• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

A poem a day to keep all agonies away!

The 64 Thiru ViLaiyAdalgaL.

15a. மேருவுக்குப் புறப்பாடு

# 15. மேருமலையைச் செண்டால் அடித்தது

15 (a). மேருவுக்குப் புறப்பாடு

குறுமுனி அருளிய சிவவிரதத்தைத்
தருமம் எனக் கருதிப் பின்பற்றியவன்;
திருக்குமரனுக்குத் தந்தையானான்,
அருமை மகன் பெயர் வீரபாண்டியன்!

கல்வி, கேள்வி, வேதம் ,புராணம்,
கரி பரியேற்றம், தேரோட்டம்,
கற்றான் கற்கவேண்டியன எல்லாம்
கொற்றவன் மைந்தன் வீரபாண்டியன்.

மீண்டும் பொய்த்தன மழை மேகங்கள்!
யாண்டும் வற்கடம், பசிப்பிணி, வறுமை;
“தீருமா இத்துயர்?” என வினவினால் பதில்,
“ஓராண்டு காலம் நீடிக்கும் இப்பஞ்சம்!”

இத்தனைத் துயரைக்கண்டு மனம்
தத்தளிக்க மன்னன் வேண்டினான்;
மீனாக்ஷி சுந்தரேஸ்வரரிடம், “இது
தானாக நீங்க என்ன செய்வேன் நான்?”.

கனவினில் தோன்றினார் கருணைக்கடல்;
“மனம் உடைந்து போய்விடாதே மாறா!
பொன்னும், பொருளும் உள்ள இடத்தை
இன்னும் உனக்கு நான் உரைக்கவில்லை!

தருக்குடன் நின்று, செருக்குடன் விளங்கும்,
மேரு மலையின் அருகில் ஒரு குகையில்,
இருக்கின்றது அளவில்லாச் செல்வம்!
இருப்பது உன் குடி மக்களுக்காகவே!

படையுடன் நீ புறப்படுவாய் உடனே!
வடதிசை நோக்கி நடத்துவாய் அதனை!
செருக்குடன் இருக்கும் மா மேருவின்
தருக்கு நீங்க அதைச் செண்டால் அடி!

ஒளித்து வைத்துள்ள பொற்குவியலை
களிப்பு எய்தும்படி அள்ளிக் கொள்வாய்!
மிகுந்த பொன்னை அங்கேயே வைத்துத்
தகுந்த முறையில் அதனைப் பாதுகாப்பாய்!”

கனவு கலைந்தது உக்கிரவர்மனின்;
கவலை ஒழிந்தது பாண்டிய மன்னனின்!
கடலென ஒரு பெரும் படையும் புறப்பட்டு
வடதிசை நோக்கிச் செல்லலாயிற்று.

பறந்த புழுதியும் கண்களை மறைத்து;
சிறந்த மீன்கொடி கண்களைப் பறித்தது!
பொன்னும், பொருளும் பெரும் ஆவலால்
முன்னம் நகர்ந்தது மன்னன் படைகள்.

வாழ்க வளமுடன். விசாலாக்ஷி ரமணி.

#15 (a) THE MARCH TO THE MOUNT MERU.

Ugravarman followed the Soma Vaara Vratham taught by Agasthya maharishi sincerely. He was blessed with a worthy son whom he named as Veera Paandiyan.

His son was as brave as he was intelligent. He learned Vedas, Puranas and Saasthras. He mastered the weapons of warfare as well as the war techniques.

There was a drought one more time. People were starving due to famine.The king consulted the astrologers. Their predictions were bad indeed! One year of food scarcity was foreseen!

The King Ugravarman was feeling miserable and helpless. He prayed to Lord Siva to show him a way out. God appeared in his dream that night and said,

“Do not lose hope and courage! I have a good news to share with you.There is a cave near the proud Mount Meru which is filled with gold and other valuables.

March to Mount Meru with your army. Conquer the proud Meru by hitting it with the bouquet given by your father.
It will then reveal the secrets about the buried treasure.

You may take as much as you want. Seal the cave again for keeping the treasure safe for your future use.”

The king was thrilled by the revelation in his dream. He was filled with fresh hopes of success. He left with a huge army and marched northwards. The dust raised by their march made visibility impossible. The Fish in the flag of Paandiya king was fluttering high in the air. The whole army was excited about finding a solution to the famine and drought.

 
bhagavathy bhaagavatam - skanda 7

7# 26. சோகக் காட்சி

“கொல்வதில்லை பெண்களை என்பது என் விரதம்.
கொல்ல வேண்டியுள்ளது என் எஜமானன் ஆணையால்.

தலையைக் குனித்து அமர்ந்து கொள் என் முன் – உன்
தலையைக் கொய்யும் சக்தி உள்ளதா என் கைகளில்?”

விந்தையாக இருந்தது சந்திரமதிக்கு இந்த இரக்கம்!
விந்தை தான் இந்த இரக்கம் ஒரு சண்டாளனிடம்!

“கொலை செய்யப் போகும் புலையனே கேள் இதை;
விலை மதிக்க முடியாத உதவியைக் கோருவேன்.

இறந்து விட்டான் மகன் வனத்தில் அரவம் தீண்டி;
எரியிட்டு விடுகிறேன் அவனை உன் கண் முன்னே!

அதுவரை பொறுத்திருப்பாய் என்னை தண்டிக்க;
இதுவே உன்னிடம் என் பணிவான வேண்டுகோள்!”

அனுமதித்தான் அரிச்சந்திரன் அபலைப் பெண்ணை;
அழுதாள் மீண்டும் மகனைச் சுமந்து வந்து கிடத்தி.

சிறுவனின் ஆடைகளை அவிழ்த்தான் புலையன்;
பெரிய வீட்டுப் பிள்ளையின் வனப்பைக் கண்டான்.

நினைவுக்கு வந்தான் அவன் மகன் லோகிதாசன்.
நினைத்தான் ‘அவன் எங்கு எப்படி இருக்கிறானோ?’

அழுதாள் அரற்றியபடி சந்திரமதி நெஞ்சம் வெடிக்க.
அறிந்தான் அவர்கள் தன் மனைவி, மகன் என்பதை!

மயங்கி விழுந்தான் அரிச்சந்திரன் துக்கம் மேலிட்டதால்!
மயங்கி விழுந்தாள் கணவனை அறிந்து கொண்ட அவளும்!

அரற்றினான் மகனைத் தழுவிக்கொண்டு அரிச்சந்திரன்;
அரற்றினாள் மணாளன் நிலையைக் கண்ட மனைவியும்.

ஏசினாள் அவள் தெய்வங்களை! ஏசினாள் தர்மத்தை!
ஏசினாள் அவள் சத்தியத்தை! ஏசினாள் விரதத்தை!

“வெட்டுங்கள் என் தலையை எஜமானன் ஆணைப்படி!
வெல்லுங்கள் மீண்டும் உங்கள் சத்திய விரதத்தில்!”

“பிள்ளைக்கு மூட்டும் தீயில் விழுந்து விடுகிறேன் நான்!”
“பிள்ளைக்கு மூட்டும் தீயில் விழுந்து விடுகிறேன் நானும்!

சுவர்க்கமோ, நரகமோ, அடைவோம் மூவரும் ஒன்றாக!”
சம்மதித்தனர் இருவரும் சிதையுடன் எரிந்து போவதற்கு.

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

7#26. A pathetic scene

Harischandra told the woman whom he did not recognize as his wife,” Non-killing of any woman is my vtratam. But today I have to kill you in order to obey my master’s command. I do not know whether my hands have the power to kill you. Please sit here with your head bent forward!”

Chandramati did not recognize her husband since he had changed so much. She was surprised by this compassion shown by a chaNdALan. She spoke to him thus,

“Listen to me please. I seek a favor from you before I get beheaded. My son lies dead in the forest bitten by a venomous snake. Let me cremate him right in front of your eyes. After that you may carry out the command of your master.”

Harischandran agreed to this request. Chandramati ran to the forest, fetched the body of her son. She laid it in front of Harischandra and lamented and wailed recalling her better days in the past.

Harischandran removed the clothes worn by the boy. The features of the boy proved that he was not an ordinary boy but one who was born in a royal family.

He was reminded him of his own son LohidAsa and he wondered where his son was and what he was doing at that time.

The recalling of the past by Chandramati made him realize that she was his wife and the dead boy was his own son. He fainted from the shock of his sorrow.

Now Chandramati recognized him and she too fainted seeing the pathetic condition of her husband. She cursed the Gods, she cursed Dharma which was playing havoc in their lives. She cursed Satyam and she cursed vratam.

She told her husband,”Behead me now as commanded by your master and prove that you have won in the test of Dharma and kept up your vratam in adhering to satyam.

Harischandra decided to burn himself on the pyre made for his son. She too decided to do the same. They both decided to burn on the pyre along with their son and reach either swarggam (heaven) or narakam (hell) which hardly mattered now.


 
bhagvathy bhaagavatam - skanda 1

1#18d. ஜனகனின் பதில்

“மனத்தை வெல்வது மா தவருக்கும் அரிதே!
மனத்தை வெல்லப் பக்குவம் பெறவேண்டும்.


அனுபவித்துப் பின் அடக்க வேண்டும் மனத்தை.
அனுபவிக்காது துறப்பது என்றுமே ஆபத்தானது.


சாந்தம், அறிவு, ஆத்ம விசாரம் உடையவன்
சம்சார வாழ்க்கையினால் பந்தப்படமாட்டான்.


இருப்பான் சமபுத்தி கொண்டவனாக – இல்லை
இன்பம் லாபத்தாலோ, துன்பம் நஷ்டத்தாலோ.


விதித்த வேத கர்மங்களைச் செய்யும் ஒருவன்
விரும்பக் கூடாது அந்தக் கர்மங்களின் பலனை.


அர்ப்பணிக்க வேண்டும் அவற்றை ஈஸ்வரனுக்கு;
ஆனந்த மயமான ஆத்ம அனுபவம் பெறுவதற்கு.


ஆள்கின்றேன் மன்னனாக மிதிலையை – ஆனால்
வாழ்கிறேன் நான் சமபுத்தியுடன் யதேச்சையாக.


சுகமும் இல்லை, துக்கமும் இல்லை எனக்கு;
சுலபம் ஜீவன் முக்தனாவது பற்றை ஒழித்தால்!


அனுபவிக்கின்றேன் அரசவாழ்வின் போகங்களை
அடைவதில்லை அவற்றில் பற்றோ, விருப்பமோ!


கடமைகளைச் செய்ய வேண்டும் திறமையாக;
உடமை கொள்ளக்கூடாது அவற்றின் பயன்களை!


காணும் பொருட்கள் அனைத்தும் பந்தப்படுத்தும்;
காண இயலாத பொருட்கள் நம்மை பந்தப்படுத்தா!


பேதங்களை உணரச் செய்வது மனிதனின் மனம்;
வேதனை, சாதனையை உணர்த்துவது மனித மனம்.


பரமாத்மாவை அடைய முடியும் அனுமானத்தால்
பரமாத்மாவை அடைய விடாது தடுப்பதும் மனம்!


பந்த மோக்ஷங்களுக்குக் காரணம் மனித மனம்;
இந்திரியங்களோ, தேஹமோ, ஜீவனோ அல்ல.


பற்றும், வெறுப்பும் தோன்றுவது மனத்தால்
பகைவன், நண்பன் என்ற பேதங்கள் மனத்தால்.


பேதங்கள் தோன்றுகின்றன மன விகாரத்தால்,
பேதங்கள் மறையும் மன விகாரம் மறைந்தால்!


