• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

A poem a day to keep all agonies away!

kanda purANam - asura kANdam

32b. மாலின் சூழ்ச்சி.

மயக்கும் மோகினி இனிக்கப் பேசினாள்;
தயக்கம் இன்றிக் காதல் வலை வீசினாள்.


“அமுதம் உள்ளது இதோ பொற்குடத்தில்!
அமுதனைய நானும் உள்ளேன் உம் முன்பு!


விரும்பும் பொருளைத் தேர்வு செய்யுங்கள்;
விரும்பியதை அடைந்து இன்புறுவீர்கள்!”


“எமக்கு வேண்டியது அழகி நீயே!”- அசுரர்;
“எமக்கு வேண்டியது அமுதம் இதுவே!”- சுரர்;


அமுதத்தை அடைவதற்குத் தேவர்கள்!
அழகியை அணைப்பதற்கு அசுரர்கள்!


மோகினியைத் தழுவ முயன்றவர்கள்
மோஹத்தால் தமக்குள் போரிட்டனர்.


ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டனர்.
ஒருபோலக் காயப் படுத்திக் கொண்டனர்!


அவுணர்கள் இருவர் மட்டும் ஏமாறவில்லை.
அவர்கள் விரும்பியதும் இனிய அமுதமே!


கள்ளத் தேவர் வடிவம் எடுத்துக் கொண்டு
மெள்ளக் கலந்து விட்டனர் கூட்டத்தில்.


பங்கிட்டாள் அமுதத்தை அழகிய மோகினி!
பருகினர் அமுதத்தை விரைந்து இருவரும்.


கூரிய மதியால் இனம் கண்டு கொண்ட
சூரிய சந்திரர்கள் திடுக்கிட்டு நின்றனர்.


மெள்ளக் குறிப்பினால் திருமாலுக்குக்
கள்ளத் தேவர்களை ஜாடை காட்டிட,


சினந்த திருமால் அகப்பையால் அடிக்க
தனித்துத் துண்டாயின இருவர் தலைகளும்.


அழியவில்லை அமுதம் உண்ட தலைகள்!
அழிந்து பட்டன இருவர் உடல்களும்!


சிவனை நோக்கித் தவம் செய்தனர்,
சிறந்த கோள்களாக மாறிவிட்டனர்.


கோளுரைத்த சூரிய சந்திரர்களைக்
கோள் வடிவத்தில் மறைக்கலாயினர்.


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


2#32b. Lord VishNu’s trick.


The dazzling damsel Mohini spoke very sweetly. “You have nectar in the gold pot. You have me in front of you. Choose whatever you want and you can enjoy that!”


The asuras said in unison,” We want to enjoy you the most beautiful woman! But the suras did not lose sight of their aim and said,” We want nothing but the nectar”


The asuras tried to embrace Mohini and started fighting among themselves, hitting and hurting one another in the fight.

Two asuras did not fall for VishNu’s trick. They wanted nothing but the nectar. So they transformed themselves to look like Devas and mingled with the other Devas.

VishNu gave the nectar to all the Devas. The two asuras disguised as Devas drank the nectar in a great hurry. The Sun and The Moon knew that they both were in fact asuras disguised as suras and conveyed this to VishNu through a signal.


VishNu hit the two asuras on their heads with the ladle and their heads came apart. Since they had tasted the nectar, their heads did not perish but their bodies perished.


They did penance to Siva and became two grahas called Rahu and Ketu. They try to hide and cover up The Sun and The Moon causing the Solar and Lunar eclipses regularly.
 
The 64 Thiru viLaidAlgal

11. உக்கிரவர்ம பாண்டியன்.

திருவிளையாடல்கள். முதற்பகுதி. மதுரைக்காண்டம்.

# 11. உக்கிரவர்ம பாண்டியன்.

சோம சுந்தர பாண்டியன் காலத்தில்,
சோம குலத்தின் பெருமை தழைத்தது.
மகனை விழைந்த தடாதகை பிராட்டிக்கு,
மகனாக முருகனையே அளித்தார் சிவன்!

கர்ப்பம் தரித்தாள் தடாதகைப் பிராட்டி,
கர்ப்பிணிப் பெண்கள் பிறரைப் போலவே!
காலம் கனிந்தது அவள் குழந்தையைப் பெற,
ஞாலம் மகிழ்ந்தது திரு முருகனைப் பெற்று!

திங்கட் கிழமையில், சுப முஹூர்த்ததில்,
திருவாதிரை நட்சத்திரம் கூடிய வேளையில்,
திரு முருகனே வந்து உலகினில் பிறந்தான்
திருமகள் தடாதகையின் மணி வயிற்றில்!

இளம் சூரியனைப் போல் ஒளி வீசிடும்
தளிர் மேனி கொண்டு விளங்கினான்.
மதுராபுரியில் பொங்கியது மங்கல விழா,
மன்னர்கள், ஞானிகள், ரிஷிகள் கூடிப் புகழ!

பொன்னும் பொருளும் வழங்கப் பட்டது
மன்னனால் அவனது குடிமக்களுக்கு!
பனி நீரும், சந்தனமும், கஸ்தூரியும் கூடி,
இனியில்லை இதுபோன்ற சுவர்க்கம் என,

ஜாதகரணம் செய்தான் ஞானக் குமரனுக்கு,
நாமகரணம் செய்தான் உக்ரவர்மன் என்று!
ஐந்து வயதிலேயே பூணூலை அணிவித்து,
ஐயம் திரிபறக் கற்பித்தான் வேதசாஸ்திரம்.

படைகளப் பயிற்சி, அதில் நல்ல தேர்ச்சி!
பரியேற்றம், கரியேற்றம், தேரோட்டம்,
எட்டு வயதிலேயே கற்றுத் தேர்ந்தான்
எட்டெட்டுக் கலைகளையும் அக்குமரன்!

பாசுபதாஸ்திரம் மட்டும் கற்றான் தன்
பாசம் மிகுந்த தந்தையார் மன்னனிடமே!
வயதுக்குத் தகுந்த வளர்ச்சியும், வீரமும்,
வயதுக்கு மீறின வேகமும், விவேகமும்!

முப்பத்து இரண்டு லட்சணங்களும் கூடி
அப்பதினாறு வயதுக் குமரனிடம் மிளிர,
திருமணம் செய்வித்து முடிசூட்டிவிட
விருப்பம் கொண்டான் பாண்டியமன்னன்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

# 11. Ugravarman.

Soma Sundara Paandiyan made his Chandra Vamsa very popular. His queen Thadaathagai wanted a son. The Lord wished that Skanda himself should be born as their son.

The queen became pregnant and delivered a brilliant boy as the amsam of Lord Skanda Himself, on a an auspicious Monday when the star was Thiruvaadhirai.

His face was as brilliant as the rising sun.The whole city celebrated the birth of the prince.The city was purified and decorated. Lavish gifts were given to Brahmins and other deserving persons.The King performed his son’s jaatakaranam and Namakaranam as Ugravarman.

The boy had his upanayanam at the age of five. He started learning Veda Sasthras. He learned all the war techniques and the sixty four fine arts. By the time Ugravarman was eight years old, he had mastered every art and science a king should know!.

He learned the use of Paasupathaasthra from his father himself. He grew up well and by the time he was sixteen years old, he was both brave and mature for his age. He was a sight to the sore eyes, since he was bestowed with all the thirty two lakshanas to perfection.

The King wanted to perform his wedding and pattabhishekham at the right age with a suitable princess.
 
bhagavathy bhaagavatam - skanda 7

7#23a. தன்னையும் விற்றான்!

எச்சரித்தார் விஸ்வாமித்திரர் அரிச்சந்திரனை.
எடுத்துக் கொண்டு போனார் கொடுத்த பொன்னை.

“அஸ்தமனத்துக்கு முன்னால் என்னை விலைக்கு வாங்க
இஷ்டப்படுபவர்கள் என்னிடம் வரலாம்!” எனக் கூவினான்.

சண்டாளப் புலையன் ஒருவன் வந்தான் உடனேயே.
தண்டனைக்கு அரசனான தர்மராஜனே அப்புலையன்!

கறுத்த பெரிய வயிறு, நீண்டு தொங்கும் பெரிய மீசை;
பருத்த மேனியில் ரோமங்கள், விரவிய புலால் நாற்றம்;

“என்ன விலை கூறுகின்றாய் அப்பனே உனக்கு நீயே?” எனக்
கண்களை உருட்டி கர்ணகடூரமாகக் கேட்டான் புலையன்.

“எனக்கு வேலை சண்டாளனாக ஒரு சுடுகாட்டில்!
உன் வேலை பிணங்களின் ஆடையை அவிழ்ப்பது” என

“உத்தமனை உத்தமனும், மத்திமனை மத்திமனும்,
அதமனை அதமனும் வாங்குவதில் தவறில்லை.

க்ஷத்திரியனை வாங்க முடியாது சண்டாளனால்.
க்ஷத்திரியனை வாங்க முடியும் பிராமணனால்” என

“முதலிலேயே ஏன் கூறவில்லை உன் விதிகளை?
கதறினாய் ‘வாங்க எவரேனும் உள்ளார்களா’ என!

ஜாதி மதம் எதற்கு விலை பேசி வாங்குவதற்கு?
போதிய பணம் இருந்தால் மட்டும் போதாதா?

சத்தியம் காத்திடும் எண்ணம் இருந்தால் போதும்.
நிச்சயமாகத் தேவையில்லை ஜாதி மத பேதங்கள்.

அசத்தியம் பேசி அதமனாக நரகம் செல்வதிலும்,
சத்தியம் பேசி இப்பணி புரிவதில் தாழ்வில்லை.”

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

7#23. He sold himself too!

ViswAmitra warned Harischandra of dire consequences if he failed to pay the dakshiNa amount in full. He took the gold coins given to him and went away.

Now Harischandra tried to sell himself. He shouted,”If any one is willing to buy me before sunset, he may come and speak to me!”

Immediately a chaNdALa came near him. He had a pot belly and sported a thick, long mustache. He was very huge and emanated the smell of raw flesh.

He asked in a hoarse voice, “What is the price you demand for yourself? I work in a cremation ground. You will be my assistant. Your job will be to remove the dress worn on the dead bodies.”

Harischandra was shocked that a chaNdALa had come forward to buy him – a king and a kshatriyA. He said immediately,

” Only a person belonging to a higher varNa can buy another belonging to the same varNa or any other lower varNa. A chaNdALa can never buy a kshatriya.”

Now the huge chaNdALa – who was in fact Yama Dharma RAjan himself in disguise – asked,” Why did you not state all your conditions when you shouted calling for anyone interested to come and buy you?

Why do you mix up varNa with a financial transaction? To purchase anything or anyone, the buyer needs just sufficient money and nothing else really matters.

It is far better to adhere to satyam and do any job honestly than speak asatyam and end up in a hell”.
Dharma RAjan spoke to the king Harischandra about the perfect dharma!


 
bhagavathy bhaagavatam - skanda 1

1#17a. மிதிலை அனுபவம்

“தண்டிக்காமலேயே நீதியுடன் ஆளுகின்றார்
தன்னாட்டை ஜனக மகாராஜன் என்கின்றீர்கள்.

