• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

A poem a day to keep all agonies away!

bhagavathy bhaagavatam - skanda 7

7#28d. துர்க்கி

சென்றான் துர்முகாசுரன் போர்க்களம்;
சென்றான் போரின் பதினோராம் நாள்.

சென்றான் சிவப்புநிற ஆடைகளணிந்து;
செந்நிற மாலையும், சந்தனமும் அணிந்து.

வென்றான் சக்தியர் கூட்டத்தைப் போரினில்;
சென்றான் ரத்தத்தில் ஏறி சதாக்ஷிக்கு எதிரே.

செய்தான் யுத்தம் இரண்டு ஜாமக் காலம்;
எய்தான் அம்புகளை தேவி சதாக்ஷியின் மீது.

எய்தாள் தேவி ஐநூறு பாணங்களை அவன்மீது ;
எய்தாள் தேவி நான்கு பாணங்களைக் குதிரைமீது.

எய்தாள் தேவி ஒரு பாணம் சாரதியின் மீது;
எய்தாள் தேவி ஒரு பாணம் கொடியின் மீது;

எய்தாள் இரண்டு பாணங்களைக் கண்கள் மீது.
எய்தாள் ஐந்து பாணங்களை அவன் மார்பின் மீது.

எய்தாள் தேவி இரண்டு பாணங்களைத் தோளில்.
எய்த பாணங்களில் மாய்ந்து வீழ்ந்தான் அசுரன்.

வெளிப்பட்டது ஜோதி அவன் உடலில் இருந்து;
ஒளி வந்து கலந்தது தேவியின் திருமேனியுடன்.

அளித்தாள் தேவி வேதங்களை அந்தணருக்கு.
அளித்தாள் ஆசிகளை அங்கு அனைவருக்கும்,

“பயம் தேவையில்லை இனி உங்கள் எவருக்கும்!
அபயம் அளிப்பேன் என்னை நம்பி வழிபட்டால்.

அகற்றுவேன் வரும் ஆபத்துக்களை வருமுன்பே.
புகலுங்கள் என் நாமத்தை சித்த சுத்தியுடன் கூட.

துர்முகனைப் போரில் வென்றதால் பெறுவேன்
‘துர்க்கீ’ என்னும் பட்டப் பெயரை இனிமேல் நான்.”

மறைந்தருளினாள் சதாக்ஷி அங்கிருந்து – மனக்
குறைகள் மறையும் இதனைக் கேட்பவர்களுக்கு.

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

7#28d. Durgee

On the eleventh day Durmukha asuran went to the war field dressed in red colored clothes, wearing red flower garlands and smearing the red colored sandal paste. He defeated the Shakthi Devis who had emerged out of SatAkshi.

He went on his chariot near to SatAkshi. They fought for some time. He shot many arrows at Devi SatAkshi. Now Devi shot five hundred arrows on the asuran.

She shot four arrows on his horse, one arrow on his charioteer, one arrow on his flagstaff, two arrows on his eyes, five arrows on his chest and two arrows on his shoulders.

Durmakha asuran fell dead. A jyoti (an illumination) emerged from his body and went and merged with Devi SatAkshi’s body.
Devi gave back the Vedas to the Brahmins. She gave her blessings to everyone. She gave abhayam (fearlessness) to everyone and said,

“No need to fear anything or anyone in the future. I will protect you if you worship me with faith and sradhdha. I shall be called as Durgee since I vanquished Durmukha asuran in a war.” She then disappeared from there.

Whosoever listens to this story with faith and devotion will have all his/her worries removed by Devi SatAkshi’s grace.


 
bhagavtahy bhaagavatam - skanda 1

1#19b. ஜனகரின் விளக்கம்

“சிந்திக்கிறீர்கள் ராஜ்ஜிய பாலனம் குறித்து;
சிந்திக்கிறீர்கள் படைகள், பகைவர் குறித்து!

சிந்திக்கிறீர்கள் பொன், பொருளைக் குறித்து;
சிந்திக்கிறீர்கள் மண்ணை வெல்வது குறித்து!

விதேகர்கள் என்கின்றனர் உம் வம்சத்தை;
விதேகர்கள் என்பதே வஞ்சகமான பெயர்!

‘வித்யாதரர்’ விளங்கினார் பரம மூர்க்கராக!
‘திவாகரர்’ விளங்கினார் பிறவிக் குருடராக!

‘லக்ஷ்மிதரர்’ இருந்தார் அஷ்ட தரித்திரராக;
லக்ஷணம் இல்லை வழங்கிய பெயர்களில்.

இருந்தான் உம் குலத்தில் ‘நிமி’ என்ற மன்னன்;
விரும்பினான் வசிஷ்டருடன் யாகம் செய்திட.

“இந்திரன் யாகத்தை நான் ஏற்று நடத்துவதால்
இருக்க வேண்டும் கொஞ்சம் பொறுமையாக!”

புரிந்தான் யாகம் வேறு ஒரு குருவுடன்;
தெரிந்ததும் வசிஷ்டர் சபித்தார் நிமியை!

சாபம் கிடைக்குமா விதேக மன்னனுக்கு?
கோபம் கொள்வாரா குலகுரு அவன் மீது?”

ஜனகன் சிரித்தார் வாய்விட்டு உரக்க!
ஜனகன் கூறினார் சுகருக்கு விளக்க!

“தந்தையின் தொடர்பு பந்தம் விளைவித்தால்
பந்தம் விளையும் வன விலங்குகளுக்கும் கூட!

கவலை உண்டாகும் உமக்கு உணவினால்;
கவலை உண்டாகும் எனக்கு அரசாட்சியால்!

கவலை உண்டாவது பொதுவே இருவருக்கும்;
கவலையை உண்டாக்கும் காரணங்களே வேறு!

மனம் குழம்பி வந்துள்ளீர் மலையைக் கடந்து!
மனக் குழப்பங்கள் எதுவுமே இல்லை எனக்கு!

பந்தப்பட்ட மனத்தினால் நீர் ஒரு துக்க ரூபி!
பந்தப்படாத மனத்தினால் நான் ஒரு சுக ரூபி!

பந்தத்துக்குக் காரணம் நமது தேக மோஹம்!
பந்தம் நீங்கும் ‘நான் தேஹம் அல்ல’ என்றதும்!

சிந்தித்து இதனை உணர்வதே ஜீவன் முக்தி ;
பந்தப்படுத்துவது ‘நான், எனது’ என்னும் எண்ணம்!

‘என்னிடம் உள்ளவை என்னுடையவை அல்ல!’
என்ற தெளிவை அடைவது தான் ஜீவன் முக்தி.”

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


1#19b. King Janaka’s explanation


Sage Sukar continued his argument to King Janaka. “Oh king! You worry about your country, your army, your enemies, your citizens, their welfare, your wealth and the expansion of your country all the time.

Your race is called as VidEha and is it not an irony that the names and facts were just contradictory all along. ‘VidhyAdhara’ was a foolish king contrary to his name. ‘DivAkara’ was born blind contrary to his name. ‘Lakshmidhara’ lacked all the eight riches of the world – contrary to his name. Their names did not mean anything.

There was a king called Nimi. He wanted to perform a yAgA with the help of sage Vasishta. The sage told the king, “Please wait for sometime since I have to perform a yAgA for Indra”

But the king would not wait and performed the yAgA with the help of another guru. When sage Vasishta came to know of this, he cursed the king Nimi. How can a vidEha king be cursed by his own kulaguru?”

King Janaka could not contain his hearty laughter. He replied to sage Sukar thus,” If you think that the relationship with one’s
family members will cause bondage, then even the wild animals ought to suffer from such a bondage.

You may worry about your daily food requirements and I may worry about my kingdom. So worrying is common for both you and me. The only difference lies in the cause for the worries.

You are riddled by doubts and confusions and have traveled for three long years to reach here. I have no doubts nor confusions and I live in perfect peace.

Because your mind is in bondage, you suffer and you are what can be called as a ‘dukha roopi’
( personification of sorrow). I have a mind free from bondage and I am a sukha roopi (personification of happiness) . The cause for the bondage is the delusion that ‘I am the body’. When one realizes that ‘I am not my body’ the deha moham (attachment to one’s physical body)is removed and along with it the bondage.

Realizing this fact is the ‘jivan mukthi’ (liberation while a person is still alive). The delusions are caused by the concept of ownership of one’s belongings and the distinction of ‘I ‘and ‘Mine’. Get rid of these two concepts and realize that ‘Nothing in your possession really belongs to you!’
That is the jivan mukti”



 
kanda purANam - asura kANdam

42a. சூரபத்மனின் சினம்

அஞ்சினர் அவையோர் அஜமுகியின்
அலங்கோல அரற்றலைக் கண்ணுற்று!

அண்ணின் கண்களில் தீப் பொறிகள்;
உண்மையைக் கூறும்படிக் கோரினான்.

“உன் கையை வெட்டியது யார் கூறு!
இன்னமும் அவன் பிழைத்துள்ளானா?”

“அயிராணி தவம் செய்து தனியிருந்தாள்.
மயிலாளை உனக்கென எடுத்து வந்தேன்.

தேவன் ஒருவன் விரைந்து தோன்றினான்.
காவலனாம் அவளுக்கு! என்கை போயிற்று!”

சூரனின் சீனத்தீ சுடர்விட்டு எரிந்தது!
ஆறாத கோபத்தால் விழிகள் சிவந்தன!

நாசி வீசியது அனல் வெப்பக் காற்றை!
நாவும் கனன்று கக்கியது புகையை!

இடியொலியென ஆர்ப்பரித்தான் அவன்!
இரு புருவங்கள் நெறித்தன, துடித்தன!

நறநறவென்று பற்களைக் கடித்தான்;
நாற்றிசைகளும் உடன் நடுங்கலாயின!

தேவர்கள் அஞ்சினர், பிறகு ஏங்கினர்;
தேவர்களின் இருப்பிடங்கள் நடுங்கின.

மலைகள் எல்லாம் நிலை குலைந்தன.
மண்ணும். விண்ணும் எதிரொலித்தன.

கடல்நீர் கொதித்துக் கொந்தளித்தது
சுடர்விட்டு எரியும் சூரனின் சினத்தால்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

2#42a. Soorapadman’s anger.


The asuras in the durbar got scared by the wailing of the two asura women. Angry Soorapadman’s eyes burned like live coals. “Tell me the truth! Who has cut off your hand? Is he still alive?” He demanded Ajamukhi and Durmukhi!

“IndrANi was doing penance all by herself. I tried to bring her as a gift to you. Suddenly a Devan protecting her appeared and cut off our hands!”

Soorapadman’s anger knew no bounds now. His nose bellowed out burning hot air. His mouth frothed fire. He made a thunderous uproar. His eyebrows became crooked. He bit his teeth in a fit of terrible anger.

The four directions started shivering. So also all the Devas. The mountains shook! The earth and the heaven echoed those sounds. The sea water boiled over and everything everywhere was disturbed by his terrible anger.

 
The 64 Thiru ViLaiyAdalgaL

18. கடலை வற்றச் செய்தது.

