• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

A poem a day to keep all agonies away!

bhagavathy bhaagavatam - skanda 3

3#6c. தத்துவங்கள்

“எல்லாவற்றையும் நான் அழிக்கும் போது
என்னிடத்தில் ஒடுங்குவீர் நீங்கள் மூவரும்.

குணங்களோடு இணையும் போது நான் ‘சகுணை’;
குணங்களினின்று வேறுபட்டால் நான் ‘நிற்குணை’.

குணங்கள் உதிப்பதற்கும் காரணம் நானே!
குணங்கள் ஒடுங்குவதற்கும் காரணம் நானே!

‘மஹத் தத்துவம்’ மூலகாரணம் தத்துவங்களுக்கு!
மஹத் தத்துவத்துக்கு மூலகாரணம் நான் ஆவேன்.

முதன் முதலில் தோன்றியது ‘மஹத் தத்துவம்’;
முதன்மையான ‘புத்தி தத்துவமும்’ இதுவேயாம்.

‘அஹங்காரம்’ தோன்றியது மஹத்திலிருந்து.
அஹங்காரம் தோற்றுவித்தது ‘முக்குணங்களை’!

‘சத்துவ’ அஹங்காரத்தில் தோன்றியவை நான்கு;
‘புத்தி, சித்தம், மனம், அஹங்காரம்’ என்ற நான்கு.

‘ராஜஸ’ அஹங்காரத்தில் தோன்றியவை பத்து;
‘ஞான இந்திரியம் ஐந்து; கர்ம இந்திரியம் ஐந்து’.

‘தாமஸ’ அஹங்காரத்தில் தோன்றியவை பத்து;
‘தன்மாத்திரைகள் ஐந்து; பஞ்ச பூதங்கள் ஐந்து’.

பரமசிவன் காரியமோ, காரணமோ இல்லை
பரமசிவன் நிறைந்துள்ளான் நிர்குணனாக.

காரணமாக ஆகும்போது நான் சகுணை;
இதயத்தில் உறையும் போது நிற்குணை.

தியானிக்கத் தகுந்தவர்கள் சிவனும், நானுமே!
தியானித்தால் சித்திக்கும் சகல காரியங்களும் ”

சன்னதியை விட்டு வெளியேறினோம் மூவரும்;
சடுதியில் மாறினோம் முன்போல ஆண்களாக!

மறைந்து விட்டனர் தேவி, விமானம், த்வீபம்!
இருந்தோம் நாங்கள் முன்போல அதே இடத்தில்!

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K . ராமன்

3#6b. The Tatvas

Devi continued talking to The Trinity, “When I destroy everything, you three will merge with me once again. When I exhibit the three guNaas, I am called a ‘SaguNai’ (one who is associated with the guNas). When I do not have any guns and attributes I becoma a ‘NirguNai’ (one devoid of all attributes).

I am the cause of the unfolding of the three guNas. I am the cause of folding them back and making them disappear. All the Tatvas are born out of ‘Mahat Tatvam’. The Mahat Tatvam is born out of me. Mahat Tatvam is the one which appears first. It is also called as ‘Buddhi Tatva’.

‘AhankAram’ is born out of Mahat Tatvam. AhankAram gives rise to the three guNas… Satvam, Rajas and Tamas.

Satva AhankAram gives rise to the four antahkaranams namely Buddhi, Chiththam Manas and AhankAram.

RAjasa AhankAram gives rise to the ten faculties namely the five gnAna indriyaas (Organs of knowlege) and the five Karma indriyaas (Organs of action).

TAmasa AhankAram gives rise to ten factors. The Pancha Boothas (The five great elements) and the Pancha thanmAtrAs (‘sparsam’ the Touch, ‘sabdam’ the Sound, ‘roopam’ the Physical form, ‘rasam’ the Taste and ‘gandham’ the Odor)

Siva is neither the cause nor the effect of these. He is a nirguNan pervading everywhere – all the time.

When I reside in the heart of the jiva, I am the NirguNai. When I become the cause of the creation, I am the SaguNai. Only Siva and I are worthy of being meditated upon. The one who meditates on us will achieve everything he seeks.”

The Trinity left her sannadi and were changed to their previous selves from being three young women. The dweepam, vimAnam and Devi vanished and they were left sanding in the same spot where VishNu had conquered the wicked Madhu and Kaitaban.
 
kandha purANam- pOr puri kANdam

4c. முருகன் வருதல்

ஈராயிரம் வெள்ளம் பூதப் படைகளும்,
நூறாயிரத்து எண்மரும் ஆற்றலழிவதை

நேரில் கண்டார் ஆறுமுகத்து அண்ணல்!
தேரில் நெருங்கினார் சூரபத்ம அவுணனை.

“தனியொருவனாகப் போரிட வந்தாயோ?
இனியொரு சிறுவனா என்னை வெல்வான்?

பிரானும், திருமாலும் போரிட எண்ணார்;
பிறரைப் போல் எண்ணாதே என்னையும்!”

“அறியாமையில் அழுந்திய அவுணனே – தீப்
பொறி ஒன்று போதும் உலகை அழித்திட!

எதிர்ப்பவருடன் போர் புரிவதே நெறி.
எதிர்ப் பேச்சு வேண்டாம் நீ போர் புரி!”

பிரமன் படையை எறிந்தான் சூரன்;
பிரமன் படையை விழுங்கியது வேல்!

மாலின் படையை எறிந்தான் சூரன்;
மாலின் படையை விழுங்கியது வேல்!

சிவப்படையை செலுத்தினான் சூரன்!
சிவப் படை சென்றது தீப் பிழம்பாக!

தளர்ந்து போயின அஷ்ட திக்கஜங்கள்!
தளர்ந்து போனான் ஆதிசேட நாகம்!

நெக்கியது நிலம்! ஓடியது ஊழித்தீ!
சிந்திச் சிதறின இடிகளை முகில்கள்!

ஆதவன் துடித்தான்; திங்கள் சுழன்றான்;
ஆறுமுகன் கைசேர்ந்தது அந்த சிவப்படை.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

4#4c. Murugan arrives.


Murugan saw his huge army and its generals becoming powerless and helpless. He approached Soorapadman on his chariot. “So you have come to fight me all alone! A little boy dreaming of defeating me? Even Siva and VishNu will not dare to fight with me! Do not think that I am just an ordinary person!” Soorapadman warned Murugan!

Murugan replied, “You are immersed in deep ignorance. To burn this whole wide world a little spark of fire is enough. Moreover You have to fight whoever challenges you. That is the rule of war everywhere. Come on and fight with me!”

Soorapadman threw the Brahma asthram. Murugan’s spear rendered it powerless. Now Soorapadman threw the Vishnu ashram. Murugan’s spear rendered it powerless! Now Soorapadman threw the Siva asthram. It sped forward very fast emitting fire and sparks.

The ashta dig gajam suffered from the intense heat. The Aadiseshan suffered from the intense heat. The earth seemed to melt and the fire resembles praLayAgni. The clouds showered thunder bolts and lighting. The courses of the sun and moon were disturbed. And the Siva asthram reached safely Murugan’s outstretched hand without harming him in any manner!
 
The 64 Thiru ViLaiyAdalgaL

54b. இலக்கணம் போதித்தது

# 54(b) இலக்கணம் போதித்தது

“செந்தமிழ் நாடு செல்லும் அகத்தியருக்குப்
பைந்தமிழ் இலக்கணம் கற்றுத் கொடுத்தீர்!

ஆண்டுகள் பல உருண்டோடியதால்,
ஆண்டவனைக் காண அவரும் விழைவார்.

அகத்தியரின் உதவியுடன் தாங்கள்
இகத்தில் கற்றுத் தரலாம் இலக்கணம்;

நக்கீரன் என்று மட்டும் இல்லாமல்
நண்பர்களும் நல்ல பயன் பெறலாம்.”

இறைவன் நினைத்தார் அகத்திய முனிவரை,
குறைவறத் திருவுளக் குறிப்பினை அறிந்து;

தவம் என்னும் விமானம் ஏறி மனைவியுடன்
சிவம் விளங்கும் ஆலவாயினை அடைந்தார்.

காலம் கனிந்து விட்டது! நேரம் கூடி வந்தது!
ஞாலம் செய்யாததையும் காலம் செய்யுமே!

இறையருளும் குருவருளும் ஒன்று சேரக்
குறைவற்ற உபதேசம் அங்கே தொடங்கியது.

சோம சுந்தரர் பணித்தார் அகத்தியரை -
வாமன ரூபமும் ஞானமும் கொண்டவரை.

“அழகிய தமிழின் அரிய இலக்கணத்தைப்
பழுதின்றிக் கற்றுக்கொடு புலவன் கீரனுக்கு!”

நல்லிலக்கணத்தை நன்கு போதித்தார்.
நல்லிணக்கத்துடன் நக்கீரனுக்கு அவர்.

ஐயம் திரிபறக் கற்றுத் தந்தார் கீரனுக்கு,
ஐயன் அருள் பெற்ற அகத்திய முனிவர்.

இலக்கணம் கற்றுத் தந்த முனிவரின்
இலட்சணத்தில் மயங்கிவிட்ட பிரான்;

அரிய வரங்களை அருளினார்; மேலும்
பிரியா விடையும் கொடுத்து அனுப்பினார்!

தான் இயற்றிய செய்யுளின் தவறுகளைத்
தானே திருத்திக் கொண்டார் நக்கீரன்.

இறையின் கவிதையில் குற்றம் சொன்ன
குறைகளுக்காக உள்ளம் வருந்தினான்.

பைந்தமிழ் இலக்கணத்தை மனம் உவந்து
செந்தமிழ் புலவர்களுக்கும் கற்றுத்தந்தான்.

