• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

A poem a day to keep all agonies away!

bhagavathy bhaagavatam - skanda 9

9#45c. தக்ஷிணா தேவி (3)

விரைவாக தக்ஷிணையைத் தந்தால் – யாகம்
விரைவாகப் பயன் அளிக்கும் கர்த்தாவுக்கு!

விரைந்து விலகிச் சாபம் அளிப்பாள் லக்ஷ்மி
பிராமணர்களை ஏய்க்கின்ற கயவர்களுக்கு.

தக்ஷிணை இல்லாத கர்மத்தின் பலன் மஹாபலிக்கு!
தக்ஷிணையோடு கூடிய கர்மத்தின் பலன் கர்த்தாவுக்கு!

வரம் அளித்தான் வாமன ரூப விஷ்ணு – தனக்கு
விரும்பி அனைத்தையுமே அளித்த மஹாபலிக்கு.

“தக்ஷிணை இல்லாது செய்த கர்ம பலன்கள்;
வேதம் அறியாத அந்தணன் தந்த போஜனம்;

சிரத்தையின்றிச் செய்யும் தானம் – திரவியம்
சூத்திரப் பெண்ணின் அந்தணக் கணவன் தந்தது;

நல்லவன் அல்லாத பிராமணன் செய்த யக்ஞம்;
தூய்மையற்றவன் செய்யும் பூஜையின் பலன்கள்;

குரு பக்தி இல்லாதவன் செய்யும் கர்ம பலன்கள் - இவை
விரும்பி வந்து உன்னையே சேரும் இனிமேல்!” என்ற வரம்!

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

9#45c. DakshiNA Devi (3)

If the DakshiNA is paid to the priests and pundits quickly after the yAgam and poojA, the fruits of the yAgam and poojA will also be received quickly. The longer the payment of DakshiNA is delayed, the longer the fruits of the karmas will get delayed.

If a Brahmin is cheated of his DakshinA or is looted by a wicked fellow, Lakshmi Devi will desert the cheater in a great hurry and also cast a terrible curse on him in addition to deserting him!

All the Karmas performed with DakshiNA will yield the desired fruits to the KartA or the doer. All the Karmas performed without DakshiNA will yield their fruits and merits to King MahA Bali.

Vishnu had given a boon to King MahA Bali when he had appeared as VAmana,

“All the KarmAs performed without paying the due DakshiNA,
The bojanam given by a brahmin who does know the VedAs;
The donations and alms given without real sraddhA;
The things donated by a brahmin whose wife belongs to the fourth varNa;
The fruits of the yagnas performed by the wicked brahmins;
The poojAs performed by an impure Brahmin and
The KarmAs done by one who does not have guru bakthi
will all yield their merits to you MahA Bali – since
you have given me everything you possessed without any restraint

 
SEkkizhArin Periya purANam

#21e. திருநாவுக்கரசர் நாயனார் (5)

உருவெடுத்திருந்தார் நாவுக்கரசர் அரிய சிவப்பழமாக;
உருவெடுத்திருந்தனர் சமணக் குரவர் கொடிய பகைவராக;

" தண்டனை என்ன தரலாம் தருமசேனருக்கு?" என்றதும்
"சுண்ணாம்புக் காளவாயில் தள்ளவேண்டும் "என்றனர்.

இல்லை விசாரணை! இல்லை வழக்கு! நேராக தண்டனை!
தள்ளி அடைத்தனர் நீற்றறையில்! காவல் புரிந்தனர் நன்கு!

தியானம் செய்தார் இனிய பெருமானின் நாமத்தை - எனவே
திரு அடியவரின் திருமேனியைத் தீச் சுடவில்லை சிறிதும்!

குளிர்த் தென்றலானது தீ ! குளிர்ந்த தடாகமானது தீ !
குளிர் நிலவானது தீ ! இனிய யாழிசை போல் ஆனது தீ!

திறந்தனர் நீற்று அறையை ஏழு நாட்களுக்குப் பின்னர்;
இறக்கவில்லை தரும சேனர்! இன்ப வெள்ளத்தில் இருந்தார்!

"தப்பி விட்டான் தரும சேனன் சாகாத மந்திரங்களை ஓதி!
தப்ப முடியாது தருமசேனனால் கொடிய நஞ்சிலிருந்து!"

நஞ்சு கலந்த பாற்சோறு வந்தது; அஞ்சாமல் நஞ்சையுண்டார்;
"நஞ்சும் அமுதமாகும் நாதனின் அடியாருக்கு" என்று கூறியவாறு.

நஞ்சுண்ட கண்டன் மாற்றிவிட்டான் நஞ்சை அமுதமாக!
நஞ்சுச் சோறு பறித்து விடவில்லை தருமசேனர் உயிரை!

"மதயானையை இடறச் செய்வோம் தருமசேனர் தலையை!"
மதயானையை ஏவினர் அவர் மீது மன்னனின் ஆணைப்படி.

"அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை"
வெஞ்சினத்துடன் வந்த யானை வலம் வந்து வணங்கியது!

சைகை செய்தனர் சமணக் குரவர்கள் யானைப் பாகனுக்கு;
சைகை செய்யச் சொல்லி யானை தலையை இடறச் செய்திட!

சீறிச் சினந்த யானை சுழற்றி எறிந்தது யானைப் பாகனை!
சீற்றத்துடன் பாய்ந்து கொன்றது சமணக் குரவர்களையும் !

தப்பித்தோம் பிழைத்தோம் என ஓடினர் குதிகால் பிடரியில் பட!
"தப்ப முடியாது அவனால், கல்லுடன் கட்டிக் கடலில் வீசினால்!"

அஞ்சவில்லை அவர்,"எது வந்தாலும் எம்பிரானை ஏத்துவேன்" என
அறுந்தது பிணித்திருந்த கயிறு! கல் மாறியது மிதக்கும் தெப்பமாக!

மிதந்து சென்றது கடற்கரைக்கு நாவுக்கரசரைத் தாங்கியபடி.
மிதந்தனர் வியப்பில் கண்ணுற்ற திருப்பாதிரிப்புலியூர் மக்கள்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#21e. Thiru NAvukkarasar (5)

Thiru NAvukkarasar was the personification of pure piety and the Jain gurus were the personification of pure enmity. The Pallava king asked them, "What punishment can we give to Dharma SEnar?"

The Jain gurus said, "We can lock him inside a slaked lime kiln". There was neither a hearing nor was he given a chance to explain his side, but NAvukkarasar was locked up in a kiln and constant vigil was kept over the kiln.

Thiru NAvukkarasar meditated on Lord Siva. The burning fire of the kiln did not scorch him at all. It became as cool as a gentle breeze, and a pond of cold water and the cool moon light and the sweet music from a yAzh.

The room was opened after seven days. No one hoped to see a trace of Thiru NAvukkarasar but he was very much alive and in ecstasy. The Jain gurus assumed that he had survived the ordeal by chanting the Jain mantra uttered to escape death.

Surely no one can survive eating poisoned food. So cooked rice mixed with milk and a deadly poison was fed to Thiru NAvukkarasar . He ate the poisoned food uttering the words "For the devotees of Siva even the poison will transform to nectar". Siva had transformed the poison into a nourishing nectar. Thiru NAvukkarasar was alive and cheerful after eating the poisoned food.

Now the Jain gurus decided that they would employ a mad elephant to trample the head of Thiru NAvukkarasar. Surely he would not be able to escape this ordeal. A mad elephant was let loose on Thiru NAvukkarasar .

But he was unafraid and said," There is nothing that scares me. Nor is there anything worthy of being scared of". The angry elephant calmed down as it went near Thiru NAvukkarasar. It went round him and paid its respects.

Jain gurus did not expect this dramatic development. So they signaled to the mahout ordering him to signal to his elephant to kill Thiru NAvukkarasar . The elephant got so wild that it flung the mahout on the ground and killed him. It also charged on the Jain gurus and killed some of them.

Those who had survived took to their heels ran for their lives. But the Jinan gurus would not give up so easily. Now they wanted to tie Thiru NAvukkarasar to a heavy rock and throw the rock into a sea. Thiru NAvukkarasar said,"Whatever may happen I will still sing the praise of Lord Siva"

The rope binding him to the rock fell off by itself. The heavy stone started floating like a boat and took Thiru NAvukkarasar safely to the seashore. The people living in Thiru pAthiri Puliyoor were stunned to watch this miracle of a floating rock!
 
It is always the same story.

Difference in the opinion about God / religion paves way to murder by the most cruel methods.

Burn in a pit of fire/ submerge in deep sea water/ throw from a height AkAsam to take the help of gravity pruthvee/ administer deadly poison/ trample using the royal elephant.....

But Navukkararsar gets saved from every danger in the same way Bhaktha PrahlAd gets saved!

https://youtu.be/q2KWnSm33mI

Attachments area

Preview YouTube video Bhaktha Prahaladha - Official Tamil Full Movie | Bayshore


Bhaktha Prahaladha - Official Tamil Full Movie | Bayshore






 
bhagavathy bhaagavatam - skanda 9

9#45d. தக்ஷிணா தேவி துதி

துதித்தார் யக்ஞமூர்த்தி தக்ஷிணா தேவியைப் போற்றிட;
துதித்தார் யக்ஞமூர்த்தி தக்ஷிணா தேவியைப் பெற்றிட.


“இருந்தாய் கோலோகத்தில் ஒரு கோபியாக;
இருந்தாய் ராதைக்கு அழகில் சமமானவளாக!


இருந்தாய் கிருஷ்ணனின் பிரியமான நாயகியாக;
பிறந்தாய் லக்ஷ்மியின் தக்ஷிண புஜத்திலிருந்து.


பெற்றிருந்தாய் முன்பு சுசீலை என்னும் பெயரை;
பெற்றுள்ளாய் இன்று தக்ஷிணா என்ற பெயரை.


தள்ளப்பட்டாய் ராதையின் கொடிய சாபத்தால்!
தள்ளப்பட்டாய் கோலோகத்திலிருந்து என்னிடம்!


ஏற்றுக் கொள்வாய் என்னை உன் கணவனாக!
நற் கர்மங்களுக்குப் பலன் தரும் தேவி நீயே!


கர்மங்கள் வீணாகாமல் காக்கின்றவள் நீயே!
கர்மங்கள் வீணாகிப் போகும் நீ இல்லாவிடில்!


விளங்குகின்றாய் பிரம்மனின் கர்ம ரூபியாக;
விளங்குகின்றாய் மகேஸ்வரனின் பல ரூபியாக;


விளங்குகின்றாய் விஷ்ணுவின் யக்ஞ ரூபியாக;
விளங்குகின்றாய் நீ மும்மூர்த்தியரின் சார ரூபியாக;


பலனளிக்க வல்லவள் ஆகி விட்டாய் நீ தேவி
பரபிரம்ம ஸ்வரூபிணி பராசக்தியின் அருளால்.


சக்தியாக உள்ளாய் எனக்குப் பிறவி தோறும் – நான்
சக்தியுடையவன் ஆவேன் உன்னுடன் சேர்ந்தால்!”


துதியின் பயன்


யாக, யக்ஞங்களைத் தொடங்கும் முன் துதித்தால்
யாக, யக்ஞங்கள் நிறைவேறும் தடங்கல்கள் இன்றி!