நவமணிகளை அளித்து, நல்லாசி தந்த,
சிவபிரானை மன்னன் மறக்கவில்லை.
சித்திரா பௌர்ணமி தவறாமல் தன்
நித்திரையைத் துறந்து ஆராதித்தான்.

கற்பூரம் கரைத்த நீரால் குளிர்வித்து,
கற்பூர சுந்தரேசனைத் தொழுவான்;
தேவர்களும் வந்து பூஜை செய்வதுண்டு;
சிவனுக்குச் சித்திரா பௌர்ணமி அன்று.

அபிஷேக பாண்டியன் செய்து வந்த
அபிஷேகத்தால் தாமதம் ஆயிற்று,
தேவர்கள் தலைவன் அங்கு செய்யும்
திவ்விய வருடாந்திர பூஜைகள் அன்று.

வருணன் இந்திரனிடம் வந்து கேட்டான்,
“ஏன் இந்த முகவாட்டம் உங்களுக்கு?” என.
“பாண்டிய மன்னனின் பூஜைகளால் என்
ஆண்டவன் பூஜை தாமதமாகின்றது!

“அங்கேயே சென்று வருடம் தோறும்
அதே லிங்கத்தைப் பூஜிக்க வேண்டுமா?
எத்தனையோ லிங்கங்கள் உள்ளனவே!
அத்தனை அங்கேயும் நீர் பூஜிக்கலாமே!”

“விருத்திரனைக் கொன்றதால் பீடித்த,
பிரம்மஹத்தியை போக்கியது அதுவே!
துர்வாசரின் கொடிய சாபத்தினின்று,
ஐராவதம் பிழைத்தது அதனாலேயே!

எத்தனையோ லிங்கங்கள் இருந்தாலும்
அத்தனையிலும் சிறந்து அந்த லிங்கமே!
சொக்கலிங்கத்துக்கு நிகர் உலகினில்
எக்கடவுளும் இல்லை என்றறிவாய்!”

“பெரு வயிற்று நீரைப் போக்கிட அச்
சிறு லிங்கத்தால் முடியுமா கூறும்!
பெருந் தொல்லை தருகின்றது அதைச்
சரி செய்ய இயலவில்லை எவராலும்!”

“முடியாதது என்று எதுவுமில்லை தன்
அடியார் குறை தீர்க்கும் சிவனுக்கு!
சோதித்து நீயே அறிந்து கொள்வாய்!
போதிக்க வேண்டிய தேவை இன்றியே!”

கடலைப் பொங்கி எழச் செய்தான் அவன்,
கடுகி மதுராபுரியை அழிக்கச் சொன்னான்;
பொங்கி எழுந்தது கடல் நீர் அங்கு!
ஓங்கி எழும்பின கடல் நீர் அலைகள்!

வேரோடு சாய்ந்த மரங்கள் எல்லாம்
நீரோடு அடித்துச் செல்லலாயின!
அபிஷேக பாண்டியன் ஈசனிடம் தஞ்சம்!
அபயம் அளித்தான் கொன்றை மலரவன்.

நிலவுடன் தன் தலையில் உலவிடும்
நிகரில்லாத நான்கு மேகங்களிடம்,
“பருகுவீர் சென்று பொங்கிய கடல் நீரை,
செருக்கு ஒழிந்து அது அடங்கும் வரை!”

முழங்கிக்கொண்டு புறப்பட்ட மேகங்கள்,
முழங்காலுக்கு வற்றச் செய்தன கடலை;
மதுராபுரி பிழைத்தது வெள்ளத்திலிருந்து!
மன மகிழ்ந்தனர் மன்னனும், மக்களும்!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி. .

மதுரைக் காண்டம் முற்றுப் பெறுகின்றது.

# 18. SUBSIDING THE SWOLLEN SEA WATER.

Abisheka Paandian never forgot Lord Siva even for a moment. He did special abishekam to the Lord on every Chitraa Pournami day, with the fragrant water in which pure camphor was dissolved. He would stay up till very late on those nights.

Indra also used to come down to earth to do puja to the Sivalingam. Indra’s puja got delayed since he had to wait till the king left the temple. Indra was not happy with this state of affairs.

Varuna asked Indra what was bothering him. Indra told about the King’s puja and how it delayed his own puja. “Why should you do puja to the same Lingam as he does? You may worship another Lingam. There are so many Lingams on the earth.”

Indra replied to Varuna,”There may be many Lingams on earth. But only that Chokkalingam was able to free me from the brahmahathi dosham and liberate Airavatham from the curse of Durvasa rishi. Chokklingam is the best of all the Lingams.”

Varuna told Indra,”I am suffering from heaviness of the stomach. Can Chokkalingam cure me of the pain and suffering?”
Indra replied,”Nothing is impossible for Sivalingam. You may test Him and convince yourself.”

Varuna ordered the sea to swell up and destroy Madhuraapuri. The sea rose very high, uprooted many trees and carried them along with its giant waves..

The King Abisheka Paandian sought the protection of Lord Siva. Siva gave him abhayam and ordered the four clouds residing on his matted coils, along with the crescent moon, “Go forth and drink up all the swollen waters of the sea!”

The clouds left with a loud noise and drank up the water from the swollen sea till the sea became shallow and calm. The city of Madhuraapuri was saved. The king and his citizens thanked Lord Siva .
Madurai Kaandam is completed.
 
bhagavtahy bhaagavatam - skanda 7

7#29a. சக்தியை அறியாத சிரிப்பு

“கூறினேன் சூரிய வம்சத்து அரசர் வரலாற்றை;
கூறுவேன் சந்திர வம்சத்து அரசர் வரலாற்றை.

சிறந்து விளங்கினர் இவர்கள் தேவியின் அருளால்;
சிறந்து விளங்கும் அனைத்தும் தேவியின் அருளே.

வேதப் பிரகாசம் என்பது சக்திதேவியே அறிவாய்!
தேவி உயர்ந்தவள் ஆவாள் பஞ்சப் பிரம்மத்தையும் விட.

தேவி அமர்ந்துள்ளாள் பஞ்சப் பிரம்ம ஆசனத்தின் மீது;
தேவியை அறியாதவன் ஆகமாட்டான் ஒரு முக்தனாக.

தியான யோகத்தால் அறியமுடியும் பரமாத்மாவை.
தியானிக்க வேண்டும் தேவியை நாம் இடையறாது.

விடுதலை தரும் அந்த தியான யோகமே நமக்கு!
கொடுக்க வேண்டும் தேவிக்கு நம் முழு மனத்தை.

விளங்கினர் சந்திர, சூரிய வம்சத்து அரசர்கள்
அளவில்லாத பக்தியுடன் தேவி உபாசகர்களாக.”

” கூறினீர்கள் நீங்கள் என்னிடம் முன்பு – தேவியின்
குறைவற்ற அம்சங்களே மும்மூர்த்திகளின் தேவியர்.

லக்ஷ்மி தேவி, சரஸ்வதி, கௌரி என்ற மூவரும்
லக்ஷ்யமான பராசக்தி தேவியின் அம்சங்கள் எனில்

தக்ஷனுக்கும், பர்வத ராஜனுக்கும் புதல்வியாகச் சென்று
தேவி அவதரிப்பது எங்கனம் சாத்தியம் ஆகும் கூறுவீர்!

பாற்கடலில் லக்ஷ்மி தேவி தோன்றியது உண்மை எனில்
மாற்றம் கொண்ட இக்கருத்தினை விளக்குவீர் முனிவரே!”

வியாசர் விளக்கினார் தேவியின் சிறப்பை மன்னனுக்கு.
வியர்த்தம் ஆகும் வாழ்வு சக்தியின்றேல் என்று நன்கு.

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

7#29a. The laughter of ridicule

Sage VyAsa continued his long speech to King Janamejayan.

“I have expatiated on the kings of Soorya vamsam. Now I shall tell you about the kings of Chandra vamsam. They all shone by the divine grace of Devi.

Anything that excels does excel so, only by Devi’s grace. ‘VedaprakAsam’ is Devi herself. She is superior to the Pancha brahmas ( namely Brahma, VishNu, Rudran, Eswaran and SadAsivam).

She sits on an aasanam made up of these Pancha Brahmas. We can know about Devi in DhyAna yoga. Without knowing Devi no one can get liberated from samsAram.

We must meditate on Devi ceaselessly. That constant meditation liberates us giving us mukti. Both the Soorya vamsa and Chandra vamsa kings were staunch devotees of Devi.”

Now King Janamejayan got a doubt. “You have told me earlier that the three consorts of The Trinity were the amsams of ParA Shakti Devi. How and why was Devi born again as the daughter of Daksha PrajApati and Parvata RAjan? Why did Lakshmi appear from The Ocean of Milk? These facts seem to contradict one other. Can you please explain to me more about this sire?”

VyAsa explained about the greatness of Devi and said that without the grace of Shakti Devi, life and living would become impossible for any jeeva.

 
bhagavathy bhaagavatam - skanda 1

1#19c. சுகரின் திருமணம்

மனம் மகிழ்ந்தார் சுகர் விளக்கம் கேட்டு;
மனம் தெளிந்தார் சுகர் விளக்கம் கேட்டு!


திரும்பிச் சென்றார் அன்புத் தந்தையாரிடம்;
கரும்பாக இனித்தான் குழப்பம் தீர்ந்த மகன்.


“மனோ பந்தம் ஆகும் மெய்யான பந்தம்;
மண பந்தம் ஆகாது மெய்யான பந்தம்!”


சுகமாக வாழ்ந்தார் சுகர் விரக்தியுடன்;
சுகர் பயின்றார் வியாசரிடம் வேதங்கள்.


பிதுர் தேவதைகள் புத்திரியை மணந்தார்.
பிறந்தனர் நான்கு மகன்கள், ஒரு மகள்.


பெண் கீர்த்தியை மணந்தான் மன்னன் அணு.
மண்ணாளும் அரசனானான் பேரன் பிரமதத்தன்.


நிஷ்டையில் அமர்ந்தார் சுகர் கயிலையில்;
அஷ்டமா சித்திகளுடன் எழும்பினார் வானில்.


காற்றைப் போல சஞ்சரித்தார் வானில்!
போற்றித் துதித்தனர் ரிஷிகள், ஜனங்கள்.


புத்திர சோகத்தில் வருந்தினார் வியாசர்.
சுற்றித் திரிந்தார் மகனை அழைத்தபடி.


பரிதவிப்பும், எதிரொலியும் சேர்ந்ததனால்
பரிதாபம் உண்டாகியது பரம சிவனாரிடம்.


சுகரைப் போலவே பதில் அளித்தார் பரமசிவன்,
“சோகத்தில் கூவி அலைய வேண்டாம் வியாசரே!


வான சஞ்சாரம் செய்கிறான் யோக சாதனையால்!
வாழும் உம் புகழ் அவனால் பன் நெடுங்காலம்!”


