• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

A poem a day to keep all agonies away!

bhagavathy bjaagavatam - skanda 1

1#11f. புதன்

“மதி என்று பெயர் பெற்றுள்ளாய் – எனினும்
மதி என்பதே இல்லையா உன்னிடம் கூறு!

மதிகெட்ட செயல்கள் புரிந்த உன்னை
மதிப்பார்களா உலகில் எவரும் கூறு!

குரு பத்தினியைத் திருப்பி அனுப்பிவிடு!
மறுத்தால் அழிவாய் விஷ்ணு கைகளால்!

சுக்கிரா! உன் மதிக்கு என்ன ஆயிற்று?
அக்கிரமச் செயலுக்கு நீயும் உடந்தையா?

மாற்றான் மனைவி தருவாள் அழிவினை!
ஏற்றமும் இல்லை இழி செயல் இதனால்!

புகழ்ச்சி தரும் செயல்களை விடுத்து
இகழ்ச்சி தரும் செயல்கள் எதற்கு?

நிறுந்துங்கள் இப்போரை இப்போதே!
மறுத்தால் விளையும் சர்வ நாசம்!” என

பிரம்மன் மொழிந்ததும் மாறிவிட்டான்
பிரம்மையில் வீழ்ந்திருந்த சுக்கிரன்.

“சந்திரா! உதவ மாட்டேன் இனி உனக்கு
தந்தை வருந்துவதை விரும்பவில்லை நான்.

குரு மனைவியைத் திருப்பி அனுப்பி விடு
சிறுபிள்ளைத்தனமான போரை நிறுத்தி விடு!”

தாரை அப்போது பூரண கர்ப்பிணி – எனினும்
தாரையை ஏற்றார் பிருஹஸ்பதி மகிழ்வுடன்!

யுத்தம் நின்று விட்டது தேவாசுரர் இடையே.
புத்திரன் பிறந்தான் குருபத்தினி தாரைக்கு.

புத்திரன் பிறந்ததால் மகிழ்ந்தார் தேவகுரு.
“புத்திரன் என் மகன்!” என்றான் சந்திரன்.

புத்திரன் உள்ளான் என்னைப் போலவே!”
யுத்தம் தொடங்கித் தொடர்ந்தது மீண்டும்!

விரைந்து சென்றான் பிரமன் போர்க்களம்;
மறைந்த உண்மையைக் கேட்டு அறிந்தான்.

சந்திரன் தன் மகனின் தந்தை என்பதைச்
சந்தேகம் இன்றி உணர்த்தினாள் தாரை.

சந்திரன் செய்தான் ஜாதகாதி கர்மங்கள்;
சந்திரன் பெயரிட்டான் மகனை புதன் என.

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


1#11f. Budhan


Brahma chided Chandran for his thoughtless and irresponsible actions! ” Are you out of your mind Chandran? Will anyone treat you with respect and regard after what you have been doing with your guru’s wife? Send her back to her husband immediately. Otherwise get ready to be killed by VishNu!

What is wrong with you Sukra? You too are supporting this foul act. Having an affair with another man’s wife is nothing to feel proud about. In fact it will destroy the miscreant like wildfire. I am ordering both of you. Stop is foolish war immediately or be ready to face the extreme unpleasant consequences!”

Sukran felt crestfallen for having made Brahma unhappy. He told Chandran, ”I am sorry. I can’t help you any more in this war – against the wishes of Brahma Devan. Send back TArA to Bruhaspati immediately.”

TArA was sent back to her husband. She was pregnant with Chandran’s child. Yet the DEvaguru accepted her joyfully. The war between the DEvas and asuras came to an end.

TArA delivered a son. Bruhaspati was overwhelmed with joy at the birth of a son. Chandran claimed openly that the boy was his son and resembled him. A fresh war erupted and went on between the DEvas and asuras!

Brahmma lost his patience and went to TArA who made it very clear that her son’s father was Chandran and not the Deva Guru Bruhaspati. Chandran performed the jAtha karma etc and named his son as Budhan.


 
kanda purANam - asura kANdam

21c. இந்திரன், இந்திராணி

நிலவுலகை அடைந்துவிட்ட இந்திரன்
நிலவணிந்த பிரானை வழிபட்டான்.


சீர்காழியை அடைந்தான் மனைவியுடன்;
சீரிய பூம்பொழில் ஒன்றினை அமைத்தான்.


மலர்களால் அர்ச்சித்தான் தினம் பெருமானை.
கலங்காது காத்திருந்தான் சிவன் அருளுக்கு.


ஒற்றர்கள் தேடி வந்தனர் அங்கேயும்!
முற்றிய மூங்கில்களின் வடிவெடுத்தனர்!


மறைந்து கொண்டனர் இருவருமே.
இறை அருள் ஒற்றரிடமிருந்து காத்தது.


மழை முகில்களை வெருட்டிய அவுணர்
மழை பொழிவதைத் தடுத்து விட்டனர்.


கருகிக் காய்ந்து சருகாகி விட்டது
கருத்தைக் கவர்ந்த அப்பூம் பொழில்.


மனம் வருந்திய இந்திரன் வேண்டினான்
தினம் வணங்கும் முக்கட் பிரானிடம்.


“வருந்தாதே இந்திரா! பொழில் தழைக்க
வரும் ஆறு ஒன்று விரைவில் இங்கு!”


அருள் வாக்கு ஒலித்தது அசரீரியாக.
பெருமகிழ்ச்சி அடைந்தான் தேவர்கோன்.


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

2#21c. Indra and IndrANi.


Soon after reaching the earth with his wife IndrANi, Indra started worshiping lord Siva. He went to SeerkAzhi and grew a garden full of flowering plants. He did puja to Lord Siva with these fresh flowers everyday. He waited patiently for the favorable time.


Soorapadman’s spies came there looking for him and his wife. The Celestial Couple transformed themselves into two bamboos and deceived the asura spies.


The asuras scared and chased away the rain clouds and stopped the rain fall there. The lovely flower garden soon withered dry.

Indra was very sad and prayed to Lord Siva. An asareeri spoke to him, “Do not worry Indra. Very soon a river will start flowing here. Your nandavanam will become as glorious as before!” Indra was happy with the promise made by God.

 
sree venkatesa purANam

32. பேரண்டவன்

வடதிசையில் வாழ்ந்தான் அரக்கன் பேரண்டவன்;
வெடவெடக்கும் அண்ட சராசரம் பேர் கேட்டவுடன்!

பிரம்மாண்டமான சேனை வெள்ளத்துடன் வந்ததும்,
பெருமானை தியானித்தான் சக்கர ராஜன் ஒரு கணம்.

அசுர சேனைக்கு இணையான அரிய சேனை ஒன்று
அதே கணத்தில் தோன்றியது ஆயுதங்களுடன் அங்கு.

கொடிய யுத்தம் தொடங்கி நடந்தது உடனே – போரில்
மடிந்தனர் எண்ணற்ற வீரர்கள் இரு சேனைகளிலும்.

வெற்றியும், தோல்வியும் இன்றி நீண்ட போரில்
வெறி கொண்ட அசுரர்களின் கை ஓங்கலானது.

சக்கர ராஜனின் படை வீரர்கள் பின் வங்கலாயினர்;
மிக்க சினம் கொண்டு அவன் செய்தான் ஹூங்காரம்.

சினத்தில் தோன்றினான் தேவ புருஷன் பாவகன்!
“சின்னா பின்னம் செய்வாய் அசுரர்களை!” என

பாவகன் தலைமையில் பொருதனர் மீண்டும்;
பாய்ந்து முன்னேறிய சக்கர ராஜனின் வீரர்கள்.

பாவகன் மீது பாய்ந்தனர் அசுரர்கள் இப்போது!
பாவகன் எய்தான் மயக்கும் மோகன அஸ்திரம்!

மறந்தனர் தம்மையே; துறந்தனர் போரையே;
எறிந்தனர் ஆயுதங்களை; மறிந்தனர் நிலத்தில்!

பேரண்டவன் எய்தான் ஹாஹாகாரம் செய்தபடி
மோகன அஸ்திரத்தை வெல்லும் ஞான அஸ்திரம்.

தூக்கத்தில் இருந்து எழுபவர்போல மீண்டும்
எழுந்து தாக்கினர் ஆயுதங்களால் அசுரர்கள்.

எய்தான் பாவகன் தன் கிரௌஞ்ச வாளியை!
எய்தான் பேரண்டவன் பைசாச அஸ்திரத்தை!

இரண்டும் தாக்கின அசுரர்கள் படையினையே!
பேரண்டவன் எய்தான் பிரமன் தந்த சூலாயுதம்!

வாயு அஸ்திரத்தை எடுத்து விடுத்தான் பாவகன்;
வாயு அஸ்திரம் வாயுவென விரைந்து சென்றது.

வாரிச் சுருட்டிப் பாய்போல எறிந்தது அசுரனை!
நேரில் பார்த்தவர் வீழ்ந்தனர் வியப்புக் கடலில்!

மண்டை உடைந்து மடிந்தான் அசுரன் பேரண்டவன்;
சண்டை முடிந்து திரும்பி விட்டான் சக்கர ராஜன்.

இனிதாக ஆணைகளை நிறைவேற்றிய பின்னர்
இணைந்தான் ஸ்ரீனிவாசனின் சக்கரத்தில் மீண்டும்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

வேறு புராணங்களில் காணப்பட்ட சில கதைகளின் தொகுதி முற்றியது.


