• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

A poem a day to keep all agonies away!

4#21d. அம்ச, அவதாரங்கள் (2)

ஆவான் சுவர்சாக்கியன் புதனின் அம்சம்;
ஆவாள் திரௌபதி லக்ஷ்மியின் அம்சம்;

ஆவான் துருபதன் வருணனின் அம்சம்;
ஆவர் உபபாண்டார் விஸ்வ தேவாம்சம்;

ஆவாள் காந்தாரி மதியின் அம்சம்;
ஆவாள் குந்தி சித்தியின் அம்சம்;

ஆவாள் மாத்ரி நிருதியின் அம்சம்;
ஆவர் கோபிகையர் அப்சரஸ்களின் அம்சம்;

ஆவான் சிசுபாலன் ஹிரண்ய கசிபுவின் அம்சம்;
ஆவான் சல்லியன் பிரஹலாதனின் அம்சம்;

ஆவான் கம்சன் காலநேமியின் அம்சம்
ஆவான் கேசி அயசிரசனின் அம்சம்;

ஆவான் அரிஷ்டன் பாணசுரனின் அம்சம்;
ஆவான் பிரலம்பன் லம்பனின் அம்சம்;

ஆவான் தேனுகன் கரணாம்சம்;
ஆவான் குவலயன் கஜாசுரனின் அம்சம்

ஆவான் கிருஷ்ணன் கரிய கோச அம்சம்
ஆவான் பலராமன் வெண்மை கோசாம்சம்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


4#21d. Amsams and Avatars (2).

Droupadi was the amsam of Lakshmi Devi;
Drupada was the amsam of Varuna;

Upa Paandavas were the viswadevaamsam,
Gaandaari was the amsam of Mati,

Kunti was the amsam of Siddhi
Maadri was the amsam of Nruti,

The gopis were the amsam of apsaras
Sisupaala was the amsam of HinraNyan,

Kamsan was the amsam of Kaalanemi
Sallian was the amsam of Prahlaad

Kesi was the amsam of Ayasiras,
Arishtan was the amsam of Baanaasuran

Pralamban was the amsam of Lamban
Kuvalayan was the amsam of Gajaasuran,

Krishna was the amsam of the dark kosa and
Balram the amsam of white kosa.
 
Last edited:
Here is the whole poem . I have forgotten to add the

last few lines when I posted it in this thread yesterday.


DEVI BHAAGAVATAM - SKANDA 9

9#48h. மனஸா தேவி (10)
துக்கம் மேலிட்டது மனஸா தேவிக்கு - "நான்
தூக்கத்துக்கு ஊறு விளைவித்தது உண்மை!

"விட்டுப் பிரிந்து செல்லும் அளவுக்கு - அது
கெட்ட செயலா என்று சிந்தியுங்கள் ஸ்வாமி!

தரிசனம் தர வேண்டும் தங்கள் வந்து எனக்குக்
கரிசனையுடன், நான் விரும்பும் போதெல்லாம்!

துக்கம் உறவினரைப் பிரிவது - அதைவிடத்
துக்கம் அருமைப் புத்திரரைப் பிரிந்து இருப்பது.

இணையாகும் பிராணனைப் பிரிந்திடும் துக்கம்
இணைந்த பிராணாதிபதியை பிரிந்திடும் போது!

ஒரு தந்தை கொள்வான் பிரியம் மைந்தன் மீது ;
ஒற்றைக் கண்ணனின் பிரியம் இரு கண்களின் மீது.

பிரியம் கொள்வான் தாகம் கொண்டவன் நீரின் மீது;
பிரியம் கொள்வான் பசி எடுத்தவன் உணவின் மீது!

பிரியம் கொள்வான் காமுகன் கலவி சுகத்தில்!
பிரியம் கொள்வான் கள்ளன் பிறர் பொருட்களில்!

பிரியம் கொள்வாள் பதிதை பர புருஷர்கள் மீது;
பிரியம் கொள்வான் கற்காதவன் நூல்களின் மீது!"

பிரியம் வைப்பான் வணிகன் வாணிபம் மீது;
பிரியம் வைப்பாள் பதிவிரதை பதியின் மீது.

விழுந்தாள் கணவனின் பாதங்களில் தேவி
அழுதாள் தாளமுடியாத துயரத்தினால் தேவி.

அணைத்துக் கொண்டு ஆறுதல் கூறினார்;
இணையாகக் கண்ணீர் சிந்தினர் இருவரும்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
DEVI BHAAGAVATAM - SKANDA 9

9#48i. மனஸா தேவி (11)
தியானம் செய்தனர் இருவரும் சிவபெருமானை;
ஞானம் பெற்றனர்; சோகம் நீத்தனர் இருவரும்.

ஜரத்காரு முனிவர் சென்றார் தவம் புரிந்திட;
பரமேஸ்வரனிடம் சென்றாள் மனஸா தேவி.

மனம் இரங்கினாள் அவளைக் கண்ட பார்வதி;
மனஸாவுக்கு உபதேசிக்கச் செய்தாள் சிவனை.

மனம் தெளிந்தாள்; மகிழ்ச்சியுடன் வாழ்ந்தாள்;
மனஸா தேவி ஈன்றாள் அழகிய புதல்வனை.

பெற்றிருந்தான் புதல்வன் ஞானோபதேசங்களை
கர்ப்பத்தில் வாசம் செய்து வந்த காலத்திலேயே.

புகழ்ந்தனர் அவன் மேன்மையை அனைவரும்;
புரிந்தார் ஜாதகர்மம் ஸ்வயம் ருத்திர மூர்த்தி.

கற்பித்தார் வேதங்கள் நான்கையும் அவனுக்கு;
பெற்றான் சிறுவன் ஆஸ்திகன் என்ற பெயரை!

அறிந்திருந்தான் "காலத்தைக் வென்றவர் கடவுள்!"என.
சிறந்திருந்தான் தன் குரு பக்தியில் ஆஸ்திகன்.

உபதேசம் பெற்றான் ருத்திர மூர்த்தியிடமே;
உடனே சென்றான் புஷ்கர க்ஷேத்திரத்துக்கு.

தவம் செய்தான் அங்கு மூன்று யுகங்களுக்கு;
தவம் செய்தான் மூன்று லக்ஷம் ஆண்டுகள்!

திரும்பினான் ருத்திரருடன் சில காலம் வசிக்க;
திரும்பினான் கச்யபரிடம் மனஸா தேவியுடன்.

தானங்கள் தந்தார் மகிழ்ந்த காச்யபர் - அன்ன
தானங்கள் செய்தார் மனம் மகிழ்ந்த காச்யபர்.

அதிசயித்தனர் ஆஸ்திகன் தேஜஸைக் கண்டவர்!
அங்கேயே தங்கிவிட்டான் ஆஸ்திகன் காச்யபருடன்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


9#48i. ManasA Devi (11)


Some time later, true knowledge arose in them and they both became free from their sorrow. JaratkAru enlightened ManasA and asked her to meditate on the lotus feet of ParamAtmA. He went away to do penance in Pushkara Kshetra.

ManasA felt distressed with sorrow and went to her guru Lord Sankara in KailAsa. Lord Sankara and Devi PArvati consoled her by imparting true knowledge and good advice. Some days later, ManasA
gave birth to a son born as an amsam of Lord NArAyaNA.

When the child was in ManasA's womb, he had listened to the highest knowledge from the mouth of MahAdeva himself! So he was born as a Yogeendra and the Spiritual Teacher of GnAnis.

On his birth, Lord Sankara performed various auspicious ceremonies. Brahmins chanted the Vedas for the welfare of the child. MahAdeva taught the boy four Vedas with their six Angas (limbs) and gave him the Mrityumjaya Mantra. The child was named as Aastika.

Aastika then got the MahA Mantra from Lord Sankara. He went to Pushkara Kshetra
to worship VishNu. He did severe penance for three eons or three lakh divine years.

He returned to KailAsa, to pay his respect to his guru - the great Yogi Lord Sankara. He remained there for some time. Later ManasA went to the hermitage of Kas’yapa, her father, with her son Aastika.

Seeing ManasA with a son, Kashyapa's joy knew no bounds. He gave feast to the brahmins along with gift of gold and gems. Aditi and Diti - the wives of Kashyapa- were very happy to see Aastika. ManasA remained there for a long time with his son.
 
