• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

A poem a day to keep all agonies away!

BHAARGAVA PURAANAM - PART 1

#27e. வன்னி, மந்தாரம்

ஒரு நல்ல முனிவர் நந்தி கோத்திரர்;
ஔரவர் நந்திகோத்திரரின் புதல்வர்.

சுமேதை ஔரவரின் அன்பு மனைவி,
சுமேதை ஈன்றாள் சமியை மகளாக.

மணப் பருவம் எய்தினாள் சமி வளர்ந்து!
மந்தாரன் சௌனகமுனிவரின் ஒரு சீடன்.

மகளுக்கு ஏற்ற மணாளன் அவன் என்று
மகளை மந்தாரனுக்கு மணம் முடித்தனர்.

தாய் தந்தையரைக் காணச் செல்லுகையில்
தம்பதிகள் கண்டனர் தும்பிக்கை முனியை.

வேழமுகனின் உருவம் பெற்ற அவரை
ஏளனம் செய்து சிரித்தனர் இருவரும்.

புருசுண்டிக்குக் கோபம் பொங்கியது;
புருவம் நெற்றி உச்சிக்குச் சென்றது!

” என்னைக் கண்டு நகைத்த நீங்கள்
ஒன்றுக்கும் உதவாத மரமாகக் கடவீர்.”

சாபம் பிறந்தது கோபம் பிறந்ததால்.
தாபம் பிறந்தது சாபம் பிறந்ததால்.

மன்னிக்கும்படி வேண்டினர் முனிவரிடம்
கண்ணீர் மல்கக் கணவன் மனைவியர்.

முனிவருக்குத் தோன்றியது கனிவு.
கனிவிலிருந்து தோன்றியது கருணை.

“துதிக்கையைக் கண்டு நகைத்தீர்கள்!
துதிக்கையனால் வளரும் சிறப்புக்கள்!

நிழலில் அமர்ந்து வெளிப்படுத்துவான்
வேழமுகன் உங்கள் பெருமைகளை.

மரவுருவம் மாறாமலேயே செல்வீர்
கரிமுக நாதனிடம் காலம் முடிந்தபின்!”

மாறிவிட்டாள் வன்னி மரமாக சமி;
மாறினான் மந்தார மரமாக மந்தாரன்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#27e. Vanni and Mandaaram

Nandi GOthrar was a rushi. Ouravar was his son. SumEdai, Ouravar’s wife bore him a beautiful daughter named Sami. When the girl reached marriageable age they were on the look out for a suitable boy. MandAran was a disciple of Sounaka rushi and they got Sami married to MadAran.

The couple went to meet his parents. On the way they met BrusuNdi. His elephant-like trunk made them burst out with laughter. The rushi became very angry at this immature behavior and cursed them to transform to two useless trees.

The couple were filled with remorse, fell at his feet and begged for his pardon. The sage took pity on them and said,

” You will become two tress. But VinAyaka will be worshiped under your shade and thus bring greatness to you. You will stand for long and reach the Vinayaka lokam when your time comes in the form of the trees.”

Sami became the Vanni tree and Mandaaran the MandAra tree.
 
4#14a. தேவாசுர யுத்தம்

காலத்தின் வலிமையினை உணர்ந்த பிரஹலாதன்
காத்திருக்க முடிவு செய்தான் காலம் கனியும் வரை.

“வெற்றி கிடைக்காது இப்போது யுத்தம் புரிந்தால்!
வெல்லும் காலம் வரை காத்திருப்போம்!” என்றான்.

“காலம் கருதும் நிலையில் இல்லை நாம் இப்போது;
காலம் கருதுவர் முயற்சி அற்றவர்கள் மட்டுமே!

விரயம் செய்யோம் விலை மதிப்பற்ற காலத்தை!
கரை கண்டவர் யார் காலத்தின் நியதியை இங்கு?

எந்த உருவத்தில் உள்ளது காலத்தின் நியதி?
ஏற்படுத்தியவர் யார் காலத்தின் நியதிகளை?

வீரமும், தீரமும் தரும் வெற்றியை – வீணே
விரயம் செய்யும் காலம் அல்லவே!” என்றனர்.

மறுக்க முடியவில்லை பிற அசுரரின் கூற்றை!
விருப்பத்துக்கு அடி பணிந்தான் பிரஹலாதன்.

அழைத்தான் தேவர்களைத் தன்னுடன் போருக்கு;
அணைத்தாள் வெற்றித் திருமகள் அசுரர்களை !

தோல்வியால் துவண்டான் தேவேந்திரன் – சென்று
தேவ குருவிடம் கூறினான் தனது குறைகளை.

“அடைவோம் சகல சித்திகளையும் உடனே
தடையின்றி மகேஸ்வரியின் கடாக்ஷத்தால்!”

வழிபட்டான் இந்திரன் தேவியைத் துதித்து;
வெளிப்பட்டாள் தேவி புன்னகை முகத்தோடு.

சிங்க வாகனத்தில் அமர்ந்து கொண்டு கரங்களில்
சங்கு, சக்கரம், கதை, பத்மம் ஏந்திக் கொண்டு!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


4#14a. Devaasura yuddham

Prahlaad understood the power of the Time Factor on the activities of everyone and decided to wait for a more favourable time for the war with the Devaas. But the other asuraas who did not accept his views said,

“We are not in a position to abide for a more favourable time. Only those who do not faith in themselves believe in the Time Factor. We do not want to waste the precious time in waiting.

Who knows everything about the Time Factor and how it affects our lives? It is our valour and strength that give us victory and not the Time Factor.”

Prahlaad gave in to their demands and went to fight with Indra and his army. The Goddess of Victory embraced the side of the Asuraas. The Devaas were defeated in the war. Indra went to his guru crestfallen and sad to lament on his defeat.

Bruhaspati advised him to do aaraadhana to Devi and get her blessings. Indra did as he was told and Devi emerged seated on her lion vaahana and with a smiling countenance. She held the conch, discus, the mace and the lotus in her four arms.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 9

9#44a. சுவதா தேவி (1)

திருப்தியை உண்டாக்குவாள் இவள் பித்ருக்களுக்கு.
சிறந்த பலன் தருவாள் சிரார்த்த காலத்தில் இவள்.

சிருஷ்டித்தான் பிரமன் ஆதியில் பித்ருக்களை;
சரீரம் உள்ள நால்வரை, தேஜோரூப மூவரை!

ஏற்படுத்தினான் சிரார்த்த கர்மத்தைப் பித்ருக்களுகாக.
ஏற்க வேண்டும் அந்தணன் அனுஷ்டான கர்மங்களை

சிரார்த்த தர்ப்பணம், சந்தியா வந்தனம், வேதம்
சிறந்த அந்தணனுக்கு இன்றி அமையாதவை.

விஷமில்லாத பாம்பு போல இகழப்படுவான் - இந்த
விஷயங்களில் அக்கறை இல்லாத ஒரு அந்தணன்

இறைவனுக்குப் படைக்காமல் உணவு உண்பவன்;
இறைவனுக்குச் சேவை ஒருநாளும் செய்யாதவன்;

கர்மங்கள் செய்யும் தகுதியை இழப்பான் - செய்யும்
கர்மங்கள் எதுவும் பலனளிக்காது இவனுக்கு.

பித்ருகளுக்காக பிரமன் ஏற்படுத்தினான் சிரார்த்தம்
பிருக்களுக்கு கிடைக்கவில்லை பலன் எதுவும்

செய்தனர் பிராமணர்கள் சிரார்த்தம் - ஆனால்
சேரவில்லை அளித்த உணவு பித்ருக்களுக்கு

முறையிட்டனர் குறையை பித்ருக்கள் பிரம்மனிடம்
உருவாக்கினான் அழகிய கன்னியை பிரம்ம தேவன்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

9#44a. SvadhA Devi (1)

Svadha Devi serves during the SrArdha kArya to satisfy the Pitrus. BrahmA created the Pitrus - four of them with sareeram and three of them with Tejo roopam. He created anushtAna karmAs to honor them.

VedAs, SandhyA vandanam and SrArdha karmAs are the three important things for a brahmin. A brahmin who does not show interest in these three is no better than a serpent without poison.

A brahmin who eats the food not offered to God and he who never does any service to God will lose the eligibility to do the karmAs. Also the karmAs performed by him wil not bear fruits.

Even though Brahma established the Pitru karmaas there was no use. The brahmins performed SrArdham but the food offered did not reach the Piturs.They went and complined about this to BrahmA.

BrahmA created a Devi to become the wife of the Pitrus and make the food reach them.



[TABLE="class: cf FVrZGe"]
[TR]
[TD="class: amq"]
[/TD]
[TD="class: amr"]
[/TD]
[/TR]
[/TABLE]

 
BHAARGAVA PURAANAM - PART 1

#27f. வேழமுக வேந்தன்

சீடன் மந்தாரனைக் காணாத் சௌனக முனிவர்
சீடர்களை அனுப்பினார் ஔரவ முனிவரிடம்.

மந்தாரன் சென்றான் அன்றே மனைவியுடன்;
வந்து சேரவில்லை இன்னம் ஆசிரமத்துக்கு!

ஞான திருஷ்டியில் கண்டார் சீடன் மந்தாரன்,
மோனத்தவ முனிவரின் சாபத்தைப் பெற்றதை.

விநாயகர் அருள் பெற்ற புருசுண்டி முனிவரை
அனாவசியமாகச் சினம் ஊட்டிய பிள்ளைகள்;

சுய உருவடைய வேண்டும் என்று விரும்பிக்
கயமுகனைத் தொழுதனர் அவர் பெற்றோர்.

பன்னிரண்டு ஆண்டுகள் கடந்த பின்னர்
பத்துக் கரங்களுடன் வந்தார் கணபதி.

“பக்தனின் சாபத்தை மாற்ற இயலாது!
பக்தி செய்தீர் பன்னிரண்டு ஆண்டுகள்.

ஒன்றுக்கும் உதவாத மரமாக நிற்பவரை
மண்ணுலகம் போற்றிட வழி செய்வேன்!

இம்மர நிழலில் என்னைப் பூஜிப்பவருக்கு
இம்மை, மறுமை இரண்டிலும் ஆனந்தமே!”

மரங்களின் நிழலில் எழுந்தருளினார்.
மரங்களின் சிறப்புப் பல்கிப் பெருகியது.

மந்தார மலர், வன்னி இலைகள் கொண்டு
மனதாராப் பூஜித்தனர் நான்கு பெற்றோரும்.

சுமேதை சேர்ந்தாள் விநாயகர் திருவடிகளை.
சூக்ஷ்ம வடிவில் சரீரத்தை வருத்திக்கொண்டு

ஔரவர் அடைந்தார் வன்னியின் கர்ப்பத்தை.
ஔரவர் ஆகிவிட்டார் இப்போது சமீகர்ப்பர்!

அவிர்பாகம் பெற்று தேவர்களுக்குத் தரும்
அனுக்கிரஹம் பெற்றார் அந்த சமீகர்ப்பர்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


#27f. Lord VinAyaka

Sounaka rushi got worried since MandhAran never came back after his marriage. He sent his other disciples to Ouravar find out about MandAran. Ouravar was equally surprised since the bride and the groom had left their place soon after their wedding.

Sounakar found out the things that happened to them and how the newly weds had been cursed to become useless trees. They had made fun of BrusuNdi – who had a trunk in his face and resembled VinAyaka in appearance.

The parents of MandAran and Sami started praying to VinAyaka to deliver their children from this terrible curse and make them get back their original forms. Twelve years rolled by. VinAyaka took pity and appeared to them with his ten impressive arms.

He told the parents, “The curse laid by my devotee cannot be removed by me. You have prayed hard for twelve long years. i shall bestow some boons on you. Those who pray to me sitting under the shade of these two trees will get happiness in this birth as well in the next.” He appeared as statues under those two trees.

The parents of the couple prayed and did archanai with the vanni leaves and Mandara flowers. Sami’s mother SumEdhai merged with VinAyaka’s lotus feet. Ouravar took the sooshma form and managed to reach the garbbam of the vanni tree. He became Sami grabbar-incharge of giving the havir-bAgam to the various DEvA during a hOmam.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 4

4#14b. பிரஹலாதன் (2)

“அருள் செய்வேன் அஞ்சற்க! என்றாள் தேவி – அசுரர்
இருக்குமிடம் சென்றாள்; போர்முகமாக நின்றாள்.

சண்ட, முண்டர்களைக் கண்டனம் செய்த தேவி!
துண்டாக்கியவள் மது, கைடபரை விஷ்ணு மூலம்!

வெல்ல இயலுமா இந்த மஹா மாயையை? இந்த
எல்லையில்லா ஆற்றல் கொண்ட மஹாசக்தியை?

கூறினான் பிரஹலாதன் அசுரரிடம் – “வேண்டாம்
போரிடவும்! வேண்டாம் ஓடித் தப்பவும் பாதாளம்!”

அஞ்சி ஓட முயன்றவர்களிடம் கூறினான் நமுசி,
“மிஞ்ச மாட்டோம் உயிருடன் எங்கு ஓடினாலும்!

வணங்கி வழிபடுவோம் தேவியை முதலில்;
பணிந்து விடை பெறுவோம் பாதாள உலகுக்கு!”

துதித்தான் தேவியை பிரஹலாதன் முன் நின்று;
துதித்தனர் தேவியை அசுரர் அவன் பின் நின்று.

“உலகினைப் படைத்துக் காத்து அழிக்கின்றாய்.
உலகில் உள்ள அனைவருக்கும் நீ ஒரே தாய்!

தேவர்கள் போலவே நாங்களும் உன் மக்கள்;
பேதப்படுத்தி வேறுபடுத்துவது ஏன் எம்மை?

ஒருவரிடம் பிரியம் வைப்பதும் – மாறாக
ஒருவரிடம் குரோதம் கொள்வது சரியோ?

காமக் குரோத மோகங்கள் உள்ளன அமரர்களிடம்!
காமக் குரோத மோகங்கள் உள்ளன அசுரர்களிடம்!

என்ன வேறுபாடு கண்டாய் இருவரிடமும்;
எண்ணிப் பார் தாயே நடு நிலைமையோடு”

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


4#14b. Prahlaad (1)

Devi gave abahyam to the Devaas. She went to face the Asuraas in the war. The Devi – who had destroyed the demons ChaNda and MuNda and caused the death of the demons Madhu and Kaitaba through Vishnu – now stood opposing the Asuraas.

Can anybody defeat this Mahaa Maayaa? Can anybody vanquish this Maahaa Shakti?

Prahlaad told the Asuraas, “Don’t fight with Devi. Don’t try to run away to save your skin”. Namuchi told the Asuraas. ” None of us will escape with our lives if we try to run away from here. Let us pay our obeisance to Devi first and with her permission go to the Paataala.”

Prahlaad praised Devi with deep reverence. The rest of the Asuraas stood behind him and did likewise. Prahlaad told Devi,

“You create, sustain and destroy the worlds Oh Devi! You are the only mother to everything living and non-living. Devaas are your children but so are we the Asuraas. Why is this differentiation between these two races?

Why this soft corner for the Devaas and animosity towards the Asuraas? The Devaas are steeped in Kaama, Krodha and Moha. So are the Asuraas. What makes the Asuraas different from the Devaas? Please consider this with a neutral and impartial attitude Oh Devi!”
 
DEVI BHAAGAVATAM - SKANDA 9

9#44b. ஸ்வதா தேவி (2)
பெற்றிருந்தாள் நூறு சந்திரர்களின் ஒளியை!
பெற்றிருந்தாள் மனோரம்ய உருவம், பருவம்.

சிறந்திருந்தாள் வித்தையில், நற்குணங்களில்
இருந்தாள் பிரகிருதி தேவியின் ஓரம்சமாக.

புன்னகை முகம், தூய்மை, கற்புடன் - வெண்
ஷண்பக மலரின் நிறம் கொண்டிருந்தாள்!

இரத்தின ஆபரணங்கள் பூண்டிருந்தாள் தேவி
பக்தருக்கு வரம் தரும் சக்தி பெற்றிருந்தாள்.

விளங்கினாள் ஸ்வதா என்ற பெயருடன்;
விளங்கினாள் லக்ஷ்மியின் லக்ஷணத்துடன்!

தாமரையில் பதிந்திருந்தன அழகிய பாதங்கள்;
தாமரை மிளிர்ந்தது முகத்திலும், விழிகளிலும்!.

பத்தினியானாள் ஸ்வதா தேவி பித்ருக்களுக்கு;
உத்தம மந்திரம் உருவானது ஸ்வதா பெயரில்.

உபதேசித்தார் அந்தணர்களுக்கு அந்தரங்கமாக
உபயோகித்தனர் அந்தணர் ஸ்வதா மந்திரத்தை

ஸ்வாஹா மந்திரம் உணவளிக்கும் தேவர்களுக்கு
ஸ்வதா மந்திரம் உணவளிக்கும் பித்ருக்களுக்கு

தக்ஷிணை தேவை எல்லாக் கர்மங்களுக்கும்!
தக்ஷிணை இல்லாத பூஜையும், யாகமும் வீண்

போற்றினர் அனைவரும் ஸ்வதா தேவியை
போற்றினர் அவள் மூலம் பித்ருக்களையும்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

9#44b. SvadhA Devi (2)


SvadhA Devi had the cool luminescence of one hundred full moons risen together. She had a beautiful body and was young and attractive. She was created out of an amsam of the Prakriti Devi and excelled in good qualities.

She had a smiling countenance. She was chaste and was of the coloUr of white champaka flowers. She was adorned with many ornaments studded with precious gems. She had the power to give boons to her devotees. She was as beautiful as Lakshmi Devi herself.

Her feet stood on a lotus flower. Her eyes resembled the lotus petals and her face a lotus in bloom. She became the wife of the Pitrus. BrahmA created an auspicious mantr in the name of SvadhA Devi.

He taught it to the Brahmins secreTly. They used the mantra in their karmAs. The mantrA with SwAhA gives food to the DevAs and Gods. The mantrA with SvadhA gives food to the Pitrus.

DakshiNa Devi is necessary for all the pujAs and YAgAs. Without DakshiNA Devi, all the karmAs will go in waste.

Everyone praised SvadhA Devi and through her the Pitrus.



 
BHAARGAVA PURAANAM - PART 1.

#27g. பிரமனின் யாகம்

பெருமானைக் குறித்துப் பொதிய மலையில்
பெரும் யாகம் ஒன்று செய்தார் பிரம்மதேவன்.

சாவித்திரி தேவியை விட்டுச் சென்றார்,
சரஸ்வதி தேவியுடன் யாகம் செய்வதற்கு.

கோபம் கொண்டாள் உதாசீனம் ஆனவள்.
சாபம் தந்தாள் யாகம் காண வந்தவருக்கு!

ஜலவுருவாகும்படி சபித்தாள் தேவர்களை.
ஜலவுருவாகி விட்டார்கள் வந்த தேவர்கள்!

அலறி அடித்துக் கொண்டு ஓடி வந்தனர்
ஜலவுருவடைந்த தேவரின் மனைவியர்.

செய்வது அறியாமல் திகைத்த பிரமன்
கைலாசபதியை தியானித்தார் மனத்தில்.

நந்தி வாகனம் மீது காட்சி தந்தார் சிவன்
“தந்தியைத் தொழுதிட மறந்து விட்டீர் நீர்!

இடையூறுக்கு ஆகும் அதுவே காரணம்.
தடைகள் நீங்கும் தொழுவீர் கணபதியை!

ஆதி காரணனை மறந்ததால் யாகம்
பாதியிலேயே நின்று விட்டது பாரும்!”

பெரிதும் வருந்தினர் தவற்றை யுணர்ந்து;
கரிமுக நாதனை பூஜித்தனர் தேவமாதர்!

மந்தார மரத்தடியில் செய்த பூஜையால்
எந்த விளைவுமே ஏற்படவில்லையே!

வன்னிப் பத்திரத்தால் அர்சிக்கும்படிச்
சொன்னது அசரீரி வாக்கு அப்போது .

வன்னிப் பத்திரத்தால் அர்ச்சித்த உடனே
எண்ணப் படிக் காட்சி அளித்தார் தந்தி.

ஏரம்ப கணபதியை நன்கு ஆராதித்து
தேவர்கள் பெற்றனர் தம் சுய உருவை.

பன்னிரண்டு ஆண்டுகள் பூஜித்த பிரமன்
தன்னிரண்டு மனைவியரோடு செய்தான்.

வேழமுகனின் அருளோடு செய்த யாகம்
தாழ்வின்றி நன்றாக நடந்து முடிந்தது.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#27g. Brahma’s yagna

Brahma wanted to perform a yagna in honour of lord Siva in the mountain POdigai. He left behind his wife SAvithri Devi and went to the Yagna sAla with his other wife Saraswathi Devi.

The neglected wife SAvithi Devi became wild with anger and cursed that all the DEvA who had come to witness the yagna be turned to water. All the Deva including VishNu and Indra became water.

The wives of the DEvA came running and crying. Brahma was shocked beyond words. He contemplated on Lord Siva who appeared on his Nandi vAhanam.

Siva told Brahma, “You forgot to invoke the blessings of VinAyaka before you started the yagna. That is the cause of all these troubles. Worship VinAyaka and start the yagna once again with his blessings and it will be completed successfully.”

Brahma and all the wives of the DEvA worshipped Vinayaka under the MandAra tree – but nothing happened.

Then they heard an AkAshvANi telling them to do the archanani with the vanni patrams. When the vanni patra archani was done, VinAyaka appeared before them. They worshipped the Ekamba VinAyaka and got back their original forms.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 4

4#14c. பிரஹலாதன் (3)

“நீ விரும்பும் செயல்களே நடப்பது மெய்!
நீ விரும்பாமல் எங்கனம் விளையும் போர்?

தர்மத்தை அறிவான் தேவேந்திரன் நன்கு;
தர்மத்தை அறிவேன் உள்ளபடியே நானும்.

தர்மம் அறிந்த எங்களிடையே விரோதம்
மர்மமாக உதிப்பது உன் செயல் அல்லவா?

பாற்கடலைக் கடைந்தோம் ஒற்றுமையாக;
பரந்தாமன் செய்தார் கபடமும், சூதுவாதும்.

பல பொருட்கள் விளைந்தன பாற்கடலில்!
பரதேசியானோம் எதுவுமே கிடைக்காமல்!

கொள்ளையடித்தார் விஷ்ணு லக்ஷ்மியை,
கௌஸ்துபத்தைத் தன் லோப குணத்தால்.

கற்பக விருக்ஷம், ஐராவதம், உச்சைஸ்ரவஸ்,
காமதேனு, அமிர்தம், அப்சரஸ் தேவர்களுக்கு!

மதியை மயக்கிக் குடியைக் கெடுக்கும் கொடிய
மதுவின் தேவதை மட்டும் அசுரருக்குப் பரிசு!

பொது உழைப்பால் விளைந்த பொருட்களைப்
பொறுப்பாகச் சம பங்கிடவில்லை எவருமே!

நீதிக்குப் புறம்பாக அபகரித்தனர் தேவர்கள்;
நீயும் அறிவாய் நடந்தவற்றை எல்லாம்!

உழைத்தும் பயன் இல்லை அசுரசமூஹத்துக்கு;
திரும்பிச் சென்றோம் ஏமாந்த பரதேசிகள் போல.

திரும்பிய எமக்குப் பரிந்து பேசவில்லை எவரும்!”
பிரஹலாதன் கூறினான் தேவியிடம் ஆதங்கத்தை!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#14c. Prahlaad (2)

Prahlaad told Shakti Devi his side of the arguments seeking justice.

“Everything happens according to your wishes Devi. Unless you have wished for a war among the Devaa and Asuraa, it could never have happened!

Indra knows the rules of Dharma. I too know the rules of Dharma. How can a war take place betweEn two people when both are well versed in Dharma?

The Asuraas and Devaas churned the Ocean of Milk long ago. Many rare objects emerged from the ocean. But Vishnu played foul and cheated us the Asuraas mercilessly. He took away Lakshmi Devi and the Kousthubam as his own.

The Devaa took away the Karpaga Vruksham, the Airaavatam, the Uchchaisravas, the Apsaras for themselves. The Asuraa were presented with the the goddess of wine to make monkey out of them.

These rare objects appeared since the Devaa and Asuraa worked together. But these rare objects were not shared equally among those who worked for them. The Devaa cheated the asura of everything. You too are aware of all the happenings.

Our labour was made use of and we were made to return empty handed like beggars. Yet no one came forward to support our side seeking justice!”
 
DEVI BHAAGAVATAM - SKANDA 9

9#43C ஸ்வதா தேவி துதி
"ஸ்வதா தேவியே!
பிராணனுக்குச் சமமானவள் பித்ருக்களுக்கு;
பிராமணர்களுக்கு ஜீவிய ரூபம் ஆனவள் நீ;

அதிஷ்டான தேவதை நீயே ஆவாய் தாயே
அனைத்துப் பித்ரு கர்மங்களுக்கும் தேவி .

தருகின்றாய் செய்யும் கர்மங்களின் பலனை
இருக்கின்றாய் புண்ணிய ஸ்வரூபிணியாக!

இருக்கின்றாய் நீ நித்தியையாக தேவி;
இருக்கின்றாய் நீ சத்திய ரூபிணியாக.

தோன்றுகின்றாய் நீ சிருஷ்டி காலத்தில்;
மறைகின்றாய் நீயும் பிரளய காலத்தில்.

ஓம் ஸ்வஸ்தி நம:
ஸ்வாஹா ஸ்வதா தக்ஷிணா"
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

9#43b. SvadhA Devi (3)

“O SvadhA Devi! You are dear to the Pitrus as their vital breath and you are the very life of the BrAhmins. You are the Presiding Deity of the S’rArdh ceremonies and you bestow the fruits of performing it.

You are eternal, you are the truth, and you are of the nature of religious merits. You appear during the creation and disappear in dissolution. And this appearing and disappearing go on forever.

You are the Pranava Om, You are Svasti, You are NamaskArA, You ar SvadhA and You are DakshiNA. You are the various karmAs as designated in the Vedas.

BrahmA handed over the lotus-faced SvadhA Devi to the Pitrus and they took her happily to their own abode.

He who hears with devotion and attention this stotra of SvadhA, gets all his desires fulfilled and the merit of bathing in all the holy Teerthams.
 
BHAARGAVA PURANAM - PART 1

#27h. வன்னிப் பெருமை

“வன்னி மரத்தின் அருமை பெருமைகளைப்
பொன் எழுத்தில் நாம் பொறிக்க வேண்டும்!

செங்கதிர்க் காலையில் வன்னி தரிசனம்
அந்தண குலத்தில் பிறவியைத் தரும்.

செங்கதிர்க் காலையில் வன்னி தரிசனம்
அந்தணர்களை ஞானிகள் ஆக்கும்.

செங்கதிர்க் காலையில் வன்னி தரிசனம்
க்ஷத்திரியருக்கு வெற்றியைத் தரும்

செங்கதிர்க் காலையில் வன்னி தரிசனம்
வைசியருக்குச் செல்வத்தைத் தரும்

செங்கதிர் கலையில் வன்னி தரிசனம்
பரகதியைத் தரும் பிற மனிதருக்கு.

பார்வதிக்குப் பரமசிவன் கூறியது!”
கீர்த்திக்குக் கூறினார் கிருச்சதமர்.

“வன்னிப் பத்திரத்தால் அர்ச்சித பலன்
வாழ்வைத் தந்தது உன் பாலகனுக்கு!”

“இனி எக்காலத்திலும் எவராலும் என்
இனிய மகனுக்கு நேரக் கூடாது ஆபத்து!

விநாயக மந்திரத்தை உபதேசியுங்கள்!” என
வினயத்துடன் வேண்டினாள் கீர்த்தி – வக்கிர

துண்டனின் மந்திரத்தை உபதேசித்தார்.
“துண்டி விநாயகனை ஆராதிப்பாய் மகனே!”

“காசியில் உள்ள துண்டி விநாயகரைப்
பூசிக்கச் சொன்னதன் காரணமென்ன?”

அன்னை கீர்த்தி கேட்டதும் முனிவர்
சொன்னார் இந்த விருத்தாந்தத்தை.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#27h. The greatness of Vanni patram

The greatness of the Vanni patram needs to be inscribed in letters of gold. The dharshan of Vanni leaf early in the morning makes a person take birth as a brahmin. It makes a brahmin into a JnAni.

It gives victory to the Kshatriya and wealth to the Vaisya and a good life to the other people.

Siva had told this to Uma. Sage Kruchchadmar told these to Keerthi.

“The pooja done with Vanni leaf saved the life of your son.” Kruchchadamar told keerthi.

She requested the sage to teach her son the VinAyaka mantra so that no one could harm him in the future.

The sage taught him the mantra and told him, “Go and worship the ThuNdi VinAyaka at Kasi”

Keerthi asked the sage, “Sire! Why do you ask us to go to KAsi to worship the ThuNdi VinAyka there?”
 
DEVI BHAAGAVATM - SKANDA 4

4#14d. பிரஹலாதன் (4)

“பரிந்து வந்து உள்ளாய் தேவர்களுக்கு உதவிட !
பரிந்து வரவில்லையே நீ அசுரர்களுக்கு உதவிட!

சிந்திப்பாய் தேவர்கள் சிறந்த உத்தமர்களா?
சந்திரன் சுகித்தான் குரு மனைவி தாரையுடன்!

கர்ப்பிணிப் பெண்ணை, சகோதரன் மனைவியைக்
கட்டியணைத்தான் பலவந்தமாக பிருஹஸ்பதி!

இடையூறாக இருந்த சிசுவையும் சபித்தான்,
“கிடையாது கண்பார்வை!” எனக் கடுமையாக!

கற்பழித்தான் அகலிகையை இந்திரன் – அவள்
கல்லாக மாறிக் கிடந்தாள் பன்னெடுங்காலம்.

வஞ்சித்தார் விஷ்ணு, பேரன் மகாபலியை!
வஞ்சித்து அபகரித்தார் மூவுலகங்களையும்!

நடப்பர் தர்ம வழியில் தேவர்கள் வெல்கையில்!
நடப்பர் அதர்ம வழியில் தேவர்கள் தோற்கையில்!

காப்பதோ அழிப்பதோ உன் விருப்பம் தாயே!
கேட்பதற்கும் சொல்வதற்கும் இல்லை ஒன்றும்!”

சக்தி கூறினாள் வணங்கும் அசுரர்களிடம்,
“சம்பத்தும், ஆபத்தும் வருவது காலத்தால்.

காலமே காரணம் வெற்றி, தோல்விக்கு!
காலம் கனியும் வரை காத்திருங்கள்!

சாந்த சித்தம் கொண்டால் திருப்தி நிலவும்;
சாந்த இன்றேல் நிலவும் பேராசை!” என்றாள்

வணங்கினர் தேவியை அசுரர்கள் பணிவுடன்,
இணங்கினர் மீண்டும் பாதாளம் சென்றிட!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


4#14d. Prahlaad (3)

Prahlaad spoke to Devi,” You have come to help the Devaas. But You never came to help us the Asuraas! Are all the Deva blemish-less good people?

Chandran lived with the wife of his guru. Bruhaspati raped the pregnant wife of his own brother. He cursed the foetus in the womb which was a hindrance that it should become blind.

Indra raped Ahalya Devi and she lay converted to a rock for many years. Vishnu cheated my grandson Mahaa Bali and took away the three worlds from him be treachery.

Th Devaas would follow the path of Dharma when they emerge victorious. They follow the path of Adharma when they get defeated. Whether you want to spare or kill us is left your will and pleasure. I have nothing more to say”

Devi spoke to the Asuraas now,” The victory and defeat are time bound. A person’s prosperity and adversity is also time based. Wait till the time becomes favoUrable to you once again. Remember that a satisfied mind is at peace and greedy mind is restless”
 
DEVI BHAAGAVATAM - SKANDA 9

9#45a. தக்ஷிணா தேவி
கோலோகத்தில் இருந்தவள் கோபிகை சுசீலை;
கோலோகக் கிருஷ்ணனுக்கு அதிகப் பிரியை!

இணையானவள் அழகில் ராதா தேவிக்கு!
இனியவள் அனைவருக்கும் பிரபாவத்தில்!

மனோ ரம்மியமானவள்; இளமையானவள்;
மான் விழிகள், தாமரை முகம் கொண்டவள்.

முத்துப் பற்களும், புன்னகையும் உடையவள்;
ரத்தின ஆபரணம், கோவை இதழ் கொண்டவள்;

நடையில் அன்னம்; நிறத்தில் வெண் சண்பகம்;
உடலோ மென்மை; குணமோ மிகவும் மேன்மை!

நிபுணை காமக் கலையில்! புத்தி கத்தி போன்றது!
ரசிகை, ரசிக்கத் தகுந்தவள், ரசிக சுகம் அறிந்தவள்;

ஒட்டியிருந்தாள் சுசீலை கிருஷ்ணனின் மார்பில்;
ஒட்டி உறவாடும் ராதையின் கண் எதிரிலேயே.

வெட்கினார் கிருஷ்ணர், சிவந்த உதடுகள் துடிக்க
வெட்டும் விழிகளுடன் வந்த ராதையைக் கண்டு!

மறைந்தோடி விட்டான் கிருஷ்ணன் - உடனே
உறைந்து விட்டனர் அச்சத்தால் மற்றவர்கள்!

"பஸ்பமாகக் கடவாய் கோலோகம் வந்தால்!"
பரிவின்றிச் சபித்தாள் சுசீலையை ராதை!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


9#45a. DakshiNA Devi (1)

SuseelA was a gopi in the Goloka.She was very dear to Krishnan. She was comparable to RAdhA in her beauty. She was sweet natured. She was attractive and youthful.

She was doe-eyed and her face resembled a lotus in bloom. She had two rows of pearls for her teeth and bimba fruits for her lips. She was adorned with many gem studded ornaments.

She had the gait of a swan and the colour of white Champaka flowers. She was an expert in the art of love. She was sharp witted and one who enjoyed the joy of living.

She was leaning on the chest of Krishna right in the vicinity of RAdhA, who became terribly angry with jealousy surging in her.

Krishna got frightened and disappeared from there. Everyone present there froze in fear seeing the angry RAdhA with reddened eyes and quivering lips.

RAdhA cursed the beautiful SuseelA very harshly, "You will turn into ashes if you ever set foot in Golokam!"
 
BHAARGAVA PURAANAM - PART 1

#28a. காசி க்ஷேத்ரம்

நிலம் சிறப்புப் பெறும் வேறு வேறாக
ஸ்தலம், தீர்த்தம், மூர்த்தி இவற்றால்!

மூர்த்தி, தீர்த்தம், ஸ்தலம் என்னும்
மூன்றிலும் சிறந்தது காசி க்ஷேத்ரம்.

அவிமுக்தம் என்பது அதன் ஸ்தலம்;
அதன் தீர்த்தம் மணிகர்ணிகை ஆகும்;

விசுவநாதர் அங்கு விளங்கும் மூர்த்தி;
பூசிப்பவர் பெறுவார் புருஷார்த்தங்கள்!

தொழுவர் ஈசனை இங்கு தேவர்களும்;
தொழுவர் ஈசனை இங்கு மனிதர்களும்.

விஷ்ணு பூஜித்தார் ஈசனை இங்கே,
விசுவநாதர் மனம் குளிர்ந்து மகிழ.

பாதாளம் வரைத் தோண்டிய தடாக நீரை
தாராளமாக எடுத்து அபிஷேகம் செய்தார்.

முக்தி தரும் ஈசன் காட்சி தந்தான் அங்கே
பக்திக்கு மெச்சி காளை வாஹனம் மீது.

தலையை அசைத்துத் துதிகளைக் கேட்கக்
குலுங்கின செவியில் குண்டலங்கள்.

ஒரு மணி உதிர்ந்து விழவே தடாகம்
திருப் பெயர் பெற்றது மணிகர்ணிகை!

பகீரதன் தவம் செய்து கங்கையை
பாகீரதியாகச் சேர்த்தான் அந்த நீரில்.

முனிவரின் கனிவான ஆசிகள் பெற்று,
அன்னையும் மகனும் சென்றனர் காசி!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


#28A. KAsi Kshetram

Any Land becomes auspicious due to the presence of three factors. Sthalam, Theertham and Moorthi add value to any holy kshethram. Kaasi is famous for all these three factors.

Avimuktam is the name of the sthalam, MaNikarNikai is the name of the theertham and ViswanAthar is the moorthi there. Those who worship the lord here will get the chatur vidha purushArtham.

The DEvA come and worship Lord Siva here. The humans also come here to worship Lord Siva. Once VishNu did ArAdhanA to Siva here. VishNu dug a pond as deep as the pAtAla and used the water liberally to do abhishekham to ViswanAthar.

VishNu sang songs of praise and Lord Siva listened to them with pleasure moving his head to suit the music. A bell from his kuNdalam fell into the water below and the thadaagam got the name MaNikarNikai.

Bhageerathan did tapas and brought down Ganga to merge with this water as Bhaageerathi. The sage Kruchchadamar spoke of the greatness of KAsi. Keerthi and Kippira Prasaad were duly impressed and left for KAsi right away.
 
DEVI BHAAGAVATM - SKANDA 4

4#15. திருமாலின் அவதாரம்

“பிருகுவின் சாபத்தால் என்னென்ன அவதாரங்கள்
திருமாலுக்கு ஏற்பட்டன எனக் கூறுங்கள் குருதேவா!”

“ஜனமேஜயா! திருமால் எடுத்தார் அவதாரம்
சாக்ஷூஷூ மன்வந்தரத்தில் முதன் முதலில்.

கிருத யுகத்தில், முதல் சதுர் யுகத்தில்
தருமரின் பிள்ளைகள் நர, நாராயணராக.

அத்திரி முனிவர் பத்தினி அனசூயாதேவி
புத்திரனாக வேண்டினாள் மும்மூர்த்தியரை.

கிருத யுகத்தில் முதல் சதுர் யுகத்தில் இங்கு
உருவெடுத்தார் தத்தாத்ரேயராக விஷ்ணு.

நான்காவது சதுர்யுக கிருதயுகத்தில் விஷ்ணு
நரசிங்கராகத் தோன்றினார் ஹிரண்யனை அழிக்க.

அடுத்த யுக்தில் பிறந்தார் காச்யபர் மகனாக;
கெடுத்தார் பலியின் கர்வத்தை வாமனனாக.

திரேதா யுகத்தில் பத்தொன்பதாவது சதுர் யுகத்தில்
பரசுராமராகத் தோன்றினார் ஜமதக்னி முனியிடம்.

திரேதா யுகத்தில் தசரத மன்னனுக்கு
ஸ்ரீ ராமராகப் பிறந்தார் ரகு வம்சத்தில்,

துவாபரயுகம் இருபத்தெட்டாவது சதுர் யுகத்தில்
அவதரித்தார் கிருஷ்ண, அர்ஜுனர்களாக.

எங்கும் நிறைந்தவர் பரமாத்மா எனினும்
எதற்கும் புலப்படாதவர் பரமாத்மா.

ஆதாரம், உருவம், ஆசைகள் இல்லாதவர்;
அறிய முடியாதவர் அந்தப் பரமாத்மா.

முக்குண பேதத்தால் மும்மூர்த்தி ஆகின்றார்
முத்தொழில்கள் புரிகின்றனர் மும்மூர்த்திகள்.

இத்தனைக்கும் காரணம் சக்தி தேவியே.
அத்தனையும் கட்டுப்படுகின்றன அவளுக்கு.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


4#15. Vishnu’s avatars

King Janamejayan asked sage Vyaasaa, “What are the Avatars taken by Vishnu, as a result of sage Brugu’s curse?'”

Vyaasaa replied, “Oh king Janamejaya! Vishnu took his first avatar as Nara and Naaraayan – sons of Dharman in Kruta yugam in the first chatur yugam in the Sakshushu manvantara.

Anasooyaa Devi the patni of sage Atri wished to have the The Trinity as her son. So Vishnu took avatar as Dattaatreya in the Kruta yugam in the first chatur yugam.

In the fourth chatur yugam in Kruta yugam Vishnu took avatar as Narasimham to kill HinraNyan. In the next yugam he was born as Vaamana and destroyed the ego of Mahaa Bali.

Vishnu took avatar as Parasu Rama in the nineteenth chatur yugam in Treta yugam. Vishnu took the avatar as Sree Rama in Raghu vamsa as the son of Dasaratha in Treta yugam. Vishnu took the avatar as Krishna and Arjuna in the Dwaapara yugam in the twenty eighth chatur yugam.

Paramaatma pervades everywhere – yet he cannot be seen or known by any sense organ. He does not need any support, he is devoid of any form or any desires. The Paramaatma becomes the the Trinity due the guNa vikaaram.

Then he performs the three tasks of Generating, Sustaining and Destroying the creation. Every thing happens as per the wishes of Shakti Devi. Everything is controlled by her."

 
DEVI BHAAGAVATAM - SKANDA 9

9#45b. தக்ஷிணா தேவி (2)

அழைத்தாள் ராதை கிருஷ்ணனை ராசக்கிரீடைக்கு;
அழைத்த குரலுக்கு கிருஷ்ணன் வரவே இல்லை!

கோடி யுகமானது ஒரு கணம் ராதைக்கு - அவனைத்
தேடினாள்; ஓடினாள்; அரற்றினாள்; விம்மி அழுதாள்!

கோலோகத்திலிருந்து வெளியேறிய சுசீலை
பூலோகம் வந்தடைந்தாள் சாபம் பெற்றவுடன்.

தவம் செய்தாள் பன்னெடுங்காலம் சுசீலை;
இடம் பெற்றாள் லக்ஷ்மி தேவியின் உடலில்!

யாகம் செய்தனர் தேவர்கள் அந்த நாட்களில்;
யாகப்பயன் கிடைக்கவில்லை தேவர்களுக்கு.

கோரினர் தேவர்கள் பிரம்மனிடம் காரணம்!
கோரினான் பிரம்மன் கிருஷ்ணரிடம் காரணம்!

காரணம் ஆனவள் லக்ஷ்மி உடலுள் சுசீலை!
வேறாக்கினர் சுசீலையை லக்ஷ்மியிடமிருந்து!

தோன்றிய தேவியே தக்ஷிணா தேவி என்பவள்;
தோன்றினாள் தக்ஷிணா கர்மப் பூர்த்திகளுக்காக.

தக்ஷிணா தேவியைத் தந்தார் பிரம்ம தேவனிடம்
தக்ஷிணையைத் தந்தான் பிரம்மன் யக்ஞமூர்த்திக்கு.

திருமணம் புரிந்தார் தக்ஷிணையை யக்ஞமூர்த்தி;
இருவரும் இன்புற்றனர் நூறாண்டுகள் தனிமையில்.

பிறந்தான் ஒரு திருமகன் அவ்விருவருக்கும்,
அரிய வலிமை வடிவாக சகல கர்மங்களுக்கும்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


9#45b. DakshiNA Devi (2)

KrishNan went missing and did not respond to the calls of RAdhA to come for RAsak KreedA. A moment felt like an eon for the lovelorn RAdhA. She looked for KrishNan everywhere; she wept and she lamentd but all in vain!

SuseelA went to the earth after she got cursed by RAdhA. She did severe penance and obtained a place for herself in Lakshmi Devi's body.

DevAs performed YAgAs but they did not receive the fruits of the YagAs. They went to BrahmA surprised by this. He went to KrishNan unable to answer their doubts!

KrishNan found out the reason for the failure of the YAgAs to bestow the desired effects. It was the SuseelA who had become a part of Lakshmi Devi herself now!

She was separated from Lakshmi Devi, through her right shoulder as DakshiNA Devi. Krishna presented DakshiNA Devi to BrahmA who in turn presented her to the Yagna Moorthi.

Yagna Moorthi married DakshiNa Devi and they spent one hundred yeras in pleasure.

They got a powerful son who would help in the success of all the YagnAs and YAgAs that would be performed from then on!

 
BHAARGAVA PURAANAM - PART1


#28b. பரசு பாணி

காசி சென்றனர் கீர்த்தியும் மகனும்,
பூசித்துத் துண்டி விநாயகர் அருள்பெற.

மணிகர்ணிகையில் நீராடுவர் அனுதினம்,
பணிந்து போற்றுவர் துண்டி விநாயகரை.

மாசி மாத அமர பக்ஷ சதுர்த்தி வந்தது!
ஆசையுடன் விடியலில் புனித நீராடினர்.

நான்கு எழுத்து மந்திரத்தை ஜெபித்தனர்;
வன்னி மரத்தடியில் அமர்ந்து கொண்டு.

சந்திரன் உதிக்கும் வேளையில் வன்னி இலை,
மந்தார மலர், அறுகம் புல்லால் அர்ச்சனை.

ஐந்து முகங்களுடனும் பத்து புஜங்களுடனும்
வந்து காட்சி தந்தார் விநாயகப் பெருமான்.

“குமாரனுக்கு எந்த ஆபத்தும் வரக் கூடாது
குமாரன் பூரண ஆயுள் வாழ அருளும்!” என

“சகல பாக்கியங்களும் பெறுவான் இவன்,
சகல கீர்த்திகளையும் அடைவான் இவன் !

ஆயிரம் யாகங்கள் செய்வான் இவன்”
அனுக்ரஹம் செய்தார் விநாயகர்.

கரத்தில் அளித்தார் தன் வஜ்ராயுதத்தை;
‘பரசு பாணி’ என்ற புதுப் பெயர் இட்டார்.

தாயும், மகனும் திரும்பினர் தம் நாடு;
தந்தை எதிர்கொண்டு வரவேற்றான்.

மகன் வளர்ந்த பின்னர் பிரியவிரதன்
மகனை மன்னனாக முடி சூட்டினான்.

ஹஸ்தி முகன் அருளால் கிப்பிரப் பிரசாதன்
ஸஹஸ்ர யாகம் செய்து நீடூழி வாழ்ந்தான்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


#28b. Parsu PANi

Keerthi and her son Kippira PrasAd went to KAsi kshetram. They would worship ThuNdi VinAyaka and seek his grace. Every day they took a holy dip in the MaNikarNikai theertham and did ArAdhana to ThuNdi VinAyaka.

It was the Amara paksha chathurthi of MAsi mAsam on that day. They took the holy dip and were doing ArAdhanA as usual. They did archanai with vanni patram, mandAra flowers and green arugu grass under a vanni tree just as the moon rose.

The Lord VinAyaka appeared to them with his five brilliant faces and ten impressive arms. Keerthi prayed to the lord, “Please remove all the dangers away from my son. Please bless him with a poorna Ayush and a long happy life. I seek nothing else!”

VinAyaka blessed the boy and said,” Your son will receive all the good things in life. He will become very famous in his time. He will preform one thousand yagnas.” Vinayaka gave the child his own parasu and named his as ‘Parasu PANi’.

Keerthi and her son returned to their kingdom. The king Priyavrathan received them and was happy that everything ended well. When his son was of the right age, the king made him the new king. Kippira prasad who had won the grace of ThuNdi VinAyakar lived a long fruitful life and performed one thousand yagnas.

 
DEVI BHAAGAVATAM - SKANDA 4

4#16a. சில கேள்விகள்

“விரும்பி வந்த தேவ கன்னியரை அங்கிருந்து
திரும்பிச் செல்ல வைத்தானா நாராயணன்?”

ஜனமேஜயனின் ஐயத்துக்கு வியாச முனிவர்
மனம் தெளியும்படி விரிவாக பதிலளித்தார்.

“சபதம் செய்துள்ளோம் நாங்கள் இருவரும்;
சபலம் அடைவதில்லை இப்பிறவியில் என.

நாட்டம் இல்லை காமக் கேளிக்கைகளில்!
நடக்குமா எதுவும் காம வேட்கையின்றி?

காரியம் ஆண் பெண் சங்கமம் என்றால்
காரணம் ஆகும் அதற்குக் காம வேட்கை .

மீண்டும் பிறப்பேன் நான் இந்த பூமியில்;
வேண்டும் சுகம் தருவேன் நான் அப்போது.

தருமமும் சபதமும் மீறப் படமாட்டா.
விருப்பமும் நிறைவேறும் அப்போது!

இரக்கம் கொள்ளுங்கள் சிறிது என் மேல்;
விரத பங்கம் ஏற்படுத்தாமல் செல்லுங்கள்.

இருபத்தெட்டாவது சதுர்யுக துவாபரத்தில்
அரசகுமாரிகளாக அவதரிப்பீர்கள் நீங்கள்.

ஆசை மனைவியர் ஆவீர்கள் எனக்கு
நேசம் காட்டுவேன் மனம் குளிரும்படி!”

திரும்பிச் சென்றனர் தேவ கன்னியர்
விரும்பிக் கூறினர் இந்திரனிடம் இதை.

தேவ கன்னியரைக் கண்டும் மயங்காததால்
தேவேந்திரன் வியந்தான் வைராக்கியத்தை.
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
4#16a. Some more questions

“What did Naarayanan do to make those divine damsels return to the heaven?” Janamejayan asked sage Vaasaa. The sage replied, “Naaraayanan told those apsaras this:

I and my brother have sworn to celibacy and will remain staunch brahmachaaris throughout our lives. We are not interested in love or lust. Nothing can happen between us unless the desire is there.

If union of a man and woman is the effect, the cause of that effect is the desire for the union. I will be born again in this world in the Dwaapara yugam in the twenty eighth chatur yugam.

At that time all of you will be born as the Princesses. I will marry all of you and shower my love and affection on you. But please do not disturb my decision or vrata to remain celibate in this birth.”

The apsaras went back to the swraggam. They told Indra the recent happenings. Indra wondered at the vairaagaym of the two young brothers who did not get infatuated with the beauty of the divine damsels.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 9

9#45c. தக்ஷிணா தேவி (3)
விரைவாக தக்ஷிணையைத் தந்தால் - யாகம்
விரைவாகப் பயன் அளிக்கும் கர்த்தாவுக்கு!

விரைந்து விலகிச் சாபம் அளிப்பாள் லக்ஷ்மி
பிராமணர்களை ஏய்க்கின்ற கயவர்களுக்கு.

தக்ஷிணை இல்லாத கர்ம பலன் மஹாபலிக்கு!
தக்ஷிணையோடு கூடிய கர்மபலன் கர்த்தாவுக்கு!

வரம் அளித்தான் வாமன ரூப விஷ்ணு - தனக்கு
விரும்பி அனைத்தையுமே அளித்த மஹாபலிக்கு.

"தக்ஷிணை இல்லாது செய்த கர்ம பலன்கள்;
வேதம் அறியாத அந்தணன் தந்த போஜனம்;

சிரத்தையின்றிச் செய்யும் தானம் - திரவியம்
சூத்திரப் பெண்ணின் அந்தணக் கணவன் தந்தது;

நல்லவன் அல்லாத பிராமணன் செய்த யக்ஞம்;
தூய்மையற்றவன் செய்யும் பூஜையின் பலன்கள்;

குருபக்தி இல்லாதவன் செய்யும் கர்ம பலன்கள்
விரும்பி வந்து உன்னையே சேரும்!" என்ற வரம்!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

9#45c. DakshiNA Devi (3)

If the DakshiNA is paid to the priests and pundits quickly after the yAgA and poojA, the fruits of the yAgA and poojA will also be received quickly. The longer the payment of DakshiNA is delayed , the longer the fruits of the karmAs will get delayed.

If a Brahmin is cheated of his DakshinA or is looted by a wicked fellow, Lakshmi Devi will desert him in a great hurry and also cast a curse on him in addition to this!

All the KarmAs performed with DakshiNA will yeild the desired fruits to the KartA or the doer. All the KarmAs performed without DakshiNA will yield their fruits and merits to King MahA Bali.

Vishnu had given a boon to King MahA Bali when he had appeared as VAmanA,
"All the KarmAs performed without paying the due DakshiNA,
The BrAhmaNa bojanam given by a brahmin who does know the VedAs;
The donations and alms given without sraddhA;
The things donated by a brahmin who has married a girl from the fourth varNa;
The yagnAs performed by a wicked brahmin;
The poojAs performed by an impure Brahmin and
The KarmAs done by one who does not have guru bakthi
will all yield their merits to you MahA Bali - since you have given me everything you possessed without any restraint"
 
BHAARGAVA PURAANAM - PART 1

#28c. கனவு

பிரமன் தொடர்ந்தார் மன்னன் தந்தையிடம்,
“பித்ரு உலகத்தில் இருந்து வந்துள்ளீர் நீர்.

பிள்ளை பிறப்பதற்கு வழி ஒன்று கேட்டீர்.
பிள்ளை பிறக்கும் விரதம் அனுஷ்டித்தால்!

சதுர்த்தியில் வைக்க வேண்டும் ஒரு கலசம்,
முதல், ஐந்தாவது அல்லது ஏழாவது மாதம்.

ஸ்தாபிக்க வேண்டும் அதன்மேல் இயந்திரம்.
ஸ்தாபிக்க வேண்டும் ஒரு விநாயகர் பிரதிமை.

ஆகுதி செய்த குறுணி எள், பிற வஸ்துக்களை
அளிக்க வேண்டும் தானமாகப் பலருக்கு.

இருபத்தொரு அந்தணருக்கு உணவளித்தபின்
அருந்த வேண்டும் தன் உணவை விரதகர்த்தா.

பிரதிமை, இயந்திரங்களை ஆச்சாரியாருக்கு
விரத முடிவில் தானம் செய்ய வேண்டும்.

விநாயகருக்கு உகந்த விரதம் இதுவே.
அநாதிகாலம் தொட்டு செய்கின்றார்கள்.”

அத்தனை விஷயங்களையும் தெளிவாகப்
புத்தகத்தில் பதிவு செய்தார் தந்தையார்.

கடுமையான தவம் செய்யும் மகனிடம்
கொடுத்தார் அவன் கனவில் தோன்றி.

“சதுர்த்தி விரதம் ஒன்றே வழி உனக்குச்
சந்ததிகள் பிறந்து குலம் செழிப்பதற்கு.

அந்தணரைக் கொண்டு அந்த விரதம் செய்.
இந்தப் புத்தகத்தில் அதன் விதிமுறைகள்.”

கண் விழித்த கிருதவீர்யன் கண்டான் தந்தை
கனவில் தந்த புத்தகத்தைத் தன் கைகளில்.

‘கனவு வெறும் கனவு அல்ல’ …உணர்ந்தான்!
‘நனவாகும் வேளை வந்தது’… மகிழ்ந்தான்!

மனைவியுடன் திரும்பினான் தன் நாட்டுக்கு;
இனிச் செய்ய வேண்டியது சதுர்த்தி விரதம்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#28c. The dream

Brahma continued to talk to Kritha Veeryan’s father. “You have come down here from Pithru lOkam. You asked me for an advice to get santhathi through your son. Observing the Chathurti vratham will yield the desired result.

You must establish a kalasam in the first, fifth or seventh month of the vratham. A yantram and a pratima of VignEswara must be established on the kalasam. Til seeds and other things must be offered to many people as daanam.

Twenty one Brahmans must be fed an elaborate feast and only after that the kartha of the vratham must eat his food. The yantram and the pratima must be donated to the Acharya at the end of the vratham.

There is nor greater vratham to please VinAyaka than this chathurti vratham”
The father wrote down all the instructions clearly in a book. He appeared in the dream of his son and said,

“If you observe chathurti vratham you will be blessed with a son. All the instruction are recorded in this book. Take the help of the learned brahmins and perform the vratham.”

Krutha veeryan woke up from the dream and was surprised to see the book of instructions in his hands. He knew that the dream was not an idle dream.

The time had come for him to make the dream come true by returning to his country and performing the chathurti vratham immediately.
 
DEVI BHAAGAVATM - SKAND 4

4#16b. மேலும் ஐயங்கள்

“மேலும் ஐயங்கள் எழுகின்றன குருதேவா!
வேணும் அவற்றுக்கும் ஏற்ற விளக்கங்கள்.

பலமிக்க மகன்களைப் பெற்ற தேவகி வசுதேவன்
பரிதவித்தனர் கம்சனின் சிறைச் சாலையில்.

சிறையில் பிறந்த கண்ணன் வளருவானேன்
இரவோடு இரவாக கோகுலம் சென்று?

கொன்றது ஏன் கம்சன் ஆறு சிசுக்களை?
சென்றது ஏன் கண்ணன் மதுரையை விட்டு?

கோபம் அடைந்த முனிவரின் சாபத்தால்
நாசம் அடைவானேன் கண்ணனின் குலம்?

பூபாரம் குறைய அவதரித்த கிருஷ்ணன்
பூமியை விடுத்தது ஏன் நரனைப் போல?

கள்வர்களிடம் அடிபட்டு உதைபட்டுக்
கொள்ளை அடிக்கப் பட்டனர் மனைவியர்.

தவம், தானம், தர்மம் இவற்றில் சிறந்த
தரமான மனிதரை அழித்தான் கண்ணன்.

எண்ணினானா அவர்களைப் பாவிகள் என?
எண்ணினானா கள்வரைப் புண்ணியர் என?

பதிவிரதைகள் கண்ணனின் மனைவியர்
பரிதவித்தனரே மான பங்கம் அடைந்து!

வசுதேவன் புத்திரசோகம் அடைந்தது ஏன்?
சுகுமாரன் அபிமன்யு போரில் பலியானது ஏன்?

ஏன் கிருஷ்ணன் மாற்றவில்லை இவற்றை?
ஏன் கண்ணன் அடிமையனான் உக்கிரசேனனுக்கு”

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


4
#16b. More and more doubts

King Janamejayan asked some more doubts to sage Vyaasaa now.
“Devaki and Vasudev were blessed with strong powerful sons. Why did they have to suffer in Kamsa’s prison? Why did Krishna born in the prison have to grow up in Gokulam in secrecy?

Why did Kamsa kill six new born babies? Why did Krishna go to Dwaraka from Maduraa? Why was Krishna’s race destroyed by the curse of an enraged sage?

Krishna was born to reduce the population of the world. Why did he leave the world like any other ordinary mortal? Krishna’s wives were beaten up and insulted by a band of thieves.

Krishna did nothing about this but he killed many good persons in the Mahaa Bhaarata war. Why did Vaudev suffer the pangs of separation from his sons?
Why was Abhimanyu sacrificed in the war? Krishna could have changed all these happenings if he had wished to. Why did he not do it then?”
 
DEVI BHAAGAVATAM - SKANDA 9

9#45d. தக்ஷிணா தேவி துதி

துதித்தார் யக்ஞமூர்த்தி தக்ஷிணா தேவியைப் போற்றிட
துதித்தார் யக்ஞமூர்த்தி தக்ஷிணா தேவியைப் பெற்றிட.

"இருந்தாய் கோலோகத்தில் ஒரு கோபியாக;
இருந்தாய் ராதைக்கு அழகில் சமமானவளாக!

இருந்தாய் கிருஷ்ணனின் பிரியமான நாயகியாக;
பிறந்தாய் லக்ஷ்மியின் தக்ஷிண புஜத்திலிருந்து.

பெற்றிருந்தாய் முன்பு சுசீலை என்னும் பெயரை;
பெற்றுள்ளாய் இன்று தக்ஷிணா என்ற பெயரை.

தள்ளப்பட்டாய் ராதையின் கொடிய சாபத்தால்!
தள்ளப்பட்டாய் கோலோகத்திலிருந்து என்னிடம்!

ஏற்றுக் கொள்வாய் என்னை உன் கணவனாக!
நற் கர்மங்களுக்குப் பலன் தரும் தேவி நீயே!

கர்மங்கள் வீணாகாமல் காக்கின்றவள் நீயே!
கர்மங்கள் வீணாகிப் போகும் நீ இல்லாவிடில்!

விளங்குகின்றாய் பிரம்மனின் கர்ம ரூபியாக;
விளங்குகின்றாய் மகேஸ்வரனின் பலரூபியாக;

விளங்குகின்றாய் விஷ்ணுவின் யக்ஞரூபியாக;
விளங்குகின்றாய் நீ மும்மூர்த்தியரின் சாரரூபியாக

பலனளிக்க வல்லவள் ஆகி விட்டாய் நீ தேவி
பரபிரம்ம ஸ்வரூபிணி பராசக்தியின் அருளால்.

சக்தியாக உள்ளாய் எனக்குப் பிறவி தோறும் - நான்
சக்தியுடையவன் ஆவேன் உன்னுடன் சேர்ந்தால்!"

துதியின் பயன்

யாக, யக்ஞங்களைத் தொடங்கும் முன் துதித்தால்
யாக, யக்ஞங்கள் நிறைவேறும் தடங்கல்கள் இன்றி!

9#45d. DakshiNA Devi Stuti

Yagna Moorthi worshiPped DakhiNA Devi in this manner to win her affection and marry her.

"You were a gopi named SuseelA in the Goloka! You were equal to RAdhA in your beauty. You were very dear to Sri KrishNan!

You were born from the right shoulder (DakshiNa bhujam) of Lakshmi Devi and got your name as DakshiNA Devi.

You were known by the name SuseelA earlier! Now you are known by the name DakshiNA. You were expelled from Goloka by the terrible curse cast by RAdhA. You were expelled from Goloka so that you can come to me!

Accept me as your husband dear Devi! You are the one who bestows the fruits of good KarmAs. You are the one who makes the karmAs bear fruits. But for you, all the karmAs will get wasted.

You exist as the Karma roopi in BrahmA; the Bala roopi in Maheswara and the Yagna roopi in VishNu. You are the very essence of the holy Trinity.

You got the power to bestow the fruits of the good actions by the grace of the Devi ParA Skakti. You are my power and Shakti. I shall obtain my Shakti from you by my association with you!"

If this stuti is read read before starting any yAgA or YagnA, they will get completed without any hurdles of problems.
 
#28d. கார்த்த வீர்யன்

தந்தான் வேதம் கற்ற அந்தணரிடம்,
தந்தையார் தந்த அந்தப் புத்தகத்தை.

“சங்கட சதுர்த்தி விரத விதிகள் இவை,
பங்கம் இல்லாமல் நடத்தித் தாருங்கள்!”

மகிழ்ச்சி அடைந்தனர் அந்த அந்தணர்கள்;
நெகிழ்ச்சியுடன் கூறினர் கிருதவீர்யனிடம்;

“கரிமுகனுக்குப் பிரியமான விரதம் பற்றி
அறிந்திருக்கவில்லை நாங்கள் இதுவரை.

பிரமன் வகுத்த விதிமுறைகளின் பலனாக
விரதம் சந்ததியை அளித்திடும் அரசே!”

தொடங்கியது விரதம் ஒரு நன்னாளில்,
தொடர்ந்தது தடங்கல் இன்றி ஓராண்டு.

தானம் அளித்தான் பலவிதப் பொருட்களை;
தானம் அளித்தான் பதினாயிரம் பசுக்களை.

கருவுற்றாள் சுகந்தை வெகு விரைவில்,
திருமகன் தோன்றினான் சுகந்தையிடம்.

நல்ல காந்தியுடன் இருந்தது குழந்தை;
இல்லை கைகளும், கால்களும்! அந்தோ!

ஞானவிநாயகனைத் தொழுது பெற்றது
ஊனமுற்ற ஒரு குழந்தையையா? பாவம்!

குறையை நீக்குவான் இறைவன் என்று
குறையாத நம்பிக்கையுடன் இருந்தனர்.

தத்தாத்திரேயர் வந்தார் கிருதவீர்யனிடம்,
தவப் புதல்வனின் நிலையைக் கூறினான்.

“உன் மகனைக் காணவே வந்துள்ளேன்!
என்னிடம் எடுத்துவா உன் மகனை!” என

ஊனமுற்ற பாலகனைக் கொணர்ந்து,
ஞானமுனிவர் காலடியில் வைத்தான்.

“வெறும் குழந்தையல்ல உன் மகன்!
பிறந்துள்ளான் உன் வம்சம் விளங்க!”

ஏகாக்ஷரத்தை உபதேசித்தார் குழவிக்கு.
நாவாற அழைத்தார் கார்த்தவீர்யன் என!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#28d. KArthaveeryan

Kruthaveeryan gave the book of instructions to the learned brahmins and requested them to perform the chathurthi vratham as per the prescribed rules.

The brahmins were happy to learn about the vratham since they had never heard about it earlier. They were sure that the King and Queen would be blessed with a worthy son after observing the vratham.

The vratham was started on an auspicious day and continued for one year without any break or hurdles, as per the instructions. Kruthaveeryan donated many things and ten thousand milch cows as gift to brahmins.

The queen conceived immediately after the vratham. She delivered a male child in due course. The child was bright and brilliant but did not have either hands or legs. The king and queen were crestfallen that after performing the tough vratham they could get only a defective baby.

DhaththAthreya came to meet the king. Kruthaveeryan told him the condition of his son. The sage wanted to have a look at the baby. He consoled the king,

“Do not feel sorry that your child is defective. He is not an ordinary child. He is born to bring glory to your race.”

He taught the baby EkAksharam and named him as KArthaveeryan.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 4

4#16c. மேலும் மேலும் ஐயங்கள்

“பாண்டவர்கள் துன்பம் அடைந்தது ஏன்?
பத்தினி திரௌபதி துன்பம் அடைந்தது ஏன்?

ஒற்றை ஆடையில், மாத விடாய்க் காலத்தில்
பற்றி இழுத்து வரப்பட்டாள் ராஜ தர்பாருக்கு.

கூந்தலை இழுத்தான் கொடிய துச்சாதனன்;
சேலையை இழுத்தான் கொடிய துச்சாதனன்!

பலவந்தமாகக் கடத்திச் சென்றான் சிந்துராஜன்;
பலவந்தம் செய்ய முயன்றான் பாவி கீசகன்.

அநியாயமாகக் கொன்றான் அஸ்வத்தாமன்
அயர்ந்து உறங்கிய அவள் பிள்ளைகளை.

சம நோக்குக் கொண்டிருந்த நர நாராயணர்
சமரில் குணம் மாறுபட்டது எதற்காக?

வரும் சுக, துக்கம் மனிதர்களுக்கு என்றால்
வருவது ஏன் சுக, துக்கம் இறைவனுக்கும்?

குறுக்கு வழிகளில் கிருஷ்ணன் சென்றதேன்?
மறைந்து துவாரகைக்குச் சென்றதேன்?

தெய்வத்தன்மை வாய்ந்த கிருஷ்ணன்
செய்தது எல்லாம் தர்மம் அல்லவே!

ஐவரின் பத்தினியான பஞ்சாலியை
வைவதில்லை உலகம் குற்றம் கருதி!

ஐவரும் அனுபவித்தனர் அவளிடம் இன்பம்
ஐந்தறிவு உள்ள விலங்கினம் போலவே!

ராஜ பத்தினிகள் உற்பத்தி செய்தனர் – தம்
ராஜ குமாரரைப் பரபுருஷர் உதவியுடன்!

எதுவுமே எனக்கு ஏற்புடையன அல்ல.
புதிர்களைப் புரியச் செய்வீர் குருதேவா!”

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


4#16c More and more doubts!

Janamejayan fired at sage Vyaasaa more and more doubts which were riddling his active mind.

“Why did the PaaNdavaas have to suffer so much? Why did their patni Droupati have to suffer so much? She got dragged to the Durbar filled with menfolk, when she was having her monthly period and was dressed in a single piece of clothing. She was dragged by her hair first and then by her dress by the wicked Dushasan.

Sindu Raajan abducted her. Keechagan tried to rape and molest her. Her five sons, the Upa PaaNdavaas, were mercilessly killed by Aswathaama, when they were in deep slumber.

Nara and Naaraayan possessed equanimity but during the war thy were transformed. Sukham and Dukham are in the destiny of man but why do Gods also suffer from dukham and enjoy sukham like any mortal?

Why did Krishna do several unjust things? Why did he go to Dwaaraka from Maduraa secretly? Krishna is the amsam of God VishNu but all he did is neither fair nor just.

Paanchaali is not ridiculed for being the wife of five men. All the five brothers shared her like the animals which lack the power of discretion.

The queens and wives of kings produced sons outside wedlock with the help
of other men. I am not be to accept or digest any of these weird things. Oh Guru! please clarify my confusions and grant me peace of mind!“
 
DEVI BHAAGAVATAM - SKANDA 9

9#45e. தக்ஷிணா உபாக்கியானம்
நூற்பயன்

கர்மங்களில் ப்ரீதி தரவல்ல தேவி தக்ஷிணா;
கர்மங்களின் பலன் தரவல்ல தேவி தக்ஷிணா.

தக்ஷிணையின் சரிதம் கேட்பவனின் கர்மம்
குறையுள்ளதாயினும் நிறைந்த பலன் தரும்.

புத்திரனை அடைவான் புத்திரனை விழைபவன்;
பத்தினியை அடைவான் பத்தினியை விழைபவன்!

உன்னதமான அங்க, முக லக்ஷணங்கள்;
இன் சொற்களே பேசும் இனிய ஸ்வபாவம்;

வணக்கமும், இணக்கமும் நிறைந்த மனது;
பிணக்கமும், சுணக்கமும் இல்லாத பண்பு;

நற்குடி, நன்னடத்தை கொண்ட ஒருவளை
நல்ல மனைவியை அடைந்து இன்புறுவான்.

பெறுவான் கல்வியை அறிவற்ற மூடன்;
பெறுவான் செல்வத்தை வறிய மனிதன்;

பெறுவான் நிலத்தைப் பசித்திருப்பவன்;
பெறுவான் சந்ததிகளை நல்ல மனிதன்.

கஷ்டமான காலங்கள் வந்துள்ள போதும்
இஷ்ட மித்ர பந்துக்களைப் பிரிந்த போதும்

ஆபத்துக் காலங்களிலும் இதைக் கேட்பவன்
ஆபத்து, விபத்துக்களிலிருந்து விடுபடுவான்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

9#45e. DakshiNa UpAkyAnam


The benefits of reading or listening to this DakshiNa UpAkyAnam:

DakshinA is the Devi who can create interest in us in doing good KarmAs. She is the one who can bestow the fruits of good KarmAs.The good KarmAs performed by a person who listens to this story will get duly fulfilled - despite its defects and deficiencies.

A man who seeks a son will get a son; A man who seeks a wife will get a good wife. He will find a woman who is good looking; who speaks nothing but sweet pleasing words; who gets on well with everyone; who is without anger and laziness; who is born in a good family and had a good conduct and live happily with her.

The illiterate will obtain education; the poor will get wealth; the hungry man will get a piece of land to grow food and a good man will get worthy children.

If this story is remembered during the difficult periods - when one is separated from his kin and kith and from his the near and dear ones and at the face of imminent dangers and accidents, he will be saved from all kinds of dangers and troubles by DakshiNA Devi.




[TABLE="class: cf FVrZGe"]
[TR]
[TD="class: amq"]
[/TD]
[TD="class: amr"]
[/TD]
[/TR]
[/TABLE]

 
BHAARGAVA PURAANAM - PART 1

#28e. பவழ விநாயகர்

குழந்தை பேசினான் அதிசயிக்கும்படி!
“இழந்ததைப் பெற வேண்டும் நான்!

கானகத்தில் கொண்டு விடுங்கள்;
ஊனம் நீங்கித் திரும்புவேன் இங்கு.

ஏகாக்ஷர மந்திரத்தை ஜெபிப்பேன்;
ஏகாந்தத்தில் அருள் பெறும் வரை.”

மனம் ஒப்பவில்லை விடுவதற்கு;
மன உறுதி தளரவில்லை மகனுக்கு.

கானகத்தில் விட்டு வந்தான் மகனை.
மோனத் தவம் செய்தான் குழந்தை.

பன்னிரண்டு ஆண்டுகள் உருண்டோடின!
பச்சிளம் பாலகன் இப்போது ஒரு சிறுவன்.

விடாமல் செய்த தவம் பலித்தது அன்று.
தடாகத்தில் காட்சி தந்தார் விநாயகர்.

வணங்க விரும்பினான் ஓடிச் சென்று!
வணங்கினான் தன் மனத்தால், விழுந்து.

“என்ன வேண்டும் கூறு கார்த்தவீர்யா!”
“என் நிலைமையைப் பாருங்கள் சுவாமி!”

“அற்புதக் கரங்கள் தோன்றும் ஓராயிரம்.
நிற்கவும், நடக்கவும் வலிய இரு கால்கள்.

கற்பக் காலம் நீடூழி வாழ்வாய் – நீயும்
நற்பணிகள் பல நூறு புரிவாய்!” என

மாயமாகத் தோன்றின ஆயிரம் கரங்கள்;
நேயத்துடன் தோன்றின இரண்டு கால்கள்.

ஆலயம் எழுப்பினான் அதே இடத்தில்.
அமைத்தான் அதில் பவழ விநாயகரை.

பவழத்தால் ஆன விநாயகரால் தலம்
பவழ வனம் என்னும் பெயர் பெற்றது.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#28e. The Coral Ganapathi

The child spoke with surprising maturity. “I must get back what I have lost. Please take me to the forest. I will return only after getting my arms and legs. I will do penance with EkAkshara mantram until lord VinAyaka takes pity on me”

The child was too young to be left in the forest but he was determined to have his way. The child was taken to the jungle. KArthaveeryan did penance on VinAyaka with the EkAkshara mantram with undivided attention for twelve long years.

VinAyaka appeared in a pond near by. KArthaveeryan wanted to prostrate in front of VinAyaka but he could not move. He did many namaskAr mentally.

“What do you wish for KArthaveerya?” VinAyaka asked him. “Look at my sad plight my lord!” the boy replied.

“Do not worry child. You will grow one thousand strong arms and two mighty legs now. You will live a long and fruitful life. You will do many good deeds in your life!” VinAyaka blessed the boy who was born without arms and legs.

Lo and behold there appeared one thousand strong arms and two strong legs on the boy now. He was so happy that he built a temple right there and established a coral Ganapathy in the temple.

The place itself came to be known as the Coral Garden (pavazha vanam) later on.
 

Latest ads

Back
Top