• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

A poem a day to keep all agonies away!

bhagavathy bhaagavatam - skanda 7

7#17b. வசிஷ்டரின் தீர்ப்பு

“கூறுவேன் இப்போது வேத ரீதியாக நான்;
சிறுவனின் தந்தை உண்மையில் யார் என்று!

அன்பு உள்ளவனே ஒரு நல்ல தந்தை – மகனைப்
பொன்னுக்கு விற்பவன் அல்ல ஒரு நல்ல தந்தை.

விற்றதோடு நிற்கவில்லை அஜீகர்த்தன் – தான்
பெற்ற மகனையே வெட்டவும் துணிந்தான் அவன்.

அஜீகர்த்தன் அல்ல இந்தப் பிள்ளையின் தந்தை!
அரிச்சந்திரன் செய்ததைக் காண்போம் இனிமேல்.

விலைக்கு வாங்கினான் யாரோ பெற்ற மகனை;
இலட்சியம் அவனை யாகத்தில் பலி கொடுப்பது.

அன்பும், இரக்கமும் இல்லாத அரிச்சந்திரன்
ஆகமுடியாது இந்தச் சிறுவனின் தந்தையாக!

விடுதலை செய்தான் சிறுவனை வருண தேவன்;
விடுதலை செய்தது கொண்ட அன்பினால் அல்ல.

மகிழ்ந்தான் மானசீக பூஜையினால் வருணன்;
அவிழ்த்தான் கட்டுக்களை மன மகிழ்ச்சியால்.

ஆகமாட்டான் வருண தேவன் தந்தையாக;
ஆகமுடியும் விஸ்வாமித்திரர் தந்தையாக!

நாடினான் செல்வத்தை அஜீகர்த்தன்;
நாடினான் ரோகநிவர்த்தியை மன்னன்;

நாடினான் புகழ்ச்சியை வருண தேவன்;
நாடவில்லை எதையுமே விஸ்வாமித்திரர்.

உபதேசம் செய்தார் வருண மந்திரத்தை;
உயிரைக் காத்தார் அப்பாவி சிறுவனின்!”

ஒப்புக் கொண்டது சபை இந்தத் தீர்ப்பை!
தப்பாக முடியுமா வசிஷ்ட முனிவரின் தீர்ப்பு?

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K . ராமன்

7#17b. Vasishta’s opinion

Sage Vasishta came forward to give his opinion in this matter. He said, “I shall answer this question with the help of Veda sAstras. I shall tell you who can be considered as the father of this boy now.

A father must have love for his offspring. A man who is willing to sell his son for wealth and also is ready to kill him with his own hands can never become his true father!

King Harischandra bought this boy by paying his father well. But his aim was not to bring up the child well but to offer him to Varuna in a yAgam in the palce of a sacrificial animal. He can never be the true father of this boy since he has neither love nor sympathy for this boy.

Varuna Devan untied the boy and set him free. It is because he was pleased with the devotion of the boy and his chanting of Varuna Japa mantra. So he too can’t be a true father to this boy.

Ajeegartan wanted wealth. Harischandran wanted to get rid of his disease. Varuna Devan wanted to be praised and hailed. But ViswAmitra did not want anything from the boy.

ViswAmitra can be considered as the true father of this boy. ViswAmitra’s heart was filled with love and sympathy for this poor lad. He did the upadesam of the Varuna japa mantra voluntarily and saved the boy’s life.”

Everyone agreed to this opinion! “How can the opinion of Vasishta be wrong?”

 
bhagavathy bhaagavatam - skanda 1

1#13b. காற் சதங்கை

வாக்குத் தந்தான் புரூரவன் ஊர்வசிக்கு;
வாழ்ந்து வந்தனர் சுக போக வாழ்வினை.

மோஹம் ஆட்சி செய்தது புரூரவனை!
போகம் திகட்டவில்லை புரூரவனுக்கு!

கைவிட்டான் தன் அரசியல் கடமைகளை;
கைவிடவில்லை தந்த வாக்குறுதிகளை!

உல்லாச சல்லாபமே வாழ்வானது – களை
இல்லை ஊர்வசி இல்லாத இந்திரசபையில்!

இந்திரன் திட்டம் தீட்டினான் ஊர்வசிக்காக!
இந்திரன் பணித்தான் சில கந்தருவர்களிடம்,

“உயிரினும் உயர்ந்தது ஊர்வசிக்குச் சலங்கை;
துயருற்றுத் திரும்புவாள் களவாடி விட்டால்!”

சலங்கையைக் கவர்ந்தனர் இரவு நேரத்தில்;
சலங்கை ஒலித்தது களவாடிச் செல்கையில்.

தூக்கம் கலைந்து விட்டது ஊர்வசிக்கு – பிறகு
துக்கம் விளைந்தது சலங்கை தொலைந்ததால்!

சலங்கையை மீட்க விரைந்தான் புரூரவன்;
சமயம் இருக்கவில்லை ஆடைகள் அணிய!

மின்னல் தோன்றியது கந்தருவர் சதியால்!
இன்னல் தோன்றியது நிர்வாண நிலையால்!

வரை முறைகளை மீறி விட்டான் புரூரவன்;
வாக்குறுதியைப் பறக்க விட்டான் புரூரவன்.

போகமும், காமமும் மறைந்தே போய்விடக்
கோபம் கொண்டு சென்று விட்டாள் ஊர்வசி!

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


1#13b. The ankle bells


Purooravan promised Oorvasi to obey all her conditions. She became very happy and they lived a life of endless pleasures. The king was ruled by an insatiable desire for Oorvasi and neglected his kingly duties.

As he never broke his promises, they lived life of pleasure and joy. But Indra missed Oorvasi in Heaven. He wished to bring her back to the Heaven by hook or crook.

He spoke to a few Gandharvas, “Without Oorvasi the Heaven lacks luster. We must get her back here somehow. I know she loves her ankle bells more than her dear life. If you can steal them and bring them here, she is sure to follow them and come back to us!”

The Gandharvas went to the king Purooravan’s palace at night and stole the ankle bells of Oorvasi. As the Gandharvas flew with her ankle bells, the bells made a jingling sound. Oorvasi woke up hearing that sound and told Purooravan to get back her ankle bells.

There was no time to get dressed and the king went after the sound of the bells stark naked – since the night was pitch dark anyway. But the GandharvAs created a streak of lightning and Oorvasi happened to see the streaking king in this streak of lightning – in all his natural glory!

She got very upset that he had broken his promise and also had lost her precious ankle bells. She promptly left king Purooravan. She too followed the Gandharvas who had stolen her ankle bells and went away.


 
kanda purANam - asura kANdam

26. வேடதாரி முனிவன்

சொல்லின் செல்வர் அகத்தியர் வருகையை
வில்வலனும், வாதாபியும் அறிந்திருந்தனர்.


ருசித்துப் புசிக்க முடிவு செய்தனர் அவரை,
ருத்திராக்ஷப் பூனை ஆனான் வில்வலன்.


தலையில் தொங்கும் ஜடாமுடி, திருநீறு,
பலவித ருத்திராக்ஷ மாலைகள் மார்பில்;


தரித்தான் மரவுரி முனிவனைப் போலவே;
விரைந்து சென்றான் அகத்திய முனிவரிடம்,


“என் இல்லம் வந்து அங்கு விருந்து அருந்தி
என் இல்லத்தைப் புனிதமாக்க வேண்டும்!”


ஆடாக மலைச்சாரலில் மேய்ந்திருந்த
ஆட்டுமுக வாதாபியை இழுத்து வந்தான்.


பலவித கறிகளைப் பக்குவம் ஆக்கினான்.
உளமார முனிவனுக்கு உணவாக அளித்தான்.


பொற்கலங்களில் பரிமாறினான் உணவை.
அற்புதமான இன்மொழிகள் புகன்றான்.


உணவு வகைகளைத் தூய்மைப் படுத்தி
உணவு அருந்தினார் அகத்திய முனிவர்.


வழக்கம் போல் வாதாபி அவர் வயிற்றினுள்
முழு வடிவம் பெற்று எழுந்து அமர்ந்தான்.


அவுணர்களின் சதியை அறிந்த முனிவர்
“அழிந்தொழிக வாதாபி!” எனச் சாபமிட,


கடல் குடித்த குறுமுனியின் சிறு வயிற்றில்
குடல் ஜீரணம் செய்து விட்டது வாதாபியை!


தம்பி ஜீரணம் ஆனதை அறிந்து கொண்டு
தன் சுய வடிவெடுத்தான் வில்வலன் அங்கு.


தடியால் அடித்துக் கொல்ல வந்தான் முனிவரை.
படைக்கலம் ஆக்கினார் ஒரு சிறு தர்ப்பையை!


சிவப் படைக் கலத்துக்குப் பலியானான் அவன்;
சவமாகக் கீழே விழுந்தான் அண்ணன் வில்வலன்.


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

2#26. VILVALAN POSES AS A RUSHI.


Vilavalan and VAtApi knew about the Sage Agasthya’s visit. They decided to kill him and eat him as usual. Vilvalan dressed up as a venerable Sage. He had jada in his matted hair, holy ash on his forehead, rudrAksham around his neck and maravuri in his waist.


He requested the Sage Agasthya to take food in his hut. The Sage agreed happily. He then fetched his brother vAtApi who was grazing far away – transformed to a real lamb.


Vilvalan cooked the lamb into many tasty dishes and offered them to the Sage Agasthya on a plate of gold with a great affection. VAtApi regained his form , figure and Life once he was inside the Sage Agasthya’s stomach.


Agasthyar realized the trick being played by the two wicked brothers. He cursed that VAtApi should get destroyd in his stomach. VAtApi got digested by the rushi’s jatarAgni. Now Vilavalan assumed his real form and pounced on the rushi to beat him to death.

Agasthya chanted a mantra and transformed a kusa grass into the ashtram of Siva. Vilvlan fell dead by the asthram.

 
64 Thiru ViLaiyAdalgaL

2a. முனிவரின் சாபம்.

திருவிளையாடல்கள். முதற்பகுதி. மதுரைக்காண்டம்.
# 2. வெள்ளை யானை சாபம் தீர்ந்தது.
2 (a). முனிவரின் சாபம்.

பொங்கும் புண்ணிய நதியாம் அழகிய
கங்கைக் கரையில் தானே அமைத்த,
லிங்க பூஜையைத் துர்வாச முனிவர்
தங்கு தடையின்றிச் செய்து வந்தார்.

மனம் மகிழ்ந்த மாதொரு பாகனும்
மணம் வீசும் பொற்றாமரை மலரினை,
முடியிலிருந்து கீழே விழச் செய்தார்
அடியவனுக்குத் தன் அருட்பிரசாதமாக.

கண்களில் ஒற்றி அகமிக மகிழ்ந்து,
விண்ணுலகேகிய முனிவர் கண்டார்;
வெற்றி வாகை சூடித் திரும்புகின்ற
வெற்றித் திருமகன் விண்ணவர் கோனை.

பொங்கும் மகிழ்ச்சியுடன் அவனுக்குத்
தங்களால் இயன்ற காணிக்கைகளை
அங்குள்ள அனைவரும் அளிப்பதை
இங்கிருந்து சென்ற முனிவர் கண்டார்.

