• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

A poem a day to keep all agonies away!

DEVI BHAAGAVATAM - SKANDA 4

4#19d. வாக்குறுதி

இத்தனை அறிவுரைகளைக் கேட்ட பின்பும்
பித்தனைப் போல வெறியுடன் இருந்தான்.

வசுதேவன் செய்தான் சத்தியப் பிரமாணம்!
வசமிழந்து நின்றனர் வாக்குறுதி கேட்டவர்!

“சத்தியமே ஆகும் ஆதாரம் அனைத்துக்கும்;
சத்தியத்தை ஆக்குகிறேன் ஆதாரமாக நான்.

பிறக்கப் போகும் குழந்தைகளைத் தருவேன்
பிறந்தவுடனேயே எடுத்து வந்து உன்னிடம்.

சத்தியத்தை நான் மீறினால் என் பித்ருக்கள்
அத்தியந்தத் துன்பம் அடையட்டும் நரகத்தில்!”

சத்தியம் செய்தான் வசுதேவன் கம்சனிடம்.
“இத்தனை காலமும் வாக்குத் தவறாதவன்;

பிள்ளைகள் தான் உனக்குப் பகைவர்கள் ;
பிள்ளைகளின் பெற்றோர் அல்ல கம்சனே!

பெண் கொலை செய்ய வேண்டாம் கம்சா”
மீண்டும் வற்புறுத்தினர் பெரிய மனிதர்கள்.

கோபத்தை ஒழித்தான் கம்சன் இது கேட்டு.
பாவத்தைத் தவிர்த்தான் அறிவுரைகளால்.

மங்கள வாத்தியங்கள் முழங்கின மீண்டும்
தங்கள் இல்லம் சேர்ந்தனர் மணமக்கள்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


4#19d. The Promise

Kamsan was mad with anger even after listening to these words of wisdom. Vasudevan stepped forward and made a promise which left everyone aghast.

“Satyam is the foundation of everything. I make satyam the foundation of my words. I will hand over to you all my children as soon as they are born Oh Kamsa! If I fail in this promise, may my ancestors suffer in hell endlessly”

The other older people joined in advising Kamsan now. “Vasudevan has never broken a promise nor uttered lies. Only the children to be born will be your enemies. The newly married couple are not your enemies Kamsa! Let there be no bloodshed here please”

Kamsan listened to the good advice. His temper cooled down. The auspicious musical instruments resumed playing and the newly weds reached their home safe.
 
DEVI BHAAGAVATAM- SKANDA 9
9#48a. மனஸா தேவி (3)
நிறத்தில் வெண்சண்பக மலரைப் போன்றவள்,
திறமையான புஷ்ப அலங்காரம் கொண்டவள்;

தூய ஆடைகளை அணிந்திருப்பாள் இத்தேவி;
பாம்பு மாலைகளை அணிந்திருப்பாள் இத்தேவி.

ஞானிகளில் சிறந்தவள் மனஸா தேவி;
சித்தர்களின் அதிஷ்டான தேவதை இவள்;

பூஜிக்க வேண்டும் மூல மந்திரங்களால்;
பூஜிக்கும் மந்திரம் ஆகும் ஒரு கற்பகத்தரு.

சித்திக்கும் மந்திரம் ஐந்து லக்ஷம் ஜபித்தால்
சித்திக்கும் பற்பல அற்புத சக்திகள் ஜபித்தால்.

இணையாகும் கொடிய விஷம் அமிர்தத்துக்கு
இணையாவான் ஜபித்தவன் தன்வந்திரிக்கு.

பஞ்சமியில் மனஸா தேவியைப் பூஜிப்பவன்
புகழ், செல்வம், சத்புத்திரர்களைப் பெறுவான்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

9#48a. ManasA Devi (3)

DhyAnam;

“I meditate on the Devi ManasA,
who is of the color of the white champaka flower;
whose body is decorated with several jewels and ornaments;
whose dress has been purified by fire;
whose garlands are the poisonous NAgas;
who is full of wisdom;
who is the greatest among GnAnis;
who is a siddha yogini;
who is the Presiding deity of the Siddhas,
and who bestows Siddhis to all.

The twelve lettered Siddha Mantra of Manasa Devi yields all their desires to the devotees like the Kalpa Tree does.
 
BHAARGAVA PURAANAM - PART 1

#30a. ஜமதக்னி

கிருதவீரியன் ஏகினான் வனம் – மகன்
கார்த்தவீரியனை மன்னன் ஆக்கிவிட்டு.

எதிரிகளை எளிதில் வென்று புகழோடு
அதிரடி ஆட்சி நடத்தினான் கார்த்தவீரியன்.

ஜமதக்னி சிறந்த முனிவர்களில் ஒருவர்;
ஜனனம் எடுத்தார் விஷ்ணு இவர் மகனாக.

ரிஷிபத்னி கற்புக்கரசி ரேணுகா தேவி;
ராமன் என்ற பெயரில் வளர்ந்தார் விஷ்ணு.

காட்டுக்கு வந்தான் கார்த்தவீரியன் – விலங்கு
வேட்டை ஆடுவதற்கு தன் படைகளுடன்.

ஆசிரமத்தைக் கண்டதும் சென்றான் அங்கு
ஆசீர்வாதமும், தரிசனமும் பெறுவதற்கு.

ஜமதக்னி முனிவர் வரவேற்றார் அன்போடு;
“உமது புகழை நான் கேட்டுள்ளேன் அரசே!

ஆசிரமத்தில் தங்கி இளைப்பாறுங்கள்
ஆகாரம் புசித்து விட்டுப்போகலாம்!” என

“முனிவரே படையுடன் வந்துள்ளேன் நான்
தனியாக உணவு உண்பது சரியல்ல!” என

“எத்தனை பேர்கள் இருந்தாலும் சரியே!
அத்தனை பேர்களும் நீராடிவிட்டு வரலாம்!”என

நீராடச்சென்றான் அரசன் படைவீரருடன்;
ஆராதித்தனர் காமதேனுவை ரிஷி தம்பதியர்.

அழகிய நகரம் உருவானது அந்த வனத்தில்;
அறுசுவை உண்டி உருவானது போஜனத்தில்!

இந்திர ஜாலமா? தந்திரக் காட்சிகளா?அன்றி
மந்திரப் பிரயோகமா? என்று மதி மயங்கினர்.

மன்னனும், படையினரும் உண்ட பின்னும்
இன்னமும் குவிந்திருந்தது உணவு வகைகள்!

வாழ்க வளமுடன். விசாலாக்ஷி ரமணி

#30a. Sage Jamadagni

Kruthaveeryan made KArthaveeryan the new king and went for vAnaprastha. KArthaveeryan defeated his enemies easily and ruled his land with fame and popularity. Jamadagni was on of the revered sages. Renuka Devi was his patni. VishNu was born as their son Raman.

Once KArthaveeryan went to the jungle to hunt the wild animals. He saw the Ashram of Jamadagni and went there to get the dharshan and the blessings of the sage.

Jamadagni welcomed him and said, “Please relax and take rest in the Ashram. You can eat some food and then go back to your city.” The king KArthaveeryan told the sage, “I have not come here alone but along with my army. It will not be fair on my part to eat food here, leaving all my soldier to go hungry”

Sage Jamadagni replied, “It is not a problem at all. All of you ware welcome to enjoy our hospitality and take food here. All of You may finish your bath and come to eat food.” The king was surprised how the rushi was going to feed a hungry army of soldiers in this jungle.

After the king and his soldiers went to the river, Jamadagni and Renuka Devi did pooja to KAmadhEnu – the divine cow. It had the power to produce and provide them with anything they wished for.

It produced a beautiful city with all conveniences in the middle of the jungle. All types of food were made available as if by sheer magic.

The king and his soldiers wondered whether it was a magic or illusion or IndrajAlam. They ate to their fill the choicest of preparation and still a lot of food was leftover.

 
DEVI BHAAGAVATAM - SKANDA 4

4#20a. எட்டாவது குழந்தை

தேவகி மலர்ந்து அடைந்தாள் யௌவனம்;
தேவதை போலக் குலுங்கினாள் வனப்புடன்

துய்த்தனர் இல்லற இன்பம் தம்பதியினர்;
வாய்த்தது ஆண் மகவு தேவகி கருவில்.

பிறந்தது அழகிய மகவு உரிய காலத்தில்,
“துறந்து விடுவோம் இவன் மேல் பற்றை.

வாக்களித்தேன் கம்சனுக்கு அன்று – அதனால்
தூக்கியளிக்க வேண்டும் குழந்தையை இன்று.

ஒப்படைக்க வேண்டும் குழந்தையைக் கம்சனிடம்
தப்பக் கூடாது நான் அளித்த வாக்குறுதியிலிருந்து!”

தேவகியின் மனம் ஒப்பவில்லை இதற்கு – வசு
தேவனிடம் கூறினாள் மனவேதனை தாளாமல்.

