• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

A poem a day to keep all agonies away!

bhagavathy bhaagavatam - skanda 9


9#14. கந்தர்வ விவாஹம்

வைகுந்தம் சென்றாள் கங்கா தேவி – உடன்
வைகுந்தம் சென்றான் பிரம்ம தேவனும்.


கூறினான் கோலோகத்தில் நடந்தவற்றை;
கூறினான் கங்கை அங்கு வந்த காரணத்தை.


“ரசனை உடைய அழகிய மங்கை கங்கை;
ரசனையில் சிறந்தவர் நீரும் நாராயணரே!


மணந்து கொள்ளும் இணங்கிய பெண்ணை!
பிணங்குவாள் லக்ஷ்மி மணக்க மறுத்தால்!


அவமதித்தோம் பெண்களை என்றால் – நாம்
அவமதிக்கிறோம் உண்மையில் பிரகிருதியை!


ஏற்றுக் கொண்டார் நாராயணன் பிரமன் கூற்றை.
பற்றினார் கங்கையின் கரத்தை விருப்பத்துடன்.


கூடி மகிழ்ந்தனர் கங்கையும், விஷ்ணுவும்!
ஊடினாள் சரஸ்வதி பொறாமைத் தீயினால்!


தாபம் மாறியது கோபமாக அவளிடம்!
கோபம் மாறியது சாபமாக அவளிடம்!


கூறினார் நாராயணன் நாரதருக்கு இதை;
கூறினார் நாராயணன் துளசியின் கதை!


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


9#14. Gandharva vivAham


GangA Devi went to Vaikuntham. Brahma also went to Vaikuntham. He told Lord NArAyanan the happenings at Goloka and advised him to marry GangA Devi.


“GangA Devi is a beautiful lady worthy to become your wife. One must never refuse to marry a lady who comes to him willingly. Lakshmi Devi will surely get upset with you if you refuse to marry GangA.

Al women are the amsmas of Prakruti Devi. If we insult a woman, we are actually insulting the Prekruti Devi herself."


NArAyaNan agreed to what Brahma said and married GnagA Devi in a Ghandharva VivAham.


GangA and NArAyaNan lived happily as a newly wedded couple. But Saraswati sould not stand the sight of their happiness. She became angry and cursed GangA.

Lord NArAyaNan told Brahma the story of Tulasee Devi.




 
Now I have just completed writing down the stories of all the 63 nAyanmArgaL. (Periya purANam)

The task of typing those Tamil poems (with no one to edit and help to spot the slips) and translating them into English remain.

The launching of the new blogs takes longer than usual since the creator of my blogs has become a work-from-home-mom in addition to being a busy mom of two naughty boys.
 
I just finished typing the introduction and the first post of Periya purAnam.

I want to share them with you while they are still oven-hot!

You will have to wait for the other posts till they are ready!
 
பெரிய புராணம் (திருத் தொண்டர் புராணம்)

ஒரு சிறு முன்னுரை :

சேக்கிழார் அருளியது பெரிய புராணம் என்னும் திருத் தொண்டர் புராணம். இது ஐந்தாவது வேதம் என்று கருதப்பட்டு அனைவராலும் புகழப்படுகின்றது.

இது பன்னிரண்டாவது திருமுறை என்றும் பெயர் பெற்றுள்ளது.
இதை இயற்றிய சேக்கிழார் தொண்டர் சீர் பரவுவார் என்று புகழப்படுகிறார். இதை அரங்கேற்றிய மன்னன் அநபாய சோழன் ஆவான்.

சிவபெருமானின் கருணையும் சிவநேசர்களின் பெருமையையும் ஒருங்கே வெளிப்படுத்துவது இந்த செந்தமிழ்க் காவியம்.

இதனை ஐயம் திரிபு அறக் கற்று அறவழியில் நிற்போம்.
இம்மையிலும் மறுமையிலும் உரிய பயன் பெறுவோம்.

"ஜகத் பிதரௌ வந்தே பார்வதி பரமேஸ்வரௌ"
நமச்சிவாய நாமம் வாழ்க! அன்பே சிவம்!!
 
Last edited:
SEkkizhArin Periya PurANam

#1. தில்லை வாழ் அந்தணர் சிறப்பு

வெள்ளைப் பிறை அணிந்த பிரான் எழுந்தருளிய
தில்லை என்னும் திருத்தலம் ஆகும் சிதம்பரம்.

விரிந்து பரந்த மரகதநிற வயல்களின் எழில்;
விரிந்து மலர்ந்த தடாகத் தாமரைகளின் எழில்;

ஓங்கி வளர்ந்து நெருங்கி நிற்கும் தருக்களில்
ஓங்கி ஒலிக்கும் வண்ணப் பறவைகளின் குரல்;

பாடும் பச்சைக் கிளிகள்; ஆடும் தோகை மயில்கள்;
பயிலும் நாட்டிய நடை அன்னப் பேடைகள் கூட்டம்;

தேன் பருகிய மலர்களின் மகரந்தம் மாற்றிவிடும்
தேவரின் அடியாராகத் திருநீறணிந்த வண்டுகளை!

ஒலிக்கும் மறைகளை வேதியர்கள் ஓதும் கோஷம்;
ஒலிக்கும் ஆடல் அழகியரின் சலங்கைகளின் நாதம்;

ஐந்து வகை இசைக்கருவிகளின் இன்னிசை நாதம்
ஐயமின்றி ஒலித்துக் கொண்டிருக்கும் எப்போதும்.

வேதியர்கள் வேள்விப் புகை சென்று விண்ணை எட்டும்!
ஓதுபவர்கள் ஹர ஹர கோஷம் செவிக்கு விருந்தாகும்!

வெள்ளை மலை போன்ற அன்னக்குவியலால், நீற்றால்
வெள்ளிமலைக் கயிலை எனத் திகழும் தில்லைத் தலம்.

காட்சியளிப்பார் சிவ பெருமான் நடராஜனாக இங்கு;
காற்றில் தடையின்றி ஒலிக்கும் தொடரும் பஞ்சாக்கரம்.

பிறையணி வேணிப் பிரானைப் போற்றி வழிபடுவர்
குறைவற்ற தில்லை வாழ் அந்தணர்கள் மூவாயிரவர்.

முப்பொழுது மட்டும் வழிபடுபவர்கள் அல்ல இவர்கள்;
எப்போதும் ஈசனைப் போற்றி வழிபடுபவர் இவர்கள்.

தூய வெண்ணீறு துலங்கி ஒளிரும் இவர் மேனியில்
தூய பக்தியில் சிறந்தவர் தில்லை வாழ் அந்தணர்.

குஞ்சித பாதனை வணங்குகின்ற மெய்யன்பர்களின்
சஞ்சித வினைகள் அழிந்து ஒழிந்துவிடும் அல்லவா?

நான்கு வேதங்களையும், ஆறு அங்கங்களையும்,
நான்கு உபாயங்களையும் நன்கு கற்றறிந்தவர்கள்

வேத விதிப்படி முத்தீயை வளர்ப்பவர்கள் - ஆகம
பாதங்கள் நான்கையும் நன்கு உணர்ந்தவர்கள்

"தில்லை வாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்" எனத்
திருத் தொண்டத் தொகை புகழும் நற்றவம் உடையவர்கள்.

ஆழ் கடலையும் நம்மால் அளவிட இயலும் - தில்லை
வாழ் அந்தணர்தம் பெருமையை அளவிட இயலுமோ?

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி

விளக்கம்:


நான்கு வேதங்கள்:

ருக்கு, யஜுர், ஸாமம், அதர்வணம்

ஆறு அங்கங்கள்:
சிக்ஷை, வியாகரணம், நிருக்தம் , கல்பம், சந்தஸ் , ஜ்யோதிஷம்

நான்கு உபாயங்கள் :
மீமாம்சை, நியாசம், புராணம், ஸ்ம்ருதி

முத்தீ :
ஆகவனீயம், காருகபத்தியம், தட்சிணாக்னி

நான்கு பாதங்கள் :
சரியை, கிரியை,யோகம், ஞானம்
 
Last edited:
bhagavathy bhaagavatam - skanda 9

9#15a. நந்திக் கொடியோன்

தக்ஷ சாவர்ணி ஆவான் விஷ்ணுவின் பக்தன்;
தக்ஷ சாவர்ணியின் மகன் பிரம்ம சாவர்ணி.


தர்ம சாவர்ணி பிரம்ம சாவர்ணியின் மகன்;
தர்ம சாவர்ணியின் மகன் ருத்ர சாவர்ணி.


தேவ சாவர்ணி ருத்ர சாவர்ணியின் மகன்;
தேவ சாவர்ணியின் மகன் இந்திர சாவர்ணி.


இந்திர சாவர்ணியின் மகன் விருஷபத்வஜன்;
நந்திக் கொடியோன் ஆன அவன் சிவபக்தன்.


விஷ்ணு பக்தர்கள் முன்னோர்கள் அனைவரும்;
விருஷபத்வஜன் இருந்தான் தீவிர சிவபக்தனாக!


நினைக்கவில்லை பிற தெய்வங்களை மனத்தாலும்;
நிறுத்திவிட்டான் பிற தெய்வங்களின் ஆராதனையை!


லட்சியம் செய்யவில்லை விருஷபத்வஜன் சிறிதும்
லக்ஷ்மி, சரஸ்வதி, விஷ்ணு ஆகிய தெய்வங்களை.


கோபம் கொண்டான் இது கண்ட சூரியன் – கொடிய
சாபம் தந்தான் “சம்பத்து இல்லாது போகக் கடவது!”


பரிவு கொண்டார் தன் பக்தன் மீது சிவபெருமான்;
துரத்தி விரட்டினார் சூரியனைச் சூலாயுதம் ஏந்தி!


சூரியன் ஓடினான் ஆகி வந்த கிரமப்படியே
பிரமன், விஷ்ணு இவர்களின் உலகங்களுக்கு.


பிராணனைக் காத்துக் கொள்ள அழைத்தான்
பிரமதேவனை, நாராயணனை உதவிக்கு.


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


9#15A. VRUSHABHA DHWAJAN

The Manu Daksha SAvarNi was a Vishnu devotee and was born of Vishnu’s amsam. Brahma SAvarNi his son was also devoted to Vishnu. His son Dharma SAvarNi was also a devotee of Lord Vishnu and a master of his senses.


