• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

A poem a day to keep all agonies away!

SRI VENKATESA PURAANAM

17b. குபேரன்

“பெறுவோம் குபேரனிடமிருந்து கடனாக;
திருப்புவோம் அதை வட்டியும், முதலுமாக!”


அழைக்கப்பட்டான் குபேரன் சேஷாச்சலத்துக்கு;
அடைந்தான் குபேரன் உடனேயே சேஷாச்சலம்.


திருமணச் செலவுக்குக் கடன் கேட்டான் பிரமன்;
திருப்பித் தருவதாக வாக்களித்தான் பிரம்ம தேவன்.


ஒரு கோடியே பதினான்கு லக்ஷம் பொற்காசுகள்!
ஒரு வருடத்திய வட்டி ஒரு லக்ஷம் பொற்காசுகள்!


“தந்து விடுவோம் வட்டியை பிரதி வருடமும்!
தந்து விடுவோம் கடனைக் கலியுக முடிவில்!”


எழுதினான் பிரமன் கடன் பத்திரத்தை – கை
எழுத்திட்டான் ஸ்ரீனிவாசன் கடன் பத்திரத்தில்.


கையெழுத்திட்டான் பிரமன் ஒரு சாட்சியாக;
கையெழுத்திட்டன இரு மரங்கள் சாட்சிகளாக.


தொடங்கின ஏற்பாடுகள் கடன் கிடைத்தவுடனே.
மடங்கல்கள் சென்றன தேவர், முனிவர்களுக்கு.


தங்கும் ஏற்பாடுகள் செய்தனர் அதிதிகளுக்கு.
தருக்கள் குலுங்கின காய், கனிகள் நிறைந்து.


சிவன், உமை அடைந்தனர் சேஷாச்சலத்தை.
சிவ கணங்கள் தொடர்ந்தன நந்தி தேவனை.


அளித்தான் குபேரன் பட்டுப் பீதாம்பரங்களை;
அளித்தான் குபேரன் நவரத்ன ஆபரணங்களை.


ஸ்ரீனிவாச கல்யாணம் காண வந்து குழுமினர்;
இனிமையான சூழ்நிலை நிலவியது அங்கே.


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


#17b. Kuberan


“We will take a loan from Kuberan and return it with interest.” Brahma suggested and everyone agreed to it. Kubaran was summoned and rushed to SeshAchalam to meet SrinivAsan.


Brahma spoke of behalf of SrinivAsan, “We need a loan of 1,14, 00, 000 gold coins. We agree to pay an annual interest of 1,00,000 gold coins. We will return the loan amount at the end of the Kali Yuga.”


Kuberan agreed to these terms. Brahma himself wrote the loan document and made SrinivAsan signed in it. Brhama and two trees signed the document as the witnesses.


Now that money was available, the wedding arrangement went on in full swing. Invitations were sent to all the Devas and rushis. Arrangements were made for the pleasant stay of the guests. The flowering trees bloomed and the others were laden with ripe fruits.


Siva came with Uma Devi. The Siva gaNa followed Nandi Devan. The place was filled with the happy people who had come to witness the SrinivAsa KalyANam.








 
DEVI BHAAGAVATAM - SKANDA 6

6#14a. வசிஷ்டரும், நிமியும்

“மித்திரா வருணி என்ற பெயர் வசிஷ்டருக்கு!
இத்தகைய பெயர் வரக்காரணம் என்னவோ?”


“சபித்தான் வசிஷ்டரை இக்ஷ்வாகு குல நிமி.
சாபத்தால் வசிஷ்டர் இழந்தார் தம் தேஹத்தை.


பிறந்தார் மித்திர வருணனிடம் பிரமன் ஆணையால்;
பிறகு பெயர் பெற்றார் வசிஷ்டர் மித்திரா வருணி என.


“சபிக்க முடியுமா ஒரு மன்னனால் பிரும்ம ருஷியை?
சாபம் பலிக்குமா மன்னன் இட்டால் பிரும்ம ருஷியிடம்?”


” இக்ஷ்வாகு குலத்தின் மன்னன் நிமி – தந்தையார்
இக்ஷ்வாகு தந்தார் அனுமதி பெரிய யாகம் செய்ய.


விரும்பினான் மாபெரும் யாகம் ஒன்று புரிந்திட.
பொருட்களைச் சேகரித்தான் மாபெரும் யாகத்துக்கு.


வரவழைத்தான் மா முனிவர்களை யாகம் கண்டிட;
உரைத்தான் குலகுரு வசிஷ்டரிடம் யாகம் புரிந்திட.


“ஐயாயிரம் ஆண்டுகள் தொடர்கின்ற யாகம் இது!
ஐநூறு ஆண்டுகள் தொடரும் யாகம் செய்யும்படி


வேண்டிக் கொண்டான் தேவேவேந்திரன் முன்பே;
தேவியின் அருளை நாடுகின்றான் தேவேந்திரன்.”


“அத்தனை பொருட்களையும் சேகரித்துவிட்டேன்;
அத்தனை முனிவர்களையும் வரவழைத்து விட்டேன்.


சாத்தியம் அல்ல ஐநூறு ஆண்டுகள் காத்திருப்பது;
பாத்தியதை உம்முடையது நீரே என் குலகுரு!” என,


புறக்கணித்தார் நிமியின் வேண்டுகோளை வசிஷ்டர்;
புறப்பட்டுச் சென்றார் தேவேந்திரனின் யாகத்துக்கு.


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


6#14a. Sage Vasishta and King Nimi


King Janamejayan asked sage VyAsa,” sage Vasishtaa is also known as MitrAvaruNi. How and why did he get that name?”


VyAsa said, ” King Nimi of Ikshvaaku race cursed his kulaguru Vasishtaa. As a result Vasishtaa lost his physical body and had to born again to Mitra Varunan as ordained by Brahma. Hence the name MitrA VaruNi for Vasishtar.”


“Can a mere king curse a Brahma rushi successfuly?’” King Janamejayan was amazed.


“King IksvAku gave permission to his son Nimi to perform a grand yagna. Nimi gathered all the things needed for the yagna. He sent out invitations to all the sages. He requested Vasishta to perform the grand yagna which would last for five thousand years.


Vasishta had to refuse since he aad already accepted Indra’s request to perform a yagna for five hundred years to seek
Devi’s blessings and grace.


King Nimi said, “We can’t wait for five hundred more years. You are our kulaguru. So it is your responsibiity to perform the yagna!” But Vasishta honoured his commitment and went off to perform Indra’s yagna.





 
KANDA PURAANAM - URPATTHIK KAANDAM

16. நான்முகனின் அறியாமை

பிரமன் முதலானோர் பிரானை வணங்கி,
பிரமலோகம் மீண்டு செல்லலாயினர்.


அருகில் வருமாறு முருகன் அழைக்க,
நெருங்கினான் பிரமன் கரங்கள் குவித்து.


நான்முகனை அமரச் செய்த முருகன்,
“யான் அறிய வேண்டும் உம் தொழிலை!”


“பிரான் ஆணைப்படி படைப்புத் தொழிலை
சிரம் மேற்கொண்டு நான் செய்து வருகிறேன்!”


“குறைவின்றிப் பெற்றுள்ளீரா நீர்- நான்கு
மறைகளின் அறிவையும் உண்மை கூறும்!”


“முன்னாளிலே நான்கு அரும் மறைகளை
அண்ணல் எனக்கு போதித்து உள்ளார்!”


“அப்படியானால் ருக் வேதத்தைக் கூறும்!”
“அப்படியே!” என்று “ஓம்” எனத் தொடங்க,


“நிறுத்தும்! ஓம் என்பதன் பொருள் என்ன?”
மறு மொழி தெரியவில்லை நான்முகனுக்கு.


இறைவனின் பீடமாக என்றும் இலங்குவதும்,
பிறப்பிடமாக தேவர்களுக்குத் துலங்குவதும்,


மறைகள், மந்திரங்களின் மூலமும் ஆகின்ற
பிரணவத்தின் பொருள் புலப்படவில்லை.


அறியாது மயங்கிய நான்முகன் மீது
ஆறுமுகன் கொண்டான் கடும் சினம்.


“பிரணவத்தின் பொருளை அறியாத நீர்
பிரான் ஆணைப்படி படைப்பது எங்ஙனம்?”


நான்முகனின் நான்கு தலைகளும் குலுங்குமாறு
நன்றாக அழுத்திக் குட்டினான் குட்டி முருகன்.


தண்டை அணிந்த கால்களால் உதைத்து,
தண்டித்தான் பிரம்மனைத் தரையில் தள்ளி!


கந்த வெற்பில் சிறைப்பட்டார் பிரம்மன்!
கந்தனை எதிர்த்துப் யாரும் பேசமுடியுமா?


உடன் வந்த தேவர்கள் மனம் நடுங்கிடப்
படைப்புத் தொழிலைத் தன் வசமாக்கினான்.


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


1#16. BRAHMA’S IGNORANCE


Brahma Devan and the other Devas visited Lord Siva at KailAsh. After paying their obeisance, they were returning to Brahma LOkam. Murugan saw Brahma Devan and called him to come closer to Him. Brahma Devan went near Murugan with anjali hastham but did not prostrate to the young Murugan.


Murugan made Brahma Devan sit near him and asked him,” What is your business?” Brahma Devan replied, “I am in charge of the creation as ordained by Lord Siva”.


