• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

A poem a day to keep all agonies away!

bhagavathy bhaagavatam - skanda 9

9#48b. மனஸா தேவி (4)

முனிவர் காச்யபரிடம் அடைக்கலம் புகுந்தது
மனித குலம் பாம்புகள் மீதுள்ள அச்சத்தினால்.

உருவாக்கினார் பல மந்திரங்களை காச்யபர்
பிரும்ம தேவன் உதவியைப் பெற்றுக் கொண்டு.

உருவானாள் மனஸா தேவி முனிவர் உச்சரித்த
திரு மந்திரங்களுக்கு ஏற்ற ஒரு வடிவம் எடுத்து.

மனத்தினால் உருவாக்கப் பட்டதால் இந்தத் தேவி
மனஸா தேவி என்ற காரணப் பெயர் பெற்றாள்.

ஆயிரம் திவ்விய வருடங்கள் பூஜித்தாள் – இவள்
தூய கயிலைமலைக்குச் சென்று சிவசங்கரனை.

எளிதில் மகிழ்பவன்; எளியவற்கு எளியவன்,
அளிப்பான் அரிய ஞானத்தைச் சிவபெருமான்!

அளித்தான் மாபெரும் ஞானத்தை மனஸாவுக்கு;
அளித்த உபதேசமாக அஷ்டாக்ஷர மந்திரத்தை.

லக்ஷ்மி மாயா காம பீஜத்தோடு கூடிய
லக்ஷணமான கிருஷ்ண மந்திரம் அது.

புஷ்கர க்ஷேத்திரம் சென்றாள் மனஸா தேவி;
புரிந்தாள் தவம் மூன்று லக்ஷம் வருட காலம்!

தரிசித்தாள் கிருஷ்ண பெருமானை – அவர்
அருளினார் சித்தியும், இளம் பெண் வடிவமும்!

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

9#48b. ManasA Devi (4)

In olden days, men became greatly terrified by the poisonous snakes and took refuge in Sage Kas’yapa. With the help of Brahma, Kashyapa composed a mantra following the principal motto of the Vedas.

While composing the mantra, Kasyapa intensely meditated on the Presiding Deity of the Mantra. Due to the power of his penance, Devi ManasA took shape and appeared there. She was named as ManasA Devi since she was produced by the power of the sage’s mind.

On being born, ManasA went to the abode of Lord Sankara in KailAsa and began to worship Him for one thousand Divine years!

Lord Sankara became very pleased and bestowed on her the Great Knowledge. He gave her the eight lettered Krishna mantra. She got from Him the Kavacha – an amulet – auspicious to the three worlds.

ManasA went to the Pushkara Kshetra and worshiped Sri KrishNA for the three Yugas. Sri KrishNA appeared before her and made her youthful and beautiful again. He granted her this boon, “May you be worshiped throughout the world” and disappeared.

ManasA was first worshiped by the Supreme Spirit Sri KrishnA, secondly by Lord Sankara; thirdly by Sage Kasyapa and the Devas. Then she was worshiped by the Munis, Manus, NAgas, and men. She became widely respected in all the three worlds.

 
SEkkizhArin Periya PurANam

#24c. திரு காரைக்கால் அம்மையார்

கண்டு பிடித்தனர் பரமதத்தனின் புது இருப்பிடத்தை;
கொண்டு வந்தனர் புனிதவதியை அந்த இடத்துக்கு.

புனிதவதியின் கால்களில் விழுந்து வணங்கினான்
புது மனைவியுடன, குழந்தையுடன் வந்த பரமதத்தன்.

மனைவி பாதங்களை கணவன் வீழ்ந்து வணங்குவதா?
மனம் அதிர்ந்தது அவளுடன் வந்திருந்த உற்றம், சுற்றம்!

"பணிவதற்கு உரியவள் புனிதவதி! உறவாட அல்ல!"
மணி அடித்தது போல எடுத்து உரைத்தான் கணவன்.

தனிமைப் படுத்தப் பட்டாள் புனிதவதி கணவனால்.
இனிய இளமையை, அழகை வெறுத்தாள் புனிதவதி.

"கணவனுக்காகத் தங்கியிருந்த வனப்பும், எழிலும்
கணமும் தேவை இல்லை இனி எனக்கு!" என்றாள்.

"பேய் வடிவம் தாரும் அம்பலவாணரே!" என்றதும்
தாயாக வேண்டிய இளம்பெண் பேயாகி நின்றாள்!

மறைந்து விட்டன தசைகளும், அழகிய உடலும்!
மாறிவிட்டாள் ஓர் அச்சம் தரும் எலும்புக் கூடாக!

பிறந்தது அரிய தமிழ்ப் புலமை புனிதவதியிடம்!
பிறந்தன திருவந்தாதி, இரட்டை மணிமாலை!

மாறிவிட்டது பெயர் 'காரைக்கால் அம்மையார்' என.
மாறிவிட்டது அம்மையாரின் வாழ்வின் குறிக்கோள்.

'தரிசிக்க வேண்டும் கயிலை நாதனைக் கயிலையில்!
தரிசிக்க வேண்டும் கயிலையைத் தலையால் கடந்து!'

என்புருவாகி தலையால் நடந்து கயிலை சென்ற அந்த
அன்புருவைக் கண்டவர் என்புருகித் தொழுது நின்றார்.

"பிறவா வரம் தாரும் ஐயனே! அன்றிப் பிறந்தாலும்
மறவா வரம் தாரும் உம்மை ஒரு நாள் ஒரு பொழுதும்!

ஆனந்தத் தாண்டவம் ஆடும் உம் திருவடிகளின் கீழ்
ஆனந்தமாகப் பாடும் நற்பேறு அருள்வீர் ஐயனே!" என

"திருவாலங்காட்டில் யாம் ஆனந்த நடனம் செய்கையில்
திருவடிக்கீழ் அமர்ந்து கண்டு களித்துப் பாடி மகிழ்வாய்!"

"கொங்கை திரங்கி" என்று தொடங்கிய அம்மையார்
அங்கு பாடி அருளினார் மூத்த திருப்பதிகம் ஒன்றை.

"எட்டியிலவம்" என்று தொடங்கும் ஒரு திருப்பதிகத்தை
இட்டத்துடன் பாடி அருளினார் காரைக்கால் அம்மையார்.

இறைவனின் திருவடிகளின் அருகே அமர்ந்து பாடும் பெரும்
பேறைப் பெற்றார் புனிதவதி எனும் காரைக்கால் அம்மையார்.

"பேயார்க்கும் அடியேன்"

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#24c. KAraikkAl AmmaiyAr (3)
cleardot.gif


Soon the new residence of Paramadhatthan became known to Punithavathi's parents. They wished to reunite her with her husband and brought her over to where he now lived.

But Paramadhatthan did not wait till they descended on him. He himself went to them with his new wife and daughter and fell at the feet of Punithavathi. Everyone got stunned that a husband would fall at the feet of his wife.

Paramadhatthan said in a voice loud and clear, "Punithavathi is not an ordinary woman. She reserves to worshiped by all of us". There was no hope of reuniting with him ever in the future.

Punithavathi hated her youth and beauty - which she had maintained only for the sake of her husband. She prayed to Siva, "Please take away my beauty and youth. Please make me look like a ghost." And Lord Siva obliged.

Her beauty and along with her youth vanished. She looked like a scary skeleton now. But the loss of her beauty was more than compensated by the poetic talent which surged in her - by Lord Siva's grace. She sang Thiru AndhAdhi and Irattai MaNi mAlai praising Lord Siva.

Now her name got transformed to KAraikkAl AmmaiyAr. He aim in life also changed. Now she wished to get a dharshan of Siva in Kailash itself. She did not want to defile the holy place by walking on her feet. So she walked on her head instead and reached Kailash.

Those who happened to see her skeletal figure walking to Kailash on its head were both thrilled and amazed. Siva asked her "What do you wish for?" KAraikkAl AmmaiyAr replied,

"Lord! Give me the boon that I may never take a birth in the world. Even if I take birth, may I never forget my devotion to your lotus feet. I wish to sing along when you perform your Anandha thANdavam".

Siva blessed her saying,"When I perform my Anandha thANdavam in Thiru AlangAdu you may sit near me and sing to your heart's content."

KAraikkAl AmmaiyAr sang the thirup padhigams "Kongai thirangi" and "Ettiyilavam". Ever since then she is singing to the Anandha thANdavam performed by Lord Siva In Thiru AlangAdu.


 
bhagavathy bhaagavatam - skanda 9

9#48e. மனஸா தேவி (7)

பிரதிக்ஞை செய்திருந்தார் முனிவர் மனைவியிடம்
“பிரிந்து செல்வேன் பிரியம் இல்லாததைச் செய்தால்!”


பிரதிக்ஞையை நிறைவேற்ற முனிவர் உடனே
பிரிந்து செல்லலானார் மனஸா தேவியை!


வருந்தினாள் மனஸா தேவி இந்தப் பிரிவினால்;
வணங்கினாள் மனதில் குரு சிவ சங்கரனாரை!


வணங்கினாள் பிரம்ம தேவனை, விஷ்ணு பிரானை;
வணங்கினாள் தனக்குப் பிறவி தந்த கச்யப முனியை.


தோன்றினர் அவர்கள் மனஸா தேவியின் முன்பு;
தேவி கூறினாள் நிகழ்ந்தவை எல்லாம் துயருடன்.


பிரமன் வினவினான் விஷ்ணு மூர்த்தியிடம்,
“பிறக்கவில்லை புத்திரன் இன்னம் இவளுக்கு.


புத்திர உற்பத்தி இன்றிப் பிரிவது எங்கனம்?
புத்திர உற்பத்தியின்றிப் பிரிந்து செல்பவன்


புறக்கணிக்கின்றான் தன் இல்லற தர்மத்தை.
புண்ணியம் வீணாகும் ஜல்லடை நீர் போல!”


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


9#48e. ManasA Devi (7)

Sage JaratkAru had a laid a condition to ManasA Devi before they got married that he would desert her if she ever did anything to upset him. So to keep his up his words, JaratkAru decided to go away from ManasA Devi.


She became very sad and began to cry aloud with pain and anguish. She prayed to her Guru Lord Sankara, Lord Brahma, Lord Sri Krishna and Sage Kashyapa. They all appeared there immediately.


Bowing down to them, sage JaratkAru inquired why they had come there. BrahmA bowed down at the lotus feet of Sri KrishnA and spoke thus:


“If this Brahmin JaratkAru leaves his wife, he should have first of all given her a son to fulfill his Dharma. Any man can quit his wife only after he has impregnated her and
given her a son. But if he leaves his wife without giving her a son, then all his religious merits will be lost just as water carried on a sieve!”



 
SEkkizhArin Periya PurANam

#25a. அப்பூதி அடிகள் நாயனார்

பொங்கும் எழில் மிக்க சோலைகள் நிறைந்த
திங்களூர் ஒரு திருத்தலம் சோழ வளநாட்டில்.

அந்தணச் சிவபக்தர் அப்பூதி அடிகளார் - அவர்
செந்தண்மை பூண்டு ஒழுகினார் இல்லறத்தில்.

