• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

A poem a day to keep all agonies away!

bhagavathy bhaagavatam - skanda 9


9#38f. தேவியின் பக்தன்

சிருஷ்டி நடக்கின்றது கிருஷ்ணன் கண் திறக்கையில்!
சிருஷ்டி அழிகின்றது கிருஷ்ணன் கண் இமைக்கையில்!

கிருஷ்ண பரமாத்மாவே ஐக்கியம் ஆகின்றார்
பிரளய காலத்தில் பிரகிருதில் ஒடுங்கி மறைந்து!

இறுதியில் மிகுந்திருப்பது பிரகிருதி ஒன்று மட்டுமே!
ஆதியில் சத் ரூபமாக இருந்ததும் பிரகிருதி மட்டுமே!

ஆதியிலும் இருந்து, அந்தந்திலும் மிகுந்திருக்கும்
ஆதி காரணியின் புகழைப் புகலவும் முடியுமோ?

இயலாது தேவியின் பெருமைகளைப் புகலுவது!
இயலும் தேவியிடம் அளவற்ற பக்தியைப் புரிவது.

தேவி பக்தன் விரும்புவதில்லை உத்தம முக்தியையும்!
தேவி பக்தன் விரும்புவான் பக்தி செய்வதை மட்டுமே!

பக்தித் தொண்டாற்றுவது முக்தி தரும் ஆனந்தம்;
பக்தி தரும் ஆனந்தம் பரமாத்மாவின் தொண்டு !

பக்திக்கு விரோதமானது சுக போகங்களில் விருப்பம்;
பக்திக்கு நிஷேதமானது புரிந்திடும் காமிய கர்மங்கள்.

பற்றற்று பரமாத்மாவின் தொண்டாற்றுவது ஒன்றே
நற் கருமமும் ஆகும்; தத்துவ ஞானமும் ஆகும்;”

ஆசிகள் தந்து கணவனை உயிர்ப்பித்தான் யமன்;
ஆணையிட்டான் இருப்பிடம் திரும்பிச் செல்லுமாறு.

அழதாள் சாவித்திரி அந்தப் பிரிவற்றமையினால்!
தொழுதாள் சாவித்திரி தர்மராஜனின் பாதங்களை!

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

9#38f. PrAkritic PraLaya


PrAkritic PraLaya happens When Sri Krishna closes his eyes and the creation takes place on the opening of his eyes. The closing and opening of his eyes takes the same length of time equal to those of creation and dissolution.

Brahma’s creation lasts one hundred years on Brahma’s scale and the PraLaya also lasts for one hundred similar years. No one knows how many Brahmas have been born or how many times creations and dissolution have taken place till now.

Just as one cannot count the number of dust particles, one cannot count the number of Creations and Dissolutions.

The all powerful Sri Krishna himself dissolves at the time of PraLaya in Moola Prakriti. Thus The Highest Sakti, the Moola Prakriti will be the Only One left behind after PraLaya. She is the NirguNa and the highest purusha. She is the sath-chith-aanandham.

Bhakti towards the Devi is the highest of all forms of mukti. Deiva Bhakti is superior even to Mukti. Mukti gives one of these four namely SAlokya, SAroopya, SAmeepya and SAyujya. But the Bhaktas do not want any of these things.

They want to serve their God. They do not want anything more than that. The state of becoming a Siva, or of becoming an Amara or an immortal, or of becoming a Brahma, or assuming a divine form or Moksha do not appeal to the true bhakta.

Mukti is without serving God while Bhakti increases with the service. The service of the Highest Lord severs the ties of Karmas (past actions). This service is really the True Knowledge.

I have now told you the Real Truth which will lead to auspicious results. Now you can go back freely as you wish.”

Having spoken thus Yama, the son of Soorya, brought SAvitri’s husband back to life, blessed them and got ready to go to His own abode.

SAvitri became sad at the thought of separation of Yama, who had been a good companion and an excellent Guru, bowed down at His feet and began to cry.

 
SEkkizhArin Periya PurANam

#10d. திரு கண்ணப்ப நாயனார் (4)

வருகை தந்தான் திண்ணன் முதல் நாள் போலவே;
செருப்புக் கால் அகற்றியது மலர்கள், இலைகளை!

உமிழ்ந்தான் தேவன் மீது தன் வாயில் கொணர்ந்த நீரை;
கவிழ்த்தான் தேவன் மீது தலையில் கொணர்ந்த பூவை.

செய்தனர் இரு பக்தர்களும் மாறி மாறிச் சிவ பூசை!
செய்தனர் இரு பக்தர்களும் பூசை தாம் அறிந்தபடி!

சென்றனர் தம் ஊருக்கு நாணனும், காடனும் மட்டும்.
செப்பினர் தம் ஊராரிடம் திண்ணன் மனநிலையை!

நாகன் பதறியடித்து ஓடி வந்தான் திண்ணனிடம் - கரு
நாகம் தீண்டிவிட்ட ஒரு தீனன் வேடனைப் போலவே!

நாகன் ஓடினான் காளத்தி மலையை நோக்கி - அங்கு
நாகன் கண்டான் திண்ணனின் முற்றிவிட்ட பக்தியை.

அணைத்துக் கொண்டிருந்தான் திண்ணன் குடுமித்தேவரை
அணைகடந்த வெள்ளமாகப் பெருகி ஓடிடும் கண்ணீருடன்!

திரும்பிச் செல்ல வேண்டும் ஊருக்கு என்ற எண்ணத்தைக்
கருத்தில் கொள்ளவில்லை பக்திப் பித்துப் பிடித்த திண்ணன்!

தொடர்ந்தன இரு மாறுபட்ட வழிபாடுகள் சிவபெருமானுக்கு;
தொடர்ந்தனர் இருவரும் தாம் அறிந்த வண்ணம் வழிபடுவதை.

மனம் நொந்தார் வேதியர் சிவாச்சாரியார் தன் ஆலயத்தில்
தினம் தினம் நடக்கின்ற நீசமான சிவ ஆராதனைகளால்!

"இனித் தொடரக் கூடாது இக் கொடுமை இறைவா - மனம்
கனிந்து காத்தருள்வீர் என்னை இக்கொடுமையில் இருந்து!"

தோன்றினான் வேதியர் கனவில் அன்றிரவு பெருமான்;
தேற்றினான் மனம் நொந்த வேதியரை எம்பெருமான்;

"இழிவு படுத்தவில்லை என்னை வேடுவ பக்தன் - அவன்
வழிபடுகின்றான் அன்புடன் என்னை அவன் அறிந்தபடி!

மழலையின் மெல்லடிகளே அவன் செருப்புக் கால்கள்!
உமிழ்கின்ற அவன் வாய்நீர் எனக்குத் திருமஞ்சனமாம்!

உதிர்கின்றனவே மணமலர்கள் அவன் தலையில் இருந்து;
புதிய தேவலோகப் பாரிஜாதப் புஷ்பங்கள் ஆகும் எனக்கு!

அளிக்கின்ற இறைச்சித் துண்டுகள் புனிதமானவை - எனக்கு
அளிக்கப்படும் வேள்விகளின் அவிர்பாகத்தைக் காட்டிலும்!

குழறும் பித்துப்பிடித்த அவன் சொற்களே எனக்கு ஆகும்
குழலிசையை வென்றுவிடுகின்ற இனிய தோத்திரங்கள்!

காட்டுகின்றேன் ஒரு விந்தையை உனக்கு - நிலை
நாட்டுகின்றேன் அவன் உத்தம பக்தியின் உயர்வை!''

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

7#10d. KaNNappa nAyanAr (4)

ThiNNan returned to the side of his God as before. He removed the leaves and flowers offered by the brahmin priest with his feet covered by leather foot wear. He spat the water brought in his mouth on the God and dropped the flowers from his head on to that of God. He offered the fresh cooked meat he had brought with him.

This went on for five days. The two devotees of Siva worshiped Him in the manner they knew but which happened to be the exact opposite of each other.

NANan and KAdan returned to their village to convey the state of mind of ThiNNan their new leader. NAgan got worried and went to meet his son ThiNNan - with the speed of a hunter bitten by a poisonous serpent.

NAgan was surprised to see his son as a new ThiNNan whom he had never known before. ThiNNan was embracing the Kudumi Devan and tears were flowing freely from his eyes. ThiNNan had no wish to return to his village. He would not part from his new found friend Kudumi DEvan.

The brahmin priest had reached the limit of his patience and endurance and complained to God,"I do not wish to see you defiled in this manner any longer. Please spare me from this punishment"

Lord Siva appeared in the dream of the brahmin priest that night. He consoled the hurt priest saying," The hunter is not humiliating me. He is worshiping me in the manner known to him. To me his feet covered by leather footwear are like the soft feet of a toddler!

To me the water poured from his mouth is the holy abhishekha theertham. The flowers dropped from his head are superior to the pArijAtha flowers from heaven. The cooked meat offered by him is superior to the havisu offered in the yajna and yAga.

His slurred speech conveying sweet nothings is the best stuthi I have listened to! It is sweeter than the music from a flute. I will prove to you the intensity of his love and devotion to me."







 
bhagavathy bhaagavatam - skanda 9

9#38g. பிரியாவிடை

யமதர்மன் வாழ்த்தினான் சாவித்ரியை!
யமதர்மன் அளித்தான் பிரியாவிடையை!

“இன்பமாக வாழ்வீர் ஒரு லக்ஷம் ஆண்டுகள்;
இறுதியில் அடைவீர் தேவியின் லோகத்தை!

அனுஷ்டிப்பாய் சாவித்திரி விரதத்தை விடாமல்;
அளிக்கும் அது மங்கையருக்கு மோக்ஷப் பலனை!

ஜ்யேஷ்ட மாத சுக்லபக்ஷ சதுர்த்தியில் விரதம்
செய்ய வேண்டும் பதினான்கு ஆண்டுகளுக்கு!

பாத்ரபத மாத சுக்ல பக்ஷ அஷ்டமியில் விரதம்
பதினாறு ஆண்டுகள் செய்வாய் மஹாலக்ஷ்மிக்கு!

செவ்வாயன்று பூஜிப்பாய் மங்கள சண்டிகையை;
சுக்ல பக்ஷ சஷ்டியில் பூஜிப்பாய் சஷ்டி தேவியை;

ஆடி மாத சங்கராந்தி ராதிகா தேவியை பூஜிக்க;
அம்மனை மறவாதே சுக்ல பக்ஷ அஷ்டமிகளில்.

