• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

A poem a day to keep all agonies away!

bhagavathy bhaagavatam - skandA 1

1#15a. சுகரின் வைராக்கியம்

“பொறாமை உடைய மனிதனுக்கு ஏது சுகம்?
பொருள் இல்லாதவன் எனில் செல்லாக் காசு!

பொருள் சேர்த்தவனும் அடைவதில்லை திருப்தி;
விருத்தி செய்வான் சேர்த்த பொருளை மேன்மேலும்.

இந்திரனும் அஞ்சுகிறான் பதவி பறிபோகும் என!
தொந்தரவு செய்கின்றான் தவம் செய்பவர்களை!

கலைமகளால் சுகம் அடையவில்லை பிரமன்
அலைமகளால் சுகம் அடையவில்லை விஷ்ணு.

தொடரும் துக்கச் சங்கிலி ஆகும் சம்சாரம்;
கொடுக்க வேண்டும் மிகுந்த செல்வம் ஈட்டி.

வாழ வேண்டும் நயந்தும், பயந்தும் உழைத்தும்!
வயிற்றை வளர்க்க வேண்டும் குடும்பத்தினரின்.

மூடர்கள் மோஹிக்கிறார்கள் சிந்திக்காமல்,
மங்கையரின் நளின வளைவுகளைக் கண்டு.

ஆடவரின் ரத்தத்தையே உறிஞ்சுகிறார்கள்
அட்டைகள் போலவே அழகிய பெண்களும்.

அபகரிக்கிறார்கள் செல்வத்தை போகத்தால்;
அபகரிக்கிறார்கள் பலத்தை மோஹத்தால்;

அபகரிக்கிறார்கள் மனதை சாதுர்யத்தால்;
அபகரிக்கிறார்கள் அறிவைத் தம் அழகால்!

புரிகின்றான் திருமணம் நித்திரை கெடுவதற்கு.
அறிவதில்லை அவன் நித்திரை கெடுவதையும்.

துக்கத்தையே சுகம் என்று எண்ணிக்கொண்டு
மொத்தமாக மயங்குகின்றான் மனிதன்” என்றான்.

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


1#15a. Sage Sukar’s views


Sukar tried to convince his father by sharing his opinions. “The man in samsAram can never have peace of mind since he is always competing with and comparing himself with the others. The one who does not have enough wealth gets slighted. The one who has amassed wealth is always trying to multiply it. No one is really satisfied.

Even Indra is not at peace. He is constantly worrying that someone may usurp his place in the Heaven. He keeps disturbing the severe penance done by anyone on earth. Brahma did not get any happiness from his wife VAni no did VishNu get it from his wife Lakshmi.

SamsAra is a chain of misfortunes and sorrows. The married man must earn enough to provide for his family. He has to compromise on many things in order to earn the money.

The woman is no better than a leech. She sucks the life force of her man in several ways. The fool falls in love with the woman attracted by her curvaceous body.
But he hardly realizes that the woman spends his hard earned wealth in pursuit of pleasures. She loots her man’s power by her lust, she steals her man’s mind by her smartness and man’s intelligence by her beauty.

Man marries a woman only to lose his sleep. He does not realize that he is losing his sleep over petty things. Man imagines the sorrow of samsAram as its pleasure and deceives himself. “

 
kanda purANam - asura kANdam

28b. பொய்க்கோலம்

“பாம்பணி நாதனைப் பழித்த இவ்வூர்
பாம்பணைத் துயிலும் மாலின் பக்தரின்

ஆணவ மலத்தை அடக்கிட வேண்டும்!
பேண வேண்டும் இங்கே மதநல்லுறவை!”

திருமால் அடியவரின் திருக்கோலத்துடன்
திரும்பவும் சென்றார் திருமுற்றத்துக்கு.

வைணவக் கோலம் கண்டு மகிழ்ந்து அவரை
வைணவர்கள் எதிர்கொண்டு வரவேற்றனர்.

“அழகர் மலையிலிருந்து செல்கிறேன் அத்திகிரி!
தொழவேண்டும் குடிகொண்டுள்ள பெருமானை!”

திருமால் வழிபாடு செய்யத் தேவைப்படுகின்ற
திரவியங்கள் அனைத்தும் கொண்டு தந்தனர்.

“இறைவனை வழிபடும் முறைகளை நீவீர்
குறைவின்றி கண்டு களிப்பீர்!” என்றார் அவர்.

திருமால் திருமுடியில் திருக்கரம் வைத்து,
பிறையணி நாதனை மனத்தில் இருத்தியபடி,

“குறுகு! குறுகு!” என்று அவர் கூறுகையில்
குறுகிய விக்ரஹம் மாறிவிட்டது லிங்கமாக!

பொய்க் கோலத்தைத் துறந்தார் குறுமுனி;
மெய்யன்புடன் வழிபட்டார் சிவலிங்கத்தை.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

2#28b. Agasthya in disguise!


“The devotees of VishNu living here hate the devotees of Siva. This must be set right.” Agasthya decided to prove that the goal of all the religions was one and the same and all Gods are the various forms of the one and the same Supreme Being!

He dressed up like a VishNu bhakta and went to the temple again. This time he was given a very warm welcome by the group of VaishNavites.

He told them, “I am going from Azhagarmalai to Hasthi giri. I wish to worship the Lord of this temple” The VaishNavites brought all the articles needed for the puja. Sage Agasthya told them,” You may watch my puja and worship!”

He then placed his hand on the vigraham of VishNu. He contemplated on Lord Siva and commanded the vigraham to change its shape. The VishNu vigraham now miraculously transformed itself into a Sivalingam!

He changed his disguise and became his original self. He worshiped Lord Siva with great affection.



 
The 64 Thiru ViLaiyAdalgaL

5b. தேவியின் திருமணம்.

திருவிளையாடல்கள். முதற்பகுதி. மதுரைக்காண்டம்.
# 5. தடாதகை திருமணம்.

5 (b). தேவியின் திருமணம்.

“திக்விஜயத்தின் பொருட்டு நீ படையோடு
திக்குகள் அதிரப் புறப்பட்ட பொழுதிலிருந்தே,
பிரியாது உன்னையே தொடர்ந்து வருகின்றேன்,
தெரியாமல் உனக்கே என்னுடைய இன்னரசியே!

வேதங்கள் இயம்பியபடி உன்னை நான்
வதுவை புரிவேன் உன் மதுராபுரியிலே!
அடுத்த சோமவாரத்திலே நம் திருமணம்
நடக்கும் ஒரு சுப முஹூர்தத்திலேயே!”

விஞ்சும் வீராங்கனையாக திக்விஜயம் சென்று,
கொஞ்சும் குமரியாகத் திரும்பினாள் மதுராபுரி.
வழங்கினர் திருமண ஓலைகள் அரசர்களுக்கு!
முழங்கினர் திருமண முரசுகள், வாத்தியங்கள்!

எழில் கோலம் புனைந்து நின்றது அன்று
அழகிய மதுராபுரி நகரம் முழுவதுமே!
தெளித்தனர் வீதிகளில் பன்னீர், மலர்கள்!
குவித்தனர் வீதிகளில் நறுமணப் பொடிகள்!

பாவை விளக்குகள் கைகளில் தீபம் ஏந்தி,
சேவை புரிந்தன அழகிய வரிசைகளில்.
மலர்மாலைகள் குலுங்கின மணப்பந்தலில்,
மணி மலைகள் மிளிர்ந்தன மணப்பந்தலில்.

புண்ணிய நதிகளின் தண்ணிய நீரும்,
எண்ணிறந்த குடங்களில் வந்து சேர்ந்தன;
மண்ணிலுள்ளவர்கள் அனைவரும் அங்கு
கண் பெற்ற பயனைக் கண்கூடாக அடைந்தனர்.

திவ்வியமானதொரு திருமண மண்டபம்;
பவ்வியமான இரண்டு பளிங்கு யானைகள்;
பொன்னால் ஆன படிக்கட்டின் அருகிலே,
மின்னும் அழகுடன் மிளிர்ந்து நின்றன .

பளிங்குச் சுவர்களும், பவளத் தூண்களும்,
விளங்கிய மேல்நிலையில் சந்திரகாந்தம்;
நவ மணிகள் இழைத்த அழகிய பொன்னிருக்கை,
நவ மணமக்கள் அமர்ந்து மணம் புரிந்துகொள்ள.

அணிகலன்களையும், ஆடைகளையும்,
அணியத் தந்தது அற்புத கற்பகமரம்.
அறுசுவை உண்டியைக் குறைவின்றித்
தருவதற்கு இருந்தது அங்கே காமதேனு.

உவந்தவர்க்கு அவர் உவந்ததெல்லாம்
உவந்து அளித்தது சீரிய சிந்தாமணி.
விண்ணவர் உலகே நாணித் தலை குனிய
மண்ணுலக மதுராபுரி ஜொலித்தது அங்கே.

பொன்னுலகத்தினர் வந்து குவிந்தனர்;
மண்ணுலகத்தினரும் வந்து குழுமினர்;
குபேரன் கைகளாலேயே அலங்காரம்,
குவலயம் தொழும் சிவபெருமானுக்கு!

கலைமகளும், அலை மகளும் செய்தனர்
தலையாய அலங்காரம் மணமகளுக்கு!
இசைக்கருவிகள் இசைந்து ஒலிக்கவே,
இசைந்து மண்டபத்தில் அமர்ந்தனர் அவர்.

பாதபூஜை சிவனுக்கு மாலவன் கைகளால்!
வேதநாதமோ நான்முகன் வாய்மொழிகளால்!
பரந்தாமன் செய்வித்தான் பாணிக்ரஹணம்;
தாரையும் வார்த்தான் தன் தாமரைக்கையால்!

வந்தவர்க்கெல்லாம் வரிசை முறைப்படி
தந்தனர் பற்பல அரும் பரிசுப் பொருட்கள்;
சுந்தரமான ஆட்சி தொடங்கிவிட – சோம
சுந்தர பாண்டியன் ஆனான் நம் சிவபிரான்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

5 (b). THE WEDDING!

“I have been following you everywhere-ever since you left on digvijyam-unknown to you! I will marry you in Madhuraapuri on next Monday, as prescribed by the scriptures. Now go back and make all the wedding arrangements!”. Siva spoke to Devi in this manner.

The now transformed queen was welcomed by her mother and her citizens with pomp and show. Messages were dispatched to all the kings announcing the forthcoming wedding.

Auspicious musical instruments were played. Madhuraapuri became better than Swargapuri! Rose water and fragrant flowers were sprinkled on all the streets. Sandal and other sweet smelling powders was heaped in the various places.

The paavai lamps stood in beautiful rows all over the city -giving light and presenting a pretty picture.The wedding mandapam was decorated with many flower garlands and haarams made of navarathnam.

Holy water from all the rivers were brought for abhishekham. Those who lived there on that day were blessed indeed and witnessed all the glorious things and events.

The wedding mandapam was unusual. Two marble elephants stood on either side of the steps made of gold. The walls were made of marble, the pillars were made of corals and the top portion was made of Chandra kaantham. A gold aasanaa studded with navaratna was placed for the new couple to sit on.

