• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

A poem a day to keep all agonies away!

SEkkizhArin Periya PurANam

#58. திரு பத்தராய்ப் பணிவார்

பக்தியும், அருந்தவமும் உடைய தொகையடியார்
'பத்தராய்ப் பணிவார்கள்' என்ற பெயர் பெறுவர்.

விடையியேறும் ஈசனின் திருவடி பேணுபவர் இவர்கள்;
உடல் பூரித்து பக்தியில் மூழ்கி விடுபவர்கள் இவர்கள்;

அனைத்தையும் அர்ப்பணிப்பர் அரன் திருவடிகளுக்கே;
ஆறாக காதல் கொள்வர் அரனடி பணியும் அடியவரிடம்;

விரும்ப மாட்டார்கள் புகழையும், புண்ணியத்தையும்;
விரும்ப மாட்டார்கள் பக்தியைத் தவிர வேறு எதுவும்.

சிந்தை மகிழ்வர் சிவன் புகழ்மொழிகள் செவிமடுத்து;
சிந்தையைச் செலுத்துவர் சிவன் திருப்பணிகள் மீது ;

தகுதி வாய்ந்தவர்கள் அரனடி சேர்ந்திட இவர்கள்;
தகுதி வெளிப்படும் அன்பின் கண்ணீர் அருவியாக.

இருந்தாலும், கிடந்தாலும், நின்றாலும், நடந்தாலும்,
துயின்றாலும், விழித்தாலும் மறவார் அரனடிகளை .

"பத்தராய்ப் பணிவார் எல்லார்க்கும் அடியேன்"

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#58. BaktharAip paNivArgaL (The staunch devotees)

These staunch devotees possess bakthi (devotion) towards Lord Siva and lead a life full of vrathams (austerities or self imposed restraints). These people worship Lord Siva with their thoughts, words and deeds.

They immerse themselves in the sea of devotion to Siva. They are ready to offer everything they possess to Siva. They have deep regard and love to the other devotees of Siva.

They do not care for fame or a name or good merits. They do not care for anything except their love to Lord Siva. They go in ecstasy by listening to the glories of Siva.

They are always seriously committed to their chosen tasks to help the other devotees of Siva. These people are all well qualified to merge with Lord Siva. Their qualification would be expressed as the copious tears they flow due to their love to Siva.

Whether they are seated or are lying down, standing or are walking, sleeping or are wide awake their mind is always centered on the lotus feet of Lord Siva.


 
bhagavathy bhaagavatam - skanda 11

11#6b. கழுதைக்கு முக்தி

திரிந்து கொண்டிருந்தது ஒரு கழுதை
விரும்பியபடி விந்தியமலைச் சாரலில்.


கண்டான் இதை ஒரு வணிகன் – உபயோகித்துக்
கொண்டான் கழுதையைத் தன் வணிகத்துக்கு.


ஏராளமான மூட்டைகளில் ஏற்றினான் அவன்
தாராளமாகப் பாரமான ருத்திராக்ஷ மணிகளை.


தள்ளாடியது கழுதை பாரம் தாங்க முடியாமல்;
மெல்ல மெல்ல முயன்றும் முடியவே இல்லை.


விழுந்து விட்டது கழுதைத் தரையில்;
இழந்து விட்டது இன்னுயிரை வீணே!


இறந்தது வீணாகவில்லை அதற்கு – ஒரு
சிறந்த சிவஸ்வரூபம் கிடைத்து விட்டது!


தந்தது சிவஸ்வரூபம் சிவலோகப் பதவியை;
தந்தன ருத்திராக்ஷங்கள் சிவலோகப் பதவியை.


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


11#6b. Liberation of a mere donkey


A donkey was roaming on the slopes of Vindhya mountain. A merchant saw it and used it for carrying his load of RudrAksha. The donkey was overloaded so much so that it could not carry it. The donkey struggled a lot, fell down and died.

But its death was not in vain! It obtained the swaroopam of Siva himself. It reached the abode of Siva and lived there – just because it was made to carry the load of RudrAksha by the unkind merchant.




 
SEkkizhArin Periya PurANam

59. திரு பரமனையே பாடுபவர்

'பரமனையே பாடுவர்' என்னும் தொகையடியார்
அரன் புகழ் பாடிப் பாடிப் பரவசம் எய்தும் அடியார்.

தென் மொழியிலும், தொன்மொழியிலும் பாடுவர்;
திசை மொழிகளிலும் பாடுவார்கள் பரமன் புகழை.

"பிறவியின் பயன் அரனடி சேருவதே" என்பர் இவர்;
நெறி வழுவாது நின்று பரமன் புகழ் படுபவர் இவர்;

"மன்றில் ஆடும் ஈசன் ஒருவனே தர வல்லவன் நமக்கு
மாறாத பேரின்ப நிலையை" என்று உள்ளம் உருகுபவர்

"பரமனையே பாடுபவர் அடியார்க்கும் அடியேன்"

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
#59. Paramanaiye pAdubavar ( Those who sing Lord's glories)

These are the people find bliss in singing the glories of their Lord. They may sing in Thamizh or Sanskrit or in any other regional language. But the theme of their song is always the glory of Lord Siva.

They firmly believe that "The purpose of human life is to merge with Lord's lotus feet". They also believe that "Only Lord Siva can liberate us from the shackles that bind us to the worldly things and bestow on us the eternal bliss."



 
bhagavathy bhaagavatam - skanda 11

11#6c. குணநிதி

வேதங்கள் கற்றுத் தேர்ந்தவன் கிரிநாதன் – அவ்
வேதியனின் மகன் அழகிய இளைஞன் குணநிதி.

உருவமும், பருவமும் கொண்டிருந்தான் அவன்;
இருந்தான் யாகம் செய்கின்ற ஒரு தீக்ஷிதனாக.

குணநிதியின் குருநாதர் சுதீஷ்ணர் – அவரது
குணமில்லா மனைவியே அழகிய முக்தாவளி.

மயக்கினான் குரு பத்தினியை குணநிதி;
மயங்கியவள் கொண்டாள் உடலுறவும்.

பயமின்றி உறவாட முடியவில்லை – எனவே
பயங்கர விஷத்தைத் தந்தான் தன் குருவுக்கு.

குலாவினான் அச்சமின்றி குரு பத்தினியுடன்;
குலைத்தான் தன் குலப்பெருமையை குணநிதி!

துன்புற்றனர் இதை அறிந்த அவன் பெற்றோர்.
கொன்றான் அவர்களைக் கொடிய விஷத்தால்.

அழிந்தது சேர்த்திருந்த செல்வம் – குணநிதி
அந்தணர் இல்லங்களில் களவாடலானான்;

மது அருந்தினான்; மமதை கொண்டான் – யாரையும்
மதிக்காமல் திரிந்தான் தன் மனம் போன போக்கில்!

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

11#6c. GuNanidhi

GirinAthan was a Brahmin well versed in The Vedas. GuNanidhi was his son who was young and very handsome. He was a dheekshit who performed YAgAs and YagnAs.

SudheeshNan was GuNanidhi’s guru and MuktAvaLi was the pretty and unchaste wife of his guru. She got infatuated by the youth and beauty of GuNanidhi and had an affair with the student of her husband – who was technically like a son to her.

They could not operate freely due to fear of being discovered by SudheeshNan. So GuNanidhi poisoned his own guru. He had no fear of anyone now and enjoyed with his guru’s wife freely.

His parents came to know about this illicit affair and felt ashamed of his behaviour. He poisoned them also in order to silence them.

The accumulated wealth had dwindled down to nothing. So he started stealing from the house of Brahmins. He took to intoxicating drinks and did not care about anyone or anything anymore!
 