தரும் இம்மையில் சுகம், மறுமையில் தேவிபதம்!”
திரும்பினாள் சாவித்திரி கணவனுடன் இருப்பிடம்.

அனுஷ்டித்தாள் விரதங்களை; பெற்றாள் புத்திரர்களை;
அனுபவித்தாள் சுக போகங்களை லக்ஷம் ஆண்டுகள்!

அடைந்தான் சத்யவானின் தந்தை கண் பார்வை!
அடைந்தான் சத்யவானின் தந்தை ராஜ்ய போகம்!

அடைந்தான் சாவித்திரியின் தந்தை புத்திரர்களை!
அடைந்தாள் சாவித்திரி தேவியின் திருப்பதங்களை!

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

9#38g. BIDDING FAREWELL


Yama Dhraman told SAvitri who was crying at his feet, “The chaste woman who worships the Moola Prakriti, in Yantra or Mantra or in image, enjoys all pleasures in this world. In the end she goes to the Devi’s loka called MaNi Dweepam.

The worshipper must worship all the manifestations of the Prakriti Devi, day and night. At all times one must worship the omnipresent DurgA, the Highest Eswari.

You will enjoy worldly happiness for one hundred thousand years and you will in the end go to the Deviloka or MaNi Dweepam. Now go back to your house and observe for fourteen years the vow called SAvitri-vrata which gives mukti for women. This Vrata is to be observed on the fourteenth day of the white fortnight in the month of Jyestha.

Also observe the MahA Lakshmi Vrata on the eighth day of the bright fortnight of the month of BhAdra. Continue the vrata for sixteen years consecutively without any break in this vow.

The woman who practices with devotion this vrata will go to the abode of Moola Prakriti. You worship on every Tuesday Devi Mangala ChaNdika throughout the year.

Worship Sashti Devi on the sixth day of the bright fortnight every month. Worship ManasA Devi on the Sankranti day every year.

Worship RAdhikA, on the Full Moon night in the month of KArtik. You should observe fasting on the eighth day in the bright fortnight and worship the VishNu MAyA Devi.”

Saying these and after bidding them farewell, DharmarAjan went back to His own abode. SAvitri went back home with her husband SatyavAn. After they reached their home, they narrated the incident to their friends.

In time, by the blessing of Yama, SAvitri’s father got sons and her father-in-law regained his eye-sight and his lost kingdom. SAvitri got many sons. For one hundred thousand years, SAvitri enjoyed all the pleasures and ultimately went with her husband to MaNi Dweepam , the Devi’s lokam.

 
SEkkizhArin Periya PurANam

7#10e . திரு கண்ணப்ப நாயனார் (5)

லைந்து விட்டது கண்ட கனவு; எழுந்து விட்டார் வேதியர் ;
புலரும்வரை கொள்ளவில்லை வேதியர் கண்ணுறக்கம்;

ஆறாம் நாள் பொழுது புலர்ந்தது; சென்றான் திண்ணன்
மாறாக் காதலுடன் புதிய இறைச்சி, புது மலர்களை நாடி;

வேத, ஆகம வழிபாடுகள் செய்தார் சிவாச்சாரியார் - பின்பு
தோதாக மறைந்து கொண்டார் குடுமித்தேவன் சிலையருகே.

தொன்னையில் இறைச்சி; வண்ண மலர்கள் தலை மேல்;
முன் போலவே வாய் நிறையப் பொன்முகலி ஆற்றின் நீர்!

திடுக்கிட்டு நின்று விட்டான் திண்ணன் குடுமித்தேவரின்
திரு வலக்கண்ணில் இருந்து வழியும் குருதியைக் கண்டு!

வழிந்து வீணானது வாயில் இருந்த பொன்முகலி ஆற்றுநீர்;
விழுந்து வீணாயின சமைத்த இறைச்சியும், புது மலர்களும்!

"கொடிய இச் செயலைச் செய்தவன் யார்?" என்று திண்ணன்
கொடிய கானகத்தில் தேடித் தேடி அலைந்தான் எவரையோ!

"மூலிகைகளால் அகற்றலாம் இந்த புண்ணை!" என்று அவன்
மூலிகைகள் வேட்டையில் இறங்கி விட்டான் மிகவும் தீவிரமாக!

நிற்கவில்லை கண்ணிலிருந்து வழியும் குருதி - திண்ணன்
அற்புதமான வேட்டுவ மூலிகை வைத்தியம் செய்த பிறகும்!

"ஊனுக்கு ஊன் இட வேண்டும் என்பார்களே!" என்று தன்
ஊன வலக்கண்ணை அப்பினான் முழுவதுமாக அகழ்ந்து !

வழிந்த குருதி நின்று விட்டது குடுமித்தேவர் வலக் கண்ணில்!
வழியத் தொடங்கியது குருதி திண்ணனின் வலக் கண்ணில்!

ஒற்றைக் கண்ணால் கண்டு மகிழ்ந்தான் குடுமித்தேவனை!
சற்றும் உணரவில்லை திண்ணன் தன் வேதனை, வலியை!!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

7#10e. KaNNappa nAyanAr (5)

The dream came to an end and the brahmin priest was wide awake now. He could not sleep any further wondering at what was in store for him the next day.

ThiNNan went away to bring fresh offerings to God. The brahmin priest did the pooja as per the rules laid by Siva Agamas. He then hid himself well to watch the happenings unseen. ThiNNan returned with flowers on his head, water in his mouth and carrying his bow in one hand and cooked meat in the other.


ThiNNan stopped abruptly quite shocked when he noticed that blood was flowing from the right eye of the Kudumi DEvan. He dropped the offerings of flowers, water and meat on the ground along with his bow and arrow. He ran here and there looking for the wicked person who had committed this crime but found none!

He then brought the herbs with medicinal value and tried to stop the bleeding but that also went in vain. The blood continued to flow from the right eye of his God. He suddenly remembered that "Flesh must be replaced by flesh." So he scooped out his own right eye with his arrow and fixed it on God's right eye.

Now the blood stopped flowing from the right eye of the God but started flowing from the right eye of ThiNNan. He knew neither pain nor discomfort. On the other hand he was very pleased to see with his remaining left eye that the bleeding of Kudumi DEvan had stopped!
 
bhagavathy bhaagavatam - skanda 9

9#39a. மஹாலக்ஷ்மி (1)

பரமாத்மாவின் இடப்பக்கம் தோன்றியது
படைப்புக்கு முன் அழகிய பெண்ணுருவம்!

பிரிந்தாள் இரண்டாக அந்த முதல் பெண்
சரி சமமான பெருமை, மேன்மைகளோடு.

தேஜஸ், நிறம், வயது, காந்தி மற்றும்
யசஸ், குணம், ஆடை, ஆபரணங்கள்;

அன்பு, அருள், பிரியம், புன்னகை போன்ற
அனைத்திலும் சமமான இரண்டு தேவியர்.

வலது பக்கத்தில் தோன்றியவள் ராதிகா;
இடது பக்கத்தில் தோன்றியவள் லக்ஷ்மி.

லக்ஷ்மி தேவியே மஹாலக்ஷ்மியும் ஆவாள்;
லக்ஷ்மி என்றால் ‘கருணையுடன் காண்பவள்’!

பத்தினியாவாள் உத்தமன் வைகுந்தனுக்கு;
நித்தியம் உள்ளாள் காணும் இடம் எல்லாம்!

உள்ளாள் சுவர்க்கத்தில் சுவர்க்க லக்ஷ்மியாக;
உள்ளாள் பாதாளத்தில் நாக லக்ஷ்மியாக;

உள்ளாள் அரசர்களிடம் ராஜ லக்ஷ்மியாக;
உள்ளாள் இல்லங்களில் கிருஹ லக்ஷ்மியாக;

உள்ளாள் யக்ஞங்களில் தக்ஷிணா ரூபிணியாக;
உள்ளாள் தாமரை மலரில் அதன் சோபையாக;

உள்ளாள் சந்திரனில் அதன் சந்திரிகையாக;
உள்ளாள் சூரியனில் அதன் காந்தியாக.

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

9#39a. MahA Lakshmi (1)

Before the creation came into existence, a beautiful feminine figure appeared from the left side of ParamAtmA. It divided in to two new Devis of equal glories and greatness.
Their brilliance, their age, their colour and their beauty were all identical. Their yas’as, their dress, their ornaments and their temperaments were all exactly identical in them.

They were identical in their love, grace, affection and smiling countenance. One who emerged from the right side was RAdhika Devi and the one who emerged from the left side was Lakshmi Devi.

Lakshmi and MahA Lakshmi are one and the same. The name ‘Lakshmi’ means “one who sees with merciful eyes”

Lakshmi is the Vishnu-patni; Lakshmi exists everywhere as auspiciousness. She is the Swargga Lakhmi in the Heaven; She is the NAga Lakshmi of PAtAla; She is the RAja Lakshmi of the kings and rulers; She is the Gruha Lakshmi in every house.

She is the DakshiNa Devi in YAga and YagnAs; She is the beauty of the lotus flowers, She is cool luminescence of the Moon and the brilliance of the shining Sun.

 
SEkkizhArin Periya PurANam

#10f. திரு கண்ணப்ப நாயனார் (6)

வழிந்தது குருதி குடுமித்தேவனின் இடக் கண்ணிலிருந்து!
வழி அறிந்து கொண்டுவிட்டான் திண்ணன் அதை நிறுத்த!

இடக்கண்ணையும் அகழ்ந்து எடுத்துவிட்டால் அதன் பின்
இருக்கும் இடம் தெரியாது குடுமித் தேவனின் இடக்கண்!

ஊன்றினான் தன் காலைக் குடுமித்தேவன் இடக்கண் அருகே.
ஊன்றினான் அம்பைத் தன் இடக்கண்ணை அகழ்ந்து எடுக்க.

ஞானக் கண்களால் குடுமித்தேவனைக் காண்பவன்
ஊனக் கண்களைத் தரத் தயங்குவானோ உலகீரே!

அடிமை ஆனார் அரன் அவன் தன்னலமற்ற அன்புக்கு!
தடுத்து ஆட்கொண்டான் அரன் தன் இனிய பக்தனை!