தண்டனை இல்லாவிட்டால் தவறுகள் நிகழும்;
தண்டனை இல்லாவிட்டால் தர்மமும் பிறழும்.

கற்பனையைக் கடந்த மிதிலை செல்கின்றேன்;
அற்புத மன்னன் ஜனகனைக் காண்கின்றேன்!”

“மிதிலை சென்று பதிலை அறிந்து கொண்டு
திகிலைப் போக்க நீ திரும்பவேண்டும் இங்கு!

காத்திருப்பேன் உன் நினைவாக உன்னைக்
காணும் வரை உயிரைப் பிடித்துக் கொண்டு.”

வாக்குத் தந்தார் சுகர் வியாசருக்கு;
வாழ்த்தி அனுப்பினார் சுகரை வியாசர்.

பயணம் நீண்டது மூன்று ஆண்டுகள்.
பயணம் முடிந்தது மிதிலை மாநகரில்.

செல்வம் கொழித்தது மிதிலையில் – உள்ளே
செல்லவிடவில்லை நகரக் காவலன் சுகரை.

“வந்துள்ளேன் மூன்றாண்டுகள் பயணித்தபின்;
வஞ்சித்து விட்டார் என் தந்தையார் என்னை!

கேட்டதில்லை இதுவரை கடுஞ் சொற்களை!
கேட்க வரவில்லை மன்னனிடம் பொருளை!

ஆசையில்லை பொருட்கள் மீது சிறிதும்;
ஆசையில்லை விஷயசுகம் மீது சிறிதும்;

தேசம் விட்டு நான் தேசம் வந்தது எதற்காக?
வேதம் உள்ளதா? மூர்த்தி, தீர்த்தம் உள்ளனவா?

'முன்வினைப் பயனைத் துய்த்தே தீர வேண்டும்;
நன்மையையும் தீமையும் தானே வந்து சேரும்.

அன்னியர் நுழையலாகாது என்று உங்கள்
கண்ணிய மன்னன் கட்டளை இட்டுள்ளான்.”

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


1#17a. The journey to Mithila


Sage Sukar could not believe what his father told him about King Janaka. “He rules his country without punishing anyone! If there were no punishments then the crimes will flourish and Dharma will perish. I will visit the Mithila to meet its king Janaka who fascinates me beyond my fertile imagination”

VyAsa said, “Go to Mithila, find your answers and come back to me. I will await your safe return my son”. Sukar took the blessings of VyAsa and traveled for three years to reach Mithila.

The city looked rich and luxurious but the guard would not allow Sage Sukar to enter the city. He spoke very rudely to sage Sukar, as was the custom of all the city guards in all the cities.

Sukar said, “I have traveled for three long years to reach this city. My father has tricked me into taking up this journey. I have never listened to such crude and cruel words in all my life.

Why should I come here? Why did I come here? I do not seek rich gifts from your king. I have no interest in riches or worldly pleasures.

Do you have the sound of resonating Vedic chanting here? Do you have any holy theertam or important moorthy worthy of visiting? I think it is my sin that made me come here when your kind king has ordered that no stranger should be allowed to enter the city limits!”
Sage Sukar was really very much annoyed and disappointed.


 
kanda purANam - asura kANdam

32c. ஹரியும், ஹரனும்.

லோகத்தை மயக்கிய திருமாலின் அழகிய
மோகினி அவதாரத்தைக் காண விழைந்தார்.

ஈசனுக்குக் காட்சி தந்தார் திருமால்
ஆசையை வளர்க்கும் மோகினியாக.

காம வயப் பட்ட சிவன் கையைப் பற்ற,
காம விகாரத்தை பெருக்க மோகினி ஓட,

நாவலந்தீவினில் தேவனும், தேவியும்
சால மரத்தின் கீழ் கூடி ஒன்றாயினர்.

ஒன்றி அவர்கள் கூடிய காலத்தில்
கண்டகியாயிற்று கான்றுமிழ்ந்த நீர்.

பொன் வண்ண வஜ்ரதந்திப் புழுக்கள்
தோன்றின ஆழிக்குறியுடன் நதியில்.

கூடுகளைச் செய்தன ஆற்று மண்ணால்.
கூடுகளில் வாழ்ந்து பின்னர் மடிந்தன.

கூடுகளிலும் தோன்றின ஆழிக் குறிகள்.
கூடுகள் ஒதுங்கின ஆற்றின் கரையில்.

ஆழிக் குறிகளை இனம் கண்டு பிரித்து
ஆழியோனை, ஈசனை வழிபடலாயினர்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

2#32c. Hari and Haran.


Lord Siva wished to see the beautiful Mohini avatar of VishNu. VishNu appeared once again as Mohini. Siva fell love with the beautiful woman and caught hold of her hand.

Mohini ran away with Siva in hot pursuit. Their union took place in the Jambu dweep under the giant SAla tree. Their union brought into existence the river KaNdagi.

There were vajradanthi worms in the river water which bore the designs of the wheel (chakram) . Those worms built nests using the river mud and their wheel designs were transferred to their shells also.

When the worms died, the empty shells were deposited on the river banks. The people could classify them depending on their designs and patterns and used them to worship Siva as well VishNu.


 
The 64 Thiru ViLaiyAdalgaL

12. காந்திமதியுடன் திருமணம்.

திருவிளையாடல்கள். முதற்பகுதி. மதுரைக்காண்டம்.

# 12. காந்திமதியுடன் திருமணம்.

பிறப்பு, குடி, குலம், கோத்திரம் முதலிய
சிறப்புக்களை ஆய்ந்து தேர்வு செய்தனர்;
கல்யாணபுர மன்னன் சோமசேகரனின்
காந்திமதி என்னும் சூரியகுலப்பெண்ணை!

காந்திமதியே மணப்பெண் என்னும்போதே,
காந்திமதியை உக்கிரனுக்கு அளிக்கும்படிக்
கனவில் தோன்றிய சித்தர் ஆணையிடவே,
மனம் மிக மகிழ்ந்தனர் சூரிய வம்சத்தினர்!

மதுரையை நோக்கி இவர்கள் செல்லவும்,
மதுரையிலிருந்து அவர்கள் எதிர்ப்படவே,
இருதரப்பினரும் ஒரு மனதினர் ஆனதால்
திரும்பினர் தூதுவர் முன்னதாக மதுரை.

சோமசேகரனைத் தழுவி வரவேற்றான்,
சோமசுந்தர பாண்டிய மன்னனாம் சிவன்;
மண நாளும் முஹூர்த்தமும் குறித்தனர்’
மண ஓலைகள் பறந்தன மாநில அரசர்க்கு!

மண முரசும், வாத்தியங்களும் முழங்கின!
மணம் வீசும் பொருட்கள் நகரை அலங்கரிக்க,
மங்கலம் பொங்கித் திகழ்ந்தது அங்கே!
மங்கலப் பொருட்களால் நிறைந்த மதுரை!

அழைப்பு ஓலை பெற்ற அனைத்தரசர்களும்,
அயல் நாட்டு மன்னர்களும், தூதுவர்களும்,
தழைக்கும் ஐந்து வகை சமயத்தினரும்,
அயல் சமயத்தினரும் அன்புடன் குழும,

மணக் கோலத்தில் ஒளி வீசியவர்கள்,
மணம் புரிந்து, பெற்றனர் வாழ்த்துக்கள்!
வரிசைக்கேற்ப அளித்தனர் பல வகைப்
பரிசுப் பொருட்களும் விருந்தினருக்கு!

பிரிய மனம் இன்றியே பிரிந்து சென்றனர்,
பிரியா விடை பெற்றுக் கொண்டவர்கள்!
முருகனை நிகர்த்த மணமகன் உக்கிரனையும்,
முறுவல் நங்கையைப் பிரியவும் கூடுமோ?

“உள்ளனர் நமக்குப் பகைவர்கள் மூவர்!
கள்ள மனம் கொண்ட இந்திரன் முதலவன்;
செருக்கும், மதர்ப்பும் கொண்டு உயர்ந்த,
மேரு மலையே இரண்டாவது பகைவன்;

கடலும் தரும் எல்லை இல்லாத்தொல்லை!
அடக்க வேண்டும் இம்மூன்று பகைவர்களை!
கொடுக்கும் ஆயுதங்களப் பெற்றுக்கொள்வாய்!
தொடுப்பாய் நீ இவற்றைப் பகைவர்கள் மேல்!

இந்திரன் தலையை இவ்வளை கொண்டு அடி!
சுந்தர மேருவை இச்செண்டு கொண்டு அடி!
கடல் நீர் முற்றிலுமாக வற்றிப் போகும்படி
வடிவேலினை விடுவாய் நீ பொங்கும் கடல்மேல்! ”

தந்தையை வணங்கிய உக்கிரவர்மன் அவர்
தந்த ஆயுதங்களைப் பெற்றுக் கொண்டான்!
இந்திரன் முதலானோர் பகை தீர்ப்பது என
எந்த நேரமும் அவன் தயாராக இருந்தான்!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

# 12. WEDDING WITH KANTIMATHI.

A search was on to find the most suitable bride for Ugravarman, taking into consideration the kulam, gothram, vamsam etc. The most suitable bride was Kantimathi, the daughter of the Soorya Vamsa King Somasekaran of Kalyanapuram.

At that time a sidhdha appeared in the dream of the bride’s father and instructed him to present his daughter to Ugravarman of Chandra vamsam in marriage.

A party left from Kalyanapuram to Mdhuraapuri to fix the wedding. Another team left Madhuraapuri for the same purpose! Both the teams met mid way! Both the parties were happy that their mission was successful.

When the bride’s party arrived in Madhuraapuri, they were given a royal welcome. The kings embraced each other. They fixed the auspicious day and time for the subha muhoortham.

The wedding invitation was dispatched to all the kings. The city put on a festive look once again! Auspicious decorations made Mdhuraapuri better than Swargapuri! All the Kings, ambassadors of foreign countries and religious heads arrived for the royal wedding.

The bride and the groom were dazzling with brilliance-decorated with rich ornaments and finest silks. The wedding was performed at the appointed time.The young couple were blessed by all the elders. In return they showered lavish gifts on every one of their guests.

No one wanted to leave the city. But they must go back to where they came from, to where they really belonged! Every one took leave and left Madhuraapuri.

Ugravarman’s father Soma Sundara Pandiyan spoke to his son thus: “Son! we have three powerful enemies! Indra is the first and foremost. The proud and haughty Mount Meru is the second. The sea is the third. You must conquer them with these three asthras I am giving you now.
Hit Indra’s head with this discus, hit the head of Mount Meru with the whip and throw this mighty spear in to the sea to defeat it!”
Ugravarman received those three asthras with great reverence. He was waiting for the right time to vanquish his three powerful enemies.

 
bhagavathy bhaagavatam - skanda 7

7#23b. தன்னையும் விற்றான்!

வந்தார் விஸ்வாமித்திரர் ஆத்திர ஆவேசமாக;
தந்தார் தன்பங்கு நிந்தனையைத் தாரளமாக.


‘மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி’ போல
மத்தியில் மாட்டிக் கொண்டான் அரிச்சந்திரன்.


