• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

A poem a day to keep all agonies away!

bhagavathy bhagavatam - skanda 9

9#1c. துர்க்கா தேவி

தோன்றினாள் அன்னை துர்க்கா தேவி
தன்னை வணங்குபவருக்கு அருளிட!

பிரியமானவள் இவள் சிவபெருமானுக்கு;
பிறவி தந்தாள் இவள் விக்ன விநாயகனுக்கு.

பிரம்ம ஸ்வரூபிணி; விஷ்ணு மாயை இவள்;
பிரம்மனுக்கும், பிறருக்கும் தெய்வம் இவள்;

நிறைந்துள்ளாள் எங்கெங்கும் நீக்கமற – தருவாள்
குறைவின்றி பக்தர்கள் வாழ்வில் மேன்மைகளை!

சுகம், மங்களம், புகழ், மேன்மையை அளிப்பாள்;
துக்கம், அசுபம், பிற பீடைகளை இவள் அழிப்பாள்.

காப்பாள் பலஹீனர்களையும் அசக்தர்களையும்;
கருவூலம் தேஜஸ், பலம், தைரியம் இவற்றுக்கு.

திகழ்வாள் பலவேறு குணங்களின் வடிவாக!
திருமறைகள் உரைக்கின்ற வடிவங்கள் சில;

அறிவு, உறக்கம், பசி, தாகம், ஒளி மற்றும்
பொறாமை, கவனம், கருணை, நாணம், பிரம்மை

லக்ஷ்மி, துஷ்டி, தைரியம், மாயை என்று பல
லக்ஷணங்களாகத் திகழ்கின்றவள் துர்க்கா தேவி.

உலகம் உய்ய வேண்டும் ! விசாலம். K. ராமன்

9#1c. DHURGA DEVI

The Mother of Ganesha and the consort of Lord SivA – Durga Devi is the first and foremost among the Pancha Prakrutis. She is the most auspicious among the five Devis. She is NArAyaNi and VishNu mAyA. She is of the nature of PoorNa Brahman.

This eternal, all auspicious Durga Devi is the Presiding Deity of all the other Devas. She worshiped and praised by all the Devas, Gods, Munis, and Manus.

When Durga Devi is pleased, she destroys all the sorrows, pains and troubles of her devotees who have taken refuge in Her.

She gives them Dharma, name, fame, bliss, happiness and the final Liberation! She is Omnipotent and is worshiped by all the Siddha Purushas.

This Great Devi exhibits herself in many forms as the Intelligence, Sleep, Hunger, Thirst, Shadow, Drowsiness, Fatigue, Kindness, Memory, Caste, Peace, Forbearance, Errors, Beauty, Consciousness, Contentment, Nourishment, Prosperity, and Fortitude.

She is sung in the Vedas as MahA MAyA, of the Nature of the Universe. In reality, She is the S’akti of the whole Universe and the S’akti of Brahman.
 
bhagavathy bhaagavatam - skanda 9

9#1d. லக்ஷ்மி தேவி

சுத்த சத்துவ வடிவினள் லக்ஷ்மி தேவி;
சௌபாக்கியத்துக்குத் தெய்வம் இவள்.

அதிஷ்டான தேவதை செல்வ போகத்துக்கு!
அதிர்ஷ்டத்தால் மாற்றி விடுவாள் வாழ்வை!

அமைதி, அழகு, சாந்தம், ஒளி படைத்தவள்;
ஆறு மன மலங்களையும் விலக்கி விடுவாள்!

பக்தர்களுக்கு அருள் பலிக்கும் தாய்;
பத்மநாபனுக்கு அதீதப் பிரியமானவள்.

பிராணன் ஆவாள் நாரணனுக்கு இவள்;
பிரேமையோடு, பக்தியும் கொண்டவள்.

லக்ஷ்மி, வைகுண்டத்தில் ‘விஷ்ணு பத்தினி’;
லக்ஷ்மி, சுவர்க்கத்தில் ‘சுவர்க்க லக்ஷ்மி’!

லக்ஷ்மி, ராஜ்யங்களில் ‘ராஜ்ய லக்ஷ்மி’;
லக்ஷ்மி, ராஜாக்களிடம் ‘ராஜ லக்ஷ்மி’.

லக்ஷ்மி, இல்லங்களில் ‘க்ருஹ லக்ஷ்மி’;
லக்ஷ்மி, உயிர்களிடத்தில் ‘சோப லக்ஷ்மி’.

லக்ஷ்மி, புண்ணியவான்களிடம் ‘ப்ரீதி லக்ஷ்மி’;
லக்ஷ்மி, கண்ணியவான்களிடம் ‘சாந்த லக்ஷ்மி’.

லக்ஷ்மி, க்ஷத்திரியர்களிடம் ‘கீர்த்தி லக்ஷ்மி’;
லக்ஷ்மி, வைசியர்களிடம் ‘வர்த்தக லக்ஷ்மி’.

லக்ஷ்மி, பாவியர்களிடம் ‘கல லக்ஷ்மி’;
லக்ஷ்மி, வேதாந்திகளிடம் ‘தயா லக்ஷ்மி’!

பல்வேறு பெயர்களோடு விளங்குபவள் இவள்
பல்வேறு நன்மைகளைத் தருபவள் இவள்!

உலகம் உய்ய வேண்டும் ! விசாலம். K . ராமன்

9#1d. LAKSHMI DEVI


The second S’akti of the ParamAtman is named as Lakshmi Devi. She is the Presiding Deity of Wealth and Prosperity and she is of the nature of S’uddha Satva.

She has a very pleasant temperament and is always auspicious and peaceful. She is free from greed, delusion, lust, anger, vanity and egoism – the six defects of a human mind.

She is devoted to Her husband and to her devotees. Her words are very sweet and pleasing. This Devi resides in all the grains and vegetables and so She is the Source of Life to all the beings.

She is residing in VaikuNtA as ‘MahA Laksmi’ – always in the service of Her husband. She is the ‘Heavenly Lakshmi’ residing in the Heavens and the “Royal Lakshmi’ in the palaces of kings and the ‘Griha Lakshmi’ in the households.

She is the glory of the glorious people and the fame of those that have done good and pious work. She that is the prowess of all the powerful kings. She is the trade of the merchants, She is the mercy of the saints, engaged in doing good to others. She is worshiped by all and reverenced by all!

 
Today I am unable to post even one poem.
Look at what appears on the laptop screen!

Internal Server Error

The server encountered an internal error or misconfiguration and was unable to complete your request.
Please contact the server administrator at [email protected] to inform them of the time this error occurred, and the actions you performed just before this error.
More information about this error may be available in the server error log.
Additionally, a 500 Internal Server Error error was encountered while trying to use an ErrorDocument to handle the request.
 
bhagavathy bhaagavatam - skanda 9

9#1g. சாவித்திரி தேவி

நான்கு குல வேதாந்தங்களின் தாய் இவளே.
நன்கு உலகைத் தூய்மை ஆக்குபவள் இவளே.

அன்னை சந்தஸ்ஸு, சந்த்யா வந்தனத்துக்கு!
அன்னை மந்திர, தந்திர, சாஸ்த்திரங்களுக்கு!

வடிவம் ஆவாள் பிராமண குலத்துக்கு;
வடிவம் ஆவாள் ஜபம், தவங்களுக்கு;

வடிவம் ஆவாள் பிரம்ம தேஜஸ்ஸுக்கு;
வடிவம் ஆவாள் தூய திருவுருவத்துக்கு;

வடிவம் ஆவாள் நமஸ்கார ஸ்வரூபிணிக்கு;
வடிவம் ஆவாள் இவள் காயத்திரி தேவிக்கு;

பிரியமானவள் காயத்திரியை ஓதுபவருக்கு;
பிரியமானவள் செந்தண்மை அந்தணருக்கு.

வடிவம் எடுப்பாள் புண்ணிய தீர்த்தமாக – நாம்
அடைவோம் தூய்மை தீர்த்தத்தைத் தொட்டதும்

ஒளிர்வாள் நிர்மலமாக ஸ்படிகம் போல்;
ஒளிர்வாள் சுத்த சத்துவ குண வடிவாக.