"நிற்க கண்ணப்ப! நிற்க கண்ணப்ப!" என்று தன்
அற்புத மொழிகளால் போற்றினான் திண்ணனை.

பொழிந்தது மலர் மழை! பிறந்தது புதிய ஒளி!
முழங்கியது வேத ஒலி ! பெருகியது இறையன்பு!

இழந்த கண்களைப் பெற்று விட்டான் திண்ணன்!
சிறந்த பெயர் பெற்றான் "கண்ணப்பன்" என்று.

"ஆண்டாண்டு காலமாகத் தொண்டு செய்தேன் நான்!
ஆண்டுவிட்டான் ஆண்டவனை அன்பினால் வேடுவன்!

அன்பே சிவம்! அன்பில்லார்க்கு இல்லை அவன்!
அன்பரை வழிபடுவதே ஆகும் அரன் வழிபாடு!"
என

"ஒப்புயர்வற்ற கண்ணப்ப! இனி நீ நிற்பாய்
எப்போதும் என் அருகே என் வலப்புறத்தில்!"
என

திண்ணன் ஆகிவிட்டான் 'கண்ணப்ப நாயனார்'
கண்ணுக்குக் கண் அளித்து
காட்டினான் அன்பை.

"கலைமலிந்த சீர்நம்பி கண்ணப்பர்க்கு அடியேன்!"

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#10f. KaNNappa nAyanAr (6)


But the left eye of Kudumi Devan started bleeding now. ThiNNan now knew how to stop the bleeding and decided to dig out his left eye also. But after removing his left eye, he would not be able to see any more nor put the eye dug out in the right spot.

So to mark the spot, he planted his foot near the left eye of the God. He planted the tip of the arrow near his own left eye. Just as he was about to scoop out his left eye, God stopped him and said, "Stop KaNNappa! Stop!"

Flowers rained form the sky. All the directions became bright. The chanting of Vedas could be heard. ThiNNan's right eye and his eye sight got restored. He got a new name as KaNNappa nAyanAr.

The brahmin spoke to himself,"I have only served God all these years. But this hunter had completely won over God with his selfless love and deep devotion."

God is Love and Love is God. No one can attain God without true love. The worship of a devotee is the worship of the God Himself.

God blessed KaNNappa nAyanAr thus,"You will always stand near me to my right side KaNNappa!" ThiNNan had offered his own eye (KaN) and became KanNNappa nAyanAr .







 
bhagavathy bhaagavatam - skanda 9

9#39b. மஹாலக்ஷ்மி (2)

“லக்ஷ்மிகரமாக உள்ளது!” என்கின்றோம்
லக்ஷணமான பொருட்களை எல்லாம் நாம்.

ஆடைகள், ஆபரணங்கள், பழங்கள், ரத்தினங்கள்;
அரசன், அரச பத்தினி, திவ்ய ஸ்திரீ, உத்தம ஸ்திரீ,

பயிர்கள், தூய்மையான இடம், தேவியின் பதுமை,
தெய்வச்சிலை, மாணிக்கம், முத்துமாலை, வைரம்,

பால், சந்தனம், மரக் கிளைகள், புது மேகங்கள்;
பலவற்றிலும் உள்ளாள் சௌபாக்கிய உருவமாக.

பூஜித்தான் விஷ்ணு லக்ஷ்மியைப் பாற்கடலில்,
புரட்டாசி, தை மாதங்களில் மங்கள வாரங்களில்.

பூஜித்தான் பிரம்மன் புரட்டாசி சுக்ல அஷ்டமியில்;
பூஜித்தான் மனு மஹாலக்ஷ்மியை வருட முடிவில்;

பூஜித்தான் மனு தை மாத சங்கராந்தியில் லக்ஷ்மியை;
பூஜித்தான் மனு மாசி மாத சங்கராந்தியில் லக்ஷ்மியை!

தேவர்கள், நாகர்கள் பூஜித்தனர் மஹாலக்ஷ்மியை;
தானவர்கள், மானவர்கள் பூஜித்தனர் லக்ஷ்மியை;

துறவிகளும், முனிவர்களும் பூஜித்தனர் லக்ஷ்மியை;
புரவலரும், புலவரும் பூஜித்தனர் மஹாலக்ஷ்மியை;

அதிஷ்டான தேவதை இவள் செல்வபோகங்களுக்கு;
அதிஷ்டான தேவதை இவள் சகல சம்பத்துக்கும்.

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

9#39b. MahA Lakshmi (2)

Lakshmi is the lustre and beauty of the ornaments, precious gems, sweet fruits, pure water, powerful kings, beautiful queens, heavenly women, of all the houses people live in, grains, new clothes, clean and holy places, images, auspicious jars, pearls, jewels, crest of jewels, garlands, diamonds, milk, sandal wood, beautiful twigs and fresh rain clouds.

She was first worhiped in Vaikuntha by NArAyaNan. Brahma worshiped her next. Then she was worshiped by SvAyambhuva Manu, Indra, men, Munis, Rishis, all the householders, Gandharvas and NAgas.

Brahma worshipped her on the bright eighth day in the month of BhAdra. VishNu worshiped her on the Tuesday in the months of Pausha, Chaitra, and BhAdra. Manu worshiped Her on the Pausha SankrAnti and on the Tuesdays in the month of MAgha.

MahA Lakshmi was worshiped by Indra and by MangaLa (Mars) on Tuesday. She was then worshiped by Kings, poets, sages, rushis, DAnavas (demons) and MAnavas (men).

Her worship expanded and spread to all the places. She is the Presiding Deity of all wealth; She is the Devi who bestows on people immense wealth and all the pleasures that are associated with wealth.

 
SEkkizhArin Periya PurANam

7#11a. திரு குங்கிலியக் கலயனார் (1)

திருக்கடவூர் ஒரு திருத்தலம் சோழ வள நாட்டில்;
பெருமானின் அருட்பெயர் அமிர்த கடேச்சுவரர்.

அமரர்கள் வைத்தனர் அமிர்த கலசத்தை இங்கே;
அமிர்த லிங்கமாக உருவெடுத்தது அமிர்த கலசம்.

பால் மணம் மாறப் பாலகனைக் காக்க - ஈசன்
காலனைக் காலால் உதைத்த திருத்தலம் இது.

செஞ்சடையானின் அஞ்செழுத்தை ஓதினார்
செந்தண்மை பூண்ட குங்கிலியக் கலயனார்.

குங்கிலிய தூபமிடும் திருத்தொண்டை இவர்
தங்கு தடையின்றி நடத்தி வந்தார் தொடர்ந்து.

அன்பனைச் சோதிப்பதும், அவன் பெருமையை
அவனிக்கு உணர்த்துவதும், அரன் விளையாட்டு.

அளித்தான் கொடும் வறுமையை கலயனார்க்கு;
அளித்தான் அவர் திருத் தொண்டுக்குப் பரிசாக.

விற்க நேர்ந்தது நிலபுலன்களைக் கலயனார்,
விற்க நேர்ந்தது கன்றுகளை, காளைகளை;

வளர்ந்ததே அன்றிக் குறையவில்லை வறுமை;
தளரவில்லை திருப்பணி வளர்ந்த வறுமையால்.

குறைத்துக் கொண்டார் வாழ்க்கை வசதிகளை;
குறைக்கவில்லை ஈசன் திருத்தொண்டுகளை .

துடித்தாள் மனைவி குழந்தைகளின் பசி கண்டு!
வடித்தாள் கண்ணீர் தன் வறுமையை எண்ணி !

கழற்றினாள் கழற்றக் கூடாத தன் தாலியை - அவள்
கதறினாள் அதையும் விற்று நெல் வாங்கி வரும்படி.

தவித்தாள் தாய் குழந்தைகளின் பசி போக்கிட!
தவித்தார் கலயனார் திருப் பணியைத் தொடர!

குங்கிலியப் பொதியுடன் எதிர்பட்டான் வாணிகன்;
குங்கிலியமாக மாறிவிட்டது அந்த மங்கலச் சின்னம்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

7 #11a. Kungiliyak KalayanAr (1)

Thiruk kadavoor is a famous holy place situated in the Choza kingdom The name of the Lord Siva residing here is Amrutha GatEswarar.

When the Devas placed the Amrutha kalasam ( the pot of nectar) here, it transformed into the Amrutha GatEswarar. It was here that Lord Siva kicked Yama to protect MArkkaNdEyan from Yama's noose.

Here lived a brahmin named KalayanAr. He was devoted to Siva and would utter his name all the time. His sole aim was to offer God Kungiliyam (an incense producing sweet smelling fumes) as the form of his worship. His service continued without any hindrance for long.

Siva loves to test his devotees to fathom the intensity of love they have for Him. He made Kungiliyak KalayanAr very poor. KalayanAr was forced to sell off his land, fields, cows and calves.

He sacrificed and compromised on the various comforts he used to enjoy but he never compromised on offering kungiliyam to God.

Finally he had become so poor that there was nothing left in the house to sell. His children were hungry and his wife had nothing to sell except her ThAli (mangala soothram). It was forbidden for any woman to remove the mangala soothram (Thaali) while her husband was alive.

But she had no choice and removed her gold ThAli with tears flowing down her face in streams. She gave it to her husband and requested him to get some rice for feeding the children.

He wanted to continue his offering of kungiliyam to his lord while she wanted to feed her starving children. A vendor was selling kungiliyam.

Instead of buying the food stuff and going back home as requested by his wife, KalayanAr exchanged the gold ThAli for a bag of kungiliyam and went to the temple.



 
bhagavathy bhaagavatam - skanda 9


9#40a. துர்வாசர் சாபம்

காட்டில் புரிந்தான் இந்திரன் மது மயக்கத்தில்
காம லீலைகள் பல, அப்சரஸ் ரம்பையுடன்!

சென்றார் துர்வாசர் அவ்வழியே கைலாசம்;
செலுத்தினான் மரியாதை இந்திரன் அவருக்கு.

மகிழ்ந்தார் முனிவர் இந்திரன் பணிவு கண்டு!
நெகிழ்ந்து அளித்தார் பாரிஜாத மாலையை!

வீசினான் இந்திரன் ஐராவதத்தின் மீது மாலையை.
நேசித்தவனை விட்டுக் கானகம் சென்றது யானை!

