• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

A poem a day to keep all agonies away!

DEVI BHAAGAVATAM - SKANDA 5

5#26a. ChaamuNdi Devi (1)

ChaNdan and MuNdan went to meet Devi and Kaali with their large army. They asked Kaali, “Did you dare to come here all alone trusting this young woman and her lion? Can these two match and become equal to the valour and power of Sumban and Nisumban?


He asked Devi now, “Did you come her because you have eighteen arms? Did you come her because of you arrogance and conceit? Sumbaasuran had severed the trunk of the mighty Airaavat- the elephant of Indra. His might is unlimited.


You sing in a voice which will put to shame the cuckoos. You are very beautiful to look at. And yet you want a war! A war of valour is fought between two male members. The war between a male and a female is the war of love.


We have two types of friends those who wish our welfare and those who wish their own welfare. I wish your welfare. So listen to me now. Accept Sumbaasuran as your husband. He is attractive, handsome, brave and the king of the Asuraa clan. ”
Devi could not tolerate this nonsense any more and let out a loud roar similar to the roar of her pet lion.

She said,” I am the Mother of the universe. I support everything here. I do not require a husband or anyone else to give my happiness. In fact every joy and pleasure enjoyed by any living thing is actually enjoyed by me!”


 
BHAARGAVA PURAANAM - PART 2

#42e. சிரம்பை

சிரம்பை தூமட்சனின் மனைவி;
உரைத்தாள் சபதம் சினத்துடன்;


“தூமாட்சனைக் கொன்ற சிறுவனை
ஏமாற்றிக் கொல்லாது விடமாட்டேன்!”


அழகிய அந்தணப் பெண் வடிவெடுத்தாள்;
பழகியவள் போல வந்தாள் ஆசிரமத்துக்கு.


கொண்டு வந்திருந்தாள் தன்னுடன்
எண்ணையில் விஷங்களைக் கலந்து.


“காசிபரின் குமாரர் வந்துள்ளதைக் கேட்டு
ஆச்சாரியாரின் மகனைக் காண வந்தேன்.


குமாரனைக் காண்பது ஒப்பாகும் அந்தக்
குமாரனின் தந்தையைக் காண்பதற்கு.


பாலகனுக்குப் பணிவிடை செய்யும்
பாக்கியம் வேண்டி வந்துள்ளேன் நான்.


பரிமளம் வீசும் வாசனைத் திரவியங்கள்
நிரம்பிய தைலம் கொண்டு வந்துள்ளேன்.


எண்ணை ஸ்நானம் செய்விப்பதற்கு நீர்
என்னை அனுமதிக்க வேண்டும்” என்றாள்.


அறியவில்லை தருமதத்தர் சிரம்பையை;
அறிந்து கொண்டார் மகோற்கடர் அவளை.


மணையில் வந்து அமர்ந்தார் மகோற்கடர்.
மனத்தில் மகிழ்ச்சி அடைந்தாள் சிரம்பை.


விஷம் கலந்த எண்ணையைத் தடவிவிட
விஷம் ஏறியது அவள் விரல்கள் வழியே!


ஆபத்து இல்லை மகோற்கடருக்கு;
ஆபத்து விளைந்தது சிரம்பைக்கு!


'கெடுவான் கேடு நினைப்பான்' என்பார்கள்.
கொல்ல வந்தவளைக் கொன்றது
அந்த விஷம்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி




 
BHAARGAVA PURAANAM - PART 2

#42e. Sirambai

Sirambai was DhoomAkshan’s wife. She swore that she would avenge the death of her husband and kill the boy who had killed him. She transformed herself into a beautiful Brahmin lady.


She went to the Ashram of Dharmadattar. She had brought with her a deadly mixture of oil and poison. She spoke to Dharmadutar,


” I heard that sage Kahsyap’s son has come here. I came to see him. Seeing him is equal to seeing his father the sage Kashyap himself. I want to do some service to the lad. I have brought with me the oil mixed with fragrant substances. Please allow me to bathe the boy with my own hands”


Dharmadattar did not realize her real idea behind this offer but MahOrkadar knew her real scheme. He sat on the wooden plank and Sirambai started applying the poisoned oil.


The poison entered her own body through her fingers and she fell dead. No harm happened to MahOrkadar.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 12

12#8g. தேவியின் விளக்கம் (3)

"சமாவஸ்தையாகிய அந்தர்யாமியும் நானே !
உருவமே அற்ற பிரம்ம ஸ்வரூபமும் நானே!

மாயையின் கலப்பில்லாத நிர்குணமும் நானே!
மாயையுடன் கூடியிருக்கும் ஸகுணமும் நானே!

படைக்கின்றேன் சகல ஜீவராசிகளையும் நானே!
படைக்கின்றேன் சகல ஜீவன்களின் கர்மங்களை!

இயக்குகின்றேன் மும் மூர்த்திகளையும் நான்!
இயங்கச் செய்கின்றேன் முத்தொழில்களை நான்!

ஏவுகின்றேன் கிரஹங்களை அவற்றின் பாதைகளில்;
மேவினீர் போரில் வெற்றி என்னுடைய உதவியால்.

