• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

A poem a day to keep all agonies away!

bhagavathy bhaagavatam - skanda 9


9#42b. லக்ஷ்மி துதி (2)

“கமலா வாசினியே உனக்கு நமஸ்காரம்!
நாரணன் பத்தினியே உனக்கு நமஸ்காரம்!


கிருஷ்ணப் பிரியே! மஹாலக்ஷ்மி நமஸ்காரம்!
கமலா வதனீ! கமலக் கண்ணீ! என் நமஸ்காரம்!


பத்மாசனத்தில் அமர்ந்துள்ள விஷ்ணு பத்தினி!
பத்மங்களை ஏந்தியுள்ள உனக்கு நமஸ்காரம்!


பூஜிக்கின்றனர் உன்னை ஸர்வ சம்பத் ரூபிணியாக;
பூஜிக்கின்றனர் உன்னை விஷ்ணு பக்தி தருபவளாக.


கிருஷ்ணன் மார்பில் வசித்துக் கொண்டு பதியாகக்
கிருஷ்ணனையே அடைந்த உனக்கு நமஸ்காரம்!


சந்திர காந்த ஸ்வரூபிணி உனக்கு நமஸ்காரம்!
சம்பத்தின் அதிஷ்டான தேவதையே நமஸ்காரம்!


விருத்தி ஸ்வரூபிணீ நீ ! விருத்தி தாயினீ நீ !
வைகுண்டத்தில் விளங்கும் ஸ்ரீ மஹாலக்ஷ்மி நீ!


பாற்கடலில் உதித்த அலைமகளும் ஆனாய் நீ!
சுவர்க்கத்தில் விளங்கும் சுவர்க்கலக்ஷ்மியும் நீ!


ராஜ கிருஹத்தில் உள்ளாய் ராஜ்ய லக்ஷ்மியாக!
பிரஜா கிருஹத்தில் உள்ளாய் கிருஹ லக்ஷ்மியாக!


சமுத்திரத்தில் தோன்றிய காமதேனுவும் நீயே!
யக்ஞங்களில் அளிக்கப்படும் தக்ஷிணையும் நீயே!


தேவ மாதரில் சிறந்த அதிதி தேவியும் நீயே!
குளங்களில் தோன்றும் தாமரை மலரும் நீயே!”


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


9#42b. Lakshmi Stuti (2)

“The Devi who dwells on a lotus flower! My obeisance to you! The wife of Sriman NArAyaNa! My obeisance to you! You are dear to KrishnA! My obeisance to you! You have eyes like lotus petals. You have a face like lotus in full bloom. My obeisance to you!


You are seated on a lotus flower. You are holding two lotus flowers in your hands. My obeisance to you! You bestow wealth on your devotees. You bestow Hari Bhakti on your devotees! My obeisance to you!


You live on the broad chest of KrishnA. You have obtained KrishnA as your loving husband. My obeisance to you! You have the brilliance of the Moonstone. You are the presiding deity of wealth. My obeisance to you!


You make things plentiful. You are the giver of bountifulness. My obeisance to you! You are the MahAlakshmi in Vaikuntam; the Devi who emerged from the Ocean of Milk!


You are the Swargga Lakshmi; You are the Gruha Lakshmi; You are Surabhi who emeged from the Ocean of Milk! You are the DakshiNA Devi in YagnAs; You are Aditi devi – the mother of all Devas. You are the beauty of the lotus flowers!”






 
SEkkizhArin Periya PurANam

7 #17. உருத்திர பசுபதி நாயனார்

செழித்தன பல் வளங்கள் சோழ நாட்டினில் - பூம்
பொழில்கள் நிறைந்து இருந்தன திருத்தலையூரில்.

முழங்கும் வேத பாராயண கோஷம் எப்போதும்;
பொழியும் மாதம் மும்மாரி அவ்வூரில் தப்பாமல்.

புலமை பெற்றிருந்தார் உருத்திர பசுபதியார்
புராணம், இதிஹாசம், வேத சாத்திரங்களில்.

உச்சரித்த வண்ணமே இருப்பர் உருத்திரத்தை
எச்சமயத்திலும் இடைவிடாது பசுபதி நாயனார்;

துன்பத்தைத் தீர்ப்பவன் உருத்திரன் - மேலும்
இன்பத்தைத் தருபவன் அதே ஸ்ரீ உருத்திரன்.

எம்பெருமானின் கண்கள் ஸ்ரீ உருத்திரம் எனில்
எம்பெருமானின் கண்மணிகள் சிவபஞ்சாக்ஷரம்.

ஓதுவார் நாயனார் கழுத்தளவு நதி நீரில் நின்று
தோதாகக் கைகளைத் தலைக்கு மேல் குவித்து;

இரவு பகல் பாராது செய்தார் உருத்திர பாராயணம்;
இறைவன் தந்தான் இவருக்குத் தன்னருகி
ல் ஓரிடம்.

"உருத்திர பசுபதிக்கு அடியேன்"

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

7 #17. Rudhra Pasupathi nAyanAr

ChOzha kingdom was very fertile and prosperous. Thiru Thalaiyoor was situated in the ChOzha kingdom. It had many beautiful gardens and cool groves. Vedic chanting could be heard everyday and since the Veda were respected, rains never failed to pour down here thrice a month.

Rudhra Pasupathi nAyanAr was well versed in PurANa, IthihAsa and sAsthrAs. He would be chanting Sree Rudhram always.

Sree Rudhran is the God who removes all our troubles. Sree Rudhran is the God who gives us happiness and good health.

If SreeRudhran can be compared to the eyes of Lord Siva then the pupils of those eyes are the Siva panchAkshara.

Rudhra Pasupathi nAyanAr used to stand neck deep in the flowing river water and chant Sree Rudhram. He would chant Sree Rudhram day in and day out. Lord Siva was well pleased with his deep devotion and granted him a place near Himself in His world.



 
bhagavathy bhaagavatam - skanda 9

9#42c. லக்ஷ்மி துதி (3)

“ஹவிஸு ஹோமத்தில் ஸ்வாஹா தேவி நீ!
கவ்ய ஹோமத்தில் உதவும் சுவதா தேவி நீ!


விஷ்ணு ஸ்வரூபம்
நீய! பூமி ஸ்வரூபம் நீயே!
இஷ்ட வரங்கள் தருவாய் சாந்த குணத்துடன்.


சரஸ்வதி
ஸ்வரூபமாகத் தருவாய் பரமார்த்தம்;
சாம்பல் ஆகிவிடும் உலகம் நீ இல்லாவிட்டால்.


காக்கின்றாய் பெற்ற தாய் போல உன் பிள்ளைகளை!
காக்கின்றாய் பெற்ற தாயினும் சாலப் பரிந்து எம்மை!


பிழைத்துக் கொள்ளும் தாயற்ற குழந்தை ஒருவேளை;
பிழைத்துக் கொள்ளாது நீ இல்லாவிடில் இந்த உலகம்.


கருணை புரிய வேண்டும் தாயே நீ எனக்கு!
அருள வேண்டும் இந்திர லோகத்தை எனக்கு!


யாசகனாகி விட்டேன் நீ விலகிச் சென்றதும்;
யாசிக்கின்றேன் ஞானம், தர்மம், சௌபாக்யம்.


தருவாய் பிரபாவத்தையும், பிரதாபத்தையும்;
தருவாய் போரில் வெற்றியை, ஐஸ்வர்யத்தை!”


துதித்தனர் அனைவரும் வரங்களைக் கோரியபடி;
அளித்தாள் அனைத்து வரங்களையும் கோரியபடி!


மலர் மாலையை அளித்தாள் இந்திரனுக்கு – பின்பு
மறைந்தருளினாள் மஹாலக்ஷ்மி தேவி அங்கிருந்து.


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

9#42c. Lakhmi Stuti (3)

“You are the SwAhA Devi, in the sacrificial ceremonies; You are the SvadhA Mantra in the KAvyas in offering of food to deceased ancestors. My obeisance to you!


You are of the nature of VishNu! You are of the nature of Earth that supports all! You grant boons to all. You are the auspicious SAradA! You grant devotees the Highest Reality and the devotional service to Hari.


Without you all the worlds would be dead even while existing. As a loving mother nourishes her infants with her milk, so do you nourish all of us as our mother! A child might be saved even when deprived of its mother, but none of us can ever be saved except by you!


All my possessions are now in the hands of my enemies. Be kind enough to restore my kingdom to me. Ever since you have forsaken me, I am wandering like a beggar, deprived of all prosperity. O Devi! Please grant me the JnAnam, Dharma, fortune, power, influence and all my possessions.”


Lakshmi Devi granted boons to the Devas, gave the garland of flowers to Indra and disappeared from there.


Whoever recites this holy Stotra three times a day, becomes prosperous like Kubera. He who recites this stotra five lakh times will attain siddhi.



 
SEkkizhArin Periya PurANam

7#18a . திரு நாளைப் போவார் நாயனார்

அமைந்திருந்தது கொள்ளிட நதிக் கரையில்
ஆதனூர் என்னும் சிறந்த சிவத் தலம் ஒன்று.

பூலைப்பாடி ஒன்று இருந்தது ஆதனூரில் - அதில்
புலையர் வாழ்ந்தனர் வேளாண் தொழில் செய்து.

பிறந்தார் நந்தனார் புலையர் குலத்தில் - எனினும்
சிறந்தார் நந்தனார் தம் சீரிய சிவ பக்தியினால்.

புரிந்து வந்தார் நந்தனார் திருத் தொண்டுகள் பலவும்
விரிசடையான் கோயிலுக்குத் தன்னால் இயன்ற அளவு.

வழங்கினார் இசைக் கருவிகளுக்கு நரம்பு, தோல்;
வழங்கினார் இறைவன் பணிக்குக் கோரோசனை.

அனுமதி இல்லை தாழ்குலத்தவர் ஆலயம் நுழைய!
அனுதினமும் ஆடுவார், பாடுவார் ஆலய வாயிலில்!

விரும்பினார் நந்தனார் சிவலோக நாதனைத்
திருப்புன்கூர் திருத்தலத்தில் சென்று வணங்க.

அந்தோ பரிதாபம்! காண முடியவில்லை ஈசனை;
நொந்தார் மனம் மலைபோல மாடு மறைத்ததால்!

விலக்கினான் நடுவே நின்ற நந்தியை எம்பிரான்;
விளக்கினான் நந்தன் பெருமையை உலகினருக்கு.

