• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

A poem a day to keep all agonies away!

The 64 Thiru ViLaiyAdalgaL

46. பன்னிரு மந்திரிகள்.

46. பன்னிரு மந்திரிகள்.

பன்னிரு பன்றிக் குட்டிகளும் அப்போதே,
பன்னிரண்டு ஆதித்யர்கள் போலாயினர்!
முன்னர் சிவனிடம் பால் பருகியவர்கள்,
பின்னர் பன்றி மலையில் வசிக்கலாயினர்;

அன்னை கேட்டாள் ஐயனிடம் இதை,
“பன்றிகள் ஆகும்படிச் சபிக்கப்பட்ட
பன்னிரண்டு கொடியவர்களுக்கு இரங்கி
பன்றி உருவில் சென்று பாலூட்டியது ஏன்?”

“சகல ஜீவ தயாபரன் என்று எனக்குப் பெயர்!
சகல ஜீவர்களுக்கும் தயை புரியவேண்டும்;
தாயை இழந்து தவிக்கும் குட்டிகளுக்குத்
தாயுருவில் சென்று ஞானப் பால் அளித்தேன்.

ஞானம், கல்வி, வலிமை பெற்றவர்
பேணப் படுவர் மதி மந்திரிகளாக!
வளங்களைப் பெருக்கி வாழ்ந்த பின்னர்,
கணத் தலைவர்கள் ஆகி விடுவார்கள்;

அன்றிரவே கனவில் தோன்றினான் சிவன்
அன்று ஆட்சி செய்த ராஜராஜ பாண்டியனின்;
“பன்னிரு குமாரர்கள் வசிக்கின்றனர்,
பன்றி மலையில், பன்றி முகங்களுடன்;

கல்வி அறிவில் சிறந்து விளங்குபவர்கள்,
நல்வழிப்படுத்தும் அமைச்சர்களாக நீயும்,
ஆக்கிக் கொண்டு ஆட்சி புரிந்தாயானால்,
போக்கிக் கொள்ளலாம் பிரச்சனைகளை!

விழித்து எழுந்த ராஜ ராஜ பாண்டியன்,
அழைத்தான் மதி மந்திரிகளை உடனே!
கண்ட கனவின் விவரம் கூறினான், பின்
கொண்டு வரச் சொன்னான் குமாரர்களை!

பன்றி மலைக்குச் சென்ற அமைச்சர்கள்
பன்றி முகக் குமாரர்களைக் கண்டனர்!
பன்னிருவரையும் தம்முடன் அழைத்து
மன்னனிடம் திரும்பவும் வந்து சேர்ந்தனர்.

இறைவனே பரிந்துரை செய்திருந்ததால்,
குறைவற்ற வரவேற்பு அளிக்கப்பட்டது!
மந்திரிகளாக அவர்களை நியமித்துத் தன்
மந்திரி குமாரிகளை மனைவிகள் ஆக்கினான்.

உடல்கள் இருந்தன பன்னிரண்டாக!
உயிர் இருந்து வந்தது ஒரே ஒன்றாக!
கடமை, கல்வி, அறிவில் சிறந்தவர்
உதவி புரிந்தனர் மன்னன் ஆள்வதற்கு!

மன்னனுக்கு அறிவுரைகள் கூறினர்,
மன்னனை நல்வழிப் படுத்தினார்கள்;
தங்களின் காலம் முடிந்தபின்னர் அவர்
தாங்கினர் சிவகணங்களின் தலைமை.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

# 46. THE TWELVE MINISTERS.

The twelve pigs started to glow like the twelve Aadithyaas-after drinking Siva’s milk.
Uma Devi asked Lord Siva,”Why did you take pity on the twelve wicked boys who were cursed to be born as pigs?”

Siva replied ,”One of my names is Sakala Jiva DhayAparan. I have to be kind to all forms of lives! So I gave the piglets my divine milk. Now they have acquired all knowledge, talent and wisdom, They will serve the Paandiya king as his ministers and finally reach my abode to become the leaders of my Siva ganam.”

Lord Siva appeared in the dream of the Paandiya king Rajarajan. He spoke very highly about the twelve pig-faced-men living on the Mountain of Pigs. He advised the king to appoint them as his new ministers.

The next day the King revealed his unusual dream to his ministers and ordered them to fetch the pig faced men. The ministers traced them and lead them to the King with due honors.

The twelve bothers were appointed as new minsters. They were married to the lovely daughters of the old ministers. They served the king well. They were twelve in body but their opinion was always one and the same.

When the time came for them to leave this mortal world, they were duly appointed as the leaders of the Siva gaNam.

 
bhagavathy bhaagavatam- skanda 8

8# 2. வராஹ மூர்த்தி

ஆதி பகவானை பிரமன் தியானித்து இருந்த
போது தோன்றியது வராஹம் மூக்கிலிருந்து!


விரல் அளவே இருந்தது அது தோன்றிய போது!
விரைவாக வளர்ந்து விட்டது அது மலையளவாக!


அந்த வராஹம் சாதாரணப் பன்றி அல்லவே!
அந்த வராஹம் யக்ஞரூபி பகவான் அல்லவா?


கர்ஜனை செய்தது அது உலகம் மகிழ்ந்திட!
கர்ஜனை செய்தது அது பகைவர் நடுங்கிட!


தோத்திரம் செய்தனர் அனைவரும் கூடி!
பாத்திரம் ஆயினர் வராஹத்தின் அருளுக்கு!


புகுந்தது வராஹம் பூமியைத் தேடி – பூமி
அமிழ்ந்திருந்த பரந்த நீர் பரப்பினுக்குள்.


வருந்தினான் சமுத்திர ராஜன் வராஹத்தின்
வருத்திய அடர்ந்த பிடரிமயிர் கற்றைகளால்!


முகர்ந்து பார்த்தது நீரினுள் தெய்வ வராஹம்;
அகம் மகிழ்ந்தது பூமியைக் கண்டு கொண்டதும்.


தாங்கியது பூமியைத் தன் கோரைப் பற்களால்;
தூக்கியது பூமியைத் தன் கோரைப் பற்களால்!


வெளி வந்தது ஒளி வீசியபடி நீர் பரப்பிலிருந்து;
வெகுளியுடன் எதிர்த்த இரண்யனைக் கொன்றது!


நிலை நாட்டியது பூமியை அதன் இருப்பிடத்தில்;
வேலை முடிந்ததும் திரும்பியது தன் வைகுந்தம்.


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


8# 2. VarAha Moorthy


While Brahma was meditating on the Aadi Bhagavan, a VarAham appeared from his nostril. It was the size of a thumb when it first appeared but it grew as big as a mountain very soon.


It was not a regular boar but the Yagnaroopi BhagavAn himself in the form of a boar or VarAham. It roared so loudly that its enemies shuddered with fear while its devotees felt reassured.


Everyone gathered to praise the VarAham and to get blessed by it. The VarAham now entered the large water body looking for the submerged earth. The movement of the dense hair of the boar troubled the Samudra rAjan (The king of the Ocean) a lot.


The Boar smelled out the earth from under the water. It lifted the earth on its curved tusk-like strong teeth and brought it out of the water – itself shining like the brilliant Sun all the time.


HiraNyAkshan grew angry to see that the earth had been saved from underwater and brought out and attacked the boar. The boar promptly killed him and restored the earth in her original position.


Now that the task was over the divine varAham returned to its heavenly abode in Vaikuntam.



 
bhagavathy bhaagavatam - skanda 2

2#11d. கோபமும், சாபமும்

“எப்படி வந்தது பாம்பின் வடிவம்?
செப்புவாய் எனக்கு விவரமாக!” என,

“பூர்வத்தில் இருந்தேன் அந்தணனாக – அ
பூர்வ நண்பனாக இருந்தவன் மோகன்.

இந்திரியங்களை வென்று விட்ட நண்பனைத்
தொந்தரவு செய்தேன் விபரீதமான செயலால்!

செய்து கொண்டிருந்தான் அக்னி ஹோத்திரம்;
செய்து வீசினேன் மெழுகால் ஒரு பாம்பினை !

அச்சத்தில் நடுங்கி உடல் வெளுத்துவிட்டான்;
அச்சம் நீங்கியவுடன் பொங்கியது கடும் சினம்!

“பொய்ப் பாம்பைக் காட்டி அச்சுறுதினாய்!
மெய்ப் பாம்பு வடிவுடன் திரியக் கடவாய்!”

சாபம் இட்டான் அவன் சினம் மீறியதால்;
சாப விமோசனம் கேட்டு இறைஞ்சினேன்.

“சாபம் நீங்கும் ருருவின் வருகையால்
சாபம் நீங்கும் வேளை வந்து விட்டது.

ஒன்று உமக்கு நான் கூறுவேன் முனிவரே!
என்றும் அதை நினைவில் கொள்வீர்!

கொல்லாமை சிறந்த நோன்பு நமக்கு!
கொல்வது யாகப் பசுக்களை மட்டுமே.

தயை காட்டுவீர் ஜீவ ஜந்துக்களிடம்;
தயை தயையை உருவாக்க வல்லது!”

சாபமும் தீர்ந்தது, தாபமும் தீர்ந்தது!
நாகம் மாறிவிட்டது பிராமணனாக!

கொல்லாமை நோன்பை ஏற்றான் ருரு;
இல்லாளுடன் இணைந்து வாழ்ந்தான்!

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K . ராமன்


2#11d. The end of the curse!


Ruru asked the two headed Albino serpent,”How did you get this form if you were born as a Brahmin? Please tell me all about it”

The snake spoke in great detail.” I was a Brahmin before. My best friend was Mohan – a brahmin who had conquered his pancha indriyaas – the five sense organs. I used to play weird games with him and trouble him a lot.

One day he was performing agni kaaryam. I made a lifelike snake with wax and threw it near him. He got so frightened that he turned as pale as a white cloth. When he found out that the snake was made of wax, his anger knew no bounds.

He cursed me angrily,”You frightened me with a false snake, May you roam on the earth as a real snake!”

I was sorry for my foolish action but a curse is a curse. I begged him to grant me a saapa vimochanan. Mohan said, “When you meet the sage Ruru, your curse will end!”