வடிவம் ஆவாள் பரமானந்தத்துக்கு!
வடிவம் ஆவாள் பர பிரம்மத்துக்கு !

வடிவம் ஆவாள் பிரம்ம தேஜஸ்சுக்கு;
வடிவம் ஆவாள் பிரம்ம சக்திக்கும்!

தூய்மை அளிப்பாள் உலகனைத்துக்கும்
தூய தன் பாத துளிகளின் மகிமையால்.

உலகம் உய்ய வேண்டும் ! விசாலம். K. ராமன்

9#1g. SAVITRI DEVI


SAvitri Devi is the mother of the four varNas (castes). She is the origin of the six limbs of the Vedas; and of all the Chhandas; and of all the mantras; and of SandhyA vandanam and she is the Root and the Seed of all the Tantras.

She Herself is well versed in all these subjects. She herself an ascetic. She is the Tapas and the Tejas of the Brahmins. She is the Japam. Known by the names of SAvitri and GAyatri, She resides in the Brahma Loka. Her mere touch can purify everything and everyone.

Her color is that of a pure crystal. She is pure S’uddha Sattva. She is of the nature of the Highest Bliss. She is eternal and superior to all. She is of the nature of Para Brahman and can bestow liberation.

She is the Presiding Deity of the Brahma Tejas. The whole world is purified by the touch of her feet.
 
[h=1]9#1h. ராதா தேவி (1)[/h]
ஆதி தேவியாவாள் பஞ்ச பிராணன்களுக்கு
ராதா தேவி என்ற பெயருடைய இந்த சக்தி.


பிராணன்களின் வடிவம் ராதா தேவி;
பிராணனிலும் அதிகப் பிரியமானவள்;


எல்லா தேவர்களின் அழகுருவம் இவள்;
எல்லா ஜீவர்களின் சம்பத்து ராதா தேவி.


எல்லா உடல்களின் இடப் பக்கம் ராதா தேவி
எல்லா நற்குணங்களும் நிரம்பியவள் இவள்.


சாராம்சம் இவளே பராபரங்களுக்கு;
ஆதிமூலம் இவளே பராபரங்களுக்கு;


பூஜைக்கு உகந்தவள் ராதா தேவி;
பூஜிக்கப் படுகின்றவள் ராதா தேவி;


ராசக்ரீடைக்கு அதிதேவதை இவள்;
ராசக்ரீடையின் இறைவியும் இவள்;


கோகுலத்தில் வசிப்பவள் ராதா தேவி;
கோபி வேடம் தரித்தவள் ராதா தேவி;


ஆனந்த மயம் ஆனவள் ராதா தேவி;
அமைதியாக அருள்பவள் ராதா தேவி;


அவாக்கள் இல்லாதவள் ராதா தேவி;
அஹங்காரம் இல்லாதவள் ராதா தேவி;


நிர்குணை ஆனவள் ராதா தேவி;
நிராகாரை ஆனவள் ராதா தேவி;


உலகம் உய்ய வேண்டும் ! விசாலம். K . ராமன்


9#1h. RAdhA Devi


The Fifth S’akti, RAdhA Devi is the Presiding Deity of the Five PrANAs. She is the Life force of everyone. She is dearer to Sri Krishna than his own life!


She is very beautiful like all the other Devis. She dwells in everything. She is happy about of Her good fortune. She forms the left side of Sri Krishna and is equal to him in her tejas and greatness.


She is higher than the Highest. She is highly respected and worshiped everywhere by everyone. She is the Presiding Devi of Sri Krishna’s RAsa LeelA


She is the Grace and the Ornament of the RAsa maNdalam (the dance in a circle in RAsa Leela).



 
bhagavathy bhaagavatam - skanda 9

9#1i. ராதா தேவி (2)

அறிய முடியும் தியானித்து வேதவழிகளால்!
அறிய முடியும் ஞானநோக்கில் பார்க்கையில்!


அணிவாள் நெருப்பினால் சுத்தமான ஆடையை;
அணிவாள் அழகிய அலங்காரப் பொருட்களை.


ஒளிர்வாள் ஒன்றாக ஒரு கோடிச் சந்திரர்கள்
ஒரே நேரத்தில் வானில் உதயம் ஆனது போல.


பற்றுக் கொண்டிருப்பாள் ஸ்ரீ கிருஷ்ணரிடம்;
பக்தியும் கொண்டிருப்பாள் ஸ்ரீ கிருஷ்ணரிடம்.


கரு மேகத்திரளில் வெட்டி ஒளி வீசுகின்ற
ஒரு மின்னல் போன்ற அழகி ராதா தேவி!


திகழ்வாள் பகவானின் பரந்த மார்பினில்
திகழ்கின்ற ஒரு மின்னல் என மேகத்தில்!


அருந் தவம் செய்தான் பிரமதேவன் முதலில்
அறுபதினாயிரம் ஆண்டுகள் ஆத்ம சக்தி பெற.


கனவிலும் காண்பதற்கு அரியவள் – ஆனால்
மனமிரங்கிப் பின்னர் காணும்படிச் செய்தாள்


பிருந்தாவனம் எங்கும் தன்னையே – பிறகு
பிரமன் பூமியிலிருந்து தவம் செய்த போது.


உலகம் உய்ய வேண்டும் ! விசாலம். K. ராமன்


9#1i. RAdhA Devi (2)


RAdhA Devi’s abode is in Goloka and all the Gopikas emerged from Her. Her nature is of the Highest Bliss, the Highest Contentment and of Excessive Joy. RAdhA Devi transcends the three GuNAs namely Sattvam, Rajas and Tamas.


RAdhA Devi is without any particular physical form. She dwells everywhere and in everything – though she remains unconnected with any of them. She is the soul of everyone. She assumes forms only to shower Her favor on Her devotees.


RAdhA Devi can be realized by meditating on her as laid down by Vedas. She can be known only by the JnAna vichAraNa by the highly learned and devoted persons.


Her cloths are fire-proof and She is decorated with many ornaments all over Her body. Her body glows with the cool luminescence of tens of millions of full moons which have risen in the sky all at once.


She gives Krishna Bhakti to jeevAs. She bestows wealth and prosperity on her devotees. Brahma and the other Devas could never perceive Her through any of their sense organs, yet everyone at VrindAvan saw Her very easily.


She is the Gem amongst all Devis. She appears to be a streak of brilliant lightning on the dark rain clouds in the sky when she appears on the broad chest of Sri. Krishna


Brahma practiced several austerities for sixty thousand years to purify Himself by seeing the nails of Her toes but he could not.


At last He succeeded in seeing Her at VrindAvana and became blessed and purified



 
bhagavathy bhaagavatam - skanda 9

9#1j. கங்கையும், துளசியும்

தேவி கங்கை

பிரகிருதியின் பிரதான அம்சம் ஆவாள்
பிரபஞ்சத்தைத் தூய்மையாக்கும் கங்கை.


பிறந்தாள் நீர் வடிவாக விஷ்ணுவிடம் இருந்து;
சிறந்தாள் பாவிகளின் பாவத்தைத் தொலைத்து.


தூய நதிகள் அனைத்திலும் தூயவள் கங்கை;
தூய ஸ்பரிச இன்பம் தர வல்லவள் கங்கை.


வழங்குகிறாள் மோக்ஷத்தை ஜீவர்களுக்கு;
விளங்குகிறாள் படிக்கட்டாக சுவர்க்கத்துக்கு!


பரமசிவனின் செறிந்து, அடர்ந்து, படர்ந்த
விரிசடையில் கங்கை ஒளிர்வாள் நித்திலமாக!


துளசி தேவி


ஒளிர்வாள் நிலவு, பால், வெண்டாமரை போல்
துளசி தேவி, நாராயணனின் பிரிய பதிவிரதை.


பிரகிருதியின் பிரதான அம்ச வடிவினள்.
பத்திர உருவில் விளங்கும் துளசி தேவி


திருமாலின் பிரியை, பூஷண ஸ்வரூபிணி;
திருமாலின் பாதங்களில் தங்குபவள் துளசி.


பூஜைகளுக்கு அத்தியாவசியம் ஆனவள் துளசி;
புண்ணியம் தருவாள் தன் ஸ்பரிச தரிசனத்தால்.


