• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

A poem a day to keep all agonies away!

bhagavathy bhaagavatam - skanda 9

9#25c. சந்தியா வந்தனம்

அந்தணன் ஆகும் தகுதியை இழக்கின்றான்
சந்தியா வந்தனம் செய்யாத ஒரு வேதியன்.

மூன்று சந்திகளையும் முறையாகச் செய்பவன்
விண்ணில் ஆதவன் போல நன்கு ஒளிர்வான்!

இணையவான் அவன் தேஜஸில் சூரியனுக்கு!
இணையாவான் அவன் தவத்தில் சூரியனுக்கு!

தூய்மையடையும் பூமி அவன் பாதத் துளிகளால்!
தூய்மையடையும் பாயும் நதி அவன் நீராடுவதால்!

சந்தி செய்யாத அந்தணனும் ஒரு சூத்திரனே!
சந்தி செய்யாதவன் செய்யும் கர்மங்கள் வீணே!

ஏற்க மாட்டார்கள் தேவர்கள் இவன் செய்யும் பூஜையை!
ஏற்க மாட்டார்கள் பித்ருக்கள் இவன் தரும் பிண்டத்தை!

மூலப் பிரகிருத்யின் பக்தன் ஆகாத ஒருவனும்,
மூல மந்திரத்தை ஜபம் செய்யாத ஒருவனும்,

தேவிக்கு உற்சவங்கள் செய்யாத ஒருவனும்,
வேளைக்குச் சந்தியைச் செய்யாத ஒருவனும்,

ஏகாதசி விரதம் அனுஷ்டிக்காத ஒருவனும்,
நிவேதிக்காத உணவை உண்ணும் ஒருவனும்,

சூத்திரான்னத்தைச் சுவைத்துப் புசிப்பவனும்,
சூத்திரப் பெண்ணைத் திருமணம் செய்தவனும்,

சூத்திரனுக்குச் சமையல் செய்து போடுபவனும்,
சூத்திரனிடம் தானம் பெறுகின்ற அந்தணனும்,

கத்தியைக் காட்டி வயிறு வளர்ப்பவனும்,
வட்டியை வாங்கி வயிறு வளர்ப்பவனும்,

சூரியோதயத்தின் போது நித்திரை செய்பவனும்,
பூஜை, புனஸ்காரங்களை விட்டு ஒழித்தவனும்,

வேஷத்தால் அந்தணர்கள் போல இருந்தாலும்,
விஷமற்ற பாம்புகளுக்கு இணையாவார்கள்!

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

9#25c. SandhyA Vandanam

A brahmin who does not perform SandhyA Vandanam does not qualify to be called as a Brahmin. The man who performs all the three SandhyA Vandanams regularly will shine like the Sun in the sky!

He will become equal to the Sun in his tejas and penance. The earth will become purified by his foot steps. The running rivers will get purified when he takes bath in their water.

A brahmin who does not perform SandhyA Vandanam is a SoodrA – even if he is born as a Brahmin. All the karmas performed by him will go in waste. Devas will not accept his pooja and Pitrus will not accept his srAddha karmas.

The brahmin who is not the devotee of Moola Prakruti Devi; The brahmin who does not chant her divine mantrAs; The brahmin who does not follow EkAdasi vratam;

The brahmin who eats the food not offered to God; The brahmins who eats the food cooked by a SoodrA; The brahmin who has married a SoodrA woman; The brahmin who cooks for food for a SoodrA; The brahmin who receives DAnam from a SoodrA;

The brahmins who makes a living by brandishing a knife; The brahmin who makes money lending his profession for earning his livelihood; The brahmin who sleeps at Sooryodhaya kAlam and The brahmin who has given up the pooja and other form of worship may look like brahmins but they are equal to the non poisonous snakes.

 
SEkkizhArin Periya PurANam

#6p. சங்கிலி நாச்சியார்

வாழ்ந்தாள் கன்னிமாடத்தில் தோழியர், சேடியருடன்;
வாழ்ந்தாள் சிந்தையில் எந்தையையே நிலை நிறுத்தி.

வைகறையில் நீராடுவாள்; வெண்ணீறு அணிவாள்;
ஐயனுக்கு வண்ண வண்ண மாலைகள் தொடுப்பாள்;

சாத்தி வழிபடுவாள் காலத்துக்கு ஏற்ற மாலைகளை;
ஏத்தி வழிபடுவாள் திரு ஐந்தெழுத்து மந்திரத்தால்.

செய்து வந்தாள் திருத்தொண்டு திருவொற்றியூரில்;
சென்று சேர்ந்தது சுந்தரர் குழுவும் திருவொற்றியூர்.

புகுந்தார் ஆலய மண்டபத்தில் சுந்தரமூர்த்தியார் ஒரு நாள்;
புகுந்தாள் ஆலய மண்டபத்தில் சங்கிலியார் மாலையுடன்;

தென்றல் போல வந்தாள்; ஒரு மின்னல் போல மறைந்தாள்;
கன்னிமாடத்தில் நுழைந்தாள்; சுந்தரர் உள்ளத்திலும் தான்!

மனம் பறிபோனது கண நேரத்தில்; உடன் மையல் பிறந்தது ;
'இனம் காண வேண்டும் இந்த எழில் தேவதை யாரென்பதை'!

கண்டுபிடித்தார் 'மின்னல் மோகினியின் பெயர் சங்கிலியார்;
கன்னி மாடத்தில் வசிக்கும் ஒரு கன்னி மயில் அவள்' என்று.

மணந்தேன் பரவையைப் பரமன் திருவருளால் - அது போல்
மணக்க வேண்டும் சங்கிலியாரையும் பரமன் திருவருளால்.

"மறைத்தாய் உமையாளை உன் மேனியின் இடப்புறம்!
மறைத்தாய் கங்கையை உன் சென்னிமேல் சடையில்!

தீர்த்தருள்வாய் என் தாபத்தையும், என் மோகத்தையும்;
தீர்த்தருள வல்லன் நீ ஒருவனே என்று அறிவேன் நான்".

துயின்றார் சுந்தரர் சங்கிலியாரின் நினைவாகவே;
துயரைத் தெரிவித்து விட்டார் தோழன் அரனுக்கு;

தோன்றினான் அரன் சுந்தரர் கனவில் அன்றிரவு,
"துயர் உற வேண்டாம்; மணப்பாய் நீ சங்கிலியை!"

தோன்றினான் வேதியராகச் சங்கிலியார் கனவில்;
"மணம் புரிவாய் என் தோழன் சுந்தரனை நீ !" என்றார்

"திருவாரூரில் வாழ்கின்றார் பரவையாருடன் சுந்தரர்;
திருமணம் அவருடன் செய்து கொள்வது எங்ஙனம்?" என

"உறுதி மொழி அளிப்பான் உன்னைப் பிரியேன் என்று!"
மறுபடி மறைந்தருளினார் வேதியர் வேடமிட்ட சிவன்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#6p. Changili nAchiyAr

Changili nAchiyAr lived in the Kanni mAdam (the abode of virgins) with her friends and maidservants. Her thoughts were firmly fixed on Lord Siva. She would get up early in the morning and bathe. She would smear her forehead with the holy ash. She would pluck fresh fragrant flowers and make them into lovely garlands.

She would offer the appropriate garland to Siva depending on the time of the day. She would be chating the Siva panchAksharm all the time. While ChangiliyAr was thus serving Lord Siva, Sundarar and his disciples reached Thiru votrioor.

One day Sundarar went to the mandapam in the temple. At the same time ChangliyAr also entered the mandapam holding the garland meant for Siva. She entered like a whiff of fresh breeze and vanished as swiftly as a streak of lightning.

ChangiliyAr went back and entered her Kanni mAdam. At the same time she had entered the heart of Sundarar. He fell head over heels in love with her at the very first sight. He found out her name and her place of residence.

He told to himself., "I could marry Paravai since Siva helped me. I will marry ChangilyAr also since Siva will surely help me. Oh Lord! You have successfully hidden Uma Devi in the left half of your body . You have hidden Ganga in your matted coils.Only you can help me now. You must show me a way to marry the pretty ChangiliyAr."

He slept in fits and starts thinking of ChangiyAr all the while. He had conveyed his wishes to his God and friend Siva. Siva appeared in his dream and assured Sundarar, "Do not worry. You will surely marry ChangiliyAr."


Now Siva appeared in the dream of ChangiliyAr and said," You must marry my friend and devotee Sundaran." ChangiliyAr asked this question to Siva disguised as a brahmin,

"Sundarar has married ParavaiyAr and is living in ThiruvAroor. How can I marry him knowing this?" Siva reassured ChangiliyAr, "Sundarar will promise to you never to leave your side"

With this Siva disguised as a brahmin vanished again.

 
Last edited:
bhagavathy bhaagavatam - skanda 9

9#26a. சாவித்திரி தியானம்

உருக்கிய பொன்னிறம் வாய்ந்தவள் தேவி;
பிரம்மா தேஜசுடன் ஒளிர்ந்து ஜொலிப்பவள்.


கிரீஷ்ம ருதுவில் ஒளிரும் நண்பகல் சூரியன்
ஆயிரவரின் காந்தியை அடையப் பெற்றவள்.


புன்னகை தவழுகின்ற மலர்ந்த முகத்தினள்;
பொன்னகை, ரத்தினங்கள் அணிந்துள்ளவள்.


பக்தருக்கு அருளும் திருவுள்ளம் கொண்டவள்;
பக்தருக்கு முக்தியையும், சுகத்தையும் தருபவள்.


சாந்தை, காந்தை, பிரம்ம பத்தினி!
சர்வ சம்பத் வடிவினி, பிரதாயினி!


வேதத்துக்கு அதிஷ்டான தேவதை!
வேதசாஸ்த்ர, வேதபீஜ வடிவானவள்!


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


9#25d. SAvitri Devi DhyAnam

SAvitri Devi is of the color of molten gold! She glows with Brahma tejas! She has the brilliance of one thousand Suns which have risen together in the Greeshma rutu at mid day.


She has a smiling countenance! She is adorned with ornaments made of gold and precious gem stones. She is kindly disposed to bless her devotees. She gives her devotees liberation and happiness.


She is calm; She is very attractive; She is the wife of Brahma Devan; She is the personification of all the wealth and also giver of all the wealth to her devotees.


She is AdishtAna Devata of the VedAs. She is the VEda Bheeja Swaroopini.




 
SEkkizhArin Periya PurANam

#6q. ஓர் உறுதி மொழி

தோன்றினான் தோழன் சுந்தரர் கனவில் பெருமான்;
"தேவை ஓர் உறுதிமொழி அவளைப் பிரியேன் என்று!" என

"பிரியாமல் இருக்க முடியாது அவளை என்னால்!
தரிசிக்க வேண்டாமா நீர் உறையும் ஆலயங்களை?

சபதம் செய்து தருகையில் 'அவளைப்பிரியேன்!' என்று
சன்னதி விடுத்து எழுந்தருள்வீர் நீர் மகிழ மரத்தடியில்!" என

தோன்றினார் வேதியர் மீண்டும் சங்கிலியார் கனவில்;
"கேள் மகிழ மரத்தடியில் சபதம் செய்யுமாறு சுந்தரனை"

விழித்துக் கொண்டாள் சங்கிலியார் உறக்கத்திலிருந்து;
எழுப்பினாள் தன் அருகில் உறங்கிய தன் சேடியர்களை.

கூறினாள் தான் கண்ட அதிசயக் கனவுகளை எல்லாம்;
கூறினாள் வேதியர் தனக்கு அளித்த அறிவுரையையும்.

சென்றாள் சங்கிலியார் மாலைகளுடன் ஈசன் ஆலயம்;
சென்றார் சுந்தரர் சங்கிலியாரைக் காண ஈசன் ஆலயம்;

எடுத்துரைத்தார் கனவைச் சுந்தரர் சங்கிலி நாச்சியாரிடம்;
நடந்து சென்றாள் சங்கிலியார் கன்னம் சிவக்க முன்னே.

"ஆணை இடுகின்றேன் உன்னைப் பிரிந்து செல்லேன் என;
அன்புடன் வரவேண்டும் அரன் சன்னதிக்கு என்னுடன்!" என

"சபதம் செய்ய இறைவன் சன்னதியா? என்றனர் சேடியர்.
"சபதம் செய்வீர் மகிழ மரத்தடியில்!" என்றனர் தோழியர்.

