• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

A poem a day to keep all agonies away!

DEVI BHAAGAVATAM - SKANDA 9

9#49b. சுரபி (2)

சுரபி ஆகும் லக்ஷ்மி தேவியின் ஸ்வரூபம்;
சுரபி ஆகும் ராதாதேவியின் ஒரு பிரியசகி.

சுரபி ஆகும் பசுக்களின் சிறந்ததோர் தலைவி;
சுரபி ஆகும் பசுக்களின் அதிஷ்டான தேவதை.

சுரபி மக்கள் அனைவருக்கும் அன்பான தாய்;
சுரபி தருவாள் பாலை, பரிசுத்த ஆகாரத்தை.

பிரியப்படும் சர்வ காமங்களையும் தருவாள்;
பிரபஞ்சங்களையும் தூய்மைப் படுத்துவாள்.

ஒருமுறை காமதேனு அடக்கிக் கொண்டது
சுரக்கின்ற பாலை விஷ்ணு மாயையால் .

வருந்திய தேவர்கள் துதித்தனர் பிரமனை;
அறிவுறுத்தினான் காமதேனுவைத் துதிக்க.

துதித்தான் இந்திரன் காமதேனுப் பசுவை
துதித்தனர் தேவர்கள் காமதேனுப் பசுவை.

நெகிழ்ச்சி அடைந்தது காமதேனு துதிகளால்;
மகிழ்வுடன் வரம் தந்து சென்றது கோலோகம்.

தந்தன பசுக்கள், பாலைக் குடம் குடமாக!
தந்தது பால், தயிர், வெண்ணை, நெய்யை!

யாகங்கள் செய்தனர் மனிதர்கள் இவற்றால்;
தேவர்கள் மகிழ்ந்தனர் யாக யக்ஞங்களால்.

இந்திரன் செய்த துதியுடன் - பசுக்களை
வந்தனை செய்கின்றவன் அடைவான்

செல்வம், கோசம்பத்து, பரவிய புகழ்;
புண்ணிய நதியில் நீராடலின் பயன்கள்.

இம்மையில் அடைவான் இக இன்பம்;
மறுமையில் ஆவான் பிரம்ம குமாரன்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

9#49b. Surabhi (2)


Worshiping Surabhi :

"You are Lakshmi! You are the chief companion of RAdhA Devi! You are the first cow and the source of all the other cows. You are holy! You fufil the desires of your devotees. You purify the whole universe. So I meditate on You.”

He who worships Surabhi with devotion on the morning after DiwAli night, will be worshiped by all the others in this world.

Once Surabhi did not yield milk under the influence of VishNu MAyA. The DevAs became very worried.They went to the Brahmaloka and consulted BrahmA. He advised them to chant hymns to Surabhi.

Hearing the praise sung by Indra, Surabhi was pleased and appeared in the Brahmaloka. After granting boon to Mahendra, Subrabhi went back to the Goloka. The Devas went back to their own abodes.

Now milk flowed like a river. The whole world was now full of milk. Butter and clarified butter were obtained from the milk. Sacrifices were performed and the Devas got their share of havisu and they became pleased.

He who recites this holy Stotra of Surabhi with devotion, gets cows, other wealth, name, fame and worthy sons. The reciting of this Stotra gives the merits obtained by taking bath in the holy rivers.

He who recites this strotra will enjoy happineSs in this world and in the afterlife he will become a Brahma KurmAran.
 
BHAARGAVA PURAANAM - PART 2

#34c. கணன்

கடல் நீராடும் பௌர்ணமி தினம்;
தடாக நீரைப் பருகினாள் குணமதி.

நீருடன் கலந்த பிரம்மனின் தேஜஸ்,
நீரோடு சென்றது அவள் வயிற்றுக்குள்.

பஞ்சாக்ஷர மந்திரத்தை ஜபித்தான் அபிஜித்;
எஞ்சிய ஹோமங்களையும் செய்தான்.

கர்ப்பமுற்ற குணமதி ஈன்றாள் மகனை;
கணன் என்ற பெயரில் வளர்ந்தான் அவன்.

பயம் என்ற சொல்லே இல்லை அகராதியில்;
பராக்கிரமத்துடன் வளர்ந்து வந்தான் கணன்.

உதயச் சந்திரனைப் பிடித்தான் கைகளில்!
இதமாக வேண்டியதும் விடுவித்தான் அதை.

மதம் கொண்ட யானை அலைந்தது நகரில்;
மிதித்துத் துதிக்கையால் வாரி எறிந்தது!

அறைந்தான் யானையின் கன்னத்தில்;
பிளந்தான் இரு மத்தகங்களைப் பிடித்து!

பலம் கண்ட யானை மாறியது பூனையாக;
பலத்துடன் இருந்தன பல நற்குணங்களும்.

கானகம் சென்றான் கடும் தவம் செய்ய;
கடும் தவம் செய்தான் ஆயிரம் ஆண்டுகள்!

கொஞ்சமும் தளரவில்லை உறுதியில்!
பஞ்சாக்ஷரத்தை நிறுத்தினான் நெஞ்சில்!

நின்று தவம் செய்தான் ஒற்றைக் காலில்.
நீரை மட்டும் அருந்தி முப்பது ஆண்டுகள்!

பத்து ஆண்டுகள் காற்றை மட்டும் சுவாசித்து!
பத்து ஆண்டுகள் எதுவுமே உட்கொள்ளாமல்!

யோகாக்னி வெளிப்பட்டது உடலிலிருந்து
யோகாக்னி சென்றடைந்தது சுவர்க்கத்தை

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

#34c. GaNan

It was a full moon day when people bathe in the sea. GuNamathi drank the water from the pond. The tejas released by reached her stomach along with the water.

Abhijith did the japam and homam as prescribed. GuNamathi became pregnant and delivered a son indue course. He was named as GaNan. He was fearless and valorous. He caught hold of the rising moon once. When the moon begged to be released, he released it.

A mad elephant ran berserk – threatening and throwing people around. GaNan slapped hard on the cheeks of the elephant. He pulled apart its forehead. The elephant became as mild as a cat.

GaNan was strong and had good qualities in addition to his strength. He want to the forest and did severe penance for one thousand years. He concentrated on Lord Siva’s PanchAkshara. He stood on one leg and did penance.

For thirty years he would take nothing but water. For the next ten years he took nothing but the air. For the next ten year he did not even breathe. His body started emanating the yoga angi and it reached the swarggam.
 
4#23b. கிருஷ்ணன் (2)

மல்ல வீரர்களைக் கொன்றனர் இருவரும்
மல் யுத்தம் முறைப்படிப் புரிந்து வீழ்த்தி.

இழுத்தான் கிருஷ்ணன் கம்சனின் முடியை!
விழுந்தான் கம்சன் அரியணையிலிருந்து!

அறைந்து கொன்றான் கம்சனைக் கண்ணன்;
சிறை மீட்டான் தேவகி வசுதேவர்களையும்.

முடி சூட்டினான் மீண்டும் உக்கிர சேனருக்கு;
குடி மக்கள் உளமகிழ மலர்ந்தது நல்லாட்சி!

குருகுலம் சென்றனர் பிறகு சாந்திபநியிடம்;
திரும்பினர் ஆயகலைகள் அனைத்தும் கற்று.

வருந்தினான் ஜராசந்தன் கொல்லப்பட்ட தன்
மருமகன் கம்சனை எண்ணி எண்ணி ஏங்கி!

இள வயதிலேயே புகழுடன் விளங்கிய
இரு சகோதரர்கள் மீதும் அதீத அசூயை.

முற்றுகை இட்டான் மதுராபுரியை அவன்;
வெற்றி கிட்டவில்லை தொடர்ந்த போரில்!

வசப்படுத்திக் கொண்டான் காலயவனனை;
வசப்படுத்த அனுப்பினான் மதுரா புரியை;

“வரம் பெற்ற யவனனை வெல்வது கடினம்;
வரலாம் ஆபத்து எப்போதும் இவர்களால்!

வெளியேறி விடுவோம் மதுராபுரியிலிருந்து;
குடியேறுவோம் இனி துவாரகையில்!” என்று

சென்று அடைந்தனர் துவாரகாபுரியை – பிறகு
சென்றனர் ராம கிருஷ்ணர்கள் மதுராபுரிக்கு.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

4#23b. Krishna (2)

Krishna and Balraam killed the wicked wrestlers Malla and ChaaNoora in their own sport. Krishna went into the durbar and pulled Kamsan by his hair. Kamsan fell down from his throne. Krishna sat on his chest an killed him with a mighty blow. Devaki and Vasudev were released from the prison. Ugrasena was made the king once again – much to the joy of the citizens.