கொண்டார் கோபம் துர்வாசர்; தந்தார் சாபம்
” லக்ஷ்மி நீங்கட்டும் உன் சுவர்க்கத்திலிருந்து!’

அழுதான் இந்திரன் தன் செயலுக்கு வருந்தி;
தொழுதான் முனிவரின் பாதங்களில் வீழ்ந்து.

“கேட்கவில்லை நான் இழந்துவிட்ட சம்பத்தை!
கேட்கின்றேன் புத்தியையும், ஞானத்தையும்.

காரணம் செல்வமே என் அகம்பாவத்துக்கு;
காரணம் செல்வமே என் அறியாமைக்கும்!

முக்தி மார்க்கத்தைத் தடுப்பது செல்வம்!
பக்தி மார்க்கத்தைத் தடுப்பது செல்வம்!”

பணிந்தான் துர்வாச முனிவரை மீண்டும்;
தணிந்தார் தம் சினம் துர்வாச முனிவரும்.

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

9#40a. Sage DhurvAsa


Indra spent a long time with the apsaras Ramba in a forest – intoxicated with both lust and drinks. Sage DhurvAsA passed that way on his way to KailAsh from Vaikuntham.

Indra paid his respects to the sage who was well pleased and presented him with a garland of PArijAta flowers given to him by VishNu Himself.

Indra threw the garland carelessly on the head of his four tusked white elephant Airavat. It ran away leaving him, deeper into the forest to do penance. Indra could not stop it.

Sage DhurvAsA got wild seeing the manner in which Indra had humiliated the divine prasAdam of Sri VishNu and cursed Indra in a surge of anger,”May Lakshmi Devi leave from your AmarAvati!”

Indra repented for his careless behavior and begged for forgiveness, falling at the feet of the sage. He said, “I do not seek to get back the wealth which has vanished along with Lakshmi Devi from AmarAvati. I only seek to acquire good wisdom and true knowledge.

I have realized that it is the accumulated wealth that creates the arrogance in a person. It is the wealth that causes ignorance in a person.

Accumulated wealth blocks his path towards liberation. It blocks the way to the path of devotion (bakthi mArggam). Please grant me wisdom and your pardon!”

Indra begged for pardon falling at the feet of sage DhurvAsa.

 
SEkkizhArin Periya PurANam

7#11b . திரு குங்கிலியக் கலயனார் (2)

செல்லவில்லை இல்லம் உணவுப் பொருளுடன்;
சென்றார் ஆலயம் அவர் குங்கிலியப் பொதியுடன்.

வழி மேல் விழி வைத்துக் காத்திருந்த குடும்பம்
விழி சோர்ந்து பசி மீறி நன்கு உறங்கி விட்டனர்.

தன்னையே எண்ணி வாழும் அன்பன் குடும்பத்தை
தானும் எண்ணினான் அரன் கனிந்த மனத்துடன்;

குவிந்தன தானியங்கள், உணவுப் பண்டங்கள் அங்கே.
குவிந்தன பொன்னும், மணியும், பட்டாடைகளும் அங்கே.

கனவில் கூறினான் இதைக் கலயனாரிடம் அரன்;
இனிய செய்தி கேட்டு இல்லம் திரும்பினார் அவர்.

மேலும் காட்ட விழைந்தான் கலயனார் பெருமையை;
மேலும் சோதனை செய்தான் பெருமான் கலயனாரை.

திருப்பனந்தாள் திருத்தலத்தில் ஆதி சைவப்பெண்
விருப்பத்துடன் அணிவித்தாள் அரனுக்கு மாலை .

நெகிழ்ந்து விட்டது அவள் ஆடை அப்போது - அவள்
நெகிழ்ந்த ஆடையைத் தடுத்தாள் முழங்கைகளால்.

தவித்தாள் மாலையை அணிவிக்க முடியாமல்;
குவித்தான் தன் சிரசை அவளை நோக்கி அரன்.

மகிழ்வோடு சென்றாள் மாலை அணிவித்துவிட்டு;
திகழ்ந்தது அச்சிவலிங்கம் சாய்ந்த நிலையிலேயே!

யானைகள் இழுத்தன லிங்கத்தை கயிறுகளால்!
யானைகள் இழுத்தும் நிமிரவில்லை சிவலிங்கம்!

கழுத்தில் மாட்டிக் கொண்டார் கயிற்றைக் கலயனார்!
இழுத்தார் சாய்ந்து நின்ற சிவலிங்கத்தைக் கயிற்றால்!

இறுகினால் சுருக்குக் கயிறு பறித்து விடும் ஜீவனை!
இறுதியில் பணிவித்தார் அன்பின் தளைக்குச் சிவனை!

சாய்ந்து நின்ற லிங்கம் நிமிர்ந்து நேரானது - நாயனார்
சாற்றிய கயிறுகள் மாறிவிட்டன மலர் மாலைகளாக!

அன்புடன் ஆவான் அரன் அன்பனுக்கு ஓர் அன்பனாக!
பண்புடன் ஆவான் அரன் பக்தனுக்கு ஒரு பக்தனாக !

"கடவூரிற் கலயன்றன் அடியார்க்கும் அடியேன்"

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

7 #11b. Kungiliyak KalayanAr (2)

KalayanAr went to the temple with the bundle of kungiliyam. His wife and children were waiting for him to return with food stuff. They became so hungry and tired that they all fell asleep on a hungry stomach.

Siva saw the intensity and determination of KalayanAr to continue his daily offerings. Siva took pity on the family of His staunch devotee. He filled the house of KalayanAr with grains, food items, gold, precious gems and silk clothes.

Siva appeared in the dream of Kungiliyak KalayanAr and told him about this. Kungiliyak KalayanAr now went back home happily since his family would not have to starve any more.

But Siva wanted to spread his fame further and played one more prank. An Adhi Saivaite woman had come to the temple in Thirup pananthAL with a flower garland to offer to Lord Siva.

But just when she was about to put it around the Sivalingam, her dress became loose. She had to hold on to her clothes with her elbows and now she was unable to put the gland around the Sivalingam.

Siva took pity on her and bent his head forward so that the woman was able to put the garland around the Sivalingam now. She became very happy and went away. The Sivalingam which had bent forward never went back to its original position. It remained inclined permanently.

The king wanted to make the Sivalingam stand straight as before. He employed elephants which pulled the ropes passed around Sivalingam but in vain.

Now KalayanAr tied the rope to his neck and tried to straighten the inclined Sivalingam. If the rope tightened it would become the noose around his neck.

So Siva was moved with pity and became straight as before. Siva loved His devotees more than they love Him. Siva loves to become a devotee of His own devotees






 
bhagavathy bhaagavatam - skanda 9

9#40b. தணிந்தது சினம்!

சினம் தணிந்த துர்வாசர் இந்திரனுக்கு பல
நலம் தரும் கருத்துக்களை எடுத்துரைத்தார்.

“சம்பத்து இருளாகச் சூழ்ந்து விடும் மதியை!
சம்பத்து மூடனாக்கி விடும் மதியை மயக்கி.

சம்பத்துப் பெருக்கும் ரஜோ குணக் காமங்களை;
சம்பத்து அழிக்கும் ஸத்துவ குண நலன்களை.

இருவகையினர் நாடுவர் விஷய சுகங்களை;
ஒருவகை ராஜஸர்; மறு வகை தாமஸர்கள்.

சாஸ்திரம் அறியாதவன் தாமஸ விஷயாந்தகன்!
சாஸ்திரம் அறிந்தவன் ராஜஸ விஷயாந்தகன்!

இரு மார்க்கங்களுக்கு வழி காட்டும் சாஸ்திரம்;
பிரவிருத்தி பீஜம், நிவிருத்தி பீஜம் என்பவை.

தேடுகின்றன தேனீக்கள் மலர்களில் தேனை;
நாடுகின்றனர் ஜீவர்கள் விஷயங்களில் சுகத்தை!

சஞ்சரிக்கின்றனர் பிரவிருத்தி மார்க்கத்தில்;
சஞ்சலம் அடைகின்றனர் பல இன்னல்களால்.

கர்ம வினைப்படி பிறவிகள் எடுத்து, விடுத்து
சம்சாரச் சகதியில் மாட்டிக் கொள்கின்றனர்.

ஆயிரத்தில் ஒருவன் விரும்புகின்றான் – சம்சாரப்
பேயிடமிருந்து விடுதலை பெற வேண்டும் என்று.

சத்சங்கத்தில் சேர்க்கின்றார் கடவுள் – அவனுக்குத்
தத்துவ ஞானம் தந்து முக்திக்கு வழி காட்டுகிறார்.

யோகத்திலும், தவத்திலும் ஈடுபடுபவன் உயர்ந்தவன்
போகத்திலும், காமத்திலும் ஈடுபடுகின்றவனை விட!”

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

9#40b. The anger subsides!


The anger of Sage DurvAsA subsided now and he started giving his upadesam to Indra.

“Wealth will cloud one’s thinking capacity. It will make him a fool by causing delusions. Wealth flames up and increases the desires born out of Rajo GuNam. It destroys the wisdom born out of Satva GuNam.

Two kinds of people desire the worldly pleasures – the RAjasic persons and the TAmasic persons. The TAmasic are ignorant of the SastrAs and are known as TAmasa VishayAntaka. The RAjasic people know the SastrAs and are known as the RAjasa VishaYAntaka.

SAstras show us two different paths – the Pravritti MArggam (in which life spent in fulfilling one’s desires) and the Nivritti MArggam (in which life not spent in the fulfillment of one’s desires). Bees are always looking for honey. The jeevas are always looking for pleasure and happiness.

Most of the Jeevas choose the Pravritti MArggam ( in which the life is spent in fulfilling one's desires ) and start chasing the worldly things and pleasures. They confront many problems and suffer from many pains and enjoy a few pleasures.

They are born, they die and will be born again to die again. They get stuck up in the wheel of SamsAra. Only one in a thousand persons may wish to escape from the cycle of birth and death.

God guides him to a sat-sangh with like minded persons and helps him by giving him true wisdom and showing the way to liberation.

The person who spends his life in Yoga and Penance is far superior to the one who spends his life in indulging endless pleasures and fanning their desires.”

Sage DurVAsa taught Indra the wisdom Indra had sought from him.

