• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Interesting articles from various sources.

Status
Not open for further replies.
பசுமாட்டை வணங்குவது ஏன்?

பசுமாட்டை வணங்குவது ஏன்?

TN_20140421140244355792.jpg



வீட்டில் இடைவிடாமல் தொடரும் பிரச்னைகள், அதனால் மனத்தில் நீங்காத சஞ்சலம் என வருத்தத்தில் இருக்கிறீர்களா? அப்படியென்றால் பசு தரிசனம் உங்களுக்கு உதவி செய்யும். தினமும் பசுவைத் தரிசித்து, ஒருபிடி அகத்திக்கீரை கொடுத்து, தொட்டுக் கும்பிட்டால், வீட்டில் லட்சுமிகடாட்சம் பெருகும். நம்ம பாவங்கள் தொலைவதோடு; நம்மை பீடித்த பீடைகள் தீய தொல்லைகள் எல்லாம் விலகிப்போகும்.

அப்படி பசுமாட்டை வணங்கும்போது சர்வ விருப்பங்களையும் நிறைவேற்றித் தருபவளும், சர்வ தீர்த்தங்களிலும் நீராடிய புண்ணியத்தைத் தருபவளும், பரிசுத்தத்தை அளிக்கக்கூடியவளும், காமதேனுவின் ச்ரேஷ்டையுமான அம்மா கோமாதாவே உனக்கு நமஸ்காரம் என்று மனத்தில் பிரார்த்தித்து வணங்கவேண்டுமாம்.

இந்தக் கருத்தைச் சொல்லும் கீழ்க்காணும் ஸ்லோகத்தைச் சொல்லியும் பசுவை வழிபடலாம்.

காம் ச த்ருஷ்ட்வா நமஸ்க்ருத்ய க்ருத்வா சைவ ப்ரதக்ஷிணம்

ப்ரதக்ஷிணீக்ருதா தேன ஸப்தத்வீபா வஸுந்த்தரா
ஸர்வகாமதுகே தேவி ஸர்வதீர்த்தாபிஷேசினீ
பாவனே ஸுரபிஸ்ரேஷ்டேதேவி துப்யம் நமோஸ்துதே.

Temple News | News | Dinamalar Temple | ????????? ????????? ????
 
பெரும்பாலான நதிகளுக்கு பெண் பெயர்கள் சூ&

பெரும்பாலான நதிகளுக்கு பெண் பெயர்கள் சூட்டப்பட்டிருப்பது ஏன்?


TN_20140417175011764162.jpg



நமது சாஸ்திரங்கள் கடலை ஆணாகவும், நதிகளை பெண்ணாகவும் போற்றுகின்றன. பெண் மென்மையானவள். அனைவரையும் அரவணைத்து, அந்தக் குடும்பத்தார் அனைவரின் நலனுக்காகவும் தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணிப்பவள்.

சூரியனால் கடல் நீரானது நீராவியாகி, மேகங்களின் வாயிலாக மழையாகப் பெய்து, அவை நதிகளின் மூலம் ஊர்மக்கள் பயனடைய வளைந்து மெலிந்து ஓடி, கடைசியில் கடலிலேயே நதிகள் சங்கமிக்கின்றன. இது போன்று பெண்ணானவள் ஒரு குடும்பம் நன்றாக இருக்க விட்டுக்கொடுத்து, புரிந்துகொண்டு, தியாகம் செய்து வாழ்கிறாள். அவள் எவ்வளவு தியாகம் செய்திடினும், முடிவில் தனது கணவன் இன்னார், இன்னாரின் மனைவியே தான் என்பதிலேயே பெருமை கொள்கிறாள்.

வளர்ச்சிக்கு வித்தாக பெண்களும் நதிகளும் விளங்குவதினால். நதிகள் கங்கா, காவிரி, யமுனா என்று பெண்பால் சொற்களாலேயே சிறப்பிக்கப்படுகின்றன. உலகம் இன்று இருப்பது பெண்களால்தான்! அதுபோன்று, நதிகளே ஒரு தேசத்தை உயர்ந்ததாக ஆக்குகின்றன. பெண்கள் இணைந்திருந்தால் அந்தக் குடும்பத்துக்கு வளர்ச்சி என்பது போன்று. நதிகள் அனைத்தும் இணைந்தால் நமது நாடும் வளம்பெறும்.

Temple News | News | Dinamalar Temple | ??????????? ?????????? ???? ???????? ??????????????????? ????
 
குரு பார்க்க கோடி நன்மை என்பதற்கு என்ன அ&#2992

குரு பார்க்க கோடி நன்மை என்பதற்கு என்ன அர்த்தம்?


TN_20140417141817910806.jpg



நவக்கிரகங்களில் முழுமையான சுபகிரகம் குரு. இவர் தேவர்களுக்கு பாடம் போதிக்கும் குருவுமாவார். எனவே, இவரது பார்வை எந்த ராசியின் மீது பட்டாலும் எல்லாத் தோஷங்களும் நீங்கிவிடும்.

ஒருவருடைய ராசிப்படி ஏழரைச்சனி நடக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அந்த ராசிக்கு குரு பார்வை இருந்தால் கெடுதல் விளையாது என்பதையே குரு பார்க்க கோடி நன்மை என்கிறார்கள்.

கோடி என்றால் அளவு கடந்த என்றும் பொருள் உண்டு.

ஒரு மனிதனின் வாழ்வில் தொழில் துவங்குதல், வேலை கிடைத்தல், திருமணம், புத்திரப்பேறு ஆகியவை முக்கியமானவை. இவற்றுக்கு குரு பார்வை தேவை. இவை சாத்தியமாகி விட்டால், நம் மனம் படுகிற சந்தோஷத்துக்கு அளவிருக்குமா! அளவில்லாத மகிழ்ச்சியையே கோடி நன்மை என்கிறார்கள்.

Temple News | News | Dinamalar Temple | ???? ??????? ???? ????? ????????? ???? ?????????
 
நந்தியின் காதில் வேண்டுகோளைச் சொல்லலாம&#

நந்தியின் காதில் வேண்டுகோளைச் சொல்லலாமா?


TN_20140416140101447155.jpg




கோயில்களில் வழிபடும் போது சிலர் நந்தியின் காதில் வேண்டுகோளைச் சொல்லி வழிபடுவர், இவ்வாறு சொல்லலாமா?

ஆகமங்களில் ஆலய அர்ச்சகரைத் தவிர மற்றவர்கள் ஆலய மூர்த்திகளைத் தொடக் கூடாது என்று விதிக்கப்பட்டுள்ளது. பலர் நந்தி பகவானின் காதுகளில் தங்களின் பிரார்த்தனைகளைக் கூறுவதை வழக்கமாக வைத்துள்ளார்கள். எனினும், அவ்வாறு செய்யும்போது தவறுதலாக நாம் நந்தியெம்பெருமானைத் தீண்டுவதாக அமைய நேரியடலாம். அது மட்டுமல்லாமல் நமது காற்று அவரின்மேல் பட்டாலோ, துர்நாற்றம் அவரின்மேல் பட்டாலோ அதனால் நமக்கு தோஷம் ஏற்படும். ஆகவே, இவற்றைத் தவிர்க்க நாம் நந்தியெம்பெருமானின் இடதுபுறம் வடக்கு நோக்கி நின்றுகொண்டு கைகூப்பி மிகுந்த பக்தியுடனும் மரியாதையுடனும் நமது கோரிக்கைகளை மனதினால் தெரிவிக்கலாம். கண்டிப்பாக அவை, பரம்பொருளான சிவபெருமானால் அனுக்கிரகிக்கப்படும் என்பதில் எவ்விதச் சந்தேகமும் இல்லை.

மாலை 4,30- 6 மணிவரையிலான வேளைக்கு பிரதோஷ காலம் என்று பெயர். இதனை நித்ய பிரதோஷம் என்பர். தேய்பிறை அல்லது வளர்பிறையில் திரயோதசி கூடிய மாலை வேளையில் எல்லாரும் விரதம் இருப்பர். இந்த பிரதோஷ வேளையில் சிவன் நந்தியின் கொம்புகளுக்கு இடையே நடனம் புரிவதாக ஐதீகம். இதனால், நந்தியின் கொம்புகளுக்கு இடையே சிவனை மனக்கண்ணால் தரிசிப்பது விசேஷம். நந்தியின் கொம்புக்கிடையில் சிவனை மனதால் நினைத்து தூரத்தில் இருந்து வணங்க வேண்டுமே தவிர, நந்தியின் கொம்பில் முகத்தை வைத்துப் பார்ப்பது, காதில் வேண்டுகோளைச் சொல்வது போன்றவை தவறு.



Temple News | News | Dinamalar Temple | ????????? ?????? ???????????? ??????????
 