Balraam and Krishna went to Gurukulam with Sage Saantipani. They learned all the sixty four arts in no time and returned home. Jaraasandan could not forget nor forgive the death of Kamsan. He wanted to avenge for that. He lay a siege on Madhurapuri. The siege was followed by a war which lasted for seventeen days, But Jaraasandan could not win in the war.

He befriended Kaalayavanan and tried to win Madhuraapuri through his help. Krishna felt that it was difficult to win the Kaala yavanan who had received special boons. He decided that the citizens of Madhuraapuri should go to Dwarakaapuri and live there. After shifting all the men and their belongings to Dwaarakaa through his Maayaa. Krishna went to Madhuraapuri with Balraam bur did not enter the city.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 9

9#50a. ராதா தேவி (1)

பிராணன் புத்திகளுக்கு அதிஷ்டான தேவதை;
பிரகிருதியாகக் காத்தும், தண்டித்தும் வருவாள்.

இயக்குகிறாள் விராட் புருஷனை இந்த சக்தி;
இயக்குகிறாள் எல்லா ஜீவன்களை இந்த சக்தி.

சித்திக்காது முக்தி நிலை இவள் அருளின்றி;
சித்திக்கப் பூஜிக்க வேண்டும் இந்தத் தேவியை.

ஆறு அக்ஷரம் கொண்டது ராதிகா மந்திரம்;
அறம், பொருள், இன்பம், வீடு தரவல்லது.

மந்திரம் இதுவே மாயைக்கு பீஜம் ஆகும்;
சிந்தித்தவற்றைத் தரும் சிந்தாமணியாகும்.

விவரிக்க இயலாது இதன் பெருமையை;
விவரிக்க இயலாது இதன் அவசியத்தை.

உபதேசித்தாள் மூல தேவி கிருஷ்ணனுக்கு;
உபதேசித்தார் கிருஷ்ணன் விஷ்ணுவுக்கு;

உபதேசித்தார் விஷ்ணு பிரம்ம தேவனுக்கு;
உபதேசித்தார் பிரம்ம தேவன் விராட்டுக்கு.

ராதிகாவை பூஜிக்கின்றனர் மக்கள் - இல்லை
ராதிகா பூஜை இல்லாமல் கிருஷ்ண பூஜை!

நீங்குவதில்லை ராதிகா தேவியைக் கிருஷ்ணன்;
தாங்குகின்றான் தன் பிராணனாக, தலைவியாக.

'ராதனம்' என்றால் பேறுகளைச் சித்திக்க வைப்பது;
'ராதா' என்பவள் பேறுகளைச் சித்திக்க வைப்பவள்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


9#50a. RAdhikA Devi (1)

RAdhikA is the presiding deity of PrANa and Buddhi. She protects and punishes the JeevAs, as an amsam of Prakriti Devi. VirAt purushan is controlled by this Devi. All the living things are controlled by this Devi.

Mukti or total liberation is not attainable without the grace of RadhikA. She must be worshiped for attaining the liberation.

The mantra of RadhikA has six letters in it. It can bestow on the devotee the chatur vidha purushArtam namely Dharma, Artha, KAma and Moksha.

This mantra is the seed for the MAyA. It is the ChintAmaNi which can give the devotee whatever he wishes for.

It is not possible to relate the greatness of this mantra. It is not possible to relate the inevitability of this mantra.

Moola Prakruti Devi did the upadeasam of this mantra to Sri KrishNa who then did the uadesam to VishNu

VishNu did the upadesam to BrahmA who in turn did the upadesam to the VirAt Purushan,

All the three worlds worship RAdhikA Devi. Worshiping KrishNa is impossible without worshiping RAdhikA along with him. Krishna does not leave RadhikA even for a second. He cherishes her as his PrAna Shakti and is ruled by her.

'Radhanam' means 'That which bestows the siddhis on a person!' RAdhikA is the Devi who bestows on her devotees all the siddhis.

 
BHAARGAVA PURAANAM - PART 2

#34d. திக்விஜயம்

தேவர்கள் விரைந்தனர் கைலாசம்;
தேவலோகம் தகித்தது வெப்பத்தால்!

“கௌரீபதே! பஞ்சாக்ஷரம் ஜபித்துக்
கோரத் தவம் செய்கின்றான் ஒருவன்.

தகிக்கிறது சுவர்க்கத்தை யோகாக்னி.
தாங்களே அபயம் அபயம்” என்றனர்.

காளை வஹானம் ஏறி உமையுடன்
காட்சி தந்தார் சிவபிரான் கனணுக்கு.

மெய் சிலிர்த்துப் புளகம் அடைந்தான்;
கை கூப்பியபடி வலம்வந்தான் கணன்.

“என்றும் மங்காத பக்தியை அருள்வீர்!”
குன்றாத பக்தியை அளித்தார் – மேலும்

மூவுலகையும் வெல்லும் வல்லமையும்,
தேவர்களைத் தோற்கடிக்கும் திறமையும்,

நீண்ட ஆயுளையும் பெற்றபின் கணன்
மீண்டும் வந்தான் தன் பெற்றோரிடம்.

மணம் முடித்தனர் தக்க பெண்ணை;
கணனுக்கு முடி சூட்டினான் அபிஜித்.

பரமசிவன் வரத்தால் உலகை வெல்ல
அரசன் ஆனவுடன் விரும்பினான் கணன்.

குமாரர்கள் சூலபாணி, சுலபன் மற்றும்
அமைச்சருடன் சென்றான் திக் விஜயம்!

நாற்படையுடன் வந்த கணனை எதிர்க்க
நாற்றிசையில் எவரும் துணியவில்லை.

சென்ற இடமெல்லாம் நல்ல வரவேற்பு!
செல்வங்களை வாரித் தந்தனர் மன்னர்.

மண்ணுலகு முழுவதையும் வென்ற கணன்
விண்ணுலகை நோக்கிப் பயணித்தான்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

#34b. Digvijayam

The DEvA ran to KailAsh. The swarggam had became very hot. They begged Siva, “Oh Lord! Please save us from the yoga agni created by a man who is doing severe penance towards you.”

Siva appeared to GaNan with Uma on Nandi vAhanam. GaNan was thrilled and praised his god. He prayed for undiminished Bhakti. He got several boons from Siva. He would win over the three words. He would defeat the Deva and he had a very long lifespan.

GaNan returned to his parents very pleased with his boons. Abhijit got him married to a suitable princess. GaNan was made the new king. GaNan wanted to conquer the three worlds. He set out on a digvijayam along with his sons SoolapANi, Sulabhan and his ministers.

No one dared to oppose the chaturanga sena of GaNan. The kings welcomed GaNan and showered gifts on him. After conquering the earth, GaNan set out towards the Heaven.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 4

4#23c. கிருஷ்ணன் (3)

மதுராபுரி இருந்தது காலயவனனின் கீழ்!
மதுராபுரி நிறைந்திருந்தது படைகளால்.

அழகிய தோற்றத்துடன் ராம, கிருஷ்ணர்
அளித்தனர் தரிசனம் நகருக்கு வெளியே!

அனைவரும் வந்தனர் அவர்களைக் காண;
யவனனும் வந்தான் அவர்களைக் காண.

நடந்தான் தாமரைமாலை அணிந்த கண்ணன்;
நடந்தான் யவனனும் அவனைத் தொடர்ந்து.

நுழைந்தான் கண்ணன் முசுகுந்தன் இருப்பிடம்;
நுழைந்தான் யவனன் கண்ணனைத் தொடர்ந்து.

கண்ணன் எனக் கருதி உறங்கும் முசுகுந்தனைக்
கால்களால் எட்டி உதைத்தான் கால யவனன்

கண்களைத் திறந்தார் உறங்கிய முசுகுந்தர்;
மண்ணில் விழுந்து எரிந்தான் கால யவனன்!

அபகரித்தான் ருக்மிணியை கிருஷ்ணன் தேரில்
சுப விவாஹம் செய்து கொண்டான் முறைப்படி

மற்ற மனைவியர் ஜாம்பவதி, சத்யபாமை,
மித்ரவிந்தை, காளிந்தி, லக்ஷ்மணை, பத்திரை.

