• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

A poem a day to keep all agonies away!

The 64 Thiru ViLaiyAdagal28. நாகம் எய்தது.

# 28. நாகம் எய்தது.

அனந்த குண பாண்டியன் என்பவன்
அருமை மகன் குலோத்துங்கனின்.

சிவச்சின்னகள் மெய்ப்பொருள் உணர்ந்து,
சிவ வேடம் பூண்டு சிவநாட்டை ஆண்டான்.


கொல் யானையை கொல்ல அனுப்பியவர்,
வில் வீரன் பாதுகாவலை மறந்துவிட்டனர்!

மீண்டும் ஒரு யாகம் செய்து அதன் மூலம்
பாண்டியனை அழிக்கத் திட்டம் தீட்டினர்.


கோரமான யாகம் தொடங்கியது அங்கே!
கோரமான யாகம் தொடர்ந்தது அங்கே!

மலை போன்ற உடலுடன் கொடிய அசுரன்
வெளிப் போந்தான் யாக குண்டத்திலிருந்து!


இருண்ட குஹையைப் போன்ற ஆழ்ந்த வாய்!
பிறையினை ஒத்த வளைந்த விஷப்பற்கள்!

கண கண என ஜ்வலிக்கின்ற செங்கண்கள்,
“கொணர்க உணவு என் பசி தீர்க்க!” என ஓலம்!


மதுராபுரியையும், மதுரை மன்னனையும்
நாக உருவெடுத்து அழிக்க விரைந்தான்.

மது மலர்த்தோட்டங்கள் வாடிக் கருகின;
நாக மூச்சால் பச்சைப் பயிர் பாலையானது.


மேற்கு வாயிலை நெருங்கினான் பாம்பசுரன்;
மேற்கு வாயிலை நெருங்கினான் மன்னவனும்.

ஆபத் பாந்தவனும், அனாத ரக்ஷகனும் ஆகிய
அம்பலவாணன் திருவடிகளைத் தொழுது விட்டு.


தீக் கக்கும் பாணங்களைத் தொடுத்தான் மன்னன்,
தீக் கக்கும் வாயால் விழுங்கினான் பாம்பசுரன்.

மந்திரம், தந்திரம் எதுவும் பலிக்கவில்லை,
மந்திரத்தால் உருவான மாயப் பாம்பினிடம்.


சந்திர சேகரனின் அருளை வேண்டி, வணங்கி,
சந்திர பாணத்தை விடுத்தான் அனந்தகுணன்;

சின்னாபின்னம் ஆகிவிட்டது அசுரன் உடல்.
சினந்து தன் கொடிய விடத்தைக் கக்கினான்.


ஊரெங்கும் பரவிவிட்டது கருநாக விடம்;
ஊர்மக்கள் மயங்கினர் விட வாயுவினால்.

மக்களைக் காப்பது மன்னவன் கடமையன்றோ?
மன்னவன் விரைந்தான் மகேசன் கோவிலுக்கு.


“அன்று ஆலகாலம் உண்டாய் அமரரைக் காக்க!
இன்று நாகவிஷம் போக்குவாய் நமரைக் காக்க!”

விடையேறும் வித்தகன் சிரித்தவண்ணம் தன்
சடையேறும் நிலவின் அமுதினைச் சிந்தினான்


விரைந்து பரவியது அது நகர் முழுதும்,
விரைவாய் அகன்றன விடமும், விடக்காற்றும்;

“கடுமையான கருநாக நஞ்சினையும், காற்றின்
கொடுமையையும் நீக்கிய அண்ணல் அடி வாழ்க!”


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


# 28. KILLING THE SERPENT.


Ananthaguna Paandian was the son of Kulothunga Paandian. He knew the true meaning of Saivism. He and his citizens followed Saivism much to the disgust of the Jain kings and their gurus. They were planning a fresh attempt to kill the Paandian King through a terrible yaagam.


They performed a gora yaagna till a gora asura emergd from the yaaga kundam. He was as large and strong as a mountain. His mouth was as dark and deep as a cave. His eyes were bright like live coals.His poisonous teeth resembles the crescent moon. He was terribly hungry even as he emerged from the kundam.


He was sent to destroy Madhuraapuri and its king. He took the form of a terrible serpent. His fiery breath scorched the plants and fields on the way. He reached the western gate of the city.


The king prayed in Siva’s temple and reached the western gate of the city.The king shot many fiery arrows but the serpent swallowed them promptly.All the kings asthras and sasthras proved futile.


The king prayed to Chandrasekara and shot his Chandra Baanam at the snake.The arrow tore up its body into shreds.The snake spat poison and died writhing in pain.The poison sped fast through the city.


People fainted due to the poisonous fumes.The king got worried again.He visited the Lord’s temple and prayed to him to save the city and citizens the way he saved the Devas during Amrutha mathanam.


The Lord smiled and shook his crescent moon. A few drops of nectar spilled over and sped through the streets very fast nullifying the effects of the poison. People got up as if from sleep and the king as well his city were saved.


 
bhagavathy bhaagavatam - skanda 7

7#33c. தேவியின் விச்வரூபம் (3)

மலைகள் ஆயின அவள் எலும்புகளாக;
நதிகள் ஆயின அவள் நாடிகளாக;


மரங்கள் ஆயின அவள் ரோமங்களாக;
நடைகள் ஆயின மனிதனின் பருவங்களாக.


கருங் கூந்தல் ஆயின மேகங்கள்;
விலங்கினம் தொடைக்கும் மேலே.


சந்தி காலங்கள் ஆயின ஆடைகள்;
சந்திரகலை ஆனது அவள் மனது ;


விஷ்ணு ஆனார் ஞான சக்தியாக;
ருத்திர மூர்த்தியே அந்தக்கரணம்;


அதல லோகம் அவள் தொடைக்கும் கீழே!
விதல லோகம் அவள் தொடைக்குக் கீழே!


பற்களைக் கடித்துக் கொண்டு நின்றாள்;
பறந்தன கண்களில் தீப்பொறி தேவிக்கு.


ஆயுதங்களைக் கரங்களில் ஏந்தியபடி
ஆயிரம் கரங்களோடு நின்றாள் தேவி.


விளங்கியது விஸ்வரூபம் கோரமாக;
விழுந்தனர் தேவர்கள் அஞ்சி மயங்கி!


முழங்கின வேதங்கள் அதிர்ந்து நன்கு,
எழுப்பின தேவர்களை மயக்கதிலிருந்து!


“காணக் கூடாத உன் வடிவைக் கண்டோம்
கண்டோம் வலிமை பெருமைகளை தேவி;


புவனேஸ்வரி! பிராண ஸ்வரூபிணி !
சர்வாத்மக ஸ்வரூபிணி! நமஸ்காரம்!


பிரபஞ்சத்தை உன்னுள் தங்கியுள்ளாய்!
பிறந்துள்ள அனைத்தையும் தாங்கியுள்ளாய்!


காணக் கூடாத வடிவை மறைத்தருள்வாய்!
காண்பிப்பாய் உன் சாந்த வடிவை மீண்டும்!”


மாறினாள் தேவி கோர விஸ்வரூபத்தை விடுத்து
திரிபுர சுந்தரியாக அங்குச அபய வரதத்துடன்.


களித்தனர் கண் குளிரக் கண்டு அமரர்;
குளித்தனர் ஆனந்த சாகரத்தில் மூழ்கி.


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


7#33c. Viswaroopam (3)


The mountains became her bones; the rivers became her NAdi; the trees became the hair on her body; the clouds became her tresses and the sandhya kAlam beame her dresses.


Chandran became her mind; VishNu became her JnAna shakti; Rudran became her four antahkaraNams; and all the animlas were seen in her waist above her thighs.


Atala and Vitala were below her thighs. She stood there grinding her teeth; She stood there spitting fiery sparks from her eyes; She stood there carrying her various weapons in her hands; She stood there with thousands of heads and faces.


The viswaroopam was terrifying to look at. The Devas fainted seeing Devi’s awesome viswaroopam. The Vedas woke them up again by their loud chanting.


The Devas told Devi,” We saw your form which is not to be seen by anyone. We have understood your greatness very well. Bhuvaneswari! PrANa swaroopini! SarvAthmaka swaroopiNi! namaste! You support the entire universe on yourself. Hide this hideous form and show us your beautiful form as before”.


Devi gave up her viswaroopa dharsanam and stood in her pleasing sowmya roopam as before. She sported the famous pAsa, ankusa, abhaya and varada (the noose, the goad, fearlessness and favors respectively) in her four hands. The Devas felt delighted to see her as before.



 
bhagavathy bhaagavatam - skanda 2

2#5a. சத்தியவதி

கங்கையின் மைந்தன் முருகனுடன் சிவன்
எங்கனம் மகிழ்ந்து குலாவி இருப்பாரோ;


அங்கனம் மகிழ்ந்திருந்தான் சந்தனு
காங்கேயனுடன் தன் தலை நகரில்.


வேட்டைக்குச் சென்றான் சந்தனு மீண்டும்.
வேட்டையாடி அடைந்தான் யமுனையை.


பரிமள கந்தம் வீசியது காற்றில் கலந்து
பழகிய மணம் அல்ல, புது விதமானது!


மலர்களின் நறுமணமும் அல்ல அது!
மிருகங்களின் மோக வாசனையும் அல்ல.


தேடினான் அந்த இடம் முழுவதும் சென்று;
நாடினான் வாசனை வீசிய பொருளைக் காண.


அடைந்தான் மணத்தைத் தொடர்ந்து சென்று
கடைந்தெடுத்த ஒரு பருவ மங்கையிடம்.


அபூர்வ அழகே அவள் ஆபரணங்கள்!
அழகிய இளமையே அவள் பட்டாடை!


பொலிந்தாள் இயற்கை எழிலுடன் அவள்;
பொலிந்தது அந்த இடமே ஒளி மயமாக!


நறுமணம் வீசியது அவளிடமிருந்தே -அவனைக்
கருவண்டுக் கண்களால் நோக்கினாள் அவள்.


மோகம் கொண்டான் புதுவித மணத்தினால்;
காமம் கொண்டான் பொங்கும் இளமையால் .


“தன் கங்கையாகவே இருப்பாளோ?”என்று
தன்னைத் தானே கேட்டுக்கொண்டு ஐயுற்றான்.


அருகில் சென்றான் துணிந்த சந்தனு மன்னன்,
நெருங்கிய வீசினான் கேள்விக் கணைகளை!


“யார் நீ பெண்ணே? என்ன உன் குலம் ?
யார் மகள் நீ? என் தனிமையில் உள்ளாய்?


சாதி என்ன கூறு ? உன் ஆசாரம் என்ன?
சேதி கூறு நீ திருமணம் ஆகிவிட்டவளா?”