சொல்லிலக்கணம் கற்றறிந்த புலவர்கள்
நல்லிலக்கணக் கவிதை புனையலாயினர்!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

# 54 (B). TEACHING KEERAN TAMIL GRAMMAR.

“Before the sage Agasthyaa was sent to South, you had taught him Tamil Grammar. May be he can help you now in teaching Keeran.

I am sure he too will be yearning for your dharshan after all these years!” Devi Meenaakshi spoke to Lord Siva thus.

Siva thought about the sage Agasthyaa. The sage could know immediately what was in Siva’s mind.

He flew to Thiru Aalawai in the Vimaanam created by his ‘tapo shakthi’, along with his wife.
So the time became ripe for the teaching of Tamil grammar to the poet Keeran.

Agasthyaa taught Keeran so well that Siva was immensely pleased with the sage and granted him several boons before bidding him farewell.

Now Keeran was able to locate the mistakes in his own compositions and correct them. He taught the Tamil grammar he had learned to all his friends- the Sanga Poets.

All of them started writing much better poetry after that.
 
bhagavathy bhaagavatam - skanda 8

8#12b. Salmala dweepam

Next to Plaksha Dweepa is the Ocean of sugarcane juice that surrounds it. Next to it exists S’almala Dweepa. It is twice as large as Plaksha. This Dweepa is surrounded by the Ocean of wine.

A S’almali tree – as large as the Plaksha tree – is in this island and Garuda resides on that tree. YagnabAhu is the Ruler of this place. He was born of Priyavrata; he divided his Varsha into the seven parts for his seven sons respectively. Surochana, Saumanasya, RamaNa, Deva Varsha, PAribhadra, ApyAyana, and VignAta.

The names of the seven mountains are :– Sarasa, S’atas’ringa, VAma Deva, Kandaka, Kumuda, Pushpavarsha and Sahasra-S’ruti.

The names of the seven rivers are :- Anumati, SineebAli, Sarasvati, Koohu, Rajani, NandA, and RAkA.

The people are divided into the four castes :– S’rutadhara, Veeryadhara, Vasundhara, Ishundhara. These correspond to the BrAhmaNas, etc.

They worship the Moon God, the Controller of all and the Creator of all the Vedas. They offer food duly in the black and white fortnight to their Pitris.

 
bhagavathy bhaagavatam - skanda 3

3#7a. தத்துவ விளக்கம் (1)

நாரதன் கேட்டான் மேலும் ஐயங்கள்
நான்முகன் ஆகிய தன் தந்தையிடம்.

“நிர்குணை ஆன சக்தி எத்தகையவள்?
நிர்குணன் ஆன புருஷன் எத்தகையவன்?

அறிந்தவர் யாரேனும் உண்டோ – கண்டு
அனுபவித்தவர் யாரேனும் உண்டோ?

ஸ்வேத த்வீபதில் கடும் தவம் செய்தும்
சிவனும், சக்தியுமே தந்தனர் தரிசனம்!”என

“நிர்குணை நம் கண்ணுக்குப் புலப்படாதது;
நிர்குணனை அறிய முடியும் ஞானத்தினால்.

வியாபித்துள்ளனர் அனைத்திலும் சிவசக்தி!
இயங்காது உலகில் எதுவும் சிவசக்தியின்றி!

தியானிக்க வேண்டும் இவர்களை தேஹத்தில்!
தியானிக்க வேண்டும் தேஹத்தை ஆலயமாக!

குணங்களுக்கு அப்பாற்பட்ட நிர்குணனை
குணங்களுள்ள ஜீவனால் அறிய இயலாது!

அஹங்காரத்தின் வசப்பட்டவை முக்குணங்கள்;
அஹங்காரத்துக்கு அப்பாற்பட்டவன் பரம்பொருள்.

அஹங்காரம் முற்றிலும் அழிந்தால் மட்டுமே
அதற்கு அப்பாற்பட்ட பரமனைக் காணலாம்.

சூக்ஷ்ம ரூபத்தை உணர முடியும் ஞானத்தால்!
ஞான யோகம் உணர்விக்கும் பரம்பொருளை!”

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

3#7a. Explanation of Tatva (1)

Brahma was asked some more questions by his son NArada! “Sire! Please tell me more about the NirguNai Shakti and the NirguNan Sivan. Has anyone ever seen them or known them?
Even when I did penance in Sweta dweepam, I got dharshan only of Siva and Shakti and not the NirguNai or the NirguNan!”

Brahma replied to NArada, “NirguNai cannot bee seen. NirguNai and NirguNan are to be realized by gnAnam and not through the sense organs. They pervade in each and everything in creation. Nothing can happen without their presence and involvement.

We must meditate on them in our body – considering it as a temple for the Siva Shakti. The jeeva who is guna-mayan (filled with a combination of the three guNAs) can not realize the NirguNan (ONE who is devoid of the three guNAs).

The three guNAs are born out of ahankAram but NirguNan is beyond ahankAram. Only when the ahankAram is completely destroyed, we can realize the Para Brahman or NirguNan who is beyond the ahankAram and three guNAs.

Their sookshma form ( minute form) can be realized by gnAnam but cannot be seen or felt by any of the the sense organs (indriyAs)”.

 
kandha purANa - pOr puri kANdam

4d. முருகனும், சூரனும்

“ஜயந்தனையும், பிற தேவர்களையும்
பயமின்றிச் சிறைப்படுத்தினாய் நீ!

தூதுவனை அனுப்பி விடுதலை கேட்டும்
ஏதும் ஏற்கப் படவில்லை உன்னால்.

போருக்கு நானே நேரில் வந்தேன்.
தாரகனைக் கொன்றேன் முன்னமே!

உன்னை இன்றைக்கே அழிக்கிலேன்!
உன் படைகள், படைகலங்கள் இன்றித்

தனியே நிற்கும் உன்னைக் கொல்லேன்!
இனியும் உந்தன் உயிர் பிழைக்கலாம் நீ!

தேவர்களைச் சிறை விட்டுவிடு உடனே!
ஏவும் முன்னரே நீங்கி விடும் என் படை!

எண்ணம் என்ன எனத் திண்ணமாய் கூறு.
எண்ணம் போல் அமையும் உந்தன் வாழ்வு!”

முருகனின் மொழிகளைக் கேட்ட பின்பும்
பெறவில்லை சூரபத்மன் நல்லறிவை.

“சிறுவன் அறியான் என் பெருமைகளை.
அருமைத் தந்தை தந்த மேன்மைகளை.

என் படைக்கலங்களை அழித்த போதும்
என்னை அழிக்க முடியுமா இவனால்?

என்னைக் கொல்லுதல் என்றுமே அரிது.
நான் அவனை வெல்லுதல் இன்று அரிது.

தகுந்த படைக்கலங்களுடன் வந்து நாளை
தகுந்த பாடம் புகட்டுவேன் சிறுவனுக்கு!”

மாய மந்திரத்தை மனத்தில் ஓதினான்.
மாயமாக அங்கிருந்து மறைந்து போனான்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

4#4d. Murugan and Soorapadman.


Murugan spoke to Soorapadman,” You imprisoned Jayanthan and the other Devas. I sent a messenger seeking their release from your prison. You did not agree to it. I had to come down to wage a war with you. I have killed TArakan. I could have killed you today, but I will not do so.

You have lost all your weapons and your army. You can still live if you release the Devas from your prison. My army will go back at once. Tell me frankly your opinion and your life now depends on it.”

Soorapadman did not like Murugan’ s words nor got any good sense after listening to Murugan’s advice. He thought to himself, “This little boy does not know about my greatness. He does not know about all the rare boons his father has given me.

He may destroy my weapons. Can he ever destroy me really? So he says he will not kill me today. He can never kill me. I can win over him very easily when I return with my army and armaments tomorrow.”

He recited the mantra for becoming invisible and disappeared from there unseen by anyone.


 
The 64 Thiru viLaiyadalgaL

55. கலகம் தீர்த்தது.

# 55. கலகம் தீர்த்தது.

நல்லிலக்கணக் கவிதைகள் புனைந்தவர்
நல்லிணக்கத்தைத் தொலைக்கலாயினர்!

நாற்பத்து எண்மரும் சிறந்து விளங்கவே
“நானே சிறந்தவன்!” எனக் கருதலாயினர்!

“சிறந்தவர் யார் எங்களுக்குள்ளே?
சிறந்தது யார் கவிதை இவற்றினுள்ளே?

இறைவா! நீரே எடை போட்டு எமக்குச்
சிறுமை பெருமைகளை உணர்த்துவாய்!”

புலவர் வடிவில் தோன்றினார் பிரான்,
புலவர்களிடம் கூறினார் இங்ஙனம்;

“தனபதி என்று ஒரு வணிகர் திலகம்,
குணசாலினி அவன் கற்புடை மனைவி ;

திருமுருகனே அவர்கள் திருமகனாக
உருத்திர சருமனாகப் பிறந்துள்ளான்.

வாய் பேச முடியாத ஊமை எனினும்
ஆய்ந்து கூறுவான் சிறுமை, பெருமை!

“வாய் பேச முடியாத குழந்தையால்
தூய கவிதையை உணர்த்த முடியுமா?”

“தலையை அசைத்தும், நன்கு சிரித்தும்,
தோளை உயர்த்தியும் அன்றி அசைத்தும்,

மயிர் கூச்செரிந்தும் புளகம் அடைந்தும்
உயர்வான கவிதையை உணர்த்துவான்!”

அனைவரும் ஒப்புக் கொண்டனர் இதற்கு!
அன்புடன் அழைத்து வந்தனர் குமரனை.

மண்டபத்தில் அவனை அமர்த்திவிட்டு
வெண்ணிற மலர்களால் அர்ச்சித்தனர்.

புலவர்கள் தங்கள் கவிதைகளைக் கூற
தலையை அசைத்துக்கேட்டான் குமரன்.

