• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

A poem a day to keep all agonies away!

The 64 Thiru ViLaiyAdalgaL

63b. அனல், புனல் வாதங்கள். (1)

# 63. (b). அனல், புனல் வாதங்கள்.

தீய கனவுகள் கண்டன குடும்பங்கள்,
தீய சகுனங்கள் கண்டனர் சமணர்கள்;
தீமையை விரும்பிய தீயவர் குழு,
தீமையை எண்ணி அஞ்சவில்லை.


“மன்னன் சொற்படியே நாம் செல்வோம்,
சம்பந்தனை வாதப் போரில் வெல்வோம்;”
சமணர்கள் மன்னனைக் காணச் செல்ல,
சம்பந்தரும் அவ்விடம் வந்து சேர்ந்தார்.


அரன் அருள் பெற்ற திரு ஞானசம்பந்தர்,
அரசன் அளித்த அரியணையில் அமர்ந்து;
அரச மரியாதையால் அவையில் சிறந்த
உதய சூரியனைப் போல் ஒளி வீசினார்.


சமணக் குரவர்களின் அசூயையோ எனில்,
கணத்துக்குக் கணம் பெருகி வளரலாயிற்று.
பால சூரியனை நிகர்த்த ஞான சம்பந்தரை,
கோப சூரியர்களாக மாறி முறைத்தனர்.


“காக்கை அமரப் பனம் பழம் விழும்,
காக்கைக்கு அதில் என்ன பெருமை?
தானே வந்தது அரசனின் ஜுரம்;
தானே தணிந்தது அரசனின் ஜுரம்!


மருத்து அல்ல உன் கைச் சாம்பல்;
மந்திரம் அல்ல உன் வாய்ச் சொற்கள்.
எல்லாம் நீயே செய்ததாக எண்ணிப்
பொல்லாத செருக்கு அடையாதே!


அனல் வாதத்துக்குத் தயாரா நீ?
அது உறுதி செய்யும் வென்றவரை,
பச்சை ஓலையில் மந்திரம் எழுதி,
பற்றி எரியும் நெருப்பில் இடுவோம்.


பசுமை மாறாது வென்ற ஓலை,
பொசுங்கிப்போனது தோற்ற ஓலை;
சிவபதிகளில் செய்யலாகாது இதை,
சிவன் நடுநிலையாளன் அல்லவே!


ஊருக்கு வெளியே நம் அனல் வாதம்;
ஊர்மக்கள் அனைவர் முன்னிலையில்;
தோற்றவர் வென்றருக்கு அடிமை,
குற்றேவல் செய்து வாழ வேண்டும்.”


அரசனும் சம்பந்தரும் ஒப்புதல் தர,
விரைந்து வெளியேறினர் குரவர்.
மதுரைக்குக் கிழக்கே ஆழ் குழியில்
கதகதக்கும், நெருப்பை வளர்த்தனர்.


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


# 63 (b). The ordeals by fire and water.


The families of the gurus had inauspicious dreams. The gurus themselves saw many bad omens. But they were undaunted by silly sentiments.


“We will go for debate as required and try to win over that boy!” Sambandhar also arrived there at the same time. He was offered a throne by the king. The gifted boy shone like the rising sun – seated on the throne.


The Jain gurus were annoyed to see the glory of the young boy and spoke to him very rudely.

“Often a palm fruit drops down from the tree when a crow sits on it. It is merely a coincidence. The crow should not take the credit of plucking the fruit.

The king developed a high fever all of a sudden. He got well equally dramatically. Why do you take the credit for that? Your holy ash is not a medicine. Your words are not mantras. Do not feel proud that you have performed miracle!


Are you ready for an ordeal with fire? We will write our mantras in green palm leaves and drop them in roaring fire. The leaf which remains fresh wins and the one which gets burnt is defeated.


We can’t have this in any of the Siva kshethrams. Siva is not neutral . We will have the ordeal outside the city in the presence of all the citizens. The loser becomes the slave of the winner for life”


The king and Sambandhar gave their consent. The Jain gurus left in huff to the eastern side of the city. They dug a deep pit and tended a roaring fire in it. They were impatient to get over with the ordeal and wanted to win at any cost.

 
bhagavathy bhaagavatam - skanda 8

8#22c. நட்சத்திர பூஜை

நட்சத்திரமும், நிவேதனப் பொருளும்

1. அஸ்வினி………….நெய்


2. பரணி…………….எள்


3. கார்த்திகை…………சர்க்கரை


4. ரோஹிணி …………தயிர்


5. மிருகசீர்ஷம் ………..பால்


6. திருவாதிரை….. …..கிலாடம்


7. புனர் பூசம்… ……..தயிர் ஏடு


8. பூசம்…………….மோதகம்


9. ஆயில்யம்………….பேணி


10. மகம்………….. நெய்ப் பாலேடு


11. பூரம்……………கம்சாரம்


12. உத்திரம்………..ஆல இலைப் பூரி


13. ஹஸ்தம்………..நெய் வெல்லம் ஹல்வா


14. சித்திரை………..வடை


15. சுவாதி…………..தாமரை ரசகம்


16. விசாகம்…………பூர்ணயம்


17. அனுஷம்… ……..மது சூரணம்


18. கேட்டை…………வெல்லம்


19 மூலம்…………….அவல்


20. பூராடம்………….திராக்ஷை


21. உத்திராடம்.. …….பேரீச்சை


22. திருவோணம்………ராசகம்


23. அவிட்டம்………..அப்பம்


24. சதயம்………….நவநீதம்


25. பூரட்டாதி ………பயிறு


26. உத்திரட்டாதி……மோதகம்


27. ரேவதி……………. மாதுளம் பழம்


உலகம் உய்ய வேண்டும் ! விசாலம். K . ராமன்


8#22c. Nakshatra pooja


The following are the Naivedyas given on each of the 27 Nakshattras, starting from As’vini:–


1. Clarified butter (ghee),


2. Sesamum (Til),


3. Sugar,


4. Curd,


5. Milk,


6. KilAtak (MAlAi of milk),


7. Dadhikoorchi (MAlAi of Curd),


8. Modaka (a kind of sweetmeat, a confection)


9. PheNikA


10. GhritaMaNdaka


11. A sweet meat of wheat flour and gur,


12. Vatapattra,


13. Ghritapura (Ghior),


14. Vataka


15. Kharjura juice (of the date palm),


16. PoorNayam (a sweet meat of Gur and gram),


17. Honey S’oorNa


18. Gur


19. Prithuka,


20. Grapes,


21. Date palms,


22. ChArakAs


23.Apoopa,


24. Navaneeta (fresh butter),


25. Mudga,


26. Modaka, and


27. MAtulinga




 
3#18a. சுயம்வரம் (1)

சுபாஹுவின் சொற்களைக் கேட்ட அரசியார்
சசிகலையை அழைத்துக் கூறினார் அறிவுரை.

“விருப்பத்தை அறிந்தோம் உன் தோழியிடமிருந்து;
வருத்தத்தை அடைந்தோம் அதைச் செவிமடுத்து!

நாடு, நகரத்தை இழந்து விட்டவன் சுதர்சனன்;
நல்ல வாழ்க்கையினையும் இழந்து விட்டவன்.

பந்து, மித்திரர்களால் கைவிடப் பட்டவன்;
பரி, கரி, படை, ஆயுதங்கள் இல்லாதவன்.

வசிக்கின்றான் வனத்தில் ஆசிரமத்தில்,
வாழ்கின்றான் கனிகளை உட்கொண்டு.

உன் கணவனாக வருபவனுக்கு வேண்டும்
உன்னை மணக்கும் தகுதிகள் கண்ணே!

உள்ளனர் பல மன்னர்கள் அறிவு, அழகு,
ஆள், அம்பு, சேனை, செல்வாக்குகளுடன்.

சுதர்சனனின் சகோதரன் சத்ருஜித் உள்ளான்.
அதர்மம் ஆகும் ஒரு நாடோடியை நீ நாடுவது.

சுதர்சனனை அழிக்கத் துடிக்கின்றான் யுதாஜித்;
சுதர்சனனுக்கு உண்டு ஒரு பிராண ஆபத்து!”

கண்ணீர் அருவி பெருகியது சசிகலையிடம்,
அன்னையிடம் கூறினாள் தன் நியாயத்தை.

“மாறாது மனம் யார் என்ன கூறிய போதிலும்;
கூறினாள் அன்னை பராசக்தி அவனை மணந்திட.

வளர்த்து விட்டேன் என் மானசீகக் காதலை;
வரித்து விட்டேன் அவரை என் கணவனாக!

மாறாது என் மனம் என நம்புங்கள் தாயே;
மறுக்காதீர்கள் என் விருப்பத்துக்கு தாயே!”