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


9#45d. DakshiNA Devi Stuti


Yagna Moorthi worshipped DakhiNA Devi in this manner to win her affection and to marry her.
“You were a gopi named SuseelA in the Goloka! You were equal to RAdhA in your beauty. You were very dear to Sri KrishNan!

You were born from the right shoulder (DakshiNa bhujam) of Lakshmi Devi and got your name as DakshiNA Devi.


You were known by the name SuseelA earlier! Now you are known by the name
DakshiNA. You were expelled from Goloka by the terrible curse cast by RAdhA. You were expelled from Goloka so that you can come to me!


Accept me as your husband dear Devi! You are the one who bestows the fruits of good Karmas. You are the one who makes the karmas bear fruits. But for you, all the Karmas will get wasted.


You exist as the Karma roopi in BrahmA; the Bala roopi in Maheswara and the Yagna
roopi in VishNu. You are the very essence of the holy Trinity.


You got the power to bestow the fruits of the good actions by the grace of the Devi ParA Skakti. You are my power and my Shakti. I shall obtain my Shakti from you by my association with you!”


If this stuti is read read before starting any yAgA or YagnA, they will get completed without any hurdles of problems.



 
SEkkizhArin Periya PurANam

#21f . திருநாவுக்கரசர் நாயனார் (6)

கொண்டனர் பேரானந்தம் ஆலயத்தில் குழுமிய அன்பர்கள்,
வெண்ணீறு அணிந்து உழவாரப்படை தாங்கிய கோலம்கண்டு.

தெளிந்து விட்டது கலங்கியிருந்த மதி பல்லவ மன்னனுக்கு;
ஒழித்துக் கட்டிவிட்டான் எஞ்சி இருந்த சமணர்களை எல்லாம்.

தேடிச் சென்றான் திருநாவுக்கரசரைப் பல்லவ மன்னன்;
நாடிச் சென்றான் தன் பிழைகளுக்குப் பிராயச்சித்தம் தேடி.

திருவதிகை சென்றார் திருத்தலங்களை தரிசித்த நாவுக்கரசர் ;
திரு வீரட்டானேசுவரரைத் தொழுதார் இனிய பதிகங்கள் பாடி.

உழவாரப்பணி செய்தார் உவகையுடன் திருவதிகையில்;
விழுந்தது இந்தச் செய்தி பல்லவ மன்னன் செவிகளில்;

அடைந்தான் மங்கல வாத்தியங்களுடன் திருவதிகையை ;
பணிந்தான் மலரடிகளைப் பிழைகளைப் பொறுக்க வேண்டி.

மாறிவிட்டான் பல்லவ மன்னன் உயரிய சைவ சமயத்துக்கு;
மாற்றிவிட்டார் அன்பும், பண்பும், பக்தியும் கொண்ட அடியார்.

திரும்பிச் சென்றபின் அழித்தான் சமணப் பள்ளிகளை;
திருவதிகையில் கட்டினான் திருக்கோவில் குணபாலீசுரம்;

பெண்ணாடகம் அடைந்த நாவுக்கரசர் விண்ணப்பம் செய்தார்
"பொறுப்பீர் உம் இலச்சினைகளை எந்தன் ஈன உடலில்!" என்று.

பொறித்தனர் பூத கணங்கள் அவர் இரு தோள்களிலும் ஈசனின்
அரிய சூல முத்திரையையும், இடப முத்திரையையும் அன்புடன்.

அடைந்தார் தில்லையைத் தல யாத்திரைக்குப் பின்னர்
அடைந்தார் மெய்ப்புளகம் கண்ணீர் மல்கிப் பெருகிட.

பாதக் கிண்கிணிகள் பரதமாட, அபிநயித்தன ஈசனின் கரங்கள்;
பாடினார் பல இனிய பதிகங்களைப் பரமனை ஏத்தியும் தொழுதும்.

வணங்கினார் பொள்ளா பிள்ளையாரைத் திருநாரையூரில்
வந்தடைந்தார் சீர்காழிப் பதியின் எல்லையை நாவுக்கரசர்.

கண்டார் தோணியப்பர் திருத்தொண்டுகளில் ஞானசம்பந்தரை;
தெண்டனிட்டார் அன்புடன் ஞானக்குழந்தையின் செவ்வடிகளுக்கு.

அழைத்தார் "அப்பரே!" என்று அவர் கரம் பற்றிய சம்பந்தர்;
குழைந்தார் "அடியேன்!' என அகவையில் மூத்த நாவுக்கரசர்.

தோணியப்பரை வழிபட்டனர் ஞான மூர்த்திகள் இருவரும்;
தேனினும் இனிய தமிழ்ப் பதிகங்களை பாடினர் இருவரும்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#21f. Thiru NAvukkarasar (6)

Now Thiru NAvukkarasar carried a small plough to help him level the uneven ground in the temple premises. The people visiting the temple were thrilled to see Thiru NAvukkarasar adorned by the holy ash and carrying the plough.

The Pallava king realized his foolish in trying to punish a devotee who Lord Siva Himself held in great favor. He got rid of the remaining Jain. He went looking for Thiru NAvukkarasar to beg for his pardon.

Mean while Thiru NAvukkarasar reached Thiruvathigai after visiting the holy places on the way. He sang many padhigams praising the glory of Thiru VeerattAneswarar. He did his humble service in the temple in Thiruvathigai. This news reached the Pallava King who was looking for Thiru NAvukkarasar.

The Pallava king reached Thiruvadhigai with his retinue and the players of auspicious musical instruments. He fell at the feet of Thiru NAvukkarasar whom he had wronged terribly and begged for his forgiveness. He became a devotee of Siva - thanks to the kindness and greatness of Thiru NAvukkarasar.

After returning to his Pallava kingdom he destroyed the Jain schools. He constructed a temple for Lord Siva in Thiruvadhigai named as GuNapAleeswaram. After reaching PeNNAdagam, Thiru NAvukkarasar requested Lord Siva to mark his body with the holy symbols of Siva. The bhootha GaNas marked the symbols of Soolam and Rishabam on his two shoulders.

Thiru NAvukkarasar reached Thillai Chidambaram during his pilgrimage. He felt thrilled to the core and shed copious tears of joy and devotion. The bells on the feet of the idol seemed to dance. The hands of the idol seemed to gesture to him. He sang many beautiful padhigams in praise of Lord NatarAjan.

Thiru NAvukkarasar worshiped BoLLA PiLLaiyAr in Thiru nAraiyoor and reached the outskirts of SeerkhAzhi. He learned that Thiru GnAna Sambandhar was engaged in serving ThONiyappar. He paid his obeisance to the GnAna Sambandhar who in turn addressed him with the greatest regards as "ApparE!"

Thiru NAvukkarasar who was much older than Thiru GnAna Sambandhar replied "AdiyEN". The two great devotees of Lord Siva worshiped ThONiyappar together. They praised the glory of Siva in padhigams sweeter than the sweetest honey.



 
bhagavathy bhaagavatam - skanda 9

9#45e. தக்ஷிணா உபாக்கியானம்

நூற்பயன்

கர்மங்களில் ப்ரீதி தரவல்ல தேவி தக்ஷிணா;
கர்மங்களின் பலன் தரவல்ல தேவி தக்ஷிணா.

தக்ஷிணையின் சரிதம் கேட்பவனின் கர்மம்
குறையுள்ளதாயினும் நிறைந்த பலன் தரும்.

புத்திரனை அடைவான் புத்திரனை விழைபவன்;
பத்தினியை அடைவான் பத்தினியை விழைபவன்!

உன்னதமான அங்க, முக லக்ஷணங்கள்;
இன் சொற்களே பேசும் இனிய ஸ்வபாவம்;

வணக்கமும், இணக்கமும் நிறைந்த மனது;
பிணக்கமும், சுணக்கமும் இல்லாத பண்பு;

நற்குடி, நன்னடத்தை கொண்ட ஒருவளை
நல்ல மனைவியை அடைந்து இன்புறுவான்.

பெறுவான் கல்வியை அறிவற்ற மூடன்;
பெறுவான் செல்வத்தை வறிய மனிதன்;

பெறுவான் விளைநிலத்தைப் பசித்திருப்பவன்;
பெறுவான் சந்ததிகளை ஒரு நல்ல மனிதன்.

கஷ்டமான காலங்கள் வந்துள்ள போதும்,
இஷ்ட மித்ர பந்துக்களைப் பிரிந்த போதும்,

ஆபத்துக் காலங்களிலும் இதைக் கேட்பவன்,
ஆபத்து, விபத்துக்களிலிருந்து விடுபடுவான்.

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

9#45e. DakshiNa UpAkyAnam


The benefits of reading or listening to this DakshiNa UpAkyAnam:

DakshinA is the Devi who can create interest in us in doing good Karmas. She is the one who can bestow the fruits of good Karmas. The good Karmas performed by a person who listens to this story will get duly fulfilled – despite its defects and deficiencies.

A man who seeks a son will get a son; A man who seeks a wife will get a good wife. He will find a woman who is good looking; who speaks nothing but sweet pleasing words; who gets on well with everyone; who is without anger and even a trace of laziness; who is born in a good family and had a good conduct and live happily with her.

The illiterate will obtain education; the poor will get wealth; the hungry man will get a piece of land to grow food and a good man will get worthy children.

If this story is remembered during the difficult periods – when one is separated from his kin and kith and from his the near and dear ones and at the face of imminent dangers and accidents, he will be saved from all kinds of dangers and troubles by DakshiNA Devi.

 
SEkkizhArin Periya PurANam

#21g. திருநாவுக்கரசர் நாயனார் (7)

தங்கினார் திருநாவுக்கரசர் சீர்காழியில் சில காலம்;
பொங்கியது ஆனந்தம் பதிகம் கேட்டவர் உள்ளத்தில்.

இரு சிவனருட்ச் செல்வர்களும் சென்றனர் யாத்திரை;
திருக்கோலக்கா திருத்தலத்தைச் சென்று அடைந்தனர்.

ஆளுடைப் பிள்ளை திரும்பி விட்டார் சீர்காழிக்கு - ஆனால்
அப்பர் தொடர்ந்தார் தன் திருத்தல யாத்திரையை மேலும்.

திருச்சத்தி முற்றத்தில் பெருமானை வேண்டினார் அப்பர்
"திருவடிகளைப் பதிக்க வேண்டும் எந்தன் சென்னி மீது!"என.

கூறினான் பெருமான் "வருவாய் திருநல்லூருக்கு!"என்று.
கூறியபடிச் சென்று அடைந்தார் அப்பர் திருநல்லூர் பதி.

பதித்தான் தன் திருப்பாதங்களை அப்பர் சிரத்தின் மீது;
உதித்தன அழகிய தமிழ்ப் பதிகங்கள் அப்பரிடமிருந்து.

திங்களூர் வந்த அப்பர் சென்றார் அப்பூதியாரின் இல்லம்;
திருவமுது உண்ணும்போது வெளிப்பட்டது ஓர் உண்மை.

இறந்திருந்தான் அப்பூதியின் மூத்த மகன் அரவம் தீண்டி!
இறையருளால் உயிர்ப்பித்தார் அவனை அப்பர் மீண்டும்!

