DEVI BHAAGAVATAM - SKANDA 5
5#4a. மந்திராலோசனை
இந்திரன் அழைத்தான் எல்லா தேவர்களையும்
மந்திராலோசனைக் கூட்டம் நடத்துவதற்கு.
“மஹிஷாசூரன் ஆவான் ரம்பனின் மகன் – அவன்
மமதையோடு அனுப்பினான் தூதுவனை இங்கு.
இழிவாகப் பேசினான் வந்திருந்த தூதுவன்;
பழித்துப் பேசினன் என்னைப் பலவிதமாக!
‘யுத்தம் தவிக்கச் சரணடைவாய் உடனே – ஆ
யத்தம் செய் யுத்தம் விரும்பினால்!’ என்றான்.
பலஹீனப் பகைவனிடமும் தேவை எச்சரிக்கை!
பலவானான பகைவனைப் பற்றி சொல்வானேன்?
படை வலிமை அறிந்து செய்ய வேண்டும் போர்;
தடை செய்யலாம் போரைச் சமாதானம் மூலம்.
சமாதானம் பலன் தரும் சாது ஜனங்களிடம்;
சமாதானம் வீணாம் துணிந்த பகைவனிடம்!
அறிந்து வாருங்கள் எதிரியின் பலத்தை;
அறிந்த பின் செய்வேன் தகுந்த ஏற்பாடு.
புறப்படுவேன் யுத்த களத்துக்கு – அன்றேல்
பலப்படுத்துவேன் சுவர்க்கத்தின் காவலை.
சோம்பல் தரும் தீராத துக்கத்தை – நாம்
சோம்பலைத் தவிர்த்துச் செயல் புரிவோம்
உளவு பார்த்து வாருங்கள் மஹிஷனை!
களவும் செய்ய இயலாது உளவு இன்றி”
சென்றனர் தூதர் படை பலம் அறிந்திட;
செப்பினர் தூதுவர் படை பலம் அறிந்து.
வியந்தான் இந்திரன் அதனைக் கேட்டு;
தயங்காமல் சென்றான் குலகுருவிடம்.
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
5#4a. Council of ministers
Indra invited all his ministers for a council meeting. He told them, “Mahishan, the son of Ramban, had sent a messenger with arrogance. The messenger spoke with disrespect and insulted me. He warned me to surrender to Mahishan or prepare for a war immediately.
No enemy is too weak as to be slighted or neglected – even if he is very weak. I need not elaborate on the danger involved if the enemy is also strong. Pact of peace will bear fruit only with soft people but a determined enemy will not stand by it.
We should know the strength of the enemy before we plan our next move. If we are stronger, we will get ready for the war. If the enemy is stronger we will fortify the protection to Swargga.
There is no time for idleness and sloth which always land us in troubles. Spies must be dispatched immediately to find out the strength of the enemy’s army. Without spying even stealing is impossible.”
Accordingly spies were sent and they came back with the required information. Indra was amazed to hear it and went promptly to meet his kulaguru Bruhaspati.