• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

A poem a day to keep all agonies away!

DEVI BHAAGAVATAM - SKANDA 9

9#41a. அலைமகள்
பிரம்ம லோகம் சென்று சபையில் கூறினார்
பிரஹஸ்பதி நடந்தவற்றை முழு விவரமாக!

"தக்ஷப் பிரஜாபதி என் மகன் இந்திரா!
தக்ஷப் பிரஜாபதி உன் தாயின் தந்தை!

சுத்தமான மூன்று தலை முறையையில் வந்து,
சுத்தமான பதிவிரதைக்கு மகனாகப் பிறந்தவன்;

ஜிதேந்திரியனைத் தந்தையாக உடையவன்,
ஜெயிதிருப்பான் ஆணவத்தை, அகந்தையை!

தோஷம் வருவதுண்டு தாயின் தோஷத்தால்;
தோஷம் வருவதுண்டு தந்தையால், குருவால்.

பரிசுத்தமான பரிஜாத மாலையை இழந்ததும்
பரிதாப நிலையை அடைந்தாய் லக்ஷ்மி இன்றி!

வஞ்சிக்கப் பட்டுள்ளாய் தெய்வங்களால்!
கெஞ்சுவோம் உதவி கோரி விஷ்ணுவிடம்.

சென்றனர் விஷ்ணுவிடம் தேவர்கள் கூடி;
செப்பினான் பிரம்மன் இந்திரன் குறைகளை .

வாஹனம், ஆபரணம், சோபை, காந்தியின்றி
வந்துள்ள தேவர்களைத் தேற்றினார் விஷ்ணு.

"மக்கள் என் வசப் பட்டு இருக்கின்றனர் -ஆனால்
மக்கள் வசப் பட்டு இருக்கின்றேன் நான் இந்திரா!

பக்தருக்குச் சினம் ஊட்டும் இடத்தில் வசியேன்!
பக்தருக்கு இழிவூட்டும் இடத்தில் நான் வசியேன்!"

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


9#41a. Lakshmi Devi (1)

Bruhaspati went to The Durbar of BrahmA and related the events in detail. BrahmA told Indra," Daksha PrjApati is my son. He is also your mother's father. Any one who has come from a family of three respectable generations; who has a pativrata ( a chaste woman) as his mother and a jitendriya (one who has conquered his sense organs) as his father is not afflicted by AhankAram and arrogance.

He may incur sin from his mother or father or guru. You sinned by treating the pArijAta flowers with disrespect! You have been reduced to this pitiable status because Lakshmi had left your kingdom in Heaven. Only Vishnu can help us now!"

All the DevAs went to meet VishNu and Brahma explained the pitiable condition of the DevAs. Vishnu felt pity on seeing the DevAs and Indra without their vAhanams, ornaments, tejas and mirth. He consoled them thus.

"Devotees depend on me but I depend on my devotees. I will not live in any place where my devotee has been insulted or belittled by any one!"
 
BHAARGAVA PURAANAM - PART 1

#26c. மனமோகினி

வரம் பெற்றவர் வலிமை பெறுவர்;
வலிமை பெற்றவர் கொடுமை புரிவர்.

பாரினில் அன்றும் இன்றும் என்றும்
மாறாமல் நிகழ்வது இதுவே அன்றோ?

தேவர்கள் அஞ்சினர் விரோச்சனனிடம் ;
தேவர்கள் கெஞ்சினர் விஷ்ணுவிடம்;

அபயம் அளித்தார் அவர் தேவர்களுக்கு
அழகிய மோகினி வடிவம் எடுத்தார்!

மனமோகினி அசுரன் முன் வந்தாள்;
மயங்கி விட்டான்அசுரன் அவளிடம்.

“தேவகன்னியோ? கந்தர்வ கன்னியோ?”
தேடிச் சென்றான் அவளிடம் அசுரன்!

மாயையை அறியவில்லை சிறிதும்;
மயக்கம் வளர்ந்து பெருகியது விரகம்.

இழுத்த இழுப்புக்கு வளைந்தான்;
பழுக்கக் காய்ச்சிய இரும்பு போல!

“அசுரர் அரசே! பாக்கியம் எனதே!
பேச இயலுமோ உன் பராக்கிரமத்தை?

நேசம் பெருகுகிறது உன் வலிமை கண்டு!
நெஞ்சம் விரும்புகிறது உன் நெருக்கத்தை!

உறுதி ஒன்று வைத்துள்ளேன் நெடுநாளாக;
அருகில் நெருங்குமுன் எண்ணெய்க் குளியல்.

விரும்பினால் செய்விக்கின்றேன் ஸ்நானம்;
விருப்பத்தை நிறைவேற்றுவேன் அதன்பின்!

தையல் மேல்கொண்ட அதீத மையலால்
மெய் மறந்தே போனான் விரோசனன்.

அமர்ந்தான் கிரீடத்தைக் கழற்றிவிட்டு,
ஆயிரம் சுக்கலானது சிரம், கரம் பட்டதும்!

சூரியன் தந்த வரம் அசுரனைக் காக்கும்,
அரிய கிரீடம் தலை மீது உள்ளவரையே!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


#26C. The bewitching beauty

The person who gets special boons becomes stronger. The person who becomes stronger becomes a terror to the others. That was what happened in the past, happens in the present and will continue to happen in the future.

Virochanan became a terror to the DEvA. They sought VishNu’s help. VishNu gave them abhayam and transformed himself into a beautiful Mohini.

Mohini came in front of Virochanan. He was dazed by her bewitching beauty. He wondered “Is she a Deva kanya or a Gandharva kanya?” He went closer to her.

The mohini spoke to him in a sweet voice.”I have heard about your valour and victories. It will be my pleasure to associate with you. I am deeply in love with you. I want to have intimacy with you.

But I have a rule which I follow very strictly. The closeness will follow a nice relaxing oil bath. I can bathe you if you will permit me. After that I will fulfil your desires.”

Virochanan was like a red hot iron rod which could be bent into any shape. He forgot himself, his boons, the warning which go with the boons. He removed his kireetam and sat there to be bathed by the mohini.

The moment her hand touched his head, it blew up into one hundred pieces. The boon and the crown given by the Sun God will protect him only as long as he was wearing it on his head.
 
devi bhaagavatam - skanda 4

4#11c. இடையறாத இன்பம்

சுக்கிரன் கண்டான் ஜயந்தியை அருகினில்,
மிக்க மகிழ்ச்சியுடன் கூறினான் அவளிடம்;

“கனிவோடு பணிவிடை செய்தாய் பல ஆண்டுகள்!
இனியவளே! கேள் நீ விரும்பும் வரம் தருவேன்”

“அறிவேன் நான் உம் தவ வலிமையினை!
அறிவல்லவர் நீர் என் கோரிக்கையை!” என,

“அறிந்து கொண்டேன் உன் மன ஓட்டத்தை!
தெரிந்து கொள்வேன் உன் வாய் மொழியாக.”

“அந்தணரே! இந்திரன் மகள் ஜயந்தி நான்;
வந்துவிட்டேன் உம் பத்தினி ஆவதற்கு .

தொண்டு புரிந்தேன் அன்பு கொண்டு.
உண்டாக்கியது காம விகாரத்தை அது.

பதிவிரதா தர்மப்படி கற்புடையவளாகப்
பதி உம்மிடம் நான் சுகம் பெற வேண்டும்!”

“இன்று முதல் பத்து ஆண்டுகள் நீ
என்னுடன் கலந்து சுகித்து இருப்பாய்!”

மணந்து கொண்டான் சுக்கிரன் ஜயந்தியை
மணவாழ்வு இனித்தது இருவருக்கும்!

மாயையால் மறைத்தனர் உருவங்களை;
மயங்கி முயங்கினர் இன்ப வெள்ளத்தில்.

திரும்பி வந்த குருவிடம் வந்தனர் அசுரர்;
குரு மறைந்து உறைவதை அறியவில்லை.

ஆசிரியரைக் காணாமல் அலை பாய்ந்தனர்;
யோசித்தனர் குருவுக்கு என்ன ஆனது என!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


4#11c. Nonstop indulgence

Sukran felt happy to see the beautiful Jayanti close by. He told her,” Dear girl! You have served me well for many years. Please say what you want from me. I shall not deny it from you whatever it may be!”

Jayanti replied coyly,’ “I know the power of your penance! Surely you must be already knowing what I want from you!” Sukran replied, “I do know it, but I want to hear it from you in your own words”

Jayanti said, ” I am Indra’s daughter Jayanti. I wish to become your lawfully wedded wife and enjoy the pleasures of marital life.” Sukran was pleased with her and said, “I will marry you and we will enjoy the pleasures of marital life for ten years non stop.”

They married, made themselves invisible and immersed in the sea of carnal pleasure.

The asuras knew that their guru had come back with his mission accomplished. They went to his ashram but were unable to see him anywhere there.They grew worried as to what could have happened to their dear venerable guru.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 9

9#41b. அலைமகள் (2)
"லக்ஷ்மி நீங்குவாள் சிவார்ச்சனைகள் இல்லை என்றால்!
லக்ஷ்மி நீங்குவாள் பிராமண போஜனம் இல்லையெனில்!

லட்சியம், லக்ஷணம் இல்லாத வாழ்வு வாழ்வதனால்,
லக்ஷ்மி நீங்கி விடுவாள் இவர்கள் இல்லங்களிலிருந்து!