கருவுற்று ஈன்றாள் பிரத்யுமனனை ருக்மிணி;
கவர்ந்து சென்றான் சம்பசுரன் குழந்தையை!

மூழ்கினர் துன்பக்கடலில் கண்ணன், ருக்மிணி
வீழ்ந்தனர் தேவியின் திருவடிகளே கதியென.

“கட்டுக் காவலை மீறி உள்ளே நுழைந்து
கடத்திச் சென்றது யாராக இருக்க முடியும் ?

மீட்டுத் தா எங்கள் குழந்தையை எம்மிடம்!”
கேட்டனர் தேவியை இருவரும் தொழுது.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


4#23c. Krishna (3)

Madhuraapuri was under the power of Kaala yavanan. It was filled with his army. Krishna and Balraam did not enter the city but gave a darshan at the outskirt of the city. Everyone came to have a darshan of these two. Kaala yavanan also came along with the others.

Krishna pretended to be very scared on seeing him and walked away fast with his lotus garland swaying. Kaala yavanan followed him closely. Krishna entered into a cave where Muchukundan was in deep sleep. Kaala yavanan also followed him into the cave.

It was very dark inside the cave. Kaala yavanan mistook the sleeping Muchukundan to be Krishna hiding and kicked him hard. Muchukundan opened his eyes in anger and Kaala yavanan got burnt down to ashes.

Krishna abducted Rukmini during her swayamvaram and married her. He had some more wifes such as Jaambavati, Satyabhamaa, Mitravindha, KaalLiNdi, LakshmanNai and Badra.
Rukmini gave birth to Pradyumnan. The child was kidnapped by Sambaasuran.

Krishna and Rukmini were immersed in sorrow and prayed to Devi to restore the lost child to them.
Devi consoled them, “Do not worry about your stolen son. He will return to you when he becomes sixteen ears of age and kill the wicked Sambaasura. You have to suffer this grief as a result of the actions performed by you in your earlier births”
 
DEVI BHAAGAVATAM - SKANDA 9

9#50b ராதிகா தேவி (2)

நிறத்தில் வெண்ஷண்பக மலர் இவள்;
முகத்தில் ஒளிரும் சரத்காலச் சந்திரன்;

உதடுகள் புதிய இரு கோவைப் பழங்கள்;
இடையினில் ஒலிக்கும் இனிய மேகலை;

மயக்கம் தரும் நிதம்பம் உடையவள்;
குருந்த மொட்டுப் பற்கள் உடையவள்;

தவழும் முகத்தில் இனிய புன்னகை;
தனங்களோ யானையின் மத்தகங்கள்;

பன்னிரண்டு வயதைத் தண்டாதவள்;
இரத்தின பூஷணங்கள் அணிந்தவள்;

சிருங்கார ரச வடிவான மங்கை;
மங்காத அருள் புரிவாள் பக்தருக்கு;

மல்லிகை, மாலதி அணிந்த கூந்தல்;
மெல்லிய உடலோ செந்தளிர் மேனி;

ராஸ மண்டலத்தில் வசிக்கும் தேவி
ஆசியுடன் அளிப்பாள் வரதம், அபயம்.

சாந்தம் நிறைந்த மனத்தினள் இவளைத்
தாங்கும் அழகிய இரத்தின சிம்ஹாசனம்.

கோபிகைகளின் பிரியமான தலைவி;
கோபால கிருஷ்ணனின் பிரியமான சகி.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


9#50b. RAdhikA Devi (2)

Her color is that of the white Champaka flowers.
Her face puts to shame the full moon in Sarat rutu.

Her lips are redder than the fresh Bimba fruits.
Her waist is adorned by a tinkling Mekala.

Her waist causes intoxication by its sheer beauty.
Her teeth are two rows of the buds of flowers.

A smile adorns her lovely face.
Her breasts are like the frontal globe of an elephant.

She is not a day older than twelve years.
She is adorned with several gem studded ornaments.

She is the personification of amorous love.
She blesses her devotees without any hesitation.

Her hair is decorated with Jasmine and MAlati.
Her body is soft as well as tender.

She lives in the RAsa MaNdalam in Golokam.
She grants boons and fearlessness to her devotees.

She is of calm peaceful temperament.
She occupies a gem studded gold throne.

She is the leader of all the GopikAs and
She is the beloved of GopAla KrishNan.

 
BHAARGAVA PURAANAM - PART 2

#34e. இந்திரன்

விண்ணுலகு அடைந்ததும் கைப்பற்றினான்,
வியத்தகு குதிரையான உச்சைஸ்ரவத்தை.

பதறி அடித்துக்கொண்டு வந்தான் இந்திரன்,
இதர தேவர்களுடன் செய்தியை அறிந்ததும்!

சதுரங்க சேனையுடன் தயாராக இருந்தவனிடம்,
மெதுவாகச் சொன்னான், “குதிரையைத் தருவாய்.”

தேவலோகத்தை வெல்லுவதற்கு வந்தவன்
கேவலம் நல்ல வார்த்தைகளுக்கு மசிவானா?

“பரியைத் தரவும் மாட்டேன்; உன்னுடைய
கரியையும் கைப்பற்றப்போகிறேன் நான்!”

சினம் மேலிட்டது இந்திரனுக்கு! தன்னுடைய
இனத்தவரைப் போரிடும்படிப் பணித்தான்.

கோரமான ஒரு யுத்தம் தொடங்கியது;
மோதிக் கொண்டனர் இரு தரப்பினரும்!

கணன் அருகே வந்தவுடன் இந்திரன்
கணனைத் தாக்கினான் குலிசத்தால்.

விழுந்து விட்டான் மூர்ச்சித்து கணன்;
எழுந்து கொண்டான் சுதாரித்து உடன்!

தரையில் விழுந்து விட்டன ஆயுதங்கள்;
தரையில் இறங்கி விட்டனர் அவர்களும்.

ஒருவருக்கு ஒருவர் என்ற போர்முறைப்படி
ஒருவருடன் ஒருவர் கை கலந்தனர் அங்கு.

பொறி பறக்கக் குட்டினான் கணன் இந்திரனை;
பொறி கலங்கி அமர்ந்து விட்டான் இந்திரன்!

“தேவலோகத்தை நீயே ஆண்டு வரலாம்!
வேலைகள் தொடரலாம் என்றும் போல்!

என் கட்டளைக்கு அடிபணியும் வரையில்
என்னால் இல்லை உனக்கு ஒரு தொல்லை”

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#34e. Indra

As soon as GaNan reached the swargga, he took hold of Indra’s wonderful horse Uchchaisravas. Indra came running with the other DEvA the moment he heard this news.

He told GaNan who was ready with his army, “Release my horse!” GaNan laughed and said, “I am going to take hold of your elephant AirAvat also”

Indra became very angry and ordered his army to fight with GaNan’s army. A terrific war ensued immediately. When GaNan moved in closer, Indra attacked him with his kulisam.

GaNan fell faint but managed to get up immediately. Their weapons had fallen on the ground. They too stood on the ground and they started to fight one to one.

GaNan rapped Indra real hard on his head. Indra sat down in a state of shock. GaNan told him, “You may continue to rule the swargga as usual. You may go about your job as usual. As long as you remember to obey me, there will be no trouble for you from me!”
 
DEVI BHAAGAVATAM - SKANDA 4

4#24a. கிருஷ்ணன் (4)

ஐயத்தை எழுப்பினான் ஜனமேஜயன் மீண்டும்
“வையத்தின் நாயகன் கண்ணன் அறியாததா?

துக்கம் எதற்கு வைகுந்த வாசனுக்கு – யார்
தூக்கிச் செல்ல முடியும் அவன் மகனை ?”

“ஜனமேஜயனே சொல்கின்றேன் கேள் – உன்
மனம் ஒன்றி கவனமாக நான் கூறப் போவதை.

மாயை வசப்படுத்தும் மனிதர்கள் மனங்களை!
மாயையை வசப்படுத்துவர் முதிர்ந்த ஞானிகள்!

முக்குணம் கொண்டவர்கள் மனிதர்கள்!
முக்குணம் கொண்டவர்கள் தேவர்கள்!

உடல் உணர்வு கொள்ளும் ஜீவராசிகள்!
உடல் உபாதை கொள்ளும் ஜீவராசிகள்!