ஒழிப்பாள் பாவக் குவியலை அக்னியாக எரித்து;
அழிப்பாள் ஜீவர்களின் தீய வினைப் பயன்களை.


செய்த கர்மங்கள் வீணாகாமல் பாதுகாப்பாள்;
செய்த கர்ம பலன்களைத் தவறாமல் தருவாள்.


உலகம் உய்ய வேண்டும் ! விசாலம். K . ராமன்


9#1j. Ganga Devi


GangA has sprung from the lotus feet of VishNu. She is eternal. She is the fire burning away the sins of the sinners.
She purifies all those who with faith touch, take bath in or to drink her water. She gives final liberation to the JeevAs leading them easily to Goloka.

She is the holiest among all the holy rivers. She is the beautiful pearl shining on the thick matted hair of MahA Deva.
Ganges is a part of the Moola Prakruti. She purifies all the three worlds.

Tulasi Devi


She shines like the Full Moon, the white lotus and milk! She is pure S’uddha Satva completely free from AhankAra (Ego). She is chaste and the beloved wife of Lord NArAyaNa.


Tulasi Devi is the consort of VishNu and always dwells at his lotus feet. All forms of worship, all austerities, and a Sankalpa is useless unless Tulasi is used in it.


She is the chief of all the flowers. She is holy and gives puNyam to the others. But for Tulasi Devi, there could be no other fire in this Kali Yuga to burn down and destroy the sins of the sinners.


She Herself is of the nature of Fire and the earth is purified by her touch. Without Her all the good acts performed in this world become fruitless.


She bestows liberation to those who want final liberation. She grants all sorts of desires to all sorts of people. Tulasi is Presiding Deity of all the trees in India.


She is considered very superior and auspicious throughout India. Tulasi Devi is the chief factor of Moola Prakruti.



 
bhagavathy bhaagavatam - skanda 9

9#1k. மானஸா தேவி , சஷ்டி தேவி

மானஸா தேவி

பிரகிருதியின் பிரதான அம்சம் மானஸா தேவி.
பிரியமான சிஷ்யை இவள் சிவ சங்கரனாருக்கு.


பிரிய சஹோதரி நாகராஜன் அனந்தனுக்கு.
பிரமிக்க வைக்கும் மஹா ஞான ஸ்வரூபிணி.


நாகர்கள் தொழும் நாகேஸ்வரி மானஸாதேவி.
நாக மாதா; நாக ஆபரணங்களை அணிவாள்.


ஆகும் நாகங்களே மானஸாவின் வாஹனம்;
ஆகும் நாகங்களே மானஸாவின் பஞ்சணை.


தபோரூபிணி மானஸா; தவ பலம் தருவாள்;
தவம் செய்தாள் மூன்று லக்ஷம் தேவ வருடம்.


மாபெரும் புகழ் பெற்றாள் தபஸ்விகளிடையே;
மாபெரும் புகழ் பெற்றாள் பெண்களிடையே.


பரபிரம்மா ஸ்வரூபிணி பிரம்ம தேஜஸ்வினி!
ஜரத்காருவின் பத்தினி, ஆஸ்திகரின் அன்னை!


சஷ்டி தேவி


பிரகிருதியின் பிரதான அம்சம் சஷ்டி தேவி;
பிரகாசிக்கிறாள் தேவசேனையாக சஷ்டி தேவி.


பிரகிருதியின் ஆறாவது அம்சம் சஷ்டி தேவி;
பிறக்கச் செய்வாள் நல்ல சந்ததிகளை நமக்கு.


வளமூட்டுவாள் வாழ்வில் சம்பத்தை அளித்து;
விளங்குவாள் குழந்தைகளின் வளர்ச்சியாக.


விளங்குவாள் யோகினியின் வடிவத்திலும்.
வணங்குவோம் குழந்தையின் நலனுக்காக.


விருப்பங்களை நிறைவேற்றும் கருணாகரி!
வரும் துன்பத்திலிருந்து காப்பாள் சிசுக்களை.


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


9#1k. MANaSA Devi


MAnasA Devî, the daughter of Kas’yapa is the disciple of Lord S’ankara and excells in matters related S’Astras. She is the sister of Ananta Deva, the Lord of Snakes and is highly respected by all the NAgas.


She is very beautiful and is carried about by the NAgas. She is decorated with ornaments of the Snakes; She is respected by the NAgEndras and She sleeps on the bed of Snakes.


She is a Siddha Yogini. She is a Tapasvini and the bestows the fruits of Tapas. She is an ascetic and spent three lakh celestial years in doing severe penance.


She is the Presiding Deity of all the mantras; Her whole body shines with Brahma tejas. She is the chaste wife of Jarat KAru Muni and the mother of the great sage Aastika. She is a part of the moola prakruti.


Sashti Devi

Sashti Devi is the DevasenA – the consort of Lord Skanda. This chaste Devi is the one who blesses us with sons and grandsons and helps our lineage to continue. She is the nurse and the foster mother of each and every child.


She is the sixth part of MoolA Prakruti and is known as Sashti Devi. She lives near to every child as a yogini. Her worship is prevalent throughout the year- everywhere


She protects all children always with the affectionate care of a dear mother. Sashti Devi is a part of Moola prakruti.



 
bhagavathy bhaagavatam - skanda 9

9#1l. சண்டிகை, காளிகா

மங்கள சண்டிகை

பிரகிருதியின் முகத்திலிருந்து தோன்றி
பிரியத்துடன் சர்வ மங்களமும் தருபவள்.


வடிவம் மங்களகரமாகும் சிருஷ்டிக்கும் போது!
வடிவம் ரௌத்திர ரூபிணி சம்ஹரிக்கும் போது!


மங்கள சண்டிகை என்ற பெயரின் காரணம்
மங்கள வாரம் இந்தத் தேவி தொழப்படுவது.


புத்திரன், பேரன், புகழ், செல்வம் இவை தந்து
பேருவகை அளிக்கின்றாள் பெண்மணிகளுக்கு.


காளிகா தேவி


தோன்றினாள் துர்க்கையின் முகத்திலிருந்து;
தோன்றினாள் சும்ப, நிசும்பரை அழிப்பதற்கு.


கோபமே வடிவான சம்ஹார சக்தி இவள்.
கோபத்தினால் அழிக்க வல்லவள் உலகை.


தாமரை இதழ் விழிகள் கொண்டவள்;
தானும் சமம் ஆவாள் துர்க்கா தேவிக்கு.


கோடி சூரியப் பிரகாசம் கொண்டவள்;
ஈடாக மாட்டார் பிற சக்தியர் காளிக்கு.


சித்திகளைத் தருபவள் காளிகா தேவி;
பக்தி கொண்டவள் ஸ்ரீ கிருஷ்ணனிடம்.


குணங்களில் சமம் ஸ்ரீ கிருஷ்ணனுக்கு!
நிறத்தினில் சமம் ஸ்ரீ கிருஷ்ணனுக்கு!


வீர விளையாட்டு அசுரருடன் போரிடுதல் !
தர வல்லவள் சதுர்வித புருஷார்த்தங்களை!


ஆராதிக்கின்றனர் காளியை போக மோக்ஷகாமிகள்;
அடைகின்றனர் காளியிடம் விரும்புகின்ற வரத்தை.


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


9#1l. MangaLa ChaNdika


Devi MangaLa ChaNdigka goes from house to house on land or through water or in air, doing great good to all the people. She has emerged from the face of Prakruti Devi.


She appears all auspiciousness at the time of creation and assumes a furious form at the time of destruction. She is worshiped on every Tuesday and She blesses women with good sons, grandsons, wealth, prosperity, fame and also grants them all their wishes.


KAlikA Devi


The lotus-eyed KAlikA Devi – who can destroy all this universe in a moment – sprang from the face of DurgA Devi in order to kill the demons Sumbha and Nisumbha.


She is half as fiery and energetic as DurgA Devi herself. The beauty and splendor of her body make one imagine that millions of suns have risen simultaneously.


KAlikA is the foremost of all the Saktis; She is more powerful than any of them; She grants success to her devotees; She is of Yogic nature; She is deeply devoted to Krishna; She is fiery and valorous like Krishna.


