• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

A poem a day to keep all agonies away!

bhagavathy bhaagavatam - skanda 3

3#3b. மணி த்வீபம்

இருந்தது ஒரு தீவு கடலின் நடுவே;
இருந்தன பழ மரங்கள், மலர்க் கொடிகள்;

பாடின குயில்கள், ஆடின மயில்கள் – ஒரு
பஞ்சணைக் கட்டில் சோலையின் நடுவே!

இரத்தின வேலைப்பாடுகள் நிறைந்தது;
சித்திரப்பூ வேலைப்பாடுகள் மஞ்சத்தில்!

வானவில்லாக வளைந்திருந்தது விதானம்;
வனப்புடன் அமர்ந்தாள் ஸ்ரீபீடத்தில் தேவி.

ஆடைகள் சிவப்பு, அதரங்களும் சிவப்பு,
அகன்ற கண்கள் சிவப்பு, சந்தனப் பூச்சுடன்

கூடி மின்னல்கள் ஒளிர்வது போலவும்,
கோடி லக்ஷ்மிகளின் சுப மங்கலத்துடன்;

புதுமை, இனிமை, வளமை, இளமை
பூரிக்கும் அழகுடன் மிளிர்கின்ற தேவி!

தாடகம் மின்னும் செவிகள், ஆபரணங்கள்;
தாமரை மொட்டு தனங்கள், தாமரை முகம்,

கம்பீரமாக தேவி ஸ்ரீ சக்கரத்தில் அமர;
கன்னிகள், பக்ஷிகள் புடைசூழ்ந்திருக்க;

“யார் இந்த பெண்?” மூவரும் சிந்திக்க – விஷ்ணு
யார் என்று கண்டறிந்தார் தன் ஞானதிருஷ்டியில்

‘எங்கும் நிறைந்திருப்பவள் இவள் – உலகில்
எல்லாவற்றுக்கும் ஆதாரமானவள் இவள்.

அறிய முடியாதவள் அற்ப அறிவினால்!
அறிய முடிந்தவள் யோக நிஷ்டையால்!

வேதங்களின் தாய், கருணைக் கடல்,
ஆதி காரணி, சர்வேச்வரி, மகாதேவி!

தன்னுள் பிரபஞ்சத்தை ஒடுக்குபவள்;
தன் அம்சங்கள் புடை சூழ இருப்பவள்;

மூல பிரகிருதி இவளே! மகாமாயை இவளே!
ஆலிலை பாலகனின் அன்னையும் இவளே!’

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

3#3b. MaNi Dweepam

There was an island in the Ocean Of Milk. There were trees laden with many fruits and creepers laden with fragrant flowers, on that island.

Peacocks were dancing and cuckoos were singing. There was a cot studded with precious gem stones and a bed with elaborate floral embroidery work on it – right in the middle of the garden. The canopy of the cot was shaped like a lovely rainbow.

Devi sat on a peetam. She was dressed in red silk. Her lips were red and her wide beautiful eyes were red in color too! She had sandal wood paste smeared on her body. She dazzled like many brilliant lightnings shining together. She was as auspicious as ten million Lakshmi Devis put together.

She had a rare beauty, bubbling youth, charm and grace. The ear ornament ThAdagam shone on her ears and she was decorated with many gold ornaments on her body. Her breasts were like the firm lotus buds and her face was like a lotus flower in full bloom. Several young maidens and birds surrounded her.

The Trinity looked at the Devi and started wondering, “Who can this Devi be?” VishNu found out her identity using his jnAna dhrushti!

“This is the Devi who resides everywhere and in everything. She supports everything that exists in the universe. She can not be realized through the intellect. She can be realized by the yOga sAdhana.

She is the mother of the VEdas. She is an ocean of mercy. She is the cause of the creations. She is the one who is really all powerful. She is the supreme Goddess.

She can hide the entire creation within herself. She is surrounded by her own faculties and amsams. When I was an infant floating on the praLaya jalam on a Bunyan leaf, she was my mother.”

 
kandha purANam - Por puri kANdam


3b. போருக்குப் புறப்பாடு

மாளிகையை அடைந்தான் பானுகோபன்;
தோள்கள் துடிக்கப் போரினை விழைந்தான்.


வெற்றித் திருமகளைத் தொழுதான் முதலில்!
வெற்றிக் கழல்களைப் பூட்டினான் கால்களில்!


உடைவாளைச் சொருகினான் இடையில்;
உடல்மூடியையும் அணிந்து கொண்டான்;


முதுகில் தாங்கினான் அம்புகள் கூட்டத்தை;
புதுமையானதொரு பட்டம் அவன் நெற்றியில்.


படைக்கலங்கள் சுமந்தான் போருக்கு.
படைவீரர்கள் புடை சூழச் சென்றான்;


பதினாயிரம் வெள்ளம் அவுணர்கள்;
பதினாயிரம் வெள்ளம் கரி, பரி, தேர்;


முப்பதாயிரம் குதிரைகள் பூட்டிய தேரில்
அப்பழுக்கு இல்லாத அந்த பானுகோபன்;


போருக்கு அவுணர்கள் புறப்பட்டதும்
முருகனிடம் விரைந்து நாரதர் சென்றார்.


“தூதுவர் மூலம் செய்தி அறிந்த சூரன்
பாதுகாவலுடன் அனுப்பினான் மகனை;


அனைத்து தேவர்களையும் வென்றவன்,
அனைத்து மாயங்களையும் கற்றவன்;


வெல்ல இயலாது அவனைப் பிறரால்!
செல்ல வேண்டும் போருக்கு நீங்களே!”


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


4#3b. To the war front.


BhAnukoban went to his palace. He was eager to fight the war. He worshiped the Goddess of Victory. He put on the veerak kazhalgaL on his ankles. He wore his sword in his waist. He wore the body kavacham. The arrows filled the quiver on his back. He wore a decoration on his forehead.


He left surrounded by his army of ten thousand veLLam of asuras, ten thousand VeLLam of horses, elephants and chariots. He rode on a chariot drawn by thirty thousand horses.


NArada rushed to meet Murugan and told him thus: “Soorapadman got the news through his messengers. He has sent his son BhAnukoban with a huge army. His valorous son has already conquered all the Devas. He knows all tricks of the war. No one can conquer him but you. You must go to the war front in person”.


 
The 64 Thiru ViLaiyAdalgaL

# 52 (a). தருமிக்குப் பொற்கிழி தந்தது.

வங்கிய சூடாமணி மன்னன் ஆனான்
வங்கிய சேகர பாண்டியனுக்குப்பின்;
குலபிரான் ஆகிய சிவ பெருமானிடம்
குறைவற்ற பக்தியுடன் விளங்கினான்.


மூன்று கால பூஜைகளுக்கு உகந்ததாகத்
தொன்று தொட்டு பயன்படும் மலர்களை,
நந்தவனம் அமைத்து நன்கு வளர்த்தான்
நண்பகல், காலை, மாலை வழிபாட்டுக்கு.


பொன்னிற சண்பக மலர்களின் மீது
மன்னனுக்கு உண்டு கொள்ளைப் பிரியம்!
பொன்னிற மலர் மாலைகள் தாம் எத்தனை
பொருத்தம் நம் பொன்னார் மேனியனுக்கு?


எத்தனை வகை மாலைகள் உள்ளனவோ
அத்தனையையும் தொடுத்து அளித்தான்.
அண்ணலின் பெயர் சண்பக சுந்தரன் எனவும்
மன்னனின் பெயர் சண்பக மாறன் என்றானது!


இளவேனில் காலத்தில் சுகமான அனுபவம்!
மலர் வனத்தில் தன் மனைவியுடன் ஏகாந்தம்.
சண்பக வனத்தில் இருந்தனர் தனிமையில்
சண்பக மாறனும், அவன் பட்டத்து ராணியும்.


தென்றலில் கலந்து வீசியது அங்கு
முன் கண்டிராத ஒரு புது நறுமணம்!
மலர்மணத்தை அறிந்த மன்னனாலும்
நவமணத்தை இனம் காண இயலவில்லை!


கேள்விக்குறியுடன் தேவியை நோக்க,
கேள்விக்குரிய மணம் அவளிடமிருந்தே!
எங்கிருந்து வருகின்றது என்று ஆராய்ந்தான்!
பொங்கும் நறுமணம் அவள் கூந்தலில் இருந்தே!


அடுத்து அராய்ச்சி செய்தான் – கூந்தல்
விடுத்த மணம் இயற்கையா? செயற்கையா?
தொடுக்கும் கேள்விக்கணைகளுக்கு விடை
கொடுக்கவல்லவர் யாரோ தெரியவில்லை!


“மனத்தில் நிலவும் மருட்சியை உணர்ந்து,
இனிக்கும் செய்யுளால் ஐயம் தீர்க்கும்
கவிக்குப் பரிசு பொற்கிழி ஒன்றுண்டு!
கவின் மிகு ஆயிரம் பொற்காசுகளுடன்!”


சங்க மண்டபத்துக்கு கொண்டு சென்று
அங்கு தொங்கவிட்டனர் அப்பொற்கிழியை!
மன்னன் மனதின் ஐயம் என்னவோ என
நன்கு ஆராய்ந்தது சங்கப்புலவர் குழாம்.


பாராளும் மன்னன் மனத்தில் ஐயங்கள்
ஏராளமாக எழ வாய்ப்புக்கள் உள்ளனவே!
யாராலும் காண முடியவில்லை அன்று
தாராளமான பரிசை வெல்லும் வழியை.


