• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

A poem a day to keep all agonies away!

kanda purANam - mahEndra kANdam

12a. சூரனைக் காணுதல்

சிறைக் கூடத்தை விட்டு வந்த வீரவாகு
பறந்து கடந்தார் மாளிகை கோபுரங்களை.


அரச மண்டபத்தைச் சென்றடைந்தார்.
அரியணையில் கொலுவிருந்தான் சூரன்.


தெய்வ மகளிர் வீசினர் வெண்சாமரம்;
தேவக் கலைஞர்கள் இசைத்தனர் வீணை;


அரம்பையர்
ஆடினர் அற்புத நடனம் ,
அருகே அமர்ந்திருந்தனர் குமாரர்கள்.


ஒளிரும் மணிமுடி தலை முடி மீது!
பளீரென நெற்றி நிறையத் திருநீறு!

இணைக் குண்டலங்கள் இலங்கும் செவிகள்
அணிகலன்கள் புரளும் பரந்த மார்பு.


தோள்களில் வாகு வளையங்கள் விளங்க
கால்களில் வீரக் கழல்கள், கைகளில் காப்பு.


அலங்கரிக்கப்பட்ட ஒரு கார்மேகம் என
அமர்ந்திருந்தான் அரியணை மேல் சூரன்.


தவத்தில் இவனை விஞ்சியவரும் இல்லை-சிவன்
இடத்தில் மேன்மைகள் பெற்றவரும் இல்லை.


‘மின்மினி எனக் கொள்ளிக் கட்டையைத்
தன் கூட்டில் வைத்த குருவியைப் போல’


தேவர்களைச் சிறைப் பிடித்துத் தானே – தன்
தவத்தால் பெற்ற மேன்மைகள் அழிவான்.


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


3#12a. EYING SOORAPADMAN.


Having come out of the Deva’s prison, VeerabAhu flew over the tall gopurams. He soon reached the durbar of Soorapadman, who was seated on his beautiful throne. Celestial women were waving the chAmaram. The divine musicians were playing on their veena. The apsaras danced and Soorapadman’s sons were sitting by his side.


A brilliant crown adorned his head, kundalams dangled from his ears, his forehead was smeared with the holy ash, his chest was covered with fresh flower garlands and gem studded gold hArams. He wore bAhu-rings on his arms, kazhal on his ankles and kankaNs on his wrists. He resembled a large dark rain cloud decorated with many beautiful ornaments.


Veerbaahu contemplated on Soorapadman. “There is none superior to him in doing severe tapas. No one has got as many boons from LordSiva as he has done. But like the foolish sparrow which places a piece of burning coal in its nest – mistaking it to be the firefly – he has arrested the Devas. That is going to cause his downfall and destruction.”


 
The 64 Thiru vilaiyAdalgaL

33b. அஷ்ட சித்திகள்!

# 33 (b). அஷ்ட சித்திகள்!

சித்திகள் எட்டும் நம் வசப்படும், உடல்
சக்கரங்கள் ஏழும் எழுப்பப்பட்டால்!


சித்தி பெற்ற சித்த புருஷர்கள்
செய்வர் பற்பல அற்புதங்கள்!


அணுவாகத் தன் உடலைக் குறைக்க
“அணிமா” என்னும் சித்தி உதவிடும்.


மலை போலத் தன் உடலை வளர்க்க
“மகிமா” என்னும் சித்தி உதவிடும்.


கரியை நிகர்த்த உடல் எடை அடைய
“கரிமா” என்னும் சித்தி உதவிடும்.


லேசான இறகு போல உடலை மாற்ற
“லகிமா” என்னும் சித்தி உதவிடும்.


பிரியப்பட்ட இடத்துக்கு உடனே செல்ல
“பிராப்தி” என்னும் சித்தி உதவிடும்.


விரும்பிய பொருட்களை அடைந்திட
“பிரகாம்ய” என்னும் சித்தி உதவிடும்.


ஈசனுக்கு நிகரான சக்தி அடைவது
“ஈசத்வம்” எனப் பெயர் பெற்ற சித்தி.


யாராகிலும் தன் வசப்படுத்துவது
“வசத்வம்’ என்கின்ற சித்தி ஆகும்.


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


# 33 (b). ASHTA SIDHDHI.


If all the seven chakrAs in a human body are activated through Yoga

SAdanA in the prescribed form, the person develops various special
powers known as Ashta Sidhdhi. He can perform many miracles, not
possible for a normal human being.

The ability to reduce the size of one’s body to an atom is called “animA”

The ability to increase the size of the body to resemble a huge mountain
is called “mahimA”

The ability to become as heavy as an elephant is called “garimA”.

The ability to become as light as a feather is ‘lagimA”

The ability to reach any desired destination is “prApthi”.

The ability to get any desired object is called “prAkAmyA”.

The ability to become like a God in his powers is called “Esathvam”.

The ability to conquer and win over anybody’s mind is “Vasathvam”.

 
bhagavathy bhaagavatm - skanda 7

7#35c. சக்கரங்கள்

“குண்டலினி சக்தி என் வடிவம் ஆகும்!
குண்டலினிக்கு வெளிப்புறம் உள்ளது


பொன்னிறத்தில் ஒரு நான்குதளத் தாமரை.
அக்ஷர வடிவங்கள் ‘வ’, ச’,’ஷ’,’ஸ’.


முதன்மையானது உடலின் ஆறு ஆதாரங்களிலும்
‘மூலாதாரம்’ என்ற பெயர் பெற்ற இச்சக்கரம்.


நிறம் கொண்டது நெருப்பெனச் சிவப்பாக
ஆறு இதழ்க்கமலம் கொண்ட ‘ஸ்வாதிஷ்டானம்’;


ப3, ப4, ம, ய, ர, ல இதன் அக்ஷரங்கள்.
பிரகாசத்தில் வஜ்ர காந்தியை நிகர்த்தது.


நிலை பெற்றுள்ளது ஸ்வாதிஷ்டானம்
மூலாதாரத்துக்கும் நாபிக்கும் நடுவே.


‘மணிபூரகம்’ உள்ளது நாபி ஸ்தானத்தில்;
மின்னல் போன்ற பிரகாசம் கொண்டது.


பத்து இதழ் கொண்ட தாமரை இது – மணி
பூரகச் சக்கரத்தின் அக்ஷர வடிவங்கள் ஆகும்


ட3, ட4, ண, த1, த2, த3, த4, ந, ப1, ப2.
அதிஷ்டானம் ஆகும் இது விஷ்ணுவுக்கு.


உதய சூரியனென ஒளிர்வது ‘அநாஹதம்’;
இதயப் பகுதியில் அமைந்துள்ளது இது.


பன்னிரண்டு இதழ் கொண்ட கமலம் இது;
ஒலி வடிவமாக இருக்கும் உருவம் இன்றி.


அக்ஷர வடிவங்கள் ஆகும் அநாஹததுக்கு
க1, க2, க3, க4, ங, ச1, ச2, ஜ1, ஜ2, ஞ, ட1, ட 2


பதினாயிரம் சூரியனின் காந்தியுடைய
பாண லிங்கம் உள்ளது இதன் மத்தியில்.


ஆனந்தத்துக்குரிய ஆதாரம் அநாஹதம்.
மேக வர்ணத்தோடு பிரகாசிக்கும் விசுத்தம்.


ஆகும் இது பதினறு இதழ் தாமரை போல.
ஆகும் இதன் அக்ஷர வடிவம் அ,
ஆ, ……. அ:

அமைந்துள்ளது இது கண்டப் பிரதேசத்தில்,
ஆகாயம் என்ற பெயரும் கொண்டுள்ளது.


‘ஆக்ஞா’ சக்கரம் உள்ளது இதற்கும் மேலே.
‘க்ஷ’, ‘ஹ’ இரு அக்ஷரங்கள் வடிவாகும்.


உண்டு ஆக்ஞா சக்கரத்தின் மேலே ‘கைலாசம்’;
உண்டு அதற்கும் மேலே ‘ரோதினிச் சக்கரம்’.


உண்டு ஆறு ஆதாரங்களுக்கும் மேலே
ஆயிரம் இதழ் கொண்ட ‘பிந்து ஸ்தானம்’.


உன்னதமான யோக மார்க்கம் இதுவே.
உடலின் உள்ள சக்கரங்களின் வழியே.


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


7#35c. The six chakrAs (Energy Centers of the body)

Serpent Fire or Kula KuNdalinee is of a red colour. Outside that lies the AdhAra Lotus of a golden yellow colour – having four petals and Comprising of these four letters va, s’a, sha, sa. This is called the ‘MoolAdhArA’ – since it is the base and it supports all the six lotuses.


‘SvAdhishtAna’ Chakra above this is fiery red and emits a luster like a diamond. It has six petals representing the six letters ba, bha, ma, ya, ra, la. The word “Sva” means “Param Lingam” (superior Male Symbol). Therefore this energy center is called as SvAdhishtAna chakam.

‘MaNipuraka’ Chakram is situated above this. It is of the color of lightning in clouds and is very fiery. It comprises the ten Petals and da, dha, Na, ta, tha, da, dha, na, pa, pha – the 10 letters. VishNu dwells in this lotus resembling a fully grown pearl.

Above it is ‘AnAhata’ chakram which is a Padma (lotus) with the twelve petals representing, the twelve letters ka, kha, ga, gha, nga, cha, chha, ja, jha, gna, ta and tha. In the middle is ‘BANalingam’, dazzling like the Sun.


This lotus emits the sound S’abda Brahma, without being struck. Hence the name AnAhata chakram. This is the source of joy. Rudra, the Highest and the most Supreme Person dwells here.

Above it is situated the ‘Vis’uddha’ Chakra of sixteen petals, with these sixteen vowels of Sanskrit ‘a’ to ‘aha’. This is of a smoky color, highly lustrous, and is situated in the throat. The jeevAtmA sees the ParamAtmA here and gets purified; hence it is called Vis’uddha. This wonderful lotus is termed ‘AkAsa’.

‘AjnA’ chakra is situated between the eyebrows with two petals comprising the two letters ‘ha’ and ‘ksha’. The Self resides in this lotus. When a person can reach this spot, he can see everything and know of the present, past and future. One gets the commands from the Higher power at this spot. Hence the name AgnA chakra.


Above this is the ‘KailAs’a Chakra’ and ‘RodhiNi chakra’ is above that. These are the AdhAra Chakras. ‘Vindu SthAnam’, the seat of the Supreme Deity with thousand petals lies above all of these.



 
bhagavathy bhaagavatam - skanda 2

2#6c. பாண்டு

கர்ப்பவதி ஆனாள் பிருதை – ஆனால்
கவனமாக மறைத்து விட்டாள் அதை.


கவச குண்டலங்களுடன் பிறந்தான் மகன்;
கதிரவனை நிகர்த்த ஒளியுடன் கர்ணன்.


பிரிந்தாக வேண்டும் பிறந்த குழந்தையை!
மரப் பெட்டியில் வைத்து மூடினாள் அதை.


“பாலூட்டித் தாலாட்டும் பேறு பெறவில்லை;
பாராட்டிச் சீராட்டிடும் பேறும் பெறவில்லை!


