• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

A poem a day to keep all agonies away!

BHAARGAVA PURAANAM - part 2

#34j. அறிவுரைகள்

ஆலோசனைக் கூட்டத்தை நடத்திட,
அமைச்சர் அளித்தனர் அறிவுரைகள்.

பிரமதன் கூறினான் கணனிடம்,
“அரசே இது என்ன புது மயக்கம்?

ஒரு குடைக் கீழ் உலகாளும் நீர்
வெறும் கனவுக்கு அஞ்சுவதோ?”

கிரந்தன் கூறினான் கணணிடம்,
“அரசருக்கு நன்மை உரைப்பது

அமைச்சரின் கடமை அன்றோ?
குமைச்சலுடன் சபித்தார் கபிலர்,

மன்னன் மணியைக் கவர்ந்தபோது;
மன்னன் கனவு தீவினைப் பயனே!”

விசுவஜித்து கூறினான் குறுக்கிட்டு,
“பேசுவதற்கு இதுவல்ல நல்ல நேரம்,

விசுவாசத்தை நாம் காட்டவேண்டும்
ஆசுவாசப்படுத்த வேண்டும் அரசனை.”

விதந்து ஒரு தந்திரசாலி அமைச்சன்;
யதார்த்தத்தையே பேசினான் அவன்.

“கபிலரை நினைவில் வைத்தால்
கபிலரே தோன்றுவர் கனவிலும்!

முனிவரையே அழித்து விட்டால்
இனி ஒரு பயம் இல்லை நமக்கு”

“கேடு வரும் பின்னே ஆயினும் மதி
கெட்டு வரும் முன்னே” உண்மையே.

சம்மதம் விதந்துவின் அறிவுரைகள்!
ஆயத்தம் நான்கு வகைச் சேனைகள்!

கணனின் யுத்தப் புறப்பாட்டால்
கலங்கி ஓடி வந்தான் அபிஜித்.

“தவறுக்கு மேல் தவறு செய்யாதே!
அவரிடமிருந்து பறித்த மணியைக்

கொடுத்துவிடு திரும்ப அவரிடமே!
கெடுமதியை மன்னிக்கச் சொல்!”

அழிவு அழைக்கும்போது யாரால்
அழிவைத் தவிர்த்திட முடியும்?

யுத்தத்துக்குப் புறப்பட்டான் கணன்,
சத்தம் கடல் அலையென ஒலிக்க!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#34J. The Council of ministers

GaNan called all his ministers for counseling. The ministers gave different advices to GaNan. Pramathan said,” Oh king! Why this fear and confusion? You rule over the three worlds. Are you afraid of a mere dream?”

Granthan said, “It is the duty of the ministers to give good advice to the king. When the king took away by force the ChintAmaNi, the sage Kapila cursed him. I am sure the dream is an effect of the curse”

Viswajith interfered and said,” We have no time to spend in idle talks. We have to stand by our king and infuse confidence and courage in him, since he appears to be disturbed”

Vithanthu was a cunning minister. He spoke what appeared to be the truth, “If the king keeps thinking about the sage Kapila all the time, he is sure to appear in the King’s dreams also. If we kill the sage, there will be no need to fear him any more”

GaNan felt that this was a good advice. The power of thinking gets clouded whenever there is going to be a great fall or total destruction. GaNan got his chaturanga sena ready for a battle with the sage Kapilar.

Abijith was shocked by GaNan’s wrong decision. He came running to his son,” Oh dear son of mine! Do not commit more and more mistakes. You have taken away by force the rare gem ChintAmaNi from the rushi.

Return it to him with humility and seek his pardon. This way you will not have to fear him any more” But GaNan was determined to wage a war and would not listen to the sound advice given by his well wisher father.

The army left making as much noise as the waves of a disturbed sea.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 5

5#2a. மஹிஷாசுரன்

வியாசர் உரைத்த மொழிகளைக் கேட்டு,
வியந்தான் மன்னன் தேவியின் சிறப்பை!

ஆர்வம் கொண்டான் மேன்மேலும் கேட்க,
பார்வதி தேவியின் பெருமைகளை எல்லாம்!

“தேவியின் பெருமையை அறிவது அவசியம்
தேவியின் சிருஷ்டியை புரிந்து கொள்வதற்கு!”

” இருந்தான் மஹிஷன் எனும் கொடிய அசுரன்
பொருதனர் இருபுறமும் தேவர்கள், தானவர்கள்.

சென்றான் மஹிஷன் மேரு மலைக்கு – அங்கு
செய்தான் கடும் தவம் பிரம்ம தேவனைக் குறித்து.

பதினாயிரம் ஆண்டுகள் உருண்டோடின பின்பு
விதி மகிழ்ந்து காக்ஷி தந்தான் மஹிஷனுக்கு!

“வரம் என்ன வேண்டுமோ கேள்!” என்று கூற,
“மரணமே இல்லாத வரம் தாரும்!” என்றான்.

சிரித்தான் பிரம்மதேவன் இதைக் கேட்டு;
விரித்தான் கால தத்துவத்தை மஹிஷனுக்கு!

“கட்டுண்டு இயங்குகிறது அண்ட சராசரம்
கால தத்துவத்துக்கு என்று அறிந்து கொள்!

காலம் செயல்படும் தோற்றம், மறைவு என;
காலம் இல்லை என் வசத்தில் – ஏனெனில்

காலத்துக்கு வசப்பட்ட ஒருவனே நானும்!
காலத்துக்கு வசப்படாதவள் தேவி ஒருத்தியே!

மரணமே இல்லாத வரத்தைத் தவிர்த்து – வேறு
வரம் எதுவானாலும் கேள் தருவேன் உனக்கு!”

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

5#2a. Mahishaasuran

King Janamejayan was fascinated by the greatness of Devi. He wished to hear more and more about her from sage Vyaasaa. He said, ” I wish to know more about Devi’s greatness. It will help me to appreciate her creation of the universe better”

Sage Vyaasaa continued, “Once there lived a fearsome asuran named Mahishan. A long war was fought between the Deva and the Asura. Mahishan decided to get a boon by which he would become immmortal. He went to the Mount Meru and sat there in severe penance directed to Brahma.

Ten thousand years rolled by. Brahma was pleased with his penance and appeared to Mahishan in person to grant the boons he wished for. Mahishan said,”I want to become immortal. Please grant me that boon sire!”

Brahma laughed on hearing this. “No one and nothing can be immortal. Everything and everyone is under the influence of Time Factor except the Supreme Devi. If there is a thing called the birth, there will be a thing called the death. I myself am bound by the Time Factor. So ask for any other boon except immortality and I will be happy to grant you that boon.”
 
DEVI BHAAGAVATAM - SKANDA 10

[h=2]10#1a. ஸ்வாயம்பு மனு
பிறந்தான் பிரமன் நாரணன் நாபியிலிருந்து;
பிறந்தான் ஸ்வாயம்பு பிரமன் மனதிலிருந்து.
[/h] பிரிந்தான் ஸ்வாயம்பு மனு இரு உருவங்களாக;
பிறந்தாள் பெண் சதரூபை இடப் புறத்திலிருந்து.

திருப்பாற்கடற்கரை சென்று மண்ணினால் - தேவி
திரு உருவினைச் சமைத்தான் ஸ்வாயம்பு மனு.

பிரதிஷ்டை செய்தான் தேவியின் திரு உருவை;
புறக்கணித்தான் அன்னம், பானம், நித்திரையை.

விரதங்களால் ஒடுக்கினான் இந்திரியங்களை;
விரதங்களால் அடக்கினான் அந்தக்கரணங்களை.

ஜெபித்தான் வாக்பவம் என்னும் மந்திரத்தை - தவம்
செய்தான் ஒற்றைக் காலில் நின்று நூறு ஆண்டுகள்.

காட்சி தந்தாள் தேவி பராசக்தி ஸ்வாயம்பு மனுவுக்கு;
"கேட்டால் தருவேன் கோரும் வரங்களை!" என்றாள்.

ஆனந்தம் அடைந்தான் ஸ்வாயம்பு மனு இது கேட்டு;
அன்னையிடம் கேட்டான் இந்த அரிய வரங்களை.

"அழகிய விழிகளை உடைய என் ஜகதன்னையே!
அனைவரின் இதயங்களிலும் என்றும் உறைபவளே!

எவராலும் பூஜிக்கத் தகுந்த தேவி நீயே - இந்த
புவனங்கள் அனைத்தையும் தாங்குபவளே!"

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


10#1a. SWAyambu Manu



From the lotus on navel of the four armed VishNu, BrahmA the creator of the Universe was born. The four faced BrahmA, produced from His mind SvAyambhuva Manu and Manu's wife SataroopA appeared from his left side.

SvAyambbuva Manu, the mind-born son of BrahmA, was given the task of creating and multiplying. He made an image of the Devi, on the beach of the Ocean of milk. He started worshiping Her and began to repeat the mystic mantra of VAgbhava or the Deity of Speech.

Thus engrossed in worship, SvAyambhuva Manu conquered his breath and food. He observed Yama, Niyama and other vows and became lean and thin. For one hundred years he stood on one leg and successfully controlled his six passions of the mind.