Murugan now asked,”Do you have the knowledge of all the Vedas required for the task of Creation.?” Brahma Devan replied, “Lord Siva had taught me those long ago!”


Murugan said, “Then recite Rig Veda”. Brahma started reciting with the Pranava “Om”. Murugan asked Brahma to explain the meaning of “Om”. Brahma could not explain the meaning of the PraNava – which was the seat of the Lord; the birthplace of the Devas; the root of all the Mantras and Vedas. He stood with his head hung downing shame.


Murugan became very angry! “If you do not know the meaning of the PraNava, how can you be in charge of the Creation?” He rapped on Brahma’s head with a great force so that all the four heads wobbled under the impact . He kicked Brahma and pushed him down on the ground.


Brahma was imprisoned on Kanda Verpu by Murugan. The Devas who accompanied Brahma were shocked by these events. Murugan took charge of the Creation Himself.


 
SRI VENKATESA PURAANAM

17c. முதல் உரிமை

மணமகனைப் புனித நீராட்டுவதற்கு
முன் வந்தனர் முதல் உரிமை கோரி!


வகுள மாலிகை முதல் உரிமை கோர,
வெகு நயமாகக் கூறினார் ஸ்ரீனிவாசன்;


“லக்ஷ்மிக்கு முதலுரிமை மறவாதீர்!”
“லக்ஷ்மி வருவாளா திருமணத்துக்கு?”


“கரவீரபுரத்திலிருக்கும் லக்ஷ்மியை
வரவழைக்க ஒரு வழி கூறுகிறேன்.


உடல் நலமில்லை எனக்கு என்றால்,
உடன் ஓடி வருவாள் லக்ஷ்மிதேவி!”


கதிரவனை அனுப்பினர் கரவீரபுரத்துக்கு;
கதிரவன் செய்தி சொன்னான் லக்ஷ்மிக்கு.


“வைகுந்தம் விட்டு நீங்கள் வந்ததால்,
வையகம் வந்துள்ளார் ஸ்ரீனிவாசரும்.


உடல் நிலை பாதிக்கப் பட்டுள்ளது தேவி!
தடை சொல்லாமல் வரவேண்டும் தாயே!”


கரவீரபுரத்திலிருந்து லக்ஷ்மி புறப்பட்டதும்,
பிரமனும், சிவபிரானும் கைலாகு கொடுக்க;


நலிவுற்றவன் போல நடித்தான் ஸ்ரீனிவாசன்
பொலிவிழந்து உடல் நலம் குன்றியவனாக!


“ராமாவதாரத்தில் தந்த வரம் நினைவுள்ளதா?”
“ஆமாம் ஸ்வாமி! நினைவுள்ளது நன்கு எனக்கு!


வேதவதியை ஏற்றுக் கொள்ளச் சொன்னேன்;
வேளை வந்ததும் ஏற்றுக் கொள்வேன் என்றீர்!”


“வேளை வந்து விட்டது தேவி இப்போது!
வேதவதியே ஆவாள் இளவரசி பத்மாவதி!


சித்திரை சுத்தத் திரயோதசியில் திருமணம்;
உத்தேசித்தேன் உன்னை இங்கு வரவழைக்க.”


ஆனந்தம் அடைந்தாள் லக்ஷ்மி இது கேட்டு.
அனைவரும் சென்றனர் ஸ்ரீநிவாசன் புற்றுக்கு.


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


#17c. The first importance

The bride groom was to be given a ceremonial bath. Everyone wanted to get the first chance and the first importance. SrinivAsan reminded them that it was the right of his consort Lakshmi Devi.


“But Lakshmi Devi has left you. Will she come now for the wedding?’ people raised this doubt. SrinivAsan told them, “I know how to make Lakshmi come here forgetting her difference of opinion. Just send the Sun god to tell her that I am not doing well. She will rush here to see me!”


The Sun was sent to Karaveera Puram and conveyed this message. “Soon after you left Vaikuntham, VishNumoorthy also left it. Now he is living in SeshAchalam and he is not doing very well.”


Lakshmi rushed to meet him. SriniAsan took the support of Barhma and Siva to walk – as if he were very sick and weak. When Lakshmi Devi arrived he asked her eagerly , “Do you remember the boon I gave you in RAma avatAr?”


Lakshmi Devi replied, “I do very well. I requested you to accept Vedavati and you said that you will do it when the right time comes!”


“The right time has come now. I am to marry her on Thrayodasi day in the month of Chitthirai. I wanted your presence here, that is why the Sun was to you. ”


Lakshmi Devi was pleased with the importance given to her. They all reached the anthill where SrinivAsan lived.



 
DEVI BHAAGAVATAM - SKANDA 6

6#14b. நிமியின் யாகம்

நிறுத்த விரும்பவில்லை மன்னன் நிமி யாகத்தை;
நடத்தினான் அதைக் கௌதம முனிவர் உதவியுடன்;


நடை பெற்றது யாகம் நல்ல முறையில் – வேதியர்
கிடைத்த அரிய பரிசுகளால் மனம் மகிழ்ந்தனர்.


வந்தார் வசிஷ்டர் ஐநூறு ஆண்டுகள் கழித்து;
வந்த சமயம் ஆழ்ந்த உறக்கத்தில் மன்னன் நிமி.


எழுப்பினர் சேவகர் மன்னன் நிமியை – ஆனால்
எழவில்லை மன்னன் நிமி அதன் பிறகும் கூட.


கோபம் வந்து விட்டது வசிஷ்ட முனிவருக்கு – கொடிய
சாபம் தந்து விட்டார் இக்ஷ்வாகு குல மன்னன் நிமிக்கு!


“யாகம் செய்து என்னை அவமதித்துவிட்டாய் – உன்
தேஹம் மறைந்து போகக் கடவது!” எனச் சபித்தார்


காவலர் சென்று தெரிவித்தனர் சாபத்தை;
கோவலன் நிமி ஓடி வந்து வணங்கினான்!


“நடத்தச் சொன்னேன் உம்மிடம் யாகத்தை;
தடுத்துப் பார்த்தேன் இந்திரனிடம் செல்வதை.


சென்றீர் இந்திரனின் யாகத்துக்கு நீரே விரும்பி;
புகன்றீர் சாபம் தவறு செய்யாத எந்தன் மேல்.


உடல் அற்று நான் திரிய வேண்டும் எனில்
உடல் அற்றுத் திரிய வேண்டும் நீரும் கூட!”


சாபத்துக்கு எதிர்ச் சாபம் தந்தான் மன்னன் நிமி;
சாபங்கள் பலித்தன; உடல்கள் மறைந்து போயின!


உடல் இன்றி உலகின் உயிர் வாழ்வது எங்கனம்?
உடனே சென்றார் வசிஷ்டர் பிரம்மனிடம்.


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


6#14b. The yagna of King Nimi


King Nimi did not want to postpone the yagna by five hundred years. He performed the yagna with the help of Goutama. Everything was going on well. The brahmins were happy with the numerous gifts they had received.


Sage Vasishta came there after five hundred years, after completing the yagna performed by Indra. He was angry that King Nimi had performed the yagna in his absence. He sent for King Nimi – who was in deep sleep at that time.


Sage got annoyed since Nimi would not wake up from his sleep. Vasihsta cursed king Nimi,”You ignored me and performed the yagna in my absence. May you lose your visible body now!”


The guards got anxious and ran back to tell the king about the curse. King Nimi got up and rushed to honour his kulaguru Vasishta.


He put forward his side of the arguement,”I requested yo to perform my yagna. I tried to stop you from going away but you would not listen.You went off on your own free will to perform Indra’s yagna and now you are cursing me. If I will have to lose my physical body so will you too do!”


King Nimi gave a counter curse to Sage Vasishta. Both their curses took effect and both the king Nimi and sage Vasishta lost their physical bodies.


But how can anyone live without a physical body? Vasishta rushed to Brahma to seek his guidnance and intervention.





 
KANDA PURAANAM - URPATTHIK KAANDAM

17a. சிவனும், முருகனும்

முருகன் படைத்தலைச் செய்தான் பலகாலம்;
திருமால் விரும்பினார் பிரம்மனைச் சிறைமீட்க.


தேவர் குழாம் திரண்டு சென்றது கயிலை;
வேத நாயகனைப் பணிந்து விண்ணப்பித்தது.


நந்தியைப் பணித்தார் நம் சிவ பெருமான்,
“நம்பியிடம் சொல்லி நான்முகனை மீட்பாய்!”


கந்தவெற்பை நோக்கிச் சென்றான் நந்திதேவன்,
கந்தனைக் காண எண்ணற்ற சிவகணங்களுடன்;


“பிரமனைச் சிறை நீக்க வேண்டும் முருகா!
பிரணவத்தின் பொருள் உரைப்பது எளிதா?”


“நான்முகனைச் சிறை விடேன் நான்!
உன்னையும் சிறை இடுவேன் ஓடி விடு!”


திருமுருகனின் சீற்றத்தைக் கண்டு அஞ்சித்
திருக்கயிலை திரும்பினான் நந்தி தேவன்.


விவரம் அறிந்த பெருமான் – பிரம்மனை
விடுவிக்கத் தாமே செல்ல விழைந்தார்.


அரியணையில் இருந்து இறங்கிப் பின்னர்
எருது ஊர்தியில் ஏறி அமர்ந்தார் பிரான்;


பிற தேவர்களும் தத்தம் ஊர்திகளில் ஏறி
பிரானுடன் சென்றனர் அந்தக் கந்தவெற்பு.


