• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

A poem a day to keep all agonies away!

kandha purANam - pOr puri kANdam

5b. பானுகோபன் தூது

மதில் புறத்தே வந்து சேர்ந்தான் பானுகோபன்.
குதிரை முகங்கள் ஆயிரம் கொண்ட தூதனை

முருகன் பாசறைக்கு அனுப்பி வைத்தான்;
“கூறுவாய் வீரவாகுவிடம் இங்ஙனம்!

வந்துள்ளான் பானுகோபன் போருக்கு!
நொந்து ஓடி ஒளிவான் என எண்ணாதே!”

விரைந்து சென்றான் தூதுவன் பாசறை;
உரைத்தான் சேதியை வீரவாகுவிடம்;

“உன் உயிரைக் கவர்ந்து செல்வதற்கு
இன்றைக்கு வருவான் பானுகோபன்.

விரைந்து போருக்குப் புறப்பட்டு நீ!”
உரைத்த தூதுவனுக்குக் கிடைத்த பதில்

“அவன் உயிரைக் கவர்ந்து கொள்ள நான்
அவனைத் தேடி வருவேன் எனக் கூறு!”

இளவல்கள், படைத் தலைவர்களுடன் கூடி
அழகன் முருகன் அடிபணிந்தான் வீரவாகு.

தூதுவன் வந்த சேதியை அறிந்து கொண்டு
மாதவன் மருகன் கூறினான் இங்ஙனம்.

“பானுகோபனுடன் போர் புரிவாய் நீ!
தான் ஏவும் படைக்கலன்களை எதிர்த்து

நீயும் ஏவுவாய் தக்க படைக்கலன்களை.
மாயையை வந்து நீக்கும் என் வேற்படை!”

வாழ்க வளமுடன், விசாலாக்ஷிரமணி .

4#5b. BAnukoban’s messenger.

BhAnukoban reached the encircling wall. He sent a messenger who had one thousand horse faces to VeerabAhu. “Tell VeerabAhu that BhAnukoban will kill him in today’s war! Let him not think that I will run away today also!”

The messenger hurried to convey the message. The reply he got from VeerabAhu was, “Tell BhAnukoban that VeerabAhu will come to kill him in today’ s war!” He then went with his younger brothers and other army generals and paid obeisance to Murugan.

Murugan knew about the visit of the messenger and the message conveyed by him. He told VeerabAhu, “You fight with BhAnukoban today. Just shoot the right asthram to annul each of his asthrams. My spear will assist to remove the delusion due mAyai.”

 
The 64 thiru viLaiyAdalgaL

# 57 (c). தேவ வலைஞன்.

நினைத்த மாத்திரத்தில் சிவன் வடிவெடுத்தார்,
அனைத்துலகும் மயங்கும் தேவ வலைஞனாக!


கறுத்த வைரம் பாய்ந்த மேனி, சிறுத்த இடை,
பரந்து விரிந்த மார்பு, அரையில் வரிந்த கச்சு.


இடையில் தொங்கும் கூரிய உடைவாள்,
சடையில் தேன் சிந்தும் நெய்தல் மலர்கள்;


தோலினால் ஆகிய அழகிய மேலாடை,
தோளில் தொங்கும் கனத்த மீன்வலை;


உதவியாளன் ஒருவன் பின் தொடர்ந்து வர
பதவிசாக பரதவ மன்னனிடம் வந்தான்.


“அழகிய நம்பீ! யார் நீ என்று கூறுவாய்!”
என,
பழகியவன் போலச் சிரித்து பதில் தந்தான்.


“மதுரை பரதவர் அரசன் மகன் நான்!
வதுவை புரிய வந்தேன் உம் மகளை!


வலை வீசுவதில் வல்லவன் நான் அறிவீர்.
அலைகடல் என் விளையாட்டு மைதானம்!”


“துள்ளித் திரிந்து துயரம் தருகின்ற
கள்ளச் சுறா மீனை வெல்பவருக்கே


ஒள்நித்தில நகைக் குமரியின் கரத்தை
அள்ளித் தருவேன் நான் திருமணத்தில்!”


ஏறினான் படகில் தன் உதவியாளனுடன்
ஏகினான் கடலில் கடுகி மறைந்தான்


விட ஒண்ணாத சுறா மீனைப் பிடிக்கச்
‘சடார்’ எனத் தன் வலையை வீசினான்.


தெய்வீக வலையில் சிக்கிக் கொண்டது
தெய்வீகச் சுறாவாகிய நந்தி தேவன்.


தொலை தூரம் படகை இழுத்துச் சென்றது.
தொல்லைகள் பல தந்து தப்ப முயன்றது.


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


# 57 (C). THE DIVINE FISHERMAN.


The moment Siva decided to give sapa vimochanam, he acquired the form of divine fisherman.
He was dark, stunningly handsome, strong, slim, broad shouldered and narrow waisted. He had tied up his dress well. A sword hung at his waist.

Flowers dripping with honey decorated his hair. He wore a vest made of a thin hide. His assistant carried the heavy fishing net on his shoulder.


He walked to the king of the fishermen, who asked the newcomer, “Who are you my handsome boy?”


Siva replied,”I am the son of the king of fishermen in Madurai. I have come to marry your daughter! I am an expert in throwing the net. The sea is my play ground.”


“Only the man who could capture the troublesome shark can marry my daughter!”

Siva (turned to a fisherman) got into a boat, with his assistant. They soon disappeared from the sight.

Siva threw his net far and wide. The shark got caught in it but it dragged them all over the sea. It tried every trick known to it to escape from the ne
t.
 
bhagavathy bhaagavatam - skanda 8

8#15a. காலச் சக்கரம்

நடைகள் மூன்று வகைப்படும் – அவை
துரித நடை, மந்த நடை, அதிவேக நடை.


கிரஹங்களுக்கு உண்டு மூன்று ஸ்தானங்கள்,
ஐராவதம், வைச்வாநரம், ஜாரத்வம் என்பவை.


வடவிடம், தென்னிடம், நடுவிடம் எனலாம்!
வடவிடத்தை அடைந்ததும் சூரியன் இழுத்துப்


பிடிக்கின்றான் ரதத்தின் நுகத்தடியை!
பிடிப்பு மந்தமாக்கி விடும் அந்த ரதத்தை!


அதிகரிக்கும் பகல் பொழுது அப்போது;
சுருங்கிவிடும் இராப் பொழுது அப்போது.


தென் வழியை அடைந்தவுடன் சூரியன்
தளர விடுகின்றான் தன் நுகத்தடியை!


அதிகரிக்கிறது அவன் ரதத்தின் வேகம்;
சுருங்கி விடுகிறது பகல் அப்பொழுது.


அதிகரிக்கிறது இரவு அப்பொழுது!
மத்திய வழியில் சூரியன் கயிற்றினை


இழுப்பதோ, தளர விடுவதோ இல்லை!
இரவும், பகலும் சமம் ஆகி விடுகின்றன!


சுற்றுவான் சூரியன் மண்டலத்துக்குள்ளேயே
துருவன் கயிற்றை இழுத்துப் பிடிக்கையில்.


சுற்றுவான் சூரியன் மண்டலத்துக்கு வெளியே
துருவன் கயிற்றித் தளர விடும் பொழுது.


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


8#15a. The Movement of the Sun


Movement of the Sun is of three types – S’eeghra, Manda and Sama. Every planet has three positions. The name of the Madhyagati position is JAradgava, the name of the northern position is AirAvata; and the name of the southern position is Vais’vAnara.


During the UttarAyaNa time, as the Dhruva attracts the rope of air from both the sides, the chariot of the Sun ascends higher being drawn up by the rope.


Thus when the Sun enters within the sphere, the motion of the chariot becomes slower and the day is lengthened and the night is shortened.


When the cord draws towards the south, the Chariot descends and as the Sun then comes out of the sphere, the motion becomes quick. The day shortens and the night is lengthened.


Again when the cord is neither tightened nor is it slackened, rather its motion is exactly mid-way, the Sun also remains in a medium position and his Chariot enters within a sphere of equilibrium and the day and night become equal.


When the cord of air, in a state of equilibrium is attracted by the Polar Star, then it is that the Sun and the Solar system revolves; and when the Polar Star slackens its attraction over the cord of air, the Sun coming out of the middle sphere, revolves; and the Solar system also revolves.



 
bhagavathy bhaagavatam - skanda 3

3#10b. உதத்தியன்

கருணை பிறந்தது தேவதத்தன் கண்ணீரால்;
பெரியோர் சினம் விரைந்து மறையுமல்லவா?

“மறைந்துவிட்டது உன் மேல் வந்த கோபம்,
குறையுடன் பிறப்பான் உன் மகன் எனினும்

நிறைவடைந்து விடுவான் விரைவில் அவன்;
மறையும் மூடத்தனம்; மலரும் அறிவுத் திறன்!”

மகிழ்ந்தான் தேவதத்தன் இது கேட்டு;
நிகழ்த்தினான் யாகத்தைத் தொடர்ந்து.

ரோஹிணி என்ற மனைவி கருவுற்றாள்.
ரோஹிணி நக்ஷத்திரத்தில் பிறந்தான் மகன்!

உதத்தியன் என்ற நாமகரணம் செய்தனர்;
உபநயனம் நடத்தினர் எட்டாவது வயதில்.

கற்க முடியவில்லை மந்திரங்களை அவனால்!
கற்பிக்க முயன்றனர் பன்னிரண்டு ஆண்டுகள்!

ஏளனம் செய்தனர் மக்கள் மூடன் என்று;
கேவலமாக நடத்தினர் அவன் பெற்றோர்.

நிந்தித்தனர் மகனைப் பலவாறாக இகழ்ந்து!
சிந்தித்தான் மகன் “தேவையா இது எனக்கு?”

வெளியேறிவிட்டன வைராக்கியத்துடன்!
வனம் சென்று அமைத்தான் ஓர் ஆசிரமம்.

வாழ்ந்து வந்தான் காய் கனிகளை உண்டு!
வாய்மையே ஆனது அவனுடைய விரதம்.

சத்தியம் பேச வேண்டும் என்ற விரதம்
சத்திய விரதன் என்ற பெயரைத் தந்தது.