Rudra SAvarNi was a man of restraint. He and his son Deva SAvarNi were both sincere devotees of Lord Vishnu. Indra SAvarNi the son of Deva SAvarNi was also a VishNu bhakta, but his son Vrishabadwaja was a sincere devotee of Lord Siva.


Lord Siva himself remained at his residence for three Deva Yugas and loved Vrishabadwaja as if he were His own son.


Vrishabadwaja did not care for Lord NArAyaNA or Lakshmi Devi or Saraswati Devi or any other God or Goddess. He discontinued the worship of all the Devas and Devis. He worshiped only Siva Sankara.


At this the Sun God became angry with the King Vrishabadwaja and cursed him thus: “O King! May you be stripped of and deprived of all your wealth and prosperity.”


Sankara became very angry on hearing this curse. He chased the Sun God with his terrible trident lifted up ready to attack. The Sun God got frightened and ran to Brahma seeking protection – accompanied His father Kasyapa.


BhagavAn Sankara went chasing them to the BrahmA Loka, with trident in His hands. BrahmA got frightened and took Sun to VaikuntA. They all bowed down to NArAyaNan, praised Him and informed Him of the cause of their visit and terror.


Lord NArAyaNan gave them abhayam and promised that no harm would befall on them while they were with him in His Vaikuntham.




 
ஒரு சிறு முன்னுரை :

பெரிய புராணம் (திருத் தொண்டர் புராணம்)

சேக்கிழார் அருளியது பெரிய புராணம் என்னும் திருத் தொண்டர் புராணம். இது ஐந்தாவது வேதம் என்று கருத
ப்பட்டு அனைவராலும் புகழப்படுகின்றது.

இது பன்னிரண்டாவது திருமுறை என்றும் பெயர் பெற்றுள்ளது.
இதை இயற்றிய சேக்கிழார் தொண்டர் சீர் பரவுவார் என்று புகழப்படுகிறார். இதை அரங்கேற்றிய மன்னன் அநபாய சோழன் ஆவான்.

சிவபெருமானின் கருணையும் சிவநேசர்களின் பெருமையையும் ஒருங்கே வெளிப்படுத்துவது இந்த செந்தமிழ்க் காவியம்.

இதனை ஐயம் திரிபு அறக் கற்று அறவழியில் நிற்போம்.
இம்மையிலும் மறுமையிலும் உரிய பயன் பெறுவோம்.

"ஜகத் பிதரௌ வந்தே பார்வதி பரமேஸ்வரௌ"
நமச்சிவாய நாமம் வாழ்க! அன்பே சிவம்!!

An Introduction to Periya PurANam

Periya purAnam (meaning The Great purANam) was written by SEkkizhAr who was the Chief minister of king AnabhAya chOzhan.

The other name for this purANam is Thiruth ThONdar purANam ( meaning The Stories of the Great Devotees of Siva) and this work is considered as the Fifth Veda.


SEkkizhAr is praised as "ThONdar seer paravuvAr" (meaning one who sings the praise of all the devotees of Siva). This epic work forms the PannireNdAm Thirumurai (The 12th Thirumurai of the Saivaites).


This work brings out the grace and mercy of Lord Siva as well as the staunch faith and devotion of the 63 nAyanmAr. Learning these well and walking in the path of Dharma will elevate us to the next higher level of existence easily.


"Jaagth pitharou vandhE PArvathi ParamEswarou"

(I bow to the Parvathi and ParameEswar who are the parents of all the creations)


Hail the name of Siva!
May our devotion to Siva keep forever growing.
God is love and Love is God.

 
SEkkizhArin Periya PurANam

#1a. தில்லை வாழ் அந்தணர் சிறப்பு


வெள்ளைப் பிறை அணிந்த பிரான் எழுந்தருளிய
தில்லை என்னும் திருத்தலம் ஆகும் சிதம்பரம்.

விரிந்து பரந்த மரகதநிற வயல்களின் எழில்;
விரிந்து மலர்ந்த தடாகத் தாமரைகளின் எழில்;

ஓங்கி வளர்ந்து நெருங்கி நிற்கும் தருக்களில்
ஓங்கி ஒலிக்கும் வண்ணப் பறவைகளின் குரல்;

பாடும் பச்சைக் கிளிகள்; ஆடும் தோகை மயில்கள்;
பயிலும் நாட்டிய நடை அன்னப் பேடைகள் கூட்டம்;

தேன் பருகிய மலர்களின் மகரந்தம் மாற்றிவிடும்
தேவரின் அடியாராகத் திருநீறணிந்த வண்டுகளை!

ஒலிக்கும் மறைகளை வேதியர்கள் ஓதும் கோஷம்;
ஒலிக்கும் ஆடல் அழகியரின் சலங்கைகளின் நாதம்;

ஐந்து வகை இசைக்கருவிகளின் இன்னிசை நாதம்
ஐயமின்றி ஒலித்துக் கொண்டிருக்கும் எப்போதும்.

வேதியர்கள் வேள்விப் புகை சென்று விண்ணை எட்டும்!
ஓதுபவர்கள் ஹர ஹர கோஷம் செவிக்கு விருந்தாகும்!

வெள்ளை மலை போன்ற அன்னக்குவியலால், நீற்றால்
வெள்ளிமலைக் கயிலை எனத் திகழும் தில்லைத் தலம்.

காட்சியளிப்பார் சிவ பெருமான் நடராஜனாக இங்கு;
காற்றில் தடையின்றி ஒலிக்கும் தொடரும் பஞ்சாக்கரம்.

பிறையணி வேணிப் பிரானைப் போற்றி வழிபடுவர்
குறைவற்ற தில்லை வாழ் அந்தணர்கள் மூவாயிரவர்.

முப்பொழுது மட்டும் வழிபடுபவர்கள் அல்ல இவர்கள்;
எப்போதும் ஈசனைப் போற்றி வழிபடுபவர் இவர்கள்.

தூய வெண்ணீறு துலங்கி ஒளிரும் இவர் மேனியில்
தூய பக்தியில் சிறந்தவர் தில்லை வாழ் அந்தணர்.

குஞ்சித பாதனை வணங்குகின்ற மெய்யன்பர்களின்
சஞ்சித வினைகள் அழிந்து ஒழிந்துவிடும் அல்லவா?

நான்கு வேதங்களையும், ஆறு அங்கங்களையும்,
நான்கு உபாயங்களையும் நன்கு கற்றறிந்தவர்கள்

வேத விதிப்படி முத்தீயை வளர்ப்பவர்கள் - ஆகம
பாதங்கள் நான்கையும் நன்கு உணர்ந்தவர்கள்

"தில்லை வாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்" எனத்
திருத் தொண்டத் தொகை புகழும் நற்றவம் உடையவர்கள்.

ஆழ் கடலையும் நம்மால் அளவிட இயலும் - தில்லை
வாழ் அந்தணர்தம் பெருமையை அளவிட இயலுமோ?

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி

விளக்கம்:


நான்கு வேதங்கள்:

ருக்கு, யஜுர், ஸாமம், அதர்வணம்

ஆறு அங்கங்கள்:
சிக்ஷை, வியாகரணம், நிருக்தம் , கல்பம், சந்தஸ் , ஜ்யோதிஷம்

நான்கு உபாயங்கள் :
மீமாம்சை, நியாசம், புராணம், ஸ்ம்ருதி

முத்தீ :
ஆகவனீயம், காருகபத்தியம், தட்சிணாக்னி

நான்கு பாதங்கள் :
சரியை, கிரியை,யோகம், ஞானம்


#1a. The 3000 Brahmins of Thillai

Chidambaram is the Thillai Kshethram of Lord Siva - who is adorned by a lovely crescent moon. It is a beautiful place filled with vast emerald green fields and ponds filled with blooming lotus flowers. The trees stand tall as well as dense and the jargon of the songs of the different birds living on those trees is enchanting.


The parrots sing, the peacocks dance and the lovely swans sway and walk the steps of a dancer. The bumble bees get coated with the pollen of the flowers they feed on and resemble the devotees of Siva adorned by the holy ash.

The chanting of the VEdas filled the air. So also the sweet sound made by the ankle bells of the beautiful dancers. The music from the five different types of musical instruments blend and prevail all day long.

The smoke rising from the Homa kuNdam spirals up to the Heavens. The robust chanting of "Hara Hara MahAdev!" will be a sweet treat to the ears of the listeners.

Cooked rice is heaped to resemble white mountains. This and the glow of the holy ash will transform the Thilli to resemble Kailash. Here the Lord appears as NatarAja The King of Dance. Sound of "Namah SivAya" fills the air.

The 3000 Brahmins of Thillai worship Siva all day long. They glow with the holy ash and they shine in their devotion. The only way to slash the sanchitha karma (the bundle of our sins) is to worship the Kunchitha pAdhan ( the lord with lovely, well curved and arched heels).

The 3000 Brahmins of Thillai have mastered the four VEdas, the six limbs of the VEdas, the four upAyams, the four pAdhams, They light the three fires as per the Vedic rules.

We may be able to fathom a deep ocean but we can't measure the true greatness of these 3000 Thillai Brahmins.

Foot notes:

The four Vedas:
Rig, Yajur, SAma, Atharva

The six limbs of the vEdas:
Siksha, VyAkaraNa, Niruktha, Kalpa, Chhanda, JyOthisha.


The four upAyamas:
MeemAmsa, Nysa, PurANas, Smruthi,

The three fires:
Ahavaneeyam, Garukapathyam, DhakshinAgni

The four pAdhAs:
sariyai, kiriyai, yOgam, j~Anam.


 
Last edited:
SEkkizhArin Periya PurANam

1#b. சிவக் கோவில்

பொன்னிற மேனியில் மின்னும் வெண்ணீறு போல
மின்னும் திருக்கயிலைமலை வெள்ளிமலையின் மீது.

ஆதியும், அந்தமும் இல்லா அருட்பெருஞ்சோதி சிவன்
பாதி மதியணிந்து அமர்ந்துள்ளான் தேவி உமையுடன்.

பிறையணி பெருமான் பரப்பினான் ஒளிக்கதிர்களை
நிறைவான ஆதவன் நின்று ஒளிர்வது போல அங்கே.

பாடிப் பரவுவார் அமரர், கந்தருவர் எம் பெருமானை;
ஆடி மகிழ்விப்பர் அரம்பையர் பிறர் அனைவரையும்.