Karpaga vruksham gave everyone fine dresses and ornaments. Kaamadenu gave all kinds of tasty foods worthy of such a wedding. Chinthaamani gave everyone everything they wished for. Swargam was put to shame by the glory of Madhuraapui.

Kuberan-the god of wealth- decorated Lord Siva while Lakshmi Devi and Saraswathi Devi decorated the bride.
The musical instruments started playing melodiously.

Lord Vishnu performed the Paada puja for Lord Siva. Brahma chanted the Vedic manthraas.Vishnu presented Devi’s hand to Siva for Paani Grahanam and performed the Dhaaraa also.

The divine marriage was completed. All the guests were presented with gifts befitting their greatness.They were treated with the exquisite wedding feast.

Lord Siva now became the King Sundara Paandian and started ruling over Madhuraapuri.

 
bhagavathy bhaagavatam - skanda 7

7#21a. சந்திரமதியின் யோசனை

துக்கப்பட்டுக் கொண்டிருந்தனர் மூவரும் – அங்கு
தூமகேது போல வந்தார் விஸ்வாமித்திர முனிவர்.

கிங்கரனைப் போல நடந்து வந்தவரைக் கண்டு
கிறங்கி மூர்ச்சித்தான் அரிச்சந்திரன் மீண்டும்.

தெளித்தார் கமண்டல நீரை அள்ளி அவன்மேல்;
விளித்தார் அவனை, ”அரிச்சந்திரா எழுந்திரு!

தந்துவிடு தக்ஷிணைப் பொன்னை இப்போதே;
தரும் வரையில் குறையாது உன் மனக்கலக்கம்!”

வந்திருந்தார் வசூல் மன்னனாக விஸ்வாமித்திரர்!
வந்தது மனமயக்கம் அரிச்சந்திரனுக்கு மீண்டும்.

தெளித்தார் கமண்டல நீரை மீண்டும் ஒருமுறை.
விளித்தார் அவன் பெயரைச் சொல்லி மீண்டும்.

“தக்ஷிணை தரவேண்டும் என்றதும் உனக்குத்
தலை சுற்றி மயக்கம் வருகிறது அரிச்சந்திரா!

சத்திய வாக்கு சமம் அஸ்வமேத யாகத்துக்கு;
சத்தியத்தால் நிலைபெற்று நிற்கிறது உலகம்.

தர வேண்டும் என் தக்ஷிணையை மாலைக்குள்;
தராவிட்டால் சபித்து விடுவேன் உன்னை நான்!”

‘அந்திப் பொழுதுக்குள் கிடைக்குமா பொன்?’
சிந்தித்துச் சிந்தாகுலம் அடைந்தான் மன்னன்!

வந்தான் ஓர் அந்தணன் வீட்டிலிருந்து வெளியே!
வந்தான் தனது நண்பர்கள் புடை சூழ வெளியே!

சொன்னாள் சந்திரமதி நல்ல யோசனையை;
சொன்னாள் இக்கட்டிலிருந்து வெளியே வர.

“தந்தை ஆவார் அந்தணர் அனைவருக்கும்!
தந்தையாக எண்ணிக் கேட்போம் ஓர் உதவி!”

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

7#21a. Chandramati’s suggestion

The royal trio were immersed in sorrow and self pity. Sage ViswAmitra was approaching them like the terrifying Dhoomaketu (a comet considered as an ill omen) – since the grace period of one month was getting over on that day.

The fearsome sight of the sage walking angrily was enough to make Harischandra swoon once again. ViswAmitra sprinkled the cold water from his kamanadalam on the king and called out his name loudly to make him come around.

“Pay up the dakshiNa gold. You will never have any peace of mind until then!” These harsh words spoken by the sage and his obvious determination to extract the gold – which did not exist – made Harischandra swoon again. The sage sprinkled water on him once again.

“The very thought of paying my dakshina is enough to make you swoon. Speaking the truth is equal to performing an aswameda yAgam. The world exists in perfect order only because of the truth or Satyam.

The grace period of one month will get exhausted today. You had better pay me before the day is over. Otherwise I will curse you very harshly!”

Harischandra was worrying as to how to procure so much gold before the night fell! Just then a brahmin came out of his house. He was surrounded by his friends and looked well placed in the society and appeared to be happy.

Chandramati told Harischandra thus.”A good brahmin is like a father to the other three varNas. There is nothing wrong in asking for help from a father figure. We can request this gentle man for his timely assistance to avoid being branded as liars!”


 
bhagavathy bhaagavatam - skanda 1

1#15b. மாயையின் சக்தி

வியாசர் மூழ்கினார் வியாகூல வெள்ளத்தில்;
வியர்த்தமானது அவர் பேசிய பேச்செல்லாம்.

தந்தை விடும் கண்ணீர் விந்தையாக இருந்தது
தந்தையின் கருத்தை மறுத்துப் பேசிய சுகருக்கு.

“மாயையின் சக்தி இத்தனை வலியதா?
துயரம் தருமா பரம பண்டிதருக்கு இங்ஙனம்?

மோஹம் அடைகின்றனர் மும்மூர்த்திகள்!
மோஹம் அடைகின்றீர் எந்தை நீரும் கூட!

மாயைக்கு அடி பணியாதவர் யார் உளார்?
மாயையின் சக்தியை இயம்பவும் இயலுமோ?

எப்படி உண்டாகிறது இந்த மாயவலை?
எப்படி வயப்படுத்துகிறது இந்த மாயவலை?

மாயையை மாற்றுவதில்லை சக்திமான் ஈசன்!
மாயையை ஆளும் தேவி தரவேண்டும் ஞானம்.

பாமரருக்கு அறிவு புகட்டும் பரம ஞானி நீர்!
பாமரன் போல மனம் கலங்குவது தகுமோ?

இப் பிறவியில் ஆனேன் உம் புத்திரனாக!
முற் பிறவியில் இருந்தேன் யார் புத்திரனாக?

பசி அடங்கும் உணவைப் புசித்தால் மட்டுமே!
பசி அடங்குமா பிள்ளையின் முகம் கண்டால்?

தாகம் அடங்கும் தண்ணீர் பருகினால்!
தாகம் அடங்குமா தனயனைக் கண்டால்?

அரிது அரிது மானிடராகப் பிறத்தல் அரிது,
அதனினும் அரிது அந்தணனாகப் பிறத்தல்!

இல்லை இனிமேல் கர்ப்ப வாசம் இது உறுதி!
இல்லை இனி கர்ப்ப உற்பத்தி இதுவும் உறுதி!

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


1#15b. The power of MAyA


VyAsa became crestfallen and sad. All his arguments were in vain. Sukar was surprised to see his father in tears – just because he did not agree with his views. He started thinking aloud!

“Is MAyA so powerful? Can it affect even a sage so deeply? Even the Trinity are said to get deluded at times. Even a Sage like VyAsa gets deluded at times. Who has the power to resist or overcome MAyA?

Who can estimate the power of MAyA? How is this MAyA created? How does it bind and affect people? Lord Siva cannot remove the MAyA. It is the Devi who controls the MAyA that can remove the MAyA and give us true wisdom!

You are a seer and a teacher. It is not proper on your part to get affected like a pagan. I am your son in this birth! Whose son was I in my previous birth?

Hunger will be satisfied only by eating food – not by looking at one’s offspring. Thirst will be quenched only by drinking water – not by seeing one’s son.

It is a rare gift to be born as a human being. It is ever rarer to be born as a brahmin. I will not take any more births. Nor will I cause any more births. “



 
kanda purANam - asura kANdam

28c. மால் சிவன் ஆனார்!

நீண்ட நெடிய திருமால் விக்ரகம்
யாண்டும் காண இயலாத மாயத்தால்


அனலிட்ட மெழுகாக உருகிக் குறுகி
அமைந்தது அழகிய சிவலிங்கமாக!


அதிசயச் செயலைக் கண்ட பின்னரும்,
விதி வசத்தால் மதி இழந்த வைணவர்கள்,


“சிவக் கோலத்துடன் வந்த தவ முனிவன்
இவனே தான் ஐயமில்லை! பிடியுங்கள்!


மாறுவேடம் பூண்டு வந்தது மட்டுமின்றித்
தாறுமாறு ஆக்கி விட்டான் நம் மூர்த்தியை!”


அத்தனை பேரும் ஒன்று கூடி ஓடி வந்தனர்,
அத்தனின் பக்தனை நன்கு புடைப்பதற்கு.


எரி எழப் பார்த்தார் குறுமுனி அப்போது.
எரி துரத்தலாயிற்று நெருங்கியவர்களை!


சினத் தீயின் சுவாலையைத் தாங்காமல்
சிதறி ஓடிவிட்டனர் திசை தோறும் – அப்


பதி மாறிவிட்டது ஒரு சிவப்பதியாக!
பொதிய மலை சென்றார் தவமுனிவர்.


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.



2#28c. VishNu’s vigraham becomes Sivalingam.


The tall vigraham of VishNu melted like wax shown in a flame and changed its shape into a beautiful Sivalingam. The onlookers were wonderstruck by this rare sight. But the VaishNavites became hopping mad with anger and shouted,


“It is the same fellow who had come earlier as a Siva bhakta. He has come here again in disguise and ruined our Lord’s vigraham! Catch hold of him and thrash him!”


They came charging at the Sage. He stared at them with anger in his eyes. The fire of his anger started chasing the people gathered around him to beat him.
They ran in every direction and disappeared. Then the place became a Siva sthalam. Sage Agasthya now set out to Pothigai giri.

 
The 64 Thiru ViLaiyAdalgaL

6. வெள்ளியம்பலக்கூத்து.

திருவிளையாடல்கள். முதற்பகுதி. மதுரைக்காண்டம்.

6. வெள்ளியம்பலக்கூத்து.

திருமணத்திற்கு வந்திருந்தவர்கள்
அருந்தவ முனிவர், பெருநில மன்னர்;
அமுது செய்து அருளுமாறு சிவன் வேண்ட,
தமது நியம நிஷ்டைகளைச் செய்யலாயினர்.

பொற்றாமரைக் குளத்தில் சென்று நீராடித்
தத்தம் நியமங்களை முடித்து வந்தனர்;
விருந்துண்ண அனைவரும் விரைந்தபோது,
வியாக்ரபாதர், பதஞ்சலி தயங்கி நின்றனர்!

“பொன்னம்பலத் திரு நடனம் காணாமல்
அன்னம் புசியோம் நாங்கள் அரசர்க்கரசே!
பொன்னார் மேனியர் நீரே கூறும் எமக்கு,
என்ன செய்வதென்று யாம் அறிகிலோம்!”

“பொன்னம்பலத் திரு நடனத்தை நீவீர்
மன்னுபுகழ் மதுராபுரியிலேயே காண்பீர்!
முன்னர் தோன்றி விட்டதால் மதுராபுரி,
உன்னர்க்கரிய துவாதசாந்த ஸ்தானம்.