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

3#10b. Udatthiyan

Kopilar was moved with pity towards Devadattan. The anger of great men vanishes fast. He told Devadattan, ”I am not angry with you any more. Your son will be born with defects but they will get rectified soon and he will become both very intelligent and famous.”

Devadattan was happy to hear this and completed the yAgam as per the rules. One of his wives named RohiNi became pregnant and delivered a son under the star RohiNi.

The boy was named as Udatthiyan. Upanayanam was performed when he had
completed seven year. But the boy was unable to speak or learn anything properly.

Even after being trained for twelve years, he could not learn anything. People poked fun at him and called him as a dunce. His own parents lost patience with him and ill treated him.

Udatthiyan decided that enough was enough and went away from home with strong vairaagyam (determination). He went to a forest nearby and erected a small hut there.

He lived in it eating the fruits and roots. His only vratham was never to tell a lie and this earned him the name Satya Vratan.

 
kandha purANam - pOr puri kANdam

5c. படைகள் கலந்தன!

படைகள் இரண்டும் கலந்தன – இரண்டு
கடல்கள் என்னும்படிப் போர்க்களத்தில்!


செலுத்தினான் அவுணன் வருணப் படை.
செலுத்தினார் வீரவாகு விழுங்கும் தீப்படை.


அவுணன் செலுத்தினான் தீப் படையை
அழித்துக் கெடுக்க வல்ல காற்றுப் படை.


தேவர் செலுத்தினார் காற்றுப் படையைத்
தோற்கச் செய்ய வல்ல பாம்புப் படையை.


அவுணன் செலுத்தினான் பாம்புப் படையை
அழித்து ஒழிக்க வல்ல கருடப் படையை.


தேவர் செலுத்தினார் கருடப் படையை
தோற்கச் செய்ய வல்ல நந்திப் படையை.


அவுணன் செலுத்தினான் யமப் படையை.
அழித்து ஒழித்தது அதை நந்திப் படை.


அவுணன் செலுத்தினான் நான்முகப் படை.
அது வணங்கி மீண்டது நந்திப் படையை.


அவுணன் செலுத்தினான் நாராயணப் படை.
அது நந்திப் படையுடன் போரிட்டு நின்றது.


செலுத்தினான் வீரவாகு வீரபத்திரப்படை.
தொலைந்து ஒழிந்தது நாராயணப் படை.


செலுத்தினான் அவுணன் சிவப் படையை.
செலுத்தினார் வீரவாகு சிவப் படையை.


சிவப்படைகள் இரண்டும் எதிரெதிர் நின்று
சினத்துடன் ஒன்றை ஒன்று பொருதலாயின!


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


( குறிப்பு …..தேவர் = வீரவாகுத் தேவர்)


4#5c. The war commenced.


The armies moved in and it appeared as though two seas were merging together. BhAnukoban shot the asthram of Varuna. VeerabAhu shot the asthram of Fire to annul it. BhAnukoban shot the asthram of Wind to fight the Fire. VeerabAhu shot the asthram of Snake to fight the Wind.


BhAnukoban shot the asthram of Garuda to fight the Snake. VeerabAhu shot the asthram of Nandhi to fight the Garuda. BhAnukoban shot the asthram of Yama. Nandhi asthram vanquished the asthram of Yama.


BhAnukoban shot the asthram of Brahma. It paid obeisance to the asthram of Nandhi and went back. BhAnukoban shot the asthram of NArAyaNa. It fought well with the asthram of Nandhi. VeerabAhu shot the asthram of Veera Badran which defeated the asthram of NArAyaNa.


BhAnukoban shot the asthram of Siva. VeerabAhu also shot the asthram of Siva. The two asthram of Siva were on opposite sides. The two asthrams fought valiantly with each other!
 
The 64 Thiru viLaiyAdalgaL

57d. சுறாமீன் பிடிபட்டது!

# 57 (d). சுறாமீன் பிடிபட்டது!

உடும்புப் பிடியைப் போல வலையை, வலைஞன்
விடவே இல்லை ஒரு நொடிப் பொழுதும் கூட!


ஓடி ஓடிக் களைத்து விட்டது சுறாமீன் நந்தி.
தேடிப் பிடித்துக் கரையில் வீசினான் வலைஞன்.


திருமணம் நிகழ்ந்தது அவர்கள் முறைப்படி!
அருமை மணமக்களுக்கு என்ன ஆகிவிட்டது?


உமையும், சிவனும் அன்றோ அவ்விடத்தில்
அமைந்துள்ளனர் புதிய மணமக்களாக!


நந்தி தேவன் ஆயிற்று கொடிய சுறாமீன்.
நந்தியின் மீது காட்சி தந்தனர் மணமக்கள்.


கண்டவர்கள் பெற்றனர் தூய மெய் ஞானம்.
மண்டின பாவங்கள் தொலைந்து போயின.


“உம் பக்திக்கு மெச்சியே தேவி உமையை
உம் வளர்ப்பு மகளாக நாம் ஆக்கினோம்.


அன்புக்கு அடிமை ஆகிய நானும் உம்
அன்பு மருமகன் ஆகி விட்டேன் இன்று.


குபேர சம்பத்தைப் பெற்று மகிழ்வீர்!
அமோக போகங்கள் துய்த்து மகிழ்வீர்!


சிவலோக சாயுஜ்யமும் உங்களுக்காகவே
சிறந்த முறையில் காத்து இருக்கின்றது!”


உத்திர மங்கை என்னும் க்ஷேத்திரத்தை
உமை, நந்தி தேவன், பிற அடியவர்களுடன்


அடைந்தார் பிரான்; அங்கிருந்துகொண்டு
படைத்தார் மீண்டும் வேத விழுப்பொருள் .


சிவன் அடியவர்கள் கற்றுத் தேர்ந்தனர்
சிவ யோகிகளும் உடன் கற்றுத் தேர்ந்தனர்


சிவகாமியாகிய உமையுடன், அங்கே, அன்று,
சிவ உபதேசம் பெற்றனர் அறுபதாயிரம் பேர்.


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


# 57 (D). THE SHARK IS CAPTURED!


Siva held on to the net with all his might. The shark became very tired eventually and could swim no more! Siva pulled the shark ashore.


The wedding took place as promised by the king of fisher folks. But where were the newly weds? What had happened to them? Lord Siva and Devi Uma stood there instead of the newly weds!


The shark transformed into Nandhi Devan. The divine couple were now seated on the divine bull. Whoever was present there and saw this rare spectacle gained pure knowledge and pure bliss. All their sins vanished without a trace.


Lord Siva spoke to the chief,” I was pleased with your sincere devotion.That is why I made Uma your daughter. I too became your sin in law. You will be bestowed with every wealth in the world like Kuberan. You will live a very long life filled with happiness and joy. When your time comes. you will attain saayujya mukthi.”


They all left for the kshethram called Uththira Mangai. Siva again did the upadesam of the sacred and secret meanings of the Vedas.


Siva yogis, devotees as well as Uma Devi listened to it with fervor. On the whole 60,000 persons reaped the benefit of Siva’s upadesam.

 
bhagavathy bhaagavatam - skanda 8

8#16a.சந்திரன்

நவக்ரஹச் சக்கரத்தில் இணைந்து சுழலும் மனிதருக்கு
நல்ல பலன்களும் தீயவையும் உண்டாகும் மாறி மாறி.


படைப்புக்கு ஆதாரம் ஆதி புருஷனான திருமால்;
பரிணமிக்கச் செய்கின்றான் தன் ஆத்மாவை!


சூரியன் முதலிய கிரஹங்களின் வடிவமாக
கர்மத் தூய்மை ஆத்மாவுக்கு ஏற்படுத்துவதற்கு.


ஆறு ருதுக்களில் காலரூபியாக உள்ள பகவான்
அந்தந்த ருதுவின் காலத்தை ஒளிர்விக்கின்றான்.


வானகம், வையகம், அந்தரம் என்ற மூன்றிலும்
விளங்குகிறான் ஆதி பரமாத்மா காலச் சக்கரத்தில்.


பயணம் செய்வான் சூரியன் இரண்டு அயனம்;
பன்னிரண்டு மாதங்கள் சேர்ந்தது ஒரு வருடம்;


இரண்டு பக்ஷங்கள் சேர்ந்தது ஒரு மாதம்;
இரண்டு மாதங்கள் சேர்ந்தது ஒரு ருது;


பகலும் இரவும் சேர்ந்தது ஒரு நாள்;
பதிவாக 2¼ நட்சத்திரம் ஒரு ராசி,


சம்வத்சரம், பரிவத்சரம், இதா வத்சரம்,
அனுவத்சரம், இத்வத்சரம் வத்சரங்கள்.


சூரியனின் ஒளியால் ஒளிர்வான் சந்திரன்;
சூரியன் ஓராண்டில் தரும் பலன்களை


சந்திரன் தருவான் ஒரு மாதத்தில் உலகுக்கு.
சந்திரன் வேகமான ஓட்டம் உடையவன் தான்!


பூர்ண கலைகளுடன் பிரகாசிக்கும் போது – அவன்
பிரியமானவன் ஆவான் விண்ணகத் தேவர்களுக்கு!


தேய்பிறையில் ஒளி குன்றிய போது சந்திரன்
பிரியமானவன் ஆவான் நம் பித்ருக்களுக்கு.


பிராணிகளுக்குப் பிராணன் ஆவான் சந்திரன்
இருளையும், ஒளியையும் தருவதனால்.


அமுத மயமான தன் குளிர்ச்சியால் சந்திரன்
சுகமூட்டுகின்றான் தாவர ஜங்கமங்களுக்கு!


‘சர்வாமயன்’ என்று அழைக்கப்படுகின்ற
சந்திரன் அடைகின்றான் தாரகைகளை.


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K . ராமன்


8#16A. THE MOVEMENT OF THE PLANETS


The auspicious and inauspicious events in the lives of the mankind, are due to the different movements of the nine planets or Nava Grahas. Their motion from one star to another and from one constellation to another may appear to be contradictory but they are consistent.