திடுக்கிட்டார் சுந்தரர் இதைச் சற்றும் எதிர்பாராததால்!
தடுக்க முடியாது மகிழ மரத்தின் கீழ் சபதம் செய்வதை!

"திருவொற்றியூரை விட்டு அகன்று உன்னைப் பிரியேன்!"
திருத்தமாகவும் அழுத்தமாகவும் சபதம் செய்தார் சுந்தரர்.

சிவனடியார்கள் கனவில் தோன்றினார் சிவபெருமான்.
"சிறப்பாகச் செய்வீர் சுந்தரர் சங்கிலியார் திருமணத்தை"

பெற்றோர்கள் மகிழ்ந்தனர் உற்ற சம்பந்தம் விளைந்தால்;
உற்றார் மற்றோர் வியக்க நடந்தது அவர்களின் திருமணம்

அணிவித்தாள் அரனுக்குப் பூமாலைகளைச் சங்கிலியார்;
அணிவித்தார் அரனுக்குப் பாமாலைகளைச் சுந்தரமூர்த்தி.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#6q. The promise

Siva appeared in the dream of Sundarar one again and said,"You must promise Changili nAchiyAr that you will never leave her and go away."

Sundarar objected to this saying ," I can't promise that to her. I have to leave her side in order to visit your temples and to go on a pilgrimage. When I make the promise to her, kindly leave your sannadhi and reside in the Magizha tree in the temple."

The brahmin appeared once again In the dream of ChangiliyAr. He told her," When Sundarar makes the promise to you, demand that it should be made under the Magizha tree and not in the sannadhi."

ChangiliyAr woke up and she woke up all her friends and maids as well. She told them of her wonderful dreams and the advise the brahmin had given her.

Next day ChangiliyAr went to the temple with the freshly made flower garlands. Sundarar also went to the temple to meet her. He told her of his dreams. ChangiliyAr became shy and walked with her cheeks turned red.

"I will promise to you to never leave you and go away from here. Please come to the sannadhi of Siva." The friends asked,"Why should the promise be made in the sannadhi? You must promise in front of the Magizha tree."

Sundarar did not expect this twist in the tale! But it was too late to go back on his promise to make his promise. So he promised in front of the Magizha tree where Siva was actually residing at that time. He made his promise loud and clear never to part with her and leave her side.

Siva appeared in the dreams of his devotees and instructed them to perform the wedding of Sundarar with ChangiliyAr in a grand manner. JnAyiru KizhAr and his wife were happy since their daughter found a devotee of Siva as she had wished for.

The wedding was celebrated grandly. ChangiliyAr continued to offer flower garlands to Siva while Sundarar continued to offer the padhigams to Siva.



 
bhagavathy bhaagavatam - skanda 9

9#26b. சாவித்திரி துதி

“சச்சிதானந்த ரூபிணி! மூலப் பிரகிருதி வடிவே!
ஹிரண்ய கர்ப்ப ரூபிணி! பிரசன்னமாகுவாய்!

வேத ஸ்வரூபிணி! பரமானந்த ரூபிணி!
தேவி நீ நித்யை! நித்ய புருஷனின் பத்தினி!

நித்யானந்த ஸ்வரூபிணி! பிரம்மஜாதி ஸ்வரூபிணி!
நிகர்த்தவள் நீ ஒளிர்ந்து சுடரை உமிழும் அக்னிக்கு!

மந்திர ரூபிணி நீ! பராத்பரை நீ! காட்சி தா!
மோக்ஷமும், தேஜசும் தருபவளே காட்சி தா!

பஸ்பமாகிவிடும் மனோ, வாக், காயங்களின்
பாவங்கள் உன் பெயரை உச்சரித்தவுடனேயே!”

கோலோகத்தில் கிருஷ்ணன் பிரம்மனுக்குத் தர
குதூஹலத்துடன் உச்சரித்தான் பிரம்ம தேவன்.

பிரம்ம லோகத்தை அடைந்தாள் சாவித்திரி;
பிரம்மனின் மனைவியாக வாழ்கின்றாள் அங்கே.

துதித்தான் அஸ்வபதி இந்த மந்திரத்தை;
மதித்தாள் அவன் துதியை சாவித்திரி தேவி.

சந்தியா வந்தனத்துக்குப் பின் இதை ஓதினால்
வந்து சேரும் நான்கு வேதபாராயண பலன்கள்.

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

9#26b. SAVITRI DEVI STUTI


“You are the everlasting existence, everlasting intelligence and everlasting bliss! You are the Moolaprakriti! You are the HiraNya Garbha! You get pleased!

You are of the nature of Fire and Energy! You are the Highest! You are the Highest Bliss! You belong to the caste of the twice-born. Do become appeased!

You are eternal! You are dear to the Eternal! You are of the nature of the Everlasting Bliss. O Devi! You, the all auspicious One! Please become satisfied.

Thou art present in everything and everyone! You are the essence of all mantras of the BrAhmaNas! You are higher than the highest! You are the bestower of happiness and the liberation! O Devi! Please become pleased.

You are like the burning flame to the fuel of sins of the BrAhmaNas! You bestow the BrahmA teja (the brilliance of BrahmA)! O Devi! Please become appeased.

All the sins committed by me through my body, my mind and my speech are burnt to ashes – just be remembering your holy name.”

Thus saying, the Creator of the world reached the assembly there. Then SAvitri came to the Brahmaloka with BrahmA. The King Aswapati chanted this stotra to SAvitri. She gave him her darshan and all the boons desired by the king.

Whosoever recites this highly sacred king of Stotras after SandhyA Vandanam, quickly acquires the fruits of studying all the four Vedas.

 
SEkizhArin Periya PurANam

#6r. தவறும், தண்டனையும்

வந்தது மீண்டும் வசந்தகாலம் வையகம் மகிழ்ந்திட;
வசந்தவிழா வீதிவிடங்கனுக்கு மிகவும் சிறப்பானது.

காண விரும்பினார் திருவாவூர்த் தேர்விழாவை;
காண விரும்பினார் பரவையாரின் நடனத்தை.

சித்தம் கலங்கினார் பழைய நினைவுகளால்;
புத்தி பேதலித்தது பெருமானின் பிரிவினால்;

மறந்தார் மகிழமரத்தின் கீழ் செய்த சத்தியத்தை;
புறப்பட்டார் திருவாரூர் ரகசியமாகச் செல்வதற்கு.

நடந்தது கொடுமை ஊர் எல்லையைக் கடந்ததும்;
நாயனார் மூர்ச்சித்தார் இருகண் ஒளியையிழந்து.

அருள் வேண்டிப் பாடிப் பணிந்தார் பரமனை;
அருள் செய்யாது வாளே இருந்தார் பெருமான்.

உறுதியில் தளரவில்லை பார்வையிழந்த சுந்தரர்;
'திருவாரூர் தியாகேசனைத் தொழுதிட வேண்டும்'.

திருவெண்பாக்கத்தில் பாடினார் உள்ளம் நெகிழ்ந்து;
திருவருள் புரிந்தார்; ஈசன் ஊன்றுகோல் அளித்தார்;

அடைந்தார் சுந்தரர் தட்டுத் தடுமாறிக் காஞ்சி மாநகரை;
அடைந்தார் ஈசன் சன்னதியைக் காமாக்ஷியை வணங்கி.

பார்வை வேண்டினார்; பரிதவித்துப் பரவினர் அரனை;
பாடினார் பதிகங்கள்; பலவாறு கதறி இறைஞ்சினார்;

கனிந்தார் மனம் ஈசன் பாடிப் பரிதவிக்கும் சுந்தரர் மீது;
இனிதாக அளித்தார் இடக்கண் பார்வையை மட்டும்.

தங்கினார் சுந்தரர் மாநகர் காஞ்சியில் சில நாட்கள்;
தொடங்கினார் தல யாத்திரையை அதன் பின்னர்;

நடை தளர்ந்தார் இரவு பகல் பாராமல் நடந்ததால்;
தொடர்ந்த யாத்திரையால் பற்றியது வெப்புநோய்!

திருத்துருத்தி உறை பெருமானிடம் இறைஞ்சினார்;
"விரட்ட வேண்டும் துன்பம் தரும் வெப்பு நோயினை!"

"வெப்பு நோய் விலகிவிடும் ஆரூரா! வருந்தாதே!
இப்போதே நீராடு வலப்புறத்தில் உள்ள குளத்தில்!"

மூழ்கி எழுந்தார் அக்குளத்து நீரில் சுந்தரர் - மனம்
மூழ்கி இருந்தது ஈசனின் திருவைந்தெழுத்துக்களில்.

மறைந்து விட்டது மாயமாக சுந்தரரின் வெப்பு நோய்!
மறுபடிச் சுடர்விட்டது பொன்மேனி மாணிக்கம் போல்!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#6r. The punishment

The world rejoiced the arrival of the Spring Season once again. The famous festivals of Veedhi Vidangap perumAn of Aaroor would be celebrated in a very grand manner during this season. Sundarar wished to partake in the festival in Aaroor. He wished to witness the divine dance of Paravai nAchiyAr.

The separation from Aroor Veedhi Vidangan and ParavaiyAr made him feel like a mad man. He forgot the promise he had made to ChangiliyAr never to leave her side and go away from Thiruvotriyoor. He planned to visit Aaroor secretly and set out on his journey.

When he crossed the city limits something terrible happened. Sundarar became blind in both eyes and fainted right away. Sundarar begged for the mercy of Lord and wanted his eye sight to be restored. But Siva turned a deaf ear to his padhigams.

Sundarar was not discouraged by the loss of his eyesight. He was determined to reach ThiruvAroor at any cost. He walked with faltering steps and kept his journey on. He sang soulful padhigam in Thiru VeNpakkam begging for the mercy of the lord. Lord Siva took pity on Sundarar and presented him with a sturdy walking stick.

Sundarar stumbled on and manged to reach KAnchipuram. He prayed to KAmAkashi Devi and reached the sannadhi of EkAmbarEsar. He sang the praise of his lord and begged for his mercy. Siva was moved with compassion and restored the eye sight in Sundarar's left eye only.

Sundarar stayed on there for some more days and resumed his his journey. He was afflicted by Veppu Noi due to his constant travel. He prayed to Thiruth Thuruthi Sivan and begged for mercy.

Siva told Sundarar, "Take a dip in the pond in the northern side of the temple.You will get cured of your Veppu noi. Sundarar took a dip and got cured of his terrible Veppu Noi. Sundarar's golden hued body started to shine like before with the luster of carbuncle.



 
9#29a. வரங்கள்

யமன் கூறினான் புன்னகை முகத்துடன்
நிழல் போல் தொடர்ந்த சாவித்திரியிடம்.


“அஸ்வபதியின் தவப்பயன் நீ பெண்ணே!
சாவித்திரி தேவி தந்த வரத்தின் பயன் நீ!


பன்னிரெண்டு வயதுப் பெண் ஆன போதும்
பரம ஞானியைப் போலப் பேசுகின்றாய் நீ!


விஷ்ணுவுடன் லக்ஷ்மி போல இருப்பாய்!
சிவனுடன் உமை போல இருப்பாய் நீயும்!


சௌபாக்கியவதியாக ஜீவிப்பாய் நீ
சௌக்கியமாக அன்புக் கணவனோடு!


கேள் இன்னமும் உனக்கு வேண்டியவற்றை!”
கேட்டாள் சாவித்திரி மேலும் பல வரங்களை!


“வேண்டும் எனக்கு ஒளரச புத்திரர் நூற்றுவர்;
வேண்டும் என் தந்தைக்கு சத் புத்திரர் நூற்றுவர்.


வேண்டும் பார்வை கண் இழந்த மாமனாருக்கு!
வேண்டும் மீண்டும் ராஜ்ய போகம் மாமனாருக்கு!


வாழ வேண்டும் லக்ஷம் ஆண்டுகள் கணவனோடு
வாழ்ந்த பின் வேண்டும் இருவருக்கும் பரமபதம்!”


“தந்தேன் நீ கேட்ட வரங்களை எல்லாம் – மேலும்
தந்தேன் நீ கேளாத உன் மன விருப்பங்களையும்!”