I have met you today. My curse is going to end now. I just want to ask for a favor from you. Always please show mercy to all the living things. Mercy breeds mercy. We must kill only the animals offered in the yAga and nothing else.”

The curse ended and the while serpent became a Brahmin once again. Ruru promised to adhere to the message of mercy to all living things. He stopped hunting and killing the snakes. He went back to live happily with his wife.

 
kandha purAma - mahEndhra kANda

21d. தருமகோபன் பதில்

“நவ மணிகள் பதித்த பொற்கலப்பையால்
நில புலன்களை உழுவதைப் போன்றதே

அண்டர்கோன் ஆகிய மாவீரன் நீயும்
அச்சிறுவனிடம் சென்று போர்புரிவது!

அவன் என்ன சிவபெருமானா? அல்ல!
அவன் என்ன நெடிய திருமாலா? அல்ல!

அவன் என்ன நான்முகனா? அல்லவே!
அவன் என்ன நமனா? அல்லவே!

அண்டர்கோன் சூரனான உன்னைக்
கண்டதும் ஓடி ஒளிவான் சிறுவன்!

சிறுவனோடு போரிட நீயே சென்றால்
சிறுமையால் நாணுவர் நம் குலத்தவர்.

நம்மைக் கண்டு நகைப்பர் தேவர்;
நம்மிலும் தாழ்ந்த மனிதர்கள் கூட.

அகத்தியரின் சாபத்தால் மட்டுமே
அழிந்தது கிரௌஞ்சம் அறிவாய்!

தகுந்த படைக்கலன்கள் இன்மையால்
தாரகனும், வஜ்ஜிவாகுவும் அழிந்தனர்.

ஒரு படைத் தலைவனை அனுப்புவாய்.
முருகனை அவனே போரில் வெல்வான்!”

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

3#21d. Dharmagopan’s reply.


” Your fighting the little boy is as ridiculous as ploughing a field with a plough made of gold and set with precious gems. Is he Siva himself that you should personally confront him? He is neither VishNu, nor Brahma nor Naman.

The moment he sets his eyes on you, he will run and hide himself. If you go to fight him, the race of asuras will feel ashamed. The Devas and manushyas will laugh at us.

Krounja giri got destroyed because of the curse cast by sage Agasthya. ThArakan and VajrabAhu did not have proper asthrams and therefore got killed by the messenger. Just send one of your generals. He will surely conquer Murugan and his army.”Dharmagopan told Soorapadman thus.

 
The 64 Thiru vilaiyAdalgaL

47. கரிக்குருவிக்கு உபதேசம்


# 47. கரிக்குருவிக்கு உபதேசம்

பாண்டியன் ராஜராஜனுக்குப் பிறகு,
பாண்டியன் சுகுணன் முடி சூடினான்;

கர்ம வினையால் வலியவன் ஒருவன்,
கரிக் குருவியாகப் பிறவி எடுத்தான்.

காக்கை முதலிய வலிய பறவைகள்
யாக்கையைக் கொத்தித் துன்புறுத்தின.

குருதி வழியும் தலையுடன், பெரும்
அவதிக்கு உள்ளானது கரிக் குருவி.

பல தினங்கள் நகர வாசம் செய்தது;
பலன் இன்றிப் பின் காடு திரும்பியது!

மலர்கள் குலுங்கும் மரக்கிளையில்,
மன வருத்ததோடு அமர்ந்திருந்தது!

தீர்த்த யாத்திரை செல்பவர், மரத்தைப்
பார்த்தவுடன் அங்கேயே அமர்ந்தார்.

நல்லுபதேசம் அவர் மற்றவர்களுக்குச்
சொல்லும் போது அவர் குரல் கேட்டது.

“உலகிலேயே உன்னதமான இடம் எனக்
கலக்கம் இன்றிச் சொல்வேன் மதுரையை!

பொற்றாமரைக் குளத்தின் தீர்த்தம்
மற்றெல்லாவற்றையும் பின் தள்ளும்!

வல்லவருக்கு வல்ல ஈசன் என்பவர்
எல்லோரும் வணங்கும் சோமசுந்தரர்!

ஸ்தலம், தீர்த்தம், மூர்த்தி என்னும்
பல சிறப்புகள் பெற்றுள்ளது மதுரை!”

ஞானம் பிறந்தது கரிக் குருவிக்குத் தன்
ஈனப் பிறவிக்குக் காரணம் புரிந்தது!

பிறவிப் பிணியை ஒழித்துக் கட்டிட
ஒரே வழி உடனே மதுரை செல்வதே!

பறந்து சென்றது மதுரையை நோக்கி!
சிறந்த பொற்றாமரைக் குளத்தில் முங்கி,

சோமசுந்தரரின் விமானம் வலம் வந்து,
தாமதம் இன்றிச் செய்தது மானஸபூஜை.

அன்னை கேட்டாள் அண்ணலிடம்,
“என்ன காரணத்தால் இக்கரிக்குருவி

இத்தனை சிரத்தையோடும், உம்மை
சித்த சுத்தியோடும் பூஜிக்கின்றது?”

வரலாற்றைக் கூறினான் தேவிக்கு,
பரம தயாபரன் சோமசுந்தரேச்வரன்;

ம்ருத்யுஞ்ஜய மந்திரத்தையும் ஈசன்
ம்ருத்யுபயத்தை போக்க உபதேசித்தான்.

மந்திரத்தைக் கேட்ட உடனேயே தன்
சொந்த அறிவைப் பெற்றது குருவி.

தொந்தரவு செய்யும் பிற பறவைகளை
அந்த நேரத்தில் தெரிவித்தது ஈசனுக்கு.

“கொடிய பறவைகளுக்கு எல்லாம்
வலியவனாக ஆகிவிடுவாய் நீ!”

“மரபில் வரும் அத்தனை பறவைகளும்
வலியவராகத் திகழ வேண்டும் ஐயனே!”

ம்ருத்யுஞ்ஜய மந்திரத்தைச் சரிவர
உச்சரிக்க வேண்டிய விதிகளின்படி,

ம்ருத்யுஞ்ஜயனிடமே கற்றுக் கொண்டது,
வலியவனாகி விட்ட அந்தக் கரிக் குருவி!

இடைவிடாமல் ஓதி வாழ்ந்து விட்டு
விடையேறும் ஈசனின் அடி சேர்ந்தது !

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

# 47. UPADESAM TO THE BLACK BIRD.

Suguna Paandiyan succeeded Rajaraja Paandiyan.

A man had been born as a long tailed black bird.This bird was always chased and attacked by the other black birds like the crows. It had bleeding wounds on its head all the time!

It could not live in the populated areas and flew back to the forest. It sat on a branch of a beautiful tree leaden with flowers-but its heart was nonetheless heavy.

A holy man on his theertha yaathraa saw the tree. He liked it very much and sat underneath its branches for taking rest.Soon the others gathered round him for a
sat sang.

The holy man said, “Madhuraapuri is the holiest place in the whole world. The water in the Pond of Golden Lotus is holier than all the other theertham.The best among all Gods is Soma Sundareswarar.SoMadhuraapuri has all the three features namely Theertham, Sthalam and Moorthy.”

The black bird listened very carefully. Now it understood the real cause of its misery and how to set things right.It must go to Madhuraapuri immediately!

It flew away to the holy city. It took a dip in the Pond of Golden Lotuses. It started its Maanasa Puja of Lord Siva after doing pradakshinam to the temple vimaanam

Uma Devi asked Siva,”Why does the little bird do puja with so much sincerity and devotion?”

Lord related the story of the bird to Uma. He did the upadesam of the Mruthyunjaya Mahaa Mantram-to help the bird overcome the fear of death.

The bird listened to it with devotion. It put in a word of complaint to the Lord about the other black birds which were attacking it.

God promised to make the bird Valiyan (the mighty one). The bird further requested that all the birds of his race must become Valiyans.The lord agreed with a smile.

The black bird learned to chant the Mruthyunjaya Mahaa mantram from the Mruthyunjayan Himself. It kept on chanting the mantra until it was freed from all its previous sins and reached Siva lokam.

 
bhagavathy bhaagavatam - skanda 8

8# 3. முதல் மனுவின் மக்கள்

பிரமன் கூறினான் ஸ்வாயம்பு மனுவிடம்,
“பிரஜைகளைப் படைப்பாய் நீ இனி பூமியில்.

காலத்துக்கு ஏற்பப் பூஜிப்பாய் யக்ஞபுருஷனை;
காத்து வருவாய் அறநெறிகள் வழுவி விடாமல்.

நல்ல புதல்வர், புதல்வியரைப் பெறுவாய்;
நல்ல குணவான்களுக்கு மணம் செய்வாய்!

விடுபடுவாய் சம்சாரத் தளையிலிருந்து பின்;
அடைவாய் ஞானயோகம் பக்தியின் மூலம்!”

பிறந்தனர் இரண்டு புதல்வர் ஸ்வாயம்புவுக்கு;
பிறந்தனர் மூன்று புதல்வியர் ஸ்வாயம்புவுக்கு.

புதல்வர்கள் பிரிய விரதனும், உத்தானபதானும்;
புதல்வியர் ஆவர் ஆஹூதி, தேவஹூதி, பிரசூதி.

மணந்தாள் மகள் ஆஹூதி, ருசி என்பவனை;
மணந்தாள் தேவஹூதி, கர்த்தமன் என்பவனை;

மணந்தாள் மகள் பிரசூதி, தக்ஷன் என்பவனை;
மணந்தனர் மூவரும் நல்ல குணவான்களை.

பிறந்தான் யக்ஞன் ருசி, ஆஹூதியருக்கு;
பிறந்தான் கபிலன் கர்த்தமன், தேவஹூதிக்கு;

பிறந்தனர் எண்ணற்ற பிள்ளைகள் பிரசூதிக்கு;
பிறந்தனர் தேவர்கள், மனிதர்கள் அவர்களுக்கு.

திகழ்ந்தான் யக்ஞன் புகழோடு – அசுரரிடமிருந்து
தேவர்கள் உதவியுடன் மனுவைக் காத்ததனால்.

திகழ்ந்தான் கபிலன் ஒரு மகா யோகியாக;
அளித்தான் உலகுக்குக் கபில கீதையினை!

