• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

A poem a day to keep all agonies away!

The 64 Thiru ViLaiyAdalgal

25a. யார் குற்றவாளி?

# 25. (a). யார் குற்றவாளி?

குலோத்துங்கனுக்கு மகுடம் சூட்டித் தன்
குலப்பெருமையைக் கண்டு மகிழ்ந்தான்;
குலத்தின் இறைவன் அரன் திருவடிகளில்,
திளைத்தான் பேரின்பத்தில் ராஜசேகரன்.


மறையவன் ஒருநாள் மதுரையம்பதிக்கு,
மனைவி, மகவுடன் வனவழியே வந்தான்;
தாகம் என்று தவித்த மனைவிக்குத் தர
தாகம் தீர்க்க நீரைத் தேடிச் சென்றான்.


நடந்த களைப்பினால் வருந்திய பெண்மணி,
கிடந்தாள் மரத்தடியில் சற்று ஓய்வெடுக்க;
சிலு சிலுத்த ஆல மரக் கிளைகளிடையே
சிக்கி இருந்தது ஓர் அம்பு நெடுநாளாகவே!


வாட்டமுற்று கண்ணுறங்கிய பெண்ணின்
வயிற்றில் பாய்ந்துவிட்டது கூரிய அம்பு;
உதிர வெள்ளத்தில் மிதந்தவள் தன்
உயிர் துறந்தாள் ஒரு சில நொடிகளில்;


தண்ணீர் கொண்டு வந்த மறையவன்
கண்ணீர் வெள்ளத்தில் கலங்கினான்.
“ஒன்றுமறியாமல் உறங்கியவளைக்
கொன்று விட்ட பாவி யாரோ?” என்று!


மரத்தைச் சுற்றி நடந்து போன அவன்
மரத்தின் மறுபுறம் கண்டன் வேடனை!
தொடுத்த அம்புடன், பிடித்த வில்லுடன்,
மிடுக்கு நடையுடன், முறுக்கு மீசையுடன்;


மனைவியைக் கொன்று விட்ட மகாபாவி
அவனே என எண்ணினான் மறையவன்;
மனைவின் உடலைத் தோளில் சுமந்தான்,
மகனை மார்புடன் அணைத்துக் கொண்டான்;


வேடனையும் தன்னுடன் அழைத்துக் கொண்டு
வேந்தன் அரண்மனையை அடைந்தான் அவன்;
வேடன், “தான் ஒரு நிரபராதி!” என வாதிட்டான்;
வேந்தன் மதி மயங்கினான் இந்த விவகாரத்தில்.


எத்தனை வித சித்திரவதை செய்த போதிலும் ,
அத்தனையும் பொறுத்துக் கொண்டான் வேடன்;
தான் ஒரு நிரபராதி என்பதையே உறுதியாகத்
தண்டனிட்டபடிக் கூறிக் கொண்டு இருந்தான்.


சித்திரவதை உண்மைத் தெளிவாக்கவில்லை,
சித்தம் கலங்கினான குலோத்துங்க பாண்டியன் ,
நித்தம் நித்தம் தொழும் வித்தகன் அருளால்
பித்தம் தீர்ந்து சித்தத் தெளிவு பிறந்திடுமா?


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


# 25 (A). WHO WAS THE CULPRIT?


It was the reign of king Kulothunga Paandian-the son of King Rajasekaran. A brahmin was walking through the forests with his wife and young son to Madhuraapuri. The lady became very thirsty and tired.


The brahmin told her to rest for a while under a tree and went to fetch water. A sharp arrow was lodged among the branches of that tree. When the wind blew and the branches rustled, the arrow got freed! It pierced the womb of the woman and killed her.


The brahmin was shocked to find his wife in a pool of blood, quite dead. He cried in despair and walked around the tree in an effort o locate the culprit.


He saw a hunter with a bow and arrow kept ready for use. He felt sure that the hunter had killed his wife. He carried the dead body of his wife on his shoulder, his son in his arms and set out to the king’s place with the hunter.


The hunter claimed that he was innocent and did not kill the woman. Since there was no one else in the vicinity, his words were not believed! He was put to torture but he never changed his statements.


The matter was now beyond human comprehension. The king decided to seek divine guidance in settling these matters without bending Dharma and justice.


 
bhagavathy bhaagavatam - skanda 7

7#32c. தேவி கீதை (3)

“அடைகின்றது ஆத்மா மாயகாரியத் தொடர்பால்
கிடைக்கின்ற பிறவிக்குக் காரணமான கர்மத்தை.


நிரந்தரமானது ஆனந்தம் ஞான வடிவுக்கு;
நிரந்தரமானது மாய காரியம் ஆத்மாவுக்கு.


எடுக்கிறது பல பிறவிகள் முழு அறிவிலியாக
மாயா காரிய இயக்கத்தால் இயங்கும் ஆத்மா.


எடுக்கும் பிறவிகளில் கழிந்து வரும் கர்மங்கள்;
அடுத்து வரும் கணக்கை அறியாது அந்த ஆத்மா.


ஆதித் தத்துவம் மாறுதல் என்பதே அற்றது.
ஆதித் தத்துவம் லௌகீகம் என்பதே அற்றது.


ஆதித் தத்துவம் கண்களுக்குப் புலப்படாதது.
ஆதித் தத்துவம் மாயையோடு பிணைந்தது.


சகல கார்ய கர்மங்களைத் தன்னுள் அடக்கியது;
சகல தத்துவங்களுக்கும் ஆதிமூலம் இதுவே.


சச்சிதானந்த ஸ்வரூபமானது ஆதித் தத்துவம் – இது
இச்சை, ஞானம், கிரியை சக்திகளின் இடமானது.


அனாதித் தத்துவமாகக் கூறப்படுவது இது.
ஆதித் தத்துவமே சிருஷ்டிக்குக் காரணமாம்!


உருவாயின பஞ்ச தன்மாத்திரைகள் இதிலிருந்து!
உருவாயின பஞ்ச மஹாபூதங்கள் இதிலிருந்து!


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


7#32c. Devi’s Gita (3)


“Aatma relates with the MAyA KAryam. It performs Karma which becomes the cause for its future births. Sat-Chit-Anandam is the real nature of Aatma. But its association with MAyA is inevitable for the Aatma.


Aatma takes many births steeped in ignorance due to the MAyA KAryam. Karma gets deleted or added depending on the actions performed by the Aatma during a birth. But Atma is not aware of these accounts of Karma.


The Primeval Tatva or ‘Aadhi Tatvam’ does not get changed. It does not relate to the worldly things. It is the Cause of all the Causes. It is the root cause of the all the other tatvas.


It has Sat-Chit-Aanandam as its swaroopam. It contains all the KAryams and Karmas in itself. It holds in it the Ichcha shakti, Kriya shakti and JnAna shakti.


It has neither a beginning nor an end. It is the cause of all creation. The pancha tanmAtrAs were created out of this and the pancha boothAs were also created out of this Aadi Tatvam.





 
bhagavthy bhaagavatam - skanda 2

2#3b. தியா வசு

அஷ்ட வசுக்கள் செய்தனர் யாத்திரை – தம்
இஷ்ட மனைவியருடன் பூவுலகம் வந்து!


உலவினர் வசிஷ்டரின் ஆசிரமத்தருகே;
நிலவியது உற்சாகமான சூழ்நிலை அங்கே!

அங்குலா ஆவாள் தியா வசுவின் மனைவி.
அங்குள்ள நந்தினிப் பசுவினைக் கண்டாள்.


“தெய்வீகப் பசு யாருடையது?” என்றாள்
“தெய்வப் பசு வசிஷ்ட மகரிஷியின் பசு.


இதன் பாலைப் பருகுபவர் வாழ்வர்
இளமை மாறாமல் பன்நெடுங்காலம்!”


உசினரின் மகள் அங்குலாவின் தோழி
“பசுவை அளிக்க வேண்டும் தோழிக்கு!”


பின்புத்தி என்றும் எண்ணவில்லை தியா!
பின் விளைவுகளையும் எண்ணவில்லை!


தந்திரமாகக் கவர்ந்தான் அந்தப் பசுவை
சென்று விட்டனர் நந்தினியைக் கன்றுடன்!


ஆசிரமத்தில் பசுவைக் காணவில்லை;
ஆராத் துயர் உற்றார் வசிஷ்ட முனிவர்.


ஞான திருஷ்டியில் அறிந்து கொண்டார்,
ஈனச் செயல் செய்தவர்கள் யார் என்று!


“விண்ணுலகப் பசுவைக் கவர்ந்த கள்வர்
மண்ணுலகில் சென்று பிறக்கக் கடவது!”


சரணடைந்தனர் சாபம் பெற்ற வசுக்கள்;
“தரவேண்டும் எமக்குச் சாப விமோசனம்”


“தெய்வப் பசுவைத் திருடிய தியா வசு
உய்வான் நெடுங்காலம் வாழ்ந்தபின்.


எழுவர் அடைவீர் சாப விமோசனம்
உழலாமலேயே, உலக வாழ்க்கையில்!”


திரும்பும் போது கண்டனர் கங்கையை.
விரும்பி வேண்டினர் வரம் கங்கையை.


“வேண்டும் உன் வயிற்றில் பிறக்கும் பேறு!
வேண்டும் விமோசனம் பிறந்தவுடனேயே!”


கங்கை தந்தாள் அவர்கள் கேட்ட வரம்;
தங்கள் வழியில் சென்றனர் அனைவரும்.


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


2#3b. Dyo vasu


Asta vasus – the eight demigods – went on a tour to the earth with their respective wives. They were roaming near the ashram of Sage Vasishta, where the atmosphere was both holy and relaxing.

Dyo was the eighth Vasu. AnguLa his wife saw the divine cow Nandini in the ashram and wanted to gift it to her best friend – since the milk of the cow was supposed to keep a person always young and healthy.

Dyo listened to his wife instead of to his good sense. He did not bother about the dire consequences of the foolish act he was about to perform. He stole Nandini and its calf and the eight Vasus and their wives returned to their world.

Sage Vasishta was overcome with sorrow when he found out that his favorite cow Nandini was missing. He used his divine dhrushti and found out the culprits who were behind this.

He cursed the eight Vasus, “May you be born on the earth and suffer like the human beings for a very long time!”

The eight Vasus got frightened and surrendered to the rushi. They begged for pardon and sapa nivAraNam. Sage Vasishta was mellowed with pity and reduced the intensity of his curse. He told the eight Vasus,

“The seven of you who did not steal the cow will get liberated as soon as you are born. But Dyo Vasu who stole the cow will live for a long time on earth before returning to the heaven”

The eight Vasus now had to choose their mother – to be born on the earth. While going back they met Ganga Devi on their way.

