• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

A poem a day to keep all agonies away!

DEVI BHAAGAVATAM - SKANDA 9

9#30. தான, தர்ம பலன்கள்

"அன்னதானம் அடைவிக்கும் சிவலோகம்;
அன்னதானம் செய்யலாம் அனைவருமே!

பசு தானம் அடைவிக்கும் கோலோகம் - புது
சயன தானம் அடைவிக்கும் சந்திர லோகம்.

வெண்குடை தானம் தரும் வருண லோகம்;
வஸ்திர தானம் அடைவிக்கும் வாயு லோகம்.

சாளக்ராம தானம் அடைவிக்கும் வைகுந்தம்;
கஜ தானம் தரும் இந்திரனின் அர்த்தாசனம்!

பரி, பல்லக்கு தானம் தரும் வருண லோகம்;
நந்தவன தானம் அடைவிக்கும் வாயு லோகம்.

வெண்சாமர தானம் அடைவிக்கும் வாயுலோகம்;
தாமிரம், எள் தானம் அடைவிக்கும் சிவலோகம்.

கனிகளின் தானம் அடைவிக்கும் இந்திர லோகம்;
விளைநில தானம் அடைவிக்கும் வைகுண்டம்.

கிராம தானம் அடைவிக்கும் வைகுண்ட லோகம்;
கார்த்திகைத் துலாதானம் தரும் விஷ்ணு லோகம்.

கங்கையில் நீராடுவது தரும் விஷ்ணு லோகம்;
வைகாசியில் மாதானம் சேர்க்கும் சிவலோகம்.

சித்திரை மாத நிருத்தியம் தரும் சிவலோகம்;
கார்த்திகை ராஸமண்டல பூஜை கோலோகம்.

ஹரிநாம ஜபம் சேர்க்கும் விஷ்ணு லோகம்;
பார்த்திவ லிங்க பூஜை சேர்க்கும் சிவலோகம்

சாளக்ராம பூஜை தரும் வைகுண்டம் - தரும்
நூறு பரி யாகம் இந்திரப்பதவி, விஷ்ணு பதம்.

பிற பூஜைகள்:

கார்த்திகை பௌர்ணமி ராஸ மண்டல பூஜை
சுக்கில ஏகாதசி, கிருஷ்ண ஏகாதசி பூஜைகள்

பாத்ரபத சுக்ல பக்ஷ துவாதசி பூஜை;
சுக்ல பக்ஷ சப்தமியில் சூரிய பூஜை;

ஜேஷ்ட மாச கிருஷ்ண சதுர்த்தி சாவித்ரி பூஜை
மாசி மாத சுக்கில பஞ்சமியில் சரஸ்வதி பூஜை

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


9#30. The fruits of some sat KarmAs

"Anna DAnam will give us a spot in the Siva Lokam. It is the only DAnam everyone is qualified to perform and no one is prohibited from performing!

Giving away a cow will take a person to Golokam; Giving a new bed will take a person to Chandra Lokam; Giving a white Umbrella will take a person to VaruNa Lokam and Giving new clothes will take person to VAyu Lokam.

Giving SAlagrAmas will take a person to Vaikuntam; Giving away an elephant will give him a seat on the throne of Indra himself. Presenting horses and palanquins will bestow a spot in Varuna Lokam; Giving away a flowering garden will bestow a spot in the VAyu Lokam.

Presenting ChAmara will find a person a spot in VAyu Lokam; Giving away copper vessels and sesame seeds will take a person to Siva lokam; Presenting fruits will find a spot in Indra Lokam; Presenting fertile lands will find a spot in Vaikuntam.

Presenting a village bestows a place in Vaikuntam; TulA Danam done in the month of Karthik gives VishNu padam. A holy dip in Ganges will take a person to Vishnu Lokam; The nrithya done in the month of Chitra will give a spot in Siva Lokam.

RAsa MaNdala Pooja performed in month of Karthik will take a person to Golokam; The chanting of the name of Hari will take a person to VishNu Lokam. PArthiva Linga pooja bestows on a person a spot in Siva lokam;

SAlagrAma pooja takes a person to Vaikuntam. One hundred Aswamedha YAgA gives the post of IndrA and Vishnu padam.
The other important poojAs yielding good merits are RAsa MaNdala Pooja on the full moon day of the month of Karthik;

Sukla EkAdasi and Krishna EKAdasi pooja;

Baadrapada sukla paksha dwAdasi pooja;

Jyeshta maasa Krishna chathurthi SAvitri pooja

MAsi MAsa sukla panchami Saraswati poja.
 
BHAARGAVA PURANAM - PART 1

#23c. அறுகம் புல் - 1

புல்லுக் கட்டிலிருந்து பறந்து வந்த
புல் விழுந்தது இறைவன் முடியில்.

எருதின் வாயிலிருந்து பறந்த புல்
இறைவன் தும்பிக்கை மேல் விழ,

கழுதை வாயிலிருந்து வந்த புல்
அழகிய திருவடி மீது சென்று விழ,

“சண்டாளப் பெண் தொட்ட புற்கள்
கண் கண்ட தெய்வத்தின் மீதா?”

மூவரையும் வெளியே விரட்டினர்;
மீண்டும் பூஜைகளைச் செய்தனர்.

இரவு முழுதும் பெய்த கனமழை
இரவி உதிக்கையில் ஓய்ந்தது!

குளிரில் விறைத்து இறந்தனர்
கோவிலில் இருந்த மூவரும்!

விமானங்கள் வந்து இறங்கின;
விநாயக கணங்களும் வந்தனர்.

மூவரும் ஏறினர் விமானங்களில்;
முனிவர்கள் திகைத்து நின்றனர்.

கணங்களைக் கேட்டனர் முனிவர்,
“கணபதி அருள் கிடைத்தது எப்படி?”

“அறுகம் புல்லால் பூசித்தனர் ஐயனை
அரிய பதவி அளித்தான் ஐங்கரன்.”

“பறந்து சென்ற அறுகம் புற்களால்
பரமன் அருள் கிடைத்ததா கூறும்!

அறுகம் புல்லால் ஐயனைப் பூஜித்தால்
அடையும் பயன்கள் யாவை கூறுவீர்.”

முனிவர்கள் கேட்டனர் கணங்களிடம்;
மகிமையைக் கூறலாயினர் கணங்கள்.

வாழ்க வளமுடன் விசாலாக்ஷி ரமணி


# 23c. The Arugu grass

Three blades of grass flew in the air and fell on the vigraham of the deity. The grass from the bundle fell on God’s head. The grass from the mouth of the bull fell on God’s trunk. The grass from the mouth of the donkey fell on God’s feet.

The pujAris became wild with anger that the grass touched by the chaNdAla sthree had defiled God’s vigraha. They drove the three pests out of the temple premises and did purification followed by puja.

The rain slashed throughout the night. It stopped early the next morning as the sun rose. The three pests were found frozen to death outside the temple. Lo and behold there came down three vimAnams from the sky.

The vinAyaka gaNas accompanied the vimAnams. The souls of the three dead occupied the vimAnams and the pujAris stood speechless. They gathered enough courage and asked the gaNas. “Why are these lowly creatures taken to the heaven?’

The gaNas replied, “They worshipped Ganesha with the green grass. So they get a special place in his world.”

“If the grass flying in the air can deliver them from their bondage, what will be the effect of the puja done with the green grass as prescribed? The pujAris asked and the gaNas began to explain.
 
devi bhaagavatam - skanda 4

4#6e. “வரம் தாரும்!”

“உம் திருவடிகளை அடைந்தோம் பக்தியோடு.
யாம் விரும்பவில்லை இந்திரலோகம் திரும்ப!

வேண்டும் வரத்தைக் கேளுங்கள் என்றீர்கள்!
வேண்டும் வரத்தைக் கேட்கின்றோம் நாங்கள்.

நாயகன் ஆகவேண்டும் நீரே எமக்கு – மனதில்
நாதன் நீரே என்று யாம் உறுதி பூண்டுள்ளோம்.

இருப்போம் நாங்கள் இங்கேயே உம்மோடு-நீர்
உருவாக்கிய பெண்கள் செல்லட்டும் அங்கு!

அருளுங்கள் யாம் கோரிய வரத்தை – யாம்
விரும்புகின்றோம் உம் உறவை மட்டுமே.”

நாராயணன் கூறினார் புன்முறுவலுடன்
நாதனாகக் கோரும் அப்சரஸ்களிடம்,

“நிறைவான தவம் செய்தேன் பல ஆண்டுகள்;
குறைவின்றி வென்றேன் ஐம்புலன்களையும்.

குலைக்க மாட்டேன் என் அரிய தவத்தை!
நிலையில்லாத காம சுகத்தை விழையேன்.

சகஜமான புலன் இன்பங்களை விழைவர்
சாமான்ய மனிதர்கள் மட்டுமே உலகில்.

புலன்களை அடக்கிவிட்ட புத்திசாலி
அலையமாட்டன் காம சுகத்தை நாடி!"என

ஒப்புக் கொள்ளவில்லை அப்சரஸ் இதை,
"தப்பு நாராயணனின் கருத்து!" என்றனர்.

"ஐம்புலன்களும் ஆனந்தம் தரும் எனினும்
ஐந்திலும் சிறந்தது ஸ்பரிச சுகம் ஒன்றே.

