• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

A poem a day to keep all agonies away!

DEVI BHAAGAVATAM - SKANDA 4

4#9c. மஹா பலி

கலகம் மூண்டது தேவர், அசுரர் இடையே
பலிச் சக்கரவர்த்தியின் தலைமையின் கீழ்!

உதவினர் தேவர்களுக்கு விஷ்ணு, இந்திரன்;
உண்டாக்கினர் தோல்வியினை அசுரர்களுக்கு!

குலகுருவைச் சரணடைந்தனர் அசுரர்கள்;
புலம்பினர் குரு சுக்கிரர் உதவியை நாடி!

“அனைத்தும் அறிந்துள்ள நீர் எமக்குத்
தினையளவும் உதவாதது ஏன் குருவே?

பாதாளம் செல்கின்றோம் நாம் இப்போது!
பலமிழந்து பரிதவிக்கின்றோம் இப்போது!”

அபயம் அளித்தார் சுக்கிராச்சாரியார் – உம்
அபாயம் நீக்குவேன் என் தவ வலிமையால்.

உதவவுகின்றேன் மந்திரங்களால் உமக்கு!
உண்டாக்குவேன் துன்பம் தேவர்களுக்கு!”

மந்திர சக்தியைப் பிரயோகித்தார் சுக்கிரர்;
மனக் கவலை உண்டானது அமரர்களுக்கு.

காரணம் இன்றிக் கவலை தோன்றியதால்
காரணம் அசுர மாயை என்று அறிந்தனர்!

தேவர்கள் சென்றனர் மஹா விஷ்ணுவுடன்,
தேவர்கள் துரத்தினர் அசுரர்களை மீண்டும்!

சரணடைந்தனர் அசுரர்கள் சுக்கிரிடம்,
சுக்கிரர் கூறினார் அரக்கரிடம் உரக்க!

“அச்சப் படத் தேவையில்லை அசுரர்களே!
மிச்சம் உள்ளன நம் மந்திர ஔஷதங்கள்!”

பயந்து விட்டனர் தேவர்கள் இது கேட்டு!
பாய்ந்து விலகிச் சென்றனர் அங்கிருந்து!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


4#9c. Mahaa Bali

A war took place between the Asura and the Deva under the leadership of King Mahaa Bali. Both Vishnu and Indra helped the Deva to defeat the Asura. The defeated Asura promptly surrendered to their Kula guru Sukran.

They lamented to him,”Oh our Kula guru! You know everything and yet you do not help us at all! We have been banished from here to the Paataala. We are powerless against the mighty Deva now.”

Sukran took pity on the Asura and said, “I will help you now with my yogic power. I will delude and make the Deva feel very sad” He employed his yogic power and chanted a mantra to cause unhappiness in the minds of the Deva.

The Deva felt sad, unhappy and miserable for no real reason despite their victory over the Asura. They guessed that it must be the Maayaa employed by the Asura. They went along with Vishnu and chased away the Asura once again.

The asura went to Sukran once again. Sukran spoke very loudly to the Asura, making sure that the Deva could hear his words. He said, “Do not panic my dear Asura! We still have the mantraas and the medicines to help us fight the Deva!”

The Deva were not sure what was the mantraa and what was the medicine. Thy got scared, stopped chasing the asuras and went away quickly.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 9

9#38f. தேவியின் பக்தன்

சிருஷ்டி நடக்கின்றது கிருஷ்ணன் கண் திறக்கையில்!
சிருஷ்டி அழிகின்றது கிருஷ்ணன் கண் இமைக்கையில்

கிருஷ்ண பரமாத்மாவே ஐக்கியம் ஆகின்றார்
பிரளய காலத்தில் பிரகிருதில் ஒடுங்கி மறைந்து!

இறுதியில் மிகுந்திருப்பது பிரகிருதி ஒன்று மட்டுமே!
ஆதியில் சத் ரூபமாக இருந்ததும் பிரகிருதி மட்டுமே!

ஆதியிலும் இருந்து, அந்தந்திலும் மிகுந்திருக்கும்
ஆதி காரணியின் புகழைப் புகலவும் முடியுமோ?

இயலாது தேவியின் பெருமைகளைப் புகலுவது!
இயலும் தேவியிடம் அளவற்ற பக்தியைப் புரிவது.

தேவி பக்தன் விரும்புவதில்லை உத்தம முக்தியையும்!
தேவி பக்தன் விரும்புவான் பக்தி செய்வதை மட்டுமே !

பக்தித் தொண்டாற்றுவது முக்தி தரும் ஆனந்தம்;
பக்தி தரும் ஆனந்தம் பரமாத்மாவின் தொண்டு !

பக்திக்கு விரோதமானது சுக போகங்களில் விருப்பம்;
பக்திக்கு நிஷேதமானது புரிந்திடும் காமிய கர்மங்கள்.

பற்றற்று பரமாத்மாவின் தொண்டாற்றுவதே
நற் கருமமும் ஆகும்; தத்துவ ஞானமும் ஆகும்;"

ஆசிகள் தந்து கணவனை உயிர்ப்பித்தான் யமன்;
ஆணையிட்டான் இருப்பிடம் திரும்பிச் செல்லுமாறு.

அழதாள் சாவித்திரி அந்தப் பிரிவற்றமையினால்!
தொழுதாள் சாவித்திரி தர்மராஜனின் பாதங்களை!.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


9#38f. PrAkritic PraLaya

PrAkritic PraLaya happens When Sri Krishna closes his eyes and the creation takes place on the opening of his eyes. The closing and opening of his eyes takes the same length of time equal to those of creation and dissolution.

BrahmA’s creation lasts one hundred years on BrahmA's scale and the PraLaya also lasts for one hundred similar years. No one knows how many BrahmAs have been born or how many times creations and dissolution have taken place.

Just as one cannot count the number of dust particles, one cannot count the number of creation and dissolution.

The all powerful Sri Krishna himself dissolves at the time of PraLaya in Moola Prakriti. Thus Highest Sakti, the Moola Prakriti will be the Only One left behind after PraLaya. She is the NirguNa and highest purusha. She is the sath-chith-aanandham.

Bhakti towards the Devi is the highest of all forms of mukti. Deiva Bhakti is superior even to Mukti. Mukti gives one of these four namely SAlokya, SAroopya, SAmeepya, and NirvANa. But the Bhaktas do not want any of these things.

They want to serve of the Lord. They do not want anything more than that. The state of becoming a Siva, or of becoming an Amara or an immortal, or of becoming a BrahmA, or assuming a divine form or Moksa do not appeal to the true bhakta.

Mukti is without any service while Bhakti increases this service. The service of the Highest Lord severs the ties of Karmas (past actions). This service is really the True Knowledge.

I have now told you the Real Truth which will lead to auspicious results. Now you can go back freely as you wish."


Having spoken thus Yama, the son of Soorya, brought SAvitri's husband back to life, blessed them and got ready to go to His own abode.

SAvitri became sad at the thought of separation of Yama, who had been a good companion and an excellent Guru, bowed down at His feet and began to cry.

 
bhaargava puranam - part 1.

24e. அறுகின் பெருமை

அந்தணனாக வந்து தம் முன் நிற்பவர்
சிந்தையில் நிலைத்த விநாயகரே எனத்

தொழுது பணிந்தனர் தம்பதியர் இருவரும்;
வேழமுகன் தந்தான் தன் திவ்ய தரிசனம்.

திருவடிகளில் இணையும் வரம் வேண்டிட
திருவருள் புரிந்து வரம் தந்தான் ஐயன்!

ஜனகன் உணர்ந்தான் தன் தவற்றினை!
ஜனகன் விரைந்தான் திரிசரன் இல்லம்.

“மாயையை அகற்றி அறிவு புகட்டினீர்;
மார்க்கம் சொல்வீர் முக்தி அடைந்திட!”

உபதேசித்தான் கணபதி ஜனகனுக்கு;
உய்ந்தான் அவன் அதைப் பின்பற்றி!”

முனிவரின் மொழிகளைக்கேட்டு முடித்த
மனைவி ஆசிரியை கேட்டாள் இதனை.

” சாயுஜ்யம் தந்தார் ஒரு அறுகுக்கு – பதி
னாயிரத்துக்கு எதுவும் தரவில்லையே நமக்கு ?”

‘பொன்னும், மணியும் விரும்பும் இந்தப்
பெண்ணை உணரச் செய்வேன் உண்மை!’

ஆனைமுகனை அர்ச்சித்த அறுகு ஒன்றை
அவளிடம் தந்து இம்மொழி பகன்றார் அவர்.

“கொடு இந்தப் புல்லை இந்திரனிடம் சென்று;
எடைக்கு எடை பொன் தருவான் உனக்கு!”

அறுகை எடுத்துச் சென்றாள் ஆசிரியை;
அமரர் கோனிடம் வேண்டினாள் பொன்!

“குபேரனிடம் செல்வீர் தாயே!” என்றான்;
“குபேரன் தருவான் எடைக்கு எடை பொன்!”

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


#24e. The greatness of green Arugu grass

Thrisaran and Virochanai realized that the Brahmin standing in front of them was none other than Lord VinAyaka. They prostrated in front of him.