இடி இடிக்கும் போது அர்ஜுனா.. அர்ஜுனா என்ப&#298

இடி இடிக்கும் போது அர்ஜுனா.. அர்ஜுனா என்பது ஏன் தெரியுமா?



TN_20140411165932417929.jpg



போது இடி இடித்தால் போதும். அர்ஜுனா...அர்ஜுனா என்பார்கள் பெரியவர்கள். உடனே, நம் வீட்டு இளசுகள், நீ அர்ஜுனான்னு சொன்னவுடனே, அவன் வில்லையும் அம்பையும் எடுத்துகிட்டு வந்து, இடி சத்தமே இல்லாம பண்ணிட போறானாக்கும் என்று கேலி செய்வார்கள்.

இடிதாங்கி கண்டுபுடிச்சு எத்தனையோ வருஷமாகியும், அதை பில்டிங் மேலே வைக்காம இன்னமும் அர்ஜுனான்னு புலம்பிகிட்டு இருக்கியே! என்று இடியிலிருந்து தப்பும் அறிவியல் உபகரணம் பற்றியும் எடுத்துச் சொல்வார்கள். உண்மையில்,

உண்மையான அறிவியல் காரணம் என்ன தெரியுமா?இடி பலமாக இடிக்கும் போது, சிலரது காது அடைத்து ஙொய்ங் என்று சத்தம் வரும். இதிலிருந்து தப்ப அர்ஜுனா என்றால் போதும். காது அடைக்காது. அர் என்று சொல்லும் போது, நாக்கு மடிந்து மேல் தாடையைத் தொடும். ஜு என்னும் போது வாய் குவிந்து காற்று வெளியேறும். னா என்னும் போது, வாய் முழுமையாகத் திறந்து காற்று வெளியே போகும். இப்படி காற்று வெளியேறுவதால் காது அடைக்காது. அதற்குத்தான் அர்ஜுனா வை நம்மவர்கள் துணைக்கு அழைத்தார்கள். அர்ஜுனன் கிருஷ்ண பக்தன் என்பதால், அவன் பெயரை உச்சரிப்பது மனதுக்கு பலம் என்ற ஆன்மிக காரணத்துடன், காது அடைத்து விடக்கூடாது என்ற அறிவியல் காரணமும் இதில் புதைந்து கிடக்கிறது. இனிமேல், இடி இடித்தால் அர்ஜுனா கோஷம், இடியையும் தாண்டி ஒலிக்கட்டும்! சரியா!

Temple News | News | Dinamalar Temple | ??? ????????? ???? ???????.. ??????? ?????? ??? ?????????
 
ஞானம் என்பது என்ன?

ஒரு பெரிய பண்டிதர் ஆன்மீக குரு ஒருவரை தேடி வந்தார்.

“நீங்கள் நூல்களில் இல்லாத பெரிய விஷயங்களைக்கூடக் காட்டிக் கொடுக்கிறீர்களாமே?”
குரு புன்னகைத்தார்.

பண்டிதர் விடவில்லை.

“எனக்கு நீங்கள் கட்டாயமாக ஏதேனும் காட்டிக் கொடுக்க வேண்டும்.”

“சரி, இப்போது மழைக் காலமில்லையா? இன்று மழை வரும் போல இருக்கிறது. மழை பெய்யும்போது மைதானத்தில் சென்று கைகளை உயர தூக்கிக் கொண்டு நில். ஏதேனும் புரியலாம்.”


அடுத்த நாள் பண்டிதர் வெகு கோபமாக வந்தார்.


“என்ன ஆயிற்று?”


“நீங்கள் சொன்னதுபோல மழையில் நேற்று மாலை நின்றேன்.”


“ம்?”


“முழுக்க நனைந்து போனேன். எல்லாரும் சிரித்தார்கள். நான் என்னை ஒரு பெரிய முட்டாளாக உணர்ந்தேன்!”


“பரவாயில்லையே? முதல் நாளே பெரிய விஷயம் புரிந்துவிட்டதே!

????? ???? - ?? ?????
 
தத் த்வம் அஸி

தத் த்வம் அஸி

x3_1848175h.jpg.pagespeed.ic.2Vn3tp-b86.jpg





தத் த்வம் அஸி

ப்ரக்ஞானம் பிரம்ம
அயமாத்மா பிரம்ம
அஹம் பிரம்மாஸ்மி


இவை அனைத்தும் உபநிடதங்களில் வருபவை.


தத் த்வம் அஸி என்றால் நீயே அதுவாக இருக்கிறாய் என்று பொருள். அது என்பது பிரம்மம். பிரம்மா எனப்படும் கடவுள் வேறு, பிரம்மம் என்று சொல்லப்படுவது வேறு. இந்த பிரம்மம் குணமற்றது, வடி வற்றது, ஆதி அந்தம் அற்றது.


பிரம்மா, விஷ்ணு, சிவர், பராசக்தி போன்ற கடவுளர்களை சகுண பிரம்மம், அதாவது குணங்களோடு கூடிய பிரம்மம் என்பார்கள். பிரம்மம் என்பது குணம், வடிவம், காலம் ஆகியவற்றைக் கடந்தது.


ப்ரக்ஞானம் பிரம்மம் என்றால் தூய அறிவே பிரம்மம் எனப் பொருள்.
அயமாத்மா பிரம்மம் என்றால் இந்த ஆத்மாவே பிரம்மம் எனப் பொருள்.
அஹம் பிரம்மாஸ்மி என்றால் நானே பிரம்மம் எனப் பொருள்.


இவற்றில் இரண்டாவதைத் தவிர இதர மூன்று வாக்கியங்களும் நீயே அல்லது நானே அல்லது இந்த ஆத்மாவே பிரம்மம் எனச் சொல்கின்றன. ஜீவாத்மாவும் பரமாத்மாவும் வேறல்ல எனக் கூறும் அத்வைதக் கருத்துக்கு இவை நெருக்கமாக இருப்பதாகத் தோன்றும். ஆனால் துவைத, விசிஷ்டாத்வைத தத்துவ ஞானிகள் இந்த வாக்கியங்களுக்குத் தத்தமது பார்வையில் விளக்கம் அளிக்கிறார்கள். இந்த விளக்கங்கள் யாவும் இந்த வாக்கியங்களின் ஆழமான பொருளைப் புரிந்துகொள்ள உதவக்கூடியவை.


????? ???? - ?? ?????
 
தத்துவ விசாரம்: ஐந்து வகை கோசங்கள் என்றா&#2994

தத்துவ விசாரம்: ஐந்து வகை கோசங்கள் என்றால் என்ன?

x01_1859459h.jpg.pagespeed.ic.2B7FaUvJNk.jpg


வேதாந்தம் எனப்படும் தத்துவம் உபநிடதங்களின் சாரம். வேதங்களின் அந்தமாக விலங்கும் உபநிடதங்கள் இந்தப் பிரபஞ்சம் குறித்தும் அதன் ஆதாரம் குறித்தும் தேடலை மேற்கொள்கின்றன. இந்தத் தேடலில் பல்வேறு தத்துவங்களும் கருதுகோள்களும் முன்வைக்கப்படுகின்றன. கவித்துவமான முறையில் மிகச் சுருக்கமாகச் சொல்லப்படும் இந்தக் கருத்துகள் பல விதமான விவாதங்களுக்கும் விளக்கங்களுக்கும் வழிவகுக்கின்றன.



மனித வாழ்வையும் இந்தப் பிரபஞ்சத்துக்கும் அதற்கும் உள்ள தொடர்பையும் பற்றிச் சிந்திக்க விரும்புபவர்களுக்குப் பல விஷயங்களை அள்ளித் தருவது வேதாந்தம். ஆத்மா, பிரம்மம் ஆகிய விஷயங்கள் பற்றியும் உபநிடதங்கள் ஆழமாகப் பேசுகின்றன.


உபநிடத சிந்தனைகள் ஆத்மாவைப் பற்றி விளக்குவதற்கு முன்பு நம் உடலைப் பலவாறாகப் பகுக்கின்றன. மனித உடலை ஐந்து கோசங்களாகப் பிரித்துப் பார்க்கும் ஒரு பகுதி தைத்ரிய உபநிடதத்தில் வருகிறது.
பஞ்ச கோசங்கள் என்று இவை குறிப்பிடப்படுகின்றன. கோசம் என்றால் உறை; பஞ்ச என்றால் ஐந்து. அன்னமய கோசம், பிராணமய கோசம், மனோமய கோசம், விஞ்ஞானமய கோசம், ஆனந்தமய கோசம் ஆகியவையே இந்த கோசங்கள். இவற்றைப் பற்றிச் சுருக்கமாகப் பார்ப்போம்.