புல்லரித்தது அவர் மேனி ஈசனின் தரிசனத்தால்;
சொல்லரிய பெரும் பேறு பெற்றார் நந்தனார்.

இருந்தது ஊரின் நடுவே ஒரு பெரும் பள்ளம்;
இருந்தது ஊற்று ஒன்று பள்ளத்தின் நடுவே.

மாறியது பள்ளம் ஸ்வாமி புஷ்காரிணியாக
மாறாது உழைத்த நந்தனாரின் முயற்சியால்.

மீண்டும் அழைத்தான் சிவலோகநாதன் நந்தனை
மீண்டும் அடைந்தார் திருப்புன்கூரை நந்தனார்;

தில்லை சென்று அம்பலக் கூத்தனைக் காண
எல்லை கடந்து பெருகியது நந்தனின் ஆவல்!

மாலையில் சொல்வார், "நாளை செல்வேன் தில்லை!"
காலையில் கலைந்து விடும் கனவு பனிமூட்டம் போல!

"நாளைப் போவேன்!" என்று நாளும் கூறி வந்ததால்
"நாளைப் போவார்" என்ற நாமம் அமைந்து விட்டது!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#18a. Thiru NALai pOvAr nAyanAr

Aadhanoor was a Siva kshethram ( a place holy to Lord Siva) situated in the bank of river KoLLidam. There as a Pulaip pAdi (a slum area ) where the Pulaiyar ( people of lowest caste in ancient India ) lived and worked in the fields of the rich landlords.

Nandan was born in the race of Pulaiyar but he excelled his deep devotion to Lord Siva. He served Lord Siva to the best of his limited ability. He would provide the guts needed for the various stringed instruments and the leather needed for the percussion instruments used in the temple. He would present the GOrojanai he obtained to the temple of Siva.

In those days untouchability prevailed in India. The people of the lower varNa were not allowed to enter the temple premises. But that did not deter Nandan from singing and dancing in front of the temple of Siva.

He wished to have a dharshan of Siva in Thiruppunkoor. He visited the temple but could not get a glimpse of God since the Nandi Devan was hiding the view of God.

Nandan became very sad but Lord Siva performed a miracle by shifting the Nandhi Devan's huge statue to one side so that Nandan could get a glimpse of Lord Siva. Nandan was overwhelmed both the by the Lord Siva's dharshan and by the grace shown by God on him.

There was a huge pit with a spring of pure water in it in the middle of Aadhanoor. Soon Nandan converted it into a SwAmi pushkariNi ( a holy pond) by his hard work. Again he wished to visit Siva in Thiru punkoor and he did visit it again.

Now he got the desire to get a dharshan on Thillai NatarAjan. Every single day he would say, "I will go to Thillai Chidhambaram tomorrow!" but the next day the desire will vaporize like the morning dew due to his commitments.

Since he used to say "NALai POven" ( "I will go tomorrow" ) everyday his name itself became "Thiru NAlai POvAR nAyanAr".



 
bhagavathy bhaagavatam - skanda 9


9#43a. ஸ்வாஹா தேவி (1)

உணவு வேண்டும் உயிர் வாழ்வதற்கு;
உணவு வேண்டும் பணிகள் புரிவதற்கு!

விண்ணப்பித்தனர் தேவர்கள் பிரமனிடம்
உண்ண உணவுக்கு ஏற்பாடு செய்யும்படி.

யக்ஞரூபி விஷ்ணுவைத் தியானித்தான் பிரமன்;
யக்ஞ ரூபமாக அவதரித்தார் ஒரு கலையினால்!

ஹவிஸுகளைத் தந்தனர் யாகத்தில் அந்தணர்;
ஹவிஸு சென்றடையவில்லை தேவர்களிடம்!

சென்றனர் தேவர்கள் மீண்டும் பிரம்ம தேவனிடம்;
பகன்றனர் உணவு வந்து அடையவில்லை என்று.

பிரமன் சென்றான் மீண்டும் விஷ்ணு பிரானிடம்,
“பிரகிருதி தேவியைத் துதி!” என்றார் விஷ்ணு.

தோன்றினாள் பிரகிருதி தேவி ஒரு கலையினால்
புன்னகை முகத்துடனும்; கரிய நிறத்துடனும்!

ஸ்வாஹா தேவியாக வந்து அவதரித்த தேவி
சிநேகத்துடன் வினவினாள், “வேண்டுவது என்ன?”

“எரிக்கும் சக்தி இல்லை அக்னி தேவனுக்கு!
எரிக்கும் சக்தி ஆவாய் அக்னி தேவனுக்கு!

உச்சரித்து இடுவர் ஹவிஸ்ஸை உன் பெயரால்!
மிச்சமின்றிச் சேர்க்க வேண்டும் தேவர்களிடம்!

அருள் புரிவாய் தேவர்கள் உணவு உண்ண!
அருள் புரிவாய் கிருஹலக்ஷ்மியாக இருந்து!”

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

9#43a. SwAhA Devi (1)

One needs food to remain alive! One needs food do his duties. The Devas made a request to Brahma to arrange for their food in Heaven.

Brahma meditated on Sri VishNu and he appeared as the Yagna Roopi through one of his amsams. The Brahmins performed yajnas and offered havisu in the fire of the Homa kuNdam. But it was unable to reach the Devas in the Heaven.

The Devas went to Brahma again and said that the havisu did not reach them in the Heaven. Brahma went to Krishna who suggested to him to meditate on Prakithi Devi.

Brahma meditated on Prakrithi Devi and she appeared as a new Devi with a smiling face and a dark hue. She was the SwAhA Devi and asked Brahma, “What do you wish for?”

Brahma said, “Agni is not able to deliver the food offered in the yagna to the gods in Heaven. May you become the burning power of Agni and deliver the food to the Devas. The havisu will be offered while uttering your name and you must please help the Devas to get their share of the havisu offered in the yajna.”

 
SEkkizhArin Periya PurANam

7#18b. திரு நாளைப் போவார் நாயனார்

கனிந்து விட்டது அரும்பிய ஆவல் பூத்துக் காய்த்து!
"இனியும் செல்லாது இரேன் தில்லைக்கு!" என்றார்.

அடைந்து விட்டார் சென்று தில்லையின் எல்லையை;
அடைய முடியவில்லை ஆலயத்தில் ஈசன் தரிசனத்தை.

மண்ணுலகம் அதிர்ந்தது வேதங்கள் ஓதும் ஒலியால்!
விண்ணுலகம் நிறைந்தது வேள்விகளின் புகையால்!

வலம் வந்தார் தில்லை நகரை! பாடினார்! கூத்தாடினார்!
வலம் வந்தார் ஆலய மதிலை ! பாடினார்! கூத்தாடினார்!

ஈடேறுமா நடராஜனைக் காண விரும்பும் அவர் கனவு?
ஈசன் விடை அளித்தான் இதற்கு ஓரிரவு அவர் கனவில்!

"இப்பிறவி நீங்கிட மூழ்கி எழுவாய் அனலிடை - பின்பு
முப்புரி நூலுடன் வந்தணைவாய் என்னை!" என்றான்.

தோன்றினான் பிரான் தில்லை அந்தணர் கனவிலும்;
ஊன்றினான் இதே கருத்தை அந்தணர் சிந்தையிலும்;

"அழைத்து வாருங்கள் என் அன்பன் நந்தனை - வளரும்
அனலிடை மூழ்கச் செய்து எந்தன் சன்னதிக்கு!" என்றான்.

வந்தனர் தில்லை வாழ் அந்தணர்கள் நந்தனிடம் - வந்து
தந்தனர் அனுமதி நந்தனுக்கு அனலிடை மூழ்கி எழுந்திட.

நெருப்புக்குழி தயாரானது ஆலயத்தின் மதிலின் அருகே;
நெருப்பு நெருப்பை அழித்து விடுமா என்ன? காண்போம்!

வீழ்ந்தார் நந்தனார் அக்கினிக் குண்டத்தில் - அதன் பின்
எழுந்தார் செந்தாமரையின் மேல் உள்ள பிரம்மன் போல்!

பால் வண்ண மேனியோடு, பளீரிடும் வெண்நீற்றோடு,
நூல் அணிந்த மார்போடு, புரளும் உருத்திராக்கத்தோடு.

வியந்தனர் அந்தணர் நந்தனின் திவ்விய ரூபம் கண்டு!
மயங்கினர் தில்லை நடராஜனின் திருவருளைக் கண்டு!

பொழிந்தது மலர் மழை; எழுந்தது வேதங்களின் ஒலி!
வழி காட்டினார் தில்லைவாழ் அந்தணர்கள் நந்தனுக்கு.

குவித்த கரங்களுடனும், திரு ஐந்தெழுத்துக்களுடனும்
குனித்த புருவப் புனிதப் பிரானுடன் ஒன்றி விட்டார்!

திரும்பி வரவில்லை நந்தனார் மீண்டும் வெளியே!
திருவடி நிழலில் நந்தன் கலந்து இணைந்து விட்டார்.

"திருநாளைப்போவார் அடியார்க்கடியேன்"

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#18b. Thiru NALai pOvAr nAyanAr (2)

The desire of visiting Thillai Chidhambaram which had bloomed in Nandan's mind long ago now bore fruit at last. Nandan reached the city limits of Thillai Chidhambaram. But a dharshan of even the temple was beyond his good fortune.

In Thillai Chidhambaram the earth echoed with the Vedic chanting and the sky got filled with the smoke rising from the hOma kuNdams. Nandan went round the whole city. He sang and danced with glee. He went round the compound wall of the temple. He sang and danced with glee once again.

Would his dream of getting a dharshan of NatarAjan become real? One fine day Siva appeared in the dream of Nandan and told him this, " Enter a pit of roaring fire to get rid of your present birth. Attain a holy form adorned by pooNool and come to me!"

Siva appeared in the dream of the Thillai Brahmins and told the same thing. He instructed the Thillai Brahmins to make Nandan enter the fire pit and then lead him to the sannadhi of Siva."

The Brahmins of Thillai came to Nandan and invited him to go with them. Nandan was overwhelmed by this and accompanied them happily. He entered the pit of roaring fire and came up again looking like Lord Brahma himself seated on a large red lotus flower.

He looked very brilliant; his divya sareeram ( the divine form) was adorned with the holy ash, the pooNool and the rudhrAkshams. The brahmins lead him to the sannadhi of Siva.

