• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

A poem a day to keep all agonies away!

bhagavathy bhaagavatam - skanda 11

11#13. திருநீற்றின் பெருமை

தரும் மெய் ஞானத்தைச் சந்நியாசிக்கு;
தரும் விரக்தியை வானப்பிரஸ்தனுக்கு;


தரும் வேதாந்த தியான சித்தியை பிரம்மசாரிக்கு;
தரும் கிருஹஸ்தனுக்கு இல்லறதர்ம அபிவிருத்தி!


தரும் புண்ணியப் பேற்றினைச் சூத்திரனுக்கு;
தரும் மனிதனுக்கு விடுதலை பாவத்திலிருந்து.


முக்தி மங்கையை வசீகரிப்பவை இவை நான்கு;
விபூதி, சிவலிங்கம், பஞ்சாக்ஷரம், ருத்திராக்ஷம்.


சிவன் உண்பது ஆகும் விபூதி தரித்தவன் உண்பது;
அவனைப் பின்பற்றினால் அழியும் பாவக் குவியல்.


விபூதி தரித்தவனை பாவிக்க வேண்டும் சிவனாக.
விபூதி தரித்து வேடமிட்டாலும் பெறுவான் நற்கதி!


இல்லை சிவ மந்திரத்திலும் சிறந்த ஒரு மந்திரம்,
இல்லை சிவ ஆசாரத்திலும் சிறந்த ஒரு ஆசாரம்;


இல்லை சிவார்ச்சனையிலும் சிறந்த புண்ணியம்;
இல்லை சிவ பரத்திலும் சிறந்த ஒரு பரம்!


இல்லை விபூதி ஸ்நானத்திலும் சிறந்த ஸ்நானம்;
இல்லை சிவாக்னி வீரியத்திலும் சிறந்த வீர்யாக்னி.


இல்லை விபூதியிலும் சிறந்த ஒரு தாரணம்;
இல்லை விபூதியிலும் சிறந்த ஒரு பாபநாசினி;


என்றோ எரித்தான் சிவபெருமான் காமதேவனை!
இன்றும் என்றும் எரிக்கும் திருநீறு பாவங்களை!


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


11#13. The greatness of Vibhooti


Vibhooti bestows true knowledge on the SanyAsis; it bestows Virakti (dispassion) on the VAnaprasta; it nurtures the Gruhasta Dharma and it confers VedAnta DhyAna Siddhi on a BrahmachAri. It gives merits for a person of the fourth VarNa and liberates everyone form the sins they had committed.


The four things which attract and speed up the process of liberation are Vibhooti, Sivalinga, PanchAkshara and RundrAksha.


A person who wears Vibhooti is at par with Siva Himself. Following such a person destroys one’s own sins. Such a man must be treated with a great respect. Even if he is merely posing and acting his role as a devotee of Siva, he still gets good merits by wearing the vibhooti.


There is no mantra superior to the Siva mantra. There is no superior AachAram to Siva AchAram. There is no greater merit than performing Siva archana.


Nothing and no one is superior to Lord Siva. There is no theertha snAnam holier than the Vibhooti snAnam. There is no VeeryAgni superior to that SivAgni.


There nothing superior to Vibhooti for adorning a person. There is nothing better than Vibhooti in destroying the sins committed by a person.


Siva burned down Manmatha long ago. Vibhooti continues to burn down the sins committed by everyone of us, every single day.




 
SEkkizhArin Periya PurANam

#69a . திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் (1)

எருக்கத்தம்புலியூர் சோழ நாட்டின் திருத்தலம்;
எழுந்தருளிய பிரான் பெயர் நீலகண்டேஸ்வரர்.

எழுந்தருளிய அம்மை நீலமலர்க் கண்ணம்மை;
எருக்கு ஆகும் இத் திருத்தலத்தின் தலவிருட்சம்.

பிறந்தார் பாணர் குலத்தில் நீலகண்ட நாயனார்;
சிறந்தார் அவர் மனைவியாக மதங்க சூளாமணி.

இசையே உருவெடுத்து வந்தவர் பாணர் - அவருடன்
இசைந்து வாழ்ந்தார் பாணரது இனிய மனைவியார்

இசைத்தனர் யாழுடன் இணைந்து இனிய பாக்களை;
ஈசன் அருளால் பெற்றனர் சென்ற இடங்களில் சிறப்பு.

தரிசித்தனர் சோழ நாட்டுச் சிவன் கோவில்களை;
தரிசிக்கச் சென்றனர் ஆலவாய் அண்ணலையும்.

பாடிக் கொண்டிருந்தார் பாணர் யாழினை மீட்டிப்
பண்ணமைத்துச் சுருதியுடன் அண்ணல் புகழினை.

புக முடியாது ஆலயத்தினுள் பாணர்கள் பண்டு;
புறத்தே நின்று புகழ்ந்து பாடுவது மட்டும் உண்டு.

உருகினார் சோமசுந்தரர் பாணரின் இன்னிசையில்
பெருக்கினார் தம் கருணையைப் பாணரின் மீது.

ஆணையிட்டார் மதுரை சிவத்தொண்டர் கனவிலும்,
பாணர் கனவிலும் வந்து பாணரை ஆலயம் புகும்படி.

தொண்டர்கள் வந்து வேண்டினர் ஆலயத்தினுள் புகும்படி.
அன்புடன் சென்றனர் ஆலயத்துள் பாணரும் மனைவியும்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#69a. Neelakanta yAzhppANa nAyanAr

Erukkaththam Puliyoor was a famous Siva KshEtram in ChOzha Kingdom. The presiding deities were NeelakantEswarar and Neela Malar KaNNammai. The sthala vruksham associated with this place was Calotropis (எருக்கு).

Neelakanta nAyanAr was born in a family of musicians called PANar. Mathanga ChooLAmani was his talented and gifted wife. Both of them were great exponents in singing songs, accompanied by the yAzh. They were heartily welcomed and greatly respected wherever they went.

The couple went around visiting the various temples in ChOzha Kingdom. Then they went to visit the Siva Temple at Madurai. In those days pANars were not allowed to enter the temples. They were allowed to sing from outside the temples.

When the Neelakanta nAyanAr and his wife sang in Madurai, Lord Siva became very pleased and showered His grace on pAnan and his wife. He ordered His devotees in their dream to let Neelakantar and his wife enter the temple. He expressed the same wish in the pAnan's dream also.

 
bhaavthy bhaagavatam - skanda 11

11#14. தீவினை அகற்றும் திருநீறு

எல்லாத் தீர்த்த நீராடலின் புண்ணியத்தை
அள்ளித் தரும் விபூதி ஸ்நானம் நமக்கு!

கட்டைகளைக் கொளுத்தும் அக்னியாகக்
கெட்ட பாவங்களைக் கொளுத்தும் திருநீறு!

பந்தம் தரும் தண்ணீரில் ஸ்நானம்;
பந்தம் அகற்றும் திருநீற்று ஸ்நானம்.

மங்களம் தருவது தூய திருநீறு;
மக்களைக் காப்பது தூய திருநீறு;

தூய்மையைத் தருவது தூய திருநீறு;
தேவிக்குப் பிரியமானது தூய திருநீறு;

விடுபடலாம் 64 வகை ரோகங்களிருந்து;
விடுபடலாம் துஷ்ட மிருகங்களிடமிருந்து;

விடுபடலாம் கள்வரின் பயத்திலிருந்து;
விடுபடலாம் நம் தலை எழுத்திலிருந்து;

விடுபடலாம் செய்த பாவங்களிலிருந்து;
விடுபடலாம் துன்பம் துயர்களில் இருந்து;

ஒளிர்வதால் திருநீற்றின் பெயர் பஸிதம்;
ஒழிப்பதால் குற்றங்களை, இது பஸ்மம்;


ஐஸ்வர்யம் தருவதால் இது விபூதி;
ரக்ஷிப்பதால் இதன் பெயர் ரக்ஷை.

