• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

A poem a day to keep all agonies away!

Bhagavathy bhaagavatam - skanda 11

11#18a. தேவி பூஜையின் பலன்

இருந்தது ஒரு சக்ரவாகப் பறவை பொதிகையில்;
பறந்து திரிந்தது பறவை பல நாடுகளின் வழியே.

அடைந்தது காசியைப் பூர்வ ஜன்ம புண்ணியத்தால்;
அடைந்தது பறவை அன்னபூரணியின் ஸ்தானத்தை.

பறந்தது தினந்தோறும் ஆலயத்தைப் பிரதட்சிணமாக;
இறந்த பின் பறவை அடைந்தது நேராகச் சுவர்க்கத்தை.

சிறந்த போகம் அனுபவித்தது இரண்டு கற்ப காலம்;
பிறந்தது க்ஷத்திரிய குலத்தில் மன்னன் மகனாக.

பெற்றான் பிரகத்ரதன் என்ற பெயரை அவன்;
பெற்றான் பேரும் புகழும் சத்திய சீலனாக.

பெற்றான் பெரும் புகழை ஜிதேந்த்ரியனாக;
பெற்றான் பெரும் புகழைத் திரிகால ஞானியாக.

காணச் சென்றனர் முனிவர்கள் அவனை,
“ஞானம் கிடைத்தது எங்ஙனம்?” என்றனர்.

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

11#18. The merits of Devi worship


There lived a ChakravAka bird in the Podhigai hill. It flew across many countries and reached the City of Kasi by its good fortune. It reached the temple of Devi AnnapooraNi.

Everyday it would fly around the Devi’s temple in clockwise direction making pradakshiNams ( clockwise circumambulation). When it died, it went straight to the heaven. It enjoyed all the pleasures of the heaven for two eons.

Then it was born as the son of a king and became a prince. The prince was named as Brihadratha. He became very famous. He was always truthful. He had conquered all his sense organs and he knew the past and the future in addition to the present.

The sages went to him and paid their respect. They asked him wonder struck,”Oh King! Please tell us how you managed to gain so much knowledge and wisdom?”

 
ஆழ்வார்கள்

03. பேயாழ்வார்

வழங்கப்படுகின்றார் இவர் மூன்றாவது ஆழ்வாராக;
வாழ்ந்தார் திரு மயிலையில் ஏழாம் நூற்றாண்டில்.


அவதரித்தார் இவர் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தில்;
அவதரித்தார் இவர் சிவந்த அல்லி மலர் ஒன்றினில்.


தலம் ஆனது திருமயிலையில் ஒரு கோவில் குளம்;
ஆலயம் ஆனது ஆதி கேசவப் பெருமாளின் ஆலயம்.


ஆவார் இவர் திருமாலின் வாள் நந்தகத்தின் அம்சம்;
அளித்தார் இவர் மூன்றாம் திருவந்தாதியை உலகுக்கு.


சிறந்து விளங்கினார் கல்வியில், கேள்வியில் ஆழ்வார்;
பிறக்கும் கண்ணீர் அருவி பொங்கிய பக்தி பெருக்கால்.


அழுவார், தொழுவார், விழுவார், பாடுவார், ஆடுவார்;
அலைந்தார் பக்தியால் பித்தனாகவும், பேயனாகவும்.


சார்வு நமக்கென்றும் சக்கரத்தான், தண்டுழாய்த்
தார்வாழ் வரைமார்பன் தான்முயங்கும், – காரார்ந்த
வானமரு மின்னிமைக்கும் வண்டா மரைநெடுங்கண்,
தேனமரும் பூமேல் திரு.


“ஸ்ரீ பேயாழ்வாரின் திருவடிகளே சரணம்”


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


03. PEyAzhwAr


PEyAzhwAr is the third among the twelve AzhwArs. He was born on the day next to the birth of Boothathu AzhwAr on a red lily in Thiru Maliyai in a pond . He is he amsam of Nandhakam - the sword of Lord Vishnu.


The one hundred verses sung by him form the Third thiru AndhAdhi. He was steeped in his devotion to Vishnu. He would shed copious tears, fall down, sing and dance in ecstasy due to his bhakthi. He excelled in knowledge and was a staunch ascetic.




 
bhagavathy bhaagavatam - skanda 11

11#18b. பிரகத்ரதன்

“இருந்தேன் ஒரு சிறு பறவையாக முன்னர்;
அடைந்தேன் அன்னபூரணியின் ஆலயத்தை.

செய்தேன் ஆலயப் பிரதட்சிணம் தினமும்;
சென்றடைந்தேன் பின்னர் சுவர்க்க லோகம்!

இருந்தேன் இரண்டு கற்ப காலம் அங்கே;
பிறந்தேன் மன்னர் குலத்தில் ஒரு மகனாக.

அன்னையின் அருள் நமக்கு இருக்குமானால்
இன்னமும் வேண்டியது ஏதாகிலும் உண்டோ?

நித்தியம் அல்ல சிவ பெருமானின் உபாசனை;
நித்தியம் அல்ல விஷ்ணு பிரானின் உபாசனை;

நித்தியமானது தேவி உபாசனை ஒன்றே;
சத்தியமானது தேவி உபாசனை ஒன்றே!

யாரால் கூற முடியும் தேவியின் பெருமையை ?
யாரால் அறிய முடியும் தேவியின் பெருமையை?

உண்டாகும் தேவியிடம் பக்தி ஒருவனுக்கு
உண்டானால் ஜன்ம சாபல்யம் என்ற நற்பேறு!”

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

11#18b. Brihadratha

The King Brihadratha told the Sages the story of his life. “In my previous birth I was a chakravAka – a very lowly bird. Once I used to fly everyday around the temple of Devi AnnapoorNi of Kasi in the clockwise direction.

And, as the result of that, I lived in the Heavens for a period of two Kalpas- after my life on earth ended. Now I have taken birth as a prince. I have the knowledge of the past, the present and the future.

Who can ascertain the amount of merits accumulated by remembering the lotus feet of the Mother of the World? I shed tears of joy whenever I think of her glories. Those who do not worship Devi are the Great Sinners and their lives will be miserable.

Neither the worship of Siva nor of VishNu is eternal. Only Devi’s worship is eternal. This is stated clearly in the Vedas.

Everyone ought to serve the lotus feet of the Devi with devotion. No other act is more glorious or meritorious in this world than serving the feet Devi.

The births of those are really fruitful who possess faith in the worship of Devi. Those who have no such faith will never earn the merits by performing Devi’s worship.”

The Sages went back to their abodes satisfied with the reply of Brihadratha.

 
ஆழ்வார்கள்

04a. திருமழிசை ஆழ்வார் (1)

அவதரித்தார் இவர் சுதர்சனச் சக்கரத்தின் அம்சமாக;
அவதரித்தார் இவர் திருமழிசையில் தை மாதம் மகத்தில்.


ஆழ்வாரின் தந்தையார் ஆவார் பார்க்கவ முனிவர்;
ஆழ்வாரின் தாயார் ஆவார் கனகாங்கி அம்மையார்.


யாகம் புரிந்து வந்தார் பார்க்கவர் திருமழிசையில் – நீண்டது
யுகம் போல் மனைவியின் கர்ப்பம் பன்னிரண்டு ஆண்டுகள்!


பெற்றெடுத்தாள் கைகள் கால்கள் இல்லாத ஒரு பிண்டத்தை;
பெற்ற பிண்டத்தை விடுத்தாள் ஒரு பிரம்புத் தூற்றின் கீழே.


வளர்ந்தன பின்பு எல்லா உடல் உறுப்புக்களும் தாமாகவே;
வளர்ந்த பின்பு மாறியது பிண்டம் அழகிய ஆண் மகவாக.


கண்டான் மகவைப் பிரம்புத் தொழிலாளி திருவாளன்;
தந்தான் மனைவி பங்கயச் செல்வியிடம் அந்த மகவை.


பால் அருந்த மறுத்து விட்டது அந்த ஆண் மகவு – எனினும்
பால் இன்றி வாடிவிடவில்லை அதன் உடல் சிறிதேனும்.


அளித்தார் ஒரு வேளாளர் காய்ச்சிய பாலை மகவுக்கு;
அளித்தது மகவு அதையே அவருக்கு ஒரு பிரசாதமாக.


நீங்கி விட்டன வேளாளரின் நரையும், திரையும், மூப்பும்!
பொங்கியது இளமை; பிறந்தது ஆண் மகவு அவருக்கும்!