“மகனுக்காக ஏங்குகிறது என் மனம் இறைவா!
மன்னியும் என் பிழை பொறுத்து அருளும்!” என


‘புத்திரனைக் காணும் விருப்பம் நிறைவேறும்!
புத்திரன் தோன்றுவான் சாயா ரூபமாக!” எனப்


புத்திரன் முன்பு தோன்றினான் சாயா சுகராக!
புத்திரனைக் கண்டு மனம் தெளிந்தார் வியாசர்.


தீண்ட முடியவில்லை சாயா சுகரை – அதனால்
தீரவில்லை ஏங்கிய வியாசரின் புத்திர சோகம்!


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


1 #19c. Sage Sukar’s wedding

Sukar was now really convinced with king Janaka’s argument and felt happy. He went back to his father VyAsa who was in turn happy to see his son rid of all his doubts. ‘The real bondage is the one created by one’s own mind and not the one created by one’s own marriage.’


Sukar lived a peaceful life devoid of any desires. He learned the VEdAs from his father. Later he married the daughter of the Pitru DevatAs. The couple were blessed with four sons and a daughter named Keerti. King ANU married Keerti and their son Brahmadattan succeeded his father and ruled his country.


Sukar sat in mediation In Mount KailAsh. He gained the ashta mA siddhis (the eight unusual powers) . He could now travel in the space as freely as the flowing Wind! Everyone was duly impressed with his feat and praised him.


But VyAsa could not bear the separation from his son Sukar. He roamed like a mad man calling out the name of his son. Lord Siva was moved with pity at the sad plight of the rushi and replied to him, “Your son has obtained the eight great aNimA siddhis and he can travel in air like air. Your name will become famous because of your son. Please stop worrying and lamenting now!”


But VyAsa could not come out of his sorrow. He lamented told Lord Siva, “Kindly bear with me Lord! I long to be with my son Sukar!” Siva replied,” Don’t fret and lament now. You can see your son to your heart’s content once again.”


Lord Siva created ‘ChAyA Sukar’ as the shadowy image of Sage Sukar to console VyAsa. But Sage VyAsa still remained very unhappy since he could only see ‘ChAyA Sukar’ but was unable to embrace him!

 
kanda purANam - asura kANdam

42b. சூரபத்மனின் சினம்

அனைவரையும் அழிக்க விரும்பினான்
அண்டங்களின் அதிபதி சூரபத்மன்.

தம்பியரிடம் சினத்துடன் சீறினான்,
“நம்முடைய ஏவலால் மீன் பிடித்து வந்த

இந்திரன் மண்ணுலகில் வாழ்கின்றான்;
தந்திரமாக இவர்கள் கையை வெட்டினான்.

இனி மனிதரும் நம்மை எதிர்ப்பார்கள்;
தனித் தன்மையை இழந்து விட்டோம்;

பிரானும் அல்லவாம், திருமாலும் அல்ல.
பிரமனும் அல்ல, இந்திரனின் ஏவலாள்.

முன்னமேயே சிறை செய்து அவர்களைத்
தண்டிக்காமல் விட்டது தவறாக ஆயிற்று!

இந்திரனைத் தேடிச் சென்ற தூதுவர்கள்
எந்த உலகில் தேடிக் கொண்டுள்ளார்கள்?

நீங்களும் இருந்து, நானும் இருந்து என்
இந்திரஞாலத் தேரும் இருந்து என்ன பயன்?

தங்கையின் அவமானம் நம்முடையது!
தாங்கிக் கொண்டிருப்பது ஆண்மையா?”

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

2#42B. SOORAPADMAN’S ANGER.


Soorapadman wanted to destroy everything and everyone. He hissed to his brothers, “Indra used to bring fish for us. Now he has gone into hiding. He had our sister’s hand cut off. Now even mortal men will start revolting against us.

It was not Siva, nor VishNu nor Brahma that cut off the hand but a mere servant of Indra. We should have imprisoned Indra when we had the chance. Where are the spies who went looking for them?

What is the use of us or of my wonderful chariot – if we just put up and sit tight on the insult inflicted upon our dear sister?”

 
The 64 Thiru ViLaiyAdalgal
19a. ஏழு மழைமேகங்கள்.


#19.(a). ஏழு மழைமேகங்கள்.
அடங்கி விட்டது கடலின் வலிமை;
சுருங்கி விட்டது பெருகிய கடல் நீர்;
சிவந்தன வருணனின் கண்கள் இரண்டும்;
சீறினான் வளரும் சினத்தினால் அவன்!


கடல் தோற்றதால் என்ன ஆகிவிடும்?
அடல் மிக்க மேகங்கள் ஏழு உள்ளனவே!
அழைத்தான் அந்த ஏழு மேகங்களையும்,
“பிழைக்க முடியாதபடி அழித்து விடுங்கள்!”


கறுத்த ஏழு கன மேகங்கள் புறப்பட்டன;
கண்களைப் பறிக்கும் மின்னல் வெட்டின.
ககனம் நடுங்கும் இடி முழக்கம் செய்து
கள்ளம் இன்றி மழை பொழியலாயின!


மண்டையைப் பிளக்கும் ஆலங்கட்டிகள்,
மதுராபுரி மீது வந்து விழத் தொடங்கின!
ஊழிக் காற்றும் உடன் உருவாகியது;
சூழ்ந்தன காரிருளும், பெரும் புயலும்!


உலகையே அழிக்கும் ஊழியிலிருந்து;
உலக நாயகனே காக்க வல்லவன்;
“அபயம்! அபயம்!” என்று அலறியயபடி,
அம்பலத்தை அடைந்தனர் நகர மக்கள்.


நிலவுடன் கூடித் தலை மேல் உலவும்,
நிகரற்ற நான்கு கன மேகங்களிடம்;
நீலகண்டன் மீண்டும் பணித்தான்,
“நீக்குவது இடரை உங்கள் கடமை!


நான்கு திசைகளில் இருந்தும் நீங்கள்
நன்கு சூழ்ந்து கொள்வீர் மதுரையை!
நான்கு மாடங்கள் போலக் கூடிநின்று
நன்கு மழையைத் தடுப்பீர் நீங்கள்!”


விரைந்து சென்றன நான்கு மேகங்கள்;
பரந்து விரிந்தன வெண்நிறக்குடையாக!
மாட மாளிகைகள், கூட கோபுரங்களைக்
கூடாரம் போலக் குவிந்து காத்தன!


வருணன் மேகங்கள் பொழிந்த மழை
பெருங்குடை மீது பட்டுத் தெறித்தது!
ஒரு துளி நீர் கூட அதைத் தாண்டி
மதுரை நகர் மீது விழவில்லை!


முள்ளை முள்ளால் எடுப்பார்கள்!
நெருப்பை நெருப்பால் அழிப்பார்கள்.
மேகக் கூட்டத்தின் தாக்குதலை ஈசன்
மேகங்களின் உதவியுடனே எதிர்த்தான்!


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

19 (A). THE SEVEN RAIN CLOUDS OF VARUNA.


The swollen waves subsided! The sea lost its destructive power and became tamed. Varuna became red with rage.

“The sea has been tamed! But I still have my unfailing clouds seven in number.They can cause the destruction and deluge the sea failed to cause!”

He ordered his loyal clouds to flood and destroy Madhuraapuri completely. Those were the dark rain clouds. They crackled with lightning, roared with a thunderous noise and left on their mission.


There was a terrifying hail storm. A single hailstone was large enough to crack the skull of fully grown man. The wind blew as a
storm and the whole city became dark and sinister,


The only refuge left was Lord Siva and the only safe place His temple. Every one gathered there praying for His mercy and protection.


Siva summoned the four clouds residing on his matted coils of hair.He told them, “It is now your duty to protect the city and its citizens. Go forth and form a protective umbrella from the four direction of the city!”


The four clouds left on their new mission, swifter than thoughts. They took position one in each direction and spread themselves out forming a giant protective umbrella over the whole city.


The hailstorm could not penetrate the shield formed by these four clouds. The hail stones got thrown in all directions and not a single stone could penetrate the umbrella of the four clouds. The shield saved the city.


A thorn is removed by a thorn. A fire is extinguished by a fire. But here the onslaught of clouds was fought back by clouds themselves! Isn’t it a wonderful concept?


 
bhagavathy bhaagavatam - skanda 7

7#29b. சக்தியை அறியாத சிரிப்பு

முத்தொழில்கள் செய்தனர் மும்மூர்த்திகள்
மூன்று தேவிகள் தந்த சக்தியின் உதவியால்.


ஹலாஹலர்கள் பெற்றனர் பிரமனிடம் வரம்;
ஞாலங்கள் அனைத்தையும் வென்று விட்டனர்.

வளர்ந்தது மமதை; உயர்ந்தது அகம்பாவம்;
தளராது சென்றனர் கயிலை மலை, வைகுந்தம்!


திருமாலும், ருத்திரனும் புரிந்தனர் போர் – நீண்ட
அறுபதினாயிரம் ஆண்டுகளுக்குத் தொடர்ந்து!


வென்ற பின்னரும் அறியவில்லை இருவரும் – தம்
வெற்றியின் காரணம் தேவியரின் சக்தி என்பதை.


சிரித்தனர் இருவரும் தேவியரை எள்ளி நகையாடி.
சிரித்தனர் தேவியர் இவர் தம் இறுமாப்பை எண்ணி.


அருவருப்பான வார்த்தைகளால் இகழ்ந்தனர் கணவர்.
இருதேவியரும் எங்கோ சென்று மறைந்து விட்டனர்.


சக்தி மயமான தேவியர் விலகிச் சென்றதால்
சக்தி ஹீனர்கள் ஆகிவிட்டனர் கணவன்மார்.


இழந்தனர் தாம் பெற்றிருந்த ஞானத்தை;
இழந்தனர் தம் தொழில் புரியும் சக்தியை.


பலமற்ற இருவரைக் கண்டு வியந்தான் பிரமன்!
பலவீனத்தின் காரணத்தையும் கண்டறிந்தான்.


செய்யலானான் முத் தொழில்களை ஒருவனாக;
செய்வதற்கு வேண்டிய சக்தியைத் தரும் தவம்.


தவம் செய்ய இயலவில்லை பிரமனால் – தன்
தவப் புதல்வர்களை அழைத்தான் தன்னிடம்.


“முத்தொழில் புரிகின்றேன் தனி ஒருவனாக!
எத்தொழில் புரியவும் தேவை சக்தியல்லவா?


தவம் செய்வீர் இருவரும் தபோவனம் சென்று;
தவப் பயனாக சக்தியைப் பெறுவர் அரி, அரன்.


புகழ் பெறுவீர் நீவிர் சிறிதும் சுயநலமின்றிப்
பூவுலக நன்மை கருதித் தவம் புரிவதால். ”


சென்றனர் மகன்கள் தபோவனத்துக்கு;
செய்தனர் தேவி தியானம் குறையின்றி.


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


7#29b. The laughter or ridicule (2)


The Trinity got these three Devis as their consorts and started doing their three folded jobs well. HalAhalas did penance towards Brahma and became very powerful. They won over all the three worlds. The invaded Kailash and Vaikuntam.


Rudra and VishNu had to fight with them for sixty thousand years before they could vanquish the HalAhalas. They took pride in their valor and endurance instead of owing the victory to the shakti given to them by their respective consorts.


