• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

A poem a day to keep all agonies away!

bhagavathy bhaagavatam - skanda 7

7#30d. சக்தி பீடங்கள் (2)

உள்ளன இன்னும் பல சக்தி பீடங்கள் – எனினும்
உள்ளவற்றில் தலையாயவை இந்தப் பீடங்களே.


விடுபடுவான் அனைத்துப் பாவங்களிருந்தும் – இந்த
இடங்களையும், தேவியின் பெயர்களையும் அறிபவன்.


செய்ய வேண்டும் தலயாத்திரை இந்த இடங்களுக்கு;
செய்ய வேண்டும் தேவியின் பூஜை, தியானம், ஜபம்.


நிறைவடையச் செய்யவேண்டும் உள்ளங்களை
அறுசுவை உணவை அனைவருக்கும் வழங்கி.


பெறக் கூடாது புண்ணியத் தலங்களில் தான தருமம்.
இருக்கக் கூடாது ஆசைகள் நிறைந்தவனாக அங்கே.


தேவியின் தலங்களுக்கு யாத்திரை செய்பவன்
தேவன் போல வசிப்பான் பிரம்ம லோகத்தில்.


நற்கதி அடைவர் அவன் பித்ருக்கள், முன்னோர்கள்;
நற்பேறு அடைந்து ஆவான் அவன் ஜீவன் முக்தனாக.


அஷ்டோத்திர சத நாமங்களை ஜபிப்பவர்கள்
அடைவர் தாம் விரும்பிய சித்திகளை எல்லாம்.


தேவியின் வடிவம் அடைபவனைத் தொழுவர் தேவர்;
தேவியின் பீடங்கள் ஞான ரூபமானவை – அவைகள்


நீக்கும் பயத்தை; மற்றும் பெருக்கும் சம்பத்தை,
அளிக்கும் நிலையான சௌபாக்கியத்தை அள்ளி!


சொல்லி விட்டேன் தேவியின் ரகசியங்களை – இன்னும்
சொல்ல வேண்டியது என்னவோ சொல்வாய் மன்னா!”


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


7#30d. Shakti peetam (2)


Sage VyAsa continued to speak to king Janamejayan, “These are the most important of all the Shakti peetams of the world. The person who knows the names of these holy places and the names of the goddess enshrined there will be delivered from all his precious sins.


One should visit these places. One should perform Pooja, japam and DhyAnam of Devi. One must give good food to the people in these places – to their heart’s satisfaction. One should not accept dAnam in these holy places. One must keep his mind free from all desires.


The person who visits these Shakti peetams will live a Devan in the Brahma lokam. His ancestors will reach heavenly abode. He himself will become a jeevan muktan.


He who recite these 108 names, will acquire all the siddhis he wishes to acquire. One who attains sAroopya mukti of Devi, will be worshipped even by the Devas.


All the Shakti peetams are full of Jnaanam and enlightenment. So they remove the fear of samsAra. They increase the wealth. They bestow prosperity on the devotees of Devi.



 
bhagavathy bhaagavatam - skanda 2

2#1b. மச்சகந்தி

தேவ மங்கை அத்ரிகை நீராடினாள் நதியில்;
வேதியன் இறங்கினான் நதி நீரில் சந்தி செய்ய.


குறும்புடன் காலைப் பற்றி இழுத்தாள் அவள்;
அறிந்து கொண்டான் அவள் அப்சரஸ் என்று.


“சந்திக்கு இடையூறு செய்ததால் நீ நீர்வாழ்
ஜந்துவாக, ஒரு மீனாக மாறக் கடவாய்!”


உபரிசரனின் வீரியத்தை விழுங்கிய மீன்
உருமாறி மீனாகிய அப்சரஸ் அத்ரிகையே!


கருவுற்றது மீன் வீரியத்தை விழுங்கியதால்!
கரு வளர்ந்து நிறை மாத கர்ப்பம் ஆகிவிட்டது.


வலைஞனின் வலையில் மாட்டிக் கொண்டது;
வயிற்றைக் கிழித்தான் வலைஞன் தாசன்.


ஆச்சரியம் அடைந்தான் தாசன் – வயிற்றுக்குள்
ஆண், பெண் என்று இரு குழவிகளைக் கண்டு!


மன்னனிடம் கொடுத்தான் இரட்டையரை.
மன்னன் அறிந்தான் தன் பிள்ளைகள் என்று!


வைத்துக் கொண்டான் ஆண் மகவைத் தன்னுடன்;
வளர்க்கச் சொன்னான் பெண் மகவை தாசனிடம்.


வளரும் பெண்ணிடம் வீசியது மீன் மணம்;
வளர்ந்தாள் மச்சகந்தி என்னும் பெயருடன்.


சாப விமோசனம் கேட்ட அத்ரிகைக்குச்
சாப விமோசனம் அளித்தான் வேதியன்.


“கருத்தரிப்பாய் நீ இரண்டு குழவிகளை;
திரும்புவாய் சுவர்க்கம் நீ ஈன்றவுடனே!”


வலைஞன் கையால் சுவர்க்கம் அடைந்தாள்;
வலைஞனிடம் வளர்ந்தாள் அப்சரஸின் மகள்.


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


2#1b. Machcha Gandhi


A naughty apsaras was bathing in a river one day. A Brahmin entered the river to perform sandhyaA vandanam and his prayers. She pulled his leg under the water surface.

He knew it was an apsaras and cursed her in anger, “You disturbed my sandhyA vandanam hiding under the surface of water. May you become a fish that dwells in water”


The apsaras became a huge fish. It was this fish that swallowed the tejas of the king Uparisaran – dropped by the eagle in the river. The fish became pregnant and the time of delivery approached fast.


Just then it got caught in the net of a fisherman named DAsan. He was surprised to see the huge fish with a bulging stomach. He cut open its stomach and was even more surprised to find two human infants in the stomach – a boy and a girl.


Anything out of the ordinary should be reported to or presented to the king. DAsan took the infants and presented them to the king. The king knew those were his own children – born out of the tejas he had sent for his wife though an eagle.

He kept the male child with him and told the fisherman to bring up the female child with love and care.


The apsaras had begged for s’Apa vimochanam and the Brahmin had granted her one. He said, “You will bear two children in your womb. The moment you deliver them you will return to swarggam (The Heaven).”


So when the fisherman cut open the stomach of the fish, the apsaras returned to the swarggam. But her daughter was left behind with the fisherman DAsan. She emanated the smell of fish and got the name Machcha Gandhi meaning ‘a girl who smells like a fish.’





 
kanda purANam - asura kANdam

43e. அவுணர் அட்டகாசம்

தனித்து விழுந்து கிடந்த ஜயந்தனையும்,
தளர்ந்த விழுந்து கிடந்த யானையையும்


கண்ட அவுணர்கள் பொங்கி ஆரவாரித்து,
கண்டபடி ஜயந்தனை வருத்தலாயினர்.


“முன்னமே தளர்ந்து போய் உள்ளான்;
இன்னமும் வதைக்காதீர்கள் அவனை!


தேடித் திரிந்து அஞ்சி ஒளிந்துள்ள பிற
தேவர்களையும் சிறைப் பிடியுங்கள்!”


அனைவரையும் பிடித்துக் கட்டினர்;
அனைத்தையும் எரித்து அழித்தனர்.


பொன் போலவே ஒளிர்ந்து எரிந்து
பொன்னுலகம் சேதமாகி விட்டது!


முன்னே சிறைக் கைதிகளை அனுப்பிப்
பின்னே நகர் திரும்பினான் பானுகோபன்.


“விண்ணவர்கள் இதோ நம் கைதிகள்!
விண்ணுலகம் எரிந்து சாம்பலானது!”


சூரபத்மனை வணங்கிக் கூறினான்;
சூரபத்மன் அழைத்தான் காவலரை.


“ஈவு இரக்கம் இன்றிச் சேதியுங்கள்
தேவர்களின் உடல் உறுப்புக்களை.”


கை வலிக்க வெட்டினாலும் வளர்ந்தன
கை, கால்கள் மற்றும் தாள், தோள்கள்.


கொல்லவும் இயலவில்லை – வெட்டித்
தள்ளவும் இயலவில்லை அவர்களை.


“விலங்குகள் பூட்டிய பின் சிறையில்
விலங்குகள் போலப் பூட்டுங்கள்!”


சிறைப்பட்ட தேவர்கள் வருந்தினர்;
அடைபட்ட தம் நிலையை நொந்தனர்.


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


2#43e. The atrocities of the asuras.


The asuras shouted with delight when they saw Jayanthan unconscious and the elephant overcome. The started harassing Jayanthan. BhAnukOban told them, “Already he is very weak. Do not torture him. Now go and get hold of all the other Devas who have gone into hiding!”


Everyone was rounded up and tied with ropes. The whole swargga was burned down to ashes. The prisoners proceeded first and BhAnukOban followed them later. He told Soorapadman, “I have destroyed the swargga. Here are all the captured Devas who are now our prisoners.”


Soorapadman ordered his soldiers to chop off the body parts of the Devas. But their body parts regenerated and grew back as soon as they were cut off. The Devas had tasted their share of nectar and could not be killed or disfigured.


“Oh! We can neither kill them nor disfigure them! Lock them up in the prison, after chaining them, so that they cannot escape!” All the Devas were locked up and chained like wild animals. They were steeped in self pity.


 
The 64 ThiruiLaiyAdalgaL

# 22 (b ). வில்வீரன், கொல்யானை.

மலை போல உயர்ந்தும், நிமிர்ந்தும்,
அலை போல அசைந்தும் நடந்தது யானை;

சோழர் குலத்தின் நால்வகைப் படையும்,
சோர்வில்லாச் சமணரும் பின்தொடர்ந்தனர்.