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

8# 3. The sons of the First Manu

Brahma ordered his son SwAyambu The First Manu now, “Procreate good children on the earth. Worship the God in the befitting manner through yagnam and yAgam.

Protect Dharma and Justice on earth. Get good children and get them married to worthy spouses. You will be relieved from the bondage of samsArA once you have completed your prescribed duties and you will attain true knowledge through devotion.”

SwAyambu Manu got two sons named Priyavratan and UtthAna PAdan. He got three daughters named Aahooti, Devahooti and Prasooti.

The three daughters married Ruci, Kardaman and Dakshan respectively. Ruchi and Aahooti got a son whom they named as Yagnan. He became famous since he saved the Manu from the AsurAs with the help of DevAs.

Kapilan – the son of Kardaman and Devahooti – was a great gnAni and a yOgi. He gave the world his famous Kapila Geeta.

Dakshan and Prasooti had numerous children and out of them were born the DevAs and the AsurAs.

 
bhagavathy bhaagavatam - skanda 2

2#11e. ஆஸ்திகர் (1)

“பிராமணனாகப் பிறந்த ருரு முனிவரே
வீர வைராக்கியம் கொண்டு எழுந்தார்!

வீரர்கள் குலத்தில் பிறந்த நீயோ இன்னமும்
வீணாக நாளைக் கடத்துகின்றாய் மன்னா!

சர்ப்பங்களைக் கொன்று பழி தீர்ப்பாய்!
சஞ்சலத்தில் வீணாக்காதே காலத்தை!”

விசனம் அடைந்தான் ஜனமேஜயன்;
விரும்பினான் யாகம் செய்வதற்கு.

யாக சாலையை நிர்மாணித்தான்;
யாகப் பொருட்களைச் சேகரித்தான்.

ஆக்கினான் தக்ஷகனை யாகப் பசுவாக!
ஆனார் உத்துங்கர் யாகம் செய்பவராக!

செய்தி அறிந்த தக்ஷகன் அஞ்சி ஓடினான்;
சென்று இந்திரனிடம் சரணம் அடைந்தான்.

அரியணை மேல் தக்ஷகனை அமர்த்தி,
அரிய காவலர்களை ஏற்பாடு செய்தான்.

இழுத்துச் சென்றது மந்திரத்தின் சக்தி
இந்திரனையும், தக்ஷகனோடு சேர்த்து!

தியானித்தான் தக்ஷகன் ஆஸ்திகரை,
யாயாவாகுல ஜரத்காருவின் புதல்வரை.

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K . ராமன்


2#11e. Aasthikar (1)


Utthungar spoke to King Janamejayan about the need to avenge the death of king Pareekshit. “Even a sAtvic brahmin like sage Ruru rose up to kill his enemy – the race of snakes.

You are born as a Kshatriya and yet you are wasting time without getting even with your enemy. Do not waste any more time in this wavering of mind. You will have to conduct the Sarpa yAgam and kill Takshakan.”

King Janamejayan was sad in heart for the sake of his father. He decided to perform the Sarpa yAgam. He gathered all the things required for the yAgam.

Takshakan was made the animal to be sacrificed in the YAgam. Utthungar conducted the yAgam in the prescribed manner.

Takshakan got frightened to learn about this Sarpa yAgam by Janamejayan. He ran to Indra seeking asylum and his protection. Indra reassured him that no evil could befall him in Swarggam.

Takshakan was made to sit on Indra’s throne and many valiant Deva were put in charge of protecting both of them. But the mantras chanted by Uththungar were very powerful. They dragged Takshakan and Indra together out of swarggam and brought them to the yAga sAlA.

Thakshakan meditated upon Aasthika rushi the son of JaratkAru who would be his savior from the agni kuNdam (burning fire pit ) of the yAga sAlA.

 
kandha purANam - mahEndhra kANdam

21e. அறிவுரை

சூளுரைத்தனர் சூரபத்மனிடம்;
“சிறுவனைப் போரில் பிடித்த பின்

காலபாசத்தில் கட்டி வருவதாக!”
காலசித்து, சண்டன், அனலி, சிங்கன்!

பானுகோபன் கோபித்தான் தந்தையை,
பகர்ந்தான் பல கடின மொழிகளையும்.

“தாரகனும், கிரௌஞ்சனும் அழிந்ததும்
போருக்கு அனுப்பவில்லை என்னை.

தூதுவன் வந்து போர் செய்து – கால
தூதுவனாக மாறிவிட்ட போதும் நீங்கள்

பகைவரைப் பந்தாடும் என்னை விடுத்து
பச்சிளம் பாலகனை அனுப்பினீர் அங்கு!

இனிமேலாவது என்னை அனுப்புங்கள்!
தனி ஒருவனாகப் பிடித்து வருவேன்.”

இரணியன் இயம்பினான் சூரபத்மனிடம்,
“இப்போதே என்னையும் அனுப்புங்கள்!”

அக்னிமுகன் சூரபத்மன் முன் நின்று
ஆங்காரத்துடன் உரைத்தான் இம்மொழி.

“இளவலைக் கொன்றவனைக் கொல்லாமல்
கொள்ளேன் நான் மனநிறைவு தந்தையே!

அரிமாமுகன் எழுந்து கூறினான் தன்
அறிவுரையும், அறவுரையும் கலந்து.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

3#21e. The other advices.


KAlachithu, ChaNdan, Anali and Singan swore that they would bind the enemies in Yama pAsam and bring them to Soorapadman. BhAnukoban got annoyed with his father and spoke thus,

“When Taarakan and Krounjan were destroyed, you must have sent me to the fight Murugan’s army. Even when a messenger turned out to be mass killer you did not send me to fight with him. Instead you sent my younger brother who is no more than a boy – to fight with him. Send me at least now. I shall capture all of them single-handedly!”

HiraNyan offered to go to the war front. Agni mukhan said, ” I can’t relax, until I avenge the death of my anujan.” Just then Singa mukhan got up and spoke the words of wisdom along with his own advice.
 
the 64 thiru vilaiyAdalgaL

48a. நாரைக்கு பக்தி கொடுத்தது

48 (a). நாரைக்கு பக்தி கொடுத்தது.

தாமரைக் குளம் என்னும் அழகிய ஊர்,
தாமரைகள் நிறைந்த தடாகங்களுடன்.


துள்ளி விளையாடும் வண்ண மீன்கள்;
அள்ளி விழுங்கும் அவற்றை நாரைகள்.


நீரின்றி வாழாது உலகும், உயிர்களும்;
நீரின்றிப் போய்விடும் வானம் பொய்த்தால்.


வானம் பொய்த்து விட்டது அங்கே!
வானம் பொழிய மறந்து விட்டது!


நீர்நிலைகள் முற்றும் வற்றலாயின!
நீரிலுள்ள மீன்கள் எங்கே போயின?


உணவும் இல்லை, நீரும் இல்லை!
உலர்ந்த இடத்தில் செய்வது என்ன?


நாட்டை விட்டுப் பறந்தது நாரை,
காட்டை அடைந்து சோர்ந்து விழுந்தது.


ஜீவன் முக்தர்கள் வாழ்ந்தனர் அங்கே,
ஜீவனை போஷிக்கும் வற்றாத தடாகம்!


‘அதோ தீர்த்தம்’ என்ற பெயர் அதற்கு.
அதில் தீர்த்தம் வற்றவே வற்றாதாம்!


படித் துறைகள் இருந்தன அங்கே
வடிவில் சதுரம், சீரிய முறையில்!


சந்தியா மடம் ஒன்று அங்கிருந்தது!
விந்தையான இடம், மரங்கள் சூழந்தது!


நல்ல பாதிரி, வேங்கை, வஞ்சி, மருது,
வெல்லும் மணம் வீசி மலர்ந்திருந்தன!


தண்ணீரிலே முங்கிக் குளிப்பார்கள்
தண்ணருள் பெற்ற ஜீவன் முக்தர்கள்.


முடிக் கற்றைகள் நீரில் புரளும் போது,
ஒளிந்து விளையாடும் மீன் கூட்டம்!


“புண்ணிய சீலர்களைத் தீண்டுவதற்கு
என்ன தவம் அவை செய்திருந்தனவோ?


உணவே இன்றி உயிரே போனாலும்
உண்ணக்கூடாது புண்ணியசாலிகளை!”


சந்தியா மடத்தில் நடக்கும் தினம்
சத்சங்கம் ஜீவன் முக்தர்களின்!


மதுரையைப் பற்றிப் பேசுவதற்கு
மதுரமான விஷயங்கள் எத்தனை?


மதுரைப் புராணத்தை ஓதுவார்,
மதுரையின் சிறப்பை அலசுவார்.


மூர்த்தி, தீர்த்தம், ஸ்தலம் என்னும்
கீர்த்திகள் பெற்றது மதுரையம்பதியே!


வயிற்றுக்கு உணவு இல்லாது போயினும்
செவிக்கு உணவு கிடைத்தது நிறையவே.


கேட்கக் கேட்க வயிற்றுப் பசி மறைந்து
கேட்கக் கேட்க அறிவுப்பசி நிறைந்தது!


அறியாமை இருள் அகன்று போயிற்று!
அறுந்து போனது இருவினைத் தொடர்பு!


கர்மவினைகளைத் தொலைத்து நாரை,
சர்வமும் அறிந்து சிவபக்தி பெற்றது!


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


# 48. THE GIFT OF BHAKTI TO THE STORK.


A lovely village was named as ThAmaraik Kulam – since there were lovely ponds with many blooming lotuses. The colorful and frisky fish leaped and played in the water. The stork living near the pond had satisfying meals of fish everyday.


Times changed from good to bad. The rains failed completely. All the water bodies dried up slowly and steadily. What happened to all the colorful frisky fish? The stork found neither water nor fish in the pond!
Life had become impossible there.

The stork flew back to the forest hoping to find better living conditions there. There was a pond in the forest and it never dried up. Many liberated saints (Jivan mukthas) lived there.The pond was called Adho Teertham.


The pond had steps running all around it in a beautiful square shape. The place was called SandhiyA Mandapam. Trees surrounded this wonderful place laden with colorful and sweet smelling flowers.


The Jivan Mukthas bathed in the pond Adho Theertham. The fish in the pond used to play hide and seek in the matted coils of their hair when they bathed.