மன மாசுகள் அற்ற தூய சிவனடியார் - இவர்
மனம் நிறைந்து இருந்தது அரன் நினைவால்.

கொண்டிருந்தார் எல்லை இல்லா பக்தி - தாம்
கண்டிராத அப்பர் என்ற திருநாவுக்கரசரிடம்.

மகன்கள் பெயர்கள் மட்டுமல்ல நாவுக்கரசு!
மடங்கள், குளங்கள், சாலைகள் அனைத்துமே!

திங்களூர் வந்தார் திரு நாவுக்கரசர் ஒரு நாள்;
தங்கி இருந்தனர் ஜனங்கள் தண்ணீர் பந்தலில்.

எங்கு நோக்கினும் நாவுக்கரசரின் பெயர் தான்!
அங்கிருந்தவர் கூறினர் அப்பூதி அடிகள் பற்றி.

அழைத்துச் சென்றனர் அவரை அப்பூதி அடிகளிடம்;
அழைத்துச் சென்றார் அவரை அப்பூதி தன் இல்லம்.

வினவினார் அப்பர் பெயர் வைத்த காரணத்தை;
சினம் துளிர்த்தத்து; அடிகளின் மனம் ரணமானது.

"சமணர் வலையில் சிக்கிய மன்னனை விடுத்தவர்;
சன்மார்க்க நெறியை உலகின் நிலை நிறுத்தியவர்;

இவரை அறியாத நீர் ஒரு மெய்ச் சிவனடியாரா?
இதுவரை அறியவில்லையா நாவுக்கரசர் பற்றி?"

"சூலை நோய் பற்றிச் சமணத்திலிருந்து வெளியேறி
ஆலைக்கு கரும்பாகி சைவத்தை அடைந்தவன் நானே!"

ஆலிங்கனம் செய்தார் அப்பரை அப்பூதி அடிகளார்;
ஆனந்தக் கடலில் மூழ்கினார் அப்பரை அறிந்ததும்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#25a. Appoothi AdigaL nAyanAr (1)

ThingaLoor was a beautiful place in the ChOzha kingdom. Appothi adigaL was a staunch devotee of Lord Siva born in the varNa of brahmins. His mind was pure and filled with the thoughts of Lord Siva. He had a deep regard for Thiru NAvukkarasar whom he had never set his eyes on.

He named his two sons as the Elder Navukkarasu and the Younger Navukkarasu. He named all the mutts, ponds, roads constructed by him after NAvukkarasar.

Navukkarasar came to ThingaLoor one day. He was surprised to find every charity work named after him. He was told about Apoothi AdigaL who was an ardent admirer of NAvukkarasar. He was lead to the great man. He in turn took NAvukkarasar to his home for feeding him.

Appar asked Appothi adigal why he had named all his welfare activities after NAvukkarasar. Appoothi adigaL got upset and asked," Don't you know him who helped the king escape the net cast by the Jain?

Don't you know him who established the Right way of Living (San MArgga NeRi) in this world? How can you be a true devotee of Siva and yet not know about NAvukkarasar?"

Appar told him, " I am the person who got out of Jainism after suffering severe soolai noi and becoming like the sugar cane fed into a mill. I am the NAvukkarasar you are talking about."

Appoothi adigaL's happiness knew no bounds. He embraced Appar. All his family members came forward and paid their respects to Appar.











 
bhagavathy bhaagavatam - skanda 9

9#48d. மனஸா தேவி (6)

“ஆகிவிட்டது சந்தியா வந்தன சமயம் என்று
அஞ்சியபடியே நான் எழுப்பினேன் ஸ்வாமீ!

சிருங்காரம், ஆகாரம், நித்திரை இம்மூன்றுக்கும்
பங்கம் செய்பவர் உழலுவர் நரகத்தில் அறிவேன்!”

விழுந்தாள் பதி ஜரத்காரு முனிவரின் கால்களில்;
தொழுதாள்; அழுதாள்; பயபக்தி, பதிபக்தியுடன்!

சபிக்க முயன்றார் ஜரத்காரு தன் மனைவியை;
தடுத்தான் சந்தியா தேவியுடன் தோன்றிய சூரியன்.

“உசிதமல்ல நீர் உன் மனைவியைச் சபிப்பது;
உறக்கத்தைக் கலைத்தாள் பாவத்தைத் தவிர்க்க!

வெகுளியில் ஏதேதோ பேசிவிட்டீர் நீர் – தேவி
வெகு பவ்யமாக ஆகிவிட்டாள் சரணாகதி!

வெண்ணெய் போன்று இருக்க வேண்டும் – செந்
தண்மை பூண்ட அந்தணர்களின் இருதயம்!

கோபம் இருப்பது ஒரே கணம் என்றாலும் – இடும்
சாபம் அழித்துவிடும் எல்லா வஸ்துக்களையும்!

பிரம்மனின் அம்சமே பிராமண குலம் – அதனால்
பிரம்ம தேஜஸ் கொண்டுள்ளது பிராமண குலம்!

பிரம்மத்தையே தியானிக்கும் பிராமண குலம்;
பிராமணனுக்குக் கோபம் அழகல்ல முனிவரே!”

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

9#48d. ManasA Devi (6)


Seeing the wrath of her husband ManasA Devi was shaken badly. She fell at his feet and spoke thus with tears of remorse in her eyes!

“I disturbed your sleep and woke you up, fearing that you might miss your SandhyA Vandanam. I have committed an offence.

I know that a person who disturbs another while sleeping or while eating and while mating will go to the KAlasootra hell and suffer there as long as the Sun and Moon exist in this world!”

Knowing that the Muni was angry, and about to curse her, the Sun God came there with the SandhyA Devi. And He humbly spoke to the sage filled with fear,

“Seeing Me about to set in the sky, and fearing that you may miss your Dharma, your chaste wife chose to wake you up. You should not curse her for doing this gesture with a good intention.

A Brahmin’s heart should be as tender as fresh butter. The anger of a Brahmin lasts only for a seconds but it can cause great damages.

A BrAhmin is a part of Brahma himself! He shines with the Tejas of Brahma. A
Brahmin should always meditates on Brahma. Anger does not suit a good Brahmin!” Sun God told Sage Jatar KAru.

Jarat KAru’s anger subsided on hearing these words of wisdom spoken by the Sun God!

 
SEkkizhArin Periya purANam

#25b. அப்பூதி அடிகள் நாயனார் (2)

தொழுதனர் குடும்பத்தில் அனைவரும் அப்பரை;

அழைத்தனர் விருந்துண்ண அன்புடன் அப்பரை.

செய்தனர் பாதபூஜை புது மலர்களால் - தயார்
செய்தனர் அறுசுவை உண்டியை அடியவருக்கு.

இலை அரியச் சென்றான் வாழைத் தோட்டத்துக்கு;
நிலை குலைந்து விட்டான் மகன் அரவு தீண்டியதால்.

கொடுத்தான் அரிந்த இலையை அன்னையிடம்;
படுத்தான் தரையில் நீலம் பாரித்துவிட்ட உடலுடன்.

சிந்திக்கவும் நேரம் இல்லை அப்பூதி அடிகளுக்கு;
விந்தையான செயல் செய்தனர் அக்குடும்பத்தவர்.

ஓரமாக வைத்தனர் பாயில் சுருட்டிய மைந்தனை;
ஒன்றுமே நிகழாதது போல நடந்து கொண்டனர்!

அளித்தார் திருநீறை அனைவருக்கும் அப்பர்;
அளிக்க முடியவில்லை அந்த மூத்த மகனுக்கு!

"எங்கே உங்கள் மூத்த மகன்?' என்று கேட்டார்.
மங்கிவிட்டன முகத்தின் ஒளியும், இளநகையும்.

"அவன் இங்கு இப்போது உதவான்!" என்றதும்
அவனைக் குறித்த உண்மைகள் வெளியாயின!

இறந்த பாலகனை எடுத்துச் சென்றனர் ஆலயம்;
இறந்த செய்தியை அறிந்தவர் சென்றனர் ஆலயம்;

மெய்யுருகப் பாடினார் அப்பர் "ஒன்று கொல்லாம்" என;
மெய்யன்பருக்கு உருகினான் மைக்கண்டப் பெருமான்.

எழுந்தான் சிறுவன் ஆழ்ந்த துயிலிலிருந்து - உடனே
தொழுதான் சிறுவன் அப்பர் பாதங்களில் விழுந்து.

திருப்பழனம் சென்று அப்பூதி அடிகள் நாயனாரின்
திருத்தொண்டுகளைப் பாடினார் திருநாவுக்கரசர்

"திருநம்பி அப்பூதி அடியார்க்கும் அடியேன்"

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#25b. Appoothi AdigaL nAyanAr (2)

Appoothi AdigaL did pAdha poojai for Appar. They prepared tasty food to serve to Appar. Their elder son went to the garden to fetch fresh banana leaves.

He was bitten by a venomous snake in the garden. He handed over the leaves to him mother and just dropped dead with his body turned blue.

Appoothi AdigaL and his wife did not know what to do. If they announce the death of their son, Appar would not eat food in their home.

So they rolled up the body of their son in a mat and kept it away from sight. They with great sorrow behaved as if nothing had gone wrong.

Appar gave the holy ash to all the family members but the elder son was missing. He asked Appoothi about him and the father replied,"He will be of no use to us now!" Then the terrible truth emerged that the boy had died of a snake bite.

They carried their dead son to the Siva temple. The people who had learned about this unfortunate incident also went to the temple. Appar sang a soulful Tamil padhigam "Ondru kollaam.."

Lord Siva took pity on His devotees and resurrected the son. The boy got up as if from deep sleep. He paid his obeisance to Appar. After spending some time with Appothi AdigaL Appar went away.

Navukkarasar sang glorifying the greatness of Appothi AdigaL after he reached Thirup Pazhanam.



 
bhagavathy bhaagavatam - skanda 9

9#48e. மனஸா தேவி (7)

பிரதிக்ஞை செய்திருந்தார் முனிவர் மனைவியிடம்
“பிரிந்து செல்வேன் பிரியம் இல்லாததைச் செய்தால்!”

பிரதிக்ஞையை நிறைவேற்ற முனிவர் உடனே
பிரிந்து செல்லலானார் மனஸா தேவியை!

வருந்தினாள் மனஸா தேவி இந்தப் பிரிவினால்;
வணங்கினாள் மனதில் குரு சிவ சங்கரனாரை!

வணங்கினாள் பிரம்ம தேவனை, விஷ்ணு பிரானை;
வணங்கினாள் தனக்குப் பிறவி தந்த கச்யப முனியை.

தோன்றினர் அவர்கள் மனஸா தேவியின் முன்பு;
தேவி கூறினாள் நிகழ்ந்தவை எல்லாம் துயருடன்.

பிரமன் வினவினான் விஷ்ணு மூர்த்தியிடம்,
“பிறக்கவில்லை புத்திரன் இன்னம் இவளுக்கு.

புத்திர உற்பத்தி இன்றிப் பிரிவது எங்கனம்?
புத்திர உற்பத்தியின்றிப் பிரிந்து செல்பவன்

புறக்கணிக்கின்றான் தன் இல்லற தர்மத்தை.
புண்ணியம் வீணாகும் ஜல்லடை நீர் போல!”