SEkkizhArin Periya PurANam

#60. சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்

சித்தத்தைச் சிவன்பாலே வைத்த தொகையடியார்
சித்தத்தில் பிற நினைவுகளைத் தடுக்க வல்லவர்.

கடந்து நிற்பார் இவர்கள் தத்துவ நெறிகளை எல்லாம்;
தொடர்ந்து நிறுத்துவார் மனத்தை மேலான நிலையில்;

கட்டுப்படுத்துவர் தம் சித்தத்தைச் சிறிதும் சிதறாமல்;
கட்டுண்டு நிற்பார் ஈசனின் நேசம் என்னும் தளையில்;

இம் மகான்களை இனம் கண்டு கொண்டு போற்றுவதே
இம்மையில் மனிதன் அடையக் கூடிய பெரும் பேறாகும்.

"சித்தத்தைச் சிவன்பால் வைத்தார்க்கும் அடியேன் "

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

60. Those who remain focused on Lord Siva

These people always remain focused on Siva and can control their thoughts from diverting to any other subject or person. They have transcended everything that is worldly.

They always remain at a higher state of consciousness. They have perfect control of their mind. The only thing that can affect them is their intense and immense love for Siva.

Recognizing such great persons and worshiping them is the supreme blessing anyone can get in this birth.
 
bhagavathy bhaagavatam - skanda 11

11#6d. வழிப்பறி

துரத்தி விட்டனர் அவர்களைக் காட்டுக்கு;
துவளவில்லை அவர்கள் வனவாசத்தால்.

வழிப்பறி செய்தான் வழிப் போக்கர்களிடம்;
வாழ்வாதாரம் ஆகிவிட்டது இந்த வழிப்பறி.

முடிந்து போனது குணநிதியின் ஆயுட்காலம்;
மடிந்து வீழ்ந்தான் காட்டில் ஒரு மரத்தருகே!

வந்தனர் யம கிங்கரர்கள் ஒரு புறம்,
வந்தனர் சிவ கணங்கள் மறு புறம்.

வாக்குவாதம் நடந்து குழுக்களிடையே!
வாதித்தனர் சிவகணங்கள் தம் கட்சியை!

“மாண்டான் இவன் ஒரு மரத்தருகில்;
ஆண்டவனின் ருத்திராக்ஷ மரம் அது.

காற்றுப் பட்டாலே அழிந்து விடும் பாவங்கள்;
மாற்றுக் கருத்துக்கு இடமில்லை!” என்றனர்.

திவ்விய சரீரம் தந்தனர் குணநிதிக்கு;
திவ்விய விமானம் ஏறிச் சென்றான்!

குருஹத்தி, பிரம்மஹத்தி தோஷங்கள் அழிந்தன
அருகில் இருந்த ருத்திராக்ஷ மரத்தின் காற்றால்!

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

11#6d. Banished to a forest!


When all these secrets became public, the people drove out GuNanidhi to a nearby forest. He was unruffled by being banished. He started looting the wayfarers and made it his mode of living.

One fine day his life ended and he fell dead in the forest near a tree. The Yama KinkarAs came to take him to the hell. The Siva GaNAs came to take him to Siva lokam.

There was an argument between the two groups as to where GuNanidhi had to be taken now. The Siva GaNAs said,

“This man had died near a RudrAksha tree. The air from the tree has destroyed all the sins committed by this man. So he must go to Siva lokam. There is no second opinion in this matter!”

They gave GuNanidhi a beautiful form and a vimAnam came down to take him to Siva lokam. All the sins committed by GuNanidhi including the brahma hatthi and guru hatthi had been removed by the proximity of the RudrAksha tree when he died.
 
SEkkizhArin Periya PurANam

#61. திருவாரூர் பிறந்தார்கள்

அருவம் ஆகி நிற்பவன் அரன் - அவனே
உருவம் ஆகியும் நிற்பவன் அல்லவா ?

"பிறப்பு திருவாரூரில்" என்னும் போதே - ஆவர்
பிறந்தவர்கள் சிறந்த சிவகணத்தைச் சேர்ந்தவர்.

ஞான வயல் ஆகும் திருவாரூர் திருத்தலம் - நாம்
மோன நிலையும், முக்தி நிலையும் அடைவதற்கு.

"திருவாரூரில் பிறந்தாலே போதும் - அதுவே
தரும் ஒருவருக்கு முத்தியை" என்பர் சைவர்.

'திருத் தொண்டத் தொகை'யைச் சுந்தரர் பாட
திருவாரூர் சிவனடியார்களே மூல காரணம்.

"உரைக்க இயலாதது" என்று சேக்கிழார் பெருமான்
உரைக்கின்றார் "திருவாரூர் பிறந்தவர்கள் சிறப்பை".

திருநாமத்தைப் போற்றி புகழ்வோம் நாம்
திருவாரூரில் பிறந்தவர்களின் புகழை.

"திருவாரூர் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன் "

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#61. The People born in ThiruvAroor

Lord Siva can exhibit Himself with an Uruvam ( a physical form) or as an Aruvam (without any physical form). The people who are fortunate enough to be born in ThiruvAroor invariably are the reincarnations of Siva GaNas.

ThiruvAroor is the field in which GnAnam (wisdom) grows. It bestows on us the supreme state of Silence (Monam) and liberation (Mukthi).

Saivaites firmly believe that Being born in ThiruvAroor is enough to obtain mukthi (liberation). The devotees of Siva who lived in ThiruvAroor were the main reason why Sundara moorthy nAyanaAr sang Thiruth thondath thogai which in turn was the cause of the birth of this great literary work called Periya PurAnam.

SekkizhAr states that it is impossible to enumerate the merits of the people born in ThiruvAroor. The least we can do is to honor those who were born in ThiruvAroor as the reincarnations of Siva GaNas.



 
bhagavathy bhaagavatam - skanda 11

11#7a. ருத்திராக்ஷ வடிவங்கள்

உத்தம ருத்திராக்ஷம் நெல்லிக்காய் அளவு;
மத்யம ருத்திராக்ஷம் இலந்தைக் கனி அளவு;


அதம ருத்திராக்ஷம் கடலையின் அளவு என
ஆன்றோர் பாகுபாடு செய்துள்ளனர் மணிகளை.


வெண்மை நிற ருத்திராக்ஷம் உரியது வேதியருக்கு;
செம்மை நிற ருத்திராக்ஷம் உரியது க்ஷத்திரியருக்கு;


பொன் நிற ருத்திராக்ஷம் உரியது வைசியருக்கு;
கருமை நிற ருத்திராக்ஷம் உரியது சூத்திரருக்கு.


முள்ளுடைய மணிகள் உத்தமம் ஆனவை.
முள்ளில்லாத மணிகள் மத்தியமானவை;


இயற்கையில் துவாரம் உள்ளவை உத்தமம்;
செயற்கை துவாரம் உள்ளவை மத்தியமம்.


அணிய வேண்டும் சிகையில் ஒன்றே ஒன்று;
அணிய வேண்டும் சிரசில் முப்பத்து இரண்டு;


அணிய வேண்டும் கண்டத்தில் முப்பத்தாறு;
அணிய வேண்டும் மார்பில் ஐம்பது மணிகள்;


அணிய வேண்டும் ஒரு தோளில் பதினாறு;
அணிய வேண்டும் மணிக்கட்டில் பன்னிரண்டு;


அணிய வேண்டும் அரைப் பட்டிகையில் ஐம்பது;
அணிய வேண்டும் பூணூலில் நூற்றெட்டு மணிகள்.


அதமம் முப்பது மணிகள் அணிவது;
மத்யமம் ஐநூறு மணிகள் அணிவது;


உத்தமம் ஆயிரம் மணிகள் அணிவது;
எத்தனை அதிகமோ அத்தனை மேன்மை!


