• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

"Life is like that!"

Status
Not open for further replies.
I was in Andhra for a quarter of a century. So I am more familiar with their thought process. It does not mean that the others are not interested in going to USA. :)

That is not true that only Andhra people's goal is to go to USA.. I know more tamil kids here than I know telugu kids.. I come across Gujarathis more than any other indians.. so you cannot say it is just the Andhra people alone..
 
You can't be more correct ! Most men steal occasional glances fearing the anger of the wife for admiring another lady-when she is around.

But our hero will show the 'piece of art' and involve his wife also - since he is admiring only the 'wrong side' of the 'right person'!

How can she ever get angry with him-when he is so honest and frank!!!


I liked the choli ke peeche kavithai. Its really written humourously. I guess one tends to find such jollu parties in every family!
 
"Will you walk into my parlor?"
said a spider to a fly! :welcome:
Mary Howitt.

Life is just one damed thing after another.:bump2:
Elbert Hubbard.

Life isn't :nono: all beer and skittles. :spit:
Thomas Hughes.
 
# 59. "ஷீர்வாத் தீஜியே மாஜி!"

முதல் முதல் விசிட் டு அமெரிக்கா.

மெட்ரோவில் நீண்ட நெடிய பயணம்.

வழியில் வரும்போது ஒரு குட்டிப்பெண்

வழிமறித்துக் கூறினாள் என்னிடம்,

"
ஷீர்வாத் தீஜியே மாஜீ !" :pray2:

வடநாட்டினரின் ஸ்டைலில் குனிந்து

காலைத் தொட்டு தலைமேல் தடவிக்கொள்ள,

"சரி தான் பயல் என்னவோ குறும்பு செய்து,

அதன் பலன் இவள்
ஷீர்வாத் கேட்கிறாள்!" :shocked:

suspense உடனேயே உடைந்துவிட்டது ! :nono:

பின்னாலேயே அவள் கணவனும் 'டிட்டோ'!

பிறகு தெரிந்தது அவர்கள்,
ன் மகனின்

மிகவும் நெருங்கிய நண்பர்கள், :hug:

எனக்கு அவர்களைத் தெரியை
வில்லையே ஒழிய

அவர்களுக்கு எங்களைப்பற்றி

நன்றாகவே தெரிந்து இருந்தது!

பிறகு டின்னெர் டேபிள் இல்

அவள் அடித்த கூத்தைப் பார்த்து

"இப்படியும் ஒரு வால் பெண்ணா?"

என்ற நானே அதிசயிக்க நேர்ந்தது!

"வசிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி?"
 
# 60. பழங்களின் படையெடுப்பு!

University merit award + cash award

வாங்கிய என் இளைய மகனுக்கும்,

எங்களுக்கும் ட்ரீட் தர விரும்பினார்

அவன் professor cum adviser .

அவர்கள் சாப்பிடுவதை நாம் சாப்பிடமாட்டோம்.

அவர்களால் நாம் சாப்பிடுவதைத் தரமுடியாது.

என்ன செய்யலாம்? Evening TEA ?
.கே.!

ஒரு மேஜை நிறைய, தோல் நீக்கப்பட்டு

slice செய்யப்பட்ட juicy பழங்கள்!

உலகில் அவ்வளவு பழ வகைகள் உண்டு என்றே

அன்று தான் நான் தெரிந்து கொண்டேன்.:shocked:

பொறுமையாக, அழகாக, arrange செய்து!

எல்லா நிறங்களிலும், சுவைகளிலும்....!:love:

பழங்களை உண்ண விரும்பினால் :hungry:

பிறக்கவேண்டும் அமெரிக்காவில்!
:plane:
 
Last edited:
The proper study of mankind is books. :nerd:

The solemn foolery of scholarship
for scholarship's sake. :rolleyes:

There is no substitute for talent. :nono:
Industry and all the virtues are of no avail.

Silence is as full of potential wisdom and wit
as the unhewn marble of great sculpture. :tape:

Aldous Huxley.
 