வாழ்ந்தான் ராமன் ஒரு மனிதன் போலவே!
வாழ்ந்தான் கண்ணன் ஒரு மனிதன் போலவே!

அரசுரிமை இழந்தான் ராமன் – கானகம்
மரவுரி தரித்துச் சென்றான் இருவருடன்.

பறி கொடுத்தான் சீதையை ராவணனிடம்!
பரிதவித்தான் சீதையைத் தேடி அலைந்து!

பரிசோதித்தான் சீதையை மீட்ட பின்பு
எரியும் நெருப்பில் இறங்கச் செய்து!

பழிக்கு அஞ்சி கர்ப்பிணியைக் கைவிட்டு
பழி தேடி கொண்டான் தன் நற்பெயருக்கு.

போரிட்டான் லவ, குசர்களுடன் கடுமையாக.
அறியவில்லை அவர்கள் தன் புதல்வர் என்று.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


4#24a. Krishna (4)

King Janamejayan asked one more doubt now. “Krishna is the lord of the world. How can he suffer due to ignorance like an ordinary man? Who can steal his son and get away with it?”

Sage Vyaasaa replied,”Oh King! Maayaa covers our intellect and deludes our mind. A Gnaani may be able to conquer Mayaa but Maayaa conquers the ordinary jeevaa. The Deva, Manushya and Asura all have the three gunaas namely Satvam, Rajas and Tamas.

The jeevaas have sense organs and physical needs. Raama lived like an ordinary mortal. Krishna lived like an ordinary man. Raama lost his throne. He went for vanavaasm with his wife and younger brother. Seetaa was abducted by RaavaN. Raamaa searched for her like a mad man everywhere.

After releasing her from Asokha vanam he tested her purity by making her do agni pravesam. Even after that he gave her up and forsook her when she was pregnant with his twin sons. He fought with his own sons Lava and Kusa little realizing that they were his own flesh and blood.”
 
DEVI BHAAGAVATAM - SKANDA 9

9#50c. ராதிகா தேவி (3)

வேதத்தில் போற்றப் படுபவள் இவள்;
தேவி பரமேஸ்வரியின் ஓரம்சம் இவள்.

செய்ய வேண்டும் ஆவாஹனம் தேவியை;
செய்ய வேண்டும் ஆசனாதி உபசாரங்கள்.

வரிசையாகக் கிழக்கிலிருந்து ஈசானம் வரை
வணங்க வேண்டும் இவர்களைத் தளங்களில்.

மாலாவதி, மாதவி, இரத்தின மாலை, சுசீலை
சசிகலை, பாரிஜாதை, பராவதி, சுந்தரியரை

வரிசையாக அவரவர் ஸ்தானங்களில்
வணங்கவேண்டும் அஷ்ட திக் பாலகரை.

செய்ய வேண்டும் எல்லா ராஜ உபசாரங்களை.
செய்யவேண்டும் ஆயிரம் நாம அர்ச்சனையை.

இருப்பாள் ராதிகா எப்போதும் அருகிலே - தன்
பிறந்த நாளை மறவாது கொண்டாடுபவனுக்கு.

மூன்று காலம் ராதிகா தேவிவைத் தொழுபவன்
சென்று அடைவான் கோலோகம், ராசமண்டாலம்

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

9#50c. RAdhikA Devi (3)

This Devi is praised by the VedAs. She is the amsam of Moola Prakruti Devi. She is one of the Pancha Prakriti Devis.

We have to do the AavAhanam of this Devi and offer her Asanam and the other upachAram. We must offer her nivedanam prepared with milk and ghee.

We must worship these eight Devis starting from the East and ending in the EsAnam.
MAlAvati, MAdhavi, RatnamAlA, SuseelA, SasikalA, PArijAtA, ParAvati and Sundari.

We must worship the Ashta Dik PAlakAs in their sthAnams. We must offer the kingly upachArams and perform the Sahasra nAma archana.

RadhikA remains close to the devotee who worships her on her birthday. The person who worships RadhikA thrice a day will surely reach the RAsa MaNdala in Goloka at the end of his life.
 
BHAARGAVA PURAANAM - PART 2

#34f. கபிலர்

சத்தியலோகம் சென்றான் கணன்;
சத்தியமாகக் கோலாகல வரவேற்பு!

“வெற்றி கொள்ள முடியாதவனோடு
வெற்றுப் போர் புரிவது எதற்கு?” என

அள்ளித் தந்தார் அநேகப் பரிசுகளை;
உள்ளம் களிக்கும்படி பிரம்மதேவன்.

வைகுண்டமும் வரவேற்றது கணனை;
வெகுமானித்தது அரிய பல பரிசுகளால்.

மூவுலகையும் வென்ற பின்னர் கணன்
முன்போலவே நல்லாட்சி புரிந்தான்.

நற்பெயர் விளங்கியது நாற்றிசையிலும்,
நற்பணிகள் தொடர்ந்தன நாடு முழுவதும்.

துஷ்ட மிருகங்கள் தொல்லை தந்தன!
கஷ்டம் அளித்தன வாழும் மனிதருக்கு.

நடமாட வசதியாக அவற்றை அழிக்கத்
திடமாக விண்ணப்பித்தனர் வேடர்கள்.

வேட்டையாடினான் அவ்விலங்குகளைக்
காட்டுக்குச் சென்று படை வீரர்களுடன்!

வேட்டைக்கு அலைந்து திரிந்ததால் நீர்
வேட்கை அதிகரித்துத் துன்புற்றனர்.

அலைந்து திரிந்தனர் நீரைத் தேடி;
அழகிய சோலை கண்களில் பட்டது!

தெளிந்த நதியில் நீராடி மகிழ்ந்தனர்;
களைப்பு நீங்க அமர்ந்தனர் அங்கேயே.

ஆசிரமம் அமைந்திருந்தது சோலையில்;
வாசம் செய்தனர் கபிலரும், சீடர்களும்.

நீர் எடுக்க வந்த சீடன் கண்டான் அங்கு
நீராடிக் களைப்பாறும் படைவீரர்களை.

ஓடோடிச் சென்று சொன்னான் முனிவரிடம்;
தேடிவந்து அழைத்தான் அந்த ஆசிரமத்துக்கு.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

#34f. Kapilar

GaNan went to Sathya lOkam. He was given a warm welcome. Brahma knew that GaNan was invincible and did not want to fight with him. He showered rare gifts and honored GaNan.

Vaikuntam also extended a warm welcome to GaNan since it was useless to try to defeat him. VishNu presented GaNan with many rare and rich gifts.

After conquering all the three worlds, GaNan ruled his kingdom as before.
His fame and name spread in all the directions. He was good king and did many good things to his citizens.

The wild animals in the forest threatened the hunters living there. They requested GaNan to make their lives easier and safer by killing those wild animals.

GaNan left with his soldiers to the forest. They hunted down all the wild animals. They became very thirsty and tired. They looked for fresh water and found a beautiful garden. It had sparkling clear river running through it.

GaNan and his soldiers took a refreshing bath in the cool water and sat on the bank to rest for a while. There was an ashram in the garden it belonged to the sage Kapilar. He lived there with this disciples.

One of his disciples came for water. He was excited to see the king and his soldiers there. He ran to inform his guru of this. He came running again to invite GaNan and his soldiers to the ashram of Kapilar.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 9

4#24b. கிருஷ்ணன் (5)

“சென்றான் கோகுலம் கம்சனுக்கு அஞ்சி!
சென்றான் துவாரகை ஜராசந்தனுக்கு அஞ்சி!

களவாடினான் ருக்மிணியைச் சுயம்வரத்தில்;
களவாடப் பட்ட மகனை எண்ணிக் கலங்கினான்!

சத்தியபாமை ஏவப் போரிட்டான் தேவர்களுடன்;
சத்யபாமை மகிழக் கவர்ந்தான் கற்பகத் தருவை!

தானம் செய்தாள் அவனை அவள் நாரதனுக்கு!
தனம் தந்து மீட்டாள் அவனை சத்யபாமை!

ஜாம்பவதி வேண்டினாள் சத்புத்திரன் ஒருவனை!
சம்புவைக் குறித்துத் தவம் செய்தான் கண்ணன்.

தீக்ஷா குருவானார் உபமன்யு முனிவர் – கண்ணன்
தீக்ஷையில் ஆழ்ந்துவிட்டான் சிவ தியானத்தில்.

