• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

A poem a day to keep all agonies away!

kanda purANam - mahEndra kANdam


17a. வஜ்ஜிரவாகு

சூரபத்மனின் தூதர்கள் நின்றனர்
போரைப் பார்த்தபடியே விண்ணில்.


ஆயிரந்தோளர் அழிந்த உடனேயே
பாய்ந்து சென்று செய்தியைக் கூறினர்.


வஜ்ஜிரவாகு பத்துத் தலை அவுண வீரன்;
வஜ்ஜிர உடல் சூரனின் இளைய மகன்;


பொங்கி எழுந்தான்; சூளுரைத்தான்;
“எங்கிருந்தாலும் பிடித்து வருவேன்!”


பூண்டான் போர்க்கோலம் வஜ்ஜிரவாகு.
சென்றான் படையுடன் வீரவாகுவைத் தேடி.


தோள்களைத் தட்டி வீரவாகு கொக்கரிக்கத்
துவண்டு போயினர் மீண்டும் அவுண மறவர்கள்.


சூழ்ந்து கொண்டு போர் செய்தனர் மறவர்கள்,
சுழன்று சுழற்றி அடித்தார் மரத்தால் வீரவாகு.


குடுமிகளைப் பிடித்து அறைந்தார் நிலத்தில்;
விடுத்த படைக்கலன்களை முறித்து எறிந்தார்.


பாதங்களால் பலமாகத் தேய்த்தார் பலரை,
குதித்தார் பல அவுணர்களின் தலைகளின் மீது.


பல வித வீர சாகங்கள் செய்தார் வீரவாகு!
நால்வகைப் படையையும் அழித்து விட்டார்!


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


3#17a. VAJRABAAHU.


The messengers of Soorapadman stood in the sky watching the outcome of the war between VeerabAhu and SahasrabAhus. When the SahasrabAhus got killed, they rushed back to Soorapadman with the bad news.


VajrabAhu was Soorpadman’s younger son. He was valorous and he had ten heads. He promised his father, “I shall bring back that messenger of Murugan.” He donned on the armor and went with his army looking for VeerabAhu.


VeerabAhu was so happy to see the new batch of asuras. He clapped on his shoulders and roared so loudly that half of the asura army went mad on hearing that loud noise.


They surrounded VeerabAhu and started attacking him. VeerabAhu swirled a large tree. He grabbed the asuras by their knotted hair and dashed them on the ground. He jumped on the heads of some others and crushed more asuras under his feet. He used several war techniques and destroyed the asura army completely.


 
The 64 Thiru ViLaiyAdalgaL

43. பலகை இட்டது.

# 43. பலகை இட்டது.

மூன்று ஜாம பூஜைகளிலும் நிதம்
முக்கண்ணனைப் பாடிவந்த பாணன்;
நான்கு ஜாம பூஜைகளிலும் பின்பு
நாள் தவறாமல் பாடலானான்!

அடாது மழை பெய்தாலும் தொண்டு
விடாது நடை பெறும்என்று காட்ட,
அரன் மழை பொழியச் செய்தான்;
இரவு நடு ஜாம பூஜை சமயத்தில்!

மேகக் கூட்டங்கள் மோதின!
ஏகப்பட்ட மின்னல்கள் சிதறின!
இடி முழக்கி வெருட்டியது உலகை,
தொடர்ந்து நடந்தான் பாணபத்திரன்.

முனைந்து கோவிலை அடைந்தான்,
நனைந்து தொப்பலான பாணபத்திரன்;
நனைந்த யாழ் இசைக்க மறுத்தது!
நனைந்தவனின் குரல் நடுங்கியது!

வெடவெட என உடல் நடுங்கியது!
கடகட என்று பற்கள் கிட்டிப் போயின!
முழங்கால்கள் மோதிக் கொண்டன!
வழிந்தது மழை நீர் உடையிலிருந்து!

“இதன் மீது இருந்து பாடுவாய் பாணா!”
அரன் குரல் அசரீரியாகக் கேட்டது.
நவரத்தினங்கள் பதித்த ஒரு பலகை;
சிவன் அன்புடன் அளித்த பலகை.

அதன் மீது இருந்து பாடியபடியே
அரனை மகிழ்வித்தான் பாணன்;
அரனின் பரிசை அறிந்த மன்னன்
அதன் மீது அவனை அமரச் செய்தான்.

நஞ்சை நிலத்தின் பெறும் பகுதியை
வஞ்சனை இன்றி வழங்கினான்.
வறுமை நீங்கிய பாண பத்திரன்
பிறழாது நிதம் இசை பயின்றான்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

# 43. A PLANK OF GOLD AND GEMS.

Paanabadhran used to sing during the thrikaala pooja. Later he started singing during
the midnight puja also. He was very regular and sincere so that nothing could keep him away and make him miss the puja.

Siva wanted the world to recognize Paanabadhran’s sincerity and devotion. One night thick dark clouds gathered in the sky. Thunderstorm with lightnings and a heavy rain followed. But this did not deter Paanabadhran from walking to the temple.

He got drenched to the skin. He was shivering violently due to the cold. His lute would not produce any music neither would his voice sing. In spite of everything he tried to sing at his best.

God produced a plank of gold studded with the nine rathnas and told Paanabadhran to stand on it and sing. Paanabadhran was elated by the God’s concern and the rare gift.

When the king heard the story, he made Paanabadhran sit on the gold gem studded plank and presented him with fertile lands and fields. Paanabadhran started living a comfortable life, but he never ever failed in his duty of singing in the temple during all the pujas.




 
bhagavathy bhaagavatam - skanda 7

7#39a. பூஜை வகைமுறைகள்(1)

இரு வகைப்படும் தேவியின் பூஜை – அவை
‘புற பூஜை’ மற்றும் ‘அக பூஜை’ எனப்படும்.


இருவகைப்படும் புற பூஜை – அவை
‘வைதீகம்’ மற்றும் ‘தாந்த்ரீகம்’ எனப்படும்.


வேத தீக்ஷையுள்ள வைதீகனோ அல்லது
தாந்திரிகம் கற்ற தாந்திரிகனோ செய்வது.


விதிமுறைப்படிச் செய்யவேண்டும் பூஜையை.
விபரீத பூஜை செய்தால் தரும் வீழ்ச்சியை.


இருவகைப் படும் வைதீக பூஜையும் – அதில்
ஒருவகை என் விராட் ரூபத்தை தியானிப்பது.


எல்லா ஆற்றல்களும் வாய்ந்தவளாக எண்ணி;
எல்லா அவயவங்கள் உடையவளாக எண்ணி;


உலோக பிம்பத்திலோ அன்றிப் பிரதிமையிலோ,
சூரிய மண்டலம் அன்றிச் சந்திர மண்டலத்திலோ;


தண்ணீரிலோ அல்லது பாண லிங்கத்திலோ,
யந்திரத்திலோ அல்லது சிறந்த பீடத்திலோ,


தன்னுடைய இதயத்திலோ ஆவாஹனம் செய்து
பொன்னான நேரத்தை வீணாக்காமல் பூசிப்பது!


கருணா பூரணியாகவும், நல்ல குணவதியாகவும்;
தருணியாகவும், மாதுளம்பூ நிறத்தவளாகவும்,


சிருங்கார ரசம் நிறைந்தவளாக தேவியாகவும்,
அங்க அழகு நிறைந்துள்ள ஒரு சுந்தரியாகவும்,


பிறை சூடியவளாக, அன்பர் குறை தீர்ப்பவளாக,
பாச அங்குசம் தரித்தவளாக, ஆனந்த வடிவினளாக,


அபய வரதம் அளிக்கும் தேவியாக பாவித்து- எனக்கு
அன்புடன் செய்ய வேண்டும் ஷோடசோபச்சாரங்கள்”.


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


7#39a. The types of PoojA


DEvi poojA is of two types – the external worship and the internal worship.

The external poojA is again of two types – Vaideekam and TAntreekam. They are performed by a Vaideekan trainded in Veda sAstrAs or by a TAntreekan trained in TAntreekam. Either type must be performed according the prescribed rules. The wrong kind of puja will yield the wrong results.

Vaideeka poojA is of two types namely the puja of the VirAt swaroopam or the puja of a pratima or bimbam or a moorti.


Devi is made to enter by inviting her (AvAhanam) on a metal moorthi or pratima or in the Soorya MaNdala or the Chandra MaNdala or in water or in a BANa lingam or a yantrA or a peetam or the heart of the devotee.


Puja is done continuously. Devi is imagined to be an ocean of mercy, good-natured, young in age, as red in color as the flower of pomegranate, filled with an amorous sringAra rasa, beautiful in every limb and organ, sporting a crescent moon on her head, holding a noose and a goad in her hands and giving abahyam and varadam to her devotees and filled with happiness.


One must offer the sixteen ubachaaram to her thus.



 
bhagavathy bhaagavatam - skanda 2

2#10b. ஞான திருஷ்டி

அறிந்தான் தக்ஷகன் கஸ்யபன் மகிமையை!
‘முறிப்பானோ விஷத்தைத் தன் மந்திரத்தால்’?


“மன்னனைக் காப்பாற்ற மட்டுமே வந்தாய் என
மனமார நம்பிவிட முடியவில்லை என்னால்!


உண்மையைக் கூறு ஒளிக்காமல் என்னிடம்,
மன்னனைக் காப்பதால் என்ன லாபம் உனக்கு?


ஆதாயம் இல்லாமல் செட்டி ஒருவன் – பாயும்
ஆற்றோடு போக மாட்டான் அறிவேன் நான்.


சும்மா ஆடாது சோழியன் குடுமி – என்னிடம்
சொல்லு உனக்கு இதனால் என்ன ஆதாயம்?”


“மன்னனைப் பிழைக்க வைத்தால் எனக்குப்
பொன், பொருள், பரிசுகள் கிடைக்குமே!” என


‘பொருளாசை கொண்ட வெறும் மனிதன் இவன்!
அருளாசை கொண்ட பெரும் புனிதனல்ல இவன்!’


“தருவேன் அள்ளி அள்ளி இப்போதே உனக்கு
அரசன் தருவதைவிட அதிகப் பொன் பொருள்!


திரும்பிச் செல்லலாம் நீ உன் இல்லத்துக்கு!
விரும்பி அளிக்கலாம் உன் சுற்றத்தினருக்கு!”