வேதங்கள் விதிக்கின்றன வாழும் முறையினை;
வேதங்களை மீறினால் அழியும் வர்ணாசிரமம்!”


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


1#18b. King Janaka’s reply

King Janaka replied to sage Sukar. “Conquering the mind is impossible even for a tapasvi doing severe penance. One has to enjoy everything and then try to control his mind. Giving up everything without enjoying them may not prove to be successful.


A person who has a calm temperament and intelligence and does Aatma vichAram (Self Inquiry) regularly, will not be bound by samsAram. He will be at peace irrespective of whether he makes a profit or a loss.


One must perform all the prescribed duties. But one should not covet for the fruits of those actions. Everything must be offered to God. The only aim should be to enjoy Aatma sukham ( the serene peace of mind).


I rule this country as its King. But I live my life with equanimity. I am neither happy nor sad. It is easy to become a a jivan muktan if one gives up all desires and attachments. I live the life of a king. But I do not get attached to the comforts and pleasures. We must perform our duties well but should covet the fruits of our actions.


Everything we can see with our eyes or feel with our senses bind us to samsAram. Those which can not be seen or felt do not bind us. Mind creates and feels the various differences. Mind feels the pride of a victory and the sorrow of a defeat.


One can easily attain Aatman ( realize The Self) but it is the mind that stops it from happening. The main reason for man’s bondage is not his body, nor his indriyAs the sense organs, nor intellect but his mind.


Mind feels the love or the hatred. Mind brands people as friends and enemies. All the differences will vanish when the mind vanishes. The Vedas lay down the rules for righteous living. If we do not adhere to them then the varNAsrama dharmam will be ruined.”

 
kanda purANam - asura kANdam

36b. மாதர் இருவர்

தேவர் கோனின் ஏவலாளனா இவன்?
ஏவினாள் முத்தலைச் சூலத்தை அஜமுகி.

இரு துண்டாகச் சூலம் உடையும்படி
ஒரே வீச்சில் வீழ்த்தினார் மஹாகாளர்.

அருகில் இருந்த துன்முகியின் கையில்
அயிராணியை அளித்தாள் அஜமுகி.

துன்முகியின் சூலத்தைத் தான் வாங்கி
வன்மத்துடன் பாய்ச்சினாள் அஜமுகி.

வீழ்ந்தது அதுவும் இரண்டு துண்டாகி
வீசிய மஹாகாளரின் வாள் வீச்சினால்.

மலையைப் பறித்து எறிந்தாள் துன்முகி.
மலையும் தூள் தூளானது வாள் நுனியில்.

“சூரபத்மனின் வீரத் தோள்களில்
ஆரமாவாள் இனிமேல் அயிராணி.

தாரகன் படைவீரர் வெல்வர் உன்னை!
தாமதம் எதற்கு நானே கொல்வேன்!

வீணாக இறவாதே நீ ஓடிப் போ! – கண்
காணாத இடத்துக்கு விரைந்து உடனே!”

“பெண் என்று எண்ணிக் கொல்லவில்லை!
வீண் வம்புகள் செய்யாமல் நீ விலகி விடு!”

அயிராணியுடன் அஜமுகி, துன்முகியர்
அங்கிருந்து செல்வதற்கு விரைந்தனர்!

மின்னலெனப் பாய்ந்தார் மஹாகாளர்;
பின்னாத கூந்தலைப் பற்றினார் கையால்.

இடையில் இருந்த உடை வாட்படையால்
உடன் துண்டித்தார் அஜமுகி கரத்தை.

துன்முகியின் கரத்தையும் துண்டித்தார்!
மண்மீது புரட்டினார் மாதரை உதைத்து!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

2#36b. Ajamukhi and Durmukhi.


“So he is the servant of Indra”. Ajamukhi threw her trident at MahAkALar. He cut it into two with his sword. Ajamukhi took the soolam from Durmukhi’s hand and threw it at MahAkALar. It was also cut into two by him with his sword. Durmukhi now threw a mountain. He shattered it with the tip of his sword.

“IndrANi’s hands will decorate Soorapadman like a garland worn around his neck by him”. The two asura women grabbed IndrANi and tried to flee from there.

MahAkALar moved in very fast. He held Ajamukhi by her loose hair and chopped off her hand. He did likewise to Durmukhi. He
pushed them both on the ground and kicked them real hard.

 
The 64 Thiru viLaiyAdalgal

15b. மேருவை அடித்தது.

# 15(b). மேருவை அடித்தது.

எத்தனை நாடுகள்! எத்தனை ஆறுகள்!
எத்தனை காடுகள்! எத்தனை மலைகள்!

அத்தனையும் கடந்து நடந்து சென்றனர்,
ஒத்த கருத்தினை உடைய படைவீரர்கள்.


இடைப்பட்ட பலவித இன்னல்களையும்,
இடையூறுகளைக் கடந்து சென்ற சேனை;

அடைந்தது காசி என்னும் புண்ணிய நகரை,
கடைதேற்றும் அழகிய கங்கைக் கரையில்.


கங்கையில் புனித நீராடிய பின்னர்
மங்கையொரு பாகனின் தரிசனம்!

தங்கு தடையின்றி நடந்த சேனைகள்
தங்கநிற மேருவை அடைந்து விட்டன!


“மஹாமேருவே! மலையரசே! பொன் மலையே!
மஹாதேவன் கைவில்லே!” என்று பலவாறு

புகழ்ந்து பேசிய போதும் அந்த மேரு மலை
திகழ்ந்தது வெறும் ஒரு கல் மலையாகவே!


சீறி வந்தது சினம் என்னும் ஒரு தீச்சுடர்
மாறன் மனதில் இருந்து வெளிப்பட்டு!

“ஆடுகிற மாட்டை ஆடிக் கறக்கணும்!
பாடுகிற மாட்டைப் பாடிக் கறக்கணும்!”


சொல்லுக்கு மயங்கி வெளிப்படாமல்
மல்லுக்கு நிற்கும் அம்மலையரசனின்,

மண்டையில் ஓங்கி அடித்தான் தன்கைச்
செண்டால் உக்கிரவர்ம பாண்டியன்.


“அடி உதவுவது போல் ஒருவருடைய
அண்ணன், தம்பி கூட உதவமாட்டார்!”

தருக்கு அழிந்தது மேருமலையின்,
செருக்கு ஒடுங்கி அது வெளிப்பட்டது.


நான்கு முகங்கள்; நாலிரண்டு கைகள்,
வெண்குடை தாங்கிய அழகிய உருவம்!

“என்ன வேண்டும் உங்களுக்கு” என வினவ,
பொன்னை வேண்டினான் உக்கிர மன்னன்.


“மன்னன் விழையும் ஆணிச் செம்பொன்,
மண்ணில் மறைத்து வைக்கப்பட்டுள்ளது!

மாமரத்தின் நிழலின் கீழே வெகு ஆழத்தில்
மாநிதி ஒன்று புதைந்து கிடக்கின்றது அரசே!


வேண்டும் மட்டும் எடுத்துக் கொண்டு
மீண்டும் பாறையால் மூடி விடுங்கள்.

வேண்டும் போது நீங்களே இங்கு வந்து
மீண்டும் அதனை எடுத்துக்கொள்ளலாம்!”


பாண்டிய மன்னன் இறைவன் திருவருளால்
வேண்டிய பொன்னும் பொருளும் பெற்றான்;

மீண்டும் பாறையால் மூடிவிட்டு , அதன் மேல்
பாண்டிய இலச்சினையைப் நன்கு பதித்தான்.


மீண்டும் வந்தனர் தங்கள் மதுரையம்பதிக்கு!
வேண்டும் அளவுக்குக் கையில் பொன், பொருள்!

வேண்டும் பொருட்களை வாங்கிய மன்னன்
யாண்டும் வறுமைப் பிணியைத் தீர்த்தான்.


கோள்கள் தம் நிலைக்குத் திரும்பின;
ஆள்பவருக்கு அனுகூலமான காலம்;

வளமை கொழிக்கும்படிப் பெய்தது மழை.
வறுமை எங்கோ பறந்தோடி விட்டது!


வளர்ந்து நின்றான் வீர வாலிபனாகத்
தளர்ந்த மன்னன் மகன் வீரபாண்டியன்;

அருமை மகனுக்குப் பட்டம் சூட்டி, சிவன்
திருவடிகளில் கலந்தான் உக்கிரவர்மன்.


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

# 15.(b) THE CONQUEST OF MOUNT MERU..


The army marched through many countries, crossed many rivers, passed through many forests and scaled many mountains in its path.The army finally reached the holy city Kasi, on the banks of river Ganges.


Everyone took a holy dip in the Ganges.They had a dharshan of Visalakshi Devi and Lord Viswanaathan. The army then kept on marching till it reached the Mount Meru.


The King Ugravarman praised the mount Meru in many sweet words but it would not budge! It remained silent just like a real mountain of rocks!


The King remembered the words spoken by his father as well as by Lord Siva in his dream. He hit the Mount Meru with the bouquet given by his father long ago!


The Mount Meru lost its pride and arrogance and appeared before the king in a human form. It had four heads and eight arms and looked magnificent.


It demanded the king as to what was his wish.The king wanted to know about the buried treasure. The Mont Meru told him,

“The treasure is buried under the shade of the mango tree over there. You may open the cave and take out as much treasure as you want. But do seal the cave again before you go back.”

The king was pleased to find the huge treasure. He took out as much as he thought he would need to meet the crisis in his country. He sealed the cave with his own emblem and returned to Madhuraapuri.


He bought enough food stuff to feed his citizens till better days returned.The rains came back in due time. The crops grew well and the prosperity returned to the kingdom once again.


Veera Paandiyan was ready to take over as the new king. Ugravarman crowned him as his successor. When his time came, he merged with the lotus feet of Lord Siva for eternity.


 
bhagavathy bhaagavatam - skanda 7

7#27a. வாய்மையே வென்றது!

அடுக்கினான் சிதையை அரிச்சந்திரன்;
அமர்ந்தான் மனைவியுடன் அதன்மீது!


தியானித்தான் சதாக்ஷி என்னும் தேவியை;
வியாபித்தவள் எங்கும் கருணை வடிவாக!


பஞ்ச கோச மத்தியில் உள்ளவள் சதாக்ஷி;
ரத்த வர்ண ஆடை அணிந்தவள் சதாக்ஷி;


உலகைக் காக்கும் ஆவல் கொண்டவள்;
பல ஆயுதங்களைக் கைகளில் ஏந்தியவள்;


வந்தனர் தேவர்கள் அங்கு ஒன்றாகக் கூடி!
“வந்துள்ளோம் உங்கள் மூவரையும் காண!


இந்திரன் மிகவும் வியந்தான் அரிச்சந்திரனை;
இந்திரன் தெளித்தான் அமுதத்தை மகன் மேல்.


உறங்கியவன் போலக் கண் விழித்தான் அவன்;
உற்சாகமாக எழுந்து நின்றான் லோகிதாசன்!


“வென்று விட்டீர்கள் சுவர்க்க வாழ்வை மூவரும்!
வென்று விட்டீர்கள் மானுடர்களுக்கு கிட்டாததை!


கற்பக மாலையை அணிவித்தான் இந்திரன் – தன்
அற்புத சுவர்க்கத்துக்கு வரவேற்றான் மன்னனை.


“சண்டாளன் அனுமதி இல்லாமல் வரமாட்டேன்!
சண்டாளன் கடன் தீராமல் வரமாட்டேன்!” எனவும்


சண்டாள வீரபாகுவாக வந்திருந்த யமதர்மராஜன்
பண்பாளர்களுக்குத் தலை வணங்கிக் கூறினான்,


“கண்டு கொண்டேன் உமக்கு வரவிருந்த துயரை;
சண்டாளனாக உம் பொறுமையைப் பரீட்சித்தேன்.”