 
SEkkizhArin Periya PurANam

#12. மானக் கஞ்சாற நாயனார்

சோழ வள நாட்டில் ஒரு நகரம் கஞ்சாறு - இங்கு
சேர்ந்து பாய்ந்தனவாம் தேனும், கருப்பஞ்சாறும்!

மானக் கஞ்சாற நாயனார் ஒரு சிவபக்தர் - அவர்
மனைவி குணவதி கல்யாண சுந்தரி அம்மையார்.

வளம் நிறைந்த வாழ்வு வளம் பெற்றது மேலும்
தளர் நடையிடும் பெண் குழந்தை பிறந்த பிறகு.

ஏயர்கோன் கலிக்காம நாயனார் - மணம் பேசிட
ஏவினார் சுற்றத்தை மானக் கஞ்சாறனாரிடம்.

நடந்தது மணப் பேச்சு; அமைந்தது மனப்பொருத்தம்;
நாடினர் திருமணத்தை இரு வீட்டைச் சேர்ந்தவர்களும்.

எழுந்தருளினார் பெருமான் அந்தணர் கோலத்தில்
அழகிய மணமண்டபத்தில் திருமண நாள் அன்று .

ஒளிந்து கொண்டாள் கங்கை; சிரசில் உருத்திராக்கம்;
ஒளிர்ந்தன குண்டலங்கள் இரு திருச் செவிகளிலும்.

புரண்டது திருமார்பில் முப்புரி வடம் ஒன்று - மேலும்
புரண்டது திருமார்பில் மயிர்வடம் ஒன்றும் அத்துடன்.

வணங்கினார் மானக் கஞ்சாறனார் சிவனடியாரை;
வணங்கச் செய்தார் மணமகளையும் வரவழைத்து.

மனம் குளிர வாழ்த்தினர் அடியார் மணப்பெண்ணை;
மனம் விட்டுக் கேட்டார் அவள் கூந்தலைப் பஞ்சவடிக்கு!

மணப் பெண்ணின் கூந்தலால் ஒரு பஞ்சவடியா?
மங்கல வேளையில் இந்த அமங்களைச் செயலா?

சினம் கொள்ளவில்லை மானக் கஞ்சாறனார் - ஒரு
கணத்தில் அரிந்து தந்தார் அக் கருநாகப் பின்னலை!

மறைந்து அருளினார் அந்தணர் அக்கணமே - ஆனால்
மறைநாயகன் தோன்றினான் வானில் உமையாளுடன்!

அளித்தான் சிவலோகப் பிராப்தி கஞ்சாறனாருக்கு;
அளித்தான் கார்மேகக் கூந்தலை மணப் பெண்ணுக்கு.

கலிக்காமர் மகிழ்ந்தார் இவர்கள் சிறப்புக் கண்டு
பலகாலம் வாழ்ந்தனர் அரன் மீது அன்பு கொண்டு.

"மலை மலிந்த தோள் வள்ளல் மானக் கஞ்சாறனுக்கு அடியேன் "


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#12. Thiru MAnak kanchARa nAyanAr

KanchARu was a very prosperous town in the ChOzha Kindom. It was so prosperous that honey and the sugar cane juice flowed liked rivers. KanchARu is the short form of Karuppan chARu meaning sugar cane juice.

MAnak kanchARar lived here. He was a staunch devotee of Lord Siva. KalyANa Sundhari was his virtuous wife. They had a beautiful daughter to make their lives happier and richer.

Eyar KalikkAmar - another staunch devotee of Lord Siva - wished to have alliance with this family and marry their daughter. He sent the elders in his family to speak with MAnak kanchARar and finalize the wedding.

Both the parties agreed for the marriage. An auspicious day and time was fixed for the wedding. Lord Siva himself appeared in the wedding maNdapam disguised as a brahmin.

He hid Ganga in his matted coils and wore a string on RudhrAksham instead. He word shining kuNdalams in his ears and wore two pooNools - one made of cotton threads and the other made of hair.

MAnak kanchARar paid his obeisance to the devotee of Siva. He made sure his daughter also paid her respects to the devotee and got his blessings before her wedding.

The devotee of Siva blessed her well and appeared to be fascinated by her long, dark and thick braid resembling a black cobra. He said, "This braid will make an excellent panchavadi ( a pooNool made of hair) for me".

Everyone was duly shocked that such crude words were spoken in an auspicious muhoortham. Who could wish to cut off the braid of a bride on her wedding day?

But MAnak kanchARar did not get angry or upset. He cut off the long thick braid of his daughter and handed it over to Lord Siva disguised as a devotee of Siva.

The devotee vanished into thin air and Lord Siva appeared with Uma Devi in the sky on Nadhi Dhevan. Siva promised MAnak kanchARar a place in the Sivalokam and the bide had her beautiful braid restored.

KalikkAmar was very happy with their love and devotion. He happily married the daughter at the auspicious muhoortham and lived happily.








 
Nice effort Mam. Thanks for sharing. BTW do yo have the complete details of all the 63 nayanars? I have heard about only a a few of them. Please share link if you already have posted somewhere in this thread.
 
Nice effort Mam. Thanks for sharing. BTW do yo have the complete details of all the 63 nayanars? I have heard about only a a few of them. Please share link if you already have posted somewhere in this thread.

Dear Mr. Ganesh,
Periya PurAnam is being posted in this thread by me ever since 23-3-2018.
I have not give the link since I have not yet posted in my blog.

You won't find these anywhere else since they are written by me with the aim of simplifying the difficult poems so that they can reach more people.

The first post #9605 in page 961 was this :


பெரிய புராணம் (திருத் தொண்டர் புராணம்)

ஒரு சிறு முன்னுரை :

சேக்கிழார் அருளியது பெரிய புராணம் என்னும் திருத் தொண்டர் புராணம். இது ஐந்தாவது வேதம் என்று கருதப்பட்டு அனைவராலும் புகழப்படுகின்றது.

இது பன்னிரண்டாவது திருமுறை என்றும் பெயர் பெற்றுள்ளது.
இதை இயற்றிய சேக்கிழார் தொண்டர் சீர் பரவுவார் என்று புகழப்படுகிறார். இதை அரங்கேற்றிய மன்னன் அநபாய சோழன் ஆவான்.

சிவபெருமானின் கருணையும் சிவநேசர்களின் பெருமையையும் ஒருங்கே வெளிப்படுத்துவது இந்த செந்தமிழ்க் காவியம்.

இதனை ஐயம் திரிபு அறக் கற்று அறவழியில் நிற்போம்.
இம்மையிலும் மறுமையிலும் உரிய பயன் பெறுவோம்.

"ஜகத் பிதரௌ வந்தே பார்வதி பரமேஸ்வரௌ"
நமச்சிவாய நாமம் வாழ்க! அன்பே சிவம்!!
 
Last edited:
bhagavathay bhaagavatam - skanda 9

9#40c. பிருஹஸ்பதி

அமராவதி திரும்பினான் இந்திரன் – அங்கே
அமராவதி நிறைந்திருந்தது அசுரர்களால்!

அஞ்சவில்லை அசுரர்கள் இந்திரனைக் கண்டு;
கொஞ்சமும் மதிக்கவில்லை அவனைக் கண்டு.

தேடினாலும் காணவில்லை தேவர்களை எங்குமே!
ஓடினான் குலகுரு பிருஹஸ்பதியைத் தேடியபடி!

தியானித்துக் கொண்டிருந்தார் கிழக்கு நோக்கி
தேவகுரு பிருஹஸ்பதி கங்கையின் கரையில்.

குறைகளைக் கூறி அழுதான் இந்திரன் குருவிடம்;
நிறைவான உபதேசம் செய்தார் தேவகுரு அப்போது.

“நீதி அறிந்தவன் அஞ்ச மாட்டான் எப்போதும்!
நிலையானவை அல்ல சம்பத்தும், விபத்தும்!

உண்டாகின்றன அவை கர்ம வினைகளின் படி;
வண்டிச் சக்கரம் போலச் சுழல்வதே வாழ்க்கை!

அனுபவித்தே தீர வேண்டும் வினைப் பயன்களை;
அனுபவித்தே தீர்க்க வேண்டும் வினைப் பயன்களை.

மிகையும், குறையும் உண்டாகும் கர்மங்களில்
கால, தேச, பாத்திரங்களின் மேன்மைகளால்!

விளையும் புண்ணிய பலன் நல்ல நாட்களால்!
விளையும் புண்ணிய பலன் நல்ல தேசங்களால்!

விளையும் புண்ணிய பலன் நல்ல பாத்திரங்களால்!
சளைக்காமல் எதிர் கொள்வாய் நீ வருபவற்றை”

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

9#40c. Bruhaspati


Indra went back to AmarAvati. It was now filled with the asuras. They were not afraid of Indra any more. Nor did they bother about him any more. Indra could not find a single Devan in AmarAvati!

He ran looking for his Kula guru Bruhspati. Indra found him on the banks of the river Ganges doing meditation facing Eastwards. He gave vent to his feelings and fears and cried to his Kula guru.

Bruhaspati advised him thus, “A man who knows the laws of Dharma and Karma will never get upset by any developments. He knows that neither the good fortune, nor the bad fortune is permanent.

They happen according to the effects of the Karmas done by us. The life is a wheel causing ups and down in every one’s life. One has to undergo the effects of his Karma.

One has to exhaust the effects of Karma by undergoing them. He has no choice. But the intensity of the unpleasant effects can be reduced with the help of auspicious days, places and persons.

Auspicious days reduce the bad effects and increase the good effects. The same is true of auspicious places and persons. Be brave and face the inevitable Indra!”

Kula guru Bruhaspati advised Indra thus.

 
SEkkizArin Periya PurANam

#13. அறிவாள் தாய நாயனார்

கணமங்கலம் என்ற ஊர் விளங்கியது - இலக்
கணமாகச் சோழ வள நாட்டின் செழிப்பிற்கு.

அவதரித்தார் ஒரு நாயனார் இங்கு - தினமும்
அளித்தார் அன்னம், கீரை, மாவடு அரனுக்கு.

சோதித்தான் சிவன் இவரது மாறாத சீர்மையை;
சோதிக்கத் தந்தான் சிவன் தீராத வறுமையை.