They told her their curse and begged her to allow them to be born as her sons. Ganga Devi agreed to this request. Then they all want back to their respective places.



 
kanda purAnam - mahEndra kANdam

3. வீரசிங்கன் அழிவு

இலங்கையை வீரபாகு அடைந்தபோது
இலங்கையில் இருக்கவில்லை யாளிமுகன்.


சூரபத்மனைக் காணப் படைகளுடன்
வீரமகேந்திரபுரி சென்றிருந்தான் அவன்.


அதிவீரன் என்னும் மகன் இலங்கையை
ஆயிரம் வெள்ளம் படைகளுடன் காத்தான்.


படைத் தலைவர்களில் ஒருவன் வீர சிங்கன்.
வடக்கு வாயிலில் அவன் புரிந்தான் காவல்.


விரைந்து சென்ற வீரபாகுவைக் கண்டு
வியந்து நின்றான்,”இவன் யார்?” என்று.


ஐநூறு வெள்ளம் படைகளுடன் சென்று,
“மெய் கூறு யார் நீ? எங்கு வந்தாய்?”என,


“சூரபத்மனின் வீரமஹேந்திரபுரி செல்கிறேன்.
வீரனே உன்னால் இயன்றதைச் செய்”என்றான்.


“படை வீரர்களிடம் பணித்தான் வீரசிங்கன்,
“உடைப்பீர் ஆணவத்தை! பறிப்பீர் உயிரை!”


வாட்படையை உருவிப் போர் தொடுத்து
நாற்படையையும் அழித்தார் வீரபாகு.


நூறு வெள்ளம் படைவீரர் அழிந்தனர்.
தாறுமாறாக ஓடினர் மற்ற அவுணர்கள்.


வீரசிங்கன் விடுத்த சூலம் துண்டானது!
வீரசிங்கன் வீசிய குலிசம் துண்டானது.


வீரசிங்கனின் கரம், சிரம் அறுபட்டன!
வீரவாகு பாய்ந்தார் இலங்கையினுள்.


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


3#3. Veerasingan’s defeat!


When VeerabAhu reached Lanka, YALiimukan was not there. He had gone to visit Soorapadman in Veera Mahendrapuri. His son Athiveeran was guarding Lanka with the help of one thousand veLLam (Units) of the asura army.


Veerasingan was in charge of the northern gate. He saw VeerabAhu hurrying inside the city and wondered who he could be! He confronted VeerabAhu with his five hundred veLLam of the asura army and demanded , “Who are you? What is your business here? Tell me the truth”


“I am on my way to Veera Mahendrapuri. You may do what you deem fit!” Veerasingan ordered his army,” Cut his pride to size and kill him!” VeerabAhu drew out his sword and killed one hundred veLLam of the asura army. The rest of the army ran away.


He cut into two the soolam (trident) thrown at him by Veerasingan. He cut into two the kulisam thrown by Veerasingan. He then cut off the hands and the head of Veerasingan and rushed into the city of Lanka.


 
The 64 Thiru ViLaiyAdalgaL

# 25 (b). பழி அஞ்சும் நாதர்.

சிறையில் இட்டான் வேடனை மன்னவன்;
மறையவன் செய்தான் இறுதிச் சடங்குகள்;

மனித முயற்சிக்கு அப்பாற்பட்டவைகள்,
இனிதே தீர்க்கப்படும் இறைவன் அருளால்!


தஞ்சம் புகுந்தான் தன் குலப் பிரானிடம்,
அஞ்சினான்,”பழி சேருமே நீதி தவறினால்!”

கெஞ்சினான் தனக்குத் தெளிவைத் தரும்படி,
செஞ்சடையான் உரைத்தான் அசரீரியாக.


“இன்று நடக்கும் ஒரு திருமண நிகழ்ச்சி,
இரவில், செட்டிகள் வசிக்கும் தெருவில்;

மறையவனும், நீயும் செல்லுவீர் அங்கே;
குறைவின்றித் தெளிவு பிறக்கும் அங்கே!”


மாறுவேடம் பூண்டு கொண்ட மன்னனும்,
மறையவனோடு சென்றான் மண நிகழ்ச்சிக்கு!

திருமணக் கூட்டத்தில் கலந்து விட்டனர்
இருவரும் தங்கள் அடையாளத்தை மறைத்து.


அருகில் அமர்ந்தவர்கள் யார் தெரியுமா?
இரு கிங்கரர்கள் யம லோகத்திலிருந்து!

பேசுவது கேட்டது இவ்விருவருக்கு மட்டும்,
ஈசன் திருவருளால், தெளிவு ஏற்படும்படி.


“மணமகன் உயிரைப் பறிக்க வேண்டும்;
மணமகள் விதவையாக மாற வேண்டும்;

வாலிப முறுக்குடன் ஆரோக்கியமாக உள்ள
வாலிபன் உயிரை எடுப்பது எளிதல்லவே!”


“நம்மால் செய்ய முடியாதது என்பது எது?
நம் ஆணைக்கு இயற்கையும் துணை வரும்!

இன்று காலையில் வனத்தில் மரத்தடியில்,
கொன்றோமே மறையவன் மனைவியை,


எங்கோ சிக்கி இருந்த ஒரு கூரிய அம்பாலே!
இங்கும் செய்வோம் அது போலவே ஏதாவது.

மங்கள வாத்தியங்கள் முழங்கும் வேளையில்,
மருண்ட மாடு அவனை முட்டச் செய்வோம்!


குடல் சரிந்தவனின் உயிர் ஒரு நொடியில்
உடலை விட்டுப் பிரிந்துவிடும் அல்லவா?

கடமையைச் செய்ய வந்துள்ள நாம் இருவர்
திடமான மனதோடு இருக்க வேண்டும்.”


மங்கள வாத்தியங்கள் நன்கு முழங்கின;
மங்கலப் பெண்கள் குதூகலம் அடைந்தனர்;

மங்கள நாணை அணிவிக்கும் வேளையில்
மருண்டு விட்ட மாடு மாறிவிட்டது நமனாக!


சிந்தை தெளிந்தனர் சென்றிருந்த இருவரும்;
எந்தை அருளால் மன மயக்கம் ஒழிந்தது;

எந்தக் குற்றமும் செய்யாத வேடனுக்குச்
சொந்தம் ஆயின பல வினோதப் பரிசுகள் .


“தாயை இழந்து தவிக்கும் பாலகனைத்
தாயன்புடன் போற்றி வளர்த்திட நீயும்

வேறு மணம் புரிந்து கொள்!” என மன்னன்
வேதியனுக்கும் பொன், பொருள் அளித்தான்.


பழியினின்றும் தன்னைக் காத்து, நீதியின்
வழிகாட்டிய வெள்ளி அம்பலவாணனை;

மொழிகளால் வாழ்த்தியும், போற்றியும்,
விழிகளால் பருகியும், பலவாறு தொழுதான்.


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


# 25 (B). JUSTICE DONE BY LORD.


The hunter was thrown in the jail.The brahmin performed the last rites of his dead wife. The King prayed in Siva’s temple.


The God told him to go and attend the wedding which was to take place in the Vaisyas’ street that night.


The king wore a disguise.He went to the wedding with the brahmin and mingled with the crowd. There were two Yama kinkaraas sitting next to them. They were conversing like human beings but no one could hear them except the king and the brahmin.


The first kinkaraa asked, “How are we going to kill the young man who is going to get married when he is in such good health and spirits?”


The second kinkaraa replied,”Nothing is impossible for us! Even the nature will help our
cause. You know how we killed the brahmin’s wife today morning with a arrow which was lodged in the tree for years!


We can do something similar here also. First we will make the cow in the front yard get scared with the music. Then it will charge like mad and gore the groom to death.”


When the musical instruments suddenly blared, the cow got frightened. It snapped the rope by which it was tied. It gored the groom just as he was about to tie the mangala suthra,


The king and the brahmin now knew who was the real culprit and how the woman got killed. The hunter was set free immediately with a an apology and many lovely gifts.


The brahmin’s child needed a mother to take care of it. So the king told him to remarry. He also gave him enough wealth to lead a comfortable married life.


The King thanked and praised the Lord who was always faultless and just in all his dealings.





 
bhagavathy bhaagavatam - skanda 7

7#32d. தேவி கீதை (4)

தோன்றியது ஆதித் தத்துவத்திலிருந்து சப்த தன்மாத்திரை;
தோன்றியது பின்னர் சப்த தன்மாத்திரையிலிருந்து ஆகாயம்.


தோன்றியது பின்னர் ஆகாயத்திலிருந்து ஸ்பரிச தன்மாத்திரை;
தோன்றியது பின்னர் ஸ்பரிச தன்மாத்திரையிலிருந்து வாயு.


தோன்றியது பின்னர் வாயுவிலிருந்து ரூப தன்மாத்திரை;
தோன்றியது பின்னர் ரூப தன்மாத்திரையிலிருந்து அக்கினி.


தோன்றியது பின்னர் அக்கினியிலிருந்து ரசத் தன்மாத்திரை;
தோன்றியது பின்னர் ரசத் தன்மாத்திரையிலிருந்து ஜலம்.


தோன்றியது பின்னர் ஜலத்திலிருந்து கந்தத் தன்மாத்திரை
தோன்றியது பின்னர் கந்தத் தன்மாத்திரையிலிருந்து ப்ருத்வீ.


பஞ்ச தன்மாத்திரைகள் கலக்கப்பட்டன பஞ்சீகரணத்தில்
பஞ்ச பூதங்களை பின்னர் உருவாக்குவதற்கு என்று அறிவீர்.


ஓசை, ஊறு, ஒளி, சுவை, நாற்றம் என்ற ஐந்தும் நிலத்திலும்;
ஓசை, ஊறு, ஒளி, சுவை என்னும் நான்கும் ஜலத்திலும்;


ஓசை, ஊறு, ஒளி என்ற மூன்றும் நெருப்பிலும்;
ஓசை, ஊறு என்னும் இரண்டு மட்டும் காற்றிலும்;


ஓசை என்னும் ஒன்று மட்டும் ஆகாயத்திலும் விளங்கும்.
ஓங்கி விளங்கும் இவைகள் ஐந்தும் வரிசைக் கிரமமாக.


தோன்றும் சூக்ஷ்ம சரீரம் பஞ்ச தன்மாத்திரைகளிலிருந்து!
தோன்றும் ஸ்தூல சரீரம் சூக்ஷ்ம சரீரத்தை ஒட்டியபடி.


பஞ்ச தன்மாத்திரைகளின் பஞ்சீகரணம் என்பது இதுவே
பஞ்ச பூதங்களை உருவாக்குகின்ற முறையும் இதுவே.


ஐந்து தன்மாத்திரைகளும் கலந்திருக்கும் ஒன்றாக
ஐம்பெரும் பூதங்களிலும் வேறு வேறு அளவில்.


விகிதாசாரம் மட்டும் மாறுபடும் ஒவ்வொன்றிலும்;
வேறு வேறு பஞ்ச பூதங்கள் உருவாகிட ஏதுவாக.