BHAARGAVA PURAANAM - PART 1

#32b. காவேரி நதி

இந்திரன் செய்தான் அரும் தவம் – அவன்
முந்தித் தோன்றினார் விக்கின விநாயகர்.

“பிரானைப் பூஜிக்க வளர்த்தேன் நந்தவனம்;
பெறாது நீரை வாடி நிற்கின்றது நந்தவனம்!

குறுமுனி கமண்டலத்தில் உள்ளது காவேரி
அருள் கூர்ந்து பாயச் செய்யும் அந்நதியை!”

மனம் கனிந்தது விக்கின விநாயகருக்கு.
கணத்தில் பறந்து சென்றார் காகவடிவில்!

அகத்தியர் அருகில் இருந்தது கமண்டலம்;
அகத்தில் அடங்கியிருந்தது காவேரி நதி.

பறந்த காகம் சென்று அமர்ந்து கொண்டது;
சிறந்த நீர் நிரம்பிய அந்தக் கமண்டலத்தில்.

புனிதநீரை மாசு படுத்தி விடுமோ?” என்று
முனிவர் விரட்டினார் மாயக் காக்கையை.

பறந்து சென்று விட்டது காகம் எனினும்
பறக்கும் முன் கவிழ்த்தது கமண்டலத்தை.

விடுதலை பெற்ற காவேரி மகிழ்வோடு
தொடங்கியது ஓடுவதற்கு வெள்ளமாக!

காணவில்லை அக்காகத்தை இப்போது!
கண்டார் அந்தணச் சிறுவன் ஒருவனை!

துரத்தித் துரத்தி ஓடிப் பிடித்து அவன்
சிரத்தில் வைக்க விரும்பினார் குட்டு.

ஓட்டம் ஓடினான், ஆட்டம் கட்டினான்;
மாட்டவில்லை சிறுவன் முனிவரிடம்!

இளைத்துக் களைத்து நின்றார் முனிவர்.
வளைந்த துதிக்கை ஐயனைக் கண்டார்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

#32b. River KAvEri

Indra did penance towards VinAyaka and the lord appeared in front of him. “I did pooja to Lord Siva with flowers from my own garden. Soorapadman has stopped the rainfall. Now the garden is withering without water. Agasthya rushi has river KAvEri stored in his kamaNdalam. Kindly make it flow here as a river! ”

VinAyaka took pity of Indra. He transformed himself into a crow and flew away to Agasthya immediately. The crow saw the water kamaNdalam near sage Agasthya. It went and sat on it.

Sage Agasthya was worried that the crow might defile the holy river water. He drove away the crow. It flew off but managed to topple the kamaNdalam before it took off.

River KAvEri was happy to be released from the small kamaNdalam and started flowing happily as a big river. Agasthya was upset. He wanted to punish the crow. But now the crow was nowhere to be seen. He saw a brahmin boy where the crow was last seen.

He chased the boy and wanted to plant a real hard rap on his head. But the boy was very good in running. He would appear to be very near now and then he would appear to be very far away.

He made the rishi run all over the place chasing him in vain. The sage grew very tired and stood there out of breath. The boy also disappeared and now VinAyaka stood before sage Agasthya.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 4

4#22a. ஸ்ரீ கிருஷ்ண ஜனனம்

“ஜனமேஜயனே கேள் இனிக் கூறுவேன்
ஜனித்து விஷ்ணு கிருஷ்ணன் ஆனதை.

வயிற்றில் நெருப்புடன் காத்திருந்தான் கம்சன்
வரப்போகும் தேவகியின் எட்டாவது சிசுவுக்காக.

“எட்டாவது குழந்தை பிறந்ததும் கொன்றால்
எட்டிச் சென்று விடுவாள் மரண தேவதை!”

பலப்படுத்தினான் கம்சன் கட்டுக் காவலை;
நிலைநிறுத்தினான் தேவகியைக் கண்காணிக்க.

வளர்ந்தான் விஷ்ணு தேவகியின் கர்ப்பத்தில்;
வளர்ந்தான் பலராமன் ரோஹிணி கர்ப்பத்தில்;

வளர்ந்தாள் யோகமாயை யசோதா கர்ப்பத்தில்;
வளர்ந்தது கம்சனின் அச்சம் நாள்தோறும்!

சிராவண மாத கிருஷ்ண பக்ஷ அஷ்டமியில்
ரோஹிணி நக்ஷத்திரத்தில் பிறப்பான் பிள்ளை.

கூறினான் கம்சன் காவலர்களிடம் அன்று,
“புரியுங்கள் கண் இமைக்காது காவல் இன்று.

தாங்குங்கள் உமது எல்லா ஆயுதங்களையும்!
தூங்கினால் உருண்டுவிடும் உமது தலைகள்!

பிறக்கப் போகும் சிசு எனக்கு எமன் ஆவான்.
மறைக்க முயல்வார் அதை நம்மிடமிருந்து.

உறங்குவேன் நான் அதைக் கொன்ற பிறகு;
உறங்கவில்லை எத்தனையோ காலமாக!

தேவை கவனம்! தேவையில்லை சோம்பல்!
தேவகியைக் கண்காணியுங்கள் கவனமாக!”

கிடந்தான் மஞ்சத்தில் உறங்காமல் கம்சன்;
தொடங்கியது பிரசவ வேதனை தேவகிக்கு.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

4#22a. Sri Krishna jananam

Sage Vyaasaa continued ,”Listen to me Janamejaya! I shall tell you about the Sri Krishna jananam now. Kamsan was waiting with the fire of fear constantly burning inside him. He said to himself, ‘I shall kill the eighth child as soon as it is born so that my death will become impossible.’

He strengthened the number of prison guards. Vishnu grew in the womb of Devaki as Krishna. Aadhiseshan grew in the womb of Rohini as Balram. Yoga Maayaa grew in the womb of Yasoda. The fear in Kamsan also grew along with these pregnancies.

Kamsan learned that the eight child of Devaki and Vasudev would be born on Krishna Paksha Ashtami in the month of Sravan under the star RohiNi. He spoke to the prison guards on that day.

“Guard the prison with unblinking eyes. Carry your weapons in readiness. If I catch you sleeping on duty our heads will roll like balls. The baby to be born is my mortal enemy. Efforts will be made to hide the birth or conceal the baby from me.

I can sleep in peace only after killing that child. It is ages since I have had a peaceful night’s sleep. Be on guard when you are on your guarding duty”

He went to bed and spent a sleepless night tossing on it. Meanwhile labour pains started for Devaki.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 9

9#48j. மனஸா தேவி (12)
சாபத்தால் மாண்டு போனான் பரீக்ஷித் மன்னன்;
சர்ப்பதால் மாண்டு போனான் பரீக்ஷித் மன்னன்;

சர்ப்பங்களின் மீது வஞ்சம் தீர்க்க எண்ணிச்
சர்ப்ப யாகம் செய்தான் மகன் ஜனமேஜயன்.

இழுத்து வீழ்த்தின சர்ப்பங்களை மந்திரங்கள்;
இழுத்து வீழ்த்தின யாக குண்ட அக்கினியில்!

இந்திரனிடம் சென்று சரண் புகுந்தான் தக்ஷகன்;
மந்திரம் இழுத்தது தக்ஷகனுடன் இந்திரனையும்!

முறையிட்டனர் தேவர்கள் மனஸா தேவியிடம்;
"குறை தீர்ப்பான் ஆஸ்திகன்" என்றாள் மனஸா.

இந்திரன் பணிந்து வேண்டினான் உயிர் பிச்சை;
வந்தார் ஆஸ்திகர் யாக சாலைக்கு விரைந்து.

முடித்தார் யாகத்தை; கொடுத்தார் வரங்களை;
மடியாமல் தப்பிவிட்டன மிஞ்சிய சர்ப்பங்கள்!

பூஜித்தனர் தேவர்கள், நாகங்கள் மனஸாவை.
பூஜித்தனர் தேவர்கள், நாகங்கள் ஆஸ்திகரை.

உடுத்த வேண்டும் இரு தூய ஆடைகளை - தேவியை
இருத்த வேண்டும் அழகிய இரத்தின சிம்மாசனத்தில்

அபிஷேகம் செய்யவேண்டும்; அலங்கரிக்க வேண்டும்
அளிக்க வேண்டும் தூபம் , தீபம், மலர்கள், சந்தனத்தை.