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


# 52 (a). THE POEM CONTEST.


Vangiya Choodaamani succeeded Vangiya Sekara Paandian as the new king. He was a sincere devotee of Lord Siva.


He maintained a beautiful garden which yielded fresh flowers for the tri kaala pooja of Lord Siva. Fresh flowers adorned the Lord, in the morning, noon and evening.

The king was particularly fond of the golden hued shanbaga flowers. They looked so good on the Lord.

He would get all the different kinds of garlands made with those flowers and worship the Lord.
Now the name of the God became Shanbaga Sundaresar and the name of the king became Shanbaga Maaran.

It was spring season. The king and queen were seated in the shanbaga vanam – spreading its fragrance. The king could smell another fragrance which was quite new to him. He wondered where it came from and what it was?


He then realized that it was emanating from the hair of the queen. His next doubt was this! Was it natural or artificial?


He could not come to any conclusion. He announced a contest. Any one who could find out the question bothering his mind and clear his doubt in the form of a poem would be awarded a bag of one thousand gold coins.


No one could guess the question bothering the king’s mind since he had a hundred different things to worry about.


The prize money was hung in the sanga mandapam, where the sanga poets resided.


 
bhagavathy bhaagavatam - skanda 8

8#10b. குரு வர்ஷம்


இருப்பார் குருவர்ஷத்தில் ஆதி வராஹர்
உருவத்தில் அனைத்துமாகிய பகவான்.

பூஜிப்பாள் பக்தியுடன் வராஹ மூர்த்தியைப்
பூதேவி துதிகளினால் தோத்திரம் செய்தபடி.

“முக்குணங்களினால் நிரம்பிய கடலினை
மனம் என்ற மத்தினால் கடைந்தவர்

அடைவர் உமது சாக்ஷாத்காரத்தை!
அத்தகைய பகவானுக்கு நமஸ்காரம்!

எவர் மாயையால் ஆக்கம் ஏற்படுமோ;
எவர் மாயையால் அழிவு ஏற்படுமோ;

எவர் மாயைக்கே ஆதாரமாக உள்ளாரோ;
எவர் முக்குணச் செயலுக்குச் சாட்சியோ;

அந்த பகவானுக்கு என்னுடைய நமஸ்காரம்!
அந்தகாரத்தில் அமிழ்ந்து கிடந்த என்னைக்

கோர அசுரனைக் கொன்று விட்டுத் தன் வலிய
கோரைப் பற்களால் மீட்டவருக்கு நமஸ்காரம்!”

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

8#10b. Kuru varsham

in Kuru Varsham, Bhagavn would be in the form of Aadhi VarAha Moorthi.
Bhoomi DEvi would worship Aadi VarAha Moorti with many sweet sthotrAs.

“He who churns the ocean filled with the three GuNAs (RAjasa, TAmasa and Satva) with the churner called The Mind is sure to get your sAkshAtkAram and darshan. I pay my obeisance to you oh Baghavan!

He whose MAyA creates the world; He whose MAyA destroys the world, He who is the supporter of the all powerful MAyA; He who is the eternal witness for various actions performed by the three GunAs; to Him I pay my obeisance.

I was hidden in the dark deep water by HiraNYAkshan. My namaskArams to Him who killed the wicked asura and brought me out safely by placing me on his strong, lovely and curved tusks.”

 
bhagavathy bhaagavatam- skanda 3

3#4a. புவனேஸ்வரி

“நமஸ்கரிப்போம் தேவியை அருகில் சென்று
நாம் மூவரும்!” என்றார் விஷ்ணு மூர்த்தி.


சக்தி பீடத்தின் அருகே சென்றது விமானம்;
சக்தி பீடத்திலிருந்து எழுந்து வந்தாள் தேவி.


ஆண்களின் அண்மையால் நாணமுற்றாள்;
பெண்களாக மாற்றிவிட்டாள் மூவரையும்!


அதிசயமான ஆடை ஆபரணங்களுடன்
அழகிகளாகி விட்டனர் மும்மூர்த்திகள்.


“கலக்கம் இன்றிச் சென்றோம் அருகே,
கருணை பொழிந்தது கண் பார்வை!


தோழியர் புடை சூழ்ந்திருந்தனர் தேவியை;
தோழியர் உடைகள் பலவேறு நிறங்களில்!


இசைவாகச் செய்தனர் பணிவிடைகள்;
இசைத்தனர் இன்னிசை, ஆடினர் நடனம்.


நமஸ்கரித்தோம் அழகிய திருப் பாதங்களை;
நவரத்தினம் பதித்திருந்த பொற் பாதுகைகளை.


நகங்கள் பிரகாசித்தன கண்ணாடியைப் போல!
நகங்களின் நடுவே கண்டோம் அற்புதங்களை!


பிரம்மாண்டம், அஷ்ட திக்பாலகர்கள்,
பிரம்மன் ஆதி தேவர்கள், அப்ஸரஸ்கள்


அசுரர், கந்தர்வர், மஹரிஷிகள்,
அஸ்வினி குமாரர்கள், சித்தர், நாகர்,


அஷ்ட வசுக்கள், மலைகள், கடல்கள்,
சத்யலோகம், வைகுண்டம், கைலாசம்,


மலர்ந்த தாமரையை, என்னை, நாரணனை,
மது கைடபர் போன்றவற்றைக் கண்டோம்


பாங்கியர் என்று அங்கிருந்த தோழியர்
பழகினர் எங்களுடன் மிகவும் நெருங்கி!


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


3#4a. Bhuvaneswari


VishNu said, “Let us go near Devi and pay our respect.” The vimAnam went near Shakti peetam. Devi got up from her peetam.


She felt shy by the proximity of the three male gods – The Trinity – and immediately changed them into three young women. The Trinity got turned into three beautiful women wearing suitable dresses and ornaments.


Now the Trinity went near to Devi without feeling ill at ease. She showered her grace through her glance. The maidens attending on Devi were dressed in various hues. They served her with care. They played sweet music and also danced to her very gracefully.


The Trinity worshiped Devi’s feet. Devi was wearing gold slippers decorated with the nine precious gems. Her toe nails shone like clean mirrors. The trinity saw many wonders in those toe nails of Devi.


They saw The Universe, Ashta dik pAlakas, Devas, Apsaras, asuras, gandarvas, rusis, Aswini devatAs, Siddhas, NAgAs, Ashtavasus, mountains, oceans, Vaikuntam, Sathya lokam, KailAsam, the lotus on which Brahma sits, Brahma, Vishnu Madhu and Kaitaban.


The attendants of Devi thought that the Trinity – now turned into women – were real women and moved with them very freely.



 
kandha purANam - por puri kANdam

3c. வீரவாகுத் தேவர்

நாரத முனிவர் நவின்ற சொற்களை
மாறாத நகையுடன் கேட்ட முருகன்;


வீரவாகுத் தேவரை அழைத்தான்!
சூரபத்மன் மகன் பற்றிக் கூறி விட்டு,


“நூறாயிரத்து எட்டு மள்ளர்களுடனும்
ஓராயிரம் வெள்ளம் பூதப் படையுடன்


அவுணர்களைப் போரில் வென்று நீ
அவனியை மகிழ்விக்கச் செல்வாய்!”


முருகனிடம் விடைபெற்றார் வீரவாகு!
மேருவை நிகர்த்த வில்லை ஏந்தினார்.


அணிந்தார் அழகிய உடல் மூடியை.
அணிந்தார் முதுகில் அம்பறாத் துணி.


பூத மள்ளர்கள் புடை சூழ்ந்தனர்.
பூதத் தலைவர்கள் படை நடத்தினர்.


பூத மள்ளர்கள் ஆற்றல் மிக்கவர்கள்!
பூவுலகைத் தோளில் தாங்க வல்லவர்!


கூற்றுவனை வெல்லும் ஆற்றலும்,
மற்றும் சிவந்த சடையும் உடையவர்.


படைக்கலங்கள் இலங்கும் கையினர்.
படை நடப்பதில் விருப்பம் உள்ளவர்கள்.


மாயங்களில் கற்றுத் தேர்ந்தவர்கள்
ஆயாசம் இன்றிப் போர் செய்பவர்கள்.


போர்க்கருவிகள் இசைத்து முழங்க
போர்க்களத்தை நோக்கி நடந்தனர்.


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


4#3c. VeerabAhu.


Murugan listened to the words of NArada with a smile. He called VeerabAhu and told him, “Take with you 100,008 soldiers and one thousand veLLam of demons to vanquish BhAnukoban in today’s war!”


VeerabAhu got ready for the war. His huge bow resembled Mount Meru. He wore his protective armor. He fixed on his back his quiver filled with arrows. The demon army surrounded him in order to go with him to the war front.


The army consisted of very strong warriors. Each of them could lift the earth on his shoulder. Each of them could conquer even Yama. They were red haired and bore various arms and astrams. They were experts in Maya techniques. They all marched to the beat of the war drums towards the battle field.


 
The 64 Thiru ViLaiyAdalgaL

52b. செய்யுளும், பரிசும்.

# 52 (b). செய்யுளும், பரிசும்.

ஆதி சைவக் குலத்தில் பிறந்தவன்,
அநாதை, பிரம்மச்சாரி, ஏழை மாணவன்;
தருமி என்னும் பெயர் படைத்தவன் – அவன்
கருமித்தனத்தால் திருமணம் நிகழவில்லை.

“இறைப்பணி செய்வதற்கேனும் எனக்கு
இல்லாள் ஒருத்தி தேவை அய்யனே!
சிறந்த பரிசால் நிகழும் திருமணம்,
பிறகு பாதசேவையே எம் தொழில்!”