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


2#5a. Satyavati


Santhanu spent a happy time with his son KAngeyan just as Lord Siva must have with his son Murugan – another KAngeyan since he too was a son of Ganga. The king went on hunting expedition one more time. This time he reached the bank of river Yamuna.

An unusually pleasant fragrance filled the place. He had never smelled it earlier. It was not from the flowers nor from the animals in heat. He went looking for the novel object which caused this fragrance.

He traced it back to a lovely maiden on the river bank. Her rich ornaments were just her beautiful limbs. Her silk dress was just her stunning youth.

She shone in her natural beauty and not with the beauty imparted by the
gold ornaments and silk. The whole place was filled with her fragrance and beauty.

The king fell in love with her at the very first sight. He wondered whether it was his own Ganga Devi! He approached her and fired a series of questions at her, “Who are you? What is you race and what is your caste? Who is your father? Why are here all alone by yourself? Are you married?”



 
kanda purANam - mahEndra kANdam

8. நகர்வளம் காணல்

அணு உருவெடுத்து அமர்ந்த வீரவாகு
அளவற்ற சிறப்பை அங்கே கண்டார்.


மேலான நால்வகைப் படைகளுடன்
ஏராள இன்ப நுகர்ச்சிப் பொருட்கள்!


பொன்னுலகத்துடன் போட்டி போட்டால்
பின்னடையச் செய்யும் விஞ்சும் அழகால்!


மணிகள் இழைத்த மாளிகைகளில் – பெண்
மணிகளுடன் இன்பம் நுகரும் அவுணர்கள்;


விரும்பியவற்றை அளித்திடக் காமதேனு,
அரிய சிந்தாமணி, பதுமநிதி முதலியவை.


ஒலிகள் பலவிதம் ஒன்றாகக் கலந்து
ஒலித்தது அலைகடல் போன்ற ஓசை.


உள்ளங்களைக் கொள்ளை கொள்ளும்
அள்ளமுடியாத ஒரு செல்வச் செழிப்பு.


முதியவர், வறியவர், நோயாளிகள்,
கதியற்றவர் எவரும் இல்லை அங்கே!


யாரும் கண்டிராத குளங்களாகப் பால்,
கருப்பஞ் சாற்றுடன், தயிர், நெய், மது.


தெருவில் குப்பையாக பொன்அணிகள்!
முருகன் விதித்த பணியை எண்ணினார்.


விண் வழியாக நகர் புகுந்தார்
வீரவாகு;
வியந்தார் மந்திரி மாளிகைகள் கண்டு.


தருமகோபன் மாளிகையின் மேலிருந்து
வருந்தும் தேவர்கள் சிறையைக் கண்டார்.


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


3#8. The prosperity of the city.


VeerabAhu who was now the size of an atom witnessed the prosperity of the city Veera Mahendram. The chaturanga sena protected it well. The city was filled with various objects of sensual enjoyment. It would put to shame even the swargga of the Deva.


The palatial houses were decorated with precious gems. The asuras were enjoying the company of their womenfolk. KAmadhenu, ChintAmani and Padmanidhi gave whatever anyone wished for.


The various sounds of the city merged to produce a humming sound like the waves of an ocean. The richness and the beauty of the city was mesmerizing VeerabAhu. The old, the infirm and the sick people did not exist in that city. The ponds were filled with pure milk, sugar cane juice, curds, ghee and madhu for the enjoyment of everyone living there.


The streets were littered with the gold ornaments thrown carelessly. VeerabAhu now remembered his actual mission in entering the city. He was wonder-struck by the beauty of the palaces occupied by the ministers of Soorapadman. From the top of the palace of Dharmagopan, he could see the prison in which all the Devas were locked up.


 
Thr 64 Thiru ViLaiyAdalgaL


29. மாயப் பசு எய்தது.

# 29. மாயப் பசு எய்தது.

அனந்தகுணன் கொன்றுவிட்டான் அந்த
அபிசார ஹோமப் பாம்பை என்றதும்,
தொடர்ந்த சமணர்கள் பிடித்தனர் ஓட்டம்,
கடந்தனர் தம் நாட்டு எல்லை கோட்டை!


கொல் யானையை வில் வீரன் கொன்றான்;
கொல் பாம்பை அனந்தகுணன் கொன்றான்;
இனி செய்வது என்ன வென்று சமணர்கள்,
தனியே மந்திராலோசனை செய்தனர்.


“பசுவை வணங்குவர், தெய்வமாக!
பசுவை எவரும் கொல்லத் துணியார்.
பசு மூலம் முடிப்போம் பாண்டியனை!
பசு நிறைவேற்றும் நம் ஆணையினை.”


மீண்டும் தொடங்கியது அபிசார ஹோமம்,
பாண்டிய மன்னனை அழித்து விடுவதற்கு.
மண்டிய ஹோமப் புகை மண்டலத்தில்,
குண்டத்தில் இருந்து வந்தது மாயப் பசு.


காற்றினும் கடுகி ஓடலாயிற்று மாயப்பசு,
வெற்றி கொள்ளும் வெறியுடன் மதுரைக்கு.
“பசு வதை செய்யலாகாது, பசு நம்மை
வதைக்கும் முன் ஈசனைத் தொழுவோம்!”


சந்திர மௌலிக்கே சினம் வந்து விட்டது!
நந்தி தேவனிடம் ஆணை இட்டார் பிரான்;
“அந்தப் பசுவை விரட்டியும், வென்றும்,
இந்த நாட்டினைக் காப்பது உன் கடமை!”


நந்திக்கும் தொற்றிக் கொண்டது சினம்.
செந்தீக்கனல் கண்களில்; காலடியில் புழுதி!
மாயப் பசுவை விரட்டலாயிற்று நந்தி,
பேய் போல ஓடத் தொடங்கியது அப்பசு.


விரட்ட விரட்ட ஓடிய பசு, நின்றுவிட்டது
விரைந்து களைத்துப் போய் ஓரிடத்தில்!
நந்தி கொம்புகளால் குத்தி எத்தியவுடன்
நம்பமுடியவில்லை! பசு மாண்டு விட்டது.


மாண்ட இடத்திலேயே அந்த மாயப்பசு
மாறி விட்டது ஒரு பெரிய மலையாக!
மீண்டு செல்லுமுன் நந்தியும் உடலை
மாற்றி விட்டது அங்கு ரிஷப மலையாக!


சூக்கும சரீரத்துடன் மீண்டது கயிலை,
ஆக்கினார் அதனை பழைய வடிவுடன்;
ஏக்கம் தீர்ந்தனர் நந்தியும், மன்னனும்,
ஊக்கம் அடைந்தனர் பாண்டிய மக்கள்!


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


# 29. KILLING THE KILLER COW.


When the Jain Gurus saw that Paandian King has slain the serpent created by them, they ran back to the safety of their country. The killer elephant and the killer snake had been killed, even before they could accomplish their mission! What was to be done?


People worship Cows! No one would kill a cow ! So they planned to create a cow through Yagna and finish off the Paandian king, with the help of the cow.


A terrible yagna was performed. This time a killer cow emerged from the yaaga kundam.Thecow had only one aim -to destroy Paandian king, along with Madhuraapuri.


It wasted no time and charged towards Madhuraapuri like a storm. It was like an animal possessed and was filled with wrath.


The king surrendered to Siva. Surely he could not kill a cow in cold blood! Siva himself got very angry this time. He told Nandhi, “It is your duty to chase and kill the cow and save the king and his capital city”.


The anger of Siva rubbed on to Nandhi. His eyes became burning coals. He thumped his feet-creating clouds of dust. His angry breath was like a hot stormy wind. He started chasing the devilish cow.


The cow ran everywhere trying escape from Nandhi and eventually became very tired. Nandhi gored the cow with his horns and tossed her body very heavily.


The cow landed on the earth quite dead. Her dead body changed into a mountain. Nandhi also cast off his physical body which became the Rishaba Mountain.


He returned to Siva in his sookshma sareeram. Siva gave him a new form as glorious as his original form. The king and the citizen were elated by Siva’s help in fighting the devilish cow.


 
Bhagavathy bhaagavatam - skanda 7

7#34a. ஆத்ம ஞானம்(1)

“நிறைந்த பாக்கியம் பெற்றவர்கள் நீங்கள்;
குறைவற்ற தன்மை உடையது என் ஸ்வரூபம்.


காட்டினேன் விஸ்வரூபத்தை உமக்கு – அதைக்
காண முடியும் என் கருணையினால் மட்டுமே.


யோக சாதனைகள் தராது இந்தக் காட்சியை!
வேத பாராயணம் தராது இந்தக் காட்சியை!


தேஹ, இந்திரிய உபாதிகள் தரும் பிறவியை;
தேஹம் செய்விக்கும் மேலும் பல கர்மங்களை.


கர்மங்கள் சேர்க்கும் பாவ புண்ணியங்களை;
கர்மங்கள் நிச்சயிக்கும் அடுத்த பிறவியினை.


பிறக்கும் ஜீவன் பற்பல யோனிகளில் இருந்து;
பிறவிக்கு ஏற்ப இன்ப, துன்பங்களைப் பெறும்.


புரியும் பிறவிக்கு ஏற்ற கர்மங்களை ஒரு ஜீவன்;
புரிந்த கர்மங்களுக்கு ஏற்ற பிறவியைப் பெறும்.


குயவனின் சக்கரம் போலவே சுழன்று, சுழன்று
இயங்கும் சம்சாரச் சக்கரம் விடாமல் தொடர்ந்து!


ஓயாமல் பிறந்து, இறந்து, பிறந்து உழலும் ஜீவன்;
ஓய்வில்லை இந்த சம்சாரச் சுழற்சிக்கு என்றறிவீர்.


அஞ்ஞானமே காரணம் ஜீவனின் ஜனன மரணத்துக்கு;
மெய்ஞானம் நீக்கும் ஜீவனின் சம்சாரத் தளைகளை.


ஒழிக்க வேண்டும் அஞ்ஞானத்தை வாழ்நாளிலேயே!
ஒழிக்க முடியும் அஞ்ஞானத்தை ஞானத்தால் மட்டுமே!


கர்மங்களால் நீக்க இயலாது அஞ்ஞானத்தை;
கர்மங்கள் உதவும் ஜீவன் ஞானம் அடைவதற்கு.


ஞானம் மட்டுமே பயன் தராது முக்தியை அடைய;
ஞான விசாரம் தொடர வேண்டும் கர்மங்களை.


ஏற்படுத்தும் கர்மங்கள் விஷயங்களில் பற்றினை;
ஏற்படுத்தும் பற்று, துவேஷம் மற்றும் அழிவினை.


ஞான விசாரம் இல்லாத கர்மங்களும் பயன் தராது.
ஞானமும் பயன் தராது கர்மங்களின் உதவியின்றி.”