வெளி மலத்தைப் போக்கும் தண்ணீர் ஸ்நானம்;
எல்லா மலத்தையும் போக்கும் பஸ்ம ஸ்நானம்;

பஸ்ம ஸ்நானம் செய்யாதவன் நீசன்!
பஸ்ம ஸ்நானமே புண்ணிய தீர்த்தம்!

அணிய வேண்டும் நாம் விபூதியை உடனே
அபான வாயுவை வெளியே விட்டாலும்;

கக்கினாலும், தும்மினாலும், மலஜலம்
கழித்தாலும், கொட்டாவி விட்டாலும்!

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

11#14. The greatness of Bhasma


Vibhooti snAnam confers the benefit of the snAnam in every holy teertham. Just like the fire burning down all the woods and logs, Vibhooti will burn down all the sins and evils. The bath taken in water binds a person while a bath taken in Bhasma liberates a person.

Vibhooti confers auspiciousness. It protects the wearer. It purifies the wearer. It is very dear to Devi’s heart.

By applying Vibhooti one can get cured of sixty four different diseases. He can get saved from wild animals; He can become free from the fear of thieves. It can even change one’s destiny.

One can get rid of one’s sins committed through the body and become free from his sorrows and problems. Since the Vibhooti shines on the forehead it is called ‘BhAsita’. Since it destroys all the sins it is a ‘Bhasma’. Since it bestows auspiciousness and good merits it is ‘Vibhooti’. Since it protects the wearer it is ‘Rakshai’.

A bath in water removes only the dirt on one’s external body but a bath in Bhasma removes all the dirts of the mind and of the body. One who does not take the Bhasma SnAnam is a very lowly man.

One must smear vibhooti on one’s forehead without fail, after releasing ApAna VAyu or vomiting, or sneezing or yawning or urinating or defecating.

 
SEkkizhArin Periya PurANam

69b . திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் (2)

அரன் ஆணையிட்டான் பாணரை ஆலயம் புகும்படி;
அன்புடன் ஆலயம் புகுந்தார் பாணர் மனைவியுடன்.

மெய்மறந்து பாடினர் ஈரத்தரையில் அமர்ந்து கொண்டு
மெய்யன்பர்க்கு இறங்கினான் திரு ஆலவாய் அண்ணல்.

"பலகை ஒன்றை இடுங்கள் பாணருக்கு - ஈரமான
நிலத்தில் அமர்ந்தால் அதன் ஈரம் தாக்கும் " என

அளித்தனர் பீடம் பாணருக்கும் அவர் மனைவிக்கும்;
அனைவரும் மயங்கினர் அவர்களின் இன்னிசையில்.

தொடர்ந்தனர் தலயாத்திரையை இருவரும் மீண்டும்;
அடைந்தனர் திருவாரூர்த் தியாகேசனின் ஆலயத்தை.

ஆணையிட்டான் அரன் தனது தொண்டர்களுக்கு,
"அமைப்பீர் பாணன் நுழையத் தனிவாயில் ஒன்று!"

அமைத்தனர் புது வாயில் ஒன்றை வடக்கு திசையில்;
அழைத்தனர் பாணரை வந்து ஆலயத்துள் புகுமாறு.

பாடினர் பாடல்கள் கேட்டவர் மயங்கிட - பின்னர்
நாடினர் பிற சிவத் தலங்கள் சென்று தொழுதிட.

அடைந்தனர் சீர்காழியில் திரு ஞானசம்பந்தரை;
அடைந்தனர் இன்பம் சம்பந்தரின் சம்பந்தத்தில்.

தோன்றியது சிவஜோதி சம்பந்தரின் திருமணத்தில்;
ஒன்றி விட்டனர் ஜோதியில் பாணரும், மனைவியும்.

சிவஜோதி அளித்தது சிவலோகப் பதவியை - அன்று
சம்பந்தருடன் சம்பந்தம் கொண்ட அனைவருக்குமே!

"திருநீலகண்டத்துப் பாணனார்க்கு அடியேன்"

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

69a. Neelakanta yAzhppANa nAyanAr

The devotees of Lord Siva invited Neelakanta nAyanAr and his wife to enter into the temple. They became very excited to be able to enter into the temple at last. They sat on the wet floor and sang soulfully. Lord Siva instructed His devotees to offer the couple a dry plank to sit on.

A peetam was offered to Neelakanta nAyanAr and his wife to sit on. They continued to sing even more sweetly. After that the couple continued their pilgrimage. They reached the temple of ThyAgEsan at ThiruvAroor.

Again Lord Siva ordered his devotees to make a special entrance for the pAnar to enter into the temple to enable him to sing to his heart's content. A new entrance was created in the north exclusively for the entry of Neelakanta nAyanAr. PANar and his wife entered the temple and sang mesmerizing everyone present there.

Then they went round visiting the other temples also. Finally they reached SeerkAzhi and met Thiru GNAna Sambandhar. Their music was so pleasing to the ears that Sambandhar requested them to accompany him the thevAram songs.

They stayed on with Sambandhar for a long time. They went to attend the wedding of Sambandhar. A huge illumination ( Siva JyOthi) appeared during the wedding. Neelakanta NayanAr entered the cool illumination with his wife and all the others present there and reached the lotus feet of Siva.
 
SEkkizhArin Periya PurANam


#70. திரு சடையனார் நாயனார்

அவதரித்தார் திரு சடையனார் நாயனார்
நாவலூர் நகரில், ஆதிசைவர் குலத்தில்.

சடையனார் மனைவியார் இசைஞானியார்;
சடையனார் மகன் சுந்தர மூர்த்தி நாயனார்.

திருத்தொண்டாத் தொகை பாடிய சுந்தரமூர்த்தி
சிறப்பித்துக் கூறியுள்ளார் தன் பெற்றோர்களை.

உலகை உய்வித்த தெய்வ மகனைப் பெற்று - இவர்
உவப்புடன் சென்று அடைந்தார் அரன் திருவடிகளை.

"அரனடியே அடைந்திட்ட சடையனுக்கு அடியேன்"

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#70. Chadaiyan nAyanAr


ChadaiyanAr nAyanAr was born in Thiru NAvaloor in the family of Adhi Saivar race. His wife was Isai GnAniyAr. His son was Sundhara moorthi nAyanAr.

In his Thiruth thondath thogai Sundara moorthi has sung the praise of his parents. ChadaiyanAr was the great father of the great Sundhara moorthi nAyanAr. He reached the lotus feet of Siva to find the greatest bliss.



 
SEkkizhArin Periya PurANam


#71. இசை ஞானியார்

ஆவர் இவர் திரு சடையனாரின் மனைவியார்;
ஆவார் இவர் திரு சுந்தர மூர்த்தியின் தாயார்;

நாயனார்களுள் ஒருவர் ஆவார் சடையனார்;
நாயனார்களுள் ஒருவர் ஆவார் சுந்தரமூர்த்தி;

நாயனார் ஆனார் இசைஞானியார் - பெண்
நாயனார் இருவரில் ஆனார் இவர் ஒருவர்.

ஆயினர் நாயன்மார்கள் மொத்தம் அறுபத்து மூவர்.
ஆயினர் அவர்களுள் ஒரே குடும்பத்தினர் மூவர்.

குடும்பம் முழுவதுமே ஆகிவிட்டது நாயனார்களாக!
எடுத்து உரைக்கவும் இயலுமோ இவர்கள் சிறப்பை?