தன்னிடம் இருந்த பொற்றாமரையைத்
தன் பரிசாக அவர் அளித்திடும்போது;
வெற்றியின் மதத்தினால் அறிவழிந்தவன்
பெற்றுக் கொண்டான் ஒற்றைக் கையால்!

ஒற்றவும் இல்லை கண்களில் மலரை,
வெற்றுப் பொருள் போலக் கருதி யானை
மத்தகத்தின் மீது பொற்றாமரை மலரை
வைத்து விட்டான் விண்ணவர் வேந்தன்!

பித்துப் பிடித்துவிட்டது போல் ஐராவதம்
மத்தக மலரைக் கீழே தரையில் தள்ளி;
மிதித்துக் காலால் கசக்கி மலரைத்
துதிக்கையால் தூக்கி எறிந்து விட்டது!

கனிந்தது கோபம் ஒரே வினாடியில்;
முனிவரின் சாபம் வெளிப்பட்டது.
“ஐயனின் அருட்பிரசாதத்தை ஒரு
கையால் பெற்று அவமதித்தாய் மலரை!

பாண்டிய வீரன் கைத் திகிரியில்
பந்தாடப்படும் உன் தலை ஒருநாள்!
தெய்வத் தன்மை அழிந்து ஒழிந்து,
தெய்வயானை மாறும் காட்டானையாக!”

பதறி விழுந்தனர் முனிவர் கால்களில்,
கதறிவேண்டினர் சாப விமோசனம்,
சுற்றி நின்ற மற்றவர் எல்லோரும்
கொற்றவனுக்காக மிகவும் இறைஞ்சினர்!

“இந்திரன் செய்தது தவறே ஆயினும்
இந்திரன் சாபத்தை நானே மாற்றுவேன்;
தலைக்கு வந்த அந்த ஆபத்து அவன்
தலை முடியோடு நீங்கிப்போய் விடும்!

யானையின் சாபத்தை மாற்றி அமைத்திட
யாராலுமே முடியாது என்றறிவீர்!
நூறு ஆண்டுகள் மண்ணில் வாழ்ந்தபின்
மாறும் யானையின் சாபமும் வடிவும்”

விளையாட்டு வினையாகி விட்டது கண்டீர்!
விளையாடும் இடம் தெரியாமல் ஆடினதால்!
இறையிடத்தும், குருவிடத்தும் வேண்டும்
குறைவில்லாத ஒரு பக்தி என்றென்றும்!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி .

2 (A). SAAPAM ON AIRAVATHAM.

Durvaasa has done prathishtaa of a Sivalingam on the bank of river Ganga. He did pooja to this Lingam with utmost bakti, everyday without fail. Lord Siva was pleased with the rushi’s devotion and let a golden lotus fall from his head-as a divine prasaadam to the rushi.

The rushi was overwhelmed to receive Lord’s prasaadam. He went to the Heaven and saw Indra returning victoriously after a battle with the Asuras. Everyone who had gathered there to welcome Indra was giving his some gift of love and appreciation. The rushi wanted to present the golden lotus to Indra, as a mark of his appreciation and respect.

Indra was steeped to his eyebrows in pride and received the flower carelessly with one hand. He then placed it on the head of Airaavatham. The elephant was also intoxicated with the victory in the war. It grabbed the golden lotus, threw it down and trampled on it. It then tossed away the flower with his trunk.

Rushi became insane with anger! He cursed both Indra and Airaavatham severely. “Indra! you are intoxicated by your victory. You did not receive god’s prasaadam with the honor it deserves. You will lose your head to the discus thrown at you by a Pandiya King. Airaavatham will lose its divinity and be reduced to a black wild elephant!”

Everyone fell at his feet begging for pardon. The rushi was moved to pity. He reduced the severity of his curse and said,
“Indra! The discus aimed at you by the Pandiya King will destroy your crown and not your head! But I can’t reduce the severity of the curse on Airaavatham. He will live as a black wild elephant for a hundred years. He will regain his divinity, original color and glory after the saapa vimochanam.”

We must never show disrespect to God and Guru - unless we are willing to suffer the unpleasant consequences of our thoughtless actions!

 
bhagavathy bhaagavatam -skanda 7

7#17c. முனிவர்களின் பந்தயம்

விச்வாமித்திரருடன் சென்றான் சுனச்சேபன்;
விவரம் அறிந்து திரும்பினான் லோகிதாசன்.

பிராண ஆபத்து நீங்கிவிட்டது அல்லவா?
பிரேமையுடன் வந்தான் தந்தையைக் காண.

வரவேற்றான் அரிச்சந்திரன் ஆதரவுடன்;
நரமேத யாகம் குறித்துக் கூறினான் அவன்.

விரும்பிச் செய்தான் ராஜசூய யாகம் – குல
குருவுக்குத் தந்தான் பல அரிய பரிசுகளை.

இந்திரனின் சபைக்குச் சென்றார் வசிஷ்டர்.
இந்திரன் சபைக்கு வந்தார் விஸ்வாமித்திரர்.

வியந்தார் அரிய பரிசுகளை வசிஷ்டரிடம் கண்டு!
வினவினார் ” உமக்கு இவற்றைத் தந்தவர் யார்?”

“தந்தான் அரிச்சந்திரன் அரிய பரிசுகளை!
தந்தான் குலகுரு என்னை கௌரவிப்பதற்கு!

உண்மையே பேசுபவன் அரிச்சந்திரன் – தன்னை
அண்டினோருக்கு அள்ளித் தருவதில் வள்ளல்.

இருந்ததில்லை இது போன்ற அரசன் உலகினில்!
இருக்கப் போவதுமில்லை இது போன்ற அரசன்!”

புகழ்ந்தார் அரிச்சந்திரனை வசிஷ்டர் வானளாவாக.
புகழ்ச்சி பிடிக்கவில்லை விஸ்வாமித்திர முனிவருக்கு!

“அரிச்சந்திரன் ஒரு நயவஞ்சகன் என்று அறிவேன்;
நரமேத யாகம் செய்யவில்லை வருண தேவனுக்கு!

அஞ்சாமல் பொய் சொல்வதில் நிகரற்றவன் அவன்;
வஞ்சகத்தில் ஐயமின்றித் தலை சிறந்தவன் அவன்.

பொய்யன் ஆக்குகின்றேன் அவனைப் பரீட்சித்து
மெய்யுருவம் வெளிப்படும் அப்போது கண்கூடாக.

வைக்கின்றேன் பந்தயமாக என் தவப்பயனை!
வைக்கின்றேன் பந்தயமாக என் புண்ணியத்தை!

வைக்கின்றேன் பந்தயமாக சாஸ்திர ஞானத்தை!
வையும் பந்தயமாக நீரும் இதைப் போலவே!

தோற்பவர் இழப்பர் இவை அனைத்தையும்!
தோற்கவே மாட்டேன் நான் இந்தப் பந்தயத்தில்.”

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K . ராமன்

7#17c. The wager between the sages!

Sunahsepha went away with Sage ViswAmitra. LohidAsan came to know of all these happenings and returned to his father – now that the imminent danger threatening his life in the form of the Nara media YAgam has been removed.

King Harischandra was happy to see his long lost son and told him all about the Nara medha yAgam and other things that had happened.

Now that the prince had returned safely, Harischandra wanted to perform in a very grand manner the RAjsooya YAgam. He made his guru Vasishta as the ‘hota’ or the performer of this yAgam. The yAgam was performed in a grand scale. Pleased with his guru, Harischandra showered rare gifts on sage Vasishta.

One day Vasishta went to the durbar of Indra. On the same day ViswAmitra also went to the durbar of Indra. He was impressed
by the rare and precious articles in the possession of Vasishta and asked him who had given them to him.

Vasishta elaborated very proudly ,”King Harischandra gave these to me to honour me after he performed the RAja sooya yAgam. He speaks nothing but the truth!

He showers gifts and wealth on everyone who approaches him. There has never been a king in the history of the world as great as Harischandra. There will never be one more like him!”

Vasishta praised king Harischandra sky-high! Sage ViswAmitra did not relish listening to the praise and retorted,

“I know that king Harischandra is a duper and a cheat. He promised to perform Nara Meda yAgam to Varuna Devan and cheted him without performing it. He does not bat an eyelid while telling a lie. He is very treacherous and cunning. I shall prove that he is a lier of the highest order. You will see his real swaroopam then!

I wager the fruits earned by my long and hard penance! I wager all my puNyam (good merits) earned so far! I wager all the knowledge of sAstras I have gathered so far. You too wager all your merits in the same way. One of us who loses in the wager loses all. I am sure I will not lose my all in this wager!”

 
bhagavathy bhaagavatam - skanda 1

1#13c. புறக்கணிப்பு

கந்தருவரைத் தொடர்ந்து சென்றாள் ஊர்வசி;
கந்தருவர் இட்டனர் சலங்கையை ராஜவீதியில்.

சலங்கையைக் கண்ட நிர்வாண மன்னன் - வாடி
வதங்கினான் துயரால், திரும்பினான் மாளிகை.

பிரிந்து சென்றாள் ஆடையற்ற நிலைகண்டு!
திரும்பி வருவாள் ஆடையுடன் தேடினால்!

ஊர் ஊராகச் சென்று தேடினான் ஊர்வசியை;
ஊர்வசி தென்பட்டாள் குருக்ஷேத்திரத்தில்.

கண்டும் காணாமல் இருந்தால் ஊர்வசி,
மண்டிய காதலை விண்டான் புரூரவன்.

ஊர்வசி செய்தாள் அவனை அலட்சியம்,
“பார்த்ததில்லை உன் போன்ற மூடனை!

நிலையான பிரியம் ஏது பெண்களிடம்?
புலி மானிடம் காட்டுவது பிரியமாகுமா?

மன்னன் கொள்ளலாகாது அதிகமான பிரியம்
மங்கையிடமும், கள்வரிடமும் நீ அறியாயோ?

நீதி நெறிகளை மறந்து விட்டாய் நீ!
நாட்டு நலனைத் துறந்துவிட்டாய் நீ!

கடமைகளைச் செய்து வருவாய் சரிவர;
உடனே திரும்புவாய் உன் நாட்டுக்கு!” என,

வலி உள்ளத்தைக் கிழித்தது அவனுக்கு!
வலையில் அகப்பட்ட மீனாகத் துடித்தான்.

தீராத துயரில் ஆழ்ந்தான் புரூரவன்;
மாறாத காதல் ஊர்வசி மேல் கொண்டு.

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


1#13c. Oorvasi deserts Purooravan


Oorvasi followed the Gandharvas who dropped her ankle bells in the main street of the town. The naked king saw the ankle bells and became very sad.

Oorvasi had deserted him since she had seen him stark naked. May be she would come back to him – if he went around searching for her fully dressed.

He went from place to place in search of her. He saw her in Kurukshetram but she chose to ignore him completely. The king elaborated on his deep love for her but she sneered and made fun of him.

“I am yet to see another fool like you in my life. Women can not have constant love for anyone. Will you call the feeling a tiger shows towards a deer as love?

It is said that a king should not show too much affection to women or to the robbers. You have forgotten the dharma sAstra. You have neglected the welfare of your country. Go back to your city and rule it wisely in the future!”