உபசாரங்களைச் செய்ய வேண்டும் மிக அன்போடு;
உச்சரிக்க வேண்டும் தேவி மந்திரத்தை பக்தியோடு.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


9#48j. ManasA Devi (12)

King Pareekshit died bitten by a serpent due to a curse laid by the son of rushi. King Janamejayan wanted to take revenge on the serpents and performed a grand Sarpa YAgA.

The mantrAs uttered in the yAgA brought down the serpents from wherever they were to the fiery pity of the homa kundam. Takshakan who had bitten King Pareekshit got terrified and took refuge in Indra in Heaven.

The MantrA dragged him along with Indra to the fiery pit. DevAs prayed to ManasA Devi. She promised that her son Astika would save the serpents from total destruction.

Indra prayed to sage AastikA who hurried to the yAgasAlA. Aastika stopped the sarppa yAgA and saved the remaining serpents. The NAgAS, DevAs and Indra praised and worshipped ManasA Devi and Aastika.

A person wishing to worship ManasA Devi must become clean and wear two pieces of clothes. He must give the Devi a gem studded throne to sit on.

He must perform abhishekam and decorates her. He must offer incense, deepam, flowers and sandal paste. He must offer her all the sixteen honours. He must chant the mantrA with devotion and interest.

 
BHAARGAVA PURAANAM - PART 1

#32c. மீண்டும் காவேரி

அந்தணச் சிறுவன் அலைக்கழித்த பின்
விந்தையாக மாறினான் விநாயகராக!

நொந்து நூலானார் அகத்திய முனிவர்!
“இந்த இறைவனையா குட்ட முயன்றேன்?”

தரையில் விழுந்து தலையால் தொழுதார்;
“தவற்றை மன்னிக்க வேண்டும் இறைவா!

காகம் என நினைத்தேன் நான் முதலில்;
கள்ளச் சிறுவன் என நினைத்தேன் நான்;

கணநாதன் நீங்கள் என்பதை என்னால்
கண்டு கொள்ள முடியவில்லை ஐயனே!

இது என்ன விளையாட்டு என்னுடன்?
பொதிகை மலை செல்ல வேண்டிய நதி

பொங்கிப் பிரவாகமாக ஆகிவிட்டதே!
தாங்கள் தரவேண்டும் மீண்டும் காவேரி”

“குறுமுனியே இதோ காவேரி நதியை
மறுபடி தருகிறேன் உம் கமண்டலத்தில்.

இந்திரன் வளர்த்து வருகின்ற அழகிய
நந்தவனம் வாடுகின்றது நீர் இன்றி!

இந்தக் காரணத்துக்காகவே நான்
தந்தேன் நதி நீரை இந்திரனுக்கு!”

கமண்டலம் நிறைந்தது காவேரி நீரால்,
முக மண்டலம் இனிய புன்முறுவலால்.

பல முறை வணங்கி விட்டு பொதிகை
மலை செல்லலானார் அகத்தியர்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#32c. River KAvEri

The brahmin boy who made sage Agasthya chase him all over the place had now transformed into VinAyaka. Agasthya was shocked beyond words! “Is this God the young boy who I was trying so hard to rap?”

He fell on the ground and prayed to the lord, “Pardon me my lord! I thought you were a crow and drove you away. Then I thought you were a brahmin boy and chased you all over the place. Now I see that you are my lord VinAyaka.

What have you done my lord? This river Kaveri was to be taken to POdhigai mountain by me. But now she has started flowing here as a big river. I need KAvEri water!”

VinAyaka told Agasthya, “I shall refill your kamaNdalam with KAvEri water. Indra’s flower garden is withering without water. I let Kaveri flow only on his request.”

He filled the kamaNdalam with KAvEri water. His face was filled with smiles. The sage took leave of VinAyaka and started walking towards POdhigai Mountains.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 4

4#22b. தேவகியின் அறிவுரை

“நெருங்கிவிட்டது என் பிரசவ காலம் – வெளியே
நெருங்கி நிற்கின்றனர் காவலர் ஆயுதங்களுடன்.

எப்பாடு பட்டாகிலும் காக்க வேண்டும் மகனை;
எப்போதோ சொன்னாள் யசோதை என்னிடம்!

பிறந்த குழந்தையை அனுப்பிவிடு என்னிடம்;
பிறந்த குழந்தை தருவேன் வேறொன்று என்று.

எப்படிச் சேர்ப்போம் தெரியவில்லை எனக்கு;
எப்படியாவது சேர்க்க வேண்டும் அவளிடம்.”

பிறந்தது தெய்வக் குழந்தை நள்ளிரவில்;
பிறந்தவனைக் கண்டு கண்ணீர் வடித்தனர்.

இருக்க வேண்டும் அது ஆனந்த பாஷ்பமாக
இருந்தது அது துயரத்தின் வெளிப்பாடாக.

ஒலித்தது வானொலி இருவருக்கு மட்டும்,
“கலங்க வேண்டாம் உங்கள் மகனை எண்ணி!

உறங்குகின்றர் காவலர் என் வயப்பட்டு;
திறந்து கிடக்கின்றன பூட்டிய கதவுகள்;

எடுத்துச் செல்வாய் கோகுலத்துக்கு இவனை
கொடுத்து விடு இவனை யசோதையிடம்.

கொடுப்பாள் யசோதை பெண் குழந்தைய;
எடுத்து வந்து விடு அவளை இங்கு!” எனவும்,

வாரி எடுத்தான் வசுதேவன் தன் மகனை;
கூறியபடித் திறந்திருந்தன சிறைக் கதவுகள்

விரைந்து வெளியேறினான் காவலைக் கடந்து;
கரை புரண்டு ஓடியது யமுனையில் வெள்ளம்.

தயங்கினான் கடந்து செல்வது எப்படி என்று.
தயக்கம் மறைந்தது நீர் வடிந்து குறைந்ததும்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


4#22b. Devaki’s suggestion

Devaki told Vasudev, “The baby will be born soon. The prison is under tight scrutiny. The guards are armed and dense. We have to save our son somehow.

Yasoda had told me long ago to send our new born son over to her and bring the infant she will give us in stead. But how to get out of the prison and walk past the armed guards is baffling”

The divine child was born at midnight. Devaki and Vasudev shed copious tears. It must have been tears of joy but they were just tears of sorrow. Just then they heard an asareeri. It said,

“Do not worry about your son. The guards of the prison are in deep slumber. The prison doors and the other gates all lay open now. Take your child to Gokulam and give it to Yasoda. Bring back the baby she will give you in exchange.”

Vasudev and Devaki felt relieved but they had to hurry now. Vasudev took his son and made haste. All the doors lay open and all the guards lay asleep.

But the water in river Yamuna had swollen to a dangerous level. Vasedev was baffled but the water drained off and became shallow very soon.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 9

9#48k. மனஸா தேவி (13)

இந்திரனின் மனஸா தேவி ஸ்துதி

"துதிக்கின்றேன் பதிவிரதைகளில் சிறந்த உன்னை!
துதிக்கும் வல்லமையும் இல்லை என்னிடம் தேவீ !

விவரிக்கின்றது வேதம் உன் லக்ஷண, குணங்களை!
விவரிக்கும் வல்லமையும் இல்லை என்னிடம் தேவீ !

சுத்த சத்துவ ஸ்வரூபிணி நீயே ஆவாய்;
நீத்துள்ளாய் கோபத்தை, ஹிம்சையை.

யாசித்தார் ஜரத்காரு உன்னை உன் மேன்மைக்காக;
பூஜித்தார் மாந்தர் உன்னைத் தாயின் ஸ்வரூபமாக.

தயா ரூபிணியாகிய நீ எனக்குச் சகோதரி;
தாயும் ஆவாய் எனக்கு நீ க்ஷாம ரூபமாக.

காத்தாய் என் புத்திர, களத்ராதியரை நீயே !
காத்தாய் பரிவோடு எங்கள் துயர் துடைத்து!

அன்னை நீயே சகல உலகங்களுக்கும் - எனவே
உன்னைப் பூஜிக்க வேண்டும் இந்த தினங்களில்.

ஆடி மாத சங்கிரமணத்தில் அல்லது
ஆடி மாத பஞ்சமியன்று அல்லது

மாத முடிவில் அல்லது தினம் தோறும்
தீது ஏதும் அணுகாமல் வாழ்வதற்கு!"