“அயோத்தி மக்கள் அனைவருக்கும் சுவர்க்கம் தா!”
அயோத்தி மன்னனாக அரிச்சந்திரன் வேண்டினான்.


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


7#27a. Satyam Eva Jayate!


Harischandra got the funeral pyre ready. He sat on it along with his wife. He meditated on Devi SatAkshi. This Devi pervades everywhere. She is interested in protecting the entire world.


She resides in the center of the pancha kosa (the five sheaths of the mortal body). She is dressed in blood colored red silk. She wields many different weapons in her many hands.

All the DevAs gathered together and appeared before Harischandra. They said, “We have come here to meet the three of you!”


Indra was amazed at the patience exhibited by Harischandra. Indra sprinkled the Amruta ( the nectar of immortality) on LohidAsa. The boy opened his lotus petal shaped eyes as if from a deep sleep. He got up and stood energetically.


Indra told them “You three have won a place in Heaven. No mortal can get a spot there easily. ” He garlanded Harischandra and welcomed him to the swargga lokam.


Harichandra said, “Now I am the slave of VeerabAhu. I can’t go anywhere without his permission.”


Yamadharma RAjan who had disguised himself as VeerabAhu stepped forward and spoke now. “I knew of the troubles you were destined to suffer. I too came down here to test your titiksha (patience).”


Now Harischandra made one request to Indra. “I want a spot in the heaven for all my citizens of Ayodhya. As I am the king of Ayodhya, I feel that all my citizen must share my good fortune and get a place in Heaven.”



 
bhagavthy bhaagavatam - skanda 1

1#18e. சுகரின் கேள்வி

“நீங்கவில்லை என் ஐயங்கள் முற்றிலுமாக
நீங்கள் கூறியதைக் கேட்ட பின்பும் ஜனகரே!


வேதங்கள் கூறுவது தர்ம நெறி என்கின்றீர்.
வேதங்கள் கூறுகின்றன ஜீவஹிம்சையை!


அருந்துகிறார்கள் சோமபானம் – பசுக்களை
அதர்மமாக பலியிடுகிறார்கள் யாகத்தில்!


சுராபானம் அருந்திச் சொக்கட்டான் ஆடுவது
சுகம் தரம் வாழ்க்கை நெறிமுறையா கூறும்!


சசிபிந்து என்கின்ற சத்யசீலன் செய்தானாம்
சிஷ்ட பரிபாலனமும், துஷ்ட நிக்ரஹமமும்!


குவிந்து கிடந்தனவாம் யாகப் பசுத் தோல்
விந்திய மலையே நாணுகின்ற வண்ணம்!


சர்மண்வதி ஆறாக ஓடியதாம் வழிந்த ஊன் நீர்!
சுவர்க்கம் சென்று சேர்ந்தானாம் அந்த சசிபிந்து!


யாக தர்மத்தை ஏற்க முடியவில்லை என்னால்!
போக அனுமதியையும் ஏற்க முடியவில்லை.


சம்சாரத்தில் மூழ்கிய ஒருவன் எங்கனம்
சம புத்தியுடன் ஜீவன் முக்தனாக முடியும்?”


ஜனகன் விளக்கினான் சுகமுனிவருக்கு – அவர்
மனத்தின் ஐயங்கள் மறைந்து போகும் வண்ணம்.


“அக்கினியில் உண்டாகும் புகை அக்கினியாலா?
அக்கினியில் உண்டாகும் புகை வெறும் விறகால்!


விறகின் சம்பந்தம் இல்லாத ஒரு அக்னியில்
சிறிதும் புகை இருக்காது இது உண்மையன்றோ?


ஹிம்சை அல்ல வேதங்கள் கூறும் நெறிமுறைகள்;
ஹிம்சையாகும் காமிய கர்மங்கள் செய்பவனுக்கு.


நிஷ்காமியாக ஈச்வரார்ப்பணம் செய்தால் – அவை
நிலை பெறும் முற்றிலும் அஹிம்சைகளாகவே.


செயல்கள், ஆசையோ அஹங்காரமோ இன்றிச்
செய்யப் பட்டாலும், அவை செய்யப் படாதவை!”


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


1#18e. Sukar’s doubts


“Oh king! I am not convinced even with your explanations. VEdAs teach us himsa. Animals are sacrificed in the yAgAs and the intoxicating surA pAnam flows like water.

Are drinking and playing dice marks of a good life? There was a king called Sasibindu. He performed so many yAgAs and sacrifices that the hides of the dead animals were heaped into a mountain – competing with the Vindhya giri. Their body fluids flowed as a river. He attained swargga by performing those yAgAs.

I find it difficult to accept the yAgA practices and the pleasures permitted. How can a person steeped in samsAram become a jivan muktan (liberated person ) and live with equanimity?” King Janaka patiently replied to all these queries raised of Sage Sukar.

“Fire is accompanied by smoke. Is the smoke from the Agni? No, it is from the firewood used to feed the Agni. If there can be a fire without firewood, there will be no smoke at all.

The teachings of VEda become himsa when performed wishing for personal gains. If performed as an offering to God, there will be no himsa attached to it and no sin in the sacrifices.

So it is the attitude which decides whether an action is himsa or ahimsa. An action performed without the concepts “I” and “my” is considered not to be performed at all – even though it is performed. It is called The Inaction in Action!



 
kanda purANam - asura kANdam

37. அஜமுகியின் வாட்டம்

குருதி ஆறாகப் பெருகியது கையில்
வருந்திப் புலம்பினர் மாதர் இருவரும்;


கைகளை அறைந்து, நிலத்தில் புரண்டு,
கால்களை உதைத்து, உடல் தேய உருண்டு,


வாயினால் தீயைக் கக்கிக் கலுழ்ந்தனர்
“வாராத இழிவு இன்று வந்து விட்டதே!”


சினந்தாள் உலகையே அழிக்க விரும்பி!
நைந்தாள் தன் துன்பத்தில் அழுது புலம்பி!


அஜமுகி போன்றே அரற்றினாள் துர்முகி.
“அண்ணனிடம் சென்று சொல்வோம் வா!”


“அண்டங்கள் அனைத்தையும் ஆளும் என்
அண்ணன் செல்வாக்கை விரைவில் அறிவாய்.


எங்கு ஒளிந்தாலும் உன்னைச் சிறையிடுவேன்!
தங்கை அல்லவா நான் வலிய அசுர அரசனின்?”


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


2#37. Ajamukhi gets depressed.


Blood started flowing from their cut hands. The pain was too much for them to bear. Ajamukhi beat her palms on the ground; she rolled on the ground; she kicked her legs in pain; she spat fire!


She lamented,”Such a shame for me! It has never happened before!” Durmukhi suffered similarly and told Ajamukhi, “Let us go and report this to King Soorapadman”

Ajamuki threatened MahAkALar and IndrANi, “My bother is the ruler of the 1008 Universes. I will have you arrested wherever you may try to hide. I am the sister of the asura king!”


 
The 64 Thiru viLaiyAdalgaL

16a. யுவகுரு வடிவம் எடுத்தது.

# 16. வேதங்களுக்குப் பொருள் உரைத்தது.

# 16 (a). யுவகுரு வடிவம் எடுத்தது.

வேதங்களைப் பாராயணம் செய்து வந்தனர் முனிவர்கள்;
வேதங்களின் நுண்பொருளைச் சற்றும் அறியாமலேயே!
வசித்து வந்தனர் நைமிசாரண்யம் என்னும் வனத்தில்,
வசப்படவில்லையே வேதங்கள் என்னும் மருட்சியுடன்.

அரும் தவ சீலர் வந்தார் ஒருவர், அரபத்தர் என்பவர்;
அறவே ஒழித்து வென்றவர் தன் ஆணவ மலத்தை!
முனிவர்களின் மனவாட்டத்தின் காரணத்தைக்
கனிவுடன் வினவினார், அதை அறிய விரும்பியவர்!

“வேதங்களின் நுண் பொருளை அறியாமலேயே
பேதையர்களாக வேதம் ஓதி வருகின்றோம் !
பொருள் உணர்த்த வல்ல குருநாதர் ஒருவரை
அருளுடன் எமக்கு அடையாளம் காட்டுவீர்!”

“வேதங்களை உலகிற்கு அருளியவன் நம் சிவன்;
வேதப் பொருளை உமக்கு உரைக்க வல்லவன் அவன்;
வேதப் பொருளைக் கற்க வேண்டியது மதுராபுரியில்,
வேத நாயகன் உள்ளான் யுவ சிவ குரு வடிவில் அங்கு.

தத்துவ அறிவுக்கு உகந்த நகரம் மதுராபுரியே;
உத்தமமான த்வாதசாந்த க்ஷேத்ரம் அதுவே;
விராட்புருஷனுடைய பிரமரந்திரத்துக்கு மேலே
விரட்கடைகள் பன்னிரண்டின் உயரத்திலே!

அந்த சோமசுந்தரரின் அற்புதத் திருக்கோயிலில்,
இந்திரன் அளித்த விமானத்தின் தெற்குப் பகுதியில்,
சுந்தர யுவனாக வடிவு எடுத்து அமர்ந்துள்ள சிவன்
மந்திரப் பொருளை உமக்கு உரைக்க வல்லவன் !”

மருட்சி நீங்கி தெருட்சி அடைய விழைந்த அந்த
மறை முனிவர்கள் சென்றடைந்தனர் மதுராபுரி;
பொற்றாமரைக் குளத்தில் புனித நீராடிவிட்டுச்
சொற்பதம் கடந்த அந்த அற்புத நாயகனுடைய,

பொற்பதம் பணிந்து, பின் கற்பதைத் துவங்கினர்,
அற்புதமான தட்சிணாமூர்த்தின் சிலையருகே!
யுவனாகத் தோற்றம், மௌனமே பேசும் மொழி;
யுகங்களைக் கடந்து நிற்கும் உண்மைகள் துலங்கும்!

மேதா மந்திரத்தை விடாது ஓதலாயினர் ;
மேதா விலாசத்தையே விரும்பிய முனிவர்கள்.
கார்த்திகை பௌர்ணமியில் தொடங்கியவர்கள்
கார்த்திகை பௌர்ணமி வரை ஓராண்டு காலம்

ஜெபம், ஹோமம், பிராமண போஜனம் என
ஜெயம் தரும் அனைத்தையுமே செய்தனர்.
மெல்ல மெல்லப் பக்குவம் அடைந்து விட்டன
நல்ல தவத்தால் முனிவர்களின் மனங்கள்.

பொருள் சொல்ல வேண்டிய நேரம் வந்ததை
அருள் கூர்ந்து அறிந்து கொண்டான் இறைவன்.
குரு வடிவம் எடுத்து எதிர் வந்தான் சிவன்,
சிறு யுவன், பதினாறு வயது நிரம்பியவனாக.

திரு நெற்றியில் வெண்ணீறு, திரு மார்பில் பூணூல்,
திரு முக மண்டலத்தில் ஒரு மாறாத புன்சிரிப்பு,
திரு மார்பில் துலங்கின ருத்திராக்க மாலைகள்,
திருக்கைகளில் பவித்ரமும், ஓலைச் சுவடிகளும்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

# 16 (A). SIVA YUVA GURU.

The rushis living in Naimichaaranyam were sad at heart. Though they all chanted the Vedas regularly, none of them knew the secret and sacred meanings of the Vedas!