Fighting with the demons is just a sport for her. When pleased with the worship, She can grant the four fruits of human existence namely Dharma, Artha, KAma and Moksha.



 
bhagavathy bhaagavatam - skanda 9

9#1m. பிற தேவியர் (1)

பூமி தேவி

துதிக்கின்றனர் பூமி தேவியைப் போற்றி வணங்கி
வேதியர்கள், முனிவர்கள், தேவர்கள், தெய்வங்கள்.

அடிப்படை ஆனவள் இவள் அனைத்துக்கும்;
ஆதாரம் ஆனவள் இவள் அனைத்தினுக்கும்.

ஔஷத ரூபிணி; இரத்தின கர்ப்பிணி இவள்!
ஒரே ஜீவனோபாய ரூபிணி உலகுக்கு இவள்!

தருவாள் சகல சம்பத்துக்களையும் உலகுக்கு;
தருவாள் சகல நலன்களையும் உலகினுக்கு.

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

9#1m. BHOO DEVI


VasundharA Devi ( The Earth) is a part of Mool Prakriti. Brahma, Devas, Munis, Manus and all men sing her praise and worship her.

She is the one who supports everyone and everything. She is the one who is filled with all grains. She is the source of all gems, all jewels and all the precious metals. In fact she gives everything to the creatures on Earth which they need for living well.

The subjects and kings worship Her and praise Her. All the JeevAs live on the surface of the earth. She bestows wealth and prosperity on all of them.

 
bhagavathy bhaagavatam - skanda 9

9#1n. பிற தேவியர் (2)

அக்னி தேவனின் மனைவி ஸ்வாஹா தேவி;
அவிசைத் தர இயலாது இவள் உதவியின்றி.


யக்ஞ பத்தினிகள் தக்ஷிணா தேவி, தீக்ஷா தேவி;
யக்ஞங்கள் வீணாகும் இவர்களைத் தொழாவிடில்.


பித்ருக்களின் பத்தினி ஸ்வதா தேவி – செய்யும்
பூஜைகள் வீணாகும் ஸ்வதாவைத் தொழாவிடில்.


வாயு பத்தினி ஸ்வஸ்தி தேவியைத் துதிப்போம்
வாயாரத் தானம் தரும் போதும் பெறும் போதும்.


புஷ்டி தேவி
ஆவாள் ஸ்ரீ கணேசரின் பத்தினி;
புஷ்டி தேவி இன்றேல் நலிந்து மெலிவோம்!


துஷ்டி தேவி
ஆவாள் ஆதிசேஷனின் பத்தினி;
துஷ்டி தேவி தருவாள் திருப்தியும், ஆனந்தமும்.


சம்பத்து தேவி
ஆவாள் ஈசான பத்தினி – வறுமை,
சம்பத்து தேவி இன்றேல், தலை விரித்தாடிடும்!


த்ருதி தேவி
ஆவாள் கபிலதேவரின் பத்தினி;
த்ருதி தேவி இன்றேல் உறுதி என்பதே இராது.


சதி தேவி
ஆவாள் சத்தியர் பத்தினி – இல்லை,
சதிதேவி இன்றேல், உற்றார்கள், உறவினர்கள்.


தயாதேவி, பதிவிரதா தேவி
மோக பத்தினிகள்
பயன் இராது இந்த தேவியர் இல்லை என்றால்.


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


9#9n. The other Devis (2)


SwAhA Devi
is the wife of Agni (Fire), and the whole Universe worships Her. Without her, the Devi can never take any oblations.


DakshiNA Devi and and DeekshA Devi
are both the wives of Yajna (Sacrifice). They are honored everywhere. Without DhakshiNA (the fees given at the end of the Sacrifice) no sacrificial ceremonies can be duly completed.


The Devi SwadhA is the wife of the Pitris. All worship this Devî SwadhA whether they are Munis, Manus, or men. If this mantra SwadhA is not uttered while making an offering to the Pitris, it will become useless.


The Devi Swasthi is the wife of the VAyu Deva; She is honored everywhere in the Universe. Without this Svasti Devi, neither giving of DAnam nor receiving of DAnam will be effective.


Pushti Devi
(Nourishment) is the wife of Ganapathi. All the world worships Pushti Devi. Without Pushti Devi, women and men will become weaker and weaker.


Tushti Devi
(Satisfaction, Contentment) is the wife of Ananta Deva. She is praised and worshiped everywhere in this world. Without Her no one in the world can ever be happy or feel contented.


Sampatthi Devi
is the wife of EesAna Deva. The SurAs and the men worship Her alike. Were it not for this Devi, all the world would be immersed in dire poverty.


Dhrithi Devi
is the wife of Kapila Deva. She is honored equally in all places. Were it not for Her, all the people in this world would be impatient and agitated.


Sathi Devi
is the wife of Sathya Deva (Truth). She is endearing to the whole world. The liberated ones worship Her always. Were it not for the truth loving Sati, the whole world would have lost the treasure of friendship. “


DhayA Devi
(Mercy) and PativrathA Devi – endearing to the whole world – are the chaste wives of MohA DevA. They are liked by all. Were it not for these Devis, all the world would have become hopeless.



 
9#1p. பிற தேவியர் (3)

ப்ரதிஷ்டா தேவி என்பவள் புண்ணியதேவ பத்தினி ;
ப்ரதிஷ்டையை வழிபடாதவர்கள் நடைப் பிணங்கள்.

சம்சித்தி தேவி, கீர்த்தி தேவி
, சுகர்மத்தின் பத்தினியர்;
புண்ணிய சீலர் – தொழ மறந்தால் புகழ் நசித்து விடும்.

கிரியை தேவி
ஆவாள் உத்தியோக பத்தினி
திரியும் உலகம் சோம்பி – இவள் இன்றேல்!

மித்யா தேவி
ஆவாள் அதர்ம பத்தினி
மித்யா தேவியின் பக்தர்கள் துஷ்டர்கள்.

பாழ்வெளியாகும் உலகம் இவள் இன்றேல்;
பல்வேறு உருவங்கள் தாங்குவாள் இவள்.

உருவம் அற்று இருப்பாள் கிருத யுகத்தில்;
உருவம் நுண்ணியதாகும் திரேதா யுகத்தில்;

உருவம் பூரணமாகும் துவாபர யுகத்தில்;
திரிவாள் எங்கும் சஹோதரன் கபடனோடு.

சாந்தியும், லஜ்ஜையும்
, சுசீல பத்தினிகள்;
இந்த இருவரை ஆதரிப்பார் அனைவரும்.

பித்துப் பிடித்ததுபோல ஆகிவிடும் உலகம்
உத்தம பத்தினிகள் இவர்கள் இல்லாவிடில்.

புத்தி, மேதை, த்ருதி
, தியான பத்தினிகள்;
சித்த பிரமை பீடிக்கும் இம்மூவரும் இன்றேல்!

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

9#1p. THE OTHER DEVIS (3)


PratishtA Devi
(Goddess of Fame and Celebrity) is the wife of PuNya Deva (God of Merit). She gives merits to persons in accordance to their devotion to Her. Were it not for Her, all the persons would roam around like dead persons – even while they were living.

Keerti Devi
(Goddess of Fame) is the wife of Sukarma ( God of Good works). She herself a Siddha and all the people honour Her with great reverence. Were it not for Her, all the persons in this world would have been dead, devoid of any fame and without leaving behind a good name.

KriyA Devi
(Goddess of Work, Efforts and Action) is the wife of “Udyoga” (God of Enthusiasm). All honor Her greatly. Were it not for Her, the people would not have any rules regulating what they do.

Mithya Devi
(Falsehood) is the wife of Adharma (God of Unrighteousness). She is honored greatly by all the cheats of this world. Were she not liked by them, then all the cheats would become extinct and the world would be rid of them.

She was not visible to anybody in the Satya Yuga. Her subtle form became visible in the TretA Yuga. When the DvApara Yuga came, She became half developed. And at last when the Kali Yuga came, She is fully developed. With her wicked brother Deceitfulness, She roams around from house to house in Kali Yuga.

ShAnti and LajjA
(Peace and Modesty )are both the wives of the God of good behavior. Were they not existent, all in this world would have turned out deluded and mad.