அரச குலப் பெண் செய்யும் செயலா இது ?
விரசமான வேசிகள் செய்யும் செயல் இது!


உலகம் முழுவதையும் காக்கும் பராசக்தி
உன்னையும் காக்கட்டும் என் செல்வனே!”


பெட்டியை ஆற்றில் தள்ளினாள் அவள்;
பெட்டி மிதந்து சென்றது தெப்பம் போல.


தேர்ப்பாகன் அதிரதன் கரத்தில் சிக்கத்
திறந்து பார்த்து மகிழ்ச்சி அடைந்தான்.


அளித்தான் பரிசாக மனைவி ராதைக்கு;
வளர்ந்தான் கர்ணன் ராதேயனாக நன்கு.


சுயம்வரம் நடத்தினான் சூரசேன மன்னன்;
தயங்காமல் பாண்டு மணந்தான் பிருதையை.


இளைய மனைவி ஆனாள் மாத்ரி என்பவள்;
இணைந்து வாழ்ந்தான் இரு மனைவியருடன்.


காட்டில் வாழும் ரிஷிகள் அனுபவிப்பார்கள்
காம சுகத்தை மிருக வடிவம் எடுத்துக் கொண்டு.


குந்தமரும், மனைவியும் மான் உருவெடுத்து
விந்தையாக அனுபவித்தனர் உடல் சுகத்தை.


பாண்டு அறியவில்லை அவர் முனிவர் என்றோ;
பாவம் இனிய தருணத்தில் கொல்வது என்றோ!


அடித்தான் ஆண் மானை ஓரம்பினால் பாண்டு!
துடித்தார் குந்தம முனிவர் மரண வேதனையில்.


“பாவியே கொன்றாய் நீ இணை மான்களை!
ஆவி பிரியும் நீ உன் மனைவியோடு கூடினால்!”


சாபம் இட்டார் உயிர் துறக்கும் முன்பு.
காமம் ஆனது பாண்டுவின் எதிரியாக.


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K . ராமன்


2#6c. PANdu


PrithA became pregnant but managed to hide it from the world. A son was born in due course of time. He was adorned with an armor and a pair of kuNdalams. He shone with the brilliance of the Sun God.

She could not keep the child with her nor take care of it for the fear of the gossip of this cruel world. She decided to part with the infant as soon as it was born. She kept the infant in a huge wooden chest and pushed it in the flowing river.

She felt pangs of remorse since this was not the action to be performed by the royal ladies but only by the whores and fallen women. She prayed to Devi ParA Shakti – who takes care of the entire creation – to take care of her helpless infant son also.

The box floated in the river like a boat and caught the attention of the charioteer Athirathan. He opened the box and became very happy to see a brilliant male infant in it. He presented the baby to his wife RAdhA. KarNan grew up as RAdhEyan – the son of RAdhA.

SoorasEnan conducted a swayamvaram of PruthA aka Kunti. PANdu married Kunti happily. He married another lady MAdri as his second wife. They lived happily and enjoyed all the kingly pleasures in life.

One day PaaNdu saw two deer in amorous play. It was the custom of the rushis and rushi-patnis to assume the form of some animals while indulging in lust. Those deer were in fact sage Kundamar and his wife but PANdu was unaware of that fact. He did not realize the folly of killing the animals indulging in amorous play.

He shot the male deer with his arrow. It transformed into the sage Kundamar and cursed PANdu,

“You disturbed two harmless deer in the act of love and killed me quite unnecessarily. You will die if you ever try to perform the act of love with any woman!”

The sage cursed before breathing his last. Now love and lust had became the chief life threatening enemies of PANdu.



 
kanda purANam - mahEndra kANdam

12b. சூரனைக் காணுதல்

அக்கினியில் சிறியது பெரியது என்று
அவனியோர் பேதம் பார்ப்பதுண்டோ?


மிகுந்த செல்வம், ஆற்றல் பெற்றாலும்
பகை உடையவராதல் பயக்கும் தீமை.


தேவர்களைச் சிறைப்படுத்தினான் இவன்;
தேவர்களின் உலகை அழித்தான் இவன்;


இந்திரனை, அயிராணியை விரட்டி விட்டுத்
தந்திரமாகச் சிறை இட்டான் அவர் மகனை!


சூரபத்மன் முன்னே செல்லத் துணிந்தார்.
அரச மண்டபத்தை அடைந்தும் விட்டார்.


தம் வடிவத்தை வெளிப்படுத்தினார் அங்கு;
தம் பெருமை வெளிப்பட அமர நினைத்தார்.


முருகனை நினைத்தார் தம் மனத்தில் – ஓர்
அரியணை தோன்றியது முருகன் அருளால்!


ஆயிரம் கோடி ஆதவர்களை ஒத்த ஒரு
மாய அரியணை அங்கு வந்து படிந்தது.


அவையின் சிறப்பையும், ஒளியையும்,
அரசனின் ஒளியையும், மங்கச் செய்தது.


முருகன் தந்த அந்த அரியணை மீது
இருந்தார் தம்பி வீரவாகுத் தேவர்.


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


3#12b. MEETING SOORAPADMAN.


Does the size of a live coal affect its ability to burn? Even those who have immense wealth and power can not afford to have any enemies. Soorapadman has imprisoned the Deva; he chased Indra and IndrANi out of their swargga; he has arrested their dear son Jayanthan and he has burned down the swargga to ashes.


Veerabaahu decided to reveal himself. He had reached the durbar. He stood there in his original form and size. He wanted to sit in a grand manner befitting that of a messenger of Murugan.


He contemplated on Murugan. Immediately a throne as brilliant as a thousand crore Sooryans descended in the durbar. He occupied the throne which had suddenly made the rest of the magnificent things present there appear lack-luster and unattractive.



 
The 64 Thiru viLaiyAdalgaL

34. விடை இலச்சினை.

# 34. விடை இலச்சினை.

முத்தமிழ் வேந்தர்கள் மத்தியில்
சத்தம் இன்றி நிலவிவந்தது பகை;
ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளும்,
ஒரு மொழி மாந்தரும் பகைவர்களே!

குலபூஷணன் ஆண்ட பாண்டிய நாட்டில்,
குடியிருந்த சோமசுந்தரப் பெருமானின்,
அடிமையாக விளங்கினான் அந்நாளில்
முடி புனைந்த ‘காடு வெட்டிச் சோழன்.’

“ஒரு முறையேனும் காணுவேனோ ஐயன்
திருவுருவத்தை என் கண்கள் மகிழ்ந்திட?”
அருகே சென்று தொழ முடியாதபடி அன்று
குறுக்கே நின்றது கொடும் பகையுணர்வு .

கனவில் சித்தனாக வந்தார் பிரான்,
“தனியே வா நீ மதுரைக்கு இரவில்!
என்னைக் காண விழையும் உனக்கு
என்னால் உதவமுடியும், அஞ்சற்க!”

நம்பினான் சோழன் ஈசன் மொழிகளை;
நள்ளிரவில் தனியனாகப் புறப்பட்டான்!
சிவ பக்தியே அவனது பரியாயிற்று!
சிவ பஞ்சாக்ஷரம் அவனது உடைவாள்!

வைகயின் கரையை அடைந்த சோழன்
வெள்ளத்தைக் கண்டு அதிர்ந்து போனான்;
“பாண்டிய மன்னன் பகைவன் என்றால்,
யாண்டும் சுழித்தோடும் நீரும் பகையா?”

விக்கித்து நின்றான் ‘காடு வெட்டிச் சோழன்’,
திக்குத் தெரியாமல் காரிருளில் தனியனாக!
சித்தர் பிரான் உடனே தோன்றினார் அங்கே;
வற்றச் செய்தார் பொங்கிய சிவ கங்கையை.

கடந்தனர் இருவரும் நீர் வற்றிய ஆற்றை,
அடைந்தனர் இருவரும் மதுரைக் கோட்டை;
திறந்தார் திருவருளால் வடக்கு வாயில்,
புகுந்தனர் திருக்கோவில் காவலை மீறி!

பொற்றாமரைக் குளத்தில் புனித நீராடி,
சொக்கலிங்கதைச் செய்தான் தரிசனம்;
மீனாட்சித் தாயையும் துதித்து வணங்கி,
தேனாம் தேவியை நன்கு போற்றினான்.

“விடியும் முன்னர் திரும்ப வேண்டும்!”
வடக்கு வாயில் வழியே வெளி வந்தனர்.
வடக்குக் கரையில் வைகை நதியின் ,
விடப்பட்டான் ‘காடுவெட்டிச் சோழன்’.

திருநீற்றை அணிவித்து வாழ்த்தினார்
திருவருளுடன் கூடிய சித்தர் பிரான்,
பரபரப்புடன் சோழன் நாடு திரும்பிட,
அவசரத்துடன் திருக்கோவில் சென்றார்!

வடக்கு வாயிலுக்கு முத்திரை இட்டார்
விடை இலச்சினையால் சித்தர் பிரான்,
சிவன் கோவிலுக்குள் சென்று மறைந்து
சிவலிங்கத்துடன் ஐக்கியம் ஆனார்!

காலையில் பார்த்துத் திகைத்து நின்றனர்
காரணம் புரியாத அரசுக் காவலர்கள்.
மூன்று கதவுகளிலும் மீன் இலச்சினை!
ஒன்றில் மட்டும் விடை இலச்சினையா?

குல பூஷணனின் கனவில் வந்தார்,
குல தெய்வமாகிய கருணைக் கடல்;
நடந்தவற்றைக் கூறி தெளிவு தந்தார்.
வடக்கு வாயிலில் தன் விளையாட்டை!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

# 34. THE DIVINE SEAL.

The three kings of Tamil Nadu never got along smoothly. There was always an under current of suspicion and enmity among them. Blood brothers often become enemies. It was the same thing with the three brotherly kings of Tamil Nadu!.

‘Kaadu Vettich chozhan’ ruled over the Chozha Kingdom when Kulabooshanan ruled over Paandiyan kingdom. He was a sincere devotee of Soma Sundareswarar of Madhuraapuri.

He wished with all his heart that he could have at least one dharshan of his lord! Lord Siva appeared in his dream as a sidhdha purusha. He told the Chozha king, ” Come to Madhuraapuri alone at night time. I will help you to get a dharshan of the lord in the temple”.

Chozha king trusted his words implicitly. He disguised himself and left to Madurai on foot all alone in the middle of the night. Siva Bhakthi was the horse he rode on and Siva panchaaksharam was the protective sword he carried!

He reached the bank of Vaigai and stood aghast to find the river in spate.The same sidhdha who came in his dream appeared there.He made the swollen waters shrink. Now they both could cross the river.

They reached the Northern gate of the fort.Sidhdha opened the door and led the Chozha king into the temple. The chozha king has a holy dip in the Pond of Golden Lotuses.He had a dharshan of Somasundareswarar and Meenakshi Devi.

They hurried back to the bank of river Vaigai.The Chozha king had to go back to the safety of his own country before the day break.