அன்னமய கோசம்


நம் ஸ்தூல உடல் அன்னம் அதாவது உணவால் தோன்றி, உணவால் வளர்ந்து, உணவின் மூலமாகிய மண்ணில் சிதைந்து அழிகிறது. இதுவே அன்னமய கோசம் எனப்படுகிறது. உடலுக்கும் வாழ்வுக்கும் உணவின் முக்கியத்துவம் என்னவென்பதை இது உணர்த்துகிறது.


பிராணமய கோசம்


வாயு (காற்று) உடலின் உள்ளும் புறமும் இருக்கிறது. உடலுக்குள் இது மூச்சுக் காற்றாக உள்ளது. இதன் இயக்கத்தாலேயே உடலின் எல்லா உறுப்புகளும் இயங்குகின்றன. இதன் மூலம் செயலாற்றும் புலன்கள், உயிர் வாழ்வதற்கு அவ்சியமான உள் உறுப்புகள், அவற்றின் இயக்கங்கள், ஆகியவை பிராணமய கோசம் என வகைப்படுத்தப்படுகின்றன.


மனோமய கோசம்


உணர்ச்சிகள், உணர்ச்சிகளுக்கு ஆதாரமான மனம், அதன் பல்வேறு அடுக்குகள், செயல்பாடுகள் ஆகியவை மனோமய கோசம் எனப்படும்.


விஞ்ஞானமய கோசம்

எது சரி, எது தவறு? எதைச் செய்யலாம், எதைச் செய்யக் கூடாது? எது உண்மை, எது பொய்? எது நிலைக்காது, எது நிலைக்கும்? இதுபோன்ற தர்க்க ரீதியான தேடல்களை நம் பகுத்தறிவும் சிந்தனைத் திறனும் மேற்கொள்கின்றன. அறிவின் இந்த இயல்புகளும் செயல்பாடுகளும் அடங்கிய உறை விஞ்ஞானமய கோசம் எனப்படும்.


ஆனந்தமய கோசம்


ஆனந்தமய கோசம் என்பது இந்த அடுக்குகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு இருக்கும் நிலை. இந்த நிலையை உணர்வதும் அடைவதும் ஆன்மிகத்தின் லட்சியம் என்று சொல்லலாம்.


மனித வாழ்வு என்பது இவை ஐந்தையும் உள்ளடக்கியது. ஐந்தாவது கோசம் நம் புலன் அறிவுக்கு அப்பாற்பட்டது. மற்ற நான்கு கோசங்களையும் நாம் உணரவும் அறியவும் முடியும். ஒவ்வொருவரும் உடல், மனம், அறிவு இதில் ஏதேனும் ஒன்றுடன் தம்மை அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள். அதற்கு மாறாக இவை ஒவ்வொன்றும் ஒரே உடலின், ஒரே வாழ்வின் வெவ்வேறு அடுக்குகள் என்பதை உணர்ந்தால் ஒருங்கிணைந்த விதத்தில் நம்மை நாமே அணுகிப் புரிந்துகொள்ளலாம்.


எல்லாமே சேர்ந்ததுதான் நம் வாழ்வு என்பதையும் எந்த ஒன்றுடனும் நாம் நின்றுவிடக் கூடாது என்பதையும் அனுபவபூர்வமாக உணர்பவர் எல்லாக் கோசங்களையும் தாண்டி ஆனந்தமய கோசத்தை உணர முடியும் என்பது இதன் உட்பொருள்.

தைத்ரிய உபநிடதத்தில் எது பிரம்மம் என்னும் தேடலில் அன்னமே பிரம்மம் என்று முதலில் உணரப்படும். பிறகு இது படிப்படியாக நகர்ந்து பிரணனே பிரம்மம், மனமே பிரம்மம், விஞ்ஞானமே பிரம்மம் என்ற முடிவுகள் எட்டப்படும். கடைசியில் ஆனந்தம் பிரம்மணோ வியஜானாத் (ஆனந்தமே பிரம்மம் என அறிக) என முடியும்.



????? ???? - ?? ?????
 
ராமாயண கதைமுழுதும் ‘அ’

ராமாயண கதைமுழுதும் ‘அ’


ராமாயண கதைமுழுதும் ‘அ’ என்று ஆரம்பிக்கும் வார்த்தைகளால்
வடிவமைக்கப் பட்டுள்ளது.


அனந்தனே அசுரர்களை அழித்து,அன்பர்களுக்கு அருள அயோத்திஅரசனாக அவதரித்தான்.அப்போது அரிக்கு அரணாக அரசனின்அம்சமாக அனுமனும் அவதரித்ததாகஅறிகிறோம்.அன்று அஞ்சனை அவனிக்குஅளித்த அன்பளிப்பு அல்லவா அனுமன் ?










அவனே அறிவழகன்,அன்பழகன்,அன்பர்களைஅரவ-ணைத்து அருளும் அருட்செல்வன்!அயோத்தி அடலேறு,அம்மிதிலை அரசவையில்அரசனின் அரிய வில்லை அடக்கி, அன்பும்அடக்கமும் அங்கங்களாக அமைந்த அழகியைஅடைந்தான் .



.


அரியணையில் அமரும் அருகதை அண்ணனாகியஅனந்த ராமனுக்கே!அப்படியிருக்க அந்தோ !அக்கைகேயி அசூயையால் அயோத்தி அரசனுக்கும்அடங்காமல் அநியாயமாக அவனை அரண்யத்துக்குஅனுப்பினாள்





அங்கேயும் அபாயம்!அரக்கர்களின் அரசன் ,அன்னையின் அழகால் அறிவிழந்து அபலையைஅபகரித்தான்





அத்தசமுகனின் அக்கிரமங்களுக்கு, அட்டூழியங்களுக்குஅளவேயில்லை. அயோத்தி அண்ணல் , அன்னைஅங்கிருந்து அகன்றதால் அடைந்த அவதிக்கும்அளவில்லை.அத்தருணத்தில் அனுமனும், அனைவரும் அரியைஅடிபணிந்து, அவனையே அடைக்கலமாக அடைந்தனர்.



.
அந்த அடியார்களில் அருகதையுள்ள அன்பனைஅரசனாக அரியணையில் அமர்த்தினர்.அடுத்து அன்னைக்காக அவ்வானரர் அனைவரும்அவனியில் அங்குமிங்கும் அலைந்தனர், அலசினர்.அனுமன், அலைகடலை அலட்சியமாக அடியெடுத்துஅளந்து அக்கரையைஅடைந்தான்.






அசோகமரத்தின் அடியில் ,அரக்கிகள் அயர்ந்திருக்கஅன்னையை அடி பணிந்து அண்ணலின்அடையாளமாகிய அக்கணையாழியை அவளிடம்அளித்தான்







அன்னை அனுபவித்த அளவற்ற அவதிகள்அநேகமாக அணைந்தன.அன்னையின் அன்பையும்அருளாசியையும் அக்கணமே அடைந்தான் அனுமன்.அடுத்து, அரக்கர்களை அலறடித்து , அவர்களின்அரண்களை , அகந்தைகளை அடியோடு அக்கினியால்அழித்த அனுமனின் அட்டகாசம் , அசாத்தியமானஅதிசாகசம்.






அனந்தராமன் அலைகடலின் அதிபதியைஅடக்கி ,அதிசயமான அணையைஅமைத்து,அக்கரையை அடைந்தான்.






அரக்கன் அத்தசமுகனை அமரில் அயனின்அஸ்திரத்தால் அழித்தான்.






அக்கினியில் அயராமல் அர்பணித்த அன்னைஅவள் அதி அற்புதமாய் அண்ணலை அடைந்தாள்.







அன்னையுடன் அயோத்தியை அடைந்துஅரியணையில் அமர்ந்து அருளினான்





அண்ணல் . அனந்த ராமனின் அவதாரஅருங்கதை அகரத்திலேய அடுக்கடுக்காகஅமைந்ததும் அனுமனின் அருளாலே.

.




Ramayanam with letter ? . « Sage of Kanchi



 
நமது தாய்த் தமிழ் நாட்டைப் பற்றி

நமது தாய்த் தமிழ் நாட்டைப் பற்றி


1. தமிழக அரசு முத்திரை கோபுரம் – ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோபுரம்............