திரண்டு நிற்கும் அங்கே அமரர்களின் கூட்டம்
சிறந்த மலர்மாலைகளை அத்தனுக்கு அளித்திட.

பேரின்பக் கடலில் மூழ்கித் திளைத்திருப்பர்
வேறு எண்ணங்கள் இல்லாத சிவ கணங்கள்.

முழங்கி கொண்டே இருக்கும் அங்கு தேவகானம்;
முழங்கி கொண்டே இருக்கும் சங்கம், வேதகோஷம்.

வந்தான் நான்முகன் சிவபிரானைத் தரிசிக்க - வெளியே
வந்தபின் தேடினான் தன் அன்னப் பறவை வாகனத்தை.

கலந்து விட்டது ஒன்றாக வெண்மையுடன் வெண்மை;
கலந்து விட்டன இனம் கண்டு பிரிக்க முடியாத வண்ணம்!

கூடி இருந்தனர் கயிலை மலையின் அடிவாரத்தில்
தேடினாலும் காணக் கிடைக்காத ஞானியர் கூட்டம்.

இருந்தார் உபமன்யு முனிவரும் அந்தக் குழுவில்,
இவர் பிரம்ம ரிஷி வியாக்கிர பாதரின் புதல்வர்.

அழுதார் இவர் பாலுக்காகக் குழந்தைப் பருவத்தில்;
அளித்தார் சிவனார் திருப்பாற்கடலையே பருகிட!

மாட்சிமை வாய்ந்தவர் உபமன்யு முனிவர் - சிவ
தீட்சை அளித்தவர் அந்தக் கண்ண பிரானுக்கே!

தவ வலிமை மிகுந்தவர்; சிவ தியானம் செய்பவர்
சிவத் தொண்டு புரிவதில் ஆர்வம் மிகுந்தவர்.

விவரித்துக் கொண்டு இருந்தார் உபமன்யு முனிவர்
சிவபிரானின் அருமை, பெருமைகளைப் பிறருக்கு.

தோன்றியது ஓர் பேரொளி ஆயிரம் ஆதவர் போல!
தோன்றிய பேரொளி சிந்தைக்கு விந்தை தந்தது!

வினவினார் உபமன்யு பிரானிடம் ஒளி குறித்து;
விடை தந்தார் பிரான் சுந்தரர் கயிலை வருவதாக.

தொழுதார் உபமன்யு ஒளி வீசும் திசை நோக்கி;
தொழுதனர் முனிவர்களும் அத்திசையை நோக்கி.

கூறலானார் உபமன்யு குழுமியிருந்த முனிவருக்கு;
விரிவாக நம்பியாரூர் சுந்தர மூர்த்தியைக் குறித்து.

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி

#1b. The Temple of Siva

The mount Kailash glows brightly on the Himalayas just as the pure holy ash glows on the body of a true devotee of Siva. The lord Siva, who has neither a beginning nor an end, sits there adorned by a crescent moon on his head, along with his Devi Uma.


The Lord radiated luminescence all around Him, just as a stationary Sun would. The DEvAs and Gandharvas sang his praise sweetly. Apsaras, the celestial damsels, danced giving delight to all the onlookers.

The DEvAs stand in groups and clusters waiting to present their lord with lovely garlands made of fresh fragrant flowers. The Siva GaNas are immersed in pure bliss, since they seek nothing more than being near their lord.

Divine music, the chanting of Vedas and the sound of conchs being blown filled the air with the mixture of their sounds.

Brahma came to Kailash to pay his reverence to Siva. Afterwards he had to search for his snow white swan vAhana which had blended inseparably with the snow white Himalayas.

There was a distinguished gathering of great seers and rushis at the foot of Mount Kailash. Sage Upamanyu was among that crowd. He was the son of the great rushi VyAgra pAdha and he himself was the guru who gave Siva deeksha to Lord Krishna.

Upamanyu was describing the greatness of Siva when a brilliant light appeared like a thousand Suns shining together. Upamanyu asked Siva about that blinding light. Siva said it was his devotee Sundara moorthy returning to Kailash from the earth.

Upamanyu paid his respects to the glowing light. So did all the rushis gathered there. Now Upamanyu rushi told the gathering the life and greatness of Sundara moorthi nAyanAr.




 
Last edited:
On second thoughts I decided to post Periya PurANam also side by side with Bhagavathy Bhaagavatam. This commitment will keep me motivated to type the posts faster and also regularly! :)
 
Last edited:
bhagavathy bhaagavatam - skanda 9

9#15b. தணிந்தது சினம்

அபயம் தந்தார் நாராயணன் சூரிய தேவனுக்கு,
“அபாயம் இல்லை உனக்கு சிவ சங்கரனாரால்!


வசப்படுவார் சிவசங்கரன் பக்தரின் பக்திக்கு;
வசிப்பார் சிவசங்கரன் பக்தரின் இருதயத்தில்.


உயிரினும் மேலானவர் சிவசங்கரன் எனக்கு!
உயரிய தெய்வம் உண்டோ சிவனாரை விட?


படைக்க வல்லவர் விளையாட்டாகவே சிவன்
படைப்புகளை எல்லாம் உள்ளம் விரும்பினால்.


மங்களகரம் நிரம்பியவர் சிவசங்கரன் – சர்வ
மங்களத்துக்கும் நிலைக்களன் ஆவார் அவர்!”


வினவினார் விஷ்ணு விரைந்து வந்த சிவனிடம்,
“விவரம் கூறுங்கள் இத்தனை சினம் எதற்காக?”


“சபித்து விட்டான் சூரியதேவன் என் பக்தனை!
சரியான பாடம் கற்பிக்கவே வந்துள்ளேன் நான்.


அழிக்க முடியும் அவன் சம்பத்தைச் சாபத்தால்!
அழிக்க முடியுமா அவன் பக்தியைச் சாபத்தால்?


செல்வத்தை வெறுப்பவர்கள் என் பக்தர்கள்;
செல்வத்தை விரும்பி விழைவது இல்லை!”


“மன்னிக்க வேண்டும் சூரியனின் பிழையை!
விண்ணுலகப் பேறு அடைந்தான் உம் பக்தன்


அரசாண்டு மடிந்தான் விருஷபத்வஜன்;
அரசாண்டு மடிந்தான் மகன் ரதத்வஜன்.


ஆசை கொண்டனர் அவன் இரு புதல்வர்கள்
குசத்வஜன், தர்மத்வஜன் செல்வம் பெற்றிட.


புரிந்தனர் தவம் லக்ஷ்மியைக் குறித்து;
அருள்வாள் லக்ஷ்மி புதல்வியாகப் பிறந்து!”


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


9#15b. SivA’s anger subsides!

Lord NArAyaNan gave abhayam or fearlessness to the Sun God. He said, “There is no danger to you from Lord Sivasankara. He is a devotee of his devotees. He lives in their hearts. He is dearer to me than my own life.


Is there any God greater than Siva? He can create the Universe as if it were a child’s play. He is the personification of all auspiciousness and bestows all auspiciousness on everyone. ”


Lord Siva reached there with his trident lifted in anger. Lord Vishnu asked him,” Why are you so angry ? Tell me all about it”


Siva replied to Vishnu, “The Sun God has cursed my dearest devotee. I want to teach him a good lesson today. He may curse and destroy the wealth of my sincere devotee!

But can he destroy the devotion of my devotee by his curse? My sincere devotees do not care for material wealth. They do not desire or pray for worldly wealth.”


Lord NArAyaNan spoke thus: “PleaSe pardon the mistake committed by the Sun. Your devotee Vrishabadwajan has ruled well and reached your abode. Rathadwajan his son also has ruled well and reached your abode.


He has two sons Dharmadwajan and Kusadwajan. They both seek wealth and are praying to Lakshmi Devi. She will be born as the daughter of Kusadwajan and give them the wealth they so badly desire to possess!”




 
SEkkizhArin Periya PurANam

#2a . சுந்தரின் தோற்றம்

அற்புத நடனம் ஆடும் அம்பலவாணருக்குக்

கற்பனைக்கெட்டாத ஓர் ஆவல் எழுந்தது!

விருப்பத்துக்கு காரணம் ஆவர் தேவர்கள்;
விரும்பினர் ஈசனை மன்மத வடிவில் காண!

அணிந்து கொண்டான் ஈசன் பட்டாடைகளை;
அணிந்து கொண்டான் ஈசன் நவமணி மகுடம்;

அணிந்து கொண்டான் ஈசன் நவரத்தின ஹாரங்கள்;
அணியவில்லை புலித்தோல், ருத்திராக்க மாலைகள்!

கண்டான் தன் பிரதி பிம்பத்தை நிலைக் கண்ணாடியில்;
கொண்டான் பேருவகை தன் மன்மத வடிவத்தைக் கண்டு.

திருவாய் மலர்ந்து அருளினான், "சுந்தரா! வருக!" என்றான்.
திருவுருவம் பெற்று வெளிப்பட்டது ஈசனின் பிரதி பிம்பம்.

சுந்தரன் என்று பெயர் பெற்றான் வெளிவந்த அழகன்;
மந்திர நாயகனுக்குத் தொண்டுகள் புரிவான் அவன்.

அருகிலேயே நிற்பான் சுந்தரன் தன் தலைவன் ஈசனுக்கு.
விருப்புடன் ஏந்தி நிற்பான் திரு நீற்றுக் கிண்ணத்தை.

பறித்துக் கொண்டு வருவான் புது நறுமண மலர்களை.
பறித்த மலர்கள் மாறிவிடும் பல அழகிய மாலைகளாக.

கடைந்தனர் பாற்கடலை அமரர், அசுரர் ஒருமுறை.
கடையும் மத்து மந்தர மலை, கடையும் நாண் வாசுகி!

பெற விரும்பியது பாற்கடலில் மறைந்திருந்த அமுதத்தை!
பெற்றதோ கடலில் பிறந்த கொடிய ஆலகால நஞ்சினை!

அஞ்சி நடுங்கினர் அனைவரும் நஞ்சின் வீரியம் கண்டு!
தஞ்சம் அடைந்தனர் ஈசனிடம் "அபயம்! அபாயம்!" என்று!

அமர்ந்து இருந்தான் வேத நாயகன் தேவர்களிடையே;
அரும் மணிகள் பதித்த பீடத்தின் மேல் புலித் தோலில்.

அன்னையும் அமர்ந்து இருந்தாள் அண்ணல் அருகே,
உன்னற்கரிய ஆடல், பாடல்களை ரசித்துக் கொண்டு.