Nandan entered the garbba graham (sanctum sanctorium) with his hands held in anjali and lifted over his head. He never emerged from there. He had merged with Lord Siva for ever and ever.




 
bhagavathy bhaagavatam - skanda 9

9#43b. ஸ்வாஹா தேவி (2)

வருந்தினாள் இதைக் கேட்ட ஸ்வாஹா தேவி;
“விரும்புகின்றேன் நான் கிருஷ்ணனை மணக்க!

நடப்பவை அனைத்தும் நடப்பது கிருஷ்ணனால்;
அடைய வேண்டும் நானும் கிருஷ்ண மூர்த்தியை!”

ஒற்றைக் காலில் தவம் செய்தாள் ஸ்வாஹா தேவி;
தோற்றம் தந்தான் அன்புடன் ஸ்ரீ கிருஷ்ண மூர்த்தி.

தாங்கொண்ணாத மகிழ்ச்சியில் மூர்ச்சித்து விழத்
தாங்கி எழுப்பினான் ஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி அவளை!

“எடுப்பேன் வராஹ அவதாரம் எதிர் காலத்தில்!
அடைவாய் நீ அப்போது என்னைக் கணவனாக!

பிறப்பாய் நக்னிஜிதனுக்குப் புதல்வியாக!
பெறுவாய் நாக்னிஜிதீ என்னும் பெயரை!

அக்னி தேவனின் மனைவி ஆவாய் இப்போது!
அக்னி தேவனின் எரிக்கும் திறன் ஆவாய் நீ!

அங்கமாக இருப்பாய் நீ அவன் மந்திரங்களுக்கு!
பங்கமின்றித் தருவாய் ஹவிஸ்ஸை தேவருக்கு!

மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வான் உன்னை.
மகிழ்வடைந்த அக்னி தேவன் உன் சக்தியால்!”

மணம் புரிந்து கொண்டான் அக்னி தேவன்
மந்திரப் பூர்வமாக ஸ்வாஹா தேவியை.

அக்னி சுகித்திருந்தான் ஸ்வாஹா தேவியுடன்
ஆயிரம் தேவ வருடங்கள் இல்லற வாழ்வினில்.

ஜனித்தனர் மூன்று மகன்கள் அவர்களுக்கு!
தக்ஷிணாக்னி, கார்ஹபத்யாக்னி, ஆஹவனீயம்.

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

9#43b. SwAhA Devi (2)

SwAhA Devi became sad on hearing this request. She said, “Everything in this universe happens because of Sri Krishna. I want to marry him and no one else.”

SwAhA Devi did severe penance standing on one leg. Sri Krishna was pleased and gave her his darshan. She fainted at his sight due to overwhelming happiness! Krishna brought her around and told her:

“I will take an avatar as a divine boar in the future. You will become my wife then. You will be born as the daughter of king Nagnijith and bear the name as NAgnijithee.

Now you will marry Agni Devan and become his wife and his burning power. Your name will form a part of the mantrAs uttered during the offering of the havisu. You have to make sure that the havisu reaches the Devas in Heaven. Agni will keep you happy since you will become his burning power.”

Agni married SwAhA with the auspicious mantras uttered and they lived happily for one thousand celestial years. They were blessed with three sons named DakshinAgni, GArhyapatyAgni and AhavaneeyAgni.

 
SEkkizhArin Periya PurANam

#19. திருக்குறிப்புத் தொண்டர்

பிறந்தார் ஏகாலியார் மரபில் காஞ்சி மாநகரில்
திருக்குறிப்புத் தொண்டர் என்னும் நாயனார்.

அடியவர் மனக்குறிப்பு அறிந்து தொண்டு செய்த
அடியவர் பெயர் ஆனது திருக்குறிப்புத் தொண்டர்.

ஆடையின் மாசை அகற்றும் தொண்டினால் - தான்
வீடுபேறு பெற்றுவிடலாம் என நம்பினார் நாயனார்.

தொண்டர்களின் ஆடைகளைத் துவைக்கும் - சிறு
தொண்டு புரிந்து வந்தார் சிவனடியார்களுக்கு.

குடத்தில் இட்ட விளக்காக இருந்த இவர் பெருமையை
திடமாக உலகினில் பரப்ப விரும்பினான் சிவபெருமான்.

வந்தான் எம்பெருமான் கந்தலை அணிந்து கொண்டு
இந்த நாயனாரின் இல்லத்துக்கு சிவனடியாராக மாறி.

"சுத்தமாகத் துவைத்துத் தருவேன் இதை!" என்றால்
"வைத்துவிடு அதைத் துவைக்க வேண்டாம் எனக்கு !"

"மாலை மயங்குவதற்குள் இதைத் துவைத்து உலர்த்திப்
பாலைப் போல வெண்மையாக்கித் தருகின்றேன் நான்!"

தொண்டனைச் சோதிக்க வந்திருந்த பிரான் தன்னுடைய
கந்தலைத் தந்தான் நாயனார் துவைத்துத் தருவதற்கு.

வருணதேவன் வந்தான் சோதனைக்கு மேல் சோதிக்க;
கருமேகங்கள், மின்னல், இடி, கன மழையுடன் அன்று.

உலர்த்த முடியவில்லை துவைத்த துணியை அவரால்.
உலர்ந்து போனது நாயனாரின் ஜீவ சக்தி அதனால்.

"சொன்ன சொல்லக் காப்பாற்ற முடியாத நான் இன்னும்
என்ன காரணத்துக்காக உயிர் வாழ் வேண்டும்?" என்றார்.

கருங்கல் இருந்தது துணி துவைக்க உதவுவது - அன்று
கருங்கல் உதவும் தலையை மோதி உயிர் விடுவதற்கும்!

மோத முயன்றார் தன் தலையைக் கருங்கல்லில் அவர்;
சோதனை செய்ய வந்த ஐயன் வேதனை அடைந்தான்.

பாறையிலிருந்து வெளிப்பட்டது பெருமானின் கரம்.
பாறையில் மோதாமல் காக்கப்பட்டது நாயனார் சிரம்.

தோன்றியது பேரோளி வான வீதியில் அப்போது.
தோன்றினார் அண்ணலும் அன்னையும் ஒளியில்.

மலரடிகளை அணையும் பெரும் பேறு பெற்றார் - மன
மலமின்றித் தொண்டாற்றிய திருக் குறிப்பு நாயனார்.

"திருக்குறிப்புத் தொண்டர் தம் அடியார்க்கும் அடியேன்"

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#19. Thiruk kuRipputh ThoNdar nAyanAr

In the city on Kancheepuram, a nAyanAr was born in the race of washer-men of clothes. Since he served the people by knowing their exact needs, he was called as Thiruk kuRippu ThoNdar nAyanAr.

He strongly believed that by washing away the dirt from the clothes of devotees of Lord Siva, he would attain the abode of Siva. So he made it a rule to wash the clothes of a devote of Siva before he would wash the clothes of the other people.

His name and fame were like a lamp lit and kept inside a pot. Lord Siva wanted the whole world to know about his greatness and played a divine prank as was his custom.

Lord Siva appeared as a devotee of Siva dressed in rags. NAyanAr offered to wash his clothes clean but the old devotee of Siva in rags would not agree to this offer.

NAyanAr renewed his offer and promised to wash the clothes clean and dry them before handing them back safely to the old devotee. Finally the devotee agreed to this offer.

Lord Siva himself had descended on nAyanAr to test him. Now VaruNa dEvan also came to His assistance. It rained in cats and dogs so that nAyanAr could not dry the washed cloth.

His vow was broken and so was his heart. He did not have the courage to face the devotee after forcing him to part with clothes for washing.

He decided that his life was not worth living. So he decided to end his life by banging his head of the huge stone he used for washing the clothes.

Just as he was about to bang his head on the rock, a hand emerged from the rock and protected his head from getting cracked. A brilliance was seen in the sky. Lord Siva and his consort Devi Uma were seen in the brilliance.

Thiruk kuRippu thoNdar had earned his place in the world of Siva since he pursued his simple vow with utter sincerity and unshakable faith.








 
I thank the readers of the thread for the impressive traffic of 2525 in the past 24 hours. It has been slowly increasing over the past few days.

I do hope those of you who can read the Tamil, read the poem and the English translation. The others of course can read only the translation.

I just wish to remind that the Tamil Poem is the main product and the translation the bye product!

If you still this simple poetry too difficult to understand, please the read the English translation first and then the poem positively.

However good a translation may be, it will never become equal to the original poetry in its beauty, flow, grace, rhyme and rhythm!

I just completed typing the Periya PurANam.

I can hardly wait to post the remaining posts.

But it is "A poem a day to keep the agonies away!"

So I will just post the concluding post here today.

This series will continue as usual @ one poem + translation per day. :pray2:
 
So I will just post the concluding post here today.This series

will continue as usual @ one poem + translation per day.


முடிவுரை ... வாழ்த்துரை ... பின்குறிப்பு...

இத்துடன் அறுபத்து மூன்று நாயனார்களின் சரித்திரம் முடிவு பெறுகின்றது. எத்துணையோ நாட்களாக இவற்றைப் படிக்க விரும்பிக் கொண்டிருந்தேன். அதற்கு இப்போதேனும் வாய்ப்பும், வேளையும் வந்ததில் மட்டற்ற மகிழ்ச்சி.

அதை
எளிமைப்படுத்தி எழுதுவது அரன் அருளால் முழுமை அடைந்ததில் அளவற்ற ஆனந்தம். படிப்பது அதன் முழுப்பயனை எப்போது நமக்குத் தரும் என்று தெரியுமா ? படித்ததை பிறருக்கும் நன்கு விளங்கும்படி எடுத்துச் சொல்லும் போது தான்!

ஆழ்வார்கள் வரலாறும் தொடருமா? எனக்கு
த் தெரியவில்லை!

ஆசை இருக்கின்றது தாசில் பண்ண! அதிருஷ்டம் இருக்கிறதா??

வாழ்த்துரை

என்றும் இன்பம் பெருகும் இயல்பினால்
நன்று காதலித் துள்ளமும் ஓங்கிட
மன்று ளாரடி யாராவர் வான்புகழ்
நின்ற தெங்கும் நிலவி உலகெலாம்.

இறைவன் அடியெடுத்துக் கொடுத்த "உலகெலாம்" என்று தொடங்கும் பெரிய புராணம், அதே சொற்றொடர் "உலகெலாம்" என்று முடிவுறுவது என்ன அற்புதம்!

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்;
நிலவு லாவிய நீர்மலி வேணியன்,
அலகில் சோதியன் அம்பலத்தாடுவான்;
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்.