The sidhdha applied holy ash on the forehead and sent him away to safety.He himself hurried back into the temple and sealed the Northern door with His bull emblem.

Next morning people were surprised to find the fish emblem on three doors and bull emblem in the Northern door.No one could explain the mystery.

Lord appeared in the dream of Kulabooshanan and explained the events of the previous night. Thus the lord solved the mystery of the bull emblem in the northern door.




 
bhagavathy bhaagavatam - skanda 7

7#35d. பிரம்ம சித்தி

பூர்வ யோகத்தினால் சேர்க்க வேண்டும்
காற்றை மூலாதாரத்தில் கொண்டு நிறுத்தி.


குதத்துக்கும், குறிக்கும் நடுவே உள்ள
குண்டலினி சக்தியை எழுப்ப வேண்டும்.


ஆறு ஆதாரங்களையும் கிரமமாகக் கடந்தபின்,
அடையச் செய்ய வேண்டும் பிந்து ஸ்தானத்தை.


பாவிக்க வேண்டும் சிவன் பார்வதி சங்கமிப்பதாக.
பிறக்கும் அதனால் அமிர்தம் பிந்து ஸ்தானத்தில்.


ஊட்ட வேண்டும் அமிர்தத்தைச் சக்தி தேவிக்கு;
ஊட்ட வேண்டும் அதை ஆறு ஆதாரங்களுக்கும்.


அடைவிக்க வேண்டும் அதனை மூலதாரத்தை.
அடைவான் விடுதலை இதைச் செய்ய வல்லவன்.


தேவியிடம் அறிவை நிலை நிறுத்தி ஜீவப் பிரம்மம்
ஐக்கியத்தைச் செய்பவன் தன்மயம் அடைவான்.


செய்து வரவேண்டும் அஷ்டாங்க யோகத்தைச்
செவ்விய யோகசித்தியை அடையும் வரையில்.


யோகிகள் சித்தத்தை நிலை நிறுத்த வேண்டும்
தேவியின் அழகிய அங்கங்களில் முதன் முதலில்.


முழு உருவில் நிறுத்த வேண்டும் சித்தத்தை;
மனோலயம் வரை தேவை ஜபம், ஹோமம்.


மந்திர சித்தி இல்லை யோக சித்தியின்றி.
மந்திர சித்தியின்றி இல்லை யோக சித்தி.


பிரம்ம சித்தியடைத் தேவை இரண்டுமே.
பிரம்ம சித்தி பெறமுடியாது ஒன்றால் மட்டும்.


குரு உபதேசம் இன்றி இவ்விரண்டையும்
ஒரு போதும் பெற முடியாது அறிவீர்!


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K . ராமன்


7#35d. Brahma siddhi


The mind should be fixed on the MoolAdhArA Lotus by Pooraka prANAyAmA. Then Kula KuNdaline- lying between the anus and the genital organ – must be aroused with that VAyu.


All the six lotuses must be crossed one after another until the ‘SahasrArA’ is reached. The Siva and Parvati in sangamam (union) must be meditated upon in the SahasrArA chakram.


A nectar-like juice will be produced there. This Nectar of Joy, is given to Devi and to the other DevAs residing in the other lotuses. Then Shakti is brought down once again to the MoolAdhArA lotus. Practicing this daily will surely yield success.


Fixing one’s mind at all times on Devi will soon lead to the union of the Jeeva and the Brahma. ‘Avayava’ Yoga helps in the beginning in which the mind is fixed on the individual limbs of the deity one at a time and then on the whole body.


Japam and Homam are necessary till the mind of the jeeva gets dissolved completely. Meditating on the Mantra gives true knowledge. But the Mantra is futile without the support of Yoga and the Yoga is futile without the Mantra.


The Mantra and the Yoga together are the two infallible means to realize Brahma. One should receive the instructions about these from a Sat-Guru since no one can achieve this without the Guru-krupa (the blessing of one’s teacher)



 
bhagavathy bhaagavatam - skanda 2

2#6d. புத்திரர்கள் உற்பத்தி

நடுங்கி விட்டான் பாண்டு சாபம் கேட்டு – இனித்
தொடுவது பிராண ஆபத்து அன்பு மனைவியரை!


அரசாட்சியை வெறுத்து வாழ நினைத்தான்;
மரவுரி தரித்துக் காட்டில் ஒரு முனிவனாக!


கூறினார் மனைவியரிடம் தலைநகர் செல்ல.
கோரினான் அவர்கள் நலனைத் தன் உளமார!


“முனிவன் ஆவதற்குத் தடை சொல்ல மாட்டோம்
பணிவிடைகள் செய்து எம் காலத்தைக் கழிப்போம்!


மறந்தும் உம்மைப் பிரிந்து செல்ல சம்மதியோம்!
துறந்தோம் எம் காமங்களையும், ஆசைகளையும்!”


துறவிகளாக வாழத் தொடங்கினர் அம் மூவரும்;
அரச போகங்களை முற்றிலும் தியாகம் செய்து.


கங்கைக் கரையில் முனிவர்கள் கூறக் கேட்டான்
அங்கு சென்ற பாண்டு “அபுத்ரஸ்ய க3திர் நாஸ்தி!”


“புத்திரன் இல்லாதவன் மனைவியின் உதவியுடன்
புத்திரர்களை உண்டாக்கலாம் வேறு வழிகளில்.”


சிந்தை கலங்கினான் இதைக் கேட்ட பாண்டு;
குந்தியிடம் கூறினான் உள்ளக் கருத்தினை.


“புத்திரன் இல்லையெனில் இல்லை நற்கதி!
புத்திரர்கள் பிறவார் இனி எந்தன் மூலமாக.


கணவனாக நான் ஆணை இடுகின்றேன் – ஒரு
முனிவரைப் புணர்ந்து நம் மகனை உருவாக்கு!


பாவம் பற்றாது இச் செயலால் – எந்தன்
தாபம் தீர்ப்பாய் மகனை ஈன்று!” என்றான்.


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K . ராமன்


2#6d. The need for a son


PANdu got the shock of his life on hearing this curse. He could not touch his loving wives any more. He decided to live in the forest as a rushi and give up the kingly pleasures completely. However he wished well for his wives and advised them to go back to the capital city and live a safer life there.

But both the wives refused to part company with him. They said, “We too will start living like the rishi patnis and serve you by doing the odd jobs here. We do not seek anything more than being near you. We will not disturb your life as a sanyAsin on any accord. “

All the three of them started living like sanyAsins. They gave up all the kingly pleasures and lived the simple life of the sanyasins.

One day PANdu went to the banks of Ganga and heard the rushis there elaborating on the concept of the need for a son to escape the misery of the Hell. They were discussing the various methods permitted by the sAstra by which a man could produce his heir with the help of his wife and a good natured pure brahmin.

PANdu spoke to Kunti about this and told her. “Please produce a worthy son with the help of a good natured Brahmin so that we will all be saved from the pains of burning Hell. There is no sin attached to this act since it is permitted by sAstrAs to procreate a son in this manner.”


 
Kanda purANam - mahEndr kANdam

12c. கண்டோர் வியப்பு

கண்டோர் வியந்தனர், நடுங்கினர்,
“அண்டர்கோன் அவையில் மாயாவி?”


“யார் இவன்? எங்கே வந்துள்ளான்?”
“அரியணை வந்தது எந்த மாயத்தால்?”


“கடலை இவன் கடந்தது எங்ஙனம்?”
“காவலை இவன் கடந்தது எங்ஙனம்?”


“நம்மிலும் சிறந்த மாயாவியோ இவன்?”
“நம் இடத்தை நாடி வந்தது எதற்கு?


“நாடி வந்தது நம் நல்லுறவையா?”
“நாடி வந்தது நமது பகைமையா?”


“நெடுமாலே தன் உருமாறி வந்தாரோ?”
“நான்முகனே தன் உருமாறி வந்தானோ?”


“பிரானே தன் உருமாறி வந்தாரோ?”
“தாரகனே தன் உருமாறி வந்தானோ?”


கண்டவர் வியக்க வந்த அரியணையில்
அண்டர்கோன் முன் அமர்ந்தான் வீரவாகு!


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


3#12c. Surprise of the onlookers.


The entire durbar was startled by the sudden appearance of VeerabAhu and the brilliant throne from nowhere and out of the thin air! They started murmuring and questioning.


“Who is he?” ” How did he come here?” ” How did the throne come here?” ” How did he cross the ocean?” “How did he overcome the zealous guards?” “Is he better than us in performing mAyA tricks?” ” Does he want our friendship or is he here as an enemy?”


“Has Vishnu changed his form and appeared thus?” ” Has Brahma changed his form to appear to us thus?” ” Has Siva appeared in this form?” Has TArakan taken a new form and returned?” There were surprised murmurs all over the durbar as VeerabAhu sat on the brilliant throne sent by Murugan right in front of Soorapadman.
 
The 64 Thiru ViLaiyAdalgaL

35. தண்ணீர்ப் பந்தல் வைத்தது.

# 35. தண்ணீர்ப் பந்தல் வைத்தது.

‘காடு வெட்டி காஞ்சிச் சோழன்’ தன்
நாடு விட்டு நாடு சென்று பலமுறை
தொழ விரும்பினான் சோமசுந்தரரை,
தோழமை உணர்வுடன் அச்சம் இன்றி!


காணிக்கைகள் பல அனுப்பிவைத்தான்
சாணக்கியத்தனத்துடன் பலமுறைகள்,
ராஜேந்திர பாண்டிய மன்னனுக்கு,
ராஜசிம்மனின் அருமை அண்ணனுக்கு!


உறவை உறுதிப்படுத்துவதற்கு ஒருவழி
திருமணம் செய்து தருவதும் ஆயிற்றே!
மகளை ராஜேந்திரனுக்கு மணம் செய்வித்து,
மகளால் நாடுகளை இணைக்க எண்ணினான்.


ராஜேந்திரனின் நல்வினையைப் பொறாத
ராஜசிம்மன் தானே மணக்க விரும்பினான்,
காஞ்சிச் சோழ மன்னனை நேரில் சந்தித்து
கெஞ்சிக் கூத்தாடியேனும் அவன் மகளை.


மாறுவது மனித மனம் என்பது உண்மையே!
மாறிவிட்டது சோழ மன்னனின் மன ஓட்டம்.
ராஜசிம்மனுக்கே தன் மகளை அளித்தான்,
ராஜசிம்மனை மன்னனாக்கவும் விழைந்தான்!


பேரிகை, முரசுகள் முழங்கப் புறப்பட்டது,
பெரிய சதுரங்க சேனைக் கடல் சோழனது!
மதுராபுரியின் மீது பெரிய படை எடுப்பு!
மதுரைக்கு மருமகனை மன்னனாக்கிவிட.


“முன்னம் சோழன் இரவில் ஒளிந்து வந்தான்
உன்னிடம் பக்தி செய்வதற்காக மதுரைக்கு!
இன்று கடலனைய ஆரவாரத்துடன் வருகை
என்னை சமரில் தோற்கடிப்பதற்கு விரும்பி.