"அரனடியே அடைந்திட்ட இசைஞானிக்கு அடியேன்"

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#71. Isai GnAniyAr


Isai GnAniyAr was the wife of ChadaiyanAr nAyanAr and mother of Sundhara moorthi nAyanAr. She was one of the two female nAyanArs-the other one being kAraikkAl ammaiyAr.

In fact all the three members of her family had become three out of the sixty three nAyanArs.



 
முடிவுரை

இத்துடன் அறுபத்து மூன்று நாயனார்களின் சரித்திரம் முடிவு பெறுகின்றது. எத்தனையோ நாட்களாக இவற்றைப் படிக்க விரும்பிக் கொண்டிருந்தேன்.

அதற்கு இப்போதேனும் வாய்ப்பும், வேளையும் வந்ததில் மட்டற்ற மகிழ்ச்சி. அதை எழுதுவது அரன் அருளால் முழுமை அடைந்ததில் அளவற்ற ஆனந்தம்.

படிப்பது அதன் முழுப்பயனை எப்போது நமக்குத் தரும் என்று தெரியுமா ? படித்ததை பிறருக்கும் நன்கு விளங்கும்படி எடுத்துச் சொல்லும் போது தான்!

வாழ்த்துரை


என்றும் இன்பம் பெருகும் இயல்பினால்
நன்று காதலித் துள்ளமும் ஓங்கிட
மன்று ளாரடி யாராவர் வான்புகழ்
நின்ற தெங்கும் நிலவி உலகெலாம்.

'உலகெலாம்' என்ற சொல்லுடன் தொடங்கிய பெரிய புராணம் 'உலகெலாம்' என்ற சொல்லுடன் முடிவுறுவது எத்தனை சுவை!


பின்குறிப்பு :

தித்திக்கும் இத் தீந்தமிழ்க் காவியத்தை
குழவியின் மழலையில் குழறியுள்ளேன்.

சிலந்தியின் வலையையும், யானையின் மலரையும்,
கண்ணப்பனின் அறியாமையையும் ரசித்த பெருமான்

இதையும் ரசித்தோ அல்லது சிரித்தோ ஏற்றுக் கொள்வான்.
ஈசனின் பாதங்களில் இதைப் பணிவன்புடன் படைக்கிறேன்.

மீண்டும் சிந்திப்போம் விரைவில் இன்னொரு புதுத் தொடரில்.
உங்கள் உண்மையுள்ள,
விசாலாக்ஷி ரமணி

A Conclusion to Periya PurANam

I humbly offer this literary work at the lotus feet of Lord Siva and Devi Uma.The task of rewriting Periya PurANam into a simpler form ( for the easy understanding without the use of a dictionary) began in November 2017.

It got competed over a period of seven months against all odds, illnesses, relocation, travel etc.

My pranAms to Lord VignEswara for the successful completion of this work.
My pranAms to Lord Murugan for keeping me focused at the task in hand.
My pranAms to Shakthi Devi for giving me the Shakthi and yukthi needed for this task.

My pranAma to my dear parents for making me and shaping me to who I am now.
I thank the readers for their silent support and in helping me to keep up the tempo!

May the love for Lord Siva spread all over the world.

God is Love . Love is God.


அன்பே சிவம்! அருளே சிவம்!

[TABLE="align: center"]
[TR]
[TD]அன்பும் சிவமும் இரண்டு என்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே
[/TD]
[TD="width: 9"][/TD]
[/TR]
[TR]
[TD="colspan: 2"](திருமந்திரம் : -270)[/TD]
[/TR]
[/TABLE]




 
bhagavathy bhaagavatam - skanda 11

11#15a. விபூதி தரிப்பது

வியர்த்தம் ஆகிவிடும் கர்மங்கள், ஜபம்
விபூதி அணியாமல் அவற்றைச் செய்தால்.


பிராமணனின் அடையாளம் காயத்ரீயே ஆகும்;
பிரம்மண்யம் அழிந்துவிடும் விபூதி இன்றேல்!


மந்திர பூர்வமான திருநீறு ஒளிர்வது
அந்தணன் ஒருவனின் லக்ஷணம் ஆகும்.


கண்டபோதே பிரியம் எழும் அந்தணனுக்கு;
சண்டாளன் ஆவான் பிரியம் எழாத ஒருவன்.


உண்ணக் கூடாது விபூதி அணியாமல்;
பண்ணும் துலாபாரமும் தராது பலன்!


விலகி விடக்கூடாது பூணூல் என்பதற்காகவே
அணிகின்றனர் வேறு ஆடையைப் பூணூலாக!


கூறவில்லை விபூதிக்கு மாற்றாக எதையும்;
கூற இயலாது விபூதிக்கு மாற்றாக எதையும்!


இட வேண்டும் வலக்கையின் மூன்று விரல்களால்;
இட வேண்டும் ஆறு அங்குலத்துக்குக் குறையாமல்.


‘அகாரம்’ ஆகும் அநாமிகை (மோதிர விரல்)
‘உகாரம்’ ஆகும் மத்திமை (நடு விரல் )


‘மகாரம்’ ஆகும் தர்ஜனி (ஆள்காட்டி விரல்)
முக்குண ஸ்வரூபம் த்ரிபுண்டர தாரணம்.


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


11#15a. The Rules for applying Vibhooti


All the Karmas done without applying Vibhooti on one’s forehead go in waste. The real hallmarks of a brahmin are the Gayatree mantra and the smearing of the holy Vibhooti. Every Brahmin must be adorned by the bright Vibhooti applied with the uttering of the mantras.


A brahmin must develop a liking to Vibhooti even as he looks at it. The brahmin who does not have a liking for Vibhooti is actually a ChaNdALan!


One must not eat without applying Vihooti. Even the tulAbhAram measured with gold will go in waste if Vibhooti is not smeared on one’s forehead.


Often the utthareeyam – the upper garment – is twisted and worn as a poonool to make sure that it does not get displaced during the ceremony or ritual. But there is no alternative for Vibhooti. There can be no alternative for Vibhooti.


Vibhooti must be applied with the three fingers of the right hand – excepting the thumb and the little finger. The length of the three lines must be at least six inches.


The line drawn by the ring finger (AnAmika) is the ‘AkAram’. The line drawn by the middle finger (Madhyamai) is the ‘UkAram’ and the line drawn by the index finger is the ‘MakAram’.


The three lines are the swaroopams of the three gunAs and these are three component sounds ( a + u + m ) in the PraNava OnkAram.




 
#1. ஆழ்வார்களின் வரலாறு - முன்னுரை

இறைவனின் அருளில் ஆழ்ந்து கிடப்பவர்கள் ஆழ்வார்கள். இவர்கள் இறைவனை அணு அணுவாக அனுபவித்துள்ளனர். ஆழ்வார்கள் நாயகி மனோபாவத்தில் இறைவனை அணுகி உள்ளார். ஆழ்வார்கள் பன்னிருவர் ஆவர். இவர்களுள் ஒரே பெண் ஆவார் ஆண்டாள் நாச்சியார்.


ஆழ்வார்கள் அருளிய பாசுரங்களின் தொகுப்பே நாலாயிரம் திவ்வியப் பிரபந்தம். நான்கு வேதங்களின் சாரமாக அழுந்துள்ளது இந்தத் தொகுப்பு. பன்னிரண்டு ஆழ்வார்கள் பாடிய 4000 பாசுரங்களையும் நாதமுனி பதினொன்றாம் நூற்றாண்டில் தொகுத்து வழங்கினார்.

மணவாள மாமுனிகள் இயற்றிய உபதேச இரத்தின மாலை என்னும் நூல் பன்னிரண்டு ஆழ்வார்களைப் பற்றிய அரிய தகவல்களைத் தருகின்றது.