திருவாரூர் அமையும் உலகளாவிய
விராட் புருஷனது மூலாதாரமாக!
திருவானைக்காவே சுவாதிஷ்டானம்,
திருவண்ணாமலை மணிபூரகம் ஆகும்.

தில்லையம்பதி அவனது அனாஹதம்,
திருக்காளஹஸ்தியே அவனது விசுத்தி;
காசியே விராட்புருஷனது ஆக்ஞை;
கயிலையே அவனது பிரமரந்திரம்.”

இரு பெரு முனிவரும் சிவபெருமானும்,
அருகிலிருந்த திருக்கோவிலில் நுழைய,
இறைவனின் இச்சாசக்தியால் தோன்றியது
இந்திர விமானத்தின் கீழ் வெள்ளியம்பலம்!

மாணிக்கப்பீடம் கம்பீரமாக காட்சிதர,
ஆணிப்பொன் மேனியர் பீடத்தின் மேல்
காணர்க்கரிய அழகிய திருநடனம் ஆட,
கண்டு களித்தனர் அருந்தவ முனிவர்கள்.

கணத்தில் தோன்றின சிவகணங்கள்!
கணக்குடன் ஒலித்தது தண்ணுமை.
நந்திகேஸ்வரருடைய மத்தள வாத்யம்,
பின்னிப் பிணைந்தது தண்ணுமையோடு!

திருமால் முழக்கினர் அழகிய இடக்கை,
பிரமன் மனைவி சுருதி கூட்டி ஒலிக்க,
தும்புரு, நாரதர் இசைத்தனர் கீதங்கள்,
என்புருகும் ஓர் அற்புதத் தாண்டவம்!

வலக்கைகள் ஐந்தில் பற்றி இருந்தார்
சூலம், உடுக்கை, அம்பு, வாள், மழு!
இடக்கைகள் ஐந்தில் பற்றி இருந்தார்
விடநாகம், தீ, வில், கேடயம், கதை.

திரு நீலகண்டம், வெண்ணீற்று மேனி;
விரித்த சடைக்கற்றை, சங்குக்குண்டலம்,
கமல நயனங்கள் கருணை மழை பொழிய,
கச்சை ஆனது ஒரு கொடிய விஷ நாகம்.

மந்திரம், வேதம், தீச்சுடர் , சிலம்புகள்,
கங்கையுடன் அங்கு கலந்து ஒலித்திட,
“என்ன வரம் வேண்டும் உமக்கு?” என்று
பொன்னார் மேனியன் முனிவரை வினவ,

“இந்த வரம் ஒன்று தருவாய் இறைவா!
இந்த நடனம் என்றும் நிலைத்து நின்று,
பந்தபாசம் விலக்கவேண்டும் அன்பரின்!”
அந்தவரமே தந்தான் சுந்தரபாண்டிய சிவன்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

6. THE DIVINE DANCE OF LORD SIVA!

When the guests were invited for the wedding feast, they wanted to finish their daily nishtaa and niyamaa. They went to the Pond of golden lotuses and performed their nithya karma.

When everyone left to eat the feast, two maharishis Patanjali and Vyaagra Paadaa were hesitating. They told the Lord, “We never take food without witnessing your dance at Ponnambalam. Please tell us what to do now?”

The Lord replied, “You may witness the dance performed at Ponnambalam now and here in Madhuraapuri itself. This is the dwaadasaantha sthaanam of the cosmic Viraat Purushan.

Thiruvaroor is His Moolaadhaaram; Thiruvaanaika is His Swathishtaanam; Thiruvannaamalai is His Manipooragam; Thillaiyambathi is His Anaahatham, Thirukkaalahasthi is His Agnai. Kailaash is His Bramaranthram.”

The two rushis entered the temple with Lord Siva. Lord’s icchaa skakti made a Velliyambalam appear beneath the Indra Vimaanam A dais of carbuncle stood there very majestically. Lord Siva did His thaandavaa on the dais.

Sivaganas appeared instantly.They started playing drums. Nandhi played his mruthangam in accordance with their drums. Saraswathi played on her veena.Thumburu and Narada sang melodious songs. The divine dance was a feast both for the eyes and the ears.

Siva held in His five right hands a Trisoolam, a damaroo, an arrow, a sword and the mazhu. In His five left hands He held, a poisonous cobra, the fire, a bow, a shield and a mace.

The sound of Mantraas, Vedas, fire, anklets, and flowing Ganges merged and mesmerized.The God was pleased with the rushis and wanted to bestow a boon on them.

“This dance must be permanent here. Those who witness this must be freed from all kinds of bondage by your divine grace!”
Sundara Paandiya Sivan happily agreed to this proposal.

 
bhagavathy bhaagavatam - skanda 7

7#21b. சந்திரமதியின் யோசனை

ஏற்றுக் கொள்ளவில்லை மனைவியின் கருத்தை!
“ஏற்றதல்ல யாசகம் க்ஷத்திரிய குல அரசனுக்கு.

யாசகம் பெறுவது அந்தணர் தர்மம் அறிவாய்;
யாசகம் தருவது அரசனின் தர்மம் அறிவாய்.

அபயம் அளிக்க வேண்டும் சரண் புகுந்தவர்களுக்கு;
யாகம் செய்ய வேண்டும், மக்களைக் காக்க வேண்டும்.

அரசன் சென்று ஓர் அந்தணணிடம் யாசிப்பதா?
அடாத செயலாகும் இது” என்றான் அரிச்சந்திரன்.

மறுத்துப் பேசினாள் சந்திரமதி மன்னனிடம்,
“இருக்கிறது காலம் என்றொரு தத்துவம் நாதா!

விதி என்றும் கூறுவார் அதனை உலகத்தோர்;
மதியை மயக்கி மாட்டிவிடும் மாய வலையில்.

வாக்குத் தந்தீர் அந்தணருக்கு ஆலோசியாமல்!
வள்ளலாக இருந்தவர் இன்று வறியவர் ஆனீர்!

முனிவரை முன்கோபியாக ஆக்கி நம்மைக்
கனிவு இன்றி நாட்டிலிருந்து விரட்டியது எது?

வள்ளலை வறியவனாக ஆக்குவது காலம்!
வள்ளலாக வறியவனை ஆக்குவது காலம்!

காலம் செய்வது கோலம் அல்ல அலங்கோலம்!
காலம் எதிரியானால் விளைந்திடும் விபரீதம்!”என

“வசப்பட்டது அனைத்தும் காலத்துக்கு அறிவேன்.
வசப்பட்டது அனைத்தும் அறிவுக்கு உண்மையாக!

அறிவு மிகுந்திருந்தால் தன்மானம் அதிகரிக்கும்;
அறிவு கண்டிக்கும் பிறரிடம் உதவி பெறுவதை.

கேட்கவே மாட்டேன் நான் அந்நியரிடம் உதவி.
கேட்டுப் பழக்கம் இல்லை எனக்கு!” என்றான்

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

7#21b. Chandramati’s suggestion (2)

King Harischandra did not consent to his wife Chandramati’s suggestion. “A Kshatriya king is supposed to give dAnam – not
receive daanam from others. It is the the kula dharmam of Brahmins to receive a dAnam.

A king has to perform yAgam, protect his citizens and give dAnam to brahmins. A king can never accept dAnam from a brahmin.”
Chandramati did not agree to his point of view and aired her own views on this matter now. “There is another thing to be
considered along with the rules laid by dharma sAstras.

There is something called Time Factor or Fate or Destiny which shapes our lives. It deludes our mind and makes our lives topsy turvy and upside down.

You promised a brahmin your kingdom without giving it a second thought. You were the greatest among the donors and now you have become the greatest among the paupers.

What made a sage – who loves everyone in the world true to his name ViswAmitra – get annoyed with us? What made him chase us away from our own country and our own palace pitilessly?

There are the tricks played by Destiny. It makes a prince out of a pauper and a pauper out of a prince. When the time becomes unfavorable to us, everything starts going wrong!”

Now Harischandra aired his own opinions on this matter.”I do know about the effects of Time Factor on our lives. I also know the effect of self-respect on a man’s life.

When a man is intelligent and well versed he develops a self-respect. It stops him from stooping low to take help from anyone else. I can never seek the help of a stranger to save my name or fame!”

 
hbhagavathy bhaagavatam - skanda 1

1#15c. சர்வம் சக்தி மயம்

‘இல்லறத்தை ஏற்கப் போவதில்லை இவன்;
துறவறத்திலேயே நோக்கம் கொண்டுள்ளான்!


பயனில்லை இவனுடன் வாது புரிவது!’ என்று
பயனுள்ள சொற்களைக் கூறினார் வியாசர்.


” இயற்றியுள்ளேன் பாகவதம் என்ற புராணம்;
இலங்குகிறது புராணங்களின் மகுடமாக அது.


ஆலிலை மேல் கிடந்தான் பாலரூப விஷ்ணு;
ஆலோசித்தான்,” உலகை நான் அறிவது எப்படி?”


சொல்லப்பட்டது பாதி ஸ்லோகம் தேவியால்;
சொல்லக் கேட்டவன் ஆலிலைமேல் பாலகன்!


“எல்லாப் பொருட்களாகவும் இருப்பவள் நானே!”
இல்லை என்னைவிட அநாதியான இன்னொன்று!”


கேட்டான் விஷ்ணு ஒரு பாதி ஸ்லோகத்தை!
கேட்டான் “சத்தியத்தைச் சொன்னது யார்?” என.


“ஆணா பெண்ணா அல்லது அலியா?” – விஷ்ணு
வீணாகச் சிந்தித்தான் அதைக் குறித்து தன்னுள்.


பாற்கடலில் பள்ளி கொண்டிருந்தான் பரந்தாமன்;
தோற்றம் தந்தாள் தேவி புன்னகையுடன் எதிரில்!


தரித்திருந்தாள் தேவி சாந்தமான ஒரு வடிவம்;
தரித்திருந்தாள் தேவி சங்கு, சக்கர, கதா, பத்மம்!


தரித்திருந்தாள் தேவி உயர்ந்த பட்டாடைகள்;
தரித்திருந்தாள் தேவி நவமணி ஆபரணங்கள்.


தோழியர் புடைசூழ வந்தாள் பேரொலியுடன்;
தேவியை உணரவில்லை லக்ஷ்மி தேவியும்.


ஆதாரம் இன்றி அரியகாட்சி தந்த தேவியை
அதிக வியப்புடன் கண்டவன் பரந்தாமன்.


தோன்றினர் அவள் அருகே கீர்த்தி, ஸ்ம்ருதி
திருதி, ச்ரத்தா, மேதா, ஸ்வதா தேவியர்;


ரதி, புத்தி, ஸ்வாஹா, க்ஷுதா தேவியர்கள்;
நித்ரா, தயா, துஷ்டி, புஷ்டி தேவியர்கள்,


க்ஷமா, லஜ்ஜா, ஜ்ரும்பா, தரித்ரா தேவியர்கள்
சக்திகளாகத் தோன்றினர் தேவியைச் சுற்றி.