Pleased by his Tapas Devi, the Mother of the Universe, appeared before him and said “O King! Ask divine boons from Me and I shall grant them to you.”

Manu said, "Oh Devi with large eyes! Victory to You who is residing in the heart of everyone! You are honored! You are worshiped! O Devi! You Uphold the world!"
 
BHAARGAVA PURAANAM - PART 2

#34k. லக்கன்

ஆசிரமத்தில் செய்து கொண்டிருந்தார்,
அபிஷேக ஆராதனைகள் கபில முனிவர்.

“கணன் வந்துள்ளான் பெரும் படையுடன்!
கண நாதா நீயே அபயம் அபயம்” எனவும்,

வேழமுகன் தோன்றினான், தேற்றினான்;
அழைத்தான் தன் அரிய சிங்கவாகனத்தை.

“நான் செல்கின்றேன் போருக்கு!”என்று
முன் வந்தார் சித்தி தேவியார் உடனே!

உள்ளன்போடு தந்தார் அனுமதி – அவள்
உள்ளங்கையோடு ஒன்றினார் பெருமான்.

நிராயுத பாணியாக ஓர் இளம் பெண்ணா?
குமாரர்கள் கொக்கரித்தனர் ஏளனமாக!

நெருங்கினர் அவளுடன்போர் புரிவதற்கு,
இரு குமாரர்கள் சுலபனும், சூலபாணியும்.

இமைக்கும் நேரத்தில் உற்பத்தி ஆயினர்
இலக்கத்தைக் கடந்துவிட்ட படைவீரர்கள்.

படைகள் மோதின உக்கிரத்துடன்,
தடைகள் இல்லை போர் புரிவதற்கு!

தேவியின் படைகள் தளர்ந்தவுடன்,
தேவி தோற்றுவித்தாள் இலக்கனை.

பஞ்சு போல அழிந்தது படை தீ முன்!
அஞ்சிய வீரர்கள் இட்டனர் புறமுதுகு.

சிறைப்பட்டனர் சுலபன், சூலபாணி,
இறைவன் முன்கொண்டு நிறுத்தினர்!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#34k. Ilakkan

Kapilar was performing the daily abhisheka ArAdhana. When he came to know about the army of GaNan approaching the ashram he prayed to his lord, “Oh VinAyaka ! you must protect us from the army of GaNan. We have no one else to save us”

VinAyaka appeared with his two Devis. He called out for his simha vAhanam. But Siddhi Devi offered to go and fight with GaNan. VinAyaka allowed her to go the battle field. He merged in her palms.

When Sulabhan and SoolapANi the sons of GaNan saw a young woman all alone without any weapon in the battle field, they sneered and jeered at her. They went near her. DEvi produced an army of armed soldiers in a blink of an eye.

Both the armies fought well. When DEvi’s army has become weak she created a mighty warrior called Lakkan. GaNan’s army got destroyed like a bale of cotton in a wild fire.

Sulabhan and SoolapANi were arrested and taken before VinAyaka.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 5

5#2b. வரம் தந்தான்

மரணம் இல்லாத வாழ்வு பெற்றிட மஹிஷன்
வரம் கேட்டான் மீண்டும் வேறு விதமாக!

“நிகழக் கூடாது என் மரணம் ஓர் ஆணால்
நிகழாது என் மரணம் பேதைப் பெண்களால்!”என

“ஆணால் இல்லை உனக்குப் பிராண ஆபத்து
ஆனால் அழிக்க முடியும் ஒரு பெண்ணால்!”என

இந்த வரம் பெற்று மகிழ்ந்தான் மஹிஷன்!
‘எந்தப் பெண் எதிர்க்கத் துணிவாள் என்னை?’

இருந்தான் தனு என்பவன் பூமியில் முன்பு;
இருந்தனர் இரு மகன்கள் ரம்பன், கரம்பன்.

தவம் செய்தனர் இரு சகோதரர்களும் – அந்தத்
தவத்தின் நோக்கம் நன் மக்களைப் பெறுவது.

பஞ்சநதம் நதி நீரில் கரம்பனின் தவம்!
பஞ்சாக்கினி நடுவில் ரம்பனின் தவம்!

இந்திரன் அஞ்சுவான் தபஸ்விகளைக் கண்டு.
இந்திரன் முயல்வான் தவத்தைக் கலைத்திட.

முதலையாக மாறிச் சென்றான் நதி நீரில்
மூழ்கடித்தான் தவம் செய்த கரம்பனை.

வருந்தினான் மனம் அண்ணன் ரம்பன்;
அரிந்து இடப்போனான் சிரத்தைத் தீயில்.

பிடித்தான் இடக் கரத்தால் தன் சிரத்தை!
பிடித்தான் தன் வலக் கரத்தால் வாளை!

தடுத்தான் தற்கொலையை அக்கினிதேவன்
“கொடுப்பேன் வரம்! வேண்டாம் கொலை!”

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


5#2b. The Boon

Mahishan asked for the same boon wishing for immortality, but now he put it differently. “I should not get killed by any male. I am sure no female will ever dare to face me in a war.”

Brahma granted him that boon and said, “You will not get killed by any male but a female can kill you!” Mahishan thought that this boon was good enough for him. If no man could kill him, no woman could kill him either.

Once up on a time a man named Tanu lived on the earth. He had two sons named Ramban and Karamban. They wished to beget good sons and went to do severe penance for that purpose.

Karamban did penance by standing in the water of the river Panchanatham. Ramban did penance by standing amidst Panchaagni. The four agni kuntams were on his four sides and the Sun shone on him from the sky – making it a difficult penance in between Pancha agni.

Indra got worried about their penance. He would always have this fear that his place in the heaven would be usurped by the tapasvi. He would try to ruin the penance by any means – fair or foul.

Indra came transformed into a crocodile and drowned Karamaban in the river water. Ramban became heart broken and wanted to end his life by cutting off his own head and offering it to the Agni Devan.

He held his head with his left hand and his sword with his right hand. Just as he was about to severe his own head, Agni Devan emerged from the fire and stopped him.

“I shall grant you any boon you seek. Please stop your effort to commit suicide” Agni Devan told Ramban with sympathy.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 10

10#1b. ஸ்வாயம்பு மனு (2)

"எல்லா மன்வந்தரங்களிலும் மங்கலமானவளே!
எல்லோரும் வணங்கும் சித்ரூப ஸ்வரூபிணியே!

பக்தியுடன் உன் வாக்பவ மந்திரத்தை ஜபித்தால்,
சித்தியாக வேண்டும் அந்த பக்தனின் கோரிக்கை.

அடைய வேண்டும் எளிதாக பக்தியை, முக்தியை;
படிப்போரும், கேட்போரும், சொல்வோரும் இதனை!

விருத்தி அடைய வேண்டும் அவர்கள் குலம்;
விருத்தி அடைய வேண்டும் அவர்கள் ஞானம்;

விருத்தி அடைய வேண்டும் அவர்கள் கர்ம சித்தி;
விருத்தி அடைய வேண்டும் பூர்வ ஜன்ம ஞானம்.

அருள வேண்டும் நீ இவை அனைத்தையும்
அன்புடன் உன் வாக்பவத்தை ஜபிப்பவருக்கு!"

"அருளினேன் நீ கோரிய வரங்களை எல்லாம்!
மகிழ்ந்தேன் நீ செய்த வாக்பவ ஜெபத்தினால்!

தருகிறேன் உனக்குப் பகைவர் இல்லாத அரசு;
தருகின்றேன் உனக்கு சத்புத்திர, பௌத்திரர்கள்.

தருகின்றேன் உனக்குக் நிலையானதொரு பக்தி;
தருகின்றேன் உனக்கு மீண்டும் பிறவாத முக்தி!"

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

10#1b. SWAyambuva Manu (2)

" It is only by your gracious glance that BrahmA is able to create, VishNu is able to preserve and Rudra is able to destroy. If You desire to grant me a boon, then let it be this! Let all the obstacles to procreating and multiplying the human race disappear.

Whosoever worships you with this VAgbhava Mantra and whosoever hears it with devotion or makes the others hear it, must be blessed with success. The enjoyment of Mukti must become very easy for them to attain.
They must get the power to remember their past lives. They must become eloquent in their speech. They must succeed in obtaining knowledge and in all the deeds they do.

May their race grow with the increase in the number of their children and grand children . O Devi Bhagavati! This is the boon I seek from you."

Devi blessed him saying," I am pleased with your chanting of the VAgbhava mantram. I shall bless you with many good sons and grandsons. I shall bless you with a kingdom with no fear of enemies. I shall give you undiminished bhakti and mukti!"
 
Last edited:
BHAARGAVA PURAANAM - PART 2

#34l. பஞ்ச பாணம்

“கணனின் மகன்கள் இவர்கள்” என
கணநாதரிடம் கூறினான் லக்கன்.

புறமுதுகிட்ட வீரர்கள் சென்றனர்,
அரசனிடம் கூறினர் நிலைமையை.

“இந்திராதி தேவரால் இல்லை அழிவு!
எந்தக் காரணம் கொண்டு அச்சம்?