விரத நாட்களில் உணவு உண்பவன் - தன்னிடம்
விருந்துக்கு வந்த அதிதிக்கு உணவு தராதவன்;

கெட்ட மனம் உடையவன், கொடூரம் ஆனவன்;
இட்டம் போல அந்தணர்களை நிந்திப்பவன்;

நகத்தால் பச்சைப் புல்லைக் கிள்ளுபவன்;
நகத்தால் பூமித் தாயைக் கீறுகின்றவன்;

சூரியோதயத்தில் உணவு உண்ணும் அந்தணன்;
இரவாகாத போது உறங்குபவன், கலவி புரிபவன்;

ஈரக் கால்களோடு படுத்து உறங்குகின்றவன்;
இடுப்பில் ஆடையின்றி படுத்து உறங்குபவன்

வீணாகச் சிரிப்பவன், வீண் சொற்கள் பேசுபவன்;
வீணன் போல உடலில் வாத்தியம் அடிப்பவன் ;

சந்தியா வந்தனம் செய்யாதவன் - இவர்களை விட்டு
சஞ்சலத்துடன் நீங்கிச் செல்வாள் லக்ஷ்மி தேவி!"

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

9 #41b. LAKSHMI DEVI

Vishnu continued his advice to Indra. "Lakshmi will not live in the house of the following persons. She will desert these persons promptly with a troubled and a heavy heart.

The man who does not perform Siva AarAdanA;

The man who does not feed worthy Brahmins;

The man who eats on the days when he should observe fasts;

The man who does not feed the guests who have come to his house;

The man who is crooked and wicked minded;

The man who is merciless and unsympathetic;

The man who speaks ill of Brahmins as a race;

The man who plucks the green grass with his nails;

The man who scratches on the earth with his nails;

The Brahmins who eat at the time of Sunrise;

The man who sleeps while the Sun is still shining;

The man who indulges in carnal pleasures during the day time;

The man who goes to bed with wet feet;

The man who sleeps without wearing any clothes on;

The man who laughs and talks without any purpose;

The man who plays drums on his own body and

The Brahmin who does not perform SandhyA vandanam.

Lakshmi promptly deserts the residence of these persons."
 
BHAARGAVA PURAANAM - PART 1

#26d. மாவலி

மாவலி விரோச்சனனின் மைந்தன்;
மகாபலம் பொருந்திய அசுர அரசன்.

கடும் தவம் செய்தான் சிவனைக் குறித்து.
அரும் வரங்கள் பெற்றான் பெருமானிடம்.

குருவிடம் கேட்டான் அரிய கேள்வி,
“பெறுவது எப்படி நான் இந்திரப் பதவி?”

“நூறு அஸ்வமேத யாகத்தின் பயனே
யாவரும் விரும்பிடும் இந்திரப் பதவி!”

“செய்வேன் அஸ்வமேத யாகங்கள்!
எய்துவேன் நிகரில்லா இந்திரப்பதவி.”

முனிசிரேஷ்டர்கள் வந்து குவிந்தனர்;
முடிந்தது தொண்ணூற்று ஒன்பது யாகம்.

தொடங்கி விட்டது நூறாவது யாகம்.
முடிந்து விட்டால் பறிபோகும் பதவி.

பதவியை விட யாருக்கு சம்மதம்?
பதறி ஓடினான் மஹா விஷ்ணுவிடம்.

ஆறுதல் கூறினார் அவர் இந்திரனுக்கு,
“ஆவான செய்வேன் யாகம் தடைபட !

ஒழுக்கம் தவறாத மாவலியை வெல்ல
வழக்கமான உபாயங்கள் பயன் தரா!

மாவலியின் வலிமையைக் கொண்டே
மாவலியின் யாகத்தைக் குலைப்பேன்!”

அதிதி வேண்டினாள் ஹரியை மகனாக;
அதிதியிடம் அவதரித்தார் வாமனனாக.

தந்தை கச்யபரிடம் கேட்டான் வாமனன்,
இந்திரன் பதவி நிலைத்திட வேண்டும்.

மாவலியின் யாகம் தடைபட வேண்டும்.
ஆவன கூறுவீர் இவை நிறைவேறிட!”

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


26d. MahA Bali

MahA Bali was the son of Virochanan. As his names suggested he was mighty and valorous beyond words. He did severe penance towards Lord Siva and got many boons from him.

One day he asked his Guru, “How can I attain the position of Indra?” The guru replied that performing one hundred aswamEdha yAga would confer the power and position of Indra on any person.

MahA Bali decided to perform one hundred aswamEdha yAga and become the new Indra. All the sages and rushis were were brought to his palace and they completed ninety nine yaagas successfully. The hundredth yaaga was started.

Indra panicked since he would be dislodged by the New Indra from his powerful position. He ran to MahA VishNu for help and guidance. VishNu consoled him and said,

“I shall interrupt and ruin the hundredth yaagam. Then you will be safe. But since MahA Bali is a person of Integrity and character, the usual sAma, dAna, bEdha and daNdam will not work here. I will use his might and greatness against him and ruin his yAga.”

Aditi had wished that VishNu should be born as her son. VishNu used this opportunity to fulfil both these missions. He was born to Aditi and sage Kasyapa as VAmana.

VAmana asked his father, “Sir! tell me how to ruin MahA Bali’s yaagam and help Indra retain his power and position?”
 
DEVI BHAAGAVATAM - SKANDA 4

4#11d. இந்திரனின் தந்திரம்

சுக்கிரன் மனோரம்மியமாக ஜயந்தியுடன்
சுகித்து இருப்பதை அறிந்தான் இந்திரன்.

தேவ குருவுக்குச் சொன்னான் விவரங்களை,
“தேவை ஒரு தந்திர நாடகம் அசுரர்களிடம்;

ஏமாற்ற வேண்டும் நீர் அசுரர் கூட்டத்தை;
காப்பாற்ற வேண்டும் நீர் அமரர் கூட்டத்தை.

அடி பணிய வேண்டும் அசுரர்கள் உமக்கு
அடி பணிய கூடாது அமரர் அசுரர்களுக்கு!”

கண்ணுக்குப் புலப்படாது சுக்கிரன் இருந்ததைக்
கண்டு கொண்ட தேவகுரு கொண்டார் உவகை!

தாங்கினார் அசுரகுரு சுக்கிரனின் உருவத்தை!
ஏங்கி நின்ற அசுரரிடம் சென்றார் தேவகுரு.

இந்திரனின் தந்திரத்தை அறியாத அசுரர்கள்
வந்து சூழ்ந்தனர் அவரை குரு என்று எண்ணி.

அசுர குருவென்று எண்ணி தேவகுருவை
அசுரர்கள் வரவேற்றுக் கொண்டாடினர்!

“தவம் செய்தேன் உங்கள் நன்மைக்காகத்
தலை கீழாக ஓராயிரம் ஆண்டுகளுக்கு.

மஹாதேவன் உவந்து எனக்கு அளித்துள்ள
மஹா மந்திரங்களை உபதேசிப்பேன் உமக்கு.”

மந்திர பலம் பெற்று வந்துள்ளார் குரு – இனி
இந்திரனுக்கு அசுரர்கள் அஞ்ச வேண்டாம்”

ஆனந்தக் கூத்தாடினார்கள் அசுரர்கள் – அவர்
அறியவில்லை இந்திரன் செய்த தந்திரத்தை.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

4#11d. The treachery of Indra

Indra knew that Sukran was lost to the world in the loving company of Jayanti – his beautiful daughter He spoke to the Devaguru Bruhaspati and told him of another cunning scheme.

“You must go to the Asuraas disguised as their guru Sukran. You must make them obey your commands. The Deva must never be defeated by the asuraas. Only you can save the Deva from the newly acquired power of Sukran!”

Bruhaspati became very pleased to know that Sukran was lost to the world for ten long years. He disguised himself as Sukran and went meet the asuraas.

The ausraas had no idea of Indra’s treachery or the trick played by Bruhaspati. They assumed that it was their guru Sukran who had returned to them after getting the boons from Lord Siva.

The disguised Bruhaspati spoke as if he were Sukran to the asuras.”I did severe penance for your sake by hanging upside down and living on the smoke emerging from the yaaga kunda. I have learned the Mahaa mantraas due to the grace of Siva. I shall teach them to you now!’

Asuras were happy that Sukran had learned mantras unknown to anyone else.They danced it little realizing the treachery of Indra and Bruhaspati.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 9

9#41c. அலைமகள் (3)

லக்ஷ்மி வசிப்பாள் லக்ஷணமான இடங்களில்;
லிங்க அர்ச்சனை, ஆராதனை நடக்குமிடங்கள்;

இஷ்ட தேவதைகளின் பூஜை நடக்கும் இடங்கள்;
கோஷ்டியாக நாம சங்கீர்த்தனம் ஒலிக்கும் இடங்கள்;

சங்க நாதம் ஒலிக்கும் இடங்கள் - சத் சங்கமும்
பங்கமின்றி தெய்வத் தொண்டும் நடக்குமிடம்;

துர்கா தேவியின் பூஜைகள் நடக்கும் இடங்கள்;
தூய பிராமணரின் போஜனம் நடக்கும் இடங்கள்;

குடியிருப்பாள் லக்ஷ்மிதேவி இவ்விடங்களில்
குதூஹலமான உள்ள நிறைவுடன் இந்திரா!