பக்திக்கு ஈடு செய்தீர்கள் அன்று என் ஐயனே!
பகைமைக்கும் ஈடு செய்வீர்களா இன்று கூறும்”
அசரீரி ஒன்று கேட்டது அங்கு, அரனுடையது.
“அஞ்சவேண்டாம் ராஜேந்திரா! வெற்றி உனதே!”


“விடியற்காலையில் எழுந்தான் பாண்டியன்,
முடித்தான் காலை பூஜை, புனஸ்காரங்களை!
அடைந்தான் அமர்க்களத்தைச் சேனைகளுடன்;
இடிமுழக்கத்துடன் அங்கே போர் தொடங்கியது.


சேனை பாண்டியனது ஒரு சிற்றாறு எனில்
சேனை சோழனது ஒரு பெரும் கடல் ஆகும்!
பெருமான் அருளால் பாண்டியவீரர்களில்
ஒருவனே பலராகக் காட்சி அளித்தான்.


உச்சி வெயில் தகித்துப் பொசுக்கிடவே
எச்சில் உலர்ந்து வாடி வதங்கினர் வீரர்கள்;
தட்சணம் தோன்றியது ஒரு தண்ணீர் பந்தல்;
லட்சணம் மிகுந்த நீர்ஆளனுடன், குடிநீருடன்;


பாண்டியப் படைவீரர்கள் பெற்றனர்
வேண்டிய அளவு தெள்ளிய குடிநீர்!
தாகவிடாய் தீர்ந்ததால் புத்துணர்வுடன்
மேகங்கள் போல் மீண்டும் பொருதனர்.


வெற்றிவாகை ராஜேந்திர பாண்டியனுக்கு!
சுற்றிவளைத்தனர் சோழ மன்னனையும்,
வஞ்சனையாளன் தம்பி ராஜசிம்மனையும்
கொஞ்சமும் அஞ்சாத பாண்டிய வீரர்கள்.


“திருவுள்ளம் என்னவோ என் ஐயனே?” என,
“தருமநெறி நன்கு அறிந்தவன் தான் நீயும்!
விருப்பப்படிச் செய்வாய் ராஜேந்திர பாண்டியா!
இருவரையும் பிணைத்துப் பிடித்த நீ!”என்றார் ஈசன்.


சதுரங்க சேனையையும், ஆபரணங்களையும்,
மதுரை மன்னன் சோழனுக்கு அளித்தான்!
நாட்டின் ஒரு பகுதியைப் பிரித்து நாடாக்கி,
சூட்டினான் மகுடம் தம்பி ராஜசிம்மனுக்கு.


வாழ்க வளமுடன் , விசாலாக்ஷி ரமணி.


# 35. THE REFRESHING DRINKING WATER.


The Chozha king wanted to visit Soma Sundareswaran frequently without any fear or danger. He started sending costly gifts to Paandiya king Rajendran in order to befriend him. Rajendra Paandian also returned his favor by sending costly gifts.


Marriages could seal the friendship between Kings and countries. Chozha King wanted to marry his daughter to Rajendra Paandian.


Rajasimman-the younger brother of Rajendran-went in person to the Chozha kingdom and impressed the Chozha king favorably. He married to the king’s daughter. Now the Chozha king wanted to crown his son in law as the new Paandiya king!
He set out with a huge army to battle with Paandiyan.

Rajendran was shocked at the sudden developments.He prayed to Siva to handle the delicate situation.
Siva assured the king through asareeri that the victory would be Rajenda Paandian’s and the Chozha army would be defeated.

The next morning Rajendra Paandian did his puja and went to the battle field.The Chozha army could be compared to an ocean while the Paandian army could be compared to a river.


By Lord’s grace each Paandia soldier appeared as many soldiers to the enemy’s eyes.Thebattle went on for a long time. The scorching sun dehydrated both the armies.


Suddenly a pandal appeared on the Paandian’s side. A handsome man started distributing cool refreshing drinking water to the Paandiya soldiers.With their thirst quenched they felt refreshed and attacked he Chozha army with renewed vigor.


The Chola army became weak and tired and were easily defeated by the smaller Paandian army. The Chozha king and Rajasimman were arrested and brought to Rajendran.


He asked the lord,” How am I supposed to deal with those two?” Siva replied “In the way you deem fit since you know all the dharma saathrass!”


Rajendran offered chaturanga sena and ornaments to the Chozha king and sent him back safely. He divided his kingdom into two and made Rajasimman the king of one of those two countries.


 
bhagavathy bhaagavatam - skanda 7

7#36a. தியான யோகம் (1)

“கூறுவேன் இப்போது விரிவாக என்னை நீங்கள்
பிரம்ம ஸ்வரூபமாக தியானிக்கும் முறையை.


சாதனை கைவரப் பெற்றவன் என்னைத் தனது
இதயத்தில் தியானிக்க வேண்டும் ஒளிமயமாக.


அசையும் பொருட்கள் அடங்கும் பிரம்மத்தில்;
அசையாப் பொருட்கள் அடங்கும் பிரம்மத்தில்;


அனைத்துச் செயல்களும் அடங்கும் பிரம்மத்தில்;
அனைத்துமே அடங்கி விடும் அந்த பிரம்மத்தில்.


உருவம் உள்ளாதாகவும், இல்லாததாகவும்,
உண்மையில் உள்ளதாகும், இல்லாததாகவும்,


அறிவின் எல்லையைக் கடந்து விளங்குவதாகவும்
ஆத்ம ஞானத்தையும் கடந்து விளங்குவதாகவும்;


ஜீவாத்மாவை விஞ்சிய பரமாத்மாவாகவும்;
ஜீவன்களின் நெஞ்சில் உறைகின்றதாகவும்;


அணுவைக் காட்டிலும் மிகவும் சிறியதாகவும்;
அண்டத்தைக் காட்டிலும் மிகப் பெரியதாகவும்;


பிரம்ம வடிவினளாகச் சிந்திக்க வேண்டும் என்னை;
பிரம்ம ஸ்வரூபமாகவே சிந்திக்க வேண்டும் என்னை.


ஞானத்தை வைக்க வேண்டும் பிரம்மத்தின் மீது;
ஞானம் பாயும் பிரம்மத்தின் மீது, மனம் ஓய்ந்தால்.


பிரபஞ்சத்தை பிரம்மமாக அறிபவன் உயர்ந்தவன்;
பிரம்ம வடிவினனாக மாறினால் இல்லை சுக துக்கம்.


பிரம்ம தரிசனம் பெற்றவனிடம் உறைவேன் நான்;
மேலாகும் என்னிலும் பிரம்ம ஞானியை பூஜிப்பது”.


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


7#36a. DhyAna yogam


Devi told the assembled DevAs, “I shall tell you how to meditate on me as Para Brahmam. A person who has mastered the art of meditation can think of me as brilliant light in his heart.


Brahmam includes all things movable, immovable, all the actions and in fact everything that ever was, is or will be! Brahmam can be with a form or formless; it can be existing or non-existing; it can lie beyond the intellect; it can lie beyond self realisation; it can be the paramAtmA superior to the jeevAtmA. Brahmam resides in the heart of every jeevA. It is smaller than an atom and it is bigger than the whole Universe.


Meditate on me as the Para-Brahma-SwaroopiNi. The Atma JnAnam must be directed towards Para-Brahmam. When a person has achieved mano layam ( the complete destruction of one’s mind) his JnAnam gets directed towards the Brahmam.


He who identifies the entire creation with Brahmam is a superior soul. He who has become one with Brahmam has neither pleasures or pains thereafter. I reside in the heart of such a Brahma-JnAni”.


It is far better to worship a true Brahma-JnAni than worship me.



 
Bhagavathy bhaagavatm - skanda 2

2#6e. பாண்டவர்கள்

“முனிவரிடம் செல்ல அவசியம் இல்லை – ஒருத்
தனிப் பெரும் மந்திரம் தந்துள்ளார் துர்வாசர்.

உச்சரித்து அழைத்ததும் அதன் தேவதை வந்து
புத்திரனைத் தரும் நாம் விரும்பியபடி!” என்றாள்.

பாண்டு மகிழ்ந்தான் அச்செய்தி கேட்டவுடன்;
பண்டே அறிந்திருந்தாரோ துர்வாச முனிவர்

குந்திக்குத் தேவைப்படும் இந்த மந்திரம்
குழந்தைகளை உருவாக்குவதற்கு என்று?

குந்தி தியானித்தாள் தர்ம ராஜனை முதலில்;
குந்தி பெற்றெடுத்தாள் தர்மனைத் தலைமகனாக.

வாயு பகவான் வந்தார் அடுத்ததாக அழைத்ததும்;
வாயு புத்திரன் பீமன் அவதரித்தான் குந்தியிடம்!

இந்திரன் வந்தான் மந்திரம் சொல்லி அழைத்ததும்;
தந்தான் அழகிய மகன் அர்ஜுனனைக் குந்திக்கு!

மாத்ரியும் விரும்பினாள் மகன்களைப் பெற்றிட;
மார்க்கம் தெரியவில்லை மாத்ரிக்கு அதற்கு.

வேண்டினாள் கணவன் பாண்டுவின் அனுமதியை;
வேண்டினான் பாண்டு குந்தியின் அனுமதியினை.

குந்தி உபதேசித்தாள் மந்திரத்தை மாத்ரிக்கு;
மந்திரம் அழைத்தது அஸ்வினி தேவதைகளை.

இரட்டையர் அஸ்வினி தேவதைகள் வந்தனர்;
இரட்டைக் குழந்தைகளைத் மாத்ரிக்குத் தந்தனர்.

நகுலன், சகாதேவன் பிறந்தனர் மாத்ரிக்கு.
வெகுவாக மகிழ்ச்சி அடைந்தனர் மூவரும்.

பாண்டுவின் மகன்களாக வளர்ந்தனர் ஐவரும்;
பாண்டவர்கள் என்ற பெயர் பெற்றனர் ஐவரும்!

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K . ராமன்


2#6d. The Pancha PANdavAs (The five sons of PANdu)


Kunti told her husband PANdu,” There is no need to seek the help of any pure Brahmin. Sage DurvAsa had taught me a mantra long ago. By reciting that mantra, we can invoke any DEvata and get a son as his gift”.

PANdu was very happy to hear the piece of good news. Did the sage DurvAsa know by his divya dhrushti that Kunti would need the help of the mantra to get her sons?

Kunti recited the mantra invoking Dharma RAjan. He appeared and blessed Kunti with a worthy son Yudhishthira aka Dharman. Next VAyu was invoked. He appeared and blessed Kunti with a mighty son called Bheeman.

Indra was invoked next. He appeared and blessed Kunti with a handsome son Arjun. MAdri felt sad for being left alone. She too desired to get worthy sons. She spoke to PANdu and PANdu spoke to Kunti. Kunti taught the mantra to MAdri.

MAdri chanted the mantra and invoked the Ashwini DevatAs. The twin DevatAs appeared and blessed MAdri with the twins called Nakula and Sahadev. The five sons grew up as brothers and as the five sons of PANdu. They were called the Pancha PANdavAs.

 
kanda purANam - mahEndra kANdam

12d. சூரபத்மனின் சீற்றம்

சிறிதும் அஞ்சாமல் அமர்ந்த அவனிடம்
சீற்றம் கொண்டான் அவுணன் சூரபத்மன்.