புழுதிப் படலத்துடன் வரும் பெரும் படையை
பொழுதில் கண்டு விட்ட விக்கிரம பாண்டியன்,

மலை நிகர்த்த கரிய கொல்யனையை வெல்ல
மலை மகள் மணாளனைச் சரணடைந்தான்!


“பாண்டியா! அஞ்ச வேண்டாம் வீணாக மனம்!
அண்டிய படையையும், மந்திர யானையையும்,

தண்டிப்பேன் வில் வீரனாக உருவெடுத்து!
மண்டபம் ஒன்று கிழக்கில் அமைத்திடுக!”


பதினாறு தூண்களை உடைய அழகிய
அதியுறுதியான அட்டாலை மண்டபம்

அமைத்தான் பாண்டியன் கிழக்கு திசையில்,
உமைமணாளன் தன்னிடம் கோரிய விதத்தில்!


வந்தான் ஒரு வாலிப வில் வீரன் அங்கு!
வண்ண மயில்பீலி அவன் கரியகுடுமியில்;

இழுத்துக் கட்டிய சிவப்பு நிறக் கச்சை!
இடுப்பில் தொங்கிய நீண்ட உடைவாள்!


இடது தோள் மீது ஒரு நீண்ட வலிய வில்!
வலது முதுகில் அழகிய அம்பறாத்துணி;

கண்களைக் கவரும் வடிவழகன் அவன்!
கருநிறம் எடுத்து வந்தானோ மன்மதன்?


மண்டபத்தின் மேல் ஏறி நின்றான் வீரன்;
கண்டவுடன் யானையைக் கொல்லுவதற்கு;

கூப்பிடு தூரத்தில் யானை வந்தவுடனே
கூரிய நரசிங்கக் கணையை விடுத்தான்.


சிங்கம் போலவே கர்ஜித்தது அக்கணை!
மேகம் போல இடி முழக்கியது அக்கணை!

வேல் போலப் பாய்ந்து சென்றது அக்கணை!
வேழத்தின் தலையைத் துளைத்தது அக்கணை!


கொல்ல வந்த கொல் யானையே அங்கு
கொல்லப் பட்டது வில் வீரன் கணையால்!

இருள் மலையைப் போன்ற கரிய யானை,
இறந்து விழுந்தது ரத்தம் பெருக்கெடுத்து!


தெய்வ வில்வீரனின் திருப் பாதங்களைத்
தொழுதான் பக்தியுடன் பாண்டிய மன்னன்;

தொடர்ந்த சமணரையும், சேனையையும்,
துரத்தினான் தக்கப்படி தண்டித்த பிறகு.


ராஜகளையுடன் பிறந்த தன் மகனுக்கு
ராஜசேகரன் எனப் பெயரிட்டான் அவன்.

ராஜகுமாரனுக்குப் பயிற்சிகள் அளித்து
ராஜாவாகும் தகுதிகளை வளர்த்தான்.


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


# 22 (B) THE ARCHER AND THE ELEPHANT.


The elephant which was tall and dark resembling a huge mountain walked majestically towards Madhuraapuri.The army of the Chola King and the group of Jain followed it closely-not wishing to miss the fun!


Vikrama Paandiyan saw the approaching elephant and the army. He knew that only Siva could save him and his capital city from this killer elephant.He heard an asareeri – the voice of god instructing him thus:


“Do not be afraid Paandiya! I will appear as an archer and kill the devilish elephant myself. Put up a strong and tall mandapam in the eastern side of Madhuraapuri”
The King constructed strong and tall mandapam with sixteen pillars.

There appeared a young archer! His dark hair was tied up and decorated with peacock feathers! He worse a red sash and had a long sword at his waist. He had a powerful bow and and many arrows.


He was so handsome that anyone would wonder whether he was a dark skinned Manmatha! He waited on the mandapam till the elephant came close enough to be shot by an arrow.


He then set his Narasimha Asthra on his bow and released it with a great force. The arrow roared like a lion. It made a thunderous noise. It sped like a spear. It tore open the forehead of the mighty killer elephant.


The killer elephant got killed. It collapsed in a pool of blood and died. The king held the feet of the divine archer with gratitude. He then set his army to fight the Chola army and drove them back to their country.


In due course the king was blessed with a worthy son. He had all the markings of a good king. The prince was named as Rajasekaran and everything he needed to learn to become noble king, was taught to him by his loving father Vikrama Paandian.


 
bhagavathy bhaagavatam - skanda 7

7#31a. ஜோதி வடிவாகிய தேவி!

பராசக்தியின் ஜோதி இமயமலை மீது வந்து
பார்வதியாகத் தோன்றியதைக் கூற வேண்டும்!”


“யோகாக்னியில் புகுந்து விட்டாள் சதி தேவி.
யோகியாகவே மாறிவிட்டார் சிவபெருமானும்.


பிரபஞ்ச நினைவே இல்லாமல் போனது – ஒரு
பிரதேசத்தில் அமர்ந்து தியானத்தில் மூழ்கினார்.


அசைவற்ற தன்மையை அவர் பெற்றுவிட்டதால்,
ஆசைகளை இழந்து விட்டன ஜீவராசிகள் எல்லாம்.


பெருகின பலவித ரோகங்கள் ஜீவர்களிடத்தில்;
வருந்தினர் தேவர்கள் நிகழ்ந்த விபரீதங்களால்.


பிரம்மனிடம் வரங்கள் பெற்றான் தாரகாசுரன்;
பிரம்மாண்டத்தை அச்சுறுத்தத் தொடங்கினான்.


துன்பம் இழைத்தான் தேவர்களுக்குத் தாரகன்;
இன்ப வாழ்வையிழந்து ஒளிந்து வாழ்ந்தனர்.


சிவபெருமானின் சக்தி ஒன்றே சாதிக்கவல்லது
தவம் செய்து வலிவுற்ற தாரகனின் அழிவினை.


தேவியோ மறைந்து விட்டாள் யோகாக்னியில்;
தேவதேவனும் அமர்ந்து விட்டான் தியானத்தில்.


எங்கனம் தோன்றுவான் சிவகுமாரன் இவர்களிடம்?
எப்போது அழிப்பான் துன்புறுத்தும் தாரகாசுரனை?


வருந்திய தேவர்கள் சென்றனர் வைகுந்தம் நோக்கி;
விரும்பினர் விஷ்ணுபிரான் ஒரு வழி காட்டவேண்டும்.


“அனைத்தும் நிகழ்வது அன்னை பராசக்தியால்!
எனவே சரண் புகுவோம் அந்த சக்திதேவியிடம்!”


சென்றனர் அனைவரும் இமயமலைக்கு ஒன்றாக!
சென்றனர் சக்தி தேவியின் தரிசனம் பெறுவதற்கு.


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


7#31a. The Devi in the form of light (1)


“Please tell me about PArvati Devi who appeared on the HimAlayas in the form of an illumination!” King Janamejayan asked sage VyAsa.


VyAsa continued, “Sati Devi had disappeared by entering into yogAgni. Siva became a Yogi. He forgot himself in his dhyAna nishta.


Since he sat without any change the living beings lost all their desires. Diseases multiplied and afflicted all the living beings. Devas got worried watching such happenings.


Meanwhile TArakAsuran did severe penance and acquired many powerful bboons from Brahma. He could not be destroyed by anything or anyone other than the amsam of Siva.


TArakan became arrogant after receiving the boons and threatened all the three worlds. He inflicted sufferings on Devas so much so that they had to run away from the heaven and go in hiding.


Only Siva’s amsam can put an end to the atrocities of TArakan. But Devi had disappeared and Siva was in yoga nishta. How can they bring forth a son who could vanquish TArkaa?


The Devas went to VishNu and prayed for his help. Vishnu said,”Everything happens as per the order of Devi ParA Shakti. Let us go to her and seek her assiatnce in this matter’

So all the Devas went to HimAlayas and prayed to Devi sincerely.


 
bhagavathy bhaagavatam - skanda 1

2#2a. பராசரர்

தீர்த்த யாத்திரை செய்து வந்தார் பராசர முனிவர்;
யாத்திரையில் அடைந்தார் யமுனைக் கரையை!

நதியைக் கடக்க அழைத்தார் படகோட்டி தாசனை;
விதி வசத்தால் வர முடியவில்லை அழைத்தவுடன்.

“உடனே செல்ல வேண்டும்” என்று முனிவர் கூறவே
உடன் அனுப்பினான் தன் வளர்ப்பு மகள் மச்சகந்தியை.

ஓடத்தை ஒட்டிய மச்சகந்தியின் ஓய்யாரத்தில்,
ஒயிலில், வனப்பில் கொள்ளை போனது மனம்!

மோகம் தலைக்கு ஏறிவிட்டது முனிவருக்கு!
காமம் எல்லை மீறிவிட்டது தவ முனிவருக்கு!

வலக் கரத்தைப் பற்றிக் கொண்டார் முனிவர்;
கலவரம் அடைந்தாள் மச்சகந்தி அதனால்.

“ஞான வைராக்கியம் உடைய தவச் சீலரே!
ஏனையரைப் போல இருக்கலாமா நீரும்?

ஏழைப் பெண்ணின் கரம் பற்றி இழுக்கலாமோ?
பாழாய்ப் போன மீன் மணம் அடிக்கவில்லையா?

அரிய அந்தணப் பிறவி எடுத்த பிறகும் உமக்குத்
தெரியவில்லையா இது தவறான செயல் என்று?

சமமான இருவர் கூடினால் சந்தோஷம் விளையும்;
சமமற்றவர்கள் கூடினால் அருவருப்பு விளையும்.