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

3#18a. The Swayamvaram (1)

The queen listened to the words of the king SubAhu and then spoke to her daughter with great concern. “My dear child! Your father and I came to know of your wishes through your friend. We became very sad on hearing them.

Sudarsanan has lost his kingdom. He does not live a decent kingly life. He has been forsaken by all his friends and relatives. He lives in an ashram and eats the raw fruits and roots. The man who marries you must be suitable for you my dear child.

There are many kings who are good looking, intelligent, rule over vast kingdoms and posess powerful armies. You may marry even Sudarsanan’s step brother king Satrujit. Wishing to marry a pauper living with the hermits in the forest is not acceptable to us.”

Sasikala’s tears flowed copiously. She said her side of the argument to her mother. ”I will not change my mind despite the many reasons put forward by you and the king my father.

I have cherished my secret love for Sudarsanan. I have chosen him as my husband when Devi told me to marry him. Please understand my feelings and do not stand against my wishes dear mother!”

 
kandha purANam - pOr puri kANdam

12a. அரிமுகன்

வட கடலில் ஆசுரம் என்னும் நகரில்
நடத்தி வந்தான் அரிமுகன் தன் ஆட்சியை.


நடந்தவற்றைக் கேட்ட அரிமுகன் உடனே
படையுடன் அடைந்தான் மகேந்திரபுரியை.


“பூதப் படையுடன் வந்தான் சிவகுமாரன்;
சேதப் படுத்தினான் நம் நகரை , நாட்டை!


ஆறுமுகனின் ஆற்றலைக் கெடுத்து
ஆறுதல் அளிப்பாய் நீ எனக்கு!”


அறவுரைகள் கூறிப் பயன் இல்லை!
வெறும் சிறுவன் அல்லவே முருகன்!!


“செல்வேன் போருக்கு இப்போதே நான்;
வெல்வேன் அன்றிப் போரில் மடிவேன்.


பிழைத்து வந்தால் சந்திப்போம் நாம்.
இழந்து விடாதே அனைவரையும்!”


உண்டான் வயிறார அறுசுவையில்.
பூண்டான் கவசமும், போர்க்கோலமும்.


மணப் பொருட்கள் பூசி, மாலை அணிந்து,
அணிகலன்கள் பூண்டு, நீறு தரித்தான்.


ஆயுதங்களை, தெய்வப் படைகளை,
மாயவள் தந்த பாசத்தை ஏந்தினான்;


பத்து நூறாயிரம் குதிரைகள் பூட்டிய
உத்தமமான தேரில் ஏறிச் சென்றான்.


அவுண மள்ளர்கள் புடை சூழ்ந்து வர;
அனைத்து இசைக்கருவிகளும் ஒலிக்க.


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


4#12a. Singa mukhan.


Singa Mukhan, the younger brother of Soorapadman ruled his country Aasuram situated in the Northern Sea. When he learned of the recent happenings, he rushed with his army to Veera Mahendrapuri.

Soorapaman told him, “The son of Siva came here with an army of demons and he has destroyed our country and capital city. My dear brother! Vanquish the army of demons and make me happy again!”

Singa Mukhan felt that things had gone beyond his control or counseling. He decided to obey the command of his elder brother without any protest. He told Soorapadman, “I shall go to the war front now on a “do or die” mission. If I return with victory we shall meet again! I hope you won’t lose everyone of us here in this war!”


He ate tasty food to his fill. He donned the armor and got ready for the battle. He wore flower garlands and smeared the fragrant pastes on his body. He applied the holy ash of

Siva and wore several other ornaments. He carried all the divine astrams and sastrams in his possession along with the pAsam ( noose) given by MAyA Devi.


He got into his chariot drawn by a million horses and went to the war front surrounded by his army which marched to the war music played on the various instruments.
 
The 64 thiru viLaiyAdalgaL

63c. அனல், புனல் வாதங்கள். (2)

# 63 (c). அனல், புனல் வாதங்கள்.

எட்டாயிரம் சமணக் குரவர் தயார்.
பத்தாயிரம் அடியவர்கள் புடைசூழ,


சம்பந்தர் பிரானும் வந்து சேர்ந்தார்;
அன்பர்கள் கூட்டம் அலை மோதியது!


தமக்குத் தெரிந்த மந்திரங்களை எல்லாம்
தமது ஓலைகளில் எழுதினர் குரவர்;


அத்தனை ஓலைகளையும் நெருப்பில் இட,
மொத்தமாக எரியுண்டன அத்தனையும்!


ஞானப் பால் அளித்துக் காத்த அன்னை,
ஞாலம் போற்றும் உமையின் பெயருடைய,


“போகமார்ந்த பூண் முலையாள்” பாடலை
மோகம் இன்றித் தீயில் எறிந்தார் அடியார்.


என்ன விந்தை இது? என்ன மகிமை?
சொன்ன பாடல் ஓலை கருகவே இல்லை!


பசுமை மாறாமல் திகழ்ந்தது அது,
பொசுக்கிடும் செந்தழல் குழியில்!


சுவடியை எடுத்துப் பாடல் கட்டில்
சேர்த்துக் கொண்டார் ஞானசம்பந்தர்.


சுற்றி இருந்த மற்றவர் நகைப்பால்,
பற்றிக்கொண்டு வந்தது குரவருக்கு!


“அனல் வாதத்தில் தோற்றால் என்ன?
புனல் வாதம் செய்வோம் நாம்.


நீருடன் செல்லும் ஓலை தோற்றது!
நீரை எதிர்த்து நீந்துவது வென்றது!


தொண்டு புரிந்து வாழவேண்டும்,
தோற்றவர் வென்றவருக்கு அடிமை!”


” தொண்டு புரிய உள்ளனர் பலர்,
தோற்றவர் கழு ஏறிடச் சம்மதமா?”


சமணக் குரவர்கள் சம்மதித்தனர்;
அமைச்சர் பிரான் நாடினார் தச்சரை,


சூலவடிவில் தயார் செய்தார்கள்,
நீளமரங்களில் பல்லாயிரம் கழுக்கள்.


“இப்போதேனும் மனம் மாறிவிடுங்கள்!
அம்மை அப்பனின் தாள் பற்றுங்கள்.”


ஒப்புக் கொள்ள மறுத்தனர் சமணர்கள்,
“ஓடி ஒளிவது எங்கள் வழக்கமல்ல!”


“உமது அழிவு அல்ல எங்கள் நோக்கம்,
உமது மதத்தை நீக்குவது மட்டுமே!


உயிர்த் தியாகம் செய்ய வேண்டாம்.
உயிர் பிழையுங்கள் அரன் அடி பற்றி.”


எள்ளி நகையாடினார்கள் குரவர்கள்,
பிள்ளை ஞானசம்பந்தரைக் கேலிபேசி;


“அனல் வாதத்தில் வென்ற பின்னும்
புனல் வாதத்துக்கு நீர் அஞ்சுவதேன்?”


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


# 63 (C). THE ORDEAL BE FIRE AND WATER.


Eight thousand Jain gurus were ready. Sambandhar arrived with his ten thousand disciples. The citizens of Madurai were there too.


The Jain gurus wrote all the mantraas known to them and dropped them in the fire. Every single leaf got burnt to ash.


As a three year old boy, Sambandhar had praised Uma Devi after drinking the divine milk from her hands. He threw into fire the palm leaf on which that song was inscribed.


The palm leaf did not get charred and remained as fresh as before. Sambandhar took out the palm leaf
and saved it with his other songs.


The gathering laughed mockingly. The gurus became very angry. “You might have won the ordeal by fire but that is not the end. We will have the ordeal by water.


We will throw our palm leaf manuscripts in water. The leaf which goes along with the water is defeated. The one which swims against the current is wins.The loser must serve the winner life long.”


“I have enough people to serve me. The loser must agree to be impaled. The Jain gurus agreed to this. The minister got ready thousands of strong sharp wooden impaler ready with the help of the carpenters.


Sambandhar told the gurus, “It is not too late even now. You may till live by caching hold of Siva’s lotus feet.”


The gurus said arrogantly, “We don’t run away from challenges.”


Sambandhar said, “Our aim is merely to revive our religion and not put you to death.”