Purooravan could not bear the thought of going back without her. He was deeply pained and he pined for her love and affection.



 
kanda purANam -asura kANdam

27a. சிவ வழிபாடு

வில்வலனை, வாதாபியைக் கொன்றதால்
தொல்லை தந்தது பிரம்ம ஹத்தி தோஷம்;

சிவ வழிபாடு நீக்கிவிடும் தோஷங்களை
தவத்தைப் போன்றே முற்றிலுமாக!

லிங்கத்தை அமைத்து செய்த பூஜையால்
அங்கு அகன்றன அகத்தியர் குற்றங்கள்;

நாரதர் கண்டார் அகத்தியரின் செயலை,
விரைந்து சென்றார் அமரர் கோனிடம்.

மூங்கிலில் மறைந்து வாழ்ந்த இந்திரன்
முடி அவர் அடியில் படத் தொழுதான்.

மலர்கள் தந்த தன் நந்தவனம் காய்ந்து
நலம் குலைந்து நிற்பதைச் சொன்னான்.

“கொங்கு நாட்டில் உள்ள குறுமுனிவர்
திங்கள் அணி பிரானைத் தொழுகின்றார்;

பொங்கும் காவிரி நதி அடைபட்டுள்ளது
அங்கு அவர் கமண்டலத்தில் இந்திரா!

இங்கே காவிரி நதி வந்து பாய்ந்தால் உன்
சிங்கார நந்தவனம் செழிக்கும் மீண்டும்!”

“காவிரியை எங்ஙனம் பாய்ந்து வந்து
பூவிரி வனத்தை அடையச் செய்வது?”

“யானைமுகப் பெருமானைச் சரணடை!
ஏனத்து நதியைப் பாயச் செய்வார் அவர்.

காவிரி நதி பாய்ந்து பூவிரி வனம் வரும்.
ஆவியை அறுக்கும் கவலை ஒழிப்பாய்!”

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

2#27a. THE SIVA PUJA.


Vilavalan and VAtApi were the sons of Durvasa. Hence sage Agasthya killed them, he was afflicted by the Brahma haththi dosham. He had to perform lord Siva’s puja to nullify his brahma hatthi dosham.

He made a Siva Lingam and did puja regularly until all his sins were absolved. NArada was watching the puja performed by the Sage Agasthya. He rushed to meet Indra who was hiding inside a bamboo tree.

Indra prostrated to NArada. Indra spoke about his nandavanam which had dried up completely. NArada told him, ” Sage Agasthya is now carrying the river Kaveri in his kamaNdalam. If it can be somehow brought here you flower garden will become as glorious as it was before.”

“But how to make the river flow here?” was Indra’s next question. NArada told Indra, “Pray to Lord Ganesh. He is the remover of all obstacles. He will surely help you and make the river Kaveri flow here!”
 
The 64 Thiru ViLaiyAdalgaL

திருவிளையாடல்கள். முதற்பகுதி. மதுரைக்காண்டம்.
# 2. வெள்ளை யானை சாபம் தீர்ந்தது.
2 (b) சாப விமோசனம்.


அறிவு மறைந்தது, நிறம் மாறியது;
அரியயானை ஆயிற்று ஒரு கரியயானை!
மற்ற யானைகளைப் போலவே இதுவும்
சுற்றித் திரிந்தது அடர்ந்த காடுகளிலே.

நூறு ஆண்டுகள் கழிந்து சாபம்
மாறும் நேரம் வந்து விட்டது!
விதிவசத்தால் அன்று இழந்த
மதியைப் பெறும் நேரம் வந்தது.

கடம்பவனத்தில் நுழைந்தது யானை;
உடம்பில் ஏற்பட்டது ஒரு சிலிர்ப்பு!
பொற்றாமரைக் குளத்தைக் கண்டதும்
மற்றதன் அறிவுக்கண்ணும் திறந்தது!

குளத்தில் முங்கி எழுந்தவுடனேயே
ஜொலிக்கும் மேனி திரும்பிவிட்டது!
பழைய நிறமும், பழைய வடிவும்,
பழைய பலமும், பொலிவும் பெற்றது!

துதிக்கையில் முகர்ந்து எடுத்துச் சென்ற
தூய நீரால் சிவனை அபிஷேகம் செய்தது!
பொற்றாமரை மலர்களையும் பறித்து
சாற்றித் தொழுது பூஜையும் செய்தது.

“வேண்டிய வரம் தருவேன்!” என்று
ஆண்டவன் அருள் கூர்ந்த போது அது,
“தானும் தாங்க வேண்டும் ஈசனுடைய
தன்னிகரில்லாத விமானத்தை” என்றது!

“இந்திரன் ஏறும் யானை ஆயிற்றே நீ ?
இந்திரன் என்னுடைய பக்தன் ஆவான்!
அவனை நீ முன்போலத் தாங்குவதையே
அனுதினமும் யாம் விழைகின்றோம் !”

மேற்கு திசையில் அமைத்தது யானை
ஏற்றம் மிகுந்த மற்றொரு தீர்த்தம்!
ஐராவத தீர்த்தம் என்று புகழ் பெற்றது
ஐராவதத்தால் அமைக்கப்பட்ட தீர்த்தம்.

ஐராவதேஸ்வரர் என்ற லிங்கத்தையும்,
ஐராவத கணேசரையும் அழகு மிளிர;
ஐராவதத் தீர்த்தத்தின் கரையிலேயே
ஐராவத யானை அமைத்துவிட்டது!

இந்திரனின் தூதுவர்கள் வந்து வந்து,
இந்திரலோகம் வருமாறு அழைத்தும்;
தந்திரம் செய்தபடித் தங்கி விட்டது,
இந்த மண்ணுலகிலேயே ஐராவதம்!

கிழக்குப்புறத்திலும் அமைத்தது பிறகு
அழகிய இந்திரேஸ்வரரை, ஐராவதம்.
இந்திரன் மீண்டும் அழைப்பு விடவே
இந்திரலோகம் சென்றது தயங்கியபடி.

மண்ணுலகில் நிலவும் பக்தி பாவனை
விண்ணுலகில் இருப்பதில்லை போலும்!
சாபம் பெற்று வருவதும் மண்ணுலகுக்கு!
சாபம் தீர்ந்தும் விரும்புவது மண்ணுலகே!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
2 (b). Saapa Vimochanam!

Airaavatham lost its divinity, its white color, its two extra tusks and became a regular bull elephant. It forgot its past glory and roamed in the jungle just like any ordinary elephant!

A hundred years rolled by! The auspicious time of the saapa vimochanan was fast approaching. It was time for regaining its divinity and past glory. It entered Kadambavanam on that day. It felt a thrill run along its body-as if a mild electric shock was given. The moment it cast its eyes on the pond of Golden Lotuses, it remembered it glorious past.

It took a holy dip in the pond. It got back it color, form and glory. It carried water in its trunk and performed abhishekam to the Sivalingam. It plucked some lotus flowers from the pond and did archanai to the Lingam. The Lord was pleased with Airaavatham and wanted to bestow a boon on it.

Airaavatham wanted to become one of the elephants supporting the Lord’s Vimaanam. But God told it that since it was the Indra’s elephant it should serve him as before.

Airaavatham made a new theertham on the western side of the temple. It established Airaavatheswarar and Airaavatha Ganesar on the banks of the Airaavatha Theertham.

Indra learnt about the saapa vimochanam and sent messengers ordering Airaavatham to return to him. But it did not want to return to the Heaven and stayed back on earth.

Airaavatham established another Lingam, Indireswarar on the eastern side. Indra was sending repeated messengers. Finally Airaavatham went back to Indra halfheartedly.

Isn’t strange that people who get cursed come down to live on the earth till the time of saapa vimochanam. Isn’t stranger that after sapa vimochanam they want to continue to live on earth-where real bakti and spiritual saadana is possible rather than return to a life on non-stop-indulgence, arrogance and ego!

 
bhagavathy bhaagavatam - skanda 7

7#18a. வன வேட்டை

வேட்டைக்குச் சென்றான் அரிச்சந்திரன் – அங்கே
வேதனையுடன் அழும் பெண்ணைக் கண்டான்.


“யார் நீ? ஏன் அழுகின்றாய்? என்ன உன் துன்பம்?
கூறு இவற்றை! தண்டிப்பேன் அவனை” என்றான்.


“பேதை என்னை முன்னிட்டு விஸ்வாமித்திரர்
கோரத் தவம் செய்வதே காரணம்!” என்றாள்.


சென்றான் விஸ்வாமித்திரரிடம் அரிச்சந்திரன்;
“துன்பம் விளைவிக்கும் தவம் செய்யலாகாது.


நோக்கம் என்ன என்னிடம் கூறும் முனிவரே!
ஊக்கத்துடன் நிறைவேற்றுவேன் அவற்றை!”


சினம் மூண்டது விஸ்வாமித்திரரின் மனதில் – தான்
தினம் செய்யும் தவத்தைக் குலைகின்றானே என்று.


ஆக்கினார் ஓர் அரக்கனைப் பெரிய பன்றியாக;
அனுப்பினார் அதனை அரசனின் தோட்டத்துக்கு.


தினவெடுத்த பன்றி சென்றது தோட்டத்துக்கு;
வனத்தைப் பாழ் செய்து நாசம் ஆக்கிவிட்டது.


கொல்ல முடியவில்லை; விரட்ட முடியவில்லை
சொல்ல விரைந்தனர் அரிச்சந்திர மன்னனுக்கு.


அட்டஹாசம் செய்திருந்தது அசுரப் பன்றி!
அதிகச் சினம் அடைந்தான் அரிச்சந்திரன்.


அம்புகள் எய்தான் வம்பு செய்த பன்றியின் மீது.
தும்பை விட்டு விட்டு வாலைப் பிடித்தது போல!


துள்ளி ஓடியது தப்பி விட்ட பன்றி விரைந்து.
துரத்திச் சென்றான் அதனை வெகு நேரம்.


வழி தவறி விட்டது அரிச்சந்திரனுக்கு – ஒரு
செழிப்பான நதியில் தாக விடாய் தீர்ந்தான்;


வந்தார் விஸ்வாமித்திரர் கிழ அந்தணனாக;
வந்த விவரத்தைக் கேட்டறிந்தார் அவனிடம்.


“துரத்தி வந்தேன் பன்றியை விரட்டியபடி.
மறைத்து விட்டது தான் இருக்கும் இடத்தை.


பிரிந்து விட்டேன் என் படையிடமிருந்து!
திரும்பிச் செல்லவும் தெரியவில்லை வழி!


காட்டுங்கள் வழியை அயோத்தி சென்றிட;
ஈட்டுங்கள் பரிசினை மனம் விரும்பியபடி.”


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K . ராமன்


7#18. The hunting expedition


Harischandran went on a hunting expedition. He saw a young beautiful woman in copious tears. He asked her the reason for her sorrow. She replied,” Sage ViswAmitra is doing a severe penance and I suffer as a resut of that”


Now the king went to ViswAmitra and said, “No one in my country should suffer. Please do not do severe penance so as to cause pain or suffering to anyone here.”


The sage got angry with the foolish king who was meddling with his daily schedule. He created a wild boar out of an asuran and sent it to the King’s royal garden.


The boar ruined the garden and uprooted the trees and plants. It made a mess of the whole place. The sodlier guarding the garden could neither kill it not drive it away. They ran to report it to the king.


The king Harischandra rushed to the garden and went mad with anger at the sight that greeted him there. He shot several arrows at the big boar.