அருவருக்கும் பெண்ணிடம் விளையுமா இன்பம்?
விரும்பி வரும் பெண்ணிடமே விளையும் இன்பம்!

ஓடத்தைக் கவிழ்க்க ஒரு நாழி வேண்டாம்!
உடலும், உயிரும் பறிபோய் விடும் அறியீரா?” என

‘ஊடல் செய்பவள் போலப் பேசுகின்றாள் இவள்;
மூடன் மகள் அல்ல; நல்ல அறிவுள்ளவள் இவள்!’

என்ன செய்வது என்றறியாத பராசர முனிவர்
பின்னும் சிந்திக்கலானார் தீவிரமாக மனத்துள்.

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


2#2a. Sage ParAshara


Sage ParAshara was on a theerta yAtra to holy places. He reached the bank of river Yamuna during his travel. He wished to cross the river Yamuna and called the boatman DAsan.

Unfortunately DAsan could not come and since the sage insisted on crossing the river, DAsan sent his daughter Machcha Gandhi with the rushi.

Machcha Gandhi was very pretty, young and attractive in spite of the smell of fish she emanated. The sage was infatuated by her beauty and proximity. He lost control over himself and grabbed her right hand. The girl got shocked and frightened by this sudden and unexpected gesture.

She took him to task by throwing on him a series of questions. ”Oh holy sage! Can you behave like a common man devoid of any good sense? Are you allowed to grab the hands of the poor girls who makes a living by rowing the boat? Don’t you find my smell of fish repelling? In spite of being a Brahmin don’t you realize that what you are doing is wrong?

Don’t you know that only when two people equal in all aspects fall in love, they can reap pleasure. Unequal status can’t yield pleasure. I don’t need more than a few seconds to topple the boat. You will lose your live and everything you have!”

The sage thought to himself, “She speaks as if she is angry but she is not. She is very intelligent despite being poor and uneducated. What shall I do now? How shall I proceed further in getting closer to her?”

The sage was lost in his thoughts.

 
kanda purANam - asura kANdam

43f. வியாழபகவான் உரை

கொம்புகள் முறிந்த வெள்ளை யானையும்
சம்புவை வழிபட்டது திருவெண்காட்டில்.


ஆகம முறைப்படி சிவனை வழிபடவே
வேகமாகக் கொம்புகள் வளரலாயின.


இந்திரன் சென்றான் விண்ணுலகுக்கு!
நொந்தான் தன் நகரின் அழிவு கண்டு!


மைந்தன் சிறைப் பட்டதைக் கேட்டு
மனம் உடைந்து போனாள் அயிராணி.


கோரத் தவம் செய்யலுற்றனர் பொன்னிற
மேருவில் இந்திராதி தேவர்கள் குழாம்.


தவத்தை மெச்சிக் காட்சியும் தந்தார்
சிவபிரான் தேவர்களின் கண் முன்னே!


“சூரபத்மனை வேரோடு அழித்து ஒழித்து
சுரர்களைக் காக்க வேண்டும் ஐயனே!”


“உமையை மணந்து நான் பெறும் மகன்
உமது துயர்களைத் துடைப்பான் இனி!”


திருமணத்தை விரைவு படுத்த எண்ணிக்
கரும்புவில் காமனைப் பரமனிடம் அனுப்ப,


நெற்றிக் கண்ணைச் சிவனார் திறக்கக்
குற்றமற்ற காமதேவன் எரிந்து போனான்.


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


2#43f. Devaguru’s speech.


The celestial elephant whose four tusks got shattered came down to the earth. It worshiped Siva in Thiru VeNkAdu as per the Aagma vidhi. Its tusks grew back fast.


Indra went to swargga. He was shattered by the complete ruin of his city. IndrANi was sad to learn that her dear son had become a prisoner of the merciless asuras.


Indra and the other Devas sat on Mount Meru and did severe penance. Lord Siva was pleased and appeared in front of them. “Lord you must destroy Soorapadman and save the Devas!” Lord Siva replied, “I will marry Uma Devi and a valiant son will be born to us. He will put an end to all you sufferings!”


The Devas wanted to speed up the wedding of Lord Siva and Uma Devi and sent Manmathan on this task. But Siva opened his fiery eye and Manmathan got scorched!


 
The 64 Thiru ViLaiyAdalgal

THIRUVILAIYADALGAL

23a. சிவனடியார் வருகை.

# 23 விருத்த
ன், குமாரன், பாலன் ஆனது.

# 23 (a). சிவனடியார் வருகை.

வேதியன் விரூபாக்ஷனுக்கும், அவன்
தேவியான நங்கை சுபவிரதைக்கும்,
விரத பயனாக வந்து அவதரித்தாள்;
பிறவிப் பிணியை வெறுத்த கௌரி.

மாறுபட்டிருந்தாள் கௌரி மிகவும்
மற்ற சிறு குழந்தைகளிடமிருந்து!
பொம்மைக்காக அவர்கள் அழ, இவள்
இம்மையிலேயே முக்தி வேண்டினாள்!

பிறவிப் பிணியை ஒழிக்க வல்ல ஒரு
சிறந்த மருந்தினை தேடினாள் அவள்.
மகளின் விருப்பத்தை மதித்த தந்தை
மகா மந்திரத்தை உபதேசம் செய்தார்.

பரா சக்தியின் மகா மந்திரத்தை
பயபக்தியுடன் ஜெபித்துவந்தாள்.
“பிறவிப்பிணிகளை ஒழிக்கவேண்டும்!
இறையோடொன்றாய்க் கலக்கவேண்டும்!”

கண்கவர் கன்னியாக வளர்ந்து அவள்
கல்யாண வயதை அடைந்து விட்டாள்.
விடுதலை விரும்பியவளின் தந்தை
தடுமாறினான் மனம் விதிப்பயனால்!

பிக்ஷை கேட்டு வந்த அயலூர்க்கார
பிரம்மசாரிக்குப் பெண் கொடுத்தார்.
குலம், கோத்திரம் சமம் ஆனாலும்,
கும்பிடுவது விஷ்ணுபிரானை அன்றோ!

இரு தரப்புப் பெற்றோர்களுக்குமே
இருந்தது கவலை, மன வாட்டம்.
மணமகன் வீட்டில் ஒரு சிவபக்தையை
மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளவில்லை.

சிவன் அடியாருக்கு உதவமுடியவில்லை.
சிவனடியாரைப் பார்ப்பதும் தொல்லை!
உமா மகாமந்திரத்தை ஜெபித்த கௌரி
சுமாரான வாழ்க்கை வாழ்ந்து வந்தாள்.

திருமணத்துக்குச் சென்றது குடும்பம்,
திருமகள் கெளரியைத் தனியே விட்டு!
வீட்டை வெளியே பூட்டிக்கொண்டு
ஒட்டு மொத்தமாகச் சென்றுவிட்டனர்.

சிவன் அடியாரைக் காணவும் ஆவல்,
சிவன் அடியாருக்கு உணவிட ஆவல்.
பக்தையின் மனப்பாங்கை அறிந்ததால்,
பக்தவத்சலன் ஒரு சிவப்பழம் ஆனான்!

வாழ்க வளமுடன்! விசாலாக்ஷி ரமணி.

# 23 (A). THE ARRIVAL OF THE OLD DEVOTEE.

During the reign of Vikrama Paandian, there lived a brahmin couple named Viroopaaksha and Subhavratha.They observed several severe penance and were blessed with a female child. They named her after a Goddess as Gowri.

This child was very different from the other children. While the other children begged for toys to play with, Gowri wanted to know the divine mantra which would rid her of the cycle of births and deaths.

Her father was very happy with his daughter’s request. He taught her the Devi Paraasakthi mahaa manthram. Gowri started chanting it regularly with utmost devotion.

Years rolled by and she had grown to a pretty young woman and attained the marriageable age. Fate played a strange game to fulfill Gowri’s desires.

A Vaishnava brahmachaari came for bikshaa. Viroopaakshan decided to marry his daughter to him-against the wishes of his wife Subhavratha.

The parents of the brahmachari were not happy with this marriage. They could accept Gowri who worshiped Siva only halfheartedly. Gowri was treated like an alien and a stranger by her in laws.

One day they had to attend a wedding. Since they did not want Gowri to go with them, they left her in the house. The locked up the house and went for the weeding.

Gowri was feeling sad that she could neither meet any Siva Baktha nor feed him with her hands in this strange house. Lord Siva took pity in His Baktha and turned Himself into an very old devotee of Lord Siva.



 
bhagavathy bhaagavatam - skanda 7

7#31b. ஜோதியாக வந்த தேவி

கடந்தது ஓராண்டு காலம் தியானத்தில்;
நடந்தது ஓரற்புதம் சித்திரை நவமியில்;


தோன்றினாள் தேவி சுக்கிரவாரம் ஜோதியாக;
தோத்திரம் செய்தன நாற்புறமும் வேதங்கள்.


வந்தாள் கோடி சூரியர்களின் பிரகாசத்துடன்;
வந்தாள் கோடிச் சந்திரகளின் குளுமையுடன்;


வந்தாள் கோடி மின்னல்களின் ஒளியோடு,
வந்தாள் பேரோளியாக அங்கங்கள் இன்றி.


கூசின கண்கள் ஜோதியைக் காணவியலாது!
மாசில்லா தேவி தோன்றினாள் ஜோதியிலிருந்து!