ஆயிற்று அவன் அழகிய பெயர் கணிக்கண்ணன் என்று:
ஆகிவிட்டான் கணிக்கண்ணன் ஆழ்வாரின் முதல் சீடனாக.


ஒதுக்கி வைத்தனர் கணிக்கண்ணனை அந்த ஊரை விட்டு;
ஒதுங்கிச் சென்றார் ஆழ்வாரும் தாமாகவே அந்த ஊரை விட்டு.


சென்று விட்டார் நாராயணனும் அந்த ஊரை விட்டு;
சென்று விட்டாள் இலக்குமி தேவியும் அந்த ஊரை விட்டு;


வளம் அனைத்தும் இழந்து நின்றது அன்று அந்த நாடு.
வளர்ந்தன வறுமையும், இருளும் மட்டும் நன்கு அங்கு!


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


04a. Thirumazhisai AzhwAr (1)


Thirumazhisai AzhwAr was born in a place called Thirumazhisai in the month of ‘Thai’ under the star ‘Magham’. He is considered to be as an amsam of Lord Vishnu’s divine discus named Sudharsana chakkaram.


His father was Sage BhArgava and mother was KanakAngi. Sage BhArgava was performing a yAga in Thirumazhisai. His wife was pregnant. Her pregnancy lasted for twelve long years.


Later she delivered a baby without any hands or legs. She discarded the baby under a cluster of cane trees and went away. The baby grew all the missing limbs later and became a fully formed male child.


ThiruvALan – a man who used to make cane articles – saw this child and took it home to his wife. The child would not drink any milk but it did not seem to become weaker because of not feeding.


One day an old farmer visited the child. He took pity on the child and offered it some milk. The child gave it back to him as a prasadam.

The milk was drunk by the old man and changed him into an energetic youngman. Later he was blessed with a robust son who was named as KaNik KaNNan. He became the first disciple of Thirumazhisai AzhwAr.


Once the king banished KaNik KaNNan from his country. AzhwAr also decided to go away with his disciple on his own. Lord NArAyaNa also decided to go away with the AzhwAr. So did Lakshmi Devi.

So the country lost all its wealth and prosperity in no time. Only poverty and darkness kept growing more and more there



 
bhagavathy bhaagavatam - skanda 11

11#19. காயத்ரீ மஹிமை

பசு, சிசு, மாதா, பிதா ஹத்தி தோஷங்கள்;
குரு பத்தினியைக் கூடிப் புணர்ந்த பாவம்;

பிராமணனின் பூமியைத் திருடிய பாவம்;
பிராமணன் மதுவினை அருந்திய பாவம்;

மூன்று கரணங்களால் செய்த பாவங்கள்;
மூன்று பிறவிகளில் செய்த பாவங்கள்;

ஆயிரம் உரு காயத்திரியால் அழிந்து விடும் !
தூய்மை தருவதில் இதற்கு இணை உண்டோ?

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

11#19. The greatness of GAyatree


If the GAyatree is repeated one thousand times, the sins resulting from the killing a cow, one’s own father, one’s own mother, from causing abortions, enjoying with the wife of one’s own Guru, stealing the property or land of Brahmin and drinking wine all get completely destroyed.

Also the sins acquired in three births through one’s thoughts or words or deeds get destroyed. He who works hard in studying the Vedas without knowing the GAyatree is just wasting his valuable time.

The study of the four Vedas is only secondary to the reciting of the GAyatree which is primary for a true Brahmin.

 
ஆழ்வார்கள்

4b. திருமழிசை ஆழ்வார் (2)

ஆராய்ந்தார் ஆழ்வார் அன்னிய மதக் கொள்கைகளை;
அறிந்து கொண்டார் திருமாலே தன் தெய்வம் என்று.

மாயங்கள் பல புரிந்ததாக வரலாறு உள்ளது - ஒருமுறை
மாற்றி விட்டார் தொண்டுக் கிழவியை இளங்குமரியாக.

அரசன் அழைத்தான் தன்னையும் இளமையாக்கிவிட;
அரசன் அழைப்பை ஏற்றுக் கொள்ளவில்லை ஆழ்வார்.

நாடு கடத்தினான் கோபம் கொண்ட அரசன் அவர் சீடனை;
நாட்டை விட்டு அவர் தான் மட்டும் போகவில்லை சீடனுடன்.

கூறினார் எம்பெருமானிடம்,"எழுந்திரு போகலாம்" என்று;
சுருட்டினார் தன் பாம்பணையை; சென்றார் பெருமானும்.

காலி செய்து வெளியேறி விட்டன பிற தேவதைகளும்;
"காலில் விழுந்தேனும் திரும்ப அழைத்து வாரும் அவரை!"

அறிவுறுத்தினர் ஆன்றோர்கள் அறிவு இழந்த அரசனுக்கு.
அழைக்க வந்தனர் ஆழ்வாரை மீண்டும் நாட்டுக்கு.

"திரும்பச் செல்லலாம் நாம்" என்று ஆழ்வார் கூறியதும்
திரும்ப வந்து சயனித்தாராம் திருமால் மீண்டும் அங்கே.

அழைத்தார் ஆழ்வார் அண்ணலையும், அன்னையையும்,
அழைத்ததும் வந்தனர் அண்ணலும், அன்னையும் உடனே.

சொன்ன வண்ணம் செய்த பெருமானின் திருநாமம்
பின்னர் மாறிவிட்டது 'யதோக்தகாரி' பெருமான் என்று

இடம் வலமாகப் பள்ளி கொள்ளும் எம்பெருமான் இங்கே
வலம் இடமாகப் பள்ளி கொண்டுள்ளது இதனால் தானோ?

பாடினார் ஆழ்வார் 120 பாடல்கள் கொண்ட திருச்சந்த விருத்தம்.
பாடினார் ஆழ்வார் 96 பாடல்கள் கொண்ட நான்முகன் திருவந்தாதி

பல சிறப்புப் பெயர்கள் பெற்றவர்; அவற்றில் சில 'பக்தி சாரார்'
பார்க்கவர், மகிசாராபுரீஸ்வரர் மற்றும் மழிசை பிரான் என்பவை

" நடந்தகால்கள் நொந்தவோ நடுங்குஞால மேனமாய்
இடந்தமெய்கு லுங்கவோவி லங்குமால்வ ரைச்சுரம்
கடந்தகால்ப ரந்தகாவி ரிக்கரைக்கு டந்தையுள்
கிடந்தவாறெ ழுந்திருந்து பேசுவாழி கேசனே".


"அன்பாவாய் ஆரமுதம் ஆவாய், அடியேனுக்
கின்பாவாய் எல்லாமும் நீயாவாய், - பொன்பாவை
கேள்வா கிளரொளியென கேசவனே, கேடின்றி
ஆள்வாய்க் கடியேன்நான் ஆள்."

"திருமழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம்"

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

4b. Thirumazhisai AzhwAr (2)

Thirumazhisai AzhwAr studied the concepts of the other religions and decided that Lord Vishnu was his supreme God. There are instances of Thirumazhisai AzhwAr performing miracles. Once he transformed an old woman into a young and beautiful maiden.

The king of that country wanted to get transformed to a young man as well. He invited Thirumazhisai AzhwAr to his palace through KaNik KaNNan. But AzhwAr did not accept the king's invitation. The king banished KaNik KaNNan in a fit of rage.

Thirumazhisai AzhwAr decided to leave the country along with his disciple. But apparently he wanted some divine companions as well. He told Lord Vishnu residing in the temple to go with him. Lord Vishnu rolled his snake-bed and left with AzhwAr promptly.

Later on all the other deities also decided to leave that country as well. The country got steeped in utter poverty and darkness.The wise men of the country advised the king to go and bring back the AzhwAr by begging for his pardon.

When AzhwAr pardoned the king and decided to return to the country so did Lord Vishnu and all the devatas. Vishnu went back to his snake bed but the direction of his reclining pose differs from all the other temples - since he quit the place and returned again later.

Thirumazhisai AzhwAr composed Thiruch chandha vruththam consisting of 120 verses and NAnmukhan ThiruvandhAdi consisting of 96 verses. Some of the titles given to this AzhwAr are Bhakthi sArAr, BhArgavar, MahisArA pureeswarar and Mazhisai pirAn.




 
ஆழ்வார்கள்

05a. நம்மாழ்வார் (1)

அவதரித்தார் திருக்குருகூர் திருத்தலத்தில்
வைகாசி விசாகப் பௌர்ணமி தினத்தில்.