But the boar was agile and cunning. It shook off his arrows easily. It made him chase it all over the land and finally managed to hide itself somewhere.


By now Harischadra had got lost in the forest and also separated from his soldiers. He felt thirsty, hungry, tired and defeated. He then saw a stream of fresh water.


He quenched his thirst and was wondering how to get back to his palace before the night fell. Disguised as an old Brahmin ViswAmitra arrived there. He asked the king the purpose of his visit.


The king told him everything that had happened and added, “If you will show me the way to get out of here, I shall shower on you anything your fancy!”



 
bhagavathy bhaagavatam - skanda 1

1#14a. சுகர் (1)

பறந்தோடினாள் ஊர்வசி – புரூரவனைத்
துறந்து, மறந்து, விரைந்து மறைந்தாள்!


புத்திர வரம் பெற்று வந்த வியாசரின்
சித்தத்தை மயக்கியவள் இதே ஊர்வசி.


விண்ணில் தோன்றினாள் மின்னற் கொடியாக.
கண்டதும் கொண்டார் காமம் வியாச முனிவர்.


‘தேவ கன்னிகை போலத் தோன்றும் இவளைத்
தேவைக்கு அணுகுவதா? அன்றி விட்டு விடுவதா?


கிள்ளை மொழி பேசினாள் கிளியான ஊர்வசி;
துள்ளித் தத்தி ஆக்ரமித்தாள் அவர் கவனத்தை.


அலை பாய்ந்தது காம வசப்பட்ட அவர் மனம்;
அடக்க முடியவில்லை அறிவால் மனத்தை.


அரணியில் பூட்டினார் தீக் கடைக் கோலை;
அக்னியை உண்டாக்க முயற்சி செய்தார்.


மோகத்தினால் வெளிப்பட்ட அவரது வீரியம்
வேகமாகச் சிதறியது அரணிக் கட்டையில்!


தோன்றினான் ஒரு மகன் அரணியிலிருந்து!
தோற்றம் இருந்தது வியாசரைப் போலவே!


தீக் கடைக் கோலிலிருந்து தோன்றிய – தன்
தூய மகனை எண்ணி வியந்தார் வியாசர்.


வெளிப்பட்ட அக்னி எரிந்தது கொழுந்து விட்டு,
வெகுவாக யாகப் பொருளைப் பெய்தது போல.


வரத்தின் பயனாகத் தோன்றிய வியாசகுமாரன்
பிரகாசமாக ஜொலித்தான் அக்னியைப் போல!


கட்டியணைதார் மகனை; கங்கை நீரட்டினார்;
சூட்டினார் பெயரைச் சுகர் என்று அன்புடன்.


பெய்தது பூமாரி; முழங்கின வாத்தியங்கள்;
ஆடினர் தேவ மங்கையர்; பாடினர் கந்தருவர்.


வாழ்த்தினர் ரிஷிகள்; வழங்கினர் பரிசுகள்;
வீழ்ந்தன தண்டம், கமண்டலம் வானிலிருந்து!


உபநயனம் செய்வித்தார் வியாசர் மகனுக்கு;
உற்சாகமாகக் கற்றார் தன் தந்தையிடம் சுகர்.


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


1#14a. Sage Sukar


Oorvasi deserted and went away from Purooravan in a hurry. She appeared as a streak of lighting to Sage VyAsa – who had just got back to his Aashram after getting a boon for a son from Lord Siva.

VyAsa fell in love with the heavenly damsel at the very first glance. He needed a son desperately and was wondering right then how a son would be born to him without the union with a woman.


Ho wondered whether to approach the damsel or stay away from her. She now transformed in to a lovely parrot. She spoke sweetly as a parrot does and was hopping and jumping in front of him trying to get his attention.


VyAsa tried to churn fire from the wood with a stick and divert his mind from the divine damsel. But he felt aroused his tejas emerged and spilled all over the block of wood.


A son emerged from that spilled tejas! He resembled VyAsa. He was the pure son born out of the fire churning block of wood – without the association and sexual union with any woman.


He shone as brilliantly as the fire itself. VyAsa was overwhelmed by the sight of his son for whom he had longed all his life. He embraced him, bathed him in Ganga water. He named his son as Sukar.


Flowers rained from the sky. Heavenly instrument played music. The rushis blessed Sukar and gave him rare gifts. A dandam and kamandalam fell down from the sky as divine gifts to the brilliant Sukar.


VyAsa performed the upanayanam ( sacred thread ceremony) of his son. His son Sukar eagerly learned everything from his dear doting father.

 
kanda purANam - asura kANdam

27b. யானைமுகன்

யானை முகனைத் தொழுதான் இந்திரன்
ஏனைய நினைவுகள் நீங்கிய மனத்துடன்;


யானைமுகன் காட்சி தந்தான் அங்கு;
வீணாகவில்லை இந்திரனின் வழிபாடு!


“உன் வழிபாடுகள் மிக மகிழ்ச்சி தந்தன.
உனக்கு வேண்டியதை நான் தருவேன்!”


“நிலவணி பிரானை நிலவுலகில் பூசிக்க
மலர்வனம் ஒன்று அமைத்து இருந்தேன்.


கொடிய அவுணர்கள் மழையைத் தடுத்து
மடியச் செய்து விட்டனர் பூங்கா வனத்தை.


நீர் பாய வேண்டும் மலர்கள் மலர்ந்திட!
நீரே அதற்கு உதவ வேண்டும் ஐயனே!”


“எந்நீர் வேண்டும் என உரைப்பாய் நீ!
அந்நீர் தருவிப்பேன் நான் இக்கணமே!”


“நந்நீர் உள்ளது குறுமுனி கமண்டலத்தில்!
அந்நீர் கிடைத்தால் அகமகிழ்வேன் ஐயனே!”


“காவிரியைக் கவிழ்த்துப் பாயச் செய்வேன் நான்!
பூவிரி சோலையை அடையச் செய்வேன் நான்!”


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

2#27b. Indra and Lord Ganesh.

Indra contemplated on Lord Ganesh. He appeared there and spoke to Indra, “I am very happy with your worship. Tell me what is it that you want Indra!”


“I had planted a nandavanam to obtain fresh flowers to do Siva Puja. But the asuras have stopped the rain fall and the garden has completely withered. Water must flow here to revive the garden so that I can go on with my puja. You must help me in this Lord!”


“Tell me which river you want to flow here. I shall fetch it immediately.” Lord Ganesh reassured Indra. “Sage Agasthya has stored the river Kaveri in his kamaNdalam. It is the river Kaveri that I wish to flow here now.”


Lord Ganesh had made a plan immediately! “I shall topple the sage’s kamaNdalam; make the rive Kaveri flow here and revive your flower garden to its original glory!”


 
The 64 Thiru ViLaiyAdalgaL

3a. நகர் சமைப்பாய்!

திருவிளையாடல்கள். முதற்பகுதி. மதுரைக்காண்டம்.

3. ஆலவாய் கண்டது.

3. (a). “திருநகர் சமைப்பாய்!”

பாண்டிய மன்னன் குலசேகரன்
ஆண்டு வந்தான் நீதி வழுவாமல்;
மணவூர் என்னும் அழகிய தலைநகர்,
மணமிகு கடம்பவனத்துக்குக் கிழக்கே!

மணவூரில் ஓர் அரிய சிவபக்தன்,
வணிகன் தனஞ்சயன் என்பவன்;
தாண்டவம் ஆடும் ஆண்டவனிடம்
பூண்டிருந்தான் தாளாததொரு பக்தி.

வணிகம் கருதி மேற்கே சென்றவன்,
வணிகம் முடித்துத் திரும்பி இரவுப்
பொழுதைக் கழிக்க எண்ணியபடியே,
நுழைந்தான் அழகிய கடம்பவனத்தில்!

யானைகள் தாங்கும் அழகியதொரு
யாரும் காணாத அற்புத விமானத்தைக்
கண்டவன் சென்றான் அதன் அருகினில்,
கண்டான் அதிலொரு அதிசய லிங்கத்தை!

தேவர்களுக்கு உகந்த சோமவாரம் அன்று!
தேவர்கள் வந்தனர் தேவதேவனைப் பூஜிக்க;
அருகில் நின்று பூஜைக்கு உதவி செய்யும்,
அருமையான பாக்கியம் அன்று வணிகனுக்கு!

நான்கு ஜாம பூஜைகளையும் அவன்
நன்கு கண்டு மெய்ப்புளகமடைந்தான்!
பிரியா விடை பெற்றான் மறுநாள்,
அரிதாகிய சிவலிங்கேஸ்வரரிடம்!

அரசனைக் கண்டு விண்டான் இந்த
அரிய செய்தியினை வணிகன் அன்றே!
அற்புதமான அந்த விருத்தாந்தத்தைக்
கற்பனை செய்ய முயன்றான் மன்னன்!

நள்ளிரவில் கண்டான் உறக்கத்தில்,
நல்லதொரு கனவு குலசேகர மன்னன்;
சித்தர் ஒருவர் அவன் கனவில் வந்து,
இத்தகையதோர் ஆணை விதித்தார்!

“திருத்தி அமைப்பாய் கடம்பவனத்தை!
திருநகர் ஒன்றினைச் சமைத்திடுவாய்!”
உறக்கம் கலைந்தது! கனவு முடிந்தது!
அரசவை கூடியது! பொழுது புலர்ந்ததும்.

மதி மந்திரிகள் தன்னைப் புடைசூழ,
விதிக்கு அஞ்சாத ஞானியர்களுடன்,
மேற்கு நோக்கிச் சென்ற அம்மன்னன்
அற்புத இந்திர விமானத்தைக் கண்டான்.

பொற்றாமரைப் பொய்கையில் நீராடி,
பொன்னர் மேனியன் லிங்க ரூபத்தைக்
கண்ணால் கண்டவன் பக்தி மேலிட்டால்,
மண்ணில் அங்கேயே தங்கி விட்டான்!

“அடுத்துச் செய்ய வேண்டியது என்ன?
எடுத்த காரியத்தை முடிப்பதெப்படி?
இறைவன் கருணையுடன் முன்வந்து
சரியான வழி காட்டிட வேண்டும்!”

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

3 (a). KULASEKARA PAANDIYAN.

Kulasekara Paandiyan was a just king. He ruled with Manavoor as his capital city, situated to the east of Kadambavanam. Dhananjayan was a good merchant living in Manavoor. He was a staunch devotee of Lord Siva.

Once he went on a business to a city to the west of Manavoor. When he returned it was night fall. He decided to spend the night in safety and entered Kadambavanam. He saw the extraordinary Vimaanam presented by Indra. When he went closer he saw the Sivalingam in the temple.

It was a Somavar-the auspicious day for Siva pooja. Devas came down to worship Sivalingam. Dhananjayan got the rare opportunity of helping the Devas in performing the pooja which lasted all night.Next morning Dhananjayan returned home.

He could not contain his excitement. He shared the rare news with King Kulasekaran. The King was equally thrilled and tried to imagine the pooja performed by Devas in the temple. He went to sleep and had an unusual dream that night.

In his dream a siddha purusha appeared. He instructed the king to build a city around the temple in Kadmbavanam. The next morning the king shared his unusual dream with the ministers and the pundits of his court.

They all left westwards and saw the Indra Vimaanam.The king was moved to the core by the sight of the Sivalingam and the Pond of Golden Lotuses.