வண்டின் கருமையோடு சுருண்ட கூந்தல்;
வண்டினம் மொய்க்கும் மல்லிகைச் சரங்கள்;


பச்சைக் கற்பூரம் நாறும் மணமிக்க தாம்பூலம்;
இச் சகத்தை மயக்க மின்னும் காதோலைகள்;


எட்டாம் பிறை போன்ற அரை வட்ட நெற்றி;
கிட்டாத விற்புருவம், தாமரை இதழ்க் கண்கள்;


அழகிய மூக்கு; வரிசையில் அமைந்த பற்கள்;
அணி மணிகள்; தாமரை மொட்டு தனங்கள்;


மேகலைச் சிற்றிடை, மாலைகள் புரளும் மார்பு.
மேலான பாச அங்குச அபய வரத ஹஸ்தங்கள்;


சிங்கார மணி மகுடம், மாதுளம் பூ மேனி;
குங்குமத் திலகம் பிறை நெற்றியில் துலங்கிட;


துதித்தனர் கண்ணீர் பெருக குழுமிருந்த அமரர்;
துதித்தனர் மெய்சிலிர்க்க தேவியை வணங்கி!


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


7#31b. Devi appeared as an illumination!


One whole year passed in the meditation of Devi. A miracle took place on the Friday in the month of Chithirai on the Navami thithi. Devi appeared in front of the meditating Devas as a bright illumination. The four Vedas praised her standing on her four sides.


Devi had the brilliance of ten million Suns shining together. She had the coolness of ten million full moons shining together. She appeared with the blinding brilliance of ten million lightnings shining together.


She appeared as an illumination without any form or features. The light was blinding the Devas and Gods. Form the light appeared the form of Devi.


She had curly hair resembling the jet black bees. The jasmine flowers worn by her attracted a swarm of humming bees. The betel leaf chewed by her spread the fragrance of pure camphor.


Her ear rings were beautiful enough to mesmerize the viewers. Her forehead resembled the half moon. Her eyebrows were as well shaped as real bows.


Her eyes were large and lotus petal shaped. She had a straight nose and pearly white teeth in two perfect rows. Her young breasts were as firm as the lotus buds.


She held pAsam, ankusam, abahyam, varadam in her hasthams. Her crown was studded with the nava ratna or the nine precious gems. Her body was of the color of the pomegranate flowers. A red kumkum thilkam shone on her forehead.


The Devas and Gods worshiped her overwhelmed with joy and devotion.



 
bhagavathy hhaagavatam - skanda 2

2#2b. பராசரர் பதில்

எதிர்க்கரையை அடைந்து விட்டது அந்த ஓடம்.
விதிர்ந்தார் பராசரர் அவள் பிரிவை எண்ணி.


விட்டு விட்டுப் போய் விடுவாளோ என்றஞ்சி
கெட்டியாகப் பிடித்துக் கொண்டார் கைகளை.


“மீன் நாற்றம் வீசுகிறது உடலில் என்றாய்!
நான் உமக்கு ஏற்றவன் இல்லை என்றாய்!


மச்சகந்தத்தை நீக்கி விடுகிறேன் இப்போதே!
இச்சையூட்டும் பரிமள கந்தம் தருவேன்!”


நீரை அள்ளித் தெளித்தார் மச்சகந்தி மீது;
தாரை வார்த்தார் தவப்பயனைக் கொஞ்சம்.


பரிமளம் வீசியது உடல் காத தூரத்துக்கு.
பிரியமுடன் பெயரிட்டார் ‘சத்யவதி’ என.


ஏற்றவள் ஆகிவிட்டாய் இப்போது எனக்கு!
ஏற்க வேண்டும் என் கோரிக்கையை நீ!”


உல்லாச மொழிகள் பல பேசினார் பராசரர்.
சல்லாபத்துக்குத் தயார் ஆனாள் சத்யவதி.


மயங்கி விட்டாள் தன் உடலின் பரிமளத்தில்!
தயங்கி நின்றாள் பகல் பொழுதாக இருந்ததால்.


‘பகல் இரவு பாராமல் கூடுவன மிருகங்கள் – நாம்
பகல் கழியும் வரைக் காத்திருப்போம்” என்றாள்.


ஜலத்தை அள்ளி ஜெபித்துத் தெளித்தவுடன்
ஜகஜ் ஜாலம் நிகழ்ந்தது; பகல் இரவானது!


“காமம் மிகுந்தவருக்கு மிகுந்திருக்கும் வீரியம்;
காமம் முடிந்ததும் சென்று விடுவீர் பாம்பு போல.


குழந்தையைப் பெற்றுக் கொண்டு கிடப்பேன் நான்
இழிவடைந்து உலகின் பழிச்சொற்களுக்கு ஆளாகி!”


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


2#2b. ParAsharA’s offer


The boat had reached the opposite bank of the river. Soon the girl would go back on her boat and out of his life for ever. The sage caught hold of her hands tightly and spoke to her.

“My dear girl! You objected to our union because you smell like a fish. I can remove that smell and bestow on you a divine fragrance in an instant.”

He sprinkled some water on her and sacrificed a part of the power he had earned by his penance. Now the girl emanated a divine fragrance which could reach far and wide. He named her as Satyavati.

Satyavati was so happy with her new fragrance that she was ready to accept the sage’s love. She hesitated since it was day time which was not suitable for indulging in the act of love.

The sage had a solution to that problem also. He took some water from his kamaNdalam, chanted a mantra and sprinkled it. A miracle happened and now the day became as dark as a night!

The girl had one more objections now. “People in lust have a lot of sexual prowess. You will make me pregnant and disappear from my life once for all. I will deliver a child out of wedlock and be spoken ill of for all my life!”



 
kanda purANam - asura kANdam

43g. முடிவுரை

சிவனை வேண்டினார்கள் தேவர்கள்
அவனே துயர் தீர்க்க வேண்டும் என!


இமயத்துக்கு எழுந்து அருளிய சிவன்
உமையவளைத் திருமணம் புரிந்தார்.


திரு நுதற்கண்ணில் தீப் பொறிகளாக
முருகா உன்னைத் தோற்றுவித்தார்.


அளித்தது துணிவை உன் பிறப்பு
ஒளிந்து திரிகின்ற தேவர்களுக்கு!


ஐயனைக் காண வரும்போது மட்டும்
மெய் வடிவுடன் வருகின்றனர் குமரா!


ஆற்றலிலும் செல்வத்திலும் உயர்ந்து
கூற்றுவன் போலக் கொடுமை செய்யும்


சூரபத்மனின் ஓரண்டத்துச் செய்தி இது!
சூரபத்மன் ஆளுவதோ 1008 அண்டங்கள்.


பவ்வியமாகப் படிக்கின்றான் பிரமன்
பஞ்சாங்கம் அனுதினம் சூரனுக்கு.


தாரகனோடு போர் புரிந்து தோற்றார்.
பார் புகழும் பரந்தாமன் முன்னரே!


மேன்மைகள் அளித்த சிவபிரானோ எனில்
மேற்கொண்டு தண்டனை வழங்கமாட்டார் !


சூரபத்மனை வேருடன் அழித்து விட்டு - நீ
சுரர்களைக் காத்தருள வேண்டும் முருகா!


இழிநிலையில் உள்ள தேவர்களைத் தம்
தொழிலில் முன்போல் அமர்த்தவேண்டும்!”


“வருந்த வேண்டாம் உம் துயரங்கள் தீரும்.”
திருவாய் மலர்ந்து அருளினான் குமரன்.


முருகன் திருவடி வணங்கிய தேவர்கள் – அத்
திருநாளை எதிர்நோக்கிக் காத்திருந்தனர்.


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

அசுரகாண்டம் முற்றியது!


2#43g. The conclusion.


The Devas requested Lord Siva to put an end to their sufferings and humiliation in the hands of Soorapadman. Lord Siva went to the Himalayas and married Devi Uma. He then created you Muruga out of the fiery sparks emanating from his fiery eye in his forehead.


The Devas feel reassured by your birth. They used to roam around in disguise. They assumed their real forms only when they visit Lord Siva.


Soorapadman is punishing all the worlds like another Yama. Brahma reads him the daily almanac. VishNu had been defeated by Soorapadman’s younger brother TArakan long ago.


Siva who had given all the powers to Soorapadman will not destroy him. It is now left to you to destroy Soorapadman and restore on the Devas their original position of glory. They must return to their life in Swarggam as before.


“You sorrows will end soon!” Murugan reassured the Devas. They paid their respect to Murugan and were eagerly waiting for the day of deliverance from their current misery.


With this the Asura KANdam of Kanda PurANam comes to an end.


 
The 64 Thiru ViLiyAdalgaL

23b. சாரூப்ய முக்தி.

# 23 (b). சாரூப்ய முக்தி.

முதிர்ந்த வயதுடைய சிவபக்தனாகித்
தளர்ந்த நடையுடன் வீட்டினருகே வந்தார்;


நெற்றியிலே மூன்று விபூதிப் பட்டைகள்,
கழுத்திலே ருத்திராக்ஷக் கொட்டைகள்;


பசித்து வந்த விருத்தருக்கு அன்னம்,
புசிக்க அளிக்க விரும்பினாள் கௌரி;


“பூட்டிய கதவு திறந்து கொள்ளும்,
நீட்டிய உன் கரத்தால் தொட்டால்!”


தொட்டவுடன் திறந்து கொண்டது கதவு,
தொண்டுக் கிழவர் ஓய்வெடுக்கையில்;


பர பர வென்று சமையல் செய்தாள்;
பரமசிவ பக்தனுக்குப் பரிமாறினாள்.


அமுது செய்தவுடன் குடுகுடு கிழவர்,
அழகிய வாலிபனாக ஆகி விட்டார்!


வெண்ணீறு ஆனது சந்தனப் பொட்டு;
பொன்மணிகள் ஆயின ருத்திராக்ஷம்.