பொங்குக மங்களம்!!! தங்குக எங்கும்!!!


#32. PEraNdavan

The asuran PEraNdavan lived in the northern direction. His name was enough to infuse fear and terror in the mind of anyone who heard it.
He came to fight Chakra RAjan with an immense army resembling the endless ocean. Chakra RAjan paused for a minute and prayed to his Lord NArAyNan. Immediately there appeared on his side a vast army with suitable weapons which could match the asura army.

A terrifying war ensued. The soldiers got killed in both sides of the army. The battle went on for a long time, well matched by the two huge armies.
Then the asura army started gaining on the army of Chakra RAjan. He did a loud hoonkAram and from that terrifying sound appeared a brave warrior PAvakan. Chakra RAjan ordered the warrior PAvakan, “Go forth and destroy the army of the asura!”

Chakra RAjan’s army lead by the warrior fought more fiercely than before. The asura army started attacking the new warrior. He shot his Mohana asthram which caused delusion in the minds of the asura soldiers. They forgot themselves. They forgot that they were a war. They threw down their arms. They rolled down on the ground.

PEraNdavan shot the asthram which would bring them out of the delusion. They woke up as if from deep sleep and continued to fight.

Now Chakra Ajan shot the Krounja VALi and PEraNdavan shot his PasisAsam. But both these started attacking the army of the asura. PEraNdavan threw the SoolAyudam given by Brahma and the warrior shot his VAyu ashtram.

The VAyu asthram sped as fast as the wind . It lifted up PEraNdavan and threw him far away as if here a mere mat. PeRaNdavan died of a broken crown. Chakra RAjan had completed his mission successfully and returned to lord NArAyaNan. He merged with the Sudharshan in Lord’s hand,

This collection of stories found in the other PurANas comes to an end with this.


May Auspiciousness, Peace and Joy prevail and pervade the whole Universe!!!

 

https://youtu.be/n_gY0to-XAQ

Attachments area

Preview YouTube video Sri Venkatesha Mangalaashasanam - with english subtitles!





VEnkatEsa MangaLam

Sriyah kanthaya kalyana nidhaye nidhayerthinam
Sri Venkata nivasaya Srinivasaya Mangalam (1)


Lakshmi savibhra maloka-subhru vibhrama chakshushe
Chakshushe SarvaloKanam Venkateshaya Mangalam (2)


Sri Venkatadri Sringagra-Mangalaha bharananghraye
Mangalanam nivasaya Venkateshaya Mangalam (3)


Sarvavayava soundarya Sampadha Sarvachethasam
Sada sammohanayasthu Venkateshaya Mangalam (4)


Nithyaya niravadhyaya Sathyananda chidhathmane
Sarvantharath mane Srimad Venkateshava Mangalam (5)


Swatha ssarvavide sarvasakthaye Sarvaseshine
Sulabhaya Suseelaya Venkateshaya Mangalam (6)


Parasmai Brahmane Poorna Kamaya Paramathmane
Prayunje Parathathvaya Venkateshaya Mangalam (7)


Akalathathva masrantha mathmanamanu-pasyatham
Athripthya mritha rupaya Venkateshaya Mangalam (8)


Prayah swacharanom Pumsam Saranyathvena Panina
Kripaya dhisathe Srimad- Venkateshava Mangalam (9)


Dhaya mritha tharanginya-Stharangairiva Seethalaih
Apagai ssinchalhe viswam Venkateshava Mangalam (10)


Sragbhushambara hetheenam Sushamava hamurthaye
Sarvarthi Samanayasthu Venkateshaya Mangalam (11)


Sri Vaikunta virakthaya Swami Pushkarineethate
Ramaya Ramamanaya Venkateshaya Mangalam (12)


Srimad sundara jamathru muni manasavasine
Sarvaloka Nivasava Srinivasaya Mangalam (13)


Mangalasasana paraih madacharya Purogamaih
Sarvaischa Purvai racharyaih Sathkrithayasthu Mangalam(14)
 
Monday is the most auspicious day for catching up with The 64 Pranks of Lord Siva!

So ThiruviLaiyAdalgaL of EesA will appear HERE from tomorrow ( 3 - 7 - 2017)
 
Last edited:
bhagavathy bhaagavatam - skanda 7

7#16b. சுனச்சேபன்

“புத்திரர்கள் பத்துவிதம் என்னும் சாஸ்திரம்;
பெற்றால் தான் பிள்ளை என்பதில்லை மன்னா!

புத்திரன் ஆவான் விலைக்கு வாங்கியவனும்;
புத்திரனை விற்பவனைத்தேடிக் கண்டு பிடி.

வறிய அந்தணன் தருவான் தன் பிள்ளையை.”
வசிஷ்டர் கூறினார் அரிச்சந்திரனிடம் இதனை.

“பொருளாசை மிகுந்த வறிய அந்தணன்
தருவான் தன் மகனை யாகப்பசுவாக!”

தேடினர் தேசம் எங்கும் அமைச்சர்கள்;
தேடித் பிடித்தனர் வறிய அஜிகர்த்தனை.

இருந்தனர் அவனுக்கு மூன்று பிளைகள்;
இருந்தது அவனிடம் தீராத வறுமையும்.

“தருகின்றோம் நூறு பசுக்களை உமக்கு!
தருவீர் பிள்ளைகளில் ஒருவனை எமக்கு!”

தலை மகன் மீது அதீதப் பிரியம் அவனுக்கு;
இளையவன் மீது அதிகப் பிரியம் மனைவிக்கு!

நடுப் பிள்ளையைக் கொடுத்தான் அஜிகர்த்தன்;
நடுப் பிள்ளளையின் விலை நூறு கறவைப் பசு.

அழைத்துச் சென்றனர் அவனை அரிச்சந்திரனிடம்;
அழும் பிள்ளையைக் கட்டினர் யூப ஸ்தம்பத்தில்.

அஞ்சிய பிள்ளை அழுதான் விம்மி விம்மி!
கெஞ்சினான் தீனக் குரலில் விடுதலை செய்திட.

வீசினான் கொலை வாளைக் கொலை செய்பவன்;
பேசினான் “என்னால் ஆகாது இந்தப் படுகொலை.

வேலையே வேண்டாம் ஆளை விடுங்கள்!” என்று
வெளியேறி விட்டான் யாக சாலையில் இருந்து.

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K . ராமன்

7#16a. Sunahsepha

Sage Vasishta told king Harischandra,”Ten kinds of children are considered equal to one’s own children. Do not think that only the son born to you is your son. A boy purchased by you is also your son. Find out a poor brahmin who is willing to sell his son.”

Harischandra was convinced that some poor brahmin would be willing to part with his son for a good payment and won’t mind the boy being sacrificed in a yAgam.
The ministers set out and combed the country looking for such a man and his son. They came across a poor brahmin whose name was Ajigarta. He was as greedy as he was poor. He had three sons and was willing to exchange one of them for one hundred milch cows.

Ajikarta was extremely fond of his eldest son and his wife was fond of their youngest son. So the middle son was given away to Harischandra in exchange for one hundred milch cows.

The boy named Sunahsepa was taken to king Harischandra and then tied to the yoopa sthambam in the yAga sAlA. The boy was frightened and cried piteously begging to be released.

The executioner threw down his weapon and said,”I can’t kill this innocent child. I quit my job!” and walked away from the yAga sAlA.

 
bhagavathy bhaagavatam - skanda 1

1#12a. சுத்யும்னன்

சுத்யும்னன் ஒரு க்ஷத்ரிய குல மன்னன்;
சுத்த வீரன், சத்திய சாந்தன், தர்ம சீலன்.

காட்டு மிருகங்களை வேட்டை ஆடிய பின்
களைப்பாறச் சென்றான் சோலை வனத்துக்கு.

இருந்தது சோலை மேருவின் அடிவாரத்தில்!
இருந்தன பல நிழல் தரும் அடர்ந்த மரங்கள்!

வீசியது குளிர்ந்த காற்று இலைகள் அசைய!
வாசமலர்களின் மணம் மயக்கியது மனதை!

ஆடின கலாப மயில்கள்; பாடின பூங்குயில்கள்;
நடை பயின்றன சோலையில் பல அன்னங்கள்.

வண்டுகள் வரவேற்றன அவனை ரீங்காரமிட்டு;
எண்ணவில்லை சுத்யும்னன் எதைப் பற்றியுமே.

குதூகலத்துடன் நுழைந்தான் சோலையில்;
குமரிப் பெண்ணாக மாறிவிட்டான் மன்னன்!

ஏறி வந்த குதிரையைக் கண்டான் அவன்;
மாறியிருந்தது அதுவும் பெண் குதிரையாக!

“யார் செய்த வஞ்சனையோ தெரியவில்லை!
பார் ஆளும் மன்னன் பெண்ணாகலாகுமா?”

திரிந்தான் சோலை எங்கும் பெண்ணாக மாறி!
திரிந்தது அவன் பெயர் ‘இளை’ என இப்போது!

சனகாதி முனிவர்கள் சென்றனர் சோலைக்கு
சங்கரனைக் காண ஆகாய வழியாக ஒருமுறை!

உல்லாசமாக இருந்தார் சிவனும், உமையும்
சல்லாபம் செய்து கொண்டு சோலை வனத்தில்!

நெருங்கிவிட்டனர் இதை அறியாத முனிவர்கள்;
நெருப்பென ஜொலித்தது தேககாந்தி சோலையில்!