தருமியின் குரல் கேட்டு இரங்கினான் – தன்
தருமம் தவறாத சர்வஜீவ தயாபரன் சிவன்;
பொருள் வென்று பெருமையுடன் வாழக்
கருவியாகிய ஒரு செய்யுளை அளித்தான்!

“கொங்குதேர் வாழ்க்கையஞ்சிறைத் தும்பி
காமஞ்செப்பாது கண்டது மொழிமே.
பயிலியது கேழீயே நடப்பின் மயிலியற்
செறி யெறிற் றரிவை கூந்தலி
னறியவு முளவோ நீ அறியும் பூவே!”

ஐயம் தீர்த்து பரிசினை வழங்க வல்ல
செய்யுளைப் பெற்றான் ஐயனிடம் தருமி;
தங்க வேட்டையில் இறங்கியவன் விரைந்து
சங்க மண்டபத்தைச் சென்று அடைந்தான்.

புலவர்களிடையே நிலவிய கருத்து இது!
“உலகிலேயே சிறந்த கவிதை இது தான்!
அமைப்பு, சொல் நயம், பொருள் நயம்,
அமைந்த இதுவே பரிசுக்கு உரியது!”

தன் மனக் கருத்தினைச் சரியாகக் கணித்துத்
தன் மனக் குழப்பத்தைப் போக்கிய தருமிக்குத்
தந்தான் அரசன் எடுத்துக் கொள்ள அனுமதி
சங்கமண்டபத்தின் முன் தொங்கும் பொற்கிழி.

நற்றமிழ் கவிஞன் நக்கீரன் தடுத்தான்;
“பொற்கிழிக்கு உகந்த கவிதை இதுவல்ல!
சொற்குற்றம் இல்லாது போனாலும் இதில்
பொருட்குற்றம் நிறைந்து உள்ள காரணத்தால்!”

“கைக்கு எட்டியது போலத் தோன்றியது!
வாய்க்கு எட்டவில்லை ஐயகோ என் தீவினை!
தேவரீர் இயற்றிய கவிதையில் குற்றம்
கேவலம் மனிதன் எடுத்துக் கூறலாமா?”

தருமியின் கண்ணீருக்கு மனம் இளகி
ஒரு நொடியில் வெளிப்பட்டார் சிவன்;
புலவர் வடிவில் வெளிப்போந்தார் அவர்!
உலகிலேயே சிறந்த தமிழ்ப் புலவர்!

குண்டலம், மகர கண்டிகை, பதக்கம்,
வெண்ணீறு, மோதிரங்கள், பாதுகைகள்,
வெண் சாமரம், பட்டாடை, முத்துக்குடை,
உண்மைச் சீடர்களின் குழாம் புடை சூழ!

எங்கும் தங்கவில்லை இடையில் அவர்கள்!
சங்க மண்டபத்தைச் சேர்ந்து அடைந்தனர்.
அங்கிருந்த புலவர்கள் அதிசயித்து நிற்க,
இங்கிருந்து சென்ற புலவர் பேசலுற்றார்!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

# 52 (B). THE PRIZE WINNING POEM.

Tarumi was a Saivite. He was an orphan and a very poor brahmachaari. He wished to get married to a suitable girl but his poverty blocked all his marriage prospects. He wished with all his heart that he should win the prize money, get married and settle down in life. He prayed to God to make him win in the contest.

Siva was moved to pity. He decided to help Tarumi win the prize money. He produced an exquisite Tamil poem which cleared the king’s doubts. Tarumi as overjoyed and ran to the sanga mandapam with the poem. The verdict of the poets was unanimous. This was the prize wining poem. It had depth of meaning and beauty of words!

The king was overwhelmed that someone could actually guess his doubt and clear it so well. He ordered Tarumi to take possession of the prize money.

Nakkeeran stopped Tarumi and told him that the poem was not worth winning the prize. It had certain defects.
Tarumi was in tears. “How true it is that there is many a slip between the cup and the lip!”
He told the Lord,” How can a mere mortal find fault with your poem?”

The lord emerged as a great Tamil poet. He wore the ornaments and the dress worn by the great poets of that time. He had a group of disciples. Together they went to the sanga mandpam.

 
bhagavathy bhaagavatam - skanda 8

8#10c. கிம்புருஷம்

இருப்பார் பகவான் ஸ்ரீ ராமச்சந்திரனின்
உருவத்தில் கிம்புருஷம் வர்ஷம்த்தில்.


ஆராதிப்பார் அனுமன் ராமச்சந்திரனை,
அமுதனைய இன்மொழிகளால் துதித்து.


“சாந்தராகவும், விஸ்வாத்மாவாகவும்,
செருக்கற்றும் உள்ள உமக்கு நமஸ்காரம்.


அவதரித்தீர் மனித உருவில் உலகினில்
அரக்கர் குலத்தை வேருடன் அழித்திட!


அவதரித்தீர் மனித உருவில் உலகினில்
அனைவருக்கும் ஒழுக்கத்தை போதித்திட!


உற்றவர் ஆவீர் நீர் ஆத்ம ஞானியருக்கு;
மற்றும் இறை வடிவமாக இருப்பவர் நீர்!


துயரம் உண்டாகுமா உமக்கும் சீதைக்கும்?
துக்கம் உண்டாகுமா பெண்ணால் உமக்கு ?


வசப்படுவீர் நீர் தியான யோகத்துக்கு – ஆனால்
வசப்பட மாட்டீர் நீர் வாக்குக்கும், மனத்துக்கும்.


சத்திய சீலரே! திட விரதம் கொண்டவரே!
கமலக் கண்கள் கொண்டுள்ள பேரழகரே!


போற்றி வழிபடுகின்ற அனைவரும் – நற்
பேற்றினை அடைவது உமது அருளால்!”


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


8#10c. Kimpurusham


In Kimpurusha Varsham, BhagavAn would be in the form of Sree RAmachandran. HanumAn would worship Sree RAmachandran with many sweet words in this manner.


” You are the ViswAtmA! You are the personification of s’Antha bhAvam. You are completely devoid of any pride.


You have taken the avatar as a human being, to rid the world of the wicked asurAs. You have taken the avatar as human being to teach the world the good moral principles.


You are very close to the Aatma JnAni. You are the God in human form. Is it possible that you and SeetA Devi would suffer sorrows? Is it possible that a woman can cause you sorrow?


You are beyond the words and the mind. But you can be realized through the DhyAna YOgam! You are sworn to sathyam. You have taken up a hard vratam!


You have the loveliest eyes of the color and shape of luminous lotus petals. Those who worship BhagavAn attain their heart’s desires fulfilled merely because of your grace and mercy.”



 
bhagavathy bhaagavatam - skanda 3


3#4b. விஷ்ணுவின் துதி

“நமஸ்காரம் தேவி! உனக்கு நமஸ்காரம்!
நமஸ்காரம் மூலப்பிரகிருதியான உனக்கு!

நமஸ்காரம் சிருஷ்டியின் காரணமாகிய உனக்கு!
நமஸ்காரம் மனோபீஷ்டத்தைத் தரும் உனக்கு!

நமஸ்காரம் எல்லாவற்றிலும் கலந்துள்ள உனக்கு!
நமஸ்காரம் இதயத் தாமரையில் வசிக்கும் உனக்கு!

உன்னிடம் உள்ளன உலகங்கள் யாவையும்!
உன்னிடம் உள்ளன சிருஷ்டி, ஸ்திதி, லயம்!

உன் திருவுருவம் ஆனந்தம் தருவதற்கு!
உன் பிரபாவம் மகிழ்ச்சியைத் தருவதற்கு!

உன் ஒளியால் ஒளிர்கின்றது உலகம்,
உன்னால் அடைய முடியும் எதையும்!

நிறைந்துள்ளாய் அனைத்துப் பொருட்களிலும்!
நினைத்திருந்தோம் மும்மூர்த்திகள் யாமென்று.

காட்டினாய் மூவுலகங்களை, மும்மூர்த்திகளை!
நடத்துகின்றாய் முத்தொழில்களை இச்சைப்படி!

சுதந்திரமாக எதையும் செய்வதற்குச் சிறிதும்
சக்தியற்றவர் என்று உணர்ந்து கொண்டோம்.

மேதினியை பூமித் தாய் தாங்குவது உன்னால்!
ஆதவன் விண்ணில் ஒளிர்வது உன் சக்தியால்!

நித்தியை என்பவள் நீ ஒருத்தி மட்டுமே!
சத்தியமாகக் காலவசப்பட்டவர் மற்றவர்!

நீயே அறிவாளியின் அறிவு! நீயே பலவானின் பலம்!
நீயே கீர்த்திமானின் கீர்த்தி! நீயே தனவானின் தனம்!

நீயே போகியின் ஆனந்தம்! நீயே யோகியின் தவம்!
நீயே முமுக்ஷுவின் மோக்ஷம்! நீயே ரிஷியின் தவம்!

நீயே மந்திர ஸ்வரூபிணி! நீயே பிரம்ம காயத்ரி !
நீயே தருவாய் ஜீவ பாவமும், சிவ பாவமும்!

நீயே படைப்பவள், நீயே விடுதலை கொடுப்பவள்.
நீயே இச்சாசக்தி, ஞானசக்தி, நீயே க்ரியாசக்தி!

அகண்ட ஞானத்தைத் தருவாய் தேவி!”
அன்புடன் துதித்தார் விஷ்ணு மூர்த்தி.

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

3#4b. VishNu’s sthuthi

“NamskAr Oh Devi! NamaskAr to you! You are the Moola Prakruti – The Mother Nature! You are the Srushti KartA – The creator. You fulfill all our desires. You are
present in everything seen.