எப்படி உண்டாயினர் இத்தனை சக்திகள்?
எதற்கு உண்டாயினர் இத்தனை சக்திகள்?


ஒன்றும் அறியாத சிறுவனைப் போலவே
ஒன்றும் பேசாமல் இருந்தான் விஷ்ணு,


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


1#15c. Sarvam Sakthi mayam


VyAsa realized that it was useless talking to his son Sukar about the merits of the married life. He talked to him on something else now.


He told his son,”I have written the BhAgavata purANa which is the best among all the purANas. VishNu was floating on a banyan leaf as a small baby in the praLaya jalam ( the deluge). He wondered to himself ‘How can I know this world?’


Devi said in the form of half a slokam, “I pervade in everything here. There is noting but I which has neither a beginning nor an end.” VishNu heard it and started wondering about the person who spoke these words. ‘Was it a man or a woman or neither of these?’


Devi appeared in front of Vishnu in a beautiful form. She had a smiling countenance. She bore the conch, the sudarshan, the mace and the lotus. She wore rich silks and several precious gem studded ornaments. She was surrounded by her attendants and friends. All the other manifestations of Devi were accompanying her in different forms.


VishNu got dazed looking at the Devi who stood in front of him without any support and was exhibiting so many different forms at the same time. He remained silent like an innocent and ignorant child.

 
kanda purANam - asura kANdam

29. சிவ வழிபாடு

காகம் கவிழ்த்த கமண்டலத்தின் நீர்
காவிரி ஆறாகப் அங்கு பாயலுற்றது.

பெருகியும், பொங்கியும், சுழித்தும் ஓடி
அருமையான சீர்காழியை அடைந்தது.

மழை நீருக்குத் தவித்த அந்த நந்தவனம்
தழைத்தது மீண்டும் காவிரி நதி நீரினால்.

செழித்து வளர்ந்தன செடி, கொடிகள்;
அளித்தன பலவித நறுமண மலர்கள்.

அண்ணலின் அடிகளை அமரர்கோன்
எண்ணியும், புகழ்ந்தும் போற்றினான்.

நறுமலர்களைக் கொய்து நாடோறும்
முறைப்படித் தொழுதான் இறைவனை.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

2#29. The worship of Lord Siva.


The kamaNdalam was toppled by the crow who was in reality Lord Ganesh himself. The water contained in it started flowing as the river Kaveri. It soon reached CheerkAzhi.

Indra’s garden which had withered due to the failing rains, was nourished by this river water. It flourished back to its original glory.
All the plants and creepers grew back and bore loads of fragrant flowers. Indra was very happy. He gathered the fresh and
fragrant flowers from his garden and performed Lord Siva’s puja as before.


 
The 64 Thitu ViLaiyAdalgaL

7. பூதத்துக்கு அன்னம் இட்டது.

திருவிளையாடல்கள். முதற்பகுதி. மதுரைக்காண்டம்.
7. பூதத்துக்கு அன்னம் இட்டது.

மாதவர்களுக்கும், மறையவர்களுக்கும்,
மாநில மன்னர்களுக்கும் அளித்தனர்;
அறுசுவை உணவு, தளிர்த்த தாம்பூலம்,
ஆபரணங்கள், அழகிய பட்டாடைகள்!

ஐம்பத்து ஆறு தேசத்து அதிபர்களும்
சம்பத்துக்களுடன் பிரியாவிடை பெற;
சமையல் வேலை செய்தவர்கள் நல்ல
சமயம் பார்த்து விண்ணப்பித்தனர்.

“அருமையான உணவுப்பொருட்களில்
ஆயிரத்தில் ஒரு பங்கே உண்ணப்பட்டது!
பனி மலை போலக் குவிந்துள்ள உணவை
இனி என்ன செய்வது எனத் தெரியவில்லை!

முப்பத்து முக்கோடி தேவர்களும் இங்கு
தப்பாது விருந்து உண்ணுவார்கள் என்று
எண்ணிச் சமைத்த உணவுப் பொருட்கள்
அண்ணலே! வீணாகிப் போக விடலாமா?”

சிறு நகை புரிந்தார் நம் சிவபெருமான்!
“ஒரு பூதத்துக்கு முன்பு உணவளியுங்கள்.
மிகுந்த உணவைப் புசிப்பதற்கு ஒரு
தகுந்த ஏற்பாட்டைச் செய்கின்றேன்!

திருக்குடை ஏந்தும் சிறுகால் பூதத்திற்கு
ஒரு பிடி சோறு கொடுங்கள்!” என்று கூறி,
வடவாக்னியையே பூதத்தின் வயிற்றில்
ஜடராக்னியாகப் நுழையச் செய்துவிட்டார் !

“எடுத்தது கண்டனர், இற்றது கேட்டனர்!”
என்பர் ராமன் வில்லை முறித்த போது!
அமர்ந்தது பூதம் உணவுமலை முன்பு!
அடுத்த வினாடி உணவுமலை இல்லை!

உண்டதும் தெரியவில்லை எவருக்கும்,
கண்டதும் புரியவில்லை எவருக்கும்;
மலை போலக் குவிந்திருந்த உணவு,
சிலை போல அமர்ந்தவன் வயிற்றினுள்!

காய், கறிகள், பசும் பால், தயிர், தேன்,
நெய், கனிவகைகள், தேங்காய், அரிசி,
தானிய வகைகள் என்னும்படி பூதம்
இனி எதுவுமே மிச்சம் வைக்கவில்லை!

வெந்தது, வேகாதது என்றும் பாராமல்
எந்த வேறுபாடும் இல்லாது விழுங்கியது!
“ஒரு பூதம் போதுமா! உண்பதற்கு இன்னும்
ஒரு பூதம் கூடத் இங்கு தேவைப்படுமா?”

கண்டதெல்லாம் உண்ட பின்னரும்
மண்டிய பசி தீரவில்லை பூதத்துக்கு!
அய்யனிடம் சென்று சரண் புகுந்தது
செய்வதே என்னவென்று அறியாமலே!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

7. FEEDING THE SIVA GANAM.

The rushis, brahmins, kings of the 56 countries were treated to a rich feast.They were presented with appropriate gifts, thaamboolam, finest silk and fine gold ornaments. Everyone who had attended the wedding, took leave.

The kitchen staff had a cause for concern. Only one thousandth of the food prepared had been consumed by all the guests. What was to be done with the left over food items, which were heaped into small mountains? Did they have to be wasted in totality?

Siva smiled and said, “First of all you feed Gundotharan – who holds my umbrella! If more food is left over after he finishes eating, I will come up with another plan! ”

He made the Vadavaagni enter into the stomach of the bootham as Jataraagni. The bootham became terribly hungry!
He sat in front of the food heap and everything vanished in a trice-without a trace! There is a famous quotation about Sree Rama breaking the Siva Dhanus.

It goes thus, “The people who had gathered there saw Sree Rama pick up the bow and heard the thunderous noise made by the bow as it broke into two pieces!”

In a similar manner people saw the bootham sit there and the next instant nothing was left of the heaps of food. But his hunger was not appeased! So the Sivaganam continued to eat all the vegetable, milk, curds, honey, ghee, fruits, coconuts, rice and grains!

He had polished off all the cooked food and the raw food materials indiscriminately. Even then his hunger was not satisfied! He went and prayed to Lord Siva to satisfy his hunger!


 
bhagavathy bhaagavatam - skanda 7

7#21c. சந்திரமதியின் யோசனை

சிந்தனையுடன் இருந்தாள் சந்திரமதி சிறிது நேரம்.
வந்தனையுடன் கூறினாள் அரிச்சந்திரனிடம் பிறகு.

“யாசகம் பெறுவதற்கு மனம் ஒப்பவில்லை எனில்
யாசகம் பெறவேண்டிய தேவையும் இல்லை நாதா!

மனைவி ஆனேன் உமக்கு அக்கினி சாக்ஷியாக;
மனைவி கணவனின் சொத்து என்பது உண்மை.

உரிமையுண்டு என்னைக் கட்டுப்படுத்துவதற்கு!
உரிமையுண்டு என்னை விலைக்கு விற்பதற்கும்!

விற்று விடுங்கள் என்னை நல்ல விலைக்கு!
பெற்றுக் கொடுங்கள் அதை தக்ஷிணையாக!”

புலம்பினான் இதைக் கேட்ட அரிச்சந்திரன்;
அலமந்தான் செய்வது அறியாமல் மீண்டும்.

தொடர்ந்தாள் தன் ஆலோசனையை சந்திரமதி
இடர் வந்தபோதும் மனத் துணிவை இழக்காமல்.

“செய்து தான் ஆகவேண்டும் இதை நாதா!
செய்யாது போனால் விளையும் விபரீதம்!

தக்ஷிணை தராவிட்டால் சபிப்பார் முனிவர்;
ரக்ஷிப்பதற்கு யார் உளர் இப்போது நமக்கு?

நீசனாகிவிடுவீர்கள் முனிவர் சபித்தால்!
ஏசுவார் பிறர் என அஞ்ச வேண்டாம் நீர்!

விற்கவில்லை நீர் என்னை மது அருந்துவதற்கு!
விற்கவில்லை நீர் என்னை அரசியல் லாபத்துக்கு!

விற்கவில்லை நீர் என்னை அதிக இன்பம் தேடி!
விற்கின்றீர் நீர் தக்ஷிணைப் பொன் பெறவேண்டி !

விற்கின்றீர் என்னைச் சொன்ன சொல் காப்பதற்கு!
விற்கின்றீர் முனிவரின் தக்ஷிணையைத் தருவதற்கு!

விற்பதால் வராது எந்த அவப் பெயரும் உமக்கு!
விற்பதால் வரும் அழியாத புகழ் ஒன்றே உமக்கு!”

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

7#21c. Chandramati’s suggestion (3)

Chandramati was immersed in deep thoughts for some time and spoke again.

“If you are against accepting dAnam, there is no need to do it. I became your wife in the presence of Agni Devan. I belong to you. You have every right over me to do anything you deem fit. You can control me. You may even sell me for money. Please sell me
for a good price and pay sage ViswAmitra his dhakshiNa”

Harischandran was helpless and torn asunder by his love for his wife and his dire need of money.

Chandramati cintinued,”You will have to do this. We have no other choice. If you do not pay the sage his DakshiNa he will surely curse you and you will become a fallen man.

Do not fear that world will comment on this and criticize it. You are not selling me to buy intoxicating wines or for political benefits or for seeking more pleasure.

You are selling me to keep up your promise, to get money for DakshiNa and to pay the sage his dues. You will not incur any sin or earn ill fame by this act. In fact your prestige will increase since you value your promise more than your personal relationship.”

 
bhagavthy bhaagavatam - skanda 1

1#16a. வழி காட்டிய கதை

புன்னகை செய்தான் மஹாவிஷ்ணு – அந்தப்
புன்னகையின் காரணம் கேட்டாள் லக்ஷ்மி.

“மஹா சக்தியின் மாயா ப்ரபாவத்தினால்
மஹாதேவி தோன்றியுள்ளாள் நம்முன்!”