தருகின்றேன் திருமகளைத் தேவர்களுக்காக!
திருமகள் உதிப்பாள் பாற்கடலில் இருந்து!"

பாற்கடலைக் கடைந்தனர் அமரர், அசுரர்,
அற்புதப் பரிசுகள் வெளிப்பட்டன அப்போது.

உச்சைச்ரவம், ஐராவதம், கௌஸ்துபம், சந்திரன்,
சுதர்சனம், லக்ஷ்மி, வனமாலை, அமிர்தம் என்று.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

9#41c. Lakshmi Devi (3)

Vishnu now listed the places where Lakshmi Devi resides with a happy heart.

"Lakshmi Devi likes to reside in these auspicious places.

The place where Sivalinga AarAdhanA takes place;

The places where one's Ishta DevatA is worshipped;

The place where group NAma sangeertan takes place;

The place where the auspicious conch is blown;

The place where sat sangh takes place;

The place where the service to Gods takes place

The place where DurgA Devi is worshipped and

The place where worthy Brahmins are given feast.

I shall send Lakshmi to give back to you your wealth and glory. She will appear from the Ocean Of Milk - if you churn it with the help of the asuras.

The AmarAs and Asuras churned the Ocean of Milk. Many wonderful objects emerged from it. Some of them were Uchaisravam the divine horse, Airvatam the divine elephant; Kousthubam the rare gem; Sudarsanam the ChakrAyudam, Lakshmi Devi, The moon, the VanamAlA and the Amrut kalash.
 
BHAARGAVA PURAANAM - PART 1.

#26e. வாமனன்-2

“விநாயகர் அருளால் முடியும் அது!”
விநாயகர் மந்திரத்தைக் கற்பித்தார்.

வன்னி மரத்தடியில் அமர்ந்து கொண்டு
விநாயகனை தியானித்தான் வாமனன்.

மயில் வாகனத்தில் தோன்றினார் ஐயன்;
மாவலியை வெல்லும் திறன் அளித்தார்.

மரத்தடியில் அமைத்தான் விநாயகனை.
முடித்துக் கொண்டான் ஆராதனைகளை.

வாமனன் சென்றான் மாவலி யாகத்துக்கு.
வாமனனை வரவேற்றான் மன்னன் மாவலி .

“தாங்கள் விழைவது என்னவோ சுவாமி?”
“தவம் செய்யத் தேவை மூன்றடி மண்!”

“மூன்று உலகங்களையும் தருகின்றேன்!
மூன்று அடி மண் எதற்கு போதும்?” என

“மூன்றடி மண்ணால் நிறைவு எய்தாதவன்
மூன்று உலகங்களாலும் நிறைவெய்தான்!”

குலகுரு கண்டு கொண்டார் வாமனனை!
வலியிடம் கூறினார் “மாயாவி விஷ்ணு

இந்திரன் பதவியைக் காத்துக் கொடுக்க
வந்துள்ளான் இன்று இந்த உருவில் இங்கு!

வாக்குத் தானே அளித்துள்ளாய் நீ! நீர்
வார்த்து தத்தம் செய்யாதே!” என்றார்.

“நாராயணன் நாடி வந்தால் நம்மை
நமக்கல்லவோ வந்து சேரும் பெருமை!

வாக்கை மறுத்துச் செழிப்பதைவிட
வாக்குக் கொடுத்து அழிவதே மேல்.

சொல்லே போதும் வாக்கு அளிக்க
இல்லை தேவை நீர் வார்த்துத் தர!”

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

# 26e. VAmanan

Sage Kasyapa said, “It is possible only for VinAyaka. Pray to him”. He taught VAmana the VinAyaka mantra. VAmana sat under a vanni tree and concentrated on VinAyaka.

VinAyaka appeared on his peacock vAhana and blessed VAmana with the power to conquer MahA Bali. VAmana did prathishta of a VinAyaka statue under the vanni tree and went to the yAga sAla.

MahA Bali was duly impressed by this little brahmachaari’s brahma tejas. He paid obeisance and asked Vaamana, “What do you wish for swami? Vaamana replied, ” I need three paces of land measured with my feet, for doing tapas”

“MahA Bali was amused. “What is the use of three paces of land with your tiny feet? I shall bestow the three worlds on you swami!”

VAmana said, “One who is not contented with three paces of land will not be contended with the three worlds either. I need only three paces of land measured with my own feet”

SukrAchArya was able to identify vAmana as VishNu in disguise. He warned MahA Bali,” This little brahmin is VishNu in disguise. His aim is to help Indra retain his power and position.”

MahA Bali was thrilled now. “If VishNu himself comes to me asking for something it will only add to my greatness.”

The Asura guru persisted. “You have only committed orally. Do not pour water and
gift the land to this young brahmin brahmachAri!”

MahA Bali said, “It is better to be ruined trying to uphold my words rather than live in disgrace by going back on my promise. My words are as good as the gifting with water being poured.”
 
DEVI BHAAGAVATAM - SKANDA 4

4#12a. ஜனமேஜயனின் ஆதங்கம்

“புத்திமான் அல்லவோ தேவகுரு பிருஹஸ்பதி?
சத்தியமே தர்மத்தின் வேர் என்று அறியாரோ?

நயவஞ்சகமாகச் செய்தார் ஆள் மாறாட்டம் எனில்
கயவர்கள் செய்வதில் என்ன வியப்பு கூறுங்கள்!

தேவர்கள், தேவ குரு, மும்மூர்த்திகள் என்பவர்
தேவைக்கேற்பத் தீச் செயல்கள் புரிந்துள்ளனர்.

காமம், குரோதம், பொய், நயவஞ்சகம் மற்றும்
கபடம்,பிறன்மனை விழைதல் போன்ற என்னோ!

கதி என்னவாகும் இழிசெயல் புரிந்தோருக்கு?
கதி கலங்குகின்றது எண்ணும் போதே!”என்றான்

ஜனமேயன் எழுப்பினான் ஐயங்களை
ஜனமேஜயனுக்கு உரைதார் வியாசர்.

“மனித உடல் எடுத்தவுடனேயே அனைவரும்
மனித குணங்களையும் அடைகின்றார்கள்.

இருபத்து நான்கு தத்துவங்களால் ஆன சரீரம்
இருக்கும் வரை தப்பாது முக்குண விகாரம்.

சுக, துக்கங்கள் ஆகிவிடும் சுழல் சக்கரம்!
இக, பர ஞானங்கள் அடைவது துர்லபம்!

காமாதிகளைப் புறக்கணிக்க ஒரே வழி
காமியைத் தவிர்ப்பது என்று அறிவாய்!

மங்கையர் வசப்பட்டவர் உலகில் எந்நாளும்
சங்கப் பரித் தியாகிகளாக சஞ்சரிக்க இயலாது!”

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

4#12a. Janamejayan’s doubts

“I thought Deva guru Bruhaspati was intelligent ! Surely he must have been aware of the fact that truthfulness is the foundation of Dharma! If he could impersonate as the Asura guru, why won’t the wicked people do such things?

I see that the the Devaas, the Deva guru as well as The Trinity indulged in adharmic activities depending on their needs. They too were filled with desire, anger, spoke lies and cheated.

They were treacherous and coveted the wives of other men and gods. What will be the fate of the doers of such evil actions? I shudder at the very thought'”

Sage Vyaasaa tried to explain these things to the King Janamejayan.

“The moment we a get a body, we also get the three guNaas along with it. The body is made up of twenty four tatvaas (factors) and it can never remain unaffected by the three guNaas.

Sukham and Dukham follow like day and night in an infinite loop. Obtaining the gnaanam of this world or the next world becomes impossible.

The only way to overcome the six defects of the mind is to avert the cause of samsaaraa – the association with a woman. Only those who are free from the bonds of samsaaraa and association with women can live unattached to the world”
 
DEVI BHAAGAVATAM - SKANDA 9

9#42a. லக்ஷ்மி துதி (1)
இரு ஆடைகள் அணிந்து கொண்ட இந்திரன்
திருமகளை ஆவாஹனித்தான் ஒரு கடத்தில்.

சந்தனந்தில் தோய்த்த திவ்ய பாரிஜாத மலர்களால்
இந்திரன் பூஜித்து தியானம் செய்யத் துவங்கினான்.

பத்து லக்ஷம் முறை ஜெபித்தான் மூல மந்திரத்தை;
சித்தியாகி விட்டது அந்த மந்திரம் இந்திரனுக்கு!

இந்திரன் விருப்பம் நிறைவேறியது மந்திரத்தால்;
காந்தி வீசியபடி காட்சி தந்தாள் லக்ஷ்மி தேவி!.

வெண் சண்பக மலரின் அற்புதமான நிறத்தில்;
கண்ணைப் பறிக்கும் இரத்தினஅணிகலனுடன்.

கோடிச் சந்திரர்களின் பிரகாசத்துடன் லக்ஷ்மி
தேடி வந்தாள் இந்திரனுக்கு அருள் புரிவதற்கு.

பக்திப் பரவசத்தில் மெய் சிலிர்த்தான் இந்திரன்;
பக்தியுடன் துதித்தான் பிரமனின் தோத்திரத்தை.

பிரம்னால் அருளப் பட்டது தேவியின் இந்தத் துதி;
பிரிக்க முடியாத வைதீக சம்பந்தம் உடையது.