சுவர்க்கமும் ஈடாகது இந்த சுகத்துக்கு!
சுகமாக இருப்போம் அனைவரும் இங்கு.”

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி



4#6e. “Grant us this boon!”

The apsaras spoke to Naaraayanan thus:

“We surrender at your feet with intense bhakti. We do not wish to go back to Indra lokam. You promised to grant us any boon we seek. This is the boon we seek from you.

You must become our master and husband. We have all determined to wed none but you. We will stay back here with you. You may send these beautiful girls created by you to Indra instead of us!”

Naaraayanan smiled and replied to them, “I did penance for several years. I have conquered my five indriyaas (sense organs). I will not destroy my power of penance by indulging in love or lust.

Only normal people willingly waste their lives in love and lust. The wise man who has conquered his mind and body will not fall for these impermanent things in life.”

The apsaras tried to impress him again, “All the sense organs yield pleasure but the pleasure of touch is the best of all. Even the pleasure of heaven will pale when compared to the pleasure of touch. We will all stay together and live happily on earth!”

 
DEVI BJAAGAVATAM - SKANDA 9

9#31. யமாஷ்டகம்

"தர்மராஜன் என்ற பெயர் பெற்றீர் நமஸ்காரம்!
தவம் செய்து சூரிய தேவன் பெற்றார் உம்மை
தர்ம தேவதையை ஆராதனை செய்த பின்னர்.


சமன் என்று பெயர் பெற்றீர் நமஸ்காரம்!
சாட்சியாக உள்ளீர் சகலமான நிகழ்வுகளுக்கும்;
சமத்துவம் கொண்டுள்ளீர் சகல ஜீவன்களிடமும்.

யமன் என்று பெயர் பெற்றீர் நமஸ்காரம்
இறுதி அழிவை நீர் உண்டாக்குவதால்!

கிருதாந்தகன் என்ற பெயர் பெற்றீர் நமஸ்காரம்!
காலத்துக்கேற்ப ஜீவராசிகளை நீர் அழிப்பதால்.

தண்டதரன் என்ற பெயர் பெற்றீர் நமஸ்காரம்!
தண்டாயுதத்தால் பாவிகளைச் சரி செய்வதால்!

யமன் என்று பெயர் பெற்றுள்ளீர் நமஸ்காரம்!
கர்ம பலன் தரும் ஜிதேந்த்ரியர்! பிரம்ம நிஷ்டர்!

புண்ணிய மித்திரன் என்ற பெயர் பெற்றீர் நமஸ்காரம்!
புண்ணிய சீலர்களுக்கு நீர் கண்ணிய நண்பர் ஆவதால்!

பிரம்ம அம்சமும், பிரம்ம தேஜஸ்ஸும் பெற்று
பிரம்மத்தைத் தியானிக்கும் உமக்கு நமஸ்காரம்!"

பலஸ்ருதி

நீங்கிவிடும் யம பயம் அதிகாலையில் துதித்தால்;
நீங்கி விடும் செய்த சகல விதமான பாவங்களும்!

மஹா பாவிகள் படித்து வந்தால் நரகத்தில்
தேஹ தண்டனைகள் விதிக்கப்பட மாட்டா.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


9#31. YamAshtakam

"O DharmarAjan! The Sun practiced hard austerities and worshiped Dharma Devan. Dharma Himself was born as the son of SooryA.
You are incarnation of Dharma. So I bow down to You!

You are the Witness to all the JeevAs! You treat them all equally! Your other name is Samana. I bow down to You!

Sometimes you take away the lives of jeevas according the time prevailing then. Hence your other name is KritAnta. my Obeisance to You!

You wield the rod to bestow justice and pronounce sentence on the sinners. You destroy the sins of the JeevAs! Your other name is Dandadhara! My obeisance to you!

If you wish to destroy the universe, no one can stop you! You are known as KAlA! My obeisance to Thee!

You are an ascetic; you are devoted to BrahmA; you have perfect control over your IndriyAs; and you are the distributor of the fruits of Karmas to the JeevAs; You are called Yama since you rule over your senses. I bow down to You!
You are delighted with yourself! You are omniscient! You torment the sinners but you are a good friend of the Virtuous persons. Hence your name is PuNya Mitra. I bow down to Thee.

You are born as a part of BrahmA! The tejas of BrahmA shines in your body. You meditate on Para BrahmA. You are the Lord. Obeisance to you!”

PHALA SRUTI:

He who recites these eight hymns to Yama early in the morning is freed of the fear of death. He becomes free of all the sins committed by him. Even if he is a horrible sinner, he will not suffer from physical punishments in the hell where he may fall.

 
Yamaashtakam

तपसा धर्ममाराध्य पुष्करे भास्करः पुरा ।
धर्मं सूर्यः सुतं प्राप धर्मराजं नमाम्यहम्॥ १॥

समता सर्वभूतेषु यस्य सर्वस्य साक्षिणः ।
अतो यन्नाम शमनं इति तं प्रणमाम्यहम्॥ २॥

येनान्तश्च कृतो विश्वे सर्वेषां जीविनां परम्।
कर्मानुरूपं कालेन तं कृतान्तं नमाम्यहम्॥ ३॥

भिभर्ति दण्डं दण्डाय पापिनां शुद्धिहेतवे ।
नमामि तं दण्डधरं यश्शास्ता सर्वजीविनाम्॥ ४॥

विश्वं च कलयत्येव यस्सर्वेषु च सन्ततम्।
अतीव दुर्निवार्यं च तं कालं प्रणमाम्यहम्॥ ५॥

तपस्वी ब्रह्मनिष्टो यः सम्यमी सन्जितेन्द्रियः ।
जीवानां कर्मफलदः तं यमं प्रणमाम्यहम्॥ ६॥

स्वात्मारमश्च सर्वज्ञो मित्रं पुण्यकृतां भवेत्।
पापिनां क्लेशदो नित्यं पुण्यमित्रं नमाम्यहम्॥ ७॥

यज्जन्म ब्रह्मणोंशेन ज्वलन्तं ब्रह्मतेजसा ।
यो ध्यायति परं ब्रह्म तमीशं प्रणमाम्यहम्॥ ८॥

यमाष्टकमिदं नित्यं प्रातरुत्ताय यः पटेत्।
यमात्तस्य भयं नास्ति सर्वपापात्विमुच्यते ॥ ९॥

http://sanskritdocuments.org/doc_deities_misc/yamAShTakam.pdf

YAMAASHTAKAM IN TAMIL ALAPHABETS WILL BE PRESENTED
IN THIS THREAD AS SOON AS POSSIBLE.
 
BHAARGAVA PURAANAM - PART 1

#23d. அனலாசுரன்-1

தாபரம் நகரின் தென்பக்கத் தோப்பில்
தவமுனிவர் கௌண்டின்யர் வசித்தார்.

ஆசிரியை முனிபுங்கவரின் மனைவி.
பூசிப்பர் ஐங்கரனை நேசத்துடன் இவர்.

அனுதினம் அறுகம் புற்கள் கொணர்ந்து
அர்ச்சிப்பர் பதினாயிரம் அறுகுகளால்!

“மலர்கள் வித விதமாகக் கிடைக்கையில்
மணமில்லாத புற்களால் பூசிப்பது ஏன் ?”

ஆசிரியை கேட்டார் ஐயத்தை அவரிடம்;
நேசிக்கும் மனைவிக்கு கூறினார் முனிவர்.

“தேன் பருகும் வண்டாகச் சுவைத்தான்
தேவமாதரின் நடனத்தை யமன் அன்று.

நழுவியது திலோத்தமையின் மேலாடை.
நகர்ந்து சென்று விட்டாள் நாணத்துடன்.

விழுந்த மேலாடை தூண்டியது விரகத்தை!
எழுந்து விரைந்தான் அந்தப் புரத்துக்கு.

அதிக விரகத்தால் வெளிப்பட்டது தேஜஸ்;
அதனின்றும் தோன்றினான் அனலாசுரன்.

நடுங்கினர் தேவர்கள் அசுரனைக் கண்டு
நான்கு புறங்களிலும் ஓடி ஒளிந்தனர்.

அரக்கனைக் காண விரும்பாத யமன்
அடைக்கலம் புகுந்தான் அந்தப்புரத்தில்!

அனலாசுரன் அடைந்தான் மிகச் செருக்கு.
அடித்துத் துன்புறுத்தினான் தேவர்களை.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


#23d. AnalAsuran

KouNdinya and his wife Aasiriyai lived in a palm grove in the southern side of the TAparam city. They both were devotees of VinAyaka. They would gather fresh green Arugu grass and select ten thousand tiny branches for the daily archanai of VinAyaka.

Aasiriyai wondered why the green Arugu grass which had no fragrance was preferred over the colourful and fragrant flowers. Koundinya told her this incident to explain the greatness of the green Arugu grass over the fragrant flowers.

Yamadharman was watching the divine dance by the celestial nymphs. During the dance, the upper garment of Thilothama came off loose. She felt shy and left the place quickly.

But Yama was badly aroused by the sight of her beauty. He too got up and rushed to his heram. But before he could reach it, his tejas had emerged. From it emerged a son named AnalAsuran.

He was terrifying to look at and ferocious in his behaviour. All the DEvA ran away at his sight and hid themselves. Yama himself did not want to set his eyes up on his son. He locked himself up in his heram.