நாணமுற்ற உமை துள்ளி எழுந்தாள் – பின்
பேணினாள் ஆடைகளை; ஓடி ஒளிந்தாள்!

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


1#12a. Sudhyumnan


Sudhyumnan was a Kshatriya king. He was valorous, truthful and good natured. He went on a hunting expedition once. He grew tired and thirsty after hunting for some time. He saw a garden at the foot of the mount Meru.

The trees with thick foliage offered cool shade and a cool breeze. The flowers filled the air with their mixed fragrance. Peacocks danced and cuckoos sang very sweet songs. Swans were walking daintily in that garden.

Sudyuman did not stop to think or worry about anything as he entered the garden and to his amazement he had become a beautiful damsel and his horse had changed into a mare!

‘Can a king become a woman and still hope rule the country as before?” He did not understand what was happening to him and was forced to stay on there itself with his mare.

Once long ago Sanakan and his three brothers who were great Brahma JnAnis wished to have a darshan of Lord Siva. They traveled by an aerial route unaware of the fact that Siva and Uma were enjoying the company of each other in intimacy in that garden.

The aura of their bodies lit up the garden and Uma realized that they were nearing very fast. She jumped up with a startle and ran to hide herself and adjust her clothes.


 
kanda purANam - asura kANdam

22. விந்திய மலை

விந்திய மலையிடம் சென்றார் நாரதர்;
வியந்து வாழ்த்திப் போற்றினார் அதை.

விந்திய மலை தொழுதது நாரதரை;
வினயத்துடன் இன்மொழி இயம்பியது.

“தருக்கு மிகுந்து விட்டது மேருமலைக்கு.
பொருப்பு சிவன் கை வில் ஆகிவிட்டதே!

அன்னை உமை வளர்ந்தாளாம் அதனிடம்;
அனைத்து மலைகளுக்கும் அரசனாம் அது.

கதிரவனைத் தொடும் உயரம் உள்ளதாம்.
கணக்கற்ற கொடுமுடிகள் கொண்டதாம்.

கயிலை மலை பொருந்தியுள்ளதாம் அங்கு!
பயிலுகிறது தனக்கு ஒப்பார் இல்லை என!”

“மேருவின் பெருமைகள் எனக்கு இல்லையா?
மேருவின் சிறுமைகளையும் நான் அறிவேன்!

மேருவும் ஒரு மலை தான், மால் அல்லவே!
மேருவுக்கு உணர்த்துவேன் என் பெருமையை!”

சத்தியலோகம் வரை வளர்ந்தது விந்தியம்;
நித்தியமாக விண்வழியைத் தடைசெய்தது.

வியப்பின் விளிம்பில் விண்ணவர், மண்ணவர்,
விந்தியம் வளர்ந்த காரணம் விளங்கும் வரையில்.

வளர்ந்த காரணத்தையும், அகத்தியரால் அது
தளர்ந்து போகும் எனவும் அறிந்து மகிழ்ந்தனர்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

2#22. The Vindhya Giri.


NArada approached the Vindhya Giri. He praised it sky-high. The Vindhya Giri paid its respect to NArada and spoke sweet words of welcome to him.

NArada told the Vindhya Giri, ” The mount Meru has become very arrogant since Siva uses it as his bow. Uma Devi grew on its lap. It claims to be the King of all the Mountains. It claims it can touch the Sun. Is has countless peaks. KailAsh is situated on it. So it says it is unmatched in its greatness.”

Vindhya replied, “I know the greatness as well the meanness of Mount Meru. Meru is only a mere mountain. It is not a God like VishNu. I will prove to him my greatness now.” It grew up very rapidly and reached Satya lokam. It obstructed the path of the Sun, The Moon and The Stars.

The Devas and manushyas were dumbfound by this sudden spurt of growth of Vindhya Giri. Later when they understood the cause of the growth of Vindhya Giri and how it would be kept in check by the great Sage Asasthya, they felt somewhat relieved.


 
[h=1]64 Thiru Vilaiyaadalgal.
[/h]


The 64 Divine dramas played by Lord Siva.



Lord Siva is attributed with the divine dramas numbering sixty four.


They are all interesting and captivating stories.



Some of the them-in fact most of them-are too long to be given as a single poem.



So these stories are split up into 2 or more parts. A suitable heading is given to each part.



Some of us are familiar with some of these stories. But a knowledge of all of them is desirable.



Here is my humble offering of 128 simple Tamil poems in the lotus feet of Lord Siva and Devi Uma.



For the benefit of those who are interested to read but unable to read Tamil script, the most accurate and crisp translation of the poem is

given in English, right below each of these poems.
 

ராகம்: புன்னாகவராளி. தாளம்: ஆதி.
(என்னுடைய சொந்த சாஹித்யம்)


காலனைக் காலால் உதைத்தவரை - ஒரு
காலைத் தூக்கி நடம் செய்பவரை;
காளையை ஊர்தியாய்க் கொண்டவரை,
கலப்படம் அற்ற பொன் மேனியரை (1)

கழுத்தினில் நீல நிறம் கொண்டவரைக்
கருநாகப் பாம்பினை அணிந்தவரை;
கங்கையைத் தலைமேல் அணிந்தவரை,
கந்தனை மைந்தனைக் கொண்டவரை (2)

காட்டுப் புலித்தோல் அணிந்தவரைக்
காயும் மழுவைப் பிடித்தவரை;
காமனைக் கண் திறந்து எரித்தவரை,
காசி விச்வேஸ்வரனாய் அமைந்தவரை (3)

கண்கள் மூன்று உடையவரை,
கணபதிக்குக் கனி அளித்தவரை;
கனகசபைதனில் நடித்தவரை,
கபால மலையை அணிந்தவரை (4)

கையிலே உடுக்கை பிடித்தவரை,
கௌரிக்கு இடப் பக்கம் தந்தவரை;
கைலாய மலை மீது உறைபவரை,
மையலுடன் பார்வதியை அணைப்பவரை (5)

கரி உரி போர்த்திய செஞ்சேவகனை,
காதில் குழையாட ஆடும் நாதனை;
கரை காணா பக்தியுடன் தினம் தோறும்,
காலையும் மாலையும் பூஜை செய்வோம்.(6)

ஹர ஹர சிவ சிவ சங்கரா!
ஜெயஜெய சிவ சிவ சங்கரா!
ஹர சிவ ஜெய சிவ சங்கரா!
ஜெய சிவ ஹர சிவ சங்கரா!

அன்பே சிவம்! எல்லாம் சிவமயம்!
ஓம் நம: சிவாய! ஓம் நம: சிவாய! சிவாய நம: ஓம்!


A prayer to Lord Siva.

The glories of Lord Siva.

He who kicked Yama with one leg,
He who dances standing on one leg;
He who rides a bull truly bold,
He who shines like pure gold.(1)

He whose throat has turned black,
He who wears cobras shining black;
He who on His head sports Ganga,
He who is the father of lovely Skanda (2)

He who wears the skin of a ferocious tiger,
The Lord who holds flame and burning fire;
He who scorched Manmatha as Maheswara,
The Lord who is adored as KAsi ViswEswara (3)

The Lord who has three powerful eyes,
The Lord who gave a fruit to Ganesh;
The Lord who dances in Kanaka sabhai,
The Lord who wears a KapAla mAlai (4)

The Lord who plays His little lovely drum,
The Lord who gave Gowri the left side of Him;
The Lord who on Mount Kailaash lives.
The Lord whom Devi Paarvathi Loves (5)

The Lord who sports an elephant hide,
The who wears poisonous snakes alive;
Let us pray to Him every morning,
And without fail every evening!

Hara Hara Siva Siva Sankara!
Jaya Jaya Siva Siva Sankara!
Hara Siva Jaya Siva Sankara!
Jaya Siva Hara Siva Sankara!

On Namah SivAya.

God is Love. Love is God.


 
1a. இந்திரன் மமதை.


திருவிளையாடல்கள். முதற்பகுதி. மதுரைக்காண்டம்.
# 1 இந்திரன் பழி தீர்ந்தது.
1 (a). இந்திரன் மமதை.

“பதவி வரும்போதே பவிசும் வந்துவிடும்!”
பாரில் உள்ளவர்க்கே இந்த கதியென்றால்,
பொன்னுலகாளும் விண்ணவர் வேந்தன்
மன்னர் மன்னன் இந்திரன் என் செய்வான்?

ஒளிமயமான உலகம் களிததும்பும் சுவர்க்கம்;
இனிய இசையும், இன்னல் தீர்க்கும் நடனமும்,
தோகை மயில்களை நிகர்த்த தேவ உலகப்
பாவைகளின் முன்பு தன்னையே மறந்தான்.

தேடிவந்த குலகுரு வியாழபகவானைக் கண்டும்
ஓடிவந்து வணங்கி வரவேற்காமல் இருந்தான்;
மமதை தலைக்கேறிய விண்ணவர் கோமானுக்கு
தமது அவசியம் இல்லையென விரைந்து மறைந்தார்.

குருவருள் இல்லையேல் குலச் சிறப்பேது ?
திருவும் உருவும் மங்கித் தவித்தான் தன்
பதவி தந்த ஆணவத்தால், குலகுருவுடைய
உதவியை இழந்து நின்ற மன்னன் இந்திரன்.