ஆலோசித்தான் கஸ்யபன் பின் விளைவுகளை;
‘அளவில்லாத செல்வம் கிடைக்கும் உறுதியாக.


மன்னனைப் பிழைக்க வைத்தால் கிடைக்கும்
மண்ணுலகு உள்ள வரையில் பெயரும், புகழும்.


கைவிடக் கூடாது நாட்டு மன்னனின் நலனை;
கைவிடக் கூடாது நாட்டு மக்களின் நலனை.’


“தீரும் மரணமா இது அன்றித் தீரா மரணமா?”
தீர ஆராய்ந்தான் தன் ஞான திருஷ்டியில்!


ஞாலம் ஆளும் மன்னன் பிழைப்பது அரிது என
ஞான திருஷ்டியில் தெரிந்தது மிகத் தெளிவாக.


“தருவதாகச் சொன்ன தனத்தைத் தா!” என்று கேட்டுப்
பெரும் பொன் பொருளைப் பெற்றான் தக்ஷகனிடம்.


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K . ராமன்


2#10b. Divya Dhrushti


Takshakan realized the power of Kasypan now. He asked Kasyapan,”It is hard to believe that you had come only to save the king’s life. What do you stand to gain by saving the king’s life. I know there must be an ulterior motive for you action. Be frank and tell me the truth”

Kasyapan told Takshakan, “I am sure the king will shower rich gifts on me if I save his life.” Takshakan realized that Kasyapan was driven by his needs and greed and not by the noble thought of saving the king’s life.

“I can give you far more richer gifts than the king can. You may take them and go back home. You may share the wealth with your friends kin and kith and live happily!” Now Takshakan tempted the greedy and the needy Kasyapan openly.

Kasyapan thought for some time. ‘I must save the king for the sake of the citizens. I am sure to get rich gifts either from the king or from Takshakan. But if I save the king my name will etched in the history of mankind for eternity.’

But he also studied the future of the king Pareekshit with his divya dhrushti. He found out that there was no way in which the king’s life could really be saved.

Kasyapan was a practical man and accepted the riches given to him by Takshakan and decided to go back home – without meeting Pareekshit.



 
kandha purANam - mahEndra kANdam

18. யாளி முகன்

அழிந்து வஜ்ஜிரவாகு விழுந்த போது,
விழுந்தான் கதிரவன் மேற்குத் திசையில்.


யாரும் வரவில்லை மேலும் போர் செய்ய!
திரும்பிச் செல்ல எண்ணினார் வீரவாகு.


தெருவில் நடக்கும் வீரவாகுவைக் கண்டு
அருகில் செல்லாமல் ஓடினர் அவுணர்கள்.


மீண்டும் ஒரு முறை கடந்தார் கடலை;
மீண்டும் அடைந்தார் இலங்கையை.


யாளிமுக அவுணன் அதன் காவலன்;
யாளிமுகங்கள் ஆயிரம் கொண்டவன்;


மேருவை நிகர்த்த உடல் உடையவன்;
நெருப்பை உமிழும் கண்கள் உடையவன்;


விரைந்து செல்லும் வீரவாகுவைக் கண்டு
விரைந்து வந்து உரைத்தனர் காவலர்கள்.


“அதிவீரனை, வீரசிங்கனை அழித்துக்
கதிகலங்க வைத்தவன் இவனே தான்!”


“இவனைக் கொல்வேன்!” என்று கூறி
அவரை நெருங்கினான் யாளி முகன்.


கரங்கள், சிரங்களை அறுத்துத் தள்ளி
போர் புரியலானார் வீரவாகுத் தேவர்.


ஆயிரம் வலக் கரங்கள் வெட்டுண்டன!
ஆயிரம் இடக் கரங்கள் வெட்டுண்டன!


ஆயிரம் துதிக்கைகள் வெட்டுண்டு வீழ்ந்தன.
ஆயிரம் சிரங்களும் வெட்டுண்டு வீழ்ந்தன.


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


3#18. YALimukhan.


When Vajrabaahu fell dead, the Sun also set in the west. No more asuras came forward to fight with VeerabAhu. He decided to return to Lord Murugan at Thiruchendhoor.


The asuras who saw him walking on the streets kept away from him out of fear. He crossed the sea and reached Lanka one more time.


YALimukhan was its guardian. He had a thousand YALi faces. His body was as huge as the mount Meru. His eyes spat fire.


When the asura soldiers eyed VeerabAhu they rushed to inform YALimukhan that it was he same man who had struck terror in their hearts earlier that day and killed Athiveeran and Veerasingan.


YALimukhan swore to kill the man himself and went near him. VeerabAhu started to fight with him by cutting off his numerous heads, trunks and hands.


One thousand right hands of YALimukhan got cut off. One thousand left hands too were cut off. One thousand trunks fell on the ground and one thousand heads rolled on the ground.


YALi is a mythological creature which had a lion’s body and the trunk and tusks of an elephant. It is considered to be much more stronger than both a lion and an elephant.



 
The 64 Thiru ViLaiyAdalgaL

44a. ஈழத்துப் பாடினி.

# 44 (a). ஈழத்துப் பாடினி.

வரகுண பாண்டியனுக்குப் பின்
அரியணை ஏறினான் ராஜராஜன்;
பல மனைவிகளுடன் அவனுக்குப்
பல காமக் கிழத்தியரும் உண்டு!

காதல் மிகக் கொண்டிருந்தான்
காமக் கிழத்தி ஒருத்தியிடம்;
பாடல் பாடுவதில் வல்லவள்;
பாலினும் இனிய குரல் வளம்.

தான் உண்டு தன் வேலை உண்டு என
மாண்போடு நடந்து கொள்பவரையும்,
தேடி வரும் பகைமையின் செந்தழல்,
நாடி வருவதன் காரணம் அசூயை!

பாண பத்திரனின் கற்புக்கரசியைக்
காணப் படவில்லை காமக்கிழத்திக்கு;
சபையில் அவளை அவமதிக்க எண்ணிச்
சமயம் பார்த்துத் தன் ஆவலைக் கூற,

பெண்ணாசையில் மூழ்கிய மன்னன்
கண்ணிருந்தும் குருடன் போலானான்;
“பழி வந்து சூழுமே!” என்று அஞ்சாமல்,
“வழி ஒன்று சொல்வாய்!” அதற்கு என,

“நம் நாட்டுப் பாடினிகள் போதாது!
நம் அண்டை நாட்டில் வசிக்கின்றாள்
ஈழத்துப் பாடினி ஒருத்தி! அவள்,
தோழமையால் வென்றிட முடியும்!”

ஓலை சென்றது ஈழத்துப் பாடினிக்கு!
வேளையில் வந்தாள் மாணவிகளோடு;
இள வயதினள், அவள் பேரழகியும் கூட;
இளைஞர்களைக் கவர வல்ல பாடினி!

மன்னன் பாடச் சொன்னான் அவளை;
கின்னர கீதம் போல அவள் இசைத்தாள்;
“இன்னம் ஒரு பணி உள்ளது உனக்கு;
முன்னம் அதைக் கூறுகின்றேன் நான்.

பாணன் மனைவியைப் பாட அழைப்பாய்!
பாணன் மனைவி மறுத்திட்ட போதிலும்
வஞ்சினம் கூறியேனும் தடுத்து நிறுத்தி
அஞ்சாமல் அவையில் நீ வாது தொடுப்பாய்!

பொன் பொருள்களை அள்ளித் தந்தான்!
மன்னன் அவைக்கு வரச் சொன்னான்;
தன் கின்னர கானத் திறனாலும் மேலும்
மன்னன் அளித்த பரிசாலும் மகிழ்ந்தாள்!

பாணபத்திரனின் மனைவியை அழைத்து,
“பாட்டுப் போட்டியில் வென்று பாடினியின்
செருக்கை ஒடுக்க முடியுமா உன்னால்?
செப்புவாய்!” என்று சொன்னான் மன்னன்.

“இறையருள் நிரம்பவும் உள்ளது மன்னா!
நிறையருள் பலமும் உன்னது என்னிடம்;
அம்பிகை நாதனின் அருளால் வென்றிடும்
நம்பிக்கை உள்ளது பாட்டுப் போட்டியில்!”

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

# 44 (A). THE SINGER FROM CEYLON.

Raja raja Paandian succeeded Varaguna Paandian. He had several lawfully wedded wives and a few lady loves besides. He loved one of those lovers best since she could sing with a sweet voice.

Even non-interfering people minding their own business end up making powerful enemies.The main reason is jealousy. Paana badhran’s wife was a very talented singer and king’s lover could not stand her sight!

Paanan’s wife must be belittled and put to shame in public! This was the only aim of the king’s lover. She knew she could twirl the king around her little finger. So she hatched an infallible plan.

They would bring a renowned singer from Ceylon, trap Paanan’s wife in a music competition and defeat her to enslave her for life.

The singer from Ceylon came with all pomp and show -accompanied by her many students. She was young, talented and very beautiful.

The King told her to sing. She rendered a song as sweet as that of Gandharvaas and Kinnaras. The secret plan was revealed to her.

She had to get Paanan’s wife to enter a contest with her by hook or crook.The king would take care of the other things. He showered many gifts on the Ezhaththup paadini.

Later the king summoned Paanan’s wife and told her, “The singer from Ceylon is very proud and arrogant. Can you take part in a contest to defeat her and put an end to her pride?”

Paana badhran’s wife replied with respect,”I have the grace of Lord Siva and blessings of my husband. I should be able to defeat her. Even if I can’t I won’t take it to my heart and suffer!”

 
bhagavathy bhaagavatam - skanda 7

7#39b. பூஜை வகைமுறைகள்(2)

தியானித்து வரவேண்டும் நாள் தோறும்,
பூஜித்து வரவேண்டும் நாள் தவறாமல்.


தேவை அமைதி, அடக்கம், அன்பு மனம்;
தேவையின்மை ஆடம்பரம், அகங்காரம்.


அடைய முடியும் தேவியை தியானத்தால்;
அடைய முடியும் தேவியை பக்தியினால்;


அடைய முடியாது வெறும் கர்மம் மட்டும் செய்து;
அடைய முடியாது பக்தியும், தியானமும் செய்யாது.


புறவழிபாடு செய்து வரவேண்டும் தவறாமல்;
புறவழிபாடு செய்யும் அகவழிபாட்டுக்கு வழி!