கூலிக்கு வேலையாட்கள் வைத்திருந்த நாயனார்
கூலிக்கு வேலையாளான கொடுமை நிகழ்ந்தது!

கூலியாகக் கிடைக்கும் அறுவடை செய்த நெல்;
கூலியாகக் கிடைக்கும் செந்நெல், கார் நெல்.

அளிப்பார் செந்நெல்லை அம்பலவாணனுக்கு;
அளிப்பார் கார்நெல்லைக் குடும்பத்தினருக்கு;

கிடைத்தது கூலி முழுவதுமே செந்நெல்லாக;
கொடுத்துவிட்டார் செந்நெல்லைப் பிரானுக்கு.

இல்லாமல் போனது உண்பதற்கு அரிசி!
கொல்லைக் கீரை குடும்ப உணவானது!

பஞ்சம் வந்துவிட்டது கொல்லைக் கீரைக்கும்!
கொஞ்சம் தண்ணீரே உணவானது இப்போது!

பசி குடலைச் சீரணித்த போதிலும் விடவில்லை
பசுபதிக்குத் திருவமுது அளிக்கும் திருப்பணியை.

தடுமாறிய நாயனார் ஒருநாள் தவறவிட்டார் - பசிக்
கொடுமையினால் தன் நிவேதனப் பொருட்களை.

சிதறிய பொருட்களை இறைவனுக்குப் படைப்பதா?
பதறிய நாயனார் துணிந்தார் உயிர்த் தியாகம் செய்ய.

அரிந்து கொள்ள முடிவு செய்தார் தன் சொந்த
அரிவாளினால் தன் சிரத்தையே தனியாக.

வெளிப்பட்டது வெடித்த நிலத்திலிருந்து ஒரு கரம்;
வெண்ணீறும், உருத்திராக்கமும் அணிந்திருந்தது!

தடுத்தது தேவனின் கரம் நாயனாரின் அரிவாளை;
வெடுக்கென்று கீழே விழுந்தது அரிவாள் நிலத்தில்;

தோன்றினான் எம்பெருமான் உமை அன்னையுடன்;
தேற்றினான் ; அளித்தான் பேரின்பப் பேற்றினை!

அரிவாள் நாயனார் என்ற பெயர் பெற்றார் - தன்
அரிவாளால் சிரத்தைத் துண்டிக்க முயன்றதால்.

திருப்பணிகள் செய்தார் பன்னெடுங்காலம் - சென்று
திருவடிகளில் கலந்தார் சிவபெருமானோடு பின்னர் .

"எஞ்சாத வாட்டரயன் அடியார்க்கும் அடியேன்"

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#13. ArivAL DhAyanAr nAyanAr

KaNamangalam was a perfect example for the prosperity of the ChOzha Kingdom. A staunch devotee of Siva named DhAyanAr was born here. His vratham ( strict vow) was to offer cooked rice, spinach and tender mango pickle to God everyday.

Lord Siva is very fond of testing the sincerity of His devotees before bestowing great boons and blessings on them. He made DhAyanAr very poor in due course of time.

DhAyanAr used to employ laborers for daily wages to work in his field. Nor he himself had to become a laborer for daily wages. The wage for the laborers was paid in the form of paddy they had harvested. It would be one part superior verity and the other part slightly inferior variety.

DhAyanAr offered the superior variety of paddy to God and used the inferior retriever to feed his own family. Once the entire wage was paid in the form of the superior paddy.

DhAyanAr offered the entire quantity to God and his own family had to go hungry. The spinach from the backyard became their staple food. Soon that also dwindled down to nothing. Now plain water became their only food. But DhAyanAr never contemplated on compromising on the daily offering .

One day DhAyaNar was so hungry, tired and weak that he spilled the offerings on the parched ground on his way to the temple. Surely he could not offer the soiled food to God. He could not bear the thought that his staunch vow (vratham) was now broken.

He decided to end his life by cutting off his head with his own sickle. Just then a hand emerged from the crack in the ground. It was adorned with the holy ash and rudhrAksham. It caught hold of DhAyanAr's hand and the sickle dropped down on the ground.

Siva appeared with Uma Devi. He consoled DhAyanAr and promised him a place in SivalOkam. The name of DhAyanAr became 'ArivAL DhAya nAyanAr'. He lived for a long time and continued his vratam without any lapse.




 
bhagavathy bhaagavatam - skanda 9

9#41a. அலைமகள் (1)

பிரம்ம லோகம் சென்று சபையில் கூறினார்
பிரஹஸ்பதி நடந்தவற்றை முழு விவரமாக!

“தக்ஷப் பிரஜாபதி என் மகன் இந்திரா!
தக்ஷப் பிரஜாபதி உன் தாயின் தந்தை!

சுத்தமான மூன்று தலை முறையையில் வந்து,
சுத்தமான பதிவிரதைக்கு மகனாகப் பிறந்தவன்;

ஜிதேந்திரியனைத் தந்தையாக உடையவன்,
ஜெயித்திருப்பான் ஆணவத்தை, அகந்தையை!

தோஷம் வருவதுண்டு தாயின் தோஷத்தால்;
தோஷம் வருவதுண்டு தந்தையால், குருவால்.

பரிசுத்தமான பரிஜாத மாலையை இழந்ததும்
பரிதாப நிலையை அடைந்தாய் லக்ஷ்மி இன்றி!

வஞ்சிக்கப் பட்டுள்ளாய் தெய்வங்களால்!
கெஞ்சுவோம் உதவி கோரி விஷ்ணுவிடம்.

சென்றனர் விஷ்ணுவிடம் தேவர்கள் கூடி;
செப்பினான் பிரம்மன் இந்திரன் குறைகளை.

வாஹனம், ஆபரணம், சோபை, காந்தியின்றி
வந்துள்ள தேவர்களைத் தேற்றினார் விஷ்ணு.

“மக்கள் என் வசப்பட்டு இருக்கின்றனர் – ஆனால்
மக்கள் வசப்பட்டு நான் இருக்கின்றேன் இந்திரா!

பக்தருக்குச் சினம் ஊட்டும் இடத்தில் வசியேன்!
பக்தருக்கு இழிவூட்டும் இடத்தில் நான் வசியேன்!”

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

9#41a. Lakshmi Devi (1)


Bruhaspati went to The Durbar of Brahma and related the events in detail. Brahma told Indra,” Daksha PrjApati is my son. He is also your mother’s father. Any one who has come from a family of three respectable generations; who has a pativrata ( a chaste woman) as his mother and a jitendriya (one who has conquered all his sense organs) as his father is not afflicted by AhankAram (Ego) and arrogance.

He may incur sin from his mother or father or guru. You sinned by treating the pArijAta flowers with disrespect! You have been reduced to this pitiable status because Lakshmi had left your kingdom in Heaven. Only VishNu can help you now!”

All the DevAs went to meet VishNu and Brahma explained the pitiable condition of the Devas. Vishnu felt pity on seeing the Devas and Indra who had come without their vAhanams, ornaments, tejas and mirth. He consoled them thus.

“Devotees depend on me but I depend on my devotees. I will not live in any place where my devotee has been insulted or belittled by any one!”

 
SEkkizhArin Periya PurANam

#14. திரு ஆனாய நாயனார்

சோலைவளம் மிகுந்தது அழகிய மழ நாடு - எழில்
கோலம் புனைந்த அழகிய ஊர் ஆகும் திருமங்கலம்.

எம்பெருமானின் பெயர்கள் பரசுதாமீசுரம் உடையார்;
காமவேதீசுவரர், திரு மழுவுடைய நாயனார் என்பவை.

ஆயர் குடியில் அவதரித்தார் ஒரு நாயனார் - பெயர்
ஆனாயர் ஆகிவிட்டது ஆநிறைகள் மிக இருந்ததால்!

குலத்தொழில் ஆநிரைகளை மேய்த்துப் பாதுகாப்பது;
குலத்தொழிலுக்கு உதவியது குழல் இசைக்கும் திறமை.

குழல் இசை உதவும் ஆநிரைகளை ஓட்டிச் செல்ல!
குழல் இசை உதவிடும் ஆநிரைகளைக் கூட்டி வர !

பண்ணாகவே இசைத்தார் ஈசனின் பஞ்சாட்சரங்களை;
மண்ணை மயக்கியது ஐந்தெழுத்துக்களின் இன்னிசை.

புரளும் மலர்மாலைகள் அவர் அழகிய மார்பினில்;
புரளும் கண்ணிமாலை கோதி முடித்த சிகையில்.

செவிகளில் விளங்கும் செங்காந்தள் மலர்கள்;
செவ்விய பாதங்களில் இரு தோற்பாதுகைகள்;

வெண்குழலும், வேய்ங்குழலும் தன் இரு கரங்களில்
கொண்டு செல்வார் அவர் முல்லை நிலம் நோக்கி.

மாறி இருந்தது மலர்ச்சோலையாகவே முல்லை நிலம்;
வாரிச் சொரிந்தன தருக்கள் கொன்றை மலர்களை;

கருத்தில் இருத்தி இருந்தார் எம்பெருமானை - எனவே
கருத்தில் தோன்றினான் மலர்களிடையே எம்பெருமான்.

வலம் வந்தார் மலர்கொன்றைத் தருக்களை - உடனே
வளம் கொழிக்கும் இன்னிசை பிறந்தது அவர் குழலில்.

கல்லையும் கரைத்துவிடும் இன்னிசை நாதம் தோன்றி
முல்லை நிலம் எங்கும் பரவியும், விரவியும், நிறைந்தது.

புல்லை மறந்து நின்றுவிட்டன மயங்கிய ஆநிரைகள்;
பாலை மறந்து நின்று விட்டன மயங்கிய கன்றுகள்;

பணிகளை மறந்து நின்றனர் ஆயர் குலத்தவர்கள்;
பகைமையை மறந்து நின்றன வன விலங்குகள்;

வானவர், விஞ்சையர் மயங்கி நின்றனர் இசையில்;
மானும், மயிலும் மயங்கி நின்றன இன்னிசையில்;

புலிகளும், புள்ளி மான்களும் நின்றன அருகருகே!
கரிகளும், வலிய சிங்கங்களும் நின்றன அருகருகே!

ஈரேழு உலகங்களும் மயங்கி நின்றன இசையில்!
ஈசனும், உமையும் மயங்கி நின்றனர் இசையில்!