ஆறு மாதம் தொடர்ந்த தவத்தை மெச்சி சிவன்
ஆரவார தரிசனம் தந்தான் பரிவாரங்களுடன்.

“முக்தி தரும் நாதன் உம்மிடம் கோரிய வரமாக
முக்தியைக் கேட்க முடியவில்லையே ஈசா!

புத்திர வரமே கேட்கின்றேன் பிறரைப் போல;
புத்திரனை விழைகின்றாள் ஜாம்பவதி !” எனச்

சிரித்துக் கொண்டே சொன்னான் சிவபிரான்,
“புரிவாய் திருமணம் பல பத்தினிகளுடன்;

பெறுவாய் தலா பத்துப் பத்துப் புத்திரர்கள்!”
கூறினாள் பார்வதி கண்ணனை நோக்கி,

“வளர்ந்து வாழும் குலம் நூறு ஆண்டுகள்;
தளர்ந்து வீழும் பின் பிராமண சாபத்தால்!”

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


4#24b. Krishna (5)

Sage Vyaasaa continued to explain to the king Janamejayan, ”Krishna’s life was no better than Raamaa’s. Krishna had to part from his parents and go into hiding in Gokulam fearing Kamsan. He had to quit Madhuraapuri and live in Dwaarakaapuri fearing Jaraasandan.

He abducted Rukmini during her swayamvaram. He shed bitter tears for his son who was abducted. He fought with Devaas as ordained by his wife Satyabhaama. He stole the Karpaga vruksham to please her. She gave away him as daanam to Naarada. She had to purchase him back paying in gold.

Jaambavati wished for a good son. Krishna did penance towards Lord Siva. Upamanyu rushi became his dheeksha guru. Krishna was immersed in deep penance for six months.

Siva was pleased and appeared in person with his retinue. Krishna told him, “I could ask you for mukti since you are the mukti daayaka. But like any ordinary man I seek your blessing only to beget good sons. ”

Siva smiled and said, “You will marry many more women. You will beget ten ten sons from each of them!” Parvati Devi told Krishna,”Your race will flourish for one hundred years. After that it will perish due to the curse of an enraged brahmana”
 
DEVI BHAAGAVATAM - SKANDA 9

9#50d. துர்க்கா தேவி (1)

நினைத்த மாத்திரத்தில் அகற்றி விடுவாள் - நம்
அனைத்துத் துன்பத்தையும் அன்னை துர்க்கை.

உகந்தவள் துர்க்கை பூஜித்து வழிபடுவதற்கு;
உகந்தவள் துர்க்கை உபாசித்து வழிபடுவதற்கு.

வடிவம் ஆகும் சிவ சக்தியரின் வடிவம்;
வடிவம் ஆவாள் அற்புதச் சிறப்புக்களின்!

அதி தேவதையாவாள் ஜீவர்களின் புத்திக்கு,
அந்தர்யாமியாவாள் எல்லா ஜீவன்களுக்கும்.

துரத்தி விடுவாள் துக்கம் என்னும் துன்பத்தை!
துர்க்கை என்ற பெயர் பெறக் காரணம் இதுவே.

மூலப் பிரகிருதியின் உருவம் இவள்;
முத் தொழில்களையும் செய்பவள் இவள்.

சிறப்புக்கள்:

ரிஷிகள்: பிரம்மன், விஷ்ணு, ருத்திரன்.
சந்தஸ்ஸுகள் : காயத்ரி, உஷ்ணிக், அனுஷ்டுப்

தேவதைகள்: மஹா காளி, மஹா லக்ஷ்மி, சரஸ்வதி
பீஜங்கள்: ரக்த தந்திகா, துர்க்கா, பிரமரி

சக்தியர்: நந்தா, சாகம்பரி, பீமா
விநியோகம்; அறம், பொருள், இன்பம், வீடு

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


9#50d. DurgA Devi (1)

The moment we think of DurgA Devi, she will remove all our hardships and worries. DurgA Devi is is worthy of being worshiped by us. She is Siva-Shakti in her form. She is the personification of many rare powers.

DurgA Devi is the presiding deity of Intellect. She resides in every jeevA as AntaryAmi. She drives away all our sorrows. That is why she is called as DurgA Devi.

DurgA Devi is the Moola Prakruti Devi herself. DurgA Devi is responsible for the creation, preservation and destruction of everything.

The nine lettered DurgA mantra is a Kalpa Taru for the devotees. It yields and fulfills all their wishes and desires.

The three Rushis are BrahmA,VishnU, and Rudran
The three santhassu are Gayatree, UshNik and Anushtup
The three DevatAs are MahA KAli, MahA Lakshmi and Saraswati
The three beejams are Raktha DantikA, DurgA, Bramari.
The three sakthis are NandA, Saksmbaree and BheemA
The four purposes. Dharma, Arhta, KAma and Moksha
 
#34g. சிந்தாமணி

முனிவரின் அழைப்பினை ஏற்று வந்தனர்;
இனிய முனிவரைப் பணிந்து வணங்கினர்;

“கணன் என் பெயர்; அபிஜித் ராஜனின் மகன்;
களைத்து விட்டோம் காட்டில் வேட்டையாடி!

தண்ணீரைத் தேடி வந்தோம் இச்சோலைக்கு;
பண்ணிய புண்ணிய வசமே தங்கள் தரிசனம்!”

“பசியுடன் திரும்பலாகாது என் அதிதிகள்;
பரிவாரங்களை வரச் சொல் விருந்துக்கு!

செல்லலாம் திரும்பித் தலை நகருக்கு;
மெல்ல உணவுண்டு களைப்பாறிய பின்”

அணிந்திருந்தார் தன் மார்பில் கபிலர்
அற்புத ரத்தினம் ஆகிய சிந்தாமணியை.

சிந்தையில் நினைத்ததை அளித்திடும்,
விந்தைத் திறன் படைத்த அற்புத மணி.

ஆசனத்தில் அமைத்தார் சிந்தாமணியை;
பூசித்தார் அதை அன்புடனும், பக்தியுடனும்.

அழகிய நகரம் உருவானது சோலையில்!
பழகிய வசதிகள் நிறைந்துள்ள நகரம்!

கண்டதில்லை அந்த உணவு வகைகளை;
உண்டதில்லை அந்த அறுசுவையினை!

நினைத்ததைத் தரும் சிந்தாமணி கணன்
நினைவில் நிலைத்து பேராசை ஊட்டியது!

முனிவரை வணங்கிச் சொன்னான் கணன்,
“மணியால் யாது பயன் உமக்கு முனிவரே?

மூவுலகாளும் என்னிடம் அது இருந்தால்
மூவுலகமும் பயன் பெறும் சிந்தாமணியால்”

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#34g. ChintAmaNi

GaNan and his soldiers went to meet Sage Kapilar. GaNan paid his respects and introduced himself as the son of King Abhijith and explained his purpose of visit to the forest.

The kind sage told him, “You must be very hungry and tired. None of my guests ever leave this ashram with pangs of hunger. All of you can eat, relax and the return to your capital”

Kapilar was wearing a rare gem on his chest called ChintAmaNi. It could give anything the wearer wished for. Sage Kapilar kept the ChintAmaNi on a befitting seat and worshiped it with bhakti and love.

A city appeared in the garden. It was fit for a king and his army with every convenience they were used to. Enough food appeared to feed all the group. No one had ever seen such varieties nor tasted such an excellent food.

The rare gem made GaNan covet to posses it. He told the sage,”You are living in the forest in seclusion. What is the use of keeping this rare gem here? If it is with me, it will serve and fulfill all the needs of my citizens.”

 
DEVI BHAAGAVATAM- SKANDA 4

4#24c. கிருஷ்ணன் (6)

“அழிவர் உன் சந்ததியர் தமக்குள் போரிட்டு,
அழிவார்கள் யாதவர்களும் அவ்விதமே!

நடப்பவை தடைபடாது என்று நீ அறிவாய்!
நடப்பவை உள்ளன என் வசமே!” என்றாள்.

மறைந்துருளினர் பரிவரங்களுடன் – அவர்கள்
குறைவற்ற தரிசனமும், வரமும் தந்த பின்பு.

மாயையின் கைகளில் மரப் பொம்மைகள் நாம்.
மாயை விளையாடுகின்றாள் ஜீவராசிகளுடன்.