திருவாரூர் வந்தடைந்தார் தலங்கள் பல தரிசித்தபடி;
தியாகேசனைத் தொழுதார்; பாடினார் திருத்தாண்டகம்.

தொடர்ந்தது தல யாத்திரை; சென்றார் திருப்புகலூர்;
அடைந்தார் சம்பந்தரும் அதே சமயம் திருப்புகலூரை.

தழுவிக்கொண்டனர் சிவனருட் செல்வர்கள் - அப்பர்
தண்பதிகமாகப் பாடினார் தியாகேசன் திருவிழாவை.

சென்றார் சம்பந்தர் தம் அடியார் குழுவுடன் திருவாரூர்;
செய்தார் உழவார பணியை அப்பர் திருப்புகலூரில்.

திரும்பினார் சம்பந்தர் திருவாரூர் தலத்தைத் தரிசித்து;
பெரும் சிவனடியார்கள் பலர் எழுந்தருளினர் அவருடன்.

திருக்கடவூருக்குத் தொடர்ந்தது சிவத் தலயாத்திரை.
திருவீழிமலையை அடைந்து விட்டனர் சில நாட்களில்.

விரும்பினான் விஷ்ணு பிரான் சக்கராயுதத்தைப் பெற.
வழிபட்டான் முக்கண்ணனை 1008 தாமரை மலர்களால்.

குறைந்து விட்டது ஒரு தாமரை மலர் சிவார்ச்சனைக்கு!
நிறைவு செய்தான் அதைத் தன் கண்மலரைக் கொண்டு!

தடுத்தான் சிவபிரான் மால் விழியைத் தோண்டுகையில்;
கொடுத்தான் தன் சக்கராயுதத்தை அன்புடன் திருமாலுக்கு.

பெயர் பெற்றது இத்திருத்தலம் திருவீழிமிழலை என்று;
பெயர் பெறக்காரணம் விழிமலரால் செய்த சிவ வழிபாடு.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#21g. Thiru Navukkarasar (7)

Thiru Navukkarasar stayed on in SeerkAzhi for some more days. His padhigams filled the hearts of the listeners with bliss. Later both the devotees of Siva continued their pilgrimage and reached Thiru KOlakkA. Afterwards Sambandhar went back to SeerkAzhi but Appar continued his pilgrimage.

In Thiruch Sakthi Mutram Appar prayed to Lord Siva to plant His lotus feet on his head. Lord Siva commanded Appar to come to Thirunalloor. Lord Siva planted His lotus feet on the head of Appar as requested by him in Thirunalloor. Appar sang more beautiful thamizh padhigams here.

After reaching ThingaLoor, Appar went to the house of Appoothi AdigaL, who had great respect for Appar. When Appar sat down to eat food in their house, the terrible truth came to light that the eldest son of Appoothi AdigaL had died of a snake bite. With the divine grace of Lord Siva, Appar was able to resurrect him much to the joy and wonder of all the people there.

Appar continued his pilgrimage and reached ThiruvAroor. He sang Thiruth ThANdagam on ThiruvAroor ThyAgEsan. His pilgrimage continued and took him to Thirup Pugaloor. At the same time GnAna Sambandhar also came to Thirup Pugaloor. They embraced each other with great affection. Appar sang ThaNpadhigam describing the festival of ThiruvAroor ThyAgEsan.

Sambandhar went to ThiruvAroor but Appar stayed on Thirup Pugaloor. After visiting ThiruvAroor, Sambandhar came back to Thirup Pugaloor along with many other devotees of Lord Siva.Their pilgrimage continued to Thiruk Kadavoor and Thiru Veezhi Mizhalai.

VishNu wanted to possess the discus (ChakrAyudham of Siva) and worshiped Lord Siva with 1008 lotus flowers. But He later found out that there were only 1007 lotus flowers instead of 1008. He decided to offer one of his lotus eyes instead of the missing lotus flower.

Lord Siva stopped VishNu when he was about to pluck out his eye. Lord Siva gave His discus (ChakrAyudham) to VishNu. The place assumed the name as Thiru Veezhi Mizhalai due to this unusual worship offered by Lord VishNu to Lord Siva
here.








 
bhagavathy bhaagavatam - skanda 9

9#46a. சஷ்டி தேவி (1)

பிரகிருதியின் ஆறாவது அம்சத்தில் தோன்றியவள்;
பிறந்த குழந்தைகளின் அதிஷ்டான தேவதை இவள்!


தருவாள் தன் பக்தர்களுக்குப் புத்திரப் பேற்றை;
தருவாள் அக் குழந்தைகளுக்கு நீண்ட ஆயுளை!


சிசுக்களுக்குத் துன்பம் நேராமல் காப்பாள்
சிசுக்களின் அருகிலேயே இருந்துகொண்டு.


தேவ சேனை என்னும் உன்னத தேவியும் இவளே!
தேவ சேனாபதி கந்தனின் பிராணப்ரியை இவளே!


பிரிய விரதன் புத்திரன் சுவாயம்பு மனுவுக்கு;
பிரியம் வைத்தான் யோகமார்கத்தில் அவன்.


செய்ய வில்லை திருமணம்; செய்தான் தவம்;
செய்வித்தான் பிரமன் மாலினியுடன் திருமணம்.


வருந்தினான் புத்திரப் பேறு என்பதே இன்றி;
புரிந்தான் புத்திர காமேஷ்டி சிரத்தையுடன்.


அருந்தினாள் யாகப் பிரசாதத்தை மாலினி;
கருவுற்றாள் யாகப் பிரசாதத்தை உண்டதால்.


பிறந்தது பொன் போன்ற ஓர் ஆண் குழந்தை
இருந்தது அது கண் திறந்து, உயிர் இழந்து!


அழுதனர் இந்தக் கொடுமையைக் கண்டவர்!
எழவில்லை பெற்ற தாய் இந்த அதிர்ச்சியால்!


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


9#46a. Sashti Devi (1)


Sashti Devi was born out of the sixth amsam of Moola Prakriti Devi. She is the presiding deity of infants and children. She blesses the couples with sons and daughters. She blesses those children with a long life span.


She stays very close to the young children and protects them from all kinds of harms. Thus Devi is also known by the name DevasEna – the consort of Lord Skanda.


Priyavratha was the son of SwAyambu Manu. He was interested in the Yoga mArggam. He did not get married but was doing severe penance. Brahma got him married to MAlini Devi. The couple did not have any children.


Priyavratan performed Putra Kameshti YAga and Malini Devi ate the Yagna prasAdam. She conceived and delivered a beautiful male child in due course of time.


But the baby was stillborn! This shock was to much for everyone in the country. MAlini Devi fainted due to the severe shock and sorrow and could not be revived.




 
SEkkizhArin Periya PurAnam

#21h . திருநாவுக்கரசர் நாயனார் (8)

தனித்தனி மடங்கள் தயாராக இருந்தன - திருவீழிமிழலையில்
தத்தம் பரிவாரங்களுடன் நாயன்மார்கள் தங்கி இருப்பதற்கு.

பொய்த்தது வானம்; பரவியது கடும் வறட்சியும், பஞ்சமும்.
பெருமான் அருளினார் கனவில்,"படிக்காசு தருவேன் தினம்"

ஆளுடைப் பிள்ளைக்குக் கிழக்குப் பீடத்தில் பொற்காசுகள்;
அப்பர் அடிகளுக்கு மேற்குப் பீடத்தில் பொற்காசுகள் காணும்.

பண்டங்கள் வாங்கி வந்தனர் பொற் படிக்காசுகளைத் தந்து;
உண்டனர் மக்கள் வயிறாரக் கொடிய பஞ்சம் நிலவிய போதும்.

தொடர்ந்தது அன்ன தானம் தினமும் இரு சிவ மடங்களிலும்;
தொடர்ந்தது மீண்டும் மழை பெய்து வளம் கொழிக்கும் வரை.

தொடர்ந்தது தல யாத்திரை முன்போலவே மீண்டும் ஒருமுறை;
அடைந்தனர் வேதாரண்யம் என்னும் திரு மறைக்காட்டினை.

அடைத்திருந்தன ஆலயக் கதவுகள் அதிசயமாக அந்த ஊரில்!
அடைத்துவிட்டுச் சென்றவை பெருமானை வழிபட்ட மறைகள்!

"திருமுன் காப்பிட்ட திருக்கதவு திறக்கப் பாடுவீர்! என்றார்
திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசரிடம் மிகுந்த ஆவலுடன்.

திறக்கவில்லை கதவு அப்பர் முதல் பதிகம் பாடியவுடனேயே.
திறந்தது திருக்கதவு அப்பர் பாடிய திருக்கடைக் காப்புக்கு!

சென்றனர் ஆலயத்துக்குள் திறந்து விட்ட கதவுகளின் வழியே;
நின்றனர் மருள்கொண்டு மறைக்காட்டுப் பிரானைக் கண்டு!

"மணிக்கதவம் மீண்டும் அடைக்குமாறு பாடுவீர் நீங்கள்!" எனப்
பணிவுடன் கூறினார் அப்பர் பெருமான் ஆளுடைப் பிள்ளையிடம்.

மூடிக் கொண்டுவிட்டது மணிக் கதவு முன்போலவே மீண்டும்
பாடி முடிப்பதற்கு முன்பே ஞான சம்பந்தர் முதல் பதிகத்தை!

தானே திறக்கவும் மூடவும் செய்தன அந்த ஆலயக் கதவுகள்
ஞானச் செல்வர்கள் இருவர் செய்த கூட்டு முயற்சியினால்.

உறங்க முடியவில்லை அப்பர் பெருமானால் அன்றிரவு!
மறக்க முடியவில்லை அன்றைய நிகழ்ச்சிகளை அவரால்!

'பலமுறை நான் பாடிய பிறகே திறந்தது கதவு - ஆனால்
ஒரு முறை அவர் பாடும் முன்பே அடைத்துக்கொண்டது!'

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#21h. Thiru NAvukkarasar (8)

In Thiru Veezhi Mizhalai two different mutts were arranged for the two nAyanArs to stay with their disciples and devotees. Then the rains failed miserably. There was a severe drought and famine. People did not have money to buy food stuff.

Lord Siva took pity on his devotees and their devotees and said in their dream, "I will leave gold coins on the peetams everyday. You may buy food stuff with those coins and feed your people". The gold coin was kept on the peetam in the east for GnAna Sambandhar and on the peetam in the west was for Appar.

With those gold coins they could afford to buy food stuff and keep their people not starving. This continued until the rains returned and so also the prosperity along with the rains.

Now the two nAyanArs resumed their pilgrimage once again. They reached VEdhAraNyam temple. The main doors of the temple were closed and locked. The devotees went through another entrance to worship God. The doors were sealed by the Vedas which had once worshiped Lord Siva there.

Sambandhar told Appar,"Please sing a padhigam so that the closed door will open again." Appar sang padhigams but the door opened only when he sang his Thiruk kadaik kAppu. All the devotees entered through the open doors now and worshiped the God inside.