தந்தையைக் கண்டதும் வந்து வணங்கியபின்
கந்தன் அமர்த்தினான் அரியணையில் அவரை.


“எம்பெருமான் எழுந்தருள என்ன காரணம்?”
“எம் திருவுளம் பிரம்மனைச் சிறை மீட்பதே!”


“பிரணவத்தின் பொருள் அறியாதவன் அவன்!
பிரானைத் தொழுதும் ஆணவம் நீங்காதவன்!


அவனைச் சிறைவிட முடியாது!” என்றான் கந்தன்.
அவனிடம் சினந்தது போலப் பேசினார் சிவபிரான்!


“நந்தி தேவன் கூறிய போதும் கேட்கவில்லை நீ!
நான் கூறும் போதும் கேட்கப் போவதில்லை நீ! ”


“தங்கள் திருவுள்ளம் விடுதலை என்றால்
உங்கள் விருப்பம் போலச் செய்கின்றேன்!”


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
 
KANDAPURAANAM - URPATTHIK KAANDAM

1#17. SIVA AND SKANDA.

Brahma Devan was imprisoned and Murugan took care of the creation. Days rolled by. VishNu took pity on Brahma’s plight and wanted to get him released from Murugan’s prison. He went to meet Lord Siva along with all the other Devas.


Siva also took pity of Brahma Devan and ordered Nandhi Devan to meet Murugan and get Brahma Devan released from the prison. Nandi Devan went to meet Murugan with all the Siva gaNas. He requested Murugan thus,

“Skanda! You must release Brahma Devan from your prison. You know that explaining the meaning of PraNava is not an easy task after all!”

Skanda was very stubborn.”I will not release Brahma Devan. If you continue to pester me in this manner, I will imprison you also along with Brahma Devan. Now run along!”


Nandi returned to KailAsh hastily and told Lord Siva of Skanda’s threat. Lord Siva then decided to go in person to
meet Skandan and get Brahma Devan released. He got down from his throne and sat on his vehicle – the bull Nandhi.

All the other Devas accompanied Him to meet Skanda. Skanda paid obeisance to Siva, made Him sit on a throne and wanted to know the purpose of His visit.

Siva told him, “My aim is to get Brahma Devan released from your prison.”
“He does not know the meaning of PraNava. He is unfit to be in charge of the Creation. He worships you but he has not yet got rid of his ego and ignorance.”

Siva appeared to be irritated with Murugan and said,”You did not listen to Nandhi. You are not listening to me either.” Murugan gave in to his father’s wish and said, “If that is your wish, I will release Brahma Devan from my prison immediately.”
 
SRI VENKATESA PURAANAM

18a. புறப்பாடு

நாராயண புரத்துக்குச் செல்லும் துடிப்பு
நாட்காலையிலேயே துவங்கி விட்டது.


அலங்கரித்துக் கொண்டனர் அழகாக – பிறர்
அலங்கரித்துக் கொள்ள உதவிகள் செய்தனர்.


சரசர என்றன புத்தம் புதிய பட்டாடைகள்;
கலகல என்றது மகிழ்ச்சியின் வெளிப்பாடு.


புனித நீரால் ஸ்ரீநிவாசனுக்கு அபிஷேகத்தை
இனிதே தொடங்கி வைத்தாள் லக்ஷ்மி தேவி.


பட்டுப் பீதாம்பரம் அணிந்தான் ஸ்ரீநிவாசன்;
இட்டாள் லக்ஷ்மி அவன் நெற்றியில் திலகம்.


வைத்தாள் திருஷ்டிப் பொட்டை அன்னை – அணி
வித்தாள் ரத்தின ஆபரணங்களைப் பார்வதி தேவி.


அழகுக்கு அழகு கூட்டினர் தேவர்கள் ஒன்றுகூடி,
அணிவித்தனர் பல வண்ண மலர் மாலைகளை.


கொட்டிக் கிடந்தன உணவுப் பொருட்கள்;
அட்டில் பணியோ அக்னி தேவனுடையது!


பாத்திரங்கள் இல்லை சமையல் செய்வதற்கு!
தீர்த்தங்கள் மாறின சமையல் பாத்திரங்களாக!


முனிவர்கள் தேர்ந்தெடுத்தனர் சமதளத்தை;
இனிய கோலங்கள் வரைந்தனர் பெண்கள்.


சங்கல்பம் செய்தான் மணையில் அமர்ந்து;
சமீ விருக்ஷமே தன் குலதெய்வம் என்றான்.


சுவாமி புஷ்கரிணியில் ஸ்தாபித்தான் அந்தச்
சமீ விருக்ஷத்தின் ஒரு கிளையை உடைத்து.


பகலுணவைத் தயார் செய்துவிட்டான் அக்னி.
பரிமாறினான் நரசிம்மருக்கு நிவேதனம் செய்து.


பரிமளச் சந்தனம், தாம்பூலம், புஷ்பம் இதைப்
பரிவுடன் அளித்தனர் வந்திருந்த அதிதிகளுக்கு.

நாராயணபுரம் புறப்பட்டனர் உணவு உண்டபின்;
ஏராளமான வாஹனங்கள் காத்திருந்தன அங்கே.


ஆரோஹணித்தனர் ஸ்ரீனிவாசன் கருடன் மீதும் ,
பிரமன் அன்னத்தின் மீதும், சிவன் நந்தியின் மீதும் .


கரிகள், பரிகள், ரதங்களில் அமர்ந்து கொண்டு
உரிமையுடன் சென்றனர் நாராயணபுரத்துக்கு.


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி




 
SRI VENKATESA PURAANAM

#18a. Off to NArAyaNa Puram

People were eager and excited to go to NArAyaNa Puram since early in the morning. They decorated themselves and helped one another to get dressed up beautifully. The new silk clothes were colorful and rustled. The people very excited and happy.


Lakshmi Devi started to do the abhishekham to SrinivAsan. After the auspicious bath, SrinivAsan wore new silk peethAmbaram. VaguLa MAlikA applied the beauty spot to protect him from the evil eyes. Parvathy Devi adorned him with gem studded gold ornaments. The Devas made him wear several colorful and fragrant fresh flower garlands.


The cooked food stuffs were heaped up. Agni Devan was in charge of the cooking. He had no vessels and so cooked directly in the theerthams.


The sages selected a level ground. The ladies adorned it with colorful designs drawn on the floor. Srinivaasan sat on a wooden plank and did the sankalpam. He planted a small branch of the Samee vruksham in the Swami PushkariNi theertham.


The lunch was ready. It was offered to the Narasimha moorthi and then served to all the guests. Sanadal paste, flowers and thAmboolam were offered to the guests. Everybody got on to their respective vAhanams and vimAnams which were waiting for them.


SrinivAsan sat on his Grudan, Siva on his Nandhi and Brahma on his swan. The others got on to the horses, elephants and chariots. They all went to NArayaNa Puram for the SrinivAsa kalYANam.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 6

6#14c. மித்திர வருணன்

பிரம்ம தேவனை அணுகினார் வசிஷ்டர்.
“பிறப்பு எடுக்க வேண்டும் மீண்டும் நான்!


வரம் தாருங்கள் தந்தையே நான் என்றும்
மறக்கலாகாது என் சாஸ்திர ஞானத்தை!”


இரக்கப் பட்டான் பிரம்மன் வசிஷ்டரிடம்;
வரம் தந்தான் வசிஷ்டர் விரும்பிக் கேட்டபடி.


“கலந்திருப்பாய் மித்திர வருணனின் தேஜசில்;
அவதரிப்பாய் அயோநிஜனாக மறுபடியும்!


உடல் பெறுவாய் முன் போலவே மீண்டும்;
புகழ் பெறுவாய் சகல சாஸ்திர பண்டிதனாக.”


கலந்தார் வசிஷ்டர் மித்திர வருணனின் தேஜசில்;
வந்தாள் ஊர்வசி தோழியருடன் ஆசிரமத்துக்கு.


அணுகினான் மித்திர வருணன் காமத்துடன்,
இணங்கினாள் ஊர்வசி முனிவரின் காமத்துக்கு.


வெளிப்பட்ட தேஜஸ் விழுந்தது ஒரு கும்பத்தில்;
வெளிவந்தனர் அகத்தியர், வசிஷ்டர் அதிலிருந்து.


வனம் சென்று விட்டார் குறுமுனி அகத்தியர்;
ஞானம் மறையவில்லை வசிஷ்டரிடமிருந்து.


குலகுருவாக்கிக் கொண்டான் இக்ஷ்வாகு மன்னன்;
நிலவுலகில் பரவியது மித்திரா வருணி என்ற பெயர்.


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K . ராமன்


6#14c. Mithra Varunan


The body-less Vasishta approached Brahma and made a request,” I should be born again in the world. Please grant me the boon that I will remember all the sAstras I have learned and not forget any of them.”


Brahma was moved with pity on seeing the plight of his son Vasishta. He blessed his son and said,”You be in the tejas of Mitra Varunan. You will take birth as an a-yoni-jan and without being conceived in a woman’s womb.


You will regain your physical body. You will remember all that you have learned and mastered. You will become very famous as a pundit and you will be well versed in all sAstra.”


Vasishta mixed with the tejas of Mithra Varunan and waited. One day Oorvasi visited the ashram with her celestial friends. Mithra Varunan approached her with surging lust. She too welcomed the advances made by Mithra Varunan.