“கர்ம பேதங்கள் தோன்றும் வகை எது – மேலும்
கர்மம் செய்பவர் யார்? அனுபவிப்பவர் யார்?”


இறைவன் உலகினைப் பரிபாலிப்பது எப்படி?
அறிய விரும்புகின்றேன் இந்த விஷயங்களை!”


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


9#29a. Boons and Wishes


Yama Dharma told SAvitri who was following him like a shadow,” You are the daughter born out of the penance done by Aswapati and the boon given by SAvitri Devi. No wonder you talk so well like a mature JnAni-even though you are just twelve years old!


May you live happily with your dear husband like Lakshmi Devi does with Vishnu and Uma Devi does with Siva. You can ask for any boons you wish for dear child!”


SAvitri asked for several boons.” I want one hundred sons. I want one hundred sons to be born to my father. I want my father in law’s eye sight restored. He should become the ruler of his lost kingdom.


I want to live with my husband happily for one hundred thousand years. After that both of us should reach the highest abode of liberation.”


Yama said,”I give you all that you have asked for and even those for which you wish though you have not asked for them.”


SAvitri asked a few more questions now.”What creates the difference in the karmAs performed? Who performs the karmAs? Who undergoes the effects of karmAs? How does God rule the world? I want to know all these things!”




 
SekkizhArin Periya PurANam

#6s. மீண்டும் திருவாரூர்


அடைந்தார் திருவாரூர் எல்லையைச் சுந்தரர்;
நுழைந்தார் திருவாரூரில் பொழுது சாயும் போது.

பதிகங்கள் பாடினார்; பார்வையை வேண்டினார்;
மதியணி வேணியன் மனம் கனிந்தான்; தந்தான்;

'துரோகம் செய்துவிட்டேன் பரவையாருக்கு' எனத்
தங்கிவிட்டார் தேவாசிரிய மண்டபத்திலேயே அன்று.

துவண்டாள் சுந்தரரைப் பிரிந்த பின்பு பரவையார்;
துன்புற்றாள் அனல் மேல் இட்ட புழுவைப் போன்றே.

இரவு பகல் போல் ஆனது; பகல் இரவு போல் ஆனது ;
இல்லாமல் போய்விட்டன மனஅமைதியும் ஆனந்தமும்.

வந்தது ஒரு செய்தி ஒரு நாள்; தாக்கி விட்டது அவளை;
சுந்தரர் மணந்து கொண்டார் சங்கிலியாரை என்பது

வேதனை மேலிட்டது ; நெஞ்சில் மண்டியது சினம்;
"தேவை தானா எனக்கு இப்படி ஒரு நிலைமை? "

மாறிவிட்டாள் ஒரு சிறகொடிந்த சிறு பறவையாக!
மாறினாள் பற்றுக்கோல் அற்ற முல்லைக்கொடியாக!

பயனின்றிப் பாலைவனத்தில் காயும் நிலவு ஆனாள்;
பாய் மரம் இல்லாத ஒரு படகு போலப் பரிதவித்தாள்.

அஞ்சினார் சுந்தரர் பரவையாரிடம் மீண்டும் செல்ல;
அனுப்பினார் ஏவலரைத் தம் வருகையைத் தெரிவிக்க.

பார்க்க இயலவில்லை பரவையாரை ஏவலர்கள்;
பாங்கிகள் விரட்டி விட்டனர்; கதவை அடைத்தனர்;

சித்தம் தடுமாறினார் சுந்தரர் இதைக் கேட்ட பின்னர்;
'இத்தனை சினம் இருந்தால் அங்கு செல்வதெப்படி?'

அடுத்து அனுப்பினார் திறமை வாய்ந்த மாதர்களை;
தடுக்க முடியவில்லை தோழிகளால் அம்மாதர்களை;

அறிவுரைகள் பல எடுத்துக் கூறினார் மாதர் - ஆனால்
அறிவுரைகளுக்குச் செவி மடுக்கவில்லை பரவையார்.

"என்னை மறந்தார் ; வேறு பெண்ணை மணந்தார்;
ஏற்க முடியாது அவரை மீண்டும் ஒருமுறை என்னால்;

புண்படுத்தாமல் சென்று விடுங்கள் என் மனத்தை;
பெண் பட்ட பாடு பெண்ணுக்குத் தெரியாதா? " என

திரும்பிச் சென்றனர் மாதர்கள் அனுப்பியவரிடமே;
திருபக் கூறினார் நடந்த நிகழ்வுகளை எல்லாம்

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#6s. Back in ThiruvAroor

Sundarar reached ThiruvAroor one day when the dusk fell. He prayed to Siva and begged to restore his eye sight. Lord Siva took pity and Sundarar got back his eye sight.

He felt guilty of having deserted ParavaiyAr and did not have the courage to meet her in person. So he stayed in the MaNdapam attached to the temple.

ParavaiyAr suffered a lot after Sundarar deserted her all of a sudden. She could not sleep at night nor do her chores in the day time. She lost her mirth, joy, happiness and peace of mind completely.

One day a shocking news came to her that Sundarar had married ChangiliyAr at ThiruvOtriyoor. She felt deeply hurt and terribly angry. Surely she did not deserve this fate! She felt as helpless as a bird with broken wings; a creeper without a supporting pole, a cool moon wasting its rays in a dry desert and a boat floating without any sails.

Sundarar sent his attendants to convey the message that he had arrived in ThiruvAroor to ParavaiyAr. But the friends and maidservants of ParavaiyAr did not allow those servants to meet their mistress. Those attendants went back and conveyed their failure even to meet the lady.

Sundarar got scared more at the intensity of anger in ParavaiyAr. He sent some experienced and wise women this time to argue his case. The maids could not stop these ladies from meeting Paravaiyar.

These women advised her freely and at great length. ParavaiyAr turned a deaf ear to all their justifications. She flatly refused to forgive Sundarar or to meet him ever again.

These women also failed in their mission miserably and went back to report to Sundarar.
 
#6t . சிவன் தூதுவன் ஆனான்

உறக்கம் பிடிக்கவில்லை சுந்தரருக்கு - ஆனால்
உறங்கி கொண்டிருந்தனர் அவர் தொண்டர்கள்.

'முறையிடலாம் மனக்குறையை இறைவனிடம்' என

முறையிட்டார் தன் மனக்குறையை இறைவனிடம்.

எழுந்தருளினார் பேரொளிப் பிழம்பாகப் பெருமான்;
"விழைவது என்ன? என்னை அழைத்தது எதற்கு?" என

"ஊடல் கொண்டாள் பரவையார் சினம் அடைந்து!
ஊடலைப் போக்கிடச் செல்வீர் அவளிடம் ஒரு தூது!"

புறப்பட்டார் பரவையார் மாளிகைக்குச் சிவபிரான்;
மாறியது திருவாரூர் சிலலோகம் போல அப்போது!

பின் தொடர்ந்தனர் அவரை அமரர், சிவகணங்கள்;
பிற முனிவர்கள், நந்தி தேவன், மற்றும் குபேரன்.

பின் தொடர்ந்தன மணி ஒளி வீசும் பல நாகங்களும் ;
பின் தொடர்ந்தன மலர்த்தேன் பருகும் வண்டுகளும்:

தங்குமாறு ஆணை இட்டார் அனைவரையும் வெளியே;
தான் நுழைந்தார் மாளிகையுள் அர்ச்சகர் கோலத்தில்.

"திறவாய் கதவைப் பரவையே!" என்றார் அர்ச்சகர் சிவன்.
உறங்காமல் விழித்திருந்த பரவை எழுந்தாள் உடனேயே.

விரைந்து வந்து திறந்தாள் மாளிகையின் கதவை - " இவர்
வரவேண்டிய காரணம் என்ன இங்கே இந்த வேளையில்?"

"இழைத்து விட்டான் பெரும் பிழையை உன் கணவன் - தன்
பிழைக்கு வருந்தித் தவிக்கிறான் உன் பிரிவாற்றாமையால்!

இணைந்து வாழவேண்டும் நீங்கள் இருவரும் முன்போலவே;
இசைந்து அனுமதிக்க வேண்டும் அவன் இங்கு வருவதற்கு!"

"சிவத் தலங்களைத் தரிசிக்கச் சென்றவர் செய்தது என்ன?
சிந்திக்கவில்லை எதைப்பற்றியும்! மணந்தார் சங்கிலியாரை!

எந்தத் தொடர்பும் இல்லை எனக்கு அவருடன் இனிமேல்!
எந்த முயற்சியும் பலன் தராது! என் மனம் மரத்து விட்டது!"

எத்தனை முறை எடுத்துக் கூறினாலும் மாறவில்லை மனம்;
'இத்தனை உறுதியா இந்தப் பெண்ணிடம்?" என்று வியந்தார்!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#6t. Siva - The messenger


Sleep eluded Sundarar on that night bu all his disciples were fast asleep. He decided to share his sorrows with Siva. Lord Siva appeared as brilliant light and demanded to know what Sundarar wanted from Him?

Sundarar said,"Paravai is very angry with me and I can't stand her separation any longer. Please go to her as my messenger to make her forget her anger and accept me once again."

Siva left for the house of Paravai and the ThiruvAroor resembled Sivalokam at that time. The Devas, the Siva gaNas, the rushis, Nandhi Devan and Kuberan all followed Siva. Huge serpents followed flashing the brilliant light of their gems. Buzzing bees also followed the unusual procession.

Siva ordered everyone to stay outside the house. He wished to enter all by himself disguised as the priest of the temple. Siva knocked the door and called out the name of Paravai in the voice of the priest.

Paravai was also tossing in the bed unable to fall asleep. She rushed to the door and opened it. She could not stop wondering what had made the priest visit her house so late at night!

The priest spoke to her thus, "Your husband had committed a grave mistake no doubt. But now he repents for the mistake. He wants to be forgiven by you and be accepted by you. Take pity on him. You two must continue to live a long and happy life as before."

Paravai could not contain her anger and said, "He went on a pilgrimage. He forgot me and married another woman in ThiruVOtriyoor. I can never forgive him. I have no intention of living with him. However hard you may try, I will not change my mind."

Siva in the guise of the priest could not help wondering at the firm determination in Paravai.


 
#6u . இரண்டாவது தூது

இருப்புக் கொள்ளவில்லை சுந்தரருக்கு பிரான் சென்றபின்;
'வருவாரா வெற்றியுடன்? வரவேற்பாளா என்னைத் திரும்ப?'

அழல் வண்ணப்பிரான் அங்கு வந்தான் அர்ச்சகர் வேடத்தில்;
"விழலுக்கு இறைத்த நீரானது என் முயற்சி; பலன் தரவில்லை!"

"உம்மால் முடியாததும் உண்டோ உண்மையில் பெருமானே?
என்பால் இரக்கம் கொண்டு செல்வீர் நீர் இரண்டாவது தூது".

மீண்டும் சென்றார் பரவையார் மாளிகைக்கு நள்ளிரவில் ;
"யாண்டும் நிறைந்துள்ள ஈசனே வந்தானோ தூதுவனாக?

கலங்கினாள் மனம் பரவையார்; நிலை தளர்ந்து போனாள்;
கதவருகில் அமர்ந்து நோக்கினாள் மாளிகையின் வாயிலை;

எழுந்தருளினார் பூதகணங்கள் புடைசூழ மாளிகை வாயிலில்;
எதிர்கொண்டு வணங்கினாள்; மாளிகைக்கு வரவேற்றாள்;

"மறுத்துவிடாதே என் தோழனின் கோரிக்கையை பெண்ணே!
மறுகி நிற்கின்றான்; உன் நினைவால் வருந்தி நிற்கின்றான்!"

"அந்தணர் வடிவம் எடுத்து எழுந்தருளிய என் அண்ணலே!
எந்தன் பிழை பொறுப்பீர்! மறுத்துப் பேச இயலாது இனி!"

மறைந்தருளினார் அர்ச்சகர் வேடப் பெருமான் அங்கிருந்து;
மறுபடி எழுந்தருளினார் தன் தோழன் சுந்தரமூர்த்தி முன்பு!

"தணிந்துவிட்டது பரவையார் கொண்டிருந்த கடும் சினம்;
இணைந்து வாழ்வீர்கள் இனிமையாக முன் போலவே!" என

பெண்கள் ஏந்தி நடந்தனர் மங்கலப் பொருட்களை முன்னே;
கண்டவர் வியக்கும் சுந்தரக் கோலத்தில் சுந்தரர் பின்னே!

