• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

A poem a day to keep all agonies away!

kandha purANam - pOr puri kANdam

6a. நகர் புகுதல்

அடைந்தார் வீரமகேந்திரபுரியை வீரவாகு;
உடைந்து சினம் பொங்கியது பார்த்ததும்!


“மாயப் போர் புரிந்து ஓடி ஒளிந்த
மாயையின் பேரனைக் கொல்வேன்;


அழிப்பேன் நகரத்தை முற்றிலுமாக!
அழிப்பேன் எதிர்க்கும் அவுணர்களை!”


மேற்கு வாயிலை அடைந்தனர் – கடல்
தோற்கும் பேரொலியை எழுப்பினர்;


வாயிலின் காவலன் ஆவான் புலிமுகன்,
மாயையின் மகன்களில் ஆவான் ஒருவன்;


கூற்றுவனையும், வருணனையும் அஞ்சாமல்
பற்றிச் சிறையில் அடைத்தவன் ஆவான் ;


தீயொளி போன்ற சிவந்த உடம்பினன்;
தீப் பொறி போலச் சீறிச் சினந்தான்;


அவுணர்கள், பூதர்கள் அங்கு பொருதனர்;
ஆறாகப் பெருகியது அங்கு செங்குருதி!


சிங்கரும், புலிமுகனும் போர் புரிந்தனர்
சிங்கர் போரில் கொன்றார் புலிமுகனை!


உதைத்து அழித்தனர் அந்த வாயிலை,
உதைத்து அழித்தனர் அந்த மாளிகையை;


காற்றையும், தீயையும் அங்கு எய்ததும்
காற்றும், தீயும் அங்கு கலந்து பரவின.


எரிந்தன சில இடங்கள்; கரிந்தன சில;
பொரிந்தன சில இடங்கள்; புகைந்தன சில.


வெடித்தன சில இடங்கள், பொடிந்தன சில;
கொடிய சூரபத்மனின் அழகிய நகர் அழிந்தது.


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


4#6a. Destroying the city.


VeerabAhu reached Mahendrapuri. His anger knew no bounds at the thought of the treacherous BhAnukoban who used sorcery in the war. He swore to himself, “I will kill that grandson of MAyA who did war by sorcery! I will destroy this city. I will kill anyone who crosses my path!”


The nine brothers and their army reached the western gate of the city. They roared louder than the roaring sea. The gate was guarded by Puli mukhan – one of the sons of MAyA. He was famous for having fearlessly arrested Yama and VaruNa.


His body was of the color of burning fire. He emitted sparks and fumes due to his anger. The armies of demons and the asuras fell upon each other and soon a red river of fresh, hot blood started flowing there.


Singar fought with Puli mukan and killed him. There was nothing or no one to stop the army of demons from destroying the western gate and the city completely now.


Wind and fire were shot as arrows and they spread very fast. Soon the whole place was burned, charred, popped, smoked, cracked and burst to powder. The beautiful city of the asuras was soon completely destroyed!


 
The 64 Thiru ViLaiyAdalgaL

59b. மாயப் பரிகள்.

# 59 (b). மாயப் பரிகள்.

தொண்டன் அழுகுரல் கேட்டுவிரைந்தான்;
தண்டனைகளைத் தவிர்க்க விழைந்தான்;
சிவ கணங்களைத் தன்னிடம் அழைத்தான்;
சிறந்த திட்டம் ஒன்று சிவன் இழைத்தான்.

“காடு மேடுகளில் அலைந்து திரிவீர்!
ஓடும் நரிகளைப் பற்றிக் கொணர்வீர்.
மாற்றிவிடுவீர் அவற்றைப் பரிகளாக!
மாறிவிடுவீர் நீங்களும் பரிவீரர்களாக!

ஆடி மாதம் ஓடியே போய் விட்டது!
தேடிய பரிகளைத் தரவேண்டியதே!
யாமும் ஒரு பரிசேவகனாக உருமாறி
யாத்திரையில் பங்கெடுத்து வருவோம்!”

நரிகளைத் திரட்டி ஓரிடம் சேர்த்தனர்;
பரிகளாக அவற்றை மாற்றி அமைத்தனர்.
உருமாறிப் பரிவீரர்கள் ஆயினர் கணங்கள்;
உரு மாற்றிய பரிகளின் மேல் அமர்ந்தனர்.

ஆடைகள், பல்வகை ஆபரணங்கள், மேலும்
ஆயுதங்கள் பலவற்றை மிடுக்குடன் ஏந்தி
குதிரை வீரனாகவே உரு மாறிவிட்டான்;
மதுரை சோம சுந்தரேஸ்வரப் பெருமான்.

திருவடியில் ஒளிர்ந்தன வீரக்கழல்கள்;
திருக்கரத்தில் ஒளிர்ந்தது ஞானவாள்;
ஆடை அலங்காரம், நவமணி ஆபரணம்,
அழகிய நெற்றில் துலங்கிய திருநீறு.

ஏறி வந்ததோ திவ்ய வேதப்பரி மேல்!
பாரினில் யாருமே இதுவரை கண்டிராதது.
அறம், பொருள், இன்பம், வீடு என்னும்
புருஷார்த்தங்களே அதன் நான்கு கால்கள்.

கர்ம கண்டம், ஞான காண்டம் என்னும்
இரு காண்டங்களே அதன் இரு செவிகள்.
இரண்டு கண்களும் ஞானக் கருவிகள் !
பரஞானம் மற்றும் அபரஞானம் என.

விதியே வேதப்பரியின் முகம் ஆனது.
விதிவிலக்கே வேதப்பரியின் வால் ஆனது.
ஆகமங்கள் அதன் அழகிய புற அணிகள்;
ஓம் என்ற பிரணவமே அதன் கடிவாளம்!

பிரமனின் முகமே அதன் இருப்பிடம்.
பிரமிக்க வைத்த கால் குளம்பொலியில்
அதி சௌம்மியமகப் பொருந்தி ஒலித்தன
பதினெட்டு வகையான இசைக்கருவிகள்.

மாயப் பரிக்கூட்டம் சென்றது மேற்கே.
தூய வேதப்பரி ஆனது நடுநாயகம்.
அலைகடல் பொங்கியதொரு ஆரவாரம்.
மலைகள் அதிரும் வண்ணம் கோலாகலம்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

# 59 (B). THE MAGICAL HORSES.

Siva decided that it was time to play another divine prank to save his devotee from the tortures he was being subjected to.

He ordered his Siva GaNas,” Go and round up all the foxes you see. Change them into sturdy horses. You too become the horse riders.

The Aashaada maasam is over. It is time to hand over the horses to the king. I too will become a horse rider and go with you”.

All the foxes were rounded up in a place. They were changed into sturdy horses with every aswa lakshaNa.

The Siva GaNas changed into strong and smart horsemen, dressed in the proper clothes and carrying the proper arms.

Siva transformed himself into a handsome soldier. The anklets worn by the brave men adorned his ankles. The sword of wisdom glittered in his hand. His forehead was smeared with viboothi. He wore rich clothes and gold ornaments.

He rode the Vedas transformed into a horse.The four Purushaarthaas namely Dharma, Artha, Kaama and Moksha formed its four legs.

Karma KaaNda and Jnaana KaaNda were its two ears. Para Jnaanam and Apara Jnaanam were its two eyes. Vidhi was its face. Agamaas were its ornaments. Pranava was its reins.

It lived in Brahma’s face. The trotting sound made by the horse was the sound of eighteen different musical instruments played in unison.

All the magical horses traveled west wards. The Veda turned horse was in the center of the group. The noise made by the group was like the roar of an ocean and made the mountains tremble.

 
bhagavathy bhaagavatam - skanda 8

8#19a . அதலம்

மயனின் மகன் பலன் அமைத்துள்ளான்.
மாயைகள் தொண்ணூற்றாறு கற்றவன்!


வெளிப்படுவர் மூன்று புவன மோகினிகள்
வெளி வரும் பலனின் கொட்டாவியுடன்.


பும்சலி, ஸ்வைரிணி மற்றும் காமினி
புவன மோகினிகள் அந்த மூவர் ஆவர்.


ரகசியமாகப் பிலத்துவாரத்தில் நுழைபவர்களை
ரசாயனத்தால் தம் வசப்படுத்துவர் மோகினிகள்.


கடைக்கண் பார்வை, அணைத்தல், சிரித்தல் என்று
ஆடவரை மகிழ்விப்பர் மோஹ வலையில் வீழ்த்திவிட்டு.


மயங்கிய ஆடவர் கொள்வர் ஆணவ மதம்;
உயர்த்திப் பேசிக் கொள்வர் தம்மைத் தாமே.


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K . ராமன்


8#19a. AtaLam


In Atala, the first beautiful region, lives the exceedingly haughty son of the DAnava MAyA. He has mastered the ninety-six MAyAs.


All the requisites of the inhabitants are obtained by them. The other MAyAvis know one or two of these. None of them know all, as these MAyAS are exceedingly difficult to be carried out.


When this powerful Bala yawned, the three classes of women emerged – fascinating all the Lokas. They were named Pums’chalee (or unchaste woman) SvairiNi, (an adulteress) and KAmini (a lovely women).