His tejas emerged and fell inside a kumbham placed nearby. Two sons Agasthya and Vasishta were born out of the kumbham – without a garbba vAsam and passing through the birth canal of a woman.


Agasthya went to a forest to do penance. Vasishta was made the kula guru by king IkshvAku. His name came to be known as MithrA VaruNi.


 
KANDA PURAANAM - URPATTHIK KAANDAM

17b. பிரணவம்

பூதங்கள் சென்று விடுவித்தன பிரம்மனை;
பூதங்கள் கொணர்ந்து நிறுத்தின பிரம்மனை;


“நான் முகனே! மிகவும் வருந்தினீரா நீர்
என் மகன் சிறையில் இட்டதால் வாடி?”


“ஆணவம் ஒழிந்தேன் சிறைப்பட்டதால்.
தீவினை தொலைந்து தூயவன் ஆனேன்.”


“வழக்கம் போல் படைத்தல் செய்வாய்!”
வணங்கிய பிரம்மனை வாழ்த்தி அனுப்பினான்.


மகனை வாரி மடியில் அமர்த்திக்கொண்டு,
“மகனே! நீ அறிவாயா பிரணவத்தை?


நான்முகன் அறியாத அம் மறைபொருளை
நான் அறியும் வண்ணம் எடுத்துக் கூறு!”


“மறைபொருளை மறைவாகக் கூற வேண்டும்.
பிறர் அறியும் வண்ணம் நான் பகரலாகுமா?


குருவாக என்னை அமர்த்திச் சீடனானால்
உரைப்பேன் நான் பிரணவத்தின் பொருளை!”


முருகன் குருவானான்! பிரான் சீடனானான்!
பொருளை உரைத்தான் பிரான் திருச்செவியில்.


கயிலை திரும்பினார் கண்ணுதற் பெருமான்.
கந்தவெற்பில் கந்தனும் அவன் சொந்தப் படையும்.


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


1#17b. SIVA AND PRANAVA.


Some of the Siva GaNas released Brahma Devan and brought him to Lord Siva.

“Did you suffer much in my son’s prison Oh Brahma?” Siva asked the Brahma.


“No sire! The imprisonment helped me to overcome my pride and ego. I have become a purer and better person now! Thanks to Skandan.”


Lord Siva blessed Brahma Devan,”You may now resume your duty as the Creator”. He then placed Murugan on his lap and asked him, ” Son! You imprisoned Brahma Devan since he did not know the meaning of PraNava. Do you know the meaning of Pranava?”


“Sire! Surely I know the meaning of PraNava. But it should not be revealed in public. If you will make me your guru and you become my disciple, I will reveal to you its scared meaning secretly.”

Lord Siva now bent down and assumed the posture of a humble disciple while Murugan sat down as His guru. He explained PraNava to Lord Siva’s delight. Siva was very pleased and went back to KailAsh. Murugan and his loyal army stayed back in Kanda Verpu.

 
SRI VENKATESA PURAANAM

18b. சுகரின் உபசரிப்பு

சுகமாக அடைந்தனர் பத்ம தீர்த்தத்தை;
சுக முனிவரின் ஆசிரமம் இருந்தது அங்கு.


பூரண கும்பத்துடன் காத்திருந்தார் முனிவர்,
பூரண மகிழ்ச்சியுடன் ஒரு சிறு இடைவேளை.


பாத பூஜை செய்தார்; வலம் வந்தார் சுகர்
பரம பக்தியுடன் மணமகன் ஸ்ரீனிவாசனை.


“மணக் கோலத்தில் உம்மைக் காண்பதற்கு
மாதவம் செய்திருப்பேன் முற் பிறவியில்.


இளைப்பாறி விட்டுச் செல்ல வேண்டும்;
களைப்பு மாறும் வரை இங்கு தங்கி விட்டு.


உபசரித்துப் பெற வேண்டும் ஆனந்தம்!
உபசார வார்த்தையல்ல உண்மையே!”


“இத்தனை பேர்களை உபசரிப்பதா எனச்
சிந்தனை செய்கின்றேன் நான் முனிவரே!”


“ஈரேழு உலகங்களும் ஒன்றாகி ஒளிந்து
இருப்பது உமக்குள் அல்லவா நாராயணா?


ஒரு கவளம் தாங்கள் உண்ட மாத்திரத்தில்
ஒரு புவனம் முழுவதும் திருப்தி அடையுமே!”


பர்ணசாலைக்குச் சென்றான் முனிவருடன்,
பாலும், பழமும் உண்டான் ஸ்ரீனிவாசன்.


திருப்தி அடைந்தார் சுகர் அவன் உண்பது கண்டு.
திருப்தி அடைந்தனர் அதிதிகள் உண்டது போல .


பிரயாணம் தொடங்கியது கலகலப்பாக,
நாராயணபுரத்தை நோக்கி மறுபடியும்.


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


#18 b. The hearty welcome by Sage Sukar


The wedding party reached The Padma Theertham where sage Sukar’s Aashram was situated. He was waiting for the arrival of the wedding party with a PoorNa kumbham. The wedding party stopped there for a short break.


The sage did pAda pooja for SrinivAsan and circumambulated him. He spoke to SrinivAsan with intense bhakti and happiness, “I must have done a lot of puNya in my previous birth to be able to see you as a groom set out to get married. Please relax here for some time and then you may proceed to NArAnyaNa Puram. I want to play the host to you and enjoy that happiness also.”


SrinivAsan hesitated thinking of the number of persons accompanying him to attend his wedding. But the sage told him, “You have all the fourteen world concealed in your body. If you eat, then all the fourteen world will feel satisfied!”


So SrinivAsan went with the sage inside his Aashram. He ate some fruits and drank some milk. The Sage was overwhelmed with happiness and the guests were feeling full – as if they themselves had eaten those fruits and drunk that milk.


The wedding party set out to NArAyaNa Puram with a great excitement and joy.




 
DEVI BHAAGAVATAM - SKANDA 6

6#15a. மன்னன் நிமி

அடைந்தார் வசிஷ்ட முனிவர் வேறு ஒரு உடல்;
அடையவில்லை மன்னன் நிமி வேறு ஒரு உடல்.


சாபம் தகித்தது உடலை வெப்பத்தால் – அவனைக்
காபந்து பண்ண வேண்டும் யாகம் முடியும் வரை.


காப்பாற்றினர் ரிஷிகள் மந்திரங்கள் ஓதி;
காப்பாற்றினர் ரிஷிகள் மலர்களைத் தூவி.


யாகம் முடிந்தது; தோன்றினர் தேவர்கள்.
“யாகப் பயனாக பெறலாம் புது உடலை!


தேவ உடல் வேண்டுமா? மனித உடலா?” என,
“தேவையில்லை எனக்கு நிலையற்ற ஓர் உடல்.


வசிக்க விரும்புகின்றேன் நான் காற்று உருவமாக
வசிக்கும் ஜீவராசிகளின் கண்களில்” என்றான்.


“அருள்வாள் தேவி இவ்வரத்தை உனக்கு;
ஆராதிப்பாய் தேவியின் அருளை வேண்டி!”


தேவியைத் துதித்தான் மன்னன் நிமி அதன் பின்பு.
தோன்றினாள் தேவி ஒளி மயமாக அவன் முன்பு.


“வசிப்பாய் நீ சகல ஜீவராசிகளின் கண்களில்;
வசிக்கும் ஜீவன்கள் கண்ணிமைகளைக் கொட்டி.”


சந்ததிகள் இல்லை மன்னன் நிமிக்கு – ஒரு
சந்ததி வேண்டும் அவன் நாட்டை ஆள்வதற்கு.


உற்பத்தி செய்ய வேண்டும் ஒரு புத்திரனை;
உச்சரித்தனர் புத்திர உற்பத்தியின் மந்திரத்தை.


கடைந்தனர் அரணிக் கட்டையை முனிவர்கள்
சடங்குகளை நிமிக்குச் செய்து முடித்த பிறகு.


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


6#15a. King Nimi


Vasishta got a new body with the help of his father Brahma, but King Nimi did not get a nee body! Vasishta’s curse was scorching his body into nothingness, but he must be kept alive until the yagna was completed.
The rushis chanted life saving mantras and showered cool flowers on king Nimi to fight the scorching heat. The Yagna was completed against all these odds.

The Devas were pleased and appeared in front of Nimi. They told Nimi, ”You may get a fresh new body as the fruit of the yagna you have performed. Do you want the body of a Deva or a man?”


King Nimi said, “I do not wish for a body which is temporary and transient. I want to live in the eyes of all living creatures and be as light as air.”

The Devas told Nimi,”Devi can bestow this boon on you. Seek her blessings!” Nimi prayed to Devi and she appeared in front of Nimi shining brightly.

She blessed Nimi and said, ”You will live for ever in the eyes of all the living creatures and they will start blinking their eyes from now on.” Nimi thus became immortal since he lives in the eyes of every living creature ever since then.


Nimi did not have any offspring to rule his country after him. The sages wanted to create a son by employing the mantras for getting a son. After cremating king Nimi they churned the block of wood used to produce the sparks of fire, while chanting the appropriate mantras.





 
kanda puraanam - urpatthik kaandam

18a. இரு சகோதரிகள்

கந்த வெற்பில் இருந்தான் கந்தன் படையுடன்;
சுந்தர புருஷனை மணக்க விரும்பினர் இருவர்.