VinAyaka revealed himself in his full glory. The couple prayed for the boon of merging with his lotus feet. Lord VinAyaka granted them sAyujya mukthi.

King Janakan realized his folly. He too rushed to the house of Thrisaran. He worshiped the lord and said, “You have removed my ignorance and given me the right knowledge. Please tell me how to attain liberation from samsArA.”

Lord taught him the right path. king Janakan followed it austerely and got liberated from the samsArA when his time came.

After listening to this Asiriyai asked her husband sage KouNdinya this question. “For a single arc of green Arugu grass Lord VinAyaka gave that couple sAyujya mukthi.
We are doing archanai with ten thousand arcs of Arugu grass everyday. Yet he has not given us anything!”

Sage KouNdinya decided to teach her the futility of the earthly wealth and the greatness of bhakti. He gave her a single arc of the green grass offered to Lord VinAyaka and told her, “Take this to Indra. He will give you an equal amount of gold”

She took the grass and went to Indra. He paid his respects to her and said with reverence “Mother ! Please go to KubEran. He will give you an equal amount of gold for this grass.”
 
Devi bhaagavatam - skanda 4

4#10b. மந்திர உபதேசம்


பிரஹலாதனிடம் விண்ணப்பித்தனர் அசுரர்கள்,
“மறுக்காமல் செல்லவேண்டும் தேவரிடம் தூது!

மதிக்கின்றனர் தேவர்கள் உம்மை நன்றாக!
மதிப்பார்கள் தேவர்கள் உம் தூதை நன்றாக!”

பிரஹலாதன் சென்றான் தேவர்களிடம்,
பிரஹலாதன் சொன்னான் தேவர்களிடம்,

“புரியப் போவதில்லை அசுரர்கள் இனிப் போர்.
தரிக்கப் போகின்றனர் மரவுரிகளை இனிமேல்!

ஆயுதங்களை உதறித் தள்ளிச் செய்வோம்
ஆய தவம் ஒன்றையே இனிமேல்!” என்றான்.

நம்பினர் தேவர்கள் இந்த மொழியினை
நிம்மதியாக இருந்தனர் சில காலத்துக்கு!

கண் காணித்தனர் தேவர்கள் அசுரரை!
கண்டு மகிழ்ந்தனர் தவத்தில் அசுரரை!

இன்ப வாழ்வு வாழ்ந்தனர் சுவர்க்கத்தில்!
துன்பம் தரும் அசுரரை மறந்தே போயினர்!

தவ வேடம் தரித்தனர் அசுரர்கள் – அதிகத்
தவிப்புடன் காத்திருந்தனர் சுக்கிரருக்காக.

மஹாதேவனிடம் சென்று கோரினார் சுக்கிரர்,
“மந்திர உபதேசம் வேண்டும் மஹாதேவா!

தர வேண்டும் தடையற்ற வெற்றியை எமக்கு!
பெறவேண்டும் தேவர் இடைவிடாத தோல்வி!

மாற்று மந்திரங்கள் எதுவும் தெரியக்கூடாது
மாற்றார் குலகுரு பிரஹஸ்பதிக்கு!” என்றார்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

4#10b. Mantra Upadesam

The asuras went to their king PrahlAd and requested him to go the Devas as a messenger. The Devas had high regard for PrahlAd and would never doubt his words.

PrahlAd went to the Deva and said, “The asura have laid down their arms and become tapasvis. They want to live in peace doing penance.” The Devaas believed in him and his words.

They watched over the asuras and found them immersed in doing deep penance. The Deva felt relieved and lived happily in Heaven. In a shirt time they forgot all about the troublesome asuraas.

The asuras were waiting impatiently for the return of their guru Sukran after finishing his mission successfully. Sukran went to Lord Siva and wished for this boon!

“Oh Lord! I wish for your mantra upadesam which will give us the AsurAs constant victory and supremacy over everyone else. The Deva guru Bruhasptati should not know the mantra which can cancel the effect of this mantra!“
 
DEVI BHAAGAVATHAM - SKANDA 9

9#39g. பிரியாவிடை
யமதர்மன் வாழ்த்தினான் சாவித்ரியை!
யமதர்மன் அளித்தான் பிரியாவிடையை!

"இன்பமாக வாழ்வீர் ஒரு லக்ஷம் ஆண்டுகள்;
இறுதியில் அடைவீர் தேவியின் லோகத்தை!

அனுஷ்டிப்பாய் சாவித்திரி விரதத்தை விடாமல்;
அளிக்கும் அது மங்கையருக்கு மோக்ஷப் பலனை!

ஜ்யேஷ்ட மாத சுக்லபக்ஷ சதுர்த்தியில் விரதம்
செய்ய வேண்டும் பதினான்கு ஆண்டுகளுக்கு!

பாத்ரபத மாத சுக்ல பாக்ஷ அஷ்டமியில் விரதம்
செய்வாய் மஹாலக்ஷ்மிக்குப் பதினாறு ஆண்டு!

செவ்வாயன்று பூஜிப்பாய் மங்கள சண்டிகையை;
சுக்ல பக்ஷ சஷ்டியில் பூஜிப்பாய் சஷ்டி தேவியை;

ஆடி மாத சங்கராந்தி ராதிகா தேவியை பூஜிக்க;
அம்மனை மறவாதே சுக்ல பக்ஷ அஷ்டமிகளில்.

தரும் இம்மையில் சுகம், மறுமையில் தேவிபதம்!"
திரும்பினாள் சாவித்திரி கணவனுடன் இருப்பிடம்.

அனுஷ்டித்தாள் விரதங்களை; பெற்றாள் புத்திரர்களை;
அனுபவித்தாள் சுக போகங்களை லக்ஷம் ஆண்டுகள்!

அடைந்தான் சத்யவானின் தந்தை கண் பார்வை!
அடைந்தான் சத்யவானின் தந்தை ராஜ்ய போகம்!

அடைந்தான் சாவித்திரியின் தந்தை புத்திரர்களை!
அடைந்தாள் சாவித்திரி தேவியின் திருப்பதங்களை!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

9#38. BIDDING FAREWELL

Yam dhrama told SAvitri who was crying at his feet, "The chaste woman who worships the Moola Prakriti, in Yantra, or Mantra or in image, enjoys all pleasures in this world. In the end she goes to the Devi's loka called MaNi Dweepa.

The worshipper must worship all the manifestations of the Prakriti Devi, day and night. At all times one must worship the omnipresent DurgA, the Highest Eswari.

You will enjoy happiness for one lakh years and you will in the end go to the Deviloka or MaNi Dweepa. Now go back to your house and observe for fourteen years the vow called SAvitri-vrata which gives mukti for women,

This Vrata is to he observed on the fourteenth day of the white fortnight in the month of Jyestha. Also observe the MahA Lakshmi Vrata on the eighth day of the bright fortnight of the month of BhAdra. Continue the vrata for sixteen years consecutively without any break this vow.

The woman who practices with devotion this vrata will go to the abode of Moola Prakriti. You worship on every Tuesday Devi Mangala ChaNdika throughout the year.

Worship Sashti Devi on the sixth day of the bright fortnight every month. Worship ManasA Devi on the Sankranti day every year.

Worship RAdhA, on the Full Moon night in the month of KArtik. You should observe fasting on the eighth day in the bright fortnight and worship the VishNu MAyA Devi."

DharmarAja went back to His own abode. SAvitri went back home with her husband SatyavAn. After they reached their home, they narrated the incident to their friends.

In time, by the blessing of Yama, SAvitri’s father got sons and her father-in-law regained his eye-sight and his kingdom. SAvitri got many sons. For one lakh years, SAvitri enjoyed pleasures and ultimately went with her husband to the Devi's lokam.
 
BHAARGAVA PURAANAM - PART 1

24f. குபேரன்

ரிஷிபத்தினியை வணங்கினான் குபேரன்
ரிஷிபத்தினியை கௌரவித்தான் குபேரன்.

“என் பொக்கிஷங்கள் உள்ளன இங்கே;
எடுத்துக் கொள்வீர் எது தேவையோ”

“உன் செல்வம் வேண்டாம் குபேரா!
என் தேவை எடைக்கு எடை பொன்!”

தராசை நடுவில் நிறுவினான் குபேரன்;
தங்கக் கட்டியை வைத்தான் மறுதட்டில்!

தாழ்ந்து நின்றது புல் வைத்த தட்டு.
தங்கக் கட்டிகளை அதிகரித்தான்.

கூடைப் பொன்னை வைத்தபோதும்
எடைகள் சமமாகவே ஆகவில்லை.

தேவர்களின் சம்பத்து வந்தது அங்கு;
தேவசம்பத்து ஈடாகவில்லை புல்லுக்கு!

மும்மூர்த்திகள் ஏறினர் தங்கத் தட்டில்;
அம்மூர்த்திகளும் சமன் செய்யவில்லை!

விநாயகருக்கு அர்ச்சித்த ஓர் அறுகினை
அனாயாசமாக சமன் செய்ய முடியுமா?