When any man, enters the Atala region, they, with the help of the sentiment of love, they entice him. They generate in him the power to enjoy pleasures. They captivate him with their sweet smiles and amorous lovely looks.


They embrace him and converse with him with amorous gestures and postures, pleasing him well. He who enjoys thus thinks often that he himself has become a god!


Blinded by vanity and finding himself endowed with powers and prosperity, he thinks and talks very highly of himself.



 
bhagavathy bhaagavatam - skanda 3

3#11c. தேவி யக்ஞம்

சர்ப்ப யாகம் செய்தாய் ஜனமேஜயா
சர்ப்பங்கள் மேல் கொண்ட பகையால்!

சர்ப்பங்களின் அழிவு யாகப் பலன்.
சர்ப்ப யாகம் ஆனது தாமஸ யாகம்.

காரணம் நாடினால் அது பகைமையே.
காரியம் நாடினால் அவை கொலையே.

தேவியின் யக்ஞ விதிகளைக் கூறுவேன்;
தேவை வேதம் கற்றுள்ள வல்லுனர்கள்.

புண்ணியம் சேர்போம் யாகம் செய்து;
கண்ணியம் சேரும் பரீக்ஷித் மன்னனை.

பிரபஞ்ச சிந்தனையே இல்லாத முனிவர்
பிரம்ம நிஷ்டையில் ஆழ்ந்திருந்த போது

கழுத்தில் போட்டான் செத்த பாம்பினை.
இழுத்துத் தள்ள முயன்றான் முனிவரை.

கோபம் கொண்ட முனிகுமாரனின் கடும்
சாபத்துக்கு அஞ்சி பதுங்கி வாழ்ந்தான்.

அழுது மணி மந்திரங்களை நாடினான்!
புழு போன்ற ஜந்து கடித்து மண்டான்.

நரகத்தில் இருக்கும் மன்னனைக் காத்துக்
கரை ஏற்றுவாய் நரகத்தின் துயரிலிருந்து!”

“சுவர்க்கத்துக்குத் என் தந்தை செல்லும்
மார்க்கம் எதுவோ கூறுங்கள் வியாசரே!”

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

3#11c. Devi Yajnam

Sage VyAsA told king Janamejayan thus,” You performed the great sarpa yAgam. Your hatred towards the serpents was the cause of the Sarpa yAgam.

The yAgam was a tAmasic yAgam since destruction of the serpents was its fruit. The cause of the yAgam was the hatred on the snakes and the effect of the yAga was the mass-killing of those snakes.

I will tell you the rules for performing the Devi yajnam. We need learned pundits to perform it. We have to earn puNya (good merits) to release your father King Pareekshit from his sufferings.

A sage was lost in deep meditation shut away from this world. King Pareekshit garlanded the sage with the body of a dead snake. He tried to topple the sage by pulling the body of the snake.

When the angry son of the sage cast a curse, he got frightened and tried to hide in the safety of his fort. He sought the help of gems and mantra to save himself but in vain.

He was bit by a strange worm like germ and lost his life. We have to help him attain swarggam.” VyAsa told Janamejayan. “Sire! please tell me how I can help my father to attain swarggam!” king Janamejayan asked sage VyAsa now.

 
kandha purANam - pOr puri kANdam

6b. நீரும், நெருப்பும்

ஒற்றர்கள் நுழைந்தனர் அரண்மனையில்;
கொற்றவனிடம் கூறினர் அனைத்தையும்;


” கொண்டு சென்று இட்டான் நீர்க் கடலில்
வென்று பானுகோபன் பூதப் படையினரை!


மாயப் படையால் போர் புரிந்தான் அவன்;
மாயப் படையை அழித்தது வேளின் வேல்!


பூதப் படை எழுந்தது உயிர் பிழைத்து.
பூதப் படை அடைந்தது நம் நகரை.


புலிமுகன் படையை வென்றது போரில்
புலிமுகனையும் கொன்றது அப்போரில்.


தீயையும், காற்றையும் ஒன்றாகச் செலுத்தித்
தீமை செய்து விட்டது நம் தலை நகருக்கு!”


“ஊழிக் காலத்தில் உலகையே அழிக்கும்
ஏழு முகில்களையும் அழைத்து வருக!”


ஏழு முகில்களும் வந்து நின்றன அங்கு!
“எழுவீர்! பொழிவீர்! எரியும் நம் நகரில்!”


தீயை அணைத்து விட்டன ஏழு முகில்கள்!
திகைத்து நின்று விட்டார் வீரவாகுத் தேவர்.


நாரதர் தோன்றிக் கூறினார் விவரம்;
நகரை அழித்திட மற்றொரு உபாயம்.


“ஊழிக்கால முகில்களை ஒடுக்கிட
உடனே செலுத்துவீர் வடவைத் தீயை!”


வடவைத் தீப்படை விரைந்து சென்றது!
வற்றச் செய்தது ஏழு ஊழி முகில்களை.


ஆற்றல் இழந்தன ஊழி மேகங்கள் ஏழும்.
சீற்றம் அடைந்தான் சூரபத்ம அவுணன்.


“என் தேரை உடனே கொணர்க!” எனத்
தன் காவலருக்குக் கட்டளை இட்டான்!


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


4#6b. Fire fights Water.


The messengers entered the palace. They related the recent happenings to Soorapadman. “BhAnukoban fought the war using the asthram given by MAyA. It vanquished the army of the demons and threw them all into the freshwater sea.


Then the spear of Murugan appeared there. MAyA’s asthram lost its deluding power. The army of the demons were saved by the spear. The army of demons then reached the western gate of our city.

They fought with Pulimukhan who was guarding the gate and killed him after defeating his army. They shot the arrows of Wind and Fire and have destroyed our city completely.”


Soorapadman became very angry and ordered, “Go and fetch the seven great rain clouds which cause deluge during PraLaya.” The seven rain clouds reported to him immediately.

He ordered them,”Go forth and rain on my city and put out the burning fire there.” The clouds obeyed him and soon the fire was put out. VeerabAhu was surprised by these sudden developments.


Just then NArada appeared and told him another way to destroy the city. He suggested that VeerabAhu must shoot the great VadavAgni to vanquish those seven rain clouds. The VadavAgni spread very fast. It drank up all the water from the seven rain clouds.


The dry clouds could not pour down any more rain. Soorapadman became mad with anger and ordered that his chariot be bought there immediately.


 
The 64 Thiru ViLaiyAdalgal

59c. குதிரைகள் வந்தன!


# 59 (c). குதிரைகள் வந்தன!

அச்வ சாஸ்திர லக்ஷணங்கள் பெருந்திய
அச்வக் கூட்டதைக் கண்டதும் மக்கள்,
சொல்ல ஒண்ணாத வியப்படைந்தனர்.
செல்லுவதை ஆர்வத்துடன் நோக்கினர்.


குதிரைகளின் கனைப்பு, வாத்திய முழக்கம்,
குதிரை வீரர்களின் ஆரவாரம் எல்லாம்
கலந்து ஒலித்தது அன்று ஆலவாயில்,
காத தூரத்தில் பரிகள் இருக்கும்போதே !


பல நிறம் கொண்ட ஏழு கடல்கள் போலப்
பல நிறம் கொண்ட புரவிகளின் கடல்!
“பொங்கி எழுந்து வருவது காணீர்!
எங்கும் காணக் கிட்டாத பரிகளின் கூட்டம்!”


உடல் பூரித்தான் மன்னன் அப்போதே!
விடச் செய்தான் சிறையிலிருந்து அவரை.
பரிசுகள், பட்டாடைகள், முத்து மாலைகள்!
பரிகளின் வரவை எதிர் நோக்கி இருந்தான்.


அலகிலா விளையாட்டுடையவன் மீண்டும்
காலம் தாழ்த்தினான்; வந்து சேரவில்லை.
மீண்டும் தண்டனை வாதவூராருக்கு
தண்டலார் கைகளில் மாற்றி மாற்றி.


எக்காள ஒலிகளால் ஊரே நிறைந்தது!
அக்குளம்பு ஒலிகளும், தூசும் பரவின.
குதிரைகளின் வரவு உறுதியான பின்னர்
மதி மந்திரிக்கு மீண்டும் விடுதலை.


உயர்ந்த சாதிக் குதிரைகளைக் கண்டு
மயங்கி விட்டான் மன்னன் அரிமர்தனன்
எத்தனை எழில்! எத்தனை கம்பீரம்!
எத்தனை உயரம்! எத்தனை திறமை!


“யார் இவர்களின் தலைவன் அறிவீரா?”
“யான் அறிகிலேன் மன்னர் மன்னா!”
“யானே தலைவன்!” என்று முன்வரவில்லை
யாவரையும் மயக்கும் அப்பேரழகன்


“எம் பரிகளின் சிறப்பினைக் காண்பீர்!”
தம் வேதப்பரியின்மேல் ஆரோஹணித்து,
மல்ல, மயூர, வானர கதிகளையும்
வல்லி, சரகதிகள், விசித்திர நடைகள்


நடாத்திக் காட்டி அசத்தினர் பிரான்.
நடாத்திக் காட்டின சிவ கணங்களும்.
பரிவேடத்தில் இருந்த நரிகளை அவ்வாறே!
பரவசம் அடைந்தனர் பார்வையாளர்கள்!