அகவழிபாட்டில் தன்னாட்சி வந்ததவுடன்
அதுவே உண்டாக்கும் ஞானத்தில் லயிப்பு.


மறைந்து விடும் அப்போது புறத்தோற்றம்;
மறைந்து விடும் அப்போது புறபூஜைகளும்;


தோன்றும் சம்வித் ஸ்வரூபம் ஞான லயிப்பில்;
தோன்றும் உலக வாழ்வினில் பற்றற்ற தன்மை!


நிலைத்து நிற்க இயலும் சம்வித் ஸ்வரூபத்தில்;
நிலைத்து நிற்க இயலும் விரக்தி உள்ளவனாக.


தேவி ஆத்ம வடிவானவள் – அவளைத்
தேட வேண்டும் யோக நுட்ப அறிவால்.


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


7#39b. Types of Pooja (2)


One must meditate on DEvi everyday without fail. One most worship DEvi everyday without fail. One must remain calm, humble and be filled with love and bhakti for DEvi. One must keep away from pomp, show and ego.


DEvi can be attained by DhyAnam and Bhakti, DEvi can’t be reached by mere KarmAs without Bhakti and DhyAnam accompanying those KarmAs.


External worship must be done regularly. It will pave way for the internal worship slowly and steadily. Once we master in the internal worship, it will pave way for the rise of JnAnam or true knowledge.


At that juncture the external appearance vanishes and along with it the external pooja also. Devil’s samvith swaroopam appears in the rising JnAnam.


The person automatically loses interest in all worldly things and affairs. He will be able to retain DEvi’s samvith swaroopam for longer periods or even permanently. He will become completely detached from the worldly things and affairs.


DEvi is of the swaroopam of Aatman and she can be reached only through the yogic path filled with bhakti.



 
bhagavathy bhaagavatam - skanda 2

2#10c. முனிவர்களின் கனிகள்

நாகசம் நகரை நிர்மாணித்திருந்தான் பரீக்ஷித்;
நாகத்திடமிருந்து தன்னைக் காத்துக் கொள்ள.

“கோட்டையின் உப்பரிகையில் வசிக்கின்றானாம்;
சோடை போகாத காவல் நடுவே வசிக்கின்றானாம்.

ஜாக்கிரதையாக இருக்கின்றானாம் நாள் முழுதும்!”
ஜனங்கள் பேசக் கேட்டு இதை அறிந்தான் தக்ஷகன்.

“பாண்டவர் வம்சத்தில் தோன்றியது இல்லை
பரீக்ஷித் போன்ற சிறந்த ஒரு அரசன் இதுவரை.

நிஷ்டையில் இருந்த முனிவரை அநாவசியமாகக்
கஷ்டப் படுத்தினான் கழுத்தில் பாம்பைப் போட்டு.

எப்படி நுழைவது காவலை மீறிக் கோட்டையில்?”
எண்ணினான் தக்ஷகன் தான் செய்ய வேண்டியதை.

ஆணையிட்டான் தன் இனத்து சர்ப்பங்களிடம்,
அருந்தவ முனிவர்களின் உருவில் வருமாறு.

“சுவையும், மணமும் உள்ள கனிகளை ஏந்திச்
சமர்பிக்க வாருங்கள் மன்னன் பரீக்ஷித்துக்கு!”

கிருமி ரூபத்தில் பிரவேசித்தான் தக்ஷகன்
இருப்பதிலேயே பெரிய, அழகிய கனியில்.

பழங்களுடன் சென்றனர் கபட முனிவர்கள்;
பரீக்ஷித் பதுங்கியிருந்த காவல் கோட்டைக்கு.

“அபிமன்யு குமாரன் நம் நாட்டு மன்னன் அன்றோ?
அபிமந்திரித்துக் கொண்டு வந்துள்ளோம் கனிகளை!

அரசனைக் காக்கும் அற்புதக் கனிகள் இவை!
அளிக்க வேண்டும் அரசனிடம் இவற்றை!” என

நாகர்கள் முனிவர்கள் வேடம் தரித்துக் கொண்டு
காவலர்களை விடாமல் தொல்லை செய்தனர்.

“உள்ளே அனுமதியாவிட்டாலும் பரவாயில்லை.
உள்ளே அனுப்பி விடுங்கள் மந்திரித்த கனிகளை!”

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K . ராமன்


2#10c. The unusual fruits


King Pareekshit had prepared a well protected fort to save himself from the curse of the sage’s angry son. He lived in the top floor of the fort – under tight security arrangements. Everyone around him was on guard for spotting anything unusual.

Takshakan learned these from the citizens of Pareekshit. It was true that Pareekshit was one of the greatest kings in the dynasty of PANdu. But he had incurred sin and had been cursed by the sage’s son for his irresponsible behavior. He had thrown a dead snake around the sage’s neck – as if it were a fragrant garland.

Takshakan wondered how to enter the palace unseen by the guards to fulfill the curse. He ordered the snakes of his race – who had the rare power of assuming any form and figure – to disguise themselves as holy rushis.

They were ordered to bring a baskets full of luscious looking delicious rare fruits. Then Takshakan entered into the best fruit of the lot, in the form a tiny worm.

The serpents disguised as sages went to the fort of the king and pleaded to be allowed to enter inside to meet the king and hand over to him the basket of fruits personally.

“We have chanted mantras and made these fruits powerful enough to save the king from all dangers. Please hand over these to the king. We do not mind even if we are not allowed to enter the fort but these fruits must be given to the king!”

 
kandha purANam - mahEndra kANdam

19. திருச்செந்தூர் சேர்தல்

யாளிமுகனைக் கொன்ற பின் வீரவாகு,
ஆழியைக் கடந்து அடைந்தார் செந்தூர்.


வீரவாகுத் தேவரின் நல்வரவு கண்டு
ஆரவாரம் செய்தனர் பூதத் தலைவர்கள்.


வணக்கம் செய்து இணக்கமாகப் பேசி
வரவேற்றனர் வீரவாகுத் தேவரை.


முருகனைக் கண்டு வணங்கிய வீரவாகு
பகர்ந்தார் சூரபத்மனின் மறுமொழியை.


“தூது சொல்லி அனுப்பிய மொழியினைக்
காதில் போட்டுக் கொள்ளவில்லை அவன்;


தேவர்களைச் சிறை நீக்க முடியாது என்று
தேவரிடம் கூறியுள்ளான் மிக உறுதியாக!


படையுடன் நடப்போம் நாம் நாளை;
கடையனின் கொட்டத்தை அடக்கிட!”


முறுவல் மாறாத திங்கள் முகத்துடன்
முருகன் கூறினான் அனைவரிடத்திலும்!


“துன்பம் தொலையும் நாளையுடன்;
இன்பம் திரும்பும் இனி நம் வாழ்வில்!”


குதூகலித்தனர் தேவர்கள் – இந்திரன்
குதூகலித்தான் ஜெயந்தன் செய்தி கேட்டு.


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


3#19. Reaching Thiruch Chendhoor.


After killing YALimukhan, VeerabAhu crossed the ocean one more time and reached Thiruch Chendoor. The army waiting eagerly was happy to see the safe return of their brave friend and gave him a boisterous welcome. They welcomed him heartily and took him to Lord Murugan.


VeerabAhu conveyed the reply given by Soorapadman. Murugan with his moon-like smiling face told the assembly, “Soorapadman did not accept the message sent by us. He will not release the Devas from his prison. We will have to march with our army to his capital city tomorrow to shatter his arrogance and pride!”


The Devas became happy with the thought that soon their troubles will come to an end. Indra was happy to know from VeerabAhu the welfare of his dear son Jayanthan.


 
The 64 thiru viLaiyAdalgaL

44b. இசை வாது.

# 44 (b). இசை வாது.

இருவரும் அரச சபைக்கு வந்தனர்;
இருவரும் எதிர் எதிரே அமர்ந்தனர்;
“யாழ் வாசியுங்கள்” மன்னன் குரல்
கேள்விக் கணைகளில் கேட்கவில்லை!


“இசை அறிவு உள்ளவள் ஆனால் கூறு!
இசைக் கலையில் குற்றங்கள் யாவை?
இசைக் கலையில் குணங்கள் யாவை?
இசையில் யாழின் தெய்வம் எது கூறு!


எதிரே வந்து அமர்ந்து விட்டதால்
என்னுடன் போட்டிபோட முடியாது!
என் கேள்விகளுக்குப் பதிலளித்தால்
என்னுடன் போட்டி போட முடியும்!”


“இசைப் போட்டி என்று எண்ணி வந்தேன்!
வசைப் போட்டி என்னால் இயலாது!
கல்விச் செருக்கை, வாதத் திறனை,
எல்லோருக்கும் காட்ட வந்தாயோ?”


“போதும் போதும் நீங்கள் பேசியது!
மேலும் அவையின் நேரம் குறைவு!
கற்றவர் மத்தியில் நடக்கும் போட்டியில்
தோற்றவர் வென்றவரின் முழு அடிமை!”


ஈழ நாட்டுப் பாடினியின் பாடல்கள்
பழச் சுவையாயிற்று மன்னனுக்கு!
பாணன் மனைவியின் பக்திப் பரவசம்
ஏனையோர் உள்ளம் கவர்ந்து விட்டது.


மன்னன் மட்டுமே பாராட்டினான்
மனம் கவர்ந்த ஈழத்துப் பாடினியை.
மற்றவர் எல்லோரும் பாராட்டினார்கள்
கற்றறிந்த பாணபத்திரன் மனைவியை.


என்றைக்குமே ஒரு உலகநியதி உண்டு;
இன்றைக்கும்கூட அதுவே நடைமுறை.
“மன்னன் எவ்வழி, மக்கள் அவ்வழி!”
மன்னனுடன் மக்கள் இணைந்தனர்.


“ஒரே நாளில் இது போன்ற இசைவாதில்
ஒரு முடிவை எட்டுவது மிகக் கடினம்;
நாளையும் தொடரும் இசை வாது;
வேளையில் கூடட்டும் இந்த அவை!”


சபை கலைந்து சென்று விட்டது அங்கே,
சலசலப்புடன் சற்றே விரைந்தபடியே.
மறு நாள் அங்கு என்ன நடக்கும் என்று
அறிந்து கொள்ளும் விருப்பம் மேலிட்டது.


