• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

A poem a day to keep all agonies away!

kandha purAnam - pOr puri kANdam

8b. வீரவாகு

வீரவாகு நெருங்கினான் அக்கினி முகனை;
வீரவசனங்கள் பேசினர் இரு வீரர்களும்.


எய்தனர் அம்புகள் நாண் ஒலியை எழுப்பி.
எதிர்த்த அம்புகள் அழித்தன ஒன்றை ஒன்று!


ஆயிரம் கணைகள் எய்தான் அவுணன்!
பாய்ச்சினான் வீரவாகுவின் நெற்றியில்!


ஆயிரம் கணைகள் செலுத்தினான் வீரவாகு;
அழித்தான் அவுணனின் தேரை, வில்லை!


தடிப்படையை எடுத்து வீசினான் அவுணன்;
பொடிப்பொடி ஆக்கினார் அதை வீரவாகு.


காற்றுப் படையைச் செலுத்தினான் அவுணன்;
காற்றுப் படையைச் செலுத்தினார் வீரவாகு!


யமப் படையைச் செலுத்தினான் அவுணன்;
யமப் படையைச் செலுத்தினார் வீரவாகு.


ஞாயிற்றுப் படையைச் செலுத்தினான் அவுணன்;
ஞாயிற்றுப் படையைச் செலுத்தினார் வீரவாகு,


நஞ்சு பாய்ச்சிய நூறு கணைகளை அவுணன்
நெஞ்சில் பாய்ச்சினார் வீரவாகுத் தேவர்.


தேரில் விழுந்தான் மார்பில் குருதி பொங்க!
நேரில் வந்த நமனும் அஞ்சினான் நெருங்க!


ஆபத்தில் உதவிடும் காளியின் வழிபாட்டை
அக்கினி முகன் செய்து வந்தது உண்டு.


உயிர் பிரியும் நேரத்தில் காளியைத் தனக்கு
உதவி செய்யுமாறு பிரார்த்தனை செய்தான்.


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


4#8b. VeerabAhu VS Agni Mukhan.


VeerabAhu went near Agni Mukhan. Both of them spoke valorous words. Both of them shot their arrows. The arrows were well matched and hence destroyed each other. Agni Mukhan shot one thousand arrows and hurt VeerabAhu’s forehead. VeerabAhu shot one thousand arrows and shattered Agni Mukhan’s chariot and his bow.


Agni Mukhan threw his daNdam and VeerabAhu promptly shattered it with his arrow. Agni Mukhan shot his VAyu astram. VeerabAhu also shot his VAyu astram. Agni Mukhan shot the asthram of Yama. VeerabAhu also shot the same. Agni Mukhan shot the asthram of Sun and VeerabAhu also shot the same.


VeerabAhu shot one hundred poisonous arrows on Agni Mukhan’s chest. He collapsed on his chariot bleeding heavily. Naman who came in person to take his life away was afraid to go near him. Agni Mukhan used to worship a KALi who would help him in in the face of any danger. He remembered her and prayed to her to come to his help.


 
The 64 Thiru ViLaiyAdalgaL

61b. “யார் இவன்?”

61. (b). “யார் இவன்?”

“என் பங்கை அடைப்பாயா?”
“என்ன கூலி தருவாய் தாயே?”

“பிட்டு சுட்டுப் பிழைப்பவள் அப்பா!
பிட்டு சுட்டுத் தருவேன் வயிறாற!”

“பசி காதை அடிக்கிறது தாயே!
ருசியான உதிர்ந்த பிட்டைத் தா!

உண்டு ஓய்வெடுத்துக் கொண்டு,
கொண்டு கொட்டுவேன் மண்ணை!”

அள்ளித் தந்தாள் வந்திக் கிழவி,
உள்ளன்போடு உதிர்ந்த பிட்டை.

“அருமையாக உள்ளது தாயே!
பெருமானுக்கு உகந்த உணவு!”

களைப்புத் தீர இளைப்பாறினான்;
கரையை அடைக்கச் சென்றான்.

“வந்தியின் கூலியாள் நான் தான்.
வந்ததைக் குறித்துக் கொள்ளுங்கள்.”

கரையை அடைக்கலானான் அவன்,
கரை என்றுமே அடைபடாத வண்ணம்!

வெட்டி மண்ணைக் கூடையில் போடுவான்,
கொட்டுவான் கீழே மண் அதிக பாரம் என.

சும்மாடு நழுவிக் கீழே, கீழே விழும்!
“அம்மாடி!” என்று எடுத்துக் கட்டுவான்.

களைத்து விடுவான் இந்த வேடிக்கையில்!
களைப்புத் தீர நல்ல ஒரு குட்டித் தூக்கம்.

அதற்குள் பிள்ளைக்குப் பசி மேலிடும்.
சிதறிய பிட்டை மீண்டும் உண்பான்.

கூடையையும் கொட்டுவான் மண்ணுடன்;
கூடையின் பின் நீந்திச் செல்வான் பிறகு.

ஆட்டம் காட்டினான், விளையாடினான்,
அரசனின் செல்ல மகனைப் போலவே.

கண்காணி மண்கரை அடைபடாததைக்
கண்டு மிகுந்த கோபம் கொண்டான்.

அடுத்த கரையையும் வைகை ஆறு
உடைப்பதைக் கண்டு சீறிச் சினந்தான்.

“வந்தியின் கூலியாள் யார்?” என,
நம்பியைக் காட்டினர் அனைவரும்.

“ஏன் கரையை அடைக்கவில்லை?”
எந்த பதிலுமே கூறவில்லை கூலியாள்.

‘பித்தனா இவன்? சித்தனா? எத்தனா?
இத்தனை அழகான கூலி ஆளா?

அழகும், இவன் அழுக்கு உடைகளும்,
அணுவளவும் பொருந்தவில்லையே!

உடலைப் பார்த்தாலே தெரிகிறது, இவன்
உடலை வளைத்து வேலைசெய்தது இல்லை!

கூலியை வாங்கிக் கொண்டு விட்டானாம்.
கூலி கிடைத்த பின் வேலை செய்வானா?

கேட்டால் மரம் போல நிற்கின்றான்.
கோவலனிடம் சென்று சொல்வோம்!”

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

# 61 (B). “WHO IS HE?”

“Will you complete my part of the job?” Vandhi asked the young man.
“What will you pay me with?” the man asked.

“I make a living selling Pittu. I can give you as much of it as you wish to eat!”

“I am already feeling very hungry. Please give me some crumpled Pittu – which you won’t be able to sell. I will eat it, rest for a while and then complete your job.”

The old woman gave him all the crumbled Pittu. “It is very tasty. It is Siva’s favorite food too!” He ate without inhibitions, rested for a while and went to the bank of the river.

“Note down my name as Vandhi’s helper!” He set out on the job in such a manner that it would never get completed.

He would fill his basket with soil. He would throw out some of it since it was too heavy.By that time his towel would fall off from his head. He would become tired while tying it up.
He would take a nap. He would be hungry when he woke up. He would go for more Pittu.

While dumping the soil, he would throw the basket along with it. He would swim and go after it . He was playing and having a good time like a prince.

The supervisor became very angry that the task was not completed. He demanded to know whose portion it was. Everyone pointed out to Siva.

“Why is your job not completed yet?” Siva kept mum as if he were deaf.

The supervisor spoke to himself! “Who is he? A siddha? A mad fellow? A cheat? Such a handsome helper! His figure and dress did not match each other.

One glance at him confirms that he is not used to physical labor. He has taken his fees in advance. Who would work after claiming his fees?

He just stands and stares. He does not reply to any questions. It is best to report the matter to the king and let him handle this queer fellow!”

 
bhagavathy bhaagavatam - skanda 8

8#19g. பாதளம்

நாகலோக அதிபதிகள் வாழுகின்ற இடம் இது!
நீண்ட உடலும் அதிக உக்கிரமும் கொண்டவை.


பயங்கர விஷம் கொண்ட கொடிய நாகங்கள்;
பல தலைகள் கொண்ட கொடிய நாகங்கள்!


இரத்தினங்கள் விளங்கும் நாகங்களின் முடியில்;
மொத்தமாக விரட்டிவிடும் பாதாளத்தின் இருளை!


அமைந்துள்ளது இவ்வுலகில் மூல ஸ்தானத்தில்
அனந்தை என்னும் பெயரில் பகவானின் தலை.


இலக்கணமாகும் ‘நான்’ எனும் அஹங்காரத்துக்கு!
இழுத்து விடும் காண்பவர் கண்களை நொடியில்!


தாங்குகின்றான் இந்த உலகங்களை எல்லாம்
தனியாக ஆதிசேஷன் ஆயிரம் தலைகளால்!


எழுந்தருளி இருப்பான் ருத்ரமூர்த்தியான சங்கர்ஷணன்;
சூழ்ந்திருப்பர் ஏகாதச ருத்திரர்கள் முக்கண்கள் விளங்க.


விரல் நகங்கள் வீசுகின்ற சிவந்த ஒளிக் கதிர்களில்
பிரகாசிக்கும் உன்னதமான அத்தனை சர்ப்பங்களும்.


ருத்திர மூர்த்தியை வணங்கும் இந்த நாகங்கள்
சத்துவ குணத்தோடும், அதிக பக்தியோடும் கூட!


குண்டலங்கள் ஒளி வீசும் அவர்கள் காதுகளில்;
மண்டலமிட்டு நோக்குவர் தங்கள் முகங்களை.


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K . ராமன்


நாகலோக அதிபதிகள்:


வாசுகி, சங்கன், குலிகன், ஸ்வேதன், தனஞ்சயன், மஹாசங்கன்,
த்ரிதராஷ்ட்ரன், சங்கசூடன், கம்வலன், அஸ்வதரா, தேவோபதத்தகன்.


8#19g. PAtAla


Lower down is PAtAla, where VAsuki, the Chief of the snakes lives along with S’ankha, Kulika, S’veta, Dhananjaya, MahAs’ankha, DhritarAshtra, S’ankhachooda, Kamvala, As’vatara, and Devopadattaka.