They all took a holy dip in the pond, performed pooja to Lord Siva and awaited further instructions.

 
bhagavathy bhaagavatam - skanda 7

7#19a. தானமும், தக்ஷிணையும்

அந்தணன் கூறினான் அரிசந்திரனிடம்,
“இந்தத் தருணம் தர்ப்பணத்துக்குரியது.


புனித நதியில் நீராடு முதலில் – பின்னர்
புண்ணியம் தேடு எனக்குத் தானம் தந்து.


காட்டுவேன் தலைநகர் செல்லும் வழியை,
கோட்டை வரை
ழி
த்துணையாக வருவேன்!”

ஆற்றில் நீராடிய அரிச்சந்திரன் கேட்டான்,
“சாற்றுங்கள் தாங்கள் விரும்பும் பரிசினை.”


“சூரிய வம்சத்தின் கொடை வள்ளல் எனக்
கூறியுள்ளார் என்னிடம் வசிஷ்டர் ஒருமுறை.


புரிய வேண்டும் குமாரனுக்குத் திருமணம்
அரிய பொன், பொருள் தந்து உதவுவாய்!”


“ஏற்பாடு செய்யுங்கள் திருமணத்துக்கு;
பிற்பாடு தருகிறேன் பொன், பொருளை!”


தவ வலிமையால் உண்டாக்கினார் முனிவர்
தக்க பருவம் உடைய மகனை, மணமகளை.


சத்தியம் செய்தான் மன்னன் அரிச்சந்திரன்,
“நிச்சயம் தருவேன் நீர் கோரும் பரிசுகளை.”


அழைத்துச் சென்றார் அயோத்திக்கு வழிகாட்டி;
“பிழைத்தேன் நான்!” என்றான் நன்றி உணர்வுடன்.


மாயப் புத்திரனுக்குச் செய்தார் விவாஹம்!
“மன்னா! மணமக்களுக்குப் பரிசு தா!” என


“என்ன வேண்டும் கேளுங்கள் அந்தணரே!
சொன்னதும் தந்து விடுவேன் உமக்கு அதை.


புகழை விரும்புபவன் நான் அதனால் அந்தப்
புகழுக்காகச் செய்வேன் எதையும்! “என்றான்.


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


7#19a. The Gift and the DakshiNa (1)


The old brahmin told Harischandra, “This time is auspicious for performing pitru tharpaNam. So take bath in this holy river and then give rich donation to me for earning puNyam! I shall show you the way and also accompany you to your capital city.”


Harischandran felt happy that he met a good Samaritan willing to help him. The king bathed in the river and then asked the Brahmin,”Please tell me which gift you wish to recieve from me.”


The brahmin said, “Already sage Vasishta had praised about you sky high. I know that you are very liberal with your gifts. I have son to be married today. I wish for enough wealth to perform it grandly.”


The king said, “Please make the arrangements and come again. I shall shower my gifts on you. Viswaamitra created a suitable groom and a bride by the power of his penance and showed them to the king.


Now King Harischandra swore to give anything the brahmin demanded as the wedding gift. The brahmin lead him back safely to his city and took leave of him. Later the wedding was celebrated to the virtual couple created by power of MAyA.


The brahmin went to the king and reminded of his promise. King Harischandra said,”Just name what you want and it shall be yours. I crave for a good name and fame. I shall part with anything to gain a good name and fame.”



 
bhagavathy bhaagavatam - skanda 1

1#14b. சுகர் (2)

குருகுலம் சென்று சகலமும் கற்ற பின்னர்,
சிறப்புடன் வாழ வேண்டும் இல்லறம் பேணி.


குருவாக்கினார் பிருஹஸ்பதியை வியாசர்;
திரும்பினார் சுகர் குருகுலம் முடிந்த பின்னர்.


திருமண ஏற்பாடு செய்ய விரும்பினார்
அருந்தவ முனிவர் குமாரி ஒருத்தியுடன்.


“கிருஹஸ்தாச்ரமம் பேண வேண்டும் நீ!
கர்மங்களைச் சரிவரப் புரிய வேண்டும் நீ!


புத்திரன் இல்லாதவனுக்கு இல்லை முக்தி.
புத்திர உற்பத்திக்குப் பின் செய்வாய் பக்தி”


சுகரிடம் சொன்னார் தந்தை வியாச முனிவர்.
சுகமுனிவரின் எண்ணமோ வேறு விதமானது!


“திருமணம் புரிந்த ஒவ்வொரு மனிதனும்
கருமமே என்று மனைவி வயப்படுவான்.


என்ன சுகம் உண்டு சுதந்திரத்தை இழப்பதில்?
என்ன சுகம் பிறக்கும் பிறர் வயப்படுவதில்?


மூத்திர, மலங்களால் நிறைந்த உடலில்
சாத்தியமா உண்மை சுகத்தைக் காண்பது?


பெண்ணின் கருவில் உண்டாகாதவன் நான்!
பெண் விஷயத்தில் இல்லை ஓர் ஈடுபாடு.


விரும்பவில்லை நான் தாழ்ந்த இன்பத்தை!
விரும்புகின்றேன் சீரிய ஆத்ம சுகத்தையே!”


“நூறாண்டு காலத் தவப் புதல்வன் நீ – சிவ
ஆராதனையின் பயனாக உதித்தவன் நீ!


மாறாக நடக்காதே என் கருத்துக்கு மகனே!
தீராது என் துன்பம் நீ மாறாகப் பேசினால்.”


“சுகம் என்னவென்று சிந்தியுங்கள் தந்தையே!
சுகம் போலத் தோன்றுவது துன்பம் அல்லவா?


“கட்டளை இடுங்கள் நன்மார்க்கத்தில் நடக்க;
கடமை உணர்வோடு அடி பணிகின்றேன் நான்.


வேறு மார்க்கத்தைக் நீர் கூறினால் நான்
வேறுபட்டு நிற்பேன் ஏற்க முடியாததால்!”


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


1#14b. Sage Sukar
(2)


Sukar learned everything in Gurukulam with Bruhaspati was his guru. After Sukar returned home from gurukula vAsam (after completing all his studies) VyAsa wanted to celebrate his marriage with the daughter of a suitable rushi.


He told his son, “There is no liberation for a person who does not have a son. So first raise a family and then you can go on to perform penance”


Sukar was not interested in getting married. He told his father, “Command me to do anything and I will do it willingly. But getting married is not in my plan. I will resist that by all means!”


VyAsa told his son Sukar, “You are the fruit of a hundred years of severe penance and devotion to Lord Siva. I can’t think of you disobeying me on any account”


Sukar presented his side of the argument. “What is the pleasure we get out of a marriage? What appears as pleasure has pain as its tail. A man loses his individuality and freedom the moment he marries a woman.


What is the fun in being always under someone’s control and be manipulated like a puppet? The human body is filled with urine and feces. What kind of pure pleasure can it offer?


I am not born out of a woman like the others. I will have nothing to do with a woman in the future also. I will enjoy the pure pleasure of self-realization and not these petty carnal pleasures.”


Sukar was equally firm in his opinion.



 
kanda purANam - asura kANdam

27c. பொய்க் காக்கை

பொங்கும் காவிரியை விடுவிக்க விரும்பி
கொங்கு நாட்டை அடைந்தான் ஆனைமுகன்;

பொய்க் காக்கை வடிவெடுத்து அமர்ந்தான்
பொய்க்காத காவிரிநீர் கமண்டலத்தின் மேல்.

பொய்க் காக்கையைப் புரிந்து கொள்ளாது
மெய்க் காக்கை என எண்ணினார் முனிவர்;

காகத்தை விரட்டக் கையை ஓங்கவே
காகம் பறந்தது! கமண்டலம் கவிழ்ந்தது!

“நிலத்தில் பாய்ந்து செல்வாய் காவேரி!”
நினைத்த மாத்திரத்தில் நிலத்தில் பாய்ந்தது!

பறவை உருவத்தை மாற்றிக் கொண்டான்!
பார்ப்பனச் சிறுவன் வடிவம் பூண்டான் ஐயன்.

சிறுவனே கவிழ்த்தான் காவிரியை எனச்
சீறிச் சினந்தார் குறுமுனி அகத்தியர்.

விரைந்து சிறுவனை விரட்டிச் செல்லவே
விரைந்தான் அஞ்சிய அந்தச் சிறுவனும்!

“குட்டாமல் விடுவதில்லை இவனை இன்று!”
எட்டாமலும் எட்டியும் திரிந்தான் சிறுவன்.

மடக்கிய கையோடு துரத்திய முனிவர்- பின்
உடல் சோர்ந்து தளர்ந்து நின்று விட்டார்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

2#27c. Agasthya and VinAyaka.


Lord Ganesh went to Kongu NAdu where sage Agasthya was staying. He assumed the form of a common crow and sat on sage’s kamaNdalam containing the river Kaveri.

The Sage did not recognize the Lord. So He tied to scare the crow away. The crow flew away after toppling down the kamaNdalam . “Flow on the earth!” the Lord commanded and the river Kaveri started flowing – rushing and gushing on the ground.

Now Lord Ganesh assumed the form of a young brahmin boy and the Sage thought, “This must be the boy who toppled my kamaNdalam and let out the river Kaveri.”

He started chasing the young boy wishing to rap him hard on his head. The boy appeared to be very scared and kept running, always just beyond the reach of the rushi. After some time the sage stopped running as he became too tired to chase the boy any more.

 
The 64 Thiru ViLaiyAdalgaL

திருவிளையாடல்கள். முதற்பகுதி. மதுரைக்காண்டம்.

3 . ஆலவாய் கண்டது.


3 (b). மதுராபுரி.


காடு கெடுத்து அதை நாடாக்குவதும்,
மேடு கெடுத்து சமநிலம் ஆக்குவதும்,

விளையாட்டல்லவே! கடின வேலைகள்!
சளைக்காமல் செய்தனர் பணியாளர்கள்!


உழைத்தனர் இரவு பகல் பாராமல்,
தழைத்தன மன்னனின் ஆணைகள்!

அழிக்கப்பட்டது அந்த அடர்ந்த காடு!
அழகிய பரப்பு ஆகிவிட்டது சமநிலம்.


சித்தர் தோன்றினார் அத்தன் கனவில்!
“சித்திர நகரினை அமைப்பாய் நீ இங்கு,

சிவாகமத்தின் வழியே தோன்றிய
சிற்ப சாஸ்திரத்தைப் பயன் படுத்தி!”


ஆலயம், மண்டபம், கோபுரம் கொண்ட,
அழகிய நகரினை அமைக்க வேண்டிய

அனைத்து விதிகளையும் அறிவித்தபின்,
அண்ணல் மறைந்தார் மன்னன் கனவில்.


சங்கமித்தனர் அங்கே புகழ் பெற்ற,
தங்க நகரை அமைக்க சிற்ப வல்லுநர்;

முன்னர் கோவிலை அமைத்துவிட்டு,
பின்னர் கோவில் நகரை அமைத்தனர்.


அரசனுக்கு ஓர் அழகிய அரண்மனை,
அரிய வடகிழக்கு திசையினிலே;

அற்புத நகரம் உருவான பின்னர்
அதற்கு சாந்தி செய்ய வேண்டுமே!


