• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

A poem a day to keep all agonies away!

bhagavathy bhaagavatam - skanda 9

9#21c. சங்க சூடனின் பதில்(1)

“உண்மை தான் நீங்கள் கூறியவை எல்லாம்;
உண்மை தான் இனி நான் கூறப் போவதும்!


வஞ்சகமாக வந்தார் வாமன ரூபத்தில் விஷ்ணு;
வஞ்சித்து அபகரித்தார் மகாபலியின் சம்பத்தை.


அழுத்தி விட்டார் மகாபலியை அதல லோகத்துக்கு!
அழுந்தி விட்டன பலியின் செல்வங்களும் அங்கே!


இரண்யன், இரண்யாக்ஷன் மாண்
டு போயினர்,
ஹரி எடுத்த மாய அவதாரங்களின் செயலால்!


பாற்கடலைக் கடைந்தனர் அமரர்கள், அசுரர்கள்.
பாற்கடல் தந்த பரிசுகள் அனைத்தும் அமரருக்கே!


மதியை மயக்கும் வாருணி மட்டும் அசுரருக்கு!
மதியை மயக்கினார் மோகினியாக விஷ்ணுவும்!


அபகரித்தார் அமிர்த கலசத்தைக் கபடமாக;
அனுபவித்தனர் அமரர்கள் அமுதச் சுவையை.


வஞ்சித்துக் அசுரர்களைக் கெடுப்பவர் அமரர்களே!
வஞ்சனையின் விளைவு எங்களிடையே துவேஷம்.


போர் நடக்கின்றது அடிக்கடி எங்களிடையே;
போரில் வெற்றி தோல்வி வரும் மாறி மாறி.


செல்வம் வருவது ஹிம்சையினால் அல்ல!
செல்வம் வருவது வஞ்சனையினால் அல்ல!


செல்வம் தருவதும் தேவியின் கருணைக் கடாக்ஷம்!
செவ்வம் காப்பதும் தேவியின் கருணைக் கடாக்ஷம்!”


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


9#21c. Sankha Choodan’s reply (1)


Sankha Choodan replied to MahAdEvA with great humility. “Whatever was told by you is absolute truth oh Lord! What I am going to say is also absolutely true.


VishNu came in VAmana Roopam to king MahA Bali. He stripped MahA Bali of all his possessions and pushed him down to Atala loka. Bali’s fortune got lost for ever from the face of the earth.


HiraNyan and HiraNYAkshan died in the hands of Hari when he took the avatars as VarAha Moorthi and Narahari.


The Ocean of Milk was churned jointly by the Devas and the DAnavas. Everything emerging from The Ocean of Milk was taken away by the DevAs except the Goddess of intoxication VAruni – who was very generously given off to the DAnavas.


VishNu Took the avatar as Mohini and took possession of the pot of nectar. He cleverly distributed it only to the Devas and cheated the Asuras of their share of the nectar obtained by the joint efforts of the Amaras and Asuras.


It is the Devas who cheat the DhAnavas. It is the Devas who loot and cheat the DAnavas of their lawful shares of the fruits earned – as was promised to them.


This has caused the enmity between the Devas and the DAnavas. Victory and defeat result according to our good time or bad time. Wealth is not obtained by himsa.

Wealth is not obtained by treachery. Wealth is obtained when Devi blesses us due to her infinite mercy. It is She who gives us the wealth and the victory and it is She who chooses to take them away from us”.




 
SEkkizhArin Peiya PurANam

#6d. வந்த வேதியர் யார்?

வெண்ணை நல்லூர் வந்து அடைந்தனர் அனைவரும்;
அந்தணர் கூறினார் தன் வழக்கை அவையோரிடம்;

"அடிமைச் சாசன ஓலையைத் தந்தவன் இவன் பாட்டன்;
பிடுங்கி அதைக் கிழித்து எறிந்தவன் அவன் பெயரன்!

உண்மையை நாடித் தீர்ப்பு அளியுங்கள் அவையோரே!
வெண்ணெய் நல்லூர் வந்ததே ஒரு நல்ல தீர்ப்புக்காக!"

தந்தார் மூல ஓலையை அவையினரிடம் அந்தணர்;
தந்த ஓலையை வாசித்தான் அவைக் கணக்கன்;

"திருநாவலூர் ஆதிசைவன் ஆரூரன் ஆகிய நான்
திருவெண்ணெய் நல்லூர் பித்தனுக்கு எழுதியது.

நானும் என் வழித்தோன்றல்கள் அனைவரும்
தானாக விரும்பி இவர் அடிமைகள் ஆவோம்!"

சரி பார்க்கப்பட்டன கையெழுத்துக்கள் அங்கேயே!
சரியாகவே இருந்தன கையெழுத்துக்கள் எல்லாம்!

தீர்ப்பு வழங்கியது அந்தணர் அவை சுந்தரருக்கு,
"தீர்க்கவேண்டும் கடமையை அடிமைத் தொண்டனாக!"

"இருப்பிடம் எது?" என்று கேட்ட சுந்தரரை - அந்தணர்
இட்டுச் சென்றார் திருவட்டுறைத் திருக்கோவிலுக்கு.

உள்ளே புகுந்த அந்தணர் மீண்டும் வெளிவரவில்லை!
மெல்ல மெல்லக் கலைந்து சென்று விட்டது அக்கூட்டம்

எஞ்சி இருந்தது சுந்தரர் மட்டுமே அந்த ஆலயத்தில்!
எழுந்தது அவருள் ஞானம் வந்த அந்தணர் யாரென்று!

"வேத நாயகனே வந்துள்ளான் என்னை ஆட்கொள்ள!
பேத அறிவினால் நான் இனம் காணவில்லை அரனை!"

விடை மீது கட்சி தந்தான் எம்பெருமான் சுந்தரருக்கு;
விடை கிடைத்துவிட்டது வந்த அந்தணர் யாரென்று.

"ஆலால சுந்தரா! என்றும் நீ என் தொண்டன் அன்றோ?
விளைந்தது இம்மனிதப் பிறவி உன் மன மயக்கத்தால்!

பிறவிப் பெருங்கடல் உன்னைத் தொடராது வண்ணம் - நீ
விரும்பியபடியே தக்க தருணத்தில் தடுத்தாட் கொண்டேன்!

வன்றொண்டன் என்ற பெயரில் சிறப்பாய் - எப்போதும்
வளமிக்க பாக்களால் என்னைப் போற்றிப் புகழ்வாய்!

பித்தா! என்று என்னை அழைத்தாயே மண்டபத்தில்!
பித்தா என்றே அடி எடுத்துப் பாடுவாய்!" என்றதும்

"பித்தா! பிறைச்சூடி பெருமானே!" என்று தொடங்கி
அத்தனைப் புகழ்ந்து பாடினார் சுந்தரமூர்த்தி நாயனார்.

திருமணம் தடைப்பட்டதால் மனம் வருந்திய மணமகள்
பிறவாப் பெருவாழ்வு பெற்றாள் ஆரூரன் நினைவிலேயே.

யாத்திரை சென்றார் சுந்தரர் சிவத் திருத் தலங்களுக்கு;
தோத்திரம் செய்தார் பெருமானைத் தீந்தமிழ்ப் பாக்களால்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#6d. Who was that old Brahmin?

They all reached Thiru VeNNai Nalloor with the old brahmin. The people's court was ready to resolve the issue between the old brahmin and Sundarar.

"His grandfather gave me his word that his lineage will be my slaves. But this man tried to destroy my evidence. I still have the original palm leaf with me. You make take a look at it. " The old man gave the palm leaf to the court.

The accountant read the leaf aloud. "This is written by Thiru nAvaloor Aadhi Saivan AaroorAn to The Piththan of Thiru VeNNai Nalloor to promise that all the men of my lineage will willingly serve Piththan as his slaves". The signatures of the grandfather and the witnesses were verified and found to be authentic.

The judgement was passed that Sundarar was indeed the slave of the old brahmin and should obey his commands obediently. The old man lead Sundarar to his place which turned out to be the temple in Thiruvattarai. The brahmin went inside the temple but never came out again!

The crowd dissipated slowly and now only Sundarar stood waiting for the old man. The truth dawned on him now. The old man was none other than Lord Siva in disguise. Only Sundarar failed to recognize him.

Just then Siva gave dharsan on his Nandhi and said,"AlAla SundarA! You were my ardent devotee in Kailash. You were born as a human being because you got deluded. You had requested me to stop you from entering into the mire called samsAra. I did as requested by you".

You will be known as "VandRoNdan" and you will sing my praise in many sweet Tamil verses. You called me as 'piththan' or 'raving mad'. You may sing with that as the first word of your verse" Sundarar sang the praise of Siva starting with "PiththA piraich choodi perumAnE!"

The bride fixed for Sundarar held him in her heart as her God as long as she lived. Thus she got easily freed from the cycle of birth and death. Sundarar himself wandered visiting all the Siva temples singing the glory of his lord.






 
bhagavathy bhaagavatm - skanda 9

9#21d. சங்க சூடனின் பதில்(2)

“வாரி வாரி வழங்கினீர் செல்வத்தை நீரே!
கோரித் தூது அனுப்பினீர் போருக்கு நீரே!

வந்து விட்டேன் போர் புரியத் தயாராக;
இந்த உலகம் நகைக்கும் வராவிட்டால்!

கடவுளாகப் போர் புரியவேண்டாம் என்னோடு!
நடக்கட்டும் போர் பந்து என்கின்ற முறையில்!

வெற்றி பெற்றால் வரும் புகழ்ச்சி எனக்கே!
தோல்வி பெற்றால் வரும் இகழ்ச்சி எனக்கே!

வெற்றி, தோல்விகளின் விளைவுகளைப்
பெற்றிடுவேன் நான், உமக்கு ஒன்றுமில்லை!”

“பிரம்ம வம்சம் உன்னுடையது சங்கசூடா!
‘பிரம்ம’ என்ற சப்தம் உரியது எனக்கும் கூட.

பந்துக்களே நாம் இருவரும் – இதனால்
முந்திப் போர் செய்தேன் திரிபுரர்களிடம்.

தேவி அசுரரைக் கொல்வதும் இதனால் – மா
யாவி விஷ்ணு போரில் வெல்வதும் இதனால்!

கூச்சம் இல்லை உன்னுடன் போர் செய்வதற்கு
கூச்சம் இல்லை வல்லவன் நீ எனச் சொல்வதற்கு.”

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

9#21d. Sankha Choodan’s reply (2)


Sankha Choodan continued to speak to Lord MahAdevA,” You yourself have given us immense wealth! You yourself have sent a messenger calling us to the war front. I have come here ready to fight the war. If we do not fight now, we will surely be ridiculed by the world.

I have just one request for you. Please do not fight with me as a God but fight with me as a relative. The fame one will get by winning the war or the criticism one will face by losing the war will all belong to me. They will not affect you in any manner.”

MahAdevA replied, “Sankha ChoodA! You belong to ‘Brahma vamsam’. ‘Brahma’ is a term applicable to me also. So we are related indeed. That is why I fought with the Tripura asuras earlier. That is why Devi fights with the asuras. That is why Vishnu fights with the DanavAs.

I am not ashamed to fight with you.Nor am I shy to admit your true greatness!” MahAdevA replied.

 
SEkkizhArin Periya PurANam

#6e. தம்பிரான் தோழர்

சித்தவடம் மடத்தில் இராத் தாங்கினார் சுந்தரர்;
சித்தவடம் மடத்துக்கு வந்தார் சிவபெருமானும்;

அந்தணர் வடிவில் வந்திருந்த சிவன் உறங்கினார்
சுந்தரர் சிரத்தின் மேல் தன் திருவடி பதியும்படி.