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


7#34a. Aatma JnAnam (1)


Devi told the Devas,”You are very fortunate to view my viswaroopam. It can not be won by yoga sAdana nor by Veda pArAyaNa. Unless I wish to show it, no one will not get to see it.


The Body and Indriyaas (sense organs) force a jeevan to perform many actions – paving the path for the future births of a jeevan.


While living in a body endowed with powerful sense organs, a jeeva has to do many karmas which earn both good and bad effects. These karmas and their effects decide the next birth of the jeevan and the yoni from which it will take birth.


According to the yoni and its birth the jeeva enjoys pleasures and pains. It will perform more karmas depending on the present birth taken by it which will deicde its next future birth.


This sequence goes on and on like the wheel of a pot maker without any break. The jeeva takes birth, dies, takes birth and dies endlessly.

The true cause for the samsAra consisting of endless jananam (birth) and maraNam (death) is the Ignorance of the jeeva. True knowledge can break this endless cylce of samsAra and liberate the jeevan.


The ignorance can be removed only by true knowledge. Nothing else can remove the ignorance. Good Karmas may indirectly help by helping to acquire true knowledge and thereby remove ignorance.


Karmas create Likes and Dislikes leading to rAgam and dwesham. So neither Karma not JnAnam can free jeeva from the bondage of samsAra by itself. Karma should be followed by JnAna vichAram (pursuit of true knowledge). GnAna vichAram must be taken up after performing the prescribed karma.”



 
bhagavathy bhaagavatam - skanda 2

2#5b. வலைஞனின் நிபந்தனை

மன்னன் காட்டிய அன்பால் மகிழ்ந்தாள்;
புன்னகையுடன் பேசினாள் சத்தியவதி.


“பரிமளகந்தி என் பெயர்; வலைஞன் மகள்.
படகோட்டுவது எங்கள் குலத் தொழில்!


தனிமைக்குக் கரணம் தந்தையின் ஆணை;
தந்தை தாசன் ஒரு பிரபல வலைஞன் இங்கு.


திருமணம் ஆகவில்லை இதுவரையிலும்;
திருமணம் நடக்கும் தந்தை ஆணைப்படி!”


“மான் விழியாளே! இளமையை வீணாக்காதே!
மணக்க விரும்புகிறேன் உன்னை என் மனதார.


மனைவி இல்லாத எனக்கு நீ தர்மபத்தினி.
மன்மதன் வாட்டுகின்றான் கண்டது முதல்.


இருந்தாள் ஒரு மனைவி முற்காலத்தில்;
பிரிந்தாள் என்னிடமிருந்து ஒரு பூசலால்.


இழந்தேன் என் வசம் உன்னைக் கண்டதும்;
வழங்குவாய் அனுமதி மணந்து கொள்ள!”


“சுதந்திரம் இல்லாத கன்னிப்பெண் நான்;
சுதந்திரம் உள்ளவளாகத் தோன்றினாலும்.


வலைஞன் மகளானாலும் வழி தவறேன்.
பழிதரும் செயல்களைச் செய்யமாட்டேன்.


தந்தையிடம் பேசி அனுமதி பெறுங்கள்;
தந்தை நடத்துவார் நம் திருமணத்தை!”


விரைந்து சென்றான் வலைஞன் இல்லம்.
வரவேற்றான் தாசன் மன்னனை வணங்கி!


“வாராதவர் வந்த காரணத்தைக் கூறலாமே”
வலைஞன் வலை வீசினான் பேச்சிலேயே!


“பரிமள காந்தியை மணக்க விழைகிறேன்
‘சரி’ என்று நீங்கள் சொல்ல வேண்டுமாம்!”


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


2#5b. Meeting with Daasan


Satyavati was pleased to have won the king’s attention favorably. She replied to him with a sweet smile, “
I am called ParimaLa Gandhi. I am the daughter of DAsan – a fisherman. Rowing boat across Yamuna is our profession. I live alone here as ordered by my father. I am not yet married. I will marry the person my father chooses for me.”

Santhanu told her, “You are wasting your beauty and youth by living here alone. I want to marry you more than anything else in the world. I do not have a wife. You will become my queen. I had a wife earlier, but she went away from me due to a misunderstanding. I have lost control over myself after seeing you. Please give your consent to marry me!”

“I may be living here alone, but that does not mean that I am at liberty to marry anyone on my own choice. I will not do anything that will bring bad name to my family. I will not waver from the path set for me by my father. Please talk to my father and he will surely conduct our marriage himself. ” Satyavati told the king.

The king hurried to the house of the fisherman DAsan who was duly surprised to see the king. DAsan welcomed the king and asked the purpose of his visit. The king told him,” I want to marry your daughter ParimaLa Gandhi. She told me to talk to you and seek your permission. That is was has brought me here to your house.”



 
kanda purANam - mahEndra kANdam

9a. ஜயந்தன்

பானுகோபனால் சிறைப் பிடிக்கப்பட்டு
பன்னெடுங்காலம் சிறையில் வாடினர்.


ஜயந்தன் முதலிய தேவர்களின் குழாம்
மயங்கினர், துயரக் கடலில் வீழ்ந்தனர்.


“சுவர்க்க போகங்கள் பறி போயின!
சுவர்க்கமே எரிந்து சாம்பலானது!


அன்னை, தந்தை எங்கே உள்ளனர்?
என்னை விடுவிக்க வருவார்களா?”


சிறைக் காவலர் வந்தனர் அங்கு!
சிறைப்பட்ட தேவரைச் சினந்தனர்.


“இந்திரன், இந்திராணி எங்கே உள்ளனர்?
தந்திரம் செய்யாமல் சொல்லி விடுங்கள்!


எந்த உலகில் அவர்கள் ஒளிந்திருந்தாலும்
இந்தக் கணமே அதை நீவீர் கூற வேண்டும்!”


“விண்ணுலகை விட்டு ஓடியது உண்மையே.
பின்னர் நடந்ததை யாம் அறிகிலோம்!”


கூற மறுத்ததால் கோபம் அடைந்தனர்.
சிறைப்பட்ட தேவர்களைத் துன்புறுத்தினர்.


உடலைச் சேதித்தனர் பல வழிகளில்!
கடைந்தனர் காதில் விட்டுத் தோமரத்தை!


மார்பில் அடித்தனர்; ஓங்கி அறைந்தனர்.
சேர்த்து மோதித் தலையைத் தாக்கினர்.


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


3#9a. Jayanthan in prison.


The Devas captured by BhAnukoban withered in his prison. Indra’s son Jayanthan now lamented, ” We lost our life of luxury in the Heaven. The Heaven has been burned down to ashes. I have no idea where my parents are now! Will my father ever come here and release me from this prison?”


The asura soldiers came there at that time. They demanded to know about the hiding place of Indra and IndrANi. When the Devas denied of any knowledge about their hiding place, the soldiers became very angry and started torturing the Devas.


They cut off the various body parts of the Devas; they churned into the ears of the Devas, hit them on their chest and banged their heads together.



 
The 64 Thiru viLaiyAdalgaL

30. மெய் காட்டியது.

# 30. மெய் காட்டியது.

குல பூஷண பாண்டிய மன்னனின்
குறை இல்லாத சேனைத்தலைவன்
சுந்தர சாமந்தன் என்னும் சுத்த வீரன்;
விந்தை அவன் அடியார்க்கடியான்!


குறுநில மன்னன் ஒருவன் சேதிராயன்.
கருவத்தால் பகைத்தான் பாண்டியனை;
படை எடுக்கப் போட்ட அவன் திட்டத்தை
தடை செய்ய விரும்பினான் குலபூஷணன்.


சேனாதிபதியிடம் சொன்னான் மன்னன்,
“சேனையை வலுப்படுத்த வேண்டும் நாம்.
வேண்டிய பொன் பொருளை பெற்றுக்கொள்!
வேண்டிய வீரரைச் படையில் சேர்த்துக்கொள்!”


பொன்னும் பொருளும் பெற்றதும் அவன்
முன்னைய விருப்பம் நிறைவேறலானது.
திருப்பணிகள், தானங்கள், தருமங்கள்,
திருப்தியுடன் அடியவருக்கு இன்னமுது என.


ஒற்றன் சொன்னான் கண்காணித்த பிறகு,
கொற்றவனிடம் நடக்கும் நிகழ்சிகளை.
“திருப்பணிக்கே செலவாகின்றது நீங்கள்
விருப்பமுடன் அளித்த பொருள் எல்லாம்!”


சுந்தர சாமந்தனிடம் சொன்னான் மன்னன்,
“எந்த வீரர்கள் சேர்ந்துள்ளனர் படையில்,
என்று அறிய ஆவல் அடைகின்றேன், நீ
இன்று போய் நாளை அவர்களைக் காட்டு!”


“பொன் பொருள் அத்தனையும் நான்
உன் அடியவர்களுக்கே அளித்தேன்!
படையைக் காட்டு என மன்னன் கேட்டால்
எதைக் காட்டுவேன் நான்?” என்று புலம்ப,


“சுந்தர சாமந்தா! கவலை வேண்டாம்
இந்த மன்னன் கேட்கும் படை ஒன்று
உரிய நேரத்தில் வந்து சேரும் அங்கு
அரிய படைக்கலங்களுடன் அறிவாய்!”


சிவகணங்கள் மாறின சேனை வீரர்களாக!
சிவகணத் தலைவர்களே குதிரை வீரர்கள்;
சிவன் தன் நந்தியைப் பரியாக்கி விட்டான்.
சிவன் தானே ஒரு சேவகன் ஆகிவிட்டான்.


அறிமுகம் செய்தான் சுந்தர சாமந்தன்,
அரிய படையினை, குதிரை வீரர்களை,
சேவகன் சிவனோ பரிசுகள் பெற்றார்
பரியினை ஐந்து கதிகளில் நடத்தி!


நல்ல சேதி அப்போது வந்து சேர்ந்தது!
கொல்லப்பட்டான் சேதிராயன் புலியால்!
படை எடுப்புகள் இல்லை இனிமேலே!
படை வீரர்கள் திரும்பலாம் தம் நாடு!


மாயமாகப் படைவீரர்கள் மறையவே
மயக்கம் தீர்ந்தது மன்னவன் மனத்தில்;
திருவிளையாடல்கள் புரியும் ஈசனின்
திரு அடியவர் தொண்டு தொடர்ந்தது!


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


# 30. APPEARING IN PERSON.


Sundara Saamanthan was the senaapthy of Kulabooshana Paandian.He was sincere devotee of the devotees of Siva.


Sedhiraayan was the ruler of a small territory. He became puffed with pride and ego and challenged the Paandian king. He was planning a battle on Paandian kingdom.

Kulabooshana Paandian wanted to strengthen his army and keep them in good shape for the forthcoming battle.

He told Saamanthan, his army chief, that any amount of money was permitted to be used to recruit new swordsmen from different countries.