Buddhi, Meda, Dhriti
(Intelligence, Genius and Fortitude) these three are the wives of GnAna (God of Knowledge). But for these three Devis, every one would become stupid and insane.

 
bhagavathy bhaagavatam - skanda 9

9#1q. பிற தேவியர் (4)

காந்தி ஆவாள் தரும பத்தினி – ஆதாரம்
காந்தி பிரபஞ்ச வடிவான பரமாத்மாவுக்கு.


மதி பத்தினி சோபா ஒளி உருவம் ஆனவள்
மதிக்கப் படுகின்றாள் பெண்ணாக, தானியமாக.


ருத்திர பத்தினியர் காலாக்னி தேவி, நித்ரா தேவி
மொத்த உலகத்தையும் வசப்படுத்த வல்லவர்கள்.


காலத்தின் பத்தினியர் ஆவர் இம்மூவர்.
காலத்தின் பத்தினிகள் பகல், இரவு, சந்தி.


காலத்தைக் கணிக்க இயலாது பிரமனால்
கால பத்தினிகள் இவர்களின் உதவியின்றி.


லோப பத்தினியர் ஆவர் பசியும், தாகமும்;
லோகத்தை வாட்டுவர் ஜனங்களைப் பீடித்து!


பிரபையும், தாஹிகையும்
தேஜசின் பத்தினிகள்;
பிரமனும் படைக்க இயலான் இவர்கள் இன்றேல்!


கால கன்னியும், ஜரையும்
ஜுர பத்தினியர்;
நிலவும் உலகில் கலகம் இவர்கள் இன்றேல்.


தந்தரையும், ப்ரீதியும்
புத்திரிகள் நித்திரைக்கு
தந்தரையும், ப்ரீதியும் பத்தினிகள் சுகத்துக்கு.


வியாபித்துள்ளனர் இருவரும் எங்கெங்கும்;
வியாமோஹத்தில் ஆழ்த்துவர் எல்லோரையும்!


சிரத்தையும், பக்தியும்
வைராக்கிய பத்தினியர்;
நிறைந்திருப்பர் இருவரும் ஜீவன் முக்தரிடம்.


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


9#1q. THE OTHER DEVIS (4)


KAnti
is the wife of Dharma Deva. She is of the nature of Beauty and is very charming. Were it not for Her, ParamAtmA would not get any place to rest. This Devi is of the nature of splendor and loveliness. She is respected, worshiped and revered by everyone everywhere.


NidrA Devi and KAlAgni Devi
are the wives of Rudra Deva. All the Jeevas spend all their nights with NidrA Devi. KAlAgni is the universal conflagration at the break-up or dissolution of the world.


The Night, The Day and The SandhyA Kaalam
are the three wives of KAla (Time). Even the Creator would not be able to reckon time without their help.


Hunger and Thirst
are the wives of Lobha (Covetousness). They are extremely powerful and can affect and afflict every living creature in the universe.


Splendor and The Ability To Burn
are the wives of Tejas (Fire). Without these, the Lord of the world could never have created and established order in this universe.


Death and Old age
are the daughters of the KAla, and the dear wives of JvarA ( The disease). But for these two Devis, confusion will prevail in all the creation.


The TandrA (Drowsiness, Lassitude) and Preeti (Satisfaction) are the daughters of NidrA devi (Sleep). They are the dear wives of Sukha (Pleasure). They are present everywhere in every living thing in this world.


S’raddhA
(Faith) and Bhakti (Devotion) are the wives of VairAgyam (Dispassion). With the help of these two Devis, all the persons can become liberated even while living and become the Jeevan Muktas.



 
bhagavathy bhaagavatam - skanda 9

9#1r. பிற தேவியர் (5)

9#1r. THE OTHER DEVIS (5)

1). Aditi Devi………The Mother of the Gods,

2). Surabhi…………The mother of cows;


3). Diti Devi……….The mother of the Daityas;


4). Kadru…………..The mother of the NAgas (serpents);


5). VinatA………….The mother of BIRDS.


6). RohiNi………….The wife of the Moon,


7). SamjgnA…………The wife of the Sun;


8). S’ataroopA………The wife of Manu;


9). S’achi………….The wife of Indra;


10). TArA…………..The wife of Brihaspati;


11). Arundhati………The wife of Vasishta;


12). AnasooyA……….The wife of Atri;


13). Devahooti………The wife of Kardama;


14). Prasooti……….The wife of Daksha;


15). MenakA…………The mind born daughter of the Pitris


16). LopAmudrA…….. The wife of Agasthya


17). Kunti………….The wife of Kubera,


18). VindhyAvali…….The wife of King Bali;


19). Yojana GandhA…..The chaste mother of VyAsa,


20). Usha…………..The daughter of BANA;


21). ChitralekhA…….Usha’s companion and friend


22). ReNukA…………The mother of Paras’urAma;


23). RohiNi…………The mother of BalarAma,


Damayanthi, Yas’odhA, Devaki, GAndhAri, Draupadhi, S’aivyA, Satyavathi, the mother of RAdhA,

Mandhodhari, Kaus’alyA, SubhadhrA, Revathi, SathyabhAmA, KALindhi, LaksmaNA, JAmbavathi,

NAgnajithi, MitrabhindA, LakshaNa, RukmiNi, SeethA, the Laksmi incarnate, PrabhAvathi,

BhAnumathi, the Sathi MAyAvathi, KAli, Sathi DurgA and many other ladies are the parts of

Prakriti.


In fact every girl and a woman is a part of Prakruti.


 
bhagavathy bhaagavatam - skanda 9

9#1s. பெண்ணினம்

பிரபஞ்சத்தில் உள்ள பெண்கள் அனைவரும்
பிரகிருதியின் கலையம்சத்தில் தோன்றியவர்.


பெண்ணை அவமதிப்பது பிரகிருதியை அவமதிப்பது!
பெண்விடும் கண்ணீர் மாறும் கொல்லும் படையாக.


மங்கலப் பெண்டிருக்கு, எட்டு வயது கன்னியருக்கு,
மங்கலப் பொருட்கள் தந்து வணங்கிட வேண்டும்.


சமம் ஆகும் இவர்களை இங்ஙனம் வணங்குவது
சர்வேஸ்வரி தேவியை உபசரித்து வழிபடுவதற்கு.


நற்குணங்களும், நன்னடத்தையும் கொண்டவர்
கற்புக்கரசிகள் ஆவர்; உத்தமப் பெண்கள் ஆவர்.


தோன்றியுள்ளனர் பிரகிருதியின் சத்துவ அம்சமாக.
இன்பமாக இல்லப் பணிகளைச் செய்யும் இனியவர்!


மத்திம ஸ்த்ரீக்கள் ரஜோ குணம் மிகுந்தவர்கள்;
உத்தம சுக போகங்களை நாடும் சுயநலவாதிகள்.


அதம ஸ்த்ரீக்கள் தாமச குணம் மிகுந்தவர்கள்;
ஏதேதோ குலங்களில் பிறந்தவர்கள் இவர்கள்.


துர்குணங்கள் மலிந்து மிகுந்தவர்கள் இவர்கள்;
ஆர்வம் வம்பு தும்புகளில்; யாருக்கும் அடங்கார்!


நடத்தை கெட்ட அத்தனை பெண்களும் அதமர்.
குடியைக் கெடுக்கும் அத்தனை பேரும் அதமர்!


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


9#s. The female gender


All the creatures belonging to the female gender, everywhere in the Universe, form parts of Prakruti. So to insult any woman is to insult the Prakruti Devi herself.


If one worships a chaste Brahmin woman, who has her husband and son living, by presenting her with new clothes, ornaments, and sandal paste, he is actually worshipping Prakruti Devi Herself.


If a Vipra (Brahmin) worships an eight year old virgin girl and presents her with new clothes, ornaments and sandal paste, he too is worshipping The Prakruti Devi Herself.


The best (utthama), the mediocre (the madhyama) and the worst (adhama) women have all sprung from Prakruti Devi. Those women that are sprung from Devi’s Sattva GuNa are all very good, soft natured and chaste.


Those that are sprung from Devi’s Rajo GuNa are the mediocre women very much attached to worldly enjoyments and carnal pleasures and who are always extremely self centered.