“பரிஹாரம் செய்து அழித்து விடலாம் – வரும்
பாவங்களை நம் வாக்குறுதியை மீறுவதனால்!

உண்டு பரிஹாரங்கள் பஞ்சமாபாதகங்களுக்கு ;
வேண்டாம் கம்சனிடம் சிசுவை ஒப்படைத்திட.

காப்பாற்றுவோம் நம்மிடம் உதித்த மகனை
காப்பற்ற வேண்டாம் நீர் அளித்த வாக்கினை!”.

“முயற்சி செய்வோம் குழந்தையைக் காக்க!
முயற்சி வெல்லும் தெய்வ அனுகூலத்தால்!

ஆன்மாவின் கர்மங்கள் மூவகைப்படும்,
ஆகாமியம், சஞ்சிதம், பிராரப்தம் என்பன.

அனுபவங்களுக்குக் காரணம் ஆம் சஞ்சிதம்
அனுபவிப்பவைகள் பிராரப்தம் எனப்படும்

இரண்டுக்கும் இடமாகவும், பெரிதாகவும்
இருப்பதே ஆகாமியம் என்று அறிவாய் நீ!”

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

4#20a. The eighth child

Devaki had bloomed into womanhood and was as pretty as a divine damsel. The couple Devaki and Vasudev enjoyed the pleasures of marital life and Devaki became pregnant with her first child. The baby boy was born in due course.

Vasudev told Devaki,”We must not place our affection on this child. I will have to hand him over to Kamsan as per my promise. A promise is a promise. I should not break it”

But Devaki’s mind would allow her to part from her son. She told Vasudev, “If we go back on our promise, we may incur sin. But there is a parihaaram for every sin including the five greatest sins known to man. We will save our dear son rather saving our promise made to Kamsan long ago!”

Vasudev told Devaki,”There is no harm in trying to save this child. Who knows he may be still saved by the divine grace of God. The karma of a jeevaa is of three types the Kriyamaana, the Prarabda and the Sanchita

Sanchitam causes the experiences in a janma. The experiences themselves are the praarabdam.The one which is larger and holds these two is the Aagaamiyam or Kriyamaana.

Foot Notes:-

Everything that we have ever thought, spoken, done or caused is karma, as is also that which we think, speak or do this very moment. Hindu scriptures divide karma into three kinds viz Sanchita, Prarabda and Kriyamaana.

Sanchita is the accumulated karma. It would be impossible to experience and endure all karmas in one life time. From this stock of sanchita karma, a handful is taken out to serve one lifetime and this handful of actions, which have begun to bear fruit and which will be exhausted only on their fruit being enjoyed and not otherwise, is known as prarabdha karma.

Prarabdha Fruit-bearing karma is the portion of accumulated karma that has “ripened” and appears as a particular problem in the present life.

Kriyamana is everything that we produce in the current life. All kriyamana karmas flow in to sanchita karma and consequently shape our future.

Only in human life we can change our future destiny. After death we lose Kriya Shakti (ability to act) and do (kriyamana) karma until we are born again in another human body.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 9

#48b. மனஸா தேவி (4)

முனிவர் காச்யபரிடம் அடைக்கலம் புகுந்தது
மனித குலம் பாம்புகள் மீதுள்ள அச்சத்தினால்.

உருவாக்கினார் பல மந்திரங்களை காச்யபர்
பிரும்ம தேவன் உதவியைப் பெற்றுக் கொண்டு.

உருவானாள் மனசஸா தேவி முனிவர் உச்சரித்த
திரு மந்திரங்களுக்கு ஏற்ற ஒரு வடிவம் எடுத்து.

மனதினால் உருவாக்கப் பட்டதால் இந்தத் தேவி
மனஸா தேவி என்ற காரணப் பெயர் பெற்றாள்.

ஆயிரம் திவ்விய வருடங்கள் பூஜித்தாள் இவள்
தூய கயிலைமலைக்குச் சென்று சிவசங்கரனை.

எளிதில் மகிழ்பவன்; எளியவற்கு எளியவன்,
அளிப்பான் அரிய ஞானத்தைச் சிவபெருமான்!

அளித்தான் மாபெரும் ஞானத்தை மனஸாவுக்கு;
அளித்த உபதேசமாக அஷ்டாக்ஷர மந்திரத்தை.

லக்ஷ்மி மாயா காம பீஜத்தோடு கூடிய
லக்ஷணமான கிருஷ்ண மந்திரம் அது

புஷ்கர க்ஷேத்ரம் சென்றாள் மனஸா தேவி,
புரிந்தாள் தவம் மூன்று லக்ஷம் வருட காலம்!

தரிசித்தாள் கிருஷ்ண பெருமானை - அவர்
அருளினார் சித்தியும், இளம் பெண் வடிவமும்

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

9#48b. ManasA Devi (4)

In olden days, men became greatly terrified by the poisonous snakes and took refuge in Sage Kasyapa. With the help of BrahmA, Kashyapa composed a mantra following the principal motto of the Vedas.

While composing the mantra, Kasyapa intensely meditated on the Presiding Deity of the Mantra. Due to the power of his penance, Devi ManasA took shape and appeared there. She was named as ManasA Devi since she was produced by the power of the sage's mind.

On being born, ManasA went to the abode of lord Sankara in KailAsa and began to worship Him for one thousand Divine years!

Lord Sankara became very pleased and bestowed on her the Great Knowledge. He gave her the eight lettered Krishna mantra. She got from Him the Kavacha - an amulet - auspicious to the three worlds.

ManasA went to the Pushkara Kshetra and worshipped Sri KrishNA for the three Yugas. Sri KrishNA appeared before her and made her youthful and beautiful again. He granted her this boon, “May you be worshipped throughout the world” and disappeared.

ManasA was first worshiped by the Supreme Spirit Sri KrishnA, secondly by Lord Sankara; thirdly by Sage Kasyapa and the Devas. Then she was worshipped by the Munis, Manus, NAgas, and men. She became widely respected in all the three worlds.

 
BHAARGAVA PURAANAM - PART 1

#30b. காமதேனு

“மன்னனாலும் அளிக்க இயலாத உணவைச்
சொன்ன மாத்திரத்தில் அளித்தது எங்கனம்?

ஐயா! இது மந்திரமா? அன்றித் தந்திரமா?
மாயையா? அன்றிக் கண் கட்டு வித்தையா?”என

“காமதேனுவை ஆராதித்து உணவைத்
தாமதம் இன்றித் தருவித்தேன் மன்னா!” எங்கன

காமதேனுவை அடையவேண்டும் என்னும்
காமம் எழுந்தது கார்த்தவீர்யன் மனத்தில்.

“வனத்தில் பற்றை ஒழித்து வாழ்ந்திடும்
முனிவருக்குக் காமதேனு எதற்கு ஐயா?

அனைத்து உலகையும் ஆண்டுவரும் புவன
அதிபதியிடம் அன்றோ இருக்க வேண்டும்?”

“ஆசைக்கோர் அளவில்லை மன்னா! நாம்
நேசிக்கக் கூடாது பிறரது உடைமைகளை.”

“தந்தே ஆகவேண்டும் காமதேனுவை – பல
வந்தமாகக் கவர்ந்து செல்வேன் அன்றேல்!”

முனிவருக்குக் கோபம் மூக்குக்கு மேலே!
கனிவால் இயலாதது சினத்தால் இயலுமே!

“அதிதியாக வரவேற்று உணவு அளித்தேன்;
அதிகாரம் செலுத்த முயற்சி செய்கின்றாய்!

பலவந்தமாகக் கவர்ந்து செல்வாயா? உன்
பலத்தைச் சோதித்துப்பார் காமதேனுவிடம்!”என

அரசன் உணரவில்லை தபோவலிமையை!
அரசன் ஆணையிட்டான் படை வீரருக்கு,

“கட்டி இருக்கும் காமதேனுவை அவிழ்த்து
இட்டுச் செல்வீர் நம் நாட்டுக்கு!” என்றான்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#30b. KAmadhenu

“How could you provide so much food fit for a king at such a short notice sire? Even a king won’t be able to do it so well. Is it a magic or a trick or an illusion or Maya?” the king KArthaveeryan asked the sage Jamadagni.

“I prayed and got the food from the divine cow KAmadhEnu” The sage replied. KArthaveeryan’s desire to possess the holy and heavenly cow was kindled now.

“You are living in the forest as a tapasvi, far away from the world. Of what use can this cow be to you? It should be in the possession of a king who rules over the world to be more useful!” The king spoke to the sage.

“Desire has no limits oh king! One should not covet for the possessions of another person” the sage replied to the king.

“I must possess that cow KAmadhEnu. If you will not part with it on my request, I will have to take it away from you by force.” Now the king threatened the sage.

The sage became very angry now. “I invited you as my guest of honor and fed you and your soldiers good food. Now you are trying to take away my cow. Do you think you can take her away just by force? Match your strength against her to realize the truth!”