All these snakes exhibit anger, have wide hoods and are poisonous. Some of them have five heads, some seven hoods, some ten; some hundred, some others have thousand heads. Some of them have brilliant jewel on their crests. They dispel the darkness of the nether regions.


BhagavAn in the shape of infinite Darkness reigns there. All the Devas worship this Form. The devotees call Him SankarshaNa. He is the emblem of “Aham” where the Seer and the Seen blend into one.


Anantha is the thousand-headed snake and the Controller of all, the moving and the non-moving. He is of infinite form. He is Sesha supporting the whole Universe on His one thousand heads.


He is of the Nature Intelligence and Bliss and He is Self-manifest. When he wants to destroy all this during the Pralaya, SankarshaNa Rudra, springs up from Him.


All the prominent snakes,come to Him during the nights filled with devotion and bow down to Him with their heads bent low. They would look at one another, in the lights emitted by the jewels on the toes of his red colored lotus feet.


At that time their faces become brilliant with the rays emitting from the jewels on the top of their hoods; and their cheeks shine beautifully.



 
bhagavathy bhaagavatam - skanda 3

3#14b. பரத்வாஜர்

“யுதாஜித்தைக் காணச் செல்கின்றேன்!” என்றாள்.
ரதத்தில் ஏறினாள் மகன், தாதியுடன் மனோரமை.

விரைந்தாள் போர்க்களத்துக்கு மிகவும் ரகசியமாக;
கரைந்தாள் சோகத்தில் தந்தையின் உடலைக் கண்டு.

வனத்தில் செல்கையில் வந்தது கள்வர் கூட்டம்;
அனைத்தையும் அக்கூட்டம் பறித்துக் கொண்டது.

“உயிரோடு விட்டார்களே புண்ணியசாலிகள்!”
துயரோடு விரைந்தாள் கங்கை நதிக்கரைக்கு.

அடைந்தனர் படகில் ஏறித் திரிகூட மலையை;
அடைந்தனர் அங்கே பரத்வாஜரின் ஆசிரமத்தை.

“யார் அம்மா நீ? ஏன் வந்தாய் வனத்துக்கு?
யாருடைய மனைவி நீ! கூறு விவரங்களை!”

அழுத கண்ணீரால் கழுவினாள் பதங்களை!
தொழுத தாதிப் பெண் கூறினாள் சரிதத்தை!

“சூரிய வம்சத்து துருவசிந்துவின் ராணி;
பேர் மனோரமை; கலிங்கத்து இளவரசி.

பட்டத்து ராணி இவள்; சக்களத்தி பெயர் லீலாவதி;
வேட்டையாடிய மன்னனைக் கொன்றது ஒரு சிங்கம்!

பட்டம் கட்ட வேண்டுமாம் சக்களத்தி மகனுக்கு!
பாட்டன்கள் இருவரும் மோதினர் யுத்தத்தில்;

மடிந்து போனார் இவள் தந்தை போரில்!
துணிந்து தப்பித்து வந்தோம் இளவரசனுடன்.”

கனிவுடன் கேட்டார் முனிவர் அவள் கதையை.
மனம் இறங்கினார் அவள் நிர்கதியை எண்ணி!

“தங்கியிருக்கலாம் ஆசிரமத்தில் அச்சமின்றி!
இங்கிருக்கும் வரை இல்லை எந்த ஆபத்தும்!”

பர்ண சாலையில் வாழ்ந்து வந்தனர் அமைதியாக;
வர்ண மயமான அரசவாழ்வு தொலைந்து போனது!

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

3#14b. Sage BharatwAj

Manorama told the palace guards that she wanted to visit King YudAjit. She got into a chariot with her son Sudharshan, a trusted maid servant and a body guard. The group went to the battle field secretly. She broke down on seeing the dead body of her father King Veerasenan.

Then they hurried from there into the jungle. A group thieves stopped them and took away everything they had brought with them. The group was happy to be left alive and ticking. They reached the banks of River Ganges and took a boat. They reached Trikoota parvtham and went to the ashram of sage BharatwAj.

Manorama wept bitter tears in self pity. The sage was moved by her tears and asked about the cause of her sorrow. The maid servant who was accompanying the queen told the sage the life history of the queen.

“This is Queen Manorama, the wife of King Dhruvasindhu of Soorya vamsam. She is also the princess of Kalinga and the daughter of King Veerasenan. She is the queen on the throne. The other wife of the king is Queen LeelAvati. A ferocious lion killed king
Dhruvasindhu when he went on a hunting expedition.

The other Queen LeelAvati’s father wants to crown his grandson Sathrujit. In the war between the two grandfathers, Veerasenan the king of Kalinga got killed. We ran away from the palace in order to save the life of the prince Sudharshan”

The heart of the sage Bharatwaj melted with pity on hearing her story. He assured her of her safety and told her, “Oh Queen! You may stay here in my ashram without any fear. No harm will befall on you and your son, when you are under my protection.”

Manorama and her son Sudharshan lived a simple and humble live in the Aashram – and the kingly comforts they were used to became a faded dream.

 
kandha purANam - pOr puri kANdam

8c. காளியின் போர்

காளி போருக்கு வந்தாள் உடனேயே,
கூளிக் கூட்டங்கள் பல புடை சூழ.

வாளும், சூலமும் ஏந்தி இருந்தாள் அவள் ;
கூளிகள் கொடிகள் விண்ணை முட்டின!

சங்குகளுடன் வாத்தியங்கள் முழங்கின.
சிங்கத்தின் மேல் அவள் அமர்ந்திருந்தாள்.

அக்கினி முகனுக்கு ஆறுதல் கூறினாள்.
அவனியோர் நடுங்க ஒலி எழுப்பினாள்.

முத்தலைச் சூலத்தைப் பணித்தாள் காளி,
“முன் நிற்கும் பூதர்களை அழித்து விட்டு வா!”

தீயைப் புகையைக் காளிக் கூட்டத்தைத்
தோற்றுவித்தது அவள் முத்தலைச் சூலம்.

பதிமூன்று கணைகள் செலுத்தினார் – அதைப்
பல துண்டங்கள் ஆக்கி விட்டார் வீரவாகு.

சீற்றம் தந்தது வீரவாகுவின் போர் ஆற்றல்!
கூற்றுவனாகிக் கொல்ல விரும்பினாள் காளி.

வீசினாள் இன்னொரு சூலத்தை அவர் மீது!
வீழ்ந்தது சூலம் ஆயிரம் கணைகள் பட்டு!

பாய்ந்தாள் காளி வாளை எடுத்துக் கொண்டு!
பாய்ந்த காளியை அவர் அறைந்தார் மார்பில்!

மயங்கி விழுந்தாள் காளி மண் தரையில்!
மார்பு கிழிந்தது; அவள் உதிரம் பெருகியது!

ஆணவம் முற்றிலும் அடங்கினாள் காளி!
ஆணுக்கு நிகராகப் பெண் போரிடலாமா?

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

4#8c. War with KALi.


KALi appeared there immediately. She was surrounded by KooLi (female demons). She carried a sword and a trisoolam. She was seated on a lion. The flags her army carried touched the sky. Conchs and other instruments were played. She consoled Agni Mukhan and then let out a terrible scream.

KALi then ordered her trisoolam,”Go forth and kill all the demons in that army!” The trisoolam started producing fire, poisonous fumes and gangs of more and more KALi.

Veerabaahu shot thirteen arrows and shattered her trisoolam to pieces. KALi became more wild after watching the valor of VeerabAhu. She wanted to kill him. So she threw another trisoolam at him. It was also shattered by the one thousand arrows shot by him!

She jumped on VeerabAhu with a drawn sword in her hand. VeerabAhu held her hands together and hit her on her hard on her chest. She fell faint and started bleeding heavily from her torn breasts. Her pride, courage and ego vanished in a trice. How can a woman fight with a strong Nava Sakti KumAra and win over him??

 
The 64 Thiru ViLaiyAdalgaL

61c. அரனும், அரசனும்.

# 61 (c). அரனும், அரசனும்.

“கரையை எல்லோரும் அடைத்துவிட்டனர்;
கரையை அடைக்காதவன் வந்தியின் ஆள்.


அழகன், இளைஞன், கூலியாள் போலில்லை.
அரசன் மகன் போல் ஆட்டம் போடுகிறான்.


ஆடியும், பாடியும், ஓடியும், சாடியும்,
வேடிக்கைகள் பல செய்து வருகிறான்.


மண்ணை அளைவான், நீரில் நீந்துவான்,
சின்னப் பிள்ளை போல சேட்டை செய்வான்.


தண்டிக்கவும் என் மனம் ஒப்பவில்லை.
கண்டித்தால் அவன் பதில் பேசவில்லை.”


மந்திரிகள் புடைசூழ மன்னன் வந்தான்.
வந்தியின் கரை அடைக்கப்படவில்லை.


அடுத்த கரையும் இடிந்து போனதால்
கடும் கோப வசப்பட்டான் மன்னன்.


பொற்பிரம்பை எடுத்து உயர்த்தி
மன்னன்
வெற்று முதுகில்
அவனை ஓங்கி அடித்தான்!

கூடையுடன் மண்ணைக் கொட்டிவிட்டு
கூப்பிடும் முன்னே அவன் மறைந்தான்.


அண்ட சராசரங்களையும் தன்னுள்
கொண்ட திருமேனியை அடித்ததால்,


அவன் முதுகில் இட்ட அடி பட்டது
அவன் தாங்கும் அனைவர் முதுகிலும்.


அரசன், மந்திரி, ஏவலர், காவலர்,
அரசி, அரசகுமாரன், சேடிப்பெண்கள்,


பிரதானிகள், குடிமக்கள், மகளிர்,
பிரபுக்கள், சிறுவர், சிறுமியர் என,


ஐம் பூதங்கள், பதினான்கு உலகங்கள்,
மும் மூர்த்திகள், தேவாதி தேவர்கள்,


அத்தனை பேரும் கலங்கி நின்றனர்,
அத்தன் முதுகில் விழுந்த அடியால்.


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


# 61 (C). SIVA AND THE KING.


“All the people have finished their part of the job, except Vandhi’s helper. He is very young and handsome. He behaves like a prince and has a good time in dancing, singing, running and jumping.