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


7#32d. Devi’s Gita (4)


From the Aadi Tatvam (Primeval Tatva) was born the Shabda TanmAtra (The Sound)

From the Shabda TanmAmtraa was born AakAsham (The sky)

From The Sky was born the Sparsa TanmAtra (The Touch)

From the Sparsa TanmAtra was born VAyu (The Air)

From VAyu was born the Roopa TanmAtra (The Vision)

From Roopa TanmAtra was born the Agni (The Fire)

From Agni was born Rasa TanmAtra (The Taste)

From Rasa TanmAtra was born Jalam (The Water).

From the Water born the Ghandha TanmAtra (The Smell)

From the Smell was born the Pruthvee (The Earth)

The Pancha (five) TanmAtras viz The Sound, The Touch, The Vision, The Taste and The smell were mixed in a process called ‘PancheekaraNam’ to produce the Pancha boothaas viz the five elements The Sky, The Air, The Fire, The Water and The Earth.


The earth has all the five TanmAtras in it. Water has four TanmAtras – all except The Smell. Fire has three TanmAtras namely The Sound, The Touch and The Vision.

Air has only two TanmAtras namely The Sound and The Touch while the Sky has only one TanmAtra namely The Sound.


All the five TanmAtras are present in all the five gross elements or The Pancha Bhoothas in varying proportions.



 
bhagavathy bhaagavatam - skanda 2

2#3c. பிரதீபன்

பிரதீபன் செல்வதுண்டு கங்கை நதிக்கு,
பிரதி தினம் கர்மானுஷ்டானங்களுக்கு.


சூரிய நமஸ்காரம் செய்கையில் ஒரு மங்கை
ஏறி அமர்ந்தாள் அவன் வலது தொடையில்!


“யார் நீ? இது என்ன வரம்பு மீறிய செயல்?” எனப்
“பாராளும் மன்னனுக்கு இது கூடத் தெரியாதா?


கூடி மகிழ விரும்பினேன் நான் – உன்னை
நாடி வந்து அமர்ந்தேன் உன் மடி மீது !” என,


ஏறிட்டும் பாராதவன் அவன் பரஸ்திரீக்களை;
“ஏறி அமருவர் வலது தொடையில் இவர்களே,


புத்திரன், புத்திரி, மருமகள் என்பவர் மட்டுமே.
புத்திரனுக்குப் பத்தினியாகலாம் நீ! எனக்கல்ல!”


திடச் சித்தத்தையும், தெளிவையும் பாராட்டி,
விடை பெற்றுச் சென்றாள் கங்கை அவனிடம்.


‘எப்போது பிறப்பான் எனக்கு ஒரு மகன்?
எப்போது நிறைவேறும் நான் தந்த வாக்கு?’


பிரதீபன் மனைவியின் கருவில் மகாபிஷன்!
பிறந்தான் அவன் மகனாகப் பத்துத் திங்களில்!


சந்தனு என்ற பெயரிட்டான் பிரதீபன்
சந்திரன் போன்ற அழகுடைய மகனுக்கு.


கங்கைக்கும் தனக்கும் நடந்த உரையாடலை
சந்தனுவுக்கு எடுத்துரைத்தான் மன்னன் பிரதீபன்.


“குல முறை கேளாது கங்கையை மணப்பாய்;
நிலை பெறவேண்டும் நான் தந்த வாக்குறுதி!’


முடி சூட்டினான் சந்தனு வளர்ந்ததும்;
கடமை முடிந்ததும் கானகம் சென்றான்.


ராஜராஜேஸ்வரியைத் தியானித்து வந்து
தேஜோ ரூபனாக அடைந்தான் சுவர்க்கம்.


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


2#3c. Pradeepan


King Pradeepan used to go to the river Ganges to perform his nithya karma anushtAnam (prescribed daily rituals). One day when he did Sooyra namaskAr, a lovely woman came and sat on his right lap.

The king got startled and demanded “Who are ? What is the idea behind this provocative action?” The lovely lady replied in a teasing tone,”You are the king of country! Can’t you guess the meaning of this action? I wished to become intimate with you!”

The king was a good man and a loyal husband. He would not even look at women other than his queen. He said,” The persons allowed to sit on the right lap are one’s own son, daughter and daughter in law. You can never become my wife but you may become my daughter in law.”

Ganga was pleased with his good conduct and self control and took leave of the king. Now the king started thinking,”When will a son be born to me? When will I fulfill the promise I had given to Ganga Devi?”

MahAbishan entered the womb of Pradeepan’s queen. In due course a very handsome son was born to the King and the Queen. The child was named as Santhanu since he was as pleasant and luminous as the Moon God.

Pradeepan told Santhanu the conversation he had had with Ganga Devi and the promise made by him to her.”Son! You must marry Ganga Devi and fulfill my promise made to her .”

When Santhanu attained the right age, he was crowned as the new king and king Pradeepan went to VAnaprastam. He meditated on Raja Rajeswari Devi and attained the Heaven with a luminous body.



 
kanda purANam - mahEndra kANdam

4. இலங்கை வீழ்தல்

இலங்கையிற் பாய்ந்தான் வீரவாகு!
இலங்கை கலங்கியது அச்செயலால்.

அதிவீரனும், அவுணரும் கலங்கிட
அமிழ்ந்தது கடலில் இலங்கை நகர்.

அவுணர்கள் கலங்கித் துன்புற்ற போது
அவர்களை வருத்தின கடல் மீன்களும்.

கயல்களோடு போர் செய்து கலங்கிச்
செயல் இழந்து வாடி வதங்கலாயினர்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

3#4. The fall of Lanka.


VeerabAhu charged into the city of Lanka. The city started sinking under his immense power. Athiveeran and the asuras got shocked since their city was sinking in the water of the surrounding sea!

As if these troubles were not enough, the fish in the sea also started troubling the asuras. The asuras tried their best to fight off the fish and thus became very tired in that process.
 
The 64 Thiru ViLaiyAdalgal

26a. மாபாதகம் பீடித்தது.

# 26 (a). மாபாதகம் பீடித்தது.

குலோத்துங்க பாண்டிய மன்னனின்
குதூகலம் நிறைந்த ஆட்சிக்காலம்;

அவந்தி நகரில் வாழ்ந்து வந்தான்
அமைதியான அந்தணன் ஒருவன்.


சிலை போன்ற அழகிய மனைவிக்குச்
சிறு வயதிலேயே மகன் பிறந்தான்;

நெடுநெடுவென வளர்ந்துவிட்ட அவன்
கொடியவன் ஆனது அந்தோ பரிதாபம்!


வாலிபம் அடைந்தவனுக்கு பேதங்கள்,
வஞ்சிக்கும், தாய்க்கும் தெரியவில்லை!

அழகு குறையாத தன் தாயையே அவன்
அனுபவிக்க விரும்பினான் காமாந்தகன்!


தாயும் மனம் மாறிப் பேயாகி விட்டாள்;
தந்தை மட்டும் என்ன செய்வான் பாவம்!

தாயும், மகனும் மிருகங்களாக வாழ்வதைத்
தந்தை கண்டும், காணாமல் இருந்து வந்தான்.


“வெளியே சொன்னால் வெட்கக் கேடு,
தெளியும் அறிவு சிறிது காலத்தில்!

ஆசை அறுபது நாள், மோஹம் முப்பது;
அவர்களாகவே வழிக்கு வருவார்கள்!”


எது தந்தைக்குத் தெரிந்து விட்டதோ
அது என்றுமே ஆபத்து இருவருக்கும்;

புது வாழ்வு தொடங்கும் முன்பாகவே
எதிர்ப்புகளை அழித்துவிட வேண்டும்!


தந்தை என்றும் தயங்கவில்லை மகன்,
அந்தணன் என்றும் எண்ணவில்லை அவன்;

துண்டு துண்டுகளாகத் தந்தையின் உடலை
மண்வெட்டியால் வெட்டி, எரித்துவிட்டான்!


இரவோடு இரவாகப் பொன், பொருளுடன்,
அரவமில்லாமல் தப்பிச் சென்றுவிட்டனர்;

காட்டு வழியே நெடுந்தொலைவு சென்றபின்
மாட்டிக் கொண்டனர் கள்வர் கூட்டத்திடம்.


வழிப்பறி வேடர்கள் வந்து சூழ்ந்தனர்;
வழிப்பறி செய்தனர் பொன், பொருளை;

கட்டுக் குலையாத பெண்ணைக் கண்டதும்
இட்டுச் சென்றனர் அவளைத் தங்களுடன்!


ஒரே இரவில் நிகழ்ந்தன இத்தனையும்!
அருமைத் தந்தையை வெட்டிக் கொன்றான்;

பொன்னும், பொருளும் களவு போயின;
இன்பம் அளித்த தாய்-மனைவியுடன்!


இத்தனையும் போதாது என்பது போல
அப்பனின் ஆவியும் துரத்தி வந்தது!

பித்தனைப் பீடித்தது அதற்குத் துணையாக,
பிராமணனைக் கொன்றதால் பிரம்மஹத்தி.


அல்லும், பகலும் அவனை வாட்டி வதைத்தன;
செல்லும் இடமெல்லாம் தொடர்ந்து வந்தன;

செய்வதறியாமல் அலைந்து திரிந்தவன்
தெய்வத்தின் அருளால் அடைந்தான் மதுரையை.


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


# 26 (A). THE ULTIMATE SIN!


During the reign of Kulothunga Paandian, there lived a brahmin in Avanthi. He was a quiet man by nature.He had a very beautiful wife, who bore him a son at a very young age.


The boy grew up fast and became a young adult. He turned out to be very wicked and desired his own mother! She was proud with her beauty and consented to his weird wishes.


The brahmin came to know of this fact. He was filled with shame but could do nothing to stop their affair. He hoped that they would grow out of their infatuation and become become responsible human beings.


But he was wrong! The son got very disturbed since his father knew the truth. He killed his father with a spade in cold blood. He cut the body to several pieces and burnt them.


He bundled up all the movable properties he possessed and escaped in the quiet of the night with his mother,through a jungle.


In the jungle the robbers waylaid them.They took away his precious bundle and his mother in addition to it. Suddenly he had became all alone in the world. He lost everything he had in a single night.


The ghost of his murdered father started chasing him. Brammahathi dosham also closed in-since he had killed a brahmin in cold blood.


He became like a man possessed and wandered aimlessly till he reached the city of Madhuraapuri.


 
bhagavathy bhaagavatam - skanda 7

7#32e. தேவி கீதை (5)

நிலம், நீர், நெருப்பு, வளி, வெளி இவை
நிலவுகின்ற ஐம் பெரும் பூதங்களாகும்.


இரு சம பாகங்களாகப் பிரிக்க வேண்டும் – ஒவ்
வொரு தன்மாத்திரையையும் முதன் முதலில்.