Their Devis Lakshmi and Gowri burst out laughing to note the growth of pride and arrogance of their spouses. One thing lead to another. Then Hari and Haran made fun of their Devis and the Devis just disappeared from there – to put an end to their taunting and teasing!


Being separated from their respective Shakti Devis, the two gods Hari and Haran were unable to peroform their prescribed duties as before. They lost all their knowledge and power needed to do their jobs and the order of the universe was affected.


Brahma was surprised to see that these two gods Hari and Haran had become powerless. He learned what had happened by his JnAna drushti. He took over the duties of both VishNu and Rudran in addition to his own.


So Brahma was struggling to do the work of the Trinity singlehandedly. He needed more power and energy. These can be obtained only by doing severe penance but he did not have time to do penance.


So he requested his sons,”Please go to Tapovanam and do penance on Devi. As the fruit of your penance VishNu and Rudran must regain their original powers. Since You are going to penance without any selfish motives and also for the sake of the whole universe, You will become very famous!”


Brahma’s sons went to Tapovanam and started doing severe penance concentrating on Devi.
 
bhagavathy bhaagavatam - skanda 1

1#20a. சுயம்வரம்

வைசம்பாயனர், தேவலர், அசிதர் மற்றும்
ஜைமினி, சுமந்து வியாசரின் மாணவர்கள்.

திரும்பிச் சென்றனர் தங்கள் இருப்பிடம்
குருமுகமாக வேதம் கற்றுத் தேர்ந்தபின்.

தங்க முடியவில்லை தனியாக வியாசரால்;
தங்கினார் தம் மாணவர்களுடன் சில காலம்.

புத்திர வேட்கை வாட்டி வதைத்தது வியாசரை.
சத்தியவதியான தன் தாயைத் தேடிச் சென்றார்.

சத்தியவதி சந்தனு மன்னனுடன் கூடிச் சில
சந்ததிகளை உற்பத்தி செய்ததை அறிந்தார்.

அமைந்தார் சரஸ்வதி நதிக் கரையில்;
அமைதியாகத் தவம் செய்யலானார்.

சந்தனு கங்கையின் மைந்தன் காங்கேயன்;
சந்தனு சத்தியவதியின் மகன்கள் இருவர்.

விசித்திர வீர்யன் வீரமும், தீரம் பொருந்தியவன்;
சித்திராங்கதன் அழகுடன் இளமை கொண்டவன்.

நித்திய பிரம்மசாரியாகச் சத்திய விரதம் பூண்டு
சித்திராங்கதனை மன்னனாக்கினான் காங்கேயன்.

இறுமாப்புடன் ஆட்சி செய்தான் சித்திராங்கதன்;
தூரவிலகிச் சென்றான் இவனைக் கண்ட கந்தர்வன்.

விமானத்தோடு இழுத்துப் போர் புரிந்த சித்திராங்கதன்,
விடாமல் நடந்த மூன்று ஆண்டுப் போரில் மாண்டான்!

விசித்திர வீர்யன் ஆனான் புது மன்னன் இப்போது!
விசித்திர வீர்யனுக்கு திருமணம் புரிய வேண்டுமே!

காசிராஜன் நடத்தினான் பெண்களின் சுயம்வரம்.
காசினியின் மன்னர்கள் அனைவரும் காசி வந்தனர்.

பெண்களைக் கைப்பற்றியிருந்த சாளுவ மன்னனை
மண்ணில் தள்ளிப் போரில் வென்றான் காங்கேயன்.

அம்பா, அம்பிகா, அம்பாலிகா ஆகிய மூவரையும்
அழைத்துச்சென்றான் ஹஸ்தினாபுரம் தேரில்.

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


1#20a. Swayamvaram


PailA, VaisampAyanA, Jaimini and Sumanthu were the four famous disciples of SAge VyAsa. After they leaned the four VEdAs from VyAsa they went back to their respective places.

VyAsa was overcome by loneliness. He stayed with his disciples for some time. Then he went in search of his mother Sathyavati. He learned the Sathyavati had married king Santhanu and had two sons now. He decided to live on the bank of river Saraswati. He set up an ashram there and started practicing severe penance there.

King Santhanu had a son KAngeyan through Ganga and two sons Vichithra Veeryan and ChitrAngathan through Sathyavati. KAngeyan had sworn to remain a staunch bachelor all his life. He crowned his step brother ChithrAngathan as the new king of HastinApura.

ChitrAngathan ruled HastinApura with pride and arrogance. Once a gandharva saw him and tried to escape from him in his own vimAnam. But ChitrAngathan would not let him do so.

He dragged the Gandharva with his vimAnam and fought with him for three long years. In the fight ChitrAngathan got killed by the gandharva. So now Vichitra Veeryan was made the new king of HasthinApura.

A king needs a queen to become a full fledged king. So KAngeyan set out to find a suitable bride for his step brother Vichitra Veeryan – the new king of HastinApura.

KAsi RAjan was conducting the swayamvaram of his three daughters AmbA, AmbikA and AmbAlika. KAngeyan went there and captured the three princesses after defeating the king of ChaLuva Desam who had captured them first.

KAngeyan brought the three princesses to HasthinApuram in his chariot as the bride for his step brother Vichitra veeryan..



 
kanda purANam - asura kANdam

42c. பானுகோபன்

சூரபத்மனின் சொற்களைக் கேட்டதும்
வீரமகன் முன் சென்று வணங்கினான்.


“இந்திரன் நம் ஏவலைச் செய்து வந்து,
இளைத்து, அஞ்சி, ஒளிந்து திரிகிறான்.


கள்ளமற்ற எளிய தேவர்களோ எனில்
உள்ளத்திலும் எண்ணார் இச் செயலை.


அத்தையின் கை வெட்டுண்ட மாயம்
சித்தத்தைக் குழப்புவது உண்மையே!


தேவர்களில் ஒருவன் செய்தான் என்று
தேவை இல்லாமல் பழி சுமத்துகிறோம்.


ஆண்மையின்றி மீன் பிடிப்பவர்களிடம்
அண்டர்கோனின் இச்சினம் தேவையா!


கைகள் வெட்டப்பட்ட இடத்துக்குக்
கடுகிச் செல்லுகின்றேன் இப்போதே!


மையலை ஊட்டிய அந்தத் தையலையும்,
தையலின் கணவன் அந்த இந்திரனையும்,


கைகளை வெட்டியவனையும் பிடித்து
ஐயனே உம் முன் நிறுத்துகின்றேன்!


அகப்படாதவாறு அவர் மறைந்து போனால்
சுகப்படாதவாறு எரிப்பேன் சுவர்க்கத்தை.”


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

2#42c. BhAnukOban.


After hearing the angry words of Soorapadman, his valorous son BhAnukOban stepped forward and spoke to his father.

“Indra is frightened, famished and is hiding himself from us. The rest of the Devas are too simple to conceive such a complex scheme. It is really a puzzle as to how my aunt’s hand got cut off.

We are blaming the Devas without any proof. The wretched Devas do not deserve your wrath. I will go immediately to the spot where the incident happened and find out all about it.


I will arrest Indra, and the person who dared to cut off aunt’s hand and bring them to you along with the celestial queen IndrANi”.
 
The 64 Thiru ViLaiyAdalgaL

19b. நான்கு மாடக் கூடல்.

#19.(b) நான்கு மாடக் கூடல்.

பயந்து, நாணி, வெட்கிய வருணன்,
தயங்கிப் பொற்றாமரைக் குளத்தில்
முங்கி எழுந்து செய்ய விழைந்தான்
லிங்க பூஜை சொக்கநாதருக்கு.


வயிற்றுநீர் வியாதி நொடிப்பொழுதில்
கயிற்றை அவிழ்த்த கன்றாக ஓடியது!
ருத்திராக்கமும், திருநீறும் அணிந்து
ருத்திரனை உபாசித்தான் வருணன்.


கண்ணிய நதி நங்கைகள் தங்கள்
தண்ணிய நீரைத் தங்கக் குடங்களில்
அண்ணலின் அபிஷேகத்துக்கு அளித்து
புண்ணியம் எய்திப் புளகம் அடைந்தனர் !


வாசனைத் திரவியம், மலர்கள், சந்தனம்,
பூசனைக்கு வேண்டிய சில பொற்கலங்கள்,
அற்புதமான பொன்னாடைகள் இவற்றை,
கற்பகத் தரு மனமுவந்து அளித்தது.


பஞ்சாமிர்தம், ஐந்து வகைக் கனிகள்,
பஞ்சகவ்வியம், நைவேத்தியங்கள்,
தூப தீபங்களைக் காமதேனு உவந்து
தூய மனத்துடன் அவனுக்கு அளித்தது.


முறை தவறாமல் செய்தான் வருணன்,
நிறைவான பூஜை சொக்கலிங்கத்துக்கு;
ஆயிரம் நாமங்களை அர்ச்சனை செய்து
ஆயிரம் முத்துக்களை அர்ப்பணித்தான்.


வரம் தர விரும்பினான் கருணைக்கடல்,
வரம் தேவை இல்லையே இப்போது!
நீங்கிவிட்டது வயிற்று நீர் வியாதி,
நீலகண்டன் திருவருளால் வருணனுக்கு!


“சோதனை செய்தேன், பிழை பொறுப்பீர்!
வேதனை அடைகின்றேன், மதியிலி நான்!
போதனை பெற்றேன், தேவன் உங்களிடம்,
சாதனை மன்னர் நீங்களே! ஐயம் இல்லை!”


நான்கு மேகங்கள் நாற்புறமும் சூழ்ந்து
நான்கு மாடங்களாக நகரைக் காத்ததால்,
நான்கு மாடக் கூடல் நகர் என்ற பெயர்
நம் மதுராபுரிக்கு அமைந்து விட்டது.


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

# 19 (B). THE FOUR STORIED PROTECTION.


Varuna got frightened and ashamed at the failure of his daredevil plans and thoughtless actions. He wished to make up for his folly by worshiping Lord Siva in the form of Chokkalingam.


Even as he was making up his mind to worship the Lord, the problem due to his extended stomach vanished without a trace.

He had a holy dip in the Pond of Golden Lotuses. He adorned himself with holy ash on his forehead and rudraaksha maalas.

The rivers gave him their holy water in golden pots for doing abishekam. Karpaga Vruksham gave him the sandal paste, flowers, gold vessels, new dresses and the incenses needed for the puja.


Kaamadhenu gave him the panchaamrutham, pancha gavyam, dhoop and deepam for the puja. Varuna did an elaborate pooja in the prescribed manner.He did the sahasranaama archana for Siva with 1000 beautiful pearls.


Lord Siva was pleased with Varuna and wanted to bestow him with a boon. But Varuna had already got rid of his problem and desired nothing,


Varuna begged for Lord’s pardon for his thoughtless actions in challenging the all powerful god.
Since the four clouds protected the city of Madhuraapuri, it got new name “The city with four storied protection!” .
 
bhagavathy bhaagavatam - skanda 7

7#30a. சதி தேவி

அடைந்தனர் இமயமலைச் சாரலை அனைவரும்;
அமர்ந்தனர் தேவியின் திருவடிகளின் தியானத்தில்.