தளர்ந்த உடல் கட்டுடல் ஆயிற்று,
தாத்தா இப்போது கண்கவர் வாலிபன்.


திகைத்தாள் கௌரி, ”இதென்ன சோதனை?”
பதைத்தாள் மனம்: ”தவறு நடக்கக்கூடாது!”


மிகுந்த பயத்துடன உடல் நடுங்க அவள்
ஒதுங்கி ஒரு ஓரமாக ஒளிந்து நின்றாள்.


பூட்டி விட்டுச் சென்றவர்கள் கூட்டம்
வீட்டுக்குத் திரும்பும் அரவம் கேட்டவர்,


பச்சைக் குழந்தையாக உடனே உருமாறி,
பாயில் படுத்துக் ஓங்கிக் குரலெடுத்து அழ;


“யார் குழந்தை இது சொல்லுவாய் நீ!
பூட்டின வீட்டில் இது வந்தது எப்படி?”


குழந்தையும், கையுமாக அவளைக்
கழுத்தைப் பிடித்து வெளியே தள்ள,


உமா மஹா மந்திரத்தை கௌரி
உளமார ஜபித்தபடியே நின்றாள்.


மாயமாகக் கைக்குழந்தை மறைந்துபோக,
மலர் மாரி பொழிந்தது விண்ணிலிருந்து!


உமை வடிவாகவே மாறிவிட்டாள் அவள் ;
உமையுடனேயே ஒன்றிவிட்டாள் அவள்;


உமையுள் உமையாகவே உறைந்த அவள்,
உமா மகேஸ்வரருடன் கயிலை அடைந்தாள்.


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


# 23 (B). SAAROOPYA MUKTHI.


Siva took the form of a very old man and reached Gowri’s house.He told her that he was terribly hungry. Gowri wanted to offer him food but the doors were locked!


The old man told her, “If you touch the doors with your hands, they will open.” She tried it and the doors opened. She set to work in the kitchen while the tired old man rested for a while.


She served him tasty food till his hunger disappeared. But a strange thing happened then. The old man was now transformed to a very young handsome man!


His holy ash was transformed into sandal paste and his rudraaksham into golden beads! He was more handsome than Manmatha himself!


Gowri was shaken by this transformation. She hid herself in a corner of the house. The wedding party returned at that moment. The handsome young man now became an infant lying on a mat. He started kicking his tiny legs and crying very loudly.


The wedding party was bewildered to see the doors of the house wide open and a strange child crying in the house. They threw out of the house Gowri along with the wailing weird baby.


Not knowing what to do, Gowri kept on chanting the Paraasakthi mahaamantra.

Suddenly the baby vanished from her hands. Flowers rained from the sky. Gowri was blessed with Saaroopya mukthi.

She became a perfect replica of Devi Uma and then merged with her. She left to her heavenly abode with Uma MahEswar.
 
bhagavathy bhaagavatam - skanda 7

7#31c. தேவி தந்த வரம்

“சிவப்ரியே! பிரகிருதி ஸ்வரூபிணி! நமஸ்காரம்.
மங்கள ஸ்வரூபிணி! புவனேஸ்வரி! நமஸ்காரம்.

தவத்தால் ஜொலிப்பவளே! அக்கினி நிறத்தவளே!
தாக்ஷாயணியே! துர்கையே! நமஸ்காரம்!”

“என்ன வரம் வேண்டும் கேளுங்கள் தருவேன்!
என்ன கவலை உமக்கு நான் இருக்கும் போது?”

“அனைத்தும் அறிவாய் நீ மஹாதேவியே!
களைத்துப் போனோம் தாரகனிடம் வாடி.

வரம் பெற்றுள்ளான் தாரகன் பிரமனிடம்;
மரணம் சிவகுமாரன் கைகளால் மட்டுமே.

தேவதேவனும், தேவியும் உள்ளனர் தனித்தனியாக!
தேவ தேவியர் சேராமல் தோன்றுவானா சிவகுமாரன்?

வர வேண்டும் சிவகுமாரன் விரைவில் அவதரித்து!
தர வேண்டும் அபயம் அபாயத்திலுள்ள எமக்கு.”

“பர்வதராஜன் பூஜிக்கின்றான் என்னை பயபக்தியோடு,
கர்வமின்றி இதயத் தாமரையில் என்னை இருத்தி.

விழைகின்றேன் அவன் புதல்வியாகத் தோன்றிட,
விளங்குவேன் பார்வதி என்னும் திரு நாமத்தோடு!

மணம் செய்து வைப்பீர் என்னைச் சிவனுக்கு;
மனம் விரும்பும் பலன்கள் கிடைக்கும்!” என

ஆனந்தக் கண்ணீர் சொரிந்தான் பர்வதராஜன்!
“அரும் தவம் செய்தேனோ நூறு பிறவிகளில்?

உன்னைப் புதல்வியாக அடைவதற்கு
என்ன தவம் செய்தேனோ நான்!” என்றான்.

“அருள வேண்டும் உன் வாய் மொழியாகவே,
அருள வேண்டும் சித்தாந்தமான உன் ஸ்வரூபம்;

அருள வேண்டும் பக்தி பூர்வமான யோகத்தை.
அருளவேண்டும் சாஸ்திர ரீதியான ஞானத்தை.”

உள்ளம் மகிழ்ந்தாள் தேவி இதைக் கேட்டு
உபதேசித்தாள் தன் தத்துவ ரஹசியங்களை.

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

7#31c. The boon given by Devi

The Devas prayed to Devi,”SivapriyE! Prakruti swaroopiNi! Namaste. Mangala Roopini, Bhuvaneswari namaste. You shine with the power of your penance. You are of the color of burning fire. DAkshAyaNi! Druge Devi! namaste.”

Devi asked them, “What do you wish for ? Why do you worry when I am here – always ready to help you?”

The Devas said, “You know everything Devi. The Devas suffer humiliation under the control of TArakan. He has got powerful boons from Brahma. None but the amsam of Siva can vanquish him.

DAkshAyaNi has vanished in YogAgni. Siva is now a yogi. How can our Siva kumar appear when Devi and Siva remain separated thus? When will Siva kumar appear? When will he end our miseries?”

“Parvatha RAjan is doing my pooja with devotion and humility. I wish to be born as his daughter. I will be called as Parvati. Get me married to Siva. Your praye will be answered. Your miseries will come to an end.”

Parvatha RAjan shed tears of joy on hearing these words. He said, “Oh Devi! I must
have performed severe penance in one hundred previous births to be blessed with you as my own daughter.

I want to hear from your own words about your siddhAnta swaroopam. Please enlighten us on Yoga based on devotion as well JnAnam based of sAstras.”

Devi was delighted by this request and started the upadesam of Devi Geethai.




 
bhgavathy bhaagavatam - skanda 2

2#2c. வாக்குறுதிகள்

“அழகான மங்கைப் பருவம் நீ அடைந்தது
அளவிலாத சுகம் பெறுவதற்கே அறிவாய்.


கூடி மகிழ்ந்து நான் பிரிந்த பிறகும் நீ
ஆடிப் பாடலாம் முன்போல் கன்னியாக!”


முனிவரின் வாக்குறுதியைக் கேட்ட பிறகு
மனதில் தோன்றியது மேலும் ஓர் ஐயம்.


“கன்னித் தன்மை திரும்புவது சரியே!
முன்போல மச்சகந்தமும் திரும்புமோ?”


“ஐயங்களை அகற்றிவிடுகிறேன் நான்
மெய்யான வாக்குறுதிகளை அளித்து.


மீண்டும் அடைவாய் கன்னித் தன்மை!
யாண்டும் வீசும் உன் பரிமள சுகந்தம்!


விளங்குவாய் சத்யவதி என்ற பெயரில்;
விளங்குவாய் கற்புடைய பெண்ணாகவே.


விரும்பிய ஆடவனை மணம் புரிவாய்;
விரும்பிய வாழ்வு வந்து அமையும்.


உண்டாவான் என் உறவால் உனக்கு மகன்;
உண்மையில் அவன் விஷ்ணுவின் அம்சம்!


பரப்புவான் வேதங்களைத் திரட்டித் தொகுத்து;
புராணங்களாக வடிப்பான் வேதாந்தங்களை.


மூவுலகிலும் அடைவான் இணையற்ற புகழ்;
மூவுலகிலும் கண்டுள்ளேன் ஈடற்ற அழகியரை.


முன் எவரிடமும் தோன்றவில்லை காமம்;
உன் மேல் கொண்ட காமம் விதி வசமானது.


அருவருக்கத் தக்க மச்சகந்தம் கொண்ட நீ
பரிசுத்தமான என்னை மயக்கியது விதி வசம்.”


பரிமளகந்தியுடன் கூடினார் பராசரர்;
பகலை இரவாக மாற்றி, நதிக் கரையில்.


நதியில் நீராடினார்; விட்டுச் சென்றார்
அதி விரைவாக வனாந்தரத்தை நாடி.


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


2#2c. ParAsharA’s promises


“You have attained womanhood only to enjoy the physical pleasures. Even after I love you and leave you, you will become a virgin as before.” The sage promised Satyavati thus.

Now she got a new doubt. “It is good to become a virgin again but will my machcha gandham also come back to me along with my virginity?”

The sage spoke to her, “I shall put an end to all your doubts now. You will become a virgin once again. Your parimaLa gandham will remain with you always as it is now.

You will live in the name of Satyavati. You will respected as a chaste woman by one and all. You will marry the man you will fall in love with. You will live a happy and fruitful life.

