• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Interesting articles from various sources.

Status
Not open for further replies.
பூஜை அறை எப்படி அமைக்க வேண்டும்?

பூஜை அறை எப்படி அமைக்க வேண்டும்?



Tamil-Daily-News-Paper_73523676396.jpg


மனதிற்கு நிம்மதியை தருவது ஆண்டவன் சன்னிதி. அது போலவே ஒரு வீட்டில் உள்ள பூஜை அறையும். அது எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சில முக்கிய குறிப்புகள் வருமாறு. ஒரு வீட்டில் பூஜை அறை வட கிழக்கில் அல்லது வடக்கில் அல்லது கிழக்கில் அமைக்கப்பட வேண்டும். பெரிய வீடாக இருந்தால் வீட்டின் மையப்பகுதியில் பூஜை அறை அமைக்கலாம். ஒரு பெரிய வீட்டில் இரண்டு தளங்கள் இருந்து எல்லோரும் அந்த வீட்டில் ஒரு குடும்பமாக வசித்தால் அவற்றில் தரை தளத்தில் பூஜை அறை இருக்க வேண்டும்.


பூஜை அறையில் கடவுளின் படம் அல்லது உருவம் கிழக்கு திசை பார்த்து இருக்க வேண்டும். அதாவது நாம் வணக்கும் போது கடவுளின் படங்கள் கிழக்கு பார்த்து இருக்க வேண்டும். மேற்கு நோக்கியும் இருக்கலாம். பூஜை அறையின் வழிபடும் பகுதியில் வட கிழக்கு மூலையில் ஒரு பித்தளை சொம்பில் அல்லது டம்ப்ளரில் நீர் பிடித்து வைக்க வேண்டும். இந்த நீரை தினமும் மாற்ற வேண்டும். தென்கிழக்கு மூலையில் குத்து விளக்கை வைத்து விளக்கேற்ற வேண்டும்.

முக்கியமாக கவனிக்க வேண்டியது, பூஜை அறையில் இறந்து போன முன்னோர்களின் புகைப் படங்களை வைக்கக் கூடாது.

பூஜை அறையை குப்பைகள் இன்றி சுத்தமாக வைத்திருக்க வேண்டும். பூஜை அறை சுவர்களின் வண்ணம் வெள்ளை அல்லது இள மஞ்சள் அல்லது நீல நிறத்தில் இருக்க வேண்டும். பூஜை அறையை வழிபடுவதற்கு, தியானம் செய்வதற்கு மட்டும் பயன் படுத்த வேண்டும். சில வீடுகளில் இடப் பற்றாக்குறை
காரணமாக படுக்கை அறை அல்லது சமையல் அறை சுவர்களில் உள்ள அல மாரிகளை பூஜை அறையாக பயன்படுத்துவதுண்டு. அப்படி இருந்தால் வழிபடும் நேரம் தவிர அந்த அலமாரியை மூடி வைக்க வேண்டும். அதாவது கதவு இருந்தால் அதை அடைத்து வைக்க வேண்டும். அப்படி இல்லா விட்டால்
துணித்திரை கொண்டு மூடி வைக்க வேண்டும்.

சில சமயங்களில் கதவு உள்ள மரப்பெட்டிகளில் கடவுள் படங்களை வைத்து வழிபடுவதும் உண்டு. இதை சமையல் அறையின் வட கிழக்கு மூலையில்
வைக்கலாம். பூஜை அறைக்கு இரண்டு கதவுகள் இருக்க வேண்டும். அவை வெளிப்புறமாக திறக்கும்படி இருக்க வேண்டும். ஒரு பூஜை அறை மாடிப்படிகளின் கீழ் அமைந்து இருக்கக் கூடாது. பூஜை அறையில் மந்திர உச்சாடனங்களை தினமும் ஒன்றிரண்டு தடவை ஒலிபரப்பாகும்படி செய்ய வேண்டும் அல்லது நாமும் வாய்விட்டு உச்சாடனம் செய்யலாம். இது வீட்டில் நேர்மறை எண்ணங்களை கொண்டு வரும். அனைத்தையும் விட பூஜை அறையில் மனதை ஒருமுகப்படுத்தி, தீர்க்கமாக நமது பிரார்த்தனையை கடவுளிடம் முன் வைக்க வேண்டும். அது ஒரு நிமிடம் நீடித்தாலும் கூட போதுமானது.

http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=2885&Cat=3
 
பிள்ளையார் தோப்புக்கரணம்

பிள்ளையார் தோப்புக்கரணம்

பிள்ளையாருக்கு தோப்புக்கரணம் போடுகிறோம் எதற்காக போடுகிறோம் என்ற காரணங்கள் நமக்கு தெரிவதில்லை அதில் உள்ள காரணங்கள் மறைபொருளாக வைக்கப் பட்டு உள்ள ரகசியங்கள் என்னவென்று பார்ப்போம்

இடகலை என்னும் நாடி வலதுகால் பெருவிரலில் இருந்து புறப்பட்டு மேலே ஏறுகிறது அதேபோல் பிங்கலை என்னும் நாடி இடதுகால் பெருவிரலில் இருந்து புறப்பட்டு மேலே ஏறுகிறது

இந்த இரு நாடிகளும் மேலேறி வரும் பொழுது மூலாதாரத்தில் ஒரு பின்னல் போட்டும் இதயத்தில் ஒரு பின்னல் போட்டும் புருவமத்தியில் ஒரு பின்னல் போட்டும் இருக்கிறது.

வலது கால் பெருவிரவலில் இருந்து வரும் இடகலை என்னும் நாடி புருவமத்தியில் மாறி இடது பக்கமாகவும் இடதுகால் பெருவிரலில் இருந்து புறப்பட்டு வரும் பிங்கலை என்னும் நாடி புருவமத்தியில் மாறி வலது பக்கமாகவும்


புருவமத்தியில் மாறி மாறி நெற்றிப் பொட்டு வழியாக மூளைப் பகுதிக்குச் செல்கிறது
சுழுமுனை என்னும் நாடியானது மூலாதாரத்திலிருந��- �து ஆரம்பித்து எல்லா நாடிகளுக்கும் ஆதாரமாக இருக்கும் நடு துவாரத்தில் உட்புறமாக சஞ்சாரம் செய்து மேல் நோக்கிச் சென்று இரு புருவமத்தியிலுள் ஆக்கினை பகுதியைப் பற்றி நிற்கும்

நெற்றிப் பொட்டில் நாம் இரு கைகளையும் மடக்கி விரல்களால் குட்டிக் கொள்ளும் போது அந்த இடங்களில் உள்ள பின்னல் நரம்புகளில் அந்த அதிர்வு பரவி சரீரத்தில் பின்னி வரும் நரம்புகளில் ஒரு துடிதுடிப்பை உண்டாக்குகிறது

அந்த துடிதுடிப்பு மூலாதாரத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் குண்டலினி சக்தியில் இந்த அசைவு பதிகிறது

அதற்கு பிறகு இரண்டு காதுகளையும் பிடித்துக் கொண்டு தோப்புக் கரணம் போடும் போது குண்டலினி சக்தியில் அசைவை ஏற்படுத்துகிறது

பல தடவை தொடர்ந்து தோப்புக் கரணம் போடும் பொழுது குண்டலினி சக்தியை துhண்டி மேலே எழ வைக்கிறது

தோப்புக் கரணம் போடும் பொழுது குண்டலினி சக்தி மூலாதாரத்திலிருந��- �து எழுந்து சுழுமுனை நாடி வழியாக புருவமத்தியில் கொண்டு வந்து நிறுத்தி விடுகிறது

ஜப்பானில் ஜென் புத்த மதத்துறவிகள் இந்த தோப்புக் கரணத்தை குண்டலினி சக்தியை கிளப்புவதற்கு உபயோகப் படுத்துகிறார்கள்

நம்முள் உறங்கிக் கிடக்கும் சக்தியை எழுப்ப தோப்புக் கரணம் போடுகிறோம் இந்த தோப்புக் கரணத்தை பிள்ளையாருக்கு மட்டும் ஏன் போட வேண்டும் பிள்ளையார் சிலை முன் ஏன் போட வேண்டும் என்பதை பார்ப்போம்

மனிதர்களுடைய உடலில் ஆறு ஆதாரங்கள் உள்ளன ஒவ்வொரு ஆதாரத்திற்கும் ஒரு தெய்வசக்தி உண்டு ஒவ்வொரு ஆதாரத்திலும் உள்ள தெய்வ சக்தியின் அருள் நமக்குக் கிடைத்தால் அந்த ஆதாரத்தை விழிப்படையச் செய்து அதன் சக்தியை நாம் பெற முடியும்

ஆறு ஆதாரங்களும் அந்த ஆதாரங்களுக்கு உரிய தெய்வசக்திகளும் கீழே கொடுக்கப்பட்டுள்��- �ன

ஆதாரம் தெய்வசக்திகள்

மூலாதாரம் ------------- விநாயகர்
சுவாதிட்டானம் ------------ பிரம்மா
மணிபு+ரகம் ----------------- விசணு
அநாகதம் ------------ ருத்திரன்
விசுக்தி ------------- மகேஸ்வரன்
ஆக்கினை ------------- சதாசிவன்

இந்த ஆறு ஆதார தெய்வ சக்திகளின் அருளால் கிடைப்பது தான் சகஉறஸ்ரார சித்தி ஆகும்

மேற்கண்ட காரணங்களால் தான் பிள்ளையாருக்கு தோப்புக்கரணம் போடுகிறோம்.


