• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

A poem a day to keep all agonies away!

bhagavathy bhaagavatam - skanda 9

9#17c . துளசி தேவி (3)

“பூர்வஜன்ம வாசனை உண்டு அவனுக்கு!
பூர்வஜன்ம வாசனை உண்டு உனக்கும்!

பத்தினியாவாய் சங்க சூடனுக்கு இப்போது;
பத்தினியாவாய் நாராயணனுக்குப் பிற்பாடு.

மதிப்பர் மக்கள் அனைவரும் உன்னை வெகுவாக!
துதிப்பர் இறைவனை உன் உதவியோடு நன்றாக!

பிருந்தாவனீ என்று பெயரும், புகழும் பெறுவாய் நீ!
பிருந்தாவனத்தில் இனி வரும் காலங்களில் துளசி!

அதிஷ்டான உருவம் ஆவாய் துளசி மரங்களுக்கு நீ!
யதேஷ்டமாக அனுபவிப்பாய் கிருஷ்ணனைக் கூடி!”என

“கிருஷ்ணனின் மீது நான் கொண்டேன் மையல்;
கிருஷ்ணனைப் பெறவேண்டும் காதற் கணவனாக!

நீக்க வேண்டும் என்னுள் நிலவும் அச்சத்தை!
போக்க வேண்டும் ராதை மீதுள்ள அச்சத்தை!” என

பிரமன் உபதேசித்தார் ராதிகா மந்திரத்தை;
“பிராணனுக்குச் சமம் ஆவாய் நீ ராதைக்கு!

பிரியம் கொள்வான் கிருஷ்ணன் உன்னிடம்;
பிரியம் கொண்டது தெரியாது ராதிகாவுக்கு.”

உபதேசித்தார் பதினாறு அக்ஷர மந்திரத்தை!
உபதேசித்தார் கவசத்தைப் பூஜா விதிகளை!

ஆசிகள் தந்து மறைந்தார் பிரம்ம தேவன்;
சித்திகள் பெற்றாள் துளசி வரங்களால்.

அனுபவித்தாள் விஷ்ணுவோடு போகங்களை;
அனுபவித்தாள் மலர் மஞ்சத்தின் மீது சயனம்!

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

9#17c. Tulasee Devi (3)


Brahma continued to tell Tulasee the greatness of Sankha Choodan. “He remembers his poorva janma. You too remember your previous birth. You will make a wonderful couple together! You become the wife of Sankha Choodan now. Later on you will become the wife of Krishna ParamAtmA.

You will be respected the world over. You will become inevitable in any form of worship or puja. You will become famous by the name BrindAvanee.

You will become the presiding deity of all trees and plants. You will enjoy the company of Krishna to your heart’s delight without fearing the wrath of RAdhA.”

Tulasee told Brahma again,”It is Krishna ParamAtmA whom I want to marry. I am filled with fear towards RAdhikA. Please kindly remove the fear and terror from my heart first.”

Brahma taught her the sixteen lettered RAdhikA mantra, RAdhikA kavacham and the rules of Radhika worship. He blessed Tulasee and disappeared.

Tulasee worshiped RAdhika as taught by Brahma and attained sidhdhi. She enjoyed the pleasures with Krishna. She was enjoying her rest on her bed of flowers.

 
SEkkihArin Periya PurANam

#4b. இரண்டாம் குலோத்துங்கன்

மூழ்கி இருந்தார் சேக்கிழார் சைவ சன்மார்க்க நெறிகளில்;
மூழ்கி இருந்தான் குலோத்துங்கன் இழிந்த காமச் சுவையில்.

தேன் பருகிய வண்டு ஆனான் குலோத்துங்கன் - திருத்தக்க
தேவர் படைத்திருந்த சீவக சிந்தாமணியைக் கற்ற பின்னர்.

போர் புரிந்து எட்டுத் திக்குகளிலும் கொடி நாட்டிய மன்னன்
போதையில் வீழ்ந்து விட்டான்; கோழையாக மாறிவிட்டான்!

கலங்கினார் சேக்கிழார் மன்னனின் மன மாற்றங்களால்;
கலங்கினார் சமண மதம் அங்கு வேரூன்றி விடுமோ என்று.

இம்மைக்கும், மறுமைக்கும் நன்மை தராத சில நூல்களால்
செம்மையும், சீர்மையும் நலிந்து விடுமோ என்று அஞ்சினார்.

தடம் புரண்டு செல்லும் மன்னனுக்கு இடித்துரைப்பது - தன்
கடமை என்று உணர்ந்திருந்தார் சேக்கிழார் பெருமான்.

கூறி விளக்க வேண்டும் மன்னனுக்குச் சமணத்தின் குறைகளை;
கூறி விளக்க வேண்டும் மன்னனுக்குச் சைவத்தின் நிறைகளை;

"நலம் தரும் சன்மார்க்க நெறியினைத் துறந்து விட்டீர்கள் அரசே!
நாடிச் செல்கின்றீர்கள் சமண நெறி நூல்களை மிக்க ஆவலுடன்.

கறவைப் பசு போன்ற சைவத்தைத் தாங்கள் துறந்தது என்?
கன்றை ஈனாத மலட்டுப் பசுவும் ஈயுமோ தீஞ்சுவைப் பாலை?

நெல்லைக் குத்தி உண்டால் நீங்கிவிடும் வயிற்றின் பசி - ஆனால்
நெல்லை விடுத்து உமியைக் குத்தித் தாங்கள் வருந்துவது எதற்கு?

ஆலைக் கரும்பு ஆக முடியுமா ரசம் மிகுந்த சோலைக் கரும்பாக?
தேனருவி ஆகி விட முடியுமா கட்டின்றி ஓடும் காட்டாற்று வெள்ளம்?

பெரு நிலவாக ஆகிவிட முடியுமா ஒரு சிறு எரி நட்சத்திரம் கூறுவீர்!
பூங்காற்று ஆகிவிட முடியுமா வெந்தழல் வீசும் அனல் காற்று கூறுவீர்!

ஏளனமாகக் கேட்டான் மன்னன் குலோத்துங்கன் சேக்கிழாரிடம்,
"எதற்காகக் கூறுகின்றீர் இத்தனை உவமான, உவமேயங்கள்?"

"இம்மைக்கு மட்டுமின்றி நம் மறுமைக்கும் பயன் அளிப்பது
செம்மையான சிவக் கதைகள் மட்டுமே என்பதால் தான் அரசே!"

"செம்மையான சிவக் கதைகள் என்பவை எவை எவை? அந்தச்
செம்மையான சிவக் கதைகளைக் கூறும் நூல்கள் எவை எவை?

சிவக் கதைகளைக் கற்று அறிந்தவர்கள் யார் யார் கூறுவீர்!
சிவக் கதைகள் மிகவும் புதியவைகளா அன்றி பழையனவா?

அரிய சிவக் கதைகளைக் கூறும் அரிய பெரிய நூல் எதுவோ?
அந்த அரிய பெரிய நூலை ஆக்கித் தந்தவர் யாரோ கூறும்!"

வாழ்க வளமுடன், விசாலாக்ஷிரமணி

#4b. IraNdAm KulOthungan

SekkuzhAr was immersed in the Saiva SanmArgga way of life while the King AnabAyan sank deeper and deeper into a life of carnal pleasures. He liked the Jeevaka ChinthAmaNi composed by the Jain Thiruththakka Devar so much that he got attracted to Jainsm and lost interest in Saivism.

SekkizhAr felt concerned to notice these changes in the king. He was afraid that Jainism may replace Saivism in the country. As the chief minister it was his duty to direct the King in the right path one more time. He had to explain to the king the defects of Jainism and the merits of Saivism before it became too late.

He asked king KulOthungan,'Oh KIng! Why are you neglecting the sanmaarggaway of living of Saivism and have taken to reading the books by Jains. Saivism is the religion which gives good principles like a cow with a calf gives us milk. The other religions are like the cows which had never had a calf and so could not give any milk.

If we pound paddy and eat the rice we get out of it our hunger will be satisfied. Will eating the dry husk satisfy our hunger sir? The sugar cane which had been squeezed dry can never become the fresh juicy sugar cane brought from a field.

Can a wild river become a lovely water fall? Can a shooting star become the cool and lovely full moon? Can the hot wind from a fire become the gentle breeze laden with the fragrance of the flowers?"

The king got annoyed by this long lecture and the chain of questions put to him. He asked SekkizhAr, "Why so many similes and examples are being thrown at me? What do you wish to convey?"

SekkizhAr replied, "Only stories on Siva and his devotees will help us in this life on earth and also our life after that. " The king questioned him again,"What are the stories on Siva and his devotees? Which literary work relates all these stories? Who are well versed in these stories? Are these stories new or old? Tell me the name of the work which contains the answers to all my questions!"

 
bhagavathy bhaagavatam - skanda 9

9#18a. கனவில் வந்த காதலன்

சயனித்திருந்தாள் துளசி ரதி போல அழகாக;
மயங்கினாள் மன்மதன் மலர் பாணங்களுக்கு.


தாபம் கொண்டாள்; தகித்தது மலர் மஞ்சம்;
காமம் கொண்டாள்; கலங்கியது பெண் மனம்.


சுட்டது அணிந்திருந்த பட்டாடை அக்னி போல்!
சுட்டது பொட்டு நெற்றியில் பட்ட ரணம் போல்!


நொந்த உள்ளம் மகிழ வந்தது ஒரு கனவு – ஒரு
சுந்தர புருஷன் தோன்றினான் அந்தக் கனவில்.


சந்தனப் பூச்சு கமகமத்தது அந்தக் கனவில்;
சுந்தரன் அவனைப் போலக் கண்டதில்லை!


புன்னகை மிளிரும் சுந்தர வாலிபன் – பல
பொன்னகைகள், மாலை அணிந்திருந்தான்.


குனிந்து முத்தமிட்டான் அவள் மதி முகத்தில்;
கனிந்த காதல் கவிதைகள் இனிக்கப் பேசினான்!


அணைத்தான் காற்றுப் புகவும் இடம் இல்லாமல்;
துணை ஆனான் அழகிய மலர் மஞ்சத்தின் மீது!


போக முற்பட்டான் அவளை விட்டு விட்டு!
“போக வேண்டாம் என்னை விட்டு விட்டு!” என


விழித்துக் கொண்டாள் இனிய கனவில் இருந்து;
அழத் துவங்கினாள் கனவில் வந்தவனை எண்ணி!


தூக்கம் போனதும் துக்கம் வந்தது, அந்தோ பரிதாபம்!
ஊக்கம் போனதும் ஏக்கம் வந்தது, அந்தோ பரிதாபம்!


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


9#18a. A lover in her dream

Tulasee was lying on the bed of flowers stretched out beautifully, looking like Rati Devi, the lovely wife of Manmathan – the God of Love.


Manmathan shot his flower arrows and she was overcome by a burning passion. She felt her flower bed to be as hot as a plate kept on a fire. Her silk dress burned on her skin like flames of a fire. The bindi in her forehead hurt as if it were a live wound.


Then she had a very pleasant dream. A very handsome young man appeared in her dream. He was anointed with sandal paste emitting a good aroma. She had never seen anyone so young and handsome before.


He sported a lovely smile on his lips. He was dressed in rich clothes and was decorated with many gold ornaments and fresh flower garlands.


He bent down and kissed her on her face. He spoke to her sweet nothings. He then embraced her so tightly that even air could not separate them. He was a lovely and lively companion on her flower bed.


Suddenly he tried to leave and go away from her. Tulasee said,”Please don’t go away from me!” and woke up from her lovely dream. She started crying for the company of the handsome young man who had appeared in her dream.