“யார் உங்கள் தலைவன் கூறுங்கள்!”
“யானே தலைவன்!” என முன் வந்தான்.
சிவசேவகனைக் கண்டதும் மெய் மறந்து
சிவஅஞ்சலி செய்தான் அரிமர்தனன்.


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


# 59 (C). THE ARRIVAL OF THE HORSES.


The people were amazed to see to such a large group of horses – each of which was sturdy and strong. They watched with interest as the horses trotted by.


The neighing of the horses, their foot steps, the conversation among their riders, the sound of the blowing horns and beating of drums could be heard in Madurai, even when the horses were miles away.


It was as if the seven seas in different hues had risen up together. The king became joyous. He ordered his minister to be released from the prison. He presented him with silk, jewels and gold.


The horses did not arrive as per plan. Siva delayed the delivery of the horse. The king threw his minister in prison again.


Again the sound of the horses was heard. The cloud of dust filled the city. When the arrival of the horses was confirmed, the minister was released again.


The king was very pleased with those horses.They appeared so sturdy so strong, so tall and so talented.


“Who is the leader of this group?” the king demanded to know. “I do not know sire!” replied the minister. Siva did not come froward claiming to be the leader.


Instead he invited the king to watch the show of talent and training imparted to the horses. He made his horse run, walk an trot in various styles. All the Siva Ganaas did the same with their horses.


“Who is the leader?”Siva came forward.”It is I!”
At the sight of Siva the king forgot himself and did anjali to Siva.
 
bhagavathy bhaagavatam - skanda 8

8#19b. விதலம்

ஆடகேச்வரன் அமைந்துள்ள உலகம் இது;
ஆடகேச்வரனைச் சுற்றிப் பிரமத கணங்கள்.

விருத்தி செய்கிறான் பிரமன் படைப்புகளை;
விளங்குகிறான் தேவர்களால் பூஜிக்கப்பட்டு.

பாய்கிறது ஆடகம் என்னும் ஒரு நதியாக
பார்வதி பரமேஸ்வரனின் இன்ப வீரியம்!

விளையும் ஆடகப் பொன் அந்நதியிலிருந்து!
விழைவர் தைத்தியர் அதை அணிந்து கொள்ள.

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K . ராமன்

8#19b. Vitalam

Here is the description of the second region Vitala. Vitala is situated below the earth and below the Atalam.

There the BhagavAn who is worshiped by all the Devas, has assumed the name of HAtakes’vara.

He is staying there – surrounded by his attendants – with Devi BhaAni, specially for the purpose of increasing the creation of BrahmA.

Out of the reproductive essence of the HAtakeswara and Devi BhavAni the river HAtaki is formed and flows there.

Fire with the help of wind produces a gold called HAtaka out of the river water. DaityAs value this rare gold a lot. The Daitya women use this gold for making their various ornamen
ts.
 
bhagavathy bhaagavatam - skanda 3

3#12a. பிரம்ம லோகம்

மும் மூர்த்திகள் ஏற்றனர் பெண்ணுருவம்;
மும் மூர்த்திகள் தரிசித்தனர் பராசக்தியை!


மும் மூர்த்திகள் பெற்றனர் மூன்று தேவியர்!
மும் மூர்த்திகள் பெற்றனர் முத் தொழில்கள்!


ஆதார சக்தியும் வந்தாள் அவர்களுடன்;
ஆதாரம் ஆனாள் அனைத்துக்கும் அவள்.


தரித்துத் தாங்குகின்றாள் அனைத்தையும்;
‘தரை’ என்று பெயர் பெற்றாள் ஆதார சக்தி.


இருக்கிறாள் அகண்டமாக விரிந்து, பரந்து!
‘பிருத்வி’ என்ற பெயர் பெற்றாள் ஆதர சக்தி.


மது கைடபர்களின் மேனியுடன் கலந்து
‘மேதினி’ என்ற பெயர் பெற்றாள் அச்சக்தி.


‘பூமி’யாக ஆகிவிட்டாள் ஆதார சக்தி;
பூமி அசையாமல் காப்பது மலைகள்.


‘மஹீதரம்’ என்னும் மலைகளே பூமிக்கு
மரத்தில் அடித்த ஆணிகள் போன்றவை.


மரீசி, நாரதர், புலகர், புலஸ்தியர்,
கிருது, அத்திரி, தக்ஷன், வசிஷ்டர்


புதல்வர்களாகப் பிறந்தனர் பிரமனிடம்.
புதல்வரானார் காச்யபர் மரீசியிடம்.


காச்யபர் மணந்தார் தக்ஷனின் பெண்களை;
காச்யபர் மனைவியர் பதின்மூவர் ஆவர்.


அத்தனை வகை உயிரினகளும் உலகில்
அந்தப் பெண்களிடமிருந்தே உருவானது.


பிரமனின் உடலின் இரு பகுதிகளில்
பிறந்தனர் ஸ்வாயம்பூவும் சதரூபியும்.


பிறந்தார் இரண்டு புத்திரர்கள் அவர்களுக்கு.
பிறந்தனர் மூன்று புத்திரிகள் அவர்களுக்கு.


உற்பத்தியானது பிரமன் வம்சம் இங்ஙனம்;
உற்பத்தியானது பிரம்மலோகம் இங்ஙனம்.


சிகரங்களுடன் விளங்கும் வெகு அழகாக
சிறந்த மேரு மலையின் உச்சியில் அது.


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


3#12a. Brahma lokam


The Trinity assumed feminine bodies and got the darshan of Devi ParA Shakti. They got their respective consorts and respective assignments from Devi.


When they came back the Shakti who supports everything and everyone came with them. She has several names as the ground, Pruthvee, Medhini, Bhoomi etc.


The mountains keep her fixed in one place without letting her move around. The mountains act like the nails driven in a wood to keep it in place and are called ‘Maheedhara’.


Mareechi, NArada, Pulaka, Pulasthya, Kruthu, Ati, Dakshan and Vasishta were born to Brhma Devan. Kasyapa was the son of Mareechi. He married thirteen daughters of Dakshan. All the living beings emerged from these thirten wives of Kasyapa.


SwAyamboo and Satharoopa emerged from the two halves of Brahma’s body. They got two sons and three daughters. Brahma vamsam grew from them. Brahma lokam also appeared to house them. It was right on the top of the Mount Meru with many beautiful peaks.



 
kandha purAnam - pOr puri kAndam

7a. இரணியன் அறிவுரை

அரசவையில் உடன் அமர்ந்திருந்தான்;
ஆற்றல் மிக்க அவுணன் இரணியன்.


ஆயிரம் மறைகளை உணர்ந்தவன்;
மாய வஞ்சனைகளில் தேர்ந்தவன்.


முன்னாளில் கீழுலகை வென்ற அவுணன்;
மூன்று தலைகளை உடைய ஓர் அவுணன்.


அரசன் சூரபத்மனைப் போற்றிய பின்
அறவுரைகள் பல உரைக்கலானான்;


“தேவர்களைச் சிறை செய்வது தீமை;
தேவர்களைத் துன்புறுத்தினால் அழிவு!


மேன்மைகளைத் தந்த சிவபெருமானே
மேன்மைகளை மாற்றிட எண்ணினால்;


போற்றி அவரை நாம் வழிபடுவோமா?
போரிட்டு அனைத்தையும் இழப்போமா?


அருள் மிக்க ஐயனை அடைக்கலம் என
அடைந்தவர் உய்வர்; மற்றவர் மாய்வர்.


பெருமானின் திருமகன் முருகனோடு
பொருதலும் நமக்கு நன்மை தருமோ?


முருகனின் திரு விளையாடல்களை
அறியாமல் மயங்குகின்றனர் தேவர்;


சிறுவன் என்று நீ இகழாதே அவனை!
சிறுவனாக வந்துள்ளது சிவபெருமானே!


வேற்படை முன் எப்படை வெல்லும்?
தோற்றம், முடிவு இல்லாதவன் முருகன்!


முருகனை எதிர்த்து வெல்ல இயலுமா?
முருகன் சிறுவனாக இருந்த போதிலும்!


உறவினரோடு சரண் புகுவோம் நாம்!
உய்வோம் வாரும் உடனே செல்வோம்!”


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


4#7a. HiraNyan’s advice.


HiraNyan was seated in the durbar at that time. He was a distinguished asura. He had learned all the Vedas. He was an exponent in all the MAyA tricks. He was three headed. He had conquered the lower worlds earlier. He praised Soorapadman first and then starting advising him thus,


” Imprisoning the Devas will surely harm us. Harming the Devas will also harm us. Lord Siva had given us all these rare boons. If he decides to take them away from us, should we worship him seeking his grace and mercy or fight him and lose everything?


Lord Siva is the manifestation of kindness. Those who seek refuge in Him will be saved. The others will perish. Murugan is none other than Lord Siva himself manifesting as a child. Will fighting with Murugan prove beneficial to us? Which of our astrams can face Murugan’s spear?


He is the One whole truth without a beginning or an end – even if he appears to us as a mere child. Come on let us all go to him now and surrender and be saved .”

 
The 64 Thiru VilaiyAdalgaL

59d. கயிறுகள் மாறின.