படைக்கின்றாள் அவரவர் முன்வினைக்கு ஏற்ப;
படைக்காவிட்டால் உலகம் இருக்கும் ஜடமாக!

சுரர்கள், அசுரர்கள். பறவைகள், விலங்குகள்;
பிரபஞ்சம் முழுவதும் அவள் வசப்பட்டவை.

வணங்குவாய் புவனத்தின் தாயை பக்தியோடு;
பிணங்குவாய் குல தெய்வம் தொழாதவரோடு.

தேவி மயமானவன் நான்; வேறானவன் அல்லன்;
தேவி அருளால் துக்கம் என்பது இல்லை எனக்கு!

பந்தத்தை விடுத்து மோக்ஷம் அடையலாம்
சந்ததம் தேவியை ஆத்மரூபமாக தியானித்து!

முப்பெரும் தேவரும் வணங்குகிறார் தேவியை!
இப்போது தீர்ந்தனவா உன் ஐயங்கள் எல்லாம்?

தியானம் செய்து வா தேவியை இடைவிடாது,
தீரும் சகல பாவங்களும் தேவி தியானத்தில்!”

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


இத்துடன் வியாசரின் தேவி பாகவதத்தின் நான்காவது ஸ்கந்தம் நிறைவு பெறுகிறது.


4
#24c. Krishna (6)

Paarvati Devi continued talking to Krishna,” Your descendants will perish fighting one another. The race of Yaadava will meet a similar fate. Whatever should happen will happen. They are all under my care!” Siva, Paarvati and their retinue disappeared after giving darshan and the boons.

“Jeevaas are mere toys in the hands of Maayaa. She plays with jeevaas in the same way a child plays with her toys. She creates them according to their poorva karmaa. If she does not create, the world will be completely frozen and frigid.

Every living thing is created by her. Worship Devi the Mother of the Universe. Break away from the heretics who do not worship even their kula deivam. By meditating upon Devi as the Aatma swaroopam we can get liberated very easily.

Even the mighty Trinity worship Devi. Have I cleared all your doubts now O king ? Always meditate upon Devi. It will cancel the effects of all the sins and karmaas of the past.” Vyaasaa told King Janamejayan thus.

The fourth Skanda of the Vyaasaa’s Devi Bhaagavatam gets completed with this.
 
For reasons which I am NOT able to figure out till today, my blogs of Devi Bhaagavatam got archived - while I was editing a few posts in the Skanda 7.

When I wrote back saying that this will disturb the continuity of the series of 12 blogs, seven other blogs also got archived! :(

They are right there - but out of the reach everyone, including me! :pout:

Instead of feeling crestfallen, sorry and sad, I look upon this as another opportunity to blog this work of epic nature - with about 1000 original poems in Tamil.

This time I will post them after making all the corrections - applying castor oil in my eyes if necessary! :)

This will start as soon I complete the Ninth blog 'Onbathaam Thanthiram' of Thirumoolar's Thriumanthiram , in all probability in the next 3 or 4 weeks.

Still 230+ poems remain to be explained in detail as the others were explained.

I wish to use my maiden for the new series of blogs which will number 13 in all - with one blog for each skanda and one for the introduction of the work and the greatness of Shakti Devi .
Thereafter anyone can read them continuously like a book.

I have popularized the name of my master and lord more than enough. :rolleyes:
So all the future blogs will bear my maiden name - honoring my dear irreplaceable Dad.

I am just waiting to get TMTM Onbathaam Thanthiram finished soon with the grace of Aththan Sivan, Annai Sakthi Devi, Aanai mukhan and AaRu mukhan! :pray: :hail:
 
DEVI BHAAGAVATAM - SKANDA 9

9#50e. துர்க்கா தேவி (2)

நியாசிக்க வேண்டும் இவற்றை முறையே
தலை, முகம், இருதயம் , ஸ்தனங்களில்.

நியாசம் செய்ய வேண்டும் பீஜங்களால்
சிகை, கண், காது மூக்கு, முகம், புஜத்தில்.

கட்கம், சக்கரம், கதை, பாணம், சர்ப்பம்,
பரிகம், சூலம், பிஜுண்டி,சிரசு, சங்குடன்.

தியானிக்க வேண்டும் மஹாகாளி வடிவமாக;
தியானிக்க வேண்டும் முக்கண் உடையவளாக.

தியானிக்க வேண்டும் ஆபரணங்கள் அணிந்தவளாக;
தியானிக்க வேண்டும் அலங்காரம் புனைந்தவளாக.

தியானிக்க வேண்டும் கருமேகத்திரளின் பிரகாசத்தோடு!
தியானிக்க வேண்டும் பத்துத் திருமுகங்கள் உள்ளவளாக!

ஜபமாலை, மழு, கதை, பாணம்;
வஜ்ரம், தாமரை, வில் குண்டிகை;

தண்டம், சக்தி, கத்தி, கவசம், மணி;
சுரா பாத்திரம், சூலம், பாசம், சுதர்சனம்;

சிவந்த காந்தியுடன் ஒளிர்ந்து கொண்டு;
செந்தாரையில் வசிக்கின்ற அன்னையாக;

மாயா ஸ்வரூபிணியை, மஹிஷனை அழித்த
மஹா லக்ஷ்மியைத் தியானிக்க வேண்டும்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


9#50b. DurgA Devi (2)

NyAsA must be done on the head, face, heart and the chest. NyAsA must be done on the hair, eye, ear, nose, face and shoulder.

Devi must be meditated upon as MahA KALi wielding the Kadga (axe), Chakra (disc), GadA (club), BANA (arrows), ChApa (bow), Parigha, Soola (spear), BhushuNdi, KapAla, and the Conch in her ten hands.

She must be meditated as having three eyes; decorated with ornaments and jewels; shining like the black clouds; with ten faces and ten feet.

DhyAnam of MahA Lakshmi is done as the destroyer of MahishAsura. Devi is meditated as holding a japamAlA, Paras’u (an axe), GadA (a club), Ishu (arrows), Kulisa (the thunderbolt), PadmA (a Lotus), Dhanu (a bow), KuNdika (a water pot), DaNda ( a rod), Shakti (a spear), Asi (a sword), charma (an armor), GhantA (a bell) SurApAtrA ( pot of liquor), SoolA (a trident); PAsA (a noose) and Sudarsana (the chakrAyudam).


She is of the color of the rising sun and is seated on red lotus.

 
BHAARGAVA PURAANAM - PART 2

#34h. கபிலரின் தவம்

“உயிரைக் கேள் தருகிறேன் மன்னா!
உனக்கு வசப்படாது சிந்தாமணி!” என

கண்ணால் கண்டு விரும்பிய பொருளை
மண்ணாள் அரசன் விட்டு விடுவானா?

“வல்லான் வகுத்ததே வாய்க்கால்” போல்
வலிமையால் அபகரித்தான் மணியை!

மணியுடன் திரும்பினான் நாடு - இட்டார்
முனிவர் மனம் வருந்தியதால் சாபம்!

“இனிய என் இறைவன் மண்ணில் வந்து
மனிதனாகப் பிறந்து அழிப்பான் உன்னை!”

கடும் தவத்தில் ஈடுபட்டார் கபிலமுனிவர்;
சுடும் தீ ஜ்வாலையாகக் காட்சி அளித்தாள்

சாருஹாசினி என்னும் விஷ்ணு மாயை!
அருள் கூர்ந்து கூறினாள் கபிலமுனியிடம்,

“பிரானிடம் வரங்கள் பெற்றுள்ள கணனை
பிரம்மாதி தேவர்களால் அழிக்க இயலாது!

ஆதி காரணனான விநாயகர் மட்டுமே
அழிக்க வல்லவர் கணனை அறிவீர்!

தவம் செய்வீர் விநாயகர் மீது!” எனத்
தாயினும் பரிந்து கூறினாள் மாயை.

“தருவீர் தவம் செய்யும் விதிமுறையை!”
திருமந்திரத்தை உபதேசித்தாள் மாயை.

“ஜெபியுங்கள் பதினெட்டு லக்ஷம் முறை
துதிக்கையன் தருவான் திவ்ய தரிசனம்!”

முறைப்படி ஜபித்துச் செய்தார் ஹோமம்;
குறைவின்றி நிறைவுற்றன வழிபாடுகள்!