KArthaveerayan did not realize the power of penance. He ordered his soldiers, “Untie the cow KAmadhEnu and take her to our country now!”
 
DEVI BHAAGAVATAM - SKANDA 4

4#20b. கர்மங்கள்

“உண்டு மூன்று உட்பிரிவுகள் ஆகாமியத்தில்;
கொண்டுள்ளது அது மூன்று இரட்டைகளை.

இன்பம், துன்பம் என்பது முதல் இரட்டை;
இரண்டாவது இரட்டை ஹிதம், அஹிதம்.

நல்வினை, தீவினை ஆகும் மூன்றாவது.
வெல்ல முடியாது இவற்றில் எதையுமே!

அனுபவிப்போம் பொருட்களைப் புலன்களால்;
அனுபவங்கள் உருவாகும் இன்ப துன்பங்களாக.

ஹிதம், அஹிதம் காராணமாகும் பிறவிகளுக்கு;
இதன் மூலம் கிடைக்கும் பிறவிக்கேற்ற உருவம்.

ஆகாமியம் விதையாகும் சஞ்சித கர்மத்துக்கு;
ஆகும் இதில் விளையும் பயிர் பிராரப்த கர்மம்.

தொடரும் இந்தச் சங்கிலித் தொடர் நீண்டு;
இடையறாது ஆன்மா முக்தி பெறும் வரை.

நல்வினைப் பயனாகும் ஸ்வர்க்க வாழ்வு
தீவினைப் பயன் ஆம் நரகத்தில் உழல்வது

பிறவிகள் தொடரும் வினைப்பயன் முடிந்ததும்;
பிறவியில் சேர்ப்போம் ஆகாமியத்தை மீண்டும்.

கர்மங்கள் நீங்கிவிடா பிராயசித்தத்தினால்
கர்ம வினைகள் தொடரும் ஜன்மாந்திரமாக

கொடுத்து விடுவோம் இவனைக் கம்சனிடம்;
கொடுத்த வாக்கைக் கெடுப்பவன் பொய்யன்.

சத்தியத்தை விடுத்தால் வீணாகி விடுவோம்;
சத்தியமும், தர்மமும் வாழ்வின் குறிக்கோள்.

சுகமோ துக்கமோ இல்லை நம் வசத்தில்!
செய்யவேண்டும் நல்ல செயல்களையே!”

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#20b. The effects of Karma

“There are three division in Aagaamiyam. It consists of three pairs of opposites. Joy and Sorrow form the first pair. The Favourable and The Unfavourable form the second pair. Good karma and bad karma form the third pair of opposites.

We enjoy the objects through our sense organs. These sensual experiences exhibit as pleasures and pains. These likes and dislikes which are also called as ruchi or vaasana cause the future births. The form is allotted to us according to the birth allotted.

Aagaamiyam is the seed for Sanchitam. Praarabdam is the produce of this cultivation. This series goes on for ever-unless and until the jeevan is liberated from samsaaraa.

The effect good karma is the life in heaven and the effect of bad karma is the suffering in hell. The births continue one after another. We perform more karmas and earn more Aagaamiyam.

Parihaaram cannot nullify the effects of karma. The effect of karma follows us for many births. Let us hand over this child to Kamsan as promised. One who breaks a promise is a liar. We we break a promise our lives will be wasted.

Dharma and satyam are the purpose of our lives. The pleasures and pains are not under our control. So let do only good karmas and avoid bad karma.” Vasudevan explained to his wife Devaki.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 9

9#48c. மனஸா தேவி (5)
வரங்கள் தந்தார் கிருஷ்ணர் மனஸா தேவிக்கு;
வழிபடச் செய்தார் மானஸா தேவியை மாந்தர்.

மணந்தார் முனிவர் ஜரத்காரு மனஸா தேவியை;
குணமிக்க இல்வாழ்வு வாழ்ந்தனர் இவ்விருவரும்.

உறங்கி விட்டார் ஜரத்காரு முனிவர் ஒருநாள்;
மறையும் நேரம் நெருங்கியது ஆதவன் வானில்.

சந்தியா வந்தனம் செய்யத் தவறும் அந்தணனை
வந்தடையும் கொடிய பிரம்ம ஹத்தி தோஷம்!

பாவத்தை அடையக் கூடாது கணவன் என்று
பயத்துடனே எழுப்பினாள் கணவரை மனஸா.

கோபம் வந்து விட்டது ஜரத்காருவுக்கு - பரி
தாபம் பாராமல் சீறிச் சினந்தார் அவள் மேல்!

" அபசாரம் செய்யலாகாது கணவனுக்கு மனைவி!
அனுஷ்டானங்கள் பயன் தரவியலாது அவளுக்கு!

பதியின் ரூபத்தில் இருப்பவர் பரமாத்மாவே!
பதி சேவையே பத்தினிக்குப் பரமாத்மா பூஜை.

பத்தி சேவைக்கு ஈடாகாது வேறு எந்த
துதியும் , தானமும், தவமும், விரதமும்;

யாகமும், புண்ணிய தீர்த்த ஸ்நானமும்,
யக்ஞமும், புனித ஸ்தல க்ஷேத்ராடனமும்!

பதி விரும்பாத காரியத்தைச் செய்பவள் ஒரு
பத்தினியல்ல! ராக்ஷச குலத்தில் உதித்தவள்!

உழலுவாள் நரகத்தில் பன்னெடுங் காலம் - பின்
உருவெடுப்பாள் பதி, புத்திரன் இல்லாதவளாக!"

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

9#48c. ManasA Devi (5)

Muni Jarat KAru married ManasA Devi. After the marriage they lived happily. One day, Jarat KAru fell fast asleep and slept on for a long time until the Sun was about to set.

Then ManasA Devi thought to herself, “If my husband fails to perform the SandhyA Vandanam, he would incur the sin of BrahmahatyA
and the other crimes will come down on him.” At last she took courage to wake her husband from his deep sleep.

Then Muni Jarat KAru became very angry and said," I was sleeping happily. Why have you disturbed my sleep? All her vows go in vain - who displeases her husband. Her tapas, fasting, dAnam, and other vrats all go in vain who does unpleasant things to her husband.

For the sake of fulfilling the vows of the chaste women, ParamAtmA Sri Hari himself becomes their husbands. No austerity can become equal to even one-sixteenth part of serving one’s husband well.

She who does unpleasant things to her husband or who speaks unpleasant wor
ds has come from a bad family. She will go to the hell and suffer as long as the Sun and Moon last. She will be born again without husband or a son!"
 
BHAARGAVA PURAANAM - PART 1

#30c. காமதேனு

கட்டியிருந்த காமதேனுவைக் கண்டனர்;
இட்டுச் செல்லும்படி அரசனின் ஆணை!

நெருங்கினர் பசுவை அவிழத்துச் செல்ல;
அருகில் வந்ததும் சிலிர்த்தது பசு உடலை.

சிலிர்த்த வேகத்தில் சிதறி விழுந்தனர்
பொல பொல வென்று நான்கு திசைகளில்!

படை மொத்தமும் வந்து விட்டது இப்போது;
படையுடன் பொருதத் தேவை ஒரு படை.

உடலைச் சிலிர்த்த பசுவிடம் படைவீரர்கள்
உற்பத்தி ஆயினர் அதன் மயிர்க் கால்களில்!

யுத்தம் செய்தனர் மன்னன் படைவீரர்கள்,
சித்தமான பசுவின் படை வீரர்களுடன்.

விநாயகர் தந்த வினோத அஸ்திரங்கள்
விநாசம் செய்யவில்லை பசுப் படையை!

தெய்வப் பசுப் படைவீரர்களிடம் தோற்று
செய்வதறியாமல் மயங்கினான் மன்னன்.

வெல்லவும் வழியில்லை தெய்வப் படையை,
செல்லவும் மனமில்லை தோல்வி அடைந்து!

வென்று பசுவை அடைய முடியாததால்
கொன்று பழிதீர்க்க எண்ணினான் அவன்.

எஞ்சிய வீரருடன் நாட்டுக்குத் திரும்பினான்,
வஞ்சக எண்ணங்களை நெஞ்சில் நிறைத்து!

தவத்தில் அமர்ந்திருந்த ஜமதக்னி முனிவரின்
தலையைச் சீவி வீழ்த்தினான் கார்த்தவீர்யன்!

தடுக்க ஓடிவந்த ரேணுகா தேவி மீது,
அடுத்தடுத்துச் செலுத்தினான் சரமழை!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

#30c. The War

The soldiers saw KAmadhEnu tied up in the ashram. The king’s order was to untie her and take her to his capital. When the soldiers moved closer, the cow bristled up its hair. The force was enough to throw the soldiers off their feet all around her!

Now the whole army moved in to deal with the cow. To fight an army the cow needed an army of her own! She produced an armed soldier from each of her hair follicle.

Soon there was an army big enough to fight with the king’s army. The asthrams given by VinAyaka to KArthaveeryan could not harm the soldiers produced by KAmadhEnu.