ஜெபித்தனர் மாயாபீஜ மந்திரத்தைத் தொடர்ந்து;
ஜெயித்தனர் தேவியின் திவ்வியமான தரிசனத்தை.


மூன்று கண்கள்; நான்கு கரங்களோடு – அவர்கள்
முன்னாள் தோன்றினாள் மணித்வீபவாசினி தேவி.


தொழுதனர் தேவியை, மகிழ்ந்தனர் காட்சியினால்,
“விழையும் வரம் எது கூறுங்கள்!”என்றாள் தேவி.


“அடைய வேண்டும் ஹரி, ஹரர்கள் தம் சக்தியை!
அடைய வேண்டும் ஹரி, ஹரர்கள் தம் தேவியரை!”


தக்ஷன் வேண்டினான் தேவி மகளாக வருவதற்கு;
தயையுடன் அளித்தாள் தக்ஷனுக்கு அந்த வரத்தை.


“உண்டானது துன்பம் ஹரிக்கும், ஹரனுக்கும்,
ஒண்முகத் தேவியரை இகழ்ந்து நகைத்ததால்;


அடைவார்கள் ஹரி, ஹரர்கள் தம் சக்தியினை;
அடைவார்கள் ஹரி, ஹரர்கள் தம் பத்தினியரை;


தோன்றுவேன் தக்ஷப் பிரஜாபதியின் மகளாக;
தோன்றுவேன் நான் பாற்கடலில் லக்ஷ்மியாக!”


அருள் செய்துவிட்டு மறைந்து விட்டாள் தேவி;
திருமால், சிவனார் பெற்றனர் தத்தம் சக்திகளை.


தக்ஷனின் மகளாகத் தோன்றினாள் ஒரு சக்தி;
தாக்ஷாயணி, சதி தேவி என்ற பெயர் பெற்றாள்.


மலர் மழை பொழிந்தது விண்ணிலிருந்து;
உலகமே மகிழ்ந்தது தேவியின் வரவால்!


சூரியன் ஒளிர்ந்தான் அதிகமான ஒளியுடன்;

பாரினில் பொங்கிப் பரவியது பெருமகிழ்ச்சி.

பத்தினியானாள் சதி தேவி பரமசிவனாருக்கு;

அக்கினியில் பிரவேசித்தாள் ஒரு காரணமாக!

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

7#30a. Sati Devi


The sons of Brahma reached the slopes of HimAlayas and sat down meditating upon Devi, uttering her MAyA Bheeja manta. Devi was pleased and appeared before them.

She had three brilliant eyes and four beautiful arms. She spoke in a voice sweeter than the song of a cuckoo,”What do you wish for Oh sons of Brahma?”

The sons of Brahma paid obeisance to Devi and put forward these requests,
” Oh Devi! Please grant that VishNu and Rudran regain all their lost powers and knowledge. They must win back their consorts who are none other than your own amsams.”


Dakshan had one more request to Devi,” You must be born as my daughter!” Devi gave that boon to Dakshan.


She told all of them, “VishNu and Rudran will get back all their powers and knowledge as before. They will win their consorts as before. I will be born as DAkshAyaNi – the dughter of Dakshan. I shall appear from the Ocean of Milk as Lakshmi Devi and wed Lord NArAyaNan.”


Devi granted these boons and disappeared. Siva and VishNu got back their powers. Shakti appeared as the daughter of Dakshan. She was called DAkshAyaNi and Sati Devi.


Flowers rained from the sky. The whole world became very happy and pleased. The sun shone more brilliantly than usual. Sati Devi married Parama Sivan. Later on she did agni pravesam for a specific reason and ended her life.



 
kanda purAnam - asura kANdam

43b. “போர் புரிவேன்!”

செய்தி கேட்டுத் துன்புற்றான் ஜயந்தன்,
“தாய் தந்தையர் இருக்குமிடம் அறியேன்!


நலம் கூறி அறிவுறுத்த நம்முடைய
குலகுரு வியாழ பகவானும் இல்லை.


நம்மைத் துன்புறுத்தவே வந்துள்ளான்
நால்வகைப் படைகளுடன் இவன்.


புகலிடம் எதுவும் இல்லை நமக்கு,
புகலிடம் தேடும் எண்ணம் இல்லை.


வருந்தி வாடப் போவதும் இல்லை!
வருவதை யாரால் தடுக்க முடியும்?


புறமுதுகு இடப்போவதும் இல்லை.
திறலழிந்து சரண் புகுவதும் இல்லை.


வெற்றி அல்லது வீரசுவர்க்கம் எனக்கு!
அசுரர்களுடன் நான் போர் புரிவேன்!


அஞ்சுபவர்கள் விட்டுச் செல்லலாம்!
கொஞ்சமும் கவலை இல்லை எனக்கு!”


“அவர்களுக்குத் தொண்டு புரிவதிலும்,
அவர்களுடன் பொருதலே மேலானது!


விரைந்து செல்வோம் போர்க்களம்!”
ஐராவதத்தை எண்ணினான் ஜெயந்தன்


நினைத்த மாத்திரத்தில் நின்றது எதிரே.
அனைத்து தேவர்கள் உடன் சென்றனர்.


பானுகோபன் படைக்கு முன் சென்று
சேனையுடன் நின்றது தேவர் குழாம்.


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


2#43b. JAYANTHAN AND THE DEVAS.


Jayanthan got very upset on hearing the news. “I do not know where my parents are now! Our kulaguru SukrAchArya is not around to guide us. BhAnukOban wants to destroy us.


We have no asylum. We are not seeking any asylum. I am not going to worry about the outcome of the war. I will not run away from it. I am not going to surrender to the asuras Either victory or the swargga of the valorous warriors will be mine. Those of you
who are afraid to fight the auras can safely leave now.”


“We will rather fight those asuras than serve them doing menial jobs! Let us go to the war front right now.” All the other Devas said to Jayanthan and got ready for the war.

Jayanthan thought of the AirAvata and it stood in front of him. Each Deva got into his vimAnam and they all went to the war front ready to fight with the asura army.

 
The 64 ThiruviLaiyAdalgaL

20. எல்லாம் வல்ல சித்தர் ஆனது.

#20. எல்லாம் வல்ல சித்தர் ஆனது.

அபிஷேக பாண்டிய மன்னன் மாறாத
அபிமானம் கொண்டிருந்தான் சிவன் மீது;
அன்புக்கு அடிமையான ஈசன் அவனோடு
அன்புடன் விளையாட விரும்பினான்!


வடிவடுத்தான் அழகிய சித்தர் பிரானாக;
முடிக் கற்றைகள், புலித்தோல், இளவயது;
தங்க நிற நெற்றியில் திருநீற்றுப்பட்டை;
தங்கப் பூண்கள் இட்ட அழகிய ஒரு பிரம்பு!


மாட மாளிகைகள், கூட கோபுரங்கள்;
கடை வீதிகள், சித்திரக் கூடங்கள்;
நிலவு முற்றம், நாற்சந்திகள் எங்கும்
அலகிலா இந்திரஜாலங்கள் செய்தார்!


ஆண் மகனைப் பெண்ணாக்கி விடுவார்;
ஆண்மகன் ஆக்குவார் அழகிய பெண்ணை;
வாலிபர்கள் வயோதிகர்கள் ஆனார்கள்;
வயோதிகர்கள் வாலிபர்கள் ஆனார்கள்;


கூனனை நிமிர்த்தி அழகனாக்குவார்;
குருடனுக்குக் கண் பார்வை தருவார்;
செவிடன் கேட்பான்; ஊமை பேசுவான்;
முடவன் காலை வீசி நன்கு நடப்பான்;


இரும்பு உருமாறி பொன்னாகிவிடும் ;
ஈயம், தாமிரம், வெள்ளியும் கூட;
பண்டிதன் ஆவான் பாமரன் நொடியில்;
சண்டிராணி அழகிய மடந்தை ஆவாள்;


சித்தரின் சித்து விளயாடல்களால்
சித்தம் பறி போனது பாண்டியனுக்கு!
“வித்தகர் அவரைக் கண்டு நான் என்
அத்தனாகவே வணங்குவேன் அவரை!”


ஏவினான் தன் ஆணைக்கு அடிபணியும்
ஏவலர்கள் சிலரைச் சித்தர் பிரானிடம்;
பணியாட்கள் சித்து விளையாடல்களில்
பணிமறந்து சிலையாக நின்றுவிட்டனர்;


மதி மந்திரிகள் அனுப்பப்பட்டனர் பிறகு
மதி மயக்கும் சித்தரை அழைத்துவர;
“மன்னனுக்கு எந்த நன்மையையும்
என்னால் விளையாது! வரமாட்டேன்!”


மதி மந்திரிகளின் இத்தகையதொரு
பதிலைக் கேட்டு எண்ணினான் மன்னன்,
“தேவருலக மன்னனையே மதியாதவர்
பூவுலக மன்னனையா மதிக்கப் போகின்றார்?”


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


20. The all powerful Siddha


Abhisheka PaaNdiyan did not forget the kindness shown by Lord Siva. The God who is easily won by the devotee’s love wanted to play a prank with him. He transformed himself into a young and handsome siddha purusha. He sported long coils of hair and wore a tiger skin. He smeared the holy ash on his forehead and held a stick with gold rims.


He performed stunning miracles in the most populated areas of the city. He would convert a man into a woman, a woman into a man, old people into youngsters and youngsters into old people.


He would straighten the hunchback of man in a moment and give the gift of eyesight to a blind man. A deaf man would be able to hear well, a dumb man would be able to talk fluently and a lame man would walk and run like normal people.


He could convert baser metals into gold. An illiterate would become a pundit and a shrew would become the most docile woman in the world.


As the tales of these stunning miracles spread in the country, the king Abhisheka PaaNdian became an ardent admirer of the Siddha purusha. He wished to meet him in person and pay his obeisance to that great young man.


He sent some messengers to bring that Siddha purusha to the palace. The messengers forgot their orders and stood mesmerized in the miracles performed by him. The king then sent his trusted ministers. But the Siddha said, “I will be of no use to your king and I will not come to meet him”


The king was not surprised to hear this. He knew that a Siddha purusha could not be controlled or manipulated even by Indra – the king of Deva. Why would he be controlled by a mere human king like himself ?


 
bhagavathy bhaagavatam - skanda 7

7#30b. தக்ஷனின் துவேஷம்

துர்வாசர் ஜபித்தார் மாயாபீஜ மந்திரத்தை;
தரிசனம் தந்தாள் ஜாம்புந்தேச்வரி அவருக்கு.

தந்தாள் தான் அணிந்திருந்த மாலையை அவருக்கு.
அந்த மாலையுடன் சென்றார் முனிவர் தக்ஷனிடம்.

“வினோத மாலை கிடைத்தது எவ்வாறு?” தக்ஷன் வினவ
“மனம் மகிழ்ந்த தேவி தந்தாள் பிரசாதமாக!” என்றார்.