The stork wondered at the good fortune of the fish which could actually come into contact with the Jivan Mukthas. It made a harsh decision. ”Even if I am starved and famished, I would never eat a fish from this pond!”


Sat Sang wold be held every day in the SandhyA mandapam. The Jivan Mukthas could go on talking about MadhurApuri for hours together – the holiest of all holy places with the best Sthalam, Theertham and Moorthy.


The stork was starving due to the self imposed restrictions but its ears feasted on the greatness of Madhurapuri and Soma Sundareswarar. It forgot its pangs of hunger and its mind became calm and peaceful.


Its intellect gathered useful knowledge. It got out of its bonds of karma. It learned what needs to be learned for liberation. Its bakthi for Siva ripened.

 
bhagavathy bhaagavatam - skanda 8

8# 4. பிரியவிரதன்

பிரியவிரதன் மூத்த புதல்வன் ஸ்வாயம்புவுக்கு.
பிரியத்துடன் செய்தான் பணிவிடை தந்தைக்கு.

மணந்தான் பிரஜாபதியின் புதல்வி பர்ஹிஷ்மதியை.
மணந்தான் விஸ்வகர்மாவின் புதல்வி சுரூபையை.

பிறந்தாள் ஒரு புதல்வி, பெயர் ஊர்ஜஸ்வதி;
பிறந்தனர் உத்தம புத்திரர்கள் மேலும் பதின்மர்.

விரக்தர்களாயினர் மூவர் கவி, சவணன், மகாவீரன்;
சிறந்தனர் ஊர்த்வரேதஸ், பரம ஹம்சாஸ்ரமங்களில்!

கண்டனர் அனைத்தையும் பிரம்ம மயமாக;
கொண்டனர் மாறாத திருப்தி, மனஅமைதி!

பிறந்தனர் உத்தமன், தாமஸன், ரைவதன்
மற்ற மனைவியின் பிரிய புதல்வர்களாக.

சிறந்தனர் மூவரும் மன்வந்திரத் தலைவர்களாக;
சிறந்தனர் மாபெரும் தேஜசுடன் விளங்கியதால்!

அரசாண்டான் பிரியவிரதன் மிகவும் அற்புதமாக!
ஆலோசித்தான்,”இரவு பகல் என் ஆட்சியில் ஏன்?”

உறுதி பூண்டான் இரவையும் பகலாக்கி விடுவதற்கு
சூரியனின் ஒளி வீசும் ரதத்தினை ஓட்டிச் சென்று.

சுற்றி வந்தான் அதி விரைவாக பூமியை ஏழுமுறை
கதிரவனின் ஒளி வீசிய அழகிய ரதத்தில் அமர்ந்து.

பதித்தது பூமியில் அழுந்தத் தன் சுவடுகளை ரதம்,
பதிந்த சுவடுகள் ஆகிவிட்டன ஏழு பெரும் கடல்கள்!

உள்ளன ஏழு தீவுகள் இந்த ஏழு கடல்களின் நடுவே;
உள்ளன ஒன்றை ஒன்று அடுத்தடுத்து அமைந்தபடி.

உள்ளன ஒன்றுக்கு ஒன்று இரு மடங்குகளாக.
உள்ளன இவ்வேழும் ஏழு திரவங்களால் நிரம்பி.

உப்பு நீர், கரும்புச் சாறு, மது, நெய் மற்றும்
பால், தயிர், சுத்த நீர் என்ற திரவங்களால்.

அமர்த்தினான் குமாரர்களை அரசர்களாக;
அளித்தான் ஊர்ஜஸ்வதியைச் சுக்கிரனுக்கு.

பிறந்தாள் தெய்வயானை அவள் மகளாக;
சிறந்தான் யோக மார்க்கத்தில் பிரியவிரதன்.

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

8# 4. Priyavratan

Priyavratan was the elder son of SwAyambu Manu. He served his father with love and respect. He married two wives namely Barhishmati (the daughter of PrajApati) and Suroopa (the daughter of Viswakarma).

He got a daughter Oorjaswati and ten good sons. Of these ten, three sons became viraktas and excelled in Oordwarathas and paramahamsa ashramam. They were Kavi, Savanan and Mahaveeran.

These three sons saw everything as Brahmam and had attained unshakable and full contentment and peace of mind of the parama hamsa.

Utthaman, TAmasan and Raivathan were the three sons of Priyavratan from his second wife. They excelled as the leaders of their manvantaras. They all had impressive tejas and glory.

Priyavratan ruled excellently. He wondered one day, “Why should there be day and night in my kingdom?” He wanted to have only bright day all the time!

He decided to convert the night into day by going round the earth in his chariot which was as bright as the sun itself. He went round the world very fast seven times.

The chariot made deep impressions on the earth and those became the seven seas and got filled with seven different liquids. There is an island inside every sea. The seas and the islands are situated alternately.

Each of them is twice the size of the one just in the inner side. The seven seas are filled with salt water, cane sugar juice, madhu, ghee, milk, curds, and pure drinking water.
Priyavratan made his sons as the rulers of these seven islands. He also got his daughter Oorjasvati married to Sukran. DevayAni was born to Oorjaswati.

Having completed all his duties well, Priyavratan took up the yoga mArggam and excelled in it.

 
bhagavathy bhaagavatam - skanda 2

2#11f. ஆஸ்திகர் (2)

ஆஸ்திகர் வந்தார் அந்த யாகசாலைக்கு!
ஆச்சரியத்துடன் பாராட்டினர் மன்னனை.

தர்மாத்மா ஆஸ்திகரின் கல்வித் திறமை
கவர்ந்தது ஜனமேஜய மன்னன் மனதை.

“என்ன வேண்டும் சொல்லுங்கள் முனிவரே?
எதுவாயினும் செய்வேன் உமக்காக நான்!”

“உண்மை என்றால் உன் யாகத்தை நிறுத்து!
உன் வாக்குறுதியை உடனே நிலை நிறுத்து!”

வாக்குத் தந்ததால் நிறுத்தினான் யாகத்தை.
காக்கப் பட்டனர் தக்ஷகனும், இந்திரனும்.

கோபத்தைத் தணிக்கக் கூறினார் வியாசர்
பாவத்தைத் தீர்க்கும் பாரதக் கதையினை.

சாந்தி அடையவில்லை ஜனமேஜயன்,
“சர்ப்பம் கடித்து மாண்டார் தந்தையார்.

மரணத்துக்கு அஞ்சாதவன் க்ஷத்திரியன்;
மரணம் தவிர்க்க முடியாதது உண்மையே.

போர்க்களத்தில் மடிந்தால் வீர மரணம்;
இருப்பிடத்தில் மடிந்தால் விதி மரணம்.

துர் மரணம் அடைந்தார் என் தந்தையார்!
துர்கதியைத் தீர்க்க என்ன செய்வேன்?

சுவர்க்கம் அடைவிக்க என்னவெல்லாம்
செய்ய வேண்டும் சொல்வீர் வியாசரே!

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K . ராமன்


2#11f. Aasthikar (2)


Aasthikar appeared in the yAga sAlA immediately. He praised King Janamejayan for the elaborate yAgA arrangements.

Janamejayan had high regard for this young, very learned and respectable sage. He paid his obeisance and asked the sage, “What do you wish for sire! I will do anything for your sake!”

The sage Aasthikar replied. “If what you just said is true please stop this yAgam now and here. I ask for nothing more than this.”

Since he had promised it, the king had to stop the YAgam abruptly. Takshakan and Indran were saved from the roaring flames of the yAga kuNdam.

VyAsa recited the MahA BhAratam but king Janamejayan did not find any peace of mind even after listening to that. He kept thinking about his father’s ill fortune and told VyAsa.

“I know that a Kshatriya never fears death. If he dies in a war it will be a valiant death. If he dies in his abode it will be a death due to destiny. But King Pareekshit died an unnatural death. I do not want him to suffer in Hell. I want him to go to Heaven. Please tell me what all I have to do to achieve this aim?”

 
kandha purANam - mahEndhra kANdam

21f. அரிமுகன் அறிவுரை

“தேவர்களுக்குத் தீங்குகள் செய்தாய்!
ஏவினாய் அவர்களை மீன் பிடித்து வர!


அழித்தாய் இந்திரன் அரசாட்சியை!
விரட்டினாய் இந்திரனையும் துரத்தி!


சிறையில் தள்ளினாய் தேவர்களை!
சித்திரவதை செய்தாய் அவர்களை!


அறிவு மழுங்கி நெடுங்காலம் ஆனது
இரக்கம் உறைந்து பலகாலம் ஆனது.


மேன்மைகள் அளித்தார் சிவபெருமான்
மேலான நூற்றெட்டு ஊழிகளுக்கே!


அந்தக் காலக்கெடு முடிந்து போனதை
அந்தகன் போலவே அறியவில்லை நீ!


‘எமது சக்தியே உம்மை வெல்லும்’ என
நமது பிரான் உரைத்தார் நம்மிடம்;


ஆறுமுகன் விடுத்த சிறிய வேற்படை
தாரகனை அழித்தது இதனால் அன்றோ?


பெரியவர், சிறியவர், பெண்களை;
அரியவர், தவத்தினரைப் பேணுவோம்.


தேவர்களைச் சிறை நீக்கிவிட்டால்
போர் புரிய மாட்டார் முருகபிரான்.


குற்றத்தை மன்னித்து மறந்து மீண்டும்
சுற்றத்துடன் சென்றுவிடுவார் கயிலை.


தேவர்களை நாம் சிறை நீக்காவிடின்
வேருடன் அழித்து விடுவார் நம்மை.”


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


3#21f. Singamukhan’s advice.


Singamukhan got up and started to speak to Soorapadman. ” You have caused troubles to the Devas. You made them bring fish everyday. You haunted Indra and chased him out of his swargga. You imprisoned all the Devas. You tortured them. You have got corrupted long ago. You have lost your compassion and kindness completely.


Siva gave us boons that would last for 108 Yugams. That period is already over and you are not aware of that fact. Siva said that only His power can vanquish us. That is why a small spear thrown by the young Murugan could kill TArakan and split Krounjagiri into two.


We are supposed to protect the elders, the very young, ladies and tapasvis. We can still solve this problem by releasing all the Devas from the prison. Murugan will forgive us and forget our sins. He will go back to KailAsh with his army of demons. If we refuse to release the Devas, Murugan is sure to destroy all of us completely!”