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

9#48e. ManasA Devi (7)

Sage JaratkAru had a laid a condition to ManasA Devi before they got married that he would desert her if she ever did anything to upset him. So to keep his up his words, JaratkAru decided to go away from ManasA Devi.

She became very sad and began to cry aloud with pain and anguish. She prayed to her Guru Lord Sankara, Lord Brahma, Lord Sri Krishna and Sage Kashyapa. They all appeared there immediately.

Bowing down to them, sage JaratkAru inquired why they had come there. BrahmA bowed down at the lotus feet of Sri KrishnA and spoke thus:

“If this Brahmin JaratkAru leaves his wife, he should have first of all given her a son to fulfil his Dharma. Any man can quit his wife only after he has impregnated her and given her a son. But if he leaves his wife without giving her a son, then all his religious merits will be lost just as water carried on a sieve!”

 
SEkkizhArin Periya PurANam

#26. திரு நீலநக்க நாயனார்

பொய்க்காத பொன்னி ஆற்றால் வளம் பெற்றது
சோழவள நாட்டில் அமைந்த திருச்சாத்த மங்கை.

விளைந்து நிற்கும் செந்நெற் கதிர்கள் வயல்களில்;
விளையாடும் வண்ண மீன்கள் தாமரை மலர்களில்.

அன்னங்கள் நீந்தி நீராடும் குளிர்த் தடாகங்களில்;
அன்ன நடை பயிலும் பல வண்ண மங்கையருடன்.

இங்குள்ள எம்பிரானின் திருப் பெயர் அவயந்தி நாதர்;
இங்குள்ள எம்பிராட்டியின் பெயர் மலர்கண்ணியம்மை.

மூன்று வேள்வித் தீக்களையும் வளர்த்தனர் வேதியர்கள்,
நான்காவது தீயாக வளர்த்தனர் சீரிய கற்பு நெறிகளை.

சாமவேதம் கற்பிக்குமாம் தம் குஞ்சுகளுக்கு - கற்கும்
அந்தணச் சிறுவர்களுடன், நாகணவாய்ப் பறவைகள் !

பிழையாகச் சொன்னால் அந்தணச் சிறுவர்கள்- அப்
பிழைகளைத் திருத்துமாம் நாகணவாய்க் குஞ்சுகள்!

திருச்சாத்த மங்கையில் திரு நீலநக்கனார் - புரிந்தார்
திருத்தொண்டுகள் அந்தண குலத்தில் பிறவி எடுத்து.

வந்தது திருவாதிரை அவ்வாண்டும் வழக்கம் போல்;
வந்தார் அவயந்தி நாதரை ஆராதிக்க நீலநக்கனார்.

விழுந்தது ஒரு சுதைச் சிலந்தி நிலை தவறிக் கீழே;
விழுந்தது அச்சிலந்தி ஈசன் திருமேனியின் மேலே.

ஊதினார் அம்மையார் தன் வாயினால் சிலந்தியை;
உமிழ்நீர் தெறித்துவிட்டது ஈசனின் திருமேனியில் !

அபச்சாரமாகக் கருதினார் நீலநக்கர் இதனை - தன்
உபசாரங்களை நிறுத்தினார்; இல்லம் திரும்பினார்.

வழிபாட்டை நிறுத்தியதோடு நில்லாமல் சொன்னார்
"வாழமாட்டேன் மனைவி உன்னுடன் சேர்ந்து!" என்று

தங்கி விட்டார் மனைவி திருக்கோவிலில் அன்றிரவு;
தூங்கி விட்டார் நாயனார் தன் இல்லத்தில் அன்றிரவு;

கனவில் காட்சி தந்தார் அவயந்தி நாதர் நீலநக்கருக்கு;
காண்பித்தார் தன் திருமேனியில் பல கொப்புளங்களை.

அம்மையார் ஊதிய இடங்களில் மட்டும் காணவில்லை
அல்லல் தரும் கொப்புளங்கள் பெருமான் திருமேனியில்!

விரைந்து சென்றார் நாயனார் அந்த ஆலயத்துக்கு ;
விவரித்தார் தன் கனவை; வேண்டினார் மன்னிப்பை.

தலயாத்திரை சென்றார் சம்பந்தர் குழுவுடன் இவர்.
தலங்களில் பாடினார் ஈசனை தரிசித்து நேசத்துடன்;

பெருமண நல்லூர் சென்றார் மனைவியுடன் நாயனார்;
திருமணம் நிகழ இருந்தது ஞான சம்பந்தருக்கு அங்கு;

தோன்றியது பெரிய சிவச்சோதி திருமணத்தின் போது;
ஒன்றிவிட்டார் நாயனார் மனைவியுடன் சிவச் சோதியில்.

"சாத்தமங்கை நீலநக்கர்க்கடியேன்"

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#26. Thiru Neela Nakkar nAyanAr

Thiruch chAtha Mangai was situated in the fertile Chozha kindom. The perennial river Ponni flowed through it making it a very prosperous city. Paddy fields would appear loaded with the crops and colorful fish could be seen playing on the lotus flowers in full bloom.

Beautiful swans would swim and bath along with the pretty women who had a swan-like-gait. The temple in this place was called a Avanthi. The name of the God residing there was Avanthi nAthar and the Devi was Malar KaNNI Ammai.

The brahmins here used to light all the three types of fire during their Vedic ceremonies. The fourth fire people kept alive here was Chastity. The birds called NAgaNavAi - which excel in singing - would teach the SAma vEdam to their young ones along with the brahmin brahmacharis learning SAma Vedam. If and when the boys committed a mistake the young birds would correct their mistakes.

Thiru Neela NakkanAr was born in the family of brahmins. He was a staunch devotee of Siva. He served the Lord and His devotees to the best of his capacity. It was his custom to celebrate ThiruvAdhirai day with great joy and devotion.

He went to the temple with his wife on the ThiruvAdhirai day as usual. When they were worshiping, a spider fell down from above and it landed on the idol of the deity.

NAyanAr's wife felt concerned that the poisonous spider may affect the deity and she blew it away with her breath. While she was doing it she sprayed God with her own saliva quite unintentionally.

Neela Nakkar flew into a rage at this rude behavior. He stopped the worship midway and went back home. He told his wife, "I can not live with you any more now that you have defiled the lord whom I worship".

His wife stayed back in the temple that night. NAyanAr went home alone and slept alone. Avanthi nAdhar appeared in his dream. God showed NAyanAr the blisters and boils caused on his body by the poisonous spider.

But where his wife had sprayed her saliva there was not a single blister or boil. NAyanAr realized his folly and rushed to the temple. He told his dream to his wife and begged for her pardon. He took her back to their home.

Neela Nakkar went on pilgrimage along with JnAna Sambandhar and his group. He sang many padhigams on Lord Siva during the pilgrimage. He went to Peru MaNa Nalloor with his wife to attend the wedding of Thiru JnAna Sambandhar.

A huge illumination appeared during the wedding ceremony. All those who had gathered there for the wedding entered in it and reached the lotus feet of Lord Siva. Neela Nakkar and his wife were among those who were thus blessed by Lord Siva




 
bhagavathy bhaagavatam - skanda 9

9#48f. மனஸா தேவி (8)


மனைவி நாபியை மந்திரப் பூர்வமாகத் தொட்டு,
மனஸா தேவிக்கு வரம் தந்தார் ரிஷி ஜரத்காரு.


“உண்டாகும் உனக்கும் பிள்ளைப் பேறு;
உண்டாவான் உனக்குச் சிறந்த புதல்வன்!


இருப்பான் சிறந்த புலன் அடக்கத்துடன்;
இருப்பான் தர்ம சீலனாக, உத்தமனாக.


திகழ்வான் வேதமுணர்ந்து தேஜசுடன்;
திகழ்வான் புகழ் பெற்ற தவ ஞானியாக.


திகழ்வான் ஈஸ்வர பக்தி மிகுந்தவனாகத்
தன் குலத்தைக் கடைத்தேற்றுபவனாக!


கூத்தாடுவர் மகிழ்ச்சியுடன் பித்ருக்கள்
உத்தமன் நம் மகன் தோன்றியவுடனே!


நல்ல ஒழுக்கம் உடைய பெண் பதிவிரதை;
நல்ல இன்சொல் பேசுகின்றவள் பிரியை;


நல்ல புதல்வனைப் பெறுபவள் தர்மிஷ்டை;
குலத்தை நன்கு வளர்த்துபவள் குலமங்கை;


நல்ல ஈஸ்வர பக்தியைத் தருபவன் பந்து;
நல்ல தெய்வ கவசத்தைத் தருபவன் பிதா;


கர்ப்ப வாசத்தை நீக்குபவள் அவன் தாய்;
கர்ப்பத்தைத் தரித்துத் தாங்குபவளும் தாய்.


தயையும் அவளே! தாயும் அவளே – யம
பயத்தைப் போக்குகின்றவளும் அவளே! ”


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K . ராமன்


9#48f. ManasA Devi (8)


Hearing the words of Brahma, JaratkAru recited a Mantra, touched the navel of his wife ManasA and spoke to her thus, “O ManasA! A son will be born to you who will be self-controlled, religious, and the best among all the Brahmins.


Your son will have tejas, energy and fame. He will be well-qualified! He will be the foremost of those who know the Vedas. He will be a great JnAni and the best of the Yogis.


That son is a good son who uplifts his family; who is religious and is devoted to Sri Hari. Pitris dance with joy when such a son is born.


A wife is a true wife who is devoted to her husband, good-natured, Sweet-spoken and religious. She is a mother of her sons, she is the woman in the family and she is the preserver of the family.


He is the true friend who implants devotion to Hari. He is a good father who shows his son the way to devotion to Hari.


She is the True Mother, through whom the disease of further entering into wombs ceases for ever! She is also a good sister who makes the fear of Death vanish!”




 
SEkkizhArin Periya PurANam

#27a . திரு நமிநந்தி அடிகள் நாயனார் (1)

நமிநந்தி அடிகள் நாயனார் தோன்றினார்
ஏமப்பேறூர் தலத்தில், பொன்னி நாட்டில்.

அறநெறியப்பரின் ஆலயம் அமைந்திருந்தது
திருவாரூர், திருக்கோவில், திருமதில் அருகே.

இருள் படர்ந்து இருந்தது விளக்குகள் ஏற்றாமல்;
இருந்த தெருவிளக்கிலும் இல்லை அதிக நெய்.

தம் ஊர் என்று நெய் கொண்டு வரும் முன்பே
கும்மிருட்டு ஆகிவிடும் விளக்கும் அணைந்து!

கேட்டார் சிறிதளவு நெய் தருமாறு - அருகில்
கூப்பிடு தூரத்தில் இருந்த இல்லம் சென்று.

இருந்தனர் சில சமணர்கள் அந்த இல்லத்தில்;
இகழ்ந்து நகைத்தனர் சைவ அடிகளை நோக்கி

"உள்ளது எரியும் தழல் உம் இறைவன் கையில்!
உள்ளதா அவசியம் வேறு ஒரு நெய் விளக்குக்கு?