Now Appar told GnAna Sambandhar to sing a padhigam so that the doors closed again. The doors closed promptly even before Sambandhar could complete singing his first padhigam. That night Appar could not fall asleep nor could he forget the events that happened during that day!
 
bhagavathy bhaagavatam

9#46b. சஷ்டி தேவி (2)

அழுதான் உரத்த குரலில் பிரியவிரதன்
குழந்தையை அணைத்துக் கொண்டு!

விடத் துணிந்தான் தன் இன்னுயிரையும்!
அடைந்தான் மோஹம் சோக மிகுதியால்!

தோன்றியது விண்ணில் அழகிய விமானம்;
மின்னும் இரத்தின மயமாக இருநதது அது!

சூழப் பட்டிருந்தது அழகிய வெண்பட்டால்;
சூட்டப் பட்டிருந்தது மலர் மாலைகளால்.

இருந்தாள் ஓர் அழகிய தேவி விமானத்தில்;
இருந்தாள் இனிமையான அருள் முகத்துடன்.

நிறத்தில் வெண் ஷண்பக மலர் போன்றவள்;
சிறந்த இரத்தின ஆபரணங்கள் அணிந்தவள்;

கருணை பொழியும் கண்கள்; புன்னகை முகம்;
அருள் புரிவதில் கொண்டிருந்தாள் மிக ஆர்வம்!

துதித்தான் பிரியவிரதன் தேவியை வணங்கி,
விதி சதித்த குழந்தையைக் கீழே வைத்தபின்.

“யார் நீ? பூஜிக்கத் தகுந்த தேவியே கூறுவாய்!
யாருடைய புதல்வி நீ? யாருடைய மனைவி நீ?”

வினவினான் மிக வினயமாகப் பிரியவிரதன்;
விவரித்தாள் தேவி தன்னைப் பற்றி அவனுக்கு.

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

9#46b. Sashti Devi (2)


Priyavratan cried piteously embracing his dead infant in the burial ground. His sorrow was boundless and he decided to give up his life also. All his knowledge and wisdom were pushed behind by the intense sorrow he was steeped in.

A beautiful vimAnam appeared on the sky. It was studded with many brilliant gems. It was decorated with pure white silk cloth and fragrant flower garlands. There was beautiful Devi inside the vimAnam. She looked the personification of mercy and sympathy.

She was of the color of white champaka flowers. She was adorned with several gem studded ornaments. Her eyes were kind and merciful. She face wore a very beautiful and pleasing smile. She was keen on bestowing her grace on those who needed it.

Priyavratan placed the dead infant down paid his obeisance to the Devi and asked her “Who are you poojya Devi? Whose daughter are you? Whose consort are you? Please tell me about yourself!”

 
SEkkizhArin Periya PurANam

#21i. திருநாவுக்கரசர் நாயனார் (9)

கண்ணயர்ந்தார் இறுதியில்; கனவில் தோன்றினான் பிரான்;
"என்னைத் தொடர்ந்து வருவாய் நீ திருவாய்மூருக்கு" என்றான்.

புறப்பட்டார் அப்பர் அந்த இரவிலேயே திருவாய்மூருக்கு;
நடந்தான் அந்தண வேடத்தில் அப்பருக்கு முன்னே பிரான்.

நெருங்க முடியவில்லை பிரானை அப்பர் பெருமானால்,
அருகில் இருந்த போதும், அவர் விரைந்து நடந்தபோதும்.

தோன்றியது பொன்மயமான கோவில் பாதையின் மருங்கில் ;
தோன்றியது பெருமான் அதனுள் விரைந்து சென்று மறைவது.

சென்றர் பொன் வண்ணக் கோவிலுக்குள் அப்பர் பெருமானும்.
துன்புற்றார் கண்ணீர் மல்க அங்கு பெருமானைக் காணாமல்.

விரைந்து வந்தார் சம்பந்தரும் திருவாய்மூருக்கு மறுநாள்;
உரைத்தார் அப்பர் பெருமான் இறைவன் காட்சி தராததை.

இறைஞ்சினார் உள்ளம் உருகி தனக்குக் காட்சி தருமாறு;
இறங்கினான் எம்பெருமான், அருளினான் அருங் காட்சி.

வந்தனர் மதுரையில் இருந்து சம்பந்தரைக் காணச் சிலர்;
"வளர்க்க வேண்டும் சைவத்தை; சமணத்தை அழித்தபின்!"

"விரைவில் வருவேன் மதுரைக்கு" கூறினார் சம்பந்தர்
விரைந்தார் சம்பந்தர் மதுரை செல்லாமல் தடுக்க ;

" மாசு படிந்த உள்ளத்தினர்; தூசு படிந்த கொள்கையினர்;
மாயைகளில் வல்லவர்; வஞ்சக நெஞ்சம் கொண்டவர்கள்;

கணக்கில் அடங்கா சமணர்கள் எனக்கு இழைத்த தீமைகள்;
கணப் பொழுதும் சம்மதியேன் தாங்கள் மதுரை செல்வதற்கு!"

"எத்தகையது தீமையும் நேரத்து எனக்கு அஞ்சற்க அப்பரே!
அந்த மன்னனைக் கொண்டே நான் அழிப்பேன் சமணத்தை!

எங்கும் செல்ல வேண்டாம் தாங்கள் நான் வரும் வரை
இங்கு வருவேன் சைவம் தழைக்க வெற்றி வாகை சூடி. .

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#21i. Thiru Navukkarasar (9)

Appar spent a restless night unable to fall asleep. Finally he fell asleep and Lord Siva appeared in his dream. He told Appar, "Follow me to Thiru VAimoor". Appar woke up from the dream and started towards Thiru VAimoor right away.

He did not wait till the morning nor did he inform about this to Sambandhar. He saw Lord Siva walking ahead of him in the disguise of a brahmin. The brahmin was walking very fast.

Appar tried to catch up with him but in vain. Suddenly there appeared a temple of the color of Gold on the side of the road they were walking on. The brahmin who was in reality Lord Siva entered the temple.

Appar followed him and entered the temple but he could not find the brahmin anywhere. Tears rose in his eyes; he felt very sad and finally fell asleep.

Sambandhar also came to the temple in Thiru VAimoor the very next day. Appar told Sambandhar that God would not give him a glimpse. Siva took pity and gave his dharshan to both the devotees.

Some brahmins came from Madhurai. They invited Sambandhar to come to Madhurai to put an end to Jainism and to revive Saivism. Sambandhar sent word that he would be visiting Madurai very soon.

Appar tried to stop Sambandhar from visiting Madurai. He told Sambandhar, " The Jain gurus are wicked. I know very well about them and their treachery. I have suffered a lot in their hands. I will never allow you to go and confront the Jain in Madurai."

Sambandhar replied,"No one can harm us when we are being protected by Lord Siva Himself. I shall make that king himself destroy Jainism and revive Saivism. Please stay on here till I come back victoriously."



 
bhagavathy bhaagavatam - skanda 9

9#46c. சஷ்டி தேவி (3)

“தேவாசுர யுத்தத்தில் இருந்தேன் நான்
தேவர்களின் சேனாதிபதியாக முன்பு.

பிரமனின் மானசீகப் புத்திரி தேவசேனை நான்;
பிராண நாயகர் ஆவார் தேவசேனாபதி ஸ்கந்தர்.

பிரகிருதியின் ஆறாவது அம்சம் ஆவேன் நான்.
பெயர் உண்டு சஷ்டி தேவி என்றும் அதனால்!

தருவேன் பிள்ளையை அதை விரும்புபவருக்கு;
தருவேன் பத்தினியை அதை விரும்புபவருக்கு.

தருவேன் செல்வத்தை அதை விரும்புபவருக்கு;
தருவேன் கர்ம பலனை அதை விரும்புபவருக்கு.

விளைகின்ற அனைத்தும் கர்ம வினைப் பயனே!
விளங்குகின்ற அனைத்தும் கர்ம வினைப் பயனே!”

உயிர் ஊட்டினாள் குழந்தைக்குச் சஷ்டி தேவி;
உயரச் செல்ல முயன்றாள் தேவி குழந்தையுடன்!

நெஞ்சுருகத் துதித்தான் சஷ்டி தேவியை – மன்னன்
கெஞ்சினான் குழந்தையைத் திருப்பித் தருமாறு!

“மூவுலகங்களிலும் புகழுடன் விளங்குகிறாய்!
மூவுலகும் என்னைத் தொழும் வகை செய்வாய்!

இருப்பான் இந்தப் பாலகன் சிறந்த குணசீலனாக;
இருப்பன் அறிஞனாக; பூர்வ ஜன்ம உணர்வுடன்.

இருப்பான் நாராயணரின் ஒரு கலா ஸ்வரூபனாக;
தருவான் சக்தி தவ முனிவருக்கு, ஞானியருக்கு!

இருப்பான் சகல சம்பத்துடன், அதிகப் புகழுடன்;
இருப்பான் பண்டிதர்களுக்குப் பிரியமானவனாக.

வாழ்வான் நெடுங்காலம் மாறாத புகழோடு!
வாழ்வான் சுவ்விரதன் என்ற பெயரோடு!”

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

9#46c. Sashti Devi (3)


The Devi replied to the question raised by Priyavratan in her sweet voice,”I am DevasEna the MAnasa putri (daughter born out of the mind) of Brahma. I am the consort of Lord Skanda.

I lead the army of Devas in a war against the Asuras long ago! I am the sixth amsam of the Moola Prakriti Devi. So my other name is Sashti Devi.

I bless the couples with good children and I bless the children with a long life span. I bless the poor man with wealth and the fruits of the Karmas to those who perform them.

Whatever people see here is the fruit of their karmas. Whatever happens here is the fruit of their KarmAs.”

She made the dead infant become alive and tried to fly away carrying it with her. Priyavratan would not not let her go. He begged her and pleaded to her to return the infant to him.

Sashti Devi told him thus: “You are famous in all the three worlds. Make all the three worlds worship me as the protector of their infants and children.

This child will grow up to become a highly cultured and respected man. He will be very wise and have the memories of his poorva janma (previous birth).

He will be an amsam of Lord NArAyaNA. He will be a yogeendra ( Indra among yogis) and also a king of kings. He will have the valor to conquer raging mad elephants.

He will bestow power to the rushis and sages. He will live well with all the various forms of wealth and win lasting fame. He will be respected and loved by everyone under the name Suvratan.”

 
SEkkizhArin Periya PurANam

#21j . திருநாவுக்கரசர் நாயனார் (10)

வந்து அடைந்தார் அப்பர் திருப்பழையாறை திருத்தலத்தை.
வடதளிச்சிவன் கோவில் மாறியிருந்தது சமணக் கோவிலாக.

"காட்ட வேண்டும் உம் திரு உருவத்தை வடதளி விமானத்தில்!
காட்டாவிடில் அகன்று செல்ல மாட்டேன் இந்த இடத்திலிருந்து!"

அமர்ந்து விட்டார் அப்பர் ஆழ்ந்த தியானத்தில் அங்கேயே!
அமரர் பிரான் தோன்றினான் சோழமன்னன் கனவில் அன்று.

"மறைத்து வைத்துள்ளனர் என் மேனியை மண்ணுக்குள்!
மறைத்து விட்டனர் வடதளிக் கோவில் விமானத்தையும்!