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


11#7a. The types of RudrAkshas


The best (uththamam) RudrAksha is of the size of a gooseberry. The second best
madhyamam) is of the size of a bear fruit and the third best (adhamam) is of the size of a peanut.


The white RudrAksha is suitable for the Brahmins. The red colored ones are fit for the KshatriyAs. The gold colored ones are fit for Vaisyas and the black RudrAkshas are fit for the fourth VarNa.


The seeds with a thorny exterior are the best and those with a smoother surface are not so good. The seeds which have a bore in the middle naturally are good and those which have been bored by man are the second best.


Only one RudrAksha is worn on the hair, thirty two are worn on the head; thirty six are worn on the neck; fifty are worn on the chest; sixteen are worn on the shoulder; twelve are worn on the wrist; fifty are worn on the waist; one hundred and eight are worn as a pooNool”


Wearing thirty RudrAkshAs is adhamam, wearing five hundred RudrAkshas is madhyamam and wearing one thousand RudrAkshas is utthamam.




 
SEkkizhArin Periya PurANam

#62. முப்போதும் திருமேனி தீண்டுவார்

சைவத்தின் அடிப்படை நூல்கள் ஆகும்
சிவன் அருளிய 28 ஆகமங்கள் என்பர்.

நடைபெறும் வழிபாடுகள் ஆகம விதிப்படி;
தடையின்றிச் செய்பவர் ஆதி சைவர்கள்.

முப்போதும் முக்கண்ணணை பூசிப்பர் - இவர்
எப்போதும் ஈசனின் நேசத்தில் ஆழ்ந்திருப்பவர்.

திருமஞ்சனம் செய்து, மலர் அணிவிப்பவர்களே,
திருமேனியைத் தீண்டும் உரிமையுடையவர்கள்.

லிங்க பூஜை செய்யும் அந்தணர்களின் புகழ்
இங்கு அங்கு என்னாதபடி உயர்ந்து நிற்கும்.

"முப்போதும் திருமேனி தீண்டுவார்க்கடியேன்"

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#62. Those who touch the Sivalingam thrice a day


Saivism is based on the twenty eight Siva Agamas given to us by Lord Siva Himself. The worship of Sivalingam is done as prescribed in these Agamas by Lord Siva Himself.

The persons who are eligible to worship Sivalingam are the Adhi Saivaites. They are people who are always immersed in their deep love for Siva.

Only they have the right and liberty touch the Sivalingam thrice a day in order to worship him. They perform the abhishekham and adorn the Sivalingam with flowers.

The praise of the brahmins who worship a Sivalingam will remain superior everywhere.

 
bhagavathy bhaagavatam - skanda 11

11#7b. ருத்திராக்ஷ மந்திரங்கள்

ஓத வேண்டும் ‘ஈசான’ மந்திரத்தை
சிரசில் ருத்திராக்ஷம் அணியும் போது;


ஓத வேண்டும் ‘தத் புருஷ’ மந்திரத்தை
காதில் ருத்திராக்ஷம் அணியும் போது;


ஓத வேண்டும் ‘அகோர’ மந்திரத்தை
நெற்றியில், இதயத்தில் அணிகையில்;.


ஓத வேண்டும் ‘வாம தேவ’ மந்திரத்தை
வயிற்றில் இம்மணிகளை அணிகையில்.


ஓத வேண்டும் ‘அங்க’ மந்திரங்களை முறையே
அங்கங்களில் ருத்திராக்ஷம் அணியும் போது


கோர்க்க வேண்டும் ருத்திராக்ஷங்களை
மூல மந்திரத்தை ஜபித்த வண்ணம்.


நீக்க வேண்டும் ருத்திராக்ஷம் அணிந்த ஒருவன்
மீன், இறைச்சி, வெங்காயம், பூண்டு, முருங்கை.


அணிய வேண்டும் ருத்திராக்ஷத்தை
கிரஹணம், அமாவாசை, பௌர்ணமி,


உத்தராயணம், தக்ஷிணாயனம் மற்றும்
விஷு சங்கிரமண காலங்களில் தவறாமல்.


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


11#7b. The RudrAksha MantrAs

EesAna mantra must be uttered while wearing the RudrAksha on the head.Tatpurusha mantra must be uttered while wearing the RudrAksham in the ears.


Aghora mantra
must be uttered while wearing RudrAksha in the forehead and the chest. VAmadEva mantra must be uttered while wearing RudrAksha on the waist.


Anga mantras
must be uttered while wearing RudrAksha in the various angas. The RudrAksha must by strung while uttering the moola mantra of the god to be worshiped.


One who wears RudrAksha must not eat fish, meat, onion, garlic and drumsticks.

The RudrAksha must be worn during eclipses, on the New Moon days, the Full Moon days and the Vishu SangramaNa times as well as the commencement of UttarAyanam and the DakshiNAyanam.



 
SEkkizhArin Periya PurANam

63. முழு நீறு பூசிய முனிவர்

சிவனடியார்கள் அணியும் சிவாம்ச சின்னங்கள்
தவ வெண்ணீறும், உருத்திராக்கங்களும் ஆகும்.

கற்பகம், அனுகற்பகம், உபகற்பகம் என்று
அற்புதமான திருநீறு மூன்று வகைப்படும்.

மூவகைத் திருநீறும் அணிபவர்கள் அறிவர்
முழுவதுமாகப் பிறவிப் பிணியை அகற்றிட.

நோயற்ற கன்றை ஈன்ற பசுவின் சாணத்தை
நேராகப் பெறவேண்டும் திருநீறு செய்வதற்கு.

பஞ்சாட்சரத்தை நெஞ்சில் நிலை நிறுத்தி
பஞ்சகவ்யம் விட்டு அதைப் பிசைய வேண்டும்

நெருப்பில் இட வேண்டும் சிவராத்திரியன்று
அரும் வேள்வி சிவமந்திரம் கொண்டு செய்து.

எரிந்துவிடும் சாணம் ஓமகுண்ட நெருப்பில்;
எரிந்து உருமாறிவிடும் தூய வெண்ணீறாக .

பக்தியுடன் எடுக்க வேண்டும் வெண்ணீற்றை
முக்தி தரும் இதுவே கற்பக வெண்ணீறு ஆம்.

அடவியில் கிடைக்கும் பசுஞ்சாணம் தரும்
அனுகற்பகம் என்ற வகைத் திருநீற்றை.

உபகற்பகம் என்னும் வகைத் திருநீறு ஆகும்
காட்டில், கொட்டிலில் எரிந்த பசுஞ்சாணம்.

அணியவேண்டும் திருநீற்றை விதி முறைப்படி;
அணியவேண்டும் திருநீற்றை உடல் முழுவதும்.

அணியக் கூடாது தூய்மையற்ற இடங்களில்;
அணியக் கூடாது அது கீழே சிந்தும் வண்ணம்.

"முழு நீறு பூசிய முனிவர்க்கும் அடியேன்"

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#63. Devotees smeared with vibhoothi


The external identifications of a devotee of Lord Siva are his Vibhoothi and RudrAkasham. Vibhoothi (the holy ash) can be classified into three different types namely Karpagam, anukarpagam and upakarpagam. Devotees who use any of these varieties can get liberated from the shackles of samsara.

Karpagam Vibhoothi is prepared in this manner. The fresh cow dung is collected directly from a cow which had given birth to a healthy calf. It is mixed thoroughly with the pancha gavyam chanting the Siva panhAkshara all the time.

A homam is performed honoring Siva and the mixed cow dung is thrown into the homa kuNdam. The next day the vibhoothi formed is removed from the kuNdam with due reverence. Anukarpagam is prepared in the same manner except that it is made out of the dried cow dung obtained from the forests.
Upakarpagam is the holy ash obtained from the jungle or the cow shed produced by wildfire. Vibhoothi must be smeared on one's body as per the prescribed rules. It must be smeared all over the body.