A great tapasvi Arabaththar visited them once. He was truly a mahaan who had got rid of his ego and pride completely. He wanted to know what made the rushis sad at heart.

“We do not know the meaning of the sacred Vedas. We are in search of a suitable guru. Can you please help us to find a guru?”

Arabaththar told them, “Lord Siva gave the world the four Vedas. He is the only person qualified to impart its meanings.The most suitable city for this quest is Madhuraapuri. Siva appears there as Lord Dakshinaamoorthy-the yuva guru.

Madhuraapuri is the dwaadasaantha kshethram of the cosmic Virat Purushan. In a man it lies 12 inches above his Bramarandram-the soft spot on the top of the skull.

In the Soma Sundareswara temple, to the southern side of the Indra vimaanam, Lord Siva sits under a stone tree as Siva yuva guru- the Dakshinaamoorthy. He is the right guru who can clear all your doubts”.

All the rushis thanked Arabaththar and left for Madhuraapuri. They took a holy dip in the Pond of golden lotuses. They prostrated in front of the deity and sat near the statue of Dakshinaamoorthy.

The uththama guru was so young and his disciples so old! His language was pure silence and yet His very presence cleared all the doubts in the mind of his disciples!

The rushis started chanting the Medhaa manthram, in the prescribed manner, in the most auspicious time of the day.They started their vratham and quest for knowledge on a Kaarthigai full moon day and continued till the next Kaarthigai full moon day, for a year!.

They performed japam, homam, brahmana bhojanam and everything that would help their cause.

The minds of the rushis were mellowing with this tapas into the proper receptive mood. God knew that the appropriate time had come for disclosing the sacred meanings of the Vedas to the rushis.

He appeared as the Siva yuva guru! He looked not a day older than 16 years of age!
His lovely forehead was adorned by the holy ashes.
His lovely shoulder was adorned by the holy poonool.
His lovely face was adorned by a pleasant smile.
His lovely chest as adorned with rudraaksha maalas.
In his lovely hands he held pavithram and the palm leaf manuscripts .





 
bhagavathy bhaagavatam - skanda 7

7#27b. சுவர்க்க வாழ்வு

“தர இயலாது சுவர்க்க வாழ்வை ஒரு போலத்
தரம் கெட்ட மக்களுக்கும், தூயவர்களுக்கும்!”

இந்திரன் மறுத்தான் இந்தக் கோரிக்கையை;
இந்திரனிடம் சொன்னான் அரிச்சந்திரன்.

“யாகங்கள் நடந்தன மக்களின் செல்வத்தில்;
யாகப் பலனைப் பெற வேண்டும் அவர்களும்!”

ஒப்புக் கொண்டான் இந்திரன் கோரிக்கையை;
அப்போதே சென்றனர் அனைவரும் அயோத்தி.

அளித்தான் இந்திரன் அனைவருக்கும் சுவர்க்கம்.
களித்தனர் இதைக் கேட்ட அயோத்தி நகர மக்கள்!

பூலோக வாழ்வில் பற்று இல்லாதவர்கள்
புத்திரரிடம் ஒப்படைத்தனர் பொறுப்பை.

பொன்னிற உடல் பெற்றனர் மகிழ்வுடன்;
பொன்னிற விமானத்தில் ஏறி அமர்ந்தனர்.

சென்றனர் பொன்னுலகம் தத்தம் விமானத்தில்;
சென்றனர் சுவர்க்கம் அரிச்சந்திரன் தயவால்!

முடி சூட்டினான் மகன் லோகிதாசனுக்கு;
நிலை நாட்டினான் தன் புகழை பூமியில்.

ஏறினான் விண்ணுலகு சென்றிட விமானம்,
கூறினார் சுக்கிராச்சாரியார் அரிச்சந்திரனிடம்,

“பொறுமையின் சிகரம் நீரே – சத்திய
நெறி தவறாத உத்தமர் நீரே ஐயமின்றி.

செய்த தான தர்மங்களால் ஆகிவிட்டீர்
சுவர்க்கத்தில் இந்திரனுக்குச் சமமாக! ”

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

7#27b. Life in Heaven

Indra objected to this plan. He said,”The doors of Heaven can not be opened to the good people and the bad people alike. A spot in the Heaven is to earned by one’s own merits and can not be allotted uniformly!”

But Harischandra argued, “I performed many yAgas and yagnas with the tax money paid by all my citizens. So they have earned their own share of puNya by their own good karma.”

Indra agreed to this point. They all reached Ayodhya immediately. People of Ayodhya were overwhelmed to hear that they had earned a place in the heaven by the grace of their kind hearted king Harischandra. They handed over the family responsibilities to their sons and got ready to take off to Heaven.

Each of them got a divya sareeram and a vimNnam to go to Heaven. Harischandra crowned his son LohidAsa as his successor. The troubles and miseries suffered by King Harischandra, his wife and his son did not go in waste. His name has become inseparable from adherence to satyam and truthfulness against all odds. He took off to heaven with his queen Chandramati.

SukrAchArya told him,”You have excelled in your patience and adherence to Satyam and Dharmam. You have earned a position equal to that of Indra in swarggam!”


 
bhagavathy bhaagavatam - skanda 1

1#18c. சுக முனிவரின் ஐயம்

“பிறக்கும்போதே ஞான வைராக்கியம் பெற்ற ஒருவன்
பிரவேசிக்க வேண்டுமா கிருஸ்தாதி ஆஸ்ரமங்களில்?”

“சந்நியாசத்தில் நேரடியாக பிரவேசிக்கும் ஒருவன்
சந்திக்க வேண்டி வரும் இடர்பாடுகள் பலவற்றை.

ஐந்து மதயானைகளின் வலிமை பெற்றவை புலன்கள்!
ஐம்புலன்களையும் அடக்கி ஒடுக்கி வைப்பது கடினம்.

நெறி கெட்டு ஓடச் செய்யும் பரிபாகம் இல்லாதவனை!
அறிவினை மயக்கும்; பெருக்கும் பல ரக இச்சைகளை!

சித்தத்தைக் கெடுப்பவை நாம் கொண்டுள்ள இச்சைகள்;
எத்தனை இச்சைகள் நித்திரை, ஆகாரம், சுகம் இத்யாதி.

வெல்வது கடினம் வெறும் சங்கல்பத்தினால் மட்டும்!
வெல்வது எளிது அவற்றை நாம் அனுபவித்த பிறகு.

கிரமமாக ஈடுபட்டு அனுபவித்த பிறகே ஒருவனால்
சிரமம் இன்றி ஒடுக்க முடியும் இந்திரிய இச்சைகளை.

கீழே விழுவான் உயரத்தில் உறங்குபவன் புரண்டால்!
கீழே உறங்குபவனுக்கு இல்லை அன்றோ இந்த ஆபத்து?

நேராகச் சன்னியாசம் பெற்றவன் சீராக இல்லாமல்
சிறிது நழுவினாலும் பிரஷ்டனாகி வீணாகிவிடுவான்.

அனுபவிக்காத இன்பங்களும் இச்சைகளும் ஒன்றாகி
அலைக் கழிக்கும் மனிதனை வாழ்நாள் முழுவதும்.

பழங்களை உண்ணும் எறும்புகளைப் பாருங்கள்!
பழங்களை உண்ண எண்ணி ஏறுகின்றன மரத்தில்.

இறகுகள் உள்ள பறவைகளால் எளிதாகப்
பறந்து சென்று உண்ண முடியும் பழங்களை.

விழுந்து விடலாம் பறவை மரத்தில் மோதுண்டு
விழுந்து விடலாம் பழம் பறவையிடமிருந்து தவறி.

இடையறாது முயற்சி செய்யும் சிறிய எறும்புகள்
இடையூறு இன்றி உண்கின்றன இனிய கனிகளை.”

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


#18c. Some more doubts raised by Sukar


Sukar asked King Janaka,”If a person is born with gnAnam and vairAgyam does he need to enter into all these Asramams in this
order? Can’t he become a sanyAsin directly?”

King Janaka replied,” The man who becomes a sanyAsin directly has to face several types of problems. The five senses of a man are as powerful as five mad elephants. It is difficult to keep them under one’s control.

If the person is not strong willed, the senses will make him run after them. Man is filled with so many desires …desire for food, for sleep and for the other sensual enjoyments. It is difficult to overcome them just by one’s sankalpam or determination of the mind.

But if a person has already enjoyed them, it becomes easier to overcome them and rise above them. The man who sleeps at a height will fall down and get hurt – if he rolls over. The man who is sleeping on the floor need not fear about such an accident.

The person who becomes a sanyAsin directly will be wasted even if he gives in to a small desire. The pleasures which he had not enjoyed in life will hunt him and haunt him throughout his life.

Look at these small ants climbing on the trees. They wish to eat the sweet fruits of the tree. They go up with difficulty but enjoy the fruits with certainty.

The birds on the other hand have wings and can reach the fruits easily. Yet they may dash against the trees and fall down. Or the fruit may slip from their grip and fall down.”




 
Kanda purANam - asura kANdam

38. இந்திரன் திரும்புதல்

நடந்தவற்றைக் கண்டார் நாரத முனிவர்.
இடப வாகனனின் கயிலை அடைந்தார்.

இறைவனைத் தரிசிக்கக் காத்திருந்த
இந்திரனிடம் கூறினார் விவரங்களை.

துயருற்ற இந்திராணியை எண்ணித்
துயருற்றான் மனம் நொந்த இந்திரன்.

நந்தி தேவரைக் கண்டு வணங்கினான்.
“நான் திரும்புகின்றேன் நிலவுலகுக்கு!

இனிய இறை அருளைப் பெறும் காலம்
கனிய வில்லை போலும் இன்னமும்.

நிலவுலகு நான் எய்திய பின் புதிய தவம்
நிலவணிப் பிரானை நோக்கிப் புரிவேன்.”

நந்திதேவன் விடை தந்தான் உடனே.
இந்திராணியிடம் விரைந்தான் இந்திரன்.

சீர்காழி சென்றடைந்தான் இந்திரன்.
வீரமஹாகாளருக்கு விடை கொடுத்தான்.

அயிராணிக்கு ஆறுதல் கூறினான்.
துயர் துடைத்து பயம் நீக்கினான்.

“சிறைப் பிடிப்பேன்” என்று சூளுரைத்த
அரக்கியின் அச்சுறுத்தல் ஒருபுறம்.

பொன் மேருமலை சென்றனர் மீண்டும்.
பொன்னார் மேனியனை நோக்கித் தவம்!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

2#38. Indra returns to Earth
.

NArada watched these happenings. He rushed to KailAsh and reported the matter to Indra immediately. Indra became very upset and started worrying about the safety of his dear wife. He decided to return to earth.

He took leave of Nandhi Devan and said, “The time is not yet ripe for me to get the grace of Lord Siva. I shall return to the earth and start a fresh penance seeking Lord Siva’s grace.”

Indra hurried to SeerkAzhi. He bade farewell to MahAkALar. He consoled IndrANi. The threat by Ajamukhi made him decide to return to mount Meru. He left for mount Meru with the other Devas and they started a fresh penance seeking the grace of Lord Siva.



 
The 64 Thiru ViLaiyAdalgaL

#16 (b). வேதப்பொருள் உரைத்தது.

குரு வடிவெடுத்து வந்த யுவ சிவன்,
அருள் வேண்டிய முனி புங்கவருடன்

சிவ லிங்கத்தின் திரு முன்பு அமர்ந்து,
சிறந்த பொருளை உரைக்கலானார்.