# 61. "marad log aa rahe hain!"

வீட்டின் பின்னால் இரண்டு சிறு
வீடுகள், வேலையாட்களுக்காக!

வேலை செய்யத் தெரியுமே ஒழிய,
வேலை வாங்கத் தெரியாது எனக்கு.

வேலையும் செய்யாமல், வீடுகளில்
வசித்து வந்தனர் ராஜஸ்தானியர்.

ஒருத்திக்கு ஒரு சிறு மகன் உண்டு.
நெடு நெடு என்று ஒல்லி! எப்போதும்

தான் உண்டு தான் வேலை உண்டு டைப்.
இன்னொருத்தி புது மணமானவள்.

கண்களில் வழியும் காம உணர்வு.
பம்பரம் போலச் சுழலும் எப்போதும்;

தெருவில் வருபவரைப் பார்ப்பதற்கு.
எவனாவது ஆண் கண்ணில் பட்டால்...

"marad log aa rahe hain!" என்று கூறி

முக்காட்டை இழுத்துத் தன் கண்களை
முற்றிலுமாக மறைத்துக் கொள்வாள்.

ஆனால் முன்னழகை மூட மாட்டாள்.
அணிவது பாவாடை சட்டை தானே!

"நீ பார்ப்பதைப் பார்த்துக் கொள்!
நான் பார்ப்பது தெரியக் கூடாது!"

இதற்காகவா ஒரு முழு நீள முக்காடு?

"தெருவில் வரானோ என்னைச் சற்றுத்
திரும்பிப் பாரானோ?" என மயக்கும்

பாட்டு இல்லாமல் வெறும் அங்க
அபிநயம் மட்டும் அங்கு நடக்கும்! :doh:

 
# 62. Lambaadi Women vs super duper models.

சூப்பர் duper மாடல்களின் உடைகளைச்

சிலர் சிலாகிக்கும்போது எனக்கு நிரம்பச்

சிரிப்பு வரும். கூடவே நினைவும் வரும்!

கை அகல front pieces உள்ள blouse ஐக்

கண்டு பிடித்ததே லம்பாடிகள் தானே!

வெறும் நூலால் கட்டும் ஃ ப்ரீ சைஸ் ப்ளௌஸ் ஐக்

கண்டு பிடித்தவர்கள் லம்பாடிகள் தானே?

இத்தனை கண்ணாடித் துண்டுகளை வைத்து

தைத்த உடை அவர்கள் கண்டுபிடிப்பு தானே?

"live -in-dress " என்னும் கான்செப்ட்

அவர்கள் கண்டு பிடிப்புத் தானே!

இத்தனை செய்தவர்களை ஓரம் கட்டிவிட்டு

இவர்களை மட்டும் சிலாகிப்பது ஏன்???
:noidea:
 
Quotes by Aldous Huxley.


Defined in psychological terms, a fanatic is a man
who consciously over-compensates a secret doubt.:peace:


Success--"the bitch-goddess, Success" :doh:

in William James's phrase--
demands strange sacrifices :whoo:

from those who worship her.


Living is an art; and to practice it well,
men need not only acquired skill,
but also a native tact and taste.
:laser:
 
# 63. அந்த விந்தைத் தந்தை.

அவர்கள் எதிர் வீட்டுக்கு வரும்போது வெறும்

ஐந்து, மூன்று வயதுப் பெண் குழந்தைகள்!

அம்மாவுக்கு உதவியாக அவர்களின்

அப்பா அவர்களைக் குளிப்பாட்டுவார்.

பத்து ஆண்டுகள் உருண்டு ஓடி விட்டன.

அப்போதும் அவரே குளிப்பாட்டுவாராம்!

வயதுக்கு வந்த, வளர்ந்துவிட்ட பெண்களைக்

குளிப்பாட்டி விட வேண்டிய அவசியம்?

அது தப்பு என்று மனைவிக்கும் தெரியவில்லை.

"தினமும் செய்வது தானே!" என்பார்.