மன்மத விக்ரஹத்தைப் போன்று கண்முன்
விக்னராஜர் தோன்றினார் தேவியர்களுடன்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#34h. Kapilar’s penance

“It will easier for me to part with my life than to part with ChintAmaNi” the sage Kapilar told the GaNan. But once a king … always a king! If any king sets his eyes on any thing superior, he simply must possess it. GaNan took away the ChintAmaNi by sheer force.

Sage Kapilar felt very hurt by the treacherous way his kindness was repaid by GaNan and his army. He cursed GaNan, “The lord whom I worship will be born on earth as a man and destroy you!”

Kapilar started doing severe penance. VishNu MAyA appeared to him as a JwAlA of fire and told the sage, “GaNan has got several boons from Lord Siva. He can not be destroyed by Indra or any DEvA or even by Brahma and VishNu. Only VinAyaka is capable of destroying him. So pray to VinAyaka!”

“Please tell me the right manner to pray to him” the sage requested VishNu MAyA. She taught him the holy mantra and said “If you do japam of this mantra eighteen lakh times, VinAyaka will give you his dharshan”

Kapilar started his penance, japam and homam and completed them successful. VinAyaka appeared before him – more beautiful than Manmatha himself – along with his two Devis Siddhi and Buddhi.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 5

ஐந்தாம் ஸ்கந்தம் - தேவி பாகவதம்


5#1a. “என்ன தவறு?”

சௌனகர் வினவினார் சூத மஹா முனிவரிடம்;
“சௌக்கியமாக இருக்க வேண்டியவன் கண்ணன்

செய்வதற்கரிய சிவபூஜை செய்தது ஏன் கூறும்!
வைகுந்தவாசனின் அம்சம் அல்லவா கண்ணன்?

பார்வதி தேவியும் அருள் புரிந்தது எதற்காக?
பாரினில் கண்ணன் தாசனாக ஆனது ஏன்?”

ஐயங்களை எழுப்பினான் ஜனமேஜயனும்.
ஐயம் தீர உரைத்தார் வியாசர் அவனுக்கு!

“தேவர்களைக் காப்பவன் மஹா விஷ்ணு;
தானவர்களை அழிப்பவன் மஹா விஷ்ணு;

தேவ காரியத்துக்கு அவதரித்தான் உலகில்!
தேவை மனிதனைப் போலவே வாழ்வதும்!

மனிதனான பின்பு பூஜிப்பதில் என்ன தவறு
தன்னிலும் உயர்ந்த ஈசனையும், குருவையும்?

குண வடிவான கண்ணன் நிர்குணன் அல்ல
குணவடிவானவன் அல்ல நிற்குண சிவன்.

குணவடிவான கண்ணன் நிர்குண சிவனை
வணங்கி வழிபடுவதில் என்ன தவறு கூறு.

இன்பம், துன்பம், காமம், மோஹம், வேகம்
இன்னும் அத்தனையும் உண்டு கண்ணுக்கு.

எல்லைக்கு உட்பட்டு வாழ்ந்த கண்ணன்
எல்லையில்லாத சிவனைத் தொழலாகாதா ?

சிறையில் பிறந்த கண்ணனைக் காப்பாற்றி
குறைவின்றி வளரச் செய்தாள் கோகுலத்தில்.

தன் கலைகளிலிருந்து உருவாக்கிய பெண்களை
மன்மத லீலைகள் செய்வித்தாள் கண்ணனுடன்.”

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


5#1a. “Why not?”

Sounakar asked Sootha maharushi, “Krishna is the amsam of Vishnu. He deserves to live happily. Why did he have to perform the difficult Siva aaraadhana? Why did Paarvati Devi give him boons? Why did Krishna become a devotee of the other gods?”

Sootha maharushi told Sounakar, “King Janamejayan had asked the same questions to Vyaasaa and this was the reply Vyaasaa gave to the king.

“Vishnu protects the Devaas and kills the asuraas. He took the avatar as Krishna in the world to carry out the plans made by gods. When he is born on the earth he is expected to live like any ordinary man will.

When Krishna is a man and Siva is a god what is wrong in Krishna’s doing Siva aaraadhna? Krishna was made of the three gunaas satvam, rajas and tamas. But Siva was the nirgunan – beyond and free from the three gunaas. Krishna had his limitations but Siva is limitless. So there is nothing wrong in Krishna’s doing Siva aaraadhana.

As for Paarvati Devi, she protected infant Krishna as Yoga Maayaa. She arranged for his safe childhood in Gokulam. She created beautiful women from her own amsam and made them enjoy pleasures with Krishna.
 
Food for thought for the neutral and unbiased minds!!!

(NOT a bone of contention for those who always feel one-up!)


These are NOT MY WORDS even by any remote chance!

These are the words of Sage Vyasa ( another avatar of Vishnu)

as seen in the Fifth Skanda of Devi Bhaagavatam.


"Why did Krishna become a devotee of the other gods?”

Sootha maharushi told Sounakar, “King Janamejayan had asked the same questions to Vyaasaa and this was the reply Vyaasaa gave to the king.

“Vishnu protects the Devaas and kills the asuraas. He took the avatar as Krishna in the world to carry out the plans made by gods. When he is born on the earth he is expected to live like any ordinary man will.

1. When Krishna is a man and Siva is a god what is wrong in Krishna’s doing Siva aaraadhna?

2. Krishna was made of the three gunaas satvam, rajas and tamas.
But Siva was the nirgunan – beyond and free from the three gunaas.

3. Krishna had his limitations but Siva is limitless.

So there is nothing wrong in Krishna’s doing Siva aaraadhana."


Conclusion drawn from the above statements:

What is good enough for Krishna is good enough for any other avatar of Vishnu!

You are welcome to draw your own conclusion and cherish it. :)

This subject is NOT OPEN for any debate! Thank you for cooperating! :pray2:
 
Last edited:
DEVI BHAAGAVATAM - SKANDA 9

9#50f. துர்க்கா தேவி (3)

" மணி, சூலம், கலப்பை, சங்கு;
உலக்கை, சக்கரம், தனுசு, பாணம்;

கரங்களில் தாங்கி சும்பாசுரனை அழித்தொழித்த
சச்சிதானந்த ஸ்வரூபிணி, வாணீ , பீஜ ரூபிணி

சரஸ்வதியை தியானிக்கின்றேன்!" என்று கூறி
சரஸ்வதி தேவியைத் தியானிக்க வேண்டும்.

ஸப்தஸதீ ஸ்தோத்திரத்துக்குச் சமமானது
சத்தியமாக வேறு இல்லை மூவுலகிலும்!

மகிழ்ச்சியடைவதில்லை வேறு துதியால் தேவி
மகிழ்ச்சி அடைவதைப் போல இந்தத் துதியால்.

அடைவர் அறம், பொருள், இன்பம், வீடு;
இடைவிடாது தேவியைத் துதிக்கும் அன்பர்.

தேவரும், மூவரும் துதிக்கின்றனர் துர்க்கையை;
தேவியர் குழுமித் துதிக்கின்றனர் துர்க்கையை;

ஞானியர், யோகியர் துதிக்கின்றனர் துர்க்கையை;
முனிவர், மனிதர்கள் துதிக்கின்றனர் துர்க்கையை!

பிறவிப் பயனைத் தருபவள் அன்னை துர்க்கை;
பிறவிப் பயன் ஆகும் துர்க்கையின் ஸ்மரணை!

பலன்கள் அடைந்தனர் தேவியைத் துதித்து
பதினான்கு மனுக்களும், பிற தேவர்களும்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


9#50c. DurgA Devi (3)

Saraswati is meditated upon as holding a bell, a pickaxe, a plough (Hala), a Conch shell, a Mushala (a club), Sudarsana chakram, a bow and arrows.

She is the one who destroyed Sumbasura. She is the Sath-Chit-Aananda swaroopiNi. She is the VANi Beeja RoopiNi. (the source of knowledge and speech)

There is no other stuti which can please Devi as much as Sapta Sathee. Those who worship chanting this stuti will attain Dharma, Artha, KAma and Moksha.

The DevAs and the Trinity worship Devi. All the amsams of Devi worship her. The GnAnis, Yogis, Rushis and men all worship Devi.

DurgA Devi will confer success on the purpose of one's life. It is nothing but remembering Devi all the time. The fourteen Manus and the DevAs attained whatever they wished for by worshiping Devi.
 