பாடினியோ சீடர்கள் புகழ் மொழியிலும்,
பாண்டிய மன்னன் புகழ் மொழியிலும்,
மூழ்கித் திளைத்து மகிழ்ச்சி அடைந்து,
தாழ்வாக எண்ணினாள் பாணினியை.


நடுநிலைமை இல்லாதவர்களிடையே
கடும் போட்டியில் வெல்வது எப்படி?
மனம் கலங்கிய பாணன் மனைவி
தினம் தொழும் சிவனிடம் சென்றாள்.


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


# 44 (B). THE MUSIC COMPETITION.


Both the singers came to the durbar. They sat facing each other.The king commanded them to play their lutes. But his voice got completely lost in the list of queries raised by the singer from Ceylon.


“If you really know something about music, then answer my questions? What are the common mistakes committed by the singers? What is the greatness of music? Who is the God of the lute?”


You can’t compete with me just because you are sitting in front of me.I will take part in the competition only if you answer my questions!”


Paanan’s wife replied, “I thought it was a music competition. I did not know it is also a heated debate.You have come here with the idea of displaying your vast knowledge to the gathering”


The king intervened and said,” Enough of talking. You are wasting the time of the gathering. Start to sing. Remember the loser will become the slave of the winner for life”


The Eezhathup paadini’s song was like the sweet ripe fruits for the king. Paanan’s wife sang with utmost devotion. The whole crowd applauded her singing.


The king spoke highly of the singer from Ceylon. Now the crowd got confused as to whom to praise! They did not want to anger their king. So they too joined him in applauding the singer from Ceylon!.


The king said, “It is very difficult to judge such competitions in one day! Let the contest continue tomorrow also!”


The singer from Ceylon was happy to hear the praises of her students and the king. Paanan’s wife got worried that the king was partial and not neutral. She went to the Siva temple where she used to pray everyday.


 
bhagavathy bhaagavatam - skanda 7

7#40a. தேவி பாஹ்ய பூஜை

எழவேண்டும் தினந்தோறும் விடியற்காலையில்;
எண்ண வேண்டும் தாமரை மலரைத் தலை மேல்;


தியானிக்க வேண்டும் குருவை ஜோதி வடிவில்;
போற்ற வேண்டும் மண்டலமிட்ட குண்டலினியை;


போற்ற வேண்டும் தேவி சிகை மத்தியில் ஒளிர்வதாக;
போற்ற வேண்டும் தேவியை ஆனந்தமாக, அமுதமாக.


முடிக்க வேண்டும் காலைக் கடன்களை – பின்னர்
முடிக்க வேண்டும் அக்னி ஹோத்திரம் செய்து.


செய்ய வேண்டும் மந்திரங்களின் நியாசம்;
செய்ய வேண்டும் பிராணாயாமம் தேவிக்கு;


பாவிக்க வேண்டும் பஞ்சப் பிரேத ஆசனத்தில்;
பாவிக்க வேண்டும் என்னை இதய கமலத்தில்;


குறைவின்றி ஜபிக்க வேண்டும் என் நாமத்தை;
புறபூஜை செய்யவேண்டும் பிம்ப மூர்த்திக்கு.


செய்ய வேண்டும் பதினாறு உபசாரங்களும்
தர வேண்டும் ஆடைகள், ஆபரணங்களும்.


சிறப்பாகும் தினப்படிச் செய்யும் பூஜைகள்;
சிறப்பானது வெள்ளிக்கிழமை செய்யும் பூஜை.


தர வேண்டும் பிம்ப மூர்த்திக்கு நிவேதனம்;
தர வேண்டும் அந்தணர்களுக்கு தக்ஷிணை!


பூஜிக்க வேண்டும் ஸஹஸ்ர நாமத்துடன்;
வாசிக்க வேண்டும் இன்னிசை வாத்தியங்கள்.


செய்ய வேண்டும் வேதங்களின் பாராயணம்;
அந்தணர், சுமங்கலிகள், கன்னிப் பெண்கள்,


அன்னியர், குழந்தைகள், பாமரர்களுக்கு,
அளிக்க வேண்டும் சுவையான உணவு.


அளிக்க வேண்டும் ஆச்சாரியன் மகிழும்படி
அணிகலன்களும் பரிசுப் பொருட்களும் வாரி.


அனைத்தும் அடைவான் பக்தி செய்பவன் – பின்பு
அடைவான் இறுதியில் தேவியின் மணித்வீபத்தை.


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


7#40a. BhAhya pooja


The person should get up early in the morning. He must imagine a lotus in full bloom over his head. He must meditate on his guru in the form of a light. He must cherish the KuNdlini shakti lying dormant in his MoolAdhArA.


He must imagine me (Devi) as glowing on the top of his head. He must imagine me (Devi) as Ananda swaroopiNi and Amrutamayi. He must finish his daily routine of cleansing. He must do ‘Agni Hotram’ followed by ‘Nyaasam’ of mantrAs. He must offer his prAnAyAmA to DEvi. He must imagine her on her pancha prEtha AsanA.


He must imagine Devi as living in his heart. He must chant Devi’s nAmAs. External worship must be performed to Devi’a moorti or pratima. The Sixteen upachArams must be offered to Devi. New clothes and ornaments must be offered.


Doing pooja daily is the best. Friday pooja is very important. Devi loves her to hear her SahasranAma archani. Musical instruments must be played. VEda pArAyaNam and feasting must follow.


The brahmins, puNya sthrees, girls under 12 years of age, children and guests must be offered a tasty feast and the other auspicious gifts. The AachArya must be duly honored and offered gifts and money.


One who does all these will reach my MaNi dweepam most certainly.



 
bhagavathy bhaagavatam - skanda 2

2#10d. சாபம் பலித்தது

மன்னனிடம் சென்று கூறினர் காவலர்கள்;
மன்னன் நம்பி விட்டான் கபட ரிஷிகளை.


“கனிகளைப் பெற்றுக் கொண்டு வாருங்கள்.
முனிவர்களிடம் நாளை வருமாறு கூறுங்கள்.


வந்தனத்தைத் தெரிவியுங்கள் அவர்களிடம்;
எந்த உதவி தேவை அறிந்து கொள்ளுங்கள்!”


‘வந்த காரியம் இனிதே முடிந்தது!’ என்று
சொந்த இடம் திரும்பினர் கபட ரிஷிகள்.


கொண்டு வந்தனர் மன்னனிடம் பழங்களை;
கண்டதில்லை யாரும் அத்தகைய பழங்களை!


“அருமையாக மணம் வீசும் இந்தக் கனிகளை
ஆளுக்கொன்றாகப் புசிப்போம் அனைவரும்”


பெரிய கனியை எடுத்துப் பிளந்தான் மன்னன்;
கரிய கண்களுடன் இருந்தது ஒரு சிவந்த புழு!


“அஸ்தமன காலம் நெருங்கி விட்டபடியால்
அச்சம் தேவையில்லை இனி விஷம் பற்றி!”


புழுவாக இருந்த தக்ஷகனை எடுத்துத் தன்
கழுத்தில் வைத்துக் கொண்டான் பரீக்ஷித்!


சுயவுருவெடுத்துக் கொண்டான் தக்ஷகன்;
தயக்கம் இன்றிக் கடித்தான் பரீக்ஷித்தை!


“ஓ” வென்று அலறினர் அருகில் இருந்தவர்!
ஓடிச் சென்று விட்டான் ஆகாய மார்க்கமாக!


காலனைக் கண்டது போல அஞ்சி ஒதுங்கினர்
கோவலனைக் கொன்று விட்டுச் சென்றவனை!


முனி குமாரன் கவிஜாதன் தந்த சாபத்தைக்
கனி மூலம் நிறைவேற்றி விட்டான் தக்ஷகன்.


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K . ராமன்


2#10d. The curse got fulfilled


The guards of the fort went to the king and told him about the rushis. Pareekshit believed that they were indeed his well wishers. He told the guards, “Give those sages my regards. Find out what they want from me. Tell them to come again tomorrow. Bring that basket of fruits to me.”

The serpents disguised as sages were more than happy when the basket of fruits was taken to the king. They returned to their abode happily – having fulfilled their mission successfully.

Pareekshit was happy to see the luscious and delicious fruits in the basket. He told his ministers, “Let us all share and eat these lovely fruits while are still fresh!” He took the largest fruit in which Takshakan had entered and split it into two. He saw in it a small red worm with big black eyes.

He said to himself, “Now that the sunset is nearing fast, there need be no more fear about the curse and the poison!”

He took the worm from the fruit and placed it on his neck playfully. Now Takshakan assumed his real form and bit Pareekshit mercilessly. The ministers were shocked beyond words and started screaming their heads off.

Takshakan went away fast after his mission was fulfilled. Those who faced him took off in terror – as if they had seen Yama, the God of death. The curse given by Kavijaathan was fulfilled by Takshakan through the clever use of the fruits.



 
kandha purANam - mahEndra kANdam

20. திருத்தி அமைத்தல்

“படைகளோடு வீரன் வஜ்ஜிரவாகுவும்
படைக் களத்தில் மடிந்து விட்டான்!

கடலைக் கடந்து திரும்பி விட்டான்
இடத்தைச் சூறையாடிய வீரவாகு!”

தூதுவர்கள் சொன்ன செய்தி கேட்டு
துன்பக் கடலில் ஆழ்ந்தான் சூரபத்மன்.

மனைவி பதுமகோமளை கதறி அழுதாள்
மகனைப் பறி கொடுத்த துக்கத்தினால்.

மற்ற சுற்றமும் அழுது கண்ணீர் பெருக்க
மகேந்திரபுரி அழுகைபுரி ஆகிவிட்டது.

தருமகோபன் தான் தலைமை அமைச்சன்;
தரும மொழிகளைக் கூறித் தேற்றினான்.

கள்ளமற்ற அவன் மொழிகளைக் கேட்டு
உள்ளம் சற்றுத் தெளிந்தான் சூரபத்மன்.

“அழைத்து வா நான்முகனை!”காவலனை
அழைத்துக் கட்டளை இட்டான் சூரபத்மன்.

“திருச்செந்தூரில் நம் அண்டத்துப் பிரமன்
திரு முருகனுடன் தங்கி இருக்கிறானாம்.