Those that are sprung from Devi’s Tamo GuNa are recognized as the worst type of women. They are cheats and ruin their families. They are fond of their own free will and ways and are extremely quarrelsome.


Such women become prostitutes in this world and ApsarAs in the Heavens. The Hermaphrodites are parts of Prakriti but they too are born out of Tamo GuNas.



 
bhagavathy bhaagavatam - skanda 9

9#1t. தேவி வழிபாடு

இயல்பானதே இங்கு தேவி வழிபாடு – தேவியால்
இழந்த அரசுரிமையைப் பெற்றான் சுரத மன்னன்.


ஸ்ரீ ராமன் வணங்கினான் பராசக்தி தேவியை,
சீதையை மீட்கவும், ராவணனை வெல்லவும்.


தாக்ஷாயணியாகப் பிறந்தாள் தேவி தக்ஷனுக்கு.
தாக்ஷண்யம் இன்றி அழித்தாள் தக்ஷ யாகத்தை.


இகழ்ந்தவர்களுக்கு அளித்தாள் தண்டனை!
புகழுக்காக உடலைத் துறந்தாள் தாக்ஷாயணி!


பிறந்தாள் தன் அம்சங்களுடன் உலகில் வந்து;
சிறந்தாள் சிவபெருமானை மீண்டும் மணந்து!


தோன்றினாள் துர்க்கையிலிருந்து லக்ஷ்மி.
மங்களன் தொழுதான்; மற்றவர் தொழுதனர்.


அஸ்வபதி வணங்கினான் சாவித்திரி தேவியை;
அனைவரும் வணங்கினர் சாவித்திரி தேவியை!


வாணி தோன்றியதும் வணங்கினான் பிரமன்;
வாணியை வணங்கினர் தேவர், முனிவர், மனிதர்.


ராதையைத் தொழுதான் ஸ்ரீ கிருஷ்ணபிரான்,
ராச மண்டலத்தில் கார்த்திகைப் பௌர்ணமியில்!


வணங்கினர் கோபர், கோபியர், பசுவினங்கள்.
வணங்கினர் அதன் பின் தேவர்கள், முனிவர்கள்.


கிராமங்களில் கிராம தேவதையின் வழிபாடு;
நகரங்களில் நகர தேவதையின் வழிபாடு;


வனங்களில் வனதேவதையின் வழிபாடு;
எனப்படுபவை அனைத்தும் தேவி வழிபாடே!


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


9#1t. Worship of Devi


In BhArata Varsha, Devi worship is very common. King Surata worshiped the Moola Prakruti DurgA Devi – the Destroyer of all the evils and won back his kingdom and rulership.


S’ri RAma worshiped Devi when he wanted to kill RAvaNa, free Sita and bring her back to Ayodhya. Devi’s worship exists in all the three worlds.


Devi was first born as the daughter of Daksha. She destroyed the Daityas and DAnavas, on hearing the abusive words uttered against Lord Siva, by Daksha Her own father. She gave up Her body and took birth as Parvati. She married Siva once again.


Lakshmi Devi came out of DurgA. Mangala RAjan, the King Mars first worshiped Her. Since then both men and Deva began to worship Her.


The King As’vapati first worshiped SAvitri Devi; and since then the Devas, Munis and all the people began to worship Her.


When the Devi Sarawasti was born, the BhagavAn BrahmA first worshiped Her. Munis, Devas all began to
worship Her.


On the full moon night of the month of KArtik, S’rî KrishNa worshiped Devi RAdhA within the RAsa MaNdalam, in the region Goloka. All the Gopas and Gopis (cow-herds), all the boys, girls, Surabhi, the queen of the race of the cows, and the other cows worshiped Her.


After BrahmA, the other Devas and the Munis, everyone began to worship S’ri RAdhA with devotion offering her dhoopam, deepam and neivedhyam.


In the villages we have the village Deities, in the forests we have the forest Deities and in the cities we have the city Deities. All these are the various forms of worship of the same Devi.



 
bhagavathy bhaagavatam - skanda 9

9#2a. ஐந்து பிரகிருதிகள்

நாரதன் வினவினான் நாரணனிடம் இதனை
“கூறுவீர் பராசக்தி சிருஷ்டியை முன்னிட்டு!


எப்படித் தோற்றம் எடுத்தாள் முதன் முதலில்?
எப்படிப் பிரிந்தாள் ஐந்து தேவிகளாக அதன் பின்?


அவதாரம், தியானம், பூஜை, கவசம், பிரார்த்தனை,
துதி, செல்வம், சுகம், மங்களம் என்பவைகள் எவை?”


“பரமாத்மா நித்தியமானவர் அறிவாய் நாரதா !
பரபிரும்மத்தில் ஒளிரும் பிரக்ருதி நித்தியம்!


தாமரையில் ஒளிரும் பிரகாசம் போலவும்,
நெருப்பில் வீசும் வெப்பக் கதிர் போலவும்;


சூரியனில் வெளிப்படும் வெய்யில் போலவும்
பிரகிருதி வெளிப்படும் பிரும்மத்திலிருந்து.


பொன் இன்றி உருவாகாது ஆபரணங்கள்;
மண் இன்றி உருவாகாது சட்டி பானைகள்.


பிரகிருதி இன்றி உருவாகாது பிரபஞ்சம்.
பிரபஞ்சம் பரபிரும்மனால் என்றறிவாய்!


சக்தியின் சம்பந்தத்தால் ஆகின்றான் சக்திமான்!
சக்தி ஆகும் ஐஸ்வர்யம், பராக்கிரமம் இரண்டுமே.


‘பக’ என்பது ஞானம், சம்பத்து, யசஸ், வலிமை;
‘பக’ வடிவான சக்தியே பகவதி எனப்படுவாள்.


பகவதியுடன் இருக்கும் பரமாத்மா பகவான்!
பரமாத்மா, பரபிரும்மம், பகவான் எனப்படுவார்.

வைஷ்ணவர் கருத்து மாறுபடும் முற்றிலும்;
வைஷ்ணவர் கருத்தைக் கேள் நீ இப்போது.


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


9#2a. Pancha Prakrutis


“Why was the Moola Prakruti or Aadhi Sakti created before the creation of the world?” How did She get divided into five Devis? I wish to hear all this in great detail.


Please describe their auspicious births, methods of worship, their meditation, their stotras, Kavachas, glory and power in detail.” NArada requested NArAyaNan.


NArAyaNan replied, “The Moola Prakruti is of the nature of MAyA of Para Brahman and is The eternal! Para Brahman and Prakruti are in inseparable from each other just as a Lotus is from its splendor, The Fire is from its ability to burn down and the Sun is from its infinite number of rays!


A goldsmith cannot make gold ornaments without gold. A potter cannot make earthen pots without mud. ParamAtman cannot do any work without the help of the all powerful Prakruti.


‘Sa’ indicates Prosperity and ‘kti’ denotes Strength. Since DEvi bestows of these two, she is named as Sakti.


‘Bhaga’ indicates knowledge, prosperity, wealth and fame. Devi is called as ‘Bhagavati’ – since she has all these powers. ParamAtman who is always in union with ‘Bhagavati’ is called ‘BhagavAn’.


The BhagavAn is sometimes with a form; and sometimes he is without a form. When Prakruti is latent, God is without any form; with Prakruti manifests, God is with a form.


The Yogis always think of the Luminous Form of the Formless BhagavAn and declare Him to be all blissful Para Brahma, the God.


Though He is invisible, He is the Witness of all, Omniscient, the Cause of all, the Giver of everything and of every form. But the VaishNavas do not think so.



 
bhagavathy bhaagavatam - skanda 9

9#2b. வைஷ்ணவர்கள் கருத்து

தேஜோ மண்டலத்தில் உள்ளது – பிரம்ம
தேஜஸ் உள்ள ஓர் உன்னதமான வஸ்து.

இயங்கிகிறது அது முழு சுதந்திரத்துடன்;
இயங்குகிறது முற்றிலும் தன்னிச்சையாக!

அனைத்து உருவங்களுக்கும் காரணம் இதுவே!
அனைத்து நிகழ்வுகளுக்கும் காரணம் இதுவே!

கவருகின்ற அழகிய உருவம் கொண்டது இது!
கபடம், சூது, வாது இல்லாக் குழவி போன்றது!