“கேட்கும் பொன்னை வீசத் தயாராக உள்ளான்;
கேட்டுப் பெற்று என் கடனைத் தீர்ப்பாய் நீ” என,


“சூரிய குலத்தின் க்ஷத்திரிய மன்னன் நான்!
சண்டாளனுக்கு அடிமை ஆவேனோ கூறும்?


அடிமை ஆகி விடுகிறேன் முனிவரே நான் உமக்கு!
அடிமையாக மனம் ஒப்பவில்லை சண்டாளனுக்கு!”


“அடிமையாக ஏற்றுக் கொள்கிறேன் உன்னை! என
விடிவு காலம் வந்ததென மகிழ்ந்தான் மன்னன்.


அழைத்தார் விஸ்வாமித்திரர் சண்டாளனை;
“உழைப்பான் நன்றாக; என்ன விலை தருவாய்?”


“பத்து காதத்துக்குப் பத்து காதம் பரப்பில்
ரத்தினங்கள் நிறைந்த பூமியைத் தருவேன்!”


ஆயிரம் ரத்தினங்கள் தந்தான் புலையன்;
ஆயிரம் பொற் காசுகள் தந்தான் புலையன்;


வருந்த வில்லை அரிச்சந்திரன் இப்போது!
விருப்பத்தை நிறைவேற்றுவது அவன் கடன்.


அசரீரி ஒலித்தது! மலர் மாரி பெய்தது!
“அரிச்சந்திரா! கடனைத் தீர்த்து விட்டாய்”


தன்னையே விற்றுக் கடனைத் தீர்த்தான்!
தன்னேயே விற்றுச் சத்தியம் காத்தான்!


“என்ன செய்ய வேண்டும் நான் கூறுங்கள்!”
“சொன்ன வேலையைச் செய் புலயனிடம்!”


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்



7#23b. He sold himself too!

ViswAmitra came there huffing and puffing! He rained fresh accusations on king Harischandra. “This man is ready give any money you demand. Take it and pay off my dues!”


Harischandra asked ViswAmitra, “I am a Kshatriya king. How can a ChaNdALan buy me? I will rather become your slave and serve you. I can’t accept this chaNdALa as my master!”


ViswAmitra said,”I gladly accept you as my slave from now on!”


Harischandra was happy to become the slave of a sage. The sage then demaned the chaNdALa,”This man is robust and healthy. What will you pay me as his price?”


The chaNdALa promised a piece land strewn with rare gems. He also paid one thousand rare gems and one thousand gold coins.


Harischandra handed over them to the sage. Flowers rained form the sky and a voice said, “Harischandra! You are now free from all your debts!”


Harischandra sold himself to a ChaNdALa to pay for his debts. Ho sold himself to an untouchable – just to uphold his words as satyam.


 
bhagavathy bhaagavatam - skanda 1

1#17b. ராகியும், விராகியும்

வருந்தினான் காவலன் தன் செய்கைக்கு;
விரும்பினான் மன்னிப்புத் தன் செய்கைக்கு.

“கடமையைச் செய்தாய் நீ, வருத்தம் இல்லை!
கடமையன்றோ காவலன் நாட்டைக் காப்பது?

தவறு செய்ததை உணர்கின்றேன் நானே இன்று;
எவர் தேசத்திலும் எளிதாக நுழையலாம் என்று.”

ஞானவானைக் கண்டதும் பிறந்தது ஆவல்
ஞானம் பெற்றிடக் காவலன் அவனுக்கும்.

“சுகம் யாது? துக்கம் யாது? கூறுவீர் ஐயா!
பகைவன் யார்? நண்பன் யார்? பகருவீர் ஐயா!

நலத்தை நாடுபவன் செய்ய வேண்டியது யாது?
விளக்க வேண்டும் நீர் இவற்றை எனக்கு!” என

“சம்சாரத்தை விரும்புபவன் ஆவான் ராகி.
சம்சாரத்தில் அடைவான் ஒரு மன மயக்கம்.

விரும்புவது கிடைத்துவிட்டால் வரும் சுகம்;
விரும்புவது கிடைக்காவிடில் பெரும் துக்கம்.

விருப்பத்துக்கு துணை நிற்பவனே மித்திரன்.
விருப்பத்துக்குத் தடை செய்பவனே சத்ரு.

விராகி அனுபவிப்பான் ஆத்ம சுகத்தை!
விரும்பமாட்டான் அவன் விஷய சுகத்தை!

விசாரம் செய்வான் ஆத்மாவைக் குறித்து,
விலைபோக மாட்டான் மோக வேகத்துக்கு!

சம்சார சுகமும் அவனுக்கு ஒரு துக்கமே.
சம்சாரத்தை வெறுப்பவனுக்கும் உள்ளன.

பலவிதப் பகைவர்கள் – காமம், குரோதம்,
லோபம், மதம், மாச்சர்யம், போன்றவை.

உண்டு ஒன்று நண்பன் உறவு என்று;
உள்ளத்தில் நிலவும் ஆனந்தமே அது!”

அனுமதித்தான் காவலன் நகரில் நுழைய;
அதிசய நகரைச் சுற்றி வந்தார் சுகமுனிவர்.

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


1#17b. A RAgi and A VirAgi


The city guard felt bad for having been rude to a true gnaani – an enlightened young man. He begged for pardon from Sage Sukar who come out of his anger and said,

“I am not angry with you any more. You did your duty as the city guard. I can see that it was my fault to think that I can just walk in anywhere at anytime.”

Now the guard wanted to learn some wisdom from this young wise sage. He asked a few questions to the sage, “What is happiness? What is sorrow? Who is a friend? Who is an enemy? What should a well wisher do and what should he refrain from doing?”

Sage Sukar replied thus, “The man who is interested in samsaaram is a RAgi. The one who does not care for samsaaram is a VirAgi. A RAgi has many likes and dislikes.

When he gets what his heart desires, he becomes happy. When it is denied, he feels sad. One who helps him to get what he desires is a friend. One who forms a hurdle to his efforts is an enemy.

A virAgi enjoys the happiness by knowing his Aatman (Soul). He does not care for the pleasures born out of material things. He feels that samsAram (the life of a householder) is burden and a bondage.

But even a VirAgi has six main enemies residing in his mind such as kAmam, krOdham, lObham, moham, matham and mAcharyam ( Desire, Anger, Miserliness, Delusio0n, Pride and Jealousy respectively). He too has one sincere friend. It is the peace of mind he enjoys constantly.”

The city guard was pleased with the knowledge imparted and allowed the sage to enter the city. Sage Sukar went round admiring the rich luxurious city.

 
kanda purAnam - asura kANdam

32d. ஐயனார்

ஹரியும் ஹரனும் ஒன்று கூடிய போது
கரிய உடலும், சிவந்த சடையும் கொண்டு,


கையில் செண்டைத் தாங்கி இருக்கும்
ஐயன் ஒருவன் வந்து அவதரித்தான்.


மேன்மைகள் பல அளித்தார் சிவன்;
வன்மைகள் பல ஈந்தார் அவனுக்கு.


உருத்திரர்களில் அவன் ஒருவனான்!
உலகம் ஒன்றும் கிடைத்தது அவனுக்கு!


தேவர், முனிவர் வணங்கும் பெருமையை
தேவாதி தேவன் அவனுக்கு அளித்தார்.


“ஊறு யாதும் உனக்கு நேராமல் காத்து
உறுதுணையாக நிற்பான் ஐயனார்.”


வெள்ளை யானை வேந்தன் பணிவுடன்
உள்ளத்தில் துதித்தான் அந்த ஐயனாரை.


நினைத்த மாத்திரத்தில் கண் முன்னே
அனைத்துச் சிறப்புடன் அதே ஐயனார்.


வெள்ளை யானயின் மீது அமர்ந்து கொண்டு
கொள்ளை அழகியர் ஆகிய தேவியருடன்!


திருக்கயிலை தான் செல்ல இருப்பதையும்,
திரும்பி வரும்வரை பாதுகாப்புக் கோரியும்,


இந்திரன் தந்த வேண்டுகோளையும் ஏற்றார்;
இந்திராணிக்குக் காவலர் ஆனார் மகாகாளர்.


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

2#32d. AyyanAr.


When the union of Siva and Mohini took place, a valorous son named AyyanAr was born to them. He was dark in hue and had red hair. He carried a whip in his hand.


Siva blessed AyyanAr with many special honors and powers. AyyanAr was made into one of the Rudras. He was given his own separate world. The Rushis and the Devas worshipped AyyanAr. Indra told IndrANi about the birth and greatness of AyyanAr.


“AyyanAr the valorous son of Hari and Haran will take care of you during my absence”, Indra assured his queen IndrANi.

He then meditated on AyyanAr who appeared in front of him almost immediately. He too was seated on a white elephant with his lovely wives.

Indra explained to him the necessity of his travel to KailAsh and requested AyyanAr to take care of his queen IndrANi, during his absence.


AyyanAr agreed to this readily and made MahAkAlar as the personal bodyguard of Indra’s queen IndrANi.
 
The 64 Thiru ViLaiyAdalgaL

13. வேலை மீது வேல் எறிந்தது!

திருவிளையாடல்கள். முதற்பகுதி. மதுரைக்காண்டம்.

# 13. வேலை மீது வேல் எறிந்தது!

உக்கிர பாண்டியனின் நல்லாட்சி
சுக்கிர தசையாயிற்று மக்களுக்கு!
பரியாகங்கள் தொண்ணூற்று ஆறு,
புரிந்தான் தன் மக்கள் நலன் கருதி!

நூறு பரி யாகங்கள் நிறைவுற்றால்,
பறி போய்விடும் தன் இந்திரப் பதவி!
வெறி கொண்டவனாக மனதில் எண்ணிக்
கறுவினான் அமரர் வேந்தன் இந்திரன்.

மதுராபுரியின் வளம் எல்லாவற்றையும்
பொதுவாக அழித்துவிட விரும்பியவன்;
வருண தேவனுக்கு ஓர் ஆணை இட்டான்,
“பெருகுவாய் நீ பிரளய ஜலம் போலவே!”

ஆழிப் பேரலைகளின் ஊழிக் கூட்டம்
சூழ்ந்து கொண்டன மதுரையின் கீழே!
ஊழிக் காற்றுடன் எழுப்பிய ஓசையை
ஆழ்ந்த உறக்கத்தினர் அறியவில்லை!

மன்னன் கனவில் சித்தர் சிவபிரான்
மன்னுயிர் காக்க மீண்டும் தோன்றினார்!
அபாயம் அறியாமலே உறங்குபவர்க்குச்
சகாயம் செய்ய விழைந்தார் சிவன்!

“உலகமே ஆழ்ந்து உறங்கிடும் போது,
கலகம் விளைவிக்கப் பொங்கியது கடல்;
ஒடுக்க வேண்டும் நீ அதன் ஆற்றலை!
தடுக்க வேண்டும் நீ அதன் பெருக்கை!”

கலைந்தது கனவு, கையில் வேலெடுத்து,
அலைகடலை அடைந்தான் உக்கிரன்,
கனவில் தோன்றிய சித்தர் பெருமானை
நனவிலும் கண்டான் கடற்கரை அருகில்!