பாதம் பட்டதால் கண் விழித்தார் சுந்தரர் - "உம்
பாதம் தலைமேல் படத் துயில்வது ஏனோ?" என

"முதுமையின் பிழை பொருத்தருள்வாய்!' எனப்
புது இடம் அடைந்து உறங்கலானார் சுந்தரர்.

மீண்டும் அதே பாதங்கள் தன் சிரசின் மீது!
வேண்டும் என்றே வம்பு செய்கிறாரா கிழவர்?

"யார் நீங்கள்? உண்மையைக் கூறுங்கள்! " என
"யார் என்று என்னை அறியவில்லை நீ " என்று

மறைந்து அருளினார் வயோதிக அந்தணர்;
திறந்தது அறிவுக்கண்; பிறந்தது ஞானம்;

"சிரம் மீது திருவடி பதித்து தீட்சை தந்தீர் நீர்!
இறுமாப்படைந்து அறியாது நின்றேன் நான்!"

வீழ்ந்து வணங்கினார் ஆலய கோபுரத்தை - அவர்
வரவை அறிந்து இருந்தனர் அந்தணர்கள் முன்பே.

அனந்த நடனம் ஆடும் அரனைக் கண்டார்
ஆனந்த வெள்ளத்தில் மூழ்கித் தத்தளித்தார்.

அசரீரி மொழிந்தது "ஆரூருக்கு வா சுந்தரா!"
ஆரூர் சென்றார் அரன் இட்ட கட்டளைப் படி.

அணுகினார் சீர்காழியை; புறத்தே நின்று வணங்க
தோணியப்பர் கட்சி தந்தார் விடைமீது உமையோடு.

பாடினார் தோணியப்பரைப் புகழ்ந்து பதிகங்கள்
நாடினார் திருவாரூரை, பிற சிவத்தலங்களை.

அறிவித்தார் அரனார் சிவனடியார்கள் கனவில்
அரிய பக்தர் சுந்தரமூர்த்தி அந்த ஊர் வருவதை.

அலங்கரித்தனர் திருவாரூரை அமராவதி போல
மலர் மாலைகள், விளக்குகள், தோரணங்களால்.

வரவேற்றனர் சுந்தரரைப் பூரண கும்பத்துடன்
வாழ்த்தொலி எட்டியது விண்ணுலகையே!

மெய்ப் புளகம் அடைந்து தண்டனிட்டார் சுந்தரர்;
மெய்யுருகப் பாடினார் பதிகம் இனிய இசையுடன்.

"மணப் பந்தலில் தடுத்து ஆட்கொண்டேன் முன்பு
மணக்கோலம் பூண்டு வாழ்வாய் என் இனிய தோழா!"

பட்டப்பெயர் பெற்றார் சுந்தரர் தம்பிரான் தோழரென்று
பட்டப்பெயரால் அழைந்தனர் சிவனடியார்கள் அவரை.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#6e. "The friend of Lord Siva"

Once Sundarar stayed in the mutt in Chiththavadam. Lord Siva also came to the same mutt posing as an old brahmin. Sundarar was awakened by a foot planted on his head as he slept there. He saw that the old brahmin was the one who had planted is foot on his head.

He asked the old man, " Why did you place your foot on head?" The old man apologized for the mistake committed due his advanced years. Sundarar moved to another spot and went back to sleep.

Again he felt the foot of the same brahmin on his head. He got really vexed and demanded to know the identity of the old brahmin. "Don't you know me really?" The old brahmin asked him mischievously and disappeared in an instant.

The truth dawned on Sundarar as to the real identity of the old man! He said, " I was ignorant and did not recognize you. You have come to give me deeksha by planting your foot on my head". He fell on the ground and paid his obeisance to Siva. He then went on to Thillai Chidambaram.

The 3000 Brahmins of Thillai knew about his arrival. They welcomed Sundarar in a befitting manner. Sundarar was overwhelmed to set his eyes on the Cosmic dancer NatarAra. An asareeri told him, "Come to Aaroor Sundara!"

He set out to Aaroor and reached SeerkAzhi. He prayed from outside the city limits. Siva gave him dharshan as ThONiappar. Sundarar sang the praise of lord ThONiappar. He continued to visit Siva kshethrams and reached ThiruvAroor.

Siva had appeared in the dreams of the his devotees and announced the arrival of Sunadar. They decorated the city with flowers, lamps, thorans, and welcomed him with poorNa kumbham. They greeted him and praised him heartily.

Sundarar went into ecstasy and sang the praise of his lord in Tamil with sweet music. Siva told him,"I have stopped your marriage earlier. But now I want you to marry and live happily"

Sundarar got a new title,"ThambirAn thozgan" meaning "The friend of our Lord"
 
bhagavathy bhaagavatam - skanda 9

9#22a. யுத்தம்(1)

போர் தொடங்கியது இரு படைகளின் இடையே;
போர் செய்தான் மகேந்திரன் விருஷபர்வனோடு.

போர் செய்தான் சூரியன் விப்ரசித்தோடு;
போர் செய்தான் சந்திரன் தம்பனோடு!

போர் செய்தான் யமன் காலேஸ்வரனுடன்;
போர் செய்தான் அக்னி கோகர்ணனுடன்;

போர் செய்தான் குபேரன் காலகேயனோடு;
போர் செய்தான் விஸ்வகர்மா மயனோடு ;

போர் செய்தான் ம்ருத்யுபயங்கரன் சங்காரமயனோடு;
போர் செய்தான் வருணன் விகங்கணனோடு;

போர் செய்தான் வாயு சஞ்சலனோடு;
போர் செய்தான் புதன் திருதபிரஷ்டனோடு;

போர் செய்தான் சனி ரக்தாக்ஷனோடு;
போர் செய்தான் ஜயந்தன் ரத்னசாரனோடு;

போர் செய்தனர் வசுக்கள் வர்ச்சோ கணங்களோடு;
போர் செய்தான் தருமன் துரந்தரனோடு;

போர் செய்தனர் அஸ்வினி தேவர் தீப்திமானோடு;
போர் செய்தான் நலகூபரன் தூம்பரனோடு ;

போர் செய்தான் பானு சோபாகரனோடு;
போர் செய்தான் மன்மதன் பிபாரனோடு;

போர் செய்தான் மங்களன் உசாடினோடு;
போர் செய்தான் விச்வன் சபலாசனோடு;

போர் செய்தனர் ஏகாதச ருத்திரர் மஹா பயங்கரனோடு;
போர் செய்தான் மஹாமாரி உக்ர சண்டனோடு.

செய்தான் போர் நந்திதேவன் ராக்ஷசர்களுடன்;
செய்தனர் பிரளய காலப் போர் இரு சேனைகளும்!

அமர்ந்திடுந்தார் மகேஸ்வரன் காச்யாசுதனோடு;
அமர்ந்திருந்தான் சங்கசூடன் பிற அசுரர்களோடு.

சிதறி ஓடினர் தேவர்கள் போர்க்களத்தில்;
பதறி ஓடினர் தேவர் அசுரர் தாக்குதலால்!

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

9#22a. The war broke out!


Sankha Choodan, the King of the DAnavas, bowed down to MahAdeva and got in his chariot with his ministers. MahAdeva gave orders to His army to get ready for the war. So did Sankha Choodan also.

A terrible fight broke out between Mahendra and VrishaparvA; between BhAskara and Viprachithi’; between NishAkara and Dhambha; between KAla and KAleswara; between Agni and GokarNa, between Kubera and KAlakeya, between ViswakarmA and MAYA, between Mrityu and Bhanyankar, between Yama and SamhAra, between VaruNa and Vikanka, between Budha and Dhritaprishta, between Sani and RaktAksha, between Jayanta and RatnasAra, between the Vasus and Varchasas, between the two Ashvin KumAras and DeeptimAn, between Nalakoobara and Dhoomra, between Dharma and Dhurandhara, between Mangala and UshAksha, BhAnu and ShovAkara, between Kandarpa and the eleven AdithyAs and GodhAmukha, ChoorNa and Khadgadhvaja, DhoormA and Nandi, Viswa and PalAsha, between the eleven Rudras and the eleven Bhayankaras, between UgrachaNda and the other MahAmArees and Nandishvara and the other DAnavas.

The battlefield looked as if it were pralaya kAlam. BhagavAn MahAdeva sat under the peepal tree with KArtikeya and BhadrakAli. Sankha Choodan adorned with many ornaments sat on his throne.

The army of Siva Sankara got defeated at the hands of the DAnavas. The Devas with cuts and wounds on their bodies ran away from the battle field terrified.

 
SEkkizhAr's Periya PurANam

#6f. பரவை நாச்சியார்

காதல் கொண்டார் கமலினி மீது ஆலால சுந்தரர்
கயிலாய மலையில் அவளைக் கண்ணுற்ற போதே.

திருவாரூரில் சென்று பிறவி எடுத்தாள் கமலினி
உருத்திர கணிகையர் குலத்தில் பரவையாராக.

திடமான பக்தி கொண்டிருந்தாள் பரவையார்
தியாகேசன் மீதும் மெய்ச் சிவனடியார்கள் மீதும்.

துயில் எழுவாள் வைகறைப் பொழுதில் தினமும்;
தூய நீராடிச் சென்று தரிசிப்பாள் தியாகேசனை.

வந்தாள் பரவையார் வழக்கம் போல ஆலயம்;
வந்தார் சுந்தரரும் அதே சமயத்தில் ஆலயம் ;

கண்கள் கலந்தன; கருத்துக்கள் ஒருமித்தன;
தம்மையே மறந்து நின்று விட்டனர் இருவரும்.

"மன்மதனோ? முருகனோ? வித்தியாதரனோ? என்
மனம் சஞ்சலம் அடைந்ததில்லை என்றும் இதுபோல!"

துளிர் விட்டது காதல்; தளர்ந்து விட்டது தளிர் நடை;
அளித்தாள் உள்ளத்தை; சென்று விட்டாள் இல்லம்;

உருகினார் சுந்தரர் பரவையார் சென்ற பின்பு;
இருப்பிடம், பெயர் அறிந்து கொண்டார் கேட்டு

தங்கி விட்டார் தேவாசிரிய மண்டபத்தில் சுந்தரர்;
மங்கிய ஆதவன் மறைந்தான் மேற்கு திசையில்!

அமுதை பொழியும் நிலவு எழுந்தது வானில்;
அல்லிகள் மலர்ந்தன; அவனியும் குளிர்ந்தது!

துன்பம் தந்தது சுந்தரருக்கு அந்தக் குளிர் நிலவு!
துன்பம் தந்தது பரவையாருக்கும் குளிர்ந்த நிலவு

வினவினாள் தோழியரிடம் சுந்தரரைக் குறித்து;
விவரித்தனர் 'தம்பிரானின் தோழர் அவர்!' என்று

மறக்க முடியவில்லை அந்தப் பேரழகனை அவளால்;
உறக்கம் பிடிக்கவில்லை; உணவும் செல்லவில்லை;

பஞ்சணை ஆனது பாறை போல - மலர்களின்
மஞ்சம் தகித்தது தீக்கனல் போல மேனியை!

தோன்றினான் அடியார்கள் கனவில் பிரான்;
கூறினான் பரவையை சுந்தரருக்கு மணம் புரிய!

தோன்றினான் பிரான் காதலர்கள் கனவிலும்;
கூறினான் பிரான் கடிமணம் புரிந்துகொள்ள!

மகிழ்ந்தனர் காதல் வயப்பட்ட இருவரும் - மணம்
நிகழ்ந்தது விண்ணோரும் மண்ணோரும் மகிழ.