The gurus laughed at Sambandhar, “Are you afraid that you may lose in the ordeal by water?”
 
bhagavathy bhaagavatam - skanda 8

8#22d. மாத பூஜை

1. சித்திரை……….ஐந்து வித உணவுப் பொருட்கள்

2. வைகாசி……….வெல்லம்

3. ஆனி ……….. தேன்

4. ஆடி………….வெண்ணெய்

5. ஆவணி………..தயிர்

6. புரட்டாசி……….சர்க்கரை

7. ஐப்பசி…………பரமான்னம்

8. கார்த்திகை……..பால்

9. மார்கழி………..பேணி

10. தை………… தயிரேடு

11. மாசி…………பசு நெய்

12. பங்குனி……….தேங்காய்

உலகம் உய்ய வேண்டும் ! விசாலம். K . ராமன்

8#22d. Nivedana in the 12 months

1. Pancha KAdya (five kinds of food) in Chaitra

2. The Gur, in the month of Vais’Akh;

3. The honey, in Jyaishtha;

4. The fresh butter, in AshAdha;

5. The curd, in S’rAvaNa;

6. The S’arkarA, in BhAdra;

7. The PAyas’a, in Aas’vin;

8. The pure milk, in KArtik;

9. The PheNee, in AgrahAyaNa;

10. The Dadhi KoorcheekA in Pausha;

11. The clarified butter of cow’s milk, in MAgha, and

12. The cocoanut offerings, in the month of PhAlguna.

These are twelve offerings to be given to Devi in the twelve months respectively.

 
Bhagavathy bhaagavatam - skanda 3

3#18c. தேவியின் கவசம்

தாயின் தவிப்பைக் கண்டான் சுதர்சனன்;
தளரவில்லை தன் மனவுறுதியில் சற்றும்!


“நடப்பது நடக்கட்டும் அம்மா! – எப்போதும்
நல்லதையே நினைப்போம் நம் மனதினில்.


அரச குலத்தில் பிறந்த நான் அஞ்சுவதா?
அடவியிலேயே வாழ்நாளைக் கழிப்பதா?


முடிவு செய்தேன் சுயம்வரத்துக்குச் செல்ல;
மூவுலகின் அன்னை காப்பாள் என்னை!”


அன்னை கோரினாள் தேவியின் கவசத்தால்;
அன்னை பராசக்தி தன் மைந்தனைக் காத்திட!


“முன்னால் இருந்து காக்கட்டும் அம்பிகை;
பின்னால் இருந்து காக்கட்டும் பார்வதி தேவி.


இடர் தரும் வழிகளில் காக்கட்டும் வாராஹி;
கடின செயல் புரிகையில் காக்கட்டும் துர்க்கை;


கோரமான போரில் காக்கட்டும் மஹாகாளி;
பேரவையினில் காக்கட்டும் பரமேஸ்வரி;


மண நிகழ்ச்சியில் காக்கட்டும் மாதங்கி;
மன்னர்கள் நடுவே காக்கட்டும் பவானி;


மலைக் குகையில் காக்கட்டும் கிரிஜா;
மனிதர் கூடும் நாற்சந்தியில் சாமுண்டி;


கனமான வனங்களில் காக்கட்டும் காமகை;
கனமான வாதங்களில் காக்கட்டும் வைஷ்ணவி;


பகைவருடன் போரில் காக்கட்டும் பைரவி;
சகல இடங்களிலும் காக்கட்டும் ராஜேஸ்வரி;”


தனியே அனுப்ப மனமின்றித் தவித்தாள்
தானும் ரதம் ஏறினாள் மகனுடன் அவள்.


வந்தார் குரு பரத்வாஜரும் அவர்களுடன்;
வந்தாள் பணிப்பெண்ணும் அவர்களுடன்;


சுபாஹு வரவேற்றான் விருந்தினர்களை;
சுகமான ஏற்பாடுகள் செய்து கொடுத்தான்.


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


3#18c. Devi’s kavacham


Sudarsanan noticed the anxiety of his mother and said to her, “Mother! Let us hope for the best always. Whatever will be will be! I am the son of a valorous king. I should not know fear.


I should not spend my entire life in hiding away from my enemies. I have decided to go to the swayamvaram.The mother on the Universe will protect me from all dangers.”


Manorama wished him well and prayed to Devi to protect her son always.


“May Ambika protect you from the front.
May Parvathi protect you from the back.


May VArAhi protect you during your travels.
May Durga protect you while performing difficult deeds.


May MahA KAli protect you during the battles.
May Parameswari protect you in a gathering.


May MAthangi protect you during the wedding.
May BhavAni protect you among all the other kings.


May Girija protect you in the mountain caves.
May ChAmuNdi protect you at the crossroads.


May KAmagai protect you in dense jungles.
May VaishNavi protect you in serious discussions.


May Bhairavi protect you in the wars with enemies.
May RAja RAjeswari protect you everywhere all the time.”


She could not let her son go all alone to the swayamvaram. So she got into his chariot along with Sudarsanan, Guru Bharatwaaj and her trusted maid. King SubAhu welcomed them and made their stay very comfortable.



 
kandha purANam - pOr puri kANdam

12b. விண்ணப்பம்

அரிமுகன் போருக்கு வந்துள்ளதை
அறிந்து அஞ்சியது அமரர் கூட்டம்.

முருகக் கடவுளின் அருகே சென்று
உருகி விண்ணப்பித்தது ஒரே குரலில்.

“ஆயிரம் தலைகள் உடையவன் அவன்;
ஈராயிரம் கரங்கள் உடையவன் அவன்;

ஆயிரம் உலகங்களை வென்றவன் அவன்;
ஆயிரம் யோசனை உயரமானவன் அவன்.

மாயையில் தன்னிகர் அற்றவன் அவன்;
மனதில் வஞ்சனை நிறைந்தவன் அவன்.

உலகினை உண்டு உமிழ வல்லவன் அவன்;
உலகினை ஒரு கரத்தால் எடுத்தவன் அவன்.

கொடிய முச்சூலப் படையினன் அவன்;
நடக்கையில் கடலை நகர்த்துபவன் அவன்;

மேருவைக் கையில் எடுத்தவன் அவன்;
சூரபத்மனுக்கு இளைய அவுணன் அவன்.

ஆற்றலில் அண்ணனை மிஞ்சியவனைத்
தோற்கடித்து எம்மைக் காக்க வேண்டும்!”

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

4#12b. The Devas pray to Murugan.


When the Devas learned that Singamukhan had come to the war front, they got scared and started running aimlessly. Then they went to Murugan and prayed to him in unison, “Singa mukhan has one thousand lion faces;

He has two thousand strong hands; He had conquered one thousand worlds; He stands one thousand yojanas tall.He excels in MAyA techniques and is very cunning as well as sharp. He had carried the world with one of his hands.

He can swallow the whole world if he wishes to do so. He is armed with a terrifying trisoolam. When he walks the earth is shaken and the seas get displaced. He can pick up the mount Meru with one palm.

Though he is the younger brother, he is stronger than Soorapadman. Please defeat him in the war and save us!”

 
The 64 Thiru viLaiyAdalgal

63d. தோல்வி, கழு ஏற்றம்

# 63 (d). தோல்வி, கழு ஏற்றம்

வேகமாக வாதத்தில் வெல்ல விரும்பி ,
வேகவதியின் வேகத்தைக் குறைத்தனர்.

மந்திரங்கள் எழுதிய பல ஓலைகள்,
நீந்தின மீண்டும் வைகைநதி நீரில்.


“வேதம் கூறும் நித்திய வஸ்துவும்,
வேதம் கூறும் சத்திய வஸ்துவும்,

சிவன் என்பது உண்மையானால்,
அவன் அருளால் எதிர் நீச்சல் இடு!”


“வாழ்க அந்தணர்” என்ற பாடலை
ஏட்டில் எழுதி நதிநீரில் இட்டார்;

சமணர்கள் ஓலையை நீருடன் செல்ல,
சம்பந்தர் ஓலை எதிர்நீச்சல் இட்டது!


பூ மாரி பெய்தது! ஆரவாரம் ஒலித்தது.
பா ஓலை ஒருகாத தூரம் எதிர்நீச்சல்!

“நாங்கள் தோற்றோம், நீ வென்றாய்!
தாங்களே தம் தோல்வியை ஏற்றனர்.


“உய்யுங்கள் நீங்கள் இப்போதேனும்,
ஐயன் திருவடிகளைப் பற்றுங்கள்!”

” விடுவதற்குத் தயார் எம் உயிரை.
விடமாட்டோம் எங்கள் மதத்தினை!”


தாமே விரும்பிக் கழு ஏறினர் சிலர்;
தாமே விரும்பி நீறு அணிந்தனர் சிலர்,

இரண்டையும் செய்யாத சமணர்களை,
விரட்டிப் பிடித்துக் கழு ஏற்றினர் மக்கள்.


எதிர்நீச்சல் போட்ட ஏடு எங்கே?
புதிராகக் காததூரத்தில் மறைந்தது.

“வன்னியும் மத்தமும்” பதிகம் பாட,
வளர்ந்தது லிங்கம் வில்வமரத்தடியில்.


லிங்கத்தை வலம் வந்தார் சம்பந்தர்,
லிங்கத்தினின்றும் தோன்றினார் மறையவர்;

“குமரனைப் போலவே உள்ளாய் பிள்ளாய்!
குமரன் என் இனிய, இளைய மகன்!” அவரே


திரு நீறு இட்டு விட்டார்- வாழ்த்தினார்
“திருத்தலம் தோறும் சென்று பாடுவாய்!”