இருக்கின்றது நிறைய நீர் எதிரில் உள்ள குளத்தில்!
ஏற்றலாமே நீர் விளக்குகளைக் குளத்து நீரை ஊற்றி!"

குமைந்து போனார் நமிநந்தியார் அவமானத்தால்;
குமுறினார் மனம்; முறையிட்டார் இறைவனிடம்!

ஒலித்தது அசரீரி விண்ணிலிருந்து - கூறியது
"ஒளி விடும் உன் விளக்குகள் குளத்து நீராலும்!"

மொண்டு வந்தார் சங்கு தீர்த்தம் குளத்து நீரை;
தூண்டினார் திரியை; ஊற்றினர் தண்ணீரை!

ஐயமின்றி அருள் செய்தான் ஐயன் அற்புதம்!
நெய் விளக்குப் போல ஒளிர்ந்தது நீர்விளக்கு!

ஏற்றினர் எல்லா விளக்குகளையும் நீர் ஊற்றி;
எரிந்தன மிக மங்களகரமாக அந்த விளக்குகள்.

காலப் போக்கில் அழிந்துபட்டது சமண மதம்;
ஞாலத்தில் செழித்தது மீண்டும் சைவ மதம்;

நமிநந்தியார் தலைவர் ஆனார் கோவிலுக்கு;
திமிலோகப் பட்டது கோவில் திருவிழாக்களால்.

பங்குனி உத்திரத்தைக் கொண்டாடினர் மிகச் சிறப்பாக;
தங்கு தடையின்றிக் கிடைத்தன பொன்னும், பொருளும்!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷிரமணி

#27a. Nami Nandhi AdigaL nAyanAR (1)

Nami Nandhi AdigaL was born in Ema pERoor in Ponni nAdu. The temple of ARa neRi appar was situated near the compound wall of the ThiruvAroor temple. The place was dark since lamps were not lit. The only street light did not have much oil and might go off at any time.

Nami Nandhi could go back to his home and bring some ghee for the lamps but surely it would go off and the whole place would become dark. He saw a house at some distance. He went over there and asked for some ghee for the lamps. The house was occupied by some Jains.

The Jains mocked at him and said," Your God has a burning fire in his hand. Why do you need one more lamp there? If you must have a lamp, You may pour the water from the pond and light those lamps"

Nami Nandhi felt ashamed and insulted. He heard a voice from the sky. "Light the lamps with the water from the pond. They will burn as brightly as if they were filled with oil"

Nami Nandhi fetched some water from the pond Sangu Theertham. He trimmed the wicks and lit the lamps pouring the water from the pond. The lamps burned brightly as if filled with oil.

Jainism came to end in due course of time. Saivism thrived as before. Nami Nandhi was made in charge of the temple. Festivals were celebrated with great jubilation





 
bhagavathy bhaagavatam - skanda 9

9#48g. மனஸா தேவி (9)

“ஞானத்தை வழங்குபவனே ஒரு நல்ல குரு;
ஞானம் ஆகும் பரமாத்மாவை உணருவது.

பிரஞ்சம் தோன்றுகிறது ஈஸ்வரனிடமிருந்து;
பிரபஞ்சம் ஒடுங்குகிறது ஈஸ்வரனிடம் சென்று!

வேத யாகங்கள் அனைத்தும் இறைவன் தொண்டு;
ஞான உபதேசம் நல்குபவன் ஒரு ஸ்வாமி ஆவான்.

விடுவிக்க வேண்டும் குரு பிறவித் துயரிலிருந்து;
விடுவிக்க வேண்டும் மரண வேதனையிலிருந்து!

காட்ட வேண்டும் பரமானந்த உருவான இறைவனை;
காட்ட வேண்டும் நிலையான பொருளான இறைவனை;

சரண் புகுவாய் அப்பரமாத்மாவிடம் ஓ பெண்ணே!
அரண் ஆகிக் காப்பான் உன் கர்மங்களை அழித்து!

துறந்து செல்வேன் உன்னை ஒரு காரணத்துக்காக;
பொறுத்துக் கொள் நீ உன்னைப் பிரிந்து போவதை!

தவம் செய்யப் போகின்றேன் புஷ்கரக் ஷேத்திரத்தில்;
நலம் நாடிச் செல்லலாம் நீ விரும்புகின்ற இடத்துக்கு!

ஆசைகள் அற்றவனின் உள்ளம் உறைய வேண்டும்
ஈசனின் திருவடித் தாமரைகளில்!” என்றார் ஜரத்காரு.

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K . ராமன்

9#48g. ManasA Devi (9)


” He is the true guru who imparts true knowledge. It is true knowledge to know about ParamAtma. The creation appears from ParamAtma. It finally gets dissolved in ParamAtma.

All the Vedic Karmas are services done to God. A Swami is one who does the upadesam of true knowledge. The man who pushes another deeper in SamsAram is an enemy. The guru who can not impart true knowledge will destroy his disciples.

A guru must set free his disciple from the cycle of birth and death. A guru must set his disciples free from the pain of birth and death. A guru should show his disciple the God who is personification of true bliss. He must show his disciple the only true everlasting thing among the all others which will vanish.

Take refuge in God my dear wife! He will destroy your Karmas and protect you. I am going away from you for a specific reason. You must bear with my separation.

I am going to Pushkara Kshetra to do penance. You are free to go wherever you want to go. The heart of man who has overcome desires must rest at the lotus feet of the Lord.”

 
SEkkizhArin Periya PurANam

#27b. திரு நமிநந்தி அடிகள் நாயனார் (2)

எழுந்தருள்வார் தியாகேசன் மணலிக்கு - அங்கு
குழுமுவர் சைவ அன்பர்கள் ஜாதிமத பேதமின்றி.

கலந்து கொண்டார் நமிநந்தி அடிகளார் விழாவில்;
கலந்து கொண்டனர் பிற வர்ணத்துச் சைவர்களும்.

வீடு திரும்பினார் நமிநந்தி அடிகளார் - ஆனால்
வீட்டுக்கு வெளியே அமர்ந்து விட்டார் அன்றிரவு.

ஜாதி, மத வேறுபாடின்றிக் கலந்து கொண்டதால்
பாதிக்கப்பட்டு விட்டது தன் உடல் தூய்மை என்று.

மனைவி கேட்டாள் இதன் காரணத்தை - இவரோ
மனைவியிடம் கூறினார் "குளிக்க வெந்நீர் போடு!"

நீர் சுடும் முன்பே தோன்றினார் நமிநந்தியாருக்குப்
பார் போற்றும் பரம்பொருள் ஒரு விநோதக் கனவில்!

"திருவாரூர் வசிப்பவர் அனைவருமே சிவகணங்கள்;
கருத்து மாறுபட்டு வீணே மதி மயங்கியது எதற்காக?

செல்வாய் மீண்டும் ஒரு முறைத் திருவாரூர் - அதன் பின்
சொல்வாய் அங்கு கண்ட மக்களில் உண்டோ பேதம் என!"

"குளித்து விட்டு வரலாமே!" என்றாள் மனைவி - இவர்
குளிக்காமலேயே உறங்கச் சென்று விட்டார் அன்றிரவு

சென்றார் திருவாரூர் நீராடி, நீறணிந்து கொண்டு;

செல்லும் இடமெல்லாம் கண்டார் சிவகணங்களை!

வெண்ணீறு ஒளிர்ந்தது அவர்கள் திருமேனிகளில்;
கண்கள் கண்டன எங்கும் சிவகணங்களை மட்டுமே.

நிலத்தில் வீழ்ந்தார்; அவரைத் தொழுதார் நமிநந்தியார்;
பொலிவு மறைந்து மாறிவிட்டனர் மக்கள் முன்போலவே.

விடுத்தார் நமிநந்தியார் ஏமப்பேற்றை - அதன் பின்னர்
விரும்பினார் நமிநந்தியார் திருவாரூர் தலத்தில் வாழ.

இருப்பிடம் ஆக்கிக் கொண்டார் நாயனார் திருவாரூரை
திருத்தொண்டுகள் புரிந்த நாயனார் இறையடி சேர்ந்தார்.

"அருள்நம்பி நமிநந்தி அடியார்க்கும் அடியேன்"

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#27b. Nami Nandhi AdigaL NAyanAR (2)


Panguni Uththiram was celebrated in a grand scale, sparing no expenses. Money and gold needed for the celebration just poured in. ThyAgesan of ThiruvAroor would be made to visit MaNali during the festival. People from all the places and belonging to all the four varNas would participate in these celebrations.

Nami Nandhi also participated in this festival held in ThiruvAroor and MaNali. After returning home he did not wish to enter his house. He had a feeling that his purity has been defiled by his mingling freely with people of all the varNas.

He sat outside the house and told his wife to prepare hot water for his bath. He dozed off before the water got heated and had a strange dream. Lord appeared in his dream and said,

"All the people living in ThiruvAroor are my Siva gaNas. Why do you worry about becoming impure by the physical contact with them? Go to ThiruvAroor one more time. Tell me whether you find any difference among the people living there."

He woke up from his sleep when his wife said that the hot water was ready for his bath. But Nami Nandhi entered his house and went to sleep without taking a bath.

The next day he took bath and smeared himself with the holy ash and went to ThiruvAroor. Wherever he set his eyes he could see only Siva GaNas. They were all adorned by the holy ash and looked very attractive and respectable. Nami Nandhi fell on the ground and paid his respects to the people of ThiruvAroor. Now all the people of ThiruvAroor changed back and became who they were before.

Nami Nandhi wished to change his residence from Emap pEroor to ThiruvAroor. So he shifted his family to ThiruvAroor. He continued to serve Lord Siva and his devotees as before, until he merged in the lotus feet of Siva.

 
bhagavathy bhaagavatam - skanda 9

9#48h. மனஸா தேவி (10)

துக்கம் மேலிட்டது மனஸா தேவிக்கு – “நான்
தூக்கத்துக்கு ஊறு விளைவித்தது உண்மை!

“விட்டுப் பிரிந்து செல்லும் அளவுக்கு – அது
கெட்ட செயலா என்று சிந்தியுங்கள் ஸ்வாமி!

தரிசனம் தர வேண்டும் தங்கள் வந்து எனக்குக்
கரிசனையுடன், நான் விரும்பும் போதெல்லாம்!

துக்கம் உறவினரைப் பிரிவது – அதை விடத்
துக்கம் அருமைப் புத்திரரைப் பிரிந்து இருப்பது.

இணையாகும் பிராணனைப் பிரிந்திடும் துக்கம்
இணைந்த பிராணாதிபதியை பிரிந்திடும் போது!

ஒரு தந்தை கொள்வான் பிரியம் மைந்தன் மீது;
ஒற்றைக் கண்ணனின் பிரியம் இரு கண்களின் மீது.

பிரியம் கொள்வான் தாகம் கொண்டவன் நீரின் மீது;
பிரியம் கொள்வான் பசி எடுத்தவன் உணவின் மீது!

பிரியம் கொள்வான் காமுகன் கலவி சுகத்தில்!
பிரியம் கொள்வான் கள்ளன் பிறர் பொருட்களில்!

பிரியம் கொள்வாள் பதிதை பர புருஷர்கள் மீது;
பிரியம் கொள்வான் கற்காதவன் நூல்களின் மீது!