பின்குறிப்பு :

தித்திக்கும் இத் தீந்தமிழ்க் காவியத்தை
குழவியின் மழலையில் மிழற்றியுள்ளேன்.

சிலந்தியின் வலையையும், யானையின் மலரையும்,
கண்ணப்பனின் அறியாமையையும் ரசித்த பெருமான்

இதையும் ரசித்தோ அல்லது சிரித்தோ ஏற்றுக் கொள்வான்.
ஈசனின் பாதங்களில் இதைப் பணிவன்புடன் படைக்கிறேன்.

மீண்டும் சிந்திப்போம் விரைவில் இன்னொரு புதுத் தொடரில்.
உங்கள் உண்மையுள்ள,
விசாலாக்ஷி ரமணி




 
SEkkizhArin Periya PurANam

7#18b. திரு நாளைப் போவார் நாயனார்

கனிந்து விட்டது அரும்பிய ஆவல் பூத்துக் காய்த்து!
"இனியும் செல்லாது இரேன் தில்லைக்கு!" என்றார்.

அடைந்து விட்டார் சென்று தில்லையின் எல்லையை;
அடைய முடியவில்லை ஆலயத்தில் ஈசன் தரிசனத்தை.

மண்ணுலகம் அதிர்ந்தது வேதங்கள் ஓதும் ஒலியால்!
விண்ணுலகம் நிறைந்தது வேள்விகளின் புகையால்!

வலம் வந்தார் தில்லை நகரை! பாடினார்! கூத்தாடினார்!
வலம் வந்தார் ஆலய மதிலை ! பாடினார்! கூத்தாடினார்!

ஈடேறுமா நடராஜனைக் காண விரும்பும் அவர் கனவு?
ஈசன் விடை அளித்தான் இதற்கு ஓரிரவு அவர் கனவில்!

"இப்பிறவி நீங்கிட மூழ்கி எழுவாய் அனலிடை - பின்பு
முப்புரி நூலுடன் வந்தணைவாய் என்னை!" என்றான்.

தோன்றினான் பிரான் தில்லை அந்தணர் கனவிலும்;
ஊன்றினான் இதே கருத்தை அந்தணர் சிந்தையிலும்;

"அழைத்து வாருங்கள் என் அன்பன் நந்தனை - வளரும்
அனலிடை மூழ்கச் செய்து எந்தன் சன்னதிக்கு!" என்றான்.

வந்தனர் தில்லை வாழ் அந்தணர்கள் நந்தனிடம் - வந்து
தந்தனர் அனுமதி நந்தனுக்கு அனலிடை மூழ்கி எழுந்திட.

நெருப்புக்குழி தயாரானது ஆலயத்தின் மதிலின் அருகே;
நெருப்பு நெருப்பை அழித்து விடுமா என்ன? காண்போம்!

வீழ்ந்தார் நந்தனார் அக்கினிக் குண்டத்தில் - அதன் பின்
எழுந்தார் செந்தாமரையின் மேல் உள்ள பிரம்மன் போல்!

பால் வண்ண மேனியோடு, பளீரிடும் வெண்நீற்றோடு,
நூல் அணிந்த மார்போடு, புரளும் உருத்திராக்கத்தோடு.

வியந்தனர் அந்தணர் நந்தனின் திவ்விய ரூபம் கண்டு!
மயங்கினர் தில்லை நடராஜனின் திருவருளைக் கண்டு!

பொழிந்தது மலர் மழை; எழுந்தது வேதங்களின் ஒலி!
வழி காட்டினார் தில்லைவாழ் அந்தணர்கள் நந்தனுக்கு.

குவித்த கரங்களுடனும், திரு ஐந்தெழுத்துக்களுடனும்
குனித்த புருவப் புனிதப் பிரானுடன் ஒன்றி விட்டார்!

திரும்பி வரவில்லை நந்தனார் மீண்டும் வெளியே!
திருவடி நிழலில்நந்தன் கலந்து இணைந்து விட்டார்.

"திருநாளைப்போவார் அடியார்க்கடியேன்"

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#18b. Thiru NALai pOvAr nAyanAr (2)

The desire of visiting Thillai Chidhambaram which had bloomed in Nandan's mind long ago now bore fruit at last. Nandan reached the city limits of Thillai Chidhambaram. But a dharshan of even the temple was beyond his good fortune.

In Thillai Chidhambaram the earth echoed with the Vedic chanting and the sky got filled with the smoke rising from the hOma kuNdams. Nandan went round the whole city. He sang and danced with glee. He went round the compound wall of the temple. He sang and danced with glee once again.

Would his dream of getting a dharshan of NatarAjan become real? One fine day Siva appeared in the dream of Nandan and told him this, " Enter a pit of roaring fire to get rid of your present birth. Attain a holy form adorned by pooNool and come to me!"

Siva appeared in the dream of the Thillai Brahmins and told the same thing. He instructed the Thillai Brahmins to make Nandan enter the fire pit and then lead him to the sannadhi of Siva."

The Brahmins of Thillai came to Nandan and invited him to go with them. Nandan was overwhelmed by this and accompanied them happily. He entered the pit of roaring fire and came up again looking like Lord Brahma himself seated on a large red lotus flower.

He looked very brilliant; his divya sareeram ( the divine form) was adorned with the holy ash, the pooNool and the rudhrAkshams. The brahmins lead him to the sannadhi of Siva.

Nandan entered the garbba graham (sanctum sanctorium) with his hands held in anjali and lifted over his head. He never emerged from there. He had merged with Lord Siva for ever and ever.

https://youtu.be/odSYjJcF-Rc


Attachments area

Preview YouTube video ஜெமினியின் நந்தனார் 1962 | Nandanaar Full Tamil movie


ஜெமினியின் நந்தனார் 1962 | Nandanaar Full Tamil movie






 
bhagavathy bhaagavatam - skanda 9

9#43c. ஸ்வாஹா தேவி (3)

அவிர்தானம் செய்தனர் மூன்று வர்ணத்தவர்;
அழகிய ஸ்வாஹா என்னும் மந்திரங்களால்!


அடைந்தனர் தேவர்கள் ஹவிர் பாகங்களை;
அடைந்தனர் சித்திகள் யாகம் செய்தவர்கள்.


இணையாகும் ஸ்வாஹா இல்லாத ஒரு மந்திரம்
தினை அளவும் வேதம் அறியாத அந்தணனுக்கு;


நஞ்சு இல்லாத ஒரு சர்ப்பத்துக்கு – பதிக்குக்
கொஞ்சமும் சேவை செய்யாத பெண்மணிக்கு;


வித்தை எதுவும் இல்லாத மனிதனுக்கு;
விரும்பும் கனிகள் இல்லாத கிளைக்கு;


ஹோம பலன் கிடைக்காது செய்பவருக்கு;
அவிர்பாகமும் கிடைக்காது தேவர்களுக்கு.


பூஜிக்க வேண்டும் ஸ்வாஹா தேவியை
பூர்வம் யக்ஞ, ஹோமம் தொடங்குமுன்!


அங்கம் ஆவாள் ஸ்வாஹா மந்திரங்களுக்கு;
எங்கும் பலன் தருவாள் செய்த கர்மங்களுக்கு.


தியானிக்க வேண்டும் மூல மந்திரத்தால் தேவியை;
அபிமானிக்க வேண்டும் உபசாரங்களால் தேவியை.


இம்மையிலும், மறுமையிலும் சித்திகள் பெறுவான்
இந்தப் பதினாறு நாமங்களால் போற்றிப் புகழ்பவன்


“ஸ்வாஹா, வஹ்னி ப்ரியா, வஹ்னி ஜாயா,
சந்தோஷ காரிணீ, சக்தி, கிரியா, காலதாத்ரி,


பரிபாக்கரி, த்ருவா, நராணாம் சதா கதி,
தாஹிகா, தஹனக்ஷமா, சம்சார சார ரூபா,

கோர சம்சார தாரிணீ, தேவ ஜீவன ரூபா,
தேவ போஷன காரிணீ ” என்ற நாமங்களால்

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


9#43c. SwAhA Devi (3)


The three varnAs performed YAgam and offered havisu uttering the mantra with the name of SwAhA Devi! The Gods and Devas got their share of the havisu and the performers of the yAgam got all their desires fulfilled.


The mantrA without SwahA is like a Brahmin without the knowledge of the VedAs; or a serpent without poison; or a pathni who does not do pathi-seva; or a man who does not have any talent or training; or a branch which does not not bear fruits.


The kartA of the yAgam will not get his desires fulfilled nor will the Deva get their share of havisu. One must worship SwAhA Devi before the commencement of the yAgam. She bestows the fruits of the Yagam.


One must worship her uttering her Moola mantra and doing the various honors. One who praises her uttering these sixteen names will obtain sidhdhi in this world as well as the next!


“You are the SwAhA Devi! You are Vahni PriyA (the Beloved of Agni). You are theVahni JAyA (the wife of Agni). You are SantOsha KAriNi (you please everyone).


You are Shakti (Energy). You are Kriya (Action). You are the bestower of KAla (The Time). You are ParipAkkari (you help in digesting the food);


You are the DhruvA; You are NarANAm sathA gathi (the eternal resort to all men); You are DAhikA (the burning power); You are Dahana kshamA (You can burn everything),


You are SamsAra SAra Roopa (the essence of this world); You are Gora SamsAra TAriNi (the deliverer from the terrible world); You are the Deva Jeevana roopa (life of all the gods) and You are the Deva PoshaNa kAriNi (you are the nourisher of all the Gods.”


He who reads with devotion these sixteen names, gets success both in this world and the next. All his efforts will be successful. He who wants a wife will marry a beautiful girl and live with her in bliss.



 
SEkkihArin Periya PurANam

#20a . சண்டீஸ்வர நாயனார்

பண்ணுக்கு இன்னிசை போல, பாலுக்குச் சுவை போல,
கண்ணுக்கு ஒளி போல, கருத்துக்கு "நமசிவாய" போல,

விண்ணுக்கு மழை போல, வேதத்துக்குச் சைவம் போல,
மண்ணுக்குப் பயனாக ஆனது திருச்சேய்ஞ்ஞலூர் தலம்.

தந்தை அந்தணர் எச்சதத்தன்; தாய் பெயர் பவித்திரை;
அந்த தம்பதியினரின் குமாரன் ஆவான் விசாரசருமன்.