விழுந்தது அபாயத்தில் எழுந்த அபாயக் குரலோசை;
விழுந்தனர் திருவடிகளில் அபயம் வேண்டியவர்கள்.

"எடுத்து வாருங்கள் ஆலகால விஷத்தை என்னிடம் !" என
"கடுமையும் கொடுமையும் தாங்க முடியவில்லை ஈசா!" எனக்

கட்டளை இட்டான் சுந்தரருக்கு ஈசன் அக்கணத்தில்,
"கட்டுப்படுத்திக் கொண்டு வா ஆலகாலத்தை!" என்று.

கொண்டு வந்து தந்தான் சுந்தரன் ஆலகால விடத்தை!
உண்டு அதைத் தன் கண்டத்தில் நிறுத்திவிட்டான் ஈசன்.

ஆலகால விஷத்தை அஞ்சாமல் கையாண்டதால் அன்று
'ஆலால சுந்தரர்" ஆகிவிட்டார் பட்டப் பெயரைப் பெற்று.

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி

#2a. Siva's reflection comes to life

One day Lord Siva had an unusual desire. The desire was caused by the request made by the Devas - who wished to see him as a manmatha vigraham in his real beauty and glory.

Siva gave up his tiger skin and rudhrAkshams. He adorned himself with rich silk, wore the ornaments and crown made in gold with the nine rare gemstones.

He admired Himself in the mirror and loved His own reflection so much that He called it to come out of the mirror. The reflection assumed a glorious physical form - an exact replica of Siva himself - and earned the name Sundaran (meaning a very beautiful man)

Sundaran loved to serve his master. He wanted to be as close to Siva as possible at all times. He would hold the container of the holy ash. He would pluck fragrant flowers and make them into lovely garlands to be offered to Siva.

Once the Devas ans Asuras churned the Ocean of Milk hoping to get the nectar contained in it. But the deadliest poison Halaahala emerged from the ocean at first. The Asuras and Devas took to their heels unable to stand the fumes of the poison. They took refuge in Siva and requested him to save them.

Siva was seated on his tier skin spread on a gold peetam with Uma Devi, enjoying the celestial music and dance. Siva told them to bring the poison to him but they could not even go near the poison.

Siva then sent Sundara to bring the poison to Him. Sundara collected the deadly poison and brought it to Siva - who swallowed it and then arrested it at His throat.

This daring deed earned Sundara a new title "HalAhla Sundara"
 
bhagavathy bhaagavatm - skanda 9

9#16a. வேதவதி (1)

கடுமையான தவம் செய்தனர் இரு சகோதரர்களும்;
கொடுத்தாள் லக்ஷ்மி விரும்பிய வரங்கள் எல்லாம்.


ஆயினர் புண்ணியசாலிகள்; ஆயினர் செல்வந்தர்;
அடைந்தனர் புத்திர பாக்யம்; அடைந்தனர் மகிழ்ச்சி!


மாலாவதி குசத்வஜனின் அழகிய மனைவி;
மாலாவதி ஈன்றாள் அழகிய பெண் குழந்தை.


லக்ஷ்மியின் அம்சமாகத் தோன்றினாள் அவள்!
லக்ஷணமாக உச்சரித்தாள் வேத சப்தங்களை!


வேதத்வனிகளைச் செய்த குழந்தைக்கு அழகிய
வேதவதி என்ற பெயர் இட்டுப் பேணி வளர்த்தனர்.


தவம் செய்யச் சென்றாள் வேதவதி – அவள்
தவத்தின் நோக்கம் நாராயணனை மணப்பது.


தடுத்தும் கேட்கவில்லை – புஷ்கர க்ஷேத்திரத்தில்
கடும் தவம் செய்தாள் ஒரு மன்வந்தரக் காலம்.


இளைக்கவில்லை, வருந்தவில்லை – கட்டுக்
குலையாத இளமை, எழிலோடு இருந்தாள்.


“விஷ்ணுவை மணப்பாய் அடுத்த பிறவியில்!”
இஷ்டப்பட்ட வாக்குறுதியைத் தந்தது அசரீரி.


கந்த மாதனத்தில் தொடர்ந்தது கடும் தவம்
“சொந்தமாக வேண்டும் விஷ்ணு கணவனாக!”


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


9#16a. Vedavathi (1)


Dharmadhwaja and Kusadhwaja practiced severe penance and worshiped Lakshmi Devi. They then got their desired boons. By the boon of Lakshmi Devi, they became the rulers of the earth. They acquired great religious merits and they got their children.


MAlAvati was the wife of Kusadhvaja. She delivered a daughter as an amsam of Lakshmi. The baby was full of wisdom and knowledge. She began singing clearly the Vedic mantras from the lying-in-chamber, as soon as she was born.


Therefore She was named Vedavathi by the Pundits. She bathed after her birth and got ready to go to the forest to practice severe tapas. Everyone then, tried earnestly to stop her.


But she did not listen to anybody. She went to Pushkara Kshetra and practiced severe penance for one Manvantara. Yet her body did not get lean or tired a bit. By degrees her youth began to show signs in her body and she became extremely beautiful and attractive.


One day she heard an asareeri voice from the air above, “O Fair One! In your next birth NArAyaNan will become your husband.” Hearing this, her joy knew no bounds. She went to the solitary caves in the GandhamAdan mountain to practice tapas again
.




 
SekkizhArin Periya PurANam

#2b. சுந்தருக்குத் தண்டனை

சென்றார் மலர்கள் கொய்திட சுந்தரர் நந்தவனம்;
சென்றாள் மாலினி அநிந்திதையுடன் அதே வனம்.

கண்டனர் பெண்டிர் மன்மத விக்கிரஹ சுந்தரரை;
கொண்டனர் ஆறாக்காதலும், மயக்கமும் உடனே.

கண்டார் சுந்தரரும் அவ்விரு அழகிய பெண்களை;
கொண்டார் அவரும் அவர்கள் மீது தீராத விருப்பம்.

சென்று விட்டனர் பெண்கள் மிகுந்த ஏக்கத்துடன்;
சுந்தரர் உணர்ந்தார் தான் இழைத்த பிழையை!

தண்டனிட்டார்; மனம் வருந்தினார்; அஞ்சினார்;
தண்டனை என்னவோ தான் செய்த பிழைக்கு என.

தொடுத்த மாலைகளைச் சமர்ப்பித்தார் ஈசனுக்கு;
அடுத்தது காட்டும் பளிங்கு ஆனது சுந்தரர் முகம்!

அறிந்தான் ஈசன் நந்தவனத்தில் நடந்தவற்றை;
"சிறு தண்டனை ஒன்று உண்டு அந்தப் பிழைக்கு;

மனம் நாடிச் சென்றது இரு மாதர்களை சுந்தரா!
மனம் போல் வாழ்வாய் அவ்விரு பெண்களுடன்!

காமனை எரித்த கயிலையில் அது அசம்பவம் - உன்
காமம் கைக்கு கூடும் நீ பூவுலகம் சென்று விட்டால்!

பிறப்பாய் பாரத கண்டத்தில் தெற்குகே கோடியில்;
சிறப்பாய் வாழ்ந்த பின்பு சேர்வாய் என்னிடம்!" என

வருந்தினார் சுந்தரர் ஈசன் மொழியைக் கேட்டு -"தக்க
தருணத்தில் தடுத்தாட்கொள்ள வேண்டும் என்னை!"

தென் திசையில் அவதாரம் செய்தார் சுந்தரர்.
இன்பம் துய்த்தார் இரு காதல் மாதர்களுடன்.

திரும்பி வருகின்றார் கயிலை, ஈசன் சேவை செய்திட;
விரும்பிய வாழ்வை அடைந்து மகிழ்ந்த பின்னர்!" என

அத்திசை நோக்கித் தொழுதனர் முனிவர் அனைவரும்;
வினவினர் "தென்திசையின் சிறப்புக்கள் யாவை?" என

"தென்திசையில் அமைந்துள்ளன சீரிய சிவத் தலங்கள்
ஒன்று ஈசன் நடனம் ஆடும் தில்லை என்னும் சிதம்பரம்;

தியாகேசனாக எழுந்தருளியுள்ள திருவாரூர் மற்றொன்று;
திருநகரம் காஞ்சியும் அமைந்துள்ளது தெற்குத் திசையில்.

திருவையாறு, சீர்காழி இன்னும் பலத் திருத்தலங்கள்
இருப்பது தென் திசையில், பரத கண்டத்தில் அறிவீர்!

திருத்தொண்டர்த்தொகை என்னும் புராணத்தைத்
திருவாரூர் தியாகேசனுக்குச் சூட்டினார் சுந்தரர்.

வகைப் படுத்தினார் இதை நம்பியாண்டார் நம்பி;
வகைப் படுத்திய வழிமுறையும் மிக உயர்வானது".

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#2b. Sundara gets punished

Sundara went to the garden to pluck fresh flowers. At the same time, MAlini and AnindhithA, two attendants of Devi Uma, also went to the same garden to pluck flowers. They fell head over heels in love with Sundara - the most beautiful person they have set their eyes on.

Sundara himself fell in love with those beautiful women. They had to go their own ways after plucking the flowers. But Sundara felt he had committed a sin by falling in love with those lovely ladies. He wondered what would be the punishment for his sin.

He presented the garlands made by him to Siva as usual. But by his appearance and facial expression Siva knew what had happened in the garden. He spoke to Sundara thus:

"You have fallen in love with two women. You may live with them happily but it can't happen here in Kailash, where I have burned to ash the God of Love Manmathan.

You may be born as a human being in the southern region of Bharatha kanda. Enjoy all the pleasures with those women you love. You may come back to me after that."

Sundara felt very sad at the thought of separation from Siva. But he had no choice. He made one request to Siva,"Please stop me from entering the shackles of samsara at the right moment so that I will be able to come back to you"

Sunadara was born in the Southern region of Bharatha kanda, lived his life on earth and is now returning to Siva."

On hearing these words of sage Upamanyu, all the other seers and sages paid obeisance to that glow of light. They had one more doubt now."What are the specialties of the Southern region of Bhratha kanda?'

Sage Upamanyu replied,"Many of the kshetrams special to Siva are situated in the Southern region of Bharatha kanda. Thillai aka as Chidhambaram, Thiruvaaroor, Kanchipuram, Thiruviyaaru, Seerkaazhi to name a few.