# 59(d). கயிறுகள் மாறின.

“உம் பொன் பொருள் தந்தார் இவர்
எம்மிடம் இக்குதிரைப் படைக்காக.
சர்வ லக்ஷணங்களும் பொருந்திய
அபூர்வ குதிரைப்படை இதோ தயார்.

இன்று கயிற்றை மாற்றிக் கொண்டால்,
இவை உம்முடையவை ஆகிவிடும்.
நாளை என்ன நிகழ்ந்த போதிலும்
நமக்குள்ளே எந்த வழக்கும் இல்லை!”

புரவி வாணிகம் நடப்பது இங்ஙனமே.
புவியாளும் மன்னன் ஒப்புதல் தந்தான்.
புரவி இலக்கணத்தை விளக்கினார் பிரான்
புரவிகளின் வகைகளும், இயல்புகளும்;

போரிடும் தன்மையை விவரித்தார்.
நாடுகள் எவற்றிலிருந்து வந்துள்ளன;
எந்தக் குதிரைகள் எந்த நாட்டிலிருந்து;
அந்தக் குதிரைகளைத் தனியே காட்டினார்.

நாடுகளின் சிறப்பைப் பட்டியல் இட்டார்.
நானா குதிரைகளின் உடலில் சுழிகள்,
சுழிகளின் உண்மைப் பலன்கள், பயன்கள்;
தெளிவாக எடுத்து இயம்பினார் பிரான்.

சீரிய பரிகளுக்குச் சிறந்த அலங்காரம்!
சிலம்புகள், சதங்கைகள், கிண்கிணிகள்,
சந்தனம், குங்குமம், தூப தீபங்கள்,
எந்தக் குறையையும் வைக்கவில்லை!

“வழுதி வாழ்க!” என்று வாழ்த்தினார்.
வழுதி கயிற்றைப் பெற்றுக் கொண்டான்.
வேதப்பரி ஒன்றைத் தவிர அங்கிருந்த
மாயப் பரிகள் எல்லாம் கை மாறின.

மன்னனிடம் பரிகளைப் பெற்றுக் கொண்டு
அன்புடன் பந்தியில் சேர்த்தனர் சேவகர்கள்;
மன்னன் அளித்த தூய வெண் பட்டை
அன்புடன் அணிந்தார் திருமுடியில்.

மற்ற சேவகர்களுக்குப் பட்டாடைகள்
மற்ற அழகிய நிறங்களில் அளித்தான்;
கொற்றவனிடம் விடைபெற்று மறைந்தனர்.
மற்றவர் தங்கள் இல்லம் திரும்பினர்.

வாதவூராருக்குச் சிறந்த பாராட்டுக்கள்;
போதும் போதும் என்னும்படிப் பரிசுகள்.
அரன் கூறி மகிழ்ந்தான் அன்னையிடம்,
நரிகள் பரிகளாக மாறிய விந்தையை.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

# 59 (D). HANDING OVER THE HORSES.

“I was paid handsomely in gold by your loyal minister for these horses. The moment I hand them over, our business finishes. Whatever may happen tomorrow, there will be no dispute between the two of us!”

Usually this was how the horse trading was done.So the king agreed to it.
Siva went on to explain the the types of horses, their characteristics, nature, talents, how well they would fight, from which countries they had been imported etc.

He went on elaborate the greatness of each of those countries. He spoke about the colors and circle marks on the bodies of the horses and their interpretations.
Each horse was decorated with anklets, kinkini, silver bells, sandal paste and kumkumam. They were shown deepam and dhoopam also.

Siva shouted, “Long live the king!”. All the horses except the one Siva rode had changed hands. Siva wore the pure white silk given by the king on his head. The other Sivaganas received silk in various hues.

They all took leave of the king and went back. The citizens were happy to witness these happenings and returned home. The minster was honored and showered with more gifts.

Siva had an enjoyable time relating to his Devi of how the cunning foxes were transformed into handsome horses.

 
bhagavathy bhaagavatm - skanda 8

8#19c. சுதலம்

விரோசனனின் மகன் மகாபலியின் உலகம் இது!
விளங்குகின்றார் மகாபலி செல்வ போகங்களோடு.


வந்தார் வாமன வடிவில் விஷ்ணு யாகசாலைக்கு;
வஞ்சகமாகக் கவர்ந்து கொண்டார் அவன் சம்பத்தை!


வருண பாசத்தால் கட்டித் தள்ளினர் மகாபலியை
அதல பாதாளத்தில் ஒரு பிலத் துவாரம் வழியாக;


சுகமாக வாழச் செய்கிறார் மகாபலியை இங்கு;
சுயமாக எழுந்தருளியுள்ளார் துவார பாலகராக!


மகிழ்ந்தான் மகாபலி தன் செல்வத்தின் சிறப்பால்;
முயலவில்லை கர்ம பந்தத்தைக் கட்டறுப்பதற்கு.


வஞ்சனையால் கவர்ந்தான் வாமனன் செல்வத்தை!
தஞ்சமடையச் செய்து உயர்த்தினார் மகாபலியை!


கர்ம பந்தங்களை நீத்தவன் எளிதில் அடைவான்
கர்மங்களைக் கடந்த கடவுளின் பார்வையை.


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


8#19c. Sutala


Below Vitala is Sutala. The highly respected MahA Bali, the son of Virochana lives here. The BhagavAn VAsudeva, brought down Bali into Sutala, for the welfare of Indra.


Bali, the Lord of Sutala, is entirely fearless and goes on living, worshiping VAsudeva. When Vishnu wanted three feet of land Bali gave him that land and became even more prosperous.


BhagavAn does not show us His Favor when he gives us great wealth since wealth is a product of MAyA and is the root cause of all worries and problems. One may forget BhagavAn altogether when one is very rich.


Bhagavan took away all that Bali had except his body, fastened him by the VaruNA’s noose threw him here. BhagavAn then has stationed Himself at his door as a Door-keeper or DWAra pAlaka.


Thus Bali, the Lord of Daityas, the highly respected and renowned in all the Lokas, is reigning in Sutala. Hari Himself is his Door-keeper.


Thus by the grace of the Devadeva Vâsudeva, Bali is reigning in Sutala, and enjoying all sorts of pleasures, without any equal anywhere.



 
bhagavathy bhaagavatam - skanda 3

3#12b. தேவி தந்த வரங்கள்

உண்டாக்கினார் மஹா விஷ்ணு – வை
குண்டத்தைத் தன் லீலைகளுக்காக!


உண்டாக்கினார் ருத்திரர் கைலாசத்தை;
உமை, சிவ கணங்ககளுடன் அமைந்தார்!


அமைந்தது சுவர்க்கம் இந்திரனுக்கு;
அமைந்தன அதில் பல அற்புதங்கள்!


ஐராவதம், உச்சைஸ்ரவம், காமதேனுவோடு
பாரிஜாதம், அப்சரஸ், தன்வந்திரி, சந்திரன்!


தோன்றின மூன்று வேறு இனங்கள்!
தோன்றினர் தேவர், மனிதர், திரியக்!


தோன்றின அனைத்து ஜீவராசிகளும்!
தோன்றின நான்கு யோனிகளிலிருந்து!


விஷ்ணு தியானித்தார் தேவி திருவடிகளை!
விஷ்ணு முனைந்தார் தேவி யக்ஞம் புரிய.


தேவர்கள், முனிவர்களை அழைத்தார்
சேகரித்தார் ஹோம திரவியங்களை.


அமைத்தார் விசாலமான யாகசாலையை.
அழைத்தார் விசேஷமான ரிக்வித்துக்களை!


பீஜாக்ஷரங்களுடன் தொடங்கியது ஜபம்;
பிராமணர் செய்தனர் அவிசுடன் ஹோமம்.


ஒலித்தது ஓங்கி அசரீரி விண்ணிலிருந்து.
அளித்தது விஷ்ணுவுக்கு பல சிறப்புகளை.


“வணங்கத் தக்கவனாக, பக்திக்கு இலக்காக;
வரம் தருபவனாக, ஐஸ்வர்யம் உடையவனாக,


ஆனந்தம் தருபவனாக, அபயம் அளிப்பவனாக,
அறத்தை நிலை நாட்டுபவனாக விளங்குவாய்!


கலந்திருக்கும் உன் அவதாரங்களில் என் சக்தி;
கடை விலங்கான போதும் கிடைக்கும் புகழ்!


நான் தரும் வரங்கள் இவை உனக்கு! பக்தியோடு
நானிலம் பூஜிக்க வேண்டும் என் அம்சங்களை!”


யக்ஞம் நடந்து முடிந்தது இனிதாக;
யாவரும் திரும்பினர் தம் இருப்பிடம்.


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


3#12b. The Boons given by Devi


MahA VishNu created Vaikuntam for his leelAs. Rudran created KailAsam and he occupied it with Uma and the Siva gaNAs. Indra got swarggam and there were many wonderful things there.


The four tusked white elephant AirAvat, The divine horse Uchchaisravas, the divine cow KAmadhEnu, the rare flower PArijAtam, the divine damsels apsaras, the God of Medicines Danvantri and the Moon just to name a few.


Three races were created namely the DevAs, The munushyAs and The Thiryak – animals which grow horizontally. These were born out of four different yonis or birth canals.