#1 . In introduction to the Lives of the AzhwArs

An AzhwAr is 'one who is immersed in God's infinite grace'. AzhwArs have enjoyed God's grace in great abundance. They approach God as though God is their lover and themselves are the lovelorn ladies. Of the Twelve AzhwArs, ANdAL is the only woman AzhwAr.

The collection of the 4000 songs sung by these twelve AzhwArs put together is called 'NAlAyiram dhivya prabandham'. THis consists of the very essence of the four vedas. This was compiled by NAdhamuni in the eleventh century.

Upadhesa Rathna mAlai written by MaNavALa muni is the authentic source of all the details about the AzhwArs.














 
#2. ஆழ்வார்களின் அம்சங்கள்

12 ஆழ்வார்கள் .............................அம்சங்கள்

1. பொய்கையாழ்வார்...................பாஞ்சஜன்யம் (சங்கு)

2. பூதத்தாழ்வார்............................கௌமோதகி (கதை)

3. பேயாழ்வார்................................நந்தகம் (வாள் )

4. திருமழிசை ஆழ்வார்.................சுதர்சனம் (சக்கரம்)

5. நம்மாழ்வார் ...............................விஷ்வக்சேனர் (சேனை முதலியார் )

6. மதுரகவி ஆழ்வார் ....................நித்ய சூரி குமுதர்

7. பெரியாழ்வார் ..........................கருடன் (வாஹனம்)

8. ஆண்டாள் நாச்சியார்.................பூமா தேவி

9. குலசேகர ஆழ்வார்.....................கௌஸ்துபமணி

10. தொண்டரடிப்பொடி ஆழ்வார் ..வைஜயந்தி (வனமாலை)

11. திருப்பாணாழ்வார் ...................ஸ்ரீவத்சம்

12. திருமங்கையாழ்வார் ................சார்ங்கம் (வில்)

#2. The twelve AzhwArs and the divine amsams they represent

1. Poigai AzhwAr....................Panchajanyam - the conch of Vishnu

2. Boothathu AzhwAr..............Koumodhaki ......the mace of Vishnu


3. PEyAzhwAr.........................Nandhaka..........the sword of Vishnu


4. Thirumazhisai AzhwAr.........Sudharsan..........the discus of Vishnu


5. NammAzhwAr.....................ViswaksEnar......The general of Vishnu's army


6. Madhurakavi AzhwAr..........Kumudhar..........Nithya soori


7. PeriyAzhwAr........................Garuda..............The bird vehicle of Vishnu


8. ANdAL nAchiyAr...................Bhoo DEvi.........The earth


9. Kulasekhara AzhwAr.............Kousthubham....The rare gem of Vishnu


10. ThoNdar adippodi AzhwAr....Vaijayanthi garland (vana mAlai of Vishnu)


11. ThiruppANAzhwAr.................Sreevathsam........The mark on Vishnu's chest


A12. Thirumangai AzhwAr...........SArngam..............The bow of Vishnu
 
bhagavathy bhaagavatam - skanda 11

11#15a. விபூதி தரிப்பது

வியர்த்தம் ஆகிவிடும் கர்மங்கள், ஜபம்
விபூதி அணியாமல் அவற்றைச் செய்தால்.

பிராமணனின் அடையாளம் காயத்ரீயே ஆகும்;
பிரம்மண்யம் அழிந்துவிடும் விபூதி இன்றேல்!

மந்திர பூர்வமான திருநீறு ஒளிர்வது
அந்தணன் ஒருவனின் லக்ஷணம் ஆகும்.

கண்டபோதே பிரியம் எழும் அந்தணனுக்கு;
சண்டாளன் ஆவான் பிரியம் எழாத ஒருவன்.

உண்ணக் கூடாது விபூதி அணியாமல்;
பண்ணும் துலாபாரமும் தராது பலன்!

விலகி விடக்கூடாது பூணூல் என்பதற்காகவே
அணிகின்றனர் வேறு ஆடையைப் பூணூலாக!

கூறவில்லை விபூதிக்கு மாற்றாக எதையும்;
கூற இயலாது விபூதிக்கு மாற்றாக எதையும்!

இட வேண்டும் வலக்கையின் மூன்று விரல்களால்;
இட வேண்டும் ஆறு அங்குலத்துக்குக் குறையாமல்.

‘அகாரம்’ ஆகும் அநாமிகை (மோதிர விரல்)
‘உகாரம்’ ஆகும் மத்திமை (நடு விரல் )

‘மகாரம்’ ஆகும் தர்ஜனி (ஆள்காட்டி விரல்)
முக்குண ஸ்வரூபம் த்ரிபுண்டர தாரணம்.

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

11#15a. The Rules for applying Vibhooti


All the Karmas done without applying Vibhooti on one’s forehead go in waste. The real hallmarks of a brahmin are the Gayathree mantra and the smearing of the holy Vibhooti. Every Brahmin must be adorned by the bright Vibhooti applied with the uttering of the mantras.

A brahmin must develop a liking to Vibhooti even as he looks at it. The brahmin who does not have a liking for Vibhooti is actually a ChaNdALan!

One must not eat without applying Vibhooti. Even the tulAbhAram measured with gold will go in waste if Vibhooti is not smeared on one’s forehead.

Often the utthareeyam – the upper garment – is twisted and worn as a poonool to make sure that it does not get displaced during the ceremony or ritual. But there is no alternative for Vibhooti. There can be no alternative for Vibhooti.

Vibhooti must be applied with the three fingers of the right hand – except the thumb and the little finger. The length of the three lines must be at least six inches.

The line drawn by the ring finger (AnAmika) is the ‘AkAram’. The line drawn by the middle finger (Madhyamai) is the ‘UkAram’ and the line drawn by the index finger is the ‘MakAram’.

The three lines are the swaroopams of the three gunAs and these are three component sounds ( a + u + m ) in the PraNava OnkAram.

 
#3. ஆழ்வார்கள் பிறந்த இடம்

12 ஆழ்வார்கள் ...........................பிறந்த இடம்


1. பொய்கையாழ்வார்...................ஸ்ரீ காஞ்சி

2. பூதத்தாழ்வார்...........................திருக் கடல் மல்லை


3. பேயாழ்வார்..............................திரு மயிலை

4. திருமழிசை ஆழ்வார்.................திருமழிசை

5. நம்மாழ்வார் .............................திருக் குருகூர்

6. மதுரகவி ஆழ்வார் ....................திருக் கோளூர்

7. பெரியாழ்வார் ..........................ஸ்ரீவில்லிபுத்தூர்

8. ஆண்டாள் நாச்சியார்.................ஸ்ரீவில்லிபுத்தூர்

9. குலசேகர ஆழ்வார்....................மலை நாடு

10. தொண்டரடிப்பொடி ஆழ்வார் ...திரு மண்டங்குடி

11. திருப்பாணாழ்வார் .................உறையூர்

12. திருமங்கையாழ்வார் ..............திருக் குறையலூர்


#3. The birthplaces of the twelve AzhwArs


1. PoigaiyAzhwAr........................Thiruk KAnchi

2. BoothathAzhwAr.....................Thiruk Kadal mallai

3. PEyAzhwAr.............................Thiru Mayilai

4. Thirumazhisai AzhwAr..............Thirumazhisai

5. NammazhwAr .........................Thiruk Kurugoor,

6. Mathura kavi AzhwAr................Thiruk kOLoor

7. PeriyAzhwAr.............................Sreevillipuththoor

8. ANdAL nAchiyAr.......................Sreevillipuththoor

9. KulasekarAzhwAr...............
.......Malai NAdu

10. ThoNdar adipodi AzhwAr..........Thiru maNdangudi


11. Thiup PANAzhwAr....................Uraiyoor


12. Thirumangai AzhwAr.................Thiruk kuraiyaloor




 
bhagavathy bhaagavatam - skanda 11

11#15b. துர்வாசர்.