He plays with the soil. He swims in the water. He behaves like a naughty boy. I am unable to punish him. He does not even answer my questions!”


The king got annoyed by this report. He did not like the high handed behavior. He went to the spot with his ministers.


Vandhi’s portion still remained unfinished. The river water had washed away the next portion also. The king raised his gold staff and brought it down on the bare back of the young man.

The man jumped, dumped the soil and disappeared. He who was present in everyone in the universe got beaten by the king. So everyone felt the lick of the stick.

The king, the ministers, soldiers, supervisors, the queen, the prince, boys, girls, men, women, pancha bootham, the occupants of all the fourteen worlds felt the pain of the beating and stood shaken badly.

 
bhagavathy bhaagavatam - skanda 8

8#19h. நாக கன்னிகைகள்

அழகிய கன்னியர் ஆதிசேஷனின் புதல்வியர்;
அமைவர் கவர்ச்சி, காந்தியோடு, நிர்மலமாக!


உடல் மனோரம்மியமாகவும், கரங்கள் நீண்டும்
உலவுவர் இங்கும் அங்கும் பிற நாகங்களுடன்;


பரிமளிக்கும் உடலிலிருந்து நறுமணக் கலவை.
அரிதான சந்தனம், அகில், குங்குமப் பூவுடன்.


காம வேகம் தரும் சங்கர்ஷணனின் சம்பந்தம்;
காணப் படும் மாறாத புன்னகையும், நாணமும்;


வீற்றிருப்பான் இவ்வுலகில் ஆதிசேஷன் புகழோடு;
வீற்றிருப்பான் இவுலகில் ஆதிசேஷன் பலத்தோடு!


அடக்கி இருப்பான் தனது கோபத்தை எல்லாம்
‘நடைபெற வேண்டும் உலகுக்கு நன்மை!’ என்று!


போற்றுவர் ஆதிசேஷனை சுரர், அசுரர், சித்தர்,
சர்ப்பங்கள், வித்யாதரர், கந்தருவர், முனிவர்.


மகிழ்வர் தேவர்கள் ஆதிசேஷனின் இன்சொற்களால்;
மகிழ்வான் ஆதிசேஷன் மலர் மாலைகளை அணிந்து!


அணிவான் நீல நிற ஆடைகளும், குண்டலங்களும்;
அமைவான் கலப்பையுடன், மங்கையர் சோபனம் பாட!


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K . ராமன்


8 #19h. NAga KanyAs


The daughters of NAga RAjA are very beautiful. They are attractive, brilliant and free from all blemishes. They move about freely mingling with the other NAgAs.


They smear their bodies with the mixture of Sandal paste, Aguru and Saffron. They are overcome by the amorous passion, due to the use of this scented mixture. They look at SankarshaNa with bashful glances and sweet smiles and expect benedictions from Him.


Ananta DEvA is of boundless strength; His attributes are infinite; He is the ocean of infinite qualities. He is the Aadi DEvA. He has controlled his anger and envy since He wishes for the welfare of everyone.


All the DEvAs worship Him and He is the personification of SAtvic qualities The DEvAs, SiddhAs, AsurAs, UragAs, VidyAdharAs, GandharvAs, and Munis always meditate on Him. He is always pleasing to those who surround him and to the DEvAs with His sweet nectar-like words.


The Vaijayanti garland which hangs from His neck never withers! He is always decorated with the fresh Tulasi leaves.


He is the DEvA of the DEvAs and He wears a blue colored silk. He wears kundalam in his ears. He holds his Hala Ayudham gracefully in his powerful hands and the NAgA women sing his praise and glory.



 
bhagavathy bhaagavatm - skanda 3

3#15a. சத்ருஜித்

திரும்பினான் யுதாஜித் வெற்றியுடன் அயோத்தி;
விரும்பினான் இளவரசன் சுதர்சனனை அழித்திட!


காணவில்லை அரசியுடன் சுதர்சனனை – கரை
காணவில்லை வெடித்துக் கிளம்பிய சீற்றமும்!


தேடினார்கள் எண் திசைகளிலும் ஒற்றர்கள்;
ஓடியவர்கள் சென்ற திசை தெரியவில்லை.


முடி சூட்டினான் தன் பேரன் சத்ருஜித்துக்கு;
குடிமக்கள் வருந்தினர் சுதர்சனனை எண்ணி.


சத்ருஜித் வயதில் மூத்தவன் என்பதால்
சத்ரு பயம் இருந்து வரும் எப்போதும்.


பொறுப்பை அளித்தான் அமைச்சர்களுக்கு.
திரும்பினான் தனது உஜ்ஜயினி நகருக்கு.


தெரியவந்தது சுதர்சனன் ஒளிந்துள்ள இடம்
பரத்துவாஜரின் ஆசிரமம் என்கின்ற உண்மை.


போட்டிக்காரனால் நிலவும் என்றும் அபாயம் !
போட்டிக்காரனை விலக்குவதே நல்ல உபாயம்!


சேனையுடன் சென்றான் பரத்துவாஜரின் ஆசிரமம்
சேனையுடன் சென்றான் வேடராஜன் துர்த்தரிகன்.


செய்தியறிந்த மனோரமை நடு நடுங்கினாள்;
செய்வதறியாமல் முனிவரைச் சரணடைந்தாள்.


“தந்தையைக் கொன்ற பாவி இங்கு வருகிறான்;
எந்தத் தீமையும் செய்யத் தயங்க மாட்டான்!


எப்படிக் காப்பீர் எங்களை அவனிடமிருந்து?
எப்படி எதிர்கொள்வீர் அவன் சேனையை? ”


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


3#15a. S'atrujit


Yudaajit returned to Ayodhya victoriously. He wanted to put an end to Prince Sudarsanan. When he learned that Queen Manorama had escaped with her son, his anger knew no bounds.


He sent out spies in every direction but they could not trace the queen and the crown prince. He made his own grandson Sathrujit the new king. He distributed the responsibility of ruling the kingdom to the ministers and went back to his country Ujjayini.


Later on he learned that Sudarsanan and Manorama had taken refuge at the ashram of sage BharatwAj. He sent out an army along with the king of hunters called Durtharigan.


Manorama trembled with fear when she heard this news. She took refuge at the feet of sage Bharatwaaj and asked him, “How are you going to save us from the wicked king sire? How are you going to deal with the army sent out by YudAjit?”



 
kandha purANam - pOr pui kANdam

8d. அக்கினிமுகன்

“அறிவில்லாமல் வந்தேன் போர் செய்ய!”
ஆற்றல் அழிந்தவள் எழுந்தாள் மெல்ல.


“உமக்கு ஈடு இல்லை நான் உணர்ந்தேன்.
நமது இடத்தில் இருப்பதே நன்மை தரும்.


என்னைச் செல்ல அனுமதியுங்கள்.
பின்னர் அழியுங்கள் அவுணர்களை!


முருகனின் திருவருள் பெற்றுப் பல
வருடங்கள் இனிது வாழ்வீர் நீங்கள்.”


விடை பெறும் காளி பணிந்து நின்றாள்.
விரைந்து திரும்பினாள் தன் இருப்பிடம்.


காளியைக் கண்டு அவுணன் சினந்தான்,
“காளியின் துணை தேவை இல்லை இனி!


அழைத்தேன் அவள் ஆற்றலைக் காண!
பிழைத்தால் போதும் என ஓடுகின்றாள்.”


நான்முகப் படையை எய்தான் அவுணன்;
வீரபத்திரப் படையை எய்தார் வீரவாகு.


நடுங்கி ஒடுங்கியது நான்முகப் படை – ஆனால்
விடுத்த வீரபத்திரப் படையோ முன்னேறியது!


மீண்டது அவுணனின் உயிரைக் கவர்ந்த பின்!
மாண்ட அக்கினி முகன் வீழ்ந்தான் நிலத்தில்!


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


4#8d. The fall of Agni Mukhan.


“It was utter foolishness on my part to have come here to this war!” KALi spoke to herself. She got up slowly and spoke to VeerabAhu.


“I realized that I am no match for you! It is always safer to stay in one’s own place. Please let me go back. You can kill the asuras after I go away. May you live long by the grace of Murugan!” KALi quietly went back to her place.


Agni Mukhan became very angry watching KALi’s behavior. “I do not need her help any more! I just wanted to watch her fight. She is running away to save her skin!”


The war was resumed there. Agni Mukhan shot the BrahmAstram. VeerabAhu shot the Veerabadra asthram. BrahmAstram got frightened and made way for the Veerabadra astram which went on its path uninterrupted and killed Agni Mukhan.
 
The 64 Thiru ViLayAdalgaL
61d. அடியவர் பெருமை.

# 61 (d). அடியவர் பெருமை.

வந்தியின் கூலி ஆளாக வேலைக்கு
வந்துபோனவன் உண்மையில் யார்?

மன்னன் மிகவும் மருண்டு விட்டான்;
உண்மையை அறிய வேண்டும் உடனே!


கூடை மண்ணை மட்டுமே கொட்டினான்
உடைப்பை அடைத்துவிட்டான் அவன்.

கரையையும் உயர்த்திவிட்டான் – பின்
கண்ணிலிருந்து மறைந்தும் விட்டான்.


மந்திரியை அனுப்பினான் மன்னன்,
வந்தியைத் தன்னிடம் அழைத்துவர.

“என்ன துயருக்கு அறிகுறியோ இது?”
என்றே அஞ்சினாள் வந்திக் கிழவி.


வானிலிருந்து இறங்கியது ஒரு விமானம்,
வந்தியை அமர்த்திச் சென்றது மேலே!

பூ மழை பெய்தது! இன்னிசை ஒலித்தது!
பூவுலகு நீத்து சிவலோகம் சென்றாள் வந்தி.


வியப்பின் விளிம்பிற்கே போய்விட்டான்
மயக்கும் காட்சிகளைக் கண்ட மன்னன்.

அளித்தது மனஅமைதியை அரன் அசரீரி.
தெளிவாக உண்மைகளை எடுத்துக் கூறி.