சொல்லழகைச் சிலாகித்துச் சிரித்தான்;
பொருளழகைக் கேட்டுப் புன்னகைத்தான்.

குற்றம் கண்டால் முகம் கோணினான்;
மற்று அவன் கருத்து தெளிவாக இருந்தது!

நக்கீரன், கபிலர், பரணன், கவிதையில்,
மிக்க மகிழ்ச்சி அடைந்தான் குமரன்!

உடல் பூரித்தான்; தோளை உயர்த்தினான்;
மயிர்க் கூச்செரிந்து கண்ணீர் சிந்தினான்!

சிறந்த கவிதைகள் எவை எவை என்று
மறுக்க முடியாதபடி நிறுவிவிட்டான்.

முடிவுக்குக் கட்டுப் பட்ட புலவர்கள்
குடுமிபிடி சண்டையை ஒழித்தனர் .

கர்வம் நீங்கிக் கவிதை படைத்தனர்.
சர்வமும் ஈசன் அருள் என்று உணர்ந்தனர்.

குரல் சிறந்திருக்கும் குயிலுக்கு; எனினும்
பிற பறவைகள் பாடத் தடை இல்லையே!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

# 55. SETTLING THE DISPUTES.

The poets of the Sangam composed several poems. To each one, he was the best poet and his was the best poem.

Soon they started to have occasional disputes as to who was really superior to the others. They could not come to any conclusion. So they approached Siva for his judgment. Lord appeared to them as a poet and told the other poets this.

“There lives a very good merchant called Dhanapati. His wife’s name is Guna Saalini. Their son Rudra Sarman is the amsam of Lord Skanda Himself.

The boy is dumb but he is a gifted child. He can help you to decide who is the best poet among you.”

“How can a dumb child express his opinions clearly?”

“He can smile, frown, laugh, move his head, raise his shoulders and express his opinions clearly!”

All the Sanga poets agreed to this proposal. The brought the child to the Tamil sangam with due honors. They did archanai for him with white flowers. He was given the seat of honor and the poet started reading out their poems.

The boy listened with rapt attention. He smiled, he shook his head, he frowned and he expressed his views very clearly.

When Nakkeeran, Kapilar and Baranan read out their poems, he shed tears, developed goose pimples and showed signs of ecstasy.

It was proved beyond doubts that they were the best poets of the Sangam. The poets gave up their disputes. They realized that every talent was God’s gift. Any one could produce his best – even though it may not be the best.

 
bhagavathy bhaagavatam - skanda 8

8#12c. Kucha dweepam

Next to the ocean of wine is Kus’a dweepa, surrounded by the Ocean of Ghee or clarified butter. Its dimensions are twice as large as the previous dweepam. The blades of Kus’a grass are of a very special color.

The name of the Dweepa is derived from the Kus’a sthamba – the bundle of Kus’a grass which illuminates all the quarters with their gentle rays.

The Ruler of the Dweepa is HiraNyaretA, the son of Priyavrata. He divided the Dweepa into seven parts for his seven sons respectively.

The names of the seven sons are :– Vasu, VasudAna, Dhridharuchi, NAbhigupta, Stutyavrata, Vivikta, and BhAmadevaka.

The names of the seven mountains are :– Chakra, Chatuhs’ringa, Kapila, Chitre DevAneeka, Koota, OordharomA and DraviNa.

The names of the seven rivers are :– RasakulyA, MadhukulyA, MitravindA, S’rutavindA, DevagarbhA, GhritAchyut, and MantramalikA. The inhabitants of the Kus’a dweepa drink the waters of these rivers.

There are the four castes here Kus’ala, Kovida, Abhiyukta, and Kulaka corresponding to the BrAhmaNas, etc.

They are all powerful like Indra the kind of DEvAs and the other chief Devas. They are all omniscient. They worship the Fire God and honor of Him.

 
bhagavthy bhaagavatam - skanda 3

3#7b. தத்துவ விளக்கம் (2)

“சத்துவ, ராஜச, தாமசம் பற்றிக் கூறுவீர் தந்தையே,
சம்சார பந்தத்திலிருந்து விடுதலை பெறும்படியாக!”

“சக்திகள் மூன்று வகைப்படும் அறிவாய் நாரதா!
சக்திகள், குணங்கள் நெருங்கிய தொடர்புடையன;

ஞான சக்தி, கிரியா சக்தி, திரவிய சக்தி முறையே
சத்துவ, ராஜச, தாமச குணங்களின் வசப்பட்டவை.

தோன்றின தாமச அஹங்காரத்திலிருந்து – பஞ்ச
தன்மாத்திரைகள் சப்த, ஸ்பர்ச, ரூப, ரஸ, கந்தம்!

தோன்றியது ஆகாசம் ‘சப்த’ குணத்தின் விரிவாக!
தோன்றியது வாயு ‘ஸ்பர்ச’ குணத்தின் விரிவாக!

தோன்றியது அக்னி ‘ரூப’ குணத்தின் விரிவாக!
தோன்றியது ஜலம் ‘ரஸ’ குணத்தின் விரிவாக!

தோன்றியது ப்ருத்வீ ‘கந்த’ குணத்தின் விரிவாக!
தோன்றின இவை பத்து தாமஸ அஹங்காரத்தில்.

கிரியா சக்தி ‘ராஜஸ’ அஹங்காரத்தின் வசப்பட்டது.
கர்மேந்த்ரியங்கள் ஐந்து, ஞானேந்திரியங்கள் ஐந்து,

பிராண வாயு ஐந்து என்று பதினைந்தின் படைப்பும்!
கிரியா சக்தி உபாதானம் அதன் வடிவங்களுக்கு!

ஞான சக்தி ‘ஸத்துவ’ அஹங்கார வசப்பட்டது;
ஞான சக்தியின் வடிவங்கள் அந்தக்கரணங்கள்!

மனம், புத்தி, சித்தம், அஹங்காரம் ஞானவடிவானவை.
மலரும் சிருஷ்டி பஞ்ச பூதங்களின் பஞ்சீகரணத்துடன்.

ஜீவன்களைப் படைக்கும் தொழில் செய்வேன் நான்;
ஜீவன்களைக் காக்கும் தொழில் செய்வார் விஷ்ணு.

எண்பத்து நான்கு லக்ஷம் பேதங்கள் ஜீவன்களில்!
எண்ணிப் பார்த்தாலும் விளங்குவது கடினம்!”

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

1. பஞ்ச தன்மாத்திரைகள்;
சப்தம், ஸ்பர்சம், ரூபம், ரசம், கந்தம்

2. பஞ்ச பூதங்கள்:
ஆகாசம், வாயு, அக்னி, ஜலம், ப்ருத்வீ

3. கர்மேந்திரியங்கள் ஐந்து:
கரம், பாதம், வாய், மல ஜல துவாரங்கள்.

4. ஞானேந்த்ரியங்கள் ஐந்து:
கண், செவி, மூக்கு, நாக்கு, தோல்.

5. பஞ்சப் பிராணங்கள்:
பிராண, அபான, ஸமான, உதான, வியான வாயுக்கள்

6. அந்தக் கரணங்கள் நான்கு:
மனம், புத்தி, சித்தம், அஹங்காரம்

7. பஞ்ச பூதங்களின் பஞ்சீகரணம்:
பஞ்ச பூதங்களை வேறு வேறு விகிதத்தில் கலந்து சிருஷ்டியைத் தொடங்குவது

3#7b. Explanation of Tatva (2)

“Sire! Please explain to me about the Satvam, RaAjasam and TAmasam and how a man can get liberated from the bondage of samsAram” NArada asked his father Brahma.

“Shakti is of three types – The GnAna shakti, KriyA shakti, the Dravya shakti. These are closely related to the three guNAs namely Sathva guNam, Rajo guNam and TamO guNam.

The Pancha TanmAtras viz Sabdam (the sound), Sparsam (the touch), Roopam (the form) Rasam (the taste) and Gandham (the smell) appear from TAmasa ahankaram.

AkAsam appeared as the extension of Sabdam; VAyu appeared as the extension of Sparsam; Agni appeared as the extension of Roopam; Jalam appeared as an extension of Rasam and Pruthvee appeared as an extension of Gandham. All these appear from the TAmasa ahankAram.

KriyA shakti is related to RAjasa ahankAram. The five gnAna indriyaas (the eye, the ear, the nose, the tongue and the skin) the five karma indriyaas (the hand, the foot, the tongue, the genitals and the anus) as well the five vital airs Pancha PrANAs (PrANa, ApAna, SamAna, UdhAna, VyAna) are the products of the RAjasa ahankAram or the Kriya shakti.

JnAna shakti is related to Satva ahankAram. The four anthak karaNams (inner instruments) are The Manas, The Buddhi, The Chittham and the AhankAram. These are products of Satva ahankAram.

When the Pancha boothAs (The five elements AakAsam, VAyu, Agni, Jalam and Pruthvee) are divided and mixed again in different ratios the srushti begins.

I take care of the creation. Vishnu takes care of the protection and Rudra the destruction. There are 84 lakhs (8.4 millions) different living organisms in my creation. It will be mind boggling even to think about it. ” Brahma told NArada.

 
kandha purANam - pOr puri kANdam

4e. உறுதி மொழி

சூரபத்மன் ஆற்றல் அழிந்து மறைந்ததும்
கூறினர் திருமால், நான்முகன், தேவர்கள்.

“பிறந்தது முதல் வெற்றியே அடைந்தவன்
மறைந்து போனான் தோற்றுப் போனதும்.

சூரனுடன் செய்த இப்போர் உனக்குச் சிறிய
வீர விளையாட்டே என்பதை யாமறிவோம்.

அவனை வென்று அருள்வாய் முருகா!
அவனைத் தப்பிக்க அனுமதியாதே!”

“மறுபடி போருக்கு வரும் சூரபத்மன்
உறுதியாகப் பிழைத்துச் செல்லான்!”