Lord NArAyaNA, Who is the Origin of all; Who is the Aadhi Purusha; from Whom everything has sprung, Who is endowed with six divine powers, in Whom this material world composed of the five elements remains, has divided the Trayee Aatma into twelve parts – for the perfect happiness of everyone and for the purification of Karma.


The Sun who is the Aatman of all the Lokas, revolves in the Zodiac between the Heavens and the Earth and spends twelve months in the twelve constellations.


The twelve months are the twelve limbs of one year. Two fortnights make one month. The two months’ period that the Sun takes to travel over the two constellations is called Ritu or the Season.


The path described by the Sun during three seasons or half the year in the Zodiac is called one Ayanam. The time taken by the Sun to make a complete circuit of the Zodiac is called one Vatsara or year.


This year is reckoned into five divisions as Samvatsara, Parivatsara, IdAvatsara, ANuvatsara and Idvatsara.


The Moon exhibits every month the dark and bright fortnights. Moon is the Lord of the Night and of the medicinal plants. Moon enjoys a day and a night with one of the twelve constellations, consisting of 2¼ Nakshattras.


During the bright fortnight, the Moon becomes more and more visible and gives pleasure to the Immortals by the increasing phases. During the dark fortnight by the waning phases, Moon delights the Pitris.


Moon performs a revolution in the day and night in both the phases of the bright and dark fortnights. Thus Moon becomes the Life and Soul of all the living beings.


Moon fructifies the desires or Sankalpas and is called ‘Manomaya’. Moon is the Lord of all the medicinal plants, and is called ‘Annamaya’.


Moon, filled with nectar, is called the Abode of Immortality gives the final liberation. Moon is called ‘SudhAkara’. Moon nourishes and satisfies the Devas, Pitris, men, reptiles and trees. Hence Moon is called ‘SarvAmaya’.



 
bhagavathy bhaagavatam - skanda 3

3#10c. சத்தியவிரதன்

வேதம் அறியவில்லை உதத்தியன்;
தேவரை தியானிக்க அறியவில்லை;


தவமோ, தியானமோ செய்யவில்லை;
ஜபமோ, பூஜையோ செய்யவில்லை.


பல் துலக்குவான்; தேய்த்துக் குளிப்பான்;
பகல் வேளையில் உண்பான் கனிகளை.


உறங்குவான் இரவில் மரக் கட்டையாக;
உரைப்பதில்லை பொய் எந்த விதத்திலும்.


சிந்தித்தான் தன் வாழ்க்கையைப் பற்றி;
நொந்தான் மனம் அது வீணாவது பற்றி.


“பிறந்தேன் நற்பயனால் அந்தணனாக;
பிறவி வீணாகின்றது வன வாசத்தில்!


பசு பால் கொடாமல் வீணாவது போல!
பழமரம் கனி தராமல் வீணாவது போல!


என்ன பாவம் செய்தேன் முற்பிறவியில்?
என்ன செய்ய வேண்டும் பாவங்கள் தீர?”


பதில் கிடைக்கவில்லை வினாக்களுக்கு;
பதினான்கு ஆண்டுகள் ஓடி விட்டன.


வேடனின் அம்பு தைத்த பன்றி ஒன்று,
வீழ்ந்தது அவன் காலடியில் ஓடி வந்து.


ஊதிரம் வழியும் உடலைக் கண்டு
உடல் நடுங்கிடக் கூச்சல் இட்டான்!


வந்தது “ஹ்ரூ! ஹ்ரூ!” என்ற த்வனி!
வாய் பேச இயலாதவனின் கூச்சல்!


பூர்வ ஜன்மத்தின் புண்ணியமோ – அன்றிப்
பார்வதி தேவியின் அருளோ அறியோம்!


ஒலித்தது ஊமையின் கூச்சலில் – தேவியின்
ஸ்ரீவித்யா மந்திர பீஜாக்ஷரத்தின் உச்சரிப்பு!


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


3#10c. Satya Vratan


Udattiyan did know the Vedas nor did he know how to do meditation or do penance. He
would cleanse his body thoroughly everyday. He would eat the fruits and roots during the day time and sleep like log at night time. He would never utter a lie in any manner.


He thought a lot about his life. ‘I am born as a brahmin due to my good fortune. But my life is being wasted in this secluded life in the forest.


I am as useless as a cow that does not give milk. I am as useless as a tree that does not bear fruits. What are my sins ? How can I come out of them?’ He asked these questions to himself but he could not find their answers.


Fourteen years had rolled by. One day a pig hurt by the arrow shot by a hunter came running and fell at his feet. Satya Vrathan got frightened when he saw its body drenched in fresh blood and screamed in terror.


It was a strange sound “Hroo! Hroo!” as he was a dumb man unable to speak clearly. By the grace of Devi this strange sound resembled the BeejAkshara of Sree Vidhya mantra of Devi.



 
kandha purANam - pOr puri kANdam

5d. ஊழித் தீ!

எதிர் எதிர் நின்ற இரு படைக்கலன்கள்
எவரும் கண்டிராத விந்தைகள் புரிந்தன!

ஊழிக் காற்று ஒன்று தோன்றி வீசியது.
ஊழித் தீ ஒன்று தோன்றிப் பரவியது.

புகையும், நஞ்சும் தோன்றிப் பரவின.
பூதக் கூட்டங்கள் உற்பத்தி ஆயின.

உற்பத்தி ஆயின காளித் தொகைகள்!
உற்பத்தி ஆயின வைரவர் கூட்டங்கள்!

வெளிப்பட்டனர் வீரத் திருமடந்தையர்!
வெளிப்பட்டன பலப் பேய்க் கூட்டங்கள்!

தோன்றி வெளிப்பட்டனர் காலர்கள்!
தோன்றின காரிருளும், மாயையும்!

தோன்றின அளவில்லாத கடல்கள்!
தோன்றின அளவில்லாத முகில்கள்!

தோன்றின பல பாம்புக் கூட்டங்கள்!
தோன்றின பல ஐயனார் படைகள்!

பொழிந்தன கற்கள், தீக் கொள்ளிகள்!
மழு, இடி, உருளை, வேல், கணைகள்!

ஏழு கடல்களும் வற்றிப் போயின!
ஏழு மலைகளும் கரிந்து போயின!

மடிந்தன கடல்வாழ் உயிரினங்கள்!
இடிந்தது வான்! பொடிந்தன தாரகை;

எரிந்தது நிலம், பொரிந்தது மேருமலை!
அழிந்தன கதிரவனின் தேர்க்குதிரைகள்!

வெருண்டனர் உலகத்தின் உயிர்கள்!
மருண்டனர் வீரவாகுவின் இளவல்கள்!

புரண்டனர் அங்கு அவுண மறவர்கள்!
உருண்டன அங்கு கரிகளும், பரிகளும்!

பிழைத்து நின்றான் அங்கு பானுகோபன்.
அழைத்துக் கொண்டான் தன் படைக்கலனை.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

4#5d. PraLayAgni.


The two asthrams of Siva fought each other. Things which have never been witnessed started happening there! A terrible wind swept over the place. PraLayAgni swept though the place. Poisonous smoke swept tough the area. Several gangs of demons appeared. Several groups of KaLis, Vairavar, war goddesses and KAlans appeared there.

Total darkness and MAyA appeared there. Many seas appeared. Many clouds appeared. Poisonous snakes and AyyanArs appeared. Stones, burning splinters, mazhus, thunder, discusses, spears and arrows fell down from the sky.

The seven seas dried up. The seven mountains got charred completely. All the sea living creatures got killed. The sky fell apart and the stars exploded. The earth burned and the mount Meru popped in the intense heat. The horses in Sun’s chariot were destroyed.

All the living things got scared. The eight younger brothers of VeerabAhu got dazed. The asura sena fell down and rolled on the earth. The elephants and horses tumbled down. But nothing happened to BhAnukoban. He stood unharmed he called back his Siva asthram.


 
The 64 Thiru ViLaiyAdalal

58a. திருவாதவூரார்.

58 (a). திருவாதவூரார்.

திருவாதவூர் வைகைக் கரையில்,
திருவிழாக்கள் நிகழும் நகரம்;
விருந்தோம்பலில் சிறந்த இல்லங்கள்;
பெருமை பெற்ற வேத பாடசாலைகள்!

உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்யும்
அழகிய வளமிக்க அமைதியான ஊர்!
அரன் அருளால் அங்கே அவதரித்தார்
அவன் சிறந்த பக்தர் திருவாதவூரார்.

சிறு வயதிலேயே பலவிதப் பயிற்சிகள்;
பெருமை சேர்த்தன பதினாறு வயதில்!
வேத, வேதாகம சாஸ்திரங்களுடன்,
வேத புராணங்களையும் கூடக் கற்றார் .

திறமையை அறியும் அறிஞர் குழாம்
தெரிவித்தது இதை அரிமர்த்தனனுக்கு.
திறமைகளை ஊக்குவிக்கும் மன்னனும்,
அரிய அமைச்சர் பதவியை அளித்தான்.

போர்க்களப் பயிற்சியும் நன்கு உண்டு!
தர்ம சாஸ்திர அறிவும் நிரம்ப உண்டு!
விரைந்து முன்னேற்றம் கண்டவர்
சிறந்த முதல் மந்திரி ஆகி விட்டார்.

அந்நிய நாட்டுடன் நல்லுறவு நிலவ,
அந்நிய நாட்டுடன் வாணிகம் பெருக,
நன்னெறி நிலவியது அந்த ஆட்சியில்!
நற்பணிகள் தொடர்ந்து நடந்து வந்தன!

கூர்மையாயிற்று அவர்தம் பகுத்தறிவு!
பார்த்தவற்றை இனம் காண முடிந்தது!
“இம்மை, மறுமை இரண்டுமே தொல்லை!
செம்மையானது அந்தச் சிறந்த மோக்ஷமே!”

மோக்ஷ மார்க்கத்தை ஆராய்ச்சி செய்தார்.
வேத வல்லுனர்களின் கருத்தைக் கேட்டார்.
தெரிந்து கொண்டவை அமைதி தரவில்லை!
செறிந்த சிவபக்தி ஒன்றே அமைதி தந்தது!