அலங்கரித்தனர் பரவையார் மாளிகையைத் தோழிப்பெண்கள்;
மலர்களைத் தூவினர்; ஏற்றினர் ஒளிவீசும் நெய் விளக்குகளை;

தூபங்களும், மணக்கும் அகிற்புகையும் நிறைத்தன மாளிகையை;
தூயநீரால் நிரப்பி வைத்தனர் பல பொற்குடங்களை வரிசையாக;

மங்கள வாத்திய ஒலிகளுடன் வந்தார் சுந்தரர் அந்த மாளிகைக்கு;
மலர்களைத் தூவி வரவேற்றனர்; வணங்கினர் சுந்தர மூர்த்தியை;

இல்லறம் என்னும் நல்லறம் பேணினர் அவர்கள் முன்போன்றே!
"ஈருடல் ஓருயிர்!" என்று இணைந்தனர் அவர்கள் முன்போன்றே!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#6u. The second message

Sundarar was feeling restless wondering whether or not Lord Siva will succeed in his mission. But Lord Siva came back and told him,"All my efforts were in vain. I could not convince Paravai to forgive you and take you back!"

Sundarar was very sad and said to Lord Siva, "I am sure nothing is beyond your power and capacity my Lord. Please take pity on me and try one more time to make Paravai forgive me accept me. Siva obliged and went back to the house of Paravai one more time as Sundarar's personal messenger.

After the temple priest went away, Paravai too was feeling ill at ease! She could not help wondering whether the priest was in fact Lord Siva in disguise. She sat near the door and could neither relax nor fall asleep.

Siva returned to her home one more time with his retinue in full attendance. Paravai opened the door, came out and welcomed the Priest who was in fact Siva in disguise.

Siva poke to her, " Do not refuse my request again! Sundarar is suffering the pangs of separation from you intensely." Paravai said, " I can't refuse your request any more . Please forgive me for my stubbornness shown earlier."

Siva disappeared from there and reappeared in front of Sundarar. "Paravai has forgotten your mistake and forgiven you. May you both live a happy life together as before."

A procession went to Paravai's house with the women folk carrying all the auspicious articles. Sundarar looked stunningly handsome one more time. Meanwhile the friends and attendants of Paravai decorated the house with flowers, lit lamps, incense sticks, rows of shining pots filled with water

Sundarar entered the house with the chanting of auspicious mantras. Paravai paid her obeisance to him and welcomed him to the house. They lived as happily as they had done before. They became as intimate as two bodies and one soul.






 
#6v . விந்தை நிகழ்த்தினார்!

சித்தத்தை வைத்தார் சுந்தரர் சிவன் பால்;
நித்தம் நித்தம் பணிந்தார் பெருமான் தாள்;

இன்புற்று வாழ்ந்தார் பரவையார் நாச்சியாருடன்;
தோன்றியது ஆவல் சேரமான் பெருமாளைக் காண;

விடை பெற்றார் பரவையாரிடம் சுந்தரமூர்த்தியார்;
அடியார்கள் புடைசூழச் சென்றார் திருவஞ்சைக்களம்;

தொடர்ந்தார் பயணம் சோழத் திருத்தலங்கள் வழியே.
அடைந்தார் கொங்கு நாட்டின் திருப்புககொளியாறு.

கண்ணுற்றார் வேதியர் வீதியில் இரண்டு எதிர் வீடுகளில்,
கண்ணுற்றார் ஆனந்தமும், அமங்கலமும் அந்த வீடுகளில்!

வினவினார் காரணங்களை மாறுபட்ட நிலைமைகளுக்கு!
விடைகளைப் பெற்றார் தடையின்றி அங்கு இருந்தவரிடம்.

சென்றனர் இரு இல்லத்துச் சிறுவர்களும் நீர் மடுவுக்கு;
சென்று விட்டான் ஒருவன் முதலையின் வயிற்றுக்குள்!

மீண்டு வந்த சிறுவனுக்கு அன்று முப்புரிநூல் விழா!
மாண்டு விட்ட சிறுவன் இல்லத்திலோ அழுகை ஒலி!

வந்து பணிந்தனர் மாண்ட சிறுவனின் பெற்றோர்;
"நொந்த அவர்கள் பிள்ளையை மீட்டுத் தருவேன்!"

சென்றனர் சிறுவர்கள் சென்று அதே மடுவுக்கு;
பாடினார் 'ஏற்றான் மறக்கேன்' என்ற பதிகத்தை.

வெளிப்பட்டது ஒரு முதலை நான்காவது பதிகத்துக்கு!
வெளியில் உமிழ்ந்தது என்றோ விழுங்கிய சிறுவனை!

வடித்தனர் ஆனந்தக் கண்ணீர் அவன் பெற்றோர்கள்;
பிடித்தனர் மகனை உயிருடன் மீட்ட அவர் பாதங்களை!

எட்டியது விண்ணை "வாழ்க வாழ்க" என்னும் கோஷம்!
விட்ட பயணம் தொடர்ந்தது தடைகள் இன்றி மீண்டும்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#6v. A miracle was performed!


Sundarar fixed his thoughts on Siva permanently. He worshiped Siva daily. He wished to meet SEramAn PerumAL nAyanAr. He took leave from ParavaiyAr and reached Thiru Vanjaik kaLam with his group. He continued his pilgrimage visiting all the Siva Sthalams on the way.

He reached Thirup puga koLiyoor in Kongu nAdu. While walking through the agraharam where the brahmin families lived he witnessed two opposing situation in the two opposite houses.

In one house there was a joyous celebration and in the other there was sorrow and rears. He wished to know the reason for this.

He learned from the people gathered there that two young boys from those two houses went to a pond. One of the boys got devoured by a giant crocodile. The other boy returned safely and his upanayanam was being performed on the very same day.

This explained the jubilation and celebration in one house and the sorrow and tears in the other. Sundarar decided to himself."I am going to bring back the devoured boy to life and make his parents happy."

So they all wen to the same pond. Sundarar sang padhigam. Nothing happened. But when Sundarar sang the fourth padhigam, a large crocodile appeared before them. It brought out the boy swallowed long ago alive and in one piece. The parents were overwhelmed with joy and fell at his feet.

The people gathered there witnessed the miracle and hailed Sundarar loudly. Sundarar and his group continued their long journey once again.

 
Bhagavathy bhaagavatam - skanda 9

9#29b. உபதேசம் (1)

“இரு வகைப்படும் கர்மங்கள் அறிவாய் பெண்ணே!
இரு வகைகளாகும் சுப கர்மங்கள், அசுப கர்மங்கள்.

பரத கண்டமே கர்மங்களை அனுபவிக்கும் இடம்,
கர்மப் பெருக்கத்தை அனுபவிக்கும் இடம் மற்றவை.

சுரர், அசுரர், தானவர், மானவர், கந்தர்வர்,
கர்மங்களைச் செய்பவர், மற்றும் அனுபவிப்பவர்!

தோற்றுவிகின்றான் கர்மங்களை சர்வேஸ்வரன்;
புரிவிக்கின்றான் கர்மங்களை அதே சர்வேஸ்வரன்.

அனுபவிக்கச் செய்கின்றான் பலன்களை சர்வேஸ்வரன்;
அவன் அகில உலகைப் பரிபாலிக்கும் விதம் இதுவே.

ஜீவர்கள் வகுத்துக் கொள்ள இயலாது கர்மங்களை;
ஜீவர்கள் மனம் போலப் புரியமுடியாது கர்மங்களை;

ஜீவர்கள் விரும்பிய இடங்களில் புரிய முடியாது;
ஜீவர்கள் செய்வார்கள் சர்வேஸ்வரன் வகுத்தபடி!

சுப கர்மம், அசுப கர்மங்களின் பலன்கள் தரும்
சுவர்க்க, நரக வாழ்வையும், அனுபவங்களையும்.

யுக்தியுடன் ஒழித்து விடலாம் கர்மங்களை ஜீவர்கள்
நித்தியம் உரு பக்தியோ, நிர்வாண பக்தியோ செய்து.

புண்ணியங்கள், பாவங்களின் பலனைக் கூறுவன
புராணங்கள், ஸ்மிருதிகள், இதிகாசங்கள் எனப்படும்.

வர்ணாசிரமம் எல்லைகளை வகுக்கும் – ஜீவர்கள்
கர்மங்களைச் செய்ய வேண்டிய வரைமுறைகளை”.

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

9#28b. Upadesam by Yama (1)

“Karmas are of two types – the auspicious Karmas and the inauspicious Karmas. Bhatara KaNdam is the place to enjoy the fruits one’s Karmas. SurAs, AsurAs, DAnavAs, MAnavAs and GandharvAs are those who performs the karmAs and enjoy their fruits.

Sarweswaran creates our Karmas; He makes us perform those karmas; He makes us enjoy the fruits of those karmas! This is how the Sarvewsawan rules the world!

The Jeevas cannot choose their Karmas; They cannot act as they wish to; They can not act where they wish to; The jeevas just act according to the plan made by Sarweswaran.

Auspicious karmas give happiness and heaven while the inauspicious karmas give sorrow and hell. A Jeeva can destroy his Karmas and their effects by his deep devotion and by worshiping God of his choice or the formless Supreme Power.

The PurANas, Smrutis and IthihAsAs elaborate on the fruits of the good merits and bad effects. The varNAsramam lays down the karmas for the four VarNas and the manner in which they must be performed
.”
 
SEkkizhArin Periya PurANam

#6w. சேரமான் பெருமாள் நாயனார்

அலங்கரித்தார் நகரைச் சேரமான் பெருமாள் நாயனார்
அன்பர் சுந்தரரின் அரிய வருகையை அறிந்து கொண்டு.

அறிவித்தார் வருகையை பறையறைந்து நாடெல்லாம்!
அடைந்தார் நகர எல்லையைத் தன் பரிவாரங்களுடன்;

ஆனையிலிருந்து இறங்கினார் சுந்தரரைக் கண்டவுடன்;
ஆரத் தழுவிக்கொண்டார் சுந்தரை அன்பில் மிகுதியால்.

அமர்த்தினார் சுந்தரரைத் தன் பட்டத்து யானையின் மீது;
அன்புடன் ஏந்தினார் அழகிய வெண்கொற்றக் குடையை.

அமரச் செய்தார் தன் அரியணையில் சுந்தரரை - தானே
அன்புடன் செய்தார் அனைத்து வித உபசாரங்களையும்.

கண்டு களித்தனர் இருவரும் சென்று சிவத்தலங்களை;
தொண்டு புரிந்தனர் தூய தமிழ்ப் பதிகங்கள் பல பாடி;

நீராடுவர் இருவரும் அழகிய பொய்கை ஒன்றில் - பின்
நிர்மலமாகச் சென்று தொழுவர் ஈசனை ஆலயத்தில்.

சுந்தரர் சென்று விட்டார் முந்திக் கொண்டு ஆலயம்
சேரமான் பெருமாள் நீராடிக் கொண்டிருக்கையில்.

பொங்கியது அரன் அருள்; பெருகியது கண்ணீர் ;
பொங்கியது பேரொளி; சிவப்பழமாக ஆகிவிட்டார்;

பாடினார் "தலைக்குத் தலை மாலை" என்ற பதிகம்;
ஆடல் அரசன் விரும்பினான் அவரை ஆட்கொள்ள;

ஆணையிட்டான் அமரர்களிடம் ஆடல் அரசன் அரன்;
"அழைத்து வருவீர் சுந்தரரை வெள்ளை யானைமீது"

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

#6w. SeramAn PerumAL nAynaAR


Sundarar wished to meet SEramAn PerumAL nAyanAr and took leave of Paravai. The King announced the about the visit of Sundara moorthy to his citizens. They decorated the whole city beautifully in order to extend a warm welcome to Sundarar.

The King SEramAn PerumAL nAyanAr reached the outskirts of his city with his retinue in full attendance. When Sundarar arrived, the King got down from his royal elephant. He embraced Sundarar and made him sit on his royal elephant. He himself held the royal white silk umbrella over Sundarar's head.

Having reached his palace, the King made Sundarar sit on his throne and did all the ubachArams to show his deep respect and love. Then these two nAyanmArs visited many holy temples of Siva together and praised Him in their songs.