You reside in the hearts of all jeevAs. All the worlds reside in you. You control the Srushti, Sthiti and Layam – the Creation, Sustenance and Destruction respectively. Your roopam (form) gives us happiness and your grace gives us satisfaction.

The world shines with your luminescence. Only you can achieve anything. We thought we were The Trinity. But you showed us the three worlds and The Trinity living in them.

You have the freedom to do things the way you want to. No one else has that freedom of choice. The world is supported by your strength. The Sun shines with your energy. You are the only permanent being. Everything and everyone else is under the influence of the Time Factor.

You are the intellect of the intelligent, the strength of the strong, the fame of the famous and the riches of the rich. You are the pleasures enjoyed by the worldly people and the penance performed by the yogi. You are the liberation of the mumukshu and the tapas of the tapasvi.

You are the Mantra Swaroopini. You are the Brahma GAyatri. You give people the jeeva bhAva and the Siva bhAva. You are the one who creates and binds everyone in bondage. You are the one who liberates everyone from the bondage.

You are the ichchA shakti, jnAna shakti and kriyA shakti. Give us the complete knowledge and wisdom oh Devi!” Vishnu prayed to Devi.

 
kandha purANam - por puri kANdam

3d. போர் துவங்கியது!

தூதனாக அன்று வந்து திரும்பிய வீரவாகு
பூதப் படைகளுடன் இன்று போர்க்களத்தில்!


பானுகோபன் நெருங்கினான் படையுடன்;
கனைத்தனர் அவுணர்கள் பூதர்கள் முன்பு.


போர் மூண்டது இரு படைகள் இடையே!
தேர்கள் அழித்து ஒழித்தன பிற தேர்களை!


கரிகள் அழித்து ஒழித்தன பிற கரிகளை.
பரிகள் அழித்து ஒழித்தன பிற பரிகளை.


சிங்கன் கொன்றான் அவுணன் அனலியை.
சிங்கன் கொன்றான் பிறகு சண்டனை.


பானுகோபன் எதிர்த்தான் பூதங்களை!
பானுகோபன் எதிர்த்தான் உக்கிரனை!


பானுகோபன் எதிர்த்தான் நூற்று எண்மரை!
பானுகோபன் எதிர்த்தான் வீரகேசரியை!


பானுகோபன் எதிர்த்தான் வீர மார்தாண்டரை!
பானுகோபன் எதிர்த்தான் வீர ராக்கதரை!


பானுகோபன் எதிர்த்தான் வீராந்தகரை!
பானுகோபன் எதிர்த்தான் வீரவாகுவை!


மோகக்கணை செலுத்தினான் பானுகோபன்.
மோகக்கணை அழித்தது பூத உணர்வுகளை!


அமோகக் கணையை உருவாக்கினான் முருகன்.
அமோகக்கணை அழித்தது மோகக்கணையை.


மோகப்படையின் ஆற்றல் அழிந்ததும்
மோகத்தினின்றும் மீண்டது பூதப் படை.


சிவப் படைக்கலத்தை எடுத்தான் முருகன்;
எவரும் அறியாது மறைந்தான் பானுகோபன்.


கதிரவன் மேற்கில் விழுந்து மறைந்தான்!
பூதப் படை திரும்பியது அதன் பாசறைக்கு.


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


4#3d. The war began.


BhAnukoban noticed that VeerabAhu who had earlier visited as the messenger of Murugan was now in the battle field. The two armies moved in closer. The war began. Chariots fought chariots; elephants fought elephants and horsemen fought horsemen.


Singan killed Anali and ChaNdan. BhAnukoban fought valaintly with the army of demons, with Ugran, with the 108 generals and with the Nava Shakthi KumAras.


He shot the MOha astram which sent the entire army of Murugan into delusion. Murugan shot the Amoha astram which nullified the effects of the Moha asthram. The demons in the army came back to their senses.


Murugan wanted to shoot the PAsupada astram of Lord Siva. It was truly invincible. BhAnukoban who knew this truth just disappeared from the battle field unseen by any one there. The Sun set in the west and the army of demons returned to its camp.


 
The 64 Thiru viLaiyAdalgaL

52c. “குற்றம் குற்றமே!”

# 52 (c). “குற்றம் குற்றமே!”

“சங்கப் புலவர்களே! என்னிடம் கூறும்!
இங்கு கவிதையில் குற்றம் கண்டவர் யார்?”

அஞ்சாமல் முன் வந்தார் புலவர் நக்கீரர்;
நெஞ்சை நிமிர்த்திச் சொன்னார், “நானே தான்!”

“என்ன குற்றம் கண்டு விட்டீர் ஐயா
இந்தச் செந்தமிழ்க் கவிதையில் நீர்?”

“சொற்குற்றம் ஏதும் இல்லை எனினும்
பொருட்குற்றம் நிறைந்துள்ளது அதில்!”

“அந்தப் பொருட் குற்றம் தான் என்னவோ?
இந்தப் புலவர்களுக்கும் எடுத்துக் கூறலாமே!”

“பெண்களின் கூந்தலுக்கு இல்லை இயற்கை மணம்!
பெண்களின் கூந்தல் மணம் பெறுவது மலர்களால்!”

“எந்தப் பெண்ணின் கூந்தலுக்கும் நீர் கூறும்
இந்த விதி பொருந்தும் என்கின்றீரா சொல்லும்?”

“எந்தப் பெண்ணாக இருந்தாலும் சரியே!
இந்த விதிமுறையில் மாற்றம் ஏதுமில்லை!”

“நன்கு சிந்தித்துப் பின் பதில் கூறும்!
நல்ல பத்மினி ஜாதிப் பெண்களுக்கு?”

“பத்மனி ஜாதிப் பெண்கள் கூந்தல் மணமும்
உத்தமமான மலர்களை அணிவதாலேயே!”

“தேவ மகளிரின் தெய்வீகக் கூந்தலின்
தேவ மணமும் கூட அதைப் போலவா?”

“தேவ மகளிரின் கூந்தல் மணமும்
தெய்வீக மலர்கள் சூடுவதாலேயே!”

“மோனக் காளத்திநாதரின் சக்தியாகிய
ஞானப் பூங்கோதையின் கூந்தல் மணம்?”

“அம்மையின் கூந்தல் நறுமணம் கூடச்
செம்மையான மலர்களை அணிவதாலே!”

சினம் மேலிட்டுவிட்ட சிவன் பேசவில்லை!
சிறிதே நெற்றிக் கண்ணை திறந்து மூடினார்!

“நெற்றிக் கண்ணைக் காட்டினாலும் உம்
குற்றம் குற்றமே!” எனச் சாதித்தார் நக்கீரர்.

மூன்றாவது கண்ணைத் திறந்தார் ஐயன்!
முன் பாய்ந்து சென்றது செந்தழல் வெப்பம்!

வெப்பத்தைத் தாள மாட்டாத நக்கீரர்,
பொற்றாமரைக் குளத்தில் வீழ்ந்தார்!

ஐயனும் சீடர்களும் மறைந்து சென்றனர்.
செய்வதறியாமல் அனைவரும் திகைத்தனர்.

நீரில் மூழ்கிய நக்கீரனின் நிலைமை,
யாருக்குமே தெரியவில்லை அங்கு!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

# 52 (C). “A MISTAKE IS A MISTAKE!”

The Siva turned poet spoke,”Dear Sanga poets! Which of you found fault with this man’s poem?”

Nakkeeran said undaunted,”It is me!”

Siva asked, “What is the defect you have found in his poem?”

Nakkeeran said, “The words are not defective but the idea conveyed by it is defective!”

Siva: “Can you point out the defect to the benefit of everyone here?”

Nakkeeran: “There is no natural fragrance in ladies’ hair. They attain fragrance from the flowers worn by them”

Siva: “Is it the rule governing all women?”

Nakkeeran: “Yes! There is no exception to this rule!”

Siva: “Think well before you reply! What about the Padmini type women?”

Nakkeeran: “They too get the fragrance from the flowers worn by them”

Siva: “What about the women in Heaven?”

Nakkeeran: “It is the same with them too”

Siva: “What about the consort of Siva you worship?”

Nakkeeran: “It is the same even with Shakti Devi!”

Siva became very angry and opened his fiery third eye slightly.

Nakkeeran said, “Even if you threaten me by opening your third eye, I standby my opinion!”

Siva opened his third eye. The red heat flashing out of it was too much for Nakkeeran to bear.

He jumped into the Lotus pond and did not surface again! The angry poet left with all his disciples. No one knew the real fate of Nakkeeran!

 
bhagavathy bhaagavatam - skanda 8

8#11a. பாரத வர்ஷம்

“துதிக்கப்படுகின்றேன் நான் பாரத வர்ஷத்தில்
ஆதிபகவனாக இருந்து கொண்டு, நாரதனால்!”

“சம்பந்தம் இல்லை நீர் படைத்த உலகங்களுடன்!
சம்பந்தம் இல்லை, நீர் இருந்த ஓர் உடலுடன்.

உள்ளன விழிகள்; ஆயினும் இல்லை விழிகள்;
உள்ளன குணங்கள்; ஆயினும் இல்லை நிந்தனை.

இறுதிக் காலத்தில் நிறைந்த பக்தி செய்பவன்
உறுதியாக அடைவான் உம் உலகத்தினை!

இக, பரத்தில் விருப்பம் உடையவன் – தன்
இல்லம், இல்லாள் பற்றிக் கவலை கொள்பவன்.