தந்தையார் ஆவார் வேளாளர் காரி என்பவர்;
தாயார் ஆவார் உடைய நங்கையார் என்பவர்;


ஆழ்வாரின் இயற்பெயர் ஆகும் மாறன் என்பது;
அமைந்தது இது அவரது பாட்டனாரின் பெயராக;


சடம் என்பது குழந்தையின் பூர்வ ஜென்மத்து வாயு
சடம் சூழ்ந்ததும் பிறந்த குழந்தை அழத் தொடங்கும்.


அருந்தவில்லை தாய்ப்பாலை ஆழ்வார் பல நாட்கள்;
ஒரு சொல்லும் வரவில்லை ஆழ்வார் வாயிலிருந்து.


அழவே இல்லை நம்மாழ்வார் வந்து பிறந்தவுடன்!
ஆழ்வார் ‘சடகோபன்’ ஆனார் – சடத்தை முறிந்தால்!


மனம் நொந்த பெற்றோர் துறந்தனர் தம் மகனை
ஆதிப்பிரான் ஆலயத்தில் ஒரு புளிய மரத்தடியில்.


வளர்ந்தான் சிறுவன் உணவு உண்ணாமலேயே
பெருமான் அருளால் பதினாறு நீண்ட ஆண்டுகள்.


விலகியே இருந்தான் சடகோபன் என்னும் இச்சிறுவன்;
விளங்கினான் விஷ்வக்சேனரின் அம்சமாகச் சிறுவன்;


“நம்மாழ்வார்” என நட்புடன் அழைத்தவன் யார் அறிவீரா?
நாராயணனே அளித்தான் ஆழ்வாருக்கு இந்தப் பெயரை.


ஆனார் ஆழ்வார் ‘பரமனை வசப்படுத்திய பராங்குசன்’
ஆனது ஆழ்வாரின் பக்தியே அவரது கூரிய அங்குசம்.


ஆழ்வார்களை ஒரு சரிரம் என்று எண்ணிக் கொண்டால்
ஆன்மா ஆவார் அந்தச் சரீரத்துக்கு நம்மாழ்வார் மட்டுமே.


வாழ்ந்தார் இவர் முப்பத்திரண்டு ஆண்டுகள் உலகில்;
வாழ்ந்தார் அதில் பதினாறு ஆண்டுகள் மௌனியாக.


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


05a. NammaAzhvAr (1)


NammaAzhvAr was born in Thiruk kurugoor on a Vaikasi VisAkam day which was also a full moon (pournami) day. His father was a cultivator named KAri and his mother was Udaiya nangaiyAr. He was named as MARan after his grandfather.


Whenever a baby is born it would remember the poorva janma (previous birth) due to “shatam” and start crying immediately. But this child did not cry at all. So he got the name as Shatagoban. This child would neither suckle milk nor make any sound at all.


The parents grew weary of such a child which would neither feed nor communicate. So left him under a tamarind tree near the local temple. The boy did not eat anything for sixteen long years. But he grew up well and he remained very silent, always immersed in himself. He was considered to be the amsam of VishvaksEnar.


The tile “NammAzhvAr” was given to him by Lord Vishnu Himself. He got the name ‘ParAnkusan’ since he won over God’s love with the ankusam of his deep devotion. If the twelve AzhwArs are imagined to form one physical body then the soul of that body would invariably be NammAzhvAr.

NammaAzhvAr lived for only thirty two years on the earth. Of these the first sixteen years were spent in seclusion and samadhi.
 
bhagavathy bhaagavatam - skanda 11


11#22a. காயத்ரீ ஜபம் (1)

நாளொன்றுக்கு ஆயிரம் உரு என்ற கணக்கில்
நிஷ்காம்யமாக ஜபம் செய்திட வேண்டும்.

ஆயுள் விருத்தியாகும் ஒரு மாதம் ஜபித்தால்;
ஆரோக்கியம் வளரும் இரண்டு மாதம் ஜபித்தால்.

விருத்தியாகும் சம்பத்து மூன்று மாதம் ஜபித்தால்
விருத்தியாகும் புகழ் நான்கு மாதங்கள் ஜபித்தால்.

விருத்தியாகும் வித்தை ஐந்து மாதம் ஜபித்தால்
விருத்தியாகும் மாதங்கள் இன்னும் அதிகரித்தால்.

இஷ்ட சித்தி உண்டாகும் ஒற்றைக் காலில் நின்று
இரு கைகளை உயர்த்தி முன்னூறு உரு ஜபித்தால்.

இஷ்டப்பட்டவை எல்லாம் கிடைக்கும் இதுபோல
இயல்பாக ஆயிரத்தெட்டு முறைகள் ஜபித்தால்.

மனம் ஒருமித்து ஜபித்தால் கிடைக்கும்
மோக்ஷப் பிராப்தி ஒரு மாத காலத்தில்.

எல்லாமே சித்திக்கும் இது போலத் தொடர்ந்து
எல்லோரும் மூன்று லக்ஷம் உரு ஜபித்தால்.

நீரில் மூழ்கி நூறு உரு ஜபித்தால் கைக்கூடும்
விரும்பும் மனோ ரதங்கள் ஒரே மாதத்தில்.

மூன்று லக்ஷம் உரு ஜபித்தால் சித்திக்கும்
மனம் விரும்பியவைகள் அனைத்துமே.

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

11#22a. GAyathree Japam (1)

Gayathree mantra must be chanted one thousand times per day. Chanting for one month makes one life span longer. Chanting for two months will improve one’s health.

Chanting for three months bestows wealth on the person. Chanting for four months will make him very famous. Chanting for five months will make him very skillful. As the number of months of chanting increases the benefits also increase.

If a person stands on one leg, lifts up both his hands and does this japam three hundred times, he will get his ishta siddhi. Doing japam one thousand and eight times will make him get all his desires fulfilled.

Concentrated japam for one month will make him eligible to obtain moksham or liberation. Doing the japam for three lakh times will make him get everything he can think of.

Standing in water and doing japam one hundred times a day for one month will make his wishes come true. Doing japam three lakh times in this manner will bestow on him all the greatness.


 
ஆழ்வார்கள்

05b. நம்மாழ்வார் (2)

மகான் மதுரகவி கண்டார் ஒரு பெரிய ஒளி வட்டத்தை;
மகான் பயணித்தார் ஒளியின் காரணத்தை அறிந்திட.


சென்று சேர்ந்தார் நம்மாழ்வார் இருந்த புளிய மரத்தை;
ஒன்றும் பேசாத சிறுவனிடம் பேசினார் மதுரகவியார்;


வாய் பேசாத சடகோபனிடம் வினவினார் மதுரகவி
வாய் பேசுபவர்களும் அறியாத ஓர் அரிய வினாவை.


“செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால்
எத்தைத் தின்று எங்கே கிடைக்கும்?” என்றார்


சத்தான விடை தந்தான் சடகோபன் வாய் திறந்து,
“அத்தைத் தின்று அங்கேயே கிடக்கும்!” என்று.


ஆச்சாரியான் ஆனான் சடகோபன் ஆழ்வான்
அவனைத் தேடிவந்த மதுரகவி ஆழ்வாருக்கு.


நம்மாழ்வார் படைத்தார் 1296 பாசுரங்களை;
நான்கு தமிழ் மறைகள் ஆயின அப்பாசுரங்கள்.


திருவிருத்தம், திரு ஆசிரியம் என்பவை இரண்டு;
திருவாய்மொழி, பெரிய திருவந்தாதி என இரண்டு.


நான்கு படைப்புகளும் விளங்கிகின்றன – உயரிய
நான்கு வேதங்களின் அரியத் தமிழ்ச் சாரமாகவே.


“வேதம் செய்த தமிழ் மாறன்” என்னும் பட்டத்தை
ஆதரவுடன் அளித்தார் ஸ்ரீ ராமானுஜ ஆச்சாரியார்.


வழக்கழிந்து ஒழிந்து போயின பாசுரங்கள் – அவற்றைத்
தழைப்பிக்க முயற்சி செய்தவர் திரு நாதமுனிகள் ஆவார்.


தொடர்பு கொண்டார் யோகநிலையில் நம்மாழ்வாரை;
தொடரச் செய்தார் பாசுரங்களுக்குப் புத்துயிர் தந்து.


நான்காயிரம் பாசுரங்கள் நாதமுனிக்குக் கிடைப்பதற்கு
நம்மாழ்வாரே செய்தார் பேருதவி என்பதில் ஐயமில்லை.