2. தமிழகத்தின் நுழைவாயில் – தூத்துக்குடி

3. தமிழகத்தின் மான்செஸ்டர் – கோயம்புத்தூர்


4. மக்கள் தொகை அதிகமுள்ள மாவட்டம் – கோயம்பத்தூர்


5. மக்கள் தொகை குறைந்த மாவட்டம் – பெரம்பலூர்


6. மிக உயரமான தேசியக்கொடி மரம் – புனித ஜார்ஜ் கோட்டை (150 அடி)


7. மிகப் பெரிய பாலம் இந்தியாவின் முதல் கடல்வழி பாலம் – பாம்பன் பாலம் ( ராமேஸ்வரம் )


8. மிகப் பெரிய தேர் – திருவாரூர் தேர்


9. மிகப்பெரிய அணைக்கட்டு – மேட்டுர் அணை


10. மிகப் பழமையான அணைக்கட்டு – கல்லணை


11. மிகப்பெரிய திரையரங்கு (ஆசியாவில்) – தங்கம் (மதுரை – 2563 இருக்கைகள்)


12. மிகப்பெரிய கோயில் – தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில்


13. மிகப்பெரிய கோயில் பிரகாரம் – ராமேஸ்வரம் கோயில் பிரகாரம்


14. மிகப்பெரிய கோபுரம் – ஸ்ரீ ரெங்கநாதர் கோயில் கோபுரம் (திருச்சி)


15. மிகப்பெரிய தொலைநோக்கி – காவலூர் வைணுபாப்பு (700 m)


16. மிக உயர்ந்த சிகரம் – தொட்டபெட்டா [ 2,636 m (8,648 ft) ]


17. (உலகின்) மிக நீளமான கடற்கரை – மெரினா கடற்கரை (14 km )


18. மிக நீளமான ஆறு – காவிரி (760 km)


19. மக்கள் நெருக்கம் அதிகமுள்ள மாவட்டம் – சென்னை (25937/km2)


20. மக்கள் நெருக்கம் குறைவாக உள்ள மாவட்டம் – சிவகங்கை (286/km2)


21. மலைவாசல் தலங்களின் ராணி – உதகமண்டலம்


22. கோயில் நகரம் – மதுரை


23. தமிழ்நாட்டின் ஹாலந்து – திண்டுக்கல் (மலர் உற்பத்தி)


24. (ஆசியாவில்) மிகப்பெரிய பேருந்து நிலையம் – கோயம்பேடு பேருந்து நிலையம்


25. மிகப்பெரிய சிலை – திருவள்ளுவர் சிலை (133 அடி)





Source: Ananthanarayanan Ramaswamy
 
குருசேத்திர யுத்தம் பற்றிய அறிவியல் தத்&

குருசேத்திர யுத்தம் பற்றிய அறிவியல் தத்துவம்!

TN_131030153158000000.jpg



மகாபாரதப்போர் நடந்த இடம் எது என்றால் குருசேத்திரம் என்பார்கள். குருசேத்திரம் எங்கிருக்கிறது என்று கேட்டால் ஹரியானாவில் இருக்கிறது என்று கூட தெரிந்து வைத்திருப்பார்கள். ஆனால், குருசேத்திர யுத்தம், ஒரு அறிவியல் தத்துவத்தையும் எடுத்துச்சொல்வது எத்தனை பேருக்கு தெரிந்திருக்கும்! மனம் தான் நம் செயல்களுக்கு காரணமாக அமைகிறது என்பது அறிவியல் கலந்த ஆன்மிக உண்மை.

ஒவ்வொரு நாளும் நமக்குள்ளும் குருசேத்திர யுத்தம் நடந்து கொண்டு தான் இருக்கிறது. மனசு தான் குருசேத்திரம். அதில் இருக்கும் நல்ல எண்ணமே நியாயத்திற்காகப் போராடும் தர்மர் தலைமையிலான பாண்டவர்கள். தீய எண்ணங்களே அநியாயத்தின் பக்கமிருக்கும் துரியோதனன் தலைமையிலான கவுரவர்கள். ஓயாமல் இருபிரிவுக்கும் போர் நடந்து கொண்டே இருக்கிறது. பாண்டவர்களும், கவுரவர்களும் ஒரே பரம்பரையில் பிறந்த தாயாதிகள்(சகோதரர்கள்).

அதேபோல, நல்லதும், கெட்டதும் ஒரே மனதில் உற்பத்தியானவை தான். அர்ஜூனன், தன் சொந்த பந்தத்தினர் மீது அம்பு விட தயங்கியது போல, உலகியல் வாழ்வில் ஈடுபடும் நமது புத்தியும், ஒன்றைச் செய்வதா வேண்டாமா என திண்டாடுகிறது. அப்போது விவேகம் என்னும் கிருஷ்ணர், நம் புத்திக்கு வழிகாட்ட வருகிறார். பாரதப்போரில், விவேகமாக நடந்த கிருஷ்ணர் மூலம் நியாயம் ஜெயித்தது.

நம் மனதில் நடக்கும் குரு÷க்ஷத்திர போரிலும் நன்மை ஜெயிக்க, விவேகத்துடன் நடந்து கொள்ள வேண்டியுள்ளது.





Temple News | News | Dinamalar Temple | ??????????? ??????? ?????? ???????? ????????!
 
ஞானம் தரும் புதிய பார்வை

ஞானம் தரும் புதிய பார்வை



* தன்னைப் புரிந்து கொள்வதும் உணர்வதும் மிகப் பெரிய ஞானம் ஆகும். கிரேக்க ஞானி சாக்ரடீஸ் உட்பட பல பேரறிவாளர்களும் இதைக் கூறி இருக்கிறார்கள். புத்தரும் மகாவீரரும் இவ்வாறே முழு ஞானத்தைப் பெற்றவர்கள். அறியாமையைப் போக்கி அறிவும், அனுபவமும் சேர்ந்து கிடைப்பதே ஞானம் என்றும் சாத்திர நூல்கள் விளக்குகின்றன.

* அறிவு என்பது புத்தகத்திலிருந்து பெறப்படுவது மட்டும் அல்ல. சொல்லிக் கொடுத்தோ, கேள்வி மூலமாகவோ, அறிவுக்கூர்மையினாலோ அடையக் கூடியதும் அல்ல என்று கடோபநிடதம் கூறுகிறது. அதுபோல மதம் என்பதும் சடங்குகளாலும், நம்பிக்கைகளாலும் உருவாவது அல்ல.

* முழுமையாக ஆன்மிக ஞானம் பெற்றுவிட்டபின், யாரும் பெருமைப்படக்கூடாது. ஞானம் என்பது படிப்படியாக அனுபவத்தால் உண்டாவதாகும். அனுபவத்தால் ஞானம் பெற்றவன் செய்யும் செயல்கள் யாவும் உயர்வடைகின்றன.

* ஒருவனை பெற்ற ஞானத்தால் உலகத்தையே புதிய நோக்கில் பார்க்கத் தூண்டும். அவனுள் புத்துணர்ச்சி பெருகும். அவன் புதுப்பிறவி எடுத்து புதிய மனிதனாக உலவுவான். ஞானக்கண் மனிதனை உள்முகமாகப் பார்க்கத் தூண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன்


Indian Hindu Religion Philosophers and Spiritual Philosophy
 
திருவேணி சங்கமம் (பிரயாகை) என்பதன் பொருள&#3021


திருவேணி சங்கமம் (பிரயாகை) என்பதன் பொருள்


TN_144747000000.jpg



வேணி என்றால் நதி என்பது பொருள். மூன்று நதிகள் (கங்கை, யமுனை, சரஸ்வதி) சங்கமத்தில் சென்று நீராடுகிறோம். அதன் மூலம் நமக்கும் நமது முன்னோர்களுக்கும் புண்ணியம் கிடைக்கச் செய்கிறோம்.

கங்கா நதி நீர், வெண்மையாகவும், யமுனை நதி நீர், கருணையாகவும், சரஸ்வதி அந்தர்வாகினியாக கண்ணுக்குத் தெரியாமல் கீழே ஒடிக்கலப்பதாக ஐதீகம்.

இத்தகைய திரிவேணி சங்கமத்தில், ஸ்ரீராமர், லட்சுமணர், சீதாதேவி நீராடிய புண்ணிய பூமி. இங்கு 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பமேளாகவும், 6 ஆண்டுகளுக்கு ஒரு முறை அர்த்கும்பமேளா திருவிழாவும், சிறப்பாக நடைபெறுகிறது. லட்சக்கணக்கான பக்தர்களும், சாதுக்களும் இங்கே வந்து முன்னோர்களை வணங்கி நீராடுவர்.

பிரயாகையில் முண்டம், காசியில் தண்டம், கயையில் பிண்டம் என்ற ஒரு வழக்கு உண்டு. இவற்றின் முக்கிய நோக்கம்,பாவம் களைவது. பாவம் அண்டாமல் தடுப்பது, பாவம் நீங்கி இறையோடு ஒன்றாவது ஆகும். முண்டம் என்பது முடி எடுத்தல். உடலில் வளரும் கேசங்கள் தாமாகவே அகலக்கூடியவை. அகற்றினாலும், உபத்திரவம் தாராதவை. அவற்றைப் போல் நம் பாவங்கள் களையப்படவேண்டும் என்பதற்காக பிரயாகை ஷேத்திரத்திலே முடி எடுத்து பாவங்களை களைய வேண்டும்.