VishNu wanted to perform the Devi Yagnam. He collected the materials needed for Devi Yagnam He established a huge yAga sAlA and invited all the sages and seers to attend the yagnam.


Rikviths were the special invitees. Japam started with the BeejAkshara mantras. Brahmins performed homam offering havisu. An asareeri sounded from the sky. It was Devi herself who wanted to give Vishnu several boons – since she was well pleased with his Devi Yagnam.


“You VishNu will be worthy of being worshiped. You will be capable of giving boons to your devotees. You will be the aim and fruit of all bhaktAs and bhakti respectively.


You will possess all the eight aiswaryams (forms of wealth). You will be the giver of Anandham (bliss) and abhayam (fearlessness) to your devotees. You will establish Dharma (Justice) whenever it suffers in the hands of the unjust and ruthless people.


My power will be infused in all your avatars. Even when you will be born as a lowly animal, your avatar will command and receive a lot of respect. These are my boons to you. Make sure that the world remembers to worship all my amsams without fail”


The yajnam was completed and all those who had attended it went back to their respective places.



 
kandha purANam - pOr puri kANdam

7b. சூரபத்மனின் சீற்றம்

இரணியன் உரைத்ததை செவி மடுத்தான்;
பெருகிய சினத்தால் விரல் நொடித்தான்.


“புகழுகின்றாய் சிறு முருகனைப் போற்றி!
புகலுகின்றாய் வெறும் தூதுவனை ஏத்தி!


சொன்னது யார் உனக்கு இவற்றை?
உன்னை ஆழ்த்தியது யார் அச்சத்தில்?


நான்முகன் நவில்கிறான் அரசவையில்
நாட்பஞ்சாங்கம் நான் கேட்டு மகிழ!


திருமால் தோற்றார் தம்பி தாரகனிடம்!
தினமும் தந்தான் இந்திரன் கடல் மீன்!


மேன்மைகள் தந்த சிவனே வந்தாலும்
மேன்மைகள் அவர் அழிவது திண்ணம்.


அறிவு இழந்து போய் விட்டாயா நீ?
அச்சம் மிகுந்து போய் விட்டாயா நீ?


நாக்கூசாமல் பகைவனைப் புகழ்ந்து
நமனுலகுக்கு அனுப்ப வைக்காதே நீ!”


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


4#7b. Soorapadman’s anger.


Soorapadman became very angry and cracked his fingers. “How dare to talk so highly about Murugan and his messenger? Who has told you all these things? Who has sowed the seed of fear in your heart?


Brahma reads the almanac everyday for my pleasure. VishNu got defeated by my dear younger brother TArakan. Indra used to bring us fish everyday. Even if Siva comes to fight me now, He will get defeated.


Have lost your senses?Are you frightened of the war? If you speak highly on my enemies, I shall send you to yamalokam.”

 
The 64 Thiru ViLaiyAdalgal

60a. பரியை நரியாக்கியது.

# 60 (a). பரியை நரியாக்கியது.

மங்கல வாத்தியங்கள் நன்கு முழங்கின;
மங்கல மங்கையர் எதிரே வந்தனர்;
பரிசுகளுடனும், வரிசைகளுடனும்,
பரிபூர்ண பக்தியுடன் சென்றார் இல்லம்.


“நான் விரும்பியபடியே அரசன் அளித்த
பொன்னும் பொருளும் அரன் பணிக்கே!
அத்தன் அருளால் மன்னனுக்கு எத்தனை
உத்தம ஜாதிக் குதிரைகள் கிடைத்துள்ளன!


அரன் திருவடியை மறவேன் எந்நாளும்;
தவம் ஒன்றே சிறந்த வாழ்க்கை நெறி!”
பக்தி என்னும் பேரின்பத்தில் திளைத்து
முக்தி பெறுவதையே விழைந்தார் அவர்.


காலைப் பொழுது மாறி மாலை ஆயிற்று.
மாலை மயங்கியதும் இரவு ஆயிற்று.
பரிகள் எல்லாம் முன்போலவே – காட்டு
நரிகளாகவே மாறிப் போய்விட்டன.


நரிகளுக்கு அன்று நல்ல விருந்து;
பரிகளைக் கடித்துக் குதறலாயின.
பெருகும் உதிரத்தை விரும்பிப் பருகின.
பொருது குடலைச் சுவைக்கலாயின.


குதிரைகளின் கனைப்பொலி, காலடிகள்,
உதிரம் சிந்தும் குதிரைகளின் ஓலம்,
நரிக் கூட்டங்கள் ஊளை இடும் ஒலி,
உறக்கம் கலைந்தது காவலர்களுக்கு.


தப்பிச் செல்லலானது நரிக் கூட்டம்!
அப்போதே ஓடின அனைத்து வீதிகளிலும்!
வளர்ப்புப் பிராணிகளைத் தின்று தீர்த்தன!
வளர்ப்புப் பறவைகளும் தப்பவில்லை!


வேத கோஷமும், தேவகீதமும் கேட்கும் ,
மதுரையில் ஊளைகளும், ஓலங்களுமா?
காவலர்கள் அஞ்சியபடி சென்று இதைக்
கோவலனிடம் விண்ணப்பித்தனர்.


பரிகளைக் கண்டு மகிழ்ந்த மன்னன்
நரிகளைக் கேட்டு சீற்றம் அடைந்தான்;
வஞ்சித்துவிட்ட வாதவூரான் மீது மீண்டும்
வெஞ்சினம் கொண்டு வெறுப்படைந்தான்.


கோட்டைக் கதவுகள் திறக்கப்பட்டதும்,
ஓட்டம் பிடித்தன காட்டுக்குள் நரிகள்!
நடந்தது எதுவுமே அறியாத அடியார்,
கடமை உணர்வுடன் சென்றார் மன்னிடம்.


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


# 60 (A). HORSES BECAME FOXES.


The auspicious musical instruments were played. Women appeared in the front carrying the eight auspicious articles.
MANikka vAsagar went home leaded with gifts and praises.

“I have the satisfaction that all the gold taken from the King’s treasury was spent on Siva and devotees. At the same time, Siva has delivered a group of strong horses to the satisfaction of the king. I will never forget the lord’s lotus feet. Tapas is the only right way to live.”


He wanted to immerse himself in Siva bakthi and attain mukthi. The day rolled on and it became night time. All the horses got transformed into foxes as before.


They had a royal feast on the royal horses. They drank the fresh blood gushing from those horses and ate their flesh. The old and sickly horses tried to fight off the foxes, but in vain.


The mixed sound of the horses neighing, struggling and crying along with the howling of the foxes woke up the entire city.


The foxes escaped when the stable doors were opened. They ran through all the streets of the city eating the domestic animals and birds.


The city famous for its Vedic chanting and divine music was filled with cries of pain and howling. The soldiers were shivering with fear when they reported the matter to the king.


The king who was happy to see the horse was now angered by the reports of the foxes. He was terribly angry with the minister for having played such a mean trick. The foxes ran away to the jungle when the city gate was opened.
 
bhagavathy bhaagavatam - skanda 8

8#19d. தலாதலம்

உள்ளது சுதலத்தின் கீழே தலாதலம்;
உள்ளான் அதில் அரக்கன் மாயாவி மயன்.

திரிபுரத்தைச் சிவன் சிரித்து எரித்த போது
புரிந்தான் ஆட்சி மயன் சிவன் அருளால்.

மாயைகளில் வல்லவன் அரக்கன் மயன்;
மாயாவிகளின் குருவும், தெய்வமும் இவன்.

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K . ராமன்

8#20.ThalAthala

The region lying lower than Sutala is ThalAthala! The Lord of Tripura or the three cities, the great DAnava Mayan is the Ruler of this region.

Mahes’vara burnt his three cities just by bis laughter. But being pleased with Mayan’s devotion, Siva rescued him. Thus Mayan, by the favour of that God, has regained his own kingdom and his position.

This DAnava Mayan is the Teacher of the MAyAvi sect and the cult thereof. He is skilled in various MAyAs or all sorts of the magic powers.

All the fierce demons, of cruel temper, worship him for their prosperity in their various enterprises.

 
bhagavathy bhaagavatam - skanda 3

3#13a. துருவ சிந்து

துருவ சிந்து சூரிய வம்சத்தின் ஓரரசன்;
தர்மசீலன், சத்யசந்தன், பாக்கியவான்!


ஆண்டான் கோசல தேசத்தை இனிதாக!
கொண்டான் அயோத்தியைத் தலைநகராக!


நிகழவில்லை தீச்செயல்கள் நாட்டில்.
திகழ்ந்தனர் மக்கள் நற்பண்புகளுடன்.


இருந்தனர் இரு மனைவியர் அவனுக்கு;
இருவரும் சிறந்தவர் அழகில்,அறிவில்.


பட்டது ராணி ஆவாள் மனோரமை – அவன்
இஷ்டநாயகி ஆவாள் இளையவள் லீலாவதி.


பெற்றாள் லீலாவதி அழகிய ஆண் மகவை!
பெற்றாள் மனோரமையும் முப்பதாம் நாள்!


ராஜ லக்ஷணம் நிறைந்த குமாரர்கள்
ராஜ்ஜியத்தின் கண்மணிகள் ஆயினர்.