The king’s army was easily defeated by the army of the cow. The King became very angry since he could not defeat the cow’s army nor accept his defeat and go away. He decided to avenge his shame very soon and returned to his country with the soldier still left alive.

Soon he returned to the ashram. Sage Jamadagni was doing penance. KArthaveeryan chopped off his head and made it roll on the ground. Sage’s wife ReNuka Devi was shocked and came running to her husband. She was pierced by a shower of arrows from the king’s bow and feel down in agony.

 
DEVI BHAAGAVATAM - SKANDA 4

4#20c. கம்சனின் கருணை

கம்சனிடம் கொடுக்க எடுத்துச் செல்கையில்
கண்டவர் அதிசயித்தனர் இந்த விந்தையை!

“கொடுமையே உருவான கம்சனிடம் கொடுக்க
எடுத்துச் செல்கின்றான் இந்த சிசுவை!” என்று.

கொடுத்தான் வசுதேவன் கம்சனிடம் சிசுவை;
எடுத்தான் கைகளில்; சிரித்தான் கம்சன்!

“தர்மாத்மா நீரே உம் வாக்கு சுத்தத்தால்!
தரும் துன்பம் உமது எட்டாவது குழந்தை.

எமனல்ல மற்ற ஏழு குழந்தைகள் எனக்கு;
எடுத்துச் செல்லலாம் உம் குழந்தையை!

விட்டு விடுகிறேன் இன்பமாக வாழ்வதற்கு;
கட்டாயம் தரவேண்டும் எட்டாவது சிசுவை!”

வியப்பி ஆழ்ந்து திரும்பினான் வசுதேவன்
வியப்பில் ஆழ்ந்தாள் தேவகி இது கண்டு.

வந்தார் கலக முனிவர் நாரதர் கம்சனிடம்;
வரவேற்று உபசரித்தான் கம்சன் அவரை.

“மேருமலை சென்றபோது சேதி கேட்டேன்;
பிரம தேவன் கூறினார் தேவர்களிடம்,

அவதரிப்பார் விஷ்ணு கம்சனைக் கொல்ல
தேவகி வசுதேவர்களின் மகனாக என்று.

ஏன் கொல்லாமல் விட்டு விட்டாய் சிசுவை?
கூறுவாய் என்னிடம் உண்மையை!” எனவும்,

“எட்டாவது பிள்ளையே எனக்கு யமன் ஆவான்.
எதற்குக் கொல்ல வேண்டும் முதல் பிள்ளையை?

என்று எண்ணி உயிருடன் விட்டு விட்டேன்
இன்று பிறந்த முதல் குழந்தயை!”என்றான் கம்சன்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


4#29c. Kamsan’s kindness

Vasudev carried his new born son to hand over to Kamsan as promised. The onLookers stood transfixed to see this rare occurrence. “The poor infant is to be given away to the cruel Kamsan.”

Vasudev handed the child to Kamsan. He took the infant and laughed while commenting, “You are a dharmaatma Vasudev. You have kept your promise.

But this child is not me enemy. Only your eighth child will be my enemy. So I shall spare this infant with life. But make sure your eighth son is promptly handed over to me as soon as he is born”

Vasudev never expected such kindness from Kamsan. He was shocked beyond words. Devaki also was shocked to see her husband come back with their infant son alive.

Narada came to meet Kamsan. Kamsan welcomed the Devarushi heartily. Narada told Kamsan, “I heard this news when I went to the Mount Meru.

Brahma was telling the other Devaas that Vishnu will be born as the son of Davaki and Vasudev to kill you Kamsan! Why did you spare the life of the child born today? Tell me the truth!”

Kamsan replied to Naarada, “Only the eighth child will be my mortal enemy not the other seven. So I spared the life of the infant born today!”
 
DEVI BHAAGAVATAM - SKANDA 9

9#48d. மனஸா தேவி (6)
"ஆகிவிட்டது சந்தியா வந்தன சமயம் என்று
அஞ்சியபடியே நான் எழுப்பினேன் ஸ்வாமீ!

சிருங்காரம், ஆகாரம், நித்திரை இம்மூன்றுக்கும்
பங்கம் செய்பவர் உழலுவர் நரகத்தில் அறிவேன்!"

விழுந்தாள் ஜரத்காரு முனிவரின் கால்களில்;
தொழுதாள்; அழுதாள்; பயபக்தி, பதி பக்தியுடன்!

சபிக்க முயன்றார் ஜரத்காரு தன் மனைவியை;
தடுத்தான் சந்தியா தேவியுடன் தோன்றிய சூரியன்.

"உசிதமல்ல நீர் உன் மனைவியைச் சபிப்பது;
உறக்கத்தைக் கலைத்தாள் பாவத்தைத் தவிர்க்க!

வெகுளியில் ஏதேதோ பேசிவிட்டீர் நீர் - தேவி
வெகு பவ்யமாக ஆகிவிட்டாள் சரணாகதி!

வெண்ணெய் போன்று இருக்க வேண்டும் - செந்
தண்மை பூண்ட அந்தணர்களின் இருதயம்!

கோபம் இருப்பது ஒரே கணம் என்றாலும் - இடும்
சாபம் அழித்துவிடும் எல்லா வஸ்துக்களையும்!

பிரம்மனின் அம்சமே பிராமண குலம் - அதனால்
பிரம்ம தேஜஸ் கொண்டுள்ளது பிராமண குலம்!

பிரம்மத்தையே தியானிக்கும் பிராமண குலம்;
பிராமணனுக்குக் கோபம் அழகல்ல முனிவரே!"

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

9#48d. ManasA Devi (6)

Seeing the wrath of her husband ManasA Devi was shaken badly. She fell at his feet and spoke thus with tears of remorse in her eyes!

"I disturbed your sleep and woke you up, fearing that you might miss your SandhyA Vandanam. I have committed an offence.

I know that a person who disturbs another while sleeping or while eating and while mating will go to the KAlasootra hell and suffer there as long as the Sun and Moon last in this world!"


Knowing that the Muni was angry, and about to curse her, the Sun God came there with the SandhyA Devi. And He humbly spoke to the sage filled with fear :

"Seeing Me about to set in the sky, and fearing that you may miss your Dharma, your chaste wife woke you up. You should not curse her for doing this gesture with a good intention.

A Brahmin's heart should be as tender as fresh butter. The anger of a Brahmin lasts only for a seconds but it can cause great damages.

A BrAhmin is a part of BrahmA himself! He shines with the Tejas of BrahmA. A Brahmin should always meditates on BrahmA. Anger does not suit a good Brahmin!" Sun God told Sage Jatar KAru.

Jarat KAru 's anger subsided on hearing these words of wisdom.
 
BHAARGAVA PURAANAM - PART 1

#30d. பரசுராமன்

நைமி சாரண்யம் சென்றிருந்த ராமன்
அமைதியாகத் திரும்பினான் ஆசிரமம்.

உயிரற்ற தந்தையின் உடலையும் அருகில்
உயிருக்குப் போராடும் தாயையும் கண்டான்.

இடி ஏறுண்ட நாகம் போல நடுங்கினான்;
கொடிய செயல் யார் செய்தது?” சீறினான்!

“இருபத்தோரு அம்புகள் எய்தான் என்மீது;
உருட்டினான் தந்தை தலையைத் தரையில்!

இருபத்தோரு தலைமுறையின் தலைகள்
உருள வேண்டும் கீழே அது போலவே!”

“அரசர்கள் குலமே உலகில் இல்லாமல்
அழித்து விடுகிறேன் க்ஷத்திரியர்களை!”

தாய் தந்தையரின் சடங்குகள் செய்தான்
தத்தாத்திரேய முனிவரின் உதவியுடன்.

அன்னையைத் தன் மனதில் தியானிக்க
அன்னை தோன்றினாள் அவன் கண்முன்.

“சபதம் நிறைவேற வேண்டும் – கைலா
சபதியின் அருள் பெற வேண்டும் மகனே”

சிவனைத் தேடிச் சென்றான் கயிலை;
சிரம் தாழ்த்தி வேண்டினான் அருளை.

கற்றான் விநாயகர் ஷடாக்ஷரத்தை;
‘நிறைவேறும் சபதம் அவர் அருளால்’!

மாயூரம் சென்றான் ராமன் மனதில்
தியானித்தான் விக்ன விநாயகரை.

கடும் தவம் புரிந்தான் நெடுங்காலம்
காட்சி தந்தார் சதுர் புஜ விநாயகர்.

“அழித்தான் இரக்கமின்றி பெற்றோரை!
அழிக்க வேண்டும் அவன் சந்ததியரை!

சபதம் நிறைவேற வேண்டும் – நான்
சாதிக்க வேண்டும் சூளுரைத்ததை!”

பரசுவை தந்துவிட்டார் விநாயகர்;
பரசு ராமன் எனப் பெயர் இட்டார்!

வரம் தந்தார் வினாயகர் வெற்றிபெற;
சிரஞ்ஜீவித்வம் அளித்தார் ராமனுக்கு!