ஆட்டுவிக்கின்றேன் ஜீவர்களை பொம்மைகளாக;
ஆட்டம் தொடரும் நான் ஆட்டுவிக்கும் வரையில்.

தருவேன் கர்ம பலன்களை ஜீவ ராசிகளுக்கு;
தருவேன் வெற்றி தோல்வியை ஜீவர்களுக்கு.

மறந்து விட்டீர்கள் ஸர்வ ஸ்வரூபிணியான என்னை;
மமதை கொண்டீர்கள் வெற்றியால் கர்வம் அடைந்து.

உன்னதமாக வெளிப்படுகின்ற உங்களுடைய தேஜஸ்
உண்மையில் வெளிப்படுகின்ற என்னுடைய தேஜஸ்!"

மமதை அகன்ற தேவர்கள் துதித்தனர் தேவியை;
மனம் மகிழ்ந்த தேவியும் மறைந்து அருளினாள்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
DEVI BHAAGAVATAM - SKANDA 12

12#8f. Devi's explanation (2)

My Tureeya Form is the state of equilibrium of the three GuNAs. I am the AntaryAmi ( one who resides in every living being) with the three GuNAs perfectly balanced. I am also the Supreme Brahman without a form.

I have two forms - SaguNa with the attributes and NirguNa without any attributes. SaguNA lies within MAyA. NirguNA lies beyondMAyA.
After creating this universe, I enter within that as the Inner Controller of everything and everyone. It is I that compel all the Jeevas to act. I decide their karmAs, efforts and actions.

Creation, Preservation and Destruction of this universe are carried out by BrahmA, VishNu and Rrudra according to My Commands. I make the wind blow; the clouds rain; the fire burn and the Sun move in the sky. Indra, Agni and Yama do their respective duties as ordered by me .

Through My Grace you have obtained victory in the battle. I make you all dance like wooden puppets and as My mere instruments. You are merely My functions. I am the Integral Whole. I give victory to you or the DaityAs as I please.

I do everything as I wish to. I am the only one who has the independence to act. I act duly and justly according to the KarmAs of the JeevAs.

You have forgotten me though your pride and went into deep delusion by your vanity egoism. I have appeared as this glow of Light only to favor you. Give up your pride and ego. Take refuge in Me with your head, heart and soul and be safe. "

Having said this Devi disappeared from there. The DevAs worshiped Devi with deep devotion and respect.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 5

5#26b. சாமுண்டி தேவி (2)

“சக்தி அளித்தார்கள் தேவர்கள் எனக்கு எனப்
புத்தி இல்லாமல் சிந்திக்க வேண்டாம் நீங்கள்!


நடக்கின்றன அனைத்தும் காலம் விதித்தபடி.
முடிந்து விட்டது அசுரர்களின் பொற்காலம்.


எடுங்கள் ஆயுதங்களை! தொடுங்கள் போரை!
கெடுக்காதீர்கள் போர்முனையை வீண் பேச்சால்!”


வளைத்தனர் விற்களைச் சண்ட, முண்டர்கள்;
விளைந்தது சரமழை வளைந்த விற்களிலிருந்து.


எண்திசையும் செவிகள் செவிடுபட முழங்கியது
சண்டிகை எழுப்பிய வீர சங்க நாதம் அப்போது.


ஒன்றாகத் தாக்கினர் தேவியை சண்ட முண்டர்.
தோன்றியது கடும் சினம் சண்டிகை தேவிக்கு !


ஒளிர்ந்தன வாழைப் பூக்களாகச் சிவந்த கண்கள்!
வெளிப்பட்டாள் நெற்றிக் கண்ணிலிருந்து காளி!


உடுத்தி இருந்தாள் புலித்தோலை ஆடையாக;
உடுத்தி இருந்தாள் கரித்தோலை தாவணியாக.


சிரங்கள் விளங்கின கழுத்தில் ஒரு மாலையாக.
கரங்கள் ஏந்தி இருந்தன விவித ஆயுதங்களை.


கொன்று தின்றாள் அசுரப் படை வீரர்களை!
மென்று தின்றாள் கரி, பரி, ஒட்டகங்களை.


பதைத்தனர் இதைக் கண்ட சண்ட முண்டர்கள்;
மறைத்தனர் அசுர சேனையை பாணத் திரையால்.


சிலிர்த்தாள் காளி அம்புத்திரை சிதறும்படி.
சிரித்தாள் காளி முயற்சி வீணானது கண்டு.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

 
DEVI BHAAGAVATAM - SKANDA 5

5#26b. ChaamuNdi Devi (2)

ChaamuNdi Devi told ChaNdan and MuNdan, “Do not think that I got my powers from the Devaas. They had got their power from me. Everything is happening as ordained by the Time Factor. The golden period of the Asuraa clan is over. Lift up your weapons and fight with me now. Do not waste the precious time in the war front. ”

ChaNdan and Mundan lifted up their bows and sent out a rain of arrows. ChaamuNdi Devi blew her conch so that a deafening noise was created and reverberated in all the eight directions menacingly. ChaNdan and MuNdan attacked ChaamuNdi Devi together. ChaamuNdi Devi became very angry and her eyes shone in the color of the deep red banana blossom.