உறுதி பூண்டுள்ளான் என் அன்பன் என்னைத் தரிசிக்க!
நிறைவேற்றுவாய் அவன் விருப்பத்தை உடனே விரைந்து!"

கூறினான் தன் திருமேனியைச் சமணர் மறைத்த இடத்தை;
கூறினான் சோழ மன்னன் தன் கனவை அமைச்சர்களுக்கு.

அடைந்தான் ஆலயத்தைப் பரிவாரங்களுடன் சோழமன்னன்;
அடையாளம் கொண்டு கண்டு பிடித்தான் சிவலிங்கத்தை.

நாவுக்கரரசர் துன்பம் நீங்கி இன்பம் ஓங்க வாழ்த்தினார்;
கோவிலுக்குள் சென்று இறைவனை வணங்கி மகிழ்ந்தார்.

விமானம் அமைத்தான் வடதளிக் கோவிலில் சோழமன்னன்;
விழா எடுத்துப் பிரதிஷ்டை செய்தான் அந்த சிவலிங்கத்தை;

நில புலன்கள், பொன் பொருட்கள் அளித்தான் ஆலயத்துக்கு;
நிற்காமல் நிகழ வேண்டுமே நித்திய நைமித்திக வழிபாடுகள்!

கொன்று விட்டான் சமணர்களை யானைகளின் உதவியுடன்
வென்று விட்டது சமண மதத்தை மீண்டும் நம் சைவமதம்.

தொடர்ந்தது அப்பரின் தலயாத்திரை மீண்டும் ஒருமுறை;
தொய்ந்து விட்டது உடல் மேலிட்ட பசியினால் தாகத்தினால்!

குளிர் பொய்கையும், எழில் சோலையும் உருவாக்கினான்;
அளிக்க உணவு பொதியுடன் காத்திருந்தான் எம்பெருமான்.

தளர்வு நீங்கினார் பொதிச் சோறு உண்டு; குளிர்நீர் பருகி;
துணையாகவும் வந்தான் பிரான் திருப்பைஞ்ஞீலி வரை.

தொடர்ந்தது அப்பரின் தலயாத்திரை மீண்டும் ஒரு முறை;
அடைந்தார் அப்பர் காஞ்சி மாநகரையும், ஏகாம்பரேசரையும்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#21i. Thiru Navukkarasar (10)

Appar reached Thiru PazhayARu. The Siva temple at VadathaLi had got trnsformed into a Jain temple. Appar prayed to Lord Siva to show Himself in the form on the idol on the VimAnam of the temple - since both of these had been cleverly concealed by the Jains.

Appar vowed that he would not move away from that place until Lord Siva showed His roopam (form and figure) on the temple VimAnam.

Siva appeared in the dream of the ChOzha king and said, "My idol and the vimAnam of my temple lay concealed. My ardent devotee Thiru Navukkarasar had vowed to get a glimpse of both of these. You must fulfill his wishes immediately." Siva also told he King where to find his
idol and the vimAnam.

The chozha king told his dream to his minsters. They all left to the temple at VadathaLI. The king found out the Siva lingam. Appar became very happy and blessed the king. He went into the temple and woshiped Lord Siva.

The ChOzha king constructed a new VimAnam and did the prathishta of the Siva Lingam with great celebrations. He donated land, gold and other things needed to perform the aarAdhanai at the temple as per the rules prescribed by sAshtras. The king killed the Jains by employing the elephants. Finally Saivism had defeated Jainism.

Appar continued his pilgrimage once again. He walked for so long that he became very tired, thirsty and hungry. Lord Siva wished to revive his energy and strength. He created a cool pond and a cool garden. He Himself waited there with a packet of food to offer to Appar - disguised as a brahmin.

Appar felt revived by the food and cool water. Now the brahmin gave him company until they both reached Thirup Painjnjeeli. Appar resumed his pilgrimage from there and reached KAncheepuram and EkAmbarEsar






 
bhagavathy bhaagavatam - skanda 9

9#46d. சஷ்டி தேவி (4)

சம்மதித்தான் பிரியவிரதன் சஷ்டி தேவியைப் பூஜிக்க;
சஷ்டி தேவி அந்தர் தியானமானாள் ஆசிகள் தந்தபின்.

வழிபட்டான் சஷ்டி தேவியை ஆறாவது நாளில்;
வழங்கினான் தானம் வாரி வாரி அந்தணருக்கு!

பூஜித்தான் தேவியைச் சுக்கில சஷ்டியில் – இன்றும்
பூஜிக்கின்றோம் நாம் தேவியைச் சுக்கில சஷ்டியில்.

செய்ய வேண்டும் ஆவாஹனம் சஷ்டி தேவியை!
செய்ய வேண்டும் அனைத்து உபசாரங்களையும்!

ஜெபிக்க வேண்டும் தேவியின் மந்திரத்தை;
துதிக்க வேண்டும் சாம வேதத் துதியினால்!

விரும்பிய பொருளைத் தருகின்ற தோத்திரம்
மறைந்து நிலவுகின்றது நமது வேதங்களில்.

பலஸ்ருதி

ஓராண்டு காலம் இந்தத் துதியைக் கேட்பவன்
நூறாண்டு காலம் வாழும் புத்திரரைப் பெறுவான்.


மலடியும் பெறுவாள் குழந்தைப் பேறு – குண
சீலனான, மா வீரனான, அறிஞனான மகனை.

நோய்கள் அகன்று விடும் குழந்தைகளை விட்டு
தாய் தந்தையர் இத் துதியை ஒரு மாதம் கேட்டா
ல்.

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

9#46d. Sashti Devi (4)


Priyavratan agreed to this and Sashti Devi returned the infant to him and blessed them both. She disappeared with her VimAnam.

Priyavratan worshipped Sashti Devi on the sixth day after the birth of his son. He gave away rich gifts to worthy brahmins lavishly. He made the worship of Sashti Devi on the sukla sashti very popular. Even today we worship the benevolent Sashti Devi on the sixth day of the white fortnight of lunar months.

AavAhanam must be done to invoke Sashti Devi. All the sixteen upachArams (rituals honouring the Diety) must be offered to the Sashti Devi.

Sashti Devi’s mantra must be chanted. The Stuti in SAma Vedam must be sung to please her. The stotras which bestow the desired results abound in the Vedas.
The person who listens to this sthuthi for one year will get sons who will live for one hundred years. Even a barren woman will deliver a child who is good-natured, wise and valorous. If the parents listen to this sthuthi for one month, the diseases troubling their children will vanish completely!

 
SEkkizhArin Periya PurANam

#21k. திருநாவுக்கரசர் நாயனார் (11)

மேலும் சென்றார் நாவுக்கரசர் காளத்தி மலைக்கு;
மேலும் சென்றர் ஸ்ரீசைலம் என்னும் திருப்பர்வதம்.

தொடர்ந்தார் வடக்கு நோக்கித் தம் யாத்திரையை;
அடைந்தார் காசி மாநகரத்தைத் திருநாவுக்கரசர்;

தொடர்ந்தார் யாத்திரையை கயிலை மலையை நோக்கி!
கடந்தார் அடிவிகளையும், முகடுகளையும் தனி ஒருவராக!

உண்பதை நிறுத்தி விட்டார் ; உறங்குவதையும் விடுத்தார்;
கொண்ட காதலால் நடந்து கொண்டே இருந்தார் தொடர்ந்து.

தொடர்ந்தது பயணம் இரவில் நாகமணிகளின் ஒளியில்!
தொடர் நடையால் தேய்ந்து விட்டன அப்பரின் பாதங்கள்!

கைகளை ஊன்றித் தத்திச் சென்றார் கால்கள் தேய்ந்தபின்!

கைகளும் தேய்ந்து போய்விட்டன மணிக்கட்டு வரையிலும்!

மார்பினால் தவழ்ந்து சென்றார்; சதைப் பற்று இற்று விட்டது!
உருண்டு செல்லலானார் திருநாவுக்கரசர் கயிலையை நோக்கி!

வீணாகி விட்டன புற உறுப்புக்கள் அனைத்துமே இப்போது!
வீழ்ந்து விட்டார் திருநாவுக்கரரர் பலமிழந்து ஓரிடத்தில்!

தோன்றியது ஒரு தாமரைத் தடாகம் அப்பரின் அருகினில்!

தோன்றினான் தவசி வேடத்தில் அங்கே கருணைக் கடல்!

"யாது கருதி உன்னையயே வருத்திக் கொள்கிறாய் இங்கனம்?
யாரும் இல்லாத இவ்விடத்தில் வந்து உடல் சிதைந்து அழிந்திட?" என

"கயிலை சென்று அடைய வேண்டும் நான் எவ்வாறேனும்!
காண வேண்டும் கண்ணுதல் பெருமானைக் கயிலையில்!" என

"அமர்ந்துள்ளனர் பார்வதியும், பரமேஸ்வரனும் கயிலையில்!
அடைய முடியுமா அதை வெறும் மனித முயற்சியால் கூறு!" என

"அழிந்துவிடும் இந்த உடல் எப்படியும் ஒரு நாள் அறிவேன்!
அழியும் முன் காணவேண்டும் நாதனையும், தேவியையும்!" என

அங்கிருந்து மறைந்து அருளினார் தவசி! ஒலித்தது அசரீரி;
"ஓங்கு புகழ் நாவுக்கரசனே! எழுந்திரு!' என்றது அந்த அசரீரி.

வளர்ந்துவிட்டன தேய்ந்து போன உடல் உறுப்புகள் மீண்டும் !
தளர்வு நீங்கி விட்டது; உடல் வலிமை திரும்பி விட்டது மீண்டும்!

வணங்கினார் நிலத்தில் விழுந்து பலமுறைப் பெருமானை!
"இணங்குவீர் எனக்குத் திருக்கயிலைத் திருக்கோலம் காட்டிட!"

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

21k. Thiru Navukkarasar

Thiru Navukkarasar visited KALahasthi giri and then Sree Sailam. His pilgrimage continued towards the north. He reached KAsi KshEthram and continued his pilgrimage towards Mount KailAsh. He crossed the dangerous jungles and mountains on his path all alone by himself.

He stopped eating and gave up sleeping. His intense love for Lord Siva kept him going on and on. In the dark nights, he continued his holy pilgrimage in the light given by the gems held by the poisonous serpents.

His feet became so tired that they could not bear his weight any more. Now he started moving forward on all the four limbs. Soon his hands got worn out right up to his wrists.

Now he started crawling on his chest and stomach. His flesh got torn into shreds and bled. Now he could only roll towards his destination. He kept it on and on by sheer will power. When all his external limbs had forsaken him, he just lay down pathetically on his path.

Suddenly a cool pond appeared near him. A hermit stood by its side and asked him, "Why are you punishing yourself in this manner? What makes you travel alone in this manner and get into troubles?"

Appar replied, " I must reach Kailash by any method. I have to get a glimpse of Lord Siva and Devi Uma."

The hermit said now," Parvathy and Parameswaran reside in Kailash. Do you really think a mere mortal will be able to go there?"

Appar replied, "My body will surely perish one day. I wish to have a glimpse of Lord before my body falls."

The hermit suddenly disappeared and a voice was heard from the sky. It said,"NavukkarasE! Please stand up!" All his damaged limbs grew back to perfect health as if by a magic. He regained his strength and was not feeling weak or tired anymore.