கடித்தான் தன் பற்களை; சினந்தான்;
கனைத்தான்; வியர்த்தான்; நகைத்தான்;


கண்களில் வெளிப்பட்டது சினத்தின் தீ!
சொற்களில் வெளிப்பட்டது சினத்தின் தீ!


“விலங்குகள் போலக் காட்டில் வசித்து
பல வருடங்கள் தன் உடலை வருத்திச்


சித்து வேலைகள் கற்றவர்கள் உண்டு.
சிறியவன் நீ அவர்களில் ஒருவன் போல.


என் முன்னே வந்து உன் திறமையை
எல்லோரும் காணும்படிக் காட்டினாய்.


அஞ்சித் திரியும் தேவர்கள் ஒரு போதும்
அஞ்சாமல் செய்யார் என்முன் வந்து!


சித்தர்கள் எல்லோரும் வித்தைகளைத்
தத்தம் இடத்திலேயே என்றும் செய்வர்.


அஞ்சுவர் என் முன் வந்து செய்வதற்கு!
விஞ்சி விட்டாய் நீ அவர்களையும் பலே!


பெண்கள் செய்வர் சித்து வேலை – பச்சை
மண்களும் செய்யும் சித்து வேலை இங்கு.


நீ யார்? எதற்கு வந்தாய் இங்கு என்பதை
நீயாகவே கூறிவிடு விரைந்து என்னிடம்!”


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


3#12d. Soorapadman’s anger.


Soorapadman became very angry when VeerabAhu sat on the throne in his presence.
He ground his teeth, became red in his face, sweat poured out profusely and he laughed out loudly in terrible anger. His eyes shot out sparks of anger and his words were rude and crude with anger.


“People live in the forests like animals and do penance to acquire the power of sidhdhi. You seem to be one of them. You have displayed your excellence in my presence. Devas are capable of this but they will not dare to perform in my presence. Siddhas prefer to do these acts in their own place. They will not venture to come to my durbar. So You have excelled all of them.


In this city everyone has the power of sidhdhi – even infants and toddlers. Now tell me quickly who you are and what is your mission here?”Soorapadman angrily demanded VeerabAhu.


 
The 64 Thiru ViLaiyAdalgaL

36. ரசவாதம் செய்தது.

# 36. ரசவாதம் செய்தது.

வைகை நதியின் தென் கரையில்
விளங்கியது ஒரு சிவக்ஷேத்திரம்.
திருப் பூவனம் என்பது அதன் பெயர்,
திருப் பூவணநாதரின் உயரிய இடம்.


பொன் போன்ற மேனிப் பெண்ணுக்கு,
‘பொன்னனையாள்’ தகுந்த பெயரே!
விண்ணோரும் மயங்கும் பேரழகி!
மண்ணில் விழுந்துவிட்ட தேவதை?


ஆடற்கலையில் அற்புதத் திறமை,
பாடலிலும், வீணையிலும் தேர்ச்சி;
ஆடலையும், பாடலையும் அவள்
ஆடல் அரசுக்கே அர்ப்பணித்தாள்!


வைகறையிலே எழுவாள் தினமும்,
வைகை நதியில் நன்னீராடி விட்டு,
பூவண நாதரைத் தரிசித்துத் தன்
பூஜை நிகழ்ச்சிகளை முடிப்பாள்.


அறுசுவை உணவைத் தினமும்
திரு அடியவருக்கு அளித்தாள்;
திருப்படிவத்தைப் பொன்னாலேயே
திரும்பவும் படைக்க விழைந்தாள்.


“கைக்கும் வாய்க்குமான வாழ்வில்
காண்பது எப்போது பொன் படிவம்?
உலவாக்கிழி மன்னனுக்கு அளித்து
உதவிய அரனே உதவவேண்டும்!”


ஏங்கிய பாவையின் ஏக்கம் தீர்க்க,
தாங்கினான் அரன் சித்தர் வடிவம்;
யோகியரின் உடை, வெண்ணீறு,
யோகப்பட்டம் கட்டிய இடை, சடை.


பொன்னனையாள் இல்லத்தில்
அன்னம் புசிக்கவில்லை அவர்!
உள்ளே எழுந்தருளும்படி வேண்ட,
உள்ளே எழுந்தருளினார் அவர்.


“ஏன் இப்படி மெலிந்து உள்ளாய்?
என்ன கவலை உனக்குச் சொல்?
அன்னமிடுகின்றாய் தாயாக,
அனைத்து அடியவர்களுக்கும்!”


“பொன்னர் மேனியனுக்கு ஒரு
பொன்படிவம் பண்ண வேண்டும்!
என் நாள் நிறைவேறும் என் கனவு
என்பதே எந்தன் கவலை இன்று!”


“தானத்தில் சிறந்து அன்னதானம்,
தயங்காமல் செய்து வருகின்றாய்;
மனம் போல் எல்லாம் நடக்கும்,
உணவுக் கலயங்களைக் கொண்டு வா!”


இரும்பு, ஈயம், செம்பு, பித்தளை,
வருகை தந்தன அவர் முன்பு!
தெளித்தார் விபூதியை அள்ளி!
அளித்தார் ஓர் அரிய வரமும்!


“புடம் போடுவாய் இவற்றை,
தடை இன்றி இரவு முழுதும்,
இரசவாதத்தினால் அத்தனையுமே
இரணியமாக நாளை மாறிவிடும்!


சித்தர் சொன்னபடியே அவள்
மொத்த இரவும் புடம் இட்டாள்.
என்ன விந்தை! விடியற்காலை
பொன்னாகி இருந்தன அத்தனையும்!


சொன்னபடியே அமைத்தாள் அவள்
பொன்னால் ஆன புதிய விக்ரஹம்;
பூவண நாதரை பிரதிஷ்டை செய்து,
பூக்களால் அர்ச்சித்து மகிழ்ந்தாள்.


தினம் தவறாமல் தொழுதாள்.
மனம் கவர்ந்த பொன்படிவத்தை,
பிறகு சென்றாள் சிவலோகம்,
மறைந்தது அப்பொன் மேனியும்!


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


# 36. THE ALCHEMIST.


In the southern bank of river Vaigai, there was a Siva Kshethram called Thiruppoovanam. The lord residing there was called Thiruppoovana Naathar.


A woman lived there. Her name was Ponnanaiyaal. She was very beautiful and was a devotee of Siva. She was well versed in dance, music and veena. She used all her talents in worshiping Siva.


She had two more passions in her life. She wanted to feed all the devotees of Siva and she could accomplish this easily. Her other aim was to make a vigraha of her lord in solid gold.


She was spending all her earnings in feeding the Siva bakthas. She could not save money to buy the gold for the vigraha.


It seemed to be an impossible dream! She thought that only the God who presented a bag of gold coins to the king would have to help her also.


Siva wanted to put an end to her despair. He took the form of a Sidhdhar and reached her house. He was dressed like a yogi and smeared with holy ash.


He asked the woman, “What is the cause of your constant worry that you look so famished and thin?”


The woman replied, “It has been my life’s ambition to get the vigraha of my lord made in gold. Poor as I am, my dream may remain a dream for ever!”


The sidhdha told her to bring all the vessels in the house. He sprinkled them with holy ash. He told her to heat them overnight in a constant fire.The next day they would all be transformed to pure gold.


The woman heated all the vessels as told and lo behold they had become pure gold the next day. She got the vigraha made in gold and did puja everyday as long as she lived.


When she died she went to Sivalokam. God hid his true nature and became an ordinary statue again.


 
bhagavathy bhaagavatam - skanda 7

7#36b. தியான யோகம் (2)

“சித்த லயம் அடைந்த ஞானி வாழும்பூமி புண்யபூமி;
வைக்கவேண்டும் பக்தி இறை போலவே குரு மீதும்.


அடைய வேண்டும் பிரம்ம ஞானத்தை குரு முகமாக;
அடையாதவன் ஒரு தீராத ஜன்மாந்திரக் கடன்காரன்!


நஷ்டம் அடையும் தந்தை, தாய் தந்த ஊனப் பிறவி;
நஷ்டம் அடையாது பரமகுரு தந்த ஞானப் பிறவி.


பரமசிவன் கோபித்தால் பரமகுரு காப்பாற்றுவான்;
பரமகுரு கோபித்தல் பரமசிவன் காபாற்ற மாட்டான்.


மகிழ்விக்க வேண்டும் குருவின் மனத்தை – குருவை
மனம், மொழி, மெய்களால் துதித்திட வேண்டும்.


செய்நன்றி மறந்த கயவனுக்கு இல்லை பரிஹாரம்;
செய்நன்றி மறந்தவன் மனித உருவில் ஒரு விலங்கு.



அதர்வண வேதத்தில் வல்லவர் தத்யங்க முனிவர்.
அஸ்வினி தேவர்கள் விரும்பினர் உபதேசம் பெற்றிட.


“பிறகு உபதேசிக்கிறேன்!” என்று கூறிய முனிவர்
திருப்பி அனுப்பி விட்டார் அஸ்வினி தேவர்களை.


வெருட்டினான் முனிவரிடம் சென்ற இந்திரன் – அவரை
மிரட்டினான் உபதேசித்தால் சிரசைக் கொய்து விடுவதாக.


சென்றனர் அஸ்வினி தேவர்கள் உபதேசம் பெற்றிட;
செப்பினார் அவர் அவர்களிடம் இந்திரன் மிரட்டலை.


மருத்துவர்களிடம் பலிக்குமா இது போன்ற மிரட்டல்?
மறைத்து வைத்தனர் முனிவரின் தலையை பத்திரமாக.


பொருத்தி விட்டனர் ஒரு கிழக் குதிரையின் தலையை.
மறைந்து காத்திருந்தனர் உபதேசம் பெற்ற பின்னர்.


வெறி கொண்ட இந்திரன் வெட்டினான் அவர் தலையை!
வெகுளியில் அறியவில்லை அது குதிரையின் தலை என்று!


பொருத்தினர் முனிவருக்குச் சொந்தத் தலையினை;
திரும்பினர் தம் இருப்பிடத்துக்கு அஸ்வினி தேவர்கள்.


சிரமப்பட்டாகிலும் கற்க வேண்டும் ஒவ்வொருவரும்
பிரம்ம வித்தையை சத்குரு முகமாக என்று அறிவீர்!”


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


7#36b. DhyAna YOgam (2)


The land where a person who has attained mano-layam lives becomes a holy land. One must have bhakti towards his guru in the same way he has towards his God. One must attain Brahma JnAnam through the guidance of his guru – failing which he is burdened with an unfulfilled duty to his guru.


The sthoola sareeram given by one’s parents will perish but the JnAna sareeram given by a guru will never perish. It is the only thing a jeeVA can take along with him to his next birth.


If God gets angry with us, a guru can protects us from God’s anger with his mercy. But if a guru gets angry with us, even a god cannot protect us from guru’s anger.