 
The 64 thiru viLaiyAdalgaL

48b. நாரைக்கு முக்தி

48 (b). நாரைக்கு முக்தி

சிவபக்தி பற்றி இழுத்தது நாரையை,
தவநெறி நிறைந்த மதுரையம்பதிக்கு!


“இனி எனக்கு இங்கென்ன வேலை?
இனி நான் சேர வேண்டியது மதுரை!”


சோர்வின்றிப் பறக்கலாயிற்று நாரை;
சேர்ந்தது சென்று மதுரையம்பதியை!


பொற்றாமரைக் குளத்தில் புனித நீராடி,
சுற்றி வந்தது ஐயன் விமானத்தை வலம்!


தொடர்ந்தன உபவாசம், வலம் வருதல்,
தொடர்ந்து பதினைந்து நாட்களுக்கு அங்கு!


பசி வந்திடப் பத்தும் பறந்து போம் அன்றோ?
பசி மேலிட்டு விட்டது செங்கால் நாரைக்கு.


புசிக்க விரும்பியது வண்ண மீன்களை;
புசிக்கவில்லை அத்திருக்குள மீன்களை!


சிவன் தோன்றினான் நாரையின் முன்னே!
தினம் அது தியானித்த உருவத்திலேயே!


“என்னருமை நாரையே கூறுவாய்!
என்ன வரம் வேண்டும் உனக்கு?’ என,


“சிவலோகப் பதவி வேண்டும் ஐயனே!
இகலோகத்தில் எதுவும் வேண்டாம்!”


“அங்ஙனமே ஆகுக! ” என்றான் ஐயன்.
செங்கால் நாரையின் தாபம் தீர்ந்தது.


“இன்னும் ஒரு வரம் வேண்டும் என் ஐயனே!”
“என்னவாயினும் சொல் என் நாரையே!” என,


“தண்ணருள் பெற்ற தீர்த்தத்தில் உள்ள,
புண்ணிய மீன்கள் உண்ணப்படலாகாது!


இல்லாமல் செய்வீர் குளத்தில் மீன்களை!
பொல்லாத பறவைகள் தின்னாதவாறு!”


அருளினான் அதையும் கருணாகரன்,
அருளினான் நாரைக்குச் சாரூப்யம்!


மூன்று கண்களும், நான்கு தோள்களும்
தோன்றின நாரையின் திருமேனியில்!


வெண்ணீற்று மேனி, வரிப் புலித்தோல்,
அண்ணலின் உருவம் பெற்றது நாரையும்!


அற்புத விமானம் வந்து இறங்கியது!
கற்பகலோகம் சென்றது நாரை சிவன்!


கூடற்காண்டம் முற்றுப் பெற்றது.


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


# 48 (b). THE GIFT OF MUKTHI TO THE STORK.


Siva Bhakti drew the stork to MadhurApuri. It flew forgetting its hunger, thirst and weakness. It reached the holy place as quickly as was possible.


It took a holy dip in the Pond Of Golden Lotuses. It did pradakshiNam of the holy vimAnam of the Lord’s temple. It meditated of Lord Siva in its own way.


It did neither eat nor sleep! This holy dip, the vimAna pradakshiNam and meditation went on for fifteen days.


The frisky fish tempted the stork everyday while it took the holy dip. But its intellect ruled its instinct and it refrained from eating the fish.


Lord appeared to the stork in the same form it had meditated on Him! He asked in a kind voice,


“What is that you desire my little bird?”


“Lord! I want to be a part of SivalOkam. I have no other desires in this BhoolOkam! ”
Lord smiled kindly and said,”Be it so!”

“I have one more request my Lord! The holy fish in this pond should not be eaten by the wicked birds. So please bless that the pond will remain devoid of any fish in the future.”


“Be it so!” said the Lord and gave the stork SAroopya Mukthi.


The stork grew three eyes and four arms! Its forehead shone with the holy viboothi. It was dressed in a tiger skin and became an exact replica of Lord Siva himself!


A divine vimAnam came down and carried the stork turned Siva to the Sivalokam.


KOODAL KAANDAM GETS COMPLETED WITH THIS.


 
bhagavathy bhaagavatam - skanda 8

8# 5. பூ மண்டலம்

உள்ளது ஜம்பு த்வீபம் லக்ஷம் யோசனைப் பரப்புடன்;
உள்ளன இந்தத் தீவில் ஒன்பது பரந்த வர்ஷங்கள்.


உள்ளன இதில் எட்டு உயரமான பெரிய மலைகள்;
உள்ளன இவைகள் இவ் வர்ஷங்களின் எல்லைகளாக.


உள்ளன வில் போன்ற வளைந்து இந்த வர்ஷங்கள்;
உள்ளன இவைகள் தெற்கிலும் மற்றும் வடக்கிலும்.


உள்ளன இவற்றில் நான்கு வர்ஷங்கள் நீளமாக;
உள்ளது இலாவிருதம் இதன் நடுவில் சதுரமாக.


உள்ளது லக்ஷம் யோசனை உள்ள பொன் மேரு.
உள்ளது மேரு தாமரையின் பொருட்டைப் போல.


வடக்கே உள்ளன நீலம், சுவேதம், சிருங்க மலைகள்;
வர்ஷங்கள் ரம்யம், ஹிரண்மயம், குருவின் எல்லைகளாக.


உள்ளன நிஷாதம், ஹேமகூடம், இமாலய மலைகள்
எல்லையாக ஹரி, கிம்புருஷம், பாரத வர்ஷங்களுக்கு.


உள்ளது மால்யவான் பர்வதம் மேற்கு திசையில்;
உள்ளது கந்தமாதன பர்வதம் கிழக்கு திசையில்.


அமைந்துள்ளன நான்கு உயன்ற அகன்ற மலைகள்
அழகிய பாதங்கள் போல பொன்னிற மேருமலைக்கு.


மரங்கள் நான்கு விளங்கும் கொடி மரங்கள் போல!
மா, கடம்பு, நாவல், கல்லால் என அவை நான்கு.


உள்ளன நான்கு அழகிய மடுக்கள் அங்கே
பால், தேன், கரும்பு ரசம், நன்னீரால் நிரம்பி.


உள்ளன நான்கு தேவர்களின் நந்தவனங்கள்;
அள்ளித் தரும் இன்பத்தை அப்சரஸ்களுக்கு.


உல்லாசம் பெறுவார் தேவர்கள் அங்கே;
சல்லாபம் செய்வர் தேவ மங்கையருடன்;


மாமரம் உள்ளது மந்திர மலை உச்சியில்;
மாங்கனிகள் விழுந்து சிதறும் கனிந்த பின்!


பெருகிய பழச் சாறு ஓடும் பெரு வெள்ளமாக!
பெறுவர் தேவர்கள் போக, மோகங்கள் இங்கே!


ஆதி மாலா, அதுலை, அனந்தை, புஷ்டை,
ஈஸ்வரமாலினி, துஷ்டநாசகரி, காத்யாயனி என


நதியைத் தொழுது வணங்குவர் தேவர்கள் – மேலும்
துதிப்பர் தங்கள் விருப்பம் நிறைவேறக் கோரியபடி.


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


8#5a. BHOO MANDALAM


Jambu Dweepa is one lakh Yoyanas in its dimension. This Jambu Dweepa is round in its shape – like a lotus. There are eight lofty mountains forming the natural boundaries of the nine Varshams situated in it.


Of these, the two situated in the North and in the South and are of the shape of the segments of a bow. Four others are elongated in their shape. The center one of all these nine varshAs is named IlAvrita and its shape is rectangular.


In the center of this IlAvrita is situated the golden Sumeru Mountain – the King of all the mountains – one lakh Yoyanas high. Sixteen thousand Yoyanas of this mountain is under the ground and the eighty four Yoyanas are visible above the ground.


In the north of IlAvrita VarshA are the three mountains the Neelagiri, the S’vetagiri and the S’ringa, forming the boundaries of Ramyaka, HiraNmaya and Kuru VarshAs respectively.


In the south of IlAvritA three beautiful mountain ranges Nishadha, Hemakoota, and HimAlayAs, are situated, extending from the east. These three mountains form the boundaries of Kimpurusha and BhArata Varsha.


To the west of IlAvritA is situated the mountain MAlyavAn and to the east are situated Neela, Nishada and GandhamAdan. Mandara, SupArs’vak, and Kumuda are situated in the KetumAla and BhadrAs’va ; but these all are reckoned as the PAda Parvatas of the Sumeru mountain.


These form the pillars, as it were, of Meru on the four sides. On the mountains, the mango, the jack, plantain, and the fig trees are situated. They seem to extend to the Heavens and form the flagstaffs on the top of the mountains.


On the top of those mountain tops are four very large lakes filled with Milk, Honey, Sugarcane juice and sweet water. There are four lovely gardens – lovely, enchanting and pleasing to the delicate senses. Here the Devas enjoy the wealth and prosperity and their other Yogic powers.


Here the Devas enjoy the company of the heavenly maidens to their heart’s content. They hear the sweet songs sung by the Gandharvas and Kinnaras.


On the top of the Mandara mountain, there are the Heavenly mango trees bearing the sweet delicious nectar-like mango fruits. The ripe fruits fall down to the ground and split open. Out of their juice golden in color like the rising sun, AruNodA a great river starts flowing.


Here the DevAs always worship AruNA – the great Devi Bhagavati. She is the destroyer of all sins, benefactor of all desires and the bestower of abhayam. Her other names are AadimAlA, AtulA, AnantA, Pushti and EswaramAlini, Dushta nAsakari and KAthyAyini.



 
bhagavathy bhaagavatam - skanda 2

2#12a. ஜரத்காரு (1)

இல்லறம் வெறுத்தார் ஜரத்காரு முனிவர்;
இருந்தார் தூய பிரம்மச்சாரி அந்தணனாக.

கண்டார் காட்டு வழியே நடந்து செல்கையில்
தன் பித்ருக்கள் தலை கீழாகத் தொங்குவதை!

“செய்வாய் திருமணம் சிறந்த கன்னியுடன்;
செய்வாய் புத்திரர்களை அவளிடம் உற்பத்தி!