முயற்சிகளில் அடைவான் முழுத் தோல்வி,
மயங்கிவிடுவான் அறியாமையில் மூழ்கி!

தூய பக்தி தருவீர் உமது திருவடிகளில்;
யோக மார்க்கத்தில் செலுத்துவீர் மனதை!”

துதிக்கின்றான் நாரதன் பாரத வர்ஷத்தில்
துதிக்கின்றன மலைகளும், நதிகளும் கூட.

இமயம், மங்களப் பிரஸ்தம், மைனாகம்,
திரிகூடம், ரிஷபம், கூடகம், ஸஹ்யம்,

தேவகிரி, ரிஷ்ய முகம், ஸ்ரீ சைலம், வேங்கடம்,
மஹேந்திரம், வாரிதாரம், விந்தியம், சூக்திமான்,

ரிக்ஸம், பாரியத்ரம், துரோணம், சித்ரகூடம்,
கோவர்த்தனம், ரைவதகம், கருபா, நீலம்,

கௌரமுகம், இந்திரகீலம், காமகிரி போன்ற
புண்ணிய பர்வதங்கள் பவ நாசினிகள் ஆகும்.

உண்டாகின்றன புண்ணிய நதிகள் இங்கு – அவை
துண்டாடுகின்றன வாக், மனோ காய பாவங்களை”

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

8#11a. BhArata Varsham .

“I am being worshiped by NAradA as Aadhi Bhagavan in BhArata varsham. NArada says,”You are not relating to the worlds created by you. You are not relating to the body – even while living in one. The eyes are there and yet there are no eyes. The three guNAs are there and yet there is no abuse of the guNAs.

Whoever does intense bhakti towards you reaches your world. The man who is immersed in the worldly affairs worries about his wife and home. He is defeated completely in his efforts. He will get deluded due to his utter ignorance. Give me pure and undiminished bhakti towards you. Put my mind in the path of yoga!”

Narada worships in Bharata varsha. Even many holy mountains and rivers worship God there.

Himalaya, Mangalaprastha, MainAka, Chitrakoota, Rishabha, Kootaka, Kolla, Sahya, Devagiri, Rishyamooka, S’ris’aila, Venkata, Mahendra, VAridhAra, Vindhya, S’uktimAn, Riksha, PAriyAtra, DroNa, Chitrakoota, Gobardhana, Raivataka, Kakubha, Neela, Gaurmukha, Indrakeela, KAmagiri and many other mountains, that cannot be numbered destroye the sins of the sinners.

 
bhagavathy bhaagavatam - skanda 3

3# 5. ருத்திரனின் துதி

துதித்து முடித்து விஷ்ணு பரவசம் அடையத்
துதிக்கத் தொடங்கினார் தேவியை ருத்திரர்.


“சங்கற்பத்தினால் தோற்றினாய் அயன், அரியை;
சற்குண ரூபமாகிய நீ என்னையும் தோற்றினாய்!


நீயே ஆவாய் பஞ்ச பூதங்களின் உருவம்;
நீயே ஆவாய் அந்தக் கரணங்களின் உருவம்;


அலங்காரம் செய்து கொள்பவள் நீயே!
ஆனந்தத்தை அனுபவிப்பவள் நீயே!


உலகை படைப்பது உனக்கு விளையாட்டே.
உலகின் சிருஷ்டியும் உனது கற்பனையே!


தந்தாய் பாத தரிசனம் பெண்களாக மாற்றி;
தரவில்லை அருவருப்புப் பெண்ணின் உடல்.


உபதேசிப்பாய் நவாக்ஷர மந்திரத்தை எனக்கு!
ஜபித்தேன் முன்பு, மறந்து விட்டேன் இப்போது!”


உபதேசித்தாள் நவாக்ஷரத்தை ருத்திரனுக்கு;
ஜபித்தார் நிஷ்டையில் பரமாத்ம ரூபத்தில்.


தேவியைத் துதித்துப் பூஜித்தான் பிரமனும்;
“வேதம் கூறுகிறது ‘ஏகமேவாத்வீதீயம்’ என.


அந்தத் தன்மை உடையவர் நீயா? சிவனா?
இருவரும் ஏகமா? த்வீதீயமா? உண்மை கூறு!


அறியேன் நான் நீ ஸ்திரீயா புருஷனா என.
அறிவு தந்து உதவுவாய் எனக்கு!” என்றான்.


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K . ராமன்


3#5. Rudran’s sthuthi


After VishNu finished praising Devi, Rudran started praising her. “You created
Brahma, Vishnu and me just by your sheer will and wish. You exist in the form of the pancha boothaas – the Five great elements. You are the four Anthah karaNas.


You are the one who gets decorated whenever anyone gets decorated. You are the one who enjoys all the pleasures – whenever anyone enjoys a pleasure.


The creation of the world is a child’s play for you. The creation of the world is purely out of your imagination. You changed us into women and gave us a glimpse of your feet (your pAda dharshan).


But I do not find the body of a woman repulsive. I want to know the NavAkshara mantra. I used to chant it previously but now I have forgotten it completely.”


Devi did the upadesam of NavAkshara mantra to Rudran. He started chanting it. Brahma praised Devi now.


“VedAs say ‘Ekame vaa dwitheeyam!” Is it you or Siva who has this quality? I do not know whether you two are one and the same or two different beings! Tell me the truth, are you a female or a male? Please enlighten me with true knowledge oh Devi!”


Please Note:


Pancha Bootha means the 5 great elements:- Earth, Water, Fire, Air and Space.


In VEdAntic literature, this antahkaraNas (internal organs) form four parts:


AhamkAra (Ego) :–
This identifies the Atman (Self) with the body as ‘I’


Buddhi (Intellect) :–
This controls decision making


Manas (Mind) :–
This controls Sankalpa (will or resolution)


Chitta (Memory) :–
This deals with the remembering or the forgetting



 
kandha purANam - por puri kANdam

3e. வீரமகேந்திரபுரி

புறமுதுகு இட்டு ஓடிய பானுகோபன்
பெருமையையும் இழந்து விட்டான்.


சூரபத்மனிடம் திரும்பவும் இல்லை.
ஆர அமர்ந்து களிக்கவும் இல்லை.


ஓரிடத்தில் அமர்ந்து ஆலோசித்தான்
வீரபாகுவை வெல்லுகின்ற வழிகளை.


ஒற்றர்கள் கண்டனர் நிகழ்ச்சிகளை!
கொற்றவனிடம் சென்று விண்டனர்.


பகைவரை வெல்லாமல் மகன் ஓடியது
திகைப்பை அளித்தது சூரபத்மனுக்கு.


“புறமுதுகிட்டு ஓடியவனைப் போருக்கு
மறுபடி அனுப்புவதில் பயன் இல்லை.


சுற்றத்தினரும், மற்றவர்களும் நன்கு
கற்றுக் கொண்டனர் பிழைக்கும் வழி!


நாளை படையுடன் சென்று போரில்
நானே வெற்றி கொண்டு மீள்வேன்.”


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


4#3e. Veera Mahendrapuri.


After running away from the battle field unseen by any one, BhAnukoban felt ashamed of himself. He did not go back to his father, nor could he enjoy as he usually did. He sat alone and was wondering as to how to conquer VeerabAhu.


The messengers who were watching these events and rushed to report them to their king. Soorapadman was shocked to learn that his son had run away from the battle field and hid himself.


He thought to himself, “There is no point in sending to the war front my son who ran way from the war front. People seem to have learned all the tricks needed to save their skin. I myself will go to the war front to fight with Murugan and VeerabAhu and conquer them”.




 
The 64 Thiru ViLaiyAdalgaL

53a. கீரனைக் கரை சேர்த்தது.

# 53.(a). கீரனைக் கரை சேர்த்தது.

“நெற்றிக் கண்ணைத் திறந்தாலும் – உம்
குற்றம் குற்றமே!” என வாதிட்டுச் சிவன்


நெற்றிக் கண் சுவாலையால் தாக்கப்பட்டு,
பொற்றாமரைக் குளத்தில் விழுந்தான் நக்கீரன்.


வீழ்ந்த நக்கீரன் வெளியே வரவில்லை!
ஆழ்ந்த கவலையில் அருமை நண்பர்கள்!


“என்ன ஆயிற்று நீரில் விழுந்தவனுக்கு?
இன்னமும் உயிரோடு தான் உள்ளானா?”


கீரன் இல்லாத புலவர்கள் சங்கம்
மாறன் இல்லாத நாட்டுக்குச் சமம்!


ஞானம் இல்லாத் கல்விக்குச் சமம்!
மானம் இல்லாத மங்கைக்குச் சமம்!


வாது புரிந்தது பிழையோ அல்லவோ!
வாதிடுபவர் சிவன் என்றறிந்த பின்னர்;


வாதத்தைக் கீரன் நிறுத்தி இருக்கலாம்-அப
வாதத்தை அவன் தவிர்த்திருக்கலாம்!


கயிலையைப் பெயர்த்த ராவணன் கர்வத்தைக்
கால் கட்டைவிரல் அழுத்தத்தால் அழிந்தவர்;


பயிலும் வீணை இசையில் மயங்கியதால்
பரிசாக அளித்தார் பின்னர் வாளும், தேரும்!


ஈசன் மனம் வைத்தால் எதுவும் நடக்கும்!
பூசனை செய்யும் அன்பரைக் கைவிடான்!


பாசமிகு நண்பன் உயிர் காக்க வேண்டி
நேசமிகு ஈசனைப் பூசனை செய்தனர்.