Vibhoothi must not be used in dirty places nor should it be dropped down or wasted while smearing it .
 
bhagavathy bhaagavatam - skanda 11

11#7c. ருத்திராக்ஷ ஸ்வரூபங்கள்

ஒரு முக மணி பரமாத்மாவின் ஸ்வரூபம்;
இரு முக மணி அர்த்த நாரீஸ்வர ஸ்வரூபம்;


மூன்று முக மணி அக்னியின் ஸ்வரூபம்;
நான்கு முக மணி பிரம்மனின் ஸ்வரூபம்;


ஐந்து முக மணி பஞ்ச பிரம்ம ஸ்வரூபம்;
ஆறு முக மணி ஆறுமுகனின் ஸ்வரூபம்;


ஏழு முக மணி சூரியனின் ஸ்வரூபம்;
எட்டு முக மணி அஷ்டவசு ஸ்வரூபம்;


ஒன்பது முக மணி யமனின் ஸ்வரூபம்;
பத்து முக மணி திக்தேவதை ஸ்வரூபம்;


பதினோரு முக மணி ஏகாதச ருத்ர ஸ்வரூபம்;
இதையே இந்திரனின் ஸ்வரூபம் என்பர் சிலர்;


பன்னிரண்டு முக மணி ஆதித்யரின் ஸ்வரூபம்;
இதையே விஷ்ணுவின் ஸ்வரூபம் என்பர் சிலர்;


பதிமூன்று முக மணி மன்மதனின் ஸ்வரூபம்;
பதினான்கு முக மணி ருத்ர மூர்த்தி ஸ்வரூபம்.


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


11#7c. The swaroopam of RudrAkshas


The RudrAksha with a single face is the swaroopam of ParamAtma. The RudrAksha with two faces is the Aardha NAreeswara swaroopam.


The RudrAksha with three faces is the Agni Swaroopam; The RudrAksha with four faces is Brahma swaroopam. TheRudrAksha with five faces is the Pancha Brahma swaroopam.


The RudrAksha with six faces is the ShaNmukha swaroopam. Some people say it is Ganesha swaroopam.The RudrAksha with seven faces is the swaroopam of The Sun.


The RudrAksha with eight faces is he swaroopam of Ashta Vasu. The RudrAksha with nine faces is the swaroopam of Yama Dharma. The RudrAksha with ten faces is the swaroopam of Dik DevatAs.


A RudrAksha with eleven faces is the swaroopam of EkAdasa Rudra. Some people say that this is the swaroopam of Indra.


The RudrAksha with twelve faces is the swaroopam of the DwAdasa Adithya. Some say it is the swaroopam of VishNu.


A RudrAksha with thirteen faces is the swaroopam of Manmatha and one with fourteen faces is the swaroopam of Rudra Moorthi Himself.




 
SEkkizhArin Periya PurANam

#64. திரு அப்பாலும் அடிசார்ந்தவர்

திருத்தொண்டத் தொகையில் அடங்காத சில பல
திருவருட் செல்வர்களே "அப்பாலும் அடிசார்ந்தவர்"

சேர்த்துள்ளனர் இத் தொகையில் சிவனடியார்களை,
வேறு மண்டலங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தால்.

அடிச் சார்ந்தவர் நாயன்மார்களுக்கும் முற்பட்டவர்கள்
அடிச் சார்ந்தவர்கள் ஆவர் அனைத்து சிவநேசர்களும்.

"அப்பாலும் அடிசார்ந்த அடியார்க்கும் அடியேன்"

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#64. The Other Devotees Of Lord Siva

This term includes the devotees of Lord Siva not enlisted in Sundara moorthi nAyanAr's Thiruth thondath thogai. The devotees of Siva who belong to the other regions are included in this. These devotees belong to a period prior to that of the nAyanArs. Anyone who was devoted to Siva can belong to this category.



 
Last edited:
bhagavathy bhaagavatam - skanda 11


11#7d. மணிகள் தரும் சித்திகள்

ஒரு முக ருத்திராக்ஷம் தரும் பரத்வம்;
இரு முக மணி தரும் ஈஸ்வரப் ப்ரீதி;

மூன்று முக மணி நீக்கும் ஸ்த்ரீ ஹத்தி தோஷம்;
நான்கு முக மணி தரும் சம்பத்து, தேக நலன்கள்;

நான்கு முக மணி தரும் மேலும் ஞானச் செல்வம்,
நான்கு முக மணி தரும் மற்றும் உடல் தூய்மை;

ஐந்து முக மணி தரும் ஈஸ்வரப் பிரீத்தி;
ஆறு முக மணி தரும் முருகனின் அருள்;

ஏழு முக மணி தரும் சம்பத்து, புனிதத் தன்மை;
ஏழு முக மணி தரும் மேலும் ஆரோக்யம், ஞானம்;

எட்டு முக மணி அணிபவனுக்குச் சித்திக்கும்
அஷ்ட வசுக்களின் மற்றும் கங்கையின் பிரியம்.

ஒன்பது முக மணி போக்கி விடும் யம பயத்தை;
பத்து முக மணி தரும் திக்தேவதையின் அருள்;

பதினோரு முக மணி தரும் சௌக்ய, சௌபாக்யம்;
பன்னிரண்டு முக மணி தரும் விஷ்ணுவின் பிரியம்;

பதிமூன்று முக மணி தரும் மன்மதனின் பிரியம்
தரும் சுகம், காம ஆற்றல், காம நிறைவுகளை.

பதினான்கு முக மணி தரும் தேக நலன்கள்-இது
அகற்றி விடும் அத்தனை விதப் பிணிகளையும்!

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

11#7d. The siddhis bestowed by RudrAksha

The RudrAksha with a single face confers Parathvam or Godliness. The RudrAksha with two faces bestows Eswara preeti. The RudrAksha with three faces removes the sthree haththi dosham.

The RudrAksha with four faces gives wealth, good health, wisdom and purity. The
RudrAksha with five faces confers Maheswara preeti. The RudrAksha with six faces bestows the grace of KArtikEya.

The RudrAksha with seven faces bestows wealth, purity, good health and wisdom. The RudrAksha with eight faces confers the blessings of Ashta vasuand Ganga Devi.
The RudrAksha with nine faces removes the fear of Yama Dharma. The RudrAksha with ten faces confers the grace of the Dik DevatAs.

The RudrAksha with eleven faces gives good fortune and a good life. The RudrAksha with twelve faces confers the blessings of Vishnu.

The RudrAkshawith thirteen faces bestows the grace of Manmatha. It gives pleasure, prowess, sexual energy and sexual satisfaction. The RudrAksha with fourteen faces removes all the diseases and bestows very good health.

 
SEkkizhArin Periya PurANam

#65a . திரு பூசலார் நாயனார் (1)

தோன்றினார் பூசலார் நாயனார் வேதியர் குலத்தில்,
தொண்டை மண்டலத்தில் திரு நின்றவூர் தலத்தில்.

கற்றுத் தேர்ந்தார் ஆகம, வேத, சாத்திரங்களை - உண்டு
கட்ட வேண்டும் சிவாயலம் ஒன்று என்னும் கனவு ஒன்று.

திரட்ட முடியவில்லை தேவையான செல்வத்தை - ஆனால்
விரட்டவும் முடியவில்லை அவரால் நெடுநாளைய கனவை!

"புறத்தே கட்ட முடியவில்லை தான் விருப்பிய ஆலயத்தை!
அகத்தே கட்டுவதற்குத் தடையும் உண்டோ?" எண்ணினார்.