சதாசாரம் கொண்ட உன் சத்புத்திரர்கள்
சுவர்க்கம் அடைவிப்பர் எங்களை!” என

“என் பெயரைக் கொண்ட ஒரு கன்னிகை,
என் மனம் போல் நடக்கும் ஒரு கன்னிகை,

நான் தேடாமலேயே என்னிடம் வந்தால்
நான் செய்வேன் அவளுடன் திருமணம்!”

கத்ருவும், வினதையும் கச்யபர் மனைவிகள்;
சத்ருவாக எண்ணினாள் கத்ரு, வினதையை.

“கூறு சூரியனின் குதிரையின் நிறத்தை!” என
“சிறந்தவை எப்போதும் வெண் குதிரைகளே!

இதன் நிறம் என்னவென்று கூறு இப்போது.
இருப்பேன் அடிமையாகத் தோற்று விட்டால்!”

“கரிய நிறம் சூரியனின் குதிரை” என்றாள்
கரிய மனம் படைத்த கத்ரு வினதையிடம்.

நாகங்கள் ஆவர் கத்ருவின் மகன்கள்;
நாகங்களைப் பணித்தாள் தாயார் கத்ரு.

“விஷ ஜ்வாலையால் மாற்றி விடுங்கள்;
விளங்க வேண்டும் குதிரை கருமையாக!”

மறுத்துப் பேசிவிட்டன சில நாகங்கள்;
வெறுத்துச் சபித்தாள் அந்த நாகங்களை.

“சர்ப்ப யாகத் தீயில் வீழ்ந்து மடிவீர்கள்
சர்ப்ப யாகம் ஜனமேஜயன் செய்கையில்!

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K . ராமன்


2#12a. JaratkAru (1)


Sage JaratkAru hated to get married. He wanted to live as a pure brahmachAri
Brahmin. Once while walking through the forest, he saw his ancestors hanging upside down in a well.

They told him, “Please get married to a good woman and beget good children. Only your children can deliver us from this hell and transport us to heaven”

JaratkAru laid some conditions to them.”I will marry the girl who bears my own name. She should obey me implicitly. She should come looking for me since I will not go looking for her.

Sisters Kadru and Vinata were two of the several wives of sage Kasyapa. Kadru (the mother of all the serpents) was extremely jealous of Vinata (the mother of all birds). One day she asked Vinata to tell her the color of the horse of Sun God.

Vinata said, “All the excellent horses are always white in color. Can you tell me the color of that horse. If I am wrong I will become your slave for life!” Kadru was wicked and told her a lie. She said,” The horse of sun God is black in color”

She also told the serpents who were her sons,” Go forth and make the horse of the Sun God appear black by your poisonous fumes”. Some of the serpents did not agree to perform this evil deed.

She lost her temper with those and cursed her own sons. ” You will die by dropping into the fire of the yAga kuNdam when Janamejayan performs the great sarpa yAgam”.

 
kandha purANam - mahEndhra kANdam

21g. சூரபத்மனின் சீற்றம்

அரிமாமுகனின் அறிவுரையைக் கேட்டு,
சூரன் நகைத்தான் தன் கைகளைத் தட்டி.

அளவு கடந்த சினம் பொங்கி வழிந்திட,
இளவலைப் பார்த்து இகழலுற்றான்;

“இந்திராதி தேவர்களுக்கு அஞ்சினாயா?
மந்திரத்தால் உந்தன் மனம் அழிந்தாயா?

எமது சக்தி உம்மை வெல்லும் என்று
நமது பிரான் கூறியது கேட்டிலேன்.

பொய் மொழிகள் புனைந்துரைத்து
மெய் போல் அதை நம்பச் சொல்கிறாய்.

மேன்மைகள் தந்த ஒருவரே – அந்த
மேன்மைகளைப் பறிப்பதும் உண்டோ?

வேள்விகள் செய்து மேன்மை பெறாது
வேற்படைக்கு அழிந்தான் தாரகன்;

குழந்தை போன்ற வஜ்ஜிரவாகுவும்
அழிந்து போனான் அறியாமையினால்;

என்னிடம் உள்ள குறை என்ன கூறு!
என்றும் அழியாத ஒரு வஜ்ஜிரகாயம்;

தேவர்கள் இப்போது என் ஏவலர்கள்;
தேவைகளைப் புரியும் தொண்டர்கள்;

திருமால், தேவர்கள் கண்டு அஞ்சும்
பெருமை படைத்தவன் அன்றோ நான்?

சிறுவனோ வந்து கொலை செய்வான்?
அறியாமல் பேசுகின்றாய் அச்சத்தால்.”

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

3#21g. Soorapadman’s rage.


Soorapadman became very angry on hearing the words of wisdom spoken by his younger brother Singamukhan. He clapped his hands loudly and laughed in anger.

He spoke to Singamukahn with utter scorn, “Are you afraid of the Devas and Indra?
Have you lost you mind due to an evil spell? Siva never told us that his shakti will destroy us.

You tell me a lie and you want me to believe it. After giving us those boons, will the same lord remove them from us? TArakan did not perform yAgam or Yagam to acquire superior powers. So he got killed. VajrabAhu was no more than a child. So he got killed. Tell me now!

What is my weak point? I have a vajya kaayam-a body as strong as a diamond. Devas are now my servants and obey my orders. Even Vishnu and Brahma are afraid of me. How can Murugan, a mere child kill me? You are out of your senses overcome by your fear!”

 
49 (a). திரு ஆலவாய் கண்டது.

சுகுணபாண்டியனுக்குப் பின்னர் மதுரையைச்
சுபிட்சமாக ஆண்டனர் பாண்டிய மன்னர் பலர்;

பாண்டிய மன்னன் சித்திர விரதன் முதலாக,
பாண்டியன் மன்னன் அதுல கீர்த்தி ஈறாக!


அதுல கீர்த்தியின் அருமை மகன் ஆகிய
கீர்த்தி பூஷணனின் ஆட்சி நடந்த காலம்;

ஏழு கடல்களிலும் பொங்கியது பிரயளஜலம்!
ஏழு தீவுகளும், அனைத்தும் அழிந்து போயின!


ஊழிக் காலத்தில் பொங்கிய பேரலையில்
மூழ்கிப் போகாமல் இருந்தவை சிலவே!

அன்னை மீனாட்சியின் அழகிய கோவில்,
பொன்னார் மேனியனின் அற்புத விமானம்,


பொற்றாமரைக்குளம், ரிஷபமலை, யானை மலை
பன்றி மலை, பசு மலை, நாக மலை என்பவைகள்!

பிரளய ஜலத்தில் அழிந்து போய்விடாமல்,
ஸ்திரமாக நின்று இருந்தவைகள் இவைகளே.


சிருஷ்டி நிகழ்ந்தது மீண்டும் முன்போலவே,
சிவன் அருளால் அனைத்தும் தோன்றலாயின;

சந்திரக் குலத்தின் மன்னன் ஆனான்,
வங்கிய சேகர பாண்டியன் என்பவன்.


அண்ணலின் திருக்கோவிலைச் சுற்றி ஒரு
வண்ணமிகு ஊரை அமைத்து ஆண்டான்.

நல்லாட்சியில் பெருகின நல்ல வளங்களுடன்
நற்குடி மக்களின் எண்ணிக்கையும் கூடவே!


எல்லோரும் இனிதே வாழ்வதற்கு ஏற்றதான
நல்லதொரு நாட்டைச் சமைக்க விழைந்தான்;

எல்லைக் கோடுகள் தெரியவில்லை எவருக்கும்!
எல்லாமே பிரளயத்தில் அழிந்து போய்விட்டதால்!


அண்ணலின் திருக்கோவில் சென்று வணங்கி
விண்ணப்பித்தான் தன் மனக் கோரிக்கையை;

அம்பலத்தில் தோன்றினான் நம்பிரான் உடனே;
தம்மிடத்தில் அருள் வேண்டி நின்ற மன்னனுக்கு.


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


# 49 (a). THIRU AALAVAAI – THE NEW CITY.


Suguna Paandiyan was succeeded by a line of kings from Chitra Virathan up to Athula Keerthi.


It was during the reign of Keerthi Bhooshanan- Athula Keerthi’s son that the seven
seas swelled up and swallowed all the creation.


But for a few things everything vanished. The only things that were spared by the pralaya jalam were the Meenakshi temple, the vimaanam of Soma Sundareswarar,

The Pond of Golden lotuses, the Rishaba Giri, the Hasthi Giri, the Varaaha Giri, the Pasu malai and the Nagaamalai.


The srushti was resumed by the divine grace of lord Siva. The new Paandiya king was Vangiya Sekaran. He built a small city around the Soma Sundara temple and ruled well.


Auspiciousness, prosperity and wealth grew. So also the population of his citizens. He wished to construct a new bigger city to accommodate his countrymen.


No one knew the boundaries of the old city. He prayed to Lord Siva to help him build the new city exactly where the old city was situated originally.


Siva answered to his sincere prayers and appeared almost immediately.
 
bhagavathy bhaagavatam - skanda 8


8#6a. மலைகளும், நதிகளும்

அருணை நதி பாயும் கீழ்திசையை நோக்கி;
நறுமணம் கமழும் பத்து யோஜனை தூரம்.

சுகந்தத்தை அனுபவிப்பார்கள் – யக்ஷர்கள்,
கந்தர்வர்கள் பத்தினிகள்; தேவியின் சகிகள்.

மேரு மலையில் உள்ளது உயர்ந்த நாவல் மரம்;
தரையில் விழுந்து சிதறும் அதன் பழுத்த கனிகள்.

விதையில்லாத, சுவை மிகுந்த நாவல் கனிகள்
சிதறும் பெரும் யானையின் பருமனுடன் கூடி!

வழிந்த சாறு ஓடும் ‘ஜம்பூநதி’யாகப் பெருகி.
வசிக்கும் தேவர்கள், நாகர், முனிவர், அசுரர்

போற்றுவர் நதியை ‘ஜம்புவர்த்தினி தேவி’ என.
போக்க வல்லது பாவிகளின் பாவங்களை இது.

கோகிலாக்ஷி, கமலா, கருணா, காம பூஜிதா,
கடோரா விக்ரஹா, தன்யா, சுபஸ்தினி என்று.