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


9#48k. ManasA Devi Stuti by Indra (13)



"O Devi! You stand high among the chaste women. You are higher than the highest. You are the most supreme. How can I praise you? Vedas say that hymns describe the greatness of a God or Goddess. But I am unable to describe your superior qualities.

You are of the nature of Suddha Sattva - unmixed with the other guNAs. You are free from anger and malice. I now worship You. You are an object of worship just as my mother Aditi is.

You are my merciful sister. You are a mother full of forgiveness. It is through your help that my life, my wife and my sons have been saved.

Those who worship you with devotion on the SankrAnti day of the month of Aashada or on the NAga Panchami day, or on the SankrAnti day of every month or on every day to live a life free free from fears and dangers."
 
Bhaargava puranam - part 2

#33a. சந்ததிகள்

பிரளயத்தின் முடிவில் தோற்றுவித்தார்,
பிரமதேவன் ஏழு மானசீக புத்திரர்களை.

ஆவார் காச்யபர் அவ்வெழுவரில் ஒருவர்,
ஆயிரம் ஆண்டுகள் அரும் தவம் புரிந்தார்.

முத்தாரம் குலுங்க, மூன்றாம் பிறை துலங்க,
ரத்தின கிரீடத்துடன் காட்சி தந்தான் ஐயன்.

“உலக சிருஷ்டியில் உதவுமாறு எந்தை
உத்தர விட்டுள்ளார் ஐயனே எனக்கு!

அனுகிரகிக்க வேண்டும் அச்சக்தியை
அவதரிக்கவேண்டும் திருக் குமாரனாக”

விரும்பும் வரங்களை அளித்த பின்னர்
விநாயகர் மறைந்தருளினார் முன்போல்.

பத்தினியர் பதின்மூவர் காச்யபருக்கு.
பத்தினியருடன் இல்லறம் பேணினார்;

கந்தருவர், தேவர், சித்தர், சாரணர்,
கின்னரர், யக்ஷர், தானவர், மானவர்,

அத்தனை ஜீவராசிகளும் உருவாயினர்
அத்தனை வேறு வேறு பத்தினிகளிடம்.

விநாயக மந்திரத்தைக் கற்ற பின்னர்
விநாயகர் மீது செய்தனர் அரும் தவம்.

அவரவர் கற்பனைக்கு ஏற்றவண்ணம்
அன்புடன் காட்சி தந்தார் விநாயகர்.

துதித்துப் போற்றினர் துதிக்கை ஐயனை;
துதிகளால் மகிழ்ந்தார் துதிக்கை ஐயன்.

அருளுவான் ஐயன் ஐஸ்வரியங்களை
இருபத்தொரு முறை துதிப்பவர்களுக்கு.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

#33a. The lineage

A the end of PraLaya, Brahma created seven sons out of his mind. One of the seven was KAsyapa. He did penance on VinyAka for one thousand years.

VinAyaka appeared with pearl strings decorating his chest and the crescent moon on his head. He was wearing a crown made of gems. KAsyapa prayed to VinAyaka,

” My father has ordered me to assist him in the creation. Please give me the power for creating. Also You must be born as my son” VinAyaka granted these boons and disappeared.

KAsyapa had thirteen wives. He created the various races of beings out of them. Gandharva, DEvA, Siddha, ChAraNa, Kinnara, Yaksha, DAnavaa and MAnavaa were all created out of his different wives.

They all learned VinAyaka mantra and did penance on him. VinAyaka appeared to them the way they had imagined him. They all praised him with various names.

VinAyaka was very pleased by those words. He blessed that whoever chants those words twenty one times would get all the eight aiswaryam in the world.
 
BHAARGAVA PURAANAM - PART 2

#33b. துதி மாலை

துதித்தனர் ஒரு வகையினர் ‘சுமுகர்’ என்று.
துதித்தனர் ஒரு வகையினர் ‘ஏகதந்தர்’ என்று.

துதித்தனர் ஒரு வகையினர் ‘கபிலர்’ என்று.
துதித்தனர் ஒரு வகையினர் ‘கஜகர்ணகர்’ என்று.

துதித்தனர் ஒரு வகையினர் ‘லம்போதரர்’ என்று.
துதித்தனர் ஒரு வகையினர் ‘விகடர்’ என்று.

துதித்தனர் ஒரு வகையினர் ‘விக்னராஜர்’ என்று.
துதித்தனர் ஒரு வகையினர் ‘கணாதிபர்’ என்று.

துதித்தனர் ஒரு வகையினர் ‘தூமகேது’ என்று.
துதித்தனர் ஒரு வகையினர் ‘கணாத்யக்ஷர்’ என்று.

துதித்தனர் ஒரு வகையினர் ‘பாலசந்த்ரர்’ என்று.
துதித்தனர் ஒரு வகையினர் ‘கஜானனர்’ என்று.

துதித்தனர் ஒரு வகையினர் ‘வக்ரதுண்டர்’ என்று.
துதித்தனர் ஒரு வகையினர் ‘சூர்ப்பகர்ணர்’ என்று.

துதித்தனர் ஒரு வகையினர் ‘ஹேரம்பர்’ என்று.
துதித்தனர் ஒரு வகையினர் 'ஸ்கந்தபூர்வஜர்' என்று.

ஆயிரம் நாமங்களில் இவைகள் அடங்கும்
ஆயிரம் நாமங்கள் இவற்றில் அடங்கும்


தோத்திரம் செய்தால் விடியற் காலையில்
தேடி வந்து சேரும் ஒரு கோடிப் புண்ணியம்

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


#33b. Stuthi MAlA

Of the various species created each one called VinAyaka with a special name.The sixteen names called by the different species are

Sumukhar, Eka dantar, Kapilar, Gajakarnakar,

LambOdarar, Vikatar, VignarAjar, GaNAdhipar,

DhoomakEtu, GaNAdhyakshar, BAla chandrar, GajAnanar,

Vakra thuNdar, Soorppa karNar, HErambar and Skanda poorvajar.

These form a part of VinAyaka sahasranAma.
These names contain the essence of the SahasrtanAma.

Whoever chants these names twenty one times at dawn
will be blessed with all the eight aiswaryams in this world.
 
Last edited:
DEVI BHAAGAVATAM - SKANDA 4

4#22c. யோக மாயா (1)

அடைந்தான் நந்தகோபன் வீட்டைக் காரிருளில்;
இடையர் அறியவில்லை வசுதேவன் வருகையை.

பெற்றெடுத்தாள் யசோதை பெண் குழந்தையை;
பெற்ற பெண்ணைத் தந்துவிட்டாள் அவனுக்கு!

வாங்கிக் கொண்டான் வசுதேவன் பெண்ணை;
தூங்கும் காவலரை எண்ணி விரைந்தான்;

பெண் குழந்தையைத் தந்தான் தேவகியிடம்.
எண்ணினாள் நடக்கப் போவது என்ன என்று!

வீறிட்டு அழுதது பெண் குழந்தை – அதனால்
விழித்துக் கொண்டனர் உறங்கிய காவலர்.

விரைந்தனர் கம்சனிடம் செய்தி சொல்ல.
விரைந்தான் கம்சனும் சிசுவைக் கொல்ல.

“எட்டாவது குழந்தை விஷ்ணுவின் அம்சம்?
எடுத்துத் தாருங்கள் என்னிடம்!” என்றதும்,

அழுகின்ற முகத்தோடு கொடுத்தான் வசுதேவன்
அழுகின்ற பெண் குழந்தையைக் கம்சனிடம்.

திடுக்கிட்டான் கம்சன் பெண் சிசுவைக் கண்டு;
‘அடுக்குமா இது? அசரீரி வாக்கும் பொய்க்குமா?

நாரதரும் கூறினார் எட்டாவது மகன் குறித்து!
நாரதர் வாக்குப் பொய்ப்பது புதிர் அல்லவோ?

மாற்றி இருப்பார்களோ குழந்தையை?
மாற்ற முடியுமா கட்டுக் காவலை மீறி?

பெண்ணோ ஆணோ அழித்து அடைவேன் அமைதி.’
கண்களை மூடிக் கொண்டு அறைந்தான் பாறை மீது!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


4#22c. Yoga Maayaa (1)

Vasudev reached Gokulam when the night was pitch dark. No one knew about his visit. Yasoda had delivered a baby girl. She gave that girl to Vasudev and took away his son.