ஆழ்வார்களை முதன்மையானவர் இவரே, இது உறுதி!
ஆழ்வாரின் திருவாய்மொழியே ‘திராவிட வேதம்’ ஆனது!


பிற பட்டப் பெயர்கள் சடகோபன், சடாரி, பராங்குசன்,
மாறன், வகுளாபரணன், குருகையார் கோன் என்பன

“உயர்வற வுயர்நலம் முடையவன் யவனவன்
மயர்வற மதிநலம் அருளினன் யவனவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி யவனவன்
துயரறு சுடரடி தொழுதெழென் மனனே”.


“கண்ணன் கழல் இணை நண்ணும் மனம் உடையீர்
எண்ணும் திருநாமம் திண்ணம் நாரணமே”


நம்மாழ்வார் திருவடிகளே சரணம்


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


05b. NammaAzhvAr (2)


MahAn Madhurakavi AzhwAr saw a huge glow of light in the sky and went towards it to investigate the cause of that glow. He reached Thiruk kurugoor and the tamarind tree where the sixteen year old Satagopan was sitting – oblivious to the external world.


Madhurakai AzhwAr put a question to the young boy which was in the form of a riddle. The boy spoke for the first time in his life and answered the riddle correctly.


The question asked by Madhurakavi was,” If the imperishable soul gets into a perishable body what would it enjoy and where would it be?’ The answer given by Satagopan was,” It would enjoy what was allotted to that body and live in it”


Madhurakavi AzhwAr recognized the greatness of this young boy and became his foremost disciple. NammazhwAr composed four great works named Thiru Viruttham, Thiru Asiriyam, ThiruvAi mozhi and Periya ThiruvanthAthi. The total number of verses sung by NammAzhwAr form 1296 out of the 4000 verses found in NAlAyiram dhivya prabandham.


His compositions give the essence of the four vedas in Tamil. RamAnuja AchArya praised him as “Vedham seitha Thamizh mAran” meaning ‘The MARan who rendered the Vedas in Tamil’.


At one point of time all the pasurams went out of circulation and were forgotten. Nadhamuni took great pains to save them and revive them. He communicated with NammazhwAr through his power of yoga and could save and revive the 4000 verses with the help of NammAzhwAr.


NammAzhwAr is the foremost among the twelve azhwArs. His works are referred to as DrAvida VEdam. The other popular names attributed to him are Chadakoban, ChadAri, ParAnkusan, MARan, VaguLAbharaNan and Kurugaiyar kOn.



 
bhagavathy bhaagavatm - skanda 11

11#22b. காயத்ரீ ஜபம் (2)

உண்ண வேண்டும் உப்பில்லாமல் உணவு;
உண்ண வேண்டும் இரவு மட்டுமே உணவு;

ஒற்றைக் காலில் நீரில் நின்று கைகளை உயர்த்தி
ஒரு வருஷம் ஜபிக்கின்றவன் ரிஷியாகி விடுவான்.

இரண்டு வருஷங்கள் ஜபித்தால் வித்தைக் கைக் கூடும்;
மூன்று வருஷங்கள் ஜபித்தால் முக்கால உணர்வு வரும்.

நான்கு வருஷங்கள் ஜபித்தால் மஹாதேவன் தரிசனம்;
ஐந்து வருஷங்கள் ஜபித்தால் அணிமா சக்திகள் வரும்.

ஆறு வருஷங்கள் ஜபித்தால் விரும்பிய உரு எடுக்கலாம்;
ஏழு வருஷங்கள் ஜபித்தால் தேவனின் வடிவம் கிடைக்கும்.

ஒன்பது வருஷங்கள் ஜபித்தால் மனுத்வம் கிட்டும்;
பத்து வருஷங்கள் ஜபித்தால் இந்திரத்வம் கிட்டும்.

பதினோரு வருஷங்கள் ஜபித்தால் பிரஜாபதித்வம் கிட்டும்;
பன்னிரண்டு வருஷங்கள் ஜபித்தால் பிரம்மத்வம் கிட்டும்.

உணவு ஆகலாம் கிழங்குகள், சருகுகள், பால் மற்றும்
கனிகள், சோமபானம், பிக்ஷா அன்னம் போன்றவை.

உரு மூவாயிரம் தினம் ஜபித்தால் ஒழிந்து போகும் இவை:
குருபத்னி சம்போக பாவம், பொன் திருட்டு, சுராபானம்!

காட்டில் குடிசையில் இருந்து ஜபித்தால்
விட்டு விலகும் பிரம்மஹத்தி ஒரே மாதத்தில்!

பாவங்களை ஒழிக்கலாம் ஆயிரம் உரு தினமும்
நீரில் மூழ்கி பன்னிரண்டு ஆண்டுகள் ஜபித்து.

ஒரு மாத காலம் மௌனத்தோடும் நியமத்தோடும்
பிராணாயாமத்துடன் மூவாயிரம் உரு ஜெயித்தால்

அகன்று விடும் தீவினைகள் – பிரம்மஹத்தி
அகலும் ஆயிரம் முறை பிராணாயாமத்தால்.

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

தேவி பகவதி பாகவதம் பதினொன்றாம் ஸ்கந்தம் முற்றுப் பெற்றது


11#22b. GAyatree japam (2)


A person must eat only once a day at night – food without any salt. If such a person stands in water on one leg, lifts up both his hands and does GAyatree japam for one full year, he can become a rishi.

If he does japam for two years he will will become the master of learning. If he does the japam, for three years he can know all the happenings in the past, the present and the future.

If he does this for four years, he will get the darshan of Lord Siva. If he does this for five years he will get the ashta siddhis. If he does this for six years he will get the power to assume any form.

If he does this for seven years he will get the form of a Devan. Doing this for nine years will make him a Manu. If he can do this for ten full years he can become an Indra.

If he can do this for eleven years, he can become a prajApati. If he can do this for twelve long years he can become a BrahmA. The food he can take may be roots, fruits, leaves, milk, water, soma rasa and biksha annam.

Chanting three thousand times GAyatree mantra will destroy the sins incurred by stealing gold, consuming intoxicating drinks and copulating with one’s own guru patni.

Chanting GAyatree staying in a hut in the forest can remove even Brahma hathi dosham in one month. Standing in water and doing japam one thousand times a day, for twelve days, will deliver him from all his sins.

Brahma hatthi can be got rid off by doing one thousand prANAyAma and doing japam three thousand times a day, for one month, observing the vow silence and proper niyamam.


Skanda 11 of Devi Bhagavathy Bhaagavatam gets completed with this.

 
ஆழ்வார்கள்

06a. மதுரகவி ஆழ்வார் (1)

நம்மாழ்வாரின் திருவடிகளைப் பற்றிக் கொண்டு புரிந்தார்
இறையடிகளுக்குத் திருத்தொண்டு திரு மதுரகவி ஆழ்வார்.


அவதரித்தார் சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்தில்,
திருக்கோளூரில் நித்யஸூரி குமுதரின் அம்சமாக.


உண்டு ‘ஆழ்வாருக்கு அடியான்’ என்ற பட்டம் இவருக்கு;
உண்டு ‘குருகைப் பிரான்’ என்னும் பட்டமும் இவருக்கு.


செவிக்கு இனிய சொற்களால் பாசுரங்கள் பாடியதால்
அளித்தனர் ‘மதுரகவி ஆழ்வார்’ என்னும் அரிய பட்டம்.


வணங்கினார் ஆழ்வார் அயோத்தி நகரில் ராம பிரானை;
வனப்புடன் ஒளிர்ந்தது தென் திசையில் அற்புத ஜோதி!


அடைந்தார் ஆழ்வார் திருநகரியை மதுரகவியார்;
அறிந்தார் அந்த ஊரின் சிறப்பைப் பிறர் மூலம்.


சென்றார் புளிய மரத்தினுள் பத்மாசனத்தில்
சின்முத்திரையுடன் அமர்ந்திருந்த சடகோபரிடம்.


குண்டுக்கு கல் ஒன்றைத் தூக்கிப் போட்டார் கீழே;
கண் விழித்துப் பார்த்தார் சடகோபன் அது கேட்டு.


“செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால்
எத்தைத் தின்று எங்கே கிடக்கும்?” என வினவ


“அதைத் தின்று அங்கே கிடைக்கும்” சடகோபன்
அளித்தார் உயரிய ஆத்ம ஞானத்தை விடையாக.


ஆட்கொள்ளும்படி விண்ணப்பித்தார் மதுரகவியார்;
ஆட்கொண்டு ஆணையிட்டார் பிரபந்தங்களை எழுதிட.