முறுவலுடன் முருகன் உறுதி மொழியை
மறுபடியும் தேவர்களுக்குத் தந்தான்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

4#4e. Murugan and the Devas.


When Soorapadman disappeared after becoming invisible, the Devas spoke to Murugan thus: “We know that the war with Soorapadman was a child’s play for you Muruga! He had always tasted victory from the day he was born.

Now that he got defeated for the first time in his life, he has disappeared. But you have to get rid of him. Please do not let him escape. His atrocities must come to an end!”
Murugan replied with a smile,”Do not worry. The next time Soorapadman comes to the war, he will surely be destroyed!”
 
The 64 Thiru vilaiyAdalgaL

56a. “என் பிழை என்ன?”

# 56 (a). “என் பிழை என்ன?”

சண்பக சுந்தரேஸ்வரருக்கு அழகிய
சண்பக மாலைகளைச் சூட்டி மகிழ்ந்த,
சண்பகமாறனின் மகன் பிரதாபசூரியன் முதல்
ஆண்டனர் பதினால்வர் பூபசூடாமணி வரை !

குலேச பாண்டியன் வரிசையில் பதினைந்து;
இலக்கண இலக்கியம், அரசியல்கலைகளைத்
தங்கு தடையின்றிக் கற்று இருந்ததால், உண்டு
சங்கப் பலகையில் அவனுக்கும் ஓர் இடம்!

இடைக்காடன் கபிலனின் நல்ல நண்பன்;
தடையின்றி செய்யுள் இயற்ற வல்லவன்;
குலேசனுக்குப் படித்துக் காட்ட எண்ணிக்
கிலேசம் இன்றி ஒரு பிரபந்தம் இயற்றினார்.

மன்னனுக்குப் படித்துக் கட்டிய போது
எண்ணம் அவனது நிறைவேறவில்லை.
சிறிதும் அக்கறை காட்டாமல் குலேசன்
வறிதே அஃறிணை போல் இருந்தான்.

மானம் மிகுந்தவர் இடைக்காட்டுப் புலவர்!
ஈனச் செயலை தாங்கவே முடியவில்லை.
சினம் கொண்டு சீறிச் சிவனிடம் சென்றார்,
“இனம் இனத்தைக் மதிக்க வேண்டாமா?

இந்த அவமானம் என்னுடையது அல்ல!
இந்த அவமானம் உன்னையே சாரும்!
சொல் வடிவானவள் அன்னை உமையாள்.
பொருள் வடிவானவன் நீயேயன்றோ?”

விரைந்து நடந்தான் வடதிசை நோக்கி!
விடையேறும் பிரானுக்கும் சினம் வந்தது!
இடைக்காடப் புலவனையும், அவனுடைய
கிடைத்தற்கரிய நண்பன் கபிலனையும் எண்ணி!

லிங்க ரூபத்தை நன்கு மறைத்து விட்டான்!
சங்கப் புலவருடனும், தேவியுடனும் சென்றான்
திருக் கோவிலின் வடக்கே அமைந்துள்ள ஒரு
திருக்கோவிலுக்கு, வைகையின் தென் கரைக்கு.

திருப்பள்ளி எழுச்சி பாடச் சென்றவர்களுக்கு
திடுக்கிடும் அதிர்ச்சி காத்திருந்தது அங்கே!
திருக் கோவிலில் அமைந்திருந்த சிவலிங்கம்
திருட்டுப் போய்விட்டதா? என்ன நடந்தது?

பயந்த வண்ணம் விண்ணப்பித்தார்கள் இதை!
மயங்கி விழுந்தான் மன்னன் ஆசனத்திலிருந்து!
நினைவு மீண்டதும் எழுந்து, தொழுது, அழுதான்,
“எனை மன்னியுங்கள்! என் பிழை தான் என்ன?”

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

# 56 (a). "What is my crime?"

Shanbaga Maaran found delight in decorating the Sivalingam with shanbaga flowers!
After him fourteen other kings ruled the Paandiya kingdom-starting with Prataapa Sooriyan and ending with Boopa Choodaamani. The fifteenth king was Kulechan.

Kulechan was well versed in Tamil Literature and Grammar and other arts besides. So he had secured a place of honor in the famous Sangap Palagai for himself. Kapilan had a good friend named the poet Idaikkaadan. He composed a prabandham exclusively to be read out to king Kulechan.

The king was overcome with jealousy at the brilliance of the poet. So he just sat through the session without showing any interest or appreciation. He behaved no better than a cow or a goat.

The poet got very upset. He fumed and fretted with anger and reached the Siva temple.
“A poet must appreciate another poet! It is not me that he has insulted. Uma Devi lives in the form of words and you live in their meanings. So it is you and Devi that the king has insulted.”

He left the place in a huff. He walked briskly northwards. Lord Siva also got angered by this incident. He hid his Linga roopam and went away with Devi and the Sanga poets to another temple, situated in the Southern bank of Vaigai river.

The devotees who went to the temple,for the Thiruppalli ezhuchi got the shock of their lives that the Sivalingam had disappeared! Had anyone stolen the moorthi?They reported the matter to the king. He fainted right away and fell down on the floor.

When he regained consciousness he started crying and begging for pardon. He kept repeating, “What is my crime?”
 
bhagavathy bhaagavatam - skanda 8

[h=1]8#13a. Krouncha dweepam[/h]
Next to the Kus’a dweepa is situated the Krouncha Dweepa. It is twice as large as Kus’a dweepa. The Ksheera SAgara (The Ocean of Milk) surrounds this Dweepa. The Krouncha mountain is on this dweepa. The name of this Dweepa is derived from the name of the mountain.

In the past, the highly powerful God KArtikEya split this mountain by his own prowess with his Shakti Ayudham. This Dweepa is washed by the Ksheera SAgara and VaruNa is its Regent.

The son of Priyavrata, Ghritsprishtha – who is respected by everyone and whose prosperity knows no limits – is the Lord of this Dweepa. He divided this Dweepa into the seven parts for his seven his sons and named the Varshas after them.

He made his seven sons the rulers of those places and he himself took refuge in BhagavAn NArAyaNa.

The names of the seven Varshas are respectively :– Ama, Madhuruha, Meghaprishtha , SudhAmaka, BrAjishta,LohitANa and Vanaspati.

The seven mountains and the seven rivers there are very famous throughout the worlds.

The names of the seven mountains are :– Sookla, VardhamAna, Bhojana, UpavarhaNa, Nanda, Nandana, and Sarvatobhadra.

The names of the rivers are :– AbhayA, AmritaughA, AryakA, Tîrthavati, Vrittiroopavati, S’ooklA, and PavitravatikA.

The inhabitants here drink the pure water of these rivers. The people here are divided into four types – Purusha, Rishaba, DraviNa, and Vedaka.
They worship the BhagavAn VaruNa.

They with great devotion hold water within their folded palms chant mantrAs and sing hymns in praise of VaruNa.
 
Last edited:
bhagavathy bhaagavatam - skanda 3

3#8a. மூன்று குணங்கள் (1)

வெண்ணிறம் உடையது சத்துவ குணம்;
அன்பு வடிவானது; ஆதாரம் ஆனந்தம்.

சத்தியம், ஆசாரம், ஊக்கம், பொறுமை,
சாந்தம், கருணை, ஞானம், தைரியம்,

சத் விஷயத்தில் சிரத்தை, தர்மத்தில் விருப்பம்,
சத்துவ குணங்கள் வெளிப்படும் வழிகள் இவை.

சிவந்த நிறமுடையது ரஜோ குணம்;
அன்பு இல்லாதது; ஆதாரம் துக்கம்.

வெறுப்பு, குரோதம், துரோகம், மாச்சரியம்
உறக்கம், பேராசை, அசிரத்தை, ஆடம்பரம்,

அகம்பாவம், அடங்காமை, மானம் போன்றவை
ரஜோ குணங்கள் வெளிப்படும் வழிகள் இவை.

கருமை நிறமுடையது தமோ குணம்;
புறங்கூறுதல், தமோ விஷயத்தில் சிரத்தை;

ஆலச்யம், தீனபாவனை, நயவஞ்சகம், நாஸ்திகம்,
அஞ்ஞானம், தூக்கம், விவாத புத்தி, ரோஷம்

தமோ குணம் வெளிப்படும் வழிகள் இவை.
தமோ குணத்தை அழித்து ஒழித்திட வேண்டும்.

ரஜோ குணத்தை அடக்கிட வேண்டும்;
சத்துவ குணத்தை வளர்த்திட வேண்டும்.

ஒரு குணம் மேலோங்கி நிற்கும் போது
இரு குணங்கள் தாழ்ந்து குறைந்து விடும்.

ஒன்றுக் கொன்று தொடர்புடையவை – எனினும்
ஒன்றுக் கொன்று மாறுபட்டவை முற்றிலும்!

அனுபவத்தால் அறிய முடியும் பேதங்களை.
அனுமானம் அல்லது சாஸ்திரங்களால் அல்ல!

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

3#8a. The Three GuNas (1)

Satva guNam is associated with white color. It is based on love and a feeling of happiness. Truthfulness, Good conduct, spirit of achieving, patience, mercy complacence, courage, interest in good things, interest in doing good deeds are the outlets of Satva GuNam.

RajO guNam is associated with red color. It lacks love and is based on sorrow. Hatred, anger, enmity, jealousy, pomp and show, desire, carelessness, frequent uncontrollable outbursts of temper and too much of ego are the outlets of RajO guNam.

TamO guNam is associated with black color. Back biting, interest in forbidden actions and things, laziness, too much sleep, cunning, treachery, vengeance, ignorance, a feeling of helplessness, arguing, disbelief in God are the outlets of TamO guNam.

One should try to destroy TamO guNam, keep under control the RajO guNam and develop the Satva guNam. When one of these three guNAs dominates, the other two become subdued.