மந்திர ராஜமாக உள்ளது பிரமனின் தேவி துதி
இந்திர லோகத்துக் கற்பகத் தரு போன்ற துதி.

பெற்றான் ஐஸ்வர்யங்களைக் குபேரன் இதனால்;
பெற்றான் தீபங்களின் தலைமை தக்ஷ சாவர்ணீ .

பெற்றனர் சகல சித்திகள் மந்திரத்தால் பலர்!
பெற்றனர் சகல சம்பத்துக்களை மேலும் பலர்!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


9#42a. Lakshmi Stuti (1)

Indra dressed himself appropriately for the worship of Lakshmi Devi. He did the preliminary AavAhanam of Devi on a pot. He worshiped Lakshmi Devi with the pArijAta flowers dipped in sandal paste. He meditated on her and did the japam of the moola mantra ten lakh times. He got the siddhi of the mantra.

His prayer was answered. Lakshmi Devi appeared there with all her brilliance. She was the color of the White champaka flower. She was adorned in various gem studded ornaments. She had the cool luminescence of ten million full moon risen together. She came there to bless Indra by granting him boons.

Indra was overwhemled by his devotion and his emotions. He chanted the stuti on Lakshmi Devi given by Brahma. It was the supreme stuti on Lakshmi Devi and granted the wishes of the devotees as the Krapaga vruksham of Swargga.

Kubera obtained his wealth with the help of this stuti. Daksha SAvarNi obtained the ruler ship all the DweepAs by this stuti. Many others got many things they sought by it - be it siddhi or sampath and wealth.

 
BHAARGAVA PURAANAM - PART 1

#26f. விஸ்வரூபம்

தாரை வார்க்க முயன்றான் மாவலி,
தண்ணீர் நிரம்பிய கமண்டலத்தால்.

“என் வார்த்தையைத் தட்டுகின்றான்;
தன் அழிவை நாடுகின்றான் இவன்!”

ஆதங்கம் ஏற்பட்டது குலகுருவுக்கு;
“எதாவது செய்து தடுக்க வேண்டும்.”

எடுத்தார் ஒரு சிறு வண்டின் வடிவை!
அடைத்தார் நீர் வருகின்ற துவாரத்தை.

வாமனன் கண்டான் ஞான திருஷ்டியில்;
வண்டைக் குத்தினான் சிறிய குச்சியால்!

கண்ணில் அந்தக் குச்சி பாய்ந்து விட்டது;
வண்டின் கண் ஒன்று குருடாகி விட்டது!

தன் காலால் மூன்றடி மண் கேட்ட சிறுவன்
தான் வளர்ந்தான் வானளாவாக வாமனன்!

ஓரடியால் அளந்தான் மண்ணுலகை எல்லாம்!
ஓரடியால் அளந்தான் விண்ணுலகை எல்லாம்!

இடம் இல்லை மூன்றாவது அடியை வைக்க!
இடம் தந்தான் கால் வைக்க மாவலி சிரசில்.

தலையைக் காலால் அழுத்தி மாவலியைத்
தலைவன் ஆக்கினான் பாதள உலகிற்கு.

சிவன் அருள் பெற்றவன் மாவலி மன்னன்;
அவனைத் தொழுகின்றான் அங்கிருந்தபடி!

வன்னிப் பத்திரத்தின் பெருமையைக் கூற
இன்னும் ஒரு கதை சொன்னார் பிரமன்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


#26f. Thrivikraman

MahA Bali wanted to pour the dhArai from his kamaNdalam. Kulaguru SukrAchArya got agitated since MahA Bali was not listening to his sound advice and was leaping towards his own destruction.

He had to do something to stop the dAnam or the gift of land. He transformed himself into small beetle and sat blocking the outlet of water of the kamaNdalam. Water could not come out of the kamaNdalam.

VAmana knew the reason and thrust a thin stick in to the nozzle of the kamaNdalam. It poked one of the eyes of the beetle. Asuraguru SukrAchArya became blinded in one eye.

The gift of land was given. The little brahmachaari who wanted three foot lengths of land grew towering to the sky as Trivikrama. He measured the entire earth in step, he measured the entire heavens with his second step.

There we no place to keep the foot now. MahA Bali offered his head to Trivikarama for placing his foot. Tri Vikrama pushed him to PAtAla lOkam and made him the king there.

MahA Bali who is a devotee of lord Siva lives there even today worshiping his god. Brahma related one more story to bring out the greatness of vanni patram.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 4

4#12b. வியாசரின் விளக்கம்

வியாசர் தொடர்ந்தார் தமது விளக்கத்தை
விசனப் படும் மன்னன் ஜனமேஜயனிடம்.

” தாழ்வடைந்தான் சந்திரன் - குரு பத்தினி
தாரையை விரும்பி உடன் வாழ்ந்ததால்.

விரும்பிதால் சகோதரனின் மனைவியை,
குரு பிரஹஸ்பதியும் மிக இழிவடைந்தார்.

சுழல்கிறது சம்சாரம் பெரிய சக்கரம் போன்று.
சுழல்கின்றனர் சம்சாரிகள் அதில் தொடர்ந்து!

மாயசக்தி மறைக்கும் சிந்தனா சக்தியை,
மாற்றி விடும் மனத்தை கள்வெறிபோல்.

தேவியின் மாயையை வென்றிட – அந்த
தேவியே தண்ணருள் புரிந்திட வேண்டும்!

அசுரகுரு உருவிலே தேவகுரு போதித்தார்
அசுரருக்கு அசுர ஞானத்தையே தொடந்து.

அசுரகுருவென்று அவரை நம்பிய அசுரர்
ஆடினர் அவர் ஆட்டுவித்தபடி எல்லாம்.

ஜயந்தியுடன் சுகித்த காலம் முடிவுற்றது.
ஜயித்து வருவார் என்று காத்திருந்த தன்

சீடர்களைச் சந்திக்கும் வேளையும் வந்தது.
“சீக்கிரம் திரும்புவேன் மீண்டும் உன்னிடம்!”

விடை பெற்றுச் சென்ற அசுரகுரு சுக்கிரன்
நடை பெறும் நாடகம் கண்டு அதிர்ந்தார்.

கள்ள குரு போதித்துக் கொண்டிருந்தார்
மெள்ள மெள்ளப் பொல்லாத ஞானத்தை!

அதிர்ந்து போனான் சுக்கிரன் இது கண்டு!
‘விதி விளையாடுமா வாழ்வில் இப்படி?

நடை உடை பாவனை அனைத்தும் மாற்றி
நான் என்று அசுரரை நம்ப வைத்துள்ளான்!’

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

4#12b. Sage Vyaasaa’s explanation

“Chandran fell in love with Taaraa, the wife of his guru, and he fell in the esteem of all the others. Bruhaspati fell in love with his brother’s pregnant wife and fell in the esteem of all the others.

The worldly life is a like a giant wheel. It keeps rotating non-stop with all the samsaaris bound on it. The Maayaa covers our intellect and disturbs our thinking power.

It deludes a man like the intoxicating drinks. To attain liberation form the bondage of samsaaraa or the worldly life, we need the grace of Devi who is The Maayaa deluding us.

Bruhaspati went to the asuras impersonating Sukran the guru of Asuras. He taught them asura gnaanam and reduced them to mere puppets in his hand.

The ten year period of non-stop indulgence with Jayanti came to an end. Sukran had to return to the asuraas – who he assumed were eagerly awaiting his return. He took leave of Jayanti promising her to come back to her soon.

He was shocked to find another Sukran in his place – teaching the asuras wrong things. He wondered at the power of destiny that had made him look like the impersonator while the impersonator looked like and behaved like the real Sukran and had gained the full confidence and trust of the Asuraas.”
 
DEVI BHAAGAVATAM - SKANDA 9

9#42b. லக்ஷ்மி துதி (2)

"கமலா வாசினியே உனக்கு நமஸ்காரம்!
நாரணன் பத்தினியே உனக்கு நமஸ்காரம்!

கிருஷ்ணப் பிரியே! மஹாலக்ஷ்மி நமஸ்காரம்!
கமலா வதனீ! கமலக் கண்ணீ! என் நமஸ்காரம்!

பத்மாசனத்தில் அமர்ந்துள்ள விஷ்ணு பத்தினி!
பத்மங்களை ஏந்தியுள்ள உனக்கு நமஸ்காரம்!

பூஜிக்கின்றனர் உன்னை ஸர்வ சம்பத் ரூபிணியாக;
பூஜிக்கின்றனர் உன்னை விஷ்ணு பக்தி தருபவளாக.

கிருஷ்ணன் மார்பில் வசித்துக் கொண்டு பதியாகக்
கிருஷ்ணனையே அடைந்த உனக்கு நமஸ்காரம்!

சந்திர காந்த ஸ்வரூபிணி உனக்கு நமஸ்காரம்!
சம்பத்தின் அதிஷ்டான தேவதையே நமஸ்காரம்!

விருத்தி ஸ்வரூபிணீ நீ ! விருத்தி தாயினீ நீ !
வைகுண்டத்தில் விளங்கும் ஸ்ரீ மஹாலக்ஷ்மி நீ!

பாற்கடலில் உதித்த அலைமகளும் ஆனாய் நீ!
சுவர்க்கத்தில் விளங்கும் சுவர்க்கலக்ஷ்மியும் நீ!