அந்தப் பெண்களுக்கும் தெரியவில்லை.

நண்பிகளிடம் ஒருவேளை சொன்னால்....!

கிடைத்த வாய்ப்பை சற்றும் நழுவ விடாத

அந்த விந்தைத் தந்தை என்பவன் ....

ஒரு புத்திசாலியா? ஒரு தந்திரசாலியா?

ஒரு சந்தர்ப்பவா
தியா? ஒரு மனித மிருகமா?
 
# 64. ரயில் பெட்டி வீடுகள்.

திருமணம் ஆன புதிதில் எடுத்த

திகைக்க வைத்த வாடகை வீடு.

மூன்று அறைகள் எங்களுக்கு!

மூன்றும் ஒரே பக்கம் திறக்கும்.

ஒரு அறையிலிருந்து செல்ல முடியாது

இன்னொரு அறைக்கு! அதைப்

பூட்டிக் கொண்டு, வெளியில் வந்து,

பூட்டைத் திறந்து கொண்டு, நுழைய

வேண்டும் அடுத்த அறையில்.

ஜெயில் வார்டன் போல இடுப்பில்

சாவிக்கொத்து. திறப்பதும், பூட்டுவதும்

சரியான பேஜார் ஆகிவிட்டது எனக்கு!

நல்லவேளை quarters அல்லாட் ஆனது.

இல்லாவிட்டால் LOCK & KEY phobia
என

ஒரு புது வியாதியே வந்திருக்கும்!

நல்ல பெயர் வைத்துள்ளார்கள்

ரயில்பெட்டி வீடுகள்!

ஒரு அறை வாசிகளுக்காகவே

ஏற்படுத்தப்பட்ட ஒரு அமைப்பு!

மூன்று அறைகள் எடுத்தது நம் தவறே!
 
The minority is always right.:high5:

One should never put on one's best trousers
to go out to battle for freedom and truth. :nono:

The most dangerous foe to truth and freedom
in our midst is the compact majority.:flock:
Yes, the damned, compact, liberal majority.:mmph:
Henrik Ibsen.
 
# 65. Obedient carpenters.

கிரிக்கெட் ஸ்டம்புகளை வீணாக்க

மனம் ஒப்பவில்லை எனக்கு.

அழகான மூன்றுபடிகள் கொண்ட

stand ஒன்று செய்ய விரும்பினேன்.

வீட்டில் ஏரியா மிகவும் குறைவு.

சாமான்களோ மிகவும் அதிகம்.

முடிந்தவரை நான் உபயோகிப்பது

multi layer கான்செப்ட் தான்!

அவர்களைப் பார்த்தால் புத்திகூர்மை

அதிகம் இருப்பதாகத் தெரியவில்லை! :loco:

ஆனால் தோற்றம் நம்மை ஏமாற்றுமே!

சொல்வதைப் புரிந்து கொண்டனர்! :laser:

புரிந்து கொண்டதைச் செய்து காட்டினர்.

கற்பனை செய்ததுபோல் furniture. :love:

ஸ்டா
ண்ட்ஸ், காஸ்செட் holders etc .

பணம் தினம் வாங்கிக் கொள்வதில்லை.

"உங்களிடம் இருந்தால் எங்கள் பணம்

பத்திரமாக பாங்கில் இருப்பது போல.
மொத்தமாக வாங்கிக் கொள்கின்றோம்!":popcorn:

எல்லாம் ஃ போல்டிங் டைப் தான்.

டான்ஸ் கிளாசுக்கும், பாட்டுக் கிளச்சுக்கும்

காலி செய்ய வேண்டுமே அறை முழுவதும்!

இன்றைக்கு நினைத்துக்கூடப் பார்க்க முடியாது!
 
# 66. உயிரெழுத்துக்களும் ஒரு மொழியே!

பாலக்காட்டில் ஒரு புடவைக்கடை.

நான் விரும்பும் நிறங்கள் சாதாரணமாக

நிறம் மங்குபவைகள் ஆக இருக்கும்.