This made AnalAsuran more haughty and arrogant. He started harassing and troubling the DEvA in various ways.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 4

4#7a. தத்துவ விசாரணை

“விட்டுப் போக மாட்டோம்!” என்று கூறினர்
விண்ணுலக மங்கையர் நாராயணனிடம்!

தத்துவ விசாரணையில் ஆழ்ந்து விட்டார்,
தர்ம சங்கடத்தில் சிக்கிவிட்ட நாராயணன்.

‘அஹங்காரத்தால் வந்தது இந்தத் துன்பம்!
அஹங்காரம் கெடுக்கும் செய்த தவத்தை!

அஹங்காரம் கொடுக்கும் சம்சார பந்தத்தை;
அஹங்காரம் விதையாகும் சம்சார மரத்துக்கு!

மெளனமாக இருந்திருந்தால் இச் சோதனை
மெல்ல முடிந்து போயிருக்கும் எப்போதோ!

ஊர்வசி முதலிய பெண்களை உருவாக்கி,
உயர்ந்த தவப்பயனை விரயம் செய்தேன்.

காமவசப்பட்ட தேவ கன்னிகைகள் – நம்
காலைச் சுற்றிய பாம்புகள் போலாயினர்!

புறக்கணித்தால் பிறக்கும் கோபம் -அந்த
நிறைவேறாத ஆசை தரும் கொடிய சாபம்!

லோபம், காமம் இவை தரும் துன்பத்திலும்
கோபம் தரும் அதீதமான பல துன்பங்களை!

உராயும் மரங்களை அழித்துவிடும் – அந்த
உராய்வில் தோன்றும் தீப்பொறி அன்றோ?

ஏற்படுகின்ற கோபம் நமக்கு உறுதியாக
ஏற்படுத்தும் முற்றிலுமாக அழிவினை! ‘

சிந்தனை ஓட்டத்தை அறிந்துகொண்ட நரன்
வந்தனை செய்து கூறினான் தமையனிடம்

“பூர்வத்தில் ஆயிரம் தேவ வருடங்களுக்கு நாம்
ஆர்வமுடன் புரிந்தோம் பிரஹலாதனுடன் போர்!

நஷ்டமானது நம் இருவர் செய்த தவமும்!
கஷ்டம் தரும் நாம் கொள்ளுகின்ற சினம்”

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

4#7a. “My ego led to my troubles!”

The damsels from the heaven refused to go back to swarggam. Naaraayanan sat in deep contemplation wondering why this was happening! He was in a real dilemma.

He said to himself, “All these happened because of my ego. Ego ruins the power earned by one’s penance. Ego causes the bondage of Samsaara. Ego is the seed of the tree of Samsaara. Had I just remained quiet, all these things would not have happened at all !

I created Oorvasi as well as seventeen thousand and fifty women and wasted the power I had accumulated by my long penance. These infatuated damsels are like the serpents wound round my legs.

If I resist their advances, they are sure to get hurt and may even curse me. Anger causes more problems than even greed and lust put together. When two trees rub against each other, the fire sparks created out of friction might burn both of them.”

Naran understood the thoughts in his brother’s mind and told him,” We had spent one thousand Deva years fighting with Prahlaad. It drained all the power we had accumulated by our tapas. Anger always destroys a person!”
 
Devi bhaagavatam - skanda 9

9# 32. நரக குண்ட வகைகள்

உபதேசித்தான் தேவி மஹா மந்திரத்தை யமன்;
உள்ளபடிக் கூறினான் நரக குண்ட வகைகளை!

"உண்டோ எத்தனை வகை புண்ணிய பேதங்கள்
உண்டு அத்தனை வகை சுக அனுபவ பேதங்கள்!

உண்டோ எத்தனை வகையான பாவ பேதங்கள்
உண்டு அத்தனை வகை துக்க அனுபவ பேதங்கள்!

புண்ணியம் மட்டுமே செய்தவன் செல்லான் நரகம்!
பாவம் மட்டுமே செய்தவன் செல்லான் சுவர்க்கம்!

இரண்டையும் கலந்து செய்வார்கள் மனிதர்கள்
இரண்டையும் கலந்து அனுபவிப்பர் மனிதர்கள்;

பார்க்கலாம் பூலோகத்திலும் கண்கூடாக இதை!
பார்க்கலாம் சிலர் சுகம் மட்டுமே அனுபவிப்பதை.

பார்க்கலாம் சிலர் துக்கம் மட்டுமே அனுபவிப்பதை;
பார்க்கலாம் சிலர் மாறி மாறி மாறி அனுபவிப்பதை.

பார்க்கலாம் சுகத்தை மட்டுமே தரும் சில இடங்களை!
பார்க்கலாம் துக்கத்தை மட்டுமே தரும் சில இடங்களை!

உள்ளன எண்பத்தாறு நரக குண்டங்கள் - அவற்றில்
உள்ளனர் பதினான்காயிரம் கிங்கரர்கள் தண்டிக்க!

பயங்கரர்கள், மத மத்தர்கள், தம் கைகளில்
பாசம், சூலம், கதை, தண்டம் ஏந்தியவர்கள்.

தயை என்பதையே அறியாதவர்கள் இவர்கள்!
பயம் என்பதையே அறியாதவர்கள் இவர்கள்!

செவ்வரி ஓடிய பச்சைக் கண்களை உடையவர்கள்;
செம்மையான யோக சித்திகளை உடையவர்கள்.

காணமுடியாது வெறும் நாட்களில் இவர்களை!
காண முடியும் மரண காலம் நெருங்கும் போது!"

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


9# 32. The types of Hells

Yama Dharman did the upadesam of Devi MahA Manrtram to SAvitri. He explained the types of Hells where men get punished for the sins they had committed.

"There are as many types of pleasures to be enjoyed in Heaven - as there are of good deeds earning merits. There are as many types of sufferings to be experienced in the Hells as there are of Sins.

A man who has done only good deeds and earned merits will not enter Hell. A man who has done only bad things will not enter heaven. But most people do both good deeds and bad deeds. So they experience both pleasures and pains in their afterlives.

This can be seen even on the earth. Some people enjoy nothing but pleasures all their lives. Some others enjoy nothing but sorrows all their lives. But mostly people enjoy pleasures and pains by turns.

There are a few places on earth which give only happiness and a few others which give only sorrow. they are the Heaven and hell on the earth.

There are eighty six types of Hells. There are fourteen thousand KinkarAs or Yama DhoothAs for punishing the sinners in those hells.

They are terrifying people. They carry the noose, the trident, the mace and the stick. They know the meaning of neither mercy nor of fear.

They have blood shot green eyes and possess many yoga siddhis. They are normally invisible to everyone except to those who are about to die."
 
BHAARGAVA PURAANAM - PART 1

#23e. அனலாசுரன்-2

இந்திரனை நாடி ஓடினர் தேவர்கள்;
இந்திரன் நாடினான் பிரமதேவனை;

நாரணனை நாடினார் பிரம தேவர்
நாரணன் கூறினார் தேவர்களிடம்,

“அனலாசுரனை அழிக்க வல்லவர்
ஆனைமுகன் ஒருவனே என்றறிவீர்.

ஐங்கரனை பணிந்தால் அவன் உமது
சங்கடங்களைத் தீர்ப்பான் விரைந்து!”

நாரணன் கூறியபடியே தேவர் குழாம்
நாடிச் சென்றது வேழமுக வேந்தனை.

கருத்தினை அறிந்து கொண்டார் அவர்.
உருவெடுத்தார் ஒரு பிரம்மச்சாரியாக.

ஆதிப் பரம்பொருளே அந்த பிரம்மச்சாரி!
அறிந்து கொண்டு வணங்கினர் தேவர்கள்.

சங்கடங்களைக் கூறினர் விநாயகரிடம்.
ஐங்கரன் அளித்தான் உடனே அபயம்.

தேவர்களைத் தேடிவந்த அனலாசுரன்
தேவர் குழுவைக் கண்டு கொக்கரித்தான்.

“சிரமம் இல்லது செய்துவிட்டீர் நீவீர்
ஒரே இடத்தில் குழுமியதன் மூலம்!”

அஞ்சிய தேவர்கள் தஞ்சம் புகுந்தனர்
மிஞ்சிய தெய்வம் இல்லாத விநாயகரை!

நெருங்கிய அசுரனை வாரி வளைத்தார்,
நொடியில் அனலனை விழுங்கி விட்டார்.

“நீ காண வேண்டிய உலகங்கள் இன்னும்
நிறைய உள்ளன என் வயிற்றுக்குள்!”

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


#23e. AnalAsuran

Whenever in trouble, the Deva seek Indra’s help; Indra seeks Brahma’s help and Brahma seeks VishNu’s help.

VishNu told the gathering, “Only VinAyaka can put an end to Analasuran. Go and pray for his grace!”

The Deva went to Ganapathy who knew their innermost thoughts and transformed himself to a young attractive brahmachari.

The Deva knew that it was none other than Lord GanEsa. They told him of their suffering and sought his help in putting and end to AnalAsuran.

GanEsa gave them abhayam immediately. Meanwhile AnalAsuran went in search of the missing DEvA. He was happy to find them all with the young brahmachari.

He chuckled to himself and said, “You have made my job much easier by assembling in one place”. He approached them menacingly. The Deva hid behind GanEsha. As AnalAsuran came nearer GanEsha grabbed him and swallowed him whole.