பிரயாகையில் முக்கியமானது அட்சயவடம் என்று அழைக்கப்படும் ஆலமரம். இதன் வேர் பகுதி பிரயாகையிலும், நடுப்பகுதி காசியிலும், நுனி கயாவிலும், இருப்பதாக கூறுகிறார்கள். அதனால் இந்த மூன்று இடங்களிலும் வரிசையாக, பித்ரு காரியங்களை செய்ய வேண்டியது தமது கடமை என்று இந்துக்கள் நம்புகிறார்கள்.

Triveni sangamam | ???????? ??????? (???????) ??????? ?????? ?????????
 
9ன் சிறப்பு தெரியுமா?

9ன் சிறப்பு தெரியுமா?



TN_120605173554000000.jpg


எண்களில் விசேஷமான எண்ணாக கருதப்படுவது ஒன்பது. அந்த எண்ணில் நீண்ட வாழ்வு எனும் அர்த்தம் பொதிந்திருப்பதாகச் சொல்கின்றனர்,

சீனர்களின் சொர்க்க கோபுரம், ஒன்பது வளையங்களால் சூழப்பட்டுள்ளது.
எகிப்து, ஐரோப்பா, கிரீக் முதலான நாடுகளும் 9-ஆம் எண்ணை விசேஷமாகப் பயன்படுத்திப் போற்றுகின்றன.

புத்த மதத்தில், மிக முக்கியமான சடங்குகள் யாவும் ஒன்பது துறவிகளைக் கொண்டே நடைபெறும். தங்கள், வெள்ளி மற்றும் பிளாட்டினத்தின் சுத்தத்தை 999 என்று மதிப்பிடுவார்கள்.

பெண்களின் கர்ப்பம், பூரணமாவது ஒன்பதாம் மாத நிறைவில்தான்!

பரத கண்டத்தில், நம் இந்தியாவில் ஒன்பது எனும் எண் இன்னும் மகத்துவங்கள் கொண்டது.

ஒன்பது என்ற எண்ணுக்கு வடமொழியில் நவம் என்று பெயர். நவ என்ற சொல் புதிய, புதுமை எனும் பொருள் உடையது.


நவ சக்திகள் - வாமை, ஜேஷ்டை, ரவுத்ரி, காளி, கலவிகரணி, பலவிகரணி, பலப்பிரமதனி, சர்வபூததமனி, மனோன்மணி


நவ தீர்த்தங்கள்: கங்கை, யமுனை, சரஸ்வதி, கோதாவரி, சரயு, நர்மதை, காவிரி, பாலாறு, குமரி
நவ வீரர்கள் - வீரவாகுதேவர், வீரகேசரி, வீரமகேந்திரன், வீரமகேசன், வீரபுரந்திரன், வீரராக்ஷசன், வீரமார்த்தாண்டன், வீரராந்தகன், வீரதீரன்


நவ அபிஷேகங்கள்: மஞ்சள், பஞ்சாமிர்தம், பால், நெய், தேன், தயிர், சர்க்கரை, சந்தனம், விபூதி.
நவ ரசம்: இன்பம், நகை, கருணை, கோபம், வீரம், பயம், அருவருப்பு, அற்புதம், சாந்தம் ஆகியன நவரசங்கள் ஆகும்.


நவக்கிரகங்கள் - சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது
நவமணிகள் - கோமேதகம், நீலம், வைரம், பவளம், புட்பராகம், மரகதம், மாணிக்கம், முத்து, வைடூரியம்



நவ திரவியங்கள் - பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம், காலம், திக்கு, ஆன்மா, மனம்

நவலோகம் (தாது): பொன், வெள்ளி, செம்பு, பித்தளை, ஈயம், வெண்கலம், இரும்பு, தரா, துத்தநாகம்


நவ தானியங்கள் - நெல், கோதுமை, பாசிப்பயறு, துவரை, மொச்சை, எள், கொள்ளு, உளுந்து, வேர்க்கடலை

சிவ விரதங்கள் ஒன்பது: சோமவார விரதம், திருவாதிரை விரதம், உமாகேச்வர விரதம், சிவராத்ரி விரதம், பிரதோஷ விரதம், கேதார விரதம், ரிஷப விரதம், கல்யாணசுந்தர விரதம், சூல விரதம்

நவசந்தி தாளங்கள் - அரிதாளம், அருமதாளம், சமதாளம், சயதாளம், சித்திரதாளம், துருவதாளம், நிவர்த்திதாளம், படிமதாளம், விடதாளம்


அடியார்களின் பண்புகள்: எதிர்கொள்ளல், பணிதல், ஆசனம் (இருக்கை) தருதல், கால் கழுவுதல், அருச்சித்தல், தூபம் இடல், தீபம் சாட்டல், புகழ்தல், அமுது அளித்தல்


நவரத்னங்கள் - தன்வந்த்ரி, க்ஷணபகர், அமரஸிம்ஹர், சங்கு, வேதாலபட்டர், கடகர்ப்பரர், காளிதாசர், வராகமிஹிரர், வரருசி (விக்ரமார்க்கனின் சபையிலிருந்த 9 புலவர்கள்; நவரத்னங்கள் எனச் சிறப்பிக்கப்படுவர்)




அடியார்களின் நவகுணங்கள்: அன்பு, இனிமை, உண்மை, நன்மை, மென்மை, சிந்தனை, காலம், சபை, மவுனம்.


நவ நிதிகள் - சங்கம், பதுமம், மகாபதுமம், மகரம், கச்சபம், முகுந்தம், குந்தம், நீலம், வரம்

நவ குண்டங்கள்:
யாகசாலையில் அமைக்கப்படும் ஒன்பது வகையிலான யாக குண்ட அமைப்புக்கள்:
சதுரம், யோனி, அர்த்த சந்திரன், திரிகோணம், விருத்தம் (வட்டம்), அறுகோணம், பத்மம், எண்கோணம், பிரதான விருத்தம்.


நவவித பக்தி : சிரவணம், கீர்த்தனம், ஸ்மரணம், பாத சேவனம், அர்ச்சனம், வந்தனம், தாஸ்யம், சக்கியம், ஆத்ம நிவேதனம்


நவ பிரம்மாக்கள் : குமார பிரம்மன், அர்க்க பிரம்மன், வீர பிரம்மன், பால பிரம்மன், சுவர்க்க பிரம்மன், கருட பிரம்மன், விஸ்வ பிரம்மன், பத்ம பிரம்மன், தராக பிரம்மன்


நவக்கிரக தலங்கள் - சூரியனார் கோயிவில், திங்களூர், வைத்தீஸ்வரன் கோவில், திருவெண்காடு, ஆலங்குடி, கஞ்சனூர், திருநள்ளாறு, திருநாகேஸ்வரம், கீழ்ப்பெரும்பள்ளம்


நவபாஷாணம் - வீரம், பூரம், ரசம், ஜாதிலிங்கம், கண்டகம், கவுரி பாஷாணம், வெள்ளை பாஷாணம், ம்ருதர்சிங், சிலாஷத்

நவதுர்க்கா - ஸித்திதத்ரி, கஷ்முந்தா, பிரம்மாச்சாரினி, ஷைலபுத்ரி, மகா கவுரி, சந்திரகாந்தா, ஸ்கந்தமாதா, மகிஷாசுரமர்த்தினி, காளராத்ரி


நவ சக்கரங்கள் - த்ரைலோக்ய மோகன சக்கரம், சர்வசாபுரக சக்கரம், சர்வ சம்மோகன சக்கரம், சர்வ சவுபாக்ய சக்கரம், சர்வார்த்த சாதக சக்கரம், சர்வ ரக்ஷõகர சக்கரம், சர்வ ரோஹ ஹர சக்கரம், சர்வ ஸித்தி ப்ரத சக்கரம், சர்வனந்தமைய சக்கரம்.


நவநாதர்கள் - ஆதிநாதர், உதய நாதர், சத்ய நாதர், சந்தோஷ நாதர், ஆச்சாள் அசாம்பயநாதர், கஜ்வேலி கஜ்கண்டர் நாதர், சித்த சொவ்றங்கி நாதர், மச்சேந்திர நாதர், குரு கோரக்க நாதர்


உடலின் நவ துவாரங்கள் : இரண்டு கண்கள், இரண்டு காதுகள், இரண்டு மூக்குத் துவாரங்கள், ஒரு வாய், இரண்டு மலஜல துவாரங்கள்


உடலின் ஒன்பது சக்கரங்கள் : தோல், ரத்தம், மாமிசம், மேதஸ், எலும்பு, மஜ்ஜை, சுக்கிலம், தேஜஸ், ரோமம்


18 புராணங்கள், 18 படிகள் என அனைத்தும் 9-ன் மூலமாக தான் உள்ளன. காயத்ரி மந்திரத்தை 108 முறை ஜபிக்க வேண்டும். எல்லா தெய்வத்தின் நாமாவளியும் ஜப மாலையின் எண்ணிக்கையும் இதை அடிப்படையாகக் கொண்டதுதான்!

