#4. CITIZENS OF THE WORLD.
கல்யாண வைபோகமே!
இந்தியாவில் திருமணம் வைத்துக் கொண்டால்
இருக்கும் visa problems and attendance problems !
சிகாகோவில் திருமணம் செய்ய நிச்சயித்தோம்.
பெண், பான், பூ, பண்டிட் மட்டும் அங்கே இருந்து!
மஞ்சள், குங்குமம், பாக்கு, விளக்கு திரி, அவுல் பொரி,
மிஞ்சிய சாமான்கள் அத்தனையும் சென்றன இங்கிருந்து!
நல்ல கோவில் பூசாரி ஒருவர் கிடைத்தார்.
நமது தீவிரத்தால் அவரும் தீவிரமானார்.
ஷாப்பிங் லிஸ்ட் போல எழுதினேன் நான்;
செய்ய விரும்பிய திருமணச் சடங்குகளை!
கொஞ்சம் உதவி தேவைப்பட்டது இதற்கு!
தஞ்சம் புகுந்தேன் ராஜியிடம் வழக்கம்போல்.
முதல் நாள் விரதம் கோவில் அறை ஒன்றில்!
மறு நாள் திருமணம் ஒரு பெரிய ஹாலில்.
மணப் பெண்ணுக்கு மெஹந்தி போட்டோம்.
மண மாலைகளை நானே தயார் செய்தேன்!
கடையில் இருந்த அத்தனை bouquet களும்,
எங்கள் வீட்டு பக்கெட் நீரில் கூடி நின்றன!
wedding dresses, வாத்யார் வேஷ்டி, தாலி
எல்லாமே இங்கிருந்து ரெடியாகவே அங்கு!
Mixed Crowd! ஒன்றும் புரியாது என்பதால்
Booklets தயாரித்தோம் மண விவரங்களை .
ஆளுக்கு ஒரு copy உள்ளே வந்தவுடனேயே!
Announcement மைக்கில் பூஜாரி ஜி செய்தார்.
பாலும், பழமும் கொடுப்பதில் சின்னச் சிக்கல்!
இருவரும் சுத்தமான vegan கள் ஆயிற்றே!
Soy பாலில் வாழைப் பழங்கள் போட்டோம்!
பாலும், பழமும் கொடுக்க நின்றது பெரிய Q!
ஆண், பெண், தாத்தா, பாட்டி, குஞ்சு, குளுவான்!
ஆர்வத்தைப் பார்த்த பின் தடுக்கவில்லை நான்!
எல்லோரும் பாலும், பழமும் கொடுத்தார்கள்.
நல்லாசிகளையும் வாரி வாரி வழங்கினார்கள்!
பாணிக்ரஹணம், தாரை வார்த்தல், சப்த பதி,
அருந்ததி பார்த்தல் எதையுமே விடவில்லை!
உணவு சுடச் சுட வந்தது இந்தியன் , சைனீஸ்.
உணவு மிக அதிகம் ஆர்டர் செய்து விட்டார்கள்!
அலுமினியம் பெரிய tray இல் THICK FOIL மூடிகளுடன்.
யாருக்கு என்ன பிடித்ததோ எடுத்துச் சென்றார்கள்.
மிகுந்ததை museum வந்திருந்த குழந்தைகளுக்கு
மிட் டே லஞ்ச் ஆகக் கொடுத்தனர். வீணாக்கவில்லை.
அமெரிக்காவில் அவர்கள் மத்தியில் மகன் திருமணம்
விமரிசையாக ஸ்ரீ அனுமன் அருளால் இனிதே நடந்தது!