அமிர்தவல்லி சுந்தரவல்லி என்னும் அழகியர்,
அறி துயில் மாலின் அருமைப் புதல்விகள்;


“சரவணபவனே எங்கள் கணவனாக வேண்டும்!”
சரவணப் பொய்கையில் செய்தனர் அருந்தவம்;


மங்கையர் செய்த அத்தவத்தை மெச்சி
கங்கையின் மைந்தன் கண் முன் தோன்ற;


“அடியோங்கள் வரித்தோம் தங்களையே!
கடிமணம் புரிந்து எமக்கு வாழ்வளிப்பீர்!”


அமிர்தவல்லியிடம் கூறினான் கந்தன்,
“அமிர்தம் அருந்தும் இந்திரன் மகளாவாய்!


காலம் கனிந்ததும் நாடி வந்து உன்னையே
ஞாலம் போற்றக் கடிமணம் புரிவேன் நான்!”


கந்தன் கூறினான் சுந்தரவல்லியிடம்,
மாந்தருள் மாணிக்கம் சிவமுனி மகளாகி,


வேடர்குல மன்னனிடம் வளர்வாய் நீ!
வேண்டியபடி வந்து வதுவை புரிவேன்”


அமிர்தவல்லி அழகியதொரு சிறுமியாகி
அமரர் கோனிடம் சென்றாள் மேருவுக்கு.


“உன்னுடன் தோன்றிய உபேந்திரனின் மகள்
என்னை நீ வளர்த்து வரவேண்டும்!”என்றாள்


அன்புடன் ஏற்றான் இந்திரன் சிறுமியை,
ஐராவதத்திடம் வளர்க்கச் சொன்னன்.


தெய்வங்களின் யானை வளர்த்ததால்
தெய்வயானை என்னும் பெயர் பெற்றாள்.


சுந்தரவல்லியும் கந்தன் ஆணைப்படியே
அந்தக் கணம் சென்றாள் தொண்டை நாடு.


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


1#18a. THE TALE OF TWO SISTERS.


Skandan was living on the Kanda Verpu with his personal loyal army. Two sisters wished to marry him. They were Amirthavalli and Sundaravalli – the daughters of VishNu.


They did severe penance in SaravaNap poigai. Skanda was pleased with their penance and appeared in front of them. The two sisters expressed the purpose of their penance. “Sire! We both wish you marry you. Please grant us our wish and marry us!”


Skanda told Amirthavalli,”Go to Indra and grow up as his dear daughter. I will marry you when the time is right.” He told Sundaravalli,” You become the daughter of Sivamuni and grow up among the hunters. I will marry you when the right time approaches.”


Amirthavalli became a beautiful young girl and went to Indra. She told him, ” I am the daughter of your brother Upendran. You must take care of me.”

Indra accepted the girl and appointed AirAvatm to take care of her. She grew up with the name DeivayAnai. Sundaravalli went to ThoNdai NAdu.


 
sri venkatesa puraanam

19a. மணவிழா

எல்லையில்லா ஆனந்தம் அடைந்தனர் – நகர
எல்லையை மணமகன் குழுவினர் அடைந்ததும்.

எல்லையில்லா ஆனந்தம் அடைந்தனர் – அதைச்
சொல்லக் கேட்ட ஆகாச ராஜனும், தரணி தேவியும்.

‘எதிர் கொண்டழைக்க வேண்டும் நாமே சென்று
இதர பிரதானிகள் அமைச்சர்களுடன் இன்று!”

பட்டத்து யானை நின்றது தயாராக – ரத்தினப்
பட்டத்தை அணிந்திருந்தது பெரிய நெற்றியில்.

தந்த நுனிகளில் துலங்கின தங்கக் குமிழிகள்.
தந்தனர் யானையிடம் ரோஜாமலர் மாலையை.

ஆகாசராஜன், தரணி தேவி அமர்ந்தனர் – யானை
அம்பாரியில் மணப் பெண் பத்மாவதியுடன்.

இசைக் குழுவினர் நடந்தனர் யானை முன்னால்;
இளம் பெண்கள் தொடர்ந்தனர் யானை பின்னால்.

மலர்கள், சந்தனம், பன்னீர் இவை சொரிந்து
மலர்ந்த முகத்தோடு மணமகனை வரவேற்க;

ஒலித்தது மணமகன் குழுவின் ஆரவாரம்!
தலை நிமிரவில்லை மணமகள் நாணத்தால்!

பூரண கும்பத்துடன் வரவேற்றான் மன்னன்
நாரணன் கோஷ்டியைத் திருமணத்துக்கு.

ஒலித்தது வெற்றி கோஷம் “ஜெயா விஜயீ பவ!”
தெளித்தனர் நறுமண மலர்களை நாட்டு மக்கள்.

வலம் வந்தது பகவானைப் பட்டத்து யானை;
தலையால் வணங்கித் தந்தது ரோஜா மாலை.

வெகு நாணத்துடன் முன் வந்தாள் பத்மாவதி;
வகுள மாலிகையும் முன் வந்தாள் குழுவிலிருந்து.

“பத்மாவதியை ஏற்றுக் கொள்ளுங்கள்!” என்றதும்
“உத்தமியை நீ ஏற்பாய்!” என்றாள் வகுளமாலிகை.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

#19a. The wedding


When the group reached the city limits they rejoiced. The King and the Queen also rejoiced at their safe arrival. They decided to welcome the wedding party in person. They rode on the royal elephant which was decorated in a befitting manner with jewels and rich silk.

PadmAvati also sat with her parents on the elephant. The musicians walked in front of the elephant and the young girls carrying the auspicious articles walked behind them.

The groom and his party were welcomed with flowers, sandal paste and rose water. There was a huge cry announcing the victory “Jaya Vijayee Bhava!” PadmAvati was overcome with shyness. The king welcomed the group with poorna kumbham. The royal elephant went round SrinivAsan and adorned Him with the rose flower garland.

PadmAvati stepped forwards and so also VaguLa MAlikA. The king and queen told her, “Please accept our daughter as your daughter in law!.” VaguLa MAlikA told Srinivaasan, “Please accept this virtuous princess as your wife!”


 
DEVI BHAAGAVATAM - SKANDA 6

6#15b. விதேஹர்கள்

பிள்ளை தோன்றினான் அரணிக் கட்டையிலிருந்து;
பிரகாசமாக இருந்தான் மன்னன் நிமியைப் போல.


மிதி என்று பெயர் சூட்டினர் முனிவர்கள் – மகன்
மிதியை ஆக்கினர் மன்னன் நிமியின் வாரிசாக.


தேஹம் அழிந்துவிட்டது மன்னன் நிமிக்கு – வி
தேஹர் என்ற பெயர் பெற்றது நிமியின் வம்சம்.


மிதிலாபுரி என்ற அழகிய நகரத்தை மன்னன்
மிதி அமைத்தான் கங்கை நதியின் கரையில்.


வம்சம் பெயர் பெற்றது விதேஹர்கள் என்று;
வம்சத்து அரசர்கள் ஆயினர் ஞானவான்கள்!”


முனிவரிடம் கேட்டான் மன்னன் ஜனமேஜயன்,
“முனிவரின் சாபத்துக்கு எதிர் சாபம் இடலாமா?


பெருங்கோபம் கொள்ளலாமா யாகம் செய்கையில்?
குருவையே சபிக்கலாகுமா மன்னனகிய ஒருவன்?


யயாதியைச் சபித்தான் குரு சுக்கிரன் எனினும்
யயாதி சபிக்கவில்லை குரு சுக்கிரனைச் சினந்து.


கிழத் தன்மையை ஏற்றுக் கொண்டான் யயாதி;
அழகு உள்ளது பொறுமை, சகிப்புத் தன்மையில்”.


“நல்லவன், கெட்டவன் என்பது மட்டும் இன்றி
நல்லவனே ஒரு கெட்டவனாக ஆவதும் உண்டு.


கோப குணம் கொண்டவர் ஹைஹய அரசர்கள்;
லோப குணம் கொண்டு அழித்தனர் அந்தணரை.


பிருகு குலத்தில் பிறந்த அந்தணர் அனைவரையும்
பிரம்மஹத்திக்கும் அஞ்சாமல் அழித்து ஒழித்தனர்.”


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K . ராமன்


6#15b. Videhar.


A son was born from the block of wood. He was as bright and brilliant as King Nimi himself. The sages named him as Mithi and made him King Nimi’s lawful successor.
Since Nimi lost his physical body his vamsam got a new name as Videhar. All the kings in that vamsam had great wisdom. Mithi established a lovely city called Mithilaapuri on the banks of river Ganga.

King Janamejayan asked sage VyAsa,”Is it proper to cast a counter curse? Is it agreeable to curse one’s own kula guru? Is it appropriate to become furious while conducting a yagna?


Guru Sukran cursed king YayAti but YayAti did not curse back Sukran! There is beauty and grace in patience and tolerance.”
VyAsa said, “We have good people and the bad people. In addition there is also one more category of people who were good before they became bad.

Haihayas were known for their short temper. They became greedy and killed all the brahmins born in the vamsam of Sage Brugu – without even fearing the terrible brahma haththi dosham.



 
KANDA PURAANAM - URPATTHIK KAANDAM

18b. முறையீடு, புறப்பாடு

கந்தன் மீண்டான் கயிலையங்கிரி
தந்தை, தாயுடன் அரியணை அமர.