“வேலைச் சுழற்றி எறிவாய் உக்கிரா!
வேலையின் நீர் வற்றும் படியாகவே!”
வேலைச் சுழற்றி எறிந்தான் வேந்தன்
வேலையின் நீர் வற்றத் தொடங்கியது.

சுருசுரு என்று ஒரு பெரும் சப்தத்துடன்
சுறுசுறுப்பாகக் கடல்நீர் ஆவியாயிற்று!
பொங்கிய கடல் நீர் வற்றிப் போயிற்று!
பொட்டிப் பாம்பானது வலுவிழந்ததால்!

வேத கோஷத்தைத் தடுக்க முயன்ற
தேவ வேந்தன் சதி பலிக்கவில்லை!
சித்தர் மறைய, வானில் தோன்றினர்,
பித்தனும், உமையும் ரிஷபத்தின் மேலே!

மண்ணிலேயே விழுந்து வணங்கினான்
மண்ணாளும் மன்னர்களின் மன்னன்!
அண்ணலின் அம்பலத்துக்கும் சென்று
அன்னையுடன் மீண்டும் வணங்கினான்!

கடலுக்கும் திருநகர் மதுரையம்பதிக்கும்
இடைப்பட்ட நிலங்களையும், ஊர்களையும்
உரிமை ஆக்கிவிட்டான் தன் வள நாட்டை,
அரிய முறையில் காத்த அவ்விறைவனுக்கே!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

# 13. THROWING THE SPEAR AT THE SEA.

The rule of king Ugravarman brought Sukradasa to his kingdom. He performed ninety six Aswameda Yaaga. If he completed one hundred Aswameda Yaaga, he would become the new Indra. So Indra got all worked up and wanted to destroy the city Mahuraapuri, in order to put an end to the yaagaa..

He summoned Varuna to swell up like the Pralaya Jalam and destroy the city.Varuna created giant waves and went to destroy Madhuraapuri from the eastern side. Varuna chose to attack at midnight when everyone would be in deep slumber. The element of surprise would make his venture more successful.

A sidhdha appeared in the King Ugravarmans’ dream. He was none other than Lord Siva who wished to protect the sleeping city and the innocent citizens from the wrath of Indra and Varuna.

He warned the king about the attack by the sea waves and instructed him to throw his spear at the sea with all his might.

The king woke up immediately and rushed towards the sea, holding the spear given by his father. He met the same sidhdha near the sea shore. The sidhdha told him again, “Throw your spear at the sea with all your might to dry up the swollen waves!”

The king threw his spear as he was told. The water started evaporating swiftly-making a loud hissing noise as if it had come into contact with red hot iron. The swollen sea slowed down and became calm.

Indra’s plot to destroy Madhuraapuri in order to stop the Aswameda Yaagas failed miserably!

The sidhdha disappeared suddenly and at the same time Lord Maheswara and his consort Uma Maheswari appeared on the sky-seated on Nandi, in their fullest glory!

The king prostrated to them then and there. Again he went to the temple and prostrated in front of Siva and Parvathi.

The king was grateful for the timely warning given by the Lord-but for which the Madhuraapuri would have submerged under sea water.To show his gratitude, he donated all the land and villages lying between Madhuraapuri and the East Coast, to the temple property.

 
bhagavthy bhaagavatam - skanda 7

7# 24. சுடலைக் காவல்

இடித்துரைத்தான் புலையன் அரிச்சந்திரனைப் பலவாறு.
அடித்தான் தன் கைத்தடியால் “ஓடி விடுவாயா?” என்று.

அழைத்துச் சென்றான் சேரிக்கு அவனைத் தன்னுடன்;
அடைத்து வைத்தான் விலங்கு பூட்டிச் சிறையினில்.

நகர்ந்தன நான்கு நாட்கள் இவ்வண்ணம் – மன்னன்
மகன், மனைவியை நினைத்து அழுதான் வெகுநேரம்.

கொடுக்கவில்லை அன்ன ஆகாரம் நான்கு நாட்கள்.
விடுவித்தான் சிறையிலிருந்து ஐந்தாம் நாள் காலை.

கொடுத்தான் தன் கைத்தடியை அரிச்சந்திரனுக்கு.
கொடுத்தான் மயானத்தில் வேலையை அவனுக்கு.

மெய் சிலிர்த்தது மயானக் காட்சிகளைக் கண்டு;
பொய் பேசாததற்கு இத்தகைய தண்டனையா?

நாற்றமும், புகையும், மண்டையோடுகளும்;
நாய்களும், நரிகளும், கழுகுகளும் சூழ்ந்திட;

தீயின் நாக்குகளும், சட சட என்ற ஒலியும்;
தீனக் குரல்களும், ஒப்பாரியின் ஒலிகளும்;

வருந்தினான் தன் நிலையை எண்ணி எண்ணி;
வருந்தினான் தன் மனைவி, மகனை எண்ணி;

தொடங்கினான் சண்டாளன் தந்த பணிகளை;
தொடங்கினான் மயானக் காவல் தொழிலை;

கணக்கிட்டான் வந்துள்ள பிணங்களை;
கணக்கிட்டான் வரவேண்டிய பணத்தை;

பரிசோதித்தான் பிணங்களைக் கையால்;
பரிதாபமாக மாறினான் சண்டாளன் போல.

பிணங்களின் வாய்க்கரிசி ஆகாரமானது.
உணவின்றித் திரிந்தான் ஓராண்டு காலம்.

திரிந்தான் ஓராண்டு உறக்கம் என்பதின்றி;
திரிந்தான் ஓராண்டு காலம் காவல் காத்தபடி.

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

7#24. Guarding the cremation ground

The chaNdALa scolded Harischandra and beat him up with his stick. He then took the king along with him to the slum where he lived. Harischandra was locked up for four days without being offered any food to eat. On the fifth day he was sent to guard the cremation ground, undo the clothes worn by the dead bodies and collect taxes.

He was deeply disturbed by the sights and sounds in the cremation ground. What a big punishment had been given to him for speaking the truth and refusing to tell a lie.

The tongues of the leaping fire, the burning dead bodies, the smoke and sounds from the burning pyres, the grinning skulls strewn on the ground, the gang of wild dogs, jackals and vultures all added to his discomfort.

There was the cry of the relatives of the departed souls and other such pitiful sounds. Harischandra felt sorry for himself and his family. He started doing the work entrusted to him earnestly.

He counted the number of dead bodies and the taxes to be collected. He handled the dead bodies as if he were a real chaNdALan. He had nothing to eat except what he could get from the rice which had been offered to the dead. He did not sleep and guarded the cremation ground day and night for one full year.

 
bhagavathy bhaagavatam - skanda 1

1#17c. மிதிலை நகர்

கண்டார் மாட மாளிகைகள், கூட கோபுரங்கள்.
கண்டார் கடை வீதிகள், பலவிதக் கடைகள்.

கண்டார் நடமாடும் சாதாரண ஜனங்களை;
கண்டார் வாதாடும் சாஸ்திர நிபுணர்களை.

நுழைய முயன்றார் இன்னொரு வாயிலில்;
நுழைவாயிலில் தடுத்தான் ஒரு காவலன்.

கஷ்டம் அடையவில்லை சுகர் இதனால்.
நிஷ்டையில் அமர்ந்தார் மரத்தின் நிழலில்

உபசரித்தான் அமைச்சன் அவரை உள்ளே
உத்யான வனத்துக்கு அழைத்துச் சென்று.

“முனிவரை உபசரியுங்கள்!’ எனக் கட்டளையிட
இனிய மங்கையர் கவனித்தனர் தேவைகளை.

அந்தப்புர மங்கையர் வந்தனர் ஒருநாள்
நந்த வனத்துக்கு உல்லாச மிகுதியோடு!

ஆயிரம் சந்திரனின் அற்புத காந்தியோடு
அமர்ந்திருந்த சுக முனிவரைக் கண்டனர்.

மன்மதனைப் பழிக்கும் சுந்தர ரூபம் கண்டு
மதி மயங்கினர் மங்கையர் காம மிகுதியால்.

வசப்படுத்த முயன்றனர் அழகால், உருவால்,
சுகரைத் தம் சாஹசத்தால், சாமர்த்தியத்தால்.

சரசம் செய்தனர், பலாத்காரமும் முயன்றனர்.
சலனம் அடையவில்லை சுகமுனிவர் சற்றும்.

தியான நிஷ்டையிலேயே மூழ்கி இருந்தார் சுகர்;
திரும்பிப் பார்க்கவில்லை விரும்பிய சுந்தரிகளை.

மரக் கட்டை போல இருந்து மயங்காது
சரசங்களைச் சமாளித்தார் சுக முனிவர்.

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


1#17c. Mithila Nagar


Sage Sukar watched with fascination the palatial buildings and their impressive gopurams, the market streets and the shops in those streets. He saw the common folks moving about doing their daily business and the learned pundits arguing on many sAstras.

He tried to enter through another gate and was stopped by the guard there. But now he did not mind being stopped thus. He just sat in the shade of a tree and was lost in meditation.

A minister saw the tejas of the young sage and took him inside to the nandavanam (garden of the king). He told some young maidens to attend to the needs of the sage. These women took care of his needs with great devotion.

One day the womenfolk from the king’s palace visited the nandavanam. They were impressed by the young sage who shone like the cool luminescence of one thousand full moons risen together.

They feel head over heels in love with him. They tried to win his love by many subtle methods known to them. They even tried to force themselves on him. But sage Sukar sat like a wooden statue and was not affected by any of their charm and cunning ways.



 
kanda purAnam - asura kAndam

33. கயிலை ஏகுதல்

இந்திரன் அளித்தான் ஓர் உறுதி மொழி;
“இந்திராணி இனி அய்யனார் பொறுப்பு!”


தேவர்களுடன் சென்றான் திருக்கயிலை,
தேவாதி தேவனைத் தரிசித்து விண்ணப்பிக்க.


நந்தி தேவன் வினவினான் இந்திரனிடம்,
“வந்த செய்தி என்ன கூறுவீர் நீர்!”என்று.


“கயிலை நாதனைக் காண வந்துள்ளோம்.
ஐயனை அன்றி யாரோ காக்க வல்லவர்?


மெய் வருந்தி இழிதொழில் புரிகின்றோம்!
மெய்யன்பர்களாகிய தேவர்கள் நாங்கள்!”


“மெய்யறிவு போதிக்கின்றார் நால்வருக்கு!
ஐயனைக் காண அனுமதி கிடைக்காது!”


“பொன்னுலகில் வாழ்ந்து வந்த நாங்கள்
இன்று செய்வது என்ன என்று தெரியுமா?


மீன் பிடித்துக் கொடுத்து வருகின்றோம்
ஊன் உண்ணும் அசுரர் குலத்தவர்க்கு.


தீவினைப் பயனைத் தூய்க்கின்றோம் யாம்!
தேவனை இகழ்ந்த தக்கனை கௌரவித்ததால்!


முனிவர்கள் மெய்யறிவு பெறுகின்ற வரையில்
அனுமதிக்க வேண்டும் இங்கு தங்குவதற்கு.