Saamanthan took a huge sum of money but started spending it in charitable work and feeding the Siva bhakthas. The news reached the king through the spies appointed by him.


The king told Saamanthan to parade the new recruits of the army the next day. Saamanthan was in deep trouble since he would not be able to show a single new recruit.


Siva promised him to be there at the appointed time with a talented, spirited and well equipped army.


The Siva ganaas became the soldiers on foot. The leaders of the Siva ganaas became the soldiers on horse back. Siva transformed Nandhi into a beautiful horse and himself became a sevagan!


The excellent army arrived at the appointed time. The king was duly impressed and became very pleased.Nandhi turned into horse performed the various strides and king presented Siva the sevgan with several gifts.


Then the news reached them that Sedhiraayan had been killed by a tiger and the battle has been called off. The king told the new recruits that they might return home. Immediately every one vanished without a trace!


Kulabooshana Paandian understood it as the divine drama of Lord Siva.He allowed Sundara Saamanthan to continue his charitable work as before.


 
bhagavathy bhaagavatam - skanda 7

7#34b. ஆத்ம ஞானம் (2)

கர்மங்கள் ஒழுங்குபடுத்தும் ராகத் துவேஷங்களை;
கர்மங்கள் பரிபாகப் படுத்தும் செய்பவர் இதயத்தை.

கர்மமும், ஞானமும் தொடர்பு உடையனவா? அல்லவா?
கர்மமும் ஞானமும், இருளும் ஒளியும் போல மாறுபடும்.

இருள் இருக்கையில் ஒளி இருக்க முடியாது – அதே போல
இருள் இருக்கவே முடியாது நல்ல ஒளி இருக்கும்போது.

சூரியன் உதித்ததும், இருள் மறையும்; உலகறியும் இதனை.
ஞானம் உதித்ததும், கர்மங்கள் அனைத்தும் மறைந்து விடும்.

சித்த சுத்தி அடைந்தவனுக்கு மட்டுமே உதிக்கும் மெய்ஞானம்;
சித்தம் சுத்தமாகும் சுயநலம் கருதாமல் கர்மங்கள் புரிவதால்.

அன்னமய கோசமாகிய ஸ்தூல உடல் ஐம்பூதங்களால் ஆனது;
அனுபவங்களின் கோவில் என்று கருதப்படுவதும் இதுவே.

நரை திரை மூப்பு உடையது ஸ்தூல உடல்; அழியும் தன்மையது;
மாறும் தன்மை வாய்ந்தது; ஆத்மாவுக்கு வருத்தம் தருவது இது;

பிராணமய கோசம் ஆகும் சூக்ஷ்ம உடல் – மனம், புத்தி, பஞ்சப்
பிராணன், ஞானேந்திரியங்கள், கர்மேந்திரியங்கள் அடங்கியது.

அறிவிக்கின்றது ஆத்மாவுக்கு சூக்ஷ்ம உடல் அனுபவங்களை;
வருந்துகின்றது சூக்ஷ்ம உடலும் அனுபவங்களின் தாக்கத்தால்.

அனுபவங்களை அனுபவிப்பது ஸ்தூல உடல் – ஆத்மாவுக்கு
அனுபவங்களை அறிவிப்பது சூக்ஷ்ம உடல் என்று அறிவீர்.

அனுபவிக்காமலும், அறிவிக்காமலும் இருந்து கொண்டு
அனாதியாக அஞ்ஞானத்தில் அமிழ்வது காரண தேகம்.

வருத்தம் தரும் ஆத்மாவுக்கு தன் அறியாமையினால்;
வருந்தச் செய்யும் இரு கோசங்களை அனுபவங்களால்.

விஞ்ஞான மயகோசம் அறிவு மயமானது; தெளிவானது;
ஆனந்தமய கோசம் இன்ப மயமானது; விருப்பமானது.”

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

7#34b. Aathma JnAnam (2)

“Karmas try to regulate the feelings of RAgam and DwEsham. Karmas purify the doer’s heart. Are the Karmam and JnAnam related to each other or not?

Karmam and JnAnam are related to each other in the same way light and darkness are. They are mutually exclusive. When there is light, the darkness disappears as it gets dispelled. When it is dark there can be no light.

When the Sun rises the darkness is dispelled. When the JnAnam arises in the jeeva, Karmam disappears. The mind is purified by doing Karmam with a spirit of selflessness. When the mind is purified of its six enemies (KAma, Krodha, Moha, Lobha, Mada and MArcharya) JnAnam is born.

The sthoola sareeram is the ‘Annamaya kosam’ ( the gross body) made up of the five elements (pancha bhootas). This is the body which experiences the pleasures and pains. It changes constantly with the passing time and develops the symptoms of old age. It can perish. It gives sorrow by suffering.

The sookshma sareeram is the ‘prANamaya kosam’ (the subtle body). It consits of these seventeen elements viz, the five JnAnEndriyAs, the five KarmEndriyAs, the Pancha PrANa, The mind and The Buddhi. Sookshma sareeram conveys the experiences felt by the gross body to the Aatma and there by it also suffers.

The KAraNa sareeram (the causal body) neither suffers like the sthoola sareeram nor conveys the experiences like the sookshma sareeram. But it is steeped in ignorance from time unknown. It makes the Aatma suffer by its utter ignorance.

The VijnAnamaya kosam is filled with Knowledge and the Aanandamaya kosam is fil
led with happiness or bliss. ”
 
bhagavathy bhaagavatam - skanda 2

2#5c. நிபந்தனை

வலைஞன் தாசன் வலையை வீசினான்;
விலை மதிக்க முடியாததைக் கேட்டான்!


“நிபந்தனை ஒன்று உள்ளது மன்னா! அது
பந்தப்படுத்தும் உன்னுடைய சந்ததிகளை.


அரசனாக வேண்டும் சத்தியவதியின் மகன்;
வரக்கூடாது எந்தத் தடையும் இதற்கு இனி.”


தயங்கினான் சந்தனு நிபந்தனையைக் கேட்டு!
மயங்கினான் சந்தனு காங்கேயனை நினைத்து!


‘மூத்தவன் இருக்க இளையவன் அரசாள்வதா?
ஏற்றுக் கொள்ளுமா இதனை இந்த உலகம்?


மறுத்துச் சொன்னால் வலைஞன் தாசன்
மறுத்து விடுவான் மகளைத் தருவதற்கு!’


இருதலைக் கொள்ளி எறும்பானான் சந்தனு!
தர்மநெறி ஒரு புறம், காம வெறி மறு புறம்!


விடை கூறவில்லை வலைஞன் தாசனுக்கு!
விடை பெறவில்லை பரிமள கந்தியிடமும்!


விரைந்து திரும்பினான் தன் அரண்மனைக்கு.
கரைந்தான் மனக் குழப்பத்தில் குமுறியதால்.


தந்தையின் மாற்றதைக் கண்டான் தனயன்;
சந்தனுவிடம் கேட்டான் துயரின் காரணம்!


“எந்தப் பகைவனை எண்ணி வருந்துகிறீர்கள்?
அந்தப் பகைவனை வென்று வருவேன் நான்!


தந்தையின் துயரைக் களையாத மகன்
தனயன் என்ற பெயருக்கு தகுந்தவனா?


தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை எனத்
தியாகம் செய்தான் ராமன் அரசுரிமையை.


தந்தையின் ஆணைப்படித் தாயைக் கொன்று பின்
விந்தையாகத் தாயை உயிர்ப்பித்தான் பரசுராமன்.


உடல் நீர் தந்தது, எனவே உமக்கு உரியது
உடன் நிறுத்துங்கள் துயரம் அடைவதை.


தயங்க வேண்டாம் உண்மை கூறுவதற்கு;
இயலாத காரியம் என்று ஒன்றும் இல்லை!”


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


2#5c. The condition


DAsan told King Santhanu a condition he had least expected to hear. “I have one condition oh king and it will bind your race for ever. The son born to my daughter must be crowned as the king! No hurdle should ever come to the crowning of my grandson”

King Santhanu was shocked to hear this condition. He remembered his son Yuvaraj KAngeyan who was the rightful successor to his throne. He was in a real dilemma now.

The world would not accept a younger brother superseding an elder brother to become the king. At the same time if he refused to this condition, DAsan would refuse to marry ParimaLa Gandhi to him.

He left the place without uttering a word as reply and without taking leave of ParimaLa Gandhi. He rushed back to his palace and was immersed in deep sorrow. KAngeyan noticed the change in his father and asked him the cause for it.

KAngEyan asked his father, ” Which enemy are you worrying about my dear father? I shall conquer him and put an end to your worry. What is the use of being a son if I can not remove the cause of your sorrow?

Rama gave up his throne and took up vana vAsam as commended by his father king Dasaratha. Parasu Raman beheaded his mother as commanded by is father and again brought her back to life by performing a miracle.

This body has been given to me by you. It belongs to you dear father. Please stop worrying and tell me what is bothering you dear father. There is no problem on earth which can’t be solved by us”



 
kanda purANam - mahEndra kAndam

9b. ஜயந்தன் புலம்புதல்

தண்டனை தந்தவர் தளர்ந்து போயினர்!
உண்ட அமுதம் காத்தது தேவர்களை!


ஒறுப்பதால் ஒரு பயனும் இல்லை எனச்
சிறைக் காவலில் வைத்தனர் மீண்டும்.


சிவனை நினைவு கூர்ந்தான் ஜயந்தன்;
அவனை நினைத்துப் புலம்பலானான்.


“கங்கையைச் சடைமேல் அணிந்தவரே!
திங்களைத் தலை மேல் தாங்கியவரே!


தொண்டர்கள் துயரைத் தீர்ப்பவரே!
கண்ணுதற்பிரானே! காத்தருளும்.


உம்மைத் தவிர யார் உளர் வல்லவர்
எம்மை இடர்களிலிருந்து காப்பதற்கு?


எந்த மேன்மையும் தேவை இல்லை!
இந்த இடரை மட்டும் நீக்குவாய் நீ.


விண்ணுலக வாழ்வும் வேண்டாம்!
விண்ணுலக போகங்கள் வேண்டாம்.


தவம் செய்து அடைவேன் உம் திருவடி.
தாரும் உமதருளை எனக்கு உடனடி.”


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


3#9b. Jayanthan laments.


The asuras who were punishing the Devas themselves grew tired. The nectar protected the Devas and their limbs grew back as soon as they had been cut off by the asuras. The asura soldiers locked up the Devas again – since it was no use trying to punish the Devas.


Jayanthan remembered lord Siva and started lamenting thus. “Oh Lord who sports Ganga on the matted coils of his hair; who adorns his head with the crescent moon, who can protect his devotees from all dangers, who has a third eye in his beautiful forehead! Who but you can protect us now?


Just free us from our present troubles. We do not seek from you anything else. We do not desire a life of luxury in Heaven. We will do penance and and reside in your lotus feet. Save us now!”