Sundara sang the Thiruth ThoNdar Thogai and offered it to Thyagesan in Thiruvaaroor. NambiyaaNdaar nambi classified and organized them in a very superior manner."

 
bhagavathy bhaagavatam - skanda 9

9#16b. வேதவதி (2)

கண்டான் கட்டுக் குலையாத தபஸ்வினியை!
கொண்டான் காமம் ராவணன் வேதவதியிடம்.


விதிமுறையை மறந்து உறவாட முயன்றான்
அதிகரித்த காம வேகத்தினால் பலவந்தமாக!


ஸ்தம்பிக்கச் செய்தாள் வேதவதி ராவணனை;
ஸ்தம்பமாக நின்றான் அசையவே முடியாமல்!


துதித்தான் மனத்தில் லக்ஷ்மியை ராவணன்;
துதித்ததால் தளர்ந்தது ஸ்தம்பனம் சற்று!


காமம் தலை தூக்கியது மீண்டும் – அவள்
கண்டித்தும் அணைக்க முயன்றான் அவளை!


“அழிவீர் வேரோடு நீயும், உன் அரக்கர் குலமும்,
பழி தீர்ப்பேன் பெண்ணுருவில் உன்னை அழித்து!”


சபித்தாள் பதிவிரதை வேதவதி அவனை!
சாய்ந்தாள் மண்ணில் உடலைத் துறந்து!


கழிவிரக்கம் கொண்டான் இராவணன் – மிக
அழுது புலம்பியபடிச் சென்றான் இருப்பிடம்.


பிறந்தவள் லக்ஷ்மியின் அம்சமான வேதவதி;
வளர்ந்தாள் ஜனக மன்னனின் புதல்வியாக!


கைப் பிடித்தான் சீதையை ஸ்ரீ ராமன்-அவன்
கடை பிடித்தான் தந்தையிட்ட ஆணையை.


வனவாசம் சென்றனர் ராம, லக்ஷ்மண, சீதையர்
வனசஞ்சாரத்தில் அடைந்தனர் ஒரு கடற்கரையை.


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


9#16b. VEDAVATHI – 2


RAvaNa set his eyes on this beautiful young tapasvini one day. He saw Vedavathi’s smiling face, beautiful teeth, her face resembling a lotus in autumn, her heavy loins and her full breasts and became very passionate.


He lost his self control and was ready to violate her by sheer force. Seeing this Vedavathi, became angry and out of her power of penance made him unable to move.


He remained motionless like an inanimate body. He could not move his hands or feet nor could he speak. That clever fellow mentally recited praises to Lakshmi Devi.


Praising of the Higher Shakti can never go futile. Vedavathi became pleased with his stuti and granted him religious merits in the next world. But she also pronounced this curse!


“You have defiled my body out of your lust and passion! You and your whole race will pay for this by perishing for my sake!” Saying this to RAvaNa, Vedavathi left her mortal body by her yogic power.


Vedavathi became SeethA, the adopted daughter of King Janaka. As a punishment for his lust for SeethA, RAvaNa and his whole race got destroyed just as Vedavathi had cursed before quitting her mortal body!


By the merits earned by her penance in her previous birth, Vedavathi reborn as SeethA married RAmachandra. SeethA in her fresh youth enjoyed various pleasures in the company of her husband, who was handsome, peaceful in temperament, strong and invincible.


But the all-powerful Destiny is irresistible. RAmA had to keep up the promise made by his father to his step mother. He had to go to the forest as ordained by the all powerful Destiny. He went with his wife SeethA and loyal younger brother LakshmaN. They reached a beach during their wandering.




 
SEkkizhArin Periya PurANam

#3எ. திருமுறை பிறந்தது

சோழ வள நாட்டில் திருத்தலம் ஒன்று
செழிக்கும் திரு நாரையூர் என்பதாகும்.

அடுத்து அமைந்துள்ளது தில்லைப் பதிக்கு;
எடுத்து ஒலிக்கும் வேத கோஷம் எப்போதும்.

உற்சவங்கள் ஏற்படுத்தும் உற்சாகத்தை;
உற்சாகம் ஏற்படுவது உறவினர் வரவால்.

பொள்ளா பிள்ளையார் எழுந்தருளிய இறைவன்;
பிள்ளைகள் இல்லாத வீடே இல்லை இவ்வூரில்.

வழிபாடு செய்து வந்தது ஆதி சைவர் குடும்பம்;
வழி காட்டப் பிறந்தான் ஓர் அருட் செல்வ மகன்.

வளர்ந்தான் நாளொரு மேனி, வண்ணத்துடன்;
வளர்ந்தது அறிவும், அழகும், இறை பக்தியுடன்.

கொண்டிருந்தான் மறை அறிவும், புலமையும்;
கொண்டிருந்தான் அரசருக்கு உரிய உருவமும்.

சென்றான் பள்ளிக்கு கல்வி பயில உரிய வயதில்;
செய்தனர் உபநயனம் அவனுக்கு உரிய வயதில்.

நிர்பந்தம் ஏற்பட்டது குடும்பம் வெளியூர் செல்வதற்கு.
நிர்பந்தம் ஏற்பட்டது மகனை மட்டும் விட்டுச் சென்றிட.

"பூசனை செய்ய வேண்டும் பொள்ளா பிள்ளையாருக்கு!"
நேசத்துடன் கட்டளை இட்டுச் சென்றார் அவன் தந்தையார்.

பேருவகை கொண்டான் இதைக் கேட்ட அந்த பாலகன்;
புளகம் அடைந்தான் தான் பெற்ற நற்பேற்றினை எண்ணி.

துயில் எழுந்தான் குமாரன் வைகறைப் பொழுதினில்;
தூய நீராடினான்; தூய ஆடை, வெண்ணீறு தரித்தான்.

உருத்திராட்சம் அலங்கரித்தது அந்தச் சிறுவன் மார்பை;
திருவமுதை எடுத்துச் சென்றான் பிள்ளையார் ஆலயம்.

முறைப்படி ஆலயத்தைச் சுத்தீகரித்து வழிபாடு செய்தான்;
திருவமுதைப் படைத்தான்; பிள்ளையார் உண்ணவில்லை!

வருந்தினான் குமாரன், மறுகினான் காரணம் தெரியாமல்!
"திருவமுது உண்ணாமல் இருப்பது ஏன்?" என வினவினான்.

கல்லாகவே இருந்தார் பொல்லாத பொள்ளா பிள்ளையார்!
கல்லிலேயே மோதிக் கொண்டான் சிறுவன் தன் சென்னியை!

தடுத்து ஆட்கொண்டார் பொள்ளா பிள்ளையார் அப்போதே,
திருவமுது உண்டார், அச்சிறுவனை மதித்து மகிழ்வித்தார்.

"நம்பி என்ற பட்டம் பெற்றான் அந்த இளங் குமாரன் - தன்
நம்பிக்கையால் இறைவனுக்கே திருவமுது செய்வித்ததால்.

கால தாமதம் ஆகிவிட்டது சிறுவன் பள்ளிக்குச் செல்வதற்கு;
கலக்கம் அடைந்தான் சிறுவன் அதையே எண்ணி எண்ணி.

"தண்டிப்பார் கடுமையாக பள்ளி ஆசான் கால தாமதத்துக்கு!
தண்டனிட்டேன் எனக்கு எல்லாக் கலைகளையும் ஓதி அருள்வீர்!"

பேரொளி பிறந்தது அந்த ஆலயத்தில் இறைவன் அருளால்;
பேரருள் கொண்டு ஓதினார் கலைகளை, நன்னெறிகளை!

வியந்தார் தந்தை நடந்த நிகழ்வுகளைக் கேட்டு அறிந்தபின்பு.
வியந்தார் குமாரன் ஒரே நாளில் பரம ஞானி ஆகிவிட்டதால்.

பாலகனாக இருந்தான் அச் சிறுவன் முதல் நாள் வரையில்;
பார் போற்றும் புலவன் ஆக்கிவிட்டார் பொள்ளா பிள்ளையார்.

"நம்பியாண்டார் நம்பி" என்ற பட்டப் பெயர் இயற்பெயர் ஆனது.
நம்பியாண்டார் நம்பியின் நாவன்மை நாற்றிசையும் பரவியது.

திரு வீரட்டை மணிமாலை பிறந்தது நம்பியின் நாவினில்;
திருவருட் புரிந்த பொள்ளா பிள்ளையாரைப் போற்றுவதாக.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#3a. Nambi AndAr Nambi

Thiru nAraiyoor is a holy place in the Chozha kingdom. It is very close to Thillai and so the vedic chanting can be heard there all through the day. Festivities bring joy to the people there since they also bring home their near and dear relatives.

The name of the God residing there is BoLLA PiLLaiyAr. There was not single house which did not have young children in it. A family of Adhi Saivaites were the priests of that temple.

A son was born in that family who would lead many thousands of people in the right path when he grows up. He grew up well and his beauty, intelligence and devotion to God also grew well along with him.

He was well versed in Poetry and had knowledge of the Vedas. He went to school at the right age. His upanayanam was performed at the right age.

One day the whole family had to go out leaving the little boy alone. His father reminded him to perform pooja to BoLLA PiLLaiyAr as usual. The boy was thrilled that now he could worship his God to his heart's content.

He got up early the next day. He bathed and got ready to go to the temple carrying the neivedhyam to be offered to God. He did the pooja as he had watched his father do. But when the neivedhyam was offered the God did not eat it!

The boy expected the God to actually eat the offering and was therefore very upset. He begged his God to eat but the God remained like a stone He was made out of. The boy started banging his head on a stone. God could not bear it any more. He stopped the boy from harming himself and ate the offerings made.

The boy became very happy. He realized that he would be very late to his school and would get punished severely. He prayed to God, "Please teach me everything I need to know I pray to you!" The BoLLA PiLLaiyAr taught him everything he needed to know.

When his father returned , he was thrilled to learn about everything that had happened. His son had become a pundit in one single day. The boy sang Thiru veerattai mani maalai in praise of the BoLLA PiLLaiyAr. He got the title 'nambi AndAr nambi'. His fame and poetry spread in all the four directions.

 
bhagavathy bhaagavatam - skanda 9

9#16c. வேதவதி (3)

வந்தான் அக்னி தேவன் தேவர்களின் தூதுவனாக;
“வந்தது ராவணன் சீதையை அபகரிக்கும் நேரம்.