These three guNas are closely related to one another and at the same time they are also opposed to one another. There is no sAstra which can help us to distinguish between these three guNas. One must learn to identify them through one’s own personal experience.

 
kandha purANam - pOr puri kANdam

4f. நகரை அழித்தல்

தோற்றோடிய பூதர்களும், துன்பம்
ஆற்றாது தளர்ந்து விழுந்தவர்களும்,

மறைந்து சூரபத்மன் ஒளிந்த பிறகு
முருகக் கடவுளை வந்தடைந்தனர்.

“சூரபத்மனின் மகேந்திரபுரியை நாம்
ஆரவாரம் செய்யும் கடலில் எறிவோம்!”

ஒருவரை ஒருவர் அழைத்துக் கொண்டு
புறப்பட்டு அடைந்தனர் மதிற் சுவற்றை.

மதிலை அடைந்த பூதப்படையைக் கண்டு
மதிற் காவலன் அதிகோரன் சினந்தான்;

போர்க்கருவிகள் முழங்க அவுணர்கள்
போர் புரிந்தனர் பூதப் படைகளுடன்;

ஈட்டியால் குத்தியும், வாளால் துணித்தும்,
எறிந்தனர் மரங்களையும், மலைகளையும்!

பூதங்கள் போரிட, அவுணர்கள் அழிந்திட
பருந்துகளும், காகங்களும் வந்து கூடின.

அதிகோரனை மேகர் அடித்தார் மார்பில்!
அதிகோரன் மடிந்தான் சுருண்டு விழுந்து.

பேரொலி செய்த பூதங்கள் பிறகு சென்றன;
ஆயிரம் யோசனை உயர்ந்த கோபுரத்தை

பிடுங்கிக் கடலில் அதை வீசி எறிந்தன.
நடுங்கியது நிலம்; நடுங்கினான் சேடன்;

ஆழ்ந்தது கோபுரம் மந்தர மலை போல்!
சூழ்ந்தது நகரைக் கடல் நீர் மேல் எழுந்து!

இடித்தும், மிதித்தும் மதில்களை வீழ்த்திக்
கடலில் தள்ளிப் பூதங்கள் நகரை அழித்தன.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

4#4f. Destroying Veera Mahendrapuri.


After Soorapadman disappeared the army of Murugan returned to him. They called out to one another, “Come on! Let us go and destroy the capital city of Soorapadman!”

The army reached the encircling wall protecting the city. Athigoran was guarding the wall and he became very angry when his eyes fell on the approaching army of demons.

The army of asuras fought the army of demons. The used freely spears, swords, uprooted trees and mountains. There was a heavy loss of life on the side of the asura army and the carrion birds assembled to feast or the dead bodies.

Megar hit Athigorn on his chest and killed him. The army of demons rejoiced loudly. They demolished the encircling wall of the city and threw it into the sea. The earth shook and Adiseshan trembled.

The Gopuram submerged as the Mount Mandara did in the Ocean of Milk long ago. The sea water rose up. The army of demons destroyed the protective wall and the city of Veera Mahendra puri completely.

 
The 64 Thiru vilaiyAdalgaL

# 56 (b). பிணக்குத் தீர்த்தது!

சிலர் ஓடிவந்தனர் விரைந்து அங்கே!
சிலிர்க்க வைக்கும் நல்ல செய்தியுடன்!


“பொங்கிய வைகையின் தென் கரையில்,
சங்கப் புலவர்களோடும், தேவியோடும்,


எழுந்தருளி உள்ளான் நம் சிவ பெருமான்.
பழுதில்லாமல் கண்டோம் அதை நாங்கள்.”


அழுத கண்ணும், சிந்திய மூக்கும் ஆகத்
தொழுதபடியே விரைந்தான் வழுதியும்.


புதுத் திருக்கோவில் அடைந்த மன்னன்
மெதுவாகக் கேட்டான்,”என் பிழை என்ன?


ஏன் இங்கு குடி பெயர்ந்து வந்து விட்டீர்?
என் நகரம் பாழடைந்து போகும் வண்ணம்!”


“ஸ்தலங்களில் எல்லாம் உயர்ந்தது ஆலவாய்!
ஸ்வயம்பு லிங்கங்கள் எண்ணில் அடங்காதவை!


அவற்றுள் சிறந்தவை அறுபத்து நான்கு ஆகும் .
அவற்றுள்ளும் சிறந்தவை எட்டு லிங்கங்கள்.


அஷ்ட திக்பாலகர்கள் இவ்வெட்டையும்
இஷ்டத்துடன் பூஜித்துக் கொண்டு வந்தனர்.


குபேரன் பூஜை செய்தது இந்தச் சிவலிங்கம்;
குபேரன் எனது அருமை நண்பன் அல்லவா?


இடம் இது இன்று முதல் சிறப்புடன் விளங்கும்
வட திரு ஆலவாய் என்னும் அழகிய பெயரால்.


இடைக்காடன் பிணக்கை எண்ணியே அனைவரும்
இடம் பெயர்ந்து இங்கு வந்து விட்டோம் மன்னா!”


ஆகாசவாணி விளக்கியது அரன் கருத்தினை.
“ஆகா! உடனே அவரை கௌரவிக்கின்றேன்!


மீண்டும் ஆலவாய் எழுந்து அருள்வீர்
ஆண்டவனே உடனடியாக அனைவரும்!”


சங்கப் புலவர் புடை சூழச் சென்றான் மன்னன்,
தங்கத் தமிழ்ப் புலவன் இடைக்காடனிடம்;


பொன் ஆசனத்தில் புலவரை அமரச் செய்து
இன்னும் ஒருமுறை பிரபந்தம் கேட்டான்!


அனைத்துப் புலவர்களுக்கும் மன்னன்
நினைக்க ஒண்ணாத பரிசுகள் தந்தான்.


நன் முத்து மாலைகள், பட்டாடை, கரி, பரி,
நன்செய், புன்செய் நிலபுலன்கள் என்னும்படி!


நல்ல பரிசுகளைப் பெற்ற புலவர் குழாம்
நல்ல ஆசிகளை வாரி வாரி வழங்கியது.


நல் வாழ்த்துக்கள் பெற்று நல்லாட்சி செய்தான்!
நல்லுலகம் செல்லுமுன் மகனுக்கு மணிமகுடம்!


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


# 56 (b). End of misunderstanding.


Some people came running and reported that Lord Siva, Uma Devi, and the Sanga poets were now in another temple, in the southern bank of river Vaigai.


The king left immediately to that place with tears running down his cheeks and palms pressed together in anjali.


He cried to the Lord, “Why have you deserted my city and displaced to this place? What is my crime?”


The asareeri replied, “Aalawaai is the holiest among all places. Numerous swayambu lingams abound there. Of those sixty four are very famous.


Of them eight are really famous since they were worshiped by the eight digpaalakaas.
This lingam was worshipped by Kuberan who is my bosom friend. That is why I moved in here.

Hence forth this place will be known as the Vada Thiru Aalawaai.
I am unhappy with the way you have treated the poet Idaikkaadanaar. ”

The king realized his folly. He begged the Gods and poets to return to his city.
He brought poet Idaikkadanaar with due honors. He gave him a royal seat and listened to his prabandham with rapt attention and appreciation.

The king enjoyed the session and showered rare gifts and fertile lands on all the poets.
They too blessed him with a long and prosperous life. He ruled well for many more years. His son Ari Mardhanan succeeded him.
 
bhagavathy bhaagavatam - skanda 8

8#13b. S’AKA DWEEPA

S’aka dweepa is situated next to the Ksheera SAgara. It is surrounded by the Dadhi SAgara (the Ocean of Curds). A great S’aka tree stands on this dweepa.

The Dweepa is named after the S’aka tree. MedhAtithi, the son of Priyavrata is the Lord of this Dweepa. He divided this land into the seven Varshas and gave them to his seven sons respectively. He took refuge to the path of Yoga.

The names of the seven Varshas are Purojava, Manojava, PavamAnaka, DhoomrAneeka, Chitrarepha, Bahuroopa, and Vis’vadhrik.

The seven mountains in these seven varshas – one in each Varsha – form their boundaries. There are seven rivers also.

The names of the mountains are :– Ees’Ana, Oorusringa, Valabhadra, S’ata Kes’ara, Sahasra-srotaka, DevapAla, and MahAsana.

The names of the rivers are :– AnaghA, AayurdA, Ubhayasprishti, AparAjitA, Panchapadi, Sahasras’ruti and Nijadhriti. These seven rivers shimmer and are resplendent with
luster.

The people are divided into four classes :– Satyavrata, Kratuvrata, DAnavrata, and ANuvrata. They excel in PrAnAyAmA exercise and thereby bring under control their Rajasa and TAmasa GuNas. They worship Hari of the nature of PrANa VAyU

 
bhagavthy bhaagavatam - skanda 3

3#8b. மூன்று குணங்கள் (2)

சத்துவ குணம்:

கர்மானுஷ்டானத்தில் மிக்க நாட்டம்,
தர்மானுசாரமாகத் திரவியம் ஈட்டல்,

வேதத்திலும், யாகத்திலும் மிகுந்த நாட்டம்;
தர்மானுசாரமான காமமும், போகங்களும்.

மோக்ஷ சாதனங்களில் தீவிர ஈடுபாடு
மற்ற குண ரூபிகளை ஒதுக்கி வாழுதல்.

தமோ குணம்:

வேதங்கள், அறநூல்களில் வெறுப்பு,
தேடிய திரவியத்தை விரயம் செய்வது;

துரோக எண்ணங்களுடன் பழகுவது ;
கோப, தாபங்கள், பிடிவாதம், மடமை!