BHAARGAVA PURAANAM - PART 2

#34i. விநாயகர்

ரத்தின கிரீடம், செவிக் குண்டலங்கள்;
முத்து மாலை, வலிய நான்கு புஜங்கள்;

கருணை பொழியும், முகம் அருட்பார்வை;
அருகினில் சித்தி தேவியும், புத்தி தேவியும்!

வணங்கி வழிபட்டார் கபில முனிவர்,
கணபதியை மெய் சிலிர்த்து, புல்லரித்து!

“கணன் என்னும் அபிஜித்ராஜனின் மகன்,
கவர்ந்து சென்றான் அரிய சிந்தாமணியை.

வென்றுள்ளான் பிரம்மாதி தேவர்களை.
பெற்றுள்ளான் நீண்ட ஆயுளை வரமாக!”

“கணன் கவர்ந்த சிந்தாமணியை மீட்டுத்
கபிலரே தருவேன் மீண்டும் உம்மிடமே!”

கனவு ஒன்றைக் கண்டான் கணன்;
நனவிலும் வந்து பற்றியது கவலை.

தாய் தந்தையரை அழைத்தான் – தன்
தாபத்தைச் சொன்னான் அச்சத்துடன்!

“அழிவு காலம் வந்துவிட்டதோ என்று
அஞ்சுகிறேன் கனவு கண்ட பின்னர்.

அளவற்ற சேனையுன் கபில முனிவர்
அமர்க்களம் வருகின்றார் போர் புரிய!

நான்கு கரங்களை உடைய ஒரு வீரன்
கொன்று குவிக்கிறான் என் சேனையை.

காரத்தில் உள்ள மழுவை ஏவிவிட்டு – என்
சிரத்தை அறுத்துத் தள்ளுகிறான் கீழே!

வரங்கள் பொய்த்துப் போய்விடுமோ- என்
சிரம் விழுந்து உருளுமோ மண் தரையில்?”

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


#34i. VinAyaka

VinAyaka was wearing a crown made of precious gemstones. He wore kuNdalams in his ears and pearl strings on his chest. He had four strong arms carrying his four weapons.

His face was merciful and his glance graceful. He was accompanied by his two DEvis. Sage Kapila was thrilled by the dharshan and paid his obeisance to lord VinAyaka and his DEvis.

He told VinAyaka, “GaNan the son of Abhijith took away by force my rare ChintAmaNi. He has many boons and a long life besides. He has conquered all the three worlds.”

“I will take away the ChintAmaNi from GaNan and return it to you!” VinAyaka told the sage and disappeared.

GaNan had a nightmare. He was terrified by the dream. He consulted his parents immediately. “I am afraid that my end is nearing. The nightmare has got me really worried. Sage Kapila came for a battle leading a huge army in my dream.

A man with four arms killed all my soldiers. He threw his mazhu at me. It cut off my head and made it roll on the ground. Will all my boons fail me? Will my head really roll on the ground?”
 
DEVI BHAAGAVATAM - SKANDA 4

5#1b. அஹங்காரம்

“ஒரு பெண்ணே போதும் விலங்கிட்டது போல்
ஒரு மனிதனைத் தளைப்படுத்தி அடக்குவதற்கு!

பதினாயிரத்து ஐம்பது பெண்களுக்குக் கண்ணன்
அதிகப் பிரியனாக இருந்தது எப்படி எனக் கூறும்!”

கேட்டவன் மன்னன் ஜனமேஜயன் – அவனுக்குத்
தேட்டமும், தெளிவும் தந்தவர் வியாச முனிவர்.

“அஹங்காரமே காரியங்களின் காரணம் – நாம்
அஹங்காரத்தால் புரிகின்றோம் தீச் செயல்கள்.

அஹங்காரம் பந்தப்படுத்துகின்றது மனிதனை;
அகங்காரம் அழிவதே முக்திக்கு வழி ஆகும்.

காக்கும் தொழில் செய்பவன் விஷ்ணு – அவன்
காக்கின்றான் கர்த்ருத்வ அஹங்காரம் கொண்டு.

அஹங்காரத்துடன் செய்யும் செயல்கள் - அவனை
அநேகம் பிறவிகளை எடுக்கச் செய்கின்றன!

அகங்காரத்தின் வித்து ஆகும் அஞ்ஞானம்.
அஹங்காரத்தின் விளைபொருள் சம்சாரம்!

இல்லை அஹங்காரம் என்ற நிலை வந்ததும்
இல்லை மோஹம், இல்லை சம்சார பந்தம்.

தன்னிச்சையாக அவதரிக்கின்றானா விஷ்ணு?
தன்னிச்சையாக எடுப்பானா இழிபிறவிகள்?

மூடனும் விரும்ப மாட்டான் கர்ப்ப வாசம்;
மூத்திர மலங்கள் நிறைந்துள்ள ஓர் உடலை!

பிறவி என்றாலே துன்பம் என்னும் போது
பிறவியை விழைவானா அறிவுள்ளவன்?

தானம், தவம், வேள்வி செய்வதெல்லாம்
மானிடப் பிறவியை ஒழிப்பதற்கு அல்லவா?

‘பிறவா வரம் வேண்டும்’ என்பது அல்லவா
மறவாமல் அனைவரும் கோரும் ஒரே வரம்?

சுதந்திரம் உள்ளவர் எவரேனும் உலகில்
இந்த விதமாக வந்து பிறப்பார்களா கூறு!

பிரமன், தேவன், மனிதன் அனைவருமே
பிறையணி தேவியின் வசப்பட்டவர்கள்!”

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


5#1b. Ahankaaram

King Janamejayan had put this question now, “One woman is enough to bind a man in Samsaara. How did Krishna manage the ten thousand and fifty women? How did he please everyone and keep them happy?”

Sage Vyaasaa continued explaining to him,” Ahankaaram makes us perform various actions. We do everything good and bad due to our Ahankaaram. It is the Ahankaaram that binds a man to samsaaraa. If the Ahankaaram is destroyed, then there will be total liberation.

Vishnu is the protector of the creation. He protects with karthruthva ahankaaram as the doer of that action. That binds him and as a result he has to take many more births.

Ignorance is the seed of Ahankaaram. Samsaaram is the crop grown in Ahankaaram. When the Ahankaaram gets completely destroyed then there will be no more confusion, nor delusion, nor bondage, nor samsaara.

Do you think Vishnu took those avatars by his choice? No one in his right senses will wish to be born as lowly creatures. Not even a fool will prefer to grow in the womb and be born.The body is filled with urine and feces. Birth itself is painful. All that follows the birth is also painful.

We perform various good karma to get out of the bondage. The only prayer any wise person seeks is to get out of the samsaara chakra of birth and death. No one has any freedom here not Brahma, nor Deva, nor Manushya nor Asura.”
 
DEVI BHAAGAVTAM - SKANDA 9

9#50g. துர்க்கா தேவி (4)
பயன்:
கூறப் பட்டன பஞ்சப் பிரகிருதியரின் அவதாரம்;
கூறப் பட்டன பஞ்சப் பிரகிருதியிரின் அம்சங்கள்.

அடைவான் இதைக் கேட்கும், படிக்கும் ஒருவன்
அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கையும்.

அடைவர் ஒவ்வொருவரும் தாம் விரும்புவதை;
அடைவர் இக பரங்களில் விரும்பும் நல் வாழ்வு.

பாராயணம் செய்ய வேண்டும் இதனைப்
பராசக்தியின் சன்னதியில், நவராத்திரியில்.

அடைவாள் மிகவும் மகிழ்ச்சி பராசக்தி.
அடைவாள் பக்தனின் வசம் பராசக்தி!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

ஓம் தத் ஸத்! ஓம் தேவ்யை நம:

ஒன்பதாவது ஸ்கந்தம் முற்றுப் பெற்றது


9#50d. DurgA Devi (4)

Thus I have described to you the very hidden histories of the Five Prakritis and their avatars have been explained. The four objects of human pursuits Dharma, Artha, KAma and Moksha are obtained by hearing this.

He who wishes for sons will get good sons; He who wishes to become learned will become learned; Whatsoever whosoever wishes for will be given to him if he listens to this.

The Devi becomes pleased with him who reads this for nine nights in front of her in a temple. She becomes favorably disposed towards such a devotee.

The ninth Skanda of Devi BhAgavatam ends here.


On tath sath. On Devyai nama:

 

Latest ads

Back
Top