இணைந்தனர் இருவரும் இனிய இல்லறத்தில்
பிணைந்தனர் மகரயாழும், இனிய இசையும் என.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#6f. Paravai nAchchiyAr

AlAla Sundarar fell in love with Kamlini when he set his eyes on her in Kailash. Kamalini took birth in the race of Rudhra kaNigaiyar as Paravai nAchiyAr. She had staunch devotion towards Lord Siva and his devotees. She would arise early every morning, bathe and go to the temple to worship Siva.

One day Paravai went to the temple a usual. On that day Sundarar also came to the temple at the same time. They saw each other and were captivated by their mutual beauty one more time. They were lost to the world and stood transfixed for a long time.

Paravi wondered, "Is he the God of love Manmathan or Murugan or a VidhyAdharan? Suchaa beauty is rare in a human being. I have never felt shaken in this manner ever before". She fell in love with him head over heels at the very first sight. She gave him her heart and went back home with faltering steps.

Sundaran also stood transfixed for a while. He inquired about her and found out her name and the place of her residence from the people around him. He stayed in the DevAsirya MaNdapam that night.

The Sun set at the west and the full moon rose in the east. Lilies bloomed and the whole world rejoiced. The cool moon made the whole world happy except for those two who had fallen in love.

Paravai inquired about that handsome stranger and her friends told her all about Sundarar 'The friend of Lord Siva'. She could not get him out of her mind. Sleep eluded her. Food did not interest her anymore. The bed felt as hard as a rock and the flowers scorched her like live coals of fire.

Siva appeared in the dreams of his devotees and advised them to get Sundarar married to Paravai. He also appeared in the dreams of Sundarar and Paravai and told them to get married.

Their marriage took place making everyone happy. They were united in the holy wedlock. They became inseparable like the Yazh and its sweet music and like the flowers and their fragrance.

 
bhagavathy bhaagavatam - skanda 9

9#22b. யுத்தம் (2)

சிதறியோடும் அமரர்களைக் கண்டு – பெரும்
சினம் கொண்டார் திரு முருகப் பெருமான்.


சிவ கணங்களுக்கு அளித்தார் அபயம்;
சிவ கணங்ளுக்கு அளித்தார் ஊக்கம்.


தனி ஒருவராகப் போர் செய்து கொன்றார்
கணத்தில் நூறு அக்ஷௌஹிணி சேனையை!


தின்றாள் பத்ரகாளி கரிகளை அறைந்து கொன்று!
திரிந்தாள் களமெங்கும் ராக்ஷசரின் உதிரம் அருந்தி!


ஒடி ஒளிந்தனர் கந்தன் விடுத்த பாணங்களால்!
ஓடி ஒளிந்தனர் கந்தன் கை வேலாயுதத்துக்கு!


பெய்தான் சங்கசூடன் சரமாரியை விண்ணிலிருந்து;
எய்தான் சங்கசூடன் அவற்றைத் தடுக்க இயலாதபடி.


மரங்கள், மலைகள், அம்புகள், பாம்புகள் முருகனை
மறைத்தன பனியால் மூடிய செங்கதிரவனைப் போல!


உடைத்தான் முருகனின் தேரை, அறுத்தான் கை வில்லை!
தடுத்தான் வேலை, அலைக் கழித்தான் கந்தன் மயிலை!


அறுத்து எறிந்தான் முருகன் அவை அனைத்தையும்;
எறிந்தான் தன் சக்தி ஆயுதத்தைச் சங்கசூடன் மீது!


மயங்கி விழுந்தான்; பின் தெளிந்து எழுந்த அவன்
ஏவினான் சக்தி ஆயுதத்தைக் கந்தன் மார்பினில்!


தாவி ஓடிவந்த காளி அணைத்துக் காத்தாள்;
ஏவிய சக்தி தாக்கவில்லை கந்த பெருமானை!


உடன் இருந்து போர் செய்தாள் காளி தேவி;
உதவின போரினில் மோகினிப் பரகணங்கள்.


பொழிந்தாள் பிரளயாக்னியைக் காளி தேவி!
அழித்தான் மேகாஸ்திரத்தினால் சங்கசூடன்!


எறிந்தாள் காளி வருணாஸ்திரத்தை;
எறிந்தான் சங்கசூடன் கந்தர்வாஸ்த்திரத்தை!


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


9#22b. The war (2)

Skanda became angry seeing the Devas running in confusion in the battle field. He gave Abhayam to the frightened army and fought with the asura army single-handedly. He killed one hundred akshouhiNi of the asura army in just a moment.


Bhadra KAli killed and swallowed the elephants. She went around the battle field drinking the blood of asuras. Now it was the asuras’ turn to run in confusion and hide from the Shakti Aayudam of Skanda.


Sankha Choodan rained arrows from the sky. They came so fast that they were unstoppable even for Skanda. Trees, Moutains, arrows and snakes covered Skanda like the dense mist covering the morning sun.


Sankha Choodan shattered the chariot of Skanda, cut off his bow, stopped his Shakti Ayudam and gave a hard time to his vAhanam the peacock.


Skanda cut off all these and aimed and threw his Shakti on Sankha Choodan. He fainted hit by Skanda’s Shakti Aayudam but regained consciousness fast and threw his own Shakti Aayudam back on Skanda.


Bhadra KAli rushed in and saved Skanda for being attacked. She fought the asura army side by side with Skanda. The Mohini Para GaNas also helped her in the war.


KALi rained praLayAgni on Sankka Chooda and he put it off with his MeghAsthram. KALi shot at him her VaruNAsthram and Sankhachood shot his GandhavAsthram.




 
SEkkizhArin Periya PurANam

#6g. திருத் தொண்டத் தொகை

தனியாக ஆலயம் சென்றர் சுந்தரர் ஒருநாள் - அங்கு
இனிதாகக் குழுமி இருந்தனர் சிவன் அடியார்கள்.

"தொழுவது எளிது இறைவனை; அரியது அடியாரை!
தொழுவது என்றோ சிவனடியார்களையும் நான்"" என

ஒதுங்கிச் சென்று விட்டார் சுந்தரர் ஆலயத்துக்குள்;
ஓங்கிய குரலில் ஏசினார் அவரை விரல் மிண்டர்;

"அடியார்களை வணங்காமல் ஆலயம் செல்வதா?
அடியாருக்குப் புறம்பான வன்றொண்டன் இவன்!"

அடியாருக்குப் புறம்பானவன் ஆட்கொண்டவனும்!
அவர்கள் வீதிவிடங்கனும் வன்றொண்டனும் ஆவர்!"

"அடியாருக்கு அடியேனாகும் நிலை தாரும்!" எனவும்
"அடியார்கள் பெருமையைப் பாடு!" என்றார் ஈசன்.

"அறியேன் எளியேன் அடியவர்கள் வரலாறு!
அறியேன் எளியேன் அடியவர்கள் சிறப்பினை!

திருப்பதிகம் பாடுவது எங்ஙனம் நிகழும் ஈசா?
திறனும் அறிவும் தருவீர் எனக்கு!" என வேண்டிட

அடி எடுத்துக் கொடுத்தார் "தில்லைவாழ் அந்தணர் தம்
அடியார்க்கும் அடியேன்" என்று அரனார் சுந்தரருக்கு!

தெண்டனிட்டார் இறைவனுக்கு; மண்டபம் சென்றார்;
தொண்டர்கள் சரிதத்தை விவரித்தார் பதிகங்களில்;

திருத் தொண்டத் தொகை பிறந்தது மண்டபத்தில்;
திருவருளினால் பாடச் செய்தவன் சிவபெருமான்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#6g. Thiruth thondath thogai

One day Sundarar went to the temple all by himself. All the staunch devotees of Lord Siva had assembled in the temple mandapam.

Sundarar thought to himself," Worshiping the God is so much easier than worshiping His devotes. Will I ever develop the capacity to worship Lord's devotees as well as I worship Him?"

He went straight into the temple avoiding the devotees of Lord Siva who had gathered there. ViRal mindar nAyanAr commented on Sundarar's behavior in a loud voice.

"What is the use of worshiping God if one does not worship his devotees first. Sundarar does not care about the other devotes. Nor does the God who had made him as His own dear friend."

Sundarar prayed to God, "Please make me a devotee of all your sincere devotees." God ordered him to sing the praise of all his devotees.

Sundarar said, "I do not know the life history of all your devotees. I will not be able to sing their praise. You must first give me the knowledge and capacity to sing on them."

God gave him the first line of the song Sundarar was expected to sing praising all the other devotees. The words given by God were "Thillai Vaazh anthanargaL tham"

Sundarar paid his obeisance to God and went to the mandapam. He sang the praise of all the devotees of Siva and claimed himself to be the devotee of each and everyone of those devotees.

This became the famous Thiruth thoNdath thogai sung by Sundarar himself praising all the other devotees of Siva. Later on this became the guide and reference followed by SEkkizhAr while composing his Periya purANam."



 
bhagavathy bhaagavatam - skanda 9

9#22c. யுத்தம் (3)

எய்தாள் காளி மஹேஸ்வர அஸ்திரத்தை;
எய்தான் சங்கசூடன் சதாசிவ அஸ்திரத்தை.


ஏவினாள் காளி வீரபத்திர அஸ்திரத்தை;
தாவியது வானில் சங்கசூடன் தொழுததும்.


அஸ்திரத்துக்கு அஸ்திரம் பதிலானது.
ஆயுதத்துக்கு எதிர் ஆயுதம் பதிலானது.


பாசுபதாஸ்திரத்தை எடுத்தாள் காளி எய்வதற்கு!
“பத்தினியாகத் துளசி உள்ளவரை இல்லை மரணம்”.


ஒலித்தது அசரீதி விண்ணிலிருந்து மண் வரை;
ஒலித்தது, “அது பிரமன் தந்தவரம் இவனுக்கு!”


விழுங்க ஓடினாள் காளி சங்கசூடனை;
விழுங்க இயலாத பேருருவம் எடுத்தான்.


உடைத்தாள் தேரை; எறிந்தாள் சூலத்தை!
தடுத்தான் சூலாயுதத்தை இடது கையால்!


மூர்சித்தான் காளி கொடுத்த அடியில்;
மூர்ச்சை தெளிந்து செய்தான் மல்யுத்தம்.


எய்யவில்லை பாணங்களை மாத்ரு பக்தியால்!
எய்யவில்லை பாணங்களைக் காளியும் கூட.


சுழற்றி வீசினாள் சங்கசூடனை விண்ணில்!
சுழன்று வணங்கிவிட்டு விமானம் ஏறினான்!


காளி கூறினாள் சிவபெருமானிடம் சென்று,
“வாயிலிருந்து நழுவிய அசுரர் மிகுந்தனர்!”


அசரீரி தடுத்தது காளியின் பாசுபதாஸ்திரத்தை!
அசல் ஞானி அவனும் எய்யவில்லை பாணம்!


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


9#22c. The war (3)


Kali shot her MahEswara asthram on Sankhachooda. He shot his SadAsiva asthram on her. Now KAli shot the MahA Veerabhadra asthram. It went away into the sky – the moment Sankha Choodan paid obeisance to it.


Every asthram released by KAli was met by a suitable asthram by Sankha Choodan. Every weapon used by her met its match released from his hands.


KAli took out her PAsupthAsthram and then an asareeri was heard “As long as Tulasee remains a pativrata, Sankha Choodan will not fall. It is the boon given to him by Brahma Devan”


KAli wanted swallow him whole and ran towards him. Sankha Choodan assumed a form too huge to be swallowed by her.