“இல்லை இதற்கு ஈடாக எதுவும்” என
எல்லோரும் விரைந்தனர் முனிவரிடம்.

“அறுகம் புல்லின் மகிமையை உணர்த்த
அனுப்பினீர் போலும் இதை எம்மிடம்!”

ஆதி காரணனை அர்ச்சித்த அறுகுக்கு
ஏதும் ஈடாகாது என்று உணர்ந்தனர்

அன்புடன் அனுதினமும் அறுகினால்
அர்ச்சிக்கும் உமக்கு யார் இணை?”

கணங்கள் அறிவித்தன முனிகளுக்கு
கேவலம் அல்ல அறுகம் புல் என்று.

அறுகுகளால் ஐங்கரனை அர்ச்சித்து
அவர்களும் ஏகினர் விண்ணுலகம்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


#24 f. KubEran

KubEran welcomed the rushi patni. He did several honors to her and said, “Here is all my wealth. You may take anything you desire.” The rushi patni replied, “I do not covet your treasures KubEran. I was told to get gold equivalent to this green Arugu grass.”

KubEran set up a pair of scales. He put the green Arugu grass on one plate and a piece of gold in the other. The grass was heavier. He went on increasing the gold in the other plate and yet the grass remained heavier.

Now all the riches of the Deva was on the scales and even then they could not balance the grass. The Trinity themselves climbed on to the plate – which kept expanding to give more space – but the grass was heavier than all of them put together.

The truth dawned on them at last. The grass offered to VinAyaka was superior to everything else. Nothing can ever become equal to it.

They all went down to meet the sage KouNdinya. They told him,”Sire! you have made us realize the real worth of this Arugu grass. You worship lord VinAyaka with ten thousand arcs of grass everyday. None in the three worlds can become equal to you!”

The DEvagaNa told these to make the pujAris understand the greatness of the green Arugu grass. The pujAris did archanai with the green Arugu grass and found a place in the vimAnam and in the heaven when they left the world.
 
Devi Bhaagavatam - skand 4

4#10a. பிருகுவின் சாபம்

சுக்கிரர் கூறினார் அசுரர் கூட்டத்திடம்,
“உக்கிரம் வாய்ந்த நரசிங்க மூர்த்தி.

அழித்து விட்டார் ஹிரண்ய கசிபுவை.
அழித்தார் ஹிரண்யாக்ஷனை வராஹர்!

மீண்டும் எடுப்பார் பல அவதாரங்கள்;
மீண்டும் அழிப்பார் அசுரர் குலத்தை.

இல்லை விஷ்ணுவை வென்றிடும் சக்தி,
வெல்ல வேண்டும் சிவனாரின் உதவியால்.

மந்திர உபதேசம் பெற்று வருகிறேன்;
மந்த நிலை மாறிவிடும் அதன் பின்னர்.!”

செல்ல விரும்பிய சுக்கிரரிடம் இதனைச்
சொல்ல விரும்பினர் அசுர குல வீரர்கள்,

“திரும்ப நீர் வருவதற்குள் அசுரருக்குத்
தீங்கு நேர்ந்தால் என்ன செய்வது?” என,

“கால வசத்தால் பலவீனம் அடைந்தால்
காத்திருப்போம் பலம் பெருகும் வரை.

அமைதி காப்போம் பலம் பெறும் வரை;
அழிப்போம் பகைவரை அதன் பின்னர்.

ஞாலம் செய்யாததைக் காலம் செய்யும்
ஞாபகத்தில் கொண்டு நயமாக நடப்பீர்!

சாந்தமாகத் தவத்தில் காலம் கழித்தால்
சாராது ஆபத்து நான் வரும் வரையில் !”

மந்திர உபதேசம் பெறச் சுக்கிரர் சென்றார்
மகாதேவனை நாடிக் கயிலை மலைக்கு.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


4#10a. Sage Brugu’s Curse

Sukran told the asuras, “Narasimha moorthi killed HiraNyan and Varaaha moorthi killed HiraNyaakshan. Vishnu will take many more avatars to kill our race and our asura kings.

I do not have the power to defeat Vishnu. I have to go to Lord Siva to get mantra upadesam and become strong enough to deal with Vishnu”

The asura got worried and said, “We are very weak and if some calamity befalls us in your absence, we can’t face it ”

Asura Guru Sukran said, “If we become weak due to unfavourable time, we must bide for a favourable time. Once the time becomes favourable, we must move in and crush our enemies.

Time has more power and influence than anything else in the world. Live peacefully and do not get into any controversies with the Deva till I come back. You may spend your time in doing penance till I return.”

The asura agreed to this. Sukran went to Mount Kailash to get the mantra upadesam from Siva.
 
4#10b. மந்திர உபதேசம்

பிரஹலாதனிடம் விண்ணப்பித்தனர் அசுரர்கள்,
“மறுக்காமல் செல்லவேண்டும் தேவரிடம் தூது!

மதிக்கின்றனர் தேவர்கள் உம்மை நன்றாக!
மதிப்பார்கள் தேவர்கள் உம் தூதை நன்றாக!”

பிரஹலாதன் சென்றான் தேவர்களிடம்,
பிரஹலாதன் சொன்னான் தேவர்களிடம்,

“புரியப் போவதில்லை அசுரர்கள் இனிப் போர்.
தரிக்கப் போகின்றனர் மரவுரிகளை இனிமேல்!

ஆயுதங்களை உதறித் தள்ளிச் செய்வோம்
ஆயதவம் ஒன்றையே இனிமேல்!” என்றான்.

நம்பினர் தேவர்கள் இந்த மொழியினை
நிம்மதியாக இருந்தனர் சில காலத்துக்கு!

கண் காணித்தனர் தேவர்கள் அசுரரை!
கண்டு மகிழ்ந்தனர் தவத்தில் அசுரரை!

இன்ப வாழ்வு வாழ்ந்தனர் சுவர்க்கத்தில்!
துன்பம் தரும் அசுரரை மறந்தே போயினர்!

தவ வேடம் தரித்தனர் அசுரர்கள் – அதிகத்
தவிப்புடன் காத்திருந்தனர் சுக்கிரருக்காக.

மஹாதேவனிடம் சென்று கோரினார் சுக்கிரர்,
“மந்திர உபதேசம் வேண்டும் மஹாதேவா!

தர வேண்டும் தடையற்ற வெற்றியை எமக்கு!
பெறவேண்டும் தேவர் இடைவிடாத தோல்வி!

மாற்று மந்திரங்கள் எதுவும் தெரியக்கூடாது
மாற்றார் குலகுரு பிரஹஸ்பதிக்கு!” என்றார்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


4#10b. Mantra Upadesam

The asuras went to their king Prahlaad and requested him to go the Devas as a messenger. The Devas had high regard for Prahlaad and would never doubt his words.

Prahlaad went to the Deva and said, “The asura have laid down their arms and become tapasvis. They want to live in peace doing penance.” The Devaas believed in him and his words.

They watched over the asuras and found them immersed in doing deep penance. The Deva felt relieved and lived happily in Heaven. In a shirt time they forgot all about the troublesome asuraas.

The asuras were waiting impatiently for the return of their guru Sukran after finishing his mission successfully. Sukran went to Lord Siva and wished for this boon!

“Oh Lord! I wish for your mantra upadesam which will give us the Asuraas constant victory and supremacy over everyone else. The Deva guru Bruhasptati should not know the mantraa which can cancel the effect of this mantra!“
 
4#10b. மந்திர உபதேசம்

பிரஹலாதனிடம் விண்ணப்பித்தனர் அசுரர்கள்,
“மறுக்காமல் செல்லவேண்டும் தேவரிடம் தூது!
மதிக்கின்றனர் தேவர்கள் உம்மை நன்றாக!
மதிப்பார்கள் தேவர்கள் உம் தூதை நன்றாக!”
பிரஹலாதன் சென்றான் தேவர்களிடம்,
பிரஹலாதன் சொன்னான் தேவர்களிடம்,
“புரியப் போவதில்லை அசுரர்கள் இனிப் போர்.
தரிக்கப் போகின்றனர் மரவுரிகளை இனிமேல்!
ஆயுதங்களை உதறித் தள்ளிச் செய்வோம்
ஆயதவம் ஒன்றையே இனிமேல்!” என்றான்.
நம்பினர் தேவர்கள் இந்த மொழியினை
நிம்மதியாக இருந்தனர் சில காலத்துக்கு!
கண் காணித்தனர் தேவர்கள் அசுரரை!
கண்டு மகிழ்ந்தனர் தவத்தில் அசுரரை!
இன்ப வாழ்வு வாழ்ந்தனர் சுவர்க்கத்தில்!
துன்பம் தரும் அசுரரை மறந்தே போயினர்!
தவ வேடம் தரித்தனர் அசுரர்கள் – அதிகத்
தவிப்புடன் காத்திருந்தனர் சுக்கிரருக்காக.
மஹாதேவனிடம் சென்று கோரினார் சுக்கிரர்,
“மந்திர உபதேசம் வேண்டும் மஹாதேவா!
தர வேண்டும் தடையற்ற வெற்றியை எமக்கு!
பெறவேண்டும் தேவர் இடைவிடாத தோல்வி!
மாற்று மந்திரங்கள் எதுவும் தெரியக்கூடாது
மாற்றார் குலகுரு பிரஹஸ்பதிக்கு!” என்றார்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


4#10b. Mantra Upadesam

The asuras went to their king Prahlaad and requested him to go the Devas as a messenger. The Devas had high regard for Prahlaad and would never doubt his words.