விளையும் இந்த நதியின் இரு கரைகளிலும்
விலை மதிப்பற்ற ‘ஜம்பூநதகம்’ என்னும் பொன்!

அணிவர் வித்யாதரர்கள், தேவர்கள் – இதில்
அணிமணிகள், ஆபரணங்களை உருவாக்கி.

உள்ளது கடம்ப மரம் சுபர்ச்சுவ மலையின் மேல்;
வெள்ளமாகப் பெருகும் மரத்திலிருந்து பழ ரசம்!

பிரிந்து ஓடும் ஐந்து தாரைகளாக மேற்குப் புறம்;
சேர்ந்து பாயும் பெரிய ஒரு நதியாக மீண்டும்.

பருகுவர் மதுர ரசத்தைத் தேவர்கள் விரும்பி;
பரிமளிக்கும் நறுமணம் நூறு யோசனை தூரம்.

பூஜிப்பர் மதுர ரஸ மஹாநதியைத் தேவர்கள்;
பூஜிப்பர் தங்கள் விருப்பங்கள் நிறைவேறிட.

தாரேஸ்வரி, மஹாதேவி, பக்த கார்ய காரிணி,
தேவ பூஜ்யை, மகோத்ஸாஹை, கால ரூபை,

மஹா ரௌணை, கர்மபாதை, காலாங்கி
காமகோடிப் ப்ரவர்த்தினி என்ற நாமங்களால்.

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

8#6a. The mountains and rivers

AruNodA river rises from the Mandara mountain and flows by the east of IlAvrita. The Pavana Deva (The God of wind) keeps the surroundings of the earth there filled with nice smell for ten Yoyanas around.

The rose-apples, of the size of an elephant, fall down upon the earth from the high peaks of the mountain Mandara and break into pieces. The sweet scented juice flows down as the river Jamboo by the south of IlAvrita.

The Devi Bhagavati there is pleased with the Juice of that rose-apple (Jamboo) and is known by the name of ‘JambAdini’. The rushis, Devas and NAgas worship the lotus-feet of the merciful Devi, praying for the welfare of all the JeevAs.

The name of the Devi destroys diseases, and all the sins. DevAs always worship and chant the names of the Devi as the Remover of all obstacles. So idols of Devi are installed on both the banks of the Jamboo river.

If men recite Her names KokilAkshi, KaruNA, KAmapoojitA, KatoravigrahA, DevapoojyA, DhanyA, Gavasthini and worship, so they are taken care of in this life and the next by the grace of Devi.

From the juice of the Jamboo fruit, the wind and the rays of the Sun create a rare gold called ‘JAmboonada’. Out of this gold ornaments are made for the wives of the Immortals and the VidyAdharas. Devas make crowns, waist bands and armlets out of this gold for their sweet-hearts.

There is a big Kadamba tree on the mountain Supars’va. Five streams of honey called Madhu DhArA run by the west of IlAvrita. The Devas drink it and their mouths become filled with the sweet fragrance. The air carries this sweet fragrant smell to a distance of even one hundred Yoyanas.

The DhAres’vari MahA Devi – who grants all the desires of the Bhaktas, is worshipped by the Devas and is the presiding Deity of the woods and forests all around.
DArEswari, MahADevi, Bhakta kAryakAriNi, DEvaPoojyA, MahOtsAhA, KAlaroopA, mahArouNai, KarmabAdai, KAlAngi, KAmakOtipravathini are some of the names of this Devi.

 
bhagavathy bhaagavatam - skanda 2

2#12b. கருடன்

விரைந்து சென்றன அஞ்சிய நாகங்கள்;
மறைத்தன குதிரையின் தேக காந்தியை!

தோற்றம் அளித்தது வெண்குதிரை கறுப்பாக!
தோற்று விட்டாள் வினதை சக்களத்தியிடம்!

அடிமை ஆகிவிட்டாள் வினதை கத்ருவுக்கு;
கொடுமைகள் செய்தாள் வினதையைக் கத்ரு.

கருடன் வினைதையின் ஒரு வீர மகன்;
பொருமினான் தாய் படும் துயர் கண்டு.

“அருணனும், நானும் மகன்களாக இருக்க
வருந்தலாமா தாயே நீ இந்த விதமாக?

துக்கத்தின் காரணத்தைக் கூறுவாய் – நான்
இக்கணமே போக்குவேன் அக்காரணத்தை!”

“அடிமையாகிவிட்டேன் பெரிய அன்னைக்கு!
அடி பணிய வேண்டும் அவள் ஆணைகளுக்கு!

செல்லவேண்டும் சுமந்துகொண்டு – அவள்
செல்ல விரும்பும் இடங்களுக்குச் சுயமாக!”

விடுவித்தான் அடிமைப் பிரச்சனையை;
“எடுத்துச் செல்வேன் இனி அவளை நானே!”

“நானே செய்கின்றேன் தாயின் கடமைகளை!”
நாகங்களின் தாய் அக மகிழ்ந்தாள் இதுகேட்டு.

பிள்ளைகளுடன் ஏறி அமர்ந்து கொண்டாள்;
“கொள்ளையழகுடைய கடற்கரை செல்!” என

நொடியில் கொண்டு சேர்த்தான் கருடன்
அடிமையின் தொண்டில் மகிழ்ந்தாள் கத்ரு.

“அடிமைத்தனம் மறைய வழி என்ன?” என
“அடைவிப்பாய் இந்திரனின் அமுதத்தை!

அமரத்வம் வேண்டும் நாகங்களுக்கு – நீ
அமிர்தம் கொணர்க! தருவேன் விடுதலை!

சந்தேகம் வேண்டாம் என் சொற்களில்!
சத்தியம் நான் உரைப்பது!” என்றாள் கத்ரு.

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K . ராமன்


2#12b. Garudan


The serpents which did not want to get cursed sped fast in fear – to cover the brilliance of the white horse and make it look dark hued. Vinata lost her bet to Kadru and became her slave for life.

Kadru treated her very cruelly and harhly. Garudan was one of the sons of Vinata. He became very sad to see his mother suffer at the hands of her own elder sister Kadru.

He requested Vinata,” Mother! Please tell me the reason for you suffering. I and AruNan are your valiant sons. We do not want you to suffer like a slave”

Vinata replied,”I lost a bet and have become the slave of Kadru. I have to carry her to the places which she wants to visit.”

Garudan offered to carry Kadru instead of his mother Vinata. Kadru was very happy since Garudan was younger and stronger than Vinata and could actually fly fast.

She sat on his back with all her sons and ordered to be taken to the lovely beach. Garudan obliged and transported them swiftly. Kadru was well pleased with this scheme.

Garudan asked Kadru, “What is that you want to release my mother from slavery?” Kadru replied.

“The serpents must become immortal. For that we have to drink the divine nectar which is being zealously guarded Indra in Heaven. If you bring the nectar and give us, I will release you and Vinata from slavery. It is a promise!”


 
kandha purANam - mahEndhra kAndam

21h. அரிமுகன் அறிவுரை

“தவம் செய்தாய் சிவனை நினைத்து;
அவன் அளித்தான் பல மேன்மைகளை.

எல்லாவற்றுக்கும் உண்டு முடிவு ஒன்று!
நல்லதாயினும் சரி, அல்லதாயினும் சரி!

உணர மறுக்கிறாய் உண்மைகளை;
அவுண அரசனே ஆலோசனை செய்.

அறநெறிகளைத் துறந்து விட்டாய் நீ.
ஆண்மையால் செயல் புரிகின்றாய் நீ.

வரத்தைக் கொடுத்த பிரானே அதைப்
பறித்து விடலாகாது என்று கருதியே

திருமகனைத் தோற்றுவித்துள்ளார்!
பிற உயிர்போல் அவனை எண்ணாதே!

திரு நுதற்கண்ணில் தோன்றியவன்;
மறைகளும் அறிந்திட முடியாதவன்;

அனைத்தும் அறிந்து உணர்ந்தவன்;
அனைத்துக்கும் அவனே முதல்வன்;

அறிவே வடிவான அவன் இயல்புகள்;
அறிவுக்கு அப்பாற்பட்டது அறிவாய்!

முப்பத்தாறு தத்துவங்களையும் விஞ்சி,
அப்பால் நிற்கும் பரம்பொருள் அவன்.

கூறுதற்கரிய முழு முதற் பொருள்!
சிறுவன் ஒருவன் என மயங்காதே.

கணப் பொழுதில் அழிக்க வல்லவன்
கணக்கற்ற அவுணர்களை, உன்னை!

ஆக்கவும், காக்கவும் வல்லவன் அவன்.
ஆணவம் அழிக்க வந்துள்ளான் செந்தூர்.

அழியாத உடல் உண்டு என்னாதே;
அழிவு உண்டு தோன்றும் உயிர்க்கு.

விண்ணுலகமும் கூட இதற்கு ஒரு
விதிவிலக்கு ஆகாது அறிவாய்!

கொடுத்த இறைவனே எடுத்தால்
தடுக்க முடியுமா எவரேனும் கூறு!

நன்மையை நாடி உனக்கு நலம் தரும்
மேன்மை உரைப்பேன்! சிறை நீக்கு!”

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
 
The 64 thiru viLaiyAdalgaL

49b. பாம்பலங்காரச் சித்தர் பிரான்

# 49 (b). பாம்பலங்காரச் சித்தர் பிரான்.

பாம்பலங்காரச் சித்தர் வடிவெடுத்து நின்றார்!
பாம்பே ஓர் அரை ஞாண், பாம்பே ஒரு பூணூல்,


பாம்புகளே வண்ண மாலைகள், பாம்புகளே கங்கணங்கள்;
பாம்புகளே கால்கிண்கிணிகள், பாம்புகளே அணிகலன்கள்!


கங்கணப் பாம்பிடம் கங்காதரன் கூறினார்,
“வங்கி, வளைந்து, எல்லையைக் காட்டுவாய்!”


“நான் எல்லையைக் காட்டும் இந்த ஊர்
என் பெயராலேயே விளங்கிட வேண்டும்!”


கங்கண நாகம் மிகமிக நீண்டு வளர்ந்தது!
அங்கு பதித்துக் கொண்டது வால் நுனியை,


கிழக்கு திசைக்குச் சென்று அடைந்தது,
வலக்கைப் புறமாக அந் நகர எல்லைக்கு!