KAli broke his chariot and threw her SoolAyudam on Sankha Choodan. He stopped it with his left hand. She beat him and he fainted right away. When he came round, he started wrestling with KAli.


Neither KAli nor Sankha Choodan shot any more asthrams on each other. KAli threw him high up. He landed safely, did a namaskAr to her and got into his vimAnam.


KAli went back and told Lord SivA, “Only those asurAs who had slipped from my mouth have survived in the battle today.”


An asareeri stopped KAli from shooting PAsupatAstram and Sankha Choodan being a true JnAni did not shoot any asthram at her.




 
SEkkizhArin Periya PurANam

#6h. திருத் தொண்டத் தொகை

சுந்தரமூர்த்தியின் திருத் தொண்டத் தொகை

தில்லைவாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்
திருநீல கண்டத்துக் குயவனார்க் கடியேன்
இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்
இளையான்றன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன்

வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக் கடியேன்
விரி பொழில் சூழ் குன்றையார் விறன் மிண்டற்கடியேன்
அல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக் கடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே .....(1)


இலைமலிந்த வேல்நம்பி எறிபத்தர்க் கடியேன்
ஏனாதி நாதன்றன் அடியார்க்கும் அடியேன்
கலைமலிந்த சீர்நம்பி கண்ணப்பர்க் கடியேன்
கடவூரிற் கலையன் றன் அடியார்க்கும் அடியேன்

மலைமலிந்த தோள்வள்ளல் மானக்கஞ் சாறன்
எஞ்சாத வாட்டாயன் அடியார்க்கும் அடியேன்
அலைமலிந்த புனல் மங்கை ஆனாயர்க் கடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே .....(2)

மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்
முருகனுக்கும் உருத்திர பசுபதிக்கு அடியேன்
செம்மையே திருநாளைப் போவார்க்கும் அடியேன்
திருக்குறிப்புத்தொண்டர் தம் அடியார்க்கும் அடியேன்

மெய்ம்மையே திருமேனி வழிபடா நுற்க
வெகுண்டெழுந்த தாதைதாள் மழுவினால் எறிந்த
அம்மையான் அடிச்சண்டிப் பெருமானுக் கடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே .....(3)

திருநின்ற செம்மையே செம்மையாகக் கொண்ட
திருநாவுக் கரையன் றன் அடியார்க்கும் அடியேன்
பெருநம்பி குலச்சிறைதன் அடியார்க்கும் அடியேன்
பெருமிழலைக் குறும் பர்க்கும் பேயார்க்கும் அடியேன்

ஒரு நம்பி அப்பூதி அடியார்க்கும் அடியேன்
ஒலிபுனல்சூழ் சாத்த மங்கை நீலநக்கர்க் கடியேன்
அருநம்பி நமிநந்தி அடியார்க்கும் அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே .......(4)

வம்பறா வரிவண்டு மணநாற மலரும்
மதுமலர்நற் கொன்றையான் அடியலாற் பேணா
எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன்
ஏயர்கோன் கலிக்கமான் அடியார்க்கும் அடியேன்

நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன்
நாட்டமிகு தண்டிக்கும் மூர்க்கர்க்கும் அடியேன்
அம்பரான் சோமாசி மாறனுக்கு அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே ....(5)

வார்கொண்ட வனமுலையாள் உமைபங்கன் கழலே
மறவாது கல்லெறிந்த சாக்கியர்க்கும் அடியேன்
சீர்கொண்ட புகழ்வள்ளல் சிறப்புலிக்கும் அடியேன்
செங்காட்டங் குடிமெய் சிறுத்தொண்டர்க் கடியேன்

கார்கொண்ட கொடைக்கழறிற் றறிவார்க்கும் அடியேன்
கடற்காழிக் கணநாதன் அடியார்க்கும் அடியேன்
ஆர்கொண்ட வேற்கூற்றன் களந்தைக்கோன் அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே ....(6)

பொய்யடிமை யில்லாத புலவர்க்கும் அடியேன்
பொழிற்கருவூர்த் துஞ்சிய புகழ்ச்சோழர்க் கடியேன்
மெய்யடியான் நரசிங்க முனையரையர்க் கடியேன்
விரிதிரைசூழ் கடல்நாகை அதிபத்தர்க் கடியேன்

கைத்தடிந்த வரிசிலையான் கலிக்கம்பர்க் கடியேன்
கழற்சக்தி வரிஞ்சையர்கோன் அடியேன்
ஐயடிகள் காடவர்கோன் அடியார்க்கும் அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே .......(7)

கறைக்கண்டன் கழலடியே காப்புக்கொண்டிருந்த
கணம்புல்ல நம்பிக்கும் காரிக்கும் அடியேன்
நிறைகொண்ட சிந்தையால் நெல்வேலி வென்ற
நின்றசீர் நெடுமாறன் அடியார்க்கும் அடியேன்

துறைக்கொண்டசெம்பவளம் இருளகற்றுஞ் சோதித்
தொன்மயிலை வாயிலான் அடியார்க்கும் அடியேன்
அறைக்கொண்ட வேல்நம்பி முனையடுவார்க் கடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே .......(8)

கடல்சூழ்ந்த உலகெலாம் காக்கின்ற பெருமான்
காடவர்கோன் கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன்
மடல்சூழ்ந்த தார்நம்பி இடங்கழிக்கும் தஞ்சை
மன்னவனாம் செருத்துணைதன் அடியார்க்கும் அடியேன்

புடைசூழ்ந்த புலியதன்மேல் அரவாட ஆடிப்
பொன்னடிக்கே மனம் வைத்த புகழ் துணைக்கும் அடியேன்
அடல்சூழ்ந்த வேல்நம்பி கோட்புலிக்கும் அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே .......(9)

பத்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன்
பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன்
சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன்
திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன்

முப்போதுந் திருமேனி தீண்டுவார்க் கடியேன்
முழுநீறு பூசிய முனிவருக்கும் அடியேன்
அப்பாலும் அடிச்சார்ந்த அடியார்க்கும் அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே ........(10)

மன்னியசீர் மறைநாவன் நின்றவூர்ப் பூசல்
வரிவளையால் மானிக்கும் நேசனுக்கும் அடியேன்
தென்னவனாய் உலகாண்ட செங்கணார்க் கடியேன்
திருநீல கண்டத்துப் பாணனார்க் கடியேன்

என்னவனாம் அரனடியே அடைந்திட்ட சடையன்
இசைஞானி காதலன் திருநாவ லூர்க்கோன்
அன்னவனாம் ஆரூரன் அடிமைகேட் டுவப்பார்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே ........(11)

Note:

The meaning of these lines will become clear as the stories about the nAyanmArs unfold! So I am not giving a translation to these verses.






 
Bhagavathy bhaagavatam - skanda 9

9# 23. சங்க நாதம்

கணங்களுடன் களம் சென்றார் சிவபெருமான்;
வணங்கினான் தரையில் இறங்கிய சங்க சூடன்.

புரிந்தனர் யுத்தம் நூறு ஆண்டுகள் தொடர்ந்து!
தெரியவில்லை வெற்றி தோல்வி ஏற்படும் வழி!

உயிர் பெறச் செய்தார் சிவன் மாண்டவர்களை;
புயலுக்குப் பின் அமைதியானது போர்க்களம்.

பிராமணக் கிழவன் ஒருவன் வந்தான் யுத்த பூமிக்கு;
பிரார்த்தனை செய்தான் ஒரு பொருளை ஈந்திட!

சத்தியம் செய்தான் சங்க சூடன் தருவதாக;
“நித்தியம் அணியும் மந்திரக் கவசம் தாரும்!”

தந்து விட்டான் சங்கசூடன் சத்தியம் காக்க;
அந்தணன் மாறினான் போலி சங்க சூடனாக!

சென்று கூடினான் துளசியைக் கணவனைப் போல!
சென்று மறைந்து விட்டது அவள் பதிவிரதா தர்மம்!

பதிவிரதா தர்மத்துக்குப் பங்கம் நேர்ந்ததும்
விதி வசமாக அழிந்தது ‘விதி’ தந்த வரமும்.

நெருங்கிவிட்டது மரண காலம் சங்க சூடனை!
எறிந்தார் சிவன் பிரம்மாண்டமான சூலத்தை!

தியானத்தில் அமர்ந்தான் சங்க சூடன் உடனே!
பாய்ந்த சூலாயுதம் பஸ்பமாக்கியது சங்க சூடனை.

திவ்விய உருவம் எடுத்தான் அவன் சுதாமனாக!
திவ்விய விமானம் வந்து இறங்கியது அவன்முன்.

அடைந்தான் கோலோகத்தை அதில் அமர்ந்து;
அடைந்தான் ராதா, கிருஷ்ணர்களை மீண்டும்.

வணங்கினான் ராதா, கிருஷ்ணர்களை அன்போடு;
அணைத்துக் கொண்டானர் சுதர்மனை அன்போடு!

சூயாயுதம் திரும்பிச் சென்றது சிவபெருமானிடம்;
சூலாயுதம் மாற்றியது எலும்புகளைச் சங்குகளாக.

சங்குத் தீர்த்தம் புனிதத் தீர்த்தம் தெய்வங்களுக்கு;
சங்கின் ஓசை லக்ஷ்மிகரமானது தெய்வங்களுக்கு.

சங்கு இருக்கும் இடத்தில் இருப்பாள் லக்ஷ்மி;
சங்கு இல்லாத இடத்தை அலக்ஷ்மிகரம் என்பர்.

சிவலோகம் திரும்பி விட்டார் சிவபெருமான்;
திமிலோகப் பட்டது தேவ துந்துபியின் நாதம்!

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

9# 23. The sound of the conch

Siva entered the war field accompanied by his Siva gaNAs. Sankha Choodan got down from his vimAnam and paid his obeisance to Lord Siva. Then they fought for one hundred long years. There was no sign of victory or defeat to either of them!

Siva resurrected all those who had died in the war. There was a calm after the storm. Then an old brahmin came to the war front. He begged Sankha Choodan for a specific gift. Sankha Choodan promised to give him whatever it might be. Now the old brahmin wanted the mantra kavacham always worn by Sankhachooda which was protecting him.

Just to keep up his promise, Sankha Choodan parted with his mantra kavacham and immediately he lost its magical protection. The old brahmin new transformed himself to look like another Sankha Choodan and wore the mantra kavacham around his neck!

He went to Tulasee as if he were her real husband and enjoyed marital pleasures with her. Without her knowledge, Tulasee had lost her pavi-vratA dharmam.

The boon given by Brahma had become powerless now. Sankha Choodan also became powerless after parting with his mantra kavacham. His end had neared.

Siva threw his huge SoolAyudam at him. Sankha Choodan sat down in deep dhyAnam immediately in the war field. The SoolAyudam hit him and reduced him into a heap of ash but his bones had become auspicious rare conches.

Sankha Choodan got back his divya sareeram as SudAman of GolokA. A vimAnam came down to take him back to the Goloka. He met RAdhA and Krishna and prostrated to them. They hugged him with great affection.

The SoolAyudam returned to the hands of Siva. All the bones of Sankha Chooda had became rare conches. Conches are auspicious to all the Gods. The water poured from a conch becomes a teeth – a holy water. The sound of a conch is considered very auspicious. Lakshmi Devi dwells wherever there is a conch.

Siva went back to Sivaloka. There was a great rejoicing and the air was filled with the sounds of Deva Dundubi!
 
SEkkizhArin Periya PurANam

#6i . குண்டையூர்க் கிழார்

வாழ்ந்து வந்தார் குண்யூடைர் என்ற திருத்தலத்தில்
வளமை வாய்ந்த சிவனடியார் குண்டையூர்க் கிழார்.