KaaLi emerged from her fiery third eye of ChaamuNdi Devi now. KaaLi was wearing a tiger skin in her waist. She was wearing an elephant skin to cover the upper portion of her body. She wore a hideous garland made of severed heads and sported menacing weapons in each of her hands. She ate up the Asuraa warriors. She chewed and swallowed the elephants, horses and camels of the Asuraa army.

ChaNdan and MuNdan became anxious by this and tried to cover and hide their army with a screen created by their swift arrows. ChaamuNdi Devi made the screen of arrows crumble by a gentle vibration of her body. She laughed loudly since she had foiled the attempt of ChaNdan and MuNdan so easily.

 
BHAARGAVA PURAANAM - PART 2

#42f. திருமணம்

திருமண ஏற்பாடுகள் நடத்தினார் தருமதத்தர்.
திருமணம் நடந்தது பந்து மித்திரர் சாட்சியாக.


காசிராஜன் கலந்து கொண்டான் ஆர்வமாக;
ஆசீர்வதித்தனர் முனிவர்கள், பெரியோர்கள்.


அரசகுமாரனின் மணம் பற்றிய ஆலோசனை;
அஞ்சினர் அமைச்சர்கள் நராந்தகனை எண்ணி.


“வைரியாக எண்ணுகின்ற நராந்தகன் நமக்கு
வரிசையாகத் துன்பம் தந்தான் விடாமல்.


முறியடித்தது மகோற்கடரின் திருவருள்.
முயற்சி செய்வான் மீண்டும் தீங்கிழைக்க!


திருமணத்துக்குத் தடங்கல்கள் செய்வான்;
ஒருமுறைக்கு இருமுறை ஆலோசிக்கவும்!”


அரசனுக்கு ஒப்புதலே இந்த அறிவுரைகள்;
ஆயினும் நோக்கினான் மகோற்கடரை.


“திருமணம் நடக்கட்டும் நிச்சயித்தபடி;
நெருங்கியது இறுதிநாள் நராந்தகனுக்கு.”


அமைச்சர்களின் அச்சம் மெய்யானது.
அசுரர்கள் மூவர் வந்தனர் அன்றிரவே.


பெருங் காற்றாகி வீசினான் விதாரணன்.
நொறுங்கி விழுந்தன மாட மாளிகைகள்!


அக்னி வடிவில் பரவினான் ஜ்வாலாமுகன்
தீக்கரங்கள் தழுவின நகர் முழுவதையும்.


அல்லல்பட்டு ஓடினார்கள் உயிர் காத்திட!
தொல்லைகள் இவை போதாது என்பதுபோல


வாயிலில் அமர்ந்த அசுரன் வியாக்கிரமுகன்
வாயைத் திறந்து வருபவரை விழுங்கினான்.


குழப்பம், கூச்சல் நீடித்தது நகர் முழுவதும்
குழம்பிய அரசன் சென்றான் மகோற்கடரிடம்.


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி




 
BHAARGAVA PURAANAM - PART 2

#42f. The Wedding

The wedding of MahOrkadar with the two daughter of Dharmadattar took place in a grand manner. Rushis and sages blessed the newly weds. KAsi RAjan participated with great enthusiasm.


The king discussed about his son’s wedding, but the ministers were afraid of the enmity of NarAntakan. “He considers us as his enemies and he gave us a lot of troubles. MahOrkadar saved us from them. He is sure to create more problem in the future. Please reconsider your decisions”


The king thought this was good advice and looked at MahOrkadar. But he said, “The marriage can take place as planned. NarAntakan’s end is nearing fast!”


The fear of the ministers proved to be true. That night three asuras came to KAsi. VidAraNan blew as a stormy wind shaking the buildings and gopurams and making them collapse.


JwAlA mukhan spread in the city as fire. The scared people ran for their lives. VyAgra mukhan sat with his mouth wide open near the city gates and swallowed the people as they came out running.


KAsi RAjan was at his wit’s end. He rushed to meet MahOrkadar.


 
DEVI BHAAGAVATAM - SKANDA 12

12#8h. தேவி வழிபாடு

வழிபட்டனர் தேவர்கள் காயத்ரீ தேவியை;
மொழிந்தனர் காயத்ரீ ஜபத்தைச் சந்திகளில்.

தந்தனர் யக்ஞ பாகங்கள் தவறாமல்;
வந்தனம் செய்தனர் நன்றி மறவாமல்.

சிறந்திருந்தனர் கிருத யுகத்தில் அந்தணர்கள்
பிரணவ, காயத்ரீ, ஹ்ருல்லேகா மந்திரங்களில்.

நித்தியம் ஆனது அல்ல சிவனின் உபாசனை!
நித்தியம் ஆனது அல்ல விஷ்ணு
னின் உபாசனை!

நித்தியமானது காயத்ரீ உபாசனை என்று
நிச்சயமாகக் கூறுகின்றன வேதங்கள்.

கிருதக் கிருத்தியம் தரும் காயத்ரீ ஜபம்;
விரும்பத் தேவையில்லை வேறு எதையும்!