They both would take a holy dip in one of the ponds. Then they both would visit the temple and sing the praise of Lord Siva. But one fine day Sundarar went to the temple ahead of the king.

He was deeply moved and shed copious tears due to his intense devotion. He became very brilliant and emotional as he sang the padhigam "thalaikkuth thalai mAlai".

Siva decided to call him back to Kailash and ordered to the Devas,
" Make Sundarar sit on the celestial white elephant and bring him here."



 
Bhagavathy bhaagavatam - skanda 9

9#29c. உபதேசம் (2)

நான்கு வர்ணங்களிலும் நற்குலம் பிராமண ஜாதி;
மேன்மைக்குக் காரணம் தர்மங்களைப் பின்பற்றுதல்.

சாஸ்திரங்கள் விதிக்கின்றன செய்ய வேண்டியவற்றை;
சாஸ்திரங்களின் வழி நடப்பதால் இவர்கள் உத்தமர்கள்.

இரு வகையினர் உள்ளனர் இவர்களிலும் கூட.
ஒரு வகையினர் சகாமர், மற்றவர் நிஷ்காமர்.

பயன் கருதிச் செயல் புரிபவன் சகாமன்;
பயன் கருதாமல் செயல் புரிபவன் நிஷ்காமன்;

நிஷ்காமன் ஆவான் அவாவறுத்த பிரம்ம நிஷ்டன்;
இஷ்டத்தால் செய்யாமல் கடமையாகச் செய்பவன்;

ஜீவன் உடலைப் பிரியும் போது துன்புற மாட்டான்!
ஜனனம் எடுக்காமல் சேருவான் பிரம்மத்தோடு!

சகாமன் அடைவான் தனது கர்ம பலன்களை;
சகாமன் அடைவான் மேலும் பல பிறவிகளை!

காலக் கிராமத்தில் மாறுவான் சகாமன் நிஷ்காமனாக;
காலக் கிராமத்தில் சேருவான் பிரம்மத்தை நிஷ்காமன்.

வைஷ்ணவர்கள் ஆவார்கள் எப்போதும் சகாமர்கள்;
வைஷ்ணவர்களுக்கு உண்டாகாது நிர்மலமான புத்தி.

இஷ்டப் படுவர் சுயதர்மம், தீர்த்த யாத்திரைகளில்,
கஷ்டமான தவத்தில் அடைவர் பிரம்ம லோகத்தை!

சத்கர்மத்தில் பக்தியும் ஆசையும் உடையவர்கள்
சூரிய லோகத்தைச் சென்று அடைவர் தவறாமல்!

தெய்வங்களின் மேல் பற்றுள்ளவர்கள் சேருவர்
தெய்வங்களின் லோகத்தை வாழ்ந்த பின்னர்.

செய்யும் கர்மங்களே காரணம் ஆகும் பிறவிக்கு;
செய்யும் கர்மங்களுக்குக் காரணம் ஆகும் பிறவி.

நீங்காது பிறவி எடுக்கும் தன்மை அவா இருந்தால்;
நீங்கும் பிறவி எடுக்கும் தன்மை அவா அறுந்தால்”

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

9#29c. Upadesam by YamA (2)


“Of the four varNAs, Brahmins are suposed to be the best. The real cause for their greatness is that they follow the Vedic dharmas.

SAstras lay down the “do”s and the “don’t”s for the right living. Brahmins do adhere to these rules. So they are considered as the best among the four varNas.

Among the Brahmins there are two types – the SakAmAn and the NishkAmAn. One who performs an action without desiring anything in return is a NishkAman. He is the true Brahma Nishtan – who performs any action as a duty and not for getting anything in return.

Such a NishkAman does not suffer when he parts with his life. He will not be born again but will merge with the Supreme Brahman once for all.

The SakAman performs actions desiring specific results. He achieves what he set out for. But he also takes several more births in the world. In due course of time, SakAman will mature to become a NishkAman and eventually merge with the Supreme Brahman over a longer period of time.

VaishNavas are always SakAmans. They do not have the NishkAma, nirmala buddhi. The persons who are interested in swadharmam, theerta yAthras and severe penance attain Brahma lokam. Those who are interested in performing good actions will reach the Soorya lokam. Those who are attached to specific God and Goddess will attain that particular God’s or Goddess’ lokam.

Our Karmas are the cause of the births we take. The births we take decide our future karmas. Janana – MaraNa cycle will not cease as long as there is even a trace of desire in the jeevA. One who is free from all sorts of desires is the one who is qualified for jumping out of the endless cycle of birth and death.”

 
SEkkizhArin Periya PurANam

#6x. முக்தி நாதன் முக்தி தந்தான்

சென்றனர் அமரர் அரன் ஆணையால் திருவஞ்சைக்களம்;
செப்பினர் அரன் இட்ட ஆணையை அன்பர் சுந்தரருக்கு;

விண் நோக்கிச் சென்றார் வெள்ளை யானை மீது சுந்தரர்;
மண் மீது திகைத்து நின்றார் சேரமான் அவரைக் காணாது!

அறிந்து கொண்டார் தன் தவ வலிமையால் அனைத்தையும்;
செறிந்த ஆவல் கொண்டார் சுந்தரரைத் தொடர்ந்து சென்றிட.

அமர்ந்தார் தன் வெண் புரவியின் மீது சேரமான் பெருமாள்;
"நமச்சிவாய!" மந்திரத்தை ஓதப் பறந்தது புரவி விண்ணில்!

வலம் வந்தார் சேரமான் சுந்தரரை வெள்ளை யானையுடன்;
விரைந்தார் முந்திக் கொண்டு கயிலைக்கு வாயு வேகத்தில்.

தடுத்தது சேரமான் பெருமாளை அடைத்திருந்த கோவில் வாசல்;
அடுத்து வந்த சுந்தரருக்குக் காத்து நின்றார் சேரமான் பெருமாள்;

கயிலை மலைக் கோவிலின் தென்திசை வாயிலை அடைந்தார்
பயின்றபடியே "தானெனை முன் படைத்தான்" பதிகத்தைச் சுந்தரர்;

விடுத்தனர் இருவரும் தத்தம் வெண் வாகனங்களை அங்கேயே
நடந்தும், கடந்தும், அடைந்தனர் திருவணுக்கன் திருவாயிலை.

தடுத்தது வாயில் சேரமான் பெருமாள் நாயனாரை - ஆனால்
விடுத்தது சுந்தரை மட்டும் பெருமான் திருமுன்பு சென்றிட !

ஒலித்தது வேத கோஷம், ஒலித்தது இனிய தேவ கானம்;
ஒலித்தன தேவ துந்துபிகள்; வாழ்த்தினர் முனிவர்கள்;

கற்பக மலர்களைத் தூவினர் தேவர்கள், கந்தருவர்கள்;
கற்பகவல்லித் தாயார் காட்சி தந்தாள் எம்பெருமானுடன்.

"ஆரூரானே நீ வந்தனையோ?" என வினவினான் ஈசன்;
ஆட்கொண்ட அரன் அருளைப் போற்றினார் சுந்தரமூர்த்தி.

"தடைபட்டு நிற்கின்றார் சேரமான் பெருமாள்!" என்றதும்
விடையேறும் பிரான் உடன் அனுப்பினான் நந்தி தேவனை.

நாடி வந்தான் சேரமான் பெருமாள் ; வணங்கினான் ஈசனை;
பாடித் தந்தான் ஞான உலா என்னும் திருக்கயிலாய உலாவை.

ஆகிவிட்டனர் சிவகணங்களின் தலைவர்களாக இருவரும்!
ஆகிவிட்டனர் உமையின் சேடிகளாக இரு நாச்சியார்களும் !

விடுத்தனர் பற்றுக்களை பரவையார் சங்கிலியார் நாச்சியார்;
அடுத்தனர் உமையைக் கமலினி, அநிந்திதையாக மாறியபின்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
# 6x. The final journey and liberation

The Devas went to ThiruvAnchai kaLam and conveyed the wish of Lord Siva. Sundarar sat on the white elephant and started going towards the sky. SEramAn was surprised not to find Sundarar anywhere after he emerged from the pond. He realized by the power of his penance what had actually happened and wished to follow Sundarar.

He sat on his white horse. He chanted in the ears of the white horse the Siva panchAkshara "namasivAya" continuously and the white horse started flying in the sky. He saw Sundarar on a white elephant and went round him clockwise. He proceeded to the Kailash faster than Sundarar. But he could not enter Kailash and and was forced to wait for Sundarar.

Sundarar reached the gate on the Southern side singing "thAnenai mun padaiththan". He could walk through the entrance unstopped. There was a fusion of the sounds of Vedic chanting, celestial music, the playing of dhundhubis and the blessings by rushis. Ghandharvas and Devas sprinkled flowers.

Siva and PArvathi gave a divine dharshan. Siva asked Sundarar, "AroorA! Have you come back to Kailash?" Sundarar praised the infinite grace of God for taking him back in Kailash"

He informed Siva that his dear friend SEramAn PerumAl nAyanAr was stopped at the entrance and was waiting there. Siva sent Nandhi DEvan to bring SEramAn into Kailash. SEramAn came in and paid his obeisance to Siva and Parvathy . He sang The JnAna ulA aka Thiruk KayilAya ulA.

Sundarar and SEramAn were made the leaders of the Siva gaNas. ParaviyAr and ChangiliyAr gave up all worldly attachments to the earthly things. They returned as Kamalini and Aninthithai to become the attendents of Uma Devi as before.

Thiruch chitrambalam

The life story of Sundhara Moorthi nAyanAr gets completed here.

The life stories of the other nAyanmArs will unfold from tomorrow.

 
bhagavathy bhaagavatam - skanda 9

9#29d. உபதேசம் (3)

ஸ்வதர்மத்தைப் பின்பற்றுவோர் – கன்னிகாதானம்
ஸ்வதர்மத்தைப் பின்பற்றுவோருக்குச் செய்தவர்கள்


இந்திர லோகத்தில் வசிப்பர் – பதினான்கு
இந்திரனின் ஆயுட்காலம் வரை இன்பமாக!


பொன், வெள்ளி, நெய், ஆடைகள் அளிப்பவர்
மன்வந்தர காலம் வாழ்வர் சந்திர லோகத்தில்!


பொன், தாமிரம், பசு தானம் செய்பவர் வாழ்வர்
சூரியலோகத்தில் சுகமாகப் பதினாயிரம் ஆண்டு!


பூமியை, தனத்தைத் தானம் செய்பவர் வாழ்வர்
விஷ்ணு லோகத்தில் சந்திர, சூரியர் உள்ளவரை.


தேவதைகளை முன்னிட்டுத் தானம் செய்பவர்
தேவதைகளின் உலகை அடைவர் இன்பமாக!


தடாகப் பிரதிஷ்டை தரும் ஒருவனுக்கு ஜனலோகம்.
தடாகத்தைச் சுத்தம் செய்வதும் தரும் ஜனலோகம்.


அரச மரம் நடுபவன் அடைவான் தபோலோகத்தை!
நந்தவனம் தந்தவன் அடைவான் துருவலோகத்தை!”


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


9#29d. Upadesam by YamA (3)


“Those who follow the swadharmam ( one's presribed actions and duties) as told by SAstras and VEdas and those who marry their daughters to men who adhere to swadharman will live in Indra Lokam for a period equal to the life span of fourteen Indras.


Those who donate Gold, Silver, Ghee and New clothes will live in Chandra Lokam for one Manvatara.


Those who donate Gold, Copper or Cow will live in Soorya Lokam for ten thousand years. Those who donate land and wealth will live in VishNu Lokam as long as the Sun and the Moon exist.


Those who donate for the sake of Gods and Goddesses will reach the land of that God or Goddess and live there happily.


A man who digs a pond and one who cleans an existing pond will reach Janarlokam.
A man who plants a Peepal tree will reach Tapolokam. A man who creates a beautiful flower garden will reach Dhruvalokam.”



 
7#01. தில்லை வாழ் அந்தணர் சிறப்பு

வெள்ளைப் பிறை அணிந்த பிரான் எழுந்தருளிய
தில்லை என்னும் திருத்தலம் ஆகும் சிதம்பரம்.