சுதர்சனன் பட்டத்து ராணியின் மகன்;
சத்ருஜித் இஷ்டத்து ராணியின் மகன்.


இளைய மனைவியின் மகன் சற்று மூத்தவன்;
இளையவனாக இருந்தான் மூத்தவள் மகன்!


சாதுர்யம் உடையவன் சத்ருஜித் – அதனால்
சகலரும் நேசித்தனர் அவனை அதிகமாக.


வேட்டைக்குச் சென்றான் வேந்தன் காட்டுக்கு;
வெறியுடன் பாய்ந்தது சீற்றம் கொண்ட சிங்கம்.


வீரமாகப் போரிட்ட துருவ சிந்து – பின்னர்
வீழ்ந்து விட்டான் சிங்கத்தின் சீற்றத்துக்கு.


எழுந்தது புதிய பிரச்சனை அந் நாட்டில்;
“எவருக்குப் பட்டம் கட்டுவது அரசனாக?”


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


3#11a. Dhruva Sindhu


Dhruva Sindhu was a king of Soorya vamsam. He ruled over Kosala Desam with Ayodhya as his capital city. He was a man of justice, truthful and fortunate.


His country was free from crimes. His citizens were very well behaved. He had two queens – both very beautiful and intelligent. His queen on the throne was Manorama and his favorite queen was the younger LeelAvati.


LeelAvati gave birth to a beautiful son first. Manorama delivered a son a month later. Sudharsanan, the son of the elder queen Manorama, was younger to Satrujit the son of queen LeelAvati by one month.


Satrujit the son of the younger queen was older by one month. Both these princes had all the princely qualities and were loved by the whole country. Satrujit was smart and people adored him more than Sudharsanan.


King Dhruva Sindhu went for hunting one fine day. He had to fight with a lion which pounced on him with a terrible anger. In the fight with that ferocious animal, the king got killed.


Now a new problem arose in the country. “Who was to become the next king? The younger son of the older queen or the older son of the younger queen?”



 
kandha purANam - pOr puri kANdam

7c. இரணியன் புறப்படுதல்

நன்மை பகன்றாலும் பயன் இல்லை.
மேன்மைகள் அழிவது உறுதியானது!


“அறியாமல் பேசிவிட்டேன் தந்தையே!
சிறியேன் பிழையைப் பொருத்தருள்க!


போருக்குப் போகின்றேன் இன்று நானே!”
மாறும் மனம் கண்டு வியந்தான் சூரபத்மன்!


தந்தையின் அனுமதி பெற்றான் மகன்,
தன் மாளிகையைச் சென்றடைந்தான்.


பூண்டான் போர்க்கோலம் இரணியன்.
பூண்டான் தும்பைப் பூ மாலைகளை.


ஆயிரம் மடங்கல்கள் பூட்டிய தேரில்,
ஆயிரம் துணைவர், தலைவருடனும்.


நகரை பூதங்கள் அழிப்பதைக் கண்டு
நாற்புறமும் அனுப்பினான் சேனையை.


போர் மூண்டது அசுரர், பூதர் இடையே.
வீரவாகு பொருதான் இரணியனோடு.


புரிந்தான் இரணியன் மாயப்போர்
பூதப் படைத் தலைவர் நீலருடன்.


அறிவுப் படைக்கலத்தினால் வீரவாகு
அழித்தான் இரணியனின் மாயையை!


பறந்தன பாணங்கள் இரு புறங்களிலும்.
விழுந்தன பிணங்கள் இரு புறங்களிலும்.


கயலாக மாறினான் தெய்வ மறையை ஓதி!
செயலிழந்து மறைந்தான் கடல் நீரினுள்!


வெற்றிச் சங்கை வீரவாகு முழங்கினான்;
ஒற்றர்கள் ஓடினர் சூரனிடம் செய்தி கூற.


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


4#7c. HiraNyan goes to war.


‘There is no use talking to my father. His fate is sealed!’ HirNnyan told himself! HiraNyan then spoke to his father with deep reverence, “Please forgive my immature talk. I will go to the war today!”


Soorapadman was amazed at the speed with which the young prince had changed his mind. He gave him his blessings. HiraNyan went to his palace. He got ready for the war. He wore his armor and flower garlands. His chariot was drawn by a thousand lions.


When he saw the demons demolishing the city he sent his army in all the four directions. A terrible war broke out between the asura and the demons. HiraNyan resorted to war by treachery.


VeerabAu shot his JnAna Astram (Arrow of Knowledge) which could break the effects of MAyA. Arrows flew from both the sides. Dead warriors fell on both the sides. When his defeat was imminent, HiraNyan transformed himself into a fish and disappeared in to the sea.


VeerabAhu blew his conch as a mark of his victory. The messengers hurried to convey the news to their king Soorapadman.


 
The 64 Thiru ViLaiyAdalgaL

60b. தண்டனை, விடுதலை

# 60 (b). தண்டனை, விடுதலை

வாதவூரான் ஒரு மாயக் கள்வன்;
ஏதும் அறியாதவன் போன்ற எத்தன்;


பொன்னையும், பொருளையும் கவர்ந்தான்,
இன்னமும் பல தொல்லைகள் தந்தான்!


பரிகள் என்று வாங்கி வந்தவை
நரிகளாக மாறியது என்ன மாயம்?


என்ன தண்டனை தந்தாலும் அது
சின்ன தண்டனையே அவனுக்கு!


“வாரும் வாரும் திருவாதவூராரே!
யாருமே உம்போல் இருந்ததில்லை.


ராஜாங்க காரியங்களைத் தாங்கள்
ராஜவிசுவாசத்தோடு செய்கின்றீர்!”


“குற்றம் ஏதும் நிகழ்ந்ததா மன்னா?
சற்றும் எனக்குப் புரியவில்லையே!”


“குற்றம் என்ன என்பதை அறியீரா?
சுற்றம் பழிக்கும் செயல் செய்தீரே!


பரிகள் நடு இரவில் நரிகள் ஆயின!
பரிகளின் குடலைப் பிடுங்கித் தின்றன!


ஊளையிட்டு ஊரெங்கும் உலவின!
வளர்ப்புப் பிராணிகளைத் தின்றன!


பாசாங்கு இனிமேல் பலிக்காது இங்கே.
மோசம் செய்தீர் அந்தண குலத்தவர் நீர்!


என்ன தண்டனை தந்தாலும் தகும்
பொன்னைத் திரும்பத் தரும்வரை.”


காலதூதர் போன்ற தண்டலார்-மனம்
போல தண்டனை தரத் தொடங்கினார்.


உச்சி வெய்யிலில் நிறுத்தி வைத்தார்.
உச்சந் தலையில் கல்லை வைத்தார்.


சிவனை நினைத்து தியானித்தவாறே
நிலத்தில் விழுந்து அவனை விளித்தார்!


மணி வாசகரைக் காக்க விரும்பினான்
பணி அணிநாதன் பிறை சூடும் பிரான்.


வைகை ஆற்றில் வெள்ளம் பொங்கியது!
கைவைக்க இடம் இல்லாமல் பரவியது!


நதியின் கரைகள் உடைந்து போயின.
நதியில் மிதந்தன மரங்கள் வேருடன்.


பச்சைப் பயிரை வைகை விழுங்கியது!
அச்சம் தரும் அழிவுகளைச் செய்தது!


மதிலைத் தாண்டி நகரில் நுழைந்து,
மக்கள் இல்லங்களை நாசம் செய்தது.


நரிகளால் ஏற்பட்ட துன்பம் போதாதா?
பெருகும் வைகையும் துணை போகலாமா?


அரன் திருவிளையாடல்களில் ஒன்றோ?
அரசன் செங்கோல் வளைந்து விட்டதோ?


தண்டலார் தண்டனை தருவதை மறந்து,
தன் உடமைகளைக் காக்க விரைந்தார்.


விடுதலை பெற்றார் வாதவூரார் – ஆயினும்
விடவில்லை சிவதியானத்தைச் சற்றும்.


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


# 60 (B). THE PUNISHMENT.


The king started talking to himself,


“MANikka VAsakar is a cheat and a rogue. He pretends complete innocence. He has stolen my gold and subjected me to many hardships besides. How on earth did the horses change to foxes? No punishment will befit his crime….!”


MANikka VAsakar walked in just then.
“You are unique! No one has served me as well as you have done! You are so sincere in performing your duties”

“I do not understand Sire! Has something gone wrong?”


“You are unfit to be a brahmin! Your own people can swear to that effect. Don’t you really know what has happened?


All your horses became foxes. They ate up the real horses. They ran through the streets eating all the domestic animals and birds.


You can’t deceive me any more. I know what kind of a rogue you really are! You will be punished until you return all my gold taken from my kazaana!”


The torturer was like a yama kinkara. He started his punishments. MaNi VAsakar was made to stand in the mid day sun. A heavy stone was kept on his head. MaNi VAsaar fell down under the weight of the stone. All the time he was meditating on Siva.


Siva decided that it was time to save his devotee. He made the river Vaigai swell with a flash flood. The banks of the river were broken.


Trees were uprooted and floated in the water. Fields were flooded and crops destroyed. The high wall round the city was crossed and all the houses flooded.