பெருமானைக் கண்டு உரையாடும் வரையில்
திருக்கயிலையில் தங்க யாம் விழைகின்றோம்!”


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


2#33. Devas go to KailAsh.

Indra promised IndrAni that she would be safe under the protection of AyyanAr. Then all the Devas left with Indra and went to KailAsh, to meet lord Siva. Nandhi Devan wanted to know the reason for their visit to KailAsh.


“We have come to meet Lord Siva and tell Him about our sad plight. Who else can really save us now ? We have been reduced to the state of menial workers by Soorapadman.”


Nandhi Devan replied, “Lord Siva is teaching the four muni kumAras Sanakan and his brothers. You can’t meet Him now”


“We lived happily in Heaven, but now we have to catch fish for Soorapadman and his family. We reap the bad effects heaped by
our thoughtless action, in attending the yAgam performed by Dakshan, insulting our Lord Siva.


We want to wait here until Lord Siva becomes free. Kindly grant us permission to stay on here, till we can meet the Lord and speak to Him.”
 
The 64 Thiru VLlaiyAdalgaL

14a. விண்ணுலகு ஏகியது!

திருவிளையாடல்கள். முதற்பகுதி. மதுரைக்காண்டம்.

# 14. இந்திரன் மீது வளை எறிந்தது!

14 (a). விண்ணுலகு ஏகியது!

திரிந்தன கோள்கள் தம் நிலையில் இருந்து!
மாரியும் பொய்த்துவிட்டது மொத்தமாகவே!
கருகின பயிரும், பச்சை நிற வயல்களும்,
மறுகினர் மூன்று நற்றமிழ் வேந்தர்களும்!

வறுமையில் வாடுகின்ற தங்களுடைய
திருநாட்டு மக்களைக் கண்டு மனம் வாடி,
அரிய பொதிகை மலையில் விளங்கும்
குறுமுனி அகத்தியரிடம் சரணடைந்தனர்.

“பன்னிரண்டு ஆண்டுகள் பாரினில் பஞ்சமே!
தண்ணீர் இன்றித் தவித்திடும் இந்த உலகே!
இந்திரன் தன் மனம் கனிந்தால் மட்டுமே
தந்திடுவான் மழை நீர் பஞ்சம் போக்க!”

“விண்ணுலகில் வாழும் மன்னன் இந்திரனை
மண்ணுலகத்தினர் சென்று காண்பது எப்படி?
காணாமலேயே முறை இடுவது எப்படி?
காணாமலேயே மழை பெறுவது எப்படி?”

“வானுலகம் செல்வதற்கு வான் வழிஉண்டு!
காண முடியாது அனைவராலும் அதனை!
வெள்ளியம்பலவாணனை மகிழ்வித்தால்,
தெள்ளிய வான் வழி தானே திறந்திடும்!

சிறந்தவர் தேவருள், நம் சிவபெருமானே!
சிறந்தவள் சக்தியுள் உமா மஹேஸ்வரி!
சிறந்தது விரதங்களுள் சோமவார விரதம்!
சிறந்த இடம் விரதம் புரிவதற்கு மதுராபுரி!

அமாவாசை சோமவார விரதம் ஒன்றே
உமாமகேஸ்வரனை நன்கு மகிழ்விக்கும்!
விரத முறைகளைக் கூறுகின்றேன் நான்,
விரதம் தொடங்குவீர் நீவீர் மதுராபுரியில்!”

பொற்றாமரைக் குளத்தில் நீராடிவிட்டு,
நற்றாள் தொழுது இறைவனடி பணிந்து,
கடின விரதத்தைத் தொடங்கிய மன்னர்
முடித்தும் விட்டனர் இனிய முறையில்!

விரதம் அளித்தது கை மேல் பலனை!
திறந்தது வானுலகு ஏகுவதற்கு ஒரு
சிறந்த வான் வழி மூவேந்தர்களுக்கும்!
பிறவிப் பயனை பெற்றனர் அம்மூவரும்!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

14 (A). THE JOURNEY TO SWARGAM.

The planets turned hostile to human beings. Rains failed! The crops and fields withered and dried off without water. All the three kings of Tamilnadu were saddened by the plight of their poor citizens.

They wanted to do something to save their people from famine and starvation deaths. They sought the help of the great sage Agasthya.

The rushi’s forecast was disheartening indeed! “There will no rains for the next twelve years! There will be a terrible famine. Water will become very scarce. Only Indra can save the situation!”

“But how are we to meet Indra who is in Heaven and explain our plight to him, in order to win his mercy?” the kings asked the great sage.

“There is a special path which will lead straight to the heaven! But normal persons can not see it. If you please Lord Siva, He will surely show you the path to Heaven!”

The sage continued, “Siva is the supreme among all the gods. Uma Maheswari the supreme among all the shaktis. Soma Vaara Vrathm is the best among all the Vrathams. Madhuraapuri is the best place to do any Vratham.

Amaavasya Soma vaaram is the most auspicious day to start the Vratham. I will teach you the rules of the Vratham. You may perform it in Mahuraapuri and get everything you wish for!”

The three kings learned the proper way of doing the Vratham.They went to Madhuraapuri and took a holy dip in the Pond of golden lotuses. They started the Vratham on a Amaavasya Soma Vaaram and completed it successfully .

Now they could clearly see the path which would lead them straight to the Heaven and to its king Indra!

 
bhagavtahy bhaagavatam - skanda 7

7#25a. சந்திரமதியின் தவிப்பு (1)

அரிச்சந்திரன் மாறிவிட்டான் சண்டாளன் போலவே!
சந்திரமதியும், லோகிதாசனும் வேதியரின் அடிமைகள்.


ஏவிய வேலைகளைச் செய்து வந்தனர் இருவரும்;
மேவிய துயரோடு வாழ்ந்து வந்தனர் இருவரும்.


சேகரிக்க வேண்டும் தர்ப்பைப் புல்லும், சமித்தும்.
லோகிதாசன் சென்றான் கானகம் நண்பர்களோடு.


இருந்தது நிறைய தர்ப்பைப்புல் ஓரிடத்தில்;
அறுத்துக் கட்டினர் ஒரு பெரிய கட்டாக.


தூக்க முடியாமல் தூக்கி வந்தனர், களைத்தனர்;
தாக்கியது தாகவிடாய் நடந்த களைப்பினால்.


இறக்கி வைத்தனர் புல்லைப் புற்றின் அருகே,
பிறகு சென்றனர் தெளிந்த நீர் அருந்துவதற்கு.


சீறிப் பாய்ந்த கருநாகம் தீண்டியது லோகிதாசனை,
ஏறியது விஷம் தலைக்கு; விழுந்தான் கீழே பிணமாக!


ஓடிச் சென்றனர் சிறுவர் அஞ்சி நடுங்கியபடி;
தேடினர் சந்திரமதியைச் சேதி சொல்வதற்கு.


வெட்டுண்ட வாழை மரம் போல வீழ்ந்தாள்
கெட்ட செய்தியைக் கேட்டதும் சந்திரமதி.


தெளிவித்தனர் மயக்கத்தை நீர் தெளித்து;
தெளிவடைந்ததும் அழுதாள் சந்திரமதி.


ஏசினார் வேதியர் வாய்க்கு வந்தபடி எல்லாம்!
பேசினார் பேசக் கூடாதவற்றை அடிமையிடம்!


அஞ்சினாள் மகனைக் காண அனுமதி கேட்கவும்;
கெஞ்சினாள் தன் மகனைக் காண வேண்டும் என்று.


“அடிமைகள் வேலை செய்யாமல் இருந்தால்
அடைவர் கொடிய நரகத்தை!” என அச்சுறுத்திச்


செல்ல விடவில்லை கிழவேதியர் சந்திரமதியை!
சொல்லொண்ணாத் துயருடன் செய்தாள் பணிகள்!


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்



7#25a. Chandramati’s sorrow

Harischandra got transformed into a ChaNdALa by now. Chandramati and LohidAsa served the old brahmin sincerely. They did everything told by him and lived a life full of sorrow.


LohidAsa was ordered by the old brahmin to collect kusa grass and samiththu for the yAgas and yagnas. He went to the forest along with his friends.


They found plenty of kusa grass in a particular spot. They cut the grass and made it into a huge bundle. They carried it with a great difficulty and hence became thirsty and tired very soon.


They dropped the bundle go kiss grass near an anthill and went to quench their thirst. When they came back for the bundle of grass, a black cobra bit LohidAsa and he fell down dead on the spot.


The other children got terrified by this and ran back to tell the bad news to Chandramati. She fainted as if she were a banana tree slashed with a sickle. They sprinkled cold water and revived her.


She cried bitterly and wished to her son immediately. But the cruel old brahmin would not let her go until she had finished all her chores as usual. Her master threatened her saying that she would end up in a hell if she cheated her master by not doing her chores.


Chandramati cried her heart out but continued to do her work until every one of her daily chores was completed as usual.


 
bhagavathy bhaagavatam - skanda 1

1#18a. சுகரின் சந்தேகம்

உத்யான வனத்தில் இருந்த சுகமுனிவரை
உபசரித்தான் ஜனக மன்னன் வேத விதிப்படி.


“சூரியனைப் போல் ஜொலிக்கிறீர்கள் நீங்கள்!
கோரிக்கை இருப்பதாகத் தோன்றவில்லை.


வந்த காரணம் என்னவென்று கூறவேண்டும்”
“எந்தை என்முன் வைத்த வாதமே காரணம்!


நாலு ஆசிரமங்களிலும் சிறந்தது இல்லறமென
நாள் தோறும் வற்புறுத்தினார் மணந்து கொள்ள!


பந்தத்தைத் தரும் சம்சாரம் என மறுத்தேன்;
பந்தம் ஏற்படாது சம்சாரத்தால் என மறுத்தார்.


மாறவில்லை என் மனவுறுதி அவர் வாதத்தால்;
கூறினார் தங்களைச் சந்திக்குமாறு என்னிடம்;


ஆட்சி செய்கின்றீர் சம்சார வலையில் சிக்காமல்;
மாட்சிமை பெற்றுள்ளீர் விதேக ஜீவன் முக்தராக.


மோக்ஷத்தில் விருப்பம் கொண்டுள்ளேன் நான்;
மோக்ஷம் தருவது எது என்று அறிய வேண்டும்.


தவமா? யாகமா? தியானமா? விசாரணையா?
தீர்த்த யாத்திரையா? விரதமா? இவற்றில் எது?”


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


1#18a. Doubts raised by Sage Sukar

Janaka RAjan welcomed sage Sukar and did honor to him in the prescribed manner. He then asked the sage,”You shine like the Sun with your brilliance earned by your penance. You do not seem to wish for anything that is in my possession . May I know the real reason behind you visit to my city?”


Sage Sukar replied.” The reason for my visit here is the argument put forward to me by my father. He thinks that gruhastha Asramam ( the life of a family man ) is the best among all the four (Asramams) and keeps pestering me to get married. I seek the liberation and moksha. I am afraid to enter into a bondage by getting married.