Dull கலர் விரும்பி எடுக்க மாட்டேன்.

ஒரு புடவை கண்ணைப் பறித்தது.

"நிறம் மங்குமா?" என்று கேட்டேன்.

"ஏ..ஏய்!" என்ற அழகான ஒரு பதில்! :nono:

"நிறம் நிற்குமா?" என்று கேட்டேன்.

"ஓ...!" என்ற ஒற்றை எழுத்தில் பதில். :nod:

"எல்லோருக்கும் புரியும்படி பதில்

பேசத் தெரியாதா?" என்று கேட்டேன்.

"நிங்கள் பாலக்காடு அல்லே! அல்லே ?

நிங்கள் ஏ தேசமாணு?" பதில் கேள்வி! :rolleyes:

பின்னால் நவரசச் சொற்களை நான்

ஆராய்ச்சி செய்ததற்கு, இதுவே அன்று

அவர் போட்ட பிள்ளையார் சுழி ஆனது! :playball:


 
An honest God is the noblest work of man.

In nature there are neither
rewards nor punishments--
there are consequences.

Robert Greene Ingersoll.

Those who drink beer, will think beer.
Washington Irving.

The bird, the beast, the fish eke in the sea,
They live in freedom everich their kind;
And I a man, and lackith liberty.
King of Scots James I

 
# 67. Making up for the lost time.

எனக்கு கிஃ ப்ட் ஷாப்புகள் பிடிக்கும்,

எல்லாவற்
றையும் தொட்டுப் பார்க்கலாம்.

விளையாடலாம். அணிந்து போட்டோ !:photo:

வெளியில் கொண்டு வந்தால் தான் பில்!

Falling Water என்ற இடத்தில் இருந்த

கிஃ ப்ட் ஷாப்பை விட்டுவர மனம் இல்லை. :love:

சாவி கொடுத்தால் ஓடும், ஆடும், பாடும், நடக்கும்

எல்லா பொம்மைகளையும் test செய்தேன். :high5:

ஷாப்பில் இருந்தவர் வயதான அம்மையார்.

சிரித்த முகம், நல்ல சுபாவம், அமைதியானவர்.

அவர் என்னை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்!

"I never had any of these when I was young!

I am making up for the lost time!" என்றேன்.

அவருக்கே சிரிப்பு வந்துவிட்டது! :becky:

"Go ahead and enjoy !" என்றார்.

"ஒரு பாட்டிக்குள் ஒரு குட்டியா?"

என்ற வியந்தாரோ என்னவோ?

 
Last edited:
# 68. அணிகலன் முதல் ஆனை வரை.

"மம்மி! உனக்கு இந்த ஷாப் பிடிக்கும்!"

"மம்மிக்கு எல்லா ஷாப்பும் பிடிக்கும்!"

அதன் பெயர் Container Store.

அணிகலன்கள் முதல் ஆனை வரையில்

அனைத்தையும் பேக் செய்ய பாக்ஸ் உண்டு!

குட்டி காயின் போடுவதற்கு!

மறந்து விடாமல் மருந்து மாத்திரை உண்ண!

ஒரு நாள் கோட்டா, ஒரு வாரம், ஒரு மாதம்,

ஒரு நேரம், இரு நேரம், நான்கு நேரங்கள்!

அற்புதமான கடை அது.

ஆள் பாதி ஆடை பாதி போல

பொருளின் மதிப்பு அதை வைத்த

பாக்ஸினால் அதிகம் ஆகும், உண்மை.

 
Quotes by Henry James Jr.

The historian, essentially wants
more documents than he can really use.:popcorn:

The dramatist only wants
more liberties than he can really take. :moony:



Her grace of ease was perfect,

but it was all grace of ease, :couch2:

not a single shred of it

grace of uncertainty or difficulty.
:nono:
 
# 69. Built-in-dining table.

வயிறு ஒரு Built-in-dining table

ஆகிவிட்டது அவருக்கு.

டாக்டரிடம் சென்றார் கவலையோடு!