பிரியம் வைப்பான் வணிகன் வாணிபம் மீது;
பிரியம் வைப்பாள் பதிவிரதை பதியின் மீது.

விழுந்தாள் கணவனின் பாதங்களில் தேவி
அழுதாள் தாளமுடியாத துயரத்தினால் தேவி.

அணைத்துக் கொண்டு ஆறுதல் கூறினார்;
இணையாகக் கண்ணீர் சிந்தினர் இருவரும்.

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K . ராமன்

9#48h. ManasA Devi (10)


Hearing the words of JaratkAru, the Devi ManasA became distressed with great sorrow. Copious tears flowed from her eyes. She spoke to her dear husband thus:

“O SwAmi! I have not committed any grave offence that you have to desert me and go away. Please be kind enough to show yourself to me whenever I wish to see you.

The separation from one’s friend is painful; the separation from one’s sons is even more painful. For a wife her husband is dearer than one hundred sons. So the separation from one’s husband is the hardest to bear.

The heart of a man who has only one son is attached to that son. The heart of a VaishNava is attached to Sri Hari. The mind of one-eyed man is attached to two eyes.

The mind of a thirsty man is attached to water and the mind of a hungry man is attached to food. The mind of a passionate man is attached to lust and the mind of a thief is attached to the properties of others.

The mind of a lewd man is attached to his prostitute and the mind of the learned is attached to the SAstras. The mind of a trader is attached to his trade and the mind of chaste woman is attached to her husband.”

Thus saying, ManasA fell down at the feet of her husband JaratkAru. He took her for a moment on his lap and drenched her body with tears. The Devi ManasA also drenched his lap with tears flowing freely from her eyes.

 
SEkkizhArin Periya PurANam

#28a. திரு ஞானசம்பந்தர் பெருமான் (1)

பன்னிரண்டு பெயர்களைக் கொண்டது சீர்காழி - சம்பந்தர்
பல்வளம் செழிக்கும் இந்தத் திருத்தலத்தில் அவதரித்தார்.

அந்தணர்; செந்தண்மை பூண்ட சிவபாதவிருதயர் தந்தை;
அந்த சிவனருட் செல்வர் மனைவி பகவதியார் அன்னை.

வலிமை குறைந்து விளங்கியது சைவ சமயம் அச் சமயம்;
வலிமை பெற்று விளங்கின சமண, பௌத்த மதங்கள்.

குன்றி விட்டன வேத நெறிகளும், சமய நெறிகளும்;
மங்கி விட்டன வெண்ணீற்றின் சிறப்பும், பெருமையும்.

விழைந்தனர் தெய்வ அருள் பெற்ற ஒரு மைந்தனை;
விழைந்தனர் சைவ மதத்தைத் தழைக்கச் செய்திட.

திருவுள்ளம் கனிந்தார் தோணியப்பர் அவர்கள் மீது;
கருவுற்று ஈன்றார் பகவதியார் ஞானக் குழந்தையை.

அவதரித்தார் சம்பந்தர் திருவாதிரை நன்னாளில்;
அளித்தனர் பரிசாகப் பொன் பொருளை வாரி வாரி.

புறப்பட்டார் சிவபாதவிருதயர் பொற்றாமரைக் குளத்துக்கு
புறப்பட்டது மூன்று வயதுக் குழந்தையும் தன் தந்தையோடு.

அமர்த்தினார் சம்பந்தரைக் குளக்கரையில் தந்தை.
அமிழ்ந்தார் குளத்தில் அனுஷ்டானங்களைச் செய்திட.

அழுதது கலங்கிய குழந்தை "அம்மா! அப்பா!" என்று.
எழுந்தனர் வானவீதியில் உமையும், தோணியப்பரும்.

"ஊட்டுவாய் ஞானப் பாலைச் சம்பந்தனுக்கு தேவீ!" என
ஊட்டினாள் உமை முலைப்பாலைப் பொற்கிண்ணத்தில்.

பருகியது குழந்தை ஆவலுடன் அந்த ஞானப் பாலை;
பெருகியது அதன் கண்களில் ஆனந்தக் கண்ணீர்!

'ஆளுடைய பிள்ளை' ஆகிவிட்டான் குழந்தை சம்பந்தன்.
ஆட் கொண்டவர்கள் அண்டங்களின் தாயும், தந்தையும்.

அரிய சிவ ஞானத்தை நொடியில் பெற்று விட்டான்;
அரிய கலை ஞானத்தை நொடியில் பெற்று விட்டான்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#28a. Thiru JnAna Sambandhar (1)

SeerkAzhi was and is a famous holy place with twelve different names. It was and is a prosperous and fertile place. Siva pAdha Hrudrayar was a well respected brahmin and BhagavathiyAr was his wife.

At that time Saivism was perishing and Jainism and Buddhism were flourishing. The Vedas and their messages were slighted or completely discarded. So were the rules laid down by the religions. The couple wished to beget a son who would revive Saivism one again.

ThONiyappar is the name of the God residing in SeerkAzhi. He graced them and they were blessed with a son on the ThiruvAdhirai day. Gold and money were distributed to celebrate the birth of their son.

The child was named as Sambandhan. When he was three years of age, he went along with this father to the Pond of Golden Lotuses. The father made the child sit on the bank of the pond and entered the pond to perform his nithya karma anushtAnam.

When he took a dip in the pond, the child panicked and started crying for its mother and father. Devi Uma and Lord Siva rose in the sky and Lord Siva told Devi Uma, "Feed the crying child with you milk which imparts all knowledge and wisdom.

Devi Uma collected her milk in a gold cup and gave it to the child who drank the divine milk eagerly.Tears of pure joy sprung from its eyes. He became the "pet child" (AaLudaiya PiLLai ) of none other than Lord Siva and Devi Uma. With the divine milk he got the knowledge of Siva as well as of all the arts in just one moment.








 
bhagavathy bhaagavatam - skanda 9


9#48i. மனஸா தேவி (11)

தியானம் செய்தனர் இருவரும் சிவபெருமானை;
ஞானம் பெற்றனர்; சோகம் நீத்தனர் இருவரும்.

ஜரத்காரு முனிவர் சென்றார் தவம் புரிந்திட;
பரமேஸ்வரனிடம் சென்றாள் மனஸா தேவி.

மனம் இரங்கினாள் அவளைக் கண்ட பார்வதி;
மனஸாவுக்கு உபதேசிக்கச் செய்தாள் சிவனை.

மனம் தெளிந்தாள்; மகிழ்ச்சியுடன் வாழ்ந்தாள்;
மனஸா தேவி ஈன்றாள் அழகிய புதல்வனை.

பெற்றிருந்தான் புதல்வன் ஞானோபதேசங்களை
கர்ப்பத்தில் வாசம் செய்து வந்த காலத்திலேயே.

புகழ்ந்தனர் அவன் மேன்மையை அனைவரும்;
புரிந்தார் ஜாதகர்மம் ஸ்வயம் ருத்திர மூர்த்தி.

கற்பித்தார் வேதங்கள் நான்கையும் அவனுக்கு;
பெற்றான் சிறுவன் ஆஸ்திகன் என்ற பெயரை!

அறிந்திருந்தான் “காலத்தைக் வென்றவர் கடவுள்!”
சிறந்திருந்தான் தன் குரு பக்தியில் ஆஸ்திகன்.

உபதேசம் பெற்றான் ருத்திர மூர்த்தியிடமே;
உடனே சென்றான் புஷ்கர க்ஷேத்திரத்துக்கு.

தவம் செய்தான் அங்கு மூன்று யுகங்களுக்கு;
தவம் செய்தான் மூன்று லக்ஷம் ஆண்டுகள்!

திரும்பினான் ருத்திரருடன் சில காலம் வசிக்க;
திரும்பினான் கச்யபரிடம் மனஸா தேவியுடன்.

தானங்கள் தந்தார் மகிழ்ந்த காச்யபர் – அன்ன
தானங்கள் செய்தார் மனம் மகிழ்ந்த காச்யபர்.

அதிசயித்தனர் ஆஸ்திகன் தேஜஸைக் கண்டவர்கள்!
அங்கேயே தங்கிவிட்டான் ஆஸ்திகன் காச்யபருடன்.

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K . ராமன்

9#48i. ManasA Devi


Some time later, true knowledge dawned in them and they both became free from their sorrow. JaratkAru enlightened ManasA and asked her to meditate on the lotus feet of ParamAtma. He went away to do penance in Pushkara Kshetra.

ManasA felt distressed with sorrow and went to her guru Lord Sankara in KailAsa. Lord Sankara and Devi PArvati consoled her by imparting true knowledge and good advice. Some days later, ManasA gave birth to a son born as an amsam of Lord NArAyaNA.

When the child was in ManasA’s womb, he had listened to and absorbed the highest knowledge from the mouth of MahAdeva himself! So he was born as a Yogeendra and the Spiritual Teacher of JnAnis.

On his birth, Lord Sankara Himself performed many auspicious ceremonies. Brahmins chanted the Vedas for the welfare of the child. MahAdeva taught the boy four Vedas with their six Angas (limbs) and did upadesam of the Mrityumjaya Mantra. The child was named as Aastika.

Aastika then got the MahA Mantra from Lord Sankara. He went to Pushkara Kshetra to worship VishNu. He did severe penance for three eons or three lakh divine years.

He returned to KailAsa, to pay his respect to his guru – the great Yogi Lord Sankara. He remained there for some time. Later ManasA went to the hermitage of Kas’yapa, her father, with her son Aastika.

Seeing ManasA with a son, Kashyapa’s joy knew no bounds. He gave feast to the brahmins along with gift of gold and gems. Aditi and Diti – the wives of Kashyapa- were very happy to see Aastika. ManasA remained there for a long time with his son
.
 
SEkkizhArin Periya PurANam

#28b. திரு ஞானசம்பந்தர் பெருமான் (2)


முடித்தார் நித்திய நியமங்களை சிவபாதவிருதயர்;
படிக்கட்டில் பால்வழிய மகன் பொற்கிண்ணத்துடன்!

"ஊட்டியது யார் உனக்கு இந்தப் பாலை ?' என்றதும்
காட்டியது குழந்தை வானவீதியில் சிவன் உமையை.

பாடியது ஞானக் குழந்தை "தோடுடைய செவியன்.."
ஆடினார் தந்தையார் ஆனந்தக் கூத்து இது கேட்டு.

சென்றது குழந்தை தயங்காமல் தோணியப்பரிடம்;
சென்றார் தந்தையும் பின்னே திருப்பதிகம் கேட்க.

மொழிந்தது குழந்தை ஈசன் தன்னை ஆட்கொண்டதை;
மொழிந்தனர் ஆசிகள்; வாழ்த்தினர் குழுமிய ஜனங்கள்.

சுமந்து சென்றார் ஞானக் குழந்தையைத் தோள்மீது தந்தை.
சுமங்கலிகள் வாழ்த்தினர் புது மலர்கள், நெல் பொரி தூவி.

வண்ணக் கோலங்கள், மணி விளக்குகள் அலங்கரித்தன;
வெண்கடுகு, அகில் முதலியவை நறுமண தூபங்கள் ஆயின.