 
The 64 Thiru ViLaiyAdalgaL

31. உலவாக்கிழி அளித்தது.

# 31. உலவாக்கிழி அளித்தது.

குலபூஷண பாண்டியன் விளங்கினான்
குலத்துக்கே குன்றிலிட்ட விளக்காக.
விரதங்களை விடாமல் அனுஷ்டித்ததால்,
கர்வம் பெருகலாயிற்று மெது மெதுவே!

மறையவர்களுக்கு இல்லை மரியாதை;
மழையும் பொய்த்தது வேள்விகள் இன்றி;
வறுமையின் கொடுமை அதிகரிக்கவே,
குறைந்து போயின யாகமும், வேள்வியும்.

நினைத்து வருந்தினான் குலபூஷணன்;
மனத்தால் வேண்டினான் பெருமானிடம்,
“உன் திருப்பணிகளுக்கே செலவிட்டேன்
என் பொக்கிஷங்களை எல்லாம் ஐயனே!

வறுமைகள் நீங்கி வளமை கொழித்திட,
வழி ஒன்றைக் காட்டுங்கள் என் ஐயனே!”
குறை மன்னனிடம் இருந்ததால், பிரான்
மறுமொழி கூறாமல் மௌனம் காத்தான்.

தரையில் படுத்து, இறையை நினைத்தவனின்
கனவில் தோன்றினான் சித்தர் சிவபிரான்;
“மறையவர்களை நீ மதிக்கவில்லை மன்னா!
மறை என்பது வெறும் ஓலைச்சுவடிகள் அல்ல!

என் இருக்கை, என் வாஹனம், என் கண்கள்,
என் வாக்கு, என் வடிவம், என் சக்தி வேதமே!
வேள்விகளே வான்மழைக்கு வித்தாகும்,
வேள்விகள் இன்றேல் வான்மழை பொய்க்கும்!

பொன், பொருள் இல்லை என்று அஞ்சற்க!
உன் தேவைகளை எல்லாம் நிறைவேற்றும்
உலவாக்கிழி ஒன்று உவந்து அளித்தேன்!
செலவாக்கினாலும் குறையாது என்றும்!

இந்தப் பொற்காசுகளின் உதவியால் நீயும்
சொந்த நாட்டின் வறுமையைத் தீர்ப்பாய்!”
திரு நீற்றை நெற்றியில் இட்டுவிட்டுத் தம்
திருக் கரங்களால் கிழியினை அளித்தார்.

விழித்துப் பார்த்து வியந்தான் மன்னன்,
கிழி இருந்தது, பொன்னால் நிறைந்தது;
அரனை வணங்கி ஆனந்தம் அடைந்தான்;
அரியணை மேல் அதை வைத்துப் பூஜித்தான்.

வாரி வழங்கினான் மறையவர்களுக்கு,
குறைவற்ற யாக, யக்ஞங்கள் நடந்தன;
மாரி பொழிந்தது நிறைவான யாகத்தால்,
வறுமை ஒழிந்தது, வளமை செழித்தது.

பொன்னாலே இழைத்தான் குலபூஷணன்,
பொன்னார்மேனியன் கோவில் விமானத்தை.
அன்னையின் கோவிலை, அறுகால் பீடத்தை,
அழகுற அமைத்தான் அதன் கோபுர வாசலை.

வேதியர், வேதாந்தியர், வியாகரணர்,
சிவ விரதர், நியாயிகள், சிவாகமியர்,
துறவியர் என்னும் எல்லாவித மக்களும்
வறுமை நீங்கிச் செழித்து வாழ்ந்தனர்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

31. THE INEXHAUSTIBLE BAG OF GOLD.

Kulabooshana Paandian was a very good king. He observed all the Vathams and gradually became very proud. He slighted the Brahmins All the yaagas and Yagnas came to a halt.The rains failed and the country was afflicted by a famine.

The king prayed to Lord Siva,”I spent my entire treasury towards many welfare and charitable activities. My citizens are suffering now. Please show me a way out.”

Since the king was at fault by neglecting the Brahmins, God maintained silence and did not reply to the king.

The king was lying on the barren floor, quite worried. In his dream, Lord Siva appeared as a sidhdhar. and spoke to the king thus:

“You neglected the Brahmins and their yaaga, yagnas Oh King! Vedas are not just a bundle of palm leaf manuscripts. I reside in Vedas, I ride on Vedas, My eyes, my words, my power, my form are the Vedas.

Yagnas bring forth the rains. When the Yagnas are neglected, rain fails. Do not worry that your treasury is empty. I shall give you an inexhaustible bag of gold coins. Use it wisely!”

The sidhdhar applied the holy ash on king’s forehead and blessed him. The king woke up and found the bag of gold coins in reality. Kulabooshanan was overwhelmed by the grace of God. He did puja to the bag of coins placing it on his throne.

He spent the gold wisely.The Brahmins resumed the Yaagaas and yagnaas. The rains returned. Famine vanished and prosperity returned.

The vimaanam of Soma Sundara Sivan was covered with gold leaves. The Meenakshi temple was duly decorated. All kinds of people from gruhastaas to sanyaasis lived happily in peace and prosperity.

 
bhagavathy bhaagavatam - skanda 7

7#34c. ஆத்ம ஞானம் (3)

“பரமாத்மா ஆதியும், அந்தமும் அற்றது;
நிரந்தரமானது அது;
நித்தியமானது அது;

இன்பமோ, துன்பமோ அடையாது பரமாத்மா.
அணுவிலும் சிறியது; அண்டத்திலும் பெரியது.


உறைகின்றது ஜீவனின் இருதய குஹையில்;
தருகின்றது தன் மேன்மைகளை ஜீவனுக்கு.


மனித உடல் ஒரு ரதம் என்று கொண்டால்,
இனிய ரதத்தின் சொந்தக்காரன் இறைவன்.


அறிவு ஆகும் ரதத்தைச் செலுத்துகின்ற சாரதி;
அடங்காத குதிரைகள் ஆகும் இந்திரியங்கள்;


ஆகும் மனம் அதில் பூட்டியுள்ள கடிவாளம்;
அனுபவிக்கும் ஜீவாத்மா விஷயங்களை;


அனுபவித்திட உதவிடும் இந்திரியங்கள்;
அனுபவித்திட உதவிடும் ஜீவனின் மனது;


ஸ்தூல, சூக்ஷ்ம, காரண சரீரங்களில் இருந்து
ஸ்திரமாக ஆத்மாவைப் பிரித்துணர்ந்தவன்;


பரமாத்மாவைத் தன் ஆத்மாவில் காண்பவன்;
பரமபதம் சென்றடைவான் மிகவும் உறுதியாக.


தியானிக்க வேண்டும் தேவியை இடையறாது,
பாவிக்க வேண்டும் வாசக, வாச்சியத்தினாலும்.


ஹகாரம், ரகாரம், ஈகாரம் ஒன்றாகிவிட்டால்
ஹ்ரீங்கார ஸ்வரூபமான துரியம் ஆகிவிடும்.


குறிக்கும் ஸ்தூல சரீரத்தை இதன் ‘ஹ’காரம்
குறிக்கும் சூக்ஷ்ம சரீரத்தை இதன் ‘ர’காரம்


குறிக்கும் காரண சரீரத்தை இதன் ‘ஈ’காரம்
குறிக்கும் துரீய நிலையினை ‘ம்’ என்பது.


தியானிக்க வேண்டும் தேவியை விடாது
அகண்ட சச்சிதானந்த ஸ்வரூபிணியாக.


தியானம் தர வேண்டும் சாக்ஷாத்காரத்தை.
தியானத்தால் பெறலாம் தேவியின் தரிசனம்.


கிடைக்கும் இறையுடன் ஒன்றி விடும் பேறு;
அடையும் அஞ்ஞானம் முற்றிலுமாக அழிவு”.


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K . ராமன்


7#34c. Aatma JnAnam (3)


ParamAtma has neither a beginning nor an end. It is permanent. It is eternal. It does not enjoy pleasures nor suffer pains. It is smaller than an atom and also is bigger than the whole Universe. It resides in the heart of every jeeva. It extends and lends it own greatness to the jeeva.


If the body of a jeeva is considered to be a chariot, then God is the owner of this beautiful chariot. Intellect is the charioteer. The unruly sense organs are the uncontrollable horses attached to the chariot. Mind the girdle controlling horse drawing the chariot.


A jeeva enjoys pleasures and suffers pains. The sense organs and the mind help the jeeva to experience the pleasures and pains.


If a jeeva has learned to differentiate his Aatmaa form his three sareerams and his pancha kosams, and if he is able to see the ParamAtma in his own Aatma, he will surely reach the highest destination as his final abode.


One must meditate on Devi without interruption. One must employ his mind, words and body in her worship. ‘Hreem’ is the mantra of Devi. It denotes ‘HreenkAra swaroopa thureeyam’ of Devi.


In this the ‘H’ represents the gross body (the sthoola sareeram); the ‘r’ represents the subtle body ( the sookshma sareeran ) and ‘ee’ represents the causal body (the KAraNa sareeram) and ‘m’ denotes the state of Tureeyam.


The dhyAnam should be directed towards the akanda-sat-chit-Aanandha-swaroopiNi-Devi. The dhyAnam must culminate in the sAkshAtkAram of Devi (the dharshan of Devi).


One who could achieve this will achieve oneness by merging with Devi herself. His ignorance will be destroyed and true knowledge will be born.



 
bhagavathy bhaagavatam - skanda 2

2#5d. சத்ய விரதன்

சந்தனு கூறவில்லை பரிமளகந்தி பற்றி!
சிந்தனைக்குக் காரணம் நிபந்தனை என.

உண்மையைக் கண்டறிய காங்கேயன் – சில
பண்புள்ள அமைச்சரின் உதவியை நாடினான்.

கூச்சப்பட்டு சந்தனு மறைத்த உண்மையை
பேச்சுக் கொடுத்துக் கண்டறிந்தனர் அவர்கள்.

சென்றான் வலைஞனிடம் காங்கேயன் உடனே,
சொன்னான்,” தந்தைக்கு மகளைத் தருவீர்!” என

“தாயாவாள் அவள் எனக்கு; மகன் ஆவேன் நான்.
தாஸானு தாஸனாகத் தொண்டு செய்வேன்!” என

“அறிவேன் அரசுரிமை உம்முடையது என்று.
விரும்புகிறேன் என் பேரனை அரசனாக்கிட!

மணம் புரிந்து கொண்டீர் என்றால் – பிறகு
மண்ணை ஆளுவான் அவள் பெறும் மகன்.”

“காரியத்தில் கண்ணாக இருக்கும் வலைஞரே !
கூறிவிட்டேன் உம் மகளை என் அன்னை என்று.