“உத்தமர்களில் எல்லாம் உத்தமன் சிவன்;
தத்துவ வடிவாக விளங்குபவன் அவன்;

நித்திய வேதத்தின் ஆதி காரணன் சிவன்;
சுத்த அத்வைத ஸ்வயம் பிரகாசன் அவன்.

பராபரன் சிவன்; ஸ்வயும்புவாக வந்தவன்;
நிராமயன் அவன்; விஞ்ஞான கனரூபன்;

பர பிரம்ம ஸ்வரூபன் ஆன மூர்த்தி
பரம சிவனே அன்றி வேறு எவருமல்ல!

வேதத்தின் திருவுருவே சிவ லிங்கம்;
வேதமே சிவ லிங்கத்தின் நுண்பொருள்;

வேதம் வேறு சிவ லிங்கம் வேறு அல்ல!
வேதமே லிங்கம், லிங்கமே வேதம் ஆகும்!”

சிவலிங்கத்தின் தத்துவங்களையும்,
சிவ குரு விரிவாக எடுத்து உரைத்தார்;

அகார, உகார, மகார தத்துவங்கள்,
அழகிய பிந்து, நாதங்களின் பெருமை;

சீரிய காயத்திரியின் தனிச் சிறப்புக்கள்,
சிவாகமங்கள் இருபத்தெட்டின் சிறப்பு,

நான்கு வேதங்கள் தோன்றியது எப்படி,
கன்ம, ஞான காண்டங்களின் உற்பத்தி;

நித்திய, நைமித்திக, காமிய கர்மங்கள்
முக்தி அளித்திடும் சிவன் முன் செய்தால்;

வேதப் பொருளை விரும்பியபடியே,
வேத நாயகன் விரித்து உரைத்தான்!

மருட்சி நீங்கி மகிழ்ச்சி அடைந்தவர்களை,
அருட் கரத்தால் அன்புடன் தடவினான்;

சிவ யுவ குரு ஆலயக் கருவறையில் புக்கு,
சிவலிங்கத்துடனே ஒன்றிக் கலந்தான்!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ராணி.

# 16 (B). THE GREATNESS OF VEDAS.

The Siva yuva guru approached the rushis.They all sat in front of the Sivalingam and the exchange of knowledge began earnestly!

“The best among the Gods is Siva. He is the personification of Tatvam. The Vedas have originated from Siva. He is the real advaitha, sudhdha, swayam prakaasan. He is the paraaparan!

He is the swayambu. He is sinless and pure. He is the personification of knowledge. He is the para Brahma swaroopan. He is the most auspicious of all the Gods.

The roopam of the Vedas is the Sivalingam.The meaning of the Sivalingam is the Vedas. Sivalingam and the Vedas are related as closely as a word and its meaning. Lingam and Vedas are one and the same.”

The Siva guru went on to explain the tatvam behind the Sivalingam. He explained the greatness of the three letters forming the Pranavam viz ‘a’, ‘u’ and ‘m’.

He explained the greatness of Naadam and Bindu; the Gaayadri manthraa; the 28 Siva aagamaas; the birth of the four Vedas; the need for the Karma Kaandaa and the Gnaana Kaandaa; the need for performing one’s nithya, naimithika karmaas, the kaameeya karmaas and the promise of mukthi -if these are performed in front of a Sivalingam!

The uththama guru explained everything the rushis ever wanted to know. He then stroked the heads of his old disciple rushis very gently, blessing them further and imparting to them pure knowledge, pure bliss and pure peace of mind!
He then walked back into the garbha gruham and merged with the main deity right in front of their eyes!


 
bhagavathy bhaagavatam - skanda 7

7#28a. துர்முகாசுரன்

வினவினான் ஜனமேஜயன் வியாசமுனிவரிடம்
“விவரமாகக் கூறுங்கள் சதாக்ஷி தேவியைப் பற்றி!”

“இருந்தான் துர்முகன் என்னும் அசுரன் முன்பு;
குரு என்பவன் மகன்; இரண்யாக்ஷ குலத்தவன்.

‘தேவர்களுக்குத் துணை புரிவது வேதங்களல்லவா?
தேவர்கள் வலுவிழப்பர் வேதம் மறைந்து விட்டால்!’

சென்றான் இமயமலைக்கு தவம் செய்வதற்கு.
செய்தான் தவம் ஓராயிரம் நீண்ட ஆண்டுகள்.

ஆகாரம் ஆனது காற்று; இல்லை வேறெதுவும்!
அன்ன வாகனத்தில் தோன்றிய பிரம்ம தேவன்,

“என்ன வரம் வேண்டும் கேள் என்னிடம்!”என,
சொன்னான் தான் விரும்பும் வரத்தைத் துர்முகன்.

“அனைத்து மந்திரங்களும் என் வசமாக வேண்டும்;
அனைத்து தேவர்களையும் நான் வெல்ல வேண்டும்!”

அளித்தான் பிரமன் கேட்ட வரத்தை அவனுக்கு;
களித்தான் துர்முகன் வேதங்கள் வசப்பட்டதால்.

மறந்து போயிற்று வேதங்கள் வேதியர்களுக்கு!
மறைந்து போயின யாகம், யக்ஞம், ஜபம், தவம்!

வருந்தினர் வேதியர்கள் வேதங்கள் இன்றி!
வருந்தினர் தேவர்கள் அவிர்பாகம் இன்றி !

நலிவடைந்த அமரருடன் போரிடச் சென்றான்
வலிமை படைத்த துர்முகாசுரன் தேவலோகம்.

வஜ்ஜிர தேகம், வைர நெஞ்சம் உள்ளவனுடன்
வலுவிழந்த தேவர்கள் போர் புரிய முடியுமா?

பதுங்கி வாழ்ந்தனர் பல மலைக் குகைகளில்;
ஒதுக்கினர் நேரத்தை பராசக்தியை தியானிக்க!

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

7#28a. Durmukha asuran

King Janamejayan requested Sage VyAsa to tell him more about Goddess SatAkshi Devi. VyAsa continued,” Once there lived an asura named Durmukhan. He was the son of Guru and belonged to the race of HiraNyAkshan.

He knew that Devas owed their strength and welfare to the Vedas. He decided to gain control over the Vedas and thereby make the Devas weak and powerless.

He went to the Himalayas and did severe penance for one thousand years. His food was just the air he breathed. He ate and drank nothing else. Brahma was pleased with this penance and appeared to him in person.

Durkmukhan asked for this boon. “Please make me gain control over all the Vedas. Please make me strong enough to defeat the Devas.”

Brahma granted this boon and disappeared from there. Durmukhan was happy since now all the Vedas were under his control. Thereafter brahmins forgot the Vedas completely.

YAgams and Yagnas came to a halt. Brahmins felt pained to have lost their precious Vedas and the Devas were becoming weaker and weaker since they did not get any Havisu or their food from the yAgams

Now Durmukhan went to Swarggam to fight with the weakened Devas and won over them easily. The Devas had to run away from Swarggam and live hiding in the caves to save themselves.

They were too weak to stand against Durmukhan who had a strong body and a stronger heart – as strong as a diamond.


 
bhagavathy bhaagavatam - skanda 1

1#18d. ஜனகனின் பதில்

“மனத்தை வெல்வது மா தவருக்கும் அரிதே!
மனத்தை வெல்லப் பக்குவம் பெறவேண்டும்.


அனுபவித்துப் பின் அடக்க வேண்டும் மனத்தை.
அனுபவிக்காது துறப்பது என்றுமே ஆபத்தானது.


சாந்தம், அறிவு, ஆத்ம விசாரம் உடையவன்
சம்சார வாழ்க்கையினால் பந்தப்படமாட்டான்.


இருப்பான் சமபுத்தி கொண்டவனாக – இல்லை
இன்பம் லாபத்தாலோ, துன்பம் நஷ்டத்தாலோ.


விதித்த வேத கர்மங்களைச் செய்யும் ஒருவன்
விரும்பக் கூடாது அந்தக் கர்மங்களின் பலனை.


அர்ப்பணிக்க வேண்டும் அவற்றை ஈஸ்வரனுக்கு;
ஆனந்த மயமான ஆத்ம அனுபவம் பெறுவதற்கு.


ஆள்கின்றேன் மன்னனாக மிதிலையை – ஆனால்
வாழ்கிறேன் நான் சமபுத்தியுடன் யதேச்சையாக.


சுகமும் இல்லை, துக்கமும் இல்லை எனக்கு;
சுலபம் ஜீவன் முக்தனாவது பற்றை ஒழித்தால்!


அனுபவிக்கின்றேன் அரசவாழ்வின் போகங்களை
அடைவதில்லை அவற்றில் பற்றோ, விருப்பமோ!


கடமைகளைச் செய்ய வேண்டும் திறமையாக;
உடமை கொள்ளக்கூடாது அவற்றின் பயன்களை!


காணும் பொருட்கள் அனைத்தும் பந்தப்படுத்தும்;
காண இயலாத பொருட்கள் நம்மை பந்தப்படுத்தா!


பேதங்களை உணரச் செய்வது மனிதனின் மனம்;
வேதனை, சாதனையை உணர்த்துவது மனித மனம்.


பரமாத்மாவை அடைய முடியும் அனுமானத்தால்
பரமாத்மாவை அடைய விடாது தடுப்பதும் மனம்!


பந்த மோக்ஷங்களுக்குக் காரணம் மனித மனம்;
இந்திரியங்களோ, தேஹமோ, ஜீவனோ அல்ல.


பற்றும், வெறுப்பும் தோன்றுவது மனத்தால்
பகைவன், நண்பன் என்ற பேதங்கள் மனத்தால்.


பேதங்கள் தோன்றுகின்றன மன விகாரத்தால்,
பேதங்கள் மறையும் மன விகாரம் மறைந்தால்!


வேதங்கள் விதிக்கின்றன வாழும் முறையினை;
வேதங்களை மீறினால் அழியும் வர்ணாசிரமம்!”


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்



1#18b. King Janaka’s reply

King Janaka replied to sage Sukar. “Conquering the mind is impossible even for a tapasvi doing severe penance. One has to enjoy everything and then try to control his mind. Giving up everything without enjoying them may not prove to be successful.


A person who has a calm temperament and intelligence and does Aatma vichAram (Self Inquiry) regularly, will not be bound by samsAram. He will be at peace irrespective of whether he makes a profit or a loss.


One must perform all the prescribed duties. But one should not covet for the fruits of those actions. Everything must be offered to God. The only aim should be to enjoy Aatma sukham ( the serene peace of mind).


I rule this country as its King. But I live my life with equanimity. I am neither happy nor sad. It is easy to become a a jivan muktan if one gives up all desires and attachments. I live the life of a king. But I do not get attached to the comforts and pleasures. We
must perform our duties well but should covet the fruits of our actions.


Everything we can see with our eyes or feel with our senses bind us to samsAram. Those which can not be seen or felt do not bind us. Mind creates and feels the various differences. Mind feels the pride of a victory and the sorrow of a defeat.


One can easily attain Aatman ( realize The Self) but it is the mind that stops it from happening. The main reason for man’s bondage is not his body, nor his indriyAs the sense organs, nor intellect but his mind.


Mind feels the love or the hatred. Mind brands people as friends and enemies. All the differences will vanish when the mind vanishes. The Vedas lay down the rules for righteous living. If we do not adhere to them then the varNAsrama dharmam will be ruined.”

 
kanda purANam - asura kANdam

39. சூரபத்மன் சிறப்பு

அசுர மாதர்கள் சென்றடைந்தனர்
அசுர அரசனின் அத்தாணி மண்டபம்.


அரியணையில் இருந்தான் சூரபத்மன்.
பெரிய வெண்கொற்றக் குடைகளின் கீழ்.