“தாயும் ஆகிவந்த தயாபரன் நீயே!
தந்தையாக உலகைக் காப்பவன் நீயே!


வித்யா கர்வத்தின் மிகுதியால் கீரன்
விதண்டாவாதம் செய்யத் துணிந்தான்.


தண்டனையும் பெற்றுவிட்டான்- தன்
தவற்றையும் கீரன் உணர்ந்திருப்பான்!


விண்ணப்பிக்கின்றோம் உம் திருவடிகளில்!
தண்ணருள் பொழிந்து நண்பனைக் காப்பீர்!”


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


# 53 (a). KEERAN IS SAVED!


Even after realizing that it was Lord Siva himself who had come in the disguise of Tamil poet, Keeran continued to argue with Him!


He was scorched by the red hot fire emitted by the third eye of Siva and fell into the Lotus Pond! He did not emerge from the water. All his friends got worried about his safety and well being.


The Tamil Sangam without Keeran would be like a country without a king, a learning without wisdom and a woman without virtue.


It was wrong on the part of Keeran to continue to argue and make Siva angry. When Ravana tried to displace Mount Kailash, Siva shattered his ego and pride by the pressure applied by his single toe.


But when Ravana played enchanting music on veena, Lord was well pleased with him and gifted him with a sword and a chariot.


If Siva could be moved to pity, Keeran could still be saved! All the poets gathered together and prayed to Siva to save the life of Keeran,


“You are the Thaayum Aanavan! You are the father of creation. Keeran argued with you because of his vidhyaa garvam.


He has been duly punished by you. He has realized his folly. We pray for your mercy! Please save the life of our dear friend – even though he is at fault!”


 
bhagavathy bhaagavatm - skanda 8

8#11b. பாரத வர்ஷம் (2)

தாமிரபரணி, சந்திரவாசா, கிருதமாலா, வடோதகா,
வைகாயசி, காவேரி, வேணு, பயச்வினி, துங்கபத்ரா,

கிருஷ்ணவேணி, சர்க்கரா, வர்த்தகை, கோதாவரி
பீமாரதி, நிர்விந்த்ய, பயோஷ்ணிகா தாபி, ரேவா,

சுரஸா, நர்மதா, சரஸ்வதி, சர்மண்வதி
சிந்து, ரக்த சோணா, மகாநதீம், ரிஷிகுல்ய,

த்ரிசாமா, வேதச்ம்ருதி, கௌசிகை, யமுனை,
மந்தாகினி, தீரஷத்வதி, கோமதி, சரயு,

ஓகவதி, சப்தவதி, சுஸமா, சதத்ரு, சந்திரபாகா,
மருத்விரதா, விதஸ்தரா, அசிக்னி, விஸ்வா,

புண்ணிய நதிகள் பாய்கின்றன பாரதத்தில்;
புண்ணியம் செய்தவர்கள் பாரத வாசிகள்;

பண்ணுகின்றனர் தெய்வ தரிசனம் எளிதாக;
பண்ணுகின்றனர் கர்ண மாசனம் எளிதாக;

தானாக வந்து காட்சி தருகின்றான் விஷ்ணு!
நானும் விரும்புகின்றேன் பாரத்ததில் பிறக்க!”

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

8#11b. BhArata Varsham (2)

Hundreds and thousands of rivers issue from these mountains. Drinking their waters, bathing in them, visiting them and singing their praises completely destroy the sins of mind, word and body. The names of these holy rivers are

TAmraparNi, ChandravasA, KritamAlA,VatodakA, VaihAyasee, KAveri, VeNA, Payasvini, TungabhadrA, KrishNavENI, S’arkarA, VartakA, GodAvari, Bheemarathee, NirbindhyA, PayoshNikA, TApee, RevA, SurasA, NarmadA, Sarasvati, CharmaNvati, Indus, Andha, Sone, RishikulyA, TrisAmA, Vedasmriti, MahAnadi, Kaus’iki, YamunA, MandAkini, Drisadvati, Gomati, Sarayoo, Oghavati, Saptavati, SusamA, S’atadru, ChandrabhAgA, MarudbridhA, VitastA, Asikni and Vis’vA and many other rivers.

Those who are born in BhArata varsham are fortunate. They get the darshan of their favorite God very easily. VishNu gives his darshan voluntarily and willingly. I too wish to be born in BhArata varsham.”
 
bhagavathy bhaagavatam - skanda 3

3#6a. பராசக்தி

கூறினாள் பராசக்தி பதில்களை நாரதா!
கூறுவேன் உனக்கு அவற்றை நானும்!


“பரமசிவனும் நானும் ஒன்றே ஆவோம்;
பிரமை அடைந்தவர் காண்பர் வேறுபாடு.


ஏகமே வா த்வதீயம்’ ஆவது எங்கனம்?
ஏகமாக உள்ளது த்விதீயம் ஆவது எப்படி?


கண்ணாடிகளின் நடுவே வைத்த ஜோதி
இரண்டாகத் தெரிவது போலவே தான்.


எல்லாவற்றையும் அழிக்கும் காலத்தில்
எல்லாவற்றையும் கடந்து நிற்கும் என் உரு.


புருஷனோ, ஸ்தரீயோ, அலியோ அல்ல நான்!
பேதங்களாகப் பரிமளிப்பேன் படைப்பின் போது.


பயன் தருவேன் பேதங்களின் செயல் புரிந்து.
இயங்காது என்னிடமிருந்து பிரிந்த எதுவும்.


எல்லாப் பொருட்களும் நானே என்றறிவாய்
உள்ளேன் பல்வேறு சக்திகளின் ரூபமாக.


நீரில் குளிர்ச்சியாக! நெருப்பில் வெப்பமாக!
சூரியனின் ஒளியாக! நிலவின் குளுமையாக!


பலஹீனனைக் கூறுவார் 'சக்தி ஹீனன்' என்று
பயந்தவனைக் கூறுவார் 'அசக்தன்' என்று.


சக்தியின்றி செயல் புரிய இயலாது எவராலும்!
சக்தி அளித்துச் செயல் புரிய வைப்பவள் நானே.


நீர் அனைத்தையும் அருந்துவேன் விரும்பினால்!
நெருப்பை அணைப்பேன், காற்றை நிறுத்துவேன்!


மண்ணைக் காண்கையில் தெரியாது பானை!
மண்ணைக் காணாவிட்டால் தெரியும் பானை!


படைப்பைக் கண்டால் தெரியாது பரம்பொருள்.
படைப்புத் தெரியாது பரம்பொருள் தெரிந்தால்.”


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K . ராமன்


3#6a. ParA Shakti


“NArada! Devi replied to all my questions and I will tell you all the answers given by her” Brahma told NArada.


Devi said, “I and Siva are one and the same. Those who are deluded think of us two different entities. How does “Ekame vaa dwitheeyam” happen? It is just like placing a lamp in between two mirrors. One lamp will now appear as two different lamps now.


I am neither a woman, nor a man nor an eunuch. Only during creation I assume the various differences. Anything which gets separated from me can’t function. I am there in everything and everyone seen in this world.


I exhibit myself as different forms of energy in different things. I am the coldness of the water, I am the hotness of the fire, I am the light energy of the Sun and the cool luminescence of the Moon.


A person devoid of energy is called ‘bala-heenan’ and a person in fear is called as a ‘asakthan’. Nothing can be achieved without using some form of my energy.


I am the one who gives the various forms of energy to get things done. If I wish to, I can soak up all the water in the oceans. I can stop the flow of the wind and destroy the all destroying fire.


When you see the mud used in making a pot, you miss seeing the pot. When you see the pot you miss seeing the mud used making it. In the same way, when you see the creation you can’t see God and when you can see God you can’t see the creation.”



 
kandha purAnam - por puri kANdam

4a. சூரபத்மன் புறப்பாடு

கதிரவன் உதிக்கும் முன்பே எழுந்தான்;
அதியுற்சாகமாகத் தயாரானான் சூரன்.


“புறமுதுகிட்டு வந்த மகனைப் போருக்கு
மறுபடி அனுப்புவது நடவாத காரியம்!


நானே போருக்குச் சென்று வென்று
நாளை நகர் திரும்புவேன் களிப்புடன்!”


ஆயிரம் கோடி ஒற்றர்கள் சென்றனர்!
அவுண மறவர்களைத் திரட்டி வந்தனர்.


கணக்கற்ற அவுணர் வந்து சேர்ந்தனர்;
இணக்கமாகத் தலை நகரில் குழுமினர்.


உயர்ந்த மாளிகையிலிருந்து கண்டதும்
தளர்ந்த மன உறுதி வளர்ந்தது மீண்டும்!


போருக்குப் புறப்பட்டான் சூரபத்மன்;
மேருவை ஒத்த தன் தேரில் அமர்ந்தான்.


நால் வகைப் படைகளும் உடன் நடக்க
தூள் பறந்தது நடக்கும் காலடிகளால்!


அதிசூரனும், அசுரேந்த்ரனும் படை நடத்த
கதி கலங்க வைக்கும் அசுரப் படை நடந்தது.


தொண்டகம், துடி, பம்பை, முருடு,
தூரியம், கொம்பு, படகம், என்னும்


வாத்தியங்கள் ஒன்றாய் ஓங்கி முழங்கிட
“சாத்தியம் வெற்றி!” என்று தோன்றியது.


தேர்களின் ஒலியும், பரிகளின் ஒலியும்,
போர் முரசொலியும், கரிகளின் ஒலியும்,


போர் மறவர்களின் வீரக்கழல் ஒலியும்,
பரந்து விரிந்து எங்கும் எதிரொலித்தன.