குதிரைக்காரன் சொன்னான் அரசனிடம்,
“குதிரைகள் எல்லாம் மாண்டு விட்டன!
எஞ்சியுள்ளவை கிழட்டு குதிரைகள் தாம்!
கொஞ்சம் குதிரைகள் வாங்கவேண்டும்!”

“பொன் பொருள் எடுத்துச் செல்வீர் நீர்!
அன்னிய நாட்டின் அழகிய குதிரைகள்
கடல் துறையில் வந்திறங்கும் போது
படைக்குத் தேவையானதை வாங்குவீர்!”

பொன் பொருள் எடுத்துக் கொண்டார்
அண்ணல் அருளால் மனம் மாறிவிட்டது!
“பொன் பொருள் எல்லாம் என்னுடைய
அண்ணலுக்கே செலவாக வேண்டும்!”

பக்தியுடன் நீராடினார் குளத்தில்;
சித்தி விநாயகரைத் தொழுது எழுந்தார்.
அன்னையையும் ஐயனையும் வணங்கிப்
பின்னர் ஏறிச் சென்றார் பொற் சிவிகை.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

# 58 (A). THIRUVATHAVOORAAR.

Thiruvaathavoor was situated on the bank of Vaigai river. The city was celebrating festivals round the year. The people were famous for their hospitality.

There were several Veda paatasaalaas there. Cultivation was on full swing. In this and auspicious place one of Siva’s greatest devotees was born.

His name was Thiruvaathavooraar. He learned Vedam, Vedaagamam, puraanam and saasthram. He became well versed by the time he was 16 years old.

A group of wise men were favorable impressed by this young man’s achievements. They advised King Arimardhanan to appoint him as one of his ministers.

The young man knew warfare as well as he did the dharma saasthrass. Soon he was made the chief minister. He maintained friendly relationship with the neighboring countries. Trades were carried on with them. People’s welfare was the prime object of this benevolent rule.

His vivekam became very sharp. He could now differentiate the Sat from the Asat. He realized that the life in this world as well the one in the next world were riddled with pain and suffering.

The only thing worth striving for is Moksham or Liberation. He consulted the authorities in Vedas. The knowledge he acquired did not make him happy or peaceful. Only the intense bakthi to Siva gave him peace of mind and joy.

The man in charge of the stable, reported to the king,” Sir! Most of the horses are dead. The ones alive are too old to be of any use. We need to buy more horses for our army.”

The king told his minister “Please take enough gold from the treasury for the purchase of new horses. Buy the good ones when the are imported from the other countries!”

The minister took the gold but in his mind he secretly wished that all the gold should be spend on Siva and is devotees. He took a holy dip in the pond and worshiped Siddhi Vinaayaka, Siva and Devi. He set out in his golden palanquin.

 
bhagavathy bhaagavatam - skanda 8

8#16b. நவ க்ரஹங்கள்

சந்திர மண்டலத்துக்கு மேலே உள்ள
சுக்கிர மண்டலம் தரும் சுகம், நன்மை!


நீக்கும் மழைக்கு உள்ள தடைகளை;
நகரும் துரித, மந்த, சம கதிகளில்.


சுக்கிர மண்டலத்துக்கு மேலே உள்ளான் புதன்;
சுழல்கின்றான் புதன் மூன்று விதமான கதிகளில்.


புதன் சூரியனைப் பிரிகையில் உண்டாக்குவான்
புயல், காற்று, இடி, மழை போன்ற நிகழ்வுகளை!


அங்காரகன் உள்ளான் புதனுக்கும் மேலே;
அங்கரகனுக்கும் மேலே பிருஹஸ்பதி!


சஞ்சரிப்பான் ஓராண்டு ஓரோரு ராசியில்;
சனீச்வரன் உள்ளான் குருவுக்கும் மேலே!


சனி சஞ்சரிப்பான் 30 மாதங்கள் ஒரு ராசியில்;
சூரியனின் குமாரன்; நவ கிரகங்களில் அசுபன்!


சனி கிரஹத்துக்கும் மேலே சப்தருஷி மண்டலம்;
முனிவர்கள் எழுவர் சஞ்சரிப்பார் நன்மைகள் செய்ய.


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K . ராமன்


8#16b. Nava Grahas


The planet Venus or S’ukra is situated above the Moon. He sometimes goes before the Sun, sometimes behind Him and sometimes along with Him. He is very powerful.


His motions are of three types – s’eegra gathi, manda gathi or sama gathi. He is very friendly and favorable to all the persons and bestows on them auspicious things. He also removes the obstacles to the rain fall.


Mercury or Budha is situated above Sukra. He too goes sometimes in the front sometimes behind and sometimes along with the Sun. His motion is also of three kinds – s’eegra gathi, manda gathi and sama gathi.


When Mercury the Son of Moon, is away from the Sun, fears about the strong winds, storms, hurricanes, thunder, rain, the falling of meteors from the sky and drought arise.


The planet Mars, the son of the Earth is situated above Budha. Within three fortnights or 45 days, he travels one Zodiac sign. This occurs when his motion is not retrograde. Mars causes all sorts of mischief, evils, and miseries to mankind.


The planet Jupiter or Bruhaspati is situated above Mars. He passes through one zodiac sign in one year when his motion is not retrograde. He always favors the BrahmA VAdis.


Next to Bruhaspati is situated Saturn, the son of the Sun, much higher. He takes thirty months to pass over one zodiac sign. This planet causes all sorts of disturbances and miseries to all. Therefore He is called a Malefic Planet.


Sapta Rushi MaNdala or the Great Bear is situated above Saturn. The seven sages always do special favors to everyone. These circumnavigate the the Pole Star.



 
bhagavathy bhaagavatam - skanda 3

3#10d. ஸ்ரீ வித்யா

பன்றி ஓடி ஒளிந்து கொண்டது ஒரு புதரில்;
பன்றியைத் துரத்தி வந்தான் அந்த வேடன்.

சத்திய விரதனிடம் கேட்டான் வேடன்,
“ரத்தம் சிந்த ஓடி வந்த பன்றி எங்கே?

வேட்டையாடுவது என் குலத் தொழில்;
காட்டு விலங்குகள் எங்கள் உணவு!

வாடுகிறது என் குடும்பம் பசியினால்!
தேடுகின்றேன் அடிபட்ட பன்றியை நான்!

உணவுக்கும் எமக்கும் நடுவே உள்ளீர் நீர்!
உண்மை கூறும் அந்த பன்றி எங்கே?” என,

பன்றி பதுங்கியுள்ள இடத்தைக் கட்டினால்
பன்றிக்கு ஹிம்சை! வேடனுக்கு அஹிம்சை!

‘சத்தியம், அசத்தியம் என்ன வேறுபாடு?’
சத்திய விரதன் சிந்தித்தான் தீவிரமாக

‘ஹிம்சை தரும் உயிர்களுக்குத் துன்பம்.
ஹிம்சை தருவது சத்தியம் ஆக முடியாது!

அஹிம்சை தரும் உயிர்களுக்கு நன்மை!
அஹிம்சை சத்தியம் ஆகிவிடும் அதனால்!

செய்யக் கூடாது ஹிம்சை பன்றிக்கு!
சொல்லக் கூடாது பொய் வேடனிடம்!’

முன் போலவே மீண்டும் கூச்சலிட்டான்
பன்றி பதுங்கி இருந்த புதர் அருகே சென்று.

தோன்றினாள் ஸ்ரீவித்யா தேவி அங்கே!
தோன்றியது ஞானம் ஊமைப் பாமரனிடம்!

கண நேரத்தில் ஆகிவிட்டான் கவிராஜனாக!
கண நேரத்தில் ஆகிவிட்டான் வித்துவானாக!

பேசும் திறனும் தோன்றிவிட்டது அவனுள்!
ஆசு கவி பாடினான் அழகிய வடமொழியில்!

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

3#10d. Sree VidhyA Devi

The bleeding pig took to its heels and ran into a bush nearby to hide itself. A hunter came running after the pig and asked Satya Vrathan, “Did you see an injured and bleeding pig come running this way?

Hunting is my profession. The wild animals form our staple food. My family is starving. I must take that pig to my family. Now you are standing in between my family and its food. Please tell me where the pig is hiding”

Satya Vrathan thought deeply. ‘If I show the hiding place of the pig, I will do good to the hunter but bad to the pig. What is the difference between satyam and asatyam? How are they related to himsa and ahimsa?

Himsa gives sorrow to the jeevan. So it can’t be satyam. Ahimsa gives joy to the jeevan. So it should be the satyam.’

He did not want to show either the hiding place of the pig to the hunter or utter a lie to the hunter. He stood near the bush in which the pig was hiding and made the same strange sound “Hroo! Hroo!” once again.

Lo and behold! Sree VidhyA Devi appeared near that bush – pleased with his utterance of her beejAkshara mantram. She blessed Satya Vrathan with complete knowledge and power of speech in an instant.

Satya Vrathan now became a pundit and a poet. He could speak well and sing Devi’s praise extempore without any preparation. He sang a beautiful verse in praise of Tree Vidhya Devi in the brilliant Sanskrit language now.

 
kandha purANam - pOrpuri kANdam

5e. மாயப் படைக்கலம்

தன்னைச் சூழ்ந்து நின்றிருந்த படைகள்
ஒன்றும் காணப் பெறவில்லை அவுணன்;

தனியாளாகி ஏங்கினான் பானுகோபன்;
இனிச் செய்வது ஏதென்று அறிகிலன்!

திரும்பி விட்டது சிவப்படைக் கலமும்;
ஒருவனாக நின்றால் அழிவது உறுதி!

உருவத்தை மறைத்து எழுந்தான் வானில்;
மறைந்தவனை எள்ளி நகைத்தன பூதங்கள்!

“அன்றும் நான் தோற்று ஓடி மறைந்தேன்!
இன்றும் நான் தோற்று ஓடி மறைந்தால்

யாவரும் இகழ்ந்து பேசுவர் என்னை!
எந்தையும் வெறுப்பார் என் வீரத்தை!

ஆதவனைச் சிறைப் பிடித்துப் பெற்ற
கோதற்ற புகழ் மங்கி மறைந்துவிடும்.

பழிச் சொற்கள் பேசிட அனுமதியேன்!
இழிச் செயல் செய்தேனும் வெல்வேன்!