Prahlaad went to the Deva and said, “The asura have laid down their arms and become tapasvis. They want to live in peace doing penance.” The Devaas believed in him and his words.

They watched over the asuras and found them immersed in doing deep penance. The Deva felt relieved and lived happily in Heaven. In a shirt time they forgot all about the troublesome asuraas.

The asuras were waiting impatiently for the return of their guru Sukran after finishing his mission successfully. Sukran went to Lord Siva and wished for this boon!

“Oh Lord! I wish for your mantra upadesam which will give us the Asuraas constant victory and supremacy over everyone else. The Deva guru Bruhasptati should not know the mantraa which can cancel the effect of this mantra!“
 
DEVI BHAAGAVATAM - SKANDA 9

9#39a. மஹா லக்ஷ்மி

பரமாத்மாவின் இடப்பக்கம் தோன்றியது
படைப்புக்கு முன் அழகிய பெண்ணுருவம்!

பிரிந்தாள் இரண்டாக அந்த முதல் பெண்
சரி சமமான பெருமை, மேன்மைகளோடு.

தேஜஸ், நிறம், வயது, காந்தி மற்றும்
யசஸ், குணம், ஆடை ஆபரணங்கள்;

அன்பு, அருள், பிரியம், புன்னகை போன்ற
அனைத்திலும் சமமான இரண்டு தேவியர்.

வலது பக்கத்தில் தோன்றியவள் ராதிகா;
இடது பக்கத்தில் தோன்றியவள் லக்ஷ்மி.

லக்ஷ்மி தேவியே மஹாலக்ஷ்மியும் ஆவாள்;
லக்ஷ்மி என்றால் 'கருணையுடன் காண்பவள்'!

பத்தினியாவாள் உத்தமன் வைகுந்தனுக்கு;
நித்தியம் உள்ளாள் காணும் இடம் எல்லாம்!

உள்ளாள் சுவர்க்கத்தில் சுவர்க்க லக்ஷ்மியாக;
உள்ளாள் பாதாளத்தில் நாக லக்ஷ்மியாக;

உள்ளாள் அரசர்களிடம் ராஜ லக்ஷ்மியாக;
உள்ளாள் இல்லங்களில் கிருஹ லக்ஷ்மியாக;

உள்ளாள் யக்ஞங்களில் தக்ஷிணா ரூபிணியாக;
உள்ளாள் தாமரை மலரில் அதன் சோபையாக;

உள்ளாள் சந்திரனில் அதன் சந்திரிகையாக;
உள்ளாள் சூரியனில் அதன் காந்தியாக.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


9#39a. MahA Lakshmi (1)

Before the creation came into existence, a beautiful feminine figure appeared from the left side of ParamAtmA. It divided in to two new Devis of equal glories and greatness.

Their brilliance, their age, their colour and their beauty were are all identical. Their yas'as, their dress, their ornaments and their temperaments were all exactly identical in them.

They were identical in their love, grace, affection and their smiling countenance. The one who emerged from the right side was RAdhika and the one who emerged from the left side was Lakshmi.

Lakshmi and MahA Lakshmi are one and the same. The name 'Lakshmi' means "one who sees with merciful eyes"

Lakshmi is the Vishnu-patni; Lakshmi exists everywhere as auspiciousness. She is the Swargga Lakhmi in the Heaven; She is the NAga Lakshmi of PAtAla; She is the RAja Lakshmi of the kings and rulers; She is the Gruha Lakshmi in every house.

She is the DakshiNa Devi in YAga and YagnAs; She is the beauty of the lotus flowers, She is cool luminescence of the Moon and the brilliance of the shining sun.


 
BHAARGAVA PURAANAM - PART 1.

#25a. வன்னிப் பத்திரம்

பிரமனிடம் கேட்டான் மன்னனின் தந்தை,
“அறுகு இல்லாவிடில் செய்ய வேண்டியது?”

“சமம் ஆகும் வன்னிப் பத்திரம் அறுகுக்கு!
சமம் ஆகும் மந்தார மலர் அறுகினுக்கு!

வேடன் வீமன் கொடுமையின் வடிவம்;
வாழ்ந்து வந்தான் அதேயம் நகரில்.

வாழ்வாதாரம் வழிப்பறிக் கொள்ளை!
வருந்தியது இல்லை வழிப்பறி செய்ய.

அந்தணர் வந்தனர் அக்காட்டு வழியே.
அடித்து அபகரித்தான் அவர் பொருளை.

அரக்கன் கண்டான் அங்கு நடந்தவற்றை;
அடையத் துடித்தான் அவனும் அவற்றை.

அரக்கன் துரத்தினான் வேடன் வீமனை;
அரக்கனுக்கு அஞ்சி ஏறினான் வன்னி மரம்!

அசைந்த மரத்திலிருந்து விழுந்தது ஓரிலை;
அடியில் இருந்ததோ ஆனைமுகன் சிலை.

வீமனைத் தொடர்ந்து ஏறினான் அரக்கன்;
விழுந்தது மேலும் ஓரிலை அச்சிலை மீது!

சண்டை இட்டனர் கட்டிப் பிடித்துக் கொண்டு;
மண்டை உடைந்திட கீழே வீழ்ந்து மடிந்தனர்.

வன்னிப் பத்திரம் சிலை மீது விழுந்ததால்,
விண்ணுலகு ஏகினர் திவ்ய ரூபத்துடன்!

அன்பு என்பதையே அறியாத அவ்வேடனும்
துன்புறுத்துவதே ஒரு தொழிலான அரக்கனும்,

ஒற்றை வன்னி இலையின் மகிமையால்
பெற்றனர் சீரிய விண்ணுலக வாழ்வினை!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


#25A. The Vanni leaf

King Kruthaveeryan’s father asked Brahma, “What is to be done, if we do not have the green grass for the VinAyaka Puja?”

Brahma replied to him, “The leaf of the Vanni tree is as great as the green grass. The flower of the MandAra tree is as great as the green grass. Listen to this story to learn about the greatness of the Vanni leaf.

There lived a hunter named Beeman. He was the very personification of cruelty. He lived near a city called Adheyam. His mode of life was waylaying the passers by and looting their wealth. He never regretted nor repented for his action.

A few Brahmins were passing through the forest. He killed them all and took hold of their belongings. An asuran was watching the happenings. He himself coveted the loot and started chasing the hunter Beeman.

Beeman ran fast and climbed up on a Vanni tree. As he climbed a leaf of the tree fell down on the statue of VinAyaka sitting in its shade. The asuran also climbed on the same tree. Now one more leaf fell on the statue of god.

They fought on the tree for a while and fell down together from it and died. Since they had each offered a leaf of Vanni tree to VinAyaka, they were given divya sareeram and a place in the Heaven.

Beeman did not know what was kindness and the asuran had lived by harassing people. Even such seasoned sinners are released from their sins by offering to VinAyaka a single Vanni leaf – knowingly or unknowingly.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 4

4#10c. கடின தவம்

சுக்கிரன் விரும்பினான் அசுரரின் நன்மையை!
சிவன் விரும்பினான் அமரரின் நன்மையை!

“விரதம் ஒன்று புரிய வேண்டும் சுக்கிரா!
பரிபக்குவம் அடைந்து உபதேசம் பெற.

ஓராயிரம் ஆண்டுகள் தலை கீழாக இருந்து
ஓமப்புகை மட்டுமே உட்கொள்ள வேண்டும்!”

ஒப்புக் கொண்டார் சுக்கிரர் விரதம் புரிந்திட;
தப்பாமல் செய்தார் மஹாதேவன் கூறியதை.

அறிந்தனர் தேவர்கள் இத்தவம் குறித்து!
புரிந்தது அசுரர் செய்த தவத்தின் நோக்கம்.

தவ வேடம் தாங்கிக் காத்திருக்கின்றனர்
தங்கள் குலகுரு சுக்கிரர் வருகைக்காக.

யுத்தம் புரியச் சென்றனர் தேவர் அசுரர்களுடன்
உத்தமர் வேடம் பூண்டனர் அசுரர் அப்போதும்

“பலஹீனம் அடைந்தோம்; அபயம் புகுந்தோம்
பல காலம் செய்கின்றோம் கடும் தவம் யாம்.

சொந்தக் காரணங்களுக்காக குரு சுக்கிரர்
செய்கிறார் இந்தக் கோரத் தவம்!” என்றனர்.

“நிராயுத பாணிகளுடன் புரியலாகுமா போர்?
சரணாகதி அடைந்தவரைத் தாக்கலாகுமா !”

அசுரர்களின் கூற்றை நம்பவில்லை அமரர்.
அசுரர்களின் வஞ்சகத்தை அறிவார்கள் நன்கு.