ராஜ கிருஹத்தில் உள்ளாய் ராஜ்ய லக்ஷ்மியாக!
பிரஜா கிருஹத்தில் உள்ளாய் கிருஹ லக்ஷ்மியாக!

சமுத்திரத்தில் தோன்றிய காமதேனுவும் நீயே!
யக்ஞங்களில் அளிக்கப்படும் தக்ஷிணையும் நீயே!

தேவ மாதரில் சிறந்த அதிதி தேவியும் நீயே!
குளங்களில் தோன்றும் தாமரை மலரும் நீயே!"

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


9#42b. Lakshmi Stuti (2)

"The Devi who dwells on a lotus flower! My obeisance to you! The wife of Sriman NArAyaNa! My obeisance to you!

You are dear to KrishnA! My obeisance to you! You have eyes like lotus petals. You have a face like lotus in full bloom. My obeisance to you!

You are seated on a lotus flower. You are holding two lotus flowers in your hands. My obeisance to you!

You bestow wealth on your devotees. You bestow Hari Bhakti on your devotees! My obeisance to you!

You live on the broad chest of KrishnA. You have obtained KrishnA as your loving husband. My obeisance to you!

You have the brilliance of the Moonstone. You are the presiding deity of wealth. My obeisance to you!

You make things plentiful. You are the giver of bountifulness. My obeisance to you!

You are the MahAlakshmi in Vaikuntam; the Devi who emerged from the Ocean of Milk!

You are the Swargga Lakshmi; You are the Gruha Lakshmi; You are Surabhi who emeged from the Ocean of Milk!

You are the DakshiNA Devi in YagnAs; You are Aditi devi - the mother of all Devas. You are the beauty of the lotus flowers!"

 
BHAARGAVA PURAANAM - PART 1

#27a. கீர்த்தி

பரமசிவன் அமர்ந்திருந்தார் கயிலையில்
பார்வதியுடனும், சிவ கணங்களுடனும்.

“வன்னிப் பத்திரத்தில் மகன் கணபதிக்கு
என்ன காரணத்தால் இத்தனை பிரியம்?”

பார்வதி தேவி கேட்டாள் பரமசிவனிடம்.
பார்வதிக்குப் பரமசிவன் கூறினார் இதை.

பிரியவிரதன் ஒரு மிகவும் நல்ல அரசன்;
அரிய பல தருமங்கள் செய்து வந்தான்.

கீர்த்தி பரவி இருந்தது உலகு எங்கும்;
கீர்த்தி, பிரபை என்று அரசியர் இருவர்!

பிரபை அழகிய இளம் மனைவி.
பிரியம் சற்று அதிகம் அவள் மீது.

பெரியவள் கீர்த்தி நல்ல குணவதி.
குறையாத அன்பு கொண்டிருந்தாள்.

பத்மநாபன் பிறந்தான் பிரபைக்கு;
பாஞ்சாலன் மகளை மணந்தான்.

பெருமை ஓங்கி விட்டது பிரபைக்கு
பெரியவளை மதிப்பதே இல்லை.

கணவனைக் காண வந்தாள் கீர்த்தி.
கணவன் இருந்தான் பிரபை அறையில்.

எரிந்து விழுந்தாள் கீர்த்தி மீது பிரபை!
எட்டி உதைத்தும் தள்ளினாள் கீழே.

கண்டும் காணாது இருந்த கணவனைக்
கண்டு மனம் வெதும்பினாள் கீர்த்தி.

சக்களத்தியின் வெறுப்பு சஹஜமே!
சக்களத்திக்குத் துணை கணவனுமா?

உயிர் வாழ்வதில் பயன் இல்லையோ?
உலகமே இருண்டுபோய்க் காட்சி தந்தது.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


#27a. Keerti

Siva was seated in KailAsh with PArvathi and the siva gaNas. PArvathi asked Siva, “Why does Ganapathy love the Vanni patram so much?” Siva told her this story.

Priya Vrathan was a good natured king. He took good care of his country and citizens and did a lot of charitable work. His fame had spread all over the world.

His two queens were Keerti and PrabhA. He was very fond of his younger queen PrabhA. Keerthi the elder queen was treated with indifference.

PrabhA had a son called PadmanAbhan. He grew up and married the daughter of the king of PAnchAlA. So PrabhA became even more arrogant and haughty. She treated with contempt the elder queen Keerthi.

One day Keerthi came to meet her husband who was in PrabhA’s room at that time. PrabhA abused her and kicked her down on the floor. The king saw the happening but remained silent.

Keerthi felt very bad by the king’s indifference. It was usual for the other wife to hate her but if her husband also joined hand with her, what is the point in her living?

 
DEVI BHAAGAVATAM - SKANDA 4

4#13a. கோபமும், சாபமும்

விரைந்து சென்றான் அசுரரிடம் சுக்கிரன்;
விவரித்து உரைத்தான் அமரரின் கபடத்தை,

“உண்மையில் அசுர குரு சுக்கிரன் நானே!
உங்கள் முன் நிற்பவன் வேடதாரி தேவகுரு!

நம்ப வேண்டாம் அவன் அறிவுரைகளை!
நம்ப வைத்து மோசம் செய்யும் வஞ்சகன்!”

திடுக்கிட்டனர் அசுரர்கள் இதைக் கேட்டும்;
அடுத்து அடுத்து நின்ற இருவரைக் கண்டும்!

மாறி மாறிப் பார்த்தனர் இருவரையும்;
மதி மயங்கினர் உண்மையை அறியாது!

தேவகுரு திசை திருப்பினான் அசுரர்களை,
“தேவகுரு திசை திருப்புகிறான் உங்களை !

எத்தனை காலமாக உங்களுடன் இருக்கிறேன்!
எத்தனைப் போல நுழைவது இவன் அல்லவா?

உபதேசம் பெற்று வந்தவனும் நானே – அதை
உபதேசம் உமக்குச் செய்கின்றவனும் நானே!”

மயங்கினர் இனிய மொழிகளில் அசுரர்கள்;
தயங்கினர் புதிய மனிதனை நம்புவதற்கு !

பொய் குருவை மெய்குருவென எண்ணினர்!
மெய் குருவைப் பொய்குருவென எண்ணினர்!

கள்ள குருவின் வாக்குச் சாதுரியத்தினால்
எள்ளி நகையாடினர் தம்முன் உள்ள குருவை.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


4#13a. The anger and the curse

Sukran went the Asuraas and spoke to them, ” I am your kula guru Sukran. This man is an imposter. Do not trust him. Do not listen to his teachings. He is the treacherous guru of the cunning Devaas.”

The Asuraas were truly baffled by this declaration and saw two people who looked like identical twins standing in front of them. They could not identify their real guru in those two persons.

Bruhaspati made use of this confusion to delude them further. He told the Asuraas,” I have been living here with you all for many years. He is the one who tried to enter stealthily like a cat.

I am your real guru who got the upadesam from Lord Siva. I am your real guru who is teaching you what I had leaned from Lord Siva.”

The Asuras got more confused and trusted the imposter as the real guru and the real guru as an imposter. They made fun of the real Sukran and laughed at his audacity!
 
EVI BHAAGAVATAM - SKANDA 9

9#42c. லக்ஷ்மி துதி (3)

"ஹவிஸு ஹோமத்தில் ஸ்வாஹா தேவி நீ!
கவ்ய ஹோமத்தில் உதவும் சுவதா தேவி நீ!

விஷ்ணு ஸ்வரூபம் நீய! பூமி ஸ்வரூபம் நீயே!
இஷ்ட வரங்கள் தருவாய் சாந்த குணத்துடன்..

சரஸ்வதி ஸ்வரூபமாகத் தருவாய் பரமார்த்தம்;
சாம்பல் ஆகிவிடும் உலகம் நீ இல்லாவிட்டால்.

காக்கின்றாய் பெற்ற தாய் போல உன் பிள்ளைகளை!
காக்கின்றாய் பெற்ற தாயினும் சாலப் பரிந்து எம்மை!

பிழைத்துக் கொள்ளும் தாயற்ற குழந்தை ஒருவேளை;
பிழைத்துக் கொள்ளாது நீ இல்லாவிடில் இந்த உலகம்.

கருணை புரிய வேண்டும் தாயே நீ எனக்கு!
அருள வேண்டும் இந்திர லோகத்தை எனக்கு!

யாசகனாகி விட்டேன் நீ விலகிச் சென்றதும்;
யாசிக்கின்றேன் ஞானம், தர்மம், சௌபாக்யம்.

தருவாய் பிரபாவத்தையும், பிரதாபத்தையும்;
தருவாய் போரில் வெற்றியை, ஐஸ்வர்யத்தை!"

துதித்தனர் அனைவரும் வரங்களைக் கோரியபடி;
அளித்தாள் அனைத்து வரங்களையும் கோரியபடி!

மலர் மாலையை அளித்தாள் இந்திரனுக்கு - பின்பு
மறைந்தருளினாள் மஹாலக்ஷ்மி தேவி அங்கிருந்து.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


9#42c. Lakhmi Stuti (3)
You are the SwAhA, in the sacrificial ceremonies; You are the SvadhA Mantra in the KAvyas in offering of food to deceased ancestors. My obeisance to you!

You are of the nature of VishNu! You are of the nature of Earth that supports all! You grant boons to all. You are the auspicious SAradA! You grant the Highest Reality and the devotional service to Hari.