பறந்த துகள்கள் மறைத்தன ஆதவனை.
சிறந்த விண்ணுலகம் மண்ணுலகானது!


கொடிகள் வான்கங்கையில் நனைந்து
கொடிய சூரனின் முடிவு நெருங்கியதென


கண்ணீர் விட்டு அழுவதைப் போலவே
விண்ணிலிருந்து மண்ணில் சொரிந்தன.


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


4#4a. Soorapadman goes to war.


The next day Soorapadman got up before sunrise and got ready for the war. He had decided that it was useless sending his son BhAnukoban to the war since he had fled from the battle field the previous day.


His summoned his messengers to gather all the asura warriors. Every single asura warrior reported to the capital city immediately. When Soorapadman saw the huge crowd of asura warriors, his hope of victory was rekindled.


He sat on his chariot as huge as mount Meru. The chaturanga sena walked along with him. The dust thrown up by the marching feet made the world appear dark. Athisooran and Asurendran lead the army.


The various instruments of war were played inspiring hope and courage in the hearts of the warriors. The mixed sound made by the chariots, the elephants, the horses and the sound of the kazhal worn by the men was heard everywhere. The dust formed by the marching army hid the sun and the swargaa got tarnished by the dust.


The long flags carried by the army got drenched by the water of AakAsh Ganga. They sprinkled it down to the earth in the form of tear drops which appeared to symbolize the fact that the end of Soorapadman was fast approaching.


 
The 64 Thiru ViLaiyAdalgal

53b. ஈசனும், கீரனும்.

# 53 (b). ஈசனும், கீரனும்.

கூட்டுப் பிரார்த்தனைக்குச் சக்தி அதிகம்!
கூட்டு முயற்சிகளுக்கு வெற்றி வாய்ப்பும்!

மீட்டுத் தர விரும்பினான் புலவர் கீரனை!
மீனாட்சி அம்மையுடன் எழுந்தருளினான்.

தண்ணருள் பார்வையை ஈசன் முழுமையாகத்
தண்ணீருக்குள் செலுத்தினான் அன்புடன்!

தன்மயம் ஆகிவிட்டான் தண்ணீரிலே கீரன்;
தன்னையும் மறந்துவிட்டான் அதீத பக்தியில்.

“ஜகதன்னையின் கூந்தலைப் பழித்த நான்
மிகப் பெரிய குற்றம் புரிந்து விட்டேன்!

எவன் செய்த எத்தகைய பாவத்தையும்
சிவன் மட்டுமே மன்னித்து அருளுவான்!”

திரு காளத்தியப்பர் மீது தொடுத்தான்
“கயிலை பாதி காளத்தி பாதி அந்தாதி”!

நெருங்கினான் சிவன் அவன் குரல் கேட்டு
திருக்கரம் பற்றிக் கரை ஏறினான் கீரன்.

புன்மை செய்பவர்க்கு அனல் காட்டும் பிரான்
நன்மை செய்பவருக்கு அருள் காட்டுவான்!

செய்யுள் மாலை ஒன்றைக் கீரன் கோர்த்தான்
ஐயன் குணாதிசயங்களைச் அதில் சேர்த்தான்.

கோபப் பிரசாதம் என்னும் அழகிய
தாபம் தீர்க்கும் ஒரு வசந்த மாலை.

பெருந்தேவ பாணி என்னும் பாடல்களையும்
திருவெழு கூற்றிருக்கையும் இயற்றினான்.

பன்முறை பணிந்து வணங்கிய கீரனை
முன்போல் சிறப்புடன் வாழ வழுத்தினான்.

அன்னையுடன், தந்தையும் மறைந்தருளவே
பின்னர் மண்டபம் சேர்ந்தனர் புலவர்கள்

பொற்கிழியை அளித்தனர் தருமிக்கு!
அற்புதப் பரிசுமழை பொழிந்தான் அரசன்,

செல்வத்தை வெறுத்த சங்கப் புலவர்கள்
கல்வியில் செல்வந்தராக வாழ்ந்திருந்தனர் .

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

# 53 (b). KEERAN AND SIVAN.

Mass prayer had more power than individual prayers. Mass effort has greater rate of success than individual efforts.

Lord Siva was moved to pity! He appeared with his consort Meenaakshi Devi near the Lotus Pond.

Siva gazed into the water of the pond. Keeran felt the divine gaze and attained paravasam with the surging bakthi bhaavam.

He thought to himself, “I have committed a heinous crime by commenting on Devi’s hair. Only Siva can forgive and forget the sins committed by fools like me!”

Keeran composed an Anthaadhi “Kayilai Paadhi, Kaalaththi Paathi”. Siva moved closer to him. Keeran took hold of Siva’s hand and emerged from the water of the pond!

Siva always shows anger to the wrong doers and love to the righteous people. Keeran compiled the Guna adhisayam of Lord Siva.

He sang a Vasantha Maalai called “Kobap Prasaadam”. He composed poems called “Perundheva PaaNi” and “Thriuvezhu Kootrirukkai.”

Keeran prostrated to Siva several times begging for His pardon. God blessed him to live in all glory as before. He then disappeared with his Devi.

The poets returned to their Sanga Mandapam. They presented the bag of gold coins to Tharumi. The king showered more gifts on Tharumi.

The poets hated pomp and show as they believed in “Simple living and high thinking.” They continued to lead a very simple and humble life but they all were rich in their knowledge and talents.
 
bhagavathy bhaagavatam - skanda 8

8#11c . பாரத வர்ஷம் (3)

அருமையான யாக யக்ஞங்களின் பலனைத்
தருகின்றது இறைவனின் திருநாம உச்சரிப்பு.

கற்ப காலம் வாழத் தேவையில்லை பாரதத்தில்;
சொற்ப காலம் வாழந்தாலே போதும் பாரதத்தில்.

துறந்து விடவேண்டும் உலக விஷயங்களை!
மறந்து விடாது தொழவேண்டும் விஷ்ணுவை!

அடைவிக்கும் இதுவே நம்மைப் பரமபதம்;
விடுவிக்கும் இதுவே சம்சாரத் தளைகளை;

பிறவிப் பிணியை மற்ற முயலாதவன்
பிறவி எடுத்து உழல்வான் சம்சாரத்தில்.

தருவான் இறைவன் நாம் கேட்கின்றவற்றை,
தருவான் இறைவன் மெய்ப் பொருளை நமக்கு!

தருவதில்லைப் பொய்ப் பொருளான விஷயங்களை!
தருவதில்லை மெய்ப் பொருளைக் கேட்காதவருக்கு!

ஏற்படுள்ளன எட்டு த்வீபங்கள் சகரர்களால்
எட்டு த்வீபங்கள் ஆகும் முறையே இவைகள்.

சுவர்ணப் பிரஸ்தம், சந்திரப் பிரஸ்தம்,
சுக்ரப் பிரஸ்தம், ஆவர்தனப் பிரஸ்தம்,

ரமணகப் பிரஸ்தம், மந்திரோ பாக்கியப் பிரஸ்தம்,
ஹரிணப் பிரஸ்தம், பஞ்ச ஜன்யப் பிரஸ்தம் ஆகும்.

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

8#11c. BhArata Varsham (3)

The utterance of the names of the Gods gives the same result as that of the yAga and Yagna performed. A short life in BhArata varsham is far superior to the long pleasure filled live in the other Varshams.

One must give up the pleasures of the senses. One should never forget to worship Vishnu. This will take us to the Parama padam. This will release the devotees from the bondage of samsArA.

A person who does not try to escape from the shackles of samsARa will be born again and again and suffer in samsArA.

God will give us whatever we seek. He will show us the truth about ParamAtma. He will not give us the worldly things to one who seeks true knowledge. He will not give true knowledge to those who do not seek it.

There are eight dweepAs discovered by Sagaras. They are respectively, SvarNa prastha, Chandra prastha, S’ukra prasta, Avartana prastha, RamANaka prastha, MandaropAkhya prastham, HariNa prastham, PAnchajanya prastham.

 
bhagavathy bhaagavatam - skanda 3

3#6b. மூன்று தேவியர்

“புன்முறுவல் முகமும், வெண்ணிற ஆடையும்,
பொன்னாபரணங்களும், ரஜோகுணமும் கொண்ட,

மஹாதேவியின் அம்சத்தைக் கொண்டுள்ள
மஹாசரஸ்வதி ஆவாள் பிரமன் துணைவி!

நான்கு வித பீஜங்களைக் கொண்டு படைப்பாய்;
முன்னுள்ள ஸ்வபாவ, குணங்களை அறிவாய்;

கால, கர்ம குணங்களை நியமிப்பாய் பிரம்மனே!
லிங்காலிங்க பாகங்களுடன் படைப்பாய் இனி!”

மஹாலக்ஷ்மியை அளித்தாள் விஷ்ணுவுக்கு!
“மஹாலக்ஷ்மியோடு மகிழ்கையில் ரஜோகுணம்;

சத்துவ குணமே பிரதானம் உனக்கு விஷ்ணுவே!
சாதுக்களைக் காக்க நீ அவதரிப்பாய் உலகினில்!”

தமோ குணம் பிரதானம் ஆனது ருத்திரனுக்கு;
துணைவியாக்கினாள் தேவி மகா காளியை!

“யாகங்களை அமைக்கிறேன் உங்களுக்காக;
யாகங்கள் செய்வர் மூன்று வர்ணத்தவர்கள்.

அவிர்பாகத்தை ஏற்பீர் அவர்களிடமிருந்து;
அவிர்பாகம் ஆகும் உங்களுக்குக்கு உணவு!