பார்த்தவர்கள் சொன்ன தகவல் இது.
பக்கம் மாறிக் சென்று விட்டான் அவன்.”

“வேறு அண்டத்து பிரமனைச் சென்று
விரைவாக அழைத்து வாருங்கள் இங்கு!”

வேறு அண்டத்தின் நான்முகன் வந்தான்.
“விரைந்து நகரைச் சீர் அமைப்பாய்!”

மதில்கள், கோபுரங்கள், மாடங்கள்,
மண்டபங்கள் முன் போல் இலங்கின.

“உன் அண்டத்துக்குத் திரும்பிச் செல்வாய்!
உன் தொழிலை அங்கே செய்து வருவாய்!”

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

3#20. City is restored to its original glory.


The messengers brought the bad news to Soorapadman. VajrabAhu had died in the battle along with his army. The troublemaker VeerabAhu had destroyed the city completely and gone back safely !”

Soorapadman was immersed in the sea of sorrow. His wife Padma KomaLa cried bitterly moaning the death of her dear son VajrabAhu. The other asuras joined in and the usually joyous city was now reduced to a city of tears.

Dharmagopan was the topmost minister of Soorapadman. He tried his best to console Soorapadman with his words of wisdom. Soorapadman got consoled to some extent. He ordered his men to bring Brahma there immediately.

The soldiers replied,” Brahma had joined the Murugan’s side and is now staying with him in Chenthoor. So Soorapadman ordered that Brahma of another universe be brought there immediately.

Brahma of another universe came there. He was ordered to restore the city to its original glory and beauty. He did as he was told. Soorapadman was happy with his job and sent him back to his own universe, advising him to continue to do his assigned job as usual.

 
The 64 Thiru ViLaiyAdalgaL

44c. ஆஹா ! நல்ல தீர்ப்பு !

# 44 (c). ஆஹா ! நல்ல தீர்ப்பு !

“பார பட்சம் காட்டும் ஒரு மன்னன்,
தூர தேசத்தின் ஒரு அழகிய பாடினி;
மன்னிடம் மருண்டுள்ள இம்மக்கள்;
என்ன முறையில் வெல்லுவேன்?”


“மகளே! நீயே வெல்லுவாய் நாளை!
திகில் கொள்ள வேண்டாம் வீணாக!”
மன மயக்கம் ஒழிந்து தன் இல்லம்
மன அமைதியுடன் திரும்பினாள்.


மறு நாள் வந்தனர் அவையினர்;
இரு பெரும் வாதுப் பாடினிகளும்;
அத்தின முடிவிலும் மன்னனுடன்
ஒத்து ஊதினர் அச்சபையினரும்!


“மனிதர்கள் பாரபட்சம் உடையவர்கள்!
இசைக்கும் ஒரு இசை வாதிலும் கூட;
தனிப் பெரும் இறைவன் சிவன் முன்
இனித் தொடருவோமா இவ்வாதினை?”


பாணனின் மனைவியின் கூற்றை
பாண்டிய மன்னன் மறுக்கவில்லை!
மறுநாள் இசைவாது நடக்கும்
இறைவனின் திரு அம்பலத்தில்.


மூன்றாவது நாள்சென்றான் மன்னன்
முக்கண்ணின் திருக் கோவிலுக்கு!
சுருதி, தாளம், கீதம், இலக்கியம்,
அறிந்த அறிஞர் குழாம் ஒன்றுடன்.


அறிஞரைப் போலவே உருவெடுத்து
அணிகலன், ஆடை அணிந்து கொண்டு,
அரனும் கலந்து வந்தான் அந்த இசை
அறிஞர்களின் உயர்ந்த குழுவினிலே.


“இன்று இவளை எளிதாக இசையில்
வென்று விடுவேன் என் அடிமையாக!”
கர்வம் பொங்க வந்தாள் ஈழத்தின்
சர்வமும் அறிந்த இசைப்பாடினி!


இறைவன் அருளின் மீதும், காக்கும்
நிறையின் திறனின் மீதும், மாறாத
நம்பிக்கையுடன் வந்து அமர்ந்தாள்
அம்பிகை நாதனின் அருள் பெற்றவள்.


ஈழத்துப் பாடினி அருமையான ஒரு
ஈர்க்கும் பாடலைப் பாடினாள் அன்று!
பக்திரசம் சொட்டச் சொட்டப் பாடலை
பக்தியுடன் பாடினாள் பாணன் மனைவி.


இறையின் சந்நிதியில் மன்னன் மனக்
குறைகள் மறைந்து நிறைந்தது நடுநிலை!
“பாணன் மனைவி வென்றாள்!” என்றதும்,
காணாமல் போனார் “ஆஹா!” என்ற அறிஞர்!


காணாமல் போன அறிஞராகத் தன்
கோணாத தீர்ப்பை அங்கீகரிக்கவே;
சிவனே தன் உருமாறி அவைக்கு
அவனாக வந்தது புரிந்துவிட்டது.


பாணன் மனைவிக்குப் பல பரிசுகள்!
பாடினிக்கும் தந்தான் பல பரிசுகள்!
வலிமையில் தெய்வம் மன்னனை மிஞ்சும்!
வலிமையில் சிவன் அனைவரையும் மிஞ்சுவான்.


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


# 44 (C). THE FAIR JUDGEMENT.


“The king is biased. The girl from Ceylon is pretty and young! The gathering dances to the king’s whims and fancies. How am I going to win?”


Siva spoke in asareeri,” Dear child! Do not worry! You will defeat the singer from Ceylon.” Paanabadhran’s wife felt comforted and returned home with a calmed mind.


The sabha assembled and the singers sang. The king repeated his statement that it was difficult to judge the contest and it would continue the next day also.


“Human beings are biased and partial. Can we continue the contest in the temple in the presence of lord Siva who is unbiased and neutral ?” The king could not refuse the request of Paanabadhran’s wife.


The venue for the contest was changed to the temple on the third day.The king brought with him a group of experts in music, lyrics, thaalam etc. Siva transformed himself as a vidhwaan, dressed and wore ornaments as they did and was among the group of experts.


The singer form Ceylon arrived so sure of her success. both haughty and proud. Paanabdhran’s wife appeared confident and took her seat. The girl from Ceylon sang very attractive song.Paanan’s wife sang a divine and moving song.


In the presence of the deity the king could not waver or speak lies. He announced to the crowd that Paanan’s wife was the winner. Siva disguised as vidhvaan exclaimed, “Excellent!” and vanished immediately.


Everyone realized that it was none other than Siva. The king showered gifts on Paanabadhra’s wife and to the singer from the Ceylon since she had done him a favor by accepting his invitation.


He realized that god was superior to man and Siva was superior to all the other Gods.


 
bhagavathy bhaagavatam - skanda 7

7#40b. தேவி கீதை

“தேவி கீதை என்ற இந்தப் புனித சாஸ்திரத்தைப்
போதிக்க வேண்டும் தகுதி வாய்ந்தவர்களுக்கு.


போதிக்க வேண்டும் நல்ல சிஷ்யர்களுக்கு ;
போதிக்க வேண்டும் பக்தி பூண்டவர்களுக்கு;


போதிக்க வேண்டும் நல்ல மனம் உள்ளவருக்கு;
போதிக்க வேண்டும் தனது மூத்த புதல்வனுக்கு;


போதிக்க வேண்டும் நல்ல ஆசார சீலனுக்கு;
போதிக்கலாகாது இதை துன்மார்க்கர்களுக்கு.


தகுதியற்றவர்களுக்கு இதை உபதேசிப்பதற்குச் சமம்
தாயின் முலையை ஒரு காட்சி பொருளாக்குவது.


ரஹசியமாக இருக்கவேண்டும் இந்த தேவி கீதை!”
ரஹசியமாக இனிய முறையில் எச்சரித்தாள் தேவி.


மறைந்து அருளினாள் அந்த இடத்திலிருந்து;
சிறந்து விளங்கினாள் பார்வதி என்ற பெயரில்;


பத்தினியனாள் மகாதேவன் பரமசிவனாருக்கு;
உத்தமத் திருமகன் ஆனான் ஸ்கந்தன் முருகன்;


வென்றான் தாரகாசுரனைப் போரில் முருகவேள்;
வென்றான் தேவ சேனாபதி என்ற பட்டப் பெயர்.


கடைந்தனர் பாற்கடலை அமரரும்,அசுரரும் கூடி.
அடைந்தனர் பல அரிய பொருட்களை அப்போது.


தோன்றினாள் லக்ஷ்மி அப்போது பாற்கடலில்;
தோற்றுவித்தாள் லக்ஷ்மியைத் தேவி பராசக்தி.


பத்தினியானாள் லக்ஷ்மி ஸ்ரீமன் நாராயணனுக்கு!
பாற்கடலை அடைந்தாள் பாதசேவை செய்வதற்கு.


சித்திக்கும் எல்லா நன்மைகளும் மேன்மைகளும்,
பக்தியுடன் தேவி கீதையைப் படித்து வருவோருக்கு!


நித்தியம் சிந்திக்க வேண்டும் மறைந்து உறையும்
நித்திலங்களாகிய அரிய கருத்துக்களை மாந்தர்கள்.


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


இத்துடன் பகவதி பாகவதத்தின் ஏழாவது ஸ்கந்தம் முற்றுப் பெற்றது.


7#40b. Devi GitA


“Devi GitA must be taught only to the deserving persons. This may be taught to one’s own disciples, to those who have true bhakti on Devi, to those who are pure in heart, to one’s eldest son and to a good man who has good conduct and AachAram.


This should not be taught to the persons doing forbidden things and walking the path of evil. Teaching this to anyone who is not qualified to learn this, is similar to exhibiting a mother breast-feeding her child, to the general public.


This sAstrA must remain a secret to the non deserving people.”Devi warned this in her sweet cuckoo-like voice. Then she disappeared from there. She became a much beloved goddess by the name of PArvati (the daughter of Parvata RAjan HimavAn).


PArvati became the wife of lord SivA. They got Skandan as their younger son. Skandan defeated TArakAsuran and delivered the DEvAs from their sufferings.


Lakshmi DEvi appeared in the ocean of Milk along with several other marvelous objects, when the Asuras and DEvas together churned the Ocean of Milk. She married Lord NArAyaNA.


Thus both the Devis who left their lords suddenly – on being ridiculed – returned to them. The two gods Hari and Hara thus regained their strengths – when their consorts returned to them – and maintained the creation as before.