People were shocked by these happenings. The foxes ran through the city the previous night. Now there was the flash flood. Was it a prank played by Siva? Or had the king deviated from Justice?


The torturer ran home to salvage whatever he could from the flood water. The minister was set free. He continued to meditate on Siva.
 
bhagavathy bhaagavatam - skanda 8

8#19e. மஹா தலம்

பாம்புகளின் உலகம் ஆகும் மஹாதலம் என்பது;
பாம்புகள் கொண்டிருக்கும் பலப் பல தலைகளை.


மிகுந்த கோபம் கொண்டவைகள் பாம்புகள்;
திகழும் வேறு வேறு இனங்களைச் சார்ந்து!


குஹகன், தக்ஷகன், சுவேணன், காலியன்
குறிப்பிடத் தக்க நான்கு பாம்புகள் ஆகும்,


மஹா பலமும், நீண்ட உடலும் கொண்டவை;
மஹாக் கொடூரமும், கோபமும் கொண்டவை.


அஞ்சுகின்றன இவை கருடனைக் கண்டு!
அதிகம் செல்வதில்லை வெளி உலகுக்கு.


விளையாடிக் கொண்டிருக்கும் ராசா தலத்தில்
களிப்போடு மனைவி, மக்கள், நண்பர்களுடன்.


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


8#19e. MahAtala


Next to TalAtala is MahAtala. The huge snakes – angry sons of Kadru – live here. They are many headed. The names of the most famous amongst them are Kuhaka, Takshaka, SusheNa and KAliya.


They have very wide hoods and are very strong and long. They have a very cruel temper. Their kinsmen also are so.


They are always afraid of Garuda, the King of birds. Surrounded by their sons, wives, friends and acquaintances, they live happily, well skilled in various sports and activities of pleasures.



 
bhagavathy bhaagavatam - skanda 3

3#13b. “யாருக்கு அரசு?”

யுதாஜித் சத்ருஜித்துக்குப் பாட்டன் முறை;
லீலாவதியின் தந்தை; உஜ்ஜயினி மன்னன்.

வீரசேனன் சுதர்சனனுக்குப் பாட்டன் முறை;
மனோரமையின் தந்தை; கலிங்கத்து மன்னன்.

வந்து சேர்ந்தனர் படையுடன் அயோத்திக்கு;
விரும்பினர் தத்தம் பேரனை மன்னன் ஆக்கிவிட.

“மூத்தவன் இருக்க இளையவனுக்கு அரசா?’
வாதித்தான் யுதாஜித், பேரன் சத்ருஜித்துக்காக.

”பட்டத்து ராணி மகனே பட்டத்துக்குரியவன்!”
வெட்டினான் வாதத்தை மன்னன் வீரசேனன்.

“ஏதும் அறியாத சிறுவன் அரசாள்வதா?”
ஏளனம் செய்தான் சுதர்சனனை யுதாஜித்!

“மூளுமோ கலகம்?” என்றஞ்சினர் அமைச்சர்கள்!
“மூளுமோ போர்?” என்றஞ்சினர் படை வீரர்கள்!

“கொள்ளையடிக்க விரும்புகிறீர்களோ – ஒரு
வெள்ளை மனச் சிறுவனை அரசனாக்கிவிட்டு?”

“சிறியவனுக்குப் பட்டம் கட்டுபவரைச்
சின்னாபின்னம் ஆக்கி விடுவேன் நான்!”

சூளுரைத்தான் உஜ்ஜயினி மன்னன் யுதாஜித்!
சூளுரைத்தான் கலிங்க மன்னன் வீரசேனன்!

வாய் வார்த்தைகள் தடித்தன, வெடித்தன!
வாட் சண்டை மூளும் அபாயம் வந்தது !

கலகப் பிரியர்களும், பகைவர்களும்,
கள்ளர்களும், வேடர்களும் நுழைந்தனர்

கொள்ளையடித்துச் சூறையாட அயோத்தியை.
கொள்ளையரை வென்றனர் இரு பாட்டன்களும்

வேற்றுமைகளை மறந்து விட்டு ஒன்று சேர்ந்து
ஒற்றுமையாகப் பகைவருடன் சண்டையிட்டு.

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

3#13b. “Who will rule the country?”

YudAjit was the grandfather of Satrujit. He was LeelAvathy’s father and the king of Ujjayini. Veera Senan was the grand father of Sudarsanan. He was elder Queen Manorama’s father and the king of Kalinga. Both arrived in Ayodhyaa with their respective armies – ready for a showdown!

Both wanted their own grandson to become the successor to King Dhruva Sindhu. YudAjit argued, “The younger prince cannot supersede the elder prince to become the new king!” Veera Senan put forward his side of the argument.” The son of the queen on the throne will be the natural and legal heir – not the son of any other wife.”

YudAjit said, “I know your ulterior motive. You want to make an innocent boy the king so that you can loot the wealth of this country!” The ministers were afraid of a mutiny in the kingdom with the people diving among themselves to support one of the two princes. The army was afraid that a war was imminent.

Each of the grandfathers swore to make his own grand child as the new king. This was the opportune moment for which the people who love to create disturbance in the country, the enemies, the thieves and the hunters had been waiting for. They entered the country to loot its wealth using the disharmony.

But both the grand fathers forgot their differences in opinion, joined hands to fight their common enemies. The enemies were vanquished and thrown out of Ayodhya by their joint effort.

 
kandha purANam - pOr puri kANdam

8a. அக்னிமுகாசுரன்

சூர பத்மனின் மகன்களில் ஒருவன்
வீரன் அக்கினிமுக அவுண இளவரசன்.


தாயின் கருவிலே உருவாகும் போதே
தாயின் உடலிலிருந்து கசிந்தது தீ!


அன்னைக் கருவிலிருந்து பிறந்ததும்
அக்கினி முகன் என்னும் அரிய பெயர்.


திக் பாலகர்களை வென்ற வீரன் அவன்;
திக் கஜங்களை வென்ற சூரன் அவன்.


தமையன் ஆதவனைச் சிறை செய்தான்.
தம்பியோ திங்களைச் சிறை செய்தான்!


மாயப் போர்கள் புரிவதில் வல்லவன்;
தெய்வப் படைக்கலன்கள் பெற்றவன்.


போருக்குப் புறப்பட்டான் அக்னி முகன்;
போர் முரசொலி வீழ்த்தியது முகில்களை.


தொடங்கியது போர் பூதர், அவுணரிடையே.
உதிர்ந்தன தாரகைகள்! அதிர்ந்தது நிலம்!


பெரும் உயிர்ச்சேதம் இரு புறங்களிலும்!
பொருதனர் அக்கினிமுகன் வீரபுரந்தரர்.


பொருதனர் வீரரின் ஏழு இளவல்களும்!
அரிய படைக் கலன்களைச் செலுத்தி!


செலுத்தினான் சிவப் படையை அவுணன்.
செலுத்தினர் வருணப் படையைப் பூதவீரர்.


சிவப் படை விழுங்கியது வருணப்படையை.
சிவலோகத்துக்கு அனுப்பியது எழுவரையும்.


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


4#8a. Agni MukAsuran


Agni mukhan was one of Soorapadman’s many sons. When he was in his mother’s womb, she leaked fire from her body. So he was named as Agni Mukhan after he was born. He was a valorous prince. He had defeated Ashta-dik-pAlakas (The guardians of the eight directions) and the Ashta-dik-gajas (The eight mighty elephants in the eight directions).


He had imprisoned the Moon just as his brother BhAnukoban had imprisoned the Sun.Hewas an expert in the MAyA tricks and had secured many divine astrams. He got ready and left for the battle field.


The noise of the war drums made the clouds drop down from the sky! A terrible war ensued between the asuras and the demons. The earth trembled and the stars sprinkled down from the sky. There was a heavy loss of life in both sides.


Veera Purandarar fought with Agni Mukhan. His seven younger brothers also joined him in the war. Agni Mukhan shot the Siva asthram. The seven younger brothers of Veera Purandarar shot the VaruNa asthram.


The Siva asthram gobbled up the VaruNa asthram and dispatched the seven younger brothers to Siva lokam.

 
The 64 Thiru ViLaiyAdalgaL

61a. வந்திக் கிழவி.

61 (a). வந்திக் கிழவி.

வைகை ஆற்றில் பெரும் வெள்ளம்!
வைகை ஆற்றால் பெரும் துன்பம்!
ஆற்றின் கரையை உயர்த்திவிட்டு
ஆற்றின் வேகத்தைக் குறைக்கவேண்டும்.


குடிப் பெயர்களைக் கணக்கில் எடுத்து,
உடைந்த கரையையும் கணக்கில் எடுத்து,
பங்கு பிரித்தனர் அங்கு காவலர்கள்,
பறை சாற்றின தண்டோராக்கள்.


“வீட்டுக்கு ஒரு ஆள் வரவேண்டும்!
விரைந்து கரையை உயர்த்த வேண்டும்!”
மண்வெட்டிகளுடனும், கூடைகளுடனும்,
மரம் சுமப்பவர்கள், தழை எடுப்பவர் என


விரைந்து வந்தனர், பணியைத் தொடங்கினர்.
கரையோரம் நிறுத்தப்பட்டன நல்ல மரங்கள்,
விரித்துக் கிடத்தினர் வைக்கோல் பிரிகளை,
பரப்பிய தழைகளின் மேல் கொட்டினர் மண்!