Without you all the worlds would be dead even while existing. As a mother nourishes her infants with her milk, so do you nourish all of us as our mother! A child might be saved even when deprived of its mother, but we can never be saved except by you!

My possessions are now in the hands of the enemies. Be kind enough to restore my kingdom to me. Ever since you have forsaken me, I am wandering like a beggar, deprived of all prosperity. O Devi! Please give me GnAnam, Dharma, fortune, power, influence and my possessions.”

Lakshmi granted boons to the Devas, gave the garland of flowers to Indra and disappeared from there.

Whoever recites this holy Stotra three times a day, becomes prosperous like Kubera. Siddhi comes to him who recites this stotra five lakh times.

 
BHAARGAVA PURAANAM - PART 1

#27b. வன்னிப் பத்திரம்

நொந்த மனத்துடன் வருந்தியவளிடம்
வந்தான் புரோகிதன் ஒருவன் அப்போதே.

“கஷ்டங்கள் தீர்ந்துவிடும் தாயே – தாங்கள்
இஷ்டத்துடன் வினாயகரை பூஜித்தால்.

மனக் குறை நீங்கும், வாழ்வு செழிக்கும்;
கணவன் அன்பு கிடைக்கும் மீண்டும்!”

மனக் கவலை உடனே ஒழிந்தாள் கீர்த்தி;
தினமும் தொழுதாள் விதிப்படி ஐயனை.

தோழியர் சேகரித்து வந்த அறுகம் புல்
வேழமுகன் அர்ச்சனைக்குப் பயன்பட்டது.

அறுகம் புல் கிடைக்கவில்லை ஒருநாள்!
அருகில் இருந்த வன்னி இலை கிடைத்தது.

“அறுகம் புல் இல்லாத விநாயக பூஜையா?
அறுகம் புல்லுக்கு ஈடாகுமோ வன்னி இலை?

இறைவா பொறுத்தருளும் இக்குறையை
அறுகம் புல் இல்லாத இந்த பூஜையை ”

அறுகம் புல்லால் பூஜை செய்யாத
குறை நீங்கிட இருந்தாள் உபவாசம்.

காலையில் தோன்றினார் கனவில் கணபதி!
“கவலை வேண்டாம் என்னைப் பார்” என்றார்.

அர்ச்சனை செய்த வன்னி இலை எல்லாம்
உற்சாகமாக இருந்தன உச்சந் தலையில்!

“மறுக வேண்டாம் அறுகம் புல்லுக்காக.
சிறந்த வன்னி இலைகள் இருக்கையில்”

கண்களில் பெருகியது ஆனந்தக் கண்ணீர்!
கண்கண்ட கணபதியைத் தொழுதாள் அவள்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


#27b. The leaves of Vanni tree

When Keerthi was considering ending her life a prOhit approached her from nowhere. He told her,” All you troubles will be removed if you pray to VinAyaka with love. Your worries will disappear. Your life will become happy. You will win your husband’s love and affection”

Keerthi felt a little more cheerful. She started doing puja to VinAyaka in the prescribed manner. Her friends gathered enough green grass for the daily puja.

But on one day they could not find a single green grass fit for the puja. Keerthi had to perform the puja with the leaves of the Vanni tree instead.

She was not happy about her puja without the grass arcs. She went on upavAsam to nullify the defect in her puja. Early in the morning she had a vivid dream. VinAyaka appeared in it and spoke to her,

” Look at me my child!” She looked up and saw all the leaves of the Vanni offered by her still stuck to the head of her god. “Do not worry if you can’t get the green grass. I like the leaves of Vanni tree equally well”

She was overcome with joy and shed tears of happiness. God had accepted happily what she imagined to be her defective puja.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 4

4#13b. அசுரர் வசை

“தவம் செய்து மந்திரங்கள் பெற்றவர் இவர்,
நலம் கருதி போதிக்கிறார் பத்தாண்டுகளாக!

உண்மை குரு இவரன்றி நீரல்ல – அதனால்
உண்மையைக் கூறி உடனே சென்றுவிடும்!”

எத்தனை கூறினாலும் நம்பவில்லை அசுரர்.
அத்தனையும் சினமாக மாறியது சுக்கிரனிடம்.

“ஏளனம் செய்து அவமதித்தீர்கள் என்னை!
ஏற்ற தண்டனை அடைவீர்கள் விரைவில்!

தேவாசுர யுத்தத்தில் அறிவற்ற அசுரர்களே!
தோல்வியுற்றுத் துவளுவீர் நிச்சயமாக !

விளையும் என் சாபம் வெகுவிரைவில் போரில் !
வெளியாகும் வஞ்சனையும், கபடமும் அப்போது!”

வந்த வேலை முடிந்தது எளிதாக என்று
இந்திரனிடம் திரும்பினான் பிருஹஸ்பதி.

“தருணம் இதுவே அறிவாய் இந்திரா! தம்
குருவின் சாபம் பெற்றுள்ளார்கள் அசுரர்.

சுக்கிரன் உதவி இல்லாத போது – அசுரரை
மிக எளிதாக வென்று விடலாம் போரில்!”

படை எடுத்தான் இந்திரன் அசுரர்கள் மீது!
அடைந்தனர் கிலேசம் குருவின்றி அசுரர்!

‘மறைந்து உறைகின்றார் நம் அருமை குரு;
குறைவற்ற குருவைச் செய்தோம் ஏளனம்!

மந்திர சித்தி பெறுவது எப்படி – நம்முடைய
சொந்த குருவிடம் சென்று சேர்வது எப்படி?’

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


4#13b. Sukran’s Curse

The Asuraas made fun of the new comer. “This man is our real guru. He did severe penance for our sake and obtained special mantraas from Lord Siva. He has been teaching us for the past ten years. You are the imposter Tell us the truth and get lost from here!”

Sukran tried his best to convince the confused Asuraas but in vain. He became terribly angry with the foolish Asuraas. He cursed them harshly,

” You make fun of me. You don’t trust me. You will be punished for this during the imminent war with the Devaas. You will be crushed by the Devaa. You will realize who spoke the truth very soon”

He disappeared from there. Bruhaspati was happy with the turn of the events. He has successfully completed his mission and he too disappeared and went back to Indra. The asurass were shocked that both the gurus had vanished into thin air.

Bruhaspati told Indra, “This is the right time to crush the Asuraas once for all. They don’t have the guidance or protection of their guru Sukran. Also they have been cursed harshly by Sukran.”

Indra got ready to wage a war with the Asuraas. The Asuraas were crestfallen even before the war – not knowing how to get their guru back and use the mantras obtained by him for their sake.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 9

9#43a. ஸ்வாஹா தேவி (1)

உணவு வேண்டும் உயிர் வாழ்வதற்கு;
உணவு வேண்டும் பணிகள் புரிவதற்கு!

விண்ணப்பித்தனர் தேவர்கள் பிரமனிடம்
உண்ண உணவுக்கு ஏற்பாடு செய்யும்படி.

யக்ஞரூபி விஷ்ணுவைத் தியானித்தான் பிரமன்;
யக்ஞ ரூபமாக அவதரித்தார் ஒரு கலையினால்!

ஹவிஸுகளைத் தந்தனர் யாகத்தில் அந்தணர்;
ஹவிஸு சென்றடையவில்லை தேவர்களிடம்!

சென்றனர் தேவர்கள் மீண்டும் பிரம்ம தேவனிடம்;
பகன்றனர் உணவு வந்து அடையவில்லை என்று.

பிரமன் சென்றான் மீண்டும் விஷ்ணு பிரானிடம்,
"பிரகிருதி தேவியைத் துதி !" என்றார் கிருஷ்ணன்.

தோன்றினாள் பிரகிருதி தேவி ஒரு கலையினால்
புன்னகை முகத்துடனும்; கரிய நிறத்துடனும்!

ஸ்வாஹா தேவியாக வந்து அவதரித்த தேவி
சிநேகத்துடன் வினவினாள் "வேண்டுவது எது?"

"எரிக்கும் சக்தி இல்லை அக்னி தேவனுக்கு!
எரிக்கும் சக்தி ஆவாய் அக்னி தேவனுக்கு !

உச்சரித்து இடுவர் ஹவிஸ்ஸை உன் பெயரால்!
மிச்சமின்றிச் சேர்க்க வேண்டும் தேவர்களிடம்!

அருள் புரிவாய் தேவர்கள் உணவு உண்ண!
அருள் புரிவாய் கிருஹலக்ஷ்மியாக இருந்து!"

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

9#43a. SwAhA Devi (1)

One needs food to remain alive! One needs food do his duties. The DevAs requested BrahmA to arrange for their food in Heaven.

BrahmA meditated on Sri VishNu and he appeared as Yagna Roopi through one of his amsams. The Brahmins performed yagnas and offered havisu in the fire of the Homa kundam. But it could not reach the DevAs in the Heaven.

They went to BrahmA again and said that the havisu did not reach them in the Heaven. Brahma went to KrishnA who suggested to him to meditate on Prakiti Devi.

BrahmA meditated on Prakriti Devi and she appeared as a new Devi with a smiling face and a dark hue. She was the SwAhA Devi and asked Brahma, "What do you wish for?"

BrahmA said, "Agni is not able to deliver the food offered in the yagna to the gods in Heaven. May you become the burning power of Agni and deliver the food for the Devas. The havisu will be offered uttering your name and you must help the Deva to get their havisu"
 
BHAARGAVA PURAANAM - PART 1

#27c. கிப்பிரப் பிரசாதன்

“மனக் கவலையை விட்டு விடு குழந்தாய்!
மணாளனின் அன்பு கிடைக்கும் மீண்டும்.