One who listens to this Devi GitA will be blessed with everything auspicious in his life. One should read it everyday and ponder over the hidden treasure of true knowledge in this Devi GitA.


With this ends the Seventh Skanda of Bhagavathy BhAgavatam.



 
bhagavathy bhaagavatam - skanda 2

2#11a. ஜனமேஜயன்

மன்னன் பரீக்ஷித் மறைந்த பொழுது
மகன் ஜனமேஜயனுக்குச் சிறு வயது.

மதியமைச்சர்கள் வருந்தினர் இது கண்டு.
மன்னனாக்கினர் அவனை ஒரு நன்னாளில்.

நாளொரு மேனி! பொழுதொரு வண்ணம்!
நன்கு வளர்ந்தான் செவிலியர் வளர்ப்பில்.

அனைத்து ராஜ லக்ஷணங்களைப் பெற்றான்;
அனைத்து ராஜ கல்வி, கலைகளைக் கற்றான்.

கற்றுத் தேர்ந்தான் வில், வாள் வித்தைகளில்;
கற்றுத் தேர்ந்தான் கரியேற்றம், பரியேற்றம்.

கவரப் பட்டான் காசி நகரத்தை ஆண்ட மன்னன்
சுவர்ண வர்ணாகரன் ஜனமேஜயனின் புகழால்.

வதுவையில் இணைத்தான் தன் அருமை மகள்
வபுஷ்டை என்பவளை ஜனமேஜய மன்னனுடன்.

ரதியும், மன்மதனும் போல ரமித்தனர் இருவரும்;
சசியும், இந்திரனும் போலச் சுகபோகம் துய்த்தனர்.

குடி மக்கள் இன்புற்று வாழ்ந்தனர் – எவரும்
குறை சொல்ல முடியாதாதொரு நல்லாட்சி.

உத்துங்கர் விரும்பினார் தக்ஷகனைப் பழி தீர்க்க;
“எத்துணை பாடு பட்டாவது செய்வேன் இதனை!”

அஸ்தினாபுரத்தை அடைந்தார் ஆலோசித்து;
ஆட்சி செய்து கொண்டிருந்தவன் ஜனமேஜயன்.

அவனால் இயலும் தக்ஷகனைப் பழி தீர்த்திட;
அவனிடம் சென்றார் அரண்மனைக்கு நேராக.

“மன்னிடம் பேச வேண்டும் தனியாக!” என்றார்;
மன்னன் ஜனமேஜயனைச் சந்தித்தார் உத்துங்கர்.

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K . ராமன்


2#11a. Janamejayan


When king Pareekshit got killed by Takshakan, Janamejayan was a mere child. The ministers were very sad but made him the new king on an auspicious day.

He grew up well under the loving care of his nurses. He learned everything necessary to become a good king. He had all the royal characteristics and the good looks and personality fit to be a king.

The king of Kasi Suvarna VarAkaran was duly impressed by the fame and good name of Janamejayan. He gave away his dear daughter VapushtA to the young king in marriage.

Janamejayan and VapushtA enjoyed the earthly pleasures as Rati Devi and Manmathan must have enjoyed and indulged as Sasi Devi and Indra must have indulged. The citizens were happy. They had no complaints and everything went on smoothly.

Utthungar could not forget the treachery of Takshakan. He wanted to avenge the death of king Pareekshit. It would become possible if he approached Janamejayan – the son of Pareekshit.

So he went to Hastinaapuram and wished to meet the king in privacy. He was taken to the king Janamejayan.

 
kandha purANam - mahEndhra kANdam

21a. ஆலோசனை

அழிந்த நகரை பிரமன் ஒழுங்கு செய்தபின்,
அரியணையில் அமர்ந்திருந்தான் சூரபத்மன்.

ஒற்றர்கள் விரைந்து வந்தனர் அரசவைக்கு.
மற்ற செய்திகளையும் புகன்றனர் அரசனிடம்.

“செவ்வேட்கடவுள், சிவனாரின் மகனார்,
செந்தில் மாநகர் வந்து சேர்ந்து விட்டார்.

பூதப் படைகள் ஈராயிரம் வெள்ளம் ஆம்.
ஏவப் படைத் தலைவர்கள் நூற்று எண்மர்.

தாரகன் மாய்ந்த செய்தி உண்மையாகும்.
கிரௌஞ்சன் பிளந்ததும் உண்மை ஆகும்.

யாளிமுகனையும் கொன்று விட்டான் தூதன்.
நாளை வந்து சேரும் முருகனின் படைகள்.”

அமைச்சர்களும், படைத் தலைவர்களும்,
அருமைத் தம்பி சிங்கமுக அவுணனும்

விரைந்து வந்து குழுமினர் அரசவையில்.
சூரபத்மன் சொன்னான் அவையினரிடம்,

“தேவர்களை நம் சிறையில் வைத்ததைத்
தேவர்கோன் சொன்னான் சிவபிரானிடம்.

தேவாதி தேவன் தோற்றுவித்தான் முருகனை.
தேவர்கள் துயர் தீர்க்க அனுப்பினான் அவனை.

தாரகனைக் கொன்ற பின் சிறுவன் முருகன்
தூதுவன் ஒருவனை அனுப்பினான் என்னிடம்!”

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

3#21a. The Council of ministers.


After his capital was restored to its original glory, Soorapadman sat on his throne. The messengers came to him and told him all the happenings.

“Murugan, Lord Siva’s son has reached Senthoor with his army of 2000 veLLam of demons. He has 108 generals to command the huge army. He has killed TArakan and split into two the Krounja mountain. He got YALimukhan killed by his messenger. The army is expected to march in here tomorrow.”

Soorapadman called forth the council of ministers to assemble immediately. He addressed the gathering,

” We had imprisoned the Devas. Indra had reported this to Lord Siva. Siva has created a son Murugan to put an end to the sufferings of the Devas. Murugan has killed TArakan and Krounjan. He then sent to me his messenger VeerabAhu”.

 
The 64 Thiru viLaiyAdalgaL

45 (a). வியாழ பகவானின் சாபம்.

குருவிருந்துரை என்னும் ஓர் இடம்,
இருந்தது வைகையின் தென்கரையில்;
குருபகவான் அங்கே இருந்து கொண்டு
இறைஅருள் வேண்டித் தவம் செய்ததால்.


சுகலன் அவ்வூரில் ஒரு வேளாளன்,
சுகலை அவனுடைய தர்மபத்தினி;
பன்னிரு புதல்வர்கள் செய்த தவறுகளை,
முன்னிருந்து திருத்தவில்லை அவர்கள்.


‘செல்லம் கொடுத்ததால் குட்டிச் சுவராகி’த்
தொல்லைகள் பலவும் செய்து வரலாயினர்;
வயது பெருகிக் கொண்டே போயிற்று! ஆனால்
வயதுக்குத் தக்க ஒழுக்கம் அவர்களுக்கு இல்லை!


பெற்றோர்கள் திடீரென இறந்து விடவே,
மற்றோர் தயவில் வாழ வேண்டி இருந்தது.
வேளாளர் தொழிலைத் துறந்து விட்டு அவர்
வேட்டையாடும் தொழிலில் இறங்கினர்.


பிரஹஸ்பதி அமர்ந்து தவம் புரிந்திருக்க,
சிரமங்கள் பல தந்தனர் தேவ குருவுக்கு;
கல்லையும், மண்ணையும் வாரி வீசிச்
சொல்லாலும் அவரைத் துன்புறுத்தினர்.


தவத்துக்கு இடையூறு நேர்ந்ததால் அவர்
மனத்துக்குள் சினம் பொங்கி எழுந்தது!
“நிலத்தை உழுவதே உமது குலத்தொழில்!
நிலத்தைத் தோண்டும் பன்றிகள் ஆவீர்!


பெற்றோரை இழந்து திரிவது போன்றே,
பெற்றோரை இழந்து அங்கும் வாடி நிற்பீர்!
பெரியவரை மதிக்கத் தெரியாதவருக்குச்
சரியான தண்டனை இதுவே ஆகும்!”


பாவம் செய்தவர்கள் சாபம் பெற்றனர்;
“சாப விமோசனம் எப்போது கிட்டும்?”
கோபம் நீங்கிய குருபகவான் சொன்னார்,
“தாபம் நீக்கும் சிவன் அருள் தரும்போது!


தாயை இழந்து வாடும் பன்றிகளுக்குத்
தாயாக வந்து பால் தருவான் சிவன்;
அறிவையும்,ஞானத்தையும் அளித்து
மரியாதைக்குரிய மனிதர் ஆக்குவான்!


பாண்டிய மன்னனின் மந்திரிகளாகி
ஆண்டுகள் பல ஆட்சிக்கு உதவுவீர்!
தாண்டவம் ஆடும் ஈசன் அருள்வான்,
மீண்டு வரத் தேவை இல்லாத முக்தி!”


காட்டுப் பன்றி ஒன்று வாழ்ந்திருந்தது;
காட்டும் வீரத்தால் தலைவன் ஆனது!
பெட்டைப் பன்றியின் வயிற்றில் இருந்து
குட்டிப் பன்றிகளாக ஜனித்தனர் இவர்கள்.


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


45 (a).THE CURSE OF BRUHASPATI.


On the Southern bank of the river Vaigai, there was a place called Guruvirunthurai. Deva guru Bruhaspati had done penance in that place.


Sukalan was a farmer living there . He and his wife Sukalai had twelve sons.

The boys were ill bred and behaved badly but the parents failed to correct their mistakes. So the boys grew up to become public nuisances and had neither good manners nor good habits.

Both Sukalan and hos wife died suddenly and the twelve boys were left to fend for themselves. They gave up farming and started to hunt for food.


One day, they say Bruhaspati doing tapas and started throwing stones, sand and mud on him. Guru baghavaan got angry and cursed the boys thus,


“Since digging the soil is your family profession, you will become pigs that dig the soil. You will become orphans in that birth also and suffer a lot!”


The wicked boys got punished thus but they wanted to know when they would be freed from this curse. Guru baghavaan replied,


“When lord Siva takes pity on you and appears to give you milk in the form of a female pig-your mother. You will gain intelligence and wisdom from the milk and become respectable citizens.