எத்தனை தேடினாலும் காணவே முடியவில்லை
மொத்தமாகத் தன்னை மறைத்துக் கொண்டவரை!
சித்தம் கலங்கியதால் சரணடைந்தான் இந்திரன்
வித்தகன் பிரம்ம தேவனிடம் வலியச் சென்று.

“அரசன் இன்றி ஒரு நாடும், குலகுருவின்றி
அரசனும், என்றும் இருக்கலாகாது இந்திரனே!
அரக்கன் விஸ்வரூபனை உன் குலகுருவாக
அரவணைத்து ஏற்றுக்கொள்வாய் உடனே நீ!

அரக்கனே ஆயினும் அறிவில் சிறந்தவன்;
அரும் துவஷ்டாவின் மகன் விஸ்வரூபன்”
பிரமனின் மொழியால் அமைதி அடைந்தவன்
குருவாக்கிக் கொண்டான் விஸ்வரூபனை.

“பாலுக்கும் காவல்! பூனைக்கும் தோழன்!”
தேவர் குலகுரு; ஆனால் அசுரர் மேல் பாசம்;
வேஷம் வெளிப்பட்டு விட்டது யாகத்தின்போது
மோசம் செய்யும் குரு விஸ்வரூபனுடையது!

நலம் வேண்டினான் நாவினால் சுரர்களின்;
நலம் வேண்டினான் மனத்தால் அசுரர்களின்;
திவ்விய திருஷ்டியால் உண்மை அறிந்தவன்,
திவ்விய ஆயுதத்தால் அசுரனை முடித்தான்.

அசுரன் ஆயினும் அரச குலகுருவன்றோ?
அமரர்கோனைப் பற்றியது பிரம்மஹத்தி!
ஒளி மழுங்கிப் பொலிவிழந்து தவித்தவன்,
வெளிப் போக்கிவிட்டான் பிரம்மஹத்தியை!

பாவத்தைப் பங்கிட்டுக் கொடுத்துவிட்டான்!
பாகங்கள் நான்காக அதைப் பிரித்த பின்னர்.
பாவையர், தருக்கள், நீர், நிலம் எனபவர்
பாவத்தை ஏற்றுக்கொண்ட நால்வகையினர்!

“பழி ஓரிடம் பாவம் ஓரிடம்” எனப் பகரும்
பழமொழியின் நுண்பொருள் இது தானோ?
செய்யாத தவறுக்குத் தண்டனை ஏற்றனர்
பொய்யாமல் இந்த நான்கு வகையினர்களும்.

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.

1 (a). Indra’s arrogance.

Any person gets corrupted by power. Absolute power corrupts absolutely. Indra, the Lord of the Gods, became very arrogant and intoxicated by his power.

The heaven is a wonderful place! It is brightly lit, and is a carefree happy world. It resonates with divine music and mesmerizing dances performed by the damsels of heaven called Apsaras. They are pretty and proud like our peacocks and danced as well too! Indra used to get immersed in the music and dance and was lost to the external world!

One day, Deva guru Bruhaspati came to Indra’s durbar, but the proud and arrogant king did not get up to receive his kulaguru with due honors. Bruhaspati felt humiliated and left the place promptly. He also hid himself completely!

Without the blessings and the guidance of the guru, Indra started losing his prosperity and glory. He was unhappy with his own arrogant behavior. However hard he tried, his guru was not to be found anywhere! He became desperate and sought the advice of Brahma.

Brahma told him,” A country without a king and a king without a guru will perish. Accept Viswaroopan as your new guru. He is an asura, but he is well versed, intelligent and accomplished”.

Indra made Viswaroopan as his new kulaguru. The new kulaguru had a soft corner for asuras- his own clan. While performing a yagna, the Deva-guru prayed for the welfare of the Devas openly and in his mind he was praying for the welfare of the asuras.

Indra came to know of this treachery and promptly killed Viswaroopan. Indra got afflicted by the Brahmahathi dosham. He was at his wit’s end since he lost his tejas, beauty, strength and glory.

The Devas came up with a perfect plan to get rid of his sin and the dosham. Indra gave away his Brahmahathi dosham to the four categories of innocent beings viz women, tress, earth and water.

These four categories bear the brunt of Indra’s sins. They were made the scapegoats and are suffering ever since for the sins they have not actually committed.
 
bhagavathy bhaagavatam - skanda 7

7#16c. விஸ்வாமித்திரர்(1)

அழுதனர் அங்கிருந்த அத்தனை பேர்களும்;
அழுகை ஒலி கேட்டு வருந்தினான் மன்னன்!

விந்தையாகக் கூறினான் அரிச்சந்திரனிடம்
தந்தை அஜீகர்த்தன் விநோத மொழிகளை.

“விரும்புகின்றேன் என் வறுமை நீங்கிவிட;
விரும்பவில்லை என் மகன் சுனச்சேபனை;

தாருங்கள் இன்னமும் நூறு கறவைப் பசுக்கள்;
கூறுங்கள் இவனை எங்கனம் பலியிட வேண்டும்?”

ஒப்புக்கொண்டான் அரிச்சந்திரன் இதற்கும்!
தப்பான தந்தை கொல்லத் துணிந்தான் மகனை.

திகைத்தனர் இதைக் கண்ட அத்தனை பேரும்!
புகைச்சலுடன் கேட்டனர் “இவன் ஒரு மனிதனா?”

வந்தார் விஸ்வாமித்திரர் யாகசாலைக்கு;
தந்தார் உறுதி மொழி அரிச்சந்திரனுக்கு!

“யாகம் பூர்த்தியாகும் சிறுவனை விடுவித்தால்!
ரோகம் குணமாகும் சிறுவனை விடுவித்தால்!

கொலையை விடக் கொடிய பாவம் ஒன்றில்லை;
கொல்லாமையை விடச் சிறந்த நோன்பு இல்லை.

தன்னுயிர் காத்திட மன்னுயிர் கொல்லலாமா?
மன்னுயிர் துன்புற்றால் மகேசன் துன்புறுவான்!

ஆண்டவனை அடைய விரும்புவர்கள் – எண்ண
வேண்டும் அனைவரையும் தன்னைப் போலவே!

புத்திர காமேஷ்டி யாகம் செய்வார் பலர் – ஆனால்
புத்திரனையே யாகம் செய்பவன் இவன் ஒருவனே!”

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K . ராமன்

7#16c. ViswAmitra

Everyone present in the yAga sAlA shed tears of sympathy. King Harischandra was disturbed by this wide scale display of public disapproval.

Ajigarta told the king, “I myself will kill my son for another one hundred milch cows. Tell me how you want it to be done!”

King Harischandra agreed to this and the people gathered there went into shock at the sight of such a cruel father! They were murmuring and wondering what kind of a man was Ajikarta or whether he was really a man and not a demon.

Sage ViswAmitra entered the YAga sAlA. He told Harischandra, “Release this unfortunate boy. Your yAgam (Sacrifice) will get completed and your rogam (disease) will also disappear.

There is no greater sin than the murder of an innocent person. There is no greater vratam than ahimsa. No one is permitted to kill another jeeva just to save one’s own life. If we trouble our fellow humans we are troubling the God residing in them.

There have been many men who have performed Putra KAmeshti YAgam to get a worthy son but this man is the only one who is willing to perform a yAgam sacrificing his own putran.”

 
bhagavathy bhaagavatam - skanda 1

1#12b. சிவன் சாபம்

சனகாதி முனிவர்கள் சென்றனர் தபோவனம்;
சங்கரன் வினவினார், “இடையூறு என்ன தேவி?”


“முனிகுமாரர்கள் சென்றனர் வான் வழியே-அவர்
மேனி ஒளி பரவியது சோலைவனம் முழுவதும்.


ஆடவர்கள் வந்ததால் நாணம் கொண்டேன்;
ஓடி ஒளிந்து கொண்டேன் நான் விரைந்து!”


“நமது உல்லாச வனம் இது அல்லவா தேவி?
நமது தனிமையைக் குலைப்பது தவறு தான்.


இந்த வனத்தில் இனி நுழையும் ஆண்மகன்
அந்தக் கணமே மாறிவிடுவான் பெண்ணாக!”


சிவன் சாபம் உடைய வனம் என்றறியாமல்
இவன் நுழைந்ததால் நேர்ந்த சங்கடம் இது!


தேச சஞ்சாரம் செய்து வந்த புதன் கண்டான்
ஆசையுடன் இளம் பெண்ணாகிய இளையை.


சந்திரன் மகன் மேல் கொண்டாள் மோகம்;
வந்து சுகம் தரவும், பெறவும் அழைத்தாள்.


மோஹம் எல்லை மீறியது இருவருக்குமே.
மோஹம் தீரக் கூடி மகிழ்ந்தனர் இருவரும்.


தன் வழியே சென்றுவிட்டான் புதன் பிறகு;
தன் கருவில் ஏற்றாள் இளை புதன் சிசுவை.


பிறந்தது அழகிய ஆண் குழந்தை இளைக்கு;
சிறந்த பெயரைத் தந்தாள் புரூரவன் என்று.


“மண்ணாள வேண்டிய மன்னன் வனத்தில்
பெண்ணாகித் திரிகின்றேன் குழந்தையுடன்!


குலகுருவை தியானித்தாள் இளை – அறிந்தார்
குலகுரு நடந்தவற்றை ஞான திருஷ்டியால்.


‘சுத்யும்னன் பெறவேண்டும் சுயவுருவம் எனச்
சிவபெருமானைக் குறித்துச் செய்தார் தவம்.