கருவிகள், கரணங்களைச் சேகரித்தார் தம் கற்பனையில்;
கட்டத் தொடங்கினார் அகத்தில் ஆலயம் ஆகம விதிப்படி.

சிந்தை முழுவதும் நிறைந்திருந்தது ஆலயப் பணிகளால்;
எந்தைக்கு ஏற்றவாறு அதை அமைக்க வேண்டும் அல்லவா?

கர்ப்பகிரஹம், அலங்கார மண்டபங்கள், அழகிய ஸ்தூபிகள்,
அற்புதமான கோபுரம், திருக்குளம், திருக்கிணறு, திரு மதில்!

நாட்கள் பல நகர்ந்தன அகக்கோவில் அமைக்கும் பணியில்;
நாட்கள் நகர்வது போலப் புறக்கோவில் அமைக்கும் பணியில்.

கட்டிக் கொண்டிருந்தான் பல்லவ மன்னனும் அதே சமயம்
காஞ்சியில் அழகான கற்கோவில் ஒன்றைப் பெருமானுக்கு.

கும்பாபிஷேகத்திற்கு நாள் குறித்தனர் இருவருமே - ஆனால்
கும்பாபிஷேக நாள் ஒன்றாகி விட்டது இந்த இருவருக்குமே!

தோன்றினான் அரன் பல்லவ மன்னன் கனவில் இரவில்;
தேற்றினான் அரன் பல்லவ மன்னனைக் கனவில் இரவில்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
#65 (1) PoosalAr nAyanAr

PoosalAr nAyanAr was born in the family of brahmins in the place called Thiru nindravoor situated in ThoNdai maNdalam. He studied thoroughly the Vedas, the Agamas and the sAsthras. He had only one lofty dream in his life. It was to build a befitting temple to lord Siva.

Building a temple had always been beyond the capacity of a single simple man. He could not raise enough funds to construct a Siva temple.

But he could build a virtual temple in his mind and establish Lord Siva in it. That did nor incur any expenses and was well within his power. So he decided to build a beautiful temple for Siva in his mind.

The task though imaginary was as perfect as constructing a real temple. So he gathered all the various things and instruments needed to build the temple in his vivid imagination.

He started constructing his virtual temple step by step following the rules laid in Siva Agamas. His mind was completely taken by this virtual project. His temple must be perfect and befitting his lord.

He constructed the garbba graham, mandapams, pillars, gopuram, pond, a well the fencing wall. The elaborate construction though virtual took as many days as building a real temple.

At that time the Pallava King was also constructing a temple for Lord Siva in KAnchipuram. Both of them fixed an auspicious day for the kumbhAbhishekam. Needless to say both of them had selected the same auspicious day and time for the kumbabhishekham.

Lord Siva appeared in the dream of the Pallava king and said this!'



 
Bhagavathy bhaagavatam - skanda 11

11#8a. பூத சுத்தி

[குருமுகமாகப் பயில வேண்டும் இதை!]

தட்டி எழுப்ப வேண்டும் குண்டலினி சக்தியை;
இட்டுச் செல்ல வேண்டும் பிரமரந்திரத்துக்கு;

செலுத்த வேண்டும் இதைச் சக்கரங்கள் வழியே;
செலுத்த வேண்டும் இதை சுஷும்ன நாடி வழியே.

அடக்க வேண்டும் பஞ்ச பூதங்களை ஒவ்வொன்றாக;
அடக்க வேண்டும் பஞ்ச பூதங்களை ஒன்றில் ஒன்றாக!

அடக்க வேண்டும் நிலத்தை நீரினில்;
அடக்க வேண்டும் நீரை நெருப்பினில்;

அடக்க வேண்டும் நெருப்பைக் காற்றில்,
அடக்க வேண்டும் காற்றை ஆகாயத்தில்;

அடக்க வேண்டும் ஆகாயத்தை அஹங்காரத்தில்;
அடக்க வேண்டும் அஹங்காரத்தை மஹத் தத்துவத்தில்;

அடக்க வேண்டும் மஹத் தத்துவத்தை பிரகிருதியில்;
அடக்க வேண்டும் பிரகிருதியை மாயையில்;

அடக்க வேண்டும் மாயையை ஆன்மாவில்;
அடங்கி விடும் அத்தனையும் ஆன்மாவில்!

பந்திக்க வேண்டும் அவற்றைச் சுத்த ஞான ஸ்வரூபத்தில்;
சிந்திக்க வேண்டும் அவற்றை எண்ணி எண்ணி நன்றாக;

அடைக்க வேண்டும் இதயத் தாமரையில்
ஆன்மாவை ‘சோஹம்’ என்ற மந்திரத்தால்!

ஸ்தாபிக்க வேண்டும் இதயத் தாமரையில்
சிவத்தோடு இணைந்த குண்டலினியை!

பிரகாசிக்கின்றாள் குண்டலினி செந்தாமரையில்
ரத்தப் பெருக்கில் ஒளிரும் ஒரு கப்பலைப் போல!

சூலம், அங்குசம், கரும்பு வில், பாணங்கள் ஏந்தி
மூன்று கண்களோடும், கும்ப ஸ்தனங்களோடும்

உதய சூரியன் என்று ஒளிர்பவளிடம் பக்தியுடன்
உன்னத பிராண சக்தியை வேண்டிக் கொள்வோம்!

அணிய வேண்டும் திருநீற்றை உடலில் – ஒருவன்
அடைய விரும்பினால் சர்வாதிகார சக்தியை.

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

11# 8. Bhoota Suddhi


[ This is to be learned from a qualified Sat Guru correctly!]


The KuNdalini Shakti must be awakened by PrAnAyAma and guided through the Sushumna NAdi to the Brahmarandra on the top of the skull. The KuNdalini has to cross all the six chakras on its path.

The Pancha bhootAs must be dissolved one by one in the reverse order of The Creation. The Earth is to be dissolved in Water. The Water is to be dissolved in Agni.

The Agni must be dissolved in VAyu. The VAyu must be dissolved in the AakAsha. The AakAsha must be dissolved in the AhankAra.

The AhankAra must be dissolved in the Mahat Tatva. The Mahat Tatva is to be dissolved in Prakruti. The Prakrti is to be dissolved in MAyA. The MAyA is to dissolved in the Aatman. Everything gets dissolved in the Aatman finally.

All these must be contemplated upon as Suddha JnAna swaroopam. The Aatman must be fixed to the heart region by the ‘Soham’ mantra. The KuNdalini Shakti is then established along with Siva in the heart region.

Kundalini shines like a ship in a red sea. She sits on a red lotus holding in her hands Trisoolam, Ankusham, a bow of sugar cane and the arrows. She has three lovely eyes and very attractive breasts. She shines bright like the rising Sun. We have pray to her to grant us the PrANa Shakti.

VIbhooti (THE HOLY ASH) must be worn on the body in order to acquire the Siddhi of controlling the others.

 
SEkkizhArin Periya PurANam

#66. திரு மங்கையர்க்கரசியார்

பிறந்தார் மங்கையர்க்கரசி சோழ இளவரசியாக;
சிறந்தார் மங்கையர்க்கரசி பாண்டிய அரசியாக;

இயற்பெயர் ஆகும் மானி என்பது - எனினும்
இயற்பெயரை மறைத்தது அவர் பட்டப்பெயர்.

கொண்டிருந்தார் அன்பு அரனின் திருவடிகளுக்கு;
தொண்டாற்றினார் சமணமதத்தை அகற்றுவதற்கு.

சமணமதத்தைப் பின்பற்றினான் பாண்டிய மன்னன்;
சம்பந்தரை வரவழைத்தார் அரசி பாண்டிய நாட்டுக்கு.