நீருண்ட கார்மேகத்தின் வர்ணம் கொண்டது;
மலர்ந்த தாமரை இதழ்க் கண்கள் கொண்டது!

முத்துப் பல் வரிசைகள் இரண்டு கொண்டது
முல்லை, பீலி மின்னும் கேசம் கொண்டது.

நேராக, உயர்ந்து, நீண்ட நாசியை உடையது;
நேசர்களுக்கு அருளும் புன்னகை உடையது!

அணியும் உருக்கிய பொன்னிற ஆடையை;
அமையும் அழகிய கரத்தில் புல்லாங்குழல்.

ஜொலிக்கும் ரத்தினம் இழைத்த ஆபரணம்!
ஜெயிக்கும் காண்பவரைப் பட்டு பீதாம்பரம்!

ஆதாரம் அனைத்து உலகங்களுக்கும் இதுவே!
ஆதாரம் அனைவரின் சக்தி, பராக்கிரமத்துக்கு!

நித்தியமான பரம்பொருள் என்பதுவும் இதுவே.
சித்தியாக, சித்தேசமாக, சித்திகாரமானது இதுவே.

அகற்றும் ஜனன, மரண, வியாதி பயங்களை
அகண்ட பரிபூரண சச்சிதானந்தமயமான இது!

பரம்பொருள், பரமாத்மா, பரப்பிரம்மம் போன்ற
பெயர்களில் அறியப்படும் ஸ்ரீ கிருஷ்ண மூர்த்தி.

‘கிருஷ்’ என்பது சிறந்த பரப்பிரம்ம பக்தி பாவம்;
‘ண’ என்பது சரணாகதி அடைந்த தாஸ பாவம்.

‘கிருஷ்ண’ என்பது வழங்கும் இவ்விரண்டையும்;
‘கிருஷ்ண’ என்பது இனிக்கும் கேட்கும் செவிகளில்.

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

9#2b. The Vaishnava concept


From where can fire, strength and energy come without a fiery, strong, energetic Person emitting them from behind?

He who shines in the center of this fiery sphere is the Para Brahmam; He is the Fiery Person; He is higher than the Highest; He has All Free Will; He is in All the Forms; He is the Cause of all causes and His Form is Very Beautiful.

He is Young; He looks very peaceful and He is loved by all. He is the Highest; His Blue Body shines like new rain-clouds. His two eyes put to shame the autumn lotuses during mid-day; His exquisite rows of teeth are like two rows of perfect pearls!

The peacock feather on His crown; the MAlati flower garland on His neck. His exceedingly beautiful straight nose; the sweet smile on His lips enchant everyone. There is none like Him in showing favor to the Bhaktas.

He wears yellow silk in the color of molten gold and a flute is seen on His hands. His body is decorated with gem-studded jewels. He is the Sole Refuge of this whole Universe; He is omnipotent and omnipresent.

He is Himself a Siddha Purusha and bestows Siddhis on the others. He removes the fears of birth, death, old age, illness and sorrows. The life span of Brahma is just a twinkling of His eye.

The word ‘Krish’ denotes Bhakti and the letter ‘Na’ signifies devotion to His service. So He is the one who Bestows Bhakti and devotion to His service.

Again ‘Krish’ denotes everything and ‘Na’ signifies the root. So it is He Who is the Root and the Creator of everything here.

 
bhagavathy bhaagavatam - skanda 9

9#2c. வைஷ்ணவ சித்தாந்தம்

சிருஷ்டிக்க வேண்டும் என்ற இச்சை கொண்டு
சிவ ரூபமான பரபிரம்மம் பூண்டான் சங்கற்பம்.


இச்சையின் அம்சம் ஆகும் காலத் தத்துவம்;
சித்சக்தியை சித்சக்தியால் சிருஷ்டித்தான் முதலில்!


இச்சா மயமான இந்த இச்சா சக்தியால்
இரண்டு உருவம் ஏற்றான் சிவ பிரம்மம்.


வலிமையான ஆண் உருவம் வலப் பக்கத்தில்;
மெல்லிடைப் பெண் உருவம் இடப் பக்கத்தில்;


காமத்தைத் தூண்டியது அந்த அழகிய பெண்ணுருவம்;
காமத்தோடு நோக்கியது ஆணுருவம் பெண்ணுருவை.


தாமரை மலர் போன்ற அழகிய தளிர் மேனியில்
காமத்தைப் பெருக்கும் சந்திரமண்டல பிருஷ்டம்!


வாழை மரம் நாணமுறும் வழுக்கும் தொடை;
வில்வப் பழத்தைப் பழிக்கும் இளம் ஸ்தனம்;


நளினமாக அசையும் மெல்லிய சிற்றிடை;
ஒளி வீசி மனம் கவரும் அழகிய வனப்பு;


சாந்தமான வடிவம், புன்னகை பூத்த முகம்;
காந்த விழி கடைக்கண் பார்வை கொண்டு!


சுகமான, சுத்தமான ஆடை அணிந்திருந்தாள்;
விகசித்தன அலங்கரித்த ரத்தின ஆபரணங்கள்!


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


9#2c. Vaishnava SiddhAntham


When He desired to create this Universe, there was nothing except Sri KrishnA. Impelled by KAla (The Time Factor) which is His Own Creation, He became ready expand His creation.


The Lord who has Free Will, wished to divide and then divided Himself into two parts. His Left part becoming a female and His Right part becoming a male. Then Eternal male part looked at the female part with great love.


The female part on his left side was the Sole Receptacle to hold all the contents of His love. It was very lovely to behold and resembled a beautiful lotus.


The loins of this woman defied the Moon; Her thighs made the plantain trees pale in comparison; Her breasts were firm and beautiful like the Bel fruits; Fragrant flowers were scattered on her head; Her middle part was very slender and very beautiful to behold!


Exceedingly lovely, very calm in her appearance with a sweet smile reigning on Her lips and loving sidelong glances. Her clothing were purified by fire and Her body was decorated with jewels studded with precious gems.



 
bhagavathy bhaagavatam - skanda 9

9#2d. வைஷ்ணவ சித்தாந்தம்

வெண்ணிலாவை நோக்கும் சகோரப் பறவை எனக்
கண்டாள் ஸ்ரீ கிருஷ்ணமூர்த்தியின் திருமுகத்தை!


விளங்கியது நெற்றியின் நடுவில் சந்தனத் திலகம்;
துலங்கியது அதன் நடுவில் குங்குமம், கஸ்தூரி.


வளைந்த கூந்தலில் புரண்டன மலர் மாலைகள்;
விளைந்த முத்துக்கள், நவமணி அலங்கரித்தன.


பூரித்த உருவத்தினால் பதிக்கு இனியவள் – தோற்று
ஓரம் போகும் யானையும், அன்னமும் நடையழகில்!


சிருங்கார ரசமே உருவாகி வந்த ஒரு பெண் அவள்;
சிருஷ்டித் தொழிலுக்கு தலைவர் கிருஷ்ணமூர்த்தி!


சிருஷ்டியை விரும்பிச் செய்தார் தேவியோடு சம்போகம்
சிருஷ்டி ஸ்தானத்தில் பிரமனின் ஒரு நாள் பொழுதளவு.


சிரமம் அடைந்தார் தொடர்ந்த சம்போகத்தால் – ஒரு
சுப வேளையில் வெளிப்பட்டது தேவியிடம் அவர் வீர்யம்!


சிரமப்பட்டாள் தேவியும் அந்த வீரியத்தின் தேஜசால்;
சிரமத்தால் வெளிவந்தன பெரு மூச்சும், வியர்வையும்.


கிரகித்துக் கொண்டது பெருகிய வியர்வையை பூவுலகு;
பரவிய பெருமூச்சு ஆனது பிராணிகள் ஜீவிக்க ஆதாரம்.


உற்பத்தியானாள் பத்தினி வாயுவின் இடப்புறத்தில்;
உற்பத்தியாயினர் ஐந்து புத்திரர்கள் அவளிடமிருந்து.


பஞ்சப் பிராணன்கள் என்ற பெயர் பெற்றனர் ஐவரும்,
பிராண, அபான, வியான, உதான, சமான வாயுக்கள்.