முற்பிறப்பில் கொண்டிருந்த ருசி, வாசனைகளினால்
இப்பிறப்பில் உண்டாயிற்று வேதங்களில் அதீத ருசி.

அகவை ஐந்து நிரம்பியது விசாரசருமனுக்கு - பெற்றோர்
உபநயனம் செய்வித்து முறையாக ஓதுவித்தனர் வேதம்.

பசு ஒன்று முட்டிவிட்டது தன்னை மேய்க்கும் சிறுவனை;
பசுவை அடித்தான் சினம் கொண்ட மேய்க்கும் சிறுவன்.

இளகி விட்டது இதைக் கண்ட விசாரசருமனின் மனம்;
விளக்கினான் அவனுக்குப் பசுவின் மேன்மைகளை.

"கிடைக்கின்றது பசுவிடம் இருந்து தூய திருநீறு;
கிடைக்கின்றது பசுவிடம் இருந்து பஞ்சகவ்வியம்;

பால், தயிர், மோர், வெண்ணை, நெய் போன்ற
பல பொருட்களை அளிப்பது ஒரு பசு அல்லவா?

தெய்வங்களும் தேவர்களும் வாழ்கின்றனர் அறிவாய்
தெய்வத் தன்மை வாய்ந்த ஒவ்வொரு பசுவின் உடலிலும்."

அஞ்சி நடுங்கி விட்டான் மாடு மேய்த்த சிறுவன் - அதனால்
அளித்து விட்டான் மாடு மேய்க்கும் பொறுப்பை இவனிடமே.

ஏற்றுக் கொண்டான் ஆநிரையை மேய்க்கும் பொறுப்பை;
பெற்ற குழந்தைகளை போலப் பாதுகாத்தான் அவற்றை.

அச்சமின்றி வளர்ந்தன ஆநிரை அவன் காட்டிய அன்பினால்;
ஆச்சரியப் படும்படி அதிகப் பாலைச் சுரந்தன ஆநிரைகள்.

வெளிப்படுத்தின தம் அன்பை நாவினால் நக்கியதன் மூலம்.
வெளிப்படுத்தின தம் அன்பை அதிகப் பால் சுரப்பதன் மூலம்.

பொழியும் பசுக்களின் பால் வீணாகாமல் இருப்பதற்கு
வழி ஒன்று கண்டு கொண்டான் அன்பன் விசாரசருமன்.

அத்தி மரத்தின் கீழே அழகிய சிவாலயத்தை அமைக்கச்
சித்தம் கொண்டான் ஈசனின் நேசன் ஆன விசாரசருமன்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

#20a. ChaNdeeswara nAyanAr (1)

Thiru Cheinjnjaloor was as useful to the world as music was to poetry, taste was for milk; light was for vision; panchAksharas were for the mind; rain was for the sky and Saivism was for the Vedas.

VichAra sarman was born to a brahmin by Ecchadhatthan and his wife Pavithra. He was deeply interested in Vedas since he has carried with him the taste of and affinity for Vedas from his previous birth.

When VichAra Sarman attained the age of five years, his parents performed his upanayanam and made him learn the Vedas.

One day VichAra Sarman watched a scene which affected him deeply. He saw a cow nudge a cowherd with its horns. The cowherd got very much annoyed by this and beat the cow with a stick.

VichAra Sarman felt sorry for the cow and elaborated to the cowherd the greatness of a cow. "We get the holy ash vibhoothi from the cow. We get the pancha gavyam needed for performing pooja from the cow.

It gives us milk, curd, butter milk, butter and ghee needed for our daily life. All the Devas and Gods reside in the various body parts of a cow. A cow is a very holy animal."

The cowherd go so scared by this lecture that he entrusted the task of looking after the cows to VichAra Sarman himself. He was happy to look after the cows and took care of them as if they were his own children.

The cows were free from fear and felt loved and in turn loved VichAra Sarman. They started yielding more and more milk as the days passed by. VichAra Sarman did not want to waste the excess milk oozing from the cows. He wished to build a temple for Siva in the shade of a fig tree.




 
bhagavathy bhaagavatam - skanda 9

9#44a. ஸ்வதா தேவி (1)

திருப்தியை உண்டாக்குவாள் இவள் பித்ருக்களுக்கு.
சிறந்த பலன் தருவாள் சிராத்த காலத்தில் இவள்.

சிருஷ்டித்தான் பிரமன் ஆதியில்
ஏழு பித்ருக்களை;
சரீரம் உள்ள நால்வரை
யும், தேஜோ ரூப மூவரையும்!

ஏற்படுத்தினான் சிரார்த்த கர்மத்தைப் பித்ருக்களுகாக.
ஏற்க வேண்டும் அந்தணன் அனுஷ்டான கர்மங்களை.

சிராத்த தர்ப்பணம், சந்தியா வந்தனம், வேதம்
சிறந்த அந்தணனுக்கு இன்றி அமையாதவை.

விஷமில்லாத பாம்பு போல இகழப்படுவான் – இந்த
விஷயங்களில் அக்கறை இல்லாத ஒரு அந்தணன்!

இறைவனுக்குப் படைக்காமல் உணவு உண்பவன்;
இறைவனுக்குச் சேவை ஒருநாளும் செய்யாதவன்;

கர்மங்கள் செய்யும் தகுதியை இழப்பான் – செய்யும்
கர்மங்கள் எதுவும் பலனளிக்காது இவனுக்கு.

பித்ருகளுக்காக பிரமன் ஏற்படுத்தினான் சிராத்தம்
பித்ருக்களுக்கு கிடைக்கவில்லை பலன் எதுவும்!

செய்தனர் பிராமணர்கள் சிராத்தம் – ஆனால்
சென்று சேரவில்லை அளித்த உணவு பித்ருக்களை!

முறையிட்டனர் குறையை பித்ருக்கள் பிரம்மனிடம்;
உருவாக்கினான் ஓர் அழகிய கன்னியை பிரம்மதேவன்.

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

9#44a. SvadhA Devi (1)

SvadhA Devi serves during the SrAddha kArya to satisfy the Pitrus. Brahma created the Pitrus – four of them with sareeram and three of them with just Tejo roopam. He created anushtAna karmas to honor them.

Vedas, SandhyA vandanam and SrAddha karmas are the three important things for any brahmin. A brahmin who does not show interest in these three is no better than a serpent without poison.

A brahmin who eats the food without offering to God first and he who never does any service to God will lose the eligibility to do the karmas. Also the karmas performed by him will not bear fruits.

Even though Brahma established the Pitru karmas there was no use. The brahmins performed SrAddham but the food offered did not reach the Piturs. They went and complined about this to Brahma.

Brahma created a beautiful Devi to become the wife of the Pitrus and to make the food become available to the pitrus.


 
SEkkizhArin Periya PurANam

#20b. சண்டீஸ்வர நாயனார் (2)


லிங்கமாகியது மண்ணியாற்றங் கரையின் மணல்!
லிங்கத்தின் கோவில், கோபுரம், மதில் மண்ணாலே!

அபிஷேகம் செய்தான்; அர்ச்சனை செய்தான் சிறுவன்;
அவை சென்றடைந்தன அரனின் அரவிந்த பாதங்களை.

அன்புடன் எழுந்தருளினான் அரன் மணல் கோவிலில்;
அன்புடன் சுரந்தன ஆநிரைகள் மேலும் அதிகப் பால்.

அறிவிலி ஒருவன் கண்டான் அபிஷேக ஆராதனையை;
அறிவித்தான் இதனை அவ்வூர் மக்கள் அனைவருக்கும்;

"பாலை வீணாக்கும் மகனைக் கண்டியுங்கள்!" என்றனர்
பலரும் தந்தை எச்சதத்தனிடம் கூட்டம் கூடிச் சென்று.

எச்சதத்தன் பின் தெடர்ந்தான் மாடு மேய்க்கின்ற மகனை;
எச்சதத்தன் கண்காணித்தான் ரகசியமாகத் தன் மகனை.

முறையாக வழிபட்டான் விசாரசருமன் மணல் லிங்கத்தை;
முறைதவறி வெஞ்சினம் கொண்டான் தந்தை எச்சதத்தன்;

நொறுக்கினான் தடியால் அடித்து மகனின் உற்சாகத்தை;
நொறுக்கினான் தன் காலால் உதைத்துப் பாற்குடங்களை!

இன்னல் தந்த தந்தையை நோக்கி மகன் வீசிய கோல்
மின்னல் வேகத்தில் மாறிவிட்டது கூரிய ஒரு மழுவாக!

விழுந்தான் எச்சதத்தன் தன் கால்களை இழந்து கீழே;
இழந்தான் விழுந்த எச்சதத்தன் தன் ஜீவனையும் வீணே!

ஒளிப்பிழம்பாகத் தோன்றினர் அங்கே சிவனும், உமையும்;
வழிபட்டான் விசாரசருமன் தரை மீது விழுந்து வணங்கி.

"உனக்குத் தந்தையும் யாமே! உனக்குத் தாயும் யாமே!
உன்னைத் தலைவன் ஆக்கினோம் அடியவர்களுக்கு!

சண்டீசபதம் வழங்கினோம்; உனக்கு உரிமையாகும் - யாம்
உண்ணும் பரிகலம், உடுப்பவை, சூடுபவை அனைத்தும்!

திருமுடியில் இருந்து எடுத்தார் ஒரு கொன்றை மாலையை;
திருக் கைகளால் அணிவித்தார் அதை விசாரசருமனுக்கு;

உன்னதமான ஓர் உயர்ந்த பதவி ஆகும் சண்டீசபதம் பதவி ;
உள்ளது சண்டீசபதம் ஒவ்வொரு கடவுளுக்கும் தனித்தனியே;

அந்தந்தக் கடவுளை வழிபடுபவருக்குப் பலன் தருவார்
அந்தந்தக் கடவுளின் சண்டீசபதம் பதவியில் உள்ளவர்.

தொனிச் சண்டர் ஆவார் சிவ சண்டீசபதத்தில் உள்ளவர்;
தோன்றுவார் சண்டேசுரர் உருத்திரனின் சினத்திலிருந்து.

"அம்மையான் அடிசண்டிப் பெருமானுக்கு அடியேன்"

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#20b. ChaNdeeswara nAyanAr (2)


VichAra Sarman made a Siva linga out of the sand. The temple, the Gopuram, the compound wall were all made form sand. Abhishekham and Archanai performed to this sand Sivalingam reached Lord Siva Himself.