ரஜோ குணம்:

சாஸ்திர தர்மங்களைப் புறக்கணித்தல்;
சாஸ்திர விரோதமான செயல் புரிதல்;

அதர்ம வழியில் பொருள் ஈட்டல்
அதர்ம போகங்களை விரும்புதல்;

சத்துவ நெறி நிற்பவரை வெறுத்தல்;
சித்த சுத்தி இல்லாது செயல் புரிதல்;

நூல் ஆராய்ச்சியில் வளரும் சத்துவ குணம்
மெல்ல அகற்றும் தமோ ரஜோ குணங்களை.

அஞ்ஞானத்தில் வளரும் தமோ குணம்
அகற்றும் சத்துவ, ரஜோ குணங்களை!

லோபத்தால் வளரும் ரஜோ குணம் நீங்கிப்
போகவைக்கும் சத்துவ தமோ குணங்களை.

கலந்தே இருக்கும் முக்குணங்களும் – நாமே
கண்காணிக்க வேண்டும் எழும் குணத்தை.

ஆராய்ந்து தூய்மைப் படுத்த வேண்டும் – நம்
ஆத்மாவையும், உடலையும், மனத்தையும்.

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

3#8b. The Three GuNaas (2)

Satva GuNam:

Interest in performing the prescribed Karmas, earning livelihood in a dhArmic manner, interest in Veda and yAgams, enjoyment of pleasures not forbidden by sAstras, interest in MOksha sAdhanam (trying for liberation) , keeping away from the people with Rajo and Tamo guNam are the qualities of a person with Satva GuNam.

TamO GuNam:

Hatred towards Vedas and sAstras, wasting away one’s hard earned wealth, associating with persons with treachery in heart, anger, adamant behavior and foolishness are the qualities of a person with Tamo GuNam.

RajO GuNam:

Boycotting the prescribed duties, doing things forbidden by the Vedas and sAstras, earning livelihood in foul or forbidden manner, going in search of forbidden pleasures, hating the good -natured people and doing things without the purity of mind.

Reading sAstra will develop the Satva GuNam which can remove the Rajo and Tamo GuNas. TamO guNam develops from ignorance and removes the Satva and RajO GuNas. RajO GuNam develops from greed and removes the TamO and Satva GuNas.

These three GuNAs always coexist in differing quantities. One must always keep an eye on the guNA as it emerges. Constant monitoring and checking will keep the guNAs under control. A person can get his mind, body and aatman purified in this manner.

 
kandha purANam - pOrpuri kANdam

4g. தந்தை, தனயன்

தோற்றோடிய சூரபத்மன் அடைந்தான்
ஆற்றாமையுடன் தன் அரண்மனையை;

போர்ச் சூழ்ச்சிகளை எண்ணினான் அவன்.
போரில் சூரபத்மன் தோற்று வந்த சேதியை

உரைத்தனர் தூதுவர் பானுகோபனுக்கு;
உடன் வந்து சேர்ந்தான் தன் தந்தையிடம்.

“நானே வெல்வேன் பூதப் படைகளை
நாளை செல்ல அனுமதியுங்கள் என்னை.”

“முருகனைப் போரில் வெல்வது என்பது
ஒருவருக்கும் இயலாது என்னைத் தவிர.

மற்றவர்களை நீ வெல்வாய் மகனே!
மற்று என் இலக்கு அந்த முருகனே!”

பானுகோபன் மகிழ்ந்து உடன் பட,
தானும் மனமகிழ்ந்தான் சூரபத்மன்.

தந்தையிடம் விடை பெற்ற தனயன்
தன் இருப்பிடத்தைச் சென்றடைந்தான்.

விரைந்து வந்தனர் அவுண ஒற்றர்கள்;
உரைத்தனர் பூதர்கள் செய்தவற்றை.

அவுணத் தச்சன் அழைக்கப்பட்டான்;
அவுண நகரம் புதுப்பிக்கப் பட்டது.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

4#4g. The father and the son.


Soorapadman reached his palace sad and crest fallen. He sat contemplating on the war techniques. Messengers told BhAnukoban about his father’s defeat and misery. Sooran’s son BAnukoban reached his father’s palace immediately.

“Father! I will defeat Murugan’s army tomorrow. Please allow me to lead our army.” “Son! No one can fight Murugan except me. You can fight with all the others but I will fight with Murugan myself”

This was agreeable to both the father and son. They both became happy. BhAnukoban returned to his palace. The messengers rushed in carrying the news of the destruction of the city by the army of Murugan. The asura carpenter was summoned immediately and he restored the city to its original glory.
 
The 64 Thiru ViLaiyAdalgL

57a. சிவன் இட்ட சாபம்

# 57 (a). சிவன் இட்ட சாபம்.

ஒருமுறை ஏகாந்தத்தில் அன்னைக்கு
குரு உபதேசம் செய்தார் சிவபிரான்.


வேத விழுப்பொருளின் சாரங்களை
வேண்டா வெறுப்பாகக் கேட்டாள் உமை !


“பாராமுகம் காட்டி விட்டாய் பெண்ணே நீ!
வேத விழுப்பொருளில் விருப்பம் இன்றியே!


ஏனோ தானோ என்று கேட்டதால் இன்று
வீணாகச் சாபம் பெறப் போகின்றாய் நீ!


விரதங்கள், தருமம் போன்ற எதுவும்
சிறிதும் இல்லாத பரதவ குலத்தினில்


பெண்ணாகப் பிறந்து தூய்மை அடைவாய்!
விண்ணுலகத்துக்கு மீண்டும் வரும்வரை.”


“தங்களைப் பிரிந்து தரியேன் இன்னுயிர்,
தாங்கள் அறியாத உண்மையா இது?”


“வலைஞன் மகளாக வளரும் உன்னை
வதுவை புரிந்து உன் சாபம் தீர்ப்பேன்!”


நடந்ததை அறிந்து அடைந்தனர் சினம்
நம்பி ஐங்கரனும், தம்பி ஆறுமுகனும்;


வேதச் சுவடிகளை வீசினான் கடலில்;
வேழமுகன் தந்தை தடுக்கும் முன்பே!


சிவ ஞானச் சுவடியைப் பறித்து விட்டுச்
சிவகுமாரனும் அவற்றைக் கடலில் வீசவே


தொந்தரவு செய்யும் பாலகரை அனுமதித்த
நந்தி தேவன் மீது பாய்ந்தது சிவன் சினம்!


“இட்ட கட்டளைகளை மீறிவிட்டாய் நீ!
கட்டங்கள் பல விளைந்துவிட்டனவே!


பாரில் சென்று விழுந்து, நீரில் பிறந்து,
பரிதவிப்பாய் நீ பெரிய சுறா மீனாக!”


ஐங்கரனுக்குச் சாபம் இட்டால் அது
ஐயனையே வந்து அடைந்துவிடுமே!


ஆறுமுகனைச் சபித்தார் வணிகனின்
ஊமை மகனாகச் சென்று பிறக்கும்படி!


சாபம் பலித்து விட்டது உடனேயே!
நந்தி தேவன் இப்போது கொடிய சுறா!


உமை மாறினாள் ஒரு பசுங்குழவியாக.
குமரன் ஊமை உருத்திர சருமானாக!


கவனம் வைக்க வேண்டும்கல்வியில் !
மறை பொருளின் மறைந்த பொருளை


கவனம் இன்றிக் கேட்டதும் தவறே!
கடலில் சுவடியைப் போட்டதும் தவறே!


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


# 57 (a) SIVA CURSES UMA.


Once Siva did upadesam to Uma about the sacred and secret meanings of the Vedas. For some reason Uma was not paying proper attention to Siva.


He got annoyed and cursed her thus: “You did not pay proper attention or give due respect to the sacred Vedas. May you be born among the fishermen who have no vrathams or dharma to follow. After all your sins are absolved, you may return to me”

Uma broke down and cried,

” Lord! you know very well that I can not live away from you. Why do you punish me and curse me thus?”


“I will marry you and end the saapam at the right time!” Siva consoled her.

Vinayaka and Skanda became very angry on learning about these happenings.
Vinayaka gathered all the manuscripts of Veda and threw them down into the sea-even before Siva could stop him.

Skanda grabbed the remaining manuscripts and threw them down into the sea.

Siva got very angry on Nandhi who had allowed these troublesome children in.
He cursed Nandhi thus:

“You have disobeyed me and my orders to keep out everyone. May you be born a giant shark in the ocean.”
Any curse inflicted on Vinayaka would affect Siva himself. So he did not curse Vinayaka. Skanda was cursed to be born as the dumb son of a merchant Dhanapathi.

The curses took effect immediately. Nandhi was now transformed into giant shark in the ocean. Uma became a beautiful baby girl. Skanda was born as Rudra Sarman on earth!


We must always pay full attention to our guru while learning. It was wrong on the part of Uma not to pay proper attention and it was wrong on the part of Skanda to throw away the sacred manuscripts into the sea.
 
bhagavathy bhaagavatam - skanda 8

8#13c. Pushkara dweepa

Pushkara dweepa is next to this Dadhi SAgara or the Ocean of Curds. It is twice as large as S’Aka Dweepa. It is surrounded by the Dudha SAgar (the ocean of milk) all twice as large.

The leaves of Pushkara tree in the Pushkara Dweepa are fiery like the golden flames. They are so clean and so pure. Tens of millions of golden leaves adorn this Tree.


VAsudeva, the Guru of all the Lokas, has created this Pushkara Dweepa as the seat of Parameshti BrahmA, who has six extraordinary powers, for the purpose of creation.


There is one mountain in this Dweepa which divides it into two parts, named ArvAcheena and ParAcheena. These form the boundaries of the two Varshas.


There are four cities on the four sides. Indra and the three other LokapAlas are the lords of these cities. The Sun God comes out from their top and goes round Meru and goes down there again.


The whole year is his Chakram, circle of circuit; His path is UttrAyanam and DakshiNAyanam. Veetihotra, the son of Priyavrata is the lord of this island.