“சிருஷ்டி லயம் அடையும் பிரளயத்தின் பொழுது!
சிருஷ்டி தொடங்குமுன் சகுணை ஆவேன் நான்!

தேவியின் சகுணையும் சாத்வீகசக்தியும் நானே!
தோன்றுவான் பிரமன் உமது நாபிக் கமலத்தில்.

பூவுலகைப் படைப்பான் தவம் புரிந்த பின்னர்;
புத்தி கூர்மையால் படைப்பான் உயிரினங்களை!

உருவம், மனம், இந்திரியங்கள், அறிவு இவை
உருவாகும் ஜீவன் முன்செய்த வினைகளால்.

படைப்புக் கடவுள் எனப்படுவான் பிரமன்;
படைப்புகளைக் காக்கும் கடவுள் ஆவீர் நீர்!

ருத்திரன் தோன்றுவான் பிரமன் புருவமத்தியில்!
உக்கிரத்துடன் திகழ்வான் சம்ஹார மூர்த்தியாக!

சாத்வீக சக்தியாக இருப்பேன் உம்மிடம்,
சாந்தமான உம் இதயம் நான் வாழுமிடம்.

மஹாலக்ஷ்மியின் சொற்களைப் பருகிய பின்
மஹாலக்ஷ்மியிடம் கேட்டான் தன் ஐயத்தை.

“பாதி ஸ்லோகம் கேட்டேன் முன்பு ஒருநாள்!
மீதி ஸ்லோகம் என்னவாக இருக்கும்? எனச்

சிந்தித்துக் கொண்டே இருக்கின்றேன் நான்
சந்ததமும் அந்த ஸ்லோகத்தைப் பற்றியே!

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


1#16a. Lakshmi Devi’s explanation


VishNu smiled at Lakshmi Devi and said, “MahA Devi has appeared in front of us due to the MAyA Shakti of Devi.” Lakshmi Devi explAined to VishNu the truth about herself and her SAtvic Shakti.

“During PraLaya or the dissolution, the srushti aka creation will be completely destroyed. Before the srushti starts again, Devi will become a saguNai – one with any quality and any form.

I am the saguNai of Shakti. I am her sAtvic shakti. Brahma will appear from your nAbhi or navel. He will do penance to get the power required by him to start the creation.

He will create the world and the jeevas by his power. The jeeva will be allotted a form, a body, an intelligence and a mind all according to the actions performed by it, in its previous births.

Brahma will become the God of Creation. You will become the Protector of the Creation. Rudra will appear from the center of the Brahma’s eyebrows. He will become the God of Destruction.

You will be the sAtvic god. I will be your sAtvic power and always dwell in your heart.” VishNu drank in every word uttered by Lakshmi Devi and spoke out his doubt to her.


“I have heard half of a slokam long ago. I am always wondering about the other half of it!”



 
kanda purAnam - asura kANdam

30. “கயிலை செல்வோம்!”

சீகாழியில் தங்கி இருந்த தேவேந்திரனைச்
சீர் குலைந்த தேவர்கள் வந்து சந்தித்தனர்.

சூரபத்மனின் ஏவல்களைப் புரிந்து வந்ததால்
வீரப் பிரதாபம் குறைந்து மெலிந்திருந்தனர்.

“குற்றேவல் செய்து பெருமை குலைந்தோம்!
கற்ற மறைகளை யாம் முற்றிலும் மறந்தோம்!

எம்மைக் கைவிட்டு விட்டு நீர் மட்டும்
செம்மையாக வாழ்வது தகுமா? தருமமா?”

“செயற்கரிய வேள்வியினை சூரபத்மன்
செய்தபோதே நம் துன்பம் தொடங்கியது!

அடைக்க விழைகிறான் என்னைச் சிறையில்!
அடைய விழைகிறான் என் மனையாளை!

நம் துன்பம் ஒழிய ஒரே புகல் இனிமேல்
நாம் தொழும் தேவதேவன் மஹாதேவனே!

தரிசிப்போம் திருக்கயிலை சென்று பிரானை,
விவரிப்போம் நாம் படும் இன்னல்களை!”

“எங்கள் தாயும், மற்றும் தந்தையும் நீரே!
எங்கள் தெய்வமும், செல்வமும் நீரே!

தாங்கள் இருக்கையில் ஏது குறை எமக்கு?
திங்கள் பிரானைக் காணச் செல்வோம்!”

இந்திரன் சம்மதித்தான் கயிலை செல்ல.
இந்திராணியிடம் விடைபெறச் சென்றான்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

2#30. Devas and Indra.


When Indra was residing in SeerkAzhi, the Devas came down to meet him. They were serving Soorapadman by performing various odd menial jobs. They had lost their self respect and honor and were feeling wretched.

They spoke to Indra,” We forgot all our Vedas. We spend our time serving Soorapadman by doing odd menial jobs. You have forsaken us and you are living here in peace”

Indra replied,”When Soorapadman started performing his difficult yagna, our bad time had started along with it. He wanted to imprisons me and marry IndrANi. So we had go into hiding. There is only one person who can save us now. Let us go to Lord Siva in Mount KailAsh and tell him about all our sufferings.”

The Devas spoke in unison. “You are our mother, you are our father, you are our God and you are everything we possess. Let us go and meet Lord Siva”
Indra agreed to this plan. He went to take leave of his queen IndrANi.



 
The 64 Thiru ViLaiyAdalgaL

திருவிளையாடல்கள். முதற்பகுதி. மதுரைக்காண்டம்.

8. அன்னக் குழியும், வைகை நதியும்.

பசிப்பிணி தீராமல் வருந்தும் பூதத்தின்
பசிப்பிணி தீர அருளினாள் அன்னபூரணி.
நான்கு அன்னக் குழிகளில் இருந்து அங்கு
நன்கு பொங்கியது கட்டித் தயிர்அன்னம்!

“பசி தீரும் வரை புசிப்பாய்!” என்றதும்,
ருசியான தயிர் அன்னத்தைக் கைகளால்,
அள்ளி அள்ளி உண்டு பசி முற்றும் தீர்ந்து,
உள்ளக் களிப்பு எய்தியது அந்த பூதம்.

“உடல் முழுதும் வயிரா?” என ஐயுறும்படி
உடல் முழுவதுமே நிறைந்து உப்பிவிட,
தாகம் வாட்டி வதைத்து அப் பூதத்தை!
தேகம் மூச்சு முட்டியது பாரத்தால்!

கிணறு, குளம், ஓடை, வாவி நீர் என்று
கணக்குப் பார்க்காமல் பூதம் குடித்ததில்,
நீர்நிலைகள் அனைத்தும் வற்றிவிட்டன,
நீர் வேட்கை மட்டும் தீரவேயில்லை!

மீண்டும் வந்து சரண் புகுந்தது பூதம்,
தாண்டவம் ஆடும் தில்லை சபேசனிடம்;
கங்கை நதியிடம் ஆணை இட்டார் சிவன்,
“இங்கும் ஒரு நதியாகப் பிரவகிப்பாய்!”

“அன்று எனக்கு ஒரு வரம் தந்தீர்கள்,
என்னைத் தீண்டுபவர் புனிதமடைவர்.
இன்றும் எனக்கு ஒரு வரம் தாருங்கள்,
என்னைத் தீண்டுபவர்கள் புனிதர்களாகி,

பக்தியும், ஞானமும், கல்வியும் பெற்று ,
முக்தி அடைய வேண்டும் என் ஐயனே!”
“அங்ஙனமே ஆகுக!” எனக் கருணையுடன்,
தங்க வண்ணனும் வரம் ஒன்று அளித்தான்.

வேகமாகத் தரையில் இறங்கியவள்
வேகவதி ஆறாகவே மாறி விட்டாள்.
நதியும் கூட ஓர் அழகிய நங்கையே!
மதிமுகப் பெண்மணிகளில் ஒருத்தியே!

சலசலக்கும் அலைகளே அவள்
கலகலக்கும் கை வளையல்கள்!
முத்துக் குவியலே அவளுடைய
முத்துப் பல்வரிசைகள் ஆயின.

நுரை சுழிக்கும் மேற்பரப்பே அவள்
திரை போன்ற மெல்லிய ஆடைகள்.
கருமணல் திட்டுக்களே கருங்கூந்தல்,
நறுமண மலர்களே நகை அலங்காரம்.

நதியின் கரைகளை ஒட்டியபடித் தன்
ஓதிய மரக் கைகளை நீட்டியது பூதம்.
தடைபட்ட ஆற்றுநீரை ஒரு மடுவாக்கித்
தடையின்றிப் பருகி தாகம் தீர்ந்தது!

கையை வைத்து நீரைத் தடுத்ததால்,
வைகை ஆறு என்ற பெயர் பெற்றதோ?
சிவன் செஞ்சடையிலிருந்து இறங்கி
சிவ கங்கை என்ற பெயர் பெற்றதோ?

மதுராபுரியைச் சுற்றி ஓர் அழகிய
மாலை போல் ஓடிவந்ததால் அது
க்ருதமாலை என்ற பெயர் பெற்றதோ ?
க்ருபாகரனே உண்மையை அறிவான்!

வாழ்க வளமுடன். விசாலாக்ஷி ரமணி.

8. CURD RICE AND RIVER WATER.

To satisfy the insatiable hunger of the Sivaganam, Lord Siva sought the help of Devi Annapoorni! She made the finest mixture of curds and rice swell up from four different pits. The sivaganam ate with both his hands until his hunger was satisfied.

Now he was bulging with the food in his stomach and developed an unquenchable thirst! He drank water from the wells, ponds and river-lets until everything went dry! Yet his thirst was not quenched! Again he sought the help of Lord Siva.

Siva ordered Ganga to flow down as a river in Madhuraapuri. Ganga had one request!

“You have blessed me as river Ganga that I can wash away the sins of everyone who touches my water. I seek a similar boon here too! Please bless me so that whoever touches my water here would develop bhakti, gnaanam and vairaagyam and attain mukthi.”

Lord Siva blessed her as she requested! Ganga descended from the matted coils of Siva’s hair and started flowing as a river in Madhuraapuri. She got a new name Vegavathi-because of the speed of her flow !

All the rivers are personified as female goddesses! The waves of the river became the bangles of Vegavathi. The pearls in the river were her pearly white teeth. The bubbly surface became her dainty dress.The black soil was her thick black hair. The floating flowers became her various ornaments.

The bootham stretched his long arms along the two banks of the river and stopped the flow of the river. It formed a pool of water. The bootham drank water till his thirst was quenched.

Did the river get a new name “Vai kai” (meaning “keep your hands!” ) because the bootham did so?

Did it get the name Siva Ganga since it descended from the matted hair of Lord Siva?

Did it get the name of Kruthamaalai since it ran round the Madhuraapuri like a garland or a ‘maalai’?


 
bhagavathy bhaagavatam - skanda 7

7#22a. மனைவியை விற்றான்!

அரிச்சந்திரன் கூறினான் நகர மக்களிடம்,
“இருக்கிறாள் இந்தப் பெண் விற்பனைக்கு!