விரிந்து பரந்த மரகதநிற வயல்களின் எழில்;
விரிந்து மலர்ந்த தடாகத் தாமரைகளின் எழில்;

ஓங்கி வளர்ந்து நெருங்கி நிற்கும் தருக்களில்
ஓங்கி ஒலிக்கும் வண்ணப் பறவைகளின் குரல்;

பாடும் பச்சைக் கிளிகள்; ஆடும் தோகை மயில்கள்;
பயிலும் நாட்டிய நடை அன்னப் பேடைகள் கூட்டம்;

தேன் பருகிய மலர்களின் மகரந்தம் மாற்றிவிடும்
தேவரின் அடியாராகத் திருநீறணிந்த வண்டுகளை!

ஒலிக்கும் மறைகளை வேதியர்கள் ஓதும் கோஷம்;
ஒலிக்கும் ஆடல் அழகியரின் சலங்கைகளின் நாதம்;

ஐந்து வகை இசைக்கருவிகளின் இன்னிசை நாதம்
ஐயமின்றி ஒலித்துக் கொண்டிருக்கும் எப்போதும்.

வேதியர்கள் வேள்விப் புகை சென்று விண்ணை எட்டும்!
ஓதுபவர்கள் 'ஹர ஹர' கோஷம் செவிக்கு விருந்தாகும்!

வெள்ளை மலை போன்ற அன்னக் குவியலால், நீற்றால்
வெள்ளிமலைக் கயிலை எனத் திகழும் தில்லைத் தலம்.

காட்சியளிப்பார் சிவ பெருமான் நடராஜனாக இங்கு;
காற்றில் தடையின்றி ஒலிக்கும் தொடரும் பஞ்சாக்கரம்.

பிறையணி வேணிப் பிரானைப் போற்றி வழிபடுவர்
குறைவற்ற தில்லை வாழ் அந்தணர்கள் மூவாயிரவர்.

முப்பொழுது மட்டும் வழிபடுபவர்கள் அல்ல இவர்கள்;
எப்போதும் ஈசனைப் போற்றி வழிபடுபவர் இவர்கள்.

தூய வெண்ணீறு துலங்கி ஒளிரும் இவர் மேனியில்
தூய பக்தியில் சிறந்தவர் தில்லை வாழ் அந்தணர்.

குஞ்சித பாதனை வணங்குகின்ற மெய்யன்பர்களின்
சஞ்சித வினைகள் அழிந்து ஒழிந்துவிடும் அல்லவா?

நான்கு வேதங்களையும், ஆறு அங்கங்களையும்,
நான்கு உபாயங்களையும் நன்கு கற்றறிந்தவர்கள்

வேத விதிப்படி முத்தீயை வளர்ப்பவர்கள் - ஆகம
பாதங்கள் நான்கையும் நன்கு உணர்ந்தவர்கள்

"தில்லை வாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்" எனத்
திருத் தொண்டத் தொகை புகழும் நற்றவம் உடையவர்கள்.
cleardot.gif


ஆழ் கடலையும் நம்மால் அளவிட இயலும் - தில்லை
வாழ் அந்தணர்தம் பெருமையை அளவிட இயலுமோ?

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

விளக்கம்:

நான்கு வேதங்கள்:
ருக்கு, யஜுர், ஸாமம், அதர்வணம்

ஆறு அங்கங்கள்:
சிக்ஷை, வியாகரணம், நிருக்தம் , கல்பம், சந்தஸ் , ஜ்யோதிஷம்

நான்கு உபாயங்கள் :
மீமாம்சை, நியாசம், புராணம், ஸ்ம்ருதி

முத்தீ :
ஆகவனீயம், காருகபத்தியம், தட்சிணாக்னி

நான்கு பாதங்கள் :
சரியை, கிரியை, யோகம், ஞானம்​

 
#1a. The 3000 Brahmins of Thillai

Chidambaram is the Thillai Kshethram of Lord Siva - who is adorned by a lovely crescent moon. It is a beautiful place filled with vast emerald green fields and ponds filled with blooming lotus flowers. The trees stand tall as well as dense and the jargon of the songs of the different birds living on those trees is enchanting.

The parrots sing, the peacocks dance and the lovely swans sway and walk the steps of a dancer. The bumble bees get coated with the pollen of the flowers they feed on and resemble the devotees of Siva adorned by the holy ash.

The chanting of the VEdas filled the air. So also the sweet sound made by the ankle bells of the beautiful dancers. The music from the five different types of musical instruments blend and prevail all day long.

The smoke rising from the Homa kuNdam spirals up to the Heavens. The robust chanting of "Hara Hara MahAdev!" will be a sweet treat to the ears of the listeners.

Cooked rice is heaped to resemble white mountains. This and the glow of the holy ash will transform the Thilli to resemble Kailash. Here the Lord appears as NatarAja The King of Dance. Sound of "Namah SivAya" fills the air.

The 3000 Brahmins of Thillai worship Siva all day long. They glow with the holy ash and they shine in their devotion. The only way to slash the sanchitha karma (the bundle of our sins) is to worship the Kunchitha pAdhan ( the lord with lovely, well curved and arched heels).

The 3000 Brahmins of Thillai have mastered the four VEdas, the six limbs of the VEdas, the four upAyams, the four pAdhams, They light the three fires as per the Vedic rules.

We may be able to fathom a deep ocean but we can't measure the true greatness of these 3000 Thillai Brahmins.

Foot notes :

The four Vedas :
Rig, Yajur, SAma, Atharva

The six limbs of the vEdas :
Siksha, VyAkaraNa, Niruktha, Kalpa, Chhanda, JyOthisha.

The four upAyamas :
MeemAmsa, Nysa, PurANas, Smruthi,

The three fires :
Ahavaneeyam, Garukapathyam, DhakshinAgni

The four pAdhAs (paths) :
sariyai, kiriyai, yOgam, j~Anam
 
SEkkizhArin Periya PurANam

7#02. திரு நீலகண்ட நாயனார்

தில்லைப் பதியில் குயவர் குடியில் சென்று
திரு அவதாரம் செய்தார் திருநீல கண்டம்.

அல்லும், பகலும் அனவரதமும் போற்றுவார்
தில்லைப் பிரானைத் "திருநீலகண்டம்" என்று;

வழிபட்டதால் வாயாரத் "திருநீலகண்டம்" என்று
வழங்கினர் இவரையும் "திருநீலகண்டம்" என்று;

வழங்கினார் திருவோடுகளைச் சிவனடியாருக்கு;
வாழ்க்கைத் துணைவியானார் ஒரு கற்புக்கரசி.

ஊழ்வினை மாற்றிவிட்டது இவர் சிந்தையை;
பாழும் சிற்றின்பத்தில் மூழ்கிவிட்டார் குயவர்.

பரத்தையரிடம் நாட்டம் கொண்ட கணவனை
பதிவிரதையான மனைவி மன்னிக்கவில்லை!

வருந்தினாள் வாழ்க்கைத் துணைவி; சினந்தாள்;
பொருந்த வந்த கணவனிடம் ஆணையிட்டாள்.

"என்னைத் தீண்டினால் திருநீலகண்டம்!" என்றாள்;
தன்னைத் தீண்டும் அனுமதியை மறுத்தாள் அவள்;

திருந்திய திருநீலகண்டம் எதிர் ஆணையிட்டார்
"தீண்டேன் இனி ஒரு மாதை மனத்தாலும்!" என.

ஐம்புலன்களையும் அடக்கி ஆண்டனர் இருவரும்;
செம்மையாக வாழ்ந்தனர் தம் சிறிய இல்லத்தில்;

உருண்டோடின நாட்கள் மாதங்கள், ஆண்டுகளாகி!
உருமாறி விட்டனர் மிகவும் வயது முதிர்ந்தவர்களாக!

திருவுள்ளம் கொண்டான் அரன் அருள் பாலிக்க;
திருவிளையாடல் மூலம் பெருமையை விளக்க;

பூண்டான் சிவன் சிவனடியாரின் சாது வேடம்;
அடைந்தான் குயவரின் இல்லம் தன் குழுவுடன்;

தந்தான் தன் திருவோட்டினைத் தம்பதியிடம்;
"வந்து கேட்டும் வரைப் பாதுகாப்பீர்!" என்று.

பாதுகாத்தனர் திருவோட்டினைப் பத்திரமாக.
மாதொருபாகன் சாது போல வந்தான் அங்கு.

"திருவோட்டைத் திருப்பித் தாரும்!" எனத்
திகைத்தனர் திருவோட்டினைக் காணாமல்!

சினம் கொண்டார் சிவனடியார் அவர்கள் மீது;
மனம் நோகப் பேசினார் பல கடும் சொற்கள்;

"திருடிவிட்டர்கள் அந்த அரிய திருவோட்டை!" என
"திருடவில்லை நாங்கள் சிவன் சத்தியமாக!" என

"சிவன் மீது வீணே சத்தியம் செய்வது எதற்காக?
மகன் மீது செய்வீர் உம் சத்தியத்தை! ஏற்கிறேன்!

மகன் கரம் பற்றி மூழ்கி எழுவீர் நீர் குயவரே - பல
மலர்கள் அலர்ந்துள்ள பொற்றாமரைக் குளத்தில்!"

"இல்லை ஒரு மகன் எனக்குக் கரம் பற்றி நீராட!" என
"இல்லை மகன் எனில் பற்றுவீர் மனையாள் கரம்!"என

மறுத்து விட்டார் குயவர் மனைவியின் கரம் பற்றிட.
மன்றம் சென்றது எனவே இந்த வினோத வழக்கு!

"தில்லைவாழ் அந்தணரின் தீர்ப்பு இதுவே கேள்மின்!
திருநீலகண்டம் மனைவி கரம் பற்றி நீராட வேண்டும்!"

நீண்ட கழி எடுத்து வந்த குயவர் தம்பதியர் - பற்றிக்
கொண்டனர் இரு முனைகளையும் தம் கரங்களால்.

பொற்றாமரைக் குளத்தில் மூழ்கி எழுந்தனர் - அங்கு
மற்றோர் விந்தை நிகழ்ந்து இருந்தது அரன் அருளால்!

முதுமை நீங்கிச் சென்று விட்டது இருவரிடமும் - மற்றும்
புதுமையாகப் பொங்கிய இளமையால் எழில் கூடியது!

ஒலித்தன ஆலய மணிகள்; பெய்தது மலர்களின் மழை;
ஒளிர்ந்தன திசைகள் எட்டும்; ஒலித்தது இனிய இசை.

ஐம்புலன்களை வென்ற அடியவர்களின் பெருமையை
ஐயம் திரிபு அற உணர்ந்தது இந்த வையகம் முழுதும்.

இறையருள் பெற்றனர் ! இருவரும் வாழ்ந்தனர் மீண்டும்
இனிமை மாறாத இல்லறம் என்னும் நல்லற வாழ்வினை.

"திருநீலகண்டத்துக் குயவனார்க் கடியேன் !"

(திருத் தொண்டைத் தொகை)


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#02. Thiru Neela KaNTa nAyanAr

Thiru Neela KaNTa nAyanAr was born in Thillai in the house of a pot maker. He used to chant "Thiru neela kaNTam" - one of Siva's names day in and day out. So he himself came to be known by the same name very soon.

He would make excellent ThiruvOdu ( begging bowl ) out of clay and give it to a devotee of Siva for receiving food from various houses. His wife was a very chaste woman and helped him in his humble service.

But soon Thiru neela kaNTam became more interested in carnal pleasures and started visiting the prostitutes. His wife could not digest this fact and did not wish to have physical intimacy with him any more. One fine day she told her husband, " Do not touch me I swear on the name of Thiru neela kaNTam!"

He too swore back to is wife, "I will never touch any woman as long as I live. I too swear on Thiru neela kaNTam". They both controlled their five Indhriyas (sense organs) and all their desires.

They live in the same small hose but more as siblings than as spouses. Days rolled by into months and many years. Now both of them had become very old. Siva wished to make he world realize their greatness and self control by playing a harmless prank.

He assumed the form of a devotee of Siva and went to the house of the pot maker with his group. He gave his own begging bowl to Thiru neela kaNTam and said, "This is a very rare bowl. I want you to keep it safe until I come back and ask for it!"

The couple agreed and kept the bowl very safe in their small house. But when the same devotee f Siva returned and asked for his bowl, it had gone missing completely. They could not find it however much they searched for it.