செல்வோம் யுத்தகளத்துக்கு நாமே;
வெல்வோம் முனிவரின் படையை;

மீட்போம் இரு குமாரர்களையும்!”
கேட்டான் கணன் அறிவுரையை.

சிதறிய படையைத் திரட்டினான்;
பதறாமல் சென்றான் போர்க்களம்.

சித்தி தேவி , புத்தி தேவியர் சகிதம் அங்கு
சிங்கவாகனத்தில் கண்டான் கணபதியை1

அருகில் நின்று இருந்தார் கபில முனிவர்,
வெருட்டினான் அவரைச் சொற்களாலேயே.

“என்னைக் கொல்ல வந்தவன் இவனா?
தன்னைக் காத்துக் கொள்ளட்டும் முதலில்!

விளக்கை நாடி வந்து வீழ்ந்து மடியும்
விட்டில் போலவே வந்துள்ளான் இவன்!”

கணன் உரைத்த மொழிகளைக் கேட்டு
கணபதி உரைத்தார் இந்த மறுமொழி.

“உயிர் வாழலாம் என் உயிர்பிசையால்;
தயக்கம் இல்லை உன்னை அழிப்பதற்கு!

மறைக்கிறது உன் மதியை மமதை!
இறப்பதற்குச் சித்தம் ஆகிவிட்டாயோ?”

தொழுதால் உயிர் வாழலாம் அன்றிப்
பொருதால் உயிர் மாளலாம்” என்றதும்

பதில் வந்தது ஓர் அம்பு வடிவத்தில்,
பஞ்ச பாணங்களை எய்தான் கணன்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

#34 l. Pancha bANam

Lakkan told VinAyaka,”These are the two sons of GaNan.” The soldiers who ran away from the battle field, went to GaNan and told him that the two princes had been captured. GaNan got very worried. His ministers advised him thus:

“You are invincible O King! Why do worry or feel upset? We will go to the battle field and release the princes immediately.”

GaNan liked this idea. He gathered the remaining soldiers and went to attack the army of Kapilar. He saw VinAyaka with his two DEvis and sage Kapilar was standing near them. GaNan got very angry at their sight.

“So you are the one who has come to kill me! First you save yourself from me. A moth gets attracted by a lamp and goes near it only to get killed. You too have come to me only to get killed”

VinAyaka retorted, “You are blinded by your pride and ego. I can still spare your life and you may live longer – if you feel sorry for your actions. But if want a war, you shall have it and I will not hesitate to kill you.”

GaNan did not reply to this but shot on VinAyaka an arrow consisting of five arrows.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 5

5#2c. பெண் எருமை

ரம்பன் கேட்டான் தான் விரும்பியதை
ரம்பன் பெற்றான் தான் விரும்பியதை

“தருவீர் நான் விரும்பி வந்த வரத்தினை.
பெருமை மிகுந்த மகன் வேண்டும் எனக்கு.

வெல்ல வேண்டும் மூன்று உலகையும்;
வெல்லப் படக் கூடாது வேறு எவராலும்!

வேண்டும் காமரூபம் எடுக்கும் திறமை!
வேண்டும் வணங்கப்படும் பெருமை!”

தந்தான் அக்னி தேவன் இந்த வரத்தை;
சென்றான் மகிழ்வுடன் ரம்பன் இல்லம்.

அதி மனோரம்மிய வனத்தில் கண்டான்
அதிக இளமையான பெண் எருமையை.

நெருங்கினான் எருமையை காம வசப்பட்டு;
நெருங்கியது பெண் எருமை விதி வசப்பட்டு.

புரிந்தனர் காம லீலைகள் கூடிக் கலந்து;
தரித்தது கரு பெண் எருமை கலவியால்.

இணை பிரியாது காத்தான் எருமையை;
இணைய விடவில்லை பிற எருமைகளை.

கண்டது வேறு ஒரு கிடா இந்த எருமையை;
கொண்டது மோஹம் கண்டவுடன் இதனை.

துரத்தியது பெண் எருமையை அந்தக் கிடா;
துரத்தினான் ரம்பன் காமவயப்பட்ட கிடாவை.

தாக்கியது கொம்புகளால் ரம்பன் மார்பில்!
தாக்குதலில் மடிந்து விட்டான் ரம்பன்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


5#2c. The female buffalo

Ramban told Agni Devan,”I came here seeking the boon for a valorous son. He must conquer all the three worlds but no one should be able to conquer him. He must have the power of Kaama roopam and assume any form he desires. Evey one must hail and worship him!” Agni Devan grated this boon and vanished.

Ramban went back happy that he had succeeded in his mission. On the way he passed through a beautiful garden. He saw a young and attractive female buffalo there. He fell in love with it instantly. The buffalo also was attracted to him due to its destiny.

They enjoyed the pleasures of lust and the buffalo became pregnant with Ramban’s child. Ramban took good care of it and made sure that she was not bothered by any other male buffalo.

One day a strong male buffalo saw this pregnant female and started chasing her. Ramban chased the male in heat but he got gored and killed by it in the ensuing fight.

 
DEVI BHAAGAVATAM - SKANDA 10

10#2a. விந்திய மலை (1)

மலைகளில் மிகச் சிறந்தது விந்திய மலை;
மக்களால் பூஜிக்கத் தகுந்தது விந்திய மலை.

நிறைந்திருந்தது நெருங்கிய காடுகளால்;
நிறைந்திருந்தது நெருங்கிய புதர்களால்;

நிறைந்திருந்தது பலவித விலங்கினங்களால்;
நிறைந்திருந்தது உலவும் விண்ணவர்களால்;

உல்லாசமாகத் திரிவர் விந்திய மலை மீது
கின்னரர்கள், கிம்புருஷர்கள், அப்சரஸ்கள்.

வந்தார் நாரதர் ஆவலோடு விந்திய மலைக்கு;
வரவேற்று உபசரித்தது நாரதரை விந்தியமலை.

"நன்மை தரும் சூரிய, சந்திரர்களின் சஞ்சாரம்;
நன்மை தரும் லோகத்துக்கு நாரதர் சஞ்சாரம்.

வந்த காரியம் என்னவென்று கூறுவீர். நீர்!
விந்தைச் செய்தி என்னவென்று கூறுவீர்!"

"கண்டேன் லோக பாலகர்களின் இல்லங்களை!
கண்டேன் லோகங்களைப் போல அமைந்ததை "

கூறிய பின் பெருமூச்செறிந்தார் நாரத முனிவர்;
புரியவில்லை விந்தியத்துக்கு பெருமூச்சு ஏனென.

வினவியது, "முனிவரே எதற்காகப் பெருமூச்சு?"
விந்திய மலை வினயத்துடன் நாரத முனிவரிடம்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி .

10#2A. VINDHYA MOUNTAIN


cleardot.gif

Vindhya Mountain was highly honored and considered as the chief of the mountains on the earth. It was covered by dense forest with big trees. Creeping plants and thick shrubs flowered there, adding beauty to the mountain.

Deer, wild boars, buffaloes, monkeys, hares, foxes, tigers and bears roamed in the forest. Devas, GandharvAs, ApsarAs, and Kinnaras come there often to bathe in the cool rivers.

One fine day NaradA came to the Vindhya mountain - which received the Deva rushi with due honors and spoke to him thus: “O Devarushi! Please say whence you are coming. My house has been sanctified today by your arrival. Your wandering is as beneficial to the world as that of the Sun and moon. Kindly state your intention in coming here.”

NArada said :“O Vindhya! I am coming here from Sumeru Mountain. There I saw the abodes of Indra, Agni, Yama, and Varuna. There I saw the houses of these DikpAlas which are filled with objects of luxury and pleasure."

NArada sighed heavily. Bindhya, the king of mountains, seeing the Muni heaving a long sigh, asked him again with great eagerness, “O Deva Rushi! Kindly tell me why you heaved such a long sigh.”
 
BHAARGAVA PURAANAM - PART 1

#34m. முனிவரின் மணி

பஞ்ச பாணம் பிரிந்தது ஐந்தாக!
பிஞ்சு மதியணி முடி மீது ஒன்றும்,

பாதங்கள், புஜங்கள் மீது நான்கும்,
பட்டு நீராகி மறைந்தே போயின!

வேழமுகன் சினந்தான் கணன் மீது;
மழுவினை எய்தான் கணண் மீது!

அண்டங்கள் நடுங்கிக் கலங்கின!
அறுபட்டது கணன் சிரம் மழுவால்!

எஞ்சிய வீரர்கள் அஞ்சி ஓடினர்,
தஞ்சம் புகுந்தனர் அபிஜித்திடம்.

அபிஜித் ராஜன் ஆற்றாது அழுதான்,
“அபச்சரதால் வீணாயின வரங்கள்!

தவம் செய்து பெற்ற என் புதல்வனே!
தவமும், வரமும் பயனற்றுப் போயின!”

மந்திரி கிரந்தன் கூறினான் அவனிடம்,
“தண்டனை கிடைத்தது செய்த தவறுக்கு.

அளியுங்கள் மணியை முனியிடம்;
அபகீர்த்தி நீங்க வழி அது ஒன்றே!”

உணர்ந்தான் உண்மையை அபிஜித்;
மணியை அளித்தான் கபிலருக்கு.