தந்து விடுங்கள் சீதையை பத்திரமாக என்னிடம்;
தந்து விடுகிறேன் ஒரு மாய சீதையை உம்மிடம்.


போருக்குப் பின் தருவேன் சீதையை உம்மிடம்;
சொல்ல வேண்டாம் தேவ ரகசியம் எவரிடமும்!”


போலி சீதையை உருவாக்கினான் அக்னி தேவன்;
போனான் நிஜ சீதையைப் அழைத்துக் கொண்டு.


மாய மானிடம் மயங்கினாள் மாய சீதா தேவி.
மாய மானைத் துரத்திச் என்றான் ராமசந்திரன்.


தூரத்தில் அலறியது மாய மான் ராமன் குரலில்;
துரத்தினாள் சீதை ராமனிடம் லக்ஷ்மணனை!


அபகரித்தான் சீதையை அங்கு வந்த ராவணன்;
அலைந்து திரிந்து தேடினர் சீதையை இருவரும்.


தெரிந்தது சீதையிருப்பிடம் அனுமன் உதவியால்;
பரிந்து உதவியது வானர சேனை ராம லக்ஷ்மணருக்கு.


சென்றான் ராமன் கடல் கடந்து இலங்கைக்கு
வென்றான் ராவணாதியரைப் பெரிய சமரில்.


மீட்டான் சீதையை அசோக வனத்தில் இருந்து;
இட்டான் கட்டளை அக்னிப் பரீட்சைக்கு ராமன்.


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


9#16c. Vedavathi (3)


Agni Devan had come as the messenger from the Devas. He told RAman, “The time for the abduction of SeethA by RAvaNan is nearing. Please hand over SeethA Devi to me. I shall replace her with a mAya SeethA. I will return SeethA Devi to you safely after RAvaNa is vanquished. This is a Deva rahasyam. Please do not reveal this to anyone.”


So a mAya SeethA was created by Agni and the real SeethA was led away to safety. The mAya SeethA fell in love the mAya deer and wanted to have it as a pet.


RAman went chasing that strange golden deer. When he realized that it was the work of an sura, RAman struck it with an arrow. But the deer shouted in the voice of RAmA before giving up its ghost.

SeethA sent away LakhsmaN to help RAman. RAvaNan found a chance to abduct SeethA to Lanka. RAman and LakhmaN searched for SeethA everywhere. They befriended Sugreeva and with the help of the vAnara sEnA found the whereabouts of SeethA Devi.


With the help of the vAnara sEnA, RAman and LakshmaN crossed the sea and safely reached Lanka. They killed RAvaNan and his clan in a terrible war.


SeethA was freed from Asoka vanam. RAman ordered her to enter the fire in an Agni pareeksha or the ordeal by Fire.




 
SEkkizhArin Periya PurANam

#3b. திருமுறை பிறந்தது (2)

ஆண்டு வந்தான் சோழ நாட்டை இராஜராஜ சோழன்;
அபயகுல சேகரனும், இரண்டாம் ஆதித்தனும் இவனே.

சிறந்து விளங்கினான் சிவ பக்தியில் இராஜ ராஜன்;
சிறந்தான் இவன் வீரம், தீரம், வாய்மை, தூய்மைகளில்.

"சிவபாத சேகரன்" என்னும் பட்டம் பெற்றான் இவன் - தன்
சீரிய பல திருத்தொண்டுகளாலும், திருப்பணிகளாலும்.

சிவனருட் செல்வர்கள் வருவர் அவனைக் காண்பதற்கு;
சிவனருட் செல்வர்கள் பாடுவார் அவன் ரசிப்பதற்கு .

சிந்தாகுலம் அடைத்தான் இராஜராஜ சோழன் - மனம்
நொந்தான் தேவாரப் பதிகங்களைத் விருதே தேடித் தேடி!

"சமயக் குரவர்கள் திருவாய் மலர்ந்து அருளிய - அற்புத
இமயம் நிகர்த்த பதிகங்கள் இருக்கும் இடம் எது?" என்று!

உறுதி கொண்டான் அந்தத் திருப்பதிகங்களை மீட்பதற்கு;
உறுதி கொண்டான் அவற்றைத் தேடிக் கண்டு பிடிப்பதற்கு.

நற்செய்தி ஒன்று வந்து விழுந்தது அவன் செவிகளில்;
நம்பி ஆண்டார் நம்பி தெய்வ அருளைப் பெற்ற செய்தி.

நால்வகைப் படைகளுடன் சென்றான் திருநாரையூர்;
பல்வகை நிவேதனப் பொருட்களும் உடன் சென்றன.

அலங்கரிக்கப் பட்டிருந்தது திருநாரையூர் அன்று
அமராவதியோ இது என்று காண்போர் ஐயுறும்படி!

பந்தல்கள்; தோரணங்கள்; குலைத்த வாழை மரங்கள்;
செந்தூரப்பொடி, நறுமலர்கள்; வண்ணக் கோலங்கள்!

முழங்கியது வேத கோஷம்; எழுந்தது விவித நாத கீதம்;
அழகிய மகளிர் எடுத்தனர் ஆரத்தி; தூவினர் மலர்களை.

அடைந்தான் பொள்ளா பிள்ளையார் ஆலயத்தை மன்னன்;
அடைந்தான் மனநிறைவு நம்பியாண்டார் நம்பியை வணங்கி.

"செய்விக்க வேண்டும் நிவேதனங்களை இறைவனுக்கு!" எனச்
செய்தார் விண்ணப்பம் நம்பி கண்ணீர் மல்கிட, உள்ளம் உருகிட.

திருவருள் கொண்டார் பொள்ளா பிள்ளையார் அன்பர்களிடம்;
திருவமுது செய்தார் மன்னன் கொணர்ந்த நிவேதனங்களை!

வியந்தனர் இதுகண்டு கடல்போல் அங்கு குழுமி இருந்தவர்கள்;
விழுந்து விழுந்து வணங்கினர் அந்தப் பிள்ளையாரைப் பலமுறை.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

# 3b. King RAjarAja chOzhan

King RAjarAja chOzhan was ruling over ChOzha kingdom. His other tiles were 'Abaya Kulach ChOzhan' and 'IraNdAm Athiththan'. He was an ardent devotee of Lord Siva. He excelled in his valor, courage, truthfulness of words and purity of mind. He served for Saivism and earned the title 'Siva PAdha SEkharan'.

The devotees of Lord Siva would visit him often. He would be all ears to drink in their words and songs about the lord. He was sad that the ThEvArap pathigams composed by the supreme trio Thiru JnAna Sambandhar, NAvukkarsar and Sundaramoorthi had gone missing. He wished to recover them and spread them in the world once again.

He heard the news that Nambi AndAr Nambi had received the grace of BoLLA PiLLaiyAr. He set out to meet Nambi with his retinue and carried a variety of offerings to the God in Thiru NAraiyoor.

The city was decorated like AmarAvathi - the city of the Devas. Numerous Pandals, thoraNs, rows of banana trees, fragrant powders, fresh flowers, colorful designs drawn on the ground decorated the whole place. The mixture of Vedic chanting and various musical instrument filled the whole place.

Beautiful women did haarathi and showered flowers on the king. RAjarAjan went straight to the temple of BoLLA PiLLaiyAr and paid obeisance to Nambi and requested him to make God accept all the offerings brought by him.

Nambi prayed to God,"Please accept these offering and bless us!" with tears rolling down his cheeks and with utmost sincerity. The God took pity on him and accepted king's offerings. The people gathered there were wonder struck. They fell down and worshiped God many times over and over again.


 
bhagavathy bhaagavatam - skanda 9

9#16d. வேதவதி (4)

வெளிவந்தாள் அசல் சீதை அக்னியிலிருந்து!
“வழி காட்டும் எனக்கு! என்றாள் சாயா தேவி.


சாயா தேவி என்பது அக்னி உருவாக்கிய
மாய சீதைக்கு இன்னொரு பெயர் ஆகும்!


“புஷ்கரத்தில் செய்வாய் நீண்ட நெடும் தவம்!”
ஸ்வர்க்க லக்ஷ்மியாகிவிட்டாள் சாயா தேவி.


பிறந்தாள் பாஞ்சாலியாக யக்ஞ குண்டத்தில்;
சிறந்த பாண்டவர்களுக்கு மனைவியானாள்.


வேதவதியாக இருந்தாள் கிருத யுகத்தில்;
சீதையாக இருந்தாள் திரேதா யுகத்தில்;


திரௌபதியாக இருந்தாள் துவாபர யுகத்தில்;
திரிகாயனி என்ற பெயர் பெற்றாள் சாயாதேவி.


“ஐந்து கணவர்களை அடையக் காரணம்?”
வியந்து கேட்டான் நாரதன் நாரணனிடம்.


சங்கரனைக் குறித்துத் தவம் செய்தாள் சாயாதேவி;
சங்கரனிடம் கணவனை வேண்டினாள் ஐந்து முறை!


‘ஐந்து முறை கேட்டாய் கணவனை வேண்டி!
ஐந்து கணவர்களை மணம் புரிவாய்!” என்றார்


அரசாண்டான் ராமன் பதினோராயிரம் ஆண்டு.
இரண்டறக் கலந்தாள் வேதவதி லக்ஷ்மியிடம்.


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


9#16d. Vedavathi (4)


MAya SeethA – also known as ChAyA Devi – entered the fire and the real SeetA emerged from the fire. Now ChAyA Devi asked RAma what she was supposed to do.

She was advised to perform a long penance in the Pushkara kshethra. She did as told and became the Swargga Lakshmi.


She was born again as PAnchAli from the yagna kuNdam. She married and became the wife of the Pancha PANdavAs


She was born as Vedavathi in Kritha yuga; she was born as SeethA in TrethA yuga and she was born as PAnchAli in the dwAparauyuga. She has another name as Thri KAyanee.


NAraDA asked NArAYaNA,”Why did ChAyA Devi get five husbands as Droupadi?”

NArAyaNa replied, “She did penance towards Siva. She asked for a good husband five times. Siva blessed her with five husbands since she had asked five times.”

RAmA ruled well for eleven thousand years and Vedavathi merged with Lakshmi Devi inseparably.



 
SEkkizhArin Periya PurANam

#3 c. திருமுறை பிறந்தது (3)

விண்ணப்பம் செய்தான் இராஜராஜன் - தன்முன்

கண்கண்ட தெய்வம் போன்ற நம்பியாண்டாரிடம்.