Her sleep had vanished and a flood of fresh sorrow drowned her. She yearned to see the handsome young man again either in her dream or in her real life.




 
SEkkizhArin Periya PurANam

#4c . சேக்கிழாரும் மன்னனும்

வினாக்கள் எழுப்பின பெருமிதத்தைச் சேக்கிழாரிடம்,
விடைகள் அளிக்கும் மன்னனுக்கு மனத் தெளிவினை.

"திருவாவூர் தியாகேசன் தந்தான் சுந்தரமூர்த்திக்குத்
'தில்லை வாழ் அந்தணர் தம்' என்ற முதல் அடியை.

பாடி அருளினார் சுந்தரர் பதினோரு பாக்களில்
ஆதி சிவனின் அடியவர்களின் பெருமைகளை.

திருத்தொண்டத்தொகையை ஆதாரம் ஆக்கி - நம்பி
திருத்தொண்டர்கள் வரலாற்றை வகைப்படுத்தினார்.

செப்பேடு செய்து சேமித்தார் இராஜராஜ சோழன்.
அப்பெருமானின் வழித் தோன்றல் அல்லவா நீவிர்?

பரப்ப வேண்டும் அவற்றை உலகம் முழுவதும்;
பரப்ப வேண்டும் உண்மைச் சமயத்தை மீண்டும்".

பேரவா எழுந்துவிட்டது அநபாயன் மனத்தில்;
கோரினான் அவரிடம் கதைகளை விளக்கும்படி.

விவரித்தார் சேக்கிழார் உற்சாகமாக மன்னனுக்குச்
சிவத்தொண்டர்களின் வீரம், பக்தி, தியாகம் குறித்து.

தெளிவு பெற்றான் மன்னன் அடியார் வரலாறுகளால்;
தெளிவு பெற்றதும் விடுத்தான் அவன் சிற்றின்பத்தை.

"இம்மை, மறுமை, வீடு பேறு இவை அனைத்தையும்
செம்மையாகத் தருபவற்றைக் காவியம் ஆக்கிடுவீர்!"

தந்தான் பொன், பொருள், பிற தேவைகளை அவருக்கு;
தந்தான் அனுமதி சீரிய சிவக்காவியம் இயற்றுவதற்கு.

தில்லைக்குச் சென்றார் சேக்கிழார் இவற்றுடன்;
எல்லையில் வணங்கி வரவேற்றனர் அந்தணர்.

கண் கலங்கினார்; வீழ்ந்து வணங்கினார் - அரனிடம்
வேண்டினார் " காவியம் இயற்றும் திறமையைத் தாரும்!

அடி எடுத்துக் கொடுத்து அருள் புரிவீர் ஐயனே - நான்
அடியார்களின் வரலாறுகளை அழகுற அமைப்பதற்கு".

பேரொளி பிறந்தது தில்லை அம்பலத்தில் அப்போது;
பேரொலி பிறந்தது மேலே அம்பரத்திலும் அப்போது.

அடி எடுத்துத் தந்தான் பெருமான் "உலகெலாம்" என!
உடல் புளகம் உற்றார் சேக்கிழார் இந்நிகழ்வுகளால்

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#4c. SekkizhAr and the King AnabhAyan

The string of questions posed by the King made SEkkizhAr feel happy. The right answers to all the King's questions would make him see the truth in the words uttered by the minister.

"The ThyAgEsan of ThiruvAroor gave the first few words of the Thiruth thONdath thogai to Sundarar as "Thillai vAzh andhanar tham". And Sundarar completed the list of all the nAyanmAr in the eleven stanzas he sang.

Nambi ANdAr Nambi organized the stories of the nAyanmAr keeping this as his guide of reference. King RAjarAjan had them inscribed in copper plates. You are born in the lineage of that great king. You must spread the stories of the nAyanmAr. You must spread Saivism once again in our country."

Now the King's interest was kindled and he asked SEkkizhAr to relate the stories of the nAyanmAr. SEkkizhAr told the wonderful life history of those great devotees emphasizing on their courage, intensity of devotion and the sacrifices they had made.

The King realized the greatness of Saivism and the nAyanmAr. He abstained from indulging in the carnal pleasures. He requested SEkkizhAr to compose a new purANam based on those stories. The King gave him enough of gold and other things required by SEkkizhAr -to enable him to attend to his literary work, without having to worry about anything else.

SEkkizhAr went to Thillai Chidambaram. The 3000 Brahmins of Thillai welcomed him at the outskirts of the city. SEkkizhAr prayed to Lord Siva with utmost humility and sincerity, " Lord! Please give me the literary capacity and knowledge to compose this great work. Please give me the first phrase to be used in that work and help me".

A brilliant light appeared in the temple. A loud voice was heard from the sky. Siva gave SEkkizhAr the first phrase to be used in composing the purANam as "UlagelAm" meaning "The whole world"

SEkkizhAr went into ecstasy thinking of Siva's infinite mercy.

 
bhagavathy bhaagavatam - skanda 9

9#18b. சங்க சூடன் (1)


உபதேசம் பெற்றான் சங்க சூடன் ஜைகிஷவ்யரிடம்
சுபமயமான கிருஷ்ண மந்திரத்தை மிகக் கவனமாக.

சித்தி பெற்றான் அதைப் புஷ்கரத்தில் ஜபித்து!
சக்தி பெற்றான் கவசத்தைக் கழுத்தில் தரித்து!

இழுத்து வந்தது அவனை பிரம்மனின் வரம்
பழுதில்லாமல் நிறைவேறிட பதரிகாவனம்.

கண்டாள் அவனைத் துளசி; கொண்டாள் மையல்;
கண்டாள் நாணத்தோடு முகத்தை மூடிக் கொண்டு.

“யார் நீ? கூறு என்னிடம் ! யாருடைய புதல்வியோ?
பாரினில் கண்டதில்லை உன் போல் ஒருத்தியை!”என

“தர்மத்வஜரின் புதல்வி நான்; பெயர் துளசி;
தவம் செய்கின்றேன் இந்த பதரிகாவனத்தில்.

வந்த வழியைப் பார்த்துப் போய்விடும் உடனே!
இந்த வினாவைக் கேளான் நல்ல ஆண் மகன்!

இருப்பாள் பெண் காண்பதற்கு ஒரு பேரழகியாக;
இருப்பாள் பெண் கர்வம், மதம் பிடித்தவளாக;

இருக்கும் நாவின் நுனியில் அமிர்தம்;
இருக்கும் இதயத்தில் விஷக் கும்பம்.

தித்திக்கும் வாய் வார்த்தைகள் – ஆனால்
கத்திக் குத்தாகும் செய்யும் செயல்கள்!

காலைப் பிடிப்பாள் காரியம் ஆகும் வரை;
காலை வருவாள் காரியம் ஆன பிறகு!

கற்புக்கரசி போலப் பேசுவாள் வெளியே;
அற்பக் காமவெறி கொண்டலைவாள் உள்ளே.

அழுவாள் சம்போகம் திருப்தி தராவிட்டால்;
தொழுவாள் சம்போகம் திருப்தி தந்துவிட்டால்.

விரும்புவாள் உணவு, உறக்கம், உடலுறவுகளை;
விரும்பவாள் அழகன், இளைஞன், வல்லவனை!

விரும்ப மாட்டாள் தான் பெற்ற பிள்ளைகளை;
விரும்புவாள் உற்ற இன்பம் தரும் ஆடவனை.

படைத்தான் பிரமன் இது போன்ற பெண்களைத்
தடையாக்கி முமுக்ஷுக்களுக்குத் துன்பம் தந்திட!”

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

9#18b. Sankha Choodan (1)


Sankha Choodan got the upadesam of the auspicious KrishNa mantram from Maharishi Jaigeeshavya with great care. He chanted it and got sidhdhi of the mantra in the Pushkara Kshetram.

He wore the kavacham around his neck and got the great powers of Sidhdhi. The boons given by Brahma drew him towards BadarikA Vanam where Tulasee was doing severe penance. Brahma’s boon can not prove false.

Tulasee saw him and fell in love with him head over heels at first sight. She covered her face with modesty. Sankha Choodan also fell in love with her at the first sight. He asked her,

“Who are you? Whose daughter are you? Tell me everything about you! I have never set my eyes on a girl like you before!”

Tulasee replied to him, “I am the daughter of King Dharmadwajan. My name is Tulasee. I am doing penance in BadarikA Vanam.

You had better go off in the same manner you have arrived here. A man born in a respectable family will not ask such a question to a girl when he sees alone and all by herself in a lonely spot.

A girl may look pretty but she may be filled with pride and arrogance. The tip of her tongue may hold nectar and her heart may be pot of deadly poison. Her words may sound sweet but action may hurt like stabbing with a sharp knife.

She may be very polite until she gets what she wants thereafter she may cause the man’s downfall. She may lecture like a chaste woman but may be filled with lustful desires.

If she is not satisfied with sambogam she will weep bitterly and curse her man. If she is well satisfied she will praise him worship him gladly. The only things these women look forward to in life is food, carnal pleasures and sleep.

They are always on the look out for handsome, young and active young men. Such a woman may not care for her children much but will care for her man more. Brahma has created such women only to torture and trouble those men who seek to obtain liberation.”

 
SEkkizhArin Periya PurANam

#4d . பெரிய புராணம்

ஆயிரம் கால் மண்டபத்தில் அமர்ந்தார் சேக்கிழார்,
பாயிரங்கள் மூலம் சிவனடியார்களைப் பாடுவதற்கு.

நம் பிரான் அளித்த "உலகெலாம்" என்பது முதலாகிட;
நம்பியாண்டார் நம்பியின் திருவந்தாதி வழியாகிட.

பாடினார் 4253 தித்திக்கும் செந்தமிழ் பாடல்களை;
பாடினார் சிவனடியார்களின் வரலாற்றை அழகுற.

பக்திச் சுவையுடன் படைத்தார் இக்காவியத்தை;
பக்தியுடன் படைத்தார் அதை அம்பலவாணருக்கு.

தில்லைக்குப் புறப்பட்டான் அநபாயன் இதைக் கேட்டு;
எல்லையில் வரவேற்றனர் அந்தணர் சேக்கிழாருடன்.

பூரண கும்பக் கலசங்களுடன் அமோக வரவேற்பு!
பூண்டிருந்தார் சேக்கிழார் அடியாரின் தவக்கோலம்!

ஆலயம் வந்தனர் அனைவரும் ஒன்றாகத் திரண்டு.
அசரீரி ஒலித்தது பிரானின் வாக்காக அம்பரத்தில்!

"உலகெலாம் என்று யாம் அடி எடுத்துக் கொடுத்த
உயரிய புராணம் கேட்டு உய்வடைவீர் அனைவரும்!"

தண்டையின் ஒலி கேட்டது பொன்னம்பலத்தில்!
கொண்டான் அநபாய மன்னன் அளவற்ற மகிழ்ச்சி!

நாள் குறித்தான் அப் புராணத்தை அரங்கேற்றிட;
நால் திசையினருக்கும் அனுப்பினான் அழைப்பு.

"சித்திரைத் திங்கள் திருவாதிரை நன்னாள் அன்று
சிவத் தொண்டர்கள் வரலாறு அரங்கேறும் என்று!"

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#4d. The Periya purANam

SEkkizhAr sat in the MaNdapam with 1000 pillars. He started singing the greatness of the nAyanmAr. The phrase given by Lord Siva formed the first phrase of the purANam. The Thiru AndAdhi of Nami AndAr nNambi firmed the guide and reference. SEkkizhAr composed his work Periya PurANam in 4253 Tamil verses.