துர்வாசர் சென்றார் பித்ரு லோகத்துக்கு;
அர்க்ய, பாத்ய, ஆசமன, ஆசனம் தந்தனர்.

கூக்குரல் கேட்டது பித்ரு லோகத்தில் – அருகே
கும்பிபாக நரகத்தில் உழல்பவர்களிடமிருந்து!

பார்க்க விரும்பினார் நரகத்தைத் துர்வாசர்;
பார்த்தார் குனிந்து நரகத்தைத் துர்வாசர்.

சுகானந்தம் பெறத் தொடங்கினர் நரகவாசிகள்!
சுவர்க்க வாசிகள் போலக் கும்மாளம் இட்டனர்!

இசைத்தனர் இனிய இசைக் கருவிகளை;
வசந்தகால மலர்மணத் தென்றல் வீசியது.

வியப்படைந்தார் துர்வாசர் இம் மாற்றத்தால்!
வியப்படைந்தனர் கிங்கரர்கள், யமதூதர்கள்!

ஓடினர் யமனிடம் இந்த விந்தையைக் கூற!
நாடினான் யமன் நரகத்தை விடை காண!

திகைத்தான் சுவர்க்க வாசிகளிலும் – அதிக
சுகம் அனுபவிக்கும் நரக வாசிகளைக் கண்டு!

சுகம் நரகத்திலும் உண்டாகும் என்றால்
பயம் இன்றிப் பாவம் செய்வர் மனிதர்கள்!

சென்றனர் தேவர்கள் விஷ்ணுவுடன் கயிலை;
செப்பினர் பிறைசூடிப் பெருமானிடம் இதனை.

கூறினர் பிரானிடம் தாம் கண்ட விந்தையை;
கோரினர் தாம் கண்ட விந்தையின் காரணத்தை.

வெண்ணீறு அணிந்த பிரான் வெகுவாகச் சிரித்தார்.
விண்டார் “கண்ட விந்தையின் காரணம் திருநீறு” என!

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

11#15b. Sage DhurvAsa


Sage DhurvAsa went to the Pithru lokam once. He was welcomed with due honors and respect by the Pithrus. He heard pathetic cries from down below. It was from the hell called Kumbee BhAga and from the souls suffering there.

DhurvAsa wanted to have a glance at that Naraka. He looked at it from above the Hell. Suddenly everything in the Hell changed dramatically. The suffering souls became happy all of a sudden.

They were enjoying like the people in the Heaven. They played various musical instruments and danced. Breeze laden with the fragrance of the flowers embraced them gently.

Sage DurvAsa was surprised by these sudden changes. So also the Kinkaras and the Yama dhootAs. They ran to Yama Dharma to disclose this wonderful incident.

Yama was equally surprised. He ran to the Kumbee BhAga to know the reason. He could not find the reason why the people in a hell looked happier than the people in the heaven!

If there were joy and happiness in a hell, then men will have no fear of hell and will commit more sins more daringly. Yama got worried by this thought.

The DevAs went with Vishnu to meet Siva and told him of this strange incident. Siva laughed heartily and told them, “This miraculous change was caused by the holy Vibhooti!”

 
#4. ஆழ்வார்கள் வாழ்ந்த காலம் (பிறந்த ஆண்டு)

ஆழ்வார்கள் ................................ஆண்டு


1. பொய்கையாழ்வார்..................713 கி.பி.


2. பூதத்தாழ்வார்...........................713 கி.பி.


3. பேயாழ்வார்..............................713 கி.பி.


4. திருமழிசை ஆழ்வார்...............720 கி.பி.


5. நம்மாழ்வார் .............................798 கி.பி.


6. மதுரகவி ஆழ்வார் ...................800 கி.பி.


7. பெரியாழ்வார் ..........................767 கி.பி.


8. ஆண்டாள் நாச்சியார்...............785 கி.பி.


9. குலசேகர ஆழ்வார்...................844 - 883 கி.பி ஆட்சி செய்தார்

10. தொண்டரடிப்பொடி ஆழ்வார் -726 கி.பி.

11. திருப்பாணாழ்வார் .................781 கி.பி

12. திருமங்கையாழ்வார் ..............776 கி.பி.

#4. The year of birth / time period of the AzhwArs


1. PoigaiyAzhwAr........................713 A.D


2. BoothathAzhwAr.....................713 A.D


3. PEyAzhwAr.............................713 A.D


4. Thirumazhisai AzhwAr..............720 A.D


5. NammazhwAr ........................798 A.D


6. Mathura kavi AzhwAr...............800 A.D


7. PeriyAzhwAr...........................767 A.D


8. ANdAL nAchiyAr......................785 A.D


9. KulasekarAzhwAr's reign...............
.844 to 883 A.D

10. ThoNdar adipodi AzhwAr..............726 A.D


11. Thiup PANAzhwAr........................781 A.D


12. Thirumangai AzhwAr....................776 A.D


 
bhagavathy bhaagavatam - skanda 11

11#15c. பித்ரு தீர்த்தம்


“குனிந்து பார்த்த துர்வாசரின் விபூதி வாசனை
கலந்து சென்றது காற்றுடன் அந் நரகத்துக்கு!


அறிவீர் காரணம் இதுவே இந்த விந்தைக்கு!
மாறிவிடும் கும்பீபாகம் புனிதத் தீர்த்தமாக!


சுகம் பெறுவர் பித்ருக்கள் அதில் நீராடி;
மாறும் அதன் பெயர் பித்ரு தீர்த்தம் என்று.


உயர்வடையும் மூவுலகில் உள்ள அனைத்துத்
தூய புண்ணிய தீர்த்தங்களிலும் பித்ரு தீர்த்தம்.


செய்வர் பூஜை சிவலிங்கத்தை அமைத்து;
செய்வர் பூஜை தேவியையும் ஸ்தாபித்து.


புகழ் பெறும் இது மூன்று உலகங்களிலும்;
புகழ் பெறக் காரணம் ஆகும் தூய திருநீறு!”


இனிய குரலில் கூறினார் சிவபெருமான்;
பணிவோடு வணங்கிச் சென்றனர் தேவர்கள்.


எடுத்துரைத்தனர் யமனிடம் பிரான் கூறியதை;
எடுத்துரைத்தனர் யமனிடம் நீற்றின் பெருமை.


மகிழ்ந்தனர் பித்ருக்கள் புண்ணிய தீர்த்தமாடி;
மகிழ்ந்தனர் பித்ருகள் சிவன் உமையை பூஜித்து.


மூழ்கி எழுந்தனர் அப் புண்ணிய தீர்த்தத்தில்
முன்பு நரகத்தில் இருந்த பாவிகள் எல்லாம்.


பெற்றனர் புனித சரீரம், புண்ணிய பலன்கள்;
பெற்றனர் பத்திர கணங்கள் என்ற பெயரை!


அடைந்தனர் கைலாசம் பொன் விமானம் ஏறி;
அடைந்தனர் பித்ருக்கள் தீர்த்த குண்டத்தை.


நிர்மாணித்தனர் கும்பீபாகத்தைத் தொலைவில்;
நிர்மல விபூதி அணிந்தவர்கள் செல்லத் தடை!


திருநீற்றின் பெருமையை வெளிக் காட்ட
சிறந்த நிகழ்ச்சி இதைவிட வேறு எதற்கு?


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


11#15c. Pitru Theertham


Siva explained the reason for this strange incident to the Devas and Vishnu. “When sage DurvAsa bent down to look at the Hell Kumbee BhAga, the smell of his Vibhooti mixed with the air and got blown down towards the Hell.


Now the Hell Kumbee BhAga will get transformed into a holy theertham. The Pitrus will take a holy dip in the holy theertham which will get the name as ‘Pitru Teertham’.