??????-12--???????? ????????: ?????????? ?????????????
 
குபேரன் கதை:

குபேரன் கதை:

ST_174833000000.jpg




விச்ரவசு என்றொரு முனிவர்; சிறந்த சிவபக்தர். அவர் யாகம் ஒன்று செய்ய விரும்பினார். ஆனால், திருமணம் ஆனவர்களே யாகம் செய்ய முடியும் என்பதால், பரத்வாஜ முனிவரின் மகளை மணந்துகொண்டார். இவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்தது. குழந்தைக்கு வைஸ்ரவணன் என்று பெயர் வைத்தார். தந்தையைப் போலவே இவனும் பக்திமானாக இருந்தான். ஒருநாள் பெற்றோரிடம் சென்று, தான் பிரம்மனைக் குறித்து தவமியற்றப் போவதாகச் சொன்னான். அவர்களுக்கும் அதில் மகிழ்ச்சியே! அவனை மனதார ஆசீர்வதித்து அனுப்பினர்.

வைஸ்ரவணன் அமைதியான ஓரிடத்துக்குச் சென்று, தவத்தில் மூழ்கினான். அது சாதாரண தவம் இல்லை.

முதலில் ஆகாரமின்றி தண்ணீரை மட்டுமே அருந்தி தவமிருந்த வைஸ்ரவணன், பிறகு தண்ணீரையும் தவிர்த்து வெறும் காற்றை மட்டுமே புசித்தபடி தவத்தைத் தொடர்ந்தான்.

அவனது பக்தி வைராக்கியத்தைக் கண்டு அகமகிழ்ந்த பிரம்மதேவன், அவன் முன் காட்சி தந்தார். என்ன வரம் வேண்டும்? என்று கேட்டார். தங்களைத் தரிசித்ததே பெரும் பாக்கியம். இதைவிட எனக்கு வேறென்ன வேண்டும்? என்று பணிவுடன் கூறினான் வைஸ்ரவணன்.

இதனால் மேலும் மகிழ்ந்த பிரம்மதேவன், அவனை அஷ்டதிக் பாலகர்களில் ஒருவனாகவும், எல்லாச் செல்வங்களையும் பாதுகாக்கும் அதிபதியாகவும் நியமித்தார். இப்படி அருள்பெற்ற வைஸ்ரவணனே குபேரன் ஆவார். தீபாவளி தினத்தில் பூஜிக்கவேண்டிய தெய்வங்களில் இவரும் ஒருவர். அன்று இவரை வழிபட, வறுமைகள் அகன்று நமது வாழ்வு வளம் பெறும்.

????? ??????, ????? ?????!
 
தன்னுயிராகப் பிறரைப் போற்றுங்கள்

தன்னுயிராகப் பிறரைப் போற்றுங்கள்


* கொலை செய்யாதே, களவாடாதே, கள் உண்ணாதே, பிறர்மனைவி விரும்பாதே, பொய்பேசாதே. இந்த ஐந்தையும் பின்பற்றினால் எந்த தீங்கும் நேராது.

* பாவம் செய்வது தவறு என்பதை மனிதன் உணர்கிறான். உணர்ந்தும் அதை அவன் செய்யாமல் இருக்கின்றனா என்றால் அதுதான் இல்லை. எவனொருவன் தான் செய்த குற்றத்தை உணர்ந்து வருந்துகிறானோ, அவன் தான் செய்த பாவத்திலிருந்து விலகி தன்னை தூய்மைப்படுத்திக் கொள்கிறான்.

* அறிவுரை கூற விரும்புபவர்கள், தன்னிடம் உள்ள குறைகளையும் போக்கிய பிறகே, பிறருக்கு போதனை செய்ய வேண்டும்.

* எல்லா உயிர்களையும் தன்னுயிராக எண்ணி, மறந்தும் பிறருக்கு கேடு செய்யாமல், தன்னலம் கருதாதமல், எல்லா உயிர்களையும் கருணையால் நேசிப்பவனுமே மேலான மனிதன்.

* பெண்ணின் பெருமையை உணராத மனிதர்கள் நாகரிகம் என்பதே அறியாதவர்கள். காலநிலையை உணர்ந்து பெண்களும் தர்மத்திற்கு மாறுபடாதவழியில் தங்கள் உரிமையைப் பெற முயலவேண்டும்.

* ஆன்மிக சக்தி நம் மனதில் எழுச்சி பெற அன்பு, தியாகம் போன்ற நல்ல குணங்கள் இருக்க வேண்டும்.

-திரு.வி.க.,



Indian Hindu Religion Philosophers and Spiritual Philosophy
 
நவ சமுத்திர தலங்கள்

நவ சமூத்திர தலங்கள்




நவ சமூத்திர தலங்கள் என்பவை சிவபெருமானது எண்ணற்ற தலங்களில் ஒரு வகையாகும். நவ என்றால் ஒன்பது என்று பொருள்படும். எனவே நவ சமுத்திர தலங்கள் என்பது ஒன்பது சமுத்திர தலங்களைக் குறிப்பதாகும்.


அவையாவன:




  1. அம்பாசமுத்திரம்,
  2. ரவணசமுத்திரம்,
  3. வீராசமுத்திரம்,
  4. அரங்கசமுத்திரம்,
  5. தளபதிசமுத்திரம்,
  6. வாலசமுத்திரம்,
  7. கோபாலசமுத்திரம்,
  8. வடமலைசமுத்திரம் (பத்மனேரி),
  9. ரத்னகாராசமுத்திரம் (திருச்செந்தூர்).

??????????????
 
Eka sloki Ramayanam (Ramayana in one stanza)

Eka Sloki Ramayan
Translated by P. R. Ramachander


Eka sloki Ramayanam (Ramayana in one stanza)


10155684_739401649423954_8851410050749128305_n.jpg




Aadho Rama thapo vananu gamanam, Hathwa mrugam kanchanam,
Vaidehi haranam, jatayu maranam, Sugreeva sambhashanam,
Bali nigrahanam, samudhra tharanam, Lanka pureem dahanam,
Paschad Ravana Kumbha karna madanam, Ethat ithi Ramayanam

Once Rama went to forest,
He chased the deer,
Sitha was kidnapped,
Jatayu was killed, There were talks with Sugreeva,
Bali was killed,
The sea was crossed,
Lanka was burnt,
And later Ravana and Kumbha karna,
Were also killed.
This in short is the story of Ramayanam.

Source: Chinthamani
 
கோயில்களில்எதை பலியிட வேண்டும்?

எதை பலியிட வேண்டும்?


உமையவளாகிய பராசக்தியை லோகமாதா என்று வழிபடுகிறோம். அவளே கோயில்களில் இறைவனோடு சேர்ந்து அம்மையப்பராய் அருள்பாலிக்கிறாள். இறைவனின் ஐந்து தொழில்களில் ஒன்றான அருளல் என்னும் அருட்சக்தியே அம்பிகையாக உருவெடுத்து அருள்புரிவதாக ஆகமங்கள் கூறுகின்றன. அதேநேரம், கருணையே உருவான அம்பிகை உக்கிர ரூபமாகி அசுரசக்திகளை அழிக்கும் போது "காளி' என்று பெயர் பெறுகிறாள். ஆடு, மாடு போன்ற உயிர்களை அவளுக்கு பலியிடுகிறார்கள். ஆனால், உண்மையில் காளி விரும்பும் பலி எவை தெரியுமா? "வாமாசாரம்' என்று சாஸ்திரத்தின் மூலம் பழங்காலத்தில் காளிக்கு பலியிடும் வழக்கம் இருந்ததை அறியமுடிகிறது.