மறைந்து நின்று இவர்களை வெல்வேன்!”
விரைந்து துதித்தான் மாயப் படைக்கலனை.

“பகைவர்களின் அறிவைக் கெடுத்தும்,
நகைப்பவர்களின் உயிரைக் குடித்தும்,

நன்னீர் கடலில் உடல்களை வீசியும்,
பன்னீர் மழையில் என்னை நனைப்பாய்!”

மாயப் படைக்கலன் மண்ணுக்கு வந்தது!
மயக்கி வீழ்தியது பூதக் கூட்டத்தை.

நூறாயிரம் வீரர்களுடன் கூட ஒன்பது
பேராண்மைப் படைத் தலைவர்களையும்.

உயிர்களைப் பறிக்க முடியில்லை – அதனால்
உயிருடன் சுமந்து சென்றது அவர்களை!

ஆறு கடல்களையும் தாண்டிய பின்னர்
அவர்களை வீசியது நன்னீர்க் கடலில்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

4#5e. Victory by sorcery!


BhAnukoban stood all alone in the battle field. He did not know what to do! The Siva asthram shot by him had returned to him. He would surely be destroyed if he stood there all alone any longer. He became invisible and rose into the sky. The army of demons started ridiculing him for disappearing again.

“I ran away on the first day! If I run away today also, I will ridiculed all my life. My father would not think very highly of my valor. The fame and name earned by me by capturing the Sun will be lost forever. I will not allow anyone to ridicule me. I will rather win the war using sorcery.”

He remembered and summoned the asthram given by MAyA. “Go forth and cause delusion in the minds of the army of demons. Kill them all. Throw their dead bodies in the fresh water sea and make me happy!”

The asthram deluded and confused the minds of all the soldiers of the demon army as well as their nine generals. It could not kill all of them. So it carried them alive all the way up to the fresh water sea and tossed them all in the water but alive.

 
The 64 Thiru ViLaiyAdalgaL

58b. குரு சிவன்.

# 58 (b). குரு சிவன்.

ஒட்டகங்கள் பொன்னைச் சுமந்தன;
கெட்டிக்கார வீரர்களின் காவலுடன்.
பொற் சிவிகையில் முதன் மந்திரியார்;
காற்படையும் உடன் நடந்து சென்றது.


திருவாதவூராரின் இருவினை ஒப்பையும்,
மலபரிபாகத்தையும் உணர்ந்த சிவ பிரான்,
தானே குருவடிவு எடுத்துச் சென்று அவரைத்
தானே வலிய ஆட்கொள்ள விழைந்தான் !


வேதிய குருவின் திருவடிவம் எடுத்தார்;
போதிக்க மாணவர் குழாம் படைத்தார்;
திருப்பெருந்துறையின் திருக்கோவிலுக்குள்
குருந்த மரத்தின் கீழே குருவாய் அமர்ந்தார்.


கடல் போன்ற சேனையுடன் சென்றவருக்கு
மடை திறந்த இன்பம் மனத்தில் பொங்கியது!
திருப்பெருந்துறையை நெருங்க, நெருங்க,
அருள் ஒளி நிறைந்தது அவர் உள்ளத்தில்.


கரங்கள் குவிந்தன! கண்ணீர் பெருகியது!
பரவசம் அடைந்தார்! பித்தர் போல் ஆனார்!
சிவ தீர்த்தம் ஆடிச் சிவனை தெரிசித்தார்!
சிவகுருவைக் கண்டார் குருந்த மரத்தடியில்!


நானாவித ஒலிகள் நிறைந்து இருந்தன.
நான்கு வேதங்களுடன், ஆகமங்கள்!
சமய சாஸ்திரங்களும் பிறவும் அங்கே
அமைந்து விளங்கின ஏக காலத்தில்.


நால் வகை மார்க்கத்தினர் இருந்தனர்!
நால்வகை மக்களும் குழுமியிருந்தனர்.
ஞானிகள், யோகிகள் மற்றும் துறவிகள்,
மாணவர்கள், அறிஞர்கள் அனைவரும்.


குருந்த மரத்தின் கீழே, மாணவர் நடுவே,
குருவாக அமர்ந்தவரைக் கண்டதுமே,
அன்பு என்னும் கயிற்றால் சிவபிரான்
பின்னிய வலையில் ‘சிக்’கெனச் சிக்கினார்!


அருட்பார்வையால் அகன்றன மும்மலம்;
மருட்டும் பந்த பாசங்கள் தொலைந்தன!
சூட்டப் பெற்றார் திருவடித் தாமரைகள்!
ஊட்டப் பெற்றார் சூக்ஷ்ம பஞ்சாக்ஷரங்கள்!


தன்மயம் ஆனார்; தன் வசம் இழந்தார்!
உண்மை குடி புகுந்துவிட்டது உள்ளத்தில்.
வாக்கில் ஒளி வீசத் தொடங்கியது.
வாக்தேவி நாவில் நடனம் புரிந்தாள்!


தேந்தமிழ்ப் பாடல்கள் பொங்கலாயின.
தெய்வ ஞான ஆசிரியனுக்குச் சூட்டினார்.
ஒளிரும் மாணிக்கச் சொற்களை எடுத்து
மிளிரும் பக்தி எனும் நூலால் தொடுத்தார்.


திருவாதவூரார் முற்றிலும் மாறிவிட்டார்!
திருமாணிக்கவாசகர் ஆக மாறிவிட்டார்.
வந்த வேலையை முற்றிலும் மறந்து-தன்
சொந்த வேலையில் அமிழ்ந்தே போனார்!


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


# 58 (B). GURU SIVAN.


The gold was carried by camels and protected by the soldiers.The minister traveled in his palanquin. An army marched along with him.


Siva decided to shower His grace on ThiruvAdhaoorAr. He wanted to take the first step. He took the form of a Brahmin guru. Many disciples accompanied him. He entered the temple at Thirup Perunthurai and sat under a tree.


As the army marched nearer to that place, the minister started feeling an inexplicable joy in his heart. His palms were joined in anjali mudra.


He attained a state of ecstasy. He quite forgot himself. He took a dip in the Siva theertham and entered the Siva temple. Then his eyes fell on the divine guru seated under a tree surrounded by his disciples.


In that place, there was a fusion of various sounds. Vedas were being chanted. Siva Aagamas and SAsthras were heard. All sorts of people of all ashrams and ages were there.


When the guru looked at the minister, he got caught in the web of bakthi spun by Siva with the cords of love. Lord’s glance freed him from the three defects of a jiva. He got freed form all bondage. He was taught the sookshma panchAksharam. Siva’s lotus feet were placed on his head.


He forgot himself. The truth he was seeking dawned in his mind. Saraswathi Devi took possession of his tongue. Divine Tamil poems started pouring out on their own! Songs of praise which he offered to his divine guru. Each word used by him was a gem in itself. He strung them with the thread called his bhakthi.

The minister was now completely transformed. He was now MANikka VAsakar PirAn. He forgot his original mission and was deeply immersed in bhakthi towards Siva.
 
bhagavathy bhaagavatam - skanda 8

8# 17. துருவ மண்டலம்

சப்தரிஷி மண்டலத்துக்கும் மேலே துருவ மண்டலம்;
உத்தானபாதனின் மகன் இவன் – பக்தன், ஐஸ்வர்யன்!

வசிக்கின்றான் இந்திரன், அக்னி, காசியபர், தருமருடன்!
வசிப்பான் சிரஞ்ஜீவியாக கற்பாந்த காலம் வரையில்!

ஆதாரம் ஆவான் அவன் அனைத்து விண்மீன்களுக்கும்!
ஆதாரம் ஆவான் அனைத்து ஜோதிஷ்கணங்களுக்கும்!

சுற்றி வரும் அனைத்தும் துருவனை ஆதாரம் ஆக்கி;
சுழலும் அனைத்திலும் மாறாதவன் அவன் ஒருவனே!

கட்டப்பட்டு உள்ளன காலச் சக்கரத்தில் – மேழியில்
கட்டப்பட்ட எருதுகள் போல கிரகங்கள் வரிசையாக!

சஞ்சரிக்கின்றன வானவெளியில் பறவைகள் போல!
சஞ்சாரத்துக்கு உதவும் தேரோட்டி ஆகும் கர்மமே.

ஜோதி வடிவமான காலச்சக்கரம் கீழ் நோக்குடையது;
குண்டல வடிவான காலச்சக்கரம் வலப்பக்கம் சுழலும்.

உள்ளான் துருவன் சக்கரத்தின் வால் அடியில்,
உள்ளான் பிரமன் சக்கரத்தின் வால் மத்தியில்!

உள்ளனர் அக்னி, இந்திரன், யமன் வால் முனையில்!
உள்ளனர் தாதா, விதாதா சக்கரத்தின் வால் முனையில்!

உள்ளனர் சப்த ரிஷிகள் சக்கரத்தினுடைய இடுப்பில்;
உள்ளன வலப் பக்கத்தில் உத்தராயனத் தாரகைகள்.

உள்ளன இடப் பக்கத்தில் தஷிணாயனத் தாரகைகள்;
சிம்சுமாரச் சக்கரம் ஆகும் மஹா விஷ்ணுவின் உடல்.

தியானிக்கின்றனர் மகரிஷிகள் சந்திகளின் போது;
தியானித்தால் அகலும் பவவினைகள் முற்றிலும்.

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

8#17. Dhruva MaNdalam

Beyond the Saptarushi MaNdalam (the Great Bear) is situated, the VishNu’s Paramam Padham – the highest place of VishNu. One of the greatest devotees of God, Dhruva, the son of UttAnapAdha, is established there with Indra, Agni, Kas’yapa and Dharma and the Nakshathras.

He is the patron of those who live till the end of a Kalpa. He is engaged in serving the lotus-feet of the BhagavAn. God has made him the pillar round whom all the planets, stars and the luminary bodies always keep revolving.

The Devas also worship him. He shines with his own glory, illuminates and manifests all. Just as all the beasts tied to yoke go on tilling, so also the planets and stars, fixed on the Zodiac, go quickly round and round this Dhruva, the Pole Star. Some of them are nearer, some are far away, but all of them propelled by VAyu.