“போயிருக்கின்றார் சுக்கிரர் உம் பொருட்டே;
பொய் கூறுகின்றீர்கள் அனைவரும் ஒன்றாக.

தர்மமும் நீதியும் யுத்தத்தில் ஏது ? உடனே
தயாராகுங்கள் ஆயுதமேந்தி போருக்கு!”

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


4#10c. The hard penance

Sukran wished for the welfare of the Asuras and Sivan for that of the Devas and he made it very difficult for Sukran. Sivan told Sukran, “You will have to perform a difficult vratham to get purified for the mantra upadesam. You must hang upside down and consume nothing but the smoke emerging from the homa kundam for one thousand years”

Sukran agreed to this condition willingly. He performed the harsh vratham as told by Sivan,The Devaas came to know about this and the purpose of the vratam. They knew that the Asuras have tricked them by donning on the clothes of a mendicants and tapasvis, The Deva went to fight a war with the Asuras.

The asuras told them,”We have become very weak now. That is why awe are performing tapas. Guru Sukran must be performing his vratam for a personal gain and not for the gain of our race. We have laid down our arms. You can’t fight with people who do not wield arms. We have surrendered to you long back”

But the Deva knew the treacherous nature of the asuras and would not believe their words. The Deva said, “All is fair in love and war. Don you armours, take up your weapons and come to fight with us”
 
DEVI BHAAGAVATAM - SKANDA 9

9#39b. மஹாலக்ஷ்மி (2)
"லக்ஷ்மிகரமாக உள்ளது!" என்கின்றோம்
லக்ஷணமான பொருளை எல்லாம் நாம்.

ஆடைகள், ஆபரணங்கள், பழங்கள், ரத்தினங்கள்;
அரசன், அரசபத்தினி, திவ்ய ஸ்திர, உத்தம ஸ்திரீ,

பயிர்கள், தூய்மையான இடம், தேவியின் பதுமை,
தெய்வச்சிலை, மாணிக்கம், முத்துமாலை, வைரம்,

பால், சந்தனம், மரக் கிளைகள், புது மேகங்கள்;
பலவற்றிலும் உள்ளாள் சௌபாக்கிய உருவமாக.

பூஜித்தான் விஷ்ணு லக்ஷ்மியைப் பாற்கடலில்,
புரட்டாசி, தை மாதங்களில் மங்கள வாரங்களில்.

பூஜித்தான் பிரம்மன் புரட்டாசி சுக்ல அஷ்டமியில்
பூஜித்தான் மனு மஹாலக்ஷ்மியை வருட முடிவில்

பூஜித்தான் மனு தைமாத சங்கராந்தியில் லக்ஷ்மியை;
பூஜித்தான் மனு மாசிமாத சங்கராந்தியில் லக்ஷ்மியை!

தேவர்கள், நாகர்கள் பூஜித்தனர் மஹாலக்ஷ்மியை
தானவர்கள், மானவர்கள் பூஜித்தனர் லக்ஷ்மியை

துறவிகளும், முனிவர்களும் பூஜித்தனர் லக்ஷ்மியை
புரவலரும் புலவரும் பூஜித்தனர் மஹாலக்ஷ்மியை

அதிஷ்டான தேவதை இவள் செல்வபோகங்களுக்கு
அதிஷ்டான தேவதை இவள் சகல சம்பத்துக்கும்

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

9#39b. Mahaalakshmi (2)

Lakshmi is the lustre and beauty of the ornaments, precious gems, sweet fruits, pure water,powerful kings, beautiful queens, heavenly women, of all the houses people live in, grains, new clothes, clean and holy places, images, auspicious jars, pearls, jewels, crest of jewels, garlands, diamonds, milk, sandal, beautiful twigs and fresh rain clouds.

She was first worhipped in Vaikuntha by NArAyaNA. Brahma worshipped her next.
Then she was worshipped by SvAyambhuva Manu, Indra, men, Munis, Rishis, householders, Gandharvas and NAgas.

BrahmA worshipped her on the bright eighth day in the month of BhAdra. Vishnu worshipped her on the Tuesday in the months of Pausha, Chaitra, and BhAdra. Manu worshipped Her on the Pausha SankrAnti and on the Tuesdays in the month of MAgha.

MahA Lakshmi was worshipped by Indra and by Mangala (Mars) on Tuesday. She was then worshipped by Kings, poets, sages, rushis, DAnavas and MAnavAs.

Her worship expanded and spread to all the places. She is the Presiding Deity of all wealth; She is the Devi who bestows wealth and all the pleasures that are associated with wealth.
 
BHAARGAVA PURAANAMA - PART 1

#25b. சாம்பன்-1

புண்ணியகீர்த்தி விதர்ப்பதேச மன்னன்;
கண்ணிய அரசனின் மனைவி மதனாவதி.

எல்லாச் செல்வங்களும் பெற்றவர்களுக்கு
இல்லை தலையாய மழலைச் செல்வம்.

காலம் முடிந்தது, வாழ்வை நீத்தனர்;
ஞாலம் ஆண்டிட இல்லை ஒரு வாரிசு!

துத்தரிடனும் வருந்தியவன் புத்திரனின்றி;
புத்திரன் பிறக்கவில்லை அரக்கர் நட்பால்.

புத்திரன் பிறந்தான் அவன் மனைவிக்கு,
எத்தன் ஒரு செம்படவன் தொடர்பால்!

செம்படவனுக்குப் பிறந்தவன் சாம்பன்;
அம்சம் பெறவில்லை அரசனுக்குரியவை!

துத்தரிடன் ஆவான் மன்னனின் சுற்றம்;
துத்தரிடன் மகனை ஆக்கினர் அரசனாக!

தாய்க்குப் பிள்ளை தப்பாது பிறந்ததால்,
துய்த்தான் காமசுகம் சதாசர்வ காலமும்!

ஆட்சிப் பொறுப்பை அளித்து விட்டான்
மாட்சிமை இல்லாத துர்புத்தியினிடம்.

சொல்லொணாத் துயர் அடைந்தது நாடு
பொல்லாத துர்புத்தியின் அரசாட்சியில்.

வேட்டைக்குச் சென்றனர் அனைவரும்;
வேழமுகன் ஆலயம் இருந்தது அங்கே.

அமைத்தவர் வசிஷ்டர் தசரதனுக்காக;
ஆராதித்தனர் அங்கு வாழும் மக்கள்.

பக்தி என்ற ஒன்று இல்லாது போயினும்,
படைத்தான் தன பொருட்களை ஐயனுக்கு!

வேடிக்கையாகச் செய்த இச்செயல்
விடிவுகாலத்தைத் தந்தது பின்னர்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


25b. SAmban

Punyakeerthi was the king of Vidarpa DEsam. His queen was MadanAvathi. They had everything except children to make their happiness complete. When their time came, they left the world without leaving a prince to take over the ruler ship.

Duththaridan was the king’s close relative. He too had suffered without any child for long. Because of his close association with asuras, he did not have any child.

Later his wife conceived through a fisherman and SAmban was born to her. SAmban was born in the royal family but did not have the qualities associated with it – since his real father was after all a common fisherman.

SAmban was made the new king. He took after his mother and spent all his time in enjoying carnal pleasures. He appointed Durbuddhi as his representative to rule the country. Durbuddhi was a wicked man as his name suggested. He made the lives of the citizens miserable.

One day they all went for on a hunting expedition. They hunted many wild animals. On the way back, they saw a VinAyaka temple. It had been established by Vasishtar for King Dasarathan.

The people were worshipping Lord VinAyaka. SAmban and his men also offered all they had with them to the god. They went round the temple. Though they lacked true bhakti while doing this, these childish acts paid them rich dividends later on.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 4

4#10d. குருவின் அன்னை

அஞ்சி ஓடினர் அசுரர்கள் அங்கிருந்து – ஓடித்
தஞ்சம் அடைந்தனர் பிருகுவின் மனைவியை.

குருவின் தாயும் அவரே ஆவார் – அதனால்
விரும்பி அளித்தார் அபயம், அடைக்கலம்!

விடவில்லை தேவர்கள் ஓடிச் சென்ற அசுரரை;
விரட்டி வந்தனர் சுக்கிரரின் ஆசிரமத்துக்கும் !

வையத் தொடங்கினர் அசுரரை தேவர்கள்;
நையப் புடைத்தனர் அசுரரை தேவர்கள்.

“அடைக்கலம் அளித்துள்ளேன் நான் அசுரருக்கு
புடைக்காதீர்கள்!” என்றாலும் நிறுத்தவேயில்லை.

அழுதனர் அசுரர்கள் குருவின் தாயிடம்,
தொழுதனர் தேவர்களிடமிருந்து காத்திட.

“அஞ்சாதீர்கள் தஞ்சம் அடைந்தவரைக்
கொஞ்சமும் கைவிடேன்! ” என்றாள்!

தூண்டினாள் நித்திரா தேவியை அன்னை !
தூங்கினர் தேவர்கள் அனைவரும் அங்கே!

போருக்கு வந்தவர் யாரும் மிஞ்சவில்லை!
தறுமாறாக ஆழ்ந்து விட்டனர் உறக்கத்தில்!