My father spoke very highly about you. You rule a country well and at the same time you are a ‘vidEhan’ and ‘jeevan muktan’. Please tell me which of these can grant me moksha. Is it penance, dhyaana, aatma vichaaraNa, theertha yaathra or observing staunch vratams?”

 
kanda purANam - asura kANdam

34. அஜமுகி, அயிராணி

சிவனைக் காணச் சென்றான் இந்திரன்,
தவம் செய்து தனித்திருந்தாள் அயிராணி.


“விரைந்து கணவன் திரும்ப வேண்டும்!”
கரைந்தாள் கடும் தவத்தில் மூழ்கியபடி.


ஆட்டுதலை அஜமுகி கண்டாள் அவளை!
“மாட்டிக் கொண்டாள் இன்று தனியாக!


இவளை எண்ணி அண்ணன் மெலிகின்றான்.
இவளைப் பரிசாக அளிப்பேன் நான் இன்று!”


நிஜமாகவே ஓர் ஆபத்து வந்து விட்டது என
அஜமுகியைக் கண்டு அஞ்சினாள் அயிராணி.


“திருமகளும் ஒப்பாக மாட்டாள் உனக்கு!
பெருமை படைத்த பேரழகி அயிராணியே!


முனிவர்களின் வேலையே தவம் புரிவது!
இனிக்கும் இளமையை வீணாக்கலாமா?


உன்னை நினைத்து அண்ணன் தவம் செய்ய,
என்ன நினைத்து நீ தவம் செய்கிறாய் கூறு?


விண்ணுலகின் அரசன் இந்திரன் என்றால்
அண்டங்களின் அதிபதி என் அண்ணன்.


அழியக் கூடியவன் இந்திரன் என்றால்
அழிவே இல்லாதவன் என் அண்ணன்.


பாழ்செய்து கொள்ளாதே உன் இளமையை;
வாழ்வாய் நெடுங்காலம் சூரனின் மனைவியாக”


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

2#34. AJAMUKHI AND INDRAANI.


Indra had gone to Kailash with the other Devas. IndrANi spent her time in intense tapas, praying for the speedy and successful return of Indra.


Ajamukhi saw IndrANi being all alone. “My brother is doing tapas to win the love of IndrANi and she is also doing a tapas here. I will present her to my brother as my gift today.”


IndrANi shivered at the sight of Ajamukhi. Now Ajamukhi spoke to IndrANi in this manner. “You are more beautiful than Goddess Lakshmi Devi Herself. Tapas is meant for the rushis and not for a pretty lady like you. Indra may be the king of Heaven but my brother Soorapadman rules over the 1008 universes.


Indra will perish one day. My brother Soorapadman is imperishable and invincible. Marry my brother and live a life filled with pleasure and luxuries”.
 
The 64 Thiru ViLaiyAdalgL

14b. ஆரம் தாங்கிய மாறன்!

# 14 (b). ஆரம் தாங்கிய மாறன்!

சுவர்க்கம் சென்றடைந்தனர் மூவேந்தர்கள்;
சுவர்க்கத்திலும் நிலவின பேத பாவனைகள்!

உயர்ந்த ஆசனத்தில் அமர்ந்திருந்த இந்திரன்,
உயரம் குறைந்தவற்றை அளித்தான் மூவருக்கும்!

சேர, சோழ மன்னர்கள் நல்ல காரியவாதிகள்!
பாரபட்சத்தைச் சற்றும் பொருட்படுத்தவில்லை!

தாழ்ந்து நின்ற அச்சிங்காதனங்களில் மிகவும்
தாழ்மையோடு அவர்கள் அமர்ந்து கொண்டனர்!

உக்கிரவர்மன் முருகனின் அம்சம் ஆயிற்றே!
சீக்கிரமாகச் சென்று இந்திரனின் அருகிலேயே,

அமர்ந்து கொண்டான் நம் பாண்டிய மன்னன்
அமரர்கோன் அமர்ந்திருந்த அரியணையிலே!

வந்த காரியத்தை இந்திரன் வினவிடவே,
வந்தனையுடன் பகர்ந்தனர் சேர சோழர்கள்!

சொந்த நாட்டுக் குடி மக்கள் நீரில்லாமல்,
நொந்து கிடக்கும் துயரச் செய்தியினை!

“இந்தா! பிடியுங்கள்! ” என்று இருவருக்கும்
தந்தான் ஆடை அணிகலன்களை இந்திரன்;

மழையையும், நீரையும் அவர்களுக்கு அருளி
தழைக்கச் செய்தான் மண் வளம் மீண்டும்!

இத்தனை நடந்த போதும் உக்கிரன்- எள்
அத்தனை உதவியும் அங்கு கோரவில்லை!

வணங்கவும் இல்லை! இறங்கவும் இல்லை!
பிணங்கியவன் போல அமைதி காத்தான்!

வந்தது ஒரு மிகப் பெரிய முத்து மாலை!
தந்தான் அதை இந்திரன் உக்கிரனுக்கு!

பலர் முயன்று கொணர்ந்த அம்மாலையை
மலர் போல அணிந்து கொண்டான் உக்கிரன்!

பாரமான ஹாரத்தைச் சூரனாகத் தாங்கியவனை
ஹாரம் தாங்கிய மாறன் எனப் புகழ்ந்த போதும்,

அலட்சியம் செய்து விட்டு நாடு திரும்பினான்,
லட்சியத்தையே மறந்தது போல் உக்கிரவர்மன்!

வளமை மீண்டும் கொழித்து விளங்கின
வளைந்த இரு மன்னர்களின் நாடுகளும்!

வறுமையிலேயே வாடியது வணங்காத
மாறனின் நாடு மட்டும் முன் போலவே!

சந்தன வனத்துக்கு வேட்டை ஆடிடச்
சென்ற மன்னன் கண்டான் வியப்புடன்,

பொதிய மலையில் தாழ்வாக மேய்கின்ற
அதிக மழை தரும் நான்கு நல்ல மேகங்களை!

சிறைப் படுத்திக் காவலில் அடைத்துவிட்டான்
குறைவின்றி மழை பொழியும் அம்மேகங்களை!

இந்திரன் தன் இரு கைகளையும் இழந்தவன் போல்
நொந்து போனான செய்வது ஏதென்று அறியாமலே !

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
# 14.(b). THE MEETING WITH INDRA.

The three Tamil kings reached swargam. Indra had different respects for different races. He sat on a high throne at a higher level and offered the three kings three thrones at a lower level.

The Chera and Chola kings were ready to stoop low in order to get what they wanted from Indra. So they did not mind the thrones at a lower level. They occupied the seats quietly.

But Ugravarman was the amsam of Lord Skanda and would not be humiliated by Indra. He moved in and sat on Indra’s throne-along with him, sharing it with him!

The Chera and Chola Kings described the plight of their countrymen and begged for Indra’s mercy and assistance in this matter.
Indra was very pleased by the humility of the two kings.

He presented them with rich gifts and sent them away with a promise of timely rains.

Ugravarman just sat there watching the recent developments. Indra mistook his calmness as pride and arrogance. He wanted to test the physical strength of the king. He ordered a special Pearl haaram to be brought to them.

Several persons carried the heavy haaram with a great difficulty. Ugravarman wore the necklace as if it were a garland of flowers. Indra praised him as the “Maran who wore the heavy haaram!” Ugravarman said nothing and went back to earth.

The countries of Chera and Chola were flourishing while that of Ugravarman was perishing!
One day Ugravarman went for hunting near Chandana Vanam and saw the famous four rain clouds roaming low on the hilly sides of mount Pothigai.

He promptly arrested them and imprisoned them. Indra was at his wit’s ends since his rain clouds had been imprisoned by Ugravarman. He raked his brain to find a solution to this grave problem.


 
bhagavathy bhaagavatam - skanda 7

7#25b. சந்திரமதியின் தவிப்பு (2)

விழுந்து விட்டது இரவு; தரவில்லை அனுமதி;
கிழவனுக்குக் கால் பிடித்த பின் அனுமதித்தான்;


“ஓடிச் செல் உன் மகன் கிடக்குமிடத்துக்கு!
விடிவதற்குள் திரும்பி விட வேண்டும் இல்லம்.


செய்துவிடு ஈமச் சடங்கு இரவோடு இரவாக;
செய்வதற்கு யாரும் இல்லை உன் வேலைகளை!’


ஓடினாள் இருளில் காட்டை நோக்கி அபலை;
தேடினாள் மகனை அத்தனை புற்றின் அருகிலும்.


கூவினாள், “லோகிதாசா எங்கிருக்கிறாய் நீ?”
தாவினாள் புல்லுக் கட்டைக் கண்டதும் துள்ளி.


கண்டாள் லோகிதாசனின் உடலைப் புற்றருகே;
கொண்டாள் ஆற்றவியலாத வேதனையும், துயரும்.


மூர்ச்சித்து விழுந்தாள் தன் மகன் உடல் மீதே!
தேற்றிக் கொண்டு எழுந்தாள் தெளிந்தவுடன்.


அரற்றினாள் அருமை மகனின் உடலைத் தழுவி;
அரற்றினாள் எங்கோ உள்ள கணவனை எண்ணி.


“அனைத்தையும் இழந்த பின்னும் உயிர் வாழ்ந்தது
அனைத்தும் மகன் நீயே என்று எண்ணியிருந்ததால்!


நம்பிக்கை பொய்த்துப் போய்விட்டது இப்போது.
நல்ல காலம் என்பது கானல் நீராக ஆகிவிட்டது!


கலச ரேகை, சக்கர ரேகை, ஸ்ரீவத்ச ரேகை இவை
காக்கவில்லை மகனே உன்னைக் காலனிடமிருந்து.”


கூவிக் கூவி அழுதாள் சந்திரமதி – அவள்
கூச்சல் கேட்டு வந்தனர் நகரக் காவலர்.


“யார் நீ? என்ன செய்கிறாய் இந்த நேரத்தில்?
யார் குழந்தை இவன்? எப்படி இறந்து போனான்?"


பதில் கூறவில்லை சந்திரமதி எந்தக் கேள்விக்கும்;
மதி மயங்கி இருந்தாள் துக்கத்தின் தாக்கத்தினால்.


சந்தேகித்தனர் காவலர்கள் சந்திரமதியைப் பற்றி,
‘இந்தப் பெண் நல்லவள் அல்ல’ என்று எண்ணினர்.


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


7#25b. Chandramati’s sorrow (2)

The sun had set and the night fell but still Chandramati was not allowed to leave the house. She had to massage the feet of the nasty old brahmin. Finally he allowed her to go out but he said,


” You may go and look for your son now. Make it a point to return here before the sunrise tomorrow. You may finish his cremation tonight since there is no one else here to do your chores if you don’t return here in time.”


Chandramati ran in the pitch darkness to the forest where her dear son lay dead. She went looking for him near every anthill. She shouted calling out his name in vain. Finally she saw the bundle of kusa grass near an anthill.


She found the body of her son nearby. She fainted in her sorrow. She came round a little later and wept bitter tears embracing her dead son. She cried out to her dear husband who was far away from her now.


“I had lived on even after losing everything in life since I thought that you were everything to me! But these hopes have been destroyed now. The hope of a distant good future has become a mirage now. Your divine marks of Kalasam, Chakram and sreevatsam could not save you from the cruel hands of death.”