As the hawks hover round the sky, so also the planets, go completely round and round in the sky – under their own Karmas and are controlled by the VAyu. Thus all the luminaries do not fall down to the ground, as they are kept up in their respective positions by the favor of the union of Prakrithi and Purusha.

Some say that this Jyothischakra or the Celestial Heavens (the Zodiac) is S’is’umAra. It is kept duly in its position for the purpose of holding things up by the power of the BhagavAn. Hence it does not fall down or collapse.

It is resting with its body coiled round and with its head lower down. Dhruva, the son of UttAnapAda is staying at the tail end. In addition to him, Brahma, Agni, Indra and Dharma also rest at the tail.

Thus the creation is at the tail and the Saptarushi mandala is at the waist. The celestial wheel (Jyotish chakra) is resting with his coils turned in a clockwise direction.

On his right side are found the UttarAyana Nakshattras, fourteen in number from Abhijit to Punarvasu and on his left side are the other fourteen DakshiNayana Nakshattras from PushyA to UttharAshAda.

Thus the Nakshattras form the coil-shaped body of the S’is’umAra, the Zodiac – half of them on the one side and the other half on the other side.

The sins are completely destroyed for him who bows down or remembers SimsumAra thrice during a day, in the morning, afternoon and evening.

 
bhagavathy bhaagavatam - skanda 3

3#10e. கண்டவர் விண்டிலர்

“காண்பவன் அதைச் சொல்வதில்லை!
காண்பதில்லை அதைச் சொல்பவன்!


உடலின் பயனைக் கருதிய வேடனே!
அடிக்கடிக் கேட்கிறாய்? விந்தை இது!”


அருள் பாடலைச் சத்தியவிரதன் பாட
அருள் சுரந்தது வேடன் மனத்தில்.


பன்றியை மறந்து விட்டுச் சென்றான் வீடு;
பண்டிதன் ஆகிவிட்டான் சத்திய விரதன்.


ஜபித்தான் விதிப்படி கங்கைக் கரையில்,
அபிவந்தனம் செய்தனர் பிற முனிவர்கள்.


புகழ் பரவியது நான்கு திசைகைளும்;
மகிழ்ந்தனர் புகழ் கேட்ட பெற்றோர்.


விரைந்து வந்தனர் மகனைக் காண!
விரும்பி அழைத்துச் சென்றனர் வீடு.


உளறியதோ பன்றி எழுப்பிய ஒலி!
உணர்ந்ததோ பீஜாக்ஷர மந்திர ஒலி!


அத்தனை வித்தைகளையும் அளித்துச்
சத்திய விரதனைக் கவி ஆக்கினாள்.


‘காமதா’ என்ற பெயர் உண்டு தேவிக்கு!
நாமெதை விரும்புகின்றோமோ தருவாள்!


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


3#10e. “The Seer speaks not…The speaker sees not”


“He who sees it does not speak about it. He who speaks about it does not see it. Oh hunter! You are so much concerned about the welfare of your body and keep asking me the same question again and again!”


Satya vratan sang a song which created mercy in the heart of the hunter. He forgot about the pig he had wounded and went back home.


Satyavratan was a full fledged poet and pundit now. He did japam on the banks of river Ganga in the prescribed manner. He was honored and respected by the other sages and seers.


His fame spread far and wide. His parents became very happy to hear about him. They came to meet him and were happy to take him back home with them.


Satya Vratan had imitated the grunt of a pig but Devi took it as the recitation of her bheejAkshara mantra and blessed him with complete knowledge and ability to speak. One of the names of Devi is ‘KAmadhA’ – meaning ‘one who fulfills all our desires’.



 
kandha purANam - pOr puri kAndam

5f. தந்தையும், தனயனும்

நிகழ்ந்தவற்றை அறிந்தான் பானுகோபன்;
புகழ்ந்து கொண்டான் தன்னைத் தானே !

மகிழ்ந்து நின்றான் தன் சூழ்ச்சியை எண்ணி!
அழிந்து போன பூதப் படையையும் எண்ணி.

அடைந்தான் வீரமகேந்திரபுரியை;
அளந்தான் தன் வீர தீர பிரதாபத்தை.

“வீரவாகுவின் பூதர்களை வென்றேன்;
வீரர்கள் உடல்களை இட்டேன் கடலில்!

ஆறுமுகனைப் போரில் வெல்வேன்!
பிற தேவர்களையும் சிறை செய்வேன்!”

மகனின் பெருமைகளைக் கேட்டுத் தன்
மனம் மகிழ்ந்து நின்றான் சூரபத்மன்.

நிமிர்ந்தன தோள்கள்; நெறித்தன வளைகள்!
பொடித்தன மயிர்கள்; வெடித்தது சிரிப்பு!

இறுகத் தழுவினான் பானுகோபனை!
அருகில் அமர்த்தினான் அரியணையில்.

“மனக் கவலையை மாற்றினாய் மகனே!
மகிழ்ச்சிக் கடலில் திளைக்கின்றேன் நான்.

முந்நாளில் பெற்ற செல்வங்கள் பொய்!
இந்நாளில் நான் பெற்ற செல்வமே மெய்!”

அணிகலன்கள் புதியன அணிவித்தான்!
அணைத்துப் பூரித்து மெய் புளகித்தான்!

“ஆறுமுகனை வென்று பிறரைக் கொன்று
அரும் பகை தீர்ப்பாய் நாளைய போரில்!”

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

4#5f. The father and son.


BhAnukoban knew of these happenings. He was very happy and praised himself. He returned to Veera Mahendra Puri and blew his own trumpet. “I defeated the nine brothers. I dropped all their bodies in the freshwater sea. I will conquer Murugan tomorrow and arrest all the other Devas.

Soorapadman swelled up with pride and happiness on hearing the wonderful words spoken by his dear son. He embraced his son and made him share his own throne. He offered new ornaments to his son and had only one request, “Win the army of Murugan and put an end to those trouble makers tomorrow”.
 
The 64 Thiru ViLaiyAalgaL

58c. எல்லாம் அவன் செயல்!

58 (c). எல்லாம் அவன் செயல்!

மாணிக்க வாசகர் ஞான பூஜை புரிந்து
மாணவர்களின் ஆகமங்கள் கேட்பார்.
மாணிக்கவாசகரின் மணிப்பாடல்களை
மாணவர்களும் மற்றவர்களும் கேட்பர்.

தன் பக்தித் தளையில் சிக்கியவர்களின்
பொன்னையும், பொருளையும் பறிப்பான்;
பக்தியை மட்டும் விட்டுக் கொள்ளையடித்து
முக்தி அளித்து மகிழ்விப்பான் ஈசன்.

“நீ செய்ய வேண்டிய நற்பணிகள் இங்கு
நிரம்ப உண்டு என்று நீயே அறிவாய்!
சில காலம் இங்கேயே தங்கியிருந்து
பல மங்கலப் பணிகளைச் செய்வாய்!”

சொன்னவர் எங்கோ மறைந்து விட்டார்.
கன்றைப் பிரிந்த பசுவானார் மணிவாசகர்.
அத்தனைப் பிரிந்த துயர் தாளமாட்டாமல்
பித்தனாக ஆகிவிட்டார் மணிவாசகர்.

கோவிலில் இருந்து வெளியே வந்தார்;
“கோவலனிடம் மீண்டு செல்லுங்கள்!
ஆடி மாதத்தில் அழகிய குதிரைகள்
கடல்துறை வரும் என்று சொல்லுங்கள்!”

குதிரைகள் வாங்கக் கொண்டு சென்றார்
மதுரையிலிருந்து பொன் பொருள்களை;
திருப்பெருந்துறையிலேயே செலவழித்தார்
திருப்பணிகள், திருவிழாக்கள், அடியவர்க்கு!

ஆடி மாதமும் வந்துவிட்டது. ஆனால்
அந்நிய நாட்டுக் குதிரைகள் வரவில்லை!
ஓலை அனுப்பினான் மன்னன் மந்திரிக்கு,
“வேலை முடிந்து விட்டதா?” என்று கேட்டு.

மாணிக்க வாசகர் மனம் கலங்கினார்;
மனம் கவர்ந்த கள்வனிடம் முறையிட்டார்.
“குதிரைகள் வரும் என்று ஓலை எழுதி
மதுரை மன்னனுக்கு பதில் அனுப்புவாய்.”

இனிய கனவொன்று கண்டு மகிழ்ந்தார்
மணி வாசகர் அன்று உறங்குகையில்.
“நல்ல குதிரைகளை வாங்கிக் கொண்டு
நாமே மதுரை வருவோம்! நீ முன் செல்!”

மதுரை திரும்பினார் மாணிக்க வாசகர்;
எதிர் நோக்கிக் காத்திருந்தான் மன்னன்.
குதிரைக் கூட்டத்தையும் வீரர்களையும்!
பதில் உரைத்தார் மந்திரியார் இவ்வாறு.

“குதிரைகள் வந்து கொண்டே உள்ளன!
மதிப்புக்கு உரிய துரகபதி ஆகிவிடுவீர்.”
மீண்டும் சோமசுந்தரரிடம் முறையிட்டார்;
மீண்டும் தேற்றியது அரனின் ஓர் அசரீரி.

நடந்தவற்றை அறிந்தனர் குடும்பத்தினர்.
மடத்தனத்தைக் குற்றம், குறை கூறினர்.
“அடுத்து அரசன் என் செய்வானோ?” என்று!
“விடுங்கள் கவலை! எல்லாம் அவன் செயல்!”

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

# 58 (C). EVERYTHING IS DONE BY SIVA.

Maanikkavaasagar would listen to the aagamaas read by the students.The others would listen to Manivaasagar’s songs.

God has this strange quality. He would loot all the earthly possessions of his devotees except his bakthi, and then he will bestow on them mukthi.

“You have many more duties to perform. Stay here and do them.” Siva told Manivaasagar and went away.

Manivaasagar became as forlorn as a cow separated from its calf. The separation was too much for him and he became like a mad man.

He came out of the temple and told his soldiers, “Go back to our king. Horses will arrive in the month of Aadi. I will come with the horses.”