The work was dripping with pure devotion to Siva. On completion it was offered to Siva in great devotion. King AnabhAyan heard about the completion of this great work. He left for Thillai Chidhambaram with his retinue.

SEkkizhAr and the 3000 Brahmins of Thillai welcomed the King with poorNa khumbam. SEkkizhAr looked like an ardent devotee of Siva- which he really was. They all went to the temple. Just then a voice sounded from the sky and said," Listen to this great purANam which starts with the phrase given by me and be blessed."

At the same time the sound made by the anklets worn by Siva was heard inside the temple. The king became very happy. He fixed an auspicious day for the commencement of the expatiation of the purANam. It was the day of ThiruvAthirai in the month of Chithirai. Invitations were sent in all the four directions.

 
bhagavathy bhaagavatam - skanda 9

9#18c. சங்க சூடன் (2)

சிரித்தான் சங்க சூடன் துளசி கூறியவற்றுக்கு;
“சரி தான் நீ கூறியவற்றில் சில உண்மைகளே!


பெண்ணைப் படைத்துள்ளான் பிரம்ம தேவன்
மண்ணுலகம் போற்றவும், தூற்றவும் ஏற்றபடி.


பஞ்சப் பிரகிருதிகளின் அம்சத்தில் பிரமன்
கொஞ்சம் பெண்களைப் படைத்துள்ளான்!


துர்கா, லக்ஷ்மி, சரஸ்வதி, சாவித்திரி, ராதிகா,
சர்வ மங்களம் தரும் தூய பெண்களின் வடிவம்.


பிற தேவிகளும் தெய்வத் தன்மை வாய்ந்தவர்கள்;
சிறப்புப் பெறுகின்றனர் இவர்களின் அம்சங்களால்.


சத்துவ குணப் பெண்கள் உத்தம வர்க்கத்தினர்;
மற்ற பெண்கள் இருவகைப் படுவர் குணத்தால்.


கூடிக் களிக்கும் போகத்தில் ஆசை கொண்டவர்;
ஆடி ஓடும் ரஜோ குணத்தவர், மத்திம வகையினர்.


வசப்படுத்திக் கொள்வர் ஆடவரை மதி மயக்கி;
இசையச் செய்வர் அவரைத் தம் விருப்பத்துக்கு!


கண்ணாக இருப்பர் தம் காரியத்திலேயே – இவர்
மண்ணாக்கி விடுவர் தர்மம், சட்டம், நியாயத்தை!


தமோ குணம் கொண்ட பெண்களோ எனில்
தலை வணங்க மாட்டார்கள் எவருக்குமே!


அதம ஸ்திரீகள் ஆவர் இவர்கள் – கேவலம்
அடிமட்டத்தைச் சேர்ந்தவர் பெண்ணினத்தில்!


படித்த அறிஞனும், பண்புள்ள நல்லவனும்
பரஸ்த்ரீயிடம் கேட்கக் கூடாது யார் என்று!


ஜலம் இல்லாத இடத்திலும், ரகசியத்திலும்,
ஜனம் இல்லாத இடத்திலும் கேட்கக் கூடாது!


வந்துள்ளேன் உன்னைக் கந்தர்வ மணம் புரிந்திட;
வந்துள்ளேன் பிரமன் நமக்குத் தந்த வரத்தின்படி!”


உரைத்தான் தனது பூர்வ ஜன்ம நினைவுகளை;
உரைத்தான் அவள் பூர்வ ஜன்ம நினைவுகளை!


“அச்சம் வேண்டாம் ராதையை நினைத்து – நாம்
மிச்சம் உள்ள வாழ்வை இன்பமாக வாழ்வோம்!”


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


9#18c. Sankha Choodan (2)


Sankha Choodan laughed aloud after hearing Tulasee speak thus. “Yes! some of what you have just said is correct! Brahma created women worthy of being praised as well of being criticized.


He has created some superior women in the image of the Pancha Prakritis namely DurgA, Lakshmi, Saraswati, SAvitri and RAdikA.


They are the personification of all the good qualities and all auspiciousness. Many other Devis are also great since they are created in the amsams of these five Devis. They are the uththama sthrees in the creation.


The ordinary women are of two types depending upon their RAjasic and TAmasic temperaments. The RAjasic women love all the pleasures and comforts in life. They enjoy marital bliss and are actively running around getting their other desires also fulfilled.


They belong to the madhyama varggam. They infatuate and entice men and possess them completely. They can control the thoughts and actions of the men who have literally become their slaves. They never lose sight of their goals and other aims in life. They do not care for justice or dharma or even established laws.


The adhama sthrees are those created out of Tamo gunam. They are unlawful, noisy, disobedient and do not really care for anything or anyone.


A man is not supposed to ask a woman who is a total stranger, “Who are you?” A learned man will not do it. A cultured man will not do it. Any man should not ask this question in any place devoid of people, devoid of water or in secrecy.


I have come here to wed you in Ghandharva vivAham. I have come here to fulfill the boons given to us by Brahma.”


He then related in great detail his poorva janma and her poorva janma also. He told Tulasee,”No need to be afraid of RAdhikA any more. Let us live happily and enjoy the bliss of togetherness, without wasting any more time.”




 
SEkkizhArin Periya PurANam

#4e . அரங்கேற்றம்

அமராவதி ஆனது தில்லை, சித்திரை திருவாதிரையன்று;
அலங்கரித்த தோரணங்கள், கோலங்கள், விளக்குகளால்!

வைத்தனர் திருத் தொண்டர் புராணத்தை - அங்கேயே
வைத்திருந்த அறுகால் அழகிய பொற்பீடத்தின் மேலே.

விரித்து இருந்தனர் பசும் பொற்பட்டும், வெண் துகிலும்;
பரப்பி இருந்தனர் வண்ண, வண்ண மலர்களைத் தூவி!

தொடங்கியது அரங்கேற்றம் சித்திரைத் திருவாதிரை;
தொடர்ந்தது அடுத்த சித்திரைத் திருவாதிரை வரை!

கொண்டாடினர் அனைவரும் பெரிய புராணத்தை!
கொண்டாடினர் 'இதுவே ஐந்தாவது வேதம்!' என்று

வைத்தனர் திருமுறையைப் பொற் தட்டில் - அதைப்
போர்த்தினர் அதை உயரிய பசும் பட்டுத் துகிலினால்.

ஏற்றினான் மன்னன் யானை மீது திருமுறையை;
ஏற்றினான் மன்னன் யானை மீது சேக்கிழாரையும்;

தானே கைப்பட வீசினான் சேக்கிழாருக்குக் கவரி;
"நானே அடைந்தேன் என் பிறவிப் பயனை!" என்று.

வலம் வைத்தனர் ஊர்வலமாகத் தில்லை நகரை,
வலம்புரி முதலிய மங்கல வாத்தியங்கள் முழங்கிட.

கரை ஏறிவிடலாம் கருங்கடலைக் கரங்களால் நீந்தி!
கடற்கரையில் மணல் துகளை எண்ணி அளவிடலாம்!

கணக்கிடலாம் கண் சிமிட்டும் விண்மீன்களையும் !
கணக்கிட இயலுமோ புராணத்தின் பெருமையை?

'தொண்டர் சீர் பரவுவார்' ஆனார் சேக்கிழார் பெருமான்;
தொண்டர் புராணம் ஆனது பன்னிரெண்டாம் திருமுறை!

அமைச்சராக ஆகிவிட்டார் பாலறாவாயர் - இவர்
அமைச்சர் சேக்கிழாருடைய மூத்த சகோதரர்.

தொண்டைமான் எனப் பட்டம் பெற்றார் பாலறாவாயர்
தொண்டுகளில் ஈடு பட்டார் சேக்கிழார் பெருமானார்.

அடைந்தனர் சிவன் திருவடிகளை அனைவரும்!
அடைந்தனர் பிறவி ஒழிந்த பேரின்ப வாழ்வினை!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#4e. The year long expatiation (arangEtram)

Thillai Chidhambaram was decorated like the celestial city of Devas AmarAvathy with colorful ThoraNs, rows of shining golden lamps, fragrant flowers and large colorful designs drawn on the ground etc.

A six legged gold peetam was covered with fresh flowers, a silk cloth and a white cloth. The purAnam was placed on this peetam. The expatiation started on the ThiruvAdhirai day in the month of Chiththirai and went on for on full year.

The purAnam was praised by one and all as The Fifth Vedam. The purAnam was placed on a gold plate covered by green silk. King AnabhAyan took SEkkizhAr and the purANam on his royal elephant through the streets of the city in a procession.

He himself fanned to SEkkizhAr considering it as his good fortune. The procession was lead by the orchestra of all the auspicious musical instruments.

One may be able to swim across a sea and still survive. One may be able to count the number of sand particles in a beach. One may be able to count the winking stars at a night sky. But one can never fathom the true greatness of this purANam.

SEkkizhAr was now known as "ThoNdar seer paravuvAr" meaning one who sings the glory of the devotees.The Periya PurANam became the Twelfth Thirumurai . SEkkizhAr's elder brother PAlaRAvAyar became the new chief minister to the King and won the title "ThoNdaimAN"

SEkkizhAr spent his life in doing many welfare activities and reached the lotus feet of Lord Siva when his life on earth came to an end.

 
Bhagavathy bhaagavatam - skanda 9

9#18d. பரீட்சை

மகிழ்ந்தாள் துளசி இதைக் கேட்ட பிறகு!
‘மங்கையர் விரும்பும் வாலிபன் இவனே!’

“பரீட்சை செய்தேன் உம்மை அறிந்து கொள்ள;
பரீட்சித்த பின் வரிக்க வேண்டும் கணவனாக!

வரண்டவன், வயோதிகன், குணமிலி,
அறிவிலி, தரித்திரன், மூர்க்கன் மேலும்

குஷ்டன், வியாதியஸ்தன், கோபக்காரன்,
துஷ்டப்பயல், துர்முகன், நொண்டி மற்றும்

அங்கஹீனன், குருடன், செவிடன்,
அசடன், கசடன், ஊமையன் மேலும்

ஆண்மையற்றவன், நம்புசகன், பாவிக்குப்
பெண்ணைத் தருபவன் செய்கிறான் பாவம்!

கண்ணைக் கட்டிக் கடலில் தள்ளும் தந்தை
மண்ணில் அடைவான் பிரம்மஹத்தி தோஷம்!

பத்து யாகப் பலன் அடைவான் – பெண்ணைப்
படித்த நல்ல குணசாலிக்கு அளிக்கும் தந்தை!”எனத்

தோன்றினான் பிரமன் அவர்கள் முன்பு!
“வீண் வார்த்தைகள் எதற்கு சங்கசூடா?

ஆடவர்களில் சிறந்தவன் நீ சங்கசூடா!
மாதர்களில் சிறந்தவள் துளசி ஆவாள்!

சமர்த்தன் ஆகிய ஆண்மகன் கூட வேண்டும்
சமர்த்தை ஆகிய ஒரு பெண்ணுடன் மட்டுமே!

பதிவிரதையே! பரீட்சை செய்வது எதற்கு?
சதி, பதியாக இனிது வாழ்வீர் இனியேனும்!

அடைவாய் நீ கோலோகம் சென்று கிருஷ்ணனை!
அடைவான் சங்கசூடன் வைகுண்ட நாராயணனை!”

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

9#18d. The acid test!

“I tested you to ascertain your strength in learning. It is highly advisable to choose one’s husband after examining his merits and defects.