The devotee ( who was Lord Siva Himself in disguise) became very angry and started abusing the pot maker for stealing his rare bowl. Thiru neela kaNTam swore on Lord Siva the he did not steal that bowl.

But Lord Siva in disguise told him "Why do you swear on Siva. You may swear on your own son and take a dip in the pond of Golden Lotuses holding on to his hand!"

ThiruneelakaNTam replied, "I do not have a son to take a dip holding on to his hand." Siva in disguise said, "In that case You may take a dip holing on to your wife's hand!"

ThiruneelakaNTAm refused to oblige. This strange dispute went to the court of the Thillai vAzh andhanargal. Their unanimous verdict was that Thiru neela kaNTam had to take a dip in the pond holding on to his wife's hand.

The couple brought a long stick and took a dip in the pond - each one holding on to one end of the stick. When they came out of water a miracle happened!

They had regained their youth, vigor and strength and looked very well matched. The temple bells sounded sweetly; flowers rained; all the directions became very bright and divine music sounded.

The whole world came to know of the stern austerity (vtratham) taken up by the couple and praised them. The couple resumed their life once again happily as a man and his wife and lived for long, worshiping Siva and serving the devotees of Siva.

 
bhagavathy bhaagavatam - skanda 9


9#29e. உபதேசம் (4)

“ஆலய விமானம் தானம் தந்தவன் பரம பதத்தையும்
சித்திர விமானம் தந்தவன் அதிக நற்பேறும் அடைவர்.

இறைவன் பவனி செல்லும் வீதியை அமைத்தவன்
இருப்பான் ருத்திர லோகத்தில் பதினாயிரம் ஆண்டு!

உயர்ந்த லோகத்தை அடைந்து மீள்பவர் பிறப்பர்
உயர்ந்த பரத கண்டத்தில் உயர்ந்த அந்தணராக.

முயல்வர் முக்தி நெறி அடைவதற்கு – அது
முடியாதவர் அடைவர் மீண்டும் சுவர்க்கத்தை.

பிரம்ம சித்தி அடைய விரும்பும் க்ஷத்திரியர்
பிறக்க வேண்டும் பிராமணர் குலத்திலேயே.

அரிது அரிது அந்தணனாகப் பிறத்தல் அரிது!
அரிய புண்ணியச் செயல்களால் இது லபிக்கும்!

புண்ணிய, பாவங்கள் ஆகும் கர்ம பலன்கள்;
புண்ணிய பாவங்கள் ஊட்டுவது கர்ம பலனை!

செய்யாமல் இருக்க முடியாது ஜீவர்கள் கர்மங்களை;
அனுபவிக்காமல் இருக்க முடியாது கர்ம பலன்களை!

துன்பத்தைக் குறைக்கும் தெய்வத்தின் சகாயம்;
துன்பத்தைக் குறைக்கும் புனித நதிகளில் நீராடல்;

துன்பத்தைக் குறைக்கும் ஞானிகளின் ஸ்பரிசம்;
துன்பம் அடைவர் தர்மத்தைக் கைவிட்டவர்கள்.

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

9#29e. Upadesam by YamA (4)


A man who donates the VimAnam of a temple will rech the highest abode called Parama Padam. One who donates a chitra vimAnam will get even higher merits. A man who paves the street on which the Gods are taken in a procession will live in Indra Loka for ten thousand years.

Those who return from higher abodes back to the earth, take birth as Brahmins. They will try to attain total liberation called Mukti. If they fail in this they will go back to heaven one more time. Even a kshatriya who seeks liberation must be born on the earth as a brahmin to achieve this aim.

Bering born as a Brahmin is very rare. One gets this only as result of the merits earned in previous births. PuNyam and PApam are the fruis of the karmas. PuNyam and PApam give us the fruits of our karmas.

A Jeeva cannot but perform Karmas. A JeevA cannot but suffer from his karmas. But the intensity of the suffering can be reduced by devotion to God, taking dips in holy rivers and by the purifying touch of true JnAnis.

Those who give up their swadharma are those who suffer in the Hells.

 

SEkkizhArin Periya PurANam

#03. இயற்பகை நாயனார்

வாழ்ந்திருந்தார் பூம்புகாரில் ஒரு பற்றற்ற ஞானி;
பாழும் பாசவலையைப் பகையாக எண்ணுபவர்.

இயற்கைக்கு மாறான வைராக்கியம் கொண்டவர்;
இயற்பகை நாயனார் என்ற பெயரைப் பெற்றவர்.

இல்லறம் என்னும் நல்லறம் பேணினார் நாயனார்.
இல்லை என்னாது சிவனடியாரைப் பேணினார்.

பற்றற்ற மனம் கொண்டதால் நாயனார் எதையும்
பற்றின்றி வழங்குவதில் மிகச் சிறந்து இருந்தார்.

குடத்திலிட்ட விளக்காக இருந்தவரின் புகழைக்
குவலயம் அறியச் செய்ய விழைந்தார் ஈசன்.

வந்தார் ஓர் அந்தணர் வேடத்தில் எம்பெருமான்;
வந்தவருக்குச் செய்தனர் தம்பதியர் பாதபூஜை.

"புனிதமாக்கி விட்டீர்கள் ஏழை என் குடிலை!
இனிக் கேளுங்கள் எது வேண்டுமோ அதை!"

"வந்துள்ளேன் விரும்பும் பொருளை பெற்றிட!
தந்தருள்வீர் நீர் நான் விழைவதை மறுக்காமல்!

விருப்பும் பொருள் உமது மனைவி - அவளை
மறுப்புக்கு கூறாமல் அளிப்பீர் எனக்கு!" என

திகைப்போ சினமோ கொள்ளவில்லை - இயற்
பகையார் அடிபணிந்தார் வந்திருந்த அந்தணரை!

"என்னிடம் உள்ள பொருளையே கேட்டீர் நன்று!
என் மனைவி ஆகிவிட்டாள் உம் அடிமை இன்று!"

வணங்கி நின்றாள் மனைவியும் அந்தணரை;
கணவனின் ஆணையைச் சிரமேற்கொண்டாள்.

"அறியேன் ஊரார் என்ன செய்வார்களோ என்று!
வருவாய் நீயும் ஊர் எல்லை வரைத் துணையாக!"

பூண்டார் போர்க்கோலம் இயற்பகை நாயனார் - கைக்
கொண்டார் தன் கூரிய வாளையும், கேடயத்தையும்.

வெகுண்டு எழுந்தனர் ஊர் மக்கள் ஒன்று திரண்டு!
"வெகுமதியாகத் திருமதியை அளிப்பது அநியாயம்!"

பொருமினர் "குலத்தைக் கெடுக்க வந்த கோடரி!" எனக்
குழுமினர் பலவித ஆயுதங்களைக் கைகளில் ஏந்தியபடி.

தனி ஒருவனாகப் போரிட்டார் இயற்பகை நாயனார்
தன்னைத் தடுக்க முயன்ற சொந்த இனத்தோருடன்;

ஓட ஓட விரட்டினார் வணிகர் குலத்தவரைப் போரிட்டு;
ஒரு வழியாக அடைந்தனர் மூவரும் ஊர் எல்லையை.

"இனி நீ திரும்பிச் செல்லலாம்!" என்றார் அந்தணர்;
இனிதே விடைப் பெற்றுத் திருப்பினார் நாயனார்.

ஓங்கி ஒலித்தது ஓலமாக வந்த அந்தணரின் குரல்!
ஓங்கிய வாளுடன் விரைந்து சென்றார் நாயனார்!

மறைந்து அருளினார் மறையவர் வேடச் சிவன்;
இருந்தாள் தனியாக நாயனாரின் மனைவியார்;

ஞான முதல்வனைக் கண்டனர் வான வீதியில்!
தாமாக விழுந்து வணங்கினர் நிலத்தின் மீது!

"இல்லை என்னாது வாரி வழங்கும் வள்ளல் நீ ;
இல்லை உன் தியாகத்துக்கு ஈடோ இணையோ!

பன்னெடுங்காலம் வாழ்வீர் பூவுலகில் இன்புற்று;
பின்னர் வந்தடைவீர் என்னிடமே!" என்றான் அரன்.

நாயனார் புகழை நானிலம் அறிந்து கொண்டது!
நாயனார் அடிகளை உலகமே ஏத்திப் புகழ்ந்தது !

"இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன் "

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#03. IyaR pagai NAyanAr

There lived a great man in PoompukAr. He was completely devoid of the natural attachment usually all people have for all worldly things. Since he was opposite to the majority of the people seen in the world he was named a IyaR pagaiyAr meaning 'He who is opposed to the real nature of human'.

He was married to a virtuous woman They both served the Devotees of Siva to the best of their capacity. Lord Siva wanted to make the world realize the generosity of IyaR pagai NAyanAr and played a rare prank.

Siva went to their house disguised as a brahmin. The couple welcomed him heartily and performed pAdha poojai for him. NAyanAr made the brahmin feel comfortable and told him to ask for anything he desired to possess.

The brahmin dropped a bombshell by asking for the gift of nAyanAr's wife. Any other man would have become mad with rage at such a request, but not nAyanAr.

He said to the brahmin, "I am happy you have asked for something I already have and which I can give you without any delay. We are your at your disposal"

The wife paid obeisance to the brahmin and stood silently and calmly. The brahmin had one more request now,"We do not now how the people of this city will react to your rare gift. I wish you would accompany us til we cross the limits of this city safely!" NAyanAr got ready for a showdown with the people of PoompukAr if it became necessary. He took his sword and shied and accompanied the brahmin and his own dear wife.


News had already spread to the people of his own race. They found it atrocious that any man would give away his own wife as a gift to another man. They were ready to stop the brahmin from taking away NAyanAr's wife with him.

NAyanAr had to fight with his own kith and kin so that the three of them could reach the city limits safely. The brahmin now said to NAyanAr, "You may return now." NAyanAr took leave of them and turned back to go to his house. But suddenly he heard a loud wail let out by the brahmin. He rushed to the spot with his sword held ready for use.

The brahmin had vanished and his wife stood there all by herself. They they both saw The divya dharshan of Siva and Uma seated on Nandhi Devan in the sky. They fell on the ground and paid their obeisance to the divine couple.

Siva blessed them and said,"There is no limit to the sacrifice you can make. Live a long happy life and come to me when your time is up"

The whole world was wonder struck by the rare gift nAyanAr had made and praised him as an unusual and superior devotee of Siva.





 

bhagavathy bhaagavatam - skanda 9

9#30. தான, தர்ம பலன்கள்


“அன்னதானம் அடைவிக்கும் சிவலோகம்;
அன்னதானம் செய்யலாம் அனைவருமே!

பசு தானம் அடைவிக்கும் கோலோகம் – புது
சயன தானம் அடைவிக்கும் சந்திர லோகம்.

வெண்குடை தானம் தரும் வருண லோகம்;
வஸ்திர தானம் அடைவிக்கும் வாயு லோகம்.

சாளக்ராம தானம் அடைவிக்கும் வைகுந்தம்;
கஜ தானம் தரும் இந்திரனின் அர்த்தாசனம்!

பரி, பல்லக்கு தானம் தரும் வருண லோகம்;
நந்தவன தானம் அடைவிக்கும் வாயு லோகம்.

வெண்சாமர தானம் அடைவிக்கும் வாயுலோகம்;
தாமிரம், எள் தானம் அடைவிக்கும் சிவலோகம்.

கனிகளின் தானம் அடைவிக்கும் இந்திர லோகம்;
விளைநில தானம் அடைவிக்கும் வைகுண்டம்.

கிராம தானம் அடைவிக்கும் வைகுண்ட லோகம்;
கார்த்திகைத் துலாதானம் தரும் விஷ்ணு லோகம்.

கங்கையில் நீராடுவது தரும் விஷ்ணு லோகம்;
வைகாசியில் மாதானம் சேர்க்கும் சிவலோகம்.

சித்திரை மாத நிருத்தியம் தரும் சிவலோகம்;
கார்த்திகை ராஸமண்டல பூஜை கோலோகம்.

ஹரிநாம ஜபம் சேர்க்கும் விஷ்ணு லோகம்;
பார்த்திவ லிங்க பூஜை சேர்க்கும் சிவலோகம்;

சாளக்ராம பூஜை தரும் வைகுண்டம் – தரும்
நூறு பரி யாகம் இந்திரப்பதவி, விஷ்ணு பதம்.