"சப்பாத்தி சாப்பிட்டால் சரியாகும்

கவலைப் படவேண்டாம்!" என்றார்.

அடுத்த முறை அவர் வீடு சென்றபோது

அமரிக்கையாக சப்பாத்திகள் மூன்று!

பரவாயில்லையே இவர் !

குறையவில்லையே உடல்!

காரணம் தெரிந்தது அவர்

குழம்பு, ரசம், தயிர் என்று

சாதத்துடன் தொடர்ந்தபோது.

"சாதத்துக்கு பதில் சப்பாத்தி" என்று

தெளிவாகச் சொல்லாததனால்,

சப்பாத்தியும் சாப்பிட்டு விட்டு,

முறைப்படி மூன்று சாதமும் உண்டு,

எடை குறையவில்லை என்றால் எப்படி???
 
# 70. A Professor?

ஒரு முறை ஹைதராபாத் பயணம்,

பரீட்சார்த்தமாக அந்த சில நாட்கள் மட்டும்

சில கோச்களில் (?) மூன்று சைடுபெர்துகள்!

இரண்டு பெர்துகள் மட்டும் இருக்கும் போதே,

உரசாமல் தாண்டி யாராலும் போகமுடியாது.

மூன்று பேரும் வழியில் காலைத் தொங்கவிட்டு

விதியே எனக் குறுக்காக அமர்ந்திருந்தோம்!

அவர் பேசவும் இல்லை, சிரிக்கவும் இல்லை

அமைதியாக மாரீ பிஸ்கட் கடித்துக்கொண்டு,

மினரல் வாட்டர் குடித்துக் கொண்டு இருந்தார்.

அடுத்த சீட் ஆசாமி இப்படி silent ஆக இருந்தால்,

படு போராக நீண்ட நெடிய பயணம் இருக்குமே!!

"நீங்கள் ஒரு professor?" எனக்கேட்டேன்.

சிரித்துக் கொண்டே தலையை அசைத்தார்.

"விசிடிங் professor??" வியப்புடம் "ஆம்!"

"From Germany?" He leaped in his சீட் டு

perform the வேர்ல்ட் record sitting-high-jump!

கண்கள் இரண்டும் flying saucer ஆகிவிட்டன.

"Do you know me by any chance?"

நிச்சயமாக எனக்கு அவரைத் தெரியாது!

அவ்வளவு நிச்சயமாக அவரிடம் ஏன்

அப்படிச் சொன்னேன் என்றும் தெரியாது.

அவருடைய எண்ண ஓட்டங்களை நான்

சரியாக receive செய்திருப்பேனோ??

ஊருக்குத் திரும்பும் வரை அவர் உணவு

மாரீ பிஸ்கட் + மினரல்வாட்டர் தானாம்!

எலும்பும் தோலுமாக இருந்தார் அவர்!

நாடு திரும்ப இன்னும் எத்தனை நாட்களே?



 
It is impossible to enjoy idling thoroughly
unless one has plenty of work to do.:couch2:

Love is like measles; :love:
We all have to go through it. :bump2:

The world must be getting old, I think;
It dresses so very soberly now. :hat:

Jerome Klapka Jerome
 
# 71. Super clean lady?

தண்ணீருக்கு எவ்வளவு தட்டுப்பாடு
இருந்தால் என்ன?

சோப்பு விலை வானளவாக
எவ்வளவு
உயர்ந்தால் என்ன?

மூன்று நேரம் குளிப்பவர்களும் உள்ளனர்.
மொத்தத்தையும் சுத்தம் செய்பவர்களும் கூட!

"கடுகு முதல் காஸ் சிலிண்டர் வரை...!"

இது slogan contest அல்ல! அல்ல!:nono:
என் பழைய neighborhood லேடி!

கடுகு முதல் காஸ் cylinder வரை
தினமும் எல்லாம் சுத்தம் செய்யப்படும்.