ஊர்ந்து சென்றது ஒரு பெரிய வட்டத்தில்,
சேர்ந்து கவ்வியது தன் வால் நுனியை,


வட்டத்துக்குள் சுட்டிக் காட்டியது அங்கே
கட்டப் படவேண்டிய புத்தம் புது நகரத்தை!


மீண்டும் சிறிய வடிவம் எடுத்துக் கொண்டு
ஆண்டவன் கைக் கங்கணம் ஆகிவிட்டது.


கண்முன் இருந்து கணத்தில் மறைந்துபோனான்
அண்ணல் சிவபிரான் அனைத்து நாகங்களுடன்.


நன்கு அமைத்தான் சக்ரவாளகிரியை,
வங்கிய சேகரன் வலிய மதில் சுவராக!


தெற்கு வாசலில் அழகிய திருப்பரங்குன்றம்,
வடக்கு வாசலில் உயர்ந்த ரிஷப மலை,


மேற்கு வாசலில் மதிக்கத்தக்க திருவேடகம்.
கிழக்கே அருள்மிகு திருப்பூவனம் அமைந்தன.


ஆலம் ஆகிய நஞ்சை வாயில் கொண்ட நாகம்
அருளிக் காட்டிப் பெற்று விட்ட அரிய வரத்தால்,


ஆலவாய் மதில் ஆகிவிட்டது சக்ரவாளகிரி.
ஆலவாய் ஆகிவிட்டது புதிய நகரம் மதுராபுரி!


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


# 48 (b). THE SIDHDHA WITH SNAKES!


As soon as the Paandiya King Vangiya Sekaran prayed to Lord Siva, He emerged as an unusual sidhdha. He was decorated by poisonous snakes all over His body!


He wore a snake in his waist, another as a garland, two more as kankanam, and two more as kinkini. His poonool was also a snake. All his ornaments were invariably snakes.


Siva spoke to his Kankana snake, “Show the King the original boundary of the city of Madhuraapuri!”


The snake wanted a boon that the new city must be named after it. God granted the boon.


The snake now became very long. It fixed the tip of its tail firmly in the east as a mark. It slithered forward to enclose a huge area of land and grabbed the tip of its own tail, forming a huge circle.


The area inside its coil was the area where the new city should be built.
It then reduced to it original size and became a kankan again. The sidhdha vanished with all his snakes.

Vangiya Sekara Paandiyan built a very strong wall to mark the boundary of the new city. It was named as Chakravaala Giri.


The four gates of the wall were constructed thus: Thirupparam Kundram formed the Southern gate, Rishaba Giri the Northern gate, Thiru Vedagam formed the Western gate and Thirupoovanam was the Eastern gate.


Aalam means poison. Since the snake which had deadly poison in it mouth showed the boundary, the city was named as Aaalavaai Nagaram. The boundary was known as Aalavaai Mathil.


 
bhagavathy bhaagavatam - skanda 8

8#6b. மலைகளும், நதிகளும்

குமுத மலையின் சிகரத்தில் உள்ளது சத்பலம்;
அமுதனைய பால் ஒழுகும் மரக் கிளைகளில்.

கோமுகங்களில் பெருகி வழியும் தரைகளாக!
தயிர், தேன், நெய் மற்றும் கருப்பஞ் சாறுகளாக!

ஆறுகளாக ஓடும் இலாவிருதத்தின் வடக்கே;
துதிப்பர் இந்நதியைப் பல நாமங்களைக் கூறி!

மீனாக்ஷி, தத்தலே தேவி, தேவாசுர நிஷேவிதை,
நீலாம்பரி, ரௌத்திரமுகி, நீலாலகயுதை,

மனப்ரியை, மனப்ரியதரை, போன்றவை.
மேன்மை உண்டாக்கும் ஜபிப்பவர்களுக்கு!

சுகம் உண்டாகும் இந்நதி நீரைப் பருகினால்;
வியர்வை, துர் நாற்றம் கிழட்டுத் தன்மை,

பிணி, மூளைக் கோளாறு, சித்தக் கலக்கம்,
பிரமை, அதீத உஷ்ணம், சீதளம் மறையும்.

பொன் மலையாகிய மேரு பர்வதம் – இதில்
பொருந்தியுள்ளன மேலும் இருபது மலைகள்.

தாமரை மலரில் உள்ள மகரந்தம் போல
தாமரை மலர் போன்ற மேருவின் மேலே.

குரங்கம், குரகம், குசும்பம், விகங்கதம்,
திரிகூடம், சிசிரம், பதங்கம், ருசகம்,

நீலம், நிஷதம், சிதீவாசம், கபிலம்,
சங்கம், வைடூரியம், சாருதி, ஹம்சம்,

இடபம், நாகம், காலஞ்சரம், நாரதம்,
இவைகளே ஆகும் இருபது மலைகள்.

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

8#6b. The mountains and the rivers

The great Banyan tree named S’atabala is situated on the top of the Kumud mountain. From its trunk many big rivers take their origin. These rivers possess such rare influences.

They can give to the holy persons there, milk, curd, honey, ghee, raw sugar, rice, clothing, ornaments, seats, and bedding – whatever they desire to posses.

Therefore these rivers are called ‘KAmadugh’. They come gradually down the earth and flow by the north of IlAvrita.

MeenAkshi Devi dwell there and is worshiped by the Suras and the Asuras alike. The Deity is clothed in blue, has a fearful countenance and fulfills the desires of the Devas dwelling in the Heavens.

Those that worship Her, praise Her by these names AtimAnyA, AtipoojyA, Mattha MAthanga GAmini, MadanonmAdini, MAnapriyA, MAnapriyatarA, MArabegadharA,MArapoojitA, MAramAdini etc.

Those drink the clear waters of these rivers become free from old age or decay, worry, perspiration, bad smell, from all diseases and premature death. They do not suffer anything due to terror, cold, heat, rains, or from any paleness in their color. They enjoy extreme happiness as long as they live and no dangers come to them.

The names of the twenty mountains that encircle the Golden Sumeru mountain at its base, as if they were the filaments round the pericarp of a flower are :-
KuraNga; Kuraga, Kus’umbha, Vikankata, Trikoota, S’is’ira, Patanga, Ruchaka, NeelA, Nishada, SiteevAsa, Kapila, Samkha, Vaidoorya, ChArudhi, Hamsa, Rishaba, Naga, KAlanjara and lastly NArada. The one in the center is the twentieth.

 
bhagaavthy bhaagavatam - skanda 2

2#12c. ஜரத்காரு (2)

உத்தமன் கருடன் சென்றான் சுவர்க்கம்;
யுத்தம் செய்து கொணர்ந்தான் அமுதம்.


தர்ப்பைகள் மீது கலசத்தை வைத்தான்;
தாயை விடுவித்து அழைத்துச் சென்றான்.


மகிழ்ந்தன நாகங்கள் அமிர்தம் கிடைத்தால்!
“பகிர்ந்து உண்ணுவோம் தூய நீராடிவிட்டு!”


விரைந்தன நீர் நிலைக்குத் புனித நீராட!
விரைந்து இந்திரன் கலசத்தை மீட்டான்!


வருந்தின நாகங்கள் கலசத்தைக் காணாது;
சிந்திய அமிர்தத்தை நாக்கின தம் நாவால்!


தர்ப்பையின் கூர்மை பிளந்தது நாவை!
சர்ப்பங்கள் விரைந்தன சாப நிவர்த்திக்கு.


சரணடைந்தன பிரம்தேவனிடம் சென்று;
“கருணை காட்டுங்கள் சிருஷ்டி கர்த்தாவே!


சாபம் இட்டுள்ளாள் தாய் கத்ரு எமக்கு,
யாகத் தீயில் விழுந்து மடிவோம் என்று!


பரிகாரம் சொல்லிக் காப்பாற்றுவதற்குச்
சரியான ஒருவர் நீரே என்று அறிவோம்!”என


“மணம் செய்விப்பீர் வாசுகியின் தங்கையை
முனிவர் ஜரத்காருவுக்கு முழு மனத்தோடு.


புத்திரன் பிறப்பான் ஆஸ்திகன் என்பவன்;
உத்திரவாதமாகக் காப்பான் நாகங்களை.


மரண பயம் நீங்குவீர் நீவீர் இங்ஙனம்;
மணமுடிக்க விரைவீர் நீவீர் இக்கணம்!”


சர்ப்பங்கள் தேடிக் சென்றன ஜரத்காருவை;
சந்தர்ப்பங்கள் அமைந்தன அவர் கூறியபடி.


இசைந்தார் திருமணத்துக்கு ஜரத்காரு;
இசைந்தாள் மணமகள் ஜரத்காருவும்.


நிபந்தனை ஒன்றை விதித்தார் முனிவர்;
உவந்து ஒப்புக் கொண்டனர் அனைவரும்.


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K . ராமன்


2#12c. JaratkAru (2)


Vinata’s loyal son Garudan rushed to the swarggam. There he defeated the Devas and took away the amruta kalasam (the pot of divine nectar ) with him. He kept it on the kusa grass spread on the floor and got his mother released from slavery.

The serpents were happy to have secured the nectar which promised them all immortality. They wished to bathe and become clean before drinking the nectar. They went to a river to take a plunge.

Indra came down fast and took away the amruta kalasm before the serpents could return. They were very disappointed to find the kalasm missing. They licked the few drops which had spilled on the grass. The sharp grass slit the tips of their tongues into two.

They then rushed to surrender to Brahma and seek his advice and protection. They prayed to him, “Oh God of creation! Our own mother has cursed us that we will die in the flames of the great sarpa yAga. Please save our lives and tell us what to do now!”

Brahma took pity of the serpents and told them,”Get JaratkAru the sister of VAsuki married to the rushi JaratkAru immediately. A son will be born to them named Aastikan. He will save your race from complete destruction in the flames of the yAga kuNdam!”

The snakes now went in search of sage JaratkAru and offered to marry him the sister of VAsuki who was also named as JaratkAru. Since all the conditions laid by the sage were thus fulfilled he agreed to marry her – but on one more condition.



 

Latest posts

Latest ads

Back
Top