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


1#12b. Siva’s curse


Sanaka and his three brothers were traveling in the sky towards the tapOvanam. Siva asked Uma who got startled and ran away in a hurry,”Why are you agitated my DEvi?’”

Uma replied, “The Muni kumArAs went by and their brilliance lit up the whole place. I became shy by the arrival of those four sages and ran to hide myself before they could see me!”

“This is our personal garden and no one should disturb us when we are together here. In future if any man enters this garden he will be transformed into a woman!”

Siva had laid this curse. Sudhyumnan was unaware of this when he entered the garden and hence he got transformed into a woman ILai and his horse into a mare.

Chandran’s son Budhan went by when he was traveling across the countries. He fell in love with the beautiful maiden ILai. She too fell head over heels in love with this handsome young man. They enjoyed togetherness to the fullness of their satisfaction.

Budhan went off on his way. ILai had become pregnant with his child. In due course she delivered a healthy male child who was named as Purooravan.

ILai became sad thinking of the past when she was the ruler of a country. Now she was a helpless woman in a forest – with an infant to take care of.
She contemplated on her kulaguru and sought his help and intervention.

The kulaguru knew the events that had happened by his divya drushti (the divine power to see the past, present and the future).

He decided to help the king Sudhyumnan to get back his original form and gender. He started doing penance on Lord Siva who had laid the strange curse!



 
kanda purANam - asura kANdam

23. அகத்திய முனிவர்

உயர்ந்த விந்திய மலையை அடக்கிட
உயரம் குறைந்த குறுமுனியை நாடினர்.

கதிரவன் முதலோர் முனிவரை நினைத்து
துதிபல செய்துப் போற்றிப் புகழ்ந்தனர்;

தமக்கு இட்ட விண்ணப்பத்தை ஏற்றுத்
தாமே தேவர் குறை தீர்க்க எண்ணினார்.

சிவனை நினைந்தார் குறுமுனி அகத்தியர்.
சிவன் வந்தான் காளை ஊர்தியில் ஏறி.

“விந்திய மலையின் ஆணவத்தை அடக்க
வேண்டிய வலிமை எனக்கு அருள்வீர்!”

“விந்தியத்தின் ஆணவத்தை அடக்கிய பின்
விளங்குவாய் நீ பொதிய மலையின் மீது!”

“தென்திசை சென்ற பின்னர் உம்மை வழிபட
நன்நீரைத் தந்து அருள வேண்டும் ஐயனே!”

திருக்கயிலையில் இருந்த ஏழு நதிகளில்
பெருமை மிகுந்த காவிரியை அளித்தார்.

விரும்பிப் பெற்ற காவிரி கமண்டலத்தில்!
மேருவிலிருந்து செல்லலானார் பொதிகை.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

2#23. Sage Agasthya.


To check the haughty behavior of the Vindya giri, Devas sought the help of the VAmana roopa Sage Agasthya. The Sun, The Moon and the other planets prayed to the Sage Agasthya to help them to travel in their allotted paths – now obstructed by Vindhya Giri.

Sage Agasthya accepted their request. He contemplated on Lord Siva, who appeared there seated on his bull Nandhi Devan. “Lord! Please give me the ability and strength to control the arrogant Vindya Giri.”

Lord replied, “After conquering Vindhya Giri, you will reside in the mountain Pothigai” “Lord! I will need pure water to perform my daily rituals and your pooja.” The Sage Agasthya made a request to Lord Siva.

Siva presented him with one the seven rivers flowing in Kailash called the river Kaveri. The river was placed in the kamaNdalam of the rishi and he set out towards the Pothigai Giri in the South.





 
64 thiru viLaiydalgaL

1b. ததீசியின் தானம்.

திருவிளையாடல்கள். முதற்பகுதி. மதுரைக்காண்டம்.

# 1 இந்திரன் பழி தீர்ந்தது.


# 1 (b). ததீசியின் தானம்.


மகனைக் கொன்ற இந்திரனைப் பழி தீர்க்கத்
தகவுடைய யாகமொன்று செய்தான் துவஷ்டா.

யாகத்தில் தோன்றினான் வலிய விருத்திரன்,
“போகத்தில் மூழ்கிய இந்திரனை அழிப்பாய்!”


தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லையே!
தந்தை துவஷ்டாவின் பழி தீர்க்க விழைந்து ,

விருத்திரன் விரைந்தான் இந்திரனை நோக்கி;
கருத்தழிந்து மனக் கவலையுற்றான் இந்திரன்!


ஒருவருக்கு ஒருவர் சளைத்தவரும் அல்ல!
ஒருவருக்கு ஒருவர் இளைத்தவரும் அல்ல!

பெரும் போர் மூண்டது சுர அசுரர்களிடையே!
இருபுறங்களிலுமே மிகப் பெரிய சேதங்கள்.


ஓடினான் மீண்டும் பிரமனிடம் இந்திரன்;
ஓடினார்கள் இருவரும் திருமாலை நாடி!

“திவ்விய ஆயுதம் வலுவிழந்து விட்டது.
தெய்வத் தச்சனிடம் புதியது செய்துகொள்!


பாற்கடல் கடைந்த சுர அசுரர்கள் தங்கள்
தோற்றறியாத படைக்கலன்களை எல்லாம்,

அன்று அளித்தனர் அருந்தவர் ததீசியிடம்,
பின்னர் விழுங்கிவிட்டார் அவர் அவற்றை.


அத்துணை படைக்கலன்களும் இன்றுவரை
அத்தன் முதுகெலும்பில் பொருந்தியுள்ளன.

தண்டு வடத்தைக்கேட்டு நீ வாங்கி வந்தால்
தொண்டு புரியும் அது புதிய வச்சிராயுதமாக!”


முனிவர் ததீசியிடம் கோரினான் யாசகம்,
தனிப் பெரும் ஆயுதம் விரும்பிய இந்திரன்;

“என்றோ மடிந்து மறையும் உடலை நான்
இன்றே தருவேன் உனக்காக!’ என்றார் ததீசி.


அன்பிலார் எல்லாம் தமக்குரியர் ஆவார்.
அன்புடையோர் என்பும் உரியர் பிறர்க்கு!

அன்பே வடிவாகிய முனிவன் உடல் துறந்து,
என்பினை அளித்துச் சேர்ந்தான் சிவலோகம்.


தேவத் தச்சன் உடன் விரைந்து வந்தான்.
தேவர் கோனுக்கு புது ஆயுதம் சமைத்தான்.

புதிய வச்சிராயுதம் பெற்றதால் மகிழ்ந்து
புதிய பலம் பெற்றது தேவர்கள் கூட்டம்.


நால்வகைப் படைகளும் மீண்டும் கூடின.
நல்ல முறையில் அணிவகுத்து நின்றன.

மீண்டும் யுத்தம் புரிய விரும்பியவர்கள்,
மீண்டும் வந்தனர் பெரும் அமர்க்களத்துக்கு.


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


1 (b). THE GIFT OF DADHICHI.


Thvashtaa, Viswaroopan’s father became very angry with Indra and wanted to avenge his son’s murder.He performed a yaagam in order to destroy Indra.


The powerful Vruthraasuran appeared as a result of the Yaagam. Thvashtaa ordered him to destroy Indra. Vtutraasuran went looking for Indra.


The war between the asuras and devas went on and on for a long time! Indra could not vanquish Vrutraaasuran. He ran to Brahma for his advice.


Together they ran to Vishnu for His advice. Vishnu told them, “Indra’s vajraayutham has lost all its power. Indra has to get a new weapon made by Viswakarma.


During the time of the amrutha mathanam, both the suras and asuras had handed over all their weapons to the maharushi Dadhichi for safe keeping.


None of them went back to collect their weapons. Hence the maharushi had swallowed them. They all have got attached to his spine. If you could make the new Vajraayutham from his spine, you will become invincible”.


Indra begged the maharushi Dadhichi for the gift of his back bone. Anyone would have refused such a gift-the spine of a living man!


But Dadhichi was a mahaan and was not attached to his physical body. He promptly agreed to gift his spine and said to Indra,”Sooner or later my body will perish and my bones will rot. Let it be now and for a holy cause”.


He sat in meditation and cast off his physical body. Viswakarma made a new vajraayutham with the rushi’s spine. Deva’s hope for victory was renewed. So also their power and strength.They got ready for a fresh war with the invincible Vrutraasuran.


The army of the Deva reached the battle field.


 
bhagavathy bhaagavatam - skanda 7

7#16d. விஸ்வாமித்திரர்(2)

தானம், தவம், யாகம் செய்வர் பலர்;
தல யாத்திரை, பூஜை செய்வர் பலர்.


பரம பாதகன் மட்டுமே பொருளுக்காகத்
தருவான் தான் பெற்ற மகனையே பலியிட!


நாட்டு மக்கள் செய்யும் பாவச் செயல்களில்
நாட்டு மன்னனைச் சாரும் ஆறில் ஒரு பங்கு.


நல்ல அரசன் முயன்று தடுக்க வேண்டும் – தன்
பொல்லாத குடி மக்களின் பாவச் செயல்களை.


அழுகின்ற சிறுவனை விடுதலை செய்துவிடு;
பழி அடையாதே பாவச் செயல்கள் புரிந்து.


திரிசங்கு சண்டாளன் ஆனான் குரு சாபத்தினால்;
வெறி கொண்டான் உடலோடு சுவர்க்கம் போக.