வந்தார் விஷ்ணு அங்கு அப்போது – வந்து
இந்திரனை அழைத்தார் அருகில் வருமாறு.

அரை மயக்கத்தில் இருந்தான் இந்திரன்!
அமரர்கோன் சென்றான் விஷ்ணுவிடம்.

மயக்கம் தெளியத் தொடங்கியது அமரருக்கு!
தயங்கவில்லை சிறிதும் குருவின் அன்னை.

“விழுங்கப் போகின்றேன் உங்கள் இருவரையும்
முழுதாக!” என்றாள் விஷ்ணு, இந்திரனிடம்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி



4#10d. Guru Sukran’s mother

The Asuraas took to their heels and took refuge in guru Sukran’s ashram. Sage Brugu’s wife was the mother of Guru Sukran and she gave them refuge. But the Devaas did not spare the asuras. They chased them into the ashram and bet the asuras nicely scolding them in their choicest words.

Brugu’s wife tried to stop the Deva but in vain! Meanwhile the asuraas beaten up and abused by the Deva cried piteously. Brugu’s wife had accumulated her own share of the power of penance. She invoked Nidraa Devi who made all the Devaas go to sleep then and there. Not one Devaa was spared and everyone went into deep slumber.

Vishnu came there at that time. He tied to wake up Indra and asked him to come closer. At that point the spell of the deep sleep was broken and all the Deva woke up.

Brugu’s wife did not hesitate for a moment but said to Vishnu and Indra, “I am going to swallow you both whole!“
 
DEVI BHAAGAVATAM - SKANDA 9

9#40a. துர்வாசர் சாபம்
காட்டில் புரிந்தான் இந்திரன் மது மயக்கத்தில்
காம லீலைகள் பல, அப்சரஸ் ரம்பையுடன்!

சென்றார் துர்வாசர் அவ்வழியே கைலாசம்;
செலுத்தினான் மரியாதை இந்திரன் அவருக்கு.

மகிழ்ந்தார் முனிவர் இந்திரன் பணிவு கண்டு!
நெகிழ்ந்து அளித்தார் பாரிஜாத மாலையை!

வீசினான் இந்திரன் ஐராவதத்தின் மீது மாலையை.
நேசித்தவனை விட்டுக் கானகம் சென்றது யானை!

கொண்டார் கோபம் துர்வாசர்; தந்தார் சாபம்
" லக்ஷ்மி நீங்கட்டும் உன் சுவர்க்கத்திலிருந்து!'

அழுதான் இந்திரன் தன் செயலுக்கு வருந்தி;
தொழுதான் முனிவரின் பாதங்களில் வீழ்ந்து.

"கேட்கவில்லை நான் இழந்துவிட்ட சம்பத்தை!
கேட்கின்றேன் புத்தியையும், ஞானத்தையும்.

காரணம் செல்வமே என் அகம்பாவத்துக்கு;
காரணம் செல்வமே என் அறியாமைக்கும்!

முக்தி மார்க்கத்தைத் தடுப்பது செல்வம்!
பக்தி மார்க்கத்தைத் தடுப்பது செல்வம்!"

பணிந்தான் துர்வாச முனிவரை மீண்டும்;
தணிந்தார் தம் சினம் துர்வாச முனிவரும்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

9#40a. Sage DhurvAsa

Indra spent a long time with the apsaras Ramba in a forest - intoxicated with both lust and drinks. Sage DurvAsA passed that way on his way to KailAsh from Vaikuntham.

Indra paid his respects to the sage who was well pleased and presented him with a garland of PArijAta flowers given to him by Vishnu himself.

Indra threw the garland carelessly on the head of his four tusked white elephant Airavat. It ran away leaving him, deeper into the forest to do penance. Indra could not stop it.

Sage DurvAsA got wild seeing the manner in which Indra had humiliated the divine prasAdam of Sri Vishnu and cursed Indra in a surge of anger,"May Lakshmi Devi leave from your Amaravati!"

Indra repented for his careless behavioUr and begged for forgiveness, falling at the feet of the sage. He said, "I do not seek to get back the wealth which has vanished with Lakshmi Devi from AmarAvati. I only seek good wisdom and true knowledge.

I have realized that it is the accumulated wealth that creates the arrogance in a person. It is the wealth that causes ignorance in a person.

It blocks his path towards liberation. It blocks the way to bakthi maarggam. Please grant me wisdom and your pardon!" IndrA begged falling at the feet of sage DurvAsA.


 
BHAARGAVA PURAANAM - PART 1.

#25c. சாம்பன்-2

பொல்லாத சாம்பனின் காலம் முடிந்தது;
எல்லோரும் ஏகும் எமலோகம் சென்றான்.

பட்டியலைப் படித்தான் சித்திரகுப்தன்
பட்டியல் முழுவதும் பண்ணிய பாவங்கள்!

ஒருமுறை விளையாட்டாக சாம்பன்
பொருட்களைப் படைத்தான் ஐயனுக்கு.

ஆலயத்தைச் சுற்றி வந்து மக்களுடன்
ஆராதித்தான் ஆனைமுகத் தேவனை.

பாவங்களுக்கு உழன்றான் நரகத்தில்!
பல பிறவி எடுத்தான் விலங்குகளாக!

சாம்பன் பிறந்தான் வேடன் வீமனாக;
அமைச்சன் துர்புத்தியே அந்த அரக்கன்!

விநாயகரை வேடிக்கையாகத் தொழுதது
விரும்பி ஏறச் செய்தது வன்னி மரத்தில்!

விழுந்த வன்னி இலைகள் இவர்களை
விடுவித்தன பாவப் பிறவிகளில் இருந்து.”

பிரமன் தொடர்ந்தான் மன்னன் தந்தையிடம்,
மரத்தடி விநாயகரின் அருமை பெருமைகளை.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
DEVI BHAAGAVATAM - SKANDA 4

4#10e. சக்ராயுதம்

ஏவினாள் குருவின் அன்னை நித்திரா தேவியை
மேவினாள் நித்திரா தேவி அவ்விருவர் மீதும்.

அழுது புலம்பினர் தேவர்கள் இப்போது!
அழுகுரல் கேட்டு விழித்தனர் இருவரும்!

“நம்மை அவள் விழுங்குவதற்கு முன்பு
நாம் அவளை அழிக்க வேண்டும் பகவன்!

அஞ்சற்க ஸ்திரீ ஹத்தி தோஷத்துக்கு!
அஞ்சற்க அவர் உமது மாமியார் என்று!”

தூண்டினான் இந்திரன் மஹாவிஷ்ணுவை;
தாண்டினார் தர்ம நீதிநெறிகளை விஷ்ணு.

சிந்திக்கவில்லை விஷ்ணு சிறிதளவும்;
சிந்தித்தார் விஷ்ணு தன் சக்கராயுதத்தை .

வந்து அமர்ந்தது சுதர்சனச் சக்கரம்
வலக் கரத்தில் விரலில் லாவகமாக.

பிரயோகித்தார் அதை பிருகு மனைவி மீது;
தரையில் விழுந்தாள் அவள் தலை வேறாகி.

முனிவர்கள் சினத்தை அறியாதவர் யார்?
முனிவர்கள் சாபத்துக்கு அஞ்சாதவர் யார்?

சபிப்பார் முனிவர் இதை அறிந்ததும்;
சகிக்க முடியுமா அவர் தரும் சாபத்தை?

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

4#10e. Sudarsanam

Brugu’s wife invoked the Nidraa Devi to make Vishnu and Indra fall asleep. Now the Devas started crying. The two Gods woke up from sleep on hearing the cry of the Devas.

Indra told Vishnu,” Let us finish her off before she get a chance to swallow both of us. Do not hesitate about the sthree haththi dosham. Do not hesitate that she is your mother in law.” Vishnu was properly brainwashed and did not pause to think of the consequences of his impulsive action.

Vishnu commanded his Sudarsanam to appear and it descended on the index finger of his right hand. Vishnu let it go and Brugu’s wife fell dead on the ground with her head severed.

Who is not aware of the wrath of a rushi? Who can face it and accept the curse given by him?
 
DEVI BHAAGAVATAM - SKANDA 9

9#40b. துர்வாசர் (2)

சினம் தணிந்த துர்வாசர் இந்திரனுக்கு பல
நலம் தரும் கருத்துக்களை எடுத்துரைத்தார்.

"சம்பத்து இருளாகச் சூழ்ந்து விடும் மதியை!
சம்பத்து மூடனாக்கி விடும் மதியை மயக்கி.

சம்பத்துப் பெருக்கும் ரஜோகுணக் காமங்களை;
சம்பத்து அழிக்கும் ஸத்துவ குண நலன்களை.

இருவகையினர் நாடுவர் விஷய சுகங்களை;.
ஒருவகை ராஜஸர்; மறு வகை தாமஸர்கள்.

சாஸ்திரம் அறியாதவன் தாமஸ விஷயாந்தகன்!
சாஸ்திரம் அறிந்தவன் ராஜஸ விஷயாந்தகன்!