“அறவழியில் நீ ஈட்டிய பொன் பொருளை,
அறச் செயல்களுக்கே தந்தார் வாதவூரார்.

பக்தியுடன் தொண்டு செய்தவன் கேட்டது
முக்தி ஒன்றே அன்றி வேறெதுவும் இல்லை.


துன்பம் இழைத்தாய் எம் அன்பருக்கு!
துன்பம் துடைப்பதற்கே நாம் செய்தோம்.

நரியைப் பரியாக்கி, பரியை நரியாக்கி
பாரினில் நடத்தினோம் ஒரு நாடகம்!”


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


61 (D). THE GREATNESS OF THE DEVOTEES.


“Who was the man who had appeared as Vandhi’s helper?” The king got dazed by this thought.


The man had dumped just one basket of soil. But the river banks got repaired. Where did he disappear?


He sent his minister to bring vandhi for questioning. The old woman got frightened by this demand. Was the king angry with her?


Just then a divine Vimaanam descended from the sky. Vandi was accommodated in it and the vimaanam rose high. Flowers rained from the sky. Heavenly music was heard.


The king was dumbfounded by these sights and sounds. Siva’s asareeri comforted him by explaining the sequence of the strange events.


“The gold earned by you by just means was spent by your minister in good karmas. He prayed for nothing but Liberation.


You have given him a lot of trouble physically and mentally. To save him from your fury, I had converted foxes into horses and again horses into foxes!”

 
bhagavathy bhaagavatam - skanda 8

8#20a. ஆதிசேஷன்

துதிக்கின்றார் சநாதனர் ஆதிசேஷனை!
மதிக்கின்றார் பிரம்மத்தின் வடிவாகவே!

முக்குணங்களின் உற்பத்தி, ஒடுக்கத்துக்கு
மூல காரணம் ஆதிசேஷனின் இச்சையே!

அழிவற்றது ஆகும் ஆதிசேஷனின் வடிவம்;
அமுத மயமானது ஆதிசேஷனின் உருவம்.

பூவுலகத்தின் பாரத்தைத் தங்குகின்றான்
பூப்போல இலகுவாகத் தன் தலைகளால்.

ஆயிரம் நாவுடைய ஒரு மனிதனாலும் கூட
அளவிட முடியாது அவன் பெருமைகளை.

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K . ராமன்

8#20a. Glory of Ananta

SanAtana, the son of BrahmA sings the glories of Ananta Deva, and worships Him thus.
” How can a person of ordinary sight and understanding grasp the real nature of BrahmA?

His mere Glance enables Prakriti to work the three guNAs in the Creation, Preservation and Destruction of this Universe!

He has neither a beginning nor an end. He has created the universe as a covering to the Aatman or True Self. He has created both the Sat and Asat. He made the universe work on cause and effect.

Mumukshus take refuge in him. His very name removes all our sins. He supports with ease, the earth along with the mountains, oceans and rivers on his thousand heads.

He is infinite. His power never dwindles down at any time. Nobody can describe his greatness even if he possesses one thousand tongues to speak. Ananta is of infinite strength, high qualities and understanding.

Thus staying at the bottom of the earth, Ananta Deva is upholds and protects the earth all by himself – unaided and independent”.

 
bhagavathy bhaagavatam - skanda 3

3#15b. மனோரமையின் கவலை

முனிவரிடம் கூறினாள் மனோரமை – தன்
மனத்தை வாட்டி வதைத்த அச்சங்களை!


“பாண்டவர்கள் இருந்தனர் வன வாசத்தில்.
பாஞ்சாலி இருந்தாள் ரிஷி பத்தினிகளுடன்.


முனிவர் செய்திடுவர் வேத பாராயணம்;
முனி பத்தினிகள் காப்பர் பாஞ்சாலியை.


வேட்டைக்குச் சென்றிருந்தனர் பாண்டவர்கள்;
வேந்தன் சைந்தவன் வந்தான் சேனைகளுடன்.


வேத கோஷம் கேட்டு வணங்கினான் முனிவரை.
வேதியர்களிடம் கூறினான் தான் ஜயத்ரதன் என.


வேந்தனைக் காண வந்தனர் ரிஷிபத்தினிகள்;
வேந்தன் கண்டான் பாஞ்சாலியை ஆவலுடன்.


“இனிய பெண் இவள் யார்?” என வினவினான்;
முனிவர் கூறினர் திரௌபதியின் விவரங்களை.


“பாஞ்சால நாட்டின் இளவரசி பாஞ்சாலி.
பாண்டவர்களுடன் தங்கியுள்ளாள் இங்கே.


பாஞ்சாலியை நெருங்கினான் ஜயத்ரதன்;
பலாத்காரம் செய்திடவும் முற்பட்டான்!


ஐவரின் மனைவிக்கே அந்த கதியென்றால்
எவரும் இல்லாத என் கதி என்ன ஆகும்?


பகைவன் வந்தால் தடுத்திட வேண்டும்!
நகை முகத்துடன் வரவேற்க வேண்டாம்.


ஆண் எந்தப் பாதகத்துக்கும் துணிவான்!
மண், பெண், பொன் ஆசையில்லாதவன் யார்?


பெண்ணைக் காக்க உள்ள வழி ஒன்றே – ஆணைப்
பெண்ணிடம் நெருங்கிச் செல்ல விடவே கூடாது!”


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


3#15b. Manorama’s fear


Queen Manorama spoke to the sage BharatwAj about the fears ripping her mind. “PANdavAs were in vanavAsam. PAnchAli lived under the care of the rish patnis. The rishis would do Veda pArAyaNam all the time.


One day the PANdavAs had gone out to hunt for food. The king Jayadradan went by the ashram. He heard the Vedha gosham and went to pay his repect to the sages. He introduced himself to them as King Jayadradan.


All the rishi patnis wanted to see the king and came there. PAnchAli was among them. Jayadrathan asked the details about her – the most beautiful woman in that group. The rushis told him that she was the princess of PAnchAla Desam and the wife of PANdavAs.


Jayadradan got infatuated with PAnchAli, went near her and tried to misbehave with her, in the presence of everyone. If this is the fate of the wife of five valorous men, what will be my fate since I have no one to protect me?


You must stop the army of the enemies. You must not let them approach me. There is no man who does not covet land, gold and women.” Queen Manorama requested the sage thus.



 
skandha purANam - pOr puri kANdam

8e. இருபத்து நாலாயிரவர்

அக்கினிமுகன் விழுந்ததும் பெரும்
அதிர்ச்சி அடைந்தனர் அவுணர்கள்.


படை வீர்கள் இருபத்து நாலாயிரவர்
புடை சூழ்ந்தனர் வீரவாகுத் தேவரை.


கணைகள், உருளைகள், வேல், மழு
கப்பணம் சொரிந்து போர் புரிந்தனர்.


வீரவாகு எய்தார் வில்லை வளைத்து
நூறு ஆயிரம் கோடிக் கணைகளை!


உரப்பினார் அவுணர்கள் அஞ்சும்படி;
சொரிந்தார் கணைகளை மழையாக.


இழந்தனர் அவுணர்கள் படைக்கலம்!
விழுந்தனர் அவுணர்கள் வெட்டுண்டு!


அழிந்து போயின கரிகளும், பரிகளும்;
ஒழிந்து போயின ரதங்கள் எல்லாம்!


பறந்தன பருந்துகள் விண்ணில்;
பரந்தது குருதியாறு மண்ணில்.


மிதக்கும் வேல்களும், வாட்களும் நீரில்
மின்னும் கயல்கள் போலத் தோன்றின.


செந்நீரில் வெண் குடைகள் சென்றன
செவ்வானில் முழு நிலவைப் போலவே.


ரத, கஜ, துரக, பதாதி என்னும் நாற்படை
எதுவும் மிச்சமின்றி அழிந்து போயிற்று.


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


4#8e. The Twenty four thousand warriors.


When Agni Mukhan fell, the asura army got shocked beyond words. Then the twenty four thousand warriors surrounded VeerabAhu. They fought using arrows, discuss, spears, and mazhu.


VeerabAhu shot one hundred thousand crores (one trillion) arrows. He made a terrible noise and made the asura army tremble with fear. The asura army lost all its armaments. The asuras fell down with several limbs severed.


The horses, elephants and chariots were completely destroyed. Carrion birds filled the sky. A river of fresh blood started flowing. The swords and the spears carried by that river appeared to be the fish in the river water.


The White umbrellas swam in the river of blood reminding one of the full moon racing across the red sunset sky. Nothing and no one of the asura army was left behind alive.
 
The 64 Thiru ViLaiyAdalgaL

61e. எளிமையும், பெருமையும்.

# 61 (e). எளிமையும், பெருமையும்.

“மீண்டும் தண்டித்தாய் வாதவூராரை,
யாண்டும் வெள்ளம் பெருகச் செய்தோம்.

பிட்டுக்கு மண் சுமந்தோம் வந்திக்காக;
பிரம்படி பட்டோம் எம் அன்பருக்காக!


வாதவூராரை மன்னித்து விட்டுவிடு!
தீது ஏதும் அறியாதவர் மணிவாசகர்.

நீயும் எல்லா வளமும், நலமும் பெற்று
நீண்ட காலம் இன்பமாக வாழ்வாய்!”


வாதவூராரின் பெருமைகளை, இறைவன்
வாயால் கேட்டு உணர்ந்தான் மன்னன்;

ஆனந்தம், அற்புதம், அச்சம் மேலிடத்
தானே மணிவாசகரைத் தேடலுற்றான்.


சிவன் சன்னதியில் மதுராபுரியில்,
சிவயோகத்தில் மாணிக்கவாசகர்!

மண்டியிட்டு அவரை வணங்கினான்;
மன்னிக்கும்படி அவரை வேண்டினான்.


“பொன்னம்பலத் தில்லையம்பதிக்கு,
அண்ணல் என்னை வரச் சொல்கின்றார்.

என்னைச் செல்ல விடுவாய்! சிறிதும்
உன் மேல் கோபம் இல்லை எனக்கு!”