தனக்கு அதைத் தருமாறு வேண்டினான் தக்ஷன்;
“உனக்கு இல்லாததா?” என்றளித்தார் மாலையை.

தொங்க விட்டான் மாலையை பள்ளியறையில்;
தூண்டியது காம உணர்வை அந்த மலர் மாலை.

உறவாடினான் மனைவியோடு காமவெறியில்;
மறைந்தது சிவ பக்தி; பிறந்தது சிவ துவேஷம்.

சிவனை இகழ்ந்தான் தக்ஷன் – அதைக் கண்டு
ஜீவனைத் துறந்தாள் சதிதேவி யோகாக்னியில்.

தோன்றினாள் சக்தி ஒளிவடிவாக மீண்டும்;
தோன்றினாள் சக்தி இமயமலை மீது மீண்டும்.

பெரும் கோபம் உண்டானது பரம சிவனுக்கு;
உருவாக்கினர் வீரபத்திரனை, பத்ரகாளியை!

உருவாக்கினார் எண்ணற்ற பூதகணங்களை;
வெறி கொண்டு அழித்தனர் அனைவரையும்;

சரண் புகுந்தனர் தேவர்கள் பரமசிவனிடம் சென்று;
“ஒரு குற்றமும் செய்யாத எமக்குத் தண்டனை ஏன்?”

மன்னித்தார் சிவனார் அனைவர் குற்றங்களையும்;
பின்னர் உயிர்ப்பித்தனர் தக்ஷனை ஆட்டுத் தலையுடன்;

வருந்தினார் சிவனார் சதிதேவியின் மறைவுக்கு;
திரிந்தார் உலகெங்கும் சதியைச் சுமந்து கொண்டு.

“சித்கலா ரூபத்தின் கலைகளைப் பீடமாக்கி
சக்தராகிய தமரும் அமர்ந்து அருள வேண்டும்!”

இணங்கினர் சிவன் அமரரின் வேண்டுகோளுக்கு;
இணங்கினார் விஷ்ணு கலைகளைப் பிரதிஷ்டை செய்ய!

“மாயாபீஜா மந்திரத்தை சக்தி பீடத்தில் ஜபித்தால்
மந்திர சித்தி உண்டாகும்!” என்றருளினார் சிவன்.

நன்னெறியை உலகினருக்கு எடுத்துக் காட்டத்
தாமே அமர்ந்தார் தியான நிஷ்டைகளில் சிவன்.

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

7#30b. Dakshan’s dwesham

Sage DurvAsa meditated on Devi uttering her MAyA Bheeja Mantra. Devi was pleased and gave him her darshan and also presented to him a garland she was wearing as her prasAdam.

DurvAsa went to visit Dakshan carrying Devi’s garland. Dakshan was impressed by the sight and smell of Devi’s garland. He requested the sage to give Devi;s exquisite garland to him. The sage obliged willingly.

Dakshan hung the garland in his bed room. The powerful scent of the garland aroused his base instincts and he enjoyed the carnal pleasures with his wife on that night.

Since then his mentality changed dramatically. His love and devotion for Lord Siva vanished and were replaced by hatred and dwesham towards Lord Siva.

He kept insulting and humiliating Siva whenever possible. Sati Devi got upset by the insults flung on Lord Siva her husband, by her own father. She decided to burn herself in yoga agni – not wishing to live any longer as the daughter of Dakshan. Later Devi appeared in HimAlaya as a glowing, formless, illumination.

Siva became very angry to learn the sad end of his beloved Sati Devi. He created Veerabadran and Badra KALi and innumerable bootha gaNaas (demons) besides. They started destroying everything and everyone in their vicinity.

Devas took refuge in Siva and asked him,”Why is this punishment given to us – who have done no harm to you or to Sati Devi?”

Siva pardoned everyone. He resurrected Dakshan beheaded by Veerabadran – by fixing the head of a goat on to his neck. Siva threw the body of Sati Devi on his shoulder and went round the three worlds like a mad person. Everyone was deeply pained to see that sad sight.

The Devas requested him, “Please make the kalAs in the Chith kalA roopam of Sati Devi into as many Shakti peetams. You may also please reside in those peetams.”

Siva agreed to do so. VishNu agreed to do the prathishta of each individual kalA at a
different place. Thus the one hundred and eight Shakti Peetams came into existence.

“If a person does the japam of Devi’s MAyA Bheeja Mantra in these Shakthi Peetams, he will gain the mantra siddhi.” Siva blessed the world thus and he himself resides in those peetams in Dhyaana nishta since then.

 
bhagavathy bhaagavatam - skanda 1

1#20c. மூன்று மகன்கள்

அம்பிகா, அம்பாலிகா மணந்து கொண்டனர்
அரசன் விசித்திர வீர்யனை விதி முறைப்படி.


அனுபவித்தனர் காம சுகத்தை ஆசை தீரும்படி,
ஆண்டுகள் ஒன்பது தம் நாட்டிலும், காட்டிலும்.


மரணம் அடைந்தான் மன்னன் க்ஷயரோகத்தில்.
சரணம் அடைந்தாள் சத்தியவதி காங்கேயனிடம்.


“மணந்து கொள்வாய் உன் தம்பியர் மனைவியரை.
மாறுவாய் மண்ணாள அரசனாக!” வற்புறுத்தினாள்.


பிரதிக்ஞையை நினைவூட்டினான் காங்கேயன்;
“பிறழ மாட்டேன் அதிலிருந்து!” என்றான் தாயிடம்.


“நல்ல அந்தணனுடன் உறவாடச் செய்து அரசுக்கு
நல்ல வாரிசுகளை உற்பத்தி செய்யலாம்” என்றான்.


புத்திரர் வியாசரை நினைவு கூர்ந்தாள் அவள்.
சத்தியவதியின் முன் தோன்றினார் வியாசர்.


“விசித்திர வீர்யனின் மனைவியரோடு உறவாடி
வீரியத்துக்குத் தகுந்த மக்களை உருவாகுவாய்!”


அம்பிகையுடன் கூடி உறவாடினார் வியாசர்.
அந்தகனான ஒரு மகன் பிறந்தான் அவளுக்கு.


அச்சத்தில் கண்களை இறுக மூடிக் கொண்ட
அம்பிகை ஈன்றாள் குருடனான ஒரு மகனை.


அம்பாலிகையுடன் உறவாடினார் வியாசர்;
வெண் குஷ்டத்தோடு பிறந்தான் ஒரு மகன்.


அச்சத்தினால் நிறம் வெளுத்துப் போனதால்
அம்பாலிகை ஈன்றாள் வெண்குஷ்ட மகனை.


தாதியுடன் கூடினார் வியாசர் – அரசி தன்
தாதியை தனக்குப் பதிலாக அனுப்பியதால்.


இன்பமாகக் கூடினாள் தாதி வியாசருடன்
இனிய மகன் விதுரன் பிறந்தான் அவளுக்கு.


தோன்றினர் மூன்று மகன்கள் வியாசருக்கு
திருதராஷ்டிரன், பாண்டு மற்றும் விதுரன் என.


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


முதலாவது ஸ்கந்தம் முற்றுப் பெற்றது.


1#20c. The three sons of VyAsa


AmbikA and AmbAlika married king Vichitra Veeryan and lived with him happily for nine yeas enjoying marital bliss. Then the king died of Tuberculosis leaving them without an offspring.

Sathyavati knew it was necessary that the queens bear sons who could become the future rulers of the country. She approached KAngeyan and said, “The kingdom needs future kings. Please marry the wives of your younger brother and produce worthy sons for the sake of the kingdom!”

But KAngeyan reminded her of his oath and refused firmly. He suggested that the queens could produce sons with the help of a pure, good-natured and intelligent Brahmin.

Sathyavati remembered her eldest son VyAsa born long ago to Sage ParAsara. Immediately VyAsa appeared in front of her. She sought his help in producing worthy sons with the queens of his half brother.

VyAsa impregnated the queen AmbikA. But she had closed her eyes tight during the union out of fear. So a blind son was born to her. Next VyAsa impregnated the other queen AmbAlika.

She had turned completely pale during the union and she delivered a son who suffered from Leucism. Sathyavti told VyAsa to try with the elder queen once again to get a worthy son.

But the queen sent her maid in her place. The maid was happy to be with VyAsa and she delivered the intelligent and sweet tempered Vidura.

Thus Sage VyAsa produced three sons namely DhritarAshtra, PANdu and Vidura – as advised by his mother Satyavati.




 
kanda purANam - asura kANdam

43c. தேவ அசுர யுத்தம்

போருக்கு வந்து நின்ற தேவர்களை
நேருக்கு நேர் கண்டு வியந்தனர்.

“ஏவல்கள் செய்து பிழைத்தவர்கள்
எதிரே நிற்கின்றார்கள் போருக்கு!”

கடும் போர் தொடங்கியது அங்கு,
கொடும் அவுணர் தேவர்களிடையே.

விடுத்தனர் வலிய படைக்கலன்களை
அடுத்து அடுத்து இரு படையினரும்.

தேவர்கள் திறல் அழிந்து போயினர்;
தேவர்களைப் பிடித்துக் கட்டினர் அசுரர்.

நாண் ஒலி எழுப்பினான் ஜயந்தன்;
கணை மழை பொழிந்தான் ஜயந்தன்.

நூறு வெள்ளம் அவுணர்கள் அழிந்து
ஆறாகப் பெருகியது அவர்கள் குருதி.

நீலகேசன் எதிர்த்தான் ஜயந்தனை.
நீலகேசியின் கவசம் அறுபட்டது.

ஜயந்தனின் வில் நாண் அறுபடவே
மாயப் போர் புரியலானான் அவன்.

மாயை நீக்க இயலாத அவுணர்கள்
பேயைக் கண்டது போல் ஓடினர்.

படைத்தலைவர் ஒன்றாக முயன்றும்
உடைக்க முடியவில்லை மாயையை.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

2#43c. THE DEVA ASURA YUDDHAM.


The asuras were surprised to see the Devas in the war front. “They were saving their skins doing menial jobs for us. Today they have dared to come to the war front!” A fierce battle started between the asuras and the Devas. But the Devas were much weaker than their enemies.

Soon all the Devas got bound and Jayanthan was the only one left to fight the asuras. He started showering arrows from his bow. One hundred veLLam of the asura army was vanquished by him and their blood started flowing like a red river.

Neealkesan dared to fight with Jayanthan, but very soon his armor got damaged. Jayanthan’s bow string got cut and he resorted to a war using MAyA techniques.

The asura could not come out of the his MAyA and started running away madly. All the generals of the asura army tried together to destroy the MAyA created by Jayanthan but failed miserably.

 
The 64 Thiru ViLaiyAdalgaL

#21. கல்யானைக்குக் கரும்பு!

“சித்து வேலைகள் புரிந்திடும் அந்த அற்புத
வித்தகரை நானே சென்று வணங்காமல்;

இங்கே அவரை வரச் சொல்லி அழைத்து
இங்ஙனம் அவமதித்து விட்டேனே நான்!”