The sin committed by a father is equivalent to the murder of a BrAhmin – when he gives away his daughter to a man who is not worthy of her who may fall into one of the following categories.

A man devoid of all the necessary qualifications, a very old man, a man who is completely ignorant, a man who is very poor, a man who is an illiterate, a man afflicted with severe diseases, an ugly man, a short tempered man, a man very harsh in all his dealings, a lame man, a man who lacks limbs and organs, a deaf man, a dumb man and a man who is impotent.

If a father gives in marriage his daughter to a young man of good character, who is well learned, well qualified and of a peaceful temper, then the father acquires the same fruits as by performing ten ashamed yAgam (horse sacrifice).”

Now Brahma appeared in front of them and said,”Why are you both still wasting time in such useless and idle talk. Sanka ChoodA! You are a gem among men and Tulasee, You are a gem among women!

The man and his wife must be well matched in everything to lead a happy life. Get married in Gandharva style and start living as a man and his wife happily without any fear or worry.” Brahma advised them!

 
SEkkizhArin Pariya PurANam

#5எ. அறம் காத்த ஆரூர் அரசன்

"ஆரூரில் பிறக்க முக்தி" என்பது நமது
ஆன்றோர்களின் அமுத வாக்கு ஆகும்.

பரவை நாச்சியாரை மணந்து - சுந்தரர்
பல காலம் இல்லறம் நடத்திய தலம் இது.

வீதிவிடங்க பெருமான் ஆரூரில் இறைவன்;
விடாமல் ஒலிக்கும் தேவாரத் திருப் பதிகம்.

கிளிகளும் பாடும் தேவாரங்களை இங்கு
ஒழிவில்லாமல் அவற்றையே கேட்பதால்.

ஓங்கும் வேள்விப்புகை விண்ணை முட்டும்;
ஒலிக்கும் தொடர்ந்து வேதம் ஓதும் நாதம்.

பாடல்கள் ஒலிக்கும் பரமனைப் புகழ்ந்து;
ஆடல்கள் புரிவர் அழகிய நங்கையர்கள்.

இன்னிசைக் கலவையும் வேத நாதமும்
இனிய உணர்ச்சிகளையே ஏற்படுத்தும்.

"மாலும் அயனும் காணாத கமல பதம்
மணக்கின்றது ஆரூரில்" என்று ஐதீகம்.

ஆண்டு வந்தான் சோழவள நன் நாட்டை
மாண்பு மிக்க சூரிய வம்சத்து மனுநீதி.

காத்தான் மக்களைக் கண்ணை இமை போல;
கருதினான் மக்களைத் தன் உயிரிலும் மேலாக.

செய்தான் ஆலயத் திருப்பணிகள் விடாமல்;
செய்தான் பல அரிய வேள்விகள் தவறாமல்.

பிறந்தான் செல்வமகன் அருந்தவப் பயனாக;
சிறந்தான் வீதி விடங்கன் என்னும் பெயரில்.

கற்றான் அனைத்துக் கலைகளும், கல்வியும்,
பெற்றான் பயிற்சி போர்க்கலைகளில் நன்கு.

பக்தி கொண்டிருந்தான் சிவபெருமானிடம்
பக்தியில் சிறந்த மனு நீதியைப் போலவே.

சென்றான் திருக்கோவில் பரிவாரங்களுடன்;
சென்றனர் மங்கலப் பாட்டிசையரும் அவனுடன்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#5a. The righteous king of Aaroor

There is a saying which goes thus: "One who takes birth in Aaroor will surely attain total liberation". It is here that Sundara moorthy nAyanAr married and lived with Paravai nAchiyAr.

The name of the deity is "Veedhi vidangap perumAN". Thevaram songs could be heard all day long. The parrots could mimic those divine songs to which they were exposed all day long.

The smoke from the yAga and yajna would spiral to the sky. The chanting of Vedas was continuous throughout the day. Devotees would sing the praise of Lord and beautiful maidens would dance praising Siva.

The mixture of Vedam and nAdam would stir happy feelings in everyone. The lotus feet o Siva which neither VishNu nor Brahma could not find and were searching in vain, give off their fragrance in Aaroor.

The ruler of Aaroor was Manu Needhi chOzhan who belonged to the Soorya vamsam. He considered his citizens as his own children and protected them as the eyelids protect the eyes. He performed several welfare activities, celebrated all the festivals and performed yAgas for the welfare of his country.

King Manu Neethi was blessed with a good son whom the king named after the God as Veedhi Vidangan. The prince learned everything needed to become a good ruler when he grew up. He learned all the sAsthras, all the various arts and the secrets of successful warfare.


He has deep devotion towards Siva just like his own father. One fateful day he went to the temple with his retinue. The orchestra of all the auspicious instruments preceded the retinue.









 
bhagavathy bhaagavatam - skanda 9

9#19a. காதல் லீலைகள்

மணந்தான் சங்க சூடன் துளசியை விரும்பி!
மலர்மழை பொழிந்தது; துந்துபி முழங்கியது!


மூழ்கினர் இன்ப சாகரத்தில் இருவரும்!
ஆழ்ந்தனர் காம லீலைகளில் இருவரும்!


புரிந்தனர் காம நூலில் கூறப்பட்ட லீலைகளை;
எரிந்தது கொழுந்து விட்டு; காமம் தீரவில்லை!


ஈருடல் ஓருயிர் ஆக மாறி மனம் மகிழ்ந்தனர்;
இடைவெளி இல்லாது அணைத்து மகிழ்ந்தனர்.


நகைப்பர் இருவரும் தங்கள் உடல்களில் உள்ள
நகக் குறி, பற்குறிகளைக் கண்டு மனம் மகிழ்ந்து!


அலங்கரித்தக் கொள்வர் நறுமணம் கமழ்ந்திட;
அலங்கரித்துக் கொள்வர் ஆடை, அணிகளால்.


வருண தேவனின் சிறந்த பட்டாடைகள்;
பெறுவதற்கரிய நவ ரத்தின ஆபரணங்கள்;


ஸ்வாஹா தேவியின் கால் தண்டைகள்;
சாயா தேவியின் அரிய தோள் வளைகள்;


ரோஹிணி தேவியின் அழகிய குண்டலங்கள்;
ரதி தேவியின் மோதிரங்கள், வளையல்கள்;


விஸ்வகர்மா தந்த சங்கு, பொட்டு, நகைகளை
விரும்பி அளித்தான் அரிய பரிசாக துளசிக்கு.


கூடி மகிழ்ந்தார் விரும்பிய இடங்களில்;
கூடி மகிழ்ந்தனர் ஒரு மன்வந்தரக் காலம்.


தடைபட்டன யாக, யக்ஞங்கள், கர்மங்கள்;
தடை பட்டது தேவர்களின் அவிர் பாகமும்!


யாசகர்கள் போலத் திரிந்தனர் தேவர்கள்;
யாகங்கள் தொடர வழி தேடினர் தேவர்கள்.


குறைகளை முறையிட்டனர் பிரம்மனிடம்;
குறைகள் தீரச் சென்றனர் வைகுந்தம் பின்பு.


எடுத்து இயம்பினர் வைகுந்த வாசனிடம்
அடுத்து வந்துள்ள துயரங்களை விரிவாக.


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


9#19a. The game of love!


Sankha Choodan married Tulasee without any further delay. Flowers rained from the sky and the air resounded with the Deva Dundubi!


The couple immersed themselves in an ocean of joy and pleasure. The more they indulged in amorous sports, the more their desire burned like the fire fed with ghee.


They became two bodies with one soul. They embraced so tightly that even the air could not part them a little. They used to enjoy looking for locating the marks made on their bodies by their nails and teeth.


They would decorate themselves with new clothes, ornaments, flowers and sandal paste and indulge non stop in amorous sports


Sankha Choodan gave Tulasee a pair of garments brought from VaruNa’s house, a necklace of rare gemstones hard to find in any of the three worlds, the anklets of Agni’s wife SvAhA Devi, Keyura or the armlets of the Sun’s wife ChhAyA Devi, the two earrings of RohiNi Devi – the wife of the Moon, the finger rings of Rati Devi – the wife of KAmadeva, and the wonderfully beautiful conch, given by Visva KarmA.

He gave her excellent cots studded with pearls and jewels. One Manvantara rolled on this way. YAgAs and YagnAs were discontinued. Deva could not get their share of the food from the Havisu and roamed about like beggars weak and hungry.

They wanted the yAga and other karmas to be resumed soon. They went to Brahma and sought his help. He went to Vaikuntham along with them and explained their predicament to VishNu BhagaVan.




 
SEkkizhArin Periya PurANam

#5b. ஆராய்ச்சி மணியோசை

துள்ளி வந்தது ஒரு கன்றுக் குட்டி திடீரென;
துவண்டு உயிரை விட்டது சக்கரத்தின் கீழே!

எழுப்பியது தீனமான மரண ஓலத்தைக் கன்று!
எழுப்பியது சோகத்தை இளவரசன் உள்ளத்தில்!

நிறுத்திவிட்டான் தன் தேரை அதே இடத்தில்.
இறங்கி நின்றான் மிகுந்த கழிவிரக்கத்துடன்.

வந்து விட்டது அங்கே அக் கன்றின் தாய்ப்பசு;
நொந்து அழுதது மெய்விதிர்க்க அரற்றியபடி.

துடித்தான் இளவரசன் தான் இழைத்த பிழைக்கு;
"தேடிக் கொண்டேன் அழியாப்பழியைக் குலத்துக்கு!"

சென்றான் பரிஹாரம் தேடி அந்தணர்களை நாடி;
சென்றது தாய்ப்பசுவும் நேராக அரண்மனைக்கு.

தொங்கியது அரண்மனை வாயிலில் ஒரு மணி;
தொங்க விடப்பட்டது தம் குறைகளை அறிவிக்க.

மணியோசை வரவழைக்கும் மன்னன் மனுநீதியை.
கணநேரத்தில் கிடைத்துவிடும் நல்லதொரு தீர்ப்பு!

அடித்தது இல்லை எவரும் மணியை இதுவரை!
அடிக்க வேண்டிய தேவையே ஏற்படவில்லையோ?

அடித்தது தாய்ப்பசு மணியைக் கணீரென;
அடித்துக் கொண்டே இருந்தது தொடர்ந்து!

ஓடிவந்தான் மனுநீதி ஆராய்ச்சி மணியோசைக்கு.
தேடி வந்த ஆவினைக் கண்டான் கண்ணீர் பெருக.

கேட்டு அறிந்து கொண்டான் ஆவின் துயரினை;
கேட்டபின் அழுதான் அவன் ஆவினும் அதிகமாக

"பசு வதை எத்தனை கொடிய பாவம் என்றறிவேன்!
பசுவால் வளைந்து விட்டது இன்று என் செங்கோல்!

பூஜைக்கு வேண்டிய பஞ்ச கவ்வியங்களை அளிக்கும்
புண்ணியம் வாய்ந்தவை அல்லவா இந்தப் பசுக்கள்?

பாலகனைப் பெற்றெடுத்தேன் அருந்தவம் செய்து ;
பாதகம் செய்து விட்டான் குலப் பெருமை அழிந்திட;

அடைக்கலம் அடைந்த ஒரு புறாவுக்கு - உடலை
அறுத்துக் கொடுத்தான் மூதாதை சிபி மன்னன்.

அடைக்கலம் என்று வந்து நிற்கும் இப்பசுவுக்கு
தடையின்றி வழங்குவேன் நான் உரிய நீதியை!"