முக்தி தரும் காயத்ரீ ஜபம், தினசரி வழிபாடு;
நித்தியம் செய்ய வேண்டும் சந்தி வேளையில்.

வேறு உபாசனைகள் தேவையே இல்லை
மறவாமல் காயத்ரீ ஜபம் செய்பவர்களுக்கு.

உபாசித்தனர் காயத்ரியைக் கிருத யுகத்தில்
உயர்ந்த தேவீ பக்தர்களான கிருத யுகத்தினர்.

காயத்ரீ தேவிக்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை;
காயத்ரீ ஜபத்துக்கு மிஞ்சிய மந்திரமும் இல்லை.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
DEVI BHAAGAVATAM - SKANDA 12

12#8h. Worship of GAyatree Devi


The DevAs worshiped Devi Bhagavati. They chanted GAytree during the Sandhya times. They offered her share of Havisu during the yAgAs and YagnAs. They always remembered her with gratitude.

In the Krita Yuga, the brahmins excelled in PraNavam, GAyatree and HrullekA mantrAs. The worship of VishNu is not permanent. The worship of Siva is not permanent. Only the worship of GAyatree is permanent according to the VedAs.

GAyatree bestows all auspiciousness and fulfills all our desires. Regular chanting of GAyatree can give total liberation to a brahmin. It must be performed at the Sandhya times.

No other vrata or pooja or upAsana is necessary for those who chant GAyatree regularly. In the Krita Yuga brahmins worshiped GAyatree Devi sincerely.

There is no mantra superior to GAyatree and no Devi superior to GAyatre Devi.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 5

5#26c. சாமுண்டி தேவி (3)

சக்கரத்தை ஏவினான் தேவியின் மீது சண்டன்;
சக்கரத்தை உடைத்தது தேவியின் ஒரு பாணம்.


வீழ்ந்தான் சண்டன் தேவியின் பாணத்தினால்.
வீழ்ந்தான் முண்டன் ஒரு சந்திர பாணத்தினால்.


எழுந்த சண்டன் தாக்கினான் மீண்டும் தேவியை
எளிதாகக் கட்டினாள் தேவி தன் பாசத்தால்.


எடுத்து வந்தான் முண்டன் சக்தி ஆயுதத்தை.
எளிதில் கட்டினாள் அவனையும் பாசத்தால்.


குறு முயல்கள் போலத் தூக்கினாள் – பாசத்தால்
இரு அரக்கர்களையும் கட்டிப் போட்டு விட்ட காளி.


அளித்தாள் அவர்களைத் தேவிக்கு யாகப் பசுவாக;
அளித்தாள் தேவி அவர்களை மீண்டும் காளியிடம்.


யாக சாலை ஆகி விட்டது இப்போது போர்க்களம்;
யாகப் பசுக்கள் ஆகி விட்டனர் சண்ட முண்டர்கள்.


யூப ஸ்தம்பம் ஆகிவிட்டது நாட்டியிருந்த வாள்.
யூகிக்கவும் வேண்டுமோ அதன் பின் நடந்ததை?


‘தேவர்களின் காரிய சித்தியைச் செய்துவிடு!”
தேவி உணர்த்தினாள் காளிக்குக் குறிப்பாக.


கொய்தாள் சண்ட முண்டரின் சிரங்களைக் காளி!
பெய்ந்த உதிரத்தைக் குடித்து மகிழ்ந்தாள் காளி!


சண்ட முண்டரை வதைத்த அந்த தேவிக்கு
'சாமுண்டி' என்ற பெயர் வழங்கலாயிற்று.


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
DEVI BHAAGAVATAM - SKANDA 5

5#26c. ChAmuNdi Devi (3)

ChaNdan released his discus on Devi. An arrow shot by Devi shattered his discus to pieces. ChaNdan also fell down hit by Devi's arrow.
MuNdan also fell down to a crescent moon shaped arrow shot by Devi. ChaNdan got up and charged at Devi. Devi bound him easily with her NOOSE the pAsam.

MuNdan sprang on her with his spear. Devi bound him also with her pAsam. KAli lifted the two asuras bound by her pAsam as if they were two little rabbits.
She offered the asuras ChaNdan and MuNdan to Devi to be sacrificed in a yAgam.

The battle field now became the yAga sAla. ChaNdan and MuNdan became the sarificial animlas or the yAga pasu. The sword planted there became the yoopa sthambam.

Devi gave them back to Kaali and said, ”Finish off the plan as laid by the Devas.”
KAli severed the heads of ChaNdan and MuNdan and drank the blood gushing out of their bodies. The Devi got the name 'ChAmuNdi' since she killed the wicked asuras ChaNdan and MuNdan.


 
bhaargava puraanam - part 2

#42g. ஆபத்து விலகியது!


மகோற்கடரிடம் விரைந்தான் காசி ராஜன்,
“மகானே! காப்பாற்றுங்கள் ஆபத்திலிருந்து!

சூறாவளிக் காற்றில் தரைமட்டமானது காசி;
ஆறாத தீஜ்வாலைக்கு பலியாயினர் மக்கள்!