We must make the guru’s mind happy. We must show our respect to him with our thoughts, words and deeds. There is no parihAram for a disciple who fails to please his guru by gaining true knowledge, during his lifetime.


Once there lived a rushi who was an exponent in AtharvaNa vEdA. The celestial vaidhyAs Ashwini DEvatAs wished to get upadesam from this rushi. Indra the king f devas threatened to behead the rushi – if he dared to teach to the Ashwini KumArAs.


Aswini kumArAs replaced the rushi’s head with that of an old horse and got the upadesam from the rushi. They waited for Indra’s arrival hidden from the view. Indra came and cut off the sage’s horse head.


Indra did not even pause to notice that it was not the rushi’s original head. The Ashwini DevAs replaced the original head of the sage and went back to their abode.


The moral is that one should be willing to learn the Brahma vidhya through a sat guru undergoing many difficulties.”



 
bhagavathy bhaagavatam - skanda 2

2#6f. வீர பத்தினி

பறித்துக் கொண்டிருந்தாள் மாத்ரி மலர்களை;
பறித்து விட்டாள் பாண்டுவின் மனத்தையும்!


மரண காலம் நெருங்கி விட்டது பாண்டுவுக்கு!
ஸ்மரணை இல்லை முனிவர் தந்த சாபம் கூட!


கூடி மகிழ்ந்திட நாடினான் மனைவியை;
ஓடி ஒளிந்தாலும் விடவில்லை மாத்ரியை!


பலவந்தமாகக் கட்டியணைத்து உறவாடிட,
பலித்து விட்டது குந்தமர் தந்த அந்தச் சாபம்!


சுகானுபவத்திலேயே மாண்டான் பாண்டு!
சுகமே துக்கமானது மனைவி மாத்ரிக்கு!


அலறியபடித் துவண்டு விழுந்தாள் அவன் மீதே!
பதறியபடி ஓடி வந்தனர் குந்தியும், பிள்ளைகளும்!


வீர பத்தினியாக விரும்பினாள் மாத்ரி – பதி
விரதா தர்மத்தோடு ஏறினாள் உடன் கட்டை!


நகுலன், சஹாதேவனுக்குத் தாயானாள் குந்தி;
நகர் திரும்பினர் செய்வது அறியாத அறுவரும்.


திருதிராஷ்டிரனிடம் அழைத்துச் சென்றார் பீஷ்மர்.
தெரிந்திருந்தது அனைவருக்கும் சாபத்தைப் பற்றி!


“பிள்ளைகள் பிறந்தது எப்படி?” என்றார்கள்!
‘பிறப்பை ஆராய்ச்சி செய்யும்படி நேர்ந்ததே!’


குந்தி குமுறினாள், குமைந்தாள் மனத்தில்;
சிந்தித்தாள் இனிச் செய்ய வேண்டியதை!


தியானித்தாள் பிள்ளைகள் தந்த ஐவரையும்;
தோன்றினர் விண்ணில் அந்த தேவதைகள்.


“தோன்றினர் இப்பிள்ளைகள் எங்களிடமிருந்து!
தோன்றினர் இப்பிள்ளைகள் எங்கள் அம்சமாக!”


மனம் மகிழ்ந்தனர் அதைக் கேட்ட நகர மக்கள்;
மணி போலப் பேணினர் பஞ்ச பாண்டவர்களை.


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K . ராமன்


2#6f. Veera Patni

MAdri was plucking the flowers. She plucked the intellect of her husband PANdu also unwittingly. He forgot about the curse given by the sage Kundamar. He wanted to enjoy carnal pleasure with MAdri then and there. She tried to evade him but he was determined to possess her.


The curse took effect just as he indulged in the act of love. He died in ecstasy but MAdri was steeped in sorrow. She wailed and fainted on his dead body. Kunti and the five PANdavAs came rushing only to see the dead PANdu and the fainted MAdri.


MAdri entrusted her twin sons to the care of Kunti and performed ‘sati’ by sitting on the burning funeral pyre, along with the dead body of her husband. She entered the funeral pyre of PaaNdu along with him and became his veera patni.


Kunti did not know what to do there in the forest. She returned to the kingdom with her five sons. Bheeshma took them to DhrutarAshtran. Everyone knew about the curse of PANdu – since it was the curse which had made him opt to live in the jungle. They were wonderig how Kunti got her five sons despite PANdu’s wretched curse!


Kunti became very sad that the birth of her sons became the hot topic of discussion in the city. She prayed to the five DEvatAs who gave her those five sons. They all appeared in the sky and said, “These children were born to us and they are born out of our own amsam”


The citizens were satisfied since the mystery of the birth of the five sons got cleared. They all loved the five PANdavAs as the real sons of their own PANdu.


 
kanda purANam - mahEndra kANdam


12e. வீரவாகுவின் பதில்

சூரபத்மனின் ஏளனச் சொற்களால்
வீரவாகுத் தேவர் கொண்டார் சினம்;

“மாயக் கூத்தாடி ஆக்கினாய் என்னை!
மாலவன் மருகன் முருகவேள் தூதனை!

தாரகனை, கிரௌஞ்சனை நொடியில்
கீறிய வேற்படை கொண்ட தனி நாயகன்

முருகவேள் ஆவார் நம் முழுமுதற் கடவுள்!
அருள் கூர்ந்து என்னை அனுப்பினார் தூது.”

” கூறு உன்னை இங்கு தூதாக என்னிடம்
ஆறுமுகன் அனுப்பிய காரணம் ஏதென!”

“அமரர் கோனை, அயிராணியை விரட்டி
அழித்தாய் பொன்னுலகைக் கொளுத்தி.

தேவர்களை வாட்டினாய் சிறைப்படுத்தி.
பூதப்படையோடு வந்தோம் சிறை மீட்க.

திருச்செந்தூரில் நெருநல் எழுந்தருளினார்
அருள்கொண்டு அனுப்பினார் என்னைத் தூது.

காசியப முனிவரின் மகனாகப் பிறந்தும்
யோசியாமல் இழிதொழில்கள் புரிகிறாய்!

பிறருக்குத் துன்பம் இழைப்பவர்கள் தாமும்
இறப்பர் பல தொல்லைகள் அடைந்த பின்பு.

மேன்மைகளோடு நெடுநாள் வாழவேண்டுமா?
மேலான தேவர்களை உடனே விடுதலை செய்!”

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

3#12e. VeerabAhu’s reply.


VeerabAhu became angry on hearing Soorapadman’s words. “You have reduced me to the state of a street performer and a juggler. I am the messenger of Lord Murugan, the beloved nephew of MahA VishNu. His spear tore apart TArakan and Krounjan in less than a minute. Murugan is the most supreme among all the Gods.”

“Why has Murugan sent you here. Tell me quickly!” Soorapadman hissed in anger.
“You chased away Indra and IndrANi from their Swarggam. You have completely destroyed the swarggam.

You have arrested and tortured all the Devas. Murugan has come to release the Devas from your prison. He is now camping in Thiruch Chendoor. You are the son of the venerable Kashyapa rushi and yet your behavior is so mean.

One who inflicts pain and harm on others will surely suffer for his own actions. If you want to continue to live in luxury for a very long time, release the Devas from your prison immediately!” VeerabAhu conveyed Sri Murugan’s message in this manner.

 
The 64 Thiru ViLaiyAdalgaL

37. சோழனை மடுவில் தள்ளியது.

# 37. சோழனை மடுவில் தள்ளியது.

ராஜேந்திர பாண்டியனின் வம்சத்தில்
ராஜாவானான் சுந்தரேச பாதசேகரன்.


சிவ நேசனாக விளங்கியவனுக்கு ஒரு
சிறு படையே போதுமானதாயிற்று.


தேர்ப் படை என்பது பத்தே தேர்கள்;
யானைப் படை என்பது நூறு யானைகள்;


குதிரைப் படை ஓராயிரம் குதிரைகள்;
காலாட் படை என்பது பதினாயிரம் பேர்;


சுருங்கிய சேனையைக் கண்டவுடன்
விரும்பினான் மதுரை மேல் படையெடுப்பு;


கடல் அனைய சேனையுடன் சோழன்
படையெடுத்தான் திட நம்பிக்கையுடன்;


“உன் அருளை நம்பியே ஆளுகின்றேன்,
என் வலிமையை நம்பி அல்ல ஐயனே!


கடல் போன்ற சேனையை என் செய்யும்
படகு போன்ற என் பாண்டிய சேனை?”


“நானும் களம் வருவேன் உன்னோடு
நாளை நடக்க இருக்கும் போருக்கு!


அஞ்ச வேண்டாம் நீ கொஞ்சமும்
தஞ்சம் அடைந்தவரைக் கைவிடேன்!”


வேதப் பரி மீது ஏறி வந்தான் பிரான்;
வேட வடிவு எடுத்து வந்தான் பிரான்;


தந்தக் குழைகள், முத்து மாலைகள்,
தந்தக் கடகங்கள், மயிலிறகு, வெட்சி,


கையில் கொல் வேல் ஏந்திய வண்ணம்
மையத்தில் படை முன்னர் சென்றான்.


வேடனின் வீரத்தைக் கண்டு அஞ்சிச்
சோழன் புறமுதுகிட்டு ஓடலானான்!


வேடன் மறைந்து அருளவும், அங்கு
சோழனைப் பாண்டியன் துரத்தினான்.


வேடனைக் காணோம் என்றறிந்ததும்
சோழன் துரத்தலானான் பாண்டியனை!


மதுரைக்கு விரைந்த பாண்டியன்
மடு ஒன்றில் இடறி விழுந்தான்.


திரும்பத் துரத்திய சோழனும் அவன்
விரும்பாமலேயே மடுவில் விழுந்தான்.


இறைவன் திருவருளால் பிழைத்தான்;
கரையேறி வந்தான் பாண்டியமன்னன்.


இறைவன் திருவுளப்படியே மடுவில்
இறந்தான் மூழ்கிய சோழ மன்னன்.


சோழனின் சேனையைக் கவர்ந்தான்,
சோழனை வென்ற பாண்டிய மன்னன் .


சுந்தரபாத சேகரன் தொடர்ந்தான் தன்
சுந்தரேஸ்வர பெருமான் தொண்டுகளை.


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


# 37. PUSHING CHOZHAN INTO A POND.


Sundaresa Paahda Sekaran was born in the lineage of Rajendra Paandian. He was
peace loving by nature. He maintained a very small army with just ten chariots, one hundred elephants, one thousand horsemen and ten thousand soldiers.


Kaverich Chozhan was attracted by the prospect of easy victory over the Paandian. So he descended on Paandian with a large army.


Sundara Paada Sekaran prayed to Siva,”I rely more on you than my own army. Don’t you know this my lord? Won’t you save me my people?”


Siva replied, ” I myself will appear in the battlefield to help you!” The limited army of the Paandian marched on to the battle field. Siva appeared as a hunter. He rode on the Vedas transformed into a horse, leading the army.


He wore ornaments made of Ivory on his ears and wrists. He wore peacock feather on his hair and held a terrifying spear in his hand.


Chozha got frightened by the sight of this unknown warrior. He rode away in an effort to escape. The hunter who was Siva disappeared.