சம்பந்தரின் சம்பந்தம் மாற்றிவிட்டது பாண்டியனை;
சமணம் துறந்து மீண்டும் தழுவினான் சைவமதத்தை.

சைவத்துக்கு ஆற்றிய தொண்டுகளால் சிறந்தார்
சிவநேசச் செல்வியாகிய அரசி மங்கையர்க்கரசி.

"வரிவளையால் மானிக்கும் அடியேன்"

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#66. MAni ( aka Mangaiyarkkarasi )

MAni was born as the ChOzha princess. She married the PANdya king and became the PANdya Queen. Her real name got replaced by her title 'Mangaiyarkku arasi' suggesting that she was the best among women.

She had immense love for the lotus feet of Lord Siva. The PANdya King was attracted by the principles of Jainism. But the Queen was a staunch devotee of Lord Siva

The Queen invited Thiru JnAna Sambanthar to visit Madhurai. Sambandhar was able to convince the PANdya king that Saivism was a better religion than Jainism.


The king gave up Jainism and returned to the folds of Saivism. Mangaiyarkkarasi is praised for the service she had rendered to Lord Siva and the revival and spreading of Saivism once again.


 
bhagavathy bhaagavatam - skanda 11

11# 9. சிரோ விரதம்

சிரோ விரதமாகக் கூறப்பட்டுள்ளது – விபூதி
விரதம் அதர்வண வேதத்தில் மிக விரிவாக.

எண் ஜாண் உடலுக்குச் சிரசே பிரதானம் அல்லவா?
எல்லா விரதங்களுக்கும் சிரோ விரதமே பிரதானம்!

சிரோ விரதத்துக்கு உட்புகாத அந்தணர்கள்
உரியவர் ஆக மாட்டார் பிரம்ம வித்தைக்கு!

ஆசாரத்தில் விளையாது பலன் – அக்கறையின்றி
சிரோ விரதத்தை ஓர் அந்தணன் புறக்கணித்தால்.

அடைவான் சிரோ விரதத்தை அனுஷ்டிப்பவன்
அனைத்து விரதங்களையும், வித்தைகளையும்!

உச்சாடனம் செய்யவேண்டும் மந்திரங்களை
உடலில் திருநீறு பூசிக் கொள்ளும் பொழுது.

சிறப்பாகும் சந்தியா காலங்களில் தரிப்பது;
சங்கற்பம் செய்து கொண்டும் தொடங்கலாம்.

ஆயிரம் பிறவியில் வேதம் அனுஷ்டிப்பவருகே
அமையும் சிரத்தை சிரோ விரதம் செய்வதில்.

வேத கர்மங்களை அனுஷ்டிக்காதவனுக்கு
விளையும் வெறுப்பு; விளையாது சிரத்தை.

தரிக்க வேண்டும் திரு நீற்றை கிருஹஸ்தன்
ஓங்காரத்துடனும், ஹம்ஸ மந்திரத்துடனும்.

தரிக்க வேண்டும் திரு நீற்றை பிக்ஷுக்கள்
த்ரயம்பக மந்திரம், சிவ மந்திரங்களுடன்.

தரிக்க வேண்டும் பிரம்மச்சாரி திரு நீற்றை
திரியாயுஷ, மேதாவி மந்திரங்கள் சொல்லி.

விரக்தியை வளர்க்கும் திருநீறு தரிப்பது!
எரித்து விடும் செய்த பாவங்களை எல்லாம்!

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

11#9. Shiro vratam


Vibhooti Vrata is described as the Shiro Vrata in Atharva VEda. Siras or the head is the most important part of a body. In the same way Shiro Vrata is the best and the most important of all the Vratas.

A brahmin who does not take up Shiro Vrata is unfit for acquiring Brahma Vidhya. AchAra will not help-if Shiro Vrata is neglected by a Brahmin. One who observes Shiro Vratam will obtain very easily all the VidhyAs and Vratams.

Mantras must be uttered while the Vibhooti is applied to the body. Vibhooti must be worn or smeared on during the SandhyA KAlam. It can be done with Sankalpam also.

Only a person who has followed the VedAs during one thousand life times will have interest in Shiro Vrata. One who had neglected the VedAs will have only hatred for Vibhooti and not sraddha.

A Gruhastha must apply Vibhooti uttering OmkAra and the Hamsa Manta. A SanyAsi must utter the Tryambaka Mantra and the other Siva Mantras while smearing the vibhooti. A BrahmachAri must utter the MEdhAvi Mantra and TriyAyusha Mantra while smearing the Vibhooti

 
SEkkizhArin Periya PurANam

#67. திரு நேச நாயனார்


காம்பீலி என்னும் தலத்தில் அவதரித்தார்
காளர் மரபில் அடியார் திரு நேச நாயனார்.

பாசம் வைத்தார் நேச நாயனார் - விரிசடை
ஈசன் மீதும் அவன் திருவடி நேசர்கள் மீதும்.

மனம் இருந்தது முக்கண்ணனை எண்ணிட;
நா இருந்தது முக்கண்ணன் நாமம் செப்பிட;

உடல் இருந்தது சிவனடியார் தொண்டு புரிந்திட;
தடங்கல் இன்றிச் செய்தார் திருத் தொண்டுகள்;

செய்து வந்தார் நெய்தல் தொழிலை இவர்;
நெய்து தந்தார் ஆடைகள், கோவணம், கீள்.

வாழ்ந்தார் நேச நாயனார் தொண்டு புரிவதற்கே
வாழச் சென்றார் பின்னர் அரன் திருவடி நீழலில்.

"நேசனுக்கும் அடியேன்"

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


#67. NEsa nAyanAr

NEsa nAyanAr was born in a place called KAmpeeli in the race of KALAr. NEsa nAyanAr true to his name had immense affection towards Lord Siva and His ardent devotees.

His mind was engaged only in thinking about Lord Siva. His tongue was engaged only in chanting the names of Lord Siva. His body was engaged only in serving Lord Siva and His devotees.

NEsa nAyanR never missed an opportunity in serving Lord Siva and His devotes. He was an expert weaver. He wove dresses and loincloths for the devotees of Siva.

NEsa nAyanAr devoted his entire life in serving the devotees of Siva and thereby earned a spot in the blissful world of Siva.
 
Bhagavathy bhaagavatam - skanda 11

11#10. கௌண பஸ்மம்

தரிக்கலாம் முதல் மூன்று வர்ணத்தவரும்
நித்தியாக்னியில் உண்டாகும் பஸ்மத்தை.

தரிக்கலாம் முதல் மூன்று வர்ணத்தவர்
விரஜாக்னியில் உண்டாகும் பஸ்மத்தை.

தரிக்கலாம் கிருஹஸ்தர்கள் அனைவரும்
ஔபஸனாக்னியில் உண்டாகும் பஸ்மத்தை.

தரிக்கலாம் பிரம்மசாரிகள் அனைவரும்
சமிதாக்னியில் உண்டாகும் பஸ்மத்தை.

தரிக்கலாம் நான்கு வர்ணத்தவர்களும்
பசனாக்னியில் உண்டாகும் பஸ்மத்தை.

தரிக்கலாம் மற்ற குலத்தவர் அனைவரும்
தாவாக்னியில் உண்டாகும் பஸ்மத்தை.

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

திரு நீற்றை அளிக்கும் அக்னியின் வகைகள்:-

1. நித்தியாக்னி
2. விரஜாக்னி
3. ஔபாசனாக்னி
4. சமிதாக்னி
5. பசனாக்னி
6. தாவாக்னி

11#10. GauNa Bhasma

The first three varnAs can use the Bhasma of the NithYAgni and VirajAgni.
GruhastAs may use the Bhasma of the OupAsanAgni.
BrahmachAris may use the Bhasma of SamithAgni.
All the four VarnAs can use the Bhasma of PachanAgni.
The other people can use the Bhasma created by the wild forest fires.