ஒரு பக்தைக்காக இறைவன் தானே
அருள் புரிந்து கூலியாள் ஆனான்.

பிட்டு உண்ட எளிமை சிறந்ததா?
பிரம்படி பட்ட பெருமை சிறந்ததா?


திருப்பணிகள் பூஜைகள் தொடர்ந்தன.
திருவிழாக்கள் தவறாமல் நடந்தன.

அன்பு, அருள், இன்பம் பொங்கும்,
இனிய நல்லாட்சி தொடர்ந்தங்கே!


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


# 61(e). The greatness of God.


Lord Siva’s asareeri continued,” Again you punished my devotee. So I created a huge flood in Vaigai river. I became the helper of my other devotee – the old woman Vandhi. I ate her Pittu, and got hit by you.


Pardon your minister MANikka VAsakar and let him go free. You will live in prosperity and good health for many more decades on the earth!”


The king was overwhelmed to hear the praise of his innocent minister from the Lord. He himself went in search of the minister.


MANikka vAsakar was in MadhurApuri in the sannidhi of Siva. He prostrated before the minister and begged for his pardon.


The minister replied, “I have no hard feelings against you nor am I angry. My lord commands me to go to Thillaip Ponnambalam. Let me go there now!”


The king could not help wondering, “Siva ate the humble pittu given by the poor old woman! Is his humility exemplary? He got beaten by me for the sake of his other devotee. Is his greatness exemplary?


He resumed all the original activities, celebrations and festivals of the temple. He reigned in peace and prosperity for several decades happily.

 
bhagavathy bhaagavatam - skanda 8

8#20b. இருவினைப் பயன்கள்

“பாவ, புண்ணியங்களுக்கு காரணம் என்ன?
பாவிகள் நரகத்தில் உழல்வது எங்கனம்?”

“சம்சார பந்தம் உள்ள ஆத்மாக்களுக்கு
சம்பவிக்கும் பாவ, புண்ணியம் கர்மத்தால்!

அனுபவிக்க வேண்டும் வினைப் பயன்களை;
அனுபவிக்க வேண்டும் தெய்வங்களும் கூட!”

நாரணன் கூறினான் இவ்வாறு நாரதனுக்கு;
நாரணனைக் கேட்டான் நாரதன் விளக்கம்.

“செயல்களைச் செய்பவன் இறைவன் எனில்
மயக்கும் கஷ்ட, சுகங்களின் பேதங்கள் ஏன்?”

“கர்மங்களின் பலன்களை வகுப்பார் கடவுள்;
கர்மங்களைத் தாமே புரிவதில்லை கடவுள்!

ஆன்மாக்கள் வேறுபடும் குண விகாரத்தால்!
ஆன்மாக்கள் வேறுபடும் குண விகிதத்தால்!

சத்துவர்களின் செயல்கள் எல்லாம் சுகம் தரும்;
ராஜஸர்களின் செயல்கள் எல்லாம் துக்கம் தரும்;

தாமஸர்களின் செயல்களோ அஞ்ஞானம் தரும்;
தருகின்றன கர்மங்கள் ஆயிரம் சுக, துக்கங்களை!

மூன்று குண சம்பந்தம் உண்டாவதற்கு
மூல காரணம் ஜீவன்களின் அஞ்ஞானமே!

மூன்று உலகங்களுக்கும் நடுவில் தென் திசையில்,
பூமிக்குக் கீழேயும் அதல லோகத்துக்கு மேலேயும்

இருப்பர் பித்ருக்கள் தியான சமாதியில் அமர்ந்து;
கோருவர் தம் வழிபாட்டில் அனைவர் நலனையும்

கிங்கரர்கள் பறித்து வருவர் ஜீவன்களை யமனிடம்;
தங்குவர் சுவர்க்கம் அல்லது நரகத்தில் அவர்கள்!

கூறுவான் யமன் தன்னுடைய நியாயத்தை;
கூறுவான் நியாயத்தை நிறைவேற்றிடுமாறு.

தண்டிக்கப் பட்ட ஜீவர்கள் அடைவர் நரகத்தை;
தண்டிக்கும் நரகங்கள் ஆகும் இருபத்து ஒன்பது.

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

8#21b. The Effect of Karma

NArAyaNan told NArada about the effects of Karma performed by a man in this manner: “People reap the fruits of their actions and are born as kings, men, deer, birds or reptiles or other creatures in other states.

Various actions give rise to various dissimilar fruits – depending on the dictates of Dharma sAstrAs”.

NArada asked again,” O BhagavAn! Kindly tell me why different fruits are given to a jeevA when the karma done is the same?

BhagavAn replied,” These differences arise because of the differences in the attitudes of the doers. Some of them are SAtvic, some others RAjasic and yet some others TAmasic.

All SAtvic actions give happiness, all RAjasic actions cause pain and all TAmasic actions cause more ignorance. Thousand different states may occur to a man as the result of his actions, done in utter ignorance.

Below the earth and above the Atala, Pitris and all forefathers live. They practice deep samAdhi and bless their own gotras.

There Yama, the God of the Pitris, gives punishment to the dead souls brought there by His messengers – according to their Karmas and faults.

Yama, surrounded by his gaNa judges and does full justice according to the Karmas done and the sins committed by a jeeva. The punishment is given in the Hells which are twenty nine in number”.

 
bhagavathy bhaagavatam - skanda 3

3#15c. மஹாபலி

தொடர்ந்து பேசினாள் மனோரமை – தனக்கு
இடம் அளித்திருந்த பரத்வாஜ முனிவரிடம்.

“விரோசன மன்னன் பிரஹலாதனின் மகன்;
விரோசனின் மகன் மஹாபலிச் சக்கரவர்த்தி.

பெருமை பெற்றவன், கொடை வள்ளல்;
தரும சீலன், பூமண்டலத்தின் சக்கரவர்த்தி.

தொண்ணூற்று ஒன்பது யாகங்கள் செய்தான்;
தொடங்கினான் நூறாவது யாகம் புரிவதற்கு.

பகைமை இல்லை விஷ்ணுவுக்கு பலி மேல்;
பாழ் செய்தது ஏன் பலியின் யாகத்தினை?

குறு வடிவம் எடுத்துச் சென்றார் யாகசாலைக்கு.
தருமாறு கோரினார் தன் காலால் மூன்றடி மண்.

பெருவடிவால் அளந்தார் விண்ணை; மண்ணை!
திருவடியால் அனுப்பினார் பலியைப் பாதாளம்!

கள்ளத்தனம் செய்தார் விஷ்ணு பிரான்!
கள்ளத்தனம் செய்யாதவர் யார் உளர்?

பேராசை மிகுந்தவன் மன்னன் யுதாஜித்!
பேதை என்னைக் கைவிட்டு விடாதீர்கள்!”

வந்து விட்டான் ஆசிரமத்துக்கு யுதாஜித் – அங்கு
வரவில்லை மனோரமை எனச் சாதித்தார் பரத்வாஜர்.

“நீரே அவளை அனுப்புகின்றீரா? வலிமையால்
நானே அவளைக் கவர்ந்து செல்லவா?” என்றான்.

“வசிஷ்டரின் பசுவை விஸ்வாமித்திரர் செய்தாற்போல்
வலிமை இருந்தால் கவர்ந்து செல்!” என்றார் முனிவர்.

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

3#15c. MahA Bali

Manorama continued talking to sage BharatwAj, who had given protection to her son Sudarshan and herself. “Virochanan was the son of PrahlAd. Virochanan’s valorous son was MahA Bali. He was as famous as he was valorous. He was a great king known for his generosity and good nature.

He had performed ninety nine yagnas. When he started to perform his hundredth yagna, VishNu went to him as VAmana to ruin the hundredth yagna.

VishNu had no enmity towards Bali and yet he ruined the yAgam by unfair means. He went to the yAga sAla as a young brahmachaari begging for three paces of land, measured with his own feet.

He grew up to the heavens and measured the heaven and the earth with his just two paces with his legs. He then pushed MahA Bali to PAtAla lokam. with his third step. He played a mean trick to achieve his aim.

Who does not cheat in order to get what he wants? YudAjit is a greedy king. Please do not forsake me oh sire!” She pleaded to sage BharatwAj.

YudAjit reached sage BharatwAj’s ashram demanding that queen Manorama and her son prince Sudarsanan be handed over to him immediately. Sage BharatwAj said that the queen and the prince were not there.

Then YudAjit gave him an ultimatum and said, “Will you hand over them to me or shall I capture them with my own might?”

The sage was unruffled and replied. “If it is within your power, you may capture them just as ViswAmitra captured Sage Vasishta’s cow!”

 
kandha purANam - pOr puri kANdam

8f. தம்பியரைத் தேடுதல்

பிரிந்து நின்று போர் புரிந்தவர்கள்
திரும்பி வந்தனர் வீரவாகுவிடம்.

வீரபுரந்தரர் மட்டும் வந்தார் – ஆனால்
வீரவாகு காணவில்லை மற்றவர்களை!

“ஏழு தம்பிகள் எங்கே?” என வினவவும்,
“எழுவரையும் கொன்றான் அக்கினிமுகன்

அரிய நூறு யோசனைக்கு அப்பால் உள்ள ஓர்
பெரிய ஆலமரத்தடியில்” என்றார் உக்கிரர்.

விக்கித்து நின்றார் வீரவாகுத் தேவர்;
உக்கிரரின் மொழிகளைக் கேட்டதும்.

ஆலமரத்தடியை அடைந்தார் விரைந்து;
ஓலமிட்டு அழுதார் உடல்களைக் கண்டு.

அரற்றினார், புலம்பினார், தழுவினார்,
அரிய சினம் கொண்டார் கூற்றுவன் மீது.

கணையில் எழுதினர் கூற்றுவனுக்கு.
“இணையில்லாத செவ்வேளின் இளவல்

வீரவாகு ஆகிய நான் எமனுக்கு எழுதும்
ஓர் ஓலை இதுவே என்பதை அறிவாய்.

இளவல்களின் உயிரைக் கவர்ந்தாய்!
இளப்பமாக எண்ணாதே எங்களை!