ஆத்மார்த்தமாகப் பிரார்த்தனை செய்தனர்,
“அடங்க வேண்டும் ஆறு கட்டுக்குள்” என்று!
பறையடித்துப் பரவசம் ஊட்டினர் சிலர்,
குரவையிட்டுக் நல்ல கூத்தாடினர் சிலர்.


தென் கிழக்குப் பகுதில் வசித்திருந்தாள்,
தொண்டுக் கிழவியாகிவிட்ட மூதாட்டி.
ஆயிரம் பிறைகள் கண்டு விட்ட வந்தி,
ஆயினும் கொண்டவள் மாறாத பக்தி.


தவ சீலி, நரை, திரை, மூப்படைந்தவள்;
தனியாள், பிட்டு விற்றுப் பிழைப்பவள்;
அவித்த பிட்டை விற்பனைக்கு முன்னர்
அர்ப்பணிப்பாள் அரன் திருவடிகளுக்கு.


தன் பங்கு மண்ணை நிரப்புவது எப்படி?
தன்னால் முடியாது தள்ளாத வயதில்!
துணை என்று சொல்லிக் கொள்ளவோ,
இணையாகப் பணிபுரியவோ ஆள் இல்லை.


கூலி ஆள் கிடைத்தாலும் போதும்.
கூலி கொடுத்து வேலை வாங்கலாம்.
வேலை முடியாமல் நின்று விட்டால்
வேந்தன் சினம் பாயும் தன் மேல்.


கிழவியின் குமுறல் விழுந்தது செவிகளில்!
அழகிய கூலியாள் அங்கே திருக்கோவிலில்!
அழுக்குப் படிந்த உடைகள், ஒரு மண்வெட்டி,
வழுக்கி விழும் சும்மாடு, ஒரு மண் கூடை.


“கூலிக்கு ஒரு வேலையாள் வேண்டுமா?
கூலியாள் வேண்டுமா?கூலியாள்!கூலியாள்!”
குதூகலம் அடைந்தாள் வந்தி கிழவி.
கூப்பிட்டாள் அந்த அழுக்கு அழகனை!


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


# 61. THE OLD WOMAN VANDHI.


Vaigai river was flooded. An unforeseen calamity! The river banks were breached. They must be rebuilt immediately to save the city from further destruction.


The population of the city and the length of the river banks were taken into account. Each family was allotted a particular length to be repaired immediately.
“One person from each house!” was the slogan to collect the workers.

A man came from each house, ready for the task of saving the city. People brought with them spades, baskets, bundles of hay, leaves, trees etc. The work was launched without further delay.


Trees were planted along the banks.The hay was spread on the ground. Broad leaves and twigs were placed on the hay to stop erosion of the soil to be dumped there.
Each one prayed with utmost sincerity that the river must come under the control of the new raised banks.

Some men played the drums and a few others danced to cheer up the crowd. The work was launched earnestly.


There lived an octogenarian in the south eastern part of the city. She had seen 1000 crescent moons and was a staunch devotee of Lord Siva.


She lived all alone and none to call as her family. She made a living by selling the PITTU she used to cook. She would offer it to Siva before selling it to the others.


Surely she could not finish her part of the job by herself. There was no one to help her. If only she could get someone work for her for a small fees…it would be perfect. But where would she find such a person?


Her thoughts reached Siva. He emerged from the temple dressed as an odd-job-man. He was extremely handsome but wore dirty rags. He carried a spade, a basket and a small piece of cloth to place the basket of soil on.


“Does anyone need a worker? I will work for a fees? Does any one need a helper to do any job?”
The dirty handsome worker was selling his services! Vandhi was overjoyed and decided to call the dirty handsome young man to entrust him with her share of the task!
 
Since the VinAyaka purAnam (part 1 and part 2) The VEnkatEsa purANam and The 64 Thiru vilAyAdalga have done enough rounds in this thread, they will NOT be posted here AGAIN after completion of the current series.

Kandha purANam will continue until its 6 kANdams are completed. Devi bhAgavatam will continue until all the 13 skandas are competed.

Periaya purANam will be launched sometime in 2018 (as soon as I can get the poems composed, typed and translated by myself)

You are welcome to read and enjoy these and much more by using the link to my website

"My Blog of Blogs"
http://visalakshiramani.weebly.com/
 
bhagavathy bhaagavatam - skanda 8

8#19f. ரசாதலம்

வசிக்கின்றார்கள் ரசாதலத்தில் இன்பமாக
வலிமை வாய்ந்த அரக்கர்கள் காலேயர்கள்.

பகைவர் ஆவர் விண்ணுலகத் தேவர்களுக்கு!
பறந்து செல்வர் விண்வெளியில் சாஹாசமாக!

பாதிக்கப்பட்டு ஓடி வந்து விட்டனர் – இந்திரன்
தூதன் சரமா உரைத்த மந்திர வாக்கினால்!

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K . ராமன்

8#19f. RasAtala

Lower down MahAtala is RasAtala.

The Daityas, DAnavas and PaNi Asuras live here. In addition to them live the NivAta Kavachas of the HiraNyapura city and the Asuras named KAleyas, the enemies of the Devas.

They all are naturally very energetic and brave! Their powers are dwindled by the Tejas of the BhagavAn and they live like snakes in this region.

The other Asuras that live here are those who ran away since they were afraid of the Mantras, uttered by SaramA, the messenger of Indra.

 
bhagavathy bhaagavatam - skanda 3

3#14a. உரிமைப் போராட்டம்

ஒற்றுமையாக வென்றனர் பொது எதிரிகளை;
வேற்றுமையுடன் பொருதனர் அரசுரிமைக்கு!


வாதம் மாறியது சொற்போராக; விற்போராக!
யுதாஜித் தயாரானான் வெற்றிக் கொடியுடன்.


போரை விரும்பவில்லை வீரசேனன் – எனினும்
வேறு வழியின்றி நுழைந்தான் போர்க்களத்தில்.


கடும் போர் நடந்தது இருவரின் படைகளிடையே.
முடிவில் மடிந்தான் வீரசேனன் போர்க்களத்தில்.


தலைவன் இல்லாத வீரர்கள் என்ன செய்வர்?
தலை தெறிக்க ஓடினர் தம்மைக் காத்துக் கொள்ள.


பதறினாள் மனோரமை செய்தி அறிந்து;
சிதறி ஓடிவிட்டது படை போர்க்களத்தில்!


‘தந்தையைக் கொன்றவன் தனயனைக் கொன்றால்?
எந்த இழிச்செயலையும் செய்ய வல்லவன் அவன்!


தர்மத்தைத் தள்ளி வைத்து விடுவான் அவன்!
தயை என்றால் என்ன விலை என்று கேட்பான்.


சக்களத்தியைப் பற்றிக் கூறவே வேண்டாம்!
சக்களத்திகள் செய்யாத கொடுமைகளா?


சாகரனின் தாய்க்கு விஷம் தந்தவள் சக்களத்தி.
ராமனைக் காட்டுக்கு அனுப்பியவள் சக்களத்தி.


யாரும் இல்லாத அநாதை ஆகிவிட்டேன் நான்!
வேறிடம் சென்றாவது என் மகனைக் காப்பேன்!’


நம்பிக்கைக்கு உரிய அமைச்சரிடம் கேட்டாள்.
“வம்புச் சண்டையில் தப்பிப் பிழைத்து எப்படி?”


“காட்டுக்கவது, காசிக்காவது சென்று விடுங்கள்!
காசியில் உள்ளான் என் மாமன் சுபாஹு!


பாதுகாப்பு அளிப்பான் உங்கள் இருவருக்கும்;
பார்க்கச் செல்வதாகச் சொல்லுங்கள் யுதாஜித்தை!


தேரில் ஏறிச் சென்று விடுங்கள் அதன் பின்.
தேரின் பாதையை மாற்றி விடுங்கள் அதன் பின்!”


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


3#14a. The struggle for the throne


The two grandfathers won over their common enemies united but they fought among themselves for the sake of the throne. Their argument became a war of words and then a real war with bows and arrows.


YudAjit was confident of winning in the war. Veerasenan did not want to fight but had little choice. A terrible war was fought and Veerasenan got killed by YudAjit. His army ran away in confusion since it lost its leader and the king.


Manorama was steeped in sorrow and fear on hearing this. ‘My father has been killed and his army vanquished. YudAjit is a mean king and will do anything for the sake of the throne. He has killed my father! What if he kills my son also? He is capable of any mean act and is merciless in is behavior.


I need not elaborate on the wickedness of the step mothers. Sagaran’s mother was poisoned by his stepmother. Rama was sent to the forest by his stepmother. I am a helpless woman now. I must make haste and escape in order to save my son!’


She consulted a trustworthy minister. He told her.” Oh Queen! Escape and go to either to the forest or to KAsi. My uncle SubhAhu lives in KAsi. He will offer protection to you and the prince. Go out in a chariot under the pretext of visiting king YudAjit and once you have gone out, change the course of your chariot!”


The loyal minister advised Queen Manorama thus!



 

Latest posts

Latest ads

Back
Top