புத்த மதத்தினர் 108 முறை மணியடித்து, புது வருடத்தை வரவேற்றுக் கொண்டாடுகின்றனர். சீனாவில், 36 மணிகளை மூன்று பிரிவாகக் கொண்டு, சு ஸூ எனப்படும் மாலையைக் கொண்டு ஜபம் செய்வார்கள்.

ஸ்ரீகிருஷ்ணருக்குப் பிரியமான மாதம்... மார்கழி. இது வருடத்தின் 9-வது மாதம்!

மனிதராகப் பிறந்தவன் எப்படி வாழ வேண்டும் என வாழ்ந்து காட்டிய ஸ்ரீராமபிரான் பிறந்தது, 9-ஆம் திதியான நவமி நாளில்தான்.

9என்ற எண்ணை கேலிக்கையாக எண்ணாமல் புராணங்களிலும், நடைமுறையிலும் சிறப்பிடம் பெற்றுள்ளது என்பதை போற்றுவோம்.

Temple News | News | Dinamalar Temple | 9?? ??????? ?????????
 
வாழ்க்கைப் படிகள் பதினாறு...

[h=5]வாழ்க்கைப் படிகள் பதினாறு...




1) மிகமிக நல்ல‍தொரு நாள் - இன்று

2) மிகப் பெரிய வெகுமதி – மன்னிப்பு

3) நம்மிடம் இருக்க‍ வேண்டியது – பணிவு

4) நம்மிடம் இருக்க‍க் கூடாதது – வெறுப்பு

5) நமக்கு அத்தியாவசியமாய் தேவைப்படுவது – ச‌மயோஜித புத்தி

6) ந‌மக்கு வரக்கூடாத அதி பயங்கர நோய் – பேராசை

7)ந‌மக்கு எளிதாக வரக்கூடியது – குற்ற‍ம் காணல்

8) நம்மிடம் இருக்க‍ கூடாத கீழ்த்த‍ரமான செயல் - போறாமை

9) நாம் எதை நம்பக்கூடாது – வ‌தந்தி

10) ந‌மக்கு அதீத ஆபத்தை உண்டாக்குவது – அதீத பேச்சு

11) நாம் செய்யவேண்டியது – உதவி

12) நம்மிடம் இருந்து விட்டொழிக்க‍ வேண்டியது – விவாதம்

13) ந‌மது உயர்வுக்கு வழி – உழைப்பு

14) நாம் எதை நழுவ விடக்கூடாது – வாய்ப்பு

15) பிரி(ய)க்கக் கூடாதது எது – நட்பு

16) நாம் எதை ம‌றக்க கூடாதது – நன்றி.[/h]http://kalvianjal.blogspot.com/2012/12/blog-post_2318.html
 
காசி, கயா தரிசன பலன் கிட்ட...

காசி, கயா தரிசன பலன் கிட்ட...


Tamil-Daily-News-Paper_74402582646.jpg





த்ரிதளம் த்ரிகுணாகாரம் த்ரிநேத்ரஞ்ச த்ரியாயுதம்
த்ரிஜன்ம பாப ஸம்ஹாரம் ஏகபில்வம் சிவார்ப்பணம்
காசி க்ஷேத்ர நிவாஸஞ்ச காலபைரவ தர்சனம்
கயாப்ரயாகேத்வேத்ருஷ்ட்வா ஏகபில்வம் சிவார்ப்பணம்
-பில்வாஷ்டகம்



பொதுப் பொருள்: வில்வ இலை மூன்று இதழ்களைக் கொண்டது. இம்மூன்றுமே சத்வ, ரஜோ, தமோ குணங்களைக் குறிப்பவை.

பரமசிவனின் மூன்று கண்களையும் இவை நினைவுபடுத்துகின்றன. பால்யம், யௌவனம், வயோதிகம் ஆகிய மூன்று ஆயுள் பருவங்களை அளிப்பதும் மூன்று ஜென்ம பாவங்களைப் போக்குவதும் இந்த வில்வ இலையின் தனி குணம். இந்த வில்வத்தை பரமேஸ்வரா, உமக்கு நான் அர்ப்பணிக்கிறேன்.

காசி என்ற மகா புண்ணிய தலத்தில் வசித்தல், அங்குள்ள காலபைரவரை தரிசித்தல், கயை, பிரயாகை போன்ற தலங்களுக்கு சென்று தரிசித்தல் ஆகியவற்றால் எத்தனை புண்ணியம் சேருமோ அவை அத்தனையும் இந்த ஒரே ஒரு வில்வ இலையை ஈசனுக்கு அர்ப்பணிப்பதால், என்னைச் சேரும் என்பதை உணர்கிறேன்.

மகாதேவனே, உமக்கு நமஸ்காரம்.


????, ??? ????? ???? ?????... -Aanmeega Dinakaran
 
ஆஞ்சநேயருக்கான பரிகார பூஜையும் பலன்களு&#

ஆஞ்சநேயருக்கான பரிகார பூஜையும் பலன்களும்

Anjaneyar.webp


நாம் ஆஞ்சனேயருக்கு பலவிதமான பூஜைகளும் பரிகார பூஜைகளும் செய்கிறோம்,ஏழரை சனி இருப்பவர்கள் ஆஞ்சனேயர் பாதத்தை பிடித்துக் கொண்டால் போதும் சனியின் தாக்கம் மிகவும் குறையும் அதே போல்

பலவிதமான இன்னல்கள் துக்கங்கள் என்று வரும் போது ஆஞ்சனேயருக்கு நெய் விளக்கு வைத்தால் படிப்படியாக தீரும்

அவருக்கு செய்பவைகளில் சில ,

- வடைமாலை சாத்துதல்
- செந்தூரக்காப்பு அணிவித்தல்
- வெண்ணெய் காப்பு சாத்துதல்
- ராம் ராம் என்று எழுதி மாலை சாத்துதல்
இந்த பரிகாரங்களை செய்து பலர் நன்மை நடந்ததை கண்கூடாகப் பார்க்கிறோம்.

வடைமாலை
அனுமானுடைய தாய் அஞ்சலிதேவி தன் மகன் திடமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க உளுந்து வடைசெய்து கொடுத்ததாக ஐதீகம். உளுந்து எலும்புகளுக்கு நல்ல போஷாக்கு .

வெற்றிலைமாலை


சீதையைத்தேடி தேடி பல இடங்களில் காணாது பின் அசோகவனத்தில் அவரை சந்த்தித்தார், அப்போது சீதை அவருக்கு வெற்றிலைக் கொடி அணிவித்து அவரை வாழ்த்தினார். என்றும் சிரஞ்ஜீவியாய் இருக்கவும் வாழ்த்தினாள். வெற்றிலை வயிறு சம்பந்தமான எல்லா தோஷங்களையும் போக்கும் பண்டைக் காலத்தில் சின்ன குழந்தைக்கும் வெற்றிலை சுரசம் வாயு தொல்லை இல்லாமல் இருக்க கொடுப்பார்கள்.

வெண்ணெய் சாத்துதல்

ராம ராவண யுத்தம் நடக்கிறது அப்போது ராமரையும் லக்குமணரையும் தன் தோளில் சுமந்து கொண்டுச் சென்றார் அனுமான் அப்போது ராவணன் சராமாரியாய் அம்பு தொடுக்க சக்திமிக்க அம்பால் அவர் தாக்கப் பட்டார்,அந்தக் காயத்திற்கு மருந்தாக தன் உடம்பில் வெண்ணெய் பூசிக் கொண்டாராம். வெண்ணெய் சீக்கிரமாக உருகும் தன்மை உடையது அந்த வெண்ணை உருகுவதற்கு முன்பாகவே நாம் நினைத்த காரியம் நடந்து விடும் என்ற நம்பிக்கை ,அதனால் வெண்ணெய் சார்த்தும் பழக்கம் உள்ளது,

சிந்தூரக் காப்பு


சீதையை அசோகவனத்தில் கண்ட அனுமாரிடம் சீதை கேட்கிறாள்.”என் அவர் நலமா? என்று.....

அதற்கு அனுமான் “எப்போதும் உங்களைத்தான் நினைத்துக் கொண்டு இருக்கிறார் என்றதும்.....

மகிழ்ச்சி தாங்காமல் சீதை தரையிலிருந்து செம்மண்ணை நெற்றியில் வைத்துக் கொண்டாள்.,இதைப் பார்த்த அனுமனுக்கு மிக மிக சந்தோஷம் .தாங்க முடியவில்லை தானும் தன் உடம்பு முழுவதும் செம்மண் பூசிக் கொண்டாராம்..