மகன் தவறுக்கு அவன் வருந்தினான்;
மன்னிப்பு கேட்டான், மண்டி இட்டான்.

“வருந்த வேண்டாம் அபிஜித் ராஜனே!
இரு குமாரர்கள் உள்ளனர் உயிருடன்.

மன்னர்கள் ஆகி ஆட்சி புரிவர்” என்று
உன்னினார் விநாயகரை மனத்தில்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#34m. The ChintAmaNi

The Pancha bANam split into five arrows. One of them hit the crown of VinAyaka, the other four hit his legs and arms. They all vanished like vapor without harming VinAyaka.

Now VinAyaka became very angry and threw his mazhu at GaNan. The mazhu sped so fast that there was air turbulence everywhere in the world. The mazhu separated the head from the body of GaNan.

The remaining soldiers took to their heels and went to Abhijith Rajan to convey the sad news. Abhijith was besideS himself with sorrow. He wept bitter tears seeing his son’s body. “Oh dear son of mine! I got you as a gift of God through my hard penance. My penance, your penance and your boons have all gone in vain.”

The minister named Krandan consoled KIng Abhijit. “The one who commit a crime or does a mistake will have to get punished. Let us return the ChintaamaNi to the sage Kapilar and seek his pardon”.

King Abhijith understood the truth in this wise counseling. He returned the ChintAmaNi to the sage Kapilar. He knelt down and begged for pardon for the mistakes committed by his son GaNan.

The sage was moved with mercy and told Abhijth. “All is not lost my king. The two sons of GaNan Sulaban and SoolapANi are still alive. They will become the new kings and rule the country wisely.” The sage Kapilar then concentrated and meditated on Lord VinAyaka.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 5

5#2d. அபயம்

அஞ்சிய பெண் எருமை திரும்பியது வனம்;
தஞ்சம் புகுந்தது அங்கிருந்த யக்ஷர்களிடம்.

அளித்தனர் அபயம் அந்தப் பெண் எருமைக்கு;
அழித்தனர் அக் கிடாவை பாணங்களை எய்து.

அழுதது எருமை ரம்பனை எண்ணி எண்ணி;
அழும் எருமையுடன் சென்றனர் யக்ஷர்கள்.

சிதை மூட்டி எரித்தனர் ரம்பனின் உடலை;
சிதையில் பிரவேசித்தது பெண் எருமையும்.

தடுக்க முயன்றனர் யக்ஷர் உடன்கட்டையை;
தடுக்க முடியவில்லை அதன் தீவிரத்தால்.

நடுங்கினர் யக்ஷர் கருவை எண்ணி – தீயின்
நடுவிலிருந்து வெளிப்பட்டான் மஹிஷன்.

ரக்த பீஜன் ஆவான் மஹிஷன் – ஒரு துளி
ரத்தத்தில் தோன்றுவான் இன்னொருவன்!

சேர்த்தான் அசூரவீரர்களை ஒன்று திரட்டி;
சோர்வின்றி வென்றான் மூவுலகங்களை!

முடி சூட்டிக் கொண்டான் அசுர வேந்தனாக!
முடியவில்லை அவனை வெல்ல எவராலும்!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


5#2d. Abhayam

The frightened female buffalo ran baCk to the garden and surrendered to the Yakshas. They protected her and killed the male buffalo in heat chasing her, with arrows.

The female buffalo wept bitterly thinking of Ramban and led the Yakshas to where he lay dead. They cremated Ramban’s body. The female buffalo also jumped in to the fire as if performing Sati.

The Yakshas worried about the calf in its womb. Lo and behold! The buffalo calf emerged from the funeral pyre unharmed. He was named as Mahishan. He was a rakta beejan. Every drop of his blood could create an asuran well matched with him in valor and might.

Mahishan gathered all the asuraas who were still alive. He conquered all the three worlds and became the king. No body was able to defeat him.
 
Last edited:
DEVI BHAAGAVATAM - SKANDA 10

10#2b. விந்திய மலை (2)

"மேருவின் அகந்தையை அறிவாயா நீ?
கூறுவேன் உனக்குப் பெருமூச்சின் காரணம்!

பெருமை பெற்றது இமயம் பார்வதியைப் பெற்று;
பெருமை கூடியது சிவனை மருமகனாகப் பெற்று!

திருக் கயிலை உறைவிடமானது சிவபிரானுக்கு;
திருக் கயிலை பெருமை பெற்று விளங்குகிறது.

சிறப்புப் பெற்றுள்ளன நிஷாத மலை, நீலமலை.
சிறப்புப் பெற்றுள்ளது கந்தமாதன பர்வதம் கூட.

சிறப்புப் பெற்றுவிட்டது ஒவ்வொரு மலையும்;
சிறப்பால் கர்வம் அடைந்துவிட்டது மேருமலை.

சுற்றி வருகின்றான் சூரியன் மேருமலையை;
சுற்றி வருகின்றன கிரகங்கள், விண்மீன்கள்.

தனக்கு ஒப்பரும் மிக்காரும் இல்லையென்று
தன்னை உயர்வாக எண்ணுகிறது மேருமலை!

தவம் செய்யும் நான் தாபம் கொள்ளக் கூடாது!
தவம் செய்யும் நான் கோபம் கொள்ளக் கூடாது!

சிந்திக்க வேண்டாம் இது போன்ற விஷயங்களை;
சிந்தித்தேன் நீ விந்தைச் செய்தியைக் கேட்டதால்.

செல்கிறேன் என் இருப்பிடம்!"என்று கூறிவிட்டுச்
சென்று விட்டார் நாரத முனிவர் பிரம்ம லோகம்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


10#2b. Vindhya mountain (2)



cleardot.gif

"Oh! VindhyA! Here is the cause why I sighed. The HimAlayA Mountain is the father of PArvati Devi and the father-in-law of Lord MahAdevA. Therefore HimAlayA is the most worshiped mountain among all the mountains.

The KailAsa Mountain has gained respect being the residence of MahAdevA. It is also worshiped as being capable of destroying all the sins. Nishadha, Neela, and GandhamAdana mountains are worshipped at their own places for their own merits.

The Sun, the Soul of the universe, goes round Mount Meru along with the planets and stars. So Meru thinks of himself as the greatest amongst the mountains and claims “I am the supreme; there is none like me in all the three worlds.”

I sighed heavily thinking of the pride of Mount Meru. I am an ascetic and I have no need to discuss such things. I have told you all this since you asked. Now let me go back to my own abode.”
 
BHAARGAVA PURAANAM - PART 2

#34n. சிந்தாமணி

நினைத்தும் காட்சி தந்தார் கணபதி;
மனம் நிறைந்து வணங்கினார் கபிலர்.

“தந்து விட்டீர் சிந்தாமணியை மீட்டு!
இந்திரன் எனக்குத் தந்த மணி அது.

விந்தைகளைக் காண வந்த தேவர்
நொந்தனர் அதிகப் பசி, தாகத்தால்!

ஆற்றங்கரையில் தேவரை நிறுத்தி,
ஒற்றை ஆளாக வந்தான் இந்திரன்.

“வந்த நோக்கம் என்ன கூறு!” என
இந்திரன் பதில்,” உமது தரிசனம்”

உடன்பாடில்லை எனக்குச் சிறிதும்,
உண்ணாமல் அதிதிகள் திரும்புவது!

ஈசன் அருளால் உணவைப் பெற்றுப்
புசிக்கச் செய்தேன் வந்த தேவர்களை.

மனம் மகிழ்ந்தான் இந்திரன் – நான்
மனம் மகிழ அளித்தான் ஒரு பரிசு!

விஷ்ணு அளித்த சிந்தாமணியை,.
இஷ்டத்துடன் அளித்தான் எனக்கு.

பேராசையால் கவர்ந்தான் அதைக் கணன்;
ஓராசை கொண்டுள்ளேன் இன்று நான்!

அணிய வேண்டும் இந்த மணியை நீங்கள்!
பணிய வேண்டும் சிந்தாமணியுடன் நாங்கள்."

மகிழ்வுடன் பெற்றுக் கொண்டார் மணியை.
திகழ்ந்தார் மணியினை மார்பில் அணிந்து!

வரங்கள் தந்தார் கணனின் குமாரர்களுக்கு;
வணங்கினர் அனைவரும் விக்கின ராஜரை.

கபிலரின் ஆசிரமத்துக்கு வந்ததால்
கபில விநாயகர் ஆனார் கணநாதர்!

சிந்தாமணியினை அணித்து கொண்டதால்
சிந்தாமணி விநாயகர் ஆனார் கண நாதர்!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#34n. ChintAmaNi VinAyakar

VinAyaka appeared when sage Kapilar concentrated on him. Kapilar was overwhelmed with happiness at the sight of his lord. “Oh lord! You have returned my ChintAmaNi to me as you had promised. It was Indra’s rare gift to me.

Once the Deva had come to earth to see the wonders on earth. They became very hungry and thirsty. Indra made all the Deva wait near the river and came to my Ashram. He said he had come only for my dharshan.

I could not allow my guests to back hungry and thirsty. So I prayed to lord Siva and got the food fit for the Deva. Indra became very happy and gave a wonderful gift to make me very happy.