மனித மனதில் ஆறு வகையான பகைவர்கள் இருக்கிறார்கள். அப்பகைவர்களை வெல்லும் சக்தியை அருள்பவள் காளியே. காமம், கோபம், கருமித்தனம்(லோபம்), மோகம், ஆணவம்(மதம்), பொறாமை(மாச்சர்யம்) என்பவையே அந்த தீயகுணங்களின் குறியீடாகவே வெள்ளாடு, எருமை, பூனை, செம்மறியாடு, மனிதன், ஒட்டகம் ஆகியவற்றை அக்காலத்தில் பலியிட்டு வழிபட்டனர். ஆனால், காலப்போக்கில் இவ்வழக்கம் குறைந்து ஆடு, கோழி பலியிடப்படுகிறது. மற்ற மிருகங்கள் குறைந்த அளவில் பலியிடப்படுகின்றன. பலியிடுதலில் இருக்கும் உண்மையை உணராமல், வெறும் அடையாளத்தை மட்டும் பின்பற்றுவது முறையானதல்ல.

கருணையே வடிவமான காளியிடம் நம்மிடம் இருக்கும் வேண்டாத தீயகுணங்களை பலியிட்டு மனத்தூய்மை பெறுவதே சிறப்பாகும்

aanmigam: ?????????????? ?????? ?????????
 
ஸ்ரீராமஜெயம் எழுதுவது ஏன்?

ஸ்ரீராமஜெயம் எழுதுவது ஏன்?


TN_110727175514000000.jpg




வேலை கிடைத்தல், திருமணம், வீடு கட்டுதல் போன்ற உலக இன்பங்கள் கருதிய வேண்டுதல் களுக்காக சிலர் ஸ்ரீராம ஜெயத்தை லட்சம் முறை, கோடி முறை என எழுதுகின்றனர்.

உலக இன்பங்கள் மட்டுமின்றி, இந்த மந்திரம் அகப்பகை எனப்படும் நமக்குள்ளேயே இருக்கும் கெட்ட குணங்களையும், புறப்பகை எனப்படும் வெளியில் இருந்து நம்மைத் தாக்கும் குணங்களையும் வெல்லும் சக்தியைத் தரும்.

ராம என்ற மந்திரத்துக்கு பல பொருள்கள் உண்டு. இதை வால்மீகி மரா என்றே முதலில் உச்சரித்தார். மரா என்றாலும், ராம என்றாலும் பாவங்களைப் போக்கடிப்பது என்று பொருள். ராமனுக்குள் சீதை அடக்கம். அதனால் அவரது பெயரையே தனதாக்கிக் கொண்டாள். ரமா என்று அவளுக்கு பெயருண்டு.

ரமா என்றால் லட்சுமி. லட்சுமி கடாட்சத்தை வழங்குவது ராம மந்திரம். ராம மந்திரம் எழுதுவோருக்கும், சொல்வோருக்கும் எங்கும் எதிலும் ஜெயம் (வெற்றி)உண்டாகும். ராமன் என்ற சொல்லுக்கும் பொருளைத் தெரிந்து கொள்ளுங்கள். ரா என்றால் இல்லை மன் என்றால் தலைவன். இதுபோன்ற தலைவன் இதுவரை இல்லை என்பது இதன் பொருள்.


Sri rama jayam | Sri rama jayam | Sri rama jayam | ???????????? ???????? ????
 
அண்ண‍ன் தங்கை, அக்கா தம்பி என்ற உறவு முக்&#29

அண்ண‍ன் தங்கை, அக்கா தம்பி என்ற உறவு
முக்கியத்துவம் வாய்ந்தது.


எப்ப‍டி தெரியுமா?



சகோதரர்களை பெற்றிருப்பது உற்ற
நண்பர்களைப் பெற்றிருப்பதைப்போன்றதே.


இவர்கள் தான் குழந்தைப் பருவத்தின் முக்கியமான பகுதிகளாக இருப்பார்கள்.


இவர்கள் இருவரும் தங்களுடைய வாழ்க்கையில் முக்கியமான விளைவுகளை சகோதர உறவால் எதிர் கொண்டிருப்பார்கள்.


ஒரே குடும்பத்தில் பிறந்து, வளர்க்கப்பட்ட
சகோதரர்களிடம் ஒரு கலவையான அன்பும், நட்புணர்வும்
விளங்கி வரும்.


ஒரே ஒரு குழந்தையை மட்டும் கொண்ட குடும்பங்களில் சகோதர உறவுகள் இல்லையென்பதால், அவர்களுடைய வாழ்க்கையில் மிகவும் வித்தியாசமான மற்றும் அற்புதமான உறவையும், சகோதர அல்லது சகோதரி பாசத்தையும் இழந்து விடுகிறார்கள்.


சகோதரர்கள் இருவருமே பிறந்ததில் இருந்தே ஒருவரையொருவர் அறிவார்கள்.


சகோதர உறவுமுறைகள் ஒட்டு மொத்த குடும்பத்தின் நிலையையும் உணர முடியும்.


தங்களுக்குள் நல்ல புரிந்துணர்வுடன் இல்லாத உறவுகளை கொண்ட குடும்பத்தினர்களை உ டைய சகோதரர்களின் வாழ்க்கை
சற்றே மன வேறு பாடுகளுடனேயே இருக்கும்.


அதே சமயம், மிகவும் நல்ல புரிந்துணர்வுடன் இருக்கும் குடும்பங்களில் உள்ள சகோதரர்கள், நட்புக்கு எடுத்துக்காட்டாக
இருப்பார்கள்.


எனவே தான் ஒரு குழந்தையின் மன மற்றும் கலாச்சார வளர்ச்சிக்கு சகோதர உறவு முறை மிகவும் முக்கியமானதாக உள்ளது.


இந்த கட்டுரையி ல் சகோதர உறவு முறை ஏன் முக்கியமானதாக உள்ளது என்று நாம் சில கருத்துகளை விவாதிப்போம்.


இதனை விளக்குவதற்கு சில காரணங்கள் உள்ளன.
அவை பின்வருமாறு:


1. நண்பன், வழிகாட்டி மற்றும் ஆசான்

சகோதரர்கள் தங்களுக்குள் ஆரோக்கியமான உறவை பராமரிக்க வேண்டும்.
சகோதரர் அல்லது சகோதரிகள் தான் தனிமையில் இருக்கும் குழந்தைகளுக்கு மிகவும் உற்ற நண்பர்களாவார்கள்.


அவர்கள் உங்களை புரிந்து கொள்வதுடன், உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு அங்கத்தையும் விளக்கமாக
தெரிந்தும் வைத்திருப்பார்கள்.


நீங்கள் குழப்ப த்தில் இருக்கும் வேளைகளில் சகோதரர்கள் உங்களுக்கு வழிகாட்டிகளாக இருப்பார்கள்.
கடினமான நேரங்களில் ஒரு நல்ல ஆசானாகவும, வழிகாட்டியாகவும் சகோதரர்கள் இருப்பார்கள்.
இந்த குணங்களை கொண்ட சகோதரர்கள் நண்பர்களாகவும், அன்பு கொண்டவர்களாகவும் பாசத்துடன் இருப்பார்கள்.


2. உணர்வு ரீதியான ஆதரவு


சகோதரர்கள் ஒரே மாதிரியான குடும்ப சூழல் மற்றும் மன நிலை யில் வளர்க்கப்படுகிறார்கள்.
இது அவர்களின் ஒட்டு மொத்தமான மற்றும் கலாச்சார வளர்ச்சியும் ஒரே மாதிரியாக இருக்க வகை செய்கிறது.


இருவரும் ஒருவரையொருவர் நன்கு புரிந்திருக்கவும் உதவுகிறது.


இவர்கள் உறவினர்கள் மட்டுமல்லாமல், இருவரும் தங்களுக்குள் மன ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் ஆதரவாக இருக்க முயலுவார்கள்.


அவர்களுக்குள் சொந்தமாக ஏதாவது பிரச்னைகள் ஏற்படும் போதும், குடும்ப பிரச்னைகளின் போதும் ஒருவருக் கொருவர் உதவியாக இருப்பார்கள்.


3. புரிதல்


சகோதரர்கள் அல்லது சகோதரிகள் ஒருவரையொருவர் நன்றாக புரிந்து கொள்வார்கள்.
நீங்கள் பெரியவராக வளர்ந்த பின்னரும் கூட சகோதர உறவு களை நன்றாக பராமரிக்க வேண்டியது அவசியமாகும்.