இரு மார்க்கங்களுக்கு வழி காட்டும் சாஸ்திரம்;
பிரவிருத்தி பீஜம், நிவிருத்தி பீஜம் என்பவை.

தேடுகின்றன தேனீக்கள் மலர்களில் தேனை;
நாடுகின்றனர் ஜீவர்கள் விஷயங்களில் சுகத்தை!

சஞ்சரிக்கின்றனர் பிரவிருத்தி மார்க்கத்தில்;
சஞ்சலம் அடைகின்றனர் பல இன்னல்களால்.

கர்ம வினைப் படி பிறவிகள் எடுத்து விடுத்து
சம்சாரச் சகதியில் மாட்டிக் கொள்கின்றனர்.

ஆயிரத்தில் ஒருவன் விரும்புகின்றான் - சம்சாரப்
பேயிடமிருந்து விடுதலை பெற வேண்டும் என்று.

சத்சங்கத்தில் சேர்க்கின்றார் கடவுள் - அவனுக்குத்
தத்துவ ஞானம் தந்து முக்திக்கு வழி காட்டுகிறார்.

யோகத்திலும், தவத்திலும் ஈடுபடுபவன் உயர்ந்தவன்
போகத்திலும், காமத்திலும் ஈடுபடுகின்றவனை விட!"

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

9#40b. Sage DurvAsA (2)

The anger of Sage DurvAsA subsided now and he started giving his upadesam to Indra.

"Wealth will cloud one's thinking capacity. It will make him a fool by causing delusions. Wealth flames up and increases the desires born out of Rajo GuNam. It destroys the wisdom born out of Satva GuNam.

Two kinds of people desire the worldly pleasures - the RAjasic perons and the TAmasic persons. The TAmasic are ignorant of the SastrAs and are known as Tamasa VishayAntaka. The RAjasic poeple know the SastrAs and are known as the RAjasa VisjaYAntaka.

SastrAs show us two different paths - the Pravritti Maarggam and the Nivritti Maarggam. Bees are always looking for honey. The jeevAs are always looking for pleasure and happiness.

Most of the JeevAs choose the Pravritti MArggam and start chasing the worldly things and pleasures. They confront many problems and suffer from many pains and enjoy a few pleasures.

They are born die and will be born again to die again. They get stuck up in the wheel of SamsAra. Only one in a thousand may wish to escape from the cycles of birth and death.

God guides him to a satsang with like minded persons and helps him by giving him true wisdom and showing the way to liberation.

The person who spends his life in Yoga and Penance is far superior to the one who spends his life in indulging endless pleasures and fanning their desires."

Sage DurVAsA taught Indra the wisdom he sought from him!
 
BHAARGAVA PURAANAM - PART 1

#26a. வாமனன்-1

அதிதி, திதி காசிப முனிவரின் மனைவியர்;
அதிதி விழைந்தாள் விஷ்ணுவை மகனாக!

திதி விழைந்தாள் இரு வலிய மகன்களை;
திதி தவித்தாள் விளைந்த விரக தாபத்தால்!

கணவனை அணுகினாள் மகன்களை வேண்டி;
கணவன் மறுத்தான், “அந்தி நேரம் உகந்ததல்ல!”

என்ன சொல்லியும் கேட்க வில்லை திதி – எனவே
எண்ணத்தை நிறைவேற்றினார் காசிப முனிவர்.

அந்தி நேரத்தில் கணவனைக் கூடியதால்,
அரக்க மகன்கள் வந்து பிறந்தனர் இருவர்.

ஹிரண்யாக்ஷன், ஹிரண்யகசிபுவைக் கண்டு
அரண்டு நின்றன அனைத்து உலகங்களும்.

கடும் தவம் செய்தான் ஹிரண்ய கசிபு;
அரும் வரங்கள் பெற்றான் தவப்பயனாக!

அஸ்திரம், ஆயுதம், மனிதன், மிருகம், பூமி,
ஆகாயம், இரவு, பகல், உள்ளே, வெளியே,

இறவா வரம் பெற்றான் இறைவனிடம்;
ரத்தம் சிந்தினால் உற்பத்தி ஆவர் பலர்.

வரத்தால் வளர்ந்தது வானளவாகச் செருக்கு!
மரணத்தை வென்றதாக மனப்பால் குடித்தான்!

தன்னைத் தவிர தெய்வம் இல்லையெனத்
துன்புறுத்துவதையே தொழில் ஆக்கினான்.

தெய்வத்தைத் தொழுபவரை மாய்த்தான்;
தயை என்பதுவே இல்லாதவான் ஆனான்!

விதிகள் எல்லாவற்றையும் உடைத்து
வதைப்பது எப்படி ஹிரண்ய கசிபுவை?
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

# 26 a. VAmana

Adithi and Dithi were the two wives of Kasyapa rushi. Adithi wished to have VishNu as her son. Dithi wanted two mighty sons. The very thought made her crave for union with her husband immediately.

It was the sandhi time in the evening. It was auspicious to Siva and his gaNa and unsuitable for procreation. But Dithi would not listen to any reason. She was adamant and sage Kasyapa fulfilled his duty as a husband.

Dithi gave birth to two powerful asuras HiranyAkshan and Hiranyakasibu. The three worlds trembled at their very sight. HiranyAkshan was later killed by VishNu in Varaha avatar.

Hiranyakasibu wanted to conquer death in every form. He did severe penance and got rare boons. He could not be killed by any asthram, any weapon, any man, any animal, during the day or the night, in the sky or on the earth , inside the house or outside it. Every drop of his blood shed would produce one more asuran similar to him.

He thought that this boon was fool proof and nothing and no one could kill him. So he became very arrogant and imagined himself to be superior to God. He denied the existence God.

He proclaimed himself to be the god. He punished severely everyone who would not accept him as god. Now how to put an end to this asuran without breaking any boon???
 
DEVI BHAAGAVATM - SKANDA 4

4#11a. ஜயந்தி

தலை அறுபட்டுத் தன் மனைவி கோரமாகத்
தரையில் கிடப்பதைக் கண்டார் பிருகு ருஷி.

சீறி எழுந்தது சினம் அவரது சிரம் வரையில்!
சீறினார் வெஞ்சினத்துடன் விஷ்ணுவிடம்,

“செய்யக் கூடாதது என்று அறிவாய் – ஆயின்
செய்துவிட்டாய் பிராமண ஸ்திரீயின் ஹத்தி.

இல்லை இதை விடக் கொடிய பாவம் ஒன்று!
இல்லை இந்தப் பாதகத்துக்கு மன்னிப்பு என்று!

பிறப்பாய் பல இழிந்த யோனிகளில் சென்று;
இறப்பாய் இது போல் துஷ்டத்தனம் செய்து.

சத்துவ குணவான் என்று தத்துவம் பேசினால்
உத்தமனாக ஆகி விட மாட்டாய் நீ ஒன்றும்.

மண்ணுலகத்தில் எடுப்பாய் பல பிறவிகள்!
பெண்ணின் கர்ப்பத்தில் வாசம் செய்வாய்!”

இல்லறம் என்னும் நல்லறத்தை அழித்து
பொல்லாத இழிவை அடைந்தார் விஷ்ணு!

தலையைச் சேர்த்து வைத்தார் உடலுடன்;
தவ வலிமை மீது ஆணை இட்டார் பிருகு.

விழுந்தன கமண்டல நீர்த்துளிகள் – உடனே
எழுந்தாள் மனைவி உயிருடன் மீண்டும்.

சினம் தணிந்து விட்டது பிருகுவுக்கு!
சினம் தணலானது இந்திரனுக்கு!

கடும் தவம் செய்யும் சுக்கிரனுக்கு
அரும் சித்திகள் வந்து சேர்ந்துவிடும்.

கலைக்க வேண்டும் சுக்கிரன் தவத்தை
மலைக்க வைக்கும் மகளின் அழகால்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


4#11a. Jayanthi

Sage Brugu flew into a temper when he saw his dear wife lying dead on the ground with her head severed by VishNu.

He took to task VishNu and told him, “You know that this action is not to be done by you and yet you have done his. There is no greater sin than killing a Brahmin lady.

There is no parihaaram for this kind of sin. You will take birth from several lowly yonis (birth canals). You will commit more sins and get punished more.

You may proclaim that you are filled with Satva guNaa but it will not make you an uththama purushan (holy person). You will take several births on the earth. You will grow in the wombs of women just as any normal human being.”

VishNu got cursed since he ruined the happy and harmonious life of sage Brugu with his wife. Brugu kept the head of his wife along with her body.

He swore on the power of his penance and sprinkled the holy water from his kamandalam on the body of his wife. She woke up from the dead as if from deep sleep.

Brugu’s anger vanished but Indra’a anger swelled up. Sukran who was doing severe penance would gain many new powers and use them against the Devaas.

His penance should be disturbed at any cost. His own beautiful daughter Jayanti would be very useful for this mission.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 9

9#40c. பிருஹஸ்பதி
அமராவதி திரும்பினான் இந்திரன் - அங்கே
அமராவதி நிறைந்திருந்தது அசுரர்களால்!