அன்பு பூண்டிருந்தார் இவர் சுந்தரர் மீது - தந்தார்
அன்புடன் திருத்தொண்டுக்கு வேண்டியவற்றை.

நெல், பருப்பு, வெல்லம், பிறபொருட்கள் எல்லாம்
சொல்லாமலேயே வந்து குவிந்துவிடும் ஆரூரில்.

பஞ்சம் ஏற்பட்டு விட்டது; பயிர்கள் வாடி விட்டன;
அஞ்சினார் கிழார் "வழக்கம் போல் உதவ முடியுமா?"

கனவில் வந்தார் முக்கட்பிரான் அன்று இரவில்;
"கலங்காதே! தந்துள்ளேன் மலையளவு நெல்!"

கூறினான் இறைவன் சுந்தரர் கனவிலும் இதனை!
கூறினார் சுந்தரர் இறைவனுக்கு பலகோடி நன்றிகள்!

குவித்தான் நெல்லை மலைபோலக் குண்டையூரில்
குபேரன் அன்றிரவே ஆண்டவன் இட்ட கட்டளைப்படி.

மயங்கினார் கிழார் நெல்மலையின் உயரம் கண்டு!
தயங்கினார் கிழார் "நெல்லை அனுப்புவது எங்கனம்?"

சென்றார் கிழார் சுந்தரருக்கு விந்தையைச் சொல்ல;
சென்றார் சுந்தரர் குண்டையூர் விந்தையைக் காண.

சந்தித்தனர் இரு அன்பர்களும் வழியிலேயே;
சிந்தித்தனர் "நெல்லை அனுப்புவது எங்கனம்?"

சிந்தாகுலம் அடைந்தார் சுந்தரர் நெல் மலை கண்டு;
வந்தனை செய்து பாடினார் திருக் கோளிலியில்.

அரனாரின் அசரீரி ஒலித்தது வானத்திலிருந்து அப்போது!
"அஞ்சாதே! பூத கணங்கள் நெல்லை கொண்டு சேர்க்கும்!"

இரவோடு இரவாக மறைந்து விட்டது செந்நெல்மலை.
நிரப்பின பூதங்கள் நெல்லைத் திருவாரூர் வீதிகளில்.

இல்லங்களில் சேமித்தனர் வீதியிலிருந்த நெல்லை;
எல்லையில்லாக் கருணையை ஏத்திப் புகழ்ந்தனர்.

நிகழ்த்தினார் பல விந்தைகளைச் சுந்தரர் அங்கு!
புகழுடன் வாழ்ந்து வந்தார் சுந்தரமூர்த்தியார் அங்கு!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#6i. GuNdaiyoor KizhAr

A staunch devotee of Siva lived in GuNdaiyoor. He was very well of and was addressed to with great respect as GuNdaiyoor KizhAr. He had special regard for Sundadar. He used to donate all the materials needed for the welfare activities conducted by Sundarar. Paddy, Lentils, Jaggery and everything else needed by Sundarar would be sent to him regularly by KizhAr.

Once the there was a famine. KizhAr was afraid that he might not be able to extend his help to Sundarar as usual. Siva appeared in his dream on that night and said," Do not worry. I have given you a heap of paddy as huge as a mountain. Siva appeared in the dream of Sundarar and conveyed this message.

Kuberan left a heap of paddy in GuNdaiyoor as commanded by Lord Siva. The next day The KiZhAr was stunned to see the heap of paddy. He got worried as to how best to transport the paddy to Thrivaroor. He went ahead to meet Sundarar and share this good news.

Sundarar went to GuNdaiyoor to see he heap of paddy. Both these friends meet on the way and went back to GuNdaiyoor together.

Sundarar also worried about how to transport the paddy to Thiruroor. He sang a padhigam to Siva in ThirukkOLi. An asareeri spoke thus "The bootha gaNas will transport all the paddy to Thiruvaroor tonight"

The paddy was transported by the Siva GaNas during the night and they heaped the paddy in all the streets of ThiruvAroor. Sundarar said that people living in ThiruvAroor could take all paddy lying in front of their homes. So the starving people got food to eat and praised Siva and Sundarar

Sundarar performed many such miracles and lived on winning the affection of the people there.




 
bhagavathy bhaagavatam - skanda 9

9#24a. மாயமும், தாபமும்!

“பதிவிரதை துளசி கற்பிழந்தது எப்படி?” என,
“சதி செய்த அந்தணன் விஷ்ணு அல்லவா?


மந்திரக் கவசத்தைப் பெற்றான் விஷ்ணு;
தந்திரமாக வடிவெடுத்தான் சங்க சூடனாக!


வெற்றிக் களிப்போடு திரும்பினான் துளசியிடம்,
வெற்றி முழக்கம் இடும் சேனைகளுடன் வந்து!


பலகணி வழியாக அவர்களைப் பார்த்த துளசி
பரவசம் அடைந்தாள் கணவனைக் கண்டதும்!


வழங்கினாள் தான, தர்மம் அங்கஹீனர்களுக்கு;
வழங்கினாள் விடுதலை சிறைக் கைதிகளுக்கு!


அந்தப்புரத்தில் கணவனாக நுழைந்தான் விஷ்ணு;
அமரச் செய்தாள் அவனை ரத்தின அரியணையில்.


காம இச்சை பெருகியது கணவனைக் கண்டதும்;
தாம்பூலம் தந்தாள் பச்சைக் கற்பூர சூர்ணத்தோடு.


“நம்ப முடியவில்லை நீங்கள் வெற்றி பெற்றதை!
அம்புவியில் சங்கரனை வெல்லவும் இயலுமோ?


சங்கரனை நீர் வென்றது எங்கனம் எனக் கூறுவீர்!”
சங்க சூடன் போலச் சிரித்தபடிக் கூறினான் விஷ்ணு.


“போர் செய்தோம் இருவரும் ஓயாமல் நெடுங்காலம்;
பிரியம் கொண்டவன் பிரமன் எங்கள் இருவரிடமும்.


அறிவுறுத்தினான் போர் தேவையில்லை என்பதை;
திருப்பித் தந்துவிட்டேன் அமரர்களின் உலகத்தை.


சென்று விட்டார் சிவபெருமான் கைலாயம் – மேலும்
சென்று விட்டனர் அமரர்கள் தங்கள் சுவர்க்கத்துக்கு!”


கூடி மகிழ்ந்தான் துளசியுடன் காம லீலைகளில்!
ஊடினாள் துளசி நவீன லீலா வினோதங்களால்!


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


9#24a. The Trick and the Curse


NArada asked NArAyaNan,”Tulasee is a chaste woman. What made Tulasee lose her chastity? Pease tell me all about it”


NArAyaNan replied to NArada,” It was VishNu in the disguise of an old Brahmin who had taken away the mantra kavacham from Sankha Choodan in the war field.


He wore the mantra kavacha and transformed himself to look like Sankha Choodan. He went back to Tulasee with his army in jubilation and victorious celebration.


Tulasee looked at them from her balcony and became very happy to see her dear husband. She gave gifts to the physically challenged people and released the prisoners from the prison.


VishNu entered the chamber of Tulasee as if he were really her Sankha Choodan. Tulasee was overcome by passion when she saw her husband after a long time. She made him sit on a throne studded with precious gems. She gave him betel leaves folded with fresh camphor inside them.


She told him,”It is hard to believe that you have won over Lord Sanakra. Can anybody defeat Lord Sankara in a war? Tell me all about it as I am eager to know how you had won over him ?”


VishNu laughed as Sankha Choodan would laugh and replied,” Both of us fought for a very long time without a sign of victory or defeat. Brahma Devan loves both of us alike. He made both of us understand that there was no need to fight a war.


I returned the Swarggam to the Devas and the war ended. Sankara went back to his abode and the Devas too went back to their abode happily.”


Vishnu posing as Sankha Choodan indulged in amorous sports with Tulasee. She was puzzled since these were very different from what Sankha Choodan used to indulge in
.




 
SEkkizArin Periya PurANam

#6j. கோட்புலி நாயனார்

ஆரூரரிடம் அன்பு பூண்டிருந்தார் சிவனடியார்
திருநாட்டியாத்தாங்குடி கோட்புலி நாயனார்.

அழைப்பை ஏற்றுக் சென்றார் சுந்தரர் அவரிடம்;
அழைத்துச் சென்றார் கோட்புலியார் மகிழ்வோடு.

செய்தார் அரிய பாதபூஜை சுந்தரருக்கு அவர்;
செய்தார் பல உபசாரங்கள் மரியாதையுடன்.

வணங்கச் செய்தார் தம் புதல்வியர் சுந்தரரை;
வணங்கிப் பெற்றனர் சுந்தரரின் ஆசிகளை.

திருவாரூரிலேயே தங்கி விட்டார் பல திங்கள்;
தியாகேசனைப் பாடினார் செந்தமிழ் பாக்களால்.

நெருங்கி விட்டது பங்குனி உத்தர விழா- அதனை
விருப்புடன் கொண்டாடுவர் மிகக் கோலாகலமாக.

அளிப்பாள் பரவையார் அடியார்களுக்குத் தானம்;
களிப்பாள் திரு அம்பலத்தில் அற்புத நடனம் ஆடி.

பொருள் திரட்டச் சென்றார் சுந்தரர் புகலூர் - தன்
கருத்தினைப் பாடினார் ஒரு பதிகமாகப் புகலூரில்.

துயிலவில்லை சுந்தரர் எந்த மடத்திலும் அன்று;
துயில் கொண்டார் அங்கேயே முற்றத்தில் இரவு.

சுட்ட செங்கற்களை அடுக்கி அதன்மீது - வெண்
பட்டை விரித்துப் படுத்து உறங்கிவிட்டார் நன்கு.

துயில் நீங்கி எழுந்தவுடன் கண்டு மிக வியந்தார்;
தூய பொற்கட்டிகளாக மாறியிருந்தன செங்கற்கள்.

பொற்கட்டிகளை அளித்தார் பரவையாருக்கு - அவை
பெரிதும் உதவும் திருப்பணிகள், தானம் செய்வதற்கு.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#6j. KOtpuli nAyanAr


Kotpuli nAyanAr lived in a place called Thiru NAttiyAththAn Kudi. He was ardent devotee of Lord Siva and an admirer of Sundarar. He invited Sundarar to his place. Sundarar accepted the invitation and visited Kotpuli nAyanar.

Sundarar was received with the traditional welcome and pAdha poojai. The daughters of Kotpuli nAyanar paid their obeisance to Sundarar and got blessed by him. Sundarar stayed on ThiruvAroor for many more months. He sang in praise of ThyAgEsan to his heart's content.

Panguni Uththiram is an auspicious day for Siva. The day would be celebrated with enthusiasm. It was the time Paravai nAchiyAr would give generous dhAnam to the deserving people. It was the time she would dance in front of her favorite deity.

Sundarar went to Pugaloor in order to raise money for the ceebration. He did not sleep in any mutt on that night. He spent the night on a pile of bricks covered with his white uthareeyam. When he woke up the next morning all the bricks had turned into solid gold.

He gave the gold to Paravai NAchiyAr so that Panguni Uththiram could be celebrated in a grand manner.

 
Bhagavathy bhaagavatam - skanda 9

9#24b. தாபமும், சாபமும்!

“யார் நீ உண்மையைக் கூறி விடு உடனே! – நீ
யாராக இருந்தாலும் நான் சபிப்பேன் உன்னை.


கற்பைச் சூறையாடிவிட்டாய் கணவன் உருவில்!
அற்பப் பதரே! நீ யார் என்ற உண்மையைக் கூறு!”