"கடுகு O.K! காஸ் cylinder !!!:rolleyes:

இன்று வரும்... நாளை போகும்...
நம் சொந்தம் அல்லவே" என்றால்,

"பரவாலேதண்டி! நாக்கு அன்னி
சுப்பரங்கமுகா உண்டவலேனு!"

என்ன சுப்புரங்கமோ ஆனந்தரங்கமோ
இன்று வரை எனக்குப் புரியாத ஒன்று!

அப்பா அடிக்கடி சொல்லுவார்,

"Man must know how to get rid of his
superfluous energy in a harmless way !" :roll:

இந்த சுப்புரங்கமும் அதில் ஒன்றோ? :noidea:
 
# 72. சுஜாதாவின் கண்ணீர் ஏன்?

அவர் கேரளத்துப் பெண் குட்டி.

அங்கே இங்கிலீஷ் lecturer ஆவர்.

சுருட்டை முடியும், கூர்மூக்கும்

சிறிதாக, அழகாக இருப்பார்.:music:

இரவு உணவுக்கு எல்லோரும்

எங்கள் மெஸ் ஹால் போவோம்;

ஒரு பர்லாங் தூரம் இருக்கும்;

ஓபன் air - நாசுரல் A. C . போல.

தலைவலி என்று டாக்டரிடம் போனார்.

கண்ணாடி அணிந்து கொள்ளவேண்டுமாம்.:nerd:

அந்த நன்னாள்... மெஸ் ஹால் செல்லும்போது...

அவர் கண்ணீர் பாய்ச்சியது ஏன்???

அது ஆனந்தக் கண்ணீர் வகைப்படும்! :Cry:

ஆகாயத்தில் அவர் பார்த்ததில்லையாம்,

அதுவரையிலும் ஒரு நாள் கூட

அத்தனை அழகான Twinkling little stars! :love:

 
# 73. ஆட்டுக்கல் மகாத்மியம்.

ஆந்திரா ஆட்டுக்கல்லின் top surface

அம்மிக்கல் போல flat ஆக இருக்கும்.

மாவு அரைக்கும் போது வெளியே

மாவு வழிந்துவிடும் அபாயம் உண்டு.

அம்மா எனக்காகக் குஞ்சலம் போல

ஆட்டுக்கல் சென்னையிலிருந்து !

பார்க்கவே மிக அழகாக இருக்கும்.

விளிம்பு நல்ல உயரம் ஆக இருக்கும்.

ஊருக்கு வரும்போது எனக்கு அதையும்

உடன் எடுத்துவரும் உத்தேசம் இருந்தது.

வீணை மாஸ்டர் ஒரு வரம் கேட்டார்.

அது அந்தக் குஞ்சல ஆட்டுக்கல் தான்.

இன்றைக்கும் அதைப் பெருமையாக

'imported gadget ' போல வைத்துள்ளார்.

It is in safe, protective and proud hands.
 
# 74. குலத்தளவே ஆகும் குணம்!

பிளஸ் டூ வுக்குப் பிறகு பெரியவன் போட்டோ
எல்லாப் பத்திரிகைகளிலும் வெளிவந்தது!

For his record breaking performance .

எல்லோரும் வாழ்த்துக்கள் கூறினர்!
அவனை விட எங்களுக்கே பெருமை.

பெருமை என்றால் கூடவே ஒரு
ஊசிக் குத்தலும் வரவேண்டுமே! :ballchain:

என் கணவரின் கார் டிரைவர் கேட்டான்,

"enthukku photo paddadhi ?
babu thappip poyaadaa ??"

(எதற்கு பத்திரிகையில் போட்டோ வந்தது?
மகன் வீட்டை விட்டுப் போய்விட்டானா?)

குலத்தளவே ஆகும் குணம், :laser:

மனத்தளவே ஆகும் மாண்பு! :loco:

நாலாம் வகுப்புப் படித்த (?)

மூன்றாம் தர டிரைவரிடம் (!)

நாம் இதைத் தவிர வேறு

எதை எதிர்பார்க்க முடியும்?
:doh:
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top