He fell on the ground and paid his obeisance several times. He had a request to the Lord who spoke from the sky. "Please grant me a glimpse of you in your abode Kailash. I seek nothing more."








 
bhagavathy bhaagavatam - skanda 9

9#47a. மங்கள சண்டிகை(1)

கொண்டுள்ளாள் இந்தத் தேவி அதிகத் திறமை;
கொண்டுள்ளாள் இந்தத் தேவி அதிகக் கோபம்.


மங்களம் தருவாள் திருமண காரியங்களுக்கு;
மங்களம் தருவாள் தன் இனிய பக்தர்களுக்கு.


மனு வம்சத்தில் உதித்த மங்களன் என்பவன்
மன்னன் ஆனான் ஆறு அழகிய த்வீபங்களுக்கு.


பூஜித்துப் பெற்றான் மேலும் பல மேன்மைகளைப்
பூஜ்ய தேவியாகிய மங்கள சண்டிகையை அவன்.


விளங்குகிறாள் துர்கா தேவியாக இவளே!
விளங்குகிறாள் மூலப் பிரகிருதியாக இவளே!


இஷ்ட தேவதை இவளே பெண்கள் குலத்துக்கு;
இஷ்டமானவற்றை இவள் தந்து அருள்வதால்.


திரவியங்களால் பூஜித்துப் போற்றினர் தேவியை
திரிபுர சம்ஹார காலத்தில் தேவர், தெய்வங்கள்.


தோன்றினாள் துர்கையாக மங்கள சண்டிகை;
போற்றிய தேவர்களுக்குத் தந்தாள் இந்த வரம்.


“திரிபுர வெற்றி உண்டாகும் ருத்திர மூர்த்தியால்!”
சிரித்தே எரித்து விட்டார் திரிபுரத்தை ருத்திர மூர்த்தி!


திருப்தி செய்தனர் தேவர்கள் தேவியை
திரிபுர தஹனம் முடிந்த பின் மீண்டும்.


ஜெபித்தனர் மூல மந்திரத்தை மிக பக்தியுடன்;
ஜெபித்தனர் இருபத்தொரு அக்ஷர மந்திரத்தை.


சித்தியாகும் இந்த மந்திரம் தேவியின் அருளால்
பத்து லக்ஷம் முறை பக்தியுடன் ஜெபித்து வந்தால்.


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


9#47a. MangaLa ChaNdi (1)


This Devi is very skilled and also capable of becoming very angry. She causes all the auspiciousness in the marriage ceremonies. She gives auspiciousness to her devotees.


MangaLan of Manu vamsam became the king of six islands by the grace of this Devi. He worshipped her and obtained many more blessings and boons.


MangaLa ChaNdi is Sree DurgA Devi. She is the Moola Prakriti Devi. She is the ishta deivam (favorite Goddess) for the women folks, since she blesses them by fulfilling all their wishes and desires.


Before the Tripura SamhAram, the DevAs and Gods worshipped MangaLa ChaNdi. She appeared to them as DurgA Devi and gave them this boon, “Rudra will destroy Thripuram.”


Rudra destroyed Tripura with his mere laughter. After their victory the Devas and Gods again worshipped ManagaLa ChaNdi with her moola mantram. They chanted the mantra with twenty one akshara in it.


This mantra if chanted one million times, will become successful by Devi’s divine grace.




 
SEkkizhArin Periya PurANam

21L. திருநாவுக்கரசர் நாயனார் (12)

"திருவையாற்றில் எழுவாய் இப் பொய்கையில் மூழ்கி;
திருக் கயிலை காட்சியைக் காட்டி அருள்வேன் அங்கு!"

மூழ்கினார் பொய்கையில்; வெளிவந்தார் திருவையாற்றில்!
மூழ்கினார் பக்திப் பரவசத்தில் ஈசனின் கருணை மழையால்!

சென்னி மீது கூம்பிய கரங்கள்; எங்கும் தெய்வீகப் பேரொளி!
என்ன அதிசயம் பூங்கோவில் ஆகிவிட்டது கயிலை மலையாக!

நவமணிப் பீடத்தில் இருந்தனர் அண்ணலும், அன்னையும்;
தவம் பலிக்கக் கண்களால் பருகினார் ஆனந்தக் காட்சியை.

விழுந்தார்; பின் எழுந்தார்; அழுதார்; பின் தொழுதார் அப்பர்
வீழ்ந்து தத்தளித்தார் திகட்டாத சிவானந்தச் சமுத்திரத்தில்.

மறைந்து விட்டது கயிலைக் காட்சி அள்ளிப் பருகியபின்;
நிறைவடைந்து விட்டது நாவக்கரசரின் நெடுநாள் கனவு.

சோழ நாடு திரும்பினார் சமணரை வென்ற சம்பந்தர்;
அழகிய சிவிகையில் சென்றார் திருப் பூந்துருத்திக்கு.

இருந்தார் நாவுக்கரசர் திருப் பூந்துருத்தில் அப்போது;
விரைந்தார் சம்பந்தரின் சிவிகைக்குத் தோள் கொடுக்க;

வணங்கினர் இருவரும் ஒருவரை ஒருவர் பணிவன்புடன்;
வணங்கினர் இருவரும் இறைவனைப் பதிகங்கள் பாடி.

ஆவல் கொண்டார் திருநாவுக்கரசர் பாண்டிய நாடு செல்ல;
ஆளுடைப் பிள்ளை விரும்பினார் தொண்டை நாடு செல்ல;

மதுரை சென்றடைந்தார் நாவுக்கரசர் - அதை அறிந்து
மதுரை மன்னன் உபசரித்தான் ராஜ மரியாதைகளுடன்.

தங்கியிருந்து தமிழ்த் தொண்டாற்றினார் மதுரையில்;
அங்கிருந்து புறப்பட்டார் சோழ வள நாட்டை நோக்கி.

அடைந்தார் திருப் புகலூரை திருநாவுக்கரசர் - அங்கு
அமைந்தார் ஆலயத்தில் உழவாரப் பணிகள் செய்து.

பாடினார் அற்புதமான பல பதிகங்களை அப்போது;
நாடினான் பரமன் அவர் மேன்மையைப் பறை சாற்ற.

தோன்றத் செய்தான் நவமணிகளை உழவாரும் மன்றலில்;
தூக்கி எறிந்தார் அவற்றைத் தடாகநீரில் கற்களைப் போலவே.

தோன்றத் செய்தான் வானுலக அரம்யரை அந்த மன்றலில்;
தோற்றுப் போயினர் வானுலக அரம்பையர் தம் முயற்சிகளில்.

மின்னல் மேனி, விற் புருவங்கள், கூர் வேல் விழிகள் வீணே!
கன்னல் மொழி, தென்றல் உடைகள், அன்ன நடையும் வீணே!

பாடினர்; ஆடினர்; ஓடினர்; தேடினர்; ஒரு பயனும் இல்லை!
அணுகினர்; அணைத்தனர்; பிணங்கினார்; பயன் இல்லை!

சித்திரைத் திங்கள் சதய நட்சத்திரத்தில் நாவுக்கரசர்
சிவலோகப் பதவி பெற்றார்; கயிலையை அடைந்தார்.

"திருநாவுக் கரையன்றன் அடியார்க்கும் அடியேன்"

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#21L. Thiru Navukkarasar (12)

The voice from the sky said, "Immerse yourself in this pond. You will arise in the pond of Golden lotuses in ThiruvaiyARu. I will bestow on you the glimpse of Kailash there."

Appar immersed himself in the pond near him. He emerged from the water in the pond of golden lotuses in ThiruvaiyARu. He was overwhelmed by the grace showered on him by Lord Siva.

As he held his hands over his head and there was a bright illumination and Poongovil got transformed into KailAsh. Parvathi Devi and Parameswaran appeared seated on a gem studded throne. Appar drank and feasted on this rare sight of Kailash with his eyes.

He fell down; he got up; he shed copious tears; he paid his obeisance; He literally had fallen into an ocean called the Bliss of Siva (SivAnandham). The Scene of Kailash vanished from hie eyes. Since he has realized his long cherished dream and felt very happy.

Sambandhar returned to Thirup Poonthuruthi after defeating the Jain gurus. Appar was there at that time. So he too lifted the palanquin of Sambandhar along with his disciples.

Appar and Sambandhar paid their respects to each other. They both paid their respects to Lord Siva by singing lovely padhigams on Him. Appar wished to visit the PANdya kingdom and Sambandhar wished to visit the ThoNdai nAdu.

The PANdya king learned about the visit of Appar and gave him a royal welcome. Appar stayed in Madurai for some time and contributed to Tamil literature.

He went to Thirup Pugaloor and continued his UzhavArap paNi (humble services) in the temple. He sang many remarkable padhigams during this period. Siva wanted to prove his greatness and detachment from all the worldly attractions.

He made rare precious gems appear in the areas leveled by Appar. But Appar treated those rare gems in the same way he treated the gravel and pebbles and threw them all into the pond .

Divine damsels appeared on the earth.They tried their best to attract and seduce Appar. But their beauty and charm were completely wasted on Appar. Appar finally cast down his mortal body in the month of Chithirai on the day of Sadhaya nakshathram and took his place in Kailash along with Lord Siva.












 
Bhagavathy bhaagavatam - skanda 9

9#47b. மங்கள சண்டிகை (2)

பதினாறு வயது நிரம்பியவளும் – கோவை
பழம் போன்ற செவ்விதழ்கள் உடையவளும்;


அழகான பல் வரிசைகள் உடையவளும் – முக
அழகில் சரத்காலத் தாமரையைப் போன்றவளும்;


நிறத்தில் வெண் சண்பக மலர் போன்றவளும்;
கரு நெய்தல் நிற விழிகளை உடையவளும்;


அகில உலகையும் தனியாகத் தாங்குபவளும்;
அகில உலகுக்குச் சம்பத்தைத் தருபவளும் ஆன


தேவியே நமஸ்காரம்! உனக்கு நமஸ்காரம்!”
தேவர்கள் துதித்தனர் மங்கள சண்டிகையை!


மங்கள வாரம் தோறும் துதித்தால் – நமக்கு
மங்களம் தருவாள் தேவி மங்கள சண்டிகை.


மங்களன் என்னும் மன்னன், அங்காரகன்,
மங்கையர், மங்களம் விரும்பும் ஆடவர்,


முனிவர், மனுக்கள் போன்ற உத்தமர்களும்
மனிதர், தேவர் போன்று மாறுபட்டவர்களும்


மங்களத்தை அடைந்தனர் மனம் விரும்பியபடி;
மங்கள சண்டிகை தேவியை பூஜித்து வந்ததால்.


மங்களம் பெறுவார் பந்து மித்திரர்களுடன்
மங்கள சண்டிகையின் துதியைக் கேட்பவர்.

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


9#47b. MangaLa ChaNdi (2)


DhyAnam:

“O Devi! You are always sixteen years old; You are always youthful; Your lips are like the Bimba fruits; You have two beautiful rows of teeth!


Your face resembles a lotus in full bloom in autumn; You colour is that of white champaka flowers; Your eyes are like two blue lilies; You preserve the world and You bestow all sorts of prosperity. So I meditate on you.