 
SEkkizhArin Periya PurANam

#68a . திரு கோச்செங்கட் சோழ நாயனார் (1)

வற்றாது ஓடியது காவிரி நதி சோழவள நாட்டில்;
வளமிக்க எழில் கொண்டது திருவானைக் காவல்

பொய்கை சந்திர தீர்த்தம் காவிரிக் கரையருகே;
பொய்கைக் கரையில் இருந்தது குளிர்ச் சோலை;

நாவல் மரத்தின் கீழே இருந்தது அழகிய சிவலிங்கம்.
நாள் தவறாமல் வந்து வழிபட்டது வெள்ளை யானை.

மலரும், நீரும் எடுத்து வரும் தன் துதிக்கையில்;
மலர்களைச் சொரிந்து நீராட்டி வழிபடும் ஈசனை.

திருவானைக் காவல் என்னும் திருப்பெயர் பெற்றது
திருத்தலம் வெள்ளை யானை செய்த பூசையினால்.

இருந்தது ஒரு சிலந்தி அந்த நாவல் மரத்தின் மேல்;
இருந்தது சின்னச் சிலந்தியிடம் அன்பும், அறிவும்!

அமைத்தது நூ
ற்பந்தலைச் சிவலிங்கத்தின் மீது
சருகுகளும், சூரிய வெப்பமும் விழாத வண்ணம்!

சினம் கொள்ளும் சிலந்தியின் வலையைக் கண்டு
தினம் வந்து வழிபடும் தவமிக்க வெள்ளை யானை.

சிதைத்து விடும் சிலந்தியின் வலையை தினமும்
சிவலிங்கத்தை வழிபட்டு விட்டுச் செல்லும் போது.

சிதைந்த வலையைக் கண்டு மிக வருந்தும் சிலந்தி;
சமைக்கும் ஒரு புதிய நூற்பந்தலை அங்கு மீண்டும்;

சிதைத்தது நூற்பந்தலை மீண்டும் மீண்டும் யானை;
அமைத்தது நூற்பந்தலை மீண்டும் மீண்டும் சிலந்தி;

சினம் கொண்டு விட்டது அந்தச் சின்னச் சிலந்தி;
மனம் கொண்டு விட்டது யானையைக் கொல்ல;

கடித்தது யானையின் துதிக்கையினுள்ளே புகுந்து;
துடித்தது யானை; ஓங்கி அடித்தது துதிக்கையை!

இறந்து விட்டது யானை சிலந்தியின் விடத்தால்;
இறந்து விட்டது சிலந்தியும் யானை அடித்ததால்;

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#68a. KO Chengat ChOzhan (1)

The perennial river Kaveri flowed through the ChOzha kingdom. The place in the Chozha Kingdom named ThiruvAnaikkAval was both fertile and picturesque.


There was a pond named Chandra Theertham near the bank of river Kaveri. A cool grove was situated on the edge of the pond. Inside the cool green grove, a beautiful Sivalingam was found under a Jamun tree.

A white elephant came from somewhere to worship the Sivalingam everyday. It would fetch water and flowers in its trunk to shower the water on the Sivalingam and decorate it with the flowers.
The name of this place was due to the daily worship done by this elephant.

There lived a spider on the Jamun tree. It was very wise and loved Sivalingam as much as the white elephant did. It would weave a beautiful and strong net over the Sivalingam to protect it from the direct Sunlight and the dry leaves falling down from the trees.

The elephant would become angry by the unsightly spiderweb over its God and remove it before worshiping Sivalingam. The spider would become angry since the beautiful web made by it would be destroyed by the elephant everyday.

The spider became so angry that it decided to kill the elephant. But the elephant was so huge, so powerful and had such a thick skin to protect it. So the spider entered into the trunk of the elephant and bit it.

The elephant trumpeted in great pain, hit the ground with its trunk before dropping down dead due to the deadly venom of the spider. The small spider which was inside the trunk also got killed instantaneously.

So both the enemies who were also devotees of Siva died at the same time.


 
bhagavathy bhaagavatam - skanda 11

11#11. மூன்று வகை பஸ்மம்

சாந்திகம்

பசுவின் குறியிலிருந்தே கோமியத்தை எடுத்து
பஸ்மம் ஆக்கித் தயாரித்தது சாந்திக பஸ்மம்.

பௌஷ்டிகம்


பசுவின் குறியிலிருந்து தரையில் விழுமுன்
பஸ்மம் ஆக்கித் தயாரித்தது பௌஷ்டிகம்

காமதம்


தரையில் விழுந்த கோமியத்தை எடுத்து
பஸ்மம் ஆக்கித் தயாரித்தது காமத பஸ்மம்

மூன்று கீற்றுகளின் தாத்பர்யம்


கீழ்க் கீற்று குறிக்கும் பிரமதேவனை;
நடுக் கீற்று குறிக்கும் விஷ்ணுவை;

மேல் கீற்றுக் குறிக்கும் மஹேஸ்வரனை;
ஒற்றைக் கீற்று குறிக்கும் சர்வேஸ்வரனை.

அந்தணர் தரிக்க வேண்டும் மந்திரத்துடன்;
மற்றவர் தரிக்க வேண்டும் நீரில் குழைத்து.

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

11#11. The three types of Bhasma


ShAntika Bhasma
is obtained by burning the cow dung collected form the cow itself – just as it leaves the body of the cow.

Poushtika Bhasma
is obtained by burning the cow dung which has left the body of the cow but has not fallen down of the ground.

KAmadha Bhasma
is obtained by burning the cow dung which has fallen on the ground.

The significance of the three lines of the Vibhooti.

The bottom line signifies BrahmA, the middle line VishNu and the top line MahEswara. A single line signifies the SarwEswara.

Brahmins must utter mantras while smearing the Vibhooti. The others must smear vibhooti after mixing it with a few drops of water.

 
SEkkizhArin Periya PurANam

#68b. திரு கோச்செங்கட் சோழ நாயனார் (2)


இருந்தனர் சிறந்த சிவகணங்களுள் இருவர்
திருக் கயிலையில் மிகப் பொறாமை பூண்டு;

புட்ப தந்தன் ஒருவன், மாலியவான் மற்றவன்;
எப்போதும் போட்டி "யார் சிறந்த தொண்டன்"
என்று.

சிவகணங்கள் இருவரும் வீண் வாதம் செய்தனர்
"சிவத்தொண்டில் தமக்குள் சிறந்தவர் யார்?" என்று.

கூறினான் புட்ப தந்தன் "நானே சிறந்தவன்" என்று
கூறினான் மாலியவான் "நானே சிறந்தவன்" என்று

கொதித்தது இருவரிடமும் சினமும், அசூயையும்!
சபித்தனர் இருவரும் கோரமாக ஒருவரை ஒருவர்!

சபித்தான் புட்பதந்தன் மாலியவானைச் சிலந்தி
ஆகும்படி!
சபித்தான் மாலியவான் புட்பதந்தனை யானை
ஆகும்படி!

பிறந்தனர் இருவரும் பெற்ற சாபத்துக்கு ஏற்றபடி;
சிறந்தனர் இருவரும் தாம் செய்த தொண்டுகளால்;

கிடைத்து விட்டது யானைக்குச் சிவபதம் உடனேயே;
கிடைத்தது சிலந்திக்குச் சோழகுலத்தில் ஒரு பிறவி.

சோழமன்னர் சுபவேதரும், அரசி கமலாவதியும்
சோர்ந்து இருந்தனர் மக்கட்பேறு எதுவும் இன்றி.