காட்சி தந்தனர் வான வீதியில் இடபத்தின் மீது.
மாட்சிமை தந்தனர் அருகே வந்து அணைந்திட !

பேறு பெற்றார் நாயனார் தன் குழலிசையினால்!
பேறு பெற்றார் நாயனார் ஈசனின் அருகாமையை!

"அலை மலிந்த புனல் மங்கை ஆனாயர்க்கடியேன்"

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#14. AanAya nAyanAr

Mazha nAdu was famous for its gardens and groves. Thirumangalam was a beautiful town in Mazha nAdu. The various names of the deity there were Parasu ThAmeesuram udaiyAr, KAma vEdheeswarar and Thiru mazhuvudaiya nAyanAr.

A nAyanAr took birth in the race of Aayar (those who own cow herds). His name became AanAyar since he had a very big herd of cows and 'Aa' means 'a Cow' in Tamil.

He loved taking care of his cattle and he was an exponent in playing the flute. The music of the flute helped him to lead the cattle for grazing and also for bringing them back after they had grazed.

He played the Siva panchAksharam as a tune on his flute. The music was divine and mesmerizing. Flower garlands adorned his chest and his hair tied up in a bun. He wore flowers in his ears and leather foot wear on his feet. He would carry his flutes and go towards the hilly regions for grazing the cows.

The season had changed the whole area into a giant garden of flowers. Since AanAyar was always thinking of Lord Siva, he imagined the figure of Siva in the cluster of flowers he saw there on a tree. He went round the tree which appeared like Siva and started playing on his flute.

The most mesmerizing music which emerged from the flute and filled the whole area with its divine sweetness. The cows forgot to graze on the grass. The calves forgot to drink milk from the cows.

The men and women forgot their duties. The wild animals forgot their animosity. The celestial beings forgot themselves in this music. Deer and peacocks forgot to prance and dance; the deer and tigers stood very close by and the elephants and lions stood very close by.

All the fourteen words were intoxicated by this divine music. Siva and Uma were enthralled by the divine music and appeared on Nandhi Devan in the sky. Siva gave AanAyar a place in his SivalOkam.

AanAyar NAyanAr won the proximity of Lord Siva just with the help of his divine music.





 
bhagavathy bhaagavatam - skanda 9

9#41b. அலைமகள் (2)

“லக்ஷ்மி நீங்குவாள் சிவார்ச்சனைகள் இல்லை என்றால்!
லக்ஷ்மி நீங்குவாள் பிராமண போஜனம் இல்லையெனில்!

லட்சியம், லக்ஷணம் இல்லாத வாழ்வு வாழ்வதனால்,
லக்ஷ்மி நீங்கி விடுவாள் இவர்கள் இல்லங்களிலிருந்து!

விரத நாட்களில் உணவு உண்பவன் – தன்னிடம்
விருந்துக்கு வந்த அதிதிக்கு உணவு தராதவன்;

கெட்ட மனம் உடையவன், கொடூரம் ஆனவன்;
இட்டம் போல அந்தணர்களை நிந்திப்பவன்;

நகத்தால் பச்சைப் புல்லைக் கிள்ளுபவன்;
நகத்தால் பூமித் தாயைக் கீறுகின்றவன்;

சூரியோதயத்தில் உணவு உண்ணும் அந்தணன்;
இரவாகாத போது உறங்குபவன், கலவி புரிபவன்;

ஈரக் கால்களோடு படுத்து உறங்குகின்றவன்;
இடுப்பில் ஆடையின்றி படுத்து உறங்குபவன்

வீணாகச் சிரிப்பவன், வீண் சொற்கள் பேசுபவன்;
வீணன் போல உடலில் வாத்தியம் அடிப்பவன் ;

சந்தியா வந்தனம் செய்யாதவன் – இவர்களை விட்டு
சஞ்சலத்துடன் நீங்கிச் செல்வாள் லக்ஷ்மி தேவி!”

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

9 #41b. LAKSHMI DEVI (2)


VishNu continued his advice to Indra. “Lakshmi will not live in the house of the following persons. She will desert these persons promptly with a troubled and a heavy heart.

The man who does not perform Siva AarAdana;
The man who does not feed worthy Brahmins;

The man who eats on the days when he should observe fasts;
The man who does not feed the guests who have come to his house;

The man who is crooked and wicked minded;
The man who is merciless and unsympathetic;

The man who speaks ill of Brahmins as a race;
The man who plucks the green grass with his nails;

The man who scratches on the earth with his nails;
The Brahmins who eat at the time of Sunrise;

The man who sleeps while the Sun is still shining;
The man who indulges in carnal pleasures during the day time;

The man who goes to bed with wet feet;
The man who sleeps without wearing any clothes on;

The man who laughs and talks without any purpose;
The man who plays drums on his own body and

The Brahmin who does not perform SandhyA vandanam.
Lakshmi promptly deserts the residence of these persons
.”
 
SEkkizhAri Periya PurANam

7 #15a. திரு மூர்த்தி நாயனார் (1)

முத்தும் முத்தழிழும் தந்து முதன்மை பெற்றது
மதுராபுரி என்னும் பாண்டியரின் தலைநகரம்.

கமழ்ந்தன செந்தமிழும், தெய்வமணமும் அங்கே;
முகிழ்ந்தன அரிய முத்தமிழ்க் கலைகள் அங்கே;

அறுபது நான்கு திருவிளையாடல்களை அரனார்
அருமையான மதுராபுரியில் அன்றோ புரிந்தார்?

வணிகர் குலத்தில் வந்து பிறந்தார் - திருப்
பணிகள் செய்வதற்கு திரு மூர்த்தி நாயனார்.

விரும்பிப் புரிந்த பணியோ அரைத்துத் தருவது
ஒரு தினம் தவறாமல் பெருமானுக்குச் சந்தனம்.


வென்றான் கர்நாடக மன்னன் மதுரையை;
கொண்டான் தன் தலைநகராக மதுரையை;

அணைத்துக் கொண்டான் சமண மதத்தை அவன்
அணுகினான் குரவர்களைச் சமணத்தைப் பரப்பிட.

தடுத்தான் சைவரின் வழிபாட்டுத் திருப்பணிகளை;
கெடுத்தான் சிவனடியாரின் திருத் தொண்டுகளை;

கிடைக்கவில்லை சந்தனக் கட்டை நாயனாருக்கு!
தடைபட்டது தினம் செய்து வந்த திருத்தொண்டு!

முட்டு வரலாம் சந்தனக் கட்டைக்கு; வராது ஒரு
முட்டும் தன்முழங்கையில் இருக்கும் மூட்டுக்கு!

தேய்த்தார் தன் முழங்கையைச் சந்தனக் கல்லில்
தேய்த்து தோல்; தெரிந்தது சதையும், எலும்பும்!

எதையுமே உணரவில்லை மூர்த்தி நாயனார்
நைந்த தோல், எலும்பு, சதை , மூட்டு உட்பட!

உரைத்தது அசரீரி அருள்வாக்கு ஒன்று - அது
உணர்த்தியது அவர் எதிர்காலத்தை அவருக்கு.

"தடையின்றி நடை பெறும் உமது திருப்பணி!
கடையன் பகைவன் மாள நீர் அரசாள்வீர்!" என.

குணமாகி விட்டது நைந்து, தேய்த்த முழங்கை
கண நேரத்தில் பணி அணி நாதனின் அருளால்!

வாழ்க வளமுடன் , விசாலாக்ஷி ரமணி

#15a. Thiru Moorthi nAyanAr

MadhurApuri, the capital of the PANdya kingdom was famous for its exquisite pearls and the three forms of Tamil ( iyal = prose, isai = music, nAdakam = drama). Tamil flourished as well as the devotion to God and all the fine arts. Siva had performed his famous 64 divine pranks here.

Moorthy nAyanAr was born in the race of merchants. His aim in life was to provide freshly ground sandal wood paste to adorn Lord Siva. He never missed a day in this vow he had taken on himself.

The king of KarnAtaka defeated the PANdya king and took control over MadurApuri. It became his new capital. The king of Karnataka followed Jainism. Naturally he tried to suppress Saivism and tried to spread Jainism with the help of the Jain gurus.

The traditional modes of worship of Lord Siva suffered. So also the various activities taken up by the staunch devotees of Siva. Moorthi nAyanAr could not get the sandal wood for grinding into a paste.

He rubbed his own elbow on the rough stone in an effort to produce a paste for offering to his lord. His skin ruptured, the flesh and bones were exposed. But he did not feel any pain nor would stop grinding his own elbow.

An asareeri spoke to him thus, "Your vow will not be broken and you will continue your vratam. The king will perish and you will become the new king and help people flourish"

The skin and boned got healed as if by magic in an instant by Lord Siva's grace.




 
bhagavathy bhaagavatam - skanda 9

9#41c. அலைமகள் (3)

லக்ஷ்மி வசிப்பாள் லக்ஷணமான இடங்களில்;
லிங்க அர்ச்சனை, ஆராதனை நடக்குமிடங்கள்;

இஷ்ட தேவதைகளின் பூஜை நடக்கும் இடங்கள்;
கோஷ்டியாக நாம சங்கீர்த்தனம் ஒலிக்கும் இடங்கள்;

சங்க நாதம் ஒலிக்கும் இடங்கள் – சத் சங்கமும்
பங்கமின்றி தெய்வத் தொண்டும் நடக்குமிடம்;

துர்கா தேவியின் பூஜைகள் நடக்கும் இடங்கள்;
தூய பிராமணரின் போஜனம் நடக்கும் இடங்கள்;

குடியிருப்பாள் லக்ஷ்மிதேவி இவ்விடங்களில்
குதூஹலமான உள்ள நிறைவுடன் இந்திரா!

தருகின்றேன் திருமகளைத் தேவர்களுக்காக!
திருமகள் உதிப்பாள் பாற்கடலில் இருந்து!”

பாற்கடலைக் கடைந்தனர் அமரர், அசுரர்,
அற்புதப் பரிசுகள் வெளிப்பட்டன அப்போது.

உச்சைச்ரவம், ஐராவதம், கௌஸ்துபம், சந்திரன்,
சுதர்சனம், லக்ஷ்மி, வனமாலை, அமிர்தம் என்று.