ஓலையைத் திருப்பித் தந்துவிட்டு-பின்னர்
வேலை முடிந்தது என மறைந்தருளினார்.


பொற்கோவில் அமைத்தான் மன்னன்,
பொன்னார் மேனியனின் சுயம்புவுக்கு.

திருமண்டபம், கோபுரம், மதில் , வீதி,
திருவேடகம் ஆனது அத் திருத்தலம்.


சம்பந்தருடன் தங்கினான் மன்னன்,
சமயப் பணிகள் செய்தான் ஓராண்டு!

நீங்கினான் மும்மலம் சிவனைப் பூஜித்து,
தாங்கினான் நெஞ்சில் அரன் திருவடிகள்.


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


# 63 (D). DEFEATED AND IMPALED.


The gurus wished to put an end to the contest soon. They reduced the speed of the Vegavathi river. They threw in water the palm leaves with their mantras written on them.

Sambandhar wrote the poem starting with “Vaazga andanar.”

He swore to God,”If it is true that Siva is the sathya and nithya vasthu as proclaimed by the Vedas, let this leaf swim against the current!”


Sambandhar’s palm leaf swam against the current while all the others were swept away by the river. Flowers rained.
There was great jubilation. The gurus accepted their defeat.

Sambandhar told them, “Even now you may live by worshiping Siva”.
But they were too proud and haughty to do so. Most of them climbed on to the impaler. Some others were forced to climb, by the crowd.

The palm leaf went a long distance and disappeared!. Sambandhar sang a pathigam, “Vanniyum maththamun.” A swayambu lingam grew under the vilva vrukshasm.


Sambandhar went round the lingam. An old brahmin appeared from the lingam.”You look just like my lovely younger son!”


He applied viboothi on the boy’s forehead. “You must go round and sing the praise of God.” He returned the palm leaf and disappeared.


The king built a beautiful temple for the swayambu, with mandapam, gopuram, high walls and surrounding streets. The place assumed the name Thiruvedagam.


The king stayed with sambandhar for one year and rendered many services. He got rid of the three doshas of a jivan. He enshrined Siva in the temple of his heart.

 
Bhagavathy Bhaagavatam - skanda 8

8#22e. தேவி வழிபாடு


“தேவி வழிபாட்டின் விதிமுறைகள் எவை?
தேவி காப்பது எங்கனம் நரகக் குழியிலிருந்து?”


நாரணனை வினவினான் நாரத முனிவன்
நாரணன் விளக்கினான் நாரத முனிவனுக்கு.


“ஆராதனை செய்திட வேண்டும் தேவியை
தாளாத நரக வேதனையிலிருந்து தப்புவதற்கு.


வளர் பிறை தொடங்கி பௌர்ணமி வரையில்
தளராமல் செய்யவேண்டும் தேவி பூஜையை.


அந்த அந்தத் திதிகளின் நிவேதனம் செய்து
அந்தணருக்கு அளிக்க வேண்டும் தானமாக.


பூரணையில் செய்திட வேண்டும் ஹோமம்;
பூரணை ஹோமம் போக்கிடும் துக்கங்களை.


செல்ல வேண்டும் இலுப்பை மரத்தடிக்கு,
சுக்கில பக்ஷ திருதியையில் மாதம் தோறும்.


செய்யவேண்டும் மாத பூஜையின் நிவேதனத்தை;
எண்ண வேண்டும் பராசக்தி மரத்தில் உறைவதாக.


விரதம் பூர்த்தி அடையும் தேவி பூஜையால்
விருப்பங்கள் நிறைவேறி விடும் உறுதியாக”.


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K . ராமன்


8#22e. DEVI’S WORSHIP


“What are the rules for Devi worship? How does she save people from falling into the dark deep pits of hell? Sage NAradA asked NArAyaNa and he replied thus:


“Devi should be worshiped to escape being punished in the Hell. Starting on the first day after New Moon, the daily offerings as prescribed must by prepared and offered to Devi first and then presented to worthy brahmins.


This must go on until the full moon day on which a homam must be performed. The homam done on the full moon day completes the vratam and yields all the desired results.


One must go to the madhuka tree on the third day of Sukla pasha every month and offer the monthly nivedanam as prescribed. One must im
agine that Devi resides in that tree. this should continue for one full year to complete the vratam.



 
Last edited:
bhagavathy bhaagavatam - skanda 3

3#18d. விவாதம்

வந்து சேர்ந்தனர் பற்பல தேசத்து மன்னர்கள்;
விந்தையில் ஆழ்ந்தனர் சுதர்சனனைக் கண்டு!

வந்தான் சத்ருஜித் பாட்டன் யுதாஜித்துடன்;
வந்தனர் நகர மக்கள் மன்னர்களைக் காண.

ஒரு துணையும் இல்லாமல் வந்தவனைக் கண்டு
பெரு வியப்பில் ஆழ்ந்தனர் காசி நகரத்து மக்கள்.

பிரகாசிக்கும் மன்னர்கள் இருக்கையில்
பரம ஏழை இவனை வரிப்பாளா இளவரசி?

“நானே அழிப்பேன் சுதர்சனனை!” யுதாஜித் கூற
நன் மொழிகள் பகர்ந்தனர் அங்கிருந்த அரசர்கள்.

“நடக்கப் போவது இச்சா சுயம்வரம் – இதில்
இடமில்லை போட்டிக்கும், பொறாமைக்கும்!

விரும்பியவனை வரிப்பாள் மணப்பெண்;
வீர சுயம்வரம் அல்ல போர் செய்வதற்கு!

பேரனுக்கு முடிசூட்டி, சுதர்சனனை விரட்டி,
மேலும் துன்புறுத்துவது தர்மம் ஆகாது!

இறைவன் ஒருவன் உள்ளான் தர்மம் காக்க;
இறுதியில் தருவான் வெற்றியோ தோல்வியோ.

கருதுவான் சத்தியம், தர்மம் இரண்டினையும்;
தருவான் அதில் வெற்றியைத் தர்மத்துக்கே.

வந்துள்ளனர் பலதேசத்து அரசர்கள் இங்கு;
வந்தவர்களில் ஒருவன் ஆவான் மணமகன்.

அந்த முடிவும் அரசகுமாரியின் கையில்;
அந்த முடிவை ஏற்கவேணும் அனைவரும்.

பகைமையால் சாதிப்பது என்ன எனக் கூறு!
பகைமை வளர்த்தார் அறிவு படைத்தோர்!”

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


 
kandha purANam - pOr puri kANdam

12c. அரிமுகனுடன் போர்

வீரவாகு போர்க்கோலம் பூண்டார்;
நூறாயிரத்து எண்மருடன் சென்றார்.


கடுமையான போர் தொடங்கியது.
கொடுமையான தாக்குதல் நடந்தது.


முன்னணி முறிந்தது பூதர்களின்;
தண்டப் பிரயோகம் செய்தார் சிங்கர்.


சிந்தின அவுணர்களின் பற்கள்;
சிதறின அவுணர்களின் தலைகள்,


தசமுகன் பொருது வீழ்ந்தான்;
துன்முகன் செய்தான் மாயப்போர்.


நூறு நூறு வடிவங்கள் எடுத்தான்;
ஒரு பூதத்தைத் தாக்குவதற்கு.


அறிவுப் படைக்கலம் செலுத்தி
அழித்தார் மாயையை வீரவாகு.


வில்லை ஒடித்து மார்பைத் தாக்கித்
தொல்லை தந்தார் வீரவாகுத் தேவர்.


மயங்கி விழுந்தவன் பின் தெளிந்து,
மாயமறையால் விண்ணில் மறைந்தான்.


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


4#12c. War with the asura.


VeerabAhu donned his armor and got ready for the war. The one hundred thousand and eight warriors accompanied him. A terrifying war broke out between the armies of the demons and the asuras. When the demons suffered a setback, Singar took over and he started using his mighty daNdam with great expertise.


The teeth of the asuras fell off and their heads got smashed and crushed. Dasamukhan fell dead in the war. Durmukhan did war by treachery. He assumed one hundred forms for attacking every single demon.


VeerabAhu shot his arrow of Knowledge (JnAna astram) which removed the deluding MAyA. VeerabAhu broke the bow and hit Durmukhan in his chest who swooned but came his senses soon. He then chanted the secret mantra and disappeared in the sky.

 
The 64 Thiru ViLaiyAdalgaL

64a. மூன்று சாட்சிகள்.