அதன் மூலம் தன் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் கவலைகளையம், பிரச்னைகளையும் நம்பிக்கையான
ஒருவரிடம் மனம் விட்டுப்பேச முடியும்.


அவர்கள் இருவரும் ஒருவ ரை யொருவர் ஊக்கப்படுத்தவு ம், தாக்கத்தை ஏற்படுத்தவும் செய்வார்கள்.
உங்களுக்கு சகோதரர்கள்இருந்தால், உங்களை ஊக்கப்படுத்த அலலது ஆதரவு தெரிவிக்க வேறு எவரும் தேவையில்லை.


4. குடும்ப ஒற்றுமை


குடும்பத்தை ஒற்றுமையுடன் வழி நடத்த சகோதர உறவு மிக வும் முக்கியமானதாகும்.


சகோ தரர்கள் பாசத்துடன் இணைந்தி ருக்கும் வரையில் குடும்பத் தின் உறவும் நீடித்து ஒற்றுமையுடன் இருக்கும்.


இதன் மூலம் சகோதரர்கள் தாய் தந்தையரை சந்திக்கவும், அவர்களுடைய குழந்தைகள் மற்ற சகோதரர்களின் குழந்தைகளை சந்திக்கவும் முடிகிறது.


குடும்பமாக இணைந்திருத்தல், குடும்பமாக வெளியே செல்லுதல் மற்றும் இரவு உணவு சாப்பிடுதல் போன்றவை இந்த உறவுகளை சகோதர, சகோதரிகளிடம் மேம்படுத்தி வளர்க்கின்றன.


5. இரத்த பந்தம்


சகோதரஉறவுகளில் நீங்கள் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் இரத்த பந்தம்.


ஒரே குடும்பத்தில் பிறந்த சகோதரர்கள் தங்களுடைய
சிறப்பான உறவு முறைகளால், ஆரோக்கியமான மற்றும் சுறுசுறுப்பான குடும்பத்தை பராமரித்து வருகிறார்கள்.


இந்த இரத்த பந்தம், குடும்ப கலாச்சாரம் மற்றும் குடும்ப
வரலாறு ஆகியவற்றை பாதுகாத்தும், பராமரித்தும் வருவதற்கு சகோதர, சகோதரிகளிடம் நல்ல உறவு முறை இருந்து வரவேண்டும்.

Source: Mrt Srinivasan
 
ஸ்படிக லிங்க வழிபாடு

ஸ்படிக லிங்க வழிபாடு

ஸ்படிக லிங்க தத்துவம்:



யோகிகள், தங்கள் சிரசிலுள்ள சகஸ்ரார கமலத்தில் (ஆயிரம் இதழ் தாமரை போன்றது) உள்ள சந்திரமண்டலத்தில், சிவனை ஜோதி வடிவாக தியானம் செய்வார்கள்.
அப்போது, சந்திரமண்டலத்தில் இருந்து அமிர்தம் கொட்டும்.
அவர்கள் பரமானந்த நிலையில் திளைப்பார்கள்.

இதன் காரணமாக, உலக வடிவான ஜோதிர்லிங்கம் குளிரும்.
அது குளிர்ந்தால் உலகமே குளிரும்.
அதாவது, மக்கள் சுபிட்சமாக வாழ்வார்கள்.

நம்மைப் போன்ற சாமானியர்களுக்கு இது போன்ற யோகம் சாத்தியமல்ல.
நாம் செய்யும் யோகா எல்லாம் உடல்நலத்துக்காக மட்டுமே.
லிங்கம் குளிர்ச்சியாக இருக்க வேண்டுமே என்பதற்காகத்தான் வடக்கேயுள்ள ஜோதிர்லிங்கத் தலங்களில் பக்தர்களே அபிஷேகம் செய்ய அனுமதிக்கப்படுகிறது.

ஸ்படிக லிங்க வழிபாடு ஜாக்கிரதையா இருங்க!
பூஜையறையில், கண்ணாடிபோல் இருக்கும் ஸ்படிக லிங்கம் வைத்து வழிபடுவோர் ஏராளமாக இருக்கிறார்கள்.
இதை வழிபடும்போது,மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
ஸ்படிகலிங்க வழிபாட்டின் போது, உங்கள் மனதில்
என்ன தோன்ற வேண்டும் தெரியுமா?

ஸ்படிகலிங்கத்திற்கு நிறம் கிடையாது.
ஆனால், அதன் பின்னால் ஒரு செவ்வரளியை வைத்தால் சிவப்பாகத் தோன்றும். வில்வத்தை வைத்தால் பச்சையாக இருக்கும்.

அதாவது, எதை வைத்துள்ளோமோ, அந்த நிறத்தை அப்படியே உள்வாங்கி நம்மிடம் காட்டும்.
அதே போல், நாம் என்ன எண்ணத்துடன் அந்த லிங்கத்தை வணங்குகிறோமோ, அதற்குரிய பலனே நமக்கு கிடைக்கும்.

நம் எதிரிக்கு கூட கஷ்டம் வர வேண்டும் என அந்த லிங்கத்திடம் கேட்கக்கூடாது.
அவ்வாறு கேட்டால், அது நம்மையே வந்தடையும்.

எனவே, ஸ்படிக லிங்க வழிபாட்டை விளையாட்டாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.
நமக்கு ஒரு கஷ்டம் என்றால்,
"நீ பார்த்துக்கொள்'' என்று அந்த கஷ்டத்தையும் அவனிடமே சமர்ப்பித்து விடுங்கள்.
நடவடிக்கை எடுக்க வேண்டியது அவன் பொறுப்பு.

ஸ்படிகலிங்கத்தின் முன்னால் நின்று வீட்டுக்கும், நாட்டுக்கும் நன்மையை மட்டும் கேளுங்கள்.



Source: Ananthanarayanan Eamaswamy








 
யாரு முன்னால போகணும் யாரு பின்னால போகணு&#2990

யாரு முன்னால போகணும்
யாரு பின்னால போகணும்




யார் பின்னால் போக வேண்டும், யாருக்கு வழிவிட்டு ஒதுங்கி நிற்க வேண்டும் என்று சாஸ்திரம் சில விதிகளைச் சொல்லி யிருக்கிறது.


பஞ்சமகா யக்ஞம் எனப்படும் ஐந்து வகை யாகங்களை தவறாமல் செய்யும் ஒரு வேதியர் வந்தால் அவருக்கு வழிவிட்டு பின்னால் செல்ல வேண்டும்.


கர்ப்பவதி வந்தால் அவளுக்கு வழிவிட்டு பின்னால் போகவேண்டும்.


பசுக்கள் பின்னால் வந்தால், அதற்கு வழிவிட்டு பின்னால் போகவேண்டும்.


யானை பின்னால் வந்தால், அதை முதலில் விட்டு பின்னால் நடக்கவேண்டும்.


தலையில் கனமான பொருளை எடுத்துக் கொண்டு ஒருவர் பின்னால் வந்தால், அவருக்கு வழிவிட்டு தொடர்ந்து செல்ல வேண்டும்.


இவற்றில் பசுக்களின் பின்னால் சென்றால், அதன் பாததூளி தூசு நம் மீது பட்டு உடல் சுத்தம், பேச்சில் சுத்தம், மனச்சுத்தம் ஏற்படுவதாக ஐதீகம்.




Source:Raman
 
தாமரை மலர், சிவனுக்கு மட்டும் உகந்ததா?

தாமரை மலர், சிவனுக்கு மட்டும் உகந்ததா?

மலர் என்றாலே அது தாமரை தான் என இலக்கியத்தில் குறிப்பிடுவர். அந்த அளவுக்கு சிறப்பிடம் பெற்றது தாமரை. இதில் செந்தாமரை, வெண்தாமரை என இருவகை உண்டு.லட்சுமி, சிவன், சூரியன், அம்பிகைக்கு செந்தாமரையும், சரஸ்வதி, சந்திரனுக்கு வெள்ளைத் தாமரையும் ஏற்றது.

செல்வத்தை வழங்கும் திருமகளின் இருப்பிடம் செந்தாமரை. தாமரைக்கும் லட்சுமிக்கும் இருக்கும் தொடர்பை குறிக்கும் சொற்கள் பல உள்ளன.

செல்வத்தை வழங்கும் திருமகளின் இருப்பிடம் செந்தாமரை. தாமரைக்கும் லட்சுமிக்கும் இருக்கும் தொடர்பை குறிக்கும் சொற்கள் பல உள்ளன. பத்மா என்றால் தாமரை என்பது பொருள்.

தாமரை முகம் கொண்டவள் என்பதால் பத்மமுகி. தாமரையில் வீற்றிருப்பதால் பத்மமாலாதராம்.