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

9#41c. Lakshmi Devi (3)


Vishnu now listed the places where Lakshmi Devi resides with a happy heart. “Lakshmi Devi likes to reside in these auspicious places.

The place where Sivalinga AarAdhanA takes place;
The places where one’s Ishta DevatA is worshiped;

The place where group NAma sangeertan takes place;
The place where the auspicious conch is blown;

The place where sat sangh takes place;
The place where the service to Gods takes place;

The place where DurgA Devi is being worshiped and
The place where worthy Brahmins are given a feast.

I shall send Lakshmi to give back to you your wealth and glory. She will appear from the Ocean Of Milk – if you churn it with the help of the asuras.

The Amaras and Asuras churned the Ocean Of Milk. Many wonderful objects emerged from it. Some of them were Uchaisravas the divine horse, Airvatam the divine elephant; Kousthubam the rare gem; Sudarsanam the ChakrAyudam, Lakshmi Devi, The Moon, the VanamAlA ( an ever fresh garland) and the Amrutha kalasam (the pot of nectar).

 
SEkkizhArin Periya PurANam

#15b . திரு மூர்த்தி நாயனார் (2)

அழிந்து போனான் கர்நாடக மன்னன் திடீரென்று!
அழிந்து போனது சமணக் குரவர்களின் ஆதிக்கம்!

சந்ததிகள் இல்லை மாண்டு போன மன்னனுக்கு;
அந்திமக் கிரியைகள் செய்தனர் அமைச்சர்கள்;

அரசனைத் தேர்ந்து எடுப்பர் மதி மந்திரிகள்
அரசனின் பட்டத்து யானையின் உதவியோடு.

கண்ணைக் கட்டிய யானையிடம் இருக்கும் மாலை;
மண்ணை ஆளப் புது மன்னனைத் தேர்ந்தெடுக்கும்.

சென்றது பட்டத்து யானை நகர வீதிகள் வழியே;
சென்றது நேராகத் திரு ஆலவாய் கோவிலுக்கு.

இட்டது மலர் மாலையை நாயனார் கழுத்தில்!
கிட்டியது அரசுக் கட்டில் ஈசனின் நேசனுக்கு!

நடந்தன ஏற்பாடுகள் முடி சூட்டு விழாவுக்கு;
நடைமுறைக்குத் தடை விதித்தார் நாயனார்.

"தழைக்க வேணும் சைவம் முன் போலவே!
பிழைக்க வேணும் மக்கள் முன் போலவே !"

அளிக்கப்பட்டன அன்புடன் புது மன்னனுக்கு
ஒளிரும் பொன்முடி, மணிமாலைகள், நகைகள்.

மறுத்து விட்டார் நாயனார் அவைகளை ஏற்பதற்கு;
வெறுத்து ஒதுக்கிவிட்டார் ஆடம்பரச் சின்னங்களை.

"மணிமுடி ஆகும் எம்பெருமானின் இரு திருவடிகளே .
பொன்முடி ஆகும் ஆகும் என் சடை முடிகளே!" என்றார்

"திருநீறே ஆகும் எனக்கு நறுமணத் திரவியங்கள்;
உருத்திராக்கமே ஆகும் என் இரத்தின ஹாரங்கள்!"

ஆண்டார் நாட்டைத் திரு மூர்த்தி நாயனார் நன்றாகக்
கண்டிகை, சடைமுடி, திருநீறு இவற்றின் உதவியுடன்.

வளர்ந்தது சைவ மதம்; தளர்ந்தது சமண மதம்;
மலர்ந்தது வளமை; வளர்ந்தது நாட்டின் செழுமை.

நீண்ட காலம் அரசாண்டார் திரு மூர்த்தி நாயனா;
நீள் சடையோன் அடி நீழலை அடைந்தார் பின்னர்.

"மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்"

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#15b. Thiru Moorthi nAyanAr


As predicted by the asareeri (the celestial voice) the king of KarnAtakA died suddenly. Along with him the Jainism also lost it grip on the citizens. The king had no children. So the minsters performed his last rites.

The ministers had to select a new king from among the citizens. The age old practice was to let the royal elephant loose with its eyes tied up and with a flower garland. They told the elephant to select a new king for the kingdom.

The royal elephant walked through the streets and went directly to the temple in AalavAi. It draped the flower garland around the neck of Moorthi nAyanar. The simple staunch devotee of Siva had now been chosen to rule the country.

Preparations were going on for the coronation of the new king in full swing. But nAyanAr would have it in his own simple way. His only aim was that Saivism must flourish as before and Jainism must perish.

The new king was offered a crown, gem studded jewels, silk and all gifts worthy of a king. But Moorthi nAyanAr would not accept any of these things. He hated pomp and show and wished to remain the simple person he had always been.

He said, "The feet of Lord on my head will be my maNi makudam (king's crown). The knotted hair on my head will be my gold crown. The holy ash will be my perfume. The rudhrAkshams will be my gem studded jewels"

He ruled well and for many years,. The three things that guided him were KaNdigai, the holy ash and his knotted hair. Saivim flourished and Jainism perished. After ruling well, he merged with the holy lotus feet of Siva - breaking free from the endless cycles of birth and death.









 
bhagavathy bhaagavatam - skanda 9


9#42a. லக்ஷ்மி துதி (1)

இரு ஆடைகள் அணிந்து கொண்ட இந்திரன்
திருமகளை ஆவாஹனித்தான் ஒரு கடத்தில்.

சந்தனந்தில் தோய்த்த திவ்ய பாரிஜாத மலர்களால்
இந்திரன் பூஜித்து தியானம் செய்யத் துவங்கினான்.

பத்து லக்ஷம் முறை ஜெபித்தான் மூல மந்திரத்தை;
சித்தியாகி விட்டது அந்த மந்திரம் இந்திரனுக்கு!

இந்திரன் விருப்பம் நிறைவேறியது மந்திரத்தால்;
காந்தி வீசியபடி காட்சி தந்தாள் லக்ஷ்மி தேவி!

வெண் சண்பக மலரின் அற்புதமான நிறத்தில்;
கண்ணைப் பறிக்கும் இரத்தின அணிகளுடன்.

கோடிச் சந்திரர்களின் பிரகாசத்துடன் லக்ஷ்மி
தேடி வந்தாள் இந்திரனுக்கு அருள் புரிவதற்கு.

பக்திப் பரவசத்தில் மெய் சிலிர்த்தான் இந்திரன்;
பக்தியுடன் துதித்தான் பிரமனின் தோத்திரத்தை.

பிரம்னால் அருளப் பட்டது தேவியின் இந்தத் துதி;
பிரிக்க முடியாத வைதீக சம்பந்தம் உடையது.

மந்திர ராஜமாக உள்ளது பிரமனின் தேவி துதி;
இந்திர லோகத்துக் கற்பகத் தரு போன்ற துதி.

பெற்றான் ஐஸ்வர்யங்களைக் குபேரன் இதனால்;
பெற்றான் தீபங்களின் தலைமை தக்ஷ சாவர்ணீ.

பெற்றனர் சகல சித்திகள் மந்திரத்தால் பலர்!
பெற்றனர் சகல சம்பத்துக்களை மேலும் பலர்!

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

9#42a. Lakshmi Sthuthi (1)

Indra dressed himself appropriately for the worship of Lakshmi Devi. He did the preliminary AavAhanam (Invocation) of Devi on a pot. He worshiped Lakshmi Devi with the celestial pArijAta flowers dipped in sandal paste. He meditated on her and did the japam of the moola mantra ten lakh times. He got the siddhi of the mantra.

His prayer was answered. Lakshmi Devi appeared there with all her brilliance. She was the color of the White champaka flower. She was adorned in various gem studded ornaments. She had the cool luminescence of ten million full moon risen together. She came there to bless Indra by granting him boons.

Indra was overwhelmed by his devotion and his emotions. He chanted the sthuthi on Lakshmi Devi given by Brahma. It was the supreme sthuthi on Lakshmi Devi and granted the wishes of the devotees as the Karpaga vruksham of Swargga.

Kubera obtained his wealth with the help of this stuti. Daksha SAvarNi obtained the ruler ship all the Dweepams ( Islands) by this sthuthi. Many others got many things they sought by it – be it siddhi or sampath and wealth.
 
SEkkizhArin Periya PurANam

#16. திரு முருக நாயனார்

திருப்புகலூர் சிவனுடைய திருத்தலம் - இங்கு
முருகனார் தோன்றினார் வேதியர் குலத்தில்.

அறிந்திருந்தார் திரு முருகனார் இதனை நன்கு,
'திருத்தொண்டு ஒன்றே தரும் பேரின்பம்' என்று.

சேகரிப்பார் மலர்ந்தும் மலராத மொட்டுக்களை;
சேர்ப்பார் அவற்றைப் பல வண்ண மாலைகளில்.

இண்டை மாலை, கோவை மாலை, பக்தி மாலை,
கொண்டை மாலை, சரமாலை, தொங்கல் மாலை!

கட்டியது வெறும் மலர்மாலைகளை மட்டும் அல்ல
கட்டினார் சிவனடியார்களுக்குச் ஒரு சிறந்த மடம்.

சென்றார் திருநெல்லூர் திருஞான சம்பந்தரின்
திருமண நிகழ்ச்சிக்குத் திரு முருக நாயனார்.

பெருமான் அருளிய பேரொளி வெள்ளத்தில்
முருக நாயனாரும் புகுந்தார் ஞானசம்பந்தருடன்.

" முருகனுக்கு அடியேன்"

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

7 #16. Muruga nAyanAr

Thiruppugaloor was a famous kshethram (holy place attributed) to Lord Siva. Murugan nAyanAr was born here in the family of brahmins. He believed that only selfless service will be rewarded by total liberation.

He would collect fresh flower buds which are about to bloom. He would string them in to different kinds of garlands like INdai mAlai, kOvai mAlai; bakthi mAlai; koNdaimAlai,chara mAlai etc.

Murugan constructed a mutt for the convenience of the devotees of Siva. He went to Thiru Nelloor to attend the wedding ceremony of Thiru JnAna Sambandhar.

There Lord Siva created a glowing ball of light - by entering which one would attain the lotus feet of Siva Himself. Murugan nAyanAr entered the glow of light along with GnAna Sambandhar and many other staunch devotees of Siva.





 

Latest ads

Back
Top