bhagavathy bhaagavatam - skanda 9
9#4b. சரஸ்வதி தேவி (2)
“பூஜிக்கப்படுவாய் மாசி மாத சுக்ல பஞ்சமியில்;
பூஜிக்கப்பார்கள் கல்வியைத் தொடங்குபவர்கள்.
ஆவாஹனம் செய்வார்கள் உன்னைப் புத்தகங்களில்;
ஆராதனை செய்வார்கள் உன்னைப் போற்றித் துதித்து!”
சென்றாள் ஸ்ரீ வைகுண்டம் சரஸ்வதி தேவி!
வென்றாள் மனுக்கள், மனிதர்கள், தேவர்கள்,
முனிவர், வசுக்கள், மும்மூர்த்தியர், யோகியர்
சித்தர், நாகர், கந்தர்வர், அரக்கர் மனங்களை.
பூஜிக்க வேண்டும் மாசி மாத சுக்ல பஞ்சமியில்;
பூஜிக்க வேண்டும் வித்யாரம்ப நாட்காலையில்.
பால், நவநீதம், கட்டித் தயிர், வெண் பொரி, லட்டு,
வெல்லம், வெல்லப் பாகு, கரும்பு, கருப்பஞ்சாறு,
வெள்ளை தானிய அக்ஷதை, மது, சர்க்கரை,
வெண் பொங்கல், மோதகம், வெண் சந்தனம்,
வெண்ணிற மலர்கள், வெண்ணிறப் பழங்கள்
வெண்ணிற ஆடைகள், வெண்ணிற ஆபரணங்கள்;
சங்கு ஆபரணங்கள், முத்து ஆபரணங்கள் – முக்கிய
பங்கு வகிக்க வேண்டும் சரஸ்வதியின் பூஜைகளில்.
செய்ய வேண்டும் சரஸ்வதி தேவியின் தியானம்
செப்ப வேண்டும் சரஸ்வதி தேவியின் கவசம்.
குருமுகமாகப் பெற வேண்டும் இக் கவசத்தை;
குருவைப் பணிந்து வணங்கி உபதேசமாக!
சித்திக்கும் மந்திரம் ஐந்து லக்ஷம் முறை ஜபித்தால்;
சித்திக்கும் சரஸ்வதி தேவியின் பரிபூரண கடாக்ஷம்.
உண்டாகும் தேவ குருவுக்கு இணையான மேன்மை;
உண்டாகும் வாக்சாதுர்யமும், கவிதையில் திறமையும்.
உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்
9#4b. SARASWATI DEVI (2)
“On the fifth day of the bright fortnight of the month of MAgha, every year, the day when the learning is commenced, a great festival will be held. All the Men, Manus, Devas, Munis, Vasus, Yogis, NAgas, Siddhas, Gandarvas and RAkshasas will perform your worship with devotion.
They will invoke you on books and then meditate and then worship and sing hymns to you. The learned should recite your Stotras during worship. Thus the worship of the Eternal Devi is made extant in the three worlds.
The devotee should control his senses, concentrate his mind and take his bath. Then he is to perform his daily duties and then meditate the Devi Saraswati and invoke Her. He must again read the DhyAnam and then worship with the sixteen upachAras.
Fresh butter, curd, thickened milk, puffed rice , sweetmeats, Til Laddu, sugar cane, sugarcane juice, nice molasses, honey, swastik, sugar, rice, modak, veN pongal, ParamAnna with ghee, nectar like sweetmeats, coconut, coconut water, ripe plantains, Bel fruit, the jujube fruit, and other appropriate white colored fruits of the season and peculiar to the place are to be offered in the PoojA.
White flowers, white sandal paste, new white clothes, conch shell, garlands of white flowers, white necklaces, and beautiful pearl ornaments are to be offered to Saraswati Devi”.