மகிழ்வாய் மனம் அன்பு மகன் பிறப்பான்,
திகழ்வான் கிப்பிரப்பிரசாதன் பெயரில்.

மாற்றாந்தாய் இடுவாள் விஷம் மகனுக்கு.
மாற்றி விடுவார் கிருச்சதமர் விஷத்தை.

நெடுங் காலம் வாழ்வான் உன் மகன்!
விடுவாய் கவலையை இனி இன்பமே!”

தூக்கம் கலைந்தது, கண் விழித்தாள்;
தாக்கம் நீடித்தது மேலும் பல நாட்கள்!

வெப்பு நோய் உண்டானது பிரபைக்கு.
வெறுத்தான் பிரிய விரதன் பிரபையை.

கீர்த்தியை நாடினான் முன்போலவே.
கீர்த்தி ஈன்றாள் அழகிய ஆண் மகனை.

கணபதி கனவில் கூறியது போன்றே
கண்ணனின் பெயர் கிப்பிரப் பிரசாதன்.

நாளொரு மேனி, பொழுதொரு வண்ணம்;
நன்கு வளர்ந்தான் கிப்பிரப் பிரசாதன்.

“இல்லை அரசுக் கட்டில் பத்மநாபனுக்கு !
தொல்லையே இச் சிறுவன் உள்ளவரை!”

கிப்பிரப் பிரசாதன் உண்ணும் உணவில்
எப்படியோ நஞ்சைக் கலந்தாள் பிரபை.

நினைவின்றி சுருண்டான் உண்டவுடன்;
அனைத்து வைத்தியரும் முயற்சித்தனர்.

மணி, மந்திரம், மருந்துகள் தோற்றன!
கணபதி கூறியது நினைவுக்கு வந்தது.

காக்க வல்லவர் கிருச்சதமர் ஒருவரே!
தூக்கிக்கொண்டு ஓடினாள் தன் மகனை.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#27c. Kippirap PrasAd

VinAyaka spoke to Keerthi in her dream,” Do not worry any more my dear child. You will win your husband’s love and attention once again. You will get a good son named Kippira PrasAd.

The other queen will poison his food. But Kruchadamar will save your son. Kippira PrasAd will live a long happy life. Your days of sorrow are over. It will be only happiness in the future.”

Keerthi woke up from the dream. It had strong influence on her for a long time. PrabhA developed a disease which left her unsightly. The king was not in love with her any more. He came back to Keerthi. Soon they were blessed with a male child. It was named as Kippira PrasAd. The child was smart and grew up well.

PrabhA knew that as long as this little boy lived, her son PadmanAbhan could never become the king of the country. She managed to poison the food kept for the young prince.

The child ate the food and fell down unconscious. The King’s vaidhyas rushed in and tried everything they knew. The treatment with gem, with chanting and with medicines all failed. Keerthi remembered her dream vividly. The only person who could save her son was Kruchchadamar. She carried her son and ran to the ashram of Kruchchadamar.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 4

4#13c. பிரஹலாதன் (1)

உத்தமன் பிரஹலாதனின் உதவியை நாடினர்;
எத்தனை நம்பி மோசம் போனதைக் கூறினர்.

அத்தனை பேரும் சென்றனர் குரு சுக்கிரனிடம்;
எத்தனை சொன்னாலும் தணியவில்லை சினம்!

பணிந்தான் பிரஹலாதன் குருவின் பாதங்களை,
பணிவோடு விண்ணப்பித்தான் கோரிக்கையினை.

“புத்திரர்கள் ஆவோம் யாம் உமக்கு ஐயா !
புத்தி பேதலித்தோம் கபடம் அறியாமல்.

மந்திர உபதேசம் பெற நீர் சென்ற போது
இந்திரன் செய்த வஞ்சனையின் பயனால்.

இனம் காண முடியவில்லை உண்மை குருவை!
இனம் காண முடியில்லை வேடதாரி குருவை!

தீர்க்க திருஷ்டி பெற்றவர் நீர் குல குருவே!
தீர்மானிப்பீர் இதில் எம் தவறு என்ன வென்று.

ஞான திருஷ்டி வாய்ந்தவர் நீரே – இந்த
ஞான ஹீனர்களை மன்னியுங்கள் ஐயா!

தராதீர் சாபம்; கொள்ளாதீர் கோபம் – உண்மை
ஆராய்வீர்! உம்மை யாம் அடி பணிகின்றோம்.

தணிந்து விடும் பெரியோர் சினம் விரைவில்;
இனித்து விடும் குளிர்ந்த நீர் போல் விரையில்;

வெப்பத்தால் சூடு ஏறும் குளிர்ந்த நீரில்
வெப்பம் தணிந்ததும் குளிர்ந்துவிடும் நீர்.

சினம் தணிந்து அருள் செய்ய வேண்டும்;
சீடர்கள் எமக்கு உம்மையன்றி யாருளர்?”

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


4#13c. Prahlaad

The Asuraas sought the help of their good-natured king Prahlaad. They explained to him their problem in detail. Then they all went to their guru Sukran. No amount of explanation could convince their angry guru or pacify him.

Prahlaad prostrated in front of Sukran and said in a voice filled with deep reverence,”We are your foolish children oh Guru! We got deluded since we were innocent as well as ignorant.

It was due to the dirty trick played by the cunning Indra – when you had gone away to obtain mantra siddhi from Lord Siva. We could not identify the false impersonator. We could not recognize you as our real guru.

You have the power of Divya drushti and you can see the past, the present and the future. Please see for yourself what had happened and say whether it is due to our fault.

We are foolish common peOple.You must pardon our offence. The anger of a good man is like the hot water. When the anger subsides, he cools down fast. Please subdue your anger. We have no one to help us other than you!”
 
DEVI BHAAGAVATAM =- SKANDA 9

9#43b. ஸ்வாஹா தேவி (2)

வருந்தினாள் இதைக் கேட்ட ஸ்வாஹா தேவி;
"விரும்புகின்றேன் நான் கிருஷ்ணனை மணக்க!

நடப்பவை அனைத்தும் நடப்பது கிருஷ்ணனால்;
அடைய வேண்டும் நானும் கிருஷ்ண மூர்த்தியை!"

ஒற்றைக் காலில் தவம் செய்தாள் ஸ்வாஹா தேவி;
தோற்றம் தந்தான் அன்புடன் ஸ்ரீ கிருஷ்ண மூர்த்தி.

தாங்கொண்ணாத மகிழ்ச்சியில் மூர்ச்சித்து விடத்
தாங்கி எழுப்பினான் ஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி அவளை!

"எடுப்பேன் வராஹ அவதாரம் எதிர் காலத்தில்!
அடைவாய் நீ அப்போது என்னைக் கணவனாக!

பிறப்பாய் நக்னிஜிதனுக்குப் புதல்வியாக!
பெறுவாய் நாக்னிஜிதீ என்னும் பெயரை !

அக்னிதேவனின் மனைவி ஆவாய் இப்போது!
அக்னி தேவனின் எரிக்கும் திறன் ஆவாய் நீ!

அங்கமாக இருப்பாய் நீ அவன் மந்திரங்களுக்கு!
பங்கமின்றித் தருவாய் ஹவிஸ்ஸை தேவருக்கு!

மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வான் உன்னை.
மகிழ்வடைந்த அக்னி தேவன் உன் சக்தியால்!"

மணம் புரிந்து கொண்டான் அக்னி தேவன்
மந்திரப் பூர்வமாக ஸ்வாஹா தேவியை.

அக்னி சுகித்திருந்தான் ஸ்வாஹா தேவியுடன்
ஆயிரம் தேவ வருடங்கள் இல்லற வாழ்வினில்.

ஜனித்தனர் மூன்று மகன்கள் அவர்களுக்கு!
தக்ஷிணாக்னி, கார்ஹபத்யாக்னி, ஆஹவனீயம்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

cleardot.gif

9#43b. SwAhA Devi (2)

SwAhA Devi became sad on hearing this request. She said, "Everything in this universe happens because of Sri Krishna. I want to marry him and no one else."

SwAhA Devi did severe penance standing on one leg. Sri Krishna was pleased and gave her his darshan. She fainted with overwhelming happiness! Krishna brought her around and told her:

I will take an avatar as a boar in the future. You will become my wife then. Be born as the daughter of king Nagnijith and bear the name NAgnijithee.

Now you will marry Agni Devan and become his burning power. You name will form a part of the mantrAs uttered. You have to make sure that the havisu reaches the DevAs in Heaven. Agni will keep you happy since you will be his burning power."

Agni married SwAhA with the auspicious mantrAs uttered and they lived happily for one thousand celestial years. They were blessed with three sons named DakshinAgni, GArhyapatyAgni and AhavaneeyAgni.


 
BHAARGAVA PURAANAM - PART 1

#27d. கிருச்சதமர்

வாரியணைத்த சிறுவனுடன் செல்கையில்
ஆவி பிரிந்தது பாதி வழி செல்கையில்.

“தெய்வ வாக்குப் பொய்க்கலாகுமா?’ என்று
செய்வதறியாமல் கதறி அழுதாள் கீர்த்தி.