அதற்கும் அண்ணலே உதவி புரிந்தார்!
அளவுக்கு அடங்காத தன் சடைமேல்,

அமர்ந்துள்ள சந்திர கலையினைச் சற்று
அசைக்கவே கசிந்தது அதன் அமுதம்!


அமுதத் துளிகள் விரைந்து பரவி,
அமலமாக்கிவிட்டன அந்நகரினை !

அமுதக் கசிவினால் புனிதமானதால்
அமலன் விதித்த நகர் பெயர் மதுராபுரி!


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


3 (b). MADHURAPURI.


The king’s men worked day and night! They cut down the trees in Kadambavanam and leveled the ground, in order to build a new city there.The King was waiting for further instructions from God.


The same Siddha purusha appeared in the King’s dream once again. He
told the king to build the new temple city according to the concepts of Sivaagama. Famous architects and sthapthis were brought there immediately.


The temple was constructed with gopurams and mandapams. The city sprawled around the the temple. A palace was constructed for the king in the North eastern part of the city.


Once the city was ready for occupation, it needed to be purified. The king prayed to lord Siva. Lord shook the crescent moon on His head. A few drops of Amrutham spilled down from the moon. These drops spread
throughout the city and purified it.


Since the city was purified by the sweet nectar, it was named as Madurapuri.


 
bhagavahy bhaagavatam - skanda 7

7#19b. தானமும், தக்ஷிணையும்

“சத்தியம் தவறாதவன் நீ என்று அறிவேன்;
சாற்றினாய் கேட்டதைத் தருவதாக அன்று!

சதுரங்க சேனைகளுடனும், சகல சம்பத்துடனும்
புது மணமக்களுக்குக் கொடு உன் ராஜ்ஜியத்தை!”

முன் பின் யோசிக்கவில்லை அரிச்சந்திரன்;
சொன்னவுடன் சம்மதித்தான் பரிசளித்திட.

“தான பலன் தரும் தக்ஷிணை தந்தால் மட்டுமே!
தருவாய் தகுந்த தக்ஷினையை எனக்கு!” என்றார்.

“தக்ஷிணையாக என்ன வேண்டும்?” என்றபோது
“தக்ஷிணை இரண்டரை பாரம் பொன்!’ என்றார்.

புகழ்ந்தனர் மக்கள் கொடைவள்ளல் என.
புகழ்ச்சியால் மன்னன் அடைந்தான் புளகம்.

சிந்தித்தான் தான் செய்துவிட்ட தவறுகளை
அந்தப்புரத்துக்குத் திரும்பிச் சென்ற பின்பு.

“சகல சம்பத்தையும் தானம் செய்துவிட்ட பின்னர்
சகலரும் விரும்பும் பொன் மட்டும் மீந்திருக்குமா?

இரண்டரை பாரம் பொன் எப்படித் தரப் போகிறேன்?”
மிரண்டான் சிந்திக்கும்போதே மன்னன் அரிச்சந்திரன்.

“சிந்திக்காமல் செயல்பட்டு விட்டேன் – இனிமேல்
எந்த முகத்துடன் உலவுவேன் இந்த உலகினில்?

விதி வலியது என்பதில் சிறிதும் ஐயமில்லை;
மதியை மயக்கி மாய வலையில் வீழ்த்தி விடும்!”

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

7#19b. The DAnam (gift) and the DakshiNa (money) [2]

The brahmin said, “I know that you never break your promise come what may! You have promised me to give anything I wish to
possess. Please present your country with all its wealth and its army to the newly weds as your gift.”

Harischandra did not understand the significance of this statement and agreed to give away his kingdom with all his wealth and his army.

Now the brahmin said,”For your DAnam to be effective you will need to pay a DakshiNa to me!”

Harischandra asked, “How much is your dakshiNa?” and the brahmin said it would be two and half loads of gold. The foolish king agreed to this condition also.

The people standing around them sang his praise as the greatest donor on earth. He felt elated by these words of praise. The full impact of his actions became clear only after he went back to the Queens’ quarters.

“What have I committed to do in haste and without much thought? After giving away everything I possess, how will I have enough gold for paying the dakshiNa of the brahmin?

How can I face the world when I am unable to keep up my promise? Destiny is all powerful. It deludes, confuses and allows one to get trapped in difficult situations!”


 
bhagavthy bhaagavatam -- skanda 1

1#14c. சம்சாரம்

“கற்றேன் ஆத்மசுகம் பற்றி என் குருவிடம்,
கற்றேன் கர்ம வழி பற்றி தந்தை உம்மிடம்.

குருநாதரே பீடிக்கப்பட்டுள்ளார் சம்சாரத்தால்;
குருநாதரே மூழ்கியுள்ளார் சம்சார சாகரத்தில்.

ரோகி ஒருவன் வைத்தியனாக ஆகமுடியுமா?
போகி ஒருவன் முக்தியினைப் பெறமுடியுமா?

காட்டினார் மோட்சம் அடையும் வழியை குரு,
கட்டாயப் படுத்தவில்லை திருமணம் புரிந்திட.

சம்சாரம் ஆகும் ஒரு கொடிய பாம்பின் வாய்.
சம்சாரம் ஆகும் ஒரு முடிவில்லாத சக்கரம்.

சுகிக்கின்றது மலத்தில் கிடந்து உழலும் புழு.
சுகிக்கின்றான் சம்சாரத்தில் உழலும் மனிதன்!

வேத சாஸ்திரங்களைக் கற்றுத் தேர்ந்தபின்
தேவையற்ற சம்சாரத்தில் நுழைவது பிழை.

சம்சாரத்தில் சிக்கியவன் எண்ணுகின்றான்
சம்சாரத்தைவிடச் சிறந்தது வேறில்லை என

மாய வலையில் சிக்கியவன் கிருஹச்தன்;
மாய வலையிலிருந்து தப்புபவன் அறிஞன்;

கிருஹச்தாஸ்ரமத்தை அடைந்தவன் மேலும்
பிறவிப் பிணிக்கு ஊன்றுகின்றான் விதையை.

நுழைய மாட்டேன் மாயவலைக்குள் பந்தப்பட;
நுழைவர் மாய வலைக்குள் மந்த மதியினர்.

சுகர் ஒப்புக்கொள்ளவில்லை சம்சார வாழ்வினை.
சுகருக்கு எடுத்துரைத்தார் வியாச முனிவர் மீண்டும்.

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


1#14c. SamsAram


Sage Sukar continued his speech to his father VyAsa. “I learned about the Aatma sukham from my Guru Bruhaspati. But he himself is immersed deeply in samsAram. How can a person who is sick become a doctor to the others?

He taught me the way obtain liberation but he did not force me to get married. SamsAram is the mouth of a venomous serpent. It is a wheel performing perpetual motion.

The worm wriggling in filth imagines that it is enjoying life. A man in samsAram is similar to that worm. He imagines that he is enjoying his life. After mastering the VEdas and SAstrAs, why should I get into samsAra – which is the seed making one take more and more births in this world?

Anyone with a little sense will shun the samsAra, the net which gags and binds a person helplessly. I will never enter into samsAram!”

The young sage Sukar had made up his mind and was very firm in his opinion.


 
kanda purANam - asura kANdam

27d. ஐங்கரன்

மெலிந்து நலிந்த அகத்திய முனிவருக்கு
வலியத் தன் வடிவைக் காட்டினான் ஐங்கரன்.

“இச்சிறுவனைக் குட்டுவேன்!” என்று துரத்தியவர்
அச்சம் கொண்டார் ஆனைமுகனைக் கண்டதும்!

இரங்கினார்; ஏங்கினார்; மனம் கலங்கினார் – தலையில்
இரண்டு கைகளாலும் குட்டிக் கொண்டார் இடிபோல!

“ஏன் இப்படிக் குட்டிக் கொள்ளுகிறீர்கள் அன்பரே?”என
“என் பிழைகள் தீரவும், தீவினைகள் மாறவும் தான் ஐயனே!

அறிவு அணுவளவும் இல்லாது அடியேன் உம்மைச்
சிறுவன் என ஓட ஓட விரட்டினேன் குட்டுவதற்கு!”

“அன்பரே! அறியாது நீர் செய்த பிழை இது;
துன்பம் அகற்றுவீர்! மன இன்பம் உறுவீர்!”

ஆனை முகன் அடியில் விழுந்து வணங்கியவர்
தேனை அருந்தியவர் போல் உள்ளம் களித்தார்.

“இந்திரன் ஒளிந்து வாழ்கின்றான் சீர்காழியில்.
நந்தவனம் அமைத்தான் நம் ஈசனைப் பூசிக்க.

வாடிப் போயிற்று பூங்கா மழை நீரின்றி;
நாடினான் என் உதவியை நன்னீர் வேண்டி!

தேடி வந்து உம்மிடம் உள்ள காவேரி நதியை
ஓடிப் பாயச் செய்தேன் அவன் நந்தவனத்துக்கு.

எந்தையிடம் மிகுந்த அன்பு பூண்டவர் நீர்;
என்னிடத்தும் மிகுந்த அன்பு கொண்டவர் நீர்.

வேண்டும் வரம் கேளும் நான் தருவேன்!
மீண்டும் நான் தருவேன் காவிரி நீரையும் !”

“குன்றாத பக்தியினை அளிப்பீர் எனக்கு – உம்
முன் நின்று குட்டிக் கொள்ளும் அன்பருக்குத்

தண்ணருளும் தரவேண்டும் என் ஐயனே!
மண்ணில் நல்வாழ்வு நல்கிட வேண்டும்!”

அந்த வண்ணமே முனிவருக்கு அருளினான்;
நன்னீரால் நிரப்பினான் அவர் கமண்டலத்தை.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

2#27d. Sage Agasthya and Lord Ganesh


Lord Ganesh revealed himself to the sage. The sage was taken by surprise and felt very sorry for is misdeeds in chasing the Lord all over the land. He rapped his own head very hard with both his fists. The Lord asked Agasthya, “Why do you punish yourself thus?”

“I was a fool not to recognize you Lord. I chased you and wanted to rap you hard on your head. Please pardon my sins!” Sage Agasthya was filled with remorse.

“These were done unintentionally. So do feel sorry for them.” The sage fell at the feet of Lord Ganesh and praised him. The Lord spoke again, “Indra is now living in SeerkAzhi. He had planted a garden for obtaining fresh flowers for Lord Siva’s worship. The garden has withered due to the failure of rain fall.

Indra sought my help and hence I released the river Kaveri from your kamaNdalam. You are very dear to my father Lord Siva. You are very dear to me too. I shall give you any boon you wish for. I shall also give you the Kaveri water.”

“I seek nothing but undiminished bhakti. You must bless those persons who rap their heads in front of you and grant them good fortune and happiness.” The Sage made a request for the welfare of all humanity.

The Lord Ganesh agreed to this wish and also refilled the sage’s kamaNdalam with the water of the river Kaveri.


 
The 64 Thiru ViLaiyAdalgaL

4. தடாதகை

திருவிளையாடல்கள். முதற்பகுதி. மதுரைக்காண்டம்.
4. தடாதகை அவதாரம்.

மதுராபுரியினை மாண்புற அமைத்த
மன்னன் குலசேகரனின் மைந்தன்,
மலையத்துவசன் என்னும் மன்னன்
மாறாப் புகழ் பெற்று விளங்கியவன்.