It was the ChintAmaNi which he had received from lord VishNu. GaNan took it away by force. But now it is back with me. I have only one wish. I want you to wear his gem on your chest. We all wish to worship you as ChintAmaNi VinAyakar.

VinAyaka became very happy. He took the rare gem from the sage and wore it on his chest. He was worshiped as ChintAmaNi Vinayakar by all the people there. He blessed everyone. He gave boons to the two sons of GaNan, Sulaban and SoolapANi.

Since VinAyaka came to the Ashram of Kapilar, he is also known by the name Kapila VinAyakar. Since he came with a smiling face, he is also known as Sumukhan.

Anyone who worships VinAyaka by these three names will be blessed in this world and the next.

 
DEVI BHAAGAVATAM - SKANDA 5

5#3a. தூதுவன்

சேனாதிபதிகள் இருந்தனர் வலிய அசுரர்களாக;
ஏகாதிபத்திய வெறியுடன் அரசாண்டு வந்தான்.

கப்பம் கட்டினர் பிற நாட்டு மன்னர்கள் – மஹிஷன்
ஏப்பம் விட நினைத்தான் இந்திர லோகத்தையும்!

அனுப்பினான் ஒரு தூதுவனை இந்திரனிடம்;
அனுப்பினான் தன்னுடைய செய்தியைக் கூறி.

“சென்று விடு விண்ணுலகு விடுத்து உடனேயே!
வென்று விடுவான் உன்னை மஹிஷன் போரில்!

வென்றுள்ளோம் பல முறைகள் தேவர்களை;
வென்றுவிடுவோம் இனி வரும் போர்களிலும்!

அனைவரும் அறிவோம் உந்தன் ஆண்மையை!
பூனையாக மாறினாய் அகலிகையுடன் உறவாட.”

சென்றான் தூதுவன் இச்செய்தியுடன் சுவர்க்கம்;
செப்பினான் மஹிஷனின் தூது வார்த்தைகளை.

இந்திர சபை அதிர்ந்தது இந்தச் செய்தி கேட்டு!
நொந்தனர் மனம் அகம்பாவ மொழிகள் கேட்டு!

“செல் உன்னை அனுப்பிய மஹிஷனிடம் மீண்டு!
சொல் நான் கூறும் மறுமொழிகளையும் அங்கு!

எருமைக்குப் பிறந்தவன் ஏவியுள்ளான் உன்னை;
எருமைக்கு மதம் பிடித்தால் வரட்டும் போருக்கு.

பூனையானாலும் தேவாமிர்தம் உண்டவன் நான்;
புல்லை உண்பவன் உன் எருமைக் கடா மன்னன்.

வஜ்ரம் போன்ற கொம்பு இருக்கலாம் அவனிடம்
வஜ்ஜிராயுதமே உள்ளது என்னிடம் என்று சொல்!

ஆயிரம் இருந்தாலும் நான் அமரேந்திரன்!
போய்ச் சொல்லு நான் கூறியதை அங்கு!”

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

5#3a. The messenger

Mahishan’s army chiefs were valorous asuraas. Mahishan ruled with a desire to expand his kingdom. All the defeated kings paid him heavy taxes. Mahishan wanted to annex Indralokam also. He sent a messenger to Indra with this message.

“Go away from the swarggam now! Mahishan will drive you away otherwise. We have defeated you in several wars. We will defeat you in the future wars also. We know about your bravery and courage. You transformed into a cat in order to ravish Ahalya Devi.”

The messenger went to swarggam and delivered this message in the durbar of Indra. Everyone present there was shaken to the core by this arrogant message. Indra was besides himself with anger at this insult. He replied to the messenger,

“Go back to where you have come from and tell your king my message. The son of a buffalo has sent you on this mission. If the buffalo is eager for a war let him come here with his army.

I might have been a cat but yet I have drunk the nectar. All your king eats is grass and hay. He may have horns as strong as Vajram but I have the Vajraayudam itself. I am still the king of heaven and the Devaas. Go forth and tell all these to your king without fail!”
 
DEVI BHAAGAVATAM- SKANDA 10

10#3a. வழி மறித்தது (1)

சிந்தித்தது விந்தியம் இந்த வினோதம் குறித்து;
சிந்தித்தது விந்தியம் கர்வ பங்கம் செய்வதற்கு.

"மேரு கர்வம் கொண்டுள்ளது ஒரு காரணத்தால்!
மேருவைச் சூரியன் சுற்றி வரும் காரணத்தால்!

தடுப்பேன் இன்று சூரியன் செல்லும் வழியை!
உடைப்பேன் இன்று மேருவின் ஆணவத்தை!

வெல்வேன் மேருவின் கர்வத்தை நான் எளிதாக;
மேல்நோக்கி வளர்வேன் நான் விண்ணளவாக!"

வளர்ந்தது விந்தியம் விண்ணளவாக - சூரியனின்
வழியைத் தடுக்கக் காத்திருந்தது மிக ஆவலோடு.

சூரியன் காட்டுவான் உலகுக்கு மூன்று காலத்தை;
முற்பகல், நண்பகல் மற்றும் பிற்பகல் என்றவாறு.

செய்விப்பான் உலக ஜீவர்களைத் தம் தொழில்களை;
செய்விப்பான் தாமரையை மலர, ஆம்பலைக் குவிய.

தோன்றினான் சூரியன் விடியலில் கிழக்கில்;
சென்றான் தென்திசை நோக்கித் தன் வீதியில்.

தத்தளித்தன கதிரவனின் குதிரைகள் மருண்டு;
தடுமாறின முன் செல்லும் வழியைக் காணாது!

வழியேதும் தென்படவில்லை குதிரைகளுக்கு;
மொழிந்தான் சாரதி அருணன் சூரியதேவனிடம்,

"கொண்டுள்ளது பகைமை விந்தியம் மேருவிடம்!
பூண்டுள்ளது உறுதி நம் வழியை மறைப்பதற்கு!"

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

10#3a. Sun's path got obstructed (1)

VindhyA wondered for a long time after NAradA left. "I have to burst the bloated ego of Menu Mountain! He is proud since the Sun and the planets go round him all the time. I shall block the path of the Sun today and thus degrade Meru Mountain!"

VindhyA Mountain grew sky high! It was eagerly waiting to block the Sun's path when he rose in the east and started on his daily round.

The Sun shows the time to the world as forenoon, noon and afternoon. All the living things work with the movement of the Sun. The lotus flowers bloom and the lilies close with the arrival of the Sun.

The Sun rose in the east as usual. He started moving southwards as usual. The horses pulling the Sun's chariot grew agitated and restless since they found their way completely blocked.

Arunan the charioteer of Sun told him thus,
"VindhyA has become jealous of Mount Meru. He has grown sky-high to block our path and disrupt our daily rounds!"
 
BHAARGAVA PURAANAM - PART 2

#35a. சிந்தூரன்

பிரமன் விட்ட பெரிய கொட்டாவியிலிருந்து,
பிரமிக்க வைக்கும் அரக்கன் தோன்றினான்.

ரத்த மழை பெய்தது அவன் தோன்றியபோது!
மொத்த உயிர் இனங்களும் அஞ்சி நடுங்கின!

கண்ணைக் கவர்ந்தது அவன் சிந்தூர நிறம்!
கருத்தைக் கவர்ந்தது அவன் வீசிய மணம்!

“யார் நீ?” என்று கேட்டான் பிரம்ம தேவன்;
“பார் அறியும் உம் மகன் என்று!” என்றான்.

பிரமனுக்குப் பொங்கியது தந்தைப் பாசம்;
அரக்கனுக்குப் பெயரிட்டான் சிந்தூரன் என.

மூவுலகை வெல்லும் வலிமை தந்தான்;
தேவர்களால் அழிவின்மையும் தந்தான்.

அறிய வரம் ஒன்றும் தந்தான் அன்புடன்;
அரக்கன் தழுவியவர் ஆவார் பஸ்பமாக!

பூவுலகம் வந்து சேர்ந்தான் சிந்தூரன்;
புதிய ஐயம் வந்து உதித்தது மனதில்.

“நான் கடும் தவமும் செய்யவில்லை;
நான் அரும் வரங்கள் கேட்கவில்லை

தானாகத் தந்தார் வரங்களை பிரமன்;
நானாகச் சென்று சோதிப்பேன் இன்று!”

கேட்காமலேயே வந்து குவிந்தன வரங்கள்!
வேட்கை உண்டானது அவற்றைச் சோதிக்க!

தந்தையைத் தழுவ முயன்றான் தனயன்;
தந்தையிடமே வரங்களைச் சோதிப்பதா?

“அவசரப்பட்டு வரங்கள் தந்தேன் நான்;
தேவர்களிடம் அழிவின்மை தந்தேன்!

விநாயகமூர்த்தி அவதரிப்பார் உலகில்
வீணன் உன்னை அழிப்பதற்கு!” என்றார்.

ஓடினார் வழக்கம்போல விஷ்ணுவிடம்;
ஓதினார் நடந்தவற்றை எல்லாம் அங்கு!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


#35a. Sindhooran

One day Brahma yawned heavily and an asuran was born out of the yawn. He was awesome and awe inspiring. When he was born it rained blood. All the living things got terrified for no known reason.