ஒரு பாதியை வைத்து விடவேண்டும் அப்படியே;
மறு பாதியை மீண்டும் பிரிக்க வேண்டும் நான்காக.


ஒவ்வொரு அரைப் பகுதியுடன் சேர்க்க வேண்டும்
மற்ற நான்கின் அரைக்கால் பகுதிகளை ஒன்றாக.


ஸ்தூல உடல் உருவாகும் இந்த பஞ்சீகரணத்தில்;
ஸ்தூல உடல்களின் சமஷ்டியே விராட் ஸ்வரூபம்.


பஞ்ச பூதங்களிலும் உண்டு மூன்று குணங்கள்
சத்துவ, ரஜோ, தமோ குணங்கள் என்ற பெயரில்.


சத்துவ அம்சத்திலிருந்து தோன்றும் ஒன்பது:
சித்தம், மனம், புத்தி, அஹங்காரம் நான்கும்


அந்தக் கரணங்கள் என்ற பெயர் பெறும்;
உள்ளே அமைந்திருக்கும் கருவிகள் இவை.


கண், காது, மூக்கு, நாக்கு, தோல் என்பவை
மாண்புடைய ஞான இந்திரியங்கள் ஆகும்.


தோன்றும் ராஜச அம்சத்திலிருந்து இந்தப் பத்தும்:
தோன்றும் 5 கர்மேந்திரியங்களும், 5 பிராணன்களும்.


வாக்கு, பாணி, பாதம், மலத் துவாரம், ஜலத் துவாரம்;
பிராண, அபான, ஸமான, உதான, வியான வாயுக்கள்.


சூக்ஷ்ம சரீரம் கொண்டுள்ளது இப் பதினேழு அம்சங்களை:
இந்திரியங்கள் பத்து, பிராணன் ஐந்து, மனமும், புத்தியும்.


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


7#32e. Devi’s Gita (5)


Each of these five TanmAtras must be divided into two equal halves. One half of each of them must be kept aside. Each of the other halves must be further divided into four equal parts (making it into 1/8 of the original TanmAtra).


Now the half portion of every TanmAtraa is mixed with the one-eighth
portion of the other four TanmAtras. This process is called as ‘PancheekaraNam’.


The Sthoola Sareeram (or the physical body) is created by this method named as ‘PancheekaraNam’. The grand total of all the sthoola sareerams is called the ‘VirAt swaroopam’.


The Pancha boothas are also attributed with the three guNaas namely Satvam, Rajas and Tamas.


From the Satva aspect of the Pancha boothas are created these nine faluties. The Mind, The Buddhi, The Chittham, The Ahankaaram which are collectively known as AntahkaraNam (the four inner instruments).

The eye, The ear, The nose, The tongue and The skin which are collectively known as the JAna Indriyam. These help us to gain knowledge or JAnam.


From the RAjasa aspect are born these ten faculties – the Pancha Karma Indriyams and the Pancha PrANas. The speech, The hand, The leg, The orifices of excretion are the five Karma Indriyas. These help us to perform actions. PrANa, ApAna, SamAna, UdAna, VyAna are the Pancha PrANas.


The sookshma sareeram (The subtle body) has these seventeen elements in it namely The Pancha JnAna Indriyas, Pancha Karma Indriyas, Pancha PrANas, The Mind and The Buddhi.



 
bhagavathy bhaagavatam - skanda 2

2#4a. சந்தனு

காட்டுக்குச் சென்றான் சந்தனு மன்னன்;
காட்டு விலங்குகளை வேட்டையாடிட.


சென்றான் கங்கை நதியின் ஒரமாக – அங்கு
கண்டான் கரும்பாக இனிக்கும் கன்னியை.


மதி மயங்கினான் கங்கையை விதிவசமாகக் கண்டு!
‘அதிசயப் பெண் இவள் யாரோ தெரியவில்லையே!


மின்னற் கொடியோ? அன்றிப் பூங்கொடியோ இவள்?
அன்னப் பேடையை அடைவேனோ? மாட்டேனோ?


தழுவி அணைக்க விடுவளோ அன்போடு? அன்றித்
தடுத்து அணைத்து விடுவாளோ என் ஜீவஜோதியை?’


பிரலாபித்தான் மோஹ வெறியில் சந்தனு!
“பிரம்மலோகத்தில் கண்ட காதலன் இவனே!”


இனம் கண்டு கொண்டாள் சந்தனுவை கங்கை!
தினம் காத்திருந்தது இவன் வருகைக்காகவே!


“பித்தனைப் போலச் சித்தம் இழந்துவிட்டீர் – எள்
அத்தனையும் கேட்கவில்லை என் விவரங்களை!


முன்பின் அறியாத ஒரு கன்னிப் பெண்ணிடம்
தன் காதலைக் கூறுவதும் சரியோ?” என்றாள்.


“என் தந்தை மன்னன் சொன்னார் ஒருமுறை
ஏறி மடி மீது நீ அமர்ந்த கதையை முன்பே!


கூறியுள்ளார் எந்தை உன்னை மணக்கும்படி
குலம் கோத்திரம் எதுவும் கேட்காமல்!” என,


“உண்மைதான் நீர் கூறுவது என்றாலும் – நான்
உம்மிடம் கூறவேண்டும் சில விஷயங்களை.


மறுக்காமல் நீர் அவற்றை ஏற்றுக் கொண்டால்
மறுக்காமல் உம்மை நான் ஏற்றுக் கொள்வேன்!’


“எதுவாயினும் தயங்காமல் கூறு!” என்று
மதி மயங்கிய சந்தனு கூறினான் அவளிடம்.

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

2#4a. Santhanu


King Santhanu went on a hunting mission. He return path led him close to the bank of river Ganga. He saw a very attractive woman there.

He fell head over heels in love with her at the very first sight. He did not know who she was but he wanted to marry her – whosoever she might be.
Ganga Devi knew that it was Mahaabishan reborn on the earth as King Santhanu due to Brahma’s curse. Ganga Devi had been eagerly awaiting his arrival all these years.
Yet she took him to task for revealing his love to a total stranger like herself. Santhanu told her,”You must be the Ganga Devi my father had spoken about. You sat on his right lap long ago. He told me to marry you at all costs and honour the promise he had made to you.”
Ganga Devi was happy that her mission had become very easy now. She told king Santhanu, Oh King! I have to tell you somethings. If you agree to those, I shall also agree to marry you!”
King Santhanu was so deeply infatuated with this lovely maiden that he promised to accept all her conditions unconditionally.



 
kanda purANam - mahEndra kANdam

5. அதிவீரன்

இலங்கை கடலில் ஆழ்ந்தது அறிந்து
இலங்கையின் காவலன் வீரன் அதிவீரன்


அடைந்தான் துன்பம், அடைந்தான் நாணம்,
அடைந்தான் சினம், அறிகிலன் அதன் காரணம்.


“செய்யார்கள் அவுணர்கள் இது போல!
செய்யாள் அன்னை மாயை இது போல!


செய்யார் மும்மூர்த்திகளும் இது போல!
செய்யார் மற்ற தேவர்களும் இது போல!


எந்தை காவலாக வைத்தார் என்னை!
என் செயல் வீரம் இவ்வளவு தானோ?”


வீரவாகுவைக் கண்டான் வீரன் அதிவீரன்.
“நீரில் மூழ்கக் காரணம் இவன் தானோ?”


அவுணர் படை சூழ்ந்தது வீரவாகுவை.
அவுணர் படை தாக்கியது வீரவாகுவை!


வாட்படையை எடுத்து வீசிய வீரவாகு,
நாற்படைகளையும் எளிதாய் அழித்தார்.


வேற்படையை வீசி எறிந்தான் அதிவீரன்;
வேற்படை துண்டானது வாட்படையால்!


தண்டத்தை எடுத்து எறிந்தான் அதிவீரன்;
தண்டம் துண்டாகி விட்டது மார்பில் பட்டு!


முத்தலை சூலத்தை மார்பினில் செலுத்த
வெத்திலைக் கொடிபோல ஒடித்தார் அதை.


நான்முகன் அளித்த ஒரு வாட்படையால்
நன்கு போரிட்டான் அவுணன் அதிவீரன்.


வீரவாகுவுக்கு ஈடு கொடுக்க இயலாமல்
வீரமரணம் அடைந்துவிட்டான் அதிவீரன்.


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


3#5. ATHIVEERAN.


The city of Lanka sank into the sea. Athiveeran was in charge of protecting Lanka. He became sad, angry, ashamed and did not know what caused the sudden submerging of the city.


“The asuras won’t do such a thing. MAyA Devi won’t do such a thing. The Trimoorthis won’t dare to do such a thing. The Devas won’t dare do such a thing! My father trusted me with this job, but am I really worthy of his trust?”


Then he saw VeerabAhu coming there and wondered whether he had caused all these calamities. The army of the asuras surrounded VeerabAhu immediately and started attacking him. VeerabAhu drew out his sword and vanquished the entire asura army in no time.


Athiveeran threw his spear at VeerabAhu who promptly cut it into two. Athiveeran threw his dhaNdam on VeerabAhu. The thaNdam shattered into many pieces when it hit the mighty chest of VeerabAhu.


Athiveeran tried to attack VeerabAhu with his trident and VeerabAhu broke it as if it were a mere creeping plant. Athiveeran fought valiantly with the sword presented by Brahma. But he was no match to the superior VeerabAhu and so reached the final abode of all brave warriors called Veera Swarggam during the fight with VeerabAhu.

 
The 64 Thiru ViLaiyAdalgaL

26b. மாபாதகம் தீர்த்தது.

# 26 (b). மாபாதகம் தீர்த்தது.

கோபுர வாசலில் சொக்கட்டான் ஆடும்,
வேடுவன் வேடுவச்சி யாராக இருக்கும்?

சாந்தம் தவழும் முகத்தைக் கண்டால்,
சாதாரண வேடனாகத் தோன்றவில்லையே!

வேடுவச்சியின் தாயன்பைக் கண்டால்,
வீடுபேறு அளிக்கும் அன்னை போலிருந்தது!

பித்தனைப் போல கதி கலங்கியவனிடம்,
அத்தன் கேட்டான், ” என்ன ஆயிற்று உனக்கு?”

“எப்பிறப்பிலோ செய்த பாவங்களால் நான்
இப்பிறப்பில் என் அன்னையையே கூடினேன்!

குருவைப் போன்ற அருமைத் தந்தையை
அருவருப்புடன் நான் எரித்துக் கொன்றேன்!

பிரம்ம ஹத்தியின் பிடியில் சிக்கினேன்;
பிரம்மை பிடித்து நான் அலைகின்றேன்!”

“நல்ல இடத்துக்குத் தான் வந்துள்ளாய் நீ!
பொல்லாத பாவங்கள் தீரும் இடம் இது!