He divided the two Varshas between his two sons, ramaNa, DhAtaKi. They ruled over the varshas named also after them.


They worshiped Brahma the God seated on a lotus flower and followed such path of the Yoga which lead them to BrahmA’s SatyalokyA.



 
bhagavathay bhagavatam - skanda 3

3# 9. குணங்களின் இயல்புகள்

முக்குணங்களில் சிறந்தது சத்துவம் – எனினும்
முக்குணங்கள் கலந்தே இருக்கும் எப்போதும்.

கணவனிடம் சாத்வீகமாக உள்ள ஒரு பெண்
காட்டுவாள் மற்ற குணங்களைப் பிறரிடம்!

உழவருக்குப் இன்பம் தரும் பெருமழை
அழவைக்கும் ஏழைக் குடிசைவாசிகளை.

களங்கமற்ற ஒளியுடன் கூடிய சத்துவம்
கடவுள் பற்றித் தெரிவிக்கும் அறிவுக்கு.

சோம்பல், அறிவின்மை, சபலம் இவற்றால்
சீரழித்து விடும் மனிதனைத் தமோ குணம்.

ஆவேசம், இந்திரிய சுகம், சித்த சலனம்,
அலையும் மனம், மறைக்கப்பட்ட புத்தி;

அழித்து விடும் ரஜோ குணம் பேராசையால்;
அழிந்து விடும் மன அமைதியுடன் ஆனந்தம்!

தீபம் எரியத் தேவை திரி, எண்ணெய், விளக்கு;
தீபமாகச் சுடர் விடும் முக்குணங்களில் ஒன்று.

மஹா மாயையாகிச் சிருஷ்டிப்பாள் பராசக்தி;
மகா சக்தியின் அம்சங்களே பிற தெய்வங்கள்!

சக்தியின் அம்சமாக இருப்பதால் தேவதைகளுக்குச்
சக்தி கிடைக்கிறது தத்தம் பணிகளைச் செய்வதற்கு.

காப்பாள் அன்னை மந்திரத்தை உச்சரித்தால்!
காப்பாள் அன்னை மந்திரத்தை உளறினாலும்!

எழுத்தறிவில்லாத அந்தணன் சத்தியவிரதன்
எழுப்பினான் ஒரு பன்றி எழுப்பிய ஒலியை.

கல்வி அறிவில்லாத அம் மூடனைத் தேவி
கவிராஜன் ஆகிவிட்டாள் அக மிக மகிழ்ந்து.

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

3#9. The Three guNAs (3)

Satvam is the best among the three guNAs. But the three guNAs exist always together – one of them dominating the other two.

A lady may behave very gently in a SAtvic manner with her husband and may exhibit the RajO and TamO guNam in her dealings with the others.

The heavy rain which brings joy to the farmers brings tears to the poor people who dwell in huts with leaking roofs.

The Satva GuNam shines brilliantly and makes us understand the good things well. TamO GuNam destroys a man by his laziness, wavering of mind, ignorance and sinful actions. Anger, dominance, sensual pleasures, fickle mindedness, destroy a man by his RajO guNam.

Just as we use all the three items for lighting lamp namely The lamp, the oil and the wick, we exhibit all the three guNAs at different times.

Shakti Devi creates assuming the role of MahA MAyA. All the gods and Goddesses are the various forms of ParA Shakti. That is how they obtain the power to discharge their respective duties satisfactorily.

Shakti Devi protects us not only when we recite her mantra but also when we blabber her mantra. There was an illiterate Brahmin called Sayta Vrathan. He mimicked the sound made by a pig and Devi blessed him to become a great poet – since the sound made by him resembled her beeja mantra.

 
kandha purANam - pOr puri kANdam

5a. மூன்றாம் நாள் போர்

பொழுது புலர்ந்தது, எழுந்தான் பானுகோபன்;
தொழுது மாயையை அழைத்தான் வருமாறு.


போரிலே தோற்று ஓடி ஒளிந்ததைக் கூறி
நேரிலே அவளிடம் உதவிகள் கோரினான்.


“மறை வழியை விட்டு விலகிச் சென்றாய்!
சிறை செய்தாய் விண்ணுலகத் தேவர்களை;


அழித்தாய் இந்திரனின் அரசாட்சியினை!
அழித்தாய் முனிவர்கள் செய்த தவத்தை;


வளர்த்தாய் நீ பலவிதக் கொடுமைகளை!
வளர்த்தாய் நாற்புறமும் பகைவர்களை.


மண்டும் பகைவர்களிடம் நீ தோற்றாய்!
வேண்டும் உதவி என்னவோ கோருவாய்!”


“பகைவர்களை வெல்ல வல்ல அரிய
படைக்கலன் ஒன்று வேண்டும் எனக்கு.”


மாயப் படைக்கலன் ஒன்றை உருவாக்கி
மாயை அளித்தாள் பானுகோபனுக்கு.


“வெற்றியை உனதாக்கும் இப்படைக்கலன்.
இற்றை நாள் போரில் வெற்றி உனதே!”


மாயப் படைக்கலனைப் பெற்றதும் – பிற
தூய படைக்கலன்களுடன் புறப்பட்டான்.


காற்றுப் படை, தீப் படை, யமப் படை,
சூரியப் படை, சந்திரப் படை, சிவப்படை,


நான்முகப் படை, நாராயணப் படை என்னும்
நானாவிதப் படைக்கலன்களுடன் சென்றான்.


பதினாயிரம் வெள்ளம் கரிகள், பரிகள்,
பதினாயிரம் வெள்ளம் தேர்க்கூட்டம்,


காலாட்படை இருபதினாயிரம் வெள்ளம்
களம் நோக்கி நடந்தது பானுகோபனுடன்!


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


4#5a. The war on the third day.


BhAnukoban was up by the dawn on the next day. He prayed to MAyA to appear in front of him. He related how he and his father were defeated by the army of Murugan. He also sought her help to win the war.


” You have deviated from the path prescribed by the Veda. You imprisoned the Devas. You toppled Indra’s rule. You ruined the tapas done by rushis. You encouraged many atrocities. You made enemies all around you. So you got defeated. Now tell me what exactly you want from me.” MAyA asked BhAnukoban.


“I want a rare asthram which will help me to win today’s war.” She created a mAya astram and gave it to him. “This asthram will ensure your victory in today’s war.”


BhAnukoban received the mAya asthram and took his other asthrams as well. He had
the asthrams of Vayu, Agni, Yama, Soorya, Chandra, Siva, Brahma and NArAyaNa. Ten thousand veLLam of horses, equal number of elephants and chariots and twenty thousand veLLam of asura warriors accompanied BhAnugopan to the war front.

 
The 64 ThiruvilaiyAdalgal

57b . பரதவப் பெண்.

# 57(b) . பரதவப் பெண்.

பாண்டிய நாட்டின் கிழக்குக் கடற்கரை,
பக்கம் எனப்படும் பரதவர்களின் சேரி.
நற்றவம் செய்தும் தன் பாப வசத்தினால்,
கொற்றவ பரதவனாக இருந்தான் ஒருவன்.


அரனிடம் பக்தி மாறவில்லை – ஆயினும்
அறிவில் தான் செய்த தவம் நினைவில்லை.
குறைவற்ற மக்கட் செல்வமும் இல்லை;
குடிமக்களே அவன் அருமைக் குழந்தைகள்!


உறவினருடன் கடற்கரை செல்லுகையில்,
கிறங்கினான் ஒரு சிறு அழு குரல் கேட்டு!
பனை மரத்தின் கீழே பச்சிளம் குழவி!
மனைக்கு எடுத்துக் கொண்டு ஓடினான்.


“யார் பெற்ற செல்வக் குழந்தையோ?
பேர் சொல்ல வந்த பொற்கொடியோ?
கடல் மகளா? அலை மகளா? இவள்
உடல், பொருள், ஆவியைக் காப்பவளா?”


பிறவிக் குருடனுக்கு இரண்டு கண்களும்,
பிறவி ஊமைக்கு இனிய சொற்களும்,
கிடைத்து போலவே கூடி மகிழ்ந்தனர்
கடல் சேரி வாழ்ந்திருந்த பரதவ மக்கள்.


ஆரவாரம் செய்தனர் கடலலை போல!
குரவை இட்டனர் கூட்டம் கூட்டமாக!
கூத்தாடினார்கள் தலை கால் தெரியாமல்!
ஆத்தாளே மகளாக வந்ததில் மகிழ்ந்து!


நாளொரு மேனி! பொழுதொரு வண்ணம்!
தளர் நடையிட்டு அவள் விளையாடினாள்!
தினம் ஒரு அழகால், புது விளையாட்டால்
திறமையாக மனத்தைக் கொள்ளை அடித்தாள்.


வலிய சுறா மீனாக மாறிவிட்ட நந்தி,
வலியத் தேடினார் வேதச் சுவடிகளை.
தலை மீது அவற்றைச் சுமந்து கொண்டு,
அலை கடலில் அவர் வலம் வந்தார்.


சிவனையே சிந்தையில் நினைந்தார்!
அவனை விட்டு விலகியதால் சினந்தார்;
கடல் நீரை மத்துப் போலக் கலக்கினார்.
கடல் படகு, தோணிகளைக் கவிழ்த்தார்.


அட்டஹாசம் செய்த சுறாவை – எப்பாடு
பட்டாவது பிடிக்க முயன்றனர் பரதவர்.
கிட்டது ஓடி மறைந்து விடும் சுறா
எட்டாத ஆழத்தில், ஆழ் கடலில்!


திருமணப்பருவம் எய்திவிட்டாள் உமை;
ஒரு கல்லில் இரு மாங்காய்கள் வேண்டும்;
சுறாவை வென்று பிடிப்பவருக்குத் தன்
அருமை மகளுடன் திருமணம் நிகழும்.


