The 64 Thiru ViLaiyAdalgaL
62c. சமணரும், சம்பந்தரும்.
# 62 (c). சமணரும், சம்பந்தரும்.
ஓலையைப் பெற்றுக்கொண்ட பிள்ளை,
ஆலவாய் அம்பதிக்குப் புறப்பட்டார்;
உடன் இருந்த திரு நாவுக்கரசர் பற்பல
தடைகள் கூறி தடுத்தார் பயணத்தை.
“சிறு பாலகன் நீர்! சமணர்களோ எனில்
கூறும் பழி பாவங்களுக்கு அஞ்சாதவர்;
நாளும் , கோளும் நன்றாக இல்லை!
வேளை மாறியபின் செல்லலாம் அங்கு!”
“சமணர்கள் தந்த துன்பங்களில் இருந்து,
அமலன் அருளால் பிழைத்த பெருமானே!
நாளும், கோளும் நடப்பது நம்மை எல்லாம்
ஆளும் அரசன் அரன் ஆணைப்படி அன்றோ?
எம்பெருமான் முன்னின்று காப்பார்,
நம்புவீர் மனக்கிலேசம் வேண்டாம் !”
கோளறு பதிகம் என்னும் பாடல்களை,
ஆளுடைபிள்ளை பாடிப் புறப்பட்டார்.
முத்துப் பந்தல் குலங்கி நிழல் தர,
முத்துச் சிவிகையில் பயணித்தார்.
செல்லும் வழியில் க்ஷேத்திரங்களில்,
உள்ளம் கனிந்து பதிகங்கள் பாடினார்.
ஆலவாயை நெருங்கியது அக்குழாம்,
கலகலத்தது அவர்கள் திருச்சின்னம்;
“வந்தான் பரசமயக் கோளரி இங்கே!
வந்தான் சமணஇருள் கெட ஞானபானு!”.
சமணர்கள் வழிமறித்துக் கலகம் செய்ய,
சம்பந்தர் தடைகளை எளிதில் உடைத்தார்;
ஆலவாய் அடைந்து திருக்கோவில் புகுந்து,
வலம் வந்து வணங்கினார் ஆளுடைபிள்ளை.
“காமனைக் காய்ந்து நைத்த தேவனே!
தாமதம் இன்றி எனக்கு நாவலிமை தா!
வாது செய்து சமணக் குரவரை வென்று,
தீதற்ற சைவத்தை மீண்டும் உயிர்ப்பிக்க!”
வாகீச முனிவரின் வேண்டுகோளின்படி,
ஏகினார் அவர் மடத்தில் தங்குவதற்கு,
அன்றிரவு செய்தனர் சமணக் குரவர்கள்,
வென்றிடப் பகைவனை, ஒரு ஹோமம்;
அக்னியை அழைத்து ஆணை இட்டனர்,
“ஆக்கிரமிப்பாய் பகைவன் தங்குமிடம்!”
‘அக்னியை அக்னியால் தகிக்க முடியுமா?’
அக்னி தேவன் அஞ்சி நடுங்கலுற்றான்.
மடச்சமணர்களே அக்னியைக் கொண்டு
மடத்தில் இட்டு எரிக்க முயன்றனர்;
புகை எழும்பியது; அக்னி தயங்கியது;
தகவல் சென்றது ஆளுடை பிள்ளைக்கு!
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
# 62 (C). THE JAINS AND SAMBANDHAR.
Sambandhar wanted to go to Aalavaai. At that time Thiru Navukkarasu was with him and stopped the proposed journey.
He said,” The positions of the planets are unfavorable. The Jain will stop at nothing to have their way. Please postpone your visit until the planetary positions become better. You are no more than a child yet!”
Sambandhar replied,”Sire! you have survived the terrible hardships inflicted on you by the ruthless Jain by the mercy and grace of Lord Siva. He will surely protect me from dangers. The planets are all his loyal servants.”
He sang the collection of songs known as Kolaru pathigam. and left for Aalavaai in his pearl palanquin under the pearl canopy .
On the way he stopped in all the holy places and sang on Lord Siva. They reached near Madurai. The group was shouting,
“He, who is the terror to the other religions, is here!
He, who is the Sun dispelling the dark Jainism, is her!”
The Jain guru blocked their way. But Sambandhar got through their blockade and reached Aaalavaai. He did pradakshinam and worshiped Siva.
He prayed to God,”Oh god, who had burnt Manmathan! Please give me the power and ability to win over the Jain gurus in a debate and revive Saivism as before!”
Vaageesar requested Sambandhar to spend the night in his madam. Sambandhar readily accepted the invitation. That very night the Jain gurus performed an Abhichaara homam.
They ordered Agni to burn down the madam where Sambandhar was staying. Agni shivered at the prospectus, wondering how could fire burn fire?
The gurus carried the fire and placed it in the madam. Fumes of smoke rose high but Agni was hesitating to burn down the madam. Sambandhar was informed of the happenings.