மனு நீதிப்படி விளங்கியது ஆட்சி;
இனிய சொற்களே அவனது மாட்சி;
வெற்றியும், கருணையும் பெற்றவன்;
முற்றிலும் நற்றவம் பேணியவன்.

சூரிய குலத்தின் சூரியன் போன்ற
சூரசேனனின் அருமை மகளைக்
கடிமணம் புரிந்தான் காஞ்சனமாலையை,
அடிகளைத் தொடரும் அன்பு மனைவியை.

மனக்குறை ஒன்று வாட்டிவதைத்தது,
மனம் களிக்கும்படி ஒரு மகனில்லையே!
பல அசுவமேத யாகங்கள் செய்தான்;
பால் மணம் மாறா பாலகனைப் பெற!

நூறு யாகங்கள் மன்னன் செய்தால்
தீரும் தன் இந்திரப் பதவி என்றஞ்சி,
மனம் பதைத்த இந்திரன் விரைந்து
மன்னனுக்கு அறிவுரை தந்தான்.

புத்திரனைபெறச் செய்யவேண்டியது
புத்திர காமேஷ்டி யாகம் என்பதை,
மலையத்துவச மன்னனிடம் கூறி
இமையோருலகம் சென்றான் அவன்.

புத்திர காமேஷ்டி யாகம் செய்தால்
உத்திரவாதம் உத்தம மகன் என்று,
யாகம் செய்தவனுக்குக் கிடைத்தது
யாககுண்டத்திலிருந்து ஒரு குழந்தை!

மூன்று வயதுப் பெண் குழந்தையாக,
முத்துமாலைகள் , வளைகள் குலுங்க
மூவுலகின் அன்னை உமாதேவியார்
மூன்று தனங்களுடன் வெளிப்பட்டாள்.

கோரியதோர் ஆண் மகன் அரசாள!
சீரிய பெண்குழந்தை! மூன்று தனங்கள்!
விசன மன்னனின் செவிகளில் விழுந்தது
அசரீரி ஒன்று மகேசன் அருளால் அன்று.

“மகனைப் போலவே மகளை வளர்ப்பாய்!
தடாதகைப் பிராட்டி எனப் பெயரிட்டு!
மகன் கற்க வேண்டியதெல்லாம் உன்
தடாதகைக்கும் நீ கற்றுத் தருவாய்!

தகுந்த கணவனை அவள் கண்டதுமே
மிகுந்திருக்கும் இருதனங்கள் மட்டுமே!”
மகேசன் ஆணைகளால் மனஅமைதி
மலையத்துவச பாண்டிய மன்னனுக்கு!

புராணங்கள், வேதங்கள், ஆய கலைகள்,
பரியேற்றம், கரியேற்றம், தேரோட்டம்
வேல், வாள், வில் அம்புப்பிரயோகம் என
வேல் விழியாள் கற்றாள் அனைத்தையும்.

தகுந்த பிராயம் அடைந்த மகளுக்கு
மகுடம் சூட்டி மகிழ்ந்தான் மன்னன்.
கன்னி அரசி செங்கோலோச்சினாள்,
கன்னி நாடு ஆயிற்று மதுராபுரியும்!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

4. THADAATHAGAI.

Kulasekara Paandiyan’s son was the famous king Malaydhwajan.He ruled the country in a just manner.He married Kanchanamaalai, the beautiful daughter of king Surasena of Sooriya Vamsa.

Like many other kings we keep reading about, this king also did not have any child! He wanted a strong son, who would rule the country after him. Malayadhwajan performed several Aswameda yaagam. If the King completed 100 aswameda yaagam, he would become the new Indra.

Indra advised the king to perform Putra kaameshti yaaagm instead. The King and Queen performed Putra kameshti and got a child from the yaaga kundam.

It was a beautiful three year old girl child adorned with pearls, bangles and many ornaments. She also had three breasts!
The king and queen were very upset that they got a daughter instead of a son and that too one with three breasts. Then they heard an asareeri (aakaashvani) by Lord Siva’s grace.

” Bring up your daughter as you would, your son! Name her as Thadaathagai and teach her everything a king needs to know. When she meets the right person destined to wed her, her third breast will disappear!”

The girl was brought up like a prince rather than a princess.She learned Vedas, Puranas, 64 fine arts, horse riding, elephant riding, chariot riding and the mastery over all kinds of weapons of war.

When she attained the proper age, she was crowned and became the virgin queen of Maduraapuri.

 
bhagavathy bhaagavatam - skanda 7

7#19c . தானமும், தக்ஷிணையும்

வாடிய முகத்தைக் கண்டாள் சந்திரமதி;
நாடினாள் முகவாட்டதின் காரணம் அறிய.

“லோஹிதாசன் திரும்பிவிட்டான் நம்மிடம்;
லோகம் புகழும்படிச் செய்தீர் ராஜசூய யாகம்;

மனக் கவலையின் காரணத்தைக் கூறுங்கள்
மனைவி என்னிடம் மனம் விட்டு!” என்றாள்.

கூறவில்லை காரணத்தை அரிச்சந்திரன்,
உறங்கவில்லை இரவு பல சிந்தனைகளால்.

அரசசபை சென்றான் மறுநாள் காலையில்;
விரைவாக வந்தார் விஸ்வாமித்திர முனிவர்.

“தரவில்லை தானம் செய்த ராஜ்ஜியத்தை;
தரவில்லை மேலும் பேசிய தக்ஷிணையை.

சத்தியம் தவறாத மன்னன் என்பவன் இவ்வாறு
நித்தியம் அலைக்கழிக்கலாகுமா முனிவனை?”

“தந்து விடுகிறேன் ராஜ்ஜியத்தை இப்போதே!
தந்து விடுகிறேன் சகல சம்பத்துடன் நாட்டை!

உடுத்திய துணியோடு வெளியேறுகிறோம்!
கிடைத்ததும் தருவேன் தக்ஷிணைப் பொன்னை!”

வெளியறினான் மனைவி, மகனுடன் மன்னன்;
வழியில்லை இனிக் காட்டில் வாழவேண்டும்!

அழுதனர் நகர மக்கள் மன்னனைக் கண்டு!
தொழுதனர் மன்னன் மேல் பரிவு கொண்டு!

வருந்தினர் அந்தணர் முனிவர் செயலால்;
கருதினர் இது தெய்வத்தின் வஞ்சனை என.

தடுத்தார் விஸ்வாமித்திரர் அரிச்சந்திரனை;
“கொடுக்கவில்லை நிர்ணயித்த தக்ஷிணை!

வருத்தம் உண்டு நீ செய்த தானத்தில் என்றால்
வார்த்தை ஒன்று கூறு நீ ஒரு அசத்தியன் என்று.

“பொய் கூறினேன்” என்று நீ ஒப்புக் கொண்டால்
மெய்யாகத் தந்துவிடுவேன் நீ தந்த அத்தனையும்!”

கூப்பிய கரங்களுடன் நின்றான் மன்னன்;
செப்ப விரும்பவில்லை தான் பொய்யன் என்று.

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

7#19c. The Gift and the DakshiNa (3)

Queen Chandramati saw her crestfallen husband. She could not guess the cause of his sadness.

She told him, “Our son prince LohidAsa has come back to us. You have just performed RAja sooya yagnam very grandly. What is the cause of your sorrow? Please share it with me as I am your lawfully wedded wife”

But Harischandra did not reveal the cause of his sorrow. Nor did he sleep throughout that night – torn asunder by random thoughts.

The next day he went to his durbar. ViswAmitra came there and said,”You have not handed over your country which you have already gifted to my son. You have not given my dakshiNa which you had agreed to give me.

People praise you as the upholder of dharma and satyam. Can you make an old man walk up and down to get the gifts promised to him by you?”

Harischandra said, “I shall give away my kingdom with all the wealth in it now. Kindly give me some more time to procure enough gold to pay for your DakshiNa.”

He went away from the palace with his queen and son in the commoner’s clothes they were wearing. The citizens broke down and cried pitying the king and his royal family.

The brahmins were ashamed of the rudeness shown by ViswAmitra. People said it must be the treachery of gods that subjected their good king to such deep troubles.

But ViswAmitra would not let Harischandra walk away without paying his dakshiNa.

He told King Harischandra,” If you feel sorry for you hasty actions, just say one word and admit that that your are not truthful to your words. I shall return to you everything you have offered me!”

But Harischandra stood with his palms joined in anjali mudra and would not admit that he was a liar.

 
bhagavthy bhagavatam - skanda 1

1#14d. வியாசரின் விளக்கம்

“இல்லறம் புகுந்து இன்பம் துய்த்த போதிலும்
நல்ல கதி அடையலாம் பற்றின்றி வாழ்ந்தால்.

நேர்மையான வழியில் பொருள் ஈட்டுபவன்;
ஆர்வத்துடன் கர்மங்களைச் செய்கின்றவன்;

ஆசார சீலன்; உண்மையே பேசுகின்றவன்;
பேஷாக விடுபடலாம் சம்சாரத்திலிருந்து

ஜீவிக்கின்றனர் மனிதர்கள் இவனை நாடி;
ஜீவனம் தருகின்றான் அன்புடன் அவனும்.

பிரம்மச்சாரி, சந்நியாசி, வானப்ரஸ்தன்
பிற்பகலில் நாடுவர் இவனை உணவுக்கு.

இல்லறம் என்பதே நல்லறம் ஆகும்;
இதனிலும் சிறந்தது இல்லை வேறு.

இனிய இல்லறத்தில்.வசிஷ்டரைப் போன்ற
முனிபுங்கவர்களும் வாழ்ந்து வந்துள்ளனர்!

வேதங்கள் விதித்த கர்மங்களைச் செய்பவன்
சாதிக்க முடியாதது என்றும் ஒன்று உண்டோ?

சுவர்க்கமும், மோக்ஷமும் வசமாகும் அவனுக்கு!
சுலபம் ஆகும் ஆசிரமங்களைக் கிரமமாக ஏற்பது.

இல்லற இன்பம் துய்க்காதவனுக்கு இயலாது
இந்திரியங்களை வென்று சந்நியாசி ஆவது.

மூவாயிரம் ஆண்டுகள் தவம் செய்த கௌசிகன்
மேனகையிடம் மோஹம் கொள்ளவில்லையா?

மச்சகந்தி மேல் இச்சை கொண்ட பராசரர்
இச்சகத்தில் என்னை உருவாக்கவில்லையா?

பிரமன் தன் புத்திரியிடம் மோஹம் கொண்டு
துரத்தித் திரிந்து மயங்கிப் பின் தெளிந்தான்.

கன்னிப் பெண்ணை மணந்து வாழ்ந்த பின்பு
சந்நியாசி ஆகலாம் வானப்பிரஸ்தம் சென்று.”

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


1#14d. VyAsa’s explanation


VyAsa tried to convince his son Sukar by saying, “It is possible to get liberated even while living in gruhastha asramam as a householder. The one who wishes to be liberated must give up all the attachments to the worldly things.

He must earn his living by fair means. He must perform the prescribed karmaas. He must be of good conduct and speak the truth always. He can thus qualify and become eligible for liberation.

Three types of people depend on the householder- the BrahmachAri, the VAnaprasthA and the sanyAsi. The householder gives all the three of them food for the day. Being a householder is nothing to be ashamed of. Even great sages like Vasishta were householders.

Following the four Asramams namely brahmacharyam, gruhasthAsramam, vAnaprastam and sanyAsam is easier than directly
going to the later Asramam skipping the former ones.