He was sindhoor colored and he emanated a rich pleasant aroma all around him. Brahma asked him,”Who are you?” He replied,” The whole world knows that I am your son”

Brahma’s love for his newest son was kindled. He named the asuran as Sindhooran. He gave him the power to conquer the three worlds and made him invincible by the DEva. He gave one more rare boon to Sindhooran. Whosoever Sindhooran hugged tightly, would turn into ash.

Sindhooran went to the earth. He got a new doubt now. “I did not do any hard penance. In fact I did now even ask for any boons. But they were showered on me by Brahma. I wonder whether these boons will really work! I must est them now. Who else but the bestower of the boons will suit best for the testing!”

He returned to Brahma and tried to embrace him tightly. Brahma got terrified by the ungrateful son who tested this destructive boon on the giver of the boon himself.

He spoke in haste as he ran to save himself and said, “I am sorry I bestowed all those rare boons on you. You will not be conquered by the DEva. But VinAyaka will be born to put an end to you”

He ran for his life and went to Vaikuntam. He told all the happenings to VishNu in great detail.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 5


5#3b. மஹிஷனின் சினம் (1)

“அழிவற்றவன் நான், அமரர்களின் அரசன்;
அழிவுள்ளவன் அவன், அசுரகளின் அரசன்.

அளிக்கும் கற்பகத் தரு உடையவன் நான்;
அழிக்கும் அகம்பாவம் உடையவன் அவன்!

தேவியின் பாதுகாப்பைப் பெற்றவன் நான்;
தேவியால் அழிக்கப்படக் கூடியவன் அவன்!

தூதர்களைக் கொல்வது பாவம் – அதனால்
தூதன் உன்னை உயிரோடு விடுகின்றேன்!”

விரைந்தோடினான் தூதுவன் மஹிஷனிடம்,
உரைத்தான் இந்திரன் உரைத்த மொழிகளை.

சீறி எழுந்தான் சினத்துடன் மஹிஷாசுரன்;
சிறுநீர் கழித்தான் தன் வாலை மேலே தூக்கி.

“இந்திரன் தயாராம் நம்மோடு போர் புரிய.
இந்திரன் அறியான் என் பெருமைகளை.

நான் அறிவேன் அவன் சிறுமைகளை!
நயவஞ்சகன், பேடித்தனம் கொண்டவன்;

அபகரிப்பான் பிறர் மனைவியை – மேலும்
அரைகுறை ஆக்குவான் பிறர் தவத்தை.

தேவ கன்னியர் அவன் காமப் படையினர்
தேவைப் படும்போது சேவை செய்வர்.

கேவலம் இவர்கள் செய்யும் தொழிலுக்குத்
தேவையில்லை அமரர்கோன் என்ற பட்டம்!”

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


5#3b. Mahishan’s wrath (1)

Indra told Mahishan’s messenger, “I am the king of the Deva who live for ever and your Mahishan is the king of Asura who can be killed. I am indestructible. Mahishan can be destroyed.

I have the Karpaga vruksham which can grant me anything I desire. Mahishan has only arrogance which will cause his downfall. I have the protection of Devi. He will be destroyed by Devi. It is improper to kill a messenger. So I spare you with life. Go back to Mahishan and give my message to him”

The messenger went back to Mahishan and told Indra’s message. Mahishan became very angry. He lifted his tail and passed urine then and there. He spoke in a mocking tone,

” It seems Indra is ready to fight with me. He does not know my greatness but I know very well his meanness. He is a cunning and treacherous fellow. He covets the wives of the other people. He disturbs the penance of other people. The apsaras are the deluding damsels he employs to destroy anyone. The title King of Heaven does not suit the kind of actions he performs!”
 
Last edited:
DEVI BHAAGAVATAM - SKANDA 10

10#3b. வழி மறித்தது (2)

"துணிந்தால் ஒருவன் தீய வழியில் செல்வதற்குத்
துணிவான் அவன் தீச்செயல் எதுவும் செய்வதற்கு!

தடுத்து நிறுத்தி விட்டது விந்தியம் நம் வழியை;
தவிக்கின்றன நம் புரவிகள் செய்வது அறியாமல்.

விழுங்கப்பட்டு ராஹுவால் ஒளி மங்கிய போதும்
வழியில் தடையைச் சந்தித்ததில்லை இதுவரை!"

வருந்தினான் சூரியன் மிகவும் கவலையுடன்;
வருந்தினான் சூரியன் உதவிட யாருமில்லை!

கால நிர்ணயம் அவசியம் இவர்கள் இருவருக்கு!
கவலைப் பட்டனர் சூரியனும், சித்திர குப்தனும்!

நின்று போனது தேவர்களின் ஸ்வாஹா உணவு;
நின்று போனது பித்ருக்களின் ஸ்வதா உணவு.

நலிவுற்றனர் தேவர்களும், பிற தெய்வங்களும்.
நலிவுற்றனர் பித்ருக்களும், பிற ஜீவராசிகளும். .

வடதிசை, கீழ் திசை தகித்தது வெப்பத்தால்!
தென்திசை, மேற்கு மூழ்கியது அந்தகாரத்தில்.

வாடி வதங்கின பல ஜீவராசிகள் - அஞ்சி
ஓடி ஒளிந்து கொண்டன பல ஜீவராசிகள்.

சிந்தாகுலம் அடைந்தனர் செய்வதறியாமல்
இந்திரன் முதலான தேவர்கள், விண்ணவர்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


10#3b. Sun's path got obstructed (2)


The Sun replied to Arunan, "If a person decides to tread the path of evil, he would stoop to any low level! VindhyA has blocked our path.

Our horses are struggling and we can not move on! I may lose my splendor and light when devoured by RAhu during the eclipses, but my path has never before been blocked in this manner.

Sun felt sad. No one was coming to his help. Measurement of Time is very important for two persons - The Sun and Chitra Gupta, the assistant of yama Djarman. Both got worried.

The YAgAs and YagnAs stopped. So the food sent through SwAhA to the gods and SwadA to the Pitrus got stopped. They became weak and tired.

All the living things were disturbed by the burning hot sun on one side and the pitch darkness and cold on the other side.

The frightened jeevaas took to heels and hid themselves. DevAs and IndrA got worried not knowing what to do!


 
BHAARGAVA PURAANAM - PART 2

#35b. சிந்தூரன்

“உன்னிடம் தோன்றியதால் இப்படி
முன் பின் சிந்தியாமல் வரங்களா?

துன்பம் விளையும் நமக்கே எப்போதும்;
இன்னும் இந்த உண்மை புரியவில்லை?”

பிரமனைத் துரத்தி வந்தான் சிந்தூரன்;
பிரமனுடன் கண்டான் வைகுந்தனை!

“என்னுடன் யுத்தம் புரிய வருவீர்
அன்றேல் இன்று சாம்பல் ஆவீர்!”

“போர் சாஸ்திரத்தை அறியாயோ நீ?
போர் புரிவர் சம பலம் உள்ளவர்கள்.

ஆலிலை மேல் சயனித்துள்ளேன் நான்!
அமர்ந்துள்ளான் தாமரை மேல் பிரமன்!

மென்மையான எங்களை வெல்வதால்
மேன்மை என்ன கிடைக்கும் நீயே கூறு!

வலிமை மிக்க கைலாசநாதரிடம் சென்று
வெளிப்படுத்து உன் யுத்த ஆற்றலை!” என

கைலாசம் சென்று சேர்ந்தான் சிந்தூரன்;
கைலாச நாதரோ யோக நிஷ்டையில்!

சிதறி ஓடி ஒளிந்தனர் தேவர்கள்;
பதறி ஓடினாள் பார்வதி தேவியும்.

தேவியின் அழகில் மயங்கிய அரக்கன்,
தேவியைக் கொண்டு செல்ல எண்ணிட;

சிவன் எழுந்தார் நிஷ்டை கலைந்து;
சூலம் ஏந்திய ருத்திர மூர்த்தியாக!

சிவனை அணைத்துப் பஸ்பம் ஆக்க
சினத்துடன் ஓடி வந்தான் சிந்தூரன்!.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


#35b. Sindhooran

VishNu was very displeased with Brahma. “You gave him all these boons just because he appeared from your yawn? It is always the DEva who suffer whenever the asura become very powerful. Will you ever learn this truth?”

Sindhooran came there chasing Brahma. He was happy to see VishNu along with Brahma. He roared to them, “Come and fight with me! Otherwise I will turn you both into ash!”

VishNu kept his cool and told him, “Don’t you know the rules of war? Fighting is done by people of equal strength. I sleep on a leaf and Brahma sits on a lotus flower.

We are both soft natured. What is so great about defeating us? If you can defeat Siva that will add to your glory and fame”

Sindhooran went straight to KailAsam. Lord Siva was in YOga nishtai. The DEva ran in all directions, frightened by the sight of this unusual asuran.

PArvati DEvi also got scared and ran away, but not before the asura had seen her beauty and fell in love with her. He went near her with an idea of abducting her.