சித்தருக்கும் மன்னனைக் காணும் ஆவல்
சித்தத்தில் நிரம்பி வழியலாயிற்று;

மகர சங்கராந்தி மாதப் பிறப்பன்று
நிகரற்ற இந்திர விமானத்துக்கு அருகே,


எதிர் நோக்கி அமர்ந்திருந்தார் அவனைப்
புதிர் ஆக விளங்கிய இளம் சித்தர்பிரான்;

மன்னனுக்கு வழி செய்துகொண்டு வந்தவர்கள்
சன்னியாசி உடையில் இருந்தவரையும் விரட்ட,


மன்னனே வந்துவிட்டான் அங்கே அவரருகே,
சன்னியாசியிடம் கேள்விக் கணைகளுடன்!

“உமது நாடு யாது? உம் உறவினார்கள் எவர்?
உமது சக்திகள் என்ன? உம் தொழில் என்ன?”


“காசியே எனக்கு இடமும், என் நாடும்;
நேசிக்கும் சிவனடியார்களே உறவினர்;

சித்து வேலைகள் செய்து மகிழ்வித்துப்
புத்துணர்ச்சி ஊட்டுவது என் தொழில்!”


கம்பீரமாகப் பேசினார் இளம் சித்தர்பிரான்;
கம்பீரமா அன்றி கர்வமா தெரியவில்லை!

வல்லமையைச் சோதித்து அறிவதற்கு ஒரு
கல்யானையைத் தேர்வு செய்தான் மன்னன்.


பருத்து, விளைந்து, நீண்டு, உயர்ந்த ஒரு
கரும்பினை வேளாளனிடம் பெற்ற மன்னன்

“வல்லவருக்கு வல்லவர் நீங்கள் ஆயின்,
கல்யானைக்குக் கரும்பு அளிப்பீர்!” என;


கல்யானையைக் கடைக் கணித்தவர்,
வெள்ளமென மன்னனிடம் பேசினார்;

“கரும்பு தின்கின்றதே கல்யானை இன்று!
திரும்பி அதனை நீ நோக்குவாய் மன்னா!”


திரும்பிய மன்னன் திகைத்து நின்றான்;
கரும்பை விரும்பிச் சுவைத்தது யானை!

திறந்த கண்கள் விரிய, துதிக்கை ஆடிட,
சிறந்த கரும்புச் சாறு வாயிலிருந்து வழிய!


கரும்பு தின்றபின், மன்னன் மாலையைக்
குறும்புக் கல்யானைப் பற்றி இழுத்தது!

மெய்க்காவலர்கள் பிரம்பை உயர்த்தவே,
மெய்யாக மாலையை விழுங்கிவிட்டது!


காவலர் கோபம் சித்தர் மீது திரும்பியது!
கோவலன் மணிமாலை தொலைந்ததால்!

சித்தரை நோக்கிப் பிரம்பை உயர்த்தினர்;
சித்தர் ‘நில்’ எனச் சிலை போலாயினர்!


கோபம் மறைந்து ; ஞானம் பிறந்தது;
தாபம் தீர்ந்தது; உளப்பரிவு பெருகியது;

மண்மீது தன் மணிமுடி நன்கு பதியத்
தண்ணருள் ஈசனின் தாள் பணிந்தான்.


“வேண்டும் வரம் கேள் மன்னா!” என்றிட ,
“மண்ணாள ஒரு மகன் வேண்டும்” என்றான்.

தந்தார் சித்தர் மன்னன் விரும்பிய வரத்தை;
தந்தது யானை மன்னன் மணிமாலையை ;


பெற்றுக்கொள்கையில் சித்தர் மறைந்தார்;
கற்சிலையானது யானை முன்போலவே!

ஏக்கம் தீர்க்க வந்து பிறந்தான் ஒரு மகன்;
ஊக்கம் நிறைந்த விக்கிரம பாண்டியனாக!


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி .


# 21. FEEDING A STONE ELEPHANT.


“I should have gone and met that mahaan! It was wrong on my part to order him to come to meet me in the palace!”

The king kept on musing in this line of thought.
Apparently the Sidhdha also was keen on meeting the king!

On a Makara Sankaraanthi day, the Siddha purusha sat on the north western side of the Indra Vimaanam. The King was doing Pradakshinam of the temple.


The king’s bodyguards would make way for the king in crowded places. They ordered the Sidhdha Purusha to move away and make way for the king. By that time he king himself had reached that spot.


He threw many questions at the sidhdha,”Which is your place and city? Who are your relatives? What is your business here?”


The sidhdha replied with a smile, “I come from Kasi. All the devotees of Siva are me relatives. My business is performing miracles and refreshing people with my tricks!”


The confidence with which the sidhdha spoke, made the king want to test his ability. He took a sugarcane and told the sidhdha to feed it to the stone elephant seen in the temple.


The sidhdha told the king to turn back and look at the stone elephant. It had already opened its eyes wide. It waved its trunk and was chewing the sugarcane, dripping its rich juice all over the place.The King stood wonder struck!


Now the naughty elephant grabbed the gold haaram of the king. The bodyguards threatened the elephant with their sticks raised. It gobbled the king’s haaram!


Now the anger of the bodyguards turned on the sidhdha purusha. They raised their sticks to beat him. He said, “Stop!” and they all froze like statues in mid action.


Now the truth dawned on the king that the sidhdha was none other than Lord Siva Himself. He prostrated to the mahaan. He was offered a boon. The king wished for a successor in the form of a worthy son.


Sidhdha gave him the boon and the elephant returned his haaram. At that moment the sidhdha disappeared and the elephant became a stone elephant once again!


The King was blessed with a worthy son whom he named a as Vikrama Paandian.



 
bhagavathy bhaagavatam - skanda 7

7#30c. The 108 Shakti peethas

1. Goddess Vis’alakshi in Varanasi, Uttar Pradesh.
2. Goddess Lingdharini in NaimichAraNya area.
3. Goddess Lalita Devi in Prayag, Uttar Pradesh.
4. Goddess KAmuki in GandmAdan mountain.

5. Goddess Kumuda in South Mansarovar.
6. Goddess ViswkAmA in North Mansarovar.
7. Goddess Gomati Devi On Gomant.
8. Goddess KAmachAriNi in MandarAchal mountain.

9. Goddess Mdotkta in Chitrarath.
10. Goddess Jayanti Devi in Hastinapur.
11. Goddess Gauri Devi in Kanyakubj.
12. Goddess Rambha on MalayAchal.

13. Goddess Kirthymati in EkAmra pith.
14. Goddess Vis’weswari in Vis’wapith.
15. Goddess PuhutA in Pushkar.
16. Goddess Sanmardayeni in Kedar area.

17. Goddess Manda in Himatwa pith.
18. Goddess Bhadra Karnika in Gokarna.
19. Goddess Bhawani in Sthaneswar.
20. Goddess Vilwapatraika in Vilwak.

21. Goddess MAdhavi in Shrisailam.
22. Goddess BhadrA in Bhadreshwar.
23. Goddess JayA in Varaha parvat.
24. Goddess KamalA in KamalAlay.

25. Goddess RudrAni in Rudrakoti.
26. Goddess KAli in Kalanjar.
27. Goddess MahAdevi in Shalagram.
28. Goddess JalapriyA in Shivlingam.

29. Goddess KapilA in MahAlingam.
30. Goddess Mukuteswari in MAkot.
31. Goddess Kumari in MAyApuri.
32. Goddess LalitAmbikA in Santan pith.

33. Goddess MangaLA in Gaya.
34. Goddess VimlA in Purushottam Area.
35. Goddess UtpalAkshi in SahastrAksh.
36. Goddess Mahotpala in Hiranayaksh.

37. Goddess AmoghAkshi in Vipasha.
38. Goddess Padala in Pundravan.
39. Goddess NArAyaNi in Suparshwa.
40. Goddess Rudra-Sundari in Chitrakoot.

41. Goddess VipulA in Vipul Area.
42. Goddess KalyANi in MalayAchal.
43. Goddess Ekvir in Sahardra Mountain.
44. Goddess ChandrikA in Harishchandra.

45. Goddess Raman in RAmtirth.
46. Goddess Mrigawati in Yamuna.
47. Goddess Kotvi in Koti-tirtha.
48. Goddess SugandhA in MAdhav Van.

49. Goddess TrisandhyA in Godavari.
50. Goddess Ratipriya in GangadwAr.
51. Goddess SubhAnanda, in Shivkunda.
52. Goddess Nandini, in DevikA-Tat.

53. Goddess Rukmini, in DwArka.
54. Goddess RadhA, in VrindAwan.
55. Goddess DevikA, in MathurA.
56. Goddess Parames’wari, in PAtAl.

57. Goddess SeetA, in Chitrakoot.
58. Goddess VindhyawAsini, in VindhyAchal, Uttar Pradesh.
59. Goddess MahAlakshmi, in Karvir Area.
60. Goddess UmA, in VinAyak Area.

61. Goddess Aarogya, in Vaidhyanath in Bihar.
62. Goddess Maheswari, in MahAkAl Area.
63. Goddess PrachaNda, in Chagaland.
64. Goddess ChaNdika, in Amarkantak in Madhya Pradesh.

65. Goddess MANdavi, in MANdavya Area.
66. Goddess SwahA, in Maheswarpuri.
67. Goddess AbhyA, in Ushna Tirth.
68. Goddess NitambA, in Vindhya mountain.

69. Goddess VarAroh, in Someshwar.
70. Goddess Pushkaravati, in PrabhAs Area.
71. Goddess Dev-Mata, in Saraswati Tirth.
72. Goddess Paravara, in Sea beach.

73. Goddess MahabhAgA, in MahAlayA.
74. Goddess Pingales’wari, in Payoshini.
75. Goddess SinghikA, in Kritsauch Area.
76. Goddess Aatishankari in KArtik Area.

77. Goddess LolA in Utpala Mountain.
78. Goddess SubhadrA in river Sonbhadra.
79. Goddess Lakhmi in Sidha Van.
80. Goddess AnangA in Bharatashram.

81. Goddess Vis’wamukhi in Jalandhar Mountain.
82. Goddess TArA in Kishkindha Mountain.
83. Goddess Pushti in DevdAru Van.
84. Goddess MedhA in Kashmir.

85. Goddess BhimA in Himadri Mountain.
86. Goddess Tushti in Vis’wes’war Area.
87. Goddess Suddhi in KapAlamochan Tirtha.
88. Goddess MAtA in Kamvararoh Tirtha.

89. Goddess DhArA in Shankhodwar Tirtha.
90. Goddess Dhriti in Pindrak Tirtha.
91. Goddess KalA in the bank of ChandrabhAga river.
92. Goddess ShivdhAriNi in Achad Area.

93. Goddess AmritA in the bank of Ven river.
94. Goddess Urvashi in Badari-Van.
95. Goddess Aushadhi in North Kuru Pradesh.
96. Goddess KushodakA in Kushadwip.

97. Goddess ManmathA in Hemekut Mountain.
98. Goddess SatyavAdini in Kumud Van.
99. Goddess VandaniyA in Aswa-Tirth.
100. Goddess Nidhi in VaishwanAlay.