"மூவர் இயற்றிய தேவாரங்கள் மீண்டும் ஒலிக்க வேண்டும்;
ஆவலுடன் பரப்ப வேண்டும் அடியார்களின் வரலாறுகளை".

"தெளிவு பெற முடியாது நாம் அண்ணலின் அனுமதி இன்றி;
தெளிவு பெற உதவுவான் என்னை ஆட்கொண்ட அண்ணல்.

கேட்டு அருள் புரிய வேண்டும் அடியோம் விண்ணப்பத்தை;

காட்டி அருள வேண்டும் மறைந்திருளுக்கும் அந்த நூல்களை".

"திருவாயில் ஒன்று உள்ளது திருச் சிற்றம்பலத்தில் - அந்தத்
திருவாயில் அமைந்துள்ளது பொன்னம்பலத்தின் புறத்தே.

திருமுறைகள் வைத்துப் பூட்டப்பட்டுள்ளன - குரவர் மூவரின்
திருக்கைகளின் அடையாளம் பொறிக்கப்பட்ட அறையினுள்."

வியந்தார் நம்பியாண்டார் நம்பி இறைவன் கருணையை;
விவரித்தார் மன்னனுக்கு இறைவன் மொழிந்த செய்தியை.

"செல்வோம் தில்லைக்கு நாம் அனைவரும் இப்போதே!" எனச்
சென்றனர் தில்லைக்கு குழுமிய சிவனடியார்கள் மன்னனுடன்.

ஆதியும், நடுவும் ஆகி நிற்பவன் நம் சிவபெருமான்;
ஜோதியும், உணர்வும் ஆகி நிற்பவன் நம் சிவபெருமான்;

பெண்ணுமாகி, ஆணுமாகி நிற்பவன் நம் சிவபெருமான்;
வெண்ணீறணிந்து களி நடனம் புரிபவன் சிவபெருமான்.

தில்லையின் எல்லையிலேயே வீழ்ந்து வணங்கினர் - இவர்கள்
தில்லையை அடைந்தவுடன் பெற்றனர் பூரண கும்ப வரவேற்பு.

விண்ணப்பித்தான் இராஜராஜன் தனக்குக் காட்டுமாறு - அந்த
மண் போற்றும் மூவரின் திருக்கைகள் பொறித்த அறையை.

"திறக்கும் அந்த அறை அம்மூவரும் ஒன்றாய் எழுந்தருளினால்!"
உரைத்தனர் அஞ்சாமல் உண்மையைத் தில்லைவாழ் அந்தணர்.

பெருவிழா நடத்தினான் மன்னன் தேவார ஆசிரியர்களுக்கு;
"திருவிழாக் காண்பதற்கு தேவலோகமே திரண்டு வந்ததோ?"

வழிபட்டனர் மூவரின் அழகிய விக்கிரகங்களை அனைவரும்;
எழுந்தருளச் செய்தனர் ஆலயத்தில், நகர ஊர்வலத்தின் பின்.

திரு உருவங்கள் நிறுத்தப் பட்டன பூட்டிய அறையின் முன்பு;
"திறவுங்கள் அறைக்கதவை" என்றார் நம்பியாண்டார் நம்பி.

அருள் செய்தார் பொள்ளா பிள்ளையார் மீண்டும் நம்பிக்கு;
திறந்து கொண்டன பூட்டிய அறையின் கதவுகள் தாமாகவே!

அடி எடுத்து வைத்தனர் அறைக்குள் நம்பியும், மன்னனும்;
நொடித்துப் போயினர் அங்கு அவர்கள் கண்ட காட்சிகளால்!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#3c. The search for the ThevAram verses

King RAjarAjan considered Nambi as the Visible God known to him. He made his request," We must recover the ThEvAram verses which have been lost to the world. We must spread those verses and the life history of all the nAyanmArs all over the world!"

Nambi replied to the King with perfect humility, "We cant know anything about those verses without God's permission. I am sure He will help us in our search for those lost verses."

Nambi turned to BoLLA PiLLaiyAr now and made this humble request earnestly," Oh Lord! Please hear our request and help us to find those ThEvAram verses which have been lost to the world."

God replied thus, " In Thillai Thiruch Chitrambalam there is an entrance outside Ponnambalam. The verses you seek are locked up in a room which has been sealed by the three composers of those verses."

Nambi was awe stuck at the grace of the God for giving this very valuable information. He told the king the message of his God. They decided to go to Thillai Chidhambaram right away without wasting any more time.

Siva is the beginning and middle of the entire creation. Siva is the light and the sentience of all living beings. Siva is a male God as well as a female God at the same time. Siva performs the exotic thANdavam smeared by the bright white holy ash.

The entire group fell on the ground and prayed the moment they reached the outskirts of Thillai. The 3000 Brahmins of Thillai gave the king a hearty welcome with poorNa kumbham. The king requested those 3000 Brahmins of Thillai to open the room which contained the ThEvAram verses.

The 3000 Brahmins of Thillai said in unison, "The door of the room will open only if all the three composers of the ThEvAram come here together." They spoke the truth and so were not intimidated by the king.

The King did not get discouraged by their reply. He made the images of the three composers of ThevAram in pure Gold. He celebrated a very grand festival in their honor. The three vigrahams were taken on a procession through the city and reached the locked door in the temple.

Nambi prayed to his God, "Please open this door now!" and lo and behold the door opened by itself now that the images of all the three composers were there fulfilling the condition.

Nambi AndAr Nambi and King RAjarAjan entered the room. The sight they saw there gave them a rude shock!

 
bhagavathy bhaagavatm - skanda 9

9#17a. துளசி தேவி (1)

தர்மத்வஜ மன்னனின் அன்பு மனைவி மாதவி;
காதற் கணவனோடு லயித்திருந்தாள் மாதவி;

கந்த மாதனந்தில் மலர் மஞ்சம் ஒன்றில்,
சந்தனப் பூச்சுடன், மணம் வீசும் தென்றலில்!

இச்சை கொண்டனர் இன்ப லீலைகளில்!
இச்சை தீரவில்லை நூறு தேவ ஆண்டுகள்!

பிரிந்து சென்றான் மன்னன் அரசாட்சி செய்ய;
அரிய கர்ப்பம் தரித்தாள் நூறு ஆண்டுகள்.

பிறந்தாள் அழகிய பெண் குழந்தை மகளாக,
கார்த்திகை பௌர்ணமி, வெள்ளிக்கிழமை!

இட்டனர் துளசி என்னும் அழகிய பெயரை
ஈடு இணை இல்லாதவள் என்ற பொருள் பட.

‘நாயகனாக அடைய வேண்டும் நாரணனை!’
நனைந்தாள் மழையில்; காய்ந்தாள் வெய்யிலில்;

பஞ்சாக்னிகளின் மத்தியில் கோரத் தவம்
கொஞ்சமும் தயங்காமல் செய்து வந்தாள்!

புசித்தாள் பழங்களை மட்டும் 20,000 ஆண்டுகள்.
புசித்தாள் இலைகளை மட்டும் 30,000 ஆண்டுகள்

சுவாசித்தாள் காற்றை மட்டும் 40,000 ஆண்டுகள்
புசிக்கவில்லை எதனையுமே 10,000 ஆண்டுகள்!

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

9#17a. Tulasee Devi (1)

MAdhavi was the queen of King Dharmadwajan. She was enjoying marital pleasures with her husband in GandamAdan – anointed with sandal paste, on a bed of flowers in the fragrance of the cool breeze.

Both the king and his queen were equally interested in the acts of love and enjoyed on undisturbed for one hundred long celestial years.

Then the king remembered his kingly duties and went away. MAdhavi remained pregnant with his child for one hundred years. She delivered a beautiful girl child on the ausppicious full moon day in the month of KArtik on a Friday.

The baby was exceeding beautiful with none equal to her. So she was names as Tulasee meaning a beauty nonpareil whom no one can be equal to!


Tulasee wanted to wed Lord Sriman NArAyaNan. She went out to perform strict penance and could not be stopped by anyone. She got wet in the drenching rain and got dried in the scorching sun.


She performed the harsh austerities in the PanchAgni – surrounded by four burning agni kundams on the four sides and the scorching Sun over her.


She survived only on fruits for the first 20,000 years. She survived on leaves for the next 30,000 years. She lived on air for the next 40,00 years. She did not consume anything at all for the next 10,000 years.


 
SEkkihArin Periya PurANam

#3d . திருமுறை பிறந்தது (4)

புற்று மண்டிக் கிடந்தது ஓலைச் சுவடிகளின் மீது!
புற்று மண்ணை விலக்கி எடுத்தனர் அச்சுவடிகளை.

சிதைத்திருந்தன ஓலைச் சுவடிகளைக் கறையான்கள்;
சிந்தாகுலம் அடைந்தனர் இராஜராஜ சோழனும், நம்பியும்.

"வேண்டிய சுவடிகளை வைத்துள்ளோம் மிக பத்திரமாக.
மண் மூடியவை மற்ற சுவடிகளே!" ஒலித்தது ஓர் அசரீரி.

எடுத்து வந்து சுத்தம் செய்வித்தான் மன்னன் சுவடிகளை.
கொடுத்தான் நம்பியிடம் அவற்றைத் தொகுத்து அளித்திட.

தங்கி விட்டார் நம்பியாண்டார் நம்பி தில்லையிலேயே.
தொடங்கினர் திருப்பதிகங்களைத் தொகுக்கும் பணி.

அந்தாதி ஒன்று பாடினார் நம்பியாண்டார் நம்பி - பின்பு
திருமுறைகளைப் பகுத்து வகுத்தார் பதினொன்றாக.

திருமுறைகள் முதல் மூன்று ஞானசம்பந்தர் இயற்றியவை;
திருமுறைகள் அடுத்த மூன்றும் நாவுக்கரசர் இயற்றியவை;

ஏழாம் திருமுறை சுந்தரமூர்த்தி இயற்றிய பதிகங்கள்;
எட்டாம் திருமுறை மணிவாசகர் இயற்றிய பதிகங்கள்;

திருமுறை ஒன்பது இருபத்து ஒன்பதின்மர் இயற்றியவை.
திருமுறை பத்து ஆனது திருமூலர் இயற்றிய திருமந்திரம்.