# 64 (a). மூன்று சாட்சிகள்.

தனவான் வணிகன் வாழ்ந்து இருந்தது,
மனம் மகிழும் காவிரிப்பூம்பட்டிணத்தில்;


எல்லாம் இருந்தும் ஒரு குறை இருந்தது,
செல்லம் கொஞ்ச ஒரு குழந்தை இல்லை.


இல்லாளுடன் நற்பணிகள் செய்தான்,
நல்ல மகள் ஒருத்தி வந்து பிறந்தாள்;


வணிகனின் தங்கை மகன் ஒருவன்
வாழ்ந்து வந்தான் மதுராபுரியில்.


“முறை மாப்பிள்ளைக்கே தன் மகளை,
முறைப்படி மணம் செய்விக்கவேண்டும்.


திருமணம் ஆகிவிட்டது மருமகனுக்கு;
ஒரு பாதகமும் இல்லை அதனால்!


சொந்தம் விட்டுப் போகக் கூடாது,
பந்தம் விலகக் கூடாது!” என்பான்.


திடீரென இறந்துவிட்டான் வணிகன்,
உடன் இறந்தாள் கற்புடை மனைவி.


ஒரே நாளில் யாருமே இல்லாத
ஒரு அனாதையாகி விட்டாள் மகள்;


நண்பர்கள் ஓலை அனுப்பினர் அவனுக்கு,
அன்புடன் அவளை ஆதரிக்கவேண்டி!


மாமன் மறைவுக்கு வருந்திய அவன்,
மாமன் இல்லம் சென்று உதவினான்.


மதுரையில் திருமணம் செய்வதாக
முதியவர்கள் முன்பு முடிவானது.


பொன்னும் பொருளும், பிறவும்
முன்னம் மதுரைக்கு அனுப்பினான்;


நடைப்பயணம் தொடங்கினர் அவர்கள்,
நாள் ஒன்றுக்கு ஒன்றரைக் காத தூரம்.


திருப் புறம்பியம் என்னும் ஸ்தலத்தில்,
இரவு தங்கினர் வழியில் ஒருநாள்;


திருக்கிணற்று நீரில் நீராடினான்,
திருக்கோவிலில் லிங்க தரிசனம்;


அன்னம் உண்டது வன்னி மரத்தடியில்,
அண்ணல் கோவில்படியே தலையணை.


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


# 64 (A). THE THREE WITNESSES.


A rich merchant lived in Kaavirip poom pattiNam. He had everything a person could desire but not a child. He and his wife did many good karmas and as a result a very pious daughter was born to them.


The merchant had a nephew living in Madurai. He wanted to marry his daughter to him- even though he was already married. In those days, rich men used to have more than one wife.


Suddenly the merchant died. His wife also died along with him. The poor girl became an orphan. The friends of the family sent a message to the nephew and requested him to marry the girl.


He came there immediately and consoled her. They decided to get married as soon as they reached Madurai. All her earthly belongings were sent to Madurai and they too left by walk.


One night they stayed in Thiruppurambiam for the night. The nephew took bath in the well water, worshiped the Sivalingam, ate food under a tree and slept with the step of the temple as his pillow.

 
bhagavathy bhaagavatam - skanda 8

8#22f. தேவி துதி

“தாமரை இதழ்த் திருவிழியாளே நமஸ்காரம்!
தாங்குகின்றாய் உலகனைத்தையும் நமஸ்காரம்!

மஹேஸ்வரி! மஹாதேவி! மங்கள மூர்த்தினி!
பரமேஸ்வரி! பாபநாசினி! பரதேவதை நீயே!

பிரஜா உற்பத்தினி நீ! பிரம்ம ஸ்வரூபிணி நீ!
மத மூட்டுபவள்! மத உன்மத்தினி! மானகம்யா!

மஹோன்னதம் ஆனவளே! முனித் த்யாயே!
மஹத்துவத்துடன் உலவுகிறாய் ஆதவன் வீதியில்!

அறிந்துள்ளாய் அனைத்தையும் நன்றாக – நீ
அறியாமல் நிகழ முடியாது எதுவும், எங்கும்!

இணையானவள் நீ பிரளயகால மேகங்களுக்கு!
பணிகின்றனர் சுராசுரர் மோஹம் நீங்குவதற்கு!

யமலோகப் பாவங்களை அழிப்பவளே – அந்த
யமலோக பயத்தை பூஜ்ஜியமாக ஆக்குபவளே!

யமனுக்கே அரசியே! யமனையே தண்டிப்பவளே!
யாகத்துக்கு உரியவளே! உனக்கு நமஸ்காரம்!

சமபாவனை கொண்டவள் நீ! சர்வேஸ்வரி!
சர்வசங்க விவர்ஜிதை நீ! சங்க நாசகாரி நீ!

விருப்பு வடிவானவள் நீ! கருணைக் கடல் நீ!
விரும்பும் வடிவானவள் நீ! காமாக்ஷி! மீனாக்ஷி!

மர்ம பேதினி! மாதுர்ய ரூபிணி! மதுரஸ்வர பூஜிதா!
மஹா மந்த்ரவதி! மந்த்ர கம்யா! மந்த்ர ப்ரியங்கரி!

வசிக்கின்றாய் மனிதர்களின் இருதயங்களில்!
வசிக்கின்றாய் பால் வழியும் பல தருக்களில்!

துக்த வல்லியில் வசிப்பவளே! தயாபரி
தாக்ஷண்ய வடிவே! சர்வக்ஞ வல்லபி!”

உலகம் உய்ய வேண்டும் ! விசாலம். K. ராமன்

8#22f. Devi’s stuti

“MangalA, VaishNavee, MAyA, KAla-rAtri, DuratyayA, MahAmAyA, MAtangi, KAli, KamalavAsini, S’ivA, SahasracharaNA, and Sarva mangalaroopiNi are the twelve names of Devi. One name for each of the 12 months must be recited with devotion.

One must sing stotrAs to the MAhes’vari, in that Madhooka tree, thus:
You are lotus-eyed; obeisance to You! You are JagaddhAtri (the Upholdress of the Universe) I bow down to Thee;

You are Mahes’vari, MahADevi, and MahA mangaLa roopiNi,
(Thou art the great Devi, and You do great good to everyone).
You destroy the sins, You give the final liberation.

You are Parames’vari, You are the World’s Mother and You are of the nature of the Highest BrahmA.
You are MadadAtri (the giver of Mada, the Supreme rapture of excessive delight),

You are maddened with Mada the (Excessive Joy);
You can be reached when You are given proper veneration;

You are the the Highest; You are Intelligent; You are meditated upon by the Munis; You dwell in the Sun; You are the Lord of the several Lokas (worlds);

You are endowed with the Highest Knowledge;
You are of the color of clouds of PraLaya (the Universal Dissolution).

You are worshiped by the Gods and the Asuras for the destruction of the Great Moha. So Great Victory to Thee! You are the Rescuer of one from the abode of Death;

You are worshiped by Yama, You are elder to Yama, You are the Controller of Yama You are worshiped by all. Obeisance to you!

You are impartial; You control all; You are unattached; You destroy the people’s worldly attachments;

You are The One to whom all look for the fulfillment of their desires;
You are the Compassion Incarnate. You are, worshiped by the names:
KAmAkshi, MeenAkshi, Marma bhedini, MAdhooryaroopas’Alini;

You are worshiped with the PraNava Om along with all Stotras and the Mantras.
You are of the nature of the Seed MAyA ; You can be realized by repeating the mantra You can be pleased by the deep concentration (NididyAsana) on you.

You can be reached by all men through their minds
You do things that are pleasing to the MahA Deva.

You dwell in the trees As’vattha, Peepul, Neem, Mango, Kapittha , and Jujube.
You are the Palm tree, Arka, Karira and Ksheera trees.

You reside in Dugdha valli(the milky juice of plants);
You are the Compassion Incarnate; and fit to show mercy.

You are sincerity and kindness;You are the Consort of the Omniscient.
So Victory to Thee!

 
8#22g. பலஸ்ருதி

தினம் தேவிக்கு உகந்த இந்தத் துதியினை
மனம் நிறைந்த பக்தியுடன் ஓதுபவர்களுக்கு

ஏற்படாது பிறவிப் பிணியும், அதனால் பயமும்!
ஏற்படாது பகைவர்களால் துன்பமும், துயரமும்!

சித்திக்கும் சதுர் வித புருஷார்த்தங்களும்
தர்ம, அர்த்த, காம, மோக்ஷம் என்பவை.

சித்திக்கும் வேதியருக்கு வேதச் செல்வம்;
சித்திக்கும் க்ஷத்திரியருக்கு வீரச் செல்வம்;

சித்திக்கும் வைசியருக்குப் பொருட்செல்வம்;
சித்திக்கும் சூத்திரருக்கு சுகமான ஒரு வாழ்வு.

சிரார்த்த காலத்தில் விருப்புடன் ஓதினால்
சிறப்படைவர் பித்ருக்கள், முன்னோர்கள்.