ஜெய் ஸ்ரீ ராம் என்று மாலையாக அணிவித்தல்


ராம் ராம் என்று எழுதி மாலையாக அணிவித்தல், அனுமன் தன் இதயத்திலேயே ராமாவை வைத்திருக்கிறார். சில படங்களில் அவர் தன் இதயத்தையே கிழித்து ராமாவைக் காட்டுவது போல் நாம் பார்த்திருக்கிறோம் ராம் நாமம் எல்லா ஷேமங்களையும் அள்ளி வழங்கும் மகிமை கொண்டது.

வாலில் பொட்டு வைப்பது


அனுமனுக்கு சக்தி முழுவதும் தன் வாலில் தான் .இராவணன் முன் தன் வாலையே சுருளாக்கி சிம்மாசனமாக்கி இராவனனுக்கும் மேல் உயரமாக் அமர்ந்தவர் அவர் இலங்கையை எரித்ததும் வாலில் வைத்த நெருப்பினால் தான் அவருக்கு சூடு தெரியாமல் ஆனால் இலங்கையே எரிந்தது, ஆகையால் வாலிலிருந்து சந்தனம் குங்குமம் பொட்டு வைத்து ஒரு சுற்றுமுடிவதற்குள் நினைத்த காரியம் சித்தியாகிறது என்ற நம்பிக்கை.


?????????????? ?????? ???????? ????????? | ???? ???? ?????? ?????????? ????????? ?????
 
கோயிலில் உள்ள பலி பீடம்


கோயிலில் உள்ள பலி பீடம்



1384077_517170911709566_1416237089_n.jpg






கோயிலில் உள்ள பலி பீடம் என்பது, உயிர் பலி கொடுக்கப்படும் இடமல்ல. நம் மனதுள் நமக்கு
தெரியாது ஒளிந்திருக்கும்.....

காமம்,

ஆசை,

குரோதம் (சினம்),

லோபம் (கடும்பற்று),

மோகம் (கற்பு நெறி பிறழ்வு),

பேராசை,

மதம் (உயர்வு தாழ்வு மனப்பான்மை),

மாச்சர்யம் (வஞ்சம்),

எனும் எட்டு தீய குணங்களையும் பலி கொடுக்க உறுதி செய்துக்கொள்ளுமிடம்.

வெறுமனே வீழ்ந்து வணங்குவதால் நலன் ஒன்றும் வந்துவிடாது. வீழ்ந்து வணங்கும்போது தனது கீழான இயல்புகளெல்லாம் அந்த இடத்திலே பலி கொடுக்க வேண்டும்.

மனிதனிடத்துள்ள கீழ்மையெல்லாம் அங்கு பலியிட வேண்டும்.மனதின் ஆணவம் பலியிடப்படுகிறது. மேலான எண்ணங்கள் மட்டும் எஞ்சியிருக்க வேண்டும்.



???????? ???????..!: ???????? ???? ??? ????? ??????, ????? ??? ?????????????? ??????.
 
உடலுக்கு ஆரோக்கியம் தரும் வழிபாட்டு முற&

உடலுக்கு ஆரோக்கியம் தரும் வழிபாட்டு முறைகள்!

TN_120320152307000000.jpg



ஆலயத்திற்கு நாம் உடலை சுத்தம் செய்து தூய்மையான ஆடையணிந்து செல்லும் போது உடலும் உள்ளமும் உற்சாகமாக இருப்பதுடன் மனமும் இறை நாட்டத்தில் இருக்கும். பின் ஆலயத்திற்குள் செல்லும் முன் கோபுர தரிசனம் செய்ய வேண்டும். கோபுரதரிசனம் கோடி புண்ணியம் என்பர். கோபுரதரிசனம் செய்ய மேல்நோக்கி பார்க்கும் போது தலைக்கான பயிற்சி ஆரம்பிக்கின்றது. மூன்றுமுறை கீழிருந்து மேலாக பார்த்து வணங்கும் போது தலைக்கான இரத்தோட்டம் சீராகும்.

ஆலயம் உள் சென்ற உடன் முதலில் செய்வது விநாயகர் வழிபாடு.

விநாயகருக்கு தோப்புக்கரணம் போட்டு புருவப் பொட்டில் மூன்றுமுறை குட்டி வழிபடுவது வழக்கம், இவ்வாறு குட்டுகின்ற போது புத்தியைச் செயல்படுத்தும் நரம்பு சுருங்கி விரியும் இதனால் இரத்தோட்டம் அதிகரிக்கும் செவிகள் இரண்டையும் இழுக்கும் போது நரம்பு கீழ்நோக்கி இழுபடும் இதனால் மூளையில் சிந்திப்பதற்கான பகுதி செயல்படும்.

அடுத்து ஆலயத்தை மூன்று ஐந்து அல்லது ஏழு முறை வலம் வருவர். வலம் வரும் போது நடப்பது ஓர் சிறந்த உடல் பயிற்சி என்பர். சிலர் பிரதட்ணம் பண்ணுவர். இதனால் குடல் தொடர்பான நோய்களுக்கும் இரத்தோட்ட சீரக்கத்துக்கும் சிறந்த உடல் பயிற்சி என்பர்.

அடுத்து ஆண்கள் அஷ்டாங்க நமஸ்காரமும் பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரமும் செய்கின்றனர். அஷ்டாங்க நமஸ்காரம் என்னும் போது அஷ்டாங்கம் என்பது தலை கையிரண்டு செவியிரண்டு மோவாய் புஜங்களிரண்டு என்னும் எட்டவயங்களும் நிலத்தில் பொருந்தும் படி வலக்கையை முன்னால் நீட்டியும் இடது கையை பின்னும் நேரே நீட்டிய பின் அம்முறையே மடக்கி வலபுயமும் இடபுயமும் மண்னிலே பொருந்தும்படி கைகளை அரையை நோக்கி நீட்டிவலக்காதை முன்னும் இடக்காதை பின்னும் மண்னிலே பொருந்தச் செய்வதாகும். இதை மூன்று ஐந்து அல்லது ஏழு முறை என ஒற்றைப்படையில் செய்வர் இது சிறந்த ஆண்களுக்கான உடல் பயிற்சியாகும்.

இது போன்று பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரம் செய்வர் பஞ்சாங்க என்பது தலை கையிரண்டு முழந்தாளிரண்டு என்னுதைந்தவயவங்களும் நிலத்தில் பொருந்தும்படி வணங்குவதாம். இதை மூன்று ஐந்து அல்லது ஏழு முறை என ஒற்றைப்படையில் செய்வர் இது சிறந்த பெண்களுக்கான உடல் பயிற்சியாகும்.

இவ்வாறு வழிபாட்டு முறைகளில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் முறைகளை வைத்துள்ளனர் முன்னோர்கள்.


Temple News | News | Dinamalar Temple | ???????? ?????????? ????? ????????? ???????!
 
பாலுக்குள் "இவ்ளோ' இருக்கா?

பாலுக்குள் "இவ்ளோ' இருக்கா?




* பசு என்றால் நம்மைப்போல் ஒன்றும் அறியாத ஜீவன்கள். அவற்றை பராமரித்து, அவற்றிடம் உள்ள பாலை பயன்படுத்தி, நல்ல பலனைப் பெறுவது எப்படி என்று உபதேசிப்பவன் கோபாலன்.

* நம் மனதிற்கும் பாலுக்கும் ஒற்றுமை பலவுண்டு. முதலில் உள்ளத்தை பால் போல் தூய்மை ஆக்க வேண்டும். கோபாலனை அண்டி பக்தி என்னும் தீயில் அதை பதமாக காய்ச்ச வேண்டும்.

* சாந்தத்தைக் கொண்டு உறை ஊற்றி தயிராக்க வேண்டும். இதயம் என்னும் குடத்தில் தயிர் ஊற்றி அது உறைந்ததும், பக்தியென்ற மத்தைக் கொண்டு கடைந்து, பூத்துவரும் வெண்ணெயைப் போன்ற அனந்தசயனனான பரமபுருஷனைக் காண வேண்டும்.

* தயிரில் பால், வெண்ணெய், நெய் ஆகிய முப்பொருளும் அடங்கியிருந்தாலும், அவற்றை தக்க முறைகள் கொண்டே தனித்தனியாக்க முடியும் என்பது உண்மை. அதைப்போலவே நம் இதயத்தில் உறைந்திருக்கும் கடவுளை காண வேண்டுமானால், தக்க முயற்சிகள் எடுத்தால் தான் இயலும்.

- காஞ்சிப்பெரியவர்



Indian Hindu Religion Philosophers and Spiritual Philosophy
 
நவக்கிரஹ தோஷம் நீங்க செய்யப்படும் விரதம&

நவக்கிரஹ தோஷம் நீங்க செய்யப்படும் விரதம் முறைகள்!