He told the ausran “There are many worlds in my stomach which you have not seen yet. Have a glimpse of them now!”
 
4#7b. ஜனமேஜயனின் ஐயங்கள்

“பிரஹலாதன் விஷ்ணு பக்தன், தர்மாத்மா;
நர நாராயணர்கள் விஷ்ணுவின் அம்சங்கள்.

போர் மூண்டது ஏன்? போர் தொடர்ந்தது ஏன்?
போர் மூண்டது சினத்தாலா? அகந்தையாலா?

ஆதவன் உதித்ததும் மறைந்துவிடும் இருள்;
அகந்தை உதித்ததும் மறைந்துவிடும் தவம்.

அரசர்கள் போரிடுவது சர்வ சாதாரணம்;
நர நாராயணர்கள் இரு தவ முனிவர்கள்.

முனிவர்களே கோப வசப்படுவர் எனில்
மனிதர்களின் நிலைமை என்னவாகும்?

பரீக்ஷித் சுற்றினான் முனிவர் கழுத்தினில்
பாம்பின் உடலை எழுந்த சினத்தினால்.

முனிகுமாரன் சபித்தான் அந்த மன்னனை
ஜனித்த சினத்தின் அதீத வேகத்தினால்!

மது அருந்தியவன் கருதான் ஆபத்தை – நாம்
விதி விளையாடினால் கருதோம் ஆபத்தை.

போர் நடந்தது ஏன்? பாதாளத்தில் இருந்து
பிரஹலாதன் வெளிப்பட்டது ஏன் கூறும்!

பெண்ணாசையாலா? பொன்னாசையாலா?
மண்ணாசையாலா? வேறு ஆசைகளினாலா?

ஆசைகளைத் துறந்த இரு முனிவர்கள்
ஆயிரம் தேவ வருடம் போரிட்டது ஏன்?

தவ முனிவர்கள் என்று அறிந்திருந்த போதும்
தவறான போரைப் பிரஹலாதன் புரிந்தது ஏன்?”

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


4#7b. Janamejayan’s doubts

King Janamejayan asked more doubts to sage VyAsA now.

“PrahlAd was a staunch devotee of VishNu. Nara and NArAyanan were the amsam of Vishnu. Why would they fight with one another? Why and how was the war started? Why did it continue for one thousand Deva years?

When the Sun rises, the darkness gets dispelled. When Ego rises, the penance gets dissipated. Kings wage wars as a rule but two of the best tapasvis indulging in a long war? If rushis can not control their anger, what can I say about the common man?

King Pareekshit hung the body of a dead snake around the neck of a rushi due his surging anger. The son of the rushi cursed the king due to his surging anger.

A man intoxicated with wine does not consider the imminent dangers. So also the man who is deluded by his destiny does not consider the imminent dangers.

Why did the war start? Why did PrahlAd come out of PAtAla ? Was the war due to greed for land or gold or due to the lust for a women? Why did the tapasvis who had shunned the world fight for one thousand years. Why did PrahlAd fight with these two well known rushis?”
 
DEVI BHAAGAVATAM - SKANDA 9

We will skip all the scary and gory details of the various types of Hells

and the merciless punishments inflicted on the souls of the sinners there.

9#38a. பக்தியின் மஹிமை
"தேவி பக்திக்கு இலக்கணம் யாது ?
தேவி பக்தி எத்தனை வகைப்படும்?

தேவி பக்திக்கு முரணான செயல்கள் எவை?
தேவி பக்திக்குக் கண்டிக்க வேண்டியது எது?

தானம், தர்மம், தவம், விரதம் போன்றவை
தரும் செய்பவர்களுக்குப் புண்ணியத்தை!

அஞ்ஞானத்தைப் போக்குபவருக்கு - பத்து
ஆயிரம் மடங்கு அதிகப் புண்ணியம் வரும்!

பெற்ற தாய் தந்தையரை விட - உபதேசிக்கும்
உற்ற குரு நூறு மடங்கு பெரியவர் அல்லவா?

கண்கண்ட கடவுள் எனக்கு நீரே - அறிவுக்
கண்ணைத் திறந்து அளியுங்கள் ஞானம்!"

வேண்டினாள் சாவித்திரி ஞானக் கடலாகக்
கண்முன்னே இருந்த யமதர்ம ராஜனிடம்!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

9# 38. The greatness of devotion


SAvitri asked Yama Dharma RAjan some more doubts now!


"What is Devi Bhakti? How many types of Bhakti are there? What are the things opposed to Devi Bhakti? What are the things to be avoided while doing Bhakti to Devi?


Donating things, adhering to justice, doing penance and observing vrathams confer good merits on the doer. But removing ignorance of a person confers ten thousand times more merits.


Te guru who dispels the darkness of ignorance is hundred times more respectable than one's own parents.


You are the ocean of knowledge and patience. You are the god whom I can see with my eyes! Please open my eye of wisdom and bestow true knowledge on me!"





 
BHAARGAVA PURAANAM - PART 1.

#23f. அறுகம் புல்-2

பெயருக்கு ஏற்றபடி தொழில் செய்தான்
வயிற்றில் விழுந்த கொடிய அனலாசுரன்!

வெப்பத்தைப் பெருக்கினான் உதரத்தில்.
வெப்பம் தகித்தது அண்ட சராசரங்களை!

விஷ்ணு, பிரமன், இந்திரன், தேவர்கள்
விதவிதமான உபாயங்கள் செய்தனர்.

வியர்த்தமாகின அத்தனை முயற்சிகளும்;
விநாயகரின் வெப்பம் தணியவே இல்லை!

கொட்டினர் பன்னீரைக் குடம் குடமாக!
கெட்டிச் சந்தனத்தை பூசினர் உடலில்.

தெளித்தனர் அமுதத்தைத் திருமேனியில்.
குளிர்ந்த நீரைக் கொணர்ந்து சொரிந்தனர்.

தாமரை மலர்களால் ஒற்றி எடுத்தனர்.
தாமரைக் கண்ணனின் படுக்கையாகிய

ஆதிசேஷனும் முயன்று தோற்றான் – தன்
அதீதக் குளிர்ச்சியால் வெப்பத்தை நீக்கிட.

வந்தனர் எண்பத்து எட்டாயிரம் முனிவர்;
தந்தனர் தலா இருபத்தொரு அறுகினை!

உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை
உலவிய வெப்பம் சென்றது எங்கோ!

“எழ்மையிலும் இருக்கலாம் சிறப்பு!” என
வேழமுகன் அறிவுறுத்தினான் உலகுக்கு!

“அறுகம் புல் நீக்கியது ஆறாத வெப்பத்தை!
அறுகம் புல் இல்லாத பூஜை இனி வேண்டாம்!

மலர்களிலும் உயரியது அறுகம் புல் ஆகும்;
பலநூறு வேண்டாம்! இருபத்தொன்று போதும்.”

தேவர்கள் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை!
யாவரும் சேர்ந்து ஓர் ஆலயம் எழுப்பினர்.

பாலச்சந்திர விநாயகனை அமைத்தனர்;
பல ஆராதனைகள் செய்து மகிழ்ந்தனர்.

அறுகம் புல்லெனக் கருத வேண்டாம் நீ !
அறிவாய் இறைவனுக்கு உகந்தததுவே !”

ஆசிரியைக்குக் கூறினார் கௌண்டின்யர்
ஆனைமுகனின் மற்றோருவிருத்தாந்ததை.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


#23f. The cool grass

AnalAsuran justified his name as he fell into VinAyaka’s stomach. He made the stomach very hot. The heat afflicted all the worlds in the universe. Vishnu, Brahma, Indra and the Deva tried many methods to reduce the heat. But none of them had any effect on the intense body heat of Lord VinAyaka.

Rose water was poured on VinAyaka from kalasams. Thick sandal paste was smeared all over the body. The cool life giving nectar was sprinkled on his body. Cool water brought from the ponds was poured on him.

Lotus flowers were applied to his body. The cold blooded Aadhiseshan tried his best to cool the body with his chillness. He too failed miserably. Just them when every effort failed to bear fruit, eighty eight thousand rushis came there. Each of them did archana with twenty one tiny branches of fresh, cool, green grass.

It was like a miracle when the intense body heat got cooled by the cool grass. VinAyaka proved to the world that even little things can have their own greatness and they may serve great purposes.

He said,”The intense heat was cooled by the fresh green grass. There will be no more puja for me without the green grass. I prefer the grass to the thousands of fragrant and colorful flowers. Just twenty one arcs are enough for me.”

The DEvA were happy since all ended well. They built a temple for VinAyaka and did prathishtaa of BAlachandra VinAyaka. They did ArAdhana to their satisfaction.

Sage KouNdinya told his wife Aasiriyai “Do not think low of the green Arugu grass any more. Lord VinAyaka loves the grass more than the flowers!” He then told her another incident to prove the greatness of the Arugu grass.
 
devi bhaagavatam - skanda 4

4#8a. ச்யவன முனிவர்

நரசிம்ம மூர்த்தி அழித்து விட்டார் இரண்யனை;
பிரஹ்லாதனுக்குச் சூட்டப்பட்டது மணிமகுடம்.

செய்து வந்தான் நீதி நெறி தவறாத ஆட்சியினை;
செய்து வந்தனர் நாட்டு மக்கள் தம் கடமைகளை.