Chandramati cried her heart out. Her wailing was heard over a long distance. The guards on the night duty heard her. They came to her and asked her, “Who are you? What are you doing here now? Whose son is this boy? How did he die?”


Chandramati was possessed by her sorrow and did not reply to any of these questions. The night guards got a doubt that the weird lady who was wailing in a forest at the middle of the night could not be a good woman!


 
bhagavathy bhaagavatam - skanda 1

1#18b. ஜனகரின் விளக்கம்

“விருப்பம் உண்டு மோக்ஷத்தில் என்றால் - ஒருவன்
விருப்புடன் புரிய வேண்டும் இந்தக் கடமைகளை.

உபநயனம் செய்து கொள்ள வேண்டும் – பிறகு
உடன் தங்கிக் கற்கவேண்டும் குருவிடம் வேதம்.

குருதட்சிணை தரவேண்டும் கற்றுத் தேர்ந்தபின்,
திருமணம் புரியவேண்டும் நற்குலப் பெண்ணை.

ஈடுபடவேண்டும் குடும்ப வாழ்வில் அவளோடு,
ஈட்டவேண்டும் பொருளை தர்மமான வழியில்.

திருப்தியடைய வேண்டும் கிடைத்த வாழ்வில்,
நித்திய கர்மங்களை அனுஷ்டிக்க வேண்டும்.

நல்ல பிள்ளைகளைப் பெற்று ஆளாக்குவது
நல்ல கிருஹஸ்தாச்ரமத்தின் தர்மம் ஆகும்.

வெல்ல வேண்டும் வனவாசத்தைத் தவத்தால்;
செல்ல வேண்டும் சந்நியாசத்துக்கு இறுதியாக.

பெற வேண்டும் சாந்தம், தூய்மை, வைராக்கியம்;
பெற வேண்டும் விஷய சுகத்தில் விருப்பமின்மை.

ஆசைகளற்றவனே சந்நியாசத்துக்கு அதிகாரி;
ஆசைகளுள்ளவன் சந்நியாசம் பெறுவது வீண்!

வேதம் கூறும் மார்க்கம் இதுவே என்றறிவீர்.
ஏதும் பயன் தராது இதில் முறை தவறினால்.

விதிக்கப்பட்டுள்ளன நாற்பதெட்டு விதிமுறைகள்;
விதிகளில் நாற்பது கிருகஸ்த்தனுக்கு உரியவை.

எட்டு சமஸ்காரங்கள் உரியவை மோக்ஷகாமிக்கு.
கிட்டும் மோக்ஷம் இதை விடாது செய்பவனுக்கு.

ஈடுபடவேண்டும் இவற்றில் வரிசைக் கிரமமாக;
விட்டு விடமுடியாது எந்த ஒரு ஆசிரமத்தையும்.”

ஜனகன் தெளிவுறுத்திய பின்னர் சுகமுனிவர்
ஜனகனிடம் கேட்டார் மேலும் சில ஐயங்கள்!

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


1#18b. King Janaka’s explanation


King Janaka told sage Sukar,”If you are interested in attaining moksha, then you must perform these duties diligently. You must have your upanayanam ( scared thread ceremony) performed at the right age. You must learn the Vedas from a learned guru, in a gurukula vAsam.

You must give guru dakshina ( Fees for the Guru) appropriately, after you finish learning from the guru. You must marry a suitable girl from a good family. You must live with her and raise a family of good children.

You must earn by just means and be contented with whatever you are able to earn in that manner. You must adhere to the nithya karma anushtaanam (perform the prescribed daily rituals) .

In vAnaprastha (life away from the comforts of civilization) you must excel by your penance. You must enter into sanyAsam (renouncing the world) only after these these Asramams. You must develop sAntham (a calm temperament), vairAgyam (dispassion) and purity of mind.

You must give up all desires related to the worldly things. One who is immersed in desires is not fit to become a sanyAsi( a hermit). This is what the VEdAs say. There is no use in skipping or jumping over these four asramas ( four stages in a man’s life). They must be taken up in the right order.

There are 48 AchArAs (rules of good conduct) out of which 40 are meant for the gruhasthan (the house holder). Only the other eight AchArAs are meant for the moksha kAmi – one who wants to attain liberation. Anyone who follows these rules with sincerity is sure to attain moksha.”

Now sage Sukar raised some new doubts to King Janaka.


 
kanda purANam - asura kANdam

35. அயிராணியின் மறுப்பு

கொடும் மொழிகள் காதில் விழுந்ததும்
நடுநடுங்கினாள் பேதை அயிராணி.

“தீய மொழிகள் தீயினும் தீயவை ஆகும்!
வாயிலில் தள்ளும் கொடிய நரகத்தின்!

நாக் கூசாமல் பேசும் உன் கதியை,
நான் கூறி நீ அறியவும் வேண்டுமோ?

காசிப முனிவரின் மகளான நீயும்
பேசிய மொழிகள் உனக்கு அழகோ?

என் கணவனையன்றி நாடேன் பிறரை!
உன் குலத்துக்கு கோடரி ஆகிவிடாதே!

யாண்டும் எனக்குக் காவல் உண்டு!
மீண்டு சென்றுவிடு மிக விரைவாக!”

கடித்தாள்அஜமுகி தன் உதடுகளை.
புடைத்தாள் தன் இரண்டு கரங்களை!

“சொன்ன சொல் கேளாவிடில் உன்னை
உண்டு விடுவேன் இக்கணமே இங்கு!

அண்ணன் விரும்பிய பெண் என்பதால்
உன்னை உயிரோடு விடுகிறேன் நான்!

வலிய இழுத்துச் செல்வேன் உன்னை!”
மெலிந்த அயிராணியின் கரம் பற்றினாள்.

“ஐயனரே ஓலம்! என் கடவுளே ஓலம்!
மெய்யர்க்கு மெய்யரே காப்பாற்றுவீர்!”

கண்ணீர் வடியக் கதறினாள் அயிராணி!
எண்ணினாள் தன் காவல் தெய்வத்தை!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

2#35. INDRAANI RESISTS.


IndrANi trembled like a leaf in a strong wind, on hearing these cruel words.

“Cruel words cast a person in the gates of the fiery hell! You will pay heavily for these unkind words spoken to me by you. You are the daughter of a great rushi Kasyapa. Do these words suit your high birth?

I will never live with anyone other than my husband Indra! You will destroy your clan by making such suggestions. I am under divine protection. You had better be gone away before it becomes too late !”

Ajamukhi could not bear the thought of a frail fair queen disobeying her. She bit her lips, and wrung her palms in anger. “I will eat you right now and here – had it not been for my brother who madly loves you! I will take you away by force!”

She caught hold of the queen’s frail hands. IndrANi lamented and called out loudly to her protector and savior with tears streaming down her eyes.

 
The 64 Thiru ViLaiyAdalgaL

14c. வளை எறிந்தது!

14 (c). வளை எறிந்தது!

கடும் சினம் கொண்ட இந்திரன்
கொடும் பகைவனாக மாறினான்!

“விடுவிக்கவேண்டும் மேகங்களை!”
எடுத்தான் படை பாண்டியர்களின் மீது.


கடும் போர் ஒன்று நிகழ்ந்தது அங்கே!
அடுத்து வந்த அமரர்க்கும் வீரர்க்கும்;

எடுத்த வேல் முருகனது என்றால்
அடுத்து வந்த படை என்ன ஆகும்?


ஓட்டம் பிடித்து இந்திரன் படை,
வாட்டம் அடைந்து சமரில்!

தனி ஒருவனாக மாட்டிக்கொண்டான்
இனிச் செய்வதறியாத இந்திரன்!


ஒருவருக்கு ஒருவர் என்ற படைநெறி
முறைப்படி தொடங்கியது உடனே

இருவர் மட்டுமே புரியக் கூடிய
சிறந்த, கடின, துவந்த யுத்தம்!


வச்சிராயுதம் தன்னிடம் இருக்க
அச்சம் கொள்வது வீண் என்றெண்ணி,

வச்சிராயுதத்தை எறிந்தான் இந்திரன்!
வச்சிராயுதத்தை எதிர்த்தது எது தெரியுமா?


உக்கிரன் சுழற்றி எறிந்தது அப்போது
மிக்காரில்லாத தந்தை தந்த வளையே!

வளை போன்றே கட்சி தந்தாலும் அது
விளைந்தது சக்ராயுதத்தின் அம்சமாக!


வளை தட்டி விட்டது வச்சிராயுதத்தை!
வளையின் நோக்கம் இந்திரன் தலையே !

தகர்க்க வேண்டியது இந்திரன் தலையை,
தகர்ததோ அவன் மணிமுடியை மட்டுமே!


முனிவரின் சாபம் பலித்துவிட்டது.
தனி ஆயுதமான பாண்டியன் திகிரி

தலைமுடியைத் தகர்த்து அழித்தது,
தலையைச் சிதறடிக்காமல் காத்தது.


தலைக்கு வந்த ஒரு தனி பெரும் ஆபத்து
தலை மகுடத்தை மட்டும் அழித்து ஏன்?

கடலெனப் பொங்கிய சிவனது கருணைக்
கடாக்ஷமே காத்தது இந்திரன் தலையை.


சிறைப்பட்ட மேகங்களை விடுவிக்குமாறு
சிறையிலிட்ட உக்கிரனை இந்திரன் வேண்ட,

“மாதம் மும்மாரிக்கு வாக்குத் தந்தால் தான்
மேகம் விடுதலை ஆகும்!” என்றான் உக்கிரன்.


இந்திரன் வாக்கை நம்பவில்லை உக்கிரன்.
தந்திரங்கள் பலப்பல புரிபவன் இந்திரன்!

தூதுவரும், ஓலைகளும் வீணாகப் போகவே,
ஏது செய்வதென ஆராய்ந்தான் இந்திரன்.


ஏக வீரன் என்னும் இந்திரனின் நண்பன்
ஏக மனத்துடன் தானே முன்வந்தான்!

“பிணையாக என்னை அடைத்து விட்டு
இணையில்லா மேகங்களை விட்டுவிடும்!”


விடுதலை ஆன மேகங்கள் உடனேயே
கிடுகிடு என உயரே எழும்பிச் சென்றன!

“கொடு! கொடு!” என்று வேண்டியவருக்கு
கொடுத்தது மாதம் தவறாது மும்மாரி!


ஆறுகள், குளங்கள், ஏரிகள், வாவிகள்,
நீரால் முற்றும் நிரம்பி வழியலாயின.

வறுமையும், வற்கடமும் மறைந்து போயின,
வளமையும், செழுமையும் கொழிக்கலாயின!


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


# 14 (c).THROWING DISCUS AT INDRA


Indra became mad with anger! He became a bitter enemy of the Paandiya King. His only aim was to free the clouds- his servants for the prison of Ugravarman.


He lead an army on the Paandiya Kingdom. A fierce battle ensued. Ugran was the amsam of Lord Skanda. The Devas were defeated and took to their heels.


Indra was left all alone amidst the enemies. So now they fought one-to-one. A bout of wresting started between Indra and Ugravarman.