தாமரை மலரைக் கையில் தாங்கி நிற்பதால் பத்மஹஸ்தாம்.

திருமகளின் மேனியில் தாமரையின் நறுமணம் எழுவதால் பத்மகந்தி.

பத்மநாபனான விஷ்ணுவின் மனைவியானதால் பத்மநாபப்ரியா.

கண்கள் தாமரை போல அழகு மிக்கதால் பத்மநளாயதாட்சி. தாமரையில் வாழ்வதால் பத்மாலயம். தாமரையில் பிறந்ததால் பத்மேமாத்பவம்.



Temple News | News | Dinamalar Temple | ????? ????, ????????? ??????? ????????

http://temple.dinamalar.com/news_detail.php?id=16815
 
Last edited:
பெண்கள் எத்தகைய அணிகலங்களை முக்கியமாக அ&


பெண்கள் எத்தகைய அணிகலங்களை முக்கியமாக அணிய வேண்டும்?

கேள்வி – பெண்கள் எத்தகைய அணிகலங்களை முக்கியமாக அணிய வேண்டும்? இன்றைய ஆபத்தான நிலையில் தாலியைத் தங்கச் சங்கிலியில் கோர்த்து அணிந்து செல்வது முறையாகுமா? இவை இல்லாவிட்டால் பெண்களின் மங்கல நிலை பாதிக்கப்படுமா?



பதில் – ‘சௌந்தர்யலஹரி’ என்ற நூலில் ஆதிசங்கரர் பார்வதியை ஸ்தோத்திரம் செய்யும்போது, உன்னுடைய காதனியான தோட்டின் மகிமையினால்தான் ஸ்ரீபரமேஸ்வரர் சமுத்திரத்திலிருந்து உண்டான ஆலகால விஷத்தைச் சாப்பிட்டும்கூட அவருக்கு எதுவும் ஆகவில்லை என்கிறார்! எல்லா கோயில்களிலும் உள்ள அம்மனைத் தரிசிக்கும்போது பார்க்கலாம்.

தோடு இல்லாமல் – தாடங்கம் இல்லாமல் இருக்க மாட்டாள். தோடு என்பது மங்களகரமானது; மங்களத்தை அளிக்கக் கூடியது. ஆகவே பெண்கள் – முக்கியமாக சுமங்களிகள் – காதில் தோடில்லாமல் இருக்ககூடாது. காதில் தோடு, மூக்கில் மூக்குத்தி, கையில் வளையல், காலில் மெட்டி முதலியவை அணிகலங்களாக இருந்தாலும் மங்கலப் பொருட்களாகவே கருதப்படுகின்றன.



தற்காலத்தில் ஒரு கையில் வளையலும், இன்னொரு கையில் கடிகாரமுமாக அணிந்து, பெண்கள் செல்லுகிறார்கள். அதனால் பல சௌகரியங்கள் இருந்த போதிலும், மங்களம் பெறுவதில் அரைப்பங்கு குறைந்து விடுகிறது. ஆகவே வினைப்பயனால் வரும் துன்பம் ஒரு முறை – நாமே இதுபோன்ற காரியங்களினால் வரவழைத்துக் கொள்ளும் மற்றொரு முறை என்று ஏற்பட்டு விடுகிறது.



கல்யாணத்தில் முக்கியமானது தாலி கட்டுவது என்பது. அதைத்தான் மங்கள் சூத்திரம், மங்கல நாண் என்பார்கள். ஆகவே இந்தத் தாலி கட்டுவது என்பது மூன்று முடிச்சுகளைப் போடக்கூடிய மங்கலக் கயிற்றினால் செய்யப்படுவதாகத்தான் இருக்க வேண்டும் என்று தெரிகிறது. ஆனால் தற்காலத்தில் பலர் தங்கச் சங்கிலியை வாங்கி அதில் தாலிபதக்கத்தைக் கோர்த்து விடுகிறார்கள். தாலி கட்டும்போது சொல்லக்கூடிய மந்திரத்தில் “கழுத்தில் தாலி கட்டுகிறேன்” என்றுதான் இருக்கிறதே தவிர “சங்கிலியில் கோர்த்து கழுத்தில் போட்டு விடுகிறேன்” என்று இல்லை.



மேலும் தாலி என்பது ஒரு மங்கலப்பொருள் அதை அணிகலங்களைப் போலக் கழற்றுவதும், உள்ளே எடுத்து வைப்பதும் தவறு. தாலி எப்போதுமே ஒரு சுமங்கலியின் கழுத்தில் இருக்க வேண்டும். தாலிக்கயிற்றில் அது இருப்பதுதான் விஷேசம். சில புண்ணிய காலங்களில், தாலிக்கயிறு நைந்து போகும்போது. வேறு கயிறு மாற்றிக் கொள்ளலாம். ஆனால் அணிகலங்களைப் போல அவ்வப்போது மாற்றிக் கொள்ளக்கூடாது.

Source: Swarnagiri Vasan
 
நான்கு உயரிய உண்மைகளும்", "எண் வகை வழிகளு&

"நான்கு உயரிய உண்மைகளும்", "எண் வகை வழிகளும்" பிறவி என்பது ஒருவரது செயலினால் ஏற்படும்.

நான்கு உண்மைகள் :


1. துன்பம் : இவ்வுலக வாழ்க்கை துன்பகரமானது. ஏழ்மை, நோய், மூப்பு, இறப்பு முதலியவை நிறைந்த உலக வாழ்க்கை, எளிதில் விலக்கிக் கொள்ள முடியாத துன்பம் நிறைந்தது. இவை நம்மை தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

2. அதன் தோற்றம் : சிற்றின்ப ஆசையே துன்பத்தின் காரணம். தான் இன்பமாக வாழ வேண்டும் என்ற தன்னலம் கலந்த ஆசையே துன்பங்களுக்கு காரணமாகும்.

3. அதை ஒழித்தல் : ஆசை ஒழிக்கப்பட்டாலொழிய துன்பத்தை ஒழிக்க முடியாது.

4. அட்டசீலம் : (எண்வகை வழி) துன்பத்தை ஒழிக்கும் வழி இதுவேயாகும். எண்வகை வழிமுறைகளை கடைபிடித்தால் ஆசைகளை ஒழித்துவிடலாம்.

நடுவு நிலை வழி, இடை வழி : ஆசையை அறவே ஒழித்து, பல்வகையான வாழ்க்கையின் மீது நாட்டம் கொள்ளாமல், வாழ்க்கையில் ஆசையால் விளையும் துன்பங்களை ஒழிப்பதே நிர்வாணமாகும்.
இடைவழி : ஆழ்ந்த அறிவு, விவேகம், புலமை, அமைதி, நிர்வாணம் ஆகியவற்றை அடையச் செய்கின்றன. இடைவழியில் எட்டு கொள்கைகள் உள்ளன. இதற்கு "அட்ட சீலம" அல்லது "எண் வகை வழிகள்" என்று பெயர்.

அட்டசீலம் அல்லது எண்வகை வழிகள் :


1. நல்ல நம்பிக்கை : நான்கு உண்மைகளில் நம்பிக்கைக் கொள்ளுதல்.


2. நல்லெண்ணம் : இல்லற வாழ்க்கையை விட்டொழிக்கவும், சினத்தை அகற்றவும், ஒருவருக்கும் தீமை செய்யாமலிருக்கவும் தீர்மானித்தல்.


3. நல்வாய்மை அல்லது நல்லமொழி : பயனற்றதும், கடுமையானதும் பொய்யானதுமான சொற்களை கூறாதிருத்தல்.


4. நற்செய்கை : பிறரை துன்புறுத்தாமலும் (அகிம்சை) களவாடாமலும் நன்னெறி தவறாமல் இருத்தல்.


5. நல்வாழ்க்கை


6. நன் முயற்சி : தீமையை அகற்றி நற்குணங்களை வளர்த்தல்.


7. நற்சாட்சி : சிற்றின்ப ஆசையையும், துன்பத்தையும் அடையாவண்ணம் விழிப்புடனிருத்தல்.


8. நல்ல லட்சியத்தை (குறிக்கோளை) அடைய மனம் சிந்தித்தல்.



https://groups.google.com/forum/#!msg/mintamil/BYr-cl-fMgI/UK_-WD1qdYkJ
 
What is difference between 'Ashtakam' and 'Ashtothram'?

ASTAKAM


The term ashtakam (Sanskrit: अष्टकम् aṣṭakam), also often written astakam, is derived from the Sanskrit word aṣṭā, meaning "eight". In context of poetic compositions, 'ashtakam' refers to a particular form of poetry, written in eight stanzas.