Kousigan who did tapas got infatuated with MEnaka – since he had not conquered his indriyas or sense organs. Sage ParAshara fell madly in love with Machcha gandhi – since he had not conquered his sense organs the indriyas. Even Brahma fell in love with the daughter he himself had created.

It is by far easier to marry a young woman, live the life of a householder and then move on to the vAnaprastam and sanyAsam”


 
kanda purAnam - asura kANdam

28a. திருமுற்றம்

செல்லும் வழியில் இருந்தது ஓர் ஊர்.
சொல்லும் பெயர் திருமுற்றம் என்பது.


வைணவப் பார்ப்பனர்கள் வாழும் இடம்;
வேத, வேதாந்தங்களைக் கற்றிருந்தாலும்


நல்லறிவு பெறவில்லை அவ்வைணவர்கள்;
பொல்லாத பழவினைகளின் ஊழ்வலியால்.


பகை வளர்த்தனர் சிவனடியார்கள் மீது!
நகைக்கும்படி இழந்தனர் நல்லொழுக்கம்.


திருமுற்றத்து வைணவர்களின் தீச்செயல்களை
குறுமுனிவர் நன்கு அறிந்து கொண்டு இருந்தார்.


தெருவில் நடந்து சென்றார் கோவிலுக்கு.
திருமாலைத் தொழுதார் மனக் களிப்புடன்;


தவளைகள் போலக் கூச்சல் இடலாயினர்
அளவற்ற சினம் கொண்ட அந்த வைணவர்கள்.


“ஐயம் ஏற்று உண்டு உயிர் வாழுகின்ற
கையனுக்கு அடிமை அல்லவோ நீயும்!


விரைந்து அப்பால் சென்று விடுவாய்!
மறந்தும் மீண்டும் வந்து விடாதே இங்கு!”


“நல்வழி என்று எண்ணி வந்து விட்டேன்;
அல்ல என்பதை அறிந்து கொண்டேன்!


இனம் தெரியாமல் வந்து விட்ட என்னிடம்
சினம் கொள்ளவேண்டாம் செல்கிறேன் நான்!”

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

2#28a. Thirumutram.


Agasthya passed through a place called Thirumutram. It was occupied by Vaishnavites who had learned all the scriptures but had not developed the true JnAnam.They hated the Saivites with all their hearts.


Sage Agasthya knew about these people. He walked to the temple and worshiped Vishnu. The Vaishnavites started scolding him in unison like a bunch of croaking frogs.


“You are a devotee of Siva who lives on the alms he gets by begging. Do not come to our village. Now off you go!”

Sage Agasthya said,”I did not know about this place and so I ventured to enter. Please pardon me! I am going away now.”
 
5a. திக்விஜயம்.


திருவிளையாடல்கள். முதற்பகுதி. மதுரைக்காண்டம்.
# 5. தடாதகை திருமணம்.
5 (a). திக்விஜயம்.

கன்னி அரசியாக மனு நீதி தவறாமல்,
கன்னி நாட்டை ஆண்டாள் தடாதகை.
திருமணப் பருவம் நெருங்கியபோதும்,
திருமணம் குறித்து எண்ணமே இல்லை!


அரசியின் கவனம் முழுவதும் அன்று
அரசாட்சி, படை மாட்சி, குடிவளமை!
“கொஞ்சும் இளமையில் நிகழுமா மணம்?”
அஞ்சினாள் அன்னை காஞ்சனமாலை.


“உரிய காலம் வரும்போது நான்
உரியவரை மணப்பேன் தாயே!
உலகை வெல்லும் நேரம் இது!
மலர்ந்த முகத்துடன் ஆசி கொடு!”


நான்கு வகைப் படைகளும் புறப்பட்டன.
நான்கு திசைகளிலும் புழுதி எழுப்பியபடி!
சென்ற இடமெல்லாம் வெற்றி வாகையே!
அன்னையை எதிர்த்து வெல்ல முடியுமா?


வடபுல மன்னர்கள் தோல்வியால் துவண்டு
தொடை நடுங்கினர் அன்னையின் முன்னர்!
ரத, கஜ, துரக, பதாதிகளைத் தங்கள்
பத காணிக்கை ஆக்கினர் அம்மன்னர்.


அடுத்த இலக்கு இந்திரப் பட்டணம்.
எடுத்தான் ஓட்டம் இந்திரன் அங்கிருந்து!
தேவமாதர், ஐராவதம், உச்சைசிரவஸ்,
காமதேனு, சிந்தாமணி, கற்பகத்தருவென;


அத்தனையும் கைப்பற்றினாள் அன்னை!
அஷ்ட திக்பாலகர்களும் சரண் புகுந்தனர்.
மிஞ்சி இருப்பது வெற்றி கொள்வதற்கு
பஞ்சுப் பொதியாம் பனிமலை கைலாசம்.


காண்பதற்கே அச்சம் தரும் பூதங்கள்!
மாண்புடைய சிவகணங்கள் ஆயிரம்!
இன்னலைத் தவிர்க்க ஓடிப் போயின.
அன்னையை எதிர்க்க யாரால் முடியும்?


“என்ன விபரீதம் இது?” என மயங்கி,
அண்ணலிடம் விண்ணப்பித்தான் நந்தி;
“அஞ்சவேண்டாம் நந்திகேச்வர! இன்னமும்
மிஞ்சியுள்ளோம் நானும் நீயும்!” என்றார்!


காளை வாஹனம் ஏறி, ஆயுதங்கள் தாங்கி,
ஆளை மயக்கும் அழகிய நங்கையின் முன்
அற்புத வீரராக வந்து நின்றார், பக்தர்களின்
சொற்பதம் கடந்த கைலாசநாதர் சிவபிரான்!


அன்னையை அண்ணலும் நோக்க,
அன்னையும் அண்ணலை நோக்க;
மறைந்தது மூன்றாவது ஸ்தனம்!
நிறைந்தது பெண்மையின் குணம்.


அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என
மிச்சம் இல்லாது நாற்குணங்களும் சூழ,
தாமரை மலர் எனத் தன் முகம் சிவந்து,
தாமரைத் தண்டாய் நெகிழ்ந்தாள் தேவி!


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

5 (a). DIGVIJAYAM.


The virgin queen Thadaathagai ruled over Madhuraapuri very well. She had attained marriageable age but nothing was farther from her thoughts! She wanted to conquer all the three worlds.


Kanchanamaalai, her mother was worried that her daughter should get married soon.The virgin Queen left on a Digvijayam with her chaturanga sena.


The clouds of dust raised by the marching army made vision impossible. Nobody could stand and face the queen’s invincible army.The kings of North India were defeated and ended up paying her heavy tributes and presenting her their own horses and elephants.


Queen’s next target was Indralokam. Indra ran away in fright!. The queen took possession of all the wonderful things that belonged to Indra viz Airaavatham, Uchchaisravas, Kaamadenu, Sinthaamani, and Kapraga vruksham.


Ashtadig paalakaas surrendered to her. Her next target was Kailaash.The terrifying Sivaganaas fought valiantly but who could vanquish the Goddess Queen? They ran away in fear. Nandi got worried watching these strange developments and reported them to Lord Siva.


Siva told him, We both are still here to face the army”. He armed Himself with all his divine weapons, mounted on Nandhi and appeared before the queen herself.


The Lord and Devi looked at each other. Immediately Devi’s third breast disappeared making her a normal woman. She became feminine and shy like a real lady, all at once.


Her face blushed to resemble a fresh blooming lotus. Her legs became weak like the tender stems of lotus plants. She was no more the warrior queen who left on Digvijayam!
 
bhagavathy bhaagavatam - skanda 7

7#20. மன்னன் பட்ட கடன்

“கொடுப்பதாக கூறிய தக்ஷிணையை உமக்குக்
கொடுக்காமல் உணவருந்த மாட்டேன் நான்!


சூரிய வம்சத்தவன்; ராஜசூய யாகம் செய்தவன்;
கூறிய வார்த்தை பொய்யாகலாகாது ஒரு நாளும்.


தீர்த்து விடுவேன் உம் கடனை எவ்வாறேனும்;
தீர்க்கும்வரை இருக்காது சிறிதும் மன நிம்மதி!”


“எப்படிக் கிடைக்கும் அத்தனை பொன் உனக்கு?
தம்படிக் காசு கூட இல்லையே தம்பி உன்னிடம்!


ஒப்புக்கொள் நீ கூறியது பொய் என்று ஒரு வார்த்தை!
இப்போதே தந்து விடுகின்றேன் உன் நாட்டை உனக்கு.”


“உடல் வலு வாய்ந்தவர்கள் நாங்கள் மூவரும்;
கிடைக்கும் எமக்கு விலையாக தக்ஷிணைப் பொன்.


அடிமைகள் ஆகி விடுகின்றோம் யாம் மூவரும்;
அடைய முடியும் நீர் தக்ஷிணைப் பொன்னை!


தவணை தாருங்கள் ஒரே ஒரு மாத காலம்;
தவறாமல் தருகிறேன் தக்ஷிணைப் பொன்னை.”


காசி நகரில் கங்கை நதியில் நீராடினர் – காசி
விசுவநாதரை வணங்கி வெளியே வந்தனர்.


கூறினாள் ஆறுதல் மனைவி சந்திரமதி,
“சூரிய குலத்தவர் வாக்குப் பொய்யாகுமா?


பொய்யான வாக்கு மாய்த்துவிடும் – ஒருவன்
மெய்யான முயற்சியில் அடைந்த புகழை.


என்னை விற்றுவிடுங்கள் ஒரு அடிமையாக – அந்தப்
பொன்னைக் கொடுங்கள் முனிவரின் தக்ஷிணையாக!”


மூர்சித்து விட்டான் அரிச்சந்திரன் இதைக் கேட்டு;
மூர்சித்து விட்டாள் அதைக் கண்ட சந்திரமதியும்.


அழுதான் பாலகன், அன்னையிடம் கேட்டான்,
“அம்மா பசிக்கிறது! புசிக்க உணவு தாருங்கள்!”


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


7#20. The king is in debt!

Harischandra told ViswAmitra,”I will not eat food until I pay your dhakshiNa in gold. I belong to the Soorya vamsam. I have performed the great RAja sooya yAgam. My words will never go false. I will have no peace of mind until I pay you your dues”


ViswAmitra asked him, “How do you hope to raise the money when you are no more the king of this country? Just utter one word admiting that you are a liar and I will happily give you back your kingdom and everything else you have given me!”


Harischandra said, “I, my wife and my son are healthy and robust. We will fetch a good sum if we sell ourselves as slaves. I am sure I can pay you your dakshiNa with that money raised. All I need is one month’s time.”


The sage agreed to this condition. Harischandra, Chandramati and LohidAsa went to the city of KAsi, took bath in Ganges and had a dharshan of ViswanAtha.


Chandramati told Harischandra, “The words spoken by a king of the Soorya vamsam can never go wrong. Sell me as a slave and pay that gold as DakshiNa to the sage. I have completed my life’s mission as a wife by bearing you a good son.”


Harischandra fainted on hearing these pathetic words from his dear wife. On seeing his fall faint, she also fainted. LohidAsa got worried seeing both his parents fall faint and started crying for food.


 

Latest posts

Latest ads

Back
Top