You destroy all the difficulties! You give joy and you are the auspiciousness of all auspicious things. You are worthy of being worshipped on all the Tuesdays”.


Devi Sarva MangalA was first worshipped by MahAdeva. Secondly she was worshipped by AngArakA – the planet Mars; thirdly by King MangaLa; fourthly by the ladies of every household and fifthly she was worshipped by all men, desirous of their welfare. Next she came to be worshiped everywhere, by the Devas, Munis, MAnavas, and Manus.


He who hears with undivided attention this sthothra of the Devi Mangala Chandika will overcome all evils everywhere. He will get all good things and prosperity. His lineage will continue unabated by Devi’s grace.



 
SEkkizhArin Periya PurANam

#22. திரு குலச்சிறை நாயனார்

கத்தும் அலைகடலும் , கடலின் வெண்முத்தும்
முத்தன்ன முத்தமிழும், சந்தனமும் நிறைந்தது

பாண்டிய நாடு, அதில் பெருமை வாய்ந்த
மாண்புடைய திருத்தலம் மணமேற்குடி.

பிறந்தார் குலச்சிறையார் உயர் குலத்தில்;
சிறந்தார் தன் திண்மையில்; வண்மையில்.

சமய ஞானம் ஆணிவேராக ஆனது வாழ்வு;
சமய ஞானம் அற்ற வாழ்வு வெறும் தாழ்வு!

நின்ற சீர் நெடுமாறப் பாண்டிய மன்னனின்
பொன்றாத புகழ் பெற்ற தலைமை அமைச்சர்.

முயன்றனர் சமணர்கள் பல வழிகளிலும்
இயன்ற அளவு சமண மதத்தைப் பரப்பிட.

விடாது முயன்றார் இதைக் கட்டுப்படுத்த - கை
விடாது ஒழுகினார் சைவமதக் கொள்கைகளை.

பாண்டிமாதேவி ஆற்றிய சிவத் தொண்டுக்கு
தொண்டர் ஆகிவிட்டார் தாமே குலச்சிறையார்.

அழைத்தார் சம்பந்தரை மதுரைக்கு - அதனால்
தழைத்தது சைவசமயக் கோட்பாடுகள் மீண்டும்

பெயர் பெற்றார் பெருநம்பிக் குலாச்சிறையார் என;
பெருமானின் மலர்ப் பாதங்களில் தாமும் கலந்தார்.

"பெரு நம்பி குலச்சிறை தன் அடியார்க்கும் அடியேன் "

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#22. Thiruk Kulach Chirai nAyanAr

PANdya Kingdom was famous for its sea surging with waves, the pearls obtained from that sea and the three disciplines of the pearl-like Tamil as Iyal (prose), Isai (music) and NAtakam (drama).
cleardot.gif


MaNamErkudi was a famous city in the PANdya kingdom. Kulach Chirai nAyanAr was born here in a family of staunch Saivites. He had deep devotion towards Siva even from a very young age.

He believed that honoring the devotees of Lord Siva would lead him to mukthi (final liberation) and treated all devotees of Lord Siva with equal respect - irrespective of their original varNa (caste)

He believed that the knowledge of the principles of one's religion must form the supporting root of one's life. Where there is no such knowledge of the principles of one's religion the life gets reduced to a very lowly and mean life.

Kulach Chirai nAyanAr was the chief minister of the PANdya king Nindra Seer NedumAran. At that time Jainism was flourishing and Saivism was dwindling in PANdya kingdom. Kulach Chirai nAyanAr tried his best to put a full stop to the spreading of Jainism. He himself advocated and followed the principles of Saivism strictly.

He was deeply impressed by the efforts taken by the queen of PANdya kingdom in this regard. He along with the queen invited GnAna Sambandhar to visit Madhurai to curb the spread of Jainism and revive the weakening Saivism.

Sambandhar defeated the Jain in the fire and water ordeals and revived Saivism. Kulach Chirai nAyanAr was known as 'Peru Nambi Kulach Chiraiyar'. He merged with the lotus feet of Lord Siva after leaving this mortal world.






 
bhagavathy bhaagavatam - skanda 9

9#47c. மனஸா தேவி (1)

மனத்தகத்தே தோன்றினாள் காசியப மகரிஷிக்கு;
மனத்தால் தியானித்தாள் சர்வேஸ்வரனை இவள்.

மூன்று யுகம் தவம் செய்தாள் சித்த யோகினியாக,
ஊன்றிய மரக்கட்டை போலவே இருந்து கொண்டு!

அழைத்தான் அவளை வரம் தர வந்த பரமாத்மா,
அன்புடன் ‘விஸ்வ பூஜிதா’ என்ற புதிய பெயரால்!

ஜகத்தினர் அனைவரும் போற்றிப் புகழ்வதால்
‘ஜகத் கௌரி’ என்றும் வழங்கப்படுகிறாள் தேவி.

‘சைவை’
ஆனாள் சிவசங்கரனின் சிஷ்யையாக;
‘வைஷ்ணவி’ ஆனால் விஷ்ணுப் பிரியையாக.

சர்ப்ப யாகம் செய்தான் மன்னன் ஜனமேஜயன்;
சர்ப்பங்களைக் காப்பாற்றியதால் ‘நாகேஸ்வரி’.

அனந்தனின் அன்புத் தங்கை இவள் – அதனால்
ஆகி விட்டாள் ‘நாக பகினி’ என்றும் பிரசித்தம்.

விஷத்தைப் போக்க வல்லவள் இந்த ‘விஷஹரி’;
‘சித்த யோகினி’ ஆனள் சித்தயோகம் அடைந்ததால்.

மனஸா தேவி மஹா ஞான வடிவானவள்;
மனஸா தேவி ‘யோக ஸ்வரூபிணி’ ஆவாள்;

மானஸா தேவி ‘ம்ருத சஞ்சீவினி’ ஆவாள்;
மனஸா தேவி ‘ஆஸ்திக மாதா’வும் ஆவாள்;

மனஸா தேவி ஜரத்காரு ப்ரியை ஆவாள்;
மனஸா தேவிக்குப் பன்னிரு நாமங்கள்.

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

9#47c. ManasA Devi (1)


This Devi is the mind born daughter of sage Kashyapa. She meditated on ParamAtma for three lakh years or three yugams – remaining like a piece of wood planted very firmly.

ParamAtma who came to bless her called her as “ViswapoojitA!” with great affection! She is known as “Jagat Gowri” since the whole world worships her.

She is the disciple of Lord Sankara and hence she is known as “Saivi”. She is a sincere devotee of Sri KrishNa and is known as “VaishNavi”.

She protected the serpents from total destruction during the great Sarpa YAgA performed by King Janamejayan. Hence she is known as “NAgeswari”.

She is loving sister of Ananth and hence is known as “NAga Bagini”. She can save people from the deadly snake poison. So she is called “Vishahari”. She is a “Siddha Yogini”.

ManasA Devi is he personification of pure knowledge. She is a yoga swaroopini. She is “Mruta Sanjeevini”. She is “Aastika mAtA” – the loving mother of sage Aastika.

She is “JarakArupriyA” – the loving consort of Sage JaratkAru. This Devi is worshiped by these twelve names. She is also known by the name “JaratkAru” herself.

 
SEkkizhArin Periya PurANam

#23. திரு பெருமிழலைக் குறும்ப நாயனார்

பெருமிழலை ஆகும் மிழலையின் தலைநகர்;
பெருமான் குறும்பனார் அவதரித்தார் இங்கு.

தொண்டுகள் பல புரிந்தார் சிவனடியார்களுக்கு;
தொண்டர் குழாம் மொய்க்கும் இவர் இல்லத்தை.

போற்றினார் சுந்தரமூர்த்தி நாயனாரை குறும்பர்;
சாற்றினார் சுந்தரரின் புகழைக் குறும்ப நாயனார்.

கைக்கூடின அஷ்ட மா சித்திகள் இவருக்கு!
கைக்கூடியது முக்காலமும் அறியும் திறமை!

சுந்தர மூர்த்தியார் கயிலைக்கு ஏகும் சமயத்தை
அந்தரங்க சித்தியால் அறிந்து கொண்டார் இவர்.

"கண்ணின் கருவிழி சுந்தர மூர்த்தியார் எனக்கு!
மண்ணிலுயிர் வாழ்வேனோ அவர் சென்ற பிறகு?"

துறந்தார் தம் இன்னுயிரைத் தானே யோக சக்தியால்
சிறந்த சுந்தரமூர்த்தி நாயனார் கயிலை ஏகும் முன்பே.

"பெரு மிழலை குறும்பர்க்கு அடியேன்"

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#23. Perumizhalai KuRumbar nAyanAr

Perumizhalai was the capital of Mizhalai in PANdya kingdom. KuRumbar nAyanAr was born here. He had staunch devotion towards Lord Siva as well his disciples. He felt humble in the presence of the devotees of Siva. He served them well without any hesitation. So always his home would be crowded by the devotees of Siva.

KuRumbar had great regard for Sundhara moorthi nAyanAr. He would speak very highly of Sundhara moorthi - in addition to chanting the names of Lord Siva. By worshiping the devotees of Siva, KuRumbanAr had attained the rare ashta mA siddhis. He could know the the past, the present and the future.

He learned it by his power to see the future that Sundhara moorthi was about to return to Kailash seated on the celestial white elephant. He felt very sad and said, "Sundara moorthi is like the pupil of my eye. What will I do and why should I live after he returns to Kailas? I will reach Kailash before he does by using my power of Yoga."

He cast aside his mortal body a day prior to Sundarar and reached Kailash to reside under the lotus feet of Lord Siva.








 
bhagavathy bhaagavatam - skanda 9

9#47d. மனஸா தேவி (2)

“ஜரத்காரு, ஜகத் கௌரி, மனஸா,
சித்தயோகினி, வைஷ்ணவி, நாக பகினி,


சைவி, நாகேஸ்வரி, ஜரத்காருப்ரியா,
ஆஸ்திகமாதா, விஷ ஹரி, விஸ்வபூஜிதா!”

பன்னிரு நாமங்களைப் பக்தியுடன் ஓதினால்
பாம்பினால் வரும் ஆபத்துக்கள் விலகிவிடும்.

பாம்பு ஏறிவிட்ட படுக்கையாயினும் சரி;
பாம்பு குடியேறிய இல்லம் ஆயினும் சரி;

யுத்த முனையிலும், பாம்பு சுற்றிய போதும்,
நாமங்களை ஓதினால் விலகிச் செல்லும்

ஆபத்துக்களும், விபத்துக்களும் முற்றிலும்
ஆஸ்திக மாதாவின் இனிய கருணையினால்!

பாம்புகள் அஞ்சி ஓடிவிடும் – பக்தியுடன்
பன்னிரு நாமங்களை ஓதுபவனைக் கண்டு!

சித்தியாகும் மந்திரம் பத்து லக்ஷம் ஜபித்தால்;
சித்தி பெற்றவன் அடைவான் அற்புத சக்திகள்!

சக்தி பெறுவான் விஷத்தை ஜீரணிப்பதற்கு!
சக்தி பெறுவான் நாகங்களை அணிவதற்கு!