எழுதி அருளினார் நம்மாழ்வாரின் பிரபந்தங்களை;
எழுந்தருளச் செய்தார் நம்மாழ்வாரின் விக்ரஹத்தை


அழைத்தனர் ஒரு வாதத்துக்கு நம்மாழ்வாரை
அன்றைய முன்னூறு தமிழ்ச் சங்கத் புலவர்கள்.


கவிழ்த்தது சங்க பலகை; அழித்தது புலவர் செருக்கை;
வீழ்த்தியது பலகை தமிழ்ப் புலவர்களை அக்குளத்தில்!


மதுரகவி வைத்தார் நம்மாழ்வார் பிரபந்தங்களை
மதுரைத் தமிழ்ப் புலவரின் சங்கப் பலகையின் மீது.


உணர்ந்தது உலகம் ‘நம்மாழ்வார் இறையம்சம்’ என்பதை;
உலகெங்கும் பரப்பினார் நம்மாழ்வாரின் மகிமைகளை!


‘கண்ணி நுண் சிறுத்தாம்பு’ என்னும் திவ்வியப் பிரபந்தம்
கண்கண்ட கடவுளாகப் போற்றும் குருவாகிய நம்மாழ்வரை


இறைவனைப் புகழ்ந்து பாடவில்லை மதுரகவியார்
இனிய குருவைப் போற்றிப் பாடினார் பாசுரங்கள்.

ஸ்ரீ மதுர கவி ஆழ்வார் திருவடிகளே சரணம்


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


#06. Madhurakavi AzhwAr


Madhurakavi AzhwAr served Lord Vishnu indirectly by serving his guru NammAzhwAr directly. He was born in the month of Chithirai in th star Chithirai as the amsam of Nithya soori Kumudhar.


‘AzhwArukku adiyAn’ (The servant of AzwAr), Kurugaip pirAn (The lord of Kurugai), Madhurakavi (The poet who sings sweet poems) are some of the other names that denote this AzhwAr.


While Madhurakavi was in Ayodhya worshiping Sree Rama, he saw a glow of light or an illumination in the South. He went Southwards to find out the cause of this unusual glow.


He reached AzhwAr Thirunagari and learned about its greatness. He went to the tamarind tree under which Satagpan was sitting. The lad seemed to be oblivious to the external world.


Madhurakavi dropped a huge stone. The lad Satagopan opened his eyes hearing the sound. Now Madhurakavi posed a question to the young lad in the form of a riddle.


“What happens when the imperishable soul enters inside a perishable body?” The young boy conveyed Atma JnAnam ( True knowledge) as his reply and said,”It will enjoy what was destined to that body and will reside in it”


Madhurakavi requested Satagopan to accept him as his disciple, Satagopan did as requested and the ordered Madhurakavi to write down his pAsurams. Madhurakavi wrote down all the pAsurams of Satagopan (NammAzhwAr) pasurams. He also made a vigraham of his guru appear.


The three hundred poets of Madurai Tamil sangam challenged the greatness of NammAzhwAr. Madhurakavi placed the pasurams of NammAzhwAr on the Sangap palagai. It heldon to those pasurams but overturned plunging all the poets who challenged NammazhwAr into the pond of water.


Everyone realised that NammAzhWAr was an amsam of God Vishnu. Madhurakavi spread the name and fame of NammAzhwAr all over the world. He did not sing in praise of God. He chose to sing in praise of his guru NammAzhvAr instead.


‘KaNNi nuN siruth thAmbu’ consists of eleven verses sung by Madhurakavi AzhwAr in praise of his guru NammAzhwAr.



 
bhagavathy bhaagavatam - skanda 12

12#1a. காயத்ரி ஜபம்

“தேவியின் அருளைப் பெறுவதற்குச் செய்யத்
தேவையான கர்மா எது என்று கூறுங்கள்!


காயத்ரீ ஜெபத்தின் விதிமுறைகள் யாவை?
காயத்ரீ ஜெபத்தின் இன்றியமையாமை என்ன?


காயத்ரீயின் வர்ணங்கள், சந்தஸ்ஸுகள் எவை?
காயத்ரீயின் ரிஷிகள், தேவதைகள் யார் யார்?”


வினவினான் நாரதன் நாராயணனிடம் இவற்றை;
விளக்கினான் நாரதனுக்கு நாராயணன் இவற்றை.


“பிற அனுஷ்டானங்களைச் செய்யாது இருந்தாலும்
பிராமணன் செய்யதேயாக வேண்டும் காயத்ரீ ஜபம்.


மூன்று வேளைகளிலும் சந்தியா வந்தனம் செய்து
மூவாயிரம் உரு காயத்ரீ ஜபம் செய்கின்றவனை


போற்றிப் பூஜிப்பர் விண்ணுலகத் தேவர்களும்;
போற்றிப் பூஜிப்பர் மண்ணுலக மாந்தர்களும்.


நியாசங்களைச் செய்யாது விட்டு விட்டாலும்
நிச்சயமாக ஜபித்தாக வேண்டும் காயத்ரீயை.


தியானிக்க வேண்டும் தேவியை ஜெபத்தின் மூலம்;
தியானிப்பவன் பெறுவான் பற்பல மேன்மைகளை.


அக்ஷர சித்தி தரும் மும்மூர்த்திகளுடன் சமத்துவம்!
அக்ஷர சித்தி தரும் சோமசூர்யாக்னியுடன் சமத்துவம்!”


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


12#1a. The importance of GAyatree Mantra

NArada said to NArAyaNA, ” You have described the rules of SadAchAra and the glories of Devi. Most of the Devi’s vratams are difficult to follow for the ordinary people. Please tell me that vratam which can be followed easily by all men and which will win the grace of Devi.


Please tell me how GAyatree Japam is necessary for SadAchArA. Also tell me the names of the Rishis, Chhandas, Devatas and varNas of the twenty four syllables in GAyatree.”


Sri NArAyaNan replied, “The brahmins can reap all the benefits just by repeating GAyatree mantra as by observing all those difficult vratas. If a Brahmin performs SandhyA vandanam thrice a day and repeats GAyatree three thousand times, he will be worshiped even by Devas.


Whether or not a brahmin practises NyAsa, if he sincerely repeats the GAyatree mantra, worships GAyatree Devi and attains the siddhi of those syllables, he will earn respect at par with The Trinity as well as The Sun, The Moon and Agni.




 
ஆழ்வார்கள்

06b. மதுரகவி ஆழ்வார் (2)

கண்ணி நுண் சிறுத்தாம்பு

கண்ணி நுண் சிறுத் தாம்பினால் கட்டு உண்ணப்
பண்ணிய பெரு மாயன் என் அப்பனில்
நண்ணித் தென் குருகூர் நம்பி என்றக்கால்
அண்ணிக்கும் அமுது ஊறும் என் நாவுக்கே (1)

நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன்
மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே
தேவு மற்று அறியேன் குருகூர் நம்பி
பாவின் இன்னிசை பாடித் திரிவனே (2)


திரிதந்து ஆகிலும் தேவபிரான் உடைக்
கரிய கோலத் திருவுருக் காண்பன் நான்
பெரிய வண் குருகூர் நகர் நம்பிக்கு ஆள்-
உரியனாய் அடியேன் பெற்ற நன்மையே (3)


நன்மையால் மிக்க நான்மறையாளர்கள்
புன்மை ஆகக் கருதுவர் ஆதலில்
அன்னையாய் அத்தனாய் என்னை ஆண்டிடும்
தன்மையான் சடகோபன் என் நம்பியே (4)


நம்பினேன் பிறர் நன்பொருள் தன்னையும்
நம்பினேன் மடவாரையும் முன் எலாம்
செம்பொன் மாடத் திருக் குருகூர் நம்பிக்கு
அன்பனாய் அடியேன் சதிர்த்தேன் இன்றே (5)


இன்று தொட்டும் எழுமையும் எம்பிரான்
நின்று தன் புகழ் ஏத்த அருளினான்
குன்ற மாடத் திருக் குருகூர் நம்பி
என்றும் என்னை இகழ்வு இலன் காண்மினே (6)


கண்டு கொண்டு என்னைக் காரிமாறப் பிரான்
பண்டை வல் வினை பாற்றி அருளினான்
எண் திசையும் அறிய இயம்புகேன்
ஒண் தமிழ்ச் சடகோபன் அருளையே (7)


அருள் கொண்டாடும் அடியவர் இன்புற
அருளினான் அவ் அரு மறையின் பொருள்
அருள்கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான்
அருள் கண்டீர் இவ் உலகினில் மிக்கதே (8)


மிக்க வேதியர் வேதத்தின் உட்பொருள்
நிற்கப் பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான்
தக்க சீர்ச் சடகோபன் என் நம்பிக்கு ஆட்-
புக்க காதல் அடிமைப் பயன் அன்றே (9)


பயன் அன்று ஆகிலும் பாங்கு அலர் ஆகிலும்
செயல் நன்றாகத் திருத்திப் பணி கொள்வான்
குயில் நின்று ஆர் பொழில் சூழ் குருகூர் நம்பி
முயல்கின்றேன் அவன் மொய் கழற்கு அன்பையே (10)


அன்பன் தன்னை அடைந்தவர்கட்கு எல்லாம்
அன்பன் தென் குருகூர் நகர் நம்பிக்கு
அன்பனாய் மதுரகவி சொன்ன சொல்
நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே (11)


A wonderful legend about this great literary work follows!