காப்பாற்ற வேண்டும் காசி நகரைத் தாங்கள்;
ஒப்பற்ற உங்களால் மட்டுமே இது சாத்தியம்.”

“நராந்தகன் ஏவிய அசுரர்கள் கொட்டமே இது
நிரந்தரமாக நீக்குகிறேன் நொடிப் பொழுதில்!”

கமண்டல நீரைக் கையில் எடுத்தார் – கனத்த
புகைமண்டலத்தின் மீது அள்ளித் தெளித்தார்!

காற்றும், நெருப்பும் அடங்கி விழுந்தன!
காற்றும், நெருப்பும் அழித்தவை எழுந்தன!

அழிக்கப்பட்ட காசி நகரம் முன்போலவே
செழிப்புடன் விளங்கியது மீண்டும் விந்தை!

மகிழ்ச்சி பெருகியது மன்னன் மனதில்;
மார்புறத் தழுவினான் மகோற்கடரை.

விரைந்தார் மகோற்கடர் நகரவாயிலுக்கு;
திறந்த அசுரனின் வாயில் ஏறி நின்றார்.

வியாக்கிரமுகன் சுதாரிக்கும் முன்னரே
விஸ்வரூபம் எடுத்துப் பிளந்தார் அவனை!

அழிந்தான் அசுரன் பெரிய அலறலுடன்;
விழுங்கிய மக்கள் எழுந்தனர் உயிருடன்.

விருந்து அளித்தான் காசிராஜன் மறுநாள்;
விருந்து சமைத்தவள் பட்டத்து அரசியே.

விருந்து படைக்கும் பொழுது கண்டாள்
விருந்தில் சமைக்காத பல பண்டங்கள்!

“நாம் இன்று சமைக்காத பண்டங்களும்
நாம் அளிக்கும் விருந்தில் எப்படி?” என

அரசன் வினவினான் மகோற்கடரிடம்;
அரசனுக்கு விளக்கினார் மகோற்கடர்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


 
BHAARGAVA PURAANAM - PART 2

#42g. The danger is over!

The King of KAsi ran to MahOrkadar. “Please save my city of KAsi. The storm has reduced the buildings to rubble. The fire has charred everything and everyone in the city. You must save my city and the people of KAsi from total destruction. Only you are capable of performing this miracle!”


MahOrkadar replied, “These are the atrocities performed by the asurA sent by NarAntakan. I will put an end to this in a minute.” He took some water from his kamaNdalam and sprinkled it on the dense smoke filling the air. The fire got put out and the storm weakened immediately.


Everything that was destroyed by the wind and the fire was restored to its original shape and glory. KAsi became as beautiful as before. The king of KAsi was overwhelmed with happiness and embraced MahOrkadar.


Now MahOrkadar rushed to the city gate. He climbed into the wide open mouth of the asuran VyAgra mukhan and stood there. Before VyAgra mukhan could react to this, MahOrkadar assumed his viswaroopam and tore open the asuran into two pieces.


The king was extremely pleased by the genius of MahOrkadar. The very next day the king hoisted a special feast for MahOrkadar. All the food items in the feast were personally made by the queen to honor the special guest.


While serving the food, the queen noticed that some dishes which were not prepared by her, appeared among the food items served to MahOrkadar. She wondered how it could be possible. The king asked MahOrkadar to explain this mystery and MahOrkadar explained it thus.


 
DEVI BHAAGAVATAM - SKANDA 12

12#9a. கௌதமர் (1)

பொய்த்தது மழை பன்னிரண்டு ஆண்டுகள்;
காய்ந்தன பயிர்கள் மழை நீர் இல்லாமல்.

லை விரித்தாடியது கடுமையான பஞ்சம்;
தடுக்க முடியவில்லை பட்டினிச் சாவுகளை.

தின்றனர் மனிதர் குதிரைகள் பன்றிகளை!
தின்றனர் மனிதர் இறந்தவர் உடல்களை!

தின்றனர் பெற்றோர் தாம் பெற்ற செல்வங்களை!
தின்றனர் கணவர்கள் தாம் மணந்த பெண்களை!

சேர்ந்தனர் அந்தணர்கள் ஒன்றாகக் கூடி;
சென்றனர் கௌதமரிடம் உதவியை நாடி.

கூறினர் கௌதமரிடம் தம் குறைகளை;
கோரினர் அவரிடம் தம்மைக் காக்கும்படி.

ஜபிக்கச் சொன்னார் சாந்தி மந்திரங்களை;
ஜபித்தார் முனிவர் காயத்ரீயைத் துதித்து.

"வேதங்களின் தாயே! மந்திர ஸ்வரூபிணி!
பிராண ஸ்வரூபிணி! ஸ்வாஹா! ஸ்வதா!

"கற்பக விருஷம் போன்றவள் நீ பக்தருக்கு;
சாக்ஷியாகின்றாய் மூன்று அவஸ்தைகளுக்கு.

துரியாதீத ஸ்வரூபிணி! சத் சித் ஆனந்த ரூபிணி!
அறியலாம் உன்னை உபநிஷத்துக்கள் உதவியால்.