சொல்வதைக் கேட்டு அதன்படி நடந்தால்,
வல்வினை ஒழியும், பாவங்கள் அழியும்;

உண்ண வேண்டும் ஒருவேளை உணவே
மண்ணில் நல்லவரிடம் பிச்சை எடுத்து.

அடியவருக்கு அடியவனாகித் தொண்டுகள்
அடியவருக்குத் தொடர்ந்து புரிய வேண்டும்;

அதிகாலையில் அருகம்புல் சேகரித்து வந்து
பசுக்களுக்கு பச்சைப்புல் நீ தர வேண்டும்;

ஸ்நானம் மூன்று வேளையும் செய்துவிட்டு
ஸர்வாங்கப் பிரதட்சிணம் 108 முறைகள்;

தவறாமல் நீ இவற்றைச் செய்துவந்தால்,
தவநெறி அழித்துவிடும் பிரம்மஹத்தியை.”

“கொடிய நரகத்தில் உழல வேண்டியவனை
எளிய தவத்தால் காக்கின்றீரே நீங்கள்?”

வேடுவச்சி ஆச்சரியத்துடன் கேட்கவும்
வேடுவர் சொன்னார்,” நம் தொழில் அதுவே!”

அடுத்த நொடியில் மறைந்தனர் இருவரும்,
திடுக்கிட்டு உணர்ந்தான் அவர்கள் யாரென்று!

தொண்டு, சேவை, அங்கப் பிரதட்சிணம் என
மண்டிய பக்தியுடன் தவறாமல் செய்தான்.

மூன்றே மாதங்களில் மறைந்து போயின
முன்னர் செய்துவந்த பாவங்கள் எல்லாம்!

திவ்வியமான வடிவம் பெற்றுச் சிவனைத்
திவ்விய ஸ்தோத்திரங்களால் அவன் துதித்தான்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

# 26 (B) ABSOLUTION FROM THE SINS.

A hunter and his wife were playing a game of dice near the gopuram. The hunter had such a compassionate face that he could not be an ordinary hunter! His wife had such a divinity about her that she could only be the Mother of the Universe!

The hunter asked the boy,”what is troubling you, young man?” The boy replied with remorse, “I must have committed many sins in my poorva janma. As a result of those, I coveted the body of my own mother! I killed my father in cold blood! I am being punished by brammahathi dosham”

The hunter replied, “You have come to the correct place. This is the city that absolves all kinds of sins and cleanses a person. If you do as I say, you will be rid of all your sins!” The young sinner was willing to do anything to get rid of his sins.

The hunter continued,”You must beg for your food and eat only once a day. You must serve the devotees of the Lord in every possible way.

You must gather the green grass and feed it fresh to the cows before sunrise. You must take bath thrice during the day and do 108 anga pradakshinam to the Lord every day. If you do all these regularly, your sins will be cleansed by this tapas.”

The wife of the hunter spoke now, “Are you trying to save this boy from hell?” The hunter replied, “That is been my job all along!” Then they both vanished suddenly.

The young man understood the real identity of the couple. He carried out the orders to the letter and was absolved of all his heinous crimes in three months’ time. He got a wonderful form and sang the praise of the Lord.





 
bhagavathy bhaagavatam - skanda 7

7#32f. தேவி கீதை (6)

“முக்குணங்கள் பஞ்ச பூதங்களுடன் கலவாமல்
முற்றிலும் தனியாக இருப்பது ‘பிரகிருதி’ ஆகும்.

‘அவ்யகத்தம்’ எனப்படுவதும் ஆகும் இதுவே.
அவித்தை, வித்தையுடன் சம்பந்தம் உடையது.

தன் சார்பை அடைந்து காக்கப்படுவது ‘வித்யை’;
தன் சார்பை அடைந்து காக்கப்படாதது ‘அவித்தை’.

வித்யை அடைவிக்கும் மெய்ஞானம் – ஆனால்
அவித்யை அடைவிக்கும் இருண்ட அஞ்ஞானம்

ஞான வடிவான பரமாத்மா ஆவான் ‘ஈஸ்வரன்’;
ஞால விவகாரங்களில் ஈடுபடுபவன் ஈஸ்வரன்.

ஜீவன்களின் மூன்று உடல்களிலும் பற்றுள்ளவன்;
ஜீவர்களை ஆட்டுவிக்கும் சூத்திரதாரி ஈஸ்வரன்.

‘சர்வக்ஞ’னாக அவன் எல்லாம் அறிந்தவன்;
‘சர்வசக்த’னாக அவன் எல்லாம் வல்லவன்;

‘சர்வ அனுக்ரஹ’னாக அவன் எல்லாம் அருள்பவன்;
‘சர்வ வியாபி’யாக அவன் எங்கெங்கும் நிறைந்தவன்;

மோஹ வசப்பட்டு உலகில் உழல்வது ஜீவாத்மா;
மேலான சுகம், துக்கத்தை அனுபவிப்பது ஜீவாத்மா;

ஸ்தூல தேஹத்தில் பற்றுள்ளவன் ஆவான் ‘விஸ்வன்’;
சூக்ஷ்ம தேஹத்தில் பற்றுள்ளவன் ஆவான் ‘தைஜசன்’;

காரண தேஹத்தில் பற்றுள்ளவன் ஆவான் ‘பிராக்ஞன்’;
அறிவேன் ஜீவர்கள் அனுபவிக்க வேண்டியவற்றை.

அறிவேன் ஜீவர்கள் அனுபவிக்க விரும்புவதை;
அருளச் செய்கின்றேன் ஈஸ்வரனை அவர்களுக்கு.

அவதாரம் எடுக்கச் செய்கிறேன் ஈஸ்வரனை;
நிகழ்கின்றன அனைத்தும் என் சக்தியினால்;

நிகழ்கின்றன அனைத்தும் என் முயற்சியினால்;
நிகழாது எதுவுமே உலகில் என் அருள் இன்றி”.

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

7#32f. Devi’s Gita (6)

When the Pancha Bhootaas remain separated from the Three GuNAs, it is called as ‘Prakruti’. It is also known as ‘Avyaktam’ or unmanifested.

Prakruti is divided into two parts. One of them is Pure MAyA (Suddha Satva or Vidhya) and the other Impure MAyA (Avidhya ) united with the three guNaas.

When the Supreme Self is reflected by the pure MAyA, He is ‘Eswaran’. When the Supreme Self is reflected by impure MAyA or Avidhya, He becomes the ‘jeeva’. Avidhya conceals Brahmam whose nature is sat-chit-aanandam. So the jeeva suffers in misery due to his ignorance.

Prakruti is related to both Vidhya and Avidhya. Vidhya is the knowledge or illumination. It leads to salvation or liberation. Avidhya is darkness and ignorance. It binds the jeevaa and steeps him in samsAra.

Eswaran is the embodiment of all knowledge. He is Omniscient and He knows everything. He is Omnipotent and He is all powerful. He is Omnipresent and He pervades everywhere in the universe. He takes interest in the welfare of the jeevas. He controls the jeevAtma as a sootradhAri does his puppets.

The jeeva gets confused by illusions and by delusions. It enjoys in happiness and suffers in sorrows. ‘Viswan’ is the name of the jeeva who lives in the Sthoola Sareeram (gross body). ‘Taijasan’ is one who lives in his Sookshma Sareeram (subtle body). PrAgjnan is one who lives in his KAraNa sareeram (causal body).

I know the experiences a jeeva has to undergo. I also know what each jeeva wishes to experience. I give them those things through the help of Eswaran. I make Eswaran take avatars to serve specific purposes.

Everything happens because of my Shakti. Everything happens because of my efforts. Nothing will happen at all if I do not approve of it.”
 
bhagavathy bhaagavatam - skanda 2

2#4b. மகன்கள் பிறந்தனர்

“மன்னா! என்ன காரியம் நான் செய்தாலும்
என்னைக் கண்டித்துத் தடுக்கக் கூடாது நீர்!


பிரியம் இல்லாமல் என்னிடம் பேசக் கூடாது!
பிரியம் இல்லாமல் நடந்து கொள்ளக் கூடாது!


வெறுப்புடன் என்னோடு நீர் பேசக் கூடாது!
மறுத்துப் பேசினால் விட்டுச் செல்வேன்!” என


“பிரியம் இல்லாமல் பேசமாட்டேன் கண்ணே!
பிரியே! நீ எது செய்தாலும் எனக்குச் சம்மதம்.


எது செய்தாலும் தடுக்க மாட்டேன் உன்னை!
ஏவும் பணியாளாக இருப்பேன் நான் உனக்கு.”


“நானே சொல்வேன் ஒரு உண்மையை மன்னா!
நானே பெண்ணுருவில் வந்துள்ள கங்கை நதி!”


அழைத்துச் சென்றான் அரண்மனைக்கு அவளை.
அணைத்துக் கொண்டான் தன் மனைவியாக்கி!


கணமும் பிரியவில்லை கங்கையை விட்டு;
இணை பிரியாது அனுபவித்தனர் போகங்களை.


ரதி மன்மதன் போலவும், சசி இந்திரன் போலவும்,
ரமித்தும், சுகித்தும் இன்பக் கடலில் நீராடினர்.


முதல் மகனாக வந்து பிறந்த முதல் வசுவை
திகில் படாமல் வீசினாள் கங்கை, கங்கையில்!


வரிசையாக வந்து பிறந்தனர் ஏழு வசுக்கள்;
எறியப்பட்டனர் கங்கையில், கங்கையால்!


‘வம்சத்தை வளர விடமாட்டாளா இவள்?
த்வம்சம் செய்கின்றாளே குழந்தைகளை!


எடுத்து எறிவதை எத்தனை காலம் சகிப்பேன்?
தடுத்தால் விட்டுச் சென்று விடுவாளோ அவள்?’


நந்தினிப் பசுவைத் திருடிய எட்டாவது வசு
வந்து பிறந்தான் அவன் எட்டாவது மகனாக.


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


2#4b. The eight sons of Santhanu


Ganga told her conditions to the King Santhanu, “Oh king! You must not stop me from doing whatever I want to do. You must not talk to me any harsh words. You must always talk lovingly and be very affectionate to me. If you question me or take me to task on any accord, I shall desert you then and there!”

King Santhanu had no idea of what was in store for him and promised to obey all these conditions laid by Ganga Devi. Ganga continued “”I shall reveal my true identity now. I am the river Ganga in a human form”.

Santhanu took her to his palace and married her. He never left her side after that. They enjoyed the pleasures of wedded life like the God of Love Manmathan and his consort Rati. They enjoyed life like Indra and his wife Sasi Devi.

The first Vasu was born as their first son. Ganga threw the child into the swirling river water of Ganga without showing any remorse or pity. The six successive Vasus were born as her six successive sons and met the same cruel fate.

The king Santhanu could not tolerate this inhuman behavior in any mother and his own wife. But he had promised never to question her on any accord.