Lord Siva was well pleased with these and He started residing in the sand temple as well as in the regular temples built according to the Agama rules.

The cows started giving more and more milk. VichAra Sarman performed the Siva ArAdhane with great love and devotion.

One day a foolish man happened to watch this ArAdhana and spread the news in the locality. The people living in that locality went and complained to the father Ecchadhatthan about this. They told him to control his son from wasting the precious milk in this foolish manner.

One fine day, the father followed his son unseen by him. He watched the Siva ArAdhana being performed by his son, unseen by him. Anger surged in him at this waste of time and milk. He thrashed his son with a stick. He broke the pots of milk by kicking them with his legs.

VichAra Sarman got annoyed by the hindrance to his worship and threw a stick at the legs that had kicked the pots of milk. The stick got transformed into a sharp ax and both the legs of Ecchadhatthan got cut off. He too fell down quite dead.

Siva appeared with his consort Uma Devi in a brilliant light. "We are your father and your mother dear child! We have made you a leader of my devotees. We have conferred on you the Chandeesa padham. In future, whatever we are offered will belong to you!"

Siva took out a garland of Kondrai flowers from his head and draped it around the neck of the little boy. Chandeesa padham is a great position to be obtained by a devotee.

There is a Chandeesan for every God and it is his job to give the fruit of the karma to the devotees of that God.








 
bhagavathy bhaagavatam - skanda 9

9#44b. ஸ்வதா தேவி (2)

பெற்றிருந்தாள் நூறு சந்திரர்களின் ஒளியை!
பெற்றிருந்தாள் மனோரம்ய உருவம், பருவம்.

சிறந்திருந்தாள் வித்தையில், நற்குணங்களில்;
இருந்தாள் பிரகிருதி தேவியின் ஓரம்சமாக.

புன்னகை முகம், தூய்மை, கற்புடன் – வெண்
ஷண்பக மலரின் நிறம் கொண்டிருந்தாள்!

இரத்தின ஆபரணங்கள் பூண்டிருந்தாள் தேவி;
பக்தருக்கு வரம் தரும் சக்தி பெற்றிருந்தாள்.

விளங்கினாள் ஸ்வதா என்ற பெயருடன்;
விளங்கினாள் லக்ஷ்மியின் லக்ஷணத்துடன்!

தாமரையில் பதிந்திருந்தன அழகிய பாதங்கள்;
தாமரைகள் மிளிர்ந்தன முகத்திலும், விழிகளிலும்!

பத்தினியானாள் ஸ்வதா தேவி பித்ருக்களுக்கு;
உத்தம மந்திரம் உருவானது ஸ்வதா பெயரில்.

உபதேசித்தார் அந்தணர்களுக்கு அந்தரங்கமாக;
உபயோகித்தனர் அந்தணர் ஸ்வதா மந்திரத்தை.

“ஸ்வாஹா” மந்திரம் உணவளிக்கும் தேவர்களுக்கு;
“ஸ்வதா” மந்திரம் உணவளிக்கும் பித்ருக்களுக்கு.

தக்ஷிணை தேவை எல்லாக் கர்மங்களுக்கும்!
தக்ஷிணை இல்லாத பூஜையும், யாகமும் வீண்

போற்றினர் அனைவரும் ஸ்வதா தேவியை;
போற்றினர் அவள் மூலம் பித்ருக்களையும்.

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

9#44b. SvadhA Devi (2)

SvadhA Devi had the cool luminescence of one hundred full moons risen together. She had a beautiful body and was young and very attractive. She was created out of an amsam of the Prakriti Devi and excelled in all the good qualities.

She had a smiling countenance. She was chaste and was of the color of white champaka flower. She was adorned with many ornaments studded with precious gems. She had the power to give boons to her devotees. She was as beautiful as Lakshmi Devi herself.

Her feet stood on a lotus flower. Her eyes resembled the lotus petals and her face a lotus in full bloom. She became the wife of the Pitrus. Brahma created an auspicious mantra in the name of SvadhA Devi.

He taught it to the Brahmins secretly. They used the mantra in their karmas. The mantra with SwAhA gives food to the Devas and Gods. The mantrA with SvadhA gives food to the Pithrus.

DakshiNa Devi is necessary for all the pujas and YAgams. Without DakshiNA Devi, all the karmas will go in waste.

Everyone praised SvadhA Devi and through her the Pithrus.

 
SEkkizhArin Periya PurANam

#21a . திருநாவுக்கரசர் நாயனார்


மாட மாளிகைகளும் மற்றும் கூட கோபுரங்களும்
மணி மண்டபங்களும் மண்டியது திருமுனைப்பாடி.

பெருகி வரும் பெண்ணையாற்றின் பெருவளத்தால்
பெருகின வளமையும், ஒழுக்கமும், நன்னெறிகளும்.

தோன்றினர் அப்பரும், சுந்தரரும் இந்தத் தலத்தில்;
தோன்றினர் சமயக்குரவர்கள் நால்வரில் இருவர்
இங்கு.

கொண்டிருந்தது பல வளங்களைத் திருமுனைப்பாடி;
கொண்டிருந்தது திருவாமூர் என்ற சிவத்தலத்தையும்.

சிறந்து விளங்கின அறமும், நெறியும் இங்கே - மேலும்
சிறந்து விளங்கியது வேளாண்மரபில் குறுக்கையர் குடி.

புகழ் பெற்ற சிவத்தொண்டர் ஆவார் புகழனார் பெருமான்.
அகத்தை நிர்வகித்தார் மனைவி மாதினி அம்மையார்;

கருவுற்ற மாதினியாரின் முதல் புதல்வி திலகவதி;
மருள்நீக்கியார் தோன்றினார் இரண்டாவது சிசுவாக.

பிறந்தார் வாகீச முனிவர் மருள்நீக்கியாராகப் புவியில்;
பிறக்கும்படிச் சாபம் தந்தான் கயிலையில் நந்திதேவன்!

தவம் புரிந்திருந்தார் வாகீச முனிவர் திருக் கயிலையில்;
வலம் வந்தான் உலகை இராவணன் புஷ்பக விமானத்தில்;

"வலமாகச் செல்வாய் கயிலை மலையை இராவணா!
மலைமீது எழுந்தருளியுள்ளார் எம்பெருமான் ஈசன்" என

"மந்தி முகத்துடன் இருக்கும் நந்தியே! தருகின்றாயா
மாவீரன் எனக்கே அறிவுரை?" கேட்டான் இராவணன்.

எல்லை மீறியது நந்தியின் சினம் - தந்தான் கடும் சாபம்
"தொல்லை பட்டு அழியும் உன் இலங்கை குரங்குகளால்!"

"பெயர்த்து எறிகின்றேன் இந்தக் கயிலை மலையையே!"
பெயர்த்தான்
இராவணன் கயிலையை வலிய கரங்களால்!

அழுத்தினார் அரனார் கால் பெருவிரலால் மலையை!
அழுந்தினான் இராவணன் மலையின் கீழே அசைவின்றி.

எழுப்பினான் ஓலக்குரல் வேதனை தாளமுடியாமல் - அது
எழுப்பியது தவம் செய்து கொண்டிருந்த வாகீச முனிவரை.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#21a. Thiru NAvukkarasar

Thirumunaip pAdi was a prosperous and famous place in the Pallava kingdom. The river PeNNaiyARu rendered this place very prosperous. Prosperity helped in the growth of good conduct and right principles here.

Appar and Sundarar were born here. The birth of two out of the four famous saints of Saivims makes this place a very holy place indeed.

ThiruvAmoor was a holy place attributed to Lord Siva. KuRukkaiyar was a famous family of farmers in this place. PugazhanAr was a staunch devotee of Lord Siva. His wife was a gem among women named MAdhiniyAr.

In due course of time PugazhanAr and MAdhiniyAr was blessed with a female child whom they named as Thilakavathy. The second child born to them was a son who was named as MaruL neekkiyAr.

MaruL neekkiyAr was the reincarnation of sage VAgeesa who was doing severe penance in KailAsh. RAvaNa went by on his pushpaka vimAnam. Nandhi Devan told RAvaNa," Go round the KailAsh in a pradakshiNam (clockwise circle) since Lord Siva resides on KailAsh"

RAvaNa would not be advised by a mere bull. He rudely retorted to Nandhi,"Oh Nandhi whose face resembles a monkey! How dare you advise me the valiant RAvana?"

Nandhi went into a rage and cursed RAvaNa thus,"You called me a monkey. May your kingdom Lanka get completely destroyed by monkeys!"

Now RAvaNa went into a rage and said," I will pluck the mountain and throw it away!" He used is twenty mighty arms and uprooted the mountain KailAsh.

Lord Siva pressed the mountain with his big toe and RAvaNa got caught under the mountain - unable to move. He yelled in pain and shame which fell on the ears of the sage VAgeesa doing penance in KailAsh.








 
Bhagavathy bhaagavatam - skanda 9


9#43c. ஸ்வதா தேவி துதி

“ஸ்வதா தேவியே!

பிராணனுக்குச் சமமானவள் பித்ருக்களுக்கு;
பிராமணர்களுக்கு ஜீவிய ரூபம் ஆனவள் நீ;

அதிஷ்டான தேவதை நீயே ஆவாய் தாயே
அனைத்துப் பித்ரு கர்மங்களுக்கும் தேவி.

தருகின்றாய் செய்யும் கர்மங்களின் பலனை;
இருக்கின்றாய் புண்ணிய ஸ்வரூபிணியாக!

இருக்கின்றாய் நீ நித்தியையாக தேவி;
இருக்கின்றாய் நீ சத்திய ரூபிணியாக.

தோன்றுகின்றாய் நீ சிருஷ்டி காலத்தில்;
மறைகின்றாய் நீயும் பிரளய காலத்தில்.

“ஓம் ஸ்வஸ்தி நம: ஸ்வாஹா ஸ்வதா தக்ஷிணா”


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

9#43b. SvadhA Devi Stuti (3)


“O SvadhA Devi! You are dear to the Pitrus as their vital breath and you are the very life of the BrAhmins. You are the Presiding Deity of S’rAddha ceremonies and you bestow the fruits of performing it.

You are eternal, you are the truth, and you are of the nature of religious merits. You appear during the creation and disappear in dissolution. And this appearing and disappearing go on forever.

You are the Pranava Om; You are Svasti; You are NamaskArA; You are SvadhA and You are DakshiNA. You are the various karmas as designated in the Vedas.