உயிர்களைத் திருப்பிக் கொடு உடனே
உனக்கு உன் உயிர் வேண்டும் என்றால்!”

வில்லில் அக்கணையைப் பூட்டினார்.
சொல்லரும் திறனுடன் செலுத்தினார்.

கடல்களை எல்லாம் கடந்து சென்றது.
மடல் விழுந்தது எமதர்மனின் முன்பு.

பொறித்திருந்த செய்தியைக் கண்டு
பெரிதும் அஞ்சினான்; துன்புற்றான்;

“இங்கு இல்லை அவர்கள் எழுவர்.
எங்கு உள்ளனர் ஏழு இளவல்கள்?”

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

4#8f. Searching for the missing brothers.


The army of demons which got separated while fighting, now returned to VeerabAhu. Veera Purandarar came alone and the other seven brothers were not to be seen. Ugrar told VeerabAhu that his seven younger brothers were killed by Agni Mukhan under a banyan tree a hundred yojanas away from there.

VeerabAhu stood shocked and then rushed to that spot. He lamented and cried on seeing his younger brothers quite dead. He became very angry with Yama. He wrote a message on his arrow demanding that the souls of his dead brothers be returned to their bodies immediately or else Yama would face dire consequences.

He shot the arrow with such a force that it reached the Yamalokam and fell in front of Yama himself. Yama read the message and shuddered. He knew that the seven brothers were nor in his world. But “Where were they?”

 
The 64 thiru viliyadalgal

62a. சமணமும், சைவமும்.

# 62 (a). சமணமும், சைவமும்.

அரிமர்த்தனின் மகன் சகநாதன்,
அவனுக்குப் பின்பு வீரபாகு தொடங்கி
ஒன்பது மன்னர்கள் ஆண்டு வந்தனர்.
கூன் பாண்டியன் அடுத்த மன்னன்.


முத்தமிழ் நாடுகளை ஒரு குடைக்கீழ்
சக்கரவர்த்தியாக ஆண்டு வந்தான்;
பொன், மணி, பெண்மணிகளைத் தந்து,
தன் நாட்டை மீட்டான் சேர மன்னன்.


நாட்டை மீட்க விரும்பிய சோழனும்,
நீட்டினான் நேசக் கரமும், பரிசுகளும்;
மங்கையர்த்திலகம் தன் செல்வ மகள்,
மங்கையர்க்கரசியை மனைவி ஆக்கினான்.


ஸ்ரீதனம் என்ற பெயரில் செல்வக்குவியல்;
ஸ்த்ரீகள், பல சேடிகள், இளம் தோழிகள்,
ஆடை அணிகலன்கள், ஆபரணங்கள்;
சோடை போகவில்லை இந்த சம்பந்தம்.


குலச் சிறையார் என்னும் நூல் வல்லுநர்,
குணவானும் வந்தார் நன்னெறி பகன்றிட.
மந்திரிப் பதவியில் அமர்ந்தார், பின்னர்
மந்திரிகளில் முதல்வர் ஆகிவிட்டார்.


சமணனாக மாறிவிட்டான் பாண்டியன்,
சமண இருளுள் மூழ்கியது அந்நாடு;
சைவ மதத்தையும், ஒழுக்கத்தையும்,
சைவ நெறிகளையும் புறக்கணித்தான்.


சமணர் பழக்க வழக்கங்கள் விரைந்து
அமணக் களையாக பரவியது நாட்டில்.
மன்னன் எவ்வழி, மக்கள் அவ்வழி,
என்ன செய்வதென்று தெரியவில்லை.


குலச் சிறையாரும், குல அரசியும் அந்த
நிலைமை குறித்து கவலை கொண்டனர்.
கட்டுக்கடங்காமல் நிலைமை மாறினால்,
கட்டுப் படுத்த வல்லவன் இறைவனே!


ஆண்டவனிடம் சென்று இறைஞ்சினர்,
“தாண்டவம் ஆடும் தயாபரனே! நீர்
மீண்டும் சைவம் தழைத்திடச் செய்யும்;
யாண்டும் வேதம் ஒலித்திடச் செய்யும்.


மன்னனுக்கு நல்லறிவு வரவேண்டும்,
நன்னெறி நாட்டுக்குத் திரும்பவேண்டும்;
உள்ளம் உருகி வேண்டி நிற்கையில்,
கள்ளம் இல்லா மறையவனைக் கண்டனர்.


தில்லைப் பதியில் தீர்த்த யாத்திரை – பின்
தொல்லைகள் நீக்கும் ஆலவாய் அழகனைத்
தரிசிக்க வந்த அந்தணன் அவனிடம்,
கரிசனையோடு வினவினார் அமைச்சர்.


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


# 62 (A). Jainism and Saivism.


Jaganaathan was the son of Paandiyan Arimardhanan. He was succeeded by Veerabaahu and eight other kings. Koon Paandiyan was the ninth king. He had a hunch back and the nick name Koon Paandian stuck to him.


He conquered the Chera and Chozha kingdoms. He ruled the three Tamil kingdoms as a chakravarthi. The Chera King presented him with Gold, gems and beautiful women to get back his kingdom.


The Chozha king married his daughter Mangaiyarkkarasi and gave a lot of wealth, gifts, servants and a minister named Kulach chiriyaar. He was well versed and soon became the chief minister.


Koon Paandiyan had become a Jain. Vedas and Agamaas were neglected. Jainism spread as the weeds do, after a heavy rain fall.

The citizens followed the king. The queen and the minister did not know what to do.

They went to the Siva temple and prayed to him to revive the Saivism and remove Jainism. They saw a pleasant faced brahmin in the temple. He had visited the Thillai and had come to worship the Siva in Aalavaai.

The minister asked him,Where have you come from?”
The brahmin replied, “I have come from the Chozha kingdom”


The minister asked him, “What is the news there?”
The brahmin started talking about Thiru Jnaana sambanthar.


 
bhagavathy bhaagavatam - skanda 8

8#21a. நரகங்கள் (1 to 6)

1. தாமிஸ்ரம்

பிறர் பொருளைக் கொள்ளைஅடித்தவர்களையும்;
பிறன் மனைவி, சிசுவை அபகரித்தவர்களையும்;


மிரட்டி அடித்துத் தள்ளுவர் தாமிஸ்ர நரகத்தில்;
காலதூதர் காலபாசத்தினால் கட்டி இழுத்து வந்து!


2. அந்ததாமிஸ்ரம்


கணவனை வஞ்சித்த மனைவி அடையும் நரகம்;
மனைவியை வஞ்சித்த கணவன் அடையும் நரகம்;


கண்களை இழந்து வேதனை தாளாமல் – உடல்
புண்ணாகி வாடி வதங்கும் நரகம் அந்ததாமிஸ்ரம்!


3. ரௌரவம்


தனக்கு உரிமை இல்லாத பொன் பொருளைத்
தன் சாமர்த்தியத்தினாலும் செல்வாக்கினாலும்


தன்னுடையது என்று அபகரித்துக் கொள்பவர்;
தன் குடும்பத்தை நன்கு பேணிக் காப்பதற்காக


பிறர் குடும்பத்தை சீரழிப்பவர்களின் நரகம் இது!
மரண காலத்தில் பெரிதும் துன்புறுவர் இவர்கள்.


தருவார்கள் தண்டனை ஏமாற்றப் பட்டவர்கள்
ருரு என்னும் கொடிய விஷ மிருக வடிவத்தில்.


4. மஹா ரௌரவம்


ருரு துன்புறுத்திக் கொண்டே இருக்கும் பாவிகளை!
ஒருவேளை தப்பிவிடாமல் சூழ்ந்துகொண்டு நிற்கும்!


5. கும்பீபாகம்


பிற உயிர்களைக் கொன்று தின்பவரின் நரகம் இது
வறுப்பார்கள் கிங்கரர்கள் அவர்களை எண்ணையில்


தின்ற பசுக்களின் உடலில் இருந்த ரோமங்கள் போல்
அத்தனை ஆண்டு காலம் சமைக்கப்படுவார்கள் இங்கே!


6. காலசூத்திரம்


மாதா, பிதா, வேதியரை ஆதரிக்காதவன் அடையும் நரகம்;
மாதா, பிதா, வேதியரைத் துரத்தி விடுபவனின் நரகம் இது.


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K . ராமன்


8#21a. HELLS ( 1 TO 6)


1. TAmisra Hell


He who steals another man’s sons, wives, and riches, is taken to Yama by His messengers. He is tied down by the terrible messengers of Yama, using the KAla Sootra or the Rope Of Time! He is taken to the TAmisra hell, the place of many torments and punishments. Yama’s attendants beat him and threaten him until he becomes stupefied, weak, distressed and faints!


2. Andha TAmisra Hell


He who deceives another man and enjoys his wives is dragged down to Andha TAmisra hell. There he is subjected to pain and suffering. He loses his eyesight and becomes blind. His state resembles that of a tree when its trunk is broken. For this reason it is called as Andha TAmisra.


3. Raurava Hell


He who claims everything to be “My” and “Mine” and quarrels with others; he who maintains his own family, at the expense of another goes Raurava hell. The animals which he had injured and killed in this world, assume the form of the animal Ruru and torment him in the Raurava Hell.


4. MahA Raurava Hell


Ruru is more cruel and ferocious than poisonous snakes. These animals living in that hell, surround the sinner making sure that he can not escape. Hence it is named as MahA Raurava Hell. He who torments others, goes to this hell and these Rurus, the flesh-eaters, spring on his body and bite and eat his flesh.


5. KumbheepAka Hell


He who cooks and eats animals and birds, is fried in hot oil in the KumbheepAka Hell by the Yama Dootas for one thousand years.


6. KAla Sootra Hell


He who quarrels with his Pitris and the BrAhmaNas, is taken by the Yama Dootas to the KAlasootra Hell to be burnt by the fire and Sun. The sinner is troubled by hunger and thirst and spends his time in sitting, walking and running here and there helplessly.



 
bhagavathy bhaagavatam - skanda 3

3#16a. காமதேனு

புத்தி வரவில்லை இதைக் கேட்டதும் யுதாஜித்துக்கு.
யுக்தியை ஆராய்ந்தான் மனோரமையைக் கவர்ந்திட.