சிங்கமுகன், தாரகன் இருந்தனர் இருபுறம்;
மங்கையரும், மக்களும் சூழ்ந்து இருந்தனர்.


அசைந்து வீசின சாமரங்கள் காற்றை.
இசைந்து தேவமாதர் இயற்றினர் நடனம்.


பஞ்சாங்கம் சொல்ல வந்த பிரமன்
பக்கவாட்டில் ஒதுங்கி அமர்ந்தான்.


வாழ்த்துரை வழங்கினர் முனிவர்கள்.
வாழும் மங்கையர் சுற்றினர் ஆரத்தி.


மங்கலம் பாடினார் கின்னரர், சித்தர்;
பொங்கி வழிந்தன செல்வம், மகிழ்ச்சி.


ஆயிரம் கோடி பொற்றூண் மண்டபம்,
ஓவியங்கள், கண்ணாடிகள் நிறைந்தது.


ஆயிரம் யோசனைகள் பரந்த மண்டபம்!
அரியணை ரத்தினம் இழைத்த செம்பொன்.


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


2#39. The glory of Soorapadman.

The two asura women reached the durbar of Soorapadman. He was seated on his throne under the beautiful, royal, white umbrellas.


Singamukhan and TArakan were seated on his two sides. His wives and sons were seated around him. Gentle air was blown by the chAmaram. The apsaras danced very gracefully while the kinnaras and siddhas sang very sweetly.


Brahma had arrived to read the day’s panchAngam ( almanac). All the saints and sages blessed Soorapadman. Auspicious women did the hArathi. The whole place and Sooran’s palace was overflowing with wealth and happiness.


The maNdapam had a thousand crore gold pillars and sprawled over an area of one thousand yojana. Paintings and mirrors decorated the maNdapam. Soorapadman’s throne was made of the purest gold and was studded with priceless gem stones.


 
The 64 Thiru ViLaiyAdalgaL

17a. பயிரும், களையும்

# 17. மாணிக்கம் விற்றது.

# 17 (a). பயிரும், களையும்


மன்னர்களில் அநேகர் திருமணம்
மகாராணியுடன் புரிந்துகொண்டாலும்,
காமசுகத்தை அனுபவிக்க விரும்பிக்
காமக் கிழத்தியரை ஆதரிப்பார்கள்!


பொன்னும், மணியும் விரும்பியே
மன்னனுடன் கூடுவார்கள் அவர்கள்;
ராணிகளைப் போல ராஜ்ஜியத்தைப்
பேண வேண்டிய அவசியம் இல்லையே!


வீரபாண்டியனுக்குப் பிறந்தனர் முழு
வீணர்களாகிய மகன்கள் அநேகர்!
குலத்தை வளர்க்கப் பிறக்கவில்லை
குல மனைவியிடம் ஒரு மகன் கூட!


மகனை வேண்டி மன்னனும் மனைவியும்
மாதவம் செய்தனர், விரதம் காத்தனர்;
நல்ல வேளையாக ஒரு நல்ல நாளில்,
செல்ல மகன் ஒருவன் வந்து பிறந்தான்.


நாளொரு மேனியும் பொழுதொரு
வண்ணமுமாக வளர்ந்தான் அவன்;
என்ன நடக்கும் நாளை எனச் சற்றும்
எண்ணாமலே வாழ்த்து வந்தனர் அவர்.


வேட்டைக்குச் சென்ற வீரபாண்டியன்
வேட்டையாடப்பட்டான் வரிப்புலியால்!
குலப்பயிருக்குக் களையாக முளைத்த
குலத் துரோகிகள் காத்திருந்த வாய்ப்பு!


யானை, குதிரை, இரத்தினம், மணிகள்,
பொன், பொருள், அரசுச் சின்னங்கள்;
மாயமாக மறைந்து போயின! கூடவே
மாயமானார்கள் அந்த மாயாவிகளும்!


அந்திமக் கிரியைகளை செய்வித்து அவர்
சொந்த மகனுக்குப் பட்டம் சூட்டிட
விரும்பிய அமைச்சர்கள் கண்டது என்ன?
இரும்புச் சுவர் கஜானாவில் கொள்ளை!


மணி மகுடமும் இல்லை, நவமணிகளும்,
மன்னரின் சின்னங்களும் காணவில்லை!
பொன்னும், பொருளும், பிற செல்வங்களும்;
போன திசை எவருக்குமே தெரியவில்லை!


புதிய மகுடம் செய்து அணிவிக்கத் தேவை
புதுமையான நவமணிகள், ரத்தினங்கள்;
மகுடம் இல்லையேல் மன்னன் இல்லை!
மன்னன் இல்லையேல் அரசாட்சி இல்லை!


அரசாட்சி இல்லையேல் அரசியல் இல்லை!
அரசியல் இல்லாத நாட்டுக்குத் தொல்லை!
அரனே நமக்கு வழி காட்டுவான் என்று,
அரசிளங்குமரனுடன் அமைச்சர்கள் குழு


அரன் திருக் கோவிலைச் சென்று அடைந்தது.
அரனே அங்கு நின்றான் வியாபாரி வடிவில்!
ரத்தினங்களின் ஓர் அழகிய மூட்டையுடன்,
சித்திரம் போன்றதொரு அழகிய வடிவுடன்.


“என்ன கவலை உங்களை வருத்துகின்றது?
என்னிடம் தயங்காமல் நீங்கள் கூறலாமே!”
“மகுடம் புனைய வழில்லை குமரனுக்கு!
கபடமாகக் கவர்ந்து சென்றனர் முன்பே!”


“கவலையை விட்டு ஒழியுங்கள் நீங்கள்!
நவரத்தினங்கள் பல உள்ளன என்னிடம்;
பதினாறு கோடிப்பொன் விலை பெரும்
புதுமையான நவமணிகள், ரத்தினங்கள்!”


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


# 17.(a). THE CROP AND THE WEEDS.


The ancient kings married queens to bear them princes fit to rule the country, but they also had many other women to satisfy their lust. These women always had their eyes on the King’s gifts and riches.They cared little about the king or his kingdom.


King Veerapaandian had many such women. They also bore him several wicked sons-shaped after their own selves. The lawfully wedded queen did not have any offspring.The king and Queen observed several vrathams and finally a son was born to them.
They became very happy, little knowing what the future had in store for them!


The king went for hunting and got killed by a ferocious tiger. This was the opportunity the wicked women and their sons were waiting for. Using their influence they stole the royal elephants, horses, gold, silver, diamonds and even the king’s crown and scepter.


After performing the last rites to the dead king, the ministers wanted to crown the young prince as his successor.When they visited the royal treasury, they were in for severe shock! The treasury had been looted!


They wanted to make a new crown for the prince but they had no diamonds.Without a crown, there could not be a king.Without a king, there could not be a government. Without a government they would become vulnerable to the enemy’s attack.


They decided to seek the blessing of Lord Siva in solving this problem.They saw a diamond merchant standing outside the temple. He held a bundle of beautiful gems and was extremely handsome to look at!


He asked the ministers as to what was bothering their minds! The ministers told him their tale of woe. He told them not to worry
any more since he had the most exquisite collection of diamonds in the world worth 16 crore gold coins.
 
bhagavathy bhaagavatam - skanda 7

7#28b. சதாக்ஷி தேவி

நின்றி விட்டன யாக யக்ஞங்கள் முற்றிலுமாக;
நின்றுவிட்டது மழை பொழிவது முற்றிலுமாக.

நூறாண்டு காலம் வானம் பொய்த்தது;
நூறாண்டு காலம் வறட்சியே நிலவியது.

வற்றி விட்டன நீர்நிலைகள் அனைத்தும்;
செத்து விட்டன ஜீவராசிகள் நீர் இன்றி.

சென்றனர் அந்தணர் இமயமலைச் சாரலுக்கு.
சென்றனர் தேவியின் திருவடியைச் சரண்புக.

“பராசக்தி! பரமேஸ்வரி! கருணை காட்டு!
பாமரர் நாங்கள்; குற்றம் நிறைந்தவர்கள்;

தணிவாய் நீ கொண்டுள்ள சினத்தை முதலில்;
பணியும் எம்மைக் காத்துக் கரையேற்றுவாய்.”

நீல மலை போன்ற ஒளி படைத்த திருமேனி;
நீலோத்பல மலர்களை ஒத்த அழகிய விழிகள்;

பாணத்தை, தாமரையை, தளிரை, வேரை,
பசி, தாகம், மூப்பு, நரைகளை நீக்க வல்ல

ரசமான பழங்கள் உள்ள ஒரு பூங்கொடியை,
ரசிக்கத் தகுந்த ஒரு வில்லை ஏந்திக் கொண்டு

நான்கு கரங்கள், அநேகக் கண்கள் கொண்ட
தன் உருவத்தைக் காட்டி அருளினாள் தேவி.

கண்கள் பொழிந்தன கருணை மழையை;
கரங்கள் சொரிந்தன தண்ணீர் தாரைகளை!

பிழைத்தது உலகம் அவள் கருணையினால்;
பிழைத்தன உயிர்கள் பெய்த மழையினால்.

வெள்ளம் பாய்ந்து ஓடியது பெரு நதிகளாக;
வெளியே வந்தார் பதுங்கியிருந்த தேவர்கள்.

துதித்தனர் அந்தணரும், அமரரும் தேவியை!
கதி அவள் அன்றி நமக்கு வேறு யார் உள்ளார்?

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

7#28. SatAkshi Devi

YAgas and yagnas had stopped completely. Rains too stopped pouring down on the earth. For one hundred years at a stretch the rains failed. For one hundred years at a stretch there was a severe draught. All the water bodies dried up completely. All the animals died without any water to drink.

All the Brahmins who were still alive went to the slopes of Himalayas and surrendered to Devi Parvati. They prayed to her, “ParAshakti! Parameswari! Please show us mercy. We are pagans. We are filled with sins and defects. Please calm down from your state of anger. Please save us and protect us. ”

Devi Parvati appeared with a luminous blue hue. Her eyes resembled the blue water lilies. She carried in her hands a bow, an arrow, a lotus, a tender leaf and a root.

She held in her hand a branch with luscious fruits which can eliminate hunger, thirst, old age and greying. Her eyes showered her infinite mercy. Her hands showered unending streams of water which started to flow into big rivers.

All the living things were nourished by her merciful glance. The earth and the plants were nourished by the stream of fresh and cool water. The Devas who were hiding in the caves came out now.

The Devas and the brahmins praised the greatness and mercifulness of Devi. Who else is there to protect us other than Her – The Universal Mother of everyone and everything?


 
bhagavatahy bhaagavatam - skanda 1

1#18e. சுகரின் கேள்வி

“நீங்கவில்லை என் ஐயங்கள் முற்றிலுமாக
நீங்கள் கூறியதைக் கேட்ட பின்பும் ஜனகரே!

வேதங்கள் கூறுவது தர்ம நெறி என்கின்றீர்.
வேதங்கள் கூறுகின்றன ஜீவ ஹிம்சையை!

அருந்துகிறார்கள் சோமபானம் – பசுக்களை
அதர்மமாக பலியிடுகிறார்கள் யாகத்தில்!

சுராபானம் அருந்திச் சொக்கட்டான் ஆடுவது
சுகம் தரம் வாழ்க்கை நெறிமுறையா கூறும்!

சசிபிந்து என்கின்ற சத்யசீலன் செய்தானாம்
சிஷ்ட பரிபாலனமும், துஷ்ட நிக்ரஹமமும்!

குவிந்து கிடந்தனவாம் யாகப் பசுத் தோல்
விந்திய மலையே நாணுகின்ற வண்ணம்!