இறைவன் மனம் கனிந்து விட்டான்.
சுறாவை மீண்டும் நந்தி ஆக்கிவிட்டு,
பரதவப் பெண்ணாகிப் பரிதவிக்கும்
பார்வதியின் கரம் பற்றி மணப்பதற்கு!


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


# 57 (B). KING OF THE FISHERMEN.


In the eastern side of the Paandiya kingdom the fishermen lived in a Paakkam.
A good man was born as a fisherman due to a sin he had committed in his previous birth.

He became the leader of those people.
He could not remember his past life. But his bhakti towards Siva remained undiminished.

He did not have any children of his own but treated all his people as his own children.

When he was on his way to the sea shore he heard he feeble cry of child. He was stunned to find a lovely baby girl under the palm trees. He wondered who it could be and took it home to his wife.

They believed that it was a gift from God. The whole village celebrated the arrival of this divine baby-the gods gift to them.The danced, they sang and thanked their god for the gift of the lovely child.


The child grew up well. She did new things and played new games everyday making the whole village happy.


Nandhi who had become a huge shark now, hunted for the manuscripts of the Vedas.
He found them and carried them on his head.


Often he would become angry at the thought of being separated from his Lord Siva. He would churn the ocean and topple all the boats and create a havoc.


The fishermen tried to catch the shark. But it would always elude them and hide in the depths of the ocean.


Uma had attained marriageable age now. Her foster father decided that he would cast two mangoes with one stone.


The man who captured the troublesome shark would win the hand of his daughter in marriage.


Siva thought that the time was ripe for the sapa vimochanam. He would return Nandhi to his original glory and marry Parvathi.


 
bhagavathy bhaagavatam - skanda 8

8# 14. ஒளி வீசும் மலை

அமைந்துள்ளது லோகாலோகம் என்னும் மலை
ஒளிரும், ஒளியற்ற உலகங்களின் மையத்தில்.

புஷ்கரத் தீவுக்குப் பின்புறம் உள்ளது லோகாலோகம்;
மானசேந்திரம், மேருவுக்கு இடையே உள்ள அளவு.

ஒளிரும் உருக்கிய பொன்போல லோகாலோக மலை;
மிளிரும் தூய கண்ணாடி போல லோகாலோக மலை.

வளர்ச்சியும், தளர்ச்சியும் இல்லை இங்குள்ளவற்றுக்கு!
வசிப்பதில்லை ஜீவராசிகள் எதுவும் இந்த மலையில்!

விளங்கியது இது சூரியனைப் படைக்கும் முன்பே;
ஒளியூட்டுகின்றது இந்த ஒளிரும் மலையே இங்கு.

ஒளிரும் ஆதவன் முதல் ஒளிரும் துருவன் வரை
மிளிர்கின்றன நான்கு திக்கஜங்கள் இதன் மீது!

ரிஷபம், புஷ்க சூடம், வாமனம், பராஜிதம் ஆம்
விசேஷமான அந்த நான்கு திக்கு யானைகள்.

விஷ்ணு இதன் பாதுகாவலர்; அஷ்ட சித்திகளுடன்
விஷ்வக்சேனர் போன்றோர் உதவுவர் விஷ்ணுவுக்கு.

உள்ளது சுத்த ஆகாசம் இந்த மலைக்கு வெளியே;
உள்ளது யோகிகளின் மார்க்கமாக அத்தூயவெளி.

இருக்காது சூரியனின் ஒளி அத் தூய வெளியில்;
இருக்கும் சூரிய ஒளி பூமியிலும், ஆகாயத்திலும்.

மிர்த்த தண்டத்திலிருந்து பிறந்தவன் மார்த்தாண்டன்
ஹிரண்ய கர்ப்பத்திலிருந்து ஹிரண்யாண்ட சமுத்பவன்.

நரகம், சுவர்க்கம், பூமி, ஆகாயம் என்று சூரியன்
அறிவிப்பான் பேதங்களைத் தன் ஒளிக் கதிர்களால்.

ஆதவன் ஆகிவிடுவான் மறைமுக இறைவனாக!
ஆதவன் அளிக்கின்றான் உயிர்களுக்கு வாழ்வு!

அதிகரிக்கும் பகல் பொழுது உத்தராயணத்தில்;
குறையும் பகல் பொழுது தக்ஷிணாயனத்தில்.

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

8#14a. LOkAlOkam

Next to the ocean of pure water, is the mountain, called LOkAlOka. It marks the sphere between the two territories LOka and AlOka. This is a mountain of pure gold extending to a distance equal to that between MAnasOttara and Meru.

This mountain shines like a mirror and there are no living beings here. Any substance placed on it would get converted into gold. Since no living beings can live there, it is named LOkAlOka. This exists always between the LOka and AlOka.

God made this as the boundary of the three LOkas. The rays of the Sun, the Polar Star and all the planets are confined to this sphere. Passing through it, these luminaries shed their light on the three LOkas.

This great mountain is so lofty that the rays of the luminaries can never go out of it. BrahmA has placed very big elephants on all sides of it which are called Rishaba, Pushpachooda, VAmana and AparAjitha.

These four elephants hold all the Lokas in their respective positions. Hari gives strength to these elephants and to Indra and others who are reckoned to be His Vibhootis. He manifests His S’uddha Sattva and united with the eight Siddhis, is reigning there. He is surrounded by VishvaksEna and others to help him.

AlOka is situated outside the above LOka. Beyond the mountain LOkAlOka lies the pure path leading to YogEs’vara.

When the Sun enters within the egg-shaped ellipsoid formed by the Heaven and Earth, He is called as MArthANda. He becomes the HinraNya garbba when born of this golden egg.

Sun ordains the quarters, AkAs’a, Heaven and Earth in their proper spheres and divisions. This Sun is the Atma of Devas, men, birds, reptiles, trees and all other living beings; and He is the Presiding Deity of sight.

Sun God gives light and heat to the three LOkas. He goes by the path of UttarAyaNa His motion becomes slow thus prolonging the day time.

Similarly when the Sun follows the path of DakshiNAyana, his motion becomes slower shortening the day time. Again when He comes at the Equator, He maintains an even pace and both the day and the night become equal.

 
bhagavathy bhaagavatam - skanda 3

3#10a. தேவதத்தன்

கோசல தேசத்து அந்தணன் தேவதத்தன்,
ஆசைப் பட்டான் புத்திரப் பேறு வேண்டி.


உத்தமமான யாகசாலையில் செய்தான்
புத்திரகாமேஷ்டி தமஸா நதிக்கரையில்.


சாம கானம் செய்தார் கோபில முனிவர்;
சாம கானம் செய்பவது மிகவும் கடினம்.


மூச்சை அடக்கிச் செய்ய வேண்டும் கானம்;
மூச்சை விட்டு ஸ்வரபங்கமாக இசைத்தார்.


கோபிலரின் சாம கானம் கேட்ட தேவதத்தன்
கோபித்துக் கொண்டான் அவர் மூடத்தனத்தை.


கோபம் பொது சொத்தாயிற்றே எல்லோருக்கும்!
கோபம் கொண்டார் கோபில முனிவர் இப்போது!


“மூச்சை அடக்குவது எவருக்கும் இயலாதது;
மூச்சு விட்டதற்கு மூடன் என்றாய் என்னை!


மகா மூடனாகவும், பிறவி ஊமையாகவும்,
மகா முரடனாகவும் பிறப்பான் உன் மகன்!” என


“பிள்ளைப்பேறு வேண்டி யாகம் செய்கையில்
பிள்ளையைச் சபித்து வருத்தம் தந்தீரே நீர்!


மூட மகனால் விளையும் பயன் தான் என்ன?
மூட மகன் விலக்கப் படுவான் விலங்கு போல.


வேதம் பயில இயலாது ஊமைப் பிள்ளையால்!
வேதம் பயலாத அந்தணனை எவர் மதிப்பார்?


ஊமை அந்தணன் உரியவன் ஆவான் உழவுக்கு;
உரியவன் ஆகான் அவன் எந்தத் தருமத்துக்கும்.


மூடனுக்குத் தரலாகாது தானம் என்பார்கள்.
அடைவர் நரகம் தானம் தருபவர், பெறுபவர்.


புத்திரன் இல்லாத சோகம் குறைவு தான்.
புத்திரன் ஊமையானால் சோகம் அதிகம்!” என


அழுதான் சாபநிவாரணம் கேட்டு தேவதத்தன்!
விழுந்தான் கோபிலர் பாதங்களில் தேவதத்தன்!


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


3#10. Devadattan


A Brahmin named Devadattan, who lived in Kosala Desam, wished for a worthy son. He performed Putra KAmeshti yAgam on the banks of river TamasA.


Sage Kopila was singing the SAma Vedam. It is very difficult to sing the SAma GAnam, since it requires perfect breath control. Kopilar did his best but Devadattan was not happy with his singing – with breaths taken in between.


He chided Kopilar for this defective singing and called him a fool. Now Kopilar got annoyed with this ill treatment. He cursed Devadattan in a fit of anger,


”Nobody can control his breath completely. You called me a fool for breathing in between the rendition of SAma Vedam. The son born to you will be a perfect fool and dumb in addition to being a fool”


Devadattan felt sorry and said, “I am performing this yAga for begetting a good son and you have cursed the unborn baby so harshly. What is the use of getting a fool for a son? What is the use of a dumb son who will be unfit to learn Vedas?


What respect will the boy get after he grows up – if he has not learned Vedas? He will be avoided in all karmas and dAnams. He will be fit only for working in the fields.


My sorrow of not having a son appears small in comparison to the sorrow of begetting a son who will be dumb and foolish! Please forgive me and give my unborn son a sApa nivAraNam (a means of getting out of the curse).”


Devadattan fell at the feet of Kopilar, washed them with his tears and begged for a sApa vimochanam for his unborn son.



 

Latest posts

Latest ads

Back
Top