Brahma handed over the lotus-faced SvadhA Devi to the Pitrus and they took her happily to their own abode.

He who hears with devotion and attention this stotra of SvadhA, gets all his desires fulfilled and the merit of bathing in all the holy Teerthams.

 
SEkkizhArin Periya PurANam

#21b . திருநாவுக்கரசர் நாயனார் (2)

எழுப்பினான் ஓலக்குரல் இராவணன் மலையின் கீழிருந்து!
எழுப்பியது ஓலக்குரல் வாகீச முனிவரைத் தவத்திலிருந்து!

"இசைக்கு மயங்கி விடுவார் இறைவன் அறிவேன் நன்றாக!
வசப்படுத்து அண்ணலை நீ இன்னிசையை இசைத்து!" என

இசைத்தான் தன் நரம்புகளையே யாழாக்கிய இராவணன்;
இசையால் குளிர வைத்துவிட்டான் எந்தையின் சிந்தையை!

பொறுத்தார் அவன் பிழையை; அளித்தார் நீண்ட ஆயுளையும்
போரில் வெற்றியைத் தரும் அரிய சந்திரஹாசம் வாளையும்.

சினந்தான் நந்தி தேவன் வாகீசர் வலிய உதவி செய்ததால்;
சாபமிட்டான் வாகீசர் மண்ணுலகில் ஒரு பிறவி எடுக்கும்படி.

அவதரித்தார் வாகீசர் மருள் நீக்கியாராக மாதினியாரிடம்;
நாவுக்கரசர் என்பது வாகீசர் என்பதன் பொருள் அல்லவா?

கல்வி கேள்விகளில் சிறந்தனர் தமக்கையும், தம்பியும்;
வல்லவர்கள் ஆனார்கள் அனைத்துக் கலைகளிலும்;

அடைந்தார் திருமணப் பருவத்தைத் திலகவதியார்;
முடிவானது சேனாதிபதி கலிப்பகையாருடன் மணம்.

விண்ணுலகு எய்தினார் அவர்கள் தந்தையார் புகழனார்
மண்ணுலகு விடுத்தார் அவர்கள் தாய் மாதினியாரும்!

ஆழ்ந்தனர் மீளாத் துயரில் பெற்றோரை இழந்ததும்;
வீழ்ந்தனர் துன்பக் கடலில் கலிப்பகையார் இறந்ததும்!

விரும்பினாள் திலகவதி தன்னையே மாய்த்துக் கொள்ள;
இறைஞ்சினார் மருள்நீக்கியார் மனதை மாற்றிக் கொள்ள;

"அன்னையும், தந்தையும் விண்ணுலகு எய்தியபின் எனக்கு
அன்னையும் தந்தையும் இனி நீங்கள் அல்லவா?" என்றார்.

கொண்டிருந்தாள் திலகவதி தம்பியிடம் அதீத அன்பு - மாற்றிக்
கொண்டாள் உயிர் துறக்கும் தன் எண்ணத்தையும் அதனால்.

துறந்து விட்டாள் அணிமணிகளை; அழகிய பட்டாடைகளை;
சிறந்து நின்றாள் கருணை கொண்டு, சீரிய தொண்டு செய்து.

அறிந்து கொண்டனர் வாழ்க்கையின் நிலையாமையை நன்கு;
மறைந்துவிடும் யாக்கை, செல்வம், இளமை அனைத்தும் என்று!

ஈடுபட்டனர் அறச் செயல்கள் புரிவதில் இருவரும் தளராமல்
நீர்ப்பந்தல்கள், நீர் நிலைகள், சாலைகள், சோலைகள் என்று.

அளித்தனர் அறுசுவை உண்டி வந்த விருந்தினர்களுக்கு;
அளித்தனர் அகமகிழும்படிப் பரிசுகள் வந்த புலவர்களுக்கு.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#21b. Thiru nAvukkarasar nAyanAr


RAvaNa yelled in pain and it fell in the ears of the compassionate sage VAgeesar. He told RAvaNa this, "I know that Lord Siva melts down when he hears the divine music. Calm him down with your sweet music!"

RAvaNa played on the nerves in his body as the strings of a Yazh and played mesmerizing music. Lord Siva as well pleased. He pardoned RAvaNa's rude behavior and presented him with a long life span and a victorious sword called ChandrahAsam.

Nandhi Devan became angry with the sage VAgeesar for helping RAvaNA to get out of the punishment he deserved and for letting him get additional boons and gifts from Lord Siva.

So he cursed the sage VAgeesar to be born in the earth as a human being. It was the sage VAgeesar who was reincarnated as MaruLneekiyAr. Later he would be known by the title NAvukkarasar which a literal translation of the name VAgeesar.

Thilakavathi and MaruLneekiyAr became well versed in many arts and sAsthras. Thilagavthi had attained marriageable age. So her wedding was fixed with KalippagaiyAr who was the SEnAthipathi (general of the army of the king)

But suddenly PugazhanAr their father died. Their mother MadhiniyAr also followed her husband. Now the two children were overcome by grief. To add to this, the bridegroom KalippagaiyAr also got killed in a battle.

The sorrow of the siblings became deeper than an ocean. Thilagavathi decided to end her life but her brother begged her to change her decision. He begged her saying, "After we lost our parents I imagine that you are my father and mother now. You can't leave me alone and go away!"

Thilagavathi loved her brother too much to end her life and leave him alone in this world. But she gave up wearing ornaments and rich silks. She transformed into a noble person and detached herself from the various pleasures of life. Her only aim was to serve the fellow human beings to the best of her ability.

The two siblings realized that human life is ephemeral and uncertain. The human body, the wealth and the youth are merely temporary and impermanent.

They erected pandhal for distributing clean drinking water to the thirsty. They got new roads laid and grew gardens and groves. They served tasty feasts to all their guests and gave rich gifts to the poor poets.
 
bhagavathy bhaagavatam - skanda 9

9#45a. தக்ஷிணா தேவி(1)

கோலோகத்தில் இருந்தவள் கோபிகை சுசீலை;
கோலோகக் கிருஷ்ணனுக்கு அதிகப் பிரியை!

இணையானவள் அழகில் ராதா தேவிக்கு!
இனியவள் அனைவருக்கும் பிரபாவத்தில்!

மனோ ரம்மியமானவள்; இளமையானவள்;
மான் விழிகள், தாமரை முகம் கொண்டவள்.

முத்துப் பற்களும், புன்னகையும் உடையவள்;
ரத்தின ஆபரணம், கோவை இதழ் கொண்டவள்;

நடையில் அன்னம்; நிறத்தில் வெண் சண்பகம்;
உடலோ மென்மை; குணமோ மிகவும் மேன்மை!

நிபுணை காமக் கலையில்! புத்தி கத்தி போன்றது!
ரசிகை, ரசிக்கத் தகுந்தவள், ரசிக சுகம் அறிந்தவள்;

ஒட்டியிருந்தாள் சுசீலை கிருஷ்ணனின் மார்பில்;
ஒட்டி உறவாடும் ராதையின் கண் எதிரிலேயே.

வெட்கினான் கிருஷ்ணர், சிவந்த உதடுகள் துடிக்க
வெட்டும் விழிகளுடன் வந்த ராதையைக் கண்டு!

மறைந்தோடி விட்டான் கிருஷ்ணன் – உடனே
உறைந்து விட்டனர் அச்சத்தால் மற்றவர்கள்!

“பஸ்பமாகக் கடவாய் கோலோகம் வந்தால்!”
பரிவின்றிச் சபித்தாள் சுசீலையை ராதை!

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

9#45a. DakshiNA Devi (1)


SuseelA was a gopi in the Goloka. She was very dear to Krishnan of Golokam. She was comparable to RAdhA Devi in her beauty. She was sweet-natured. She was very attractive and youthful.

She was doe-eyed and her face resembled a lotus in bloom. She had two rows of pearls for her teeth and bimba fruits for her lips. She was adorned with many gem studded ornaments.

She had the gait of a swan and the colour of white Champaka flowers. She was an expert in the art of love. She was sharp witted and one who enjoyed the joy of living.

She was leaning on the chest of Krishna right in the vicinity of RAdhA Devi, who became terribly angry with uncontrollable jealousy surging in her.

KrishNa got frightened and disappeared from there. Everyone present there froze in fear seeing the angry RAdhA Devi with reddened eyes and quivering lips.

RAdhA Devi cursed the beautiful SuseelA very harshly, “You will turn into ashes if you ever dare to set foot in Golokam!”

 
SEkkizhArin Periya PurANam

#21c. திருநாவுக்கரசர் நாயனார் (3)

கருதினார் சமண மதமே உலகப்பற்றை அறுக்கும் என்று;
மருள் நீக்கியார் இணைந்து விட்டார் சமண மதத்தில்;

அறிந்திருந்தார் திரு ஐந்தெழுத்து, திரு நீற்றின் மகிமை;
அறிய விரும்பினார் சமண மதக் கோட்பாடுகளையும்;

சென்றார் பாடலிபுரத்துக்கு; சேர்ந்தார் சமணப் பள்ளியில்;
சிறந்தார் கல்வியில்; பெயர் பெற்றார் தருமசேனர் என்று.

வென்றார் வாதப் போட்டியில் பௌத்த மதத்தினரை;
வென்றார் சமண சமயத்தினரின் தலைமைப் பதவியை.

ஈடுபாடு கொண்டிருந்தார் மருள் நீக்கியார் சமணத்தில்;
ஈடுபாடு கொண்டிருந்தார் திலகவதியார் சைவமதத்தில்;

வருந்தினாள் திலகவதி சமண மத ஈடுபாட்டினால்;
விரும்பினாள் இளவலைச் சைவத்துக்குத் திருப்ப;

விண்ணப்பம் செய்தாள் அனுதினமும் பெருமானிடம்;
"மீண்டும் ஆட்கொள்ளுவேன் சூலை நோயைத் தந்து!"

பற்றியது கொடிய சூலை நோய் மருள்நீக்கியாரை;
பற்றியது வடவைத் தீயுடன் நஞ்சு அவர் வயிற்றில்!

சூலைநோய் வாட்டியது மருள்நீக்கியாரை கடுமையாக.
சமணரின் மணி, மந்திரம், மயில்பீலி பயன் தரவில்லை!

திரண்டனர் சமணக் குரவர்கள் தீவிர சிகித்சை அளிக்க;
சிறிதும் பலன் தரவில்லை குரவர்களின் தீவிர சிகிச்சை!