சர்மண்வதி ஆறாக ஓடியதாம் வழிந்த ஊன் நீர்!
சுவர்க்கம் சென்று சேர்ந்தானாம் அந்த சசிபிந்து!

யாக தர்மத்தை ஏற்க முடியவில்லை என்னால்!
போக அனுமதியையும் ஏற்க முடியவில்லை.

சம்சாரத்தில் மூழ்கிய ஒருவன் எங்கனம்
சம புத்தியுடன் ஜீவன் முக்தனாக முடியும்?”

ஜனகன் விளக்கினான் சுகமுனிவருக்கு – அவர்
மனத்தின் ஐயங்கள் மறைந்து போகும் வண்ணம்.

“அக்கினியில் உண்டாகும் புகை அக்கினியாலா?
அக்கினியில் உண்டாகும் புகை வெறும் விறகால்!

விறகின் சம்பந்தம் இல்லாத ஒரு அக்னியில்
சிறிதும் புகை இருக்காது இது உண்மையன்றோ?

ஹிம்சை அல்ல வேதங்கள் கூறும் நெறிமுறைகள்;
ஹிம்சையாகும் காமிய கர்மங்கள் செய்பவனுக்கு.

நிஷ்காமியாக ஈச்வரார்ப்பணம் செய்தால் – அவை
நிலை பெறும் முற்றிலும் அஹிம்சைகளாகவே.

செயல்கள், ஆசையோ அஹங்காரமோ இன்றிச்
செய்யப் பட்டாலும், அவை செய்யப் படாதவை!”

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


1#18e. Sukar’s doubts


“Oh king! I am not convinced even with your explanations. VEdAs teach us himsa. Animals are sacrificed in the yAgAs and the intoxicating surA pAnam flows like water.

Are drinking and playing dice marks of a good life? There was a king called Sasibindu. He performed so many yAgAs and sacrifices that the hides of the dead animals were heaped into a mountain – competing with the Vindhya giri. Their body fluids flowed as a river. He attained swargga by performing those yAgAs.

I find it difficult to accept the yAgA practices and the pleasures permitted. How can a person steeped in samsAram become a jivan muktan (liberated person ) and live with equanimity?” King Janaka patiently replied to all these queries raised of Sage Sukar.

“Fire is accompanied by smoke. Is the smoke from the Agni? No, it is from the firewood used to feed the Agni. If there can be a fire without firewood, there will be no smoke at all.

The teachings of VEda become himsa when performed wishing for personal gains. If performed as an offering to God, there will be no himsa attached to it and no sin in the sacrifices.

So it is the attitude which decides whether an action is himsa or ahimsa. An action performed without the concepts “I” and “my” is considered not to be performed at all – even though it is performed. It is called The Inaction in Action!


 
kanda purANam - asura kANdam

40. நகரில் நுழைதல்

துன்முகியுடன் நுழைந்தாள் அஜமுகி
அண்ணன் தலைநகர் மகேந்திரபுரியில்;

“இச் செயலைச் செய்தவர் யார்? யார்?”
அச்சத்துடன் வினவினர் அவுணர்கள்.

பலவகை வேலைகளையும் விட்டு விட்டு
கவலையுடன் அவர்களைச் சூழ்ந்தனர்.

“இச்செயலைச் செய்தது சிவபெருமானா?”
“இச்செயலைச் செய்தவள் துர்க்கையோ?”

“அய்யனாரின் கை வேலைகளில் ஒன்றா?”
“ஆனைமுகனின் குறும்புகளில் ஒன்றா?”

“மாலின் செயலா இது என்று கூறுவாய்!”
“முனிவரின் சாபமா இது சொல்லுவாய்!”

“இருவரும் சண்டை இட்டுக் கொண்டனரோ?”
“ஒருவர் கையை ஒருவர் வெட்டினார்களோ ?”

“அஜமுகியின் கையை வெட்டியது யார் கூறு?”
அத்தாணி மண்டபத்தை அடைந்தனர் அவர்கள்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

2#40. Entering Veera Mahendra Puram


Ajamukhi and Durmukhi entered the capital city Veera Mahendra Puram of Soorapadman. The asuras were shocked to see the plight of the two asura women.

They dropped whatever they were doing at that time and surrounded these two. They threw numerous questions at the two asura women.

“Who did this to you both?” “Was this done by Siva himself?” “Was this done by Durga?’ “Was this done by Ayyanaar or Ainkaran?” “Was this done by VishNu?” “Were you cursed by the ruhis?” “May be they just fought each other!” “May be they cut off each other’s hand?” “Who really did this to you Ajamukhi?”

The two asura women did not bother to reply to anyone and reached the durbar of the Soorapadman.
 
The 64 Thiru ViLaiyAdalgaL

17b. வலனின் வைரங்கள்.

# 17 (b). வலனின் வைரங்கள்.

தரையில் அமர்ந்து கொண்டார் வியாபாரி,
தன் முன் விரித்தார் ஒரு கறுப்புக் கம்பளி.

மாணிக்கத்தை நடுவில் அமைத்துவிட்டு,
மணிகளை அதைச் சுற்றிலும் அமைத்தார்.

“விலைமதிப்பில்லாத இந்த ரத்தினங்கள்
வித்தியாசாமாக உள்ளனவே ஐயா?”

வலன் என்னும் நல்ல சிவபக்தனுடைய
வஜ்ஜிர உடலின் பாகங்களே இவைகள்!

வலன் என்னும் அசுரன் பெரும் சிவபக்தன்,
வரம் வேண்டிப் பெற்றான் சிவபிரானிடம்;

“மடியக் கூடாது நான் எந்தப் போரிலுமே!
மடிந்த பின் மாறவேண்டும் மணிகளாக!”

மனிதர்கள் விரும்பி அணியும் நவ
மணிகளாக மாற விரும்பியவனின்,

அரிய கோரிக்கையை ஏற்றான் சிவன்;
அரிய வரத்தையும் அளித்துவிட்டான்.

வலன் போர் புரிந்தான் இந்திரனுடன்,
வலன் வென்றான், இந்திரன் தோற்றான்;

“வலிமை பொருந்திய வலனே! உன்
வலிமையைப் போற்றி வரம் தந்தேன்!”

இந்திரனின் மொழிகளைக் கேட்ட வலன்,
சிந்தினான் சிரிப்பு அலைக் கூட்டத்தை;

“சிவனிடம் பெற்றுள்ளேன் அரியவரம்,
எவனிடமும் எனக்கு எதுவும் வேண்டாம்!

இந்திரா! உனக்கு வேண்டியதைக் கூறு!”
இந்திரனின் சூழ்ச்சி பலித்து விட்டது!

கொல்ல வேண்டும் வலிய வலனை,
நல்ல தருணத்தை நன்கு பயன்படுத்தி!

“வெள்ளிமலையின் சாரலிலே செய்ய
உள்ளுகின்றேன் இணையில்லாத யாகம்!

யாகத்தில் அர்ப்பணிப்பதற்கு எனக்கு
யாகப் பசு ஒன்று தேவைப்படுகின்றது!”

“யாகப் பசுவை பலி இடுவாய் இந்திரா!
யாகப் பசுவைப் புசிப்பார் தேவர்கள்;

புகழ்ந்து போற்றுவர், புண்ணியம் கிட்டும்,
இகழ்ந்து இதை நான் ஏற்க மறுப்பேனா?”

மகனுக்கு மகுடம் சூட்டினான் வலன்;
தகவுடைய யாகப் பசுவாக மாறினான்;

அத்தனை லட்சணங்களும் கொண்ட பசு!
எத்தனை வஞ்சகம் எத்தன் இந்திரனுக்கு?

தன்னையே யாகப் பசுவாக மாற்றி,
உன்னர்க்கரிய செயல் செய்த வலன்;

கண்ணைக் கவரும் நவமணிகளாகவே
அண்ணல் அருளால் மாறிவிட்டான்!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

# 17 (b). DIAMONDS OF VALAN.

The merchant sat on the ground and spread a black cloth in front of him. He set an exquisite red diamond in the center and set the other gems around it. Those diamonds looked very different and were vary rare. The ministers exclaimed to this effect.

The merchant told them,”You are right! These are not just the usual gem stones.These are the body parts of a great Siva
bhakthan named Valan.”

Then he told them the story of Valan. Valan was an asuran but a great devotee of Lord Siva. He begged his Lord for an unusual boon,

“I should not not die in any battle or war. When I die all my body parts must get transformed to beautiful gem stones which will please the eyes of the beholders!” Lord Siva granted him the boon and Valan became very happy.

Some time later a battle broke out between Indra and Valan. Valan defeated Indra very easily. Indra thought of a new plan to get rid of Valan once for all! He told Valan,

“I am very much impressed by your valor and strength. I want to present you with a rare boon! What do you want?”
Valan had a hearty laugh and replied, “I have been blessed by Lord Siva himself. So I do not need any more boons. You tell me what you want and you will have it.”

This was what Indra had in his mind all along! He told Valan,

“I want to perform a a rare yaga to please the Gods. I need an animal to be sacrificed in the yaaga. Can you become one?”
“The yaaga pasu will be sacrificed and all the Devas would eat it. It will fetch me honor and the blessings of the Gods. Surely I will oblige your request!”

Valan crowned his son as the new king of his country. He transformed himself to a yaaga pasu. It was perfect in every aspect. Indra was secretly happy that his wicked scheme had borne fruit!
 
bhagavathy bhaagavatam - skanda 7

7#28c. துதியும், போரும்.

“அறிய முடியும் உன்னை வேதங்களால் தாயே !
அரிய சிருஷ்டியின் மூலகாரணம் ஆவாய் நீயே!

கற்பகத் தரு! பராபரை! உன் பக்தர்களுக்கு நீ!
கண்கள் நூறு கொண்டுள்ளதால் சதாக்ஷியும் நீயே.

வறியவர் ஆகிவிட்டோம் வேதங்களை இழந்து;
வறுமையைப் போக்குவாய் வேதங்களைத் தந்து!”

தோன்றின காய், கனிகள் பூங்கொடியிலிருந்து;
தோன்றின அன்ன வகைகள் கொடியிலிருந்து;

‘சாகம்பரி’ என்ற பெயர் பெற்றாள் தேவி இதனால்.
‘சதாக்ஷி’ என்ற பெயர் பெற்று விட்டாள் முன்னரே.

துதித்தனர் அந்தணர், அமரர் சதாக்ஷிதேவியை.
தூதர்கள் உரைத்தனர் துர்முகனிடம் செய்தியை.

ஆயிரம் அக்ரோணி அசுர சேனைகளுடன்
ஆயுதங்கள் தாங்கி வந்தான் துர்முகாசுரன்.

விரட்டினான் அந்தணரை, அமரரை, அசுரன்;
விரட்டினான் அம்புகளால் மழையைப் பொழிந்து.

கூவினார்கள், “காப்பாற்று தேவி காப்பாற்று!”
ஏவினாள் சதாக்ஷி தேவி தன் சக்கராயுதத்தை.

சுழன்றது சக்கரம் பக்தர்களைச் சுற்றிச்சுற்றி!
சுழன்றது சக்கரம் அம்புகள் நெருங்காதபடி.

புரிந்தாள் சதாக்ஷி தேவி துர்முகனுடன் யுத்தம்;
பொழிந்தன பாணங்கள் நெருப்பு மழையினை.

தோன்றினர் முப்பத்து இரண்டு சக்திகள் அப்போது;
தோன்றினர் அறுபத்து ஆறு சக்திகள் அதன் பிற்பாடு.