Siva came out of his yOga nishtai. He rose angrily like Rudra moorthy with his soolam in his hand.
Sindhooran now saw Lord Siva and went running to him – wishing to turn him into ash by embracing him tightly.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 5

5#3c. மஹிஷனின் சினம் (2)

“இந்திரனுக்கு உதவுபவன் விஷ்ணு;
இந்திரனிலும் தந்திரம் மிகுந்தவன்!

சூழ்ச்சிகளுக்குத் தலைவன், கபட குரு;
வீழ்ச்சியடையச் செய்தான் மாவலியை.

மாய உருவெடுத்து வஞ்சிபவன் விஷ்ணு;
மாயையில் வல்லவரான அசுரர்களையும்.

ஹிரண்யாக்ஷனைக் கொன்றான் வராஹமாகி!
ஹிரண்யனைக் கொன்றான் ஒரு நரசிங்கமாகி !

அஞ்ச மாட்டேன் நான் தேவர்கள் சமூகத்துக்கு!
அஞ்ச மாட்டேன் நான் வஞ்சகக் கூட்டத்துக்கு!

கொல்ல முடியாது என்னை தேவர்களால்;
வெல்ல முடியாது என்னை மும்மூர்த்திகளால்.

வெல்வோம் தேவலோகத்தை முற்றுகை இட்டு
செல்வோம் அங்கு உல்லாச வாழ்வு வாழ்ந்திட!

சேர்ந்து விடும் அவிர் பாகங்கள் நம்மிடம்;
சோர்ந்து விடும் தேவர் குழாம் உணவின்றி!

வெல்ல முயாது என்னை ஆண் மகனால்;
வெல்ல முடியும் என்னைப் பெண்ணால்!

எந்தப் பெண் வருவாள் என்னுடன் போரிட?
எந்தப் பெண் வெல்வாள் என்னைப் போரில்?

எந்தப் பெண் துணிவாள் என்னைக் கொல்ல?
எதப் பெண் பிறந்து உள்ளாள் அது போன்று?

ஒன்று திரட்டுங்கள் நமது அசுர வீரரை!
ஒன்று திரட்டுங்கள் ஒருவர் விடாமல்!”

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


5#3c. Mahishan’s wrath (2)

Mahishan spoke with seething anger,” Indra is helped by Vishnu who is even more cunning and craftier than Indra. He plans and plots. He is a scheming guru for the Devas. He cheated Mahaa Bali of his kingdom.

Vishnu takes many forms to cheat or to destroy the others. The asuras are famous for their power of Maayaa but he surpasses even them and tricks them. Vishnu killed HinraNyaakshan as a Boar. He killed HiraNyan as a man-lion.

I am not afraid of the Deva! I shall not fear the group treacherous Deva. I can not be vanquished by the Deva or Indra or even by the Trinity. Let us lay a siege of the swarggam and capture it.

We will chase away all the Deva from there and live in luxury and unending pleasure. The havisu offered to the Deva will reach us in stead of them. They will grow weaker and weaker while we will grow stronger and stronger.

No male can win over me. Only a woman can win over me. But which woman will dare to fight me? Which woman can defeat me in a war? Which woman will dare to kill me? Has any such girl been born till now? Gather together all the asura warriors. Do not spare a single asura from joining the army” Mahishan gave orders to his minsters and generals.

 
DEVI BHAAGAVATAM - SKANDA 10

10#4. தேவர்கள் விண்ணப்பம்

கலங்கிய தேவர்கள் சென்றனர் பிரமனிடம்;
கலங்கிய பிரமன் சென்றான் சிவபிரானிடம்.

துதித்தனர் தேவர்கள் பிறைசூடிப் பெருமானை;
"கதி எமக்கு ஆவீர் நீரே கணங்களின் நாயகரே!

பரமாத்மா வடிவானவரே! பார்வதி மணாளரே!
தருவீர் அஷ்டமா சித்திகளை அன்பர்களுக்கு!

தயாளா! விடை வாஹனரே! கைலாச வாஸா!"
மாயா விலாசத்துக்கு ஸ்தானம் ஆனவரே! என

"மகிழ்ந்தேன் உரைத்த துதிகளால் - உமது
அகம் மகிழ வேண்டுவது என்ன கூறுங்கள்!"

"விந்தியம் பகைமை பூண்டது மேருவுடன்;
விந்தியம் வளர்ந்துவிட்டது விண்ணளவாக!

விந்தியம் மறைக்கின்றது ஆதவன் வீதியை!
விந்தியம் தருகிறது துக்கத்தை உலகுக்கு!

"நின்று போனது கால நிர்ணயம் - அத்துடன்
நின்று போயின யாகங்கள், யக்ஞங்களும்.

அஞ்சி வந்து தஞ்சம் புகுந்துள்ளோம் யாம்;
சஞ்சலம் தீர்த்தருள்வீர் கிரிஜா பதியே!"என

"சக்திகளில் ஒருவர் ஆவார் விஷ்ணு பிரான்!
சக்தி பெற்றவர் அவர் விந்தியத்தை அடக்கிட.

நீக்குவார் உங்கள் சஞ்சலத்தை விஷ்ணு;
நீங்கள் அணுகுவீர் விஷ்ணு மூர்த்தியை!"

விரைந்து சென்றனர் வைகுந்த லோகம்
அனைத்து தேவர்களும் பிரமதேவனுடன்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

10#4. The DevAs seek help

The confused DevAs went to BrahmA. He went along with them to Lord Siva. They prayed to Siva with devotion and humility," You are our savior oh Lord our god! You are the supreme ParamAtmA. You are the loving husband of PArvati Devi.

You bestow the AhstamA siddhi on your devotees. You are the center of MAyAvilAsam. You are merciful! You ride on the bull! You live on the mount KailAsA!"

Lord Siva was pleased with their prayers and praises. He asked them with affection "What is that you want from me?"

The DevAs replied to lord SivA," Mount VindhyA has become jealous of mount Meru. Vindhya has grown sky high and blocked the path of the Sun.

The measurement of Time is suspended. YAgAs and YagnAs have been stopped. All the living creatures suffer in many different ways due to this unnatural phenomenon. We seek your help in this matter. Kindly help us GirijApate!"

SivA smiled and spoke to them," Vishnu is also a form of Shakti. He has the Shakti to conquer and control the unruly VindhyA. He will solve your problem and help you. Please approach VishnU and seek his help!"

All the DevAs left KailAsam and went to Vaikuntham now along with BrahmA.

 
BHAARGAVA PURAANAM - PART 2

#35c. யுத்தம்

அந்தணன் வடிவெடுத்தான் ஆனைமுகன்;
வந்தவனை விலக்கினான் சிவனிடமிருந்து.

“அஸ்திரங்களால் போரிடாமல் நேரிடயாகக்
குஸ்தி செய்வதாகத் தீர்மானமா?” என்றான்!

அஸ்திரப் பிரயோகம் தொடங்கி விட்டது!
அஸ்திரங்கள் பறந்தன எதிர்த் திசைகளில்

பரசுவை நட்டிருந்தான் இருவர் மத்தியில்!
பரசு தடுத்தது சிந்தூரனின் முன்னேற்றத்தை.

“வெல்ல முடியுமா உன்னால் காலகாலரை?
செல்வாய் எனில் உயிர் பிழைப்பாய்!” என,

வெற்றி தோல்வி இல்லாத வெற்றுப் போரால்,
வெறுப்படைந்த சிந்தூரன் திரும்பிவிட்டான்.

அந்தணன் யாரென்று அறியவில்லை உமை;
அந்தண வேடத்தை விடுத்தார் விநாயகர்.

சிங்க வாஹனத்தில் சதுர் புஜங்களுடன்,
சித்தி புத்தி தேவியருடன் காட்சி தந்தார்.

“உம்மைப் பிடிக்க வந்தான் சிந்தூரன்.
உம்மிடம் பிறந்து அவனை அழிப்பேன்”

அன்னையிடம் அளித்தான் உறுதிமொழி,
ஆனைமுகன் மறைதருளும் முன்னர்.

பூவுலகத்தில் நடந்தது சிந்தூரன் ஆட்சி.
யாவரும் அஞ்சி நடுங்கினர் அவனிடம்.

சிந்தூரனிடம் துயருற்ற தேவர்கள் குழூ
ஐங்கரனைப் பணிந்தனர் 'அபயம்!' என.

சிந்தூரனை அழித்து அபயம் தருவதற்கு
ஐங்கரன் அடைந்தான் தேவியின் கருவை.

பரியலி வனத்தில் குளிர்ந்த சோலையில்
பரிமளித்தது ஒரு இரத்தின மண்டபம்

தோழியருடன் தங்கினாள் மண்டபத்தில்
அழகிய பரியலி வனத்தில் பார்வதிதேவி.
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


#35c. The war

VinAyaka transformed himself into a Brahmin. He separated Sindhooran from lord Siva. “You may fight with your weapons instead of this fist fight!” He told both of them and planted his parasu in between them.

Arrows went flying in the opposite directions. Sindoorans’ advance was checked by the parasu. The fight went for a long time with neither of them winning nor losing.

The brahmin told Sindhooran, “You can never defeat Siva the KAla KAlan. If you go back home, you may stay alive a little longer.” Sindhooran got tired of this mock fight and went back.