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


9#2d. The Pancha prANAs


His Devi’s eyes began to drink with joy the moon beams from the face of Sri KrishnA just as the mythical Chakora bird does. On Her forehead there was the mark of red vermillion; over that was the dot of white sandal paste and over that was placed the dot of musk.


Her wavy hair was decorated with MAlati garlands. Her neck was decorated with gem studded ornaments and jewels. She was always amorous towards Her husband. Her face looked as if ten million moons had risen all at once! Her gait humiliated those of a swan and an elephant.


Krishna and Prakruti Devi indulged in prolonged amorous sports so that Brahma’s one celestial day passed away in that sport. The Father of the Universe, then became tired and impregnated her in an auspicious moment.


Devi was also very tired and began to perspire and breathe very heavily. Her perspiration turned into water and flooded the whole universe! Her breath turned into air and became the life of all beings.


The female that sprung from the left side of VAyu became his wife and out of their contact were born their five sons called as Pancha prAnAs. They were named as PrANa, ApAna,SamAna, UdAna and VyAna.


These five sons of VAyu are the five vital VAyus of all the living beings.



 
bhagavathy bhaagavatam - skanda 9

9#2e. வைஷ்ணவ சித்தாந்தம்

தோன்றினாள் வருணனின் இடப்பக்கம் தேவி;
தோன்றியவள் வருணனின் தேவி வாருணானி.


சித்சக்தி ஜொலித்தாள் தேஜஸுடன் – இருந்தாள்
சித்சக்தி சிவ ரூப கிருஷ்ணபிரானின் பிராணனாக!


வசித்து வந்தாள் சிவரூப கிருஷ்ணனின் மார்பில்!
வசித்தாள் சுகமாக நூறு மன்வந்திரம் வரையில்!


பெற்றாள் பொன்னைப் போன்ற ஒரு முட்டையை!
பெற்றதும் வீசி எறிந்தாள் பிரம்மாண்ட கோளநீரில்!


கோபம் கொண்டார் சிவரூப கிருஷ்ணமூர்த்தி இதனால்;
சாபம் தந்தார் இரக்கமற்ற செயலுக்குத் தண்டனையாக!


” நீயும் உன் அம்சமாகத் தோன்றும் தேவ ஸ்த்ரீக்களும்
நித்திய யுவதியாவீர் குழந்தைப் பேறு என்பதே இன்றி!”


தோன்றினாள் தேவகன்னிகை அதி வேகமாகத்
தேவியின் நாவின் நுனியில் இருந்து அப்போது.


கொண்டிருந்தாள் வெண்மையான அழகிய உருவம்;
பூண்டிருந்தாள் இரத்தின ஆபரணங்கள்; மாலைகள்!


கையில் வீணையும், சுவடிகளும் கொண்ட தேவி
கைவரப் பெற்றிருந்தாள் சகல சாஸ்திரங்களையும்.


பிரிந்தாள் தேவி சில காலம் கழிந்த பின்னர்
மறுபடி இரண்டு மிக அழகிய தேவியர்களாக.


தோன்றினாள் ஸ்ரீ ராதா தேவி வலப் பக்கத்திலிருந்து;
தோன்றினாள் லக்ஷ்மி தேவி இடப் பக்கத்திலிருந்து.


உலகம் உய்ய வேண்டும்! விசாலம் . K. ராமன்


9#2e. The Vaishnava SiddhAntam – 3


VaruNa Devan became the presiding deity of the water that came out from Devi’s perspiration. A Devi appeared out of VaruNa Devan’s left side. She became VaruNA’s wife called VaruNAni Devi.


The pregnant Prakruti Devi lived on Sri Krishnamurti’s chest for one hundred manvantarAs. The S’akti, of the nature of knowledge of remained pregnant for one hundred manvantaras. Her body became effulgent with Brahma-tejas.


When one hundred manvantaras passed away, that Beautiful Devi gave birth to a Golden Egg. That egg was the repository of the whole universe.
The Prakriti Devi became very unhappy to see an egg and out of anger, threw that away in the water collected in the center of the Universe.

Sri Krishna became angry on seeing this and cursed the Devi thus “You have forsaken out of anger this son just born of you! I curse you that you as well as all the godly women who appear from you will be deprived of having any children and you will remain for ever constant in your youth.”


While Krishna was thus cursing, suddenly a beautiful Devi came out from the tongue of the beloved Devi of Sri Krishna.


She was white in color. Her dresses were all white, in her hands there were a veena and book and all Her body was decorated with ornaments made of gems and jewels. She was Saraswati Devi – the Presiding Deity of all the
S’Astras.


Sometime later Moola Prakruti the Beloved Devi Of Sri Krishna further divided into two parts. Out of Her left portion came KamalA Devi (aka Lakshmi Devi) and out of Her right portion came RAdhika Devi ( aka RadhA Devi)



 
bhagavathy bbhaagavatam - skanda 9

9#2f. வைஷ்ணவ சித்தாந்தம்

பிரிந்தார் சிவரூப கிருஷ்ண மூர்த்தியும் அது போலவே!
பிரிந்தார் இருகரங்கள், நாற்கரங்கள் கொண்டவர்களாக!

வலப்புறம் தோன்றினான் இரு கரங்கள் கொண்டவன்;
இடப்புறம் தோன்றினான் நாற்கரங்கள் கொண்டவன்.

பத்தினிகள் ஆயினர் நாராயணுக்கு தேவியர்;
உத்தம வைகுண்டம் சென்றனர் அனைவரும்.

பிறக்கவில்லை பிள்ளைகள் தேவியருக்கு – நாரணன்
உருவாக்கினான் தனக்குச் முற்றிலும் சமமானவரை.

கொண்டிருந்தனர் அனைவரும் நான்கு கரங்கள்;
கொண்டிருந்தனர் சம தேஜஸ், உருவம், குணம்.

உண்டாக்கினாள் லக்ஷ்மி தேவியும் அது போன்றே
உடலிலிருந்து கோடி, கோடி தேவ கன்னியர்களை.

தோன்றினர் கோகுலத்தில் கோப குமாரர்கள்
கோகுலக் கண்ணனின் ரோம கூபத்திருந்து.

சமம் உருவம், பருவம், தேஜஸ், வலிமையில்!
சம ஆயினர் அவன் மீது கொண்ட அன்பினால்!

தோன்றினர் ராதையின் ரோம கூபத்திலிருந்து
கோகுலத்தில் கோபிகைகள் ராதைக்கு சமமாக.

பணி புரிந்தனர் ராதைக்கு அதிகப் பிரியத்துடன்!
அணிமணிகள் பூண்டிருந்தனர் ராதை போலவே!

நித்திய யுவதிகளாக இருந்தனர் இவர்கள்;
நித்திய கன்னிகளாக இருந்தனர் இவர்கள்.

உலகம் உய்ய வேண்டும்! விசாலம் . K. ராமன்

9#2f. The Vaishnava Sidhdhantham (4)


Sri Krishna also divided Himself into two parts. From his right side appeared a Devan with two hands and from his left side appeared a Devan with four hands.

Then Sri Krishna told the Goddess Speech, “O Devi! You accompany NArAyaNan (the four-handed Devan) to become his wife”.

Then he spoke to RAdhA, “You are a sensitive and proud lady. So I will let you be my wife so that it will do you good”. Sri Krishna told Lakshmi Devi to become the wife of the four-handed NArAyaNan.

NArAyaNan went to Vaikuntam with Lakshmi Devi and Saraswati Devi. Both these Devis did not bear any children as per Krishnamoorthy’s curse.

From the body of NArAyaNa emerged all his attendants, all of them were four-handed. They were all equal to Him in their appearance, in merit; in spirit and in age. From the body of KamalA emerged millions of female attendants all equal to Her in every aspect.

Then arose innumerable Gopas (cow-herds) from the hair follicles of Sri Krishna. They were all equal to the Lord of Goloka in form, GuNAs, power and age; they were all dear to Him as if they were His life.

From the hair follicles of RAdhikA came out the Gopa KanyAs (cow-shepherdess). They were all equal to RAdhA and all were Her attendants and were sweet-speaking. Their bodies were all decorated with ornaments of jewels, and their youth was constant since they never bore any children.

 

Latest ads

Back
Top