தீர்த்தமாட விரும்பினார் பிருகுவின் குமாரர்;
யாத்திரை சென்றார் அந்த ச்யவன முனிவர்;

தாண்டினார் குளித்துவிட்டு ரேவா நதியை;
தீண்டியது கொடிய விஷ நாகம் முனிவரை!

இழுத்துச் சென்றது பாதாள லோகத்துக்கு.
தொழுதார் ச்யவனர் பாம்பணைப் பிரானை.

விஷம் நீங்கிவிட்டது விமலன் அருளால்;
விஷ நாகமும் அஞ்சி விலகிச் சென்றது!

வரவேற்றனர் அன்போடு நாக லோகத்தினர்;
பிரஹ்லாதன் ஐயுற்றான் அவர் வருகையால்.

“வந்தது எப்படி நீங்கள் இந்த உலகத்திற்கு?
இந்திரன் அனுப்பினானா உண்மை கூறும்!”

“இந்திரனின் ஏவலன் அல்ல நான் அரசே!
இந்த உலகை விரும்பி நான் வரவில்லை!

பிருகு வம்சத்தைச் சேர்ந்த முனிவன் நான்;
பிரயாணம் செய்தேன் தீர்த்தமாட விரும்பி.

கொடிய விஷநாகம் ரேவா நதியிலிருந்து
கடித்து இழுத்து வந்து விட்டது என்னை.

விஷ்ணுவை வழி பட்டு உயிர் பிழைத்தேன்.
விஷ்ணு பக்தன் உன் தரிசனமும் கிடைத்தது.”

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


4#8a. Chyavana rushi

Narasimha moorthi killed the wicked HiraNyan and PrahlAd his son was crowned as the new king. He ruled well and with justice. His citizens were happy and contented. They performed their duties responsibly.

Chyavana rushi, the son of Brugu Maharushi, wished to go on a theerta yAtra. When he took bath in the Reva river and tried to cross it, a poisonous snake bit him and dragged him down to pAtAla lokam.

Chyavana rushi prayed to VishNu and the deadly poison got nullified. The snake got frightened and left Chyavana alone.

The sage reached the land of PrahlAd. The citizens welcomed the sage with enthusiasm. But PrahlAd had his own doubts about the real reason behind the sage’s visit.

PrahlAd asked the sage Chyavana, “Tell me the truth sage! Did Indra send you here?” The sage replied.”I am not a servant or a messenger of Indra to be commanded by him thus. Nor did come to this land due to my love for it.

I belong to the vamsam of sage Brugu. I was on a theerta yAtra. In Reva river, a snake bit me and dragged me down here. I prayed to Vishnu and escaped with my life. I also got your darshan, since you are a staunch devotee of Vishnu”
 
DEVI BHAGAVATAM - SKANDA 9

9#38b. தேவியின் சிறப்பு

" சொல்வது அரிது தேவியின் மேன்மைகளை ;
சொல்ல முயல்வது பெரும் கடலை நீந்துவது.

ஆயிரம் நாவு படைத்த ஆதிசேஷனாலும் ;
ஆறு நாவு படைத்த அந்த ஆறுமுகனாலும் ;

ஐந்து நாவு படைத்த மஹேஸ்வரனாலும் ;
நான்கு நாவு படைத்த பிரம்ம தேவனாலும் ;

மஹா விஷ்ணுவாலும், நான்கு வேதங்களாலும் ;
மஹா கணபதியாலும், யோகீந்திரர்களாலும் ;

சொல்ல முடியாது பதினாறில் ஒரு பங்கும் கூட!
சொல்ல முடியாது கலைமகள் வாணியாலும் கூட!

இயலவில்லை சனத் குமார சகோதரர்களால்;
இயலவில்லை கபிலரால், சூரிய தேவனால்!

தியானிக்கிறார்கள் திரி மூர்த்திகள் தேவியை ;
துணியவில்லை தேவி மேன்மைகளை விவரிக்க!

சொல்லும் திறன் இல்லாத போதும் மேன்மையால்
வெல்லும் தேவியின் பக்தி சகல சித்திகளையும்.

அறிவார் பரம ஞானி தேவியின் சிறப்பைச் சிறிது ;
அறிவார் பிரமம் தேவன் அதனிலும் சற்று அதிகம் ;

அறிவார் விநாயகர் அதனிலும் சற்று அதிகம் ;
அறிவார் முருகன் அதனிலும் சற்று அதிகம் ;

அறிவார் சிவபிரான் அதை விடச் சற்று அதிகம் ;
அறிவார் சிவபிரான் அனைவரிலும் நன்றாக!

உபதேசித்தார் சிவபெருமான் தருமருக்கு ;
உபதேசித்தான் தருமன் சூரிய தேவனுக்கு.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


9#38b. The glories of Devi

"It is difficult to relate the greatness of Devi. Trying to relate her greatness is the same as trying to swim across an ocean. Even Aadhiseshan cannot relate it with his one thousand tongues! Nor can Shanmukhan relate it with his six tongues.

Nor can Maheswara relate it with his five tongues nor brahma relate it with his four tongues. MahA VishNu cannot relate it nor can MahA Ganapathi do it.

Even the greatest Yogindra cannot reveal Devi's greatness. The Goddess of speech Saraswati herself is incapable of praising Devi's greatness.

Sage Kapila and The God of Sun also failed in this. The Trinity do meditate on Devi. But even they do not dare to try to explain her greatness.. The greatness of Devi may be beyond the power of speech but her worship will confer on a devotee all the siddhis.

An enlightened GnAni will know the greatness of Devi to some extent. BrahmA knows more than what the GnAni does. Vinayaka knows about it more than Brahma does.

Skanda knows more than what VinAyaka knows. Lord Siva knows more than Skanda and is the most knowledgeable person about Devi's greatness.

Lord Siva did upadesam to Dharma Devan and Dharma Devan did upadesam to Sooyra Devan."



 
BHAARGAVA PURAANAM - PART 1

#24a. அத்வைதம்

அரசன் ஜனகன் அத்வைத ஞானி ;
'ஆண்டவன் வேறு அடியவன் வேறு'

என்று கருதவில்லை ஜனகராஜன்.
ஒன்றே எல்லோரும் என்றான்!

பெரியோரைப் பூஜிப்பது இல்லை ;
உரிய மரியாதை தருவது இல்லை ;

“நானும் பகவான், நீயும் பகவான்,
எதற்கு தரவேண்டும் மரியாதை?”

“அண்டி யாசிப்பவருக்கு வள்ளல் நீ!
வேண்டியதை வழங்குகின்றாய் நீ!

செல்வம் பெருகட்டும் மேன்மேலும்;
இல்லாமை இல்லாது போகட்டும்.”

வாழ்த்தினார் ஜனகனை நாரதர்.
வாழ்த்து மொழி கேட்டு வியந்தான்.

“கொடுப்பவனும் ஈசனே மற்றும்
பெறுபவனும் அந்த ஈசனே!” என்றான்.

“பகவான் வேறு பக்தன் வேறு என்னாது
ஏகத்வம் பற்றிப் பேசுகிறாய் மன்னா!

இறைவன் வேறு, பக்தன் வேறு என
நிரூபிக்கின்றேன் ஐயம் திரிபு அற!”

கௌண்டின்ய முனியிடம் சென்றார்.
பண்ணிசைத்துப் பாடினார் விநாயகனை.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#24a. Advaitham

King Janaka was an advaitha JnAni. He considered that God and jiva were one and the same. Since he considered everyone equal he did not pay obeisance even to those who deserved it.

“You are a God and I am also a God. Why should one God pay respect to another God?” he used to ask.

NArada blessed him once “You give away everything anyone needs. May you become richer and richer and may poverty disappear from your kingdom”

“God is the one who gives and God is the one who receives. Then why so much fuss about dAnam?” Janakan asked NArada.

“You are talking from the angle of your concept Advaitham. I will prove beyond doubt that God is different from Jiva”. NArada went to sage KouNdinya and sang there in praise of Lord VinAyaka.

“Janaka is blessed with everything, yet he does not realize that it is the gift of God. He thinks he is God and no different from God. Oh Lord VinAyaka! you must open his eyes to his folly and make him realize that Jiva can never be God”

NArada prayed to lord VinAyaka.
 
devi bhaagavatam - skanda 4

4#8b. பிரஹலாதன்

“எண்ணிறந்த புண்ணிய தீர்த்தங்கள் உள்ளன;
புண்ணிய தீர்த்தங்கள் பற்றிக் கூறவேண்டும் !”

“புண்ணிய பாவங்கள் இல்லை நதிகளில்;
புண்ணிய பாவங்கள் உள்ளன நமக்குள்!

மனம், மொழி, மெய் தூய்மையிருந்தால்
புனித நீர் உள்ளது ஒவ்வொரு காலடியிலும்.

மனம், மொழி, மெய் தூய்மையற்றவனுக்கு
புனித கங்கையும் புழு நெளியும் மாசு நீரே!

பாவங்கள் நீங்கிய மனதுடையவனுக்குப்
பாவனம் ஆகும் எல்லா நதிகளின் நீரும்.

கங்கை கரையில் உள்ளன – அனேக
சிங்கார நகரங்களும், சிற்றூர்களும்.