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#5b. A bell to convey one's grievances

As the prince and his retinue proceeded to the temple, the sprightly calf of a cow appeared from nowhere and got crushed under the wheels of the chariot. It gave out a pathetic wail as it gave up its ghost. All these had happened within the winking time.

The prince stopped his chariot, got down and stood frozen with sorrow and guilt. The mother cow appeared there and shed copious tears at the sight of the dead calf. The prince cursed himself for bringing such a blemish to his race.

He went to the learned pundits to find out the pariharam to annul the sin he had unwittingly committed. The cow also wasted no time. It went straight to the palace .

A huge bell hung outside the palace for anyone who wished to express any grievances to the king.

The sound of the bell would make the king come out immediately. He would listen the person who has a grievance and pronounce an appropriate judgement without any delay. But no one had ever rung the bell till that day. There had been no occasion that demanded the ringing of the bell.

The king was startled by the sound of the bell and came out of his palace. He saw a cow shedding copious tears and ringing the bell continuously. He learned from his guards what had happened and felt more sorry than the cow for its dead calf.

"Killing a cow is a great sin! This sin will cling on to my race. The holy cow gives us all the five auspicious things we need for the pooja and yAga. I wished for a son to make our race shine like the Sun. But he has earned ill fame for our vamsam.


One of my ancestors gave the flesh cut from his own body to an eagle, in exchange for a pigeon which sought his protection. I will deliver due justice to the cow and the dead calf!"



 
Untitled Poem for the Mother Goddess
[COLOR=rgba(0, 0, 0, 0.843137)]The forces that animate us dance with me on this deep distant Ganges cooled evening.[/COLOR]
[COLOR=rgba(0, 0, 0, 0.843137)]I face you in unknown directions.[/COLOR]
[COLOR=rgba(0, 0, 0, 0.843137)]Even the sudden trail of incense lighted[/COLOR]
[COLOR=rgba(0, 0, 0, 0.843137)]Stimulates thoughts of your unlimited return[/COLOR]
[COLOR=rgba(0, 0, 0, 0.843137)]I remind myself how I had wandered[/COLOR]
[COLOR=rgba(0, 0, 0, 0.843137)]And lost myself in you again.[/COLOR]
[COLOR=rgba(0, 0, 0, 0.843137)]The pebbles of stories fall back into the Ocean[/COLOR]
[COLOR=rgba(0, 0, 0, 0.843137)]My pockets drunk and with no more function.[/COLOR]
[COLOR=rgba(0, 0, 0, 0.843137)]O Goddess, may I offer you my Heart,[/COLOR]
[COLOR=rgba(0, 0, 0, 0.843137)]So I may return to the Fire of your Love.[/COLOR]


The Mother inspired me to write this one in Rishikesh. Original work:https://medium.com/@100and9/untitled-poem-for-the-mother-goddess-3578efead8b6
 
bhagavathy bhaagavatam - skanda 9

9#19b. விஷ்ணு தேற்றினார்

“அறிவேன் இவற்று நீங்கள் கூறும் முன்பே!
அறிவேன் சங்க சூடன் சுதாமன் என்பதையும்.

ராதை மிரட்டினாள் கிருஷ்ணனுடன் இருந்தவனை;
ராதையைக் கண்டிக்கவில்லை மௌனி கிருஷ்ணன்.

ராதையை வெருட்டினான் சுதாமன் வெகுண்டு;
ராதை ஆணையிட்டாள் சுதாமனை விரட்டுமாறு!

வெளியேற்றினர் தோழியர் சுதாமனை விரட்டி;
வெளியே சொன்ன பொய் “சுதாமன் அடித்தான்!”

அவசரப்பட்டுச் சபித்து விட்டாள் ராதை அவனை,
“அடைவாய் ராக்ஷசக் குறியை!” என்று கோபத்தில்.

அழுது கொண்டே போனான் சுதாமன் – கருணையால்
“அழ வேண்டாம்!” என்று அவனைத் தடுத்தாள் ராதை.

கண்ணீர் விட்டு அழுதனர் கோபர், கோபியர்;
மண்ணில் சாபம் தீர்ந்து திரும்புவான் அவன்!

யோக மாயைகள் நன்கறிந்தவன் சங்க சூடன்;
போக வேண்டும் சூலத்துடன் சங்கரன் பூவுலகு;

சம்ஹாரம் செய்வான் சங்கரன் சங்க சூடனை;
சங்க சூடனைக் காப்பது அவன் மந்திரக் கவசம்;

பங்கம் ஏற்பட வேண்டும் பதிவிரதா தர்மத்துக்கு
சங்க சூடனைச் சங்கரன் சம்ஹரிப்பதற்கு முன்பு.

மங்கையிடம் விடுவேன் நான் என் வீரியத்தை;
பங்கம் ஏற்படுத்துவேன் பதிவிரதா தர்மத்துக்கு!

தேஹம் துறந்த துளசி என் மனைவி ஆகி விடுவாள்!
தேஹம் துறந்த சங்கசூடன் இணைவான் என்னுடன்!”

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

9#19b. Vishnu’s advice


VishNu told Brahma,” I know all about Sankha Chooda. In his previous birth he was my devotee Gopa SudAmA. He has now become Sankha Chooda – a DAnava due to the curse pronounced by RAdhikA.

One day I went to RAsa maNdala accompanied by Gopi VirajA. When RAdhA came there VirajA turned into a river. RAdhA thought that I too had disappeared. So She went back with her Sakhis (friends)

But when I returned to the house with SudAmA, RAdhA took me to task. I remained silent. But SudAmA rebuked RAdhikA in my presence. She immediately ordered Her Sakhis to drive him away from Goloka.

SudAmA got scared as all of RAdhikA’s friends gathered together to drive him away from there. RAdhikA further cursed him, “ May you be born in the womb of a DhAnavi.” SudAmA broke down to tears. He bowed down to me and went away crying.

RAdhikA’s heart melted with mercy and she tried to stop him. The Gopas and Gopis also began to weep. I then explained to them, “SudAma will come back, after fulfilling the curse. O SudAma! Come back to me here once again after the curse is exhausted.”

Sankha Chooda will soon return from the earth. Oh MahAdev! Please take this Soola (trident) and go to BhArata varsha. You will slay the DAnava with this Soola. He wears my auspicious Kavacha and he is invincible as it is now.

No one will be able to kill him as long as wears the Kavacha. It is to be taken away from him first. Brahma! You have given him the boon that he could not be killed as long as his wife Tulasee remains chaste. I will ravish her first and destroy her chastity.

Tulasee will then give up her body and become my wife once again. Sankha Chooda will give up his body and return to Goloka.” Thus speaking Narayanan gave the Soola to MahA dev.

 
SEkkizhArin Periya PurANam

#5சி. பசுவின் சிறப்புக்கள்

பசுவின் உடலில் தேவர்கள் வாழும் இடங்கள்:-

வாழ்கின்றனர் நாரணனும், நான்முகனும் கொம்பின் அடியில்;
வாழ்கின்றன சகல புண்ணிய நதிகளும் கொம்பின் நுனியில்;

வாழ்கின்றார் பசுவின் சிரத்தில் சிவபெருமான்;
வாழ்கிறாள் பசுவின் நடு நெற்றியில் உமையாள்;

வாழ்கின்றான் நாசி நுனியில் செவ்வேள் முருகவேள்;
வாழ்கின்றனர் உள் நாசியில் எட்டு திக்குப் பாலகர்கள்;

வாழ்கின்றனர் இருசெவிகளில் அஸ்வினி குமாரர்கள்;
வாழ்கின்றனர் இரு கண்களில் சூரிய, சந்திரர்கள்;

வாழ்கின்றான் பசுவின் பற்களில் வாயு தேவன்;
வாழ்கின்றான் பசுவின் நாவினில் வருணதேவன்.

வாழ்கிறாள் பசுவின் இதயத்தில் சரஸ்வதி தேவி;
வாழ்கின்றான் கபாலத்தில் இயமன், யக்ஷருடன்.

வாழ்கின்றனர் உதடுகளில் சந்தி தேவதைகள்;
வாழ்கின்றான் பசுவின் கழுத்தில் இந்திரன்;

வாழ்கின்றார் பசுவின் இடையில் அருக்க தேவர்;
வாழ்கின்றனர் பசுவின் மார்பில் சரத்தியர்;

வாழ்கின்றனர் பசுவின் கால்களில் அனிலர்கள்;
வாழ்கின்றனர் முழங்கால்களில் மருத்துவர்கள் ;

வாழ்கின்றன குளம்பின் நுனிகளில் நாகங்கள்;
வாழ்கின்றனர் குளம்பின் நடுவில் கந்தர்வர்கள்;

வாழ்கின்றனர் மேற்குளம்பில் தேவ மாதர்கள்;
வாழ்கின்றனர் பசுவின் முதுகில் உதித்தர்;

வாழ்கின்றனர் சந்துக்களில் வசுக்கள் எண்மர்;
வாழ்கின்றனர் அரைப் பரப்பில் பித்ருக்கள்;

வாழ்கின்றனர் பசுவின் பகத்தில் சப்த கன்னியர்;
வாழ்கின்றாள் பசுவின் குதத்தில் லட்சுமி தேவி

வாழ்கின்றனர் பசுவின் அடிவாலில் அமரர்கள்
வாழ்கின்றது பசுவின் வால் மயிரில் கதிரொளி

வாழ்கின்றாள் பசுவின் வயிற்றில் பூமாதேவி;
வாழ்கின்றன பசுவின் மடிகளில் கடல்கள்;

வாழ்கின்றது பசுவின் வயிற்றில் காருகபத்தியத்தீ
வாழ்கின்றது பசுவின் இதயத்தில் ஆகவனீயத்தீ

வாழ்கின்றது பசுவின் முகத்தில் தக்ஷிணாக்னி
வாழ்கின்றது எலும்பு சுக்கிலத்தில் வேள்வித்தொழில்.

வாழ்கின்றனர் எல்லா அவயவங்களிலும் கற்புடைய மாதர்.
வாழ்கின்றனர் எல்லா தேவர், தேவதைகள் இவ்வண்ணம்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#5c. The greatness of a cow

All the Devas and DevatAs reside in the body of a cow. Let us take a look at the names of all those Devas and the places they reside in a cow's body.

VishNu and Brahma live at the base of cow's horns;
all the auspicious rivers occupy the tip of the horns;

Lord Siva resides in it head;

Uma resides in the middle of its forehead;

Murugan resides at the tip of its nose;

the dik pAlakAs reside inside the nostrils;

Aswini kumAras live in its two ears;

The Sun and The Moon live in the two eyes of the cow.

VAyu resides in the teeth of a cow and

Varuna Devan resides in its tongue.

Saraswathi Devi lives in the heart of a cow;

Yama and yakshas live in its skull;

The DevathAs of the Sandhi reside in its lips;

Indran resides in its neck;

Arka Devan resides in its mid region;

Sarathyar reside in its chest;

Anilar live in its legs;

Maruthuvar live in its knees;

NAgas live in the tips of the hooves;

Gandharvas life in the middle of the hooves;

Celestial maidens live on the top of the hooves;

Udhithar lives on its back;

Pitru DevatAs live in its waist region;

Lakshmi Devi lives in its anus;

all the Devas live in the end of it tail,

the light rays live in the hair on the til tip;

Bhoomaa Devi lives in its stomach,

all the oceans reside in its udders;

The three fires of yAga reside in its stomach, heart and face

The yaga and yajna reside in its bones and virtuous women reside in every part of the cow's body.
 
My humble suggestion.

Periya PurANam could be in a separate thread.

Juggling between two different topics here, is rather difficult!
 