 
The legend of the recovery and compilation of the 4000 AzhwAr pAsurams which were lost at one point of time....

The collection, once thought to have been lost, was organized in the form of an anthology by
Nathamuni.


Nathamuni
was born in Veera Naarayanapuram (Veeranam) or present-day Kaattu Mannaar Koil. There is a long time gap between Thirumangai Alvar (the last alvar) and Nathamuni. In this dark period, nobody knew what happened to the 4,000 verses of the text.


Legend has it that once
Nathamuni heard some people reciting the decad of Aaraavamudeof Nammaazhvaar at Kumbakonam. Captivated by these pasurams (hymns), he wanted to know more about them.

One of the verses also mentioned Aayiraththul Ippaththu (
Tamil: these 10 out of the 1000). When Nathamuni enquired about the remaining 990, the people who sang the 10 did not know anything about the other verses. But as the song mentioned the name and place of the azhwar (Kurugoor Satakopan), Nathamuni proceeded to Thirukurugoor and asked the people there about Swami Nammazhwar's 1,000 verses.


The people did not know the 1,000 verses that
Nathamuni wanted, but they told him about 11 pasurams (hymns) of Madhurakavi Alvar, a disciple of Nammazhwar Kanninun Siruthaambu. They asked him to go to Thiruppuliaazhwar, the place where Nammazhwarlived, and recite these 11 pasurams 12,000 times.

Nathamuni did as advised, and pleased with his penance, Nammazhwar granted him not only his 1,000 pasurams, but the entire 4,000-pasuram collection of all the Alvars.
[SUP]

https://en.wikipedia.org/wiki/Naalayira_Divya_Prabhandham[/SUP]
 

bhagavathy bhagavatam - sknda 12

12#1b. காயத்ரீயின் 24 ரிஷிகள்


12#1b. The Twenty four rishis.

The 24 Rushis of the twenty-four syllables of the GAyatree.

The names of the 24 Ruhis in due order is as follows:-

(1) VAma Deva,
(2) Attri,
(3) Vasishta
(4) Sukra,

(5) KaNva
(6) ParAsara,
(7) VisvAmitra,
(8) Kapila,

(9) SauNaka
(10) YAjgnavalkya,
(11) BharadwAja,
(12) Jamadagni,

(13) Gautama,
(14) Mudgala,
(15) VedavyAsa,
(16) Lomasa,

(17) Agastya,
(18) Kausika,
(19) Vatsya,
(20) Pulastya,

(21) MANduka
(22) DurvAsA,
(23) NArada
(24) Kas’yapa
 
ஆழ்வார்கள்

07a. பெரியாழ்வார் (1)

ஸ்ரீ விஷ்ணு சித்தர் அவதரித்தார் ஆனி மாதத்தில்,
ஸ்ரீ வில்லிபுத்தூர் தலத்தில், சுவாதி நட்சத்திரத்தில்.


மாமனார் ஆகிவிட்டார் இவர் எம்பெருமானுக்கே
மகள் கோதையை பெருமானுக்கு அளித்ததால்!


தந்தையார் முகுந்தர்; தாயார் பதுமவல்லியார்;
எந்தையின் வாகனம் கருடனின் அம்சம் ஆவார்.


நித்தம் நித்தம் பெருமானைச் சேவித்து அனுபவித்தார்;
நீலவண்ணனுக்குப் பாடினார் “பல்லாண்டு பல்லாண்டு”!


கல்லடி பட்டாலும் படலாம் ஆனால் பொல்லாத
கண்ணடி படக்கூடாது அல்லவா இறைவனுக்கு?


முதன்மை பெற்றது இது நாலாயிரம் பாசுரங்களில்;
முதன்மை பெற்றார் விஷ்ணுசித்தர் பெரியாழ்வாராக.


பட்டப் பெயர்கள் பல பெற்றவர் பெரியாழ்வார்
பட்டநாடன், பட்டர் பிரான், ஸ்ரீ வில்லி புத்தூரார்.


நகர சோதனை செய்து வந்தான் மதுரை மன்னன்;
நல்ல வார்த்தைகள் கூற வேண்டினான் வேதியரை;


“உழைக்க வேண்டும் மழைக்காலத்துக்குப் பிற மாதங்களில்;
உழைக்க வேண்டும் இருண்ட இரவுக்காகப் பகல் நேரத்தில்;


உழைக்க வேண்டும் முதுமைக்காக இளமையிலேயே;
உழைக்க வேண்டும் மறுமைக்காக இம்மையிலேயே;"


பரத்வ நிர்ணயம் செய்ய விரும்பினான் மன்னன்;
பரத்வ நிர்ணயம் செய்பவருக்குப் பரிசு பொற்கிழி!


தோன்றினார் ஆழ்வார் கனவில் பெருமான் அன்றிரவு;
கூறினார் நடந்தவற்றை விரிவாக விஷ்ணு சித்தரிடம்;


“சென்று வெல்வீர் பரிசுக் கிழியை!” என்றான் பெருமான்;
“என்னால் இயலுமா? கல்லாதவன் நான்!” என்றவுடன்


“நானே பொறுப்பு; உமக்கே பரிசு!” என்றான் பெருமான்.
“நாராயணனே பரம்!” என்று நிலை நாட்டினார் ஆழ்வார்.


தாழ்ந்தது பொற்கிழி; கிடைத்தன பரிசு, ஆனைச் சவாரி!
ஆழ்வார் தரிசித்தார் எம்பெருமானை வான வெளியில்!


‘மண்ணுலக மக்கள் தீங்கு செய்வர்’ என்று அஞ்சினார்.
கண் திருஷ்டி நிங்கப் பாடினார் “பல்லாண்டு பல்லாண்டு”


சமர்ப்பித்தார் வென்ற பொற்கிழியைக் கோவிலுக்கு.
சமர்ப்பித்தார் தன் சேவைகளைப் எம்பெருமானுக்கு.


பாமாலைகளையும் பூமாலைகளையம் அளித்தார் இவர்;
பரமன் வடபத்ர சாயி என்ற பெருமான் ரங்க மன்னாருக்கு;


ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

07a. PeriyAzhwAr (Vishnu Chiththar) part 1


Vishnu Chiththar was born in Sree Villipuththoor in the month of Aani in Swathi nakshathram. He became the father in law of Lord Vishnu by getting his adopted daughter AndAL married to Lord RanganAthan.


Vishnu Chiththar is considered to be the amsam of Garudan. His father was Mukundhar and mother was Padmavalli. Vishnu Chithar found bliss in serving his God. He sang “PallANdu” to protect Lord VishNu from the evil eyes of the people to whom he gave dharshan.


His “PallANdu” forms the beginning of the ‘nAlAyiram dhivya prabandham’. He himself is the foremost among AzhwArs. His other names are Patta nAdan, Pattar pirAn, SreeVilli puththoorAr.


The PANdya king used to go through his capital city in disguise. One day he met a wise brahmin and requested him to say a few words of wisdom. The brahmin said, “One must toil for the rainy days in the other seasons. One must toil for the night during the day. One must toil for the old age while young. One must toil for Liberation while still on the earth”.

The king wanted to establish what was the most supreme concept in our life. He held a contest and announced the prize of a bag of gold coins to anyone who could establish The supreme.

That night Lord Vishnu appeared in the dream of Vishnu chiththar. God said, “Go and take part in the contest. You will the prize money.”

But PeriyAzhwAr was hesitant since he was not accustomed in such ventures. But God assured him that he would surely win in the contest.