Vasudev remembered the prison guards in deep slumber and hurried back to make sure that they did not see him return with the baby girl. Devaki became anxious thinking about the future of the female child in the hands of Kamsa.

The baby cried loudly waking up all the prison guards. They ran to inform Kamsa that the baby had arrived. Kamsa rushed to the prison to put an end to the new born infant. He mocked at Devaki and Vasudev and said,

“I believe this child is the amsam of Vishnu. Nothing can make me happier than to get rid of this Vishnu once for all.” He took the baby from the hands of Vasudev who was shedding tears.

Kamsa was shocked to find that the infant was a girl and not a boy as was predicted. “Can the prediction of an asareeri prove to be wrong? Narada also spoke about the eighth son and not the eighth daughter. May be the baby was exchanged secretly. But exchanging the child secretly is impossible with so many armed prison guards on duty.”

He thought why bother about whether the baby was a male of a female – as long as he could get rid of it promptly. He held he baby by her legs and dashed her against a rock.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 9

9#48L மனஸா தேவி (14)

"தருவாய் புத்திர, பௌத்திரர்களை நீ!
தருவாய் பொன், பொருள், செல்வத்தை!

தருவாய் புகழ், ஞானம், நற்குணங்களை.
தருவாய் மேன்மை, தன்மை, நன்மைகளை.

இருப்பார் வறியவராக உன்னை நிந்திப்பவர்;
இருப்பார் அஞ்சியவராக உன்னை நிந்திப்பவர்.

படைத்தனர் உன்னை ஜரத்காரு முனிவருக்காக;
படைத்தனர் லக்ஷ்மி விஷ்ணுவுக்கு என்பது போல்.

மனஸா தேவியானாய் சக்தியின் அம்சத்தால்;
மனஸா தேவியானாய் எங்களைக் காப்பதற்கு.

திகழ்கின்றாய் தேவீ நீ ஒரு சித்த யோகினியாக;
திகழ்கின்றாய் அனைவரும் போற்றும் வண்ணம்.

உண்மை வடிவானவள் நீ என்று துதிப்பவர்கள்
உண்மையில் வந்தடைவர் உன்னிடமே தேவீ !"

போற்றினான் இந்திரன் தேவியை இத் துதிகளால்
ஊற்றினான் சிறந்த பாலை தேவிக்கு அபிஷேகமாக.

உபதேசித்தாள் தேவி அபூர்வ ஞானத்தை - இதை
உச்சரிப்பவனுக்கு இல்லை இனிமேல் விஷ பயம்.

அமுதம் அகும் கொடிய நஞ்சும் - இந்த மந்திரம்
அளிக்கும் சித்தியை ஐந்து லக்ஷம் ஜெபித்தால்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

9#49 L. ManasA Devi (14)

"Those who worship you get their sons and grandsons. Their wealth and granary increase and they become more famous, more learned and more renowned. If anybody does not worship you out of ignorance, he will remain poor and live in fear.

JaratkAru was born as an amsam of Lord NArAyaNA. Kasyapa has created you by his power of penance and tejas only to preserve us. You are his mental creation and hence your name is ManasA.

You yourself have become a Siddha Yogini in this world by virtue of your mental power. You are widely known as ManasA Devi and worshipped by all. You are of the nature of Truth. He certainly reaches you - who always thinks of you as of the nature of truth.”

Indra praised his sister ManasA Devi and received from her the desired boons. Then Indra went back to his own abode.
 
BHAARGAVA PURAANAM - PART2

#34a. அபிஜித்

புத்திரன் இன்றி வருந்தினான் அபிஜித்;
பத்தினி குணமதியுடன் போனான் கானகம்.

தவம் செய்யும் முன் ஒப்படைத்தான் நாட்டை,
தர்மம் தவறாத ஓர் அமைச்சர்கள் குழுவிடம்.

ஆசிரமம் ஒன்றைக் கண்டான் கானகத்தில்;
வாசம் செய்துவந்தார் அதில் வைசம்பாயனர்.

“அரசனே! நீர் யார்? உம் தேவை என்ன?”
தாரையாகக் கண்ணீர் விட்டான் மன்னன்!

அறிவுக் கண்களால் கண்டறிந்தார் அரசனின்
குறை என்ன என்பதை வைசம்பாயன முனிவர்.

“சத் புத்திரன் பிறப்பான்!” ஆசீர்வதித்தார் முனிவர்.
உத்தம முனிவரைத் தொழுதான் மன்னன் அபிஜித்.

“பெரியோர் வாக்கு பலிக்கும் உண்மையே!
சரியான வழிமுறைகளை அருளுவீர் ஐயா!”

பஞ்சாக்ஷர மந்திரத்தை அளித்தார் முனிவர்;
தஞ்சம் அடைந்த அபிஜித்திடம் சொன்னார்;

“நாடிச் செல் கடலில் நதியின் சங்கமத்தை!
நன்மை தரும் ஒரு வனம் உள்ளது மேற்கே!

நான்கு மாதங்கள் மனைவியுடன் தங்கி
நன்கு ஜபித்து யாகங்களைச் செய்வாய்!

பத்தினியுடன் நகர் திரும்புவாய் அதன் பின்.
உத்தமான புத்திரன் பிறப்பான் சீக்கிரத்தில்!”

வனத்துக்குச் சென்றான் அபிஜித் ராஜன்;
குணவதி மனைவி குணமதியுடன் உடனே!

பிரம்மனும் தவம் புரிந்து இருந்தான்;
குறிப்பிட்ட அந்த வனத்தில் அப்போது!

அரசனும், பிரம்மனும் தவம் புரிந்திருக்க
அரசியும், வாணியும் செய்தனர் பணிவிடை.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#34a. Abhijit

King Abhijit was sad since he did not have any children. He went to the forest with his wife GuNamati after entrusting the rule of his kingdom to a group of honest ministers.

They saw an ashram in the forest. Sage VaisampAyana lived there. The king went to pay his respect to the sage.

When the sage asked him “Oh! King who are you and what do you seek here?” he shed copious tears without replying.

The sage saw the truth with his jnAna drushti and blessed the king “You will get a good son soon.”

The king asked the sage, “Kindly tell me the right procedure to be followed to be blessed with a son.”

The sage taught him the PanchAkshara. He told the king, “Go to the confluence of this river and the sea. You will find a beautiful forest to its west. It is the ideal place for doing yAga, yagna and tapas.

Stay there for four months with your queen. Do the yAga with proper mantra japam. You may return to your kingdom after four months. Very soon the Queen will be blessed with a son.”

Abhijit and GuNamati went to that forest. Brahma was also doing penance there at that time.

The king Abhijit and Brahma would spend time in tapas. The queen GuNamati and Vaani Devi would attend to the needs of the husband.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 4

4#22d. யோக மாயை (2)

நழுவியது குழந்தை கம்சன் பிடியிலிருந்து;
எழும்பியது விண்ணில் தேவியின் வடிவில்!

எட்டுக் கரங்களிலும் விவித ஆயுதங்கள் ஏந்தி,
எட்டாத உயரத்தில் ஒளி மயமாக விண்ணில்!

திகைத்து நின்றனர் குழுமி இருந்தவர்கள்;
நகைக்கும் குரலில் பேசினாள் யோகமாயை.

“கொல்லத் துணிந்தாயா என்னையே கம்சா?
கொல்வதால் வெல்வாயா உன் மரணத்தை?

கொல்லப்படுபவள் அல்ல நான் அறிந்து கொள்!
கொல்லப் படுவாய் நீ வேறு ஒரு சிறுவனால்!

உன்னைக் கொல்ல உருவானவன் உள்ளான்
உன்னால் அணுக முடியாத இடத்தில்!” என்றாள்.

மறைந்து விட்டாள் விண்ணில் இருந்த தேவி;
உறைந்து விட்டாள் ஆலயங்களில் தெய்வமாக!

திகைத்தான் கம்சன் அவள் மொழி கேட்டு !
அழைத்தான் அசுர குல வீரர்களை உடனே!

“நேற்றுப் பிறந்த ஆண் சிசுக்களை எல்லாம்
சற்றும் தயவின்றிக் கொன்று குவியுங்கள்!”

விரைந்தனர் அசுர வீரர் எண்திசைகளிலும்
மறைந்தனர் கண் பார்வையிலிருந்து உடனே.