ALL my poems are in this single thread fast reaching a five digit figure.

There is really no need to jump between different topics or threads.

That is precisely why every topic have been blogged chapter wise

and with index of the pages and captions.

There was a time when I used to post 4 different themes EVERYDAY!

Nobody had said that they found it difficult to maneuver around them !

But if people have reservation about entering in my website / my blogs

I can say that they are creating difficulty by their own choice. :(
 
bhagavathy bhaagavatam - skanda 9

9#20a. சிவன் தூது

உறுதியாக நம்பினான் பிரமன் விஷ்ணு கூறியவற்றை;
கருதினான் பரமசிவனைத் தியானத்தில் பூவுலகு சென்று.


அமர்ந்தான் ஓரால மரத்தின் அடியில் தேவர்களுடன்
அழகிய சந்திரபாகா நதிக் கரையில் உடனே சென்று.


சந்திர சூடன் காட்சி தந்தான் பிரம்ம தேவனுக்கு;
“சங்க சூடனை அழிக்க வேண்டும் எவ்வாறேனும்!”


பிரார்த்தித்தான் பிரமன் தேவர்களுடன் சிவனை;
பிரம்ம லோகம் திரும்பினான் விண்ணப்பித்த பின்.


சங்க சூடன் தலை நகருக்கு அனுப்பினான் தூதாக,
சந்திர சூடன் கந்தர்வன் புஷ்ப தந்தனை அழைத்து!


ஜொலித்தது தலைநகர் சுவர்க்கத்தினும் மேலாக;
ஜொலித்தது அரண்மனை ரத்தினங்கள் இழைத்து.


நான்கு அகழிகள் பாதுகாத்தன நகரை – முன்
நான்கு வாயில்களிலும் பலத்த கட்டுக் காவல்!


பிங்கலாக்ஷன் காவல் செய்தான் சூலத்துடன்;
தங்கு தடையின்றி அனுமதித்தான் தூதுவனை.


“சிவன் தூதன் நான் கந்தர்வன் புஷ்ப தந்தன்!
சிவன் கூறிய தூது மொழியைக் கேள் மன்னா!


திருப்பித் தந்துவிடு தேவர்களின் உலகத்தை!
திருப்பித் தந்துவிடு தேவர்களின் செல்வத்தை!


மறுத்தால் வா எங்களுடன் போர் புரிவதற்கு;
இருக்கிறார் சிவன் சந்திரபாகா நதிக்கரையில்!


மறுமொழி என்னவோ கூறுவாய் என்னிடம்!” என
சிரித்தான் சங்க சூடன் “வருவேன் நாளை நானே!”


குழுமினர் சிவகணங்களின் தலைவர்கள்;
குழுமினர் அஷ்டபைரவர், ஏகாதச ருத்திரர்;


குழுமினர் அஷ்ட வசுக்கள், துவாதச ஆதித்யர்;
குழுமினர் கூஷ்மாண்டர், யக்ஷர், வேதாளங்கள்.


அந்தப்புரம் சென்றான் துளசியிடம் சங்க சூடன்;
அறிவித்தான் தூது மொழிகள், போரைக் குறித்து.


“கெட்ட கனவு கண்டேன் விடியற் காலையில்;
கெட்ட செய்தி கேட்டேன்!” துளசி அழுதாள்!


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


9#20a. SivA’s messenger


Brahma entrusted the task of killing Chandra Choodan to Lord Siva aka Chandra Choodan and went back to his abode. So did all the other Devas. Now Siva sent Pushpa Dantan – a Gandharva – as his messenger to Sankha Choodan’s capital city.


The capital city was more prosperous than AmarAvathi or ALagApuri. The palace was studded with precious gems everywhere. Multiple trenches protected the city. The twelve main gates were well protected by vigilant guards.


PingalAkshan guarded eagle eyed with his SoolAyudam. But he allowed the Pushpa Dantan the messenger from Siva to enter the palace freely.


Puspa Dantan was duly impressed by the rich spectacles that met his eyes. He was amazed to see the grandeur and prosperity of Sankha Choodan.


He introduced himself and conveyed the message sent by Siva,”Return to Devas all the things and privileges they used to enjoy before. Let them live as before without any further hindrance.


If you will not agree to do this, come to the war front. Lord Siva is waiting on the bank of the river ChandabAga. Tell me your reply to be conveyed to our Lord”


Sankha Choodan laughed and said, “I shall come there tomorrow morning. Now you can go back to your Lord and master an convey my message!”


The leaders of Siva gaNAs assembled. Ashta BahiravAs, EkAdas RudrAs, Asta Vasus, DwAdasa AdithyAs, KooshmANdAs, Yakshas and VetAls all assembled in readiness for the imminent war.


Sankha Choodan went to the quarters of Tulasee and told her of the happenings of the day. She said to him,”I had a very scary dream early in the morning. Now I have heard the bad news also from you!” Tulasee started weeping uncontrollably.




 
SEkkizhArin Periya purANam

5d . மனுநீதியின் நீதி

பரிகாரங்களை உரைத்தனர் அமைச்சர்கள்;
பசுக்கொலைக்கு உண்டு மரண தண்டனை!

கொல்லவில்லை பசுவை இளவரசர் தானாகவே;
கொலையுண்டது சக்கரத்தில் விழுந்து தானாகவே;

ஆண்டவன் சித்தம் அதுவானால் சுமத்தலாமா
மாண்ட பசுவின் பழியை அப்பாவி இளவரசர் மீது?

வழிமுறைகள் உள்ளன சாத்திரங்களில் இதற்கு;
வழிகண்டு வருவார் இளவரசர் வேதியர்களிடம்".

"அல்லவை செய்தால் அறமே கொன்றுவிடும்
நல்ல குலத்துக்கு விளைவித்தான் தீராப் பழி!

பரமன் எழுந்தருளிய திருத்தலத்தில் - இந்தப்
பாதகம் நிகழலாமா மன்னர் மகனால் கூறும்!

தனக்கொரு நீதி பிறருக்கு வேறொன்றா?
தனயனைக் காத்திட அறத்தில் பிறழலாமா?

தேர்க்கால் ஏறி இறந்த கன்றுக்கு உரிய நீதி
தேர்க்கால் ஏற்றி இளவரசனிக் கொல்வதே!

இதுவே என் இறுதியான, உறுதியான தீர்ப்பு;
இராது இதில் எந்த மாற்றமும் அறிவீர்!" எனச்

சிந்தனை வயப்பட்டு நின்றார் சிறந்த அமைச்சர்;
சிந்தாகுலம் அடைந்தார்; விடுத்தார் தன் ஆவியை!

காவலன் அழைத்து வந்தான் இளவரசனை -ஆனால்
கோவலன் கருதவில்லை தான் பெற்ற மகன் என்று!

கிடத்தினான் மகனை கன்று இறந்த அதே இடத்தில்;
திடமாக்கிக் கொண்டான் பாசம் மிகுந்த உள்ளத்தை!

செலுத்தினான் தன் தேரை விரைவாக மகன் மீது;
சென்றுவிட்டது அவன் அன்பு மகனின் ஆவி பிரிந்து!

கண்ணீர் வடித்தான் மனு நீந்திச் சோழன் இதனால்;
கண்ணீர் வடித்தனர் அங்கு குழுமியிருந்த மக்களும்!

விடை மீது தோன்றினர் வீதி விடங்கரும் உமையும்!
உடனே உயிர் பெற்றெழுந்தனர் இறந்துவிட்ட மூவரும்!

தாய்ப்பசு ஓடி வந்து நக்கியது கன்றை அன்பாக;
தந்தையின் கால்களில் விழுந்தான் இளவரசன்;

மறைந்து விட்டன அந்த மாயப்பசுவும், கன்றும் - உரு
மாறி வந்தவர்கள் இந்திரனும், இயமனும் அல்லவா?

சோதிக்க வந்தனர் மனுநீதிச் சோழனின் நீதியை;
சோதனையில் வெற்றி பெற்றான் மனுநீதிச் சோழன்.

கூறினார் சேக்கிழார் திருவாரூர் தலத்தின் பெருமையை;
கூறினார் சேக்கிழார் பூங்கோயிலின் பெருமைகளையும்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#5d. The judgement of the king

The ministers told the king," Killing a cow is a sin that deserves death as punishment. But our prince did not kill the calf on purpose. It ran under the wheel of the chariot and got crushed by itself.

We can't hold the prince responsible for this accident. It was God's decision that the calf should meet such an end. There are many parihArams for such sins. Prince has gone to the learned pundits to find out the suitable parihAram for this sin.

The King said, "If we destroy Dharma wantonly, the Dharma will destroy us in return. This place is auspicious to Lord Siva. Such a sinful act should not take place here. I can't relax the punishment since the prince is my son. The death of the calf at the wheel of the chariot will be set right by the death of the prince under the wheel of the chariot. This is my final and firm verdict".

The minister could neither accept nor digest this severe punishment given to the prince. He became very sad and gave up his own life. The king became more sad by this.

The guards brought the prince to the king. The king did not consider him as his dear son but as a culprit to be punished appropriately. The prince was made to lie down at the very same spot where the calf had died. The king drove his chariot very fast and the prince got crushed and killed under the wheel in the very same manner.

The king cried at the sight of the dead prince. The whole crowd shed tears at the sight. But lo and behold! Veethi Vidangar PerumAn appeared on Nandhi along with his Devi. At the same time, the calf, the prince and the minister came back to life.The cow rushed to lick its calf with great affection. The prince fell at the feet of his father.

Suddenly the cow and the calf vanished into thin air. They were Indra and Yama in disguise. Their aim was to test the King's sense of justice and dharma. Manu neethi chozhan had won in their test and became a perfect example of a righteous king.

SEkkizhaar elaborated the greatness of Thiruvaroo and Poongkovil.








 
bhagavathy bhaagavatam - skanda 9

9#20b. சங்கசூடன் அறிவுரை

“தோன்றும் சுகம் துக்கம் காலத்தின் தொடர்பினால்;
தோன்றும் இன்பம், துன்பம் காலத்தின் தொடர்பால்!


தோன்றும் பயம், தைரியம் காலத் தொடர்பினால்;
தோன்றுகின்றன அனைத்தும் காலத் தொடர்பால்!


பிரபஞ்சம் தோன்றுகிறது காலத் தத்துவத்தால்;
பிரபஞ்சம் மறைகின்றது காலத் தத்துவத்தால்.


மும்மூர்த்திகள் முத்தொழில்கள் புரிகின்றனர்
தம்மோடு இணைந்த காலத் தத்துவத்தினால்.


பிரகிருதி நிச்சயிக்கிறது காலத் தத்துவத்தை;
பிரகிருதி நிச்சயிக்கிறது இச்சா சக்தியினால்.


பிரம்மாண்டத்தில் இயங்கும் அனைத்தும் காலப்
பிரமாணத்தை ஒட்டியே நிகழ்கின்றன அல்லவா?


காலத் தத்துவத்துக்கு அப்பாற்பட்டவர் இருவர்,
காலைப் பற்றிக் கொள் அந்த இருவர்களையும்!


பிரபஞ்சத்தின் மாதா பார்வதி தேவி என்றறிவாய்;
பிரபஞ்சத்தின் பிதா பரமேஸ்வரன் என்றறிவாய்.


உண்மையான உறவினர்கள் உயிர்களுக்கு இவர்களே!
உண்மையல்ல நாம் காண்கின்ற பிற உறவுகள் இங்கே!


நம் இருவரையும் இணைத்தது காலத் தத்துவம்;
நம்மைப் பிரிக்கும் இனி அதே காலத் தத்துவம்.