பக்தியுடன் தேவியை வழிபடுகின்றவன்
முக்தி அடைகின்றான் தேவியிடம் சேர்ந்து!

விளையும் இக வாழ்வில் காமிய பலன்கள்.
அழியும் அறிந்தும் அறியாதும் செய்த பாவம்.

நல்லறிவினைத் தரும் இறுதி காலத்திலும்;
நல்ல நினைவைத் தரும் இறுதி காலத்திலும்.

பூஜிக்கப் படுவான் தேவியின் பக்தன் – தேவியைப்
பூஜிக்கும் பிற பக்தர்களால், தேவியைப் போலவே!

உண்டாகும் பொன், பொருள், புகழ், பெருமை!
துண்டாகும் நரக பயமும், ஜனன மரண பயமும்!

நோயற்ற வாழ்வு வாழ்வர் தேவியின் பக்தர்கள்;
குறைவற்ற செல்வம் பெற்று அவனியில் இனிதாக!

உலகம் உய்ய வேண்டும் ! விசாலம். K . ராமன்

இத்துடன் தேவி பாகவதம் எட்டாம் ஸ்கந்தம் முற்றுப் பெற்றது.


8#22g. Phala sruti

After the worship, if a person recites this stotra, he derives all sorts merits. He who recites this Stotra daily, becomes free from of all sorts of diseases, pains and passions.
He who wants to possess wealth, gets wealth; He who wants Dharma, gets Dharma; He who wants KAma, gets the objects he desires; He who wants Moksha gets total liberation or Moksha.

The Brahmin who recites this becomes Vedavit, one who knows the Vedas; The Kshatriya gets the victory; The Vais’ya gets wealth and the S’oodra gets happiness.
If this Stotra is read with devotion and attention, the Pitris get ever lasting satisfaction, until the time of universal dissolution.

He goes to the Devi’s Loka, who worships Devi with devotion. When the Devi is thus worshiped, all his desires are fulfilled and all his sins are destroyed. His mind becomes free, fearless, pure and the worshiper himself is respected and worshiped everywhere.

His fear of going into hell is destroyed by the Grace of the Devi; He does not fear anything even in his dreams. By the Grace of MahA MAyA, his sons and his grandsons, his riches and the grains multiply. He lives a healthy long life on the earth with neither fear nor worry.

If this Stotra is read with devotion and attention, the Pitris get ever lasting satisfaction, until the time of universal dissolution.

He goes to the Devi’s Loka, who worships Devi with devotion. When the Devi is thus worshiped, all his desires are fulfilled and all his sins are destroyed. His mind becomes free, fearless, pure and the worshiper himself is respected and worshiped everywhere.

His fear of going into hell is destroyed by the Grace of the Devi; He does not fear anything even in his dreams. By the Grace of MahA MAyA, his sons and his grandsons, his riches and the grains multiply. He lives a healthy long life on the earth with neither fear nor worry.

The eighth skanda of Bhagavathy Bhaagavatam gets completed with this.

 
bhagavthy bhaagavatam - skanda 3

3#18d. விவாதம்

வந்து சேர்ந்தனர் பற்பல தேசத்து மன்னர்கள்;
விந்தையில் ஆழ்ந்தனர் சுதர்சனனைக் கண்டு!


வந்தான் சத்ருஜித் பாட்டன் யுதாஜித்துடன்;
வந்தனர் நகர மக்கள் மன்னர்களைக் காண.


ஒரு துணையும் இல்லாமல் வந்தவனைக் கண்டு
பெரு வியப்பில் ஆழ்ந்தனர் காசி நகரத்து மக்கள்.


பிரகாசிக்கும் மன்னர்கள் இருக்கையில்
பரம ஏழை இவனை வரிப்பாளா இளவரசி?


“நானே அழிப்பேன் சுதர்சனனை!” யுதாஜித் கூற
நன் மொழிகள் பகர்ந்தனர் அங்கிருந்த அரசர்கள்.


“நடக்கப் போவது இச்சா சுயம்வரம் – இதில்
இடமில்லை போட்டிக்கும், பொறாமைக்கும்!


விரும்பியவனை வரிப்பாள் மணப்பெண்;
வீர சுயம்வரம் அல்ல போர் செய்வதற்கு!


பேரனுக்கு முடிசூட்டி, சுதர்சனனை விரட்டி,
மேலும் துன்புறுத்துவது தர்மம் ஆகாது!


இறைவன் ஒருவன் உள்ளான் தர்மம் காக்க;
இறுதியில் தருவான் வெற்றியோ தோல்வியோ.


கருதுவான் சத்தியம், தர்மம் இரண்டினையும்;
தருவான் அதில் வெற்றியைத் தர்மத்துக்கே.


வந்துள்ளனர் பலதேசத்து அரசர்கள் இங்கு;
வந்தவர்களில் ஒருவன் ஆவான் மணமகன்.


அந்த முடிவும் அரசகுமாரியின் கையில்;
அந்த முடிவை ஏற்கவேணும் அனைவரும்.


பகைமையால் சாதிப்பது என்ன எனக் கூறு!
பகைமை வளர்த்தார் அறிவு படைத்தோர்!”


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்




 
kandha purANam - pOr puri kANdam

12d. அரிமுகன் வந்தான்

அவுணர் படையின் பின்னடைவால்
அரிமுகன் வந்தான் பூதப் படைமுன்.

எரி எழ மூச்சை உயிர்த்தான் அரிமுகன்.
எரிந்து போயின பூதர்களின் ஆயுதங்கள்.

மலைகள், மரங்களைப் பெயர்த்தனர்;
மலை போல நின்றவன் மீது வீசினர்.

கயிலையைச் சூழ்ந்த முகிலென அவை
பைய விழுந்தன பஞ்சுப் பொதி போல.

குதித்தான் அரிமுகன் நிலத்தில்;
குலுங்கியது பூமி அதிர்வுகளால்!

எற்றினான் பூதரைத் தேவருலகுக்கு;
எற்றினான் பூதரைக் கடல் நீருக்குள்.

எற்றினான் பூதரை நிலத்தின் மேல்.
எற்றினான் பூதரைத் திசைகள் தோறும்.

அள்ளினான்; தள்ளினான்; எற்றினான்;
உதைத்தான், மிதித்தான், நசுக்கினான்,

களைத்த பூதர்களை வலிமையால்
சளைக்காமல் அழித்தான் அரிமுகன்.

வாழ்க வளமுடன் , விசாலாக்ஷி ரமணி

4#12d. Singamukhan appears.


When the army of the asura suffered a set back, Singamukhan came to the war front. He breathed fire which destroyed all the armaments of the demons. They started throwing on him the uprooted trees and mountains. But he was so huge that these appeared as the clouds surrounding the mount KailAsh and fell down like balls of cotton without hurting him. He jumped down from his chariot. The earth shook under the impact.

He kicked the demons into the sky, into the sea, on the ground and in every direction. He picked them up in bunches, he threw them down, he kicked them, he stamped on them and crushed their bodies under his feet mercilessly. Thus he destroyed the army of the demons effortlessly.

 
The 64 Thiru ViLaiyAdalgaL

64b. சம்பந்தரின் சம்பந்தம்.

# 64 (b). சம்பந்தரின் சம்பந்தம்.

அண்ணல் கோவில்படி தலையணையாக
அயர்ந்து உறங்கிய அந்த மருமகனை,
விஷ நாகம் ஒன்று வீணே தீண்டிவிட,
விஷம் தலைக்கேறி மாண்டுபோனான்.


செய்வது அறியாமல் அழுதனர்,
ஐயன் அருள் வேண்டித் தொழுதனர்;
“மணம் கூட முடியவில்லை, அதற்குள்!”
மனம் உடைந்து அழுதாள் அவள்.


கலவர ஒலிகளைக் கேட்டு விரைந்தார்,
தலத்தில் தங்கி இருந்த ஞானசம்பந்தர்;
கண்களின் அமுதப் பார்வையால் அந்தப்
பெண்ணின் கண்ணீரைத் துடைத்தார் அவர்.


உறங்கி எழுபவன் போல் எழுந்தான்,
பிறவியை மீண்டும் பெற்ற மருமகன்;
“சீலவதி இவள் கரம் பற்றுவாய் உடனே!
கால தாமதம் வீணே செய்வது எதற்கு?”


“பெரியவர் சாட்சியின்றி எங்கேனும் ஒரு
திருமணம் நிகழ முடியுமா கூறுங்கள்?
இங்கு நான் இவளை மணந்துகொண்டால்,
எங்கள் மணத்துக்கு யார் சாட்சி?” என்றான்.