அத்தன் திருவடியை வழிபட்டுத்துத் தவம் செய்ய
அத்தன் திருவருளால் கருவடைந்தாள் கமலாவதி.

கருவை அடைந்தது ஈசன் அருள் பெற்ற சிலந்தி;
கரு வளர்ந்து அவதரிக்கும் நேரம் வந்து விட்டது;

"நாழிகைப் பொழுது கழித்துப் பிறந்தால் - பல
நாடுகளை ஆளும் ஆற்றல் பெறுவான் மகன்! "

மொழிந்தார் இங்ஙனம் சோதிடர் அரசியிடம்;
மொழிந்தாள் அரசி அதற்கான ஓர் உபாயம்!

கோரினாள் தன்னைத் தலைகீழாகத் தொங்கவிட;
கோரியபடித் தொங்கவிட்டனர் தலைகீழாக அவளை.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

#68b. KO Chengat ChOzhan (2)


Two of the many Siva GaNas of Lord Siva were always arguing as to which of them served Lord Siva better. Pushpa dhanthan said, "I serve our Lord better than you!" MAlyavAn said the same thing to Pushpa dhanthan. There was always a lot of jealousy and enmity between these two.

One day they cursed each other cruelly. Pushpa dhanthan cursed MAlyavAn to become a spider. MAlyavAn cursed Pushpa dhanthan to become an elephant. They were both born in the same place according to their curses and the enmity continued in their next birth also!

The Athman of elephant who was Pushpa dhantan went back to Lord Siva to serve him. But the Athman of the spider who was MALyavAn had to be born again on the earth - before returning to serve Lord Siva.

The ChOzha King Subha vEdhar and his queen KamalAvathy were praying to Siva to give them a good son. MalyavAn (The spider) would be born as a ChOzha prince to these couple.

The Queen became pregnant and the time of delivering the child neared. The astrologers told the queen, "If the prince will be born one nAzhigai ( = 24 minutes) later, he would become the ruler of a vast country."

The Queen wished her son to be mighty and strong and suggested a method to delay the delivery. She wanted to be tied and hung upside down until the auspicious time arrived!




 
bhagavathy bhaagavatam - skanda 11

11#12. திரு நீற்றின் பெருமை

பாதுகாக்க வேண்டும் இதைப் பொன் போலவே!
பயணத்தின் போதும் கொண்டு செல்ல வேண்டும்.

வைக்கக் கூடாது அசுத்தமான இடங்களில்;
கொடுக்கக் கூடாது அதர்மிகளின் கைகளில்.

தாண்டக் கூடாது இதை; வீசி எறியக் கூடாது;
தரிக்க வேண்டும் பக்தியுடன் தினந்தோறும்!

சமம் திருநீறு அணியாத ஒருவன் விலங்குக்கு!
சமம் திருநீறு அணியாத உடல் மயானத்துக்கு!

திருநீறு இல்லாத ஒரு நெற்றி பாழ்!
சிவன் கோவில் இல்லாத கிராமம் பாழ்!

சிவார்ச்சனை இல்லாத பிறவி பாழ்!
சிவசிந்தனை இல்லாத வித்தை பாழ்!

விபூதி இல்லாத அர்ச்சனையும் வீண்!
விபூதி இல்லாமல் இல்லை முக்தி!

யாகம், ஹோமம், விரதம், உபவாசம் வீண்!
யாத்திரை, சௌசம், ஜபமும், தவமும் வீண்!

திருநீறு அணியாமல் செய்கின்றவை வீணே!
திருநீறு அணிபவன் பெறுவான் சிவ பாவனை.

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

11#12. The greatness of Vibhooti

Vibhooti must be treated with the same respect as the Gold dust. One must carry it along with him while travelling. The container should not be kept in dirty or unholy places nor given in the hands of the wicked people.

One should not walk or jump across the Vibhooti nor waste it by throwing it away. Vibhooti must be worn with great care and devotion, every single day.

One who is not adorned by Vibhooti is no better than an animal. His body is no better than an inauspicious burial ground.

A forehead not adorned by Vibhooti is a waste. A village which does not have a Shiva temple is a waste. A life devoid of Siva archana is a waste.

Any art not glorifying Siva is a waste. Any pooja done without Vibhooti is a waste. There is no liberation for one who does not use Vibhooti.

All the Karmas like YAga, Yagna, DAnam, Tapas, Japam, Vratam, Fasting and visiting the holy places will go in waste – if the person performs these without smearing the auspicious and holy Vibhooti on the forehead.

 
SEkkizhArin Periya PurANam

#68c. திரு கோச்செங்கட் சோழ நாயனார் (3)


நல்ல மனம் கொண்ட அரசி தொங்கினாள் தலை கீழே!
நல்ல நேரம் வரும் வரை சிசுவைச் சுமந்து கொண்டு!

கட்டவிழ்த்தனர் அரசியை நல்ல நேரம் பிறந்ததும்;
கட்டவிழ்த்ததும் பிறந்தான் நல்ல நேரத்தில் மகன்.

சிவந்திருந்தன கண்கள் பிறந்த அந்தக் குழந்தைக்கு!
சீராட்டினாள் அரசி "செல்வக் கோச் செங்கணான் "என

ஆவி பிரிந்து விட்டது கமலாவதிக்கு சிறிது நேரத்தில்!
பாவிக்குக் கிட்டவில்லை மகனை வளர்க்கும் நற்பேறு!

வளர்ந்தான் செங்கட் சோழன் மிகவும் வல்லவனாக;
வளர்ந்தான் செங்கட் சோழன் மிகவும் நல்லவனாக ;

முடி சூட்டினார் சுபவேதர் செங்கட் சோழனுக்கு - அரன்
அடி பற்றினார் அடவிக்குச் சென்று அருந்தவம் செய்து.

உ ணர்ந்து கொண்டான் செங்கட் சோழன் - தன்னுடைய
உண்மையான ஜன்ம காரணத்தை; அரனிடம் பக்தியை!

அர்ப்பணித்துக் கொண்டான் தன்னை முழுவதுமாக
அற்புதமான பற்பல ஆலயங்களை எழுப்புவதற்காக.

எழுப்பினான் எழுபது ஆலயங்களைப் பெருமானுக்கு;
எழுப்பினான் மூன்று ஆலயங்களைத் திருமாலுக்கு!

ஆலயம் எழுப்பினான் திருவானைக் காவலில் - அந்த
ஆலய வாசல் உள்ளே நுழைய விடாது ஆனைகளை!

வழிபட்டான் முக்காலத்திலும் தில்லைத் தியாகேசனை;
வழிபெற்றான் பெருமான் அடி நீழலில் பேரின்பம் பெற.

"உலகாண்ட செங்கணார்க்கும் அடியேன்"

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#68c. KO Chengat ChOzhan (3)

The Queen KamalAvathy was tied and hung upside down until the auspicious time arrived. Then she was untied and she delivered her son. The new born had red eyes and the Queen called him fondly by the endearing name "Chengat ChOzhan" meaning "The Red eyed Chozhan". But she died soon after and did not have the good fortune of seeing her son grow up.

Chengat ChOzhan learned all that a prince must learn. He was a good person and a strong one too. King Subhadevar made Chengat ChOzhan as the new king. He himself went to the forest to lead a life of austerities and penance to attain total liberation.

Chenghat ChOzhan realized the cause leading to his birth on the face of the earth. He remembered his earlier deep love for Lord Siva. He decided to spend his life on earth in the service of Lord Siva.

Chengat ChOzhan built seventy temples for Lord Siva and three temples for Lord Vishnu. He worshiped Siva at Thillai three times a day. He returned to serve Lord Siva as before - after his life on earth came to an end.

 

Latest posts

Latest ads

Back
Top