This theertham will become more famous than all the other holy theertham in the three worlds. A Siva lingam will be established near it. The image of Devi Uma will also be established along with it. This will become a very holy theertham in the future”


The Devas took leave of Siva and told Yama the reason for this miraculous change. Everyone understood the greatness of the holy Vibhooti. The Pitrus were happy to have a holy dip in the theertham and worship Siva and Uma.


The souls who were suffering in Kumbee BhAga hell also took a holy dip in the theertham. And all their sins vanished. They got a divine body and good merits. They got the name as ‘Badra GanAs’. They reached KailAsa by getting into the vimAnams sent from Sivalokam.


A new Hell Kumbee BhAga was created far away from the Theertham. Also anyone wearing the holy Vibhooti was not allowed to go anywhere near it.


Can there be any better incident to bring out the greatness of the holy ash Vibhooti?




 
#4. முதல் மூன்று ஆழ்வார்கள்

முதல் மூன்று ஆழ்வார்கள், பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் என்னும் மூவருமே சித்தார்த்தி ஆண்டில், ஐப்பசி மாதத்தில், அடுத்து அடுத்த மூன்று நட்சத்திரங்களில் (திருவோணம், அவிட்டம், சதயம்) பிறந்தனர்.

மூவருமே நீர் நிலைகளில் முறையே பொற்றாமரை மலர், நீலோத்பல மலர், சிவப்பு அல்லி மலர் என்பவற்றின் மேல் அவதரிக்கின்றனர். இறைவனை அருளைப் பெறும் சமயம் வந்தவுடன் மூவரும் சந்திக்கின்றனர்.

சந்தித்த மூவரும் இறைவனைச் சிந்திக்கின்றனர்.
அதன் பின்னர்
அவனை வந்திக்கின்றனர். அதன் பின்னர் அவனையும் சந்திக்கின்றனர். அவன் அருளால் பாசுரங்கள் உருவாகிப் பிரவாகிக்கின்றன.

அந்தாதி என்னும் வகையில் நூறு, நூறு அழகிய வெண்பாக்களைக் கொண்டு அமைகின்றன. இவைகளே முதலாம் திருவந்தாதி, இரண்டாம் திருவந்தாதி மற்றும் மூன்றாம் திருவந்தாதிகளாக உருவெடுக்கின்றன.

"கண்டவர் விண்டிலர். விண்டவர் கண்டிலர்" என்பது வழக்கு. ஆனால் இந்த மூன்று ஆழ்வார்களுமே இறைவனைக் கண்டும், அது பற்றி விண்டும் சிறந்துள்ளனர்

#5. The first three AzhwArs

The first three AzhwArs namely Poigai AzhwAr, Boothathu AzhwAr and PEyAzhwAr were born in the year named SidhdhArthi, in the month named Aippasi, on three consecutive days, with the stars ThiruvONam, Avittam and Sadhayam respectively.

All these three AzhwArs were born on flowers in the water bodies - without the association of any human beings. They were born respectively on a Golden lotus, a blue lotus and a red alli flower. They meet one another when the time is ripe for them to get the grace of God.

The three AzhwArs meet and talk about the greatness of God. They praise Him and then they actually get to see Him among them. Poems flow out of their mouth like flowing streams of words. They sing The First, The Second and The Third ThiruvandhAdhi respectively.

Andhadhi is a poetic form in which the last word of the previous poem forms the first word of the succeeding poem. Each of these Andhadhis consist of one hundred verses.

There is saying which goes thus: One who has seen God will not talk about it. One who talks about it has not seen God. But these three AzhwArs both saw God and also spoke about it to the others.





 
bhagavathy bhaagavatam - skanda 11

11#15d. திருநீற்றுப் பதிகம்

மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திர மாவது நீறு சமயத்தில் உள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திருவால வாயாந் திருநீறே…. (1)


வேதத்தில் உள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு
போதந் தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு
ஓதத் தகுவது நீறு உண்மையில் உள்ளது நீறு
சீதப் புனல்வயல்சூழ்ந்த திரு ஆலவாயான் திருநீறே…. (2)


முத்தி தருவது நீறு முனிவர் அணிவது நீறு
சத்திய மாவது நீறு தக்கோர் புகழ்வது நீறு
பத்தி தருவது நீறு பரவ இனியது நீறு
சித்தி தருவது நீறு திருவால வாயான் திருநீறே…. (3)


காணஇனியது நீறு கவினைத் தருவது நீறு
பேணிஅணிபவர்க்கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு
மாணந் தகைவது நீறு மதியைத் தருவது நீறு
சேணந் தருவது நீறு திருஆல வாயான் திருநீறே…. (4)


பூச இனியது நீறு புண்ணிய மாவது நீறு
பேச இனியது நீறு பெருந்தவத் தோர்களுக் கெல்லாம்
ஆசை கெடுப்பது நீறு அந்தம தாவது நீறு
தேசம் புகழ்வது நீறு திருஆல வாயான் திருநீறே….(5)


அருத்தம தாவது நீறு அவலம் அறுப்பது நீறு
வருத்தம் தணிப்பது நீறு வானம் அளிப்பது நீறு
பொருத்தம தாவது நீறு புண்ணியர் பூசும் வெண்ணீறு
திருத்தகு மாளிகை சூழ்ந்த திருவால வாயான் திருநீறே….(6)


எயிலது அட்டது நீறு இருமைக்கும் உள்ளது நீறு
பயிலப் படுவது நீறு பாக்கியமாவது நீறு
துயிலைத் தடுப்பது நீறு சுத்தமதாவது நீறு
அயிலைப் பொலிதரு சூலத்து ஆலவாயான் திருநீறே….(7)


இராவணன் மேலது நீறு எண்ணத் தகுவது நீறு
பராவண மாவதுநீறு பாவம் அறுப்பது நீறு
தராவணம் ஆவது நீறு தத்துவ மாவது நீறு
அராவணங் கும்திரு மேனி ஆலவா யான்திருநீறே….(8)


மாலொடு அயனறி யாத வண்ணமும் உள்ளது நீறு
மேலுறை தேவர்கள் தங்கள் மெய்யது வெண்பொடி நீறு
ஏல உடம்பிடர் தீர்க்கும் இன்பந் தருவது நீறு
ஆலம துண்ட மிடற்றெம் ஆலவாயான் திருநீறே….(9)


குண்டிகைக் கையர்க ளோடு சாக்கியர் கூட்டமும் கூடக்
கண்திகைப் பிப்பது நீறு கருத இனியது நீறு
எண்திசைப் பட்ட பொருளார் ஏத்தும் தகையது நீறு
அண்டத் தவர்பணிந் தேத்தும் ஆலவாயன் திருநீறே….(10)


ஆற்றல் அடல்விடையேறும் ஆலவாயான் திருநீற்றைப்
போற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞானசம் பந்தன்
தேற்றித் தென்னன் உடலுற்ற தீப்பிணி யாயின தீரச்
சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே….(11)


https://youtu.be/VlbE5j3-lHc?t=89

Attachments area

Preview YouTube video மந்திரமாவது நீறு


மந்திரமாவது நீறு










 
#5. ஆழ்வார்கள்

#5. மூவரின் வினோத சந்திப்பு

திருக்கோவிலூர் வந்தடைந்த பொய்கையாழ்வார் அங்கு மிருகண்டு முனிவரின் ஆசிரமத்தில் உள்ள ஒரு சிறு இடைக்கழியில் தங்கி இருந்தார். பூதத்தாழ்வாரும் அங்கு தங்க இடம் தேடி வந்தார்.