வசிக்கின்றாய் சூரிய மண்டலத்தில் தேவி நீ!
துதிக்கின்றனர் சூரிய மண்டலத்தில் உன்னை!

உள்ளாய் சிவந்த நிற பாலையாகக் காலையில்;
உள்ளாய் சிவந்த நிறக் குமரியாக நண்பகலில்;

உள்ளாய் கரிய நிற விருத்தையாக மாலையில்
தள்ளுவாய் எம் அபராதங்களை நீ மன்னித்து!"

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
DEVI BHAAGAVATAM - SKANDA 12

12#9a. Sage Gouthama (1)

The rains failed for twelve long years continuously The water bodies dried up and the crops failed. A severe famine lasted for a long time. The death due to starvation could not be controlled. Men ate pigs and horses. Men ate dead bodies of other men. Parents ate their own children and husbands ate their own wives.

The brahmins were desperate. They decided to seek the help of Sage Gautama. They went to meet him with their families and their cattle. They explained their difficulties and begged the sage to help them. Sage Gautama told them to chant the ShAnti mantrAs while he himself started praying to GAyatree Devi.

"Oh mother of the VedAs! Mantra swroopiNi! PrANa swaroopiNi! SwAha RoopiNi! SwadA RoopiNi! You are the celestial Karpagavruksham for your devotees. You are the sAkshi for the three avsthAs of a jeevA. You are the TureeyAtheetha swaroopiNi! You are the Sath-Chit-AanandhaRoopini You may be realised through the Upanishads.

You live in the Soorya MaNdalam. I worship you in the Soorya MaNdalam. You are a fair young girl in the morning. You become a lovely fair maiden in the noon. You become a dark old woman in the evening. Please forgive our sins and help us now!"
 
DEVI BHAAGAVATAM - SKANDA 5

5#27a. ரக்தபீஜன் (1)

சண்ட முண்டர்கள் மாய்ந்தது கேட்டு
மண்டியது கோபம் சும்பாசுரனுக்கு.


“காளிகா தேவி உண்கிறாள் எல்லோரையும்.
காளிகா தேவி உண்கிறாள் எல்லாவற்றையும்.


ஆயுதங்களினால் அழியவில்லை அசுரர் படை;
வாயினால் விழுங்கப் பட்டு அழிந்தது அது.


பெருகி ஓடுகிறது ரத்த ஆறு போர்க்களத்தில்;
சேறு போல ஆனது அசுரர்களின் உடல்கள்.


பாசி போல் தோன்றுகிறது அசுரரின் தலை முடி,
வீசிய சுரைக் காய்கள் ஆயின வீழ்ந்த சிரங்கள்.


கைவிட்டு விடும் போர் செய்யும் எண்ணத்தை;
மெய் பிழைக்கும் பாதாள லோகம் சென்றால்.


ரத்தம் சுவைத்து விட்டுக் கொக்கரிக்கிறாள் காளி!
யுத்தம் விருந்தளித்தது பெண்ணின் சிங்கத்துக்கு.


தேவர்களுக்கு நல்ல காலம் பிறந்து விட்டது போல!
தோன்றியது உமது போர் வெறி அதன் காரணமாக!


பலி இடுகிறீர்கள் விசுவாசிகளைப் போரில்;
விலை மதிக்க இயலாத அசுரர்களை நீங்கள்.


இத்தனை துன்பமும் சிற்றின்பத்துக்காகவா?
எத்தனை அசுரரை ஒருத்தி அழித்துவிட்டாள்!


யோசிக்காமல் வென்றீர் போரில் அமரரை
யோசிக்கின்றீர் இன்று பெண்ணுடன் போரிட.


வரம் ஒன்று பெற்றீர் பிரம தேவனிடம் பண்டு;
மரணம் வரலாம் பெண்ணால் மட்டும் என்று.

வந்துவிட்டாள் உமது மரணதேவதை இன்று;
வந்துள்ளாள் அழகிய பெண்ணுருவம் கொண்டு.”


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

 
DEVI BHAAGAVATAM - SKANDA 5

5#27a. Raktha Beejan (1)

Those asuras who escaped alive told SumbAsuran all the events of the day. The told him about the death of ChaNdan and MuNdan in the hands of KALi Devi.


“KALi Devi is eating everything. KALi Devi is eating everyone. Our army was not destroyed by any weapons. It was actually gobbled up by KALi.

A river of blood flows there. The crushed bodies of the dead asuras have formed a bloody slush. The hair of the ausraas appear like the algae on a river. The severed heads of the asuras float like gourds plucked and thrown in a river.

Give up the idea of fighting. Going back to PAtAlam may spare our lives. KALi is intoxicated by drinking the fresh blood. The lion feasts on the bodies of the dead asuras.
Devas have an auspicious time now. That is the reason why you opted to fight. You are sacrificing your loyal warriors in the battle.

Are they being sacrificed for you pleasure and joy with that strange woman ? How many warriors have been killed single handedly by her!
You won over the Devas without a second thought. You are so concerned about fighting with this woman.
You have secured a rare boon from Brahma long ago that your death may be caused only by a woman. The angel of death has come here now – in the guise of a lovely young lady.”