விரும்பியது குழந்தை ஆலயங்கள் தோறும் ஈசனைக் காண;
பெருமானை வழிபட்டது திரு கோலக்காவைச் சென்றடைந்து.

"மடையில் வாளையாய" என்னும் பதிகம் பாடியது குழந்தை;
அடித்துத் தாளம் போட்டது தன் பிஞ்சுக் கரங்கள் சிவந்திட.

செஞ்சடையான் மனம் கனிந்தான் ஆளுடைப் பிள்ளை மீது;
அஞ்செழுத்துக்கள் பதித்த பொற்றாளங்களை அளித்தான் .

வணங்கியது குழந்தை பொற்றாளங்களைத் சிரம் மீது எடுத்து.
வழங்கியது இனிய தமிழ் பதிகங்களை பெருமான் மகிழ்ந்திட.

பாடியது திருக் கடைக்காப்பு தீந்தமிழில் இனிய இசையோடு.
பாடிய கோவில் ஆனது 'திருத்தாளம் உடையார்' கோவிலாக.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


#28b. Thiru JnAna Sambandhar (2)

Siva PAdha Hrudhayar completed his nithya anushtAnam (prescribed daily prayers). He saw his son sitting on the steps leading to the pond with milk dripping from his mouth and holding a gold cup in his hand. The father asked his son, "Who gave you this milk?" The child pointed to Lord Siva and Devi Uma in the sky.

Sambandhan sang a padhigam "ThOdudaiya seviyan" and his father started dancing in ecstasy. The young JnAna Sambandhar walked straight to the idol of ThONiyappar without any hesitation. He sang a padhigam explaining how Lord Siva had blessed him. The people gathered in the temple were thrilled by it. They all blessed the divine child.

The proud father carried the young JnAna Sambandhar on his shoulders. All the auspicious women blessed the boy by sprinkling on him fresh flowers and puffed paddy. They decorated their city with beautiful floral designs drawn on the ground. Lamps were lit and incenses were burnt making the whole place look and smell holy and divine.

Now JnAna Sambandhar wanted to visit all the temples of Lord Siva along with his father and sing His praise. He reached Thiru KOlakkA. He clapped his palms to keep the rhythm and sang a padhigam "Madaiyil vALaiyAya". His soft palms turned red by the beating.

Lord Siva made two gold cymbals with his panchAksharams inscribed on them appear in the palms of JnAna Sambandhar. He was overwhelmed by this kind gesture. He lifted the cymbals above his head and sang on keeping rhythm with them.

He sang Thiruk kadaik kAppu set to a beautiful tune. Now that temple got a new name as "thiruth thALam udaiyar kOvil' meaning "The temple of one who had golden cymbals".




 
Last edited:
bhagavathy bhaagavatam - skanda 9

9#48j. மனஸா தேவி (12)

சாபத்தால் மாண்டு போனான் பரீக்ஷித் மன்னன்;
சர்ப்பதால் மாண்டு போனான் பரீக்ஷித் மன்னன்;

சர்ப்பங்களின் மீது வஞ்சம் தீர்க்க எண்ணிச்
சர்ப்ப யாகம் செய்தான் மகன் ஜனமேஜயன்.

இழுத்து வீழ்த்தின சர்ப்பங்களை மந்திரங்கள்;
இழுத்து வீழ்த்தின யாக குண்ட அக்கினியில்!

இந்திரனிடம் சென்று சரண் புகுந்தான் தக்ஷகன்;
மந்திரம் இழுத்தது தக்ஷகனுடன் இந்திரனையும்!

முறையிட்டனர் தேவர்கள் மனஸா தேவியிடம்;
“குறை தீர்ப்பான் ஆஸ்திகன்” என்றாள் மனஸா.

இந்திரன் பணிந்து வேண்டினான் உயிர் பிச்சை;
வந்தார் ஆஸ்திகர் யாக சாலைக்கு விரைந்து.

முடித்தார் யாகத்தை; கொடுத்தார் வரங்களை;
மடியாமல் தப்பி விட்டன மிஞ்சிய சர்ப்பங்கள்!

பூஜித்தனர் தேவர்கள், நாகங்கள் மனஸாவை.
பூஜித்தனர் தேவர்கள், நாகங்கள் ஆஸ்திகரை.

உடுத்த வேண்டும் இரு தூய ஆடைகளை – தேவியை
இருத்த வேண்டும் அழகிய இரத்தின சிம்மாசனத்தில்

அபிஷேகம் செய்யவேண்டும்; அலங்கரிக்க வேண்டும்
அளிக்க வேண்டும் தூபம், தீபம், மலர்கள், சந்தனம்.

உபசாரங்களைச் செய்ய வேண்டும் மிக அன்போடு;
உச்சரிக்க வேண்டும் தேவி மந்திரத்தை பக்தியோடு.

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K . ராமன்

9#48j. ManasA Devi (12)


King Pareekshit died bitten by a serpent due to a curse laid by the son of rushi. King Janamejayan wanted to take revenge on the serpents and hence performed a grand Sarpa YAgam.

The mantras uttered in the yAgam brought down the serpents from wherever they were to the fiery pit of the homa kundam. Takshakan who had bitten King Pareekshit got terrified and took refuge in Indra in Heaven.

The Mantra uttered dragged him along with Indra to the fiery pit. DevAs prayed to ManasA Devi. She promised that her son Astika would save the serpents from total destruction.

Indra prayed to sage AastikA who hurried to the yAgasAlA. Aastika stopped the sarppa yAgA and saved the remaining serpents. The NAgAS, DevAs and Indra praised and worshipped ManasA Devi and Aastika.

A person wishing to worship ManasA Devi must become clean and wear two pieces of clothes. He must give the Devi a gem studded throne to sit on.

He must perform abhishekam and decorates her. He must offer incense, deepam, flowers and sandal paste. He must offer her all the sixteen honors. He must chant the mantra with devotion and real interest.

 
SEkkizhArin Periya PurANam

#28c. திரு ஞானசம்பந்தர் பெருமான் (3)

திருநனிப்பள்ளி, திருவலம்புரம், பல்லானீச்சரம் சென்றனர்
திருச்சாயக்காடு, திருவெண்காடு, திருமுல்லைவாயில் கூட.

வந்தார் சீர்காழி நீலகண்ட யாழ்ப்பாணர் தன் மனைவியுடன்;
கலந்தன அங்கே இசையும், யாழும்; தேனும், பாலும் போல.

காண விரும்பினார் ஞான சம்பந்தர் தில்லை நடராஜனை;
பாணருடன் சென்றார் தந்தை மகனைத் தோளில் சுமந்து.

வரவேற்றனர் தில்லை வாழ் அந்தணர்கள் பூரணகும்பத்துடன்;
வலம் வந்தார், வணங்கினார், பாடினார் இனிய பதிகங்களை.

இசைத்தனர் இனிய பாடல்களை இசைவாக யாழ்களில்;
இன்னிசைக்கு மயங்காதவர்கள் எவரேனும் உண்டோ ?

உச்சிநாதரைத் தரிசிக்க இச்சை கொண்டார் சம்பந்தர்
பச்சிளம் பாதங்கள் பதிய நடந்தார் ஞான சம்பந்தர்

எதிர்ப்பட்டது மாறன் பாடி என்னும் திருத்தலம் -அங்கே
எதிர்கொண்ட இரவைத் தங்கிக் கழித்தனர் அனைவரும்.

தோன்றினார் பெருமான் அவ்வூர் அடியார்களின் கனவில்;
ஊன்றினார் ஒரு கருத்தை அவ்வூர் அடியார்களிடம் அரன்.

"வைத்த அடி நோக வருகின்றான் ஞான சம்பந்தன் இங்கு.
வைத்துள்ளேன் ஒரு முத்துச்சிவிகை, குடை சின்னங்களை.

அழைத்து வாருங்கள் அவனைச் சிவிகையில் அமர்த்தி இங்கு!"
அடுத்துத் தோன்றினார் ஞானசம்பந்தரின் கனவில் பெருமான்.

"முத்துச் சிவிகை, குடை சின்னங்களை அனுப்புகிறேன் ;
பெற்றுக் கொள் அவற்றை மறுத்துப் பேசாமல்" என்றார்.

புலர்ந்தது பொழுது. போற்றினார் பதிகங்களால் பிரானை;
பலர் வந்தனர் ஒரு முத்துச் சிவிகையை சுமந்த வண்ணம்.

இன்னிசை முழங்கச் சிவிகை அடைந்தது நெல்வாயிலை;
இனிய பதிகங்களால் போற்றினார் அரத்துறை அரனாரை.

அடைந்தார் உரிய பருவத்தை முப்புரி நூல் அணிந்திட;
நடத்தினர் பெற்றோர் உபநயனத்தைச் சீரும் சிறப்புமாக .

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#28c. Thiru JnAna Sambandhar (3)

JnAna Sambandhar visited the Siva temples in many holy places like Thiru NanippaLLI, Thiruvalampuram, Pallaneechcharam, Thiruch chAyakkAdu, Thiru VeNgAdu, Thiru mullai vAyil.

Neelakanta YAzh pANar came to SeerkAzhi with his wife. Now the songs of Sambandhar and the sweet music of the YAzh of the pANar merged like honey and milk - enriching the taste of each other.

JnAna Sambandhar wished to visit Thillai Chidambaram to get a glimpse of NatarAjan. SivapAdha Hrudhayar carried his son on his shoulder and went toThillai with Neelakanta YAzh pANar.

The 3000 brahmins of Thillai welcomed them with poorNa kumbam. JnAna Sambandhar went round the deity and sang mesmerizing songs on the deity. PANar accompanied Sambandhar on his sweet yAzh.

Now JnAna Sambanthar wished visit the temple of Uchchi nAthar. Sambandhar walked by himself instead of being carried around by his doting father. The group spent the night a MAran pAdi.

Siva appeared in the dream of his devotees and said,"My young devotee JnAna Sambandhan is straining himself by this long walk. I have left for him a pearl palanquin, a pearl umbrella and an a pearl Chinnam. Bring him to my temple seated in the palanquin."

Siva appeared in the dream of Sambandhar and told the same thing. The day dawned and when JnAna sambandhar was praising lord Siva, some men came there carrying the pearly gifts God had sent for Sambandhar.

They reached NelvAil carrying JnAna Sambandhar in the palanquin and accompanied by the auspicious musical instruments. Sambandhar sang padhigams on the Siva at Araththurai.

Now JnAna Sambandhar had reached the right age for upanayanam. His pooNool ceremony was celebrated with great enthusiasm by his parents.









 
bhagavathy bhaagavatam - skanda 9

9#48k. மனஸா தேவி (13)

இந்திரனின் மனஸா தேவி ஸ்துதி

“துதிக்கின்றேன் பதிவிரதைகளில் சிறந்த உன்னை!
துதிக்கும் வல்லமையும் இல்லை என்னிடம் தேவீ!


விவரிக்கின்றது வேதம் உன் லக்ஷண, குணங்களை!
விவரிக்கும் வல்லமையும் இல்லை என்னிடம் தேவீ!


சுத்த சத்துவ ஸ்வரூபிணி நீயே ஆவாய்;
நீத்துள்ளாய் கோபத்தை, ஹிம்சையை.