இந்திரன், நான்முகன், திருமாலுடன்
சென்றனர் கயிலை எஞ்சிய தேவர்கள்;


நந்தி பெற்றான் அண்ணலின் அனுமதி,
இந்திரன் முதலோர் அண்ணலைக் காண.


“அவுணர்களால் துன்புறுகிறோம் யாம்,
சிவனார் அறியாததல்ல இவ்வுண்மை;


ஜயந்தனும், தேவரும், அரம்பையரும்,
கயவன் சூரபத்மன் சிறையினுள்ளே.


எப்போது தீரும் எங்கள் துயரம்?
எப்போது இரங்கும் தங்கள் இதயம்?”


பெருமான் கூறினான் மகன் முருகனிடம்,
“பெருவலிவுடன் உலகை வாட்டிடும்


சூரபத்மனை நீ அழித்திட வேண்டும் முருகா!
வீரர்கள் படையினை நீ நடத்திட வேண்டும்.”


பதினொரு ருத்திரர்களையும் வரவழைத்து
படைக்கலங்கலாக மாற்றினார் அவர்களை!


தோமரம், கொடி, வாள், குலிசம், கணை,
தாமரை, தடி, வில், மழு, அங்குசம், மணி!


வேற்படை ஒன்றை உருவாக்கினார் பிரான்,
வேலவன் என்னும்படி கந்தனுக்குத் தந்தார்.


ஐம்பெரும் பூதங்களையும் அழிக்க வல்லது.
ஐயமின்றி படைக்கலங்களுள் மிக வலியது.


நூறாயிரம் வீரர்களுக்கும் படைக்கலங்கள்,
ஈராயிரம் வெள்ளம் பூதங்களும் தந்தார்.


ஆறுமுகன் செல்வதற்கு அற்புதத் தேர் ஒன்று
நூறாயிரம் குதிரைகள் பூட்டி மனோவேகத்தில்.


போருக்குப் புறப்பட்டார் குமரக் கடவுள்,
போரில் வெல்ல வாழ்த்தினர் பெற்றோர்;


பெருவீரர்கள் அனைவரும் பெற்றனர் ஆசிகள்,
திருமுருகனுடன் சென்றனர் அமர்க்களம்.


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


1#18b. THE PLEA AND THE PREPARATION.


Skanda went to KailAsh and was sitting with Uma and Siva. All the Devas gathered under the leadership of Brahma and VishNu. They went to KailAsh. Nandi got Siva’s permission and took them all in.


Indra begged for mercy, “My son Jayanthan, Devas and apsaras are all imprisoned by Soorapadman. You promised to rid us of these problems. When will happen? How long should we continue to suffer?”


Siva told Skandan, “Soorapadman has become invincible. You must put an end to him soon with the help of your army”. Siva made the eleven Rudras appear in front of him and converted them to eleven aayudhams for Skanda.


Siva created a spear. It was superior to every other weapon. It could destroy even the pancha boothas.


 
SRI VENKATESA PURAANAM

19b. மாலை மாற்று


கருடனிலிருந்து இறங்கினான் ஸ்ரீனிவாசன்
கறுத்த மேனியில் ரத்தின மாலைகள் புரள.

அணிவித்தாள் மலர்மாலையைப் பத்மாவதி.
அணிவித்தான் மலர்மாலையை ஸ்ரீனிவாசன்.

பத்மாவதியின் கரம் பற்றி ரதம் ஏறியதும்
கூத்தாடினார் ஆனந்தத்தில் அனைவரும்.

வைகுந்தமாக மாறி இருந்தது நாராயணபுரம்.
வெகு நேர்த்தியான வளைவுகள், பந்தல்கள் !

வண்ணக் கோலங்களுடன், பூரண கும்பங்கள்;
பெண்கள் எடுத்தனர் ஆரத்தி வழி நெடுகிலும்!

நின்றான் மலர்த் தட்டுடன் ஆகாச ராஜன்;
நின்றாள் தீர்த்தக் குடத்துடன் தரணி தேவி.

வசுதானா என்னும் பட்டத்து இளவரசன்
வாசனை வீசும் சந்தனத்துடன் நின்றான்.

ஆகாச ராஜன் செய்தான் பாத பூஜை – பின்
அழைத்துச் சென்றான் தன் அரண்மனைக்கு.

கூடாரம் அமைத்திருந்தனர் தங்குவதற்கு,
கூட வந்தவர்களுக்குத் தனித் தனியாக!

நகரம் ஜொலித்தது ஜகஜ் ஜோதியாக!
பகலா? இரவா? பேதம் தெரியவில்லை.

ஆகாரம் வந்தது தங்கியிருந்த இடத்துக்கு;
ஆகாச ராஜன் உயர்வாக உபசரித்தான்.

மற்றவர் உண்டனர் அரண்மனை முற்றத்தில்;
குற்றம் சொல்ல முடியாத இனிய உபசரிப்பு!

இரவில் நடந்தது அப்சரசுகளின் நாட்டியம்;
இதுவரை கண்டதில்லை மனிதர் எவருமே!

உறங்கவில்லை எவருமே அன்று இரவு;
உற்சாகமாகக் காத்திருந்தனர் விடியலுக்கு.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

#19b. Exchanging garlands


SrinivAsan got down from his Garudan. The gem studded ornaments shone brightly on his dark colored skin. PadmAvati garlanded him and He too garlanded her. When he took hold of her hand and got onto the chariot , there was a huge joyous shout.

The city was transformed to resemble Vaikuntham with many beautiful structures and pandals. The streets were decorated with colorful floral designs and poorna kumbhams were offered everywhere. Young women did hArathi all along the way.

AakAsa RAjan stood in readiness with a tray full of flowers and Dharani Devi stood with a vessel of water. Prince VasudAna – PadmAvati’s younger brother stood with a bowl of sandal paste.

The king did pAda pooja of SrinivAsan and took Him to his palace. Tents were erected for the comfortable stay of all the guests. The city shone so brilliantly that no one was sure whether it was day or night!

Food for the groom and mother was brought to their tents. The other guests ate in the feast in the palace courtyard. No one could in point out any defect in the hospitality. In the night the apsaras danced. No human being had ever witnessed it earlier. No one slept that night. They were eagerly waiting for the dawn of the day to attend the SrinivAsa KalyANam with PadmAvati.



 
DEVI BHAAGAVATAM - SKANDA 6

6#16a. வினையும், விளைவும் (1)

“பிருகு வம்சத்தில் பிறந்த அந்தணர்களைப்
பிரம்மஹத்தி செய்தவர் எந்த வம்சத்தினர்?


பகை அவர்களிடையே மூண்டது எங்கனம்?
பாவத்துக்குப் பலசாலி பயப்படாதது ஏன்?


கொலை பெரியதா? குற்றம் பெரியதா? என்று
தெளிவாக விளக்குங்கள் வியாச முனிவரே!”


“கரங்கள் ஆயிரம் கொண்ட ஒரு மாவீரன்
கார்த்த வீர்யன் என்னும் ஹைஹைய அரசன்.


பெற்றிருந்தான் தத்தாத்திரேயரைத் தன் குருவாக;
பெற்றிருந்தான் பிருகு வம்சத்தினரைப் புரோகிதராக.


பெற்றனர் புரோகிதர் பொன், பொருள் தானமாக;
பெற்றனர் அணி, மணி, ரதங்களைத் தானமாக.


முடிந்து விட்டது கார்த்தவீர்யன் காலம்- அத்துடன்
முடிந்துவிட்டது அரச போக வாழ்வும் அவனுடன்.


கடுமையான வறுமையில் உழன்றனர் சந்ததிகள்;
“கொடுத்தார் தந்தை வேதியருக்கு அள்ளி அள்ளி!”


சென்றனர் சந்ததியர் செல்வ அந்தணர்களை நாடி;
வேண்டிக் கொண்டனர் செல்வம் கடன் தரும்படி.


“தானம் ஏற்பவர்கள் நாங்கள் – பிறருக்குத்
தானம் தருபவர்கள் அல்ல!” என்றனர் வேதியர்.

பின்னர் பொன்னைப் புதைத்து வைத்துவிட்டுச்
சென்றனர் கானகம் கடும் தவம் புரிவதற்கு.


அறிந்து கொண்டனர் அரசர்கள் இது பற்றி;
அபகரித்தனர் புதைத்திருந்த செல்வத்தை.


சிறப்புடன் வாழ்ந்தது அரச குலம் மீண்டும்
பறிகொடுத்த அந்தணர் பதறினர் மீண்டும்.


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


6#16a. The cause and the effect


“Which race of kings killed the brahmins born in the Brugu vamsam? How did the enmity begin between them? Why is it that always might is right? Which is a greater sin – a murder or a mistake?’ King Janamejayan asked sage VyAsa to clear his doubts.


“There was a race of kings known as Haihayas. KArta VeeryArjun was a famous king of that race. He had one thousand strong arms. DhattAtreya was his guru and Brugu vamsa brahmins were his priests.

KArta VeeryArjuna was vary lavish in showering rich gifts and as well as gold on his priests. So when the time of KArta VeeryArjun was over, his successors had very little wealth in their savings.

They went to the rich brahmins who had been bestowed by their father with rich gifts and gold. They requested the brahmins to lend them some wealth to go on with their kingly duties.


But the selfish brahmins said, “Our duty is only to receive gifts but not give them to anyone else.” The Successors of the king returned without succeeding in their mission.