மயில் பீலியும் மந்திரித்த நீரும் வீணாகப் போய்விட்டன.
கையாலாகாதபோது தனியே விட்டுச் சென்றனர் அவரை!

தமக்கைக்குச் செய்தி அனுப்பினார் பணியாள் மூலம்;
தமக்கை மனம் வருந்தினாள் தம்பியின் நிலைமையால்.

"வர முடியாது என்னால் சமணர்கள் இருக்குமிடம்.
வரச் சொல் தம்பியை உடனே இங்கு என்னிடம் !'

புறப்பட்டார் மருள் நீக்கியார் திருவதிகைக்கு;
குறைந்து விட்டது சூலை நோயின் தீவிரமும்!

விடுத்தார் கமண்டலம், மயில்பீலி, பாய் ஆடைகளை!
உடுத்தார் தூய வெண்ணிற ஆடைகளையே மீண்டும் .

இரவோடு இரவாகச் சென்றார் திருவதிகைக்கு.
ஒரே துணைவன் நம்பிக்கைக்குரிய பணியாள்.

வாழ்க வளமுடன் , விசாலாக்ஷி ரமணி

#21c. Thiru NAvukkarasar (3)

MaruL NeekkiyAr believed that only Jainism could help people to overcome all the worldly attachments. So he became a Jain. He already knew the glories of the Siva panchAksharam and the holy ash. Now he wished to know the glories of Jainism and its principles.

He studied in PAtalipuram in a school run for Jain. He excelled in his studies and soon earned a new name Dharma SEnar. He conquered Buddhists in various debates and soon rose to the top position among the Jain.

While his sister Thilagavathi was immersed in Saivism, he was immersed in Jainism. Thilagavathi wished sincerely that her brother must return to the fold of Saivism. She prayed to Lord Siva to make him change his mind and become a Saivaite.

Lord Siva assured her that He would change the faith of her bother by afflicting him with severe stomach pain (Soolai Noi). MaruL neekkiyAR suffered from a terrible Soolai noi and felt as if his stomach was churning a mixture of VadavAgni and the deadliest poison.

The Jain gurus gathered near him to treat him the ways they knew. But none of their methods reduced the pain suffered by Dharma SEnar. So finally they gave up their useless efforts and went away.

MaruL NeekkiyAr sent a message to his sister Thilagavathi through his servant. His sister sent back a reply saying,"I can't come there to the place of Jain. You must come back to me immediately"

MaruL NeekkiyAr decided to go back to his sister. Already the intensity of his disease seemed to have reduced. He gave up all the marks of a Jain like their dress, kamaNdalam, peacock feather and dressed in simple white clothes. He went back to his sister Thilagavathi in Thiruvadhigai with a trusted companion - his loyal servant.

 
bhagavathy bhaagavatam - skanda 9

9#45b. தக்ஷிணா தேவி (2)

அழைத்தாள் ராதை கிருஷ்ணனை ராசக்கிரீடைக்கு;
அழைத்த குரலுக்கு கிருஷ்ணன் வரவே இல்லை!


கோடி யுகமானது ஒரு கணம் ராதைக்கு – அவனைத்
தேடினாள்; ஓடினாள்; அரற்றினாள்; விம்மி அழுதாள்!


கோலோகத்திலிருந்து வெளியேறிய சுசீலை
பூலோகம் வந்தடைந்தாள் சாபம் பெற்றவுடன்.


தவம் செய்தாள் பன்னெடுங்காலம் சுசீலை;
இடம் பெற்றாள் லக்ஷ்மி தேவியின் உடலில்!


யாகம் செய்தனர் தேவர்கள் அந்த நாட்களில்;
யாகப் பயன் கிடைக்கவில்லை தேவர்களுக்கு.


கோரினர் தேவர்கள் பிரம்மனிடம் காரணம்!
கோரினான் பிரம்மன் கிருஷ்ணரிடம் காரணம்!


காரணம் ஆனவள் லக்ஷ்மி உடலுள் சுசீலை!
வேறாக்கினர் சுசீலையை லக்ஷ்மியிடமிருந்து!


தோன்றிய தேவியே தக்ஷிணா தேவி என்பவள்;
தோன்றினாள் தக்ஷிணா கர்மப் பூர்த்திகளுக்காக.


தக்ஷிணா தேவியைத் தந்தார் பிரம்ம தேவனிடம்;
தக்ஷிணா தேவியைத் தந்தனர் பின் யக்ஞமூர்த்திக்கு.


திருமணம் புரிந்தார் தக்ஷிணையை யக்ஞமூர்த்தி;
இருவரும் இன்புற்றனர் நூறாண்டுகள் தனிமையில்.


பிறந்தான் ஒரு திருமகன் அவ்விருவருக்கும்,
அரிய வலிமை வடிவாக சகல கர்மங்களுக்கும்.


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


9#45b. DakshiNA Devi (2)

KrishNan went missing and did not respond to the calls of RAdhA Devi to come for RAsak KreedA. A moment felt like an eon for the lovelorn RAdhA Devi. She looked for KrishNan everywhere; she wept and she lamentd but all in vain!


SuseelA went to the earth after she got cursed by RAdhA Devi. She did severe penance and obtained a place for herself in Lakshmi Devi’s body.


Devas performed YAgas but they did not receive the fruits of the Yagas. They went to Brahma surprised by this. Brahma went to KrishNan unable to answer the doubts and questions of the Devas!


KrishNan found out the reason for the failure of the YAgas to bestow the desired effects. It was because of SuseelA who had become a part of Lakshmi Devi herself now!


She was separated from Lakshmi Devi, through her right shoulder as DakshiNA Devi. Krishna presented DakshiNA Devi to Brahma who in turn presented her to the Yagna Moorthi.


Yagna Moorthi married DakshiNa Devi and they spent one hundred yeras in sheer pleasure. They got a wonderful and powerful son who would help in the success of all the Yagnas and YAgas that are being performed ever since then!




 
SEkizhArin Periya PurANam

#21d . திருநாவுக்கரசர் நாயனார் (4)

வணங்கினார் தம் தமக்கை திலகவதியாரை;
வருந்தினார் கொடிய சூலை நோயைக் குறித்து;

"வந்தது கொடிய சூலை நோய்; தந்தவன் சிவபிரான்;
வருந்தாதே நீங்கி விடும் சிவத் தொண்டு புரிந்தால்!"

அளித்தாள் அன்புடன் வெண்ணீறும், மந்திரமும்;
களித்தாள் அவை அவர் துன்பத்தை நீங்கியதால்;

சென்றனர் அண்ணலின் கோவிலுக்கு ஒன்றாக;
தோன்றியது பக்தி உணர்வு; பிறந்தது பாமாலை;

பாடினார் உள்ளம் உருகிப் பாமாலை ஒன்றை;
ஓடியே போய்விட்டது கொடிய சூலை நோய்!

அசரீரி கேட்டது அம்பரத்திலிருந்து அப்போது;
ஆனந்தக் கூத்தாடிய மருள் நீக்கியாருக்கு.

"நாவுக்கரசு என்னும் நாமத்தால் புகழ் பெறுவாய்!"
நாவுக்கரசர் ஆனார் தருமசேனர் / மருள் நீக்கியார்!

அணிந்து கொண்டார் சைவரின் திருக்கோலத்தை!
அணிந்து கொண்டார் சைவத் திருச் சின்னங்களை

மேனியங்கும் பளிச்சிட்டது தூய வெண்ணீறு - அவர்
நினைவெல்லாம் நிறைத்தன திரு ஐந்தெழுத்துக்கள்.

மொழி எல்லாம் ஆகிவிட்டது செந்தமிழ்ப்பதிகம்!
தொழில் எல்லாம் ஆகிவிட்டது சிவத் தொண்டு !

மாறி விட்டார் தரும சேனர் சைவ நெறிக்கு என்றதும்
சீறி வெகுண்டெழுந்தனர் சமணக் குரவர் அனைவரும்.

"ஒழித்துக் கட்ட வேண்டும் அவனை நாம் எல்லோருமாக!"
அழித்து விடுவதாகச் செய்தனர் குரவர்கள் கொடிய சபதம்!

விரைந்து சென்றனர் கூட்டம் கூடி தங்கள் மன்னனிடம்;
உரைத்தனர் தருமசேனர் சமணத்தைப் புறக்கணித்ததை.

"தயங்க மாட்டேன்; தக்க தண்டனை தருவேன் அவனுக்கு!
மயங்க வேண்டாம் நீவிர் என் மன உறுதியை ஐயுற்று!

அழைத்து வாருங்கள் தருமசேனனரை அவைக்களத்துக்கு!"
அமைச்சர்கள் குழு விரைந்தது திருவதிகையை நோக்கி.

அறிவித்தனர் மன்னன் கட்டளையைத் தருமசேனருக்கு;
புறப்பட்டனர் அமைச்சர்கள் அவருடன் அரண்மனைக்கு;

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#21d. Thiru NAvukkarasar ( 4 )

MaruL NeekkiyAr paid his respects to his elder sister Thilagavathi. He felt saddened by the intense Soolai Noi afflicting him. His sister consoled him thus, "Do not worry. The Soolai Noi is given by Lord Siva to make you return to Saivism. If you serve Lord Siva and His devotees your disease will vanish"

She gave him Holy Vibhoothi and the Siva mantra. Already MaruL NeekkiyAr could feel some relief from his intense stomach pain. They went to the temple together. An intense devotion surged in MaruL NeekiyAr and it came out in the form of beautiful Tamil padhigam. He sang with rapture and his Soolai Noi disappeared as if by magic.

He was overwhelmed with joy. At the same time an asareeri was heard in the sky. "You will become very famous in the name NAvukkarasu!" 'NAvukku arasu' means 'the King of words' or 'VAg eesan'.

He dressed like a true devotee of Siva. His body was adorned by the white vibhoothi and rudhrAkshams. His mind was filled with the Siva PanchAksharam. His speech became the songs of glory of Lord Siva. His business became to serve Siva and his devotees to the best of his ability.

When the Jain gurus came to know of this transformation in him, they went into a terrible rage. They vowed to destroy Dharma SEnar who has now become NAvukkarasar.

They went to their king and complained to him about the change in Dharma SEnar. The king promised them to give due punishment for this treachery and sent a group of ministers to fetch Dharma SEnar to the durbar.

A group of ministers left for Thiruvadhigai. They told Navukkarasar the order of the king. They all returned to the king's palace with Thiru NAvukkarasar.



 

Latest ads

Back
Top