The stanzas in an "ashtakam" are a rhyming quartet with four lines, i.e. end lines rhyme as a-a-a-a. Thus, in an ashtakam generally thirty-two lines are maintained. All these stanzas follow a strict rhyme scheme. The proper rhyme scheme for an astakam is: a-a-a-a/b-b-b-b….. (/ represents a new stanza). The rhyme designs are both ear-rhymes and eye-rhymes. Ear-rhyme where the end letters rhyme in sound and audibility, and eye-rhyme where the end letters appear similar. This rhyme sequence sets the usual structure of the astakam. astakam rhyme consists of identical ("hard-rhyme") or similar ("soft-rhyme") sounds placed at predictable locations, normally the ends of lines for external rhyme or within lines for internal rhyme.


Sanskrit language exhibits high richness in sustaining rhyming structures. Thus Sanskrit ashtakams are capable of carrying a limited set of rhymes all over a lengthy composition.


Several times in an ashtakam, the quatrains (sets of four lines) conclude abruptly or in other cases, with a couplet (a pair of lines). In the body quatrains the poet establishes a theme and then may resolve it in the final lines, called the couplet, or may leave them unsolved. Sometime the end couplet may contain self-identification of the poet. The structure is also bound by rules of meter for enhanced suitability for recital and classical singing. However, there are several ashtakams that do not conform to the regular structure.

The conventions associated with the ashtakam have evolved over its literary history of more than 2500 years. One of the best known ashtakam writers was Adi Sankaracharya, who created an ashtakam cycle with a group of ashtakams, arranged to address a particular deity, and designed to be read both as a collection of fully realized individual poems and as a single poetic work comprising all the individual ashtakams. He wrote more than thirty astakams in stuti [dedication] to various deities.


Ashtakams were a very popular and generally accepted genre of devotional and general poetry during the golden period of Sanskrit literature, and also that of Vedic Indian Literature.

ASTOTHRAM


Ashtothramas means doing puja, recieting and chanting “108″ names of God.

Ashtothram is a form of Archana worship usually offered to the deity with a recital of 108 names of a deity.It is an extended form of Astakam. It is derived from Sanskrit words Ashta and Uttaram. It consists of the names of a god in its 108 forms.





https://itunes.apple.com/us/app/ashtotram-for-goddess/id828840866?mt=8
Ashtakam - Wikipedia, the free encyclopedia

Lord Ganesha Ashtothram (Astothara Sathnamavali)
 
Story of Goddess Annapoorna and Lord Shiva

Story of Goddess Annapoorna and Lord Shiva


In Hinduism, Goddess Annapoorna, or Annapurna Devi, is the Goddess of food. She is an incarnation of Goddess Parvati; in essence one of the numerous forms of Shakti. In this incarnation she nourishes all living beings and therefore Hindus consider ‘Annam’ (food) as holy. There is an interesting incident involving Lord Shiva and Goddess Annapoorna, which explains that even Moksha (salvation) is not possible on an empty stomach.




Lord Shiva and Goddess Parvati used to play the game of dice. Once the game became so interesting that they started betting – Parvati kept her jewels and Shiva his trident. Shiva lost the game and lost his trident.

To get back his trident, Shiva betted serpent and this time too he lost the game. Finally, when the game ended, Shiva lost all that he had including his begging bowl.

A humiliated Shiva left for the Deodar forest. Lord Vishnu approached Shiva and asked him to play again to win back all that he had lost.

Taking advice from Vishnu, Shiva played again and won all that he had lost in the previous game.

Goddess Parvati grew suspicious about Shiva’s sudden turn of fortunes and called him a cheat. This led to a verbal duel between the couple. Finally, Lord Vishnu intervened and revealed that the dice moved as per His wish and they were under the illusion that they were playing.

Symbolically, life is like a game of dice - unpredictable and beyond control.

Verbal duel soon turned to philosophical discussion and Lord Shiva said that possessions are temporary…everything is Maya (illusion)…even the food we eat is Maya.

Goddess Parvati did not agree that food is illusion. She argued that if food is illusion I am also an illusion. She wanted to know how the world would survive without food and disappeared.




Her disappearance meant Nature came to a stand still. There were no seasonal changes. Everything remained barren. There was regeneration or birth. Soon there was severe drought and shortage of food.

Shiva soon realized that he is incomplete without Shakti.


Gods, humans and demons all kept praying for food. Goddess Parvati could not see her children perishing out hunger and appeared in Kashi (Varanasi) and started distributing food.

Shiva appeared before her with a begging bowl and Goddess Parvati fed Shiva. Shiva said that food cannot be dismissed as mere illusion as it is required to nourish the body in which resides the Atma.

Since then Goddess Parvati is worshipped as the Goddess of food – Annapoorna Devi.


Story of Goddess Annapoorna and Lord Shiva ~ Hindu Blog
 
what Gothram means and its significance

what Gothram means and its significance

GOTRAM is derived from noun go + root verb trA of Sanskrit, which mean -> Cow + Protect. Earlier, 'gotram' used to be a place where cattle were protected and reared, usually in hermitage premises or Ashramas, since dairy products were much useful for yajn~a or fire sacrifice. In simple meaning, A GOTRA is a cattle rearing group, identified with the name of the head of the group, obviously a sage. Naturally, the same group had parents, brothers, sisters, blood relatives and were much similar in activities and culture or customs. Due to scarcity of pasture or climatic abnormalities, the GOTRAs went nomadic, spreading out to different river valleys and other fertile lands where they set up their own GOTRAs, of course named after their leader, a sage. For example, the first known GOTRA, kashyapa gotra, split into vasiShTha, atri, jamadagni, bharadvAja, vishvAmitra, gautama and so on. Since they were Vedic groups, they excelled in different fields of knowledge and maintained their 'specialization', which came to symbolize the respective GOTRA.

On marriage, gotra of wife and cows she carried with her would change to gotra of the husband. Thus, GOTRA became a genetic inheritance of cows and knowledge. So, seeing the fraternity among same gotra, marriage between a pair of same GOTRA was BANNED, perhaps for genetic reasons. Of course, all religions prohibit marriage between brother and sister because of same reasons, whether they knew about DNA or not. So even now, Brahmin families follow the same rule of marrying from other gotras, except in special cases where, girl/ boy is adopted to other gotra even though born in same gotra. The vaishya families, in addition to this, do not even marry from maternal gotras.


http://jyotishavedika.blogspot.com/2005/11/gotra-and-astrology-of-genetics.html
 
Importance of waking up at Brahmamuhurt

Importance of waking up at Brahmamuhurt


As specified by the Dharmashastras, we should get up at Brahmamuhurt, which is three hours before the Sunrise.


1. Celestial souls of Divine nature move around during the Brahmamuhurt.

2. This period is Sattva component predominant. In this period, man’s intellect is pure and radiant.

3. During this period, there is an enhancement in qualities like purification of Sattva, getting engrossed in Karma, acquisition of Knowledge, donating, control over sense-organs, penance, Truth and peace. The qualities of compassion, moderation, shying away from objectionable Karma, stability, radiance and purity in behaviour are developed.

4. Insects like mosquitoes, bugs and fleas become weak.

5. The influence of distressing energies reduces.

Thus, it is evident that the Brahmamuhurt is a beneficial and important period for everyone. Hence, we should get up at Brahmamuhurt every day.

Read more at Vastushastra (Vaastu Shastra) - Why is acharpalan the real means of vastu purification?

#Brahmamuhurt #Spirituality #Dharma #Sanatan#Hinduism

 
Why different flowers are offered to different Deities ?

Why different flowers are offered to different Deities ?


Normally we have a concept that offering flowers to Gods and Goddesses is based on what he / she likes. But is it really so ? Let us see the actual reason according to science of spirituality.

A flower has a particular colour and a special fragrance. On a subtle level the colour and fragrance particles present in the flower have a capacity to attract the principles of a specific Deity which benefits the worshipper. That is the principle behind offering specific flowers to a Deity and not because they like it.

To cite some examples of flowers and God, white flower like that of Dhatura is offered to Deity Shiva, red coloured flower like Hibiscus for Shree Ganēsh, and red coloured flowers for Shrī Durgādēvī also. If the worshipper has more spiritual emotion for these flowers then the frequencies of Deities get more activated through the medium of these flowers and work for the worshipper directly.

To read more click here…
Why is a specific flower offered to a Deity?