You will become the honorable minister of the Paandiya King and serve him well for many years. Finally you will reach the heavenly abode and gain liberation or mukti”


There lived a very strong and courageous boar. He had become the leader of his gang by virtue of his strength. These twelve boys were born to the boar and its wife as twelve piglets.





 
bhagavathy bhaagavatam - skanda 8

8#1a. ஜனமேஜயனின் ஐயங்கள்

“எவ்வாறு தேவி பூஜிக்கப்படுகின்றாள்
ஒவ்வொரு மன்வந்திரத்தின் போதும்?


எந்த இடத்தில் பூஜிக்கப்படுகின்றாள்?
எந்த வடிவில் பூஜிக்கப்படுகின்றாள்?


வர்ணியுங்கள் விராட் ஸ்வரூபத்தை?
காண்பது எங்கனம் சூக்ஷ்ம வடிவத்தை?”


தொடுத்தான் கேள்விகளை ஜனமேஜயன்,
கொடுத்தார் தகுந்த விளக்கத்தை வியாசர்.


மேன்மை அடைவான் தேவி பூஜை அறிந்தவன்;
மேன்மை அடைவான் தேவி பூஜை புரிந்தவன்.


நாரதன் கேட்டான் இதே கேள்வியை.
நாரணன் விளக்கினான் நாரதனுக்கு.


நாரதன் கேட்ட கேள்விகளைப் பார்!
நாரணன் தந்த பதில்களையும் பார்!


“உற்பத்தியின் ஆதித் தத்துவம் எது?
உலகம் உற்பத்தியானது எங்கனம்?


உலகம் நிலைத்திருப்பது எந்த இடத்தில்?
உலகம் எங்கு ஒடுங்கும் பிரளயத்தில்?


எங்கிருந்து உண்டாகின்றது சக்தி என்பது?
என்ன செய்ய வேண்டும் மாயை அகன்றிட?


எங்கனம் உதிக்கும் ஞானசூரியன் – நமது
இதயத் தாமரையில் என்றும் கூறுவீர்!


உலகத்தினர் அறியாமை விலகும்படித்
தெளிவாக விளக்க வேண்டும் ஐயனே!”


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


8#1a. Doubts raised by King Janamejayan


“Please explain to me how Devi is worshiped in each Manvantara? Where is Devi worshiped? In which form is she worshiped? Explain her VirAt swaroopam and how to recognize her sookshma swaroopam.


VyAsa replied to the king,” One who knows about the Devi’s worship is very fortunate. One who worships Devi is also fortunate. NArada asked the same questions to NArAyaNa. You may listen to the questions and the answers now.


“Which is the Aadi tatva involved in the creation? How was the world created? How is it supported and where does it hide during dissolution? How is Shakti created?


What should one do to come out of MAyA? When will the true knowledge rise like a Sun on the lotus of one’s heart? Please explain everything so as to remove the doubts of all humanity!” These were the questions raised by NArada to NArAyaNa.



 
bhagavathy bhaagavatam - skanda 2

2#11b. உத்துங்கர்

“அரசனின் தர்மம் தன் பகையினை வெல்வது;
அறியவில்லை நீ அரசனே இதை இன்னமும்!

அறியவில்லை பகைவன் யார் என்பதையும்;
முயலவில்லை பகைவனை அழிப்பதற்கும்.

பகைவனை வெல்லும் தந்திரம் அறியவில்லை;
பகைவனை வாழவிட்டுக் காலம் கடத்துகிறாய்.”

வணங்கினான் உத்துங்கரை ஜனமேஜயன்,
“விளங்கவில்லை பகைவன் யார் என்று!

பகைவனை வெல்ல முயற்சி செய்வேன்
பகைவன் யார் என்று அறிந்துகொண்டால்!”

“இறக்கவில்லை உன் தந்தை இயற்கையாக;
துறந்தான் உயிரை ஒரு பாம்பு கடித்ததால்.

அமைச்சர்களிடம் கேட்டுப் பார் மன்னா!
அமைச்சர்கள் அறிவார்கள் அனைத்தும்!”

வரவழைத்தான் அமைச்சர்களை மன்னன்,
“உரையுங்கள் அனைத்து விவரங்களையும்!”

“கவிஜாதன் சாபத்தால் நிகழ்ந்தது விபத்து!
கடிக்கவில்லை தக்ஷகன் பகையுணர்வினால்.”

ஆதியோடு அந்தமாக விவரங்களை உரைக்க
நீதி உணர்வோடு பேசினான் ஜனமேஜயன்

“தோன்றவில்லை தக்ஷகன் பகைவன் என்று.
தன் வினை தன்னைச் சுட்டது அவ்வளவே!”

“மந்திர வித்தையில் சிறந்த கஸ்யபனைத்
தந்திரமாகத் திருப்பி அனுப்பினான் தக்ஷகன்.

கஸ்யபன் வந்திருந்தால் விஷத்திலிருந்து
கஷ்டமின்றிப் பிழைத்திருப்பான் பரீக்ஷித்.

ஒரு முனிவரின் கதையைக் கேள் ஜனமேஜயா!
புரியும் உனக்குப் பகை வெல்வதன் அவசியம்”

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K . ராமன்


2#11b. Utthungar


Utthungar told king Janamejayan,”It is the duty of the king to conquer his enemies. You seem to be unaware of this. You do not seem to know who is your enemy.

You have not taken any effort to destroy him. You do not know how to go about it either. You let your enemy live happily while you are losing valuable time”

Janamejayan paid obeisance to Utthungar and told him,””I am not aware of the existence of an enemy. I will destroy him when I come to know about him. “

Utthungar told him,”King Pareekshit did not die a natural death. He died due to a snake bite. Your ministers know the truth. You may ask them if you wish to.”

The ministers were called and asked about the incident by the king. “The death occurred to the curse laid by KavijAthan. Thakshakan had no personal enmity on king Pareekshit.” The ministers explained the incident.

Janamejayan spoke with a sense of justice to Utthungar,” The king got punished for his own misdeed. I do not think Takshakan had any personal enmity towards king Pareekshit.”

Utthungar told him, “Your father could have been saved by the Brahmin Kasyapan but Thakshakan had sent him back with rich gifts. I will tell you an incident to prove why the enemy should be destroyed at all costs!”



 
kandha purAnam - mahEndhra kANdam

21b. மந்திராலோசனை

“தூதுவன் ஒருவன் வந்தான் கடல் கடந்து;
தூதுவன் கொணர்ந்தான் விண்ணிலிருந்து

ஆதவனை நிகர்த்த ஓர் அரியணையை;
தூதுவன் பேசினான் அஞ்சாமல் என் முன்!

பேச்சுடன் நிற்கவில்லை அத்தூதுவன் – வாள்
வீச்சுடன் எதிர்த்தான் என் அவுணர்களை;

கொன்று குவித்தான் என் அவுணர்களை!
கோட்டை கொத்தளத்தை உடைத்தான்!

பிடிக்கச் சென்ற வீரரைக் கொன்றான்;
அடித்துக் கொன்றான் வஜ்ஜிரவாகுவை.

பிடிக்க முடியவில்லை அந்தத் தூதுவனை!
கடிந்து சென்றுவிட்டான் கடல் கடந்து!

சிவன் மகன் வந்த செய்தி உண்மையே.
அவன் படை நாளை வருவதும் உண்மை.

எண்ணங்களை மறைக்காமல் சொல்லவும்!
என்ன செய்யவேண்டும் நாம் இப்போது?”

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

3#21b. Soorapadman’s speech.


“Murugan’s messenger came here crossing the ocean. He bought down a throne from the sky, as brilliant as the Sun! He spoke without any fear in my presence. He attacked the asuras with his mighty sword. He killed many thousands of asuras. He destroyed our beautiful capital city completely.

Those who ventured to capture him were killed by him mercilessly. He killed our prince VajrabAhu. He made good his escape before we could capture him. The news about Murugan is true. That his army will reach our city tomorrow is also true. I want your frank opinion as to what should be done now!”

 
The 64 Thiru ViLaiyAdalgaL

45b. பன்றிகள் ஆனது.

# 45 (b). பன்றிகள் ஆனது.

வேட்டை ஆடுவது ஒரு வீர விளையாட்டு,
நாட்டை ஆண்டு வந்த நம் மன்னர்களுக்கு!

சேனையுடன் வனம் சென்ற ராஜ ராஜன்,
சேதப்படுத்தலானான் வன விலங்குகளை!

பறை, உடுக்கை, கொம்பு என்னும் பல
கருவிகள் ஒலிக்க, விலங்குகள் மருள;

மான், கரடி, புலி, யானை, பன்றிகள் என
மன்னன் அங்கே வேட்டை ஆடினான்.

பன்றித் தலைவனுக்குத் தகவல் சென்றது,
பாண்டியன் படை செய்த அட்டூழியங்கள்!

பன்றி அரசன் போருக்குப் புறப்பட, அவன்
பன்றிகள் கூட்டமும் பின் தொடர்ந்தது!

பன்றிக் கூட்டம் பாய்ந்து, பாய்ந்து,
பாண்டியன் படையைத் தாக்கியது.

இடைவிடாமல் போர் தொடர்ந்தது,
இரண்டு பக்கங்களிலும் பெருத்த சேதம்!

அரசன் குதிரையைப் பன்றி அழித்துவிடவே,
அரசன் பன்றியை உலக்கையால் அடித்தான்.

பெண் பன்றி தொடர்ந்து போர் செய்யவே,
கொன்றுவிட்டான் அதை வேடர்த் தலைவன்.

பன்றிகள் விழுந்து மடிந்த இடம் ஒரு
பன்றி மலையாகவே மாறிவிட்டது!

பன்றிகள் சாதாரணப் பன்றிகள் அல்ல!
பன்றிகளாகும்படிச் சபிக்கப்பட்டவை!

அரங்க வித்யாதரன் என்னும் யக்ஷன்;
குரங்குத்தனமாக இடையூறு செய்தான்.

புலத்திய முனிவரின் தவத்தைக் கெடுத்துப்
பிறவி எடுத்தான் ஒரு பன்றி அரசனாக!

தாய் தந்தையரை இழந்து வாடின,
வெய்யில், பசி, தாகத்தால் பன்றிகள்!

மனம் இறங்கிய பெருமான் தானே தன்
மனம் போல் மாறினான் தாய்ப்பன்றியாக!