அமைச்சர்களைக் கலந்து ஆலோசித்தான் – “முனிவர்
அமைதியாக ஒப்படைக்கமாட்டார் அவ்விருவரையும்.


பலவந்தமாகக் கவர்ந்து செல்ல வேண்டும் நாம்;
பலவீனமான எதிரி இருப்பதும் கூட ஆபத்து.


அநாதை இளவரசன் சுதர்சனனை ஒழித்தால்
அனாயாசமாக அரசாள்வான் என் சத்ருஜித்!”


அறிந்து கொண்டனர் அமைச்சர்கள் – அரசன்
அறிந்திலன் விசுவாமித்திர முனிவரின் கதையை.


அளவற்ற ஆத்மபலம் பெற்றவர்கள் முனிவர்கள்.
விளக்கினர் இதை யுதாஜித்துக்கு விளங்கும்படி.


“பூர்வத்தில் விசுவாமித்திரர் மிகப் பெரிய வேந்தன்;
ஆர்வத்துடன் அடைந்தார் வசிஷ்டரின் ஆசிரமத்தை.


விருந்து அளித்தார் வசிஷ்டர் மன்னனின் சேனைக்கு,
விரும்பிய உணவைக் காமதேனுவின் உதவியுடன்!


கண்டதை கைக் கொள்வது மன்னருக்கு எளிது!
வேண்டும் காமதேனுப் பசு தனக்கே இனிமேல்!


“ஆயிரம் பசுக்களைத் தருகின்றேன் வசிஷ்டரே!
அற்புதக் காமதேனுவுக்கு ஈடாக உமக்கு நான்!”


“ஹோம யாகங்களுக்கு உதவிடும் பசு இது!
காமதேனுவைப் பிரிய சம்மதியேன் நான்!”


“ஆயிரம் பசுக்கள் போதாதோ உமக்கு?
ஆயிரம் ஆயிரம் பசுக்களைத் தருவேன்!


தந்துவிடுங்கள் காமதேனுவை எனக்கு – நான்
இந்தப் பசு இன்றிச் செல்லேன் இங்கிருந்து!”


“மனப் பூர்வமாகத் தரவே மாட்டேன் பசுவை;
முடிந்தால் முனைந்து கவர்ந்து செல் மன்னா!”


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K . ராமன்


3#16a. KAmadhenu


King YudAjit did not understand the significance of this statement. He planned a scheme to get hold of Manorama and Sudarsanan, with the help of his ministers. He told them,


“It appears that sage BharatwAj will not hand over the queen and her son. We must capture them using our power. The enemy may appear to be weak, small and insignificant but all the same, we have to get rid of him as soon as possible. With Sudarsanan out of his way, my grandson Satrujit will be free from dangers” King YudAjit told his ministers.


His ministers understood that their king was ignorant about the tussle between Vasista and ViswAmitra also called as Kousika. They knew the spiritual strength of the sages and rushis. They explained the strory of ViswAmitra to YudAjit.


ViswAmitra was a great king before he became a sage. He visited the ashram of Vasishta along with his army. Vasishta gave him and his men a warm welcome. With the help of KAmadhenu, he fed the army a sumptuous feast.


ViswAmitra wanted to posses the divine cow KAmadhenu for his own use. He was ready to give one thousand cows in exchange for KAmadhenu but Vasishta would not part with his cow.


Now ViswAmitra offered a thousand times thousand cows in exchange. Yet Vasishta refused his very generous offer. ViswAmitra told Vasishta “Either you part with your cow willingly or I will have to take it away by sheer force!”


Vasishta told Kousika, “If possible you may take away the cow by using your force, Oh King!”



 
kandha purANam - pOr puri kANdam

8g. மாண்டவர் மீண்டனர்!

படை பரிவாரங்கள் புடை சூழ நமன்
உடன் சென்றான் திருக்கயிலை மலை.


ஏழு இளவல்களும் மலைச் சாரலில்
மூழ்கி இருந்தனர் தம்மை மறந்து,


விஞ்சையரின் தேவ கானத்திலும்,
மஞ்சையரின் திவ்விய ஆடலிலும்!


நமனுக்கு வந்தது உயிர் மூச்சு.
நமன் வணங்கினான் எழுவரையும்.


‘தமையன் தம்பியரைத் தேடி இளைக்க,
தம்பியரோ இன்னிசையில் திளைக்க,


அச்சத்தில் நான் உடல் களைக்க,
இச்சையுடன் வந்தேன் அழைக்க!


விரைந்து செல்லுங்கள் பிழைக்க!
மறுபடி தர்மம் தழைக்க! ” என்றான்.


தத்தம் உடலில் புகுந்து எழுந்தனர்.
தமையன் கால்களில் விழுந்தனர்.


மீண்ட இளவல்களை கண்ட வீரவாகு
மீண்டும் மீண்டும் ஆரத் தழுவினார்.


“திருநீறும், கழுத்தில் கண்மணியும்
திகழ்பவர் அருகிலே நான் செல்லேன்!


விளங்குவீர் சீருடனும் சிறப்புடனும்!”
விநயமாகச் சொன்னான் நமனும்.


ஒற்றர்கள் ஓடினர் தம் அரண்மனைக்கு.
கொற்றவனிடம் கூறினர் செய்திகளை.


அக்கினி முகனின் வீழ்ச்சியைக் கேட்டு
துக்கத்தில் மூழ்கியது நகர் முழுவதும்.


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


4#8g. The brothers return safely.


Yama left for KailAsh with his retinue. He saw the seven brothers there enjoying the divine music and dances of the apsaras. He paid obeisance to them and told them,


“Your elder brother is heart broken on your leaving the world. You are here enjoying the music and dance. I will be taken to task if you delay your return to the earth. Please go back to your bodies and establish Dharma !”


The brothers got up as if from deep sleep. VeerabAhu was overwhelmed with happiness and embraced them again and again. Yama told them , “I never approach anyone who is wearing rudrAksham and holy ash. May you all live very long and glorious lives!”


The messengers ran back to their king Soorapadman and conveyed the news of the fall of Agni Mukhan. The whole city was immersed in a sea of sorrow.

 
The 64 Thiru ViLaiyAdalgaL

62b. காழிப் பிள்ளையார்.

# 62 (b). காழிப் பிள்ளையார்.

“சீகாழிப் பகுதியில், மறையவர் குலத்தில்,
சிவபாதஹிருதயர், பகவதிஅம்மைக்கு
தவத்தின் பயனாக வந்து அவதரித்தார்,
தவ சீலராகிய திருஞான சம்பந்தர்.

மூன்று வயதிலேயே தரிசித்துள்ளார்,
முக்கட்பிரானை ரிஷபாரூடனாக;
அன்னை உமை கையால் பருகியுள்ளார்,
முன்னை வினை தீர்க்கும் ஞானப்பால்.

சிவ ஞானத்துடன் சம்பந்தம் பெற்றதால்,
திரு ஞான சம்பந்தர் என்ற பெயர் பெற்றார்.
சிவன் நினைவிலேயே மூழ்கித் திளைத்து
அவன் புகழையே பாடி வலம் வருகின்றார்.

நாமகள் அவர் நாவில் நடமாடுகின்றாள்,
தேமதுரத் தமிழில் தருகின்றார் – திகட்டாத
வேதத்தின் கருத்துக்களை-அனைவரும்
ஓதற்கு எளிய தீந்தமிழ் பாடல் வடிவில்,

சிவ க்ஷேதிரங்களுக்குச் சென்று பாடி,
அவனுக்குத் தமிழ்மாலை சூட்டுகின்றார்;
சிவன் அருளால் பெற்றுள்ளார்- சிறந்த
பொன் தாளம், முத்துச் சிவிகை, பந்தல்.

திருவீழிமிழிலையில் படிக்காசு பெற்றார்.
திரு மறைக்காட்டில் பாடி அருளினார்;
மறைபொருள் வேதங்கள் வழிபாடு செய்த
திருக் கோயில் கதவுகள் அடைபடுமாறு.

ஆளுடை பிள்ளையார் இங்கும் வருவார்,
ஆலவாய் அழகனின் அருளைப் பாடிட!”
அந்தணன் மொழிகளால் துன்பம் தீர்ந்தனர்
அரசியரும், அருமை அமைச்சர் பிரானும்.

சீகாழி உறையும் திரு ஞான சம்பந்தருக்கு
சீக்கிரம் வரச் சொல்லி ஓலை எழுதினர்.
‘இன்னமும் நம்பிக்கை இருக்கின்றது;
அண்ணல் அருளால் சைவம் தழைக்கும்!’

விரைந்து சென்ற அந்த மறையவர்
நிறைவாய் அளித்தார் பிள்ளையிடம்,
ஆலவாய்ப் பதியில் அமைச்சர் அளித்த
ஓலைச் சுருளைப் பணிந்து வணங்கி.

“சமண இருளை நீக்க வரவேண்டும்,
சைவம் தழைக்கச் செய்ய வேண்டும்,
மன்னன் மனம் மாறிவிட வேண்டும்,
முன்போல் வேதம் ஒலிக்க வேண்டும்.”

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

# 62 (B). JNAANA SAMBANDHAR.

“In Sikaazhi, a great devotee is born to Sivapaada hrudhaya and Bagavathi ammaiyaar. The baby is indeed blessed.

He had the dharshan of Lord Siva seated on Nandhi when he was just a three year old boy. He drank the milk of wisdom from the hands of none other than Uma devi.

He is immersed deep in Siva Consciousness. He goes round from temple to temple, singing Siva’s praise. Goddess Saraswathi lives on his tongue.

He gives the concepts of Veda in easy Tamil songs. Siva loves his songs and has presented him with a pearl canopy, a pearl palanquin and cymbals of gold.

He was presented with a measure of gold coins in Thiru veezhi mizhalai. In thiru maraik kaadu, he made the temple doors close. He will surely visit Aalavaai.”

The minister and the queen were relieved to hear this. They sent a message to Sambandhar through the brahmin. All was not lost. Saivism could still be revived.