So PeriyAzhwAr went to participate in the contest. He established that Vishnu was the supreme above everything else. He won the prize of a bag of gold coins and donated it to the temple,


He found happiness in serving lord and decorating him with garlands made of flowers as well as garlands made of pAsurams. His compositions form The PeriyAzhwAr Thirumozhi consisting of 474 pAsurams.




 
bhagavathy bhaagavatam - skanda 12


12#1c. காயத்ரீயின் சந்தஸ்

12#1c. The 24 Chhandas of the GAyatree mantra.

(1) GAyatree,
(2) UshNik,
(3) Anushtup,
(4) Brihatee,


(5) Pankti,
(6) TrishNup
(7) Jagatee,
(8) Atijagatee,


(9) Sakkaree,
(10) Ati Sakkaree,
(11) Dhriti,
(12) Ati Dhriti,


(13) VirAt
(14) PrastArapankti,
(15) KRiti,
(16) PrAkriti,


(17) Akriti,
(18) Vikruti,
(19) Samkriti,
(20) Aksharapankti,


(21) Bhuh
(22) Bhuvah
(23) Svah
(24) Jyotishmati.




 
ஆழ்வார்கள்

07b. பெரியாழ்வார் (2)

பெரியாழ்வாரின் பல்லாண்டு

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன் சேவடி செவ்வித்திருக்காப்பு (1)


அடியோ மோடும் நின்னோடும் பிரிவின்றி யாயிரம் பல்லாண்டு
வடிவாய் நின்வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு
வடிவார் சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு
படைபோர் புக்கு முழங்குமப் பாஞ்சசன்னியமும் பல்லாண்டே. (2)


வாழாட்பட்டு நின்றீருள்ளீரேல் வந்துமண்ணும் மணமும் கொண்மிண்
கூழாட்பட்டு நின்றீர்களை யெங்கள் குழுவினில் புகுத லொட்டோம்
ஏழாட்காலும் பழிபபிலோம் நாங்கள் இராக்கதர்வாழ் இலங்கை
பாழாளாகப் படைபொருதானுக்குப் பல்லாணடு கூறுதுமே. (3)


ஏடுநிலத்தில் இடுவதன் முன்னம் வந்து எங்கள் குழாம் புகுந்து
கூடுமனமுடையீர் வரம்பொழி வந்தொல்லைக் கூடுமினோ
நாடுநகரமும் நன்கறிய நமோநாராயணா வென்று
பாடுமனமுடைப் பத்தருள்ளீர்! வந்து பல்லாணடு கூறுமினே. (4)


அண்டக்குலத்துக் கதிபதியாகி அசுரர் இராக்கதரை
இண்டைக்குலத்தை எடுத்துக் களைந்த இருடிகேசன் றனக்கு
தொண்டைக்குலத்தில் உள்ளீர்!வந்தடி தொழுது ஆயிரநாமம் சொல்லி
பண்டைக்குலத்தைத் தவிர்ந்து பல்லாணடு பல்லாயிரத்தாண்டென்மினே. (5)


எந்தை தந்தை தந்தை தந்தை தம்மூத்தப்பன் ஏழ்படிகால் தொடங்கி
வந்து வழிவழி ஆட்செய்கின்றோம் திருவோணத்திரு விழவில்
அந்தியம் போதில் அரியுருவாகி அரியை யழித்தவனை
பந்தனை தீரப் பல்லாணடு பல்லாயிரத்தாண் டென்று பாடுதுமே. (6)


தீயிற்பொழிகின்ற செஞ்சுடராழி திகழ்திருச் சக்கரத்தின்
கோயிற்பொறியாலே ஒற்றுண்டு நின்று குடிகுடி ஆட்செய்கின்றோம்
மாயப்பொருபடை வாணனை ஆயிரம்தோளும் பொழிகுருதி
பாய சுழற்றிய ஆழிவல்லானுக்குப் பல்லாண்டு கூறுதுமே. (7)


நெய்யிடை நல்லதோர் சோறும் நியதமும் அத்தாணிச் சேவகமும்
கையடைக்காயும் கழுத்துக்குப் பூணொடு காதுக்குக் குண்டலமும்
மெய்யிட நல்லதோர் சாந்தமும்தந்து என்னை வெள்ளுயிராக்க வல்ல
பையுடை நாகப்பகைக் கொடியானுக்குப் பல்லாண்டு கூறுவனே. (8)


உடுத்துக் களைந்தநின் பீதகவாடை யுடுத்துக் கலத்ததுண்டு
தொடுத்த துழாய்மலர் சூடிக்களைந்தன சூடுமித் தொண்டர்களோம்
விடுத்த திசைக் கருமம் திருத்தி திருவோணத் திருவிழவில்
படுத்தபைந்நாகணைப் பள்ளி கொண்டானுக்குப் பல்லாண்டு கூறுதுமே. (9)


எந்நாள் எம்பெருமான் உன்றனுக் கடியோமென் றெழுத்துப்பட்ட
அந்நாளே அடியோங்கள் அடிக்குடில் வீடுபெற் றுய்ந்ததுகாண்
செந்நாள் தோற்றித் திருமதுரையுட் சிலைகுனித்து ஐந்தலைய
பைநாகத்தலைப் பாய்ந்தவனே! உன்னைப் பல்லாண்டு கூறுதுமே. (10)


அல்வழக்கொன்று மில்லா அணிகோட்டியர்கோன் அபிமான துங்கன்
செல்வனைபபோலத் திருமாலே! நானும் உனக்குப் பழவடியேன்
நல்லவகையால் ந்மோநாராயணா வெனறு நாமம் பலபரவி
பல்வகையாலும் பவித்திரனே! உன்னைப் பல்லாண்டு கூறுவனே. (11)


பல்லாண்டென்று பவித்திரனைப் பரமேட்டியைச் சார்ங்கமெனும்
வில்லாண்டான் தன்னை வில்லிபுத்தூர் விட்டுச்சித்தன் விரும்பியசொல்
நல்லாண்டென்று நவின்றுரைப்பார் நமோநாராயணா வென்று
பல்லாண்டும் பரமாத்மனைச் சூழ்ந்திருந் தேத்துவர் பல்லாண்டே. (12)

பெரியாழ்வார் திருவடிகளே சரணம்



 
bhagavathy bhaagavatam - skanda 12

12#1d. காயத்ரீயின் தேவதைகள்


12#1d. The 24 DevatAs of GAyatree Mantra

(1) Agni,
(2) PrajApati,
(3) Soma,
(4) EesAna,


(5) SavitA,
(6) Aditya,
(7) Brihaspati,
(8) MaitrAvaruNa,


(9) Bhagadeva,
(10) AryamA,
(11) GaNesa
(12) TvashtrA


(13) PooshA
(14) IndrAgnee
(15) VAyu,
(16) VAmadeva,


(17) MaitrA varunee
(18) Visvadeva,
(19) MAtrikA,
(20) VishNu,


(21) Vasu,
(22) Rudra Deva,
(23) Kuvera,
(24) Asvinee KumAras.


These are the DevatAs of the twenty-four syllables. The hearing of this will destroy all the sins and yields the merits of repeating the mantra GAyatree.




 
ஆழ்வார்கள்

08a. ஆண்டாள் நாச்சியார் (1)

ஆண்டாள் என்னும் பிராட்டி அவதரித்தாள்
அன்னை சீதை போலவே இம்மண்ணுலகில்.


அவதரித்தாள் ஆண்டாள் நாச்சியார்
ஆடிப் பூரத்தில், ஸ்ரீ வில்லிபுத்தூரில்.


பூமியில் அவதரித்தாள் பெண் குழந்தையாக
பூமாதேவியே ஒரு துளசிச் செடியின் அடியில்.


கண்டெடுத்தார் தெய்வக் குழந்தையை பெரியாழ்வார்;
கொண்டாடினார் ‘சுரும்பாற் குழற்கோதை’ என அவளை.


பெருமான் மீது பெரியாழ்வார் கொண்ட பக்தி கண்டு
பெருமான் மீது தானும் கொண்டாள் அளவற்ற அன்பு.


அரங்கனையே மணக்க விரும்பினாள் ஸ்ரீ ஆண்டாள்;
அரிய பாவை நோன்பை அனுஷ்டித்தாள் மார்கழியில்.


மாறிவிட்டது ஸ்ரீ வில்லிபுத்தூர் பிருந்தாவனமாக!
மாறிவிட்டனர் தோழியர் கோபிகா ஸ்திரீகளாக!


பாடினாள் முப்பது பாசுரங்களை முப்பது நாட்களில்;
பாசுரங்கள் அமைந்தன அழகிய திருப்பாவையாக.