தனியிடம் சென்று அஞ்சி நடுங்கிய கம்சன்
இனிச் செய்வது என்னவென்று சிந்தித்தான்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

4#22d. Yoga Maayaa (2)

The baby girl slipped away from Kamsa’s hands. She rose high in the sky and shone brilliantly in the form of Devi Yoga Maayaa – wielding various weapons in her eight arms. The people gathered there stood transfixed with shock and fear.

Devi spoke in a sweet voice and in a mocking tone to Kamsa. “So you have dared to kill me. But will your killing me save you from your own death oh Kamsa!

I am not someone who could be killed by anyone. You will be killed by a boy who is born to put an end to you. He is safe and sound in a place far away from here – which you may never be able to find out”

She disappeared from the sky and ever since resides in all the temples in the various forms of Shakti Devi.

Kamsa was shocked beyond words. He gathered all the mighty auras immediately. He ordered them, “Go forth and kill mercilessly all the male children born yesterday.” The asuras spread out in all the eight directions immediately.

Kamsa went to a lonely spot and shuddered with fear thinking about his mortal enemy who managed to escape from his clutches. He strained his brain to come up with scheme of future actions.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 9

9#49a . சுரபி (1)
ஒருநாள் விளையாடிக் கொண்டிருந்தான் கிருஷ்ணன்
பிருந்த வனத்தில், கோபியர் புடை, சூழ ராதையுடன்.

விரும்பினான் பால் அருந்துவதற்கு கிருஷ்ணன்;
உருவாக்கினான் சுரபியைக் கன்று மனோரதத்துடன்.

இருந்தது சுரபியின் பால் அமுதம் போலச் சுவையாக,
பிறப்பு, இறப்பு, மூப்பு, பிணிகளை அழிக்கும் திறனுடன்!

கறந்தான் பாலைப் புதிய பாத்திரத்தில் ஸ்ரீ தாமா;
கறந்த பாலைப் பருகினான் கிருஷ்ணன் ஆவலாக.

உடைந்தது அந்தப் பாத்திரம் சுக்கு நூறாக - பால்
விரிந்து பரந்தது குளமாக நூறு யோசனை தூரம்.

பாற்குளம் எனப்படும் க்ஷீத் சரஸ் இதுவே - இது
பார்ப்போர் கண்ணைப் பறிக்கும் ரத்தின மயமாக.

விளையாடும் இடமானது இது கோபியர்களுக்கு;
விளையாடும் இடமானது ராதா, கிருஷ்ணருக்கு!

பிறந்தனர் லக்ஷம் கோடி கோபர்கள், பசுக்கள்
சிறந்த காமதேனுவின் ரோமங்களில் இருந்து.

பூஜித்தனர் மக்கள் அனைவருமே காமதேனுவை
பூஜைக்கு உகந்த நேரம் மாலை; பொருள் தீபம்!

மந்திரம் ஆகும் "ஓம் சுரப்யை நம:" என்பது;
மந்திரம் சித்திக்கும் ஒரு லக்ஷம் ஜெபித்தால்.

கற்பகத் தரு போன்ற அற்புத மந்திரம் - இது
கற்பனை செய்த பொருட்களை வழங்கிடும்!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

9#49a. Surabhi (1)


Devi Surabhi sprang in Goloka. She was the first of the cows. From Her all the other cows came into being. She is the Presiding Deity of the cows.

One day the Lord KrishNA was with RAdhA surrounded by the Gopis in Brindavan. Suddenly He wanted drink cow's milk. He created Devi Surabhi and her calf, from His left side.

The calf of Surabhi Manoratham is nothing but Her wishes personified. SridAma - KrishnA's friend - milked Surabhi in a new earthen jar. The milk was sweeter than even nectar and it had the power to prevent the cycle of birth and death!

KrishNA drank the milk eagerly. The milk pot dropped down, broke into a thousand pieces and created a big tank of milk! The tank was known as Ksheeth Saras and it was decorated with precious gems. It became the favorite playing spot of the gopis as well RAdhA and krishNa

From the hair follicles of Surabhi there appeared one lakh crore cows which can yield according to one’s desires. Every Gopa who lived in Goloka got one KAmadhenu and every house had one. Their calves could not be counted! Slowly the whole universe was filled with cows. This is the origin of the Creation of cows.

Surabhi was first worshiped by KrishNA. So she is honored everywhere.On the day next the Diwali night Surabhi was worshipped by KrishNA.
“Om Surabhyai namah,” is the principal six-lettered mantra of Surabhi.

If anybody repeats this mantra one lakh times, he will gain siddhi in this mantra. This is like Kalpa Vruksha the tree yielding all desires to the devotees.

 
BHAARGAVA PURANAM - PART 2

#34b. மோஹம்

சரஸ்வதி தேவிக்குக் காமம் மேலிட,
சயனித்தாள் சென்று பிரமன் மடியில்!

நிஷ்டை கலைந்து கண்கள் திறந்தன;
நிலைமையைக் கண்டவுடன் மோஹம்!

சல்லாபம் செய்ய விரும்பினான் பிரமன்;
சரஸ்வதிதேவி சம்மதம் தரவில்லை.

“காம வசப்பட்டது உண்மை எனினும்,
காமத்துக்கு நேரமல்ல இந்த வேளை!

பங்கம் நேரிடும்; பாதகம் விளையும்;
தங்கள் தவம் தொடரட்டும் சுவாமி!”என

“மறுக்காதே என் விருப்பத்தை தேவி!
நிறைவேற்றுவதுன் கடமையல்லவா?”என

“உம் தவத்துக்கு இடைஞ்சல் செய்வதற்கு
உடன்படவே மாட்டேன் ஸ்வாமி!” என்றாள்.

விடாமல் நெருங்கிச் சென்றார் பிரமன்;
விலகி விலகிச் சென்றாள் வாணிதேவி.

இருவரும் சென்று அடைந்தனர் அங்கே
இந்திராதி தேவர்கள் இருக்கும் இடத்தை.

விரைந்து வந்த சரஸ்வதி தேவியையும்,
துரத்திக் கொண்டுவந்த பிரம்மனையும்,

இந்திரன் வரவேற்றான் உபசரித்து நன்கு!
“வந்த காரணம் என்ன?” என வினவினான்.

மௌனம் சாதித்தனர் பிரமனும், வாணியும்.
மௌனமே அங்கு மொழியாகிப் பேசியது.

புரிந்து கொண்டனர் நிலைமையைத் தேவர்கள்,
“அரிது காமத்தை வெல்வது!” என நினைத்தனர்.

கணத்தில் சுதாரித்துக் கொண்டான் பிரமன்!
‘கண நேர சுகத்தினால் எத்தனை தவம் பாழ்?’

நீராடிவிட்டுத் தவத்தை செய்தான் பிரமன்;
நீரில் கலந்துவிட்டது வெளிப்பட்ட தேஜஸ்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#34b. The desire

One day Saraswathi Devi was filled with desire. She went and lied down on Brahma’s lap. Brahma’s concentration was disturbed. He opened his eyes. On seeing Saraswathi Devi so close to him, his desire was also kindled.

He wanted to become intimate with her but Devi would agree to it. “I was overcome by desire. But this is not the time for enjoying. I will not allow your penance to be disturbed because of me.”

“You are my wife and it is your duty to make me happy. Brahma went nearer to Devi. She said again, “I will not be the cause of disturbing your penance”. She started running away from him and he started chasing Devi.

Soon they reached the place where Indra and the other Deva were sitting. Indra welcomed both of them and asked about the purpose of their visit. Both Brahma and Saraswathi Devi kept quiet and sat in silence.

Form their silence the Deva and Indra understood what had happened between Brahma and Devi. They thought to themselves. “It is impossible to overcome desire even for the gods”

Brahma managed to control desire. He said to himself. “I would have wasted so much of my penance just by indulging for a few minutes.” He took bath and went back to his penance, but the thejas which emerged from him got mixed with the water there.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 4

4#23a. கிருஷ்ணன் (1)

கவலைப் பட்டு வருந்திய கம்சனின் மனக்
கவலை அதிகரித்தது ஒற்றர் செய்தி கேட்டு.

“நந்த கோபன் இல்லத்தில் இன்று – ஆ
நந்த வைபோகம் நடந்தது இனிதாக!

ஆண்மகவு பிறந்ததாம் நந்தன் மனைவிக்கு!
காண்பதரிது இத்தகைய கொண்டாட்டத்தை!”