குடியிருக்கின்றனர் அங்கு பல மக்கள் – தினம்
குடிக்கின்றனர், குளிக்கின்றனர் கங்கை நீரில்!

மனத் தூய்மை வருவதில்லை குளியலால்!
மனத் தூய்மையே மற்றவற்றுக்கு ஆதாரம்

நைமிசாரண்யத்தில் உள்ளது புனித தீர்த்தம்;
நாடுவர் அதை நாடெங்கும் வசிப்பவர்கள்.”

பிரஹலாதன் சென்றான் நைமிசாரண்யம்
உறவினர்கள், சுற்றத்தினர்கள் புடை சூழ!

நிர்மலமான புண்ணிய தீர்த்தத்தில் முங்கி
நீராடினர் மாசற்ற மனங்களுடன் அவர்கள்.

சரஸ்வதி தீரத்தை அடைந்த பிறகு அங்கு
பிரஹலாதன் செய்தான் தானமும், தவமும்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


4#8b. Prahlaad

Prahlaad requested Chyavana rushi, “Please tell us about the holy rivers you know!”

Sage Chyavana replied, ” The holiness of the river does not lie in the river. The holiness or uncleaniness lies within us. To a person who is pure in thought, words and actions, there is holy water everywhere.

To a person whose mind is filled with filthy thoughts and words and actions are are foul even the holy water of Ganges will become unholy.

There are many cities and hamlets along the banks of river Ganga. Those who live in them, drink and bathe in the water of Ganges everyday. But they do not become purer due to that.

Purity on the mind is essential for all the other kinds of purity. There is a holy theertam in NaimichaaraNyam. People from all over the country throng to bathe in it”

Prahlaad went to NaimichaaranNaym with his kith and kin. They all bathed in the holy theertam and then Prahlaad did daanam and penance there.
 
I am glad to inform that the Ettaam Thanthiram of Thirumanthiram

has been launched by my dear D.I.L yesterday.

I have typed up to the 2400 th poem in this Thanthiram.

Hopefully I will catch up with the posting from 2121 onwards

while I try to finish typing the remaining 600+ poems of Thirumanthiram.

The link to the new blog is https://ettamthanthiram.wordpress.com/ :pray2:
 
DEVI BHAAGAVATAM - SKANDA 9

9#38c. தேவியின் சிறப்பு (2)

"தேவியின் சிறப்பை முற்றிலும் அறிந்தவள்
தேவி மட்டுமே என்பது அதிசயமான உண்மை.

அளக்க முடியாது விரிந்து பரந்த வானத்தை!
அளக்க முடியாது விரிந்து பரந்த சிறப்புக்களை!

ஆவார் அனைத்துக்கும் ஆத்மா சர்வேஸ்வரன்;
ஆவார் அனைத்துக்கும் காரணம் சர்வேஸ்வரன்;

ஆவார் அனைத்துக்கும் முதல்வர் சர்வேஸ்வரன்;
ஆவார் அனைத்துக்கும் பரிபாலகர் சர்வேஸ்வரன்;

ஆவார் அனைத்துக்கும் வித்தாக சர்வேஸ்வரன்;
ஆவார் அனைத்துக்கும் அப்பற்பட்டவராக அவர்.

நித்திய ரூபி, நித்தியானந்தர் ஆவார் சர்வேஸ்வரன்
நிர்குணர் ஆவார், நிராகாரர் ஆவார் சர்வேஸ்வரன்.

நிரங்குசர் ஆவார், ஆதார புருஷர் சர்வேஸ்வரன்
பரமாத்மாவின் சக்தி ஆவாள் மாஹா மாயை

அக்னியும் உஷ்ணமும் போலக் கலந்துள்ளனர்
பரம புருஷனும், பிரகிருதி தேவியும் ஒன்றாக!

சச்சிதானந்த வடிவானவள் பிரகிருதி தேவி - அவள்
பக்தருக்கு அருள் பாலிக்கவே உருவெடுக்கின்றாள்."

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


9#38c. The glories of Devi (2)

"It is a wonderful truth that Devi alone knows her own greatness and glories! We can not measure the sprawling sky. We can not measure the glories of Devi either!

Sarweswaran is the Aatman of every jeevA; He is the cause of everything; He is ruler of the entire creation; He is the real cause behind this creation; He is the seed of this creation; He lies beyond everything in the creation.

He is eternal; He is always happy; He is free from the three guNAs; He does not have any form; He is the one who supports every other existing thing.

Devi MaHA MAyA is the one who is the real power of ParamAtmA. Just like Agni and heat, ParamAtmA and MahA MAyA are blended together inseparably. Prakriti Devi is of the nature of Sath-Chith-Aanandam. She assumes visible forms only to shower her grace on her devotees.
 
BHAARGAVA PURAANAM - PART 1

#24b. வினோத யாசகர்-1

அரசனின் அறியாமையை நீக்கிவிட,
அந்தணன் ஆனான் ஆனைமுகன்.

அடைந்தான் அரண்மனை வாயிலை!
அரசனிடம் தெரிவித்தனர் காவலர்கள்,

“நோயால் அவதியுறும் ஓர் அந்தணன்
வாய் நிறையக் கேட்கின்றான் யாசகம்!”

பசியால் மெலிந்து நலிந்தவனிடம்
“இசைவான தானம் எது கூறு!” எனப்

“பொன்னும், மணியும் வேண்டேன்!
மண்ணும், மங்கையும் வேண்டேன்!

பசி தீரும்படி நீர் அளிக்கும் உணவே
இசைவான தானம் எனக்கு!” என்றான்.

“பசியாறப் புசிப்பதற்கு உணவு தருக!”
பேசினான் மன்னன் காவலர்களிடம்.

இலை நிறைய அறுசுவை உணவிட
இலை காலியானது ஒரு நொடியில்!

உள்ளே இருந்து கொணர்ந்த உணவை
உள்ளே தள்ளினார் ஒரே நொடியில்.

தீர்ந்துவிட்டன சமைத்த பதார்த்தங்கள்
தீரவில்லை அந்தணரின் அதீதப் பசி!

“ஆசாமி லேசுப்பட்டவன் அல்ல!” என்று
அரசனிடம் கூறினார் விரைந்த காவலர்.

திகைத்த அரசன் ஓடினான் அவரிடம்!
“சமைத்ததைத் தர இத்தனை நேரமா?

வெந்தது போதும், தந்துவிடச் சொல்!”
வந்தது எல்லாம் வயிற்றில் விழுந்தது!

காலியாகின களஞ்சியங்கள் எல்லாம்!
காலியாகின ஜனங்களின் பொருட்கள்!

தளர்ந்து போனான் மன்னன் ஜனகன்
தாளாப் பசியைக் கண்ணால் கண்டு!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


#24b. The unusual Brahmin

VinAyaka decided to open Janakan’s eyes to the truth that a jiva can never be equal to Eshwara. He transformed himself to a poor and famished brahmin.

He reached Janakan’s palace. The palace guards went and told their king that a poor famished Brahmin had come for yAchakam.

The Brahmin was troubled by some strange illness and looked famished. The king Janakan asked him, “What do you wish for?”

The Brahmin replied,” I do not want gold or the gems. I do not want a land or a lady. I just want food to sate my hunger.” The king ordered his guards ,”Give him food until his hunger is satisfied”

The guards took him to the dining place; spread a large banana leaf and filled it with tasty food. The stuff disappeared as it was eaten by the brahmin in one second.

More food was brought from inside the kitchen and the man ate faster than they could serve him food.

Now all the cooked food was exhausted but not the Brahmin’s strange hunger. The guards were startled by the sight of the Brahmin and ran to the king to report that the man’s stomach seemed to be a bottomless pit.

Now king Janakan rushed to the Brahmin who was in a very bad temper due to his hunger. He asked the king,

“How long will your cooks take to prepare food for me? Tell them to bring the half cooked food. I can’t wait any longer”

The half cooked food was exhausted. The uncooked food items were eaten next. The contents of their food reservoirs was exhausted next.

Everything edible from every house in the country was brought to the Brahmin. He
just tossed them inside the cave of his stomach and kept on demanding for more and more food.

Now Janakan was scared and upset that he could not feed one poor Brahmin enough food to satisfy him.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 4

4#9a. அஹங்காரத் தத்துவம் (1)

ஜனமேஜயன் வினவினான் வியாசரை,
“ஜனிக்கிறது மேலும் ஓர் ஐயம் எனக்கு!

நர, நாராயணர்கள் சத்துவ குணசாலிகள்;
மரக் கறி உணவினை உண்ணுபவர்கள்.

சத்திய சீலர்கள், உத்தமர்கள் – இவர்கள்
யுத்தம் புரிந்த காரணத்தைக் கூறுங்கள்!

யாகங்கள் செய்து அவற்றின் பயனாக
யயாதி அடைந்தான் சுவர்க்கப்பதவி.

அஹங்காரத்துடன் கூறிய சொற்களால்
அங்கிருந்து தள்ளப்பட்டான் இந்திரனால்!

உயர்ந்தவர் ஆயினும் தாழ்ந்து விடுவர்
உயர்வாகத் தம்மையே எண்ணும்போது.

யுத்தத்தால் நர நாராயணர் பெற்ற பயன் எது?
யுத்தம் அழித்திருக்குமே தவப் பயன்களை!”என

“அரசே கூறுவர் தத்துவ ஞானிகள் – இந்தப்
பிரபஞ்சத்தின் மூல காரணம் அஹங்காரம்.