யாசித்தார் ஜரத்காரு உன்னை உன் மேன்மைக்காக;
பூஜித்தனர் மாந்தர் உன்னைத் தாயின் ஸ்வரூபமாக.


தயா ரூபிணியாகிய நீ எனக்குச் சகோதரி;
தாயும் ஆவாய் எனக்கு நீ க்ஷாம ரூபமாக.


காத்தாய் என் புத்திர, களத்ராதியரை நீயே!
காத்தாய் பரிவோடு எங்கள் துயர் துடைத்து!


அன்னை நீயே சகல உலகங்களுக்கும் – எனவே
உன்னைப் பூஜிக்க வேண்டும் இந்தத் தினங்களில்.


ஆடி மாத சங்கிரமணத்தில் அல்லது
ஆடி மாத பஞ்சமியன்று அல்லது


மாத முடிவில் அல்லது தினம் தோறும்
தீது ஏதும் அணுகாமல் வாழ்வதற்கு!”


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K . ராமன்


9#48k. ManasA Devi Stuti by Indra (13)


“O Devi! You stand high among the chaste women. You are higher than the highest. You are the most supreme. How can I praise you? Vedas say that hymns describe the greatness of a God or Goddess. But I am unable to describe your superior qualities.


You are of the nature of Suddha Saththva – unmixed with the other guNas. You are free from anger and malice. I now worship You. You are an object of worship just as my mother Adhihti is.


You are my merciful sister. You are a mother full of forgiveness. It is through your help that my life, my wife and my sons have been saved.


Those who worship you with sincere devotion on the SankrAnthi day of the month of AashAda or on the NAga Panchami day, or on the SankrAnthi day of every month or on every day, live a life free from fears and dangers.”





 
SEkkizhArin periya purANam

#28d . திரு ஞானசம்பந்தர் பெருமான் (4)

சந்தித்தனர் திருநாவுக்கரசரும், ஞானசம்பந்தரும்;
சந்தித்தனர் இன்பம் பெருக இன்மொழிகள் பேசி.

அடைந்தார் தந்தையுடன் திருப்பாச்சிலாச்சிரமத்தை.
கிடந்தான் அங்கே கொல்லிமலை மழவனின் மகன்

விட்டுச் சென்றிருந்தான் துன்புறும் மகனை ஆலயத்தில்,
விட்டுச் சென்றுவிடும் வலிப்புநோய் இறையருளால் என்று.

பாடினார் சம்பந்தர் "துணி வளர் திங்கள்" என்ற பாசுரத்தை;
வேண்டினார் ஈசனிடம் மழவன் மகன் வலிப்பு நோய் நீங்கிட.

எழுந்து நின்றான் மழவன் மகன்; நீங்கிவிட்டது வலிப்பு நோய்;
தொழுதனர் சம்பந்தரைக் கொல்லிமலை மழவனும, மகனும்.

கொடும் பனி வாட்டியது கொங்கு நாடு மக்களை- பாடினார்
கொடும் பனி சேரா வண்ணம் "அவ்வினைக்கு இவ்வினை"

சென்றார் சம்பந்தர் பட்டீச்சுரத்தில் பெருமானை தரிசிக்க;
தந்தன பூதங்கள் முத்துப் பந்தலை வெய்யிலைத் தணிக்க;

வேண்டினார் தந்தையார் வேள்வி நடத்திடப் பொன், பொருளை,
ஆண்டவன் அருளினான் அள்ளக் குறையாத பொற்கிழி ஒன்றை.

பாடினார் திருவாடுதுறையில் பாணரின் யாழ் இசையுடன் கலந்து.
"பதிகங்கள் சிறப்பது பாணரின் யாழிசையால்" என்றனர் உறவினர்

"மாதர் மடப்பிடி" பதிகத்தை பாணரால் யாழில் மீட்ட முடியவில்லை;
மனம் வருந்தினார் பாணர்; தம் யாழை உடைக்கவும் முற்பட்டார்.

விட்டுவிடவில்லை சம்பந்தர் பாணர் யாழை உடைக்க -"யாழில்
எட்டும் வரையில் இசைப்பீர் முன்போலவே நீங்கள்!" என்றார்.

வழிபட்டார் திருமருகல் ஆலயத்தில் தங்கி இருந்த சம்பந்தர்;
வழக்கம் மாறியது அங்கு நிகழ்ந்த ஒரு சோகமான நிகழ்வால்.

தீண்டி விட்டது விஷநாகம் ஒரு வணிகனின் மகனை - அவனைத்
தீண்ட முடியாமல் தத்தளித்தாள் அவனை மணக்க இருந்த பெண்.

செவி மடுத்தார் அழுகுரலையும் புலம்பல்களையும் சம்பந்தர்
சிவபெருமான் அருளை விழைந்து பதிகம் பாடினார் உடனே.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
#28d. Thiru JnAna Sambandhar (4)

Thiru NAvukkarasar and JnAna Sambandhar met in SeerkhAzi and spoke with great respect and love for each other. Later Sambandhar reached Thiru pAchchi lAchchiramam. He saw that the son of the Mazhavan of the Kolli mzha nAdu had been left lying in the temple.

His father believed that God would free him from the attacks of epilepsy and left him there in the temple. Sambandhar took pity on him and sang the pAsuram "ThuNi vaLar ThingaL". He prayed to Siva that the boy must be freed from epilepsy.

The son of the Kolli Mazhavan got cured and he stood up. His father was overwhelmed to see this and both the father and the son fell at the feet of Sambandhar.

The people of KOngu NAdu were suffering from severe winter. Sambandhar sang a padhigam "Avvinaikku ivvinai" and reduced the severity of the winter.

When he went to Patteeswaram for a dharshan of the lord, the boothams (Siva GaNas) gave him a canopy made of pearls to beat the heat of the Sun.

SivapAdha Hrudhayar wished to perform a yAga. To meet the expenses involved he wished for some gold and money. Sambandhar sang a padhigam and Lord Siva gave him a purse of 1000 gold coins which would never exhausted.

In ThiruvAduthurai, Sambandhar sang his padhigams accompanied by the PANar on his YAzh. PANar's relatives claimed that the padhigams of Sambandhar became beautiful and sweet only because PANar played his YAzh.

Sambandhar sang the padhigam "MAdhar madappidi..." PANar was unable to play it on his YAzh. He got humiliated and wanted to smash his yAzh but Sambandhar would not let it happen. He told PANar, "Play on your yAzh whatever you can play as you used to do."

Sambandahr went to the temple at Thiru Marugal. He heard sound of a woman crying, sobbing an lamenting. A merchant's son and the girl who wanted to marry him were staying in the temple.

A venomous snake bit the man and he died. The bride to be was shedding copious tears and crying most pathetically. Sambandhar took pity on the woman and sang a padhigam seeking the grace of Lord Siva.



 

bhagavathy bhaagavatam - skanda 9

9#48l. மனஸா தேவி (14)

“தருவாய் புத்திர, பௌத்திரர்களை நீ!
தருவாய் பொன், பொருள், செல்வத்தை!


தருவாய் புகழ், ஞானம், நற்குணங்களை.
தருவாய் மேன்மை, தன்மை, நன்மைகளை.


இருப்பார் வறியவராக உன்னை நிந்திப்பவர்;
இருப்பார் அஞ்சியவராக உன்னை நிந்திப்பவர்.


படைத்தனர் உன்னை ஜரத்காரு முனிவருக்காக;
படைத்தனர் லக்ஷ்மி விஷ்ணுவுக்கு என்பது போல்.


மனஸா தேவியானாய் சக்தியின் அம்சத்தால்;
மனஸா தேவியானாய் எங்களைக் காப்பதற்கு.


திகழ்கின்றாய் தேவீ நீ ஒரு சித்த யோகினியாக;
திகழ்கின்றாய் அனைவரும் போற்றும் வண்ணம்.


உண்மை வடிவானவள் நீ என்று துதிப்பவர்கள்
உண்மையில் வந்தடைவர் உன்னிடமே தேவீ!”


போற்றினான் இந்திரன் தேவியை இத் துதிகளால்;
ஊற்றினான் சிறந்த பாலை தேவிக்கு அபிஷேகமாக.


உபதேசித்தாள் தேவி அபூர்வ ஞானத்தை – இதை
உச்சரிப்பவனுக்கு இல்லை இனிமேல் விஷ பயம்.


அமுதம் ஆக்கும் கொடிய நஞ்சையும் இந்த மந்திரம்
அளிக்கும் சித்தியை ஐந்து லக்ஷம் முறை ஜெபித்தால்.


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

9#48l. Manasa Devi (14)

"Those who worship you get good sons and grandsons. Their wealth and the grains in their granary increase. They themselves become more famous, more learned and more renowned. Anyone who does not worship you due to his ignorance, will remain poor for ever and always live in constant fear.


JaratkAru was born as an amsam of Lord NArAyaNan. Kasyapa has created you out of his own power of penance and tejas only to preserve us. You are his mental creation and hence your name is ManasA Devi.


You yourself have become a Siddha Yogini in this world by virtue of your mental power. You are widely known as ManasA Devi and worshipped by all. You are of the nature of Truth. He certainly reaches you – who always thinks of you as of the nature of truth.”


Indra praised his sister ManasA Devi and received from her the desired boons. Then Indra went back to his own abode.




 
SEkkizhArin Periya PurANam

#28e. திரு ஞானசம்பந்தர் பெருமான் (5)

"சடையாய் எனுமால் " என்ற பதிகம் பாடினார் சம்பந்தர்
உடனே உயிர்பெற்று எழுந்தான் இறந்த வணிகன் மகன்.

ஆசிகள் கூறி வாழ்த்தினர் இருவரையும் சம்பந்தர்;

நேசர் திரு சிறுத்தொண்ட நாயனாரைச் சந்தித்தார்

திருமருகல், திருச் சாட்டாங்குடி, திருப்புகலூர்
திருவாரூர் என்று தெடர்ந்தது தலயாத்திரை.

திருக்கடவூர், திருவம்பர், திருவீழிமிழலைக்குத்
திருநாவுக்கரசருடன் சென்றார் ஞானசம்பந்தர்.

அருளினார் பெருமான் சீர்காழி தோணியப்பரின்
அருட் திருக்கோலத்தைத் திருவீழிமிழலையிலேயே.

பொய்த்தது வானம்; பெருகியது வரட்சியும் பஞ்சமும்
மெய் வருந்தித் தவித்தனர் திருவீழிமிழலை மக்கள்

அளித்தார் சிவபெருமான் பொற்காசுகளைப் படிக்காசாக;
அளித்தனர் உணவு அடியவர்களுக்கு ஞானச் செல்வர்கள்.

பொழிந்தது மழை; அழிந்தது பஞ்சம்; ஞானச் செல்வர்
தொடர்ந்தனர் தம் சிவத் தல யாத்திரையை மீண்டும்.

அடைந்தனர் வேதாரண்யம் என்னும் திருமறைக்காட்டை ;
அடைத்திருந்தது திருவாயில் மறைகளால் காப்பிடப்பட்டு.

வழிபட்டு வந்தனர் மக்கள் அங்கு உறையும் பெருமானை
வாயில் இன்னொன்றை அமைத்து அது வழியே சென்று.