நாரதர் கூறியிருந்தார் முன்பே கம்சனிடம்,
நந்த கிராமத்தில் தேவர்கள் அவதரித்ததை.

அனுப்பினான் கண்ணனைக் கொல்ல அசுரரை.
அனுப்பினான் கண்ணன் அவர்களை எமனுலகு.

பால் கொடுத்துக் கொல்லச் சென்ற பூதகியோ
பாலுடன் பறி கொடுத்தாள் தன்னுயிரையும்!

தேனுகன், பிரலம்பன், பகன், வத்சன் என்றுத்
தேடிச் சென்ற அசுரர் திரும்பவே இல்லை !

பலராமன் சளைத்தவன் அல்ல கண்ணனுக்கு!
பலவான்; கொலைத் தொழிலில் வல்லவன்.

மரணம் நெருங்குகிறதோ என்றஞ்சினான் கம்சன்
மரணம் விளைவிக்க வேண்டும் அவர்களுக்கே!

வில்யாகம் என்று வரவழைத்தான் இருவரையும்
கொல்வதற்குச் செய்தான் ஏற்பாடுகளைப் பலமாக.

அனுப்பினான் உத்தமர் அக்ரூரரைத் தன் தூதாக;
அனுப்பினான் நந்தன் அக்ரூருடன் சிறுவர்களை!

சென்றனர் யாகசாலை சகோதரர் இருவரும்,
துண்டாக்கினர் யாகவில்லை சிறார் இருவரும்.

கொல்ல வந்தது யானை குவலையாபீடம்.
கொல்லப்பட்டது மதயானை சிறார்களால்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


4#23a. Krishna (1)

Kamsa was very worried and the news brought to him by his spies made him even more worried. They said, “Nandagopan’s wife has been blessed with a baby boy. The whole village is celebrating the new arrival in a very grand manner ”

Naarada had already told Kamsa that the Devaas were taking birth in the Nandagraam with many names and in many forms. He sent his mighty asuraas to kill Krishna growing up as the son of Yasoda and Nandagopan.

But in stead, Krishna killed all those asuraas who came to kill him. Putana went to feed Krishna with her poisoned milk but Krishna drank her life force along with her milk! Dhenuka, Pralamba, Baga, Vatsa were all killed by Krishna and Balram quite playfully.

Kamsa became more and more worried as the days passed by. He decided to invite Krishna and Balram for a Dhanur yaagam and get them killed by treachery.

Akroora was sent to bring Krishna and Balram for the Dhanur yaagam. Nandagopan sent the two lads with Akroora. The two brothers Balram and Krishna went to the yaaga saalaa.

They broke the yaaga Dhanus into two parts. Kuvalayaapeedam – a mad elephant – came charging on to them but Krishna killed the mountainous elephant quite playfully.
 
FOR ADDITIONAL READING......

ஒரு வழிப்பாதை





ஒரு வழிப்பாதை, இரு வழிப்பாதை,
புதியதன்று, மிக மிகப் பழையதே!
“எல்லா பாதையும் செல்லும் ரோம் நகர்”,
என்பர் முன்பு சரித்திரவாணர்.

எல்லாப் பாதையும் செல்லும் கண்ணனிடம்,
எந்த பாதையும் திரும்பாது அங்கிருந்து!
தாய் போல் வந்த மாயப் பூதனையும்,
தன் உயிர் விட்டாள், திரும்பவில்லை!

வேகத் திகிரியாகச் சுழன்று வந்தவன்,
தாமரைத் தாள் பட்டுச் சூரணம் ஆனான்!
புயல் போல் கண்ணனைத் தூக்கிப் பறந்தவன்,
புழுதிக் குவியலாய்க் கீழே விழுந்தான்!

வந்தான் வத்சாசுரன் அழகிய கன்றாய்!
வந்தவன் அசுரன் என்று அறிந்ததும்,
கால்களைப் பற்றி, சுழற்றி, எறிந்து,
காலனாய் மாறினான், கார் வண்ணன்!

வானளாவும் ஒரு பறவை உருவுடன்,
வஞ்சித்து நின்றான் பகாசுரன் – அவன்
வாயினைப் பிளந்து, வானுலுகுக்கு
வழி நடச் செய்தான் நம் கண்ணன்!

மலை அளவு உயர்ந்த மலைப்பாம்பாக,
மண்ணில் கிடந்தான் கோர அகாசுரன்.
மயங்கி வாயினுள் நுழைந்த சிறுவரை,
மனம் கனிந்து காத்தான், மாயக் கண்ணன்!

வந்த வேகத்தில் மறைந்து போயினர்,
தேனுகன், பிரலம்பன், கேசி, அரிஷ்டன்!
வந்தவர்களைக் காணோம் என்று,
தேடினாலும் காண முடியாது எங்குமே!

வைரிகள் தோற்று, வெந்து, மடிந்து,
ஒரு வழி பாதையில் போவது போல,
பிரியர்கள் கண்ணனைப் பிரிய முடியாமல்,
ஒரு வழி பாதையில் செல்வர் அவனிடம்!

“கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்”,
என்று இறைவனைப் புகழ்வது போலச்
“சென்றவர் மீண்டிலர், மீள்பவர் சென்றிலர்”,
என்ற இதுவும் ஒரு வழி பாதையே!

வாழ்க வளமுடன்.
விசாலாக்ஷி ரமணி

https://visalramani.wordpress.com/about/தலைவனும்-நாமும்/இதுவும்-ஒரு-வழிப்பாதையே/
 
[h=1]பக்தியும், பகைமையும்[/h]
பக்தியும், பகைமையும் மாறுபட்டாலும்,
முக்தியை அளிப்பதில், அவை சரிசமமே.

அவை இரண்டும் எதிர்ப் பதங்களே – ஆயினும்
அவை ஒரே நாணயத்தின் இரு பக்கங்களே.

அதீத விருப்பம் பக்தியில் முடியும்;
அதீத வெறுப்போ பகையில் முடியும்!

கண்ணன் மேல் கொண்ட பக்தி பெரியதா?
கண்ணன் மேல் கொண்ட பகைமை பெரியதா?

நூறு பிறவியில் கொள்ளும் பக்தியும்,
மூன்று பிறவிகளில் கொள்ளும் த்வேஷமும்,

சரிசமம் ஆகும் தராசுத் தட்டில்;
சரிதான் மாயக் கண்ணன் கணக்கு.

நாம் விரும்புபவர்களை, அவ்வப்போது
நாம் விருப்புடன் கொஞ்சம் நினைப்போம்.

நாம் வெறுப்பவர்களையோ, நெருப்பென
நம் நினைவில் இடைவிடாது கொள்வோம்!

எப்படி நினைத்தால் என்ன கண்ணனுக்கு?
எத்தனை நேரம் நினைக்கிறோம் என்றே,

கணக்கு வைத்துக்கொண்டு மனம் கனிவான்;
கணக்கு முடிந்தவுடன், கருணை பொழிவான்.

பக்தியும், அன்பும் அடைவிப்பது போன்றே,
பயமும், பீதியும் அவனை அடைவிக்கும்.

“எப்படியோ என்னை நினைத்தாலே போதும்”,
என்றே கண்ணன் எண்ணுகின்றான் போலும்!

விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்டவன்
வேறு எப்படித்தான் எண்ண முடியும்?

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.

https://visalramani.wordpress.com/about/தலைவனும்-நாமும்/பக்தியும்-பகைமையும்/
 
[h=1]கண்ணன் அருள்[/h]
கண்ணன் என்றால் கருணையும், கனிவும்.
காண்போர்க்கெல்லாம் இனியவன் அவனே.
சாம, தான, பேத, தண்டம் என்று,
சாதுரியமாக அருள் புரிபவனே.

பக்தர்களைக் கொண்டருளும் அவன்,
பகைவர்களைக் கொன்றருள்வான்.
பார்ப்பதற்கு இரண்டும் வேறுபட்டாலும்,
பயனளவில் இவ்விரண்டும் ஒன்றே!

கொண்டாலும், கொன்றாலும், அவன்
கொண்டல் வண்ண மேனியுடன்,
கூடும் நற்பயன் தானே கூடிவரும்.
நாடும் நற்பயன் வேறென்ன உண்டு?