பிரபாவம் முக்குணங்கள் மூவருக்கும் என்றாலும்
பிரதானம் எக்குணம் தொழிலுக்கு ஏற்றதோ அதுவே!”

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

3# 6b. The three consorts

Devi spoke to Brahma,” This Devi with a smiling countenance, dressed in white silk, decorated with golden ornaments and with Rajo guNam is MahA Saraswati – your consort. Create srushti from all the four types of the seeds. Learn the earlier swabhaavam of the jivA and allot to each one Time, Duty and Temperament accordingly. Create them with or without the linga body parts.”

Devi gave MahA Lakshmi to MahA VishNu and told him, “You will have Rajo guNam only when you indulge with Lakshmi Devi. Satva guNam is your main guNam and you will take many births in the world to save the sadhu and saints from the evil mongers!”

Devi gave Tamo guNam to Rudran and made MahA KAli as his consort. She then said, “I will prescribe yAgas to be performed by the three varNAs. They will offer you ‘havisu’ in their yAgas. It will be our food henceforth.

All the three of you will a have a blend of all the three guNas but still the dominating guNam will be that particular guNam which will help you in performing your prescribed duty well.”
 
kandha purANam - pOr puri kANdam

4b. முருகன் புறப்படுதல்

போருக்கு சூரபத்மன் படை நடத்துவதை
நேருக்கு நேர் கண்டான் அமரர்கோன்.


முருகக் கடவுளின் திருவடிகள் பற்றி
“தருவீர் மீண்டும் சுவர்க்க வாழ்வு!” என,


முருகன் முறுவலுடன் ஆமோதித்தான்.
விரைந்து தேரைக் கொணர்ந்தான் வாயு.


நடக்கத் தொடங்கியது படை – தக்கை,
உடுக்கு, கல்லரி, தடாரியை இசைத்தபடி.


அவுணப் படை சூழ்ந்தது பூதப்படையை!
அவுணப்படை தாக்கியது பூதப்படையை!


மரம், மலை, தடி, கழுமுள், உருளை, வேல்
எறிந்தது பூதப்படை அவுணப்படை மேல்!


தடி, உருளை, சூலம், கணை, கணிச்சிகளை
தொடுத்தது அவுணப்படை பூதப்படை மேல்!


அதிசூரனைப் பொருது வென்றான் உக்கிரன்;
அசுரேந்திரனைப் பொருது வென்றான் வீரவாகு.


தம்பியர் எண்மர் தோற்றனர் சூரனிடம்;
தம்பி வீரவாகுவும் தோற்றான் சூரனிடம்.


தெய்வப் படைக் கலங்கள் அனைத்தும்
செய்வதறியாமல் செயல் இழந்து போயின!


வீரவாகு ஆற்றலின்றித் தன் தேரில் விழுந்திட
ஓரமாகத் தேரை ஒதுக்கினான் அதன் சாரதி.


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


4#4b. Murugan goes to war.


Indra saw with his own eyes the asura army being lead by Soorapadman himself. He caught hold of the lotus feet of Murugan and prayed to him, “Please restore to the Devas our swarga.” Murugan nodded with a smile.


VAyu Devan brought Murugan’s chariot. The army of demons started marching to the tune and beat of the various musical instruments of warfare.


The asura army surrounded the army of Murugan. The two armies fought using uprooted trees, uprooted mountains, sticks, wheels, discus, spears, tridents, bow and arrows and other such weapons of warfare.


Ugran defeated Athisooran and VeerabAhu defeated Asurendran. His eight younger brothers were defeated by Soorapadman. VeerabAhu also got defeated by Soorapadman.

All their divine astrams became powerless when used against Soorapadman. VeerabAhu became weak and fainted in his chariot. His charioteer drove the chariot away from the war front.


 
The 64 Thiru ViLaiyAdalgaL

54a. அகத்தியர் பெருமை

# 54 (a). அகத்தியர் பெருமை.

குற்றங்கள் நீங்கிய புலவர் நக்கீரன்
முற்றிலும் விரும்பியது சிவ வழிபாடு!

சிந்திக்கச் சிந்திக்க அவன் மனம் நன்கு
பந்தப்பட்டுவிட்டது சிவபெருமானிடம்.


நெற்றிக் கண்ணால் எரித்தார் சிவன்,
அற்புத வடிவழகன் ஆகிய மன்மதனை!

அரியும், அயனும் காத்தருளவில்லை,
அரனின் தீப்பார்வையில் இருந்து அவனை!


என்னைக் காத்தது பொற்றாமரைக் குளம்.
என்னை எக்காலமும் காக்கும் இக்குளம்.

முக்காலமும் முங்கிக் குளித்துவிட்டு கீரன்,
முக்கண்ணனைத் தொடர்ந்து வழிபட்டான்.


நக்கீரனின் தீவிரபக்தி பாவத்தை அறிந்த
முக்கண்ணனும் மனம் குளிர்ந்து விட்டான்.

சங்கப் புலவன் ஆன பிறகும் கூடக் கீரன்
தங்கத் தமிழைப் பிழையின்றி அறியவில்லை!


வழா நிலைச் சொல், வழூஉச் சொற்களில்
வழுக்கி விழுவது வழக்கம் ஆகிவிட்டது.

“குற்றமற்ற இலக்கணத்தை போதித்தருள
முற்றிலும் பொருத்தமான ஒரு குரு யார்?”


தங்க வண்ணனின் இந்தக் கேள்விக்கு
அங்கயற்கண்ணி அம்மை பதில் ஈந்தாள்.

“தங்களுக்கு நிகரானவர் நம் அகத்தியர்!
மங்கள லோபமுத்திரையோ எனக்கு நிகர்!


அன்று ஒருநாள் கயிலையங்கிரியில்
வந்து குழுமினர் தேவர், முனிவர்கள்;

கூடி விட்டவர் பாரத்தின் விளைவாக
மேடிட்டு விட்டது தென்பகுதி அன்று!


தாழ்ந்து விட்டது வடகிழக்கு பிரதேசம்,
உயர்ந்து விட்டது தென்மேற்கு பிரதேசம்.

சமன் செய்து உலகினைக் காத்தருள
தமர் அனுப்பினீர் அகத்திய முனிவரை!”


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


# 54 (a). THE GREATNESS OF SAGE AGASTHYAA.


Keeran had overcome all his follies and defects. The more he thought about Lord Siva, the more he got attracted by Him and attached to Him.


Siva had scorched the beautiful God of Love Manmathan. Neither Brahma nor Vishnu could save him. But the Pond of Golden Lotuses had saved Keeran from the wrath of Siva and his fiery glance.


He said to himself, “The pond will save me always.” He made it his discipline to bathe in it three times a day and worship Siva.


Siva noticed the change in Keeran and felt kindly disposed to him. Even though Keenan was a Sanga poet, his writings were not devoid of certain mistakes.


Someone should teach him Tamil grammar! But who was the right person for this task?

Meenaakshi Devi replied to Him,

“You have told me several times that sage Agasthyaa is as great as yourself and his wife Loba mudra is equal to me in her greatness.


Once the balance of the earth was disturbed – since all the Devas and rishis assembled in Kailash.


The North dipped and the South rose up. Agasthyaa was sent by you to restore the balance of the earth! Do you remember?”
 
bhagavathy bhaagavatam - skanda 8

8#12a. Jambu & Plaksha

மன்னிக்க வேண்டுகிறேன்!

பூகோளம் பிரியமானதோ இல்லையோ
கடினமே கவிதையில் பொருத்துவது !

வெறும் பெயர்களை மட்டுமே வைத்துக் கொண்டு,
வெட்டியாக எதுகை மோனையைத் தேடி அலைந்து,

உச்சரிப்புத் தெரியாமல் நானும் கஷ்டப்பட்டு,
உங்களையும் கஷ்டப்படுத்த விரும்பவில்லை!

அடுத்த சில இடுகைகள் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கும்.
கெடுக்க விரும்ப வில்லை நான் நல்ல கவிதைச் சுவையை!

8 # 12a. The Jambu dweepam

The Jambu dweepa is surrounded on all sides by the salt water ocean. Just as the Mount Meru is surrounded by Jambu dweepa, so also the salt water ocean is surrounded by Plaksha dweepa, twice its size. The salt ocean is surrounded by gardens.

A Jambu tree exists in Jambu dweepa and a Plaksha tree of the same size exists in the Plaksha Dweepa. The name Plaksha Dweepa is derived from the name of this Plaksha tree. This tree is in golden color.

Fire named Saptajihva exists at its bottom. The Ruler of this island is Idhmajihva, the son of Priyavrata. He divided his island into the seven Varshas and distributed them, to each of his seven sons and he himself took refuge of the path of Yoga.

The names of those seven dweepas are :– S’iva, Yavas, Subhadra, SAnti, Kshema, Amrita and Abhaya.

Seven rivers and seven mountains exist respectively in the seven islands. The rivers are :– AruNA, NrimnA, Angirasi, SAvitri, SuprabhAtikA, RitambharA, and SatyambharA.

The names of the mountains are MaNikoota, Vajrakoota, Indrasena, JyotishmAna, SuparNa, HiraNvastheeva, MeghamAla.

Drinking the water of these rivers will take away all sins and all darkness accumulated due to ignorance.

The four castes live here, Hamsa, Patanga, OordhAyana and SatyAnga which correspond to the four castes BrAhmaNa, etc.

The inhabitants live for one thousand years and have wonderful appearances. They follow the customs laid down by the Vedas and worship the God Sun for the attainment of Heaven.
 

Latest posts

Latest ads

Back
Top