“ஒருவர் படுக்கலாம். இருவர் இருக்கலாம் ” என்று இருவரும் அங்கிருந்தனர். பிறகு பேயாழ்வாரும் அதே சமயம் அங்கு இடம் தேடி வந்தார். “ஒருவர் படுக்கலாம். இருவர் இருக்கலாம்.மூவர் நிற்கலாம்” என்று மூவரும் நின்று கொண்டிருந்தனர்.

மூவரும் பெருமானின் அருமை பெருமைகளைப் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அதைக் கேட்பதற்குப் பெருமானும் அங்கே வந்து விட்டார். இருளில் தங்களை அவ்வண்ணம் நெருங்குவது யார் என்று தெரியவில்லை.

பொய்கையாழ்வார் தொடங்குகின்றார் அந்தாதியை.


“வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காகச் – செய்ய
சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை
இடர்ஆழி நீங்குகவே என்று”


அதைத் தொடர்ந்து பூதத்தாழ்வார் பாடுகின்றார்


“அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா – நன்புருகி
ஞானச் சுடர் விளக்கேற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ் புரிந்த நான்”


இவர்கள் ஏற்றிய விளக்கொளியில் பெருமானைக் கண்டார் பேயாழ்வார்.

“திருக் கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழு
மருக்கனணி நிறமுங் கண்டேன் செருக்கி ளரும்
பொன்னாழி கண்டேன் புரி சங்கங் கைக் கண்டேன்
என்னாழி வண்ணன் பாலின்று” என்று பேயாழ்வார் பாடினார்.


ஞானம், பக்தி, வைராக்கியம் கொண்டு துறவறம் பூண்ட இம்மூவரும் இறைவனுக்குத் தொண்டு புரிந்தனர் .


ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்


#5. The unusual meeting of the first three AzhwArs


Poigai AzhwAr reached Thiruk koviloor and was resting in a very narrow area in the ashram of Mrugandu maha rishi (Some others say it was in the local temple of Vishnu)


After some time Boothathu Azhwar came to him seeking some place to rest. The two AzhwArs shared the available space and sat down. Now PEyAzhwAr also came there. They had to share the available space by standing up.


As they were discussing the greatness of God, they felt a fourth person squeezing tightly among them. Then the first and second Azhwars light up lamps. The third AzhwAr saw God in that light.


Now streams of words flow out in a beautiful poetic form from the three AzhwArs. They sing Thiru Andhadhis consisting of one hundred poems each. Their works are known as The First, The Second and The Third Thiru Andhadhi.


In an Andhadhi the last word of the previous poem forms the first word of the following poem. So every poem starts with the same word in which the previous poem had ended.



 
bhagavathy bhaagavatam - skanda 11

11#15e. ஊர்த்வ புண்ட்ர விதிகள்

எடுக்க வேண்டும் நாமம் இடும் திருமண்ணை
கடற்கரையிலிருந்து, சிவத் தலங்களிலிருந்து;

மலைச் சிகரங்களிலிருந்து, நதிக் கரையிலிருந்து;
துளசியின் வேரில் இருந்து, புற்றுக்களில் இருந்து.

தரும் கருப்பு நிற மண் மனச் சாந்தியை;
தரும் சிவப்பு நிற மண் நல்ல வசீகரத்தை;

தரும் பொன்னிற மண் சிறந்த சம்பத்தை;
தரும் வெண்ணிற மண் சிறந்த தர்மத்தை.

தொடக் கூடாது நகத்தால் திருமண்ணை;
இடலாம் இதை அழகிய பல வடிவங்களில்.

தீபம், மூங்கில் இலை, தாமரை மொட்டு,
மச்சம், கூர்மம், சங்கு போன்ற வடிவில்!

உத்தமம் ஆகும் பத்து அங்குலம் இடுவது;
மத்யமம் ஆகும் 9,8,7,6 அங்குலம் இடுவது.

அதமம் ஆகும் 4, 3, 2 அங்குலம் இடுவது – தரும்
அதிக பாபம் திருமண்ணே இடாமல் இருப்பது.

பன்னிரண்டு திருநாமங்களை உச்சரித்த வண்ணம்
பன்னிரண்டு நாமங்களை இடவேண்டும் உடலில்.

தரும் தூய்மை திருமண் இடுவது – அதில்
இருப்பர் விஷ்ணு, லக்ஷ்மி இடைவெளியில்.

சந்து விடாமல் புண்டரம் தரித்துக் கொள்வது
சமம் ஆகும் அவர்களை விலக்கி வைப்பதற்கு.

புண்டரம் தரிக்காமல் செய்யும் கர்மங்கள்
வீணாகிப் போய்விடும் வைஷ்ணவர்களுக்கு.

இடக் கூடாது திரிசூலம், லிங்கம், சந்திரப்பிறை.
இடக் கூடாது திருமால் போன்ற வடிவங்களை.

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

11#15e. Oordhva PuNdram

The red soil required for marking the Oordhva PuNdram is to obtained
from the crests of hills, the banks of the rivers, the Siva Kshetras, the ocean beaches, the ant-hills or from the roots of the Tulasi plants. The soil for Oordhva puNdram is not to be taken from any other place.

The black colored soil gives peace of mind, the red-coloured soil endows the person’s physical attractiveness ; the yellow-coloured soil increases his prosperity and the white-coloured soil gives better religious disposition.

The Oordhva puNdra is to be drawn with the fingers, taking care to make sure that the nails do not touch the marks. The shape of the vertical mark can resemble a flame or a lotus bud, or the leaf of a bamboo, or a fish, or a tortoise or a conch-shell.

A mark ten inches long is the best. Marks 9 / 8 / 7 / 6 inches are good but length lesser than that is not good. The twelve NAmAs of Vishnu must be uttered while marking the twelve NAmams (holy marks) on the body.

Vishnu and Lakshmi reside in the gap in the Oordhva puNdram. So care must be taken to make sure that there are gaps between the three lines. The karmas performed without marking the Oordhva puNdram will go in waste.

One must avoid using the shapes of Trisoola, Sivalinga and crescent moon.


 
ஆழ்வார்கள் வரலாறு

01. பொய்கையாழ்வார்


ஆவார் முதல் மூன்று ஆழ்வார்களில் முதல்வர் – இவர்
அவதரித்தார் திருவோண நாளில் ஏழாம் நூற்றாண்டில்.


ஆயிற்று இவர் பிறந்த பொய்கையே இவரது பெயராக;
ஆவார் இவர் திருமாலின் திருச் சங்கின் அம்சம் என்பர்.


அவதரித்தார் விஷ்ணு காஞ்சியில் யதோத்தகாரியின்
ஆலயத்தில் பொய்கை நீரில் பொற்றாமரையின் மீது.


அந்தாதிகளாக அமைந்தன இவர் பாடிய பாசுரங்கள்.
ஆயிற்று முதல் திருவந்தாதி அழகிய மலர்மாலையாக.


அமைந்துள்ளன அழகிய நூறு பாசுரங்கள் இந்நூலில்;
அமைந்துள்ளது இறைவனுக்கு உரிய பாமாலையாக.


விவரிக்கின்றார் விஷ்ணுவின் பத்து அவதாரங்களை;
விளங்குகின்றார் இவர் பாஞ்சஜன்யத்தின் அம்சமாகவே.


போற்றுகின்றார் திருமாலையே சிறந்த தெய்வமாக;
போற்றுகின்றனர் இவரைக் கவிஞர் தலைவனாக.


அர்ப்பணித்தார் தன்னையே திருமால் தொண்டுபுரிய;
அனைத்தும் கற்றுத் தேர்ந்தார் திருமாலின் அருளால்.


ஆன்மாவின் தன்மை இறைவனுடன் சென்று ஒன்றுவது.
ஆன்மா துயருறுவது இறைவனைப் பிரிந்து இருப்பதால்.