You will beget a son from me. He is the amasam of Vishnu and will become famous all over the three worlds. He would collect, compile, classify and spread the Vedas through his disciples. He will write many purANams conveying the gist of the VedAnta.

I have seen several beautiful women in all the three world but never once had I been physically attracted by them as I am now. Our love has been planned by destiny. Why else should a woman like you, emanating a weird small, attract me – a brahmin?”

The union of the sage and Satyavati happened on the river bank during the day time – which was made as dark as a night. The sage bathed in the river and went away into the deep forest – after his brief love affair with Satyavati.



 
kanda purANam - mahEndra kANdam

1a. முருகவேள் விடுதூது

திருச்செந்தூரில் தேவர்கள் புடைசூழத்
திருமுருகன் அமர்ந்திருந்தான் அரியணை.


போரைத் தொடங்கும் முன்
ஒரு முறை
சூரபத்மனுக்கு தூது அனுப்ப விழைந்தான்.

“அவுணர்களை அழிக்க நாளை போவோம்!
அவுணர்களிடம் தூது இன்று விடுவோம்!”


“அறநெறியும் அதுவே ஆகும்!” என்று
அறிவுறுத்தினர் பிற தேவர்களும் கூடி.


“தூது செல்லத் தோதானவர் யார்?”
“தூது சென்றால் யாம் மீள்வது அரிது!


தொண்டு செய்வதற்கென்றே சென்றோம்
பண்டு முதல் இந்நாள் வரையிலும்.”


தேவர்கள் மறுத்தனர் பின்னர் வீரவாகுத்
தேவரைப் பரிந்துரைத்தனர் ஒரு மனதாக.


“வீரவாகு! விரைந்து செல்வாய் மகேந்திரம்;
சூரனைக் கண்டு கூறுவாய் நன்னெறிகளை!


சிறைப்பட்ட தேவர்கள் விடுதலை ஆனால்
மறக்கப்பட்டு விடும் சூரன் செய்த குற்றங்கள்;


மறுத்துரைத்தால் விரைவில் அழிவு
மறக்காமல் வந்து பற்றும் என்பாய்!”


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


3#1a. Murugan’s messenger.


Murugan was seated on his throne surrounded by the Deva in Thiruch chendoor. He wished to send a messenger to Soorapadman before starting a war with him. The Devas agreed that it was the correct procedure.


“Who is the right person to go as the messenger?” The Devas replied in unison,”We can’t enter his city as messengers and come back alive. Till now we have been going over there everyday only for doing odd menial jobs!”


Every one recommended the name of VeerabAhu for performing this task. Murugan told VeerabAhu,” Go to Veera Mahendrapuri. Meet Soorapadman and advise him to release all the imprisoned Devas immediately. If he does this, we will forgive all his sins and he will live. If he refuses to comply with this, he will be ruined completely!”

 
The 64 Thiru ViLaiyAdalgal

# 24. கால் மாறி ஆடியது.

# 24.(a).உடல் வேதனை!


ராஜசேகரனுக்கு மகுடம் சூட்டி அவனை
ராஜா ஆக்கினான் விக்கிரம பாண்டியன்;
சிவபெருமானின் தாமரைத் திருவடிகளில்
கவலையின்றிக் கலந்து விட்டான் அவன்.


ஆய கலைகள் என்னும் அறுபது நான்கினில்
தூய பரதம் மட்டும் பயிலவில்லை மன்னன்,
முக்தி அளிக்கும் நாயகன் நடனத்தில் அவன்
பக்தி கொண்டிருந்ததே அதன் மெய்க் காரணம்.


அரசு புரிந்து வந்தான் அதே காலத்தில்,
கரிகால் பெருவளவன் சோழ நாட்டினில்;
அறுபது நான்கு கலைகளையும் கற்றவன்,
அரசர்களில் தன்னிகரில்லாது விளங்கினான்.


விழா ஒன்றில் பங்கு கொள்ள வந்தது கவிஞர்
குழாம் ஒன்று பாண்டிய நாட்டுக்கு அப்போது.
“சகல கலா வல்லவர் கரிகாலர் ஆவார்;
சகல கலா வல்லவர் நீர் அல்லர்!” என்றது!


“இதுவும் அரனின் விருப்பம் தானோ?” என
அதுவரை பயிலாத பரத கலை பயின்றான்;
புகழ் பெற்ற ஆசிரியர்களை வரவழைத்து,
மகிழ்வித்து பொன், பொருள், வாரி அளித்து!


சுவைகள் ஒன்பது, மெய்ப்பாடுகள் பத்து;
வகைகள் அபிநயத்தின் இருபது நான்கு;
தாளங்கள் ஏழு, கதிகள் ஐந்து இவற்றைத்
தாளாத காதலுடன் பயின்றான் ராஜசேகரன்.


நடனம் ஆடிய பிறகு அவனுக்கு ஏற்பட்டது,
உடல் வலிகள் தவறாமல் தினம் தினம்;
ஒரு காலில் நிற்கும் சிவபெருமானுக்குத்
திரு நடம் புரிவதில் எத்தனை வேதனையோ?


மனம் கனிந்தான் மன்னன் ராஜசேகரன்;
தினம் ஊன்றி ஆடும் காலை மாற்றினால்,
இனம் தெரியாத உடல் வலிகளிலிருந்து,
கனம் குழையான் சற்றே விடுபடலாமே!


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


# 24 (A). LEARNING TO DANCE.


King Vikrama Paandiyan crowned his son Rajasekaran as his successor and reached the lotus feet of Lord Siva. King Rajasekaran was well versed in 63 forms of fine arts out of 64. He did not learn Bharata Nruthyam, as a mark of respect to Lord Siva.


The Chola kingdom was ruled by Karikaalan. He was well versed in all the 64 forms of fine arts.A poet told Rajasekaran that he was not a ‘master of all arts’ where as Karikaalan was!


Rajasekaran decided to learn the Bharata Nruthyam. He invited all the best teachers of his time. He paid them handsomely and learned Nruthyam.

He mastered the Navarasa, the 24 Abhinayas, the seven different thaalas and the five different gathis.

After each dance session he felt pain in all his limbs. He could not help wondering how much Lord Siva must be suffering since He had been standing on one leg for ages!

May be He would get some relief if He changed the position of His legs!

 
Enjoy the song on kAl mARI Adiya kanka sabhEsan in the joyous rAga

kunthalavarALi and honey sweet voice of Smt. Sudha Rahghunathan

https://youtu.be/gUYFH3QrlPQ


https://youtu.be/Ipw82fJB4W0


The dance performed on fragile pots by pretty girls!
This also helps us to realize the weight bearing capacity
of the curved domes and arches!
Let us learn some Physics too!

Attachments area

Preview YouTube video Kal Mariyadiya - The Dance of Siva - Sudha Ragunathan


Kal Mariyadiya - The Dance of Siva - Sudha Ragunathan







Preview YouTube video KAAL MAARI AADIYA (Pot Dance)






 
bhagavathy bhaagavatam - skanda 7

7#32a. தேவி கீதை (1)

“கூறப் போவதைச் செவி மடுத்தாலே போதும்
மாறி விடுவீர்கள் நீங்கள் என் ஸ்வரூபமாகவே.


பொருந்தியிருந்தேன் நான் சிருஷ்டிக்கு முன்பு
பரப்பிரம்மத்திலிருந்து வேறுபடாமல் நன்கு.


ஒன்றுமே இருக்கவில்லை என்னைத் தவிர – அது
இன்னதென்று அளவிட முடியாதது பரப்பிரம்மம்.


ஆதவனில் ஒளி போல, நிலவில் குளுமை போல,
அக்னியில் வெப்பம் போலப் பொருந்தியிருந்தேன்.


நிலவிடும் என்னிடம் எப்போதும் ஒரு மாயசக்தி – அதனை
நிறைக்கும் ஜீவர்களின் காலம், கர்மங்கள், காரியங்கள்!


மாயையில் இணைந்து கலந்து நிலவும் என் சக்தி;
மாயைக்கு பீஜாத்மகம் ஆவேன் நான் மட்டுமே.


உள்ளது என்னிடம் ஒரு ஆவரண சக்தி – அதில்
உள்ளது திரை போல மறைத்திடும் ஒரு சக்தி.


மாயையுடன் தொடர்பு உடையது என் சைதன்யம்;
மாயை நிமித்த கரணம் ஆகும் என் சைதன்யத்தால்.


மாயை ஆகும் உபாதான காரணம் பரிணாமத்தால்!
மாயையே சிருஷ்டிக்குக் காரணம் ஆகும் இவ்விதமாக.


பிரதானம், தபஸ், ஜடம், ஞானம் என்பவை நானே!
பிரகிருதி, அவித்தை, சக்தி, என்பவையும் நானே!


விளங்குகின்றன பல பெயர்கள் மாயைக்கு – அவை
விளக்குகின்றன உற்பத்தியற்றதாகிய மாயையை.”


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


7#32a. Devi’s Gita (1)


Devi started answering the queries of Parvata RAjan HimavAn thus:-

“If you listen to me carefully, you will understand my swaroopam very easily. Before creation, I and only I, existed. I was merged with the Para Brahmam before the Creation. We were not two separate entities but one single entity.

The Para Brahmam can be neither explained nor understood. I was inseparable from that Para Brahmam just the light from the Sun, the coolness from the Moon and the heat from the Fire.


I am NirguNai (One without any attributes) by myself. But when I am united with my MAyA Shakti, I become SaguNai (One with attributes). This MAyA is further divided into two namely ‘Vidhya’ and ‘Avidhya’. Avidhya hides me while Vidhya does not hide me. Avidhya binds a person in SamsAra and Vidhya liberates the person from SamsAra.