Manivaasagar spent all the money in various religious activities. The month of Aadi had come, but not the horses. King sent a message to his minister, “Have you purchased the horses for our army?”

Manivaasagar did not know what to do. The asareeri told him to write back saying that the hoses would arrive in due time. That night Siva appeared in Manivaasagar’s dream.
“I will bring the horses myself. You may go back to Madurai.”

Manivaasagar returned to Madurai. The king was eagerly awaiting the arrival of the horses.The minister told him again that the horses would arrive soon. Again he got anxious and Siva’s asareeri assured him and told him not to worry.

His family members got worried fearing the consequences of the king’s wrath. Manivaasagar said that everything is done by Siva and there was no need to worry.

 
bhagavathy bhaagavatam - skanda 8

8#18a. ராஹு மண்டலம்

ராஹு உள்ளான் சூரிய மண்டலத்தின் கீழ்;
ராஹு ஆவான் சிம்ஹிகாவின் புதல்வன்

சஞ்சரிக்கின்றான் வானில் தாரகை போல்;
சஞ்சரிக்கின்றான் விஷ்ணுவின் அருளால்.

பெற்றுள்ளான் அமரத் தன்மையை ராஹு;
பீடிக்கின்றான் சூரிய சந்திரரை கிரஹணமாக.

உள்ளனர் ராஹு மண்டலத்தின் கீழே
சித்தர், சாரணர், வித்யாதரர் போன்றோர்.

உள்ளனர் இவர்கள் இடத்துக்கும் கீழே
யக்ஷர், அரக்கர், பூதங்கள், பிரேதங்கள்!

‘அந்தரிக்ஷம்’ ஆகும் வாயு சஞ்சரிக்குமிடம்;
‘அந்தரக்ஷணம்’ மேகங்கள் சஞ்சரிக்குமிடம்.

பூமி ஆகும் பறவைகள் சஞ்சரிக்கும் இடம்;
பூமி ஆகும் விலங்குகள் சஞ்சரிக்கு இடம்.

உள்ளன ஏழு உலகங்கள் பூமிக்குக் கீழே;
உள்ளன அவை ஒன்றன் கீழ் ஒன்றாக.

அதலம், விதலம், சுதலம், தலாதலம்,
மகாதலம், ரசாதலம், பாதளம் என்பவை.

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K . ராமன்

8#18A. RAhu MaNdala

RAhu MaNdala is below the Soorya MaNdala. RAhu, the son of SimhikA, is moving there like a Nakshatra. RAhu swallows up both the Sun and the Moon during the eclipses. RAhu is immortal.

Below the sphere of RAhu, there are the other pure Lokas situated. The Siddhas, ChAraNas and VidhyAdharas live in those Lokas.

Below them live the Yakshas, RAkshasas, Pis’Achas, Pretas and Bhootas in their excellent residences.

This is called the Antariksha. It extends up to where the wind blows violently and where the clouds appear. Below this is this earth.

All the articles and things of the earth are found here; birds, herons, cranes and ducks all fly over the earth. The atmosphere of the earth extends up to this.

 
bhagavathy bhaagavatam - skanda 3

3#11a. சாத்வீக யக்ஞம்

செய்வர் அந்தணர் சாத்வீக யக்ஞம்;
செய்வர் அரசர்கள் ராஜஸ யக்ஞம்.


செய்வர் அசுரர் தாமஸ யக்ஞம்;
செய்வர் ஞானியர் ஞான யக்ஞம்.


தேசம், காலம், இடம் கருதி யக்ஞத்தைத்
தோஷங்கள் இன்றிச் செய்வது சாத்வீகம்.


அந்தணர்கள் ஈடுபட வேண்டும் தூய்மையாக.
மந்திரங்கள் ஒலிக்க வேண்டும் தவறு இன்றி!


திரவியம் இருக்க வேண்டும் – கர்த்தாவே
தர்மானுசாரமாக உழைத்து ஈட்டியதாக.


அன்னியடரிடமிருந்து கவர்ந்த திரவியம்
இன்னல் விளைவிக்கும் யாகப் பயனாக!


ராஜசூய யாகம் செய்தனர் பாண்டவர்;
ராஜ்ஜியம் இழந்து சென்றனர் வனம்!


அவமானப் பட்டாள் பாஞ்சாலி சபையில்!
அஞ்ஞாத வாசம் செய்தனர் ஊழியர்களாக.


மந்திர தோஷம், திரவிய தோஷம் தரும்
சந்தேகமின்றி இன்னல்களையே பயனாக!


இந்திரனின் யாகத்தில் குரு விஸ்வரூபன்
மந்திரத்தால் வேண்டினான் அசுரர் நலனை.


கொள்கையில் மாறுபட்ட குருவைக் கொன்றதால்,
கொண்டான் பிரம்மஹத்தி தோஷத்தை இந்திரன்.


திரவிய தோஷம் இருந்து – அதுவே தந்தது
சரிவினைப் பாண்டவர்களுக்குப் பயனாக.


சாத்வீக யக்ஞம் செய்ய வேண்டும் குற்றமின்றி.
சாத்வீக உணவையே உண்ண வேண்டும் கர்த்தா.


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


3#11a. Sathva Yagnam


The Brahmins perform Satva yajnam, the Kshatriyas perform the RAjasa yajnam and the asuras perform the TAmasa yajnam. JnAnis perform JnAna yagnam.


Satva yajnam must be performed in the appropriate place and time without any dosham or mistakes. Pure Brahmins must take part in it.


The mantra must be chanted properly without any mistakes.The money spent for the yajnam must be earned by the kartha (the doer of the yajnam) himself in a dhArmic manner (by just means).


The wealth looted or stolen from another person – if used for the yajna – will yield problems and sorrow as the fruits of yAjam.


PANdavAs performed RAjasooya yagnam. They lost their country and had to go for vana vAsam. PAnchAli was disrobed in the sabha of KouravAs.

The PANdavAs and PAnchAli had to live in disguise, serving another king posing as common people.


The yajnam performed by PANdavAs had dosham in the wealth spent. The yajnam performed by Indra had mantra dosham in it.


Satva yajnam must be performed without any defect or mistakes. The doer of the yajnam must eat only sAtvic food during the yajna period.



 
kandha purANam - pOr puri kANdam

5g. வேலாயுதம்

நிகழ்ச்சிகளைக் கண்ட தேவர்கள்
நெகிழ்ந்து தம் நிலை குலைந்தனர்.


விரைந்தனர் மனம் பதைபதைத்து
விவரங்களை முருகனிடம் கூறிட.


உரைத்தார் செய்தியை முருகனுக்கு
விரைந்து சென்ற நாரத முனிவர்.


அனைத்தையும் கேட்ட முருகவேள்
பணித்தான் தன் சக்தி வேலிடம்,


“அனைவரையும் மீட்டு வருவாய் நீ!
பனைத் துணை நன்மை புரிவாய் நீ!”


கந்தன் கட்டளையைக் கேட்டதும்
முந்திச் சென்றது சக்தி வேலாயுதம்.


ஆறு கடல்களையும் கடந்து சென்றது;
அடைந்தது பின்பு நன்னீர்க் கடலை!


மாயப் படைக்கலன் திறன் அழிந்தது.
தோய அரசன் வந்து வணங்கினான்.


வீரவாகுவும் இளவல்களும் உடனே
அறிவு பெற்றனர்; தளர்ச்சி நீங்கினர்.


நீருக்கு மேலே எழும்பி வந்தனர்.
ஆறுமுகனின் வேலை வணங்கினர்.


முந்திச் சென்றது முருகனிடம் வேல்.
பிந்திச் சென்றனர் ஒன்பதின்மரும்.


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


4#5g. The Spear becomes the Savior.


All the Devas got shocked to witness these happenings. They rushed to report the matter to Murugan. NArada told Murugan all the events that took place. After listening to him

Murugan ordered his spear, “Go forth and bring back all our people. Your help is needed at this hour.”


The spear obeyed his command and crossed all the six seas. It finally reached the fresh water sea. At the same time the power of the sorcery of the MAyA’s asthram came to an end. The King of the Ocean came out and paid his obeisance to Murugan’s spear.


The Nava Sakthi KuamAras came out of their delusion. They rose to the surface of the sea water. They too paid obeisance to the mighty spear of Murugan. The spear returned to the hands of Murugan first. The Nava Sakthi KumAras followed Murugan’s spear.


 
The 64 Thiru viLaiyAdalgaL

59a. அரனும், அரசனும்.

# 59 நரியைப் பரி ஆக்கியது.

# 59 (a ). அரனும், அரசனும்.


“குதிரைகள் எங்கே?” என அடுத்தநாள்
மதுரை மன்னன் மணிவாசகரைக் கேட்க,
அரனின் அசரீரியை நம்பிக் கூறினார்,
“அரசே மூன்று நாட்களில் வந்துவிடும்!”


“குதிரைக் கூடத்தைப் பெரிதாக்குவோம்.
குதிரைகளுக்கு புதிய நீர்க்குளங்களும்!
குதிரைகள் வரவைக் கொண்டாடுவோம்.
மதுரை நகரின் நன்கு அலங்கரிப்போம்.”


மூன்று நாட்கள் உருண்டோடிவிட்டன.
நான்காவது நாளும் வந்து விட்டது!
மன்னனின் பொறுமை எல்லை மீறியது.
“இன்னமும் குதிரைகள் வரவில்லையே!


எத்தனை பொன் கொண்டு சென்றான்?
அத்தனை பொன்னை என்ன செய்தான்?
என்று என் குதிரைகள் வந்து சேரும்?
என்றாவது வருமா வராதா? தெரியாது!”


எதுவுமே தெரிவிக்காமல் செய்யும்
புதிய வணிக முறை பிடிக்கவில்லை!
பொன்னைக் கவர்ந்த கள்வனை தண்டித்து
பொன்னை மீட்டுத் தாரும் தண்டலாரே!”


தண்டலார் வினவினார் மந்திரியிடம்,
“பொன்னை எப்போது திருப்புவீர்?”
இல்லாத பொன்னைத் திருப்புவது எப்படி?
சொல்லவில்லை பதில் மந்திரியார்.