“உளன்கண்டாய் நன்னெஞ்சே – உத்தமன் என்றும்
உளன்கண்டாய், உள்ளூவா ருள்ளத் – துளன்கண்டாய்,
வெள்ளத்தி னுள்ளானும் வேங்கடத்து மேயானும்,
உள்ளத்தி னுள்ளனென் றோர்".


“ஸ்ரீ பொய்கையாழ்வார் திருவடிகளே சரணம் “


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


01. Poigai AzhwAr


Poigai AzhwAr is one of the first three AzhwArs. In fact he is considered as the first among the twelve AzhwArs. He was born in the Seventh Century. He is considered to be the amsam of PAncha janyam – the divine conch of Lord Vishnu.


He was born on a golden lotus in the pond attached to the YathOkthakAri temple in Vishnu Kanchi. The hundred verses sung by him as an andhadi consisting of 100 veNpA is the First Thiruvandhadhi.


His work describes the ten avatArs of Vishnu. He praises Vishnu to be the best among Gods. He himself is considered as the best among poets.


He learned all he knew by the grace of Vishnu. He devoted himself to serve the cause of Vishnu. He believed that Athma suffers since it got separated from God. The aim of every Athma is to merge with God once again.

 
bhagavathy bhaagavatam - skanda 11

11#16. சந்தியா வந்தனம்

சந்திகள் மூன்று வகைப்படும் ஒரு நாளில்;
பிராதாஸ், மத்யான, சாயங்கால சந்திகள்.


பிராதாஸ் சந்தி செய்யத் தகுந்த காலம் இது:
உத்தமம் நட்சத்திரங்கள் தெரியும் சமயம்;


மத்யமம் நட்சத்திரங்கள் தெரியாத சமயம்;
அதமம் சூரியம் தோன்றும் சமயம் என்பர்.


மத்யான சந்தி செய்ய வேண்டிய சமயம்
உச்சி வானில் சூரியன் இருக்கும் சமயம்.


சாயங்கால சந்தி செய்யும் சமயம் இது:
உத்தமம் சூரியன் தென்படும் சமயம்;


மத்யமம் சூரியன் அஸ்தமிக்கும் சமயம்;
அதமம் நட்சத்திரங்கள் தோன்றும் சமயம்.


வேதியனுக்கு விருக்ஷத்தை ஒப்பிட்டால் – அவன்
வேர்கள் ஆகும் செய்யும் சந்தியா வந்தனங்கள்.


கிளைகள் ஆகும் மதிக்கும் நான்கு வேதங்கள்;
இலைகள் ஆகும் வேதங்கள் கூறும் கர்மங்கள்.


வேர் அறுபட்டால் விழுந்து விடும் விருக்ஷம்!
வேரைக் காக்க வேண்டும் விருக்ஷத்தைக் காக்க!


செய்ய வேண்டும் சந்தியா வந்தனம் உரிய சமயங்களில்;
செய்ய வேண்டும் பிராயச் சித்தம் நேரம் தவறிவிட்டால்.


செய்ய வேண்டும் சூரியோதயத்துக்கு மூன்று நாழிகை முன்பு;
செய்ய வேண்டும் சூரியாஸ்தமனத்துக்கு மூன்று நாழி முன்பு;


சாதாரணம் வீட்டில் செய்யும் சந்தியா வந்தனம்;
மத்யமம் பசுத் தொழுவத்தில் செய்யும் வந்தனம்;


உத்தமம் ஆற்றங்கரையில் செய்வது – அதிலும்
உத்தமம் தேவியின் ஆலயங்களில் செய்வது.


வேதியர்களுக்கு மேலான தெய்வம் தேவியே!
தேவி காயத்ரீயின் உபாசனையே நிலையானது!


சகல வேத சாரம் காயத்ரீயின் உபாசனையே!
சகலரும் சாக்தரே காயத்ரீ உபாசனையால்!


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


11#16. SandhyA Vandanam

There are three Sandhis during a day – one in the morning, one at noon and one in the evening. The best time to do the SandhyA Vandanam in the Morning is when the stars are still visible. The second best time is when the stars disappear. The third best time is when the Sun rises.


The SandhyA Vandanam at noon must be done when the Sun is at its highest position. The SandhyA Vandanam in the evening must be done when the Sun has not yet set. The second best time is when the Sun just sets. The third best time is when the stars appear.


If a brahmin can be compared to a tree then SandhyA Vandanam forms the roots of the tree; The four VedAs form the branches of the tree and the KarmAs prescribed by the VedAs form the leaves of the tree. If the roots get cut, the tree gets uprooted. So to keep the tree alive, its roots must be tended to.


SandhyA Vandanam must be done at the appointed time. If the time is not maintained, the prAyachittham must be done. The right time for doing the SandhyA Vandanam is three NAzhigai (72 minutes) before the Sunrise in the morning and before the Sunset in the evening.


The Sandhya Vandanam performed in the house is ordinary, that which is performed in the cow shed is better and that which is performed in the river banks or in the temples of Devi is the best.


But the Sandhya Vandanam performed in the temple of Devi is the best among the best. GAyatree Devi worship has been prescribed for the Brahmins.

GAyatree Devi worship is the essence of all the VedAs. All the brAhmins are ‘SAkthA’s since they worship Shakti Devi.




 
ஆழ்வார்கள் வரலாறு

02. பூதத்தாழ்வார்

வழங்கப்படுகின்றார் இவர் இரண்டாவது ஆழ்வாராக;
வாழ்ந்தார் கடல் மலையில் ஏழாம் நூற்றாண்டில்.


அவதரித்தார் அழகிய நீலோத்பல மலர் ஒன்றின் மீது
அவிட்ட நட்சத்திரத்தில் ஐப்பசி மாதத்தில் சித்தார்தியில்.


ஆவார் முதல் மூன்று ஆழ்வார்களில் இரண்டாமவர்;
ஆவார் கௌமோதகி என்னும் கதாயுதத்தின் அம்சம்;


அமைத்தார் இரண்டாம் திருவந்தாதியை பூதத்தாழ்வார்;
அமைத்தார் அதனை அழகிய நூறு வெண்பாக்களால்;

“அருள் புரிந்த சிந்தை அடியார்மேல் வைத்து
பொருள் தெரிந்து காண்குற்ற அப்போது இருள் திரிந்து
நோக்கினேன் நோக்கி நினைந்தேன் அது ஒண் கமலம்
ஓக்கினேன் என்னையும் அங்கு ஓர்ந்து”


ஸ்ரீ பூதத்தாழ்வார் திருவடிகளே சரணம்


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


02. BoothathAzhwAr


BoothathAzhwAr is considered to be the second among the twelve AzhwArs. He was born in Kadal Mallai, on a blue lotus, one day after Poigai AzhwAr was born. He is considered to be the amsam of Vishnu’s mace Koumodhaki.


The one hundred verses sung by him in the form of an andhadhi is the Second Thiruvandhadhi. He devoted himself to the cause of Vishnu. The first three Azhwars (Poigai AzhwAr, BoothathAzhwAr and PEyAzhwAr) were ascetics steeped in their devotion to Vishnu.



 
Bhagavathy bhaagavatam - skanda 11

11#17. செய்யக் கூடாதவை

பூஜிக்கக் கூடாது விஷ்ணுவை அக்ஷதையால்;
பூஜிக்கக் கூடாது வினாயகரைத் துளசியால்;

பூஜிக்கக் கூடாது துர்க்கையை
அருகால்;
பூஜிக்கக் கூடாது சிவனைத் தாழம்பூவால்

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

11#17. These are forbidden

Vishnu must not be worshiped with Akshatha.
VinAyakA must not be worshiped with Tulasi.
DugA Devi must not be worshiped the Arugu.
Siva must not be worshiped with THAzham poo.
 

Latest posts

Latest ads

Back
Top