விலையாகத் தருவதைத் தரலாம் எவரேனும்;
வேலைக்காரியாக அழைத்துச் செல்லலாம்!”


வியந்தனர் நகர மக்கள் இதைக் கண்டு.
“நீ யார் இவளை விற்பதற்கு?” என்றனர்.


வந்தார் விஸ்வாமித்திரர் கிழ அந்தணராக!
“தந்து விடு இவளை எனக்கு அடிமையாக!


சரிவரப் பணி செய்வதில்லை என் மனைவி!
சரிப்படுவாள் இவள் பணிகள் செய்வதற்கு.


தருகிறேன் ஒரு கோடி பொன்னை விலையாக;
பெறுவாள் இவள் அத்தனை பொற் காசுகளை!”


விக்கித்து நின்றான் அரிச்சந்திரன் இதைக் கேட்டு.
திக்பிரமை நீடித்ததால் அந்த பேசினான் அந்தணன்.


“நல்ல குணங்கள், முப்பது இரண்டு லக்ஷணங்கள்,
நன்னடத்தையுள்ளவள் பெறுவாள் கோடிப் பொன்!”


கொட்டினான் பொற்காசுகளை கிழ வேதியன்;
இட்டுச் செல்ல முயன்றான் கூந்தலைப் பற்றி!


“மகனிடம் விடை பெறவேண்டும்!” என்றாள்.
மகனிடம் அழுதாள் தலைவிதியை எண்ணி.


அணைக்க வந்த மகனிடம் சொன்னாள் அவள்,
“அணைக்காதே என்னை! நான் ஒரு அடிமை!”


தடுக்க முடியவில்லை லோகிதாசனை – ஆடை
தடுக்கி விழுந்தான் லோகிதாசன் தரையில்.


துரத்த முயன்றார் லோகிதாசனைக் கிழ வேதியர்;
துரத்தவே முடியைல்லை கன்றாகத் தொடர்பவனை!


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


7#22a. The queen was sold!


Harischandran announced to the citizen of KAsi,” Hear!hear! Here this woman is for sale. Anyone can buy her paying her worth in gold. Anyone can take her home as his maid servant.”


The people of KAsi were surprised by this kind of human sale and purchase. They asked him, ” Who are you to sell this woman?”


ViswAmitra hurried there in the guise of an old brahmin. He told Harischandra, “I shall buy her as my servant. My wife has become very old and is unable to do the household chores. This woman can do them instead of her. I am ready to pay one crore (ten million) gold coins as her price.”


Harischandra was shocked and stood like a statue. The old brahmin told him,

“This woman is worth that price. She is good-natured. She has all the thirty two lakshanas of a woman and has good conduct. So ten million gold coins the price fixed by the sAstras for such a good woman.”

The old brahmin poured the gold coins in front of Harischandra and tried to pull his wife away by holding her hair. Chandramati wanted to take leave of her only son and asked the old brahmin’s permission to do so.


Her son tried to hug her but she told him,”You can’t embrace me son. I have become a slave now!” But her son could not be stopped from following her like a calf following a cow. He tripped on her clothes and fell down on the ground.



 
bhagavathy bhaagavatam - skanda 1

1#16b. பாகவத சாரம்

லக்ஷ்மி கூறினாள் நாரணனிடம் அன்புடன்,
“லக்ஷணமான ஸ்லோகமே பாகவத சாரம்.


அதிசயக் கிருபையால் தெரிவித்தாள் – அந்த
ரகசிய பாகவத சாரத்தைத் தேவி உங்களுக்கு.


சாஸ்திரங்களின் ரகசிய அம்சம் இதுவே!” எனத்
தோத்திரம் போலவே ஜபித்து வந்தான் விஷ்ணு.


நாபிக் கமலத்தில் தோன்றினான் பிரமதேவன்.
பீதியால் சரணடைந்தான் விஷ்ணுவை அவன்.


மது, கைடபர்களை வதைத்தான் விஷ்ணு;
மறுபடி ஜபித்து வந்தான் பாகவத சாரத்தை.


பிரமன் வியந்தான் விஷ்ணுவை எண்ணி;
பிரமன் வினவினான் விஷ்ணுவிடம் இதை.


“என் தெய்வம் என்று உம்மை நான் துதிக்க,
எந்த தெய்வத்தை எண்ணி நீர் துதிக்கின்றீர்?


உங்களை மிஞ்சிய தெய்வமும் உள்ளதா?” என
“உள்ளது நம்மை மிஞ்சிய தெய்வம் ஒன்று.


சக்தி தேவை நமக்கு நம் பணிகளைச் செய்திட;
சக்தி ஸ்வரூபமான பரதேவதை அம்பிகையே.


ஆதாரமாக தேவி இருப்பதனாலேயே – இந்த
ஆழி சூழ் உலகம் அழகாக விளங்குகிறது.


உலகினைப் படைத்தவள் பராசக்தியே!
உன்னத அதிஷ்டான தேவதை அவளே!


பாகவத சாரத்தை உபதேசித்தாள் எனக்கு;
பாகவதமாக உருவாகும் த்வாபர யுகத்தில்!”


பிரமனுக்கு உபதேசித்தான் பாகவத சாரத்தை
பிரமன் உபதேசித்தான் அதை நாரத முனிக்கு.


நாரத முனிவர் உபதேசித்தார் அதை எனக்கு
நான் உருவாக்கினேன் அதை பாகவதமாக!”


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


1#16b. BhAgavata sAram (The Essence of BhAgavatam)


Lakshmi Devi told VishNu,”That beautiful slokam is the essence of
BhAgavatam as well as of all the sAstraas. Devi had revealed it to you out of her infinite mercy!” VishNu started doing japam on it as a holy mantra.

Brahma was born out of the navel of VishNu. He surrendered to VishNu out of fear for the demons Madhu and Kaitaban. VishNu killed the demons with Devi’s help. He resumed his japam on the BhAgavata sAram.


Brahma was surprised to see this and asked Vishnu his doubt. “You are my creator and God. Hence I worship you. I see that you are worshiping on another God. Can there be anyone superior to you?”


VishNu replied to Brahma, “There is one God who is superior to everyone else. It is Shakti Devi. We all need energy and power to do our prescribed duties. It is She who empowers us.


She has created the world. She supports the world. She taught me the BhAgavata sAram out of her infinite mercy. It will become BhAgavata purANa in DwApara yugam”


VishNu taught the BhAgavata sAram to Brahma, who in turn taught it to NAradA who in turn taught it to me (VyAsa) and I wrote BhAgavatam based on that sloka.”





 
kanda puraanam - asura kaandam

31. இந்திராணி

இந்திரனைக் கண்டதும் எழுந்து சென்று
இந்திராணி வணங்கி வரவேற்றாள்.

தேவர்கள் படும் அல்லல்களையும், தான்
தேவாதி தேவனைக் காணச் செல்வதையும்

தேவர்கோன் தெரிவித்தான் அயிராணிக்கு.
துவண்டு போய்விட்டாள் செய்தி கேட்டு.

“விண்ணுலகம் நீத்து இங்கு வந்தோம்.
மண்ணுலகில் மறைந்து உறைகின்றோம்;

இணையற்ற செல்வச்செழிப்பை இழந்தாலும்,
இணை பிரியாமல் வாழ்ந்து வருகின்றோம்.

என்னைப் பிரிந்து நீர் சென்று விட்டால்
என் கதி என்ன ஆகுமோ அறியேன்!

அவுணர்கள் இங்கும் தேடிவந்து பற்பல
அல்லல்கள் அளிக்கப் போவது உறுதி.

நல்வினை, தீவினை வேறுபாடு அறியாத
பொல்லாத அவுணர்கள் எதுவும் செய்வர்.

மகன் ஜயந்தனும் இங்கே உடன் இல்லை;
புகல் ஒன்றும் இல்லாமல் தனியே நான்!”

“பாதுகாப்பு இன்றி உன்னை விட்டுச்செல்லும்
பாவி ஆகிவிடவில்லை இன்னமும் நான்.

அரியும், அரனும் சேர்ந்து பெற்றெடுத்த
அரிய ஐய்யன் உனக்குத் துணை ஆவான்.

நினைத்த மாத்திரத்தில் நின் முன்தோன்றி
நின்னை காப்பான் இது என் உறுதிமொழி.”

“அய்யனார் வரலாற்றை நான் அறியேன்!
ஐயங்கள் தீர அதை உரைப்பீரா ஸ்வாமி?”

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

2#31. IndrANi Devi


IndrANi welcomed Indra and paid her respects to him. Indra told her the plight and sufferings of the Devas and his decision to visit KailAsh to meet Lord Siva, all with the other Devas.

IndrANni felt visibly shaken, “We left The Heaven and came to hide on earth. Even though we had given up the pleasures of heaven, we still had each other. Now you want to go away leaving me alone. The asuras do not distinguish between the dharma and adharma. They are capable of any sin. Even our on Jayanthan is not with us. Who will protect me?”

Indra replied, “I am not so cruel as to leave you unprotected. IyyanAr will be your protector. He is the son of Hari and Haran. You meditate on him and he will rush to your side to help you.

“Will you please relate to me all about of AyyanAr?” IndrANi asked Indra.





 
The 64 Thiru ViLaiyAdalgaL

9. ஏழு கடலை அழைத்தது.

சோமசுந்தர பாண்டியனின் நல்லாட்சி
நேமம் தவறாமல் நடந்து வருகையில்;

ஞானிகள், முனிவர், அறவாழி அந்தணர்
ஞானக் கடலினைக் காண வருவதுண்டு!


பெருமானைக் கண்ட பின்னர் கௌதமர்
காணவிழைந்தார் காஞ்சனமாலையை;

பெருமாட்டி தவ சீலரிடம் வினவினாள்,
“பேண வேண்டியவை எவை பிறப்பறுக்க?”


“இறைவியின் தாயார் ஆவீர் நீவீர்!
இறைவனின் அருமை மாமியும் கூட!

நீர் அறியாதது என்று ஒன்று உண்டோ?
தெரிந்ததைக் கூறுகின்றேன் உங்களுக்கு!”


மனிதன் செய்யும் செயல்கள் எல்லாம்
மனம், மொழி, மெய்யென மூவகைப்படும்;

மனம், மொழி, மெய்களின் தூய்மையே
மண்ணுலகில் மாண்புடைய தவம் ஆகும்.


தானம், தருமம், பொறுமை, உண்மை,
தியானம், உயிர்களிடம் கொண்ட அன்பு,

புலனடக்கம் இவைகளே இவ்வுலகில்
புகழ் பெற்றவை ‘மானச தவம்’ என்று!


பஞ்சக்ஷரத்தை ஜெபித்தல், பாடல் பாடுதல்;
நெஞ்சார ருத்திரஜபம் செய்தல், செய்வித்தல்;

தருமத்தை உரைத்துக் கருமத்தை உணர்த்தல்,
பெருமை பெற்ற ‘வாசிக தவம்’ எனப்படும்!