Now the eighth Vasu named Dyo Vasu, who actually stole the divine cow Nandini was born as the eighth son of Santhanu and Ganga Devi.



 
kanda purANam - mahEndra kANdam


6. வீரமகேந்திரம்

அதிவீரன் மடிந்தான்; போரும் முடிந்தது – தான்
அதி விரைவில் வீரமகேந்திரம் செல்ல வேண்டும்!

மேலெழுந்தார் வீரபாகு; உடனே கடல் நீரில்
மேலெழுந்தது அமிழ்ந்திருந்த இலங்கையும்!

ஆயிரம் யோஜனை பறந்தே சென்றார்
அடைந்தார் அப்போதே வீரமகேந்திரம்.

கோபுரங்களும், மதில்களும் சூரபத்மனின்
கோலாகல வாழ்வை நன்கு பறை சாற்றின.

வடக்கு வாயிலில் கோரன், அதிகோரன்!
உடன் இருந்தன நால்வகைப் படைகளும்.

விழைந்தார் போரைத் தவிர்த்து விட்டு
கீழை வாயில் வழியாக உட்புகுவதற்கு.

இருந்தன அங்கும் நால்வகைப் படைகள்
வீரபானு, மகிடாட்சன் தலைமையின் கீழ்!

தொல்லையே வேண்டாம் என்று எண்ணித்
தெற்கு வாயிலை சென்றடைந்தார் வீரபாகு.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

3#6. Veera Mahendram.

Athiveeran died and their fight ended. VeerabAhu wanted to reach Veera mahedram as quickly as possible. He rose up in the sky once again. Lanka which had got submerged also rose up above the surface of the sea water.

He leaped a thousand yojana and reached Veeramahendram. The richness and beauty of the city proclaimed the prosperity of the asuras under the rulership of Soorapadman. He tried to enter the city through the Northern gate. But it was under the protection of Goran, Athigoran and their chathuranga sena.

VeerabAhu tried to enter the city through the Eastern gate. It was under the protection of VeerabhAnu and MahisAkshan along with their chathuranga sena. Then he decided to try his luck through the Southern entrance.
 
Last edited:
The 64 Thiru ViLaiyAdalgaL

27a. பரதேசி வாள்வீரன்.

# 27 (a). பரதேசி வாள்வீரன்.

குலோத்துங்க பாண்டியனின் அரசாட்சியில்,
குடியேறினான் மதுரையில் ஒரு வாள் வீரன்;


பரதேசத்திலிருந்து இடம் பெயர்ந்தவன்,
பரமசாது மனைவி மாணிக்கமாலையுடன்.


பயிற்சிக் கூடம் ஒன்றை அமைத்தான்,
பயிற்சி அளித்தான் பல இளைஞர்களுக்கு.


பரம பக்திமான், நிதம் ஆலயம் சென்று,
பரம சிவனைத் தொழும் ஒரு பண்பாளன்.


சிஷ்யருள் ஒருவன் சித்தன் என்பவன்;
சிஷ்யன் குருவை மிஞ்ச விழைந்தான்;


குருவையே மிஞ்சிவிட்டாதாக எண்ணி,
கருவம் கொண்டு அலைந்து திரிந்தான்;


குருவின் பயிற்சிக் கூடத்துக்கு எதிரே,
நிறுவினான் தன் பயிற்சிக்கூடத்தை.


வயதில் இளையவன் என்பதால் இவனிடம்
வயதான குருவை விட்டுப் பலர் வந்தனர்.


பெருமை, கர்வம், இளமை இவற்றுடன்
பொறாமையும் சேர்ந்து பெருகலாயிற்று.


“எல்லா வருமானமும் வேண்டும் எனக்கே ” என
எல்லை இல்லாத் தொல்லைகள் செய்யலானான்.


தாயை நிகர்த்த தன் குருவின் தாரத்திடம்
பேயைப் போல பெரும் காமம் கொண்டான்!


தனியே இருப்பவளிடம் சென்று கேட்பான்,
“இனியாவது இடம் உண்டா எனக்கு?” என்று!


நச்சரிப்பைத் தாங்கவும் முடியவில்லை,
அச்சம் இன்றி வாழவும் முடியவில்லை.


ஒரு நாள் அவள் கரம் பற்றி இழுத்தான்,
மிருகத்தைத் தள்ளி விட்டுத் தப்பினாள்!


“இறைவா! நீயே எமைக் காக்க வேண்டும்!
பரதேசிகளுக்கு யார் துணை வருவார்?”


பக்தனும், பத்தினியும் படும் பாட்டால்,
பக்த வத்சலனுக்கும் சினம் மூண்டது!


சித்தன் வழியிலேயே சென்று, வென்று
பக்தரைக் காத்திட முடிவு செய்தான்.


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


# 27 (A). THE PARA DESI TEACHER.


During the reign of Kulothunga Paandiyan, a man and his wife moved in and settled in Madhuraapuri. He was a teacher of sword fight and fencing. His wife was a good woman.


He opened a training center and taught the young men fencing. He was a great devotee of Lord Siva and used to visit his temple regularly.


Chithan was one of his students. At one stage he started feeling superior even to his own guru. He established another training center in front of his guru’s .


Many of the guru’s students migrated to Chithan’s school-since he was younger and stronger than the guru. He gave a lot of problems to the guru.


He eyed his guru’s wife with lust and pestered her to accept him. She got frightened and worried by his bold advances and prayed to Lord Siva to protect her and her husband.


They were para desis in Madhuraapuri and there was no one but the Lord to protect them.


 
bhagavathy bhaagavatam - skanda 7

7#33a. தேவியின் விச்வரூபம் (1)

“என் மாயாசக்தியால் உருவாகின்றன சராசரங்கள்;
என் சிருஷ்டிகளில் உள்ளேன் அந்தர்யாமியாக.


மாயை வேறு நான் வேறு என்பது கிடையாது.
மாயா பேதங்களால் உருவாகின்றன ஆத்மாக்கள்.


ஆன்மா அடையும் பேதங்கள் கற்பிதமானவை – ஒரே
ஆகாசம் கடாகாசம், மஹாகாசம் ஆவது போலவே.


கடத்தினுள்ளே உள்ள ஆகாசம் கடாகாசம்;
கடத்தின் வெளியே உள்ளது மஹாகாசம்!


கடத்தை உடைத்தால் இரண்டும் ஒன்றாகிவிடும்!
கடம் ஆகாசத்திலா? அன்றி ஆகாசம் கடத்திலா?


பாதிக்காது என்னை ஆன்மாவின் தொடர்பு;
பாதிக்காது சூரியனை அது காட்டும் பொருள்.


சூரியன் பிரகாசப்படுத்துவான் ஒரு போலவே
உயர்ந்த பொருட்களையும், தாழ்ந்தவற்றையும்.


பொருளின் குணதோஷம் பாதிக்காது சூரியனை;
ஆன்மாவின் குணதோஷம் பாதிக்காது என்னை.


பிரபஞ்சமாகக் காணப்படும் அனைத்துமே நான்!
விராட் ஸ்வரூபனும் நான், ஈஸ்வரனும் நான் தான்;


மும்மூர்த்தியரும் நான்; மூவரின் தேவியரும் நான்;
நல்ல செயல்கள் செய்பவனும் நான், தீயவனும் நான்;


ஆண்கள் நான், பெண்கள் நான், குழந்தைகள் நான்!
அலிகளும் நான், வறியவர் நான், பெரியவர் நான்!


காணப்படும் பொருட்கள் எல்லாம் நான் தான்;
கேட்கப்படும் மொழிகள் எல்லாம் நான் தான்;


எனக்கு மேலானது என்று இல்லை எதுவும்;
என்னால் கற்பிக்கப் படுபவையே யாவையும்!”


பர்வதராஜன் விண்ணப்பித்தான் தேவியிடம்;
“பார்க்கவேண்டும் உன் விராட் ஸ்வரூபத்தை!”


தேவர்களும் விரும்பினர் தேவி தரிசனத்தை;
தேவி காட்சி தந்தாள் விராட் ஸ்வரூபத்தில்!


பிரபஞ்சம் முழுவதும் இருந்தது திருமேனியில்
பராபரை அளித்த அந்த விஸ்வரூப தரிசனத்தில்.


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


7#33a. Viswaroopam of Devi (1)


“All the movable and the unmovable things are created by my Shakti. I reside in everything created by me as ‘AntaryAmi’. I am not different from MAyA nor is MAyA different from me.


A Jeeva is created by the MAyA bedham. The modification assumed by an Aatma is imaginary and not real. It is similar to the difference between the ghatAkAsam
(the AakAsam inside a pot) and mahAkAsam ( the AakAsam outside the pot)


The AakAsam inside a pot and the AakAsam outside the pot appear to be entirely different. This difference persists only as long as the ghata (or the pot) exists. Once the ghata (pot) is smashed, the two AakAsams merge to become one and the same.


I am not contaminated by my association with Aatma. The Sun is not contaminated by the objects on which he shines. He Shines on all the objects alike – whether they are superior or inferior.


The greatness or meanness of the objects does not affect the greatness of the Sun. In the same way the greatness or the meanness of the Aatmaa does not contaminate me.

Whatever is seen here is me and my expression. I am the VirAt Swaroopan. I am the Eshwaran. I am the Trinity. I am their three consorts. I am all the good people of the world. I am all the bad people of the world.

I am all the men, all the women and all the eunuchs. I am in everything that can be seen. I am in everything that can be heard. There is nothing superior to me. Everything is created and projected by me. ”


Parvata RAjan made a request to Devi, “Please show us your divine Viswaroopam” The Devaas also joined in this request. Devi appeared in her Viswaroopam. Everything that existed in the entire Viswam also existed on her body.



 
bhagavathy bhaagavatam - skanda 2

2#4c. காங்கேயன் (1)

‘எட்டாவது மகனைக் காப்பாற்ற வேண்டும்
எப்பாடு பட்டாவது!’ என்று முடிவு செய்தான்.

“அடிமை நான் யாசிகின்றேன் உன்னிடம்;
கொடுத்து விடு நம் செல்வனை என்னிடம்!

வம்சத்தை வளர்க்க வேண்டியவள் நீ!
த்வம்சம் செய்கின்றாய் பிள்ளைகளை!

புத்திரன் இல்லாதவனுக்கு இல்லை நற்கதி!
பத்திரமாகத் தந்துவிடு புத்திரனை எனக்கு!”

எட்டாவது குழந்தையை எடுத்துக் கொண்டு
எட்டிச் செல்லத் தொடங்கினாள் கங்காதேவி.

‘தடுக்கா விட்டால் வீசி விடுவாள் நதியில்!
தடுத்தால் விலகிச் செல்வாள் நொடியில்!’

இருதலைக் கொள்ளி எறும்பானான் சந்தனு;
இறுதியில் வென்றது பிள்ளைப் பாசம் தான்.

“பழிகாரி! கொலைகாரி! என்று பெயர் சூட்டி
இழிவாகப் பேசிவிட்டீர்கள் என்னை நீங்கள்.