முடி சூடி அரசாள மாட்டேன் நான் ஒருநாளும்!
பிடிவாதம் பிடிக்க வேண்டாம் இதற்கு மேலும்!

பரிமள கந்தியின் மகனே அரசாள்வான் என
அறுதியிட்டு உறுதியாகக் கூறுகின்றேன் நான்!”

“சுபவிவாஹம் நடந்து பிறக்கும் பிள்ளைகள்
அபகரித்து விடுவார் அரசுரிமையை மீண்டும்!

தடுக்க முடியுமா உங்களால் இதை என்று
எடுத்துக் கூறுங்கள் விளக்கமாக எனக்கு!”

“பிறப்பார்கள் எனக்கு பலமிக்க பிள்ளைகள்
விருப்புடன் இல்லறம் நடத்தினால் மட்டுமே.

எந்தப் பெண்ணையும் திருமணம் புரியேன்!
இந்த விரதம் தொடங்குகிறது இப்போதே!”

பெயர் மாறியது சத்யவிரதன், பீஷ்மன் என!
பெண்ணைத் தந்தான் தாசன் சந்தனுவுக்கு.

மணம் புரிந்து இன்பம் துய்த்தான் சந்தனு – திரு
மணத்துக்கு முன்பே மகன் பிறந்ததை அறியாமல்.

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


2#5d. Sathya Vrathan


King Santhanu did not talk about ParimaLa Gandhi and the condition laid by her father DAsan to the Yuvaraj KAngeyan. But KAngeyan approached a few loyal and trustworthy ministers and told them to find out the cause of sorrow in the king.

The clever ministers found out the truth during their talks with the king and told the news to KAngeyan. He went to meet DAsan with those ministers. He requested DAsan,”Please get your daughter married to my father. She will become my mother and I will serve her as a loyal son should do – all my life.”

DAsan said, “I know that you are the yuvarAj and the rightful heir to the throne. But I want my daughter’s son to become the next king.”

KAngeyan replied,” I have accepted your condition. I will never sit on the throne as a king and rule my country. I promise you that I shall make ParimaLa Gandhi’s son the next king. “

DAsan was still suspicious and he said, “You may forgo your right to the throne but if you get married and beget powerful sons, surely they would grab the kingdom from my grandson. How are you going to prevent such a thing from happening?”

KAngeyan now made one more terrible promise to DAsan. “I will not get married nor produce sons who would become a threat to your grandson. I will remain a staunch bachelor all my life and my oath comes into effect right now.”

Every one present were thunderstruck by this terrible oath and KAngeyan came to be known by these two names as Sathya vrathan and Bheeshman.

DAsan felt reassured and agreed to the wedding of ParimaLa Gandhi with Santhanu. King Santhanu became a happy man and enjoyed marital bliss with his fragrant wife – completely unaware of the fact that she had borne a son to Sage ParAsharA long ago – long before their wedding.

 
kanda purAnam - mahEndra kANdam

10. ஜயந்தனின் கனவு

பெருந்துயர் அடைந்த தேவர் குழாத்திற்கு
திருவருள் செய்ய விழைந்தான் முருகன்.


மயக்கம் போன்ற ஓர் உறக்கம் தந்தான்;
மயக்கத்தில் ஆறுமுகனாக மாறி வந்தான்.


தொழுத ஜயந்தன் சொன்னான் – “எப்
பொழுதும் கண்டதில்லையே உம்மை!”


“மைந்தன் கொன்றை அணி சிவனுக்கு,
உந்தன் துயர் போக்க வந்த கந்தன்.


அழித்துவிட்டேன் தாரக, கிரௌஞ்சரை,
எழுந்தருளி உள்ளது திருச்செந்தூரில்.


உன் தந்தை எம்முடன் தங்கி உள்ளான்
உன் தாய் மேருமலையில் உள்ளாள்;


வீரவாகுத் தேவர் வந்துள்ளார் தூது.
சூரபத்மனைக் காணும்முன் வருவார்.


படையுடன் இங்கு வந்து சேருவோம்,
கடையனைப் போரில் வெல்லுவோம் .


தேவர்கள் நீங்குவர் இக் கொடுஞ்சிறை.
அவர்கள் அடைவர் சுவர்க்க போகம்!”


கனவில் காட்சி தந்த சிவன் மைந்தனை
மனமகிழ்ந்து போற்றினான் ஜயந்தன்.


அனைத்து தேவர்கள் கனவிலும் வந்தான்!
அனைவரும் வியந்தது கந்தன் கருணையை.


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


3#10. Jayanthan’s dream.


Murugan took pity of the suffering Devas. He wanted to console them. He made them go into a sleep-like trance. He appeared with his six faces in Jayanthan’s dream.

Jayanthan paid his respects to Murugan and said, ” I have never seen you before. You are neither Siva nor VishNu!”


“I am Siva’s son Skandan. I have come to deliver you from your sorrows and sufferings. I have destroyed TArakan and Krounjan. I am now camping in Thiruchchendoor. Your father is with me. Your mother is on Mount Meru.


VeerabAhu has been sent as a messenger to Soorapadman. He will meet you here before he meets Soorapadman. We will march here with our army and win Soorapadman in a battle. You will be released from the prison and placed in heaven where you belong to!”


Jayanthan became very happy. Murugan had appeared in every Devan’s dream. They all woke up and started praising the mercy of Murugan.



 
The 64 Thiru ViLaiyAdalgaL

32. வளையல் விற்றது.

# 32. வளையல் விற்றது.

ரிஷிகள் பெரும் தவச் சீலர்கள் என்றால்,
ரிஷி பத்தினிகள் என்ன சளைத்தவர்களா?


கற்பின் கனலென வாழ்ந்து வந்தனர்;
கற்பு நிலையை சிவன் சோதிக்கும்வரை!


அற்புத வடிவை உடைய பிட்சாடனர்;
கற்பனைக் கெட்டாத மன்மத வடிவினர்;


தாருகா வனத்தில் நுழைந்த உடனேயே,
தாறுமாறு ஆயிற்று ரிஷிபத்தினிகள் நிலை.


பருவமும், உருவமும் கொண்டவர் மீது,
நிறை அழிந்து காம வயப்பட்டனர் அந்தோ!


பிக்ஷையிடும் போது விழுந்தன அத்துடன்
ரக்ஷையாகக் கைளில் இருந்த வளைகள்!


தொழுதனர் பிக்ஷாண்டியின் திருவடிகளை;
அழுதனர் தம்மை ஏற்றுக் கொள்ளும்படி;


இழந்தனர் இடையணி மேகலையையும்;
நெகிழ்ந்தனர் மானம் மறைக்கும் ஆடைகள்!


“இட்டு விடுங்கள் அவிழ்ந்த வளைகளை!
கட்டி விடுங்கள் அவிழ்ந்த ஆடைகளை!”


நுட்பமாக உணர்த்த வேண்டிய காதலை,
வெட்கத்தை விட்டு வெளிப்படுத்தினர்.


“நாளை வந்து இடுவோம்!’ என்று வந்த
வேலை முடிந்ததால் மறைந்து போனார்;


பசலை படர்ந்து நின்றனர் நிறை அழிந்து,
வளை, மேகலை, நாணம், ஆடை இழந்து!


அலங்கோல நிலையினைக் கண்டதுமே
துலங்கி விட்டது ரிஷிகளுக்கு அங்கே


நடந்த நாடகத்தை அறிந்து கொண்டனர்;
நடத்தியவனையும் புரிந்து கொண்டனர்.


“கணவனைத் தவிர எவரையும் விரும்பாத
மனம் அழிந்து நிலைதடுமாறினீர்கள் நீங்கள்!


வணிகர் குலத்தின் பெண்களாக நீங்கள்
மதுரையில் சென்று பிறக்கக் கடவீர்கள்!”


“சாபம் அளித்தீர்கள் எங்கள் பிழைகளுக்கு!
சாப விமோசனம் எமக்கு எப்போது கூறும்?”


“பிறை அணிந்த பெருமான் மீண்டும் வந்து
வளை அணிவிக்கும்போது விமோசனம்!”


வணிகர் குலத்தில் பிறந்தனர் பத்தினிகள்;
பணி அணி நாதனை எதிர்பார்த்திருந்தனர்.


அணிந்திருந்த வளைகளையே மீண்டும்
அணிவிக்க விழைந்தான் சிவன் அவர்க்கு!


வளைச்செட்டி வேடம் பூண்டு அவர்கள்
வளைகளைக் ஒரு கயிற்றில் கோர்த்தான்.


“வளையல்!” எனக் கூவித் தன் வடிவால்
தொளை இட்டான் காண்பவர் மனங்களில்!


மீண்டும் காமுற்றனர் அதிசய வணிகனைக்
கண்டதும் வணிகர் குலத்துப் பெண்கள்!


கரம் பற்றி வளையல்களை அணிவித்தவன்
பெருக்கினான் மேலும் காம விகாரத்தை!


வளைகளுக்குப் பணம் தர விரும்பியவரிடம்,
“நாளை பெற்றுக் கொள்ளுகின்றேன்!” என்றான்.


வளைஅணிந்து கொண்ட பெண்கள் எல்லோரும்
வளைச்செட்டியின் ஸ்பரிசத்தால் கர்ப்பமுற்றனர்!


முருகனை நிகர்த்த அழகிய மகன்களைப்
பெறுவதில் பெருமிதம் அடைந்தனர் அவர்;


கருமவினை தீரும் வரை பூமியில் வாழ்ந்து
திருவருளால் சென்றடைந்தனர் சிவலோகம்.


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


# 32. THE BANGLE SELLER.


The rushis of Taarukaa Vanam were great and their wives were no less great. But when Lord Siva approached them for Bikshaa, their minds got filled with lust at the sight of the mendicant resembling Manmathan.


They dropped their bangles along with their Bikshaa. They prostrated to him. Their waist ornament became loose and their clothes disheveled.


They invited the mendicant Siva openly to put back their bangles and tie up their clothes. Siva said that he would come on the next day and disappeared.


The rushis became angry at the sight of the womenfolk with their disheveled dresses. They knew immediately what had happened there.


They cursed their wives to be born in the family of the merchants in Madurai. They would get saapa vimochanam when Lord Siva would touch their hands.


The rushi pathnis were born in the family of merchants in Madurai. They grew up into pretty maidens.They were waiting for their saapa vimochanam. Siva knew it was the right time to release them from their saapam.


He took the form of a bangle seller. He took the same bangles dropped by the rushi pathnis earlier in his Bikshaa.

He was so handsome that the maidens came out running at the sight of the bangle seller.
He put bangles in the hands of all the maidens. When they wanted to pay him he said he would collect the money the next day and vanished.

All the maidens conceived due to the divine touch of Siva’s hands and gave birth to sons as great as Skanda himself. They lived till their karma was completed and went to
Sivalokam.