இருபத்தோரு தலைமுறை மட்டுமன்றி
அரச குலத்தையே அழித்தான் பரசுராமன்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#30d. Parasu RAman

RAman had gone to NeimichAraNyam when these atrocities took place. He returned to the Ashram and was shocked to find the headless body of his father and his mother on the verge of death pierced by many arrows.

He shivered from head to foot in anger. He demanded to know who could do such a mean act. ReNuka Devi lived long enough to speak to him.

“King KArthaveeryan cut off your father’s head and made it roll on the ground. He shot twenty one arrows at me. You must make the heads of twenty one generations of his descendants roll on the ground.”

RAman promised his dying mother, “I will put an end to the race of Kshatriya in the world!” He performed the last rites of his dear dead parents with the help of sage DaththAtrEya.

RAman sat thinking about his mother. She appeared in front of his eyes and reminded him of his oath. “You can fulfil your oath only if you get the grace of Lord Siva.’

RAman went to KailAsh and prayed to Lord Siva. “I must fulfill my oath. Please help me o lord!” Siva taught him the shatAkshara of VinAyaka and advised RAman to seek his blessings.

RAman went to MAyooram and did penance on VinAyaka for a long time. VinAyaka appeared to him with four hands. RAman told him,” King KArthaveeryan killed my parents mercilessly. I must avenge this by killing twenty one generations of his descendants.”

VinAyaka presented RAman with his own parasu. He named him and ‘Parasu RAman’. He blessed RAman with chiranjeevithvam also known as immortality.

RAman went on to haunt and hunt the race of KshatriyAs. He killed twenty one generations of KArthaveeryan’s descendants and many more kings and KshatriyAs besides.
 
DEVI BHAAGAVATAM - SKAND 4

4#20d. நாரதர் கலகம்

கலவென்று நகைத்தார் இதைக் கேட்டு
கலகப் பிரியரான தேவரிஷி நாரதர்.

“தேவர்கள் தந்திரத்தை நீ அறியவில்லை
தேவர்கள் தகர்ப்பர் தம் விதிமுறைகளை!

அற்பப் பகைவன் என யாரும் இல்லை;
சொற்ப இடம் தந்தால் விளையும் துன்பம்.

முளையிலேயே கிள்ள வேண்டும் பகையை;
முளைத்து மரமானால் வெல்வது துர்லபம்.

எட்டாவது பிள்ளை தான் எமன் என்கின்றாய்!
எட்டாவது பிள்ளையாக யாரைக் கூறுவாய்?

எட்டுப் பிள்ளைகளும் ஒன்றாக நின்றால்
எட்டாவது ஆவான் ஒவ்வொரு மகனும்.

வசுதேவன் பிள்ளைகள் அனைவரையும்
நசுக்கிவிடு முளைத்து வளரும் முன்னமே.”

எட்டாவது பிள்ளை கணக்கை எண்ணினான்;
எட்டாவது பிள்ளை ஆவான் ஒவ்வொருவனும்

விட்டு விட்டு வேறு விதமாக எண்ணினால்!.
விட்டு விட்டால் துயரம் விளைவது உறுதி!

திரும்பக் கொணரச் செய்தான் பிள்ளையை;
கருங்கல் மனத்துடன் செயல்பட்டான் கம்சன்.

கற்பாறையில் அறைந்து கொன்றான் சிசுவை
அற்ப பகைவனையும் அழித்து மகிழ்ந்தான்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


4#20d. Narada’s advice

Narada had a hearty laugh on hearing Kamsan’s words. He said, “Kamsa! You do not understand the craftiness of the Devaas. They will change the rules and the orders the way they wish to.

There is no enemy who is insignificant enough to be ignored. An enemy should be nipped in the bud. If he grows up and becomes strong, it will become impossible to vanquish him.

You say that only the eighth child is your mortal enemy. But who is the eighth child?’ If all the eight sons are made to stand we can count in different orders to make any of them the eighth son. All the sons of Vasudev are your enemies. Get rid of all of them as and when they are born.”

Kamsan understood Narada’s logic clearly. Any of the eight sons could become the eighth son if counted in different ways. He ordered the new born to be brought to him. He dashed it against a rock killing the infant and heaved a deep sigh of relief.
 
DEVIBHAAGAVATAM - SKANDA 9

9#48e. மனஸா தேவி (7)

பிரதிக்ஞை செய்திருந்தார் முனிவர் மனைவியிடம்
"பிரிந்து செல்வேன் பிரியம் இல்லாததைச் செய்தால்!"

பிரதிக்ஞையை நிறைவேற்ற முனிவர் உடனே
பிரிந்து செல்லலானார் மனஸா தேவியை!

வருந்தினாள் மனஸா தேவி இந்தப் பிரிவினால்;
வணங்கினாள் மனதில் குரு சிவ சங்கரனாரை!

வணங்கினாள் பிரம்ம தேவனை, விஷ்ணு பிரானை;
வணங்கினாள் தனக்குப் பிறவி தந்த கச்யப முனியை.

தோன்றினர் அவர்கள் மனஸா தேவியின் முன்பு;
தேவி கூறினாள் நிகழ்ந்தவை எல்லாம் துயருடன்.

பிரமன் வினவினான் விஷ்ணு மூர்த்தியிடம்,
"பிறக்கவில்லை புத்திரன் இன்னம் இவளுக்கு.

புத்திர உற்பத்தி இன்றிப் பிரிவது எங்கனம்?
புத்திர உற்பத்தியின்றிப் பிரிந்து செல்பவன்

புறக்கணிக்கின்றான் தன் இல்லற தர்மத்தை.
புண்ணியம் வீணாகும் ஜல்லடை நீர் போல!"

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

9#48e. ManasA Devi (7)

Sage JaratkAru had a laid a condition to ManasA Devi before they got married that he would desert her if she ever did anything to upset him. So to keep his up his words, JaratkAru decided to go away from ManasA Devi.

She became very sad and began to cry aloud with pain and anguish. She prayed to her Guru lord Sankara, Lord Brahma, Lord Sri krishna and Sage Kashyapa. They all appeared there immediately.

Bowing down to them, sage JaratkAru inquired why they had come there. BrahmA bowed down at the lotus feet of Sri KrishnA and spoke thus:

"If this Brahmin JaratkAru leaves his wife, he should have first of all given her a son to fulfil his Dharma. Any man can quit his wife only after he has impregnated her and given her a son. But if he leaves his wife without giving her a son, then all his religious merits will be lost just as water carried on a sieve!"
 
BHAARGAVA PURAANAM - PART 1

#31a. ராவணன்

இடைவிடாத தவம் கையிலையில் புரிந்து
இலங்கேஸ்வரன் மகிழ்வித்தான் பிரானை.

“வரம் என்ன கோருகிறாய் இலங்கேஸ்வரா?”
“வரம் ஒன்று தான் வேண்டும் என் இறைவா!

பிரளய காலத்திலும் அழியாமல் நிலைத்து
இருக்க வேண்டும் என் லங்காபுரி மட்டும்!”

சிவலிங்கம் ஒன்றை அளித்தார் சிவபிரான்;
சில விதி முறைகளையும் உடன் வகுத்தார்.

“நிறுவிப் பூஜித்து வா இதை இலங்கையில்!
நிலைத்து நிற்கும் இலங்கை என்றைக்கும்!

ஏறிச் செல்லக்கூடாது எந்த வாகனத்திலும்;
நிறுவக் கூடாது இதைத் தரையில் எங்கும்;

வைத்தால் லிங்கம் பதிந்து விடும் அங்கே.
வைத்ததை எடுக்க முடியாது மீண்டும்” என

இலங்கை இனி என்றும் அழியாது என்றதும்
நிலை குலைந்து போனான் தேவேந்திரன்!

ஓடினான் விக்கின ராஜரிடம் விரைந்து;
நாடினான் உதவியை வரத்தை முறித்திட!

வருணனை அழைத்தார் விக்ன விநாயகர்.
தரச் சொன்னார் நீர் உபாதையை ராவணனுக்கு!

சிறுநீர் பெருநீராகித் தொல்லை தரவே
அறியவில்லை அவன் என் செய்வதென!

அந்தணச் சிறுவன் வடிவில் வினாயகர்
சிந்தை குழம்பிய ராவணனிடம் வந்தார்.
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

#31a. RAvaNan

RAvaNan performed a long and hard penance to please Lord Siva. In return he wanted this boon that, even during the dissolution of the whole world due to praLaya, Lanka should not get destroyed.

Siva granted the boon and presented him with a Sivalingam. He also laid some conditions for the boon to become effective. Siva told RAvaNan,

“Establish this Sivalingam in Lanka and do ArAdhanA regularly. Lanka will never get destroyed. While transporting this to Lanka, you should not ride on any vehicle. You must not set this Sivalingam on the ground. If you put it down, it will get fixed to the same spot and you won’t be able to take it off again.”

