Raji Ram
Active member
For the benefit of those who do not read my thread 'eNNa alaigaL': My experience in 2006...
(please do not ask for a translation!!)
அதிதிகளாய் மாறிவிட்ட அமெரிக்க மகன்கள்…..
அதிதிகளாய் மாறிவிட்ட அமெரிக்க மகன்கள்…..
விடுமுறை வந்ததும் இந்தியா வருகிறோம்! – மகன்
ஒருமுறை சொன்னதும் தொற்றியது சந்தோஷம்!
திருமணம் முடிந்த பின் முதல் முறை வருகை;
ஒரு கணம் நினைத்ததும், மறு கணம் புன்னகை!
வசதியாக வாழும் குழந்தைகள் வந்தவுடன், நல்ல
வசதியுடன் தங்கிவிட இல்லத்தில் ஏற்பாடுகள்!
‘சித்தி, சித்தி’ – என ஆசையுடன் எனை அழைத்துச்
சுத்திச் சுத்தி வரும் அந்த இருவரின் வருகையால்,
மகிழ்ச்சி இரட்டிப்பாக, ஏற்பாடுகள் ஆரம்பம்!
அயர்ச்சி பற்றி எண்ணாது, ஓட்டமும் ஆரம்பம்!
மூன்று பேரும் கூடுகின்றார் ஐ. ஐ. டி. நாட்களுக்குப் பின்;
நான்கு நாட்களானாலும் இனிக்க வேண்டும் நினைவுகள்!
வரும் இரு ஜோடிகளுக்குத் தனித்தனி அறைகள்; இளவலுக்கு
வரன் தேடி வரும் அக்கா குடும்பத்திற்கு இன்னொரு அறை!
நாமும் விருந்தாளியாய் வேறு வீடு செல்லும்போது – நமக்குப்
பாயும் தலையணையும் போதுமென இருந்த காலம்
மலையேறிப் போச்சு! குடும்பத்தாரின் வருகையே, நமக்கு
மலைப்பாகத் தோன்றுவதுபோலக் காலம் மாறிப் போச்சு!
அதிதிகளாய் மாறியதாக மனம் N R I – களை நினைக்கிறது!
‘அதிதி தேவோ பவ’ என்னும் ஒரு எண்ணமும் உதிக்கிறது!
ஆபீஸிலிருந்து வந்த கம்ப்யூடர்களை ஓரம் கட்டி – மாடி
ஆபீஸை வீடு போல மாற்றி வைக்கவே ஒரு வாரம்!
எட்டு மாத காலமாய் தூசி தட்டியிரா மாடி ஜன்னல்களில்,
எட்டு மணி 'ப்ளோயர்' அடித்து ‘ஜீபூம்பா’ப் புகை மண்டலம்!
சமயம் பார்த்துத்தான் தண்ணீர்க் குழாய் அடைத்துக் கொள்ளும்!
அபயம் தர எந்த 'பிளம்பரும்' வாரது, நம்மை வேலை வாங்கும்!
தட்டித் தட்டிக் குழாய்களைச் சரி செய்து அவற்றில் – நீர்
கொட்டச் செய்யப் பட்டபாடு, ஒரு பகீரதப் பிரயத்தனம்!
அல்லித் தண்டால் அடித்து 'அனகோண்டாவை' விரட்டுவதுபோல்
பல்லி எறும்புப் படைகளை 'லைஸால்' தெளித்து விரட்ட முயற்சி.
கடைக்குச் சென்று புதுப் படுக்கைகளும் விரிப்புகளும் வாங்கி
அடைத்து வைச்சாச்சு! மகன்களுக்கு எங்கள் வீடு தயார்.
காலச் சக்கரத்தின் வேகம் மாறாமல் இருக்கிறது – நம்
காலின் சக்கர வேகம் அதனால் குறைகிறது!
முப்பதுகளில் மிக எளிதாய்ச் செய்து வந்த வேலைகள்
ஐம்பதுகளில் கடுமையாக மாறுகின்ற விந்தைகள்!
பால் தயிர் உண்ணாத 'வீகன்'களாய் மூவர் மாறியிருக்க,
பால் தயிர் உபயோகிக்காத உணவு வகைத் தேடல்கள்.
நெய்யில்லாது செய்ய முயன்ற சில இனிப்பு வகைகள்;
கையில் ஒட்டாது, மோர் விடாது அரிசிக் கூழ்க் கிண்டல்கள்!
முப்பது பலாப் பழங்கள் மரத்தில் தொங்க – அவற்றைப்
பத்து நாள் விடாமல் பிரித்துப் பிரித்து 'ஜாம்' செய்ய
வந்தது கட்டை விரல் வலி! இதுதானோ குழந்தைகளுக்கு
வந்தது என்று கூறப்படும் VIDEO THUMB SYNDROME?
மகன் வரவு; மன நிறைவில் உடல் வலியும் மறக்கும்;
பகல் இரவு பாராது, ஓயாத ஓட்டமும் தொடரும்!
மறுநாள் வருகை தந்தான் அக்கா மகன் மனைவியுடன்;
இரு நாளாய் அவளுக்கு ஜுரம் என்றான் கவலையுடன்!
இரண்டு பெரிய ரொட்டி வாங்கி வந்தான் அவளுக்கு!
இரண்டையுமே நாங்கள் உண்டோம்; ரசம் சாதம் அவளுக்கு!
வேற்று மொழிப் பெண்ணை மணந்த அவனுக்கு – மொழி
மாற்றம் செய்வதே முழு நேரப் பணி ஆனது!
பொறுமையாய் அவளிடம் எல்லாவற்றையும் மொழி பெயர்த்து
அருமையாய் மாற்ற முனைந்தான் ‘பேச்சுக் கச்சேரிகளை’!