No one knew who that Brahmin was. VinAyaka revealed himself and gave dharshan to Siva and PArvathi on his lion vAhanam, with his two DEvis. He told PArvathi, “Sindhooran wanted to abduct you. I will be born to you to kill him.”

Sindhooran ruled highhandedly. He troubled everyone, the DEva, the MAnava and the asura. The Deva prayed to VinAyaka for Abhayam. VinAyaka reached the garbbam of PArvathi Devi.

A gem studded maNdapam was built in the PariyAli Vanam, in a cool garden, for the sake of PArvathi DEvi. She lived there happily with her friends and attendants.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 5

5#3d. மஹிஷனின் சினம் (3)

“வெல்வதற்கு போதும் நான் ஒருவனே!
வெல்லத் தேவையில்லை வேறு உதவி.

தேவையில்லை ஆயுதங்கள் – எனக்குச்
சேவை செய்யும் இரு கூரிய கொம்புகள்.

சுற்றிச் சுழன்று போராடி வெல்வேன் நான்,
சற்றும் களைப்படையாமல் சுவர்க்கத்தை!

சுற்றித் திரிவோம் இந்திர லோகத்தில்;
வெற்றி முழக்கமிட்டுக் கூத்தாடுவோம்

கூடுவோம் அழகிய தேவ கன்னியருடன்;
குடிப்போம் தெய்வப் பசு தரும் பாலை!

ரசிப்போம் தேவ மங்கையரின் இசை கேட்டு;
ருசிப்போம் தேவ மங்கையரின் ஆடல் கண்டு!

ஊட்டுவர் தேவ மகளிர் அமுத பானத்தை;
ஊட்டம் தரும் நமக்கு அந்த அமுத பானம்.

அனுபவிப்போம் எல்லையற்ற போகத்தை!
அனுபவிப்போம் எல்லையில்லாத சுகத்தை!”

உற்சாகப் படுத்தினான் அசுரப் படைவீரரை;
வெற்றிவாகை சூடச் சென்றனர் சுவர்க்கம்.

வணங்கினான் குலகுரு சுக்கிரனைக் சென்று,
இணங்கச் செய்தான் உரிய பாதுகாப்புத் தர.

ஆலோசனை தேவைப்பட்டால் அதையும்
ஆவலுடன் உவந்து தனக்கு அளிக்கும்படி.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


5#3d. Mahishan’s wrath (3)

Mahishan told the asuraas,” I can conquer the swarggam all by myself – without any assistance. I do not need any special weapons either. My sharp horns will be my weapons. I will swirl and circle to aTtack everyone there and win over them without getting exhausted.

After conquering the heaven we will celebrate our victory grandly. We will roam around In Indra lokam. We will dance and sing our victory. We will make love with the apsaras. We will drink the freshly squeezed milk of the divine cow.

We will enjoy the dance and music of the apsaras. We will make the apsaras feed us nectar and get our nourishment and strength from that. We will enjoy unlimited pleasures and joys in heaven.”

Mahishan motivated his army this manner. They all went to swarggam to conquer it. Before leaving Mahishan met his kulaguru and prostrated to him. He made a request to his guru to offer him and his army protection in the war and the advices as and when needed by them.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 10

10#5. விஷ்ணு தந்த வரம்

புகழ்ந்தனர் தேவர்கள் விஷ்ணு மூர்த்தியை
நாக்குழற, மெய்ப் புளகித்து, பக்தியோடு கூடி.

"ஸ்ரீ பதே! லோககுரூ! கமலாக்ஷா!
அசுர சம்ஹாரா! காமனைப் படைத்தவா!

கோவிந்தரே! மஹா யக்ஞ ஸ்வரூபரே!
சிருஷ்டி காரணரே! மச்சாவதாராரே!

சத்திய விரதரே! பூத நாயகரே!
நமஸ்காரம்! உமக்கு நமஸ்காரம்!

அமரருக்கு அமிர்தம் பெற்றுத் தர
அன்று எடுத்தீர் ஒரு கூர்மாவதாரம்.

அசுரர்கள் கொட்டத்தை அடக்கிட
அன்று எடுத்தீர் ஒரு மச்சாவதாரம்.

தயையில் உம்மில் சிறந்தவர் யார்?
தயை தாரும்! எம் துயர் தீரும்!" என

"மகிழ்ந்தேன் உம் துதி மொழிகளால்
ஒழிப்பேன் உங்கள் துன்பம், துயரை!

தருவேன் ஓர் அற்புத வரம் இப்போது;
தருவேன் எல்லா நலன்களை உவந்து!

இந்தத் துதிமொழிகளை என்னை எண்ணிச்
சிந்திக்கும் உலக மாந்தர் அனைவருக்கும்!"

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

10#5. Vishnu gives a boon

The DevAs and BrahmA praised VishNu with devotion and emotion. "SreepatE! LokagurO! KalamAkshA! Asura samhArA! The creator of Manmatha! GovindA! MahA yagna swaroopA! Srushti KAraNA! MachchAvatArA! SatyavratA! BootnAyakA! Namaste! Namaste!

You assumed the form of a Tortoise to help the AmarAs win the Amrutam. You assumed the form of a Koormam to teach a lesson to the AsurAs. Who can be more merciful than you? Please take pity on us and please help us!" The DevAs prayed to VishNu.

VishNu smiled at them and said,"I am pleased by your words and praises. I will help you and put an end to your sufferings. I will grant you a boon now. I will grant all things auspicious and good to you and also to whoever recites this praise with devotion to me."
 
BHAARGAVA PURAANAM - PART 2

#35d. மயேச்சுதன்

மயேச்சுதன் ஒரு சிறந்த சிவபக்தன்.
மன்னன் அவன் தொழுதான் சிவனை,

இடைவிடாது தொடர்ந்து தினமும்!
கிடைத்தன அஷ்ட ஐஸ்வர்யங்கள்!

தேடி வந்தார் தேவ குரு பிருஹஸ்பதி;
ஓடி வந்து வரவேற்றான் மயேச்சுதன்.

“கேள்விப்பட்டேன் உன் பெருமைகளை
கேட்டது கொஞ்சம்; கேளாதது அதிகம்!

என்னை வணங்கினாய் உள்ளன்புடன்;
உன்னை வணங்குவர் இனி அனைவரும்!”

“என்று நடக்கும் சுவாமி அது போல?”
என்று கேட்டான் மன்னன் ஆவலுடன்.

“யானையிடம் நீ தோன்றும் பொழுது
அனைவரும் தொழுவர்; முக்தி கிட்டும்!”

தேச சஞ்சாரம் செய்தான் மயேச்சுதன்;
தேவரிஷியை உபசரிக்கவில்லை சரிவர!

‘யானை போல் கண்மண் தெரியாதவனை’
யானையாகப் பிறக்கும்படி சபித்துவிட்டார்.

“சிவன் கையால் வதம் செய்யப்படுவாய்!
சிவன் கையால் நீ முக்தியும் அடைவாய்”

கரிகளின் கூட்டத்தில் கஜமுக அசுரனாக
பரியலி வனத்தில் வந்து பிறந்தான் அவன்.

பூர்வ ஜன்ம நினைவுகள் மாறவில்லை!
ஆர்வம் மேலிட்டது சிவனைக் கண்டிட.

“பரியலி வனத்தில் பார்வதி தேவியார்
பரமசிவனுடன் தங்கி இருக்கின்றார்!” என

யோகத்தில் அமர்ந்திருந்தார் பரமசிவன்;
சோலையில் உலவினாள் பார்வதி தேவி.

ரத்தின மண்டபத்தை முட்டித் தள்ளினான்,
மொத்தமாகப் பெயர்த்துவிட்டான் கஜமுகன்!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

#35d. Mayechchudan

King Mayechchudan was a sincere devotee of Lord Siva. He prayed to Lord Siva regularly with bhakti and was blessed with all the eight riches of the world.

Bruhaspati visited him one day. The king Mayechchudan was very excited by his visit. He came running
and welcomed the Devaguru with deep reverence.

Bruhaspati blessed Mayechchudan, ” You prostrated to me. In the same way the whole world will prostrate to you too!” The king was both happy and curious and wanted to know when all these things would happen. The Devaguru said, “When you will be born as an elephant all these things will happen!”

Mayechchudan went on dEsa sanchAram. He was preoccupied and failed to welcome NArada with the usual fervor. NArada felt hurt by this negligence, oversight and indifference.

He cursed Mayechchudan,”You behaved like an elephant which does not see much. May you be born as an elephant. You will get killed by Siva and attain liberation in his hands!”

Mayechchudan was born as an elephant in the PariyAli Vanam. His name was Gajamukhan. He remembered his past very well. His bhakti towards Siva remained undiminished.

He was eagerly waiting for his encounter with Lord Siva. He heard that Siva and PArvathi Devi were staying in the same PariyAli vanam. He went out to meet Lord Siva.

Siva was in yoga nishatai and PArvathi was strolling in the garden. Gajamukha asuran uprooted the the gem studded maNdapam made for PArvathi and made it tumble on the ground.
 

Latest ads

Back
Top