ஞான திருஷ்டியில் நடந்ததைக் கண்டார்;
போனார் அவளிடம் கிருச்சதமர் விரைந்து.

“தாயே! கலங்காதே மகன் பிழைத்தெழதத்
தத்தம் செய் வன்னிப் பத்திர பூஜாபலனை!”

வன்னிப் பத்திரத்தால் கணபதியை பூஜித்த
புண்ணிய பலனைத் தத்தம் செய்தவுடன்;

விஷக் கொடுமை நீங்கிய கிப்பிரப் பிரசாதன்
விழித்து எழுந்தான் நீண்ட உறக்கத்திலிருந்து!

தாயும், மகனும் வலம் வந்து வணங்கினர்,
தந்தை போல் வந்து காத்த தயாபரனை.

“அறுகம்புல் இல்லையே என நான் மனம்
மறுகியபடி பூசித்தேன் வன்னி இலையால்!

விஷத்தை வெல்லும் மகிமை அதற்கு
விளைந்தது எப்படி கூறுங்கள் ஸ்வாமி!”

“வாயினால் வன்னி என்ற மாத்திரத்தில்,
வாக்கினால் விளைந்த பாவம் மறையும்!

மனதினால் வன்னியை நினைத்தவுடன்,
மனதினால் விளைந்த பாவம் மறையும்.

தரிசித்து வன்னியை வலம் வந்தால்,
தீரும் உடலால் விளைந்த பாவங்கள்.

வன்னியின் பெருமையை வாயால் கூற
என்ன முயன்றாலும் முடியாது தாயே!’

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#27d. Kruchchadamar

When Keerthi was half way to the ashram of Kruchchadamar, the young prince died. She was shattered that God’s words had proved false and her son was not saved by Kruchchadamar. She cried most piteously.

Kruchchadamar knew of these happenings by his gnaana drushti. He rushed out from his Ashram to the place where Keerthi was crying over her son. He told her, “Do not cry oh mother! If you will give away your vanni-patra pooja-palan to your son he will come back to life.”

Se gave away her vanni patra pooja palan to her son and the boy woke up as if from a long deep sleep. Keerthi was overwhelmed wtih joy. She and her son prostrated in front of the rushi who had saved the boy from death.

Keerhthi asked the sage Kruchchadamar,”Sire, once I could not get the fresh green grass for VinAyaka puja and used the leaves of the vanni tree instead. How do the vanni leaves possess so much power as to defeat deadly poison?”

Te sage replied, “It is very difficult to relate the greatness of vanni tree with mere words. The word vanni uttered will remove all the sins incurred through our speech.

The thought about the vanni tree will remove all the sins incurred through our thoughts. Going round the tree will remove all the sins incurred by our actions. Vanni is too great to be spoken about in mere words.”
 
DEVI BHAAGAVATAM - SKANDA 4

4#13d. தணிந்தது சினம்

கண்டான் எதிர்கால விளைவுகளைச் சுக்கிரன்,
கொண்டான் மன அமைதி இனிய மொழிகளால்.

“அஞ்ச வேண்டாம் அசுரர் குல சிகாமணிகளே!
தஞ்சம் புக வேண்டாம் பாதள உலகம் சென்று.

மந்திரங்களால் காப்பேன் உங்களை நான்;
பின்னடைவு உண்டு உமக்குக் கால வசத்தால்!

விதிப்படி வந்தடையும் சுக துக்கங்கள் – அதை
எதிர்கொள்வது அன்றி இயலாது தடை செய்ய.

பத்து யுகங்கள் ஆண்டீர் மூவுலகங்களையும்!
மொத்தமாக மாறிவிட்டது நிலைமை இன்று
.
ஓங்கும் நம் கை சாவர்ணிக மனுவின் காலத்தில்;
ஏங்கும் அசுரர்களைத் தங்குவான் மஹா பலி.

வாமனாக வந்து உலகளந்த விஷ்ணு
வாரி வழங்கியுள்ளார் பல வரங்களை.

“மூவுலகையும் எனக்களித்த புண்ணியத்தால்
மூவுலகாளுவாய் சாவர்ணிக மனு காலத்தில்.”

பலி மறைந்து உறைகின்றான் இக்காலத்தில்;
பலி ஆகிவிடுவான் இந்திரனாகப் பிற்காலத்தில்.

பிரம்மஹத்தி பற்றிய இந்திரன் ஒளிந்திருந்தான்;
பிறந்தவர்கள் கட்டுப்படவேண்டும் காலத்துக்கு.

சுகமாயினும் சரியே, துக்கமாயினும் சரியே,
சுமக்க வேண்டும் கர்மவினைப் பயன்களை!

பிறந்துள்ளவை அனைத்தும் வசப்பட்டவை
சிறந்த காலத் தத்துவத்துக்கு!" என்றார் வியாசர்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

4#13d. Sukran’s anger subsided

Sukran saw the future of Asuraas in his Divya drushti. His anger vanished on hearing the sweet words spoken softly by King Prahlaad. He spoke to the asuras now.

“Please do not worry dear Asura veeraa! You don’t have to take refuge in the paataala fearing the Devaas. I will use the power of mantras and save you. Now the time is unfavorable for you no doubt.

We enjoy pleasures and pains as ordained by Destiny. We are powerless to change them. We just have to accept them as they come to us.

You ruled over the three worlds for ten yugaas. Now the tables are turned. You will regain your supremacy again in SaavarNika manvantara. King Mahaa Bali will make us all proud. Vishnu has given him several boons when he took avatar as Vaamana.

He had blessed Mahaa Bali that Bali will rule over the three worlds. Bali keeps a low profile now. But he is destined to become the Indra in the future. When Indra was afflicted by Brahmahathi dosham, he hid himself in the stem of a lotus .

Whosoever is born is controlled by the Time Factor. He has to endure or enjoy the fruits of his past karma. Time factor binds and rules over everything created.”
 
DEVI BHAAGAVATAM - SKANDA 9

9#43c. ஸ்வாஹா தேவி (3)

அவிர்தானம் செய்தனர் மூன்று வர்ணத்தவர்;
அழகிய ஸ்வாஹா என்னும் மந்திரங்களால்!

அடைந்தனர் தேவர்கள் ஹவிர் பாகங்களை;
அடைந்தனர் சித்திகள் யாகம் செய்தவர்கள்.

இணையாகும் ஸ்வாஹா இல்லாத ஒரு மந்திரம்
தினை அளவும் வேதம் அறியாத அந்தணனுக்கு;

நஞ்சு இல்லாத ஒரு சர்ப்பத்துக்கு - பதிக்குக்
கொஞ்சமும் சேவை செய்யாத பெண்மணிக்கு;

வித்தை எதுவும் இல்லாத மனிதனுக்கு;
விரும்பும் கனிகள் இல்லாத கிளைக்கு;

ஹோம பலன் கிடைக்காது செய்பவருக்கு;
அவிர்பாகமும் கிடைக்காது தேவர்களுக்கு.

பூஜிக்க வேண்டும் ஸ்வாஹா தேவியை
பூர்வம் யக்ஞ, ஹோமம் தொடங்குமுன்!

அங்கம் ஆவாள் ஸ்வாஹா மந்திரங்களுக்கு;
எங்கும் பலன் தருவாள் செய்த கர்மங்களுக்கு.

தியானிக்க வேண்டும் மூல மந்திரத்தால் தேவியை;
அபிமானிக்க வேண்டும் உபசாரங்களால் தேவியை.

இம்மையிலும், மறுமையிலும் சித்திகள் பெறுவான்
இந்தப் பதினாறு நாமங்களால் போற்றிப் புகழ்பவன்

"ஸ்வாஹா, வஹ்னி ப்ரியா, வஹ்னி ஜாயா
சந்தோஷ காரிணீ , சக்தி, கிரியா, காலதாத்ரி,

பரிபாக்கரி, த்ருவா, நராணாம் சதா கதி,
தாஹிகா, தஹனக்ஷமா, சம்சார சார ரூபா,

கோர சம்சார தாரிணீ, தேவ ஜீவன ரூபா,
தேவ போஷன காரிணீ " என்ற நாமங்களால்

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


9#43c. SwAhA Devi


The three varnAs performed YAgA and offered havisu uttering the mantra with the name of SwAhA Devi! The Gods and DevAs got their share of the havisu and the performers of the yAgA got all their desires fulfilled.

The mantrA without SwahA is like a Brahmin without the knowledge of the VedAs; or a serpent without poison; or a patni who does not do pati-seva; or a man who does not have any talent or training; or a branch which does not not bear fruits.

The kartA of the yAgA will not get his desires fulfilled nor will the Deva get their share of havisu. One must worship SwAhA Devi before the commencement of the yAgA. She betows the fruits of the YagAs.

One must worship her uttering her Moola mantra and doing the various honors. One who praises her uttering these sixteen names will obtain sidhdhi in this world as well as the next!

“You are the SwAhA Devi! You are the Beloved of Agni. You are the wife of Agni. You please everyone. You are the Sakti. You are the action. You are the bestower of KAla. You help in digesting the food; You are the DhruvA; You are the resort to all men; You are the burning power; You can burn everything,You are the essence of this world; You are the deliverer from the terrible world; You are the life of the gods and You nourish the Gods.”

He who reads with devotion these sixteen names, gets success both in this world and the next. All his efforts will be successful. He who wants a wife will marry a beautiful girl and live with her in bliss.

 

Latest ads

Back
Top