கைகளால் பூசித்தல், கால்களால் வலம் வருதல்,
மெய் பணிந்து தொழுதல், தலை வணங்குதல்,

தீர்த்த யாத்திரை சென்று வருதல், மற்றும்
தீர்த்தங்களில் புனித நீராடுவது ‘காயிக தவம்’.


மானசம், வாசிகம், காயிகம் மூன்றிலும்
மாறாப் புகழ் வாய்ந்தது காயிகம் ஆகும்.

நதிகள் சங்கமிக்கும் கடலில் நீராடுதல்,
நதி நீராடலிலும் உத்தமமானது தாயே!”


காஞ்சனமாலையின் உள்ளத்தில் ஓராசை
பஞ்சில் நெருப்பெனப் பற்றிக்கொண்டது!

கடல் நீராடிக் கர்மங்களைத் தொலைத்திடும்
உடல் தவத்தை உடனே செய்ய வேண்டும்!


அருமை மகளிடம் தன் உள்ளக்கருத்தை
மறைக்காமல் எடுத்துக் கூறினாள் அன்னை.

மகளோ தன் மணாளனிடம் கூறி அன்னையின்
தகவுடைய கடலாடலை மிகவும் விழைந்தாள்.


“ஒரு கடல் என்ன? உன் அன்னைக்காக
எழச் செய்வோம் இங்கு ஏழு கடலையும்!”

இறைவன் விழைந்தால் எதுவும் நடக்குமே!
குறைவின்றி பொங்கியது கடல்நீர் அங்கே!


கிழக்கே அமைந்த ஒரு அற்புத வாவியில்
எழும்பிப் பொங்கின ஏழு கடல் நீரும்!

ஏழு வண்ணங்களில் பொங்கிய ஏழு கடல்
முழுவதும் கலந்து வெண்ணிறமடைந்தது.


வானவில்லின் வர்ண ஜாலம் அறிவோம்!
வாவியில் நிகழ்ந்தது மாற்று வர்ணஜாலம்.

புண்ணிய நதிகள் அனைத்தின் தன்மையும்,
தண்மையும் வாவியில் ஒன்றாய் விளங்கின!


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


# 9. COMMANDING THE SEVEN SEAS.


When Madhuraapuri was ruled by Soma Sundara Paandiyan, learned men, gnaanis, rushis and pundits used to visit the king often. One day Gouthama maha rushi visited the Queen mother Kanchanamaalai, after visiting the Paandiya King.


The queen mother wished to know the secret of ending the cycle of birth and death.


The rushi told her, “You are the queen mother and the mother in law of Lord Siva. Surely you will be knowing everything! Yet I will tell you what you want to know.


All the actions performed by mankind can be classified into three categories. They are the actions performed through one’s mind, one’s speech and one’s body. Controlling the actions performed by these three constitute the tapas.


Dhaanam, Dharmam, Patience, Satyam, Dhyaanam, love for everyone and perfect control over the thoughts is called the Maanasa Tapas.

The chanting of Panchaakshara, japam, sankeerthanam, and Satsang form the Vaachika tapas.

Archanai, circum-ambulating the temples, namaskaaram, vandanam,Theertha yaathra, and taking dips in the holy theertham are called the Gaayika tapas.


Of the three viz Maanasam, Vaachikam and Gaayikam, the best and the most effective is Gaayikam. Of these the holy dip in the sea where all the river merge is the best!”


This answer kindled in her heart a burning desire to take a holy dip in the sea and end her karma bandham. She told her wish to her daughter Thadaathagai. She told it to her husband the Paandiya king.


The Lord Siva who was the Paandiya king smiled at her and commanded the water of the Seven Seas to appear in a tank in the eastern part of Madhuraapuri.


The water from the seven a seas rose in the tank in seven different colors! Then they all got mixed and became white.


A rainbow appears because white light is split into seven colors. The reverse happened there. The seven colors merged to produce white.

The Holiness of all the rivers and seas was present in the water in that tank.

 
bhagavathy bhaagavatam - skanda 7

7#22b. மகனை விற்றான்!

தாங்க முடியவில்லை சந்திரமதியினால்!
“வாங்கி விடுங்கள் மகனையும் நீங்களே!

ஏங்கி விடுவான் என்னைப் பிரிந்த மகன்;
தேங்கி விடும் என் வேலைகள் எல்லாம்!”

வாங்கினார் அக்கிழவரே லோகிதாசனையும்!
வழங்கினர் பொற்காசுகளை அரிச்சந்திரனுக்கு.

கணவனை வலம் வந்து வணங்கினான் சந்திரமதி;
கண்ணீருடன் பிரார்த்தனை செய்தாள் தேவியிடம்!

“இனி வரும் பிறவிகளிலும் நான் இவரையே என்
கணவனாக அடைவதற்கு அருள்வாய் தாயே!”

துயரக் கடலில் மூழ்கிவிட்டான் அரிச்சந்திரன்;
‘தயையற்ற அந்தணனுக்கு விற்று விட்டேனே!

நிழல் போல என்னைப் பிரியாதவள் இவள்;
நிஜமாகவே பிரிந்து செல்கிறாள் இப்போது!

இழந்தேன் என் நாட்டை; வந்தேன் தெருவுக்கு.
இழந்தேன் குடும்பத்தினரை! அந்தோ பரிதாபம்!’

“அடிமைகளே வாருங்கள்!” என அந்தணன்
அடித்துச் சாட்டையால் இழுத்துச் சென்றான்.

கண்ணீர்த் திரையுடன் இருந்த மன்னனின்
கண்களில் இருந்து மறைந்தனர் மூவரும்.

சுயவுருவெடுத்து வந்தார் விஸ்வாமித்திரர்.
“பயமில்லையா எந்தன் சாபத்தை எண்ணி?

தந்துவிடு என் தக்ஷிணையை இப்போதே – சத்திய
சந்தன் நீ என்பது மெய்யானால்!” என்றார் முனிவர்.

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

7#22b. The prince was sold!

Chandramati could not take it any longer. She told the old brahmin,”Sir please buy my son also along with me. He is too much attached to me. I can’t work well worrying about him all the time!” The old brahmin bought the prince also paying a fair price for the boy.

Chandramati went round her husband and paid her obeisance to him. She prayed to Devi with tears running down her in cheeks, “Oh Devi! May I be blessed with this man as my husband in my future births also.”

Harischandran was immersed in an ocean of sorrow. ‘What have I done to my wife and my son? I have sold them to a stone hearted old man.

My wife was like my shadow all along till now. But now she got separated from me and is going away from me. I lost my kingdom. I have come to live on the street. Now I have sold my loving wife and son.’

The old man used his whip upon his slaves and dragged them along with him. The King watched them with his eyes brimming with tears till they disappeared from his vision.

ViswAmitra came again but this time in his real form. He ridiculed Harischandra and asked him,”Are you not afraid of my curse any more? If it is true that you speak only truth, shell my dakshiNai now and in full.”

 
bhagavthy bhaagavatam - skanda 1

1#16c. பாகவதத்தின் பெருமை

கூறும் தேவியின் லீலா விநோதங்களை;
தேறும் எல்லாப் புராணங்களில் சிறந்ததாக;

நிகராகும் இது நீதி,தர்ம சாஸ்திரங்களுக்கு;
நிறைந்திருக்கும் நுண்ணிய தத்துவங்களால்!

பிரம்ம வித்தைக்கு இதுவே மூல காரணம்.
பிரம்மாண்ட சாகரத்தைக் கடந்திடும் ஓடம்.

சுலோகங்கள் பதினெட்டாயிரம் கொண்டது.
சூரிய ஒளி போன்ற ஞானம் அளிக்க வல்லது.

அளிக்க வல்லது தனமும், தானியமும்;
அளிக்க வல்லது ஆயுள், ஆரோக்கியம்,

பாராயணம் செய்வாய் நீ இடைவிடாது;
படிப்பவர்கள் அனைவரும் என் சீடர்கள்!”

பாராயணம் செய்து வந்தார் சுகர் தினமும்.
மாறாக எதிலும் செல்லவில்லை மனம்!

நாடவில்லை சுகத்தையும், இன்பத்தையும்;
தேடவில்லை உணவையும், உற்றாரையும்!

நிஷ்டையிலேயே அமிழ்ந்திருந்தார் சுகர்.
நிஷ்காம வாழ்வு வாழ்ந்து வந்தார் சுகர்.

“சிந்தனையோடும், ஏக்கத்தோடும் நீ
இந்த விதமாக இருக்கலாகாது மகனே!

சென்று வா ஜனகராஜனிடம் ஒருமுறை!
சென்று விடும் மனக் குழப்பங்கள் நீங்கி!

புண்ணிய சீலர் அவர்; சத்திய சீலர் அவர்;
புலன்களை வென்று விட்ட தர்ம சீலர் அவர்.

ஜீவன் முக்தர், ராஜ ருஷி, நல்ல யோகி;
ஜனகன் பிரம்ம ஞானி, சாந்த ஸ்வரூபி.”

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


1#16c. The greatness of BhAgavatam


BhAgavatam relates the many miracles performed by Devi. It qualifies to be the best among the purANAs. It is equivalent to the Dharma sAstrAs. It contains many fine philosophies intricately woven into it.

It is the Brahma Vidhya. It is the boat which helps us to cross the ocean of samsAram. It has 18,000 slokaas and can impart to us the divine knowledge as brilliant as the sunlight.

It can also bestow riches and worldly comforts. It can also bestow a long and healthy life. Do pArAyaNa of this regularly. All those who learn this are my disciples.”

Sukar obeyed his father and did pArAyaNam everyday. He was immersed in the purANam. He did not seek any other comfort or company. He was engrossed in the purANam and lived a life devoid of any other desires.

VyAsa felt sad seeing his son being so sober at such a young age. He advised his son Sukar to visit the king of Mithila , a great brahma gnAni called Janaka MahA RAjan.

He said to his son,”Please visit king Jananka and all your doubts and troubles will vanish. He is a holy person, sworn to truth. He has conquered his indriyAs. He is a jeevan mukta, a RAja rushi and a yOgi. He is a brahma gnAni and is a very calm and composed person”



 
kanda purANam - asura kANdam

32a. ஐயனார் வரலாறு

தேவர்கள், அசுரர்கள் முன்னொரு நாள்
திருப் பாற்கடலைக் கடையலுற்றனர்.

நச்சரவு அணிந்த நாதனைத் தொழாமல்,
இச்சை கொண்டு அமுதம் விழைந்தாலும்,

காலகூட விஷம் திரண்டு எழுந்ததும்
கால்களைப் பற்றினர் கயிலை நாதனின்!

நஞ்சை உண்டு தன் கண்டத்தில் அடக்கி
நஞ்சுண்டான் அவர்களை ஆசீர்வதித்தான்!

“இன்னமும் கடையுங்கள் தொடர்ந்து!
பின்னர் தோன்றும் விரும்பிய அமுதம்!”

கடையத் தொடங்குகையில் மறந்துவிட்டனர்
தடைகளைத் தகர்க்கும் விநாயகனைத் தொழ!

மந்தர மத்து விழுந்தது பாதாளத்தில் – ஹரி
மந்தரமலையைத் தாங்கினான் கூர்மமாக.