 
Bhagavathy bhaagavatam - skanda 7

7#35a. யோகம்

ஜீவாத்மா, பரமாத்மாவின் ஐக்கியமே ‘யோகம்’.
ஜீவனிடம் உள்ளன ஆறுவித மனமலங்கள்.


காமம், குரோதம், லோபம், மோஹம் மற்றும்
மதம், மாச்சரியம் என்ற கொடிய பகைவர்கள்.


அவா, வெகுளி, பற்று, மயக்கம் மற்றும்
செருக்கு, பொறாமை என்றும் கூறலாம்.


ஆறு மலங்களை அழிக்கத் தேவையானது
எட்டு அங்கங்கள் கொண்ட யோக சாதனை.


‘யமம்’ ஆகும் முதன்மையான அஹிம்சை.
யமத்தில் அடங்கியுள்ளன பத்து சாதனைகள்.


இன்னா செய்யாமை, சத்யம், களவின்மை,
சன்மார்க்கம், பிரம்மச்சர்யம், தயை,


பொறுமை, துணிவுடைமை, மித ஆஹாரம்
சௌசம் என்னும் தூய்மை அல்லது துப்புரவு.


‘நியமம்’ இதில் அடங்கும் பத்து சாதனைகள்.
தவம், மகிழ்ச்சி, தெய்வ நம்பிக்கை, நாணம்,


சித்தாந்த சிரவணம், தானம், தேவ பூஜை,
புத்தி, ஜபம் ஹோமம் என்பன இவை பத்து.


‘ஆசனம்’ இதில் அடங்கும் இவை ஐந்தும்,
பத்ம, ஸ்வஸ்திக, பத்ர, வஜ்ர, வீராசனம்.


‘பிராணாயாமம்’ மூச்சை அடக்கி நாடி சுத்தி.
‘பிரத்யாகாரம்’ விஷயங்களின் பின் செல்லாது


இந்திரியங்களைத் தடுத்து வைத்து – தானும்
இந்திரியங்களின் பின்னே செல்லாதிருப்பது.


‘தாரணை’ உடலின் பன்னிரண்டு இடங்களில்
பிராண வாயுவை விதிமுறையாக நிறுத்துவது.


‘தியானம்’ ஆகும் தன் இஷ்ட தேவதையுடன்
லயித்து ஒன்றி அசைவின்றி அமர்ந்திருப்பது.


‘சமாதி’யாகும் ஜீவாத்மாவும், பரமாத்மாவும்,
சமத்துவ பாவனையில் ஒன்றி ஐக்கியமாவது.


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


7#35a. YOgam


The union of a JeevAtmA with ParamAtmA is named as YOgam. JeevAtmA is burdened with six types of natural enemies namely. KAma (lust), KrOdha (anger), LObha (greed), MOha (ignorance), Mada (vanity), MAchchryam (jealousy)


To destroy these six enemies of JeevAtmA, the Jeeva needs the help of ashtAnga yOga. Yama, niyama, AasanA, prAnAyAmA, prathyAhArA, dhAraNA, dhyAnA, and samAdhi are the eight limbs (anga) of the ashtAnga yOgam.


(A) Yama includes these ten factors namely :-
1. Ahimsa (non injuring), 2. Satyam (Truthfulness), 3. Asteyam (non-stealing), 4. Brahmachrya (continence), 5. DayA (showing mercy towards all the living beings) 6. Uprightness, 7. Forgiveness, 8. Steadiness, 9. Eating food frugally 10. Cleanliness (both external and internal)


(B) Niyama also included ten qualities:-
1. TapasyA (Austerities and penance), 2. Contentment, 3. Astikya (faith in God and in VEdA, DEvA, Dharma and Adharma), 4. Charity (for good causes), 5. Worship of God, 6. Listening to SiddhAnta (established sayings of VEdAs), 7. Modesty,
8. sraddhA, 9. Japam 10. Homam.


(C). AsanAs are of five kinds:-
PadmAsan, SwastikAsan, BhadrAsan, VajrAsan and VeerAsan.


(D). PrANAyAmA
Purifying the three main nAdis IdA, PingalA and Sushumna using Poorakam (inhaling), Kumbakam (withholding) and rechakam (exhaling) in the prescribed manner. PrAnAyAmA when learned and practiced correctly allows a person to rise above the ground.


(E). PrathyAhArA
Controlling the sense organs from chasing the sense objects in the world and making them revert their path.


(F). DhAraNA
Holding the prANa vAyu at twelve places of the body namely toes, heels, knees, thigh, genital organs, navel, heart, throat, the soft palate, nose and between the eye brows and on the top of the head.


(G). DhyAnam
Concentrating on the ishta devata and meditating without any physical movement or mental vibrations in the form of thought process.


(H). SamAdhi
Identifying the jeevAtmA and paramAtmA to be of the same nature.



 
bhagavathy bhaagavatam - skanda 2

2#6a. மூன்று மகன்கள்

சத்தியவதி அளித்தாள் சந்தனுவுக்கு மகன்களாக
சித்திராங்கதனையும் மற்றும் விசித்திர வீர்யனையும்.


புத்திரப் பேறு இல்லாமலேயே மாண்டனர் – அவள்
புத்திரர்கள் இருவரும் ஒருவர் பின் ஒருவராக!


‘சந்ததி விருத்திக்கு என்ன செய்வது?’ என்று
சிந்தித்துத் துயருற்றாள் சத்யவதி அடிக்கடி.


கன்னிப் பருவத்தில் தன்னிடத்தில் உதித்த
முனிகுமாரன் அவள் நினைவுக்கு வந்தான்.


நினைத்தவுடன் வந்து நின்றார் வியாசர்.
அனைத்தயும் எடுத்து விளக்கினாள் சத்தியவதி.


மருமகள்களுடன் கூடச் செய்தாள் வியாசரை.
மருமகள்கள் ஈன்றனர் இரு ஆண் மகவுகளை.


கூடலின் போது அஞ்சிய மூத்த மருமகள்
மூடிக் கொண்டுவிட்டாள் கண்களை இறுக்க.


பிறந்த குழந்தைக்கும் இல்லை கண்பார்வை.
பிறவிக் குருடனானான் திருதராஷ்ட்ரன்!


இளைய மருமகள் நாணத்தாலும், பயத்தாலும்
வெளுத்தப் போனாள் உடல், கூடலின் போது!


வெண்குஷ்டம் உடைய ஒரு மகன் பிறந்தான்
பாண்டு இளைய மருமகளின் அருமை மகனாக.


முழு மனத்தோடு உறவு கொள்ளவில்லை – எனவே
பழுது ஏற்பட்டது பிறந்த குழந்தைகளுக்கு!


மூத்த மருமகளை அனுப்பினாள் மீண்டும்,
மூத்த மருமகள் அனுப்பினாள் தாதியை.


அன்புடன் கூடினாள் அந்தத் தாதி வியாசரை;
அன்பின் சின்னமானான் ஞானவான் விதுரன்.


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K . ராமன்


2#6a. The three sons of VyAsa


Sathyavati gave birth to two sons – Chithraangathan and Vichitra Veeryan. But both of them died one after another – without producing any children to rule to the kingdom after them.

The kingdom needed male princes to rule over it. Satyavati started worrying as to what to do. Suddenly she remembered the son who was born long ago to her and sage ParAshara.

VyAsa appeared before her as soon as she thought of him – as VyAsa had promised her soon after his birth. Satyavati explained the situation and requested his help in producing a male heirs to rule the kingdom.

The first daughter in law Ambika closed her eyes tightly during the union and gave birth DhrutarAshtra – the son who was born blind. The second daughter in law AmbAlika grew pale during the union and gave birth to PANdu who suffered from Lucisim.

They both were not fit to become the future rulers of the kingdom. So Satyavati sent her daughter in law AmbAlika one more time to VyAsa. But she sent her maid servant instead of her.

The maid was only too happy to please VyAsa and she delivered a healthy son Vidura – who later became famous for his deep knowledge of Dharma and his sense of Justice.



 
kanda purANam - mahEndra kANdam

11. வீரவாகு தேற்றுதல்

தேவர்களைக் கண்டு வீரவாகுத்
தேவர் ஆறுதல் கூற எண்ணினார்.


முருகனின் மந்திரம் உரைக்கவும்
பொருந்தினர் உறக்கத்தில் காவலர்.


“கனவில் வந்து கந்தன் பகர்ந்த
கனவான் இவர் தானோ?”என்று


அருகில் வந்த வீரவாகுத் தேவரை
நெருங்கிய தேவர்கள் எண்ணினர்.


“கந்தன் அனுப்பிய தூதன் நானே!
கந்தனின் அன்புத் தம்பியும் நானே!


சிறை நீக்கி விடுமாறு சூரனிடம் கூற
சிவனார் மகன் கட்டளை இட்டார்.


விரைவில் தீரும் உங்கள் தாபங்கள்,
விரைந்து சேரும் சுவர்க்க போகங்கள்!


தக்கன் வேள்வியில் அவிர் பாகம் பெற்று
முக்கட் பிரானை இழிவு செய்தீர்கள் அன்று.


தீ வினைகள் தீர்ந்ததும் துயரும் தீரும்!
தீவினைகள் தீர்ந்திடும் நேரமும் வந்தது!


புறக்கணிப்பான் தூதை சூரபத்மன்.
புறப்படுவோம் படையுடன் யாம்!”


காவல் சிறையை விட்டு நீங்கினான்;
காவலர் உறக்கத்தைப் போக்கினான்!


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


3#11. VeerabAhu consoles the Devas


VeerabAhu was moved to pity by the sight and the plight of the Devas. He too wanted to console them. He chanted a mantra concentrating on Murugan. The jail guards went into a deep sleep. He entered the prison unopposed. The Devas wondered whether he was the man Murugan spoke about in their dream.


“I am the messenger of Murugan. I am also his younger brother. He has sent a message to Soorapadman that you must be released from the prison. You will become free very soon. You will regain your life in heaven very soon.


You participated in the yagna performed by Dakshan insulting Siva. You are now being punished for that thoughtless action. Soorapadman will not listen to the good counsel. There will surely be a war and he will surely be vanquished in it!”


He left the prison and made the jail guards wake up from their deep sleep.


 
The 64 Thiru ViLaiyAdalgaL

33a. அஷ்டமாசித்தி உபதேசம்

33 (a). அஷ்டமாசித்தி உபதேசம்

மையலும், கருணையும் கொண்ட உமையாள்
கையால் தரும் வெற்றிலையைச் சுவைத்து,
கயிலையில் ஒரு கல்லால மரத்தடியில்,
கயிலைநாதன் இனிதே அமர்ந்திருந்தான்.


சனக, சனந்தன் முதலியவருக்கும்,
கணக் கூட்டத் தலைவர்களுக்கும்,
சொல்லிக் கொண்டிருந்தான் சிவன்
நல்லுரைகள் பலவும் இனிமையாக.