RAvaNan was only too happy with his boon and agreed to all the terms and conditions laid by Lord Siva.

When Indra learned that Lanka could never be destroyed once the Sivalingam was established there, he ran to VinAyaka for help to defeat this scheme. VinAyaka ordered VaruNa to cause urinary discomfort to RAvaNan.

Soon RAvaNan was not able to contain or control his heavy bladder and urgently needed to relieve himself at any cost. But he could not put down the Sivalingam on the ground either.

Just then VinAyaka took the form of a young brahmachaari and walked towards RAvaNan.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 4

4#21a. வியாசரின் விளக்கம் (1)

“அறிய வேண்டும் செய்த பாவம் என்னவென்று
பிறந்தவுடன் கொல்லப்பட்ட அந்தக் குழந்தை.

துர்போதனை செய்யலாகுமா நாரத முனிவர்?
துல்யம் ஆவர் பாவம் செய்பவனும் செய்விப்பவனும்!

தெளிவு படுத்துங்கள் எனக்கு வியாசமுனிவரே !
அளவில்லாத சோகம் ஏற்பட்டு விட்டது என்னுள்.”

“நாரத முனிவர் எப்போதும் கலகப்பிரியர்;
நாரதர் கலகம் நன்மையில் முடியும்.

தூர நின்று தூண்டி விடுபவர் அல்ல அவர்;
துணை போகின்றவர் தேவ காரியங்களுக்கு!

பாதகம் போலத் தோன்றும் அவர் செயல்கள்;
சாதகமாக முடியும் உலக மக்கள் நன்மைக்கு!

பிறந்து சிறிது நேரத்தில் கொல்லப்பட்டது
பின் விளைவாகும் முன் பெற்ற சாபத்துக்கு.

இருந்தனர் ஆறு பிள்ளைகள் மரீசிக்கு.
பிறந்தனர் அவர் மனைவி ஊர்ணைக்கு.

புதல்வி மேல் மோஹம் கொண்ட பிரமனைப்
புன்னகைத்து ஏளனம் செய்தனர் இந்த அறுவர்.

கோபம் கொண்டான் பிரமன் அவர்களிடம்
சாபம் தந்தான் அசுர யோனியில் பிறந்திட.

பிறந்தனர் கால நேமியின் புதல்வர்களாக;
பிறந்தனர் ஹிரண்ய கசிபுவின் மகன்களாக.

தவம் செய்தனர் பிரமனைக் குறித்து – அவர்
தவத்தை மெச்சிக் காட்சி தந்தான் பிரமன்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


4#21a. Vyaasaa’s explanation (1)

King Janamejayan said to sage Vyaasaa,” I want to know what was the great sin committed by that jeeva to get killed soon after being born. Naarada is a Deva rushi and yet he misguided Kamsan. In my opinion the doer of a wrong thing and the one who advocates the wrong thing are both equally guilty. I feel very upset. Kindly clarify my doubts oh guru dev!”

Sage Vyaasaa replied to the king, “Naarada likes to churn up problems and issues. But his actions always yield beneficial results to everyone. He is not the type who provokes from a distance just to create problems.

He does certain things to help the God’s plans to take effect. His actions may at times appear to be shocking but always they are for the benefit of the human beings.

The Child got killed due to a curse incurred by it in its previous births. Mareechi had six sons born to his wife OorNai. These boys made fun of Brahma, when he fell in love with his own daughter Saraswati Devi – whom he had created.

Brahma became angry and cursed them to be born in the race of asuras. They were born as the sons of Kaalanemi. They were born as the sons of HiraNyan. They did severe penance on Brahma and Brahma gave his darshan pleased with their penance.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 9
9#48f. மனஸா தேவி (8)
மனைவி நாபியை மந்திரப் பூர்வமாகத் தொட்டு,
மனஸா தேவிக்கு வரம் தந்தார் ரிஷி ஜரத்காரு.

"உண்டாகும் உனக்கும் பிள்ளைப் பேறு;
உண்டாவான் உனக்குச் சிறந்த புதல்வன்!

இருப்பான் சிறந்த புலன் அடக்கத்துடன்;
இருப்பான் தர்ம சீலனாக, உத்தமனாக.

திகழ்வான் வேதமுணர்ந்து தேஜசுடன்;
திகழ்வான் புகழ் பெற்ற தவ ஞானியாக.

திகழ்வான் ஈஸ்வர பக்தி மிகுந்தவனாகத்
தன் குலத்தைக் கடைத்தேற்றுபவனாக!

கூத்தாடுவர் மகிழ்ச்சியுடன் பித்ருக்கள்
உத்தமன் நம் மகன் தோன்றியவுடனே!

நல்ல ஒழுக்கம் உடைய பெண் பதிவிரதை;
நல்ல இன்சொல் பேசுகின்றவள் பிரியை;

நல்ல புதல்வனைப் பெறுபவள் தர்மிஷ்டை;
குலத்தை நன்கு வளர்த்துபவள் குலமங்கை;

நல்ல ஈஸ்வர பக்தியைத் தருபவன் பந்து;
நல்ல தெய்வ கவசத்தைத் தருபவன் பிதா;

கர்ப்ப வாசத்தை நீக்குபவள் அவன் தாய்;
கர்ப்பத்தைத் தரித்துத் தாங்குபவளும் தாய்.

தயையும் அவளே! தாயும் அவளே - யம
பயத்தைப் போக்குகின்றவளும் அவளே! "

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

9#48f. ManasA Devi (8)

Hearing the words of BrahmA, JaratkAru recited a Mantra, touched the navel of his wife ManasA and spoke to her thus:

“O ManasA! A son will be born to you who will be self-controlled, religious, and the best among the Brahmins.

Your son will have tejas, energy and fame. He will be well-qualified! He will be the foremost of those who know the Vedas. He will be a great GnAni and the best of the Yogis.

That son is a good son who uplifts his family; who is religious and devoted to Sri Hari. Pitris dance with joy when such a son is born.

A wife is a true wife who is devoted to her husband, good-natured, Sweet-spoken and religious. She is a mother of her sons, she is the woman in the family and she is the preserver of the family.

He is the true friend who implants devotion to Hari. He is a good father who shows his son the way to devotion to Hari.

She is the True Mother, through whom the disease of further entering into wombs ceases for ever!

She is also a good sister who makes the fear of Death vanish!"
 
BHAARGAVA PURAANAM - PART 1

#31b. கோகர்ணர்

“கும்பிடப் போன தெய்வம் குறுக்கேயா?’
அம்பி ஒருவன் தோன்றினான் கண்முன்!

"தரையில் வைத்து விடாதே தம்பி இதைத்
தாங்குவாய் உன் இரண்டு கைகளிலேயே!

சிறிது நேரத்தில் வந்து விடுவேன் நான்;
சிறுநீர் கழிப்பதற்கு அவசர அவசியம்!”

“சிறிது நேரம் தான் தாங்க முடியும் – நான்
சின்னப் பையன் தானே ஐயா! ” என்றான்.

“போனேன் வந்தேன் என்னும்படி நான்
போனவுடன் வந்துவிடுவேன் அப்பனே!”

“மூன்று முறை அழைப்பேன் உங்களை!
பின்னர் வைத்துவிடுவேன் தரையில்!”

“என்னவோ செய் உன் இஷ்டம் போல!
என்னைப் போகவிடு!” என்று ஓடினான்.

அந்தப் பக்கம் ராவணன் சென்றவுடனேயே,
அந்தணச் சிறுவன் அழைத்தான் மும்முறை.

தான் வந்த வேலை எளிதில் முடிந்தது எனத்
தரையில் வைத்துவிட்டான் சிவலிங்கத்தை!

திரும்பிய ராவணன் அங்கு கண்டது என்ன?
இருந்தது தரைமேல் அந்தச் சிவலிங்கம்!

பதிந்து விட்டது அது அசைக்க முடியாதபடி- இரு
பத்துக் கைகளால் பற்றி இழுத்த போதிலும்!

இழுக்க இழுக்க வலிய இருபது கரங்களால்
குழைந்தது சிவலிங்கம் பசுவின் காதுபோல.

குழைந்த லிங்கத்தின் அழகிய புதுப் பெயர்
வழங்கலானது அன்றிலிருந்து கோகர்ணர்.

மகாபலவான் ஆன ராவணனை வென்றதால்,
மகாபலேச்வர் என்றும் ஒரு பெயர் உள்ளது.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


#31b. GOkarNar

RAvaNan needed to relieve himself very badly and was happy to see a young brahmin boy in front of him. He urged the boy to take charge of the Sivalingam for a while. “Please do not put it down on the ground. I shall be back in a moment.”

The boy said, “I am only small child. I can’t hold the heavy lingam for a very long time. I shall call you thrice. If you don’t come back, I will put it down on the ground!” RavaNan was in a great hurry and ran away after handing over the Sivalingam to that young boy.