The brahmin took the message to Sambandhar. It read, “Jainism must be destroyed. Saivism must be revived. The king’s mind must be changed. The Vedic chanting must be resumed”.

 
bhagavathy bhaagavatam - skanda 8

8#21b. நரகங்கள் (7 to 12)

7. அஸி பத்ரம் (வாளலகு)

தன் மதத்தைப் புறக்கணித்துப் பிறவற்றில் புகுபவன்
தள்ளப் படுகின்றான் இந்த நரகக் குழியில் உழன்றிட!


அடிப்பார்கள் அஸிபத்ரம் வாளலகுச் சாட்டையினால்;
இடறி விழுவான் பாவி தப்பித்து ஓட முயலும் போது!


8. பன்றி முகம்


வேதியருக்குச் சரீர தண்டனை தந்த அரசனுக்கும்;
அநீதியான தண்டனைகளைத் தருபவனுக்கும்;


உருவாக்கப் பட்டது பன்றி முகம் என்னும் நரகம்;
முறிப்பார்கள் கைகள் கால்களை அடித்து நசுக்கி.


ஆலை வாய்க் கரும்புகள் போலவே – பாவிகள்
சாலத் துன்புறுவர் இந்த நரகக் குழியில் விழுந்து!


9. அந்த கூபம்


புகழுடன் விளங்கும் அந்தணனைக் கொல்பவன்;
ரகசியமாக நல்ல மறையவனைக் கொல்பவன்;


துரோகம் செய்தவர்களின் கொடிய நரகம் இது
துரத்தித் தாக்கும் பல பறவைகள், விலங்குகள்!


10. கிருமி போஜனம்


பஞ்ச யக்ஞங்களைப் புரியாதவர்களின் நரகம் இது;
புழு வடிவெடுத்து பிற புழுக்களால் புசிக்கப் படுவர்!


11. அக்கினிக் குண்டம்


அந்தணனின் உடைமைகளைப் பறித்துக் கொள்பவரை
அக்கினிக் குண்டத்தில் தள்ளி வாட்டிக் காய்ச்சுவார்கள்.


12. வஜ்ர கண்டகம்


சேரத் தகாத மங்கையோடு சேரும் ஆடவனையும்,
சேரத் தகாத ஆடவனோடு கூடும் மங்கையையும்,


அடிப்பார்கள் இடைவிடாது சாட்டையினால் இங்கு!
அணைக்கச் செய்வர் காய்ச்சிய இரும்புத் தூணை!


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K . ராமன்


8#22b. Hells ( 7 – 12)


7. Asipatra Hell


He who transgresses the path of the Vedas in normal times (other than those of great danger) and he who follows other paths, is taken by Yama dootas to Asipatra KAnana and whipped severely. Not being able to bear the pain he would run about wildly and get pierced by the sharp edged Asi leaves on both his sides. His whole body would be lacerated, he would tumble down at every step and suffer for violating the path of the Vedas.


8. Sookaramukha Hell


The King or ruler who gives punishment not approved by Dharma and he who inflicts physical suffering on a Brahmana is thrown down into the S’ookaramukha Hell. His body is crushed as sugar cane is crushed to extract the juice. He would then cry aloud bitterly, faint and becomes stupefied.


9. Andhakoopa Hell


He who gets a famous a brahmin murdered or plots and murders brahmins secretly or proves to be not trust worthy get punished for that fault in the Andhakoopa Hell. There he is tormented by the beasts, birds, deers, reptiles, mosquitoes, bugs, lice, flies and various other pests. There he lives in his ugly body and roams around like a beast.


10. Krimi Bhojanam


The man who does not perform the five MahA YagnAs nor gives the due share of offerings to the Devas but feeds only his own belly, is taken to the Krimi bhojana Naraka for his sinful deeds. This hell is a huge reservoir of worms. It causes terror to all the inhabitants of the hell. That sinner assumes the form of an insect and is eaten up by the other insects and thus passes his time there. When a man does not give any share to the Atithis or the guests and does not offer oblations to the Fire and eats his food, he, too, goes to the above hell.


11. Agni KuNdam


When a man earns his livelihood as a thief and robs gold and jewels forcibly from a brahmin or any other person, he is taken to this hell by the Yama’s servants. He is burned in a pit of fire for all his past sins.


12. Vajra KaNdakam


A man who cohabits with an unfit woman and a woman who lives with an unfit man are sent to this hell. They are whipped mercilessly and forced to embrace a red hot figure of a woman or man.



 
bhagavathy bhaagavatam - skanda 3

3#16b. விஸ்வாமித்திரர்

பலவான்களாகிய தானைத் தலைவரைப் பணித்தான்,
“பலவந்தமாகக் கவர்ந்து செல்லுங்கள் பசுவை!” என்று.


தெய்வப் பசு என்று தெரியவில்லை வீரர்களுக்கு.
கையால் பற்றி இழுக்கத் தொடங்கினர் பசுவை.


நடுங்கியது காமதேனுவின் உடல் அச்சத்தால்;
நடுங்கியது காமதேனுவின் குரல் அச்சத்தால்.


“என்னைக் கைவிட்டு விடாதீர்கள் தவமுனிவரே!”என
“உன்னைக் கைவிட முடியுமா கூறு காமதேனுவே!


உபசாரம் செய்தேன் விருந்துணவு படைத்து!
அபசாரம் செய்கின்றான் பிரதி உபகாரமாக!


உன்னால் காத்துக் கொள்ள முடியும் உன்னை!
உன்னால் முடியாதது எது என்று கூறு!” என்றார்.


அச்சம் நீங்கிக் காமதேனு ஹூங்காரமிட – ஓர்
அச்சம் தரும் படை தோன்றியது அதனிடமிருந்து.


ஆயுதம் ஏந்திய அந்தப் படை வீரர்கள்
பாய்ந்தனர் அரசனின் படையினர் மீது.


உணர்ந்தான் கௌசிகன் புஜ வலிமையை விட
உண்மையில் தவ வலிமை சிறந்தது என்பதை.


திரும்பிச் செல்லவில்லை தன் நாட்டுக்கு.
விரும்பினான் பிரம்மன் தேஜசைப் பெற.


கடும் தவம் புரிந்தான் நெடுங்காலம்;
அடைந்தான் இறுதியில் தவ வலிமையை.


“முனிவரைப் பகைப்பது இனிமை பயக்காது!
முனிவரின் கோபம் விளைவிக்கும் சாபம்.


பொன், பொருள், இல்லாத வெறும் சிறுவன்
மண்ணாளும் வாய்ப்பில்லை அன்றோ அரசே!


பலவீனமான சிறுவனை பகையாளி என்று
பலி கொடுப்பது ஆண்மையற்ற செயல்!”


ஏற்றான் அமைச்சர்களின் ஆலோசனையை.
போற்றி விடை பெற்றான் பரத்வாஜரிடம்.


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


3#16b. ViswAamitra


King Kousika ordered his army men to take away the cow KAmadhenu by force. Those men dd not know that it was a divine cow and applied sheer force and tried to take it away.


KAmadhenu got terrified and spoke to the sage Vasishta in a trembling voice, “Oh sage! Please protect me. Do not forsake me!”


Vasishta replied, “How can I forsake you KAmadhenu? I did a service to the king by feeding him and his huge army. He is returning the favor in this ungrateful manner. I am sure you have the power to protect yourself. You can do anything you want to do. You know that!”


KAmadhenu overcame it fear and did a loud ‘hoonkAram’ ( a loud call). A terrible army of soldiers emerged from the cow. These soldiers were both armed and brave. They fought the army of King Kousika and defeated them easily.


Kousika realized the power of penance and decided to earn as much of it as he wanted to. He did not go back to his kingdom but went instead to do penance.


After many disturbances and distractions he finally achieved Brahma tejas by his penance. So please do not underestimate the power of the sages looking so humble and simple.”


YudAjit listened to the words of wisdom of his ministers. He took leave of sage BharatwAj and returned to his country.



 
kandha purANam - pOr puri kANdam

9a. மூவாயிரவர்

அழிந்தான் அக்கினி முகன் போரில்!
விழுந்தான் சூரபத்மன் ஆறாத்துயரில்!

கேட்ட மாத்திரத்தில் சூரனின் மகன்கள்
கோட்டையை அடைந்தனர் மூவாயிரவர்.

“நூறாயிரம் வீரர்களுடன் கூட – ஒன்பது
பேராண்மையாளர்களும் வந்திருக்கையில்

தீ முகன் ஒருவனை மட்டும் போருக்கு
நீர் அனுப்பியது சரியா கூறும் தந்தையே!

வலிவுடையவனையும் ஒன்றாகி விட்ட
மெலிவுடையவர் வெல்வார் அன்றோ?

வருந்தி மனம் கலங்க வேண்டாம் நீ!
இருக்கின்றோம் இன்னமும் பல வீரர்.

எண்ணங்கள் நிறைவேற வேண்டுமா?
எங்களைப் போருக்கு நீர் அனுப்புவீர்.”

துன்பம் ஒழிந்தான் சூரபத்ம அவுணன்.
தன் மக்கள் மூவாயிரவர் மொழிகளால்.

புனைந்தனர் போர்க்கோலம் அனைவரும்;
பூண்டனர் அணிமணிகள், மலர் மாலைகள்.

கடல் என அரவம் எழுப்பி நடந்தது படை;
களத்தைச் சென்றடைந்தது வெகு விரைவில்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

4#9a. The three thousand sons of Soorapadman
.

The news that Agni Mukhan got killed in the battle shattered Soorapadman. His three thousand sons rushed to meet him on hearing this sad news. “One hundred thousand warriors and nine accomplished generals had come for the battle and yet you had sent Agni Mukhan alone to fight with them.

Even a valiant warrior will be defeated by the combined strength of the less valiant warriors. Do not worry now. We are still here and many more people are here too. Allow us to go to the battle. Surely we will make your dream come true”

Soorapadman got consoled to some extent. He allowed the three thousand sons to go to the battle. They got ready for the war front. They wore armors, garlands and marched to the battle field with a huge asura army.

 

Latest ads

Back
Top