 
BHAARGAVA PURAANAM - PART 2

#42h. புருசுண்டி

“நமது அன்பர்களில் சிறந்தவர் புருசுண்டி,
தமது உடலில் எனது
ருவம் கொண்டவர்;

சதுர்த்திக்கு அவர் நிவேதனம் செய்பவை
புதிதாக வந்து சேருகின்றன என் உணவில்!”


“காண வேண்டும் அந்த பக்தரை உடனே;
பேண வேண்டும் அவரை நன்கு உபசரித்து.”


“தண்டக வனத்தில் தங்கியுள்ளார் அவர்;
தெண்டனிட்டுக் கூறுவாய் விவரங்களை.


புத்திரன் விவாஹம் பொருட்டு நான் வந்த
அத்தனையையும் ஆதியோடு அந்தமாக!”


தண்டக வனம் சென்றான் காசிராஜன் – புரு
சுண்டியைக் கண்டு வணங்கினான் மகிழ்ந்து.


“மகோற்கடர் விருந்தில் தோன்றின நீங்கள்
மகா பக்தியுடன் படைத்த உணவு வகைகள்.


அரண்மனைக்கு வந்தருள வேண்டும் – உம்மை
அழைத்து வரச்சொன்னார் மகோற்கடர்” என்றான்.


கஜானனனை அறிந்திருந்தார் புருசுண்டி – ஆனால்
கஜானனனே மகோற்கடர் என்று அறியவில்லை.


“காசியப முனிவர், அதிதி தேவியின் மகனாகக்
காசினியில் அவதரித்துள்ளார் விநாயகர் மீண்டும்.”


காசியபரிடம் சென்றது முதற்கொண்டு மகோற்கடர்
காசியில் செய்த அற்புதங்கள் வரையில் கூறினான்.


கண்ணை மூடித் திறக்கச் சொன்னார் புருசுண்டி.
மன்னன் தலையைத் தடவினார் பிறகு மெல்ல.


கண்ணைத் திறந்த மன்னன் கண்டான் தன்னை;
தண்டகவனத்தில் அல்ல, தன் அரண்மனையில்!


“புருசுண்டி வரவில்லையா?” கேட்டார் மகோற்கடர்.
“புருசுண்டியைக் கஜானனன் அழைத்ததாகச் சொல்!”


குனிந்து வணங்கி எழுந்த மன்னன் இருந்தான்
முனிவர் புருசுண்டியின் முன் தண்டகவனத்தில்!


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.




 
BHAARGAVA PURAANAM - PART 2

#42h. BrusuNdi

“BrusuNdi is one of my best devotees. He has my physical form with a trunk in his face. Whatever he is offering to me for chathurti is appearing here along with the queen’s preparations.” MahOrkadar told KAsi RAjan.


Then KAsi RAjan said, “I am very eager to meet that devotee. I want to honor him well”


MahOrkadar told him, “BrusuNdi lives in DhaNdakAraNyam. Go and tell him with due respect all the details from when you came to meet my father to what happened yesterday.”


KAsi RAjan went to DhaNdakAraNyam and met BrusuNdi. He told the elephant faced sage,” The neivEdhyam you offered to VinAyaka appeared in the food offered to MahOrkadar. He requests you to accompany with me to meet him”.


BrusuNdi knew GajAnanan but he was not aware of the fact that MahOrkadar was the avatar of GajAnanan. The king of KAsi explained to the sage that VinAyaka had been born as the son of Sage Kashyapa and Aditi Devi. His name was MahOrkadar. He related all the events since he met Kashyapa in his Ashram.


BrusuNdi listened to everything and told the king to close his eyes. The king closed his eyes and the sage ran his fingers over the king’s head. When he opened his eyes, the king found himself in his own palace, in the presence of MahOrkadar! He told MahIrkadar what had happened in the DhaNdakAraNya.


Now MahOrkadar told the king, “Go and tell the sage BrudsuNdi that GajAnanan told him to accompany you”. The king bent forward to pay his respect. When he got up he found himself in the presence of the sage in the DhaNdakAraNya.


 
DEVI BHAAGAVATAM - SKANDA 12

12#9b. கௌதமர் (2)

தந்தாள் காயத்ரீ தேவி கௌதமருக்குக் காட்சி;
தந்தாள் மாட்சிமை வாய்ந்த ஒரு பாத்திரத்தை.

சர்வ போஷண பாத்திரம் அவள் தந்தது!
சகல வஸ்துக்களையும் அளிக்க வல்லது!

"போக்குவாய் இவர்கள் பசியை இதன் உதவியால்;
ஆக்குவாய் இவர்களைத் துயரம் அற்றவர்களாக!"

குவிந்தது அங்கே உண்ண அன்னம் மலை போல;
குவிந்தன அறுசுவைப் பண்டங்கள் மலை போல.

குவிந்தன உன்னதமான பட்டாடைகள்;
குவிந்தன அணி மணிகள், ஆபரணங்கள்.

குவிந்தன உன்னதமான யாகப் பொருட்கள்;
குவிந்தன கௌதமர் விரும்பிய அனைத்துமே.