அனுப்பினேன் அவனை சுவர்க்கத்துக்கு – அதை
அனுமதித்தது நான் சேர்த்த தவத்தின் வலிமை.


உனக்கும் நன்மையே சொல்வேன் கேள் மன்னா!
எனக்கு இந்தச் சிறுவன் வேண்டும் உயிரோடு.


தர வேண்டும் யாகசாலையில் கேட்ட பொருளை;
தர மறுத்தால் யாகம் பாழாகும்; பாவம் சேரும்!”என


“நோயின் கடுமை தாளாது செய்கின்றேன் யாகம்;
நோய் தீரும் இந்த யாகம் பூர்த்தியாகும் பொழுது!


தடையின்றித் தருவேன் வேறு எதையும் உமக்கு;
தடுக்காதீர்கள் முனிவரே இந்த யாகத்தை நடுவில்!”


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K . ராமன்

7#16d. ViswAmitra


Sage ViswAmitra continued,” Many persons give dAnam, do penance, yAgam and pooja. But this man is the only one who would sell his son to be sacrificed in a yagna.
One sixth of the sins committed by the citizens get transferred to the king who rules them. So it is the duty of a just king to put a full stop to the sinful acts committed by his citizens.

Release the boy who is crying pathetically. Do not earn more sins by killing this innocent boy. King Trisanku became a chandALa by incurring the wrath of his guru. He was determined to reach heaven with his mortal body. I managed to send him to heaven using the power of my penance.


I wish your welfare. I also want this boy to live. I am asking for him as a dAnam in this yAga sAlA. You are bound to give as dAnam anything anyone asks for in a yAga sAlA. Otherwise your yAgam will not get completed.”


Harischandra said, “I have nothing personal against this boy. I am not able to bear my disease and discomfort anymore. That is why I am performing this yagna to get rid of them. Please ask for anything else and I shall happily give it to you. Kindly do not ruin my yagna before it can be completed.”
 
bhagavathy bhaagavatam - skanda 1

1#12c. சாயுஜ்ய முக்தி

தோன்றினார் சிவபெருமான் தவத்தை மெச்சி!
“வேண்டும் வரம் கேள் நீ தருவேன்!” என்றார்.

“பெண்ணாக மாறிவிட்ட மன்னன் சுத்யும்னன்
ஆணாக மாறிவிட அருள் புரிவீர்!” என்றதும்

“மாற்ற முடியாது என்னாலும் என் சாபத்தை!
ஏற்க முடியாது உன் கோரிக்கையை என்னால்.

இருக்கலாம் அவன் ஆண் உருவில் ஒரு மாதம்;
இருக்கலாம் அவன் பெண் உருவில் மறு மாதம்.

குறைக்கின்றேன் சாபத்தை முடிந்த அளவு!
மறைக்கவோ அகற்றவோ முடியாது அதை!”

ஆண் வடிவம் அடைந்தான் சுத்யும்னன்;
ஆச்சரியம் மிக அடைந்தான் சுத்யும்னன்.

வந்தான் தலைநகருக்கு மீண்டும் மன்னனாக;
விண்டான் தன் வரலாற்றை வசிஷ்டருக்கு.

விளைந்தது உருமாற்றம் சிவனை எண்ணிச்
சளைக்காமல் வசிஷ்டர் செய்த தவத்தினால்.

மாறிவிட்டான் பெண்ணாக அடுத்த மாதம்!
மாறியதும் பதுங்கினான் தன் அந்தப்புரத்தில்!

கொலு மண்டபம் சென்றான் ஆணான போது.
சில நாட்களில் அந்த ரகசியம் ஆனது பரசியம்!

வெறுப்புற்ற மக்கள் செய்தனர் அலட்சியம்;
பொறுப்பை ஒப்படைத்தான் புரூரவனிடம்.

ஆரண்யம் சென்றான் வனவாசம் செய்திட;
நாரதர் உபதேசித்தார் நவாக்ஷர மந்திரத்தை.

ஓதினான் இடைவிடாது அனேக ஆண்டுகள்;
ஆதிபராசக்தி தோன்றினாள் சிங்கத்தின் மீது.

துதித்தான் பயபக்தியுடன் சக்தி தேவியை;
அளித்தாள் பராசக்தி சாயுஜ்ய முக்தியை.

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


1#12c. SAyujya mukthi


Lord Siva appeared in front of Vasishta and spoke to him, “I am pleased with your penance. What do you wish for Vasishta?” Sage Vasishta said,” Oh Lord! Please change back Sudhyumnan into a man as before!”

Siva said, “Even I can not change my own curse and undo what has been done. I can reduce the severity of the curse and allow Sudhyumnan be a man for one month and become a woman on the next month. A Curse cannot be cancelled completely!”

Sudhyumnan suddenly became a man, while still in the forest. He was duly surprised not knowing the cause of this miracle. He reached his capital city with his son Purooravan. He met sage Vasishta and told him about his recent adventures.

He learned that Sage Vasishta was the cause of his transformation into a man once again and that it was going to be a monthly change of genders then on.

He went to the durbar on the days when he was a man. He hid himself in is palace when he became a woman. Soon this secret became public and people lost their respect for a king who would become a woman every other month!

Sudhyumnan crowned Purooravan as his successor and retired in vanavAsam. He met sage NArada there and learned Devi’s NavAkshara mantra from him.

Sudyumnan chanted the mantra with devotion for a very long time. Devi Aadhi ParA Shakti was pleased and appeared before him on her simha vAhanam. King Sudhyumnan desired for nothing but sAyujya mukti. DEvi blessed him with what he wished for and Sudhyumnan attained sAyujya mukti and a place very near to DEvi for ever and ever.

 
kanda purANam - asura kANdam

24. கிரௌஞ்சமலை

தூயபிரான் சொற்படிச் சென்ற முனிவர்
மாயாபுரி நகரை மிக நெருங்கி விட்டார்.

மாயங்கள் செய்யும் அவுணன் கிரௌஞ்சன்
மாய மலையாகிச் செல்லும் வழியை மறித்தான்.

வியந்து நின்றார் அகத்திய முனிவர் அந்த
வினோத மலையை எதிரே கண்டவுடனே.

தன்னுள்ளே அவரைச் சிறை செய்ய எண்ணித்
தானே ஒரு வழியைக் காட்டினான் அவுணன்.

வேறு வழி எதையும் காணாத அம்முனிவர்
வேறு வழியின்றி அதனுள்ளே நுழைந்தார்.

குகையும் தொடர்ந்து வழி விட்டது – பிறகு
குகையின் வழி தடைபட்டது முற்றிலுமாக!

மூடிய குகையில் எப்படி உண்டாயின
இடியும், காற்றும், மழையும், தீயும்?

அவுணனின் மாயையைக் கண்டு சினந்து
அவுணமலையைத் தடியால் அடித்தார்.

“சொந்த வடிவம் தொலைந்து மலையாகி நில்!
கந்தன் கைவேல் உன்னைப் பிளக்கும் வரை!”

கையால் நீரை அள்ளித் தெளித்து அவுணப்
பொய்யோனின் மாயத்தைப் போக்கினார்.

அன்று தொட்டு ஒரு மலையாக நின்றவனை
இன்று உன் கைவேல் பிளந்தது முருகா!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

2#24. Krounja Giri.


Sage Agasthya went southwards to Pothigai Giri as ordered by Lord Siva. He reached MAyApuri – the capital city of TAraka asuran. Krounjan, an asuran with many tricks up his sleeves, transformed himself into a mountain and blocked the path of the Sage.

Agasthya was wonder-struck at the sight of this strange mountain. The mountain wanted to imprison the sage inside its womb. It showed a solitary path to enter into it. The sage entered into the path which lead him deeper and deeper inside the mountain.

Then he came to a dead end. There came down bolts of thunder, a severe storm, heavy rain and burning fire in the womb of that closed mountain. The sage realized that they were the trick played by the aursan.

The Sage hit the mountain with his staff and cursed it thus. “You will lose your original form and stand here as a mountain until the spear of Skandan shatters you completely!”

He sprinkled some water and destroyed the power of the asura who had turned into a mountain. Since than he had stood here just as this mountain. Today your spear has destroyed him completely oh Lord Muruga!” Thus spoke the Deva guru Bruhaspathi.
 
64. thiru viLaiyAdalgaL

1c. கடம்பவனம்.

திருவிளையாடல்கள். முதற்பகுதி. மதுரைக்காண்டம்.

# 1 இந்திரன் பழி தீர்ந்தது.

# 1 (c). கடம்பவனம்.

மீண்டும் தொடங்கித் தொடர்ந்தது அங்கே
சண்ட மாருதம் போன்ற ஒரு கடும் யுத்தம்.
திடீரெனக் கடலில் புகுந்துவிட்டான் வீரன்,
நொடியில் மறைந்து விட்டான் விருத்திரன்.

பிரமித்த இந்திரன் செய்வதறியாமலே
பிரமனையே நாடி ஓடினான் மீண்டும்!
“குறுமுனி அகத்தியர் பெருமானிடம் நீ
பெறுவாய் இத்துயர் தீர்க்கும் நல்லுதவி!”

குறுவடிவினர் ஆயினும் அருந்தவ முனிவர்,
பெருவலிவுடையவர், திருமால் போன்றவர்;
உள்ளங்கையில் அள்ளி எடுத்த முனிவர் அத்
தெள்ளிய கடல் நீரைப் பருகியே விட்டார்.