I always have a MAya shakti. It contains all the jeevAs, their Time factor and their Karma in it. My shakti is inseparable from this MAya shakti. I am the seed of the MAyA. I have an AavaraNa shakthi (concealing power) . It acts as a screen hiding ParamAtma (The Supreme) from the jeevAtma (The Self).


When my chaitanya (Intelligence) is related to MAyA, it becomes the Efficient Cause of the Creation. When the five gross elements are related to MAyA, it becomes the Material Cause of the Creation.


The other names used to describe MAyA are ‘PradAnam’, ‘Prakruti’, ‘Tapas’, ‘JnAnam’, ‘Jadam’, ‘Aivdhya’ and ‘Shakti’. Using thes names, people try to explain the MAyA which always exists – with neither a beginning nor an end.”



 
devi bhaagavatam - skanda 2

2#2d. வியாசர்

கருவுற்று ஈன்றாள் சத்யவதி அப்போதே!
பிறந்தது ஆண் குழந்தை நதிக் கரையில்!


மன்மதனை ஒத்த பொலிவு கொண்டவன்;
மண் திடலில் மகனாக வந்து பிறந்தான்.


தவ வலிமையால் பிறந்த மகன் – தன்
தாயின் முகம் பார்த்துப் பேசலானான்.


“உத்தம காலம் உண்டாகும் போதும்,
புத்திரன் நினைவு உண்டாகும் போதும்,


உன்னைத் தேடி வருவேன் என் தாயே!
உண்டாகட்டும் உனக்கு சர்வ மங்களம்!


பிரிந்து உன் பாதையில் நீ செல்லலாம்!
பிரிவதற்கு கொள்ள வேண்டாம் வருத்தம்.


வாழ்வாய் எப்போதும் நிறைவான சிறப்புடன்;
தாழ்விலாத தவம் செய்யப் போகிறேன் நான். “


கானகம் சென்று விட்டான் – ஒரு நதியின்
கரையில் பிறந்த த்வைபாயன வியாசன்.


தீர்த்தங்கள் தோறும் முங்கிக் குளித்தான்;
பூர்த்தி செய்தான் தன்னுடைய கர்மங்களை.


வகைப்படுதினான் நான்கு வேதங்களை!
வரைந்தான் பதினெட்டுப் புராணங்களை!


முறைப்படி உபதேசித்தான் சீடர்களுக்கு
வரைந்த புராணங்கள், இதிகாசங்களை.


மச்ச்கந்தியின் மேல் பராசரர் கொண்ட
இச்சையினால் அவதரித்தான் வியாசன்


மங்களகரமானது அவன் பிறப்பு – ஒழிப்பர்
தங்களது பாவங்களை இதைக் கேட்பவர்கள்.


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


2#2c. VyAsa


Satyavati became pregnant and delivered a son on the bank of the river then and there. The child was as beautiful as Manmathan – the God of love. He was born out of the power of penance of the sage ParAshara and spoke to his mother thus.


“Oh mother! I will come to you whenever you remember me. May you live an auspicious and happy life. You may go your way without feeling guilty or sad. I am going off now to do penance”


DhvaipAyana also called as VyAsa bathed in all the holy rivers. He completed all his karma. He classified the Veda into four parts and taught them to his disciples. He wrote eighteen elaborate purANAs.


VyAsa – an incarnation of Vishnu – was born our of the infatuation sage ParAsharA had for Machcha Gandhi. His birth is very auspicious . Whosoever listens to this story of VyAsa’s birth will be rid of his / her sins.



 
kanda purANam - mahEndra kANdam

1b. புறப்பாடு

முருகன் விதித்த பணியை அகமகிழ்ந்து
கருத்தில் கொண்டார் வீரவாகுத் தேவர்.


முருகனை வணங்கி விடை பெற்றவரிடம்,
அருகில் இருந்த இந்திரன் உரைத்தான்.


“சிறையில் வாடும் என் அருமை மகனை
விரைவில் மீட்போம் என்று தேற்றுவீரா?”


“அவ்வாறே செய்கிறேன்!” என்று கூறிச்
செவ்வனே தொடரும் வீரர்களைத் தடுத்துக்


கடற்கரையைச் சென்றடைந்த வீரவாகு,
கந்தமாதன மலையின் மீது ஏறி நின்றார்.


பேருருவம் ஒன்றை எடுத்துக் கொண்டார்.
ஆரவாரம் செய்து மகிழ்ந்தனர் தேவர்கள்.


அம்மலையோ எனில் பிளந்து தாழ்ந்தது.
அம்மலை வாழ்விலங்குகள் அஞ்சி ஓடின.


“சூரபத்மனின் நகர் அதோ தொலைவில்!”
வீர மகேந்திரபுரியைக் கண்டு வியந்தார்.


“பெரிய வடிவுடன் செல்வதிலும் நன்று
சிறிய வடிவுடன் செல்வது” என்று


வெல்லத் தக்க ஒரு வடிவம் எடுத்தார்.
செல்வதற்கு எழும்பினார் விண்ணில்.


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


3#1b. VeerabAhu becomes the messenger.


VeerabAhu was happy with the job entrusted to him by Murugan. As he took leave of Murugan Indra spoke to him, “Will you please meet my son Jayandan who is now in Soorapadman’s prison and reassure him that we will get him released very soon?”


VeeraAhu agreed to do so. He stopped his retinue from following him. He went to the sea shore and climbed on the GandamAdana mountain. He assumed a very huge form. The Devas became very happy and cheered him.


The mountain got partially buried under his immense weight. The animals living in it started running in every direction in utter confusion and fear. VeerabhAhu could see Veera Mahendrapuri at a distance and was duly impressed by its beauty.


He decided that it was better to travel taking a smaller form rather than his present huge form. Accordingly he changed his size and leaped into the sky.


 
The 64 Thiru ViLaiyAdalgaL

24b. கால் மாறி ஆடியது.

# 24 (b). கால் மாறி ஆடியது.

சிவ ராத்திரியன்று நிகழ்ந்தன பல வகை
சிவ ஆராதனைகள் நான்கு ஜாமங்களும்;


வெள்ளி அம்பலவாணனின் திரு நடனம்
உள்ளம் களிப்புற்றுக் குளிரச் செய்தது.


“ஒரே காலைத் தூக்கியும், எப்போதும்
ஒரே காலைப் பதித்தும் ஆடும் அரசே!


வேதனை தரும் இந்தகைய அரிய
சாதனையின் அவசியம் என்னவோ?


பதித்த திருவடியை மேலே தூக்கியும்,
தூக்கிய திருவடியைக் கீழே பதித்தும்,


கால் மாறி ஆட வேண்டும் என் அரசே!
இல்லையெனில் நான் உயிர் தரியேன்!”


தன் உடைவாளை நாட்டி அதன் மேல்
தன் ரத்தம் சிந்தித் தன் உயிரை விடவும்


தயார் ஆகிவிட்டான் ராஜசேகரன்;
தாயுமானவன் மனம் கனிந்தான்.


அன்புக்கு மட்டுமே சிறைப்படும் சிவன்,
இன்னொரு காலைத் தூக்கி ஆடினார்!


இடது பதம் பதித்தார் – தூக்கியிருந்ததை!
வலது பதம் தூக்கினார் – பதித்திருந்ததை!


இறக்கும் எண்ணத்தைக் கைவிட்டுப்,
பிறவிப் பயன் எய்தினான் மன்னன்.


கவலையும், வருத்தமும் மறைந்தன;
கன்மம், ஆணவம், மாயை விலகின.


மனம், மெய், மொழிகளால் துதித்தான்,
கனம் குழையான் மலரடிகளை மன்னன்.


பாண்டியன் ஆடல் அரசன் அரனிடம்,
வேண்டினான் ஒரே ஒரு வரம் தருமாறு;


“கண்டு களிக்க வேண்டும் கால் மாறியதைத்
தொண்டர்களின் கூட்டம் என்றென்றும்! ”


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


24 (B). CHANGING THE POSITION OF THE LEGS.


It was a Siva Raathri day. Special abishekhams and pooja were performed in all the four jaamam. King admired the dance at Velli Ambalam and spoke to Lord Siva,


“You must change the positions of your legs my lord! You must plant your left foot which has been raised and lift your right leg which had been planted on the ground. Otherwise, I will sacrifice my life!”


He planted his sword and wanted to jump on it in order to end his life.
Lord Siva was moved to pity. He changed the position of his legs. He planted the left leg and lifted his right leg.The King was overwhelmed with joy!

All his sorrows and worries disappeared. His ego, karma and Maya vanished. He worshiped Siva with his mind, body and words. He begged Lord Siva for a boon!


The changed position of His legs must remain that way permanently for all his devotes to witness and worship in the future.


 
புராணம் என்றால் மிகவும் தொன்மையானது என்று பொருள்.
புராணம் என்றுமே புதுமையாக இருப்பது இறைவனின் அருள்!

எத்தனை முறை மீண்டும் படித்தால் தான் என்ன?
அத்தனை முறையும் புதிதாகத் தோன்றுவது எப்படி!

அமிழ்தாகிய தமிழ் என்றுமே அழியாது;
அமிழ்தாகிய இக் கதைகளும் திகட்டா!

I thank the readers of this thread for their continued support.
The daily views had crossed 2100 on 14th inst. Today it is over 1050!

I am glad so many people manage to understand these poems without a KOnAr guide! :clap2:

PEriya purAnam is my next major project - both God willing and my health permitting! :pray:

In the mean time (before 3rd October) I intend to finish the ThoraNam of the 14 sahasra nAmAvaLis! :pray:

Our visit planned to India will last till mid February 2018.
Many visits to both the relatives and the doctors are on the list.
Plus major purchases and stitching designer dresses from my saris!