The boy was in fact Lord VinAyaka in disguise and had come with a plan to foil RavaNan’s attempt to transport the Sivalingam to Lanka. He called out for RAvaNan thrice as soon as he disappeared from his eyes and immediately put down the Sivalingam on the ground! He was very happy that his mission was so easily accomplished.

RavaNan was shocked to find the lingam on the ground. He went and tried to lift it up again, but it would not budge. The more he tried to pull it off with his twenty mighty hands, the more the lingam got distorted to resemble the ear of a cow.

It is called by a new name from then on as ‘GOkarNar’. Since the Sivalingam defied the mighty RAvaNan’s attempts to pull it off the ground, it is also called as MahAbalEswar.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 4

4#21b. வியாசரின் விளக்கம் (2)

“வரம் தர வேண்டும் பிரம தேவனே எமக்கு;
மரணம் நிகழலாகாது தேவர், மனிதர்களால்!

அழிவு நிகழக் கூடாது கந்தருவர்களால் – எம்
அழிவு நிகழக் கூடாது சித்தர், சர்ப்பங்களால்!”

வரம் தந்து மறைந்து விட்டான் பிரம தேவன்
வரம்பு மீறிய சினம் கொண்டான் ஹிரண்யன்.

“பிரமன் என்னிலும் பெரியவனா வரம் தர?
பிழைக்க விரும்பினால் சென்று விடுங்கள்!

பிறவி எடுப்பீர்கள் செயல்கள் புரியாமல்
பிதா காலநேமி கம்சனாகிக் கொல்வான்.”

பிறந்தனர் இச் சாபத்தினால் தேவகியிடம்;
இறந்தனர் கம்சனின் கரங்களில் உடனேயே.

பிரவேசித்தது ஏழாவது கர்ப்பத்தில் அடுத்ததாக;
உருவானது பலரமானாக ஆதிசேஷனின் அம்சம்.

வளர்ந்தது தேவகி கருவில் நான்கு மாதங்கள்;
வளர்ந்தது ரோஹிணியின் கருவில் அதன் பின்.

கலைந்து விட்டது தேவகியின் கர்ப்பம் எனச்
சில காலம் நிம்மதி அடைந்தான் கம்சன்.

எட்டாவதாக உருவாகும் விஷ்ணு அம்சம்
எமனாக வளரும் தன் மாமன் கம்சனுக்கு.

மாயையால் வளருவான் கோகுலம் சென்று;
மாயையால் வெல்லுவன் பல அசுரர்களை!

இனிக் கேள் அம்சங்களின் அவதாரங்களை
தனிப் பெருமை பெற்றவர் ஒவ்வொருவரும்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


4#21b. VyAsA’s explanation (2)

VyAsA continued his explanation. “These six brothers sought a boon from Brahma. ‘Oh Brahma Dev! Please grant us this boon that we should not get killed either by the Deva or by the Manushya nor by Siddha nor the serpents.” Brahma granted the boon and disappeared.

HiraNyan their father got wild when he learned this. He had proclaimed himself to be the supreme god and his own sons were now insulting him by worshipping the other gods.

He cursed the six brothers, “You have insulted me by seeking boons from Brahma.You will be born again but you will not perform any new karma in that birth. Kaalanemi will be reborn as Kamsan and kill you all with his own hands!”

Those six brothers were the six sons born to Devaki and they got killed by Kamasan soon after their birth – before they could perform any new karma. The seventh garbbam was the amsam of Aadhiseshan. It grew up in Devaki’s womb for four months and then got transferred to the womb of Rohini. It was born as and grew up as Balraam.

Kamsan thought that Devaki’s seventh pregnancy got terminated and lived in peace for some time. Now Vishnu’s amsam entered Devaki’s womb as her eighth child. This child will be the mortal enemy of Kamsan as predicted.

He will grow up in Gokulam. He will vanquish all the asuraas who come there to kill him. Now I shall relate the various amsams and their avatars. Each of these is great in its unique manner.”
 
DEVI BHAAGAVATAM - SKANDA 9

9#48g. மனஸா தேவி (9)
"ஞானத்தை வழங்குபவனே ஒரு நல்ல குரு;
ஞானம் ஆகும் பரமாத்மாவை உணருவது.

பிரஞ்சம் தோன்றுகிறது ஈஸ்வரனிடமிருந்து;
பிரபஞ்சம் ஒடுங்குகிறது ஈஸ்வரனிடம் சென்று!

வேதயாகங்கள் அனைத்தும் இறைவன் தொண்டு;
ஞான உபதேசம் நல்குபவன் ஒரு ஸ்வாமி ஆவான்.

விடுவிக்க வேண்டும் குரு பிறவித் துயரிலிருந்து;
விடுவிக்க வேண்டும் மரண வேதனையிலிருந்து!

காட்ட வேண்டும் பரமானந்த உருவான இறைவனை;
காட்ட வேண்டும் நிலையான பொருளான இறைவனை;

சரண் புகுவாய் அப்பரமாத்மாவிடம் ஓ பெண்ணே!
அரண் ஆகிக் காப்பான் உன் கர்மங்களை அழித்து!

துறந்து செல்வேன் உன்னை ஒரு காரணத்துக்காக;
பொறுத்துக் கொள் நீ உன்னைப் பிரிந்து போவதை!

தவம் செய்யப் போகின்றேன் புஷ்கரக்ஷேத்திரத்தில்;
தலம் நாடிச் செல்லலாம் நீ விரும்புகின்ற இடத்துக்கு!

ஆசைகள் அற்றவனின் உள்ளம் உறைய வேண்டும்
ஈசனின் திருவடித் தாமரைகளில்!" என்றார் ஜரத்காரு.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


9#48g. ManasA Devi (9)

" He is the true guru who imparts true knowledge. It is true knowledge to know about ParamAtmA. The creation appears from ParamAtmA. It gets dissolved in ParamAtmA.

All the Vedic KarmAs are services done to god. A Swami is one who does the upadesam of true knowledge. The man who pushes another deeper in SamsArA is an enemy. The guru who can not impart true knowledge will destroy his disciples.

A guru must set free his disciple from the cycle of birth and death. A guru must set his disciples free from the pain of birth and death. A guru should show his disciple the God who is personification of true bliss. He must show his disciple the only true everlasting thing among the all others which will vanish.

Take refuge in God my dear wife! He will destroy your KarmAs and protect you. I am going away from you for a reason. You must bear with my separation.

I am going to Pushkara Kshetra to do penance. You are free to go wherever you want to go. The heart of man who has overcome desires must rest at the lotus feet of the Lord"


 
BHAARGAVA PURAANAM - PART 1.

#31c. குட்டு வழிபாடு

ஆத்திரம் வந்தது ராவணனுக்கு.
தந்திரம் செய்த அச்சிறுவன் மீது.

குட்டினான் பொறி பறக்க அவனை;
வெட்ட வெளியானது அந்த இடம்!

நொடியில் காணவில்லை சிறுவனை!
பெருவடிவில் நின்றது கரிமுகநாதன்!

எடுத்தார் துதிக்கையால் சுழற்றி!
அடித்தார் ஓங்கி நிலத்தின் மீது!

அனாயசமாகக் கிடைத்த அடியில்
விநாயகரிடம் கேட்டான் அபயம்.

“என் தலையில் குட்டினாயே நீ!
உன் தலையிலும் குட்டிக்கொள்!”

குட்டிய குட்டில் அவன் நெற்றிப்
பொட்டிலிருந்து கசிந்தது உதிரம்!

“தந்தைக்கு இங்கே இருக்க ஆசை;
எந்தை சொற்படிச் செய்தேன் இதை.

என் சன்னதியில் குட்டிக் கொள்பவர்கள்
நிம்மதி நிலைக்கும், நல்லது நடக்கும்”

குட்டு வழிபாடு தொடங்கியது இப்படியே.
விட்டுச் சென்றான் லிங்கத்தை ராவணன்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#31c. The new mode of worship

RAvaNan became wild with anger. He rapped the boy very hard on his head. The boy disappeared in a moment. VinAyaka stood there in a very big form. VinAyaka lifted RAvaNan in his trunk, swirled him round and threw him on the ground.

RAvaNan felt shattered and prayed for protection. VinAyaka told him, “You rapped me hard on my head. Now rap on your own head as hard.” RAvaNan rapped on his forehead so hard that it started bleeding.

“My father Lord Siva wanted to stay in this place. I just carried out his wish. In future, whoever raps the head in front of my statue, will attain peace of mind and all good things will happen in his life.”

This is how the mode of prayer by rapping on the head started. RAvaNan returned to Lanka leaving behind the Sivalingam GOkarNar.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 4

#21c. அம்ச, அவதாரங்கள் (1)

ஆவார் வசுதேவர் கச்யபரின் அம்சம்;
ஆவாள் தேவகி அதிதியின் அம்சம்;

ஆவான் பலராமன் ஆதிசேஷனின் அம்சம்;
ஆவான் கிருஷ்ணன் நாராயணனின் அம்சம்;.