அஞ்சவில்லை அசுரர்கள் இந்திரனைக் கண்டு;
கொஞ்சமும் மதிக்கவில்லை அவனைக் கண்டு.

தேடினாலும் காணவில்லை தேவர்களை எங்குமே
ஓடினான் குலகுரு பிருஹஸ்பதியைத் தேடியபடி!

தியானித்துக் கொண்டிருந்தார் கிழக்கு நோக்கி
தேவகுரு பிருஹஸ்பதி கங்கையின் கரையில்.

குறைகளைக் கூறி அழுதான் இந்திரன் குருவிடம்;
நிறைவான உபதேசம் செய்தார் தேவகுரு அப்போது.

"நீதி அறிந்தவன் அஞ்ச மாட்டான் எப்போதும்!
நிலையானவை அல்ல சம்பத்தும், விபத்தும்!

உண்டாகின்றன அவை கர்ம வினைகளின் படி;
வண்டிச் சக்கரம் போலச் சுழல்வதே வாழ்க்கை!

அனுபவித்தே தீர வேண்டும் வினைப் பயன்களை;
அனுபவித்தே தீர்க்க வேண்டும் வினைப் பயன்களை.

மிகையும், குறையும் உண்டாகும் கர்மங்களில்
கால, தேச, பாத்திரங்களின் மேன்மைகளால்!

விளையும் புண்ணிய பலன் நல்ல நாட்களால்!
விளையம் புண்ணிய பலன் நல்ல தேசங்களால்!

விளையும் புண்ணிய பலன் நல்ல பாத்திரங்களால்
சளைக்காமல் எதிர் கொள்வாய் நீ வருபவற்றை "

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

9#40c. Bruhaspati

Indra went back to AmarAvati. It was filled with the asurAs. They were not afraid of him any more. Nor did they bother about him any more. Indra could not find a single Deva in AmarAvati!

He ran looking for his Kula guru Bruhspati. Indra found him on the banks of river Ganga doing meditation facing Eastwards. He gave vent to his feelings and fears and cried to his Kula guru.

Bruhaspati advised him thus, "A man who knows the laws of Dharma and Karma will never get upset by any developments. He knows that neither the good fortune, nor the bad fortune is permanent.

They happen according to the effects of the Karmas done by us. The life is a wheel causing ups and down in every one's life. One has to undergo the effects of his Karma. One has to exhaust the effects of Karma by undergoing them. He has no choice.

But the intensity of the effects can be reduced with the help of auspicious days, places and persons.

Auspicious days reduce the bad effects and increase the good effects. The same is true of auspicious places and persons. Be brave and face the inevitable Indra!"

Kula guru Bruhaspati advised Indra thus.
 
BHAARGAVA PURAANAM - PART

1#26b. நரஹரி


அரக்கனை வதைக்கும் உபாயத்தை நாடி
அமைத்தார் ஒரு மரத்தடி விநாயகரை.

விதிப்படி ஆராதித்தார் விஷ்ணு விநாயகரை;
விதிகளை உடைத்திடும் வழிகளை அறிந்திட.

காட்சி தந்தார் வேழமுகன் விஷ்ணுவுக்கு,
காட்டினார் அரக்கனை வதைக்கும் வழியை.

“உயர் திணை, அஃறிணை இரண்டும் கலந்த
நரனும், சிம்ஹமும் ஆகிய நரஹரி ஆவீர்!

பகலும், இரவும் இல்லாத அந்தி வேளையில்,
புறமும், உள்ளும் ஆகாத வாயிற்படியில்;

ஆகாயமும், பூமியும் அல்லாத தொடை மீது,
அஸ்திரம் அல்லாத கூரிய நகங்களால்;

மார்பைப் பிளந்து, உதிரம் கீழே சிந்தாமல்,
மாய்ப்பீர் அவனை” என்று வழி காட்டினார்!

நரஹரியாகத் தோற்றம் எடுத்தார் – கொடிய
அரக்கனை எளிதில் விஷ்ணு வதைத்தார்.

அசுரர்களின் புதிய அரசன் ஆகிவிட்டான்
அசுரன் விரோசனன், ஹிரண்யாக்ஷன் மகன்.

சூரியனை ஆராதித்துப் பெற்றான் அவன்
சுவர்ண மயமான கிரீடம் ஒன்றினை!

கிரீடம் அணிந்திருக்கும் வரை வெற்றி!
சிறு அபாயம் கூட இல்லை உயிருக்கு.

சிதறும் சிரம் நூறு சுக்கல்களாகக் கரம்
கிரீடம் அணியாத தலைமேல் பட்டால்!

சூரியனிடம் வரம் பெற்ற விரோசனன்,
பார் முழுவதையும் வென்றான் எளிதில்.

மூன்று உலகங்களும் அஞ்சிப் பணிந்தன
எண் திசைகளிலும் நடந்தது அவன் ஆட்சி!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#26b. The Lion-man

VishNu wanted to find a way to kill HiraNyakasibu without breaking any of these rules. He established a VinAyaka under the Vanni tree and did ArAdhanA in the prescribed manner to find a solution to the problem.

VinAyaka appeared to VishNu and revealed a successful plan to put an end to the asuran. “Become Narahari or a lion-man so that you will be neither human nor an animal.

Select the sandhya kaalam since it is neither day nor night. Sit on the door step since it is neither inside the house nor outside it.

Place the asuran on your thighs, since it will be neither the sky not the earth. Use your sharp claws to rip open the chest of the asuran. Claws are not asthrams. Drink the oozing blood to make sure that no more asuran can appear from the blood spilled down”

VishNu took the form of narahari and killed HiraNyakasibu as told by VinAyaka. HiraNayn had been already killed by the huge VarAha – another avatar of VishNu.

The new king was Virochanan – the son of HiraNyAkshan. He worshipped the Sun God and got a gold kireetam which would protect him from all dangers. He was invincible while wearing that kireetam. But if any hand touched his head not protected by the kireeetam, it would burst into one hundred pieces.

He wore the kireetam always and conquered all the worlds. His rule was established in all the eight direction.
 
DEVI BHAAGAVATAM - SKNADA 4

4#11b. பணிவிடைகள்

பூரிக்கும் இளமையும், புன்னகை முகமும்
வாரிக் கொழிப்பவள் இந்திரனின் புதல்வி.

அழைத்தான் இந்திரன் தன் மகள் ஜயந்தியை;
“பிழைக்க உதவ வேண்டும் நீ தேவர்களுக்கு.

செய்கின்றான் கோரத் தவம் சுக்கிரன் பூமியில்;
செய்ய வேண்டும் நீ பணிவிடைகள் அவனுக்கு

பிரியமாக நடந்து கொள் தவ முனிவனிடம்,
உரிய பணிவிடையை விடாமல் செய்து வா.

பயம் நீங்கி தேவர்கள் வாழ்வதற்கு – அ
பயம அளிக்க வல்லவள் நீயே! ”

தந்தையின் ஆணையை ஏற்றாள் ஜயந்தி;
தவமுனிவன் ஆசிரமத்துக்குச் சென்றாள்.

அகோரத் தவம் செய்து கொண்டிருந்தான்
ஆகாரமாகப் புகையினை உண்டு சுக்கிரன்.

மெலிந்து இருந்த சுக்கிரனுக்கு – குருத்து
இலை கொண்டு விசிறினாள் ஜயந்தி.

தாக சாந்திக்கு தண்ணீர் கொணர்ந்து
தலை அருகில் வைத்தாள் அன்போடு.

சேகரித்தாள் தர்ப்பை, மலர்களை பூஜைக்கு;
சேகரித்தாள் இளம் தளிர்களை இளைப்பாற.

ஆயிரம் ஆண்டுகள் உருண்டு சென்றன
ஆனந்தமாகக் காட்சி தந்தான் சிவபிரான்.

“எத்தனை மந்திரங்கள் எவரும் அறியாரோ
அத்தனையும் சித்திக்கும் முழுதாக உனக்கு.

ஆனாய் பிரமனுக்கு நிகரான பிராமணனாக,
ஆபத்து என்று எதுவுமே இல்லை உனக்கு!”

வரம் தந்தான் சிவபிரான் உளம் உவந்து.
சிரமத் தவம் தந்தது விழைந்த பலன்களை.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


4#11b. Service with a smile!

Indra’s daughter Jayanti was a beautiful young girl. Indra spoke to her and said, “You must save the race of Devaas from destruction. Sukran is doing severe penance on the earth. You must serve him with a smile and attend to his needs. Be kind to him!”

Jayanti agreed to do as told by him and went to ashram of Sukran. She saw Sukran doing a deep and difficult penance – living on the smoke emitted by the homa kundam.

She fanned him with the fresh, cool, young leaves. She kept fresh drinking water within his reach. She gathered the flowers and Kusa grass for the puja. She gathered young leaves to make a soft bed for him.

One thousand years rolled off in this manner. Siva appeared to Sukran and granted this boon,”Every mantra unknown to anyone will be known to you hence forth. There will no danger for you from anything or anyone!”

The difficult vratam and tapas had yielded the desired results.
 
Last edited:

Latest ads

Back
Top