சத்துவ, ராஜச, தாமச அஹங்காரம் என
மொத்தம் மூவகைப்படும் அஹங்காரம்.

உடல் உள்ளவரை இருக்கும் அஹங்காரம்;
நடக்கும் காரியங்கள் தகுந்த காரணங்களால்!

மனிதர்கள், தேவர்கள் பணி புரிகின்றார்கள்
தனித் தன்மை வாய்ந்த அஹங்கரத்தினால்.”
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

4#9a. AhankAram (1)

King Janamejayan got more doubts and raised more questions to Sage VyAsA now.

“Naran and NArAyanan were SAtvic in nature. They were pure vegetarians. They spoke the truth and were of good nature. Why did they indulge in a war?

YayAti did several yAgAs and reached the Heaven as a result of them. But YayAti got pushed down from there by Indra when he spoke words filled with ego and pride.

Even great people slip away from their greatness – when they think themselves to be great. What did Naran and NArAyanan achieve through the war? I am sure it must have destroyed all the powers they had earned through their penance.”

Sage VyAsA replied thus: “Tatva GnAnis say that AhankAram is the root for the srushti or the creation. AhankAram can be classified into three types the SAtvic, the RAjasic and the TAmasic ahankAram.

AhankAram will exist as long as the body exists. Things happen due to their respective causes. The DEva and the Manushya all act depending on their individual ahankAram.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 9

9#38d. தேவியின் சிறப்பு
"பிரமன் சிருஷ்டிக்கின்றான் தேவியின் ஆணைப்படி!
கர்மங்களை, அனுபவங்களை நிச்சயிக்கின்றாள் தேவி!

வழங்குகின்றார் விஷ்ணு பிரான் கர்ம பலன்களை;
வழங்கப்படுகின்றன அவை தேவியின் ஆணைப்படி.

காலாக்னி ருத்திரர் சம்ஹரிக்கின்றார் சிருஷ்டியை;
காலாக்னி ருத்திரர் சம்ஹரிப்பது தேவி ஆணைப்படி.

சுழல்கின்றான் வாயுதேவன் தேவியின் ஆணைப்படி.
அழல் வீசுகின்றான் சூரியன் தேவியின் ஆணைப்படி.

குளிர்விக்கின்றான் வருணன் தேவியின் ஆணைப்படி;
பெய்விக்கின்றான் மழை இந்திரன் தேவி ஆணைப்படி;

பணி புரிகின்றான் காலதேவன் தேவியின் ஆணைப்படி,
பணி புரிகின்றனர் திக்பாலகர் தேவியின் ஆணைப்படி.

சுழல்கின்றது ராசிச் சக்கரம் தேவியின் ஆணைப்படி;
பழுக்கின்றன இனிய கனிகள் தேவியின் ஆணைப்படி.

நீரிலும், நிலத்திலும் வாழும் அனைத்து ஜீவராசிகள்
ஆருயிர் வாழ்வதும் ஆகும் தேவியின் ஆணைப்படி.

தாங்குகின்றான் ஆதிசேஷன் பூமியைத் தன் ஆயிரம்
தலைகளால் தேவி அவனுக்கு இட்ட ஆணையின்படி!"

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


9#38d. Devi's glories (3)

"BrahmA creates as ordained by Devi! Vishnu bestows the effects of karmAs as ordained by Devi. KAlAgni Rudra destroys the creation as ordained by Devi.

The wind blows as ordained by Devi; the Sun glows as ordained by Devi; Varuna causes coolness as ordained by Devi; Indra causes rainfall as ordained by Devi!

KAlA acts as ordained by Devi; the Dik PAlakAs act as ordained by Devi; The planets move as ordained by Devi; the fruits ripen as ordained by Devi!

The creatures living on land and water live as ordained by Devi; Aadhiseshan supports the World on his heads as ordained by Devi!"

 
BHAARGAVE PURANAM - PART 1

#24c. வினோத யாசகர்-2

அனைத்துப் பொருட்களும் காலி ஆயின;
அத்தனை உண்ட பின்னும் தீரவில்லை பசி.

ஜனகராஜன் தோற்று விட்டான் அவனிடம்;
ஜனங்கள் முன்பு தளர்ந்து நின்றான் ஜனகன்.

“பசியைப் போக்க உணவு தரச் சொன்னேன்;
பசியல்ல இது! பற்றியுள்ளது உம்மை நோய்!

குணப்படுத்தும் அளவுக்கு என் நாட்டில்
உணவுப் பொருட்கள் இல்லை அந்தணரே!

எல்லை இல்லா உம் பசியினைத் தீர்க்க
வல்லவரிடம் செல்லுவீர் நீர்!” என்றான்.

கலகலவென்று நகைத்தான் அந்தணன்!
வெலவெலத்து நின்றனர் அனைவரும்!

“பசியைப் போக்கிக் கொள்ள வந்தேன் – என்
பசியை மேலும் தூண்டிவிட்டாய் மன்னா!

செல்க வேறு இடம் நோக்கி என்கின்றாய்!
கொள்கை பிடிப்பு இவ்வளவு தானா கூறு?

பகவான் நீயும்; பகவான் நானும் என்றாய்!
பகவான் பகவானுக்கு உதவ வில்லையே!

பகவானின் பசியைத தீர்க்க இயலாதா?
பசியைத் தீர்க்க இயலாதவன் பகவானா?

பசியைத் தீர்க்க இயலாத உன் கொள்கைகள்
விசித்திரமாக இல்லையா என நீயே கூறு?

அர்த்தமற்ற உன் அத்வைதக் கொள்கையை
ஆற்றிலோ குளத்திலோ கொண்டு நீ வீசு!”

கோபமாகப் பேசிய அந்தணன் உடனேயே
வேகமாக வெளியேறினான் அங்கிருந்து!

சென்று அடைந்தது இன்னொரு இல்லம்,
அன்பன் அந்தணன் திரிசரனின் இல்லம்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


#24c. The unusual mendicant

All the edible things were eaten by the Brahmin and yet his hunger was not satisfied. King Janakan felt defeated for the first time. He felt disheartened in front of his citizens.

“I agreed to feed you to sate your hunger. But this is not hunger. It is a rare disease afflicting you. There is not enough food in my entire country to treat your disease. You please go to that person who can satisfy your unsatisfied hunger”

The Brahmin laughed loudly and everyone felt crestfallen. “I had came here to satisfy my hunger but the food that you gave me has made me more hungry. Now you tell me to go off to the person who is capable of satisfying my hunger.

Is this your principle? Is this your policy? You keep saying that everybody is a Bhagavan. If you and I are both Bhagavan why is that one baghavan is unable to feed another?

How can you be a Baghavan when you can’t give enough food to a poor starving Brahmin? It is high time you discard your senseless advaitha principle and wake up to the reality”.

He spoke with anger and left in a huff from the palace. He walked straight to the house of a poor Brahmin called Thrisaran.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 4

4#9b. அஹங்காரத் தத்துவம் (2)

வியாச முனிவர் கூறினார் மேலும் இவற்றை
விவரித்து மன்னன் ஜனமேஜயன் ஐயம் தீர்த்திட.

“தானம், தவம், தேவ யக்ஞம், பித்ரு யக்ஞங்களை
ஞானத்தோடு செய்விப்பது ஸத்துவ அஹங்காரம்.

விதி முறைகள் இன்றி ஞானமும் இன்றி இவற்றை
விதி ஹீனமாகச் செய்விப்பது ராஜஸ அஹங்காரம்.

பொய், புனை சுருட்டு, கலஹ புத்தி இவை
தீய தாமஸ அஹங்காரத்தின் செயல்கள்.

நடவாது உலகில் நல்லதும் தீயதும் – இங்கு
திடமாக அஹங்காரம் இல்லாது போனால்!

முத் தொழில்கள் புரிகின்றனர் மும்மூர்த்திகள்
தத்தம் தொழிலுக்கு ஏற்ற அஹங்காரத்துடன்.

முனிவர்களும் விடமுடியாது அஹங்காரத்தை;
மனிதர்களும் விடமுடியாது அஹங்காரத்தை.

நாம. ரூபங்கள் உள்ளவர்கள் அனைவருமே
தாம் என்னும் அஹங்கார வயப்பட்டவர்களே

கர்மங்கள் புரிகின்றனர் அஹங்காரத்தோடு;
கர்ம வினைப்படி எடுக்கின்றனர் பிறவிகள்!

மஹா விஷ்ணு எடுத்தார் எத்தனையோ பிறவிகள்
மஹா விஷ்ணுவுக்கும் உண்டு பிருகுவின் சாபம்!

பிரஹலாதனுக்கும் இந்திரனுக்கும் இடையே
பிரமாதமான போர் நடந்தது நூறு ஆண்டுகள்.

தோல்வியுற்ற பிரஹலாதன் தவம் செய்தான்
தோள்வலிவு உடைய மஹாபலிக்கு முடிசூட்டி!”

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி



4#9b. Ahankaaram (2)

Sage Vyaasaa continued to explain to king Janamejayan thus:

Satva ahankaaram makes a person perform Daanam, Tapas, Yaagaa, Yagnaa etc with perfect understnding and as prescribed by our scriptures.