#Hinduism #Spirituality #Sanatan #Dharma #Deity#FlowersToOffer
 
புதுமனை புகும்போது பசுவை உள்ளே அழைப்பது

புதுமனை புகும்போது பசுவை உள்ளே அழைப்பது ஏன்?

கோமாதா என்று அழைக்ககூடியது பசு.பசுவில் அனைத்து தெய்வங்களும் வாசம் செய்கின்றன.இதனால்தான் பசுவை அனைவரும் தெய்வ தாயாக போற்றுகின்றனர்.பசுவின் உடலில் மகாலெட்சுமி வாசம் செய்வதால்க பசுவை தரிசனம் செய்வது நல்லது. அவ்வாறு செய்தால் லட்சுமி கடாட்சம் உருவாகும். பசுவிற்கு பூஜை செய்து, பணிவிடைகள் செய்வதால் மிகுந்த புண்ணியம் வந்து சேரும்.புதுவீடு கிரகப்பிரவேசம் செய்யும்போது பசுவும், கன்றும் கொண்டு வந்து பூஜை செய்வது வழக்கம். அவ்வாறு செய்யும் போது மகாலெட்சுமி வீட்டிற்கு வருவதாக நம்பிக்கையாகும். கன்றில்லாமல் பசுவை மட்டும் அழைக்கக் கூடாது.
அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்
 
ராமன் எத்தனை ராமன்

ராமன் எத்தனை ராமன்



x1ramar_1812471h.jpg.pagespeed.ic.wfEWgUtieg.jpg



ராமபிரான் ஒருமுறை கங்கையில் குளிக்கச் செல்லும்போது தன் தோளில் இருந்த அம்பறாத் துணியைக் கழற்றி வைத்தார் . அதில் ஒரே ஒரு அம்பு மட்டுமே இருந்தது . அதைப் படுக்க வைத்துச் செல்வது வீரனுக்கு அழகல்ல எனத் தரையில் குத்திவிட்டுச் சென்றார்.


குளித்து முடித்துவிட்டுத் திரும்ப அந்த அம்பைத் தரையிலிருந்து பிடுங்கியபோது ஒரு தவளை ரத்தம் வெளியேற உயிருக்குத் துடித்துக்கொண்டு அதன் நுனியில் ஒட்டி இருந்தது. அதைக் கண்ட ராமபிரான் நெஞ்சம் பதைபதைத்து.


“தவளையே! நான் உன்னை அம்பால் குத்தியபோது நீ குரல் கொடுத்திருக்கலாமே” என்று கலங்கினார் .
“எம்பெருமானே ! எனக்குப் பிறர் தீமை செய்தால் என்னைக் காப்பாற்றிக்கொள்ள ‘ராமா! ராமா!’ என அழைப்பேன் . ஆனால், ராமனாலேயே எனக்கு ஆபத்து என்னும்போது யாரைக் கூவி அழைப்பேன்?” என்றது தவளை.


மீனும் தேனும்


ராமன் காட்டுக்கு வந்ததும் முதலில் அவரைச் சந்தித்தது குகன். வேடனான குகனும், அரச குமாரரான ராமனும் முதல் சந்திப்பிலேயே ஆத்மார்த்தமான உறவு கொண்டார்கள். அந்தச் சந்திப்பின்போது குகன் தேனையும், மீனையும் ராமனுக்குக் கொடுத்தான் .


ராமன் கிளம்பிச் சென்ற பிறகு பிறர் குகனிடம் இதைப் பற்றி விசாரித்தார்கள்: “ராஜகுமாரனான ராமருக்கு நீ மீனையும், தேனையும் கொடுத்ததில் என்ன பெருமை? எத்தனையோ உயர்ந்த விருந்தை உண்டவராயிறே ராமர்?” என்று கேட்டார்கள்.


அதற்குக் குகன், “நான் கொடுத்த இந்தப் பொருட்களில் மற்றவர்களுக்குப் புரியாத உட்பொருள் உண்டு. அதைப் புரிந்து ஏற்றுக்கொண்டார் ராமர்” என்றான் .


“என்ன?” என்று மற்றவர்கள் கேட்க, “தேன் உயர்ந்த மலையில் உள்ள மரத்தின் உச்சியில் கிடைப்பது. மீன் கடலின் ஆழத்தில் கிடைப்பது. எங்கள் நட்பு கடலின் ஆழம் போன்று இதய ஆழத்தில் இடம் பெற்றால் அது மலையைப் போல் உயர்ந்ததாக இருக்கும் என்பதே உட்பொருள்” என்று குகன் கூறினான் .


இதைவிட ஆழமில்லை என்றும் இதைவிட உயர்ந்ததில்லை என்றும் போற்றும்படி அமைவது நட்பு என்பதைக் கம்பன் குகனையும் ராமனையும் வைத்துக் காட்டுகிறார்.


பேச்சில் தெரியும் பண்பு


ராமனைப் பற்றிக் கூறும்போது, பூர்வ பாஷிண:, மித பாஷிண:, ம்ருது பாஷிண: என்று சொல்கிறார்கள்.
பூர்வ பாஷிண என்றால் முதலில் வணக்கம் கூறுவது. யாரைச் சந்தித்தாலும் ராமன்தான் முதலில் வணக்கம் சொல்லுவான். தன்னைவிடக் கீழோராயினும் ராமனே முதலில் சென்று பேசுவான்.


மித பாஷிண என்றால் குறைவாகப் பேசுதல். ராமன் கொஞ்சம்தான் பேசுவான். மற்றவர்கள் பேசுவதை அதிகம் கேட்பான்.


ம்ருது பாஷிண என்றால் மென்மையாகப் பேசுதல். ராமன் எப்போது பேசினாலும் மிருதுவாகவே இனிமையாகவே பேசுவான்.



????? ???? - ?? ?????
 
புராண, இதிகாசங்களை கதைவடிவில் கூறியது ஏன

புராண, இதிகாசங்களை கதைவடிவில் கூறியது ஏன்?

கதை கேட்பதென்றால் எல்லோருக்கும் பிடிக்கும். அதனால் தான் நம் முன்னோர்கள் கோயில்களில், இதிகாச, புராணங்களை கதைகளாகவே சொல்லி வந்தனர்.

அந்தப் புராணக்கதைகளில் பெரும் தத்துவ விஷயங்கள் புதைந்து கிடக்கின்றன. அதில் ஒன்று முதல் கடவுளான விநாயகரின் கதை.

எமனுடைய பிள்ளை அனலன். எப்போதும் கொதித்துக் கொண்டே இருக்கும் அசுரனான அவன், வரம் ஒன்று பெற்றிருந்தான். யாருடைய உடம்பிலும் அவர்களுக்குத் தெரியாமல் புகுந்து சக்தியை உறிஞ்சி விடுவது என்பதே அந்த வரம். அவனது தொல்லை தாங்காத தேவர்கள் விநாயகரிடம் சென்று, அனலனிடம் இருந்து தங்களை காப்பாற்றும்படி முறையிட்டனர். விநாயகர் அவனை அப்படியே விழுங்கி விட்டார். அதனால், விநாயகரின் மேனி கொதித்தது. அகில உலகமுமே சூடாகத் தொடங்கியது. செய்வதறியாத தேவர்கள் பால், தயிர், அமிர்தம் என அவரின் திருமேனியில் சாத்தி குளிர்விக்க முயன்றனர்.

சந்திரன் தன் குளிர்ந்த கிரணங்களை விநாயகர் மீது செலுத்தினார். ஆனாலும், சூடு கொஞ்சம் கூடத் தணியவே இல்லை. அப்போது அத்ரி, பிருகு, குத்ஸர், வசிஷ்டர், கவுதமர், காஸ்யபர், ஆங்கிரஸர் என்னும் சப்த ரிஷிகளும் அங்கு வந்து, ஒரு சாண் அளவுள்ள 21 அருகம்புற்களை விநாயகர் மீது சாத்தினர். சூடு தணிந்து திருமேனி குளிர்ந்தது. உலகமும் அமைதி அடைந்தது. தேவர்களும், சப்தரிஷிகளும் விநாயகரிடம், ஆனைமுகக் கடவுளே!

இதே போல அருகம்புல் சாத்தி உங்களை வழிபடுவோருக்கு எல்லா விதமான மங்களங்களையும் அருள வேண்டும், என வேண்டினர். அப்படியே ஆகட்டும் என்று விநாயகரும் அருள் புரிந்தார்.