தாய் மொழியில் ‘கடி’ ஜோக்கில்லாமல் பேசத் தெரியவில்லை;
தாய் மொழி தெரியாமல், அவளுக்கு ஒன்றும் புரியவில்லை!
சுற்றிச் சுழன்று பம்பரமாய் என் ‘பெண்ணரசி’ உதவ – தலை
சுற்றிச் சுழல்வதுபோல் அந்தப் பெண்ணோ தவிக்கின்றாள்!
கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டதுபோல் உணர்கின்றாள் – நம்
மண்ணில் இருக்கும் நாட்களைப் பாடாய் நினைக்கின்றாள்!
நம் கலாச்சாரம் புரிந்து கொள்ள அவளுக்கு மனமுமில்லை;
நம் தாய் மொழி அறிந்துகொள்ள ஏனோ முயலவில்லை!
அமெரிக்கா சென்றவருக்குக் கண்ணோட்டம் மாறிவிடும்;
'அமெரிக்க சுதந்திரமே' உயர்வாகத் தோன்றிவிடும்!
புதிதாக எதையேனும் கற்கணுமெனக் கூறிவிட்டால்,
எளிதாக அதைச் ‘சுதந்திரக் குறுக்கீடு’ என எண்ணிடுவார்!
இதனிடையில் ஒரு நாள் மகனின் நண்பனின் திருமணம்;
பட்டுடையில் சென்ற நான் கண்டது 'சென்னைத் திருமணம்'!
'சாப்பிடவா!' என்றழைக்க ஒரு ஜீவனும் அங்கில்லை;
கூப்பிடமாட்டார் என அறிந்து சிற்றுண்டி எம் வீட்டிலே! – மாப்பிள்ளையின்
அக்காவிடம் நான் சென்று 'அவன் அம்மாவா' எனக் கேட்க,
அக்கா என்னை முறைக்க, நான் பிழைக்க எடுத்தேன் ஓட்டம்!
ஒருவார அலுவலக வேலை பெங்களூரில் மகன் முடித்து,
ஒருவாறு இங்கு வந்தான்; மீதம் ஏழு நாளே சென்னையில்!
நேரம் போவதே தெரியவில்லை! மறுநாள் அதிகாலை
நேரம் வருகை தந்தனர் அக்கா குடும்பத்தினர்!
FAST FOOD கடைகளின் குறுக்கு வழி பல கற்று,
FAST FOOD தயாரிக்க பொடித்த மசால் உதவிற்று!
எலுமிச்சம்பழம் பிழிந்து விரல் வலி வராமல்,
எலுமிச்சம்பழச் சாத 'மிக்ஸ்' பேருதவி புரிந்தது!
தங்களுக்குள் 'க்ரூப்' போட்டுக் கொண்டு, வெளியே சென்று
தங்களுக்குத் தேவையானதை அவரவர் வாங்குகின்றார்!
இரு பெண்கள் 'பார்த்து' வந்த இளவல், தன் முடிவு சொல்ல
ஒரு இரவு முழுவதும் கண்விழித்துக் குழம்புகின்றான்!
ஒருவாறு தெளிவடைந்து தன் முடிவை உரைக்கின்றான்;
'இரு நாளில் நிச்சியதார்த்தம்' – என்கிறார் பெண் வீட்டார்!
பெண்ணின் தந்தை வீ. கே; அவர் யூ.கே. செல்ல வேண்டுமாம்;
அண்ணன் அண்ணி சுற்றத்துடன் FUNCTION முடிக்கணுமாம்!
வீ. கே. யூ, கே. போறதாலே FUNCTION செய்யும் ‘பேக்கே’ – இப்படி
'ஓ. கே, ஓ. கே' – ன்னு ஓடினால் உன் உடம்பு ஆயிடும் 'வீக்கே'! – என
அடி மனதில் 'நக்கல் ஹைக்கூ' தோன்றி மறைந்தாலும்,
படிப் படியாய் ஏற்பாடுகள், துரித கதியில் தொடர்ந்தன.
ஒரே நாளில் மூன்று செட்டாய் N R I – கள் பயணம்;
அதே நாளில் காலை நிச்சியதார்த்தம் செய்யணும்!
'என்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகற்கு' – இது வள்ளுவம்!
என்னைத் திருமணமான புதிதில் ஆறாண்டுகள், அன்பு
அன்னைபோல் பேணியவள் அக்கா; மறக்கலாகாது.
வள்ளுவன் வாய்மொழி போற்றுவதும் உத்தமம்;
வள்ளுவன் கூறிய வழி நடப்பதும் உன்னதம்!
PACKING ஒருபுறம்; சமையல் ஒருபுறம்;
SHOPPING ஒருபுறம்; தூக்கம் எங்கே வரும்?
இறை அருளால், எல்லாமே நல்லபடி நடந்தது – ஒரு
குறைவின்றிச் சுற்றத்தார் மனம் மகிழ்ச்சி கொண்டது.
அனைவரையும் அவரவர் ஊருக்கு அனுப்பிய பின்,
அனைத்துமே கதை போல மனத்திரையில் விரிகிறது.
இவையனைத்தும் நிஜமே – என்றுணர்த்த அன்றெடுத்த
சபை கூடிய போட்டோக்கள் C. D - யாக இருக்கிறது.
அதி வேக நிகழ்வுகளை எதிர்பாரா இளவலுக்குப்
புதிதாக வரும் வாழ்க்கை சந்தோஷம் தரணும்!
எல்லாம் வல்ல எங்கள் சக்தி கணபதியை – நலம்
எல்லாம் தந்தருள, அனுதினமும் வேண்டுகிறோம்!
:grouphug: . . . ray: