• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

A poem a day to keep all agonies away!

DEVI BHAAGAVATAM - SKANDA 4

4#17a. பூமியின் புலம்பல்

“ஜனமேஜயனே! தீர்ப்பேன் உன் ஐயங்களை!
மனம் ஒன்றிக் கேள் இனி நான் கூறுவதை!

துஷ்டர்கள் அதிகரித்து விட்டனர் உலகினில்
கஷ்டம் அடைந்தாள் பூமித் தாய் அதனால்;

பசுவின் உருவெடுத்துச் சென்றாள் அவள்
பயந்த வண்ணம் இந்திரன் முன்னால்.

“அஞ்சுவது ஏன் பூமித் தாயே? அஞ்சித்
தஞ்சம் புகுவது ஏன் கூறு!” என்றான்.

“அழிக்கின்றனர் பூமியில் தர்மத்தை!
பழிக்கின்றனர் பூமியில் நீதிநெறிகளை.

பகைமை கொண்டு திரிகின்றனர் பலர்,
மமதை கொண்டு அலைகின்றனர் பலர்.

ஒளித்தான் என்னை ஹிரண்யாக்ஷன்
அலை கடல் நீரில் முன்பு ஒரு நாளில்.

இருந்திருப்பேன் அங்கேயே கவலையின்றி!
இருத்தினார் விஷ்ணு வெளிக் கொணர்ந்து!

தங்க முடியவில்லை பாவிகளின் சுமையை;
ஓங்கி விடுவான் கலி புருஷனும் விரைவில்!

மூழ்கி உள்ளேன் துக்க சாகரத்தில் – என்னை
வாழ்விக்க யார் உளார் கூறு இந்திரா!” என,

“பிரமன் உதவுவான் உறுதியாக!” என்றான்.
பிரமனிடம் சென்றனர் தேவர்கள் பூமியுடன்.

பிரமன் வருந்தினான் கண்ணீர்க் கதை கேட்டு
பிரமனுடன் சென்றனர்; விஷ்ணுவை நாடினர்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


4#17a. Mother Earth in tears!

Sage Vyaasaa replied thus: “Oh King Janamejaya! I will clarify all these doubts riddling your mind. No listen to me carefully.

As the number of wicked people increased in the world, The Mother Earth became very sad. She assumed the form of a cow and went to meet Indra with some apprehension.

Indra asked, “Why are you afraid Oh Mother Earth? What is bothering you and what had brought you here?”

The Mother Earth replied,” The men on earth have no respect for Dharma any more. They make fun of justice. They roam around filled with hatred, animosity and ego.

HiraNyaakshan had hid me under the sea water once. I could have just stayed there happily free of sorrows. But VishNu brought me out and re-established me in my position.

I am not able to tolerate the burden of these sinners. Soon Kali Purushan will become stronger and make the matters worse. Who will lessen my burden and rid me of sorrows please tell me Indra!”

Indra reassured her, “Surely Brahma will help you. Let us go to him now” They all went to meet Brahma. He too was moved by the tearful tale related by the Mother Earth.

Brahma said. “Surely VishNu the protector will help us. Let us go to him now!” So they all went to meet VishNu with the Mother Earth.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 9

9#46a. சஷ்டி தேவி
பிரகிருதியின் ஆறாவது அம்சத்தில் தோன்றிய
பிறந்த குழந்தைகளின் அதிஷ்டான தேவதை!

தருவாள் தன் பக்தர்களுக்குப் புத்திரப் பேற்றை;
தருவாள் அக்குழந்தைகளுக்கு நீண்ட ஆயுளை!

சிசுக்களுக்குத் துன்பம் நேராமல் காப்பாள்
சிசுக்களின் அருகிலேயே இருந்துகொண்டு.

தேவசேனை என்னும் உன்னத தேவியும் இவளே!
தேவ சேனாபதி கந்தனின் பிராணப்ரியை இவளே!

பிரிய விரதன் புத்திரன் சுவாயம்பு மனுவுக்கு;
பிரியம் வைத்தான் யோகமார்கத்தில் அவன்.

செய்யவில்லை திருமணம்; செய்தான் தவம்;
செய்வித்தான் பிரமன் மாலினியுடன் மணம்.

வருந்தினான் புத்திரப் பேறு என்பதே இன்றி;
புரிந்தான் புத்திர காமேஷ்டி சிரத்தையுடன்.

அருந்தினாள் யாகப் பிரசாதத்தை மாலினி;
கருவுற்றாள் யாகப் பிரசாதத்தை உண்டதால்.

பிறந்தது பொன் போன்ற ஓர் ஆண்குழந்தை
இருந்தது அது கண் திறந்து, உயிர் இழந்து!

அழுதனர் இந்தக் கொடுமையைக் கண்டவர்!
எழவில்லை பெற்றதாய் இந்த அதிர்ச்சியால்!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

9#46a. Sashti Devi (1)

Sashti Devi was born out of the sixth amsam of Moola Prakriti Devi. She is the presiding deity of infants and children. She blesses couples with sons and daughters. She blesses those children with a long life span.

She stays very close to the young children and protects them from all kinds of harms. Thus Devi is also known by the name DevasEna - the consort of Lord Skanda.

Priyavratha was the son of SwAyambu Manu. He was interested in the Yoga marggam. He did not get married but was doing severe penance. Brahma got him married to MAlini Devi. The couple did not have any children.

Priyavratan performed Putra Kameshti YAga and Malini Devi ate the Yagna prasAdam. She cinceived and delivered a beautiful male child in due course of time.

But the baby was born dead! This shock was to much for everyone in the country. MAlini Devi fainted due to the severe shock and sorrow and could not be revived.
 
BHAARGAVA PURAANAM - PART 1.

#28f. தரணிதர விநாயகர்

பூபாரம் தாங்குபவன் ஆதிசேஷன்;
பூபாரம் தாங்கும் திறன் நலிந்தது!

நாடினான் பவழ விநாயக மூர்த்தியை;
வேண்டினான் பூபாரம் தாங்கும் சக்தியை!

தரணியைத் தாங்கும் ஆதிசேஷனால்
தரணிதர விநாயகர் ஆகிவிட்டார் இவர்.

நன்மைகள் பல பெற்றான் ராவணன்,
பண்புடன் பவழவிநாயகரைத் தொழுது!

பாண்டவர்கள் பெற்றனர் நன்மைகள்,
பவழ விநாயகரை ஆராதித்த பயனாக!

தேவேந்திரன் மீண்டும் கூறினான்,
“தேவை சதுர்த்தி விரதத்தின் பலன்.

சங்கட சதுர்த்தி விரதம் செய்பவரை
எங்கிருந்தாலும் அழைத்து வருவாய்.

பண்ணிய ஒரு சதுர்த்தி விரதத்தின்
புண்ணியத்தைத் தத்தம் செய்தால்,

விண்ணிலிருந்து இறங்கிய விமானம்
மண்ணிலிருந்து விண்ணில் எழும்பும்!”

“சங்கட சதுர்த்தி விரதம் செய்பவர்
எங்கிருந்தாலும் அழைத்து வருக!”

தூதரை அனுப்பினான் சூரசேனன்;
தூதர்கள் சென்றனர் வீடு வீடாக!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

28f. DharaNidhara VinAyakar

AdhisEshan bears the earth on his head. His powers got reduced. He prayed to the Coral VinAyaka and got back his strength. The Coral VinAyaka thus got a new name as ‘DharaNidhara VinAyaka’.

RAvaNa worshipPed the Coral VinAyaka and got his wishes fulfilled. The PANdavAs worshiped the Coral VinAyaka and benefited from that.

Indra told the king SoorasEnan, “I need some one who performs the chathurti vratham regularly. If he donated the puNya earned by performing one chathurthi vratham, it will make the vimAnam rise in the sky once again.”

The king SoorasEnan instructed his messengers, “Go forth from house to house and locate a person who performs the chathurti vratham!” The messengers went on that mission from house to house.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 4

4#18a. தேவி ஸ்துதி

வியாசர் கூறினார் ஜனமேஜய மன்னனிடம்
விஷ்ணு என்றோ பிரம்மனுக்குக் கூறியதை.

“உண்மையை அறியார் மாயை வசப்பட்டவர்;
உண்மையை அறிவோம் மும்மூர்த்திகள் நாம்.

மணித்வீபத்தில் அன்று தரிசித்தோம்
மாயாஸ்வரூபிணி ஆதி பராசக்தியை.

பராபரையை துதிப்போம் அனைவரும்;
பாரபக்ஷமின்றி அளிப்பாள் நல்ல வரம்.

தியானித்தனர் அனைவரும் தேவியை.
திவ்விய தரிசனம் தந்தாள் ரம்மியமாக.

செம்பருத்திப் பூ போன்ற சிவந்த நிறம்!
அங்கைகளில் பாசாங்குச அபய வரதம்!

“வலை தோன்றுகிறது சிலந்தியிடம்;
உலகம் தோன்றுகிறது உன்னிடம்!

பொறிகள் தோன்றுகின்றன அக்னியில்
உயிர்கள் தோன்றுகின்றன உன்னிடத்தில்..

கருணா சாகரி! துரித துக்க நிவாரிணி!
அருள் கூர்ந்து குறைப்பாய் பூமி பாரம்.

துன்பம் இழைக்கின்றனர் கொடியவர்;
உன்னால் மட்டுமே அழிக்க முடியும்!

முக்கடவுளரும் செய்ய இயலாதவர்
முத்தொழில்களை உன் உதவியின்றி!”

“தேவர்களே கூறுங்கள் என்ன வேண்டும்?’
தேவி கேட்டாள் தேவர்களைப் பரிவோடு.

“கண்ணீடன் வந்துள்ள பூமி அன்னையின்
கண்ணீரைத் துடைக்க வேண்டும் நீயே!”

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


4#18a. Devi Stuti

Sage VyAsA told King Janamejayan what VishNu had told Brahma long long ago.

“Those who are deluded will never know the truth, But we The Trinity know the truth. We had a darshan of Shakti Devi in the MaNi dweepam. She who is supreme among Gods and she who is the AadhiParaa Shakti. Let us woRship her together now”.

All the Devas, Gods and mother Earth prayed to the Supreme Devi and she gave a very pleasing darshan immediately.

She was the coloUr of the red hibiscus flowers and had the Paasam, Ankusam and Abhaya, Varada mudra in her hands.

“A spider builds a nest from its own body. You create the whole world from yourself. Sparks appear on the tongues of flame. Jeevaas appear in you. You are the ocean of mercy. You are the remover of difficulties and sorrows.

Please reduce the weight of the earth. Only you are capable of doing this Oh Devi! The number of wicked people on earth is escalating and you must put an end to their atrocities”

The Devi asked in a sweet voice, What is that you want me to do now?”
The Devaas and Gods said. “You must wipe off the tears of sorrow from the eyes of the Mother Earth”
 
DEVI BHAAGAVATAM - SKANDA 9

9#46b. சஷ்டி தேவி (2)
அழுதான் உரத்த குரலில் பிரியவிரதன்
குழந்தையை அணைத்துக் கொண்டு!

விடத் துணிந்தான் தன் இன்னுயிரையும்!
அடைந்தான் மோஹம் சோக மிகுதியால்!

தோன்றியது விண்ணில் அழகிய விமானம்;
மின்னும் இரத்தின மயமாக இருநதது அது!

சூழப்பட்டிருந்தது அழகிய வெண்பட்டால்;
சூட்டப் பட்டிருந்தது மலர் மாலைகளால்.

இருந்தாள் ஓர் அழகிய தேவி விமானத்தில்;
இருந்தாள் இனிமையான அருள்முகத்துடன்.

நிறத்தில் வெண்ஷண்பக மலர் போன்றவள்;
சிறந்த இரத்தின ஆபரணங்கள் அணிந்தவள்;

கருணை பொழியும் கண்கள்; புன்னகை முகம்;
அருள் புரிவதில் கொண்டிருந்தாள் மிக ஆர்வம்!

துதித்தான் பிரியவிரதன் தேவியை வணங்கி,
விதி சதித்த குழந்தையைக் கீழே வைத்தபின்.

"யார் நீ பூஜிக்கத் தகுந்த தேவியே? கூறுவாய்!
யாருடைய புதல்வி நீ? யாருடைய மனைவி?"

வினவினான் மிக வினயமாகப் பிரியவிரதன்;
விவரித்தாள் தேவி தன்னைப் பற்றி அவனுக்கு.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

9#46b. Sashti Devi (2)

Priyavratan cried piteously embracing his dead infant in the burial ground. His sorrow was boundless and he decided to give up his life also. All his knowledge and wisdom were pushed behind by the intense sorrow he was steeped in.

A beautiful vimAnam appeared on the sky. It was studded with many brilliant gems. It was decorated with pure white silk cloth and fragrant flower garlands. There was beautiful Devi inside the vimAnam. She looked the personification of mercy and sympathy.

She was of the colour of white champaka flowers. She was adorned with several gem studded ornaments. Her eyes were kind and merciful. She face wore a beautiful pleasing smile. She was keen on bestowing her grace on those who needed it.

Priyavratan placed the dead infant down paid his obeisance to the Devi and asked her "Who are you poojya Devi? Whose daughter are you? Whose consort are you? Please tell me about yourself"
 
BHAARGAVA PURAANAM - PART 1

#29a. சுந்தரி

வீடு வீடாகச் சென்று விசாரித்த தூதர்கள்
வியப்புடன் கண்டனர் ஒரு விமானத்தை.

தரையில் இறங்கியது திவ்யவிமானம்;
நெருங்கிச் சென்றனர் விவரம் அறிந்திட .

சண்டாள ஸ்த்ரீயை திவ்ய சரீரத்துடன்
கண்டதும் ஆழ்ந்தனர் வியப்புக் கடலில்!

“சண்டாளப் பெண்ணுக்கு மகத்துவமா?
விண்ணுலக வாழ்வு என்னும் பரிசா?”

தூதர்கள் கேட்டனர் கேள்விகள் பலவற்றை;
தேவகணங்கள் உரைத்தனர் இக்கதையை!

சாரங்கன் ஆண்டான் வங்காள தேசத்தை,
பார் புகழும் அழகி அவன் மகள் சுந்தரி!

சித்திரன் மனந்தான் அழகி சுந்தரியை;
சத்ரு ஆகிவிட்டாள் ரூபவதி பார்யா.

கண்டவர் மனம் மயங்கும் தன் அழகினால்,
கொண்டவனுக்குத் துரோகம் இழைத்தாள்!

கூடிக் களித்து வந்தாள் பரபுருஷர்களுன்;
ஆடிப் போய்விட்டான் அறிந்த சித்திரன்.

“ஒழுக்கம் தவறி நடந்தால் இரக்கமின்றி
அழித்துவிடுவேன் உன்னை” எச்சரித்தான்.

உரிக்கு உரி தாவும் ருசி கண்ட பூனை!
‘உல்லாச வாழ்வுக்கு உலை வருமோ?

தன்னைக் கொல்வதாகக் கூறியவனைத்
தானே முதலில் கொன்று விட்டால்…!’

உறங்கும் கணவனின் தலையைச் சுந்தரி
அறுத்துத் தள்ளித் தப்பிச் சென்று விட்டாள்.

உண்மை அறிந்த காவலர் சிறைசெய்து
தண்டிக்க நிறுத்தினர் சாரங்கன் முன்பு!

மகள் என்றும் நினைக்கவில்லை மன்னன்,
முகத்தையும் ஏறெடுத்துப் பார்க்கவில்லை!

“பாவியின் தலையைக் காட்டில் சென்று
சீவித் தள்ளு!” என்று ஆணை இட்டான்.

வாழ்க வளமுடன், விசலாக்ஷி ரமணி


#29A. Sundari

The messengers went from house to house as per the king’s orders. They saw a vimAnam landing on the ground. They went closer to find out the details about it. They were surprised to see a chandALa sthree in the vimAnam with a heavenly body.

“What made this lowly woman get a divya sareeram and a place in heaven?” the messengers demanded to know and the DEva gaNAs replied thus,

“SArangan ruled over the VangALa DEsam. He had a very pretty daughter aptly named as Sundari. She was a world class beauty no doubt. The king got her married to a suitable young man called Chithran.

But Sundari was not loyal to her husband. She was proud of her beauty and enjoyed with all kinds of men the carnal pleasures.

Chithran was devastated to know this truth. He warned her, “You are a king’s daughter and my lawfully wedded wife. If you behave in this manner unbecoming of your status, I will kill you with my own hands!”

Sundari had got used to her life of pleasures. She was worried that it might come to a halt because of the interference from her husband. She decided to kill him before he could kill her.

She severed the head of her sleeping husband and escaped. But the truth was known before long. She was traced by the soldiers, arrested and brought before King SArangan.

He had no sympathy for this kind of a daughter nor would even look at her face. He ordered to his men “Take this sinner to a forest and chop off her head mercilessly!”
 
DEVI BHAAGAVATAM - SKANDA 4

4#17c. விஷ்ணுவின் பதில்

நாட்டை விட்டுக் காடு சென்றது துக்கம்;
காட்டின் வேடனாக வாழ்ந்தது துக்கம்;

அலைந்து திரிந்தேன் பதினான்கு ஆண்டுகள்
அழுது புலம்பினேன் என் சீதையைத் தேடி

சுயலாபம் கருதிக் கொண்டேன் நட்பு
சுக்ரீவன் முதலிய வானரங்களுடன்.

மறைந்திருந்து அம்பால் வீழ்த்தினேன்
மகா பலசாலியாகிய வீரன் வாலியை.

சேர்ந்தேன் இலங்கை சேது பந்தனம் செய்து;
சோர்ந்து கிடந்தேன் நாக பாசத்தில் கட்டுண்டு.

சீதையை மீட்டேன் முயன்று போரிட்டு
சீதையுடன் வாழ்ந்த காலம் மிகச்சிறிதே

கடமைக்காகத் தியாகம் செய்தேன் சீதையை;
கானகத்தில் தவிக்க விட்டேன் கர்ப்பிணியை.

பூமியின் மகள் திரும்பிச் சென்று விட்டாள்
பூமியின் பிளந்த வயிற்ருக்குள் மீண்டும்!

சுதந்திரம் உள்ளவன் செய்வானா இவற்றை?
சுதந்திரம் இல்லாதவன் செய்வான் இவற்றை!

துன்பங்கள் வரும் பிறர் வசப்பட்டவருக்கு!
துன்பங்கள் வருகின்றன அனைவருக்கும்!

சுதந்திரம் சுயேச்சை உள்ள ஒருத்தி
சந்தேகம் இன்றி யோக மாயையே!”
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
4#17c. Vishnu’s reply

Vishnu continued to Brahma, “I went to the jungle and lived like any ordinary hunter. I roamed around there for full fourteen years. I searched like mad man for my wife Seetaa when she was abducted by RaavaN.

I became a friend of Sugreevan and other monkeys for personal benefits. I killed Vaali by shooting arrow from my hiding place.

I reached Lanka after building the Sethu dam. I lay helpless bound by the Naaga paasam in the war with RaavaN.

I freed Seetaa after wining the war with RaavaN but we did not live together for a long time. I had to forsake her in the dense forest – when she was pregnant – to keep up my image as a just king.

Seetaa returned to the womb of Mother Earth from where she had originally emerged. Are these the things done by a man who has freedom of action? There are the miserable actions of one who is under the control of someone else.

Coming to think of it, Devi Yoga Maayaa is only one who has freedom of action and no one else has it”
 
DEVI BHAAGAVATAM - SKANDA 9

9#46c. சஷ்டி தேவி (3)

தேவாசுர யுத்தத்தில் இருந்தேன் நான்
தேவர்களின் சேனாதிபதியாக முன்பு.

பிரமனின் மானசீகப் புத்திரி தேவசேனை நான்;
பிராண நாயகர் ஆவார் தேவசேனாபதி ஸ்கந்தர்.

பிரகிருதியின் ஆறாவது அம்சம் ஆவேன் நான்.
பெயர் உண்டு சஷ்டி தேவி என்றும் அதனால்!

தருவேன் பிள்ளையை அதை விரும்புபவருக்கு;
தருவேன் பத்தினியை அதை விரும்புபவருக்கு.

தருவேன் செல்வத்தை அதை விரும்புபவருக்கு;
தருவேன் கர்ம பலனை அதை விரும்புபவருக்கு.

விளைகின்ற அனைத்தும் கர்ம வினைப் பயனே!
விளங்குகின்ற அனைத்தும் கர்ம வினைப் பயனே!"

உயிர் ஊட்டினாள் குழந்தைக்குச் சஷ்டி தேவி;
உயரச் செல்ல முயன்றாள் தேவி குழந்தையுடன்!

நெஞ்சுருகத் துதித்தான் சஷ்டி தேவியை - மன்னன்
கெஞ்சினான் குழந்தையைத் திருப்பித் தருமாறு!

"மூவுலகங்களிலும் புகழுடன் விளங்குகிறாய்!
மூவுலகும் என்னைத் தொழும் வகை செய்வாய்!

இருப்பான் இந்தப் பாலகன் சிறந்த குணசீலனாக;
இருப்பன் அறிஞனாக; பூர்வ ஜன்ம உணர்வுடன்.

இருப்பான் நாராயணரின் ஒரு கலா ஸ்வரூபனாக;
தருவான் சக்தி தவ முனிவருக்கு, ஞானியருக்கு!

இருப்பான் சகல சம்பத்துடன், அதிகப் புகழுடன்;
இருப்பான் பண்டிதர்களுக்குப் பிரியமானவனாக.

வாழ்வான் நெடுங்காலம் மாறாத புகழோடு!
வாழ்வான் சுவ்விரதன் என்ற பெயரோடு!"

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

9#46c. Sashti Devi (3)

The Devi replied to the question raised by Priyavratan in her sweet voice,"I am DevasEna the MAnasa putri (daughter born out of the mind) of BrahmA. I am the consort of Lord Skanda.

I lead the army of DevAs in a war against the AsurAs long ago! I am the sixth amsam of the Moola Prakriti Devi. So my other name is Sashti Devi.

I bless the couples with good children and I bless the children with a long life span. I bless the poor man with wealth and the fruits of KarmAs to those who perform them.

Whatever people see here is the fruit of their karmAs. Whatever happens here is the fruit of their KarmAs."

She made the dead infant become alive and tried to fly away carrying it with her. Priyavratan would not not let her go. He begged her and pleaded to her to return the infant to him.

Sashti Devi told him thus: "You are famous in all the three worlds. Make all the three worlds worship me as the protector of their infants and children.

This child will grow into a highly cultured and respected man. He will be very wise and have the memories of his poorva janma.

He will be an amsam of Lord NArAyaNA. He will be a yogeendra and a king of kings. He will have the valor to conquer raging mad elephants. He will bestow power to the rushis and sages. He will live well with all kinds of wealth and lasting fame. He will be respected and loved by everyone under the name Suvratan"
 
BHAARGAVA PURAANAM - PART1

#29b. சண்டாளப் பெண்
பாவங்களுக்கு உழன்றாள் நரகத்தில்,
பாவம் கழியவில்லை காலம் கழிந்தும்.

தண்டனையைப் பூர்த்தி செய்ய மீண்டும்
சண்டாளப் பெண் ஆனாள் மண்ணுலகில்.

காலையில் எழுந்ததும் கள் அருந்தினாள்;
காலைப் பொழுது கழிந்தது போதையில்!

போதை தெளிந்ததும் அகோரப் பசியால்
போனாள் உணவைத் தேடிய வண்ணம்.

தெருவில் வந்து விழுந்தன நிறைய
விருந்து உண்ட எச்சில் இலைகள்.

பசிக்கு ஏது ருசியும் பல விதிகளும்?
புசித்தாள் எச்சில் உணவைத் திரட்டி!

சதுர்த்தி விரதம் நடந்திருந்தது அன்று;
பொதுவாகக் கேட்டது கணபதி நாமம்.

“கணபதி! கணபதி! ” என்றாள் அவளும்!
கணபதி அருளுக்குப் பாத்திரம் ஆனாள்!”

கணங்கள் உரைத்தன இந்த விவரத்தை;
கணங்களை வேண்டினர் தூதுவர்கள்.

“மண்ணில் இறங்கிய இந்திரன் விமானம்
விண்ணில் எழும்ப உதவிட வேண்டும்!”

“வேலை தருபவர் வேழமுகன் ஒருவரே!
வேலை நடுவில் வேண்டாம் தடங்கல்!”

சென்றனர் விமானம் ஏறிய கணங்கள்,
பெண்ணின் பார்வை விழுந்தது தரையில்.

என்ன விந்தை நடந்தது அங்கே காண்பீர்!
எழும்பியது விமானம் அவள் பார்வையில்!

சண்டாளப் பெண் அல்லவே அவள் இப்போது!
விண்ணுலக வாழ்வை வென்றுவிட்ட பெண்!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

#29b. The untouchable woman

Sundari suffered in hell for a very long time. Still her sins were not exhausted. She was born on earth again as an untouchable ChandALa sthree.

She drank toddy and got intoxicated early in the morning. She felt the pangs of hunger in the afternoon and went out in search of food.

Plantain leaves with the remnants of food were thrown on the street after a feast. Hunger knows no laws! She gathered the leftover food and ate it. That day happened to be the auspicious VinAyaka chathurthi day.

The name of lord GaNapathy was in the air – heard from every house. She too said “GaNapathy! GaNapathy!” just for fun. But GaNapthy rid her of all her sins immediately. She has been given a divya sareeram and a place in the heaven.”

The messengers asked for a favour. “Indra’s vimAnam has been grounded. Please help it to rise again in the sky”

The Deva gaNAs refused to help them saying, “We obey only the commands of our god Ganapathy. No distractions are allowed while doing our duties”

They got back in their vimAnam and were leaving. The eyes of the ChandALa sthree fell on Indra’s vimAnam and it started rising in the sky! After all she was not just an untouchable woman any more. She had won a divya sareeram and a spot in the heaven.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 4

4#18a. தேவி ஸ்துதி

வியாசர் கூறினார் ஜனமேஜய மன்னனிடம்
விஷ்ணு என்றோ பிரம்மனுக்குக் கூறியதை.

“உண்மையை அறியார் மாயை வசப்பட்டவர்;
உண்மையை அறிவோம் மும்மூர்த்திகள் நாம்.

மணித்வீபத்தில் அன்று தரிசித்தோம்
மாயாஸ்வரூபிணி ஆதி பராசக்தியை.

பராபரையை துதிப்போம் அனைவரும்;
பாரபக்ஷமின்றி அளிப்பாள் நல்ல வரம்.

தியானித்தனர் அனைவரும் தேவியை.
திவ்விய தரிசனம் தந்தாள் ரம்மியமாக.

செம்பருத்திப் பூ போன்ற சிவந்த நிறம்!
அங்கைகளில் பாசாங்குச அபயவரதம்!

“வலை தோன்றுகிறது சிலந்தியிடம்;
உலகம் தோன்றுகிறது உன்னிடம்!

பொறிகள் தோன்றுகின்றன அக்னியில்
உயிர்கள் தோன்றுகின்றன உன்னிடத்தில்..

கருணா சாகரி! துரித துக்க நிவாரிணி!
அருள் கூர்ந்து குறைப்பாய் பூமி பாரம்.

துன்பம் இழைக்கின்றனர் கொடியவர்;
உன்னால் மட்டுமே அழிக்க முடியும்!

முக்கடவுளரும் செய்ய இயலாதவர்
முத்தொழில்களை உன் உதவியின்றி!”

“தேவர்களே கூறுங்கள் என்ன வேண்டும்?’
தேவி கேட்டாள் தேவர்களைப் பரிவோடு.

“கண்ணீடன் வந்துள்ள பூமி அன்னையின்
கண்ணீரைத் துடைக்க வேண்டும் நீயே!”

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


4#18a. Devi Stuti

Sage Vyaasaa told King Janamejayan what VishNu had told Brahma long long ago.“Those who are deluded will never know the truth, But we The Trinity know the truth. We had a darshan of Shakti Devi in the MaNi dweepam. She who is supreme among Gods and she who is the AadhiParaa Shakti. Let us worship her together now”.

All the Devas, Gods and mother Earth prayed to the Supreme Devi and she gave a very pleasing darshan immediately.

She was the color of the red hibiscus flowers and had the Paasam, Ankusam and Abhaya, Varada mudra in her hands.

“A spider builds a nest from its own body. You create the whole world from yourself. Sparks appear on the tongues of flame. Jeevaas appear in you. You are the ocean of mercy. You are the remover of difficulties and sorrows.

Please reduce the weight of the earth. Only you are capable of doing this Oh Devi! The number of wicked people on earth is escalating and you must put an end to their atrocities”

The Devi asked in a sweet voice, What is that you want me to do now?”bThe Devaas and Gods said. “You must wipe off the tears of sorrow from the eyes of the Mother Earth”
 
DEVI BHAAGAVATAM - SKANDA 9

9#46d. சஷ்டி தேவி (4)
சம்மதித்தான் பிரியவிரதன் தேவியைப் பூஜிக்க ;
சஷ்டி தேவி அந்தர் தியானமானாள் ஆசிகள் தந்து.

வழிபட்டான் சஷ்டி தேவியை ஆறாவது நாளில்;
வழங்கினான் தானம் வாரி வாரி அந்தணருக்கு!

பூஜித்தான் தேவியைச் சுக்கில சஷ்டியில் - இன்றும்
பூஜிக்கின்றோம் நாம் தேவியைச் சுக்கில சஷ்டியில்.

செய்ய வேண்டும் ஆவாஹனம் சஷ்டி தேவியை!
செய்ய வேண்டும் அனைத்து உபசாரங்களையும்!

ஜெபிக்க வேண்டும் தேவியின் மந்திரத்தை;
துதிக்க வேண்டும் சாம வேதத் துதியினால்!

விரும்பிய பொருளைத் தருகின்ற தோத்திரம்
மறைந்து நிலவுகின்றது நமது வேதங்களில்.

பலஸ்ருதி

ஓராண்டு காலம் இந்தத் துதியைக் கேட்பவன்
நூறாண்டு காலம் வாழும் புத்திரரைப் பெறுவான்.

மலடியும் பெறுவாள் குழந்தைப் பேறு - குண
சீலனான, மா வீரனான, அறிஞனான மகனை.

நோய்கள் அகன்று விடும் குழந்தைகளை விட்டு
தாய் தந்தையர் இத் துதியை ஒரு மாதம் கேட்டால்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

9#46d. Sashti Devi (4)

Priyavratan agreed to this and Sashti Devi returned the infant to him and blessed them both. She disappeared with her VimAnam.

Priyavratan worshipPed Sashti Devi on the sixth day after the birth of his son. He gave away rich gifts to worthy brahmins lavishly. He made the worship of Sashti Devi on the sukla sashti very popular. Even today we worship the benevolent Sashti Devi on the sixth day of the white fortnight of the month.

AavAhanam must be done to invite Sashti Devi. All the upachArams (rituals honouring the Diety) must be done to the Sashti Devi.

Sashti Devi's mantra must be chanted. The Stuti in SAma VedA must be sung to please her. The stotrAs which bestow the desired results abound in the VedAs.

The person who listens to this stuti for one year will get sons who will live for one hundred years. Even a barren woman will deliver a child who is good natured, wise and valorous. If the parents listen to this stuti for one month, the diseases troubling their children will vanish completely!
 
BHAARGAVA PURAANAM PART 1

#29c. சூரசேனன்

தூதுவர் கூறிய வினோத விவரங்கள்
ஊதி வளர்த்தன மன்னனின் ஆசையை!

அடைய வேண்டும் விநாயகன் அருளை!
அடைய வேண்டும் விண்ணுலக வாழ்வை!

முனிவர்களின் உதவியுடன் சூரசேனன்
இனிதே தொடங்கினான் விரதத்தை.

அமர பட்சத்தில், மாசி மாதத்தில், பூஜை
அங்காரக சதுர்த்தியில் தொடங்கினான்!

மாதம் தவறாமல் பூஜைகள் நடந்தன;
பாதகம் இன்றிப் பூர்த்தியும் அடைந்தன!

தேவ கணங்கள் வந்தன விமானத்துடன்;
கேவலம் தான் மட்டும் சுவர்க்கம் செல்வதா?

“யாவரும் வர வேண்டும் என்னுடன்!”
தேவ கணங்கள் அளித்தன அனுமதி.

நகர மக்கள் வந்து குவிந்தனர் அங்கு.
அகமகிழ்ந்து அமர்ந்தார் விமானத்தில்.

எழும்பவில்லை விமானம் விண்ணில்!
பழுது என்னவோ தெரியவில்லையே!

“நகர மக்களில் ஒருவன் பாவி வணிகன்;
நகராது விமானம் அவன் ஏறி அமர்ந்தால்!

பார்வை பட்டுத் தரை தட்டினான் இந்திரன்
பாவி இறங்கினால் தான் பறக்கும் விமானம்!”

“எல்லோருக்கும் கிட்டும் நற்பயன்
இல்லாமல் போனது ஏன் அறிவீரா?

பாவம் என்ன செய்துள்ளான் இவன்?
பரிஹாரம் என்று ஒன்றும் இல்லையா?”

வாழ்க வளமுடன் விசாலாக்ஷி ரமணி.

#29c. SoorasEnan

The king SoorasEnan was bewildered by the information gathered by his messengers. He too wished for a spot in heaven and the travel by the heavenly vimAnam. He called the learned pundits and started chathurti vratham in the prescribed manner.

It was started on an AngAraka chathurti in the month of MAsi and in amara paksham. The puja went on for one full year without any break or hurdles.

A VimAnam came down from heaven. The king did not want to be to be the sole benefactor. He wanted all his citizens to go with him. He argued with the DEva gaNas and got their permission. The citizens of his country were only too happy on hearing this. They assembled and started boarding the vimAnam.

But the vimAnam would not rise in the air! What had gone wrong? One of the citizens was a sinner merchant. Unless he got down from the vimAnam, it would not go up. Even Indra’s vimAnam got grounded only because the sinner had cast his eyes on it.

The king could nor reconcile to this news. “What kind of sin had the merchant committed that he was denied the privilege given to all the others? Was there no parihAram for his sins?”
 
DEVI BHAAGAVATAM - SKANDA 4

4#18b. தேவியின் மறுமொழி
புன்னகை பூத்தாள் ஜகதன்னை இது கேட்டு.
“மன்னர்கள் கொண்டனர் தீய அசுர குணம்!


கொல்வேன் துஷ்டர்களை அதிவிரைவில்;
வல்லமை தருவேன்; உமக்கு உதவுவேன்.


காச்யபன் மனைவியுடன் சென்று பிறப்பான்
கனக துந்துபியாக யாதவர்கள் குலத்தினில்.


பிருகுவின் சாபத்தால் பிறப்பான் விஷ்ணு
கிருஷ்ணனாக, தேவகி வசுதேவன் மகனாக.


பெண்ணாகப் பிறப்பேன் யசோதை இல்லத்தில்
கண்ணனும், நானும் இடம் மாறிவிடுவோம்.


பிறப்பான் ஆதிசேஷன் ரோஹிணி மகனாக.
பிறப்பான் அர்ஜுனன் இந்திரனின் அம்சமாக.


பிறப்பான் தருமன் யமனின் அம்சமாக;
பிறப்பான் பீமன் வாயுவின் அம்சமாக;


பிறப்பர் இரட்டையர் அச்வினியர் அம்சமாக,
பிறப்பான் பீஷ்மன் தியா வசுவின் அம்சமாக.


துவாபர யுகத்தின் முடிவில் அழிவார்கள்
துஷ்ட ஜனங்கள் இவர்களால் கரங்களால்.


குறைந்துவிடும் பூமியின் அதிக பாரம்!
மறைந்து விடும் பூமியின் இத் துயரம்!


கொள்வர் யாதவர் அதிக அஹங்காரம்.
கொள்வர் மமதை, மோஹம், காமம்.


அழியும் யாதவகுலம் பிராமண சாபத்தால்!
அழிவான் கிருஷ்ணனும் ஒரு சாபத்தால்!


மதுரா புரியில் சென்று பிறவி எடுங்கள்;
உதவி புரியுங்கள் கிருஷ்ணன் பிறந்ததும்”

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


4#18b. Devi’s reply


Devi smiled at the Deva gathered in front of her. “Many of the kings are wicked now. I will get all of them killed very soon. I will give you all the power and might you need and also help you kill them.


Kasyap will be born in Yaadava race as Kanaka Dundubi. Vishnu will be born as Krishna due to Sage Brugu’s curse.
I will be born in Yasoda’s house as her daughter. Later on Krishna and I will switch places.


Aadhiseshan will be born as Balram to Rohini. Arjun will be born as Indra’s amsam. Dharman will be born as the amsam of Yama and Bheema as the amsam of Vaayu.The twins will be born as the amsam of the Aswini Devata. Bheeshma will be born as the amsam of Dyaus Vasu.


At the end of the Dwaapara yuga, all the wicked men will get killed. The extra weight borne by the Mother Earth will reduced. So also the deep sorrow she is suffering now.


The Yaadavas will get bloated with pride and arrogance. The Yaadava race will be cursed to destruction by an enraged sage. Krishna will die due to a curse. So all of you be born in Maduraapuri and wait for Krishna’s birth!”

 
DEVI BHAAGAVATAM - SKANDA 9
9#47a. மங்கள சண்டிகை

கொண்டுள்ளாள் இந்தத் தேவி அதிகத் திறமை;
கொண்டுள்ளாள் இந்தத் தேவி அதிகக் கோபம்.

மங்களம் தருவாள் திருமண காரியங்களுக்கு;
மங்களம் தருவாள் தன் இனிய பக்தர்களுக்கு.

மனு வம்சத்தில் உதித்த மங்களன் என்பவன்
மன்னன் ஆனான் ஆறு அழகிய த்வீபங்களுக்கு.

பூஜித்துப் பெற்றான் மேலும் பல மேன்மைகளை;
பூஜ்ய தேவியாகிய மங்கள சண்டிகையை அவன்.

விளங்குகிறாள் துர்கா தேவியாக இவளே!
விளங்குகிறாள் மூலப் பிரகிருதியாக இவளே!

இஷ்ட தேவதை இவளே பெண்கள் குலத்துக்கு;
இஷ்டமானவற்றை இவள் தந்து அருள்வதால்.

திரவியங்களால் பூஜித்துப் போற்றினர் தேவியை
திரிபுர சம்ஹார காலத்தில் தேவர், தெய்வங்கள் .

தோன்றினாள் துர்கையாக மங்கள சண்டிகை;
போற்றிய தேவர்களுக்குத் தந்தாள் இந்த வரம்.

"திரிபுர வெற்றி உண்டாகும் ருத்திர மூர்த்தியால்!"
சிரித்தே எரித்து விட்டார் திரிபுரத்தை ருத்திர மூர்த்தி!

திருப்தி செய்தனர் தேவர்கள் தேவியை
திரிபுர தஹனம் முடிந்த பின் மீண்டும்.

ஜெபித்தனர் மூல மந்திரத்தை மிக பக்தியுடன்;
ஜெபித்தனர் இருபத்தொரு அக்ஷர மந்திரத்தை.

சித்தியாகும் இந்த மந்திரம் தேவியின் அருளால்
பத்து லக்ஷம் முறை பக்தியுடன் ஜெபித்து வந்தால்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

9#47a. MangaLa ChaNdi (1)

This Devi is very skilled and also capable of becoming very angry. She causes all the auspiciousness in the marriage ceremonies. She gives auspiciousness to her devotees.

MangaLan of Manu vamsam became the king of six island by the grace of this Devi. He worshipped her and obtained many more blessings and boons.

MangaLa ChaNdi is Sree DurgA Devi. She is the Moola Prakriti Devi. She is the ishta deivam for the women folks, since she blesses them fulfilling all their wishes.

Before the Tripura SamhAram, the DevAs and Gods worshipped MangaLa ChaNdi. She appeared to them as DurgA Devi and gave them this boon, "Rudra will destroy Tripuram."

Rudra destroyed Tripura with his mere laughter. After their victory the DevAs and Gods again worshipped ManagaLa ChaNdi with her moola mantram. They chanted the mantra with twenty one akshara in it.

This mantra will become successful if chanted one million times, by Devi's divine grace.
 
BHAARGAVA PURAANAM - PART 1

#29d. புதன்

தவசீலர் கௌட தேசத்தில் ஒரு வேதியர்,
தவசீலரின் மனைவி ஜானகி, மகன் புதன்.

மணவயதை அடைந்து விட்டான் புதன்;
மணமுடித்தனர் சாதுப்பெண் சாவித்திரியை.

பச்சைக் கிளி போன்ற மனைவி இருந்தும்,
இச்சை தீர்க்கத் தேவை ஒரு வைப்பாட்டி!

வேசியர் வலையில் விழுந்தான் புதன்;
வேசியர் வீடே அவன் இருப்பிடம் ஆனது.

வேதியர் அறியவில்லை அவன் செய்கை;
வேதியர் அலைந்து தேடினார் புதனை!

நண்பன் கூறினான் அவன் இருப்பிடம்.
நண்பன் உதவியுடன் சென்றார் அங்கே!

‘தள்ளாடியபடி வந்துவிட்டது கிழம் – தன்
உல்லாச வாழ்க்கையைக் கெடுப்பதற்கு!’

ஆத்திரம் பீறிட வெளியே வந்தான் புதன்;
“கோத்திரம் என்ன? உன் குலம் என்ன?

பிறப்பால் உயர்ந்திருந்தும் உன்னுடைய
பிழைப்பால் தாழ்ந்து போய்விட்டாயே!

கண்ணும், கண்ணீருமாகக் காத்திருக்கும்
பெண்ணை மோசம் செய்யாதே மகனே!”

செவிடன் காதில் ஊதிய சங்கானது!
குருடனுக்குக் காட்டிய வழி ஆனது!

வேசிகளின் வலையில் சிக்கியவனிடம்,
பேசுவதால் விளையும் பயன் உண்டோ?

“புத்தி கூற வந்தாயா கிழவா?” என்று
சக்தியைத் திரட்டி அறைந்தான் அவரை.

உடல் தளர்ந்தவர் மனம் உடைந்தார்;
உடன் விழுந்து உயிரையும் விட்டார்!

யாரும் அறியாமல் புதைத்தான் உடலை!
மேலும் பணம் எடுக்கச் சென்றான் தன் வீடு.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#29d. Budhan

Thavaseelar was a brahmin living in Gowda DEsam. Janaki was his wife and Budhan his son. When Budhan grew up and became a young man, his parents got him married to a soft and sweet girl named SAvithri.

A man may have a wife but he needs a concubine to fulfill his sexual perversions. Budhan fell a prey to a prostitute and started living with her, away from his home.

Thavaseelar did not know about this. He got worried and started looking for his son everywhere. Budhan’s friend told him about Budhan’s behavior and took the old man to the house where Budhan was staying.

Budhan became wild and turned violent when he saw his old father approach the house where he was living in pleasure. His father took him to task,

“Don’t you remember your race, your caste and your gothram? You are doing things unfit for a brahmin. Your young wife is waiting for you with eyes filed with tears. Let us go back home!”

But these words were wasted on Budhan. He became mad with rage and struck the old man with all his might. The old man was already weak. Now he became broken-hearted. He promptly fell down and died.

Budhan buried the dead body secretly and went home to fetch more money and valuables to give to the fallen woman he was living with!
 
DEVI BHAAGAVATAM - SKANDA 4

4#19a. யோகமாயை


வித்தை, அவித்தை என்ற உருவங்களில்
விளங்குகிறாள் யோகமாயை பராசக்தி.

சடுதியில் பிணிக்கின்றாள் சம்சாரத்தில்;
சடுதியில் விடுவிக்கின்றாள் அதிலிருந்து.

பிணிக்கின்றாள் நம்மை அவித்தையாக!
துணிக்கிறாள் தளைகளை வித்தையாக!

மும்மூர்த்திகள் வசப்படுவர் அவித்தைக்கு.
மும்மூர்த்திகள் வசப்படுவர் வித்தைக்கும்.

கட்டி இயங்க வைக்கிறாள் அனைவரையும்;
கொட்டலில் அடைபட்டுள்ள மாடுகள் போல.

துக்கமும், சுகமும் உண்டு அனைவருக்கும்;
தூக்கம், சோம்பல் உண்டு அனைவருக்கும்.

பிறப்பு என்று ஒன்று இருந்தால் உயிர்களுக்கு
இறப்பு என்ற ஒன்றும் இருக்கும் திண்ணமாக.

அமரர்கள் அல்ல தேவர்கள் உண்மையில்;
அதிக காலம் வாழ்கின்றனர் அவ்வளவே!

அதிக காலம் ஜீவிப்பான் தேவரிலும் இந்திரன்;
அதிக காலம் ஜீவிப்பான் இந்திரனிலும் பிரமன்;

அதிக காலம் ஜீவிப்பான் பிரமனிலும் விஷ்ணு;
அதிக காலம் ஜீவிப்பான் விஷ்ணுவிலும் ருத்திரன்

ஒளி தரும் சூரிய சந்திரர்களால் – முடியவில்லை
ஒழிப்பதற்குத் தம்மைப் பற்றியுள்ள பீடைகளை.

மந்தன் ஆவான் ஒளிமிக்க சூரியனின் மகன்;
சந்திரனோ எனில் களங்கங்கள் நிறைந்தவன்

உலவுகின்றனர் வானவீதியில் ஒளி தந்து.
நிலவுகின்றன அவர்களுக்கும் கஷ்டங்கள்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

4#19a. Yoga Maayaa

Paraa Shakti exhibits in two different forms as Avidhya (Ignorance) and Vidhya (Knowledge). She binds a jeeva in Samsaaraa in a moment acting the role of Avidhya. She liberates the jeeva from all the bonds in a moment as Vidhya.

Even The Trinity are bound by Vidhya and Avidhya. Yoga Maayaa controls all the jeeva as the cows tied in a barn. Pleasure and pain are common for all living beings. Sleep and sloth are common for all the jeevaas.

If there is thing called the birth there must be the one called death. The Devaas are not immortals as commonly misunderstood by us. The Deva live for longer periods than men. Indra lives longer than the Devaas and Brahma lives longer than Indra. Vishnu lives longer than Brahma. Rudran lives longer than Vishnu.

Even the luminous objects could not get rid of their blemishes. The brilliant Sun has a son called Mandhan. The cool moon has many defects and blemishes. These heavenly bodies roam around in the sky giving us light but they are not free from worries!
 
Last edited:
DEVI BHAAGAVATAM - SKANDA 9

9#47b. மங்கள சண்டிகை (2)

பதினாறு வயது நிரம்பியவளும் - கோவை
பழம் போன்ற செவ்விதழ்கள் உடையவளும்;

அழகான பல் வரிசைகள் உடையவளும் - முக
அழகில் சரத்காலத் தாமரையைப் போன்றவளும்;

நிறத்தில் வெண் சண்பக மலர் போன்றவளும்;
கரு நெய்தல் நிற விழிகளை உடையவளும்;

அகில உலகையும் தனியாகத் தாங்குபவளும்;
அகில உலகுக்குச் சம்பத்தைத் தருபவளும் ஆன

தேவியே நமஸ்காரம்! உனக்கு நமஸ்காரம்!"
தேவர்கள் துதித்தனர் மங்கள சண்டிகையை!

மங்கள வாரம் தோறும் துதித்தால் - நமக்கு
மங்களம் தருவாள் தேவி மங்கள சண்டிகை.

மங்களன் என்னும் மன்னன், அங்காரகன்,
மங்கையர், மங்களம் விரும்பும் ஆடவர்,

முனிவர், மனுக்கள் போன்ற உத்தமர்களும்
மனிதர், தேவர் போன்று மாறுபட்டவர்களும்

மங்களத்தை அடைந்தனர் மனம் விரும்பியபடி;
மங்கள சண்டிகை தேவியை பூஜித்து வந்ததால்.

மங்களம் பெறுவார் பந்து மித்திரர்களுடன்
மங்கள சண்டிகையின் துதியைக் கேட்பவர்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


9#47b. MangaLa ChaNdi (2)


DhyAnam:

“O Devi! You are always sixteen years old; You are always youthful; Your lips are like the Bimba fruits; You have beautiful rows of teeth!

Your face resembles a lotus in autumn; You colour is that of white champakas; Your eyes are like two blue lilies; You preserve the world and You bestow all sorts of prosperity. So I meditate on you.

You destroy all the difficulties! You give joy and you are the auspiciousness of all auspicious things. You are worthy of being worshipped on all the Tuesdays.
Devi Sarva MangalA was first worshipped by MahAdeva. Secondly she was worshipped by AngArakA - the planet Mars; thirdly by King MangaLa; fourthly by the ladies of every household and fifthly she was worshipped by all men, desirous of their welfare. Next she came to be worshiped everywhere, by the Devas, Munis, MAnavas, Manus.

He who hears with undivided attention this stotra of the Devi Mangala Chandika will overcome all evils everywhere. He will get all good things and prosperity. His lineage will continue unabated by Devi's grace.


 
BHAARGAVA PURAANAM - PART 1

#29e. சாவித்திரி

குணம் கெட்ட புதன் வெட்கம் இன்றிப்
பணம் எடுக்கச் சென்றான் தன் இல்லம்.

ஓடிவந்தாள் அவனைக் கண்டதும் அன்னை,
‘தேடித் தேடி அலுத்து விட்டோமே உன்னை!

சென்றுவிட்டாய் ஒன்றும் சொல்லாமல் நீ!
எண்ணாதது எண்ணிக் கலங்கி விட்டோம்!

உன்னைத் தேடிச் சென்றார் உன் தந்தை;
என்ன ஆனாரோ தெரியவில்லை!” என

வெறிகொண்ட புதன் அவளையும் ஓங்கி
அறைந்ததில் விழுந்து இறந்தாள் கிழவி!

புதைத்துவிட்டான் பெற்ற தாயையும்
குப்பை மேட்டில் முன்போல் ரகசியமாக.

தாயனைய மாமியைக் கொன்றுவிட்டான்!
பேயனைய புருஷனிடம் ஓடோடி வந்தாள்!

“பரத்தையர் வலையில் வீழ்ந்தவர்கள்
சரித்திரமே இல்லை நன்கு வாழ்ந்ததாக!

பெற்ற தாய் தந்தையரைக் கொன்று
பெறப் போகும் இன்பம் தான் என்ன?

பணத்துக்காக உடலை விற்கும் இந்த
குணம் கெட்ட பெண்களிடம் மோஹம்!

அட்டை போல உறிஞ்சி எடுத்து விட்டு
வெட்டி விடுவார்களே இரக்கம் இன்றி!

என்னிடம் இல்லாத இன்பம் என்று
என்ன இருக்கிறது அப்பெண்களிடம்?

குடும்பத்தைக் குலைக்கும் குடிகேடிகள்!
நடுத் தெருவில் நிறுத்திவிடுவர் உம்மை!”

இரண்டு கொலைகள் செய்தவனுக்கு
எளிதாகி விட்டது மூன்றாவது கொலை.

அடித்துக் கொன்றான் அவளையும் – பிறகு
எடுத்துச் சென்றான் செல்வம் எல்லாம்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#29e. SAvithri

Budhan was both shameless and remorseless. He went home to fetch more wealth for his concubine. His mother came running to him as soon as she saw him.

“Dear son! You went away without uttering a word. We were all getting worried. We were looking for you everywhere. Your father went in search of you. I wonder what is delaying him, now that you are already here!”

Budhan did not speak a word to her but hit her so hard that she too fell down in shock and gave up her ghost. The timid SAvithri was bewildered by this and came running to him.

“Never in the history has the man flourished who has become a slave to a prostitute. You killed your parents just to enjoy with those women?

They sell their bodies for money. They will suck your blood dry and cast you on the street – broken and sick. What do you find in them that I do not possess? They ruin families and homes. You are sure to become a pauper soon”

For a man who had killed two people the third murder became very easy. He beat his wife to death and took away all his wealth.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 4

4#19b. மதுராபுரி

தான் படைத்த சரஸ்வதியிடம் கொண்டான்
தாளாத மோஹம் பிரம்ம தேவன் அன்று!

சீதையைத் தேடி அலைந்த ராமன்
சித்தம் கலங்கிப் புலம்பித் திரிந்தான்.

மாயா விமுக்தர் ஆகிய சிவபெருமான்
மயங்கினார் தாக்ஷாயணியின் மறைவால்.

காமாக்னியின் வெப்பத்தைத் தணிப்பதற்கு
காளிந்தியில் மூழ்க, நதி நீர் கறுத்து விட்டது!

சிவன் தாருகாவனம் சென்ற போது அங்கே
சிதைந்தது முனி பத்தினிகளின் கற்புநெறி.

மதுக் காடு இருந்தது காளிந்தி நதியின் அருகே.
மதுவின் மகன் லவணன் இருந்தான் அங்கே.

போரில் சத்ருக்னன் வென்றான் லவணனை
மாறியது மதுக்காடு அழகிய மதுராபுரியாக.

அரசாண்டனர் மதுராபுரியை இரு மகன்கள்;
அடைந்தான் விண்ணுலகைச் சத்ருக்னன்.

யாதவர்கள் குவிந்தனர் மதுராபுரியில்!
யயாதியின் மகன் ஆவான் சூரசேனன்.

பிறந்தான் சூரசேனன் மகனாகக் காச்யபன்
வருணன் அளித்திருந்த ஒரு சாபத்தினால்.

உக்கிர சேனன் ஆண்டான் மதுராபுரியை
உக்கிர சேனன் மகன் அரக்கன் கம்சன்.

பிறந்தாள் அதிதி தேவகியாக தேவகனுக்கு.
திருமணம் நடந்தது தேவகி, வசுதேவனுக்கு.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


4#19b. Madhuraapuri

Brahma fell in love with Saraswati who was created by him. Rama lost his equanimity while searching for his wife Seetaa abducted by RaavaN. Siva who has conquered Maayaa became deluded when DaakshaayaNi sacrificed her body.

He became so lonely and lovelorn that he immersed himself in the cool waters of Kaalindi river and the water tuned black due to his body heat.


When Siva visited Taarukaa vanam as a mendicant all the rushi patnis became infatuated with him and lost their pativratha attitude. Maayaa can not be conquered even by Gods and Devaa.


Madhu vanan was situated near the river Kaalindhi. Lavana the son of Madhu lived there. Satrugnan defeated Lavanan in a war. He converted the Madhu vanam into a beautiful city called Maduraapuri. His two son ruled over Madhuraapuri when Satrugnan went to heaven.


Later Yaadhavas invaded Madhuraapuri. Kahsyap was born as Vasudevan the son of Soorasenan due to a curse cast by Varuna. Ugrasenan ruled over Madhuraapuri.

His son was the wicked Kamsan. Aditi was born as the daughter of Devakan, the younger brother of Ugrasenan. Vasudevan and Devaki got married.
 
Yamaashtakam

तपसा धर्ममाराध्य पुष्करे भास्करः पुरा ।
धर्मं सूर्यः सुतं प्राप धर्मराजं नमाम्यहम्॥ १॥

समता सर्वभूतेषु यस्य सर्वस्य साक्षिणः ।
अतो यन्नाम शमनं इति तं प्रणमाम्यहम्॥ २॥

येनान्तश्च कृतो विश्वे सर्वेषां जीविनां परम्।
कर्मानुरूपं कालेन तं कृतान्तं नमाम्यहम्॥ ३॥

भिभर्ति दण्डं दण्डाय पापिनां शुद्धिहेतवे ।
नमामि तं दण्डधरं यश्शास्ता सर्वजीविनाम्॥ ४॥

विश्वं च कलयत्येव यस्सर्वेषु च सन्ततम्।
अतीव दुर्निवार्यं च तं कालं प्रणमाम्यहम्॥ ५॥

तपस्वी ब्रह्मनिष्टो यः सम्यमी सन्जितेन्द्रियः ।
जीवानां कर्मफलदः तं यमं प्रणमाम्यहम्॥ ६॥

स्वात्मारमश्च सर्वज्ञो मित्रं पुण्यकृतां भवेत्।
पापिनां क्लेशदो नित्यं पुण्यमित्रं नमाम्यहम्॥ ७॥

यज्जन्म ब्रह्मणोंशेन ज्वलन्तं ब्रह्मतेजसा ।
यो ध्यायति परं ब्रह्म तमीशं प्रणमाम्यहम्॥ ८॥

यमाष्टकमिदं नित्यं प्रातरुत्ताय यः पटेत्।
यमात्तस्य भयं नास्ति सर्वपापात्विमुच्यते ॥ ९॥

http://sanskritdocuments.org/doc_deities_misc/yamAShTakam.pdf

YAMAASHTAKAM IN TAMIL ALAPHABETS WILL BE PRESENTED
IN THIS THREAD AS SOON AS POSSIBLE.

யமாஷ்டகம்
தபஸா த4ர்மமாராத்4ய புஷ்கரே பா4ஸ்கர: புரா |
த4ர்மம் ஸூர்ய: ஸுதம் ப்ராப தர்மராஜம் நமாம்யஹம் || (1)

ஸமதா ஸர்வபூ4தேஷு யஸ்ய ஸர்வஸ்ய ஸாக்ஷிண:|
அதோ யந்நாம ச'மனம் இதி தம் ப்ரணமாம்யஹம் || (2)

யேனாந்தாச்'ச க்ருதோ விச்'வே ஸர்வேஷாம் ஜீவினாம் பரம்|
கர்மானுரூபம் காலேன தம் க்ருதாந்தம் நமாம்யஹம் || (3)

பீ4ர்ப4ர்தித3ண்ட3ம் த3ண்டா3ய பாபினம் சு'த்3தி4ஹேதவே |
நமாமி தம் த3ண்டத4ரம் யச்'சா'ஸ்தா ஸர்வ ஜீவினாம் || (4)

விச்'வம் ச கலயத்யேவ யஸ்ஸர்வேஷு ச ஸந்ததம் |
அதீவ து3ர்நிவார்யம் ச தம் காலம் ப்ரணமாம்யஹம் || (5)

தபஸ்வி ப்3ரஹ்மநிஷ்டோ ய : ஸம்யமீ ஸன்ஜிதேந்த்3ரிய: |
ஜீவானாம் கர்ம ப2லத3: தம் யமம் ப்ரணமாம்யஹம் || (6)

ஸ்வாத்மாரமச்'ச ஸர்வஞ்ஜோ மிதரம் புண்யக்ருதம் ப4வேத்|
பாபினாம் க்லேச'தோ3 நித்யம் புண்யமிதரம் நமாம்யஹம் || (7)

யஜ்ஜன்ம ப்3ரஹ்மணோம்சே'ன ஜ்வலந்தம் ப்3ரஹ்மதேஜஸா|
யோ த்4யாயதி பரம் ப்3ரஹ்ம தமீச'ம் ப்ரணமாம்யஹம் || (8)

யமாஷ்ட2கமித2ம் நித்யம் ப்ரதருத்தாய ய: படேத் |
யமாத் தஸ்ய ப4யம் நாஸ்தி ஸர்வபாபாத் விமுச்யதே || (9)
 
DEVI BHAAGAVATAM - SKANDA 9

9#47c. மனஸா தேவி (1)
மனத்தகத்தே தோன்றினாள் காசியப மகரிஷிக்கு;
மனத்தால் தியானித்தாள் சர்வேஸ்வரனை இவள்.

மூன்று யுகம் தவம் செய்தாள் சித்த யோகினியாக,
ஊன்றிய மரக்கட்டை போலவே இருந்து கொண்டு!

அழைத்தான் அவளை வரம் தர வந்த பரமாத்மா,
அன்புடன் 'விஸ்வ பூஜிதா' என்ற புதிய பெயரால்!

ஜகத்தினர் அனைவரும் போற்றிப் புகழ்வதால்
'ஜகத் கௌரி' என்றும் வழங்கப்படுகிறாள் தேவி.

'சைவை' ஆனாள் சிவசங்கரனின் சிஷ்யையாக;
'வைஷ்ணவி' ஆனால் விஷ்ணுப் பிரியையாக.

சர்ப்ப யாகம் செய்தான் மன்னன் ஜனமேஜயன்;
சர்ப்பங்களைக் காப்பாற்றியதால் 'நாகேஸ்வரி'.

அனந்தனின் அன்புத் தங்கை இவள் - அதனால்
ஆகி விட்டாள் 'நாக பகினி' என்றும் பிரசித்தம்.

விஷத்தைப் போக்க வல்லவள் இந்த 'விஷஹரி';
'சித்தயோகினி' ஆனள் சித்தயோகம் அடைந்ததால்.

மனஸா தேவி மஹா ஞான வடிவானவள்;
மனஸா தேவி 'யோக ஸ்வரூபிணி' ஆவாள்;

மானஸா தேவி 'ம்ருத சஞ்சீவினி' ஆவாள்;
மனஸா தேவி 'ஆஸ்திக மாதா'வும் ஆவாள்;

மனஸா தேவி ஜரத்காருப்ரியை ஆவாள்;
மனஸா தேவிக்குப் பன்னிரு நாமங்கள்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

9#47c.ManasA Devi (1)

This Devi is the mind born daughter of sage Kashyapa. She meditated on ParamAtmA for three lakh years or three yugams - remaining like a piece of wood planted firmly.

ParamAtmA who came to bless her called her as "ViswapoojitA!" with great affection!

She is known as "Jagat Gowri" since the whole world worships her.

She is the disciple of Lord Sankara and hence she is known as "Saivi". She is a sincere devotee of Sri KrishNa and is known as "VaishNavi".

She protected the serpents from total destruction during the great Sarpa YAgA performed by King Janamejayan. Hence she is known as "NAgeswari".

She is loving sister of Ananth and hence is known as "NAga Bagini". She can save people from the deadly snake poison. So she is called "Vishahari". She is a "Siddha Yogini".

ManasA Devi is he personification of pure knowledge. She is a yoga swaroopini. She is "Mruta Sanjeevini". She is "Astika mAtA" - the loving mother of sage Astika.

She is "JarakArupriyA" - the loving consort of Sage JaratkAru.
This Devi is worshipped by these twelve names. She is also known by the name "JaratkAru" herself.

 
BHAARGAVA PURAANAM - PART 1

#29f. பத்தினியின் சாபம்

பொருளுடன் சென்றான் வேசியின் இல்லம்.
அவளுடன் சென்றான் அருகில் ஒரு கானகம்.

தாலவன முனிவர் வசித்தார் அந்தக் காட்டில்;
பாலைவனச் சோலை போன்ற ரிஷிபத்தினி!

காமாந்தகன் புதன் கண்களில் பட்டுவிட்டாள்;
ஏமாந்த நேரம் பார்த்துத் தொட முயன்றான்!

நீராட முனிவர் சென்றிருந்த நேரத்தில்,
தாராளமாக நுழைந்தான் ஆசிரமத்தில்.

கோபம் கொண்டாள் ரிஷியின் பத்தினி;
சாபம் தந்தாள் தாலவன முனிபத்தினி!

“முனிபத்தினி என்று அறிந்து இருந்தும்
துணிந்து விட்டாய் வந்து தொடுவதற்கு!

எந்த இன்பத்திற்காக அலைகின்றாயோ,
அந்த இன்பம் கிடைக்காது இனி உனக்கு.

குஷ்ட ரோகம் பற்றட்டும் உன்னுடலை
இஷ்டப் படமாட்டார் பெண்கள் உன்னை!”

பத்தினியின் சாபம் பலித்தது உடனே!
ரத்தம் வழியும் ரணங்கள் தோன்றின!

விகாரமானது வேட்கை கொண்ட உடல்;
‘ஏகாந்தமே இனி உன் கதி’ என்று ஆனது.

வேசி மறைந்து விட்டாள் மாயமாக!
ஆசை வார்த்தைகள் எல்லாமே பொய்!

தன்னந் தனியாக அலைந்தான் காட்டில்;
துன்புற்றுத் துயருற்று உயிர் துறந்தான்.

நரகத்தில் உழன்றும் தீரவில்லை பாவம்;
நரகம் ஆகி விட்டது வாழும் வாழ்க்கை!

குஷ்டத்தோடேயே வந்து பிறந்து மேலும்
கஷ்டப்பட்டான் வணிகன் புன்மகன் புதன்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

#29F. Rushi patni’s curse

Budhan went to his concubine’s house with all his wealth. He later went to a nearby forest to escape from being arrested for the murders he had committed.

ThAlavana rushi lived there with his wife. She was a beauty nonpareil and chaste to the core. Budhan happened to see her once and his desire was kindled for this beautiful rushi-patni.

He went into the ashram when the sage had gone to the river and she was alone. He grabbed her hand but she freed herself from his grasp and cast on him a fiery curse,

“You know that I am a rushi-patni. Yet you dared to come in when I am alone and tried to seduce me. The pleasure for which you crave will never be yours ever again. May your body be afflicted by leprosy. May all the women hate your very sight!”

The chaste woman’s words became true immediately. Wounds appeared all over his body and started oozing blood. His figure became unsightly. He was left all alone in the forest. His concubine disappeared without a word or a trace. All the love she had declared for him dissipated just as a whiff of smoke.

He roamed in the forest alone – hideous and hated by the onlookers. He suffered a lot and died one day. He went to hell and suffered there more but his account of sins was yet to be settled.

So he was born again on earth afflicted with leprosy to suffer more and more! This is the story of the sinner merchant Budhan”
 
DEVI BHAAGAVATAM - SKANDA 4

4#19c. கம்சனின் அச்சம்

ரதத்தில் தம்பதிகளை அமர்த்திய கம்சன்;
அதிர்ந்தான் ஒலித்த அசரீரியைக் கேட்டு.

“கம்சனே உன்னைக் கொல்பவன் – இவள்
கருவில் பிறப்பான் எட்டாவது சிசுவாக!”

மரணத்தைத் தவிர்க்க உள்ள ஒரே வழி
மரணம் தரப் போகும் சிசுவை அழிப்பது!

தங்கையைக் கொல்லவும் விரும்பவில்லை;
தன் பகைவனை விடவும் விரும்பவில்லை.

உயிர் ஆசை வென்றது தர்ம சிந்தனையை!
மயிரைப் பிடித்திழுத்தான் மணப்பெண்ணை!

வாளால் வெட்டிக் கொல்ல முயன்றவனைத்
தாளாமல் தடுத்தனர் அங்கு இருந்த மக்கள்.

“சஹோதரியைக் கொல்லப் போகின்றாயா?
ஸ்திரீஹத்தி மகாபாவம் என அறியாயோ?

முடிந்துவிட வேண்டுமா அவள் வாழ்க்கை
கடிமணம் புரிந்த சில நாழிகைப் பொழுதில்?

ஆராயவில்லை மெய்யான அசரீரியா என்று!
தோராயமாகச் செயல் புரிவது துன்பம் தரும்.

பகைவர் தந்திரமாக இருந்தால் – அவர்கள்
நகைப்பர் உன் இழிசெயல்களைக் கண்டு.

கெடுக்க நினைத்திருக்கலாம் உன் புகழை;
ஒடுக்க நினைத்திருக்கலாம் ஒரு வம்சத்தை.

கண் காணாமல் ஒலித்த ஓசையை நம்பி
கல்யாணப் பெண்ணை அழித்து விடாதே!

நடப்பது நடந்தே தீரும் – அவற்றைத்
தடுப்பது என்பது எவராலும் முடியாது!”
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

4#19c. Kamsan’s fear

Kamsan wanted to honour the newly weds. He himself became their charioteer. An asareeri was heard by all the people there. “Oh Kamsa! The eighth child born to Devaki will kill you!”

Kamsan thought to himself, “The only way to stop this from happening is to make sure that such a baby would never be born!”

Kamsan did not want to kill his cousin sister. At the same time he did not want to be killed by her eighth child. So he stopped the chariot and pulled down Devaki from it by her hair.

He wanted to behead her then and there.The crowd gathered there would not let this happen. They all stopped Kamsan from this atrocious act.

“Oh! Kamsa! Are you going to kill your own cousin sister? Don’t you know that killing a woman is a great sin? Should she die even before her wedded life has started? You never verified whether it was really an asareeri or the trick played by mischief monger.

If it had been a trick by a human, he would laugh at what you are going to do now – believing it to be true. May be someone wants to tarnish your name and fame. Or maybe someone wants to put an end to the race of Vasudev. By believing a dubious voice do not kill you own sister!”
 
DEVI BHAAGAVATAM - SKANDA 9

9#47d. மனஸா தேவி (2)

"ஜரத்காரு, ஜகத் கௌரி, மனஸா,
சித்தயோகினி, வைஷ்ணவி, நாக பகினி,

சைவி, நாகேஸ்வரி, ஜரத்காருப்ரியா,
ஆஸ்திகமாதா, விஷ ஹரி, விஸ்வபூஜிதா!"

பன்னிரு நாமங்களைப் பக்தியுடன் ஓதினால்
பாம்பினால் வரும் ஆபத்துக்கள் விலகிவிடும்.

பாம்பு ஏறிவிட்ட படுக்கையாயினும் சரி;
பாம்பு குடியேறிய இல்லம் ஆயினும் சரி;

யுத்த முனையிலும், பாம்பு சுற்றிய போதும்
நாமங்களை ஓதினால் விலகிச் செல்லும்

ஆபத்துக்களும், விபத்துக்களும் முற்றிலும்
ஆஸ்திக மாதாவின் இனிய கருணையினால்!

பாம்புகள் அஞ்சி ஓடிவிடும் - பக்தியுடன்
பன்னிரு நாமங்களை ஓதுபவனைக் கண்டு

சித்தியாகும் மந்திரம் பத்து லக்ஷம் ஜபித்தால்;
சித்தி பெற்றவன் அடைவான் அற்புத சக்திகள்!

சக்தி பெறுவான் விஷத்தை ஜீரணிப்பதற்கு!
சக்தி பெறுவான் நாகங்களை அணிவதற்கு!

பணியும் பாம்புகள் அவன் காலடிகளில் - சென்று
இணைவான் இறுதியில் பாம்பணை நாரணனோடு!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

9#47d. ManasA Devi (2)

"JaratkAru, Jagath Gowri, ManasA, Siddha Yogini, Vaishnavi, NAgabagini, Saivi, NAgeswari, JaratkAru priya, Aastika mAtA, Vishahari, ViswapoojitA" are the twelve names for worshiping this Devi.

Chanting of these twelve names will remove all the imminent dangers from snakes.

Even if a snake is found on one's bed, or snake lives in one's house, or in the war front or when the snake has climbed on one's body, the chanting of these twelve names will protect one from all these dangers.

Snakes will run away from a person who chants these twelve names. This mantra will become successful if chanted ten laksh times.

One who has mastered this mantra will obtain many unusual powers. He can digest the deadly snake poison. He can wear the deadly snakes as his ornaments.

The snakes will worship him falling at his feet. He will merge with Lord NArAyaNan after his life on earth.
 
BHAARGAVA PURAANAM - PART 1

#29g. சுவர்க்கம்

சூரசேனன் கேட்டான் இக்கதையினை;
சூரசேனன் மனம் வெண்ணெய் ஆனது!

தேவகணங்களிடம் கூறினான் அவன்,
“பாவ காரியங்கள் செய்திருந்தான் பல.

தண்டனை அனுபவித்தான் பலகாலம்
மண்ணிலும் நரகத்திலும் உழன்றபடி.

தீராத நோயுடன் பிறந்துள்ளான்;
பாராமுகம் தகுதில்ல உமக்கு.

கற்பக விநாயக தேவகணங்களின்
அற்புத தரிசனமும் பெற்றுள்ளான்.

தரிசித்த அளவில் தீர்ந்து போகுமே
அறிந்து செய்த பாவங்களும் கூட!

எச்சில் உணவைப் புசித்துவிட்டு,
எள்ளளவும் பக்தியே இல்லாமல்,

“கணபதி! கணபதி!” என்று கூறிய
பெண்ணின் பாவம் தீர்ந்துபோனது!

சதா இறைவன் அருகில் உள்ளவர்கள்
சாதாரணமானவர்களா? இல்லை இல்லை.

கிருபை செய்வீர் இந்த வணிகனுக்கும்.
அருள்வீர் அவனுக்கும் விண்ணுலகு.”

இத்தனை பரோபகார சிந்தனையா?
அத்தனை பேரும் வியந்து போற்றினர்.

மனம் இளகினர் தேவகணங்கள்;
அனுகிரஹம் செய்தனர் பாவம் தீர.

திவ்விய சரீரத்தை அடைந்த வணிகன்
திவ்விய விமானத்தில் ஏறி அமர்ந்தான்.

அய்யன் அருள் இருக்குமானால் நம்மால்
செய்ய முடியாதது என்று ஏதுமுண்டோ?

பரோபகாரி மன்னன் சூரசேனன்
விரோதிக்கும் அருளும் பெருமகன்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#29G. Swarggam

King SoorasEnan listened to this story of Budhan and his heart melted like butter. He told the DEva gaNAs,

“This man has committed many sins. He also got duly punished on earth and in hell. Again he is born with an incurable disease and is suffering now. He has had the dharshan of you the DEva gaNAs of GaNapthi. That itself is enough to cancel out all his sins.

The chandaaLa sthree ate the left overs of the feast and uttered the name of God as “GaNapathi! GaNapathi!” without any devotion. Yet all her sins vanished. You DEva gaNAs reside near GaNapathi. Your dharshan will purify any sinner. Please let Budhan also come to heaven”

Everyone wondered at the goodness of the king SurasEnan. The DEva gaNa gave in finally and made all Budan’s sins vanish. The merchant Budhan now had a divya sareeram. He got into the vimAnam and they all took off to the VinAyaka lOkam in that vimAnam.
 

Latest ads

Back
Top