திருமுறை பதினொன்று எண்பத்தொருவர் பாடிய பதிகங்கள்;
திருமுறைகள் தொகுக்கப் பட்டன பதினொன்று பிரிவுகளாக.

பண் அமைக்க விரும்பினார் பதிகங்களுக்கு நம்பி - இறைவன்
அருளினார் பண் அமைப்பதில் திறமை வாய்ந்த பெண்மணியை.

"திருநீலகண்ட யாழ்ப்பாணரின் குலப்பெண் ஒருவள் உள்ளாள்.
திறமை படைத்தவள் பதிகங்களுக்குப் பண் அமைப்பதில்!" என

வரவழைத்தனர் அந்தப் பெண்மனையைத் தில்லைக்கு;
அரிய பண்களில் அமைத்துத் தந்தாள் திருப்பதிகங்களை.

செப்பேடு செய்தான் மன்னன் பதினோரு திருமுறைகளையும்;
செம்மையான முறையில் தழைக்கச் செய்தான் சைவ மதத்தை.

புகழ் பெற்றான் திருமுறை கண்ட இராஜராஜன் என்ற பெயரில்.
புகழ் பெற்றான் அயராது பல சிவத் திருத்தொண்டுகள் புரிந்து.

வழிபட்டார் நம்பியாண்டார் நம்பி பொள்ளா பிள்ளையாரை,
வாழ்ந்து முடிந்தபின் அடைந்தார் இறைவன் திருவடி நிழலை.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#3d. Classification of the 11 ThirumuraigaL

The King RAjarAjan and Nambi were shocked to find that the bundles of verses were covered by the anthills made by the white ants. They pushed aside the anthills and tried to recover those precious bundles. Many leaves had been digested by the white ants and they both became very sad indeed.

Then they heard an asareeri, "The verses you look for have been well preserved. The others have been destroyed". They brought out all the bundles and got them cleaned up. The king gave the bundles to Nambi AndAr Nambi and requested him to classify them.

Nambi stayed on Thillai to classify those verses. He first sang an andhaadhi in praise of his ishta dheivam BoLLA PiLLaiyAr. The verses sung by Thiru JnAna Sambandhar formed the first three ThirumuraigaL. The verses sung by NAvukkarasar formed the next three ThirumuraigaL. The verses sung by Sundara moorthi became the Seventh Thirumurai.

The verses of MANIkka vAsakar became the Eighth Thirumurai. The collection of verses by 29 different poets were classified as the Ninth Thirumurai. Thiru Manthiram composed by Siva yogi Thiru Moolar became the Tenth Thirumurai. The verses sung by eighty nine other poets became the Eleventh Thirumurai.

After classifying the verses Nambi wanted to set them in appropriate PaN (tunes aka rAgas). His God guided him in this task also. There was a very talented woman born in the family of Thiru Neelakanta yAzh PANar. She was very well versed in the different rAgas. She was invited to come to Thillai and set the tunes for all the verses.

King RAjarAjan got all the verses inscribed on Copper leaves and preserved them. He was celebrated with a new title "Thirumurai kanda RAjarAjan" meaning "RAjarAjan who found the Thirumurai". He served the cause of Saivism as long as he lived. Nambi continued to worship BoLLA PiLLaiyAr all his life and took refuge in His lotus feet after his life on earth.

 
bhagavathy bhaagavatam - skanda 9

9#17b. துளசி தேவி (2)

தோன்றினான் பிரமன் துளசியின் முன்பு
“வேண்டும் வரம் என்னவோ கூறுவாய்!

பக்தியா? தாஸ பாவமா? அமரத் தன்மையா?”
பதில் தந்தாள் துளசி பிரமனுக்கு இவ்விதமாக.

“பிறந்திருந்தேன் கோலோகத்தில் கோபியாக!
சிறந்திருந்தேன் கோபாலனின் பிரிய சகியாக!

“மோஹம் தீரவே இல்லை சம்போகத்தினால்;
கோபப்பட்டாள் ராதிகா என்னிடம் அதீதமாக.

சாபம் தந்தாள் எனக்கு மானிடக் குறியில் பிறந்திட!
சாபம் பெற்றேன் பரிதாபம் கொண்டேன் என் மீதே!

“என் அம்சம் கொண்டவன் ஒருவனை மணப்பாய்!”
அன்புடன் கூறினான் என்னிடம் கிருஷ்ண பரமாத்மா.

பிறந்தேன் அந்தச் சாபம் காரணமாக இங்கே.
பெறவேண்டும் நான் பகவானைக் கணவனாக!”என

பிரமன் கூறினான் துளசியிடம் இந்த விதமாக,
“பிறந்தான் சுதர்மன் கிருஷ்ணன் தேஹத்திலிருந்து;

மோஹம் கொண்டான் உன்னைக் கண்டதும்!
மோஹமும், காமமும் நிறைவேறவே இல்லை!

சபித்தாள் ராதிகா அவனையும் கூட – பிறந்தான்
சாபத்தினால் பிறந்தான் அவன் சந்திர சூடனாக!”

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

9#17b. Tulasee Devi (2)

Brahma appeared in front of Tulasee. He asked her, “What do you wish for my dear child? Do you want bakti or dAsa bhAvam or immortality?”

Tulasee told him thus: “I was born in GOlOka as a gOpi and was very close to Krishna ParamAtmA. I could not get enough satisfaction from the pleasures I enjoyed there.

RAdhA was very annoyed with me and she was angry too! She cursed me that I will be born as a human being. Krishna ParamAtmA consoled me saying that I will marry someone great who was born out of his own amsam.

I was born on the earth among human beings because of RAdhA’s curse. I want to marry Krishna BhagavAn. I seek nothing else from you!”

Brahma told Tulasee thus: “SudhAman was born out of the body of Sri Krishna ParamAtmA. He fell in love with you madly the moment he set his eyes on you.

But his love remained futile and unfulfilled in GOlOka. RAdha cursed him too to be born in the race of DhAnavAs. He is now born as Sankha Chooda in the race of Manus.”

 
SEkkizhAr's Periya PurANam

#4எ. சேக்கிழார் பெருமான்

கொண்டிருந்தது இருபத்து நான்கு கோட்டங்களைத்

தெண்ணீர் வயற்கொண்ட தொண்டை மண்டல நாடு.

சிறந்து விளங்கியது அவற்றுள் புலியூர் கோட்டம் ;
சிறந்து விளங்கியது அக்கோட்டத்துள் குன்றத்தூர்;

சிறந்து விளங்கியது அக்குடிகளுள் வேளாண்குடி;
சிறந்து விளங்கியது அக்குடி உமையின் அருளால்.

தந்தாள் உமை அன்னை ஈசன் தந்த நாழி நெல்லை.
செந்நெல் பயிரிட ஆனது பரந்த குவலயமே கழனி!

ஆகிவிட்டது அலைவீசும் ஆழ்கடல் அமைதியான ஏரியாக;
ஆகிவிட்டான் வருணன் நெல்லுக்கு நீர் பாய்ச்சுபவனாக;

ஆயின உழவு மாடுகளாக விண்ணகக் கிடாவும், விடையும்;
ஆயிற்று நிலம் உழும் கலப்பையாக பலராமன் கை ஆயுதம்;

அவதரித்தார் சேக்கிழார் பெருமான் இத் திருத்தலத்தில்
அவனி செய்த அரும் பயனாகச் சேக்கிழார்களின் மரபில்.

அருண்மொழி இராமதேவர் இவரது அழகிய இயற்பெயர்;
பெரும் புகழ் பெற்றார் சேக்கிழார் என்னும் குடிப் பெயரால்.

அமைச்சராகப் பணி புரிந்து வந்தார் இவரது தந்தையார்
அநபாயச் சோழன் இரண்டாம் குலோத்துங்க மன்னனிடம்.

அழைத்துச் செல்வார் செல்வ மகனையும் அரசவைக்கு
அழகு, ஒழுக்கம், அறிவு, புலமை, நாவன்மை வளர்ந்திட.

ஆக்கிவிட்டான் அநபாயச் சோழ மன்னன் குலோத்துங்கன்
அமைச்சருள் முதல்வராகச் சேக்கிழாரை வெகு விரைவில்.

பட்டம் தந்தான் மனம் மகிழ்ந்த மன்னன் சேக்கிழாருக்கு
"உத்தம சோழ பல்லவர்" என்று உயரிய அரிய பெயரை.

தரிசிக்கச் சென்றார் சேக்கிழார் பெருமான் திரு நாகேசுவரம்.
திருப்பணிகள் பல சிறப்பாகச் செய்தார் அத் திருத்தலத்தில்.

அமைத்தார் அதைப் போன்ற ஓர் ஆலயம் குன்றத்தூரிலும்;
அழைத்தார் அந்த ஆலயத்தையும் திரு நாகேசுவரம் என்றே.

அமைத்தார் அதே போன்ற அழகிய பொன்மாட வீதிகளையும்;
அளித்தார் நித்திய வழிபாடுகளுக்குப் பொன், பொருள், நிலம்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#4a. SekkizhAr

ThoNdai maNdalam consisted of 24 KOttam. Of these 24, Puliyoor KOttam was considered the best. Among the subdivisions of that KOttam, Kundrathoor was considered the best. Among the people who lived there, the farmers were considered the best people.

They had been helped by Devi Uma herself. She gave them a measure of paddy given to her by Lord Siva. The world became the field for planting those seeds. The ocean became the lake that watered the field.

VaruNa was the person in charge of irrigating the field. The bull and the Ram from the Heaven became the animals use to plough the field. Balaram's weapon became the plough.


In this race of farmers was born the great poet SekkizhAr. His original name was AruL Mozhi Ramathevar but he became famous by the name of his race. His father was a minister in the dhurbar of ChOzha king AnabAyan aka IraNdAm kulOthungan.

He used to take his son also along with him to the dhurbar to expose him to the fine qualities of the people there. So The young boy imbibed many good qualities, Good Character, Knowledge, Poetical talent and power of speech easily.

The king noticed these rare qualities in him and made him his chief minister. He gave the title "Uththama ChOzha Pallavan" to SekkizhAr.


Once SekkizhAr went to Thiru nAgEswaram temple. He stayed on there and performed several welfare projects. After returning to his own place Kundrathoor, he constructed a temple similar to the one in Thiru nAgEswaram and even gave it the same name.

He had the streets constructed in a similar manner and gave generous amount of money, Gold and an expanse of land for performing the regular ArAdhana in the temple.
 

Latest ads

Back
Top