“வன்னி மரமும், இந்தத் தண்ணீர்க் கிணறும்,
அண்ணலின் லிங்கமும் ஆகும் சாட்சிகள்! .
பெண்ணின் துயரைத் துடைத்து அருள்வாய்!
கன்னியை மணம் புரிந்து கொள்ளுவாய்!”


சொன்னபடியே செய்தான் அந்த மருமகன்,
அன்னப் பேடையும் ஆனந்தம் அடைந்தாள்,
மதுரையை அடைந்தனர் புது மணமக்கள்,
புதுமண வாழ்வைத் தொடங்கினர் அவர்கள்.


மூத்த மனைவியும் ஏற்றாள் இவளை,
முத்துப் போன்ற மகன் பிறந்தான்;
வணிகம் நடந்தது நல்ல முறையில்,
வாழ்வே இன்பமானது அவர்களுக்கு!


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


# 64 (B). ASSOCIATION WITH SAMBANDHAR.


When the nephew was fast asleep, a cobra bit him and he died. The girl felt as if struck by a bolt from the blue.They were to be married soon. In the middle of the night and in the middle of nowhere, they could do nothing but pray for mercy and cry.


Thiru Jnaana sambandhar was halting nearby. He heard the cries of despair and reached there. He gazed at the young man and prayed for Siva’s divine grace. The man got up as if from deep sleep. The group became joyous.


Jnaana sambandhar listened to their story and advised the man to marry the girl then and there. Good acts should not be delayed unnecessarily. The man said, “I can’t marry her without any witnesses”


Jnaana sambandhar replied,” This Siva lingam, this tree and this well will be your three witnesses.”


The man agreed and their marriage took place. The first wife accepted the second one without much fuss. So they started a happy life. Business was good. Soon a healthy son was born to them. The young girl lived happily like Lakshmi Devi.



 
64c. குடுமிபிடிச் சண்டை.

# 64 (c). குடுமிபிடிச் சண்டை.

மூத்தவள் மகன்கள் மிகக் கொடியவர்கள்;
முழுமனததோடு ஏற்கவில்லை இளையவனை;
வாக்குவாதங்களும், சண்டை சச்சரவுகளும்,
வளரலாயின அடிக்கடி அம்மக்கள் இடையே.


சிறுவர்களின் சண்டை சிறிது நேரமே!
பெரியவர்கள் நுழைந்தால் பெரிதாகும்,
சிறுவர் பூசலில் அன்னையர் நுழைந்ததால்,
பெரும் புயலில் சென்று நின்றது அது!


“நீ யார்? எந்த ஊர்? என்ன குலம்?
நீலி நீ ஒரு காமக் கிழத்தி அல்லவா?
என் திருமணத்துக்கு அக்னி சாட்சி.
உன் திருமணத்துக்கு யார் சாட்சி?”


“சம்பந்தர் பெருமானின் ஆணைப்படி
எங்கள் திருமணம் நடந்தது உண்மை;
திருப்புறம்பியத்தில் உள்ள கிணறும்,
சிவலிங்கமும், வன்னி மரமும் சாட்சி.”


“நல்ல சாட்சிகள் வைத்துள்ளாய் நீ!
நாப் பேச இயலாத மூன்று பொருட்கள்!
இங்கு வந்து நிரூபிக்கச் சொல்லுவாய்
அங்கு இருக்கும் உன் சாட்சிகளை!”


எள்ளி நகையாடினாள் மூத்தவள்,
உள்ளம் குமுறினாள் இளையவள்;
“கள்ளம் இல்லா என் வாழ்க்கைக்குக்
களங்கம் கற்பிக்கின்றாள் சிவனே!


தாய், தந்தை என யாரும் இல்லை!
சேய் எனக்கு நீயே ஒரு கதி ஆவாய்.
மாமனாக வந்து வழக்கு உரைத்தாயே!
மாமன் மகள் என்னையும் காப்பாற்று!”


பொற்றாமரைக் குளத்தில் நீராடினாள்,
நற்றாள் மலர்களைப் பணிந்தாள்;
வன்னியும், கிணறும், சிவலிங்கமும் – என்
இன்னுயிர் காத்திட இங்கு வரவேண்டும்.”


பெருமான் அருளால் அவை மூன்றும்,
திருக்கோவிலுக்கு வடகிழக்கு திசையில்,
உடனே முளைத்து நின்றன அங்கே!
அடைந்தனர் வியப்பு அவற்றைக் கண்டவர்.


நிந்தனை செய்தனர் மூத்த மனைவியை ,
வந்தனை செய்தனர் இளைய மனைவியை,
“நிந்திக்க வேண்டாம் நீங்கள் இவர்களை!
சிந்திப்பீர்கள் இவர்கள் செய்த நன்மையை!


கற்பின் திறத்தை உலகறியச் செய்த ஒரு
பொற்புடைய மங்கை இவரே அன்றோ?
தாயற்ற எனக்குத் தாயும் இனி இவரே!
தங்கையான எனக்குத் தமக்கையும் கூட !”


பொறாமை மறைந்து பொறுமை வளர்ந்தது;
திருந்திய மகன்கள் விரும்பினர் தம்பியை;
பெருவாழ்வு வாழ்ந்தான் வணிகப் பெருமகன்;
திருமகள் போலத் திகழ்ந்தாள் இளையவள்.


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


ஆலவாய்க் காண்டம் முற்றுப் பெற்றது.


அறுபத்து நான்கு திருவிளையாடல்கள் முற்றின.


# 64 (C). THE SHOWDOWN BETWEEN THE WIVES.


The sons of the first wife were perverted. They disliked the younger wife’s son. There would be occasional quarrels and disputes among them.


The children would fight quickly and also patch up quickly. When the elders enter into their quarrels,
they get blown out of proportions and become permanent issues.


The mothers took the sides of their sons and the quarrel escalated. The first wife asked the second wife,
“Who are you? Where do you come from? What are your caste and creed? After all you are my husband’s lover. I am the one who is legally wedded to him. We married with Agni as the witness. Who is the witness for your wedding?”

The younger wife replied, “We got married in the presence of Thirugnaana Sambandhar. The Sivalingam, the well and the tree at Thiruppurambiyam are the three witnesses for our wedding!”


“How very convenient! None of them could speak nor move. Prove your truth by making them bear the witnesses”
The elder wife laughed at the younger one and ridiculed her. The pious and the straight forward wife got hurt deeply.

“I have not done anything immoral, but I am being projected as an opportunist. I have no one to take up my side and argue on my behalf.
God! You had appeared as the maternal uncle of a helpless child and restored his property to him. You must prove the truth in my words or I have no other choice than to end my life.”

She took a dip in the lotus pond and prayed to Siva, “You are my father and my mother. Produce the three witnesses to prove my words”.


The three immovable witnesses appeared in the north eastern side of the temple immediately! The onlookers were wonder struck.


Now everyone scolded the elder wife and praised the younger wife. The younger wife intervened and told them,” Please do not scold her. She has made my truthfulness known to the world. To me she is like a mother. To me she is an elder sister”


The elder wive was shaken by the magnanimity of this young woman. They both became the best friends after that. The sons too loved one another. The business roared and the family lived happily.


The Thiru Aalavaaik kaandam ends here.


The sixty four divine pranks of lord Siva are completed with this.


 
I am surprised I do not find the English translation of many of my poems. I am sure I did translate every single poem. Have I forgotten to post them in my blogs? I have no idea.

In any case all the blanks and missing posts will be filled up later ASAP.

Life suddenly seems to have jumped to fast forward. Our return travel has been booked for February 8th 2018. Mean time my husband will undergo cataract removal surgery in both eyes.

I bet I will be kept on my toes administering the eyes drops as per the schedule and keeping him engaged in talk since he can't read the news papers nor watch TV nor use the laptop!

I used up my post-cataract-surgery-period in listening to Velukkudi SwamigaL's discs. I am sure it will be neither interesting nor engaging my husband.

I am glad to note the increased traffic in the blog 64 Thiru viLaiyAdalgal.

If everyone makes it a habit to read from my blogs, I can just concentrate on my blogs and save the time spent in this forum, in posting them once again here.
 
Bhagavathy bhaagavatam - skanda 9

9#1a. பஞ்ச சக்திகள்

நாராயணன் கூறினான் நாரத முனிவனிடம்
“நாம் வணங்கும் பஞ்சசக்திகள் இவர் ஐவர்.

துர்கா தேவி, ராதா தேவி, லக்ஷ்மி தேவி,
சரஸ்வதி தேவி, சாவித்திரி தேவி என்பவர்!”

நாரதன் வினவினான் நாராயணனிடம்,
“கூறுவீர் அவர்கள் யார் யார் என்பதை!

கூறுவீர்கள் அவர்கள் இலக்கணத்தையும்,
யாரால் உண்டாக்கப் பட்டவர்கள் என்றும்!