சாபத்துக்கு அஞ்சாதவர் யார் உள்ளார்? – பரி
தாபத்துடன் காட்டினார் விஷ்ணு சுயவுருவை.


மயங்கி மூர்ச்சையடைந்து விழுந்தாள் துளசி.
மயக்கம் தெளிந்ததும் ஆத்திரம் கொண்டாள்.


“என்ன காரியம் செய்து விட்டீர் மாயாவியே?
என்ன பாவம் செய்தேன் இந்தத் தண்டனை பெற?


வஞ்சகமாகச் சூறையாடி விட்டீர் என் கற்பை!
வஞ்சகம் வாழாது! வாழவும் கூடாது உலகில்!


கல் நெஞ்சம் படைத்துள்ளீர் நீர் – ஒரு
கல்லாகக் கடவது என்று சபிக்கின்றேன்!”


விஷ்ணு தேற்றினார் சீறிச் சினந்த துளசியை,
விஷ்ணு கூறினார் பல வினோத விவரங்களை!


“என்னை அடைய விரும்பி நீ தவம் செய்தாய்;
உன்னை அடையச் சங்க சூடன் தவம் செய்தான்!


திருமணம் செய்து கொண்டீர்கள் தவப் பயனாக!
ஈருடல் ஓருயிர் என வாழ்ந்தீர் ஒரு மன்வந்தரம்!


பலிக்க வேண்டும் நீ செய்த தவமும் துளசி – நான்
அளிக்க வந்தேன் உன் தவப் பயனை உனக்கு.


மனித உடலை நீத்து விடப் போகின்றாய் துளசீ;
புனித உடல் பெற்று என்னுடனே இருப்பாய் நீ!


மாறி விடும் உன் உடல் புனித கண்டகி நதியாக!
மாறி விடும் உன் ரோமங்கள் துளசிச் செடியாக!


கூறுவேன் இனித் துளசிச் செடியின் மகிமையை
பொறுப்பாய் நான் உனக்குச் செய்த பிழையை!”


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


9#24b. The curse and the consoling

Tulasee became wild with anger.” You coward! Reveal your real identity to me now! I will curse you whoever you may be! You looted my virtue disguised as my husband. I will never forgive you!”


VishNu reveled his true identity and Tulasee swooned as soon as she saw him. When she came round she asked VishNu,” What have you done oh MAyAvee? What have I done to get this punishment?


You were treacherous to come under a disguise and defile me. You are stone-hearted. I curse you that you will become a stone.”


VishNu consoled her by revealing many facts. “Tulasee you wished to marry me and did severe penance. SudAman wished to marry you and he too did severe penance.


He married you as the fruit of his penance and lived with you happily for one Manvantara. Now it is time that you obtain the fruits of your penance. I have come here to grant you the fruits of your long and hard penance.


You will cast away your mortal body now and attain a holy body and reside with me always. Your mortal body will become the holy GaNdaki river. Your hairs will become the holy Tulasee trees. I will tell you the greatness of the Tulasee tree now. Pardon me for my wrong action done to you!”




 
SEkkizhArin Periya PurANam

#6k . சுந்தரரின் தலயாத்திரை

"திரு மழப்பாடிக்கு வர மறந்தனையோ ?" என்று
திருவாய் மலர்ந்து அருளினான் பரமன் கனவில்.

"பொன்னார் மேனியனே! புலித்தோலை..." என்று
பொன்வண்ண மேனியானைப் பாடித் தொழுதார்.

திருவானைக்காவில் பாமாலை சூட்டினார் பிரானுக்கு;
திருப்பாச்சிலாச்சிரமம் அடைந்து பொன் வேண்டினார்.

தரவில்லை ஈசன் பொன்னைச் சுந்தரர் கேட்ட உடனேயே.
தராத இறைவனை இகழ்ந்து பதிகம் பாடினார் சுந்தரர்;

திருக் கடைக்காப்பில் பொறுத்து அருளும்படி வேண்ட
பெருமான் அளித்தார் சுந்தரருக்கு ஒரு பொற்குவியல்!

அடைந்தார் திருப்பைஞ்ஞலியை; தொழுதார் அரனை;
அளித்தார் காட்சி கங்காள வேடத்தில் சிவபெருமான்.

அடைந்தார் திருப் பாண்டிக் கொடுமுடியை - அங்கு
அளித்தார் "மற்றுப் பற்றெனக் கின்றி.." பதிகத்தை.

காணவில்லை பெருமானை திருப்போரூர் கோவிலில்;
கண்டுகொண்டார் நந்தியின் குறிப்பால் இறைவனை.

உழவுத் தொழில் செய்யும் பணியாளன் தான் சிவன்;
உடன் இருந்து உதவும் பணிப்பெண் உமை அன்னை.

உழுது நீர் பாய்ச்சியவர் தேவர்களும், கணங்களும்,
உன்னதமான பிற விண்ணுலகத் தெய்வங்களும்!

சென்றார் சுந்தரர் சிவத் தலங்களைத் தரிசித்தபடி;
செல்லவில்லை கூடலையாற்றுப் பதி கோவிலுக்கு.

புறப்பட்டார் முதுகுன்றத்தை நோக்கிச் சுந்தரர்;
எதிர்ப்பட்டார் அந்தணர் வேடத்தில் எம்பெருமான்.

வழிகாட்டினார் கூடலையாற்றுக்குப் போவதற்கு;
வழித்துணை ஆனார் அவ்வூரின் எல்லைவரை.

புகழ்ந்து பாடினார் கூடலையாற்றுப் பெருமானை;
மகிழ்வுடன் சென்று அடைந்தார் முதுகுன்றூர் பதி,

பொருள் வேட்கையால் பரமன் பதம் போற்றிடத்
திருவுள்ளம் கனிந்து தந்தார் 12, 000 பொற் காசுகள்.

உள்ளம் மகிந்த சுந்தரர் கவலைப் பட்டார், "எங்கனம்
கள்ளர்களிடம் இருந்து காத்து எடுத்துச் செய்வது?" என.

"மூழ்கச் செய்வாய் மணிமுத்தாற்றில் பொற்காசுகளை;
மூழ்கி எடுப்பாய் அவற்றைத் திருவாரூர் திருக்குளத்தில்"

ஒலித்தது அசரீரி சுந்தரருக்கு வழிகாட்டும் வண்ணம்
ஒளிரும் பொற்காசுகளை விடுத்தார் மணிமுத்தாற்றில்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#6k. The Pilgrimage (Thala yAthirai)


Siva appeared in Sundarar's dream and put a question to him, "Have you forgotten to visit me Thiru mazhap pAdi?" Sundarar visited Thiru mazhap pAdi and sang the padhigam "PonnAr mEniyanE! pulith thOlai arikkasaiththu"

He visited ThiruvAnaikkA and praised Lord Siva in his padhigams. He requested for gold after he reached Thiru pAchilAchiramam but Siva did not give him the gold he begged for.

Sundarar sang padhigams insulting Siva but later on begged to be forgiven for his rudeness in the thiruk kadaik kAppu. Siva forgave him and also gave Sundarar the gold he asked for.

Sundarar reached Thiru painjnjali. Lord Siva gave his dharshan as a KangAlan. Sundarar reached Thirup pANdik kodumudi. He praised his lord by singing "matrup patrenak kindri " one of his very famous padhikams.

He was shocked not to find Siva in Thiurp pOrur. Nandi indicated to Sundarar the presence of Siva there. Siva was the farmer and his helper was Uma Devi. The Devas were helping them for ploughing and irrigating the field.

Sundarar visited many places auspicious to Siva but he did not visit Koodalai Atruppadhi. He planned to go to Muthu Kundram instead. Siva came opposite to him disguised as a brahmin. He guided and accompanied Sundarar up to Koodlai Atrup padhi.

Sundarar praised the lord at Koodalai Atrup padhi and proceeded to Muthu kundroor padhi. He praised the God and wished for more gold. Siva presented him with 12,000 gold coins. Now Sundarar became worried as to how to carry all that gold and protect it from the potential thieves.

An asareeri told him, "Drop these coins in the rvier MaNi muththAru. You can recover them from the Pond in ThiruvAroor. Sundarar took a small piece to compare the purity of gold and dropped the rest in the river water as directed by the voice of God.




 
bhagavathy bhaagavatam - skanda 9

9#24c. துளசி மஹிமை

“வாசம் செய்வர் தேவர்கள், தெய்வங்கள்
வாசம் மிகுந்த துளசிச் செடியின் அடியில்!


புனித நீராக மாறிவிடும் துளசியின் கீழ்
மனிதர் தேக்கும் சாதாரண நீரும் கூட!


துளசித் தீர்த்தத்தால் செய்கின்ற அபிஷேகம்
வளம் தரும் ஆயிரம் குடம் பாலபிஷேகம் போல.


அருந்துபவர் அடைவர் விஷ்ணு லோகத்தை
மரண காலத்தில் துளசி நீரால் பாவனமாகி.


லக்ஷம் அஸ்வமேத யாகப் பலனைத் தரும்
லக்ஷ்மீகரமான துளசி மாலை அணிபவருக்கு!


பொய் சத்தியம் துளசியின் அடியில் செய்பவன்
வெய்யிலில் புழுப் போல துடிப்பான் நரகத்தில்!


துவாதசி, மாதப் பிறப்பு, அமாவாசை, பௌர்ணமி
தூய்மையற்ற நாட்களில் துளசியைத் தீண்டுவது


விஷ்ணு தலையைக் கொய்த பாவத்தைத் தரும்!
வீணாக்கவே கூடாது துளசியின் இலைகளை.


கல்லாகும்படிச் சபித்தாய் நீ என்னை – கிடப்பேன்
கல் மலையாக மாறி கண்டகி நதிக் கரையினில்.


கிருமிகள் துளைத்து துவாரம் இடும் அக்கற்களில்;
உருவாக்கும் என் அரிய சின்னகளை அக்கற்களில்!


கண்டகி நதியினில் விழும் இந்த சாளக்கிராமங்கள்;
வண்ணம் மாறும் பிங்களமாக சூரியனின் ஜாலத்தால்!


தீர்த்த ஸ்பரிசம் தரும் தீர்த்த ஸ்நானப் பயனை;
மூர்த்தி பூஜை தரும் யாகங்கள் செய்த பலனை!


சாளக்கிராமம், சங்கு, துளசியைப் பூசிப்பவன்
விளங்குவான் ஞானியாக, விஷ்ணு பக்தனாக!”


துளசி எடுத்தாள் ஒரு திவ்விய உடலை;
துளசி அடைந்தாள் திருமால் திருமார்பை.


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


9#24c. The greatness of Tulasee

Vishnu told Tulasee the greatness of Tulasee Vruksham and the Tulasee leaves.


“The Devas and Gods reside under the Tulasee Vruksham. The ordinary water poured at the foot of the Tulasee plant become a holy theertam. The abhishekham done with the Tulasee teerthm will yield the merits of the abishekham done with one thousand pots of pure milk.


The person who drinks Tulasee theertam at the death bed will reach Vishnu Lokam having been purified by it. The person who wears a Tulasee MAlA will get the merits of performing one hundred thousand AswamEda YAgams.


One who swears under the Tulasee vruksham uttering a falsehood will land in the hell and suffer like a wriggling worm under the scorching sun.


It is wrong to touch the Tulasee plant on DwAdasi, the first day of the month, the full moon day and the new moon day. This will give the sin equivalent to cutting off the head of Lord VishNu. Tulasee leaves should never be wasted.