திறக்கச் செய்தார் கதவின் தாளை அப்பர் பதிகங்கள் பாடி;
அடைக்கச் செய்தார் கதவின் தாளை சம்பந்தர் பதிகம் பாடி.

கூன் பாண்டியன் நின்ற சீர் நெடுமாறன் ஆண்டு வந்தான்
தன் வெண்குடையின் கீழே பாண்டிய நாட்டை அவ்வமயம்.

தளர்ந்து கொண்டிருந்தன சைவ மதமும், கோட்பாடுகளும்;
வளர்ந்து கொண்டிருந்தது சமண மதமும், கோட்பாடுகளும்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#28e. Thiru JnAna Sambandhar (5)

Thiru JnAna Sambandhar was moved to pity by the sad incident. He sang a padhigam "ChadaiyAy enumAl". A miracle happened. The dead man was brought back to life by the grace of Lord Siva. Thiru JnAna Sambandhar blessed the man and the woman who got married then and there.

Thiru JnAna Sambandhar met Siruth thoNdar nAyanAr. He went on a pilgrimage to Thirumarugal, Thiruch chAttAngudi, Thirup pugaloor and ThiruvAroor. He continued the pilgrimage along with Appar to Thiruk kadavoor, Thiruvambar, Thiru Veezhi Mizhalai etc.

Siva gave the dharshan of ThONiyappar to Thiru JnAna Sambandhar in Thiru Veezhi Mizhalai itself. Then the rains failed. There was a terrible drought and famine. People suffered since they could not get water or food.

Siva gave a gold coin each to Thiru JnAna Sambandhar and Appar everyday. Food stuff were purchased with this gold coin and both the nAyanmArs managed to feed their devotees and disciples residing with them in Thiru Veezhimizhlai.

The rains returned and so also prosperity and plenty. Thiru JnAna Sambandhar and Appar continued their pilgrimage and reached VEdhAraNyam. The doors of the temple were locked by the Vedas which had worshiped Siva here. The local people used another entrance to go in and worship the god.

Appar sang several padhigams and made the locked doors open. Thiru JnAna Sambandhar sang a padhigam to close the doors. At that time 'Nindra Seer Nedu MAran' aka 'Koon PANdian' ruled over the PANdya kingdom. Saivism and its concepts were perishing while Jainism and its principles were flourishing.


 
bhagavathy bhaagavatam - skanda 9

9#49a. சுரபி (1)

ஒரு நாள் விளையாடிக் கொண்டிருந்தான் கிருஷ்ணன்
பிருந்தா வனத்தில், கோபியர் புடைசூழ, ராதையுடன்.

விரும்பினான் பால் அருந்துவதற்குக் கிருஷ்ணன்;
உருவாக்கினான் சுரபியைக் கன்று மனோரதத்துடன்.

இருந்தது சுரபியின் பால் அமுதம் போலச் சுவையாகப்
பிறப்பு, இறப்பு, மூப்பு, பிணிகளை அழிக்கும் திறனுடன்!

கறந்தான் பாலைப் புதிய பாத்திரத்தில் ஸ்ரீ தாமா;
கறந்த பாலைப் பருகினான் கிருஷ்ணன் ஆவலாக.

உடைந்தது அந்தப் பாத்திரம் சுக்கு நூறாக – பால்
விரிந்து பரந்தது குளமாக நூறு யோசனை தூரம்.

பாற்குளம் எனப்படும் க்ஷீத் சரஸ் இதுவே – இது
பார்ப்போர் கண்ணைப் பறிக்கும் ரத்தின மயமாக.

விளையாடும் இடமானது இது கோபியர்களுக்கு;
விளையாடும் இடமானது ராதா, கிருஷ்ணருக்கு!

பிறந்தனர் லக்ஷம் கோடி கோபர்கள், பசுக்கள்
சிறந்த காமதேனுவின் ரோமங்களில் இருந்து.

பூஜித்தனர் மக்கள் அனைவருமே காமதேனுவை!
பூஜைக்கு உகந்த நேரம் மாலை; பொருள் தீபம்!

மந்திரம் ஆகும் “ஓம் சுரப்யை நம:” என்பது;
மந்திரம் சித்திக்கும் ஒரு லக்ஷம் ஜெபித்தால்.

கற்பகத் தரு போன்ற அற்புத மந்திரம் – இது
கற்பனை செய்த பொருட்களை வழங்கிடும்!

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K . ராமன்

9#49a. Surabhi (1)

Devi Surabhi sprang in Goloka. She was the first of the cows. From Her all the other cows came into being. She is the Presiding Deity of the cows.

One day the Lord KrishNa was with RAdhA surrounded by the Gopis in Brindavan. Suddenly He wanted drink cow’s milk. He created Devi Surabhi and her calf Manoratham, from the left side of his own body.

The calf of Surabhi Manoratham is nothing but our wishes personified. SridAma – KrishnA’s friend – milked Surabhi in a new earthen jar. The milk was sweeter than even nectar and it had the power to prevent the cycle of birth and death!

KrishNa drank the milk eagerly. The milk pot dropped down, broke into one thousand pieces and created a big tank of milk! The tank was known as Ksheeth Saras and it was decorated with precious gems. It became the favorite playing spot of the gopis as well RAdhA and KrishNa.

From the hair follicles of Surabhi there appeared one lakh crore (One million) cows which can yield according to one’s desires. Every Gopa who lived in Goloka got one
KAmadhenu and every house had one. Their calves could not be counted! Slowly the whole universe was filled with cows. This is the origin of the Creation of Cows.

Surabhi was first worshiped by KrishNa. She is honored everywhere, ever since then. On the day next to Diwali night Surabhi was worshipped by KrishNa. “Om Surabhyai namah,” is the principal six-lettered mantra of Surabhi.

If anybody repeats this mantra one lakh (one hundred thousand) times, he will gain siddhi in this mantra. This is like Kalpa Vruksha the tree yielding all desires to the devotees
.
 
SEkkizhArin Periya PurANam

#28f . திரு ஞானசம்பந்தர் பெருமான் (6)

ஆதரவு பெற்றிருந்தனர் சமணக் குரவர்கள் பாண்டிய மன்னனிடம்;
பேதப்படுத்திக் குறை கூறினர் சைவமதத்தைச் சமணக் குரவர்கள்.

பாண்டியனின் அரசி மங்கையர்க்கரசி என்ற சோழ இளவரசி.
பாண்டியனின் முதன் மந்திரி மதிப்பிற்குரிய குலச்சிறையார்.

செவிமடுத்தனர் சம்பந்தர் திருமறைக் காட்டில் தங்கி இருப்பதை;
சென்றனர் அவர் தூதுவர் சம்பந்தரை மதுரைக்கு அழைத்து வர.

உரைத்தனர் தூதுவர் சம்பந்தரிடம் அரசியின் விண்ணப்பத்தை;
உடனே சம்மதித்தார் திருஞானசம்பந்தர் மதுரைக்கு வருவதற்கு.

அளிக்கவில்லை அப்பர் சம்மதம், சம்பந்தர் பாண்டியநாடு செல்ல.
விளக்கினார் அப்பர், சமணரின் தீய வழிமுறைகளை விவரித்து.

"நாளென்ன செய்யும் கோளென்ன செய்யும் சிவனடியார்களை?"
வினவினார் சம்பந்தர் தன் "வேயுறு தோளி பங்கன்" பதிகத்தில்.

அடைந்தார் சம்பந்தர் பாண்டிய நாட்டை நீண்ட தலயாத்திரை செய்து;
இடைப்பட்ட நெய்தல், மருதம், முல்லை, பாலை நிலங்களைக் கடந்து.

கேட்ட வண்ணம் இருந்தன மறையொலிகள் மதுரை மாநகரில்;
எட்டியது விண்ணை மறையவர் வளர்த்த வேள்விகளின் புகை.

எடுத்தனர் பூரண கும்பம்; அளித்தனர் ஓர் உயரிய வரவேற்பு;
எங்கு நோக்கினும் தூப தீபம், பாலிகை, தோரணம், கோலம்!

தோன்றின சமணர்களுக்கு அச்சம் தரும் தீய சகுனங்கள்;
தோன்றின சைவர்களுக்கு இன்பம் தரும் நல்ல சகுனங்கள்.

வணங்கி வரவேற்றார் சம்பந்தரை அமைச்சர் குலச் சிறையார்;
வணங்கினர் பின்னர் ஆலவாய் அண்ணலின் கோவில் சென்று.

வந்தித்துப் பாடினார் இனிய பதிகங்கள் பெருமானைப் புகழ்ந்து;
சந்தித்து வணங்கினார் தலைச் சங்கப் புலவர்களை, அரசியாரை.

ஏற்பாடு செய்திருந்தனர் ஒரு மடம் சம்பந்தர் அடியவருடன் தங்கிட;
எழுந்தது வேதமுழக்கமும், பதிகங்கள் பாடும் இன்னிசையும் அங்கு!

கலங்கினர் இவற்றைச் செவிமடுத்த சமணக் குரவர்கள் - உடனே
கலக்கினர் பாண்டிய மன்னன் மனத்தைச் சம்பந்தருக்கு எதிராக.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#28f. Thiru JnAna Sambandhar (6)

The ChOzha Princess Mangaiyakkarasi was the Queen of the PAndya king. Kulach Chirai nAyanAr was his chief minister. The Jain gurus had managed to win the blind support of the king. They never missed an opportunity to belittle the Saivism and its principles.

The Queen and the Chief minister came to know about GnAna Sambandhar's stay at VEdhAraNyam aka Thiru Marai KAdu. They sent a messenger to Sambandhar requesting him to visit Madhurai to revive Saivism. The messenger conveyed the message sent by the Queen and GnAna Sambandhar promptly agreed to go over to Madurai. But Appar would not let him go!

Appar had suffered a lot in the hands of the cunning Jain gurus and so he forbade Sambandhar from going to Madhurai. But Sambandhar firmly believed that Lord Siva would protect his sincere devotees and sang the KOLaRu padhigam "VEyuRu thOLI pangan"

Sambandhar reached Madhurai after crossing over the various terrains lying in between VEdhAraNyam and Madhurai. The Queen and the chief minister had made elaborate arrangements to welcome Sambandhar. Vedic mantras could be heard non stop. The smoke rising from the Homa kuNdams reached the sky.

Sambandhar was given a befitting welcome with poorNa kumbham. The whole city was decorated with ThOraNas, pAligai, floral designs drawn on the floor, lit lamps and burning incense. The Jain gurus saw evil omens of their bad time approaching. The Saivaites saw good omens promising them a good time ahead.

The chief minister Kulach Chirai nAyanAr welcomed Sambandhar. They paid a visit to the temple where Sambandhar sang padhigam praising the deity. Later Sambandhar met the Poets of the Thamizh Thalai Sangam. He also met the Queen and was warmly welcomed by her.

A mutt was arranged for Sambandhar to stay with his disciples. Vedic mantras and singing of sweet padhigams filled the mutt. The Jain gurus felt tormented by these. They turned to the PANdya king and managed to turn him against Sambandhar by their cunning brain washing.
 

Latest ads

Back
Top