குவிந்தன கால் நடைகளுக்குப் புல் வகைகள்;
குவிந்தன யாகத்துக்கு வேண்டிய பொருட்கள்.

வழங்கினார் கௌதமர் வஞ்சனையின்றி!
மகிழ்ந்தனர் அந்தணரும், குடும்பத்தினரும்.

சுவர்க்க லோகம் போலானது முனிவர் ஆசிரமம்;
சுவர்க்க வாசிகள் போலாயினர் ஆசிரம வாசிகள்.

சந்தனம், மலர்கள், பட்டாடை, அணிமணிகள்,
அந்த இடத்தை மாற்றி விட்டது அமராவதியாக.

வியந்தனர் தேவர்கள் இந்த விந்தையைக் கண்டு;
வியந்தனர் மாந்தர்கள் அந்தப் பாத்திரம் கண்டு!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
DEVI BHAAGAVATAM - SKANDA 12

12#9b. Sage Gautama (2)

Devi GAyatree appeared to the sage Gautama and gave him a vessel by which everyone can he fed and nourished. Devi told him, “This vessel will give you whatever you wish for" and vanished from there.

Mountains of cooked rice, cooked vegetables and sweetmeats for the brahmins and their familes lay heaped there. Plenty of grass and fodder for the cattle were derived from the vessel.

Silks and ornaments for the womenfolk and various articles and vessels needed for sacrificial purposes were all given by the wonderful vessel as desired by Sage Gautama.

Whatever Gautama wished for, came out of the vessel given by the Devi GAyatree. Sage Gautama gave the other sages and munis wealth, grains, clothes, ornaments, sacrificial ladles, spoons, cows and buffaloes for the sacrificial purposes.

The Munis assembled and performed various yagnAs and YAgAs. The place flourished and prospered to look like a second heaven.

The Munis, with sandal paste all over their bodies and decorated with very bright silks and ornaments looked like the gods, while their wives looked like goddesses!

The Devas wondered about the power of Gautama while the men wondered about that vessel with miraculous powers.
 
DEVI BHAAGAVATM - SKANDA 5

5#27b. ரக்த பீஜன் (2)

“வெறும் பெண்ணல்ல வந்திருப்பவள்!
வெல்லப் படாத சர்வ சக்தி கொண்டவள்.


மஹா மாயை அவள், மஹா தேவி அவள்!
மஹா பிரகிருதி அவள்! மஹா சக்தி அவள்;


நித்தியை அவளே! சக்தியும் அவளே!
சித்தி படைத்தவள்; சித் ரூபிணி அவள்.


காயத்திரி அவள்! கருணைக் கடல் அவள்;
அபயம் அளிப்பவள்; ஆனந்தம் தருபவள்.


சரணம் அடைந்து விடும் அவளிடம்!
மரணம் நெருங்காது எஞ்சிய அசுரரை.”


கோபம் தலைக்கேறியது சும்பாசுரனுக்கு;
“போதும் நிறுத்துங்கள் இந்தப் பிதற்றலை!


தோற்றுப் புறமுதுகிட்டு ஓடி வந்துள்ளீர்கள்;
ஏற்றிப் புகழ்கின்றீர்கள் எதிரி ஆனவளை!


மரண பயம் வந்து விட்டது உங்களுக்கு;
சரணம் அடையச் சித்தம் ஆகி விட்டீர்கள்.


செல்லுங்கள் உடனே பாதாள உலகுக்கு – உயிர்
வெல்லம் என்று எண்ணி அஞ்சுகின்றவர்கள்.


மரணம் யாரை விட்டுவிடும் உலகினில்?
மரணம் விளையாதோ பாதாள உலகத்தில்?


தருமதைக் கைவிடக் கூடாது நாம் எவரும்
மரணத்துக்கு அஞ்சிக் கோழைகள் ஆகி.


ஊழ் எனப் படுவது இறைவன் அல்ல;
ஊழ் என்பது ஜீவனின் வினைப் பயனே.


வினைப் பயன்களை அனுபவிக்க உதவும்
துணைச் செயல்களே முயற்சிகள் ஆகும்.”


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 5

5#27b. Raktha Beejan (2)

Those who had run away from the battle field continued to talk to Sumbaasuran. “It is not an ordinary woman who has come here seated on a lion. She is the Shakti who can not be conquered by anyone.


She is the Mahaa Maayaa. She is the Mahaa Devi. She is the Mahaa Prakruti. She is the Mahaa Shakti.
She is eternal. She is Gaaytree. She is an ocean of mercy. She is chith roopini. She is the giver of abhayam and aanandam. Surrender to her now so that the rest of the asura clan can survive and escape death in her hands”

Sumbaasuran became extremely angry. He took them to task and said,”Stop your prattle. You are praising my enemy in front of me. You have run away from the battle field. You are afraid to die.


Those who wish to live on may go to Paataalam immediately. Will death spare you if you go to Paataalam? We must perform our duty without fear of death. Fear makes us cowards and fail in out duties.


Fate is not God. Fate is the effect of our own past karma. To experience the effect of our karma, we need to perform some actions and these are called as the efforts”


 

Latest posts

Latest ads

Back
Top