தாய் வடிவில் வந்து நின்றான் சிவன்;
சேய்கள் சுற்றி விளையாடிக் களித்தன!

தாயிடம் தெய்வப் பால் அருந்தியவுடன்,
பேய்குணம் மறைந்து புனிதர் ஆயினர்!

தெய்வப் பால் அருந்திய பன்றிகுட்டிகள்,
தெய்வ அறிவு பெற்று விட்டன உடனே!

அறிவு, திறமை, தகமை, வலிமையுடன்
பிறவும் பெற்றுச் சான்றோர்கள் ஆயின.

முகத்தைத் தவிர மற்ற பகுதிகளைத்
திகைக்கும்படி மாற்றிவிட்டான் சிவன்,

பன்றி முகமும், மனித உடலும் பெற்றவர்,
பன்றி மலையில் வாழ்ந்தனர் பன்னிருவர்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

45 (b). THE TWELVE PIGS.

Hunting down the wild animals was a favorite past time of our ancient kings. Paandiya king Rajarajan went with his army and started hunting down the animals indiscriminately.

Various horns, bugles and drums were employed to frighten the animals form their safe hiding places into the open areas. Deers, bears, tigers, elephants and boars were hunted in large numbers.

The news of the massacre was taken to the Boar king. He wanted to retaliate and all the other boars and pigs joined hands with him.The boars flung themselves violently on the army and fought valiantly.The damage to both the sides was great indeed.

The boar king killed the king’s horse. The king killed the boar with a blow of his iron pestle.The boar’s wife fought bravely and got killed by the chief of the hunters.

The dead bodies of the pigs transformed into a mountain called Pandri Malai (The mountain of pigs). Those pigs were not ordinary pigs but were in fact Yakshas cursed to become pigs!

Aranga VidhyAdara was a Yaksha. He disturbed the penance of sage Pulastiya and got cursed to become a boar.

The twelve piglets were orphaned once again. They were hungry, thirsty, famished and suffered! Lord Siva took pity on them. He assumed the form of their mother pig. He came to the hungry orphans and let them drink His divine milk.

The piglets were transformed to intelligent and respectable beings -the moment they drank his milk. Siva changed their bodies to resemble human beings-all but their faces.

So the orphans were now intelligent and well versed pig faced human beings living on the Pig Mountain.
 
bhagavathy bhaagavatm - skanda 8

8#1b. ஸ்வாயம்பு மனு

“அனைத்துக்கும் மூல தத்துவம் ஆவாள் தேவியே!
அனைத்தையும் இயற்றினாலும் அவள் குணமிலி!

முதலாம் மனு பிரம்மன் மகன் ஸ்வாயம்பு மனு.
முதலாம் மனு மணந்தான் அழகி சதரூபையை.

“தேவியை ஆராதனை செய்து சிருஷ்டிக்கத்
தேவையான சக்தியைப் பெறுவாய் மகனே!”

பிரம்மன் ஆணை இட்டான் மகன் மனுவுக்கு;
பிரம்மனின் ஆணைக்கு அடிபணிந்தான் மனு.

ஒருநிலைப் படுத்தினான் மனத்தைத் தேவி மீது;
உறுதியாக தியானித்தான் தேவி திருவடிகளை.

துதித்தவனுக்கு வரம் அருள மனம் கனிந்து
உதித்தாள் தேவி ஸ்வாயம்புவின் முன்பு.

‘தங்கு தடை இன்றி நடக்க வேண்டும் தாயே
இங்கு இனி பிரஜா உற்பத்தி ” என வேண்ட,

அருளினாள் கோரிய வரத்தை – மறைந்து
அருளினாள் தேவி அதன் பின் அங்கிருந்து.

கூறினான் ஸ்வாயம்பு மனு பிரம்மனிடம்,
கோரினான் தனக்கு உரிய ஸ்தானத்தை!

” பூஜிப்பேன் யாகங்களால் தேவர்களை!
பிரஜா உற்பத்தியும் செய்வேன் தந்தையே!”

பிரமன் பிரமித்தான் செய்வது அறியாது!
நீரால் நிறைந்திருந்தது உலகு அப்போது.

‘எவ்வாறு தருவது கோரும் ஸ்தானத்தை?
எவ்வாறு தொடங்கும் பிரஜைகள் சிருஷ்டி?

அனைத்தையும் தருபவன் எந்தை விஷ்ணுவே!
இடத்தையும் தருவான் சிருஷ்டியைத் தொடங்க!’

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

8#1b. SwAyambu Manu

NArAyaNan replied to NAraDA,” Devi is the Aadi tatva or Moola tatva for the creation. She does everything but still remains devoid of the three guNAs.

The first Manu SwAyambu was the son of Brahma. He married S’ataroopa. Brahma ordained him, “Worship Devi and get the power to create prajA (offspring).”

SwAyambu Manu meditated on Devi who gave a dharshan pleased with his penance. He requested to her,” The prajA srushti must go on uninterrupted!” Devi gave him the boon and disappeared from there.

SwAyambu Manu went to Brahma and said, “I will worship the DevAs through YAgAs and create good prajA. Please give me a place to start the srushti”


Brahma was perplexed. The earth was immersed in water at that time. Where and how can the creation begin in a land flooded with water? He then remembered that it was

NArAyaNA who gives everything to everyone. Surely he would give us the right place to start the srushti.

 
bhagavthy bhaagavatm - skanda 2

2#11c. வெள்ளைப் பாம்பு

ருரு என்னும் அருந்தவ முனிவன் உளமார
விரும்பினான் மேனகையின் அழகிய மகளை.

விதிவசமாக இறந்துவிட்டாள் அவள்;
மிதித்த பாம்பு கடித்துவிட்டது அவளை!

உயிர்ப்பித்தான் காதலியை ருரு முனிவன்,
உயிர்ப் பிச்சையாக பாதி ஆயுளைத் தந்து.

மறக்க முடியவில்லை மனைவியின் துன்பத்தை.
வெறுத்தான் ருரு பாம்புகளின் வர்க்கத்தையே!

“கண்ட இடத்தில கொன்று குவிப்பேன்!” என்று
கொண்டு திரிந்தான் ஆயுதங்களைக் கையில்.

விடவில்லை காடு, வனாந்தரம் எதையுமே!
விடவில்லை ஒரு பாம்பையும் உயிருடன்!

கண்டான் இரண்டு தலைப் பாம்பை ஒருநாள்;
கொண்டிருந்தது பால் போன்ற வெண்ணிறம்.

ஓங்கி அடித்தான் தடிகொண்டு பாம்பினை;
ஏங்கிக் கேட்டது, ”என்ன தவறு செய்தேன்?”

“கொன்றது என் மனைவியை ஒரு பாம்பு;
கொல்கிறேன் நான் எல்லாப் பாம்புகளையும்.”

“கொல்லலாம் மனைவியைக் கடித்த பாம்பை!
கொல்லலாமா நீர் எல்லா பாம்புகளையும்?

சர்ப்பம் போலக் காணப் படுகின்றேன் நான்!
சர்ப்பமல்ல என்று அறிந்து கொள்ளுங்கள்.

கொல்ல முடியாது என்னை உம்மால்!”
வெள்ளைப் பாம்பு பேசியது மனிதன் போல!

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K . ராமன்


2#11c. The Albino Serpent


Ruru, a young rushi, loved the daughter of the apsaras Menaka more than himself. Just before their wedding the unfortunate girl got bitten by a serpent – which she had stamped on by mistake – and died.

The rushi Ruru was inconsolable but he brought her back to life by giving away half of his life span to her and then married her. They lived happily but he could not forgive the race of the snakes.

He swore to kill the snakes whenever and wherever he saw them. He roamed around the dense forests and jungles, carrying a weapon and killed all the snakes he came across mercilessly.

Once he came across a double headed Albino serpent. He hit it as usual with his stick. It jumped away unhurt and spoke to him like a human being! “What is my sin for which you have to beat me in this manner?”

Ruru told him, “I have taken a oath to kill every snake I set my eyes upon. A snake killed my fiancee before our wedding could take place.”

The two headed snake spoke again, “You may kill the serpent which bit your wife but why each and every snake you come across should be killed by you? You will never be able to kill me. I may look like a serpent but I am not really one!”

 
kandha purANam - mahEndra kANdam

21c. மகிடன், துர்குணன்

மகிடன் பதில்:-

தாரகனைக் கொன்றவன் சிறுவனோ?
தாரகனைக் கொன்றவன் மாவீரன்.

கடலைக் கடந்து ஒருவனாக வந்து
படைகளை அழிப்பவன் தூதுவனோ?

தாரகன் மாயந்தவுடனேயே விரைந்து
போருக்கு நீர் சென்றிருக்க வேண்டும்.

படைகளை அனுப்பவும் இல்லை;
தடை செய்யவும் இல்லை தூதனை.

சிறிதாயினும் தீ எரிக்கும் அல்லவா?
போருக்கு நீர் உடனே சென்றிருந்தால்,

தூதனும் நம் நகரம் வந்திரான் – யம
தூதனை போலக் கொன்றிறான் மகனை.”

துர்குணன் பதில்:-


“திருமால், தேவர்களுடன் போர் செய்ய
அருமைத் தம்பிகளையே அனுப்பினாய்.

சிறுவன் ஒருவனோடு போர் புரிவது உன்
பெருமைக்கு அழகோ எண்ணிப் பார்.

சிறுவனுடன் போர் செய்வது சிறுமையே.
பெரும்படையை அனுப்பினால் போதுமே.”

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

3#21c. Mahishan and DurguNan.


Mahishan was the first one to reply! “One who could kill TArakan cannot be an ordinary boy! He must be a great warrior. Will any ordinary messenger venture to cross the ocean all by himself? Will he dare to meddle with and destroy the powerful asura army?

As soon as TArakan was killed you must have marched with your army and fought with Murugan. You did not send your army to fight him. You did not try to stop the messenger.

If you had waged a war then, the messenger would never have come this far. Murugan may appear to us as a young boy. But fire is a fire – whether small or big. It will burn down everything whether it is a tiny spark or a roaring flame.”

Durgunan got up and spoke now. “You sent only your brothers to fight VishNu and the other Devas. Fighting with a mere child does not add to your glory and fame. On the other hand, it will tarnish your greatness. Just send a huge army to vanquish Murugan.”

 

Latest posts

Latest ads

Back
Top