அலைகடலின் அடியினில் அமைந்த ஒரு
மலையின் உச்சியில் இருந்து தவம் செய்த,
விருத்திரன் தலையை அறுத்துத் தள்ளினான்
பெருமை மிகு வச்சிராயுதத்தால் இந்திரன்!

பற்றியது மீண்டும் பிரம்மஹத்தி தோஷம்!
வற்றியது இந்திரனின் வலிவும், பொலிவும்;
மறைந்தன அவன் அழகும், பெருமையும்,
கரைந்தன அவன் வடிவும், இளமையும்!

தன்னை மறைத்துக் கொண்டான் நாணத்தால்,
தண்டில், ஒரு தாமரையில், ஒரு நீர் நிலையில்.
எத்தனை காலம் உருண்டு ஓடியதோ அறியோம்!
எத்தனை மாற்றங்கள் நிகழ்ந்தனவோ அறியோம்!

“மன்னன் இல்லாத நாடா?” என்று உருவாக்கினர்
மண்ணுலக நகுஷனை விண்ணுலக வேந்தனாக!
பெண்ணாசையால் மதியிழந்து குறுமுனிசாபத்தால்
மண்ணுலகில் மலைப்பாம்பாய் வீழ்ந்தான் நகுஷன்.

மனம் கனிந்த வியாழபகவான் அழைத்தார்.
மனம் வருந்திய இந்திரனுக்கு உரைத்தார்.
” பூவுலகம் செல்வாய்! ஈசனைப் பூசித்து
புதிய சக்தி பெற்று மீண்டும் வருவாய்!”

கயிலையில் துவங்கினான் பூசனையை;
காஞ்சி வந்து விட்டபோதும் மாற்றமில்லை!
பிரம்மஹத்தி தோஷம் விலகவும் இல்லை
அரனின் அருளாசிகள் கிடைக்கவும் இல்லை.

கடம்ப வனத்தை அடைந்தான் இந்திரன்;
அடைந்தபோதே நடந்தது ஓர் அற்புதம்!
பிரம்மஹத்தி தோஷம் விலகிச் செல்லவே
பிரமிக்க வைக்கும் ஒளியினை அடைந்தான்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

1.(c). KADAMBAVANAM.

The fierce battle between the Deva and Asura was resumed and renewed. It was like a ‘chanda maarutham’ and a war between two huge clouds! In the middle of the battle Vrutrasuran entered the sea and disappeared from every- body’s sight!

As usual Indra ran to Brahma for guidance. Brahma advised him to seek the help of sage Agasthya. He was no doubt small in stature but was as great as Maha Vishnu himself.

Sage Agasthya took the water of the sea in his palm and drank it completely. Vrutrasuran was found sitting on the top of a cliff, at the bottom of the sea and doing penance. Indra cut off his head with the new Vajraayutham.

Once again Indra was afflicted by the Brahmahathi dosham. He lost his beauty, strength, valor and tejas. Overcome by a sense of shame, he hid himself in the stem of a lotus flower, away from everybody’s sight. Years rolled by!

Devas wanted a new king since they could not find Indra anywhere! They crowned the famous king Nahushan as the new Indra. Nahushan soon got corrupted by power and started coveting Sasi Devi-Indra’s patni.

Guided by Indra, Sasi Devi enacted his plan. Nahushan was asked to ride a palanquin carried by the Sapta Rushis. He kicked sage Agasthya and was transformed to a huge python by the curse of the angered rushi.

Bruhaspati took pity on Indra. He advised Indra to go to Boolokam and worship Lord Siva, to get back his lost glory. Indra worshiped Siva in Kailash and started his Theertha Yathra southwards. He worshiped Siva in various holy places and reached Kanchi but all in vain. The dosham was neither absolved nor annulled.

When he reached kadambavanam, a miracle happened! The Brahmahathi dosham left him completely.He regained his original form and was overwhelmed by the transformation.

 
bhagavathy bhaagavatam - skanda 7

7#17a. “யார் என் தந்தை?”

கோபம் வந்தது மன்னன் மீது முனிவருக்கு!
பாவம் பிள்ளை அழுதான் மரண பயத்தால்!

சென்றார் சிறுவனிடம் விஸ்வாமித்திரர்;
“துன்பம் விலகும்வழி சொல்வேன் கேள்!

உபதேசிக்கிறேன் வருணஜப மந்திரத்தை;
உச்சரிப்பாய் இதனை இடைவிடாது” என

உபதேசம் பெற்றான் சுனச்சேபன் அவரிடம்;
உச்சரித்தான் வருண ஜபமந்திரத்தைத் விடாது.

தோன்றினான் மனம் கனிந்த வருண தேவன்;
தேற்றினான் அழும் பிள்ளையைக் கனிவோடு.

“யாகம் பூர்த்தி ஆகிவிட்டது இப்போது – எனவே
யாகப் பசுவுக்கு இப்போது விடுதலை” என்றான்.

தானே அவிழ்த்து விட்டான் கட்டியிருந்த கயிற்றை;
தானே நீக்கி விட்டான் மன்னனின் ஜலோதர நோயை.

ஜாண் பிள்ளை ஆனாலும் ஆண் பிள்ளை அல்லவா?
விண்ணப்பித்தான் சிறுவன் அந்த அவையோரிடம்;

“யார் என் தந்தை என்று கூறுவீர் அவையோரே!
யார் என் தந்தையோ அவரே இனி எனக்கு கதி!”

“ஆவாய் அஜீகர்தனின் மகன்” என்றனர் சிலர்.
“ஆனாலும் பெற்ற தந்தை அவன் அல்லவா?”

“ஆவாய் மன்னன் அரிச்சந்திரனின் மகன் இனி நீ!
ஆனலும் விலைக்கு வாங்கியவன் அவன் அல்லவா?”

“ஆவாய் வருணனின் புதல்வன் இனிமேல் நீ!
அச்சத்தைப் போக்கியவன் அவன் அல்லவா?”

“அன்னமிட்டவனும், கல்வி தந்தவனும் தந்தை;
அச்சம் நீக்கியவனும் ஆவான் ஒருவனின் தந்தை.

மரண பயத்தை நீக்கியவன் வருண தேவன் – எனவே
மறு எண்ணம் வேண்டாம் வருணனே சிறுவன் தந்தை!”

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K . ராமன்

7#17a. “Who is my father?”

Sage ViswAmitra became very angry. He walked to the boy bound to the sthambam and told him,

” Child! I know a way to evade this difficult situation. I shall teach you the Varuna japa mantra. Recite it non-stop with full devotion. You will come out of this difficult situation unscathed!”

The boy learned Varuna japa mantra and started chanting it with all his energy and concentration. Varuna Devan was very pleased by this and appeared in person in the yAga sAlA.

He consoled the terror stricken boy chanting the mantra amidst sobs and tears. Varuna Devan then said, “Now that the yAgam has been completed, the sacrificial animal is set free.” He himself untied the boy from the pillar. He also cured the jalodaram of King Harischandra and disappeared from there.

The boy now asked a question loud and clear,”Oh wise men of this sabha! Please tell me who is my father now? I shall seek refuge in him!”

There was a murmur in the yaaga sAlA since people expressed different opinions and and gave different reasons.
Some of them said,”Ajeegartan is the father. After all he was the man who has fathered this boy”. Some others said, ” King Harischandra is the father since he had purchased the boy paying one hundred milch cows.”

Yet others said,” Varuna Devan is the father of this boy. He removed the terror of death from the boy’s heart. Five types of people can be called the father of a boy – one who has fathered him, one who has purchased him, one who gave him food, one who gave him education and one who removed the fear from his heart.

There is no need to think any more since Varuna Devan is one who removed the fear from the heart of this boy and is the father of this boy now.”

 
bhagavathy bhaagavatam - skanda 1

1#13a. ஊர்வசியின் காதல்

சாயுஜ்ய முக்தி அடைந்தான் சுத்யும்னன்;
சக்கரவர்த்தி ஆனான் பூவுலகில் புரூரவன்.


ஆணழகன், குணவான்; அறிவு மிகுந்தவன்;
ஆட்சி செய்து வந்தான் அரசியல் நெறியுடன்.


பிரசித்தி பெற்றது அவன் ஆண்ட நகரம்
பிரதிஷ்டா என்ற பெயரில் உலகெங்கும்.


யாகங்கள் செய்தான் நாட்டு நன்மைக்காக;
தானங்கள் தந்தான் மக்கள் நன்மைக்காக.


பரவியது புரூரவன் புகழ் உலகமெங்கும்;
பறி கொடுத்துவிட்டாள் ஊர்வசி மனத்தை!


நடனம் ஆடினாள் சுவர்க்கத்தில் – ஆனால்
நாடியது மனம் பூவுலகத்துப் புரூரவனை!


பிரம்மன் அறிந்தான் அவள் மனத்தை;
“சுரர்களை விரும்ப வேண்டியவள் நீ!


மண்ணுலக மன்னனுக்கு ஏங்குகின்றாய்;
விண்ணுலகில் வாழும் தகுதி இழந்தாய்!


மண்ணுலகம் செல்லக் கடவாய்!” என்றான்;
எண்ணம் நிறைவேறிடச் சென்றாள் பூவுலகு.


கந்தர்வ மணத்தில் கலந்தாள் புரூரவனுடன்;
இந்த வரைமுறைகளை விதித்தாள் ஊர்வசி.