அன்று மடுவில் பொற்றாமரை பறித்து,
குன்று குடையாய் எடுத்த கோமானுக்கு,
கொடுக்க எண்ணிய யானை கஜேந்தரனை
கடித்து, துடிக்கச் செய்த முதலையை,

கருடாரூடனாய் விரைந்து வந்து, அந்தக்
கரியினைக் காத்து, முதலையைக் கொன்று,
கொண்டருளியும், கொன்றருளியும் அவர்க்கு
விண்ணுலகு அளித்தான், வேணு கோபாலன்.

வஞ்சனை செய்து கண்ணனை அழிக்க,
கஞ்சன் என்போன் மனப்பால் குடித்து,
குவலயா பீடம் என்ற குன்று நிகர்த்த
குவலயம் காணா மதக் களிற்றினை,

கொண்டு முடித்திட எண்ணம் கொண்டான்.
கொன்று முடித்தான் கண்ணன் களிற்றினை!
உயிருடன் உள்ள யானையின் தந்தத்தின்
உயரிய முத்துக்கள் ராதைக்கு பரிசு.

கிடைப்பதற்கரிய வானுலகப் பதவி,
கம்ச, சாணூர, குவலயா பீடத்திற்கு!
பக்தியால் கிடைக்கும் அற்புதப் பரிசு,
பகைமையால் கிடைப்பது விந்தை அன்றோ?

நவ வித பக்திகள் இறைவனை அடைய;
நன்மையே தரும் அவை ஒன்பதுமே!
கொண்டும், கொன்றும், அருளும் கண்ணன்,
கொண்டு செல்வான் நம்மை, பரமபதத்திற்கு!

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.

https://visalramani.wordpress.com/about/தலைவனும்-நாமும்/கொண்டும்-கொன்றும்-அருளு/



 
காரண வாரணன்


அகில உலகுக்கும் காரணன்;
அவன் ஒரு அழகிய வாரணன்!
அதிசயக் கருநிற அழகன்.
அதனால் அவன் ஒரு வாரணன்!

வெண்ணை பால் தயிர் எல்லாம்
வஞ்சனை இன்றி உண்டதாலே,
கண்ணனும் ஒரு வாரணம்,
குஞ்சரம் போலத் திகழ்வதாலே!

நேரம் போவதே தெரியாமல்
நின்று ரசிப்போம் வாரணத்தை,
நேசம் மிகுந்த காரணனோ
நினைவையே மறக்கடிப்பான்!

கன்றினில் எல்லாமே அழகு,
குன்றை போன்ற வாரணமுமே.
என்றென்றும் நிஜ அழகன்
என் கண்ணன், அவன் மட்டுமே!

பட்டு துகில் உடுத்தினாலும்,
புழுதி படிய விளையாடுவான்.
பட்டுப்போல் குளித்த பின்னர்
புழுதி வாரிச் சொரியும் வாரணம்!

அவன் வாய் மொழிகளே ஆரணம்;
அவன் ஒரு கற்பக வாரணம்;
அவனே ஸ்ருஷ்டிகளின் காரணம்;
அவன் அருள் என்றும் நாம் கோரணும்!

அவன் திவ்ய பரி பூரணன்;
அவனே உயர் திரு நாரணன்!
எல்லாவற்றுக்கும் வேர் அவன்;
ஆயிரம் நாமத் தோரணன்!

எட்டு திக்கினுள்ளும் சென்று
எங்கெங்கு தேடினாலும்,
தட்டுப்பட மாட்டான், இன்னொரு
காரண வாரணக் கண்ணன்!

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.

https://visalramani.wordpress.com/about/%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%b5%e0%ae%a9%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a3%e0%ae%a9%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a3%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/
 
I NEVER GET TIRED OF TALKING/ READING / WRITING /PAINTING / SINGING /THINKING ABOUT KRISHNA. HERE IS MORE FOR THOSE WHO CARE!

[h=1]அகர வரிசைப் பாட்டு[/h]
அன்பர் உள்ளம் உறைபவனே வா வா கண்ணா;
ஆலிலை மேல் பாலகனே வா வா கண்ணா.

இடையர் குலத்திலகமே நீ வா வா வா கண்ணா;
ஈரேழ் உலகும் காப்பவனே வா வா கண்ணா.

உலகை உண்டு உமிழ்ந்தவனே வா வா வா கண்ணா;
ஊதும் குழல் கை அழகா வா வா கண்ணா.

எதுகுலத்தில் உதித்தவனே வா வா வா கண்ணா;
ஏழுமலை ஆண்டவனே வா வா கண்ணா.

ஐவர்களின் நண்பனே நீ வா வா வா கண்ணா;
ஒளி விடும் நடனாகரனே வா வா கண்ணா.

ஓங்கி வளர்ந்த வாமனனே வா வா வா கண்ணா;
ஒளஷதமே ஆரமுதே வா வா கண்ணா.

ஆடி வா நீ ஓடி வா நீ வா வா வா கண்ணா;
ஓடி வா நீ ஆடி வா நீ வா வா கண்ணா.

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி


https://visalramani.wordpress.com/about/அகர-வரிசைப்-பாட்டு/

 
கண்ணன் என் கடவுள்.





எண்ண இனிப்பவன் கண்ணன்,
என்றும் இனியவன் கண்ணன்;
எங்கும் இருப்பவன் கண்ணன்,
எங்கள் இதயத்தில் கண்ணன்.

மண்ணை உண்டவன் கண்ணன்,
விண்ணை அளந்தவன் கண்ணன்;
மங்கையைக் காத்தவன் கண்ணன்,
மாயங்கள் செய்தவன் கண்ணன்.

குன்றை எடுத்தவன் கண்ணன்,
கோகுலம் காத்தவன் கண்ணன்;
கன்றை மயக்கிடும் கண்ணன்,
கன்னியர் விரும்பிடும் கண்ணன்.

இசையின் கடவுளும் கண்ணன்,
இடையர் பிள்ளையும் கண்ணன்;
கீதையைத் தந்தவன் கண்ணன்,
கிரிதரனும் அந்தக் கண்ணன்.

மேதைகள் போற்றிடும் கண்ணன்,
பேதைகள் வணங்கிடும் கண்ணன்;
தேவர்கள் தொழுதிடும் கண்ணன்,
தெய்வங்களின் தலைவன் கண்ணன்.

நீயே கதி என்று சொன்னால்,
நித்தமும் காத்திடும் கண்ணன்;
தாயும் தந்தையுமாகி நல்ல
தயை புரிந்திடும் கண்ணன்.

வெண்ணை திருடிய கண்ணன்,
வெள்ளை மனம்கொண்ட கண்ணன்;
மண்ணில் இவனைப் போல் உண்டோ?
எண்ணித் தெரிந்தவரை இல்லை!

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.

https://visalramani.wordpress.com/about/v-கண்ணன்-என்-கடவுள்/



This is the very first poem I wrote.
Smt. Raji Ram the poetess and the Queen of this forum
Who is also my younger sister due to my good fortune
encouraged me to go on and I have become what I am today.
I can never thank her enough and these lines convey my sincere feelings!

திருத்தி, மெருகேற்றிக் கொடுத்த அன்புத் தங்கை
திருமதி (கவிஞர்) ராஜி ராம் அவர்களுக்கும்,
பொருத்தி வலையில் அழகுற அமைத்துத் தந்த,
மருமகள் ரூபா ராமனுக்கும் நன்றிகள் பலப்பல.


  • 2d59e76baf9c3ec417ed7fd5730b3b0c
    ராஜி ராம் says:
    June 14, 2010 at 1:57 pm
    நன்றி பாராட்டுவது அரிய செயல். என் தினைத்துணை உதவியைப் பனைத்துணையாய்ப் பாராட்டியதால் நெகிழ்ந்தது நெஞ்சம். நன்நூலை அன்னை தந்தைக்கு சமர்ப்பணம் செய்தது சாலச் சிறந்ததே!
    அன்புடன், ராஜி ராம்.



    Visalakshi Ramani says: August 10, 2010 at 9:50 am
    காலத்தால் செய்த உதவி சிறிதெனினும்
    ஞாலத்தின் மாணப் பெரிது அன்றோ?
    Visalakshi Ramani.
 
I have not given the English translation to some of these poems.
The posts become super long and these are already in my blogs.
But I have given the link of the poem using which you can read
the English Translation posted right below the Tamil Poems. :pray2:
 

Latest ads

Back
Top