101. Goddess GAyatri, in Vedvadan Tirtha.
102. Goddess PArvati, the consort of Lord Shiva.
103. Goddess Indrani in Devloka.
104. Goddess Saraswati, in the consort of Lord Brahma.

105. Goddess PrabhA, in the light of Sun.
106. Goddess VaishNavi, in Motherhood.
107. Goddess Arundhati, among Sati’s.
108. Tilotama in all the nymphs.

And Devi exhibits herself as Chid-Brahmam in every living being.

 
bhagavathy bhaagavatam - skanda 2


2#1a. உபரிசரன்

உபரிசரன் சேது தேசத்தை ஆண்ட மன்னன்
உவமையற்ற சத்யசீலன், உயர்ந்த தர்மசாலி;

செய்தான் தவம் இந்திரனைக் குறித்து!
பெற்றான் பளிங்கு விமானத்தைப் பரிசாக.

வான சஞ்சாரம் செய்தான் விமானத்தில்;
வசுக்களில் ஒருவன் போலத் திகழ்ந்தான்.

மணந்து கொண்டான் அழகி கிரிகாவை;
மகன்களாகப் பெற்றான் ஐந்து மாவீரரை!

பித்ரு தேவதைகள் கூறினார் உபரிசரனிடம்,
“சத்ருக்களாகத் திரிகின்றன வன விலங்குகள்.”

ருது ஸ்நானம் செய்த மனைவியை விட்டுவிட்டு
வன வேட்டைக்குச் செல்ல விருப்பம் இல்லை!

அக் காலத்தில் மனைவியை மகிழ்விக்காதவன்
ஆவின் கன்றினைக் கொன்ற பாவியாவான்.

பித்ரு வாக்கிய பரிபாலனம் செய்யாவிடில் பாவம்!
பித்ரு தேவதைகள் கூறியதைச் செய்தான் அவன்.

அலைந்து திரிந்து தங்கி விட்டான் அன்று காட்டில்.
அலை மோதியது மனம் மனைவியை எண்ணி .

வெளிப்பட்டது வீரியம் அவன் மோக வேகத்தில்!
‘வீணாகக் கூடாது கரு உற்பத்திக்கு ஏற்ற இதனை.

சேர்க்கவேண்டும் இதைக் கிரிகாவிடம்!’ என்று
சேகரித்தான் வீரியத்தை ஒரு தொன்னையில்.

மந்திரித்தான் வீரியம் கெடாமல் இருப்பதற்கு
தந்தான் கழுகரசனிடம் எடுத்துச் செல்வதற்கு.

எடுத்துச் சென்ற கழுகைத் துரத்தியது – அதைப்
பிடுங்க நினைத்த வேறொரு கழுகு, விடாமல்.

விரட்டிய கழுகும், விலகிச் சென்ற கழுகும்
போராடிய போது விழுந்தது வீரியம் நீரில்.

விழுந்த வீரியத்தை ஆவலுடன் விழுங்கியது
விழுந்த இடத்தில் இருந்த ஒரு பெண் மீன்!

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


2#1a. Uparisaran


Uparisaran ruled over Sethu Desam. He was a truthful and a honest king. He did severe penance on Indra and got a vimAnam as the prize for his penance. He could fly in the sky on the vimAnam and lived as gloriously as one of the Ashta Vasus.

He married a beautiful woman named Kirika. They were blessed with five valorous sons. Pitru devatAs told him about the threat posed by the wild animals to his citizens. He had to go to the forest and put an end to their threat.

He did not want to go away from his wife at that period – in which it was his duty to keep her happy and satisfied. But if he disobeyed his ancestors he would incur sin. So he went to to the forest all the same.


He hunted the wild animals and chased them back in to the forest. But he had to spend the night in the forest. As he was thinking about his beautiful wife and his tejas emerged.

It was not to be wasted and so he collected it in a small cup made out of a leaf . He chanted some mantas to preserve the tejas and commanded an eagle to take it back to his wife.

Another eagle saw the leaf cup and thought it contained some tasty morsel and started chasing the eagle carrying it. During the chase and the fight the tejas in the leaf was dropped into the water below. A female fish which was swimming nearby swallowed the tejas very promptly.





 
kanda purANam - asura kANdam

43d. பானுகோபன் போர்

ஜயந்தனின் வெற்றியைக் கண்டதும்
மாயப்போர் புரிவதை உணர்ந்தான்.


ஞான மந்திரத்தை நினைத்தபடியே
பானுகோபன் அவன் எதிரில் நின்றான்.


உடைபட்ட மாயைகள் விலகிவிட்டன.
படையின்றி ஜயந்தன் மட்டும் யானைமேல்!


விற்போர் மூண்டது இருவர் இடையே.
வில் முறிந்தது பானுகோபன் கையில்.


தேரும், பரிகளும் அழிந்து படவே;
வேறு தேரில் ஏறினான் பானுகோபன்.


நூறு ஆயிரம் பாணங்கள் பறந்தன!
தாறுமாறாகத் தாக்கிக் கொண்டனர்!


குருதி பொங்க விழுந்தான் ஜயந்தன்;
பருகிய அமுதத்தால் உயிர் பிழைத்தான்.


வெள்ளை யானைக்குச் சீற்றம் பொங்கிக்
கொள்ளைக் கோபத்துடன் போரிட்டது.


தேரின் மீது பாய்ந்து அழித்து விட்டது
தேரோட்டியை, குதிரைகளை எல்லாம்.


நிலத்தில் குதித்த அசுரன் மார்பில்
நான்கு தந்தங்களால் முட்டியது.


தந்தங்கள் முறிந்தன – யானை அசுரன்
தந்த அறையில் தளர்ந்து விழுந்தது!


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


2#43d. War with BhAnukOban.


BhAnukOban understood that Jayanthan was resorting to MAyA technique. So he concentrated on the JnAna manthram taught to him and stood in front of Jayanthan. The effect of MAyA vanished and he saw Jayanthan all alone on his white elephant. They started to fight with bows and arrows.


BhAnukOban’s bow broke. His chariot and horses also got destroyed. He climbed on to another chariot. He shot a hundred thousand arrows at Jayanthan who fell faint bleeding heavily. He remained alive since he had tasted the divine nectar.


AirAvat got very angry and charged at BhAnukOban. It broke his chariot and killed his horses. The asura was forced to jump on the ground. Now AirAvat attacked his chest with its four tusks. But the tusks broke making a loud noise. AirAvat fell faint when the asura slapped it very hard.


 
The 64 Thiru ViLaiyAdalgaL

# 22. யானை எய்தது!

# 22 (a). கரிய மலை வேழம்.


விக்கிரம பாண்டியன் ஆட்சியில்
அக்கிரமங்களுக்கு இடமில்லை!
நல்லாட்சி புரிந்த அவன் புகழ் பரவிச்
செல்லாத இடம் இல்லை என்றானது!


சிவநெறி நன்கு தழைத்து ஓங்கியது!
புறநெறிகள் மங்கி வீழ்ச்சி அடைந்தன;
அமண மதமும், புத்த மதமும் தேய்ந்தன;
அமலன் புகழோ ஏறுமுகம் ஆயிற்று.


சூரியகுலச் சோழமன்னன் மனத்தைச்
சூரியன் போலத் தகித்தது எது அறிவீரா?
சமணனாகிய அவனுக்குக் கோபம்,
சமணமதம் அழியத் தொடங்கியதால்.


பலமுறை நேருக்கு நேர் பொருதும்,
பாண்டியனை வெல்ல இயலவில்லை!
மறைமுகத் தாக்குதல் மூலமேனும்
மாறனை அழித்துவிட விரும்பினான்.


எட்டு மலைக் குகைகளில் வசித்திருந்த
எட்டு ஆயிரம் சமணக் குரவர்களையும்;
ஓலைகள் அனுப்பி வரவழைத்தான் தன்
கோலத் தலைநகர் காஞ்சி மா நகருக்கு!


“வசியம் முதலான அறுதொழில்களையும்
வசப்படுத்தி வைத்துள்ளவர்கள் நீங்கள்!
பாண்டியனை யாகம் செய்து அழித்தால்,
பாதி ராஜ்ஜியம் உங்களுக்கு அளிப்பேன்!”


பாலி ஆற்றங்கரையில் கொடிய யாகம்
பாண்டியனைக் கொல்வதற்கு நடந்தது.
யாகசாலையின் பரப்பில் நடுவில் ஆழமான
யாக குண்டம் ஒன்று எட்டு கோண வடிவில்;


அபிசார ஹோமம் தொடங்கியது அங்கு!
அகோரமான முறையில் தொடர்ந்தது!
அழிக்கும் செயல்களைச் செய்ய விரும்பியவர்,
அழிக்கும் விஷங்களையே பயன்படுத்தினர்.


எட்டியைப் போன்ற விஷ சமித்துக்களை,
வேம்பின் நெய்யுடன் ஹோமத்தில் இட்டனர்.
கொட்டினர் ஹோம குண்டத்தில் மேலும்,
கொழுப்பு விஷ ஜந்துக்களின் உடலிலிருந்து.


நச்சு வேள்வி தொடர்ந்து நடந்தது அதில்
அச்சம் தரும் யானை வெளிப்படும் வரை!
பெரிய மாமலையா? அன்றிக் கரிய மாமலையா?
தெரியவில்லை! ஆனால் அது கொல்லும் யானை!


“விக்கிரம பாண்டியனை அழித்துவிடுவாய்!
சொக்கனின் மதுராபுரியையும் அழிப்பாய் நீ!
உற்பத்தியான காரணத்தை அறிவாய் நீ!
தற்போதே விரைந்து மதுராபுரி செல்வாய் நீ!”


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


# 22 (A). THE KILLER ELEPHANT.


Vikrama Paandian’s rule was a glorious period for the religion of Siva namely Saivism. His fame spread far and wide. Buddhism and Jainism deteriorated and Saivism flourished.


The Chola King who belonged to Soorya Dynasty and was a Jain, was seething with anger at the decline of Jainism and the growing popularity of Vikrama Paandian.


His efforts to defeat Paandian in battles were futile. He decided to employ Black magic and dark arts to have his revenge.


He invited the 8,000 Jain gurus living in eight huge caves, to his capital city. He told them,” You have mastered all the dark arts. If you can perform a yaaga and kill Vikrama Paandian, I shall give half my kingdom to you!”


The Jain gurus were not fools to reject such an offer. Immediately they set up a large yaaga saala. They dug deep yaaga kundam in the center of the yaaga saala. It was octagonal in shape.The evil homam was lalunched.


The samithu used for the homam were parts of poisonous plants and trees. The ghee used was extracted from Neem trees. The fat of the all the poisonous creatures and animals were poured in to the homa gundam.


This went on until a killer elephant emerged from the homa kundam. It was created exclusively for destroying the Paandiya king and his capital city.


The elephant which resembled a large black mountain was ordered to proceed to Madhuraapuri and accomplish its deadly mission.


 

Latest posts

Latest ads

Back
Top