So Paandiyan chased the Chozhan. When Chozhan saw that the mighty hunter has disappeared he started chasing the Paandian.


Now it was Paandian’s turn to try to escape. He rode towards Madurai very fast and fell into a pond. Chozha who was chasing the Paandian also fell into the pond.


Paandian came out unhurt while Chozhan got killed by the fall. Paandian took over the army of Chozha. His charitable acts continued as before.


 
bhagavathy bhaagavatam - skanda 7

7#37a. ஞான யோகம் (1)

“ஆசைகள் அற்றவனுக்கு எந்த ஞானம்
அளிக்கும் உன்னிடம் அதீத பக்தியை?”


வினவினான் மலையரசன் தேவியிடம்,
விவரித்தாள் தேவி அதனை அவனுக்கு.


“மூன்று வழிகள் உள்ளன முக்திக்கு – அவை
மூன்றுமே எளியவை வேறு வேறு விதத்தில்.


வசப்படும் முயற்சிகள் செய்பவனுக்கு;
வசப்படும் கர்ம யோகம் உடலுக்கு;


வசப்படும் ஞான யோகம் அறிவுக்கு;
வசப்படும் பக்தி யோகம் மனத்துக்கு;


மூன்று வகைப்படும் பக்தி யோகமும்;
முக்குணத் தொடர்பினால் மாறிவிடும்!


பிறரைத் துன்புறுத்துவது ‘தமாஸ’ பக்தி;
இருக்கும் ஆடம்பரமாக, டாம்பீகமாக!


மறையாது செய்யும் செயல்களிருந்து
குரோதமும், பொறாமையும் ஒரு நாளும்.


பக்தி செய்வர் என்னிடம் எனினும்
புத்தியன்றி தீமைகள் புரிவர் இவர்.


பிறக்குத் தீங்கு இழைக்காமல் – தனக்குச்
சிறந்ததைத் தேடுவது ஆகும் ‘ராஜஸ’பக்தி.


இச்சைகள் வளரும் தினம் புதிது புதிதாக;
பக்தி செய்வர் இவர்கள் பேத புத்தியுடன்!”


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


7#37a. JnAna yOgam (1)


HimavAn asked DEvi,” Oh DEvi! Which type of JnAnam will endow a person with intense bhakti towards you – when he has no other worldly desires?” DEvi replied to the Parvata RAjan thus:


“There are three paths for attaining mukti or liberation. All the three are equally effective and equally easy for a man who strives with determination.


Karma yOgam is for one who has great control over his body. JnAna yOgam is for one who is endowed with a sharp intellect. Bhakthi yOgam is for one who has great control over his mind.


Again Bhakti yOgam is of three types. It gets modified by its association with three gunAs namely Satva, RAjasa and TAmasa.


TAmasa bhakti inflicts sufferings on others as well the doer. It is performed more often out of a pomp and show than out of the real devotion. Hatred and jealousy will be present in every action performed by the people with TAmasic Bhakti.


RAjasic Bhakti is better since it seeks one’s own welfare and prosperity without inflicting sufferings on the others. New desires are being born all the time. The people with RAjasic Bhakti have the bEdha buddhi when it comes to the fulfilment of worldly desires over total liberation or mukti.”



 
bhagavathy bhaagavatam - skanda 2

2#7a. பாண்டவர் சரிதை (1)

பாண்டவர்களின் மனைவி திரௌபதி – உப
பாண்டவர்கள் ஐந்து புத்திரர்கள் திரௌபதிக்கு.


சுபத்ரா தேவியை மணந்தான் அர்ஜுனன்;
சுபத்திரையின் மகனாகப் பிறந்தான் அபிமன்யு


உத்தரையை மணந்த அபிமன்யு – மகாபாரத
யுத்தத்தில் மடிந்தான் சக்கர வியூகத்தில்!


குலம் நசிக்க இருந்த வேளையில் – உத்தரை
குலக் கொழுந்தைத் தாங்கியிருந்தாள் கருவில்.


அஸ்வத்தாமன் கருவை அழிக்க முயல – அவன்
அஸ்த்திரத்திலிருந்து காத்தான் கிருஷ்ண பகவான்.


பாரதப் போரில் நூற்றுவரைப் பறி கொடுத்துத்
தீராத் துயரில் ஆழ்ந்தனர் அவர் பெற்றோர்கள்.


அல்லும் பகலும் பணிவிடைகள் செய்தான் தருமன்;
ஆறுதல் கூற எப்போதும் உடன் இருந்தார் விதுரர்.


பீமன் மன்னிக்கவில்லை திருதராஷ்டிரனை!
பீமன் சுட்டெரித்தான் வார்த்தையால் அவனை!


சென்றான் வனவாசம் திருதராஷ்டிரன் – உடன்
சென்றனர் சஞ்சயன், விதுரன், குந்தி, காந்தாரி.


சதயூபர் ஆசிரமத்தை அடைந்தனர் – அங்கு
தவசீலராக வாழ்ந்தனர் ஆறு ஆண்டுகள்.


கண்டான் கனவில் தர்மன் குந்தி தேவியை!
காண விரும்பினான் தர்மன் குந்தியை நேரிலும்.


சுபத்திரை, உத்தரை உடன் வரச் சென்றனர்
சதயுபர் ஆசிரம் திரௌபதியும், பாண்டவரும்.


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K . ராமன்


2#7a. The PANdavAs (1)


Droupati was the wife of the five PANdavAs. Upa PANdavAs were the five sons of Droupati. Arjun married Subadra Devi and got a son Abhimanyu thorugh her.

Abhimanyu married princess Uththara. He got killed in the Mahabhaarata war caught inside the Chakra vyooham. The race of PANdavAs got almost destroyed when AswathAma tried to kill the fetus in the womb of Uththara. Krishna saved the fetus from AswathAma’s asthram.

DhrutharAshtra and KAntAri were steeped in sorrow having lost all their one hundred sons in the war. Dharman tried to serve them personally and make their life as conformable as possible.

The loyal Vidura stayed with them and spoke words of comfort. Bheema could never forgive DhrutharAshtra. He always spoke scorching words to the blind old man and his wife.

DhrutharAshtran went to live in the forest and along with him went loyal Sanjayan, Viduran, KAnthAri and Kunti. They reached the Asram of sage Sathayoopa and lived there for six years as tapasvis.

Dharman saw Kunti Devi in his dream one day. He wanted to visit her in person. He went to the Asram of sage Satayoopa along with his four brothers, Droupati, Uththara and Subadra Devi.


 
kanda purAnam - mahEndra kANdam

12f. சூரபத்மனின் சினம்

வீரவாகு விளம்பிய சொற்களைக் கேட்டு
ஆரவாரம் செய்தான் சூரபத்ம அவுணன்.


“அரசன் ஆவேன் ஆயிரம் அண்டங்களுக்கு!
சிறுவன் நீயும் எனக்கு அறிவுரை தருவதா?


தேவர்கள் வருத்தினர் எம் அவுணர்களை.
தேவர்களைச் இட்டேன் எம் சிறையினில்.


தேவர்களை நான் சிறை விடேன் என்றுமே.
தேவர்களை நான் ஒளிப்பேன் ஓரண்டத்தில்!


சிவன் எனக்குத் தந்துள்ள மேன்மைகளை
அவன் மகன் சிறுவன் அறிகிலன் போலும்.


சிறுவனின் பேச்சைக் கேட்டுக் கொண்டு
அறிவில்லாமல் வந்துள்ளாய் இங்கு நீயும்!


உயிர்ப் பிச்சை தந்தேன் நான் தூதுவனே!
உடனே பிழைத்தோடி திரும்பிச் சென்றுவிடு!”


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


3#12f. Sooarapadman’s anger.


On hearing VeerabAhu’s words Soorapadman became wild with anger and roared violently. “I am the ruler of one thousand and eight universes. And a little boy tries to advice me! Devas have always troubled us the asuras. So I imprisoned them.


I shall never release them. I will hide them all in one of my universes. Siva has given me so many special boons. May be his young son is not aware of them. He sent you and you have come here all the way like a fool! I shall spare your life. Go back to where you came from now!”
 
The 64 Thiru ViLaiyAdalgaL

கோட்டை அளித்தது.

# 38. உலவாக் கோட்டை அளித்தது.

அடியார்க்கு நல்லான் ஒரு வேளாளன்;
அடியவருக்கு அமுது செய்விப்பவன்;
துணைவி தருமசீலை மிக்க அன்புடன்
துணை நிற்பாள் தரும காரியங்களுக்கு!


ஆறில் ஒரு பங்கு அரசனுக்கு வரி;
ஆறில் ஐந்து பங்கு தான தருமங்கள்;
எத்தனை அடியவர் வந்த போதும்
அத்தனை பேருக்கும் அன்னம் உண்டு.


அடியவர் பெருமையை உலகு உணர,
இடியெனும் சோதனைகளைத் தருவான்;
நடம் செய்யும் திருப்பாதனும் அவனுக்கு
இடர் தந்திட முடிவு செய்து விட்டான்!


விளைச்சல் குறைந்து விட்டது வயலில்!
விருந்தோம்பலுக்குப் பொருள் இல்லை;
கடன் வாங்கி அன்ன தானம் செய்தான்;
கடன் தர ஆளில்லாமல் போகும்வரை!


“அடியவருக்கு அமுது படைக்காத இவ்
வுடல் இருந்தென்ன போயென்ன?” என்று
திடமான மனத்துடன் மனைவியுடன்,
தினம் உபவாசம் இருந்தான் நல்லான்.


“உதவாக்கரை உயிர் எதற்கு?” என்று
மதுராபுரி ஈசனின் கோவில் சென்று,
“இது காறும் நடத்திய அன்னதானம்
ஒரு போதும் இனித் தொடராதா ஐயா?


கடன் தந்து உதவும் ஆட்களை
உடனே எமக்குக் காட்டாவிடில்;
திடமாக எங்கள் உயிரை விடுவோம்
நடம் ஆடும் ஈசா உன் மேல் ஆணை!”


“சில காலம் உன்னைச் சோதித்தேன்!
பல காலம் தொடரும் உன் நற்பணிகள்;
உலவாக்கோட்டை அளித்தேன் உனக்கு;
செலவாக்கு அரிசியை வேண்டியபடி!”


எடுக்க எடுக்க குறையாத கோட்டையைக்
கொடுத்தான் ஈசன் சோமசுந்தரேஸ்வரன்.
கெடுமோ தன் நற்பணிகள் எனப் பலவாறு
நடுக்கம் உற்றவன் மனம் குளிர்ந்திட.


தூப தீபம் காட்டி, மலர் மலைகள் சூட்டி,
தேவைக்கு ஏற்ப அரிசியை எடுத்தான்;
அன்றைக்கு அன்னம் சமைப்பதற்கும்,
அன்றைக்குக் காய்கறிகள் வாங்கவும்.


அன்ன தானம் தொடர்ந்து நடந்தது;
சொன்ன சொல் தவறவில்லை அவன்;
என்னோ ஆண்டுகள் கழிந்த பின்னர்,
பொன்னுலகு ஏகினான் மனைவியுடன்!