பிற பூஜைகள்:


கார்த்திகை பௌர்ணமி ராஸ மண்டல பூஜை

சுக்கில ஏகாதசி, கிருஷ்ண ஏகாதசி பூஜைகள்

பாத்ரபத சுக்ல பக்ஷ துவாதசி பூஜை;

சுக்ல பக்ஷ சப்தமியில் சூரிய பூஜை;

ஜேஷ்ட மாச கிருஷ்ண சதுர்த்தி சாவித்ரி பூஜை;

மாசி மாத சுக்கில பஞ்சமியில் சரஸ்வதி பூஜை.

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

9#30. The fruits of some sath karmas (Good Deeds)

“Anna DAnam will give us a spot in the Siva Lokam. It is the only DAnam everyone is qualified to perform and no one is prohibited from performing!

Giving away a cow will lead the person to Golokam; Giving a new bed will lead the person to Chandra Lokam; Giving a white Umbrella will lead the person to VaruNa Lokam and Giving new clothes will lead the person to VAyu Lokam.

Giving SAlagrAmas will lead the person to Vaikuntam; Giving away an elephant will give him half the throne of Indra himself. Presenting horses and palanquins will bestow a spot in Varuna Lokam; Giving away a flowering garden will bestow a spot in the VAyu Lokam.

Presenting ChAmara will find a person a spot in VAyu Lokam; Giving away copper vessels and sesame seeds will take a person to Siva lokam; Presenting fruits will find a spot in Indra Lokam; Presenting fertile lands will find a spot in Vaikuntam.

Presenting a village bestows a place in Vaikuntam; TulA Danam done in the month of Karthik gives VishNu padam. A holy dip in Ganges will take a person to VishNu Lokam; The nrithya done in the month of Chitra will give a spot in Siva Lokam.

RAsa MaNdala Pooja performed in month of Karthik will lead the person to Golokam; The chanting of the name of Hari will take a person to VishNu Lokam. PArthiva Linga pooja bestows on a person a spot in Siva lokam;

SAlagrAma pooja will lead the person to Vaikuntam. Performing one hundred Aswamedha Yagams gives the person the throne of Indra and also Vishnu padam.

The other important poojAs yielding good merits are RAsa MaNdala Pooja on the full moon day of the month of Karthik; Sukla EkAdasi and Krishna EKAdasi pooja;

BAdrapada sukla paksha dwAdasi pooja; Jyeshta mAsa Krishna chathurthi SAvitri pooja, MAsi MAsa sukla panchami Saraswati pooja.
 
bhagavathy bhaagavatam - skanda 9


9#31a. யமாஷ்டகம்(பொருள்)

“தர்மராஜன் என்ற பெயர் பெற்றீர் நமஸ்காரம்!
தவம் செய்து சூரிய தேவன் பெற்றார் உம்மை

தர்ம தேவதையை ஆராதனை செய்த பின்னர்.
சமன் என்று பெயர் பெற்றீர் நமஸ்காரம்!

சாட்சியாக உள்ளீர் சகலமான நிகழ்வுகளுக்கும்;
சமத்துவம் கொண்டுள்ளீர் சகல ஜீவன்களிடமும்.

யமன் என்று பெயர் பெற்றீர் நமஸ்காரம்

இறுதி அழிவை நீர் உண்டாக்குவதால்!

கிருதாந்தகன் என்ற பெயர் பெற்றீர் நமஸ்காரம்!

காலத்துக்கேற்ப ஜீவராசிகளை நீர் அழிப்பதால்.

தண்டதரன் என்ற பெயர் பெற்றீர் நமஸ்காரம்!

தண்டாயுதத்தால் பாவிகளைச் சரி செய்வதால்!

காலன் என்று பெயர் பெற்றுள்ளீர் நமஸ்காரம்!

கர்ம பலன் தரும் ஜிதேந்த்ரியர்! பிரம்ம நிஷ்டர்!

புண்ணிய மித்திரன் என்ற பெயர் பெற்றீர் நமஸ்காரம்!

புண்ணிய சீலர்களுக்கு நீர் கண்ணிய நண்பர் ஆவதால்!

பிரம்ம அம்சமும், பிரம்ம தேஜஸ்ஸும் பெற்று
பிரம்மத்தைத் தியானிக்கும் உமக்கு நமஸ்காரம்!”

பலஸ்ருதி


நீங்கி விடும் யம பயம் அதிகாலையில் துதித்தால்;
நீங்கி விடும் செய்த சகல விதமான பாவங்களும்!

மஹா பாவிகள் படித்து வந்தால் நரகத்தில்
தேஹ தண்டனைகள் விதிக்கப்பட மாட்டா.

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

9#31. YamAshtakam

“O DharmarAjan! The Sun practiced hard austerities and worshiped Dharma Devan. Dharma Himself was born as the son of SooryA. You are incarnation of Dharma. So I bow down to You!

You are the Witness to all the JeevAs! You treat them all equally! Your other name is Samana. I bow down to You!

Sometimes you take away the lives of jeevas according the time prevailing then. Hence your other name is KritAnta. my Obeisance to You!

You wield the rod to bestow justice and pronounce sentence on the sinners. You destroy the sins of the JeevAs! Your other name is Dandadhara! My obeisance to you!

If you wish to destroy the universe, no one can stop you! You are known as KAlA! My obeisance to Thee!

You are an ascetic; you are devoted to BrahmA; You are a Jitendriya since you have perfect control over your IndriyAs; and you are the distributor of the fruits of Karmas to the Jeevas; You are called Yama since you rule over your senses. I bow down to You!

You are delighted with yourself! You are omniscient! You torment the sinners but you are a good friend of the Virtuous persons. Hence your name is PuNya Mitra. I bow down to Thee.

You are born as a part of BrahmA! The tejas of BrahmA shines in your body. You meditate on Para BrahmA. You are the Lord. Obeisance to you!”

PHALA SRUTI:

He who recites these eight hymns to Yama early in the morning is freed of the fear of death. He becomes free of all the sins committed by him. Even if he is a horrible sinner, he will not suffer from physical punishments in the hell where he may fall.

 
SEkkizhArin Periya PurANam

#04. இளையான்குடி மாறனார்

இளையான் குடியில் அவதரித்தார் மாறனார்;
வளமான வயல்களின் உரிமையாளர் இவர்;

விருந்தோம்பலில் சிறந்திருந்தார் மாறனார்;
விருந்து படைத்தார் பல சிவனடியார்களுக்கு;

மணைப் பலகையில் அமர்த்திப் பாதபூஜை;
மணக்க மணக்க விருந்து அதற்குப் பின்பு.

இலக்குமி வசிப்பாள் இனியவர் இல்லத்தில்;
இலக்குமி வசித்தாள் இவர்கள் இல்லத்தில்.

வளம் கொழிக்கும் காலங்களில் மட்டுமல்ல,
வறுமையில் வாடும்போதும் வள்ளன்மையே!

உலகுக்கு உணர்த்த விரும்பினார் ஈசன்- எனவே
உண்டாக்கினார் மாறனாருக்குக் கொடிய வறுமை.

தளரவில்லை மனம் இதனால் மாறனார் சிறிதும்;
தளரவில்லை அவர் செய்து வந்த விருந்தோம்பல்!

விற்றார் தன் உடைமைகளை ஒவ்வொன்றாக;
மற்றும் குறையின்றித் தொடர்ந்தது தொண்டு.

மொத்த நிலத்தையும் விற்று விட்டார் - அதன்பின்
குத்தகைக்கு வாங்கினார் ஒரு சிறு நிலத்தை.

நெல்லை விதைத்து விட்டு வந்தார் மாறனார்.
எல்லையின்றிப் பெய்தது கனமழை அன்றிரவு.

ஆறு போலப் பெருகி ஓடியது பெய்த மழை நீர்;
ஆதங்கம் கொண்டார் விதைத்த நெல்லை எண்ணி!

ஊனைத் துளைத்தது இரவில் வீசிய குளிர்காற்று.
ஊன் இன்றி உறக்கம் இன்றி வாடினர் சதிபதிகள்.

வந்தார் சிவபெருமான் ஒரு சிவனடியார் வேடத்தில்.
நைந்து நனைத்து நுழைந்தார் மாறனார் இல்லத்தில்.

அளித்தனர் உலர்ந்த துணியும், அமர்ந்திட ஆசனமும்;
"அளிக்கின்றோம் உணவு நொடிப் பொழுதில் உமக்கு!"

"என்ன செய்வது? எதைச் சமைப்பது?" சிந்தித்தார்;
முன்னே வந்து உரைத்தாள் மனைவி ஒரு மார்க்கம்.

"வாரிக் கொண்டு வாரும் விதைத்த நெல்லை நீர்!
வறுத்துக் குத்திச் சமைத்து விடுகின்றேன் நான்!"

மிதந்து கொண்டிருந்தன மழை நீரில் நெல்மணிகள்;
மிச்சமின்றிச் சேகரித்தார் சிறு கூடையில் நெல்லை;

கீரையைப் பறித்து வந்தாள் தோட்டத்திலிருந்து;
கூரையே மாறியது அடுப்பு எரிக்கும் விறகாக.

நெல்லைக் குற்றி அன்னம் வடித்தாள் மனைவி;
கொல்லைக் கீரை ஆனது நல்ல கறியமுதாக.

அதிதியை வணங்கி அழைத்தனர் உண்பதற்கு;
அதிதி ஆகிவிட்டார் அந்தர் தியானம் அங்கிருந்து!

ஒலித்தது சொக்கலிங்கக் கோவில் மணியோசை;
ஒலித்தன குழல் ஓசையும் மற்றும் முழவோசையும்;

விடை வாகனத்தில் காட்சி தந்தார் அவர்களுக்குப்
பிறை சூடிபெருமான் உமை அன்னையுடன் கூட .

"இல்லை என்னாது இன்னமுது அளிப்பதற்கு
அல்லல் பட்ட உங்களுக்குத் சிவலோகப்பதவி;

சங்க நிதி, பதும நிதி தருவான் குபேரன் உமக்கு;
தங்கு தடையின்றித் தொடரட்டும் உம் திருப்பணி".

பல காலம் வாழ்ந்தனர் இகலோகத்தில் சுகமாக;
பல காலம் செய்தனர் அடியவர்களின் திருப்பணி.

"இளையான்றன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன்!"

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

7#04. ILaiyAnkudi MARanAr


MARanAr was born in ILaiyAnkudi and was the owner of vast fertile land. He excelled in feeding the devotees of Siva - sparing no expenses. He and his wife would do 'pAdha pooja' for the guests and then treat them with an excellent feast. Lakshmi Devi dwells in the house of good people. She lived in the house of MARanAr.

This service continued not just when there was plenty but also when there was poverty. Siva wished to prove to the world the sincerity and commitment of his devotee MARanAr to the world.

Siva made him utterly poor. But MARanAr was undaunted and continued his service as before. Soon he had to sell all his belongings one after another. He had to sell of his vast land and had to lease a small field for cultivation.

He planted the paddy seeds one fine day. It rained in cats and dogs on the same night. MARanAr worried about all the seeds being washed away by the rain water. Just then a devotee of Siva came to his house drenched to his skin.

MARanAr gave him dry clothes to wear and offered him a seat. He promised that food will served soon. But what was there in the house to cook and serve for the guest?

His wife came up with a solution to the problem. She suggested that if he could collect the seeds planted earlier during that day, she can extract the rice after roasting and pounding the paddy and cook it.

MARanAr went to the field where he saw all the paddy seeds floating in the rain water. He collected them in a basket and rushed back home.

His wife plucked the spinach leaves from the backyard. The roof of their hut became the firewood for the stove. Food was cooked and curry was prepared with the spinach leaves. When the guest was invited to eat, he just vanished into thin air.

The bells of the temple sounded along with flute and drums. Siva appeared to them with Uma Devi on Nandhi Devan. Siva said,"Your sincere efforts to feed the guests did not go in vain. You have earned your place in Siva lokam. Kuberan will give you Sankha nidhi and Padhuma nidhi. May your service continue for many more years. Then you will come and live in my world".

The couple lived for long and continued to serve the devotees of Siva as long as they lived. Then they reached the lotus feet of Siva freed from the endless cycles of SamsAra.






 

Latest ads

Back
Top