தண்டலார் தண்டனைகளை ஈசன்
தொண்டருக்கு அளிக்கத் துவங்கினார்.
பாரமான கற்களை மேல் ஏற்றிவைத்து ,
கோரமான தண்டனையை அளித்தார்.


பாரத்தால் பரிதவிக்கவில்லை அவர்.
பரமன் அருள் வந்து துணை நின்றது.
பாரம் அனைத்தையும் பரமன் தாங்கிட
யாரும் கண்டிராத விந்தை நிகழ்ந்தது.


“இது என்ன மாயம்?” என்று மயங்கியவர்
இன்னும் கடுமையான தண்டனை தந்தார்.
கை கால்களைக் கிட்டிபோட்டு நெரித்தார்.
பைந்தமிழ் மணிவாசகர் துவளவில்லை.


சிவமயமாக இருந்தவரை இக்கொடிய
சித்திரவதைகள் துன்புறுத்த வில்லை.
இருண்ட சிறையில் தள்ளினார் அவரை.
இரவு முழுவதும் தொல்லைகள் செய்தார்.


விடியும் நேரம் விரைந்து நெருங்கியது.
படிக்கும் பாடல்களும், வேத கோஷமும்,
திருப்பள்ளி எழுச்சியும், சங்கொலியும்,
திரும்பவும் ஈசனிடம் மன்றாட வைத்தன.


“உன் மேல் அன்பு பூண்டது ஒரு தவறா?
உனக்குத் தொண்டுகள் புரிந்தது தவறா?
உனக்கே பொன்னைச் செலவு செய்தேன்!
எனக்கு ஏன் இந்தச் சித்திரவதைகள் ?”


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


# 59 . FOXES BECAME HORSES.


# 59 (a). THE TORTURE TREATMENT.


The very next morning, the king demanded the chief minister, “When will my horses arrive?” The minister replied that the horses are expected within the next three days.

Meanwhile they had to expand the horse sheds and dig new wells and ponds. The city should be decorated to receive the horses.

All these arrangements kept the king busy for the next three days. On the fourth day the king lost his patience completely.


No one knew how much gold was taken away from the treasury. No one knew how it was spent. No one knew when or whether the horses would arrive! What kind of a business dealing was this?


He called the master torturer and told him to start his treatments and make sure that the king’s gold was returned in full.


The torturer asked the minister, “When will you repay king’s gold?” The minister did not reply. He was wondering how he could return the gold that had already been spent!


Heavy stones were place on his body. But Siva bore the load and spared the minister of the suffering. The onlookers were wonderstruck by this.


His arms and legs were crushed with pincers. Nothing affected him as he was in deep meditation on Lord Siva.


He was locked in a dark cell and the torture continued. Soon it was dawn. The sound of songs, Vedas and thiruppalli ezhuchi mingled. The minister cried out,


“Is it wrong to love Siva? Is it wrong to serve Siva? Why are these punishments given to me?”
 
bhagavathy bhaagavatam - skanda 8

8#18b. கீழ் உலகங்கள்

அமைந்திருக்கும் அதி அற்புதமான நகரங்கள்;
அமைந்திருக்கும் அதி அற்புதமான இல்லங்கள்.


அமைந்திருக்கும் மாட மாளிகைகள், கோபுரங்கள்;
அமைந்திருக்கும் பூங்கா வனங்கள், சோலைகள்.


சுகித்திருப்பர் தத்தம் நாயகியருடன் கூடி
சுரர், அசுரர், நாகர் முதலியவர்கள் இங்கு.


நிறைந்திருக்கும் சோலைகள் மலர்களால்;
நிறைந்திருக்கும் சோலைகள் பறவைகளால்.


நிறைந்திருக்கும் கிரீடா ஸ்தலங்கள்;
நிறைந்திருக்கும் தடாகம், நீர் நிலைகள்.


நிறைந்திருக்கும் மடு, ஓடை, சரோவர்கள்;
சிறந்திருக்கும் தேவர்களின் சுவர்க்கத்தை விட.


வலிமை வாய்ந்தவர் தானவர், தைத்தியர்கள்;
வாழ்வார் மாளிகைகளில் உறவினர்களோடு.


அனுபவிப்பர் காம சுகங்களை உல்லாசமாக;
அனுபவிப்பர் காம சுகங்களைத் திகட்டாமல்.


பயம் இல்லை மரணம் குறித்து இங்கே!
நரை, திரை, மூப்பு, நோய்கள் இவை இரா.


பயம் இல்லை இரவு என்றும் பகல் என்றும்;
ஒதுங்கும் இருள் நாகமணிகளின் ஒளியில்.


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K . ராமன்


8#18b. RAhu Mndalam (2)


At the lower part of this earth there are seven nether regions. Life in these regions is filled with all sorts of enjoyments and in all the seasons.


Atala, Vitala, Sutala, TalAtala, MahAtala, RasAtala, and lastly the PAtAla. These are termed the Vila-Svargas and they yield the happiness, greater than those of the Heavens.


These are all filled with prosperity and happiness and are conducive to amorous enjoyments. These places are crowded with gardens and VihAras or the places of enjoyments. These VihAras are all decorated tastefully so as to promote people’s enjoyments.


The powerful Daityas, DAnavas, and Snakes enjoy here great happiness – united lovingly with their sons, wives and friends. The householders also pass their time in ease and enjoyments, surrounded by their friends and attendants.


They are all great MAyAvis and they are filled with desires. They all live with joy and in enjoyments and they find pleasure in all the seasons. Maya, the Lord of MAyA had built separate cities, as he liked, in those nether regions. Besides he has created thousands of dwelling-houses, palaces, and town-gates, studded with gems and jewels


The assembly halls, Chatvaras, and Chaityas are elaborately decorated and rare even to the Suras. The NAgas and Asuras live in those houses with their consorts; doves and pigeons and female MayinA birds are hovering there.


In those places rows of palatial buildings, big gardens filled with fruits and flowers are close by, fit for the comfort and enjoyments of ladies.


The tanks and pools of water are crowded with various birds. The lakes are filled with clear waters and fish abound there. The aquatic animals move in the waters, violently agitating them. Various kinds of lotuses, Kumud, Utpala, KahlAra, blue lotus, red lotus, are fully blown in these lakes or reservoirs of water.


The gardens there are all overcrowded with the VihAras of the inhabitants there and echoed with the sweet melodious music, pleasing to the senses.


Fear has no place there, whether during the day or during the night. The gems on the crest of snakes constantly illumine the environments dispell the darkness.


The food there is prepared with the divine medicines and they drink and bathe with these medicinal plants; so no disease attacks them. Old age, fever, indigestion, paleness, sweats, bad smells, or loss of energy or any other source of trouble cannot trouble them. The people are always happy and good.



 
bhagavathy bhaagavatam - skanda 3

3#11b. பிற யக்ஞங்கள்

அதிக திரவியம் தேவை ராஜஸ யக்ஞத்துக்கு!
அதில் கலந்து நிற்கும் பொறாமை உணர்வுகள்.

க்ஷத்திரியர், வைசியர் செய்வர் ராஜஸ யக்ஞம்.
ஆத்திர, அகம்பாவம் நிறைந்தது தாமஸ யக்ஞம்.

மானசீக யக்ஞம் என்றும் உண்டு ஒரு யக்ஞம்.
மனத்தினாலேயே செய்யப்படுவது அந்த யக்ஞம்.

முக்தியை நாடும் மகாத்மாக்கள் செய்வர் இதை.
முனிவர்கள், விரக்தர், ஞானிகள் செய்வர் இதை.

முக்குண விருத்திகளை விலக்கிச் செய்வதால்,
எத்தகைய தோஷமும் ஏற்படாது செய்வதனால்.

மனத் தூய்மை கொண்டவரே செய்ய வல்லவர்;
மனத்தில் நிர்மாணிக்க வேண்டும் யாகசாலையை.

பரிசுத்த குண்டத்தில் அக்னியை மூட்டியபின்
பாவிக்க வேண்டும் அந்தணர்கள் வந்துள்ளதாக.

பூஜை செய்ய வேண்டும் மானசீகமாக – ஹோம,
பூஜைப் பொருட்களையும் உருவாக்க வேண்டும்.

எஜமானன் மனது, அதி தேவதை பரமாத்மா.
பஞ்ச வாயுக்கள் ஆகும் பஞ்ச அக்னிகளாக.

தியானிக்க வேண்டும் பராசக்தியை – ஆழ்ந்து
தியானித்து அடைய வேண்டும் சமாதி யோகம்.

மானசீக யக்ஞத்தின் பலன் மோக்ஷம்;
மானசீக யக்ஞத்தின் பலன் நிலையானது.

நிலையற்றவை பிற யாகங்களின் பலன்கள்,
நிறைந்துள்ளன அவற்றில் ராஜஸம், தாமஸம்.

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

3#11b. The other yajnams.

RAjasa yajnam needs more money and more material things for the offerings. It is inseparable from the feelings of jealousy, ego and desire. Kshatriya and Vaisya perform this type of yajnam. TAmasa yajnam is based on bloated ego and pomp!

There is one more yajnam called the mAnaseeka yajnam.This in done within the mind and not in the outside world. This is performed by the mumukshus who seek liberation from the bondage of samsAra. Sages, seers and gnAnis perform this mAnaseeka yajnam.

Since it is completely free from the three guNas this type of yajnam is blemish-less. Only a person who has purified his mind thoroughly will be able to perform this kind of mAnaseeka yajnam.

The person must imagine and establish a suitable yAga sAlA and yAga kundam in his mind, using his imagination. He must light the fire in the yAga kundam and imagine that the pure brahmins are attending his yajnam.

He must create all the homa sAmAgri in his imagination and offer them in the yajnam fire, doing puja and mantra japam as usual.

Doer of the yajna is the Mind. Athi DevatA is the Supreme Brahman. The pancha prANAs become the pancha agni. He must meditate on Devi ParA Shakthi with unified concentration and attain samAdhi sate as a result of his meditation.

The fruit of this kind of mAnaseeka yajnam is moksham or total liberation which it permanent in its effect. The fruits of the other yajnas are not permanent since they are riddled with RAjasam and TAmasam.

 

Latest posts

Latest ads

Back
Top