வசிஷ்டரின் சாபம் பெற்றிருந்தனர் வசுக்கள்
கஷ்டமான மனிதப் பிறவியை எடுக்கும்படி.

விதி வசமாக எதிர்ப்பட்ட என்னைத்
துதித்து வேண்டினர் தம் தாயாகும்படி.

மனம் இரங்கிச் சாபவிமோசனம் தருவதற்காக
மனம் விரும்பி மணந்து கொண்டேன் உம்மை.

வேண்டிக் கொண்டனர் பிறந்தவுடனேயே
மீண்டும் தம் உலகம் திரும்பிட உதவும்படி.

வேண்டிக் கொண்டபடி நான் உதவினேன்
மீண்டும் அவர்கள் தம் உலகம் திரும்பிட.

எட்டாவது மகன் வாழ்வான் நெடுநாள் இங்கு.
கிட்டும் நற்பெயர் மாவீரன், தர்மாத்மா என்று.

தருவேன் இக்குமாரனை உம்மிடமே நான்;
தருவேன் வளர்ந்து வாலிபனாக ஆனபின்.

தாயில்லாப் பிள்ளையாக வளரக் கூடாது!
தாயில்லாப் பிள்ளை சுகப்படாது!” என்றாள்.

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


2#4c. KAngeyan (1)


King Santhanu decided to save his eighth son at any cost. He spoke to Ganga Devi who had delivered their eighth son,

“I beg of you my dear wife! Please spare our son’s life. We have to raise a family and not immerse our sons in the river Ganga. A man who does not have a son will suffer in the Hell. Please hand over at least our eighth son safely to me”

Ganga did not bother to reply to him but started walking away with their son. The king was in a fix now. If he did not stop her, she would kill the child. If he stopped her, she would desert him and disappear immediately. Finally his love for his son made him stop her progress.

Ganga Devi spoke now,”You have called me many names as a murderess and a sinner. Ashta Vasus stole the divine cow Nandini from Sage Vasishta and got cursed to be born as human beings on the earth.

They met me by chance and requested me to become their mother. They also wanted me to help them return their world as soon as they were born on earth. I agreed to their request. I helped them go back to their land as soon as they were born.

This is the eighth Vasu who stole the cow Nandini. He is destined to live on the earth for a very long time. He will become famous as a valorous man and a man of justice.

I shall surely return this child you but not right now. I will return him to you after he grows up and becomes a strong lad. A child should not be separated from its mother during its early years.”

Ganga spoke thus and disappeared with their eighth son.

 
kanda purAnam - mahEndra kAndam

7a. கயமுகன்

கயமுக அசுரன் காவலில் தெற்கு வாயில்!
ஆயிரம் முகங்கள், ஆயிரம் துதிக்கைகள்,


தோள்கள் ஈராயிரம் உடையவன் அவன்.
போர் புரிவதை மிகவும் விழைபவன் அவன்.


ஐயாயிரம் விலங்குகளை மென்று தின்று
வாயெல்லாம் குருதி வழிய நிற்பவன் அவன்.


தீவினைகள் செய்யும் இயல்பினன் அவன்;
தினவெடுத்துத் திரியும் பாங்கினன் அவன்;


சினம் கொண்டான் வீரவாகுவிடம் அவன்,
“இனம் தெரியாமல் இங்கு வந்து விட்டாய் நீ!


மாயங்கள் கற்றுத் தேர்ந்தவனோ – உன்
மாயங்கள் என்ன செய்துவிடும் எம்மை?


கொடிய சிங்கம் வசிக்கின்ற குகையில்
மடப் பெண் மான் நுழைகின்றது போல்


கடல் தாண்டி இங்கு வந்துள்ளாய் நீ-உன்
உடல் துறந்து உயிர் பறந்துவிடும் காண்!


வாட்படையுடன் தனியாக இங்கு வந்த உன்
கோட்பாடு என்ன என்று நீ உரைப்பாய்!


அச்சம் என்பதே அறியாதவனாக இங்கு
இச்சை எதன் மேல் வைத்து வந்தாய்?”


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


3#7a. Gajamukhan.


The Southern gate was under the protection of Gajamukhan. He had one thousand elephant faces with one thousand trunks. He had two thousand powerful shoulders and arms. He loved to fight.


He would eat five thousand wild animals for a meal and appear with blood dripping from his mouth. He was wicked and was always on the look out for a chance to wage a war or indulge in a fight. When he saw VeerabAhu and became very angry!


“You did a mistake by coming here. Are you very well versed in MAyA? But Your Maya cannot delude us. You have entered the city like a dumb doe entering a lion’s cave.


You have crossed the ocean and come here all the way to lose your life. You have come with nothing other than your sword. Tell me the truth. What is your mission here?”


 
The 64 Thiru ViLaiyAdalgaL

27b. அங்கம் வெட்டியது.

# 27 (b). அங்கம் வெட்டியது.

ஆசிரியராக உருவெடுத்து வந்த
ஆதிசிவன் சென்றார் சித்தனிடம்;


“வாள் போர் புரிவோம் இருவரும்,
நாளை ஊருக்கு வெளியே!” என்றார்.


பழம் நழுவிப் பாலில் விழுந்தது!
கிழத்தை ஒழிக்க நல்ல தருணம்!


அதிகாலையில் எழுந்து அணிந்தான்
மிதப்புடன் போர்க்கோலம் சித்தன்.


மாணவருடன் கூடி வந்த குருவும்
பூண்டிருந்தார் அரிய போர்க்கோலம்!


இரண்டு வலிய சிம்மங்கள் போலும்,
இரண்டு பெரிய கருடர்கள் போலவும்,


பறந்தும், பாய்ந்தும் தாக்கினார்கள்;
மறைந்தும், வளைந்தும் தாக்கினார்கள்;


இருபது நாழிகைகள் தொடர்ந்தது
இணையில்லாத வாள் போராட்டம்.


குருவின் கையே ஓங்கி நின்றது,
இறுதியில் தெள்ளத் தெளிவாக!


“தாயை போன்றவளை விரும்பிய
தரம் கெட்ட உனக்கு தண்டனை;


கண்ணால் கண்டு காமுற்றாய்,
கண்களைப் பறித்தேன் இதோ!


நாக் கூசாமல் வரச் சொன்னாய்,
நாவை இதோ துண்டிக்கின்றேன்!


கையை பிடித்து இழுத்தாயே!
கைகள் பந்தாடப் படுகின்றன.


வஞ்சனை செய்து திரிந்தாயே!
நெஞ்சினை இதோ பிளந்தேன்!"


ஒவ்வொரு அங்கமாக வெட்டிக்
கொன்று முடித்து மறைந்தார்!


குருவைத் தேடி மாணவர் செல்ல,
குரு கோவில் இருந்து திரும்பினார்.


இவர்க
ள் புகழ்ந்த மொழிகள்
அவருக்கு ஒன்றும் புரியவில்லை!


மாணவர்கள் கூறியதையே பின்னர்
மனைவியும் விளக்கிக் கூறியபோது;


“சொக்கநாதரின் திருவிளையாடல் இது!”
மிக்க மகிழ்ச்சி அடைந்தார்கள் அவர்கள்.


“பரதேசிக் காவலன் பரமசிவனே!” எனப்
பாரில் உள்ளோர்க்கு உணர்த்திவிட்டான்.


யானை மீது குருவும், மனைவியும் - அரசன்
ஆணைப்படி ஊர்வலமாகச் சென்றனர்.


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


# 27 (B). DISMEMBERMENT.


Siva took the form of the guru.He told Chithan that they both should engage in a bout of fencing to find out who was superior. Chithan was very happy that he could easily get rid of this man, once for all.


He wore his armor and got ready for the duel. The guru also donned his armor and came with his students.


They fought outside the city limits. They clashed like two angry lions and flew at each other like two large garudas. Both were well versed and well matched.


The fight went on for 20 Naazhigai (8 hours). Guru established his supremacy over Chithan. He started scolding Chithan and dismembering his limbs.


“You Chithan desired the wife of your guru-even though she is like a mother to you! You will get your punishment now.


You eyed her with lust. I am plucking your eyes. You spoke sinful words. Off comes your tongue. You pulled her hands. Your own hands have been cut off now. You plotted against your guru. I will tear open your heart.”


The guru cut off all the limbs of Chithan, killed him and disappeared.


The students went looking for him and saw him returning from his visit to the temple.They congratulated him. The guru could not make head or tail of it.

When he came home his wife revealed the true nature of Chithan. Her version agreed with the version of the students.

So it was Lord Siva who had come to punish the Chithan. The king was overwhelmed to hear the incident. He praised Siva as the “Protector of Para Desi”.


The king honored the guru and his wife by making them take a procession on an elephant back through the city..


 
I had to pinch myself to make sure that I was NOT dreaming.

I had to make sure that my eyes were not deceiving me!

I get less sleep these days - since my day starts one hour earlier now!

The traffic in the past 24 hours is indeed 360424 - 352325 = 8099 =~8100.
I thank the readers of this thread. :pray2:

If you are catching up with the old posts there is better way of doing it .

Please use the links given below to read the story - any story -

non stop without any interference or inconvenience!!

#1. Kandapuranam blogs:


1. Kanda Puraanam (Urppathik Kaandam)

2. Kanda Puraanam (Asura Kaaandam)


3. Kanda Puraanam (Mahendra Kaandam)

4. Kanda Puraanam (Por Puri Kaandam)

5. Kanda Puraanam (Deva Kaandam)

6. Kanda Puraanam (Daksha Kaandam)



Bhagavathy Bhaagavatam blogs:

1. Introduction on Devi

2. Bhagavathy Bhaagavatam Skanda 1

3. Bhagavathy Bhaagavatam Skanda 2

4. Bhagavathy Bhaagavatam Skanda 3

5. Bhagavathy Bhaagavatam Skanda 4

6. Bhagavathy Bhaagavatam Skanda 5

7. Bhagavathy Bhaagavatam Skanda 6

8. Bhagavathy Bhaagavatam Skanda 7

9. Bhagavathy Bhaagavatam Skanda 8

10. Bhagavathy Bhaagavatam Skanda 9

11. Bhagavathy Bhaagavatam Skanda 10


12. Bhagavathy Bhaagavatam Skanda 11

13. Bhagavathy Bhaagavatam Skanda 12

Blogs of Other PurANams:

1.
VinAyaka PurANam part 1 (விநாயக புராணம் - 1)

2.
VinAyaka PurANam part 2 (விநாயக புராணம் - 2)

3. 64 ThiruvilaiyaadalgaL (ஈசனின் 64 திருவிளையாடல்கள் )


4. Sri VenkatEsa purANam
 
Last edited:
bhagavathy bhaagavatam - skanda 7

7#33b. தேவியின் விச்வரூபம் (2)

திருமுகமாக ஆனது வானத்தின் மேல் பாகம்;
இரு திருக்கண்கள் ஆயினர் சூரிய சந்திரர்கள்.