அருகம் புல்லிற்கும், விநாயகருக்கும் உள்ள தொடர்பை விளக்கும் கதைகளில் இதுவும் ஒன்று. ஜபம், தவம், யோகம் போன்றவற்றில் ஈடுபடும் போது, குண்டலினி சக்தி தானாக மேலே எழும். உடலில் சூடு பரவி கொதிப்படையும். குளிர்ந்த நீரில் நீராடினால், சூடு தணியலாம். அதே சமயம், ஏறிய தவசக்தியும் இறங்கி விடும். பக்க விளைவு இல்லாமல் உடல் உஷ்ணத்தைத் தணிக்க என்ன வழி? அருகம்புல் தான்! அருகம்புல் கஷாயம், ஜூஸ் என்றெல்லாம் இப்போது பிரமாதப்படுகிறதே! அனலன் கதையைச் சொல்லி, அருகம்புல்லில் முடித்ததற்கு இதுவே

Temple News | News | Dinamalar Temple | ?????, ??????????? ?????????? ??????? ????
 
கண்களை மூடி இறைவனை வணங்கலாமா?

கண்களை மூடி இறைவனை வணங்கலாமா?


TN_20140426145058967091.jpg



சிலர் கோயிலுக்கு செல்கிறார்கள். வரிசையில் நிற்கிறார்கள். கருவறையில் மூலவரைக்கண்டவுடன் வழிபாடு என்ற பெயரில் கண்களை மூடிக்கொள்கிறார்கள். சூட தீபாரதனை காட்டினால் கூட தெரியாத அளவிற்கு கண்களை மூடி நின்று கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு செய்யலாமா? இப்படி செய்வது இறைவழிபாடு ஆகாது. கோயிலில் உள்ள மூலவரைக்கண்டவுடன் ஒரு நொடி கூட வீணாக்காமல் மூலவரை வைத்தகண் அகற்றாமல் பார்த்து தரிசனம் செய்யுங்கள். இறைவனின் அழகில் உங்கள் மனதை பறிகொடுங்கள். இறைவனின் ஆடை அணிகலனை ரசியுங்கள். அவர் அருள்பாலிக்கும் கோலத்தை நினைத்து வியப்படையுங்கள்.



ஏனென்றால், நீங்கள் மூலவர் முன் செல்லும் போது சில சமயம் திடீரென அபிஷேகத்திற்காக திரை போட்டு விடலாம். அல்லது அர்ச்சகர் மூலவரை மறைத்து விடலாம். எனவே கோயிலுக்குள் நுழைந்தவுடனேயே இறைவா! உனது தரிசனத்தை சிறப்பான முறையில் எனக்கு கிடைக்க அருள்புரிவாய். நான் உன்னை தரிசிக்க முடியாவிட்டாலும் கூட நீ என்னை பார்த்து கொண்டு தான் இருக்கிறாய். உனது கடைக்கண்பார்வை என்மீது விழட்டும் என மனதார பிரார்த்தனை செய்து கொண்டே இறைவனை காண செல்லுங்கள்.

இறைவனிடம் வேண்டுவதற்கு ஒன்றுமில்லை. நம்மைப்படைத்த இறைவனுக்கு நமக்கு எது தேவை என்பதும் தெரியும். எனவே இறைவனிடம் கண் மூடி வேண்டுவதை விட்டு விட்டு, கண்திறந்து பார்த்து தரிசியுங்கள். அழகில் மயங்குங்கள். அத்துடன் இறைவா! என்னை நீ தான் வாழ வைத்துக்கொண்டிருக்கிறாய். எனக்கு எது தேவையோ அதைக்கொடு. எது தேவையில்லையோ அதை நீக்கிவிடு என்று மனதார பிரார்த்தனை செய்யுங்கள். மேலும் இறைவா! நீ என் உள்ளத்திலும் இல்லத்திலும் நிறைந்திருந்து அருள் ஆட்சி செய்வாய் என வேண்டி இறைவனை இல்லத்தில் எழுந்தருள செய்யுங்கள். பின்னர் தினசரி பூஜையின் போது, கோயிலில் தரிசித்த இறைவனின் திருவுருவத்தை மனதில் நினைத்து பிரார்த்தனை செய்வது தான் உண்மையான வழிபாடு ஆகும்.

Temple News | News | Dinamalar Temple | ?????? ???? ?????? ??????????
 
அனுமன் வாலில் குங்குமம் வைத்து வழிபடுவத&

அனுமன் வாலில் குங்குமம் வைத்து வழிபடுவது ஏன்?


TN_20140423154939268016.jpg



வாலில் குங்குமம் வைத்து வழிபடுவதின் காரணம் என்னவென்றால், அனுமாருக்கு வாலில் தான் சக்தி அதிகம். பக்தி சிரத்தையுடன் ராமநாமத்தை ஜபித்துக் கொண்டு இடுப்பில் வால் தோன்றும் திருவிடத்தில் இருந்து தினமும் சந்தனம் சாத்தி குங்குமத் திலகம் வைத்துக் கொண்டு வரவேண்டும். வாலின் நுனியை அடைந்ததும், கலைத்துவிட்டு மறுபடியும் பொட்டு வைக்க வேண்டும். வால்முனையில் பொட்டு பூர்த்தி பெறுகின்ற சுபதினத்தில், எம்பெருமானுக்கு வடைமாலை சாத்தி, உப்பிலியப்பனுக்கு நிவேதிப்பது போல் உப்பில்லா திருவமுது நிவேதிக்க வேண்டும்.காரியம் சித்தியாகும் வரை இவ்வண்ணம் பொட்டு வைத்துக் கொண்டே வர வேண்டும்.

அனுமன் ராமனுக்கு தூதனாக இருந்தாலும், இவர் சிவனின் அம்சமாக தோன்றியவர். ராமாயணத்தில் ஒவ்வொருவரும் ஒரு வேடம் ஏற்றனர். அதில் மகாவிஷ்ணு ராமனாகவும், மகாலட்சுமி சீதாதேவியாகவும், ஆதிசேஷன் லட்சுமணனாகவும் பாத்திரமேற்றனர். இந்த ராமாயணத்தில் பங்குபெற எல்லாம் வல்ல சிவனுக்கும் ஆசை ஏற்பட்டது. அத்துடன் மகாவிஷ்ணுவுக்கு சேவை செய்யவேண்டும் என்ற எண்ணமும் இருந்து வந்தது. இதனால் சிவபெருமான் ஆஞ்சநேயராக அவதரித்து ராமாயணத்தில் ராமருக்கு சேவை செய்தார் என்பது முக்கியமான செய்தியாகும்.

ஆஞ்சநேயரை வழிபட்டால் சிவனையும் பெருமாளையும் சேர்த்து வழிபட்ட புண்ணியம் கிடைக்கும். ஆஞ்சநேயனின் ஜெயந்தி, ஜெயந்திக்கெல்லாம் ஜெயந்தி. அந்த ஜெயந்தியை நாம் கொண்டாடுவதால் நமக்கு சகல மங்கலங்களும் உண்டாகும். நினைத்த காரியம் கைகூடும். துன்பம் விலகும்; குடும்பத்தில் இன்பம் பெருகும்.


Temple News | News | Dinamalar Temple | ?????? ?????? ????????? ?????? ????????? ????
 
உ போட்டு எழுத ஆரம்பிப்பது ஏன்?

உ போட்டு எழுத ஆரம்பிப்பது ஏன்?


TN_20140422141924907910.jpg



பிரணவ மந்திரமான ஓம் என்பது அ, உ, மஎன்னும் மூன்று எழுத்துக்களின் கூட்டாகும்.

அ என்பது படைத்தலையும், உ என்பது காத்தலையும், ம என்பது அழித்தழையும் குறிக்கும். இதனை அகார, உகார, மகார சேர்க்கை என்று குறிப்பிடுவர். இந்த மூன்றிற்கும் இதயமாக நடுவிலுள்ள உ என்பதே பிள்ளையார் சுழியாக உள்ளது.

இதயமே மனிதனைக் காக்கிறது. இதயம் நின்று போனால் ஜீவன் போய் விடும். அதுபோல், தன்னை நம்பி வந்தவரை காப்பது தான் என் கடமை என விநாயகர் காத்தல் எழுத்தான உவைத் தனக்குரியதாக கொண்டிருக்கிறார். அதனால் தான், எதை எழுத ஆரம்பித்தாலும், உ என்ற பிள்ளையார் சுழி போட்டுத் தொடங்குகிறோம். அம்பிகைக்குரிய தேவி பிரணவம் எனப்படும் உமா என்ற மந்திரத்திலும் உ என்பது முதல் எழுத்தாக உள்ளது குறிப்பிடத்தக்கது/


Temple News | News | Dinamalar Temple | ? ?????? ???? ??????????? ????
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top