காலத்தின் வயப்பட்டவற்றை எண்ணி அறிஞர்கள்
கவலைப்படுவதோ, அச்சம் கொள்வதோ இல்லை!


அடைவாய் நீ கிருஷ்ணனை வெகு விரைவில்!
அடைவேன் நானும் கிருஷ்ணனை விரைவில்!”


தேற்றினான் துளசியைப் பலவாறாக – மஞ்சத்தில்
போற்றினான் அவளை, அவள் விரும்பும் வண்ணம்.


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


9#20b. Sankha choodan consoles Tulasee


“My dear wife! It is The Time Factor that awards us either auspiciousness or in-auspiciousness. The trees grow up, bloom with flowers, yield plenty of fruits and die out at the end of the appointed time and season!


The universe comes into existence in the appointed time and dies away in its due time. The Creator, Preserver, and Destroyer of the universe, accomplish their assigned tasks assisted by the Time factor.


Only the highest Prakruti Devi is beyond this Time Factor. She can make the Time Factor dance to her tunes. She is the Ruler of everything. She is in everything. She is the Highest God.


Take refuge in this Highest power. The wind blows, the Sun rises, the raincloud rains, the fire burns and the moon cools the plants and the planet earth only by the command of this Supreme Devi.


She is the power behind everything and everyone. Surrender unconditionally to her lotus feet and become free from all kinds of worries!
Who am I? Who are you ? The Creator brought us together due to our favorable Time Factor. We will be separated by the same Time Factor – since it has become unfavorable to us now.

The Wheel of Time takes us into happiness or into sorrow. There is no point in worrying about things and events which lie beyond our control.

You will soon return to KrishNa who you wanted for your husband. I will also soon return to my friend KrishNa after exhausting my curse given by RAdhikA. There is really no need to worry!”


Sankhachooda consoled Tulasee and made her happy in the way she loved most.




 
SEkkizhAr's Periya PurANam

#6a. சுந்தர மூர்த்தி நாயனார்

தோன்றினார் சுந்தர மூர்த்தி நாயனார்
திருநாவலூர் என்னும் திருத் தலத்தில்.

தந்தையார் ஆதிசைவர் ஆகிய சடையனார்;
தாயார் நற்குண நங்கை இசை ஞானியார்;

இவரது இயற்பெயர் ஆகும் நம்பியாரூர் என்பது;
இலங்கினார் முருகன் போல் தெய்வீக அழகுடன்.

தேர் உருட்டித் தளிர் நடை போட்ட சிறுவனைத்
தேரில் வந்த திருமுனைப்பாடி அரசன் கண்டான்.

தேரிலிருந்து இறங்கி வாரி அணைத்தார் - அந்த
தெய்வத் குழந்தையை உச்சி முகர்ந்தார் அரசன்.

சென்றார் சடையனார் இல்லம் தெய்வச் சிறுவனுடன்;
கண்டார் சடையனாரைத் தன் பாலிய சிநேகிதனாக .

"அன்பு பூண்டுவிட்டேன் உன் அருமை மகன் மீது!
அன்புடன் வளர்க்க அனுமதி தருவீர் !" என் வேண்ட,

மறுத்துக் கூறவில்லை மன்னன் விருப்பத்துக்கு,
மன நிறைவுடன் அளித்துவிட்டனர் அன்பு மகனை.

அரசகுமாரன் போலவே வளர்ந்தார் சுந்தரர்;
அரசருக்கு உரியவற்றைக் கற்றுத் தேர்ந்தார்;

உபநயனம் செய்வித்தனர் உரிய வயதில்;
திருமணப் பருவத்தை அடைந்தார் சுந்தரர் ;

பெண்ணைத் தேடும் பணி பெற்றோருக்கு!
பெண் புத்தூர் சடங்கவி சிவாச்சாரியார் மகள்;

நிச்சயித்தனர் நல்ல நாளை, நல்ல வேளையை ;
நாற்றிசையும் பறந்தன மணஅழைப்பு ஓலைகள்;

வெண் புரவியில் புறப்பட்டார் சுந்தர மூர்த்தியார்,
பெண் வீட்டுக்குத் தன் உற்றார் உறவினர்களுடன்.

அரசன் போலத் தன்னை அலங்கரித்துக் கொண்டார்;
அந்தணச் சின்னங்களையும் அவர் மறக்க வில்லை;

வெண் பட்டு, வைரக் கடுக்கன், சந்தனப் பூச்சு;
மணிகள் இழைத்த அணிகலன்கள், மாலைகள் ;

முழங்கின பல மங்கல வாத்தியங்கள் ஒன்றாக;
மங்கல மங்கையர் ஏந்தி வந்தனர் பாலிகையை;

சீர்களைச் சுமந்து வந்தனர் சுற்றத்துப் பெண்டிர்;
நேராக அடைந்தனர் அனைவரும் புத்தூர் சென்று.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#6a. Sundarar

Sundhara moorthi nAyanAr was born in Thiru nAvaloor to ChadaiyanAr - an Aadhi Saivar - and his wife Isai JnAniyAr. The original name given to him was NambiyAroor. He was born extremely beautiful as Lord Murugan is praised to be.

As a young boy he was playing with his toy chariot on the road. The King of Thiru MunaippAdi was passing by in his chariot. The divine beauty of the toddler attracted the King so much that he got down from his chariot and embraced the young boy.

He went with him to his house and found that the father of the boy was his old time friend ChadaiyanAr. He said,"I love your son more than anything else in the world. I want to bring him up as my own son- if you will allow me to do so!". ChadaiyanAr and Isai JnAniyAr felt happy that their son would grow up as a prince and agreed to let the boy go with the king.

Sundarar grew up as a prince. He learned everything needed to become a king later on, when he grew up. His Upanyanam was performed at the appropriate age. He grew up into a handsome lad and attained marriageable age.

His wedding was finalized with the beautiful daughter of Puththoor Sadangkavi SivaAchAriyAr. An auspicious day and time were chosen for the wedding to take place. Palm leaf invitations were sent out in all the four direction to all their kith and kin.

The groom rode on a handsome white horse like a real king. He was accompanied by all his relatives. Sundarar was decorated with white silk, diamond rear rings; rich ornaments studded with the precious gem stones; flower garlands and liberal smearing of sandal paste. He took on the traditional things wore by Brahmins as well as a King.

Auspicious musical instruments played music and auspicious women carried plates with the various gifts to be given to the bride. Finally the groom's party reached the outskirts of Puththoor.







 
bhagavathy bhaagavatam - skanda 9

9#21a. சந்தித்தனர் இருவரும்!

தூய நீரில் நீராடினான் விடியற்காலையில்;
ஆய தானங்கள் செய்தான் வழக்கம் போல்!


பட்டம் கட்டினான் குமாரர்களுக்கு – குருவுக்கு
இட்டதுடன் அளித்தான் அரிய நவமணிகளை!


அந்தணருக்கு வழங்கினான் பொன்னும் மணியும்;
அன்பு மனைவிக்கு நியமித்தான் தகுந்த பாதுகாப்பு.


விரைந்தனர் தூதுவர்கள் நான்கு திசைகளிலும்;
திரண்டனர் வலிமை மிக்க அசுரப் படைவீரர்கள்.


லக்ஷம் பரிகள்; பதினாயிரம் ரதங்கள் மேலும்
லக்ஷம் கரிகள்; மூன்று கோடி வில்லாளி வீரர்;


மூன்று கோடி சூலதாரிகள் அணி திரண்டனர்;
மூன்று கோடி சூலதாரிகள் அணி வகுத்தனர்.


புறப்பட்டான் போர் முனைக்கு ரத்தின விமானத்தில்;
புறப்பட்டது சதுரங்க சேனை விரைந்து போர்க்களம்.


மேலைக் கடலுக்குக் கிழக்கே, ஸ்ரீசைலத்துக்கு வடக்கே;
மலைய பர்வதத்தின் மேற்கே, கந்தமாதனத்தின் தெற்கே


பத்திரா நதிக் கரையைப் பத்திரமாக அடைந்தனர் – அங்கு
பரமேஸ்வரனைக் கண்டனர் ஓர் ஆல மரத்தின் அடியில்!


கோடி சூரியப் பிரகாசத்துடன், புன்னகை முகத்துடன்,
யோகாசனராகப் பளிங்கு போல் பரிசுத்தமான சிவனை.


எளிதில் மகிழ்ச்சி அடைகின்ற கருணைக் கடலை
அருகில் கண்டதும் மெய் சிலிர்த்தான் சங்கசூடன்!


வணங்கித் தெண்டனிட்டான் அவன் மஹாதேவனுக்கு!
வணங்கினான் பத்திரகாளியை, முருகப் பெருமானை!


அணைத்து மகிழ்ந்தான் சிவ கணங்களை எல்லாம்;
அணைத்து மகிழ்ந்தான் அவன் நந்தி தேவனையும்.


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


9#21a. Sankhachooda meets MahAdEvA


Sankha Choodan took bath early next morning. He gave away gifts as was his customs. He crowned his sons the princes to rule after him. He presented rare navaratnas to his guru. He presented gold and precious gems to the brahmins. He made arrangement for the safety and security of his dear wife Tulasee.


He sent messengers in all the four directions. All the valiant asura warriors gathered under him. There were one lakh horse riders, one lakh elephant riders, ten thousands charioteers, three crores (30 million) each of wielders of bow and arrows, the wielders of the trident and the armored warriors.


Sankha Choodan got into his gem-studded vimAnam and left for the battle field. His army also followed him and reached the war front. The place was on the bank of river Bhadra, to the east of the Western sea, to the north of Sree Sailam, to the west of Malaya parvatam and to the south of Gandha MAdana mountain.


They saw MahAdEvA sitting under a tree. He was as brilliant as ten million Suns put together, with a pleasant smiling countenance and shone as pure as a crystal. He was seated in a yogic posture.


Sankha Choodan’s heart melted at the sight of Lord Siva who was very easy please and also very generous with his gifts of boons. He prostrated to MahAdEvA,Bhadra KAli and Skanda. He embraced the siva gaNAs and Nandhi Deva.




 
SEkkizhAr's Periya PurANam

#6b. வந்தார் முதிய அந்தணர்

அமைத்திருந்தனர் பந்தலை ஊர் எல்லையில்;
அலங்கரித்து இருந்தனர் பந்தலை மிக அழகாக;

நிறை குடங்கள் நின்றன மனைகள் தோறும்;
நிறைந்திருந்தது தூய்மையான அழகு எங்கும்;

கோலங்கள் எழிலுக்கு எழிலூட்டின - நிலவியது
கோலாகலம் இன்னிசைக் கருவிகளின் இசையால்;

புத்தூர் எல்லையை அடைந்த உடனேயே அவர்கள்
பெரிய வரவேற்பைப் பெற்றனர் தூப தீபங்களுடன்.

எழுந்தருளினார் சுந்தரர் திருமண மண்டபத்தில்;
எழில் மிகுந்த தோற்றத்துடன், நல்ல ஓரையில்.

திகைப்பூட்டியது சுந்தரரின் பேரெழில் - அங்கு
திருமணம் காண வந்திருந்த ஊர்மக்களுக்கு .

"ஆட்கொள்ள வேண்டும் சுந்தரனை!" என்று எண்ணி
அந்தண வேடம் தாங்கி அங்கே வந்தார் சிவபெருமான்.