“இன்று போலவே என்றும் அன்பைப் பொழிவீர்!
இனி நான் தரும் நெய்யை மட்டுமே உண்பீர்!


சலங்கைகளைத் தந்துவிடுகின்றேன் உம்மிடம்;
சலங்கைகள் களவு போகலாகாது ஒருபோதும்!


காணக் கூடாது நான் உம்மை நிர்வாணமாக!
காணக் கூடாது உம்மை வேறு பெண்ணுடன்!


கடைப் பிடிக்க வேண்டும் இவற்றை நீர்!
தடைப் பட்டால் சென்று விடுவேன் பிரிந்து”


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


1#13a. Oorvasi’s infatuation

Sudhyumnan attained sAyujya mukthi and his son Purooravan became the new king. He was handsome, intelligent and good-natured. He ruled well and very wisely.


Soon the name of his city PrathishtA as well as his fame had spread all over the world. He did several yAgams for the welfare of his country and charity work for the welfare of his citizens.


The Celestial dancer Oorvasi heard about king Purooravan and got infatuated with him. She lived and danced in the Heaven but her mind had got hitched to this young king on the earth.


Brahma came to know about this and cursed Oorvasi thus, “You are an apsaras and you must love only the DEvas! But you are in love with a mere mortal and so you are not qualified to live here anymore. Go down to the earth now!”


Oorvasi was very happy to be sent down to the earth. She married king Purooravan in Gandharva style ( wedding on their own free will) and laid several conditions to the king.


“Your love for me should never diminish. Henceforth you will eat only the ghee I give you and nothing else. I shall leave my ankle bells with you. Make sure they are never lost nor get stolen.


I must not see you stark naked at any time. I must not see you with another woman at any time. If you agree for all these conditions, I will stay with you. If any one of these is violated, I shall leave you immediately.”


The king Purooravan agreed to all these conditions and they enjoyed all the heavenly pleasures on the earth itself.


 
Kanda purANam - asura kANdam

25. விந்திய மலை


திருத்தலங்களைத் தரிசித்த அகத்தியர்
கருவம் மிகுந்த விந்தியத்தைக் கண்டார்.


“பொதிய மலை செல்ல வேண்டும் யான்
ஒதுங்கி வழி விடுவாய் விந்திய மலையே!”


“சந்திரனும், சூரியனும் செல்லாதபடி
விந்தையாக வளர்ந்து நிற்கின்றேன்.


எந்தக் காரணத்துக்கும் வழி விடேன்!
வந்த வழியே திரும்பிச் சென்று விடுவீர்!”


குறுமுனி நகைத்தார் இம்மொழியைக் கேட்டு.
இறைவனின் திருவடியை நெஞ்சில் பதித்தார்.


நீண்ட கரத்தை மலை உச்சிமேல் வைத்து
மீண்டும் அழுத்தினார் மலையைக் கீழே!


பாதாளத்துக்கு இறங்கி விட்டது மலை.
ஆதி சேடன் நிலையை அடைந்தது அது.


புத்தி கெட்டது ஆணவம் கொண்டதும்!
புத்தி வந்தது அதன் ஆணவம் அழிந்ததும்!


“பிழையைப் பொறுத்து என்னை மன்னியும்.
பழைய நிலையை நான் அடைவது எப்போது?”


“மீண்டும் நான் இந்த வழிவே வரும் போது
மீண்டும் நீ உன் உயர்நிலை அடைவாய்!”


விந்தியம் மறைந்து விட்டது நிலத்துக்குள்.
விண்ணவர் மலர் மழையைப் பொழிந்தனர்.


கையைச் சுருக்கிக் கொண்டார் அகத்தியர்.
பையச் செல்லலானார் பொதிகை மலைக்கு.


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


2#25. Vindhya Giri gets pushed down.

Sage Agasthya visited all the holy places on his way and finally reached the Vindhya Giri. He requested the Vindhya Giri, “I am on my way to the Pothigai Giri. Please let me go past you!”.


Vindhya replied arrogantly,” I can now stop the passage of The Sun and The Moon. I will not give way to you nor let you pass by. You may now go back to where you are coming from!”


Sage Agasthya was undaunted by this rude reply. He stretched his hand so long that now he could place it on the top of the Vindhya Giri. He pushed it down with all his might.


Now the Vindhya Giri descended to the PAtAla and was in the same level as Adhiseshan. It felt humiliated and became humbler. It begged to the Sage, “Please forgive me and my arrogance. When will I regain my original place of glory?”


“When I come back here again, you will rise to your original place of glory” the Sage replied to the now subdued mountain Vindhya Giri..


Vindhya Giri got pushed to PAtAla. The Devas rained down flowers from the sky. The Sage Agasthya shrunk his hand to its original size and went on his way to Podhigai giri.
 
64 Thiru ViLaiyAdalgaL

திருவிளையாடல்கள். முதற்பகுதி. மதுரைக்காண்டம்.

# 1 இந்திரன் பழி தீர்ந்தது.


# 1 (d). பொற்றாமரைக் குளம்.


தீர்த்தக் கரையில் தானே முளைத்து எழுந்த
மூர்த்தி சிவலிங்கத்தைக் கண்டான் இந்திரன்;

காணாத புதையலைக் கண்ணுற்றவன் யாரும்
பேணாத மூர்த்தியைப் பேணலுற்றான் அவன்.



கண்கள் பனிக்க, நாத்தழுதழுக்க, தன் மனப்
புண்கள் மறையப் பெரும் மகிழ்ச்சியுற்றான்.

தேவர் உலக மலர்களால் அர்ச்சித்து அந்த
தேவர் பிரானை வழிபட விழைந்தான்.



தேவர் உலகின் திவ்விய மலர்களைத்
தேவன் பூஜைக்குக் கொணரப் பணித்தான்.

தேவத் தச்சன் விஸ்வகர்மாவை வருமாறு
தேவர்கோன் இந்திரன் உடனே பணித்தான்.



“மண்ணில் எவரும் கண்டறியாத அரிய
திண்ணிய விமானத்தை உருவாக்குவாய் நீ!

அன்பருக்கு அன்பன் ஆகிய நம் ஐயனுக்கு
அன்புடன் அளிக்க விழைகின்றேன் நான்!”



தாமரைக் குளத்தில் சென்று தேடினால்,
தாமரை மலர் ஒன்று கூட இல்லையே!

ஏங்கிய இந்திரனின் வாடிவிட்ட மனப்
பாங்கினை உணர்ந்தான் மாதொரு பாகன்.



நொடியில் தோன்றின அத்தாமரைக் குளத்தில்,
வடிவமைந்த வாடாத பொற்றாமரைகள் பல!

உள்ளக் களிப்புடன் நீராடி எழுந்தவன்,
அள்ளிக் கொண்டான் பறித்த மலர்களை.



எட்டு யானைகள், முப்பத்திரு சிங்கங்கள்;
எட்டெட்டு சிவகணங்கள் தாங்கும் அழகிய

மாணிக்க விமானத்தை அர்ப்பணித்தான்
மாணிக்கவாசகர் வணங்கிய இறைவனுக்கு.



பொற்றாமரைக் குளத்தில் தானே பறித்த
பொற்றாமரை மலர்களால் அர்ச்சித்தான்;

“அத்தா! உன்னை தினம் தவறாமல் வந்து
பித்தா! பிறைச் சூடி என வாழ்த்த அருள்வாய்!”



“சித்திரையின் முழு நிலவில் செய்யும் பூஜை
ஒத்திருக்கும் நித்தம் செய்திடும் பூசையினை!.

தப்பாமல் வந்து நீ இங்கு எனைத் தொழுவாய்.
இப்போதே பெறுவாய் இழந்தவை எல்லாம்!”



ஐயன் அருள் இருந்தால் நிகழ்ந்திடும்,
செய்யற்கரிய பல வினோத அற்புதங்கள்.

மின்னொளிர் மேனியும் பொலிவும் பெற்று,
விண்ணுலகேகினான் விண்ணவர் கோமான்.



வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.



1(d). THE POND OF GOLDEN LOTUS.



Indra saw a holy theertham in Kadambavanam.He saw a swayambu Lingam on the bank of the theertham.He felt happy that his l
ong search for mercy of Siva had not been in vain.He had at last found the rare moorthi, which he had been looking for!



He shed copious tears of joy. All his sense of shame and pain left him instantly. He wanted to do puja to the Sivalingam with the divine flowers brought from heaven.



He sent some of his attendants to bring the flowers from Swargam and also command the Deva carpenter Viswakarma to come down to earth immediately. Indra ordered Viswakarma to make the most unique vimaanam for the temple of the Sivalingam.



He wanted to do puja with the lotus flowers of the pond and was disappointed not to find even a single flower in the pond. Lord Siva took pity on Indra and made the most exquisite golden lotuses bloom in the pond. They were fragrant and would never wither away!



Indra took his holy dip in the pond. He gathered the golden lotus flowers and did Siva puja. The vimaanam made for the temple had eight elephants, thirty two lions and sixty four Sivaganaas supporting the vimaanam carved out of Carbuncle.



Lord Siva was immensely pleased by Indra’s bhakti. Indra wanted to come there everyday to do similar puja. But Lord told him that the puja done on the full moon day of the Chaitra month was equal to the puja performed everyday for one whole year.



He blessed Indra to regain everything he had lost due to the brahmahathi dosham. Indra was restored his original glory and went back to swargam happily.

When God is on our side, who can be against us?



 

Latest posts

Latest ads

Back
Top