ஆவான் அர்ஜுனன் நரனின் அம்சம்;
ஆவான் பீமன் வாயுதேவனின் அம்சம் ;

ஆவான் தர்மன் யமதர்மனின் அம்சம்;
ஆவர் இரட்டையர் அச்வினிகளின் அம்சம்;

ஆவான் கர்ணன் சூரியனின் அம்சம்;
ஆவான் விதுரன் யமனின் அம்சம்;

ஆவான் சகுனி துவாபராம்சம்;
ஆவான் சிகண்டி ராக்ஷச அம்சம்.

ஆவார் துரோணர் பிருஹஸ்பதியின் அம்சம்;
ஆவான் அஸ்வத்தாமன் ருத்திரனின் அம்சம்;

ஆவான் சந்தனு சமுத்திர ராஜனின் அம்சம்;
ஆவாள் அவன் மனைவி கங்கையின் அம்சம்;

ஆவான் பீஷ்மன் தியா வசுவின் அம்சம்;
ஆவான் துரியோதனன் கலியின் அம்சம்;

ஆவான் விராடன் சப்த மருத்துக்களின் அம்சம்;
ஆவான் திருதராஷ்ட்ரன் அரிஷ்டகுமாரன் அம்சம்;

ஆவார் கிருபர் மருத்துக்களின் அம்சம்;
ஆவான் தேவகன் கந்தர்வராஜனின் அம்சம்;

ஆவான் திருஷ்டத்யும்னன் அக்னியின் அம்சம்;
ஆவான் பிரத்யும்னன் சனத்குமாரனின் அம்சம்;

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
4#21c. The amasams and the avatars

Vasudev was the amsam of sage Kashyap;
Devaki was the amsam of Aditi Devi;

Balraam was the amsam of Aadhiseshan;
Krishna was the amsam of Naaraayanan;

Arjun was the amsam of Naran;
Bheeman was the amsam of Vaayu Devan;

Yudhishtran was the amsam of Yamadharman
The twins were the amsam of Ashwini Devataas

Karnan was the amsam of The Sun
Viduran was the amsam of Yamadharman

Dhrona was the amsam of Bruhaspati
Aswathaama was the amsam of Rudran

Santhanu was the amsam of Samudrarajan
His wife was the amsam of Ganga Devi

Bheeshma was the amsam of Dyus Vasu
Viraadan was the amsam of Sapta maruth

Duryodhan was the amsam of Kali purushan
Dhrutharashtran was the amsam of Arishta kumar;

Krupan was the amsam of Maruth
Dhrushtathyumnan was the amsam of Agni

Pradhyuman was the amsam of Sanat kumar;
Shakuni was the amsam of Dwaapara;

Shikandi was the amsam of Raakshasaa and
Devakan was the amsam of Gandharva raajan.

 
I am glad to note that a few persons have read
the entire kanda puraanam in full ( all the six kaandams)
just before the mahaa sashti which fell on 5th november.
May god murugan shower his choicest blessings
on such sincere devotees and the members of their family.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 9

9#48h. மனஸா தேவி (10)
துக்கம் மேலிட்டது மனஸா தேவிக்கு - "நான்
தூக்கத்துக்கு ஊறு விளைவித்தது உண்மை!

"விட்டுப் பிரிந்து செல்லும் அளவுக்கு - அது
கெட்ட செயலா என்று சிந்தியுங்கள் ஸ்வாமி!

தரிசனம் தர வேண்டும் தங்கள் வந்து எனக்குக்
கரிசனையுடன், நான் விரும்பும் போதெல்லாம்!

துக்கம் உறவினரைப் பிரிவது - அதைவிடத்
துக்கம் அருமைப் புத்திரரைப் பிரிந்து இருப்பது.

இணையாகும் பிராணனைப் பிரிந்திடும் துக்கம்
இணைந்த பிராணாதிபதியை பிரிந்திடும் போது!

ஒரு தந்தை கொள்வான் பிரியம் மைந்தன் மீது ;
ஒற்றைக் கண்ணனின் பிரியம் இரு கண்களின் மீது.

பிரியம் கொள்வான் தாகம் கொண்டவன் நீரின் மீது;
பிரியம் கொள்வான் பசி எடுத்தவன் உணவின் மீது!

பிரியம் கொள்வான் காமுகன் கலவி சுகத்தில்!
பிரியம் கொள்வான் கள்ளன் பிறர் பொருட்களில்!

பிரியம் கொள்வாள் பதிதை பர புருஷர்கள் மீது;
பிரியம் கொள்வான் கற்காதவன் நூல்களின் மீது!"

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


9#48h. ManasA Devi (10)


Hearing the words of JaratkAru, the Devi ManasA became distressed with great sorrow. Copious tears flowed from her eyes. She spoke to her dear husband thus:

“O SwAmi! I have not committed any grave offence that you have to desert me and go away. Please be kind enough to show yourself to me whenever I wish to see you.

The separation from one’s friend is painful; the separation from one's sons is even more painful. For a wife her husband is dearer than one hundred sons. So the separation from one's husband is the hardest to bear.

The heart of a man who has only one son is attached to that son. The heart of a VaishNava is attached to Sri Hari. The mind of one-eyed man is attached to two eyes.

The mind of a thirsty man is attached to water and the mind of a hungry man is attached to food. The mind of a passionate man is attached to lust and the mind of a thief is attached to the properties of others.

The mind of a lewd man is attached to his prostitute and the mind of the learned is attached to the SAstras. The mind of a trader is attached to his trade and the mind of chaste woman is attached to her husband.”

Thus saying, ManasA fell down at the feet of her husband. JaratkAru. He took her for a moment on his lap and drenched her body with tears. The Devi ManasA also drenched his lap with tears flowing freely from her eyes.
 
BHAARGAVA PURAANAM - PART 1

#32a. குறுமுனி

கைலாச நாதனிடம் வரங்கள் பெற்று,
உல்லாச ஆட்சிசெய்தான் சூரபத்மன்;

அண்டங்கள் ஆயிரத்து எட்டையும் தன்
வெண்கொற்றக் குடைக் கீழ் அமர்ந்து.

ஒளிந்து வாழ்ந்தனர் இந்திரனும், சசியும்;
ஒற்றர்கள் தேடித் திரிந்தனர் அவர்களை!

மகேஸ்வரன் பூஜைக்குத் தேவையான
மலர்களை வளர்த்தனர் நந்தவனத்தில்.

மேகங்களைப் பணித்தான் சூரபத்மன்,
“தாகம் தீர்க்கும் நீரைப் பொழியாதீர்!”

வறட்சி பெருகியது, பயிர்கள் கருகின,
வாடி வதங்கின மலர்ச்செடி கொடிகள்.

செய்வது அறியாத இந்திரனும், சசியும்
தெய்வ வாக்கு ஒன்றைக் கேட்டனர்.

“வருந்தாதே இந்திரா மலர்களுக்காக!
வரும் ஒரு புனிதநதி இங்கு விரைவில்”

நாரதர் வந்தார் இந்திரனைச் சந்திக்க;
நாரதரிடம் கூறினர் சசியும், இந்திரனும்.

“சூரனுக்கு அஞ்சி வாழ்கின்றோம் யாம்,
மாறவேண்டும் இந்த நிலை விரைவில்!

ஆராதிக்கத் தேவை நறுமண மலர்கள்;
நீரின்றி வாடிப் போயிற்று மலர்வனம்!

நீர் அறியாதது என்று ஒன்றுமில்லை;
நீரை வரவழைக்க ஒரு வழி கூறுங்கள்”

“பொதிய மலை செல்கின்றார் குறுமுனி;
பெரு நதி உள்ளது சிறு கமண்டலத்தில்!

கைலாசநாதன் தந்த காவிரி நதி அது!
வையகம் தழைக்கும் நதி பாய்ந்தால்.

செய்ய வல்லவர் விநாயகர் ஒருவரே!
செய்வாய் வழிபாடு அவரருள் வேண்டி!”

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#32a. Agasthya

Soorapadman ruled over all the one thousand and eight universes after getting boons from Siva. Indra and Sasi Devi fled from Swargga to avoid being arrested by Soorapadman. They lived on the earth secretly since Sooran’s spies were on the lookout for them everywhere.

Indra and Sasi prayed to lord Siva to deliver them from all their miseries. They had a nandavanam full of flower plants and creepers. The flowers were used to worship Siva.

Soorapadman ordered all the clouds to stop raining. The plants and creepers withered without water. Indra and Sasi Devi could not do Siva ArAdhanA – the way they had been doing.

NArada came down to meet Indra. Indra asked NArada to find a solution to the problem of water scarcity faced by his nandavanam.

NArada told him, ‘Agasytha rushi is on his way to Podhigai mountain. He has river KAvEri inside his kamaNdalam. If KAvEri can be feed from the kamaNdalam, she will flow freely here and the land will become fertile once again. Only VignEswara can make it possible. You pray to him and seek his help in this matter.”
 

Latest ads

Back
Top