பொற்குடம் கடலில் தோன்றி எழும்பியது.
அற்புத அமுதம் அதனுள் ஒளிர்ந்தது.

முயற்சியில் ஒன்றுபட்ட சுர, அசுரர்கள்
கிளர்ச்சியில் ஈடுபட்டனர் சுவைப்பதற்கு!

போர் துவங்கியது இருகுழுக்கள் இடையே.
போரைத் தவிர்க்க எண்ணினான் திருமால்.

அனைவரும் விரும்பும் ஒரு வடிவு எடுத்தார்!
அனைத்தையும் மறக்கச் செய்யும் மோகினி!
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

2#32a. AiyyanAr.


Once the suras and asuras churned The Ocean of Milk to bring out the Amrutham (nectar). But they did not seek the blessings of Lord Siva.

Yet when the hAlAhalam (the deadly poison) appeared for the ocean, they ran to Lord Siva their Savior. He drank the deadly poison and arrested it in his throat. He blessed the suras and asuras to continue to churn the ocean until the nectar appeared.

They resumed the churning but they forgot to worship Lord Ganesh – the remover of obstacles. The Mandara mountsin used as a giant churn, sank down to the PAtAla. Lord VishNu appeared as a giant tortoise and supported the Mandara hill on his hard shell.

At last the nectar appeared in a gold pot. The suras and asuras wanted all the nectar only for themselves and started to fight.
Vishnu wanted to avoid the fight and the war. So he transformed himself into Mohini, a beautiful woman – whom no one can resist.
 
The 64 Thiru ViLaiyAdalgaL

10. மலயத்வஜனை அழைத்தது.

திருவிளையாடல்கள். முதற்பகுதி. மதுரைக்காண்டம்.

10. மலயத்வஜனை அழைத்தது.


பொங்கிய வாவியின் புதுப் புனல் நீரை
ஏங்கிய அன்னையும் கண்டு மகிழ்ந்தாள்.
அங்கேயே இருந்த நந்தவனத்தில் ஒரு
சிங்காசனத்தில் அமர்ந்திருந்தார் பிரான்.


அன்னப்பேடைஎன்னும் தடாதகையிடம்,
“அன்னையை நீராட அழைத்துச் செல்!” என,
அன்னையுடன் வாவியை அடைந்தவுடனே
அன்னை கேட்டாள்,”கடலாடும் விதி என்ன?”


“அருமைக் கணவன், பெருமை தரும் மகன்,
கரங்களைப் பற்றிக் கடலாட வேண்டும்!
பசுங்கன்றின் வாலைப் பற்றியும் ஒருவர்
பாசம் தகர்க்கும் கடலாடலாம்” என்றனர்.


“கணவனும் இல்லை! ஒரு மகனும் இல்லை!
கன்றின் வால் தான் வாய்த்திருக்கிறது!” எனக்
கண்ணீர் பெருக்கிய மாமியின் துயர் கண்டு
கணத்தில் ஒரு திட்டம் வகுத்தார் பிரான்.


இந்திரனுடன் அமர்ந்து கொண்டிருந்த,
தந்தையைப் போன்ற மலயத்வஜனிடம்
மனத்தால் சங்கற்பித்தவுடனேயே அவர்
கணத்தில் வந்தார் தெய்வீக விமானத்தில்!


காலில் விழ வந்த மாமனைத் தடுத்து
ஆலிங்கனம் செய்து கொண்டார் பிரான்!
காலில் விழுந்து எழுந்த காஞ்சனமாலை
கரம் பற்றி அவருடன் கடலாடத் தயார்!


பரிசுத்தப்படுத்தும் பவித்திரத்தை அவர்கள்
விரலில் அணிந்தனர், நாவில் பஞ்சாக்ஷரம்;
நீரில் மூழ்கி எழுந்த இருவருக்குமே அங்கு
சீரிய சிவபிரானின் வடிவம் வாய்த்தது!


திரு நீலகண்டம், நான்குத் திருத்தோள்கள்,
திருநீற்று நெற்றி, திவ்விய த்ரிநேத்ரங்கள்;
மிளிர்ந்த ஸ்வரூபத்தைக் கண்டு கண்கள்
குளிர்ந்து உலகமே அதிசயித்து நின்றது!


பொன்னுலக விமானம் இறங்கியது கீழே!
பொன்னுலகோர் பெய்தனர் மலர் மாரி!
வேத கோஷமும், துந்துபி நாதமும் முழங்க,
தேவர்கள் புகழ, அடைந்தனர் சிவலோகம் .


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி .


# 10. BECKONING KING MALAYADHWAJA.

The queen mother was very happy that the holy water from all the seven seas was ready for her holy dip.The king sat in a simhaasana in a nandavanam nearby. He instructed his wife to take her mother for the holy dip.


The queen mother wanted to know the rules for the holy dip. The learned men present there told her,” A woman may hold the hand of her husband or son and take the dip. Or holding the tail of a cow’s calf is also allowed!”


The queen mother burst into tears! “I do not have either my husband or a son! I am destined to hold on to the tail of a calf!”

The king was moved to pity. He wished that the dead king Malayadhwaja, who was now a companion to Indra, should come down to earth. Immediately the dead king descended near to the tank of seven seas in a divine vimaanam.

He rushed to prostrate to lord Siva but He stopped the old king and embraced him.The queen mother paid her respect to her husband.


Both of them got ready for the holy dip. Both of them wore the purifying pavithram, held each other’s hands and took the dip.

When they came up again, lo and behold, both of them had acquired the swaroopam of Lord Siva himself! They had blue tinted throat, four arms, holy ash on their forehead and three eyes!

At the same time a divine vimaanam came down to take them to Sivalokam amidst the rain of flower from the sky, the divine music being played and the Vedas chanted by the Devas.


 
bhagavathy bhaagavatam - skanda 7

7#22c. “இன்னமும் பொன் தா!”

அரிச்சந்திரன் கூறினான் முனிவரிடம்!
அரிய பொற்காசுகளை அள்ளித் தந்து!


“எடுத்துக் கொள்ளும் பொற்காசுகளை;
கொடுத்து விட்டேன் உம் தக்ஷிணையை!”


கொடுத்தான் பதினோரு கோடிப் பொற்காசு.
எடுத்துக் கொள்ளவில்லை விஸ்வாமித்திரர்.


“எப்படிக் கிடைத்தது இத்தனை பொன் உனக்கு?
தப்பு வழியில் ஈட்டினாயா இந்தப் பொன்னை?


கெட்ட வழியில் வந்த பொன்னை – நான்
தொட்டும் பாரேன் எனது தக்ஷிணையாக!


நேர்மையான வழியில் வந்ததா இந்தப் பொன்?
வாய்மையுடன் கூறு நீ உண்மையை எனக்கு!” என


“விற்றேன் மனைவியை ஒரு கோடிப் பொன்னுக்கு;
விற்றேன் மகனைப் பத்துக் கோடிப் பொன்னுக்கு.


நல்ல வழியில் ஈட்டிய பொருள் தான் இது;
நல்ல விலை கிடைத்தது மனைவி மகனுக்கு.


எடுத்துச் செல்லும் உம்முடைய தட்சிணையாக;
கொடுத்துவிட்டேன் பதினோரு கோடிப் பொன்!” என


“தகுந்த தக்ஷிணையா இது ராஜசூய யாகத்துக்கு?
தந்தால் போதுமா இந்தப் பொன்னை எனக்கு?


சொன்னபடிக் கொடு இரண்டரை பாரப் பொன்;
இன்னல் விளையும் சொன்ன சொல் தவறினால்.


ஒரு ஜாமப் பொழுது மிகுந்துள்ளது இன்னமும்.
பொறுக்க மாட்டேன் அதன் பின் ஒரு கணமும்!”


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்



7#22c. “Give me more gold!”

Harischandra gave the gold coins to ViswAmitra. He said,”Take these eleven crore gold coins as your dakshiNa.” But ViswAmitra would not touch those gold coins. Now he fired a series of questions at Harischandra.


“How did you come into possession of so much gold so suddenly? Surely you must have earned it by some foul means. If so, I would not even touch that gold. Tell me the truth now!”


“I sold my wife for one crore gold coins and my son for ten crore gold coins. They fetched good prices. I have got this gold by selling my family. Take these for you dakshiNa.”


ViswAmitra would not touch the gold even now. “Do you think this dakshiNai is enough for my service? I would not take anything less than two and half loads of gold as promised by you. You still have a little more time left before the day ends. I will not wait even for a second after that!”


 
bhagavathy bhaagavatam - skanda 1

1#16d. ஜனக ராஜன்

நம்ப முடியவில்லை சுக முனிவரால் – தன்
அன்புத் தந்தை கூறும் விந்தை மொழிகளை!

‘அதிசய மன்னன் மிதிலையின் ஜனகன்!
ஆட்சி செய்கின்றான் ஒரு ராஜ்ஜியத்தை!

விதேஹனாகவும், ஜீவன் முக்தனாகவும்
விளங்குவது கற்பனைக்கெட்டாத அற்புதம்!

இருக்கின்றானாம் சம்சார சாகரத்தில்;
இருக்கின்றானாம் தாமரை இலை போல்!

பந்தம் என்பது எது? மோக்ஷம் எது?
பற்றுதல் இல்லாமல் இருப்பது எப்படி?

அனுபவித்தும் அனுபவிக்காமல் இருப்பதும்
அனுபந்தம் தோன்றாமல் இருப்பதும் எப்படி?

ஜீவன் முக்தனின் லக்ஷணங்கள் என்னென்ன?
ஜீவன் முக்தனுக்கு இரட்டைகள் வேறுபடாவா?

சம புத்தி உடையவனே ஜீவன் முக்தன்!
சமம் ஆவார்களா திருடனும், முனிவனும்?

இருப்பது கிருஹச்தாஸ்ரமத்தில் என்றால்
இருக்க முடியாது ஒருவன் ஜீவன் முக்தனாக!

மிதிலை செல்கிறேன் ஜனக ராஜனிடம்,
பதிலைத் தேடுகிறேன் ஜனக ராஜனிடம்!’

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


1#16d. Janaka RAjan


Sage Sukar could not believe the words uttered by his father. Janaka RAjan sounded to be a very strange king indeed. He ruled over a vast country. He was at the same time a vidEhar (one who had conquered all his sense organs) and a jeevan muktan (liberated from earthly bondage even while he was alive)!

He is steeped in samsAra and at the same time he had learned to live like a lotus leaf placed in water. What is a bondage? What is liberation? How to give up attachments? How to enjoy and at the same time not enjoy what we are enjoying?

What are the qualities of a jeevan muktan? Won’t he perceive the pairs of opposites occurring together as being different from each other? Sama buddhi (Equanimity) makes a jeevan muktan. Can a thief and a sage become equal in anybody’s eyes?

If a man is a gruhasta it is impossible for him to be a jeevan mukta. I will go to Mithila and meet Janaka to get all my doubts cleared’



 

Latest posts

Latest ads

Back
Top