Raajasa ahankaaram makes a person perform these without really understanding them and also not obeying the rules to be followed.

Taamasa ahankaaram makes a person tell lies, cheat and live in disharmony with the others.

No action will take place in the earth but for these three ahankaaram. The Trinity perform their respective duties with their respectively suitable ahankaaram. Even sages and sanyaasin who have renounced the world can not renounce ahankaaram.

Man can never get rid of his ahankaaram. Whosoever has a name and a form is subjected to ahankaaram. People perform various actions depending on their ahankaaram. They take birth according to the effect of the actions performed by them.

Even Mahaa VishNu took many avatar due to ahankaaram. He was also cursed by sage Brugu. Once a long war went on between Indra and Prahlaad. When he got defeated Prahlaad made his valorous son Mahaa Bali the new king and went to perform penance.”
 
DEVI BHAAGAVATM - SKANDA 9

9#38e. பிராகிருத பிரளயம்

பிரம்மனின் ஒரு நாளுக்கு சமம் ஆகும்
இருபத்தெட்டு இந்திரரின் ஆயுட்காலம்

முப்பது நாட்கள் சேர்ந்தது ஒரு மாதம்;
பன்னிரண்டு மாதங்கள் ஒரு வருடம்.

பிரம்மனின் ஆயுள் நூறாண்டுகள் - இது
கிருஷ்ணபிரான் கண்ணிமைக்கும் காலம்.

பிரம்மனின் ஆயுட்காலம் முடிந்தவுடனே
ஹரியும் மூடிக்கொள்வான் தன் கண்களை!

பிராகிருதப் பிரளயம் என்பது இதுவே ஆகும்
சாராசரம் அனைத்தும் அழிந்துவிடும் அப்போது!

பிராகிருதப் பிரளயத்தில் அழிந்து விடும் சிருஷ்டி;
பிரளயத்தில் ஒடுங்கி விடும் மொத்த சிருஷ்டியும்.

ஒடுங்குவான் பிரம்மன் விஷ்ணுவின் நாபியில்;
ஒடுங்குவான் விஷ்ணு கிருஷ்ணனின் இடப்புறம்!

ஒடுங்குவர் சக்தியர் எல்லோரும் மூலப் பிரகிருதியில்;
ஒடுங்குவாள் மூலப் பிரகிருதி கிருஷ்ணனின் புத்தியில்.

ஒடுங்குவான் ஸ்கந்தன் கிருஷ்ணனின் மார்பினில்;
ஒருங்குவான் ஆனைமுகன் கிருஷ்ணனின் புஜத்தில்.

ஒடுங்குவர் லக்ஷ்மியின் அம்சங்கள் லக்ஷ்மியில்;
ஒடுங்குவாள் லக்ஷ்மி ராதா தேவியின் உடலில்!

ஒடுங்குவர் கோபியர் ராதா தேவியின் உடலில்!
ஒடுங்குவாள் ராதை கிருஷ்ணின் பிராணனில்!

ஒடுங்குவாள் சாவித்ரி சரஸ்வதி தேவியில்;
ஒடுங்கும் வேதங்கள் சரஸ்வதி தேவியில்.

ஒடுங்குவாள் சரஸ்வதி கிருஷ்ணின் நாவினில்;
ஒடுங்குவர் கோபர் கிருஷ்ணின் ரோம கூபத்தில்!

ஒடுங்கும் வாயு கிருஷ்ணின் பிராண வாயுவில்;
ஒடுங்குவான் அக்னி கிருஷ்ணனின் ஜடராக்னியில்!

ஒடுங்குவான் வருணன் கிருஷ்ணனின் நா நுனியில்;
ஒடுங்குவர் வைஷ்ணவர் கிருஷ்ணின் பாதங்களில்!

ஒருங்குவர் சின்ன விராட்கள் பெரிய விராட்டில்;
ஒடுங்குவார் பெரிய விராட் கிருஷ்ணன் உடலில்!.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

9#38e. Praakruta PraLayam

Seventy-one Divine Yugas constitute one Indra’s life period. Twenty-eight Indra’s life periods constitute BrahmA’s one day and one night.

Thirty such days constitute BrahmA’s one month. Twelve such months make one year. One hundred such years constitute BrahmA’s lifespan.

When BrahmA dies, BhagavAn Hari also closes his eyes. That is the PrAkritik PraLaya. Everything moving and non-moving, from Deva loka to earth perishes.

BrahmA gets dissolved in the navel of Sri KrishNA. VishNu who sleeps on the Ocean of Milk, gets dissolved on the left side of Sri KrishNA.

All the forms of Saktis get dissolved in Moola Prakriti or the VishNu MAyA. The Moola Prakriti or DurgA Devi, being the Presiding Deity of Buddhi, gets dissolved in the Buddhi of Sri KrishNa.

Skanda, being an amsam of NArRyaNa gets dissolves in His breast. Ganesa, born as an amsam of Krishna gets dissolved in his arm.

Those who are born as amsams of Lakshmi get dissolved in Her body and Lakshmi gets dissolved in the body of RAdhA.

All the Gopis and all the Devas get dissolved in RAdhA’s body. RAdhA being the Presiding Deity of PrANA gets dissolved in the PrANa of KrishNa.

SAvitri Devi and the four Vedas along with all the SAstras get dissolved in Saraswati. Saraswati gets dissolved in the tongue of Sri KrishNa.

The GopAs of Goloka get dissolved in the pores of His skin. VAyu gets dissolved in Sri KrishNa's PrANa VAyu. Fire gets dissolved in the fire in KrishNa's belly and water gets dissolved in the tip of His tongue.

VaishnavAs get dissolved in the lotus feet of the lord. All smaller VirAts get dissolved in the Great VirAt and the Great VirAt gets dissolved in the Body of Sri KrishNa.
 
BHAARGAVA PURAANAM - PART 1


24d. திரிசரன்

ஏழை அந்தணன் ஆவான் திரிசரன்;
வேழ முகத்தோனின் தீவிர பக்தன்!

விரோச்சனை இல்வாழ்வின் துணை;
விநாயக பக்தியில் அவனுக்கு இணை!

சதாகாலமும் செய்து வந்தனர் இவர்கள்
விடாமல் பூஜை, ஆராதனை, தியானம்!

பிராமணரைக் கண்டதும் வணங்கினர்,
திரிசரனும், விரோச்சனையும் பணிந்து.

“திரிசரா! பசி தீர அரசனிடம் சென்றேன்
அதிகரித்தான் பசியை அற்ப உணவால்.

'வேறிடம் சென்று பசி தீர்க!' என்றான்
நேராக வந்தேன் இந்த இல்லத்துக்கு!”

விரோச்சனையின் விழிகளில் அருவி!
“விநாயகர் அனுப்பினார் சோதிப்பதற்கு!

தேசத்தை ஆள்பவன் தராத உணவு
யாசகம் செய்து வாழும் எம்மிடமா?

இன்றைக்கு என்று எதுவுமே இல்லை!
ஒன்று மிகுந்துள்ளது பூஜையின் அறுகு.”

“தினைத் துணை பனைத் துணை ஆகும்
மனப்பூர்வமாக அளிக்கப்படும் பொழுது!

பனைத் துணை தினைத் துணை ஆகும்
மனம் ஒன்றாமல் தரும் பொருட்கள்.

உணவு இல்லை என வருந்த வேண்டா.
மனமுவந்து அளிப்பீர் அறுகினை!” என

கொண்டு தந்தாள் அதை விரோச்சனை;
மென்று தின்றார் அதை அந்த அந்தணர்.

தீரப் பசி தீர்ந்து விட்டது ஒரு விந்தை!
மாறாத வறுமை மாறியதும் விந்தை!

மாட மாளிகை ஆனது திரிசரனின் வீடு;
கூடவே வந்தன செல்வமும் செழிப்பும்.

மன்னன் மாளிகையில் நிதிக் குவியல்!
மக்கள் இல்லங்களில் செல்வக் குவியல்!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


#24d. Thrisaran

Thrisaran was a poor Brahmin. His wife was named Virochanai. Both of them were sincere devotees of VinAyaka. They would spend all their time in pooja, ArAdhna and dhyAnam on VinAyaka.

When they saw a strange Brahmin approaching they welcomed him and paid him their obeisance.

The Brahmin spoke,”Thrisara! I went to king Janakan to get my hunger satisfied. But he has increased it further by giving me insufficient food. Now he tells me to go to anyone who is capable of satisfying my hunger. So I have come straight to your house!”

On hearing the words spoken by the Brahmin, tears started to flow down in streams from the eyes of Virochanai.

“Surely VinAyaka wants to test us in this strange manner. If the king of a country could not satisfy your hunger, what can we living on yAchakam offer you sir? Today of all the days there is nothing in the house – save an arc of the green grass brought for the pooja”

“Please do not feel sorry that there is no food in your house. When given with affection a tiny morsel becomes a feast and when given without affection a feast becomes a tiny morsel. Please bring the arc of grass and give it to me”

Virochanai brought that arc of green grass and gave it to the Brahmin. He chewed it well and swallowed it. Lo and behold his hunger was finally satisfied.

At the same moment the humble hut of the devout couple became a palatial house. Wealth filled their house, the palace of Janakan and the house of every single citizen of that country – who had offered food to the strange hungry Brahmin on that day.
 

Latest ads

Back
Top