Sewing Machine Brother is fascinating but my old sewing machine Merritt helps me to stitch faster - just like the old broom which knows well all the corners of the house! :thumb:
 
bhagavathy bhaagavatam - sknada 7

7#32b. தேவி கீதை (2)

“த்ருஷ்யமாகக் காணப்படும் மாயை ‘ஜடம்’ ஆகும்.
திரையிட்டு ஞானத்தை மறைக்கின்ற மாயை ‘அசத்’.


சைதன்ய சம்பந்தத்தால் மாயையாகும் நிமித்தகாரணம்.
சைதன்யம் கண்ணுக்குப் புலனாகாதது; காணமுடியாதது.


மாயை காண முடிவது, கண்ணுக்குப் புலப்படுவது.
மாயை சைதன்யம் அன்று; மாயை ஜடமே ஆகும்.


சைதன்யம் பிரகாசிக்கும் சுயமாகவே ஒளி வீசி!
சைதன்யதுக்குத் தேவையில்லை வேறு பிரகாசம்.


தனக்குத் தானே பிரகசிக்கும் விளக்குப் போலத்
தன்னிலும் வேறானதை விளக்குவது சைதன்யம்.


காணப்படும் அனைத்தும் ‘ஜடம்’ அல்லது ‘மாயை’;
காணப்படும் அனைத்தும் அடையும் பல மாறுதல்கள்.


அவஸ்தைகள் உண்டு காண முடிகின்றவற்றுக்கு;
அவஸ்தைகள் இல்லை காண முடியாதவற்றுக்கு.


நித்தியமானது சைதன்யம், என்றும் மாறாதது இது;
பக்தியை விளைவிப்பது இது; ஆனந்த மயமானது.


ஆதியும், அந்தமும் அற்றது சைதன்யம் – எனவே
நித்தியமானது, நீங்காதது, அழிவில்லாதது இது.


ஞானமே ஆகும் என் சம்வித் வடிவம் – ஆனால்
ஞானம் ஆகாது ஜீவாத்மாவின் ஆன்ம தர்மம்.


அடையாது ஞான தர்மம் ஜடத் தன்மையை.
அடையும் ஜீவாத்மா என் மாயா தர்மத்தை.


ஞானம் வாய்ந்தது சித்துத் தன்மை – எனவே
ஞானம் அடையாது அசித்துத் தன்மையை.


சித் ஆகும் ‘சுத்த ஞானம்’; அசித் ஆகும் ‘ஜடம்’;
சத்தியமானது ஞான வடிவம்; இது மிக சுகமானது;


ஞான வடிவம் கலப்படமற்றது; நித்தியமானது;
ஞான வடிவம் விகாரமற்றது; துவைதமற்றது.”


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


7#32. Devi’s Gita (2)


“Whatever can be seen with eyes is ‘jadam’. When MAyA covers true knowledge like a screen, it becomes ‘asath’. MAyA becomes the Nimiththa kAranam when related to chaitanym (intelligence).


Chaitanyam (intelligence) is not visible to the eyes. MAyA is visible to the eyes. MAyA is not chaitanyam. MAyA is merely jadam.


Chitanyam has its own illumination and does not need another source for its illumination. Chitanyam can be compared to a lamp which shines on its own and also shows the other objects around it.


All that can be seen with our eyes is MAyA or jadam. All that can be seen has different states of existence called ‘avasthas’ namely JAgratha, Sushupti and Swapna. What is not visible to the eyes does not have these states of existence or avathas.


Chaitnayam is permanent. It does not undergo any change. It produces Bhakti. It is a pleasant experience. It has neither a beginning nor an end. It is eternal. It does not diminish or disappear. My true swarropm is JnAnam. Know it that true JnAnam can never become a mere jadam.


JeevAtma’s dharmam is not pure JnAnam. JeevAtma attains MAyA dharma. JnAnam is a chit swaroopam and can not become achit swaroopam.

JnAnam is pleasant, truthful, unadulterated, permanent, without any changes and exists as a unique thing.


 
bhagavathy bhaagavatam - skanda 2

2#3a. மஹாபிஷன்

இக்ஷ்வாகு வம்சத்து மன்னன் மஹாபிஷன்;
இஷ்டத்துடன் செய்தான் பற்பல யாகங்கள்.


அஸ்வமேத யாகம் ஆயிரம் முறை செய்தான்;
வாஜ்பேய யாகத்தை நூறு முறை செய்தான்.


இந்திரப் பதவியை அடைந்து விட்டான்;
அந்தமில்லாத போக வாழ்வு வாழ்ந்தான்.


பிரமனைக் காணச் சென்றான் ஒருமுறை.
பிரமன் சபையில் இருந்தால் கங்கா தேவி.


வீசியது காற்று; விலகியது அவள் சேலை.
கூசி விலக்கினர் சபையோர் தம் கண்களை!


நோக்கினான் காமத்தோடு மஹாபிஷன் அவளை.
நோக்கினாள் மகாபிஷனைக் காதலோடு கங்கை!


உறவாடின கண்கள் கலந்து அச்சபையினில்;
மறந்துவிட்டனர் பிறர் அங்கு இருப்பதையே!


கோபம் கொண்டான் இது கண்ட பிரமன்;
சாபம் தந்தான் அவ்விருவருக்கும் பிரமன்!


‘சிற்றின்பத்தை விழைந்தீர்கள் இருவரும்!
சிற்றின்பத்தை அனுபவிப்பீர் பூவுலகினில்.


புண்ணியங்கள் செய்து சாபம் தீர்ந்ததும்
விண்ணுலகம் வந்தடைவீர்கள் மீண்டும்!”


விலகிச் சென்றனர் மன வருத்தத்தோடு.
நிலவுலகினில் யாராக எங்கே பிறப்பது?


சிந்தித்தான் மஹாபிஷன் மிகத் தீவிரமாக.
வந்தனைக்குரிய ஒரு மன்னன் புரூரவன்.


பிரகாசித்தான் அவன் வம்சத்தில் தோன்றிய
பிரதீபன் என்னும் அரசன் மிகுந்த புகழுடன்.


பிறந்தால் பிரதீபனின் மகனாகப் பிறந்திட
உறுதி பூண்டான் மஹாபிஷன் மனத்தில்.


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

2#3a. MahAbishan

MahAbishan was a famous king in IkshvAku vamsa. He performed one thousand AswamEda yAgAs and one hundred VAjpEya yAgAs. As a result he became the Indra and lived a life of endless pleasures in the Heaven.


He visited Brahma one day. Ganga Devi was also present there along with many others. Breeze blew off her sari. Everyone there felt uneasy and turned away their eyes – but not MahAbishan. He kept staring at Ganga Devi unashamed.

Ganga Devi too stared back at him with desire written openly in her eyes. They both forgot that they were in a sabha filled with many more Deva. Brahma noticed this shameful behavior and cursed them thus!

” You were overcome by lust in a sabha filled with many DEva. May you be born on earth and human beings and enjoy the pleasure you desired so badly. Earn puNya by your good deeds and after the effect of the curse wears out you may return to the swarggam.”

Both Ganga and Mahaabishan felt crestfallen and left the place. They had to be born on the earth – but where and to whom? Purooravan was a good king and Pradeepan who was born in his lineage was also very good and famous. Mahaabishan decided to be born as a son of the King Pradeepan.



 
kanda purANam - mahEndra kANdam

2. விண்ணிற் பறத்தல்

வீரவாகுத் தேவர் எழும்பிய உடனேயே
விரைவின் இழுப்பால் பறந்தன மலைகள்.

விரைந்த காற்றில் சுழன்றன உயிர்கள்!
விரைந்த காற்றில் திரிந்தன உலகங்கள்!

கருமுகில் கலங்கி வடவாக்னி அணைந்தது!
கதிரவன் குளிர்ந்தது மதில்கள் பெயர்ந்தன.

மூச்சுக் காற்றின் தீ நகரைக் கொளுத்திவிட
மூண்டதீயை அணைத்தது தள்ளுண்ட நீர்!

கடலில் உதிர்ந்தன பல விண்மீன்கள்.
கடல் மீன்களோ விண்ணிற் பறந்தன!

இரத்தின வளையின் திகழும் பேரொளி
சக்கரவாள கிரியில் ஒளி உமிழ்ந்தது.

“முப்புரம் எரித்த அப்பனின் நகைப்போ?
முருகக் கடவுள் எறிந்த வேற்படையோ?”

கண்டவர் ஐயுறச் சென்றடைந்தான் அவன்
அண்டர்கோனின் வீர மகேந்திரபுரிக்கு,

வடக்கே அமைந்திருந்த இலங்கையைத்
திடமாய்க் காவல் செய்பவன் யாளிமுகன்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

3#2. Soaring in the sky.


When VeerabAhu soared in the sky, the force of his travel displaced many mountains which also started to fly along with him. The speed of his flight churned the three worlds and troubled all the living beings in those worlds.

The water-laden-clouds rained and put out the vadavAgni. The Sun became cooler. The surrounding wall of the city got pushed down. His fiery breath set fire to the city. The tidal waves which rose due to the force of his breath put out the fire.

The stars of the sky fell down into the sea. The fish from the sea leaped up in the air. The sparkle of his gem studded kankaNs worn on his wrists shone on the ChakaravALa Giri. The onlookers wondered ,”Is this the laughter of Siva which set fire to the
Tripuram? Is this the spear thrown by Murugan?”

VeerabAhu landed in Lanka which was situated to the north of Veera Mahendrapuri and was under the protection of yAlimukhan.

 

Latest ads

Back
Top