Tulasee! You have cursed me to become a stone. I will become a huge mound of stone and lie at the bank of river GaNdaki. Thousands of tiny worms will drill holes in those stones forming my holy symbols in them.


These SAlagrAmas will fall into the GaNdaki river water. They will turn golden yellow by the play of the sunlight. The mere touch of this water will give the same merit as a bath taken in it.


The pooja done to this moorti will yield the same merit as a yAgA. One who worships the SAlgrAma, Tulasee and the conch will become a great JnAni and a staunch devotee of VishNu!”


Tulasee cast off her mortal body and took a divya roopam.
She is residing on the chest of Sri VishNu ever since then.



 
SEkkizhArin Periya PurANam

#6l . பங்குனி உத்திர விழா

அடைந்தார் தில்லையம்பதியைச் சுந்தரர்;
அழைத்துச் சென்றனர் அந்தணர்கள் அவரை;

பரவசம் அடைந்தார்; பதிகங்கள் பாடினார் - பின்பு
புறப்பட்டுச் சென்றார் தலயாத்திரை திருவாரூருக்கு.

பாமாலை சார்த்தி வணங்கினார் பெருமானை - சிவ
நாமம் ஜெபித்தபடித் திரும்பினார் பரவையரிடம்.

"இட்டேன் பொற்காசுகளை மணிமுத்தாற்றில்;
இட்ட பொன்னை மீட்பேன் திருக் குளத்திலிருந்து.

மயங்கினாள் இதைக் கேட்ட பரவை நாச்சியார்;
தயங்கினாள் "ஆற்றிலிட்டது குளத்தில் கிடைக்குமா?"

கிடைக்கவில்லை பொற்காசுகள் திருக் குளத்தில்!
மடை திறந்த வெள்ளம் போலப் பாடினார் பதிகங்கள்!

ஒன்பது பாடல்கள் பாடியதும் கிடைத்தன காசுகள்;
ஒத்துப் போகவில்லை இந்தப் பொன்னின் மாற்று!

பத்தாவது பாடல் பாடியதும் மாற்று ஒத்துப் போனது!
பார்த்தவர்கள் நின்று விட்டனர் வியப்பில் ஆழ்ந்து!

விமரிசையாகக் கொண்டாடினர் பங்குனி உத்திரம்;
விடாமல் சிவத் தொண்டுகள் புரிந்து வாழ்ந்தனர்.

திருத்தல யாத்திரையை மேற்கொண்டார் சுந்தரர்;
இருக்கவிடவில்லை சிவபக்தி ஓரிடத்தில் அவரை.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#6l. Panguni uththiram

Sundarar reached Thillai Chidambaram. The Thillai Brahmins welcomed him and took him to the temple. He became very happy and sang the praise of his lord in beautiful padhigams. Then he went to ThiruvAroor, visiting all the Siva Kshethrams on the way. He sang the praise of ThyAgEsan and went back to Paravai nAchiyar chanting the names of Siva.

He told Paravai nAchiyAr about his adventures. He said, "I have dropped 12,000 gold coins in the River MaNi muththaRu. Now I am going to get back from the local pond. Paravai nAchiyAr could not help wondering, "How can one recover the coins dropped in a river in one pace from the pond in another place?"

But Sundarar could not recover the gold coins from the pond. After he sang nine padhigams, he recovered those coins. He compared the purity using a touch stone. The coins from the river were less pure than the one he had dropped in the river. He sang his tenth padhigam and the coins attained the same purity as those dropped by him in the river.

People were wonder struck by these events. Panguni Uthiram was celebrated in a very grand manner with the help of these gold coins. Paravai nAchiyAr and Sundarar continued doing their service to the humanity. Later Sundarar started his next round of pilgrimage. His deep love and devotion to Siva would not let him stay put in one place for a long time.






 
bhagavathy bhaagavatm - skanda 9

9#25a. சாவித்திரி பூஜை (1)

“எதற்காகப் பிறந்தாள் சாவித்திரி தேவி?
எவரெவர் பூஜித்தனர் வேதத்தின் தாயை?”


வினவினான் நாரத முனிவன் நாரணனிடம்,
விளக்கினான் நாரத முனிவனுக்கு நாரணன்.


“பிரமன், தேவ கணங்கள், பண்டிதர்கள் மேலும்
அஸ்வபதி, நான்கு வர்ணத்தவர்கள் பூஜித்தனர்.


பத்திர தேசத்து அரசன் அஸ்வபதி; அரசி மாலதி;
பக்தியோடு உபதேசம் பெற்றாள் வசிஷ்டரிடம்


ஆராதிக்கும் விதிகளை சாவித்திரி தேவியை;
ஆராதித்தாள் தேவியை பக்தியோடு பல காலம்.


காட்சி தரவில்லை தேவி அவளுக்கு – மாலதி
நாட்டுக்குத் திரும்பினாள் தன் அரண்மனைக்கு!


அஸ்வபதி அறிந்தான் அரசி படும் துயரை;
புஷ்கரத்தில் செய்தான் நூறாண்டு கடும் தவம்.


ஆகவில்லை பிரத்யக்ஷம் தேவி அஸ்வபதிக்கும்;
அசரீரி ஒலித்தது விண்ணிலிருந்து அப்போது!


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


9#25a. SAvithri Pooja (1)


“Why was SAvithri Devi born? Who all did worship SAvithri Devi?” NArada asked and NArAyNan replied!


“Brahma, The Deva GaNas, the pundits, king Aswapathi and the people of all the four varNas worshiped Devi SAvithri!


Aswapathi was the King of Bhadra desam. His wife was queen MAlathi. She got upadesam from sage Vasishta with great care. She learned the method of worshiping SAvithri Devi and did worship the Devi for a very long time.


But SAvithri Devi did not give dharshan to her. She got very much disappointed and went back to her country and her palace.

King Aswapathi learned about the disappointment of his dear wife. He too did penance in Pushkara Kshethram for a very long time. Yet Savithri Devi did not give him her dharshan.


An asareeri sounded from the heaven. “Do Gayatri japam one hundred thousand times!”




 
SEkkizhArin Periya PurANam

#6m. அரன் அளித்த உணவு

திருத்தல யாத்திரையை மேற்கொண்டார் சுந்தரர்;

திருத்தோணியப்பரைத் தொழுதார் சீர்காழியில்.

தளர்ந்து விட்டனர் குருகாவூர் செல்கையில் - நடந்த
களைப்பினால் சுந்தரரும், அவரது தொண்டர்களும்.

குளிர்ப்பந்தல் அமைத்தார் சிவபெருமான் அங்கே.
குளிர்ந்த நீரும், உணவும் அளித்தார் குழுவினருக்கு

துயின்றனர் குழுவினர் பயணக் களைப்பு மேலிட்டதால்!
மயங்கினர் விழித்தபின் அந்தப் பந்தலைக் காணாமல்!

தில்லையை அடைந்தனர் சுந்தரரும், தொண்டர்களும்;
தில்லைவாழ் அந்தணர் எதிர்கொண்டு வரவேற்றனர்.

கண்டு களித்தனர் தில்லை நடராஜனை - சுந்தரர்
தொண்டர்களுடன் தெடர்ந்தார் தல யாத்திரையை.

அந்தணர் வடிவம் தங்கி வந்தார் அங்கு எம்பெருமான்.
"அன்னம் இரந்து வருகின்றேன் அமருங்கள் இங்கேயே!"

இரந்து பெற்றார் அன்னத்தை அங்குவாழும் அந்தணரிடம்;
உவந்தது அளித்தார் அன்னத்தை அந்தக் குழுவினருக்கு.

வந்து சேர்ந்தார் தொண்டர்கள் குழுவுடன் காஞ்சி நகருக்கு;
வரவேற்றனர் மெய்யன்பர்கள் இனிய வாத்திய இசையுடன்.

வணங்கினார் சுந்தரர் காஞ்சி ஏகாம்பரேசர் சன்னதியை.
வணங்கினார் சுந்தரர் கஞ்சி காமாக்ஷியின் சன்னதியை.

தொடர்ந்தனர் தலயாத்திரையைச் சில தினங்களுக்குப் பின்;
அடைந்தனர் நடந்தும் கடந்தும் திருக் காளஹத்தி மலையை.

அடைந்தனர் திருவொற்றியூரைத் தலயாத்திரையின் போது;
விட மனம் இன்றித் தங்கிவிட்டனர் குழுவினர் அங்கேயே.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

#6m. The food given by Siva

Sundarar and his disciples went on their next pilgrimage. They worshiped Thiru ThONiyappar in SeerkAzhi. They became tired, hungry and thirsty while travelling to Guru KAvoor.

Siva took pity on them and erected a pandhal on their way. He served them food and gave cool drinking water. All the pilgrims fell asleep after eating. After they woke up the pandhal vanished into thin air.

The group then reached Thillai Chidambaram. The brahmins of Thillai welcomed them heartily. The pilgrims prayed to Thillai NatarAjan and continued their journey. The group became very hungry and thirsty.

Siva came to them disguised as a brahmin. He told them, "I will beg for food from the brahmins and bring it for you. Please stay here and do not go away till I come with the food." He went around and collected food for the group.

Then the pilgrims went to KAnchi. The devotees of Siva welcomed them. The pilgrims prayed to KAnchi EkAmbarEsar and to Kanchi KAmAkshi Devi. They visited KALahasthi giri and then Thiru Votriyoor where they decided to stay on longer.

 
நந்தன் சரிதம் ஆனந்தம் அல்லவா ? :dance:

தயார் ஆயின கவிதைகள் இப்போதே. :typing:

தருகின்றேன் ஓவன் ஃ பிரெஷ்ஷாக! :hungry:
 
#18a . திரு நாளைப் போவார் நாயனார்

அமைந்திருந்தது கொள்ளிட நதிக் கரையில்
ஆதனூர் என்னும் சிறந்த சிவத் தலம் ஒன்று.

பூலைப்பாடி ஒன்று இருந்தது ஆதனூரில் - அதில்
புலையர் வாழ்ந்தனர் வேளாண் தொழில் செய்து.

பிறந்தார் நந்தனார் புலையர் குலத்தில் - எனினும்
சிறந்தார் நந்தனார் தம் சீரிய சிவ பக்தியினால்.

புரிந்து வந்தார் நந்தனார் திருத் தொண்டுகள் பலவும்
விரிசடையான் கோயிலுக்குத் தன்னால் இயன்ற அளவு.

வழங்கினார் இசைக் கருவிகளுக்கு நரம்பு, தோல்;

வழங்கினார் இறைவன் பணிக்குக் கோரோசனை.

அனுமதி இல்லை தாழ்குலத்தவர் ஆலயம் நுழைய!
அனுதினமும் ஆடுவார், பாடுவார் ஆலய வாயிலில்!

விரும்பினார் நந்தனார் சிவலோக நாதனைத்
திருப்புன்கூர் திருத்தலத்தில் சென்று வணங்க.

அந்தோ பரிதாபம்! காண முடியவில்லை ஈசனை;
நொந்தார் மனம் மலைபோல மாடு மறைத்ததால்!

விலக்கினான் நடுவே நின்ற நந்தியை எம்பிரான்;
விளக்கினான் நந்தன் பெருமையை உலகினருக்கு.

புல்லரித்தது அவர் மேனி ஈசனின் தரிசனத்தால்;
சொல்லரிய பெரும் பேறு பெற்றார் நந்தனார்.

இருந்தது ஊரின் நடுவே ஒரு பெரும் பள்ளம்;
இருந்தது ஊற்று ஒன்று பள்ளத்தின் நடுவே.

மாறியது பள்ளம் ஸ்வாமி புஷ்காரிணியாக
மாறாது உழைத்த நந்தனாரின் முயற்சியால்.