கார்த்திகேயனை எடுத்து வளர்த்த,
கார்த்திகைப் பெண்கள் வணங்கினர்;
“அஷ்ட மா சித்திகளை எங்களுக்கு நீர்
இஷ்டத்துடன் உபதேசிப்பீர் ஐயனே!”


“அஷ்டமா சித்திகள் நீங்கள் அறியக்
கஷ்டமானவைகள் அல்லவே அல்ல!
இஷ்டத்துடன் குற்றேவல் புரியும்
அஷ்ட மா சித்திகள் உமையிடம்!


நினையுங்கள் மனதில் உமையை;
அனைத்து வினைகளும் அகலும்;
சித்திகள் எட்டும் தாமே தேடி வந்து
சித்திக்கும் உங்கள் அறுவருக்கும்!”


உபதேசித்தார் அஷ்டசித்திகளை,
உமா மகேஸ்வரன் அப்பெண்களுக்கு!
என்ன காரணத்தினாலோ அவர்கள்
உன்ன மறந்தனர் உமை அன்னையை!


கற்ற கல்வியும் வீணாகி விட்டது!
சிற்பரனின் சொற்கள் வீணாகலாமா?
குற்ற உணர்வுடன் நின்றவர்களுக்கு
சொற்பதம் கடந்தவனின் சாபம் இது!


“பட்ட மங்கை என்னும் இடத்தில்
கெட்டிப் பாறைகளாகக் கிடப்பீர்!
ஆல மரத்தின் அடியில் இருந்து,
காலம் ஆயிரம் ஆண்டுகளுக்கு!”


“சாபம் அளித்தீர் எம் தவறுக்கு!
சாப விமோசனம் எப்போது?” என,
தாபம் தீர்க்கும் பதில் தந்தார்,
பாபம் தீர்க்கும் கயிலை நாதர்!


“ஆயிரம் ஆண்டுகள் போன பின்,
போய்விடும் சாபம் தானாகவே!
காலம் வரும்வரைத் காத்திருங்கள்
கோலம் புனைந்து தவம் செய்தபடி!”


பட்ட மங்கையை அடைந்தனர் பெண்கள்;
கெட்டுப் போனது அவரது உயரிய வாழ்வு!
கெட்டிப் பட்ட பாறைகளாக கிடந்து அவர்
கட்டுப் பட்டனர் ஈசனின் சாபத்துக்கு!


ஆயிரம் ஆண்டுகள் உருண்டோடின!
ஆயிரம் சூரியனின் ஒளியுடன் கூடி,
ஞான ஆசாரியனாக வந்த சிவன்
ஞானம் தந்து சாபம் நீக்கினான்!


அணிமா முதலிய அஷ்ட சித்திகளைப்
பணிவாகக் கேட்டு கிரஹித்தனர்;
அணிந்தனர் மனத்தில் உமை நாமம்,
பணிந்தனர் ஈசன் திருப்பாதங்கள்.


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


# 33 (a). ASHTA SIDHDHI UPADESAM.


One day Lord Siva was chewing the thaamboolam given with love by his consort Uma Devi. He was imparting some important messages to Sanakan and his brothers as well as the leaders of His Siva ganam.


The six women who brought up Kaarthigeyan prayed to Lord Siva to teach them about the Ashta Sidhdhi. Siva told them,”The Ashta Sidhdhi are servants of Uma Devi.
You can attain them merely by praying to Uma Devi!”


He then elaborated on the eight Sidhdhis. The six Kaarthigai women learnt His upadesam well. But for some reason, they did not meditate on Devi Uma and seek her blessings.


They for got all the upadesam given by lord Siva.He got angry and cursed them to spend one thousand years as insentient rocks under Bunyan tree in a place called Pattamangai.The ladies would be relieved of the curse by the grace of Siva who would appear as an AachArya.


The women were transformed to rocks and lay under a Bunyan tree for a thousand years. When the time of their SApa Vimochanam arrived, Lord Siva appeared As JnAna Guru with the brilliance of a thousand Suns!


He did the upadesam again on Ashta Sidhdhi. The six women listened with deep reverence and absorbed everything taught by Siva.


They worshiped Devi Uma seeking Her blessings.Then they returned to Kailash in their original form and glory with the knowledge of the Ashta Sidhhdi.


 
bhagavathy bhaagavatam - skanda 7

7#35b. நாடிகள்

சரீரத்தில் உள்ளன ஐம்பெரும் பஞ்சபூதங்கள்.
சரீரம் பிரகாசிக்கும் சூரிய சந்திர அக்னிகளால்.


சரீரம் ஆகும் ஜீவன், பிரம்மத்தின் ஐக்கியம்;
சரீரத்தில் உள்ளன மூன்றரைக் கோடி நாடிகள்.


முக்கியமான நாடிகள் பத்து – இவற்றில் மிகவும்
முக்கிய நாடிகள் இடை, பிங்கலை, சுழுமுனை.


விளங்குகிறது முதுகெலும்பு மேரு தண்டமாக.
விளங்குகின்றன இவை மேரு தண்டத்தினுச்சியில்.


இடைகலை நாடி இருக்கும் மேரு தண்டத்தின்
இடப் புறத்தில், சந்திரப் பிரகாசத்துடன் கூடி.


இருக்கும் வெண்மையாக, அமிர்த மயமாக;
இருக்கும் சக்தி ஸ்வரூபமாகப் பெண் வடிவில்.


இருக்கும் பிங்கலை நாடி மேரு தண்டத்தின்
வலப்புறத்தில், சூரியப் பிரகாசத்துடன் கூடி.


விளங்கும் ஆண் வடிவில் பிங்கலை நாடி.
விளங்கும் சுழுமுனை நெற்றிப் பகுதியில்.


சுழுமுனை நாடி அக்கினி ஸ்வரூபமானது
சுழுமுனை நாடி இருக்கும் புருவ மத்தியில்.


சுழுமுனை நடுவில் சுயம்பு லிங்கம் உண்டு
கோடி சூரியர்களின் பிரகாசத்தைக் கொண்டு.


இச்சா, ஞான, கிரியா சக்திகளின் ஆத்மகம் இது!
இருக்கின்றன பல வேறு பெயர்கள் லிங்கத்துக்கு.


மாயா பீஜம் விளங்கும் அதற்கும் மேலே – பிந்து
நாதங்களின் ஸ்வரூபமாகவும், சிவாத்மகமாகவும்.


குண்டலினி சக்தி விளங்கும் நெருப்பு முடிபோல,
ரத்த விக்ரஹமாகத் தேவியுடன் இரண்டறக் கலந்து.


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


7#35b. The three important NAdis


The gross body is made up of the pancha boothAs. The body of a jeevA shines with the illumination of the Sun, The Moon and the Agni. It is the oneness or union of of the jeevAtmA with the paramAtmA.


There are thirty five million NAdis in a human body. Of these ten are very important of those ten three are very very important. They are called IdA, PingalA and SushumnA.


These three nadir are located on the top of the spine which is also called as Meru daNdam. IdA is situated on the left side of the Meru daNdam. It has the cool, white brilliance of the moon. It is filled with nectar and is of a beautiful feminine form.


PingalA is on the right side of the Meru daNdam with the brilliance of the Sun. It is of a masculine form. Sushumna is in the center of the two eyebrows on the forehead. It is of the nature of agni.


There is a swayambu lingam in the center of the Sushumna NAdi. It is the center of IchchA shakti, JnAna shakti and KriyA Shakti. It has the brilliance of ten million Suns shining together.


MAyAbeejam is situated above that. It is of the swaroopam of Bindu and NAdam. Kundalini Shakti shines like the tongues of a burning flame on the top of the head – mixed inseparably with Devi and is blood red in color.



 
bhagavathy bhaagavatam - skanda 2

2#6b. பிருதை

சூரசேனனின் அன்பு மகள் ஆவாள் பிருதை.
சூரிய பூஜையில் உதவினாள் போஜனுக்கு.

சொந்த மகளாக பாவித்தான் குந்தி போஜன்;
வந்தார் துர்வாசர் குந்தி போஜனை நாடி.

நியமித்தனர் பிருதையை அவருக்கு உதவிட
நியமப்படி சதுர் மாஸ்ய விரதம் முடியும் வரை.

குறிப்பறிந்து நடந்து கொண்டாள் பிருதை;
சிறப்பாகப் பணிவிடை செய்தாள் அவருக்கு.

வாழ்த்தினார் துர்வாசர் பிருதையை உளமார;
வழங்கினார் திவ்ய மந்திரத்தின் உபதேசத்தை.

“மந்திரங்களுக்கு உரிய அந்த தேவதைகள்
வந்து அனுக்ரஹிப்பர் அழைக்கும் பொழுது.”

பரீக்ஷை செய்தாள் குந்தி அந்த மந்திரத்தை!
பிரத்தியக்ஷம் ஆகிவிட்டான் சூரிய தேவன்!

மனித உருவில் வந்த சூரியனைக் கண்டு
கனிந்து விட்டாள் காதலில் கசிந்துருகி!

திரும்பிச் செல்லுமாறு வேண்டினாள் சூரியனை.
“திரும்பிச் செல்வேன் அனுக்ரஹம் செய்த பின்பு”.

“கன்னிப் பெண்ணை கருவுறச் செய்தால்
பின்னர் களங்கப் பட்டுப் போய் விடுவேன்!

முன்பின் ஆலோசியாமல் செய்வதற்கு
சின்னப் பிழையா இது கூறுங்கள்!’ என

“கன்னி விரதம் பங்கப் படாது என்னால்!
களங்கப் படாது உன் பெயர் பின்னால்!”

அனுபவித்தான் பிருதையை ஆசை தீர;
அடைந்தான் தன் மண்டலத்தை ஆசி கூறி.

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K . ராமன்


2#6b. PruthA


PruthA was the daughter of SoorasEnan. His cousin Kunti Bhojan did not have any children. So he adopted PruthA and loved her as his own daughter. She helped Kunti Bhojan to perform the Soorya pooja honoring the Sun God.

DurvAsa maharushi visited Kunti Bhojan and stayed on for the Chatur mAsya vratham during the four rainy months of the year when traveling became difficult. PruthA took excellent care of the rushi and he was very pleased with her.

He did her a mantra upadEsam. The mantra can invoke any God and seek his grace. PruthA playfully wanted to test the effectiveness of the mantra and invoked the Sun God.

He appeared in front of her in a beautiful human form. She was both pleased and afraid at the same time. She requested the Sun God to go back to his place, but he insisted in blessing and pleasing her before going back to his abode.

PruthA was afraid of becoming an unwed mother. But Sun God promised that she would be a virgin even after a child would be born to her. He enjoyed her to his satisfaction and went back to his place in the heaven after blessing and pleasing PruthA.

 

Latest ads

Back
Top