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


# 38. THE INEXHAUSTIBLE CONTAINER OF RICE.


Adiyaarkku Nallaan was a farmer. He used to feed all the devotees of Siva. His fields
were fertile and their yields were good. He used to pay one sixth of his produce as tax to the king and spend the rest for feeding the devotees.


God proves the greatness of his devotees by subjecting them to hardships.Siva made the yield of the field grow less and less. Nallan could not feed the devotees any more.

He borrowed money and continued his service. Very soon no one was willing to lend him any more money.

The feeding of the devotees came to a stop. Nallaan and his wife also starved since they could not continue their service.


They decided to end their useless lives and went to the temple. Nallaan told Siva, “Either you show me people who would lend me money or you let us die now and here”.


Siva spoke to him, “I subjected you to hardship to prove your greatness to the world. Do not despair!. I have kept a container of rice in your house. It is inexhaustible. Use the rice to feed the devotees as before!”


Nallaan and his wife were happy to find the large container of rice. They did puja to it with dhoopam, deepam and flowers.


Everyday they took out enough rice to cook for the devotees and buy the vegetables for the day.


Their charitable activities were resumed. They lived for a long time and left for Sivapuram when their time came.


 
bhagavathy bhaagavatam - skanda 7

7#37b. ஞான யோகம் (2)

வேதங்கள் விதித்தவற்றைச் செய்வார்கள்
வேதவிதிகளை மீறாமல் சாத்வீக பக்தர்கள்.


பாவங்களைத் தொலைப்பதற்குச் செய்வார்கள்
பாவனையில் ஈஸ்வர அர்ப்பணத்தோடு கூட.


‘ஆண்டவன் இறைவன்;அவன் அடிமை நான்’
பூண்டிருப்பார் நிலையான தெய்வ பக்தியை.


உற்பத்தியாகும் அத்தனை நற்குணங்களும்;
உற்பத்தியாகும் உயர்ந்த உத்தமமான பக்தி.


விழையார் சாரூப்ய, சாயுஜ்ய முத்திகளை.
விழையார் சாலோக்ய, சாமீப்ய முத்தியை.


முக்தியையும் விரும்பாமல் பணி புரிவர்
பக்தியுடன் எப்போதும் எனக்கு இவர்கள்.


இதுவே ஆகும் ஞானயோகம் – மேலும்
இதுவே ஆகும் பரமபக்தி என்றறிவீர்.


ஞான யோகம் விளையும் பரமபக்தியால்;
ஞான யோகத்தில் ஒளிரும் பக்திபாவனை.


கருதுவான் எல்லா உயிர்களையும் நானாகவே.
கருதுவான் எல்லா உயிர்களையும் தானாகவே.


ஞானத்துக்கு எல்லை ஆகும் வைராக்கியம்;
பக்திக்கும் எல்லை ஆகும் வைராக்கியம்.


வீணாக மாட்டான் ஊழ் வினை வசப்பட்டு
ஞானம் அடைய முடியாத ஒருவனும் கூட. ”


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


குறிப்பு :

ஒருவன் தான் பூஜிக்கும் தெய்வத்தின் லோகத்தில் தானும் வாசம் செய்வது சாலோக்ய முக்தி.

அந்த தெய்வத்தின் உலகத்தில் அவர் அருகிலேயே இருந்து சேவை செய்வது சாமீப்ய முக்தி.

இறைவனது உருவம் போலவே தானும் வடிவத்தைப் பெறுவது சாரூப்ய முக்தியாகும்.

இறை வடிவத்தின் நாம ரூபத்தில் தானும் கலந்து அவைகளாகவே ஆவது சாயுஜ்ய முக்தி ஆகும்.


7#37b. JnAna yOgam (2)


The sAtvic bhaktAs perform only what the vEdAs priscribe and according to the rules laid down by the vEdAs. They perform these karmas as an offering to God. They do not have any selfish or ulterior motives. The only thought fixed in their mind is this: “God is my forever master and I am forever his slave.”


They develop all the good qualities. They develop the purest form of bhakti. They do not wish even for any of the four types of Mukti or Liberation viz SAlOkya, SAmeepya, SAroopya and SAyujya mukti. They continue serve their God – without asking for anything in return.


This the the JnAna YOgam. This is purest form of bhakti. Bhakti leads to JnAnam and JnAnam intensifies the bhakti. He who has attained this JnAnam will consider every living thing as me (Devi) or his own self.

VairAgyam forms the limit to both bhakti and to JnAnam. Even the person who has failed to attain JnAnam in this birth will not get wasted. He will take it up further in every future birth and continue in his quest till he attains Self Realization.


NOTE:

SAlOkya mukti = living in the same world as one’s favorite God.

SAmeepya mukti = living in the same world as one’s god and serving him personally
from close by.

SAroopya mukti = attaining the same name and form as those of one’s god.

SAyujya mukti = to merge with one’s god inseparably for ever.


 
bhagavthy bhaagavatam - skanda 2

2#7b. பாண்டவர் சரிதை (2)

ஆசிரமத்தை அடைந்தனர் தர்மன் குழுவினர்.
அனைவரும் அவர்களைக் கண்டு மகிழ்ந்தனர்.

காணவில்லை ஆசிரமத்தில் மகான் விதுரரை!
வினவினான் அவரைக் குறித்து தர்ம புத்திரன்.

விரக்தி அடைந்த விதுரர் சென்றிருந்தார்
பரம புருஷனை தியானிக்கத் தனியிடத்துக்கு.

தேடிச் சென்றான் தருமன் விதுரரை மறுநாள்.
ஒடுங்கி இருந்தார் ஆழ்ந்த தியானத்தில் விதுரர்.

ஜோதி வெளிப்பட்டது அவர் முகத்திலிருந்து;
ஜோதி கலந்தது தர்மன் முகத்தில் சென்று.

இருவர் அம்சமும் தர்ம ராஜனுடையதே;
ஒருவர் அம்சம் ஒடுங்கியது மற்றவரிடம்.

அந்திமக் கிரியைகள் செய்ய முற்படுகையில்
அசரீரி கூறியது, “விரக்தனை எரிக்கலாகாது!”

வந்தனர் வியாசரும் நாரதரும் ஆசிரமத்துக்கு;
குந்தி கூறினாள், ” காண வேண்டும் கர்ணனை!”

விரும்பினாள் காந்தாரி நூற்றுவரைக் காண!
விரும்பினாள் உத்தரை அபிமன்யுவைக் காண!

நீராடச் செய்தார் கங்கையில் அனைவரையும்;
நீராடினார் கங்கையில் வியாச முனிவரும்.

தியானம் செய்தார் பராசக்தியைக் குறித்து;
தீர்க்கவல்லவள் அபிலாஷைகளை அவளே!

‘ஜகத்காரிணி, பரப்ரம்ம ஸ்வரூபிணி, மாயே!
ஜகன்மாதா, ஸகுண நிர்குண ரூபிணி தாயே!

மகாதேவி, மணி த்வீப வாசினி, அம்பா!
மஹா வீரர்களை வரவழைப்பாய் இங்கே.

எந்த உலகத்தில் எந்த நிலையில் இருந்தாலும்.
உந்தன் அருளால் வரட்டும் அவர்கள் இங்கு!”

காண விரும்பியவரைக் கண்டனர் அனைவரும்.
கண்டபின் சென்றனர், வந்தவர் மறைந்தருளினர்.

வியாசர் சென்றார் தன் வழியே தனியாக;
வந்தனர் மற்றவர் ஹஸ்தினாபுரத்துக்கு.

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K . ராமன்


2#7b. The PANdavAs(2)


Dharma and the others reached Sage Sathayoopa’s ashram. The people there were happy to see these royal visitors. Dharman looked for Viduran but could not find him in the Ashram. Vidura had gone to a lonely spot to meditate on the Supreme Power.

The next day Dharma went in search of Viduran and found him lost deeply in his meditation. A jyoti (brilliant light) emerged from Viduran’s face only to go and merge in Dharman’s face. Both Viduran and Dharman were the amsam of the same Devata
Dharma RAjan. So the amasam of one of them went and merged with the other.

An asareeri warned them that the body of a virakthan should not be burned – when they tried to perform the funeral rites of Vidura. Narada and VyAsa came to the ashram. Kunti Devi wished to see her eldest son KarNan. KAnthAri wished to see her sons the KouravAs. Uththara wanted to see her husband Abimanyu.

VyAsa told them to take a holy bath in the river Ganges. He himself bathed in the holy river and prayed to ParA Shakti Devi – who was the one who could fulfill such an unusual wish.

He prayed to Devi, “You are the cause of the creation; You are the para brahma swaroopini! You are mother of everything seen, you exhibit yourself both as saguNa roopini and nirguNa roopini. MahA Devi who dwells in the MaNi dweepa! Please make all those valorous people appear here right now –wherever they may be now and however they may be now!”

By Devi’s divine grace all those people appeared at that place. The ladies met their loved ones and after some time the unearthly visitors disappeared. VyAsa went on his way all alone while Dharma and the others returned to HastinApuram.

 
kanda purAnam - mahEndra kANdam

12g. வீரவாகுவின் சினம்

சூரபத்மனின் சொற்களைக் கேட்டு
வீரவாகுத் தேவர் நகைக்கலானார்.


“உய்யும் வழி அறியாத அவுணனே!
உள்ளதை உள்ளபடி அறிந்துகொள்!


திங்கட் பிரானின் திருநுதற் கண்களில்
திருமுருகன் தீப்பொறியாகப் பிறந்தான்.


சிறுவன் என நீ கூறிடும் திரு முருகன்
மறு உருவம் ஆவான் சிவபெருமானின்.


சிவன் வேறு அல்ல முருகன் வேறு அல்ல.
சிவனே சிறுவன் திரு முருகனும் ஆவான்.


மேன்மைகள் தந்த இறைவன் அந்த
மேன்மைகளை அழிக்கவும் வல்லவன்.


திங்கட் பிரானின் மகனாகத் தோன்றி
எங்கும் நிறைந்துள்ள திரு முருகனுக்கு,


எங்கும் திரு முகங்கள், எங்கும் கண்கள்;
எங்கும் திருவுடல், எங்கும் திருக் காதுகள்,


எங்கும் திருவடிகள், எங்கும் திருக்கைகள்.
இங்கங்கு எனாது எங்கும் உளான் முருகன்!


மறைகளின் மூலமாகிய பிரணவ மந்திரம்,
முருகனின் திரு முகங்களில் ஒன்றாகும்.


தெய்வங்கள் அனைவரும் திரு முருகனே.
மெய்யறிவு தருபவனும் திரு முருகனே.


அவன் அன்றி ஓர் அணுவும் அசையாது.
அவன் மாயையில் மயங்கி உள்ளாய் நீ!


அவனை இகழ்ந்த நாவை அறுப்பேன்!
அவன் கட்டளை அது அல்ல வென்று


உன்னை உயிருடன் விட்டு விடுகிறேன்!
என் இறைவனைக் குறைகள் கூறாதே!”


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


The English translation will be given ASAP!!!It must be somewhere here!
 

Latest ads

Back
Top