எதனால் பஞ்ச சக்தியர் என்ற பெயர்?
என்ன சிறப்பு பஞ்ச பிரகிருதிகளுக்கு?

வரலாற்றைக் கூறுங்கள் சக்தியர் பற்றி!
வழிபடும் முறைகளையும் கூறுங்கள்!

குணச் சிறப்புக்களையும் கூறுங்கள்!
வணக்கத்துக்குரிய தலங்கள் எவை?”என

“ப்ரக்ருதிகள் ஆவர் ஐந்து சக்திகள்
கூற இயலாத பெருமைகள் கொண்டு.

கூறுவேன் என்னால் இயன்ற அளவுக்கு
கூற இயலாத சக்தியரின் பெருமையை.

‘ப்ர’ இது எழுச்சி, ‘க்ருதி’ இது சிருஷ்டி;
‘ப்ரக்ருதி’ ஆகும் ‘சிருஷ்டியின் எழுச்சி’!

சிருஷ்டியால் மனவெழுச்சி எனலாம்
சிருஷ்டியின் எழுச்சி என்று கூறலாம்.

‘ப்ர’ ஸத்துவம், ‘க்ரு’ ராஜசம், ‘தி’ தாமசம்;
‘ப்ர’ ஆதி; சிருஷ்டிக்கு முந்தியது எனலாம்!”

உலகம் உய்ய வேண்டும் ! விசாலம். K. ராமன்

9#1a. Pancha Prakrutis


NArAyaNan told NArada, “These are the Pancha Prakrutis we worship namely DurgA Devi, RAdhA Devi, Lakshmi Devi, Saraswati Devi and SAvitri Devi.”

NArada asked NArAyaNan,”Please tell me who these five Devis are, define their qualities, who has created them, how they got these names, what is their real greatness, what is their history, how to worship them and the holy places devoted to them, in great detail.”

NArAyaNan replied,”Pancha Prakrutis are the Five Devis. It is impossible to relate their greatness in full. I will expatiate on it to the best capacity of my capacity.

(Pra + kruti) means the (‘rise of’ + ‘srushti’). It can also mean the Power that existed prior to srushti. ‘Pra’ is SAtvic in nature, ‘kru’ is RAjasic in nature and ‘ti’ is TAmasic in nature.”

 
bhagavathy bhaagavatam - skanda 3

3#19a. அரச சபை

கேரளத்து மன்னன் அறிவுரை கூறியதும்
கேலி பேசினான் யுதாஜித் அவனை நோக்கி!

“நீதியும், தர்மமும் அறிந்தவன் நீ தானோ?
நீதியும், தர்மமும் அறிவோம் அனைவரும்.

சுயம்வரத்துக்குத் துணிந்து வந்திருப்பதே
சுதர்சனன் செய்துள்ள அநீதி அல்லவா?

சிங்கத்துக்கு
ரிய பொருளைப் பெறுவதற்கு
சிறு நரி முயல்வது என்ன நியாயம் கூறு!

இளவரசி சசிகலையை மணப்பதற்கு
உளதா ஏதேனும் தகுதிகள் இவனுக்கு?

அரசர்கள் இத்தனை பேர் குழுமி இருக்கப்
பரதேசியை மணமகன் ஆக விடுவேனோ?

ஏற்றதல்ல இச்சா சுயம்வரம் அரசர்களுக்கு;
ஏற்றது வீர சுயம்வரமே அரச குலத்தவருக்கு.

பலவீனமானவன் இளவரசியை அடையாமல்
பலவான்கள் ஆகிய நாம் காப்பாற்ற வேண்டும்.”

சலசலப்பை ஏற்படுத்தினான் யுதாஜித்; அங்கு
கலகம் பரவும் அபாயம் சபையில் தோன்றியது!

அழைத்தான் யுதாஜித் காசிநகர மன்னனை,
“பிழை செய்துவிட்டீர் இச்சா சுயம்வரத்தால்.

இச்சித்தவனுக்காக செய்தீரா இந்த ஏற்பாடு?
இச்சிக்கப் போகின்ற ஒருவனுக்காகவா?

உண்மையை உரையுங்கள் உள்ளபடியே,
மன்னர்கள் சபையில் இங்கே இப்போதே!”

“வரித்து விட்டாள் என் மகள் சுதர்சனனை;
மறுத்துவிட்டாள் மனத்தை மாற்றிக் கொள்ள.

தனியாக வருவதற்கு அஞ்சவில்லை அவன்;
இனி நடப்பவை எல்லாம் தேவியின் செயல்”

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

3#19a. The assembly of kings

When the king of Kerala spoke to YudAjit in this manner, he retorted in a mocking tone. “So you think that only you know about Justice and Truth. We all know about them too. That Sudarsanan has dared to attend the swayamvaram itself an injustice. A cunning fox should not try to steal away a precious thing which rightfully belongs to a mighty lion. Is he really qualified to wed the princess Sasikala?

When powerful and rich kings have assembled here for the swayamvaram, will I stand quietly and let him become the groom? Ichcha swayamvaram is not fit for the kings. Veera swayamvaram is the right type fit for the kings.

We the powerful kings must make sure that the poor pauper prince does not win the hands of the princess.” YudAjit tried to impress his views on the other kings and there was a possibility of unrest and disturbance in the assembly of the Kings.

YudAjit then called SubAhu the king of KAsi and told him thus: “You have committed a grave mistake by arranging for a ichichA swayamvaram. Did you do it to give a fair chance to the pauper prince Sudarsanan or did you do it to give a fair chance to everyone of us here? Tell us the truth here and now”

King SubAhu spoke the truth. “My daughter has selected Sudarsanan as her husband long ago. He too has dared come out to this swayamvaram all alone! Whatever happens now will be according to the wishes of Devi – The Universal Mother!”

 
Links to the other purANas which will NOT appear in this thread any more!
You are most welcome to read them directly from the blogs.
Let me assure you that the BLOG will not GOBBLE you-
even if you are afraid of the very name!

Blogs of Other PurANams:

1.
VinAyaka PurANam part 1 (விநாயக புராணம் - 1)

2.
VinAyaka PurANam part 2 (விநாயக புராணம் - 2)

3. 64 ThiruvilaiyaadalgaL (ஈசனின் 64 திருவிளையாடல்கள் )


4. Sri VenkatEsa purANam
 
Periya purANam is half ready and composing poems for 36 stories completed.

The stories of Appar, Sundarar and Sambandhar will run to many episodes.
So I am reserving them to be written at the very end - after completing all the other stories.

It will be quite some time before they get published in my blog and appear here in this thread. Waiting makes the happiness increase. So let us learn to wait patiently and with enrhusiasm!
 
Bhagavathy bhaagavatam - skanda 9

9#1b. பஞ்ச ப்ரக்ருதியர்

ஐந்து வித ப்ரக்ருதியான சக்தி தேவி பிரமத்துடன்
ஐக்கியம் ஆகும் போது சிற்சக்தியாக ஆகிவிடுவாள்.

விளங்குவாள் சக்தி தேவி சிருஷ்டியின் போது
வலப் புறம் ஆணாக; இடப் புறம் பெண்ணாக!

தோற்றம் இரண்டு உருவங்கள் என்றாலும் – இருவரும்
தோன்றுவர் அக்னியில் உஷ்ணம் போல ஒன்றாகவே!

நித்தியமானது அந்த சக்தி, அழிவில்லாதது அந்த சக்தி,
சத்தியமானது அந்த சக்தி, பிரம்ம ஸ்வரூபமானது அது.

சர்வம் பிரம்ம மயம் என்று உணர வேண்டும் – எனினும்
சிருஷ்டியின் போது இரண்டு உருவாகத் தோன்ற விரும்பி

மூலப் ப்ரக்ருதி என்ற பெண் வடிவாகிய ஈஸ்வரி
சீலம் மிக்க சிவரூப ஆணுருவைத் தோற்றுவித்துத்

தன்னியல்பாக இரண்டாகப் பிரிந்து தோன்றினாள்!
தோன்றினர் ஐவர் மூல ப்ரக்ருதியின் ஏவலினால்!

உலகம் உய்ய வேண்டும் ! விசாலம். K . ராமன்

9#1b. The Pancha Prakrutis

Devi who exhibits as the Pancha Prakrutis will become the chit shakti of Brahman (the intelligence of Brahman) when she gets merged with him inseparably.

During the creation Devi would exhibit a male form in the right side of her body and a female form in the left side of her body. These may appear to be as two different forms – they but coexist as inseparably as the heat and Agni.

That shakti is the permanent one, the indestructible one, the eternal truth and is in fact Brahman in itself. “Sarvam Brahma mayam!”

Devi wants to appear as two separate forms during srushti and she created the male form in the right half of her body.

The other Panch Prakrutis were created by the Moola Prakruti from her own self.

 

Latest ads

Back
Top