இணையாயிற்று இது திவ்விய பிரபந்தங்களுக்கு!
இணையாயிற்று இது சதுர்மறை வேதங்களுக்கு!


“கோதைத்தமிழ் ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானிடரை
வையம் சுமப்பதும் வம்பு”
என்று கூறிப் போற்றுகின்றனர்.


பாடிய பாசுரங்கள் திருப்பாவை, நாச்சியார் திருமொழி
பாடிய பாடல்களின் எண்ணிக்கை மொத்தம் 173 ஆகும்


ஸ்ரீ உய்யக்கொண்டார் அருளிச்செய்தது


அன்ன வயற்புதுவை ஆண்டாள் அரங்கற்குப்
பன்னு திருப்பாவைப் பல்பதியம் – இன்னிசையால்
பாடிக் கொடுத்தாள் நற்பாமாலை; பூமாலை
சூடிக் கொடுத்தாளைச் சொல்லு

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


08a. Sree ANdAL nAchiyAr (2)


ANdAL was born on earth as an amsam of Bhoo DEvi (The Goddess of Earth ) just SitA Devi herself did. ANdAL was born In the month of Adi under the star Pooram in Sree villipuththoor.


She was found under a Tulsi plant by PeriyAzhwAr. He named her as KOdhai and brought her up well asif she were his own daughter.


Even as a young child, ANdAl developed intense love and devotion towards Lord Vishnu impressed by the love and devotion of PeriyAzhwAr. ANdAl wanted to marry none other Lord Vishnu!


She observed the ‘PAvai NOnbu’ with her friends in the month of MArgazhi. Sree villipuththoor became the BrindhAvan and her friends became the Gopikas of BrindhAvan.


She sang a pAsuram every day during the thirty days of that month. The collection of these thirty pAsurams is known as ThiruppAvai. It is believed that ThiruppAvai is equivalent to the four vedas in its essence. It has the essence of the nAlAyiram dhivya prabandham in it.


ANdAL dreamed of marrying Vishnu and her other work is ‘NAchiyAr Thirumozhi’ consisting of 143 pAsurams. It is said that “A person who does not know the ThiruppAvai is not worth living on the face of the earth”



 
bhagavathy bhaagavatam - skanda 12

12#2a. காயத்ரீயின் 24 சக்தியர்

12#2a. The twenty four Shaktis

The twenty four Shaktis for the twenty four letters of Gayatree mantra.

(1) VAma Devi,
(2) PriyA,
(3) SathyA,
(4) ViswA,

(5) BhadhravilAsinee,
(6) PrabhAvathee
(7) JayA,
(8) S’AnthA,

(9) KAnthA,
(10) DhurgA,
(11) Saraswathi,
(12) VidhrumA,

(13) VisAlesA,
(14) VyApinee,
(15) VimalA,
(16) ThamOpahAriNee,

(17) SookshmA,
(18) ViswayOni,
(19) JayA,
(20) VashA,

(21) PadhmAlayA,
(22) ParAshobhA,
(23) BhadhrA,
(24) TripadhA.
 
ஆழ்வார்கள்

08b. ஆண்டாள் நாச்சியார் (2)

மாதவனுக்கு மாலைகள் தொடுப்பதே ஆழ்வாரின் பணி;
கோதை அணிந்து அழகு பார்ப்பாள் மாதவன் மாலையை.


சூடி முடிவு செய்வாள் “அந்த மாலை மாதவனுக்கு ஏற்றதா?”
சூடிய பின்னர் கொடுத்து அனுப்புவாள் மாலையை ஆலயம்.


சூடிய மாலையில் இருந்தது நீண்ட தலைமுடி ஒருநாள்;
வாடி நின்றார் பெரியாழ்வார் நிகழ்ந்து விட்ட தவறுக்காக.


நொந்த மனத்துடன் தொடுத்தார் இன்னொரு மலர்மாலை;
வந்த புதுமாலையை ஏற்க மறுத்து விட்டான் எம்பெருமான்!


தோன்றினான் பெருமான் பெரியாழ்வாரின் கனவில்;
தேற்றினான் பெருமான் பெரியாழ்வாரைக் கனவில்;


“சூடிக் கொடுத்த மாலையே ஏற்புடையது எனக்கு” எனச்
‘சூடிக் கொடுத்த சுடர் கொடி!’ ஆகிவிட்டாள் ஆண்டாள்.


மணப் பருவம் எய்தினாள் சுரும்பாற் குழற் கோதை;
மணக்க மறுத்துவிட்டாள் வெறும் மானிடப் பிறவியை.


”மானிடவர்க் கென்று பேச்சுப்படில் வாழ்கில்லேன்;
மற்றவர்க்கு என்னைப் பேசலொட்டேன்
மாலிருஞ் சோலை எம் மாயற்கல்லால்”
என்றாள்


மனத்தைத் தேற்றிக் கொண்டு வினவினார் பெரியாழ்வார்
“மணக்க விரும்புவது எந்தப் பதியின் பெருமானை?” என


குண நலன்களைக் கூறுமாறு வேண்டுகின்றாள் கோதை;
குண நலன்களை விவரித்துக் கூறுகின்றார் பெரியாழ்வார்.


அரங்கத்துறையும் பெருமானை வரிக்கின்றாள் கோதை;
அரங்கன் சம்மதிக்கிறான் கோதையின் கைத்தலம் பற்றிட.


“அழைத்து வருவீர் திருவரங்கத்துத் திருமுற்றத்துக்கு;
அவள் கைத்தலம் பற்றுவேன் உரிய முறையில்” என.

“சூடிக் கொடுத்த சுடர்க்கொடியே தொல்பாவை
பாடி அருளவல்ல பல்வளையாய் – நாடிநீ
வேங்கவற்(கு) என்னை விதி என்ற இம் மாற்றம்
நாங்கடவா வண்ணமே நல்கு”.

(ஸ்ரீ உய்யக்கொண்டார் அருளிச்செய்தது)

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


08b. Sree ANdAL NAchiyAr (2)


PeriyAzhwAr was committed to making beautiful garlands out of fresh flowers and taking them to the temple to offer to God. ANdAl would wear the garland secretly and look in the mirror to decide whether the garland was good enough to be offered to her Lord.


One day PeriyAzhwAr noticed a long hair in the garland he took to the temple. He felt greatly pained that he had committed a grave blunder and insulted God. He made another new garland and took it to the temple. But Lord would not accept the new garland.


Lord Vishnu appeared in the dream of PeriyAzhwAr that night. He consoled PeriyAzhWar and said the he prefered only the garlands which had been worn by Kodhai first. Now ANdAL got a new title “Choodik koduttha chudar kodi” meaning “The lissome lass who offered her Lord the garland worn by her”


ANdAl attained marriageable age but firmly refused to marry any mortal man. She had made up her mind that she would marry none other than Lord Vishnu Himself.


PeriyAzhwAR grew heavy in his heart wondering whether his pet daughter’s wish would ever get fulfilled. Will the Lord consent to marry a mere mortal woman?


He wished to know which particular form of Vishnu AndAl wanted to marry. She requested him to expatiate on the good qualities of all the forms of Vishnu before she could make up her mind. She finally decided to marry Sree RanganAthan.


Sree RanganAthan also agreed to marry AndAl and He wanted ANdAL to be brought to his temple dressed as a beautiful bride.




 
bhagavathy bhaagavatam - skanda 12

12#2b. காயத்ரீயின் நிறங்கள்

12#2b. The Twenty four varNAs

Here are the twenty four VarnAs or colours of the twenty four syllables of the GAyatree Devi

(1) the color of Champaka flower,
(2) the color of Vidruma,
(3) the color of crystal,
(4) the color of lotus,

(5) the color of Rising Sun,
(6) the color of white conch shell,
(7) the color of white KuNda flower,
(8) the color of PrabAla and lotus leaves,

(9) the color of PadmarAga,
(10) the color of Indra Neela maNi,
(11) the color of pearls,
(12) the color of Saffron,

(13) the color of black collyrium of the eye,
(14) red color,
(15) the color of Vaidoorya maNi,
(16) the color of Ksaudra (Champaka tree, honey, water),

(17) the color of turmeric,
(18) the color of KuNda flower and milk,
(19) the color of the rays of the Sun,
(20) the color of the tail of the bird Suka,

(21) the color of SatapatrA,
(22) the color of Ketakee flower,
(23) the color of MallikA flower and
(24) the color of Karaveera flower.
 

Latest posts

Latest ads

Back
Top