[h=1]39. அமரத்துவம்.[/h]
நாகங்களும், வீரன் கருடனும்
ஜனித்தது ஒரு முனிவருக்கே!
நண்பர்கள் அல்லவே அவர்கள்;
ஜன்மப் பகைவர்கள் ஆவார்கள்.
அந்நியத் தாயிடம் அடிமையாகத்
தன் தாய் இருப்பதைக் கண்ட கருடன்,
விடுதலை பெறும் வழிமுறைகளைக்
கொடுக்குமாறு வேண்டிக் கொண்டான்.
“அமரத்துவம் வேண்டும் எங்களுக்கு!
அமிர்தம் தர வேண்டும் அதற்காக!
அமிர்தம் கொண்டுவந்து கொடுத்தால்,
அன்னையின் அடிமைத்தனம் போகும்”.
நாகங்களின் கோரிக்கைக் கேட்டு,
வேகமாகக் கிளம்பினான் கருடன்;
வானவர் நாட்டினை அடைந்து,
வான் புகழ் அமுதம் கொண்டுவர.
எத்தனைக் கட்டுக் காவல்கள்?
எத்தனை பாதுகாப்பு அரண்கள்?
அத்தனையும் தாண்டி கருடன்,
அமிர்தத்தை அடைந்துவிட்டான்!
திரும்பும் வழியில் கண்டான், தான்
விரும்பும் விஷ்ணு மூர்த்தியை.
உடனே செய்து கொண்டனர் ஒரு
உடன் படிக்கை, அவ்விருவரும்.
அமிர்தம் அருந்தாமலேயே கருடன்
அமரன் ஆகலாம், இறை அருளால்;
இறைவனின் இனிய வாகனமாக
இருப்பான் கருடன் இனிமேலே.
தொடர்ந்து சென்ற கருடனைத்
தொடர்ந்தவன் அந்த தேவேந்திரன்,
“அமிர்தத்தை அளித்து நாகங்களை
அமரர்கள் ஆக்குவது மிகத் தவறு.
நாகங்கள் அருந்துமுன் அமிர்தத்தை,
நான் எடுத்துச் சென்றுவிடவேண்டும்!
உதவி புரிந்தால், உனக்கு உகந்த
உணவாக நாகங்களை ஆக்குவேன்!”
அமுதத்தை பெறுவதற்கு நாகங்கள்
ஆவலாய்க் காத்து நின்று இருந்தன.
“உண்ணும் முன் நீங்கள் அனைவரும்
திண்ணமாக நீராடி வர வேண்டும்!”
நீராடச் சென்று விட்டன நாகங்கள்;
நிமிட நேரத்தில் வந்த இந்திரன்
அமிர்த கலசத்தை மீட்டுகொண்டு,
அமரர் உலகம் விரைந்து சென்றான்.
தாயின் அடிமைத்தளை போயிற்று,
தானும் அமரத்துவம் பெற்றான் கருடன்.
விஷ்ணுவின் இனிய வாகனம் ஆனான்;
விரும்பி உண்ணும் உணவு நாகங்களே!
வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
https://visalramani.wordpress.com/about/2491-2/39-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/
நாகங்களும், வீரன் கருடனும்
ஜனித்தது ஒரு முனிவருக்கே!
நண்பர்கள் அல்லவே அவர்கள்;
ஜன்மப் பகைவர்கள் ஆவார்கள்.
அந்நியத் தாயிடம் அடிமையாகத்
தன் தாய் இருப்பதைக் கண்ட கருடன்,
விடுதலை பெறும் வழிமுறைகளைக்
கொடுக்குமாறு வேண்டிக் கொண்டான்.
“அமரத்துவம் வேண்டும் எங்களுக்கு!
அமிர்தம் தர வேண்டும் அதற்காக!
அமிர்தம் கொண்டுவந்து கொடுத்தால்,
அன்னையின் அடிமைத்தனம் போகும்”.
நாகங்களின் கோரிக்கைக் கேட்டு,
வேகமாகக் கிளம்பினான் கருடன்;
வானவர் நாட்டினை அடைந்து,
வான் புகழ் அமுதம் கொண்டுவர.
எத்தனைக் கட்டுக் காவல்கள்?
எத்தனை பாதுகாப்பு அரண்கள்?
அத்தனையும் தாண்டி கருடன்,
அமிர்தத்தை அடைந்துவிட்டான்!
திரும்பும் வழியில் கண்டான், தான்
விரும்பும் விஷ்ணு மூர்த்தியை.
உடனே செய்து கொண்டனர் ஒரு
உடன் படிக்கை, அவ்விருவரும்.
அமிர்தம் அருந்தாமலேயே கருடன்
அமரன் ஆகலாம், இறை அருளால்;
இறைவனின் இனிய வாகனமாக
இருப்பான் கருடன் இனிமேலே.
தொடர்ந்து சென்ற கருடனைத்
தொடர்ந்தவன் அந்த தேவேந்திரன்,
“அமிர்தத்தை அளித்து நாகங்களை
அமரர்கள் ஆக்குவது மிகத் தவறு.
நாகங்கள் அருந்துமுன் அமிர்தத்தை,
நான் எடுத்துச் சென்றுவிடவேண்டும்!
உதவி புரிந்தால், உனக்கு உகந்த
உணவாக நாகங்களை ஆக்குவேன்!”
அமுதத்தை பெறுவதற்கு நாகங்கள்
ஆவலாய்க் காத்து நின்று இருந்தன.
“உண்ணும் முன் நீங்கள் அனைவரும்
திண்ணமாக நீராடி வர வேண்டும்!”
நீராடச் சென்று விட்டன நாகங்கள்;
நிமிட நேரத்தில் வந்த இந்திரன்
அமிர்த கலசத்தை மீட்டுகொண்டு,
அமரர் உலகம் விரைந்து சென்றான்.
தாயின் அடிமைத்தளை போயிற்று,
தானும் அமரத்துவம் பெற்றான் கருடன்.
விஷ்ணுவின் இனிய வாகனம் ஆனான்;
விரும்பி உண்ணும் உணவு நாகங்களே!
வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
https://visalramani.wordpress.com/about/2491-2/39-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/