Later the rich brahmins buried their gold and wealth safely and went to the forest to do penance. The king’s successors made use of this opportunity to dig up all the buried treasure and took them away.


The king’s successors could now afford a kingly life – thanks to the treasures stolen from the selfish brahmins. When they returned after doing the penance the brahmins went crazy to find that all their treasures had been looted by the present king and his clan.



 
KANDA PURAANAM - URPATTHIK KAANDAM

19. படை எழுதல்.

திருமால் கூறினர் வாயுதேவனிடம்,
“முருகன் தேரை நீ செலுத்துவாய்!”


வாயுதேவன் தேரைச் செலுத்தலானான்.
பாயும் தேரில் அமர்ந்தான் திருமுருகன்;


தேவர் மகிழ்ந்தனர் “முருகன் அருளால்
யாவரின் துயரமும் விரைவில் தீரும்.”


மொய்த்தனர் முருகனைப் படைவீரர்;
மொய்த்தனர் வீரரை முனிவர், தேவர்;


கயிலையில் இருந்தன பலப்பல பூதங்கள்.
கயிலை நாதன் அருளினான் சில பூதங்கள்.


ஈராயிரம் வெள்ளம் பூதங்கள் அங்கு வந்தன
நூற்றெட்டு படைத் தலைவர் தலைமையில்.


போர் முரசங்கள் கடலென முழங்கிடப்
போர்ப்படைகள் கடலென நகர்ந்தன.


ஆறுமுகனும், அரிய படைவீரர்களும்,
சேர்ந்தனர் நிலவுலகின் மேற்பரப்பை.


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


1#19. THE ARMY MOVES ON!


Vishnu told VAyu Devan,” You become Murugan’s charioteer” VAyu Devan agreed and the chariot traveled faster than human thoughts. The Devas felt happy that their troubles would be over soon. Murugan was hailed by his warriors. The warriors were hailed b the rushis and Devas.


Two thousand units of Siva GaNas reached there under the leadership of one hundred and eight commanders. War drums roared louder than the oceans. The army traveled like the waves of an ocean. The entire army soon reached the surface of the earth.
 
SRI VENKATESA PURAANAM

20a. திருமணம்

நீராடிப் புத்தாடை அணிந்தனர் விடியற்காலை;
நடக்க விருந்த திருமணத்தால் மிக உற்சாகம்.


கண்ணைப் பறிக்கும் ஜரிகைப் பீதாம்பரத்தைப்
பெண்ணைப் பெற்ற மன்னன் அனுப்பினான்.


ஆபரணங்களை அணிவித்தனர் லக்ஷ்மி, உமை!
ஆணழகன் ஸ்ரீனிவாசன் ஆனார் மணமகனாக!


வாசனைத் திரவிய நீரில் குளிக்க வைத்தபின்
வாரி ஜடை போட்டனர் பத்மாவதி தேவிக்கு.


வைத்திருந்த புஷ்பங்களின் பாரத்தினால்
வைத்திருந்தாள் தன் தலையைத் தாழ்த்தி!


தான் தன் மணநாளன்று அணிந்தவற்றை
தன் மகளுக்கு அணிவித்தாள் தரணி தேவி.


நெருங்கி விட்டது சுப முஹூர்த்த வேளை;
நெருங்கினர் மணமண்டபத்தை அனைவரும்.


இந்திரன் வெண்கொற்றக் குடை தாங்க,
அந்த நிழலில் நடந்தான் ஸ்ரீனிவாசன்.


அளித்தான் தொண்டைமான் மலர்மாலை;
அணிவித்தாள் ஸ்ரீநிவாசனுக்குப் பத்மாவதி.


ஊஞ்சல் பாடினர் வாணியும், லக்ஷ்மியும்;
ஊஞ்சல் ஆடினர் ஒய்யாரமாக மணமக்கள்.


திருஷ்டி கழித்தபின் சென்றனர் மண்டபம்,
திருஷ்டி படும் மணமக்களைக் கண்டால்!


வைதீகக் காரியங்கள் செய்தார் வசிஷ்டர்;
வேத கோஷம் முழங்க மாங்கல்ய தாரணம்!


அன்னையர் இருவரும் தழுவி மகிழ்ந்தனர்;
ஆனந்த வெள்ளத்தில் மன்னன் ஆகாச ராஜன்!


வரிசைகள் வந்து சேர்ந்தன கூடாரத்துக்கு;
பரிசுகள் வழங்கினர் வந்த விருந்தினர்களுக்கு.


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


#20a. The wedding


In the early morning next day everyone had a refreshing bath and wore new clothes. The king has sent a yellow silk with heavy brocade work for the groom. SrinivAsan wore it after his ceremonial bath. Lakshmi and Parvati adorned him with ornaments.


PadmAvati was made to bathe in the scented water and decorated as the bride. DharaNi Devi made her wear every single ornament she had worn on her own wedding day.


The auspicious muhoortham was nearing. Everyone walked towards the wedding mandapam. Indra held the white silk umbrella and SrinivAsan walked under its shade.


ThoNdaimAn gave a garland to PadmAvati and she garlanded SrinivAsan. Siva gave a garland which SrinivAsan and He put it around PadmAvati’s neck.

Lakshmi and Saraswati sang the oonjal songs ( the traditional songs sung while the couple sit on the decorated swing). PadmAvati and SrinivAsan were gently swaying on the swing. Elderly ladies did the druhshti parihAram (to remove the effects of evil eyes) and they all went to the mandapam.

Sage Vasishta conducted the wedding ceremony and at the appointed hour SrinivAsan tied the mAngalyam to PadmAvati. Both the mothers embraced each other and the King was overwhelmed with joy. The wedding gifts were brought to their tents . All the guests were presented with many rich gifts.



 
DEVI BHAAGAVATAM - SKANDA 6

6#16b. வினையும், விளைவும் (2)

மறக்கவில்லை அரசர்கள் பழங்கதையினை;
துரத்தினர் அந்தணர்களை நையப் புடைத்து!


‘அழிக்க வேண்டும் அந்தணரைப் பூண்டோடு!’
அழித்தனர் பெண்களை, வயோதிகர்களைக் கூட.


முனிவர்கள் கேட்டனர் அந்த அரசர்களிடம்,
“இனியும் எதற்குக் கொடிய கொலைகள்?”


“செல்வந்தர் ஆனார்கள் இந்த அந்தணர்கள்
செல்வத்தை முன்னோர்களிடமிருந்து பறித்து!


வட்டிக்குக் கடனாகவும் தர மறுத்து விட்டனர்;
வெட்டியாக வைத்திருந்தனர் தம் செல்வத்தை.


தானும் அனுபவிக்காமல், தானமும் செய்யாமல்,
தேங்கும் பொருளுக்கு உண்டு இந்தப் பறிமுதல்.


திரட்டிய சொத்துக்கு தப்பாது ஒருநாளும்
திருட்டு பயம், அக்னி பயம், ராஜ பயம்.


கேட்கவில்லை தானமாக, கேட்கவில்லை தருமமாக!
கேட்டோம் வட்டிக்குக் கடனாக; மறுத்துவிட்டனர்!


பாவம் இல்லை இந்தப் பாவிகளைக் கொல்வது!” என
ஆர்வத்துடன் தேடிச் சென்றனர் மேலும் அந்தணர்களை.


அஞ்சிய அந்தணரும், மிஞ்சிய பெண்களும்,
தஞ்சம் புகுந்தனர் இமயமலையின் சாரலில்!


லோபமே மனிதனின் முதன் முதல் பகைவன்;
லோபமே மூல காரணம் ஆகும் பாவங்களுக்கு.


பாவங்கள் ஆகும் காமமும், குரோதமும்;
லோபம் ஆகும் அவற்றிலும் கொடியது.


லோபத்தினாலேயே கொன்றனர் ஹைஹயர்;
லோபத்தினாலேயே அழிந்தனர் அந்தணர்”.


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


6#16b. The cause and the effect (2)


The kings had not forgotten the way the brahmins had treated them earlier. They drove away the brahmins after thrashing them thoroughly. They wanted to destroy the race of brahmins completely.


They killed every brahmin they set their eyes on – including women and the old people. The sages asked the kings, “Why do you murder all the innocent brahmins ruthlessly?”


The kings replied, “These brahmins became rich with the lavish gifts given by our ancestors. But when we approached them for a loan with interest payable, they refused flatly.


They were just hoarding the wealth without enjoying it or sharing it with the others. Such wealth which become stagnant can be rightfully confiscated by the rulers. The hoarded wealth has three constant threats, from the thieves, the fire and the rulers.

We did not ask for free gifts or as free donations. We were ready to pay the interest and yet they just refused adamantly. There is nothing wrong in killing such heartless miserly sinners.”

They went in search or more brahmins to kill. The few brahmins and ladies who had escaped the massacre sought refuge in the slopes of HimAlayas.

Greed is the primary cause of all man’s sufferings. Greed is the first enemy of every man. Anger and Desire are bad but Greed is worse than both of them.
Haihaya kings killed the brahmins because of their greed. The brahmins brought about their own downfall by their own greed.

 
KANDA PURAANAM - URPATTHIK KAANDAM

20a. கிரௌஞ்ச மலை


படையுடன் சென்ற முருகனுக்குத்
தடையாக நின்றது கிரௌஞ்ச மலை.


சரியான சமயத்தில் வந்தார் அங்கே
திரிலோக சஞ்சாரியாகிய நாரதர்.