ஆயின திசைகள் அன்னையின் திருச் செவிகள்;
ஆயின நான்கு வேதங்கள் அன்னையின் வாக்கு.

ஆனான் அன்னையின் பிராணனாக வாயு தேவன்;
ஆனது அன்னையின் இதயமாக இந்தப் பிரபஞ்சம்.

ஆனது அன்னையின் முன்பக்கமாக மண்ணிலம்;
ஆனது அன்னையின் நாபியாக விரிந்த ஆகாசம்.

ஆனது அன்னையின் மார்பாக ஜோதி வளையம்;
ஆனது அன்னையின் திருக் கழுத்தாக மகர்லோகம்;

ஆனது அன்னையின் முகமாக ஜனலோகம்;
ஆனது அன்னையின் நெற்றியாகத் தபலோகம்.

ஆனது நெற்றியின் கீழிடமாகச் சத்திய லோகம்;
ஆனான் அன்னையின் கரங்களாக இந்திரன்.

ஆயிற்று அன்னையின் செவிப்பொறியாகச் சப்தம்;
ஆயினர் அன்னையின் மூக்காக அச்வினி தேவர்கள்.

ஆயிற்று அன்னையின் கிராணேந்த்ரியமாக வாசனை;
ஆனான் அன்னையின் கட்புலனாக அக்கினி தேவன்.

ஆயின அன்னையின் இமைகளாகப் பகல், இரவு;
ஆயிற்று அழகிய புருவ மத்தியாக பிரம்மஸ்தானம்.

ஆயிற்று அன்னையின் தாடைகளாகத் தண்ணீர்.
ஆயிற்று அன்னையின் இனிய நாவாக ரசம்.

ஆனான் அன்னையின் கோரைப் பற்களாக யமன்,
ஆயின எலும்புகளாக மலைகள், நாடிகளாக நதிகள்;

ஆயின கடைவாய்ப் பற்களாகச் சந்திர கலை;
ஆனது கடைக்கண் பார்வையாக சுவர்க்கம்.

ஆயின இரு உதடுகளாக நாணமும், லோபமும்;
ஆயின அன்னையின் பிருஷ்டமாக அறநெறிகள்.

ஆயிற்று அன்னையின் வயிராகக் கடல்கள் – ஆனான்
ஆண்குறியாக பிரஜாபதி அந்த விஸ்வரூபத்துக்கு.

ஆயின ரோமங்களாக மரங்கள்; கூந்தலாக மேகங்கள்;
ஆடைகளாக இரு சந்திகாலங்கள், மனசாகச் சந்திரன்;

விஷ்ணு ஞானசக்தியும், ருத்திரன் அந்தக்கரணணமும் ஆயினர்;
விலங்கினங்கள் தொடைக்கு மேலே உள்ள இடையாக ஆயின.

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

7#33b. Viswaroopam (2)

The upper sky became the crown of the Viswaroopam; The Sun and The Moon became her two eyes; the directions became her ears; The four Vedas became her speech; VAyu became her Life Force and the Universe became her heart.

The earth became her front side and the sky became her navel. Makarlokm became her neck, Janalokam became her face; Tapa lokam became her forehead. Satya lokam became the portion below her forehead.

Indra became her hands; Sabdam became her ears; Aswini Devtas became her nose, Smell became her grANendriyam, Agni became her power of sight, Day and Night became her two eyelids.

PrasthAnam became her eyebrow center; Water became her jaws, Rasa became her tongue. Yama became her canine teeth the chandra kalAs became her molar teeth.
Swarggam became her sidelong glance, Coyness became her upper lip and greed her lower lip. Dharma became her lower back and oceans became her stomach. PrajApati became her organ of reproduction.

The mountains became her bones; the rivers became her Naadis; the trees became the hair on her body; the clouds became her tresses and the sandhya kAlam became her dresses.

Chandran became her mind; Vishnu became her JnAna shakti; Rudran became her four antahkaraNam; and all the animals were seen in her waist above her thighs.

 
Bhagavathy bhaagavatam - skanda 2

2#4d. காங்கேயன் (2)

பிரிந்து சென்றனர் மனைவியும், மகனும்!
விரக தாபமும், புத்திர சோகமும் வாட்டின.

காட்டுக்குச் சென்றான் சந்தனு வேட்டையாட
காலம் நெடுநாட்கள் கழிந்தபின் ஒருமுறை.

கங்கைக் கரையை அவன் அடைந்தபோது,
கங்கை நதியில் வெள்ளம் பெருகி ஓடியது!

பெரிய வில்லை நாட்டி, அதில் அம்புகள் பூட்டி,
சிறியதொரு குமாரன் விளையாடுவது கண்டான்.

சிறுவனின் அழகும், வீரமும் சந்தனுவுடைய
சிந்தையைக் கவர்ந்து ஆர்வத்தைத் தூண்டின.

‘கங்கைக்கும் எனக்கும் பிறந்த மகனோ?’ எனச்
சங்கை கொண்டு நெருங்கினான் சிறுவனை.

“யார் உன் தந்தை?” எனக் கேட்டான் மன்னன்.
யாதொரு பதிலும் கூறவில்லை அச்சிறுவன்.

இறங்கி மறைந்து விட்டான் கங்கையில்,
சிறிது நேரம் விளையாடி மகிழ்ந்த பின்னர்.

“அறிய வேண்டும் இவன் யார் என்று?” எண்ணிச்
செறிந்த சிந்தையைச் செலுத்தினான் கங்கை மீது.

மங்கள வடிவுடன் வெளிப்பட்டாள் கங்கை!
தங்கு தடையின்றிப் பொங்கியது ஆனந்தம்!

“எங்கே நம் புத்திரன்? எனக்குக் காட்டுவாய்!
கங்கையே என்னிடம் கருணை காட்டுவாய்!”

“புத்திரனை உம்மிடமே அளிப்பேன் சத்தியம்;
உத்தம வசிஷ்டரிடம் கற்றான் வேத சாத்திரம்.

புத்தியில் சமம் தேவகுரு பிருஹஸ்பதிக்கு;
வித்தையில் சமம் ஜமதக்னி குமாரனுக்கு!

வம்சம் விளங்கும் நம் திருக் குமாரனால்!
அம்சமான மகனை ஏற்றுக் கொள்வீர் நீர்!”

காங்கேயன் என்னும் கங்கையின் மைந்தனை
கங்கை ஒப்படைத்தாள் தந்தை சந்தனுவிடம்.

வாரி அணைத்தான், உச்சி முகர்ந்தான் – தன்
தேரில் ஏற்றிக் கொண்டு தலைநகர் சென்றான்.

நாளையும், கோளையும் ஆராய்ந்து நல்ல
வேளையில் கட்டினான் இளவரசுப் பட்டம்.

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


2#4d. KAngeyan (2)


Santhanu’s son and wife disappeared from his life. He felt very lonely – troubled by the separation of his wife and his infant son. Years rolled by. One day he decided to go on a hunting expedition.

He returned to the bank of the river Ganga. He saw a small boy plant a large bow and shoot arrows from it. The beauty and the valor of this boy made his suspect that he might be his own son born to Ganga Devi.

He want near the boy and asked him,”Whose son are you my dear boy?” But the bot did not reply. He got into the river Ganga and disappeared from the king’s eyes.

Now king Santhanu concentrated on Ganga Devi and she emerged from the river in the beautiful form of a woman he used to love and cherish. “Please have pity on me and show me our dear son Oh Ganga!” the king begged her.

Ganga Devi said, ” I will return our son to you dear king. He has leaned the Vedas from Vasishta. He is as clever as Bruhaspati and as valorous as Parasu Raman – the son of Jamadagni. Your race will become famous because of our son. Please accept him now.” She handed over the little boy to the king.

Santhanu was overwhelmed with happiness. He embraced kissed his son’s forehead. He made the lad sit on his chariot and drove it back to his capital city. He found out an auspicious day and made his son the yuva rAj (his successor).





 
kanda purANam - mhEndra kANdam

7b. கயமுகனுடன் போர்

கயமுகன் உரைத்ததையே உரைத்தார்
கயமுகனிடம், வீரவாகுத்தேவர் மீண்டும்.


மலையைப் பிடுங்கி வீசினான் கயமுக அசுரன்;
மலை தூளானது தேவர் தோளில் பட்டவுடன்!


ஆற்றலைக் கண்டான், சீற்றம் கொண்டான்,
ஆயிரம் மலைகளை வீசினான் கயமுக அசுரன்.


தூணில் வீசிய மண்பாண்டங்கள் போல
வீணில் விழுந்து உடைந்தன குன்றுகள்.


தண்டாயுதத்தைக் கயமுகன் செலுத்த
தண்டத்தைத் துண்டாக்கினார் வீரவாகு.


ஆயிரம் மரங்களை ஆரவாரித்தபடி
ஆயிரம் துதிக்கைகளால் அவன் வீச,


கூர் வாளால் துண்டாக்கினார் தேவர்,
ஓர் ஆயிரம் துதிக்கைகளையும் அங்கு.


பிடித்து உண்ண நீட்டிய கரங்களைப்
பிடித்து அறுத்தார் வீரவாகுத்தேவர்.


மற்போர் செய்தனர் மதயானைகள் போல்.
மற்போரில் மடிந்தான் கயமுக அவுணன்.


கயமுகன் மடிந்ததும் மற்ற அவுணர்கள்
பயமின்றி வந்து குவிந்தனர் போருக்கு!


நேரத்தைப் போர் புரிந்து வீணாக்காமல்
நேராக உள்ளே செல்ல வேண்டும் உடனே!


அணு உருவம் எடுத்தார் வீரவாகுத் தேவர்,
அமர்ந்தார் ஒரு உயர்ந்த கோபுரத்தின் மீது.


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


3#7b. War with Gajamukhan.


VaarabAhu repeated Gajamukhan’s threat to him. Gajamukhan became wild with anger and threw a hillock on VeerabAhu. The hillock shattered to a thousand pieces when it hit VeerabAhu’s shoulder.


Gajamukhan threw a thousand hillocks on VeerabAhu Devar. Each of them shattered like a mud pot thrown on a strong stone pillar. The asuran then threw his dhandam on Veerabaahu who cut it into two with his sword. The asura grabbed one thousand trees in his one thousand trunks and hurled them all on VeerabAhu Devar.


Devar cut off all his trunks with his sword. The asura put out two of his hands to catch hold of Devar. The hands too were promptly cut off. Then they engaged in wrestling
and VeerabAhu killed the asura Gajamukha.


Now more asuras arrived there in large numbers ready to fight with VeerabAhu. But he did not want to waste any more time in such useless fighting. He wanted to enter the city quickly. So he reduced himself to the size of an atom and sat on one of the tall towers.


 

Latest ads

Back
Top