TN_173739000000.jpg



ஞாயிற்றுக்கிழமை சூரிய பகவானுக்கு ஏற்ற விசேஷமான நாள். சூரிய நமஸ்காரம் செய்து ஆதித்யஹ்ருதயம் படிக்க வேண்டும். சூரியனுக்குரிய தேவதை - சிவன், தானியம் - கோதுமை, வஸ்திரம் - சிவப்பு, புஷ்பம் - செந்தாமரை, ரத்தினம் - மாணிக்கம், உலோகம் - தாமிரம்.


திங்கள்கிழமை அனுஷ்டிக்கப்படும் இந்த விரதத்திற்கு சோமவார விரதம் என்று பெயர். திங்கள்கிழமையன்று தம்பதியருக்கு இயன்ற அளவு தானம் செய்து போஜனம் அளிப்பது விசேஷம். சந்திரனுக்குரிய தேவதை - துர்க்காதேவி தானியம் - நெல், வஸ்திரம் - வெள்ளை, புஷ்பம் - வெள்ளரளி, ரத்தினம் - முத்து, உலோகம் - ஈயம்.


செவ்வாய்க்கிழமை அங்காரகனுக்கு உகந்த நாள் செவ்வாய் தோஷம் ஜாதகத்தில் உள்ளவர்களுக்கு செவ்வாய்க்கிழமை விரதம் நல்ல மேன்மையைத் தரும். சுமங்கலிகளுக்கு மஞ்சள் குங்குமம், தாம்பூலம் கொடுக்கலாம். செவ்வாய்க்குரிய தேவதை - முருகன், தானியம் - துவரை, வஸ்திரம் - சிவப்பு, புஷ்பம் - சண்பகம், ரத்தினம் - பவழம், உலோகம் - செம்பு.



புதன்கிழமை விரதம் அனுஷ்டிப்பதால் கல்வி, ஞானம், தனம் பெருகும். பச்சைபயறு கலந்த சர்க்கரைப் பொங்கல், பழம், பொரி - கடலை நிவேதனம் செய்து விஷ்ணு சகஸ்ரநாமம் படிப்பது மிகவும் நல்லது. புதன்கிழமை விரதம் புகழைக் கொடுக்கும், பொன், பொருளைச் சேர்க்கும், புதனுக்குரிய தேவதை - விஷ்ணு, தானியம் - பச்சைப்பயிறு, வஸ்திரம் - பச்சைப்பட்டு, புஷ்பம் - வெண்காந்தள், ரத்தினம் -பச்சை, உலோகம் - பித்தளை.



வியாழக்கிழமை குருபகவானுக்கு உகந்த நந்நாள் இந்நாளில் விரதம் இருப்போருக்கு சகலகாரியங்களும் சித்தியாகும், எல்லா நலன்களும் பெருகும், குருவின் அருளால் குழந்தைச் செல்வம் உண்டாகும், குடும்பத்தில் உள்ள சஞ்சலம் விலகும் திருமணம் நடக்கும். குரு பகவானின் தேவதை - ருத்ரன் (தக்ஷிணு மூர்த்தி), தானியம் - கொண்டக்கடலை, வஸ்திரம் - மஞ்சள், புஷ்பம் - முல்லை, ரத்தினம் - கனகபுஷ்பராகம், உலோகம் - தங்கம்.



வெள்ளிக்கிழமை விரத மகிமையால் சுக்ரனுக்குப் ப்ரீதி ஏற்படுகிறது. சுக்ரன் சுபிட்சத்தைத் தருவான் ,தொல்லைகள் நீங்கி, நல்லவை நடக்கும். வெள்ளிக்கிழமையன்று அவரவர் குல தெய்வத்தை வழிபாடு செய்வது நல்ல பலன்தரும். சுக்கிரனுக்குரிய தேவதை - வள்ளி, தானியம் - வெள்ளை மொச்சை, வஸ்திரம் - வெண்பட்டு, புஷ்பம் - வெண்தாமரை, உலோகம் - வெள்ளி, ரத்தினம் - வைரம்.



சனிக்கிழமை சனிபகவானுக்கு மிகவும் சிரேஷ்டமான நாள் ஜாதகத்தில் சனி நீச்சமாக இருந்தாலும், அஷ்டமசனி இருந்தாலும், பகை வீட்டில் இருந்தாலும், ஏழரையாண்டு சனி இருந்தாலும், சனிக்கிழமை விரதம் இருந்து சனிபகவானை வணங்கி வழிபட்டு எள்தீபம் ஏற்றினால் சனி பகவானால் நல்லது உண்டாகும். சனிபகவானுக்குரிய தேவதை -திருமூர்த்தி, தானியம் - எள், வஸ்திரம் - கருப்பு வஸ்திரம், ரத்தினம் - நீலம், புஷ்பம் - கருங்குவளை, உலோகம் - இரும்பு.


ராகுதிசை நடப்பவர்களும், ராகு தோஷம் உள்ளவர்களும் காலசர்ப்பயோகம் உள்ளவர்களும் ராகுவிரதத்தை அனுஷ்டிக்கலாம். செவ்வாய்க்கிழமை துர்க்கைக்கு இலுப்பை எண்ணெய்யினால் விளக்கேற்றி மந்தார மலரால் அர்ச்சனை செய்து உளுந்து நிவேதனம் செய்து வழிபட்டால் அளவற்ற நன்மை கிடைக்கும். ராகுக்குரிய தேவதை - பத்ரகாளி, தானியம் - உளுந்து, ரத்தினம் - கோமேதகம், வஸ்திரம் - கருப்பு வஸ்திரம், உலோகம் - கருங்கல், புஷ்பம் - மந்தாரை மலர்.


கேதுதிசை நடப்பவர்களும் ஜாதகத்தில் கேது நீச்ச மடைந்தவர்களும் இந்த விரதத்தை அனுஷ்டிக்கலாம். சனிக்கிழமையன்று விநாயகரை 108 பிரதக்ஷணம் செய்து அருகம்புல்லால் அர்ச்சித்து வழிபட்டால் அமோகமான சௌபாக்யத்தைத் தரும். கேதுவிற்குரிய தேவதை - விநாயகர், தானியம் - கொள்ளு, வஸ்திரம் - பலகலர் கலந்த வஸ்திரம், ரத்தினம் - வைடூரியம், புஷ்பம் - செவ்வல்லி, உலோகம் - துருக்கல்.


Navagraha Vratham | ???????? ????? ????? ???????????? ?????? ???????!
 
அது என்ன பகீரத முயற்சி?

அது என்ன பகீரத முயற்சி?
-------------------------------------
ஒருவர் ஒரு காரியத்திற்க்காக கடுமையா போராடுவதை பகீரத முயற்சி என்பார்கள்.இந்த வார்த்தை எப்படி வந்தது தெரியுமா..,

Bhageeratha.webp



சூரிய குல அரசன் திலீபனின் மகன் பகீரதன் ஆவார்.தன்னுடைய மூதையார்கள் யாவரும் சாபத்தால் இறந்த செய்தியை வசிஷ்டர் சொல்ல கேட்டு மிகுந்த வருத்தம் அடைகிறார்.அவர்களின் ஆத்மா சாந்தியடைவேண்டும் என்றால்,தேவலோகத்தில் இருக்கும் கன்ங்கையின் நீரை அவர்களின் சாம்பலில் தெளிக்க வேண்டும் அதனால் அந்த கங்கையை பூலோகத்திற்கு கொண்டு வர சுமார் 10 ஆயிரம் ஆண்டுகள் கடுமையான தவம் செய்து கங்கையை சம்மதிக்க வைக்கிறார்.


கங்கை பூமிக்கு வருவதிலும் சிக்கல் அவரின் வேகத்தை பூமி தாங்க வேண்டும் அதானால் சிவனை நோக்கி மீண்டும் தவம் செய்கிறார்.பகீரதனி தவத்திற்கிணங்கி பூமிக்கு மிகுந்த வேகமாக வந்த கங்கையை தன் சடாமுடியில் அப்படியே தாங்கி கொள்கிறார்.சிவனின் கூந்தல் மீது மையல் கொண்ட கங்கை தரையில் பாய மறுக்கிறாள்.
அதனால் கவலையுற்ற பகிரதன் மீண்டும் கடுந்தவம் இயற்றி சிவபெருமானின் மணம் குளிரும்படி செய்தான்..

சிவபெருமானும் கங்கையை பிந்துசரஸ் மலையில் பாய செய்தார். கங்கையும் பகிரதன் முன்னோர்களை நற்கதி அடையும்படி செய்தாள்.


விடாமுயற்சியுடன் தவம் இருந்து கங்கையை பூமிக்கு கொண்டுவந்த பகீரதன் நினைவாகவே விடாமுயற்சி எடுப்பதை “பகீரத முயற்சி”என்கிறோம்.


அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top