“குறுமுனி சாபம் பெற்றது இம்மலை.
நிறைந்த வஞ்சகம் கொண்டது இது.


தாரகன் என்னும் சூரன் தம்பி – மலைச்
சாரலில் உள்ளான் மாயாபுரியில்!


ஆனைமுகம் கொண்டவன், பலவான்,
ஆழிப்படையையே அணிந்திருப்பவன்.


தம்பி உடையான் படைக்கு அஞ்சான்.
தாரகனை ஒழித்தால் சூரனை அழிக்கலாம்!”


நல்ல யோசனையைக் கூறினார் நாரதர்;
வெல்லும் வழியை வெளிச்சம் இட்டார்.


வீரபாகுவுக்குக் கந்தனின் ஆணை இது,
“சூரன் தம்பியை வென்று வருவாய்!”


நூறு ஆயிரத்து ஒன்பது வீரர்களுக்கும்
தேர்கள் செய்தான் தெய்வத் தச்சன்.


பூதங்கள் சென்று நுழைந்தன நகரில்,
பூதங்கள் பொருதனர் அவுணர்களுடன்!


தூதர்கள் விரைந்தனர் செய்தியுடன்,
தாரகனிடன் உரைத்தனர் விரிவாக.


செய்தி கேட்ட தாரகன் சீறினான்,
“மெய்யாகவே நம்மை வெல்லுவானா?”


ஆணை இட்டான் படைகளைத் திரட்ட.
ஆனை முகத்தான் ஏறினான் தேரினில்.


சுழன்றன குடைகள், வெண்சாமரங்கள்;
ஒலித்தன வலம்புரியும், போர்முரசும்;


ஆனை, குதிரை, தேர், படைகளுடன்
ஆனைமுக அசுரன் நகர் நீங்கினான்.


கடலோடு கடல் கலந்தது போல அங்கு
படையோடு படை கலந்து பொருதது.


குருதியாறு பொங்கிப் பெருகியது!
பெருத்த சேதம் இரு படைகளுக்கும்!


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


1#20a. THE MOUNT KROUNJAM.


The Krounja Giri obstructed Murugan’s advancing army. NArada appeared there and told Murugan about the Krounja Giri.
“This Krounja giri has been cursed by sage Agasthya. It is full of tricks and black magic. Soorapadman’s younger bother TArakan lives in MAyApuri situated near the mountain.

He is elephant-faced. He is very powerful. He wears Vishnu’s Sudharshan as his neck ornament. If you defeat TArakan, then winning over Soorapadman will become a child’s play!”


Murugan agreed eagerly to defeat TArakan. He ordered his constant companion – the eldest Nava Sakthi KumAran VeerabAhu to defeat TArakan in a war. The celestial carpenter got the chariots ready for all the warriors in an instant!


The army promptly left for MAyApuri, entered the city and started fighting the asuras. Messengers fled to inform TArakan about the army of Murugan. TArakan became very angry. He ordered his army to get ready for the war immediately.


He went to the war front with the chathuranga sena. The armies moved in as if two oceans were merging. A violent battle ensued. Soon a river of blood started to flow since there was a heavy loss of warriors on both sides of the armies engaged in the battle.


 
SRI VENKATESA PURAANAM

20b. பிரியாவிடை

நடந்தது திருமணம் நான்கு நாட்களுக்கு;
முடிந்ததும் திரும்பவேண்டும் தத்தம் இல்லம்.

விடை பெற்றனர் மணமக்கள் எல்லோரிடமும்;
மடை திறந்து பாய்ந்தது அரசியின் கண்ணீர்.

வகுள மாலிகை தேற்றினாள் தரணி தேவியை,
“வெகு தூரம் செல்லப் போவதில்லையே!” என்று.

“எப்படியும் கணவன் வீடு செல்ல வேண்டியவள்!
எப்போது வேண்டுமானாலும் காண முடியுமே!”

கணவன் வீட்டில் நடந்துகொள்ள வேண்டிய
கண்ணியத்தை எடுத்துரைத்தாள் அன்னை.

ஆகாச ராஜன் தன் மனம் திறந்து பேசினான்
பூலோக நாதன் மருமகன் ஸ்ரீனிவாசனிடம்.

“செல்லமாக வளர்ந்து விட்டாள் பத்மாவதி!
சொல்ல முடியாது பொறுப்பு உள்ளதாக.

தெரியாமல் அவள் தவறு செய்துவிட்டால்
பெரிய மனதுடன் அவளை மன்னிக்க வேண்டும் .

அம்மையாரிடம் நான் சொன்னதும் இதுவே;
தம்பதிகள் இனிதே வாழவேண்டும்!” என்றான்

வரிசைகள் வந்து இறங்கின வரிசையாக.
“வரம் தருவேன் கேளுங்கள்” என்றான்.

“ஒன்று தான் வரம் வேண்டும் எமக்கு;
என்றுமே உம்மை மறவாது இருப்பது!”

“மறக்கவே மாட்டீர்கள் என்னை எவருமே!
சிறப்பாகக் குடி இருப்பேன் உம் சிந்தையில்!”

சேஷாசலம் சென்றனர் மணமகன் குழுவினர்;
ஆகாச ராஜனும், தரணியும் உடன் சென்றனர்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

#20b. The royal send off.


The wedding celebrations went on for four days. After that they had to return to their place of residence. The newly wedded couple took leave of everyone.

Queen could not control her tears at the thought of separation form her dear daughter. VaguLa MAlikA consoled her saying, “Any girl will have to go to her husband’s home after getting married. After all we live close by and we can meet as often as we want to”

The queen told PadmAvati how to behave responsibly in her in law’s home. The King spoke to SinivAsan with frankness. He told his son in law, “Princess PadmAvati has been pampered by us. I can’t assure that she will behave responsibly in your home. If he does anything wrong please forgive her. I want you to live happily with her!”

SrinivAsan wanted to grant him a boon but the only boon the King wanted was this,”May we never forget you. Grant this boon to me and my citizens”
SrinivAsan assured him, “I will live in your mind always and no one will really forget me. ” The group accompanying the couple left for SeshAchalam. The King and Queen accompanied them.


 
DEVI BHAAGAVATAM - SKANDA 6

6#17a. பார்க்கவன் (1)

மன்னன் ஜனமேஜயன் வினவினான் மீண்டும்
முனிவர் வியாசரிடம் மேலும் சில ஐயங்கள்.


“பிருகு வம்சத்தைச் சேர்ந்த அந்தணப் பெண்கள்
பிழைத்தது எப்படி? உயிர் தப்பியது எப்படி?


எங்கனம் தழைத்தது அந்த அந்தணர் வம்சம்?
என்ன ஆயிற்று கொடிய ஹைஹய வம்சம்?”


“அஞ்சி ஓடிய அந்தணப் பெண்கள் சென்று
தஞ்சம் அடைந்தனன்ர் இமயமலைச் சாரலில்.


அமைத்தனர் மஹாதேவின் ஒரு பிரதிமையை
அமைதியான ஒரு நதிக் கரையினில் அங்கு.


தியானித்தனர் தேவியை அன்ன பானம் விடுத்து;
தியானித்தனர் தேவியின் பாதங்களில் படுத்து.


காட்சி தந்தாள் தேவி பெண்களின் கனவினில்;
“மாட்சிமை பொருந்திய ஒரு மகன் பிறப்பான்.


அளிப்பேன் என் சக்தியை நான் அவனுக்கு!
களிப்பூடுவான் உங்களுக்கு உம் நலத்தை நாடி!”


மகிழ்ந்தனர் கனவு கண்ட அந்தணப் பெண்கள்;
மயங்கினர் எங்கனம் கரு உருவாகும் என்று!


உண்டானது கர்ப்பம் தேவியின் அருளால்;
உண்டானது ஒரு பெண்ணின் தொடையில்!


கரங்களில் வாட்களுடன் நெருங்கினர் அவளைத்
துரத்தி வந்திருந்த கொடிய ஹைஹய அரசர்கள்.


தீனமாக அழுதாள் அந்த அந்தணப் பெண்,
“தீயவரிடமிருந்து கருவைக் காப்பது எப்படி?”


அழுகுரலைக் கேட்டான் கருவில் உள்ள மகன்!
எழுந்தான் உதய சூரியனாகத் தொடையிலிருந்து!


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K . ராமன்


6#17a. BhArgavan (1)


King Janamejayan asked more doubts to sage VyAsa now. “Hw did the brahmin ladies of Brugu vamsam escape the punishment of death? How did the race survive, thrive and grow? What happened to the cruel Haihaya vamsam?”


VyAsa replied to King Janamejayan,” The brahmin ladies ran and took refuge in the slopes of HimAyalas to save their lives. They did prathishta of an image of the All Powerful Devi and started worshiping her – without any food or water. The lay down at the lotus feet of Devi and worshipped her.


Devi appeared in the dreams of those women. “I shall bless one of you with a mighty son. He will have all my power and strength. He will make you happy by taking care of your welfare.”


The women were pleased and at the same time worried as to how could one of them conceive a son without the help of a male member.

But by Devi’s grace one of those women did conceive a child in her thigh. The cruel Haihaya kings had caught up with them and were about to strike the pregnant lady with their swords.

The mother-to-be cried piteously fearing the welfare of the unborn son. The baby in her thigh emerged like the brilliant Sun rising in the East.





 

Latest ads

Back
Top