மீண்டும் அழைத்தான் சிவலோகநாதன் நந்தனை
மீண்டும் அடைந்தார் திருப்புன்கூரை நந்தனார்;

தில்லை சென்று அம்பலக் கூத்தனைக் காண
எல்லை கடந்து பெருகியது நந்தனின் ஆவல்!

மாலையில் சொல்வார், "நாளை செல்வேன் தில்லை!"
காலையில் கலைந்து விடும் கனவு பனிமூட்டம் போல!

"நாளைப் போவேன்!" என்று நாளும் கூறி வந்ததால்
"நாளைப் போவார்" என்ற நாமம் அமைந்து விட்டது!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
#18b. திரு நாளைப் போவார் நாயனார்

கனிந்து விட்டது அரும்பிய ஆவல் பூத்துக் காய்த்து!
"இனியும் செல்லாது இரேன் தில்லைக்கு!" என்றார்.

அடைந்து விட்டார் சென்று தில்லையின் எல்லையை;
அடைய முடியவில்லை ஆலயத்தில் ஈசன் தரிசனத்தை.

மண்ணுலகம் அதிர்ந்தது வேதங்கள் ஓதும் ஒலியால்!
விண்ணுலகம் நிறைந்தது வேள்விகளின் புகையால்!

வலம் வந்தார் தில்லை நகரை! பாடினார்! கூத்தாடினார்!
வலம் வந்தார் ஆலய மதிலை ! பாடினார்! கூத்தாடினார்!

ஈடேறுமா நடராஜனைக் காண விரும்பும் அவர் கனவு?
ஈசன் விடை அளித்தான் இதற்கு ஓரிரவு அவர் கனவில்!

"இப்பிறவி நீங்கிட மூழ்கி எழுவாய் அனலிடை - பின்பு
முப்புரி நூலுடன் வந்தணைவாய் என்னை!" என்றான்.

தோன்றினான் பிரான் தில்லை அந்தணர் கனவிலும்;
ஊன்றினான் இதே கருத்தை அந்தணர் சிந்தையிலும்;

"அழைத்து வாருங்கள் என் அன்பன் நந்தனை - வளரும்
அனலிடை மூழ்கச் செய்து எந்தன் சன்னதிக்கு!" என்றான்.

வந்தனர் தில்லை வாழ் அந்தணர்கள் நந்தனிடம் - வந்து
தந்தனர் நந்தனுக்கு அனுமதி அனலிடை மூழ்கி எழுந்திட.

நெருப்புக்குழி தயாரானது ஆலயத்தின் மதிலின் அருகே;
நெருப்பு நெருப்பை அழித்து விடுமா என்ன? காண்போம்!

வீழ்ந்தார் நந்தனார் அக்கினிக் குண்டத்தில் - அதன் பின்
எழுந்தார் செந்தாமரையின் மேல் உள்ள பிரம்மன் போல்!

பால் வண்ண மேனியோடு, பளீரிடும் வெண்நீற்றோடு,
நூல் அணிந்த மார்போடு, புரளும் உருத்திராக்கத்தோடு.

வியந்தனர் அந்தணர் நந்தனின் திவ்விய ரூபம் கண்டு!
மயங்கினர் தில்லை நடராஜனின் திருவருளைக் கண்டு!

பொழிந்தது மலர் மழை; எழுந்தது வேதங்களின் ஒலி!
வழி காட்டினார் தில்லைவாழ் அந்தணர்கள் நந்தனுக்கு.

குவிந்த கரங்களுடனும், திரு ஐந்தெழுத்துக்களுடனும்
குனித்தப் புருவப் புனிதப் பிரானுடன் ஒன்றி விட்டார்!

திரும்பி வரவில்லை நந்தனார் மீண்டும் வெளியே!
திருவடி நிழலிலேயே கலந்து இணைந்து விட்டார்.

"திருநாளைப்போவார் அடியார்க்கடியேன்"

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
bhagavathy bhaagavatm - skanda 9

9#25b. சாவித்திரி பூஜை (2)

“செய்வாய் காயத்திரி ஜபம் ஒரு லக்ஷம் முறை!”
செப்பியது அசரீரி அஸ்வபதிக்கு இவ்வறிவுரை!


சென்றார் முனிவர் பராசரர் அவ்வழியே – மன்னன்
செய்திருந்த நற் கர்மங்களின் பயனாகப் போலும்!


பணிவுடன் மன்னன் வணங்கினான் முனிவரை;
கனிவுடன் கூறினார் முனிவர் அவனிடம் இதை.


“ஒருமுறை ஜபித்தால் அழியும் ஒரு நாள் பாவம்;
நூறு முறை ஜபித்தால் அழியும் ஒரு மாதப் பாவம்.


ஒரு லக்ஷம் ஜபித்தால் அழியும் ஒரு ஜன்ம பாவம்.
பத்து லக்ஷம் ஜபித்தால் அழியும் பல ஜன்ம பாவம்.


பத்து முறை இதைச் செய்தால் சித்திக்கும் முக்தி;
எத்தகைய பாவத்தையும் அழித்துவிடும் காயத்ரி.


செய்ய வேண்டும் ஜபம் கிழக்கு முகமாக அமர்ந்து!
செய்ய வேண்டும் ஜபம் ஆலயம், நதிக்கரையினில்.


அணிய வேண்டும் ஜபமாலை ஸ்படிக மணிகளால்;
அணிய வேண்டும் வெண்டாமரைக் கொட்டைகளால்!


பூச வேண்டும் கோரோசனை நூறு காயத்ரி ஜபித்து;
புனிதப் படுத்த வேண்டும் கங்கை, பஞ்சகவ்யத்தால்.


பத்து லக்ஷம் காயாத்ரி இந்த மாலையுடன் ஜபித்தால்
பிரத்தியக்ஷம் ஆவாள் கண்முன்னே சாவித்திரி தேவி.”


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


9#25b. SAvithri Devi Pooja (2)

An asareeri sounded from the heavens “Do Gayathri Japam one hundred thousand times!” By the good fortune of King Aswapathi, sage ParAsara was passing by at that time. The king paid obeisance to the sage and asked about the significance of the asareeri.


The sage explained to the king patiently,”If we do the japam of GAyathri mantra once, the sins committed by us in one day will get destroyed! If we do the japam one hundred times, the sins committed in one month will get destroyed.


If we do japam one lakh times, the sins committed in one whole birth will be destroyed. If we do the japa ten lakh times, the sins committed in many births will vanish.


If this is repeated ten times all over again, one will be liberated from SamsAra chakram. One must sit facing east while doing the japam – either in a temple or on a river bank.


The japamAla must be made of crystals or the seeds of white lotus flower. One must do the japa of Gayathri mantra one hundred times and smear Gorochana on the japamAlA. The mAlaA must be sprinkled with pancha gavaya and Ganga water.


If you do the japam of GAyathri mantrA ten lakh times with this mAlA, SAvitri Devi will surely give you her dharshan!” The sage ParAsAra advised the king.




 
SEkkizhArin Periya PurANam

#6n. ஞாயிறு கிழார்

இருந்தது ஞாயிறு பதி திருவொற்றியூர் தலத்தருகே;
இருந்தார் வேளாண்குலச் செல்வந்தர் ஞாயிறு கிழார்.

அருந்தவப் பயனாக வந்து அவதரித்தாள் புதல்வியாக
அநிந்திதை என்னும் உமையன்னையின் அன்புத் தோழி.

சூட்டினார் சங்கிலியார் என்ற திரு நாமத்தை மகளுக்கு;
காட்டினாள் தெய்வத் தன்மை, பக்தி, ஆற்றல், நற்பண்பு.

நாளொரு மேனி காட்டினாள்; பொழுதொரு வண்ணமும்;
வளர்ந்தாள் அந்தத் திருமகள்; அடைந்தாள் மணப் பருவம்;

தேடினர் அருமை மகளுக்கு எற்ற மணாளன் ஒருவனை;
வாடினாள் சங்கிலியார் தன் மன விருப்பத்தைக் கூறாமல்!

தயக்கம் ஏற்படுத்தியது ஆழ்ந்த மன வருத்தத்தை அவளிடம்;
மயக்கம் ஏற்பட்டது அவளிடம் ஏற்பட்ட மன வருத்தத்தினால்.

தெளிவித்தனர் மகள் கொண்ட மயக்கத்தை பெற்றோர்கள்;
வெளியிட்டாள் உள்ளக் கிடக்கையைத் தன் பெற்றோர்களிடம்.

"மணம் முடிப்பேன் இறைவன் அருள் பெற்ற ஒருவரை மட்டுமே!
மனம் ஒப்பாது வேறு எவரையும் திருமணம் செய்து கொள்ள!

திருவொற்றியூர் செல்வதற்கு விழைகின்றது எந்தன் மனம்;
திருவருள் வழியில் ஒழுகி நிற்க விழைகின்றது என் மனம்";

கதி கலங்கினர் பெற்றோர்கள் மகளின் விருப்பத்தைக் கேட்டு.
மதி மயங்கிய பெண்ணுக்குத் தேடவில்லை வேறு மணாளனை.

மணக்க விரும்பினான் சங்கிலியாரையே ஒரு செல்வந்தன்;
மரணம் அடைந்து விட்டான் அவன் திருமணம் முடியும் முன்பே.

பரவி விட்டன புயலில் பரவும் தீயைப்போல பற்பல வதந்திகள்;
வரவில்லை வேறு எவருமே அவளைப் பெண் கேட்டு அதன் பின்.

முடிவு செய்தனர் பெற்றோர் மகளின் விருப்பத்தை நிறைவேற்றிட;
வழி வகுத்தனர் அவள் கன்னி மாடத்தில் கன்னியாக வாழ்ந்திட.

அமைத்தனர் அழகிய கன்னி மாடத்தைத் திருவொற்றியூரில்
ஆலயத்தின் அருகிலேயே மகளின் அருந்தவ வாழ்க்கைக்கு.

இருந்தனர் சேடிகளும், பணிப் பெண்களும் சங்கிலியாருடன்;
இருந்தாள் சங்கிலியார் இறைவன் நினைவாகவே எப்போதும்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#6n. JnAyiru kizhAr

JnAyiru pathi was situated near ThiruvOtriyoor. JnAyiru kizhAr was a rich man in the race of cultivators. He was blessed with a beautiful daughter who was in fact Anindhithai - the friend of Uma Devi - reborn on the earth. She was named as ChangiliyAr. She exhibited all the divine qualities even from a very young age.

ChangiliyAr grew up well and attained the marriageable age. GnAyiru kizhAr searched for a suitable groom for her daughter. But ChangiliyAr had other plans which she could not revel to her parents. She kept brooding and worrying about it so much that she fell faint.

Her anxious parents revived her and asked her the cause of her distress. ChangiliyAr took courage and told her parents,"I can marry only a man who has won the grace of Lord Siva. I can't marry any other ordinary man. I wish to live in ThiruvOtriyoor in close proximity to Lord Siva. "

KizhAr and his wife were shocked to hear about the strange wish of their daughter. They lost all interest in finding a suitable groom for her.

A rich young man wished to marry ChangiliyAr but he died before the wedding could take pace. All kinds of rumors started spreading about ChangiliyAr like wild fire. After that no one approached KizhAr asking for the hand of his daughter.

KizhAr decided to give in to the strange wish of his daughter. He built a Kanni mAdam in ThiruvOtriyoor very close to the temple. He provided his dear daughter with everything she needed to live in safety and comfort. She was provided with maid servants and had her close friends with her. ChangiliyAr lived constantly thinking about God.
 

Latest ads

Back
Top