தோன்றினர் சக்தியர் சதாக்ஷி தேவியிலிருந்து;
தோன்றினர் சக்தியர் அளவற்ற கரங்களோடு.

நசுக்கினர் சக்தியர் துர்முகன் அசுரப் படையை;
நடந்தது கடும் போர் பத்து நாட்கள் தொடர்ந்து.

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

7#28c. The Prayer and the War

The brahmins and the Devas praised Devi SatAkshi thus:

“We can know about you with the help of Vedas Oh Devi! You the force behind this rare and varied creations. You are a Karpaga Vruksham which can fulfill every wish of your devotees. You are the supreme Goddess to your devotees.

You have one hundred merciful eyes and you shall be called as SatAkshi. We have lost our precious Vedas and have become paupers. Restore us to our original glory by bestowing on us the lost Vedas.”

From the branch of luscious fruits Devi held in hand appeared every kind of vegetable and fruit. From that branch appeared all kinds of food and eatables. Devi SatAkshi got the rare name of SAkambari now.

Messengers went running to report this to Durmukha asuran. He came to fight with Devi with one thousand Akshouhini (units) of his army.

He chased the Devas and the brahmins. They shouted and prayed for the help of Devi. SatAkshi promptly released her discus.
It went round and round her devotees protecting them from the rain of arrows from the asura sena. Then Devi fought with Durmukha asuran. Their arrows sped while they spat fire sparks.

Now thirty two Shakti Devis emerged from SatAkshi Devi. Later sixty six Shakti Devis emerged from SatAkshi Devi. These Devis crushed the asura army. The long war went on for ten days.

 
bhagavathy bhaagavatam - skanda 1

1#19a. சுகரின் வாதம்

“குடும்ப வாழ்வில் சிக்கி இடும்பை உறுபவன்
அடைய முடியும் முக்தியை என்பது வியப்பே!

மாய வலையில் மாட்டிக் கொண்ட மனிதன்
தூய மனத்துடன் ஆசைகளற்று இருப்பானா?

சாஸ்திர ஞானம் அடைந்த மனிதனையும்
வாஸ்தவத்தில் விடுவதில்லை மயக்கம்.

நீங்கி அகலுவதில்லை அஞ்ஞான இருள்!
நீக்குமா அகராதி ஞானம் அஞ்ஞானத்தை?

விலகுமா இருள் “தீபம்” என்று சொன்னால்?
உதவுமா கறி சமைக்க ஏட்டுச் சுரைக்காய்?

குடும்ப வாழ்வில் இருப்பவன் இருக்க முடியுமா
அடுத்தவனுக்குத் தீங்கு சிறிதும் நினைக்காமல்?

நீங்கியதா உமது ராஜ்ஜியம் ஆளும் ஆசை?
நீங்கியதா உமது ராஜ்ஜியம் வெல்லும் ஆசை?

நீங்கியதா உமக்கு ‘உனது, எனது’ என்ற புத்தி?
நீங்கியதா உமக்கு அறுசுவைகளின் தாக்கம்?

நீங்கியதா உமக்கு நன்மையில் மகிழ்ச்சி?
நீங்கியதா உமக்குத் தீமையில் வருத்தம்?

நீங்கியதா நாற்படைத் தலைவன் என்ற எண்ணம்?
நீங்கியதா பேத புத்தி? நீங்கியவா சுக, துக்கங்கள்?

நீங்கள் எப்படி ஆக முடியும் ஜீவன் முக்தனாக?
நீங்கள் எப்படி ஆகமுடியும் ஒரு விதேகராக?

மலர் மாலை, சர்ப்ப மாலை ஒன்றாகினவா?
மண்ணும், பொன்னும் ஒன்றாகி விட்டனவா?

இல்லை ஈடுபாடு எனக்கு இல்லற வாழ்வில்;
இருக்க விரும்புகிறேன் ஏகாங்கித் துறவியாக.

கிழங்குகளை உண்டு தனிமையில் வாழ்வதற்கு
அழகிய மனைவி தேவை இல்லை அல்லவா?”

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


1#19a. Sage Sukar’s arguments


“I just cannot believe that a householder can attain liberation! The man who is caught in the net of MAyA cannot be free from desires. Even learned pundits are deluded by illusions. Ignorance is not completely removed in them. Can the bookish knowledge remove the darkness of ignorance?

Can uttering the word lamp remove the darkness? Can we cook the picture of a gourd and eat it? Can a householder have noble thoughts and be free from ill-will and jealousy?

Have you overcome the desire to rule your country or to expand it further? Have you overcome the thought that you are the owner of a very large army? Have you overcome the effect of the fancy food you eat on your taste buds? Have you overcome becoming happy with good luck or sad with bad fortune?

How can you become a jivan mukta and see no difference between the pairs of opposites? Do you consider a garland of flowers and a garland of a serpent exactly in the same way? Do you consider the soil lumps and pure gold nuggets in the same way?

I have no interest in getting married. I want to live as a sanyaasi in solitude. To survive on the roots and fruits and to live a lonely life, I do not need a wife!” Sage Sukar put forward his arguments very strongly.



 
kanda purANam - asura kANdam

41. அஜமுகி அரற்றுதல்

அத்தாணி மண்டபத்தை அடைந்தவுடன்
கத்தி அழலானாள் அசுரமன்னன் தங்கை.

“என்னைக் காத்துத் திரிவேன் என்றாயே!
என்னைக் கைவிட்டு விட்டாயே தாயே!”

ஆபத்துக்கு உதவாத சகோதரர் எதற்கு?
ஆண்மையின்றிச் சிலையென நின்றீரே!

இந்திரன் மீன் சுமந்து திரிகின்றானாம்.
இந்திரனின் ஏவலாள் செய்தது காணீர்!

கதிரவனைக் கைப்பற்றிக் கட்டிப் போட்ட
அதிசய மருமகனே என் நிலையைப் பார்!

மாலின் ஆழியை அணிகலன் ஆக்கியவா!
மாதின் கை வெட்டுண்டது அறியாயோ?

முனிவன் பிழைத்திருக்கின்றான் இன்னும்,
தனித்தே என் மகன்களை அழித்த பின்னும்!

நல்லாட்சி நடத்துகின்றாய் அண்ணா நீ!
பொல்லாத உயிர் இனி எனக்கெதற்கு?

அவமானமே என்னைக் கொன்று விடும்.
எவர் முகத்திலும் இனி விழிக்கமாட்டேன்!’

அரற்றிக்கொண்டு துன்முகியுடன் சென்று
புரண்டாள் அண்ணன் கால்களில் விழுந்து!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

2#41. AJAMUKHI WAILS!


The moment the two asura women reached the durbar of Soorapadman, Ajamukhi started wailing loudly. “Oh my dear mother MAyA! You promised me that you will always take care of me. But you have forsaken me now!

What is the use of brothers who do not rush to save their sister in a crisis? You ridicule that Indra is carrying bundles of fish but his servant has dared to severe our hands!

Oh my wonderful nephew! You arrested the scorching sun while you were yet a small child! Did you see my plight! Dear brother TAraka! You have made the discus of VishNu an ornament around your neck. Don’t you know what has happened to me today?

The rushi who killed VAtApi and Vilvalan is still alive! You rule too well Oh dear brother! I will rather end my worthless life. I can’t face anyone now and my sense of shame tortures me.”

Ajamukhi and Durmukhi fell at the feet of Soorapadman and wailed loudly.

 
The 64 Thitu ViLaiyAdalgal


17c. அபிஷேக பாண்டியன்.

# 17 (c ) அபிஷேக பாண்டியன்.
தன்னலமற்ற வலனின் தியாகத்தால்,
மின்னத் தொடங்கின உடல் உறுப்புகள்.
அண்ணல் அளித்த அரிய வரத்தினால்,
வண்ண, வண்ண நவமணிகள் ஆனான்!

முத்துக்கள் ஆயின முப்பத்திரு பற்கள்,
ரத்தம் ஆயிற்று சிவந்த நிற மாணிக்கம்;
வைடூரியம் ஆனது முடிக் கற்றைகள்,
வைரங்களாயின வஜ்ஜிர எலும்புகள்.

கோமேதகம் ஆனது உடலின் கொழுப்பு,
கோழை மாறியது புஷ்பராகங்களாக!
நீலமணிகளாயின அழகிய இரு கண்கள்,
நீண்ட தசைகளோ பவளங்கள் ஆயின.

ரத்தினங்கள் தோன்றும் இடங்கள்,
ரத்தினங்களின் நிறங்கள், இனங்கள்;
ரத்தினங்களின் வகைகள், பலன்கள்;
இத்தனையும் எடுத்துரைத்தார் அவர்.

வடக்கு நோக்கி அமர்ந்து கொண்டு,
இடர்கள் நீக்கும் அரிய பூஜைகளைப்
புரிந்து, குமரனை வாழ்த்தி, மணிகளைச்
சிரித்துக் கொண்டே அளித்தார் அவர்.

“புது மகுடம் செய்விப்பீர் இவைகளால்
புது மன்னன் ஆகும் இளம் குமரனுக்கு!
அபிஷேக பாண்டியன் என்ற பெயரில்
சுபிட்சமான ஆட்சி புரிவான் இவன்!”

வியாபாரிக்கு மணிகளின் விலையைத்
தயார் செய்து அளிக்க விரும்பிய அந்த
அமைச்சர்கள் குழு கண்ட காட்சி என்ன?
உமையுடன், அவர் கோவிலில் நுழைவதே!

வந்தவர் வெறும் வைர வியாபாரி அல்ல!
சந்திர மௌலியின் திருவிளையாடல் இது;
வந்தனம் செய்து வணங்கினர் அவர்கள்
எந்தையும், தாயும் எழுந்தருளிய காட்சியை!

மகுடம் தயாரானது மகேசன் ஆணைப்படி;
மகுடம் புனைந்தான் மகேசன் ஆணைப்படி;
அபிஷேக பாண்டிய மன்னனுடைய நல்ல
சுபிட்சமான ஆட்சி அங்கு தொடங்கியது.

அவன் வீரத்தால் தன் பகை வென்றான்;
அவன் ஈரத்தால் மனங்களை வென்றான்;
தீரத்தால் அவன் மீட்டான் திருட்டுப்போன
அரசுச் சின்னகளையும், மற்றவற்றையும்!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

# 17 (c). ABISHEKHA PAANDIYAN.

Valan’s selfless sacrifice did not go in waste. As blessed by Lord Siva the parts of his body turned into precious and rare gems.
His teeth became beautiful pearls; his blood became red carbuncle; his locks of hair became Vaidooryam (lapis lazuli); his strong bones became diamonds; the fat in his body became sardonyx; his phelm became topax; his large eyes became sapphires and his muscles became corals.

The merchant went on to describe about the gems, where they were found, their colors, varieties, types and the benefits of wearing them.

Then he sat facing north. He did special puja for those diamonds, gave them to the prince and blessed him.
He told the ministers, “Make the new king a new crown with these diamonds and gems. Name him as Abishekha Paandian. His rule will be the golden period in the history of your country!”

The ministers wished to pay the merchant the huge sum of money they owned him. To their utter surprise He was seen entering the temple accompanied by Uma Devi!

They realized that the merchant was none other than Lord Siva himself. They did vandanam and namaskaram to them.
A new crown was made as ordered by Lord Siva. The prince as crowned as ordered by Lord Siva. His new name was Abisheka Paandian.

He ruled his country very well. His valor conquered his enemies. His kindness conquered his citizens. He recovered all the treasures stolen by his treacherous half brothers in due course of time.

 

Latest posts

Latest ads

Back
Top