Indra thought it was pointless to wrestle when he could finish off Ugran with his vajraayutham. He threw the Vajrayutham at Ugran and Ugran threw the discus given by his father.


The discus knocked off the Vajrayutham and went straight for Indra’s head.


According to the Durvaasaa’s saapam it should have shattered Indra’s head to a thousand pieces but it merely shattered his crown. Indra was saved by the infinite compassion Lord Siva showered on him.


Indra did not give up!. He sent messages demanding the release of the clouds. Ugran knew that Indra was capable of playing many dirty tricks.


He did not trust Indra. Ekaveeran was Indra’s friend. He offered to become a hostage in the place of the clouds.


The clouds were finally released. They rose high up in the sky and started raining on Paandiya kingdom. All the rivers, ponds, lakes and tanks were overflowing with rainwater.


The famine and drought disappeared. Paandiya Kingdom became fertile and prosperous once again.
 
bhagavathy bhaagavatam - skanda 7

7#25c. வீரபாகுவின் கோபம்


“மௌனம் சாதிக்கின்றாள் என்ன கேட்டாலும்!
கௌரவமான பெண்ணாகத் தோன்றவில்லை !

கொன்றிருப்பாள் சிறுவனை இவளே ஒருவேளை!
கொல்ல வேண்டும் இவளைப் பழிக்குப் பழியாக.

குலப் பெண் நள்ளிரவில் வருவாளா காட்டுக்கு?
கூற முடியாமல் நாடகம் நடிப்பாளா இதுபோல?

நரமாமிசம் உண்பதற்கு கொன்றிருப்பாள் இவனை;
நம்மைக் கண்டதும் செய்கிறாள் இப்படி மாய்மாலம்!”

இறுக்கிப் பிடித்தனர் அவள் இரு கைகளையும் – பிறகு
இறுக்க அமைத்தனர் ஓர் ஆயுத விதானத்தை மேலே!

இழுத்துச் சென்றனர் சண்டாளன் வீரபாகுவிடம்!
“பிழைக்க விடாதே இவளைக் கொன்றுவிடு!” என்றனர்

“அகப்பட்டாளா இன்று இந்த நரமாமிச பக்ஷிணி!
ஜகஜ்ஜாலம் செய்து வந்தாள் இத்தனை காலம்!

செய்கின்றாள் தீங்கு பொது மக்களுக்கு – இவளைக்
செய்தால் கொலை, வந்து சேராது நமக்குப் பாவம்!”

கட்டினான் கெட்டிக் கயிற்றினால் அவளை இறுக்க;
கெட்டியாகப் பற்றிக் கொண்டான் அவள் கூந்தலை.

அடித்தான் மணிக் கையிற்றால் கைவலிக்கும் வரை;
அழைத்தான் அரிச்சந்திரனை கொலை செய்வதற்கு.

மறுத்தான் அரிச்சந்திரன் அபலைப் பெண்ணைக் கொல்ல.
வெறுத்தான் அவன் பெண்ணைக் கொல்லும் எண்ணத்தை.

“கொன்றால் ஒரு பெண்ணை, அடைவேன் நரகத்தை!”என
“கொன்றுள்ளாள் இவள் சின்னஞ் சிறு குழந்தைகளை!

அடிமை நாய் என்னை எதிர்த்தா பேசுகிறாய் – எனில்
அடைவாய் நரகக் குழியை வெளியேற முடியாதபடி.”

தந்தான் கொலை வாளை அரிச்சந்திரன் கையில்;
தந்தான் ஆணை அவளை உடனே கொல்லுமாறு.

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

7#25c. VeerabhAhu’s anger

The night guards spoke among themselves.”This woman does not reply to any of our questions. She cannot be from a respectable family. Which lady will go a forest in the middle of the night all by herself?

She might have killed the boy in order to eat his flesh. Since she got caught she is enacting a drama and unable to answer our simple questions.”

They caught hold of her hands. With their weapons they formed a roof over her head and dragged Chandramati to the ChaNdALan VeerabhAhu. They told him, “Kill her. Do not spare her life.”

VeerabhAhu told them. “So finally you were able to capture this nara mAmsa bakshini (the human flesh eater). She had been evading getting arrested all these days. She had harmed the public by killing their children. By killing people like her we will not
incur any sin. In fact we may earn some puNya.”

VeerabhAhu tied her tightly with a rope. He held her by her hair and started beating her with a thick rope until he could beat her no more.

He then called Harischandra and ordered him to kill that strange woman then and there. Harischandra said, “Killing a woman is not within my power. I can never do it!”

VeerabhAhu lost his temper and said,” She has killed several young children in the past. You must kill her now as ordered by me.”

When Harischandra refused to do so, VeerabhAhu lost his temper and started shouting, ” How dare you to speak against me oh slave. How dare you disobey me? You will end up in a hell from which you can never ever be able to come out!”

VeerabhAhu handed over his weapon to Harischandra and commanded him to kill her.

 
bhagavathy bhaagavatam - skanda 1

1#18c. சுக முனிவரின் ஐயம்

“பிறக்கும்போதே ஞான வைராக்கியம் பெற்ற ஒருவன்
பிரவேசிக்க வேண்டுமா கிருஸ்தாதி ஆஸ்ரமங்களில்?”

“சந்நியாசத்தில் நேரடியாகப் பிரவேசிக்கும் ஒருவன்
சந்திக்க வேண்டி வரும் இடர்பாடுகள் பலவற்றை.

ஐந்து மதயானைகளின் வலிமை பெற்றவை புலன்கள்!
ஐம்புலன்களையும் அடக்கி ஒடுக்கி வைப்பது கடினம்.

நெறி கெட்டு ஓடச் செய்யும் பரிபாகம் இல்லாதவனை!
அறிவினை மயக்கும்; பெருக்கும் பல ரக இச்சைகளை!

சித்தத்தைக் கெடுப்பவை நாம் கொண்டுள்ள இச்சைகள்;
எத்தனை இச்சைகள் நித்திரை, ஆகாரம், சுகம் இத்யாதி.

வெல்வது கடினம் வெறும் சங்கல்பத்தினால் மட்டும்!
வெல்வது எளிது அவற்றை நாம் அனுபவித்த பிறகு.

கிரமமாக ஈடுபட்டு அனுபவித்த பிறகே ஒருவனால்
சிரமம் இன்றி ஒடுக்க முடியும் இந்திரிய இச்சைகளை.

கீழே விழுவான் உயரத்தில் உறங்குபவன் புரண்டால்!
கீழே உறங்குபவனுக்கு இல்லை அன்றோ இந்த ஆபத்து?

நேராகச் சன்னியாசம் பெற்றவன் சீராக இல்லாமல்
சிறிது நழுவினாலும் பிரஷ்டனாகி வீணாகிவிடுவான்.

அனுபவிக்காத இன்பங்களும் இச்சைகளும் ஒன்றாகி
அலைக் கழிக்கும் மனிதனை வாழ்நாள் முழுவதும்.

பழங்களை உண்ணும் எறும்புகளைப் பாருங்கள்!
பழங்களை உண்ண எண்ணி ஏறுகின்றன மரத்தில்.

இறகுகள் உள்ள பறவைகளால் எளிதாகப்
பறந்து சென்று உண்ண முடியும் பழங்களை.

விழுந்து விடலாம் பறவை மரத்தில் மோதுண்டு
விழுந்து விடலாம் பழம் பறவையிடமிருந்து தவறி.

இடையறாது முயற்சி செய்யும் சிறிய எறும்புகள்
இடையூறு இன்றி உண்கின்றன இனிய கனிகளை.”

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


#18c. Some more doubts raised by Sukar


Sukar asked King Janaka,”If a person is born with gnAnam and vairAgyam does he need to enter into all these Asramams in this order? Can’t he become a sanyAsin directly?”

King Janaka replied,” The man who becomes a sanyAsin directly has to face several types of problems. The five senses of a man are as powerful as five mad elephants. It is difficult to keep them under one’s control.

If the person is not strong willed, the senses will make him run after them. Man is filled with so many desires …desire for food, for sleep and for the other sensual enjoyments. It is difficult to overcome them just by one’s sankalpam or determination of the mind.

But if a person has already enjoyed them, it becomes easier to overcome them and rise above them. The man who sleeps at a height will fall down and get hurt – if he rolls over. The man who is sleeping on the floor need not fear about such an accident.

The person who becomes a sanyAsin directly will be wasted even if he gives in to a small desire. The pleasures which he had not enjoyed in life will hunt him and haunt him throughout his life.

Look at these small ants climbing on the trees. They wish to eat the sweet fruits of the tree. They go up with difficulty but enjoy the fruits with certainty.

The birds on the other hand have wings and can reach the fruits easily. Yet they may dash against the trees and fall down. Or the fruit may slip from their grip and fall down.”

 
kanda purANam - asura kANdam

36a. மஹாகாளர் வருகை

அண்மையில் மறைந்து நின்றிருந்தார்
அயிராணியின் காவலர் மஹாகாளர்.

அஜமுகி அயிராணியை இழுத்தவுடன்
அதட்டிக் கொண்டு முன்னே வந்தார்.

“எங்கே செல்லுகிறாய் களவாடியபடி?
தாங்கள் அஞ்ச வேண்டாம் தாயே!

தங்களைப் பற்றி இழுத்த கரத்தை
இங்கேயே வெட்டுகின்றேன் நான்! ”

அயிராணி அச்சம் நீங்கினாள்;
அஜமுகி விழித்துப் பார்த்தாள்.

“என் முன் நில்லார் மும்மூர்த்திகளும்!
என்னை எதிர்க்கத் துணிந்தவன் யார்?”

“அயிராணியை விட்டுவிடு இப்போதே!
செய்த குற்றத்தை மன்னித்துவிடுகிறேன்.”

“அஞ்சாது என்னிடம் பேசுகின்றாய்!
தஞ்சம் அயிராணிக்கு அளிக்கின்றாய்!

உன் எஜமானன் யார் என்று கூறுவாய்!”
“என் பெயர் வீரமஹாகாளன் என்பது.

வெள்ளை யானை வீரன், மூவுலகின் சூரன்
அளித்தான் இந்த வேலையை எனக்கு!”

அய்யனாருக்கும், இந்திரனுக்கும் ஒரு போல
ஐயம் இன்றிப் பொருந்தியது இந்த வர்ணனை.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

2#36a. MahAKALar intervenes!


MahAkALar was hiding somewhere nearby. When Ajamukhi pulled IndrANi’s hand, he came forward to protect her. “Where do you plan to take her to?” he angrily demanded Ajamukhi.

He told IndrANi,”Please don’t be afraid oh Queen! I will chop off the hand that caught hold of your hand!” IndrANi now felt reassured and Ajamukhi felt very troubled.

“The Trinity are afraid to stand in my presence. Who is this bold one then?”

“Let IndrANi go and I will pardon your crime” MahAkALar told Ajamukhi.

“You speak very bravely. So You protect IndrANi. Tell me now who are you who is your master?’

“I am MahAkALar and my valorous master is the one who rides on a white elephant.”

This description suited both Indra and AiyyanAr and so Ajamukhi got confused.

 

Latest posts

Latest ads

Back
Top