தள்ளாடும் தளர்ந்த நடை ; வெள்ளித் தலை மயிர்,
திருச் செவிகளில் கண்டிகை, குழைகள் அசைய;

வெண்ணிற உத்தரீயம்; மார்பில் முப்புரி நூல்;
வெண்ணீறு விளங்கியது திருமேனி எங்கும்.

தாழங்குடை இருந்தது ஒரு கரத்தில் - மற்றும்
தர்ப்பைகள் முடிந்த மூங்கில் தடி மறு கரத்தில்;

இடி முழக்கம் போல முழங்கினார் அந்தணர்;
தடுக்க வந்திருந்தார் அந்தத் திருமணத்தை.

"கேளுங்கள் நான் கூறப் போவதை எல்லோரும்!
கேள் அப்பனே நீயும் நமக்குள் உள்ள ஒரு வழக்கை!

தீர்த்துவிடு அந்த வழக்கை முதலில் - அதன் பின்பு
திருமணம் செய்து கொள்ளலாம் உன் மனம் போல!"

திகைத்து நின்றனர் அங்கிருந்த மக்கள் - சுந்தரர்
"தீர்த்த பின் வழக்கைத் திருமணம்" என்று கூறினார்.

"இவன் பட்டான் எனக்கு எழுதித் தந்த ஓலை இது;
இவன் எனக்கு அடிமை என்று என்றோ பண்டு!" எனக்

காட்டினார் அந்தணர் ஓர் ஓலையைச் சபையில் - நிலை
நாட்டினார் ஐயமின்றி நாவலூரன் தன் அடிமை என்பதை.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#6b. Piththan - The old Brahmin

The wedding paNdahl was erected at the outskirts of Puththoor. It was decorated both beautifully and richly. Rows of shining kalasams filled with water were kept as a part of the decoration. The colorful designs drawn on the floor were eye catching. One could feel beauty and purity filling the whole area.

The people gathered there were jubilant and the music from the various instruments added to their joy. The groom's party was welcomed in a traditional manner with lit lamps and incense sticks.


Sundara moorthy entered into the wedding maNdapam at an auspicious hour. The guests gathered there were impressed by the rare beauty of Sundaramoorthy.

AlAla Sundarar had requested Lord Siva to stop him getting caught in the cycles of SamsAra, while living as a mortal man on the earth. Siva thought that it was the right time to keep His part of the promise. He assumed the form an old Brahmin and reached the wedding paNdhal.

He walked with faltering steps. He had a crown of shining silver hair on his head. He wore the kuzhai and kaNdigai in his ears. He wore the pooNool, white clothes and was smeared with the holy ash all over his body. He held an umbrella made with dried leaves in one hand and a bamboo stick - which had kusa grass tied to one of its ends - with his other hand.

He spoke in a thunderous voice demanding to stop the wedding proceedings. He said," All of you listen to what I have to say. I and Sundaran have an issue to be resolved. Sundara! you can marry only after resolving our dispute."

Sundarar asked,"What might be the dispute between us which I have to resolve before marrying?" The old Brahmin pulled out a palm leaf from his waist, showed it to the gathering and said,"Sundaran is my slave. His grandfather had given me this as a proof written by his own hand long ago!"

 
bhagavathy bhaagavatam - skanda 9

9#21b. சிவன் அறிவுரை

மஹாதேவன் கூறினான் சங்கசூடனிடம்,
“மஹாப் புகழ் வாய்ந்த வம்சத்தவன் நீ!


பிரமன், மரீசி, கஸ்யபன், விப்ரஜித்து,
தம்பன் ஆவோர் உன் மூதாதையர்கள்.


திகழ்ந்தனர் தவம், சித்திகள் பெற்று!
திகழ்ந்தனர் செல்வச் செழிப்புப் பெற்று!


தேவர்களின் ராஜ்ஜியத்தில் எதற்காக ஈடுபாடு?
தேவர்களின் சொத்தில் ஏன் இத்தனை பிடிப்பு?


பிறர் சொத்தை விரும்புவது ஹிம்சை ஆகும்;
பிறர் சொத்தை விழைவது வறுமையைத் தரும்.


நிலையற்ற செல்வம் பெறுவதற்கு முயன்று
நிலையான புகழை இழக்கலாமா நீயே கூறு!


அதிகாரமும், செல்வமும் நிலைத்திருப்பதில்லை;
‘விதி’யையும் கூட விதி விடுவதில்லை அறிவாய்!


தவிப்பான் பிரம்மன் தன் தொழிலைச் செய்யாது!
தேவி வந்து உதவுவாள் பிரமன் மயக்கத்தை நீக்கி!


சந்திரன் வளர்வான், தேய்வான், மறைவான்!
கதிரவன் வெப்பமாவான் வானில் ஏறுகையில்!


தர்மம் கூடத் தேய்ந்து வருகிறது யுகம் தோறும்;
தர்மம் பரி பூரணமாக இருந்தது கிருத யுகத்தில்.


தர்மம் முக்கால் பங்கானது திரேதா யுகத்தில்;
தர்மம் அரைப் பங்கானது துவாபர யுகத்தில்;


கால் பங்காகிவிட்டது தர்மம் கலி யுகத்தில்;
கால பேதங்கள் பாதிப்பது இல்லை என்னை!


நிலையற்றவை இங்கு காணப்படும் பொருட்கள்!
நிலையாக இருப்பவன் நான் ஒருவன் மட்டுமே.


பிரம்மனால் சிருஷ்டியும், விஷ்ணுவால் ஸ்திதியும்
ருத்திரனால் லயமும் அடையமாட்டான் என் பக்தன்!


பக்தனை நெருங்க அஞ்சுவான் காலனும்!
அத்தகையவன் ஆக வேண்டும் நீயும் கூட!”


சங்க சூடன் வணங்கினான் சந்திர சூடனை!
சங்க சூடன் பதில் தந்தான் சந்திர சூடனுக்கு!


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


9#21b. MahAdEvA’s advice

MahAdEvA told Sankha choodan, “You belong to an illustrious lineage Sankha Chooda! Brahma, Mareechi, Kahsyapa, Viprajit, and Tamban are your ancestors. They had possessed many siddhis due to their power of penance performed by them. They all were very prosperous too!


I fail to see why you are interested in the kingdom of DevAs? Why do you show this interest in the wealth of the DevAs? It is himsa to covet the possessions of another person. The greed for the property of another person is the cause of poverty.


Wealth is transient and fortune is fickle minded. But fame and a good name are eternal. Do you want to lose your fame which is eternal for the sake of the wealth which is ephemeral?


Neither Power nor wealth are permanent even for Brahma. At times he would be in trouble unable to do his job of creation. At those times it is Devi who solves his problems and helps him to go on with The Creation.


Even the Moon waxes and wanes and disappears from view. The Sun becomes hotter as he ascends the sky. Dharma is undergoing changes from one yugam to the next yugam.


Dhrma was in its full glory in Krita yugam. It reduced to three fourth its glory in TretA yugam and to half its original glory in DwApara yugam. In Kaliyugam it has become just one fourth of what its glory was at first.


The only thing immutable by time is me. Time does not affect me in any way. My true bhakta will not be subjected to the Creation by Brahma, the Protection by Vishnu or the Destruction by Rudra. You to must become one such bhakta to me Sankha Choodan!”


Sankha Choodan prostrated to Lord Chandra Choodan and replied thus with great humility.




 
SEkkizhArin Periya PurANam

#6c. சுந்தரரும், அந்தணரும்

"பித்துப் பிடித்து விட்டதா வேதியரே உமக்கு?
பித்தனைப் போல் பேசுகிறீர் நான் அடிமை என"

"பித்தனும் ஆவேன் பேயனுமாவேன் - ஆனால்
சித்தம் கலங்கி வெட்கம் அடைய மாட்டேன் நான்.

என்னை நீ அறியமாட்டாய் என்ற போதிலும் - நான்
உன்னை நன்கு அறிவேன் எத்தனையோ காலமாக!

மறவாதே உன் கடன் என் பணி செய்து கிடப்பதே!
கிளறாதே என் சினத்தை விதண்டா வாதம் செய்து!"

உள்ளம் உருகியது அந்தணரின் தோற்றத்தால்!
உள்ளம் மறுகியது அந்தணரின் வார்த்தைகளால்!

"காட்டுங்கள் அந்த அடிமைச் சாசன ஓலையை!" எனக்
"காட்டுவேன் நீ அவைக்களத்துக்கு வந்தால்!" என்றார்.

பலவந்தமாகப் பறிக்க முயன்றார் ஓலையைச் சுந்தரர்;
பலமுறை வலம் வந்தனர் மணப் பந்தலை இருவரும்!

கிழவரைப் பிடித்தே விட்டார் சுந்தரர் இறுதியில்;
கிழித்து வீசிவிட்டார் கிழவர் காட்டிய ஓலையை!

கூச்சலிட்டார் வயோதிக அந்தணர் சினத்துடன்,
"கூட்டத்தில் இல்லையா நல்லவர் ஒருவர் கூட?"

"திருமணத்தைத் தடை செய்ய வந்த வேதியரே!
கூறுவீர் உம்மைக் குறித்த விவரங்களை!' என

"வெண்ணெய் நல்லூரில் பிறந்து வளர்ந்தவன்;
எண்ணம் சரியென்றால் ஓலைக் கிழிப்பானேன்?

இங்கனம் அழித்துவிட்டான் என் சாசன ஓலையை!
இதுவே ஆதாரம் இவன் என் அடிமை என்பதற்கு!"

"தொடருவோம் வழக்கை வெண்ணை நல்லூரில்"
தொடர்ந்து கூறினார் அந்த அந்தணரிடம் சுந்தரர்.

"ஓலையின் மூலம் உள்ளது பத்திரமாக என்னிடம்;
ஓலையைக் கிழித்தாயே அது வெறும் நகல் தான்.

நிரூபிக்கின்றேன் உறுதியாக நீ என் அடிமை என்று
திருவெண்ணை நல்லூர் அவைக்களத்தில்!" என்றார்.

அழகிய மண மண்டபம் இழந்துவிட்டது களையை!
வழக்காடும் மன்றமாக மணமேடை மாறிவிட்டதால்!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#6c. Sundarar VS the old brahmin

"You crazy old man! You must be raving mad to make such outdated claims about my being your slave. No one can own anyone else anymore!" Sundarar was really angry that his wedding had been stopped by a raving old man who had appeared from nowhere.

"You may call me by any name as raving mad man or a ghostly old man. I will not feel ashamed by this name calling. You do not know me but I have known you all along! Your duty is to serve me as a slave whenever I command. Don't make me more angry by your useless arguments " The old man taunted Sundarar.

The appearance of the old Brahmin melted Sundarar's heart but his harsh words rattled him to his core. Sundarar demanded the old man to show the palm leaf evidence of his bondage. The old man refused to show it and said, "I will show you the evidence only in a people's court and not here"

Sundarar tried to grab the palm leaf from his hand but he would not let Sundarar to do so. He chased the old man and they ran in circles several times in the pandal. Finally Sundarar managed to grab the evidence and destroyed it promptly.

The old man was beyond himself in rage. He shouted "Is there not even one good person in this crowd? He was asked by the people there," Please do tell us all about yourself first."

The old man replied," I hail from Thiru VeNNai Nalloor. If Sundarar was not guilty why did he destroy the palm leaf? That itself is proof enough that he is my slave.

We will continue to argue in my place since I am sure I will not get any justice in this pace. I still have the original palm leaf as my evidence. The one I gave Sundarar was only a copy. I will prove that Sundaran is indeed my slave in my place

The wedding pandal became a court of argument. It lost all its joy and mirth in no time."




 

Latest ads

Back
Top