பணியும் பாம்புகள் அவன் காலடிகளில் – சென்று
இணைவான் இறுதியில் பாம்பணை நாரணனோடு!

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

9#47d. ManasA Devi (2)


“JaratkAru, Jagath Gowri, ManasA, Siddha Yogini, Vaishnavi, NAgabagini, Saivi, NAgeswari, JaratkAru priya, Aastika mAtA, Vishahari, ViswapoojitA” are the twelve names for worshiping this Devi.

Chanting of these twelve names will remove all the imminent dangers from snakes. Even if a snake is found on one’s bed, or a snake lives in one’s house, or in the war front or when the snake has coiled over one’s body, the chanting of these twelve names will protect one from all these dangers.

Snakes will run away from a person who chants these twelve names. This mantra will become successful if chanted ten lakh times.

One who has mastered this mantra will obtain many unusual powers. He can digest the deadly snake poison. He can wear the deadly snakes as his ornaments.

The snakes will worship him falling at his feet. He will merge with Lord NArAyaNa Himself after his life on earth comes to an end
.
 
SEkkizhArin Periya purANam

#24. திரு காரைக்கால் அம்மையார் (1)

சோறுடைய சோழ வளநாட்டில் உள்ளது
காரைக்கால் என்ற அழகிய திருநகரம்.

வணிகர் தனதத்தனார் மனைவியின்
மணி வயிற்றில் பிறந்தாள் புனிதவதி.

சின்னஞ் சிறு வயதிலேயே காட்டினாள்
அன்புப் பெருக்கைச் சிவனடியார்களிடம்.

மணம் நடந்தது வணிகன் பரமதத்தனுடன்;
மனம் ஒப்பவில்லை மகளை விட்டுப் பிரிய.

இல்லறம் என்று நல்லறம் பேணினர் - தனி
இல்லத்தில் வாழ்ந்த புதுமணத் தம்பதியர்.

அரிய மாங்கனிகள் இரண்டு கிடைத்தன
அருமை நண்பனிடமிருந்து பரமதத்தனுக்கு.

அனுப்பினான் மாங்கனிகளை மனைவியிடம்;
கனிகளை வைத்தாள் புனிதவதி பாதுகாப்பாக.

"சிவாய நம!" என்ற அதிதியின் குரல் கேட்டது;
சிவனடியார் நின்றிருந்தார் வாடிய முகத்துடன்.

விரைந்து சமைத்தாள் அரிசியால் அன்னத்தை;
விருப்பத்துடன் அளித்தாள் ஒரு மாங்கனியுடன்.

வயிறார உணவு உண்டார் சிவனடியார் - அவளை
வாயார வாழ்த்தி விட்டுச் சென்றார் தன் வழியே.

இல்லம் திரும்பினான் கணவன் பரமதத்தன்;
இலை முன் அமர்ந்தான் உணவு உண்பதற்கு.

அன்னத்துடன் கூடப் பரிமாறினாள் புனிதவதி
சின்னத் துண்டங்கள் ஆக்கிய மாங்கனியை.

அரிய மாங்கனியைச் சுவைத்த பரமதத்தன்,
"தருவாய் மற்ற மாங்கனியையும்!" என்றான்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#24a. KAraikkAl AmmaiyAr

KAraikkAl was and still is a famous city in the prosperous ChOzha nAdu. Dhanadhatthan was a rich and famous merchant living there. His wife bore him a beautiful girl child whom they named as Punithavathi. The child showed deep devotion towards Lord Siva and deep respect for all the devotees of Siva, even at very tender age.

When she attained the marriageable age her wedding took place with Paramadhatthan another rich merchant from NAgappattaNam. Dhanadhatthan could not bear the thought of separation from his dear daughter and sending her away to another city.

So he arranged a separate residence for his daughter and son-in-law so that they could live in the same city. Punithavathi and her husband Paramadhatthan lived a life serving the needy and the poor.

One day Paramadhatthan got two rare mango fruits from a friend. He sent them to his wife through a servant. When Punithavathi was preparing the lunch, she heard the voice of a devotee of Siva uttering the name of Lord Siva. The devotee appeared to be hungry and tired.

She gave him water and a seat. She then served the cooked rice along with a mango fruit sent by her husband. The devotee ate the food with satisfaction and took leave of her -after blessing her generosity.

Her husband returned home and sat down to eat his lunch. She served him the cooked rice and the second mango fruit cut into smaller pieces. Paramadhatthan tasted the fruit and asked his wife to give him the second fruit also!

Punithavathi was in a dilemma. How could she give something which she did not have in her possession any more?





 
bhagavathy bhaagavatam - skanda 9

9#48a. மனஸா தேவி (3)

நிறத்தில் வெண்சண்பக மலரைப் போன்றவள்,
திறமையான புஷ்ப அலங்காரம் கொண்டவள்;


தூய ஆடைகளை அணிந்திருப்பாள் இத்தேவி;
பாம்பு மாலைகளை அணிந்திருப்பாள் இத்தேவி.


ஞானிகளில் சிறந்தவள் மனஸா தேவி;
சித்தர்களின் அதிஷ்டான தேவதை இவள்;


பூஜிக்க வேண்டும் மூல மந்திரங்களால்;
பூஜிக்கும் மந்திரம் ஆகும் ஒரு கற்பகத்தரு.


சித்திக்கும் மந்திரம் ஐந்து லக்ஷம் ஜபித்தால்!
சித்திக்கும் பற்பல அற்புத சக்திகள் ஜபித்தால்!


இணையாகும் கொடிய விஷம் அமிர்தத்துக்கு!
இணையாவான் ஜபித்தவன் தன்வந்திரிக்கு!


பஞ்சமியில் மனஸா தேவியைப் பூஜிப்பவன்
புகழ், செல்வம், சத்புத்திரர்களைப் பெறுவான்.


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


9#48a. ManasA Devi (3)


DhyAnam;


“I meditate on the Devi ManasA,

who is of the color of the white champaka flower;
whose body is decorated with several jewels and ornaments;

whose dress has been purified by fire;
whose garlands are the poisonous NAgas;

who is full of wisdom and knowledge;
who is the greatest among GnAnis;

who is a siddha yogini;
who is the Presiding deity of the Siddhas,

and who bestows Siddhis on everyone.


The twelve lettered Siddha Mantra of Manasa Devi yields all their desires to the devotees like the Kalpa Tree does to whosoever wishing for whatsoever, standing under the tree.




 
SEkkizhArin Periya PurANam

#24. திரு காரைக்கால் அம்மையார் (2)

தடுமாறினாள் புனிதவதி செய்வது அறியாமல்;
"தருவது எங்ஙனம் இல்லாத மாங்கனியை?" என்று.

அரனிடம் வேண்டினாள் தன்னிடம் தருமாறு
அருமைக் கணவன் விரும்பிய அரிய கனியை.

தோன்றியது அவள் கரங்களில் ஒரு மாங்கனி;
தோற்றுவித்தவன் அன்பருக்கு அன்பன் அரன்!

பரிமாறினாள் தெய்வீகக் கனியைக் கணவனுக்கு;
பறிகொடுத்தான் மனத்தைக் கனியின் சுவையில்.

"தேவருக்கும் மூவருக்கும் கிட்டாத அரிய கனி
பேதை உனக்கு கிட்டியது எங்கனம்?" என்றான்.

விளக்கினாள் புனிதவதி நிகழ்ந்தவற்றை எல்லாம்.
விளங்கினான் அது அரன் தந்த அரிய கனி என்று.

"கூற்றை நம்புவதா வேண்டாமா?" அறியவில்லை அவன்.
"பெற்று வா இன்னமும் ஒரு மாங்கனியை!" என்றான்.

"இன்னொரு கனி தந்து என்னை ஆதரிப்பீர் ஐயனே!
அன்றேல் என் உரை பொய்யாகிப் போய்விடும்!" என

மாங்கனி தோன்றியது அவள் கரங்களில் - அதுவே
மாயமாக மறைந்தது பின்பு அவன் கரத்திலிருந்து!

"மனிதப் பிறவி அல்ல எந்தன் அருமை மனைவி!
புனிதவதி ஒரு தெய்வப் பிறவி" என்று அறிந்தான்.

"தொழுது போற்ற வேண்டும் தெய்வப் பெண்ணை!
தொட்டு உறவாடுவது தவறு" என்று அஞ்சினான்.

தனித்தனியாக வாழத் தொடங்கினர் இருவரும்;
புனிதவதி நீத்தாள் பந்தம், பாசம், நேசம், பற்று!

அழுத்தினாள் தெய்வச் சிந்தனையில் சந்ததமும்;
பழுத்தன அவளிடம் இருந்த பக்தியும், விரக்தியும்.

கடல் கடந்து வாணிபம் செய்வது அன்றைய வழக்கம்;
கடல் கடந்து சென்றான் கணவன் பரமதத்த வணிகன்.

திரும்பினான் வணிகம் செய்தபின் பாண்டிய நாட்டுக்கு;
விரும்பிய பொருளை ஈட்டிச் செல்வந்தன் ஆகிவிட்டான்!

செல்ல விரும்பவில்லை காரைக்காலுக்கு மீண்டும்;
செல்வந்தன் ஒருவன் தந்தான் தன் செல்வ மகளை.

திருமணம் செய்து கொண்டான் இரண்டாவது முறையாக;
கருவுற்று ஈன்றாள் மனைவி அழகிய பெண் குழந்தையை.

புனிதவதியின் பெயரையே சூட்டினான் பெண்ணுக்கு;
இனிதாக வாழ்ந்தான் செல்வச் செழிப்புடன் அங்கேயே.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#24b. Thiru KAraikkAl AmmaiyAr (2)

Punithavathi did not know how to give to her husband the mango which she did not have with her anymore. She prayed to Lord Siva to help her and immediately a mango fruit appeared in her hands. She thanked her Lord and served it to her husband.

Paramadhatthan tasted the fruit which was even better the one he has tasted earlier. He told his wife, "This is not an ordinary mango. How did you get it? Do tell me". Punithavathi related to him all the happenings of the day.

He realized that the mango was given by Lord Siva Himself. He was not sure whether or not to believe her words. So he commanded her to get one more mango from Lord Siva.

Punithavathi knew that unless she could get one more mango, from Lord Siva, she would be branded as a liar and a cheat. She prayed to Lord Siva,"Please give me one more mango to prove that I am not a liar and that I am speaking the truth"

One more mange did mysteriously appear in her hands. But it disappeared equally mysteriously from the hands of her husband who had doubted her words. Now Paramadhattan felt confirmed that his wife was not an ordinary woman but one who was in the grace of Lord Siva Himself.

He felt scared to have any physical relationship with her since he had started respecting her as a goddess. They had nothing to hold them together. Punithavathi could now get out of her worldly attachments and bondage very easily. She was constantly immersed in her thoughts about God. Her bakthi (devotion) and virakthi (detachment) ripened very fast.

It was the practice in those days to go overseas to do business. Paramadhattan went overseas and did business successfully. But when he came back he settled down in PANdya kingdom instead of going back to KAraikkaAl.

He became very rich. A local rich merchant got his daughter married to him. They were blessed with a female child whom they named as Punithavathi and lived in comfort and joy.

 

Latest ads

Back
Top